உமறுப் புலவரின் சீறாப்புராணம்
இரண்டாவது காண்டம் - நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 1- 8 / பாடல்கள் (1-698 )
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
2.01 | நபிப் பட்டம் பெற்ற படலம் | 1-55 | மின்பதிப்பு |
2.02 | தொழுகை வந்த வரலாற்றுப் படலம் | 56-99 | மின்பதிப்பு |
2.03 | தீனிலை கண்ட படலம் | 100-262 | மின்பதிப்பு |
2.04 | உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் | 263-357 | மின்பதிப்பு |
2.05 | உடும்பு பேசிய படலம் | 358-397 | மின்பதிப்பு |
2.06 | உத்துபா வந்த படலம் | 398 - 418 | மின்பதிப்பு |
2.07 | ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் | 419-510 | மின்பதிப்பு |
2.08 | மதியை அழைப்பித்த படலம் | 511-698 | மின்பதிப்பு |
1 |
சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த் வாதிதன் பருமான் கொண்டினி தோங்கி மேதினி புகுந்து முகம்மது தமக்கு கோதறக் கொடுப்பத் தீன்பயிர் விளைத்த 2.1.1 | | 2 |
புள்ளிவண் டருட்ட முண்டிசை பயிலும் றெள்ளிய குறைஷிக் குலத்தினி லுதித்த விள்ளருங் கணக்கா றாரிரண் டதின்மேல் வெள்ளிடை யதனிற் சிறிதொளி திரண்டு 2.1.2
| 3 |
தெரிந்திடு மொளியைக் தம்மிரு விழியாற் | திருந்திடும் பின்னுந் தோற்றிடு மிதனை பொருந்துளக் களிப்பு மச்சமும் பிறப்பப் கருந்தலைக் கவைநா வரவுட றடிந்த 2.1.3
| 4 |
திசையனைத் தினுமந் தரத்தினு மிருந்த | மிசையுறச் சிறிது தொனிகளே பிறக்கு தசையினும் பிரியா தடுத்துறைந் தவர்தஞ் வசையறுங் குறைஷிக் குலத்துறுங் குரிசின் 2.1.4
| 5 |
இவ்வணஞ் சிறிது பகனிகழ்ந் ததற்பி | மைவண விழியா ரிடத்தினி லுறையா செவ்வணக் கருத்திற் றனியிருப் பதற்கே யெவ்வரை யிடத்துங் காலினி லேகி 2.1.5
| 6 |
உலகினிற் பிறந்து வருமெழு வகைக்கு | நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து னலனுற வுலவி மனனுறும் படியே சிலையென வளைந்த சிறுநுதற் கதீஜா 2.1.6
| 7 |
வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய் | லுருசிக்குங் கனிவாய் மடமயிற் கதீஜா தெரிசிக்கப் பொருந்து மமரர்தம் முருவுந் பரிசுத்த மனைய குயிலொடுந் தாமும் 2.1.7
| 8 |
மக்கநன் னகருந் தெருத்தலை மதிளும் | புக்குநல் லிடத்திற் றெரிந்தவை யெவையும் தக்கநற் பொருளா யுறுசலா முரைக்குந் மிக்கமெய்ப் புதுமை தனையுணர்ந் துணர்ந்து 2.1.8
| 9 |
முருகவிழ் புயவள் ளலுக்குறும் வருட | தெரிதருந் திங்க ளாறுஞ்சென் றதற்பின் மருமலர்ச் செழுந்தார்க் கனங்குழற் கதீஜா லிருவிழி துயில மண்ணிடைத் தோன்றா 2.1.9
| 10 |
வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா | கொண்டுறு மயலு ளுயிரினு முயிராய்க் வண்டுறை மலர்ப்பஞ் சணைமிசை பொருந்தி கண்டுயில் பொழுதிற் கனவுக ளனைத்துங் 2.1.10
| 11 |
துய்யவ னருளா லாதமா மனுவாய்த் | மையமி லாறா யிரத்தினி லொருநூற் வையக மதிக்கு முகம்மதின் வயது லெய்திய வெட்டாந் தேதியிற் சனியி 2.1.11
| 12 |
நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு | வித்துரு மத்தாள் சிறந்தணி திகழ பத்திவிட் டெறிக்குஞ் செம்மணி யிருகட் சித்திர வடிவைச் சுருக்கிமா னுடர்போற் 2.1.12
| 13 |
வேறு | மானுட வடிவாய் வந்த வானவர்க் கரசன் செவ்வி யானனக் குரிசி லென்னு மகுமதின் வதன நோக்கி நானமுங் கியமெய்ச் சோதி நாயகா வரையின் கண்ணே தீனுற விருக்கின் றீரோ வென்றுசே ணடைந்தா ரன்றே. 2.1.13
| 14 |
மற்றைநாட் பருதி ராவில் கிறாமலை யிடத்தில் வானோர் | கொற்றவ ருறைந்து வள்ளற் குவவுத்தோள் வனப்பு நோக்கி யுற்றவென் னுயிரே நீரிங் குறைந்தினி ரோவென் றோதி வெற்றிவெண் விசும்பு கீறி மேலுல கிடத்திற் சார்ந்தார். 2.1.14
| 15 |
விண்ணகத் தரசர் தோன்றும் விதிமுறை யறியா வள்ளன் | மண்ணகத் திவரை நேரும் வனப்பினில் விசையி லந்தக் கண்ணகன் வான நாட்டுங் காண்குற வரிதே யென்ன வெண்ணமுற் றிதயத் தாராய்ந் திருப்பிடம் பெயர்ந்தி ராரால். 2.1.15
| 16 |
வரிசைநேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நாளிற் | றெரிதர விளங்குந் திங்க ளிரவினிற் சிறப்பு மிக்கோ னருளினில் ஜிபுற யீல்வந் தருவரை யிடத்தின் வைகுங் குரிசிறன் கமலச் செங்கண் குளிர்தர வெதிர்ந்து நின்றார். 2.1.16
| 17 |
நானிலம் பரப்புஞ் சோதி நாயகக் கடவு டம்மை | வானகத் திருந்த சோதி வந்துசந் தித்த தேபோற் கானமர் துண்டச் செங்கட் கலைநிலாத் தவழு மியாக்கை யீனமில் ஜிபுற யீல்வந் திறையவன் சலாமுஞ் சொன்னார். 2.1.17
| 18 |
மரகதப் பத்தி கோலி வச்சிரத் தாரை சாத்தி | யுரகமா மணிக ணாப்ப னொளிபெறக் குயிற்றி வெள்ளைத் தரளமென் புருட ராகம் பலமணி தயங்கத் தாக்கிச் சொரிகதிர் பரப்புஞ் சோதித் துகிலினைக் கரத்திற் கொண்டார். 2.1.18
| 18 |
செகமதில் விண்ணி லொவ்வாச் செழுந்துகி லதனை யேந்தி | யகமகிழ்ந் தினிது போற்றி யமரருக் கரசர் வாய்த்த முகமதி நோக்கி யாதி முறைமறைக் கலிமா வோதி முகம்மதை விளித்துச் செவ்வி வலக்கரத் திடத்தில் வைத்தார். 2.1.19
| 20 |
மரைமலர் வதனச் சோதி முகம்மதின் கரத்தில் வானோ | ரரசர்மிக் குவகை கூர்ந்தவ் வணிதுகி லிருத்தும் போதிற் றிரைமுகில் வரையும் விண்ணுந் திகாந்தமு நடுவு மீக்கொ ளிரைகட லேழும் பாரு மிலங்கொளி விரிந்த தன்றே. 2.1.20
| 21 |
மண்டலம் புரக்குஞ் செங்கோன் முகம்மதின் வதன நோக்கி | விண்டலம் பரவும் வேத நபியெனும் பட்ட நும்பாற் கொண்டலே குதாவின் றீந்தா னெனுமொழி கூறிப் பின்னு மண்டர்வாழ்த் தெடுப்பச் செவ்வி யாரணம் புகறி யென்றார். 2.1.21
| 22 |
செப்பிய வசனங் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி | முப்படி விளங்கும் வண்ண முழுமணிக் குரிசி லேயா னிப்பெரும் புவியிற் றீட்டு மெழுத்திலொன் றறியே னாதி யொப்பரும் வேத மென்ப தோதினே னல்ல னென்றார். 2.1.22
| 23 |
சிறைநிறஞ் சுருக்கித் தோன்றுஞ் ஜிபுறயீல் முதலோன் கூறு | முறைவழி முகம்ம தன்பான் முன்னிருந் திருகை யார விறுகுறத் தழுவிப் பின்ன ரியம்புமென் றியம்பத் தோன்றன் மறைமுதல் வசன நாவின் வழக்கின னல்ல னென்றார். 2.1.23
| 24 |
எதிரிருந் தரசர் பின்னு மிடருறத் தழுவி நோக்கி | மதியினு மிலங்குஞ் சோதி முகம்மதே யோது மென்னப் புதுமையி னரிய பேறே புவியிடத் தரிய வேதங் கதிபெறக் கண்டுங் கேட்டுங் கற்றறிந் திலனியா னென்றார். 2.1.24
| 25 |
கேட்டுவா னவர்கோ மானுங் கிளரொளி வனப்பு வாய்ந்த | தோட்டுணை நெருங்க வுள்ளந் துனிவர விடலஞ் சோரப் பூட்டிய கரங்கள் சேப்பப் புல்லிநந் நபியை நோக்கி மீட்டுமெய்ம் மறைநூன் மாற்றம் விரித்தெடுத் தியம்பு மென்றார். 2.1.25
| 26 |
நெருக்கிவிட் டதற்பின் வேத நெறிநபி யுள்ளத துள்ளே | திருக்கிளர் புவியில் விண்ணோர் தௌிதரு மறிவு முன்னூ லிருக்கினி லறிவுந் தோன்றி யிடனறப் பெருகி நல்லோ ருருக்கொளு மரசை நோக்கி யோதவெண் டுவதே தென்றார். 2.1.26
| 27 |
மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமா | னிக்றவு வெனும்சூ றத்தி லிருந்துநா லாயத் தின்ப மெய்க்குற மாலம் யஃல மெனுமட்டும் விளம்பு வீரென் றொக்கலி லுயிரின் மிக்கா யுறுநபிக் குணர்த்தி னாரால். 2.1.27
| 28 |
எழுத்தினிற் றவறாச் சொல்லி னியன்முறை சிதகா வின்பம் | பழுத்தபண் ணொலியாற் றீய்ந்த பயிருயிர் பெருவ தாகச் செழித்தமெய் ஜிபுற யீல்தஞ் செவியகங் குளிரக் கல்வி யழுத்திய பொருளுட் டோன்ற அகுமது மோதி னாரால். 2.1.28
| 29 |
உறைந்தமெய்ம் மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டுரைப்பச் செவ்வி | யறந்தழைத் தனநன் மார்க்கத் தரும்புவி தழைத்த வெற்றித் திறந்தழைத் தனவிண் ணோர்கள் செயறழைத் தனதி காந்தப் புறந்தழைத் தனநந் தீனின் புகழ்தழைத் தோங்க வன்றே. 2.1.29
| 30 |
பறவைக ளினங்கள் போற்ற விலங்கினம் பலவும் போற்ற | வுறைதருந் தருக்கள் போற்ற வூர்வன வெவையும் போற்ற நிறைதரு மலகை போற்ற நிரைதிரைப் பரவை போற்ற மறைவிலா தமரர் போற்ற முகம்மது மோதி னாரால். 2.1.30
| 31 |
உயிரினுக் குயிராய் வந்த முகம்மது முரைப்பக் கேட்டுச் | செயிரறு ஜிபுற யீல்தம் மெய்மயிர் சிலிர்ப்ப வோங்கி முயலகன் மதியம் போன்ற முகம்மதைப் போற்றி வேக வெயிலவன் கதிரிற் றூண்டி மேலுல கிடத்திற் புக்கார். 2.1.31
| 32 |
அரியவன் றூத ரான அகுமது கலக்க முற்று | மருமலர்க் சோலை சூழ்ந்த மால்வரை யிடத்தை நீங்கி யெரிபகற் கதிர்க்கா றோன்றா விரவினிற் றனித்து வல்லே விரிகதி ருமிழும் பைம்பூண் மின்னகத் திடத்திற் சார்ந்தார். 2.1.32
| 33 |
வேறு | நடுக்க முற்றுமெய்ச் சுரத்தொடுங் குளிர்தர நலிந்து மிடுக்க கன்றிடப் பயத்தொடு மரிவையை விளித்துத் திடுக்க முற்றது துகில்கொடு பொதிமனந் தௌியா திடுக்க ணியாதென வறிகில னென்றன ரிறசூல். 2.1.33
| 34 |
தலைவர் கூறிய மொழிசெவி புகவுட றயங்கி | நிலைகு லைந்தெழுந் தயர்வொடு நெட்டுயிர்ப் பெறிந்து பலம லர்த்தொடை செறிந்தபஞ் சணைமிசைப் படுத்திச் சலவை கொண்டுறப் போர்த்தரு கிருந்தனர் தையல். 2.1.34
| 35 |
நொந்து மெய்யகம் பதறிடக் கணவரை நோக்கி | யெந்த னாருயி ரேயிக லடலரி யேறே சிந்தை சிந்திமெய் திடுக்கொடு மதிமுகந் தேம்ப வந்த வாறெவை யுரைக்கவென் றுரைத்தனர் மடமான். 2.1.35
| 36 |
மலையி னுச்சியி னிருந்தது மொருவர்வந் தடுத்து | நிலைபெ றுந்துகில் கரத்தளித் துரைத்தது நெருங்க வுலைவு றத்தனி யணைத்தது முரைத்துளப் பயத்தா லலம லர்ந்தன னென்றன ரரசருக் கரசர். 2.1.36
| 37 |
துணைவர் கூறிய மாற்றமு மறைகள்சொற் றதுவு | மிணைப டுத்திநேர்ந் தின்பமென் றுளத்தினி லிருத்திப் பிணையை நேர்விழி கனிமொழி சிறுபிறை நுதலா ரணையுந் தம்வயின் றுனிபல வகற்றின ரன்றே. 2.1.37
| 38 |
தாங்கு மெய்ப்பொரு ளறிவருள் குணந்தய விரக்க | நீங்கி டாதறம் பெருகிட வளர்க்குநன் னெறியீ ரோங்கு மானிலத் திடத்துறை பவர்களா லுமக்குத் தீங்கு றாதென வுரைத்தனர் மடந்தையர் திலதம். 2.1.38
| 39 |
சிந்து தேன்மொழிச் செழுங்குயில் தூதெனுந் திருப்பேர் | வந்த தாமெனத் தெருளுற முகம்மது நயினா ருந்து வெங்குபிர் களைவதித் தரமென வுயர்வா னிந்து நேரிரு ளொடுக்கிவிண் ணெழுந்தன னிரவி. 2.1.39
| 40 |
நிறக்க ருங்கழு நீர்குவி தரநிறை வனசந் | திறக்க மெல்லிதழ் வெய்யவ னெழுந்தபின் றிருவு முறக்கத் தென்னுமவ் வேந்தனைக் கொணர்கென வொருவ னறக்க டும்விசை கொண்டெழுந் தேகின னன்றே. 2.1.40
| 41 |
மடங்க லேறெனு முகம்மதும் வரிபரந் திருண்ட | விடங்கொள் வேலினை நிகர்த்துமை பொருவிழி மயிலு முடன்க லந்தினி தழைத்தனர் வருகவென் றுணர்வு துடங்கு மும்மறை தௌிந்தவற் குரைத்தனன் றூதன். 2.1.41
| 42 |
பழுதி லாக்குலப் பாவைதம் பாலினிற் பரிவா | யெழுக வென்றன ரென்றசொற் சிரமிசை யேற்றி வழுவி லாமறை வுறக்கத்தென் றோதிய வள்ள றழுவு மெய்க்கதிர் முகம்மது மனைவயிற் சார்ந்தான். 2.1.42
| 43 |
கற்ற வேதியன் வருதலுங் கிளிமொழிக் கதீஜா | பொற்றொ டிக்கரஞ் சாய்த்திவ ணுறைகெனப் புகன்று மற்ற டப்புய முகம்மது வரையிடைப் புதுமை யுற்ற செய்தியுண் டென்றன ரறிகவென் றுரைத்தார். 2.1.43
| 44 |
மதியின் மிக்கநன் மறையவன் முகம்மதை நோக்கித் | துதிசெய் தும்முழை வந்தவா றனைத்தையுந் தொகுத்து முதிர்த ரும்புக ழோயுரை கென்றலு முறையா விதிய வன்றிருத் தூதர்நன் றெனவிளம் புவரால். 2.1.44
| 45 |
வரையி னிற்றனி யிரவினி லிருக்கையின் மதியி | னுரையின் மிக்கவ ரொருவர்வந் தென்பெய ருரைத்துப் பரிவி னாலிவ ணுறைந்தினி ரோவெனப் பகர்ந்து விரைவி னின்மறு நாளுமவ் வுரைவிளம் பினரால். 2.1.45
| 46 |
இருதி னத்தினு முரைத்தவர் மறுதினத் தெய்தித் | தெரிம ணித்துகி லெனதுசெங் கரத்தினிற் சேர்த்தி யரிய நாயக னபியெனும் பெயருமக் களித்தா னுரிமை யீரினி யோதுமென் றுரைத்தன ருவந்தே. 2.1.46
| 47 |
ஓது மென்றசொற் கேட்டலு மோதின னலனென் | றோத முன்னிருந் திருகையி னிறுக்கிமுன் னுரைபோ லோது மென்றலும் பின்னரு மோதின னலலென் றோத மற்றுமென் றனைமிக விறுக்கின ருரத்தின். 2.1.47
| 48 |
மறுத்து மோதுமென் றுரைத்திட மறுத்தனன் மறுத்து | மிறுக்கி யோதுமென் றுரைத்தன ரெதிரிருந் தௌியேன் றிறக்க வோதுவ தெவையென வுரைத்தனன் றீட்டா தறத்தி னுட்படுஞ் சொல்லினைக் குறித்தெடுத் தறைந்தார். 2.1.48
| 49 |
அந்த நல்லுரை கேட்டன னவருரைப் படியே | பிந்தி டாதெடுத் தோதினன் செழும்பொருள் பிறக்க வெந்தை யீரெனப் போற்றிவிண் ணடைந்தன ரெழிலோய் வந்த வாறிவை யெனவெடுத் துரைத்தனர் வள்ளல். 2.1.49
| 50 |
புவியி னிற்பெரும் புதுமைய தாகிய பொருளாய் | நபியு ரைத்தசொல் லனைத்தையு மனத்தினி னயந்து குவித ருங்கதிர்ச் செழுமணிக் கொடியிடை கதீஜா செவிகு ளிர்ந்திட மனங்களித் திடப்பொரு டெரிவான். 2.1.50
| 51 |
மலையல் வள்ளனும் மிடத்தினில் வரைமிசை யடைந்த | தலைவர் நாயகன் றூதரில் ஜிபுறயீல் சரதம் பலக திர்த்துகில் கரத்தளித் ததுநபிப் பட்டம் விலக வோதுமென் றோதிய துமக்குறும் வேதம். 2.1.51
| 52 |
உடலு லைந்திட விறுக்கிய துமதிடத் தினிமேல் | வடுவின் மும்முறை யிடுக்கண்வந் துற்றது மாறும் படியி டத்தினும் மினத்தவர் பெரும்பகை விளைத்து மிடரு றும்படி யூரைவிட் டெழத்துரத் திடுவார். 2.1.52
| 53 |
என்ற விம்மொழி மறையவ னுரைத்தலு மிசைத்தேன் | றுன்று மென்மலர்ப் புயநபி மனத்தினிற் றுணுக்குற் றொன்று மென்னினத் தவர்பகை யெனக்குவந் துறுமோ பொன்று மோவென வுரைத்தலு முதியவன் புகல்வான். 2.1.53
| 54 |
முன்னர் மாமறை நபியெனும் பெயர்முதி யவருக் | கின்னல் வந்துறா திலதுநும் மிடத்திட ரணுகா நன்ன லம்பெறு நபிகணா யகமுநீ ரலது மன்னு மானில நபியினி யிலையென வகுத்தான். 2.1.54
| 55 |
மாத வத்துறும் பொருளெனு முகம்மது நபிதம் | பாத பங்கயத் திணைமிசை சிரங்கொடு பணிந்து கோதி லாக்கதீ ஜாதமை யிருகரங் குவித்துத் தீதி லாதெழுந் தேகினன் பலகலை தௌிந்தோன். 2.1.55
| |
56 |
உடையவ னொருவன்ற னுன்மைத் தன்மையை நடைவர விளக்கிநல் வழியி லியாரையு மடைதர வழைத்திடற் கனுப்புந் தூதரென் றிடைவரு மமரர்கோ னீய்ந்த பட்டமே. | 2.2.1 | 57 |
ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு மருத்தமே யுரைகலி மாவந் நிண்ணயப் பொருத்தமீ மானடை புனைத லாமமல் திருத்தமே விவையிசு லாமிற் சேர்தலே. | 2.2.2 | 58 |
இப்பொருள் பொதிந்ததோ ரிறைமை தாங்கிய மைப்புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத் தொப்புர வொழுகுவார்க் குரிமை யார்க்கெலாஞ் செப்பினர் வௌிப்படாச் சிறப்பிற் றாகவே. | 2.2.3 | 59 |
ஒருவனே நாயன்மற் றொழிந்த தேவத மிருமையும் பேறிலா திழிவு கொண்டதென் றருமொழி விளக்கலா லாய்ந்து நந்நபி திருமொழி யுண்மையிற் சிந்தை செய்குற்றார். | 2.2.4 | 60 |
வல்லிய மெனுமுகம் மதுதம் மாமணம் புல்லிய புயவரைப் படர்ந்த பொற்கொடி முல்லையங் குழற்கதீ ஜாமின் னேமுத லில்லறத் தொடுமிசு லாமி லாயினார். | 2.2.5 | 61 |
மனுமுறை நெறிவழு வாஅபூ பக்க ரெனுமுகில் கண்டுயில் காலை யின்புறத் தினகரன் மதிமடி யிருப்பச் செவ்விய கனவுகண் டெழுந்தகங் களிப்புற் றாரரோ. | 2.2.6 | 62 |
இன்னதன் மையின்கன வியாது கொல்லென மன்னிய மனத்தினன் மதியிற் றேகுவர் பன்னுவர் புதுமையிற் பலனுண் டாமென வுன்னுவர் தௌிந்தொரு வருக்கும் விண்டிலார். | 2.2.7 | 63 |
பொன்னக ரத்தினும் புவியுங் காணுறா நன்னல முண்டுநம் மிடத்தி லென்னவே யின்னலைப் பிரித்தெறிந் தெழுந்து பொற்புற மன்னவர் நபியுறை மனையி லாயினார். | 2.2.8 | 64 |
ஆரணக் கடவுளு மழகின் கன்னியும் பூரண மனத்துட னிருத்திப் போற்றியே தாரணி யிடத்தினிற் றனிய னாலுறுங் காரண மனைத்தையுங் கழறி னாரரே. | 2.2.9 | 65 |
அம்மொழி கேட்டட லரியபூ பக்கர் தம்மனக் கனவையுஞ் சார்ந்த செய்தியுஞ் செம்மையி னுணர்ந்துளத் திருத்திச் சிந்தையின் விம்மிதத் தொடும்புயக் களிப்பு வீங்கினார். | 2.2.10 | 66 |
சுரத்தினிற் பெருநதி யழைத்துத் தோன்றிய சரத்தினிற் கட்செவி தடிந்து பாதகன் கரத்தினைப் பொருத்திய காவ லாளநும் வரத்தினை யெவரினும் வகுக்கற் பாலதோ. | 2.2.11 | 67 |
என்றுரைத் தருளிய வெழிலபூ பக்கர் தன்றிரு மதிமுக நோக்கித் தாழ்விலா வென்றிகொண் டுறுங்கலி மாவை விள்ளுத னன்றுமக் கெனநபி நவிற்றி னாரரோ. | 2.2.12 | 68 |
அருமறை நாயக நபிக ளானவர் தெரிதரும் புதுமையின் வழியிற் சேர்த்துவர் பெரியவன் றூதென வெனக்கும் பெட்புற விரிதரும் புதுமையொன் றுதவ வேண்டுமே. | 2.2.13 | 69 |
எனவுரைத் தவர்மனங் களிப்புற் றின்புறப் புனைமலர்ப் பஞ்சணை பொருத்துங் காலையிற் கனவுகண் டினிரது புதுமை காணென வனமலர்த் தொடைப்புய முகம்ம தோதினார். | 2.2.14 | 70 |
சொல்லிய நன்மொழி கேட்டுத் துன்புறு மல்லலும் போக்கறுத் தடலபூ பக்கர் செல்லுறழ் நபிதிரு நாமஞ் சீர்பெற நல்லிய லொடுமிசு லாமி னண்ணினார். | 2.2.15 | 71 |
அந்தமி னாயகன் றூதர்க் கன்புறுஞ் சிந்தையர் புகழபுத் தாலிப் சேய்களிற் சுந்தரப் புலியலி யென்னுந் தோன்றலும் வந்தனை செய்துதீன் வழியி லாயினார். | 2.2.16 | 72 |
அடிமையி லோங்கிய வறிவின் மிக்கவர் வடிவுறும் ஆரிதா மதலை யாகிய மிடலவர் சைதெனும் வீர கேசரி யிடரறுங் கதியிசு லாமி லாயினார். | 2.2.17 | 73 |
இயன்மறை முறையொடு மிவர்க ளிங்ஙன மயலவ ரறிவுறா தடங்கி நன்னெறிச் செயலென நாட்குநாட் டேர்ந்து தம்மன மயலறத் தீனெனும் வழியிற் றேறினார். | 2.2.18 | 74 |
அறிவினிற் றௌிந்தபூ பக்க ரன்பெனு முறவினிற் கிளைகளி லுற்ற பேர்களுக் கிறையவ னபியிவ ரென்ன வேதநூற் றுறையொடும் ரகசியச் சொல்லிற் சொல்லினார். | 2.2.19 | 75 |
செவ்விய ரிவர்மொழி சிதைவி லாதென வவ்வவர் கருத்தினு ளாய்ந்தவ் வாற்றிடைக் கவ்வையங் கடனதி கடப்ப வன்றொரு நவ்விபி னெழுநபி பதத்தை நண்ணினார். | 2.2.20 | 76 |
அலகில்வண் புகழபூ பக்கர் சொல்லினைப் பெலனுறக் குறித்தவ ணடைந்த பேர்க்கெலா மலைவற வறத்தொடுஞ் சுவன வாழ்வெனு நிலைபெற நல்வழி நிகழ்த்தி னாரரோ. | 2.2.21 | 77 |
பணவர வடர்ந்தவர் பகரத் கேட்டலு மணமனத் தொடுங்கதி வாழ்வுக் கீதொரு துணையென நற்கலி மாவைச் சொல்லிநின் றிணையிலான் றூதடி யிறைஞ்சி வாழ்த்தினார். | 2.2.22 | 78 |
கரும்பெனு நபிகலி மாவைக் காமுற விரும்பிய பேர்களிற் றலைமை மிக்கவ ரரும்புவிக் கரசபு துர்ரகு மானுடன் றரும்புகழ் சுபைறுதல் காவுஞ் சகுதுவும். | 2.2.23 | 79 |
அருமறைப் பொருட்குரை யாணி யாகிய வரிசைநன் னெறியுது மானு மாசிலாத் திருநபி பெயர்க்கலி மாவைச் செப்பிய பரிசனத் தொடுந்தனி பழகு நாளினில். | 2.2.24 | 80 |
அண்டருக் கரசிழிந் தடுத்தென் முன்னுரை விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடைக் கண்டில னெனமனங் கலங்கிக் கார்க்கடன் மண்டலம் புகழ்நபி வருத்த முற்றனர். | 2.2.25 | 81 |
குருநபிப் பட்டமே கொண்ட மேலவர் வருவது நிகழ்வதும் வழுத்து வாரெனு மிருநில மாந்தருக் கென்சொல் வோமெனப் பருவர லடிக்கடி படர்வ தாயினார். | 2.2.26 | 82 |
மருப்புகுங் கருங்குழன் மடந்தை தம்மொடு மிருப்பர்பின் றனித்தெழுந் திரவி னேகியப் பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை விருப்பொடு நோக்குவர் மீள்வ ரெண்ணுவார். | 2.2.27 | 83 |
வாணுதற் குரைதர மறுப்பர் தம்முளம் பாணியிற் சசியெனப் பதைப்பர் நல்லுரை பேணினர் தம்முகம் பெரிது நோக்குற நாணுவ ருயிர்ப்பர்மெய் நலிதல் கொண்டனர். | 2.2.28 | 84 |
என்னினி யுரைப்பதென் றெண்ணி யின்புறுந் தன்னுயிர்த் துணைவியைத் தணந்து நெஞ்சகந் துன்னிய துயரொடு மெழுந்து சூன்முகின் மன்னிய தடவரை முகட்டின் வைகினார். | 2.2.29 | 85 |
தனியிவன் றூதெனச் சார்ந்து பூவிடை நனிபெறும் புதுமைக ணடத்த லில்லெனிற் பனிவரை நின்றுவீழ்ந் திடுதல் பண்பலா லினியிருப் பதுபழு தென்னுங் காலையில். | 2.2.30 | 86 |
வாடிய பயிர்க்குறு மழையும் போற்றினந் தேடிய பொருட்கரஞ் சேரு மாறென வீடில்வா னவர்க்கிறை விரைவி னேகியக் கோடுறை நபிவயின் குறுகி னாரரோ. | 2.2.31 | 87 |
திண்ணிய பெருஞ்சிறை ஜிபுற யீல்வரை நண்ணிய முகம்மதை யடுத்து நன்குறா தெண்ணமென் னுமக்கென வியம்பி யாவர்க்கு முண்மைநீர் நபியென்ப துரைத்துப் போயினார். | 2.2.32 | 88 |
தன்னுடற் குயிரெனுந் தகைமைத் தாகிய பொன்னகர்க் கிறைசொலும் புனித வாசகங் கன்னலஞ் சுவையினுங் கனிந்த பாகென நன்னபி செவிப்புக நடுக்க நீங்கினார். | 2.2.33 | 89 |
சகமதில் தீன்பயிர் தழைப்பத் தூநெறி முகம்மதின் றிருப்பெயர் வளர மாசிலாப் புகழொடுஞ் ஜிபுறயீல் போற்றி யிம்மொழி யிகலறப் பலதர மியம்பிப் போயினார். | 2.2.34 | 90 |
வேறு முருகுண் டறுகாற் சஞ்சரிக முரலும் புயத்தா ருசனயினா ரருமைத் தவத்தால் வந்துதித்த அபுல்கா சீமதன் செழுங்கரம்போற் பெருகத் தருஞ்செல் லினக்குலங்கள் பிறங்கும் பிறங்க லிடத்திருந்த வரிசை நபியை நோக்கிப்பின்னும் வந்தார் வானோர் கோமானே. | 2.2.35 | 91 |
கலன்சூழ் கிரண மணிநாப்ப ணிருந்த கதிர்மா மணிக்குறைஷிக் குலஞ்சூழ் வரிசை நபிக்கமரர் கோமான் சலாமுன் கூறியபி னிலஞ்சூழ் பரவைப் புறப்புவியு மிறைஞ்ச நெடியோன் றிருவருளாற் சொலும்சூ றத்தில் முஸம்மிலெனுஞ் சுருதி வசன மிறங்கினவே. | 2.2.36 | 92 |
சிலம்பி லுறைந்த முகம்மதுவைத் திருந்து மமரர் கோமான்கொண் டுலம்பற் றுறுஞ்சின் னெறியினிழிந் துடனின் றரிதோர் மருங்கணைந்து நிலம்பிட் டுதிர மண்சிதற நிலவா மணித்தாள் கொடுகீண்டப் பிலம்பட் டுறைந்த நறுஞ்சலிலம் பிறந்து குமிழி யெழுந்தனவே. | 2.2.37 | 93 |
பெருகிப் பரந்த புனற்கரையிற் பெரியோன் றூதை யருகிருத்தி மருவு மலரு மெனவுலுவின் வகையுந் தொகையும் வரவருத்திக் குரிசி னபியைப் பின்னிறுத்திக் குறித்த நிலைரண் டிறக்அத்துப் பரிவிற் றொழுவித் திருந்துவிண்ணிற் படர்ந்து சுவனத் தலத்துறைந்தார். | 2.2.38 | 94 |
மறையார் நபிக்கி ரகசியத்தின் வணக்கம் படித்துக் கொடுத்துமணிச் சிறையா ரமரர்க் கரசர்முகி றீண்டா விசும்பி னடைந்ததற்பி னறையார் கூந்தற் கதீஜாவை நண்ணி யுலுவும் வணக்கமுமுன் முறையா யுரைப்ப வுரைத்தபடி முடித்தார் கனகக் கொடித்தாயே. | 2.2.39 | 95 |
மாரி யருந்திப் பண்மிழற்றி வரிவண் டுறங்கு மலர்க்கூந்த னாரி சுருதி முறைவணங்கி நளின மனங்கூர்ந் திருந்ததற்பின் மூரித் திறலொண் சிலக்கையபூ பக்கர் முதன்மற் றுள்ளோரு மேருப் புயத்தார் பெருவரத்தார் விரைத்தா மரைத்தாட் புகழ்ந்தடுத்தார். | 2.2.40 | 96 |
வந்த குறைஷிக் குலத்திலுறு மடங்க லனைய முதியோர்தஞ் சிந்தை குளிர வானவர்கோன் றிருத்தி யுரைத்த வணக்கமுறை யந்த மிலிதன் றூதரெடுத் தறைய நெறிநேர் வழுவாமற் பந்தி பெறநின் றுறுந்தொழுகை படித்தார் பாவந் துடைத்தாரே. | 2.2.41 | 97 |
வடுவைப் பகிர்ந்த கரியவிழி மயிலும் வரிசை நயினாரு மடல்வெம் புரவிக் குரிசிலபூ பக்க ரலிசஃ துதுமானுந் தடவெண் கவிகைச் சுபைறொடுதல் ஹாவும் அப்துர் ரகுமானும் புடைவிட் டகலாச் செழுந்தேனைப் பொருத்துஞ் சிறைவண் டெனத்தொழுதார். | 2.2.42 | 98 |
சீற்ற மடங்கா வரிவேங்கை திரியும் வனமுங் கொடுமடங்க லேற்றை வெருவி விலங்கினங்க ளிருக்கு மிடமும் வரையிடத்துந் தூற்று மருவிச் சாரலினுந் தோன்றா திருண்ட மனையிடத்தும் வேற்றுச் சமயப் பயத்தொதுங்கி விதித்த தொழுகை முடித்துவந்தார். | 2.2.43 | 99 |
வேதப் பொருளாய்ப் பொருளொளியாய் விளங்கு முதலோன் றிருக்காட்சித் தூதென் றுதித்த முகம்மதுவுஞ் சுருதி நெறித்தீன் பெரியோருந் தீதுற் றுலைக்குங் கொடுங்காபிர் தெரியா வண்ண மூவாண்டு பேதப் படாதி ரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே. | 2.2.44 |
100 |
சீதவொண் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர் தூதென நபியின் பட்டந் துலங்கிய நான்கா மாண்டில் வேதம்நல் வணக்க மியார்க்கும் விரித்துற விளக்கு மென்ன வாதிதன் பருமான் மேற்கொண் டமரர்கோ னுரைத்துப் போனார். | 2.3.1 | 101 |
பொருப்பிடத் தொளித்தும் வாழாப் புறமனை யிடத்தும் புக்கி யிருப்பது தகாதென் றாயத் திறங்கிய தென்னக் கேட்டு மருப்பருங் கரடக் கைமா மதர்த்தன மதர்த்து வீரர் தெருப்புகுந் தெவர்க்குந் தோன்றத் தீனிலை வணக்கஞ் செய்தார். | 2.3.2 | 102 |
நீருறை யிடத்துஞ் செவ்வி நிழறிக ழிடத்தும் வாய்ந்த பேரொளி மாட வாயும் பெருகுமண் டபத்தின் சார்புங் கூருநல் லறிவி னோடு மறபிகள் குலத்து வேந்த ரீரமுற் றுருகி நெஞ்ச மிணங்குற வணங்கி நின்றார். | 2.3.3 | 103 |
ஆரணத் துலுவும் வாய்ந்த வறிவுமந் திரத்தின் வாயும் பூரண நிலைநின் றங்கை பொருந்துற வளைக்கு மாறும் பாரினி னெற்றி தீண்டப் படும்படி குழைவு மற்றுங் காரண மிதுகொ லென்னக் காபிர்கண் டைய முற்றார். | 2.3.4 | 104 |
மார்க்கமோ நெறியோ வீதோர் வணக்கமோ மாறு பாடீ தேற்குமோ நல்லோர் கேட்கி லிணங்குமோ வினத்தார் வேத நூற்கிது பொருந்து மோவிந் நூதனச் செய்கை யாவு நாற்குலத் தவர்க்கு மொவ்வா நகையென நகைத்துச் சொல்வார். | 2.3.5 | 105 |
மீறிய மதப்பி னாலோர் வேதமொன் றிறங்கிற் றென்று மீறிலா னிறுதித் தூத னெனும்பெய ரெனக்குண் டென்றுந் தேறிய வறிஞர் போலத் தௌிவுறா முகம்ம தென்போன் கூறிய கூற்றைத் தேற்றா விளைத்திடுங் கோட்டி யென்பார். | 2.3.6 | 106 |
பொறுத்துளத் தடக்கிக் கண்டு போவது தகுவ தன்று மறுத்துடைப் பனபோன் மார்க்க வழிகெட நின்ற பேரைக் கறுத்தகட் டுரைக டம்மான் மதமனங் கலங்கக் கூறிச் செறுத்திவர் தம்மைத் தண்டஞ் செய்விரா லொழியு மென்பார். | 2.3.7 | 107 |
உரனறு மனத்தி னூடு முலைவிலாச் சமய நீங்கார் பரகதி யடைவர் வேறு படுத்திநல் லறத்தைத் தீய்த்தோர் நரகமே யடைவ ரென்ற நன்மறை வசனந் தன்னால் விரகர்கள் பகுத்துக் காட்டி விலக்கவுங் கலக்க நீங்கார். | 2.3.8 | 108 |
மனத்துறு வருமக் காபிர் வலிபகை சிறிது மெண்ணா தினத்துடன் கூடிச் சஃதென் றிலங்குறு மலங்கன் மார்பர் புனற்றடக் கரையி லுள்ளப் புகழொடும் பொருவி லானை நினைத்துலுச் செய்து நீங்கா நெறிமுறை வணக்கஞ் செய்தார். | 2.3.9 | 109 |
வணக்கமுற் றிருந்த சஃது மன்னவன் றன்னை நோக்கி யிணக்கியிவ் விடரைத் தீர்ப்போ மிவர்க்கென வுரைப்பர் பின்னும் பிணக்கெனுஞ் சமய பேதப் பேய்பிடித் தவர்க்கு நீதிக் கணக்கறி வுறுமோ வென்னக் காபிர்கள் கடுத்து நின்றார். | 2.3.10 | 110 |
சீற்றமுங் கடுப்பு மாறாச் சினத்தொடுங் காபிர் கூடி மாற்றலர் போலச் சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கித் தேற்றுறு முதியோர் முன்செய் செயலினைக் செய்ய லன்றி வேற்றழ லூழல் புக்க தொழிலினை விருப்ப முற்றீர். | 2.3.11 | 111 |
வருநெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலைப் போற்றுந் திருநெறி விடுத்தீர் செய்யாத் தீவினை விளைத்தீர் வீணி லொருநெறி தொடுத்தீர் நும்மோ டுற்றவர்க் கெல்லா நந்தங் குருநெறி தவிர்த்தீர் கொள்ளாக் கொடும்பவம் விளைத்துங் கொண்டீர். | 2.3.12 | 112 |
அமரருக் கவலஞ் செய்தீ ரருமறை வசனந் தீய்த்தீர் நுமர்களுக் கிடுக்கண் செய்தீர் நோற்றநோன் பதனை மாய்த்தீ ரெமருடன் பகைத்தீ ரிவ்வூ ரிருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லாக் கமரிடை வீழ்வ தல்லாற் கதியொன்றுங் காண மாட்டீர். | 2.3.13 | 113 |
என்றவ ருரைப்பக் கேட்ட விளவல்புன் முறுவ றோன்ற நின்றுபுன் மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கித் தொன்றுதொட் டுவந்து நீவிர் துதிசெயும் புத்து கானை யின்றொழித் திடுமி னானொன் றியம்புதல் கேண்மி னென்றார். | 2.3.14 | 114 |
வானமும் புவியு மற்றும் வகுத்தவ னுண்மைத் தூத ரானவர் முகம்ம தென்போ ரவர்மொழி மறாது நின்றோ ரீனமில் சுவன நன்னா டெய்துவ ரெங்கட் குற்ற தீனிலை பொய்மை யென்ற தேவரு நரகஞ் சேர்வார். | 2.3.15 | 115 |
தீநர கடைவ ரென்ற சொற்செவித் துளையின் மாறாக் காயெரி நெய்யிட் டென்னக் கட்கனல் கதுவக் காபிர் பாய்மதக் களிறு போலப் படுகொலை மனத்த ராகி வாய்துடி துடிப்பப் பேசி வருமித்து நெருங்கி நின்றார். | 2.3.16 | 116 |
வரைதிரண் டணைய பொற்றோண் மன்னவர் சஃது கோபங் கரைகடந் தென்னச் சோகத் தென்பினைக் கரத்தி லேந்தி விரைவொடுஞ் செறுத்து நின்ற வீரரி லொருவன் றன்னைச் சிரசுடைந் துதிரஞ் சிந்தச் சினத்துடன் புடைத்து நின்றார். | 2.3.17 | 117 |
சினத்துட னெதிர்த்த காபிர் திரளையுஞ் சஃது வேந்த ரினத்தையும் வேற தாக்கி யிவர்க்குறு மொழிகள் சாற்றி மனத்தினிற் கோப மாற்றி மனைவயின் புகுதச் செய்தார் கனத்தநூன் முறையி னுட்பங் கண்டவல் லவர்க ளன்றே. | 2.3.18 | 118 |
உதித்தமுன் முதன்மை யாக பீஸபீ லுதிரங் காட்டி மதித்தவீ ரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் கொதித்தபுன் மனத்தி னோடுங் குறுகலர் மனையிற் சார்ந்தார் பதித்தவே ரூன்றி தீனும் படர்கொழுந் தோங்கிற் றன்றே. | 2.3.19 | 119 |
வேறு தூத ராகிய முகம்மது மவர்க்குறுஞ் சுருதி யோது நன்னெறி யுடையரு மினத்துட னுறைந்து தீது றுங்கொடுங் காபிர்கள் செயலினைச் சிதைப்ப வேத நன்மொழிப் பொருளொடுந் தீனிலை விரித்தார். | 2.3.20 | 120 |
கோத றுந்துகில் பொதிந்தரு மணிபல குயிற்றி யோது நன்மொழி யொடுமிரு கரங்குவித் தொதுங்கிப் பேத முள்ளற வணங்குமிப் பேயினா லுமக்குப் பாத கம்பலித் திடுநிச மெனப்பழித் தனரே. | 2.3.22 | 121 |
வம்பி ராதசொன் மறைதன துரையென வகுத்தெந் தம்பி ரானையும் பழிப்பது தகுவதன் றெனவே வெம்பி மாசினத் தொடும்பல விக்கினம் விளைப்ப வம்பு ராசியொத் தூரவர் முகம்மதை யடர்ந்தார். | 2.3.22 | 122 |
அடர்ந்து வந்தவர்க் கெதிரபுத் தாலிப்சென் றடுத்துத் தொடர்ந்து வந்ததிங் கென்னெனச் சூழ்ச்சியாற் றேற்றிக் கடந்த சொல்லொடு மிதத்தொடும் பலவுரை காட்டித் திடம்ப டைத்தவர் விக்கின மனைத்தையுஞ் சிதைத்தார். | 2.3.23 | 123 |
சமய பேதபுத் தனைத்தையுந் தகர்த்திடுந் தீனி லமையு மென்பவர் சிலர்சில ரம்மொழிப் பகையாற் கமைய றக்கடு கடுப்பவர் சிலர்சில ரிவர்க டமைவி லக்குத றொழிலபுத் தாலிபு தமக்கே. | 2.3.24 | 124 |
இவ்வ ணஞ்சில பகலிக லொடுநடந் ததற்பின் பௌவ மார்த்தெனக் குறைஷிக டலைவர்கள் பலருஞ் செவ்வி தாயொரு நெறிபடத் திரண்டுவந் தடைந்தார் மைவ ணந்தரு கொடையபித் தாலிபு மனைக்கே. | 2.3.25 | 125 |
இகன்ம னத்தவர் திரண்டபித் தாலிபை யெதிர்ந்து சகத லத்திரு ளறவரும் பருதியொத் தனையோய் விகட விக்கினம் விளையுமுன் விலகநும் மிடத்திற் புகலு தற்கொரு கருமமுண் டெனப்புக லுவரால். | 2.3.26 | 126 |
ஹாஷி மாகுலக் கடனடு வெழுந்தக லிடத்தின் மாசி லாமதி நின்றுணை யவர்தரு மதலை யேசு வார்க்கிட மெனப்பிறந் திழிதர வினத்துப் பாச நீக்கிநந் தேவத மனைத்தையும் பழித்தான். | 2.3.27 | 127 |
நடந்த முன்னெறி பழுதென நவிற்றியா லயத்து ளடைந்த பேரனை வரும்வழி கேடரென் றறைந்து கடந்த நூன்மறைப் பெரியவ ரிருசெவி கசப்பத் தொடர்ந்து பேசுவ தொறுத்தில னடிக்கடி தொடுத்தான். | 2.3.28 | 128 |
தந்தை தாய்தமர்க் குறும்பொருட் சமயநிண் ணயத்தை நிந்தை செய்தனன் றனக்குறும் வடுவென நினையான் சிந்தை யுற்றதே துணிந்தனன் பிறர்மொழி தேறா னிந்த வாறலால் வேறொரு கருமமு மிசையான். | 2.3.29 | 129 |
நின்னை நோக்கியு நின்குல முறைப்பெரி யவர்நேர் தன்னை நோக்கியும் பொறுத்தனந் தணிந்தன மிவனை யுன்னி நோக்கியே வணக்கிடு முமதுசொற் கடந்தாற் பின்னை நோக்குமெந் திறமெனப் பேசின ரன்றே. | 2.3.30 | 130 |
முறைமு றைப்படி காபிர்கள் கூறிய மொழிகேட் டறம தித்தநெஞ் கடைந்தபித் தாலிபங் கவர்கட் குறும னக்குறை தவிர்ந்திட நன்மொழி யுரைப்பப் பொறைம னத்தொடு மனைவரு மனைவயிற் போனார். | 2.3.31 | 131 |
மாற்ற லர்க்கரி முகம்மது காபிர்கள் வணங்கிப் போற்று புத்தையு மினத்தையும் பொருந்திலா திகழ்ந்து தூற்று நிந்தனை யுரைமறுத் திலர்செழுஞ் சுருதி தேற்றும் வானவர் கோனுரை நிலைபடுந் திறத்தால். | 2.3.32 | 132 |
உரைத்த வாசக மனத்திடை தரித்தில னுரவோர் நிரைத்த டைந்தபித் தாலிபுக் குரைத்தது நெகிழ்ந்தான் குரைத்த லென்னினி முகம்மது பெலத்தொடுங் குறும்பைக் கரைத்தல் வேண்டுமென் றவரவர் தனித்தனி கடுத்தார். | 2.3.33 | 133 |
கோதில் கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக் கதீஜா மாது தன்மணம் புணர்ந்தவர் பொருடரு மதமே சாதி ஹாஷிமென் குலத்தவர் பெலன்குறித் ததுவோ வேதி வற்குறுங் குறும்பெனச் சிலரெடுத் திசைத்தார். | 2.3.34 | 134 |
தந்தி ரத்தினாற் சிலவரைத் தனதுரைக் கடக்கி மந்தி ரத்துருச் சித்தியான் மார்க்கமொன் றெடுத்தான் சிந்தை யிற்றௌி வுற்றுநோக் கிடுமறைச் செயலீ ரிந்த வாறிவன் றொழிலெனச் சிலரெடுத் திசைத்தார். | 2.3.35 | 135 |
இழிவு செய்தொரு குலம்பிறந் தொருகுல மெடுத்து வழிகெ டத்தனி நின்றவன் றனதுயிர் மாய்க்கப் பழியும் பாவமு நினைத்திவை பழுதெனப் பலகான் மொழிய வேண்டுவ தில்லெனச் சிலர்மொறு மொறுத்தார். | 2.3.36 | 136 |
நிறைத்த நந்நெறித் தேவத் நிலைதலை குலைய வெறுத்த பேருயி ரகல்விசும் பினிற்குடி படுத்த லொறுத்த லென்னபித் தாலிபுக் குரைத்தினி யொருகாற் பொறுத்துச் செய்வது கருமமென் றனைவரும் புகன்றார். | 2.3.37 | 137 |
இசைத்து ரைத்தவை நன்கென வினத்தொடு பலரும் விசைத்தெ ழுந்தபித் தாலிபு திருவயின் மேவித் திசைத்த டங்களுந் திக்கினுந் திரிதரு கவனக் குசைத்த டப்பரிக் குரிசின்முன் கூறுதல் குறித்தார். | 2.3.38 | 138 |
குரிசி னங்குல மகன்முகம் மதுசெயுங் குறும்பைப் பரிவி னிற்பொறுத் திருந்துநும் மிருசெவிப் படுத்தித் தெரிய வேண்டுவ திலையினிச் சேர்தரு மினத்திற் குரிய ரியாமல வறிகவென் றுரைத்தயல் போனார். | 2.3.39 | 139 |
உற்ற தங்குலப் பெரியவ ரனைவரு முரைத்த பெற்றி யும்மகன் குறிப்பையும் பிரித்தெடுத் தாய்ந்து வெற்றி வாளபித் தாலிபு மனமிடை மிடைந்திட் டுற்ற தங்கருத் தொடுமயற் குரைத்திடா துறைந்தார். | 2.3.40 | 140 |
பத்தி விட்டினம் வெறுப்பதும் பழுதுயிர்த் துணைவன் புத்தி ரர்க்கிடர் வருவதும் பழுதெனப் புழுங்கி யெய்த்த சிந்தையோ டியனபி தமையழைத் திருத்தி வைத்து நன்னய மொழிசில வகுத்தெடுத் துரைத்தார். | 2.3.41 | 141 |
வருத்த முற்றபித் தாலிபங் குரைத்திடும் வசனந் திருத்துந் தீனிலை முகம்மது செவியிடைப் புகுந்து கருத்தி னிற்றௌிந் தெண்ணிய நல்வினைக் கருமம் பொருத்து தற்கிட ரிதுகொலன் றகத்திடைப் பொறுத்தார். | 2.3.42 | 142 |
வந்து ரைத்ததம் மினத்தவர் மனவெறுப் பகல நந்த மைச்சிறி திகழ்வரென் றகத்தினி னாட்டித் தந்தை தந்திரு முகமலர் தனையெஹிர் நோக்கிச் சிந்து முத்தவெண் ணகையித ழமுதவாய் திறந்தார். | 2.3.43 | 143 |
பருதி யைக்கொணர்ந் தணிவலக் கரத்திடைப் பதித்து மரிதி னிற்சசி கொணர்ந்திடக் கரத்தினி லமைத்து மொருமொ ழிப்பட வினத்தவ ரொருங்குற நெருங்கிப் பொருத டக்கினு நும்மனம் பொருந்திலா திருந்தும் | 2.3.44 | 144 |
ஈத லாற்சில விடரெனை யடுக்கினு மிறையோன் றூத னியானெனச் சுருதியை விளக்குவ தலது பேதி யாதென தகமென முகம்மது பிரியாத் தாதை யோடுரைத் தனரிரு விழிமழை தயங்க. | 2.3.45 | 145 |
அழுது ரைத்தநன் னெறிமுகம் மதுதமை யடுத்துச் தழுவி யென்னுயிர் நீயல திலையெனச் சாற்றி முழுது நின்கருத் துறும்படி முயல்வதே யன்றிப் பழுதி லென்மனத் திதுகொனின் ணயமெனப் பகர்ந்தார். | 2.3.46 | 146 |
சிதைவி லாமொழி தனையபித் தாலிபு தௌிப்ப மதலை யாகிய முகம்மது மனத்திடைக் களித்துப் புதிய னாயக னாரணம் புடைபரந் தோங்க விதுவி னொண்கலை வளர்த்தெனத் தீன்பயிர் விளைத்தார். | 2.3.47 | 147 |
வருந்தி லாதொரு சமயமென் றகுமது வடுவைத் தருந்த வப்பிழைக் கொடுமுடி தனைமறுத் திலனென் றிருந்த பேரினிற் றலைவர்க ளவரவர்க் கிசைத்துத் திருந்தி லாமனக் காபிர்கள் கிளையொடுந் திரண்டார். | 2.3.48 | 148 |
மாத வத்தின னொலீதருண் மதலையைக் கொடுபோய்க் கோதி லாதபித் தாலிபு திருக்கரங் கொடுத்துத் தீதி ழைத்திடு முகம்மதை நமதிடஞ் சேர்த்துப் பேத கத்தினைத் துடைப்பமென் றுரைத்தனர் பெரியோர். | 2.3.49 | 149 |
குறித்த வாசக நன்கெனத் திரளொடுங் கூடி நறைத்த டப்புய வொலீதருண் மகனைமுன் னடத்தி நிறைத்த மாமலர்ப் புயரபித் தாலிபு நிலவச் செறித்த நீணிலை மணித்தலைக் கடையிடைச் சேர்ந்தார். | 2.3.50 | 150 |
வேறு மாலை யிட்ட வரைப்புய மன்னபித் தாலி பைக்கண் டனைவருங் கைமுகிழ்த் தோலி டுங்கட லுட்படு நஞ்சினைப் போலு மாற்றம் புகலப் பொருந்தினார். | 2.3.51 | 151 |
உத்த மத்தொலீ தென்பவன் செய்தவப் புத்தி ரன்கலை யிற்பொரு வற்றவன் சித்தி ரத்தினு மிக்குயர் செவ்வியன் மத்த மாகரி யொத்த மனத்தினன். | 2.3.52 | 152 |
மறுவ றுங்குல மைந்தனிம் மைந்தனை யறுதி நன்மனத் தோடு மளித்தன மிறைவ நின்மக னாக்குக வில்லகத் துறைக பின்னு மொருமொழி கேட்டியால். | 2.3.53 | 153 |
பெறத்த காத பெரும்பழி யாய்நம தறத்தி னுக்கழி வாயவ தூறுமாய் மறுத்தோர் மார்க்கம் வகுத்தமு கம்மதை வெறுத்தி னத்தவர்க் கீந்திடல் வேண்டுமால். | 2.3.54 | 154 |
இந்த மாற்ற மிசைந்தினி ரேற்பகை வந்தி டாது மறுத்தொரு தீங்கிலைச் சிந்தை வேறுசெய் தீரெனி னீள்பகை பிந்தி டாத பெரும்பழி சூழுமே. | 2.3.55 | 155 |
எனவு ரைத்த வினத்தவர் தம்மொழி மனதி னுட்புகுந் தங்கி வளர்த்துறு சினமெ ழுப்பின சிந்தையுட் டீயைநன் னினைவி னுட்பொதிந் தோர்மொழி நீட்டுவார். | 2.3.56 | 156 |
நலிவி லாது நடுவுரைத் தீரும தொலிது மைந்தனு மாறத்தென் போன்றனை மலியும் வெண்சுதை மாடத்துள் வைத்தியான் மெலிவி லாது வளர்த்திடல் வேண்டுமால். | 2.3.57 | 157 |
எங்க டங்குலத் தின்னுயிர்த் தம்பிதன் மங்கை யீன்ற மணியை முகம்மதை யுங்கள் பாற்கொடு போயுமர் தம்மனப் பங்கந் தீரப் படுத்தலும் வேண்டுமால். | 2.3.58 | 158 |
ஈது நந்நெறி யீது மனுநெறி யீது நங்குலத் தாருக் கிணங்குவ தீது வேதத் துரைப்படி யாவர்க்கு மீத லாதுநன் னீதியு மில்லையே. | 2.3.59 | 159 |
அறபெ னும்பதி யாரா சூழியோ ரறவு நல்லறத் தாலறி வோங்கியோர் பிறவு மிவ்வுரை யாவர்கள் பேசுவார் பிறரு மில்லைநும் போற்பெரி யோர்களே. | 2.3.60 | 160 |
உரைத்த லென்னுமர்க் குற்றசொல் லென்மனம் பொருத்த மில்லெனப் புண்ணியர் கூறலுந் திருத்தி லாதென்கொல் செய்குவ மியாமென வருத்த முற்ற மனத்தொடும் போயினார். | 2.3.61 | 161 |
கனன்று சென்றற பிக்குலக் காபிர்க ளனந்த ரக்குறை ஷிக்குலத் தாரொடு வனைந்த பொற்கழன் மன்னவர் தம்மொடு சினந்து தங்க ளினங்க டிரட்டினார். | 2.3.62 | 162 |
கேட்டு வந்தவ ருஞ்சிலர் கேட்டினை மூட்ட வந்தவ ருஞ்சிலர் மூள்பகை வீட்டு மென்று வெகுண்டவ ருஞ்சிலர் கூட்ட மிட்டுக் குலத்தொடுங் கூடினார். | 2.3.63 | 163 |
வடித்த மெய்மறை நந்நபி வாக்கினிற் படித்த சொல்லைப் பகர்ந்திடும் பேர்களைப் பிடித்த டித்துப் பெலன்குறைத் தில்லமு முடித்து டைத்திடை யூறு படுத்தினார். | 2.3.64 | 164 |
செறுநர் செய்திடுந் தீயவக் கோட்டிகண் டறிவு றும்மபித் தாலிபு மங்கவர்க் கிறுதி செய்குவ னியானென வீரமுற் றுறைபெ ருங்குலஞ் சேர்ப்பதற் குன்னினார். | 2.3.65 | 165 |
பெருகி நின்ற தலைமுறைப் பேரராய் வருமவ் வப்துல் முனாபுதம் மக்களி னுரிய ஹாஷி மெனுங்கிளை யோரையும் பொருவின் முத்தலி புக்கிளை யாரையும். | 2.3.66 | 166 |
தனத்த வப்துல் ஷமுசுக் கிளையையுஞ் சினத்த வேல்நவு பலுக்கிளைச் சேனையுங் கனத்த வெண்டிரை மாகடற் கொப்பென மனைத்த லத்தில் வரவழைத் தாரரோ. | 2.3.67 | 167 |
முன்றி லெங்கணு மொய்த்தசெவ் வேற்கர வென்றி வீரரை நோக்கி விளித்தணி மன்றன் மார்பின் முகம்மது வான்முனஞ் சென்ற செய்தி யனைத்தையுஞ் செப்பினார். | 2.3.68 | 168 |
மாறி லாதெழின் மான்மதங் காவத நாறு மேனி முகம்மதை நாடொறும் வேறு பாடு விளைத்திடும் பேர்களைக் கோற லென்குறிப் பென்னவுங் கூறினார். | 2.3.69 | 169 |
ஆட்டி றத்தபித் தாலி புரைத்தசொற் கேட்டு முத்தலி புக்கிளை யோர்களுங் கூட்டத் தாஷிம் குலப்பெரி யோர்களு நாட்ட முற்றிது நன்றெனக் கூடினார். | 2.3.70 | 170 |
மற்றி ரண்டு கிளைமுதன் மன்னரிங் குற்ற வார்த்தை யுசாவி யுறாதென வெற்றி வேந்தக நீங்கி வெறுத்திடும் பற்ற லாருறை பாலடைந் தாரரோ. | 2.3.71 | 171 |
மறுவு றுத்து மனத்தின னாகிநல் லறிவு நீங்கி யபூலகு பென்பவன் பெறுமு றைத்தலை மைப்பெய ரானுமக் குறுக லாருறை கூட்டத்தி லாயினான். | 2.3.72 | 172 |
பிரிவு செய்கிளை தன்னொடும் பின்னவ னுரிய னாயின னென்று முளத்தினில் வெருவி லாதுபுன் மூரல் விளைத்தட லரியின் சீற்றமுற் றாரபித் தாலிபே. | 2.3.73 | 173 |
பகைத்த காபிர்கள் கூடிப் பனைக்கைமா வுகைத்த வீர னொலீதிடம் புக்கிநா மிகைத்த ஹஜ்ஜின் முகம்மதின் வீரத்தைத் தகைத்தல் வேண்டுவ துண்டெனச் சாற்றுவார். | 2.3.74 | 174 |
கணிதன் றுன்பக் கவியன் கபடித வணிதன் வஞ்சனை யன்வரை வற்றபித் தணித னென்றொரு பேரையுண் டாக்குத றுணித னன்றென யாவருஞ் சொல்லினார். | 2.3.75 | 175 |
நீட்டு கைக்கரி யைநிக ரிற்புலி காட்டு மாறென மாறிடுங் காபிர்கண் மாட்டி ருந்து வழங்கிய மாற்றதைக் கேட்டி ருந்த வொலீது கிளத்துவான். | 2.3.76 | 176 |
ஈதெ லாம்பெய ரன்றிவன் சொல்லினைக் கோத டர்த்தகக் குறிப்பரி தாற்குலம் பேத கப்படுத் தும்பெரு வஞ்சனைக் சூத னென்றிடும் பேரெனச் சொல்லினான். | 2.3.77 | 177 |
இத்த லத்தினி லிவ்வரு டத்தினின் மொய்த்த ஹஜ்ஜின்மு கம்மதை வஞ்சனைப் பித்த னென்று பெரும்பெயர் நாட்டுதல் பத்தி யென்றித மித்தனர் பொய்மையோர். | 2.3.78 | 178 |
மக்க மாநகர் வந்தவர் தம்மிடம் புக்கி ருந்துமு கம்மதின் புத்திகேட் டொக்க லோடுமிவ் வூரிழந் தொவ்வொரு திக்கி னில்லடை வார்சிலர் காணென்பார். | 2.3.79 | 179 |
தாயைத் தந்தையைத் தன்னுயி ராகிய சேயைப் பெண்டிரைச் சிந்தையில் வேறதாய் பாயத் தோடும் பகைப்பிக்க வல்லதோர் மாயக் காரன்மு கம்மதென் றோதுவார். | 2.3.80 | 180 |
ஆதி வேறுண் டொருவனென் பானவன் றூத னியானெனச் சொல்லுவன் றெய்வங்கள் பேத கம்படப் பேசுவன் பேதியா வேத மொன்று விளந்தது காணென்பான். | 2.3.81 | 181 |
மடுத்த சிந்தை முகம்மதென் போன்றனை யடுத்த வன்மொழிக் குள்ளகப் பட்டுநீ ரெடுத்த நல்வழி கெட்டௌி மைக்குங்கீழ்ப் படுத்த லாகப் படநினை யீரென்பார். | 2.3.82 | 182 |
வேறு மலித ரும்புகழ் முகம்ம தைக்கொடிய வொலிது மக்களு மிழந்து கைப்பொரு நலித ருங்கொடிய நரக டந்திடுவ யலைவி லாதமரர் கோனி ழிந்தவனி 2.3.83
| 183 |
மாசி லாவரிசை முகம்ம தின்பெயரை | பேசி யூரவரி ரண்டு பட்டவுரை னூச லாடுதெரு வீதி மாமதின பூச லாகுவ தினத்தி னுக்கிது 2.3.84
| 184 |
மதின மாநக ரவர்க்கு மக்கநக | ருதர பேதமஃ தன்றி யாவியுட விதியி னுட்பமறை கற்ற வன்புகழின் பதிவு பாசுரமொ டுறைய நீதிமுறை 2.3.85
| 185 |
ஓலை யுத்தரமு கம்ம தைக்கொடு | சீல மற்றபகை யொருவருக் கொருவர் மேலு நல்வழி திருத்தி னோர்கள்பத சால மிக்ககவி தைத்தி றத்தொடு 2.3.86
| 186 |
வந்த வாசக முணர்ந்து காபிர்கண் | நிந்த னைச்சின மொறுக்கி லார்தின தந்தி ரத்திலுயர் மன்னர் சொன்னமொழி செந்த ழற்குழிக ளேழு மானமுறை 2.3.87
| 187 |
இன்ன வாறுமுர ணான காபிரிட | முன்னு நன்னெறி நிறுத்து வேனெனு தன்ன மன்னமட வார்க்கு மாடவர் லின்ன லற்றவிசு லாத்தி னேர்வழி 2.3.88
| 188 |
சிந்து ரத்திர ளடர்த்து நின்றதொரு | தந்தி ரத்தையு மவன்ற னேர்வழி மந்த ரத்தின்வழி யாவிடற் கினியோ புந்தி யிற்கருதி வேறு வேறுகொலை 2.3.89
| 189 |
மதுவ ழிந்தொழுகு மரவ மாலைபுனை | புதல்வ ராகியமு கம்மதுந் தனியோர் ததிவி தப்புதுமை மறைமொ ழிக்குமுத புதிய வேதமொழி கொடுபு கழ்ந்துநிலை 2.3.90
| 190 |
கண்ட காபிர்களி லொருவ னோர்துகில் | யண்டர் நாயகமு கம்ம தின்றம விண்டி லாரெதிர் விழுத்திலா ரதனை மிண்டு வல்வினை யிதென்று கண்டற 2.3.91
| 191 |
மிடற்றி லுற்றதுகி றனைநெ கிழ்த்துமிகு | யடுத்த டாதசில மொழியின் வேகமோ னிடத்தி ருந்துதொழு தெழுந்த பின்புட முடற்பு குந்தபடி மனைபு குந்தபி 2.3.92
| 192 |
அன்றொ ழிந்துசில நாள கன்றபின | மன்ற றுன்றுமது மாலை நாற்றியொளிர் சென்ற டுத்தரு கிருந்து மூதுரை யொன்று பட்டமன மங்ங னஞ்சிறி 2.3.93
| 193 |
தக்க நன்னெறி பிழைத்த பாவியபு | னுக்கு பாவுமுத் பாவு மூடனுமை யொக்க லோடவ ணடைந்து நந்நபி விக்கி னத்தினை நினைத்தொ ருத்தனை 2.3.94
| 194 |
ஊரி னிற்புகுந்தோ ரொட்ட கத்தெலும் | வாரி வந்தவன் முகம்ம தின்றனி வேரி யங்கமு தலைம்பு லன்களும் பாரி டைப்படிதல் கண்டு தீனிலை 2.3.95
| 195 |
பிடரியின் மீதுசுமை யும்சு ஜூதியல் | மடைய லார்கணகை யோடு நின்றது டிடைய றாதவசை கொண்ட பாவிக யுடைய நாயனபி புதல்வி தம்மிட 2.3.96
| 196 |
மாத ருக்கரசி பாத்தி மாவெனு | வீதி வாயிடை புகுந்து மின்னென தாதை வெந்நிட மிருந்த தைச்சிதறிச் தேத முற்றமொழி காபி ரைச்சிறி 2.3.97
| 197 |
ஏக னைத்தொழு தெழுந்தி ருந்துபி | மோக முற்றதனி றப்பனா வுனது வேக முற்றகொடு நரகிடைப் புகுத மாக நோக்கியிரு கரமெ டுத்துபது 2.3.98
| 198 |
வேறு | வீணுரை பகர்ந்து மிடும்புக டொடுத்தும் காணிலாப் புதுமை விளைத்தநா யகத்தை தூணினைத் துரும்பா நினைத்தென ஹாஷின் பூணிலாப் பவநோய் பூண்பது தனக்கே 2.3.99
| 199 |
இருவிழி கறுப்பு மொருபுறத் தொதுங்க | திருகுற முகத்தைச் சுரிப்பொடு வளைத்துத் பெருகிய கழுத்தி னரம்புகள் விறைப்பப் வரிவர வலித்து முகம்மதை நோக்கி 2.3.100
| 200 |
கதிர்விரிந் தொழுகு மெய்யெழி னபியைக் | டெதிரெதிர் வருவன் விலக்குதற் கமையா புதியவன் றூத ரிவன்றனை நோக்கிப் பதிபெற வலித்திட் டிதனிலெண் மடங்காய்ப் 2.3.101
| 201 |
பலித்தது நபிதந் திருமொழி யவன்பாற் | வலித்தலுங் கண்கள் சிமிட்டலு முலகில் சிலிர்த்தது முகங்கண் டடுத்தவர் மனங்க சலித்ததுந் தவிரா விடும்பினால் வருநோய் 2.3.102
| 202 |
பெறுமவ ரிடத்து மனைவிதன் னிடத்தும் | மறுகெதிர்ப் படினு முகத்தெதிர் நோக்கி சிறுவர்கள் காணி லெவ்விட மனைத்துஞ் குறைவிலா நபியைப் பழித்தநிந் தனையாற் 2.3.103
| 203 |
குருநெறி யவரைக் காண்டொறும் வலிப்பன் | சிரசினை வளைத்து முகஞ்சுரித் திருகண் வருநெறி பிழைத்த பாவிகள் குலமும் தருநபி பழித்துக் காட்டுதற் கிவனோர் 2.3.104
| 204 |
மருந்தினான் மணியான் மந்திரத் தொழிலான் | றிருந்திய மதிகெட் டங்கமும் வேறாய்த் பருந்தெழுங் கதிர்வேன் முகம்மதை யிகழ்ந்தோன் மிருந்தகா பிர்களி லொருவனுண் மதத்தா 2.3.105
| 205 |
போனக மருந்தாக் கரத்தினா லமுது | வானநா யகநன் னெறிமுகம் மதுவும் றீனமற் றுரைப்ப விடருறு மொழியா தேனவிழ் தொடையாய் வலக்கரம் வழங்கா 2.3.106
| 206 |
வலிபெற வழங்கும் வலக்கரம் வழங்கா | கலியென நினைத்துக் கவரிதழ் திறந்தெக் நிலைபெற நிலத்தி லிருப்பது நிசமென் தலைமுறைப் பெயரின் முதன்மணி விளக்காய்த் 2.3.107
| 207 |
அடங்கலர்க் கரியா யுதித்தநந் நயினா | முடங்கில சிறிது நீண்டில வுணர்வு வடங்கொள்வெம் முலையார் நகைத்தரு வருப்ப லிடங்கொளம் புவியு ணோக்குநர்க் கிழிவா 2.3.108
| 208 |
மண்ணினிற் செழுந்தீன் பயிர்நலந் தழைக்க | கண்ணுடைக் கரும்பின் சுவையினு மினிய யுண்ணிறை யமிர்த மெனவறி யாம டெண்ணிறந் தனையர் சிலபக லிவர்போ 2.3.109
| 209 |
மறைபடாப் புகழை யுலகினில் வளர்த்து | குறைபடா மனமும் வாக்குமொன் றாகப் நிறைபட வடுத்த கிளையனைத் தையுந்தீ விறையவ னாயத் திறங்கிய தெனவங் 2.3.110
| 210 |
திருமறை மொழியொன் றுரைத்துவிண் ணவர்கோன் | விரைகிடந் தருந்தேன் றுளித்தகுங் குமத்தார் வருமுதன் மதமா கரியெனத் திருந்து தருமுகிற் கவிகை யிலங்கிடச் சிறந்த 2.3.111
| 211 |
உடுப்புறம் பொதிந்த மதிதவழ் மலையி | கடுப்பறக் கொடுஞ்சொற் பிறந்திடா தமிர்தங் மெடுப்பரும் புதுமை யுண்டென வினத்தோ கொடுப்பதற் கெழுமா முகிலினம் பொருவாக் 2.3.112
| 212 |
கல்லகத் துறைந்து முகம்மது விளித்த | பல்லருஞ் செறிந்து திரளொடு மெழுந்து செல்லிடம் பிரியாக் கருமுகிற் கவிகை டெல்லவ னெழுந்த தெனநபி யிருந்த 2.3.113
| 213 |
காரண முளதென் றுரைத்தெமை விளித்த | னூரவ ருரைப்ப வானவ ருரைத்த தாரணிப் புறத்திற் றெறும்படை திரண்டு னீரமுற் றுரைப்ப வெவர்க்குமுண் மையதா 2.3.114
| 214 |
உரைத்தசொல் லெவர்க்கு முறுதிநிண் ணயமென் | நிரைத்தகுங் குமத்தார்ப் புயநபி யினியா தரைத்தலத் தீமான் கொள்ளுதற் கிசையாத் கரைத்திட நனிய தாபெனுங் கொடிய 2.3.115
| 215 |
கூறிய மொழிகேட் டபூலகு பெனுமக் | மாறுபட் டிதற்கோ குலத்தொடுங் கெடுவாய் தேறிலா துறுக்கி யிருகரம் புதைப்பச் யீறிலான் றூதை முகம்மதைச் சிறிது 2.3.116
| 216 |
அடர்ந்தெதிர்த் துரைத்த கொடியவ னபூல | மிடைந்திடும் பெருங்கே டுடையவ னிவனே துடங்குதப் பத்ய தாவெனத் தோன்றுஞ் கிடந்தமும் மறையுந் தெரிதரப் புகழ்ந்த 2.3.117
| 217 |
சூறத்தின் பொருளை முகம்மது முரைப்பத் | றேறத்துன் புறுங்கே டெனக்குவந் தடைந்தாற் மீறத்தந் திரருக் களித்திட ரதனை பேறத்த மிலசொ லுரைத்தன னெவர்க்கும் 2.3.118
| 218 |
இறையவன் றூதர்க் கிசைத்தசொற் கெதிரா | னிறைதரும் பொருளு மிழந்துத வாம முறைதரு நரகம் புகுவனென் றாயத் மறைமொழி பயிற்றுஞ் செவ்விதழ் மணிவாய் 2.3.119
| 219 |
அவனியிற் கேடு முடிவினி னரகு | செவியுற வாயத் திறங்கிற்றென் றுரைத்த கவினற அதாபென் றொருபிணி பிடிக்கு தவிர்கிலா வயிர மனத்தராய்க் காபிர் 2.3.120
| 220 |
வேறு | தேந்தரு மினியசொற் செவ்வி நந்நபி யாய்ந்தசொ லுணர்ந்திசு லாத்தி லாகிய மாந்தரைப் பிடித்தக மறுக்க முற்றற வீய்ந்திட விடர்பல விளைத்திட் டார்களே. 2.3.121
| 221 |
வீசுவர் சிலர்தமை விடுத்து நன்மொழி | பேசுவர் சிலர்தமைப் பிடித்துப் புன்மொழி யேசுவர் சிலர்தமை யிரண்டு பட்டுறும் பூசலுக் கடிப்படை புணர்த்து வார்சிலர். 2.3.122
| 222 |
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தி | லாயின னிவனென வடுத்தம் மாறையுங் கூயவன் றந்தையா சிறையுங் கோதிலாத் தாய்சுமை யாவையுந் தமக்கை தன்னையும். 2.3.123
| 223 |
பிடித்தனர் சினத்தொடிந் நான்கு பேரையு | மடித்தன ரிருகர மழுந்த வங்கமுந் துடித்திடக் கயிற்றினிற் சுருக்கிப் பாதலம் வெடித்திடச் சுடும்பரல் வெயிலி லாக்கினார். 2.3.124
| 224 |
ஏங்குவ ரிரங்குவ ரிருக ணீர்விழத் | தேங்குவ ரடிக்கடி தீனை மாறியு நீங்குவ தில்லென நினைந்திட் டுள்ளகம் வீங்கிட நெட்டுயிர்ப் பெறிந்து வீழ்குவார். 2.3.125
| 225 |
தங்கிய கதிரவன் றழலின் மெய்யொளி | மங்கியுள் ளீரலும் வறந்து தீய்ந்திடப் பங்கிகள் பூழ்தியிற் பதிய மூட்டிய வங்கியிற் கிரிமியொத் தறிவு போக்கினார். 2.3.126
| 226 |
வேனலிற் கிடந்துடல் வெதும்பிச் செவ்வரி | பானலத் தருவிநீர் பரப்பி யுள்ளுடைந் தூனென வியர்ப்பெறிந் துதிர நந்நபி தீனிலை மறுத்திலர் செவ்வி யோர்களே. 2.3.127
| 227 |
உறுக்கினார் செழுங்கர முரத்தோ டொன்றவே | யிறுக்கினா ரடிக்கடி யெடுத்த தீவினை முறுக்கினா ரல்லது மூட்டுந் தண்டனைக் குறுக்கினா ரிலைக்கொலைக் கொடுமை யாளரே. 2.3.128
| 228 |
நன்னிலை கெடுமவர் நடத்தும் வல்வினை | யின்னல்கண் டெழினபி யிடருற் றொரொடு மன்னிய துயரினைப் பொறுத்த மாட்சியாற் பொன்னுல குமக்கென வுரைத்துப் போயினார். 2.3.129
| 229 |
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை | யெண்ணுற நோக்குவ ளிதயம் வாடுமப் பெண்ணினை நோக்குவள் பெய்யுஞ் செந்தழல் விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள். 2.3.130
| 230 |
யாசிறு மனைவிநல் லறிவுக் கில்லிட | மாசற தீன்பயிர் வளர்க்கும் வேலியார் பாசமற் றவரிடர் பார்த்தி லேனெனக் காசறு பொன்னகர் காணப் போயினார். 2.3.131
| 231 |
தெரிமறை முகம்மதின் தீனுக் காகவே | யிருநிலத் திடைமுத லிறந்து தேன்சொரி மருமலர் சுவர்க்கமா ராயம் பெற்றவர் தருஅம்மா றுடையதா யெவர்க்குந் தாயரே. 2.3.132
| 232 |
அன்னமென் னடைச்சுமை யாவென் றோதிய | மின்னம ருலகிடை மேய பின்னெடு வன்னியின் குழிக்குடல் வளர்க்கும் பாதக ருன்னிய கொடுஞ்சின மொழிந்தி லாரரோ. 2.3.133
| 233 |
துன்னல ரிழைத்திடுந் துன்பத் தாலடன் | மன்னவன் யாசிறு மகளும் வாடிநின் றின்னலி லிடைந்திடைந் திறந்து சோதிவாய்ப் பொன்னுல கினிற்குடி புகுதப் போயினார். 2.3.134
| 234 |
தந்தையு முடன்பிறந் தவளுந் தயரு | மிந்தவல் வினையினா லிறந்திட் டாரென மந்தரப் புயரம்மா றென்னு மன்னவர் சிந்தையிற் சூழ்ச்சியொன் றுன்னித் தேறினார். 2.3.135
| 235 |
வாயினி லொன்றுந்தம் மனத்தி லொன்றுமத் | தீயினுங் கொடியவ ரிடத்திற் செப்பியே மேயதுன் பனைத்தையும் விலக்கி வில்லிடுஞ் சாயக மெனநபி யிடத்திற் சார்ந்தனர். 2.3.136
| 236 |
மாதவ ரிடம்புகுந் தமரர் வாழ்த்திய | பாதபங் கயமல ரிறைஞ்சிப் பற்றொடுங் கோதறு தீனிலை நிறுத்துங் கொற்றவர் சீதவொண் கட்கடை யருவி சிந்தினார். 2.3.137
| 237 |
அழுதவர் திருமுக நோக்கி யங்கையாற் | செழுமலர்க் கண்ணினீர் துடைத்துத் தீயவர்க் குழுவினைக் கடந்திவ ணடைந்த கொள்கையை மொழியென வுரைத்தனர் முதல்வன் றூதரே. 2.3.138
| 238 |
பெற்றவ ரிருவரும் பிறப்புந் துஞ்சின | ருற்றவ ரிலையென வுன்னி யுண்மையை முற்றுறக் கருத்தினின் முடித்துக் காபிர்கள் சொற்றவைக் கேற்பவை சொல்லி னேனென்றார். 2.3.139
| 239 |
ஆக்கமற் றவரிட ரடுக்கி லின்னமும் | வாக்கினி லொருமொழி வழங்கி யுண்மையைப் போக்கறச் சிந்தையுட் பொருத்தித் தீவினை நீக்குதல் கடனென நிகழ்த்தி னாரரோ. 2.3.140
| 240 |
இவ்வண நிகழ்ந்திவ ணிருக்கு நாளையி | னொவ்விய மனத்திபு னுகல பென்பவன் வெவ்விய னடிமைபி லாலை நோக்கிமா செவ்விய னிவனென நகைத்துச் சீறினான். 2.3.141
| 241 |
அடிமைய னறிவில னறியுந் தன்னுரைக் | படிநட வாமுரண் படித்த வஞ்சன்பொய் பிடிபடு முகம்மதின் பேச்சுக் குட்படுங் கொடியவ னிவனெனக் கனன்று கூறினான். 2.3.142
| 242 |
மாயவஞ் சனைத்தொழின் முகம்ம தின்வயின் | போயிசு லாத்தினிற் புகுந்த தென்னெனக் காயெரி நிலத்திடைப் படுத்திக் கல்லெடுத் தேயவ னுரத்தினி லிருத்தி னானரோ. 2.3.143
| 243 |
படருல முரத்தினிந் பதியப் பார்க்கரன் | சுடுகதிர் நிலத்திடைச் சோர்ந்து மூச்செறிந் துடலுலைந் துள்ளுயி ரொடுங்குங் காலையி லிடர்தவிர்த் திருவிழி யெரிய நோக்குவான். 2.3.144
| 244 |
மற்றுமத் தரையிடைக் கிடத்தி மார்பக | மிற்றிடப் பெருஞ்சிலை யுரத்தி லேற்றுவன் சற்றொரு நொடிவரை தவிர்ந்தி ரான்மனப் பற்றறு மிரக்கமி லாத பாவியான். 2.3.145
| 245 |
நெஞ்சினிற் பெருஞ்சிலை சுமந்து நீங்கிலா | வெஞ்சுரத் திடைமிடை மிடைந்தும் வேதநூல் விஞ்சையின் முகம்மது விளக்கு முண்மையை யஞ்சலித் தவனலா லறிவு நீங்கிலான். 2.3.146
| 246 |
இபுனுகல் பவனிட ரென்னுந் தீயினி | னவநித மெனப்பிலால் நடுங்க விண்ணுமிவ் வவனியும் புகழ்நபி தோழ ராகிய கவனவாம் பரியபூ பக்கர் கண்டனர். 2.3.147
| 247 |
பொறுக்கரும் வேதனை பொறுத்து நிண்ணய | மறுக்கில னிவனென மதித்துக் கூறிய வெறுக்கைகொண் டடிமைபி லாலை மீட்டினம் பெறற்கரு முரிமையா னென்னப் பேசினார். 2.3.148
| 248 |
மன்னிய புகழபூ பக்கர் மாசிலா | நன்னிலை யவன்றனை யுரிமை நாட்டிய பின்னரும் பகைப்பிணி பிணிப்பு நீக்கியே தன்னரு ளொடும்பெருந் தீனைத் தாங்கினார். 2.3.149
| 240 |
வேறு | திருநெறி தீனுள் ளோரைத் தீனெறி மாறி னோர்கண் மருளுடை மனத்த ராகி முரண்மறா திருக்கு நாளில் விரிகதி ரிலங்கிச் சேரார் மெய்நிணம் பருகும் வெள்வேற் கரதல ஹம்சா வென்னுங் காளைகா னிடத்திற் புக்கார். 2.3.150
| 250 |
மெல்லிலைக் கானத் தேகி விலங்கினம் வேலிற் றாக்கிப் | பல்லருங் குழுமி யார்ப்பப் பரிவொடும் வேட்டை யாடி யொல்லையி லடவி நீந்தி யுள்ளகம் பூரித் தோங்கச் செல்லுறை புரிசை வேலித் திருநகர் சாருங் காலை. 2.3.151
| 251 |
செல்லுறழ் கரச்சுத் ஆனென் றோதிய செவ்வித் தோன்ற | லில்லுறைத் தொழும்பி லுள்ளா ளிளங்கொடி யொருத்தி வெற்றி வில்லணி தடக்கை யேந்தி வரும்விறல் ஹம்சா வென்னும் வல்லிய மெதிரிற் புக்கு வாய்திறந் துரைக்க லுற்றாள். 2.3.152
| 252 |
ஒன்னலர்ச் செகுக்கும் வேலோ யுமதுயிர்த் துணைவ ரீன்ற | மன்னர்மன் னவரைச் செல்வ முகம்மதை வதன நோக்கி யின்னலுற் றகமுங் கொள்ளா விழுக்கொடும் வழுக்கொண் மாற்ற முன்னியுற் றுரைக்க வொண்ணா தபூஜகி லுரைத்த தன்றே. 2.3.153
| 253 |
கைப்புரை சினக்கக் கூறுங் கருதலன் முகத்தை நோக்கி | மைப்படுங் கவிகை வள்ளன் மறுத்தொன்று மொழிகி லாம லெய்ப்புறு மனத்த ராகி யினமில்லாத் தமியர் போலச் செய்ப்படும் வனச மொவ்வாச் செம்முகம் வௌிறிற் றென்றாள். 2.3.154
| 254 |
பழுதுறுங் கொடிய மாற்ற மபுஜகல் பகர்ந்த வெல்லாம் | பொழிகதிர்ப் பொருப்புத் திண்டோட் புரவலர் பொறுத்தா ரென்ன வழுவறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேக மீறிக் குழுவொடுந் திரண்டு வைகுங் கொடியவ னிடத்திற் சார்ந்தார். 2.3.155
| 255 |
படிறபூ ஜகிலென் றோதும் பாதகன் வதன நோக்கி | யடல்முகம் முதுவைச் சொல்லா தவமொழி பகர்ந்த தெந்த மிடலெனச் சினந்து சீறி வீரவேற் றடக்கை வில்லா லுடைபடச் சிரத்திற் றாக்கி யுறுக்கொடுங் கறுத்துச் சொல்வார். 2.3.156
| 256 |
துனிமனத் துறைய முன்னோன் றோன்றலை யுறைத்தா யென்னி | லினியெவை யுரைப்ப னியானு மியனபி மொழிந்த மார்க்கந் தனினடு நிலைமை யானேன் சாதியிற் றலைவர் கூடி நனிபகை வரினுங் காண்பேன் காணுநீ நவிற லென்றார். 2.3.157
| 257 |
அணிதிகழ் ஹம்சா வஞ்ச மடரபூ ஜகிலை நோக்கித் | தணிவிலா வெகுளி மாற்றஞ் சாற்றலு மவனைச் சூழ்ந்து பணிபனீ மகுசூ மென்னுந் திரளவர் பலருங் கோபத் துணிவுட னமருக் கேற்ற சுடர்ப்படைக் கலன்க ளேற்றார். 2.3.158
| 258 |
இனத்தவர் நெருங்கிச் செவ்வா யிதழ்மடித் திருகண் சேப்பச் | சினத்ததும் ஹம்சா வென்னுஞ் சிங்கவே றியல்பு நோக்கி மனத்தினி லடக்கிச் செவ்வி மதியொடுந் தமருக் கேற்பக் கனத்துரை யெடுத்துக் காட்டி யபூஜகில் கழற லுற்றான். 2.3.159
| 259 |
அங்கவன் றனையன் மைந்த னகுமதை வாய்க்கொள் ளாத | பங்கமுற் றுறுஞ்சொற் கேற்பத் தண்டனை படுத்தல் செய்தா னங்குலத் தவர்க்குக் கோப நடத்துதல் பழுதென் றோதி வெங்கொலை மனத்து ளாக்கி விளைபகை தவிர்த்து நின்றான். 2.3.160
| 260 |
அடலரி ஹம்சா கோபித் தபுஜகி லவையை நீங்கிக் | கடிமலர் மரவத் திண்டோட் கனவரை கதித்து வீங்க வுடைதிரை யமுத மொவ்வா தோதிய கலிமா வேந்த ரிடைவிடா திருப்பத் தோன்று மெழின்முகம் மதுவைச் சார்ந்தார். 2.3.161
| 261 |
வள்ளலென் றுதவுஞ் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் | விள்ளரு மறையின் றீஞ்சொல் விடுத்தெடுத் துரைப்பத் தேறி யுள்ளமு முடலும் பூரித் துருசிக்கு மமுதின் மிக்காய்த் தெள்ளிய கலிமா வோதி தீனிலைக் குரிய ரானார். 2.3.162
| 262 |
அறிவுறும் ஹம்சா தீனி லாயின ரென்னு மாற்ற | மறுவுறை குபிரர் கேட்டு ம்னத்தினிற் றுன்ப முற்றா ரிறையவன் றூதர் செவ்வி யியனபி கலிமா வோதுந் திறல்கெழும் வேந்த ரியாருஞ் சிந்தையிற் செல்வம் பெற்றார். 2.3.163
| |
263 |
சமர கேசரி யப்துல்லா தருதிரு மதலைக் கமரர் கோனிழிந் தருநபி யெனும்பெய ரளித்துத் திமிர வெங்குபிர் கடிந்துதீ னிலைநெறி நிறுத்திக் கமைத ரும்படி யாண்டுநான் கெனக்கடந் ததற்பின். | 2.4.1 | 264 |
வருட நான்குசென் றைந்தினின் முகம்மது வொருநா ளிரவி னிற்றனித் திருந்திரு கரமெடுத் தேந்திப் பொருவி லாமுத லிறைவனை யீறிலாப் பொருளை யுருகு மெய்ம்மன வாக்கொடும் புகழெடுத் துரைத்தார். | 2.4.2 | 265 |
உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண் டலத பூஜகி லினைக்கொடு தீனிலை யதனைப் பெலனு றும்படி யெனக்கருள் பிறிதிலை யெனவே நலனொ டுந்துதுஆச் செய்தனர் முகம்மது நபியே. | 2.4.3 | 266 |
இந்த மன்னர்க ளிருவரி லொருவரென் வசமாய்த் தந்து தீனிலை நிறுத்துவை யெனத்தனி முதலைப் புந்தி கூர்தர வுரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார் சிந்து வெங்கதி ரெழுந்தது விழுந்தது திமிரம். | 2.4.4 | 267 |
அற்றை யிற்பகற் போதினி லபூஜகி லவையுள் வெற்றி வேந்தர்கள் பலருட னுமறையும் விளித்துக் கற்ற வாள்வலி யவர்க்குறு கருமமென் மனத்தி லுற்ற தொன்றுள தியாவருங் கேண்மினென் றுரைத்தான். | 2.4.5 | 268 |
திக்கு நான்கினுந் திசையினுந் தேயங்க டனினு மக்க மேயிக லறுந்தலம் வலிமையு மஃதே மிக்க வீரத்தி னம்மினத் தவரதின் மேலோ ரொக்கு மியாந்தொடுத் ததின்முடி யாததொன் றிலையே. | 2.4.6 | 269 |
பதிக்கு நம்மினத் தவர்க்குநல் வழிக்குமுட் பகையா யுதிக்கும் பாதகர் போனபி முகம்மதென் றுதித்தான் சதிக்கும் வஞ்சனைத் தறுகண னிவன்றனைப் பொருளாய் மதிக்க வேண்டுவ திலையினி வதைத்திட வேண்டும். | 2.4.7 | 270 |
உதிரஞ் சிந்திட முகம்மதி னுயிர்செகுத் தவர்க்கென் பதியி னுற்றதெப் பொருளுள தப்பொருள் பலவு நிதியு மீய்குவ னெனக்கர செனநிகழ்த் திடுவ னெதிரும் வீரர்க ளுளரெவ ரெனவெடுத் திசைத்தான். | 2.4.8 | 271 |
மானம் போக்கிய கொடுங்கொலை விளைத்திடு மனத்தா னீன னிவ்வுரை பகர்தலு மவையகத் திருந்தோ ரான திவ்வுரை தீங்கிவை யெனவுரை யாடா தூன ருந்திய வேனுழை பவரையொத் திருந்தார். | 2.4.9 | 272 |
வெற்றி வீரத்தின் மிக்கவ ரெவரென விரித்துச் சொற்ற திற்கடு வெகுளியுற் றிருவிழி சுழல வுற்று நோக்கிவெற் பதிர்த்திடு முறுவலிப் புயங்க ளிற்ற தோவென வவைவெரு விடவும றிசைத்தார். | 2.4.10 | 273 |
புதிய வேதமொன் றுளதெனும் படிறுரை புகன்றிப் பதியி லுள்ளவர்க் கருங்களை யெனப்பகை விளைத்த மதுகை மன்னவன் முகம்மதி னுடல்வதைத் திடும்வா ளிதுகொல் காணுதி நீவிரென் றடலும றெழுந்தார். | 2.4.11 | 274 |
குறுக லாருயி ருதிரங்கொப் பளித்தகுற் றுடைவா ளிறுக வீக்கிமற் றொருபடைக் கலம்வல னேந்தித் தறுகி லாமன வலியொடு புயவரைத் தடத்தி னறைகொள் குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தார். | 2.4.12 | 275 |
உமறெ ழுந்திடும் வெகுளியி னுடையவ னருளா லமரர் தங்களி லொருவரா னேறுரு வாகிக் கமல மென்பத முகம்மதி னரும்பகை களைய விமைநொ டிக்குளந் தரமிருந் தவனியி னிழிந்தார். | 2.4.13 | 276 |
காற்றி ரட்சியுங் கவையடிக் குளம்பின்கட் டுரமு மேற்றி ருக்கற வளைந்தெழு மருப்பினில் வியப்புங் கூற்று றாதுருள் கழுத்தடித் தோனௌிக் குழைவு நாற்றி மேற்றுளை நாசியிற் றவழ்தரு நாவும். | 2.4.14 | 277 |
அசைத்த வாலெடுத் திருபுடை புடைத்துமண் ணதிர விசைத்த கால்களி லுலவித்தண் பசியபுன் மேய்ந்து பசித்த வள்ளுகிர் நிகரும றேகிய பாதைக் கிசைத்த டுத்தது வானகத் துருமெனு மிடபம். | 2.4.15 | 278 |
உலங்கொ டிண்டிறற் புயனும றெனமொரு சீயங் கலன்கள் வில்லிட வியர்ப்பொடும் விழிக்கனல் கதுவத் துலங்கு செவ்விதழ் வெள்ளெயி றதுங்கிடச் சுடர்வா ளிலடங்கி டத்தனி வருவது நோக்கிய திடபம். | 2.4.16 | 279 |
கவ்வை யங்கடற் புவியின் முகம்மதைக் கசப்பத் தெவ்வ ரில்லென மனத்திடைக் களிப்பொடுஞ் சிரித்துக் குவ்வ திர்ந்திட வுமறுகத் தாபெனக் கூவி யெவ்வு ழித்தனி செல்குற்றீர் நீவிரென் றிசைத்த. | 2.4.17 | 280 |
உரைத்த செற்சொவி புகவுழை யெவரென நோக்கித் தரைத்த லத்திவ ணொருவரு மிலரெனச் சார விரைத்த லோடுமவ் வுரைபகர்ந் துமறென விசைப்பத் திருத்தி நாற்றிசை யெங்கணு நோக்கினர் செம்மல். | 2.4.18 | 281 |
கூறு மாந்தர்க ளிலையெனப் பினும்வழி குறுக வேறு கூவிய தெவரென மறுத்துமுள் ளிடைத்து வேறு மாக்களைக் காண்கிலர் விடையினை நோக்கித் தேறு மிவ்வுரை பகர்ந்ததிங் கெவரெனத் திகைத்தார். | 2.4.19 | 282 |
பருந்தெ ழுங்கதிர் வேலும றெழின்முகம் பார்த்து வருந்தி லாதுமைக் கூவிய தியானென மதித்துப் பொருந்து மில்லிடந் தவிர்ந்தெவண் புகுவது புகழோய் விரிந்த வாய்திறந் தறையுமென் றுரைத்தது விடையே. | 2.4.20 | 283 |
ஞான மாமறை முன்னவர் மொழிநட வாம லீன மின்றிய தேவத மனைத்தையு மிகழ்ந்து மானி லத்தினிற் புதிதொரு மார்க்கமுண் டாக்கி தீனெ னும்பெயர் நிறுத்தித்தன் னுரைப்படித் திருத்தி. | 2.4.21 | 284 |
இனமெ லாம்வெறுத் திடப்பகை யெனத்தலை யெடுத்துத் துனிவி ளைத்திடு முகம்மதி னுடறுணி துணித்துச் சினம கற்றுதற் கெழுந்தன னெனத்தௌிந் தெதிராய் வினவு மேறுடன் மொழிந்தன ருமறெனும் வீரர். | 2.4.22 | 285 |
ஆதி தூதரை வெறுத்துல கடங்கலுந் திரண்டு வேத னைத்தொழில் விளைக்கினு மவர்வயின் விளையா தேத முற்றதும் மனமலி யிடரினைத் தவிர்ந்து போதல் வேண்டுமா னுமக்கென மறுத்துரை புகலும். | 2.4.23 | 286 |
பரிக ரித்திரட் படையொடு நிலத்தினிற் பரப்பி யரச ராயிர ரிகலினின் மனவலிக் கணுவே திரம தாயினு முகம்மதி னிடத்தினிற் சேர லுரம தன்றுநி னுரனது முரனல வுரவோய். | 2.4.24 | 287 |
படைக்க லத்திலொன் றெடுத்தறி யாப்பகுத் தறியா விடைக்குண் மெல்லிய னிளமையன் றனியவன் வினையேன் புடைக்குள் வீரத்தை விளைத்தியேன் முகம்மதின் புகழை யுடைக்கு நின்வலி யென்பதை யறிவனென் றுரைத்த. | 2.4.25 | 288 |
நந்தி யிவ்வுரை பகர்ந்திட நரபதி யுமறு கந்த டர்த்தெறி களிறென விருவழிக் கனல்கள் சிந்தி டக்கரும் பிருகுடி நுதல்செலச் சினந்து மந்தி ரக்கதிர் வளெடுத் தசைத்தெதிர் வந்தார். | 2.4.26 | 289 |
எதிர்த்து நின்றற வீசினர் வீசலு மிடபங் குதித்துத் தம்வலப் பாரிச மாகின குறுகி மதித்து வீசலு மிடப்புற மானது மறுத்தும் பதித்து வீசலும் பிற்புற மானது பறந்தே. | 2.4.27 | 290 |
நான்கு திக்கினுங் குதித்துமுன் னணித்துற நடக்குந் தேன்கு தித்தசெந் தொடைப்புய ருரத்தொடுஞ் சினந்து வான்கு தித்தமின் னெனக்கர வாளொளி வயங்கத் தான்கு தித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி. | 2.4.28 | 291 |
எட்டி யொட்டுவர் வெட்டுவர் வெட்டலு மிடபங் கிட்டி டாதக லாதுடல் கிழிபட வெதிர்ந்து முட்டித் தாக்குற வருவபோ லடிக்கடி முடுகுந் தொட்டி டாதொழி யாதருஞ் சூறையிற் சுழலும். | 2.4.29 | 292 |
அடுத்து முன்னெதிர்ந் திருவளை மருப்பினை யசைக்கும் வெடித்த வாலிரு புறத்தினு மடிக்கடி விசைக்கும் படித்த லத்துகள் விசும்புறக் குளம்பினிற் பறிக்கு மிடித்த வானுறு மேறென வதிர்ந்திடு மிடபம். | 2.4.30 | 293 |
கண்ணி னுக்கெதிர் தோன்றிடுங் காணெணா தகலும் விண்ணி னிற்பறந் திடுந்திசை விசும்பெலாந் திரியு மெண்ணு முன்னுமுன் வந்திடுங் கான்மடித் தெதிரே மண்ணி னிற்படுத் திடுங்குனிந் தெழுந்துவா னிமிர்க்கும். | 2.4.31 | 294 |
இடப மிவ்வணந் திரிதர விருவிழி சிவந்து தொடரு வார்சுடர் வாட்கொடு தாக்குவர் துரத்தி யடரு வார்மறிப் பார்திகைப் பாரடுத் தடுத்துக் கடுவி சைகொளுங் காறளர்ந் திதழினைக் கறிப்பார். | 2.4.32 | 295 |
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பி னெருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவ ரெதிராத் தரத்தை நோக்குவ ரவையினி லபூஜகி லுடனே யுரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவ ருளத்தை. | 2.4.33 | 296 |
இன்றி ருந்தெழுந் திகலட லரிமுகம் மதுவை வென்றி கொண்டன மிலையல திவணெறி மேவுங் கன்றி னைக்கடிந் தோமிலை யெனமனங் கசங்கி நன்று நன்றுநம் வீரமென் றகத்திடை நகுவார். | 2.4.34 | 297 |
முனிந்து புன்னகை கொண்டவா ளுமறைமுன் னடுத்துக் குனிந்து பாதல மோந்துடல் குழைத்தறத் தூங்கிக் கனிந்த வாயசைப் போட்டிரு காதினை யசைத்து வனைந்த போலக லாதுநின் றதுமழ விடையே. | 2.4.35 | 298 |
ஏறு முன்னணித் திட்டதென் றெழிற்கர வாளான் மாறி வீசினர் முடுக்கின ரடிக்கடி வளைத்துக் கோறல் செய்குவ னியானெனக் குவலயங் குலுங்கச் சீறி முன்னினு மும்மடங் கெனும்படி திரிந்தார். | 2.4.36 | 299 |
தொலைந்த திவ்வணம் வெய்யவன் றோன்றுமுன் றொடுத்திட் டலைந்து லைந்திடைந் தறத்தவித் தசறுமட் டாகக் கலைந்த தன்றியே றகப்பட விலையெனக் கலங்கி மலைந்தி டாமன மறுகுற வுமறுள மலைந்தார். | 2.4.37 | 300 |
மட்டு வார்பொழி னெறியிடை மழவிடை யெதிர்ந்து வெட்டு மென்றுரை பகர்ந்ததும் வெகுளியி னடந்து பட்ட செய்தியும் புதுமையு மூரவர் பலர்க்கும் விட்டு ரைத்திட வேண்டுமென் றெழுந்தனர் விரைவின். | 2.4.38 | 301 |
குறித்து வந்தவை விடுத்தெழு முமறினைக் கூவித் தெறித்த துண்டுளி முகிற்குடை முகம்மதைச் செகுப்ப வெறித்த வெஞ்சின வீரத்தின் விழைவுக ளனைத்து மறைத்தி வோரெனப் புகன்றுபோ யதுமழ விடையே. | 2.4.39 | 301 |
கொண்ட வேகமும் வீரமும் புறந்தலை குனியக் கண்ட காரணத் தொடுமிளைப் பருநெறி காட்ட விண்டு திர்த்தமெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து மண்டு பேரவை யபூஜகி லிடத்தில்வந் தனரே. | 2.4.40 | 303 |
முகம லர்ச்சிகெட் டறத்தவித் துடல்வெயர் முழுகப் பகும னத்தும றடைந்தவை யனைவரும் பார்த்து முகம்ம தின்வயி னடைந்தது நடந்ததும் வகுத்துப் புகர றும்புக ழோயுரை யெனப்புகன் றனரே. | 2.4.410 | 304 |
வேறு அறபிகள் குழுவி னாப்ப ணமரபூ ஜகிலை நோக்கிப் பொறைமதக் கரிகோ டேற்ற புரவல ருயிரை மாந்திக் கறைகெழுங் குருதி வைவேற் காவல ருமறு கத்தாப் மறைபடா நெறியிற் கண்ட புதுமையை வகுக்க லுற்றார். | 2.4.42 | 305 |
மண்ணினிற் றிசையிற் சூழ்ந்த மறிதிரைக் கடற்குள் வானோர் விண்ணினிற் பெரியோ ராய்ந்த மெய்ம்மறை தனக்குட் டேர்ந்த திண்ணிய ருரைக்குட் கேட்ட திலைமனந் தௌிய வென்றன் கண்ணினிற் கண்ட தியாருங் காணொணாப் புதுமை யென்றார். | 2.4.43 | 306 |
சரத்திடை விடையொன் றங்ஙன் றனித்துநின் றதிர்ந்தென் பேரை யுரைத்தது விளிப்பக் கேட்டே னுணர்ந்தியா ரென்ன நேர்ந்தேன் விரைத்தலி னெங்கே கின்றீ ரெனவிறன் முகம்ம துற்ற துரைத்தனக் குறும்பு தீர்ப்பத் துணிந்தனென் றுரைத்தன் மாதோ. | 2.4.44 | 307 |
இன்றெனை யடர்த்தோர் செவ்வி யியன்முகம் மதுவை வென்றோ ரென்றதற் கெதிர்ந்து கைவா ளெறிந்தன னுரத்திற் றாக்கி நின்றனன் மறிந்தே னெந்த நிலத்தினுந் தொடர்ந்து காலிற் சென்றனன் றவித்தே னென்னாற் செய்ததொன் றில்லை யன்றே. | 2.4.45 | 308 |
காற்றெனப் பறக்கு மூழிக் கனலெனச் சீறுங் கொல்லுங் கூற்றென வெதிருஞ் செல்லிற் குலவரை யனைத்துஞ் சுற்றுந் தோற்றிடா விசும்பிற் றாவுஞ் சுழலுமட் டிகிரி யென்னச் சீற்றமுற் றடுத்துப் பின்னு முன்னுமே திரியு மன்றே. | 2.4.46 | 309 |
அலகையின் குலமோ வானி னமரரி லொருவன் றானோ வுலகுறுஞ் ஜின்னோ தெய்வ முருவெடுத் ததுவோ செவ்விச் சிலைநுதல் கதீஜா கேள்வன் செய்தொழில் வஞ்சத் தானோ நிலமிசை விடையாய்த் தோன்றி நின்றவம் மாயந் தானே. | 2.4.47 | 310 |
மாற்றுரை வேதம் பேசு முகம்மதைத் தேடிச் செல்லு மாற்றலிவ் விடையைக் கண்டே னசறுமட் டாகக் கண்ணிற் றோற்றிடாத் துன்ப முற்ற புதுமையைத் தொகுத்து வல்லே சாற்றுதற் கமைந்தேன் வீரந் தனைமறுத் திலனியா னென்றார். | 2.4.48 | 311 |
கொடுவரி யனைய கத்தாப் குமரரீ துரைப்பக் கேட்டு விடமெனக் கறுத்துச் சிந்தை விறலபூ ஜகுலுஞ் சுற்றி யுடனிருந் தவருந் தம்மி லொண்புயங் குலுங்க நக்கி யடலுறு முமறு கத்தா பணிமுக நோக்கிச் சொல்வார். | 2.4.49 | 312 |
ஈதொரு புதுமை யாக வெண்ணிநீ ருரைத்தீர் வேத மாதவன் முகம்ம தென்போன் வளர்த்தவஞ் சனைக்கு ணூறு பேதமொன் றதற்குக் காணா திதனைநீர் பிதற்றிப் பேச றீதுறு மிவைபோ லியாங்கள் கண்டதுந் தெரிக்கோ ணாதே. | 2.4.50 | 313 |
இன்னமு மிவைபோ னூறா யிரம்விதங் கண்ணுற் றாலு மன்னவன் விளைக்கும் வஞ்ச மதனைதீ ரமைத்தல் வேண்டும் பன்னுத லெவருங் கேட்பிற் பழுதுறுந் பருதி வேலோய் முன்னுமுன் கருத்தி லுன்னும் படிமுடித் திடுமி னென்றார். | 2.4.51 | 314 |
பொய்யினைப் புகலேன் கண்ட புதுமையைப் புகன்றேன் றோன்று மெய்யினைப் பொய்யென் றோத வியாவர்க்கும் விதிய தன்றே யையுற லுரைக்க லாகா ததிசய மறைக்க லாகா வையகத் தியற்கை யீதென் றுமறிவை வழங்கிப் போனார். | 2.4.52 | 315 |
அற்றைநாட் கழிந்த பிற்றை யடலும றெழுந்து செவ்வேற் கொற்றவ ரப்துல் லாதங் குமரரைக் கோறல் வேண்டி முற்றிய மனத்தி னோடு முரண்மதக் கரியை நேராய் வெற்றிவெண் கதிர்வாட் டாங்கி நடந்தனர் விளைவ தோரார். | 2.4.53 | 316 |
நடுவுறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார் படிறுரை பகராச் செவ்வி யற்பிகள் பல்லர் கூடி யுடனொரு வழக்கைத் தேற்றித் தேறிலா தொளிரும் செம்பொற் கொடுமுடி விசும்பு தூண்டுங் கோயிலின் வாயிற் புக்கார். | 2.4.54 | 317 |
ஆலயம் புகுந்து செந்தே னலங்கறோய் சுவாகு பூம்பொற் காலிணை யிறைஞ்சி யேத்தித் கைமுகிழ்த் திருந்து நோக்கி மேலவ வெங்கட் குற்ற வழக்கினை விளங்கக் கேட்டுச் சாலவுந் தீர்த லாகச் சாற்றுதல் வேண்டு மென்றார். | 2.4.55 | 318 |
தோட்டலர் நாற்றும் வாயிற் சுவாகெனும் புத்துத் தன்னை வாட்டிறத் தறபி வீரர் மகிழ்ந்தெவர் வழக்கி னுட்பப் பூட்டறுத் துரைக்க வேண்டு மெனப்புகழ்ந் திருக்குங் காலை தீட்டிய கதிர்வேற் செங்கைத் திறலும் றவணின் வந்தார். | 2.4.56 | 319 |
வகையறா வழக்குத் தீர்த்துத் தருகென மன்னர் சூழ்ந்த தொகையினி லுமறென் றோதுந் தோன்றலு மிருப்பக் கண்டு திகைதெரி விளக்க மாகச் சுவாகெனுந் தெய்வம் வாய்விண் டகமகிழ்ந் தவையோர் கேட்ப நன்மொழி யாய்ந்து சொல்லும். | 2.4.57 | 320 |
மதிகதி ரவனி காயம் வானமற் றெவையும் போற்றும் புதியவ னுண்மைத் தூதர் நபிகளிற் புகழின் மிக்கோர் பதியிரண் டினுக்கு மேலோர் படைப்புள வெவைக்கு முன்னோர் கதிதருங் காட்சி பெற்றோர் ஹபீபெனு முகம்ம தென்போர். | 2.4.58 | 321 |
அன்னவர் முன்ன ரேகி யவர்நிலை கொண்ட தீனின் சொன்னயக் கலிமா வோதித் துணைமல ரடியைப் போற்றிப் பன்னுமா மறையின் றீஞ்சொற் படிவழு வாது நேர்ந்து பொன்னுமா மணியும் போலப் பொருந்துத லெவர்க்கும் வேண்டும். | 2.4.59 | 322 |
தேவநன் மொழியென் றென்சொற் சிந்தையிற் சிந்தித் தோர்கள் காவல ரெவர்க்கு மேலாய்க் காசினிக் கரச ராகிப் பூவலர் சுவன நாட்டைப் பொதுவறப் புரப்போ ராகி மேவுதீ வினைக டீர்த்து வேதநல் லறிவ ராவார். | 2.4.60 | 323 |
வருந்திடா தகலு நுந்த மனத்துறை வழக்கின் சொல்லைத் திருந்திட வுரையு நீதிச் செவ்வியன் முகம்ம தின்சொற் பொருந்திட நடவு மென்முன் புகல்வது புந்தி கேடென் றிருந்தவப் பெயருக் கெல்லா மினையன வியம்பிற் றன்றே. | 2.4.61 | 324 |
புத்துநன் குரைத்த மாற்றம் புதுமையென் றெவரும் போந்தார் மத்தகக் கரடக் கைமா மடுத்தெறிந் துதிரெஞ் சிந்துஞ் சித்திர வடிவாட் செங்கை யுமறெனுஞ் செம்ம லேற்றி னுத்தரந் தனையு மிந்த வுறுதியு நினைத்துத் தேர்ந்தார். | 2.4.62 | 325 |
நென்னலேற் றுரையுந் தெய்வ நிகழ்த்திய மொழியும் பார்த்து முன்னுறு காட்சி யேதோ முடிவதொன் றுளதென் றெண்ணித் தன்னகத் திருத்திச் செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு மன்னுசோ தரியென் றோதும் பாத்திமா மனையிற் சென்றார். | 2.4.63 | 326 |
திருமயில் பாத்தி மாவுஞ் செவ்வியல் ஸஹீதுந் தேன்சோர் மருமலி படலைத் திண்டோன் முகம்மதின் கலிமா வோதிக் குருநெறி ஹப்பா பென்னுங் குரிசின்முன் னிருந்து செல்வம் பெருகிய மறைநேர் கேட்டுப் பிரியமுற் றிருக்குங் காலை. | 2.4.64 | 327 |
எறுழ்வலித் தடக்கை வெற்றி யெழிலும றிவணி னம்பாற் குறுகின ரென்னச் செல்வக் குலக்கொடி பாத்தி மாவும் பெறுகதி ஸஹீதுந் தம்மிற் பேதுற்று நெறிஹப் பாபை மறைபட விருத்திச் செவ்வி மனைத்திரு முன்றி னின்றார். | 2.4.65 | 328 |
மென்னபிக் கீமான் கொண்டோ ரிவரெனும் வெறுப்பி னாலும் பன்னுமா மறைச்சொ லில்லுட் பகர்ந்ததோ ரையத்தாலு மன்னிய சீல நீக்கி மைத்துனர் ஸஹீதைக் கோபித் தின்னுயிர் தடிவே னென்ன விருவிழி கனல நின்றார். | 2.4.66 | 329 |
கணவனைச் சினந்தா ரென்னக் காரிகை பாத்தி மாகண் டிணைவிழி முத்தஞ் சிந்த வின்னுயிர்ப் பிறப்பை நோக்கி மணவலித் தடக்கை வேந்தே மருவலர் போலச் சீற லணவது நுமக்கொன் றோதி யடர்த்ததை விலக்கா நின்றார். | 2.4.67 | 330 |
மடித்தவா ளெயிறு கவ்வி நின்றமன் மடந்தை தன்னை வெடித்திட வுறுக்கிக் கூறி விழிக்கனல் சிதறச் சீறி யெடுத்ததோர் கரத்திற் றண்டா லிளம்பிறை நுதற்கு மேல்பா லடித்தன ருதிர மாரி யாறுபட் டொழுகிற் றன்றே. | 2.4.68 | 331 |
சிரசுடைந் துதிரஞ் சிந்தித் தேங்கிய மயிலை நோக்கி விரிகதிர் மணிப்பைம் பூணார் வெகுளியுள் ளடங்க வேங்கி யரிவைநும் மனைக்கு ணீவி ரடிக்கடி யோதி யோதிப் பரவிய மாற்ற மென்னே தௌிதரப் பகர்மி னென்றார். | 2.4.69 | 332 |
படித்தசொ லியாது வேறு பகர்ந்தவ ரெவர்கொ லென்ன வடித்தடங் கதிர்வேன் மைக்கண் மடமயின் மறைத்துக் கூறக் கடித்தடக் கரத்து வேழக் காவலர்க் கசனி யொப்பார் பிடித்தசொற் றனைம றாது விருப்புற்றுப் பின்னுங் கேட்டார். | 2.4.70 | 333 |
உடன்பிறந் திகலா நின்ற வுமறெனு முயிரை நோக்கி மடந்தையர் திலத மன்ன பாத்திமா மணிவாய் விண்டு திடந்தவ ழுண்மை வேதந் தௌிந்தசொல் லதனைத் தீனைக் கடந்தவர் புனித மில்லார் கரத்தளித் திடறீ தென்றார். | 2.4.71 | 334 |
முன்னவள் கனிவாய் விண்டு மொழிந்தசொன் மனத்துட் கொண்டு மன்னவ னபுல்கா சீந்தன் மனத்தௌி வதனின் மிக்காய்ப் பன்னருஞ் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணித் தென்னுறு கதிர்வேற் சிங்கஞ் சீதநீ ராடி னாரால். | 2.4.72 | 335 |
புனைந்தமென் றுகிலை நீத்து வேறொரு புதிய தூசும் வனைந்தகம் புனித மாக்கி வாவியங் கரையை நீக்கிச் சினந்தங்கு கதிர்வேற் கண்ணா டிருமனை புகுந்து நீவிற் நினந்தவை முடித்தே னியானு நிகழ்த்திய தருள்க வென்றார். | 2.4.73 | 336 |
சுந்தரப் புதுநீ ராடித் தூசணிந் திகலி லாது வந்தபின் னோனை நோக்கி முகம்மதே யுண்மைத் தூதென் றந்தமி லாதி சொற்ற ஆயத்தும் பொருளுந் தீஞ்சொற் சிந்துபத் திரத்தை யீந்தார் சிற்றிடைப் பெரிய கண்ணார். | 2.4.74 | 337 |
பத்திரங் கரத்தில் வாங்கிப் பார்த்திவ ருமறு கத்தாப் சித்திர வரியி லொன்றைத் தௌிவுறத் தேர்ந்து வாசித் தித்தகைக் குரிய ரியாவ ரெவர்மொழி யிதுகொ லென்னப் புத்தியுட் களித்துத் தேறிப் பொருவிலா வுவகை பூத்தார். | 2.4.75 | 338 |
மறைமொழிப் பொருளைத் தேர்ந்து மானுடர் மொழியீ தன்றென் றிறையவன் மொழியே யென்ன விதயத்தி லிருத்தி வேத நிறைநிலை மனத்த ராகி நினைத்தவஞ் சகத்தைப் போக்கிக் குறைபடுங் குபிரைச் சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார். | 2.4.76 | 339 |
வழிபிழைத் திருளின் முட்சார் வனத்திடைக் கிடந்துள் ளாவி கழிபட விடைந்தெற் றோன்றுங் காலைநன் னெறிபெற் றோர்போ லழிதருங் குபிரை நீக்கி யகுமது தீனை நோக்கிப் பொழிகதிர் வதனச் செவ்விப் புரவல ருமறு நின்றார். | 2.4.77 | 340 |
ஓதுநன் னெறிக்கு நேர்பட் டிசைந்தன ருமறென் றெண்ணிக் காதர மகற்றி யில்லுட் கரந்தது தவிர்த்து ஹப்பாப் தாதவி ழலங்கற் கோதைத் தையலும் ஸஹீது முற்ற வேதிகை யிடத்திற் புக்கு விளைவது காண்ப நின்றார். | 2.4.78 | 341 |
மருங்கினி னின்ற ஹப்பாப் மன்னவ ருமறை நோக்கித் தருங்கர தலத்தோய் நும்பாற் சகத்தினும் விண்ணு மொவ்வா வருங்கன வெற்றி நன்மா ராயமொன் றடைவ தாக நெருங்கிய பொருளா யின்றோர் சோபன நிகழ்வ னென்றார். | 2.4.79 | 342 |
இணையட றவிர்வெள் வேலோ யின்றிர வுமைதீ னுக்கோர் துணையென வருள்செய் வாயென் றாதியைத் துதித்துச் செவ்வி மணவலி புயத்தார் வள்ளன் முகம்மதாண் டிரந்து கேட்ப வுணர்வுறக் கேட்டே மென்றா ரோங்குநன் னெறியை நீங்கார். | 2.4.80 | 343 |
எடுத்திவை யுரைத்த ஹப்பாப் தமைவிளித் திரப்போர்க் கென்றுங் கொடுத்ததிற் செவந்த செங்கைக் கோளரி யுமறு கத்தாப் கடுத்தவழ்ந் திருண்டு சேந்த கயல்விழி கதீஜா கேள்வ ரடுத்துறைந் தவணெங் கென்ன வணியிதழ் வாய்விண் டாரால். | 2.4.81 | 344 |
வேறு முதிருங் கருஞ்சூற் சலதரத்தை விதிருஞ் சினைத்தண் டலையுடுத்து சதுரி னணித்தா யொருமனையுண் முதிருங் கலிமா நிலைதவறா 2.4.82
| 345 |
மறைமா மொழிநா வொழியாது | கறையா ரிலைவேற் கரத்தேந்திக் குறையா மதிய மெனதீனை முறைவார் பொழில்சூழ் வரையினிடத் 2.4.83
| 346 |
மலையி னிடத்தி னுயர்ந்திருந்த | குவவ நோக்கி மாந்தருறை விலகுங் கதிர்மெய்க் குரிசினபி னிலைகொள் கபாடந் தனைத்தீண்டி 2.4.84
| 347 |
இணைத்தாள் செறித்த மணிக்கதவந் | னணித்தார் புறத்தா ரெனநோக்கி பணித்தாழ் குழியிற் களிற்றினம்போற் தணித்தா ரிலைமெய் நடுக்கமுரை 2.4.85
| 348 |
வெருவி யுரையா திருந்தவரை | பொருவும் ஹம்சா மனம்வெகுண்டு மதிக்கு மதிக்கும் படியாகப் பெருகு நலனுஞ் சுவனபதிப் 2.4.86
| 349 |
இகலுந் தீங்கு மனத்திருத்தி | றிகழுங் கதிர்வாட் டனைப்பறித்துச் ககலு மனத்தால் வெருவிடலிவ் தகவல் விடுமி னெனமறுத்து 2.4.87
| 350 |
அறந்தாங் ககத்தார் ஹம்சாசொல் | திறந்தார் திறந்த மனைநோக்கிச் மறந்தாங் கியபொற் புயத்துமறு பிறந்தா ரெழினந் நபிக்குரிசில் 2.4.88
| 351 |
நரந்தங் குலவி மரவமலர் | டுரந்தங் கிடவா ளரியுமறைத் யிருந்திங் கிவணில் வரும்வரவா கரந்தங் கியநல் லருள்பெருகும் 2.4.89
| 352 |
வரிசை நபியே முகம்மதுவே | யுரிய தனியோன் முதற்றூதே யரிய மறைதேர்ந் தீமான்கொண் கருதி யிவணி லடைந்தேனென் 2.4.90
| 353 |
கூறுங் கலிமா வுரைத்ததீமான் | தேறு மொழிகேட் டகுமதுதஞ் பேறு மிதுவே கிடைத்ததெனப் மீறுங் களிப்பா நந்தமன 2.4.91
| 354 |
வல்லோ னபியுங் கலிமாவை | செல்லேர் கரத்தா ருமறுகத்தாப் யல்லார் குபிரைக் கடிதகற்றி நல்லோர் பரவும் படிவணங்கி 2.4.92
| 355 |
விரியுங் கதிர்மெய்ச் சிறைத்தடங்கண் | தருவி யெனச்செய் திடுங்கலிமா சுருதி மொழித்தீன் பயிர்தழைப்பச் குருவி னெறியான் மனங்களிப்புக் 2.4.93
| 356 |
விதியின் முறையென் றகுமதுதாம் | மதிமெய் மயங்கி வஞ்சனையின் பதியும் பெருக்க வுரைநடத்திப் புதிய மொழியைத் தொல்கிளைக்குப் 2.4.94
| 357 |
சரியுந் திரைமுத் தெறிந்திரைக்குஞ் | விரியு மமுத மெனுங்கலிமா றறிய மகடூ வறுவரும் றெரியு மிலக்க மிந்நான்கு 2.4.95
| |
358 |
வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின் றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார். | 2.5.1 | 359 |
செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார். | 2.5.2 | 360 |
உடலுயி ரெனவுவந் துறையு நாளினி லடலபூ பக்கரு மலியுந் தெவ்வரைக் கடவிய வேற்கர வுமறுங் கள்ளவிழ் மடறிகழ் மாலிகை யறபி மன்னரும். | 2.5.3 | 361 |
தோமகன் முகம்மது நபியுஞ் சூழ்வர மாமதி ணகர்ப்புறத் தெய்தி மற்றொரு தேமலர்ப் பொழிலிடை தெரிய வைகினார் காமரு மதியமுங் கணமு மென்னவே. | 2.5.4 | 362 |
செல்லிடுங் குடைநபி செவ்வி காண்டலுங் கல்லொடு மரமும்புற் கானும் வாவியு மெல்லிய சிறைப்புளும் விலங்கி னங்களு மொல்லையூர் வனவனத் துகளுஞ் சாதியும். | 2.5.5 | 363 |
தோற்றிய தெவ்வையுந் துலங்கக் கேட்பதாய் மாற்றருஞ் சுருதியின் வசனந் தன்னொடும் போற்றரும் புகழ்ச்சியாற் புகழ்ந்து பொங்கிய வூற்றமுற் றுயர்சலா முறைத்து நின்றனவே. | 2.5.6 | 364 |
கானகத் துற்றகா ரணங்கே ளியாவையுந் தீனவர் செவியுறத் தேக்கிச் சீர்பெற வானவர் புகழ்தர மக்க மாநபி யீனமின் மனையகத் தேகி னாரரோ. | 2.5.7 | 365 |
அற்றையிற் போழ்தவை யகன்று பின்னைநாள் வெற்றிவெங் கதிரயில் வீர ரியாவருஞ் சுற்றிட மெய்யெழி றுலங்க மானபி மற்றொரு தலத்திடை வைகி னாரரோ | 2.5.8 | 366 |
நல்லறி வுடையவர் சூழ நந்நபி யில்லிருந் தெழுந்திவ ணிருப்ப மற்றொரு வில்லினன் வலையினன் வேடன் கையினிற் கல்லிய தடியொடுங் கானி லேகினான். | 2.5.9 | 367 |
கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு மானினந் தடைபட வலைகள் வீக்கியுந் தான்மலை முழைஞ்சினுந் தடவி நோக்கியு மூன்புசித் திடுவதற் கொன்றுங் காண்கிலான். | 2.5.10 | 368 |
அடவியிற் புகுந்தரும் பதுக்கை சுற்றியோர் புடையினின் முசலிகை புகுதக் கண்டனன் றடைபட வலைவயின் சாய்த்து மேற்சிலை யுடைபடத் தாக்கித்தன் னுரத்திற் பற்றினான். | 2.5.11 | 369 |
வள்ளுகி ருடும்பினை வலைக்குண் மாட்டிவை முள்ளுறை கானமு முரம்பு நீக்கித்த னுள்ளக மகிழ்வொடு முழையர் சூழ்தர நள்ளுறை முகம்மது நபியை நோக்கினான். | 2.5.12 | 370 |
மன்னிய வறிஞிரி னாப்பண் வைகிய தென்னிவர்க் குறுஞ்செய லியாது கொல்லென முன்னிய வேட்டுவன் மொழிய வாதித னன்னிலைத் தூதிவர் நபியென் றோதினார். | 2.5.13 | 371 |
மைமுகிற் கவிகைநன் னபிமுன் வந்துநின் றெம்மறைக் குரியவர் நீவி ரெந்நெறி செம்மையி னடத்துத றௌியச் செப்புமென் றிம்மொழி யறபிவேட் டுவனி சைத்தனன். | 2.5.14 | 372 |
கூறிய வறபியைக் குறித்துக் காசினிக் கீறினில் வருநபி யான லாதிலை யூறிய பொருட்புறுக் கானென் றோதிய தேறுநன் மறையெனக் குற்ற செவ்வியோய். | 2.5.15 | 373 |
என்னுரை நின்றிசு லாத்தி லாயினோர் மின்னொளிர் மாளிகைச் சுவன மேவுவர் பன்னியிம் மொழிபழு தென்னும் பாவியோர் வன்னியின் குழியிடைக் கிடந்து மாழ்குவார். | 2.5.16 | 374 |
ஈதுநன் றெனமன மிசைந்தென் னாவினி லோதிய நன்கலி மாவை யோதிநின் பாதகந் துடைத்துநற் பதவி யெய்தென வாதிதன் றூதுவ ரறைந்திட் டாரரோ. | 2.5.17 | 375 |
தெரிதர நன்மொழி தௌித்த நந்நபி மரைமலர் செவ்விய வதன நோக்கிநும் முரைமறுத் திலனெனச் குண்மை யாகவித் தரையினி னபியெனச் சாட்சி வேண்டுமால். | 2.5.18 | 376 |
கானிடை யறபியிவ் வுரையைக் காட்டலுந் தேனகு மலர்ப்புயச் செவ்வி நந்நபி வானிடை மண்ணிடைப் படைப்பின் மற்றதி லீனமில் கரியுனக் கியைவ தேதென்றார். | 2.5.19 | 377 |
கடும்பரற் கான்கவிழ் வலையி னுட்படு முடும்பென திடத்திலொன் றுளது முள்ளெயி றிடும்பகு வாய்திறந் தினிதி னாகநும் மொடும்பகர்ந் திடின்மறுத் துரைப்ப தில்லையே. | 2.5.20 | 378 |
என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர நன்றென முறுவல்கொண் டினிய நந்நபி குன்றினிற் றிரிதரு முடும்பைக் கூடிய மன்றினில் விடுகவென் றுரைவ ழங்கினார். | 2.5.21 | 379 |
கானிடை திரிந்தறத் தவித்துக் காறளர்ந் தேனினி விடிலுடும் பௌிதி னெய்திடா தானதான் மடிமிசை யாக்கி னேனறுந் தேனவி ழலங்கலோ யென்னச் செப்பினான். | 2.5.22 | 380 |
எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதாய் விடுத்திடி லகன்றிடா தெனவி ளம்பலு மடுத்தமென் மடிபுகு முடும்பை வாங்கியங் கடுத்தனன் விடுத்தன னறபி வேடனே. | 2.5.23 | 381 |
நெடுந்தலை யெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப் படுந்தரத் துகிர்நிலம் பதிப்ப வூன்றியெள் ளிடுந்தரை யகன்றிடா திறைவன் றூதெனத் திடந்தர மனத்தினிற் றௌிந்து நோக்கிற்றே. | 2.5.24 | 382 |
ஆரமு தனையசொல் லரிய வாய்திறந் தோர்மொழி நந்நபி யுடும்பைக் கூவலுஞ் சீர்பெற விருவிழி திறந்து நோக்கிநின் றீர்தரு நாவெடுத் தியம்பிற் றன்றரோ. | 2.5.25 | 383 |
இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா யுகம்பல வதிக்குமுன் னுதித்துப் பின்னுதித் தகம்பயி லாரணாத் துறைந்து செப்புமுச் சகம்புகழ்ந் திடவருந் தக்க நீதியோய். | 2.5.26 | 384 |
அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந் தெண்டனிட் டிருவிழி சிரசின் மீதுறக் கொண்டசிற் றடிமையே னுய்யக் கொண்டுவாய் விண்டெனை விளித்தவை விளம்பு கென்னவே. | 2.5.27 | 385 |
தேறிய மொழியிவை செவியிற் சார்தலு மாறிலா தியாரைநீ வணங்கு கின்றனை வேறற வுரையென விளங்கு நந்நபி கூறலு முசலிகை மறுத்துங் கூறுமால். | 2.5.28 | 386 |
மருமலி வள்ளலியான் வணங்கு நாயக னொருவனன் னோனெழி லுயர்சிங் காசனம் பொருவரும் வானில்ரா சாங்கம் பூமியிற் றெரிதருங் கிருபையோ செம்பொ னாட்டினில். | 2.5.29 | 387 |
தீதிக லற்றவன் சினந்து செய்யுமவ் வேதனை நரகமென் றெரியும் வீட்டினிற் பேதமி லன்னதோர் பெரிய வன்றனை யோதியான் வணங்குவ துண்மை யென்றதே. | 2.5.30 | 388 |
அறத்தொடு முரைத்தனை யென்னை யாரெனக் குறித்தனை யெனநபி கூறக் கேட்டலுஞ் சிறுத்தமுள் ளெயிற்றவெண் ணிறத்த செம்முனை யிறுத்துநூ லிரட்டைநா வெடுத்தி யம்புமால். | 2.5.31 | 389 |
பரவைவிண் ணிலமலை பருதி மற்றவு முரியநும் மொளிவினி லுள்ள வுண்மையிற் றெரிதர முதலவன் செவ்வித் தூதரா யிருநில நபிகளி னிலங்கு மேன்மையாய். | 2.5.32 | 390 |
ஈறினில் வருநபி யிவணும் வாக்கினிற் கூறிய மார்க்கமே மார்க்கங் கோதறத் தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீதென வேறுரைத் தவரவர் நரகின் வீழ்வரால். | 2.5.33 | 391 |
இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும் வனமுறை யஃறிணை வாழ்த்து கின்றது நனிபுக ழுண்மைநன் னபியு நீரலாற் பினையிவ ணிலையென வுடும்பு பேசிற்றே. | 2.5.34 | 392 |
உடும்பிவை யுரைத்தலு முவந்து தன்மனத் திடும்பினைத் தவிர்த்துநின் றறபி யென்பவன் குடும்பமு மௌியெனுங் குபிரி னாற்றினம் படும்பவந் தவிர்கெனப் பாதம் பற்றினான். | 2.5.35 | 393 |
வண்ணவொன் புயநபி பாதம் வைத்தகை கண்ணினிற் பதித்தகங் கனிய முத்தமிட் டெண்ணில் வுவகையுற் றெவரும் போற்றிட வுண்ணெகிழ்ந் தருங்கலி மாவை யோதினான். | 2.5.36 | 394 |
புதியவ னபிகலி மாவின் பொற்புற வொதுவுடன் வருமுறை யொழுகி மாமறை விதிமுறைத் தொழுகையு மேவி மேதையின் முதியவ னிவனென முசுலி மாயினான். | 2.5.37 | 395 |
உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா லெனைப்பிடித் தடர்பவ மின்று போக்கினேன் மனைத்தட வளைசெலென் றுடும்பை வாழ்த்தினான் பனைத்தடக் கரக்களி றனைய பண்பினான். | 2.5.38 | 396 |
உறைதருங் குழுவின ருவப்ப நோக்கித்தன் னறபிதன் முகமல ரதனை நோக்கிமெய் மறைநபி பங்கய வதன நோக்கிப்பின் னிறைதரு மகிழ்ச்சிபெற் றுடும்பு நின்றதே. | 2.5.39 | 397 |
மருப்புய நபிதிரு மதுர வாய்திறந் திருப்பிடத் தேகென வுடும்புக் கின்புற வுரைப்பது கேட்டுளங் கனிந்து கானிடை விருப்பொடும் போயது விலங்கின் சாதியே. | 2.5.40 |
398 |
அடவியினி லுடும்பகல அறபிவே புடையகலா நிழல்போலுந் தோழருட மடலவிழ்பைங் குவளைசெறி மடுச்சூழு லுடுவினமு நடுவுறையு நிறைமதியு 2.6.1 | | 399 |
திரைக்கடலி னடுவெழுந்த மதிக்கதிர்போன் நிறைத்தெழுந்த பயிர்போலத் தழைத்தோங்க முரைக்கடங்கா வெகுளிபொங்கு மனத்தினராய்க் வரைத்தடத்தைக் கொலுகினங்க ளரிப்பதெனச் 2.6.2
| 400 |
தண்டரளக் கதிர்வடிவின் முகம்மதினைக் | விண்டுரைக்கு மறைமொழியை யௌியமொழி கொண்டவர்க டமையுமவர் மனையும்புறம் தண்டனைகள் படுத்திடவும் பலபலதந் 2.6.3
| 401 |
பிறவியா திவனுரையா தெனவிரித்துப் | அறபியா கியகுபிரர் பலர்கூறு யிறபியா தரும்புதல்வ னிரங்காத வுறவியா னென்பவரைப் பகையாக்கும் 2.6.4
| 402 |
முகிற்கவிகை முகம்மதிடஞ் சென்றுசிறி | பகற்பொழுதி னவனுரையா லவனெடுத்த நிகர்க்கரிய குபலலது முதற்பிறிதொன் விகற்பமிலை யெனப்படுத்தி வருவனென 2.6.5
| 403 |
ஒருகாலுந் தறுகாது குணக்கெழுந்து | யிருகாலும் வழங்காதான் முன்னோடி குருகாலு மலர்வாவி புடைசூழு பொருகாலக் கதிரிலைவேல் வலனிலங்க 2.6.6
| 404 |
உத்துபா வரபினைக்கண் டுருட்டுவார் | கத்துவால் வளைத்தாளங் கதிர்த்துவார்ந் வைத்துவாழ்ந் தெழுங்கதிர்போற் கதிர்கான்ற தத்துவாம் பரிவயவ ருடனணித்தங் 2.6.7
| 405 |
இகல்பொருந்து முளத்தோடு மிறபியா | முகம்மதினை முகநோக்கிச் சூழ்ந்திருந்த பகருமொழி சிறிதுளதென் னிடத்திலம் புகரறநும் மனத்தாய்ந்து தௌியுமென 2.6.8
| 406 |
பெருந்தவத்தால் வரும்புகழோய் தனியிறைவ | மிருந்தமறை யனைத்தையும்விட் டெனதுமொழி திருந்துநெறி புதுநெறியொன் றுளதெனமுன் வருந்தமர்க்குந் திசையோர்க்கு மறையோர்க்கு 2.6.9
| 407 |
ஒருவனென வுரைத்தீரிந் நிறத்தவனி | றிருவணக்க மெனத்தொடுத்தீர் முகங்கைகா தரையினுத றைவரலா யடிக்கடித்தாழ்ந் வருவதலா லொருகுறிப்பு மிலையெவர்க 2.6.10
| 408 |
முதல்வன்றன் றிருத்தூத ரெனப்பேரிட் | புதியமொழி யுரைத்தீமான் கொள்வித்தீ லிதமுறநம் மிறைவனிவ னெனக்கண்டோ பதவியுள வெனிலதுவு மெவரறிவர் 2.6.11
| 409 |
மந்திரமொன் றுருவேற்றிக் கண்கட்டா | றந்தரத்தைக் காரணமாய் விளைவித்தீர் புந்தியினிற் சிறியோர்க ளறியாது தந்திரமும் மறையோர்க ளிதனையொரு 2.6.12
| 410 |
குலத்தினுக்கு மரசருக்கு முதியோர்க்கு | தலத்தினுறை குபலெனுமத் தம்பிரான் நலத்தகைமைத் தலக்கேடும் பிறர்சூடும் மிலத்தொடொழு கினத்தொடுறைந் திவைதவிர்வெண் 2.6.13
| 411 |
தந்தைதாய் தமர்வணக்க முறையொழுகிப் | வந்தமா வினைநீங்கு மினத்தோர்க கந்தடர்வெங் கரியிரதம் பரிநெருங்கப் விந்தமா நிலத்தரசா மிறைஞ்சுவது 2.6.14
| 412 |
அச்சமணு விலதகத்தி னுத்துபா | முச்சகமும் புகழ்முகம்ம துறசூல்தம் விச்சையெனத் தௌிந்துபல பலசூழ்ச்சி டிச்சைபெற வுரைத்தனைநன் கியானுரைத்தல் 2.6.15
| 413 |
எனக்கிறையோ னுரைத்தமறை மொழிவசனந் | மனக்குறையோ வலதுனது மதித்திறனோ கனக்கமொழி யென்றெடுத்துக் காட்டுகநீ ருனக்குரைப்பக் கேட்டுமொழித் திறனறியென் 2.6.16
| 414 |
தரளவொளி தனிலுருவா யுதித்தமுகம் | பெருகுமுதன் மறைவசன மெவ்வுலகு யிருமையினுங் கதிதருநும் புதுமொழியை வுரையுமென வெடுத்துரைத்தா னிறபியா 2.6.17
| 415 |
ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு | வேதமெனும் புறுக்கானி லொருசூறத் போதமுறு முபனிடதப் பொருளனைத்துந் சீதரவொண் கவிகைநிழ றனிலுலகம் 2.6.18
| 416 |
இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர | தெரிமறையி னுரைகேட்டுப் பொருடேர்ந்து யுருகிமதி மயங்கியெதி ருரையாம பெருவரையின் மடங்கலெதிர் வரையாடு 2.6.19
| 417 |
அலங்குளைவா லரியேறு முகம்மதுநா | லிலங்கமர ரிறைமொழிகேட் டிவர்க்குரைத்த கலங்குமனந் தௌிந்துநபி கமலமலர் விலங்கினமொத் தெவரோடு மொழியாது 2.6.20
| 418 |
கலைமறைதேர் முகம்மதுட னுரையாம | நிலமையட லறிவகன்ற நெஞ்சினொடும் சிலைவயவர்க் கெதிருரைப்ப தென்னெனச்சஞ் குலைகுலைந்து குலத்தவரு மபூஜகிலு 2.6.21
| |
419 |
உள்ளறிவு குடிபோக்கி யிருந்தவன்றன் முகநோக்கி யுரவ நீயவ் வள்ளலிடஞ் சென்றதுவு மிருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்துக் கூறென் றள்ளிலைவே லவர்கேட்ப முகம்மதுசொற் கெதிராக வமர ராலும் விள்ளரிதிந் நிலத்திலெவ ரெதிருரைப்ப ரெனுமொழியை விளம்பி னானே. | 2.7.1 | 420 |
அரியலம்பும் புயவிடலை மனமயக்குற் றுரைத்தவைகேட் டறிவின் மாந்தர் பெருகுமஃ றிணைச்சாதி யுளமனைத்தும் பேதுறுத்திப் பெட்பி னோடு முறைதரச்செய் துவரிவரை நிலைமாறச் செய்பவனில் வுத்து பாதன் றிருமனத்தைப் பேதுறுத்த லவற்கரிதோ வெனநகைத்துச் செப்பி னாரால். | 2.7.2 | 421 |
கனைத்தமுரட் கரிநிகர்த்த வுத்துபா கலங்கியகட் டுரையு நேர்ந்தங் கினத்தவர்க ளுரைத்ததுவுஞ் சரதமெனச் சிரந்தூக்கி யெண்ணித் தேர்ந்து மனத்தடக்கி தீனெனுமோர் பெரும்பயத்தைப் புறத்தாக்கி வரிவி லேந்து முனைத்தடக்கை யபூஜகில்தன் குலத்தோரை யெதிர்நோக்கி மொழிவ தானான். | 2.7.3 | 422 |
எத்திறத்து மெப்புதுமை விளைத்திடினு மம்மாயத் திடைப்ப டாத புத்தியினும் வாள்வலியின் றிடத்தானும் வஞ்சனையைப் பொதிந்து தோன்றுஞ் சத்துருவா முகம்மதுத னுயிர்விசும்பு குடிபுகுதக் தக்க தாக்கும் பத்தியின னினைத்தபடி முடித்திடுவன் பார்மினெனப் பகர்ந்து மாதோ. | 2.7.4 | 423 |
தேறாத மதியாலு முற்றாத வலியாலும் செவ்வி யோர்க்கு மாறாத பெரும்பகையாய் முகம்மதென வுதித்தோன்றன் மாயந் தானோர் பேறாக நினைத்துமறு கத்தாபைப் போலமனம் பேது றேனியான் வீறாரும் வேல்வேந்தீ ரிவைசரத மெனமறுத்தும் விளம்பி னானே. | 2.7.5 | 424 |
மதியார்தஞ் செவிக்கியைய வாக்கினா லிவையுரைத்து மனத்தி னூடு கொதியார்வெவ் விடவரவின் வாய்த்தேரை யெனவறிவு குலைந்து மேனாள் விதியாதென் றறியாத கொடும்பாவி யவைநீங்கி விண்ணி னூடும் பதியாகப் படுத்தகொடி மணிமாட மனைபுகுந்தான் பண்பி லானே. | 2.7.6 | 425 |
அற்றையினி லிரவகற்றி யறிவினா லுயர்ந்தோரை யாவி போலு முற்றவரை மதிக்கேற்ப வுரைகொடுக்குந் திறத்தவரை யுறவி னோரை வெற்றியொடு மினிதழைத்தங் கோர்மாடத் திடத்திருத்தி வியந்து நோக்கிக் குற்றமற அபூஜகில்த னுளத்தினுறும் வரலாறு கூற லுற்றான். | 2.7.7 | 426 |
பிறந்தகுலந் தனைவழுக்கி நமர்க்குமொரு பெரும்பகையாய்ப் பேதி யாத மறந்தவழு மனத்தினனா யிருந்தமுகம் மதுவையுயிர் மாய்த்தல் வேண்டு நிறந்தவழுங் கதிர்வேலீ ரில்லெனில்தீ னிலைபெருகி நிலத்தின் மீது புறந்தயங்கப் படர்ந்துநமர் குலஞ்சமயந் தேய்த்தமிழ்த்திப் போடுந் தானே. | 2.7.8 | 427 |
பகையினைநல் லுடல்வருத்து நோயதனைக் கொடுநெருப்பைப் பாரின் மீதிற் றொகுவிடத்தைத் தோற்றரவிற் பரிகரித்த லியாவருக்குஞ் சூழ்ச்சித் தாகு மிகுமெனிலிந் நிலமாக்கண் மதியாலும் வலியாலும் வெல்வ தாகா நிகரரும்வெஞ் சமர்தொலைத்து நிறங்குருதி பிறங்கியொளிர் நிணங்கொள் வேலீர். | 2.7.9 | 428 |
வேறு குடிமை யின்னமர் குலத்தையு மனத்தினிற் குறித்து மடிமை யாயிருந் தேமெனின் முகம்மது தனக்கே யடிமை யாயவன் றண்டனைக் கடல்வலி யிழந்து மிடிமை யாகுதல் சரதமின் னவிர்கதிர் வேலீர். | 2.7.10 | 429 |
உறைந்த வர்க்கிடர் வருமுன மொருமனத் துணிவாய் மறந்த ரித்திடுஞ் திரளினைத் தொடுமுகம் மதுவை யிறந்தி டும்படிக் கியற்றுவ மெனிமனர்க் கௌிதி னறந்த ரும்பர கதியுடன் புகழுமுண் டாமால். | 2.7.11 | 430 |
இந்த வல்வினை தவிர்த்திடற் கெனதுளம் பொருந்தச் சிந்தி டாதுறு மொழிபல ருளத்தினுந் தேர்ந்து மந்தி ரத்தொடு வழுவறு முரைவழங் கிடுமென் றந்த மன்னவர் தமக்குரைத் தபூஜகில் கேட்டான். | 2.7.12 | 431 |
மாறு கொண்டகு மதுநடத் திடும்வர லாற்றை வேறு கொண்டபூ ஜகில்விளம் பியமொழி யனைத்துங் கூறு கொண்டவர் சிந்தையிற் பலபல குறித்து வீறு கொண்டொரு மொழிப்பட வெதிர்விளம் புவரால். | 2.7.13 | 432 |
உரைத்த வாசக நன்குன துறுமொழிக் கெதிராய்த் திருத்தி வேறுரை பகரவல் லவரெவர் திறலோய் விரித்து மேலுரை பகரவு நமர்குலம் விளங்கப் பொருத்த வும்நினை யலதுவே றிலைசெழும் புவிக்கே. | 2.7.14 | 433 |
சிதைவி லாமனத் திறல்வலிச் செயலினுக் கேற்ற மதிவ லோமியா மலமின நும்மதிக் கியையப் புதிய சூழ்ச்சியொன் றுரைத்தியே லெங்கள்புந் தியிற்கும் விதிய தாமவை நடத்துக வெனவுரை விரித்தார். | 2.7.15 | 434 |
உற்ற செய்திக ளனைத்தையு மோர்ந்துணர்ந் துரவோர் வெற்றி வாண்முக நோக்கிவெவ் வினைமுகம் மதுவைப் பற்ற றாக்கொலை படுத்திட னமரொடு பரிவின் முற்று மிந்நகர்ப் படைகொடு முடித்திட லரிதே. | 2.7.16 | 435 |
வஞ்ச னைத்தொழி லினின்முகம் மதினொடும் வாதா விஞ்சை கற்றவ ராயிர ரெதிரினும் விளையா தஞ்ச லாதுரு வேற்றிடி லேறுரு வனைத்து நஞ்ச மாம்நம துயிரினைக் செகுத்திட நடக்கும். | 2.7.17 | 436 |
வன்ம திட்புறத் தாலயத் துறைந்ததே வதத்தை யென்ம னக்குறை தவிர்த்திடர் தவிர்த்தியென் றிசைக்கி னன்மை யாயுரைத் திடுவதோ நமர்குலப் பவத்தாற் றின்மை யாயுரைத் திடுவதோ வெனத்தெரி கிலமால். | 2.7.18 | 437 |
ஆய்ந்து ணர்ந்துளத் தெண்ணிய காரிய மனைத்துந் தேய்ந்த தல்லது தேறிய தெருட்சிய தன்றே வாய்ந்த புந்தியொன் றுளதினந் தௌிந்திடு மதிப்பாய்க் காய்ந்த செங்கதிர் வேல்வல னேந்திய கரத்தீர். | 2.7.19 | 438 |
உரனி னம்பெருங் குலத்தினி லரசரி னுயர்ந்தோன் மரைம லர்த்தடஞ் சூழ்திமஷ் கதிபதி மாலிக் கருள்ஹ பீபெனு மரசனுக் கறிந்திட வுரைத்து விரைவி னம்பெரும் பகையினைத் துடைத்திடல் வேண்டும். | 2.7.20 | 439 |
ஈத லாற்பிறி திலையென அபூஜகி லிசைப்ப வாத ரத்துடன் கேட்டவ ரனைவரு மகத்திற் கோத றத்தௌிந் திம்மொழி நன்கெனக் குறித்து மாதி ரப்புயம் வீங்கிட மகிழ்ந்துசம் மதித்தார். | 2.7.21 | 440 |
மாந்த ரியாவரு மொருப்பட வெழுந்தொரு மருங்கிற் போந்தி ருந்துநல் லறிவினிற் கேள்வியிற் புகழிற் சார்ந்த வுத்தரப் பிரத்தியுத் தரத்திவன் றனைப்போ லாய்ந்த பேரிலை யெனவொரு வனைக்குறித் தழைத்தார். | 2.7.22 | 441 |
பத்தி ரம்மிவன் வரைந்திடிற் காரியம் பலிக்கும் புத்தி யிற்றிறத் தவனிவ னெனப்பல புகழ்ந்து முத்தி ரைப்பட முறையொடுந் தேர்ந்தியா மொழிந்த வுத்த ரந்தனை வரைகென யாவரு முரைத்தார். | 2.7.23 | 442 |
காசி லாதுரை வரைபவன் கேட்டுளங் களித்து மாசி லாப்பெருந் தலைவரைத் தாழ்ந்துற வாழ்த்திச் சூசி யுங்கடு தாசியு மெடுத்துமை தோய்த்துப் பாசு ரந்தனை யுரைமின்க ளெனுமுரை பகர்ந்தான். | 2.7.24 | 443 |
எழுது கின்றன னென்றது மவனிருந் ததுவும் பழுதி லாதிற்றை முகுர்த்தமு நிமித்தமும் பார்க்கின் முழுதும் வெற்றியே யலதிட ரிலையென முதலோர் தொழுது புத்தினைப் புகழ்ந்துவக் கணைதொகுத் துரைப்பார். | 2.7.25 | 444 |
ஆதி நூலுரை தெரிதரு ஹபீபர சறிக வோது நன்னெறி மக்கமா நகரினி லுறைந்த சாதி யோர்களுந் தலைவரு மபூஜகில் தானுங் கோதி லாதவிண் ணப்பமென் றிருகரங் குவித்தே. | 2.7.26 | 445 |
குபலு றைந்தநற் றலத்தினில் ஹாஷிமா குலத்தி லபுதுல் லாவயி னவதரித் தாமினா மகவாய்த் தவமி லாமுகம் மதுவெனும் பெயரினைத் தரித்துப் புவியி கழ்ந்திடப் பிறந்திருந் தன்னொடு புதியோன். | 2.7.27 | 446 |
சலதி யூடுறை கொடுவிட மெனத்தலை யெடுத்திட் டுலைவொ டன்னையுந் தந்தையு மிழந்தொரு தனியா யலகி லாதவஞ் சனைவிதத் தொழில்படித் ததனால் விலகு தற்கரி தாகிய மாயங்கள் விளைத்தான். | 2.7.28 | 447 |
அந்த நாட்குவை லிதுமக ளரசெனு மயிலைப் பிந்தி டாமண முடித்தன னவர்பெரும் பொருளாற் சிந்தை யிற்கரு விதத்தொடு மதத்தொடுஞ் சிலநா ளெந்த மன்னவர் தம்மையு மாசரித் திணங்கான். | 2.7.29 | 448 |
ஆண்டு நாற்பது சென்றபி னவனியி லெவருந் தூண்டி டாப்பெருங் கோட்டிக டொடுத்தவன் றுணிவாய்க் காண்ட காவிறை யொருவனுண் டெனுமொழி கணித்து மீண்டு மன்னவன் றூதனியா னெனுமுரை விரித்தான். | 2.7.30 | 449 |
தூத னியானெனக் காதிதன் றூய்மொழி புறுக்கான் வேத மொன்றிறங் கிற்றெனப் பலரொடும் விரித்தான் பூத லத்திலெவ் விடத்தினுஞ் சிரந்தரை புரள வீத லானெறி யிலையென விழுந்தெழுந் திடுவான். | 2.7.31 | 450 |
எனக்கு றுங்கலி மாவுரை தனக்கியை யாதான் றனக்கே ரிந்திடு நரகமென் றிசைத்தவன் றனக்குக் கனக்க மேம்படு மவர்கடாங் கனகநன் னாட்டின் மனைக்குள் வாழ்குவர் சரதமென் றுரைவழங் குவனால். | 2.7.32 | 451 |
தேறி லாதகட் டுரையினிற் புதுநெறி திருத்தி மாறு பட்டவ ரெவரையுந் தன்வசப் படுத்தி வீறு கொண்டநம் வேத மனைத்தையும் விழலா யேறு மாறுகொண் டிரும்புகல் லெனவிகழ்ந் திடுவான். | 2.7.33 | 452 |
ஆல யங்களைக் காண்டொறுங் கண்புதைத் தகல்வன் மேலை யோர்செயும் வணக்கங்க ளனைத்தையும் வெறுப்பன் பாலை நேர்மறைக் குருக்களைத் தினம்பழித் திடுவன் சால வும்மனப் பெருமையிற் கிளையொடுஞ் சாரான். | 2.7.34 | 453 |
அகில மீதுறை யரசர்க ளெவரையு மடிக்கீழ்ப் புகவி டுத்துவ னென்பது சரதமாய்ப் புகலவன் பகும னத்தறி வினிற்றௌி வினிற்பல நெறியி லிகலி யென்னுட னெதிர்ப்பவ ரிலையென விசைப்பன். | 2.7.35 | 454 |
வாதி யாயித லாற்சில வாய்க்கொளா வசனங் காதி னாற்கொளப் படுவதன் றிழிந்தகட் டுரையை யோதி யோலையிற் தீட்டவு முடிவதன் றுடையோன் றூத னியானென வுரைத்தவ னுரைத்திடுந் துணிவே. | 2.7.36 | 455 |
மறந்த வழ்ந்திடு முகம்மது விரித்தசொன் மனுவாய்ப் பிறந்த வர்க்கிடர் வடுவலாற் பெறுபய னிலையா லறந்த ழைத்திடுந் தலத்துறை யறபிக ளெவரு மிறந்தி டாவயி ராய்த்தலை கவிழ்ந்திவ ணிருந்தோம். | 2.7.37 | 456 |
இந்த வாசக மறிந்திவ ணிடத்தெழுந் தருளி வந்து பார்த்திடின் முகம்மது மாயவஞ் சனையும் விந்தை யேற்றுரு மந்திரச் சூழ்ச்சியும் வீறுஞ் சிந்தி நங்கிளை யவர்மனத் துன்பமுஞ் சிதையும். | 2.7.38 | 457 |
இனைய பாசுர மனைத்தையும் விரித்தெடுத் திசைத்து வனையும் வார்கழ லறபிக ளனைவரும் வகுத்தார் தினையி னவ்வள வென்னினுஞ் சிதைவிலா வண்ண நினைவி னேர்வழி தொடுத்தெழு தினன்வரி நிரைத்தே. | 2.7.39 | 458 |
எழுது பத்திரந் தனைமடித் திலங்குபட் டதனான் முழுதி னும்பொதிந் திருவயின் முத்திரை பதித்துக் குழுவி லாய்ந்தொரு விரைவினன் கரத்தினிற் கொடுப்பத் தொழுது வாங்கினான் காலினுங் காலினிற் றொடர்வான். | 2.7.40 | 459 |
எடுத்த முத்திரைப் பத்திரஞ் சிரமிசை யேற்றிக் கொடுத்த மன்னரைப் பணிந்துகொண் டறபிகள் குழுவை விடுத்து வீதிநன் னிமித்தமெய் திடவிரை வுடனே தடத்து கிற்கொடி நுடங்கிய மதிட்புறஞ் சார்ந்தான். | 2.7.41 | 460 |
கரட முகம்மதக் கரிநிகர் துறையபுல் காசீ மிரவ லர்க்களித் தவனிரு நிதிபெரு கினபோன் மரும லர்த்தட வாவியுங் கழனியும் வழிதேன் முருகொ டுங்கனி தரும்பொழி லனைத்துமுன் னினனால். | 2.7.42 | 461 |
குன்றுங் கானமு மடவியு நதிகளுங் குறுகிக் கன்று மென்மயிர்க் கவரியுந் திரிவனங் கடந்து வென்றி வெய்யவன் கதிரினு மனத்தினும் விரைவா யென்றும் பூமகள் பொருந்திய திமஷ்கினை யெதிர்ந்தான். | 2.7.43 | 462 |
மின்னெ னக்கதிர் தருமணி குயிற்றிவெண் கதையாற் றென்னு லாவிய மேனிலை மாடமுஞ் செறிந்த பொன்னி னன்கதிர் குலவிய கொடிகளும் பொருவாக் கன்னி மாமதிட் புரிசையுந் திமஷ்கையுங் கண்டான். | 2.7.44 | 463 |
திரையெ டுத்தெறிந் திரைதரு கடலினுஞ் செழித்து விரைக மழ்ந்தமென் குவளையும் வனசமு மேவிக் கரைத தும்பிய சீகரத் தகழினைக் கடந்து புரிசை வாயிலுங் கடந்தரும் பெரும்பதி புகுந்தான். | 2.7.45 | 464 |
நிரைகொ ணித்திலத் தாவண வீதியு நிமிர்ந்த வரையெ னத்திகழ் மண்டப மறுகையுங் கடந்து பரக திப்பரி கரியொடு படைக்கலம் பரப்பி யரசு தங்கிய கோயிலின் வாயிலி னானான். | 2.7.46 | 465 |
மெய்யின் வேண்டுகிற் கஞ்சுகி யணிந்தடல் விளைந்த கையின் வேத்திர மேந்திய வாயில்கா வலரை யையு றாதடுத் தவரொடும் வரவெடுத் தறைந்தான் றுய்ய நன்னினை வகற்றிய அபூஜகில் தூதன். | 2.7.47 | 466 |
வந்த தூதுவ னுரைத்தலும் வாயிற்கா வலவர் பிந்திடாதெழுந் தெண்ணரும் படைக்கலம் பிறங்கத் தந்தி ராதிபர் மந்திரத் தலைவர்சொற் றண்வாச் சிந்தை யன்ஹபீ பெனுமட லரசன்முன் சென்றார். | 2.7.48 | 467 |
போற்றி நின்றுகும் பிட்டணி யொதுக்கிவாய் புதைத்துத் தூற்று தேம்பொழின் மக்கமா நகரவர் தூதன் மாற்ற ருங்கதிர் வாயிலில் வந்தன னெனுஞ்சொற் சாற்றி னார்செழும் பொன்மழைக் கரதலன் றனக்கே. | 2.7.49 | 468 |
கரைகொ ளாப்பெருஞ் சேனையங் கடனடுக் கடிதின் வரவி டுத்துக வென்றலும் வாயில்கா வலவர் விரைவி னேகியத் தூதனை விளித்துமின் னணிபூ ணரசர் நாயகன் றிருமுன மழைத்துவந் தனரால். | 2.7.50 | 469 |
எதிர்ந்த தூதுவன் றரையினிற் றெண்டனிட் டெழுந்து முதிர்ந்த பேரவை யரசனை முறைமுறை பணிந்து பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத் திரத்தைப் பொதிந்த மென்றுகி லொடுந்திறற் புரவலற் கீய்ந்தான். | 2.7.51 | 470 |
ஈய்ந்த முத்திரைப் பத்திர மதனையோ ரிளவல் வாய்ந்த செங்கரத் தேந்திமுத் திரைத்துகில் வாங்கி யாய்ந்த பாசுர மனைத்தையுந் தெரிதர வணியாய்ச் சாய்ந்தி டாதபொன் மணிமுடி யவர்க்குரைத் தனனே. | 2.7.52 | 471 |
வனைந்த பாசுர மனைத்தையும் வரன்முறை கேட்டுச் சினந்த யங்குவே லவன்மன முறச்சிரந் தூக்கி யினந்த னிற்பெரி யவர்மறை யவர்க்கெடுத் தியம்பிப் புனைந்த பொன்முடி மண்டப மாளிகை புகுந்தான். | 2.7.53 | 472 |
தனித்தி ருந்தொரு மண்டபத் தரசர்க டமையு நினைத்த சூழ்ச்சியை யுரைதரு நிருபர்க டமையு மனத்தி னின்புற வழைத்தரு கிருத்திமும் மறையின் றொனித்த செய்தியு நிகழ்ந்ததுந் தொகுத்தெடுத் துரைத்தான். | 2.7.54 | 473 |
அரசன் சொற்றவை கேட்டவ ரனைவருந் தௌிந்து புரிசை சூழ்தரு மக்கமா நகரியிற் புதுமை விரைவிற் காண்குவ துண்டெனச் சூழ்ச்சியின் விரித்தார் மரைம லர்த்தடஞ் சூழ்தரு திமஷ்குமன் னனுக்கே. | 2.7.55 | 474 |
கேட்டு மன்னவ னன்கெனக் கிளரொளி வடிவாட் பூட்டுந் திண்கர வீரரு மடற்புர விகளுங் கோட்டு வாரணத் தொகுதியு மரசர்கள் குழுவு மீட்டு மிற்றையி லெழும்புற விடுதியி லென்றான். | 2.7.56 | 475 |
வேறு நிருபர்கோ னெழுக வென்ன நிகழ்த்தமந் திரத்தின் மிக்கார் புரவியுந் தறுக ணால்வாய்ப் புகர்முகக் களிறுந் தேரு மரசரும் வருக வென்ன வணிமணிக் கனக மாடத் தெருவினு நகர முற்றுஞ் செழுமுர சறைவித் திட்டார். | 2.7.57 | 476 |
முரசதி ரோதை கேட்டு முரண்மற முதிர்ந்து வெற்றி மருமலி வாகை தாங்கு மன்னவர் திரளிற் கூண்டு திருநகர்ப் புறத்துங் கோயிற் றெருவினுஞ் செறிந்து தூளி பருதியும் விசும்புந் தூர்ப்பப் படைக்கலம் பரப்பி வந்தார். | 2.7.58 | 477 |
சேனையிற் றிரளிற் செம்பொற் செழுங்கொடி நுடங்க வெற்றி வானதி ரசனி யொப்ப மதகரி முரச மார்ப்பக் கானமர் கூந்தற் செவ்வாய்க் கடுவடர் கொடிய வாட்கட் டேனிதழ் மடவார் சூழச் சீயமொத் தெழுந்தா னன்றே. | 2.7.59 | 478 |
திக்கடங் காத வெற்றித் திறற்படை ஹபீபு வேந்த னொக்கலின் புறப்ப தாதி யுவர்க்கடல் கடுப்பப் பொங்கித் திக்கிரு நான்குந் தூது செலத்துக ளமரர் போற்று மக்கமா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ. | 2.7.60 | 479 |
வண்டுக ளுண்டு பாட மணிச்சிறை மயில்க ளாடக் கொண்டல்கண் டூங்குஞ் செந்தேன் கொழுங்கனி குழைபைங் காவு முண்டகத் தடமுஞ் செவ்வி முருகவிழ் கழனிக் காடுந் தெண்டிரை பரந்த தென்னத் திரட்படை படர்ந்த தன்றே. | 2.7.61 | 480 |
வரிவளைக் குலத்தின் குப்பை வாசியின் குரத்திற் றாக்கி விரிகதிர்த் தரளஞ் சிந்தும் விளைநிலங் கடந்து செந்தே னருவிகள் வரையிற் செம்போ னணிவடம் புரள்வ போல நிரைநிரை செறிந்து தோன்று நெடுமுடிக் குறிஞ்சி சார்ந்தார். | 2.7.62 | 481 |
கண்விரித் தனைய தூவிக் கலாபமா மயிலுங் கீதப் பண்விரித் தென்னப் பேசுந் தத்தையும் பறவை யாவும் விண்படர்ந் திரியச் செந்தேன் விளைதருப் படிந்து தோன்றா மண்பட நெரியத் தாவும் விலங்கின மலைய வந்தார். | 2.7.63 | 482 |
வரிப்புலிக் குழுவு மாறா மதகரித் திரளுஞ் செங்கட் டிருக்கறத் திசைக ணோக்குஞ் சீயமும் வெருவி யோடிப் பொருப்புறைந் தொதுங்கித் தென்றாற் புரவலன் சேனை வீரர் விருப்புறும் வீரத் தன்மை யாவரே விரிக்கற் பாலார். | 2.7.64 | 483 |
நெடுவரைக் குறிஞ்சி நீந்தி நிரைதொறு புகுதச் சேர்த்தி யிடுகுறு நுனைமுள் வேலி யிடையர்தம் பாடி யேங்கப் படர்கொடி நுடங்கு முல்லைப் பரப்பையு நீந்தி யீந்தி னடவிகள் புடையிற் றோன்று மறபுநாட் டகத்திற் புக்கார். | 2.7.65 | 484 |
மதிதவழ் குடுமி மாட மக்கமா நகர மென்னும் பதியினுக் கடுப்ப மற்றோர் பாடியி னிழிந்து பாயுஞ் சதிகதிப் பரியு நீண்ட தடக்கைமா கரியும் பொங்கக் கதிரயின் மன்ன ரீண்ட ஹபீபர சிருந்தா னிப்பால். | 2.7.66 | 485 |
மைக்கருங் கவிகை வள்ளன் முகம்மதுக் குதவி யாகத் தக்கவ னருளாற் செம்பொற் றலத்தினும் பாரிற் றோன்றுந் திக்கினுங் கதிர்கு லாவுஞ் செழுஞ்சிறைத் தடங்கட் செவ்வி மிக்குயர் வடிவ தாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார். | 2.7.67 | 486 |
ஆயிரஞ் சிறையு மொவ்வா வாயிரஞ் சிரசு மாயீ ராயிரம் விழியுந் தோன்ற வாயிர முகமு மாகி யாயிர நாவி னாலு மகுமதே யென்னக் கூவி யாயிரம் பெயரி னான்றன் சலாமென வருளிச் செய்தார். | 2.7.68 | 487 |
விரைவினிற் சலமென் றோது மொழிவழி விசும்பை நோக்கிக் கரையிலா வடிவு தோன்றுங் காரணங் கண்டி யாரோ தெரிகில மென்ன வுள்ளந் தெருமந்து வருத்த முற்றார். மரையிதழ் வனப்பு மொவ்வா மலர்ப்பத முகம்ம தன்றே. | 2.7.69 | 488 |
குரிசிறன் னுளத்தி னச்சஞ் ஜிபுறயீல் குறித்துப் பின்னும் வரிசையின் விழித்துச் சோதி முகம்மதே வருந்தன் மேலோன் பரிவுட னும்பால் வெற்றிப் பதவிக ளளித்த தியாவுந் தெரிதரக் கேண்மி னென்னச் செய்யவாய் திறந்து சொல்வார். | 2.7.70 | 489 |
வானுல கினினீ ராடை மண்ணுல கினில்வெண் டிங்கள் பானுவி னரிதா யுள்ள படைப்பினி லெவைக்கு மேலா மீனமின் முகம்ம தைப்போ லிலையென வரிசை மேலுந் தானவன் பெருமை மேலு மாணையிற் சாற்றி னானால். | 2.7.71 | 490 |
செந்நெலங் கழனி சூழுந் திமஷ்கினின் ஹபீபு வேந்தன் பொன்னணிப் புரோசை நால்வாய்க் களிறொடும் புரவி யோடு மிந்நகர்ப் புறத்திற் சார்ந்தங் கிருந்தன னதனால் தீனின் மன்னவ துன்ப மென்ப வருவதொன் றில்லை யன்றே. | 2.7.72 | 491 |
கடற்படு நிலத்தி லில்லாக் காரணங் களைஹ பீபு தொடுத்துரைத் திடுவன் கேட்டு மகிழ்ச்சியிற் றுவாச்செய் வீரா லடுத்திருந் தவர்க்குந் தூரத் தவர்க்குங்கண் டறிய வல்லே படைப்புள தெவைக்குந் தோன்றப் பலித்திடுங் கடிதின் மாதோ. | 2.7.73 | 492 |
உடற்றசை திரண்ட தல்லா லுறுப்பொன்று மிலதாய்ப் பின்னோர் மடக்கொடி தனைக்கொ ணந்தான் வடிவுசெய் திடுமி னென்னத் துடக்குறக் கேட்பன் கேட்கு முரைப்படி துஆச்செய் வீராற் கடற்படு புவிக்குட் காணாக் காரணந் தோன்று மாதோ. | 2.7.74 | 493 |
வாட்படைத் திமஷ்கு வேந்தன் மறையுணர் தௌிவா லெண்ணிக் கேட்பதெவ் வழிக்கு நுந்தங் கிளரொளித் திருவாய் விண்டு கோட்பட வுரையு மென்ன ஜிபுறயீல் கூறி னார்தேந் தோட்படு மரவ மாலை துலங்கிய குரிசிற் கன்றே. | 2.7.75 | 494 |
அமரர்கோ னினைய மாற்ற மாதிதன் பருமான் மேற்கொண் டிமைநொடிப் பொழுதிற் றோன்றி யியம்பிய திணங்கா ரான திமிரவெம் பகைக்குத் தோன்றுந் தினகர னாகப் பூத்த கமலவொண் வதனச் செவ்வி முகம்மது களிப்புக் கொண்டார் | 2.7.76 | 495 |
என்னுயிர்த் துணைவ ரான ஜிபுறயீ லிருகண் ணார முன்னுறு கோலம் போல முகத்தெதிர் நிற்பப் பேதந் தன்னைமாற் றுகவென் றாதி தன்னுட னிரந்து நின்றார் மன்னிய ஜிபுற யீலு மறுத்துமுன் வடிவம் போன்றார். | 2.7.77 | 496 |
அவிரொளி ஜபுற யீல்முன் வடிவெடுத் தடுத்துப் பேசிப் புவியினின் றகல்வான் புக்கார் பொருந்தல ருயிரை மாந்திக் கவினுறு நெடுவே லேந்துங் கரதல முகம்ம தென்னு நபியினி திருந்தா ரிப்பா னடந்தவா றெடுத்துச் சொல்வாம். | 2.7.78 | 497 |
மறுகிவெள் ளெகினஞ் சிந்த வரிவராற் றாவும் வாவி செறிதிமஷ் கிறைவன் செல்வத் திருநக ரடுத்த சீறூர்ப் புறனிடத் துறைந்தா னென்னப் பொருவருந் தடக்கை வெள்வே லறபிகட் குறைத்தார் தூத ரபூஜகி லறிய வன்றே. | 2.7.79 | 498 |
கவனவாம் பரியு நால்வாய்க் கரியுடன் ஹபீபு வேந்த னிவணில்வந் தடைந்தா னென்ன அபூஜகி லிணைத்தோள் வீங்கி யவிர்கதிர்க் கலன்க டாங்கி யகுமதை வெல்வேன் மேலும் புவனியி லெதிரியா ரென்னப் புதுமதிக் களிப்புப் பூத்தான். | 2.7.80 | 499 |
நிகரரும் பதிக்குட் செவ்வி நெடுந்தெரு வனைத்துந் தூதைப் புகவிடுத் தறிவிற் றேர்ந்த புரவலர் தம்மைக் கூவி முகிலுறை கனக மாட முன்றிலி னிருத்திச் சேர்ந்த தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை யெடுத்துச் சொன்னான். | 2.7.81 | 500 |
நெறிகுலஞ் சமயஞ் சாயா நிறுத்திட வந்த வேந்தைத் திறைகொடு பணிந்து வேறோர் திருமனை யிடத்திற் சேர்த்தி மறுவறும் படிகுற் றேவல் வகுத்தவை நடத்தப் போதல் பொறியென வெவர்க்குஞ் சொன்னான் பொறியறிந் துரைக்க லானே. | 2.7.82 | 501 |
மனமதிக் குறியன் கூறும் வசனங்கேட் டறபி மன்ன ரனைவரு மிதுநன் கென்ன வகத்தினிற் கொண்டு வேறோர் புனைகதிர் விடுதி மாடம் புதியதொன் றியற்றிச் செம்பொற் கனைகழ லரசைக் சேர்த்திக் கவல்வது கரும மென்றார். | 2.7.83 | 502 |
மரவினை யவர்க்குஞ் சிற்ப மறுவறு தொழிலி னோர்க்குந் திரகம தளித்துச் செவ்விச் செழுமடிக் கனக மாட நிரைநிரை யியற்றிச் சுற்று நெடுமதி றிருத்தி வாயில் விரிகதிர்க் கபாடஞ் சேர்த்தி வீதிகள் பலவுஞ் செய்தார். | 2.7.84 | 503 |
பந்தரிட் டலர்க ணாற்றிப் பருமணிக் கலன்க டூக்கிச் சந்தனம் பனிநீர் சிந்தித் தரைமெழுக் கெறிந்து சோதி யந்தரத் துடுவின் கூட்ட மனைத்தும்வந் தடைந்த தென்னச் சிந்துவெண் டரள ராசி செறித்தலங் காரஞ் செய்தார். | 2.7.85 | 504 |
கண்படைத் தவர்க ளியாருங் கண்டதி சயிப்பக் காந்தி விண்படர் மாட வாயின் வௌியினிற் படங்கு கோட்டிப் பண்பட ரிசையின் வாய்ந்த பழக்குலைக் கதலி நாட்டி மண்பட ருலகி னில்லா வளம்பல செய்வித் தாரால். | 2.7.86 | 505 |
மேதினித் துறக்க மென்ன விடுதிக ளியற்றி யோதும் வேதியர் குழுவும் வெள்வேல் வீரர்க டலைவ ரோடு மேதமில் திமஷ்கில் வாழு மிறைவனை யெதிரிற் காணக் காதலித் தினத்தி னோடு மபூஜகில் கடிதிற் போனான். | 2.7.87 | 506 |
மாலமர் நகர மாக்க ளபூஜகில் மரபி னோடு நால்வகைப் பதாதி சூழ நனிபல திறைக ளீய்ந்து நீலவா ருதியே யன்ன நெடும்படைக் கடலி னாப்பண் காலைவெங் கதிரிற் றோன்றும் ஹபீபெனு மரசைக் கண்டார். | 2.7.88 | 507 |
கண்டுகண் குளிர நோக்கிக் கரஞ்சிரங் குவித்துக் கான வண்டம ரலங்கற் றிண்டோண் மன்னவர் மருங்கு நிற்பத் தெண்டிரைப் புவனங் காக்குந் திறல்வலி யரசர் கோமான் விண்டநல் லுரையி னோடு மிருகமென விரைவிற் சொன்னான். | 2.7.89 | 508 |
போதலர் கழனி சூழ்ந்த திமஷ்கினைப் புரந்த வேந்துங் கோதறு மக்க மென்னுங் கொழும்பதித் தலைவ மாரு மாதரத் துடனு மொன்றா யளவளா மகிழ்ச்சி பொங்கிப் பேதமின் மனத்த ராகிப் பிரியமுற் றெழுந்தா ரன்றே. | 2.7.90 | 509 |
குரகதத் திரளி னோடுங் கொலைமதக் கரியி னோடும் விரிகதி ரெஃகங் கூர்வாள் வில்லுடைத் தலைவ ரோடு மருமலர்ச் சோலை சூழு மக்கமா நகரஞ் சேர்ந்து புரவலர்க் கரியே றன்னான் புதியமண் டபத்திற் புக்கான். | 2.7.91 | 510 |
செய்யவா யொளிவெண் மூரற் சிறுநுதற் பெரிய கண்ணாற் கையின்வெண் ணிலவின் காந்திக் கவரிகா லசைப்ப நீண்ட வையக முழுதுங் காக்கு மணிக்குடை நிழற்ற வெற்றி வெய்யவ னிருந்த தென்ன் விருந்தனன திமஷ்கு வேந்தன். | 2.7.92 |
511 |
தவிசினி லிருந்து வெற்றித் தடமுடி யரசர் கோமா னபுஜகில் தன்னைக் கூவி யணிநகர்க் கழைத்த மாற்றங் கவரற மனத்தி னுற்ற கருமங்க ளனைத்து நாளுங் குபலினை மனத்திற் கொண்டோய் கூறெனக் கூறி னானால். | 2.8.1 | 512 |
ஒலிதுத்து பாவு மாறா வுக்குபா வுமையா சைபா மலிதருங் கொடுமை பூண்ட மனத்தபூ ஜகிலு மொன்றாய் நலிதலி லெழுந்து போற்றி நமர்க்கல ருற்ற யாவு மலர்தலை யுலகம் போற்று மரசுகேட் டருள்க வென்றார். | 2.8.2 | 513 |
முகம்மதென் றொருத்தன் றோன்றி வணக்கமு நெறியு மிந்த வகலிடந் தோன்றத் தோன்று மாலய முழுது முன்னோர் புகலுநன் மறையுஞ் சூழ்ந்த பொருவருங் குலமு மற்று மிகலொடுங் கெடுத்து நின்றா னிவையிவண் விளைந்த தையா. | 2.8.3 | 514 |
அகலிடம் விளக்குஞ் செங்கோ லணிமணித் தீப மேநேர் புகலுமும் மறையுந் தேர்ந்த புந்தியிற் கடலே நாளு மிகலுடை யரசர்க் கெல்லா மெதிரிடி யேறே வானுஞ் சகமுமெண் டிசையுந் திக்கும் வெண்புகழ் தடவும் வேந்தே. | 2.8.4 | 515 |
மறுவற வுலகி னில்லா வயதொரு நூற்றின் மேலு மறுபது மிருந்தோய் நுந்த மறிவினா லறியா தில்லைச் சிறியவ ருரைத்த தல்லாற் செவியினுந் தெரிவ தாகுங் கறையற விற்றைப் போதிற் கண்ணினுங் காண்பி ரென்றார். | 2.8.5 | 516 |
ஓலையுத் தரமு மியாங்க ளுரைத்தது முகம்ம தென்போன் பாலினின் முரணி னூறு பங்கினி லொன்றுங் காணா தோலிடுங் கடன்மாச் சேனை யுரவவென் றுரைப்ப மூன்று காலமுந் தெரிந்து நோக்குங் காவலன் செவியிற் கொண்டான். | 2.8.6 | 517 |
உரைத்தவிவ் வசன மெல்லா முள்ளுறப் பொருத்தி நாளை வரைத்தடப் புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம் பொருத்தறப் புகன்ற செய்தி யறிகுவ மிற்றைப் போதிற் றிருத்தகு மனையின் கண்ணே யாவருஞ் செல்க வென்றான். | 2.8.7 | 518 |
அரசுரை கேட்டு வீர ரவரவர் மனையிற் சார்ந்தார் கரைதிரை புரட்டு மேலைக் கடலிடைக் கனலி சார்ந்தா னிரவினைப் பகலைச் செய்யு மெழின்மணித் தவிசின் மீதிற் குரவர்கண் விழிப்ப வோசைக் குணகடல் வெளுத்த தன்றே. | 2.8.8 | 519 |
விடிந்தபி னவனிப் பொன்னா டெனும்விறற் பதியின் வீர ரிடந்தரு திமஷ்கின் வேந்தைக் காண்பதற் கெழுந்தார் வெற்றிப் படர்ந்தரு கொடியிற் றூண்டும் பகைப்பெருங் கடலைக் கையாற் கடந்தவே லபித்தா லீபு கலன்பல வணிவ தானார். | 2.8.9 | 520 |
வையகம் புரந்து தீனை வளர்த்திடு மிபுறா கீந்தங் கையொலி யலைச்செங் கையா லரையினிற் கவினச் சேர்த்தித் துய்யவன் றூதர் முன்னந் தோன்றிய ஆத மென்போர் மெய்யணி குப்பா யத்தை வியன்பெற மெய்யிற் சேர்த்தான். | 2.8.10 | 521 |
கருவிமென் மிடற்றிற் றீண்டாக் காரண ரிசுமா யீல்தஞ் சருவந்து சிரசிற் சேர்த்தித் தாரணி தனிற்பொன் னாட்டு மருமலர்ப் புயத்திற் றாங்கி வளர்நபி சீது மெய்யிற் றருகதி ருத்த ரீயந் தனையெடுத் தணிந்தா ரன்றே. | 2.8.11 | 522 |
சூலினைத் தரித்த கொண்டற் சுகைபுநன் னபிதஞ் செம்பொற் காலிணைக் கபுசை வீரக் கழலடி பொருந்தச் சேர்த்திக் சாலவுங் குலத்து முன்னோர் தரித்திடுங் கலன்க டாங்கி வேலினைக் கரத்தி லேந்தி வீரவாண் மருங்கு சேர்த்தார். | 2.8.12 | 523 |
தனக்குறுங் குலத்தி லாய்ந்த தலைவரின் முதியார் பாரிற் சினக்கதிர் வேற்கை கொண்ட செல்வர்நாற் பதின்மர் தம்மைக் கனக்குற மருங்கு கூட்டிக் காவல ரபித்தா லீபு வனக்கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட் டாரால். | 2.8.13 | 524 |
வேறு மாதிர மெனக்கனக மண்டப நெருங்கும் வீதியிடை புக்குவிறன் மன்னர்புடை சூழக் கோதறு மறக்கொடு வரிக்குழுவி னாப்ப ணேதமற வந்தவரி யேறென நடந்தார். | 2.8.14 | 525 |
நித்தில நிரைத்துமலர் நீடொடைய னாற்றிப் புத்தரி சொழுக்குமுயர் பந்தரிடை புக்குச் சித்திர விறற்குரிசில் செவ்வியழி யாத மத்தகரி யைத்திமஷ்கு மன்னையெதிற் கண்டார். | 2.8.15 | 526 |
கங்கமுல வுங்கதி ரயிற்கடவு டன்னை மங்குலக லொண்கதிர் மணிக்கடக மின்ன வங்கையிணை தொட்டினி தழைத்தரு கிருத்தி யிங்கித மொடுந்திமஷ்கி னுக்கிறை யிருந்தான். | 2.8.16 | 527 |
மூரியட லேறபுதுல் முத்தலிபு மைந்தர் மாரிபொரு வாதகர மன்னவனை நோக்கித் தேருமதி யாற்பல தெரிந்தபுக ழோடு மாரமுத மானசில நன்மொழி யறைந்தார். | 2.8.17 | 528 |
ஓதுநெறி நீதியபித் தாலிபுரை கேட்டுச் சீதமதி போலுமொளிர் செம்முக மிலங்க வாதரவி னோடுமகிழ் வின்சிர மசைத்துச் சோதிமதிள் சூழ்திமஷ்கி னுக்கிறைசொல் வானால். | 2.8.18 | 529 |
இந்நகரி யிற்றலைவ ரியாவரினு மிக்கோய் மன்னுகிளை யிற்பகை வரத்தவிர்தல் செய்யா தன்னவர் துணிந்தவை துணிந்தனை யறத்தோ ருன்னவு மிழுக்கென வுளத்திலிவை கொள்ளார். | 2.8.19 | 530 |
சீலமறி யாதசிறி யோர்கள்பிழை செய்யின் மேலவர்கள் கண்டவை விலக்கல்கட னல்லாற் கோலிய பெரும்பகை குலத்தினில் விளைத்த மாலுற வளர்த்தன்மட மைத்தகைமை யாமால். | 2.8.20 | 531 |
ஆதியொரு வன்றனிய ணுண்டெனவ வன்றன் றூதனபி யானளவில் சோதியுரை யான வேதமென தின்சொலென விஞ்சையின் விளைத்த பேதமொழி வஞ்சமொடு பேசு வது மன்றே. | 2.8.21 | 532 |
மாறுபக ரற்கரிய மக்கநக ரத்திற் றேறுமறை மன்னவர் செழுங்குறைஷி மன்னர் கூறுவதி லொன்றுபடி றின்றுகுல முற்றும் வேறுபடல் வேதவிதி யன்றுபுகழ் மிக்கோய். | 2.8.22 | 533 |
காரண நினைத்தவர் கருத்துற முடித்திப் பாரிலிறை தூதுவ ரெனப்பகர்தல் வேண்டும் வேருமொரு தூருமிலை யென்பதொரு விஞ்சை யார்வமொடு கொண்டுநபி யென்பதியல் பன்றே. | 2.8.23 | 534 |
நன்றிவை யறிந்திடுவ துண்டுநபி தம்மை யின்றவை யிடத்தினி லழைத்திடுக வென்ன வென்றிவிறல் சேருமபித் தாலிபை விளித்து மன்றல்கம ழுந்திமஷ்கு மன்னவ னுரைத்தான். | 2.8.24 | 535 |
மந்தர மதிற்றிமஷ்கு மன்னவ னுரைப்பச் சிந்தைகளி கொண்டபுதுல் முத்தலிபு செல்வ ரிந்தமொழி நன்கென வெடுத்துற வியத்திச் சந்தென வொருத்தனை யழைத்தனர் தனித்தே. | 2.8.25 | 536 |
மங்குறவ ழுங்கவிகை வள்ளலை விரிந்த பங்கயப தக்குரிசி லைப்பரிவி னோடு மிங்கினித ழைத்தவரு கென்றனர் விரைந்தே பொங்கிய புயங்கள்புள கங்கொள வெழுந்தான். | 2.8.26 | 537 |
ஊதையை நிகர்த்தகதி யொண்புரவி மேற்கொண் டேதமறு மாநகர வீதியிடை புக்கி யாதமுத லானநபி நாயகம னாதி தூதுவரை வந்தநர தூதனெதிர் கண்டான். | 2.8.27 | 538 |
கண்டுகடி திற்பரி யிழிந்திருகை யார முண்டக மலர்ப்பத மிருத்திமுடி மீது கொண்டுற வணங்கிநய னங்கள்களி கூர வண்டென மலர்க்கர வனப்பினை நுகர்ந்தான். | 2.8.28 | 539 |
மாதவமு கம்மதின் வனப்பினை நுகர்ந்த தூதனொரு வில்லினிடு தூரமதி னின்று காதலொடு மெய்யிணி கலன்கலை யொதுக்கிச் சூதற விரிந்தமணி வாய்புதைத்துச் சொல்வான். | 2.8.29 | 540 |
பவக்கட னடுப்படு மனுப்பகுதி யெல்லா முவப்பொடு கரைப்படு மரக்கலம் தொத்தே நவப்பட வுதித்தநபி நாயக விளக்கே துவர்க்கமுடி விற்கொரு சுடர்க்கதிரின் மிக்கோய். | 2.8.30 | 541 |
தேனமர் பொழிற்றிமஷ்கு மன்னொடு செறிந்திம் மானகரின் வீரரு மதிக்குடை கவித்த கோனபுதுல் முத்தலிபு புத்திரரு முற்றே யீனமற நும்மைவர வென்றனர்க ளென்றான். | 2.8.31 | 542 |
வருகவென நன்மொழி வகுத்தனர்க ளென்ன வருகினிது றைந்தவ னறைந்தது தௌிந்தே தருமநெறி நந்நபி தருக்கொடு மகிழ்ந்தே மருமலர் பொதிந்தமணி மாளிகை புகுந்தார். | 2.8.32 | 543 |
மாசகல வந்தகுல மாதினை விளித்துப் பாசனபில் ஹக்கமொடு பற்பல ருடன்று பூசலை நினைத்தெழுதி விட்டதும் புரிந்தே யாசில்திமஷ் கிக்கிறை யடைந்ததுவு மன்றே. | 2.8.33 | 54 |
துன்றுமடல் வெம்புரவி சேனைபுடை சூழ வன்றிறல மச்சரொடி ருந்துமதி வல்லோன் வென்றிகொ ளயிற்படை யொருத்தனை விடுத்தே யொன்றிய மறத்தொடு மழைத்தது முரைத்தார். | 2.8.34 | 545 |
வேறு மறத்திகன் மனத்தவர் திரண்டு மாநகர்ப் புறத்திருந் தழைத்தன ரென்னும் புன்மொழி நறைத்தடப் புயநபி நவிலக் கேட்டலு நிறைத்தகற் புடைமையா ரறிவு நீங்கினார். | 2.8.35 | 546 |
காரதி ரிடிக்கெதிர் கலங்கித் தன்னுடல் சோர்தரு மயிலெனச் சோர்ந்து கண்ணினீர் வார்தரு கலன்கலை நனைப்ப வார்குழல் பார்தர விரிப்பமெய் பதைத்து வாடினார். | 2.8.36 | 547 |
மறைத்திடா மதியென வளருந் தீனிலை நிறைத்தநற் பதவியை நிலத்தி லெங்களுக் குறத்தரு மிறைவவுன் றூத ருன்றிருப் புறத்தினி லடைக்கல மென்னப் போற்றினார் | 2.8.37 | 548 |
நவ்விபின் பெரும்புன னடந்த நந்நபி மௌவலங் குழற்கதி ஜாதம் வாட்டங்கண் டவ்வயி னினிதுற வடுத்து நன்மறைச் செவ்விய தெருட்சியிற் றௌியச் செப்புவார். | 2.8.38 | 549 |
குவைலிதுக் கரும்பெருங் குலத்திற் றீபமே புவியில்விண் ணவர்தினம் போற்றும் பூவையே கவினுமென் னுயிரன்னீர் கவலல் காவலோ னவனரு ணம்மிடத் தகல்வ தில்லையால். | 2.8.39 | 550 |
மன்பெரும் புவியினில் வாழு மாந்தரிற் றுன்புறா தவரிலைத் துன்பைத் துன்புறா தின்பமே கொள்பவ ரிலங்கும் பொற்பதிக் கன்பரா யிருப்பரென் றறிவு சொற்றதே. | 2.8.40 | 551 |
இனப்படைக் கடனடு விருந்து ளோமியாந் தனிப்பவ னருண்மரக் கலத்தின் சார்பினாற் பனிப்படா மகிழ்கரைப் படுத லல்லது துனிப்பட லறிவெனுஞ் சூழ்ச்சித் தன்றரோ. | 2.8.41 | 552 |
கொதிப்படர் குபிரெனுங் குறுக லார்திர ளதிர்ப்படர் தீன்படைக் கலத்தி னாக்கம்போ லெதிர்ப்படுந் துன்பெனு மிருளை யுண்மகிழ் மதிப்பெனுங் கதிரினான் மாய்த்தல் வேண்டுமால். | 2.8.42 | 553 |
தன்மமே பொருளெனத் தவத்தின் மேற்செலு நன்மனத் தவர்க்கொரு நாளுந் தீங்கெனும் புன்மைவந் தடைந்திடா தென்னப் பூவினின் முன்மறை தௌிந்தவர் மொழிந்த வாய்மையே. | 2.8.43 | 554 |
இன்னன பலமொழி யியம்பிக் கற்பெனு நன்னிலைக் கொடிமன நடுக்கந் தீர்த்தொரு மின்னகத் திருந்தெழு மேக நீழலிற் பொன்னணி முன்றிலின் புறத்தி லாயினார். | 2.8.44 | 555 |
உள்ளகக் களிப்பொடு முவந்து நந்நபி விள்ளரும் விசும்பினி னோக்க வெள்ளிடைத் தெள்ளிய பெருஞ்சிறை ஜிபுற யீல்தமைக் கள்ளவிழ் தாமரைக் கண்ணுற் றாரரோ. | 2.8.45 | 556 |
முரணுறும் வானர்கோ னொடுமூ வாயிர வரமுறு மலக்குகள் வந்து தோன்றினர் சிரமொரு கிரியெனத் திகழச் செவ்விய கரதலம் புயவரை ககனந் துன்னவே. | 2.8.46 | 557 |
பெரும்படைப் பெனுமவர் பிடித்த வல்லய மரும்பெரும் பொருளவன் முனிவி லாயது தருமபெருங் கதிரவன் றனினும் வெய்யதா யிரும்பெரும் புவிக்கட லேழு முண்ணுமால். | 2.8.47 | 558 |
அறத்தனிப் படைப்பவர் கரத்தி லாயவை மறத்தினைத் திரட்டியோர் வடிவு கொண்டென வுறைத்தெழுங் கொழுந்தழு லோங்கி யொவ்வொரு புறத்தினி லெழுபது தலைக்கும் பொங்குமால். | 2.8.48 | 559 |
வருமெழு வான்படு வானென் றோங்கிய விருதிசைக் கிருதலை யிடமுந் தீண்டுந்தீப் பொருகதி ரயிற்கெதிர் பொருவ வாயிரம் பருதியுஞ் செழுங்கதிர் பரப்ப வெட்குமால். | 2.8.49 | 560 |
அப்பெருந் திறலயி லங்கை யேந்திநன் மைப்படி திரளென வந்த வானவர் செப்பருஞ் சலாமெனச் செய்ய வாய்திறந் தொப்பரும் புகழ்நபிக் கோதி னாரரோ. | 2.8.50 | 561 |
முருகலர் தொடைப்புய முகம்ம தேயெமக் கருளினன் பெரும்பொரு ளாதி நாயக னிருளற நும்விரும் பேவல் செய்திடத் திரளொடும் வந்தனஞ் செகத லத்தினே. | 2.8.51 | 562 |
கொலைமனக் கொடியவர் கூட்டத் தான்மன மலையனீ ரேவிடின் மாந்தர் சேனைக ளலைகட லாயினு மணுவன் றாதித னிலைபெறுந் தீனெறி நிறுத்தல் வேண்டுமால். | 2.8.52 | 563 |
இருங்கலைக் குரிசிலெம் மேவல் காண்பிராற் கருங்கட லேழையுங் கலக்கி நீறதாய்ப் பெருங்கிரி யனைத்தையும் பிதிர்த்திட் டோர்நொடி யருங்கதிர்ப் பொழுதினி லடைகு வோமென்றார். | 2.8.53 | 564 |
விண்ணவ ருரைத்தவை கேட்டு மெய்சிலிர்த் துண்ணிறை மகிழ்வொடு முணர்ந்து தேர்ந்தியன் மண்ணகத் தென்னொடும் வந்து சென்மினென் றண்ணலும் பொறுமையி னவர்கட் கோதினார். | 2.8.54 | 565 |
அமரருக் கினிதுரை யருளிச் செய்தபின் றமர்வரத் திறலபூ பக்கர் தம்மொடு முமறுது மானலி யும்வந் துற்றன ரிமையினி லடலரி யேறு போலவே. | 2.8.55 | 566 |
காரண மெனும்பல கலன்க டாங்கிமே லாரண வெற்றிவெள் ளலங்கல் சூடியோர் வீரவே லெனுங்கதிர் பிசுமி லேந்தினற் பூரண மதியெனப் புறப்பட்ட டாரரோ. | 2.8.56 | 567 |
தீனெனுங் கொடிமுத னிறுத்திச் செவ்வியீ மானெனு மதகரி மருங்கு சூழ்வரப் பானல னெனுங்கலி மாப்ப ரந்திடத் தானவ னருளெனுந் தானை முன்செல. | 2.8.57 | 568 |
மூதுரை யென்னுந் தீன்தீன் முகம்மதென் றோதிய பெருமுர சொலிப்ப நால்வரு மாதித னமரரு மணிய தாய்வர வீதியி னடந்தனர் வேத வீரத்தார். | 2.8.58 | 569 |
அடனபி வருவது கேட்ட பூஜகி லுடலுயிர் மனமறி வொடுங்கி யெவ்வண முடிவதோ வெனத்திமஷ் கிறைமுன் னேகியோர் வடிவுறுங் கவிதையின் வாழ்த்திச் சொல்லுவான். | 2.8.59 | 570 |
மறைதெரி யறிவன்மா லிக்கு செய்தவ முறைதர வுருவெடுத் துதித்த தீபமே குறைபடாப் பெருங்குலக் காக்குங் கொற்றவ நிறைபட வுலகினைப் புரக்கு நேமியோய். | 2.8.60 | 571 |
மருப்பொதி முகம்மது வாக்கி னாற்றின முரைப்பது படிறலா லுண்மை யில்லையா னிரைத்தடர் வஞ்சனை நிறுத்தி யாரையு மொருப்பட மாயத்து ளொடுக்கி னானரோ. | 2.8.61 | 572 |
வஞ்சனை யாகிய வலயி னுட்படு நெஞ்சரல் லானெறி நிலைநின் றாரிலை வெஞ்சமர்க் கவனொடும் வீரம் போக்கிநின் றஞ்சின ரலதெதிர்ந் தவரு மில்லையால். | 2.8.62 | 573 |
வருந்திட முகம்மதின் மாய வெள்ளமே பரந்ததி லமிழ்ந்துமுன் பரிவிற் றாங்குதற் கருந்தவ மரக்கல மாக வந்திவ ணிருந்தனை மார்க்கமு மிறத்த லில்லையால். | 2.8.63 | 574 |
நிரைதிரைக் கடற்படை நிரப்பி நாமிது வரையினு மிவணிடை வருவ தில்லையா லிருநில மாந்தர்க ளியாருஞ் சூறையிற் சொரிதரு பூளையொத் திடுவர் சொல்லினே. | 2.8.64 | 575 |
நனிபல புதுமையி நபிகள் வேடமா யினமொடு வருகுவ னியாவ ராயினு மனமலைத் திடமொழி வளர்ப்பன் மெய்யெனக் கனவினு மனத்தினிற் கருதல் காவலோய். | 2.8.65 | 576 |
அடுத்துறைந் தபூஜகி லளவி லாதசொல் லெடுத்திசைத் திடதிமஷ் கிறைவன் கேட்டுளங் கடுத்திலன் களித்திலன் கவிதை யாற்சில தொடுத்துரை யெடுத்தவை யெவர்க்குஞ் சொல்லுவான். | 2.8.66 | 577 |
தன்றுணைத் தவத்தினர் தீயற் தன்மையிற் குன்றிலர் நாடொறுங் குளத்தைப் பல்லுறத் தின்றிடி லிரதமே செனிக்கு மியாவரு மென்றிடி லினியவை வேம்புக் கில்லையால். | 2.8.67 | 578 |
பொய்மையோர் நொடிவரைப் பொழுதிற் றீீர்ந்திடு மொய்மைசூழ் கடலினும் விளங்கித் தோன்றுமாற் கைமதக் கரியினைக் கருப்பை மாய்த்திடா துய்மதிப் பெரியவ ருளத்தில் காண்பரால். | 2.8.68 | 579 |
வஞ்சனைக் கீழ்மையோர் மாயக் காரண மெஞ்சலி லுளதில தென்னத் தோன்றிடு மஞ்சலி லிறைவன்றூ தவர்கள் காரணம் விஞ்சையன் றுலகெலாம் விளங்கி நிற்குமால். | 2.8.69 | 580 |
தூயவன் மறைவழித் தூதர் செய்கையு மாயமந் திரத்தவர் வழக்கின் வண்ணமு நேயமு மும்மறை நிகழ்த்துங் கேள்வியி னாயுநல் லறிவினு மறிவ தாகுமால். | 2.8.70 | 581 |
வரியளி மலர்த்தடத் திமஷ்கு மன்னவன் குருநெறி முகம்மது கொண்ட பெற்றியை யெறிகதிர் படுமுன மிற்றைப் போதினிற் றெரிவதுண் டெனப்பல கவியிற் செப்பினான். | 2.8.71 | 582 |
செவியினு முளத்தினுங் காயத் தீயசொ லபுஜகி லுரைத்ததுந் திமஷ்கி னாதிபன் கவியினிற் சொற்றதுங் கேட்டுக் கல்வியின் மவுலுவர் குரிசின்முத் தலிபு மைந்தரே. | 2.8.72 | 583 |
அறிவினிற் குணத்தினி லெவர்க்கு மன்பினிற் பொறுமையி னன்னெறிப் புகலிற் செய்கையிற் றிறன்முகம் மதினொடு முவமை செப்புதற் குறுபவ ரெவருமிவ் வுலகி லில்லையால். | 2.8.73 | 584 |
மைதருங் கவிகையின் வள்ளல் வாக்கினிற் பொய்யெனப் பிறந்தசொற் புகல்வ தில்லையாற் கைதவச் சூனியங் கற்று மந்திரஞ் செய்பவ ரிடத்தினுஞ் சேர்ந்த தில்லையால். | 2.8.74 | 585 |
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாட்டொடுத் திற்றைநாள் வரையினு மெவரொ டாயினும் வெற்றிகொண் டிணங்குதல் விருப்ப மல்லது குற்றமென் றொருமொழி குறித்த தில்லையால். | 2.8.75 | 586 |
பிறபல மொழியினைப் பிதற்ற லென்கொலோர் சிறுநொடிப் பொழுதிவண் சேர்வர் கண்களாற் றிறனுறக் கண்டவர் செப்புஞ் செய்தியு மறிகவென் றெடுத்தபித் தாலி போதினார். | 2.8.76 | 587 |
இவ்வணம் பலமொழி நிகழு மெல்வையின் மைவணக் கவிகையர் மெய்யின் மான்மத மவ்வவைக் குற்றதூ தாக முன்னமே செவ்விநன் னெறித்திமஷ் கிறைமுன் சென்றதே. | 2.8.77 | 588 |
திசைகதிர் தரநபி நடந்து தீனென வசையறும் புகழபுல் காசி மன்னனுக் கிசைதரா மருவல ரிதயம் போலநின் றசைதருங் கொடிமதிள் வாயி லாயினார். | 2.8.78 | 589 |
மெய்யொளி பரப்பிட விரிந்த வாயிலின் மையலங் கடகரித் திரளும் வாசியும் பெய்கழற் சேனையு நீக்கிப் பெட்புறத் துய்யவன் றிருமறைத் தூதர் தோன்றினார். | 2.8.79 | 590 |
மான்மதங் கமழ்ந்திரு மருங்கு மெய்யெழில் பான்மதிக் கதிரொளி பரப்ப வந்தநந் நாமறைக் குரிசிலைக் கண்டு நண்பொடுந் தேனவிழ் தொடையலா னெதிரிற் சென்றனன். | 2.8.80 | 591 |
அணிதிமஷ் கிறையெழுந் தெதிரி னன்பொடு மணியொளி முகம்மதை மருங்கி ருத்திநற் பணிவிடை யொடும்பல பகர்ந்த டிக்கடித் தணிவிலா மகிழ்மொழி சார நோக்கினான். | 2.8.81 | 592 |
மருங்கினி லிருத்திமா லிக்கு தன்மக னிருங்குழு நாப்பணி னிருப்பக் காபிர்க ளொருங்குற நோக்கியுள் ளுடைந்து மாமுகம் பெருங்குகை வங்கமொத் தழுங்கிப் பேசுவார். | 2.8.82 | 593 |
கன்னலங் கழனிசூழ் திமஷ்குக் காவல னின்னண மெழுந்தெதி ரிறைஞ்சிப் போந்தனன் முன்னமியா னினைத்தவை முடிவ தென்கொலென் றன்னவர் சஞ்சலித் தவல முற்றனர். | 2.8.83 | 594 |
திருந்திலாக் காபிர்கள் சிந்தை நொந்தவ ணிருந்ததும் ஹபீபுட னபியி ருந்த தும் பொருந்துறக் கண்டுபொற் புரிசை சூழ்தர வருந்திமஷ் கவர்சில வசனங் கூறுவார். | 2.8.84 | 595 |
நிலந்தனிற் சுவடில நிழலுந் தோன்றில கலந்துமெய் யொளியொடு நறைக மழ்ந்தன சலந்தரு கவிகையொன் றெழுந்து சார்ந்தன குலந்தரு மனுவல ரென்னக் கூறுவார். | 2.8.85 | 596 |
வேறு அருளி னோக்கமு மமுதுகு வசனமு மழகா யிருளி லாதமெய் யவயவத் தாசிலக் கணமுந் தெருளுங் கல்வியும் பொறுமையு நிறைந்தவிச் சேயை மருவி லாதள விடற்கரி தெனச்சிலர் மதிப்பார். | 2.8.86 | 597 |
இறைவன் றூதுவ ரென்றது மிறைதிரு வசன மறையி றங்கிய தென்றது மார்க்கமென் றதுவு நிறையும் வாக்கினிற் றெரிவது நிகரிலிந் நகரா ரறையும் வாசகம் படிறெனச் சிலரெடுத் தறைவார். | 2.8.87 | 598 |
மதியி லாமனத் தபுஜகில் வரைந்தபத் திரத்துக் கிதய நேர்ந்திவண் வந்தன மிவன்மொழி கேட்கி லதிக பொன்னுல கிழந்துபாழ் நரகடை வதலாற் பதியி னல்லறி விலைநமக் கெனச்சிலர் பகர்வார். | 2.8.88 | 599 |
பத்தி ரத்தினாற் கடிதினிப் பதியடைந் திவர்த முத்த ரத்தினுக் கொழுகியுற் பவிபவந் துடைத்து முத்தி யெய்துதற் கெழுதிய முதல்விதி யியற்றுஞ் சித்தி ரத்திற னிஃதெனச் சிலரெடுத் திசைப்பார். | 2.8.89 | 600 |
கண்ப டைத்தவ ரிவரெழிற் காண்பவர் முகத்திற் புண்ப டைத்தவ ரிவர்தமைக் காண்கிலார் புதியோன் பண்ப டைத்தசொன் மறைநபி பதம்பணி யாதார் மண்ப டைத்ததிற் படைப்பல ரெனச்சிலர் வகுப்பார். | 2.8.90 | 601 |
அண்டர் நாயக முகம்மதின் காரண மனைத்துங் கண்டு நல்வழி யொழுகிப்பொன் னுலகுகை விலையாய்க் கொண்டு போவதங் கடைந்தன மெனச்சிலர் குழுமி விண்டு மெய்புள கெழக்களிப் பொடும்விரித் துரைப்பார். | 2.8.91 | 602 |
உறுதி யாநம தரசபு ஜகிலுரை கேட்டு மறுகும் வெம்பகை விளைத்திடி லனைவரு மதியா தறுதி யீதென வரசுட னபுஜகில் தனையுந் தெறுத லேதுணி வெனச்சிலர் தௌிந்துசெப் புவரால். | 2.8.92 | 603 |
முகம்மது தமக்கிடர் செயத்தி மஷ்குமன் னவனுஞ் செகத லத்துறை மன்னவ ரடங்கலுஞ் சினந்தே யிகல்பொ ரத்துணிந் தெதிரினு மிருங்கதிர்ப் பனியா யகல்வ தல்லது முடிவதில் லெனச்சில ரறைவார். | 2.8.93 | 604 |
ஈத லாற்சில வுரைபிறர் தரத்திமஷ் கிறைவன் காத லான்முகம் மதுதிருக் கவின்முக நோக்கி மூது ரைத்தௌி வினுமறை யினுமுதிர் மொழியாய்ப் போத ரத்தொடும் புகழொடு மிதத்தொடும் புகல்வான். | 2.8.94 | 605 |
வரிசை ஹாஷிமென் குலத்தினி லுதித்தமா மணியே தரும லர்ப்புய அப்துல்லா தருதிரு மகவே யிருநி லத்தவர்க் கிசைந்திட வெனதுளத் திருந்த வுரையி னிற்சில கேட்டியென் றினிதெடுத் துரைப்பான். | 2.8.95 | 606 |
தந்தை தாய்தமர் தம்வழி யொழுகிலா ததுவு மெந்த னாயக னொருவனுண் டென்றது மெழிலா யந்த நாளையின் வருங்குப லினைப்பழித் ததுவும் வந்த தென்றனக் கருமறை யெனவகுத் ததுவும். | 2.8.96 | 607 |
நபியு நானலா லினியிலை யெனநவின் றதுவும் புவியு ளோர்க்கெலா மொருகலி மாவெனப் புகன்று செவிசு டச்சுட வுரைத்ததுங் குலத்தொடு தினமுந் தவிர்கி லாப்பகை கொண்டதுந் தகுவதன் றுமக்கே. | 2.8.97 | 608 |
இன்ன வாசகங் கூறநம் மிறையவன் றூதாய் மன்னு நன்னபி மார்க்குறுந் தொழின்முதன் மறையோர் சொன்ன சொற்படிப் பெரியர்க்குஞ் சிறியர்க்குந் தோன்ற முன்னி லைப்படி மிகுதிகா ரணங்களை முடிப்பார். | 2.8.98 | 609 |
பிறந்த பல்லுயி ரனைத்துமுற் பிரளய மதனி லிறந்தி டாவகை நூகுநன் னபியினி தளித்தார் நிறந்த ழீ இயிபு றாஹிநன் னபிபெரு நெருப்பைச் சிறந்த மென்மலர் வாவியிற் குளிர்தரச் செய்தார் | 2.8.99 | 610 |
முரணி டும்பிரு வூன்முன மறைநபி மூசா கரத லத்துறை கோறனைக் பெருமலை கடுப்ப வரவ மாக்கின ரரியதா வூதுவல் லிரும்பை யுருகு மென்மெழு காக்கினர் செறுநர்நெஞ் சுருக. | 2.8.100 | 611 |
நிறைந்த நீணதி யிடங்கரின் வாயிடை நெடுநா ளிறந்த வர்க்குயிர் கொடுத்தனர் மறைநபி யீசா வறைந்த வெண்டிரைக் கடற்படு தலத்திவை யறியா துறைந்த பேரெவ ராமினா வயிற்றினி லுதித்தோய். | 2.8.101 | 612 |
பண்டு மேலவர் காரணப் படிக்கவர் கலிமா கொண்டி ருந்தவர் சிலரினங் குவலயத் துரவோர் கண்டு தேறிடும் படிதருங் காரண ருளரேற் றொண்டு செய்திடா ரெவரெனத் திமஷ்கிறை சொன்னான். | 2.8.102 | 613 |
வேத நந்நபி கேட்டெதி ரரசனை விளித்திப் போது ரைத்தனை நடுநிலை நின்னுளம் பொறுத்த தேது காரண காரியங் குறித்தெடுத் தெனக்குக் கோதி லாதுரை யெனவுரைத் தனர்நபிக் குரிசில். | 2.8.103 | 614 |
குரிசி லாகிய முகம்மதி னுரைசெவி குளிர வருளி னோக்கொடு மனக்களிப் பொடுஞ்சிர மசைத்துத் தெருளி னாடொறுந் தெரிந்துதன் சிந்தையாற் றிரட்டும் பொருள தாகிய நன்மொழி திமஷ்கிறை புகல்வான். | 2.8.104 | 615 |
மதியி னுஞ்செழுங் கதிர்தரு முகமுகம் மதுவே கதிரின் வெய்யவன் மேற்கடற் புகக்ககன் முழுது முதிரும் வல்லிருள் பரந்திட வேண்டும்பின் முரம்பாற் பொதிய பூக்குபை சென்கிரிக் குடுமியிற் புகுந்தே. | 2.8.105 | 616 |
நின்று நீரம வாசையிற் கலைநிறை மதியம் வென்றி வெண்டிரைக் கடன்முகட் டெழச்செயல் வேண்டுங் குன்றி டாதெழுந் தந்தரங் குலவிப்பின் னிறங்கித் தொன்று தோன்றுகஃ பாமிசை தோன்றவும் வேண்டும். | 2.8.106 | 617 |
இருந்த பூரண மதியநன் னிடத்திடை யிறங்கி வருந்தி டாதுகஃ பாவினை யெழுதரம் வலமாய்த் திருந்த வந்துபின் னுட்புகுந் திறைவனைச் சிரஞ்சாய்த் தருந்த லத்தொடு மிதயமன் புறத்தொழ வேண்டும். | 2.8.107 | 618 |
வணங்கி யங்கிருந் தெழுந்துபொன் வாயிலைக் கடந்து கணங்கொண் மாந்தரி னடுநடந் தழகொடு கடிதி னிணங்கொண் மால்வரை யேறிநின் றும்முட னியல்பாய்ப் பிணங்கி லாதநன் மொழிபல பேசவும் வேண்டும். | 2.8.108 | 619 |
ஆதி நாயக னொருவனுண் டெனவுமங் கவன்றன் றூதர் நீர்நபி யென்பது மறபெனுஞ் சொலினாற் பாத லத்தினி லிவாயருஞ் செவியுறப் பகர்ந்தப் போதி னுந்திருச் சட்டையுட் புகுதவும் வேண்டும். | 2.8.109 | 620 |
அங்கி ருந்திரு பிளவதா யணிசெழும் வலது செங்க ரத்துறை சட்டயிற் புறப்படத் திறத்தோர் பங்கிடக்கரச் சட்டையிற் புறப்படப் பரிவா யிங்கி தத்தொடுங் குறையற வெதிரவும் வேண்டும். | 2.8.110 | 621 |
ஒருப குப்பெழு வானினிற் புகுந்தொரு பகுப்பு விரிதி ரைப்படு வான்புகுந் தந்தரம் விளங்கப் பொருவி லாதிரு பங்குமோர் மதியெனப் பொருந்திப் பருதி வானகத் திடைக்கதிர் பரப்பவும் வேண்டும். | 2.8.111 | 622 |
பரப்பும் வெண்மதி பின்னுமிப் பாரெலா மறிய வுரப்பி நாயக னொருவனென் றவன்மறைக் குரித்தாய் வரப்ப டுந்திறன் முகம்மதென் றருமொழி வகுத்து விரிப்பர் தீனிலை யென்பதும் விளக்கவும் வேண்டும். | 2.8.112 | 623 |
ஈதெ லாமுடித் திடுவிரே னும்முரைக் கிணங்கிக் காத லாலிணை யடிமிசைச் சிரமுகங் கவிழ்த்தி யாத ரத்திலென் றிரளொடுந் தீனிலைக் காகிப் போது வேனென வுரைத்தனன் திமஷ்கினைப் புரப்போன். | 2.8.113 | 624 |
உள்ள மீதினி லிதுகொலோ வின்னுமற் றுளவோ விள்ளு வாயென நபிதிமஷ் கிறைவனை விளித்துக் கிள்ளை யின்றிர ளரசருஞ் சேனையுங் கேட்பக் கள்ள நெஞ்சபூ ஜகில்மனங் கருகக்கட் டுரைத்தார். | 2.8.114 | 625 |
புகலுஞ் சொற்செவி புகத்திமஷ் கினிற்புர வலனு மகம கிழ்ச்சிகொண் டிவையலால் வேறென்னென் றறைய விகன்ம னத்தவர் முகமரைக் கிருஞ்சசி யெனலாய் மகித லம்புகழ் நபியெழுந் தனர்திரு மனைக்கே. | 2.8.115 | 626 |
கரிந்த சிந்தைய னபூஜகில் கடிதினி லெழுந்து புரிந்த பொன்மலர்ப் புயத்திமஷ் கிறைவனைப் போற்றி வருந்தி லாதுசம் மதித்தனன் முகம்மது மினிமேற் றெரிந்த தங்கவன் படிறென வுரைத்தயல் சேர்ந்தான். | 2.8.116 | 627 |
வாய்ந்த பேரவை விடுத்தின மாந்தரை விளித்துச் சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியு மாய்ந்த வேதமு மார்க்கமும் வணக்கமு மறிவுந் தேய்ந்த தின்றென அபூஜகில் குலுங்கிடச் சிரித்தான். | 2.8.117 | 628 |
மருவ லாருரை செவிக்கிடா தெழின்முகம் மதுமப் பொருவி லாவணங் கடந்துதந் திருமனை புகுந்து பெருகுங் கேள்வியின் குவைலிது தவத்தினிற் பிறந்த விரிம லர்க்குழற் றெரிவையை யருகினில் விளித்தார். | 2.8.118 | 629 |
அடர்ந்த வேல்விழி மடந்தையை யருகுற விருத்தித் திடந்த ருங்கதிர் வேறகர தலத்திமஷ் கிறைமு னடந்த வுத்தர மனைத்தயும் வரன்முறை நவின்றார் மடந்த ராதநன் மறைமன வலிமுகம் மதுவே. | 2.8.119 | 630 |
அடிகள் கூறிய மொழிவழி கேட்டகந் துணுக்கிக் கடிகொண் மென்மலர்ப் பல்லவச் செழுங்கர மேந்தி நெடிய வாவென துயிரவர் மனத்தினி னினைத்த படிமு டித்தரு ளென்றிறை யொடுபகர்ந் திரந்தார். | 2.8.120 | 631 |
அன்று நந்நபி தனித்தொரு வயினுறைந் தறிவா னின்றி ரண்டிறக் அத்துநன் னெடியனை வணங்கி வென்றி தாவென விருந்தனர் விரைவின்வந் தடைந்தார் தென்றி றற்றம துயிரென வருஞ்ஜிபு ரீலே. | 2.8.121 | 632 |
எனக்கு றுந்துணை யேயுயி ரேமுத லிறையென் றனக்கு மக்குச லாமெடுத் துரையெனச் சாற்றிச் சினக்குங் காபிர்க ளொடுந்திமஷ் கிறைவன்செப் பினதும் நினைக்கு முன்வரு மென்றன னெனநிகழ்த் தினரால். | 2.8.122 | 633 |
மன்றன் மெய்முகம் மதினுரை மறுத்திடா தேவ லென்றுஞ் செய்தவர்க் கமைத்தனன் மதியையென் றிறையோன் வென்றி யாய்ப்பினு முரைத்தன னெனுமுரை விரித்தார் குன்றி லாப்பெருஞ் சிறைசெறி வானவர் கோமான். | 2.8.123 | 634 |
விண்ண வர்க்கிறை யிவையலாற் பலபல விரித்து மண்ண கத்திருந் தரும்விசும் படைந்தபின் மகிழ்வா யண்ண லாகிய முகம்மது மகத்தினிற் களிப்புற் றெண்ண மின்றியங் கிருந்தனர் திருந்தல ரிடியின். | 2.8.124 | 635 |
மருவ லர்க்கரி நிகரபித் தாலிபு மன்னர் திரும னைப்புகுந் திருந்துதம் முளத்தினிற் செனித்த பருவ ரற்பெரு நோயினாற் றனித்துடல் பதைத்துத் தெரியுந் தேற்றமு நலக்கமும் வரச்சில புகல்வார். | 2.8.125 | 636 |
கான கச்சுரத் திடைநதி யழைத்தனர் கடிதி னூன ருந்திய புலிபணி தரவெதி ருரைத்தார் பானு வின்கதிர் மணிமுடி யரவொடும் பகர்ந்தா ரீனர் வன்கொலைக் கறுங்கரம் பொருந்தியங் கிருந்தார். | 2.8.126 | 637 |
நிலவ ழைத்திடத் திமஷ்கிறை நிகழ்த்தின னவன்மு னலைவி லாதெதிர்ந் தறுதிசொற் றனருல கறிய விலகு காரண மெவ்வெண முடியுமோ வெனத்தம் மலைவி னாலுடன் மதியற மயங்கிடுங் காலை. | 2.8.127 | 638 |
இருந்த வில்லகத் தொருமதி ளிடியென முழங்கி விரிந்த செங்கதிர் வேலபித் தாலிபை விளித்துத் திருந்தும் பொன்னகர் வானவர் மொழியெனத் தௌியப் பொருந்த நன்குறத் தெரிதர வினியன புகலும். | 2.8.128 | 639 |
மெலிவு மெண்ணமுங் கவலையும் விரைந்தெடுத் தெறிமின் வலிய வன்னரு ணின்மக விடத்தினின் மலிவாய்த் தொலைவி லாப்பெருங் காரணம் விளைப்பதாற் சுடர்வெண் ணிலவு மிற்றையில் வரூஉமது மறுவற நிறைந்தே. | 2.8.129 | 640 |
மருவ லார்பெருங் கிளையொடுங் குழுவொடும் வதனங் கருகி யங்கவர் வலியிழந் திடுதல்கண் டறிமி னரிய தீனெனுஞ் செழுங்கதிர்க் குபிரிரு ளறுத்துப் பெருகு மென்பதுங் கேட்டன ரறிவினிற் பெரியோர். | 2.8.130 | 641 |
நிகதி பெற்றிலா வதிசய மிஃதென நினைத்து முகம்ம தின்றிரு மனைபுகுத் தவர்வயி னுறைந்து பகர ருஞ்சுதை மதிண்முறை பகர்ந்ததைப் பகர்ந்தார் செகத லத்தினும் விண்ணினும் பெரும்புகழ் சிறந்தோர். | 2.8.131 | 642 |
தந்தை கூறிட வானந்த முளத்தடந் ததும்பி யெந்தை யீரெனப் போற்றிவிண் ணவர்க்கிறை யிசைத்த மந்தி ரத்தையும் வரன்முறை வகுத்தெடுத் துரைத்தார் கந்த மென்மலர்ப் புயவபித் தாலிபுங் களித்தார். | 2.8.132 | 643 |
அவிரு மெய்யொளி முகம்மதே யும்மிடத் தவனாற் புவியின் மிக்குயர் செல்வமும் பெரும்புது மைகளுந் தவிர்கி லாதுவந் தடைவதுண் டெனப்பல சாற்றித் திவளு மாலைக டுயல்வர மனைவயிற் சேர்ந்தார். | 2.8.133 | 644 |
அற்றை நாளகன் றரும்பெரும் புகழ்முகம் மதுவு மற்றை நாளுயிர்த் தோழர்க டமைவர வழைத்துக் குற்ற மற்றதம் பெருங்குலத் தவரையுங் கூட்டி யொற்றர் முன்புகப் பின்னெழுந் தனர்குழு வுடனே. | 2.8.134 | 645 |
கொடிய பாதகம் வஞ்சனை குபிர்கொலை யனைத்து மடிய நல்லறங் குருவொடும் வருவன போன்றுங் கடிகொண் மான்மதங் கமழ்தரத் தெருத்தலை கடந்து முடியின் மைதவழ் ககுபத்துல் லாவைமுன் னினரால். | 2.8.135 | 646 |
உயிரு றுந்துணைத் தோழமை நால்வர்க ளுடனே வயிர வொண்கதிர்க் ககுபத்துல் லாவலஞ் சூழ்ந்து செயிர றத்தொழு திருந்தினத் தவருடன் சிறப்ப வியல்பெ றுந்தனி மறைமுகம் மதுநபி யெழுந்தார். | 2.8.136 | 647 |
வடிவு றுஞ்சல தரக்குடை நிழற்றிட வானோர் நெடுவ சும்பிடை யிடனறத் திசைதிசை நெருங்க வுடலு றும்படைப் பெவையுநல் வாழ்த்தெடுத் தொலிப்பப் புடைப ரந்தினம் வரநபி பொருப்பினி லானார். | 2.8.137 | 648 |
சிறுவ ருந்துணை முலையணை பிரிந்திடாச் சேயு மறுகு மைக்கய லஞ்சன விழிமடந் தையருந் தெறுக திர்ப்படைப் பன்னகர் மாக்களுஞ் சிலையக் குறுகி நின்றனர் நால்வகைக் குலந்தலை மயங்க. | 2.8.138 | 649 |
கனைகு ரற்சிறு கட்பெருஞ் செவிமத கரியும் புனைம யிர்க்கடு விசைவளை முகப்புர விகளு மினம ணிக்கடற் சேனையும் புறப்பட வெழுந்தான் வனச மென்மலர்த் தடந்திகழ் திமஷ்குமன் னவனே. | 2.8.139 | 650 |
திவட டங்கடற் சலஞ்சல முரறரத் திசைவிண் டவழ்த ருங்குடைத் திரள்களுங் கவரியுந் தயங்கத் துவட ருங்கொடி மலிதரப் பல்லியந் தொனிப்பக் குவட டங்கலுஞ் செருகின நிறைந்தன குழுமி. | 2.8.140 | 651 |
முருக லர்த்தருப் பொருப்பிடந் தொடுத்தணி முதிர்ந்த தெருவும் வீதியுங் கானமும் பார்த்திடுந் திசையு மிருதி லத்திடை யெள்ளிட விடமரி தெனலாய்ப் பெருகி நின்றது நிறைதரு மனுப்பிர ளயமே. | 2.8.141 | 652 |
கலையி ழந்தன மானின மடிசுரை கவிழ்பான் முலையி ழந்தன கன்றுகள் விலங்கின முழுது நிலையி ழுந்தன பறவைக ணெடும்விசும் பெழுந்த மலைய மிழ்ந்திய திரைதரு வெனுமனுக் கடலுள். | 2.8.142 | 653 |
எறிந்த வெண்டிரைக் கடன்முகட் டெழுந்துவிண் ணேகிச் செறிந்த பார்மனுக் கடலினைக் கண்களாற் றெரிசித் துறைந்த திண்கதி ராயிரங் கரங்களு மொடுக்கிக் குறைந்த காந்திகொண் டிரவிமேற் கடலிடைக் குதித்தான். | 2.8.143 | 654 |
அடரும் வான்றிரிந் துடலிளைப் பாற்றுதற் கணிமேற் கடல ணைத்திரைத் துகிலினிற் கதிர்க்கர மூன்றி யுடல்கு ழைத்திடச் செக்கரின் படத்தினுள் ளுறைந்து படரும் பேரொளி மறைந்திடப் படுத்தனன் பருதி. | 2.8.144 | 655 |
மதியி னைப்பகிர் தரநபி மலைமிசை வானோர் துதிசெ யத்தனி நின்றனர் கதிரையுந் தொடர்ந்து பதியி னிற்றரு கென்றிடிற் பகர்வதென் னெனத்த னிதய மச்சமுற் றடைந்தபோ லடைந்தன னிரவி. | 2.8.145 | 656 |
அந்த ரத்தமா வாசையி னபிமதி யழைப்ப வந்தி ருந்தனர் வானவ ரெவருமெண் ணிலத்தி லிந்த வானகத் திருப்பது பழுதென விரவி சிந்து வெண்டிரைக் குடகட லிடத்தினிற் சேர்ந்தான். | 2.8.146 | 657 |
மாதி ரப்புய நபிமனங் களிப்புற மதியைக் கோதி லாதிவண் கொடுவரு வேனெனக் குறித்து வீதி வானக வழியினைத் தொடர்ந்துமேற் கடலுட் டூது போனவ ரொத்தனன் சொரிகதிர்ச் சுடரோன். | 2.8.147 | 658 |
வெய்ய வன்கடற் புகுந்தபின் செக்கர்மே லெழுந்த துய்யு மென்மறை முகம்மதின் மொழியிலொன் றதனைப் பொய்யென் பார்கிளை யொடுமுடல் பொரிதரப் புழுங்கி யைய மற்றெழு நரகிடை நெருப்பென லாமால். | 2.8.148 | 659 |
வேறு விரிதரும் பகுதிக் கதிர்களைத் தேக்கி றெரிதரச் சேந்து செக்கர்விண் ணிலங்கச் சொரிமது விதிர்க்கும் பொரியரைத் தருக்கள் மரைமலர் பொருவா விருகர மேந்தி 2.8.149
| 660 |
ஆதிநா யகனே யழிவிலா தவனே | சோதியே யெவையி னுவமையில் லவனே நீதியே குபிரர் தௌிதரும் படியா கோதற மனமும் வாக்குமொன் றாகிக் 2.8.150
| 661 |
இரந்துநின் றதற்கா யாதிவல் லவனு | பரந்திட விருளிற் சிறிதெடுத் தூசித் திருந்திட வுரைப்ப அம்மலக் கெழுந்து பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் 2.8.151
| 662 |
மனுநெறி பிழைத்த அபுஜகில் கொதித்த | றினமணி கொழிக்கும் பரவையுங் கிரியு தினகர னுலவும் விண்ணினைத் தடவித் தனிநிலை பெருகும் பிரளய மெனலாய்ச் 2.8.152
| 663 |
கரைபுர ளிருளா லக்கினிக் கொழுந்துங் | விரிகதிர் மணியின் குலங்களு மிருண்டு சொரிமத கரியும் பரியொடி ரதமுந் தொருவருக் கொருவர் வதனமுந் தெரியா 2.8.153
| 664 |
முடிவுறுங் காலத் தியற்கையோ வலது | கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ ரிடருற வெவர்க்குங் கண்ணொளி மழுங்கி படர்விட முலகிற் பரந்ததோ வெவையென் 2.8.154
| 665 |
கனமுகிற் கவிகை முகம்மது விளைத்த | தினகர னிறந்து பேரிரு ளரசு மனமகிழ் தரவந் தடைந்தவ ரெவரு சினமொரு கடிகைப் பொழுதினிற் றெரியா 2.8.155
| 666 |
அன்பினர்க் கிரங்காத் தறுகணன் கொடிய | துன்பமு மொழியா தினம்பெருங் கேடு ரின்புறு நபிசொற் கிணங்கிலா ரிருக்கு வன்பெரு மிருடீர்ந் துய்விரே னடக்கு 2.8.156
| 667 |
மல்விதம் பயின்று திரடரும் புயத்தார் | செல்வுழி மறுத்த அபுஜகி லழைத்த கொல்விதச் சூழ்ச்சி யிதுகொலென் றுரைப்பார் வெல்விதப் புதுமைக் காரண மலது 2.8.157
| 668 |
உயிரினும் பிரியாத் துணைவரைக் காணா | செயிரறு மகவைத் தவறவிட் டலைந்து குயில்புரை யமுதக் கிளிமொழி மடவார் மயலுறழ்ந் தணியும் பணியிழந் திரங்கி 2.8.158
| 669 |
தெரிதரா விருளா லரசருந் தேர்ச்சித் | பரியினின் றிழிந்த வீரரு மற்றப் பெருகிய மாந்த ரனைவரு நிறைந்த விரிதருந் தலைமத் தெறிதருந் தயிரின் 2.8.159
| 670 |
புதுநற வருந்தி வரிச்சுரும் பிரைக்கும் | முதுமரத் துறைந்த பறவைக ளனைத்து ததிர் தரும் வாய்விட் டந்தர முழுது மதியழைத் திடுவ ரையுற லெனுஞ்சொன் 2.8.160
| 671 |
விலங்கினங் கலையப் பறவைகண் மறுக | கலங்கிடக் கலங்கித் திமஷ்கினுக் கரசன் நிலங்கொள நிறைந்த மறைமுகம் மதுவை பலன்கொளும் பதமும் படைத்தன மென்னப் 2.8.161
| 672 |
மீனக டுரிஞ்சுங் குவட்டிடை வடிவாய் | வானமட் டிருண்ட கொடியவல் லிருளை பாலனங் கொழிக்கு நிறைந்தவெண் மதியைப் யீனமற் றிவணில் வரவழைத் திடுக 2.8.162
| 673 |
திரைத்தடத் தலர்த்தேன் சேலினஞ் சிதறுந் | வுரைத்தசொ லுளத்தூ டிருத்திநந் நபியு நிரைத்தவல் லிருளைச் சடுதியி லகற்றி தரைத்தலம் புகல முழுமதி யழைத்துச் 2.8.163
| 674 |
இறையவன் றனைநன் னயமனத் திருத்தி | லறைதருந் திரைமுத் திறைத்தபைஞ் சலதி ணிறைபடப் பரப்பி விசும்புறத் தடவி மறைபடாப் புகழின் கொழுந்தினிற் பூத்த 2.8.164
| 675 |
திணிசுடர்ச் சுவனத் தரம்பைய ரமரர் | ரணிபெறத் திமஷ்குக் கிறைமனங் களிப்ப பணிநெடும் படத்திற் கிடந்தபா ருடுத்த மணியினி லமைத்த செழுமுடி நிகர்ப்ப 2.8.165
| 676 |
இடனறக் கலைகள் பெருகிய மதிய | கடுகவிட மனைய விருட்குல மறுத்துக் மடலவிழ் குவளை மதுமலர் மலர்த்தி மிடலுடைக் குபிர ரகமுகங் கருக்கி 2.8.166
| 677 |
விண்ணகத் தமுதங் கான்றவெண் மதிய | மண்ணக நோக்கி மெலமெலத் தாழ்ந்து நண்ணிவிண் முகட்டி னடுநிலை நோக்கி பண்ணுதற் கியைந்த வெள்ளிவெண் குடம்போற் 2.8.167
| 678 |
படியினிற் சுவனப் பதிநிகர்த் தனைய | கொடுமுடி யெனலா யுறைந்தவெண் மதியங் வடிவுறுங் ககுபா வாயிலி னெதிர்ந்து துடல்குழைத் தரிதி னுள்ளுறப் புகுந்தங் 2.8.168
| 679 |
நறைகுடிப் புகுந்த ககுபத்துல் லாவி | மிறைவனைப் பரிவி னொடுமனப் பயத்தா முறைமுறை பணிந்து பலதரம் புகழ்ந்து நிறைமதிக் கதிர்த்தாள் வாயிலைக் கடந்து 2.8.169
| 680 |
முதிர்கதி ரெறித்த ககுபத்துல் லாவின் | மதுவிரி பொழில்சூழ் வரையிடை நோக்கி யெதிர்தரப் பணிந்து சலாமெடுத் தோதி விதியவன் றூதர் பேரினிற் கலிமா 2.8.170
| 681 |
திருந்திநற் கலிமா வோதிமுன் னெதிர்ந்த | வருந்திடா தெனது வரவினை யெவர்க்கு பொருந்திய மனத்திற் களிப்பொடும் வாக்கிற் மிருந்தவ ரெவர்க்குந் தெரிதர வறபி 2.8.171
| 682 |
நெடியவன் படைப்பெப் பொருட்குமுன் னொளியாய் | வடிவுறு மரசா யுதித்தநன் னபியே படியினுங் கலிமாப் பகர்ந்தவர் சுவனப் கெடுநர கடைவர் சரதமென் றெவர்க்குங் 2.8.172
| 683 |
பாரினி லெவர்க்குந் தோன்றிட மதியம் | போர்வையிற் புகுந்தங் குரனடு விருந்து சீர்பெற வலது கரத்திடை யொருபாற் லேர்பெற வெழுந்து முகம்மதுக் கெதிரா 2.8.173
| 684 |
முன்னெதிர்ந் திலங்கு மொருபகுப் பெழுவான் | பின்னொரு பகுப்புக் குடகடற் புகுந்து தன்னிரு பகுப்பு மந்தரத் துலவித் மன்னிய ககுபாக் குடுமிமேற் சிறந்து 2.8.174
| 685 |
உலகெலாம் விளங்கச் செழுங்கதிர் பரப்பி | நிலமிசை யுதித்த முகம்மதே யெவர்க்கு குலவுமெப் படைப்பு மிவர்தமக் கீமான் மலிதர நபிக்குச் சலாமெடுத் தேத்தி 2.8.175
| 686 |
வானகத் துலவி யமுதவெண் கதிர்க்கான் | மீனொடுஞ் செறிந்து தன்னர சியற்றி தேனின மிருந்து புதுநற வருந்திச் பானலங் குவியக் குடகடற் றிரைக்குட் 2.8.176
| 687 |
மதிவர வழைத்துக் காரணம் விளைத்த | கதிபத மடைந்தே மெனச்சிர மசைத்து ஹபீபுதன் னகத்தினிற் களித்து யெதிரிவர்க் கிலையென் றதிசயம் பிறப்ப 2.8.177
| 688 |
மாதவன் திமஷ்குக் கிறையுரைத் ததுவு | பூதலத் தினிற்கண் டறிகொணாப் பெரிய சீதவொண் கமல முகமலர் மலர்ந்து பேதுற லகற்றிச் சிந்தையிற் றேறிப் 2.8.178
| 689 |
மருவலர்க் கரியே றெனுந்திமஷ் கிறைவன் | குருமுகம் மதுதம் மிணையடி மலரைக் யிருவிழி குளிர வைத்துமுத் தமிட்டீ திருமுக மலர்ந்து மணியெயி றிலங்கச் 2.8.179
| 690 |
ஆதிதன் றூதே பேரின்ப விளக்கே | மாதலத் தெவர்க்கும் பவக்கடல் கடப்ப தீதற வெனது கருத்துறு மறிவே பூதரத் துறைந்த முழுமணிச் சுடரே 2.8.180
| 691 |
உமதுரை திருத்து மவர்கள்பொற் பதியோ | தமரொடு நரகிற் புகுவர்நும் மரிய நிமிர்தருங் குடுமிக் கிரியின் றிறங்கி றமரரும் புகலு முகம்மதுக் குரைத்தா 2.8.181
| 692 |
குருத்துவெண் ணிலவு கொப்பளித் தெரியுங் | னுரைத்தசொற் றவறா தழகொளிர் நயினா திருத்திய வகுதைப் பதியபுயல் காசீஞ் மிருத்திய மரைத்தா டருங்கதிர் குலவ 2.8.182
| 693 |
மண்டலத் தரிய புதுமதி விளங்கி | விண்டுநின் றிறங்கி முகம்மது நபியும் திண்டிறற் பரியுஞ் சேனையு மிடையுந் னெண்டிசை யவரு நகரவ ருடனு 2.8.183
| 694 |
மக்கமா நகரக் குறைஷிகள் பலரு | வொக்கலுந் துன்புற் றெழின்முகம் வௌிறி தக்கவ ரொருவர்க் குரைகொடுப் பதற்குத் புக்கிடம் புகுதற் கருநெறி யறியாப் 2.8.184
| 695 |
வருடமீ ரைம்பா னறுபதின் மேலு | புருடரா திபனிம் முகம்மதிங் கியற்றும் திருடர்போல் விழித்தா னென்னிலிந் நிலத்திற் மிருடரா திருந்த லரிதெனச் சினந்த 2.8.185
| 696 |
விறற்பெரும் படைகொண் டபூஜகில் விளைக்கும் | மறற்பல கொழிப்ப நதிசுரத் தழைத்த புறப்பல நகரிற் சமயமுஞ் சிதையப் லுறப்படுத் துலக மடங்கலு மிவன்ற 2.8.186
| 697 |
தெரிமறை மாலிக் கருளர சறியாச் | வரவழைத் தரிய காட்சியை முடித்த பெருகிய குபிரர் தனித்தனி யுரைப்பப் குருதிகொப் பளித்த வேதினச் சூட்டுக் 2.8.187
| 698 |
இனவளை முரலுந் தடத்தன மிரைப்ப | மனநிலை யுணராக் குபிரர்தம் முளத்தில் நனிபொருண் மறைதீ னவர்மனத் தௌிவி றினகரன் கதிர்கள் வௌிறிடப் பரப்பித் 2.8.188
| |