கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்) நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்) |
Compiled by: Elias Lonnrot Translated into Tamil by R.Sivalingam Edited with an introduction by Asko Parpola |
குறிப்புகள் பாடல்களின் பொருளடக்கம் கதாநாயகர்களின் பெயர்கள் Introduction: Dr. Asko Parpola அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்) கலேவலா - சொற்றொகுதி கலேவலா - விளக்கக் குறிப்புகள் கலேவலா - ஆதார நூல்கள் |
[பெயர்கள் முதலில் தமிழிலும் அடுத்து பின்னிஷ் மொழியிலும் (அவசியமான இடங்களில் அடைப்புக்
குறிக்குள் ஆங்கிலத்திலும்) இடம் பெற்றுள்ளன].
அ | |
அசுரமலை: | இம்மலை தீய ஆவிகள் உறைவதாகக் கருதப்படும் ஒரு மலை. Horna என்னும் பின்னிஷ் சொல்லுக்கு தீய ஆவி, அசுரன், பூதம் என்று பொருள். இம்மலை கல்லவெசி ஏரிக்கு தென்கிழக்கில், பின்லாந்தின் பெரிய தீவான சொய்ஸலோவில் இருந்ததாகக் கருதப்படுகிறது. |
அந்தரோவிபுனன்: | Antero Vipunen: மந்திரம் தெரிந்த ஒரு பெளராணிக பூதம். |
அமைதிநீர் மனிதன்: | அமைதி நீரினன், நன்னீர் மனிதன் ஆகியன வைனாமொயினனின் சிறப்புப்பெயர்கள். |
அய்யோ: | A*ijo*: இக்கு - துர்சோவின் தந்தை; பார்க்க 'இக்கு - துர்சோ'. |
அலுவே: | Alue: ஒரு ஆதி காலத்து நதியின் பெயர். |
அன்னிக்கி: | Annikki: கொல்லன் இல்மரினனின் சகோதரி. 'நற்பெயருடையாள்' என்பது அவளுடைய சிறப்புப் பெயர். இரவிலும் அதிகாலையிலும் வீட்டுக் கடமைகளைச் செய்வதால் இரவின் நங்கை, வைகறை வனிதை என அழைக்கப் படுபவள். |
அஹ்தி: | Ahti: லெம்மின்கைனனின் இன்னொரு பெயர். |
அஹ்தொலா: | Ahtola: அஹ்தோவின் ஆளுகைக்கு உட்பட்ட இடம். |
அஹ்தோ: | Ahto: அலைகளின் அதிபதி; கடலுக்கும் நீருக்கும் அதிபதி; அஹ்தோவின் மனைவியின் பெயர் வெல்லமோ. |
அஹ்தோலைனன்: | Ahtolainen: அஹ்தொலாவில் வசிப்பவர். |
ஆ | |
ஆழத்துலகம்: | துவோனலா என்னும் மரண உலகத்தின் இன்னொரு பெயர். பாதாள உலகம். |
இ | |
இக்கு - துர்சோ: | Iku-Turso: கடலரக்கன், கடற்பூதம், கடலின் மாபெரும் சக்தி (sea monster) |
இங்கிரியா: | Inkeri: பின்லாந்தின் குடாக் கடலுக்கு தென்கிழக்கில் உள்ள ஓர் இடம். ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. சென்ற், பீற்றர்ஸ் பேர்க் ( St. Petersberg ) [முந்திய லெனின் கிராட்] மாநிலத்தில் இருக்கிறது. |
இடுகாட்டு ஆவி: | Kalma: மரணம், மரண சக்தி, மரணத்தின் ஆவி என்னும் பொருளில் இடுகாடு உருவகப் படுத்தப்பட்டது. |
இமாத்ரா: | Imatra: வுவோக்ஸி நதியில் வீழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி; இப்பொழுது இந்த இடம் இமாத்ரா என்ற பெயரில் ஒரு நகரமாக மாறியிருக்கிறது. இங்கே தான் பின்லாந்தின் மிகப் பெரிய காகித ஆலையும் நீராற்றல் மின்சக்தி நிலையமும் அமைந்துள்ளன. |
இல்போ[வின்] மகள்: | Ilpotar: லொவ்ஹியின் இன்னொரு பெயர். |
இல்மத்தார்: | Ilmatar: (air spirit) வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்; வைனாமொயினனின் கன்னித்தாய். |
இல்மரி, இல்மரினன்: |
Ilmari, Ilmarinen: இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன். அழிவில்லாத ஆதிகாலத்து உலோக வேலைக் கலைஞன். இவனைக் "கொல்லன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நமது வழக்கில் "கொல்லன்" என்றால் இரும்பு வேலைத் தொழிலாளியையே குறிக்கும். அதே நேரத்தில் "பொற்கொல்லன்" என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. பின்னிஷ் மொழியில் seppo என்றால் உலோகத் தொழிலாளி என்று பொருள். எந்த வகையான உலோகத்திலும் வல்லமையுடைய கலைஞன் என்றே பொருள். இதை ஆங்கிலத்தில் smith என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். வடநாட்டில் சம்போ என்னும் சாதனத்தைச் செய்த திறமை மிக்க தேவ கொல்லன். வானத்தைச் செய்தவன், விண்ணுலகின் மூடியைச் செய்தவன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவன். பின்னிஷ் மொழியில் Ilma என்றால் காற்று, ஆகாயம், வானம் என்று பொருள். இச்சொல்லில் இருந்து இப்பெயர் வந்தது. இப்பெயர் இன்னமும் பின்னிஷ் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இல்மரினனைப்பற்றிப் படிக்கும் பொழுது இந்திய மரபுப்படி புராணங்களில் வரும் தேவதச்சன் விசுவகருமாவும் அசுரதச்சன் மயனும் நினைவுக்கு வரலாம். இல்மரினனின் சகோதரி அன்னிக்கி. வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைத் திருமணம் செய்தவன். அடுத்த மகளைக் கவர்ந்து சென்று கடல் பறவையாகச் சபித்தவன். |
இல்மரினனின் தலைவி: | Ilmarisen ema*nta*: இல்மரினனின் மனைவி; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹியின் மூத்த மகள்; விவாகத்துக்கு முன்னர் வடநில மங்கை என்றும் பின்னர் இல்மரினனின் தலைவி என்றும் அழைக்கப்பட்டவள்; பெயர் கூறப்படவில்லை. |
இல்மா: | Ilma: (i) இல்மரினனின் தோட்டம், (ii) இல்மரினனின் வசிப்பிடம், (iii) இல்மரினன் என்ற பெயரின் சுருக்கம். |
ஈ | |
ஈயநெஞ்சாள்: | Tinarinta: ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பெறுமதி குறைந்த நகைகளை அணியும் கன்னிப் பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள் என்னும் பொருளில் `ஈய நெஞ்சாள்`, `ஈயத்துநெஞ்சாள்`, `தகர நெஞ்சாள்`, `ஈய மார்பினள்`, `தகர மார்பினள்` என அழைத்தனர். பொதுவாக விவாகமாகாத ஒரு கன்னிப் பெண்ணையே இவ்விதம் அழைத்தனர் என்ற கருத்தும் உண்டு. |
உ | |
உக்கோ: | Ukko: முதியவன் என்று பொருள். முகில்களின் அதிகாரம் கொண்ட சுவர்க்கத்தை ஆளும் கடவுள் என்ற கருத்தில் "உக்கோ" என்று ஆதிகாலத்தில் அழைத்தனர். |
உந்தமோ: | Untamo: 5ம் பாடலில் கனவின் சக்தி, கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்ற பொருளிலும் 26ம் பாடலில் ஓநாய்களை உடையவன் என்னும் பொருளிலும் கூறப்பட்டது. ஆனால் கலர்வோ என்பவனின் சகோதரனாக 31,34, 36ம் பாடல்களில் கூறப்படுகிறது. |
உந்தாமொயினன்: | Untamoinen: பார்க்க `உந்தமோ`. |
உந்தோ: | Unto: `உந்தமோ`வின் சுருக்கம்; பார்க்க `உந்தமோ`. |
உப்பு - நீரிணை: | Suolasalmi: ( the salt sound, the Sound); ஒரு உப்புக் கடற்கால்வாய், கடலுட் கால்வாய், தொடுவாய், நீரோட்டம். 46ம் பாடலில் கூறப்பட்ட இந்த நீரிணை தென் சுவீடனுக்கும் டென்னிஷ் தீவான சீலந்துக்கும் Sjaelland (Zealand) நடுவே அமைந்தது. இந்த நீரிணையின் இன்றைய பின்னிஷ் பெயர் Juutinrauma (`Jutland current`). |
உறுத்தியா: | Rutja: நோர்வேயின் வடகோடியில் லாப்லாந்தில் உள்ள இடம்; இதன் தற்போதைய பின்னிஷ் பெயர் உறுய்யா Ruija. |
உறைபனி மனிதன்: | Pakkanen: (Jack Frost); வடபுலத் தலைவி தனது பாதுகாப்புக்காக மந்திர
சக்தியால் கொடிய உறைபனிக் குளிரை உண்டாக்கவல்ல ஒரு சக்தியை உருவாக்கி அதை
லெம்மின்கைனன் மீது ஏவிவிடுகிறாள். இவன் உறைபனி மனிதன், உறைபனியோன், உறைபனி
மைந்தன், பனிப் பையன் என்றும் அழைக்கப்படுகிறான். பின்னிஷ் மொழியில் புஹுரியின் மைந்தன்; புஹுரி Puhuri என்பது கடுங் காற்றின் உருவகப் பெயர். |
எ | |
எஸ்த்தோனியா: | Viro: (Estonia); முன்னர் சோவியத் யூனியனைச் சேர்ந்திருந்தது; இப்பொழுது ஒரு தனிநாடு. |
ஐ | |
ஐனிக்கி: | Ainikki: லெம்மின்கைனனின் சகோதரி. |
ஐனோ: | Aino: யொவுகாஹைனனின் சகோதரி; வைனாமொயினனுக்கு மனைவியாக்க வாக்களிக்கப்பட்டவள்; கடைசியில் நீரில் மூழ்கி இறக்கிறாள். இதிலிருந்து நீரில் மூழ்கி இறப்பவர்கள் பின்னர் நீரின் ஆவியாக/சக்தியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. |
ஒ | |
ஒஸ்மோ: | Osmo: ஒரு பெளராணிக இடம்; கலேவாவின் இன்னொரு பெயர். |
ஒஸ்மொலா: | கலேவலாவின் இன்னொரு பெயர். |
ஒஸ்மொயினன்: | Osmoinen: கலேவாவின் சந்ததியினன் என்ற பொருளில் வைனாமொயினனைக் குறிக்கும். |
க | |
கந்தலே: | kantale: ஒருவகை நரம்பிசைக் கருவி; ஆரம்பத்தில் ஐந்து நரம்புகளைக் கொண்டது. பல நூறு வருடங்களாகப் பின்லாந்து மக்களால் இசைக்கப்பட்டு வரும் ஒருவகை யாழ். |
கந்தலேதார்: | Kanteletar: யாழிசைக் கருவியின் தேவதை; கலேவலா நூலின் தொகுப்பாசிரியர் லொண்ரொத் "கந்தலேதார்" என்ற பெயரில் ஒரு இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். |
கர்யலா: | Karjala: பார்க்க `கரேலியா`. |
கரேலியா: | Karelia: ரஷ்யா - பின்லாந்து எல்லையின் இரு புறமும் பரந்துள்ள பெரிய நிலப்பகுதி. இந்நூலின் பெரும்பாலான பாடல்கள் இங்குதான் சேகரிக்கப் பட்டன. இப்பகுதி கர்யலா Karjala என்றும் அழைக்கப்படும். Karja 'கர்யா' என்ற பின்னிஷ் சொல்லுக்குக் கால்நடை ( = ஆடுமாடுகள்) என்று பொருள். 'கர்யலா' என்பதை 'கால்நடை நாடு' 'கால்நடைப் பகுதி' என்று சொல்லலாம். |
கல்மா: | Kalma: இடுகாடு; மரணத்தின் உருவகப் பெயர்; இதன் வேறு பெயர்கள்: துவோனி, மனா. |
கலர்வோ: | Kalervo: குல்லர்வோவின் தந்தை; உந்தமோவின் சகோதரன். |
கலர்வொயினன்: | Kalervoinen: குல்லர்வோவின் ஒரு சிறப்புப் பெயர். |
கலேவா: | Kaleva: இந்தக் காவியத்தின் நாயகர்களின் மூதாதையரின் பெயர்; ஆனால் இவர் ஒரு காவிய நாயகனாக இக்காவியத்தில் இடம்பெறவில்லை. இவர் வழி வந்தவரை கலேவா இனத்தவர் என்பர். இந்தக் கலேவா இனத்தவர் வாழ்ந்த இடம் கலேவலா என அழைக்கப்பட்டது. பாடல்களில் கலேவாவின் மைந்தர், கலேவாவின் மக்கள், கலேவாவின் பெண்கள் என வருவதைக் காணலாம். |
கலேவலா: | Kalevala: ஒரு மாகாணப் பெயர்; அதுவே இந்நூலின் பெயரும் ஆயிற்று. 'கலேவா'
என்பது ஓர் இனத்தவரின் பெயர். இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களான வைனாமொயினன்,
இல்மரினன், லெம்மின்கைனன் ஆகியோரின் மூதாதையர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஓரிடமே/நாட்டின் ஒரு பகுதியே 'கலேவலா'.
-லா -la அல்லது -la* என்பது வதிவிடங்களைக் குறிக்கும் ஒரு விகுதி. 'தப்பியோ' Tapio என்பவன் காட்டு அரசன். 'தப்பியோ'வின் வசிப்பிடம் 'தப்பியோலா' Tapiola. 'துவோனி' Tuoni என்பவன் மரண உலகின் தலைவன். 'துவோனி'யின் வசிப்பிடம் 'துவோனலா' Tuonela. |
கலேவைனன், கலேவலைனன்: | Kalevainen, Kalevalainen: கலேவாவின் வழித் தோன்றல்கள். பாடல் 4: 94ல் வைனாமொயினனைக் குறிக்கும். |
கலேவத்தார் அல்லது ஒஸ்மத்தார்: | Kalevatar/Osmotar: ஆதிகாலத்து "பீர்" என்னும் பானம் வடித்த கலேவாவின் பெண்கள். |
கனவுலகம்: | பின்னிஷ் மொழியில் 'உந்தமோ' Untamo நித்திரைக்கும் கனவுகளுக்கும் அதிபதி. 'உந்தமொலா' Untamola உந்தமோவின் உறைவிடம். பார்க்க 'உந்தமோ'. |
கா | |
காத்ரா: | Kaatra, Kaatrakoski: ஒரு கற்பனை நீர்வீழ்ச்சியின் பெயர். |
கி | |
கிம்மோ: | Kimmo: (i) ஒரு பசுவின் பெயர் (ii) ஒரு பாறைக் கல்லின் பெயர். |
கு | |
குய்ப்பன: | Kuippana: காட்டு அரசன் தப்பியோவின் இன்னொரு பெயர்; பார்க்க 'தப்பியோ'. |
குயிலி, குயில்லி, குயிலிக்கி: | Kylli, Kyllikki: லெம்மின்கைனன் கடத்திச் சென்று மணம் முடித்த மங்கை; ஒரு தீவைச் சேர்ந்தவள்; தீவின் மலர் என அழைக்கப்பட்டவள். |
குல்லர்வோ: | Kullervo, Kullervoinen: கலர்வோவின் மகன். சிறு வயதில் தவறாக வளர்க்கப் பட்டதால் மன வளர்ச்சி இல்லாதவன் என்று கருதப் பட்டவன். |
கெ | |
கெமி: | Kemi, Kemijoki: வட பின்லாந்திலிருந்து பொத்னியாக் குடாக் கடலில் பாயும் ஓர் ஆறு. பின்னிஷ் மொழியில் joki என்றால் ஆறு. இங்கேயுள்ள ஒரு நகரமும் கெமி என்று அழைக்கப்படும். |
கெள | |
கெளப்பி: | Kauppi: லாப்லாந்தைச் சேர்ந்த பனிக் கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவன். |
ச | |
சக்ஸா: | Saksa: 'சக்ஸா' என்ற பின்னிஷ் சொல்லின் பொதுவான பொருள் ஜேர்மனி (நாடு) என்பதாகும். வர்த்தகம், வெளிநாடு என்றும் இந்நூல் தொடர்பாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாதணிகள், உப்பு, சவர்க்காரம், பலகைகள் தொடர்பாகவும் இச்சொல் சில இடங்களில் வருகிறது. எனவே பாடல் 18:137ல் வர்த்தகத் தொடர்புடைய ஒரு நீர்ப்பகுதி என்று கருதப்படுகிறது. பாடல் 21:168ல் இச்சொல்லுக்கு வெளிநாட்டுப் பலகைகள் என்று பொருள் கொள்ளலாம். |
சம்போ: | Sampo: ஒரு மந்திரப் பொருள், மர்மப் பொருள். மாய சக்தி படைத்த சாதனம். செல்வச்
செழிப்பின் சின்னம். இது மூன்று முகங்கள் அல்லது பக்கங்கள் கொண்ட மூன்று சக்தி படைத்த ஓர்
ஆலை என்றும் கருதப்படுகிறது. இப்பக்கங்கள் முறையே தானியத்தையும் உப்பையும் காசையும்
அளவில்லாமல் அரைத்துக் கொண்டு அல்லது செய்து கொண்டே இருக்கும். வடநாட்டுத் தலைவியின் மகளை
மணம் செய்வதற்காகத் தேவ கொல்லன் இல்மரினனால் செய்யப்பட்டது. சம்போவைப் பற்றிச் சொல்லும்
இடங்களில் அதன் பிரகாசமான அல்லது பல வர்ண அல்லது ஒளிப் புள்ளிகளுள்ள மூடியும் கூறப்படுகிறது.
வடநிலத் தலைவி இதனை வடக்கில் ஒரு குகையில் நிறுவுகிறாள். அங்கே இது மூன்று வேர்கள்
விட்டு நிற்கிறது. இதுபோல் மீண்டும் ஒன்றைச் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது.
சம்போவைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் வந்துள்ளன. ஆயினும் இதன் வடிவம் பற்றியும் இயல்பு
பற்றியும் நூற்றுக் கணக்கான ஊகங்கள் சொல்லப்படுகின்றன. |
சம்ஸா: | Sampsa: விவசாயத்துக்குரிய ஆவி, சக்தி; முழுப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen. |
சரா: | Sara: வடநாட்டின் இன்னொரு பெயர். |
சரியொலா, ஸரியோலா: | Sariola: வடநாட்டின் இன்னொரு பெயர். |
சவுனா, செளனா: | sauna: நீராவிக் குளியல்; நீராவிக் குளியல் செய்யும் இடத்தையும் குறிக்கும். நீராவிக் குளியலுக்கென்று அந்த நாட்களில் ஒரு தனிக் குடிசையும் இந்த நாட்களில் வசிக்கும் வீட்டோ டு சேர்ந்த தனி அறையும் கட்டப்படுவது உண்டு. உள்ளே விறகுகளால் தீ மூட்டி அந்தத் தணலின் மேல் கற்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இந்த நாட்களில் மின் அடுப்புகளில் கற்களை அடுக்கிப் பயன்படுத்தினாலும் கிராமப் புறங்களில் இன்னமும் பழைய முறையையே விரும்பி அனுபவிக்கிறார்கள். இப்படி அடுக்கப்பட்ட கற்கள் கனன்று கொண்டிருக்கும். நீராவிக் குளியலைப் பெறுபவர் நீரை அள்ளி அக்கற்களில் எறியும் போது நீராவி எழுந்து அந்த அறையை நிறைப்பதோடு குளிப்பவரின் உடலிலும் படியும். நீராவியில் உள்ள வெப்பம் குறையும் போது மீண்டும் மீண்டும் நீரை எற்றுவார்கள். இடைக்கிடை இலைக் கட்டினால் விசிறி மெதுவாக உடலில் அடித்துக் கொள்வதும் வழக்கம். கடும் குளிர்ப் பிரதேசங்களான இந்நாடுகளில், இந்த நீராவிக் குளியல் அந்தக் காலத்தில் ஒரு மருத்துவ அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் சவுனாக் குடிசைகளையே சுகப் பிரசவங்களுக்காகப் பயன்படுத்தினார்கள். பாடல் 45ல் லொவியத்தார் என்னும் பெண்ணும் பாடல் 50ல் மர்யத்தாவும் பிரசவத்துக்குச் சவுனாவுக்குச் செல்வது கவனிக்கத்தக்கது. |
சவோ: | Savo: பின்லாந்தின் கீழ் மத்திய பகுதியில் கரேலியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு மாவட்டம். இப்பொழுது குவோப்பியோ மாகாணத்தில் ஒரு பகுதி; பின்னிஷ் பெயர் Kuopio. |
சுவோமி: | Suomi: (Finland); பின்லாந்தின் பின்னிஷ் (மொழிப்) பெயர். |
த | |
தப்பியோ: | Tapio: காட்டின் காவலன்; காட்டின் அரசன்; காட்டில் நடக்கும் ஆடல்களைத் தலைமை தாங்கி நடத்தும் வன தேவதை. |
தப்பியோலா: | Tapiola: தப்பியோவின் வதிவிடம். |
தனிக்காக் கோட்டை: | Tanikkan linna: எஸ்த்தோனியாவின் தலைநகரமும் துறைமுகமுமான தல்லினாவைக் குறிக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் டென்மார்க்கைச் சேர்ந்த கடல் வீரர்கள் கண்டுபிடித்த இந்த நகரம் டென்மார்க்கின் கோட்டை என்று அழைக்கப்பட்டது. டென்மார்க்கின் கோட்டை என்பது பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கான் லின்னா' Tanskan linna எனப்படும். பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கா' Tanska என்றால் டென்மார்க் (என்னும் நாடு) (gen: Tanskan) என்றும் 'லின்னா' என்றால் கோட்டை என்றும் பொருள். இதுவே பிற்காலத்தில் மருவி தனிக்காவின் கோட்டை என்னும் பொருளுள்ள Tanikkan linna ஆயிற்று என்று கருதப்படுகிறது. அதுவே இப்போது தல்லினா எனவும் வழங்குகிறது. Tanskan linna >Tanikkan linna >Taninlinna >(Est.) Tallinn > (Finn.) Tallinna. எஸ்த்தோனியாவின் பின்னிஷ் பெயர் `விரோ` Viro. |
தி | |
தியேரா: | Tiera: (snow - foot); லெம்மின்கைனனின் தோழன். பனிப்பாத மனிதன், வெண் பனிப்பாத மனிதன், உறைபனிப் பாதங்களை உடையவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவன். பனிமழை பொழிந்து பாதங்கள் உறைந்து போகும் அளவுக்குப் பூமியில் குவிந்து கிடந்தாலும் அதைத் தாங்கும் தன்மையும் வன்மையும் உடையவன் என்று பொதுவாகக் கருதப்படுபவன். |
து | |
துர்யா: | Tyrja*, Tyrja*n koski: வடக்கில் இருந்ததாகக் கற்பனையாகக் கூறப்படும் ஒரு நீர்வீழ்ச்சி. லாப்லாந்தின் இன்னொரு பெயர். வடக்கில் கொடிய மாந்திரீகரின் வசிப்பிடம். |
துர்யா மனிதர்: | லாப்லாந்து மக்கள். |
துர்யா மொழி: | லாப்லாந்தியரின் மொழி; லாப்லாந்தியரின் மந்திரச் சொற்கள் என்ற பொருளிலும் சில இடங்களில் காணலாம். |
துவோனலா: | Tuonela: ஒரு பெளராணிக இடம். மரண உலகம், இறப்புலகம் என்று பொருள். துவோனியின் வதிவிடம். |
துவோனி: | Tuoni: மறு உலகத்து அல்லது மரண உலகத்துத் தலைவன். |
துவோனியின் மகள்: | Tuonetar, Tuonen tytto*: மரண உலகத்துத் தலைவனின் மகள். வைனாமொயினன் ஆற்றைக் கடந்து மரண உலகம் செல்ல முயன்ற போது அவனைத் தடுத்து வாதாடுபவள். |
தூ | |
தூர நெஞ்சினன், தூர நாட்டினன்: | Kaukomieli, Kaukolainen: லெம்மின்கைனன் என்ற
பாத்திரத்தின் சிறப்புப் பெயர்கள். |
தூரி: | Tuuri: ஒரு தேவதையின் பெயர். இது இடி முழக்கத்தின் அதிபதியான `தொர்` (Thor) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வேறோர் இடத்தில் கடவுளை இடி முழக்கங்களின் தலைவர் என்று வர்ணிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. |
தூலிக்கி: | Tuulikki: தப்பியோவின் மகள்; காற்றின் சக்தி, காற்றின் ஆவி என்று பொருள் உண்டு. |
தெ | |
தெல்லர்வோ: | Tellervo: தப்பியோவின் மகள். |
ந | |
நகத்து நீர்வீழ்ச்சி: | Kynsikoski: மரண உலகில் இருப்பதாகக் கற்பனை செய்யப்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி. இந்த பின்னிஷ் சொல்லை ஆங்கிலத்தில் claw rapid என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். |
நனைந்த தொப்பி, நனைந்த தொப்பியன்: | Ma*rka*hattu: (soppy-hat); ஈரமான தொப்பியை அணிந்திருப்பவன்; ஒரு குருட்டு இடையன் லெம்மின்கைனன் மரண ஆற்றில் இறப்பதற்குக் காரணமானவன். |
நு | |
நுயீரிக்கி: | Nyyrikki: தப்பியோவின் மகன். |
நெ | |
நெவாநதி: | Neva: முன்னர் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் பின்னர் 'பீட்ரோகிராட்' (Petrograd) என்றும் [ இடைக்காலத்தில் 'லெனின்கிராட்' ( Leningrad) என்றும்] இப்பொழுது மீண்டும் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் அழைக்கப்படும் பிரதேசத்தில் 'லடோ கா' என்னும் ஏரியிலிருந்து நாற்பது மைல் தொலைவில் பாயும் ஒரு நதி. |
ப | |
பனிப்பாத மனிதன்: | லெம்மின்கைனனின் தோழன். தியேரா என்பவனின் இன்னொரு பெயர். பார்க்க: 'தியேரா'. |
பி | |
பிஸா மலை: | Pisanma*ki, Pisanvuori: நில்ஸியா (Nilsia*) என்னும் இடத்திலுள்ள மலை. அந்நாளைய வழக்கு மொழியில் பேய் மலை என்று பொருள். |
பு | |
புகார் மகள்: | பூமியில் பனிப்புகாரை உண்டாக்கக் கூடிய சக்தி, தேவதை; முகில் மகள் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். |
புதிய கோட்டை: | Uusi Linna: இந்த பின்னிஷ் சொல்லுக்கு புதிய கோட்டை என்பதே பொருள். ஆங்கிலத்தில் சிலர் Novgorod என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தச் சொல்லுக்கும் புதிய கோட்டை, புதிய நகரம் என்று தான் பொருள். ரஷ்ய மொழியில் 'Nov' என்றால் 'புதிய' என்றும் + 'gorod' என்றால் 'அடைக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட இடம்' என்றும் பொருள். இதுவே பின்னாளில் 'கோட்டை' என்றும் 'நகரம்' என்றும் மாறிற்று. இது ஆதியில் சுவீடன் நாட்டுக் கடலோடிகள் ரஷ்யாவில் குடியேறிய இடம். |
பெ | |
பெல்லர்வொயினன்: | Pellervoinen: சம்ஸாவின் இன்னொரு பெயர்; முழுப்பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen. |
பொஹ்யொலா: | Pohjola: வடநாடு; கலேவலாவுக்கு வடக்கே இருந்த இருள் நிறைந்த நாடு; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹி என்பவளின் நாட்டையும் கோட்டையையும் இப்பெயரால் அழைப்பர். |
ம | |
மர்யத்தா: | Marjatta: கன்னித்தாய்; கிறீஸ்துவ மதத்துக் கன்னி மேரியுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டது. மரியா என்ற பெயரே திரிந்து மர்யத்தா ஆகியது என்பர். ஆங்கிலத்தில் Mary என்பதை பின்னிஷ் மொழியில் Maria என்றே எழுதுவர். கன்னி மேரி என்பதை ஆங்கிலத்தில் Virgin Mary என்றும் பின்னிஷ் மொழியில் Neitsyt Maria என்றும் எழுதுவர். பின்னிஷ் மொழியில் marja என்றால் சிறுபழம் (berry) என்றும் பொருள் உண்டு. ஒரு சிறு பழத்திலிருந்து கர்ப்பம் ஆன கன்னிப் பெண்ணாகையால் இப்பெயர் ஏற்பட்டது என்று கருதுவோரும் உளர். |
மரண ஆறு: | துவோனலா என்னும் மரண உலகத்தின் கறுப்பு நிற ஆறு. |
மரணத்தின் மகன்: | மரண உலகின் மகன், துவோனியின் மகன். பார்க்க 'துவோனி'. |
மனா: | Mana: மனா என்றால் மரண உலகின் அதிபதி. Manala என்பது மரண உலக அதிபதியின் உறைவிடம்; ஒரு பெளராணிக இடம். மரண உலகம் என்று பொருள். |
மி | |
மிமெர்க்கி: | Mimerkki: காட்டுத் தலைவி மியெலிக்கியின் இன்னொரு பெயர்; காட்டுத் தலைவன்
தப்பியோவின் மனைவி. |
மியெலிக்கி: | Mielikki: அன்பானவளே, மனதுக்கு உகந்தவளே என்று பொருள். காட்டுத் தலைவியின் இன்னொரு பெயர். தப்பியோவின் மனைவி. |
மூ | |
மூரிக்கி: | Muurikki: ஒரு பசுவின் பெயர். |
யொ | |
யொவுகோ, யொவுகாஹைனன்: | Jouko, Joukahainen: ஓர் இளைஞன். வைனாமொயினனுடன் போட்டியாக மந்திரப் பாடல்கள் பாடித் தோற்பவன். தோல்வியின் காரணமாகத் தன் சகோதரியை வைனாமொயினனுக்கு மனைவியாக்குவதாக வாக்களிப்பவன். வைனாமொயினனின் குதிரையை எய்து கொல்பவன். |
யொவுகொலா: | Joukola: யொவுகாஹைனனின் இடம். |
யோ | |
யோர்தான்: | Juortanin joki: ஒரு கற்பனை நதி. |
லா | |
லாப்பியர், லாப்லாந்தியர், லாப்புலாந்தியர்: | lappalainen: (Lappish); லாப்லாந்தில் வாழும் மக்கள். |
லாப், லாப்லாந்து, லாப்புலாந்து: | Lappi: ( Lapland); பின்லாந்தில் வட பகுதியில் உள்ள ஒரு மாகாணம்; மந்திரவாதிகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஓர் இடம். |
லூ | |
லூலிக்கி: | Lyylikki: பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவனான கெளப்பியின் இன்னொரு பெயர். |
லெ | |
லெம்பி: | Lempi (gen.: Lemmen): லெம்மின்கைனனின் தந்தை. 'லெம்பி' என்ற பின்னிஷ்
சொல்லுடன் ஆறாம் வேற்றுமை உருபு (genitive case) சேரும் பொழுது வல்லினம் மெல்லினமாகி
லெம்பியின் என்ற பொருளில் 'லெம்மின்' என்று வரும். அதனால் தான் மகனுடைய பெயர்
'லெம்மின்'கைனன் ஆயிற்று. தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னாரின் மகன் என்று கூற வேண்டிய
இடங்களில் லெம்பியின் மைந்தன் என்றும் பெயரைக் குறிப்பிடும் இடங்களில் லெம்மின்கைனன்
என்றும் வருகிறது. "லெம்பி" என்றால் 'அன்பு' 'பிரியம்' என்று பொருள். இது சமீப காலம் வரை ஓர் ஆண்பால் பெயராகவே இருந்தது. இன்று பெண்பால் பெயராக வழக்கில் உள்ளது. |
லெம்போ: | Lempo: ஒரு தீய சக்தி; ஹீசியின் இன்னொரு பெயர். |
லெம்மின்கைனன்: | Lemminka*inen: மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன். லெம்பியின் மகனாகையால்
லெம்மின்கைனன் என்று பெயர் பெற்றவன். குறும்பன்,போக்கிரி என்று வர்ணிக்கப்படுபவன். பெண்களில்
அதிக நாட்டம் உள்ளவன். தூர நெஞ்சினன், அஹ்தி, தீவின் அஹ்தி என்னும் பெயர்களாலும்
அழைக்கப்படுபவன். இவனுடைய சகோதரி ஐனிக்கி. துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இவனை உயிர்த்தெழ வைத்த இவனுடைய தாய் இவன் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். |
லெம்மின்கைனனின் தாய்: | Lemminka*isen a*iti: இவளின் பெயர் கூறப்படவில்லை. |
லொ | |
லொக்கா: | Lokka: இல்மரினனின் தாய்; கலேவாவின் ஒரு பெண் சந்ததியாள் என்பதால் 'கலேவாவின்
மகள்' 'கலேவத்தார்' Kalevatar ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவள். பின்னிஷ் மொழியில் 'தார்' (-tar) என்பது ஒரு பெண்பால் விகுதி. |
லொவ்ஹி: | Louhi: வட நாட்டுத் தலைவி. திறமை மிக்க மந்திரவாதி. இல்மரினனின் இரு மனைவியரின் தாய். நீண்ட பல்லுடையவள், நீக்கல் பல்லுடையவள் என்று வர்ணிக்கப்படுபவள். |
லொவியத்தார்: | Loviatar: துவோனலா என்னும் மரண உலகில் இருக்கும் ஒரு குருட்டு வயோதிபப் பெண். இவளே கொள்ளை நோயை உண்டாக்குபவள் என்று பாடல் 45ல் கூறப்படுகிறது. |
வ | |
வடக்கு: | வடக்கு, வடபகுதி, வடநிலம், வடபால் நிலம் என்ற வருபவை யாவும் பின்லாந்தின் வட பகுதியைக் குறிக்கும். வடநாட்டின் இன்னொரு பெயர் லாப்லாந்து. வேறொரு பெயர் சரியொலா; வடநாடு பொதுவாக இருண்ட நாடு, புகார் படிந்த நாடு என்று வர்ணிக்கப்படுகிறது. |
வடநிலத் தலைவன்: | Pohjolan isa*nta*: லொவ்ஹியின் கணவன். லெம்மின்கைனனால் தலை வெட்டப்படுபவன். பெயர் கூறப்படவில்லை. |
வடபுல நங்கை: | Pohjolan / Pohjan neiti: மற்றும் வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருபவை வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைக் குறிக்கும். இல்மரினனை மணந்த பின்னர் 'இல்மரினனின் தலைவி' என்று அழைக்கப்பட்டாள். பெயர் கூறப்படவில்லை. |
வா | |
வாயுமகள்: | Ilmatar: வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்;
வைனாமொயினனின் கன்னித்தாய். பாடல் 47:141ல் வைனாமொயினனும் இல்மரினனும் நெருப்பைத் தேடிச் செல்லும் வழியில் சந்திக்கும் பெண்ணும் வாயுவின் மகள், காற்றின் கன்னி Ilmatar என்றுதான் அறிமுகமாகிறாள். ஆனால் இவர்களின் உரையாடலிலிருந்து இவள் வைனாமொயினனுக்கு முற்றிலும் புதியவளாகத் தெரிகிறது. |
வி | |
விபுனன்: | Vipunen: அந்தரோவிபுனனைப் பார்க்க. |
விரோகன்னாஸ்: | Virokannas: பாடல் 20ல் விவாகக் கொண்டாட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட பெரிய எருதைக் கொல்வதற்கு எஸ்த்தோனியாவிலிருந்து வந்த ஒரு அறிஞனின் பெயராகக் கூறப்பட்டது. மீண்டும் ஐம்பதாம் பாடலில் திருமுழுக்குச் செய்பவராக வருகிறது. கிறிஸ்துவ மதத்தினரின் புதிய ஏற்பாட்டில் வரும் யோவான் என்னும் திருமுழுக்குநரை இப்பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர். |
வு | |
வுவோக்ஸி: | Vuoksi: பின்லாந்தின் கிழக்குப் பகுதியின் ஒரு பெரிய நதி; சைமா ஏரிகளிலிருந்து ரஷ்யாவின் லடொகா ஏரிக்குப் பாய்கிறது. |
வெ | |
வெண்கடல்: | Vienanmeri: ரஷ்யாவின் கரேலியா ( Russian Karelia) பகுதியில்
உற்பத்தியாகும் 'வியன்னன்யொக்கி' Vienanjoki ( Northen Dvina river) என்னும் ஆறு பாயும் இடம் வெண்கடல். ( White sea). |
வெல்லமோ: | Vellamo: கடலுக்கும் நீருக்கும் அதிபதியான அஹ்தோவின் மனைவி. |
வை | |
வைனா, வைனோ: | Va*ina*, Va*ino*: வைனாமொயினன் என்ற பெயரின் சுருக்கம். |
வைனாமொயினனன்: | Va*ina*mo*inen: வாயுமகளின் புத்திரன். இல்மரினன், லெம்மின்கைனன் உட்பட்ட
மூன்று முக்கிய நாயகர்களில் முதன்மையானவன். அமானுஷ்ய சக்தி படைத்த பாவலன். 'கந்தலே'
என்னும் இசைக்கருவியை இசைப்பதில் வல்லவன். 'நிலையானவன்' 'முதியவன்' என்பவை இவனுடைய
தனித்தன்மை. நீண்ட காலம் கர்ப்பத்தில் இருந்ததால் பிறக்கும்போதே முதியவன் என்று பெயர்
பெற்றவன். இவனுடைய அறிவையும் ஆற்றலையும் கூறும் பின்னிஷ் சொல் tieta*ja*. இதனை ஆங்கிலத்தில் wise man என்று மொழிபெயர்த்துள்ளனர். இதன் நேரடிப் பொருள் '[மந்திரமும் மாயமும்] அறிந்தவன்/தெரிந்தவன்' என்பதாகும். இச்சொல் வரும் அடி தமிழில் வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: "நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்". யேசுநாதர் பிறந்த சமயத்தில், அவரைத் தரிசிக்கக் கிழக்கிலிருந்து வந்த மூன்று அறிஞர்களைப்பற்றிக் கிறீஸ்துவ வேதாகமத்தில் கூறுமிடத்தில் tieta*ja* என்ற பின்னிஷ் சொல்லும் wise man என்ற ஆங்கில சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. |
வைனொலா: | Va*ino*la*: வைனாமொயினன் வாழ்ந்த இடம். |
று | |
றுவோத்துஸ்: | Ruotus: ஒரு கொடிய கிராமத் தலைவனின் பெயர். கிறீஸ்துவ வேதாகமத்தில் யேசுநாதரை விசாரணை செய்தவன் எனக் கூறப்பட்ட ஏரோது ( Herod) என்ற பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர். |
றுவோத்துஸின் தலைவி: | Ruotuksen ema*nta*: றுவோத்துஸின் மனைவி; பெயர் கூறப்படவில்லை. |
ஹ | |
ஹமே: | Ha*me: தென் மத்திய பின்லாந்தில் ஒரு மாகாணம். |
ஹல்லா: | Ha*lla*pyo*ra*: ஹமே மாகாணத்தில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு நீர்ச்சுழி. |
ஹீசி: | Hiisi: ஒரு தீய சக்தி. |
ஹீத்தொலா: | Hiitola: ஹீசியின் ஆளுகைக்கு உட்பட்ட இடம். |
ஹெர்மிக்கி: | Hermikki: ஒரு பசுவின் பெயர். |
1:31 | அணியிலிருந்து: அரைக் கச்சிலிருந்து, இடுப்புப் பட்டியிலிருந்து என்றும் மொழிபெயர்க்கலாம். |
1:34 | குறுக்குவில்: கணை அல்லது கல் எறிவதற்காக ஒரு காலத்தில் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி; இதற்கு வக்கிரதனு என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் பின்னிஷ் சொல் jousi, kaari; (cross bow, arch). |
1:35 | வடபால் நிலம், வடபுலம், வட நாடு என்று வருபவை யாவும் பின்லாந்தின் வடக்கில் உள்ள லாப்புலாந்தைக் குறிக்கும்; இருளான இடம், புகார் படிந்த இடம் என்னும் பொருளில் சரியொலா என்றும் அழைக்கப் படும். |
1:40 | துணி நெய்யும் தறியில் நூல் சுற்றும் தண்டு. |
1:43 | வாயிலிருந்து வழிந்து தாடி போலத் தெரியும் பாலைத் துடைக்கத் தெரியாத சிறுபிராயம். |
1:44 | இந்நூலில் பல இடங்களில் 'புளித்த பால்' 'தயிர்' என்ற சொற்கள் வருகின்றன. புளித்த பால் என்றால் கெட்டுப் போன பால் என்றும் தமிழர் வாழும் சில இடங்களில் கருதப்படுகிறது. ஆனால் மேல் நாடுகளில் பெரிதும் விரும்பிப் பருகும், பாலில் இருந்து செய்யப்பட்ட ஒரு பானத்தை இப்படி அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனைத் தயிர் என்னும் பொருளில் curd என்றும் sour milk என்றும் butter milk என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் இது தயிருமல்லாத மோருமல்லாத ஒரு புளிப்புச் சுவையுள்ள சத்து நிறைந்த பானம். இதன் பின்னிஷ் பெயர் 'பீமா' piima*. |
1:73 | பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் வண்டி; இதன் பின்னிஷ் பெயர்கள் kelkka, reki (sledge, sleigh). இதன் மேல் வண்டி என்று வரும் இடங்களில் இச்சறுக்கு வண்டியையே குறிக்கும். |
1:93 | ரொட்டி, 'பாண்' (bread) செய்யப் பயன்படும் ஒருவகைத் தானியம். கம்புவகை, புல்லரிசி; இதன் பின்னிஷ் சொல் ruis (rye, Secale cereale). |
1:94 | உணவுக்கும் மதுபானம் வடிப்பதற்கும் பயன்படும் ஒரு வகைத் தானியம்; பார்லி; இதன் பின்னிஷ் பெயர் ohra (barley); பார்லியிலிருந்து வடிக்கும் பானம் 'பீர்' (beer); இதன் பின்னிஷ் சொல் 'ஒளுத்' olut. |
1:169 | இந்நாட்டு மக்கள் முன்னாளில் கடவுளை 'உக்கோ' Ukko என்று அழைத்தனர். 'உக்கோ' என்றால் கிழவன், முதியவன், வயோதிபன் என்றும் இடிமுழக்கத்தின் அதிபதி என்றும் பொருள். இதையே சில இடங்களில் முது மனிதன், மானிட முதல்வன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
1:179(i) | நேரான பறவை: நேராகப் பறக்கும் பறவை. |
1:179(ii) | ஒரு வாத்து இனப்பறவை. இதன் பின்னிஷ் சொல் 'சொத்கா', sotka; (pochard, scaup, [duck], Aythya). |
1:272 | வஞ்சிர மீனினம். இதன் பின்னிஷ் சொல் பெயர் 'லொஹி', lohi (salmon, Salmo salar). |
1:285 | மலைகள் பாறைகளில் இயற்கையாகத் தோன்றும் சித்திர வடிவங்கள். |
1:304 | வட துருவத்திற்கு அருகில் காணப்படும் ஏழு மீன்கள் அல்லது சத்தரிஷிகள் என அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம். (Great Bear, the constellation Ursa major, alias the Plough, alias Charle's Wain). இது தாரகைக் குழு, தாரகைக்குலம், விண்மீன் குலம் என்றும் பாடலில் வெவ்வேறு இடங்களில் வருகின்றது. துருவ மண்டலம், சப்த மண்டலங்களில் ஒன்றான துருவ நட்சத்திரப் பிரதேசம். இதன் பின்னிஷ் சொல் Otava. |
1:342 | பாவலன், பாடகன் என்று பல இடங்களில் சொல்லப்படுகின்றது. இது சபித்து அல்லது வாழ்த்தி அல்லது ஏதோ ஒன்று நிகழ வேண்டும் என்று மந்திரப் பாடல்களைப் பாடும் திறனுடையோரைக் குறிக்கும்; அகவர், அகவுநர், பாணர். |
2:21 | இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம். இதன் பின்னிஷ் சொல் ma*nty, (pine, Pinus). |
2:22 | இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' என்னும் மரத்தை. இதுவும் தேவதாரு இனத்தைச் சேர்ந்தது. இது ஊசியிலை மரம் என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் சொல் 'கூசி', kuusi, (spruce, Picea). |
2:23 | இது ஒரு குட்டையான புதர்ச்செடி வகை. இதன் பின்னிஷ் பெயர் 'கனெர்வா', kanerva (heath[er], ling, Calluna vulgaris), |
2:25 | இது மிலாறு, பூர்ச்ச மரம் என்னும் மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் 'கொய்வு', koivu (birch, Betul). |
2:26 | 'அல்டர்' மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் leppa* (alder, Alnus). |
2:27 | இவ்வடியில் கூறப்பட்டது ஒரு சிறுபழ வகை; இதன் பின்னிஷ் சொல் tuomi (bird cherry, Prunus padus). |
2:28 | இது அலரி இனத்தைச் சேர்ந்த ஒருவகைச் சிறிய மரம். இதன் பின்னிஷ் சொல் raita (sallow, goat willow, great sallow, Salix caprea). |
2:29 | இது 'ரொவன்' என்னும் சிறிய பழங்கள் காய்க்கும் மரம்; ஒருவகைச் செந்நிறப் பழம்; பேரி இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் pihlaja (rowan, mountain ash, Sorbus aucuparia). |
2:30 | இது 'வில்லோ' என்னும் சிறிய மரம். இதுவும் அலரி இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் paju (willow, Salix). |
2:31 | இது 'ஜுனிப்பர்' என்னும் பழச்செடி. இது சூரைச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதன் இன்னொரு பெயர் உரோதமம். இதன் பின்னிஷ் சொல் kataja (juniper, Juniper communis). |
2:32 | இது சிந்தூர மரவினம்; இதன் தமிழ்ப் பெயர்களாவன சிந்தூர மரம், கருவாலி மரம், அல்லோன் விருட்சம். இதன் பின்னிஷ் சொல் 'தம்மி', tammi (oak, Quercus). |
2:35 | பார்க்க 2:22 |
2:38 | பார்க்க 2:26 |
2:39 | பார்க்க 2:27 |
2:42 | பார்க்க 2:27 |
2:67 | வைனாமொயினனுக்கு உதவ வந்த ஒரு நீர்விலங்கு. இதன் பின்னிஷ் சொற்கள் Tursas, turska; இதை நீர்ப் பாம்பு என்றும், வெட்ட வெட்ட முளைக்கவல்ல பல தலைகளையுடைய நீர்ப்பாம்பு என்றும் சொல்வதுண்டு. இதனைக் கடற்குதிரை, கடல்யானை என்றும் சில மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன (octopus, water monster, Hydra, Octopodida). |
2:79 | இந்த அடியில் கூறப்பட்டது மஞ்சள் விதைகளையுடைய சிறிய சிவந்த சதைப் பற்றுள்ள பழம். இதன் பின்னிஷ் சொல் 'மன்ஸிக்கா', 'மன்ஸிமர்யா' mansikka, mansimarja (strawberry, Fragaria). |
2:122 | பரசு |
2:172 | ஈரல் நிறத்து மண்ணில் என்பது மூலபாடம். |
2:206 | வடபுல நங்கை, வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருவதெல்லாம் வட நாட்டுத் தலைவியின் மகளைக் குறிக்கும். இந்த வடநிலத் தலைவியின் பெயர் லொவ்ஹி; இவளுடைய மகளுக்குப் பெயர் கூறப்படவில்லை. எனவே வடநிலத் தலைவியும் வடநில மங்கையும் ஒருவரல்ல என்பது கவனிக்கத்தக்கது. |
2:230 | இது குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை; இதன் பின்னிஷ் சொல் 'குக்கூ' kukku (cuckoo). |
2:245 | இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல் na*a*ta* (marten, pine marten, Martes martes). |
2:253 | இது ஒரு புல்லரிசித் தானிய வகை; இதன் பின்னிஷ் சொல் kaura (oats, Avena sativa). |
2:292 | இது பட்டிழை மயிர்த் தோலையுடைய கீரிவகை விலங்கு; இராஜ கீரி, மரநாய் என்றும் சொல்வதுண்டு; இதன் பின்னிஷ் சொல் ka*rppa* (stoat, ermine, weasel, Mustela erminea). |
2:372 | ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட நகைகளை அணியும் கன்னிப் பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள் என்னும் பொருளில் 'ஈய நெஞ்சாள்', 'ஈயத்து நெஞ்சாள்', 'தகர நெஞ்சாள்' 'ஈய மார்பினள்' 'தகர மார்பினள்' என அழைத்ததை இக்காவியத்தின் பல இடங்களில் காணலாம். (இந்த அடியில் குயிலை விளித்து 'ஈய நெஞ்சால் பாடு!' என்று கேட்கப் படுகிறது.) |
3:45 | பாடல்கள் என்னும்போது அது மந்திரப் பாடல்களையே குறிக்கும். இக்காவியத்தின் நாயகர்கள் ஏதேனும் ஓர் உயிரினம் அல்லது ஓர் உயிரற்ற பொருள் உண்டாகும்படி, உருவாகும்படி பாடிய சந்தர்ப்பங்களைப் பின்னால் காண்போம். பாடல் 1:342 ஐயும் பார்க்க. |
3:105 | வளைந்த மரத்தினால் செய்யப்பட்ட குதிரையின் கழுத்திலுள்ள கண்ட வளையம். |
3:159 | இது நீண்ட ஒடுங்கிய வாயும் கூரிய பற்களையுமுடைய பெரிய நன்னீர் மீனினம்; கோலாச்சி மீன்; இதன் பின்னிஷ் சொல் hauki (pike, Esox lucius). |
3:161 | இந்த அடியில் கூறப்பட்டது 'பேர்ச்' என்னும் மீனை; இதன் பின்னிஷ் சொல் ahven (perch, Perca fluviatilis). |
3:168 | இது ஒரு மான் இனம்; கலைமான், வட தேசத்து மான்; இதன் பின்னிஷ் சொல் poro (reindeer, Rangifer tarandus). |
3:170 | இது காட்டெருது, காட்டுப் பசு, கடம்பை என்றும் அழைக்கப் படும்; மூல பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் tarvas; தற்கால பாவனையில் உள்ள பின்னிஷ் சொல் hirvi (elk, Alces alces). |
3:191 | இது ஒரு சிறு பறவையினம்; இதன் பின்னிஷ் சொல் tiainen (tit, tomtit, titmouse, Paridae). |
3:193 | விரியன் பாம்பு; இதன் பின்னிஷ் சொல் ka*a*rme (snake, viper, Ophiclia l. Serpentes). |
3:194 | இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும்; இதன் பின்னிஷ் சொல் kiiski (ruff, Acerina cernua). |
3:304(i) | இழுவைப்பட்டி |
3:304(ii) | பார்க்க 2:28. |
3:322 | இது ஒரு பூவினம்: அல்லி, ஆம்பல், நீராம்பல், குவளை; இதன் பின்னிஷ் சொல் lumme (lily, water lily, Nymphaea). valkealumme: வெள்ளாம்பல் (white water lily, Nymphaea alba). பாடல் 9:412ல் வருவது பொன்னாம்பல்; இதன் பின்னிஷ் சொல் kultalumme. |
3:330 | கக்கம் |
3:553 | கூந்தலையுடைய பெண்கள், நீண்ட கூந்தலையுடைய பெண்கள், பின்னிய கூந்தலையுடைய பெண்கள் என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த நாட்களில் விவாகம் ஆகும்வரை பெண்கள் நீண்ட கூந்தலை வளர்த்தனர் என்றும் விவாகம் ஆனவுடன் கூந்தலை வெட்டித் தலைக்கு முக்காடு இட்டனர் என்றும் கலேவலா அகராதி கூறுகிறது. அதனால் கூந்தலையுடைய பெண் என்றால் பொதுவாக விவாகம் ஆகாத பெண் என்று கருதப்பட்டது. இதன்படி விவாகம் ஆனதும் தான் தனது கூந்தலை இழக்க நேரிடும் என்பதும் இங்கே ஐனோவின் கவலைக்கு ஒரு காரணம் ஆகலாம். |
3:576 | பார்க்க 2:79. |
3:580 | எரிந்த நிலம். |
4:4 | சவுனா (செளனா) sauna (sauna) எனப்படும் நீராவிக் குளியலின்போது உடலை விசிறிக் கொள்ளப் பயன்படும் ஒருவகை இலைக்கட்டு (whisk). சொற்றொகுதியில் பார்க்க 'சவுனா'. |
4:10 | பார்க்க 2:26. |
4:25 | கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட துணிவகைகள். |
4:123 | பன்றியிறைச்சி. |
4:186 | இது ஒருவகைச் சிறுபழம்; மூலநூலில் உள்ள பின்னிஷ் சொல் vaapukka; தற்காலப் பெயர்கள் vadelma, vattu (raspberry, Rubus idaeus). |
4:215 | கீல், தார் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும் பொருள் (tar). |
4:309 | பார்க்க 2:30. |
4:310 | இது ஓர் அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு; இதன் பின்னிஷ் சொல் haapa (aspen, European aspen, Populus tremula). |
4:327 | வீட்டில் உள்ள ஒருவரை (செல்லமாகக்) கோழி என்று அழைப்பதாகத் தெரிகிறது. சிலர் புறா, வாத்து, பறவை என்றும் மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்கள் மயில், கிளி என்று அழைப்பது போல. |
4:406 | நீண்ட செவிகளையுடைய முயல். |
4:408 | சிலுவை போன்ற வடிவமான வாயையுடைய முயல். |
4:422 | வட்டமான விழிகளையுடைய முயல். |
4:428 | பார்க்க 2:372. |
4:430 | செப்பினால் செய்யப்பட்ட ஒரு பட்டி வீணே ஆழ்ந்து போயிற்று. |
4:450 | பாக்கியமில்லாக் கன்னங்கள் மீது. |
4:474 | ஓடுகின்ற ஆறாக உருக்கொள்ளத் தொடங்கி - |
4:513 | இது ஒரு பயறு வகை; இதன் பின்னிஷ் சொல் herne (pea, Pisum). |
4:514 | இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் சொல் papu (bean, Phaseolus). |
5:17 | Untamo 'உந்தமோ' என்ற பின்னிஷ் சொல் கனவு, நித்திரை என்னும் பொருள்படும் uni என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். எனவே இவ்விடத்தில் கனவின் சக்தி, கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்றும் மொழி பெயர்க்கலாம். உந்தமோ என்ற இச்சொல் பாடல் 31ல் ஒரு கதாபாத்திரத்தின் பெயராகவும் வருகிறது. |
5:36 | சில இடங்களில் கப்பல் என்றும் அதே மரக்கலத்தைப் பின்னர் படகு, தோணி, ஓடம் என்றும் வருவதைக் காணலாம். ஏனைய மொழிபெயர்ப்பாளர்களைப் போன்று மூல நூலில் உள்ளது அப்படியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
5:63 | இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் பெயர் siika (powan, whitefish, Coregonus lavaretus). |
5:64 | இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் சொல் kuuja, kuujanen, ja*rvilohi; (trout, lake-trout, salmon, Salmo trutta). இதை ஆங்கிலத்தில் lake-trout என்றும் salmon-trout என்றும் மொழிபெயர்த்துள்ளனர். |
5:65 | பார்க்க 3:159. |
5:69 | கடற்கன்னி, நீரரமகள்; பழம் பெளராணிக மரபுகளில் அரைக்கு மேல் பெண்ணாகவும் அரைக்குக் கீழ் மீன் வாலாகவும் அமைந்த அரை மனித உரு (mermaids). |
5:71 | இது ஒரு மீனினம்; வஞ்சிர மீன்; இதன் பின்னிஷ் சொல் merilohi (salmon, Salmo trutta). |
5:72 | பார்க்க 3:161. |
5:121 | 'பீர்' என்னும் பானக் கலயம்; பார்க்க 1:94. |
5:149 | நீரிணை: ஜலசந்தி, கால்வாய், தொடுவாய் (strait). |
6:5 | வைக்கோல் நிறத்து. |
6:6 | பார்க்க 4:513. |
6:37 | பின்னிஷ் மொழியில் Hiisi எனப்படும் தீய சக்தி; பேய், பிசாசு, கூளி, அலகை, நரகம் என்று பொருள் (the devil). |
6:38 | பின்னிஷ் மொழியில் Lempo எனப்படும் தீய சக்தி; தீய ஆவி, பிசாசு, அலகை என்றும் பொருள் (the devil). |
6:43 | இந்த அடியிலிருந்து அடி 46 வரை வில்லின் அலங்கார வர்ணனை; வில்லின் முதுகுப்புறத்தில் ஒரு குதிரை நின்றது; அடிப்புறத்தில் பாயும் பாவனையில் ஒரு குதிரைக் குட்டி நின்றது; வில்லின் வளைவிலே ஓர் இளம்பெண் உறங்கினள்; மேற்புறத்தில் ஒரு முயல் படுத்திருந்தது. |
6:50 | மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால் (resin, gum, exudation from certain trees). அம்புகளின் முனைகள் பிசினுள்ள மரத்தினால் என்றும் மொழிபெயர்க்கலாம். |
6:53 | இக்குருவி தூக்கணங்குருவி, தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்; இதன் பின்னிஷ் சொல் pa*a*sky[nen] (swallow, Hirundinidae). |
6:54 | இக்குருவி ஊர்க்குருவி, சிட்டுக்குருவி, இல்லுறைக் குருவி, அடைக்கலாங்குருவி, தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்; இதன் பின்னிஷ் சொல் varpunen (sparrow, Passer). |
6:62 | அமைதிநீர் மனிதன், நன்னீர் மனிதன் என்பன வைனாமொயினனின் சிறப்புப்பெயர்கள். |
6:93 | வைக்கோல் நிறத்து. |
6:120 | விவாகத் தொடர்பால் சகோதரியின் கணவன், மனைவியின் சகோதரன். |
6:127 | பின்னிஷ் மொழியில் Manala 'மணல' எனப்படும் ஒரு பெளராணிக இடம். மரண உலகம் என்று பொருள் (abode of the dead, the underworld, Hades). |
6:128 | பின்னிஷ் மொழியில் Tuonela 'துவோனலா' எனப்படும் ஒரு பெளராணிக இடம். மரண உலகம் என்று பொருள். சொற்றொகுதியில் துவோனி, துவோனலா என்ற சொற்களைப் பார்க்க; (Hades, the underworld). |
6:177 | பார்க்க 3:170. |
7:67 | Luotola - பின்னிஷ் மொழியில் luoto என்றால் பாறை, பாறைத்தீவு என்று பொருள்; luotolaவை விரிகுடா, தீவு, தீவவுத்தோட்டம் எனலாம். |
7:68 | Joukola - யொவுகாஹைனனின் இடம்; யொவுகாஹைனனின் தோட்டம். |
7:133 | பார்க்க 2:206. |
7:188 | பார்க்க 2:27. |
7:285 | இந்த அடியிலிருந்து அடி 288 வரை: அன்னிய நாட்டில் தங்கக் கிண்ணத்தில் தேன் அருந்துவதிலும் பார்க்க, சொந்த நாட்டில் மிலாறு மரத்துக் காலணியில் இருக்கும் நீரைக் குடிப்பது சிறந்தது. ('மிலாறு மரத்தின் காலணி பதிந்த தடத்தில் தேங்கிய நீரைக் குடிப்பது' என்றும் மொழிபெயர்க்கலாம்). |
7:312 | சம்போவின் மூடியைப் 'பல நிறங்கள்' கொண்ட மூடி என்றும் 'ஒளிப் புள்ளிகள்' உடைய மூடி என்றும் சிலர் விளங்கியுள்ளனர். 'ஒளிமிக்க' என்பதே பலரது விளக்கம். 'சம்போ'வைச் சொற்றொகுதியில் பார்க்க. |
7:350 | பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour). |
8:1 | பார்க்க 2:206. |
8:58 | மாரிகாலத்தை மேல்நாடுகளில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை. இதன் பின்னிஷ் பெயர் kynto*rastas, ra*ka*ttirastas (fieldfare, Turdus pilaris). |
8:74 | பின்லாந்து போன்ற நாடுகளில் குளிர் கொடுமையானது. 'அதனிலும் குளிராம்' என்பதை 'அதனிலும் கொடிதாம்' என்று பொருள் கொள்ளலாம். |
8:152 | பார்க்க 6:37. |
8:153 | பார்க்க 6:38. |
8:161 | பார்க்க 6:38. |
8:162 | பார்க்க 6:37. |
8:172 | ஊசிபோன்ற இலைகளையுடைய மரம். இதன் பின்னிஷ் பெயர் honka. இதைப் 'பைன்' மரம் என்றும் சொல்வதுண்டு. 2:21யும் பார்க்க. |
8:191 | இந்த அடியிலும் அடுத்த இரு அடிகளிலும் வரும் பொருள் வருமாறு: அங்கே எந்த மண் மேடும் இல்லை இரத்த வெள்ளத்தில் மூழ்கா நிலையில், தடையில்லாது பாய்ந்த குருதியில் மூழ்கித் தாழா நிலையில். |
9:31 | உடன்பிறப்புகள் எல்லோரிலும் இரும்பே இளையவன். |
9:80 | ஒளித்தல் அபயம் பெறுதல் ஆகிய இரண்டையும் பெற்றது. |
9:99 | உறைந்த சேற்றில் ஓர் ஓநாய் ஓடியது. |
9:101 | ஓநாய் கால் வைத்த அடித் தடத்தில் சேறு ஊர்ந்தது. |
9:234 | மிலாறுப் பட்டை - வீட்டுக்கூரையில் மிலாறு மரப்பட்டையின் கீழே இருந்து பார்த்தது. |
9:297 | பார்க்க 3:170. |
9:298 | இது ஒரு மான் இனம்; கலைமான், வடதேசத்து மான்; இதன் பின்னிஷ் சொல் poro (reindeer, Rangifer tarandus). இந்த அடியில் பயன்படுத்தப்பட்ட பின்னிஷ் சொல் peura; இதைக் காட்டுக்கலை என்றும் மொழிபெயர்க்கலாம். |
9:349 | கடலில் நிற்கும் வாள் போல் நிற்பாய்! இது ஒரு கோரைப் புல்லினம். இதன் இலை அதாவது தாள் வாளின் அலகு போல நீரில் நிமிர்ந்து நிற்கும் தன்மையுடையது. இதன் பின்னிஷ் பெயர் kurjenmiekka. பின்னிஷ் மொழியில் miekka என்றால் வாள் என்று பொருள் (iris, Iris pseudacorus). |
9:412 | பார்க்க 3:322. |
9:458 | அவை நூறு பயணத்து வழிகளில் சேர்க்கப்பட்டவை. |
9:467 | பல கிளைகள் பரந்த அரச மரமொன்று. |
9:525 | இந்த அடியும் அடுத்த அடியும்: நோவை ஒரு மலையில் ஏற்றி அழிப்பதாக நம்பப்பட்டதால் 'நோவின் குன்று' என்றும் 'நோ மலை' என்றும் பெயர்கள் வந்தன. |
9:527 | நோவை அங்கே கற்களில் திணித்தான். |
10:2 | பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour). |
10:12 | பார்க்க 2:29. |
10:42 | பார்க்க 1:304. |
10:58 | நிலக்கரிக் குடிசையிலிருந்து வந்த கலகலத்த ஒலியைக் கேட்டனன். |
10:91 | பார்க்க 1:304. |
10:346 | படகுத்துடுப்புக்கு உகைப் பாதாரமான அமைவு; படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்பு விசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி; இதைத் துடுப்பு நெம்புவிசைக் குவடு, மிண்டுக்குழி, உகை மிண்டு, மிண்டுக்குவடு என்றும் அழைப்பர் (rowlock, tholepin). |
10:429 | மூல நூலில் yhdeksa*n sylen syva*ha*n என்பதை to a depth of nine fathoms என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். Fathom என்பது ஆறடி நீளம். அதனாலேயே தமிழில் இங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் வேறு சில இடங்களிலும் இந்த fathom என்னும் அளவை கூறப்படுகிறது. அந்த இடங்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாறே அடிக்கணக்கில் கூறப்பட்டுள்ளது. |
10:450 | இது ஒரு வகைப் புதர்ச்செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொற்கள் puna-puola, puolukka, puola (cranberry, mountain cranberry, cowberry, lingonberry, Vaccinium vitis-idaea). |
11:10 | பார்க்க 3:161. |
11:54 | காய்கறிகள், மீன் , இறைச்சி வகைகள் வெந்த சாறு, ரசம் (soup). |
11:58 | இந்த மெல்லிய மரக்குச்சிகள் மெழுகுவர்த்திபோல எரிக்கப் பயன்படுத்தப்பட்டன. |
11:148 | பார்க்க 3:553. |
11:174 | பார்க்க 2:372. |
11:195 | குயிலிக்கி ஏனைய பெண்களுக்கு மேலாகச் சிறப்பாக இருந்தனள். |
11:264 | இந்த அடியிலிருந்து அடி 266 வரை: பின்னிஷ் மொழியில் Muurikki, Mansikki, Puolukka 'மூரிக்கி', 'மன்ஸிக்கி', 'புவோ லுக்கா' என்பன இந்த அடிகளில் பசுக்களின் பெயர்கள். 'மூரிக்கி' அந்த நாட்களில் வழக்கிலிருந்த பசுவின் பெயர்தான். ஆனால் 'மன்ஸிக்கா' ('மன்ஸிக்கி' அல்ல), புவோலுக்கா என்ற பெயர்களில் சிறு பழங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. பார்க்க 2:79, 10:450. (ஓர் ஆய்வாளரின் கருத்து இது: "லெம்மின்கைனன் பசுக்களை வைத்திருக்க முடியாத அளவுக்கு ஏழை. சில பூக்களுக்கும் இப்பெயர்கள் இருந்தன. குயிலிக்கி பசுக்கள் என்று நினைக்கட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பூக்களின் பெயர்களை இரு பொருளில் கூறுகிறான்.") |
11:385 | பனிக்கட்டிப் பறவை; இவ்வடியில் கூறப்பட்டது lumi-sirkku, pulmunen என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒரு சிறுகுருவி (bunting, snowbunting, Plectrophenax nivalis, Emberiza nivalis). |
11:393 | கூடத்தின் நிலப்பரப்பைப் பெரிதாக்கி அமை. |
12:63 | 'பீர்' என்னும் பானம்; பார்க்க 1:94. |
12:69 | இங்கு கூறப்பட்டது 'அல்டர்' என்னும் மரத்தினால் செய்த பீப்பாவை. பார்க்க 2:26. |
12:94 | மூல பாடத்தில் ஒரு பென்னி என்று இருக்கிறது; 12:101ஐயும் பார்க்க. |
12:101 | Markka 'மார்க்கா' என்பது பின்னிஷ் நாணயம். |
12:145 | பாம்புகள் சபித்தன. |
12:154 | துளை கருவி, துறப்பணம், கன்னக்கோல் என்றும் பொருள் வரும். |
12:206 | தலைமயிரை வார (அல்லது கோதப்) பயன்படும் கருவி, 'பிரஷ்' (brush). |
12:349 | Kymmenia* என்ற பின்னிஷ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'tens' என்று பொருள். அதையே தமிழில் 'பதின்மர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது. |
12:363 | இங்கே சுடுதலுக்கு அம்பு எய்தல் என்று பொருள். |
12:390 | பாசி படர்ந்த இடத்திலிருந்து; பாசி படர்ந்த மரக்கட்டைகளிலிருந்து என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு. |
12:462 | பார்க்க 3:161. |
13:29 | பனிக்கட்டியில் சறுக்குதல்; சறுக்கிச் செல்லுதல். இதன் பின்னிஷ் சொல் hiihta*a* (ski [along a skiing track]). |
13:39 | பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (இடது) சறுக்கணி. இதன் பின்னிஷ் சொல் lyly (the longer ski [formerly used on the left foot]). |
13:40 | பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (வலது) சறுக்கணி. இதன் பின்னிஷ் சொல் kalhu (short[er] ski, kick ski). |
13:69 | பனிக்கட்டியில் சறுக்கும் போது ஊன்றிச் செல்லும் தண்டுகள். இதன் பின்னிஷ் சொல் sauva (staff). |
13:70 | ஊன்றிச் செல்லும் தண்டு தரையைத் தொடும் நுனிப் புறத்தில் இருக்கும் வளையம். இதன் பின்னிஷ் சொல் sompa (ring [ on a ski stick]). |
13:75 | ஆறுகளில் வாழும் மீன் உண்ணும் பிராணி. நீந்துவதற்கு வசதியாக விரல்கள் ஒன்றோடொன்று இணைந்த நான்கு பாதங்களையும் தட்டையான வாலையும் தடித்த பழுப்பு நிற உரோமத்தையும் உடையது. இது நீர்க்கீரி என்றும் அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் saukko 'சவுக்கோ' (common otter, Lutra lutra). |
13:106 | இந்த அடியில் பின்னிஷ் மொழியில் பயன்படுத்தப்பட்ட சொல் Juutas. இது ஆங்கில Judas என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் காட்டிக் கொடுப்பவன் என்பதாகும். கிறிஸ்தவ வேதாகமத்தில் யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த ஜூதாஸ் (Judas Iscariot) என்பவனின் பெயரிலிருந்து வந்ததாகும். சில ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் 'ஜூதாஸ்' என்றே மொழிபெயர்த்துள்ளனர்; சிலர் கொடிய பிராணி என்றும் தீய சக்தி என்றும் மொழி பெயர்த்துள்ளனர். |
13:108 | பார்க்க 13:106. |
13:110 | இது ஒரு வகைச் சிறிய மரம்; இந்த மரத்துக் கிளைகளின் கவர்த்தடிகளைக் கொண்டு கொம்புகள் செய்தன. இதன் பின்னிஷ் சொல் raita (sallow, goat willow, great willow, Salix caprea). |
13:152 | இடுகாட்டு ஆவியின் மேட்டிலும் சென்றான். |
13:219 | இந்த அடியில் கூறப்பட்டது ஒருவகை மரம். இதன் பின்னிஷ் சொல் vaahtera (maple, Acer) |
13:239 | பார்க்க 13:219. |
14:34 | உச்சியை அவன் அடைய உடன்வழி நடத்துவீர். |
14:102 | வேட்டை: மூல பாடத்தில் பின்னிஷ் சொல் vilja என்பதன் பொதுப்பொருள் தானியம். இந்நூலில் பல இடங்களில் 'செல்வம்', 'சொத்து' என்ற பொருளில் இச்சொல் வருகிறது. சந்தர்ப்பத்திற்கேற்ப தானியம், கால்நடை, வேட்டை, வன விளையாட்டு என்பனவற்றை இச்சொற்கள் குறிக்கின்றன. பாடல் 14:102ல் வேட்டைச் செல்வத்துக்குரிய முதிய பெண்கள் கிடந்தனர் என்று பொருள். |
14:117 | இந்த அடியையும் அடுத்த அடியையும் சேர்த்து இப்படிப் பொருள் கொள்க: ஒவ்வொரு கோட்டையின் மூலையிலும் பொன்னால் அமைந்த ஆறு சாளரங்கள் இருந்தன. |
14:138 | பூர்ச்ச மரப்பட்டையால் செய்யப்பட்ட பாதணிகள்; பார்க்க 2:25. |
14:154 | தளிரிலைகளில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே. |
14:158 | 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
14:160 | பார்க்க 2:22. |
14:161 | தாரு என்பது மரத்தின் பொதுப் பெயர்; தேவதாருவையும் குறிக்கும். இவ்வடியில் கூறப்பட்டது ஊசியிலை மரத்தை (fir). பார்க்க 8:172. |
14:162 | பார்க்க 2:21. |
14:167 | பார்க்க 2:22. |
14:168 | பார்க்க 2:21. |
14254 | பசும் புற்புதர்களில் வாழும் அழகானவனே. |
14:331 | இந்த அடியும் அடுத்த அடியும்: பொன் வளையத்தினுள்ளே வெள்ளி மணிகளின் நடுவே தலையைத் திணிப்பாய். இப்படியே அடிகள் 347, 348க்கும் பொருள் கொள்க. |
14:377 | அன்னம்: நீண்ட கழுத்துடைய ஒரு நீர்ப்பறவை. இதன் பின்னிஷ் சொல் joutsen (swan, Cygnus). |
14:399 | இந்த அடியிலும் அடிகள் 402, 403லும் குருடன் எனக் கூறப்பட்ட நனைந்த தொப்பியன் 'கண்டான்' 'பார்த்தான்' என்று மூலப் பாடத்தில் வருவது கவனிக்கத்தக்கது. |
14:408 | நீர்க்குழல்: குழல் போன்ற தோற்றத்தில் நீரில் வாழும் பாம்பு. |
14:434 | அரத்தம்: இரத்தம் (blood) |
15:104 | Jalopeura என்னும் பின்னிஷ் சொல் வலிய விலங்கு, சிங்கம் என்று பொருள் தரும்; இந்த அடியில் வலிய விலங்கான (சிங்கம் போன்ற) கலை மான். |
15:119 | பார்க்க 13:75. |
15:120 | நிலத்தில் வளை தோண்டி வாழும் கரடியினம். இதன் பின்னிஷ் சொல் mauriainen (pismire, badger, Lasius niger); இதைக் கீரியினம் (weasel) என்றும் சில நூல்களில் காணலாம். |
15:121 | குளவி; இதன் பின்னிஷ் சொல் neuliainen, ampiainen (wasp). |
15:203 | முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429. |
15:204 | கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் (five hundred fathoms). |
15:285 | இது ஒரு காக்கையினம். நீர்க்காகம் என்றும் சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் சொல் korppi (raven, Corvus corax). |
15:291 | மனிதனைக் கடலுக்குள் போக விடுவாய். |
15:293 | இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் turska; இச்சொல்லுக்கு தற்கால வழக்கில் ஆங்கிலத்தில் 'கொட்' (cod, Gadus morhua) என்று அழைக்கப்படும் மீனும் ஒரு பொருள். அதனால் சிலர் இந்த அடியில் மட்டும் ஒரு வகை மீன் என்று மொழிபெயர்த்துள்ளனர். பார்க்க 2:67. |
15:531 | மிருகங்களின் கொம்புகள் (horn). |
15:532 | அடர்த்தியான கட்டுகள் (bundle). |
15:580 | நீண்ட நகங்களையும் சிறகுகளையும் கொண்ட நெருப்பைக் கக்கக்கூடிய ஒரு கற்பனைப் பிராணி. இதைத் தமிழில் பறக்கும் நாகம், குக்குட சர்ப்பம் என்று சில தமிழ் அகராதிகள் கூறுகின்றன. பறக்கும் முதலை என்றும் சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் சொல் lapokyy (dragon). |
15:581 | பாக்கியமற்ற என் மேல் அவன் ஏவினான். |
15:593 | இது நீண்ட வாலுள்ள வாத்தினம். இதன் பின்னிஷ் சொல் alli (squaw, long tailed duck, Clangula hyemalis). |
15:594 | இது ஒரு வகைக் கடற் பறவை; இதன் பின்னிஷ் சொல் meripa*a*sky (sea swallow); pa*a*sky[nen] (swallow, Hirundinidae). |
15:595 | இதன் பின்னிஷ் சொல் Syo*ja*ta*r. இந்த சொல்லில் syo*ja* என்றால் உண்பது, உண்ணும் சக்தியுடையது என்று பொருள். -ta*r என்பது பெண்பால் விகுதி. (i) புராணங்களில் வரும் நரமாமிசம் உண்ணும் கொடிய பயங்கரமான பூதம் அல்லது அரக்கி அல்லது பயங்கரமான உருவம் கொண்ட பிராணி என்று இதற்குப் பொருள். இதனை ஆங்கிலத்தில் ogress (இதன் ஆண்பால் ogre) என்று மொழிபெயர்த்துள்ளனர். (ii) புராணக் கதைகளில் வரும் நரமாமிசம் புசிப்பவளான ஓர் அரக்கி. (iii) ஒரு பெண்ணின் தலை, உடலுடன் இறக்கைகளும் நகமும் கொண்ட ஒரு கொடிய பிராணி (harpy). |
16:6 | 'ஆறு வங்கக் கால்களையுடைய தோணி என்னிடமிருந்து வராது' என்று இந்த அடிக்குப் பொருள். தோணியின் பக்கவளை வரிக்கட்டை; இதை வங்கக்கால், வங்கக்கட்டை என்றும் சொல்வதுண்டு. |
16:136 | அவன் ஒரு சொல்லையும் பெறவில்லை; பாதிச் சொல்லையும் பெறவில்லை. |
16:155 | பார்க்க 2:27. |
17:20 | பெண்களின் ஊசி நுனியில் ஓடிச் செல்லுதல் வேண்டும். |
17:22 | ஆண்களின் வாள்களின் முனையில் நடந்து செல்லுதல் வேண்டும். |
17:33 | காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff). |
17:75 | அணில்கள் சேர்ந்த தாருவைப் புருவத்திலிருந்து வீழ்த்தினான். |
17:121 | வைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் ஒரு கத்தி இருந்தது. |
17:236 | கவிநிலை: காலநிலை. |
17:278 | பார்க்க 13:106. |
17:301 | சுவர்க்கத்தின் துருவத்தில் இருக்கும் முதியவனே! |
17:406 | பார்க்க 3:161. |
17:407 | அங்கே உனக்கு ஓர் இடம் கிடைக்காவிடில் - |
17:495 | முன்னர் படைக்கப்பட்ட பேய்க்கு முடிவு வந்தது. |
18:114 | பார்க்க 5:64. |
18:225 | நெசவு செய்யும் கைத்தறியில் நூல் சுற்றும் கருவி. |
18:295 | பார்க்க 4:4. |
18:359 | அதன் பின்னர் வீட்டிலே தைக்கப்பட்ட நீண்ட மேலங்கி. |
18:363 | ஆயிரம் தெறிகளோடு (buttons) தைக்கப்பட்ட புதிய கம்பளியாடை. |
18:370 | பார்க்க 3:553. |
18:388 | எம்மிடத்தில் ஆறு குதிரைகள் இருக்கின்றன. |
18:389 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats); பார்க்க 2:253. |
18:395 | குயில்போல் ஒலிக்கும் ஆறு மணிகளைச் சறுக்கு வண்டியில் கட்டு! |
18:396 | நீலப் பறவைகள் போல் ஒலிக்கும் ஏழு மணிகளைக் கட்டு! |
18:403 | பார்க்க 2:67, 15:293. |
18:523 | குவியல்கள் பெரியவை; விறகுச் சுள்ளிகள் நல்லவை. |
18:532 | கதம்: கோபம். |
18:545 | நாட்டின் சிறந்தது ஏன் உறுமிற்று என்று. |
18:548 | காதலர் சந்திக்கும் கடற்கரையிலுள்ள குடா நாடு எனக் கற்பனையாகக் கருதப்பட்ட இடம். |
18:565 | பார்க்க 2:29. |
19:12 | எனக்கு மனைவியாகி எனது சொந்தமாக வரப்போகும் பெண்ணை. |
19:76 | சலசலத்திரையும் மண்டையோடுகளைக் கண்டான். |
19:155 | பார்க்க 3:159. |
19:172 | மரண உலகின் மாய்வில்லாத/ அழிவில்லாத அருவியில். |
19:209 | ஒரு சிறகு கடலைக் கலக்கிற்று. |
19:217 | நீரில் இருந்தொரு நீர்ச்சக்தி எழுந்தது. |
19:227 | இரண்டு கோடரிகளின் கைப்பிடி நீளத்தில் அதன் நாக்கு இருந்தது. இரண்டு கோடரிகளின் அலகளவு நாக்கு என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் விளங்கியுள்ளனர். |
19:287 | வீசிய காற்றில் காற்றின் மணம் இல்லை; ஏனென்றால் அடுத்த அடியைப் பார்க்க: 'பறந்து கொண்டிருந்த கழுகின் பெரிய இறகுகளினால்'. |
19:369 | செழிப்பான தோட்டங்களில் நாடோ டித் தொழிலாளர்களில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் வதிவிடங்கள் இருந்தன. இரும்புத் தொப்பி அணிந்த ஆண்களிலும் பார்க்க, செப்பில் தலையணி அணிந்த பெண்களிலும் பார்க்க, சணற் துணியில் கைத்துண்டையுடைய கன்னியரே முன்வந்து விருந்தாளிகளை வரவேற்றனர். |
19:381 | சணற்றுணிக் கூரையில் கன்னியர் கோட்டை. |
19:457 | கைத்தறியில் நூல் சுற்றும் கருவி. |
19:458 | பார்க்க 2:292. |
19:461 | கைத்தறியில் நூலைப் பரப்பி இழையோடும் சட்டம். இப்படி இழை யோடுதலைப் பாவோடுதல் என்றும் சொல்வதுண்டு. |
19:480 | நான்கு ஊடிழை நூலின் கீச்சொலியோடு. |
19:484 | இரு வார வயதுடைய குழந்தை இவ்வாறுரைத்தது. |
19:507 | அடிகள் 507, 508, 509, 510 மூல நூலில் உள்ளபடி சரியாகவே தமிழில் இப்படி மொழிபெயர்க்கபட்டுள்ளன: "தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான் இளமையில் திருமணம் செய்து கொள்பவன் பிள்ளைப் பருவம் பிள்ளை பெறுபவன் சிறுபிரா யத்தில் பெறுபவன் குடும்பம்." இந்த அடிகளைப் படிக்கும்போது கிடைக்கும் பொதுவான விளக்கம் வருமாறு: "இளமையில் திருமணம் செய்பவனும் பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப் பெறுபவனும் சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும் தனது கருமங்கள் எல்லாவற்றிற்கும் வருந்துவான்." ஆனால் இந்த மூன்றும் செய்யத் தகாதன அல்ல; அதற்காக வருந்த வேண்டியதும் இல்லை. எனவே அந்த அடிகளுக்கு வேறு உட்பொருள் இருக்க வேண்டும் என்பது அறிஞரின் கருத்து. இந்த நான்கு அடிகளையும் விளங்கிக் கொள்வதில் மொழிபெயர்ப்பாளரிடையே கருத்து வேறுபாடும் உண்டு. சிலர் இப்படியும் விளங்கியுள்ளனர்: "இளமையில் திருமணம் செய்தல், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப் பெறுதல், சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைதல் ஆகியவற்றிற்கு எவன் வருந்துகிறானோ அவன் தன் கருமம் அனைத்துக்கும் வருந்துவான்." பலர் ஏற்றுக் கொண்ட பொருள் இதுவாகும்: "இளமையில் திருமணம் செய்பவனும், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப் பெறுபவனும், சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும், இவை தவிர்த்த மற்ற எல்லாக் கருமங்களுக்கும் வருந்துவான்." இந்தக் கட்டத்தில் வைனாமொயினன் தான் இளமையில் விவாகம் செய்யாததையிட்டு வருந்தியே அவ்வடிகளைக் கூறுகிறான் என்பது கவனிக்கத் தக்கது. |
20:27 | பார்க்க 6:53. |
20:31 | ஒரு மாத காலம் ஓடித் திரிந்த ஒரு கோடையணில் - |
20:115 | பதன் செய்யப்பட்ட இறைச்சி; இதன் பின்னிஷ் பெயர் makkara (sausage). |
20:140 | இது கொத்துக் கொத்தாய்ப் பூக்கும் ஒரு தழுவிப் படரும் செடி. இதன் காய்ந்த பூக்கள் (அல்லது காய்கள்) 'பீர்' பானத்திற்குக் கசப்புச் சுவையுட்டப் பயன்படுத்தபடும். முசுக்கட்டை இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் humala (hop, Humulus lupulus) |
20:143 | remu என்ற பெயர் அடியிலிருந்து வந்த remunen என்ற பின்னிஷ் சொல்லுக்கு ஆரவாரமான சத்தம், மகிழ்ச்சிக் கூக்குரல், இரைச்சல் என்று பொருள். இந்தச் செடி கலந்த புளித்த மதுபானத்தை வடிக்கும் பொழுது ஏற்படும் இரைச்சலை இவ்விதம் கூறியிருக்கலாம். இந்தச் சொல்லை ஆங்கிலத்தில் revel, hubbub என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிலர் மொழிபெயர்ப்புச் சிரமத்தினால் remunen என்ற பின்னிஷ் சொல்லை அப்படியே ஆங்கிலத்திலும் பயன் படுத்தியிருக்கிறார்கள். |
20:146 | இது பூனைக்காஞ்சொறிச் செடி வகை; இந்தச் செடி காஞ்சோன்றி என்றும் அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் viholainen, nokkonen (nettle, Urtica). |
20:197 | மரத்திலிருந்து அல்லது ஏதாவது உலோகத்திலிருந்து சீவிக் கழிக்கப்பட்ட அல்லது கிழிந்து கழிபட்ட சிராய்/சீவல் துண்டு. |
20:223 | இந்த அடியும் அடுத்த அடியும்: தேவதாரு இனமான ஊசியிலை மரங்களின், பசுமை மரங்களின் (fir, pine, cedar) காய். வட்டமான அடிப்புறத்திலிருந்து குறுகி வந்து நுனியில் கூராக முடியும் வடிவமுள்ளவை; அதன் மேற்புறத்தில் செதிள் போன்று பட்டை பட்டையாக மரத்தோல் இருக்கும். இதன் பின்னிஷ் சொல் ka*py (cone). |
20:228 | சடை வாலையுடைய அணில். |
20:231 | இந்த அடியும் அடுத்த அடியும்: அந்த அணில் ஒரு சோலையை முடித்தது: அடுத்த சோலையைக் கடந்தது; மூன்றாம் சோலையையும் குறுக்கே கடந்தது. |
20:265 | பார்க்க 20:197. |
20:289 | புளித்த மாவினுறை, புரையுட்டும் பொருள், மாவைப் புளிக்க வைக்கும் பொருள், மதுபானங்களைப் புளித்துப் பொங்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரை, நொதி, காடிச்சத்து (yeast, leaven). |
20:308 | பாதத்திலும் பின்னர் படிபுரை சேர்த்தது. |
20:329 | இளம் பயற்றங் கன்று (pea pod). |
20:467 | அவனே அஹ்தி, அந்தத் தீவின் அரிய மகன். |
20:509 | குமிழ்கள் எழும்பக் கொதிக்க வைத்து - |
20:510 | சலசலவென ஓசை எழும்பச் சட்டிகளைக் கையாண்டனள். |
21:43 | இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம், நீர்க்காகம் என்றும் சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் பெயர் kaarne (raven, crow). |
21:44 | சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பெளராணிக விலங்கு; இதன் பின்னிஷ் பெயர் lieve (griffin, griffon, gryphon). |
21:72 | வார்: பட்டி(belt). |
21:93 | கோடைக்கோதுமையில் சமைத்த உணவை; அடு - தல் சமை - த்தல். |
21:94 | ஒரு வகைத் தானியம் (rye). பார்க்க 1:93. |
21:104(i) | Kappa 'கப்பா' என்னும் பின்னிஷ் சொல் அந்த நாட்களில் தானியங்களை அளக்கப் பயன்படுத்திய ஒரு முகத்தலளவையைக் குறிக்கும். இது சுமார் ஒரு 'கலன்' அல்லது அரை 'பெக்' அல்லது நாலரை லிற்றருக்குச் சமமான அளவை (gallon, half a peck). |
21:104(ii) | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats); பார்க்க 2:253. |
21:150 | வாங்கு = வாங்குப் பலகை, பலகையாசனம் (bench, wooden seat) |
21:161 | Osma, ahma 'ஒஸ்மா' 'அஹ்ம' என்பன பின்னிஷ் மொழிச் சொற்கள். பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை; கீரியினத்துப் பிராணி என்றும் சொல்வர் (gluton, wolverine, Gulo gulo). |
21:166 | இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் lahna (bream, Abramis brama). நன்னீரில் வாழும் மஞ்சள் நிறமுடைய மீன்வகை. கெண்டை மீனினத்தைச் சேர்ந்தது. |
21:174 | அடுப்பின் வாய்ப்புறத்தில் அல்லது புகைபோக்கி மூலயின் அருகில் அமைந்த ஆசனம். |
21:190 | கீல் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும் பொருள்; தார் (tar). இந்த இடத்தில் வெளிச்சத்திற்காக விளக்குகள் போலப் பயன்படுத்தப்பட்ட கீல் பூசப்பட்ட மரப்பலகைகள் / கம்புகள் என்று பொருள். |
21:218 | கடலில் அல்லது சேற்றில் வளரும் ஒரு வகை நாணல், இதன் பின்னிஷ் சொல் kaisla (bulrush, club rush, Scirpus). |
21:258 | அழிவற்ற பாடலுக்கு ஆதாரமாக விளங்கும் தூண் அவன். |
21:280 | அயர்வு = நிகழ்ச்சி, செய்கை < அயர்-தல். |
21:281 | பார்க்க 21:150. |
21:349 | இந்த அடியில் முளை நிலம் எனப்படுவது மரங்கள் தறிக்கப்பட்ட பின்னர் அடிக்கட்டைகளுடன் காணப்படும் காட்டுநிலம்; அறுவடையின் பின்னர் முளைகளுடன் காணப்படும் வயல் நிலம் போன்றது. வயலில் மண்கட்டிகளை உடைத்துப் பரவுவதற்குப் பயன்படும் கருவி பரம்பு; இதைப் பலுகுக் கட்டை, பலகொழுத்தட்டு என்றும் அழைப்பர். |
21:394 | கடற்கூழாங்கற்களைப் பயற்றம் மணிகளாகவும்; பார்க்க 4:513. |
21:395 | i. மதுவகை செய்வதற்காக நீரில் ஊறப்போட்டு முளைகட்டி உலர்த்திய வாற்கோதுமை முதலிய தானிய வகை, மாவூறல் (malt, wort). [ii. ஊறிய தானியமும் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ஊறற் பானம் (malted milk)]. |
21:405 | தலையில் கொம்புகளையுடைய கால்நடைகள். |
21:411 | இது புள்ளியுள்ள உரோமமும் குறுகிய வாலும் கூர்மையான பார்வையும் கொண்ட பூனையினக் காட்டு விலங்கு; இதன் பின்னிஷ் சொல் ilves (lynx, Lynx lynx). |
21:412 | தலைவியருக்கு அகலத் துணிகளில் மேலாடை. |
22:78 | பார்க்க 2:79. |
22:93 | அன்னையின் மண்ணில் விளைந்த ஒரு சிறுபழம் போல். |
22:94 | இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186. |
22:106 | கதவு வழியால் கன வாயில் வழியால். |
22:224 | பார்க்க 4:215. |
22:259 | இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' அல்லது 'பைன்' என்னும் மரத்தின் கிளையை / சுள்ளியை (spruce, pine). |
22:260 | லாப்புலாந்தில் கலைமான் இழுக்கும் சறுக்கு வண்டி. |
22:261 | 'களஞ்சிய கூடத்தின் வாயிற்படி' என்றும் மொழி பெயர்ப்பு உண்டு. |
22:293 | இந்த அடியும் அடுத்த அடியும்: 'பெண்ணே, நீயொரு வளர்ந்த கோழி போன்ற பருவத்தில் இருப்பதால், உண்மையிலேயே எண்ணிப் பார்த்ததுண்டா?' |
22:331(i) | வஞ்சிர மீன் (salmon); பார்க்க 1:272. |
22:331(ii) | இது ஒருவகை நன்னீர் மீன் (ruff). பார்க்க 3:194. |
22:332 | பார்க்க 3:161. |
22:333(i) | இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் சொல் sa*rki(i. roach, Rutilus rutilus; ii. cyprinid [fish], Cyprinidae). |
22:333(ii) | இது ஒருவகைச் சிறுமீன்; ஒருவகை வெண்ணிற ஆற்று மீன்; இதன் பின்னிஷ் சொல் salakka (bleak, Alburnus alburnus). |
22:334 | இது கடல் வாத்துவகை; இதன் பின்னிஷ் சொல் meriteeri (Glangula glaucion); பின்னிஷ் மொழியில் telkka* என்னும் கடல் வாத்து இனத்தைச் சேர்ந்தது (golden-eye, Bucephala clangula). |
22:340 | 'கடிப்பவர்' 'தேய வைப்பர்' 'அரித்தெடுப்பவர்' என்றும் பொருள் கொள்ளலாம். அடிகள் 335ல் இருந்து 340 வரை பொருள் வருமாறு: "தாயார் பெற்ற பெண்களில், பெற்றோர் பேணி வளர்த்த பெண்களில் ஒருவரும் அறியமாட்டார், ஒன்பது பேரும் அறியமாட்டார் தம்மை(க் கணவராக வந்து ) உண்பவர் எங்கே பிறப்பார் என்பதை; தம்மை(க் கணவராக வந்து) கடிப்பவர் எங்கே வளர்வார் என்பதை". |
22:382 | துணிகளை அடித்துத் தோய்க்கும் தடியொன்று கையினில் இருக்கும். |
22:393 | இவ்வடியில் கூறப்பட்டது sirkku 'சிர்க்கு' என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒரு சிறு இசைக்குருவி (bunting, Emberiza). ஆங்கிலத்தில் 'பிஞ்' (finch) என்னும் பறவை இனத்தைச் சேர்ந்தது. |
22:477 | இவ்வடியில் கூறப்பட்டது மேல் நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை; பெரும்பாலும் பழுப்பு நிற முதுகும் புள்ளிகள் உள்ள நெஞ்சும் உடையது; இதன் பின்னிஷ் சொல் rastas (thrush, Turdus). |
22:484 | எதற்குமே வேண்டாம் இனிய தாயின் மகளே. |
22:521 | இந்த அடியும் அடுத்த அடியும்: கூழாங் கற்களைப்போல பண நாணயங்களும் சிறு கற்களைப்போல சில்லறை நாணயங்களும் குவிந்திருக்கும். |
23:20 | பார்க்க 2:79. |
23:22 | வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம் பட்டுத் துணி வகை (velvet). |
23:28 | மற்றவர் மத்தியில் மறு ஆளாய் வருகிறாய். |
23:47 | சிறுபெண்ணின் இயல்புகள் தூரிகைப் பிடியில் தங்கட்டும். |
23:104 | விளம்பும் சொற்களையும் செய்யும் செயல்களையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல். |
23:121 | பார்க்க 1:304. |
23:148 | ஒவ்வொரு தண்டிலும் மும் மூன்று இலைகளைக் கொண்ட சிறிய செடி; அரிதாக ஒரு தண்டில் நான்கு இலைகள் உண்டாகும்; இந்த நான்கிலைத் தண்டைக் காண்பவருக்கு அதிர்ஷ்டம் வரும் நம்பிக்கையும் உண்டு. இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்சிவப்பு அல்லது வெள்ளை நிறமாக இருக்கும். கால்நடை உணவுக்காக இதைப் பயிரிடுவார்கள். மணப்புல் என்றொரு பெயரும் உண்டு. இதன் பின்னிஷ் பெயர் 'அபிலா' apila (clover,Trifolium). |
23:178 | பார்க்க 4:4. |
23:217 | கைத்துண்டு, கைக்குட்டை, லேஞ்சி (kerchief). |
23:222 | பார்க்க 2:29. |
23:235 | பார்க்க 2:31. |
23:306 | காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff). |
23:320 | பார்க்க 4:310. |
23:352 | பார்க்க 4:4. |
23:360 | கும்மலி - த்தல் |
23:374 | சுற்றியுள்ள பாதுகாப்பு அகழி. |
23:376 | நெய்தற்குரிய பாவு நூல். |
23:386 | தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி. |
23:446 | குளிர் காலத்திலிருந்து அது இரண்டு மடங்காகவே கிடைக்கும். |
23:487 | மூல பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் vaahtokuu; வழக்கிலுள்ள பின்னிஷ் சொல் maaliskuu; இது ஆங்கில 'மார்ச்' (March) மாதத்தைக் குறிக்கும். |
23:499 | இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல் kiuru 'கியுறு' (skylark, lark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்: 'கணவனின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'. |
23:505 | இவ்வடியில் கூறப்பட்டது mesimarja என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒருவகைச் சிறு பழம் (arctic bramble, Rubus arcticus). |
23:510 | இவ்வடியில் கூறப்பட்டது sirkku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒரு குருவி (bunting). பார்க்க 22:393. |
23:529 | இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola (cranberry, cowberry). பார்க்க 10:450. |
23:530 | பார்க்க 2:79. |
23:532 | இது 'அல்டர்' (alder) என்னும் மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
23:534 | இது அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு (aspen). பார்க்க 4:310. |
23:544 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats); பார்க்க 2:253. |
23:547 | "காசுகள்" என்பதற்கு "நல்ல சொற்கள்" , "புகழ்ந்து கூறும் வார்த்தைகள்" என்ற விளக்கமும் உண்டு. அடிகள் 559, 560ஐப் பார்க்கும்போது இந்த விளக்கமும் பொருத்தமாகவே அமைகிறது. அதாவது: அவள் எதிர்பார்த்துச் சென்றது புகழ்ச்சியான சொற்களை; ஆனால் பெற்றதோ இகழ்ச்சியான சொற்களை. |
23:606 | உணவுக்கான ஒருவகைச் சிறிய மீன்; இதன் பின்னிஷ் சொல் kuore (smelt, Osmerus eperlanus). |
23:614 | குதிரை இலாயத்திலுள்ள எருவை வாருவதற்குப் பயன் படுத்தப்படும் கவர்க்கோல்; வைக்கோல்வாரி. |
23:690 | இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைச் சிறிய மரம்; இம்மரத்தின் கவர்த்தடியினால் கால்களும் அமைத்து என்று மொருள் (sallow, goat willow). பார்க்க 2:28. |
23:758 | இது கறுப்பு - வெள்ளை இறகுகளையும் நீண்டொடுங்கிய வாலையும் உடைய இசைபாடும் ஓர் ஐரோப்பியப் பறவை வகை; இது பிரகாசமான சிறிய பொருட்களைக் கண்டால் கொத்திக் கொண்டு பறந்து விடும். இது புறா இனத்தைச் சேர்ந்தது என்றும் சொல்வர்; இதன் பின்னிஷ் சொல் harakka (magpie, Pica pica). |
23:809 | இவ்வடியில் கூறப்பட்டது முட்டைக்கோசுவில் / முட்டைக் கோவாவில் செய்யப்பட்ட ரசத்தை (cabbage soup). |
24:11 | பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பழுப்பு நிறமான இசைபாடும் சிறு பறவை; மூல நூலில் உள்ள பின்னிஷ் சொல் linnanlintu; பேச்சு மொழியில் hemppo (linnet, hemp-bird, Carduelis cannabina). |
24:40 | பார்க்க 20:223. |
24:56 | இது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்புச் சுவையுள்ள இலைகளையுடைய ஒருவகைப் பூண்டு; இதன் பின்னிஷ் சொல் suolaheina* (sorrel, Rumex). இதைத் தமிழில் புளியாரை என்றும் சொல்வர் (yellow wood-sorrel, Oxalis corniculata). |
24:83 | பார்க்க 1:304 |
24:91 | பார்க்க 6:54. |
24:92 | பார்க்க 24:11. |
24:119 | இது சேம்பையினத்தைச் சேர்ந்த ஒரு செடி; இதன் பின்னிஷ் சொல் vehka (arum, Calla palustris, Araceae). |
24:121 | பின்லாந்தில் குறிப்பாக வட பகுதியில் கடும் குளிராகையால் வருடத்தில் சில மாதங்களே பயிர் செய்யக் கூடியதாக இருந்தது. அதனால் முற்காலத்தில் பஞ்ச நாட்களில் வைக்கோல், மரப்பட்டை, சேம்பை இனத்தைச் சேர்ந்த சில கிழங்கு வகைகள் ஆகியவற்றை அரைத்து ரொட்டி சுட்டுச் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது. (அடுத்து வரும் அடிகளில் இத்தகைய வேலைகள் மணப் பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை என்று சொல்வதால் அது ஒரு வசதியான வீடு என்று அர்த்தமாகிறது.) |
24:148 | பார்க்க 24:11. |
24:176 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats); பார்க்க 2:253. |
24:178 | பார்க்க 24:11. |
24:183(i) | ஒரு முகத்தலளவை; பார்க்க 21:104. |
24:183(ii) | இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் பெயர் pappu (bean, Phaseolus). பயற்றம் இன விதை என்ற மொழிபெயர்ப்பும் உண்டு. |
24:184 | இந்த அடியும் அடுத்த அடியும்: ஒரு படி அவரை (/ பயறு) விதைத்து அதன் விளைச்சலைப் பங்கிட்டால் ஒருவருக்கு ஒரு மணிதான் கிடைக்கும்; ஏனெனில் அப்பெண்ணுக்கு அவ்வளவு இனசனம். அடிகள் 24:286, 187க்கும் இப்படியே பொருள் கொள்க. |
24:212 | அப்பிள் (ஆப்பிள்) பழம்; இதன் பின்னிஷ் பெயர் omena (apple). |
24:221 | இது நீர்க்கரையில் வளரும் ஒரு புல்லினம்; நாணற் புல் வகை; கோரைப் புல்வகை; இதன் பின்னிஷ் சொல் ruoko (reed, Phragmites communis). |
24:222 | (i)இது குதிரைவால் போன்ற குறிமறையினச்செடி; இதன் பின்னிஷ் சொல் korte (horse-tail, Equsetum). (ii) குதிரை வாலிப்புல்: ஒரு புல்வகை (A species of grass, Panicum brizoides). |
24:242 | வீடு கட்டப் பயன்படுத்தப் பட்ட பலகைகளின் பொருத்துகளில் பாசியை வைத்து அடைத்து நீர் புகாதவாறு செய்தல். இந்த அடியில் 'சப்தம் வெளியேறாதவாறு பாசியால் மூடப்பட்ட அறையில்' என்று பொருள். |
24:271 | இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல் kiuru, leivo[nen] (skylark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்: 'பெண்களின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'. 23:499யும் பார்க்க. |
24:375 | இது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
24:384 | பார்க்க 21:411. |
24:414 | இளமைப் பருவத்தில் அதற்கு நீர் அருந்த வைத்தேன். |
24:471 | பார்க்க 2:27. |
24:492 | காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff). |
24:495 | இது ஒரு வகைப் பாத்திரம் (cup, wide-mouthed vessel). |
25:36 | பார்க்க 13:219. |
25:43 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறுபழம்; பார்க்க 2:79. |
25:85 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats); பார்க்க 2:253 |
25:108 | இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் lehmus என்னும் ஒருவகை மரத்தை / மரத்தின் பலகையை (linden, Tilia). |
25:122 | சணல் போன்ற பிடர் மயிரை உடைய பொலிக்குதிரை. |
25:125 | கோழிக் குஞ்சை இங்கு அழைத்து வந்ததனால். |
25:168 | சிறந்த மேலங்கியணிந்த அழகான ஒருவருக்கு. |
25:228 | இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி (marten); பார்க்க 2:245. இந்த அடியில் மணமகளைக் குறிக்கிறது. |
25:241 | இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் tuomi என்ற சிறு பழச்செடியை (bird cherry, Prunus padus). |
25:242 | பார்க்க 25:241. |
25:255 | இது சேற்று நிலங்களில் வாழும் ஒரு காக்கையினம்; இதன் பின்னிஷ் சொல் varis (crow, Corvus, hooded crow, Corvus corone cornix). |
25:256 | பார்க்க 23:758. |
25:264 | இற்கு: இல்லுக்கு. |
25:266 | பெரிய / நீண்ட செவிகளையுடைய சுண்டெலி. |
25:282 | மிகச் சிறந்த நாட்டினால் கொண்டு வரப்பட்டவள். |
25:283 | இது ஒருவகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450. |
25:284 | இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79. |
25:286 | இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79. |
25:341 | பார்க்க 1:44. |
25:372 | இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93. |
25:400 | Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம் செலுத்திக் கொள்வனவு செய்யபடாத தேன். |
25:417 | "வாய்க்கு வாய்" என்பதே சரியான மொழிபெயர்ப்பு; இதனை "உதட்டுக்கு உதடு" என்றும் "நேர்க்கு நேர்" என்ற கருத்தில் "முகத்துக்கு முகம்" என்றும் சிலர் மொழி பெயர்த்துள்ளனர். |
25:420 | தாய் பெற்ற மக்கள் தோளொடு தோளாய் நிற்பதும் அரிது. இந்த அடியில் "தோளொடு தோளாய்" என்பதற்கு அருகருகாய், அக்கம் பக்கமாய் என்று பொருள். |
25:427 | 'Sineta*r' என்னும் பின்னிஷ் சொல்லில் 'sini' நீல வர்ணத்தைக் குறிக்கும். '-ta*r' என்பது பெண்பால் விகுதி. அதனால்தான் 'நீலமகளார்' என்று தமிழில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. இதனைச் 'சாயத் தொழிலின் தேவதை' என்றும் துணிகளுக்குச் சாயம் போடும் பெண்கள் என்ற பொருளில் 'சாய மகளார்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர். |
25:428 | இதிலும் பின்னிஷ் மொழியில் துணி என்னும் பொருளுள்ள 'kangas' என்ற சொல்லும் -ta*r' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'தறிமகளார்', 'துணி மகளார்', 'நெய்தற் தொழிலின் தேவதை' என்று மொழிபெயர்ப்புகள் உண்டு. |
25:440 | பார்க்க 24:121. |
25:485 | பார்க்க 2:27. |
25:550 | காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff). |
25:606 | Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம். |
25:623 | ஒருவகைச் சிறுபழம்; பார்க்க 2:79. |
25:624 | இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola; பார்க்க 10:450. |
25:630 | கைத்தறியில் நூல் சுற்றும் கருவி. |
25:732 | முனையில் மணிகள் கட்டிய சவுக்கால் அடியாமலே குதிரை விரைந்தது. |
26:45 | இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை. இதன் பின்னிஷ் சொல் peiponen (chaffinch, finch, Fringilla coelebs). |
26:46 | இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய பறவை. இதன் பின்னிஷ் சொல் pulmonen (snow bunting, Plectrophenax nivalis). பார்க்க 11:385. |
26:60 | பார்க்க 21:411. |
26:139 | பார்க்க 2:26. |
26:146 | இது சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு. கழுகரி என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் சொல் vaakalintu (giant bird, [eagle], griffin). |
26:232 | இது பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல் sisilisko (lizard, Lacertidae). 'பல்லி இனப் பிராணிகளின் கூட்டத்தால் கட்டப்பட்ட வேலி' என்பது இந்த அடியின் பொருள். |
26:281 | வார்: இடுப்புப்பட்டி. |
26:308 | இது ஒரு வகை முட்செடி; மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை; இதன் பின்னிஷ் பெயர் koirankieli (dogstongue, Cynoglossum officinale). |
26:347 | பார்க்க 2:31. |
26:555 | அந்த நாட்களில் வழக்கிலிருந்த ஒரு நீட்டல் அளவை; பின்லாந்தில் 1069 மீற்றரும் ரஷ்ஷியாவில் 1067 மீற்றரும் கொண்ட நீட்டல் அளவையாகக் கருதப்பட்டது; இதன் பின்னிஷ் சொல் virsta (verst). |
26:693 | பார்க்க 15:595. |
26:744 | வார்: இடுப்புப்பட்டி. |
26:761 | இது ஒருவகைப் பூடு பார்க்க 223. |
27:19 | பார்க்க 25:108. |
27:40 | முளைகள்: முள்ளுகள், கொளுவிகள்; அடிகள் 56, 57ன் படி கையுறைகள் முள்ளுகளிலும் கொளுவிகளிலும் தொங்கவிடப்பட்டதாகத் தெரிகிறது. கலயங்கள் தொங்கவிடப்படும் கொளுவிகள் என்றும் ஒரு மொழிபெயர்ப்பு உண்டு. |
27:111 | இது தானியங்களை அளக்கும் ஒரு முகத்தலளவை; பதினெட்டுக் 'கப்பா' கொண்டது. இதன் பின்னிஷ் சொல் ma*a*ra*, 21:104யும் பார்க்க. |
27:112 | மூடைக் கணக்கில், 'தொன்' (ton) கணக்கில், அரையரை மூடையாய், அரையரைத் தொன்னாய் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். |
27:120 | பின்னிஷ் நூலில் leiviska* என்று சொல்லப் படுகிறது; இது பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுத்தல் அளவை. சுமார் பத்துக் கிலோவுக்குச் சமமானது என்று கருதப்படுகிறது. இதனைக் காற்பங்கு என்றும், ஒரு இறாத்தல் என்றும், இருபது இறாத்தல் என்றும் வெவ்வேறு விதமாக மொழிபெயர்த்துள்ளனர். |
27:135 | இந்த அடியில் கூறப்பட்டது வெள்ளை அல்லது வெள்ளை ஊதா நிறங்கள் சேர்ந்த வட்டமான ஒரு வகைக் கிழங்கு. இதன் பின்னிஷ் பெயர் nauris 'நெளறிஸ்' (turnip, Brassica rapa). |
27:215 | 'பெண்கள் வளர்த்த' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். |
27:226 | வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடி ஓநாயைத் தோன்றச் செய்தான். |
27:248 | அழகான உரோமத்தையுடைய கீரி. |
27:250 | வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடிக் கோழியைத் தோன்றச் செய்தனன். |
27:255 | நகப்புள்: நகங்களையுடைய பறவை. |
27:300 | இது அந்த காலத்தில் இருந்த ஒரு போர்முறை. சண்டை செய்பவர்கள் சண்டையைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் வாள்களை அளந்து பார்ப்பர். எவருடைய வாள் நீளமாக இருக்கிறதோ அவரே முதலில் வாளை வீச வேண்டும். |
27:326 | 'வயதான பெண்களிடம் வாதாடும் செயலும்' என்றும் ஒரு மொழிபெயர்ப்பு உண்டு. |
27:382 | பார்க்க 27:135. |
28:140 | லெம்மின்கைனன் தனது பயணத்துக்கு உணவையும் உணவுப் பொருட்களையும் உப்பையும் கட்டும்படி தாயிடம் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. யாராவது வீடு குடிபுகு விழாவுக்கு அழைத்தால், அழைப்பை ஏற்றுச் செல்பவர்கள் பரிசுப் பொருட்களாக உப்பும் ரொட்டியும் கொண்டு செல்வது இன்றைக்கும் இந்நாட்டில் வழக்கத்தில் உள்ளது. |
28:212 | இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைப் புதர்ச் செடியின் சிறுபழம். இதன் பின்னிஷ் பெயர் puolukka (cowberry, lingonberry, mountain cranberry, Vaccinium vitis-idaea). பார்க்க 10:450. |
28:213 | பார்க்க 2:79. |
28:214 | இது ஒரு கருநீல நிறமுள்ள சிறுபழம். இதன் பின்னிஷ் சொல் mustikka (bilberry, blueberry, whortleberry, Vaccinium myrtillus). |
28:218 | ஈய நெஞ்சத்து ஒண்டொடி ஒடித்து எடுப்பர். |
29:14 | பார்க்க 21:411. |
29:41 | "சொற்கள் இல்லாத தீவு" என்பதே சரியான மொழிபெயர்ப்பு. சொற்கள் இல்லாத தீவு என்பதால் குடிமக்கள் இல்லாத தீவு என்றும் பெயரில்லாத தீவு என்றும் சில பொழிபெயர்ப்பாளர் விளங்கியுள்ளனர். |
29:128 | அந்த நாட்களில் இருந்த ஓர் அளவை; இதன் பின்னிஷ் சொல் karpio; பத்துக் 'கப்பா' அளவு கொண்டது; இந்த அடியில் நிலத்தின் அளவையாக வரும் 'கப்பா' என்பது தானியங்களை அளக்கும் முகத்தலளவையாக முன்னர் கூறப்பட்டது. ஆங்கிலத்தில் 'bushel' என்றும் 'five-peck' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் இந்த அடியை "ஒரு 'புஷல்' பெறுமதியான நிலமும் இல்லை" என்கிறார். மேலே 21:104யும் பார்க்க. |
29:153 | பார்க்க 2:29. |
29:266 | குக்கடக் குஞ்சு: கோழிக் குஞ்சு; பின்னிஷ் மூல நூலில் 'கோழியின் பிள்ளை' என்று சொல்லப் பட்டது. |
29:268 | 'சிரிக்க வைத்தனன்' 'நகைக்க வைத்தனன்' 'புன்னகையூட்டினன்' என்பதே நேரடி மொழிபெயர்ப்பு. சிலர் அப்படியே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் 'தன்வசப்படுத்தினன்', 'இன்பமூட்டினன்' 'கற்பழித்தனன்', 'அவமதித்தனன்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர். |
29:344 | இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம் என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43. |
29:373 | ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79. |
29:374 | ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186. |
29:459 | பார்க்க 2:21. |
29:460 | பார்க்க 2:22. |
29:464 | இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறிய பழச்செடி; பார்க்க 2:27. |
29:494 | இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம் என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43. |
29:523 | பார்க்க 26:555. |
29:574 | பார்க்க 29:41. |
29:582 | பார்க்க 2:23. |
29:585 | பார்க்க 2:22. |
29:586 | இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம். இதன் பின்னிஷ் சொல் peta*ja* (pine, Pinus silvestris). |
29:595 | பானை வயிறுடைய எளிய பிறவிகள். |
30:103 | இந்த அடியிலிருந்து அடி 106 வரை ஈட்டியின் அலங்கார வர்ணணை: ஈட்டியின் முனையில் ஒரு குதிரை நின்றது; அலகின் அருகில் ஒரு முயல் குதிக்கும் பாவனையில் நின்றது; பொருத்தில் ஓநாய் ஊளையிட்டது; ஈட்டியின் குமிழில் கரடி உறுமிக் கொண்டிருந்தது. |
30:156 | கடலின் கரையோரத்து நீரைப் பனிக்கட்டிகளாக்கிக் கடினமாக்கினான். |
30:159 | இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை. (chaffinch); பார்க்க 26:45. |
30:160 | வாலாட்டிக் குருவியின் பின்னிஷ் பெயர் va*sta*ra*kki (wagtail, Motacilla). |
30:165 | நாண்: நாணம். |
30:167 | விசை: சக்தி. |
30:252 | பார்க்க 2:23. |
30:327 | கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதியே கடல்முனை எனப்படும்; இங்கே 'பசிக்கடல்முனை' என வர்ணிக்கப்பட்ட இடம் உணவுப் பஞ்சமுள்ள பிரதேசம் எனச் சில ஆய்வாளர் கூறுகின்றனர். |
30:339 | நெருப்பே, இந்த மூடக் கோட்டையை எரிப்பாய்! |
31:4 | அந்தத் தாய் அன்னங்களை ஆற்றுக்குக் கொண்டு வந்தாள். மேலே 14:377ஐயும் பார்க்க. |
31:35 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats); பார்க்க 2:253. |
31:95 | பார்க்க 25:108. |
31:148 | தமக்குத் தெரிந்த தார் வடியும் மரங்களை. |
31:156 | இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் saarrnipuu (ashwood). இதை 'ஸார்னி மரம்' என்று அல்லது 'ஸார்னிப் பலகை' என்று சொல்லலாம். எனவே இந்த அடிக்கு "saarni 'ஸார்னி' (ash, Fraxinus) மரங்கள்/ பலகைகள் நூறு கையளவு" என்று பொருள். |
31:282 | எனது சீழ்க்கை ஒலி இங்கிருந்து உருண்டு போய்ச் சேரும் தொலை வரை. |
31:311 | பார்க்க 8:172. |
31:313 | முழுத் தாருவை அப்படியே கொண்டு வந்து. பார்க்க 2:22. |
31:316 | பார்க்க 2:29. |
31:321 | ஒரு பறவைக்குச் சமமான உயிரினம் அல்லாமல். |
31:343 | பார்க்க 1:93. |
31:349 | எசமானரும் அந்த வழியாக வந்தாரப்பா. |
32:23 | இந்த அடியும் அடுத்த அடியும்: ரொட்டியைச் சுடும்பொழுது மேற்படையில் ஒரு வகைப் புல்லரிசித் தானியத்தையும் (oats) கீழ்ப்படையில் கோதுமையையும் (wheat) வைத்து இரண்டுக்கும் நடுவில் கல்லை வைத்தாள். 2:253யும் பார்க்க. |
32:57 | வெளிக்கணும் = வெளியிடத்திலும். |
32:65 | பார்க்க 2:30. |
32:66 | பார்க்க 2:26. |
32:67 | பார்க்க 2:29. |
32:68 | பார்க்க 2:27. |
32:83 | கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே! |
32:87 | பேரிச் செடி மகளே! பார்க்க 2:29. |
32:88 | சிறுபழச் செடிச் சேய்! பார்க்க 2:27. |
32:117 | கொம்பு, குழல் (horn, trump). |
32:134 | வெள்ளி போன்ற புல்லின் தாள்களால் மிகுந்த உணவை ஊட்டுங்கள். |
32:157 | பசுவின் மடியில் பால் வற்றியவுடன், வெறுப்புடைய நெஞ்சங்கள் அல்லது தீய நினைவுடைய விரல்கள் செய்த சாபத்தினாலோ சூனியத்தினாலோ மடியில் இருந்த பால் 'மனா' எனப்படும் மரண உலகம் போய்விட்டதாகக் கருதப்பட்டது. |
32:165 | பார்க்க 1:44. |
32:171 | பார்க்க 1:44. |
32:206 | மரத்தின் வாளி என இவ்வடியில் கூறப்பட்டது 'ஜுனிப்பர்' என்னும் மரத்தினால் செய்யப்பட்ட கொள்கலம்; மேலே 2:31ஐயும் பார்க்க. |
32:207 | கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே! |
32:209 | பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் syo*tikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு 'உண்ணும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் உண்பது, உண்பவன், உண்பவள், உண்பவர் என்று மொழிபெயர்க்கலாம். இது உண்ணு - தல் என்னும் பொருளுடைய syo*/da* என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த வினையாலணையும் பெயர் (participal noun). |
32:210 | பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் juotikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு 'பருகும்/குடிக்கும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் பருகுவது/ குடிப்பது, பருகுபவன்/குடிப்பவன், பருகுபவள்/குடிப்பவள், பருகுபவர்/குடிப்பவர் என்று மொழிபெயர்க்கலாம். இது பருகு-தல்/ குடி-த்தல் என்னும் பொருளுடைய juo/da என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த வினையாலணையும் பெயர் (participal noun). |
32:211 | இந்த அடியிலிருந்து அடி 214 வரை; நரம்புளாள், புதியவள், இனியவள், அப்பிளாள் (=அப்பிள் பழம் போன்றவள்) என்பனவும் பசுக்களின் பெயர்கள். Hermikki, Tourikki, Mairikki, Omena என்ற பின்னிஷ் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. |
32:214 | பார்க்க 1:44. |
32:223 | முகிலில் உறையும் பாலாடைப் பெண்களில் இருந்து. 'முகிலில் உறையும் தயிர்ப்பெண்களிலிருந்து' என்றும் மொழிபெயர்க்கலாம் (புகார்: முகில்). |
32:289 | பார்க்க 2:22. |
32:290 | பார்க்க 29:586. |
32:303 | பார்க்க 2:29. |
32:304 | பார்க்க 2:31. |
32:310 | பார்க்க 2:27. |
32:315 | அப்பிள் [ஆப்பிள்] எல்லோராலும் விரும்பப்படும் ஓர் இனிய பழம். இதன் பின்னிஷ் பெயர் omena (apple). இந்த அடியில் 'காட்டுப் அப்பிள்' என்பது காட்டில் வாழும் கரடிக்கு ஒரு செல்லப் பெயர். |
32:316 | முன் வளைந்த முதுகையுடைய கரடியே, தேன் போன்ற பாதங்களையுடைய கரடியே. |
32:317 | இப்பொழுது நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்வோம். |
32:321 | விரிந்த குளம்புகளையுடைய கால்நடை. |
32:326 | எக்காளம் என்பது ஒருவகை ஊதுகுழல். |
32:372 | பார்க்க 32:321. |
32:406 | எனது கால்நடைகளுக்காக நான் தங்கியிருக்கும் (நம்பியிருக்கும்) வைக்கோலைத் தவிர்த்து. |
32:425 | கோடை காலம் வரும்பொழுது, சதுப்பு நிலத்தில் உறைந்திருந்த நீர் உருகும் பொழுது. |
32:450 | தேன் போன்ற பாதங்களையுடைய கரடி. |
32:454 | கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் அடைப்புகள் வேறு உண்டே. |
32:481 | கிரியாவும் கரியாவும் பசுக்களின் பெயர்கள். |
32:490 | பார்க்க 32:321. |
32:525 | பேரியில் செய்த கழுத்து வளையம்; பார்க்க 2:29. |
32:533 | காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff). |
33:20 | ஆண்டவன் கைச் சக்கரமே, அதிகனன்று ஒளிர்வாய்! |
33:31 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் இதன் பின்னிஷ் பெயர் kaura; பார்க்க 2:253. |
33:33 | வைக்கோலை அரைத்து அந்த மாவினால் சுட்ட ரொட்டியை. |
33:34 | தேவதாரு மரப்பட்டையில் சுட்ட ரொட்டி; மேலே 24:121ஐயும் பார்க்க. |
33:35 | இந்த அடியும் அடுத்த அடியும்: மிலாறுவின் கூம்பு வடிவமான காய்களில் செதிள் போன்ற தோல் இதழ்கள் உண்டு. இத்தகைய சிறிய அகப்பையில் ஈரமான புல்மேட்டின் உச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட நீர். |
33:54 | இந்த அடியில் கூறப்பட்ட கீரை முட்டைக்கோசு. இதைக் கோசுக்கீரை, கோவிக்கீரை, முட்டைக்கோவா என்றும் அழைப்பர்.(cabbage, Brassica) |
33:56 | பின்னிஷ் மொழியில் musta என்றால் கறுப்பு நிறம். இந்த அடியில் வரும் நாய்க்கு Musti என்று பெயர். இதனைச் சிலர் ஆங்கிலத்தில் Blackie என்று மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் இதனைக் கறுப்பன், கறுப்பி, கறுப்பு என்று சொல்லலாம். |
33:57 | புள்ளிகளையுடைய நாய்க்குப் புள்ளி என்ற பெயர் வந்தது. இதன் பின்னிஷ் சொல் merkki. |
33:58 | பழுப்புநிற நாய்க்குப் பழுப்பு என்ற பெயர் வந்தது. இதை நரை நிற நாய் என்றும் விளங்கியுள்ளனர். இதன் பின்னிஷ் பெயர் Halli. |
33:105 | இடுப்புப்பட்டியில் அல்லது காலணியில் இருக்கும் வளையத்தைக் (buckle) குறிக்கிறது. |
33:111 | சாணம் பட்ட தொடைகளையுடைய பசுக்கள். |
33:117 | சின்னவள்: பசுவின் பெயர். |
33:118 | வெண்முதுகாள்: பசுவின் பெயர். |
33:142 | பால் கறக்கும் நேரம் வந்தது; பால் கறக்கும் நேரம் வரக் கூடியதாகக் கதிரவன் விரைந்து சென்றனன். |
33:155 | துவோமிக்கி: பின்னிஷ் மொழியில் tuomi என்னும் சிறு பழத்தின் பெயரிலிருந்து வந்தது. இந்த அடியில் இச்சொல் ஒரு பசுவின் பெயர்; பார்க்க 2:27. |
33:156 | பன்னிறத்தாள்: பசுவின் பெயர். |
33:283 | அவள் தன் இடத்தை மாற்றி அமையாது அதே இடத்தில் வீழட்டும். |
33:288 | கலயத்திலிருந்து கீழே விழும் கரிக்கறை போல அவள் வீழ்ந்தாள். |
33:296 | ஓர் இனிமையான மணமகளாக 22ம் பாடலில் வர்ணிக்கப்பட்ட ஒரு பெண் பெரிய கொடுமைக்காரியாக இப்பாடலில் கூறப்படுவதற்கான விளக்கம் எங்கேனும் தரப்படவில்லை. விவாகத்தின் முன்னர் அல்லது விவாகத்தின் போது அப்படி இருந்த ஒரு பெண் பின்னர் இப்படி மாறுவது ஒரு மனித இயல்பு என்பதை இது உணர்த்துவதாக இருக்கலாம் என்று ஓர் உரையாசிரியர் கருதுகிறார். |
34:35 | பார்க்க 4:215. |
34:63 | இது கடல் பறவைகளில் பெரிய நீண்ட சிறகுகளையுடைய ஓர் இனம். பெரும்பாலும் வெள்ளையும் கறுப்பும் அல்லது வெள்ளையும் சாம்பர் நிறமும் கொண்ட இறகுகளை உடையன. இதன் பின்னிஷ் சொல் kajava, lokki (gull, seagull, sea-mew, Laridae). |
34:64 | இது ஒரு வகைக் கடற் பறவை; பார்க்க 34:63. |
34:65 | பார்க்க 6:53. |
34:66 | பார்க்க 6:54. |
34:73 | இது பின்னிஷ் மொழியில் telkka* என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு வாத்து. பார்க்க 22:334. |
34:74 | இது நிலத்தில் உணவுண்ணும் தாரா வகை; இதன் பின்னிஷ் சொல் sorsa ([wild] duck, mallard, Anatinae). |
34:75 | இது ஒருவகைக் கடல்வாத்து; இதன் பின்னிஷ் சொல் tavi ([common] teal, Anas crecca). |
34:76 | இது ஒருவகை நீர்வாத்து; இதன் பின்னிஷ் சொல் koskelo (merganser, Mercus). |
34:192 | பின்னிஷ் மொழியில் solki எனப்படும் இந்த ஆபரணம் தொப்பி, காலணி, இடுப்புப் பட்டி ஆகியவற்றில் இருக்கும் பதக்கம் போன்றது. பெண்கள் அணியும் `புறூச்` எனப்படும் பதக்கம் போன்ற மார்புசியையும் குறிக்கும். |
34:214 | இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186. |
35:26 | பார்க்க 10:346. |
35:61 | என்றுமே நீ மீன் அடிப்பவன் ஆகமாட்டாய். |
35:220 | இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186. |
35:221 | இது ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79. |
35:222 | இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186. |
35:254 | பார்க்க 10:450. |
35:296 | இந்த அடியிலிருந்து 307ம் அடிவரை: "அன்னையே, அன்றைக்கு என்னை நீ ஈன்ற பொழுது, அந்த நாள் என்னை நீ அரிதீன்ற பொழுது, சவுனா அறையில் புகையை நிரப்பிக் கதவைப் பூட்டி அந்தப் புகையில் என்னை மூச்சடைக்க வைத்து ஈர்இரா வயதில் என்னை அழித்திருந்தால் - முரட்டு படுக்கைத் துணியில் என்னைச் சுற்றிக் கொண்டு வந்து நீருக்குள் ஆழ்த்தியிருந்தால்- எனது தொட்டிலைக் கொழுத்தி அடுப்பில் இட்டிருந்தால் - (அப்பொழுதே இறந்து போயிருப்பேன்; இந்த கொடுமை நிகழ்ந்திருக்காது)" |
35:311 | இந்த அடியிலிருந்து அடி 314 வரை: `நான் சவுனாவில் தானிய முளைகளில் இருந்து சுவையான பானம் வடித்துக் கொண்டு இருந்த நேரத்தில் தொட்டில் நெருப்பில் எரிந்து போய் விட்டது` என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் இந்த நான்கு அடிகளையும் விளங்கியுள்ளனர். |
35:372 | முன்னொரு நாள் குல்லர்வோ உந்தமோவிடம் அனுபவித்த கொடிய செயல்களையே இங்கு இகழ்ச்சியாக `நற்செயல்கள்` என்று கூறுகிறான். உந்தமோ தனக்குச் செய்தவற்றை அவன் இப்போது எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் தன் தந்தை தாய்க்குச் செய்த கொடுமைக்கே பழி வாங்க நினைக்கிறான். 34ம் பாடலில் அடிகள் 98, 99, 100ஐயும் பார்க்க. |
36:77 | இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் karpalo (cranberry, Oxycoccus quadripetalus). |
36:79 | இது `வில்லோ` (willow) என்னும் சிறிய மரம். அலரி இனத்தைச் சேர்ந்தது. பார்க்க 2:28. |
36:99 | பார்க்க 36:77. |
36:101 | பார்க்க 36:79. |
36:121 | பார்க்க 36:77. |
36:123 | இம்மலரின் பின்னிஷ் பெயர் lumme; பார்க்க 3:322. |
36:124 | பார்க்க 13:219. |
36:225 | அதன்பின் பட்டுத் துணியினால் நன்கு சுற்றட்டும். |
36:287 | பார்க்க 33:56. |
37:23 | இந்த அடியும் அடுத்த இரண்டு அடிகளும்: "நான் மாலைப் பொழுதுக்காக ஏக்கம் கொள்ளவில்லை; காலை வேளைக்காக மனத்துயர் கொள்ளவில்லை; மற்றைய வேளைகளுக்காக மனத்துயர் கொள்ளவில்லை. (ஆனால்-) |
37:172 | சிறிய பறவையைப் போன்ற பொற்பாவையைக் குளிப்பாட்டினான். இவ்வடியில் மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய இசைப்பறவையை ஒப்பிட்டுக் கூறப்பட்டது (chaffinch, finch). பார்க்க 26:45. |
37:173 | இவ்வடியில் கூறப்பட்டது ஒரு இசைப்பறவையை. அந்த இசைப் பறவை போன்ற பொற்பாவை என்று பொருள் (snow bunting, Plectrophenax nivalis). பார்க்க 11:385. |
37:216 | மாயாரூபம், பிசாசுத்தோற்றம், வெருளி என்றும் மொழிபெயர்க்கலாம். |
38:63 | இவ்வடியில் கூறப்பட்ட மீன், விலாங்கு போன்று தட்டையான தலையும் கீழ்த் தாடையில் மெல்லிய நீண்ட தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை. பெரும்பாலும் வட ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. இதன் பின்னிஷ் சொல் matikka, made (burbot, Lota lota). |
38:127 | பார்க்க 36:77. |
38:128 | பார்க்க 24:119. |
38:144 | செம்பினாலான பட்டியை அணிந்த அவள் முறையிட்டாள். |
38:162 | பார்க்க 2:292. |
38:166 | பார்க்க 13:75. |
38:196 | வளைந்த காலையுடைய முயல். |
38:233 | ஓரி: நரி. |
38:244 | நீண்ட முகத்தையுடைய ஓநாய். |
38:255 | பார்க்க 29:268. |
38:282 | இது ஒரு கடற்பறவை. 34:63. |
39:19 | 9 x 6 = 54 அடி ஆழம். பார்க்க 10:429 |
39:40 | வலிக்கும் தண்டுகளை உள்ளங் கைகள் பற்றியிருக்கும். |
39:47 | பரந்த நீர்ப்பரப்பை மின்னச் செய்வது. |
39:87 | அதனை உலையிலிருந்து எடுத்துப் பட்டடைக் கல்லுக்குக் கொண்டு வந்தான். |
39:88 | (தொடர்ந்து) சம்மட்டிகளுக்கும் சுத்தியல்களுக்கும். |
39:103 | இந்த அடியிலிருந்து அடி 108 வரை வாளின் அலங்கார வர்ணனை: வாளின் முனையில் சந்திரன் திகழ்ந்தது; வாளின் பக்கத்தில் சூரியன் பிரகாசித்தது; வாளின் கைப்பிடியில் நட்சத்திரங்கள் மின்னின; வாளின் அலகில் ஒரு குதிரை கனைக்கும் பாவனையில் நின்றது; வாளின் குமிழில் ஒரு பூனை 'மியாவ்' என்று கத்தும் பாவனையில் நின்றது; வாளின் உறையில் ஒரு நாய் குரைக்கும் பாவனையில் நின்றது. |
39:132 | சணல் போன்ற பிடர் மயிரையுடைய குதிரை. |
39:140 | பார்க்க 2:22. |
39:164 | பார்க்க 10:346. |
39:170 | பார்க்க 4:215. |
39:193 | என்னை ஒருவரும் பயன்படுத்தாதபடியால், என்னைச் செதுக்கிய பின் மிஞ்சிய கழிவுத் துண்டுகளில் கிடந்து நான் உழுத்துப் போகிறேன். |
39:247 | நிற்கு: நினக்கு, உனக்கு. |
39:283 | வார்: பட்டி, இடுப்புப்பட்டி (belt). |
39:319 | பார்க்க 2:29. |
39:329 | கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதி கடல்முனை எனப்பட்டது. |
39:338 | கப்பலின் அடிப்புறம், அடித்தளம். ஏராக்கட்டை என்றும் சொல்லப்படும் (keel). |
39:416 | கவனிப்பு, அதாவது படகின் பாதுகாப்புப் பற்றிய கவனம் படகைக் கவிழ்க்க மாட்டாது. |
39:417 | வைக்கோல் போருக்கு ஆதாரமாக நிற்கும் மரமே வைக்கோலைச் சிந்தும் வேலையைச் செய்யாது. |
40:16 | தார்பூசப்பட்ட படகு போகின்ற வழியில். |
40:;48 | சிலைவலு மகனே: கற்சக்தி மகனே: நீர்வீழ்ச்சியின் அடியில் கப்பல்கள் செல்லும் பாதையில் இருக்கும் பயங்கரமான பாறைகளுக்குத் தலைவன் என்றும், இத்தலைவன் கற்களின் சக்தியின் அல்லது பாறைகளின் ஆவியின் மகன் என்றும் கூறப்படுகிறது. |
40:58 | 'சலப்பை' 'சுவாசப்பை' என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு. |
40:132 | எலும்பை அழிக்கும் சக்தியுடைய வாளைப் பக்கத்திலிருந்து (உருவினான்). |
40:139 | வேலை: கடல் (sea, ocean). |
40:240 | பிசாசு போன்ற வீரமடக்கிய குதிரையின் சடைமயிரினால் நரம்புகள் கட்டப்பட்டன. |
40:308 | தந்திகளாகக் கட்டப்பட்ட குதிரையின் சடைமயிர் பின்னி முறினின. |
41:19 | கோலாச்சி மீனின் எலும்புகளால் செய்யப்பட்ட யாழ்க் கருவியை. |
41:39 | பார்க்க 2:292. |
41:41 | காட்டெருது, காட்டுப்பசு; கடம்பை என்றும் அழைக்கப்படும் (elk). பார்க்க 3:170. |
41:42 | பார்க்க 21:411. |
41:45 | பார்க்க 29:586. |
41:46 | பார்க்க 2:22. |
41:53 | பார்க்க 2:22. |
41:54 | பார்க்க 29:586. |
41:68 | இவ்வடியில் கூறப்பட்டது `அல்டர்` (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
41:85 | பார்க்க 15:593. |
41:87 | பார்க்க 26:45. |
41:89 | பார்க்க 22:393. |
41:90 | இது வான்மபாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல் kiuru, leivo[nen] (skylark, lark, Alauda arvenis). |
41:106 | தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி. |
41:119 | இந்த அடியில் கூறப்பட்டது மீன் சிறகுகளை. இதன் பின்னிஷ் சொல் eva* (fin). |
41:127(i) | பார்க்க 3:194. |
41:127(ii) | பார்க்க 22:333. |
41:128 | இது muje, muikku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒருவகைச் சிறுமீன் (vendace, Coregonus albula). |
41:143 | இது வாத்து என்னும் பறவையின் சக்தி. பாடல் 1:179ல் எங்கிருந்தோ ஒரு வாத்துப் பறந்து வந்து நீரன்னையின் முழங்காலில் முட்டைகள் இட்டதிலிருந்து பூமி உண்டானது என்ற கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது. |
41:189 | பார்க்க 36:77. |
41:190 | ஒரு பயறுவகை (pea). பார்க்க 4:513. |
41:239 | பார்க்க 15:285. |
42:74 | பையன்கள் தரையில் முழங்கால்களில் இருந்தனர். |
42:144 | பார்க்க 10:429. |
42:258 | பார்க்க 6:62. |
42:348(i) | மூலபாடத்தில் A*ijo* என்று வரும் சொல்லை முதுமகன், முதியவன் என்று மொழிபெயர்க்கலாம். சிலர் இதனை " 'அய்யோ'வின் மகனே" என்றே மொழிபெயர்த்துள்ளனர். |
42:348(ii) | மூலபாடத்தில் வரும் Iku-Turso என்ற பின்னிஷ் சொல்லை கடலரக்கன், கடற்பூதம், கடலின் மாபெரும் சக்தி (sea-monster) என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். சில மொழிபெயர்ப்பாளர்கள் அப்படியே 'இக்கு துர்ஸோ' என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றனர். |
42:532 | வெல்லமோ, நீரின் இனத்தோரை அமைதிப்படுத்து! சொற்றொகுதியில் 'வெல்லமோ' பார்க்க. |
42:533 | கப்பல் பக்கத்தின் மேல் பாகம்; கப்பலின் முன்னணியத்தின் விளிம்பு (gunwale). |
42:534 | கப்பலின் ஒரு பகுதி; சட்டம், சட்டக்கட்டு என்றும் மொழிபெயர்க்கலாம் (frame, rib). |
43:14 | கப்பல்களின் பாய் தூக்கும் மரம்; இதை வியாழ்மரம் என்றும் கூறுவர் (yard arm). |
43:31 | கவிநிலை: காலநிலை. இந்த பாடலின் 45, 337, 356, 422ம் அடிகளில் வரும் இந்தச் சொல்லுக்கும் இதே பொருள். |
43:59 | பார்க்க 4:310. |
43:118 | நூறு துடுப்பு வளையங்கள் கொண்ட படகு பிளக்கட்டும். |
43:180 | பார்க்க 26:146. |
43:249 | மற்ற வலிய நகங்கள் நொருங்கி விழுந்தன. |
43:366 | ஊசியிலை மரத்தடியில் இருக்கும் பற்களின் இடைவெளி அகன்று நீக்கல் விழுந்துள்ள மிருகத்தை. |
43:378 | முழுச் சம்போவிலும் முயன்று இல்லம் கொணர்ந்தவை. |
43:398 | இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93. |
44:33 | முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429. |
44:34 | கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் ( five hundred fathoms). |
44:86 | வெள்ளை நிறத்தில் இடுப்புப் பட்டியை அணிந்த மரமே! |
44:117 | ஐந்து கத்திகளால் கீறிக் கிழிப்பர். |
44:128 | பார்க்க 4:4. |
44:186 | சிந்தூர மரத்தின் பழம், விதை (acorn). |
44:216 | கால்களில் காலணி அணியாது நகர்ந்தனன். |
44:217 | காலுறைக்குப் பதிலாகப் பாதத்தை/விரல்களைத் துணியால் சுற்றும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. |
44:238 | தனது முழங்காலில் யாழின் தோளை அழுத்தி வைத்தனன். |
44:323 | பார்க்க 2:22. |
44:324 | பார்க்க 29:586. |
44:327 | 'ஸ்புறூஸ்' (spruce) மரத்தின் காய்; 20:223ஐயும் பார்க்க. |
44:328 | சுள்ளிகள், கிளைகள், ஊசி போன்ற இலைகள் என்றும் சிலர் மொழி பெயர்துள்ளனர். |
45:36 | கவிநிலை: காலநிலை. |
45:112 | வீட்டில் தயாரித்த `பீர்'ப் பானத்தால் பிணையல்களை நனைத்தனள். (அகத்து `பீரை`ப் பெய்து பிணையல்களை நனைத்தனள்.) |
45:123 | பார்க்க 3:161. |
45:124 | பார்க்க 38:63. |
45:182 | வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள். |
45:203 | இலைக் கட்டுத் தூரிகை வெப்பமாக்கினான்; பார்க்க 4:4. |
45:204 | நூறு இலைகள் கொண்ட தூரிகையை மென்மையாக்கினன். |
45:215 | புனிதமான தீப்பொறிகளைத் துடைத்து நீக்குக. |
45:221 | நீரெறிதல் பற்றி சொற்றொகுதியில் 'சவுனா'வைப் பார்க்க. |
45:229 | காரணம் எதுவும் இல்லாமல் நாம் உண்ணப்பட்டு அழிக்கப்படமாட்டோ ம். |
45:282 | Kivutar என்னும் பின்னிஷ் சொல்லில் kipu (gen. kivun) நோவைக் குறிக்கும். '-tar' என்பது பெண்பால் விகுதி. அதனால் தான் 'நோவின் மகள்' என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை 'நோவின் பெண், நோவின் சக்தி, நோவின் தேவதை' என்றும் சிலர் மொழி பெயர்த்துள்ளனர். |
45:283(i) | இதிலும் பின்னிஷ் மொழியில் ஊனம், காயம், சேதம் என்னும் பொருள்களுள்ள vamma என்ற சொல்லும் '-tar' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'ஊனத்தின் சக்தி, ஊனத்தின் தேவதை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
45:283(ii) | ஓர்ந்து தேர்ந்தவளே: தேர்ந்தெடுத்த பெண்ணே, தெரிவான பெண்ணே; சிறந்த பெண்ணே, நல்ல பெண்ணே என்றும் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. |
46:6 | வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள். |
46:36 | இதிலிருந்து அடி 40 வரை ஈட்டியின் வர்ணனை: ஈட்டியின் நுனியில் ஓநாய் நின்றது; ஈட்டியின் உருக்கினாலான அலகில் கரடி நின்றது; ஈட்டியின் பொருத்தில் காட்டெருது சறுக்கிச் செல்வது போல நின்றது; கைப்பிடி வழியாக ஒரு குதிரைக்குட்டி செல்லும் பாவனையில் நின்றது; கைப்பிடி முனையில் ஒரு காட்டுக் கலைமான் நின்றது. |
46:56 | இந்த அடியில் "அழகு" என்பது கரடியைக் குறிக்கும். |
46:61 | இந்த அடியில் கூறப்பட்டது நறுமணமுள்ள மஞ்சள் மலர்களையுடைய ஒரு கொடியை; இதன் பின்னிஷ் பெயர் kuusama ( honeysuckle, woodbine, Lonicera). |
46:63 | இந்த அடியில் "கானகத்து அப்பிள்" என்பதும் கரடியைக் குறிக்கும். |
46:64 | இந்த அடியில் "தேன் தோய்ந்த பாதம்" என்பதும் கரடியைக் குறிக்கும். |
46:71 | இந்த அடியில் "இணையில்லாத அன்பு" என்பதும் கரடியைக் குறிக்கும். |
46:75 | பார்க்க 2:21. |
46:76 | பார்க்க 8:172. |
46:105 | இந்த அடியில் "பொன்" என்பதும் கரடியைக் குறிக்கும். |
46:177 | இந்த அடியில் "பொற்குயில்" என்றும், அடி 118ல் "சடைத்த உரோமப் பிராணி" என்றும், அடிகள் 123, 124, 125, 126ல் முறையே "புகழ் நிறைந்தது", "அடவியின்சிறப்பு", "கனமில்லாக் காலணி", "நீலக் காலுறை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும். |
46:157 | இந்த அடியில் கூறப்பட்டது காடுகளில் வாழும் ஒருவகைச் சிறிய குருவியை. இதன் பின்னிஷ் பெயர் ka*pylintu (crossbill, Loxia). |
46:173 | பார்க்க 13:75. |
46:245 | இந்த அடியில் "இனிய பறவை" என்றும், அடிகள் 246, 251, 252ல் முறையே "பொதி" என்றும், "கறுப்புக் காலுறை" என்றும், "துணிக் காற்சட்டை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும். |
46:246 | ka*a*ro* 'கேரோ' என்னும் பின்னிஷ் சொல்லை கட்டு, சுமைக்கட்டு, சிப்பம் என்றும் மொழிபெயர்க்கலாம் (bundle, pack, roll). |
46:253 | இந்த அடியில் கூறப்பட்டது ஒரு சிறு பறவையினம், பார்க்க 3:91. |
46:254 | பார்க்க 6:54. |
46:262 | உரோமம் நிறைந்த வாயையுடைய கரடி. |
46:265 | இந்த அடியில் "நாயகன்" என்றும், அடிகள் 266, 268, 275, 276ல் முறையே "ஆடவன்" என்றும் "திரட்சியானவர்" என்றும், "மனிதன்" என்றும் "பெரிய பையன்" என்றும் வருபவை கரடியையே குறிக்கும். |
46:272 | சுருங்கிய காலுறை அணிந்தோர்க்கு அழிகலீர்! (அழிகலீர்:வருந்தாதீர்). |
46:287 | வாங்கு = வாங்குப்பலகை, பலகையாசனம் ( bench, wooden seat) |
46:317 | இவ்வடியில் "கொள்ளைச் செல்வம்" என்பதுவும் கரடியைக் குறிக்கும். |
46:318 | பார்க்க 46:157. இவ்வடியில் "சிறுகுருவி" என்பதுவும் கரடியைக் குறிக்கும். |
46:385 | பார்க்க 13:219. |
46:423 | பார்க்க 2:29. |
46:424 | பார்க்க 2:31. |
46:426 | பார்க்க 6:50. |
46:429 | இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் honka (fir); 8:172ஐயும் பார்க்க. |
46:430 | இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் kuusi (spruce); 2:22ஐயும் பார்க்க. |
46:436 | அடி 434ல் `நகங்களை ஆக்கினள்` என்று வருவதால், அடிகள் 435, 436ன்படி 'நகங்களை எப்படி தாடை எலும்பிலும் பல் முரசிலும் இணைக்கலாம்?' என்ற கேள்வி எழுகிறது. எனவே அடி 434க்கு 'நகங்களையும் பற்களையும் ஆக்கினள்' என்று பொருள் கொள்ள வேண்டும். |
46:635 | தப்பியோவின் எக்காளம் எக்காளமிட்டிட. |
47:99 | மூடப் பெண்ணின் கையிலிருந்து நெருப்பு வீழ்ந்தது. |
47:213 | இது பனிக்கட்டியை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கூர்மையான கருவி; இதன் பின்னிஷ் சொல் tuura, ja*a*tuura ( ice pick, [chisel]). |
47:238 | இந்த அடியிலும் அடிகள் 240, 242லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161. |
47:244 | பார்க்க 3:194. |
47:245 | இந்த அடியிலும் அடி 247லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161. |
47:248 | இந்த மீனுடைய பெயர் வெண்மீன்; பின்னிஷ் பெயர் siika 'சீக்கா' (powan, white-fish, Coregonus lavaretus); அதன் நிறம் நீலம். |
47:349 | இந்த அடியில் கூறப்பட்டது கெண்டை இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மீனை. இதன் பின்னிஷ் பெயர் sa*yne (ide, ide-fish, Leuciscus idus). |
48:67 | பார்க்க 10:429. |
48:68 | பார்க்க 10:429. |
48:80 | பார்க்க 3:194. |
48:81 | பார்க்க 3:161. |
48:82 | ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் பெயர் sa*rki; பார்க்க 22:333(i). |
48:91 | சிறை: மீன்பிடி வலையின் ஒரு பக்கக்கூறு. |
48:100 | பார்க்க 3:161. |
48:101 | இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் taimen (trout, Salmo trutta). |
48:102 | பார்க்க 21:166. |
48:110 | பார்க்க 10:429. |
48:111 | பார்க்க 10:429. |
48:124 | நீரில் வளரும் கோரைப்புல். |
48:138 | 42 அடி நீளமுள்ள கம்பம். |
49:13 | (அதே போல) கப்பலின் ஒரு நாள் பயணத்தைக் காற்றும் அறியும். |
49:52 | இந்த அடியில் "ஆறு" என்பது எண்ணைக் குறிக்கும். அதாவது "பிரகாசிக்கின்ற ஆறு மூடிகளின் மேல்" என்று பொருள். "ஒளிரும் சுவர்க்கத்தின் மூடிகளின் மேல்" என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் விளங்கியுள்ளனர். |
49:83 | இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
49:130 | பார்க்க 2:22. |
49:213 | இதிலிருந்து அடி 216 வரை வாளின் அலங்கார வர்ணனை: வாளின் கூரான முனையில் சந்திரன் திகழ்ந்தது; கைப்பிடியில் சூரியன் ஒளிர்ந்தது; அதன் மேற்புறத்தில் ஒரு குதிரை நின்றது; வாள்களைத் தொங்க விடுவதற்காக ஒரு முளை இருக்கும்; அந்த முளையின் வழியில் `மியா மியா` என்று கத்தும் பாவனையில் ஒரு பூனை நின்றது. |
49:217 | இது அந்தக் காலத்தில் இருந்த ஒரு போர்முறை. பார்க்க 27:300. |
49:228 | பார்க்க 27:135. |
49:246 | ஒரு செங்குத்தான பாறையில் ஒரு செயற்கையான கோடு இருந்தது. இரகசியமான கோடு என்றும் மொழிபெயர்ப்பு உண்டு. |
49:256 | பார்க்க 21:395. |
49:275 | இந்த அடியும் அடுத்த அடியும்: "அவன் கை முட்டியால் கதவைத் திறக்க முயன்றான்; சொல் வலிமையால் பூட்டைத் திறக்க முயன்றான்." |
49:282 | இந்த அடியில் சொல்லப்பட்ட ஆயுதத்தின் பின்னிஷ் பெயர் kuokka. இதனை மண்வெட்டி, மண்கொத்தி, உழவாரப் படை என்று தான் மொழிபெயர்க்கலாம் (hoe). 49:304ல் 'மும் முனையுள்ள' என்றுவருவதால் திரிசூலம் (trident) என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |
49:304 | பார்க்க 49:282. |
49:305 | பார்க்க 47:213. |
50:9 | அவள் ஒளி வீசிய பாவாடைகளை அணிந்து திரிந்ததால், அவ்வொளி பட்டு வாயிற்படிகளில் பாதி மங்கிப் போய்விட்டன. வாயிற்படி என்றும் களஞ்சியக்கூடம் என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு. |
50:52 | இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26. |
50:64 | ஜேர்மன் நாட்டு 'ஸ்ரோபரி'ப் பழமே! பார்க்க 2:79. |
50:82 | ஒரு வகைச் சிறிய பழம். இதன் பின்னிஷ் சொல் puolukka. பார்க்க 10:450. |
50:87 | இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகை நத்தையை. இதன் பின்னிஷ் பெயர் etana (slug, snail). |
50:104 | ஒரு வகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450. |
50:105 | இந்த அடியும் அடுத்த அடியும்: "அந்தப் பழம் நிலத்திலிருந்து பறித்து உண்ண முடியாத அளவு உயரத்தில் இருந்தது; (ஆனால்) ஏறிப் பறிக்க முடியாத அளவு மரம் தாழ்வாக இருந்தது." |
50:172 | இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola; பார்க்க 10:450. |
50:179 | இந்த அடிகளில் 'குளியல்' என்று வருவது சவுனா நீராவிக் குளியலையே குறிக்கும்; சொற்றொகுதியில் 'சவுனா' பார்க்க. |
50:208 | பின்னிஷ் மொழியில் saraoja என்ற சொல்லே 'புல்வளர் அருவி' என்று இந்த அடியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே சொல் saraja என்றும் சில இடங்களில் வருகிறது. தற்காலத்தில் வழக்கில் இல்லாத தற்கால அகராதிகளில் இடம் பெறாத சொற்களில் இதுவும் ஒன்று. இந்தச் சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. உதாரணமாக 18:116ல் இச்சொல் 'மரண ஆறு' என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதைக் காணலாம். 'இருண்ட வடநாடு' என்ற பொருளில் வரும் sariola என்ற சொல்லின் திரிபே இது என்றும் சிலர் கூறியுள்ளனர். இதற்குமேல் தெளிவான விளக்கத்தைப் பெற முடியவில்லை. |
50:220 | பார்க்க 50:208. |
50:239 | மேசை ஒன்றின் தலைப்பக்கம் அமர்ந்திருந்தனன். |
50:301 | அடி வைத்துக் கடிதாய் அவளும் விரைந்தனள். |
50:304 | இங்குள்ள குதிரை லாயத்தில் மர்யத்தா குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இதைத் தப்பியோ மலை, தப்பியோ குன்றம் என்றும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். |
50:338 | சாணைச் சீலை: கைக்குழந்தைகளை மூடிப் பொதியும் சீலை (swaddling clothes; perh. ஏணை). |
50:466 | வாய்மொழிப் பாடல்களாகவே பலகாலம் இருந்து, பின்னர் சேகரிக்கப்பட்ட தொகுப்புகளில் சில முரண்பாடுகள் குழப்பங்கள் வருவது இயல்பு. மூன்றாம் பாடலில் தன் தாய் பெற்ற, தன் சொந்தச் சகோதரியான ஐனோவைக் கொடுப்பதாக வாக்களித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்வந்தவன் யொவுகாஹைனன்; வைனாமொயினன் அல்ல. |
50:563 | இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன்பின்னிஷ் சொல் kiuru 'கியுறு' (skylark, lark, Alauda arvenis). |
50:564 | இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப் பறவை; (thrush); பார்க்க 22:477. |
ஆங்கிலத்தில் - In English: |