திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (655 - 1331 )
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
2.61 | திருவெண்காடு | (655-665) | மின்பதிப்பு |
2.62 | திருமீயச்சூர் | (666-676) | மின்பதிப்பு |
2.63 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (677-687) | மின்பதிப்பு |
2.64 | திருமுதுகுன்றம் | (688-697) | மின்பதிப்பு |
2.65 | திருப்பிரமபுரம் | (698-708) | மின்பதிப்பு |
2.66 | திருஆலவாய் | (709-719) | மின்பதிப்பு |
2.67 | திருப்பெரும்புலியூர் | (720-730) | மின்பதிப்பு |
2.68 | திருக்கடம்பூர் | (731-741) | மின்பதிப்பு |
2.69 | திருப்பாண்டிக்கொடுமுடி | (742-752) | மின்பதிப்பு |
2.70 | திருப்பிரமபுரம் | (753-764) | மின்பதிப்பு |
2.71 | திருக்குறும்பலா | (765-775) | மின்பதிப்பு |
2.72 | திருநணா | (776-786) | மின்பதிப்பு |
2.73 | திருப்பிரமபுரம் | (787-798) | மின்பதிப்பு |
2.74 | திருப்பிரமபுரம் | (799-810) | மின்பதிப்பு |
2.75 | சீகாழி | (811-821) | மின்பதிப்பு |
2.76 | திருஅகத்தியான்பள்ளி | (822-832) | மின்பதிப்பு |
2.77 | திருஅறையணிநல்லூர் | (833-843) | மின்பதிப்பு |
2.78 | திருவிளநகர் | (844-854) | மின்பதிப்பு |
2.79 | திருவாரூர் | (855-865) | மின்பதிப்பு |
2.80 | திருக்கடவூர்மயானம் | (866-876) | மின்பதிப்பு |
2.81 | திருவேணுபுரம் | (877-886) | மின்பதிப்பு |
2.82 | திருத்தேவூர் | (887-897) | மின்பதிப்பு |
2.83 | திருக்கொச்சைவயம் | (898-908) | மின்பதிப்பு |
2.84 | திருநனிபள்ளி | (908-918) | மின்பதிப்பு |
2.85 | கோளாறு திருப்பதிகம் | (919-929) | மின்பதிப்பு |
2.86 | திருநாரையூர் | (930-940) | மின்பதிப்பு |
2.87 | திருநறையூர் | (941-951) | மின்பதிப்பு |
2.88 | திருமுல்லைவாயில் | (952-962) | மின்பதிப்பு |
2.89 | திருக்கொச்சைவயம் | (963-972) | மின்பதிப்பு |
2.90 | திருநெல்வாயில் | (973-983) | மின்பதிப்பு |
2.91 | திருமறைக்காடு | (984-994) | மின்பதிப்பு |
2.92 | திருப்புகலூர் | (995-1005) | மின்பதிப்பு |
2.93 | திருத்தெங்கூர் | (1006-1016) | மின்பதிப்பு |
2.94 | திருவாழ்கொளிபுத்தூர் | (1017-1027) | மின்பதிப்பு |
2.95 | திருஅரைசிலி | (1028-1037) | மின்பதிப்பு |
2.96 | சீகாழி | (1038-1048) | மின்பதிப்பு |
2.97 | சீகாழி | (1049-1058) | மின்பதிப்பு |
2.98 | திருத்துருத்தி | (1059-1069 | மின்பதிப்பு |
2.99 | திருக்கோடிகா | (1070-1080) | மின்பதிப்பு |
2.100 | திருக்கோவலூர் வீரட்டம் | (1081-1091) | மின்பதிப்பு |
2.101 | திருவாரூர் | (1092-1102) | மின்பதிப்பு |
2.102 | திருச்சிரபுரம் | (1103-1113) | மின்பதிப்பு |
2.103 | திருஅம்பர்த்திருமாகாளம் | (1114-1124) | மின்பதிப்பு |
2.104 | திருக்கடிக்குளம் | (1125-1135) | மின்பதிப்பு |
2.105 | திருக்கீழ்வேளூர் | (1136-1146) | மின்பதிப்பு |
2.106 | திருவலஞ்சுழி | (1147- 1157) | மின்பதிப்பு |
2.107 | திருக்கேதீச்சரம் | (1158-1168) | மின்பதிப்பு |
2.108 | திருவிற்குடிவீரட்டானம் | (1169-1178) | மின்பதிப்பு |
2.109 | திருக்கோட்டூர் | (1179-1189) | மின்பதிப்பு |
2.110 | திருமாந்துறை | (1190-1200 | மின்பதிப்பு |
2.111 | திருவாய்மூர் | (1201-1211) | மின்பதிப்பு |
2.112 | திருஆடானை | (1212-1222) | மின்பதிப்பு |
2.113 | சீகாழி | (1223-1233) | மின்பதிப்பு |
2.114 | திருக்கேதாரம் | (1234-1244) | மின்பதிப்பு |
2.115 | திருப்புகலூர் | (1245-1255) | மின்பதிப்பு |
2.116 | திருநாகைக்காரோணம் | (1256-1266) | மின்பதிப்பு |
2.117 | திருஇரும்பைமாகாளம் | (1267-1277) | மின்பதிப்பு |
2.118 | திருத்திலதைப்பதி | (1278-1288) | மின்பதிப்பு |
2.119 | திருநாகேச்சரம் | (1289-1299) | மின்பதிப்பு |
2.120 | திருமூக்கீச்சரம் | (1300-1310) | மின்பதிப்பு |
2.121 | திருப்பாதிரிப்புலியூர் | (1311-1321) | மின்பதிப்பு |
2.122 | திருப்புகலி | (1322-1331) | மின்பதிப்பு |
655 |
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித் தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள் அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும் வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. | 01 | 656 | நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல் ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. | 02 | 657 | தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக் கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள் உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும் வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே. | 03 | 658 | நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன் உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும் விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே. | 04 | 659 | பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென் றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும் வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே. | 05 | 660 | ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென் றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட் கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே. | 06 | 661 | கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால் மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய் ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும் வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. | 07 | 662 | வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும் இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும் விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே. | 08 | 663 | கரியா னோடு கமல மலரான் காணாமை எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட் குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. | 09 | 664 | பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. | 10 | 665 | விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக் கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான் நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க் கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. | 11 |
666 |
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. | 01 | 667 | பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர் நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. | 02 | 668 | பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத் தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க் கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே. | 03 | 669 | வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப் பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன் மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே. | 04 | 670 | விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் படையார் பூதஞ் சூழப் பாட லாடலார் பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார் விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே. | 05 | 671 | குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன் மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே. | 06 | 672 | நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார் கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார் காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே. | 07 | 673 | புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர் ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே. | 08 | 674 | காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார் போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார் கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே. | 09 | 675 | கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக் கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார் பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால் விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. | 10 | 676 | வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர் நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன் பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே. | 11 |
677 |
மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர் அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே. | 01 | 678 | மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர் நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும் பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே. | 02 | 679 | பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண் டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே. | 03 | 680 | வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர் அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே. | 04 | 681 | என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர் அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர் பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே. | 05 | 682 | வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. | 06 | 683 | நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர் அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. | 07 | 684 | இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும் பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான் வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே. | 08 | 685 | முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங் கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே. | 09 | 686 | கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே. | 10 | 687 | நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன் பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல் செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே. | 11 |
688 |
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய் ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. | 01 | 689 | எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார் சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. | 02 | 690 | நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந் தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப் பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. | 03 | 691 | தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங் குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர் முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே. | 04 | 692 | வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ் சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார் கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும் முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. | 05 | 693 | வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. | 06 | இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | 694 | வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில் பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. | 08 | 695 | அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ் சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. | 09 | 696 | கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில் திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. | 10 | 697 | அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன் முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள் பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. | 11 |
698 |
கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும் மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. | 01 | 699 | கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. | 02 | 700 | சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங் கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும் பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. | 03 | 701 | நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங் கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும் மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. | 04 | 702 | தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும் ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும் ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும் பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. | 05 | 703 | விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும் அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும் வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும் பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. | 06 | 704 | பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. | 07 | 705 | பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும் புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும் பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே. | 08 | 706 | அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங் கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும் படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும் பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. | 09 | 707 | வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும் உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும் பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. | 10 | 708 | பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே. | 11 |
709 |
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. | 01 | 710 | வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. | 02 | 711 | முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. | 03 | 712 | காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. | 04 | 713 | பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. | 05 | 714 | அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. | 06 | 715 | எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. | 07 | 716 | இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. | 08 | 717 | மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. | 09 | 718 | குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. | 10 | 719 | ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. | 11 |
720 |
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 01 | 720 | துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக் கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 02 | * கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது. | 722 | கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 03 | 723 | ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம் பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 04 | 724 | தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 05 | 725 | கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர் மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப் பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 06 | 726 | மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர் கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே. | 07 | 727 | உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித் துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 08 | 728 | சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 09 | 729 | உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர் கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே. | 10 | 730 | பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. | 11 |
731 |
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத் தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக் கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில் தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே. | 01 | 732 | அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும் விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப் பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே. | 02 | 733 | *இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத் தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில் ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப் புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே. | 03 | * இளி - என்பது ஏழிசையிலொன்று. | 734 | பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. | 04 | 735 | தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில் பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே. | 05 | 736 | தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக் கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில் பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப் பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. | 06 | 737 | பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில் ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன் புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே. | 07 | 738 | பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில் காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில் மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித் தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே. | 08 | 739 | திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன் கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில் மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே. | 09 | 740 | ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச் சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன் காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே. | 10 | 741 | விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங் கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும் படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே. | 11 |
742 |
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும் பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 01 | 743 | தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே. | 02 | 744 | சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும் விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 03 | 745 | நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 04 | 746 | போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 05 | 747 | கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 06 | 748 | ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங் கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 07 | 749 | புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும் பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங் கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே. | 08 | 750 | திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 09 | 751 | புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால் மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே. | 10 | 752 | கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச் சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. | 11 |
753 |
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே. | 01 | 754 | வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந் தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங் காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. | 02 | 755 | புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர் அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம் பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. | 03 | 756 | வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர் கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. | 04 | 757 | தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. | 05 | 758 | தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. | 06 | 759 | சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே. | 07 | 760 | புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர் விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. | 08 | 761 | சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப் பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல் நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே. | 09 | 762 | செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக் கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. | 10 | 763 | கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர் நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. | 11 | 764 | காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. | 12 |
765 |
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. | 01 | 766 | நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல் கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே. | 02 | 767 | வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல் பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக் கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. | 03 | 768 | பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக் கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல் கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே. | 04 | 769 | தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல் குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே. | 05 | 770 | நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர் கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில் ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல் கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே. | 06 | 771 | பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப் பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக் குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே. | 07 | 772 | ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச் சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல் பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே. | 08 | 773 | அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல் மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே. | 09 | 774 | மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில் நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக் கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே. | 10 | 775 | கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல் நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே. | 11 |
776 |
பந்தார் விரல்மடவாள் பாகமா அந்தார் அரவணிந்த அம்மா வந்தார் மடமந்தி கூத்தாட செந்தேன் தெளியொளிரத் தேமாக் 01 | | 777 | நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் ஈட்டுந் துயரறுக்கும் எம்மா ஓட்டந் தருமருவி வீழும் சேட்டார் மணிகள் அணியுந் 02
|
778 | நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் | மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் குன்றோங்கி வன்றிரைகள் மோத சென்றோங்கி வானவர்க ளேத்தி 03
|
779 | கையில் மழுவேந்திக் காலிற் | மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் ஐய ரவரெம் பெருமா செய்ய கமலம் பொழிதே 04
|
780 | முத்தேர் நகையா ளிடமாகத் | தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா அத்தேன் அளியுண் களியா தெத்தே யெனமுரலக் கேட்டார் 05
|
781 | வில்லார் வரையாக மாநாகம் | புல்லார் புரமூன் றெரித்தார்க் அல்லாத சாதிகளு மங்கழல்மேற் செல்லா வருநெறிக்கே செல்ல 06
|
782 | கானார் களிற்றுரிவை மேல்மூடி | ஊனார் தலையோட்டி லூணுகந்தான் நானா விதத்தால் விரதிகள்நன் தேனார் மலர்கொண் டடியார் 07
|
783 | மன்னீ ரிலங்கையர்தங் கோமான் | முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் அன்னீர் மைகுன்றி அழலால் செந்நீர் பரப்பச் சிறந்து 08
|
784 | மையார் மணிமிடறன் மங்கையோர் | கையார் பலியேற்ற கள்வன் பொய்யா மறையானும் பூமி செய்யார் எரியாம் உருவ 09
|
785 | ஆடை யொழித்தங் கமணே | மூடு உருவம் உகந்தார் ஓடு நதிசேரும் நித்திலமும் சேடர் சிறந்தேத்தத் தோன்றி 10
|
786 | கல்வித் தகத்தால் திரைசூழ் | நல்வித் தகத்தால் இனிதுணரும் சொல்வித் தகத்தால் இறைவன் வல்வித் தகத்தான் மொழிவார் 11
| |
787 |
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச் களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் 01 | | 788 | திருவளருங் கழுமலமே கொச்சைதே தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் 02
|
789 | வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் | ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில் வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ 03
|
790 | மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் | சேமமதில் புடைதிகழுங் கழுமலமே பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் 04
|
| *தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
|
791 |
வயங்கொச்சை தயங்கு பூமேல் | விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர் திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல் உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம் 05
|
792 | புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு | எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற் அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை 06
|
793 | வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் | வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் 07
|
794 | மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் | நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் 08
|
795 | இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் | நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத் வரக்கரவாப் புகலிவெங் குருமாசி அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந் 09
|
796 | மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் | நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார் சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் மாலோடும் அயனறியான் வண்காழி 10
|
797 | ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் | ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் சாக்கியரோ டமண்கையர் தாமறியா 11
|
798 | அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் | புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன 12
| |
799 |
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம் சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் 01 | | 800 | கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை 02
|
801 | ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை | கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் 03
|
802 | தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் | எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ 04
|
803 | விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை | இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா 05
|
804 | காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் | ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர் வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் 06
|
805 | திகழ்மாட மலிசண்பை பூந்தராய் | மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் 07
|
806 | நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி | ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் 08
|
807 | மிக்ககம லத்தயனூர் விளங்குபுற | தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ 09
|
808 | எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் | பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் கைம்மாவை யுரிசெய்தோன் காழியய மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் 10
|
809 | இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய | குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் 11
|
810 | அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் | மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் தம்மானொன் றியஞான சம்பந்தன் 12
| |
811 |
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப் பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற் கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள் மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. | 01 | 812 | வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும் பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான் கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள் நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. | 02 | 813 | சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத் துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான் கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள் மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. | 03 | 814 | பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங் கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள் தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. | 04 | 815 | தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய் நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள் தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. | 05 | 816 | சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள் பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. | 06 | 817 | முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங் கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள் கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. | 07 | 818 | வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள் நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. | 08 | 819 | மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும் இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர் வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. | 09 | 820 | நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர் அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான் கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள் வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. | 10 | 821 | கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள் அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார் விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. | 11 |
822 |
வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. | 01 | 823 | துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர் அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. | 02 | 824 | உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங் கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. | 03 | 825 | காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. | 04 | 826 | போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. | 05 | 827 | தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. | 06 | 828 | ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. | 07 | 829 | செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம் ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம் அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. | 08 | 830 | சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. | 09 | 831 | செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச் சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. | 10 | 832 | ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள் சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. | 11 |
833 |
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. | 01 | 834 | இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன் அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. | 02 | 835 | என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. | 03 | 836 | விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே. | 04 | 837 | தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. | 05 | 838 | விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே. | 06 | 839 | வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே. | 07 | 840 | தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. | 08 | 841 | வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில் ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச் சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. | 09 | 842 | வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப் பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. | 10 | 843 | கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார் மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக் கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே. | 11 |
844 |
ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. | 01 | 845 | அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. | 02 | 846 | வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. | 03 | 847 | கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. | 04 | 848 | பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. | 05 | 849 | தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. | 06 | 850 | சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. | 07 | 851 | படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. | 08 | 852 | கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. | 09 | 853 | உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. | 10 | 854 | மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. | 11 |
855 |
கவனமாய்ச் சோடையாய் நாவெழாப் சிவனதாட் சிந்தியாப் பேதைமார் கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் அவனதா ரூர்தொழு துய்யலாம் 01 | | 856 | தந்தையார் போயினார் தாயரும் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் அந்தணா ரூர்தொழு துய்யலா 02
|
857 | நிணங்குடர் தோல்நரம் பென்புசேர் | குணங்களார்க் கல்லது குற்றம்நீங் வணங்குவார் வானவர் தானவர் அணங்கனா ரூர்தொழு துய்யலாம் 03
|
858 | நீதியால் வாழ்கிலை நாள்செலா | வாதியா ஆதலால் நாளும்நாள் சாதியார் கின்னரர் தருமனும் ஆதியா ரூர்தொழு துய்யலாம் 04
|
859 | பிறவியால் வருவன கேடுள | துறவியார்க் கல்லது துன்பம்நீங் மறவல்நீ மார்க்கமே நண்ணினாய் அறவனா ரூர்தொழு துய்யலாம் 05
|
860 | செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் | கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற முடிகளால் வானவர் முன்பணிந் அடிகளா ரூர்தொழு துய்யலாம் 06
|
861 | ஏறுமால் யானையே சிவிகையந் | மாறிவா ழுடம்பினார் படுவதோர் மாறிலா வனமுலை மங்கையோர் ஆறனா ரூர்தொழு துய்யலாம் 07
|
862 | என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் | புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் முன்பெலாம் ஒன்பது வாய்தலார் அன்பனா ரூர்தொழு துய்யலாம் 08
|
863 | தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் | பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக் வெந்தநீ றாடியார் ஆதியார் எந்தையா ரூர்தொழு துய்யலாம் 09
|
864 | நெடியமால் பிரமனும் நீண்டுமண் | படியனார் பவளம்போல் உருவனார் வடிவனார் மதிபொதி சடையனார் அடிகளா ரூர்தொழு துய்யலாம் 10
|
865 | பல்லிதழ் மாதவி அல்லிவண் | நல்லவே நல்லவே சொல்லிய எல்லியம் போதெரி யாடுமெம் சொல்லவே வல்லவர் தீதிலார் 11
| |
866 |
வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார் கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. | 01 | 867 | மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக் கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார் அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. | 02 | 868 | ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக் காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார் ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. | 03 | 869 | இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார் மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார் பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. | 04 | 870 | வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத் துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக் கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. | 05 | 871 | பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார் ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார் கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார் பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. | 06 | 872 | பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார் ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. | 07 | 873 | செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற் கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார் மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. | 08 | 874 | வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார் கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப் பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. | 09 | 875 | தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர் பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. | 10 | 876 | மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. | 11 |
877 |
பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர் ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. | 01 | 878 | சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல் உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம் அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும் படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. | 02 | 879 | கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர் திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர் மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப் பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. | 03 | 880 | நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும் ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக் கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே. | 04 | 881 | ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார் காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. | 05 | 882 | மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர் துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர் பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத் தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. | 06 | 883 | நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர் கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர் ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. | 07 | 884 | இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன் விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற் கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார் விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. | 08 | 885 | தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால் போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே. | 09 | 886 | நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள் புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும் விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. | 10 | இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 11 |
887 |
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. | 01 | 888 | ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 02 | 889 | மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 03 | 890 | முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும் பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள் சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர் அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 04 | 891 | பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 05 | 892 | பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர் அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. | 06 | 893 | வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 07 | 894 | தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. | 08 | 895 | முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான் செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர் அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 09 | 896 | பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர் ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. | 10 | 897 | அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. | 11 |
898 |
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள் வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை சாலநல் வேலையோசை தருமாட வீதி 01 | | 899 | விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் 02
|
900 | படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை | இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன் நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும் குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல 03
|
901 | எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து | பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன 04
|
902 | பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர | இனியன அல்லவற்றை யினிதாக நல்கும் முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து 05
|
903 | புலியதள் கோவணங்கள் உடையாடை யாக | நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு 06
|
| இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07
|
904 | மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் | பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள் 08
|
905 | வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் | கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும் நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து 09
|
906 | கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர் | மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல பையுடை நாகவாயில் எயிறார மிக்க செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து 10
|
907 | இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை | மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும் 11
| |
908 |
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் 01 | | 909 | சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம் இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை 02
|
910 | பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் | கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும் 03
|
911 | குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு | ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும் 04
|
912 | தோடொரு காதனாகி யொருகா திலங்கு | காடிட மாகநின்று கனலாடு மெந்தை வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும் 05
|
913 | மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து | ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் 06
|
914 | தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் | வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் *நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை 07
|
| * பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது | சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில், முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழியப் பாடியதும் என்னுந் திருவெண்பாவானுமுணர்க.
915 | வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று | டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 08
|
916 | நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற | அறவுரு வேதநாவன் அயனோடு மாலும் புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை நறவிரி போதுதாது புதுவாச நாறும் 09
|
917 | அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் | மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 10
|
918 | கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் | படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க 11
| |
919 |
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 01 | | 920 | என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 02
|
| *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத | 12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.
921 | உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து | முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல 03
|
922 | மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து | நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல 04
|
923 | நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் | துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 05
|
924 | வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் | நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல 06
|
925 | செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக | ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல 07
|
926 | வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து | வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல 08
|
927 | பலபல வேடமாகும் பரனாரி பாகன் | சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல 09
|
928 | கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு | மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல 10
|
929 | தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி | நான்முகன் ஆதியாய பிரமா புரத்து தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் 11
| |
930 |
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் 01 | | 931 | ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி கானிடை யாடிபூதப் படையா னியங்கு தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு 02
|
932 | ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் | பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த 03
|
933 | தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும் | தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் பேயுற வாயகானில் நடமாடி கோல தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் 04
|
934 | வசையப ராதமாய வுவரோத நீங்குந் | மிசையவ ராதியாய திருமார் பிலங்கு இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் 05
|
935 | உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம் | குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன் திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற 06
|
936 | தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து | இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச் சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் 07
|
937 | உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம் | மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம் திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் 08
|
938 | வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க | தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத் சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் 09
|
939 | மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம் | படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் 10
|
940 | எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை | திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க 11
| |
941 |
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி நீரியல் காலுமாகி நிறைவானு மாகி ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நாரியோர் பாகமாக நடமாட வல்ல 01 | | 942 | இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர் நடமயி லாலநீடு குயில்கூவு சோலை 02
|
943 | சூடக முன்கைமங்கை யொருபாக மாக | ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு நாடக மாகவாடி மடவார்கள் பாடும் 03
|
944 | சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி | ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன் தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் 04
|
945 | நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி | அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன் மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் 05
|
946 | கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை | பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு அணுகிய வேதவோசை யகலங்க மாறின் நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து 06
|
947 | ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க | மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் 07
|
948 | அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள் | கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல 08
|
949 | குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் | றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச நலமலர் சிந்தவாச மணநாறு வீதி 09
|
950 | துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற | கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட 10
|
951 | கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி | ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று 11
| |
952 |
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த களிமண்டு சோலை கழனிக் கலந்த தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு 01 | | 953 | பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் 02
|
954 | வாராத நாடன் வருவார்தம் வில்லின் | ஆராத வின்ப னகலாத அன்பன் பேராத சோதி பிரியாத மார்பின் தீராத காதல் நெதிநேர நீடு 03
|
955 | ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும் | அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த 04
|
956 | கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் | நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு 05
|
957 | ஊனேறு வேலின் உருவேறு கண்ணி | ஆனேற தேறி யழகேறு நீறன் மானேறு கொல்லை மயிலேறி வந்து தேனேறு மாவின் வளமேறி யாடு 06
|
958 | நெஞ்சார நீடு நினைவாரை மூடு | அஞ்சாடு சென்னி அரவாடு கையன் மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் 07
|
959 | வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் | உரைவந்த பொன்னின் உருவந்த மேனி வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து திரைவந்து வந்து செறிதேற லாடு 08
|
960 | மேலோடி நீடு விளையாடல் மேவு | பாலாடு மேனி கரியானு முன்னி காலாடு நீல மலர்துன்றி நின்ற சேலோடு வாளை குதிகொள்ள மல்கு 09
|
961 | பனைமல்கு திண்கை மதமா வுரித்த | நினைவன்ன சிந்தை அடையாத தேரர் வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு 10
|
962 | அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த | திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் 11
| |
963 |
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற் பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. | 01 | 964 | சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக் கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. | 02 | 965 | பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர் வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. | 03 | 966 | கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர் கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. | 04 | 967 | ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. | 05 | 968 | மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற் துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற் கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. | 06 | இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07 | 969 | அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய் குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. | 08 | 970 | சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. | 09 | 971 | குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர் பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. | 10 | 972 | கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே. | 11 |
973 |
எந்தை ஈசனெம் பெருமான் சிந்தை செய்பவர்க் கல்லால் கந்த மாமல ருந்திக் அந்தண் சோலைநெல் வாயில் 01 | | 974 | ஈர வார்சடை தன்மேல் சீருஞ் செல்வமும் ஏத்தாச் வாரி மாமல ருந்தி ஆருஞ் சோலைநெல் வாயில் 02
|
975 | *பிணிக லந்தபுன் சடைமேற் | பணிக லந்துசெய் யாத மணிக லந்துபொன் னுந்தி அணிக லந்தநெல் வாயில் 03
|
| *பிணி - கட்டுதல்
|
976 | துன்ன ஆடையொன் றுடுத்துத் | உன்னி நைபவர்க் கல்லால் பொன்னும் மாமணி யுந்திப் அன்ன மாருநெல் வாயில் 04
|
977 | வெருகு ரிஞ்சுவெங் காட்டி | உருகி நைபவர்க் கல்லால் முருகு ரிஞ்சுபூஞ் சோலை தருகு ரிஞ்சுநெல் வாயில் 05
|
978 | உரவு நீர்சடைக் கரந்த | பரவி நைபவர்க் கல்லாற் குரவ நீடுயர் சோலைக் அரவ மாருநெல் வாயில் 06
|
979 | நீல மாமணி மிடற்று | சீல மாந்தர்கட் கல்லாற் கோல மாமல ருந்திக் ஆலுஞ் சோலைநெல் வாயில் 07
|
980 | செழுந்தண் மால்வரை யெடுத்த | அழுந்த ஊன்றிய விரலான் கொழுங் கனிசுமந் துந்திக் அழுந்துஞ் சோலைநெல் வாயில் 08
|
981 | நுணங்கு நூலயன் மாலும் | வணங்கி நைபவர்க் கல்லால் மணங்க மழ்ந்துபொன் னுந்தி அணங்குஞ் சோலைநெல் வாயில் 09
|
982 | சாக்கி யப்படு வாருஞ் | பாக்கி யப்பட கில்லாப் பூக்க மழ்ந்துபொன் னுந்திப் ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் 10
|
983 | கறையி னார்பொழில் சூழ்ந்த | அறையும் பூம்புனல் பரந்த முறைமை யாற்சொன்ன பாடல் பறையும் ஐயுற வில்லை 11
| |
984 |
பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங் கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந் திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும் எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே. | 01 | 985 | கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங் கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே. | 02 | 986 | நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற் பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக் கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே. | 03 | 986 | ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித் தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம் மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின் நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே. | 04 | 987 | அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும் பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான் மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட் டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. | 05 | 989 | பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே. | 06 | 990 | நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப் பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே. | 07 | 991 | தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான் மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன் பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே. | 08 | 992 | விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும் பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான் கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே. | 09 | 993 | பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக் கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள் அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள் பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே. | 10 | 994 | மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக் கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன் செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப் பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே. | 11 |
995 |
பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில் புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே. | 01 | 996 | முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான் கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும் வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. | 02 | 997 | தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங் கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. | 03 | 998 | பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம் பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. | 04 | 999 | ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான் பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில் மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. | 05 | 1000 | தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக் கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல் வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. | 06 | 1001 | தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே. | 07 | 1002 | சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக் காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார் வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. | 08 | 1003 | சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர் ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால் வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே. | 09 | 1004 | கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம் மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற் செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. | 10 | 1005 | பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில் மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத் தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே. | 11 |
1006 |
புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர் விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 01 | 1007 | சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங் கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன் பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 02 | 1008 | அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட் படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன் சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண் விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 03 | 1009 | பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார் கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர் வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 04 | 1010 | சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால் தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 05 | 1011 | தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 06 | 1012 | நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார் முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப் பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 07 | 1013 | எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக் கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர் தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. | 08 | 1014 | தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார் பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால் ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. | 09 | 1015 | சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக் கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே | .10 | 1016 | வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. | 11 |
1017 |
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 01 | 1018 | எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள் கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார் பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார் வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 02 | 1019 | நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும் வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார் வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 03 | 1020 | பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார் குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார் வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 04 | 1021 | பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார் விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 05 | 1022 | தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார் கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 06 | 1023 | மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 07 | 1024 | ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார் கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 08 | 1025 | வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும் என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. | 09 | 1026 | மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர் குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே. | 10 | 1027 | நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன் வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார் நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. | 11 |
1028 |
பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. | 01 | 1029 | ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம் ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. | 02 | 1030 | கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென் கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன் சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 03 | 1031 | மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப் புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. | 04 | 1032 | மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித் தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. | 05 | 1033 | பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப் பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 06 | இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | 1034 | வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன் கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப் பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே. | 08 | 1035 | குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும் வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ் செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே. | 09 | 1036 | குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 10 | 1037 | அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ் சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே. | 11 |
1038 |
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான் செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந் தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே. | 01 | 1039 | தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே. | 02 | 1040 | கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந் திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. | 03 | 1041 | சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந் துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. | 04 | 1042 | மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான் எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. | 05 | 1043 | நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன் ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. | 06 | 1044 | நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில் விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம் இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. | 07 | 1045 | கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச் சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. | 08 | 1046 | மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற் பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. | 09 | 1047 | புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ் சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. | 10 | 1048 | ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- | 11 | * இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள் சிதைந்துபோயின. |
1049 |
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. | 01 | 1050 | பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும் ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர் தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந் தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. | 02 | 1051 | சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. | 03 | 1052 | நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. | 04 | 1053 | கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய் உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. | 05 | 1054 | அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. | 06 | இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | 1055 | பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. | 08 | 1056 | காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. | 09 | 1057 | நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. | 10 | 1058 | தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. | 11 |
1059 |
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந் திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. | 01 | 1060 | அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந் தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக் கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம் எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே. | 02 | 1061 | கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக் கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. | 03 | 1062 | கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம் அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும் ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய் இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே. | 04 | 1063 | துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. | 05 | 1064 | வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில் துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய் மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே. | 06 | 1065 | கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல் மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. | 07 | 1066 | சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன் இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய் கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே. | 08 | 1067 | களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய் வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார் துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. | 09 | 1068 | புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந் துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம் பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. | 10 | 1069 | கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ் சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால் பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே. | 11 |
1070 |
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. | 01 | 1071 | அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர் நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங் கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. | 02 | 1072 | துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. | 03 | 1073 | பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக் கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. | 04 | 1074 | முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான் கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. | 05 | 1075 | ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக் காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. | 06 | 1076 | ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர் மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. | 07 | 1077 | மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர் குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. | 08 | 1078 | மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர் கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. | 09 | 1079 | தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும் பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங் கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. | 10 | 1080 | கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. | 11 |
1081 |
படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. | 01 | 1082 | கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த் திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர் குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. | 02 | 1083 | உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே. | 03 | 1084 | கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே. | 04 | 1085 | உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண் துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே. | 05 | 1086 | கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங் கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. | 06 | 1087 | உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. | 07 | 1088 | ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல் போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. | 08 | 1089 | ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில் நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே. | 09 | 1090 | குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல் பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில் வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே. | 10 | 1091 | கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில் விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே. | 11 |
1092 |
பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே. | 01 | 1093 | விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும் இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர் கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே. | 02 | 1094 | கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர் மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர் வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே. | 03 | 1095 | அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில் குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர் பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. | 04 | 1096 | சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத் தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர் தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம் அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே. | 05 | 1097 | கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர் துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே. | 06 | 1098 | கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர் தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே. | 07 | 1099 | வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும் நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர் நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே. | 08 | 1100 | இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய் வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர் செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே. | 09 | 1101 | பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம் வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர் மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல் அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே. | 10 | 1102 | வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே. | 11 |
1103 |
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் 01 | | 1104 | கோல மாகரி உரித்தவர் அரவொடும் சாலப் பூண்டுதண் மதியது சூடிய போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் 02
|
1105 | மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் | கானத் தேதிரி வேடனா யமர்செயக் தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை 03
|
1106 | மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் | பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் 04
|
1107 | பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் | ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் 05
|
1108 | ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ் | ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ 06
|
1109 | பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய | வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம் சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் 07
|
1110 | இலங்கு பூண்வரை மார்புடை இராவணன் | கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன் குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு 08
|
1111 | வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் | கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க் பண்டு கண்டது காணவே நீண்டவெம் கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ 09
|
1112 | பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் | செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில் வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை 10
|
1113 | பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் | நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் 11
| |
1114 |
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க் 01 | | 1115 | அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் 02
|
1116 | குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் | கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை 03
|
1117 | எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் | தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை கங்கு லும்பக லுந்தொழும் அடியவர் 04
|
1118 | நெதியம் என்னுள போகமற் றென்னுள | கதியம் என்னுள வானவர் என்னுளர் மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் 05
|
1119 | கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் | தெண்ணி லாவொடு திலதமு நகுதலை மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் 06
|
1120 | தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் | பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற் 07
|
1121 | பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப் | எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை 08
|
1122 | உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின் | பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் 09
|
1123 | பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும் | கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங் வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் 10
|
1124 | மாறு தன்னொடு மண்மிசை யில்லது | தீறும் ஆதியு மாகிய சோதியை நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம் கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் 11
| |
1125 |
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை 01 | | 1126 | விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் 02
|
1127 | பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது | தங்க மங்கையைப் பாகம துடையவர் கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை 03
|
1128 | நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் | பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை 04
|
1129 | சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு | அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் 05
|
1130 | மாதி லங்கிய பாகத்தன் மதியமொ | போதி லங்கிய கொன்றையும் மத்தமும் காதி லங்கிய குழையினன் கடிக்குளத் பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை 06
|
1131 | குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் | உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை 07
|
1132 | மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் | எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் 08
|
1133 | நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு | பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் சீரி னார்கழ லேத்தவல் லார்களைத் 09
|
1134 | குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் | மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் 10
|
1135 | தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் | மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் கனம லிகட லோதம்வந் துலவிய இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் 11
| |
1136 |
மின்னு லாவிய சடையினர் விடையினர் பன்னு லாவிய மறைஒலி நாவினர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை 01 | | 1137 | நீரு லாவிய சடையிடை யரவொடு வாரு லாவிய வனமுலை யவளொடு ஏரு லாவிய இறைவன துறைவிடம் சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் 02
|
1138 | வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு | பண்ணி லாவிய பாடலோ டாடலர் பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார் 03
|
1139 | சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் | நாடு லாவிய பலிகொளும் நாதனார் பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் நீடு லாவிய நிமலனைப் பணிபவர் 04
|
1140 | துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை | மன்று லாவிய மாதவ ரினிதியன் நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை 05
|
1141 | கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் | தொத்து லாவிய நூலணி மார்பினர் பித்து லாவிய பத்தர்கள் பேணிய முத்து லாவிய வித்தினை யேத்துமின் 06
|
1142 | பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் | கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர் மறைநி லாவிய அந்தணர் மலிதரு நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் 07
|
1143 | மலைநி லாவிய மைந்தனம் மலையினை | தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் கலைநி லாவிய நாவினர் காதல்செய் நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் 08
|
1144 | மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு | பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் 09
|
1145 | சீறு லாவிய தலையினர் நிலையிலா | வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் ஏறு லாவிய கொடியனை யேதமில் பேறு லாவிய பெருமையன் திருவடி 10
|
1146 | குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை | திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி 11
| |
1147 |
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் 01 | | 1148 | விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ 02
|
1149 | திருந்த லார்புரந் தீயெழச் செறுவன | பரிந்து காப்பன பத்தியில் வருவன மருந்து மாவன மந்திர மாவன இருந்த நாயகன் இமையவ ரேத்திய 03
|
1150 | கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் | றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய 04
|
1151 | மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் | பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் 05
|
1152 | ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் | இருவ ராதரிப் பார்பல பூதமும் அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே 06
|
1153 | குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் | என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர் அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று 07
|
1154 | குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் | கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் பயில வல்லவர் பரகதி காண்பவர் 08
|
1155 | அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் | கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு 09
|
1156 | அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் | நெறிய லாதன கூறுவர் மற்றவை மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் 10
|
1157 | மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய | நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் 11
| |
1158 |
விருது குன்றமா மேருவில் நாணர பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் 01 | | 1159 | பாடல் வீணையர் பலபல சரிதையர் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் ஈட மாவது இருங்கடற் கரையினில் கேடி லாதகே தீச்சரங் கைதொழக் 02
|
1160 | பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் | சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் 03
|
1161 | பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் | வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் 04
|
1162 | நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் | வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் 05
|
1163 | பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் | மாழை யங்கயற் கண்ணிபா லருளிய வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே 06
|
1164 | பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் | கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே 07
|
1165 | தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் | தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே 08
|
1166 | பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் | மேவி நாடிநின் அடியிணை காண்கிலா மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் 09
|
1167 | புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் | எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய மத்த யானையை மறுகிட உரிசெய்து தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே 10
|
1168 | மாடெ லாமண முரசெனக் கடலின | தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் பாட லாயின பாடுமின் பத்தர்காள் 11
| |
1169 |
வடிகொள் மேனியர் வானமா மதியினர் கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை 01 | | 1170 | களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் விளங்கு மேனியர் எம்பெரு மானுறை வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 02
|
1171 | கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி | எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் 03
|
1172 | பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் | பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு வேத மோதிய நாவுடை யானிடம் சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி 04
|
1173 | கடிய ஏற்றினர் கனலன மேனியர் | இடிய மால்வரை கால்வளைத் தான்றன வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை படிய தாகவே பரவுமின் பரவினாற் 05
|
1174 | பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் | அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் 06
|
| இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07
|
1175 | இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை | திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் 08
|
1176 | செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் | எங்கு மாரெரி யாகிய இறைவனை வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் 09
|
1177 | பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ | பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் 10
|
1178 | விலங்க லேசிலை யிடமென வுடையவன் | திலங்கு சோதியை எம்பெரு மான்றனை நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் 11
| |
1179 |
நீல மார்தரு கண்டனே நெற்றியோர் சூல மார்தரு கையனே துன்றுபைம் கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் 01 | | 1180 | பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு 02
|
1181 | நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் | செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் அம்பொ னார்தரு முலகினில் அமரரோ 03
|
1182 | பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா | கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற் நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை 04
|
1183 | உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் | பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் 05
|
1184 | துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் | பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை 06
|
1185 | மாட மாளிகை கோபுரங் கூடங்கள் | பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கேட தொன்றில ராகிநல் லுலகினிற் 07
|
1186 | ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை | சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் 08
|
1187 | பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் | தேடி மாலயன் காணவொண் ணாதவத் கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற் நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் 09
|
1188 | கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் | பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் 10
|
1189 | பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் | கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் வந்து லாவிய காழியுள் ஞானசம் சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் 11
| |
1190 |
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை அம்பொன் நேர்வரு காவிரி வடகரை எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ 01 | | 1191 | விளவு தேனொடு சாதியின் பலங்களும் அளவி நீர்வரு காவிரி வடகரை துளவ மால்மக னைங்கணைக் காமனைச் அளக வாணுதல் அரிவைதன் பங்கனை 02
|
1192 | கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் | ஓடு நீர்வரு காவிரி வடகரை வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் கேடி லாமணி யைத்தொழ லல்லது 03
|
1193 | இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை | கலவி நீர்வரு காவிரி வடகரை அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் மலையை வானவர் கொழுந்தினை யல்லது 04
|
1194 | கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி | ஓங்கி நீர்வரு காவிரி வடகரை பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் 05
|
1195 | பெருகு சந்தனங் காரகில் பீலியும் | பொருது காவிரி வடகரை மாந்துறைப் பரிவி னாலிருந் திரவியும் மதியமும் மருத வானவர் வழிபடு மலரடி 06
|
1196 | நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் | இறவில் வந்தெறி காவிரி வடகரை கறவ னாகிய கூற்றினைச் சாடிய நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் 07
|
1197 | மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட | உந்தி நீர்வரு காவிரி வடகரை நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை சிந்தி யாமனத் தாரவர் சேர்வது 08
|
1198 | நீல மாமணி நித்திலத் தொத்தொடு | ஆலி யாவரு காவிரி வடகரை மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் 09
|
1199 | நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் | நன்று மாங்கனி கதலியின் பலங்களும் ஒன்றி நேர்வரு காவிரி வடகரை அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது 10
|
1200 | வரைவ ளங்கவர் காவிரி வடகரை | சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் 11
| |
1201 |
தளிரிள வளரென உமைபாடத் கிளரிள மணியர வரையார்த் விளரிள முலையவர்க் கருள்நல்கி வளரிள மதியமொ டிவராணீர் 01 | | 1202 | வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் வந்தனை பலசெய இவராணீர் 02
|
1203 | பண்ணிற் பொலிந்த வீணையர் | சுண்ணப் பொலிந்த மிடற்றினார் சுண்ணப் பொடிநீ றணிமார்பர் வண்ணப் பிறையோ டிவராணீர் 03
|
1204 | எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல் | விரிகிளர் சடையினர் விடையேறி புரிகிளர் பொடியணி திருவகலம் வரியர வரைக்கசைத் திவராணீர் 04
|
1205 | அஞ்சன மணிவணம் எழில்நிறமா | நஞ்சினை யமரர்கள் அமுதமென வெஞ்சின மால்களி யானையின்தோல் வஞ்சனை வடிவினோ டிவராணீர் 05
|
1206 | அல்லிய மலர்புல்கு விரிகுழலார் | எல்லியம் போதுகொண் டெரியேந்தி சொல்லிய அருமறை யிசைபாடிச் வல்லியந் தோலுடுத் திவராணீர் 06
|
1207 | கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் | முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் பொடியணி வடிவொடு திருவகலம் வடிநுனை மழுவினொ டிவராணீர் 07
|
1208 | கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் | எட்டுணை சாந்தமொ டுமைதுணையா பட்டிணை யகலல்குல் விரிகுழலார் வட்டணை யாடலொ டிவராணீர் 08
|
1209 | ஏனம ருப்பினொ டெழிலாமை | கானம திடமா வுறைகின்ற தேனுண மலர்கள் உந்திவிம்மித் வானநன் மதியினோ டிவராணீர் 09
|
1210 | சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் | பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் வாடல்வெண் டலைபிடித் திவராணீர் 10
|
1211 | திங்களோ டருவரைப் பொழிற்சோலைத் | அங்கமோ டருமறை யொலிபாடல் நங்கள்தம் வினைகெட மொழியவல்ல தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் 11
| |
1212 |
மாதோர் கூறுகந் தேற தேறிய ஆதியா னுறை ஆடானை போதினாற் புனைந் தேத்து வார்தமை வாதியா வினை மாயுமே. | 01 | 1213 | வாடல் வெண்டலை அங்கை யேந்திநின் றாடலா னுறை ஆடானை தோடுலா மலர் தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகளே. | 02 | 1214 | மங்கை கூறினன் மான்ம றியுடை அங்கை யானுறை ஆடானை தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் மங்கு நோய்பிணி மாயுமே. | 03 | 1215 | சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை அண்ண லானுறை ஆடானை வண்ண மாமலர் தூவிக் கைதொழ எண்ணு வாரிடர் ஏகுமே. | 04 | 1216 | கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கைய ணிம்மல ரால்வ ணங்கிட வெய்ய வல்வினை வீடுமே. | 05 | 1217 | வானி ளம்மதி மல்கு வார்சடை ஆனஞ் சாடலன் ஆடானை தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊன முள்ள வொழியுமே. | 06 | 1218 | துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை அலங்க லானுறை ஆடானை நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் வலங்கொள் வார்வினை மாயுமே. | 07 | 1219 | வெந்த நீறணி மார்பிற் றோல்புனை அந்த மில்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் சிந்தை யார்வினை தேயுமே. | 08 | 1220 | மறைவல் லாரொடு வான வர்தொழு தறையுந் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் நல்வினை பற்றுமே. | 09 | 1221 | மாய னும்மல ரானுங் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவிக் கைதொழ தீய வல்வினை தீருமே. | 10 | 1222 | வீடி னார்மலி வேங்க டத்துநின் றாட லானுறை ஆடானை நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ் பாட நோய்பிணி பாறுமே. | 11 |
1223 |
பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. | 01 | 1224 | மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. | 02 | 1225 | கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர் மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர் நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. | 03 | 1226 | குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர் பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. | 04 | 1227 | விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார் எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. | 05 | 1228 | தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப் பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. | 06 | 1229 | மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. | 07 | 1230 | முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன் அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன் தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. | 08 | 1231 | பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந் தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங் காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. | 09 | 1232 | உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார் முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம் மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. | 10 | 1233 | கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள் உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. | 11 |
1234 |
தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. | 01 | 1235 | பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந் தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங் கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. | 02 | 1236 | முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர் எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால் மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே. | 03 | 1237 | உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள் எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால் பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க் கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. | 04 | 1238 | ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால் மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. | 05 | 1239 | நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல் தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால் ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங் கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. | 06 | 1240 | மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால் உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல் கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே. | 07 | 1241 | அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. | 08 | 1242 | ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர் தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால் வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. | 09 | 1243 | கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர் இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால் அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக் கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. | 10 | 1244 | வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான் ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே. | 11 |
1245 |
வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப் பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே. | 01 | 1246 | வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல் வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள் போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே. | 02 | 1247 | மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள் தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே. | 03 | 1248 | பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால் யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே. | 04 | 1249 | அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே. | 05 | 1250 | குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால் உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள் நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே. | 06 | 1251 | ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப் பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான் ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே. | 07 | 1252 | உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன் கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால் செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம் பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே. | 08 | 1253 | நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும் ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான் சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே. | 09 | 1254 | வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும் போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள் தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால் ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே. | 10 | 1255 | புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள் வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே. | 11 |
1256 |
கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 01 | 1257 | விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான் இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற் கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 02 | 1258 | வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில் முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர் நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 03 | 1259 | வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன் கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள் உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம் கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 04 | 1260 | வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே நீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 05 | 1261 | விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர் படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர் உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 06 | 1262 | பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனை செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார் எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 07 | 1263 | பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற அத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல் கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 08 | 1264 | நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால் அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல் கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 09 | 1265 | உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும் பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும் நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே. | 10 | 1266 | மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான் நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன் வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே. | 11 |
1267 |
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம் எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. | 01 | 1268 | வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. | 02 | 1269 | வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள் கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. | 03 | 1270 | நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | 04 | 1271 | பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள் கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள் மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. | 05 | 1272 | குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. | 06 | 1273 | பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம் எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | 07 | 1274 | நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான் அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள் வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. | 08 | 1275 | அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான் இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. | 09 | 1276 | அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங் குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள் மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. | 10 | 1277 | எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. | 11 |
1278 |
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங் கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. | 01 | 1279 | தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங் கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந் தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. | 02 | 1280 | அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக் கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந் திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. | 03 | 1281 | கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ் செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே. | 04 | 1282 | புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான் பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே. | 05 | 1283 | விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும் பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந் தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே. | 06 | 1284 | ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால் தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. | 07 | 1285 | கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய் மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே. | 08 | 1286 | படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந் திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. | 09 | 1287 | புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம் பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. | 10 | 1288 | மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற் கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம் பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச் சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. | 11 |
1289 |
தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின் பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே. | 01 | 1290 | பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார் நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங் கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே. | 02 | 1291 | குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர் பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே. | 03 | 1292 | கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும் நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே. | 04 | 1293 | வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே. | 05 | 1294 | காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே. | 06 | 1295 | வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய் பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே. | 07 | 1296 | இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும் மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம் வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே. | 08 | 1297 | கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே. | 09 | 1298 | தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே. | 10 | 1299 | கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல் நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே. | 11 |
1300 |
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. | 01 | 1301 | வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே. | 02 | 1302 | மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. | 03 | 1303 | அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே. | 04 | 1304 | விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. | 05 | 1305 | வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. | 06 | 1306 | அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய் உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான் அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. | 07 | 1307 | ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங் கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. | 08 | 1308 | நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. | 09 | 1309 | வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. | 10 | 1310 | மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. | 11 |
1311 |
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே. | 01 | 1312 | கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம் புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே. | 02 | 1313 | மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான் வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின் அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே. | 03 | 1314 | போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள் ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. | 04 | 1315 | ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள் பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே. | 05 | 1316 | மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப் புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும் பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள் குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே. | 06 | 1317 | கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே. | 07 | 1318 | வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே. | 08 | 1319 | அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள் முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன் தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே. | 09 | 1320 | உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத் திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும் எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின் புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே. | 10 | 1321 | அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம் பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள் சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல் வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே. | 11 |
1322 |
விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார் படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. | 01 | 1323 | வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. | 02 | 1324 | வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. | 03 | 1325 | திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. | 04 | 1326 | ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. | 05 | 1327 | தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. | 06 | இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07 | 1328 | தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. | 08 | 1329 | கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. | 09 | 1330 | தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. | 10 | 1331 | எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. | 11 |