உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 1-9 / பாடல்கள் (1- 596)
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
1.0 | கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம் | மின்பதிப்பு | |
1.0 | சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு | மின்பதிப்பு | |
1.1 | கடவுள் வாழ்த்துப் படலம் | (1-20) | மின்பதிப்பு |
1.2 | நாட்டுப் படலம் | (21-76) | மின்பதிப்பு |
1.3 | நகரப் படலம் | (77-98) | மின்பதிப்பு |
1.4 | தலைமுறைப் படலம் | (99-165) | மின்பதிப்பு |
1.5 | நபியவதாரப் படலம் | (166-290) | மின்பதிப்பு |
1.6 | அலிமா முலையூட்டுப் படலம் | (291-390) | மின்பதிப்பு |
1.7 | இலாஞ்சனை தரித்த படலம் | (391-481) | மின்பதிப்பு |
1.8 | புனல் விளையாட்டுப் படலம் | (482-538) | மின்பதிப்பு |
1.9 | புகைறா கண்ட படலம் | (539-596) | மின்பதிப்பு |
காப்பு திருவுருவா யுணருருவா யறிவினொடு அருவுருவா யுருவுருவா யகம்புறமுந் தொருவுருவா யின்மையினி லுண்மையினைத் மருவுருவாய் வளர்காவன் முதலவனைப் கடவுள் வாழ்த்துப் படலம் | | 1 |
திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் மருவினு மருவா யணுவினுக் கணுவாய் பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த 1.1.1
| 2 |
சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத் | துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத் பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்து மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து 1.1.2
| 3 |
இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப | வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன் பெருவரந் தருவா யாதிநா யகனே 1.1.3
| 4 |
கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக் | புடவியைச் சுவனப் பதியினை யமரர் வடிவுறத் தனது பேரொளி யதனால் யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா 1.1.4
| 5 |
வேறு | அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ் யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர் விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க 1.1.5
| 6 |
வேறு | கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை 1.1.6
| 7 |
வேறு | ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித் தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும் போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம். 1.1.7
| 8 |
வேறு | தாரா தரத்தையே மேலே கவிக்கவே பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர் 1.1.8
| 9 |
வேறு | புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர் சரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர் பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு ரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரை 1.1.9
| 10 |
வேறு | அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம் 1.1.10
| 11 |
வேறு | விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில் பதிவாக வொருசேக ரமதாக நிலமீது சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க ருதுமானை யொருகாலு மறவாம லிருகாலு 1.1.11
| 12 |
வேறு | படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி வடவரை யசையாவான முகடுடை படவறாத யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர 1.1.12
| 13 |
நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு | யொலிகட லுலகமீது தெரிதர வரியதீனு மலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு ழலிதிரு மதலையான வசனுசை னுபயபாத 1.1.13
| 14 |
வேறு | ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய காலகேள்வி தானடாத காரணீக ராளவே தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர் நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம். 1.1.14
| 15 |
வேறு | ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறை நீத வான்களுறு போத வான்கள்குரு வேத வான்களெனு நாலிமாம்கள்பத 1.1.15
| 16 |
வேறு | உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந் துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம் வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன் சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன். 1.1.16
| 17 |
நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர் | சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே. 1.1.17
| 18 |
அவையடக்கம் | வேறு திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற் புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக் தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன் மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே. 1.1.18
| 19 |
படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற | வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல் வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே. 1.1.19
| 20 |
அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன் | படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர் நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே. 1.1.20
| |
21 |
தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சி நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ லிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர் கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட. | 1.2.1 | 22 |
வேறு அகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து மிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக் ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச் சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி. | 1.2.2 | 23 |
அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய் முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்த கதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே யுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே. | 1.2.3 | 24 |
பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக் கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும். | 1.2.4 | 25 |
தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும். | 1.2.5 | 26 |
வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும். | 1.2.6 | 27 |
விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக் கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தே யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம். | 1.2.7 | 28 |
வேறு வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும் விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத் 1.2.8
| 29 |
மலையெனு மரசன் புயங்களைத் தழுவி | நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச் விலைமகள் போன்று பலபல முகமாய் 1.2.9
| 30 |
வேறு | தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக் காது மாகளி றெனநதி கழைக்கடங் காது மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும். 1.2.10
| 31 |
பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி | விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச் சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப் பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும். 1.2.11
| 32 |
கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ | டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக் கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே. 1.2.12
| 33 |
வேறு | இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும் முத்தணி சிறப்ப விருகரை கொழித்து 1.2.13
| 34 |
பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப் | சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ் கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங் வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து 1.2.14
| 35 |
வேறு | கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத் தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத் துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம். 1.2.15
| 36 |
அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத் | தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங் கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய் நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும். 1.2.16
| 37 |
தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக் | கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங் குடம்பை யின்பல பேதமா கியசத கோடி யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும். 1.2.17
| 38 |
வேறு | ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து வேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கி வாரியிற் செறித்து பணையெலா நிரப்பி 1.2.18
| 39 |
வேறு | அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங் கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ் சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும். 1.2.19
| 40 |
முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க | நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச் செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே. 1.2.20
| 41 |
மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர் | கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள் வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு கட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே. 1.2.21
| 42 |
வேறு | தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன் வரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின் விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கி 1.2.22
| 43 |
முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமல | கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக் மள்ளர்கார் சேற்றி லிடறிய பதும வெள்ளநீர் பரப்பு கழனிக டோறு 1.2.23
| 44 |
சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே | மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர் லந்தர மலது வேறிட மிலையென் 1.2.24
| 45 |
சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச் | விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு 1.2.25
| 46 |
கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து | குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப் 1.2.26
| 47 |
படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற் | நடைவழி சொரியு மமுதமும் வாழை முடைபடு பனசப் பசுங்கனிச் சுளையி கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக் 1.2.27
| 48 |
அருமறை நெறியும் வணக்கமுங் கொடையு | தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந் பெருகிய செல்வக் குடியொடு கிளையும் மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி 1.2.28
| 49 |
கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக் | தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற் பூதர மனைய சுணங்கணி முலையிற் வாதரம் பெருகி நிரைநிரை வடிவா 1.2.29
| 50 |
கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக் | செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந் வையகஞ் சிறப்ப வருமுழு மதியு 1.2.30
| 51 |
பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப் | வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட் சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற் வனசமென் முகையிற் பொறிவரி யறுகால் 1.2.31
| 52 |
முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய | சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச் பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம் மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு 1.2.32
| 53 |
வெறிமது வருந்தி மரகதக் கோவை | கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக் சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற் குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க் 1.2.33
| 54 |
கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங் | காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங் சேந்திணை பொருவா தினமென வெருவிச் பாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப் 1.2.34
| 55 |
குருகின மிரியப் புள்ளினம் பதறக் | விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச் வரிவராற் பகடு வளைநில வெறிக்கு 1.2.35
| 56 |
வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி | பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்து சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச் தரையினிற் படிந்தே யருட்கை சுரந்த 1.2.36
| 57 |
கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக் | மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து 1.2.37
| 58 |
திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித் | கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட் விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப் 1.2.38
| 59 |
அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ | பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க விசும்பினைத் தடவ வரைசத கோடி 1.2.39
| 60 |
கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த | போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப் சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித் ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு 1.2.40
| 61 |
செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந் | கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய் மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம் 1.2.41
| 62 |
வேறு | கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக் கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ் சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும். 1.2.42
| 63 |
அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார் | நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித் தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும். 1.2.43
| 64 |
நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை | விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த் திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த. 1.2.44
| 65 |
நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச் | சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப் பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த. 1.2.45
| 66 |
தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்பு | பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும். 1.2.46
| 67 |
வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத் | தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ் சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும். 1.2.47
| 68 |
திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச் | சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில் விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப் பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும். 1.2.48
| 69 |
மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை | யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப் பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச் செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள். 1.2.49
| 70 |
கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற் | சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின் விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும். 1.2.50
| 71 |
பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக் | கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும் படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத் துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும். 1.2.51
| 72 |
தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே | னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச் சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும். 1.2.52
| 73 |
கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத் | துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி வெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும். 1.2.53
| 74 |
ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ் | சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியு மாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு நீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும். 1.2.54
| 75 |
தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப் | பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலே மரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற் றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே. 1.2.55
| 76 |
வேறு | நினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர் யினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்து சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி வனக்கனி கறுத்த குலைக்கள வலது 1.2.56
| |
77 |
நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம். | 13.1 | 78 |
வேறு விரிகதி ரெறித்த மணிவளை யுகுப்ப லெரிசைகைக் கிரணப் பதுமமா மணியி புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம் தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந் 13.2
| 79 |
வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும் | தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச் யிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலை படவர வரசன் றிருமுடி மணியைப் 13.3
| 80 |
கானகத் துறையும் வயிரவொண் கதிரோ | தேனவிழ் பதும மணிக்கதி ரதுவோ வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால் யீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பி 13.4
| 81 |
சரிகதி வேக மாருதஞ் சிதையத் | நிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரத முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட் விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும் 13.5
| 82 |
மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப | பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில் துன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச் 13.6
| 83 |
கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய | றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத் மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான் லெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங் 13.7
| 84 |
மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையு | பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள் தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ் லீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங் 13.8
| 85 |
தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந் | சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற் வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும் மிந்திர தருவும் வறிதென மதர்த்தங் 13.9
| 86 |
நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா | பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற் விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால் லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா 13.10
| 87 |
பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த | தங்கிய கிரண வனசமா மணியுந் செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச் மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று 13.11
| 88 |
அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட | குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந் 13.12
| 89 |
வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு | பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப் நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து 13.13
| 90 |
அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து | யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர் கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார் படர்தரு மாடக் குடுமியின் விசித்த 13.14
| 91 |
தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து | ளோங்கிட மாடக் குடுமியி னடுநின் வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த 13.15
| 92 |
வேறு | மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ் சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந் தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ் சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும். 13.16
| 93 |
வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச் | சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக் கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும். 13.17
| 94 |
மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா | னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான் முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே. 13.18
| 95 |
பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற் | கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான் மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும். 13.19
| 96 |
தெரிந்த செவ்வியர் முறைவழி தௌிந்தவர் செந்நூற் | சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும் விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம். 13.20
| 97 |
சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே | யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே. 13.21
| 98 |
மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத் | துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன் முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும். 13.22
| |
99 |
மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச் சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற் றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந் தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம். | 1.4. 1 | 100 |
தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌிவ தாக வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப் பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென் றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார். | 1.4. 2 | 101 |
கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டி விதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான் துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றி யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே. | 1.4. 3 | 102 |
திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்த பிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில் நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத் துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே. | 1.4. 4 | 103 |
வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந் தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப் பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே. | 1.4. 5 | 104 |
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின் வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத் தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத் தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே. | 1.4. 6 | 105 |
மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில் ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்து வையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத் துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே. | 1.4. 7 | 106 |
உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன் இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச் சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும் வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே. | 1.4. 8 | 107 |
துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக் கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி யண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார். | 1.4. 9 | 108 |
கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற் பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார். | 1.4. 10 | 109 |
மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின் காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட் பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ. | 1.4. 11 | 110 |
கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில் உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம் மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மை நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே. | 1.4. 12 | 111 |
பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ் சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர் வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத் தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே. | 1.4. 13 | 112 |
உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே யிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான். | 1.4. 14 | 113 |
தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள் காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி நேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்தி வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார். | 1.4. 15 | 114 |
வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற் போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி யீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றே யானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான். | 1.4. 16 | 115 |
பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள் விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே கருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக மருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே. | 1.4. 17 | 116 |
தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப் பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி யோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா ரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார். | 1.4. 18 | 117 |
செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றா னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால். | 1.4. 19 | 118 |
செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித் தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே. | 1.4. 20 | 119 |
பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச் சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன் மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே. | 1.4. 21 | 120 |
கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார் நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற் சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான். | 1.4. 22 | 121 |
மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித் துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென் றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே. | 1.4. 23 | 122 |
கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப் பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே. | 1.4. 24 | 123 |
துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென் புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான். | 1.4. 25 | 124 |
நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு முதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலே பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன். | 1.4. 26 | 125 |
மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்மு னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப் பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான். | 1.4. 27 | 126 |
வேறு தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற் சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந் கோதறப் பெருகி முன்னிலை திரண்ட மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி 1.4. 28
| 127 |
அறவரி தான காட்சியும் பேறு | ரிறைவனே யானும் பெறுவதற் கென்க நிறைநடு வாகி யுலகெலா நிறைந்த விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா 1.4. 29
| 128 |
வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க | விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில் தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச் முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த 1.4. 30
| 129 |
அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியு | வைப்பையென் விரல்க னான்கினு மென்ன மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென் ளிப்படி விரல்க ளைந்தினு மைவர் 1.4. 31
| 130 |
பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும் | மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை வகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில் 1.4. 32
| 131 |
மிக்கெழி லாத மேலவன் விதித்த | லக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்த துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்து திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத் 1.4. 33
| 132 |
ஆதியே ஹக்கா றப்பனா விறையே | நீதியே யெனவும் பலதரந் தவுபா போதிலே யெனது முதுகிடத் துறைந்த சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென் 1.4. 34
| 133 |
நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந் | யிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக் வுறைதரு துன்ப மனைத்தையும் போக்கி மறுமதி யகடு தொடுமுடி யறபா 1.4. 35
| 134 |
கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற் | நாடிய பொருட்போ னாற்பது பெயரை சூடிய கிரீட பதிநபி யமரர் நீடிய வொளியு சிறந்தொரு சூலி 1.4. 36
| 135 |
மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன | தெரிமறை ஆத மக்களிற் சிறந்த பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப் வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த 1.4. 37
| 136 |
சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை | மாதவர் கமல வதனயா னுசுதம் தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத் நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்து 1.4. 38
| 137 |
தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக் | கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல் உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி 1.4. 39
| 138 |
வடவரை குலுங்க நடமிடு துரங்க | கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள் இடிமுர சதிரு முன்றிலா ருகுநூ 1.4. 40
| 139 |
கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக் | சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச் புடையிருந் தவர்செய் யறமெலாந் திரண்டோர் விடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீ 1.4. 41
| 140 |
நன்னெறி நயினா ரொளியிருந் ததனா | உன்னுதற் கரிய முப்பது சுகுபு பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும் றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசா 1.4. 42
| 141 |
மெய்த்தவக் குரிசி னபியிது ரீசு | யுத்தமர் மத்தூ சல்குதம் மிடத்தவ் வைத்தபின் மத்தூ சல்குதம் மைந்தர் சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு 1.4. 43
| 142 |
தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத் | திருமக நூகு வயினுறைந் திருந்து பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப் கருநிறக் கடல்வங் கமுங்கவி ழாது 1.4. 44
| 143 |
வரிசையு மிமையோர் துதிசெயும் பரிசும் | தரைபுகழ்ந் தேத்தச் சாமிடத் திருந்து கருவிளை விழியார் கவரிகா லசைப்பக் விரிகட லுலகம் பொதுவறப் புரக்கும் 1.4. 45
| 144 |
சாமுதன் மதலை யறுபகு சதுமன் | தூமமும் புழுகுந் தகரமுஞ் சாந்துந் காமுக ரெனச்செய் தணிமணிப் புயங்கள் மாமதக் களிற்ற ரறுவகு சதுமா 1.4. 46
| 145 |
சாலகு தம்பா லடைந்துவாய் மைக்குந் | மேலவ ரெனச்செய் திருந்தவர் மதலை காலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங் பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம் 1.4. 47
| 146 |
தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற் | வான்கிடந் தனைய மின்னொளிர் வடிவார் கூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக் மீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகை 1.4. 48
| 147 |
வாரணி முரச மிடியெனக் கறங்கும் | தாரணி தருவா யுதித்தசா றூகு காரணக் குரிசி லானசா றூகு ஏரணிப் புயனா கூறிடத் துறைந்தங் 1.4. 49
| 148 |
வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்த | திண்டிற னாகூ றுதவிய மதலை தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோ வண்டணி மலர்த்தா ராசறு தவத்தால் 1.4. 50
| 149 |
முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீம் | ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி வானகத் தமரர் சுடர்விரி சுவன கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற் 1.4. 51
| 150 |
தீனிலைக் குரிய நபியிபு றாகீம் | ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி வானகத் தமரர் சுடர்விரி சுவன கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற் 1.4. 52
| 151 |
மன்னவ ரிசுமா யீல்தரு மதலை | தன்னிடத் திருந்து தரணியேழ் புரக்குந் மின்னவிர் மௌலி விளங்குதா பித்து யிந்நிலம் புகழு மெசுஹபு வெனும்பே 1.4. 53
| 152 |
உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் பளித்தூ | பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்த கடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதங் இடமுற விருந்து நெடும்புகழ் விளக்கி 1.4. 54
| 153 |
சந்தனந் திமிர்ந்து திரண்டமற் புயத்தார் | கந்தெறி தறுகட் கரடமா லியானைக் சுந்தர வதனத் திலங்கிட விருந்து மைந்தர்மிக் குவந்தம் மிடத்துறைந் திருந்து 1.4. 55
| 154 |
மிக்குவ மெனும்பே ரரசுதம் மதலை | பக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும் திக்கனைத் தினும்பேர் விளங்கிட விளங்கித் தக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான் 1.4. 56
| 155 |
வெண்ணிலா விரிக்கு மொருதனிக் குடைக்கீழ் | கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்து எண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்ச புண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம் 1.4. 57
| 156 |
ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட் | திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல் பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண் வருமுகின் முலறு நபியிடத் துறைந்து 1.4. 58
| 157 |
அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்த | பெறுபல னெனவந் துதித்தஇல் யாசு துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசு மறுமனர் குலக்கோ ளரியெனப் பிறந்த 1.4. 59
| 158 |
முகம்மது நயினா ரொளிவிருந் திலங்கு | செகமகிழ் குசைமா வயினுறைந் தரசர் நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்த புகழெனத் தோன்றி வருதுறை கனானாப் 1.4. 60
| 159 |
மடங்கலே றனைய தன்பதி கனானா | நுடங்கிடை மடவார் கருத்தினைக் கவரு தடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத் முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியார் 1.4. 61
| 160 |
திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச் | மண்டலம் விளக்கு முழுமணி விளக்காய் எண்டிசை யிடத்து மெழுகடற் புறத்து கொண்டமர் கடந்த வரசெனப் பெயருங் 1.4. 62
| 161 |
குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசர் | விரிதிரை யுவரி நடுநிலம் புரந்த கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங் முருகவிழ் மரவத் தொடைப்புயர் லுவையு 1.4. 63
| 162 |
வான்மதி பகுந்த முகம்மது நயினார் | கோன்மகன் ககுபு தம்மிடத் திலங்கிக் சூன்முதிர் மழைக்கை ககுபுகண் மணியாய்த் சேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற் 1.4. 64
| 163 |
கொந்தலர்ந் திருண்ட கருங்குழன் மடவார் | சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்திற் மந்தர மனைய தடம்புய ரிடத்தில் கந்தடர் தறுகட் கரடமா லியானைக் 1.4. 65
| 164 |
வில்லுமிழ் வயிரத் தொடைபுரண் டசைந்த | செல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும் மல்லலைத் திணிதோ ளரசர்நா யகர்தம் யெல்லவ னெனவே கலியிரு டுரத்தி 1.4. 66
| 165 |
கிம்புரிக் கோட்டுக் கடமலை துளைத்துக் | அம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்த நம்பிய தவப்பே றெனவிருந் திலங்கி தம்பெயர் விளக்கக் குவலயத் துதித்த 1.4. 67
| |
166 |
பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய் வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணிணைத் திருநபி வருமவ தாரஞ் செப்புவாம். | 1.5.1 | 167 |
வேறு கடியி ருந்தெழு கற்பக முஞ்சுடர் வடிவி ருந்த மணியும் வனசமும் படியுங் கார்முகி லேழும் பழித்துவிண் குடியி ருத்துங் கொழுந்தடக் கையினார். | 1.5.2 | 168 |
வேறு விண்டொடு கொடுமுடி மேரு வீறழித் தெண்டிசைக் கிரியொடு மிகலுங் கொங்கையர் கொண்டமா மயலொடு மனமுங் கூர்விழி வண்டொடும் வண்டுறை மாலை மார்பினார். | 1.5.3 | 169 |
கொன்னுனை வெண்ணிறக் கோட்டு வாரணச் செந்நிறக் குருதியிற் றிமிர்ந்து வாய்கழீஇ மின்னவிர் கணமணி விளங்கு மாமுடி யொன்னல ருயிரைமேய்ந் துறங்கும் வேலினார். | 1.5.4 | 170 |
முடங்கலங் கைதைமுள் ளெயிற்று வெண்பணிப் படங்களா யிரத்தினும் பரித்த பாரெலா மிடங்கொள்பூ தரப்புயத் திருத்தி யேதிலார் மடங்கலே றெனுமன வலியின் மாட்சியார். | 1.5.5 | 171 |
மாக்கட னெடும்புவி வளைந்த வன்கலி நீக்கிய வெண்குடை நீழ லோம்புவோர் வீக்கிய கழலடி வேந்தர் பொன்முடி தாக்கிய மருச்செழுங் கமலத் தாளினார். | 1.5.6 | 172 |
வரபதி யுலகெலாம் வாழ்த்து மக்கமா புரபதிக் கதிபதி யென்னும் பூபதி பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார். | 1.5.7 | 173 |
செழுமழை முகிலென வமுதஞ் சிந்திட வழிகதிர் நபியென வகுத்த பேரொளி பொழிகரத் தப்துல்லா விடத்திற் பொங்கியே யெழிறரு திருநுத லிடத்தி லங்குமே. | 1.5.8 | 174 |
அயிலுறை செழுங்கரத் தப்துல் லாவெனும் பெயரிய களிறுக்கோர் பிடியும் போலவ ருயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி மயிலெனு மாமினா வென்னு மங்கையே. | 1.5.9 | 175 |
இற்புகுந் தெழுமதி யிலங்கு மாமணி விற்புரு வக்கடை மின்க ணாயகம் பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர் கற்பெலாந் திரண்டுருக் கொண்ட கன்னியே. | 1.5.10 | 176 |
அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம் பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங் குறைப்பெருங் குலத்தினுக் கொப்பி லாமணிச் சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே. | 1.5.11 | 177 |
குணிப்பருங் குறைசியங் குலமென் றோங்கிய மணிப்பெருங் கடலிடை வளருஞ் செல்வமே தணிப்பிலா தெடுத்தெறி தரங்க மேனடுப் பணிப்படா தெழுந்தசெம் பவளக் கொம்பனார். | 1.5.12 | 178 |
இத்தகைக் குலமயி லாமி னாவெனு முத்தவெண் ணகைக்கனி மொழியு மோகனச் சித்திர அப்துல்லா வென்னுஞ் செம்மலு மொத்தினி தமுதமுண் டுறையு நாளினில். | 1.5.13 | 179 |
வேறு வீசு தெண்டிரைக் கடன்மலை யடங்கவெண் குடைக்கீ ழாசி லாதசிங் காசனத் திருந்தசிக் கந்தர் காசி னிக்கர சியற்றுதுல் கருனையின் கால மாசி லாக்கணக் கெட்டுநூற் றெண்பத்தோர் வருடம். | 1.5.14 | 180 |
கரைத்த மின்றௌித் தெழுத்தெனச் சிறக்குமக் காவி னிரைத்த கார்க்குலந் திரண்டெனக் களிறுக ணெருங்கி யிரைத்த டர்ந்துமும் மதங்களை வாரிநின் றிறைத்து வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொருமுதல் வருடம். | 1.5.15 | 181 |
திங்க ளாமிற சபுமுதற் றேதிவெள் ளியிராத் துங்க வார்கழன் முகம்மது பேரொளி துலங்கி யெங்க ணாயக ரப்துல்லா நுதலிடத் திருந்து மங்கை யாமினா வயிற்றினிற் றரித்தன வன்றே. | 1.5.16 | 182 |
திருத்தும் பொன்னக ரமரரே திரண்டவா னவரே கருத்தி னுண்மகிழ்ந் தெவ்வையு மலங்கரித் திடுமின் வருத்த மென்றிலா முஹம்மதை யாமினா வயிற்றி லிருத்தி னேனென வுரைத்தன னியாவர்க்கு மிறையோன். | 1.5.17 | 183 |
பரந்த வாய்க்கொடும் பாந்தளும் விடங்கொள் பஞ்சரமுங் கரிந்து பொங்கிய குழிகளுங் கனற்பொறி கதுவ வெரிந்து செந்நெருப் பொழுகிய நரகங்க ளேழும் விரைந்த வித்தடைத் திடுகவென் றனன்முதல் வேந்தன். | 1.5.18 | 184 |
விற்கெ ழுமறு சொடுகுறு சந்தரம் விளங்கச் சொர்க்க வாயிலுந் திறந்தலங் கரித்தனர் துன்ப மிக்க வாரிபாழ் நரகங்க ளடைத்தனர் வானோர் கற்கு மாமறை முதலவன் விதித்தகட் டளைக்கே. | 1.5.19 | 185 |
அந்தண் பொன்னக ரடங்கலு மலங்கரித் ததுவும் வெந்த பாழ்நர கங்களை யடைத்தபல் விதமுஞ் சந்த திண்புய முகம்மது நபிதரித் ததுவு மிந்த வாறுக ளனைத்தையு மறிந்திபு லீசு. | 1.5.20 | 186 |
நடுங்கி வாயினீர் வறந்திட நாவுலர்ந் துடல மொடுங்கி யைம்பொறி மயக்குற நெஞ்செலா முடைந்து புடங்கொள் வங்கம தாய்நினை வுருகினன் புலம்பத் துடங்கி னானடிக் கடிபெரு மூச்சொடு சுழன்றே. | 1.5.21 | 187 |
கரைவ னேங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி யிரைவன் கன்னத்திற் கையைவைத் திருந்தெழுந் திருப்பன் றரையின் மேல்விழுந் தெனக்கிலை யினிச்சிங்கா சனமென் றுரைம றந்திடக் கிடந்தன னிருகணீ ரொழுக. | 1.5.22 | 188 |
அறிவ ழிந்தமன் னவன்றனை மக்கள்வந் தடைந்து குறியுந் துன்பமும் வந்தவா றேதெனக் கூறி நிறையு மக்களோ டுறும்வர லாறெலா நிகழ்த்தி யுறையு மில்லிட மிவணிலை நமக்கென வுரைத்தான். | 1.5.23 | 189 |
இந்த வாசகங் கேட்டலு மக்களெல் லோருந் தந்தை யேயிதற் கென்செய்வோ மெனத்தடு மாறிப் புந்திநொந்து நொந் தவரவர் திசைதிசை புகுந்தார் சிந்தை நொந்திபு லீசுவுந் திகைத்திருந் திடைந்தான். | 1.5.24 | 190 |
தரித்தி டுமுதற் றிங்களிற் றரைபுக ழாத முரைப்ப ராமினா கனவினி லுன்றிரு வுதரத் திருக்குஞ் சந்ததி வலிமையை யுடையதிவ் வுலகத் தருக்க னொப்பல நாமமு கம்மதென் றகன்றார். | 1.5.25 | 191 |
கருப்பந் திங்களி ரண்டினி லாமினா கனவின் மருப்பு குங்குழல் வல்லிநின் வயிற்றினின் மதலை யருப்பும் வீறுடை யவர்பெயர் முகம்மதென் றதிக விருப்ப மாயிது றீசுநன் னபிவிளம் பினரே. | 1.5.26 | 192 |
இக்கெ னும்மொழி யாமினாக் கினிதுறத் திங்கள் புக்கு மூன்றினி னூகுநன் னபிமனப் பொலிவாய் மிக்க வுண்மையும் விளங்கிய வெற்றியு முடையோர் தக்க பேர்முகம் மதுவெனச் சாற்றிவிட் டகன்றார். | 1.5.27 | 193 |
திங்க ணான்கினி லாமினா கனவினிற் றௌிவா யிங்கி தத்திபு றாகிநன் னபியியம் பினராற் சங்கை யாய்மிகு வரிசையும் பெருங்கொலுத் தனையும் பொங்கு வாழ்வினர் பெயர்முகம் மதுவெனப் போந்தே. | 1.5.28 | 194 |
அம்பொற் கும்பத்தி னருவநீர் மஞ்சன மாடிச் செம்பொற் பட்டுடுத் தெறிகதி ரணியிழை திருத்திப் பம்பு மேகலை தரித்துமென் கரவளை பரித்துக் கம்ப லைச்சிலம் பணிந்தனர் பதங்கவின் பெறவே. | 1.5.29 | 195 |
நெறித்த வார்குழ லிறுக்கிமென் மலர்பல நிறைத்துக் குறித்த வேலிணைக் கண்களி லஞ்சனங் கோட்டிச் செறித்த மான்மதஞ் சந்தனக் கலவையுந் திமிர்ந்தே யெறித்த நன்கதிர் விளக்கென வாமினா வெழுந்தார். | 1.5.30 | 196 |
இனத்து ளாரெனுஞ் செழுமலர்க் கொடிநடு விடையே கனத்த மாமணிக் கொம்பென நடந்துகஃ பாவின் மனத்தி ருக்கற வலஞ்செய்து வாயிலில் வந்து நினைத்தி டும்பொரு டருகெனப் போற்றினர் நிறைந்தே. | 1.5.31 | 197 |
வண்டு வாழ்குழன் மடந்தையர் திரண்டுவாழ்த் தெடுப்பக் கண்டு மென்கொடி யாமினா தாமரைக் காலின் முண்ட கச்செழு மலர்சொரி தலைமுகங் கவிழத் தெண்ட னிட்டது புத்தென வுறைந்ததே வதையே. | 1.5.32 | 198 |
அஞ்ச லித்தது புத்தென மனத்ததி சயித்து மஞ்சு வார்குழ லாமினா பயந்துமெய் வருந்திக் கஞ்ச மின்னனார் கணத்துடன் வாயிலைக் கடந்தே யின்சொ னன்குலக் கிளியென மனையில்வந் திருந்தார். | 1.5.23 | 199 |
தெரியுந் திங்களைந் தினிலிசு மாயில்செப் பினரா லுரிய மென்மயி லேநின துதரத்தி லுறைந்தோர் தரிய லர்க்கிடி யாயடுத் தவர்க்கொரு தருவாய் வரிசை யுற்றவர் பெயர்முகம் மதுவென வகுத்தே. | 1.5.34 | 200 |
ஆறு திங்களில் வந்தமூ சாநபி யழகாய்க் கூறு மென்கரும் பேநின்றன் வயிற்றுறு குழந்தை வீறு பெற்றிடுந் தலைமையும் பெரும்பத வியையு மாறி லாதவர் பெயரிடு முகம்மதென் றுரைத்தார். | 1.5.35 | 201 |
சினவு வேற்கரத் தப்துல்லா வெனுமொரு சிங்க மனைவி யாகிய ஆமினா வெனுங்குல மடமா னினமு மாயமும் வாழ்த்திடக் கருப்பமு மிலங்கக் கனவு கண்டக மகிழ்ந்தினி திருக்குமக் காலம். | 1.5.36 | 202 |
மக்க நன்னக ரப்துல்முத் தலிபெனு மன்ன ரக்க மன்னமன் னப்துல்லா தமையழைத் திருத்தித் தக்க புத்தியு முறைமையுந் தொழிலையுஞ் சாற்றி யொக்கல் கூட்டுறப் புறநகர்க் கெழுகவென் றுரைத்தார். | 1.5.37 | 203 |
தந்தை கூறிட அப்துல்லா மனந்தறு காமன் மந்திர வாளெடுத் தினிதுற விசித்தனர் மருங்கி லிந்திர வில்லென வில்லெடுத் தொருகையி லேந்திக் கந்து கங்கொணர் கென்றுகட் டுரைத்தனர் கடிதின். | 1.5.38 | 204 |
பாட லத்தின்மேற் கொண்டுறு தனிற்பரி வாரங் கூடு கோளரித் திரளென வரநெறி குறுகிக் காடுங் கானமுங் கடந்துசெந் தேம்பொழிற் கனிசூழ் நாட டைந்துபோய்ப் புகுந்தனர் மதீனமா நகரில் | 1.5.39 | 205 |
மதினத் தின்னுறை ரசவருக் கங்களு மதினப் பதிய டுத்தவூர்ச் சரக்கையுங் கொண்டுபந் தனமாக் கதிர்கொண் மாடத்திற் கட்டிவைத் தவரவர் கரத்திற் புதிய வாணிபத் தலைவிலைக் கீந்தனர் பொருளை. | 1.5.40 | 206 |
வாணி பத்தொழி லனைத்தையு முடித்துமன் னவருங் காணு நாட்சில விருந்துதன் பதிவரக் கருதிப் பூண ணிந்தழ குறுமிளை யவர்புடை சூழச் சேண டைந்தபு வாவெனுந் தலத்தினைச் சேர்ந்தார். | 1.5.41 | 207 |
ஆதி கற்பனை யூழ்விதிப் பயனும்வந் தடைந்து போது நாட்களு நாழிகைக் கணக்கையும் போக்கி நீதி மன்னவ னப்துல்லா தனையறி நினைவாய்ச் சோதி மென்முக மிலங்கிடத் துயில்வபோன் றிறந்தார். | 1.5.42 | 208 |
கூடிச் சூழ்ந்தவர் விதிப்பய னெனக்குலை குலைந்து வாடி மன்னனை யெழில்பெற மணத்துட னடக்கிப் பாடி யூரபு வாவைவிட் டகன்றுபோய்ப் பதியை நாடி வந்தவ ராமினாக் கிவையெலா நவின்றார். | 1.5.43 | 209 |
மாற்றங் கேட்டலு மடமயின் மனமுடைந் தலறித் தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினீர் சொரியப் போற்றுங் காழகிற் புகைக்குழ னிலம்புரண் டசையக் கோற்றொ டிக்கரக் காந்தடா மரைமுகங் குழைக்க. | 1.5.44 | 210 |
வருந்தி நொந்தழு தாமினா விடைதலும் வளைந்து திருந்தி ழைக்கொடி மடவிய ரிரங்குத றிரண்முத் திருந்த சூல்வலம் புரியினைச் சூழ்ந்தசங் கினங்க ளிரைந்தி ரங்குவ போன்றன வெங்கணு நிறைந்தே. | 1.5.45 | 211 |
சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர வலித்த தோபகை விதிகொலோ மகப்பெறும் பலனோ பலித்த தேதென வறிகிலோ மெனப்பதை பதைத்தே யொலித்தய் யோவென விரங்கின ரூரினி லுளரே. | 1.5.46 | 212 |
உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி வடித்த கண்ணினீ ரொழுகிட விருந்தபொன் மயிலை யடுத்து வந்திருந் தன்புட னப்துல்முத் தலிபு தொடுத்த துன்பங்க ளாற்றிநல் வழிபல சொன்னார். | 1.5.47 | 213 |
இனத்து ளார்சொலு நல்வழிக் குருகிநெஞ் சிடைந்து நினைத்த பற்பல துன்பமு மகற்றிநீ ணிலத்தி லனைத்தை யும்விதித் தவன்செய லினையுமுற் றறிந்து மனத்தி னிற்றௌி வாகினர் குலக்கொடி மயிலே. | 1.5.48 | 214 |
தவிசி ருந்துநன் னெறிமுறை நடத்துதா வூது நபியுந் திங்களோ ரேழினிற் கனவினி னவின்றா ரவியுங் காலமன் றாட்டத்துக் குரியவ ரானோர் புவியி னிற்பெயர் முகம்மதென் றிடுமெனப் போந்தே. | 1.5.49 | 215 |
நலங்கொ டிங்களோ ரெட்டினில் சுலையுமா னபிவந் திலங்கு பூணணி மயிலனீர் நின்வயிற் றிருந்தோர் பெலன்கெ ழுமது னான்கிளைப் பேரொளி நபியாய்த் துலங்க வந்தவர் பெயர்முகம் மதுவெனச் சொன்னார். | 1.5.50 | 216 |
மாத மொன்பதி லாமினா கனவினின் மதித்தே வேத நான்மறை நேர்வழிக் குரியவர் விளங்கக் கோதை யேபெறின் முகம்மது வெனப்பெயர் கூறென் றாதி நாய்கன் வரிசையீ சாநபி யறைந்தார். | 1.5.51 | 217 |
ஈத லாலிமை யவர்தின மிடைவிடுத் திலராய்ப் போது சேர்குழ லாமினா கனவினிற் போந்தே யாதி தூதுவர் முகம்மது பெயரென வ திக நீதி யானமா ராயமே பெறநிகழ்த் தினரால். | 1.5.52 | 218 |
என்றும் வானவ ரிசைத்திடுங் கனவெலா மெடுத்தும் வென்றி நன்னபி மார்சொலுங் கனவெலாம் விரித்து மன்ற லங்குழ லாமினா படிப்படி வகையா நன்றி தேர்ந்தசொற் றாயர்க்குத் தினந்தொறு நவின்றார். | 1.5.53 | 219 |
பெற்ற தாயருங் கனவினின் பெற்றியைப் பிரித்தே யுற்ற பேரொடு மனத்தொடுந் தௌிந்தறிந் தோர்ந்து சொற்ற தன்மகட் குறிப்பெலாங் காண்குறத் துணிந்து குற்ற மின்றிய முகம்மதே பெயரெனக் குறித்தாள். | 1.5.54 | 220 |
செறிந்த வார்குழ லாமினா வுரைத்தசெய் தியைக்கேட் டறிந்து தாயதற் கெதிர்மொழி கொடுத்தலு மாராய்ந் துறைந்த வல்லிருட் சீத்தெறி மதியென வோங்கி நிறைந்த பேரொளி முகமலர் தரசபா நிகழ்த்தும். | 1.5.55 | 221 |
திரிந்த பாலெனச் செறுத்துப்பண் ணேழையுஞ் சினந்து விரிந்த தெண்டிரைக் கடலிடை யமுதென விளங்கிச் சொரிந்த தேன்மொழி யாமினா வயிற்றினிற் சூலா யிருந்த நாளெலாங் கனவலா லொழிந்தநா ளிலையே | 1.5.56 | 222 |
உள்ள கங்குளிர்ந் தருமறை மூன்றையு முணர்ந்தோர் வள்ள லாகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்ப் பிள்ளை யொன்றுதோன் றிடுமுகம் மதுவெனும் பெயரி னெள்ள லின்றிய வுண்மைநன் னபியென விசைத்தார். | 1.5.57 | 223 |
சொரியும் பூந்துகட் டுடவைசூழ் சாமினிற் றோன்ற லரிவை தன்னகத் தறிவினுந் தேர்ந்துணர்ந் தறிந்து தெரியக் கூறிய பெரியவர் சொல்லினுந் தௌிந்து வரிசை நேருமக் காவினில் விரைவினில் வந்தாள். | 1.5.58 | 224 |
வந்து நல்வழிக் குரியவ ரிருக்குமக் காவிற் சந்த னப்புய னப்துல்லா தனைமணம் புரியச் சிந்தை நேர்ந்தன ளவ்வுரை கேட்டுளந் திடுக்கிட் டிந்த வூருளர் மிகுதிபேர் மணத்தினுக் கிசைந்தார். | 1.5.59 | 225 |
எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக் கிகலத் தனக்கு நேரிலா னெழுதிய படிதனி முடிந்து வனக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச் சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்தொடுஞ் சேர்ந்தார். | 1.5.60 | 226 |
அந்த வாறறிந் தரிவைய ரிந்நக ரனைத்து மிந்து வாணுத லாமினா மனைவெறுத் திருந்தார் கந்த மென்குழல் கருப்புமு முதிர்ந்தன காலம் வெந்து வானவர் பிறரிலை யென்கொலோ விளைவே. | 1.5.61 | 227 |
மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயினோ யுண்ணி ரந்தில மெய்பல வருந்தில வுதரக் கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டில கனிமென் பண்ணி ருந்தவாய் வெளுத்தில பலன்பெறும் படியே. | 1.5.62 | 228 |
சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிரு வுதரம் பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்தில பொருப்புங் கறுத்திருந்தில பசுநரம் பெழுந்தில கவின்கள் வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும் விதமே. | 1.5.63 | 229 |
என்றும் பற்பல மொழிந்துச பாசலித் திருப்ப மன்ற லங்குழ லாமினா கருப்பமும் வலியு மின்று தோன்றுவ தெனவெடுத் தியம்பின ரிலங்கும் வென்றி வேல்விழி மடந்தையர்க் கிவைசொலி விடுத்தார். | 1.5.64 | 230 |
உரைத்த வாசகங் கேட்டலு மந்நக ருறைவோ ரிரைத்த டங்கலு மொருமொழிப் படவெடுத் திசையா வரைத்த னிக்கொடி யாமினா மனையினின் மறந்துங் கரைத்த லாயினும் வருவதில் லெனக்கழ றினரே. | 1.5.65 | 231 |
உற்ற வாய்மையைக் கேட்டலு மாமினா வுலைந்து குற்ற மேதுநம் மிடத்தென மனத்தினிற் குறித்துப் பெற்ற சூல்வலி யடிக்கடி பெரிதெனப் பதறி வெற்றி வாட்கரத் தப்துல்முத் தலிபுக்காள் விடுத்தார். | 1.5.66 | 232 |
சருவு வேல்விழி மடந்தையர் விடுத்தவர் சாற்றக் குரிசில் கேட்டவ ரவர்கெல்லாம் வகைவகை கூறி வருக வென்றலுங் கொடியிடைப் பிடிநடை மடவா ரொருவ ரும்மவண் புகுவதில் லெனமறுத் துரைத்தார். | 1.5.67 | 233 |
மஞ்சு வாழ்குழ லாமினா வுரைத்தது மறுத்தா ரின்சொற் கூறிநா மழைக்கவு மனமிரங் கிலரென் றஞ்சி யுள்ளகம் புழுங்கிநின் றப்துல்முத் தலிபு தஞ்ச மீதெனக் கஃபத்துல் லாதனைச் சார்ந்தார். | 1.5.68 | 234 |
வடிவி ருந்தொளிர் கஃபத்துல் லாதனை வலமாய்க் கடிதிற் றுன்புற வருங்கரு மாரியின் களையாற் கொடியி டைப்பர தாபமும் வருத்தமுங் கூறி நெடிது யிர்த்தயர்ந் திரந்துகொண் டிருக்குமந் நேரம். | 1.5.69 | 235 |
வேறு அரியமெய்ப் பொருளா யளவிடற் கரியோ தெரிவையர் பறவைக் குலங்கண்மற் றெவையுஞ் வரிஞிமி றுதறிக் கருங்குழன் முடித்த னிரைநிரை செறிந்தங் கவருரை மறாது 1.5.70
| 236 |
கருவினிற் றோன்றா தொளிவி லுருவாய்க் | பெருவடி வழகாய்க் குழுவுடன் றிரண்டு விரிகதிர்க் ககனம் புடவிமட் டொழுங்காய் ரருவரை யனையா ருருவமுஞ் சிறிதா 1.5.71
| 237 |
தேன்பெருக் கொழுகி வழிதருங் கனிகள் | வானதி மூழ்கித் துகிலெடுத் துடுத்து கான்மலர் முடித்துக் கடுவரி வடிவேற் சூன்முதி ராமி னாமனை யிடத்திற் 1.5.72
| 238 |
மறுவறுத் திருந்த நிறைந்தபூ ரணமா | வுறைதரு மமுதத் திரளைக ளுருவா கறைபடாச் சுவனக் காட்சிவாழ் வனைத்துங் குறைபடாச் சுவனத் தருவினி லுதித்த 1.5.73
| 239 |
அணித்துலைக் கனலி லுருக்கிடா தொளிரு | கணித்திடாப் பசும்பொ னெடுத்தெடுத் தமைத்த மணிக்கதி ரிழைத்துத் திரட்டிவைத் துருவ துணித்துமின் குலங்கண் மறைபடா தெழுந்த 1.5.74
| 240 |
இருட்டடை கிடக்குங் கருங்குழற் பின்ன | விரித்தபொன் னிழைப்பூந் துகிலுமே கலையும் தரித்தமுத் தார முடுக்குல மனைத்துந் கரித்தகண் ணிமையா முலைக்குவ டசையாக் 1.5.75
| 241 |
பண்ணமைத் தீஞ்சொ லரம்பையர் மேனிப் | விண்ணகத் திரவிக் கதிரொளி மணிகள் தண்ணகைத் தரளக் கதிரிரு டுணிப்பத் மண்ணகத் திருந்த வாமினா மனையை 1.5.76
| 242 |
பறவைக ளனைத்து மேவலின் படியே | நிறைதரப் பெருக வதிலொரு வெண்பு வுறைதரு மாமி னாதிரு மனையி டறைதர மனமும் பயந்திட வொதுங்கி 1.5.77
| 243 |
வருந்திநொந் திருந்த வாமினா திருமுன் | ளிருந்தவெண் சிறையை விரித்தொளி சிறந்தே பொருந்திய சரீர வேர்வையுந் தீர்ந்து திருந்திழை மனத்துட் பயங்கர மகன்று 1.5.78
| 244 |
அண்டரி லொருவர் மரகதக் கிண்ணத் | கொண்டவர் கொடுப்பக் கூறுலீன் வாங்கிக் முண்டகக் கரத்தாற் றாங்கியே பருக கண்டெனு மொழியார் கருப்பநோ யகன்று 1.5.79
| 245 |
பொன்னொளிர் கவினு முறக்குழைத் தெழுது | மின்னொளி கரப்பக் கதிர்விடுங் கலையை பன்னிய வமரர் தொகையினி லொருவர் யன்னமோ மயிலோ வெனுமொரு மடமா 1.5.80
| 246 |
செவ்விவீற் றிருந்து முகமதி யிலங்குந் | மவ்வலங் குழலார் மறியுமென் றுரைக்கு கவ்வையங் கடல்சூழ் புடவியிற் சிறந்த னவ்விவேல் விழியா ராமினா விருக்கு 1.5.81
| 247 |
இறையவ னுரைப்பச் சுவனமா மடவா | மறியமு மழகு பழுத்தொளி ததும்பு நிறைமதி யிரண்டு வானகத் திழிந்து யறைகழல் சிலம்ப வருவபோல் வந்தங் 1.5.82
| 248 |
படித்தலம் புகலு மாமினா வலது | வடித்ததெள் ளமிர்த மெனுமொழிக் குதலை லடுத்தவப் பொழுதி லரம்பையர் சிலர்வந் பிடித்தடி வருடி நின்றனர் மனையும் 1.5.83
| 249 |
மடந்தையு மகப்பே றடுத்திடுஞ் சமயம் | கடந்துவந் தொருவர் நின்றன ரவர்செங் யிடங்கொளா துறைந்த கூறுலீன் களிலோ யடர்ந்தில்லம் புகுந்து கொடுப்பதைப் பருகி 1.5.84
| 250 |
பானகம் பருக வொளிவும்வந் திறங்கிப் | வானவர் மகளிர் மருத்துவம் புகுத தேனவிழ் பதுமச் செழுங்கரங் கொடுத்துச் கானமர் குழலா யஞ்சலென் றுரைப்பக் 1.5.85
| 251 |
கோதறப் பழுத்து மதுரமே கனிந்த | தீதற நெருங்கி யேவல்செய் திருப்பச் மாதருக் கரசி யாமினா வுதர லாதரம் பெருக நல்வழிப் பொருளா 1.5.86
| 252 |
கிடந்தொளி பரப்பி வாசங்கொப் பளித்துக் | யிடங்கொளந் தரநேர் சிரசினை யுயர்த்தி டிடன்பெற மடித்துக் குறியிடக் கையாற் துடனணி கலிமா விரலினை யுயர்த்தி 1.5.87
| 253 |
சிரசினி னெய்தோய்த் திருவிழிக் கருமை | மருவுசுன் னத்துஞ் செய்யலாய்த் துடக்கின் பரவுகஸ் தூரி மனையெலா நிறைந்த பெருகிய வொளிவு வானமட்டு லவப் 1.5.88
| 154 |
செம்மையங் கோட்டுக் கடகரிக் கலகந் | லம்மதி மாசத் தொகையினில் றபீயு யெம்மனைக் கும்பே றெனவரும் பொருளா மும்மையென் றுரைக்கும் புவனமும் புரக்க 1.5.89
| 255 |
பூதலத் தரசு பதியென வுதித்த | சீதவொண் கதிர்சேர் கஃபத்துல் லாவின் வேதமொன் றணுகாச் செமுறத்தி லுஸ்தா மாதவ ரபித்தா லிபுதிரு மனையின் 1.5.90
| 256 |
நெறிநிலை திரியா மருண்மத மிகுந்து | துறவறந் தவறி யில்லற மடிந்து குறைபடுங் கால மிருளெனுங் குபிரின் மறுவிலா தெழுந்த முழுமதி போல 1.5.91
| 257 |
பானுவின் கதிரா லிடருறுங் காலம் | யீனமுங் கொலையும் விளைத்திடும் பவநோ தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க் மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய் 15.92
| 258 |
செங்கதிர் பரப்பி யுலகெலாம் விளக்கித் | தங்கிய கிரணச் சசியுமந் தரத்திற் பொங்கொளி யெவையுஞ் சுவனநா டனைத்தும் மிங்கெழின் முகம்ம தொளிவினி லென்றா 1.5.93
| 259 |
மகிதலம் புகழீ சாநபி பாரில் | பகுமத மிலையென் றாறு நூறாண்டு புகையுடன் கெழுமிப் பொறிபல தெரிப்பப் திகைதொறுந் தெரிய வெரிந்தசெந் நெருப்புத் 1.5.94
| 260 |
படியிடை புடைப்பப் பெருக்கெடுத் ததிரப் | விடுகடல் சாவா வெனும்பதி யிடத்தில் குடிலமட் டோங்கி மஞ்சடை கிடக்குங் மிடிபட வீழ்ந்து சேருவா னகர 1.5.95
| 261 |
சிலையெடுத் துருவாய் வைத்தபுத் தனைத்துஞ் | சலமதி லிபுலீ சியற்றிய சிங்கா குலமுமன் றொதுங்கி வானகம் புகாமற் நிலமிசை வீழ்ந்த வினுஞ்சில புதுமை 1.5.96
| 262 |
சிறந்தநன் மதலை தனைவிரைந் தெடுப்பத் | மறந்திகழ் விழியார் தொடத்தகா தென்றன் நிறந்திகழ் சுவனப் பதியினிற் கொடுவம் லறந்திக ழாமி னாதிரு மனைபுக் 1.5.97
| 263 |
அமரருக் கிறைவன் சபுறயீல் வரிசை | தமருடன் சுவனப் பதியினிற் கொடுபோய்ச் யிமைதிறந் திருகண் மையினை யெழுதி சுமைதர வாசந் திகழ்த்தியெண் டிசையுஞ் 1.5.98
| 264 |
ஆதிநா யகன்றன் றிருநபி யிறசூ | பூதலத் துறைந்த படைப்பெவை யவையும் மீதலா லமர ரிவர்கலி மாவுக் சூதர மொழியா ராமினா விடத்திற் 1.5.99
| 265 |
அந்தர மவனி கடன்மலை யெழுதீ | சுந்தர வதன முகம்மதைக் கொடுபோய்ச் சந்தமென் முகத்தா மரைமலர் குளிரத் வந்தது மாமி னாதிரு மனையில் 1.5.100
| 266 |
வள்ளலென் றுதவிப் பெயர்நிலை நிறுத்தி | முள்ளக நிறைந்த செம்மலர்ப் பதந்தொட் விள்ளரும் பவளம் விரிந்தன கனிவாய் தெள்ளமு தனைய முகம்மது நபியைச் 1.5.101
| 267 |
மலர்தரு கரத்தா லேந்தியே மடியில் | மலர்தரு பவள வாயிதழ் திறந்தே முலகமும் விசும்பு நிறைதரப் பொருந்து திலகிய கமல முகமலர் சபாவுக் 1.5.102
| 268 |
சத்தமுண் டாகிக் கேட்டவப் பொழுதே | பத்திவிட் டொளிரு றூமிராச் சியத்துப் மித்திர னெழுந்த குணதிசை தொடுத்து சித்திரம் பெறவே யிருவிழிக் கெதிரே 1.5.103
| 269 |
வரியளி குடைந்து தண்ணறா வருந்து | கருதிய வரங்கேட் டிருந்துநெஞ் சுருகுங் னிரைநிரை செறிந்த புத்துக ளனைத்து விரைவினி லோடிக் காவத வழிக்கு 1.5.104
| 270 |
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து | மான்மருள் விழியா ராமினா விருந்த நானிலம் புகலுங் ககுபத்துல் லாவி தூநறை கமழ வொளிதிகழ் தரவே 1.5.105
| 271 |
இறையவ னேவ விண்ணவர் கரத்தா | மறைபடா தெவர்க்குங் கேட்பன வாக குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற நிறைதரப் புனித மாக்கினா னென்ன 1.5.106
| 272 |
இரவினிற் றனித்தங் கிருந்தகா லையினி | பரவியே சிதறக் கண்டுமங் ககுபாப் விரைவினின் மொழிந்த வார்த்தையுங் கேட்டு முருகுகொப் பிளிக்கு மாமினா மனையின் 1.5.107
| 273 |
தரையினிற் பரந்த குபிரிருட் குலமுஞ் | வரைவிலா தொடுங்க முகம்மது நபியிம் கரையிலா வுவகை யாநந்த வெள்ளக் விரைவினிற் றிமிரக் கடற்பகை துறந்து 1.5.108
| 274 |
விடிந்தவப் பொழுதி லப்துல்முத் தலிபு | மடந்தையைக் கூவி வருகவென் றுரைப்ப நடந்தெதிர் வரக்கண் டம்மநின் னுதலி டிடந்திகழ்ந் திலங்கக் காண்கிலே னென்ன 1.5.109
| 275 |
வஞ்சிமென் கொடியின் முகமலர்க் கவினு | கஞ்சமென் மலர்த்தா ணிலம்புடைப் பெயர்வுங் பிஞ்சுநன் னுதலுங் கண்டுளத் தடக்கிப் கொஞ்சுமென் மொழியீர் மதலையைக் கொணர்கென் 1.5.110
| 276 |
கூறிய மொழிகேட் டாமினா வெனது | வேறொரு வருக்குங் காணொணா தெனவே யூறிய மதுர வாயிதழ் திறந்தே சீறினர் புருவ முரிதர விருகண் 1.5.111
| 277 |
சினந்தமா துலனைக் கண்டுளம் பதறிச் | கனந்தரு கொடையா யரசர்நா யகமே மனந்தனிற் சினமென் மனையுநும் மனையே யினந்தரும் பலன்போ லெழுந்தசந் ததியே 1.5.112
| 278 |
மருமலர் செறிந்து வண்டுகண் படுக்கு | தருமுரை கேட்டு வெகுளியைப் போக்கிச் பருதியொத் திலங்கு மாளிகை புகப்போய்ப் ருருவின கருவி கரத்தினி லேந்தி 1.5.113
| 279 |
மீண்டனர் பதறிக் காறடு மாறி | லாண்டகை யிவனார் நம்மனை தனைவந் பூண்டநம் மினத்தா ரனைவர்க்கு முரைத்துப் தூண்டியே நடந்து வாயிலைக் கடந்தார் 1.5.114
| 280 |
காரண மனைத்தும் வௌிப்படா தமைக்குங் | லூரவ ரெவர்க்கு முரைத்திவண் புகவென் பாரிடத் தெறும்பீ றாயிப முதலாப் லீரமுற் றுணங்கி நாவழங் காம 1.5.115
| 281 |
சிலைநுதற் கயற்க ணாமினா வென்னுஞ் | மலர்தலை யுலகிற் சுருதியை விளக்கு யிலகிய கமலக் கரத்தினி லேந்தி பலகலை யறிவுங் கொடுப்பபோ லெழுநாட் 1.5.116
| 282 |
மின்னவிர் சுவன வானவர் கூண்டு | னன்னிலைச் சலிலங் கொணந்துகோ தறவே யிந்நிலம் விளங்க விளக்குவ தெனவே பன்னிய சலவாத் தோதியே வாழ்த்திப் 1.5.117
| 283 |
இலங்கிலை வேற்கை யப்துல்முத் தலிபு | நலங்கிளர் நாவும் வழங்கிட மனத்தி கலங்கியே தௌிந்து மதலைமேல் விருப்பாய்க் பொலன்கொடி யாமி னாமணி மனையிற் 1.5.118
| 284 |
திண்டிறற் பொருப்பும் பொருவரா தெழுந்து | வண்டணி குழலா ராமினா வெனும்பேர் கண்டெனு மொழியா யிவ்வயி னிகழ்ந்த விண்டெமக் குரைரயு மென்றனர் முறுவல் 1.5.119
| 285 |
பறவைக ளனைத்தும் வந்துஞ் சுவனப் | மறியமு மாசி யாவும்வந் ததுவும் |