உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்)
படலங்கள் 12-25 / பாடல்கள் (608-1403)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
3.12 | ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் | (608-619) | மின்பதிப்பு |
3.13 | ஓநாய் பேசிய படலம் | (620-648) | மின்பதிப்பு |
3.14 | வத்தான் படைப் படலம் | (649-695 ) | மின்பதிப்பு |
3.15 | பாத்திமா திருமணப் படலம் | (696-915) | மின்பதிப்பு |
3.16 | சீபுல் பகுறுப் படலம் | (916-930) | மின்பதிப்பு |
3.17 | புவாத்துப் படலம் | (931-950 ) | மின்பதிப்பு |
3.18 | அசீறாப் படலம் | (951-991) | மின்பதிப்பு |
3.19 | பத்னுன்னகுலாப் படலம் | (992-1006) | மின்பதிப்பு |
3.20 | பதுறுப் படலம் | (1007-1262) | மின்பதிப்பு |
3.21 | சவீக்குப் படலம் | (1263-1319) | மின்பதிப்பு |
3.22 | குதிரிப் படலம் | (1320-1331) | மின்பதிப்பு |
3.23 | தீயம்றுப் படலம் | (1332-1343) | மின்பதிப்பு |
3.24 | அபீறாபிகு வதைப் படலம் | (1344-1383) | மின்பதிப்பு |
3.25 | அசனார் பிறந்த படலம் | (1384-1403 ) | மின்பதிப்பு |
608 |
நபியெனத் தீனிலை நடத்து நாண்முதற் கவினுறும் பைத்துல் முகத்தி சென்னுமத் தவிசினை நோக்கியே தக்கு பீறொடும் புவியிடைத் தொழுகையைப் பொருந்தி நின்றனர். | 3.12.1 | 609 |
தூவத்தண் டுளிமழைக் கவிகைத் தூதுவர் தீவத்தும் புகழ்தர வணக்கஞ் செய்யுநாட் பாவத்தின் றிரள்கெடப் படுத்துத் தோன்றிய காபத்துல் லாவைப்பின் காட்ட வில்லையால். | 3.12.2 | 610 |
மகிதலத் தினிலுயர் மக்க மாகிய நகர்விடுத் தணிமதி னாவை நண்ணிச்சூழ் புகழொடுந் தீனெறி புரந்து வைகுநாட் டிகழ்சகு பானென விளங்குந் திங்களில் | 3.12.3 | 611 |
மிக்கநற் றேதிமூ வைந்தின் மேவியே தக்கசெவ் வாயினி லுஹறு நேரத்தில் ஹக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான்றொழு தொக்கலோ டிசைநபி யுறையு மொல்லையில். | 3.12.4 | 612 |
நிரைமணித் தடச்சிறை யொடுக்கி நீள்கதிர் விரிதரு வெள்ளிடைப் படர்ந்து வேதநூ லுரைதருந் திருநபி யிடத்தி னோர்நொடி வரையினில் ஜிபுறயீல் வந்துற்றா ரரோ. | 3.12.5 | 614 |
இறையவன் ககுபத்துல் லாவென் றெய்திய துறவுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ மறையுரை வழங்கின னென்ன மன்னபி முறையிதென் றாநந்தக் கடலி மூழ்கினார். | 3.12.6 | 615 |
முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய பின்னரிற் ககுபத்துல் லாவைப் பெட்புற வுன்னினர் நோக்கின ரோதும் பாதியுந் துன்னிய குழுவுடன் றொழுது வைகினார். | 3.12.7 | 616 |
பருதி வானவன் விலகிய நெடும்பதி தனக்கு நரலை போல்வளம் பெருகிய மதீனமா நகர்க்குந் தெரிகி லாதுற நிமிர்ந்துமா றோல்தரத் திரண்ட வரைக ளியாவையும் பதுக்கையுந் திடருறு வனமும். 3.12.8
| 617 |
இருநி லம்பிதுங் கிடக்கட லலைகிடந் தெறிய | நிரைம ணிக்கதி ரெறித்திட நெடுங்கரத் தமிழ்த்தி யொருநி லத்தள வாக்கியங் குறைந்தன ருடுக்கள் செருகும் வானகங் கீண்டிட வருஞ்ஜிபு ரீலே. 3.12.9
| 618 |
| சூன்முகில் குலவிய வரையின் சுற்றெலாம் வானவர் கோன்புவி யிடையின் மாட்டலாற் பூநிமிர்க் ககுபத்துல் லாவும் பூணெனுங் கானமர் தூதர்கண் காண லாயதே. 3.12.10
| 619 |
மதிதவழ் நெடுங்கொடி மதீன மாகிய | பதியினி லமைத்தவப் புதிய பள்ளியை நிதிமதிட் ககுபத்துல் லாவி னேரதாய் விதியொடுந் திரித்துப்பின் விளங்கக் கட்டினார். 3.12.11
| 620 |
இருசுடர் விலங்கிட விலங்கு நீள்கொடி | நிரைதரும் பள்ளியை நோக்கி நீணபி யொருவனைத் தொழுதிரந் துவக்குந் திங்களிற் றெரிதரும் புதுமையொன் றெடுத்துச் செப்புவாம். 3.12.12
| |
621 |
நலனுறு மக்கமா நகரைச் சுற்றிய மலைகளி னொருவரை யடவி யின்வயி னிலைகொளாப் பறழொடு நிறைந்த புள்ளிமான் கலையொடுஞ் செறிந்துபுற் கறித்து நின்றதே. | 3.13.1 | 622 |
வள்ளுகிர் முடங்குவால் வளைப்பற் றூங்குர னுள்ளொடுங் ககட்டவோ னாயொன் றொண்ணுனை முள்ளரைக் கானிடைக் கிடந்து மூரிவெம் புள்ளிமெய்ப் பிணையினை நோக்கிப் போனதால். | 3.13.2 | 623 |
கல்லிரு புறத்தினுஞ் சிதற கால்வுறீஇ வல்லுர னிலம்பட வளைந்து சென்னிதாழ்த் தெல்லையில் பசியொடு மெதிர மானினம் பல்பல திசையினும் படர்ந்து போயின. | 3.13.3 | 624 |
பிணைக்குலந் திசைதொறுஞ் சிதறிப் போதுற வணித்ததென் றொருபிணை யதனை நோக்கிவெண் மணிக்கதி ரெனுமுகிர் நிலத்தில் வவ்வுறத் துணித்தணு மம்மரிற் றொடர்ந்து போயதே. | 3.13.4 | 625 |
வடித்தநீர் தூங்குநாச் சுணங்கன் வாயினிற் பிடித்தெனத் தொடர்ந்து பெயரப் புள்ளிமா னடித்தபந் தெனக்குதித் தரிதிற் சென்றபூ நடித்திடுங் ககுபத்துல் லாவை நாடியே. | 3.13.5 | 626 |
பட்டியின் வாய்நுனி படரு மானின்வாற் றொட்டது காணெனத் தொடரு மெல்வையி னெட்டெனுந் திசைபுகழ்ந் தேத்துந் தீவினைத் தட்டறும் ஹறமெனுந் தலத்து ளாயதே. | 3.13.6 | 627 |
இறையவ னமரர்க ளியற்றுஞ் சங்கையா லறமெனுந் தலத்தின்மா னாய தீண்டினித் தெறுகொலை விளைத்திட றீது செய்நெறி முறையதன் றெனத்தனி முடுவ னின்றதே. | 3.13.7 | 628 |
ஈனன பாசுபி யானு மின்பமு மானமுந் தவிரபூ ஜகுலும் வன்கொலைக் கானபஞ் சரசபு வானு மாண்டொரு தானமீ தமர்ந்துநின் றவர்கள் சாற்றுவார். | 3.13.8 | 629 |
கானகச் சுணங்கன்வாய் கழிந்து போனதிம் மானென விருந்தன மானு மொல்லையி னானநல் ஹறமது ளாய தாலது தானுநல் ஹறமதைச் சங்கை செய்தே. | 3.13.9 | 630 |
வருந்திட நிதமுயிர் செகுக்கும் வன்சுணங் கருந்திடும் பசிவெறுத் தறமைச் சங்கைசெய் திருந்தது மானுமிவ் வெல்லை யுடபடப் பொருந்திநின் றகம்புய போய தில்லையால். | 3.13.10 | 631 |
புதுமையிற் புதுமையீ தென்னப் பொங்கிநின் றதிசயத் தொடுமவ ரவர்கள் கூறலும் பிதிர்விர லுயர்ந்தபற் பிளந்த வாயினீர் குதிதரு நெடியநா நீட்டிக் கூறுமால். | 3.13.11 | 632 |
கருத்தினிற் புந்தியற் றிருக்குங் காபிர்காள் பெருத்திடும் ஹறமதைக் குறித்துப் பிந்தியீண் டிருத்தலைப் புதுமையென் றிசைக்கின் றீரெனத் திருத்தியே யுரைத்திட மறுத்துச் செப்புவார். | 3.13.12 | 633 |
குதிமறுத் தறமதைக் குறித்து நின்றதே புதுமையென் றிருந்தனம் பொருவி லாதநன் மதியொடு மின்றுநீ யுரைத்த வாசக மதனினும் புதுமையென் றறைந்திட் டார்களால். | 3.13.13 | 634 |
குறித்துநின் றெதிர்ந்தியான் கூறும் வாய்மையெப் புறத்தினு மறிகிலாப் புதுமை யென்கின்றீ ரறத்தினுக் குரியவ னாணை யும்மிடத் துறப்பெரும் புதுமையொன் றுளதென் றோதிற்றே. | 3.13.14 | 635 |
கடத்துறை ஞமலிநீ காணொ ணாதெம திடத்தினிற் புதுமையுண் டென்கின் றாயவை திடத்துட னியாவர்க்குந் தெரியச் செப்பெனத் தொடுத்தவர்க் கறிவுறச் சொல்லு கின்றதால். | 3.13.15 | 636 |
ஆதிதன் னொளிவினிற் றரித்த னாதிதன் றூதென வுலகினிற் றோன்றி நின்றனர் வேதமு மிறங்கின மெய்மை வேதத்தி னீதமு நடத்தினர் நிகரு மில்லையால். | 3.13.16 | 637 |
அந்நபி நன்மறை யறைந்தீ மான்கொளாச் சொன்னவை யனைத்தையு மறுத்துச் சூழ்தர வின்னலைப் பொருந்தினி ரீத லாலினிப் பன்னரும் புதுமையொன் றில்லைப் பாரினே. | 3.13.17 | 638 |
முகம்மது நபியுரை மறுத்த மாற்றலர் முகமதி நோக்குதன் முழுதுந் தின்மையென் றிகலுறக் கொடுமொழி யெடுத்துக் காட்டிவிண் புகுமலைக் கானினிற் சுணங்கன் புக்கதால். | 3.13.18 | 639 |
இணங்கிய நன்மொழி யெவர்க்குங் கூறியச் சுணங்கன்வெங் கான்புகச் சூழ்ந்து நின்றிடுங் கணங்களி லபூஜகல் கபடுங் கள்ளமும் பிணங்கிய மனத்தினி னகைத்துப் பேசுவான். | 3.13.19 | 640 |
உடும்பைவன் பிணையினைத் தன்கைக் குட்பட விடும்பினைப் பயிற்றிய முகம்ம தென்பவன் கடம்படு ஞமலியின் கருத்துப் பேதுறப் படும்படிப் பயிற்றுதற் பகர வேண்டுமோ. | 3.13.20 | 641 |
அறத்தினுட் படுநகர் மாந்தர்க் கன்பிலா திறத்தலைப் படுநினை வெடுத்த வஞ்சத்தான் புறத்தொரு நகரிடைப் புகுந்து மாயங்கண் மறுத்திலன் விளைத்தனன் முகம்ம தாங்கொலோ. | 3.13.21 | 642 |
அயனகர்ப் புகுந்தன னகும தென்றியாம் பயமற விருப்பது பழுது பற்றலார்க் கியலுறு மிடங்கொடுத் திருத்தல் பாரிடை வியனுறும் வீரத்தின் விழும மன்றரோ. | 3.13.21 | 643 |
மருவலர் வலிகெட வுடைந்து மற்றொரு பெருநக ரிருந்தன ராயிற் பேதுறப் பரநகர் வேந்தராற் பகைகண் மூட்டியுங் கருவறுத் தவர்பகை களைய வேண்டுமானால். | 3.13.23 | 644 |
திறைபல வழங்கினுஞ் சேர்ந்து கைகுவித் திறையென நிற்பினு மினிது கூறினுங் கறைகெழுங் கொடுமனக் கருத லார்தமை யுறவென நினைத்திட லுணர்வுக் கீனமால். | 3.13.24 | 645 |
அடுத்துறைந் திலரென வெள்ள லன்றிக் லெடுத்திடுங் கருதல ரிருந்து நாட்குநாட் டொடுத்திடும் வினையமுஞ் செயலுஞ் சூழ்ச்சியும் விடுத்திடு மொற்றராற் றெரிய வேண்டுமானால். | 3.13.25 | 646 |
வைகின னிந்நகர் வடுவுந் தீமையும் பொய்யினின் முடித்தரும் புந்தி யோர்களை வெய்யவ ராக்கினன் மேலுந் தீவினை செய்கல னெனமனந் தேற லன்றரோ. | 3.13.26 | 647 |
பவ்வமுற் றிடுநெடும் பாரி னீங்கலா தெவ்வுழை யிருக்கினு முகம்ம தென்பவன் செவ்விய னலனவ னூக்கஞ் சீர்கெட வெவ்வினை விளைத்திசை நிறுத்த வேண்டுமானால். | 3.13.27 | 648 |
என்றவ னினையன வியம்பச் சூழ்தர நின்றவர் கேட்டிவை நினைவி தாமெனக் குன்றென விரும்புயம் வளர்ந்து கொண்டெழ வன்றிறற் பெரும்பகை மனத்த ராயினார். | 3.13.28 | 649 |
ஈரமில் லபூஜகு லென்னு மன்னவன் சார்பினி லுறவினிற் றக்க வேந்தரும் பாரிடைச் சிறுகுடிப் படையின் மாந்தரு மூரிடைப் படையொடு மொருங்கு கூடினார். | 3.13.29 |
650 |
மாறரு நெடுவரை மக்க மாநகர்த் தேறல ரினையன நிகழ்த்துஞ் செய்கையைக் கூறரும் பெரும்புகழ் கொண்டன் மானபி வீறுடைத் திருச்செவி விளையக் கேட்டனர். | 3.14.1 | 651 |
அரிகடஞ் செய்கைக ளனைத்துங் கேட்டருள் பெருகிய மனத்தினிற் பிரிய முற்றெழில் வரிசைமன் னவர்களை யழைத்து வம்மென வுரைசெயத் தூதுவ ரோடி யோதினார். | 3.14.2 | 653 |
விற்கர வலியபூ பக்கர் வெற்றிசேர் மற்புய ருமறுது மானல் வாளலி சொற்பெருந் தோழருந் தூதென் றோதுவோர் முற்படு நபிதிரு முன்ன முன்னினார். | 3.14.3 | 653 |
மனனுறை யறிவென விருக்கு மன்னவ ரனைவரு மடுத்துறைந் திருப்ப வாரணத் தனிநிலை யுள்ளகந் ததும்ப நன்னபி யினியன மொழிகொடுத் தியம்பு வாரரோ. | 3.14.4 | 654 |
கொலைமனத் தபூஜகல் குழுவு மந்நகர்ச் சிலைவய வீரருந் திரண்டு தீனவர் மலைவுறப் பேரமர் வளர்க்க வேண்டுமென் றிலைமலி வேலினீ ரிருக்கின் றார்களால். | 3.14.5 | 655 |
மாவிசும் பமரருக் கிறையவ ரிம்மதி னாவினிற் போயமர் நடத்த வேண்டுமென் றேவின னிறையென விசைத்த மாற்றமும் போவதென் றிகல்கெடப் புரிதல் வேண்டுமால். | 3.14.6 | 656 |
வல்லவன் ஜிபுறயீ லுரைத்த வாய்மையிற் செல்லவுந் தீனெறி விசயஞ் செய்யவும் நல்லவை நமக்கிவை யன்றி நாட்டமொன் றில்லையென் றிசைநபி யிசைத்திட் டாரரோ. | 3.14.7 | 657 |
நாயகன் மறைவழி நடத்து நன்னபி வாயகத் துதித்தசொன் மாற லின்றியே சேயென நடப்பது திறமைத் தாமெனத் தூயவ ரியாவருந் துணிவுற் றார்களால். | 3.14.8 | 658 |
போற்றிநின் றனைவரும் புந்தி யாமெனத் தேற்றமுற் றியல்புடன் செப்ப நன்னபி மாற்றல ரெனுங்குபிர் மாய்க்கும் பீசபீற் கேற்றவை யாவையு மியற்று மென்றனர். | 3.14.9 | 659 |
கொற்றவெண் கவிகையுங் கோல மார்துகில் சுற்றிய வட்டமுந் தூங்கு குஞ்சமுங் கற்றையங் கவரியுங் கதிர்செய் மாமணி வெற்றிவெண் டுவசத்தின் பேத வீக்கமும். | 3.14.10 | 660 |
தடமுறு பதலையுந் தவிலுந் தாளமு மிடியென முழங்குபே ரிகையு மோர்புறத் திடிமனுந் தகுணிதஞ் சிறந்த பீலியும் வடிவுடைக் காளமும் வயிருஞ் சின்னமும். | 3.14.10 | 661 |
வட்டணந் தட்டிநீள் வள்ளித் தண்டைதோல் கட்டிய தோற்பரங் கவசங் கீசகம் புட்டில்கைக் சோடிணை தாக்குப் போர்வைவெண் பட்டினிற் பஞ்சுவைத் தடைக்குப் பாயமும். | 3.14.12 | 662 |
பட்டையந் தோமரம் பரசு கப்பணஞ் சொட்டைவா ளயிறனுச் சுரிகை முப்பிடி நெட்டிலைச் சூலங்கோல் பால நேமிசூழ் கட்டுபத் திரஞ்சரஞ் சுழற்று கைக்கண். | 3.14.13 | 663 |
ஆடலம் பரிபரிக் கணிக ளியாவையுந் தேடின ரியற்றினர் சேனை காக்குதற் கீடுடை யவரிவ ரென்ன நன்னபி கூடிய பெயரினிற் குறித்துக் காட்டினார். | 3.14.14 | 664 |
அரண்டு கடகரி யனைய நால்வரு முரணரி பொருவுமு ஹாஜி ரீன்களுந் தரியல ருயிருணன் சாரி மார்களு நரபதி நபியுட னிருக்கு நாளினில். | 3.14.15 | 665 |
செறுநர்வத் தானெனுந் தலத்திற் சேர்கிலாக் குறைஷிகள் பலருங்க னானிக் கூட்டமு மறமுடன் றிரண்டன ரென்னும் வாசக மிறையவன் றிருநபிக் கெடுத்துக் கூறினார். | 3.14.16 | 666 |
மாற்றலர் முதற்படை திரண்டு வைகிய கூற்றினை யுணர்வொடுங் குறித்தசு காபிகள் சீற்றமுற் றவ்வயின் செல்கு வோமெனச் சாற்றலு முகம்மதுந் தகுமென் றோதினார். | 3.14.17 | 667 |
நீட்டிய செழும்படைச் சேனை வீரரை வீட்டிவெங் களத்திடைப் பருந்துக் கேவிருந் தூட்டிய வேற்கையு பாத செய்தவங் கூட்டிய தெனவுரு வெடுத்த கோலத்தார். | 3.14.18 | 668 |
காதலுற் றிரப்பவர் கருத்துத் தேக்குற வீதலுக் கிசைந்தெடுத் தளிக்குஞ் செங்கையார் போதமும் வீரமும் புகழுந் தூங்கிய சாதன சகுதெனுந் தரும வேந்தரே. | 3.14.19 | 669 |
அன்னவர் தமைமதி னாவிற் காதியா மன்னபி முகம்மதங் கிருத்தி வைத்ததாள் பின்னிடா தடுஞ்சரம் பெய்யும் வீரர்க டுன்னிட வெழுந்தனர் துதிக்க யாவுமே. | 3.14.20 | 670 |
குடைகளுந் துவசமுங் குழுமி யோங்கிடக் கடுவிசைப் பரிக்குழாங் கலந்து முன்செலக் சுடர்விடு படைக்கலஞ் சுமந்த கொற்றவர் புடையெழத் திருநகர்ப் புறத்திற் றோன்றினார். | 3.14.21 | 671 |
படியிடத் தெழுந்துகள் புயலிற் பம்பவா னிடியென முரசுபல் லியங்க றங்கக்கூர் வடிநெடுங் கதிரயின் மலிந்து மின்னிடக் கொடியவர் திசையினைக் குறுகி னாரரோ. | 3.14.22 | 672 |
சேனையும் வாசியுஞ் செருமிச் சூழ்தரு கானர ணனைத்தையுங் கடந்து சென்றுக னானியர் குறைஷிக ணடுந டுங்கவத் தானெனும் பெயருடைத் தலத்தைச் சுற்றினார். | 3.14.23 | 673 |
ககனவெங் கதிரவன் கரங்க டூளியிற் புகவிட மிலையெனப் பொருந்து மன்னவர் தொகுதியும் வாசியுஞ் சுற்றுஞ் சேனையு மகுசிகண் டுளத்திடை மலைந்திட் டானரோ. | 3.14.24 | 674 |
வருவதும் நிகழ்வதும் வகுத்துப் புந்தியிற் பெருகிய தலைவருக் கெடுத்துப் பேசிநல் லுரையினும் வழக்கினு மொத்த சூழ்ச்சியின் புரவல னொருவனைத் தூது போக்கினான். | 3.14.25 | 675 |
சந்தென விடவருந் தலைமை மன்னவன் வந்துநன் னபிபதம் வழுத்தி யூன்றிய கந்தடு கடகளி றனைய காட்சியான் சிந்தைகண் மகிழ்தர வெடுத்துச் செப்புவான். | 3.14.26 | 676 |
இறையவன் றிருநபி யுலகுக் கின்புறு மறைவழி யொழுகியவ் வணக்க வாசக முறைமையி னடத்தியா முழுது மிவ்வயி னுறைகுவ தலதுவே றுறுதி வேண்டுமோ. | 3.14.27 | 678 |
மகுசியென் றோதும்வத் தானி னேந்தலு மிகுபடைத் தலைவரும் வேறு றாதொரு தகைமையிற் பணிவது சரத மின்றுநீ ரிகன்மறுத் தணிநகர்க் கெழுக வென்றனன். | 3.14.28 | 678 |
உற்றுறைந் தவனிவ ணுரைத்த வாசகம் வெற்றியென் றியனபி போரின் வேட்கையிற் சுற்றிய திறற்படைச் சூர ரியாரையு மிற்றையி னெழுகவென் றேவி னாரரோ. | 3.14.29 | 679 |
இங்கிதத் தொடும்பணிந் திசைத்த தூதுவ னங்கலுழ் நபிமல ரடியி னிற்கரப் பங்கயங் குவித்தரும் பதியிற் போயினன் றிங்களங் குடையொடு மெழுந்த சேனையே. | 3.14.30 | 680 |
ஒட்டிய செழுமுகிற் கவிகை யூடுற நீட்டிய வெண்கொடி நிலவு கான்றிடத் தீட்டிய படைக்கலஞ் செறியச் சென்றொரு காட்டினி லிறங்கினர் கார ணீகரே. | 3.14.31 | 681 |
இறங்கிய பாசறை யிருந்து வாரிபோற் கறங்கிய சேனைமு ஹாஜி ரீன்களின் மறங்கிள ரெண்பது பெயரை வாளொடு நிறங்கிள ரயிலொடு நீக்கி னாரரோ. | 3.14.32 | 682 |
கந்தமுங் கதிரும றாத காட்சியர் கொந்தலர் புயத்துபை தாவைக் கூவிநற் சிந்தையின் மகிழ்வுற விருத்தித் தேறிய மந்திர மொழிசில வகுத்துப் பின்னரும். | 3.14.33 | 683 |
கூடுமெண் பதுபெய ருடனுங் கோதற நாடிநீர் மக்கமா நகரைச் சூழ்தரு பாடிக ளனைத்தும்பாழ் படுத்துஞ் சூறைக ளாடியிங் கடைகென வறைந்திட் டாரரோ. | 3.14.34 | 684 |
கரியினு மதர்த்தமு ஹாஜி ரீன்களை மருமலர்ப் புயத்துபை தாவை மன்னபி திருநய னங்களா னோக்கிச் சிந்தைவைத் திருளறும் வெற்றி வெண் கொடியு மீந்தனர். | 3.14.35 | 685 |
கருதல ருறைபதி களைந்திட் டொல்லையின் வருகென வினைஞரை விடுத்து வள்ளல்பாய் துரகதக் குழுவொடுஞ் சேனை சூழ்தர நரலையின் வளமதீ னாவை நண்ணினார். | 3.14.36 | 686 |
எண்ணொரு பதின்மரு மிலங்கு நீடொடை வண்ணவொண் புயத்துபை தாவு மாறிலா தண்ணறன் பதமலர் போற்றி யன்பொடும் விண்ணெடுங் கடுவிசைப் புரவிமேற் கொண்டார். | 3.14.37 | 687 |
எதிரமர் தொறுந்தெழும் பிருந்த மெய்யினர் கதிரயில் வாண்மற வாத கையினர் விதியவன் மறைமுறை விளக்கும் வாயினர் புதியவெம் பகைப்பதி யடுப்பப் போயினார். | 3.14.38 | 688 |
வெற்றிவெண் கொடியொடும் வேக வாம்பரிக் கொற்றவர் குழுமிவந் தடருங் கொள்கையைப் பற்றல ரறிந்துசீ றூரிற் பல்பல தெற்றறக் குடியொடுஞ் சிதறிப் போயினார். | 3.14.39 | 689 |
இவுளியும் படையுமு ஹாஜி ரீன்களுந் தவிசுறை யரசுபை தாவும் வந்தவை யபுஜகல் மகனறிந் தரிய வேகத்தாற் குவிதரும் படைக்கெதிர் கொண்டு நேர்ந்தனன். | 3.14.40 | 690 |
மதிவர வழைத்தவர் விடுத்த மன்னருஞ் சதியபு ஜகல்தரு புதல்வன் றானையுங் கதிபரி யொடுபடைக் கலத்தின் கையொடு மெதிருமக் கெமக்கென விருக்குங் காலையில். | 3.14.41 | 691 |
சதிவைத்த கருதலர்த் தளத்தி னூடிருந் திதமித்த நபிகலி மாவுக் கின்புறு மதிவத்தி யெனுமிகு தாதும் வாம்பரி யுதபத்தும் வந்துபை தாவைக் கூடினார். | 3.14.420 | 692 |
மாதவ ரிருவரும் வந்த போழ்தினி லாதரம் விடுத்தம ரரிக டுன்புறப் பூதலம் புகழுமுக் காசு புத்திரர் காதகல் சகுதொரு கணைதொட் டாரரோ. | 3.14.43 | 693 |
அடுத்துநின் றவரிசு லாமி லாயது மெடுத்தொரம் பெய்தவ ரிருந்த வேகமுங் கடுத்தலை யெடுத்தவர் கருத்துங் கண்டமர் தடுத்தபூ ஜகல்மகன் றளம்பின் வாங்கினான். | 3.14.44 | 694 |
வெட்டுக்குத் தெனுமொழி விளம்பி லாதொரு மட்டினின் றவர்கள்பின் வாங்கி னாரினித் தொட்டமர் விளைத்திடல் சூழ்ச்சித் தன்றெனத் தட்டல கயிலுபை தாவு நீங்கினார். | 3.14.45 | 695 |
மருவல ருடனிருந் திருவர் வந்ததும் பொருசகு துக்கெதி ராது போயதும் விருதுகொண் டிகலிடும் வெற்றிப் போரினும் பெரிதெனக் குழுவொடும் பிரியத் தேகினார். | 3.14.46 | 696 |
மிகல்பெறும் வெற்றியின் பீச பீலுக்கா யிகன்முதற் சரமுமொன் றெய்து மன்னவர் முகிறவழ் கொடிசெலத் தானை மொய்த்திட நகர்புகுந் தகுமது பதத்தை நண்ணினார். | 3.14.40 |
697 |
திங்கள்வந் திறைஞ்சிப் போற்றி செகதிர் பேசப் பேசு மங்குலங் கவிகை வள்ளல் வளம்பெறு மதீனாத் தன்னிற் பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி யெங்கணும் படரச் செங்கோ னெறியர சியற்று நாளில். | 3.15.1 | 698 |
விதியவன் மொழிம றாது விண்ணவர்க் கரசர் கூறும் புதுமறை யவர்கள் போற்றப் பொருவில்வா னவர்கள் வாழ்த்தக் கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம் வதுவையின் வரலா றெல்லாம் வகுத்தினி துரைக்க லுற்றாம். | 3.15.2 | 699 |
ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீஜா வீன்ற பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்து மொன்றாய்க் கோதறத் திரண்டு சோதிக் கொடியென வுருக்கொண் டோ ங்கி மாதர்க டிலத மென்ன மாநிலத் துதித்த பாவை. | 3.15.3 | 700 |
அதிர்த்திரைக் கடற்பா ரெங்கு மமுதத்தீன் றிவலை சிந்தி யுதித்தெழு முகம்ம தென்னுந் திங்களி லுதயஞ் செய்து பதித்தலத் துவக்கு மாதர் பவக்கடற் றிமிர மோட்டுங் கதிர்த்தடத் தீப மென்னக் கட்டழ கெறிக்குஞ் சோதி. | 3.15.4 | 701 |
ஆதிநா ளொளிவு வாய்ந்த வழகெலாந் திரட்டிச் சேர்த்த பாதியிற் பாதி நூற்றோர் பங்கினிற் செம்பொன் னாட்டின் மாதரை வகுத்திம் மாததைத் திரட்டிய வண்ண மெல்லாந் தூதுயிர்ப் புதல்வி யென்னப் படைத்தனன் சுருதி யோனே. | 3.15.5 | 702 |
சுற்றிளம் பருதி வெய்யோன் சுவட்டடிச் சேப்புக் கேயப் பெற்றனன் மடந்தை துண்டத் தழகினிற் பெற்றி லேனென் றுற்றுள மொடுங்கக் கூனி யந்தரத் துலவி நாணி மற்றுள கலையுந் தேய்ந்து நாட்குநாண் மறுகுந் திங்கள். | 3.15.6 | 703 |
எண்ணருந் தவமுங் கற்பும் புகழுநின் றிறைஞ்சி யேத்தும் பண்ணரும் வேத வாய்மைப் படிதவ றாத வாக்கு நண்ணருந் தரும மியாவுஞ் சொற்படி நடக்கு நாளுங் கண்ணகன் புவியிற் பாவைக் கற்பெனு மரசுக் கன்றே. | 3.15.7 | 704 |
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கு மிம்பர்ப் பூண்முலை யவர்க்கு மேக நாயகி யென்னப் பூவிற் காணுதற் கரியோன் செய்தா னென்னிலிக் கவின்கொண் டோ ங்கு மாணிழை மடந்தைக் குற்ற பெற்றியார் வகுக்க வல்லார் ? | 3.15.8 | 705 |
எல்லையி லழகு வாய்ந்த வேந்திழை கதீஜா வீன்ற நல்லியற் கனக நாட்டி னாரியர் திலத மன்னார்க் கல்லடர் கரிய வாட்க ணகத்திடை வரிக ளோடிப் பல்லவம் பசப்புற் றென்னப் பருவம்வந் திறுத்த தன்றே. | 3.15.9 | 706 |
வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலுங் கொடிமல ரதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலுங் கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல் போலு மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே. | 3.15.10 | 707 |
வரிசையும் பேறும் வேத வாய்மையு முளர தன்றி யரசருக் கரசர் செல்வத் தரும்பொரு ளனைய செல்வி பெரியவ னருளால் வந்த பெண்ணினை வரைத லியானென் றுரைகொடுப் பவரியா ரென்ன வுள்ளநெக் குருகு வாரும். | 3.15.11 | 708 |
தரியலர்ச் செகுக்கும் வெள்வேற் சதுமறைத் தலைவ ரீன்ற வரிவிழிக் கரிய கூந்தன் மங்கைதம் வதுவை வேட்டுப் புரிமுறுக் கவிழுந் தொங்கற் புயவரை யரசர் கூடி யொருவருக் கொருவ ருள்ளிட் டுரைவெளிப் படித்து வாரும். | 3.15.12 | 709 |
வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும் பூத்த கொடிமட மயிலைச் சோதிக் குலக்கொழுந் தனைய கற்பைப் பிடிபடு மணத்திற் சேர்ந்து பேருல கனைத்தும் வாழ்த்தப் படுமவ ரெவரோ வென்னப் பற்பல்காற் பகரு வாரும். | 3.15.13 | 710 |
பிறநக ரரசர் செல்வின் பெண்கனி வதுவை வேண்டி யறைதிரைப் பரவை யாடை யம்புவி முழுதுங் காத்து முறைசெயுங் கார ணீகர் திருமுன மொழிமி னென்றன் றுறவின ரிடத்திற் றீட்டு மோலைக ளனுப்பு வாரும். | 3.15.14 | 711 |
எரிமணிக் கனகப் பூணு மிளநிலா வொழுகு முத்தப் பெருமணி வடமு மெண்ணில் வெறுக்கையும் பெரிது முன்னர்த் தருகுவம் வதுவை யெம்பா லளித்திடி லென்னத் தாழ்ந்து கருதல ரரியே றன்னார் காதினி லோது வாரும். | 3.15.15 | 712 |
உரைபல ரினைய வண்ண முலகவ ரியம்ப யாணர் மரைமலர் வதன வள்ளன் மங்கைதம் வதுவை வல்லோன் றிருவுளப் படிய தன்றிச் செய்வதின் றென்னச் செவ்வி தருமனத் திருத்தி யாருஞ் சாற்றுதல் பொருந்தி லாரால். | 3.15.16 | 713 |
இவ்வித நிகழா நிற்ப வியைதரு விதியின் பண்பான் மவ்வலங் குழலார் வாழ்க்கைத் துணைவரு நயத்தை நோக்கித் தெவ்வடர்த் தெறியும் வெள்வேற் சிங்கவே றனைய காளைச் செவ்விய லலியார் காதல் சிந்தையி னாளும் பூத்தார். | 3.15.17 | 714 |
நகரவ ருரையுஞ் சூழ்ந்த நாட்டவர் விடுக்குந் தூதர் பகருநன் மொழியு மற்றோர் தீட்டுபா சுரத்தின் கூறும் நிகரரும் வள்ள லுள்ளத் திருத்திய நினைவு மோர்ந்து வகையுறா தீற்றி னெண்ணத் தாலுளம் வருந்தி னாரால். | 3.15.18 | 715 |
மின்னுருக் கொண்ட கன்னி விளங்கிழை நலத்தை நாடி மன்னர்க ளுளந்தே றாது வதுவையின் மயக்குற் றாரேற் பன்னெடு நாளிற் காம மனத்தினுட் படுத்திப் பாவை தன்னைவைத் திருக்கும் வேந்தர் கருத்தையார் சாற்ற வல்லார் ? | 3.15.19 | 716 |
சூனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற் கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி நினைவுதித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால். | 3.15.20 | 717 |
குயினுறை சிகர மேருக் குலவரை யனைத்தும் வென்று வயிரவொண் வரையின் மீறு மாணெழிற் புயங்கள் சேந்த கயிரவ மனைய செவ்வாய்க் காரிகை மம்மர் நோயால் வெயில்படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த வன்றே. | 3.15.21 | 718 |
விண்கணி னமரர் கோமான் மேதினிக் குரைத்த வேதப் பண்கனிந் தொழுகுஞ் செவ்வாய்ப் பாத்திமா வென்னு மந்தப் பெண்கனி யுருவத் தார்ந்த பேரெழிற் கடலி லாழ்ந்து கண்களின் மறுத்துத் தோன்று முருவன்றிக் காண்கி லாரே. | 3.15.22 | 719 |
கலிதடுத் துலகங் காக்குங் காவல ரினிதி னீன்ற வொலிகட லமிர்த மொவ்வா வொண்டொடி முகத்தின் வாய்ந்து மலிதருங் கருமை யுண்ட வரிவிழிக் கயல்கள் பாய வலியெனும் வலிய வீர ரகக்கடல் கலங்கிற் றன்றே. | 3.15.23 | 720 |
பற்றல ருடலந் தேய்த்துப் பஃறலைக் குருதி யூற்றும் வெற்றிவா ளலியென் றோதும் வீரவெண் மடங்க னாளூ மிற்றசின் மருங்குல் பாத்தி மாவெனு மிளமான் றன்னால் வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்த தன்றே. | 3.15.24 | 721 |
செறிகடற் பாரிற் றூண்டா மணியினுஞ் செவ்வி வாய்ந்து நிறைதருங் கற்பி னல்லா ரிடத்தினி னிதமு மாறா வறிவெனுந் தூது தன்னோ டகமெனுந் துணையும் போக்கி வறியரிற் றமிய ராகி வாளலி மவுல லுற்றார். | 3.15.25 | 722 |
கனிந்தினி தொழுகும் பெண்மைக் கரும்பைத்தேன் கனியை வாசம் புனைந்தபூங் கதுப்பிற் றுஞ்சும் வண்டெனப் பொருகண் ணாரை மனந்தனிற் குடிகொண் டுற்ற வாழ்வையென் னிருகண் ணீங்கா வனந்தனை யிறைவா வென்பா லளித்தியென் றுரைத்து நின்றார். | 3.15.26 | 723 |
வனைகழற் செருவாள் வள்ளன் மனத்துறுங் காமத் தன்பும் பனிமலர்ச் செருகுங் கூந்தற் பாவைதம் மெழிலுஞ் சூட்ட நனைதரும் வதுவை வேண்டி நாடொறுங் கெஞ்சிக் கெஞ்சித் தனியெனுக் குரைத்தா ரல்லாற் பிறர்க்குரை சாற்றி லாரே. | 3.15.27 | 724 |
அரிந்துவெங் குபிரை யோது மாதிநூற் கலிமா வித்தி விரிந்ததீன் பயிரை யேற்றும் விறற்படை யலியாம் வேங்கை பரிந்திரு கரங்க ளேந்திப் பற்பல்கா லிறையோன் றன்பாற் கரைந்துநின் றிரந்த வெல்லா முறக்கபூ லாய தன்றே. | 3.15.28 | 725 |
மூதிருட் படலஞ் சீக்கு முச்சுடர்க் கதிரு மொவ்வா பாதலம் விசும்பு தூர்க்கும் படர்சிறைக் சுருணைச் செங்க ணாதரம் பெருக வாதி யருளின்வா னிழிந்து மெய்மைத் தூதரி னிடத்தில் வந்தார் துணையெனுஞ் ஜிபுற யீலே. | 3.15.29 | 726 |
வந்தடுத் துறைந்து வண்மை முகம்மதே சலாமென் றோதிப் பைந்தொடி கரிய கூந்தற் பாத்திமா பொருட்டால் வானி லந்தமி லவன்றன் பாலி னிகழ்ந்தவை யனைத்துந் தேறும் புந்தியின் மகிழ்வு பூப்பப் படிப்படி புகல லுற்றார். | 3.15.30 | 727 |
அரியவன் றிருமெய்த் தூதே யண்ணலே யிறையோன் சோதிக் குருமணி யினத்தாற் போதாற் கொழுந்துகி லதனாற் செம்பொற் றிருநகர் மனைக டோ றுஞ் சிறப்பிக்க வருளிச் செய்தா னுரையருட் படியே வானோ ரும்பரின் விளக்கஞ் செய்தார். | 3.15.31 | 728 |
பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகரு நாட்டி யென்னுட னிசுறா பீல்மிக் காயிலுஞ் சாட்சி யேயப் பன்னரு மலியார்க் கின்பப் பாத்திமா தமைநிக் காகு முன்னிய தருத்தூ பாவின் முடித்தன னிறைவ னன்றே. | 3.15.32 | 729 |
இந்தநன் மொழியை நும்பா லியம்பென விறைவ னேவ வந்தன னென்னப் போற்றி வானவர்க் கரசர் கூறச் சந்தன கதம்ப மாறாத் தடவரைப் புயங்கள் விம்மக் கந்தடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற் றாரால். | 3.15.33 | 730 |
அடலபூ பக்கர் வெற்றி யரியும றுதுமா னொன்னா ரிடரற வருமு ஹாஜி ரீன்களன் சாரி மார்க ளுடனுறை முதியோர்க் கும்ப ருற்றசோ பனத்தைச் செந்தேன் வடிமலர்த் தொங்கற் றிண்டோ ண் முகம்மது வழங்கினாரால். | 3.15.34 | 731 |
கனகநா டதனி னுற்ற காரண வமுதந் தேக்கி யனைவருங் களிப்பு வெள்ளத் தானந்தக் கடலின் மூழ்கி யினையன நினைத்தோ மியாங்க ணினைத்தவை யிறையோன் செய்தான் வனைகழ லலிதம் பேறின் மகிமையார் வகுக்க வல்லார். | 3.15.35 | 732 |
என்னுநன் மொழிகண் மிக்கோ ரினியன மகிழ்விற் கூறப் பன்னகம் பேசப் பேசும் பார்த்திவ ரிறசூ லுல்லா தன்னகத் திருந்த வண்ண முடித்தனன் ரனியோ னென்ன மன்னபித் தாலி பீன்ற மணியினைக் கொணர்மி னென்றார். | 3.15.36 | 733 |
மருவலர் மதங்க டேய்க்கு மன்னவ ருரைத்த மாற்ற மிருவர்கள் சென்னி மேற்கொண் டெழுந்தலி தம்மை முன்னிப் பரிவின் சலாமுங் கூறிப் பாவலர் வறியோர் வாழச் சொரிதருஞ் செங்கை வேந்தே சோபனம் வருக வென்றார். | 3.15.37 | 734 |
மதுமைகன் னவர்கள் கூறுஞ் சோபன வசனந் தன்னா னிதயத்தி னிருந்த வண்ண முடிந்ததோ வென்ன வெண்ணிக் கொதிநுனைப் பகுவாள் வள்ள லெழுந்திரு குவவுத் திண்டோ ட் புதுநறாத் துளிக்குந் தொங்கல் புரடர விரைவின் வந்தார். | 3.15.38 | 735 |
ஆரண முழங்கும் பள்ளி வாயிற னவையி னண்ணிக் காரணக் குரிசிற் கின்பக் கட்டுரை சலாமுங் கூறி யூரவ ருடனு மோர்பா லுறைந்தன ருயர்ந்த வெற்றி யேரணிந் திலங்கும் பைம்பூ ணிளஞ்சிங்க மிருந்த தொத்தே. | 3.15.39 | 736 |
தமனியப் பதியிற் றூபாத் தருவயி னடந்த பேறு மமரருக் கரசர் கூற நபியக மகிழ்ந்த வாறுந் திமிரவெங் குபிரை யோட்டுந் தினகர னென்னுந் தூயோர் கமைதரு சீற்ற வேங்கை யலிகயங் களிப்பச் சொன்னார். | 3.15.40 | 737 |
வானவர்க் கரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறுந் தேனெனு மணத்தின் றீஞ்சொற் செவிவழி புகுத லோடுங் கானமர் வேங்கை வள்ளல் கதிர்மணிப் புயமு நெஞ்சுத் தானவ னருளீ தென்னத் தடப்பெரும் புளகம் பூத்த. | 3.15.41 | 738 |
திருத்திய கனகப் பைம்பூண் சேயிழை வதுவை வேட்டு வருத்தமுற் றுணர்வு போக்கி நாடொறும் வருந்து நெஞ்சிற் பொருத்துற நினைத்த வண்ண முடிந்ததென் றுரைபுக் காலக் கருத்தினிற் பெருகா னந்தக் களிப்பையார் கணிக்க வல்லார்? | 3.15.42 | 739 |
அகலிடம் விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னப் பகரருங் கற்பின் மிக்க பாத்திமா செவியிற் சாற்ற விகலுறும் வேத வாய்மை முகம்மதங் கிசைத்தா ரன்றே. | 3.15.43 | 740 |
அருமறை முதியோ ரேகி யிறையவ னலியார்க் கின்பத் திருமண முடித்தா னென்ன ஜிபுறயீ லுரைத்த வாறு மருமலர் வாகைத் திண்டோ ண் முகம்மது மகிழ்ந்த வாறும் புரிகுழ னவ்வி பாத்தி மாமுனம் புகன்றிட் டாரால். | 3.15.44 | 741 |
மறையவ ருரைத்த மாற்ற மதிநுதன் மடந்தை கேட்டின் றிறையவன் முடித்த வாறு மியனபி மகிழ்ந்த வாறு முறையெனத் தலைமேற் கொண்டேன் முன்னர்நூன் முழுதும் வல்லீ ரறைவதொன் றுளது கேண்மி னெனுமுரை யருளிச் சொல்வார். | 3.15.45 | 742 |
சினவுவே லபித்தா லீபு சேயெனும் புலிக்கி யானே மனையினிற் குரிய ளானேன் மகரிர சிதமைந் நூறென் றுனைமொழி பொருத்த மில்லே னென்னுளத் துறைந்த வண்ண மினிதுற வருள வேண்டு மெனுமுரை விளங்கச் சொன்னார். | 3.15.46 | 743 |
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் படர்ந்தகேள் வியர்கள் வந்து நபிமுனம் பகரக் கேட்டுக் கடந்தசெங் கதிர்வே லேந்துங் காவல ரெவரு முள்ளத் திடந்தனி மலைவு தோன்றி யிருந்தனர் பெரிதின் மன்னோ. | 3.15.47 | 744 |
அவ்வயி னிமையா நாட்டத் தமரருக் கரச ராதி செவ்விய மொழியி னோடுஞ் செகதலத் திழிந்து கூறா நவ்விமுன் னெதிர்ந்து பேசு நாயக சலாமென் றோதிக் கவ்வையங் கடலின் மிக்காங் களிப்புறக் கருதிச் சொல்வார். | 3.15.48 | 745 |
பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றுநும் புதல்வி யுள்ளத் துறைகின்ற மகரைக் கேட்டு வருகவென் றும்பர் போற்று மிறையவ னருளிச் செய்தா னென்றுரைத் தனரம் மாற்ற முறைவழி விளக்கத் தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே. | 3.15.49 | 746 |
மேலவன் வரிசைப் பேறாய் விளம்பிய மாற்றங் கேட்டு நூலெனு மருங்குற் பேதை நுவலரு முவகை யெய்தி ஞாலமும் விண்ணு நிற்க நாட்டிய தம்ப மென்னச் சீலமுற் றறிவினோடு மொருமொழி செப்ப லுற்றார். | 3.15.50 | 747 |
இறுதியிற் பவத்தின் மாத ரென்ஷபா அத்தீ டேற்றம் பெறமன்றாட் டருள வேண்டிப் பேரருட் கபூல்செய் தானேல் உறுதிநன் மகர்பெற் றேனென் றுரைத்தன ருரைத்த மாற்றஞ் சிறைகுலாம் வள்ளலாதி திருமுன்விண் ணப்பஞ் செய்தார். | 3.15.51 | 748 |
நபியைமான் பாத்தி மாவை நரர்புலி யலியை யெந்தப் புவியினு முவந்தோர் செய்யும் பிழைபொறுத் திடுவ தாக வவியும்பிற் கால மன்றாட் டருளுவ னென்ன வாதி கவினுறச் சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார். | 3.15.52 | 749 |
வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர் தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார் பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந் தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால். | 3.15.53 | 750 |
கோதைய ருரைத்த மாற்ற மிஃதெனக் கொண்டல் கூற மாதவர்க் குதவி கூறுஞ் ஜிபுறயீல் மகிழ்வி னேகிப் பூதலத் துறைந்த யாக்கை யுயிர்தொறும் பொருந்தி வாழு மாதிமுன் னுரைத்து நின்றா ரருட்கடை நோக்கி யன்றே. | 3.15.54 | 751 |
பாவைய ருரைத்த வண்ணம் பச்சையங் கடுதா சின்கண் மேவரக் கனக மையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையி னினைவு மாறாச் செவ்விய ஜிபுற யீல்பா லீவதீ தென்ன வோதி யிறையவ னளித்திட் டானால். | 3.15.55 | 752 |
வரைந்தபா சுரத்தை யேந்தி வானிழிந் தமரர் கோமான் கருந்தடங் கண்ணார்க் கென்ன நபிதருக் சுரத்தில் வைத்தார் விரிந்தபூங் கமல மன்ன மென்முகஞ் சேர்த்தி முத்திப் பரிந்தொரு துணைவர்க கீந்து பாசுரம் விளக்கென் றாரால். | 3.15.56 | 753 |
கொடுத்தபதி திரத்தை வாங்கிக் கொழுமலர்க் கண்ணி லொத்தி விடுத்ததை விரித்துப் பைம்பொன் வரிமுறை விளங்க நோக்கி யடுத்தவர் பிறர்மற் றுள்ளோ ரியாவரு மறிய வல்லே தொடுத்தொரு மொழிவ ழாது வாசகஞ் சொல்ல லுற்றார். | 3.15.57 | 754 |
என்னடி யவரின் மிக்கா முகம்மதி னினிதி னீன்ற பொன்னிழை தனக்கு மென்ற னலியெனும் புலிக்கு மின்ப மன்னிய வதுவைக் கான மகரென விசுலா முற்ற பன்னிகள் பவத்தி னுற்றோர் பல்லர்க்குங் குறைக டீர. | 3.15.58 | 755 |
இறுதிநா ளினின்மன் றாடித் தன்ஷபா அத்திலீ டேற்ற மறைதொறும் விளங்கச் சொல்லு முகம்மதுஞ் ஜிபுற யீலு மறநெறி மீக்கா யீலுஞ் சாட்சிய தாக நானே மறுவறக் கபூல்செய் தேனென் றிருந்ததை வாசித் தாரால். | 3.15.59 | 756 |
பாரினின் முதலோன் வாய்மைப் பத்திரம் வரவ ளாகப் பேருல கினிலிப் பேறு பெற்றவ ருளரோ வென்ன வீரவெண் மடங்க லன்ன விறலுடை வள்ள லோடுஞ் சீர்பெறு முதியோ ரியாருஞ் சிலிர்த்தன ருடல மன்றே. | 3.15.60 | 757 |
செவியகங் குளிரப் பொன்னாற் றீட்டுபத் திரத்தை யேந்தி யவையகம் விடுத்துப் பாத்தி மாவணி மனையை நண்ணிக் கவினுறு மயிலே யென்ன வாசித்துக் காண்பித் தன்பி னவமிவை யென்னப் போற்றிச் சிலமொழி நவில லுற்றார். | 3.15.61 | 758 |
வரத்தினி லுயர்ந்த பேறே மகுசறு வெளியி லென்றன் கரத்தினி லளிக்க வேண்டுங் காரண மதனா லீதை யொருத்தருந் தீண்டா வண்ண முயிரென வோம்பி யோர்பா லிருத்துமென் றிறசூ லுல்லா விளந்தளிர்க் கையி லீந்தார். | 3.15.62 | 759 |
அந்தநன் மாற்றங் கேட்ட வரிவையர்க் கமுத மன்னார் செந்தளிர்க் சுரத்தி னேந்திக் சென்னிமேல் விழிமேற் கொண்டு மந்திரப் பொருளைச் செம்பொன் மணிச்செப்பி னடைத்துக் கிட்டாப் புந்தியு முயிரு மென்னப் போற்றுதல் பொருந்தி னாரால். | 3.15.63 | 760 |
பரம்பொருள் விருப்பி னீந்த பத்திர மகள்கைக் கீந்து வரம்பெறும் வள்ளல் பள்ளி வாயிலி னைவையி னண்ணி யரம்பொருந் திலங்கும் வெள்வே லபூபக்கர் முதலா யுள்ள தரம்பெறுந் தோழர்க் கெல்லா மினியவை சாற்று வாரால். | 3.15.64 | 761 |
மதுரமென் கனிக்குஞ் சீர்த்தி வாளலி தமக்கு மேன்மை முதலவன் மணநிக் காகு முடித்தன னதனை யெந்தப் பதியினுஞ் சிறப்பு வாய்ப்பப் பற்றல ரொடுங்க மேலு மிதமுற வியற்றற் கேற்ற யாவையு மியற்று மென்றார். | 3.15.65 | 762 |
பேறுய ராதி யாலி லாஞ்சனை பெற்ற சிங்கங் கூறிய வசனங் கேட்டுக் கொற்றவ ருவகை யெய்தி மாறிலா வளமை யோங்கு மதீனமா நகரை யின்னே வீறுயர் சிறப்புச் செய்ய முறையனை விளிமி னென்றார். | 3.15.66 | 763 |
குழுவின் மன்னவர் விளித்தன ரெனக்குறித் தெழுந்து தொழுது நின்றெவை பணியென வலிமணந் துலங்க முழுது மிந்நக ரறிந்திட மணமுர சறைக வெழுக வென்றலு மெழுந்தனர் கடிமுர சினரே. 3.15.67
| 764 |
கடிகொள் வெண்சுதை சோகங்கள் கவினுறத் தடவி | நெடிய சுந்தரத் தினின்மலர் மாலைக ணிரப்பி யிடியின் மிக்கதிர் முரசுக ளெடுத்தெடுத் தேற்றிப் படிய ளந்திடுந் தெருத்தலை தொறுந்தொறும் படர்ந்தார். 3.15.68
| 765 |
எடுத்த பேரொலி முரசொடு மொட்டகத் திருந்து | பிடித்த நன்மறைத் தீனொடு பெருந்துனி யாவு முடித்த நல்வழித் தொழுகையின் விழிவழி முயன்று தொடுத்து நாடொறும் வாழ்கவென் றினையன துதித்தே. 3.15.69
| 766 |
இறைய வன்றிருப் புலிக்குநந் நபியிளங் கொடிக்கு | மறுவி லாத்திரு மங்கலச் சோபன வசனஞ் செறியும் பேரெழி றதும்பிய திருநகர் மதீனத் தறிவ ராடவ ரியாவரு மறிகவென் றறைவார். 3.15.70
| 767 |
கனந்த ருங்கொடை முகம்மதைக் கவினலிப் புலியைச் | சினந்த வேல்விழி பாத்திமா வெனுஞ்செழுங் குயிலை நினைந்த கவ்வைக ளெவ்வையுந் தனிநிறை வேற மனந்த னிற்றினம் புகழொடு முவப்புவைத் திடுமின். 3.15.71
| 768 |
சுருதி நேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின் | வரிசை நன்னினை வொடும்சதக் காவழங் கிடுமின் பெருகு நல்லறி வினர்துஆப் பேறுகள் பெறுமின் றரையின் மீதுற வாழ்ந்துச லாமத்தும் பெறுமின். 3.15.72
| 769 |
அருவி நன்னதி யாடிநல் லாடைக ளுடுமின் | புரிகு ழற்ககில் புகைத்துவெண் புதுமலர் புனைமின் சொரிக திர்ப்பணி பலகளத் திடைசுமத் திடுமின் விரைசெய் சந்தனங் குங்குமக் கலவைமெய்க் கிடுமின். 3.15.73
| 770 |
இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமி | னலங்கொ ளாடைவி மானங்க டோ ரண நடுமின் விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின் பொலன்கொ ணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின். 3.15.74
| 771 |
மதுர முக்கனி தேனெய்பா றயிரொடும் வழங்கிப் | புதுவி ருந்தினர்க கிடுமின்க ளெனப்பல போற்றி முதிரு நன்னகர்த் தெருத்தொறு முகிலிடை முழங்கி யதிரும் பேரொலி யிடியெனக் கடிமுர சறைந்தார். 3.15.75
| 772 |
முரச றைந்துவள் ளுவர்தெருத் தலைதொறு மொழிந்த | வுரைசெ விப்புக நகரவர் பலருமுள் ளுவந்து வரைசெய் மாடமுங் கூடமு மனைகளு மறுகும் விரைசெ யும்படி புதுக்கிடத் துணிந்தனர் விரைவின். 3.15.76
| 773 |
பொழிந்த பொற்பொறிச் சுணங்கலர் பூண்முலைக் கணிந்து | வழிந்த சந்தமுங் கூந்தலிற் கழித்தெறி மலரு மழுந்து கூடலி லூடலிற் களைந்தபொன் னணியு மெழுந்து கட்பட லந்தர வாரிநின் றெறிவார். 3.15.77
| 774 |
சிறுது ளைக்கதிர்ப் பொற்பல கணிநிரை செறிந்து | பிறையு மங்குலு முடுக்களுஞ் செருகிடப் பிணங்கி நிறையு நெற்றிய மாடமு நிவந்தமே னிலையுந் துறும வூட்டகிற் பழம்புகைக் களங்கறத் துடைப்பார். 3.15.78
| 775 |
தெரிந்த வெண்மணி நீற்றினைக் கரைத்தறத் தெளித்துப் | பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்றுப் பதைப்ப விரிந்த பூங்குழ லார்கள்கண் ணாடியின் விளங்க விருந்த வாய்தொறு முருத்தெரி தரமெழுக் கிடுவார். 3.15.79
| 776 |
மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின் | பிறங்கி நீடரு கலைகளு மோரிடம் பிரியா தறங்கி டந்தநன் னகர்மதி டொறுமணி யணியா யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார். 3.15.80
| 777 |
நெருங்கிச் சேந்தமென் விரலெனத் தளிர்களு நீண்ட | கருங்கண் போற்செழுங் குவளையு முககம லழும்போன் றொருங்கு பூத்தசெவ் வாயென வாம்பலு மொசியு மருங்குல் போற்சிறு கொடிகளு மெழுதுவர் மடவார். 3.15.81
| 778 |
சந்த னத்திர டருக்களை கவையுறத் தறித்துப் | பந்தி பந்தியி னிறுவியொள் ளகில்வளை பரப்பிச் சிந்து வெண்கதி ரிரசிதக் கிடுகுகள் செறித்து மந்த மாருத முலவிடக் காவணம் வகுப்பார். 3.15.82
| 779 |
கழிக ளிற்பொதிந் தகுமது நபிதிருக் கலிமா | வெழுது சித்திரப் பொற்கொடி யணிநிரைத் திடுவார் வழுவி லாதபொன் மலையின்வி மானங்கள் வகுப்பார் பொழுது போம்வழி யில்லெனத் தோரணம் புனைவார். 3.15.83
| 780 |
கதிர்ம ணிக்கரும் பிளங்கமு கருங்கனிக் கதலி | பதிக மாதளை தாழைமுட் புறக்கனிப் பனசம் விதிரு மென்றளிர் மாச்செழும் பழக்கொழு விஞ்சி மதுர மூறிய கனியொடுந் தூண்டொறும் வனைவார். 3.15.84
| 781 |
பிரச மூறிய பன்மலர்த் தொகுதியின் பிறங்கி | விரிக திர்ப்பல திரண்மணி வடத்தினும் விலையி னரிய பொன்னிழைத் துகிலுனும் பல்பல வணியாய்த் திருந கர்ப்புற மெங்கணு மியற்றினர் சிறப்ப. 3.15.85
| 782 |
பூந்து ணர்ப்பசுங் காயொடும் பழத்தினைப் பூகஞ் | சேர்ந்த பந்தரிற் றென்றலி னுதிர்ப்பன திரட்டி வாய்ந்த பொன்னையு மரகத மணியையும் வாரி யீந்த மேலவர் போன்றன வீதிக ளெங்கும். 3.15.86
| 783 |
அரத்த வாடையின் பசியமென் றுகிறொடுத் தணியா | நிரைத்தி ருப்பது மாமணித் தூண்டொறு நெடுவான் றரித்த கொண்டலி னிடம்விடுத் திந்திர சாபம் விரித்த பந்தரிற் புகுந்திருந் தெனப்பல விளங்கும். 3.15.87
| 784 |
வெடித்த தாமரை மலரொடும் விரிந்தவெண் டாழைத் | தொடுத்துப் பந்தரிற் றுயல்வரத் தூக்கிய தோற்றம் வடித்த நன்னறை யல்லியை யிதழொடும் வாயி னெடுத்து மென்சிறை யெகினங்கள் படர்ந்தென விருந்த. 3.15.88
| 785 |
வேரி யஞ்செழு மலர்களுந் தளிர்களும் விளங்கச் | சாரு நன்கதிர்ப் பன்மணிக் குலங்களுந் தயங்கக் கூரு மாந்தர்தம் மனத்தினி னினைத்தவை கொடுப்பப் பாரிற் கற்பக வனைத்தையொத் திருந்தன பந்தர். 3.15.89
| 786 |
தரள மாமணி யரும்பின மீன்றுதா ரணியின் | பரிவு பெற்றிடும் பொன்னிதழ்ப் பன்மலர் பூத்து மரக தச்செழு மணித்திரட் காய்க்குலை வளர்த்துப் புருட ராகங்கள் பழுத்தன போன்றன பந்தர். 3.15.90
| 787 |
| காத்திர முசல நீள்கைக் கடகரிக் குலமு மாவும் பூத்துணர் பொதுளு மாந்தர்த் தொகுதியு மெதிரிற் போதலல் வாய்த்தமெல் லிழையார் தீற்று மணியொளி மறுகு தோறுஞ் சூத்திரப் பாவை போன்றும் வயின்வயின் றுலங்கு மன்றே. 3.15.91
| 788 |
புதுமலர்த் தார்க ணாற்றிப் பூந்துகிற் கொடிகள் சேர்த்திக் | கதிர்மணி குயிற்றிக் கும்பக் கனகமா மகுடஞ் சூட்டி விதிரிள நிலவு கான்ற மேனிலை மாட மியாவும் வதுவையின் புதுமை நோக்க மலைகள்வந் திருந்த தொத்த. 3.15.92
| 789 |
சீதசந் திந்து காந்த நீரினிற் றேய்வை பன்னீ | ராதிமான் மதங்கற் பூர மளறெழக் கலக்கி வாரி வீதியு மதிளு மாட வாயிலுந் தெளித்து வீசக் கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம். 3.15.93
| 790 |
| சொரிந்த பூங்குழன் மதிநுதற் கயல்விழித் துவர்வாய் முரிந்த தோவெனு மருங்கினர் முருகுகொப் பிளிப்ப விரிந்த சந்தகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கிப் பரந்து போர்வையின் மூடின நீள்பெரும் பதியை. 3.15.94
| 791 |
அங்க ராகமும் வரியளி மலரிடை யறுகாற் | றங்கி வீழ்தரு துகளுங்குங் குமச்செழுந் தாது மெங்க ணும்பரந் திருநிலந் தெரிகிலா திருத்தல் பொங்கு பொன்னிலம் வதுவையிற் சமைத்தன போலும். 3.15.95
| 792 |
குதித்த தேன்குழன் மடந்தைய ராடவர் குழுமிப் | பதித்தெ ருத்தொறுங் கலவையிற் சேறுகள் படுத்தி விதித்த காரண வதுவையின் மணவிதை விதைத்து மதித்தி டும்பெருஞ் சிறப்பெனும் பயிரினை வளர்த்தார். 3.15.96
| 793 |
சிந்து செங்கதிர் மணிதெளித் தொழுதுசித் திரத்தின் | கந்த மான்மதங் கமழ்தலின் கதலிகை வனத்தின் விந்தை விந்தைசெய் தோரணத் தொகுதியின் வியப்பி னந்த மானக ரல்லன போன்றிருந் ததுவே. 3.15.97
| 794 |
மின்னி னந்திரு வில்லொடு முகிலொடும் விரைவிற் | பொன்னந் தாமரை வாவியிற் புகுந்தெனப் புகுந்து மன்னு விற்புரு வக்கருங் குழற்கொடி மருங்கா ரின்ன லந்தர மூழ்குவ ராடுவ ரெங்கும். 3.15.98
| 795 |
இலகு பொன்னொடு வெள்ளிவெண் பானைக ளேற்றி | நிலவு கான்றெனும் பாலினில் வாலரி நிறைத்திவ் வுலகி னூன்முறை யடுதொழிற் புதுமண மூட்டி யலகி லாப்பெரு நகர்தொறு மமலைக ளடுவார். 3.15.99
| 796 |
கனியி னுஞ்செழுங் காயினும் பூவினுங் கலவாப் | புனித நெய்யினில் வெண்மலர்க் கரியபூங் குழலார் சுனித மாகிநற் பாகொடு மறுசுவை தூங்க வினிமை கூர்தர மணத்தொடுங் கறிசமைத் திடுவார். 3.15.100
| 797 |
தேன வாந்தொடை மடந்தையர் குழலினுஞ் செருகி | நான மார்புய மாந்தர்க ணாசியு மமட்டித் தான மானக மேனிலை யாவையுந் தடவி வான மீதினுங் கமழ்த்தின பொரிக்கறி வாசம். 3.15.101
| 798 |
நனிவி ருந்தினர்க் கன்புட னெதிர்நடந் தழைத்துப் | பனிம லர்ச்செழும் பாயலி னிருத்திமெய் பணிந்து மினுமி னென்றமுப் பழத்தினைத் தேனொடும் விரவி யினிதி னூட்டுவர் வலிதினி லடிக்கடி யெவரும். 3.15.102
| 799 |
உலவு பூம்புகை பொற்குடங் கமழ்தர வூட்டிச் | சொலவ ருந்தடத் தெளிதரு புதுப்புனல் சொரிந்து பொலனி றத்தகுங் குமமுதன் முடிந்ததிற் புகட்டி யிலகு வீதியின் முன்றில்க டொறுநிரைத் திடுவார். 3.15.103
| 800 |
மருங்குன் மின்னுக்கு மின்னுபொன் னிழைத்துகில் வனைவார் | நெருங்கு பூண்முலை மலையின் மலைவுற நிரைப்பார் கருங்கு ழற்கருங் குங்குமக் கண்ணிகள் புனைவா ரருங்க ரங்களி லரங்கொளுங் குருகெடுத் தணிவார். 3.15.104
| 801 |
மாவ ருக்கையிக் கரம்பைபூங் கமுகுடன் வனைந்த | காவ கத்திடை மயிலெனக் குயின்மொழிக் கனிவாய்ப் பூவை யன்னவர் கலவையும் பரிமளப் பொடியுந் தாவ வெற்றுவ ரொருவருக் கொருவரைச் சருவி. 3.15.105
| 802 |
விரிசி கைக்கதிர் மணிவெயி லெறித்திட விடுபூச் | சொருகு கூந்தலின் மாலைக டுயல்வரத் துடிபோ லருகு நுண்ணிடை யொடிந்திடு மெனும்படிக் கசையத் திருகு ரும்பைக ளாடுவர் வயின்வயின் சிறப்ப. 3.15.106
| 803 |
பாடு வார்சிலர் குயிலெனப் பாடலுக் கெதிரி | னாடு வார்சிலர் மயிலென வாடலுக் கழகாய்க் கூடு வார்சிலர் கிளியெனக் கூடலின் குறிகண் மூடு வார்சிலர் விரிதருங் கமலமென் முகத்தார். 3.15.107
| 804 |
பூசு வார்சிலர் கலவையிற் புதுவிரை கலக்கி | வீசு வார்சிலர் வீசலின் மெய்வழி வழியக் கூசு வார்சிலர் கூசுவ தென்னெனக் குழைந்து பேசு வார்சிலர் சிறுநுதற் பெரியகண் மடவார். 3.15.108
| 805 |
பொருவி லாநக ராடவ ரரிவையர் போற்ற | மரும லர்ப்புய முகம்மதை யலிதமை வாழ்த்திக் கருத லர்க்கரி யேறெனுங் காளையர் கூடித் தெருவெ லாமணப் பைத்துகள் சொலிச்சொலித் திரிவார். 3.15.109
| 806 |
புகரி னன்னிரி யாசங்கண் முதலிய புகைத்துப் | பகரு நன்மறை முதியவர் பலபல திரளா நகர மெங்கணும் வேதங்க ளோதிய நாத மகர வாருதி திரையொலிக் கலிப்பினை மலைக்கும். 3.15.110
| 807 |
கலிக்கு மாமறை முதல்வனிக் காகினைக் கருதி | யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழச் சிலைக்கை வீரர்க ணகரத்தி னியற்றிய சிறப்பை யொலிக்கு மாகடற் புவியினி லெவரெடுத் துரைப்பார்? 3.15.111
| 808 |
| மரைமல ரெகின மிரவியின் சிரசின் திரைமணி கொழிக்கும் வாவிசூழ் மதீனத் றருவெனு நபியு மூவரும் பெருகு வரியளி முரலுஞ் செழுந்தொடைத் திரடோ ண் 3.15.112
| 809 |
எரிகதிர் வனச மணிபதித் திழைத்த | முருகலர் நறையூற் றிருந்தண் ணீரை மரகதப் பலகை நடுவுறை வயிர செருகிய நீலக் கதிர்குடி யிருந்த 3.15.113
| 810 |
வெள்ளைமென் றுகிலாற் சிரசிடம் புலர்த்தி | தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுக் கொள்ளைவெண் டரளங் குவித்தென வீரம் வொள்ளிய சவிக டிரண்டெனச் சருவந் 3.15.114
| 811 |
பேரெழிற் பயிரில் வனமுலை மடவார் | பாரினிற் புகுதா வேலியி னமைத்த வீரவெண் மடங்கன் மரகத வளையுட் வேரணிந் திலங்கும் பசியகுப் பாய 3.15.115
| 812 |
மண்ணினிற் குபிரர் குலங்கரு வறுத்து | வெண்ணிலா விடப்பன் னாகத்தி னாப்போ ளண்ணலார் மருங்கி லெழிறர விருத்தி விண்ணிலாக் கதிரின் கச்சின்மேற் படுத்தி 3.15.116
| 813 |
மரகத வரையிற் சந்தொடு மருவி | றிரைகொலோ வணிந்த சருவந்து கான்ற பொருவிலா வரிசைப் புலியலி மணத்திற் றரளவெண் மணியி னிரைநிரை வடங்க 3.15.117
| 814 |
வண்ணவொண் புயப்பைங் கஞ்சுகி யிடத்தின் | வெண்ணறை மலர்மா லிகைபு னைந்தரிய தண்ணறும் பசுங்கற் பகமல ரிடையிற் பண்ணிசை மிழற்று ஞிமிறின மிருந்த 3.15.118
| 815 |
அம்புய மலரிற் சேந்துசெவ் வரியார்ந் | வம்பவிழ் சுறுமா வுரைத்தமை யெழுதி கொம்பலர் மரவஞ் சந்தொடுங் குழைத்துக் பம்பிய திரைவா ருதியினிற் பிறந்த 3.15.119
| 816 |
அலங்கரித் தயினி சுழற்றிநூ லவர்கட் | யிலங்கிழை மடவா ரடைப்பைக்கோ டிகஞ்சாந் துலங்கிய கவரி வெண்ணிலா வெறியச் நலங்கிளர் தீன்தீன் முகம்மதென் றேத்த 3.15.120
| 817 |
மலரணைப் படுத்த துகிலின்மே னடந்து | சிலைவல ரபித்தா லிபுமனைக் குரிய பலனுறும் பாத்தி மாவெனு மடமா விலகிய மடவார் குரவைக ளியம்ப 3.15.121
| 818 |
பேரிகை திமிலைக் குடப்பறை தடாரிப் | பாரிசப் பதலை யிடக்கைதட் டியநீள் பூரிகை நவுரி காகளஞ் சின்னம் வாரியு மலைப்பப் பேரிடி மயங்க 3.15.122
| 819 |
பரிதியின் கதிரான் மதியையேந் தினபோற் | திரடருந் துவசம் வெளியறச் செருகச் மிருபுற நெருங்க விசிறிசாந் தாற்றி வருபடை நாப்ப ணெறிந்தபா வாடை 3.15.123
| 820 |
வரையிழி யருவி யெனக்கவுட் கரட | வெரிமணி வயிரக் கிம்புரிப் பெருங்கோ திரள்பனை நெடுங்கைத் துளைவழித் திவலை கருவுடை மயிர்வாய்ப் பிடிக்கணந் தழுவிக் 3.15.124
| 821 |
மாருத மலைக்கும் விசையின விருபான் | பாரினை யுடைக்குங் குளம்பின பொற்பூப் போரடர் சீரா வணியின பாகர் சாரிகை நடனப் புரவியின் கணங்க 3.15.125
| 822 |
மணிக்கண நிரைத்து வைத்திடுங் குடுமி | பிணித்தபொற் காந்தி யுமிழ்தருங் கொடிகள் பணித்தலை நெளியத் தரைத்தலங் குழியப் கணித்துரைக் கடங்காத் தெருத்தலை நெருங்கக் 3.15.126
| 823 |
பத்தியி னெடும்பொற் சட்டக மமைத்துப் | முத்தணி நிரைத்துத் துகிர்மணிச் சிறுகான் சித்திரப் படமேல் விரித்தணி யலர்கள் வைத்தபொற் சிவிகை பலபல மருங்குஞ் 3.15.127
| 824 |
வடிநற வருந்தி வரியளி சிலம்பு | ருடனும றெனும்பே ரடலரி யேறு கடமலை கடவி நிலம்பிதிர்த் தெறியுங் ரிடுகொடை கவிப்பக் குழாத்தொடு மலித 3.15.128
| 825 |
இயன்மறை நபித மவயவ மெனலா | பெயர்களு மன்சா ரிகளெனும் வரிசைப் வயவரிக் குழுவுங் கொடுவரித் திரளு முயலகன் மதியின் குடையொடு கொடியு 3.15.129
| 826 |
கருதல ருயிருண் டூன்மறா நெடுவேற் | பரிசையு மேக மின்னென வொளிரும் நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு வரசருஞ் சூழ வலியெனு மரியே 3.15.130
| 827 |
ஆரணக் கிழவர் பேருடைத் தலைவ | வாரணி களபக் குவிமுலைக் கதிர்ப்பூண் ரூரினி லிருந்த நாற்குலத் தவர்மே காரணக் குரிசி லலிவரும் பவனிக் 3.15.131
| 828 |
| பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின் கோட்டுக் கதிர்முலைப் பணிகண் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும் பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு மொய்த்தார். 3.15.132
| 829 |
ஆடலம் பரிக்கு வேந்த ரலிவரும் பவனி வேலை | யூடுறை யமுதந் தானோ வமுதத்தின் வேர்விட் டோ டிக் கூடுறும் பவளச் செவ்விக் கொடிக்கிளைத் ததுவோ வென்ன வேடவிழ் மலர்ப்பூங் கூந்த லிங்கிழை யவர்கண் மொய்த்தார். 3.15.133
| 830 |
கண்ணெனுங் கயல்க டாவக் களமெனுஞ் சங்க மார்ப்ப | வெண்ணகைத் தரள நக்க விரிஇதழ்ப் பவள மின்ன வொண்ணிறப் பசலை கால வொளிர்நுரை மாலை சிந்தப் பெண்ணெனுங் கடலந் தானை யிடனறப் பெருகிற் றன்றே. 3.15.134
| 831 |
சவிவிரற் றளிர்க ளீன்று தண்ணகை யரும்பு பம்பித் | திவளொளி வதனம் பூத்துத் தேனளி முரல மாதர் குவிபெருந் தானை நாப்பண் கூண்டவை யலியென் றோதும் பவனியின் றருவை நோக்கிப் பலகொடி படர்ந்த தொத்த. 3.15.135
| 832 |
நிறைமணி குயிற்றும் பொன்மே னிலைவயி னெருங்கு மாத | ரறைசிலம் பலம்பச் செஞ்சீ றடிநிலந் தோயா தாலு நறைமலர் புலரா தாலு நாட்டங்க ளிமையா தாலு மறைமுத லவன்பொன் னாட்டு மங்கையர் போல நின்றார். 3.15.136
| 833 |
முறைமையி னணிய நின்றார் வதுவையின் முழக்கங் கேட்டுப் | பொறைபொரு தனத்திற் சூட்டும் பொன்னணி யொருகை யேந்திக் கறையளி முரலுங் கூந்தற் கண்ணியோர் கையி லேந்தித் திறையிடு பவர்கள் போலச் சிலர்தெருத் தலையின் வந்தார். 3.15.137
| 834 |
அல்லெனுங் கூந்தல் கையா லடிக்கடி முடித்து வாய்த்த | தில்லென மறுத்து நெற்றித் திலகந்தொட் டியற்றும் போழ்திற் கல்லெனு மோதை கேட்டுக் கடுப்பினிற் கைக்கண் ணாடி யொல்லையி னெறிந்து நாணிச் சிலரொளித் தொருங்கு நின்றார். 3.15.138
| 835 |
விள்ளருஞ் செக்கர் வான்போல் விரிதருங் கலைகள் வீக்கித் | தெள்ளுசெஞ் சாந்தும் பூசிச் செம்மணிக் கலன்க டாங்கி வள்ளறன் னழகைக் கண்ணாற் பருகிய மாத ராகத் துள்ளுறுங் காமத் தீமே லொளிர்வது போல நின்றார். 3.15.139
| 836 |
கடற்பெருஞ் சேனை சூழக் கடகரி மலைக ணாப்பண் | சுடர்க்கதி ரவனை யொப்பத் தோன்றிய வலிதருஞ் செவ்வித் தடப்புதுப் புனலி னஞ்சந் தரும்விழிக் கயல்கள் போக்கி யெடுத்தணி வளையும் வீழ்த்திச் சிலரிட ரிடைப்பட் டாரால். 3.15.140
| 837 |
சிற்றிடை யொசியப் சோதிச் சிறுநுதல் வெயர்ப்ப வாய்ந்த | முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்றொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். 3.15.141
| 838 |
மாயிரு ஞாலம் போற்று மன்னபித் தாலி பீன்ற | சேயலி மெய்யின் வாய்ந்த திருவடி வழகை நோக்கிப் பாயரிக் கருங்கட் செவ்வாய்ப் பாவையீ ரிமையா நாட்டத் தாயிரங் கண்கள் வேணு மெனெச்சில ரறிவிற் சொல்வார். 3.15.142
| 839 |
குவிதருங் கடலந் தானைக் குபிர்க்கட லுடைக்கத் தோன்று | மவிர்கதிர் வடிவாட் செங்கை யலிதிரு மணமென் றோதுங் கவினுறுங் கனக நாட்டுக் காட்சியைப் பாத்தி மாவா லவனியின் மாந்தர் காண வரும்பலன் கிடைத்த தென்பார். 3.15.143
| 840 |
வரமுறுஞ் சுவன மாதர் மலரடி பரவிப் போற்ற | வரசுவீற் றிருக்குஞ் செவ்வி யணிவிழா காணப் பெற்றோங் கருமுகிற் கவிகை வள்ளல் கனகநா டதனி னாளை வருபவ னியுமியாங் காண்போ மெனச்சிலர் மவுலு வாரால். 3.15.144
| 841 |
பேரொளி யழகு வாய்ந்த பெண்ணினை மணப்பப் பூவி | னாரெழி லவரென் றெண்ணி யிருந்தன மிவரை நோக்கின் சீரணி பெறுமம் மங்கைச் செவ்விக்குச் செவ்வித் தூயோன் பாரிலெண் மடங்க தாகப் படைத்தனன் காணு மென்பார். 3.15.145
| 842 |
அருமறை மணத்த வாயு மருளடை கிடந்த கண்ணுந் | திருமதி முகமு நீண்ட திரண்மணி வயிரத் தோளுந் தருவெனச் சிவந்த கையுந் தாமரைத் தாளும் வாய்ப்பப் பெருகிய வழகை யெல்லா மொருத்தியோ பெறுவ ளென்பார். 3.15.146
| 843 |
வீதியி னழகோ வந்த வேந்தர்கோ னழகோ சூழ்ந்த | மாதவ ரழகோ யாது பெரிதென மதித்துச் சொல்வா ராதிதன் றூத ரீன்ற வரிவைதம் மணத்தின் கோலம் பேதமொன் றின்றிக் காணப் பெற்றதே யழகென் பாரால். 3.15.147
| 844 |
எயிறுக ணிறையா மார்பி னிளமுலை முளையாக் கண்க | ளயிலென வரிகள் சேரா வளகமு முடியிற் கூடா தொயில்வரை மெய்யிற் பூழ்தி பூத்ததுந் துடையாக் காமப் பயிரெனத் தோன்றும் பேதைப் பருவத்தி னொருத்தி வந்தாள். 3.15.148
| 845 |
கனைகடற் படையு நீண்ட கவிகையுங் கொடியுஞ் சூழ்ந்த | வனைகழ லரசர் நாப்பண் வருந்திற லலியு நோக்கிப் புனைமணிப் பரியின் மீது புரவல ரிடத்திற் கூட வெனையும்வைத் திடுமி னென்ன விருவிழி பிசைந்து நின்றாள். 3.15.149
| 846 |
ககனமும் புவியும் போற்றுங் காவலன் புலியைச் செவ்வி | யகுமதின் மருக ரான அலியெனு மரசை யாக மகிழ்வுறப் பரித்தல் செய்யும் வாசிமே லிருத்த னம்மாற் றகுவதன் றென்று சாற்றித் தாயர்க ளணைத்துப் போனார். 3.15.150
| 847 |
கரும்பெனு மொழியா ளாசைக் கவின்முளைத் தென்னத் தோட்டுட் | குரும்பையின் முலையாண் மாயங் கொலைகள வென்ப சற்றே யரும்பிய விழியைப் போலு மகத்தின ளமலை மாறாப் பெரும்படைப் பவனி நோக்கிப் பெதும்பையென் றொருத்தி வந்தாள். 3.15.151
| 848 |
பருந்தெழுங் கதிர்வாள் வள்ளற் பதுமமென் முகத்தை நோக்கிக் | கருந்தடங் கண்ணு நெஞ்சுங் களிப்புற நாணின் மூடித் தெரிந்தொரு வடத்தை யேந்திச் சேவகர் மார்பிற் பூட்டி யிருந்ததி லிவையும் பூட்டென் றொருத்தியோ டிசைத்து நின்றாள். 3.15.152
| 849 |
புத்தமு துகளும் வாயும் புதுமதி முகமுஞ் சேர்ந்த | கொத்தலர்க் குழலுஞ் செம்பொற் குவிமுலைச் சுணங்கு நூலி னெய்த்தசிற் றிடையுங் காந்தி வளைநிரைத் தெடுத்த கையின் வைத்தொரு கிளியு மேந்தி மங்கைய ளொருத்தி வந்தாள். 3.15.153
| 850 |
வள்ளறன் வதன நோக்கி மதிமயக் குற்றுக் காம | முள்ளுறுந் தீயான் முத்தஞ் சுடச்சுட வொருங்கு சிந்திக் கள்ளவிழ் கோதை நல்லீர் கதிர்மணி முத்த மென்ப தெள்ளள வெனினும் பூணா தெறிமின்க ளெறிமி னென்றாள். 3.15.154
| 851 |
வாரறுத் தெழுந்து வீங்கும் வனமுலைப் பூணுஞ் சாந்துங் | கூரயில் பொருது நீண்ட கொடிவரி விழியின் மையுங் காரெனத் திரண்ட கூந்தற் காட்டினில் வரிவண் டார்ப்பப் பேரணி மடந்தை யென்னுங் பெண்கொடி யொருத்தி வந்தாள். 3.15.155
| 852 |
வாங்குவிற் றடக்கை வேந்தர் வாளலி வதன நோக்கிப் | பூங்கொடி வருந்தி நெஞ்சத் தறிவெலாந் துயரம் போர்ப்பக் கோங்கிள முலையின் செம்பொற் கொடியென வென்னைச் சூழ்ந்த பாங்கிய ரெங்கே யென்னப் பாங்கியர் தம்மைக் கேட்டாள். 3.15.156
| 853 |
காழ்த்தடக் களிறு சூழ வந்தகா வலரை நோக்கி | வீழ்த்தன ளறிவை நாண விருப்பினான் மெல்ல மெல்ல வீழத்தனள் வாரா தாலோ வென்னையோ பாலிற் சூழ்ந்து வாழ்த்திநின் றவரை யெல்லாம் வைதுகொண் டரிவை நின்றாள். 3.15.157
| 854 |
பெரும்படைத் தலைவர் சூழ வரும்பிரான் வதன நோக்கி | யரும்பிய துயர வெள்ள மடிக்கடிப் பெருக லாலே வரம்பெறு நாணும் போக்கி மதிமயக் குற்றிவ் வள்ளற் றிரும்பலிற் சொல்வே னென்னச் சினந்தொரு தெரிவை போனாள். 3.15.158
| 855 |
குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைக டதும்ப வந்து | மலிதருந் தொடையல் சிந்த வடகங்க டுயல நோக்கி யலியினைச் சேரா மாத ரலியென விருத்த னன்றென் றொலிதர வுரைத்துச் செவ்வி யொழுகுபே ரிளம்பெண் போனாள். 3.15.159
| 856 |
எய்த்தநுண் ளிடையீர் வேந்த ரேறலி யகலா தென்றன் | மைத்தடங் கண்ணு ளானார் மறுகினின் மறுகி நீவிர் கொத்தலர் தூற்றி வாழ்த்திக் கூண்டவை குறிக்கிற் பேதைப் புத்தியென் றிருகட் கையாற் பொதிந்தொரு பூவை போனாள். 3.15.160
| 857 |
சொரிநிலாக் கவிகை நீழற் சுடரவன் கடுப்பத் தோன்று | மரசகே சரியை நோக்கி யழகெலாம் விழியா லுண்டு வருதுயர் வெறியின் மீறி வாயிதழ் வெளிறக் கண்சேந் திருள்குழன் மாலை சோர விதயநொந் தொருத்தி போனாள். 3.15.161
| 858 |
இன்னன மடவார் கூறி யிதயநெக் குருகுங் காலைப் | பின்னிய கொடியும் வீசுங் கவரியும் பிறங்கத் தாங்கும் பன்னகம் வருந்தத் தூளிப் படலமேழ் கடலுந் தூர்ப்ப மன்னவ ரலியுல் லாவு மற்றொரு மறுகு சார்ந்தார். 3.15.162
| 859 |
பல்லிய முகிலி னார்ப்பப் பரிக்குழாம் பரந்து பொங்கச் | செல்லுழற் கரடக் கைமாத் தெருத்தொறு மலிய மாறா நல்லியன் மறையோர் போற்ற நடனவாம் பரியின் மீது வல்லிய மலியுல் லாவும் வானவர் வாழ்த்தப் போந்தார். 3.15.163
| 860 |
நரர்புலி யலியார் வந்தார் நபிதிரு மருகர் வந்தா | ரரியபித் தாலி பீன்ற வாணினி லழகர் வந்தார் பரிவலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் திருவுலா வென்னப் போற்றித் திருச்சின்ன மியம்பிற் றன்றே. 3.15.164
| 861 |
கள்ளவிழ் மரவ மாலைக் காளையர் பலரும் போற்றப் | பள்ளியின் வாயற் புக்கிப் பாத்திஹா வினிதி னோதி யள்ளிலை வேற்கட் பாத்தி மாவெனு மழகு வாய்ந்த தெள்ளுதே னமுத மன்னார் திருமணப் பந்தார் வந்தார். 3.15.165
| 862 |
அரம்பொரும் வேற்க ணல்லா ராலத்தி களித்து நிற்பக் | குரவையெம் மருங்குஞ் சூழ்ந்த குரைகட லென்னப் பம்ப முரசுட னெளரி கொம்பு விண்முக டுடைத்துப் பொங்கப் புரவல ரலியுல் லாவும் புரவிவிட் டிறங்கி னாரால். 3.15.166
| 863 |
அடிமிசைப் பனிநீர் சிந்தி யம்பொன்மென் றுகிலா னீவ | வடிமறை யவர்கள் வாழ்த்த வானவ ராமீன் கூறக் கடிமல ரமளி போந்து ஹபீபுகண் களிப்பச் செவ்வி யிடுசுடர்த் தவிசின் மீதி லலியினி திருந்தா ரன்றே. 3.15.167
| 864 |
அலங்கலும் பணியுஞ் சாந்து மாடகத் துயிலு மேந்திச் | சிலம்புகள் சிலம்பப் பைம்பொற் சேயிழை யவர்கள் கூடிக் கலன்கதி ரெறிப்ப வேதக் காரணர் மனைவி யாகப் பலன்பெறுங் கதீஜா வீன்ற பாத்திமா விடத்திற் புக்கார். 3.15.168
| 865 |
இறையவன் றூத ரீன்ற விருவிழி மணியைச் சோதி | மறைபடா விளக்கைச் சேணின் வானிடத் துறையா மின்னைக் கறைபடா மதியை நாளுங் கவின்குடி யிருந்த கொம்பைப் பொறையென வளர்ந்த கற்பைப் பூம்புன லாட்டி னாரால். 3.15.169
| 866 |
மின்னைவெண் சோதி சுற்றிக் கிடந்தன துகிலை வீக்கிப் | பன்னருங் கருமே கத்தின் வெண்முகிற் படர்ந்த போல நன்னெடுங் கூந்தற் காட்டி னறும்புகை கமழ வூட்டித் தென்னுலா மணியின் சோதிச் சீப்பிட்டுச் சிறப்பிட் டாரால். 3.15.170
| 867 |
முகமதிக் கிடைந்து சுற்றி மூதிருட் படல மியாவும் | புகுமிட மிதுவென் றோதும் புரிகுழ லதனிற் சாந்துந் தகரமும் விரவி வெண்பூத் தனித்தனி சிதறி வாய்ந்த சிகழிகை முடித்து வாசச் செழுமலர்த் தொடையல் வேய்ந்தார். 3.15.110
| 868 |
நுதற்பிறைக் கதிர்க ளோடி மேகத்தி னுளைந்த தென்னப் | புதுக்கதிர்த் தரளச் சுட்டி புனைந்துமேற் சாத்துஞ் சாத்திக் கதத்தடற் படைவாள் வள்ளற் கவினறாப் பருக நாளு மதர்த்தரி படர்ந்த கண்ணின் மையெடுத் தெழுதி னாரால். 3.15.172
| 869 |
மடற்றிகழ் காதிற் செம்பொன் மணிப்பணி நிரையிற் சேர்த்தி | மிடற்றெழில் கவர வந்த மின்னென மிளிர்ந்து தோன்றுஞ் சுடர்ப்பிறை வடத்தைச் சூடிச் சொரிகதிர் வடங்கள் சேர்த்துக் கொடிக்கரும் பெழுது தோண்மேற் கொழுமணிக் கோவை சேர்த்தார். 3.15.173
| 870 |
ககனமும் புவியு மில்லாக் கவின்பழுத் தொழுகுங் கையின் | மகிதல முழுதும் விற்கும் வச்சிரக் கடகம் பூட்டிப் பகிரொளி காந்த ளங்கை விரலெனும் பவளக் கொப்பின் முகிழலர் பூத்த தென்ன முத்துமோ திரங்க ளிட்டார். 3.15.174
| 871 |
நதிக்கரை கடற்குட் பாரின் விளைந்தநன் மணிக ளெல்லாஞ் | செதுக்கிப்பொன் னிழையிற் கோத்த வடத்தொடுஞ் சேர்வை யாக்கிக் கதிர்க்கட வுளும்வான் பூத்த கணங்களுஞ் சசியுங் கூடிப் புதுக்குடி யிருந்த தென்னப் பொருந்துமே கலையுஞ் சேர்த்தார். 3.15.175
| 872 |
வடிநறா வனசப் போது மாவிளந் தளிரு மொவ்வா | வடிமிசை யூட்டும் பஞ்சி னலத்தக மலர்த்தி நாளும் பிடியின நடையைக் கற்பான் பெட்புறும் பதத்திற் செம்பொற் சுடர்மணிச் சதங்கை தண்டை பாடகஞ் சூட்டி னாரால். 3.15.176
| 873 |
பொன்னினு மணியி னாலும் பூந்தொடைக் கற்றை யாலு | மின்னினை மறைத்துச் சற்றே வெளியிடை கிடந்த தெல்லாந் துன்னிய களபச் சேற்றாற் றடவிமெய் துலங்கச் செய்து கன்னியர் சூழ்ந்து வாழ்த்திக் கண்ணெச்சில் கழித்திட் டாரால். 3.15.177
| 874 |
மரகதச் சுடரைச் சேந்த மாணிக்கக் கொழுந்தைப் பூவிற் | பிரிவுறாப் பொன்னை மின்னைப் பெண்ணலங் கனியை யெய்தாப் பரகதிப் பேறை வாழ்வை பாத்திமா வென்னு மந்த வரசிளங் குயிலைப் பூவி னணைமிசை நடத்தி னாரால். 3.15.178
| 875 |
அணிக்கலங் கலவைச் செப்புக் கோடிக மடைப்பை யேந்திப் | பிணைக்கருங் கண்ணார் சூழப் பிறங்குசா மரைக டூங்கக் கணிப்பிலாத் துஆவு மாமீ னெனுஞ்சொலுங் கடல்போ லார்ப்ப மணக்கடி முரச மார்ப்ப முகம்மது மகளார் வந்தார். 3.15.179
| 876 |
வந்தபொன் மயிலை யின்ப மறைநபி யென்னும் வள்ளற் | சிந்தையுங் கண்ணு மாரச் செழுங்களி பெருகி யோடச் சுந்தர வருவி மாறாச் சுடர்வரை யிடத்திற் றோன்ற வந்தரத் திழிந்த மின்போ லலியிடத் திருத்தி னாரால். 3.15.180
| 877 |
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல | அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவ ரெவருஞ் சூழ்ந்து பலனுற வாழ்த்தி வாழ்த்திப் பாத்திஹா வோதுங் காலை. 3.15.181
| 878 |
மெய்யொளி பரப்புஞ் சோதி விரிசிறை யொடுக்கி யார்க்குந் | துய்யவ னருளின் மேன்மை ஜிபுறயீ லென்னுந் தோன்ற லுய்யுமா நிலத்தின் மாந்தர்க் குற்றதோ ருவகை கொண்டு வையகம் விளங்குந் தீனின் முகம்மதி னிடத்தில் வந்தார். 3.15.182
| 879 |
தருமுகம் மதுவுக் கின்ப சலாமெடுத் துரைத்து மேலாம் | பொருளெனு மிறையோன் றன்னாற் பொன்னுல கதனி னுற்ற வரிசையும் வானோர் வாழ்த்து மகிழ்ச்சியின் கூறு லீன்கள் பெருகுமா னந்தத் துற்ற பெற்றியுங் கூறு வாரால். 3.15.183
| 880 |
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு | முற்ரினுஞ் சிறப்பித் தன்பாய் முறைமுறை வானோ ரியாரும் வெற்றிவா லளிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ. 3.15.184
| 881 |
வல்லவ னுரைம றாம லெண்ணில்வா னவர்கள் கூண்டு | சொல்லருஞ் சுவன நாட்டுச் சுடர்மணி மனைக டோ றும் பல்லவத் துணர்ப்பைங் காவும் வீதியும் பல்பல் கோடி யெல்லவ னிருந்த தென்ன மணிவிளக் கியற்றி னாரால். 3.15.185
| 882 |
வானவர் மகளி ரெல்லா மணவினைக் கோலஞ் செய்து | தானவன் பெயரின் வண்ணப் பயித்தொடுஞ் சலவாத் தோதிப் பானமுங் கனியுங் கொண்டு பன்மணி யூச லேறித் தீனவர் தமையும் வாழ்த்திச் செறிந்தனர் விண்ணி னம்மா. 3.15.186
| 883 |
மறைமொழிக் கலிமாத் தீட்டும் வாயின்மா ளிகையி னுள்ளுள் | ளறைதொறுந் திறந்து வன்ன பேதபட் டாடை கோடி முறைமுறை யெடுத்துத் தேனார் முகிழ்நனை யிருந்த செவ்வி நறைமலர்த் தொடையும் வாய்ப்ப நன்மணிக் கரத்திற் கொண்டார். 3.15.187
| 884 |
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹாவென் | றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாராச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றிநின் றெறிந்திட் டாரால். 3.15.188
| 885 |
புதுநறும் பனிநீர் சந்தம் புழுகுமான் மதங்கற் பூர | மதுவிரிந் தொழுகும் பொற்பூ வானவர் மகளி ரேந்திக் கதிர்மணிக் கதீஜா வீன்ற கன்னியை யலியைப் போற்றி விதமுறத் திசைக டோ றுஞ் சிதறினர் விளங்க வன்றே. 3.15.189
| 886 |
பெருந்தரு வடியிற் றிட்டி கழித்தெறி பிடவை யெல்லா | மருந்தவ முடைய வள்ள லகுமதே யுமக்கீ மான்கொண் டிருந்துபின் கணவ ராக வருமவர்க் கீவோ மென்ன வருந்திலா தமரர் மாத ரெடுத்துவைத் திருக்கின் றாரால். 3.15.190
| 887 |
நறைவிரி கனக நாட்டி னடந்தசோ பனங்க ளீதென் | றறிவுற வானோர் கோமா னுரைத்தன ரதனைக் கேட்டு மறைநபி களிப்பா நந்த வாருதி தன்னை மூழ்கி யிறையவன் றன்னைப் போற்றி யாவர்க்கு மியம்பி னாரால். 3.15.191
| 888 |
அருளபூ பக்கர் வெற்றி யடலரி யுமறு கத்தாப் | தெருளுறு முதுமான் மற்றச் செவ்வியோ ரெவருங் கேட்டுப் பெருகிய புதுமை யென்னப் பேரலி தமையும் பெண்மை யரசையும் பெரிது வாழ்த்தி யகக்களி பெருகி நின்றார். 3.15.192
| 889 |
முகம்மது நயினார் வாழ்த்த மற்றமன் னவர்கள் வாழ்த்தப் | புகலருங் கற்பின் மிக்க பூவைய ரெவரும் வாழ்த்த நகுமணிக் கொம்ப னாரு நரர்புலி யலியு மின்ப மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகி னாரால். 3.15.193
| 890 |
| இருவரு மணவறை புக்கி யின்புறப் பெருகிய மகிதலத் துறைந்த பேரிருள் வெருவுறத் திசைதிசை யொளிப்ப வெவ்விய பருதிவா னவன்கதிர் பரப்பத் தோன்றினான். 3.15.194
| 891 |
அடிதிரை வளைமணி யெறியு மாவிவாய்க் | கடிமரை விரிதர விடிந்த காலையிற் படியினும் பெரும்பொறை பாத்தி மாதிரு வடிவுறும் புதுமணக் கோல வாயிலின். 3.15.195
| 892 |
தடியுலர்ந் துடனரம் பெழுந்து தாங்கிலா | மிடியினன் பசியடைத் திருக்கு மெய்யினன் பிடிவிர லுருவிலாப் பீற லாடையன் கொடுகிய குளிரின்வந் தொருவன் கூயினான். 3.15.196
| 893 |
கூயவ னியாவெனன் றெழுந்து கோதையர் | நாயகி யெதிர்ந்துபக் கீறை நன்குறச் சாயிபு பதமலர் வருந்தத் தக்கவென் வாயிலின் வந்ததென் மவுலு வீரென்றார். 3.15.197
| 894 |
கடிமனை யிஃதெனக் கருதி வந்தனன் | வடிவுறு மயிலனீர் வயிற்று றும்பசிக் கொடுமையுந் தவிர்த்துடற் குளிரு நீங்கவோர் பிடவையு மருள்கவென் றெடுத்துப் பேசினான். 3.15.198
| 895 |
வறியவ னுரைத்தசொற் கேட்டு மாமயி | லறுசுவைக் கறியுட னன்ன மீந்துமேற் குறையற வியற்றிய புதுக்குப் பாயமும் பெறுகவென் றளித்தன ரறிவின் பெற்றியால். 3.15.199
| 896 |
இகலுறு மனத்தவ ரீந்த போசன | மகமகிழ் தரவயி றார வுண்டுநற் றுகலையு மொல்லையிற் புனைந்து தோமறும் புகழொடும் வாழ்த்திபக் கீறு போயினான். 3.15.200
| 897 |
ஆதுல னகன்றபி னாதி தூதெனு | மாதவ முகம்மது மருவ லார்தமைக் காதபூ பக்கரு முமறுங் கல்வியி னேதமில் குணத்துது மானு மியார்களும். 3.15.201
| 898 |
இனையன பெயரும்வந் தெய்த நன்மலர் | புனைதரும் பாத்திமா வென்னும் பூங்கொடி தனியெதி ரெழுந்து சலாமென் றோதினா ரனைவரு மறுமொழி கொடுத்தன் புற்றனர். 3.15.202
| 899 |
மணியொளி முகம்மது மகவை நோக்கிநன் | கிணைமணிப் பணியொடும் புதிய தின்றியே பணிமொழி யீரொரு பழங்குப் பாயத்தை யணிவதென் னெமக்கடுந் தருளு வீரென்றார். 3.15.203
| 900 |
தந்தையீர் துகிலிலாச் சஞ்ச லத்தினால் | வந்தன னொருபக்கீர் வழங்கி னேனென விந்தெனு நுதலிய ரியம்பச் செவ்விய மந்தரப் புயநபி மறுத்துக் கூறுவார். 3.15.204
| 901 |
இரவல ரிடத்தினிற் பழைய தீந்துநற் | புரியிழை மென்றுகிற் புதுக்குப் பாயத்தை மருமணக் கோலத்தின் வனைய வேண்டுமென் றுரைதர மறுமொழி யுரைப்ப தாயினார். 3.15.205
| 902 |
அழகிய தெவையுமல் லாவுக் காகவே | விழைவுடன் கொடுத்திட வேண்டு மென்றுநும் பழமறை வாக்கினாற் பகர்ந்த தாலரோ மழைதவழ் கொடையனீர் வழங்கி னேனென்றார். 3.15.206
| 903 |
பாத்திமா வெனுமயில் பகரக் கேட்டலர்த் | தேத்தரு புயநபி மகிழ்ந்த செய்கையால் கோத்திரத் தவர்செழு முகங்கள் கோதறப் பூத்தசெந் தாமரைக் காடு போன்றவே. 3.15.207
| 904 |
ஆண்டகை யலிமனைக் கம்ம நின்னையான் | கூண்டவ ருடனுமே கூட்டிச் செல்வதற் கீண்டுவந் துறைந்தன னென்ன யாவருங் காண்டருங் காரணர் கழறி னாரரோ. 3.15.208
| 905 |
தந்தைய ருரைதரத் தரும வீடெனுந் | சிந்தையிற் களித்தொளிர் செவ்வி யோங்கிய விந்தெனு நுதன்மனை யிருந்த யாவையு மந்திரக் கிழவர்முன் வைத்து நின்றனர். 3.15.209
| 906 |
மாணெழி லரியபீங் கானும் வார்தலை | காணியும் பாயலுங் கதிர்கொள் வெள்வளைப் பாணியிற் றிருகையும் பரம தானியும் பூணிழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார். 3.15.210
| 907 |
வயவரி யலிதிரு மனையிற் சேறுதற் | குயர்மறை முகம்மது மொளிர்செங் கையினால் வியனுறுந் திருகையை யேந்தி னாற்விற் லியலபூ பக்கரும் பாயை யேந்தினார். 3.15.211
| 908 |
உற்றவர்க் குதவிய வுமறு வெள்ளிழை | நற்றலை யணையினை யேந்தி னாருயர் வெற்றிசே ரடலுது மானு மெய்மனப் பற்றொடு மெடுத்தனர் பரம தானியே. 3.15.212
| 909 |
கதிர்தரு பெரியபீங் கானைக் கையினின் | மதிவல ரெனுமு சாமா வெடுத்தனர் பதுமமென் மலர்முக பாத்தி மாபதம் பொதிதரு கபுசுடன் புறப்பட் டாரரோ. 3.15.213
| 910 |
வல்லிய மெனுமலி மனையின் வள்ளலார் | செல்லெனு மொல்லையின் விரைவிற் சேணிழிந் தெல்லவன் கதிரினுஞ் ஜிபுற யீலெழின் முல்லைவெண் ணகைமயின் முன்றி னண்ணினார். 3.15.214
| 911 |
பரவர சரியலி மனைக்கும் பாத்திமா | திருமண மனைக்கும்பா வாடை செய்தென வரகதி ஜிபுறயீ லென்னும் வள்ளறம் விரிகதிர்ச் சிறையினை விரித்து நின்றனர். 3.15.215
| 912 |
மன்னவ ரியாவரு மருங்கு சூழ்வரக் | கன்னியுந் தொடும்பதக் கபுசு தன்னொடு மின்னிய சிறையெனு மாடை மீதினி னன்னலங் கனிதர நடந்து போயினார். 3.15.216
| 913 |
மறைநபி மகடமை யலிதம் வாயிலிற் | சிறையினி னடத்துதல் செய்து வானவர்க் கிறைககன் புகுந்தன ரியாரு மின்புறப் பொறையெனு மனைவயின் பொலிய வைகினார். 3.15.217
| 914 |
கொணர்ந்தவை யாவையுங் கொடுத்து மன்னவர் | மணந்தரு மலியையு மையிலன் னாரையு மிணங்கிடப் போற்றிவாழ்த் தெடுத்தவ் வில்லிடந் தணந்தவ ரவருறை சார்பிற் சார்ந்தனர். 3.15.218
| 915 |
சலிலமுஞ் சீரமுந் தழீஇய தன்மைபோ | லொலிகடற் புவியினீ டூழி வாழ்கென வலியையு மகவையும் வாழ்த்தி யன்பொடு மலிபுகழ் முகம்மது மனைபுக் காரரோ. 3.15.219
| 916 |
சொல்லுடன் பொருளெனக் சுருதி நூன்முறை | யில்லுறைந் தொருவருக் கொருவ ரின்பமுற் றல்லெனுங் கூந்தலு மரசர் சீயமு மல்லலம் புவியிடை மகிழ்வின் வைகினார். 3.15.220
| |
917 |
இறையவன் றூதரு மியார்க ணால்வரு மறைவழி பெருக்கிய மன்ன ரியாவரு நிறைதர விருக்குமந் நாளி னேரல ருறைபதி யிடத்திருந் தொற்ற ருற்றனர். | 3.16.1 | 918 |
கடற்கரை சீபுல் பகறுவென் றோதிய விடத்தினி லபூஜகு லுடன்முன் னூறிய லடற்பரி கபடமா யடைந்த தின்றென மடற்றுளைச் செவிப்புக வாழ்த்திச் சொல்லினார். | 3.16.2 | 919 |
ஒற்றர்க ளுரைத்தவை யுணர்ந்து தீனிலை வெற்றிசேர் வேந்தருக் குரைத்து வேறுகொள் பற்றல ரெனுமிருள் பருகும் வெங்கதிர்க் கொற்றவ ரடல்ஹமு சாவைக் கூவினார். | 3.16.3 | 920 |
புடவியிற் பறப்பன போலு முப்பஃ தடல்வயப் பரியுட னயில்வில் லேந்திய மிடலுடை வீரர்கள் சிலரும் வெண்ணிலாச் சுடர்விடு துவசமுந் தொகுத்திட் டாரரோ. | 3.16.4 | 921 |
வயிரொலித் திடப்படை மன்னர் சூழ்வர வயிலொடுஞ் சென்றவ ணடர்ந்த பூஜகல் செயுமமர் வலிகெடச் செயித்து வம்மென வுயிரெனுஞ் சிறியதந் தையருக் கோதினார். | 3.16.5 | 922 |
கருதலர்ச் செகுத்திவண் கடிதின் வம்மென வரசர்நா யகநபி யளித்த வாசகஞ் சிரசின்மேற் கொண்டமு சாவுஞ் சேணுலாய் வரும்விசைப் பெருந்திறல் வாசி மேற்கொண்டார். | 3.16.6 | 923 |
பரகதிப் படையொடும் படைக்கு ழாத்தொடும் வரமுறு முகம்மதை வாழ்த்தி வாண்மறாக் கரதல ரெனும்ஹமு சாபெய் கார்முகிற் பொருதிரைக் கடற்கரை யிடத்திற் போயினார். | 3.16.7 | 924 |
உவமையின் மிடல்ஹமு சாவந் துற்றவை யபுஜக லறிந்தடற் பரியுஞ் சேனையுங் குவிதரப் பொருமமர்க் கோலந் தன்னொடும் புவிதுக ளெழவெதிர் புறப்பட் டானரோ. | 3.16.8 | 925 |
தவிசுறை முகம்மதின் சிறிய தந்தையும் பவுரிகொள் கவனவெம் பரியும் வீரருந் துவசமுந் துலங்கிடச் சூழி மாகரி யபுஜகல் வருமிடத் தெதிர்வ தாயினார். | 3.16.9 | 926 |
இருவர்தஞ் சேனையு மெதிருங் காலையிற் றிருகுநெஞ் சபூஜகல் சேனை புக்கிருந் தரிதினிற் றனித்தமு சாவென் றோதிய மருமலர்ப் புயத்தின ரிடத்தில் வந்தன. | 3.16.10 | 927 |
மறைநபி முகம்மதி னிடத்தும் வன்குபிர் செறுநர்க ளிடத்தினுஞ் சேர்ந்த பண்பினன் கறைகொள்வஞ் சகங்கப டடைந்த கல்பின னிறுமொழிச் சூதினன் மசுதிய் யென்பவன். | 3.16.11 | 928 |
தருத்தனை யுறழ்நபி சிறிய தந்தையர் கருத்தினுக் கேற்பவைக் கபடந் தோன்றிலா திருத்திநன் மொழியொடு மிசைவ தாகவே பொருத்தினன் றவிர்ததனன் போரின் கோலமே. | 3.16.12 | 929 |
உள்ளுற வஞ்சகத் துறுதி கூறியே தெள்ளிய னெனவெழுந் தரிதிற் சென்றுபி னள்ளிலை வேலபூ ஜகுலுஞ் சேனையும் புள்ளுவத் தவர்தலம் புகுத்திப் போயினான். | 3.16.13 | 930 |
தடத்திரட் புயத்தமு சாவுந் தண்டுறைக் கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கிநீள் கொடித்திர ளொடுங்குர கதங்கண் முன்செல வடற்படை கொடுமதி னாவி லாயினார். | 3.16.14 | 931 |
எறிதிரைக் கடற்கரை யிடத்திற் சென்றதுஞ் செறுநர்வந் துற்றது மசுமதி செய்கையு முறைமையின் முகம்மது முன்பு கூறினார் சிறியதந் தையரெனுஞ் செவ்விச் சீயமே. | 3.16.15 |
932 |
சீபுல்ப குறுவெனுந் தலத்தின் செய்தியைக் காவலர் முகம்மதங் கறிந்து கல்விசேர் நாவல ருடனினி திருக்கு நாளினில் வேவுகொண் டொருவர்வந் திறைஞ்சி விள்ளுவார். | 3.17.1 | 932 |
தன்னுடன் பொருந்தியங் கவனைத் தப்பவிட் டொன்னலர் தமக்குயி ருடலும் போன்றவ னின்னைநாட் புவாத்துவி னிருக்கின் றானென்றார். 3.17.2
| 933 |
ஒற்றர்வந் துரைத்தவை யுணர்ந்து நந்நபி | நற்றவ முடைமையீர் நன்று நன்றுநம் வெற்றிசே ரியார்களும் பரியின் வீரரு மிற்றையிற் பகற்பொழு தெழுக வென்றனர். 3.17.3
| 934 |
அகிலமன் புறுமதி னாவுக் காதியாச் | சகிமன சாயிவைத் தனிய தாகவைத் திகல்படைக் கோலங்க ளியற்றி யாவரும் புகழ்நபி முகம்மது புறத்தி லாயினார். 3.17.4
| 935 |
அறைதவில் பேரிகை முரசு மார்த்தெழ | முறைமுறை கொடிப்படை படர்ந்து முன்செலக் சுறவெனும் வீரரும் பரியுந் துன்னவே யிறைநபி முகம்மது மெழுந்து போயினார். 3.17.5
| 936 |
உண்ணுநீர் காவத முலவித் தேடினுங் | கண்ணினிற் காண்பரி தான கானகம் விண்ணினிற் புதுப்புன லன்றி வேறொரு மண்ணினிற் கூவலி லாப்பு வாத்துவே. 3.17.6
| 937 |
தொடரறுங் கேண்மையின் மசுதிய் யென்னுமக் | கொடியவ னுறைந்தபு வாத்துக் கோட்டையைச் சடிலமுஞ் சேனையுஞ் சதுரின் சுற்றிட வடிவுறு நபியவண் வைகி னாரரோ. 3.17.7
| 938 |
உய்யுநன் மதியில னுறைந்த வூரினை | வையகம் புகழ்நபி வளைந்த காலையில் வெய்யவன் பூதலம் விளக்கி நீள்கதிர்க் கையினை யொடுக்கிமேற் கடற்புக் கானரோ. 3.17.8
| 939 |
இரவினிற் படைவளைந் திருப்பக் கீழ்த்திசை | விரிதர வெளுத்தது விரவி னன்நபி யரியவற் றொழபஜ றடுத்த தீம்புனற் றருகவென் றுரைத்தனர் சாபிர் தன்னையே. 3.17.9
| 940 |
ஏடலம் பியபுய நபியி சைத்தலு | மூடிய கடங்களுந் துருத்தி மூட்டையுந் தேடின ரில்லெனத் திசையும் பாடியு மோடினர் நீருறை யொருங்கு காண்கிலார். 3.17.10
| 941 |
மீண்டனர் சடுதியின் வேத நாயக | கூண்டவிப் பதிபுறங் குறுகி யெங்கணுங் காண்டில னீரெனக் கழற நன்னபி யீண்டுநீர்த் துருத்தியைக் கொணர்மி னென்றனர். 3.17.11
| 942 |
தருகெனு முறைவழி சாபி றொல்லையிற் | பருகுநீ ரற்றதோற் றுருத்திப் பையினைத் திருமுனம் வைத்தனர் தொட்டுச் செவ்வியோர் சுருமதிந் திரத்தினிற் றுஆச்செய் தாரரோ. 3.17.12
| 943 |
மண்ணுறும் பாண்டமொன் றெடுத்து வம்மென | வண்ணலா ருரைத்தலு மோடி யவ்வயின் றண்ணுறுந் தொடைப்புய சாபிர் மன்னவ ருண்ணிறை களிப்பொடு முவந்து வைத்தனர். 3.17.13
| 944 |
புதுநுறும் பானையின் வாயிற் பொற்புறப் | பதுமமென் கரவிரற் பரப்பு மூடிநின் றிதமுறுந் துருத்தியை யெடுத்துக் கையின்மேல் விதமுறக் கவிழ்த்தென விளம்பி னாரரோ. 3.17.14
| 945 |
விடுமென வுரைத்தலும் வெறுந்து ருத்தியைக் | கடநிறை விரலின்மேற் கவிழ்ப்ப வுள்ளுறைந் திடுதுளி யொன்றின்மே லின்றி வீழ்ந்தது படுமிட நீரெனும் பான்மை தோன்றவே. 3.17.15
| 946 |
கையின்மே லொருதுளி கான்ற போழ்தினின் | மெய்யொளி முகம்மது பிசுமி லோதினர் செய்யமென் விரலிடை நான்கிற் சேணதி பெய்யுநல் லருவிபோற் பிறந்தெ ழுந்ததே. 3.17.16
| 947 |
சுருதிவல் லவனருள் சுரந்த நன்னபி | விரலிடை நதியெனப் பிறந்த வெள்ளத்தாற் பரலழற் பாலையைப் போக்கிப் பண்ணைசூழ் மருதநன் னிலமென வளமுண் டாயதே. 3.17.17
| 948 |
பரிகளொட் டகஞ்சுமை பரித்த நந்திக | ளரிதினிற் குடித்தரு மயாவுந் தீர்ந்தன திருநபி முகம்மதுஞ் சேனை வீரரும் வரநதி யிடத்தினிற் றொழுது வாழ்த்தினார். 3.17.18
| 949 |
இவ்வண்ண மூன்றுநா ளிருக்கு மெல்வையின் | மைவண்ணத் துள்ளத்து மசுதிய் யென்பவன் செவ்விய ரறிகிலா தொளித்துத் தேடருங் கவ்வைசெய் நெடிபடு கானம் போயினான். 3.17.19
| 950 |
ஓங்கிய நெடுங்கடத் தொளித்துப் போயின | னீங்கிருந் தென்பல னென்ன நன்னபி தாங்கரும் புரவியுந் தானை வீரரும் வாங்குமி னெனமதி னாவில் வந்துற்றார். 3.17.20
| |
951 |
வானவர் பரவிய வள்ள னந்நபி தீனெனும் பெரும்பெய ரரசு செய்யுநா ளீனவன் குபிரவ ரியற்றுஞ் செய்கையைத் தானறிந் தொருவர்வந் தவையிற் சாற்றுவார். | 3.18.1 | 952 |
வரைசெறி மக்கமா நகரின் மாற்றலர் திரகமு மணிகளுஞ் செம்பொ னாடையுந் தரளமு மிகுவிலைச் சரக்குந் தாங்கிய பரிகளு மெருதுமொட் டகத்தின் பந்தியும். | 3.18.2 | 953 |
காமரி னிரைநிரை காவ லாளரு மாமதி வலசில வணிக மாக்களும் பூமணஞ் செறிதரு பொழில்கள் சுற்றிய ஷாமினுக் கனுப்பினர் சமய மீதென்றார். | 3.18.3 | 954 |
உற்றுள வறிந்தவவ் வொற்ற ரீதெனச் சொற்றவை செவிப்புகத் தூயன் றூதுவர் வெற்றிகொள் வேலினர் வியப்ப விம்மொழி பெற்றன மெனத்தனி மறையிற் பேசினார். | 3.18.4 | 955 |
தலைவருக் கிம்மொழி சாற்றி வேதநூன் மலிதருங் கேள்வி யபாசல் மாதமைப் பலவளங் கெழுமதி னாவிற் பண்புற நிலைதர முதன்மையி னிறுத்தி னாரரோ. | 3.18.5 | 956 |
விரிகதிர் வேலினர் வளைந்த வில்லினர் கரிகைபட் டயமழுச் சுமந்த தோளினர் பொருவினூற் றைம்பது புரவி தம்மொடும் வரநபி யெழுந்தன ரமரர் வாழ்த்தவே. | 3.18.6 | 957 |
அறைதவில் பம்பை தடாரி யார்த்தெழ முறைமுறை காகள முழக்க மோங்கிட மறுவறும் வெண்கொடி யுலவி வள்ளலார் சிறியதந் தையர்முனஞ் செல்லச் சென்றனர். | 3.18.7 | 958 |
உள்ளகங் களித்தமு சாவென் றோதிய வள்ளல்வெண் கொடியுடன் மகிழ்ந்து முன்செலப் புள்ளினு நனிவிசைப் புரவி சூழ்வரக் கள்ளவிழ் மலர்ப்பொழில் கடந்து போயினார். | 3.18.8 | 959 |
அடவியும் பாலையு மருவிக் குன்றமுங் கடகரி வனங்களுங் கடந்து போயிகல் படுகொலை மருவலர் நடத்தும் பாதையி னிடனசீ றாவெனுந் தலத்தி னெய்தினார். | 3.18.9 | 960 |
வற்றுறாப் பெரும்புகழ் மக்க மாநகர்ப் பற்றலர் ஷாமினுக் கேகும் பாதையிற் சுற்றினு மிறங்கின சுருதி வாசகக் கொற்றவ னபியொடும் படைக்கு ழாங்களே. | 3.18.10 | 961 |
இலக சீறாவினி லிரண்டு நாளிருந் துலவிய வொற்றரா லுணரு மொல்லையிற் பலபல திசையவர் படர்ந்து சாவியே நலனுறு முகம்மது நபிமு னெய்தினார். | 3.18.11 | 962 |
முதல்வநம் படைவர மூன்று நாட்குமுன் பொதியெரு தொட்டகம் புடையிற் பொங்கவே நிதியொடும் போயின நிகரில் ஷாமெனும் பதியினுக் கெனப்பதம் பணிந்து சொல்லினார். | 3.18.12 | 963 |
பரதிசை திரிபவர் பகரக் கேட்டவண் கரநதி தருநபி யிருக்குங் காலையிற் பெருகுமவ் விடத்தவர் கூடிப் பெட்புற மரைமல ரிணைப்பதம் வந்து நண்ணினார். | 3.18.13 | 964 |
பேர்பனீ முத்லசு வென்னும் பேருட னார்பனீ லமுறத்தென் பவரு மாண்டுறப் போரறத் தன்மையிற் படுத்திப் பொற்புடன் றார்கெழும் புயநபி தருக்கின் மீண்டனர். | 3.18.14 | 965 |
முரசமும் பேரிபு முழங்கத் தாவிய பரிகளு மன்னவர் பலருஞ் சூழ்வர நரலையை நிகர்திரு நகரை நோக்கியே வரும்வழி யினிலொரு வசனங் கேட்டனர். | 3.18.15 | 966 |
துறுமலர்ப் பொழிறிகழ் மதீனஞ் சுற்றிய சிறுகுடிப் பாடிக டிடுக்குற் றேங்கிடப் பெறுநிரை யனைத்தையும் பிடித்துத் தெவ்வரிற் குறுசெனு மவன்கொடு போயி னானென்றே. | 3.18.16 | 967 |
குரைகட லெனநிரை கொண்டு போயதோர் தருமுகி றவழ்சபு வானென் றோங்கிய வரையடி வாரத்தை நோக்கி மானபி பொருவில்வெம் படையொடும் போயி னாரரோ. | 3.18.17 | 968 |
இறையவ னுரைவழி யியற்றுந் தூதுவர் மறைமுதிர் படையொடும் வருகின் றாரெனக் குறுசெனு மவனிரைக் குழுவு மூரும்விட் டுறைவதில் லெனவொளித் தோடி னானரோ. | 3.18.18 | 969 |
வலனுற வடுஞ்சபு வானெ னும்பெரூ மலையடி வாரத்தின் வந்தவ் வூரிடை நிலைகொளு நிரையெலாங் கொண்டு நீணபி சிலையயிற் படையொடுந் திரும்பி னாரரோ. | 3.18.19 | 970 |
கல்லடை திடருமுட் காடுங் கண்ணறாச் செல்லடை நெடுவரைத் திகரிச் சூழலு மெல்லவன் கதிர்கிடந் தெரியும் பாலையு முல்லையுங் கடந்தொரு பொழிலை முன்னினார். | 3.18.20 | 971 |
சேந்தன செழுங்கனி சிதறச் சிந்திய வீந்தடர் பொழிலிடத் திறங்கி நந்நபி யாய்ந்தநல் லறிவின ரமச்ச ரின்புற வாய்ந்ததோர் பத்திரம் வரைந்து கட்டினார். | 3.18.21 | 972 |
அகிலமன் னப்துல்முத் தலிபுக் கன்புறு மகள்மகன் அப்துல்லா வென்னு மன்னரை யிகலறு மனத்தவ ரிருத்தி முத்திரைத் தகுதியிற் பத்திரங் கொடுத்துச் சாற்றினார். | 3.18.22 | 973 |
பாடிபத் துனுநகு லாவிற் பாங்குறக் கூடியங் குறைந்துகைக் கொடுத்த பத்திர மூடிய முத்திரை முறித்துப் பாசுரஞ் சூடிய வுரைவழி துணிமி னென்றரோ. | 3.18.23 | 974 |
கண்ணெனப் பிரிவின்மு ஹாஜி ரீன்களி லெண்மரை யவர்மொழிக் கிணங்கச் சேர்த்தினி துண்மகிழ் தரவவ ணுறைகு வீரென மண்ணகம் புகழ்முகம் மதுவ னுப்பினார். | 3.18.24 | 975 |
நாயக ருரைத்தவை யுளத்தி னாட்டிநற் றூயவ ரெண்மரும் பரிவிற் சூழ்வரப் பாயரித் துவசமுன் படரப் போயினர் சீயமொத் தப்துல்லா வென்னுஞ் செம்மலே. | 3.18.25 | 976 |
தந்தைதம் முன்னவ டருமத் தால்வரு மைந்தரை யவணிடை யனுப்பி மன்னர்கோன் சிந்திடத் துயர்வரை சிதறத் தாக்கிக்கைப் பந்தென வருந்திறற் பரியின் மேற்கொண்டார். | 3.18.26 | 977 |
திறல்வய வீரருஞ் சேனை மன்னரு மறையொலி திசைதர வருமவ் வேளையி லறபியி லொருவன்வந் தடுத்தி யாவர்க்கு மிறையவன் றூதர்மு னியம்பு வானரோ. | 3.18.27 | 978 |
முன்னவர் மும்முறை மொழியி னீறினி னன்னபி யொருவருண் டென்னு நாட்டத்தாற் சென்னிலந் தொறுந்தொறுந் திரிந்துங் காண்கிலா திந்நிலத் தெதிர்ந்தன னூழி னேவலால். | 3.18.28 | 979 |
மண்டலம் புகழ்தரு முகம்ம தேநிழற் கொண்டலங் கவிகையுங் குறிப்புங் காட்சியுங் கண்டவன் பொருட்டுயர் கார ணீகமொன் றுண்டெனி லெனக்குவே றுறுதி யில்லையால். | 3.18.29 | 980 |
என்றவ னுரைத்தன னேகன் றூதுவர் வென்றிகொ ளறபியை விளித்துச் சேணிடை நின்றவத் தருவினைக் கூவி நின்னிடத் தொன்றுமென் றிசைதர வுரைத்திட் டாரரோ. | 3.18.30 | 981 |
தூதுவ ருரைவழி யறபி தூரத்தின் மாதரு நிலையினை நோக்கி வாவெனக் கோதறக் கூறினன் கூற வத்தருப் பூதலம் விரிதரப் புறத்தெ ழுந்ததால். | 3.18.31 | 982 |
எழுந்தருப் பணர்சினை யாவும் பின்னரின் விழுந்திட வேரைமுன் னீட்டி மேதினி யழுந்திட வூர்ந்ததி சயிப்ப வாசலச் செழுந்தொடைப் புயநபி திருமுன் னின்றதே. | 3.18.32 | 983 |
வந்துநின் றத்தரு மண்ணுள் ளோர்களு மந்தரத் தமரருங் கேட்ப தாகவே சுந்தரம் பெறச்சலாஞ் சொல்லி யிந்நிலத் துய்ந்தன னெனக்கலி மாவு மோதிற்றே. | 3.18.33 | 984 |
இருவகை மொழியுங்கேட் டறபி யீங்குறை தருவினை முன்னுறை தானஞ் சேர்தர வருளுகென் றுரைத்தன னாதி தூதரு மொருமொழி செல்கென வுவந்து கூறினார். | 3.18.34 | 985 |
வடவரைப் புயநபி வசனங் கேட்டலு முடைமர மிலையிலொன் றுதிர்த ராமலே படர்பணர் துயல்வர சலாம் பகர்ந்தக மடைவபோ லேகிமுன் னிடத்தி னாயதால். | 3.18.35 | 986 |
தருப்புது மைகடரத் தந்த நந்நபி திருப்பதக் தினிற்சிரஞ் சேர்க்கத் தன்மன மொருப்படச் செழுங்கலி மாவை யோதிநல் விருப்பொடு நெறியிசு லாமின் மேவினான். | 3.18.36 | 987 |
காரணக் குரிசில்நுங் கமல மாமல ரீரடி யினுஞ்சஜ தாச்செய் தேத்தியிப் பாரிடைப் பலன்பெறப் பரிவி னோர்விடை தாருமென் றுரைத்தனன் றழைத்த புந்தியான். | 3.18.37 | 988 |
அறபியிவ் வுரைதர வழகின் பேறுறத் தறைசிரம் படசஜ தாச்செய் தேத்துவ திறைவனுக் கல்லது மாந்தர்க் கில்லென முறைமையின் மறைவழி மொழிந்து காட்டினார். | 3.18.38 | 989 |
துன்னிதழ்த் தாமரைப் பாதந் தொட்டியா னென்னிரு விழிசிர மேத்த வாயினு முன்னுளத் திசைந்தரு ளுரைசெய் வீரெனப் பொன்னகங் காவலர் பொருந்தி னாரரோ. | 3.18.39 | 990 |
அருமறை முகம்மதி னம்பொற் றாளிணை யிருவிழி வைத்துமுத் தாடி யாவர்க்கும் பிரியமுற் றொருசலா மோதிப் பெட்புடன் வரிசைபெற் ற்றபிவாழ் பதியிற் போயினான். | 3.18.40 | 991 |
வழிபடு மவனைநல் வழியி லாக்கிமேற் சுழிபடு புரவியும் படையுந் துன்னவே யழிபடாப் பெரும்புக ழரசர் கேசரி பழிபடா திருந்துவாழ் பதியை நண்ணினார். | 3.18.41 |
992 |
மழைதவழ் கவிகை வள்ளன் முகம்மது தீனைப் போற்றி யெழில்பெறு மப்துல்லாவு மெண் மருங் கூண்டு சுற்றிச் சுழியெறி யாறுங் கானுஞ் சுரங்களுங் கடந்து செந்தேன் பொழிதரக் கனிக டூங்கும் பொழிலிடை யிறங்கி னாரால். | 3.19.1 | 993 |
நபிதமை விடுத்து மூன்றா நாளினி லிறங்குங் காவிற் கவினுற வெழுதிக் கட்டித் தருங்கடு தசை யேந்திப் புவிபுக ழப்துல் லாநற் புரவல ரெவருங் கேட்டுச் செவியினின் மகிழ்ச்சி கூரத் தெரிதர வாசித் தாரால். | 3.19.2 | 994 |
மக்கநன் னகரார் ஷாமுக் கனுப்பிய முதலு மற்று மிக்கவத் திரியு மாவு மீண்டவண் வருநாண் மட்டும் புக்கியங் குறைந்து கானிற் போவதற் கிடங்கொ டாமற் றிக்கறப் பறித்து வெட்டித் திரும்புமென் றிருந்த தன்றே. | 3.19.3 | 995 |
விரிந்தவா சகத்தைக் கேட்டு விரைந்தெழுந் தரச ரியாரும் பரிந்ததா யிபுக்கு மக்க மெனும்பதி தனக்கு நாப்பண் வரந்தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா வென்னும் புரந்தனி லிறங்கிப் பாதைப் புறந்தொருங் காவல் வைத்தார். | 3.19.4 | 996 |
பாயரி போன்று சின்னாட் பாதைகாத் திருப்பச் சாமிற் போயின சரக்கு மாவு மொட்டகைக் குழுவும் பொங்கித் தாயிபுக் கிப்பாற் பட்ட தெனுங்குறிப் பறிந்து தத்த மாயுத மெடுத்துச் சேர்த்துப் புரவிமே லாயி னாரால். | 3.19.5 | 997 |
பொன்னுநன் மணியுந் தூசும் புரவியொட் டகத்தி னேற்றிக் கொன்னுறைக் கதிர்வா டாங்கிக் குமரரும் வருத னோக்கி மின்னிலங் கியவேற் செங்கை முகம்மது விடுத்த வேந்தர் பன்னக நெளியத் தத்தம் பரியொடு மெதிர்ந்து கொண்டார். | 3.19.6 | 998 |
செயலறு மருவ லாருந் தீனவர் படையுந் தாக்கிக் கயினுறை கழித்த வாளின் கண்கடீக் கனலக் காதி வெயிலவன் கதிரிற் றூண்டும் வெஞ்சரந் தொடுத்து நீண்ட வயிலொடு மயில்க ணீட்டி யடுஞ்சமர் விளைத்து நின்றார். | 3.19.7 | 999 |
அமரிடை வெகுண்டு சீறிக் காபிரி லம்றென் றோதுங் குமரன்முன் னெதிர்ந்து தாவக் கோளரி யப்துல் லாகண் டிமைசுட விழித்து முன்ன ரேகித்தம் வாளால் வாசிச் சுமைகெட விரண்டு துண்டம் படவுட றுணித்து நின்றார். | 3.19.8 | 1000 |
மருவல னம்றென் போனு மாண்டபி னிருவர் தாக்க விருவருக் கிருவ ரேகி யெதிர்ந்துமற் போரிற் சேர்ந்து தரையிடை வீழ்த்தி வெளவிக் கட்டுத றனைக்கண் டேங்கி யொருவனு மோடி னான்மற் றுளர்திசை சிதறி னாரால். | 3.19.9 | 1001 |
தாரையி னெதிர்ந்த நான்கு தலைவரி னொருவன் வீந்தான் வீரர்க ளிருவர் தீனின் வேந்தர்கை யினிற்கட் டுண்டார் போரெதி ராது மற்ற வொருவனும் புறத்திற் போனான் வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகி னாரால். | 3.19.10 | 1002 |
ஒட்டகத் திரளு மேறும் புரவியு மொளிரச் சேர்த்த பெட்டகத் தொகையுஞ் செல்லப் பிடித்தவ ரிருவர் செங்கைக் கட்டுட னடத்திச் செவ்வேற் காளைய ரினிது சூழ மட்டவி ழலங்கற் றிண்டோ ண் மன்னவர் புறப்பட் டாரால். | 3.19.11 | 1003 |
எண்ணொணாத் திரகங் கைக்கொண் டெண்மரு மிலங்கும் வேற்கை யண்ணலென் றிசைக்குங் கீர்த்தி யப்துல்லா வென்னும் வேந்தும் விண்ணினுந் திசையுந் தீன்தீ னெனுமொழி விளங்கக் கூறிப் பண்ணெலாம் விழையாட் டெய்தும் பதியெனு மதீனஞ் சேர்ந்தார். | 3.19.12 | 1004 |
அறைகட லவனி காக்கு மகுமதி னிடத்தை நண்ணி முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த சிறையுடன் பொதியிற் செய்த திரகத்தின் றொகுதி காட்டித் தறுகிலா தெழுந்து போற்றி யவரவர் சார்பிற் சார்ந்தார். | 3.19.13 | 1005 |
பூசலிட் டடைய லாரைப் பொருதுவெல் லுவதற் காகா மாசபே தத்திற் பொன்னை வைத்தனர் சின்னாட் பின்ன ராசிலான் கருணை கூர வாய்த்தொன் றிறங்கை யாலே பாசமுற் றவர்கேட் கெல்லாம் பகுந்தினி தளித்திட் டாரால். | 3.19.14 | 1006 |
பிடித்தருஞ் சிறையிற் பட்ட பெயர்தலை விலைய தாகக் கொடுத்தரும் பொன்னான் மக்கா புரத்தவர் கொண்டு போனார் வடித்தசொன் மறையோர் வாழ்த்த மன்னவ ரினிது போற்றத் தொடுத்ததீன் விளங்கச் செய்து தூதுவ ரிருந்தா ரன்றே. | 3.19.15 |
1007 |
நெறியொடும் புறுக்கா னன்னேர் நிகழு மன்வருடந் தன்னிற் பெறுகதி றமலா லென்னப் பெருகிய நோன்பு தன்னை யுறுதிகொண் டெவர்க்குஞ் செவ்வி யுறபறு லாக்கி னேனென் றிறையவ னருளி னாயத் திறங்கிய தெவர்க்கு மன்றே. | 3.20.1 | 1008 |
உள்ளுறைந் தெவர்க்குந் தோன்றா துலகெலா நிறைந்த மேலோன் விள்ளுதற் கரிய வேத வழிமுறை விதித்த நோன்பை வள்ளனந் நபியு நாலி யார்களு மற்று ளோருந் தெள்ளிய மனத்தி னோடுஞ் சிறப்புடன் முடித்து வந்தார். | 3.20.2 | 1009 |
பறுலெனு நோன்பு நோற்று வருகையிற் பதினே ழாய குறைவற வெள்ளி நாளிற் குத்துபாத் தொழுத பின்னர் மறுவறு மொற்றர் தம்மில் பசுபசா வென்னும் வீரர் முறைவழி தவறா வள்ளன் முன்பணிந் தெழுந்து நின்றார். | 3.20.3 | 1010 |
வியர்வுமெய்த் தொய்வும் பூண விசித்தகச் சையுமா கத்தி னயர்வொடும் விரைவின் வந்தா யாதிதன் தீனை மாறுங் கயவர்தஞ் செய்கை யாது கண்டனை யென்ன மார்க்கத் துயர்நபி முகம்ம தின்பா லொதுங்கிவாய் புதைத்துச் சொல்வார். | 3.20.4 | 1011 |
மருக்கமழ் சோலை சூழு மக்கமா நகரின் வாழ்வு பெருக்கிநந் தீனை மாறு பேசிய தலைவர்க் குற்ற வுரக்கமு மணியுந் தேச வாணிபத் துறுதி யான சரக்குகள் சின்னாண் முன்னர் ஷாமுக்குப் போய தன்றே. | 3.20.5 | 1012 |
அந்நக ரடைந்தி லாப மிரட்டிக்கு மதிக மாறிப் பின்னரிந் நாட்டுக் கேய பெறுஞ்சரக் கனைத்துங் கொண்டு மன்னிய புரவி யேறு வரிநெடுங் கழுத்தலி யாவுந் துன்னிடச் சுமைக ளேற்றித் தொகுதிக டொகுதி யாக. | 3.20.6 | 1013 |
இருநிதிச் செல்வர் நாற்ப திலக்குறுந் தலைவர் சூழ மருமலர்த் தொடையல் வேய்ந்த வரைப்புயன் கறுபு மைந்த னருளறம் பயிலாச் சிந்தை யபாசுபி யானு மாகத் தெரிவருஞ் செம்பொற் குப்பைத் திரளொடும் வருகின் றாரால். | 3.20.7 | 1014 |
ஈதுபோ னமக்கு வாய்த்த திலையொரு காலத் தேனு மாதவ விஃதென் றோதி வாய்புதைத் தொருங்கு நின்றார் சூதர மொழியார் சிந்தை தொட்டமெய் யெழில்சேர் வள்ளல் காதினுட் புகுந்து மாற்றங் கருத்தையும் வியத்திற் றன்றே. | 3.20.8 | 1015 |
தனுச்சர வேக மானும் பசுபசா சாற்று மாற்ற நனைச்செழுந் தொடையல் வேய்ந்த தோழர்நால் வருக்குங் கூறித் தொனிச்சதிர் கடலந் தானைத் தொகைப் படைத் தலைவரியாரு மினிச்சடு தியினென் முன்னர் வருகவென் றிசைமி னென்றார். | 3.20.9 | 1016 |
அடையல ரிடியே றன்ன அபாலுபா னாவைச் செம்பொன் மடறிகழ் கமல வாவி மதீனமா நகர்க்கு மற்றப் புடைபடு நகர்க்குஞ் செங்கோற் புரந்தர ரிவரே யென்ன விடையறா மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டிருத்தி னாரால். | 3.20.10 | 1017 |
பழுதி லாதெமெய் முதலவன் பறுலெனப் பணியுந் தொழுகை நேரிமா மெனச்செயுந் தொழின்முறை சிறப்பப் பொழியு நன்மறை நாவினர் புகலுநா லெவையும் வழுவி லிபுனும்மி மக்த்தூமைத் தலைமையா வைத்தார். 3.20.11
| 1018 |
| வீரவெண் மடங்க லென்னும் விறலபூ பக்கர் வேக மாருத மடங்கத் தாவும் வயப்பரி யுமறுஞ் சேந்த கூரயி றாங்குஞ் செங்கைக் கோவுது மானும் வெற்றித் தார்கெழும் வடிவா ளேந்துந் தடப்புய அலியும் வந்தார். 3.20.12
| 1019 |
இயன்மறை தெரிமு ஹாஜி ரீன்களெண் பத்து மூன்று | பெயருமன் சாரி மாரிற் பேர்பெறுந் தலைமை மிக்கோ ருயரிரு நூற்று முப்பத் தொருபெய ரவருங் கைவா ளயருறா வெற்றி வீரத் தவருட னீண்டி னாரால். 3.20.13
| 1020 |
இருபுறக் கரட தாரை மதசல மிறைத்து நிற்கும் | பொருகரிக் கணங்க ளென்னப் புலிக்குழாந் திரண்ட தென்ன வரையிடை கிடந்து சீறு மடங்கலேற் றினங்க ளென்ன விரிகடற் றானை சூழ வேந்தர்க டிரண்டு மொய்த்தார். 3.20.14
| 1021 |
திரைக்கடற் கடுப்ப வேந்தர் சேனைகொண் டீண்டத் தாவும் | பரிக்குழா நெருங்கச் சேர்ந்த படைக்கலன் செறிந்து மின்ன மருக்கமழ் படலைத் திண்டோ ண் மலையென வளர வள்ள லருக்கனொத் தெழுந்து வெம்போ ரணிகல னணிய லுற்றார். 3.20.15
| 1022 |
தண்ணொளி விலகி வீசுஞ் சபூகெனுந் தலைச்சோ டிட்டு | வெண்ணிலாக் கதிரிள் கற்றை மின்னினைப் பொதிந்த தென்ன வண்ணவெண் சறுபாற் றொட்டு மருங்கினிற் சுருக்கி வீக்கிக் கண்ணொளி கவருஞ் சோதிக் கஞ்சுகி கவினச் செய்தார். 3.20.16
| 1023 |
ஒலியல்மே இருத்திச் செவ்வி யொளிருங்குற் றுடைவா னென்னுங் | கலிபினைச் சேர்த்த காட்சி கருதல ருயிரை நாளும் பலியெனக் கருள்வீ ரென்னப் பருமணிக் கச்சின் கையான் மலிபுகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்ற தன்றே. 3.20.17
| 1024 |
திருநபிக் கேவல் யானுஞ் செய்குவ னென்ன வெய்யோன் | வெரிநிடத் துறைந்த போல விளங்குகே டகத்தைச் சேர்த்துத் சொரிகதிர் வயிர மாலைத் தோள்வரை யிடத்திற் றோன்றி யொருபிறை கிடந்த தென்னத் தனுவொரு புறத்திற் கொண்டார். 3.20.18
| 1025 |
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை | யையனுக் கொன்று நூறா யிரமென வமைந்த வேவல் செய்வன திகாந்த மட்டுஞ் செல்வன திறத்த வெண்ணில் பெய்சரக் காபூ றென்னுந் தூணிபிற் புறத்திற் சேர்த்தார். 3.20.19
| 1026 |
மறுவிலு கைபத் தென்னு மரவயி ரத்திற் செய்த | குறுசூனுந் தண்ட மேந்திக் குலக்கொழுந் தனைய கற்பிற் பொறைமயில் கதீஜா வீந்த பொலன்மணி வேலுந் தாங்கி யிறைவனை வாழ்த்தி யேத்தி முகம்மது மெழுந்தா ரன்றே. 3.20.20
| 1027 |
தாவிடின் மனத்தை யொக்குந் தாக்கிடி னிடியே றொக்கு | மேவிடிற் றிகிரி யொக்கு மெதிர்ந்தவர்க் கெரியை யொக்கும் பூவிடத் தடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென் றோது மாவினைக் கொணர்மி னென்ன முகம்மது சரணம் வைத்தார். 3.20.21
| 1028 |
கடலினைக் கலக்க வென்றோ கதிர்துகள் படுத்த வென்றோ | வடவரை தகர்க்க வென்றோ மண்ணிலம் பிளக்க வென்றோ வடையலர் பதியை யின்னே யந்தரத் திடுக வென்றோ தடமுறுங் கடினவாசி தாள்பெயர்த் திட்ட தம்மா. 3.20.22
| 1029 |
உவரியுண் டெழுந்த காரி னொலித்தவொட் டகத்தின் பேரி | புவியிட மதிரப் பொங்க முரசங்கள் புடையி னார்ப்ப நவுரிகா களங்கள் சின்ன நரலையின் கலித்து விம்மப் பவுரிகொள் பரிமுன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம். 3.20.23
| 1030 |
பரிசைகே டகம்வாள் சொட்டை பட்டயஞ் சுரிகை தண்ட | மெரிசெய்வேல் சவளங் குந்த மிடுசரத் தூணி வல்வில் வரிசையி னிரையி னேந்தும் வயவரும் பரியு மற்றும் விரலிட மின்றி யெங்கு நெருங்கின படையின் வெள்ளம். 3.20.24
| 1031 |
மண்களி லரசு வைகும் வன்குபிர்க் களைக டீர்த்துப் | பண்கெழு மிறசூல் வேதப் புகழ்முனம் படர்ந்த தென்னக் கண்களித் தமரர் வாழ்த்தக் கடிதினு காபென் றோதும் வெண்கதிர் வெள்ளை வெற்றிக் கொடியைமுன் விரித்திட் டாரால். 3.20.25
| 1032 |
மிடலுறும் வெற்றி யுக்கா பெனுங்கொடி மிசஃபு கைக்கொண் | டடனபி முன்பு செல்ல வலிமுனங் கொடியொன் றேகத் தடமுறு மதீனா வேந்தர் தம்முனங் கொடியொன் றேக விடனறக் கவிகை வெள்ள மெங்கணும் பரந்த தன்றே. 3.20.26
| 1033 |
பரந்தகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி | விரிந்தவப் படல தூளி மறைத்தன கொடியின் வீக்க நிரைந்தன கொடியின் வீக்க மறைத்தன கவிகை நீத்தஞ் சொரிந்தன கவிகை நீத்த மறைத்தன கவரித் துள்ளல். 3.20.27
| 1034 |
படர்திரைக் கடலி னோதை கடந்தன படையி னோதை | புடைபடும் படையி னோதை கடந்தன புரவி யோதை கடுவிசைப் புரவியோதை கடந்தன கரியி னோதை தடவரைக் கரியி னோதை கடந்தன சலவாத் தோதை. 3.20.28
| 1035 |
உலம்பொரு தோளிற் றுன்னு மாலைக ளுகுத்த தேனுங் | கலன்பல வணிந்த மெய்யி னழிந்திடுங் கலவைச் சேறும் விலங்கலின் புறத்துந் தாவும் வெம்பரி விலாழி நீரு நிலன்படப் பிறந்த சேற்றா னெடும்பணை போன்ற தன்றே. 3.20.29
| 1036 |
கடிமலர்க் குவளைக் காடுங் கமலமு நெரிந்து சிந்தக் | குடைகொடி செறிந்த தொப்பக் குருகின மிரியல் போகப் புடைபடுங் கதலிச் சூழல் பூங்கரும் படவி மாய மடைசெறி தடங்கள் சூழ்ந்த மருதம்விட் டகன்று போனார். 3.20.30
| 1037 |
நீட்டிலை மிடறு சாய்த்த நெடுங்கதிர்த் தினையின் சார்பிற் | கோட்டலர் கமழுங் கூந்தற் குறத்தியர் கவண்கல் லேந்திப் பாட்டிசை மிழற்றுஞ் செவ்வாய்ப் பசுங்கிளி கடியு மோதை கேட்டினி தாமாத் துஞ்சுங் கிளைவரைச் சாரல் போந்தார். 3.20.31
| 1038 |
ஆம்பலங் குழலின் வாய்வைத் தாயர்க ளிசைக்கு மோதைத் | தேம்பினி மதுரத் தீம்பால் செவிமடுத் தினிது மாந்தி வாம்பரி வீர ரியாரு முகம்மதின் சலவாத் தோதிப் பூம்பொழிற் கொன்றை வேலி முல்லையுங் கடந்து போனார். 3.20.32
| 1039 |
விரிபரற் பொரிசெம் பாலை வெறுநிலங் கடந்து விம்மி | முரிதருந் திவலை தூற்று முகிற்குடை நிழலி னேகி யெரிவிழிப் பேழ்வாய் வெண்பன் மடங்கலேற் றினங்கள் போன்றோர் வரையிடை வயவர் சூழ முகம்மதுற் றிறங்கி னாரால். 3.20.33
| 1040 |
வடிசுதை தீற்று மாட மதீனமா நகரின் வள்ளல் | கொடுவரி யினங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண் படைகொடு முறைந்தா ரென்னும் பருவர லொற்றர் கூற வடலபா சுபியான் கேட்டோ ரடவியி னிறங்கி னானால். 3.20.34
| 1041 |
எண்ணிறத் தனைய செம்பொ னிடுஞ்சுமைத் தொகுதி யாவுங் | கண்ணென வொருங்கு சேர்த்துக் காவலி னிருந்து நேமி மண்ணகம் பரவு மக்கா மாநக ரரரசர்க் கெல்லாம் விண்ணபத் திரத்தைக் தீட்டி விரைவுட னனுப்பி னானால். 3.20.35
| 1042 |
பத்திரஞ் சிரசி னேந்திப் பாதைவிட் டொருபாற் சென்று | குத்திரப் புறங்க ணீந்திக் கொடுமரச் சரத்தி னேகிப் புத்தொளி விரிக்கு மாட மக்கமா புரத்தின் வேந்தர் மொய்த்தபே ரவையி னண்ணி வைத்தனன் முடங்க லன்றே. 3.20.36
| 1043 |
அபுஜகல் முதன்மற் றுள்ளோ ரனைவரும் திரண்டு வைகிப் | கவினுறும் ஷாமுக் கேகி வருமவர் கடிதிற் றீட்டி யிவண்விடுத் தனுப்பு மோலை தனைவிரித் தியம்பு கென்னச் செவிவழி புகுதக் கேட்டோ ர் செவ்வியன் வாசிக் கின்றான். 3.20.37
| 1044 |
ஷாமெனும் பதியை நீந்தித் தலவர்நாற் பதின்மர் சூழ | வேமமும் பண்டமியாவுங் கொண்டியான் வருவ கேட்டு மாமதி னாவின் வைகு முகம்மது படைகோ டெய்திப் பூமனு முபய மார்க்கப் பொறையிடத் திறங்கி னானால். 3.20.38
| 1045 |
இன்னணம் பதியி லுள்ளோ ரியாவருந் திரண்டு பூவிற் | பன்னரும் படைகொண் டீண்டிப் பாதையி னாப்பண் வைகு மன்னவன் முகம்ம தென்போன் வலிகெடுத் தவனை வீழ்த்தி நந்நிலை யெடுத்துச் சீர்த்தி நாட்டுத றுணிதல் வேண்டும். 3.20.39
| 1046 |
இல்லெனி லெம்மோ டுற்றோ ருயிர்செகுத் தெனையு மாய்த்துச் | சொல்லரும் பணியும் பண்டத் தொகுதியுங் கவர்ந்து வாரி யொல்லையிற் கொடுபோய்த் தன்னூ ருறைகுவ னுறுதி யென்ன மல்லலம் புயத்தான் றீட்டும் பாசுரம் வாசித் தானால். 3.20.40
| 1047 |
ஓலைவா சகத்தை கேட்டங் குயர்பதித் தலைவ ரியாரு | மாலையும் புயமும் வாகு வலயமுங் குலுங்க நக்கிச் சீலமு மறனுந் தேய்த்த சிறுவரி லொருவ னின்னே சாலவும் வலிய னென்றாற் சாற்றுவ தென்கொண் மாதோ. 3.20.41
| 1048 |
அடவியற் கரந்து பாதை யவர்களைத் தடிந்து முன்ன | ருடைமைகோ டுறைந்தா னம்மாற் காப்பதொன் றின்மை யாலே படையொடு மின்னும் வந்தா னினிப்பகை தவிர்த்தி டேமாற் புடவியின் முகம்ம தென்போன் புகழ்நிலை நிறுத்து வானால். 3.20.42
| 1049 |
அருநிதிக் கிடையூ றாய்வந் தடுத்தவன் றன்னை யின்னே | பொருதடர்ந் தவனை வீழ்த்தி யாவிவிண் புகுத்தே மாகிற் பரவைசூழ் நிலத்தி னந்தம் படைக்கலன் சுமந்த கையி னுரமென்னாம் வீர மென்னா முயர்குடித் தலைமை யென்னாம்? 3.20.43
| 1050 |
எனவெடுத் திசைத்த மாந்தர்க் கெதிரிருந் தகத்தி னக்கி | வினையமுற் பவித்த புந்தி யபூஜக லென்னும் வீரன் மனமுமுள் ளறிவு முட்க வயிரமு மறனும் பூணச் சினமொடுங் கண்கள் சேப்ப வொருமொழி தெரிந்து சொல்வான். 3.20.44
| 1051 |
பிறந்தநாட் டொடுத்து வாய்வீண் பேசுவ தலது நம்மான் | மறந்தரப் புகழே தேனும் வாய்மையின் முடித்த துண்டோ அறந்தவிர் நமர்கட் கெல்லா மாண்மையின் பெயரு முண்டோ வெறுந்தரை தடவன் மாற்றம் விடுமின்கள் விடுமி னென்றான். 3.20.45
| 1052 |
ஆட்டிறத் தனைய வீர னபூஜகு லுரைத்த மாற்றங் | கேட்டலுந் தலைவ ரெய்தாக் கோபத்தீக் கிளரப் பொங்கி நீட்டிய வுயிர்ப்பு வீங்கி நெடுங்கரம் பிசைந்து விம்மித் தோட்டுணை வரைக ணோக்கி வீரத்திற் றுணிந்து நின்றார். 3.20.46
| 1053 |
மறித்தெதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை யின்னே | தறித்தபா சுபியான் றுன்பந் தவிர்த்திடே மாகி லியார்க்குங் குறித்துயிர்க் குயிராய் நின்ற குபலெனுந் தம்பி ரானை வெறுத்தழற் குழியில் வீழும் வீணர்க ளாவே மென்றார். 3.20.47
| 1054 |
தனதுயிர்த் தலைவ ரிந்த வஞ்சினஞ் சாற்றத் தீமை | புனையபூ ஜகுலென் றோதும் புன்மையன் றானும் வாளான் முனைமுகம் மதுவை வீழ்த்தி முடிதுகள் படுத்தே னாகின் மனைவியைப் பிறருக் கீந்த மதியிலி யாவே னென்றான். 3.20.48
| 1055 |
அரசபூ ஜகல்சொன் மாற்ற மனைவர்க்கு மிஃதே யென்னப் | புரவல ரெவரு மொத்துப் பொருபடை யாவுந் தத்த நிரையொடும் வருக வென்ன முரசநீண் மறுகு தோறும் விரைவொடு மறைக வென்றா ரன்னது விளக்கி னாரால். 3.20.49
| 1056 |
முரசதி ரோதை கேட்டு மொய்ந்ந்க ருள்ளோ ரெல்லாம் | விரிகதி ரெஃகங் கூர்வாள் வின்மழுச் சவளங் குந்தங் கரதலத் தேந்தித் தாவுங் கடும்பரித் திரளி னோடு மிருளறுங் ககுபத் துல்லா வெனுமிடத் தெய்தி னாரால். 3.20.50
| 1057 |
கேடக மருங்கு சேர்த்துக் கிளரொளி வடிவாட் டாங்கிச் | சோடணிந் தரிய செம்பொற் சுடர்மணிக் கடகம் பூண்டு தேடரும் வெற்றி மாலை சென்னியி னிலங்கச் சூடி யாடலம் பரியி னேறி சைபத்து மவணின் வந்தான். 3.20.51
| 1058 |
வெஞ்சின மடங்க லென்ன வெகுளியி னெழுந்து சேந்த | கஞ்சுகி யணிந்து சந்தக் கதம்பமான் மதங்கள் பூசிச் செஞ்சுடர் மணித்தண் டேந்தித் திரண்மணிப் புயங்கள் விம்ம வஞ்சினங் கூறித் தாவும் வாசிமே லுமையா வந்தான். 3.20.52
| 1059 |
மணியணி பலவுந் தாங்கி வச்சிர வுடைவாட் சேர்த்துக் | கணைசொரி தூணி வீக்கிக் கார்முகங் கையி னேந்தி யணியணி வீரர் சூழ வாலயம் புகுந்து தாழ்ந்து பணிதர குபலைப் போற்றி யுத்பத்தும் பரியின் வந்தான். 3.20.53
| 1060 |
சுரிகையை மருங்கு சேர்த்துச் சொரிகதி ரிலைவே லேந்திக் | குரகத நடத்தி வெல்வேற் குமரர்கள் பல்லர் சூழ வரியென வெகுளி பொங்கி யாண்மையும் வலியுங் கூறி விரிதருங் கவிகை நீழ லபூஜகல் விரைவின் வந்தான். 3.20.54
| 1061 |
இன்னன வேந்த ரோடு மெண்பஃ தரசர் மொய்ப்ப | வந்நக ரறபிக் காபி ராயிரம் பெயர்கள் சூழ மன்னிய சீறூ ருற்ற மைந்தர்க ளெவரு மீண்ட பொன்னக ரென்னு மக்கா புரத்தினிற் புறத்துற் றாரால். 3.20.55
| 1062 |
காணுதற் கிறுதி யில்லாத் திறத்தினர் கவலும் வெற்றிப் | பூணின ருயிரை யீந்து புகழினை நிறுத்தும் பொற்பார் மாணுறுங் கிரியுங் கீறி வகிர்ந்தெடுத் தெறியும் வல்லார் சேணுற நிவந்த வூழித் தீயையு மவிக்கு நீரார். 3.20.56
| 1063 |
புடவிதொட் டெழுந்து வானிற் போவன போன்று மேன்மேற் | படர்திசை யெட்டு மெட்டிப் பறப்பன போன்றுந் துள்ளிக் கடிதிரை யுவரி யேழுங் கடப்பன போன்று வாகை விடுவிடென் றதிர்ந்து தாவும் வெம்பரிக் குழுவின் வேகம். 3.20.57
| 1064 |
பரிகளிவ் வண்ணஞ் சான்ற நிலம்பரப் பின்றித் தோன்ற | வெரிவிழி கலுழ வேந்த ரிளையருங் குழாங்கொண் டீண்ட வரமுறும் வெற்றி வள்ளன் முகம்மதை வெல்வே னென்னப் பொருபடைப் பெருக்க நோக்கி யபூஜகல் பூரித் தானால். 3.20.58
| 1065 |
வயிரொடு சின்ன மார்ப்ப வலம்புரி முழங்க வாரி | பெயுமுகி லிடியே றென்னப் பேரிகைக் குழாங்கள் பொங்க வெயிலவன் கதிர்க டோ ன்றா வெள்ளைவெண் கவிகை மொய்ப்பத் துயல்வருங் கொடிக டுன்னத் துரகத நடத்தி னாரால். 3.20.59
| 1066 |
கதக்கடல் பரந்த தென்னக் கடந்தெழுஞ் சேனை வெள்ளப் | பதத்துக ளெழுந்து மேகப் படலங்க ளனைத்து மூடி மதித்தவெண் டிசையுந் திக்கும் வானினுஞ் செறிந்து நாளு மதிர்த்திரைப் பரவை வேலை யலையையுஞ் சுவற்றிற் றன்றே. 3.20.60
| 1067 |
பவளங்கள் குலைசாய்த் தென்னப் பழுத்தசெஞ் சாலிக் காடுந் | தவளவெண் டரளஞ் சிந்துஞ் சலஞ்சலத் தடமுங் காவுந் திவளொளிக் குவளைக் காடுந் திசையெலாம் வழிய தாக விவளவென் றெண்ண வொண்ணா தெழுந்தன சேனை வெள்ளம். 3.20.61
| 1068 |
அடவிக ணெரியக் கானி னாறுகள் சேற தாகப் | புடைபடு மிறும்புங் கல்லும் பொடி படு நூறதாகத் திடரிடங் குழிய தாகக் குழியிடந் திடர தாகப் படர்கொடி விசும்பு தூண்டப் படைக்கட னடந்த தன்றே. 3.20.62
| 1069 |
கவிகையி னெருக்க மென்கோ கவரியி னெருக்க மென்கோ | சிவிகையி னெருக்க மென்கோ செழுங்கொடி நெருக்க மென்கோ குவிபரி நெருக்க மென்கோ கொற்றவர் நெருக்க மென்கோ சவுரியர் நெருக்க மென்கோ யாதெனச் சாற்ற மாதோ. 3.20.63
| 1070 |
விரிபெருங் கடலந் தானை வெள்ளமீக் கெழுந்து பாலைப் | பரல்வழி கடந்து வேற்றுப் பாடிக ளகன்று முட்சார் பொரியரைக் காடு நீந்திப் பொருப்பிட மனைத்தும் போக்கி யிருளறற் கொழிக்குங் கான்யாற் றிடத்தினி லிறுத்த தன்றே. 3.20.64
| 1071 |
அரியுளைக் கேச பந்தி யாடலம் பரிக ளியாவு | நிரைநிரை நிரைத்துப் பேரிச் சுமைநெடுங் கழுத்தல் சேர்த்து முருகுமிழ் வெற்றி மாலை முரட்படை வேந்தர் வீரர் வரிவயப் போத்துச் சூழ்ந்த மடங்கலின் வகி னாரால். 3.20.65
| 1072 |
விண்கணி னமர ரியாரு மெல்லடி பரவி போற்று | மொண்கதி ருருவ வள்ளற் குறுபகை யாகிக் கூண்ட புண்கதி ரெஃக மேந்தும் புரலவர் முகநோக் காது கண்களைப் புதைத்து வெய்யோன் மேற்றிசைக் கடலு ளானான். 3.20.66
| 1073 |
கதிரவன் கடலிற் புக்கான் கங்குலங் காலைப் போழ்தி | னதிர்கட றுயிலு மாறா யனைவருந் துயில்வ தானார் சதிவர வறியாச் சிந்தை யபூஜகல் தானு மற்றக் கொதிநுனை வேலி னோருங் கொடுங்கன வடுப்பக் கண்டார். 3.20.67
| 1074 |
வெருவருங் கனவு தோன்ற விழித்தெழுந் தரச ரியாரு | மொருவருக் கொருவர் விள்ளா துள்ளத்தி னொடுக்கா நின்றா ரெரிகதிர்ப் பரிதி வெய்யோ னெழுந்தன னெழுந்த பின்னர் முரசுசங் கொலிப்பப் பொங்கி யெழுந்தது மூரித் தானை. 3.20.68
| 1075 |
கடுநடைப் புரவி வெள்ளத் தொட்டகங் கலித்துப் பொங்க | மிடலுடைக் கதிர்வெள் வேலும் வில்லொடு மிடையத் தாங்கிப் படரரி யினங்க ளென்னக் காளையர் பல்ல ரேக விடுகொடை கவிப்ப மன்ன ரேகியோர் புறத்தி லானார். 3.20.69
| 1076 |
ஷாமினின் றெழுந்த பின்னர் தம்படை யலது வெற்றி | மாமதிட் புரிசை மக்கா மாநகர்ப் படையி னோடு மாமதி யறியாச் சிந்தை யபூஜகல் வந்த வாறுந் தோமறு மொற்றர் வள்ளன் முகம்மதுக் கறியச் சொன்னார். 3.20.70
| 1077 |
இருவ கைப்பெரும் படையும்வந் தடுத்ததென் றிசைப்ப | மரும லர்ச்செழும் புயநபி முகம்மது கேட்டுத் திருகு வெஞ்சினத் திருநிலம் பிளந்துமண் சிதறப் பொரும றாமத கயமென விருக்குமப் போழ்தில். 3.20.71
| 1078 |
முகிற்ப ரப்பிய நிழல்வரு முகம்மது தமக்குப் | பகுப்ப தற்கிட மில்லெனும் பரம்பொரு ளருளா லிகற்ப டும்பகை யிரண்டிலொன் றுமதுகை யிடத்தி னகப்ப டுத்தின னெனுமொழி யிறங்கிய தன்றே. 3.20.72
| 1079 |
ஒக்க லின்புக ழபூபக்கர் தமையர சுமறை | மிக்குத் தாதைமற் றுளமதி யரையெதிர் விளித்துப் பக்க லின்புற விருத்திவெண் ணினும்புகழ் பரப்புந் தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவ ரன்றே. 3.20.73
| 1080 |
படரும் வெம்பகை யிரண்டிலொன் றுமதுகைப் படுமென் | றுடைய நாயக னாயத்து மிறங்கின துலவிச் சுடரும் வேற்படை யபூஜகல் தனைத்துணி துணிப்பப் புடவி மேலமர் விளப்பதோ வல்லது புகழீர். 3.20.74
| 1081 |
அரும்பு மென்மலர் வாவிசூழ் ஷாமிருந் தடுப்ப | வரும்பெ ரும்பொரு ளனைத்தையும் படையுடன் வளைந்து கரம்ப டுத்திடத் துணிவதோ கருத்தினிற் றெளிந்து விரும்பி ரண்டிலொன் றுரைமின்க ளெனுமொழி விரித்தார். 3.20.75
| 1082 |
வனையு நீண்முடி முகம்மது முரைப்பவண் டரளம் | புனையு மார்பினர் கருத்தினுண் மதியெலாம் பொருத்தி நினைவி னேர்வழி யிஃதுமுத் திரையென நிறுத்திக் கனைகொள் வாம்பரி மன்னபூ பக்கர்கட் டுரைப்பார். 3.20.76
| 1083 |
அறமு மின்பமும் வளர்த்திடு முலகெலா மளிப்பத் | திறன ளித்திடுஞ் சேரலர் பகையையுஞ் சிதைக்கும் வெறுமை கண்டவர் தம்மைமேன் மையரென வியந்து நிறையி லாப்பெரும் புகழ்தரு முலகினி னிதியே. 3.20.77
| 1084 |
என்னு நீர்மையிற் சாமினி லிருந்திவ ணடைந்த | பொன்னை யாம்வசப் படுத்துத னன்கெனப் புகழு மன்ன தோற்றுதெற் கெனவினி துரைத்தனர் மகிழ்வி னன்ன தேகருத் தெனவிரு வருமறைந் தனரால். 3.20.78
| 1085 |
மாது லன்முதன் மூவரும் வழங்கிய வசனங் | காதி னுற்றருங் காரணர் கருத்தினுட் படுத்திச் சீத நன்மொழி யொடும்பல ருடனினந் தெரிந்து போத மின்புறச் சொலுமின்க ளெனுமொழி புகன்றார். 3.20.79
| 1086 |
மந்தி ரத்தினிற் றலைவரு முரிமைமன் னவருந் | தந்தி ராதியன் ஸாரிக ளெனுந்தகை மையரு நந்தம் புந்தியி னடத்துதற் பழுதென நடுங்கிக் கந்த மென்புய நபிதிரு முனங்கழ றுவரால். 3.20.80
| 1087 |
மேலே வன்றிரு மொழிவழி யுலகினை விளக்கிக் | கோன டாத்திய செழுமுகிற் கவிகையங் கோவே கால மூன்றையுந் தெரிந்தநுங் கருத்தினுக் கிசைவ போலும் புந்தியிற் சொலுமவ ரெவரிரும் புவியில். 3.20.81
| 1088 |
அடிகள் புந்தியி னிருந்தவை யுரைக்கிலவ் வழியே | முடியு மெங்களா லுரைப்பதென் ? முரணடை யலரைத் தடிமி னென்றலுந் தடிகுவ மெமர்கடம் முயிரை விடுமி னென்றலும் விடுகுவ நுந்திரு வுளத்தால். 3.20.82
| 1089 |
உயிர்க்கு றுந்துணை யவர்களிவ் வுரையெடுத் துரைப்பக் | குயிற்கு லங்கவி தருநிழல் வருபெருங் குரிசில் வெயிற்ப டுங்கதி ரவனென தீனிலை விளக்கக் கயிற்ப டும்பொரு ளெனவொரு மொழிகழ றுவரால். 3.20.83
| 1090 |
பந்தி நீடிய தெருத்தொறும் பலமணி குயிற்றி | யிந்து தீண்டிய மேனிலை ஷாமினி லிருந்து வந்த பொன்னொடு மாந்தரைச் செலும்வழி மறித்து நந்தத் தாக்குத லிருப்பப்பின் னொருமொழி நவில்கேன். 3.20.84
| 1091 |
மக்க மாநகர ரவரபூ ஜகுலுரை வழியி | னொக்கல் கூட்டுற வறபிக ளெவரும்வந் துறைந்தார் புக்கி யங்கவர்ச் செகுத்துநம் புகழ்நிலை நிறுத்தற் கிக்க ணந்துணி வதுபெருங் கருமமென் றிசைத்தார். 3.20.85
| 1092 |
மதித்தி டாப்பெரும் பொருளொளி வினில்வடி வழகா | யுதித்த நன்னபி யுரைத்தலு முயிரெனு முரவோர் கதித்த மாக்கட லெனும்படி யகங்களிற் களிப்ப விதித்த திம்மொழி துணிவது மிவையென விசைத்தார். 3.20.86
| 1093 |
புடைக்கும் பேரொலிப் பல்லியந் தொடுகடற் பொருவக் | கொடிக்க ணந்திரண் டிருவிசும் பிடைவெளி குறைப்பப் படைக்க லத்தொடு மெழுந்துபோய் பதுறெனும் பதலை யடிக்குக் கீழ்புறத் தெல்லையி னிறங்கின ரன்றே. 3.20.87
| 1094 |
ஆதி நீண்மதிள் ஷாமினி லிருந்துவந் தவரும் | பாத வத்திட முகம்மதன் றிறங்குபா சறைக்குக் காத மாமெனக் கடற்கரைப் புறத்தினிற் கடிதி னேத மின்றிய பெருநிதி யொடுமிறங் கினரால். 3.20.88
| 1095 |
விரைசெய் மெய்நபி பாசறை யடுப்பத்தென் மேல்பா | லருவி யாறும்வன் பொருப்புமுண் டதற்குமப் புறத்திற் பரியுஞ் சேனையு மிடைதர வபூஜகல் படையு மொருவ ருந்தெரி யாவண மவணில்வந் துறைத்த 3.20.89
| 1096 |
வரையி டத்தினுங் கடற்கரை யிடத்தினும் வனத்தும் | பெருகுஞ் சேனைகொண் டிறங்கிவெம் பேரமர் விளைப்ப வொருவர் தம்படைச் செய்தியங் கொருவர்தம் படைக்குத் தெரிகி லாதிருந் தனர்செழுந் திறல்வய வேந்தர். 3.20.90
| 1097 |
பற்ற லாருறை யிடந்தெரி தரச்சில பகுப்பா | யொற்ற ரைத்திசை திசைவிடுத் தனரவ ரோடி வற்று றாப்பெரு நதிகளும் வனங்களு மலையுஞ் சுற்றிப் பார்த்தவர் வரும்வழி தனிலொரு சுரத்தில். 3.20.91
| 1098 |
நறவு தூற்றிய பொழிறிகழ் மக்கமா நகரி | னறபிக் காபிர்கள் பெருஞ்சுமைத் திரளினொட் டகமும் பிறவுங் கொண்டிவண் வருதல்கண் டிமைப்பினிற் பிடித்து வெறிக மழ்ந்தமெய் முகம்மதின் றிருமுனம் விடுத்தார். 3.20.92
| 1099 |
இறுங்கு கோதும்பை நென்முத லியபல வேற்றிப் | பிறங்க லின்வனம் விடுத்தரும் பெருஞ்சுர வழியின் புறங்க டந்தெவ ணேகுவிர் புகலிட மியாதென் றறங்கி டந்தசொன் முகம்மதங் கவர்களைக் கேட்டார். 3.20.93
| 1100 |
பருகு றாக்கொடும் பாலையிற் பெரும்புனல் படுத்து | முருக றாதமெய் முகம்மது திருமுக நோக்கி யிருகி றாமலை மக்கமா நகரிடத் திருந்து வருகி றோமென வுரைத்தன ரறபிவங் கிடத்தார். 3.20.94
| 1101 |
விலகு நீள்கதிர்ச் சுதைநிலைச் சாமினை விடுத்துக் | குலவு மொட்டகத் திரளொடும் பலருடன் கூடி யிலகும் வேற்கைய பாசுபி யானெவ ணுறைந்தான் சொலுமி னீவிரென் றுரைத்தனர் நபியிற சூலே. 3.20.95
| 1102 |
துடவை சுற்றிய ஷாமினைத் துறந்தவ ருறைந்த | விடமு மெல்லையு மறிகில மபூஜகு லென்போ னுடனெ ழுந்துத் பத்துசை பத்துமை யாவும் படையும் வெம்பரிக் குழுவுட னிறங்கினர் பரிவின். 3.20.96
| 1103 |
பதுறு மாமலைக் கப்புற மிருக்குமன் னவர்க்குப் | புதிய போசன வருக்கங்க ளிவைகொடு போந்தே மிதுகொ லியாமறிந் தவையென வறபிக ளியம்பச் சுதின மின்றென வுரைத்திறை யவன்றனைத் துதித்தார். 3.20.97
| 1104 |
அறபிக் காபிர்க டமையொரு தலத்தினி லாக்கிப் | புறம டைந்தக லாதுவன் காவலிற் புகுத்தி யிறுகக் கட்டிய வொட்டகைச் சுமைகளை யிறக்கி மறுபு றத்தினி லிருத்துமென் றனர்முகம் மதுவே. 3.20.98
| 1105 |
வலிய வீரர்க ளெழுந்து நந்நபிமொழி வழியே | பொலிவு றுஞ்சுமை யனைத்தையு மொருபுறத் தாக்கிக் கலின வாம்பரி யறபிக டமையுமக் கணத்தி லொலிகொள் பாசறைக் குள்ளுறப் புகுத்தின ரொருங்கே. 3.20.99
| 1106 |
கவசம் போலுங்கண் போலுநற் காயத்தி னுறைந்த | நுவலு தற்கரு முயிரெனுந் துணைவரை நோக்கி நபிக ணாயக மகக்களி நனிகனிந் தொழுக மவுல லுற்றனர் தெரிதர வொருதிரு வசனம். 3.20.100
| 1107 |
கூறு மக்கநன் னகரவர் குழுவுடன் கூடி | மாறு கொண்டிவ ணடைந்தன ரொல்லையின் வளைந்து பாறு கொண்டுண வெஞ்சமர்க் களத்திடை படுத்தற் கீறி தன்றிப்பின் வேறொரு சமயமு மிலையால். 3.20.1010
| 1108 |
இற்றைப் போதினில் வாய்த்ததிங் கடலிறை யோனும் | வெற்றி தந்தனென் றாயத்து மிறக்கினன் விரிநீர் வற்று றாக்கடற் புவியினில் தீன்பயிர் வளர்க்கப் பெற்ற மென்றிய னபிமனம் பிரியமுற் றுரைத்தார். 3.20.102
| 1109 |
ஈது முத்திரைப் பொருளென யாவரு மிசைந்து | மோது பேரலை மடுக்களுஞ் சுனைகளு முருகார் தாது குத்தவெள் ளருவியு மலையடிச் சார்புங் காது மாற்றலர்க் கிடமறக் காவலிற் பொதிந்தார். 3.20.103
| 1110 |
அற்றைப் போதுபுக் கடைந்தபின் பாசற யனைத்தும் | பற்ற லார்க்கிட மறத்தலைக் காவலிற் படுத்தி வெற்றி வேந்தர்க ளிருந்தன ரிருளற விளக்கி யொற்றை யாழிவெய் யவன்கதிர் விரித்துதித் தனனால். 3.20.104
| 1111 |
விடிந்த காலையி லபூஜகு லெனுமடல் வீர | னடைந்த பாசறை யெழுகவென் றெழுமுர சதிரக் கடந்த தும்பிய களிரெனு மரசருங் கணமும் படர்ந்த வெம்பரிக் குழுவுட னெழுந்தனர் பரந்தே. 3.20.105
| 1112 |
கோல வட்டவெண் கவிகையு நெடுங்கொடித் காடு | மால வட்டமுங் கேகயப் பீலியு மணியாய் வேலை வட்டவெண் டிரையெனக் கவரியின் வீச்சும் நீல வட்டவொண் விசும்பிட னறநெருங் கினவே. 3.20.106
| 1113 |
பேரி காகள மதிர்தர வபூஜகல் புறப்பட் | டார வாருதி முகம்மது திசையறி யாமற் பாரின் மின்குலம் பரந்தென வேலொளி பரப்பி வீரர் சூழ்வர வரவுகண் டவர்விளம் புவரால். 3.20.107
| 1114 |
இகன்ம னத்தபூ ஜகல்பெரும் படையுட னெழுந்து | தகைவி னம்படை யுறைவது தனையறி யாம லகல்வ தன்றிநம் மெதிரடுத் தடைந்தன னெனுஞ்சொற் பகர்வ தாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே. 3.20.108
| 1115 |
ஒன்ன லார்படை யுறுவதென் றுரைவழங் கிடவே | கன்னி மாப்பெருந் தொகுதிக டமையலங் கரித்து மின்னு குற்றுடை வாளெடுத் தரையினில் விசித்து மன்ன ரியாவரும் போரமர்க் கோலங்கள் வனைந்தார். 3.20.109
| 1116 |
உதித்த திங்களின் சவிகெடக் கவிகைக ளொளிரப் | பதித்த லத்தினும் விண்ணினும் கொடித்திரள் பறப்பக் கதித்த வெம்பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதி னிதத்த நன்மறை முகம்மது நபியுட னெழுந்தார். 3.20.110
| 1117 |
சின்னம் பூரிகை பேரிகை தவில்பறை திடிம | னின்னி யம்பல முழக்கலிற் புவிசெவி டெடுப்ப மன்னர் பேரணி கலனொளி பருதியின் மலிய நன்ன யசல வாத்தொடும் வாழ்த்தொடு நடந்த 3.20.111
| 1118 |
கொதிகொள் வேலினர் வரிப்புலிக் குழுவெனக் குழுமப் | பதலை யின்புறம் விடுத்தடற் படைகொடு நடத்தி யெதிரி லான்றுணை யொடுமொரு திடரைவிட் டிறங்கிப் பதுறெ னுந்தலத் தாயினர் முகம்மது நபியே. 3.20.112
| 1119 |
ஹபீபு தம்பெருஞ் சேனையுங் கவிகையுங் கொடியு | மபூஜ குலுடன் வருபவ ரெவருங்கண் டறிந்தா ரபூஜ கல்பெருந் தானையுந் துவசமு மார்ப்பும் ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவிற்கண் டறிந்தார். 3.20.113
| 1120 |
திருகு வெஞ்சினக் கடகரி யனைவர் திரளை | யரசர் கேசரி யெனவரு மகுமது நோக்கி யிருநி லத்தினிற் றருவெனு மிருகர மேந்திச் சுருதி வல்லவன் றனையிரந் தொருமொழி சொலுவார். 3.20.114
| 1121 |
உன்னு முன்றிரு மறைபடி றெனவுமிவ் வுலகி | லென்னை யுந்திருத் தூதனு மலவென விழிவாய்ச் சொன்ன காபிர்க ளடைந்தன ரிவருட றுணிப்ப மின்னும் வாள்வலி யெனக்கரு ளெனவிளம் பினரால். 3.20.115
| 1122 |
இந்த நன்மொழி யிறையவ னிடத்திரந் தேத்தி | யந்த ரத்தினி லமரரா மீனொலி யதிரக் கந்து கத்திருந் தருமறை பாத்திஹா வோதிச் சுந்த ரப்புயத் துணைவரை யருளொடு நோக்கி 3.20.116
| 1123 |
பேத வஞ்சமன் னவர்கடம் பெயர்களைக் குறித்துச் | சோதி மென்கர மெடுத்திரு நிலத்தினைச் தூண்டி யேத முற்றுயிர் விடுமிட மிஃதிஃ தெனவே பூத லம்புகழ் திருநபி வாக்கினிற் புகன்றார். 3.20.1173
| 1124 |
கருத லார்படு களமிது தலமெனக் காட்டிச் | சுருதி நூன்முறை பெருக்கிய நாவினர் சூழ விருது நீள்கொடி யிருபுற முலவிமேல் விளங்கப் பருதி போற்பெரும் புகழ்நபி படையணி வகுப்பார். 3.20.118
| 1125 |
கடகரித்திர ளெறிந்தரும் புலவறாக் கதிர் வேற் | பிடிக்கும் வெற்றியஸ் ஹாபிக ளினிற்சில பெயரை வடிக்கு மாமறை யவரிடத் தினில்வர வழைத்து நடிக்கும் வெம்பரி யினருளந் தெரிதர நவில்வார். 3.20.119
| 1126 |
செறுநர் வெம்படை யடரினு மிவண்சித காமல் | விறள்கொள் வில்லினிற் பொருவதல் லதுகதிர் விரிவா ளுறையை நீக்கலென் னுறைபிறந் ததற்பினென் றுரைத்து நெறியி னோரிட நிறுத்தினர் நிலைதவ றாதார். 3.20.120
| 1127 |
நிகரின் மன்னவர்க் கினிதுரைத் தொருதல நிறுத்திச் | செகத லம்புக ழபூபக்கர் செழுமுக நோக்கி யிகல றுந்தனி முதலவ னுதவிகோ டிவணிற் ககனி ழிந்தம ராதிபர் வரவுகண் டனனால். 3.20.121
| 1128 |
ஒங்கல் போலுமை யாயிர மலக்குக ளுடனே | நீங்கில் பஞ்சகலி யாணியிற் றமனிய நிறத்த பாங்க ரின்சரு வந்தணிந் தரும்படைக் கலன்க டாங்கி விண்ணிடை யெதிர்ந்தன ரிருவிழி தழைப்ப. 3.20.122
| 1129 |
எந்த னாருயிர் ஜிபுறயீ லிவணம ரடுத்து | வந்து நின்றனர் வெற்றியும் பிடித்தவாள் வலியு மந்த நாயக னமக்களித் தனனென வறைந்தா ரிந்து வந்தெதிர் பகிர்தரப் பகர்தரு மிறசூல். 3.20.123
| 1130 |
அலியை யும்புகழ் தரும்ஹமு சாவையு மடல்வாள் | வலிமை மிக்குபை தத்தையு மூன்றணி வகுத்துச் சிலைகொள் வெம்பரி வீரர்கள் கணம்பல செறிய நிலைகொ ளும்படி தாமுமோ ரணியென நின்றார். 3.20.124
| 1131 |
அபுஜ கல்முத லுத்பத்து மவன்மக னொலீதும் | பவுரி வாம்பரி சைபத்தும் பெருபடைக் கடலு நவுரி பம்பைக ளார்த்திட நாலுகை யாகப் புவன மெங்கணு நடுங்குற நடத்தினர் புரவி. 3.20.125
| 1132 |
முதிரும் பூசல்கொண் டிருபெரும் படைகளு முன்னி | யெதிருங் காலையி லபூஜகல் கரமெடுத் தேந்திப் பதியி ருந்துற முறைகளைப் பழித்தபா தகரைச் சதிப டுத்திறை வாவெனத் தனியிரந் தனனால் 3.20.126
| 1133 |
எட்டிக் கொண்டெமக் குமக்கென விருக்குமவ் விடத்திற் | சுட்டிக் கொண்டவ ரிவரெனப் பெயர்களைத் தொகுத்துத் தட்டிக் கொண்டுகை யேந்திநின் றிரந்தவன் றனைத்தான் றிட்டிக் கொண்டது போலிருந் தனசொலுந் திறனே. 3.20.127
| 1134 |
உறுசி னத்துத் பத்துசை பத்துட னொலீது | முறுகு வெஞ்சின வெகுளியிற் புருவங்கண் முரியத் தெறிக னற்பொறி தெறித்திமை விழிக்கடை தீயத் தறுகி லாதுமுன் னடத்தினர் துரகதத் தளத்தை. 3.20.128
| 1135 |
தேன் றிகழ்ந்தபொற் புயவரைச் செழுந்திற லலியு | மூன்ற தும்புவே லுபைதத்து மடையல ருடலங் கீன்ற வேல்ஹமு சாவும்வெம் படைகொடு கெழுமி மூன்று பேருமம் மூவர்க ளெதிரின்முன் னினரால். 3.20.129
| 1136 |
படர்தென் கீழ்த்திசை யிறையவன் சுடுகனற் படையும் | வடவை யும்வெகுண் டெதிர்மலைந் தெனவளை கிரியும் புடவி யுள்விழக் கடல்சுவ றிடப்பணி புரள விடன றத்தனி தாக்கின வெதிரிரு படையும். 3.20.130
| 1137 |
முரசு துந்துமி திண்டிம முருடுமெல் லாரி | பெரிய காகள நவுரிபூ ரிகைதவில் பேரி யிருவ கைப்படை யினுங்கிடந் தெழுந்தபே ரோதைக் குரவு நீர்ப்பெருங் கடலொலி காண்கிலா தொளித்த. 3.20.131
| 1138 |
பரிக்கு ரத்தினு மாடவர் தாளினும் பரித்துத் | துரக்குந் திண்வளை யுருளினும் பிறந்தவத் தூளி யெரிக்கும் வெங்கதிர் வெய்யவ னிடந்தெரி யாம னெருக்கி நின்றது திசையினும் விசும்பினு நிறைந்தே. 3.20.132
| 1139 |
படல தூளிகண் மேகத்தி னிறைந்தபஃ றிசையு | மிடிக ளொத்தவின் னாணொலி வீரர்க ளெதிர்ந்து தொடுகை வாளொலி மின்னெனப் பலதுடி துடிப்பக் கடிகொண் மாமழை சொரிந்தெனச் சொரிந்தன கணைகள். 3.20.133
| 1140 |
பரவை யொத்தன சேனையி னிரைநிரை படர்ந்த | திரைக ளொத்தன வாவுமெம் பரித்திரைச் சுறவின் விரைவை யொத்தன வேந்தர்க டிரிந்தவை விரிநீ ரரவ மொத்தன நெருங்கிய படைதரு மரவம். 3.20.134
| 1141 |
மிதித்துஞ் சோடணி முகத்தினிற் றாக்கியும் விரவிற் | குதித்த கொட்பியினும் வீதியிற் றிரிந்துங்கொன் னுனைவாள் பதித்த திண்கர வீரர்க ளுடலுயிர் பதைப்பச் சதித்துத் தாவின திரிந்தன சிலசில சடிலம். 3.20.135
| 1142 |
இடியி னொன்றொலி யெனவெழுந் தனுமனித் திமைப்பிற் | படியின் மட்டிகி ரிகளெனக் கறங்கெனப் பலகா னெடுநி லஞ்சுழல் வளியென நினைந்ததிக் கனைத்துங் கொடிய வெம்படை யிடைதிரிந் தனசில குதிரை. 3.20.136
| 1143 |
வெடித்து மண்டையின் மூளைகள் சொரியமெல் லிதழைக் | கடித்த பற்பல வுதிர்தரக் கனல்விழி கலங்கப் பிடித்த கையொடும் வின்முறி தரக்குடர் பிதுங்க வடித்த பந்தெனத் திரிந்தன வாடலம் பரிமா. 3.20.137
| 1144 |
வேலிற் றாக்கினர் வில்லினிற் றாக்கினர் விரிமுக் | கோலிற் றாக்கினர் வாளினிற் றாக்கினர் குடங்கைத் தோலிற் றாக்கினர் சுரிகையிற் றாக்க்கினர் துரத்திக் காலிற் றாக்கினர் தாக்குறும் பேரமர்க் களத்தில். 3.20.138
| 1145 |
உரத்தி னுஞ்செழுந் தோள்வரை யிடத்தினு முயர்வேற் | கரத்தி னுமலர் முகத்தினுங் கழுத்தினுங் கரிய சிரத்தி னுமிதழ் கறித்திடும் வாயினுஞ் சினமங் குரித்த கண்ணினு மொழுகின வருவியொத் துதிரம். 3.20.139
| 1146 |
கால சூறையி னொத்தெதிர்ந் தெழுகுர கதத்தின் | மேல றுந்தன வளைமுக மறுந்தன மிதிகா னால றுந்தன காயத்திற் குருதியி னனைந்து வால சூரிய னெனநின்ற வீரர்கை வாளால். 3.20.140
| 1147 |
காந்து வெவ்வழ லெனப்படைக் கலன்களைக் கடிந்து | போந்த மள்ளர்க ளாவியை விசும்பிடைப் போக்கிப் பாய்ந்த மாக்களி னுரங்களை யிருவகிர் படுத்தி வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர்கை வேல்கள். 3.20.141
| 1148 |
கேட கத்தையுந் தாங்கிய கரத்தையுங் கிடந்த | சோடி ணைப்படு மிரும்பையு முரத்தையுந் துளைத்துள் ளூடு றப்புகுந் திருந்தவல் லுயிரையு முருவிச் சாடி யப்புறம் போயின வீரர்கைச் சரங்கள். 3.20.142
| 1149 |
கொடியொ டிந்தன விரிகுடை நுறுங்கின குணிலா | லடிப டும்பறை பேரிகை யுடைந்தன வரசர் முடித கர்ந்தன சோடுக ளுதிர்ந்தன மூரித் தடமு றுங்கரத் தேந்திய வீரர்கைத் தடியின் 3.20.143
| 1150 |
மூசி வண்டுடைத் தும்பையந் தொடையலை முடித்துத் | தூசி நின்றவர்த் துணித்துவெங் கொடிப்படைத் துரத்தி வாசி யின்குழுக் குறைந்திடப் பிணக்குவை மலிய வீசி நின்றனர் சிலசில திறல்வய வீரர். 3.20.144
| 1151 |
வாடை கொண்டுறும் பரியொடும் வீரரை மாய்த்து | நீடும் வேல்கெட விடுத்தவ ணிலத்திடைக் கிடந்த ஆடல் வெம்பரித் தாளெடுத் தொருகையி லாக்கிச் சாடு கின்றனன் வயவரை யதிலொரு தலைவன். 3.20.145
| 1152 |
வெற்றி வாட்கணை பொருதழிந் திடலும்வெஞ் சினத்தின் | முற்றி நின்றனன் கண்டொரு திறலவன் முன்னி யிற்று வீழ்ந்திடத் தோளினை வாளினா லெறிந்தா னற்ற தோளெடுத் தவன்றனைச் சிதைத்தன னவனே. 3.20.146
| 1153 |
அடுத்துப் பிற்புறத் தூணியிற் கிடந்தவம் பனைத்துந் | தொடுத்து மள்ளரைத் துணித்தறத் தொடுசர மிலவான் மடுத்து மர்பகங் கிடந்தவம் பனைத்தையும் வாங்கி விடுத்து நின்றனன் சிலைகுழைந் திடவொரு வீரன். 3.20.147
| 1154 |
பம்பு மாக்கடற் றானைக ளிரிதரப் படுத்தி | வெம்பு மாத்திர ளொன்றொடொன் றடித்தற வீழ்த்திக் கம்ப மூடெறிந் திருகவுண் மதசலங் கரைக்குந் தும்பி யில்லெனச் சலித்துநின் றனனொரு வீரன். 3.20.148
| 1155 |
கூரும் வெங்கணை யனைத்தையுந் தொலைத்துக்குற் றுடைவான் | வாரி சச்செழுங் கரங்கொள வெகுண்டொரு வயவ னார மார்பினில் வேல்கொடு தாக்கின னவனை வீர வேலுற நடந்துகொன் றனனொரு வீரன். 3.20.149
| 1156 |
பாரின் வெங்களத் திடைவெறுங் கயனெனனப் பரியை | யூரவிட் டடர்ந் தெதிர்த்தனை வெகுண்டுவண் டுறுக்கி மூரி வெம்பரி யுடனவன் வாயினு மூக்குஞ் சோரி கொட்டிடப் புடைத்தன னதிலொரு சூரன். 3.20.150
| 1157 |
அச்சு வத்தினும் வீரர்கள் புயத்தினு மழுந்தத் | தச்ச வாளியும் வேலும்பைங் குருதிகள் சாய்ப்ப விச்சை யின்களத் திடனறத் திரிந்தவ ரெவரு மெச்சி லென்றுறை வாள்கழற் றிலனொரு வீரன். 3.20.151
| 1158 |
நீல மாமுகிற் றுணியெனுங் கேடக நிரையின் | பால்பு குந்துட றலைகர மிருவகிர் படுத்திக் கோலி நின்றமன் னவன்றனை யெதிரினிற் குறுகி வேலி னாலெடுத் தேந்தின னொருவய வீரன். 3.20.152
| 1159 |
பெய்யும் வில்லிதென் மல்லின ரெவரெனப் பேசி | யைய மற்றவன் றனையொரு வீரன்சென் றடுத்துச் செய்வ தீதென வீழ்த்திவன் சிரத்தினைச் திருகிக் கையி னேந்திநின் றாடின னெதிரமர்க் களத்தில். 3.20.153
| 1160 |
ஆவி யோசின மோபெரி தெனவறி கிலன்போர்த் | தாவிப் போக்கினன் கரத்தொடு மிருதுணைத் தாளும் பூவின் மேற்கிடந் தார்ப்பொடும் வயவரைப் புகழ்ந்து கூவி யோய்ந்திலன் போர்வரு கெனவொரு குரிசில். 3.20.154
| 1161 |
முடக்கு வாற்பகு வாயரி யேறென முனியுஞ் | சுடர்க்கண் வேங்கைக ளெனச்சில வீரர்க டுறுமிக் கடக்கும் வெற்றியி னினையன வமர்செயக் கடிதி னுடைக்கும் வெம்பரி வீரருக் காகவந் துற்றார். 3.20.155
| 1162 |
கால மாருதப் பரியினை விசையினிற் கடவி | யால காலமொத் தரசரைப் பிணக்குவை யாக்கி மேலுந் தாக்கிவெம் பரியினந் தரையினில் வீழ்த்திக் கோல மார்கதிர் வாளினிற் கூறுசெய் தனரால். 3.20.156
| 1163 |
கருக்கொள் காரிடி யெனக்கரு தலர்கள்கட் டழிய | முருக்கும் வேளையுக் காசகை யாயுத முறிந்து செருக்கொ டுந்திரிந் துலவிய பரியினைத் திருப்பி யருக்க னொத்தநம் முகம்மது நபியிடத் தானார். 3.20.157
| 1164 |
பால டுத்தவுக் காசசெம் மலர்முகம் பார்த்தோர் | கோலெ டுத்துநந் நபியவர் கரத்தினிற் கொடுப்ப மால டுத்தகைக் கேந்திய வுடன்வடி வாளாய்ச் சூல டுத்தமை மின்னினுஞ் சுடரிலங் கியதே. 3.20.158
| 1165 |
மன்னர் மன்னபி கொடுத்தகைக் கோலொரு வாளா | யிந்தி லம்பெற விருந்ததைக் கரத்தினி லேந்திப் பொன்னி லங்கிய குசைப்பரி யொடும்படைப் புகுந்து முன்னர்த் தாக்கினு மும்மடங் கெனமுருக் கினரால். 3.20.159
| 1166 |
நீளும் வேலறுந் தனகதை யறுந்தன நிருபர் | தோள றுந்தன சோடறுந் தனதுர கதத்தின் றாள றுந்தன கேடக மறுந்தன தவைர் வாள றுந்தன குடைகொடி யறுந்தன மாதோ. 3.20.160
| 1167 |
மாறு பட்டவர் சிரத்தினு முரத்தினு மலிய | வூறு பட்டன வுதிரங்க ளூற்றெடுத் தொழுகிச் சேறு பட்டன நெடுநில மணியொடு திறனும் வேறு பட்டன பட்டன காபிர்கள் வீரம். 3.20.161
| 1168 |
தலைகு விந்தன கரத்துணி குவிந்தன தரியார் | சிலைகு விந்தன படைக்கலங் குவிந்தன திரளி னுலவு வெம்பரி யுடனடல் வேந்தர்க ளுடல மலைகு விந்தெனக் குவிந்தவுக் காசகை வாளால். 3.20.162
| 1169 |
உக்கி ரப்பரி நடவிவெள் ளுருமென வுரறிக் | கைக்க டுத்தலை விதிர்த்துவெங் காபிர்கள் சூழ மிக்க சைபத்தென் றோதிய விறலரி வீரன் புக்கி னன்றிரு நபிதுணை யவர்பொரு மிடத்தில். 3.20.163
| 1170 |
அடர்ந்து சைபத்து வரவுகண் டடலரி ஹமுசாத் | திடந்த ருங்கதிர் வாளினை நோக்கிக்கண் சிவந்து தொடர்ந்து சூறையிற் றிரித்துவெம் பரியினைத் துரத்தி யிடந்த ரும்பெருங் களத்திலங் கவன்முன மெதிர்ந்தார். 3.20.164
| 1171 |
மாறி லான்றிரு நபிக்குரைத் திடுங்கலி மாவை | வேறு கொண்டனை புந்தியற் றனைமுனம் விதித்த வீறு நாளிவை யோவினை சூழ்ந்ததோ வெதிர்ந்தாய் கூறு கூறென நகைத்தவன் முனங்குறு கினரால். 3.20.165
| 1172 |
நீங்க ருங்கிளை யிழந்துமுன் னெறிநிலை தவறித் | தீங்கி னுட்படும் பதகவென் றிருவிழி சிவப்ப வோங்கும் வாளெடுத் தசைத்திகழ் கறித்துவண் டுறுக்கிப் பாங்க ரிற்கரங் கெனத்திரித் தனன்வயப் பரியை. 3.20.166
| 1173 |
வாவு லெம்பரி யிழிந்தெனை யொருதரம் வணங்கிச் | சேவ கத்தினைத் தவிர்பிழை யலவெனிற் றீங்கி னேவல் கொண்டுனை விடுத்தபொய் முகம்மதி னிடத்திற் போவ தற்கிட மிலையிறந் தனைநொடிப் போதில். 3.20.167
| 1174 |
ஈது முத்திரை யறிகென சைபத்தென் பவனங் | கோதி நின்றனன் கேட்டனல் வெகுளியிற் றுனைப்போல் வாது ரைப்பதின் றமரறி குவனென வகுத்துக் காதும் வாளையுந் தோளையு நோக்கிக்கண் சிவந்தார். 3.20.168
| 1175 |
கொதித்த கண்ணெரி தவழ்தரக் கொடுங்கதிர் வாளான் | மதித்த மன்ஹமு சாதிரு மணிமுடி யிலக்கா யெதிர்த்துக் தாக்கினன் றாக்கலுங் கேடகத் தேந்தி யதிர்த்து வீசினர் வீசலுந் தாங்கின னவனே. 3.20.169
| 1176 |
கையின் வேலெடுத் தெறிந்தனன் கதிர்முடி ஹமுசா | மெய்யிற் சோட்டினிற் றாங்கின கடுப்பினில் வெகுண்டு செய்ய வெங்கதை யெடுத்தடித் தலும்படச் சிதறி யைய மற்றற நொறுங்கின கேடக மன்றே. 3.20.170
| 1177 |
கட்டு வாம்பரி யினைப்பரி முகத்தொடுங் கடவி | வெட்டு வாரெறி வார்மணி வேலினை வேலிற் றட்டு வார்புடைப் பார்திரி வார்தடக் கதையா லொட்டு வார்திறஞ் சாய்த்தில ரொருவருக் கொருவர். 3.20.171
| 1178 |
மடித்து வாயிதழ் கறித்துச்செம் மணிக்கதை யோங்கிப் | புடைத்த னன்ஹமு சாதிருக் கொடிவிலாப் புறத்தி லிடிக்கு நேரெனு மடியினிற் சினந்துவா ளெறிந்தா ரடற்ப ரிக்குசை யொடுமவன் கரமறுந் தனவால். 3.20.172
| 1179 |
கரந்த றிந்திட வோங்கினன் மறுத்துமக் கதையு | முரந்தி கழ்ந்தவன் சிரமும்பொற் சோடுட னுடலும் பரிந்த பக்கரைக் குதிரையு மிருபகுப் பாக்கி விரிந்த பாரிடத் தினிற்கிடத் தினரொரு வீச்சில். 3.20.173
| 1180 |
வீரன் சைபத்து மடிந்தன னெனும்வெகு ளியினாற் | கோர மாமத கரடவெங் களிறெனக் கொதித்துக் காரின் மின்னெனு மயிலொடும் பரியினைக் கடவிச் சாரும் வெம்படை யதிர்தர வொலீதுவந் தனனால். 3.20.174
| 1181 |
பச்சி ரத்தச்செஞ் சேற்றழ றெழுநெடும் பாரின் | வச்சி ராயுதங் கொடுவரு மொலீதுள மறுக வச்சு வத்தொடு முதன்முறைச் செருவிளை யாட்டுக் கிச்சை யின்படிக் கிடைத்ததென் றலியும்வந் தெதிர்ந்தார். 3.20.175
| 1182 |
கலின வாம்பரி வீரரி லெனதுகை யறிய | வலிய வஞ்சக முகம்மதே யெதிர்வரல் வேண்டுஞ் சிலையுந் தண்டமுங் கட்கமுந் தரித்தொரு சிறுவ னலிவி லாதிவ னோவெதிர் பவனென நகைத்தான். 3.20.176
| 1183 |
படைக்க லத்தொடு முனையும்வெம் பரியையும் படியி | னடித்து வீழ்த்துவ தரிதல வெதிர்ந்தனை யாயிற் பிடித்து நோக்குவ திலையுன துயிர்க்கொரு பிழையா யிடுக்க ணெய்துமுன் சார்பிடத் துறைகவென் றிசைத்தான். 3.20.177
| 1184 |
அறிவின் செய்வினை தவிர்வினை யறிகிலா தவரே | சிறுவர் பூவினிற் சிறுவரா யிருந்துஞ்செவ் வியதீன் முறைமை நின்றுநல் வணக்கமு மொழுக்கமு முதிர்ந்தோர் மறனு மாண்மையும் பெரிதென அலிவகுத் துரைத்தார். 3.20.178
| 1185 |
தரும மென்றுரை வழங்கின னம்மொழி தனைநீ | வரும மென்றுகொண் டிகழ்ந்தனை யுனைவரைந் திறுக்கி யெரிமு னாக்குவன் காண்டியொல் லையினென விசைத்தான் பொரியுஞ் செந்தழல் கெழுமிய குழியிடைப் புகுவான். 3.20.179
| 1186 |
நாய கன்றிருத் தூதெனு முகம்மது நபியைக் | காயும் வஞ்சகக் கொடியனென் றுரைத்தகட் டுரைக்குந் தீயி னிற்புகுத் திடுவனென் றெனைச்செறுத் ததற்கும் வாயி னைக்கிழித் தெறிவன்கண் டறியென வகுத்தார். 3.20.180
| 1187 |
இசைத்த வாசகங் கேட்டலு மிருவிழி கனலக் | கசைத்த லம்பொடி படப்பரி புடைத்திதழ் கடித்து விசைத்தி டக்கரக் கேடகங் குலுக்கிவெங் கதிர்வா ளசைத்தெ றிந்தன னாடல்வெம் பரிப்புலி யலியை. 3.20.181
| 1188 |
எறிந்த வாளலி கதையினிற் றாக்கவெண் பகுப்பாய் | முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல்கொடு முனிந்து பறிந்து போம்படி விடுத்தனன் பன்மணிக் கதிரி னிறைந்த கேடகத் தெற்றவு மிற்றதந் நெடுவேல். 3.20.182
| 1189 |
அயிலுங் கட்கமு மறுந்தன வெனமன மழுங்கி | யெயிற துக்கிநாக் கடித்துநின் றவன்றனை யெதிர்ந்து பயிலும் வெம்படைக் கலனுள வெனிலினம் பாரென் றியற ருந்திரு மறைநபி மருகர்நின் றிசைத்தார். 3.20.183
| 1190 |
உற்ற வாசகங் கேட்டலும் வலியதண் டோ ங்கிச் | சுற்றி விட்டெறிந் தனன்பிடித் திடக்கையாற் சுழற்றி மற்ற வன்புயத் தெறிந்தனர் வனைதுடர்ச் சோடு மற்றி றுந்தத் தண்டமு நுறுங்கிய தன்றே 3.20.184
| 1191 |
பின்னு மோர்வடி வாளினைக் கரத்தினிற் பிடித்து | மன்னு வாம்பரி யலியின்மே னீட்டினன் மறுத்துங் கொன்னு னைக்கதிர் வாளினிற் றாங்கினர் கொதித்துச் சின்ன பின்னங்கள் படுத்திடப் பரியினைத் திரித்தார். 3.20.185
| 1192 |
ஒலிதும் வெம்பரி துரத்திட வூழிவெங் காலு | மலியும் வெவ்வழல் வடவையு மெதிர்ந்தன மலைந்து கலினெ னும்படைக் கலத்தொனி திசைதிசை கதுவப் புலனு றைந்தவ ரதிசயித் திடும்படிப் பொருதார். 3.20.186
| 1193 |
கன்றி லாமனத் திறத்தவ ரிடுபடைக் கலன்க | ளொன்றொ டொன்றெறிந் தழற்பொறி தெறித்திட வொளிரும் வென்றி வாளலி செழுங்கர விசைதரும் விரைவிற் குன்று போல்விழுந் தவிந்தன னொலீ தெனுங் கொடியோன். 3.20.187
| 1194 |
கலின வாம்பரி மிசைகரக் கடுத்தலை யுடனு | மொலிது வீழ்ந்தது கண்டுத்து பத்தெனு முரவோன் புலியெ னும்படி சினந்தெழுந் தடற்பரி புடிஅத்து வலிய வீரர்கள் பொருமமர்க் களத்திடை வந்தான். 3.20.188
| 1195 |
உதுபத் தென்னுமக் கொடியவ னடந்தவுக் கிரத்தி | னெதிரெ ழுந்துபை தத்தெனும் புரவல ரேகிக் கதிர்கொள் வாள்கொடு தாக்கினர் கதையினிற் பிடித்து முதிரும் வெங்கதி ரயில்கொடு முனிந்துமோ தினனால். 3.20.189
| 1196 |
அள்ளி லைக்கதிர் வேலினை வாளினா லறுத்து | வள்ள றாக்கலுந் தாக்கினன் செழுங்கதிர் வாளால் விள்ள ரும்படி யொருவருக் கொருவர்வாள் விதிர்ப்பக் கொள்ளி வட்டங்க ளெனத்திரிந் தனகுர கதங்கள். 3.20.190
| 1197 |
காற்றை யொத்தன விசையினிற் றாக்கினிற் கருவா | னேற்றை யொத்தன வெகுளியி னெரியையொத் தனவாற் சீற்ற முட்கொடு மெழுந்தன பறந்தன தெரிந்து சாற்றும் பேரெவ ரிருவர்தங் குதிரையின் சாரி. 3.20.191
| 1198 |
சக்க ரத்தினும் வேலினும் வாளினுந் தாக்கு | முக்கி ரத்தினி லிருவர்மெய் யினுமொழு குதிரங் கக்கி நின்றன வூறுக ளிடனறக் கலிப்ப மிக்க வெஞ்சமர் விளைத்தன ரிருவரும் விரைவின். 3.20.192
| 1199 |
விரைவி னிற்பெரும் போரினை யிருவரும் விளைப்ப | வரியெ னுந்திற லலியும்வெம் பரிஹமு சாவு மொருநொ டிக்குள்வந் தடுத்தன ருத்பத்தென் பவனை யிருநி லத்திடை வீழ்த்தின ருதிரங்க ளிழிய. 3.20.193
| 1200 |
வேந்தர் மூவரு மிறந்திட வபூஜகில் வெகுண்டு | காந்து வெங்கனல் விழியெரி தரக்கரம் பிசைந்து மாய்ந்தி டும்பெருங் களத்திடை தீனவர் மறுகப் பாய்ந்தி டும்புலிக் குழுவென நடத்தினன் படையை. 3.20.194
| 1201 |
ஆட லம்பரி யொடுந்திறற் பரிசுகள்வந் தடர்த்த | நீடும் வேலுடன் வேலவ ரடர்த்தனர் நெருங்கிச் சாடும் வாலுடன் வாளின ரடர்த்தனர் தாக்கிக் கோடும் வில்லுடன் வில்லின ரடர்த்தனர் குழுமி. 3.20.195
| 1202 |
விடுகை யம்பினுங் கதையினு மழுவினும் விடமார் | நெடிய வேலினுஞ் சக்கரத் தினுமுட னெரியப் படுக வண்கலி னெறியினு முரத்தினிற் பதியத் தொடுச ரத்தினும் விசும்பினை யிடனறத் தூர்த்தார். 3.20.196
| 1203 |
வன்பி றந்திடச் செலுந்திறத் தவர்செழு மார்பிற் | பொன்பி றந்தபன் மணிசிறி திமைத்தன பொருபா ரின்பி றந்தசெந் தூளியி னிடைபல கோடி மின்பி றந்தெனப் பிறந்தன வாளொளி விளக்கம். 3.20.197
| 1204 |
பெருகும் பல்லியத் தொலிப்பினும் படைக்கலன் பிணங்கி | மருவு மார்ப்பினும் வருஞ்சிலைக் கலிப்பினு மலிந்த புரவி யார்ப்பினும் வீரர்க ளார்ப்பினும் போரி னிருதி றத்துமன் னவர்களுந் தலைமயங் கினரால். 3.20.198
| 1205 |
முருகி ருந்தபைந் தொடையலுஞ் சருவந்த முடியுங் | கருகும் வட்டவொண் பரிசையு மணிபல கலனும் விரித ருஞ்செழுந் துகிலுங்கஞ் சுகியும்வெம் பரியுங் குருதி நீரினி னனைந்துசெந் நிறத்தினைக் கொடுத்த. 3.20.199
| 1206 |
வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு | மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல்கொடு மார்பிற் கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினிற் கலிமாச் சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரிவெங் களத்தில். 3.20.200
| 1207 |
படர்ந்து கொன்றனர் சிலர்சில ரிழிந்துவெம் பரியை | நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையுமற் றொழிந்து கடந்தி ருந்துகொன் றனர்சிலர் சிலர்மனங் கனன்று கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி. 3.20.201
| 1208 |
அண்டனர் நாயகன் மறைநெறித் தீனிலை யவரு | மிண்டு பேசிய அபூஜகல் காபிர்வெம் படையு மண்டு பேரமர் விளைத்திட முகம்மது நயினார் கண்டு வேகமற் றுண்டெனச் சிவந்தகட் கடைகள். 3.20.202
| 1208 |
| சேவைசெய் தமரர் நிதமடி பரவுஞ் றேவலுக் கியைவ னியானெனப் புடவி கூவிய துணர்ந்து மாமறை யளித்த தாவரு வேகந் தனைக்கடிந் துலவுந் 3.20.203
| 1210 |
திருமொழிக் கியைவ னியானெனப் பணிந்து | லொருபிடி கரத்தி னெடுத்தினி தேந்தி பொருமமர்க் களத்திற் காபிரை நோக்கி குரகதத் தேறி வேல்வலந் தாங்கிக் 3.20.204
| 1211 |
எறிந்தமண் டாவித் திசைதிசை செருகி | செறிந்தவெங் களத்திற் காபிர்கள் முகத்துஞ் மறைந்தன விழுந்து வலிகளுங் கெடுத்து யறைந்தபே ரொலியுஞ் செவிகளிற் றோன்றா 3.20.205
| 1212 |
பொருப்பிடை கிடந்த வரிப்புலிக் குழுவும் | மொருப்படத் திரண்டு நடந்தெனத் தீனோ தெரிப்பருந் தொகுதித் தலைவரும் பரியுந் மருப்புடைக் கரட மதகரி யனைய 3.20.206
| 1213 |
நிரைநிரைப் பரியின் பிணக்குவை மலிந்த | விரிகதிர்ப் பூணு மாரமு மலிந்த குருதியு மலிந்த குடர்த்துடர் மலிந்த முரிதருஞ் சிரசின் மூளைகண் மலிந்த 3.20.207
| 1214 |
முரசமு மவிந்த காகள மவிந்த | பரிகளு மவிந்த வாவணத் தொகுதிப் திரைகட லெனும்பே ரோதையு மவிந்த அரசரு மவிந்த வாகையுந் திறனு 3.20.208
| 1215 |
சம்பினம் பரந்த வோரியும் பரந்த | வெம்பிய ஞமலிக் குலங்களும் பரந்த செம்பருந் தினமுஞ் சகுந்தமும் பரந்த பம்புவா ருதியி னலகைகள் பரந்த 3.20.209
| 1216 |
வரைகளி னேறிப் பொதும்பரிற் புகுந்து | புரவிவிட் டிறங்கி முள்ளுடை நெடுங்கான் னிரைகளிற் பதுங்கிக் கிடந்தனர் சிலர்தந் லெரியழற் பாலை யிடந்தொறு மோடி 3.20.210
| 1217 |
தெறுகளத் துயிரை முதலிடு பருவந் | முறுகொலைக் களநின் றூர்புகுந் தவரு ளெறிதர வெதிர்ந்த தலைமைமன் னவரி மறுவறு மறைநந் நபிதமக் குரிய 3.20.211
| 1218 |
அடிநிலந் தெரியா முகம்மதின் பிதாபின் | வடிவுறு மபித்தா லிபுதரு மலிமுன் னடவுவாம் பரியா ரிதுதரு திருச்சேய் பிடிபடும் பெயரி னிவரையு நபிமுன் 3.20.212
| 1219 |
பிடித்தமன் னவரை முன்னுற நடத்திப் | முடித்தவெம் போரிற் காகள முழக்கி யடித்துடைத் திறந்த தீனவர் பதினான் மெடுத்தினி தடக்கித் தொழுதிருந் தனர்மே 3.20.213
| 1220 |
விடிந்தபின் காலைக் கடன்கழித் திறசூல் | திடந்தரு மொழியா லழைத்தரு கிருத்தித் னுடைந்தொழு கினனோ வலதிறந் தனனோ றிடந்தரும் பெரும்பா சறையினுங் களத்துந் 3.20.214
| 1221 |
தூயவ னிறசூல் நபியினி துரைத்த | சீயமொத் தெழுந்து வரிப்புலி யனைய மாயிரு விசும்பும் புவனமும் புகழார் போயினர் பறவைப் பந்தரிற் கிடந்த 3.20.215
| 1222 |
மெய்யுழன் றிறந்து கிடந்தவ ரொருபால் | கையிழந் தரிதிற் கிடந்தவ ரொருபாற் மையுறுஞ் சிரசற் றுறைந்தவ ரொருபான் லெய்யும்வன் சரங்க டுளைத்திடக் குருதி 3.20.216
| 1223 |
காலினை மடக்கி வாயித ழதுக்கிக் | பாலுறும் பரியின் குலம்பல வீழ்த்திப் மாலுறுங் கரட மதமலை துளைக்கும் மேலுறு மமருங் கொல்வனென் பவன்போ 3.20.217
| 1224 |
குற்றுடைக் கதிர்வாள் குரகத வயிற்றிற் | முற்றிய முனையின் றிறத்தவ னலகைக் பற்றிவெங் கரத்தா னிணக்குடர் பிடுங்கும் வெற்றிவெண் மலர்த்தார்ப் புயத்தவர் மகிழ்ந்து 3.20.218
| 1225 |
கந்துகக் கழுத்தை முரிதர நெருக்கி | டிந்தெனு முகம்வா ளிலங்கிட வவண்சாய்ந் நந்தின னலனென் றிகலனுஞ் சுணங்கு சிந்தையின் வெருவுற் றடிக்கடி நோக்கித் 3.20.219
| 1226 |
எள்ளிட விடமற் றளந்தறி யெண்சா | யள்ளிலை நெடுவா ளிகளுறைந் திருந்த வள்ளுகிர் சுணங்கு மிகலுனுந் திரிந்த யுள்ளுறுங் களத்திற் கிடப்பன போன்றுங் 3.20.220
| 1227 |
பறவைகள் குலவுஞ் சிறைநிழற் பந்தர்ப் | மறமுதிர் சினக்க ணிமைப்பில விழித்து குறைவற வலகை நடம்பல பயிலக் னிறையுயிர் போக்கி யரசுவீற் றிருந்த 3.20.221
| 1228 |
இடருறு மிகல னொன்றொடொன் றிகலி | துடர்படுங் குடர்வாய்க் கவ்விவிண் ணிடையிற் மடிபடுங் கொடிய மாருத விசையி விடுநெடுங் கயறும் படமுமொத் தெழுந்து 3.20.222
| 1229 |
மல்லுயர் திணிதோள் விடலைக டாங்கும் | ளெல்லையி னிழிந்த குருதியிற் கிடந்தங் வல்லிசே தாம்பற் றடத்திடை மிதந்த வில்லணி தடக்கை மறத்தில்தீன் விளைத்த 3.20.223
| 1230 |
அலர்நகை முகங்க ளெண்ணில பரந்து | னிலவுவெண் கவிகை யிடையிடை பதிந்து பலவிதழ் விரித்துச் செந்நறாத் துளித்த குலவிய வனத்தின் குலங்கள் வீற்றிருந்த 3.20.224
| 1231 |
அரசர்க ளணிந்த முத்தவெண் மணிக | விரிகதி ருமிழ்ந்து கிடப்பன வென்றூழ் பெருகிய தாரா கணம்பல கோடி தெரிதர நோக்கி யடிக்கடி மகிழ்ந்து 3.20.225
| 1232 |
கங்கமுங் கொடியுஞ் சகுந்தமு மோரிக் | செங்களத் திடைக்குற் றுயிருட லருந்தத் வெங்கதிர் நெடுவே லூறுகள் படமெய் மெங்கணும் பலகண் டடுபடைக் கலன்க 3.20.226
| 1233 |
ஏற்றிய சிலைக்கை தறித்திடப் பறிபட் | சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கித் மாற்றரும் வீரர் கதைபடத் தெறித்த காற்றுணை முடிர்ந்து பயப்பயத் திரியு 3.20.227
| 1233 |
ஒலிதெனும் வேந்த னிறந்தபே ரிடமு | பலியென வுத்பத் திறந்திடு மிடமும் நலிதலில் வீரச் செருக்கினி லுமையா வலிதரு முமாறா விறந்தசெங் களமும் 3.20.228
| 1235 |
மறமுதிர் வீரர் தாண்மடித் தெதிர்ந்து | புறமிடங் குவிய வுறவின ரெவரும் குறையுயி ருடலங் குருதிகொப் பிளிப்பக் தெறுகள நாப்ப ணபூஜகல் கிடப்பத் 3.20.229
| 1236 |
கண்களிற் சேப்பு நுதலினில் வியர்ப்புங் | புண்பட விதழிற் பற்பல்காற் சினந்து மண்பட வொழுகுங் குருதியி னனைவும் பண்பொடுந் தெரியக் களத்திடை கிடந்த 3.20.230
| 1237 |
செல்வமுந் திறனும் புறத்தளித் தனையே | நல்வர மனைத்தும் பாழ்படுத் தினையே பல்பொருட் சுவனப் பதியிழந் தனையே சொல்விதம் விடுத்துப் பவமெடுத் தனையே 3.20.231
| 1238 |
வீர்வெங் களிறே யடலரி யேறே | பாரினிற் சிறந்த மக்கமா நகரிற் காரணக் குரிசின் முகம்மது நபிதங் யீரமுற் றிசைந்து மனத்தினி லிருத்தா 3.20.232
| 1239 |
மேலுமின் கலிமா வுரைத்துறுந் தீனை | பாலினிற் கொடுபோய்ப் பருவர றவிர்த்துப் கோலிய பகையை விடுத்துநன் குரையைக் வாலெயி றிலங்க நகைத்தட லிபுனு 3.20.233
| 1240 |
இறுதியிற் கலிமா வுரையென வெதிரி | றொருவரின் குலத்துக் குறுமதி யெடுத்துச் பெறுமவ ரிலையென் னிடத்தினி லென்றா தெறுகொலை விளைத்தி யெனவிழி சிவந்து 3.20.234
| 1241 |
வசைமொழி யுரைப்பக் கடிதினில் வெகுண்டு | விசையுடன் றாடி தனைப்பிடித் தீழ்த்து யசையுறுஞ் சிரசை யறுத்துவே றாக்கி பசையறும் பாழ்ங்கூ வலினிடைப் படுத்தி 3.20.235
| 1242 |
அபுஜகல் சிரத்தைக் கரத்தினிற் றூக்கி | கவிசிறைப் பறவைக் குலங்களு மிரியக் சவிதருங் கொடியுங் கவரியுங் குடையுந் புவியிடைப் பரந்த பறந்தலை கடந்து 3.20.236
| 1243 |
மறத்தினைத் தொடுத்துத் தீவினை விளைத்து | யறத்தினை வெறுத்த கொடும்பெரும் பதக நிறுத்திய தீனி லுலகெல்லாம் புரந்த திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர்வே 3.20.237
| 1244 |
ஆதியைப் புகழ்ந்து காபிர்தம் வலியு | கோதறுங் கொழுந்துங் குவலயம் படர்ந்த தீதுறுங் கொடிய பாதகன் சிரசை மூதுரை தெரிந்த புரவல ருடனு 3.20.238
| 1245 |
வற்றுறா வளமை மக்கமா நகரார் | லுற்றது மெழுவ ருடனபூ ஜகல்த வெற்றியு மியாவும் வரிப்பட வெழுதி வொற்றர்கைக் கொடுத்து மதீனமா நகருக் 3.20.239
| 1246 |
வடிவுறுஞ் சாயை வெளியுறா நபிதம் | கொடியிடை யுதுமான் மனைவிய ரென்னுங் படியினி லடக்கி யாவருந் திரண்டு லுடைபட பதுறிற் பொருதுவென் றெழுது 3.20.240
| 1247 |
புவியினிற் புதுமைக் காரண மதீனா | மபுஜகல் படைகொண் டெதிர்ந்திறந் தனனென் நபிதிரு மகளா ரடைந்தன ரெனுமந் கவலுதற் கரிய வாநந்தப் பெருக்கின் 3.20.241
| 1248 |
பதுறெனும் புடவி வரையடி விடுத்தம் | கதிர்கொளுந் துல்புக் காறெனும் வாளைக் கொதிநுனை வடிவேன் மன்னவர் சூழக் வதிர்முர சமும்பே ரிகைகளு மார்ப்ப 3.20.242
| 1249 |
தானைக ளீண்டக் கொடித்திரண் மலிய | கானகம் விடுத்தோர் காவதத் திடத்திற் னூனுடல் வதைத்து மாநிதி யனைத்து தீனவ ரொருவ ருரைத்தனர் கேட்டுச் 3.20.243
| 1250 |
எழுந்திவண் வருமு னிரண்டிலொன் றுங்கைக் | மொழிந்தினி ரவையே முடிந்தன வினிமேன் யழுந்திடப் பொருத லறிவல வெனஅப் செழுந்திற னபியு மிஃதுநன் றென்ன 3.20.244
| 1251 |
நுதிகொளுங் கதிர்வேற் காபிரை பதுறி | கிதமுறுந் தலைவர்க் கும்பர்மா ராய கதிகொளும் பரியுந் தானையு நெருங்கக் சதுமறை முழக்க மார்த்தெழ மலீக்கு 3.20.245
| 1252 |
குறைந்திட ரொடுங்கிப் போயின மருவார் | மிறந்திடு மெழுப தருந்திறல் வேந்த சிறந்தவெம் பரியும் ஸகுபிக ளெவர்க்குந் புறந்தரு களத்தின் முத்திரை படைத்துப் 3.20.246
| 1253 |
அறபினின் மலீக்குச் சபுறாவாந் தலம்விட் | இறௌகா வெனுமத் தலத்தினில் வரும்போழ் புறநக ரவருந் திரண்டெதிர் பணிந்து நறவுகொப் பிளிக்குந் துடவைசூழ் நகரி 3.20.247
| 1254 |
மறையவர் வாக்கின் பயித்தொலி முழங்க | கறைகொளுங் கதிர்வேற் காளையர் சூழக் முறைமுறை பேரி தவில்பறை திடிமன் விறையவ னருளால் வெற்றிகொண் டிறசூ 3.20.248
| 1255 |
மடலவிழ் வனச வாவிசூழ் மதினா | பிடிபடு மவரைக் கொணர்கெனக் கூறப் கடிதினி லெழுப தரசர்க டமையுங் தடல்பெருங் குரிசின் முகம்மது நபிமுன் 3.20.249
| 1256 |
ஆரிது புதல்வ னலுறையும் பதக | மூரினிற் புறத்திற் பாதையி னாப்பண் வீரர்கள் வெகுண்டு பிடித்தகைக் கயிற்றின் சோரிநீ ரொழுக விருவர்க டலையுந் |