tEcika pirapantam
(in Tamil Script, Unicode/UTF-8 format)
வேதாந்த தேசிகர் அருளிய தேசிக பிரபந்தம்
Our sincere thanks go to Mr. Mani Varadarajan for providing a soft copy of this work,
The transliterated text was converted to TSCII format by K. Kalyanasundaram.
Proof-reading: Mr. M.S. Venkataramanan and Dr. N. Kannan.
This webpage presents Etxt in Tamil script but in Unicode encoding (utf-8 format).
1.39:
எட்டிலாறிரண்டிலொன்றில் எங்கும் ஆறியும்புவார்
விட்ட ஆறுபற்றும் ஆறு வீடுகண்டுமேவுவார்
சிட்டாரானதே சுயர்ந்த தேசிகர்க்குயர்ந்து மேல்
எட்டுமூறும் ஊடறுத்தது எந்தைமால் இரக்கமே
2.5:
நீளவந்து இன்றுவிதிவகையால்நினைவொன்றியநா
மீள வந்து இன்னும்வினையுடம் பொன்றிவிழுந்துழலாது
ஆளவந்தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோமினி யல்வழக்கே.
2.6:
காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளன்
மூளுந்தவநெறி மூடிய நாதமுனிகழலே
நாளுந்தொழுதொழுவோம் நமக்கார்நிகர்நானிலத்தே.
2.52:
மறையுரைக்கும் பொருளெல்லா மெய்யன்றோர் வார்
மன்னியகூர் மதியுடையார் வண்குணத்திற்
குரையுறைக்க நினைவில்லார் குருக்க டம்பாற்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறைவளர்க் குஞ்சிலமாந்தர் சங்கேதத்தாற்
சிதையாத திண் மதியோர் தெரிந்த தோரார்
பொறை நிலத்தின் மிகும்புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.
2.53:
இது வழியின்ன முதென்றவர் இன்புலன்வேறிடுவார்
இதுவழியாமல் வென்றறிவார் எங்கள் டேசிகரே
இதுவழி எய்துக வென்று உகப்பாலெம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோரருளால் யாமிசைந்தனமே .
3.29:
தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோர்
ஒளியணைக்குங்கு ணதாலுந்த ன்னைக்கண்டு
தான் தனக்கென்றறியாத தன்குணத்தைத்
தன் குணத்தால் தானிறையில் தானே கூட்டி
யூன்மருத்துப் புலன் மனமானாங்காரங்கள்
ஒருமூலப் பிரகிருதி யன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கென் றிசைவுதந்த
நாரணனை நான் மறையால் நான் கண்டேனே.
3.30:
கழியாத கருவினையிற் படிந்த நம்மைக்
காலமிது வென்றொரு காற்காவல் செய்து
பழியாத நல்வினையிற் படிந்தார் தாளிற்
பணிவித்துப் பாசங்களடைய நீக்கிச்
சுழியாத செவ்வழியில் துணைவரோடே
தொலையாத பேரின்பந்தர மேலேற்றி
யழியாத வருளாழிப் பெருமான் செய்யும்
அந்தமிலா வுதவியெலா மளப்பாராரே.
3.31:
நின்னருளாங்கதியன்றி மற்றொன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலையுகந்தேன்
உன் சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலையெனக்குத் தீர்த்து
வானவர்த்தம் வாழ்ச்சிதர வரித்தேனுன்னை
யின்னருளாலினியெனக் கோர்பரமேற்றாமல்
என்திரு மாலடைக் கலங்கொளென்னை நீயே.
5.3:
போமுரைக்கும் பொருள் யாமறியோம் பொருளார் மறையிற்
றாமுரைக்கின்றன தாமேயறியுந் தரமுடையார்
ஆமுரைக்கென்றி வையாய்ந்தெடுத்து ஆரண நூல் வழியே
நாமுரைக்கும் வகை நல்லருளேந்திநவின்றனரே.
5.18:
பொருளொன்றிலதென்று போதமொன்றுகொண்ட பொய்யரை, நாந்
தெருள்கொண்டு தீர்த்த பின் காணவொண்ணாப் பொருள்தேடுகின்ற
மருள்கொண்ட சூதுரைக்கும் சௌத்திராந்திகன்வண்ணிக்கை நாம்
இருள்கொண்ட பாழ்ங்கிணரென்று இகழ்ந்தோடவியும்புவமே.
5.19:
நிலையில்லாப் பொருள்மதியை விளைத்துத் தான்
சேர்நிறங்கொடுத்துத் தானழியுந், தன்னால்வந்த
நிலையில்லாமதி தன்னில்நிறத்தைக் காணும்
இதுகாணும் பொருள் காண்கையென்ற நீசன்
முலையில்லாத் தாய்கொடுத்த முலைப்பாலுண்ணும்
முகமில்லாமொழியெனவே மொழிந்த வார்த்தை
தலையில்லாத் தாளூருங்கணக்காய் நின்ற
கட்டளை நாங்கண்டின்று காடினோமே.
5.52:
வையமெலாமிருள் நீக்கு மணிவிளக்காய்
மன்னிய நான் மறைமௌலி மதியே கொண்டு
மெய்யலது விளம்பா தவியாசன் காட்டும்
விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர்
ஐயமறவறு சமயக்குறும்பறுத்தோம்
அணியரங்க ரடியவர்க்கேயடிமை செய்தோ
மையகடல்வட்டத்துண்f மற்றுந்தோற்றும்
வாதியர்தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே.
5.53:
கோதவமொன்றில்லாத தகவேகொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று, ஓர்
தூதுவனாயொரு கோடிமறைகளெல்லாந்
தொடர்ந்தோடத் தனியோடித்துயரந்தீர்த்த
மாதவனார்வட கொங்கில் வானியாற்றின்
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்
போது, இவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாட்
புணராத பரமதப்போர் பூரித்தோமே.