உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 9 -21 / பாடல்கள் (699 - 1104)
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
2.9 | தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் | (699 - 733) | மின்பதிப்பு |
2.10 | ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் | (734 - 774) | மின்பதிப்பு |
2.11 | ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் | (775- 811) | மின்பதிப்பு |
2.12 | மானுக்குப் பிணை நின்ற படலம் | (812 - 883 ) | மின்பதிப்பு |
2.13 | ஈத்தங்குலை வரவழைத்த படலம் | (884 - 900 ) | மின்பதிப்பு |
2.14 | ஒப்பெழுதித் தீர்ந்த படலம் | (901- 939) | மின்பதிப்பு |
2.15 | புத்து பேசிய படலம் | (940 - 951 ) | மின்பதிப்பு |
2.16 | பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் | (952- 967) | மின்பதிப்பு |
2.17 | பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம் | (968-1002) | மின்பதிப்பு |
2.18 | அத்தாசு ஈமான் கொண்ட படலம் | (1003 -1014) | மின்பதிப்பு |
2.19 | ஜின்கள் ஈமான் கொண்ட படலம் | (1015 - 1057) | மின்பதிப்பு |
2.20 | காம்மாப் படலம் | (1058 - 1086) | மின்பதிப்பு |
2.21 | விருந்தூட்டுப் படலம் | (1087-1104) | மின்பதிப்பு |
699 |
மருமலர் சுமந்து தேன்வழிந் தொழுகு தெரிதருந் தீனி னெறிமுறை யவருஞ் வரியமெய்ப் பொருளை முறைமுறை வணங்கி திருவடி பரவத் தம்முயி ரனைய 2.9.1 | | 700 |
பூரணக் களப கனதன மடவார் வாரணி முரச மதிர்தரச் சீறு வாரணத் தலைவர் மருங்கினிற் பிரியா காரணக் குரிசின் முகம்மதி னிடத்தில் 2.9.2
| 701 |
செம்மலர்ப் பதத்தில் வெண்கதிர் குலவுஞ் | தம்மினத் தவர்க ளூடன்சலா முரைத்துத் வம்மெனத் திருவா யுரையருள் கொடுத்து வெம்மையி னமுதக் கனியெனுங் கலிமா 2.9.3
| 702 |
நன்றெனப் புகழ்ந்து மனங்களித் தெழுந்து | வென்றிகொ ளரசே யினமொரு வசனம் லென்றவ னுரைப்ப முகம்மது நபியு துன்றுமென் மனத்திற் றெரிந்துன் மகடன் 2.9.4
| 703 |
ஆண்டகை யுரைத்த புதுமொழி நறுந்தே | வேண்டுநற் பதவி படைத்தனன் சிறியேன் காண்டகாப் புதுமை யனைத்தையுந் தெரிந்தேன் தீண்டவும் பெற்றே னினியரும் பொருளொன் 2.9.5
| 704 |
புதியவன் றூதர் முகம்மதுந் திமஷ்கைப் | மதுரமென் மொழியா லளவளா யுளங்கண் ககனிழிந் தரிய பெருஞ்சிறை யொடுக்கிக் செகதலத் துறைந்த நபியிடத் துவந்தார் 2.9.6
| 705 |
மருங்கினி லெவர்க்குந் தோன்றிடா துறைந்து | பெருங்குலம் விளக்கு முகம்மதை நோக்கிப் நெருங்குவெண் கொடிக்கஃ பாவிடத் தேகி யருங்கதிர்க்கல சத் தாபுஸம் ஸத்தி 2.9.7
| 706 |
இறைவனை நோக்கித் துஆவிரந் தினிரே | சிறைநிறந் தோன்றா தமருல கதனில் கறைநிறங் குலவுஞ் செழுங்கதிர் வடிவேற் ரறைமுர சதிரத் திமஷ்கிறை யவனு 2.9.8
| 707 |
வானவ ரிறையோ னருட்படி யமைத்த | கானலர் பொதுளுங் ககுபத்துல் லாவிற் தீனவ ருடனு மணிபெற விருந்து யீனமற் றுனது மகவெனுந் தசையை 2.9.9
| 708 |
அந்தநன் மொழிகேட் டடற்படை மாலிக் | சிந்தையிற் களித்து மருங்குநின் றவரைத் றுந்திட வுரைப்ப வோடினர் சிலவ தந்தபெட் டகத்தி னொடுமெடுத் துவந்தார் 2.9.10
| 709 |
முன்னுறப் பணித்த பெட்டகத் திருந்த | மன்னிய குரிசின் முகம்மது நபிமுன் மின்னெனப் பிறழு மடந்தைய ருடனும் வந்நகர் மாக்க ளனைவரும் விரைவி 2.9.11
| 710 |
கடல்கிடந் துடுத்த பெரும்புவி யிடத்திற் | மடலவிழ் கமல வாவிசூழ் திமஷ்கு மிடலுறுங் கதிர்வாண் முகம்மது பொருட்டால் வுடலெனுந் தசைத னுயிரலா தியைந்தோ 2.9.12
| 711 |
பொருந்துறுங் குறிப்பொன் றணுவினு மிலதாய்ப் | னிருந்தவத் தசையை முகம்மது நோக்கி திருந்துற மயிரின் போர்வையிற் போர்த்துச் மருந்தினு மமர ரமுதினுஞ் சிறப்ப 2.9.13
| 712 |
மணியெனச் சிறந்து மலரின்மென் மையவா | யணிதரப் போற்றிக் கனிந்தற நெகிழ்ந்த தணிவிலா துயர்த்திப் பலபல புகழாற் பணிபணிந் திரந்தார் தீனிலை நிறுத்தும் 2.9.14
| 713 |
பூதலத் தெவர்க்கு மறைநெறி புதுக்கிப் | தூதென வுதித்த முகம்மதின் துஆவைத் பாதகக் குபிரர் மனம்பதை பதைப்பப் தீதறத் தோன்று மவயவஞ் சிறப்பத் 2.9.15
| 714 |
வரியிழை மயிர்ப்போ ருவையெனுங் கரிய | விரிகடற் பெருநீ ருண்டுசூ லுளைந்த லரியின நறவுண் டலம்புகுங் குமத்தா தெரிதரப் பவள விதழ்திறந் தோதிச் 2.9.16
| 715 |
விண்ணகத் தரம்பைக் குலத்தினும் வடிவாய் | மண்ணகத் துறையு மெழுவகைப் பருவ கண்ணினுக் கடங்கா தழகினைச் சுமந்த பெண்ணலங் கனிந்து நலனெழில் பிறங்கப் 2.9.17
| 716 |
மங்குலிற் பெருகி விடத்தினுங் கருகி | தங்கிய யிதழித் திரளினுந் திரண்டு கொங்குறக் குழன்று நெறித்துவார்த் தொழுகிக் வெங்கணன் னயினார் முன்னைநா ளழைத்த 2.9.18
| 717 |
கீற்றிளம் பிறையுங் கணிச்சியின் வளைவுங் | தோற்றிடத் தோற்றி விளங்குநன் மலருந் தோற்றிடத் மாற்றருந் தனுசுங் கருங்கொடி யெதிர்வு மேற்றிகழ் கரிய பவளமென் கொழுந்தாய் 2.9.19
| 718 |
மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து | கடற்குளந் தேறா தலைதரச் செய்து விடத்தினை யரவப் படத்திடை படுத்தி திடக்கதிர் வடிவா ளெனக்கொலை பழகிச் 2.9.20
| 719 |
வள்ளையை வாட்டி யூசலை யசைத்து | கொள்ளைகொண் டுடலங் குழைப்பதற் கன்றோ ளெள்ளையுஞ் சிறந்த குமிழையும் வாசத் விள்ளருங் கானத் திடையலர் படுத்தி 2.9.21
| 720 |
வெண்னிலாத் தரள நகைநிரை பொதிந்து | வண்ணவாய்ச் செழுஞ்சே தாம்பலின் மலரோ வெண்ணிநோக் கினருக் குவமையி னடங்கா பண்ணெலாஞ் சுவற்றி யாடவ ரிருகட் 2.9.22
| 721 |
முல்லையு முருந்து நிரைத்தன போன்று | மெல்லெனச் செவந்த மணியினிற் பிரித்து வில்லிடக் கவின்கொண் டிருபுறத் தொழுங்கும் சொல்லரு மனத்தா டவர்மய லிருளைத் 2.9.23
| 722 |
பாலென வௌிறாக் கனியென வழியாப் | வேலவார் குழலார் செழுங்கரத் தேந்து வேலைவா ழமுதம் பிறந்தென வுலகம் சாலவு மிறந்த தருவினந் தழைப்பத் 2.9.24
| 723 |
வெய்யவ னலர்த்த விகசிதம் பொருந்தி | செய்யவ ளிருப்ப தெனவெழில் சிறந்து வையக மதிப்பத் திமஷ்கிறை யுரைத்த துய்யவெண் மதிய நிகரென வுலகிற் 2.9.25
| 724 |
திரளினின் மணியாய் முரல்வினின் வளையாய்ச் | விரிகதிர் மணிப்பூண் டாங்குமென் கழுத்தாள் சருவிடப் பசந்து திரண்டுமென் மையவாய்த் வரிவளை சுமந்தி யாழினும் வியந்து 2.9.26
| 725 |
குலிகமார்ந் தனபோ லரக்கினுஞ் சிவந்த | மலிசினைக் கௌிற்றின் வனப்பினும் வனப்பாய் பொலிவுறச் சிவந்தீந் திலையெனக் கிளர்ந்து நலிவிலா திளைத்த வயிரவொண் கதிராய் 2.9.27
| 726 |
தடித்தடி பரந்திட் டெழுந்தபூ ரித்துத் | தடர்த்திமை யாத கறுத்தகண் ணதனா வடத்தினு ளடங்கா திணைத்தகச் சறுத்து படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி படர்ந்த 2.9.28
| 727 |
பரிமளச் சிமிழோ குலிகச்செப் பினமோ | பெருகிய குடமோ காமநீ ருறைந்த முருகுகொப் பளிக்கும் வனசமென் முகையோ கரையிலா வழகா றொழுகிய வரையோ 2.9.29
| 728 |
தனமெனு மிருகோட் டத்தியோ ராலிற் | மனநிலை கவருங் கடிதட வரவின் சினவுவிற் காமன் மலைக்குந்தன் மனைக்குஞ் வினனுட னழகு நிறைகுடி யிருந்த 2.9.30
| 729 |
பெருவரை யிடத்தி னடியுறைந் திலங்கும் | விரிகதிர் மணிமே கலைநடுக் கோத்து குருமுகம் மதுநன் மொழிவழி யடங்காக் தெரிவரி தெனலா யுவமையிற் பொருவாச் 2.9.31
| 730 |
கதிரொளி வழுக்கி னரம்பையைப் பழித்துக் | மதமலைக் கரத்தின் வனப்பினை யழித்து லிதமுறச் சிவந்த விலவினைக் கடைந்திட் புதுமையின் விளங்கித் தவத்துறை யவரும் 2.9.32
| 731 |
அணிமுகட் டலவன் றனைமுகந் தடுத்த | மணியினிற் செறித்த தூணியும் பொருவா றணிவிலா திசைக்குங் காளமும் பொருவாத் பணிபல சுமந்து சிறுமயிர் நெருங்காப் 2.9.33
| 732 |
நிறைதரு தராசின் வடிவறும் பரடாள் | பொறையொடுங் கமடத் தினம்வனம் புகுந்து மறைபடத் தவஞ்செய் திணைபடற் கரிதான் கறைதரா மணியின் குலமென விரல்கள் 2.9.34
| 733 |
வனமயிற் சாயற் குலமென வெழுந்து | மனமென நடந்து நபிமுகம் மதுத யினியன புகழ்ந்து பலரதி சயிப்ப புனைமணி பிறழ மின்னென நுடங்கிப் 2.9.35
| |
734 |
பூங்கொடி யெனமுன நின்ற பூவையைத் தேங்கம ழமுதவாய் திறந்து நந்நபி வாங்குதெண் டிரைத்தடக் திமஷ்கு மன்னவன் பாங்கினி லுறைகெனப் பரிவிற் கூறினார். | 2.10.1 | 735 |
வரிவிழிச் சிறுநுதன் மடந்தை நன்னெறிக் குருவிடம் விடுத்தெழில் குலவச் சென்றணி விரிகதி ரிலங்கிலை வேற்கை மன்னவன் றிருவடி கருங்குழற் சென்னி சேர்த்தினான். | 2.10.2 | 736 |
தெண்டனிட் டெழுந்தபொன் மயிலைச் சீர்பெறக் கண்டன னுவகையங் கடற்கு ளாயினன் விண்டலத் தினிலாப் பதவி வெற்றியைக் கொண்டன னெனமனக் குறைவு நீக்கினான். | 2.10.3 | 737 |
தெரிவைபின் வரத்திமஷ் கிறைவர் செவ்விய குருசினந் நபிகொழுங் கமல மெல்லடி பரவிநற் புகழ்சில பகர்ந்து வாக்கொடும் வரிசையி னெறிக்கலி மாவை யோதினார். | 2.10.4 | 738 |
அரசரு மமைச்சருந் திமஷ்கி னாதிபர் பரிகரி வீரரும் படைக்கு ழாங்களுந் தெரிவையின் றொகுதியுஞ் சிறந்த நந்நபிக் குரிமையி னொடுங்கலி மாவை யோதினார். | 2.10.5 | 739 |
ஈனமொன் றில்லதோ ரிறைவ னாகிய தானவன் றனையுளத் திருத்தித் தக்கதோர் வானவர் புகழ்முகம் மதுவை வாழ்த்திநற் றேனெனுங் கடற்பெருந் தீனி லாயினார். | 2.10.6 | 740 |
மறைமுறை யொடுந்தின வணக்க நீங்கிலா திறைவனைக் தொழுதிசு லாத்தி னேர்வழி குறைவறப் படித்தருங் குபிரை நீக்கியே முறைதவ றாப்பெரு முசுலி மாயினார். | 2.10.7 | 741 |
மானகர் திமஷ்குமன் னவருந் தம்பெருஞ் சேனையு முகம்மதின் றிருமு னாகிச்செங் கான்மல ரடியிணை யிறைஞ்சிக் கைகொடுத் தானநல் லறிவராய்ப் புறப்பட் டாரரோ. | 2.10.8 | 742 |
நபியெனு முகம்மதை வாழ்த்தி நன்னெறிப் புவியெனு நகரினோர் புறத்தி னீங்கிநின் றபுஜகில் தனையழைத் தரசர் நாயகர் கவினுறும் பலமொழி யெடுத்துக் காட்டினார். | 2.10.9 | 743 |
மந்திர மறைமுகம் மதுவை வாக்கினிற் சிந்தையி லிகழ்ந்தவர் நரகஞ் சேர்குவ ரந்தமி னாயகன் றூத ராமெனப் புந்தியிற் புகழ்வர்பொன் னுலகம் போதுவார். | 2.10.10 | 744 |
மலையென நிமிர்திமிள் திமஷ்கு மன்னவர் நிலைகுலை மனத்தபூ ஜகில்த னெஞ்சினிற் கலைமறை தௌிவினுங் கார ணத்தினும் பலதர முரைத்துத்தம் பதியை நோக்கினார். | 2.10.11 | 745 |
மதகரி யிருபுற னெருங்க மாப்படை கதழ்வொடுங் கதியொடுங் கனைத்து முன்செலப் பதலையு முரசமும் பம்பக் கானக நதிகளுங் கடந்தய னடந்து போயினார். | 2.10.12 | 746 |
கரித்திர ளொலித்தகம் பலையுங் காவளர் பரித்திர ளொலித்தகம் பலையும் பண்முர சிரைத்துந் தீன்கலி மாவை யின்புற வுரைத்திடுந் தொனிக்கட லுடைத்துக் காட்டுமால். | 2.10.13 | 747 |
கனியினுந் தேனினுங் காய்ந்த பாகினு மினியன புதுமறை யியற்று நாவினர் நனிபல சூழ்வர நகரை நண்ணினார் பனிவரை யினும்புகழ் பரித்த பான்மையார். | 2.10.14 | 748 |
விண்ணுறை கொடிமதிள் திமஷ்கு மேவிய வண்ணலும் பதிமுதி யவருக் கன்பொடு பண்ணருந் தீன்மொழி பயிற்றி நன்னெறி யெண்ணிலை பெறவிசு லாத்தி லாக்கினார். | 2.10.15 | 749 |
தீன்முறை நடத்திய திமஷ்கு மன்னவர் மான்மதங் கமழ்ந்தமெய் நபிக்கு மாசிலாப் பான்மதிக் கலைகலை பணிபொன் பட்டிவை கூன்வெரிந் தொறுவினிற் கொடுத்த னுப்பினார். | 2.10.16 | 750 |
நிதிமணி பணிபல நிறைந்த வொட்டகப் பொதிபதிற் றொடுபரற் புடவி நீந்திவான் மதிநடந் துலவிய மக்க மாகிய பதியினுக் கடுத்தொரு பாலுற் றாரவர். | 2.10.17 | 751 |
அருமறை நபிமுகம் மதுவுள் ளன்புறக் குருமணி யொடுநிதி திமஷ்கிற் கொற்றவர் வரவிடுத் தனரென வழங்கும் வாசகந் தெரிதர அபூஜகில் செவியிற் சார்ந்ததே. | 2.10.18 | 752 |
மடித்தசிந் தையினெழுந் தேகி மன்னவன் கொடுத்தனுப் பியநிதிக் குவையும் பண்டமும் விடுத்ததிங் கெமக்கென வெகுண்டு வெஞ்சொலாற் றடுத்தடுத் தனனபூ ஜகிலென் பானரோ. | 2.10.19 | 753 |
ஹபீபா சனுப்பிய கனக மியாவையு மபுஜகில் தடுத்தன னென்ன வாதிநூற் புவியினில் விளக்கிநற் புகழ்ந டாத்திய நபிதிரு முனஞ்சிலர் நவின்றிட் டாரரோ. | 2.10.20 | 754 |
வேறு உரைவி ளக்கிட முகம்மதுந் தோழர்க ளுடனும் விரைவி னேகிப்பொன் றடுத்தவ ரெவரென வினவத் தரையி லியானல திலையென வபூஜகில் சாற்ற வருள்கி டந்தகட் கடைசிவப் புண்டவப் போதில். | 2.10.21 | 755 |
உனக்கு வந்தது மோங்கிய தீன்முகம் மதுசீர் தனக்கு வந்ததுங் கொணர்ந்தவர் சொல்குவர் சரதஞ் சினக்க வந்திவண் மறிப்பது தகுவதோ செலுநின் மனைக்கெ னச்சிலர் கூறலு மனத்திடைக் கொதித்தான். | 2.10.22 | 756 |
மட்டு வார்பொழிற் றிமஷ்குமன் னவர்வர விடுத்த பெட்ட கத்தையும் பொன்னையும் பிணக்கறக் கரியாய்ப் பட்ட றத்தௌிந் துமக்கெமக் கெனப்பல ரறிய வொட்டை வாய்திறந் துரைக்குமென் றபூஜகி லுரைத்தான். | 2.10.23 | 757 |
உரைத்த வாய்மையிங் கெமக்கியை வதுபடி றுளத்தோய் விரித்துக் கேட்டரு ளென்றன ரபூஜகில் விரைவி னிருத்தி யிப்பொரு ணாளையிவ் வூரவ ரறியப் பரித்த வொட்டகங் கரிபகர்ந் திடுமெனப் பகர்ந்தான். | 2.10.24 | 758 |
நன்று நன்றெனத் தோழரு முகம்மது நபியும் பொன்றி கழ்ந்தெழில் குலவிய மனையிடைப் புகுந்தார் கன்று புன்மனத் தபூஜகில் கிளையுடன் கடிதிற் சென்று வெண்மலர் செறிதரு மாலயஞ் சேர்ந்தான். | 2.10.25 | 759 |
ஆல யம்புகுந் தழியுரு வெடுத்தபுத் ததற்குச் சால மென்மலர்த் தொடையொடும் பலபணி தரித்துக் கோல மார்ந்தெழத் தீபமுந் தூபமுங் கொடுத்துத் தால மீதினிற் சிரம்பட விருகரந் தாழ்த்தான். | 2.10.26 | 760 |
விழுந்து தெண்டனிட் டெழுந்திரு கரம்விரித் தேந்திப் பொழிந்த நீர்விழி தரவிரந் தேத்திய புகழான் மொழிந்து வல்வினை தொடுத்திடு முகம்மதின் வாய்மை யழிந்தென் சொற்பழு தறவர மருள்கவென் றறைந்தான். | 2.10.27 | 761 |
மரைத்த டந்திகழ் திமஷ்கிறை வரவிடு நிதியந் தரைத்த லம்புகழ்ந் திடவபூ ஜகில்தனக் கெனவே நுரைத்துத் தூங்கித ழொட்டைவாய் திறந்தெனை நோக்கி யுரைத்த ளித்திட வேண்டுமென் பதுமெடுத் துரைத்தான். | 2.10.28 | 762 |
எதிரி னின்றுதன் றேவதை தனைப்புகழ்ந் தேத்திக் கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த சதியன் றன்முக நோக்குத றவறெனச் சிவந்து கொதிகொ தித்தழன் றருக்கன்மேற் கடலிடைக் குதித்தான். | 2.10.29 | 763 |
அற்றை நாளகன் றிடமறு தினத்தபூ ஜகில்தன் சுற்ற மோடடைந் தான்றுணைத் தோழர்க ளோடும் வெற்றி நன்னெறி முகம்மதும் விரைவினி லேகிக் கொற்ற மன்வர விடுத்தவ ரிடத்தினிற் கூண்டார். | 2.10.30 | 764 |
ஒட்டை வாய்திறந் துரைப்பதற் கெவர்முன முரைப்ப திட்ட மாயுரை யெனவபூ ஜகிலுட னியம்பக் கட்டு ரைப்படிக் கரியினை யெவர்களுங் களிப்ப விட்டு ரைத்திடென் றுரைப்பதி யானென விரித்தான். | 2.10.31 | 765 |
நன்று கூறுமு னென்றலு மபூஜகில் நடந்து சென்று பூம்பொழி லொட்டகை யனைத்தையுந் திரட்டி நின்று நீவிர்கள் சுமந்திவ ணிறக்கிய நிதியம் வென்றி மன்னவ னெவர்க்கனுப் பியதென விரித்தான். | 2.10.32 | 766 |
கேட்ட பூஜகில் நிற்பவொட் டகக்கிளை பதிற்றும் நாட்டி வைத்திடுஞ் சிலையென நவின்றில மறுகி மீட்டுங் கேட்டலு நவின்றில வீரமும் வலியும் போட்டுக் கேட்டனன் பிற்றையும் புகன்றிசைத் திலவே. | 2.10.33 | 767 |
பரித்த வொட்டகை பகர்ந்தில கரியெனப் பலரு மிரைத்து மாமறை முகம்மதின் றிருமுகத் தெதிர்ந்து பிரித்தி டாக்கரி யாய்ப்பெரு வாயினைப் பிளந்து விரித்து ரைத்திட விளம்புமென் றெடுத்துரை விரித்தார். | 2.10.34 | 768 |
நிகர ரும்பதி முதியவர் நிகழ்த்திடும் வசன முகம்ம தின்செவிப் புகுதலு மனமிக மகிழ்ந்து மிகுவி தப்புது மைகடர வொட்டையை விளித்துப் புகலு மென்றன ரபூஜகில் கெடுமனம் புழுங்க. | 2.10.35 | 769 |
உரைத்த சொல்லுளந் தரித்திடக் கிடந்தவொட் டகங்க ணிரைத்தெ ழுந்தற வளைநெடுங் கழுத்தினை நீட்டி விரித்த வாலசைத் துவந்திரு விழிகளை விழித்துப் பெருத்த வாய்திறந் தறபெனு மொழியினிற் பேசும். | 2.10.36 | 770 |
வரிசை நாயகன் றூதெனு முகம்மது நபியே யரசர் கேசரி ஹபீபெனுந் திமஷ்கினுக் கரச ரிரசி தம்பணி மணிதம னியமிவை யனைத்தும் பரிச னத்தொடு நுமக்கனுப் பினரெனப் பகர்ந்த. | 2.10.37 | 771 |
உரைத ராவிலங் கினங்கரி யுரைத்ததென் றுரவோர் தெரித ராப்பெரும் புதுமைகொ லெனச்சிர மசைத்து விரித ராநிறை பெருங்கடன் மேதினி யனைத்தும் புரித ராதிப ரிவரெனப் புகழ்ந்தயல் போனார். | 2.10.38 | 772 |
மருந்தி லாப்பெரும் பிணிவளைத் தெனமதி மயங்கிக் கரிந்து மாமுகம் வாய்வெளுத் தறத்தலை கவிழ்ந்து திருந்தி லாமனத் தொடுஞ்சினத் தொடுஞ்செய லழிந்து பொருந்தி லாதுதன் கிளையொடு மபூஜகில் போனான். | 2.10.39 | 773 |
கன்ன லஞ்சுவை தீனிலை நிறுத்திய ஹபீபு மன்னர் மன்னவர் வரவிடு நிதியமு மணியு நன்ன யம்பெறுந் தோழர்கள் சூழ்வர நயினார் தந்ந கத்தினிற் செறித்தனர் செழும்புகழ் தழைப்ப. | 2.10.40 | 774 |
மல்ல லம்புவி யிடத்தினில் தீனெறி வழுவா தில்ல றத்தொடு முதிர்மறை யவரிர வலர்க ளல்ல ளற்றிடப் பெருநிதி யெடுத்தினி தருளிப் பல்ல ரும்புகழ் தரநபி யிருந்தனர் பரிவின். | 2.10.41 |
775 |
மாசி லானருள் பெருகிய மக்கமா நகரி லாசி லாநபி தீனினை நிறுத்துமந் நாளிற் பாச மற்றவ னபூஜகில் கிளைபல பகுப்பாய்ப் பூச லிட்டனர் பெரும்பழி நடுநிலை புகுந்தே. | 2.11.1 | 776 |
சிகையி னீண்முடி குயிற்றிவெண் கதைநடுத் தீற்றி நகைநி லாத்தரு மேனிலை மக்கமா நகரின் மிகைம னத்தொடு காபிர்க டினந்தொறும் விளைக்கும் பகையி னோடரும் பஞ்சமு முடன்பரந் ததுவே. | 2.11.2 | 777 |
வெறுத்த காலமுங் காபிர்க டொடுத்தவல் வினையு மறுத்தி லாமையும் பீஸபீ லாற்களை மாய்த்து நிறுத்துந் தீனென வேவலு மில்லையா னிதமும் பொருத்தி ருப்பதெவ் வழியென வகத்திடைப் பொறுத்த. | 2.11.3 | 778 |
சொலத்த காப்பெரும் பகைதொடுத் தினத்தொடுஞ் சூழ்ந்து குலத்தி னும்பிரித் தறநெறி தீனிலைக் குரியோ ரிலத்தி னும்வரப் பொருந்திலா நமரினா லினியிந் நிலத்தி ருப்பது பழுதென மனத்திடை நினைத்தே. | 2.11.4 | 779 |
மறுவி லாதநன் னெறிமறை தேருது மானை யறிவி னாய்ந்தகு மதுதனித் தழைத்தரு கிருத்திப் பிறவு முற்றதும் வருவது நிகழ்வதும் பேசி யுறையு மிப்பதி பெரும்பகைக் காவன வுரைத்தார். | 2.11.5 | 780 |
உற்ற நும்மனத் துடன்பட வுறைபவ ருடனும் வெற்றி மன்னஜா சிய்யுறை திருநகர் மேவிக் குற்ற மின்றியங் குறைவது கருத்தெனக் குறிப்ப மற்று வேறுரை யாதுது மானுஞ்சம் மதித்தார். | 2.11.6 | 781 |
ஷரகி றங்கிநன் னபியெனும் பெரும்பெயர் தரித்த வருட மைந்தென வரவரு மிறஜபு மாதந் தரும நேருது மானொடு றுக்கையா தமையு மிருளும் போதனுப் பினர்ஹப ஷாவெனுந் தேயம். | 2.11.7 | 782 |
திருத்துந் திண்புய நபிதிரு மகளுடன் சிறப்ப விரிந்த பூங்குழன் மடந்தையர் மூவரும் வியப்பப் பொருந்துந் தீனவர் பதின்மரும் புகழுது மானும் பிரிந்தி டாதுசென் றந்தநா டடைந்ததற் பின்னர். | 2.11.8 | 783 |
சந்த னந்திகழ் புயவபித் தாலிபு தவத்தால் வந்த ஜஃபறு மவருடன் மைந்தர்கள் சிலரு நந்து வெண்டர ளந்திகழ் நதிஹப ஷாபாற் பிந்தி டாதொரு முறைமறை தனித்தனுப் பினரே. | 2.11.9 | 784 |
அன்ன மன்னமென் னடையினர் சிறுவர்க ளல்லான் மன்னு மாடவ ரெண்ணொரு பஃதிரு வருமாய்ப் பொன்னு லாஹப ஷாவள நாடணி புரத்தி லின்ன லில்லெனச் சேர்ந்தவன் மகிழ்வொடு மிருந்தார். | 2.11.10 | 785 |
உறைந்த மாந்தருக் கபஷிய ரசெனு முரவோர னிறைந்த நன்கலை யொடும்பல வரிசையு நிதியுங் குறைந்தி டாதெடுத் தருளிநன் மொழிபல கொடுத்துச் சிறந்த தன்முத லினத்தினு மினத்தராய்ச் செய்தார். | 2.11.11 | 786 |
விதித்த தீனிலைக் குரியரை ஹபஷியர் வேந்தன் மதித்து நன்கொடு முயர்த்தின னெனும்வர லாற்றைக் கொதித்த சிந்தைய னபூஜகில் குழுவொடுங் கேட்டுக் கதித்த சூழ்ச்சியின் வேறொரு வினைகரு தினனே. | 2.11.12 | 787 |
வில்லு மிழ்ந்தசெம் மணித்தொடை திரண்டவெண் டரளம் பல்ல வம்பொரு வாத்தம னியத்துகில் பலவுஞ் சொல்ல ரும்மிர தச்சுவை யொட்டகச் சுமையா மல்லு றும்புயன் கரத்தின்முத் திரையொடும் வைத்தான். | 2.11.13 | 788 |
ஓதிக் கேட்டறிந் தொழுகிமுக் காலமு முணர்ந்த மூத றிஞரி லிருவரை யழைத்துமுன் னிருத்தி யாத ரத்தொடு சேர்த்தநல் வரிசையு மளித்துக் கோத றத்தௌிந் தொழுதுபத் திரத்தையுங் கொடுத்தான். | 2.11.14 | 789 |
கொடுத்து நன்மொழி கொடுத்துந ஜாசிய்யாங் கோவுக் கடுத்து நின்றளித் திடும்வரி சைகளிவை யவன்சொற் படுத்தி டாமதி மந்திரர்க் கிவையெனப் பகுத்து விடுத்த னன்பெரு வஞ்சமும் படிறும் விடாதான். | 2.11.15 | 790 |
அறும னத்தின னபூஜகில் கொடுத்தவை யனைத்து மெறுழின் மிக்குய ரொட்டக மீதினி லேற்றித் தறுகி லாதெழுந் திருவரு மரிதினிற் சார்ந்தார் நறவு யிர்த்ததண் டலைதிகழ் ஹபஷிநன் னாட்டில். | 2.11.16 | 791 |
சென்ற தூதுவர் வரிசைக ளனைத்தையுந் திருந்தக் குன்றெ னத்திரள் புயனஜா சியின்முனங் குவித்து முன்றி லிற்றனித் தெழுதிய முடங்கலை யெடுத்து நின்று நீட்டினர் நிருபர்க ணெருங்கிய சபையில். | 2.11.17 | 792 |
வரைந்த பத்திரப் பாசுர மக்கமா நகரி லிருந்த ஹாஷிமா குலத்தொரு வன்றலை யெடுத்து விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளத்துத் தெரிந்த வேதமுஞ் சமயமு நிலைகெடச் சிதைத்தும். | 2.11.18 | 793 |
குடிபொ ருந்திலா திந்நகர்க் குலம்பழு தாக்கிப் படிப குத்திடக் கொலையொடு பாதகம் விளைத்து முடிவி லாப்பெருந் தேவத மாலய முழுது மடிய றுத்திடத் துணிந்தனன் முகம்மதென் பவனே. | 2.11.19 | 794 |
அங்க வன்மொழிக் கொழுகின நவனினுங் கொடியோர் பொங்கு மவ்வுழை புகுந்தனர் ஹபஷிமா புரத்தைப் பங்க மாக்கமு னவர்களைத் தண்டனைப் படுத்தி யெங்கி ருக்கினு மிருக்கொணா தகற்றிடு மெனவே. | 2.11.20 | 795 |
இன்ன வாசக மனைத்தினுங் கேட்டவ ரெவருந் துன்ன லார்கொலோ சிட்டரோ வெனச்சிரந் தூக்கிப் பன்னு வாரதின் மந்திரர் பகைத்தவா சகத்தாற் சொன்ன வாற்றினின் முடிப்பது துணிவெனத் துணிந்தார். | 2.11.21 | 796 |
அரசர் நாயகர் ஹபஷிந ஜாசியா மரசன் பரிச னத்தவர் மொழியினும் மறிவினும் பார்த்தே யுரைச மர்ப்பக முகம்மதின் வழியினுக் குரிய வரிசை செய்திவ ணிருத்தலே கடனென வகுத்தான். | 2.11.22 | 797 |
மலைம னத்தபூ ஜகிலனுப் பியவெகு மானத் தலைவ ரைத்தன திரும்பதி யிடையினிற் சாராக் குலனு டனுமர் பதிக்கடைந் திடுமெனக் குறித்து விலகி யங்கவர் கொண்ர்ந்தபல் பொருளையும் வெறுத்தான். | 2.11.23 | 798 |
சதும றைப்பொருண் முகம்மதின் வழியவர் தமைநல் லிதம னத்தொடு மனுசரித் தபூஜகி லிடத்திற் புதிய ரைப்புறம் போக்கின னெனுமொழிப் புகழை மதுகை வேந்தபித் தாலிபு கேட்டுள மகிழ்ந்தார். | 2.11.24 | 799 |
வணக்க வாசகத் தொடும்ஹப சரசனை வாழ்த்தி யிணக்கி நற்பொருள் பெறப்பல பயித்தெடுத் தெழுதி யுணக்கும் புன்மனத் தபூஜகி லெழுதிய வோலைப் பிணக்க றுத்தபித் தாலிபு கொடுத்தனுப் பினரால். | 2.11.25 | 800 |
புதிய நற்பொருள் பெறத்தெரி கவிதையின் புகழான் மதுர வாசக மெழுதிய துணர்ந்துள மகிழ்ந்து துதிசெ யுங்கலி மாநெறிப் படுமறைத் தூயோர்க் கதிவி தப்பல வரிசைசெய் தபஷா சிருந்தார். | 2.11.26 | 801 |
அந்த நாளையின் மக்கமா நகரவ ரெவரும் வந்து நற்கலி மாவுரைத் தனரெனும் வசனம் புந்தி கூர்தரக் கேட்டனர் சிலரதிற் பொருவாச் சிந்தை யாயினர் நகர்க்கெனத் திரும்பினர் சிலரே. | 2.11.27 | 802 |
படைக்கை வேந்துது மானுடன் மனைவியும் பலருந் தொடைக்கி ணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியி னடக்க முன்மொழி பழுதென நவிறர நடுங்கி யடைக்க லத்தினுங் கரவினும் பதியைவந் தடைந்தார். | 2.11.28 | 803 |
புதிதின் மூவொரு பதின்மரு மூவரும் புறத்திற் சதிய றத்தினி யவரவர் சார்பினிற் சார்ந்தா ரதில பூசல்மா வென்பவ ரறிவினி லுயர்ந்த மதியின் மிக்கபித் தாலிபை யடுத்துவந் திருந்தார். | 2.11.29 | 804 |
சினத்து வன்கொலைக் காபிர்க டிரண்டிகல் செகுக்கு மனத்தின் மிக்கபித் தாலிபு மதிமுக நோக்கி யினத்தி னைத்தவிர்த் தபூசல்மா வென்பவன் றனைநும் மனைத்த லத்தில்வைத் திருப்பது பழுதென வகுத்தார். | 2.11.30 | 805 |
பொய்த்த மாமறை முகம்மதை மனையிடைப் புகுத்தி வைத்தி ருந்தனை யபூசல்மா தனையுநும் மனைக்கு ளெய்த்து வைத்திருப் பதுபழு தெனவிக லிடராய் மொய்த்த டர்ந்தன ரபூஜகி லொடுமுரண் மதத்தார். | 2.11.31 | 806 |
எடுக்கும் வாளயில் படைக்கலம் பலகரத் தேந்தித் தொடுக்குங் பூசலிட் டடலபித் தாலிபைத் துரத்தி விடுக்கு மென்பது மனையுட னகரையும் வெறுப்பக் கெடுக்கு மென்பது மபூலகு பெனுமவன் கேட்டான். | 2.11.32 | 807 |
எனக்கு முன்னவன் றனையிடர் விளைத்திட லெனது மனக்கு றைப்பட ரிவைதவிர்த் திடீரெனின் மதியை நினைக்கு முன்பகி ரகுமது நெறிநிலை நிறுவிக் கனக்க வைத்தலியா னலதிலை யெனக்கழ றினனால். | 2.11.33 | 808 |
மோதும் வாய்மையி னபூலகு பெனுமவன் முரணி யோதும் வாசகங் குபிரவ ருளங்களை யுருவிப் போது கின்றதென் றடர்ந்துநின் றவர்பொறி கலங்கித் தீத கற்றியங் கவரவர் மனைவயிற் சேர்ந்தார். | 2.11.34 | 809 |
கறைத விர்ந்திடா மனக்குறை ஷியங்குலக் காபி ரறவு நொந்தகத் தடங்கின ரெனவற முதிர்ந்து நிறையுந் தீனிலைக் குரியவர் மகிழ்ந்தநெஞ் சினராய் மறைப டாமுகம் மதின்வழி வளர்த்திருந் தனரால். | 2.11.35 | 810 |
அரிய நாயகன் றூதுவா னவர்க்கிறை யணுகிக் கிரியின் மீதுநின் றரும்பெயர் நபியெனக் கிளத்தும் வருட மாறினின் மாறுகொண் டவர்மனங் கலையத் தெருளு மேன்மையின் முகம்மதுஞ் சிறந்திருந் தனரால். | 2.11.36 | 811 |
பொருந்த மானிலத் துலவிய புகழுசை னயினா ரருந்த வத்தினுட் பொருளென வருமபுல் காசிம் விரிந்த மெய்நெறிச் சிந்தையி னடுவுற விளங்கி யிருந்த மென்மலர்ப் பதமுகம் மதுமினி திருந்தார். | 2.11.37 |
812 |
குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தடை நறவஞ் சிந்தும் வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல் செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின் பயிர்வளந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில். | 2.12.1 | 813 |
அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத் திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார். | 2.12.2 | 814 |
கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தற்றித் துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன் மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண் ண சென்றன நெறிக்குங் காந்தி செவ்விமெய் முகம்ம தன்றே. | 2.12.3 | 815 |
வனந்தரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித் தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித் தனந்தனி யிருந்து நின்று தன்றசைக் பெருக்க லன்றி யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே. | 2.12.4 | 816 |
காலினிற் கழலு நீண்ட கரியகா ளத்தின் வீக்கும் பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங் கோல்வெறி நணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன். | 2.12.5 | 817 |
குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும் பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக் கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார். | 2.12.6 | 818 |
குழைகுழைத் தெரியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார் பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார் செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய் மறையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார். | 2.12.7 | 819 |
அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும் வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப் பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே. | 2.12.8 | 820 |
நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா னொடிவரை யிமைமூ டாம னோக்கியே கிடந்த தன்றே. | 2.12.9 | 821 |
பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியாரைத் தருவி னீழன் மருப்புடைப் படலைத் திண்டோன் மன்னவ ருடனும் புக்கு நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான் றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார். | 2.12.10 | 822 |
இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற் றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார். | 2.12.11 | 823 |
கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப் பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின் பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார். | 2.12.12 | 824 |
கதிர்விரி ஹபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும் புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே. | 2.12.13 | 825 |
குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே. | 2.12.14 | 826 |
ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம் வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார் கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும். | 2.12.15 | 827 |
நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக் குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித் தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும். | 2.12.16 | 828 |
வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத் தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும். | 2.12.17 | 829 |
என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந் துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொறு மேய்ந்து நாளு முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன் மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம். | 2.12.18 | 830 |
இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான் மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம் பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே. | 2.12.19 | 831 |
தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகே லேனே. | 2.12.20 | 832 |
உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள் வெள்ளமொத் தனைய மானி னினமோர் வெற்பின் சார்பி னள்ளிலை யள்ளி வாய்கொண் டரும்பசி தடிந்து நீருண் டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம். | 2.12.21 | 833 |
அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத் தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனிச் சிதறி னேமால். | 2.12.22 | 834 |
கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும் வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால். | 2.12.23 | 835 |
அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன் றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி மிடலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன். | 2.12.24 | 836 |
வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழுந் தோடி வந்து நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத் துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச் சிலகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான். | 2.12.25 | 837 |
திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக் சரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச் சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான். | 2.12.26 | 838 |
சுவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச் சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான். | 2.12.27 | 839 |
கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம் வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத் திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே. | 2.12.28 | 840 |
எனவினை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப் புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற் றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும். | 2.12.29 | 841 |
இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி லுண்டோ முச்சகம் விளங்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய். | 2.12.30 | 842 |
கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன் குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ. | 2.12.32 | 843 |
அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல் வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப் படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய். | 2.12.33 | 844 |
வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந் தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி யிரைப்பறா நெடிக்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ. | 2.12.33 | 845 |
ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப் பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே. | 2.12.34 | 846 |
பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின் கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி மடிமுலை யிறங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே. | 2.12.35 | 847 |
கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின் மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான் காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே. | 2.12.36 | 848 |
தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென் றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடுப்பி னாவி தாங்கிய தரும வேந்தே தவறன்று சாத மன்றே. | 2.12.37 | 849 |
மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும் பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய் கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட் பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும். | 2.12.38 | 850 |
விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப் படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால் கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே யடுத்தொரு கடிகைப் போதிலடைவ னென் றைந்த தன்றே. | 2.12.39 | 851 |
மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக் கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத் தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்ரி நின்றார் தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளக்குஞ் செம்மல். | 2.12.40 | 852 |
பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணக்கியான் பிணையென் றோது முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித் தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான். | 2.12.41 | 853 |
முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன். | 2.12.42 | 854 |
பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற் பொருத்தம தன்று விண்ணு மண்ணிலும் புகழின் மிக்கோய். | 2.12.43 | 855 |
கானிடைப் பிடித்த மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின் மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான். | 2.12.44 | 856 |
என்னுறு பிணையாய்ப் போன விரும்பினை கடிகைப் போதி னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப் பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென் றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச் சொல்லார். | 2.12.45 | 857 |
காரணக் குரிசில் கூறுங் கட்டுரை செவியி னோர்ந்து பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ மல்லாற் சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார் பேரினிற் பிணயாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட் கொண்டோன். | 2.12.46 | 858 |
கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் ணுயர்ந்த மேன்மை வள்ளல்நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான். | 2.12.47 | 859 |
வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற் கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார். | 2.12.48 | 860 |
இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப் பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந் திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே. | 2.12.49 | 861 |
வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான் மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக் கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட. | 2.12.50 | 862 |
மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக் கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே. | 2.12.51 | 863 |
கன்றது வயிறு வீங்கக் கதிர்முலை யமுத மூட்டி நின்றதன் னினத்துக் கெல்லா நெடிபடுங் கானி லோடி வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர் வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே. | 2.12.52 | 864 |
பிணையென வுரைத்த மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப் பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத் துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு வீங்கி யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே. | 2.12.53 | 865 |
மாறுகொண் டவர்கை தப்பி வந்தமா னினத்தின் சாதி கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து மீறெனப் போதல் வேண்டா மெனுமுரை யியம்பிற் றன்றே. | 2.12.54 | 866 |
இணைத்தெனைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசிப் பினைதனைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத் திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே. | 2.12.55 | 867 |
என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து நன்னபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற் பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற் பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே. | 2.12.56 | 868 |
சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட் டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும். | 2.12.57 | 869 |
நதியிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின் மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப் புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார். | 2.12.58 | 870 |
ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக் காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப் பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே. | 2.12.59 | 871 |
இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச் சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே. | 2.12.60 | 872 |
மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே. | 2.12.61 | 873 |
இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற லிறுதியிற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச் செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே. | 2.12.62 | 874 |
குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால். | 2.12.63 | 875 |
அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே. | 2.12.64 | 876 |
மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன் பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார் வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான். | 2.12.65 | 877 |
பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின் றுரைப்ப தானான். | 2.12.66 | 878 |
கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளறி வுணர்வு மில்லேன் றெருளுறப் பாவி யென்னை தீனிலைக் குரிய னென்னப் பெரிதளித் திடுதல் நுந்நம் பெருமையிற் பெருமை யென்றான். | 2.12.67 | 879 |
மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு புதியினை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு நிதிமனைக் குரிய னாகி தீனிலை நெறிநின் றானே. | 2.12.68 | 880 |
பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத் தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு மறுகலை யெறிந்து தேறு ம்னக்கலை யொடுகன் றோடு முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தி யென்றான். | 2.12.69 | 881 |
வானவர் பரவுங் கோமான் முகம்மது மானை நோக்கிக் கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே. | 2.12.70 | 882 |
தேனைக்குங் குமங்கள் சிந்தச் செழித்ததிண் புயத்து வள்ளல் கானக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப் போற்றித் தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல் வேடன் மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற் புக்கான். | 2.12.71 | 883 |
துடவைநன் மலரைத் தூற்றுந் தூய்நிழ லிடத்தை நீந்திப் படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக் கடிமனை யிடத்திற் புக்கார் ஹபீபிற சூலூ மன்றே. | 2.12.72 |
884 |
சுருதியின் முறைிவழித் துணைவர் சூழ்தரக் கருமுகி னிழலொடுங் கருணை பொங்கிட மருவுமெண் டிசைக்குமான் மதங்க மழ்ந்திட விருநிலம் புகழ்நபி யிருக்கும் போதினில். | 2.13.1 | 885 |
காலினிற் கபுசுமோர் கையிற் குந்தமு மேலிடுஞ் சட்டையும் விசித்த கச்சையுந் தோலொரு தோளினுந் தூக்கி வந்தவ னாலநந் நபிதமை யடுத்து நோக்கினான். | 2.13.2 | 886 |
தரியலர்க் கன்புறுஞ் சார்பி னான்மறைக் குருநெறி முகம்மதைக் குறித்தெ திர்ந்துநீ ரிருநிலத் தெவரென வியம்பி னான்பர ருரநெரித் திடச்செவி யுழுக்குஞ் சொல்லினால். | 2.13.3 | 887 |
அச்சமொன் றின்றிநின் றறபி கூறலும் வச்சிரப் புயமுகம் மதுதம் வாய்திறந் திச்சகம் புகழ்தனி யிறைவன் றூதியா னிச்சய மிதுவென நிகழ்த்தி னாரரோ. | 2.13.4 | 888 |
ஆதிதன் றூதென வறிவ தற்கரும் பூதலத் தென்மனம் பொருந்தி யன்பொடுஞ் சாதமுற் றிடப்பெருஞ் சாட்சி யாமெனுங் கோதறு குறிப்பெவை கூறுவீ ரென்றான். | 2.13.5 | 889 |
காரணக் கரியுனக் கியையக் காண்கிலென் னாரணத் துறுங்கலி மாவை யன்பொடும் பூரண மனத்தொடும் புகல்வை யோவெனச் சீர்தரு மமுதவாய் திறந்து செப்பினார். | 2.13.6 | 890 |
அவனியி லெவர்க்குநன் கறிய வென்மனக் கவரறக் காரணக் கரியுண் டாமெனி னபியுமை யலதிலை யென்ன நண்பொடும் பவமற நும்வழிப் படுவ னியானென்றான். | 2.13.7 | 891 |
நிலத்தினில் விண்ணினீ டிசைக்கு ணின்மன நலத்தது கரியெவை நாட்டு வாயெனக் குலத்துறு முகம்மது கூறக் கேட்டுநற் சிலைத்தழும் பிருந்தோ ளறபி செப்புவான். | 2.13.8 | 892 |
இருவருக் கெதிர்தர நின்ற வீந்ததின் விரிதலைக் குலைமலர் வீழ்ந்தி டாதிவண் வரவழைத் திடுவிரேன் மனமும் வாக்குமொத் தருமறை மொழிவழி யாவ னியானென்றான். | 2.13.9 | 893 |
ஈந்தினை நோக்கிநின் றிறைவன் றூதுவர் வாய்ந்தநின் குலையிவண் வருக வேண்டுமென் றாய்ந்தநன் மறைதெரி யமுத நன்கனி யேய்ந்தவாக் கினைத்திறந் தியம்பி னாரரோ. | 2.13.10 | 894 |
ஆதிதன் றூதுவ ரறையக் கேட்டலுஞ் சோதிவெண் குருத்தொடுந் தோன்ற மேலெழுந் தேதினுஞ் சிதைகிலா திழிந்து மாநில மீதினில் விரிதலை விளங்கி நின்றதே. | 2.13.11 | 895 |
விரிதலைத் தருவடி நின்ற மென்குலைப் பரிவொடும் பயப்பயக் குதித்துப் பாரிடை யிருவிழி தெரிபவ ரெவர்க்கு மின்புறத் திருமுகம் மதுமுனஞ் சிறந்து நின்றதே. | 2.13.12 | 896 |
அந்தர விரிதலைக் கமைந்த பூங்குலை யிந்தமா நிலத்திடை யிறங்கி யிவ்வுழை வந்ததிற் புதுமையு மறுத்துண் டோவெனச் சிந்தையுற் றற பிநந் நபியைச் சிந்தித்தான். | 2.13.13 | 897 |
படித்தலம் புகழ்நபி பாதம் போற்றிநின் றடிக்கடிப் புதுமையுற் றறபி யீந்தின திடத்தினிற் குலைபொருந் திடச்செய் வீரெனத் திடத்தொடும் பயத்தொடுஞ் செப்பி னானரோ. | 2.13.14 | 898 |
மழைமுகிற் கவிகையின் வள்ள னன்கெனக் குழைதரும் விரிதலைக் குலையைப் பார்த்துநின் னுழையினிற் செல்கென வுரைப்ப வோடிமுற் புழைவழி நுழைந்தது பொருந்தி நின்றதே. | 2.13.15 | 899 |
மேதையச் சமுமுள விலங்கி னாயதோர் சாதியன் றீதொரு தருமுன் னாதலும் போதலும் படைத்தவர் புதிய நாயகன் றூதுவ ருண்மையென் றடியைச் சூடினான். | 2.13.16 | 900 |
பாதபங் கயமலர் சிரசிற் பற்றிநின் றாதியிற் சொலுங்கலி மாவை யன்பொடு மோதினன் றௌிந்தன னுரிய நாயகன் றூதுவர்க் கிவனொரு துணைவ னாயினன். | 2.13.17 |
901 |
பரிவுறு நபியெனும் பட்ட மாகிய வருடமே ழினிற்றின முஹர்ர மாத்தையிற் றெரிதரும் பிறைமுத லிரவிற் சேரலர்க் குரியவர் குறைஷிக ளொருங்கு கூடினார். | 2.14.1 | 902 |
கறைகெழு மனக்கொடுங் காபி ராகிய குறைஷியந் தலைவர்கள் பலருங் கூட்டமிட் டறபிக டம்முட னாய்ந்து வாய்மையான் முறைதவ றிடுமொரு கரும முன்னினார். | 2.14.2 | 903 |
ஹாஷிமுத் தலிபென வடுத்துக் கூடிய மாசறு மிருகுலத் தவரின் வாணிகம் பேசுதல் சம்பந்தம் பிறவு நீக்கிவிட் டேசறு சாதியின் விலக்கிட் டாரரோ. | 2.14.3 | 904 |
நெருப்புநீ ரிவைமுத னீக்கி நீணிலத் திருப்பவ ரெவருமங் கவர்க்கி டங்கொடா துருப்பமோ டிகல்வதே யெவர்க்கு மூழென வரைப்புற வொருமுறி வரைந்திட் டார்களால். | 2.14.4 | 905 |
சாதியின் விலக்கெனத் தவறி லாதெடுத் தோதிய வொப்பெனு முறியை யூரவர் மாதிர மடர்ககு பாவின் வாயிலிற் றூதரு மறியவென் றெடுத்துக் தூக்கினார். | 2.14.5 | 906 |
கொடுமனக் குறைஷியங் காபிர் கூடியப் படிநடத் திடுமந்நாட் பலன்கொண் மாமறை பிடிபடுந் தீனவ ரியாரும் பேதுறா துடலுயி ரெனவுவந் தொருங்கு கூடினார். | 2.14.6 | 907 |
தெரிதருந் தீனெறி யவருஞ் சேர்தரு மிருவகைக் கிளைஞரு மிசைந்த பேர்களுந் தருவெனத் தருமபுத் தாலிப் தம்புய வரையென வளைந்தவர் வாழு நாளினில். | 2.14.7 | 908 |
போதலர் மதீனமா புரத்தி னாடொறுங் கோதுறா தவுசெனுங் கூட்டத் தார்கட்குங் காதிய கசுறசுக் கிளைக்குங் கட்டறா தோதிய பெரும்பகை பொழிந்த தில்லையால். | 2.14.8 | 909 |
இசையுநூற் றிருபது வருட மும்கசு றசுவெனுங் கூட்டத்தா ரமைத்த வெற்றியே திசைபுகழ்ந் தனஅவு சென்னுந் திண்மையோர் விசயமோ ராண்டினும் வேய்ந்த தில்லையால். | 2.14.9 | 910 |
இந்தவல் வினையினா லிடைந்தவ் வௌசுளர் தந்தம ரொடும்பலர் தனித்து சாவியே சிந்தையிற் றௌிவொடுந் தெரிந்து பார்த்துநன் மந்திர மீதென வகுத்துக் காட்டியே. | 2.14.10 | 911 |
மக்கமா நகருறை மன்னர் தம்மைநம் மொக்கலி லின்புற வுவந்து சேர்த்துவந் திக்கணம் கசுறசை யெதிர்வ தல்லது புக்கிட மிலையெனப் பொருந்தக் கூறினார். | 2.14.11 | 912 |
பெறுமுறை யீதெனப் பேசி நால்வரைத் திறனொடுஞ் சேகரஞ் செய்து வம்மெனக் குறைவற வரிசையுங் கொடுத்த யாசினை யறமெனு மக்கமா நகர்க்க னுப்பினார். | 2.14.12 | 913 |
பெருகிய கிளையவு சென்னும் பெற்றியோர் வரவிடுத் தவர்சிலர் மக்க மீதினி லரிதின்வந் தனரென வறிந்து நந்நபி பரிவுட னெழுந்தவர் பாலி னேகினார். | 2.14.13 | 914 |
அங்குறைந் தவரகத் தன்பு கூர்தரப் பொங்கிய சிலமொழி புகன்று பின்னரு மெங்கினுந் தீன்படர்ந் தேற நன்மறை தங்கிய நாவினா லெடுத்துச் சாற்றுவார். | 2.14.14 | 915 |
பற்றல ரிடரப் படர்ந்திவ் வூரினி லுற்றநீ ருள்ளிவந் ததனி னோங்கிடும் பெற்றியுண் டெனதுரை பெற்றி ரேற்பெரும் வெற்றியுண் டுமதிடத் தெனவி ளம்பினார். | 2.14.15 | 916 |
வள்ளலிவ் வுரைதர மதீன மாநக ருள்ளவ ருள்ளகத் துவகை யூர்தர விள்ளுநுங் கருத்தென வினவ நன்மொழி தெள்ளிய மதுரவாய் திறந்து செப்பினார். | 2.14.16 | 917 |
அரியவ னருளினா லமரர் கோனெனக் கிருநிலத் தினினபி யென்னும் பேர்கொடுத் துரியவே தமுமினி துதவி நன்னெறி வரிசைநேர் வணக்கமும் வகுத்துப் போயினார். | 2.14.17 | 918 |
அகமகிழ்ந் திம்மொழி யனைத்தும் வேறிதென் றிகழ்விலா துண்மையென் றிசைந்து நீவிர்யான் புகழ்கலி மாநெறி பொருந்தி னீரெனிற் பகையறும் வெற்றியும் படரு மென்றரோ. | 2.14.18 | 919 |
நறைகமழ் முகம்மதாண் டுரைத்த நன்மொழி திறனயா சறிந்துளந் தேறித் தன்வயி னுறைபவர்க் கணிபெற வோதி வேண்டுவ பிறநினை விலையினி யெனவும் பேசினார். | 2.14.19 | 920 |
நன்பதந் தரும்புகழ் நபியைப் போற்றியா னென்பதி புகுந்தெமர்க் கியம்பி யொல்லையி னின்பதம் வரநிலை நிறுத்து வேனென வன்புற வுரைத்தெழுந் தயாசு போயினார். | 2.14.20 | 921 |
தடந்திகழ் மதீனமா நகரைச் சார்ந்தினத் துடனபி யுரைத்தவை யுரைப்பக் கேட்டவர் திடம்பெற விஃதுநன் றென்னச் சிந்தையி னிடம்பெறக் களிப்பொடு மிருக்குங் காலையில். | 2.14.21 | 922 |
கொடுஞ்சிலைக் கசுறசு வென்னுங் கூட்டத்தா ரிடும்பகை யுடனிவ ரெதிர்ந்து தாக்கலும் விடும்பரி படைக்கலம் வீழ்த்திக் காறளர்ந் தடும்படை யொடுமுறிந் தவதி யாயினார். | 2.14.22 | 923 |
பாடினிற் கசுறச படையெ லாமுறிந் தோடின ரவுசெனுங் கூட்டத் தோர்க்கெனப் பீடுடைப் பெரும்புகழ் பெருகிச் சூழ்திசை நாடடங் கலுந்தெரி தரந டந்ததே. | 2.14.23 | 924 |
நபிதமைக் கண்டுரை நடத்தி வெற்றியும் புவியினிற் பெற்றனம் பொருந்தி னோமெனி லெவர்நமக் கெதிரவர்க் கியைவ தேயென அவுசெனும் பெருங்குலத் தவர்கள் கூறினார். | 2.14.24 | 925 |
முகம்மதின் தீனிலை வழிச்செல் வோமென வகமகிழ்ந் தவுசினத் தவர்கள் கூறலும் புகழொடு மறுவர்க ளெழுந்து பொன்னில நகரெனு மக்கமா நகரை நண்ணினார். | 2.14.25 | 926 |
மறுவறு மவுசெனுங் குலத்து மன்னவ ரறுவரு நபிபத மடுத்துச் செவ்வியி னுறுகலி மாவெடுத் தோதி யன்பரா யெறுழ்வலி யொடுமிசு லாத்தி லாயினார். | 2.14.26 | 927 |
வேறு வாருதி யெனவரு மதீன மென்னுமவ் வூரவர் நமக்குயிர்த் துணைவ ராகிய பேரெனப் படைத்தனம் பெரிய னாலென வேர்பெற நபிமன மகிழ்ந்தி ருந்தனர். | 2.14.27 | 928 |
வேறு பின்னுதிரைக் கடனிலத்தில் விளங்குபுக மன்னவர்மன் னபுல்காசீ மனத்தினுநா மின்னவிர்செம் ம்லர்ப்பதத்தாண் முகம்மதுதம் யெந்நிலமு மிசுலாத்தின் கொழுந்துபல 2.14.28
| 929 |
உலகடங்கத் தனியரசு செலுத்தும் | யலகில்கதிர்ச் சிறைச்சபுற யீலகும விலகுகலி மாவோதி மணித்துகில் பலரறிய நபியெனும்பேர் பரித்தாண்டு 2.14.29
| 930 |
இறூமிகட்கும் பாரிசுநாட் டவர்க்கும்பெரும் | மறமுதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டா லுறையும்பெருங் குபிரவர்கேட் டுடற்பூரித் திறனடுத்த தெமர்க்கிழிந்த சிதைவடுத்த 2.14.30
| 931 |
தருவை நிகர் முகம்மதுநன் னபியுரைத்தா | முறியுமென விரித்த வாய்மை யொருபொழுதும் பழுதாகா தென்னஅபூ யிருமையினும் பலனறியா னிபுனுகல 2.14.31
| 932 |
எங்கள்குலத் தவருரையே பழுதாகிப் | லுங்கடமக் கருள்வேனூ றொட்டகையீ யெங்கணபி முன்னுரைத்த வுரைதவறி லுங்கடமக் களித்தலஃ தென்னவபூ 2.14.32
| 933 |
இருவருஞ்சம் மதித்திகலி யொட்டியவொட் | லொருகவிகை நிலவவுறூ மிகளடர்ந்து பெருகுமொழி யவரவர்கேட் டிபுனுகல னருவரைநே ரொட்டகநூ றடலரியே 2.14.33
| 934 |
ஒட்டியொட்டம் பலித்தவொட்டைத் திரளொடும்வந் | மட்டவிழ்திண் புயக்குரிசின் முகம்மதுதம் கட்டியபொன் மதிட்ககுபா நகரிடைவெங் விட்டமுடன் சதக்காவென் றிரப்போர்க்கும் 2.14.34
| 935 |
அன்பரா முகம்மதுவுக் கரியநபிப் | வொன்பதாம் வருடம்வரை யளவுமுயர் வன்பரா கியகுறைஷிக் காபிரிடு மின்புறா நின்றுசித லரித்ததெனப் 2.14.35
| 936 |
அரசரட லரியகும துரைத்தமொழி | கரிசமிடுங் குலக்காபிர்க் குரைப்பவதி விரைவினொடு மொப்புமுறி தனைக்கிழிப்ப யெரியிடைநெய் யிட்டதெனச் சிலகாபிர் 2.14.36
| 937 |
சாதிவிலக் கொப்புமுறி பரிகரிக்கும் | காதியெழுந் தபூஜகல்கண் செவந்துமனங் மோதுதலுங் கேளாது ககுபாவிற் பேதமறப் பார்ப்பளவின் முன்னெழுது 2.14.37
| 938 |
அல்லலறச் சிறந்தவரி யல்லாவென் | யில்லையெழுத் தினியிதனா லிருந்துபல பல்லருட னியான்பொருத்த மிலையெனவு வொல்லையினிற் கிழித்தெறிந்தான் சாதிவிலக் 2.14.38
| 939 |
இன்னிசைநன் மறைமுகம்ம திருங்கலிமாத் | மன்னமருந் திடநீருப் பங்கியளி சொன்னபடி சாதிவிலக் கொப்புமுறி றன்னிருக்கை வழங்காமன் மாறாத 2.14.39
| |
940 |
நிலத்தரசுக் கிதத்தநடுச் சிரத்தினணி குலத்தரச ரினிதுவப்பக் கலிமாவெண் சிலைத்தடக்கை வயவேந்த ரினிதுசூழ்ந் மலைத்தடத்தின் புயகுசைனு வெனுமறபி 2.15.1 | | 941 |
எதிரடுத்த குசையினுக்கன் பருளினொடுங் மதியினுமும் மறையினுந்தேர்ந் தவரவர்கள் கதிதருமென் புறுக்கானின் வழியொழுகா பதிவுபெறக் கலிமாவை யுரையெனநந் 2.15.2
| 942 |
| மானுரைத்த துடும்புரைத்த தமாவாசை தானுரைத்த தறியேனோ வுமதுவழி யானுரைப்ப திலைக்கலிமா விதயம்பொருந் தீனுரைத்த ஹபீபரசன் றடியினையோர் 2.15.3
| 943 |
அனைத்தையுங்கா ரணமலவென் றகத்திருத்தி | மனைத்தலத்தோ ருருத்தனைநீ வணங்கினையவ் கனைத்ததிரைக் கடனிலத்திற் பலர்புகழ னினைத்தபடி கலிமாவை யுரைப்பையோ 2.15.4
| 944 |
நந்நபியிந் நெறியுரைப்ப குசையினெனு | மென்னிடத்தி லாறுபத்தைந் தாண்டுவரை சொன்னதிலை யோர்மொழிமந் திரத்தடங்கித் ருன்னியவா சகத்தினொடு முரைக்குமென 2.15.5
| 945 |
பொன்னணிநன் மணிதூசு நறுமலர்கள் | மென்னொடுரை யாதகுல தெய்வமும பன்னுமறை வழியொழுகிப் படிதீண்டா மன்னுமிசு லாமாகிக் குபிரகற்றித் 2.15.6
| 946 |
திசைமுழுது மொருபுடையிற் கிடத்துங்கரு | குசையினைநின் மனைத்தலத்தி லிருந்தவுரு விசைதரும்வண் டிமிர்தொடையல் புரண்டசைய வசையறுநன் மணிக்கலன்க ளொடுபலதூ 2.15.7
| 947 |
விரைத்தழைகள் சுமத்திநறும் புகைகமழ்த்தி | யுரத்தினணைத் தொருதுகில்கொண் டுறப்போற்றி வரைத்தடத்திண் புயத்துநறை கமழ்ந்தமுகம் யிருத்தியொரு பாலிருந்தான் மும்மறையுந் 2.15.8
| 948 |
வைத்தபுத்தை முகநோக்கி யுனைவணங்கி | வித்தலத்துள் ளோரறிய வெனதுவர மெய்த்தவுரை மறைப்பேரும் விண்ணினுமண் றுத்தமசற் குணநயினா ரமுதமலர் 2.15.9
| 949 |
வெண்ணிலவு துளித்தொழுகு மதிவதன | வண்ணமலர் வாய்திறந்து பெரியோன்றன் பண்ணருநன் மறைநபியே வானவர்பொன் யெண்ணம்ருபே ரொளியுமும தொளியில்வரக் 2.15.10
| 950 |
அலலாவின் றிருத்தூதர் வேதநபி | பொல்லாத நரகடைவ ருமதடியிற் சொல்லார மனத்திருத்த வறிந்தவரே ரெல்லாரு மெனைப்போல்வா ரறிவரிது 2.15.11
| 951 |
புத்துரைத்த மொழிகேட்டு குசைனெனுமவ் | முத்தமணி யொளிமுகம்ம தடிபரவிக் பத்திபெறத் தொழுகைமுதற் படித்துத்தீ மெத்தலமும் புகழ்ந்தேத்த வீமான்கொண் 2.15.12
| |
952 |
தனுவின் மான்மத முலவிய முகம்மது தழைப்பப் புனித மாமறை மதிகலி மாக்கதிர் பொழிய வினிதில் தீன்றிசை விளங்கிட விருக்குமந் நாளி லனில மொத்தபித் தாலிபுக் கடைந்ததா யாசம். | 2.16.1 | 953 |
வருத்த நாட்குநாண் முற்றிமெய் மெலிவொடு மயங்கி யிருத்தல் கண்டுநந் நபிமன மிடைந்தரு கிருந்தார் திருத்தி லாஅபூ ஜகுலொடு நகரவர் திரண்டு குருத்த வெண்கதிர்ச் சுதைமனை யிடனறக் குவிந்தார். | 2.16.2 | 954 |
பெருக வந்திருந் தவர்களை விழித்துரை பிறழா தொருவ ருக்கொடு பகையிலை யெனும்படி யொழுகி யிருமெ னத்தலத் தவர்க்கினத் தவர்க்கெடுத் திசைத்தார் தெருளுஞ் சீரபித் தாலிபென் றுரைத்திடுஞ் செம்மல். | 2.16.3 | 955 |
கடந்த மும்மதக் கரிதொடு குழியினைக் கடவா தடைந்த வாறெனக் கிடந்திடும் பெரியதந் தையரைப் படர்ந்த நன்கலி மாச்சொலுஞ் சொலுமெனப் பகர்ந்தார் தொடர்ந்து வானவர் பரவிட வருமிற சூலே. | 2.16.4 | 956 |
காதி னுட்புகுந் தனவிலை யெனப்பினுங் கருதி யோது நன்கலி மாவென முகம்மது முரைக்கும் போதி னிற்றனி யழன்றபூ ஜகுலுடல் புழுங்கி மோதி வந்தபித் தாலிபுக் குரிமையின் மொழிவான். | 2.16.5 | 957 |
தந்தை தாய்தம ரொழுகிய மொழிவழி தவிர்ந்திட் டிந்த நாளினின் முகம்மதி னுரையினுக் கியைந்தீர் பிந்து நாளையின் முன்னுரை மறைநெறி பிசகா தந்த வாய்மையை மனத்தினின் மறவலென் றறைந்தான். | 2.16.6 | 958 |
உரப்பி யாங்கரித் தபூஜகு லுரைத்திடு முறையிற் பரப்பு நன்கதிர் முகம்மது பகர்ந்தது தெரியா திரைப்பெ ருங்கட லெனவினஞ் சூழ்தர விறந்தார் மரைப்ப தத்தபித் தாலிபென் றழகுறும் வள்ளல். | 2.16.7 | 959 |
வட்ட வாரிதிப் புவியிடை முகம்மது தமக்குப் பட்ட மென்பவந் திறங்கிய வருடம்பத் ததின்மே லெட்டு மாதமும் பதினொரு நாளுஞ்சென் றிதற்பின் சட்ட கந்தனை விட்டுயிர் பிரிந்தவண் சார்ந்தார். | 2.16.8 | 960 |
மறந்த யங்குவேற் கரஅபித் தாலிபு மன்ன ரிறந்த காலையிற் கடலுடைந் தெனநக ரிரங்கச் சிறந்த மாதர்தமை விழிமழை பொழிதரச் செருமி யறங்கி டந்தநெஞ் சவரொடு மழுதிரங் கினரால். | 2.16.9 | 961 |
வரிசை நந்நபி முகம்மது வயிறலைத் திரங்கப் பரிச னத்தவ ரடங்கலும் பதைபதைத் தேங்க வரச ரியாவரும் வந்தடுத் தெடுத்துநீ ராட்டிச் சரகி னேர்வழி யடக்கினர் முடித்தனர் சடங்கு. | 2.16.10 | 962 |
பெரிய தந்தைய ரிறந்திடும் பருவரல் பெருகி யரிய நாயகன் றூதுவ ரகத்தினி லழுங்கி வரிகொள் வண்டிமிர் செம்மலர் மரைமுகம் வாடி யுரைதெ ரிந்திலர் போலிடைந் தகத்துறைந் திருந்தார். | 2.16.11 | 963 |
அகத்தி னிற்பெருந் துன்பொடு மிருக்குமூன் றாநாள் வகுத்த நாயகன் விதிவழி குவைலிது மகளா ரிகத்தி னிற்புகழ் நிறுத்திவிண் ணகம்புக ழிலங்கத் தகுத்தொ டும்பெரும் புதுமையிற் றிருவடி சாய்ந்தார். | 2.16.12 | 964 |
முடிவி லாதவன் றூதுவர் முகம்மது நபிக்கு வடிவ மைந்தமெய்த் துணைவியாய் மகிதலத் திருந்து கடிகொள் பொன்னக ரத்தினிற் கதிர்கொண்மா ளிகையிற் குடிபு குந்தனர் கத்தீஜா வெனுங்குலக் கொடியே. | 2.16.13 | 965 |
நனைத தும்பிய மலர்ப்புய முகம்மது நபிக்கு மனைவி யாகிய கத்தீஜா வெனுங்குல மயிலைப் புனையும் பூந்துகிற் பொதிந்துநற் புகழொடு மேந்தி வனையு மென்மனம் போலினி தடக்கினர் மகிழ்ந்தே. | 2.16.14 | 966 |
பேதை யர்க்கர சினையருட் பெரியவன் றூதர்க் காத ரம்பெரு மயிலினை யெடுத்தினி தடக்கிக் காத லுற்றுயர் தீனிலை யவர்கலந் திருந்து கோத றச்செயுஞ் சடங்குகள் குறைவற முடித்தார். | 2.16.15 | 967 |
இலக்க முற்றிடும் பெரியதந் தையரிறந் திருந்த வலக்கண் மேற்கொள வருந்திய காலையி லணியாய் நிலைக்கும் பேரெழின் மனைவியு மிறந்திட நிலையாக் கலக்க முற்றது மறைமுகம் மதுநபி கருத்தில். | 2.16.16 |
968 |
ஆர ணப்பொரு ளகுமது மவதியுற் றதனாற் கார ணப்பல னறிந்தும்வஞ் சனையெனுங் காபிர் பார ணைத்தெறிந் திருகவுண் மதசலம் பரப்பும் வார ணத்தினு மும்மடங் கெனும்படி வலித்தார். | 2.17.1 | 969 |
மிகைத்த வீறரி முழைபுகுந் தெனவிற னயினா ரகத்திற் றுன்பினி லடங்கின ரெனவறி கிலராய்ப் பகைத்த புன்மனக் கொடியவர் பெரும்பகை தொடுத்தா ரிகத்தி னும்மறு புரத்தினு மிவையிலை வெனவே. | 2.17.2 | 970 |
குறைஷி யங்குலக் காபிர்கள் விளைத்திடுங் கொடுமை யறவு மேல்வளர்ந் தனகுறைந் திலஅபித் தாலி பிறைவன் முன்விதி யமைத்திடும் படியிவ ணிறந்து நிறையுந் திங்களு மூன்றெனத் தினநிகழ்ந் தனவே. | 2.17.3 | 971 |
காய முள்ளுரை யுயிரெனு மிருவருங் கம்புக் காய தும்மினத் தவர்பகை யையுமனத் தடக்கித் தூய நாயகன் தீனிலை பெருக்கிடுந் துணிவாற் றாயி பென்னுமத் தலத்தினுக் கெழுந்தரு ளினரே. | 2.17.4 | 972 |
சவிகொள் வெண்சுதை மாமதிள் தாயிபி லிபினு அபுது யாலிலென் றிடும்பெயர்க் குறைஷியென் பவனை நபிக ணாயகங் கண்டன ரவனெதிர் நடந்து குவிகை கொண்டுபின் னிவரொடு மனைகுறு கினனே. | 2.17.5 | 973 |
மனையி னிற்கொடு போய்முகம் மதுதமை யிருத்தி யினிய வாசகத் தன்பொடும் புகழ்ந்தெடுத் தேத்தி வனச மென்மலர் செழும்பதத் திணைவருந் திடவே தனிய னென்வயின் சார்ந்தவை சாற்றுக வென்றான். | 2.17.6 | 974 |
கண்ட போதினி லுவகையி னிருகரங் குவித்துக் கொண்டு நின்றுநன் மொழிபகர்ந் தனனெனக் குறித்து வண்டு வாழ்மலர்ப் புயமுகம் மதுநபி மணிவாய் விண்டு தேன்சொரிந் தெனச்சில மொழிவிளம் புவரால். | 2.17.7 | 975 |
ஆதி தன்னருள் வானவர்க் கரசெனை யடுத்து நீதி நன்னபி யெனும்பெய ரளித்துநீ ணிலத்தில் வேத மும்மெனக் கருளிதீ னிலைவிரித் திடுமென் றோதி விண்ணகத் துறைந்தனர் செழுங்கதி ருலவ. | 2.17.8 | 976 |
அந்த நாட்டொடுத் திற்றைநாள் வரையுநல் லறிவர் புந்தி கூர்தரச் செழுங்கலி மாத்தனைப் புகட்டி வந்து சூழ்தரு பவக்களை தவிர்த்துமண் ணிலத்தி லுய்ந்து நற்கதி பெறுவதற் குறுதிசெய் தனனால். | 2.17.9 | 977 |
உன்னு நன்மறை முதற்கலி மாவெடுத் துரைத்துன் றன்னை நல்வழி யவனெனுந் தகைமையிற் படுத்தி மன்னுந் தீனிலை விரித்தறம் வளர்த்திட வேண்டிற் றென்னு ளமதி னடைந்தனென் றுரைத்தன ரிறசூல். | 2.17.10 | 978 |
கதிர்தி ரண்டுரு வெடுத்தவ ருரைத்தகட் டுரைகேட் டதிவி தத்தொடு நன்கெனச் சிரங்கர மசைத்துப் புதிய மாமறைக் கையமி லெனப்புகழ் படுத்தி மதியின் வேறுவைத் திசைந்திடுஞ் சிலமொழி வகுப்பான். | 2.17.11 | 979 |
எடுத்து ரைத்தவை யென்னினத் தவர்க்கெடுத் தியம்பி யடுத்தி ரண்டொரு தினத்தினும் மிடத்தினி லணுகி வடித்த வாய்மையி னொழுகுவன் மறைதெரி மதியோய் படித்த லம்புகழ் நகரினிற் செலுமெனப் பகர்ந்தான். | 2.17.12 | 980 |
இனைய வாசக முரைத்தவ னிருப்பநம் மிறசூல் வினைய முற்றதிவ் விடத்தெனத் தாயுபை விடுத்து நினைவு நேரொடு தொழுதெழுந் திருந்துநன் னெறிக்கே நனைகொண் மென்மலர் கானகத் தருத்தர நடந்தார். | 2.17.13 | 981 |
ஆல மும்வௌி றிடக்கெடுங் கொடுமனத் தப்து யாலி லென்பவன் சிறியவர்க் கினியவை யுரைத்து மேலும் பேதைநெஞ் சவருட னிவரையும் விரவிக் கோலும் வன்கதம் வரச்சில மொழிகொளுத் தினனால். | 2.17.14 | 982 |
வெறியும் பித்துமுற் றவனிவண் பெருவழி விடுத்தோர் நெறியி டைத்தனி சென்றன னவன்றனை நேடி மறியுங் காறலை தகர்ந்திட வலியகல் லெடுத்திட் டெறியு மேகுமென் றுரைத்தன னரகிடை யெரிவான். | 2.17.15 | 983 |
வஞ்ச கக்கொடி யவனுரைத் திடுமொழி வழியே பஞ்ச பாதகர் நடந்தரும் பாதையைக் குறுகிக் கஞ்ச மென்பத முகம்மதைக் கடிதினில் வளைந்திட் டஞ்ச லாதுகற் குணிலெடுத் தெரிந்துநின் றடர்ந்தார். | 2.17.16 | 984 |
கல்லி னாலுரஞ் சிரங்கரங் கான்முகங் காணா தெல்ல வன்கதிர் பொழிந்தெனப் பல தொடுத் தெறிந்து பல்லி னாலித ழதுக்கியு முறுக்கியும் படர்ந்தார் சொல்லொ ணாப்பெரும் பாதகம் விளைத்திடுஞ் சூமர் | 2.17.17 | 985 |
இருமை யும்பத மிழந்தவர் செலச்சினந் தெறிந்து கருனு தாலிபு மட்டினுந் தொடர்ந்தவர் கலைந்தார் தருகை வள்ளனந் நபிமுகம் மதின்முழந் தாளி லொருகல் லேறுபட் டூறுபட் டுதிர்ந்தன வுதிரம். | 2.17.18 | 986 |
ஊறு பட்டதின் வருத்தமும் பசியினுள் ளுலைவு மாறு பட்டவர் தொடர்ந்ததி னடந்தமெய் மலைவும் பேறு பட்டமுந் தந்தவ னருளெனப் பெரிதின் றேறு பட்டவ ணிருந்தனர் திருநபி யிறசூல். | 2.17.19 | 987 |
இருந்து மெய்வருத் தந்தவிர்த் தந்தரத் திடத்திற் றிருந்த நோக்கினர் மங்குலின் வயின்ஜிபு ரீலைப் பொருந்தக் கண்டுகண் களித்தனர் புதியவன் றூதர் விரிந்த வெள்ளிடை கடந்தணித் துறவிளங் கினரால். | 2.17.20 | 988 |
வந்த டுத்திறை யவன்சிலா முரைத்துமெய் வருந்த லிந்த மாநிலத் திற்றைநும் மினத்தவ ரிடரா லந்த நாயக னமரரில் வரைக்கர சவரை யுந்த மேவலுக் கேவின னெனவெடுத் துரைத்தார். | 2.17.21 | 989 |
இறும்பி னுக்கர சாகிய மலக்கும திடத்தி னுறும்ப கைத்திர ளெத்தனை யாகிலு மொடுக்கிக் குறும்பி னைத்தவிர்த் திடவரு குவரெனக் கூறிப் புறம்ப ரந்தசெங் கட்கடை யருளொடும் போனார். | 2.17.22 | 990 |
உருப்பொ திந்தநல் வடிவவ ருரைத்தொரு நொடிக்குட் பருப்ப தங்களுக் கிறைசெழுந் தடஞ்சிறை பரப்பித் திருப்பு நீரலைக் கடல்வரை புவிதிடுக் கிடவே விருப்ப முற்றுநந் நபியிடத் தடுத்தனர் விரைவின். | 2.17.23 | 991 |
வெற்ப டங்கலுங் கரங்களிற் பிசைந்துவிட் டெறிந்து புற்பு தக்கட லிறைத்தொரு கடலினிற் புகட்டிப் பற்ப மாக்கும்வெங் கனலையும் புகையறப் படுத்தி நிற்ப வீரமும் வலிமையும் படைத்தநன் னெறியார். | 2.17.24 | 992 |
உதய மாகிரிக் கொருதரந் தடவுவ ரொருகை புதைய மேற்கிரி தடவுவர் விண்ணைமண் புரளச் சிதறித் தீவக மேழையுங் கடலிடை சிதைப்பார் விதிய வன்விதித் திடுமவை யெவையெனும் விரதர். | 2.17.25 | 993 |
ஒருநொ டிக்குளந் தரமடங் கலுந்திரிந் துலவி யொருநொ டிக்குளிவ் வானகங் கவிந்தமட் டுலவி யிரும னத்தொடும் வரவரம் படைத்தவ ரெழிலா ரிருசெ விக்கொடுத் தேவலின் படிக்கிசைந் திருப்பார். | 2.17.26 | 994 |
சித்தி ரத்தடப் புயவரை முகம்மது திருமு னுத்த மத்தொடு மொடுங்கிநின் றொருசலா முரைத்து முத்த வெண்கதி ரவரிரு மெனுமொழி கேட்டுப் பத்தி யாயரு கிருந்தொரு மொழிபகர்ந் திடுவார். | 2.17.27 | 995 |
எத்த லத்துயி ரினுக்குநல் லுணவளித் திரங்கு மத்த னென்னைநும் மேவலுக் கருளின னதனா லித்த லத்தில்வந் தடைந்தன னினியருட் கடைக்கண் வைத்தி ரேற்பணி விடைதறு கிலன்மறை மதியோய். | 2.17.28 | 996 |
அருந்து மாரமு தக்கலி மாவுரைக் கடங்கா திருந்த வூரெவை பகைத்தவ ரியாவர்நும் மிதயம் பொருந்தி டாத்திசை யெத்திசை பொருவராக் கதிர்மெய் வருந்தல் செய்தவ ரெவர்திரி தரவழங் கிடுமே. | 2.17.29 | 997 |
செப்பி னீரெனிற் செறுநர்க டிரளுமத் திசையு முப்பு வாரியு ளமிழ்த்துவ னலதொரு வரையா லிப்பெ ரும்புவிக் குள்ளரைத் திடுகுவ னௌியேன் றுப்ப றிந்திட வேண்டுமென் றிரவொடுஞ் சொன்னார். | 2.17.30 | 998 |
விண்டி னுக்கர சிவைபகர்ந் திடத்துளி விதிர்க்குங் கொண்ட லங்கவி கைக்கிறை யகங்களி கூர்ந்து மண்ட லத்தும துரைவழி நடத்திடின் மறைநேர் கண்டு தேறுவ ரெவர்பொறை நிலத்தினிற் கடனே. | 2.17.31 | 999 |
இறைய வன்னருட் படிக்கிட ரடைந்ததென் னிடத்திற் குறையி தென்றுமா னிலத்தவர் தமைக்குறை படுத்தன் மறையி னேரல வெகுளியை மனத்தினி லடக்கி நிறையி னிற்பது பெரியவர்க் குரியநன் நிலையே. | 2.17.32 | 1000 |
மிக்க வன்குபிர்க் கொலைத்தொழின் மனத்தினை விடுத்திட் டிக்க ணத்தினல் வழிப்படா ரெனிலிவர் பயந்த மிக்க ளாயினு நல்வழிக் கொழுகுவர் மறையுந் திக்க டங்கலும் பரந்துதீ னெறிமுறை செயுமே. | 2.17.33 | 1001 |
வான நாயக னேவலுக் குரியவ மகிழ்வின் யானி னைத்திடும் பொழுதினில் வருகவிற் றையினுந் தான மீதினிற் செல்கவென் றிசைத்தனர் தளரா தான செய்கையீ தெனவெழுந் தனர்மலைக் கரசர். | 2.17.34 | 1002 |
உள்ள மீதிலன் பொடுநபிக் குயர்சலா முரைத்து வெள்ளி டைப்படர்ந் தவணடைந் தனர்மலர் விரிந்து கள்ள லம்பிய பொழில் செறி கற்னுத ஆலிப் வள்ள லாரிருந் தனர்புவி யிடையெழு மதிபோல். | 2.17.35 |
1003 |
மறைகலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்துத் தாக நிறையொடும் பசியுந் துன்னி நீணெறி யிருப்ப வவ்வூ ரிறபீஆ புதல்வர் தம்மி லிருவர்க ளினிது நோக்கிக் குறைவிலா மனத்தி னோர்ந்து மனையிடங் குறுகி னாரால். | 2.18.1 | 1004 |
அன்னவர் தொழும்ப னத்தா சென்பவ னவனைக் கூவிக் கன்னலஞ் சுவையின் மிக்காந் திருகையின் கனியை யேந்தி யின்னணங் கொடுபோ யாண்டி னிருப்பவர் கரத்தி னீந்து பன்னரும் பசியை மாற்றி வாவெனப் பரிவிற் சொன்னார். | 2.18.2 | 1005 |
காசறுந் தட்டத் திட்ட பழத்தினைக் கரத்தி லேந்தித் தூசினிற் பொதிந்து தோளிற் சுமந்தரு நெறியை முன்னிப் பாசடைத் தருக்க ளியாவும் பலமலர் சொரிய வாய்ந்த வாசமூ டுலவுஞ் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான். | 2.18.3 | 1006 |
கனியினைக் கொணர்ந்து வைத்தோன் செம்முகங் கவின நோக்கி யினிதினி லிருக்கை யீந்திட் டெழிற் செழுங்கமலக் கையாற் பனிமலர்த் துகிலை நீத்துப் பழத்தினைத் தீண்டி யின்ப மனையநல் பிசுமி லோதி யமுதென நுகர்தல் செய்தார். | 2.18.4 | 1007 |
பண்ணினு மினிய தேன்சார் பழத்தினிற் பசியைப் போக்கி யுண்ணிறை யுவகை கூர்ந்தெவ் வூரவ னின்பே ரேதென் றண்ணலு முரைப்பச் செவ்வி யகமகிழ்ந் தத்தா சென்போன் புண்ணியப் பொருளே யென்னப் போற்றி வாய்புதைத்துச் சொல்வான். | 2.18.5 | 1008 |
நள்ளென வுலகி னூழின் வருநசு றானி மார்க்கத் துள்ளவ னீன வாவென் றோதிய வூரி னுள்ளேன் றெள்ளிய னிறபி ஆதன் றிருமனைக் கிணகன் சேந்த வள்ளிலை வேலோ யத்தா சென்பவ னடியே னென்றான். | 2.18.6 | 1009 |
விரிந்தமுன் மறைக டேர்ந்து மெய்ந்நெறி முறைமை நாளும் பிரிந்திடா துறையூ னூசு நபியெனும் பெயரின் வள்ள லிருந்தவூ ரவனோ வென்றா ரினிதின்முன் னவரை யின்னோர் தெரிந்தவா றெவ்வா றென்னச் சிந்தையுட் சிந்தித் தானே. | 2.18.7 | 1010 |
பொன்னுல கமரர் போற்றப் பூவிடை யிருந்த யூனு சென்னுநன் னபியை நீவி ரெவ்வண மறிவீ ரென்ன நன்னிலை யொடுமத் தாசு நவின்றனன் வணங்கி லாத மன்னவர்க் குருமே றென்ன வருமுகம் மதுபின் சொல்வார். | 2.18.8 | 1011 |
படியிடத் தினில்யூ னூசு நபியெனும் பட்டம் பெற்றோர் நெடியவன் றூத ரியானு நபியெனு நிலைமை பெற்றேன் வடிவுளோ யதனா லெற்கு மன்னுயிர்த் துணைவ ராகு மடனபி மாரு மென்றா ராரணங் கிடந்த வாயார். | 2.18.9 | 1012 |
நபிகளுக் கரசாய் வந்த நாயக முறைத்த மாற்றஞ் செவியினிற் புகுத வுண்மைத் திருநபி யிவரே யென்னத் தவிர்கிலா துள்ளத் துன்னிச் சரணிணை யிறைஞ்சி யேத்திக் கவினுறுங் கலிமா வோதிக் கண்ணிணை களிப்ப நின்றான். | 2.18.10 | 1013 |
மக்கநன் னகரில் வாழு முகம்மதுக் கத்தா சென்போ னிக்கணத் தீமான் கொண்டா னெனுமொழி யிறபீ ஆதன் மக்கள்கேட் டறவு நக்கி மாயவஞ் சகத்துட் புக்கிச் சிக்கினன் றொழும்ப னியாமென் செய்குவோ மென்ன நைந்தார். | 2.18.11 | 1014 |
மதிபகிர் நபிக்கன் பாக மந்திரக் கலிமா வோதி யிதயமொத் தினிதீ மான்கொண் டிருமனக் குபிரை நீத்துப் பதமலர் துதித்துத் தேடாப் பலன்கதி படைத்தே னென்னப் புதியநல் வடிவ னாகிப் பொருவிலத் தாசு போனான். | 2.18.12 |
1015 |
படர்ந்துவண் டினந்தே னுண்டு செல்வழி பாடுங் கஞ்சத் தடந்திகழ் கற்னு தஆலி பென்னுமத் தலத்தை நீந்திக் கடந்தனிற் குபிரென் றோதுங் களிறட ரரியே றென்ன நடந்துநன் னகுலா வென்னுந் தலத்தினை நண்ணி னாரால். | 2.19.1 | 1016 |
பொங்கிநின் றமர ரியாரும் பொன்னடி பரவி யேத்து மங்குலங் கவிகை வள்ளன் முகம்மது நகுலாத் தன்னிற் றங்கினர் பறவை தத்தங் குடம்பையிற் சார வவவிப் பங்கயங் குவியச் செங்கே ழலரிமேற் பரவை சார்ந்த. | 2.19.2 | 1017 |
அலரிமேற் கடலுட் புக்க வடரிரு படலஞ் சீப்ப நிலவுகொப் பிளித்த தென்ன நீண்டமெய்ச் சோதி கால நலனுறு நகுலா வென்ன நாட்டிய தலத்தி னோர்பாற் சலதரக் கவிகை யோங்கத் தனித்தவ ணிருந்தா ரிப்பால். | 2.19.3 | 1018 |
அலைகடற் றிரைக்கு நாப்ப ணாளியா சனத்தில் வைகி யுலகெலாங் கொடுங்கோ லோச்சி யொருகுடை நிழலிற் றாங்கிப் பலகலை மருவலார்க்குப் படிறெனும் படைந டாத்துந் தலைமையன் சிறுமை கீழ்மை தனைப்பெரு மையதாய்க் கொண்டோன். | 2.19.4 | 1019 |
கொலையினுக் குரிய தந்தை கோளுயிர்த் துணைவன் மாறா நிலைகெடுங் கரவுக் கன்ப னிந்தனைக் குற்ற தம்பி யிலைபிழி மதுவுக் கீன்ற சேயினு மினிய னீண்ட வுலகினின் மாயமெல்லா மோருரு வெடுத்து நின்றோன். | 2.19.5 | 1020 |
எண்ணிறந் தனைய காலமிருந் திறை யேவன் மாறி விண்ணில கிழந்து மெய்மை விதிமறை தனக்கு நாணி மண்ணிலத் திருந்து வாழு மானுட ரெவர்க்கும் வெய்ய தண்ணிய னிபுலீ சென்னுந் தனிப்பெரு நாமத் தானே. | 2.19.6 | 1021 |
மக்கடங் குழுவின் வைகி மந்திரந் தலைவர் சூழ மிக்கஜின் சிலதைக்கூவி விறன் முகம் மதுவை நீவி ரிக்கணத் திற்றைப் போதி லெவ்விடத் துறைந்தா ரென்றென் பக்கலி லுரைப்ப நோக்கி வம்மெனப் பரிவிற் சொன்னான். | 2.19.7 | 1022 |
அருந்தவந் தவறி நின்ற வரசனீ துரைப்பக் கேட்டுப் பெருந்தொகைக் குழுவி னோடும் பெரி தெழுந் தாழிசூழ விருந்தவை யகத்தி காந்த மெட்டினுந் தேடிச் சென்று பிரிந்ததி லொன்பான் ஜின்கள் பேரற படைந்த வன்றே. | 2.19.8 | 1023 |
அற்றையிற் பொழுதி ராவில் ரகசியத் தொழுகை யன்பாய் முற்றுற முடித்து வள்ளன் முதலவன் றன்னை யேத்திக் குற்றமற் றிரந்து நின்ற வசனத்தின் குறிப்புக் காதி னுற்றடுத் தொருங்கு நோக்கி யோரிடத் துறைந்த வன்றே. | 2.19.9 | 1024 |
தரிப்பொடுந் துவாவை யோதித் தனிநகு லாவி னோர்பர்ல் விருப்பொடு மிரப்பக் கேட்டு மிகமகிழ்ந் திதய நோக்கி யிருப்பது நபியே வாய்கொண் டிசைப்பது புறுக்கா னென்னத் திருப்புதற் கரிதாய் நின்று ஜின்கண் மெய்சிலிர்த்த வன்றே. | 2.19.10 | 1025 |
இத்தினத் தினிலன் பாக வெழினபி கமல பாத முத்திபெற் றீமான் கொண்டு முதற்பவந் துடைப்போ மென்ன வொத்தித மித்துத் தம்மி லொன்றுக்கொன் றுறுதி கூறிப் பத்தியுள் ளிருத்தி நாட்டத் துடன் வௌிப்பட்ட வன்றே. | 2.19.11 | 1026 |
பனியொடு திமிர மூடப் படவரு மிரவின் கண்ணே தனியிருந் தெழின்மெய்ச் சோதி தயங்கிய நபிமுன் பாக வினியவர் போலச் சென்று வந்தவா றெடுத்துக் கூறிக் கனியென நெகிழ்ந்த நெஞ்சிற் கருத்தையுங் கூற லுற்ற. | 2.19.12 | 1027 |
பின்னணித் தாதி தூதர் பிறப்பரென் றாதி நூல்கள் பன்னிய துளதின் றெங்கட் பார்வைகள் குளிரக் கண்டே முன்னைநாட் பவங்க டீர்த்தே முகம்மதே யென்னப் போற்றிச் சொன்னயக் கலிமா வோதிச் சுடர்ப்பதந் தொழுது போன | 2.19.13 | 1028 |
நன்கலி மாவை யோதி நறுமனக் களிப்பி னோடுஞ் ஜின்கடம் மினத்தைச் சேர்ந்து சென்றது மறபு நாட்டின் மின்கடந் திலங்குஞ் சோதி விரிந்தமெய் முகம்ம தென்னுங் கொன்கதிர் வேலார்க் கீமான் கொண்டது முரைத்துக் கூறும். | 2.19.14 | 1029 |
பூதலத் திடத்தின் மக்கா புரத்தினின் முகம்ம தென்போர்க் காகித னருளாற் றூதென் றருநபிப் பட்டம் வந்து வேதமு மிறங்கித் தின்பத் தீனெறி விளக்கஞ் செய்தார் பேதம தன்று காணா திருப்பதும் பிழைய தன்றே. | 2.19.15 | 1030 |
வஞ்சக னிபுலீ சென்போன் வார்த்தையு ளடங்கிப் பேதை நெஞ்சின ராகித் தீயோ ரெனநிலை நின்றோம் வேறொன் றஞ்சலித் தறியோம் நல்லோர்க் கவம்விளைத் தோமீ தெல்லாம் நஞ்சுறை நரகம் புக்கு நெறியலா னலனு முண்டோ. | 2.19.16 | 1031 |
நபிதிருப் பாத நண்ணி நன்னெறி முறைவ ழாதோர் புவியிடத் தினிது வாழ்ந்து பொன்னுல காள்வ ரென்றார் கவினுறும் பெரியோர் வேதங் காட்டிய நெறியு மீதே தவிர்கிலா தெழுக வென்னச் சாற்றின ஜின்க ளன்றே. | 2.19.17 | 1032 |
கூறிய மொழியைக் கேட்டுக் குழுவுட னிருந்த ஜின்க டேறிய கருத்து ளொத்துத் தேர்ந்தெழுந் தவிட நீந்திப் பேறுடை மக்க மென்னும் பெரும்பதி யடுத்தோர் ஜின்னை யீறிலான் றூதர்க் கன்பாய்த் தூதுவிட் டிருத்த வன்றே. | 2.19.18 | 10331 |
நறைகொளுஞ் செவ்வித் திண்டோ னபிநகு லாவை நீந்தி யிறைவனே வலினால் வானோ ரெண்ணிலர் சூழச் செல்வங் குறைவறா மக்க மென்னுங் கொழுநக ரதனின் வந்தார் மறைபட விருந்து ஜின்கள் வரவிடுந் தூதும் வந்த. | 2.19.19 | 1034 |
வந்ததூ திருந்த செவ்வி மதிமுகம் மதுவைக் கண்டு கந்தமென் மலர்த்தாள் வீழ்ந்து கைகுவித் தெழுந்து போற்றிச் சிந்தையின் மகிழ்ந்தன் பாகச் சின்களால் விடுக்க வந்த சந்தியா னென்னச் சாற்றிப் பின்னருஞ் சாற்று மன்றே. | 2.19.20 | 1035 |
எங்கடங் குலத்தி னுள்ளா ரெண்ணிலர் நகர்க்க ணித்தாய் மங்குலின் கவிகை யோய்நும் மலர்பதங் கண்டு தீனி னிங்கிதத் தொடுமீ மான்கொண் டேகுதற் கிசைந்து நின்றா ரங்கெழுந் தருள வேண்டு மென்றினி தறைந்த தன்றே. | 2.19.21 | 1036 |
ஜின்னிவை யுரைப்பக் கஞ்சச் செழுமுக மலர்ந்து வேதம் பன்னிய பிசுமி லோதிப் பண்புட னெழுந்து வள்ளல் பொன்னணி மாட வீதி நகர்ப்புறத் தடுத்துக் கூண்டு மன்னிய குழுவின் வந்தார் மாநிலந் தழைக்க வந்தார். | 2.19.22 | 1037 |
கருமுகி னிழற்றக் கஞ்சக் கதந்தரை படாது நானம் பொருவறக் கமழவந்த புண்ணியப் பொருளைக் கண்டு திருமுகத் தெதிர்ந்து ஜின்க டிரளொடு மிறைஞ்சி வாழ்த்திப் பருவர லகற்றித் தேறச் சிலமொழி பகரு மன்றே. | 2.19.23 | 1038 |
வானகத் தமரர் செய்ய மலரடி பரவி யேத்த நானிலத் தரிய வேத நபியெனும் பட்ட நும்பா லானதற் குரித்தா யெங்க ளகத்தினிற் களங்க மென்னு மூனமற் றிடவே றுண்மை யுறுதியொன் றறிய வேண்டும். | 2.19.24 | 1039 |
வன்களங் ககற்றித் தீனின் வழிநிலை குறித்து வந்த ஜின்களிற் றலமை யான ஜின்களிவ் வுரையைத் தேற்றப் பொன்கடந் தொளிருந் திண்டோட் புரவல ரிறசூ லுல்லா வின்களிப் பொழுக நோக்கி யெடுத்துரை கொடுப்ப தானார். | 2.19.25 | 1040 |
குவடுறை விலங்கி னாலோ கொழுஞ்சிறைப் பறவை யாலோ தவழ்தரு முயிரி னாலோ தருக்களி னாலோ வுங்கள் செவியறிந் திதயங் கூர்ந்து தெரிதர வென்னை யிந்த வவனியி லுண்மைத் தூதென் றறியவேண் டுவதே தென்றார். | 2.19.26 | 1041 |
பேதமற் றுரைத்தீர் சோதி பெருகுதீன் விளக்கே யிந்தப் பாதையிற் றருவந் தெங்கள் பார்வையிற் கணித்தாய் நின்று தூதுவ ரென்றோர் மாற்றஞ் சொல்லுமேற் கலிமா வோதிக் கோதற மனத்து ளீமான் கொள்வது திண்ணமென்ற. | 2.19.27 | 1042 |
கடத்தின்மா னுரைப்ப நின்ற காரணக் குரிசி றூரத் திடத்தினி னின்ற வஞ்சித் தருவினை யெதிர்ந்து நோக்கி படித்தலத் துறைந்த வேரின் பற்றறா தெழுந்து வெற்பி னடுத்திவண் வாவென் றின்ப வமுதவாய் திறந்து சொன்னார். | 2.19.28 | 1043 |
பாசடை குழைத்த வஞ்சித் தருபடி துளைதுதுள் ளோடி வீிசிய கவட்டுச் சில்லி வேரிலொன் றறாத வண்ண மாசற வெழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கிக் காசினி யிடத்திற் றோயக் கவின்பெறப் படிந்த தன்றே. | 2.19.29 | 1044 |
பலனுறுங் கலிமாத் தன்னைப் பணரெனும் பலகை யார நிலைபெறு மறபி னானன் னெடுநிலத் தெழுதிச் சின்கள் குலனொடு மினிது காணக் கொழுந்தழை குழைய வூர்ந்து கலைமுகம் மதுதம் முன்கண் களித்திட நின்ற தன்றே. | 2.19.30 | 1045 |
நின்றமா மரத்தை நோக்கி நெறிபட வெவருங் கேட்ப வின்றெனை யிவர்கட் கின்னா ரெனவெடுத் தியம்பு கென்ன மன்றலங் குரிசில் கூற மலரிலை குலுங்க வாடா வென்றிகொ ளிறையோ ணுண்மைத் தூதென விளம்பிற் றன்றே. | 2.19.31 | 1046 |
சாடினி தெழுந்து வந்து தவறிலா துரைத்த மாற்றங் கூடிய ஜின்க ளெல்லாஞ் செவிமனங் குளிரக் கேட்டு நீடிய வுவகை யென்னு நெடுங்கட னீந்தி நீந்தித் தேடிய பொருளி தென்னச் சேவடி சிரசிற் கொண்ட. | 2.19.32 | 1047 |
சீதமென் கவிகை நீழற் றிருநபி யிறசூ லுல்லா பாதபங் கயத்தை முத்திக் கண்மலர் பரிவிற் சாத்திக் கோதறுங் கலிமா வோதிக் குழுவொடு மீமான் கொண்டு வேதநன் னிலைமை நீங்கா மெய்ந்நெறி மேவி நின்ற. | 2.19.33 | 1048 |
கலைநெறி பகரும் வள்ளல் கானகத் தருவை நோக்கி யுலைவிலா துனது தானத் துறைகென வுரைப்பத் தீனி னலனுறு மபுல்கா சீம்தம் நல்லிசை திசைக டோறு நிலைபெற நின்ற தென்ன நெறிச்சென்று நின்ற தன்றே. | 2.19.34 | 1049 |
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமலமென் முகத்தை நோக்கி யிணைத்தநன் னெறியி னின்றோ மின்றுதொட் டினிமே லுங்கட் குணத்தக வுணவீ தின்ன தெனவெடுத் துரையு மென்னப் பணித்துவாய் புதைத்து நின்று பண்புறப் பகர்ந்த வன்றே. | 2.19.35 | 1050 |
பறவையில் விலங்கி லுள்ள படைப்பினிற் றக்கு பீரி லிறையவன் விதித்த வண்ணத் திறந்ததென் பவையு நுங்கட் குறைபசிக் குணவென் றன்பா யோதினர் கேட்டு மீட்டு மறுவற வெங்கட் குற்ற வாகனத் துணவே தென்ற. | 2.19.36 | 1051 |
தேறிய மறையின் றீஞ்சொல் தீனிலைக் குரிய தூயோ ரேறுவா கனந்தின் றற்ற தெவையுள வவைக ளெல்லா மாறுபா டன்றி நுங்கள் வாகனத் துணவே யென்னக் கூறினர் பிணைக்கி யானே பிணையெனக் கூறுங் கொண்டல். | 2.19.37 | 1052 |
விரிதரு மமுதச் செவ்வாய் திறந்திவை விளம்பக் கேட்டுத் திருமுகத் தெதிர்ந்த பன்னீ ராயிரஞ் ஜின்க டங்கள் சிரமடி மலரிற் சேர்த்தித் தீனவர் தமையும் வாழ்த்திப் பரிவொடு மகிழ்ந்து தத்தந் திசையினிற் படர்ந்த வன்றே. | 2.19.38 | 1053 |
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்திருள் செறிந்து தோன்று மிரவினிற் றிரண்ட ஜின்க ளினத்தினை யீமான் கொள்வித் தரியட லேற தென்ன வழகொளி விரித்துக் காட்ட மருமலர்க் கரிய கூந்தன் மயிலுறை மனையின் வந்தார். | 2.19.39 | 1054 |
நெருங்கிய கங்குற் போதி னிறைந்தவல் லிருளை மோதி யிருங்கதிர் கரங்க ளார வெடுத்தெடுத் தெறிந்து சிந்தி யருங்கண மனைத்து நாணி யகல்விசும் பொளிப்ப நோக்கிக் கருங்கடன் முகட்டில் வெய்ய கதிரவன் றோன்றி னானே. | 2.19.40 | 1055 |
காசினி யிடத்தி னற்றைக் காலையின் கடன் டீர்த்து நேசமுற் றுவந்து தீனோ ருடனினி துறைந்து ஜின்கள் மூசிவந் தீமான் கொண்டு போயது முறை வழாமற் பேசிநல் லுணவு மீந்த செய்தியும் பிறக்கச் சொல்வார். | 2.19.41 | 1056 |
மறச்சிலைக் கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சி லிறைச்சியென் பனைத்துஞ் ஜின்கட் குணவென வீந்தேன்மேலுங் கறித்தவென் பிறைச்சி மிச்சி லென்பதைக் களங்க மில்லாப் புறத்தினில் வீச லியார்க்குங் கடனெனப் பொருந்தச் சொன்னார். | 2.19.42 | 1057 |
பூமணம் பொருந்தக் காட்டும் புதுமைகண் டரிய ஜின்க டாமதி யாது கூடித் தளத்தொடுந் திரண்டு வந்தீ மான்மனம் பொருந்திற் றென்ற வார்த்தையிற் புளகங் கொண்டு தேமலர்ப் புயத்தார் போற்றத் திருநபி யிருந்தா ரிப்பால். | 2.19.43 |
1058 |
நரையொளி பிறங்க வுடம்பெலாந் திரைந்து தெரிதருங் கட்பா வையினொளி மழுங்கித் தரிபடா நாசித் துளையினீர் ததும்பத் மரையிடைக் கிடந்து சரிந்தடிக் கடிவீழ்ந் 2.20.1 | | 1059 |
உடற்குறை கூனுஞ் செவித்துளை யடைப்பு னடக்கையி னடக்குந் தலைக்கிடு கிடுப்பு யடிக்கடி யிளைப்பிற் குலுக்கிய கனைப்பு யிடுக்கணுற் றொருவன் முகம்மது நயினா 2.20.2
| 1060 |
உள்ளுறக் கிடந்த பல்லறப் பெயர்ந்த | விள்ளுதற் கரிதா யொருசலாங் குழறி வள்ளலும் பிரத்தி யுரைத்திவன் சூமன் தெள்ளருங் குணத்தா லடைந்தன னிவன்கூ 2.20.3
| 1061 |
ஊன்றிய தடியிற் கிடந்துழன் றொதுங்கி | வான்றிகழ் புகழார் திருமொழி கொடுத்து யீன்றவ ரியாவ ரெவ்வழிக் குளநின் தோன்றிய நாம மேதிவை விடுத்துச் 2.20.4
| 1062 |
நபியெனும் பெயர்பெற் றவர்க்கெவர் கருத்து | னவரினும் புதியோன் றூதரின் முதலோ ரிவர்கருத் தறியத் தெரிந்திடாப் பொருள்க தவறுவந் ததுந்தன் தலைமுறைப் பெயருந் 2.20.5
| 1063 |
வானுல கடங்கத் தன்வசப் படுத்தி | பானிற வளைவெண் டிரைக்கடற் பரப்பிற் றானெனச் செலுத்தி யரசுவீற் றிருந்தோன் னீனமுற் றொழியா மாயைகள் விளைக்கு 2.20.6
| 1064 |
அப்பெரும் புகழோன் றருதிரு மதலை | முப்பெரு நிலத்துந் தன்பெயர் நிறுத்து னொப்பருந் திறலா னிலாக்கிசென் றோங்கி கைப்படுங் கதிர்வாட் பெரும்படைக் கிறைவன் 2.20.7
| 1065 |
காயிமென் பவன்றன் கண்ணினை மணியாய்க் | சேயெனப் பிறந்தே னிசைபெறக் காம்மா னாயிரந் திருப்பேர்க் குரியவன் றூதே மாயிரும் புவிமா னிடரிடர் களையு 2.20.8
| 1066 |
மருங்கினி லிருந்து பகர்ந்தகாம் மாதன் | தருங்கதிர்த் தரள நகையிற்புன் முறுவ நெருங்கிட வறந்த காறடு மாற யிருங்கண மடுத்தென் னிடத்தினி லுறைந்த 2.20.9
| 1067 |
முன்னெடுங் காலத் திப்பெரும் புவன | றன்னிடைப் படுத்தி நால்வகைக் கதத்த மன்னிய திசைகள் பொதுவறப் புரந்து டென்னையொப் பவரிந் நிலத்தினி லிலையென் 2.20.10
| 1068 |
ஒருதனித் திகிரி செலுத்தியெந் நிலமு | பொருவரு மதத்தாற் றவங்குண மிரக்கம் தெரிவரா திகழ்ந்து பவம்பழி தொடரச் பெருகிய வலியுஞ் சீர்த்தியு முடையோய் 2.20.11
| 1069 |
தீவினைக் குரித்தாய் வருந்தொழி லனைத்துஞ் | பாவியென் னுடலு மிதயமு நடுங்கப் கூவிமுன் னிருத்தித் தாட்பெரு விரல்க நோவர விறுகக் கட்டிவைத் தெழுந்து 2.20.12
| 1070 |
காலினிற் பிணித்த பிணிப்பினை வலிதிற் | தோலிடுங் கடகக் கரத்தினா லவிழ்த்தே மேலுற வகிர்ந்துிங் கருவியா லறுத்தும் நூலள வெனினு நெகிழ்ந்தில வதனின் 2.20.13
| 1071 |
கட்டினான் மிகுதி வருத்தமுற் றொடுங்கிக் | விட்டிடா திழைத்த பாவங்க டிரண்டு பட்டதோ வலதென் னூழ்விதிப் பயனோ கிட்டிய தவத்தோர் முனிந்திடு முனிவோ 2.20.14
| 1072 |
அரசிழந் தெனது கிளையினிற் பெரியோ | லொருதிருக் கெடுத்து நெகிழ்க்கவும் பயமுற் குரைகடலிடத்து மெண்டிசை புரக்குங் னிருமென விருத்தி நோக்குவ ரலதென் 2.20.15
| 1073 |
அந்தரம் புவிமட் டுலவியுங் காற்கட் | றிந்தன மெரியிற் கிடந்தென விதய புந்தியற் றொடுங்கி யளவறுங் காலம் சுந்தரத் தொடும்பே ரறத்தொடு முருவாய்த் 2.20.16
| 1074 |
அவனி யிலாத நபியெனும் பேர்பெற் | தவிர்கிலா திடருற் றனனென வௌியேன் கவரறப் பிணித்த காவல னலது குவிதருந் திருவாய் விரிதர வுரைத்தார் 2.20.17
| 1075 |
இவ்வுரை பகர்ந்தா ராதநன் னபியென் | குவ்வின னபிமா ரென்னுமப் பெயர்பெற் செவ்விதி னுரைத்தே னவ்வவ ரெவருந் வவ்விய தளைவிட் டகன்றிடு மலது 2.20.18
| 1076 |
அன்னவ ருரைத்த மொழிமனத் தடக்கி | லெந்நெடுங் காலத் தெப்புவி யிடத்தி பன்னெடுங் கால மிதுநினை வலது மன்னிய புகழார் முகம்மது பிறந்தா 2.20.19
| 1077 |
புவியினி லறத்தின் மக்கமா புரத்திற் | நபியெனுந் திருப்பட் டமுந்தரித் தரிய குவிகுபி ரகற்றி யிருந்தன ரென்னக் யிவணில்வந் தடைந்தே னினிவினைப் பவங்க 2.20.20
| 1078 |
பதத்தி னிலடைந்த பவியென் மனத்திற் | கதத்தொடு மிறுக்கி வைத்தபா தகன்றன் யிதத்தொடு முமது தீன்வழிக் குரிய விதித்தசொற் கடவாப் படிநடத் திடுக 2.20.21
| 1079 |
இரங்கிநின் றிறைஞ்சி யுரைத்தவா சகத்தை | நெருங்கிட விறுக்கி வைத்தவர் பெயரை மருங்கினி லொடுங்கி யிருந்தகாம் மாவை னுரங்கெட விடுக்கண் விளைத்த வரியாவ 2.20.22
| 1080 |
கட்டிவைத் தகன்ற நாட்டொடுத் தவன்றன் | னெட்டியெத் தலத்துந் திரிந்தன னிவ்வூ மட்டறுங் குலத்தி லிக்குலத் தின்னான் கிட்டிடி லுருக்கண் டௌிதினி லறிவே 2.20.23
| 1081 |
கருமுகிற் கவிகை நந்நபி காம்மா | குருதியுந் தசையுஞ் சிதறுசெங் கதிர்வேற் புரியகண் மணியாய் வருமலி தமையென் பரிவினிற் றூதை விடுத்தன ரவரும் 2.20.24
| 1082 |
சிங்கவே றனைய அலிதிருக்க ரத்திற் | தங்கிய மரவத் தொடைபுரண் டசையத் யங்கமு மனமும் வெருவரத் திடுக்கிட் பங்கமுற் றயர்ந்திட் டடிக்கடி நோக்கி 2.20.25
| 1083 |
மன்னர்மன் னவரை முகம்மதை நோக்கி | வெந்நிடை யொளித்திட் டொதுங்குற வொடுங்கி என்னையுங் கெடுத்தென் னரசையு மழித்திட் னன்னவ னலது வேறிலை யினம்வந் 2.20.26
| 1084 |
மெய்ப்பொருண் மறைக்கு நாயகப் பொருளே | யிப்புவி யிடத்தி லடைக்கல மடியே துப்பின னீதோ வடுத்தனன் சற்றே கைப்பட நுந்தங் கரங்கொடுத் துயிரைக் 2.20.27
| 1085 |
வெருவுறேல் காம்மா வெனக்கர மசைத்து | யெரிகதிர் வேலோய் நம்மிடத் தடைந்தோ பெருவிரற் றொடுப்பை விடுப்பையென் றினிதின் வரியென மகிழ்ந்து நோக்கலுங் காற்கட் 2.20.28
| 1086 |
காற்றளை யகலப் பயங்கர மகற்றிக் | போற்றிநின் றமுத மெனுங்கலி மாவை தேற்றுநன் மறையின் முதியரைப் புகழ்ந்து மாற்றரும் வேடந் தனையும்விட் டொழிந்து 2.20.29
| 1087 |
சீதவொண் கதிர்செய் முகம்மதி னடியிற் | கோதற வெழுந்து தீன்வ ரெவர்க்குங் காதலின் தீன்தீன் விளங்கவென் றேத்திக் மாதவம் பெருகு மனத்தினன் காம்மா 2.20.30
| |
1087 |
புவியி லின்பம் பொருந்திப் புகழ்பெறு நபிமு கம்மது நண்பொடுந் தங்கிளை யவர்கட் கன்புற் றரிய விருந்தெனக் கவலு மென்றலிக் கோதினர் காமுற்றே. | 2.21.1 | 1088 |
தூய தூதுவ ரோதிய சொன்மறா நேய முற்றெழுந் தங்கவர் நீண்மனை வாயி றோறு நடந்துநல் வாக்கொடும் போயி ருந்து விருந்து புகன்றனர் | 2.21.2 | 1089 |
மறுவி நாறு முகம்மதுக் கன்புறு மறிவ ரும்மவ ரையர்க்கு முன்னருஞ் சிறிய தந்தைய ரும்மவர் சேய்களு முறவி னுற்றவ ரும்மவ ரொக்கலும் | 2.21.3 | 1090 |
வன்றி றற்புலி வாளலி முன்வர மின்ற வழ்ந்தணி யாரங்கள் வீசிடத் தொன்று தோன்றிய தூதுவர் மாமனை முன்றி லெங்கணு மொய்த்திருந் தார்களால். | 2.21.4 | 1091 |
சிறியர் பேதையர் தீீய்ப்பசி தீண்டிய வறிய ரல்லது வந்தவர் நாற்பஃ தறிவர் ஹாஷிம் கிளைக்குயி ராயினோ ரிறைவன் றூதுவர்க் கின்புறு மாந்தரே. | 2.21.5 | 1092 |
எடுத்தி றாத்த லெனும்பதி னாறெடை கொடுத்த பாலுங் குடித்தொரு மேழகத் தடித்த சைச்சுடு கோலினிற் றள்ளுமு னெடுத்துத் தின்ப ரிவர்சிறி யோர்களே. | 2.21.6 | 1093 |
வரிசை வள்ளன் முகம்மது வந்துநின் றுரிய கேளி ருடனுழை யோரையும் விரியுங் காந்தி விரித்த விரிப்பின் மேற் பரிவி னீணவை பத்திவைத் தாரரோ. | 2.21.7 | 1094 |
மாற்ற லர்க்கரி யேறெனும் வள்ளலார் தீற்று வெண்சுதை மாடத்துட் சென்றட வூற்றுப் பாலையு மூற்றிக்கொண் டிங்ஙனஞ் சோற்றை யுங்கொடு வாவனச் சொல்லினார். | 2.21.8 | 1095 |
மருங்கு நின்றவர் மாம னையுட்புகுந் தொருங்கி ருந்த வொருபடிச் சோற்றையுங் கருங்க லென்னுங் கலசத்திற் பாலையுந் தருங்கை வள்ள லிடங்கொடு சார்ந்தனர். | 2.21.9 | 1096 |
அருந்துஞ் சோற்றையும் பாலையு மங்கையி லொருத்த ரேந்தி யுலாவுகின் றாரிவர் வருத்த மின்றி வரவழைத் தாளெலா மிருத்து கின்றன ரென்னெனக் கூறுவார். | 2.21.10 | 1097 |
இற்றை நாள்விருந் தென்னவிவ் வூரினிற் சொற்ற தில்லைத்தொன் மாமறைக் காரணத் துற்ற செய்தி யறியவென் றுன்னியோ பற்றி னாலிவர் பாலழைத் தாரென்பார் | 2.21.11 | 1098 |
இன்று வந்திவர் முன்றி லிருந்தனம் வென்றி யாக விருந்து வழங்கிடுஞ் சொன்றி யும்மிவர் காரணத் தோற்றமு நனறு கண்டறி வோமினி நாமென்பார். | 2.21.12 | 1099 |
இந்த வண்ண மிவர்க ளியம்பிட வந்த நாயகன் றூதுவ ரன்பொடு வந்த சோற்றையும் பாலையு மன்னவர் சிந்தை கூரச் சிறந்தளித் தாரரோ. | 2.21.13 | 1100 |
சேருஞ் சீனியுந் தேனுமொத் தாலென மூர லும்மவை மூழ்கிய பாலையும் வீரர் தங்கள் விலாப்புறம் வீங்கிட வார வுண்டென ரங்கையில் வாரியே. | 2.21.14 | 1101 |
மாத ருஞ்சிறு மைந்தரு மாந்தரும் பேத மற்றதம் மில்லுறை பேர்களுங் கோதி லாதுண்டு பாலுங் குடித்தினிப் போதும் போது மெனப்புகன் றார்களால். | 2.21.15 | 1102 |
உருசிக் கும்படி பாகஞ்செய் யோர்படி யரிசிக் சோறு மரைப்படிப் பாலுநல் வரிசை யாக வழங்க வழங்கவே பெருகிற் றல்லது பின்குறை வில்லையால். | 2.21.16 | 1103 |
ஆகங் கூர்தர வுண்டவ ரியாவரும் வாய்கை பூசி மகிழ்ந்தினி துற்றபின் பாகு வெள்ளிலை பாளிதஞ் சந்தன மோகை கூர வுவந்தளித் தரரரோ. | 2.21.17 | 1104 |
சோதி நாயகன் றூதெனும் வள்ளலுக் கீதெ லாமரி தோவென வேத்திநின் றோதிக் கையெடுத் துற்றச லாமுரைத் தாத ரத்தொடு மங்கவர் போயினார். | 2.21.18 |