tiruisappA, tiruppallANTu (9th thirumurai) in Tamil Script, unicode/utf-8 format
பன்னிரு திருமுறைகளில் ஒன்றான
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)
Acknowledgement:
Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for his assistance in the preparation of this work.
This webpage presents the Etext in Tamil script - in Unicode encoding.
This page was first put up on Jan 9, 2001
30. சேவேந்து வெல்கொடி யானே ! என்னும் சிவனே ! என் சேமத்துணையே என்னும் மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில் வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும் பூவேந்தி மூவா யிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3.8
31. தரவார் புனம்சுனை தாழ்அருவித் தடம்கல் லுறையும் மடங்கல் அமர் மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும் மழைசூழ் மகேந்திர மாமலைமேல் கரவா ! என்னும் சுடல்நீள் முடிமால்அயன் இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம் குரவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3.9
32. திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப் பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள் பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும் வருநீர் அருவி மகேந்திரப்பொன் மலையின் மலைமக ளுக்கருளும் குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3.10
33. உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று) உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப் பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும் சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில் குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3.11
34. வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து) அவனிச் சிவலோக வேதவென்றி மாறாத மூவாயிர வரையும் எனையும் மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும் ஆறார் சிகர மகேந்திரத்(து) உன் அடியார் பிழைபொறுப்பாய் மாதோர் கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3.12
165. வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழும் மாளிகை மகளீர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.4
166. எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.5
167. அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோ தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.6
168. தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால் நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.7
169. பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்நடம் பயிலும் இஞ்சுசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.8
195. மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? 1.1
196. ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ. 1.2
197. முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு) ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? 1.3
290. மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 1.2