உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்)
படலங்கள் 1- 11 / பாடல்கள் (1- 607)
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
3.01 | மதீனத்தா ாீமான் கொண்ட படலம் | (1-65) | மின்பதிப்பு |
3.02 | மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் | (66-120) | மின்பதிப்பு |
3.03 | யாத்திரைப் படலம் | (121-234) | மின்பதிப்பு |
3.04 | விடமீட்ட படலம் | (235-280 ) | மின்பதிப்பு |
3.05 | சுறாக்கத்துக் தொடர்ந்த படலம் | (281- 330 ) | மின்பதிப்பு |
3.06 | உம்மி மகுபதுப் படலம் | (331-356) | மின்பதிப்பு |
3.07 | மதீனம் புக்க படலம் | (357-422 ) | மின்பதிப்பு |
3.08 | கபுகாபுப் படலம் | (423-506) | மின்பதிப்பு |
3.09 | விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் | (507-521) | மின்பதிப்பு |
3.10 | உகுபான் படலம் | (522-546) | மின்பதிப்பு |
3.11 | சல்மான் பாரிசுப் படலம் | (547 - 607) | மின்பதிப்பு |
1 |
மணிதிரண் டனைய றிண்டோன் முகம்மது மக்க மீதி லணிபெற விருந்து வல்லோ னருளொடு மதீனத் தேகி பணியாித் துவந்த பாாிற் குபிாிருட் படலநீக்கித் திணிசுடர் நிலாத்தீ னோங்கச் செய்தவை யெடுத்துச் சொல்வாம். | 3.1.1 | 2 |
கதிமனைக் குாிய தாரை காட்டுநல் வினையு மூழற் பதிசய்தீ வினையு மாறு பட்டொரு தலஞ்சேர்ந் தென்ன விதிமறைக் கதிர்மெய்த் தீனும் வெங்குபிர்க் களையு மொன்றாய்ப் பொதுவறக் கலந்து மக்கா புரத்தினி லிருக்கு நாளில். | 3.1.2 | 3 |
பாய்திரைப் பரவை சூழ்ந்த படிக்கணி திலத மாவி யாயமக் காவின் ஹஜ்ஜி லணிபெற வைம்பத் தாறு தேயுமா னிடருங் கூண்ட திரனொடு மதீன மென்னுந் தூயமா நகரத் தோரும் வந்தனர் துலங்க வன்றே. | 3.1.3 | 4 |
வால்வளைத் தரளஞ் சிந்தும் வாவிசூழ் மதீனா வாழு மேலவன் அசு அதென்னும் விறலுடைப் படலைத் தோளான் காலமூன் றுணரும் வேதக் கடலினுக் கெல்லை காணுஞ் சீலநந் நபியைக் காணச் சிந்தையிற் சிந்தித் தானே. | 3.1.4 | 5 |
தன்னுயி ரென்ன நீங்கார் தலைமையி னுாிய தோழர் பன்னிரு வருக்கு நேர்ந்த பண்புட னெறிகள் கூறிப் பின்அக பாவென் றோதும் பெருந்தலத் துறைந்து காட்சி மன்னிய முகம்ம தின்றண் மலர்ப்பதம் வந்து கண்டார். | 3.1.5 | 6 |
மக்கமா நகாில் வாழு முகம்மது பாதம் போற்றிப் பக்கலி ருந்தன் பாகப் பாிவொடுங் கலிமா வோதி மிக்கதீன் பெருகிச் செல்வம் விளங்கிட யீமான் கொண்டு தக்கநல் வணக்கத் துற்ற ஷறுந்தினைக் கருத்துட் கொண்டார். | 3.1.6 | 7 |
நல்வழிக் குாிய ராகி நடுக்கமொன் றின்றித் தங்கள் கல்பினிற் கசடு நீத்துக் கரகம லங்க ணீட்டிச் செல்வநந் நயினார் செவ்வித் திருக்கரத் திடத்திற் சேர்த்திப் பல்விதம் வாினும் வார்த்தைப் படிதவ றிலமியா மென்றார். | 3.1.7 | 8 |
வெற்றிவாண் முகம்ம துள்ளம் வேண்டிய வார்த்தைப் பாடு முற்றுற முடித்துத் தீனின் முறைமையிற் றலைவ ராகி நற்றவ முடையீர் மேலு நல்வழி சிதையா வண்ண முற்றொரு வரையின் றெங்க ளுடன்படுத் திடுக வென்றார். | 3.1.8 | 9 |
இதத்தநன் மொழிய தாய்ப்பன் னிருவரு முரைத்த மாற்ற மதித்துமா மறையிற் றேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி விதித்தநன் னெறிவ ழாமற் குறானையும் விாித்துக் காட்டிப் பதித்தலத் திவர்க்குற் றோர்க்கும் நல்வழிப் படுத்து மென்றார். | 3.1.9 | 10 |
வடிவுறை அசுஅதோடு முசுஇபு மகிழ்விற் காம ரடலாி யிறசூ லுல்லா வம்புயப் பதத்திற் றாழ்ந்து படரொளி குலவு மாடப் பதிகடந் தடவி நீந்திப் புடைவளம் பலவு நோக்கிப் போயினர் மதீன மூதூர். | 3.1.10 | 11 |
கோட்டுடை மலாின் மன்றல் குலவிய மதீனம் புக்கித் தோட்டுணை அசுஅதோடு முசுஇபு தோன்ற றானும் பாட்டளி முரலுந் தாமத் தலைவர்பன் னிருவர் சூழ வேட்டமுற் றாதிதூதர் விாித்ததீன் விளக்கஞ் செய்தார். | 3.1.11 | 12 |
இல்லகத் திருந்து தீனி னியன்மறை முறைவழாது சொல்லிய முசுஇபேரடு தொடைப்புயத் தசுஅ தும்மோர் தொல்லிருள் கிடந்த தென்னச் சுடரவன் கதிர் புகாது பல்லிய மளிக ளார்க்கும் பன்மலர்க் காவிற் புக்கார். | 3.1.12 | 13 |
தண்டலை யிடத்திற் புக்கித் தடத்தின்சம் பரத்து ளாடிக் கொண்டொலுக் கவினச் செய்து குதாதனை வணங்கி யேத்தி மண்டலம் புரக்கும் வள்ளன் முகம்மது தமையும் போற்றி விண்டலை தடவுங் கோட்டுத் தருவின்வீற் றிருந்தா ரன்றே. | 3.1.13 | 14 |
உரந்தனி யுருகி யாதி யுறுதிநா யகனுக் கன்பாய்ச் சிரந்தரை தீண்டத் தீனோர் செய்முறை வணக்கஞ் செய்தோர் மரந்தரு நீழல் வைகு மாந்தர்க டொியா வண்ணங் கரந்ததி சயித்து நோக்கிக் கறுத்தொரு காளை நின்றான். | 3.1.14 | 15 |
குறித்துநோக் கியசஃ தென்னுங் கொற்றவன் கருத்தி னூடு வெறுத்திவ்வூ ாிடைமக் காவில் விளைந்தவல் வினைக ளெல்லாம் பொறுத்தது காணுமென்னப் புழுங்கிப்பூம் பொழிலி னீழ லிறுத்தவர்க் கெதிர் கொடாம லெழுந்துபோ யுசைதைச் சார்ந்தான். | 3.1.15 | 16 |
நறுங்கதிர் குலவு மாட மக்கமா நகாில் ஹாஷிம் பெறுங்குலத் தொருவன் றோன்றப் பெரும்பகை விளைந்தவ் வூரு முறங்கின செல்வ மாறி யொருவருக் கொருவ ராகா மறங்கிளர் மனத்த ராகி மாறுபட் டிருந்தா ரன்றே. | 3.1.16 | 17 |
அன்னவன் மாய வஞ்ச மதத்தினு ளாயெ னன்னை முன்னவள் மகனென் முன்னோன் முசுஇபோ டிணங்கித் தோன்றி யிந்தகர் தனையு மார்க்கத் தீடுபட் டொழிய நின்றா னுன்னுவ தென்கொ னள்ளா ரூன்புலா லுணங்கும் வேலோய். | 3.1.17 | 18 |
மதியிலி யவராய் மக்க மாநக ரவரைப் போலிப் பதியினிற் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல் விதியிது சரத மென்னச் சகுதுளம் வெகுண்டு செந்தே னுதிர்தரும் படலைத் திண்டோ ளுசைதுநெஞ் சுழுக்கச் சொன்னான். | 3.1.18 | 19 |
சாதுரை யெனும்வே லுள்ளந் தைத்திட மார்க்க மாறும் பாதக மிவ்வூ ருள்ளும் படர்ந்ததோ பலருங் காணிற் பேதுனு முன்ன மியாமே பெரும்பகை துடைத்துக் கோடற் கேதுபோ தஞ்சொ லென்றா னிவனதற் கெடுத்துச் சொல்வான். | 3.1.19 | 20 |
குரவாி லொருவன் முன்னோற் கொல்வதற் குலகங் கொள்ளா தருமறை மாறி நின்றோ ராருயி ாிழந்தா ரென்னத் தொிவரு மாற்றா லுன்னைத் தெறுபவ ாிலையான் கொன்றாற் பாிவுறும் பழியைச் சாருஞ் சாரவும் படுவ தன்றே. | 3.1.20 | 21 |
அன்னதான் மார்க்க மாறு மவருயிர் செகுப்ப வேண்டி மின்னிய கதிர்வாட் டாங்கி விரைகெனச் சகுது வீறாச் சொன்னசொன் மறாது சைது கோறலைத் துணிந்து சென்றான் மன்னிய மலர்த்தேன் றாது மாாியொத் துதிர்க்குங் காவில். | 3.1.21 | 22 |
மருங்கினில் விசித்த கச்சும் வலக்கரந் தாங்கும் வாளுங் கருங்காிக் கரத்தி னீண்ட கரந்தனி வீச்சுங் கோப நெருங்கிய நோக்கும் வேர்வை நித்திலப் பனிப்பு மாக வொருங்கினிற் சோலை புக்கு முசைதைக்கண் டைய முற்றார். | 3.1.22 | 23 |
இங்கிவ னிவ்வூ ருள்ளார்க்க் கியல்புறுந் தலைவன் வேகந் தங்கிய மனத்தி னோடுஞ் சார்ந்தனன் சார்த னோக்கின் வெங்கொலை விளைத்தல் வேண்டு மெனவுரை விாித்துச் சொன்னார் பொங்குசீர் அசுஅ தென்போர் புண்ணிய முசுஇ புக்கே. | 3.1.23 | 24 |
வருபவன் றன்னை நோக்கி மனமறு குதவன் றல்லா திருவரு ணம்பா லுண்டு தெருட்சியிற் சிறிது சொல்லால் விரைவொடு மவன்ற னுள்ளம் விளக்குவன் காண்டி ரென்ன முருகுலா அசுஅது துக்கு முசுஇபன் புறச்சொன் னாரால். | 3.1.24 | 25 |
மாாித்தண் ணலர்கள் சிந்தும் வனத்தினில் வடிவா ளேந்தி வீரத்தின் விழைவு கூர மென்மனம் புழுங்கி விம்மக் கோரத்தின் கடைக்க ணங்கிக் கொழுந்தெழ வுசைது நோக்கிப் பாரைத்தீன் படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான். | 3.1.25 | 26 |
வியனுறு மக்க மூதூர் வேறுபட் டொழியச் செய்தோர் வயினுறைந் திவணின் வந்து வழிகெட மதீனத் தார்க்குப் பயிலுத றொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி யயலகல் வதுவே நுங்கட் கடவென வறிய வேண்டும். | 3.1.26 | 27 |
என்னுரை மறுத்திவ் வூாி லிருந்திரேற் குருதி சிந்த மின்னவிர் வடிவாட் காவி விருந்துசெய் திடுவன் வேறு பன்னுவ தென்கொல் சூழ்ச்சித் தருமத்தாற் பகர்ந்தே னென்றான் பொன்னவி ரலங்கற் றிண்டோட் புரவல னுசைதென் போனே. | 3.1.27 | 28 |
கடுத்துநின் றுரைத்த மாற்றங் காவலன் முசுஇ போர்ந்து தொடுத்தெடுத் துரைத்த வாய்மை யெங்கட்குச் சூழ்ச்சித் தாகு மடுத்தவர்க் கறமீ தன்றோ வாயினு மொருசொற் கேட்டென் னிடத்தினிற் சிறிது போழ்திங் கிருந்தெழுந் திடுக வென்றார். | 3.1.28 | 29 |
ஈங்கிவ னுரைக்கும் வாய்மை யிதமல தயித மேனும் பாங்கொடு மறிவோ மென்றே யிதயத்துட் படுத்திக் கொல்லுந் தீங்கினை யொருபாற் சேர்த்திச் செவ்விதி னிருந்தான் செந்தேன் பூங்குலாய் விாிந்த சோலைப் புதுநிழற் பரப்பி னன்றே. | 3.1.29 | 30 |
ஒருவனை யிறசூல் தம்மை யுளத்தினி லிருத்தி யார்க்குந் தொிதரப் பிசுமி லோதித் தீன்முதன் முறைமைத் தரய விாிதருங் குறானை யோதிக் காட்டினர் விளைந்த தீமைக் கருவெனு நினைவு சிந்திக் கட்டழிந் தோட வன்றே. | 3.1.30 | 31 |
மூதுரை மறையின் றீஞ்சொன் முசுஇபாண் டுரைப்பக் கேட்டுக் காதுளங் குளிர்ந்து பொல்லாக் கசடெறிந் தறிவி னாழ்ந்து பாதகம் பலியா வண்ணம் பாாிற் றொல் விதியி னாலிம் மாதவங் கிடைக்கப் பெற்ற தின்றென மகிழ்வு கூர்ந்தார். | 3.1.31 | 32 |
நிலத்தும் விண் ணிடத்து முற்றோர் நின்றநன் னெறியு மீதே சொலத்தகாத் தூயோன் றூதென் றுண்மையிற் சொல்வ தீதே பொலத்தினி லமைத்த சொர்க்கம் புகுத்துவிப் பதுவு மீதே நலத்தகு முறைமை யீதென் றகத்தினி னாட்டி னாரால். | 3.1.33 | 33 |
மனத்தினன் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபைப் போற்றி மன்ன ாினத்தினு முயிாின் மிக்கா யெனவெடுத் தினிய கூறிக் கனத்தநூன் முறையின் வாய்த்த நபிகலி மாவை யோதிச் சினத்திடர்க் குபிரை மாற்றித் தீனிலை நெறிநின் றாரே. | 3.1.33 | 34 |
உள்ளகம் பொருந்தி யீமான் கொண்டுசை தென்னும் வேந்தர் வள்ளலா ாிருவர் செவ்வி மதியெனும் வதன நோக்கிக் கொள்ளுமென் மனத்தினுற்ற குறிப்பெனுங் கரும மின்னே விள்ளுதல் செவிக்கொள் வீரென் றணிபெற வியத்திச் சொல்வார். | 3.1.34 | 35 |
பூதலத் துயர்ந்த மேன்மைப் பொறையினி லறிவின் மிக்கான் மாதவ ருரைக்கும் வேத வழிமுறை யொழுகி நின்றான் காதுவெங் களிறே யன்ன கருதலர்க் காியே றொப்பான் சாதெனு மரச னிவ்வூர்த் தலைவாிற் றலைமை யானே. | 3.1.35 | 36 |
மன்னுமென் னுயிரே யன்னான் மாற்றமே தெனினு மென்சொற் றன்னுரை யென்னத் தேறுந் தன்மையன் வடுவொன் றில்லா னன்னவன் கலிமா வோதி யாரண தெறிநின் றானே லிந்நகர் முழுது மீமான் கொண்டதற் கைய மின்றே. | 3.1.36 | 37 |
பிடித்தொரு மொழியி னெஞ்சம் பேதுறா வவனை நுங்க ளிடத்தினில் வரச்செய்வே னியா னிதத்தொடு மினிய மாற்றந் தொடுத்துரைத் தருங்கு றானைச் செவிவளைத் துளைக்கு ளோட்டிப் படித்தநல் லறிவிற் றேற்றித் தீன்வழி படுத்து மென்றார். | 3.1.37 | 38 |
இருவருங் களிப்பக் கூறி யெழின்மலர்ப் பொழில்விட் டேகித் தொிதர யீமான் கொண்ட சிந்தையிற் புளகம் பூப்பத் திருமருப் புயங்க ளோங்கச் செம்முக மலர்ந்து தோன்ற வருவது நோக்கிச் சஃது மன்னவ னுளத்திற் சொல்வான். | 3.1.38 | 39 |
மடித்தித ழதுக்கிக் காந்தி வாள்வல னேந்தி மீசை துடித்திட வேகத் தோடுஞ் சென்றனன் றுணர்ப்பைங் காவை விடுத்துள மகிழ்ச்சி கூர மெய்மயிர் சிலிர்ப்ப நம்பா லடுத்தன னவணி லுற்ற தறிகில மென்று நின்றான். | 3.1.39 | 40 |
இன்னணஞ் சகுது நெஞ்சத் தெண்ணிநின் றுலவுநேர மன்னவ ருசைதும் புக்கார் மாமரை வதன நோக்கி மினிய கதிர்வாட் டாங்கிப் போயது மீண்ட வாறும் பன்னுக வென்றான் கேட்டங் கவரெதிர் பகர்வ தானார். | 3.1.40 | 41 |
பொழிலிடைப் புகுந்தே னின்ற புரவலர் தம்மைக் கண்டேன் வழிவச மலது வேறோர் வடுவருந் தகைமை காணேன் மொழிவபின் னொன்று கேட்டேன் முன்னவ னசுஅ தென்போன் பழிபடக் கோறல் வேண்டி வந்தனர் பகைஞ ரென்றே. | 3.1.41 | 42 |
தாய்க்குமுன் னவடன் சேய்பாற் றாியல ரடைந்தா ரென்னும் வாய்க்கொளாக் கொடிய வெஞ்சொன் மனத்தினை வெதுப்பக் கண்க டீய்க்கொளச் சினந்து சீறிச் செங்கரம் பிசைந்து நக்கி மூக்கினில் விரலைச் சேர்த்தி முரணொடு மெழுந்து நின்றான். | 3.1.42 | 43 |
என்னுயிர்த் துணைவன் றன்மு னெதிர்ந்தவ ாியாவ ரேனும் பன்னரும் விசும்பி லாவி படவிடுத் திடுவ னென்னத் தென்னுறுங் கதிர்வா ளேந்திச் சீற்றமுன் னடப்பச் சென்றான் முன்னையூழ் விதியின் வண்ண முறை நெறி யறிகிலானே. | 3.1.43 | 44 |
செங்கதிர் வடிவாட் டாங்கிச் சென்றவன் றுடவை புக்கி யெங்கினுந் தொிய நோக்கி யிகன் மரு வலரைக் காணான் பொங்கிய மன்ற றூங்கும் பொழிலிலவ் விருவர் தாமே தங்கியங் கிருப்பக் கண்டான் றனித்தவண் சார்ந்து நின்றான். | 3.1.44 | 45 |
இரைந்தளி சுழலுங் காவி லிருப்பவர் தம்மை நோக்கி விரைந்திவ ணகன்று வேற்றூர் புகுமிவை வினவிரேற் சோ கருந்திட வுடலம் வீழ்த்தி யாருயிர் பறித்து நுங்கட் பெருந்தமர் தமக்குங் கூடப் பிழைவிளைத் திடுவன் மாதோ. | 3.1.45 | 46 |
சாற்றிய தெனது தம்பித் தமையனென் பதனி னானு மாற்றலர்க் கொருசொற் றன்மம் வகுத்தமர் மலைவ தென்னத் தேற்றுநல் லறிவோர் கூறுந் திறத்தினும் பொறுத்த தல்லாற் கூற்றெனும் பழியை நாணிக் கூறின னலனியா னென்றான். | 3.1.46 | 47 |
மருவலர்க் கெனிலு மோர்சொல் வகுத்தமர் விளைப்ப ரென்ன விாிமறை யவர்கள் கூறு மெய்மொழி யதனான் வேண்டி யொருநொடிப் பொழுதெம் முன்ன ருவந்தினி திருந்தோர் மாற்றந் தொிதரக் கேட்டுப் பின்னுன் றிறல்செலுத் திடுக வென்றார். | 3.1.47 | 48 |
முன்னவ னொருவ னீதி முறைமையிற் குாியன் மற்றோ னின்னவர்க் காக வேண்டி யிருந்தறி குவமியா மென வுன்னிய வெகுளித் தீயை யுணர்வெனு நீரான் மாற்றிப் பின்னெதி ாிருந்து நீவிர் பிதற்றுவ தெவைகொ லென்றான். | 3.1.48 | 49 |
நகாினுக் குாிய னோது நாவினன் றௌிந்த நீரா னிகரரும் வீரத்தானந் நெறியினுக் கமைந்தா னென்னப் புகரற மனத்துட் கொண்டு பூாித்த புளகத் தோடும் பகரரும் வேதத் துற்ற சொல்லினைப் பகுத்துச் சொன்னார். | 3.1.49 | 50 |
முறைமையிற் சிதகா வண்ண முசுஇபு பகுத்துச் சொன்ன மறையுமம் மறையி னுற்ற வழியுமவ் வழியி லுற்ற பொறையுநல் லமிர்த மெனச் செவிவழி புகுதக் கேட்டு நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக் குருகினாரே. | 3.1.50 | 51 |
ஆரமு தனைய வேதத் தருமொழி யகத்துட் டேக்கிப் பேருணர் பொங்கி யாவுந் தோற்றிடாப் பெருக்கா நந்தக் கார்முகிற் கவிகை வள்ளல் தீனெனுங் கடலு ளாழ்ந்து வாரமுற் றறிவி னாலீ மானெனும் போகந் துய்த்தார். | 3.1.51 | 52 |
மாதவ ாிறசூ லென்னு முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி வேதநன் னிலையிற் றோன்றும் விதிமுறைக் கலிமா வோதிப் பூதலத் துயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலா மாகி மூதறி வுடைய வள்ளன் முசுஇபைத் தழுவி னாரால். | 3.1.52 | 53 |
என்னுயிர்த் துணைவ நின்னை யிருங்கொலை நினைத்தே னென்ன முன்னிருந் திருக ணாலி கலுழ்தர மொழிந்து முன்னோன் பொன்னடி பரவி யிந்தப் புகழ்நிலை நிறுத்தித் தந்த மன்னவ ருசைதென் றோதி மார்புறத் தழீஇயி னாரே. | 3.1.53 | 54 |
வேறு முசுஇபை யசுஅதென் றுயர்முன் னோனையு முசைதையுந் தணப்பிலா துவந்து கொண்டுசென் றசைதருங் கொடிமறு ககன்று மாறடர்ந் திசைதரும் வேலினார் மனையி னேகினார். | 3.1.54 | 55 |
மன்னிய செழுங்கதிர் மாடத் துட்கொடு மின்னிய தவிசினி லேற்றி வீரத்தின் முன்னிய மூவரு முவப்ப மூரலிட் டின்னறைப் பாகொடு மினிதி னூட்டினார். | 3.1.55 | 56 |
வெள்ளிலை யாிபிள வீய்ந்து மெலவ ருள்ளம துவப்புற வுழையி னோர்மனக் கள்ளம தறக்கலி மாவை நாவினின் விள்ளுதல் படுத்தித்தீன் விளக்கு வேனென்றார். | 3.1.56 | 57 |
அன்னது கேட்டகங் குளிர்ந்து மூவரு மன்னிய விடத்தினிற் புக்க மனவர் தம்முயி ரெனுங்கிளை யவரைச் சார்பினி லின்னலற் றிடவழைத் திருத்தி னாரரோ. | 3.1.57 | 58 |
இனத்தவர் குழுவினை நோக்கி யென்னுநும் மனத்தினி லெவரென மதிக்கின் றீர்சொலும் பினைத்தனி புகல்வனியா னென்னப் பேசினார் சினத்தடக் கதிரயி லேந்துஞ் செங்கையார். | 3.1.58 | 59 |
சாதெனு மன்னவர் சாற்றக் கேட்டலும் பேதுறு மனத்தொடும் பொிது நைந்திவ ரேதிவை யுரைத்தன ரோவென் றெண்ணுறுங் காதரத் தொடுமெதிர் கவல்வ தாயினார். | 3.1.59 | 60 |
இத்தலைத் தலைவாி னெவர்க்கு நாயக வுத்தமக் கிளைக்கெலா முயிாின் மிக்கெனப் பத்தியிற் கொண்டனம் பகர்வ தென்னுளப் புத்தியிற் றௌியுநீ ரெனப் புகன்றனர். | 3.1.60 | 61 |
உறமுறைக் கிளைஞர்க ளொருப்பட் டியாவரும் பெறுமொழி யறுதியிற் பேசி னாாிவை மறைபகர் முகம்மதின் பறக்கத் தாலெனத் திறனுறுங் கருத்தினிற் சிந்தித் தாரரோ. | 3.1.61 | 62 |
பெருக்கிய கிளையவ ரெவரும் பெட்புறத் திருக்கிளர் நபிகலி மாவைத் தேர்ந்தெடுத் துரைக்கிலீ ரெனிலும துறவுக் குண்மையுற் றிருக்கில னியானென வெடுத்துக் கூறினார். | 3.1.62 | 63 |
இத்தகை யெவரெடுத் தியம்பு வாருமக் கொத்தவை யெமர்களுக் கொத்த செல்வமே வித்தக விவ்வுரை வெறுத்திட் டோமெனிற் பித்தரென் றுலகினிற் பேச வேண்டுமே. | 3.1.63 | 64 |
என்றுரைத் தினியன புகன்று நந்நபி மன்றலம் புகழ்பெறும் புதுமை வாழ்த்தியே யொன்றிய திருக்கலி மாவை யோதியே பொன்றிலாத் தீனிலைப் பொருந்தி னாரரோ. | 3.1.64 | 65 |
கனம்பயில் கொடைக்கரன் சகுது கல்பினி லுனும்பொருள் குறித்துநல் வுணர்வு பெற்றிடுஞ் சனம்பல ரெவரவர் தமக்கன் சாாிக ளெனும்பெய ருலகெலா மிலங்க நின்றதே. | 3.1.65 |
66 |
உயர்புகழ் முகம்மதுக் கும்பர் கோனபிப் பெயரளித் தாண்டுபன் மூன்று பேர்பெற நயமுற நடக்குமந் நாளில் ஹஜ்ஜினுக் கியல்பெற யாவரு மீண்டி னாரரோ. | 3.2.1 | 67 |
அருவரைத் தடப்புய சகுது அசுஅதுந் தருமநன் னெறியுசை துடனன் சாாிகள் பெருகிய காபிரும் புறப்பட் டெண்ணிலா நரரொடு மக்கமா நகரை நண்ணினார். | 3.2.2 | 68 |
வாய்ந்தவெண் டிசைஞரு மதீன மாநகர் வேந்தரு மக்கமா நகாின் வீரரும் போந்துகஃ பாவினிற் புகுந்து தொன்முறை யேய்ந்தஹஜ் ஜெனுநெறி முடித்திட் டாரரோ. | 3.2.3 | 69 |
மணமுர சொலிமறா மதீன மாநக ருணர்வெழுந் தீனிலைக் குாிய ராருயிர்த் துணைவருஞ் சூழ்தர வெழுந்து திண்சுடர்ப் பணைதிரட் புயநபி பாத நண்ணினார். | 3.2.4 | 70 |
மல்லணி புயஅபித் தாலி மன்னவ ாிலுறைந் திரவினி லிருப்ப வொல்லையின் வில்லணி தடக்கையப் பாசும் விண்ணகச் செல்லலங் கவிகையா ாிடத்திற் சேர்ந்தனர். | 3.2.5 | 71 |
மதிதவழ் கொடிமதிண் மதீன மென்னுமப் பதியுரை மன்னவர் பலரும் பண்புற விதமொடு நபிசில மொழியி யம்பலுந் துதிசெய்தப் பாசுவாய் விண்டு சொல்லுவார். | 3.2.6 | 72 |
தங்கிய மறைமுகம் மதுவைச் சார்ந்துதீன் பொங்கிய நிறைநிலை பொருந்தி னீாினி யெங்கடங் குலத்தினுக் கினிய வாருயி ருங்களை யலதுவே றுலகி லில்லையே. | 3.2.7 | 73 |
மக்கமா நகருறை ஹாஷி மாகுலத் தொக்கலின் முதியவர்க் குறுகண் மாமணித் தக்கமெய்ப் பொருளெமர் தமக்கு ளாவியின் மிக்கவர் முகம்மதே யன்றி வேறின்றே. | 3.2.8 | 74 |
தெறுபடை வீரத்திற் பொருளிற் செல்வத்தி னுறுபவர் நுமக்கெதி ரொருவ ாில்லையாற் பெறுமொழி யொன்றுள குறிப்பின் பெற்றியை யறிவினோ டிரகசியத் தமைத்தல் வேண்டுமால். | 3.2.9 | 75 |
உரைத்திடு மொழியினை யுறுதி யாகவுள் ளிருத்திவே றொருநினை வின்றி யாவருங் கருத்தொரு கருத்தெனப் படுத்திக் காதுறப் பொருத்தியென் மொழியினைப் பொருத்தல் வேண்டுமால். | 3.2.10 | 76 |
எனக்குயிர்க் குறுதுணை யீன்ற மாமணி மனக்கலை யறிவினின் மதித்தி டாய்பொருள் கனக்குமெய்க் காரணக் கடலிக் காசினி தனக்கொரு திலதமொத் தனைய தன்மையார். | 3.2.11 | 77 |
பெரும்புகழ் முகம்மது பிறந்த நாட்டொடுத் தரும்புவி யிடத்திற்றீங் கடுத்திடா வகை வரம்பெறு மவரவர் வணக்கந் தன்னொடு மிரும்பெருங் குலமெலா மிறைஞ்சி நின்றதே. | 3.2.12 | 78 |
கண்ணுறு மணியெனக் காமுற் றியாவரு மெண்ணருஞ் சிறப்பொடு மினிது கூர்ந்தன மண்ணலைக் குறித்தும ரடுத்துத் தீனெனும் வண்ணமொத் தொழுகிநல் வழிபட் டாரரோ. | 3.2.13 | 79 |
அன்றுதொட் டும்மிடத் தடுத்துத் தீனிலைக் கொன்றிய முதியவ ரொழுங்குஞ் செய்கையு நன்றியும் வணக்கமு நயந்து நாட்குநாள் வென்றிகொண் முகம்மது விருப்புற் றாரரோ. | 3.2.14 | 80 |
மருப்பொதி துடவைசூழ் மதீன மன்னவர் விருப்பொடுந் தம்மன விருப்பும் வேறிலா தொருப்பட வுயிர்த்துணை யுடைய ராக்குடி யிருப்பது கருத்தில்வைத் திருத்தி னாரரோ. | 3.2.15 | 81 |
திருநபி முகம்மதுந் திருந்து நும்முழை வருவது சரதமம் மதீனந் தன்னினுங் கருதல ருளருறுங் கருத்தின் பெற்றியை விாிதர வறிகிலன் விளம்ப வேண்டுமால். | 3.2.16 | 82 |
இன்னவை யனைத்தையு மெடுத்தப் பாசெனு மன்னவ ருரைத்தலு மதீன மாகிய நன்னகர்த் தலைவர்கள் கேட்டு நன்கெனச் சென்னிக டுயல்வரச் செப்பு வாரரோ. | 3.2.17 | 83 |
நரபதி முகம்மதை மதீன நன்னகர்க் கரசென விருத்தியூ ரவர்க ளியாவரும் விரைவின்குற் றேவல்செய் திருப்ப வேண்டுமென் றொருவருக் கொருவர்முன் னுரைத்த துண்டரோ. | 3.2.18 | 84 |
ஊக்கமுற் றெமதுளத் துள்ளு மாறுநும் வாக்கினி லுரைத்தனிர் மதிக்கு மேலவ னாக்கிய திஃதினி தொழிவ தன்றமர் நீக்கிய கதிரயி னிருபர் வேந்தரே. | 3.2.19 | 85 |
நனிகளிப் பெய்தியெம் முள்ள நன்குற வினியவை யிவையென விசைந்தோர் வாசகந் தனியவன் றூதுவர் சாற்று வாரெனிற் றினையள வினுமொரு சிதைவு மில்லையால். | 3.2.20 | 86 |
மறுவற வினையன மதீன மன்னவர் நிறைபெற வுரைத்தவை கேட்டு நீணிலத் திறையவன் றூதுவ ாினிய மாமறை முறையொடுந் தௌிதர மொழிவ தாயினார். | 3.2.21 | 87 |
அரும்பொருள் வேதமுந் தீனி னாக்கமும் பெரும்புவி யிடத்தினிற் பெருக நாளுமவ் விரும்பதி யிடத்துறைந் திருப்ப வென்மனம் விரும்பிய துங்கடம்னட்பின் மேன்மையால் | 3.2.22 | 88 |
எமக்கணு வெனுமிட ாியையு மேனுமர் தமக்குவந் தவையெனுந் தகைமை வேண்டுமால் கமைக்கருத் தொடுமவ ணுறைவன் காணுங்குங் குமக்குவ டெனும்புயக் கொற்ற வேந்தரே. | 3.2.23 | 89 |
என்றுநன் னபியிவை யியம்ப வீறொடு மன்றலம் புயபறா வென்னு மன்னவர் நன்றுநன் றெனக்கலி மாவை நாட்டிய வென்றியி னவையினில் விளம்பு வாரரோ. | 3.2.24 | 90 |
நிலைமுறை தவறிலா நீதி மன்னவர் தலைமுறை தலைமுறை வீரந் தாழ்விலார் நலனுறும் புகழினர் நம வேலின ரலைவிலா ரெமர்குலத் தறிவின் செல்வரே. | 3.2.25 | 91 |
இத்திறத் தவர்களு மியாங்க ளும்மும துத்தரத் தாடியி னுறையும் பாவைபோல் வித்தக நெறிமுறை விளக்கு வோமிவை யத்தலத் துறைந்தபி னறிய வேண்டுமால். | 3.2.26 | 92 |
இந்தநன் மொழிக்கியைந் திறைவ நம்பதி வந்திருந் தனிரெனின் மருவ லார்களா லுந்திய பெரும்பகை யொடுக்கி வேர்வைகள் சிந்திடி லுதிரமே சிந்தச் செய்குவோம். | 3.2.27 | 93 |
இவ்வணந் தவறிலா தியற்று வோமெனச் செவ்வணக் கருத்தொடும் வலக்கை சேர்த்துவ மைவணக் கவிகையீ ரெங்கள் வாய்மையிற் குவ்வினிற் குறையிலை யென்னக் கூறினார். | 3.2.28 | 94 |
முகம்மது நபிக்கெதி ருண்மை வாசக மிகலறத் டிறல்பறா விசைப்பக் கேட்டிவண் புகல்வது பொறுமினென் றுரைத்துப் புந்தியி னகமகிழ் கைதமென் பவாி யம்புவார். | 3.2.29 | 95 |
இறையவன் றூதுவ ாிசைத்த நன்மொழிக் குறுதிகொண் கெழில்பறா வுரைத்த மாற்றமே பெறுமுறை யாயினு மின்னும் பேச்சினிற் சிறுமொழி யொன்றுண்டென் றுரைத்துச் செப்புவார். | 3.2.30 | 96 |
மாாிவிண் டணிதிகழ் மக்க மாநகர்ச் சீாியர் தமக்குமெம் மரபின் செல்வர்க்கும் பேர்பெறும் வசனநிண் ணயத்தின் பெற்றியா லீரமற் றொல்லையி னிகலு மில்லையால். | 3.2.31 | 97 |
வரமுறுஞ் செல்வநும் வசனத் தாலெமர்க் குாியவ ாியாவரு முரைத்த வாய்மையும் பெருகிய கிளையெனுந் தொடரும் பேரற முரணொடு மன்பற முறிக்க வேண்டுமால். | 3.2.32 | 98 |
மறைமொழி குறித்துத்தீன் வமழிம றாதிவண் குறைஷிக ளொடும்பகை கொள்ளுங் காலையி லுறமுறை யென்றும துளமி ரங்குமேற் பிறமொழி யெடுத்தெவர் பேச வல்லரே. | 3.2.33 | 99 |
இனையன பலமொழி கைத மென்பவர் மனநிலை தௌிதர வகுத்துக் காட்டலும் நனிமுறு வலின்முகம் மதுநன் மாமறைப் புனைதரு நாவினாற் புகல்வ தாயினார். | 3.2.34 | 100 |
ஆதிமுன் மொழிக்கலி மாவை யன்பொடு மோதின ரெனதுட லுயிாின் மிக்கவர் பேதுறத் தீனிலை பிழைத்து நின்றவர் தீதுற விருமையுந் தீய ராவரால். | 3.2.35 | 101 |
வரைத்தடஞ் சாயினு மதிதெற்க் காயினுங் கரைத்தெறி திரைக்கடல் சுவறிக் காயினுந் தரைத்தலம் புரளினும் வாய்மை தக்கயா னுரைத்தவை மறுத்தெடுத் துரைப்ப தில்லையால். | 3.2.36 | 102 |
முன்முக மலர்ச்சியின் மொழிந்து வேறொரு வன்மமுற் றிடிலவை மறந்து மேலவர் நன்மனத் தொடர்விடு நட்பு நாடொறுந் தின்மையை வளர்ந்தறந் தீய்த்து நிற்குமே. | 3.2.37 | 103 |
சாலவு நட்பினைத் தணப்பி லாதவர் மேலவர் நட்பினை வெறுக்கும் வாய்மையர் சீலமொன் றின்றிய சிறுமை யாரென நூலினும் வழக்கினு நுவலு கின்றதே. | 3.2.38 | 104 |
ஈதுமுத் திரையும திதயத் தெண்ணியத் தீதறு மாமறைச் செவ்வி யோர்களி லேதமிற் றலைவர்பன் னிருவ ரைத்தொிந் தாதரத் தொடுமிவ ணடைக வென்றனர். | 3.2.39 | 105 |
மல்வளர் புயமுகம் மதுதம் வய்மொழிக் கல்பினி லிருத்திநன் கென்னக் காவலர் நல்வளம் பொருந்திய மதீன நன்னகர்ச் செல்வர்தம் முழையிவை யெடுத்துச் செப்பினார். | 3.2.40 | 106 |
ே வ று கேட்ட மன்னவ ரனைவருங் கிளரொளி வனப்பிற் பூட்டு வார்சிலை வீரத்திற் குறைவறாப் பொருளின் வாட்ட மின்றிய கசுறசு வங்கிஷத் தவர்கள் கூட்டத் தாாினி லொன்பது பெயாினைக் குறித்தார். | 3.2.41 | 107 |
கான்றி டுங்கதிாி வாண்மற வாதகை யினரா யூன்று வெஞ்சின வீரத்தி னுடன்பிறந் தவரா யான்ற பேரறி வவுசுவங் கிஷத்தவ ரதனின் மூன்று பேரையு முதன்மைய ரெனும்படி முடித்தார். | 3.2.42 | 108 |
இருகு லத்தினு முதியவர் பன்னிரு வரையும் வாிச நாயகன் றூதுவர் முகம்மது நபிமுன் விரைவி னிற்கொடு வந்தனர் விறலுட னுலவித் திாியுங் கேசாிக் குடன்படு முழுவையின் றிரள்போல். | 3.2.43 | 109 |
இலகு தீனிலைக் குாியாி னெழுபத்து மூன்று தலைவ ாினுயர் தலைவர்பன் னிருவர்க டமக்கு ணிலைமை முன்னிலைத் தலைவராய் அசுஅதை நிறுத்தி யுலகின் மேல்வருந் திறனெடுத் தியனபி யுரைப்பார். | 3.2.44 | 110 |
மாறி லாதும திருகுலத் தினிற்சிலர் மறுத்து வேறு கூறினு மிந்நகர்க் குறைஷிகள் வெகுண்டு சீறி னுமறு புறநகர்ப் படைதிரண் டிடினுந் தூறு தோன்றியின் பறப்பெருந் துன்பமே வாினும். | 3.2.45 | 111 |
படைக்க லத்திரை யெறிந்தெதிர் வரும்பகைக் கடலைக் கடக்கும் வேல்வல னேந்திய செழுந்தடங் கரத்தீ ருடற்கு ளாவியொத் திருப்பதிற் றிருவர்க ளுறைக்கீ ணடக்க வேண்டுமென் றுரைத்தனர் நபிகணா யகமே. | 3.2.46 | 112 |
புகலு நன்மொழி யனைத்தையு மனத்துறப் பொருத்தி யிகல றத்தௌிந் தாய்ந்துசீர் தூக்கியிந் நிலத்திற் பகரு மிம்மொழிக் கீறிலை யெனநிலை படுத்தி மகித லம்புகழ் மதீனமன் னவர்கள்சம் மதித்தார். | 3.2.47 | 113 |
முத்த வெண்கதிர் முகம்மதே முனிவிலாத் திருவா யுத்த ரத்தினி லறிவுபெற் றனமுளந் ததும்பப் புத்தி பெற்றனம் பெருகிய கதிபெறும் பொருட்டா யித்த லத்தெமக் கியம்புவ தியம்புமென் றிசைத்தார். | 3.2.48 | 114 |
அந்த வேலையி லருளுடை யமரருக் கரச ாிந்த மாநிலத் தரசெனு முகம்மதி னிடத்திற் சிந்தை கூர்தர வாதிதன் றிருசலா முரைத்து வந்தி ருந்தனர் பிறரவ ரறிகிலா வண்ணம். | 3.2.49 | 115 |
இறைவன் றூதுவ வெனதுயிர்த் துணைவவிவ் விரவே யறிவி னாலுயர் மதனியர் தம்மகத் துண்மை யுறைய வாய்மையிற் பெறுகவொவ் வொருவர்பா லொழுங்கா முறையி வர்க்குப்பி னிவரென மொழிந்துவிண் போனார். | 3.2.50 | 116 |
அவிரொ ளிச்சிறைச் சபுறுயீ லருளுரைப் படியே தவிசின் மீதிருந் தவரவர் வரன்முறை தவறா தெவரும் புந்தியின் மகிழ்வுற வலக்கர மீந்து செவிகு ளிர்ந்தநன் மொழியொடு மறுதிசெய் கென்றார் | 3.2.51 | 117 |
மதியின் மிக்கநன் முகம்மதங் குரைத்தலு மதீனாப் பதியின் மன்னவர் முறைமுறை யெழுந்தடி பணிந்து சிதைவி லாத்திட மொழிகொடுத் தணிக்கரஞ் சேர்த்தி விதுவுஞ் சூழுடு வினமுமொத் திருந்தனர் விளங்கி. | 3.2.52 | 118 |
திடங்கொண் மும்மதக் காிக்குபிர்ப் பகையறச் செழுந்தீன் மடங்க லேறென வருதிரண் மதீனமன் னவர்க ளிடங்கொள் சிந்தையிற் றொிதருந் தமியர்க ளினிமேற் றொடங்கும் வீரத்தின் றிறமெனப் பணிவொடுஞ் சொன்னார். | 3.2.53 | 119 |
என்று மிம்மொழி தவறிலா துறநிறை வேற்றி நின்ற மன்னவர்க் காதிதன் கிருபையு நிறைந்த வென்றி யுஞ்சுவர்க் கமுமருள் குவனென விாித்தார் மன்ற றுன்றிய மதுமல ரணிமுகம் மதுவே. | 3.2.54 | 120 |
கனைக்கும் வெண்டிரைக் கடற்புவி புகழ்அபுல் காசிம் நினைக்குஞ் சிந்தையிற் பொருந்துற நிறைந்தநன் னபியைக் குனிக்கும் வார்சிலைக் கரத்தொடு பணிந்திரு குலத்தோர் தனிக்க டந்தரு களிறெனச் சார்பினிற் சார்ந்தார். | 3.2.55 |
121 |
மண்ண கம்புகழ் முகம்மது மனங்களித் திருப்பப் புண்ணு லாவயிற் கரத்தரும் விடுதியிற் புகுதக் கண்ண கன்புவிக் கெவைவிளைந் தனவெனக் கருத்தி னெண்ண மோடழிந் தெழுந்திருந் தனனிபு லீசு. | 3.3.1 | 122 |
அற்றைப் போதிர வினிலணி மக்கமா நகாி னுற்ற நன்னடு மறுகினி லுருத்தொி யாமன் முற்றுங் காத்தளித் திடுமவர் மொழிந்திடு மொழிபோற் சுற்று நாற்றிசை யடங்கலுந் தொனிபரந் திடவே. | 3.3.2 | 123 |
குறைவி லாவள மக்கமா நகர்க்குறை ஷிகளே யுறையு மிந்நகர் முகம்மது மதீனத்துள் ளவரு மறையும் வாய்மையின் வலக்கரங் கொடுத்தவ ரவர்க்கே முறைமு றைப்படி யொன்றுபட் டொருமொழி முடித்தார். | 3.3.3 | 124 |
ஏதெ னிற்குறை ஷிகள றபிகளிவ ணிருந்தோர் வேத னைப்படக் கொலைவிளைத் தாலயம் வீழ்த்திச் சூது வஞ்சனைத் தொழிலொடு மாய்ந்திடத் துணிந்து போது கின்றன ரென்றுகூக் குரலொடும் புகன்றான். | 3.3.4 | 125 |
விாிந்த வீதிக டொறுந்தொறுங் கூக்குரல் விளக்கித் திாிந்த மாயவஞ் சகன்றனை நோக்கிக்கண் செவந்து புாிந்த நின்வலி கெடுக்குவன் காணெனப் புகன்றார் சொாிந்து வானவர் புகழ்தர வருமிற சூலே. | 3.3.5 | 126 |
தேய மெங்கணு மிருள்கெடச் செழுங்கதிர் குலவ மேய வாவியின் வனசங்கள் விாிதர விளங்க மாய வஞ்சகன் கூக்குரன் மறுத்துவா யடைப்பக் கூய வெத்திசை தொறுந்தொறுஞ் சேவலின் குலங்கள். | 3.3.6 | 127 |
ஒடிந்து வீழ்திரைக் குணகடற் கதிரவ னுதிப்ப விடிந்த காலையின் மக்கமா நகாினின் வீரர் கடந்த சொல்லொடு மதீனமன் னவர்களைக் கடிதி னடர்ந் திவண்கொடு வருகெனத் தூதுவிட் டழைத்தார். | 3.3.7 | 128 |
உலவு நீள்கொடி மதீனமா நகாினி லுறைந்த தலைவ ாிற்சில காபிர்க டமைவிளித் திரவி னலித லன்றியோர் கூக்குரல் கேட்டனம நடுவு நிலைமை யற்றசொற் கேளுதி ரெனநிகழ்த் துவரால். | 3.3.8 | 129 |
மதின மன்னவ ரடங்கலு முகம்மது தனக்கு முதிய சத்தியஞ் செய்தவன் தீனிலை முயன்று பதியி னிற்கொடு போயெம ருடன்பகை விளைப்பப் புதிய மாற்றமு முடித்தன ராமறைப் பொருட்டால். | 3.3.9 | 130 |
ஈது வந்ததென் னெமர்க்கிடர் நினைத்ததென் னிணங்காச் சூதன் றன்னொடு பொருந்திய வாறதென் றொலையாப் பாத கப்பழிக் கடியிட முடித்ததென் பகர்ந்தீ தோதக் கேட்டெவர் மனங்கொள்வர் நகைக்குமிவ் வுலகே. | 3.3.10 | 131 |
இந்த வாறுமெய் யெனில்கசு றசுவெனு மினமுஞ் சிந்தெ னப்பெரு கௌசெனுங் குலத்தவர் திரளு நந்து வெம்பகை முடித்திட மக்கமா நகாில் வந்த தல்லது நல்வினைக் கலவென வகுத்தார். | 3.3.11 | 132 |
மாட மோங்கிய மக்கமன் னவர்வகுத் துரைப்பக் கேடி லாமதீ னத்துறை காபிர்கள் கேட்டுக் கூடு மெம்மினத் தவர்களி லிதிலொரு குறிப்பும் நாடு வாாில ரென்கொலோ நீர்நவின் றதுவே. | 3.3.12 | 133 |
சமய பேதக முகம்மதென் பவன்றனை விளித்தோ ாிமை நொடிப்பொழு தடுத்திருந் தறிகில மியாங்க ளுமை மறுத்தவர்க் குண்மைக ளுரைப்பதெவ் வழியெம் மமைதி யுற்றறிந் தும்மிவை யுரைத்ததென் றறிவால். | 3.3.13 | 134 |
இந்நி லத்தவர் மதீனமன் னவரொடு மிணங்கி நன்னி லைப்பட விருப்பது பிாிப்புற நலியா மன்னும் வஞ்சக முகம்மது மாயவிச் சையினா லுன்னி வந்ததக் கூக்குர லுரைத்திடு முரையே. | 3.3.14 | 135 |
அலது வேறிலை யெனச்செழு மதீனமன் னவர்கள் பலருங் கூறின ாியாவருங் கேட்டிவை படிறொன் றிலை யெனச்சிர மசைத்தவர்க் கினியன புகன்று தலைவ மாரொடு மவரவர் சார்பினிற் சார்ந்தார். | 3.3.15 | 136 |
குறைஷி கட்கெதிர் மொழிந்திடுங் காபிர்கள் குலமு மறைப டத்தனி யிருந்தமெய்த் தீனின்மன் னவரு முறைமை யாகிய ஹஜ்ஜினைக் குறைவற முடித்துப் புறநி லத்தரு மவரவர் பதியினிற் போனார். | 3.3.16 | 137 |
பரத்த லத்தவர் போயபி னறமெனும் பழைய புரத்தினி னுற்றவன் காபிர்கள் மதீனமா புரத்தோர் திருத்துந் தீனிலை முகம்மதி னொடுந்திட வசன முரைத்துப் போயவை யுற்றறிந் தொருங்கினிற் றிரண்டார். | 3.3.17 | 138 |
இடுசு தைக்கதிர் மறுகினு மாவணத் திடத்துங் கொடுமு டிப்பெருங் கோயில்க ளிடத்தினுங் குறுகா ருடனு றைந்திடு மனையினு மதீனத்து ளோரைக் கடிதிற் றேடினர் திாிந்தனர் சினத்தொடுங் கறுத்தே. | 3.3.18 | 139 |
தேடி யெத்திசை தொறுந்திாிந் தலுத்தொரு தெருவிற் கூடி முந்திறென் பவரையுஞ் சகுதையுங் குறுகி யாடை முந்திதொட் டீழ்த்துறுக் கொடுமலக் கழித்து வீடு றைந்தொளித் தவாிவ ரெனக்கொடு விடுத்தார். | 3.3.19 | 140 |
விரந்து காபிர்கண் முன்கொடு விடுக்குமந் நேரங் கரந்து முந்திறென் பவரொடு திசைநெறி கடந்தார் பரந்து தேடின ரோடினர் காண்கிலர் பதைத்து வருந்திச் சஃதொருத் தரையுமே நெருக்கிட வளைந்தார். | 3.3.20 | 141 |
பற்று வார்சில ரடருவர் சிலர்கரம் பதிய வெற்று வார்சில ாிணைவிரன் மடக்கிமெய் சேப்பக் குற்று வார்சில ரடிக்கடி கொதித்தவ ரலது சற்று மாறின ரலர்கொடுங் காபிர்க டாமே. | 3.3.21 | 142 |
அடிமி னென்பவர் சிலர்சில ராதகா திவரை விடுமி னென்பவர் சிலர்சில ரவர்களை வெகுண்டு பிடிமி னென்பவர் சிலர்சில ாிவனுயிர் பிசைந்து குடிமி னென்பவர் சிலர்சிலர் காபிர்கள் குழுமி. | 3.3.22 | 143 |
ஒலித பூஜகு லுத்துபா வுடனுமை யாவு மலித ருங்குறை ஷிகளொடு மிவர்மன மறுக வலைவு செய்திடும் வேளையில் சுபைறுமா ாிதுவுங் கலியி தென்கொனீர் செய்தவை யெனக்கழ றுவரால். | 3.3.23 | 144 |
குற்ற மின்றிய ஒளசுடன் கசுறசுக் குலத்தோர்க் குற்றி டும்பெருந் தலைமையிற் பெயாினி லுயர்ந்தோன் பற்ற லர்க்காி யேறிவ னொடும்பகை விளைப்ப முற்று மோநமர் குலந்திர ளினுமுடி யாதே. | 3.3.24 | 145 |
மதின மானக ரவர்க்குமிப் பதியின்மன் னவர்க்கு மிதம தன்றியே யிகலிலை யின்றிவன் பொருட்டாற் புதிய வெம்பகை விளைந்தது போக்கவு மாிதிச் சதிவி ளைத்தது தகுவதன் றெனவுரைத் தனரால் | 3.3.25 | 146 |
குவித ருங்குலத் தவர்சினங் கெடமதிக் குறிப்பாய்ச் சுபைறு மாாிது முரைத்தலு மிதயங்க டுணுக்குற் றவம றிந்தில மெனவிடுத் தகன்றனர் மறைநேர் தவமு யன்றிடு சகுதுவுஞ் சார்பினிற் சார்ந்தார். | 3.3.26 | 147 |
குறைஷிக் காபிர்கள் விளைத்திடுங் கொடியவல் வினையை மறைத ாித்தநன் முகம்மதி னுடன்வகுத் துரைத்து நிறைம னத்தொடும் பணிந்தெழுந் தவாிட நீங்கி யுறையுந் தந்நகர் புகுந்தனர் சகுதெனு முரவோர். | 3.3.27 | 148 |
மகித லம்புகழ் சகுதுமன் னவர்வள மதீனா நகர்ப் குந்தபின் செழுமறை முகம்மது நயினா ரகம கிழ்ந்துதீ னவர்களை யழைத்தரு கிருத்திப் புகர றத்தம துளத்தினி னினைத்தவை புகல்வார். | 3.3.28 | 149 |
வற்று றாப்புனற் றடந்திகழ் மதீனமன் னவரை யுற்ற மெய்த்துணை யாயுடற் குயிரதா யுறுந்தீன் வெற்றி யாய்வலி யாய்ப்புகழ் நிலைபெற விளக்க முற்றும் நம்வயி னளித்தனன் றனிமுத லவனே. | 3.3.29 | 150 |
இந்த வூாினிற் குபிருழை யுழன்றன மினிமே லந்த நற்பதி புகுவமே லெதிரடை யலரால் வந்த வெம்பகை தடிந்திசு லாமினை வளர்த்து நந்த மர்க்கெவ ாிணையெனத் தீனெறி நடத்தும். | 3.3.30 | 151 |
ஆதி நாயக னுரையவண் புகவரு மளவு மேத மின்றியிங் கிருந்துபின் வருகுவ னியான்முன் போதல் வேண்டுநம் மினத்தவ ரெனப்புகழ்ந் துரைத்தா ாீது முத்திரைப் பொருளென யாவரு மியைந்தார். | 3.3.31 | 152 |
சோதி நாயகன் றிருமறைத் தூதுவ ாிறசூ லோதும் வாய்மையு மறைப்பொரு ளெனவுளத் திருத்திச் சாதி மனவர் மூவரு மிருவருந் தனித்தும் போதும் வல்லிருட் பொழுதினும் பகலினும் போனார். | 3.3.32 | 153 |
உரத்தின் மிக்கபூ பக்கரு முமறுது மானும் வரைத்த டப்புய வலியலிப் புலியும்வன் காபிர் கரத்த கப்படும் பெயருமல் லதுசெழுங் கலிமாத் திருத்துந் தீனவ ாியாவரு மதீனத்திற் சேர்ந்தார். | 3.3.33 | 154 |
மக்க மாநகர்த் தீனவ ாியாவரு மதீனம் புக்கி னாரெனு மொழிபல பலபுறம் பொசிய வுக்கு பாவுத் பாவுமை யாபொலி துரைப்பத் தக்க பேருடன் கேட்டபூ ஜகுலுட றளர்ந்தான். | 3.3.34 | 155 |
வடித்து மும்மறை தௌிந்தமன் னவரைவும் வடிவா ளெடுத்த வீரத்தின் றிறத்தவ ாினத்தையு மிசுலாந் தடுத்து நின்றவர் குலத்தையுந் தனக்குயிர்த் துணையா யடுத்த பேரையும் விரைவினிற் றனித்தனி யழைத்தான். | 3.3.35 | 156 |
குறைஷி யங்குலக் காபிர்க ளனைவருங் கூண்டு நிறைத ரும்பெருங் குழுவினிற் புகமன நேடிச் சிறியன் வஞ்சகச் செய்கைய னியாவர்க்குந் தீயோ னிறைவ னேவலைத் தவிர்த்திடுங் கசட்டிபு லீசு. | 3.3.36 | 157 |
பொறுமை யுள்ளவன் போலவும் வணக்கத்திற் புகழி னறிவின் மிக்கவன் போலவு மறபிவங் கிடத்தின் பிறவி போலவு முதிர்ந்தவன் போலவும் பிாியா துறவி னுற்றவன் போலவு மவையினுற் றனனால். | 3.3.37 | 158 |
சாரு மெய்நரை பிறங்கிய முதியவன் றனைக்கண் டாரு மிங்கிவர் பொியரா மெனவகத் திருத்தி வாரு மிங்கிரு மெனவுரைத் தனர்மன மகிழ்வுற் றீர முற்றிடு மறிவர்க ளிடத்தினி லிருந்தான். | 3.3.38 | 159 |
மருளி லாதுநன் மறைகளை மறுவறத் தேர்ந்து தெருளு மேலவர் சிறியவ ாியாவர்க்குந் தொியப் பொருளஞ் சொல்லுமொத் திருந்தன மொழிகளாற் பொருந்த விருளும் புன்மனக் கொடியவ னபூஜகு லிசைப்பான். | 3.3.39 | 160 |
வேறு மறுவெனப் பிறந்திவ் வூாிடை வளர்ந்த லறிவுறா வினைமேற் போட்டுநம் மினத்தா யுறையுமந் திரத்தி னுருமுடித் திவையே நிறைபெறத் தனது பெயரையு நிறுத்தித் 3.3.40
| 161 |
இனம்பெருத் திருந்து மிவைபாி காித்தோ | தனினிலை நிறுத்தி விட்டன மறிவுந் மனமுழற் றுவதென் னினியவ ரவர்க்கு வினைகளுஞ் சிதறி நமரவ ரெவர்க்கு 3.3.41
| 162 |
வருந்தகை யிஃதென் றகுமதின் வலியை | ணிருந்துபே தையர்போ லெண்ணின மெனினம் திருந்திடா தினந்தேய்ந் திகலவ ரெவருஞ் மருந்தவத் துடையீ ாீதலாற் பிழைவந் 3.3.42
| 163 |
இகத்தினி லெவர்க்கு முடித்திட வாிதென் | மகத்தினி லொருமித் தெடுத்தொரு துணிவா செகத்தினில் விளக்கும் புகழொடு முடியுஞ் பகுத்தறி வுடையீ ருங்கடம் மனத்திற் 3.3.43
| 164 |
முன்னைநா ளபித்தா லிபுவயின் பலகான் | முன்னியுட் கணித்தா னிலன்கொடும் புலிவா னினைநாட் டொடுத்தும் விடுவதன் றௌிதின் லன்னவன் முரணி லெவ்வள வெனினு 3.3.44
| 165 |
எள்ளுதற் காிதாய் மிகுவலி படைத்திங் | ணள்ளிடை யிரவிற் றேவதன் மையினா விள்ளுதற் காிதா யொருதொனி யெவர்க்கும் தெள்ளுநன் மொழியா லெவரையும் வினவும் 3.3.45
| 166 |
புரத்தினி லிரவிற் பிறந்தசொன் னென்னற் | வரத்தினி லுயர்ந்த மதீனமா நகரார் கருத்தினிற் பொருத்தி யுண்மைகொண் டவ்வூர் யிருத்துதற் காிய வலக்கரங் கொடுத்தங் 3.3.46
| 167 |
அந்நெறி முறையே முகம்மதுக் கீமான் | பொன்னகர் புகுந்தா ரவர்களு மிவர்க்குப் மன்னியங் கிருந்து நாட்குநாள் தீனை ாிந்நிலத் திவனு மப்பெரும் பதியிற் 3.3.47
| 168 |
புதுமறை வளர்க்கு முகம்மது மதீனாப் | சதிவிளைந் திடுவ தறுதிதன் வலியாற் பதியைவிட் டருங்கான் புகுந்தின மெனும்பேர்ப் கதிபெறு தேவா லயங்களு நமர்தஞ் 3.3.48
| 169 |
இந்தவல் வினைகண் முடியுமுன் றமர்க | புந்தியிற் றொிந்து செய்வது தவிர்வ மந்திரப் பொருளாய்க் குலநலந் தழைக்க நிந்தையும் படிறுங் கொலையுமுள் ளமைத்த 3.3.49
| 170 |
தலைவாிற் றலைவ னபூஜகு லெடுத்துச் | முலைவுறக் கேட்டுப் பொிதழிந் தொக்கு நிலைபெறத் தேறி யிருக்கிமவ் வவையி கலைவலான் சகுதைச் சிறைப்படா விடுத்தல் 3.3.50
| 171 |
முறைததும் பியதை நினைப்பதென் னினிமேன் | நிறைபெறத் தேர்ந்தொத் தெவருமோர் கருத்தாய் மறைபட விருந்து விரைவறத் தூங்கி பொறையுட னிருத்தல் வினைக்கிடங் கொடுத்த 3.3.51
| 172 |
இதத்ததிம் மொழியே முகம்மதென் பவனை | வதைத்தவ ாிவர்பொன் றினாிவ ரெனுஞ்சொல் புதைத்தலுக் கிடமுற் றிருக்குமோர் வினையாற் சதித்திட லெவர்க்குந் தகுவதன் றெனவே 3.3.52
| 173 |
நன்கில துறுஞ்சொன் முகம்மதைப் பிடித்தோர் | புன்கமும் புனலுஞ் சிறிதுத விலவாய்ப் லின்கணி னெவர்க்குந் தொிகிலா வண்ண வன்கொலை தொடரா மறுவுமற் றொழியு 3.3.53
| 174 |
இல்லகத் தடைத்து மெனுமொழி யிபுலீ | நல்லவை யுரைத்தீ ரடைத்தொரு மனைக்கு மெல்லணைப் படுத்தங் கிருந்தவர் போல தொல்லையி லிறப்பே தவன்றன்வஞ் சனைக்கீ 3.3.54
| 175 |
மற்றொரு தலைவன் முகம்மதைப் பிடித்தோ | பற்றிய வுகிர்க்காற் கொடுவாிக் குழுவு துற்றிய வனத்திற் போக்கிடி லவன்ற யுற்றதென் றுரைத்தான் கேட்டிபு லீசு 3.3.55
| 176 |
| கடுவிடப் பாந்தளும் புலியுங் கோட்டுடைக் களிறுங் கரடியின் குழுவுங் வீட்டுவன் குலத்தி னொடுமவன் படித்த தீட்டுவெண் புகழீர் மறுத்தொரு சூழ்ச்சி 3.3.56
| 177 |
அவரவ ருரைத்த வசனமு மிபுலீ | கவரறக் கேட்டுப் புந்தியிற் றேர்ந்து புவியினி லெவர்க்கும் பொருந்துறு மாற்றம் பவிதருஞ் சூழ்ச்சி யொன்றுள கேண்மி 3.3.57
| 178 |
வங்கிடத் தொருவர் படைக்கல மெடுத்து | செங்கர மெடுத்திட் டியாவரு மோங்கிச் பொங்கிய குருதி சிதறிடத் துணிகள் நங்களை கடிவோங் கீர்த்தியை யுலகி 3.3.58
| 179 |
இவ்வண முடித்தோ மெனிலொரு தீங்கு | னொவ்வொரு பயருன்க் கொருபழி தொடர்வ செவ்விதி னெறியே யலதுவே றிலையென் பவ்வமுங் கொலையுந் திரண்டுரு வெடுத்த 3.3.59
| 180 |
அபுஜகு லுரத்த மொழிவழி துணிந்தங் | புவியினி லெவர்நின் சூழ்ச்சியை நிகர்ப்ப குவிகுலத் தெவர்க்குங் குறிப்பிவை யலது சவிமதிண் மதீனா புகுமுனம் விரைந்தித் 3.3.60
| 181 |
இன்னவா றலது வேறொரு குறிப்பு | மன்னிய காபிர் மனையிடம் புகுத பன்னருங் கிரணச் சிறைபல வொடுக்கிப் நன்னபி யிறசூல் முகம்மதி னிடத்தி 3.3.61
| 182 |
மேலவன் றூதை முகம்மதை விளித்து | கோலிய பழியை முடித்திடத் துணிந்த மாலமர் புதுமை மக்கமா நகர்விட் சீலமுற் ாிருந்து நன்னெறி வழாது 3.3.62
| 183 |
கட்டுரைக் கடங்காக் காபிர்தம் மாவி | னிட்டமுற் றாயத் திறங்கிய வசன மட்டறப் புகழ்ந்து பிறரவ ரறியா விட்டொளி பரப்பிக் ககனிடைப் படர்ந்தார் 3.3.63
| 184 |
மங்குலிற் சுழலுந் துவசநீண் மாட | வெங்குபீர் கடிந்து பீஸபீல் செய்ய விங்கிவ ருரைத்த மாற்றமு மனத்தி றங்கமு மகமு முவகையிற் குளிப்ப 3.3.64
| 185 |
தருமுகம் மதுநம் மிறையவன் றூதாய் | வருமுறை பதினான் காண்டினின் மாசத் றொிதருந் தேதி யைந்தினிற் றிங்க பெருநகர் கேக விருந்தன ாிஃது 3.3.65
| 186 |
இற்றையி னிரவின் முகம்மது மதீனத் | றொற்றாி லிபுலீ கரைத்திடு மொழிகேட் பற்றறும் உக்பா வுத்துபா முதலப் முற்றுறுங் கதிர்வாட் கரங்களி னேந்தி 3.3.66
| 187 |
அறபிகள் குலத்தின் முதியர்போ லிபுலீ | வுறைதரும் பவத்துக் கொருவருக் கொருவ மறுவறு மடங்க லேற்றினங் கிடந்த ளறளைந் ததுபோற் காபிர்க ளெவரு 3.3.67
| 188 |
தெருவினும் வாயிற் புறத்தினுங் கதிர்க | பெருகிய திருமுன் றிலின்செழும் புறத்தும் நிரைநிரை காபிர் செறிதிர ணெருங்கி லொருவாி னொருவர் பிாிந்திடா துறைந்தாங் 3.3.68
| 189 |
இருந்திடத் தோற்றா திமைக்குமுன் பறப்ப | னருகிருந் தவரை மதிமயக் கிடுவ வெருவியிங் கெவரு நாவழங் காமல் கருவிளைத் திடுவன் முகம்மது படித்த 3.3.69
| 190 |
இல்லகத் துளனோ புறத்தடைந் தனனோ | கல்லகங் குழைய விலங்கின மலையக் னொல்லையி னெதிர்ந்தா னெனிற்றொடர் பவரா வில்லணித் தடக்கை வீரர்கள் பலபா 3.3.70
| 191 |
எடுத்தெடுத் தெவரும் வெருவுறு மாற்ற | படுத்தனன் கரந்து போயின னலனோர் றொடுத்திடுங் கரும முடித்தனந் துணிந்த கொடுத்திபு லீசு காபிர்தம் மனங்கள் 3.3.71
| 192 |
உரப்பிய வுரைகண் மறுத்துநித் திரையை | ாிருப்பிடம் பெயர்ந்து நின்றுநின் றுலவி கரப்பிட மினிமற் றில்லைமா மதீனாக் விாிப்பது மொழிந்த தின்றென வுரைத்து 3.3.72
| 193 |
நபிமுகம் மதுவைத் தீவினை யிருளைத் | கவலுதற் காிய கொலைசெய நினைத்துக் புவனமும் விசும்புஞ் செறிந்திருட் படலம் றவரவர் கருத்துங் கண்களு மயங்கத் 3.3.73
| 194 |
சாய்ந்துடன் முடக்கிக் கிடப்பவர் சிலர்வாட் | டோய்ந்திடத் துயின்றோர் சிலருட னிமிர்த்துச் மாய்ந்தவர் போலக் கிடந்தவர் சிலர்வெண் தேய்ந்தற வொடுங்கிக் கிடந்தவ ரெவருந் 3.3.74
| 195 |
தனைமதித் தடர்ந்த காபிாின் குலமுந் | கனைகட லுறங்குங் காட்சிய தென்ன நினையுமு னறியும் பொியவ னருளா மனையிடத் துறைந்தார் செவ்வியிற் சிதையா 3.3.75
| 196 |
மன்றன்முங் கியபொற் புயமுகம் மதுவை | யின்றிர வினினும் மனையினி லலியை பொன்றிலாப் பசிய போர்வையிற் போர்த்துப் வென்றிகொண் டொருகை மண்ணெடுத் தெறிந்து 3.3.76
| 197 |
அமரருக் கரசர் மொழிப்படி திருந்த | தமரொடு மிருந்து மூன்றுநாள் கடந்தென் கமைதரு மிருகண் மணியினுஞ் சிறந்த தமைவளர்த் துவந்த பாத்திமா வெனுமத் 3.3.77
| 198 |
திருமனைப் புறத்தி னின்றொரு பிடிமண் | யொருதரம் யாசீ னோத்நாற் றிசையு யிருதிருக் கினும்வா யினும்புக வெனவென் சொாிகதிர்ச் சுதைமா மனையிடங் கடந்து 3.3.78
| 199 |
ஒருகதிர் நிகராப் பெரும்பதித் தெருவி | கருவிழித் துவர்வா யாயிஷா வெனும்பெண் மருமலர்த் தொடைத்திண் புயத்தபூ பக்கர் விரைவொடு மொருசொற் பிறந்திட வுரைத்து 3.3.79
| 200 |
மறுவிலா வசன முகம்மதின் றொனியீ | நிறைதரு மிருளி னொருதர மெனினு றிறையவ னருளா லென்னினை வதனா கறைகெழும் வடிவேல் வலக்கர னேந்திக் 3.3.80
| 201 |
வேறு | உறுப்பொன் றுறையாப் பெருந்தகையை சிறப்புற் றிருப்பச் செய்தவிற யறப்பொங் கிருளிற் றனித்திவணி பிறப்ப வுரைப்ப வேண்டுமெனப் 3.3.81
| 202 |
உரைக்கு முறுதி மொழிகள்சில | ளிருக்கி லகற்று மெனவிறசூ வருக்க மிலையிங் கெழுகவென விாிக்கு மணிப்பஞ் சணையிருத்தி 3.3.82
| 203 |
இற்றை யிரவி னியாத்திரையென் | சொற்ற துணிவு மருவார்கள் முற்ற துணைவா னவர்க்கரச தெற்றி யெறிந்த வரவுமெடுத் 3.3.83
| 204 |
கோதுங் கதவெங் குபிர்க்குலத்தைக் | போது மெனுஞ்சொற் கேட்டுணர்ந்து றீது விளையுந் தாிப்பதல காதி யானு முடன்வருதல் 3.3.84
| 205 |
உறுமெய்த் துணைவர் வருவனெனு | செறுந ரறியா நெறிவிரைவிற் பெறுவா கனங்க ளிலையிருவர் திறைவன் பரமென் றிசைப்பஅபூ 3.3.85
| 206 |
உரத்தின் வலியிற் சுமைக்கிளையா | பாித்தற் குமக்கொன் றியானளித்தே பொருத்துங் கிறையம் பொருத்தியெமக் திருத்தி யிஃதே நெறிமுறையென் 3.3.86
| 207 |
இருவர் மனமும் பொருந்தவரு | தொிய நெறிக்கூ லியுமளித்தொட் முருகு துளிக்குந் தௌறுமலைப் விரைவி னாலாந் தினத்திரவின் 3.3.87
| 208 |
திாிகைக் கனியு மோதகமுந் | தருமை மகவா ரசுமாதன் வாிசை மனையார் கொடுப்பவெதிர் குருதி வடிவே லேந்துமலர்க் 3.3.88
| 209 |
கொறிக டமைமேய்த் தாமீறைக் | முறைய வுரைத்தி ரெனச்சாற்றி சிறுவ ரப்துல் லாவெனும்பேர்ச் மறுவி கமழ்ந்த முகம்மதுட 3.3.89
| 210 |
புகழோர் வடிவு கொண்டவபூ | |