சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள் (1-517)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
7.001 | திருவெண்ணெய்நல்லூர் | (1-10) | மின்பதிப்பு |
7.002 | திருப்பரங்குன்றம் | (11-21) | மின்பதிப்பு |
7.003 | திருநெல்வாயில் அரத்துறை | (22-31) | மின்பதிப்பு |
7.004 | திருஅஞ்சைக்களம் | (32-41) | மின்பதிப்பு |
7.005 | திருஓணகாந்தன்தளி | (41-51) | மின்பதிப்பு |
7.006 | திருவெண்காடு | (52-61) | மின்பதிப்பு |
7.007 | திருஎதிர்கொள்பாடி | (62-72) | மின்பதிப்பு |
7.008 | திருவாரூர் | (73-82) | மின்பதிப்பு |
7.009 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (83-93) | மின்பதிப்பு |
7.010 | திருக்கச்சிஅனேகதங்காவதம் | (94-103) | மின்பதிப்பு |
7.011 | திருப்பூவணம் | (104-111) | மின்பதிப்பு |
7.012 | திருநாட்டுத்தொகை | (112-122) | மின்பதிப்பு |
7.013 | திருத்துறையூர் | (123-133) | மின்பதிப்பு |
7.014 | திருப்பாச்சிலாச்சிராமம் | (134-145) | மின்பதிப்பு |
7.015 | திருநாட்டியத்தான்குடி | (146-155) | மின்பதிப்பு |
7.016 | திருக்கலையநல்லூர் | (156-166) | மின்பதிப்பு |
7.017 | திருநாவலூர் | (167-177) | மின்பதிப்பு |
7.018 | திருவேள்விக்குடி | (178-187) | மின்பதிப்பு |
7.019 | திருநின்றியூர் | (188-198) | மின்பதிப்பு |
7.020 | திருக்கோளிலி | (199-208) | மின்பதிப்பு |
7.021 | திருக்கச்சிமேற்றளி | (209-218) | மின்பதிப்பு |
7.022 | திருப்பழமண்ணிப்படிக்கரை | (219-228) | மின்பதிப்பு |
7.023 | திருக்கழிப்பாலை | (229-238) | மின்பதிப்பு |
7.024 | திருமழபாடி | (239-248) | மின்பதிப்பு |
7.025 | திருமுதுகுன்றம் | (249-258) | மின்பதிப்பு |
7.026 | திருக்காளத்தி | (259-268) | மின்பதிப்பு |
7.027 | திருக்கற்குடி | (269-278) | மின்பதிப்பு |
7.028 | திருக்கடவூர்வீரட்டம் | (279-288) | மின்பதிப்பு |
7.029 | திருக்குருகாவூர் | (289-298) | மின்பதிப்பு |
7.030 | திருக்கருப்பறியலூர் | (299-309) | மின்பதிப்பு |
7.031 | திருஇடையாற்றுத்தொகை | (310-319) | மின்பதிப்பு |
7.032 | திருக்கோடிக்குழகர் | (320-329) | மின்பதிப்பு |
7.033 | நமக்கடிகளாகிய - அடிகள் | (330-339) | மின்பதிப்பு |
7.034 | திருப்புகலூர் | (340-350) | மின்பதிப்பு |
7.035 | திருப்புறம்பயம் | (351-360) | மின்பதிப்பு |
7.036 | திருப்பைஞ்ஞீலி | (361-371) | மின்பதிப்பு |
7.037 | திருவாரூர் | (372-382) | மின்பதிப்பு |
7.038 | திருவதிகைத்திருவீரட்டானம் | (383-392) | மின்பதிப்பு |
7.039 | திருத்தொண்டத்தொகை | (393-403) | மின்பதிப்பு |
7.040 | திருக்கானாட்டுமுள்ளூர் | (404-414) | மின்பதிப்பு |
7.041 | திருக்கச்சூர் ஆலக்கோயில் | (415-424) | மின்பதிப்பு |
7.042 | திரு வெஞ்சமாக்கூடல் | (425-434) | மின்பதிப்பு |
7.043 | திருமுதுகுன்றம் | (435-445) | மின்பதிப்பு |
7.044 | முடிப்பதுகங்கை | (446-455) | மின்பதிப்பு |
7.045 | திருஆமாத்தூர் | (456-466) | மின்பதிப்பு |
7.046 | திருநாகைக்காரோணம் | (467-477) | மின்பதிப்பு |
7.047 | ஊர்த்தொகை | (478-487) | மின்பதிப்பு |
7.048 | திருப்பாண்டிக்கொடுமுடி | (488-497) | மின்பதிப்பு |
7.049 | திருமுருகன்பூண்டி | (498-507) | மின்பதிப்பு |
7.050 | திருப்புனவாயில் | (508-517) | மின்பதிப்பு |
001 |
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.01 | 002 | நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.02 | 003 | மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.03 | 004 | முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.04 | 005 | பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய் ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.05 | 006 | தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.06 | 007 | ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.07 | 008 | ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.08 | 009 | மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.09 | 010 | காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. | 7.1.10 |
011 |
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக் சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ் சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும் தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம் 7.2.01 | | 012 | முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர் பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம் அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர் 7.2.02
|
013 | மூடாய முயலகன் மூக்கப் பாம்பு | பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல் தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந் றாடா தனவேசெய் தீர்எம் பெருமான் 7.2.03
|
014 | மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி | பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர் 7.2.04
|
015 | பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர் | எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங் அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான் 7.2.05
|
016 | தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச் | பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர் பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர் அண்ணா மலையே னென்றீரா ரூருளீர் 7.2.06
|
017 | சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந் | பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர் கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங் அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர் 7.2.07
|
018 | பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர் | துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச் மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய் அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான் 7.2.08
|
019 | கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர் | வேளா ளியகா மனைவெந் தழிய தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர் ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான் 7.2.09
|
020 | பாரோடு விண்ணும் பகலு மாகிப் | நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி தேரோ டவரை எடுத்த அரக்கன் ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென் 7.2.10
|
021 | அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென் | முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே படியா இவைகற் றுவல்ல அடியார் குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக் 7.2.11
| |
022 |
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் 7.3.01 | | 023 | கறிமா மிளகும் மிகுவன் மரமும் நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய் வறிதே நிலையாத இம்மண் ணுலகில் பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப் 7.3.02
|
024 | புற்றா டரவம் மரையார்த் துகந்தாய் | எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால் மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான் அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி 7.3.03
|
025 | கோடுயர் கோங்க லர்வேங் கையலர் | நீடுயர் சோலை நெல்வா யிலரத் ஓடு புனற்க ரையாம் இளமை வாடி இருந்து வருந்தல் செய்யா 7.3.04
|
026 | உலவு முலகிற் றலைகற் பொழிய | நிலவு மயிலா ரவர்தாம் பயிலும் புலனைந் தும்மயங் கியகங் குழையப் அலமந்து மயங்கி அயர்வ தன்முன் 7.3.05
|
027 | ஏலம் இலவங் கம்எழிற் கனகம் | நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி வாலூன் றவருந் தும்முடம் பிதனை ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா 7.3.06
|
028 | சிகரம் முகத்திற் றிரளார் அகிலும் | நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும் மகரக் குழையாய் மணக்கோ லமதே அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7.3.07
|
029 | திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன் | நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின் பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற் அண்டா வமரர்க் கமரர் பெருமான் 7.3.08
|
030 | மாணா வுருவா கியோர்மண் ணளந்தான் | நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும் வாணார் நுதலார் வலைப்பட் டடியேன் ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய் 7.3.09
|
031 | நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின் | தேரூர் நெடுவீதி நன்மா டமலி ஆரூ ரனுரைத் தனநற் றமிழின் காரூர் களிவண் டறையானை மன்ன 7.3.10
| |
032 |
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.01 | | 033 | பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட அடித்தார் கடலங் கரைமேன் மகோதை 7.4.02
|
034 | சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே | முந்தித் தொழுவார் இறவார் பிறவார் சந்தித் தடமால் வரைபோற் றிரைகள் அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் 7.4.03
|
035 | இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் | குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.04
|
036 | வீடின் பயனென் பிறப்பின் பயனென் | கூடும் மலைமங் கைஒருத் தியுடன் பாடும் புலவர்க் கருளும் பொருளென் ஆடுங் கடலங் கரைமேல் மகோதை 7.4.05
|
037 | இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே | பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங் டரவக் கடலங் கரைமேல் மகோதை 7.4.06
|
038 | ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான் | நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான் நோக்கும் நிதியம் பலவெத் தனையுங் ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.07
|
039 | வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் | இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத் கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங் றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை 7.4.08
|
040 | பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான் | நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள் டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.09
|
041 | எந்தம் அடிகள் இமையோர் பெருமான் | அந்தண் கடலங் கரைமேல் மகோதை மந்தம் முழவுங் குழலு மியம்பும் சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் 7.4.10
| |
042 |
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு கையி லொன்றுங் காண மில்லைக் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி குய்யு மாறொன் றருளிச் செய்யீர் 7.5.01 | | 043 | திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் கங்கை யாளேல் வாய்தி றவாள் அங்கை வேலோன் குமரன் பிள்ளை உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம் 7.5.02
|
044 | பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் | மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஒற்றி வைத்திங் குண்ண லாமோ 7.5.03
|
045 | வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை | றில்லை என்னீர் உண்டும் என்னீர் பல்லை யுக்கப் படுத லையிற் கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் 7.5.04
|
046 | கூடிக் கூடித் தொண்டர் தங்கள் | ஆடிப் பாடி அழுது நெக்கங் தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ் ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் 7.5.05
|
047 | வாரி ருங்குழல் வாணெ டுங்கண் | தாரி ருந்தட மார்பு நீங்காத் காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே 7.5.06
|
048 | பொய்ம்மை யாலே போது போக்கிப் | மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் உம்மை என்றே எம்பெ ருமான் 7.5.07
|
049 | வலையம் வைத்த கூற்ற மீவான் | சிலைய மைத்த சிந்தை யாலே கலைய மைத்த காமச் செற்றக் உலைய மைத்திங் கொன்ற மாட்டேன் 7.5.08
|
050 | வார மாகித் திருவ டிக்குப் | ஆரம் பாம்பு வாழ்வ தாரூர் தார மாகக் கங்கை யாளைச் ஊருங் காடு உடையுந் தோலே 7.5.09
|
051 | ஓவ ணமேல் எருதொன் றேறும் | ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட கோவ ணமேற் கொண்ட வேடங் பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் 7.5.10
| |
052 |
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் அடங்க லார்ஊர் எரியச் சீறி மடங்க லானைச் செற்று கந்தீர் விடங்க ராகித் திரிவ தென்னே 7.6.01 | | 053 | இழித்து கந்தீர் முன்னை வேடம் தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட அழிக்க வந்த காம வேளை விழித்து கந்த வெற்றி யென்னே 7.6.02
|
054 | படைகள் ஏந்திப் பாரி டமும் | உடையோர் கோவ ணத்த ராகி சடைகள் தாழக் கரணம் இட்டுத் விடைய தேறித் திரிவ தென்னே 7.6.03
|
055 | பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் | கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக் மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் விண்ணு ளீராய் நிற்ப தென்னே 7.6.04
|
056 | குடமெ டுத்து நீரும் பூவுங் | நடமெ டுத்தொன் றாடிப் பாடி வடமெ டுத்த கொங்கை மாதோர் விடம்மி டற்றில் வைத்த தென்னே 7.6.05
|
057 | மாறு பட்ட வனத்த கத்தில் | பீறி இட்ட மாகப் போர்த்தீர் கூறு பட்ட கொடியும் நீருங் வேறு பட்டுத் திரிவ தென்னே 7.6.06
|
058 | காத லாலே கருதுந் தொண்டர் | பூதம் பாடப் புரிந்து நட்டம் நீதி யாக ஏழி லோசை வேத மோதித் திரிவ தென்னே 7.6.07
|
059 | குரவு கொன்றை மதியம் மத்தங் | விரவு கின்ற சடையு டையீர் பரவும் என்மேல் பழிகள் போக்கீர் வெருவ வேழஞ் செற்ற தென்னே 7.6.08
|
060 | மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் | பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் நாடுங் காட்டில் அயனும் மாலும் வேடங் காட்டித் திரிவ தென்னே 7.6.09
|
061 | விரித்த வேதம் ஓத வல்லார் | விருத்த னாய வேதன் றன்னை அருத்தி யாலா ரூரன் தொண்டன் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் 7.6.10
| |
062 |
மத்த யானை ஏறி மன்னர் செத்த போதில் ஆரும் இல்லை வைத்த உள்ளம் மாற்ற வேண்டா அத்தர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.01 | | 063 | தோற்றம் உண்டேல் மரணம் உண்டு மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நீற்றர் ஏற்றர் நீல கண்டர் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.02
|
064 | செடிகொ ளாக்கை சென்று சென்று | வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் அடிகள் கோயில் எதிர்கொள் பாடி 7.7.03
|
065 | வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் | யாவ ராலும் இகழப் பட்டிங் மூவ ராயும் இருவ ராயும் தேவர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.04
|
066 | அரித்து நம்மேல் ஐவர் வந்திங் | சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் எரித்த வில்லி எதிர்கொள் பாடி 7.7.05
|
067 | பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் | மையல் கொண்டீர் எம்மோ டாடி நைய வேண்டா இம்மை யேத்த ஐயர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.06
|
068 | கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் | வாசம் மல்கு குழலி னார்கள் ஆசை நீக்கி அன்பு சேர்த்தி ஈசர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.07
|
069 | இன்பம் உண்டேல் துன்பம் உண்டு | முன்பு சொன்ன மோழை மையான் அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை என்பர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.08
|
070 | தந்தை யாரும் தவ்வை யாரும் | வந்து நம்மோ டுள்ள ளாவி சிந்தை யீரே நெஞ்சி னீரே எந்தை கோயில் எதிர்கொள் பாடி 7.7.09
|
071 | குருதி சோர ஆனையின் றோல் | மருது கீறி ஊடு போன சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் கருது கோயில் எதிர்கொள் பாடி 7.7.10
|
072 | முத்து நீற்றுப் பவள மேனிச் | பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் பத்தன் ஊரன் பாடல் வல்லார் 7.7.11
| |
073 |
இறைகளோ டிசைந்த இன்பம் பறைகிழித் தனைய போர்வை திறைகொணர்ந் தீண்டித் தேவர் அறைகழல் இறைஞ்சும் ஆரூர் 7.8.1 | | 074 | ஊன்மிசை உதிரக் குப்பை மான்மறித் தனைய நோக்க மானுடப் பிறவி வாழ்வு ஆனல்வெள் ளேற்ற ஆரூர் 7.8.2
|
075 | அறுபதும் பத்தும் எட்டும் | துறுபறித் தனைய நோக்கிச் நறுமலர்ப் பூவும் நீரும் அறிவினைக் கொடுக்கும் ஆரூர் 7.8.3
|
076 | சொல்லிடில் எல்லை இல்லை | நல்லதோர் கூரை புக்கு மல்லிகை மாடம் நீடு அல்லிவண் டியங்கும் ஆரூர் 7.8.4
|
077 | நரம்பினோ டெலும்பு கட்டி | குரம்பைவாய்க் குடியி ருந்து விரும்பிய கமழும் புன்னை அரும்புவாய் மலரும் ஆரூர் 7.8.5
|
078 | மணமென மகிழ்வர் முன்னே | பிணமெனச் சுடுவர் பேர்த்தே பணையிடைச் சோலை தோறும் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் 7.8.6
|
079 | தாழ்வெனுந் தன்மை விட்டுத் | வாழ்வதே கருதித் தொண்டர் ஆழ்குழிப் பட்ட போது யாழ்முயன் றிருக்கும் ஆரூர் 7.8.7
|
080 | உதிரநீர் இறைச்சிக் குப்பை | வருவதோர் மாயக் கூரை கரியமால் அயனுந் தேடிக் அரியனாய் நின்ற ஆரூர் 7.8.8
|
081 | பொய்த்தன்மைத் தாய மாயப் | வித்தகத் தாய வாழ்வு முத்தினைத் தொழுது நாளும் அத்தன்மைத் தாகும் ஆரூர் 7.8.9
|
082 | தஞ்சொலார் அருள் பயக்குந் | அஞ்சொலார் பயிலும் ஆரூர் செஞ்சொலால் நயந்த பாடல் நஞ்சுலாங் கண்டத் தெங்கள் 7.8.10
| |
083 |
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர் சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர் கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக் அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.1 | | 084 | அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத் திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப் ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி 7.9.2
|
085 | தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ் | சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித் முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும் அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.3
|
086 | கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம் | இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில் கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக் பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ 7.9.4
|
087 | வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும் | உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை 7.9.5
|
088 | *அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி | மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி *திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப் பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன் பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள் ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில் பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில் அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும் நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும் ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது. 7.9.6
|
089 | பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் | தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.7
|
090 | பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் | பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங் பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் 7.9.8
|
091 | மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் | முழைக்கொள் அரவோ டென்பணி கலனா கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.9
|
092 | கடிக்கும் அரவால் மலையால் அமரர் | ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.10
|
093 | காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை | போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப் ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ சீரூர் தருதேவர் கணங்க ளொடும் 7.9.11
| |
094 |
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு கோனை யெரித்தெரி யாடி இடங்குல மானை இடத்ததோர் கையனி டம்மத யானை யுரித்த பிரான திடங்கலிக் 7.10.1 | | 095 | கூறு நடைக்குழி கட்பகு வாயன வேறு படக்குட கத்திலை யம்பல ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக் 7.10.2
|
096 | கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி | கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக் 7.10.3
|
097 | கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் | மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக் 7.10.4
|
098 | பைத்த படத்தலை ஆடர வம்பயில் | சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக் 7.10.5
|
099 | தண்ட முடைத்தரு மன்தமர் என்றம | பிண்ட முடைப்பிற வித்தலை நின்று கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் 7.10.6
|
100 | கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு | விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற் மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் 7.10.7
|
101 | புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர் | வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் 7.10.8
|
102 | சங்கை யவர்புணர் தற்கரி யான்றள | மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல் தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக் 7.10.9
|
103 | வீடு பெறப்பல ஊழிகள் நின்று | பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன் கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக் 7.10.10
| |
104 |
திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.1 | 105 | எண்ணி இருந்து கிடந்து நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.2 | 106 | தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.3 | 107 | நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.4 | 108 | நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடியணி வார்உறை பூவணம் ஈதோ. | 7.11.5 | 109 | மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ. | 7.11.6 | 110 | மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லாலிற வூன்றி நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம் புக்குறை வான்உறை பூவணம் ஈதோ. | 7.11.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 7.11.8-9 | 111 | சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் ஆர விருப்பிட மாஉறை வான்றனை ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. | 7.11.10 |
112 |
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர் தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம் வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே. | 7.12.1 | 113 | அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர் தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே. | 7.12.2 | 114 | மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர் நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர் கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும் வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. | 7.12.3 | 115 | தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர் நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே. | 7.12.4 | 116 | குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக் கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும் மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. | 7.12.5 | 117 | தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. | 7.12.6 | 118 | ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம் சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே. | 7.12.7 | 119 | நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர் நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங் காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே. | 7.12.8 | 120 | தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம் பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே. | 7.12.9 | 121 | மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே. | 7.12.10 | 122 | பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல் பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே. | 7.12.11 |
123 |
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக் குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.1 | 124 | மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர் அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.2 | 125 | கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் மந்தி பலமா நடமாடுந் துறையூர் எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.3 | 126 | அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர் விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.4 | 127 | பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர் வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.5 | 128 | மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச் சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.6 | 129 | மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர் நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.7 | 130 | கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மையார் தடங்கண் ணியராடுந் துறையூர் ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.8 | 131 | விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர் அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.9 | 132 | மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த் தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.10 | 133 | செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற் பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே. | 7.13.11 |
134 |
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பித்தரே யொத்தோர் நச்சில ராகில் 7.14.1 | | 135 | அன்னையே என்னேன் அத்தனே என்னேன் என்னையும் ஒருவன் உளனென்று கருதி அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் 7.14.2
|
136 | உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் | செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் 7.14.3
|
137 | நாச்சில பேசி நமர்பிறர் என்று | பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் 7.14.4
|
138 | வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை | புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் 7.14.5
|
139 | செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் | அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் 7.14.6
|
140 | கையது கபாலங் காடுறை வாழ்க்கை | மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் பையர வல்குற் பாவைய ராடும் மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில் 7.14.7
|
141 | நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் | கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங் பணம்படும் அரவம் பற்றிய கையர் பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் 7.14.8
|
142 | குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே | இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் 7.14.9
|
143 | துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் | மணிப்படு கண்டனை வாயினாற் கூறி பணிப்படும் அரவம் பற்றிய கையர் பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் 7.14.10
|
144 | ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் | உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் 7.14.11
|
145 | ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல | பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் 7.14.12
| |
146 |
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன் காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் நானே லும்மடி பாடுதல் ஒழியேன் 7.15.1 | | 147 | கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல நச்சேன் ஒருவரை நானுமை யல்லால் 7.15.2
|
148 | அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன் | பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ 7.15.3
|
149 | கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை | நில்லே னல்லேன் நின்வழி நின்றார் வல்லே னல்லேன் பொன்னடி பரவ நல்லே னல்லேன் நானுமக் கல்லால் 7.15.4
|
150 | மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் | ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன் பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் 7.15.5
|
151 | படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் | குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும் நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே 7.15.6
|
152 | ஐவாய் அரவினை மதியுடன் வைத்த | எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன் நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன் 7.15.7
|
153 | கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக் | பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன் வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் நலியேன் ஒருவரை நானுமை யல்லால் 7.15.8
|
154 | குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் | கண்டா லுங்கரு தேன்எரு தேறுங் தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு நண்டா டும்வயற் றண்டலை வேலி 7.15.9
|
155 | கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற | நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர் 7.15.10
| |
156 |
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் 7.16.1 | | 157 | செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் 7.16.2
|
158 | இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி | துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத் மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும் கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக் 7.16.3
|
159 | மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் | உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற் 7.16.4
|
160 | நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா | வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார் சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந் கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார் 7.16.5
|
161 | பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப் | செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித் தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந் கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை *எச்சன்சிரம், இந்திரன்றோள், சூரியன்பல், அக்கினிதேவன் கரம், பகன் என்னும் பெயருள்ள மற்றொரு சூரியன்கண் இவை பீடழிந்தவை. #விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல் நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது. இதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க. 7.16.6
|
162 | இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும் | நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப் கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற் 7.16.7
|
163 | மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன் | வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும் சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச் காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து 7.16.8
|
164 | பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது | கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக் இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம் கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் 7.16.9
|
165 | தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற் | வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த 7.16.10
|
166 | தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன் | உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர் நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் 7.16.11
| |
167 |
கோவலன் நான்முகன் வானவர் மேவலர் முப்புரந் தீயெழு ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் நாவல னார்க்கிட மாவது 7.17.1 | | 168 | தன்மையி னாலடி யேனைத்தாம் வன்மைகள் பேசிட வன்றொண்டன் புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் நன்மையி னார்க்கிட மாவது 7.17.2
|
169 | வேகங்கொண் டோ டிய வெள்விடை | ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் போகங்கொண் டார்*கடற் கோடியின் நாகங்கொண் டார்க்கிட மாவது *கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை. 7.17.3
|
170 | அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் | தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத் நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் நஞ்சங்கொண் டார்க்கிட மாவது 7.17.4
|
171 | உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித் | செம்பொனார் தீவண்ணர் தூவண்ண எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் நம்பிரா னார்க்கிட மாவது 7.17.5
|
172 | கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் | வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் நாட்டங்கொண் டார்க்கிட மாவது 7.17.6
|
173 | தாயவ ளாய்த்தந்தை யாகிச் | போயக லாமைத்தன் பொன்னடிக் வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் நாயக னார்க்கிட மாவது 7.17.7
|
174 | வாயாடி மாமறை ஓதியோர் | தீயாடி யார்சினக் கேழலின் வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் நாயாடி யார்க்கிட மாவது 7.17.8
|
175 | படமாடு பாம்பணை யானுக்கும் | வடமாடு மால்விடை ஏற்றுக்கும் இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் நடமாடி யார்க்கிட மாவது 7.17.9
|
176 | மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் | அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் தடுக்கவொண் ணாததோர் வேழத்தி நடுக்கங்கண் டார்க்கிட மாவது 7.17.10
|
177 | நாதனுக் கூர்நமக் கூர்நர | ஆதரித் தீசனுக் காட்செயும் றோதநற் றக்கவன் றொண்டனா காதலித் துங்கற்றுங் கேட்பவர் 7.17.11
| |
178 |
மூப்பதும் இல்லை பிறப்பதும் சேர்ப்பது காட்டகத் தூரினு காப்பது வேள்விக் குடிதண் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் 7.18.1 | | 179 | கட்டக்காட் டில்நட மாடுவரி சுட்டவெண் ணீறணிந் தாடுவர் வட்டக்குண் டத்தில் எரிவளர்த் அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் 7.18.2
|
180 | பேருமோர் ஆயிரம் பேருடை | ஊரும தொற்றியூர் மற்றையூர் காருங் கருங்கடல் நஞ்சமு காரம்பாம் பாவ தறிந்தோமேல் 7.18.3
|
181 | ஏனக்கொம் பும்மிள ஆமையும் | கானக்காட் டிற்றொண்டர் கண்டன மானைத்தோல் ஒன்றை உடுத்துப் யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் 7.18.4
|
182 | ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் | பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் 7.18.5
|
183 | குறவனார் தம்மகள் தம்மக | மறவனா ராயங்கோர் பன்றிப்பின் இறைவனார் ஆதியார் சோதிய அறவனார் ஆவத றிந்தோமேல் 7.18.6
|
184 | பித்தரை ஒத்தொரு பெற்றியர் | முத்தவை தம்மனை தந்தைக்குந் செத்தவர் தந்தலை யிற்பலி அத்தவம் ஆவத றிந்தோமேல் 7.18.7
|
185 | உம்பரான் ஊழியான் ஆழியான் | தம்பரம் அல்லவர் சிந்திப்ப எம்பரம் அல்லவர் என்னெஞ்சத் அம்பரம் ஆவத றிந்தோமேல் 7.18.8
|
186 | இந்திர னுக்கும் இராவண | மந்திரம் ஓதுவர் மாமறை சிந்துரக் கண்ணனும் நான்முக அந்தரஞ் செல்வத றிந்தோமேல் 7.18.9
|
187 | கூடலர் மன்னன் குலநாவ | பாடவல் லபர மன்னடி நாடவல் லதொண்டன் ஆரூரன் பாடவல் லார்பர லோகத் 7.18.10
| |
188 |
அற்றவ னாரடி யார்தமக் பற்றவ னாரெம் பராபர கொற்றவ னார்குறு காதவர் செற்றவ னார்க்கிட மாவது 7.19.1 | | 189 | வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் பூசத்தி னார்புக லிந்நகர் நேசத்தி னாலென்னை யாளுங்கொண் தேசத்தி னார்க்கிட மாவது 7.19.2
|
190 | அங்கையின் மூவிலை வேலர் | சங்கையை நீங்க அருளித் மங்கையோர் பாகர் மகிழ்ந்த செங்கயல் பாயும் வயல்பொலி 7.19.3
|
191 | ஆறுகந் தாரங்கம் நான்மறை | ஏறுகந் தாரிசை ஏழுகந் வேறுகந் தார்விரி நூலுகந் நீறுகந் தாருறை யும்மிட 7.19.4
|
192 | வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் | அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி தஞ்சங்கொண் டார்தமக் கென்றும் நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது 7.19.5
|
193 | ஆர்த்தவர் ஆடர வம்மரை | போர்த்தவர் ஆனையின் தோலுடல் பார்த்தவ ரின்னுயிர் பார்படைத் சேர்த்தவ ருக்குறை யும்மிட 7.19.6
|
194 | தலையிடை யார்பலி சென்றகந் | மலையுடை யாளொரு பாகம்வைத் அலையுடை யார்சடை எட்டுஞ் நிலையுடை யாருறை யும்மிட 7.19.7
|
195 | எட்டுகந் தார்திசை ஏழுகந் | இட்டுகந் தார்மலர்ப் பூசையிச் பட்டுகும் பாரிடைக் காலனைக் சிட்டுகந் தார்க்கிட மாவது 7.19.8
|
196 | காலமும் ஞாயிறு மாகிநின் | சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் மாலொடு நான்முகன் இந்திரன் நீலநஞ் சுண்டவ ருக்கிட 7.19.9
|
197 | வாயார் மனத்தால் நினைக்கு | தூயார் சுடுபொடி யாடிய மேயார் விடையுகந் தேறிய சேயார் அடியார்க் கணியவர் 7.19.10
|
198 | சேரும் புகழ்த்தொண்டர் செய்கை | சீருஞ் சிவகதி யாயிருந் ரூரன் உரைத்த உறுதமிழ் பாரும் விசும்புந் தொழப்பர 7.19.11
| |
199 |
நீள நினைந்தடி யேனுமை வாளன கண்மட வாளவள் கோளிலி எம்பெரு மான்குண்டை ஆளிலை எம்பெரு மானவை 7.20.1 | | 200 | வண்டம ருங்குழ லாளுமை விண்டவர் தம்புர மூன்றெரி தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் அண்டம தாயவ னேயவை 7.20.1
|
201 | பாதியோர் பெண்ணைவைத் தாய்பட | மாதர்நல் லார்வருத் தம்மது கோதில் பொழில்புடை சூழ்குண்டை ஆதியே அற்புத னேயவை 7.20.3
|
202 | சொல்லுவ தென்னுனை நான்தொண்டை | புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு கொல்லை வளம்புற விற்குண்டை அல்லல் களைந்தடி யேற்கவை 7.20.4
|
203 | முல்லை முறுவல் உமையொரு | பல்லயர் வெண்டலை யிற்பலி கொல்லை வளம்புற விற்றிருக் அல்லல் களைந்தடி யேற்கவை 7.20.5
|
204 | குரவம ருங்குழ லாளுமை | பரவை பசிவருத் தம்மது குரவம ரும்பொழில் சூழ்குண்டை அரவ மசைத்தவ னேயவை 7.20.6
|
205 | எம்பெரு மானுனை யேநினைந் | வம்பம ருங்குழ லாளொரு செம்பொனின் மாளிகை சூழ்திருக் அன்பது வாயடி யேற்கவை 7.20.7
|
206 | அரக்கன் முடிகரங் கள்அடர்த் | பரக்கும் அரவல்கு லாள்பர குரக்கினங் கள்குதி கொள்குண்டை இரக்கம தாயடி யேற்கவை 7.20.8
|
207 | பண்டைய மால்பிர மன்பறந் | கண்டில ராயவர் கள்கழல் தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் அண்டம தாயவ னேயவை 7.20.9
|
208 | கொல்லை வளம்புற விற்றிருக் | நல்லவர் தாம்பர வுந்திரு நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந் அல்லல் களைந்துல கின்அண்டர் 7.20.10
| |
209 |
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும் எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே. | 7.21.1 | 210 | ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும் மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. | 7.21.2 | 211 | மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும் ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே. | 7.21.3 | 212 | உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன் எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன் செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும் பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே. | 7.21.4 | 213 | எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார் மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும் பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே. | 7.21.5 | 214 | நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங் கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே. | 7.21.6 | 215 | கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும் ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.21.7 | 216 | விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால் உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும் திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும் அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.21.8 | 217 | நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. | 7.21.9 | 218 | பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச் சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. | 7.21.10 |
219 |
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.1 | 220 | அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம் வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.2 | 221 | ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.3 | 222 | அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங் கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல் நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப் படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.4 | 223 | உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.5 | 224 | செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர் கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான் கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப் படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.6 | 225 | கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப் படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே. | 7.22.7 | 226 | திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான் அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே. *அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப் புட்பவிதியிற் காண்க. | 7.22.8 | 227 | வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந் துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர் பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள் பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே. | 7.22.9 | 228 | பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ் சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும் எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே. | 7.22.10 |
229 |
செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும் அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும் வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே. | 7.23.1 | 230 | எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால் அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. | 7.23.2 | 231 | ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.3 | 232 | சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர் அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன் விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.4 | 233 | ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய் கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே. | 7.23.5 | 234 | ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற் போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக் காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப் பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே. | 7.23.6 | 235 | பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள் உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங் கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.7 | 236 | படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய் அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக் கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே. | 7.23.8 | 237 | பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான் செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே. | 7.23.9 | 238 | பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத் தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே. | 7.23.10 |
239 |
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.1 | 240 | கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.2 | 241 | எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.3 | 242 | பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.4 | 243 | கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.5 | 244 | நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.6 | 245 | சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.7 | 246 | வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.8 | 247 | நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. | 7.24.9 | 248 | ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. | 7.24.10 |
249 |
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே. *இட்டளம் து துன்பம். | 7.25.1 | 250 | உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.2 | 251 | பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.3 | 252 | மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர் திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர் கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.4 | 253 | மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய் பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள் ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.5 | 254 | நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.6 | 255 | கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல் வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய் பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.7 | 256 | பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. | 7.25.8 | 257 | ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே. | 7.25.9 | 258 | பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே. திருமுதுகுன்றமென்னும் விருத்தாசலத்தில் பரமசிவம் அருளிச்செய்த பொன்னை மணிமுத்தா நதியில் விட்டுப்போய்த் திருவாரூர்க்கமலாலயமென்னுந் திருக்குளத்திலிறங்கிக் கையால்தடவும்போதோதிய பதிகம். அவ்வாறு தடவும்போது, "எத்தாதிருந்தறியே னென்னுந்" தேவாரமோதுகையில் பொருளகப்பட்டது. | 7.25.10 |
259 |
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.1 | 260 | இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய் உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.2 | 261 | படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய் கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய் உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே. | 7.26.3 | 262 | மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன் நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள் அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.4 | 263 | செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற் துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய் அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.5 | 264 | பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென் ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. | 7.26.6 | 265 | கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள் குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய் அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே. | 7.26.7 | 266 | நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக் கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய் ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே. | 7.26.8 | 267 | தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான் களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே. | 7.26.9 | 268 | காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே. | 7.26.10 |
269 |
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய் படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.1 | 270 | மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.2 | 271 | சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.3 | 272 | செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.4 | 273 | சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே. | 7.27.5 | 274 | அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய் கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.6 | 275 | பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.7 | 276 | நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங் கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே. | 7.27.8 | 277 | வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற் பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே. | 7.27.9 | 278 | அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங் கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச் சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே. | 7.27.10 |
279 |
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.1 | 280 | பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.2 | 281 | அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான் கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. | 7.28.3 | 282 | போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத் தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.4 | 283 | மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.5 | 284 | மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.6 | 285 | எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம் அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.7 | 286 | வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. | 7.28.8 | 287 | அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள் அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.9 | 288 | காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன் ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ் பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. | 7.28.10 |
289 |
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.1 | 290 | ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.2 | 291 | பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.3 | 292 | வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை அப்படி அழகாய அணிநடை மடவன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.4 | 293 | வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.5 | 294 | பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.6 | 295 | போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான் சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.7 | 296 | மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக் கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.8 | 297 | படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | 7.29.9 | 298 | வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன் உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. | 7.29.10 |
299 |
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட எம்மானை மனத்தினால் நினைந்தபோ 7.30.1 | | 300 | நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் காற்றானைத் தீயானைக் கதிரானை கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ 7.30.2
|
301 | முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப் | கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும் கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் எட்டான மூர்த்தியை நினைந்தபோ 7.30.3
|
302 | விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி | கருந்தாள வாழைமேற் செங்கனிகள் குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் இருந்தானை மனத்தினால் நினைந்தபோ 7.30.4
|
303 | பொடியேறு திருமேனிப் பெருமானைப் | கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை கொடியேறி வண்டினமுந் தண்டேனும் அடியேறு கழலானை நினைந்தபோ 7.30.5
|
304 | பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் | கையினா லெரியோம்பி மறைவளர்க்கும் கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ 7.30.6
|
305 | செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் | கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ 7.30.7
|
306 | பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் | கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன் குறையாத மறைநாவர் குற்றேவல் உறைவானை மனத்தினால் நினைந்தபோ 7.30.8
|
307 | சங்கேந்து கையானுந் தாமரையின் | கங்கார்ந்த வார்சடைகள் உடையானை கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் எங்கோனை மனத்தினால் நினைந்தபோ 7.30.9
|
308 | பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் | கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ 7.30.10
|
309 | கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் | குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் இலைமலிந்த மழுவானை மனத்தினா மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப் 7.30.11
| |
310 |
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.1 | 311 | சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.2 | 312 | கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.3 | 313 | கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.4 | 314 | நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.5 | 315 | திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.6 | 316 | கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.7 | 317 | தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.8 | 318 | பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர் தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர் கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல் ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. | 7.31.9 | 319 | ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே. | 7.31.10 |
320 |
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற் குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. | 7.32.1 | 321 | முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.2 | 322 | மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் பத்தர் பலர்பாட இருந்த பரமா கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.3 | 323 | காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக் கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. | 7.32.4 | 324 | மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க் கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. | 7.32.5 | 325 | அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற் குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. | 7.32.6 | 326 | பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.7 | 327 | ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ முற்றா மதிசூடிய கோடிக் குழகா எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே. | 7.32.8 | 328 | நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே. | 7.32.9 | 329 | பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார் சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே. | 7.32.10 |
330 |
பாறுதாங்கிய காடரோபடு கூறுதாங்கிய குழகரோகுழைக் ஏறுதாங்கிய கொடியரோசுடு ஆறுதாங்கிய சடையரோநமக் 7.33.1 | | 331 | இட்டிதாகவந் துரைமினோநுமக் கட்டிவாழ்வது நாகமோசடை பட்டியேறுகந் தேறரோபடு தட்டியாளவுங் கிற்பரோநமக் 7.33.2
|
332 | ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக் | குன்றிபோல்வதோ ருருவரோகுறிப் இன்றியேயிலர் ஆவரோஅன்றி அன்றியேமிக அறவரோநமக் 7.33.3
|
333 | தேனையாடுமுக் கண்ணரோமிகச் | பானெய்ஆடலும் பயில்வரோதமைப் மானைமேவிய கண்ணினாள்மலை ஆனையீருரி போர்ப்பரோநமக் 7.33.4
|
334 | கோணல்மாமதி சூடரோகொடு | வீணைதானவர் கருவியோ நாணதாகவோர் நாகங்கொண்டரைக் ஆணையாகநம் மடிகளோநமக் 7.33.5
|
335 | வந்துசொல்லுமின் மூடனேனுக்கு | வந்தசாயினை அறிவரோதம்மை புந்தியாலுரை கொள்வரோஅன்றிப் அன்றியேமிக அறவரோநமக் 7.33.6
|
336 | மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக் | கையிற்சூலம துடையரோகரி வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை றையங்கொள்ளுமவ் வடிகளோநமக் 7.33.7
|
337 | நீடுவாழ்பதி உடையரோஅயன் | பாடுவாரையும் உடையரோதமைப் காடுதானரங் காகவேகைகள் ஆடுவாரெனப் படுவரோநமக் 7.33.8
|
338 | நமணநந்தியுங் கருமவீரனுந் | குமணமாமலைக் குன்றுபோனின்று ஞமணஞாஞண ஞாணஞோணமென் அமணராற்பழிப் புடையரோநமக் 7.33.9
|
339 | படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந் | வடிவிலான்றிரு நாவலூரன் செடியனாகிலுந் தீயனாகிலுந் அடியனூரனை ஆள்வரோநமக் 7.33.10
| |
340 |
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை இம்மையேதருஞ் சோறுங்கூறையும் அம்மையேசிவ லோகமாள்வதற் 7.34.1 | | 341 | மிடுக்கிலாதானை வீமனேவிறல் கொடுக்கிலாதானைப் பாரியேயென்று பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக அடுக்குமேலம ருலகமாள்வதற் 7.34.2
|
342 | காணியேற்பெரி துடையனேகற்று | பேணியேவிருந் தோம்புமேயென்று பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் ஆணியாயம ருலகமாள்வதற் 7.34.3
|
343 | நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் | வரைகள்போல்திரள் தோளனேயென்று புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக அரையனாயம ருலகமாள்வதற் 7.34.4
|
344 | வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் | பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் 7.34.5
|
345 | நலமிலாதானை நல்லனேயென்று | குலமிலாதானைக் குலவனேயென்று புலமெலாம்வெறி கமழும்பூம்புக அலமராதமர் உலகமாள்வதற் 7.34.6
|
346 | நோயனைத்தடந் தோளனேயென்று | தாயன்றோபுல வோர்க்கெலாமென்று போயுழன்றுகண் குழியாதேயெந்தை ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் 7.34.7
|
347 | எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் | வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் 7.34.8
|
348 | கற்றிலாதானைக் கற்றுநல்லனே | முற்றிலாதானை முற்றனேயென்று பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக அத்தனாயம ருலகமாள்வதற் 7.34.9
|
349 | தையலாருக்கோர் காமனேயென்றுஞ் | கையுலாவிய வேலனேயென்று பொய்கையாவியின் மேதிபாய்புக ஐயனாயம ருலகமாள்வதற் 7.34.10
|
350 | செறுவினிற்செழுங் கமலமோங்குதென் | நறவம்பூம்பொழில் நாவலூரன் சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய அறவனாரடி சென்றுசேர்வதற் இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப் புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில் திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது. 7.34.11
| |
351 |
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி தங்கினோமையும் இன்னதென்றிலர் கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் பொங்குமால்விடை யேறிசெல்வப் 7.35.1 | | 352 | பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம் புதியபூமலர்ந் தெல்லிநாறும் 7.35.2
|
353 | புறந்திரைந்து நரம்பெழுந்து | தறம்புரிந்து நினைப்பதாண்மை திறம்பியாதெழு நெஞ்சமேசிறு புறம்பயத்துறை பூதநாதன் 7.35.3
|
354 | குற்றொருவரைக் கூறைகொண்டு | செற்றொருவரைச் செய்ததீமைகள் மற்றொருவரைப் பற்றிலேன்மற புற்றரவுடைப் பெற்றமேறி 7.35.4
|
355 | கள்ளிநீசெய்த தீமையுள்ளன | தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண் துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் 7.35.5
|
356 | படையெலாம்பக டாரஆளிலும் | கடையெலாம்பிணைத் தேரைவால்கவ மடையெலாங்கழு நீர்மலர்ந்து புடையெலாம்மணம் நாறுசோலைப் 7.35.6
|
357 | முன்னைச்செய்வினை இம்மையில்வந்து | என்னைநீதியக் காதெழுமட அன்னச்சேவலோ டூடிப்பேடைகள் புன்னைக்கன்னி கழிக்கணாறும் 7.35.7
|
358 | மலமெலாமறும் இம்மையேமறு | சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் கலமெலாங்கடல் மண்டுகாவிரி புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் 7.35.8
|
359 | பண்டரியன செய்ததீமையும் | கண்டரியன கேட்டியேற்கவ தொண்டரியன பாடித்துள்ளிநின் புண்டரீக மலரும்பொய்கை 7.35.9
|
360 | துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் | அஞ்சிஊரன் திருப்புறம்பயத் நெஞ்சினாலே புறம்பயந்தொழு வஞ்சியாதுரை செய்யவல்லவர் 7.35.10
| |
361 |
காருலாவிய நஞ்சையுண்டிருள் டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி பாரெலாம்பணிந் தும்மையேபர ஆரமாவது நாகமோசொல்லும் 7.36.1 | | 362 | சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல் பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற் மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும் அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில் 7.36.2
|
363 | தூயவர்கண்ணும் வாயும்மேனியுந் | பேயொடாடலைத் தவிரும்நீரொரு பாயும்நீர்க்கிடங் கார்கமலமும் ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில் 7.36.3
|
364 | செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் | வந்துநிற்குமி தென்கொலோபலி பைந்தண்மாமலர் உந்துசோலைகள் அந்திவானமும் மேனியோசொல்லும் 7.36.4
|
365 | நீறுநுந்திரு மேனிநித்திலம் | கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந் பாறுவெண்டலை கையிலேந்திபைஞ் ஆறுதாங்கிய சடையரோசொல்லும் 7.36.5
|
366 | குரவம்நாறிய குழலினார்வளை | இரவும்இம்மனை அறிதிரேயிங்கே பரவிநாடொறும் பாடுவார்வினை அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும் 7.36.6
|
367 | ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர் | காடுநும்பதி ஓடுகையது பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ் ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும் 7.36.7
|
368 | மத்தமாமலர் கொன்றைவன்னியுங் | மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ் அத்தியீருரி போர்த்திரோசொல்லும் 7.36.8
|
369 | தக்கைதண்ணுமை தாளம்வீணை | கொக்கரைகுட முழவினோடிசை பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் 7.36.9
|
370 | கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு | மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர் பையவேவிடங் காகநின்றுபைஞ் ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும் 7.36.10
|
371 | அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில் | மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர் மன்னுதொல்புகழ் நாவலூரன்வன் துன்னிஇன்னிசை பாடுவார்உமை 7.36.11
| |
372 |
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.1 | 373 | பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும் உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.2 | 374 | சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக் கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.3 | 375 | சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள் அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும் உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.4 | 376 | இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள் அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக் கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும் முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே. | 7.37.5 | 377 | வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக் கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய் உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.6 | 378 | தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப் பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன் ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.7 | 379 | சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள் அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே. | 7.37.8 | 380 | குரவநா றக்குயில் வண்டினம் பாடநின் றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப் பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும் உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே. | 7.37.9 | 381 | கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப் பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. | 7.37.10 | 382 | நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும் அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச் சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப் பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே. | 7.37.11 |
383 |
தம்மானை அறியாத சாதியார் உளரே கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல் தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் எம்மானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.1 | | 384 | முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக் அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப் என்னேயென் எறிகெடில வடவீரட் டானத் 7.38.2
|
385 | விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே | கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக் வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும் இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத் 7.38.3
|
386 | நாற்றானத் தொருவனை நானாய பரனை | காற்றானைத் தீயானைக் கடலானை மலையின் ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான் ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.4
|
387 | சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும் | கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள் வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் 7.38.5
|
388 | மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் | தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் வெம்மான மதகரியின் உரியானை வேத எம்மானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.6
|
389 | வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு | பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத் செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய் எய்தானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.7
|
390 | பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை | தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின் என்னானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.8
|
391 | திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச் | கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும் இருந்தானை எறிகெடில வடவீரட் டானத் 7.38.9
|
392 | என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் | வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன் அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர் என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத் 7.38.10
| |
393 |
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் 7.39.1 | | 394 | இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் 7.39.2
|
395 | *மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் | செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் *விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது. 7.39.3
|
396 | திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட | பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் 7.39.4
|
397 | வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் | எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் #அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் *பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும் என்றருளிச்செய்தது. #அம்பரான் சோமாசி - திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர். 7.39.1
|
398 | வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே | சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் *கழறிற்றறிவார் - சேரமானாயனார். 7.39.6
|
399 | பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் | மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் *சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச் சத்தியாரென மாற்றுக. 7.39.7
|
400 | கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த | நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் 7.39.8
|
401 | கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் | மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் 7.39.9
|
402 | பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் | சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் *முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் *இவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள் 7.39.10
|
403 | மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் | தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் 7.39.11
| |
404 |
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் 7.40.1 | | 405 | ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய் பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக் 7.40.2
|
406 | இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை | சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ் அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் 7.40.3
|
407 | பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப் | நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின் காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக் 7.40.4
|
408 | செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத் | முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும் கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக் 7.40.5
|
409 | விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை | அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக் கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக் 7.40.6
|
410 | அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் | திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் 7.40.7
|
411 | இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் | குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக் தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக் 7.40.8
|
412 | குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் | பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப் துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் 7.40.9
|
413 | தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத் | மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் 7.40.10
|
414 | திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் | கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற் உரையினார் மதயானை நாவலா ரூரன் வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய் 7.40.11
| |
415 |
முதுவாய் ஓரி கதற முதுகாட் மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் அதுவே ஆமா றிதுவோ கச்சூர் 7.41.1 | | 416 | கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் றுச்சம் போதா ஊரூர் திரியக் இச்சை அறியோம் எங்கள் பெருமான் அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் 7.41.2
|
417 | சாலக் கோயில் உளநின் கோயில் | மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் கோலக் கோயில் குறையாக் கோயில் ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் 7.41.3
|
418 | விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் | கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் அடையுங் கழனிப் பழனக் கச்சூர் 7.41.4
|
419 | மேலை விதியே வினையின் பயனே | காலை யெழுந்து தொழுவார் தங்கள் மாலை மதியே மலைமேல் மருந்தே ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் 7.415
|
420 | பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் | துறவாய் மறவாய் சுடுகா டென்றும் ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் அறவே ஒழியாய் கச்சூர் வடபால் 7.41.6
|
421 | பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் | மெய்யே எங்கள் பெருமான் உன்னை மையார் தடங்கண் மங்கை பங்கா ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் 7.41.7
|
422 | ஊனைப் பெருக்கி உன்னை நினையா | கானக் கொன்றை கமழ மலருங் மானைப் புரையும் மடமென் னோக்கி ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் 7.41.8
|
423 | காதல் செய்து களித்துப் பிதற்றிக் | ஆதல் செய்யும் அடியார் இருக்க ஓதக் கண்டேன் உன்னை மறவேன் ஆதற் பழனக் கழனிக் கச்சூர் 7.41.9
|
424 | அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் | உன்ன முன்னும் மனத்தா ரூரன் மன்னு புலவன் வயல்நா வலர்கோன் பன்னு தமிழ்நூல் மாலை வல்லார் 7.41.10
| |
425 |
எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல் வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல் 7.42.1 | | 426 | குளங்கள் பலவுங் குழியுந் நிறையக் துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும் விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல் 7.42.2
|
427 | வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார் | திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங் விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் 7.42.3
|
428 | பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் | தண்ணா ரகிலுந் நலசா மரையும் மண்ணார் முழவுங் குழலும் இயம்ப விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல் 7.42.4
|
429 | துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந் | களையே கமழும் மலர்க்கொன் றையினாய் பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய் வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல் 7.42.5
|
430 | தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய் | உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார் முழவா ரொலிபா டலோடா டலறா விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல் 7.42.6
|
431 | கடமா களியா னையுரித் தவனே | நடமா டவல்லாய் நரையே றுகந்தாய் படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண் விடவார் அரவா வெஞ்சமாக் கூடல் 7.42.7
|
432 | காடும் மலையுந் நாடு மிடறிக் | சேட னுறையும் மிடந்தான் விரும்பி பாடல் முழவுங் குழலு மியம்பப் வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் 7.42.8
|
433 | கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே | பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல் 7.42.9
|
434 | வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார் | வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன் செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார் 7.42.10
| |
435 |
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே. | 7.43.1 | 436 | ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. | 7.43.2 | 437 | தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர் பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. | 7.43.3 | 438 | இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென் விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர் அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர் முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே. | 7.43.4 | 439 | ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே. | 7.43.5 | 440 | இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள் முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே. | 7.43.6 | 441 | சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே. | 7.43.7 | 442 | அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ் சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே. | 7.43.8 | 443 | செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே. | 7.43.9 | 444 | எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார் பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே. | 7.43.10 | 445 | முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார் எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே. | 7.43.11 |
446 |
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார் கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற் பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே. | 7.44.1 | 447 | தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள் கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள் ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே. | 7.44.2 | 448 | தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச் சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே. | 7.44.3 | 449 | நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள் எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச் சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப் பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே. | 7.44.4 | 450 | வேயன தோளி மலைம களைவி ரும்பிய மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும் பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே. | 7.44.5 | 451 | இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த் துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார் மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம் பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே. | 7.44.6 | 452 | தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும் ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும் ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப் பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே. | 7.44.7 | 453 | அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார் வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே. | 7.44.8 | 454 | கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால் எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள் பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக் கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே. | 7.44.9 | 455 | காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத் தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான் ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே. | 7.44.10 |
456 |
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய் ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட் பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள் மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே. | 7.45.1 | 457 | பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான் தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக் கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே. | 7.45.2 | 458 | காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப் பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார் ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே. | 7.45.3 | 459 | ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே. | 7.45.4 | 460 | வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச் சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால் அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே. | 7.45.5 | 461 | காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய் நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட் பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே. | 7.45.6 | 462 | எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக் கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப் பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன் அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே. | 7.45.7 | 463 | பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே. | 7.45.8 | 464 | தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே. | 7.45.9 | 465 | உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள் பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட் பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே. | 7.45.10 | 466 | ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல் பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே. | 7.45.11 |
467 |
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் 7.46.1 | | 468 | வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந் காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங் 7.46.2
|
469 | பூண்பதோர் இளவாமை பொருவிடையொன் றேறிப் | பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால் காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக் 7.46.3
|
470 | விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக | துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச் வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல் கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர் 7.46.4
|
471 | மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து | தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ் பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும் கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர் 7.46.5
|
472 | இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம் | பலவகம்புக் குழிதர்வீர் பட்டோ டு சாந்தம் உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக் 7.46.6
|
473 | தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல் | தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத் நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும் 7.46.7
|
474 | மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் | ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர் தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் 7.46.8
|
475 | மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி | எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான் திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில் கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா 7.46.9
|
476 | மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் | கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள் பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் 7.46.10
|
477 | பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் | உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங் றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. 7.46.11
| |
478 |
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. | 7.47.1 | 479 | கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக் கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே. | 7.47.2 | 480 | நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. | 7.47.3 | 481 | ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே. | 7.47.4 | 482 | மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே. | 7.47.5 | 483 | தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. | 7.47.6 | 484 | தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே. | 7.47.7 | 485 | துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய் திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே. | 7.47.8 | 486 | புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே. | 7.47.9 | 487 | கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே. | 7.47.10 |
488 |
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் 7.48.1 | | 489 | இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் கெட்ட நாளிவை என்ற லாற்கரு வட்ட வாசிகை கொண்ட டிதொழு நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் 7.48.2
|
490 | ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் | காவு நாளிவை என்ற லாற்கரு பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் 7.48.3
|
491 | எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை | கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் 7.48.4
|
492 | அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி | அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் 7.48.5
|
493 | ஏடு வானிளந் திங்கள் சூடினை | ஆடு பாம்பத ரைக்க சைத்த பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சேட னேயுனை நான்ம றக்கினுஞ் 7.48.6
|
494 | விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் | நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் 7.48.7
|
495 | செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் | வம்பு லாங்குழ லாளைப் பாகம கொம்பின் மேற்குயில் கூவ மாமயி நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் 7.48.8
|
496 | சார ணன்தந்தை எம்பி ரானெந்தை | பேரெ ணாயிர கோடி தேவர் நார ணன்பிர மன்றொ ழுங்கறை கார ணாவுனை நான்ம றக்கினுஞ் 7.48.9
|
497 | கோணி யபிறை சூடியைக் கறை | பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத் நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை 7.48.10
| |
498 |
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் 7.49.1 | | 499 | வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் 7.49.2
|
500 | பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் | *உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் *உயிர் - உசிர் என மருவியது. 7.49.3
|
501 | பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் | சூறைப் பங்கிய ராகி நாடொறுங் மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் 7.49.4
|
502 | தயங்கு தோலை உடுத்த சங்கரா | மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் 7.49.5
|
503 | விட்டி சைப்பன கொக்க ரைகொடு | கொட்டிப் பாடுமித் துந்து மியொடு மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் 7.49.6
|
504 | வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் | ஓதம் மேவிய ஒற்றி யூரையும் மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் ஏது காரணம் எது காவல்கொண் 7.49.7
|
505 | படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் | மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் இடவ மேறியும் போவ தாகில்நீர் 7.49.8
|
506 | சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் | வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் மோந்தை யோடு முழக்கறா முருகன் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் 7.49.9
|
507 | முந்தி வானவர் தாந்தொழு முருகன் | பந்த ணைவிரற் பாவை தன்னையோர் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் 7.49.10
| |
508 |
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும் மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர் பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே. | 7.50.1 | 509 | கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும் எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர் பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே. | 7.50.2 | 510 | தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும் நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம் அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப் புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே. | 7.50.3 | 511 | வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும் பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல் கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே. | 7.50.4 | 512 | நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும் நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம் வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப் புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே. | 7.50.5 | 513 | மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும் உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப் புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே. | 7.50.6 | 514 | ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும் பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப் பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே. | 7.50.7 | 515 | கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே. | 7.50.8 | 516 | எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும் மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக் கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப் புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே. | 7.50.9 | 517 | பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க் குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே. | 7.50.10 |