C. Subramaniya Bharathiyar Songs - Part IV
pAnjcAli capatam -part I in Tamil Script, unicode/utf-8 format
சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
பாஞ்சாலி சபதம் (முதற் பாகம் )
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation: Ms.Veena Jayaraman, Texas, USA (input), Dr. N. Kannan, Kiel, Germany (proof-reading) HTML and PDF versions: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This page was first put up on Sept 23, 2000
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
யாது நேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திட எண்ணிச் செய்கை யன்றறி யாந்திகைப் பெய்திச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனைத் தான்சர ணெய்தி, 'ஏதுசெய்வம்'எனச் சொல்லி நைந்தான் எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே. 40
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மாம கத்தினில் வந்து பொழிந்த சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும், தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும், என்ன பட்டது தன்னுளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான். 41
வேறு
என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம் ஈர்ந்திடக் கண்ட சகுனிதான் ''அட! இன்று தருகுவன் வெற்றியே; இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்:-அதை ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு மன்று புனைந்திடச் செய்தி நீ - தெய்வ மண்டப மொத்த நலங்கொண்டே. 53
'மண்டபங் காண வருவிரென்-றந்த மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு கொண்ட கருத்தை முடிப்பவே-மெல்லக் கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த வண்டரை நாழிகை யன்றிலே-தங்கள் வான்பொருள் யாவையும் தொற்றனைப்-பணி தொண்ட ரெனச்செய் திடுவன்யான்,-என்றன் சூதின் வலிமை அறிவை நீ. 54
மற்றதன்பின்னர் இருவரும்-அரு மந்திரக் கேள்வி உடையவன்-பெருங் கொற்றவர் கோந்திரித ராட்டிரன்-சபை கூடி வணங்கி இருந்தனர்;-அருள் அற்ற சகுனியும் சொல்லுவான்-'ஐய! அண்டகை நின்மகன செய்திகேள்;-உடல் வற்றித் துரும்பொத் துருக்கின்றான்;-உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான். 58
'உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின் உடுப்ப திகழ உடுக்கின்றான்,-பழ நண்பர்க ளோடுற வெய்திடான்;-இள நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை கண்பசலை கொண்டு போயினான்;-இதன் காரணம் யாதென்று கேட்பையால்;-உயர் திண்பரு மத்தடந் தோளினாய்!'-என்று தீய சகுனியும் செப்பினான். 59
'ஆயிரங் கால முயற்சியால்-பெற லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன் பெற்றி உனக்கெவர் பேசுவார்?' 83
10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான். மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன், பெற்றி மிக்க விதுர னறிவைப் பின்னும் மற்றொரு கண்ணெனக் கொண்டோன், முற்று ணர்திரித ராட்டிரன் என்போன் மூடப் பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்ற வாறு நயங்கள் புகட்ட, 84
கொல்லலும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில் கூடும் வெம்மைய தாய்ப்பிணக் குற்றே தொல்லு ணார்வின் மருத்துவன் தன்னைச் சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான், தோமி ழைப்பதிலோர்மதி யுள்ளான். கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும் கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான். 85
11. துரியோதனன் தீ மொழி
வேறு
பாம்பைக் கொடியென் றுயர்த்தவன்-அந்தப் பாம்பெனச் சீறி மொழிகுவான்?-'அட! தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும் தந்தையர் பார்மிசை உண்டுகொல்!-கெட்ட வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை மிக்க சருக்கரை பாண்டவர், அவர் தீம்புசெய்தாலும் புகழ்கின்றான்,-திருத் தேடினும் என்னை இதழ் கின்றான். 86
''மன்னர்க்கு நீதி யருவகை;-பிற மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை''-என்று சொன்ன வியாழ முனிவனை-இவன் சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும் என்னென்ன வோகதை சொல்கிறான்;-உற வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர் சின்ன முறச்செய வேதிறங் கெட்ட செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87
வேறு தந்தை இ·து மொழிந்திடல் கேட்டே, தாரி சைந்த நெடுவரைத் தோளான்; 'எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பன்முறை கூறியும் கேளாய்; வந்த காரியங் கேட்டிமற் றாங்குன் வார்த்தை யின்றிஅப் பாண்டவர் வாரார்; இந்த நின்முன் என்ஆவி இறுப்பேன். 97
'மதித மக்கென் றிலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும். பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார், பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்; துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச் சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்; அதிக மோகம் அவனுளங் கொண்டான் ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான். 98
வேறு 'விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு வேறு செய்வார் புவிமீ துளரோ? மதிசெறி விதுரன் அன்றே-இது வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான். ''அதிசயக் கொடுங் கோலம்-விளைந் தரசர்தங் குலத்தினை அழிக்கும்''என்றான்; சதிசெயத் தொடங்கி விட்டாய்-''நின்றன் சதியினிற் றானது விளையும்''-என்றான். 107
'விதி!விதி!விதி!மகனே!-இனி வேறெது சொல்லுவன் அட மகனே! கதியுறுங் கால னன்றோ-இந்தக் கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்? கொதியுறு முளம் வேண்டா;-நின்றன் கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்; வதியுறு மனை செல்வாய்,'-என்று விழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108
15. சபா நிர்மாணம்
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே, 'பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப் பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்! மிஞ்சு பொருளதற் காற்றுவன்'என்றான்; மிக்க உவகைய டாங்கவர் சென்றே கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே. 109
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும், வண்மைக் கவிஞர் கனவினைப் போலும், நல்ல தொழிலுணர்ந் தார்செய லென்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக் கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்துச் சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்! 110
16. விதுரனைத் தூதுவிடல்
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்; 'தக்க பரிசுகள் கொண்டினி தேகி, எம்பியின் மக்கள் இருந்தர சாளும் இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால், ''கொம்பினை யத்த மடப்பிடி யோடும் கூடிஇங் கெய்தி விருந்து களிக்க நம்பி அழைத்தனன்,கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை''என உரை செய்வாய். 111
'நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய் ''நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள் நேயமொ டேகித் திரும்பிய பின்னர் பீடுறு மக்களை ஓர்முறை இங்கே பேணி அழைத்து விருந்துக ளாற்றக் கூடும் வயதிற் கிழவன் விரும்பிக் கூறினன் இ·தெ''னச் சொல்லுவை கண்டாய். 112
என்று விதுரன் பெருந்துயர் கொண்டே ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர், 'சென்று வருகுதி,தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன். வென்று படுத்தனன் வெவ்விதி என்னை; மேலை விளைவுகள் நீஅறி யாயோ? அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கெளி'தென்றுமெய் சோர்ந்து விழுந்தான். 114
17. விதுரன் தூது செல்லுதல்
வேறு
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்; அடவிமலை ஆறெல்லாம் கடந்துபோகித் திண்ணமுறு தடந்தோளும் உளமும்கொண்டு திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும் வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான் விழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே இனையபல மொழிகூறி இரங்கு வானால். 115
'நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு, நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு, கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங் குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு, ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப் பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு பண்ணவர்போல மக்களெலாம் பயிலும் நாடு, 116
குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக் கோமகன் கண்டு வணங்கிய பின்னர், வொந்திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி, அந்திமயங்க விசும்புடைத் தோன்றும் ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை மந்திரந் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றாள். 120
தங்கப் பதுமை எனவந்து நின்ற தையலுக் கையன்,நல் லாசிகள் கூறி அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர் சிங்க மெனத்திகழ் வீரர் புலவர் சேகவர் யாரொடுஞ் செய்திகள் பேசிப் பொங்கு திருவின் நகர்வ லம்வந்து போழ்து கழிந்திர வாகிய பின்னர் 121
'உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான் ஓர்செய்தி;மற்ற· துரைத்திடக் கேளீர்! மங்களம் வாய்ந்தநல் அத்தி புரத்தே வையக மீதில் இணையற்ற தாகத் தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர்,கண்டீர்! அங்கதன் விந்தை அழகினைக் காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். 123
'வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பலதின மாயின வேனும், வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர் வந்ததெங்க ளூரில் மறுவிருந் தாட நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும் நாயகன் நும்மை அழைத்திட வில்லை; கேள்விக் கொருமி திலாதிப னொத்தோன் கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே 124
'கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன் கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்-அது தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும் தன்மை அதற்குள தாகுமோ?-இதை ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு செப்பிடு வித்தையைப் போலவே-புவிச் செய்திகள் தோன்றிடு மாயினும். 138
'இங்கிவை யாவுந் தவறிலா-விதி ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு சங்கிலி யக்கும் விதி கண்டீர்-வெறுஞ் சாத்திர மன்றிது சத்தியம்-நின்று மங்கியர் நாளில் அழிவதாம்-நங்கள் வாழ்க்கை இதனைக் கடந்ததோ? 139
'தோன்றி அழிவது வாழ்க்கைதான்-இங்குத் துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை மூன்றில் எதுவரு மாயினும்,-களி மூழ்கி நடத்தல் முறைகண்டீர்?-நெஞ்சில் ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம் உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி போன்று நடக்கும் உலகென்றே-கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர். 140
மாலைப்போ தாதலுமே,மன்னன் சேனை வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை சேலைப்போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் மேலைப்போம் பரிதியினைத் தொழுது கண்டான் மெல்லியலும் அவந்தொடைமேல் மெல்லச் சாய்ந்து பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப் பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான். 147
'பாரடியோ!வானத்திற் புதுமை யெல்லாம், பண்மொழீ!கணந்தோறும் மாறி மாறி ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாய் தொன்றுங் காட்சி யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்? சீரடியால் பழவதே முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி நவப்பையெலாம் சேரக் காண்பாய். 148
'கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். 149
குந்தியும் இளங்கொடியும்-வந்து கூடிய மாதர் தம்மொடு குலவி முந்திய கதைகள் சொல்லி-அன்பு மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்; அந்தியும் புகுந்ததுவால்-பின்னர் ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு சாருமின் னுணவமு துண்டதன் பின், 160
முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ? முன்பெனச் சொலுங் கால மதற்கு, மூடரே,ஓர் வரையறை உண்டோ? முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்; மூன்று கோடி வருடமும் முன்பே; முன்பிருந் தெண்ணி லாது புவிமேல் மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ? 179
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர் நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ? பார்பி றந்தது தொட்டின்று மட்டும் பல பலப் பல பற்பல கோடி கார்பி றக்கும் மழைத்துளி போலே கண்ட மக்க ளனைவருள் ளேயும், நீர்பி றப்பதன் முன்பு மடமை நீசத் தன்மை இருந்தன வன்றோ? 180
அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இ· துரைப்பான்; 'பந்தயங்கள் சொல்வாய்-சகுனி பரபரத் திடாதே; விந்தை யான செல்வம்-கொண்ட வேந்த ரோடு நீ தான் வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே வைக்க நிதிய முண்டோ?' 184
தருமன் வார்த்தை கேட்டே,-துரியோ தன னெழுந்து சொல்வான்; 'அருமையான செல்வம்-என்பால் அளவி லாத துண்டு; ஒரு மடங்கு வைத்தால்-எதிரே ஒன்ப தாக வைப்பேன்; பெருமை சொல்ல வேண்டா,-ஐயா! பின் னடக்கு' கென்றான். 185
'ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ? தரும மாகு மோடா!-சொல்வாய் தம்பி இந்த வார்த்தை?' 'வரும மில்லை ஐயா;-இங்கு மாம னாடப்பணயம் மருமகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்ற மேதோ?' 186
'பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்கு கின்றோம்; அழுத லேனிதற்கே?'-என்றே அங்கர் கோன் நகைத்தான். 'பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்; முழுது மிங்கிதற்கே-பின்னர் முடிவு காண்பீர்'என்றான். 187
ஒளி சிறந்த மணியின்-மாலை ஒன்றை அங்கு வைத்தான்; களி மிகுந்த பகைவன் -எதிரே கன தனங்கள் சொன்னான்; விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்; பழி இலாத தருமன்-பின்னும் பந்தயங்கள் சொல்வான். 188
'ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோ'மிதென்றான்; மாயம் வல்ல மாமன் -அதனை வசம தாக்கி விட்டான்; 'பாயுமா வொரொட்டில்-செல்லும் பாரமான பொற்றேர்; தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி வென்று விட்டான். 189
'இளையரான மாதர்,-செம்பொன் எழிலிணைந்த வடிவும் வளை அணிந்த தோளும்-மாலை மணி குலுங்கு மார்பும் விளையு மின்ப நூல்கள்-தம்மில் மிக்க தேர்ச்சி யோடு களை இலங்கு முகமும்-சாயற் கவினும் நன்கு கொண்டோர், 190
ஆயிரக் கணக்கா-ஐவர்க் கடிமை செய்து வாழ்வோர்;' தாய முருட்டலானார்;அந்தச் சகுனி வென்று விட்டான் ஆயிரங்க ளாவார்-செம்பொன்,அணிகள் பூண்டிருப்பார் தூயிழைப் பொனாடை-சுற்றுந் தொண்டர் தம்மை வைத்தான்; 191