பாண்டிய, சோழ விசயநகர
மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
(தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும்,
தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத | 5 |
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் | 10 |
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் | 15 |
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற் றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த- | 20 |
மானம் பேர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி மலர் மங்கையொடு மணனயர்ந்த | 25 |
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன் சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் | 30 |
மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதயகிரி மத்யமத் துறுசுடர்போலத் தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வௌிப்பட்டுச் சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்து வில்வேலி கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் | 35 |
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும் அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும் பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும் உரிமைச்சுற்றமோ டவர்யானையும் புரிசையுமதிற் புலியூரும் | 40 |
பகல்நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்றுகொண்டும் வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும் இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைகவென் றீத்தளித்த மகரிகையணி மணிநெடுமுடி அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன் | 45 |
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப் பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித் தாய்வேளை யகப்படஎய் யென்னாமை யெறிந்தழித்துச் செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக் கொங்கலரும் நறும்பொழில்வாய்க் குயிலொடு மயிலகவும் | 50 |
மங்கலபுரமெனு மாநகருண் மகாரதரை எறிந்தழித்து அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச் சிலையும் புலியுங் கயலுஞ் சென்று நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய் மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல் | 55 |
தென்ன வானவன் செம்பியன் சோழன் மன்னர் மன்னன் மதுரகரு நாடகன் கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்; மற்றவற்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக் | 60 | கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்து கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மன்னிக்குறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும் | 65 | கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார் கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும் செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய எண்ணிறந்த மால்களிறும் இவுளிகளும் பலகவர்ந்தும் தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும் | 70 | பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப் பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது பதும பாதம் பணிந்தேத்திக்- | 75 | கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங் கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறந்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினோர் குறைதீர்த்தும் கூடல்வஞ்சி கோழியென்னு மாடமா மதில்புதுக்கியும்- | 80 | அறைகடல் வளாகங் குறையா தாண்ட மன்னர் மன்னன் றென்னவர் மருகன் மான வெண்குடை மான்றேர் மாறன்; மற்றவற்கு மகனாகி மாலுருவின் வௌிப்பட்டுக் கொற்றமூன் றுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப் | 85 | பூமகளும் புலமகளும் நாமகளும் நலனேத்தக் கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையைப் | 90 | பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல் தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும் தீவாய் அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செருவென்றும் | 95 | அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனே சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூழியன் வீதகன்மஷன் விநயவிச்ருதன் விக்ரமபாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன் | 100 | கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன் கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன் பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன் நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் | 105 | மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்..... |
அன்ன னாகிய அலர்கதிர் நெடுவேற் றென்னன் வானவன் செம்பியன் வடவரை யிருங்கய லாணை ஒருங்குட னடாஅய் ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும் வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான் | 5 | றென்னல ராடி தேம்புனற் குறட்டிப் பொன்மலர் புறவில் வெள்ளூர் விண்ணஞ் செழியக் குடியென் றிவற்றுட் டெவ்வ ரழியக் கொடுஞ்சிலை அன்றுகால் வளைத்தும் மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை | 10 | ஆயிர வேலி அயிரூர் தன்னிலும் புகழி யூரிலுந் திகழ்வே லதியனை ஓடுபுரங் கண்டவ னொலியுடை மணித்தே ராடல் வெம்மா அவைஉடன் கவர்ந்தும் பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப் | 15 | பல்படையொடு பார்ஞௌியப் பவ்வம்மெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப வெல்படையொடு மேற்சென்றங் கிருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்துக் குடகொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து | 20 | கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்துக் கங்கபூமி யதனளவுங் கடிமுரைசுதன் பெயரறையக் கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைபூட் டிழிவித்துக் பூஞ்சோலை அணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக் குன்றமன்னதோர் கோயிலாக்கியும் | 25 | ஆழிமுந்நீ ரகழாக அகல்வானத் தகடுரிஞ்சும் பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும் அணியிலங்கையி லரணிதாகி மணியிலங்கும் நெடுமாட மதில்விழிஞ மதுஅழியக் கொற்றவேலை உறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை | 30 | வென்றழித்தவன் விழுநிதியொடு குன்றமன்ன கொலைக்களிரிங் கூந்தன்மாவுங் குலதனமும் நன்னாடுங் அவைகொண்டும் அரவிந்த முகத்திளையவ ரறிநெடுங்கண் ணம்புகளாற் பொரமைந்தர் புறம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழொடு | 35 | விசும்புதோய்ந்து முகிறுஞ்சலில் அசும்பறாத வகன்சென்னி நெடுமதிலை வடிவமைத்தும் ஏவமாதி விக்ரமங்க ளெத்துணையோ பலசெய்து மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளொடு வீற்றிருந்து மநுதர்சித மார்கத்தினால் குருசரிதம் கொண்டாடிக் | 40 | கண்டக சோதனை தான்செய்து கடன்ஞாலம் முழுதளிக்கும் பாண்டிய நாதன் பண்டித வத்சலன் வீர புரோகன் விக்ரம பாரகன் பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி நின்றிலங்கும் மணிநீண்முடி நிலமன்னவனெடுஞ் சடையற்கு | 45 | ராஜ்யவர்ஷம் பதினேழாவது பாற்பட்டு செல்லாநிற்க . . . . . . |
ஸ்வஸ்திஸரீ அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந் தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும் ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும் | 5 | சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும் ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும் பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும் யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்- | 10 | ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப் பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத் தனக்குரியன பலகுணநாம முலகுமுழு துகந்தேத்தப் பராவனிப குலமிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கி | 15 | தராசுரரது இடரகலத் தனவருஷம் பொழிதற்கு வலாஹகத்தின் விரதம்பூண்டு துலாபாரம் மினிதேறிச் சரணிபனா யுலகளித் திரணியகர்ப்ப மிருகால்புக்கு கோசகசிரத் தொடக்கத்துக் குருதானம் பலசெய்து வாசவன்போல் வீற்றிருந்தனன் வசுதாபதி மாறவர்மன் | 20 | மற்றவர்கு மகனாகி மதிபுரையும் குடைநீழல் அற்றமின்றி அவனிமண்டலமுடனோம்பி அருள்பயந்த கற்பகத்தின் விரதம் கொண்டு கலிகலுஷ மறநீக்கி அற்பமல்லாத் திரவியங்கொடுத் தவனிசுர ரிடர்நீக்கி கருதாது வந்தெதிர்த்த கழல்வேந்த ருடனவிய | 25 | மருதூரொடு குவளைமலையு மத்தவேழஞ் செலவுந்தி. . . . |
ஸ்வஸ்தி ஸரீ ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழ் மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்க்காப்ப விண்ணென் பெயரெய்திய மேகஞாலி விதானத்தின் தண்ணிழற்கீழ் சகஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப புஜங்கம புரஸ்ஸர போகிஎன்னும் பொங்கனை | 5 | மீமிசைப் பயந்தரு தும்புரு நாரதர் பனுவ னரப்பிசை செவியுறப் பூதல மகளொடு பூமகள் பாதஸ்பரி சனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் திண்படைமால் ஸரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச் | 10 | சோதிமரகத துளைத்தாட் சுடர்பொற் றாமரைமலர்மிசை விளைவுறு களம கணிசமென மிளிர்ந்திலங்கு சடைமுடியோ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலையோடு தோன்றின சதுர்புஜன் சதுர்வக்த்ரன் சதுர்வேதி சதுர்த்வயாக்ஷன் மதுகமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனிஅத்ரி | 15 | அருமரபிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணில் இருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணன் வௌிப்பட்டனன் மற்றவர்க்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்குக் கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்திப் | 20 | பூந்தளவ மணிமுறுவுற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவற்பின் பார்வேந்த ரேனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம் விசையொடு விண்மீனொடு போர்மிக்கெழுந்த கடற்றிரைகள் | 25 | சென்றுதன் சேவடிபணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விஜம்பணையும் பெறல்நகுக்ஷன் மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையும் ஒருங்குமுன்னாள் மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் | 30 | மடலவிழ்பூ மலயத்து மாமுனி புரோசிதனாகக் கடல்கடைந்து அமிர்துகொண்டுங் கயிலிணைவட வரைபொறித்தும் ஹரிஅயன தாரம்பூண்டு மவன்முடியொடு வளைஉடைத்தும் விரிகடலை வேலின்மீட்டும் தேவாசுரஞ் செருவென்றும் அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்தும் | 35 | தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர் படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வானரத்வஜன் வசுசாப மகல்வித்தும் அரிச்சந்திர னகரழித்தவன் பரிச்சந்தம் பலகவர்ந்தும் நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன் னியதிநல்கி | 40 | நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம்வழங்கியும் உரம்போந்த திண்டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும் பொன்னிமையப் பொருப்பதனில் கன்னிமையிற் கயலெழுதியும் பாயல்மீ மிசைநிமிர்ந்து பல்லுண்டி விருப்புற்றும் காயல்பாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் | 45 | மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செயதும் அங்கதனி அருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாயிறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடிசுடிய முரண்மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் | 50 | இடையாறையும் எழில்வெண்பைக் குடியிலும்வெல் கொடிஎடுத்த குடைவேந்தன் றிருக்குலத்துக் கோமன்னர் பலர்கழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்க களிறுகைத்த கூடலர்கோன் ஸரீபராந்தகன் குரைகடற்கோச் சடையற்குச் சேயாகி வௌிப்பட்ட செங்கண்மால் ஸரீவல்லபன் | 55 | வேய்போலும் தோளியர்கேள் வித்யாதர ணிரண்யகர்பன் குண்ணுரில மர்வென்றுங் குரைகடலீ ழங்கொண்டும் விண்ணாள வில்லவற்கு வழிஞத்து விடைகொடுத்தும் காடவனைக் கடலாணுர்ப் பீடழியப் பின்னின்றும் குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர் | 60 | அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன் ஒளிறிலைவேல் உபாய பஹுலன் உம்பர்வான் உலகணைந்தபின் மற்றவர்க்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன் பிள்ளைப்பிறைச் சடைக்கணிந்த பினாகபாணிஎம் பெருமானை | 65 | உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லுழி ஆயிமா யிருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பொரும்பொறைமண் மகளைத்தன் தொடித்தோளி லௌிதுதாங்கிய தொண்டியர்கோன் துளக்கில்லி வடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன் | 70 | பெத்தப்பிக் குலச்சோழன் புகழ்தரு சிரீகண்டராசன் மத்தமா மலைவலவன் மணிமகள்அக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸரீபராந்தக மகாராசன் விரைபரித்தேர் வீரநாரணன் முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்பழனச் செந்நிலந்தைச் செருவென்றும் | 75 | கொந்தார்பூம் பொழிற்குன்றையும் குடகொங்கிலும் பொக்கரணியும் தென்மாயலுஞ் செழுவெண்கையமுf பராந்தகத்துஞ் சிலைச்செதிர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா கனங்கொண்டும் ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும் சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டும் | 80 | கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கோண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரம்மதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்த லியற்றுவித்தும் நின்ற பெரும் புகழாலும் நிதிவழங்கு கொடையாலும் | 85 | >வென்றிபொர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டருள்கண்டன் மதுராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன் செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில் . . . . . |
ஸ்வஸ்திஸரீ திருவொடுந்தெள் ளமிர்தத்தொடுஞுf செங்கதிரொளிக் களஸ்துபத்தொடும் அருவிமதக் களிறொன்றுடந் தோன்றிஅர னவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்தங்கள் முதலாக வௌிப்பட்டது நாற்றிசையோர் புகழ்நீரது நானிலத்தி னிலைபெற்றது திருவொடுால் நேரஸ்துதிக் கப்பட்டது | 5 | விரவலர்க் கரியது மீனத்வய சாசனத்தது பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனா கப்பெற்றது ஊழியூழி தோறுமுள்ளது நின்றஒரு வனைஉடையது வாழியர்பாண் டியர்திருக் குலமிதனில் வந்துதோன்றி வானவெல்லை வரைத்தாண்டும் அலைகடல்கடைந் தமிர்துகொண்டும் | 10 | நானில்த்தோர் விஸ்மயப்பட நாற்கடலொடுபகலாடியும் மறுவிலொளிர் மணிமுடியொடுசங்கவெள்வளைதரெத்தும் மறுவிலொளிர் மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும் நிலவுலகம் தூதுய்த்தும் பாகசாசன னாரம்வவ்வியுஞ் செம்மணிப்பூ ணெடுதோன்றித் தென்றமிழின் கரைகண்டும் | 15 | வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் பாழியமபா யகினிமர்ந்தும் பஞ்சவனெனும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும் | 20 | பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும் விசயனைவசு சாபம்நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும் வாசயில் மாக்கயல்புலிசிலை வடவரைநெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் | 25 | அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியந் தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றைதுமிதித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாராசரும் சார்வபௌமரும் மகிமண்டலங் காத்திகந்தபின் | 30 | வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற்சங் கரமங்கைப் பல்லவனையும் புரங்கண்ட பராங்குசன்பஞ் சவர்தோன்றலும் மற்றவற்கு பௌத்ரனாயின மன்னபிரா னிராசசிங்கனும் கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகராசனும் ஆங்கவர்காத் மசனாகி அவனிதலம் பொறைதாங்கித் | 35 | தேங்கமழ்பொழிற் குண்ணூரிலும் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடாவிக் கொங்கலர்பொழிற் குடமுக்கிற் போர்குறித்து வந்தெதிர்ந்த கங்கபல் லவசோழ காலிங்க மாகதாதிகள் குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கனை தொடைநெகிழ்த்துப் | 40 | பதிதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாலனுங் குரைகழற்கா லரைசிறைசக் குவலயதலந் தனதாக்கின வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும் மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன் பொற்றடம்பூண் சிரிபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக் | 45 | கைந்நிலந்தோய் கரிக்குலமும் வாஜிப்ருந்தமுங் காலாலுஞ் சென்னிலத்தி னிலஞ்சோரத் திண்சிலைவாய்க் கணைசிதறியும் கரகிரியிற் கருதாதவர் வரகரிக்குல நிரைவாரியும் நிலம்பேர நகர்கடந்துந் நெடும்பெண்ணா கடமழித்தும் ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும் | 50 | தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும் நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின் வானவன்மகா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த மீனவர்கோ னிராசசிங்கன் விகடவா டவனவனேய் அகிபதியா யிந்தலையால் அரிதாகப் பொறுக்கின்ற | 55 | மகிமண்டலப் பெரும்பொறைதன் மகாபுஜபலத் தாற்றாங்கி புசகநாயக தரணிதாரண ஹரணராசித புசபலனாய் உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருடல் உகுத்தசெந்நீர் நிலப்பெண்ணிற் கங்கராக மெனநீவப் பாணிதந்தும் மடைப்பகர்நீர்த் தஞ்சசையர்கொன் தானைவரை நைப்பூரிற் | 60 | படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங் கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேல்கொண்டும் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும் | 65 | சேவலுயர் கொடிக்குமர னெனச்சீரித் தென்றஞ்சைக் காவலனது கரிதுரக பதாதிசங்கங் களத்தவியப் பூம்புனனா வற்பதியில் வாம்புரவி பலங்காட்டியும் விஜயத்துவஜம் விசும்பணவச் செங்கோறிசை விளிம்மணவக் குசைமாவுங் கொலைக்குன்றமுங் குருதியார முங்கொணர்ந்தும் | 70 | குலவர்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த விகடவாடவன் சிரிகாந்தன் மீநாங்கித சைலேந்திரன் இராசசிகா மணிதென்னன் ராசித குணகணுங்கோன் எண்ணறிந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணறிந்த பள்ளிச்சந்தமும் எத்திசையு மினிதியற்றி | 75 | உரம்பிலொதி ஒலிகடல்போ லொருங்குமுன்னந் தானமைத்தவல் இராசசிங்கப் பெருங்குளக்கீழ் சூழல்நக ரிருந்தருளி இராஜ்யவர்ஷம் இரண்டாவதன் எதிர்பதினான் காம்யாண்டில். . . . . |
ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும் ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும் வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும் ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த | 5 | பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன் மன்னவர்க்கோன் இராசமல்லன் மணிமுடிமா னாபரணன் தென்னவர்க்கோன் மற்றவற்குச் சேரலன்றன் மடப்பாவை சீர்திகழு மணிபயிலிச் செழுநிலந்தொழ வௌிப்பட்ட வீரகேரளன் வீரபாண்டியன் விநயகஞ்சுகன் விசாலசீலன் | 10 | தன்னுடைய குலம்விளங்கத் தன்தேயத் தமிழ்கூடலில் மன்னியமணி முடிகவித்து மகாபிஷேக மகிழ்ந்தநாளில் மேதகுசா சனசுலோகம் விதிகிடந்தவா செய்யவல்ல பூசுரமத் திவன்னதுதன் பூம்பொருநம் புடைவர்க்கும் சீர்திகழ்தரு முள்ளிநாட்டுத் தென்வீரதர மங்கலத்து | 15 | ஏர்திகழும் பெருந்தன்மை ராதிதர கோத்திரத்தில் அளப்பரிய பேரொழுக்கத் தாச்வலாயன சூத்திரத்து விளக்கமுற வந்துதோன்றி விப்ரர்க்கோர் விளக்காயின ஒருதன்மை இருபிறப்பில் முச்செந்தீ நால்வேதத்து அருமரபில் ஐவேள்வி ஆறங்கத் தந்தணாளன் | 20 | கோவிந்தஸ்வாமி பட்டர்க்குச் சோமாசிதன் குலவரவில் வாசுதேவ பீதாம்பர பட்டனென்ற மறைவாழ்நனை மதித்தருளி நீசெய்கென மற்றவனு மனமகிழ்ந்து விதித்தமைத்த அநுஷ்டுப்பின் விழுப்பநோக்கி மிகமகிழ்ந்து தனக்கிரண்டாமாண்டின் எதிராமாண்டில் | 25 | அண்டநாட்டு மின்னுக்கொடி நெடுமாடவீதி. . . . . |
ஸ்வஸ்திஸரீ
விசயாப்யுதய சாலிவாகன சகாப்தம்
1439 தின் மேல் செல்லா நின்ற ஈசுவர
சம்வத்சரம். . . .
ஸரீமன் மகாமண்டலேசுவர அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன் - 5
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
பூர்வதட்சிண பச்சிம உத்தரசதுர்ச் சமுத்திராதிபதி
ஸரீவீரப்பிரதாப ஸரீவீர கிருஷ்ணதேவ மகாராயர்...
...திருவுளம் பற்றின தர்ம சாசனராயசம் - 10