ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
1. மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை
2. வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
நேரிசை வெண்பா கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள் கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே இடம்பவனத் தாயே யிரார். | 1 |
கட்டளைக் கலித்துறை இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் குழைய விருகுவட்டாற் பொராநின் றதுஞ்சில பூசலிட் டோடிப் புலவிநலம் தராநின் றதுமம்மை யம்மண வாளர் தயவுக்குள்ளாய் வராநின் றதுமென்று வாய்க்குமென் னெஞ்ச மணவறையே. | 2 |
நேரிசை வெண்பா மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன் அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க் குளகொல் குணம். | 3 |
கட்டளைக் கலித்துறை குணங்கொண்டு நின்னைக் குறையிரந் தாகங் குழையப்புல்லி மணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர் பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் ளாயம்மை பைந்தொடியார் கணங்கொண் டிறைஞ்சு நினைக்குமுண் டாற்பொற் கனதனமே. | 4 |
நேரிசை வெண்பா கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென் தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப் பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற் றாமாறி யாடுவரோ தான். | 5 |
கட்டளைக் கலித்துறை தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக் கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய வானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே. | 6 |
நேரிசை வெண்பா கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி மடந்தை யபிடேக வல்லி - நெடுந்தகையை ஆட்டுவிப்பா ளாடலிவட் காடல்வே றில்லையெமைப் பாட்டுவிப்ப துங்கேட் பதும். | 7 |
கட்டளைக் கலித்துறை பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவ ரிதுமத்தப் பித்துமன் றேழைமை முன்ன ரிமையவர்கைப் புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே. | 8 |
நேரிசை வெண்பா தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றி லகமேயென் னெஞ்சகம தானான் - மகிழ்நரொடும் வாழாநின் றாயிம் மனையிருண்மூ டிக்கிடப்ப தேழாய் விளக்கிட் டிரு. | 9 |
கட்டளைக் கலித்துறை இரைக்கு நதிவைகை பொய்கைபொற் றாமரை யீர்ந்தண்டமிழ் வரைக்கு மலைதென் மலயம தேசொக்கர் வஞ்சநெஞ்சைக் கரைக்குங் கனகள்வி கர்ப்பூர வல்லிக்குக் கற்பகத்தால் நிரைக்கும்பொற் கோயி றிருவால வாயுமென் னெஞ்சமுமே. | 10 |
நேரிசை வெண்பா நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல் மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சி வருமந் தகாவென் வழிவருதி யாலிக் கருமந் தகாவென் கருத்து. | 11 |
கட்டளைக் கலித்துறை கருவால வாய்நொந் தறமெலிந் தேற்கிரு கான்மலரைந் தருவால வாய்நின்ற தொன்றுத வாய்வன் றடக்கைக்குநேர் பொருவால வாயெட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்ட திருவால வாய்மருந் தேதென்னர் கோன்பெற்ற தெள்ளமுதே | 12 |
நேரிசை வெண்பா தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப் பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா முலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம் மலைக்குவடு வன்றே மணம். | 13 |
கட்டளைக் கலித்துறை மணியே யொருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப் பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும் துணியேன் றுணிந்ததை யென்னுரைக் கேன்மது ரைத்திருநாட் டணியே யனைத்துயிர்க் கும்மனை நீயென் றறிந்துகொண்டே. | 14 |
நேரிசை வெண்பா கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட் கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் - கொண்டம்மை கற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள் நற்பூர வல்லியுமென் னா | 15 |
கட்டளைக் கலித்துறை நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர் தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட் பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே. | 16 |
நேரிசை வெண்பா புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை வனைந்தாளெம் வாயும் மனமும் - தினந்தினமும் பொற்பதமே நாறுமவள் பூம்பதமென் றேநமது சொற்பதமே நாறுஞ் சுவை. | 17 |
கட்டளைக் கலித்துறை சுவையுண் டெனக்கொண்டு சூடுதி யான்மற்றென் சொற்றழிழ்க்கோர் நவையுண் டெனவற நாணுதி போலு நகைத்தெயின்மூன் றவையுண் டவரொ டருட்கூடல் வைகுமம் மேசொற்பொருட் கெவையுண்டு குற்ற மவையுண்டு நீவி ரிருவிர்க்குமே. | 18 |
நேரிசை வெண்பா விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும் கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற்- றொண்டரண்டர் தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம் பூங்காவில் வீற்றிருந்த பொன். | 19 |
கட்டளைக் கலித்துறை பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும் வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும் கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. | 20 |
ஆசிரிய விருத்தம் பொன்பூத்த குடுமிப் பொலங்குவட் டிமவான் பொருப்பிற் பிறந்துதவளப் தென்பூத்த பாட்டளி துதைந்தபைங் கூந்தற் செழும்பிடி பயந்தளித்த மின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட்கடவுள் வேழங் கடம்படுபடா கொன்பூத்த தெரியற் கடம்பணி தடம்புயக் குருசிலைப் பொருசிலைக்கைக் 1 | |
திருமால் பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் புலோமசை வளர்த்தகும்பப் கோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த குழகனைக் கழகந்தொறும் தேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கிரிகள் திகிரிகிரி குலகிரியொடும் பாமேவு மதுரம் பழுத்தமுத மொழுகும் பசுங்குதலை மழலையஞ்சொற் 1.1 | |
வைத்தியநாதர் சந்த விருத்தம் ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர் உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு உமிழு முக்குடுமி யயிறி ரித்துவரு டுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர் விரிக டற்புடவி முழுது ணச்சமையும் விடமெ டுத்தரிய திருமி டற்றிலிடு விழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுண் வௌியி னிற்பரம நடந விற்றுதிறல் குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி குரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர் குமர னைச்சமரி லுருமு கக்குளிறு குறுந கைக்குமன முருக வெற்பவர்த திரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுண் செழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும் திருவ டித்துணையென் முடிப தித்தவடு சிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு 1.2 | |
தையனாயகியம்மை வேறு குழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறி குவடெ றிந்தமுத கலசம் வென்றதட குமுதம் விண்டசுவை யமுத முண்டினிய குறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர் எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும் இடைநு டங்குமட நடையி ளங்குமரி இதய புண்டரிக மலரி லெந்தையொடும் இருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின் முழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொரு முதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர் முரல விண்டதரு நிழறொ ழும்புகுடி முடியு மின்றிவெறு வௌிக டந்துமறை மழலை வண்டுதட மலர்கு டைந்துபுது வடிப சுந்தமிழி னிசைப யின்றபெடை வருவி பஞ்சிபயி றரும தங்கர்தெரு மலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரி 1.3 | |
கற்பக விநாயகக் கடவுள் வேறு கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள் வடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர் சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய 1.4 | |
பிரம தேவர் ஆசிரிய விருத்தம் பைங்காற் கமுகு செம்பழுக்காய்ப் பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல் கொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள் குறிஞ்சி மலரோ டணிந்தநறுங் செங்காற் கருங்கட் பைந்தொடியார் சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில் கங்காப் படங்கப் பாறயிர்நெய் அருந்தேன் கடலோ டிருந்துண்ண 1.5 | |
தேவேந்திரன் வேறு கானாறு கற்பகக் காவுமூ வுலகுமக் காவென நிழற்றுமொற்றைக் வானாறு கோட்டிமய மலைவயிறு வாய்த்ததலை மகளுக்கு மணமகற்கும் பானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென் பைங்குவளை வாய்குதட்டும் தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு சித்தாமிர் தஞ்சிவபிரான் 1.6 | |
த்ிருமகள் மானிறக் கடவுடிரு மறுமார்பி னறவிரி வனத்துழாய்க் காடுமூடி கானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க் கதவந் திறந்தளித்தும் மீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை வெள்ளமொடு கள்ளமனமும் தீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண் சிறைமயிற் பரிநடாத்தும் 1.7 | |
கலைமகள் துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் சுதைநிறஞ் சிதைவுறாமே நறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது நன்னெஞ் செனக்குடிபுகும் சிறைபட்ட தண்டுறைச் சித்தாமிர் தப்பெருந் தீர்த்தந் திளைத்தாடிய உறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய் உண்ணச் சகோரம்வெஃகும் 1.8 | |
சத்தமாதர்கள் சந்த விருத்தம் பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள் எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள் கயறிரி சரவண வாவிக் கரைக்குரை கழலொடு பரிபுர மோலிட் டிடக்கட முயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி 1.9 | |
முப்பத்துமுக்கோடி தேவர்கள் வேறு முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும் இறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல சத்திக் கரத்தானை யூதியமெ னத்தனை வெறுப்பொடு விருப்பினை யறுத்தவ ருளத்துமலர் பத்மப் பதத்தானை வேதபுரி யிற்சின மறைக்கிழ வனைத்தலை புடைத்துல கனைத்தினையும் ஒக்கப் படைத்தானை மூவிருமு கத்தனை 1.10 | |
ஆசிரிய விருத்தம் இருக்கோ லிடும்பரி புரக்கோல முந்நுதலில் இட்டபொட் டுஞ்சுட்டியும் உருக்கோல முஞ்சுழி யக்கொண்டை யும்முச்சி உச்சியும் வாளிமுத்தும் மருக்கோல நீலக் குழற்றைய லாட்கரு மருந்தா யிருந்ததெய்வ திருக்கோல முடனொரு மணக்கோல மானவன் செங்கீரை யாடியருளே 2.1 | |
கும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாகக் கொண்டவகி லாண்டங்களின் சொம்பாதி யன்மைக் கனைத்துந்தன் மயமெனும் சுருதிகரி யாவைத்துமச் சம்பாதி யொடுநற் சடாயுவுக் கும்பெருந் தவமுனிவ ரெழுவருக்கும் செம்பாதி யுங்கொண்ட தையனா யகிகுமர செங்கீரை யாடியருளே 2.2 | |
கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் களிற்றொடு முட்டவிட்டுக் முக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த வேதண்ட மாதண்டமா மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட மேகபட லத்துமொண்டு திக்கெட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள் செங்கீரை யாடியருளே 2.3 | |
மைவிழி செங்கமல வல்லிக்கு நேமியான் மணிமார்பு வாணிக்குநான் மெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு வேதச் சிரங்கடுப்ப கைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங் கயிலைத் தடஞ்சாரலும் தெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு செங்கீரை யாடியருளே 2.4 | |
மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியா ரிளவலொடும் ஆனே ருயர்த்திட்ட வையற்கு மம்மைக்கும் அருமருந் தாகிநின்ற கூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை யாடியருளே 2.5 | |
வேறு செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத் பைம்பொ னநசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை 2.6 | |
குழையொடு குழையெதிர் மோதிக் காதணி குண்டலம் வெயில்வீசக் முழுவயி ரப்புய வலயமு முன்கை முதாரியு மொளிகால புழுதி யளைந்த பசுந்திரு மேனிப் பொங்கொளி பொங்கியெழப் அழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி ஆடுக செங்கீரை 2.7 | |
விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே கரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக் கண்மலர் சிவவாமே உருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே தருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை 2.8 | |
சந்த விருத்தம் கும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக் சம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற் அம்பவ ளக்கொடி யேவளர் கோம்பே யென்றேநீ கம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை 2.9 | |
திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும் எங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க் கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும் கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை 2.10 | |
ஆசிரிய விருத்தம் பில்கும் பசுந்தே னசும்பிருந்த பின்றா ழளகத் தரமகளிர் கொல்குங் கொடிபோய் நுடங்கியிட ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத் பல்குஞ் சுரபி தரங்கநெடும் பாகீ ரதியின் கரைக்கிளைத்த மல்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ 3.1 | |
தொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள் தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத் முடுக்குஞ் சுடர்ப்பொற் றலத்திழைத்த முழுநீ லத்தி னொழுகொளியின் றடுக்குங் களிறென் றரமகளிர் ஐயுற் றிடத்தன் வௌிறுமுடம் மடுக்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ 3.2 | |
தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத் திரண்மா மணிகள் வெயில்விரிக்கும் டாற்றுங் குழற்காட் டினைப்புயலென் றாட மயில்கண் டம்பவளத் டூற்று நிலவுக் கிந்துசிலை ஒளிர்மா ளிகையுஞ் சுளிகையும் மாற்றுங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ 3.3 | |
கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங் கிடங்கென் றிடங்கர் மாவியங்கும் திளைக்குங் கமஞ்சூ னெடும்புயலைச் சிறுகட் பெருங்கைப் பகடென்றோர் இளைக்கும் படிவிண் டொடநிவந்த எழிற்பொற் புரிசை விண்டுபதத் வளைக்குங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ 3.4 | |
சோலைப் புறமுப் புடைக்கனிகள் தூக்கு முடத்தெங் கிமையவர்தம் ஏலக் கருங்கொந் தளவளகத் திளமா தருக்கு முதிர்வேனில் காலப் புயலின் முகந்துடைக்கும் கமுகு பழுக்காய்ப் பவழமுடன் மாலைப் பழனப் பருதிபுரி வாழ்வே தாலோ தாலேலோ 3.5 | |
வேறு மாலி மயத்து மடப்பிடி பெற்று வளர்த்த விளங்களிறே மூல மெனக்குல நான்மறை யோலிடு முழுமுத லேமூவா காலை யிளங்கதி ருக்கெதிர் முதிரும் கதிர்செம் பவளமுடன் சாலி வயற்றமிழ் வேளூ ரடிகேள் தாலோ தலேலோ 3.6 | |
கருமுகி லுக்கரி தாமடி வாரம் கண்டிரு பறவைகடம் பொருபுன லருவித் தலையின் மிசைத்தவழ் புதுமதி நிலவொழுகப் குருமணி வயிரப் புயமெனு மெட்டுக் குவடுஞ் சுவடுபடக் தருமொரு தொந்தித் தந்திக் கிளையாய் தாலோ தலேலோ 3.7 | |
உண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட ஒளிவிடு முழுமணியே விண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர் விரியு மிளஞ்சுடரே புண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும் புனித நறுங்கனியே தண்ணொளி பொங்கிய கருணா நிதியே தாலோ தாலேலோ 3.8 | |
சந்த விருத்தம் தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச் சீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும் காலாயு தக்கொடி வீறா வேறா வேறேறும் சேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ 3.9 | |
ஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ ஆனாவ ருட்கனு பானா தாலோ தாலேலோ நானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ தேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ 3.10 | |
முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு முளரிப் பிராட்டிவைத்து தொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்ககிற் றூமமொடு தாமமிட்டுச் குடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு கூரவஞ் சனமெழுதிமென் தடங்குங் குமப்புயங் கொட்டிநட மிட்டவன் சப்பாணி கொட்டியருளே 4.1 | |
மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு மதரரிக் கெண்டையுண்கண் குழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு கொடுப்பக் குடங்கையேற்றுக் இழைக்கும் பசும்பொற் றசும்பென வசும்புபொன் னிளமுலை முகங்கோட்டிநின் தழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன் சப்பாணி கொட்டியருளே 4.2 | |
உண்ணிலா வுவகைத் தடங்கடல் படிந்திட்ட உம்பருஞ் செங்களம்பட் தெண்ணிலா மதிநுதற் றெய்வப் பிணாக்கள்வாய்த் தேனமுது மமுதவாரித் பண்ணுலா மழலைப் பசுங்கிளவி யெயினர்பொற் பாவைவிழி வேலொடொப்புப் தண்ணிலா வுக்கொண் சகோரமென நின்றவன் சப்பாணி கொட்டியருளே 4.3 | |
மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின் மயிலிளஞ் சாயலுநிலா இடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல் எனத்திரு வுளங்குழைந்தாங் குடமுலைக் கேயிவள் குடிப்பிறப் புக்கியை குணங்கிடைத் ததுகொலென்றக் தடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே 4.4 | |
விண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து வேந்துபொலி பாந்தள் வைப்பும் கண்ணன் றிருப்பதமு நான்முகக் கடவுள்பூங் கஞ்சமுங் குலிசப்பிரான் திண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட சீறூரு மூரூர்தொறும் தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் சப்பாணி கொட்டியருளே 4.5 | |
கடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும் உடலிற் பெருகிய குருதிக் கடல்பிண வோங்கலொ டோங்கவமைத் தடவுத் தாழியின் மத்தெறி தயிரிற் றத்துதி ரப்புனலிற் குடுமிச் சுடர்வடி வேலைத் தொட்டவ கொட்டுக சப்பாணி 4.6 | |
சமரிற் பட்டவர் வெட்டிய பூதத் தலைவர்க ணிற்பமுதற் கமரிற் குரிய மடக்கொடி யாரை அலைத்தனர் பற்றியெயிற் கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு களமெதிர் கண்டினியக் குமரக் கடவு ளெனப்பணி வேலவ கொட்டுக சப்பாணி 4.7 | |
அற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை அங்கைத் தலம்வைத்திட் சிற்றல கைக்கொரு பேரல கைப்பெண் தேரழி யக்கழியும் பற்றிய திரிகை திரித்து விடத்திரி பரிசென வுஞ்சுழலும் கொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ கொட்டுக சப்பாணி 4.8 | |
சந்த விருத்தம் வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே அளியுமி னமுதெழு வௌியினில் வைத்த சுவைத்தேனே களிமயில் கடவிவி ணடைய முடுக்கிய புத்தேளே தௌிதமிழ் பழகிய மதவலி கொட்டுக சப்பாணி 4.9 | |
கனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள் நனைமலர் பொதுளிய வெழிலி தழைத்த குழற்கோதாய் எனவொரு குறமக ளடிமுடி வைத்தனை முத்தேவாம் சினவிடை யவரருண் மழவிடை கொட்டுக சப்பாணி 4.10 | |
குருகு நாறு செந்தளிர்க்கைக் கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக் சருகு நாறு முடைத்தலையின் தாம நாறு திரடிண்டோட் தருகு நாறு திருமேனி அந்தீங் குதலை மழலைகனிந் முருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே 5.1 | |
நறவு விரிந்த விரைத்தோட்டு நளினத் தொட்டிற் றடமுலைப்பால் குறுமெ னடைய சிறுபசுங்காற் குருதி ததும்ப வுதைந்துசில நிறுவு மொருநின் பெருந்தன்மை நினைந்தாய் போலக் கனிந்தமுது முறுவ லரும்புஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே 5.2 | |
பொழியுங் கருணைப் பெருவெள்ளப் புணரி பெருகி யலையெறியப் விழியு மனமுங் குளிர்தூங்க விரிநீர்ச் சடிலத் தொருவனிரு வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர வமுது குழைத்தூற்றும் மொழியும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே 5.3 | |
கலைப்பா னிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலம் தலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும் தண்டே னறையும் வடித்தெடுத்த அலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும் அகிலாண் டமும்பன் முறையீன்றும் முலைப்பா னாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே 5.4 | |
புயலுண் டிருண்ட கொந்தளமும் பொன்னங் குழையு மின்னகையும் கயலுங் கலப மயிலியலும் கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின் இயலுஞ் சுவைநல் லவியொடுநீத் தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின் முயலுங் குமுதக் கனிவாயால் முத்தந் தருக முத்தமே 5.5 | |
வேறு கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளைத்திட்ட கொடியிடைக் கடைசியர்குழாம் சேடுபடு புத்தே ணிலத்துப் புனிற்றிளஞ் சேதா வயுற்றுமுட்டச் தேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந் தேரியொடு கானிரம்ப காடுபடு செந்நெல்பைங் கன்னனிகர் புள்ளூர கனிவாயின் முத்த மருளே 5.6 | |
துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும் துகிற்கொடிகள் சோலைசெய்யத் தளிதூங்கு தேனிறா லிதுதம்முன் வம்மினென் றழிநறா வார்ந்துநிற்கும் ஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர் உயிரொன்று மெனவிடலுமவ் களிதூங்கு மாடமலி கந்தபுரி வருமுருக கனிவாயின் முத்த மருளே 5.7 | |
பூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி பூந்துகட் படலமுமணம் தாமரை முகச்சோதி யெழவெழுஞ் சிறுமுறுவல் தண்ணிலவு செயவெயில்செயத் தேமரு குழற்கோதை மயிலனீர் கோசிகச் செம்மலென வேறுபுவனம் காமரு மணங்குழையு மாதர்பயில் வேளூர கனிவாயின் முத்த மருளே 5.8 | |
சந்த விருத்தம் மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும் புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன் கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக் முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே 5.9 | |
வடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும் கடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பற்பமும் அடிக ளெனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே 5.10 | |
செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி சிலம்பொடு கலின்கலினெனத் அம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும் ஆரமுந் திருவில்வீச பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன் பட்டமொளி விட்டெறிப்பப் கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக் குமாரநா யகன்வருகவே 6.1 | |
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை முழுவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் மோலிநீர் பெய்தவித்து விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ மிகப்புழுதி யாட்டயர்ந்து குழவுமுதிர் செல்விப் பெருங்களி வரச்சிறு குறும்புசெய் தவன்வருகவே 6.2 | |
இருளற விமைக்குநின் றிருவுருவி னலர்சோதி இளஞாயி றெனமுகையவிழ்ந் கரைபுரள வலைமோது கடலைக் கலக்குமழ களிறென் வுழக்கியொருநின் வெருளின்மட நோக்கினீ ரரமகளி ருடனாடும் விளையாட் டெனத்திரைபொரும் குருளைக ளொடும்புனல் குடைந்துவிளை யாடிய குமாரநா யகன்வருகவே 6.3 | |
கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த கலைமதியொ டையநீயக் தெட்டுண்ட போன்முழுத் திங்களென் றேக்கறுஞ் செழுமணிச் சூட்டுமோட்டுச் மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம் மாசுணம் வெருண்டோடலும் குட்டுண்ட தறியாய்கொ லெனவித ழதுக்கும் குமாரநா யகன்வருகவே. 6.4 | |
அங்கைத் தலத்தம்மை செங்கண் புதைத்தற் கடங்காமை யாலெம்பிரான் செங்கைத் தலங்கொண் டெடுத்தணைப் பாட்கும் திருத்தாதை யார்க்குமுத்தம் கங்கைகு நல்கா தெழுந்தலறி யோடலும் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொங்கை குடங்கொட்டு பாலருவி யாடும் குமாரநா யகன்வருகவே. 6.5 | |
வேறு பைந்தண் கமல வட்டவணைப் பாவை யனையார் பூவிரியும் கந்தம் பொதிந்த செந்துவர்வாய்க் கடைசி மகளிர் செந்நெலைப்பைங் தந்தங் கருத்துக் கமைந்தபடி சாற்றிச் தாற்றி முழுமாயச் அந்தண் பழனக் கந்தபுரிக் கரசே வருக வருகவே 6.6 | |
வள்ளைக் குழையிற் றாவடிபோம் மடமா னோக்கிற் கடைசியர்கண் பள்ளத் திருடூங் கழுவநீர்ப் பரப்பென் றகல்வான் மிசைத்தாவப் உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம் அள்ளற் பழனப் புள்ளூருக் கரசே வருக வருகவே 6.7 | |
நஞ்சிற் றோய்த்துக் கொலைதீற்றும் நயன வேலுங் கரும்புருவ வஞ்சிக் கொடிநுண் ணிடைசாய்த்து மதர்த்துக் களித்த மால்களிறும் கஞ்சத் தவிசிற் றிருவன்னார் கடலந் தானைக் கைநிமிரக் டஞ்சொற் றமிழோர் புகழ்வேளூர்க் கரசே வருக வருகவே 6.8 | |
சந்தவிருத்தம் உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே அலகில் புவன முடியும் வௌியி லளியு மொளியி னிலயமே மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே 6.9 | |
இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே விழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே 6.10 | |
ஆசிரிய விருத்தம் மண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு மதிக்கடவு ளெனவருதலால் தண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத் தாமரை முகிழ்த்திடுதலாற் துண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ் சோதிகட் பொறியாதலால் அண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ டம்புலீ யாடவாவே 7.1 | |
சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் தோகைமேல் கொண்டருளினாய் குற்றமில் குணத்தைக் குறித்தவிர வலர்முகம் கோடா தளித்தல்செய்தாய் உற்றிடு மிதழ்க்குமுதம் விண்டுதண் டேனொழுக ஒளிநிலா நகைமுகிழ்த்தாய் அற்பொதி களத்தவ னளித்தகும ரேசனுடன் அம்புலீ யாடவாவே 7.2 | |
கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் கண்ணினுண் மணியிவன்காண் எங்குமிர வோனெனத் திரிதியிவ னடியவர் எவர்க்குமிர வினையொழித்தான் பொங்கமுத மமுதா சனர்க்குதவி னாயிவன் புத்திமுத் தியுமளித்தான் அங்கண்மறை யோலிட் டரற்றநின் றவனுடன் அம்புலீ யாடவாவே 7.3 | |
பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் படலங் கிழிப்பதுணராய் சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத் திருமலர் திறக்கவறியாய் நீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில் நின்பெருந் தவமென்சொல்கேன் ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனோ டம்புலீ யாடவாவே 7.4 | |
தருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத் தலைத்தலை மயங்கத்தொகும் கருமன்னு மூழிப் பெரும்பிணியு மாற்றிடுதல் கண்டனை யிருத்தியானின் திருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத் திருச்சாந்து நிற்கவற்றாச் அருவென்ன வுருவென்ன வன்றென்ன நின்றவனொ டம்புலீ யாடவாவே 7.5 | |
ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப தொருதெய்வ முண்டெனவெடுத் விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள் வேண்டிய வரங்கொடுப்பான் பொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப் புத்தேள் பெரும்புவனமும் அழியாத வீடுந் தரக்கடவ னிவனுடன் அம்புலீ யாடவாவே 7.6 | |
நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர் நிரைத்தூணம் வீக்கியார்த்து கட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக் கணநாதர் கடுகமுடுகிக் மட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர் வாய்புதைத் தஞ்சிநிற்ப கட்டதிக் கினிலுமொரு திக்கிலையெ மையனுடன் அம்புலீ யாடவாவே 7.7 | |
குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர் குடித்திட விடுத்துநின்றான் இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல் எண்மரும் பிறருமொருஞான் முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன முடியமரர் மொத்துண்டநாள் அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி அம்புலீ யாடவாவே 7.8 | |
தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் தடங்கரை விடிப்பவனுனைத் வெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன் வெகுளாது விடினுமழுது கள்ளம் பழுத்தகட் கடைசியர் சிறார்திரைக் காவிரித் தண்டுறைதொறும் அள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன் அம்புலீ யாடவாவே 7.9 | |
தன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும் தாணிழற் கீழ்நிற்பவிச் நின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி நீள்கழற் றாளுதைந்து பின்னற் றிரைச்சுர நதித்தண் டுறைத்தேவர் பேதைக் குழாங்களென்னப் தன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன் அம்புலீ யாடவாவே 7.10 | |
குறுமென் னடையு நெடுவெணிலாக் கோட்டு நகையும் வாட்டடங்கண் முறுகு நறைத்தேன் கனிபவள முத்துண் டுச்சி மோந்துகொண்டுன் இறுகும் புளகக் கும்பமுலை எம்பி ராட்டி விடுத்ததுமற் சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே 8.1 | |
கொழுநாண் மலர்க்கற் பகமுநறைக் குரவு நாறு நறுங்குஞ்சிக் தொழுவா னவர்த முடிசூட்டும் சோதி முடியிற் றுகளெழநின் கழுவா மணியு நிலவுவிரி கதிர்நித் திலமு முமையம்மை செழுநான் மறையின் பெருஞ்செல்வச் செருக்கே சிற்றில் சிதையேலே 8.2 | |
வழிக்குப் புறம்பா யாமிழைத்த வண்டண் மனையவ் வசுரேசன் கொழிக்குஞ் சிறுமுற் றிலில்வாரிக் கொடுவந் தடியே மனைமுன்றிற் கழிக்குண் டகழி வாய்மடுப்பச் சுடர்வால் வளைத்தெண் டிரைக்கரத்தாற் செழிக்குந் தடங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே 8.3 | |
மூரிக் களிறோ மழவிடையோ முடுகிற் றெனப்பார்த் துழியுனது பாரித் தோங்கிப் பூரித்த பைம்பொற் புயத்தைக் கண்ணேறு வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை விரிபூங் கமுகும் பால்பாயும் தேருக் கெழில்செய் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே 8.4 | |
பொன்னங் கொடிபோ னுடங்குமிடைப் புத்தேண் மகளிர் விளையாடப் மெய்ந்நின் றவருள் விழிப்பாவை விளையாட் டயர வழியாத பின்னுந் திரைத்தீம் புனற்கங்கைப் பேராற் றூற்று நறைக்கோட்டுப் தென்னம் பழம்வீழ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே 8.5 | |
கானக் குறப்பெண் குடியுருந்த கன்னிப் புனத்துத் தினைமாவும் மீனத் தடங்க ணவண் மிச்சில் மிசைந்திட் டதுவு நசைமிக்கு கூனற் பிறையின் கோடுரிஞ்சும் கொடிமா டத்து வெயில்விரிக்கும் தேனக் கலருஞ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.6 | |
பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும் பெருமா னார்க்கு முலகேழும் வெள்ள மமைத்த சிறுசோறு வேண்டி னிடுகே மலதௌியேம் கள்ள விழிச்சூ ரரமகளிர் காமன் கொடியேற் றெனவியப்பக் தெள்ளு புனற்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.7 | |
மடல்வா யவிழ்ந்த குழற்பேதை ஒருத்தி திருத்தும் பகிரண்ட விடலாய் தமியேஞ் சிற்றின்முற்றும் விளையாட் டாக வொருநீயும் கடமா மருப்புஞ் சுடர்மணியும் கதிர்நித் திலமு மகளிர்முலைக் திடராச் செயுங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.8 | |
வாமாண் கலைப்பே ரகலல்குல் மடமா ணோக்கி னரமகளிர் கோமா னினக்கப் பெருந்தேவர் குலமே யன்றி யடியேமும் காய்மாண் குலைச்செவ் விளநீரைக் கடவுட் சாதி மடநல்லார் தேமாம் பொழிற்றீம் புனனாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.9 | |
கருவீற் றிருந்த பெருங்கருணை கடைக்கண் பொழிய வீற்றிருக்கும் மருவீற் றிருந்த குழன்மகளிர் வண்டற் றுறைக்கு மணற்சிற்றில் குருவீற் றிருந்த மணிமாடக் கொடிமா நகரந் தொறுமலர்ந்த திருவீற் றிருந்த சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 8.10 | |
ஊற்றும் பசுந்தே னுவட்டநெட் டிதழ்விரியும் ஒண்காந்தண் முச்சியுச்சி போற்றுந் திறத்தினப் பழமறைக் கிழவன் புரிந்தபகி ரண்டங்கடாம் தூற்றும் பெயர்க்கரு முகிற்படாத் தையும்வெண் டுகிற்படா மாக்கிவீக்கித் தீற்றுஞ் சுதைத்தவள மாடமலி வேளூர சிறுபறை முழக்கியருளே 9.1 | |
விளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை வெள்ளஞ் சுருங்கவீங்கி வளைக்குங் கருங்கடல் பெரும்புறக் கடலோடும் வாய்மடுத் தெதிரெடுப்ப இளைக்கும் புளிக்கறை முயற்கறை யறக்காலும் இளநிலா வெள்ளமூழ்கி திளைக்குந் துகிற்கொடி முகிற்கொடிசெய் வேளூர சிறுபறை முழக்கியருளே 9.2 | |
இருளுந் தரங்கக் கருங்கடன் முகட்டெழும் இளம்பிறை முயற்குழந்தைக் தரளம் பதிந்திட்ட மணிமுறுவ லவரோடு தருநிழற் செல்வருய்க்கும் உருளுங் கொடித்தேரும் வீற்றுவீற் றெழில்புனைந் தோட்டுபொற் றெப்பமென்ன திரளும் பளிக்குமா டங்கள்பொலி வேளுர சிறுபறை முழக்கியருளே 9.3 | |
மொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற மோட்டாமை முதுகுளுக்க கம்பக் கடாயானை யெட்டும் பிடர்த்தலை கழுத்தொடு முரிந்துகவிழக் அம்பொற் றடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி அண்டகூ டத்தளவலால் செம்பொற் றிருக்கோ புரங்கள்பொலி வேளூர சிறுபறை முழக்கியருளே 9.4 | |
தரிக்குஞ் சுடர்ப்பருத் முழுமதிக் கடவுளொடு தடமதில் கடந்தகநகர் விரிக்கின்ற விருசுடரு மொருவழித் தொக்கென வியன்கதிர்ப் படலமூடி புரிக்குஞ் செழுந்தரள மாடமும் வெயிலினொடு பொழிநிலாப் போர்ப்பமுற்றும் தெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர சிறுபறை முழக்கியருளே 9.5 | |
வேறு மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை மடமயி லினமகவ பழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு பண்ணவ ருண்மகிழப் அழலவிர் சோதியெ மைய னடஞ்செய ஆயிர மங்கையினோர் முழவென வமரரு முனிவரு மார்ப்ப முழக்குக சிறுபறையே 9.6 | |
பெருவௌி முகடு திறந்திட் டண்டப் பித்திகை வெடியாமே குருமணி சிதறிய வென்ன வுடுத்திரள் கொட்டுண் டுதிராமே திருவிர லொடுநக கண்களி னுஞ்செங் குருதி ததும்பாமே முருகலர் தாரவ னொருமுறை மெல்ல முழக்குக சிறுபறையே 9.7 | |
வம்மி னெனப்புல வோரை யழைத்திடு வண்கொடை முரசமென அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ ணங்கை மணம்புணரும் தெம்முனை சாயச் சமர்விளை யாடிச் செங்கள வேள்விசெயும் மும்முர சமுமதிர் காவிரி நாடன் முழக்குக சிறுபறையே 9.8 | |
சந்த விருத்தம் பெருகுசுவைத்தௌி நறவொழுகக்கனி கனியமுதே கருவரைநெக்குட னுருகமிழற்றுமொர் கிளியரசே அருளில்புனத்தவர் மகளிருபொற்பதம் வருடல்செயா பருவயிரப்பய சயிலன்முழக்குக சிறுபறையே 9.9 | |
இழுமென்மொழித்தௌி தமிழின்வடித்திடு நவரசமே கழுவுமணிக்கல னடுவிலிழைத்திடு குலமணியே ஒழுகுநறைச்செழு மலர்விரியக்கமழ் புதுமணமே பழமறைகட்கொரு முதல்வன்முழக்குக சிறுபறையே 9.10 | |
போரோடு படைதுறந் துடறிறந் தொடுசெம் புனலோட வோடிநிமிரும் தாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட தழல்விழிக் கெதிர்செலாத பீரோடு கொங்கைக்க ணீரோடு வெள்ளருவி பெருகக் கடைக்கணிற்கும் தேரோடு மொருபெருஞ் சிலையோடு நின்றவன் சிறுதே ருருட்டியருளே 10.1 | |
கம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட் கடையிற் கடைக்கனலெழக் தும்பைத் தலைச்செம் மயிர்ச்சிகை யினைச்சுடு கனற்சிகை யெனப்பதைப்பச் தம்பிற் சுடத்தான் கவந்தமொடு தொந்தமிட் டாடும் பறந்தலைநிலத் செம்பொற் றடந்தே ருருட்டிவரு சேவகன் சிறுதே ருருட்டியருளே 10.2 | |
வண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல வனமூடு குருதியாற்று கொண்டேகு சிறுகுடர்ப் பெருவலை யெடுத்தெறி குறட்பேய் நெடுஞ்சினமுறக் உண்டேகு வதுமொருவன் விடவோ லிடுங்கரிக் குதவவரு திகிரியேய்க்கும் திண்டேரை யுருளாது நிற்கப் பணித்தவன் சிறுதே ருருட்டியருளே 10.3 | |
பைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள் விரிசிறை படைத்தெழுவபோற் வெங்கட் டயித்திய ருடற்குறை தலைக்குறை விரைந்துயி ரினைத்தொடர்ந்து பொங்கற் கடற்குட்ட மட்டதிக் குந்தமிற் போர்செயப் பார்கவிழவெம் செங்கட் பசுந்தோகை வாம்பரி யுகைத்தவன் சிறுதே ருருட்டியருளே 10.4 | |
நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு நிகளத் தடங்குன்றுவான் கைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன் கடும்பரியை நட்புக்கொளும் மெய்வைத்த காதன்மை யரமகளிர் பேராய வெள்ளந் திளைத்தாடியோர் தெய்வப் பிடிக்குக் கிடைத்ததொரு மழகளிறு சிறுதே ருருட்டியருளே 10.5 | |
பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம் படைவீடு கயல்கடாவும் கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு கூடமே யெனினுமருதக் பொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு பூங்குழற் காடும்வெயில்கால் சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன் சிறுதே ருருட்டியருளே 10.6 | |
கோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங் குன்றுகவுண் மடைதிறந்து பால்பாய் பெருக்கா றுவட்டெழுத றன்றுணைப் பாவைய ரொடுங்குறுகுமப் வேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன் மேற்செல்ல நாற்றிசையிலும் சேல்பாய் தடம்பணை யுடுத்தகா விரிநாட சிறுதே ருருட்டியருளே 10.7 | |
மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு மீனியரியல் போகவுகளும் காத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய் காவேரி யாயிரமுகக் பூத்தந்த கற்பகக் காட்டினை யுழக்கிவிரி பொற்றா தெழுப்பிமற்றப் தேத்தந்த தண்பணையு டுத்ததீம் புனனாட சிறுதே ருருட்டியருளே 10.8 | |
கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் கற்பகத் தும்படர்தலாற் ஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை உதைந்தாட வாடுந்தொறும் தள்ளிலை யலங்கல்வே லெம்பிரா னைப்பாடி ஆடுகின் றாரெனத்தாம் தெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட சிறுதே ருருட்டியருளே 10.9 | |
வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென மணிமுறுவ னிலவுகாலும் பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின் படிவமா கக்காட்டியிப் தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த தம்பிரா னுந்தம்பிரான் சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள் சிறுதே ருருட்டியருளே 10.10 | |