Holy Bible - Old Testament
Book 12. King -II (in Tamil, Unicode/utf-8 format)
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai
for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his
help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in Unicode /utf-8 format.
So you need to have a Unicode font with the Tamil character block and a
unicode-compliant browser to view the Tamil part properly.
Several Unicode Tamil fonts are available free download at
Tamil electronic library website (http://tamilelibrary.org/index.php?download)
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of
electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்
அதிகாரம் 1.
1. ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
2. அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் பதரிடம், நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, “இக்காயம் எனக்குக் குணமாகுமா?“ என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
3. ஆனால் ஆண்டவரின் பதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் பதரைச் சந்தித்து அவர்களிடம், “இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
4. நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல் என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.
5. திரும்பி வந்த பதரை நோக்கி, அரசன், ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்? என்று அவர்களைக் கேட்டான்.
6. அதற்கு அவர்கள் மறுமொழியாக, வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, “நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல்லுங்கள்“ என்றார் என்று கூறினர்.
7. அவன் அவர்களிடம், உங்களைச் சந்திக்க வந்து உங்கள்டம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்? என்று கேட்டான்.
8. அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, அவர் மயிரடர்ந்த மனிதர்: இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார் என்றனர். அப்பொழுது அவன், அந்த ஆள் திஸ்பேயைச் சா¡ந்த எலியாதான்! என்றான்.
9. உடனே அரசன் ஜம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.
10. எலியா ஜம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.
11. அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.
12. எலியா மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.
13. அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஜம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!
14. வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஜம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஜம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்! என்று மன்றாடினான்.
15. அப்பொழுது ஆண்டவரின் பதர் எலியாவிடம், அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம் என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.
16. அவர் அரசனை நோக்கி, ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் பதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப்போவாய்: இது உறுதி! என்றார்.
17. எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.
18. அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
அதிகாரம் 2.
1. ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
2. எலிசா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னைப் பெத்தேலுக˜கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். எலிசா அவரை நோக்கி, வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.
3. அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று கூறினார்.
4. எலியா அவரை நோக்கி, எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.
5. அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்றார்.
6. மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர்1வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
7. அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஜம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.
8. அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.
9. அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல் என்று கேட்டார். அதற்கு எலிசா, உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக! என்றார்.
10. எலியா அவரை நோக்கி, நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்: இல்லையெனில் கிடைக்காது என்றார்.
11. இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.
12. எலிசா அதைக் கண்டு, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார்.
13. மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.
14. பின்பு அவர், எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்? என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.
15. எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழந்தவற்றைக் கண்டு, எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது! என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
16. மேலும் அவரை நோக்கி, இதோ! உம் அடியார்களிடம் ஜம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் பக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்! என்றனர். அதற்கு அவர், அவர்களை அனுப்ப வேண்டாம் என்றார்.
17. ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், அனுப்பிவையுங்கள் என்றார். எனவே அவர்கள் ஜம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
18. எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? என்றார்.
19. அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை என்றனர்.
20. அதற்கு அவர் ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றார்.
21. அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது: நிலமும் பயன் தரும் என்றார்.
22. அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.
23. அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ! என்று ஏளனம் செய்தனர்.
24. எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.
25. பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினர்.
அதிகாரம் 3.
1. யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் சமாரியாவில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.
2. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த போதிலும், தன் தாய் தந்தையைப் போல் அவ்வளவு தீயவனாய் இல்லை. ஏனெனில், அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாகால் சிலைத்பணை அகற்றி விட்டான்.
3. எனினும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் தீயவழியில் அவனும் நிலையாய் நின்றான். அதை விட்டு அவன் விலகவில்லை.
4. இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.
5. ஆனால் ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
6. எனவே அரசன் யோராம் உடனே இஸ்ரயேலர் அனைவரையும் சமாரியாவில் ஒன்று திரட்டினான்.
7. அவ்வாறு அவன் செல்கையில், மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா? என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் என்றான்.
8. பின்பு அவன், எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்? என்று கேட்டான். அதற்கு அவன், ஏதோம் பாலைநில வழியாகப் போவோம் என்று பதிலளித்தான்.
9. அவ்வாறே இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை சீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
10. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா? என்றான்.
11. அப்பொழுது, யோசபாத்து, ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடிய இறைவாக்கினர் யாரும் இங்கு இல்லையா? என்று கேட்டான். இஸ்ரயேல் அரசனின் பணியாளன் ஒருவன், சாபாற்றின் மகன் எலிசா இங்கே இருக்கிறார். இவர் எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர் என்றான்.
12. யோசபாத்து, ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.
13. எலிசா இஸ்ரயேல் அரசனிடம், உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்! என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார் என்றான்.
14. எலிசா அவனை நோக்கி, நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள் என்றார்.
15. அவ்வாறே பாணன் ஒருவன் வந்து யாழிசைக்கவே ஆண்டவரது ஆற்றல் எலிசாவின் மேல் இறங்கியது.
16. அப்பொழுது அவர், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்தப் பள்ளத்தாக்கு எங்கும் குழிகளை வெட்டுங்கள்.
17. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள்.
18. இது ஆண்டவரது பார்வையில் எளிதான ஒன்று. அவர் மோவாயிரை உங்கள் கையில் ஒப்புவிப்பார்.
19. நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் பர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள் என்றார்.
20. மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது.
21. “தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்“ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.
22. மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாயத் தோன்றியது.
23. உடனே அவர்கள், அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்! என்றனர்.
24. ஆனால் அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.
25. பின்னர் அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் பர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.
26. தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுமறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
27. பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.
அதிகாரம் 4.
1. அப்பொழுது இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி எலிசாவிடம் வந்து கதறி அழுது, உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான் என்றார்.
2. எலிசா அவரை நோக்கி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல் என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை என்றார்.
3. எலிசா, நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.
4. நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை என்றார்.
5. அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.
6. எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றார். அதற்கு அவன், வேறு பாத்திரம் இல்லை என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.
7. கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
8. ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார்.
9. அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.
10. ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார்.
11. ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார்.
12. பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு என்றார்.
13. அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ அவளிடம் “அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?“ என்று கேள் என்றார். அதற்கு அவர், என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன் என்று பதிலளித்தார்.
14. மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான்.
15. எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.
16. எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.
17. எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
18. குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.
19. அவன் தன் தந்தையிடம், ஜயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், நீ இவனை இவன் தாயிடம் பக்கிக் கொண்டு போ என்றார்.
20. அவன் அப்படியே பிள்ளையைத் பக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
21. அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர் கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.
22. தம் கணவனை அழைத்து அவரிடம், வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன் என்றார்.
23. அதற்கு அவருடைய கணவர், நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை: ஓய்வு நாளும் இல்லையே! என்றார். அதற்கு அப்பெண், நல்லதற்குத் தான் என்றார்.
24. கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே! என்றார்.
25. அவ்வாறே அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி,
26. இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், “நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?“ என்று கோள் என்றார்.
27. அப்பெண் மறுமொழியாக, ஆம், நலமே என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிக்காமல் மறைத்து விட்டார் என்றார்.
28. அப்பொழுது அப்பெண் ஜயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? “என்னை ஏமாற்ற வேண்டாம்“ என்று உமக்கு நான் முன்பே சொல்லவில்லையா? என்றார்.
29. அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை என்றார்.
30. ஆனால், பிள்ளையின் தாய் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன் என்றார்.
31. எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, பிள்ளை கண் திறக்கவில்லை என்று அறிவித்தான்.
32. எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
33. உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
34. பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.
35. பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.
36. எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, உன் மகனைத் பக்கிக்கொள் என்றார்.
37. அப்பெண் உள்ளே வந்து அவர் காலடியில் தரை மட்டும் வீழ்ந்து வணங்கியபின், தன் மகனைத் பக்கிக்கொண்டு போனார்.
38. எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு என்றார்.
39. அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான்.
40. பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு! என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.
41. அப்பொழுது அவர், கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள் என்றார். அவர் அதை பானையில் போட்டு, இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள் என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.
42. பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, மக்களுக்கு உண்ணக் கொடு என்றார்.
43. அவருடைய பணியாளன், இந்த மறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்? என்றான். அவரோ, இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் “உண்ட பின்னும் மீதி இருக்கும்“ என்று ஆண்டவர் கூறுகிறார் என்றார்.
44. அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.
அதிகாரம் 5.
1. சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்: ஆனால் தொழுநோயாளி.
2. சு¢ரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3. அவள் தன் தலைவியை நோக்கி, என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார் என்றாள்.
4. எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள் என்று அவனுக்குத் தெரிவித்தார்.
5. அப்பொழுது சிரியா மன்னர், சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன் என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நாடீறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
6. அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
7. இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா! என்று கூறினான்.
8. கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும் என்று சொன்னார்.
9. அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா விட்டு வாயில்முன் வந்து நின்றார்.
10. எலிசா, நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும் என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.
11. எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12. அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா? என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
13. அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, “மூழ்கி எழும்: நலமடைவீர்“ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன? என்றனர்.
14. எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.
15. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும் என்றார்.
16. அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
17. அப்பொழுது நாமான் அவரை நோக்கி, சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்: இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.
18. ஆயினும1 ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக! என்றார்.
19. அதற்கு எலிசா, அமைதியுடன் சென்று வாரும் என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் பரம் போனபின்,
20. கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டான்.
21. எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், என்ன, எல்லாம் நலமா? என்று வினவினார்.
22. அவன் மறுமொழியாக, ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, “இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்“ என்று சொல்லச் சொன்னார் என்றான்.
23. அதற்கு நாமான், எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும் என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.
24. கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.
25. அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அவன், அடியேன் எங்கும் செல்லவில்லை என்றான்.
26. அதற்கு அவர், அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்- இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?
27. எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்! என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.
அதிகாரம் 6.
1. ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.
2. எனவே நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம் என்றனர். அதற்கு அவர், போய், வாருங்கள் என்றார்.
3. அவர்களில் ஒருவன், நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும் என்று அழைத்தான். நானும் வருகிறேன் என்று அவர் கூறினார்.
4. எனவே அவரும் அவர்களுடம் யோர்தானுக்குச் சென்றார்.
5. அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் ஜயோ! என் தலைவரே, இது இரவல் பொளாயிற்றே! என்று கத்தினான்.
6. அப்போது கடவுளின் அடியவர், அது எங்கு வீழ்ந்தது என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.
7. அவர் அதை எடுத்துக் கொள் என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
8. சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம் என்றான்.
9. அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில் அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர் என்று சொல்லச் சொன்னார்.
10. இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமறை அல்ல.
11. இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, இஸ்ரயேல் அரனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும் என்றான்.
12. பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார் என்றான்.
13. அதற்கு அரசன், நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன் என்றான். “அவர் தோத்தானில் இருக்கிறார்“ என்று தெரிவிக்கப்பட்டது.
14. ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.
15. கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, ஜயோ! என் தலைவரே, என்ன செய்வோம்? என்று கதறினான்.
16. அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம் என்றார்.
17. பின்பு எலிசா, ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்! என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.
18. சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும் என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.
19. அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.
20. அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்! என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.
21. இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா? என்றான்.
22. அதற்கு அவர், கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும் என்றார்.
23. அவ்வாறே அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். அவர்களும் உண்டு குடித்தனர். பின்னர் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர். அதன்பின் சிரியாக் கொள்ளைக் கூட்டத்தினர் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலெடுத்து வைக்கவில்லை.
24. பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.
25. எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஜந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.
26. இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்! என்று கூக்குரலிட்டாள்.
27. அதற்கு அவன், ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா? என்றான்.
28. பின்னும் அரசன் அவளிடம், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவள், இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, “இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு: நாளை என் மகனைத் தின்போம்“ என்றாள்,
29. அவ்வாறே நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், “நாம் உண்ணும்படி என் மகனைக் கொடு!“ என்றேன். ஆனால் அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள் என்று சொன்னாள்.
30. அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31. அரசன், இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக! என்றான்.
32. அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்பதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்பதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா? என்றார்.
33. இவ்வாறு அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன் அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? என்றான்.
அதிகாரம் 7.
1. அப்பொழுது எலிசா, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்றார்.
2. அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய் என்றார்.
3. நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்தப் போவோம்.
4. இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம் என்று பேசிக் கொண்டனர்.
5. இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.
6. ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி “தலைவர்“ செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்தி அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான் என்று சொல்லிக்கொண்டனர்.
7. எனவே அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.
8. ஆகவே இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும் அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.
9. பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரிடம், இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மெளனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம் என்று சொல்லிக்கொண்டனர்.
10. அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, நாங்கள் சிரியாவின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன என்று தெரிவித்தனர்.
11. வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.
12. அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்: நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, “இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்“ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர் என்றான்.
13. அவனுடைய பணியாளருள் ஒருவன், இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஜந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதை அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்: ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே அவர்களை அனுப்பிப் பார்ப்போம் என்றான்.
14. அவ்வாறே இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, சென்று பாருங்கள் என்று கட்டளையிட்டான்.
15. அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்பதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.
16. உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.
17. அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம1 நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.
18. இங்ஙனம், நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.
19. ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ! பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய் என்று கூறியிருந்தார்.
20. அவ்வாறே அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.
அதிகாரம் 8.
1. எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில் ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும் என்றார்.
2. எனவே அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.
3. ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார்.
4. அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும் என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.
5. அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார் என்றான்.
6. அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும் அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு என்று கட்டளையிட்டான்.
7. எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். “கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்“ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
8. அந்த மன்னன் அசாவேலிடம், கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். “நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?“ என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா என்றான்.
9. எனவே அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான். அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா? என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார் என்றான்.
10. எலிசா மறுமொழியாக, நீ போய், “நீர் நலமடைவது உறுதி“ என்று சொல்: ஆனால், “அவன் செத்துப்போவது திண்ணம்“ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்றார்.
11. பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
12. அசாவேல் அவரை நோக்கி, என் தலைவரே, நீர் அழுவது ஏன்? என்று கேட்டான். அதற்கு அவர், நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்: அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்: அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்: அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்: அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்றார்.
13. அசாவேல் அவரை நோக்கி, நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா? என்றான். அதற்கு எலிசா, நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார்.
14. அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, எலிசா உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டான். அதற்கு அசாவேல், நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார் என்றார்.
15. மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான். அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.
16. இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஜந்தாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான்.
17. அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான்.
18. அவன் ஆகாபின் மகளை மணந்தவன்: ஆதலால் ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்¥¥¥ : ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
19. ஆயினும் ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை: ஏனெனில் அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்க வாக்களித்திருந்தார்.
20. யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர்.
21. ஆனால் யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படை தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை யூதாவின் வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்கு தப்பி ஓடினர்.
22. எனவே இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது.
23. யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
24. யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.
25. இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.
26. தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.
27. அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.
28. மேலும் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராய்போரிட ஆகாபின் மகன் யோராமுடன் இராமோத்து கிலயாதுக்குப் போனான். ஆனால் அங்குச் சிரியாப் படையினர் யோராமைத் தாக்கினர்.
29. சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.
அதிகாரம் 9.
1. அப்பொழுது இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல்.
2. அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல்.
3. அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்“ என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு என்றார்.
4. அவ்வாறே இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான்.
5. அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றான். அதற்கு ஏகூ, எங்களுள் யாரிடம்? என்று கேட்டான். அதற்கு அவன், தளபதியே! உம்மிடம்தான் என்றான்.
6. எனவே ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெய் வார்த்து, இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: “ஆண்டவராகிய நான் என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு அரசனாக உன்னைத் திருப்பொழிவு செய்கிறேன்.
7. உன் தலைவன் ஆகாபின் குடும்பத்தை நீ அழிக்க வேண்டும். இங்ஙனம் ஈசபேலால் சிந்தப்பட்ட என் ஊழியரான இறைவாக்கினரின் இரத்தத்திற்கும் ஆண்டவராகிய என் எல்லா அடியவர்களின் இரத்தத்திற்கும் நான் பழிவாங்குவேன்.
8. இவ்வாறு ஆகாபின் குடும்பம் முழுவதும் அழியும். இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவரையும், அடிமைகளாகியனும் உரிமை மக்களாயினும், வெட்டி வீழ்த்துவேன்.
9. இந்த ஆகாபின் குடும்பத்தை நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்தைப் போலும், அகியாவின் மகன் பாசாவின் குடும்பத்தைப் போலும் ஒழித்துக் கட்டுவேன்.
10. இஸ்ரயேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டார்கள் என்று கூறிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
11. பின்பு ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்? என்று கேட்டனர். அதற்கு அவன், அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமோ! என்றான்.
12. அதற்கு அவர்கள், அது பொய்! உண்மையை எங்களுக்குத் தெரிவி என்றனர். அப்போது ஏகூ, அவன் என்னிடம் “ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்“ என்றான் என்று பதிலளித்தான்.
13. இதைக் கேட்டவுடன் அவர்கள் அனைவரும் விரைந்து தம் போர்வையைக் கழற்றி அவற்றை வெறுமையாய் இருந்த படிகளில் விரித்து எக்காளம் ஊதி, ஏகூவே அரசர்! என்று முழங்கினர்.
14. நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். அப்பொழுது யோராம் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராக இஸ்ரயேலின் எல்லாப் படைகளோடும் இராமோத்து கிலயாதை முற்றுகையிட்டிருந்தான்.
15. அனால் சிரியாவின் மன்னன் அசாவேலோடு போரிடுகையில், சிரியரால் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக அரசன் யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்திருந்தான். ஏகூ, இதை நீங்கள் மனமார விரும்பினால், இஸ்ரயேலுக்குப் போய் யாரும் செய்தியைப் பரப்பாதபடி, இந்நகரினின்று எவரையும் தப்பி வெளியேற விடாதீர் என்றான்.
16. பிறகு அவன் தேரின்மீது ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். ஏனெனில் அங்கே யோராம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். இச்சமயம் யூதாவின் அரசன் அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.
17. இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, படையொன்றைக் காண்கிறேன் என்றான். அதற்கு யோராம், ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. “அமைதிக்காவா?“ என்று அவன் கேட்கட்டும் என்றான்.
18. அவ்வாறு குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, “அமைதிக்காகவா?“ என்று அரசர் கேட்கச் சொன்னார் என்றான். அதற்கு ஏகூ, சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா என்றான். அப்பொழுது காவலன்?, பதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால் இன்னும் திரும்பி வரவில்லை என்று அறிவித்தான்.
19. அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, “அமைதிக்காகவா?“ என்று அரசர் கேட்கச் சொன்னார் என்றான். அதற்கு ஏகூ, சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா என்றான்.
20. காவலன் மீண்டும் அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால் அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்! என்றான்.
21. உடனே யோராம், தேரைப் பூட்டுங்கள் என்று கூற, அவர்கள் அவனது தேரில் குதிரைகளைப் பூட்டினார்கள். இஸ்ரயேலின் அரசன் யோராமும் யூதாவின் அரசன் அகசியாவும் தம் தேரில் ஏறி ஏகூவைச் சந்திக்கச் சென்றனர்: அவனை இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் சந்தித்தனர்.
22. யோராம் ஏகூவைக் கண்டு, ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்? என்று கேட்டான். அதற்கு அவன், உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும்வரை அமைதி எப்படி இருக்கமுடியும்? என்று மறுமொழி கூறினான்.
23. உடனே யோராம் கைகளால் கடிவாளத்தை இழுத்து, அகசியாவை நோக்கி, அகசியா! சதி! என்று சொல்லிக்கொண்டு தப்பி ஓட முயன்றான்.
24. உடனே ஏகூ தன் வலிமையோடு வில்லை வளைத்து யோராமின் புயங்கள் நடுவே அம்பினை எய்தான். அந்த அம்பு அவன் இதயத்தை ஊடுருவிச் செல்ல, அவன் தேரிலேயே சரிந்து விழுந்தான்.
25. ஏகூ குதிரைப்படைத் தலைவன் பித்காரை நோக்கி, அவனைத் பக்கி இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய தந்தை ஆகாபைத் தொடர்ந்து சென்றபோது அவனுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
26. “நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் பிள்ளைகளின் இரத்தத்தையும் கண்டேன். நான் கண்டதற்காக நாபோத்தின் இந்த நிலத்திலேயே உன்னைப் பழிவாங்குவது உறுதி“ என்கிறார் ஆண்டவர். எனவே இப்பொழுது அவனைத் பக்கி ஆண்டவரின் வாக்கிற்கிணங்க அந்த நிலப்பகுதியில் எறிந்துவிடு என்றான்.
27. யூதாவின் அரசன் அகசியா இதைக் கண்டு பெத்தகான் சாலையில் தப்பி ஓடலானான். ஏகூ அவனைப் பின்தொடர்ந்து சென்று தன் ஆள்களிடம், இவனையும் வெட்டி வீழ்த்துங்கள் என்றான். அவர்களும் இபிலயாம் அருகே இருந்த கூர் மலைச்சரிவில் தேரிலிருந்த அவனைக் காயப்படுத்தினார்கள். அவனோ மெகிதோ வரை சென்று அங்கு இறந்தான்.
28. அவனுடைய அலுவலர் அவனது சடலத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று, தாவீதின் நகரில் அவனுடைய மூதாதையருடன் அவனது கல்லறையில் அடக்கம் செய்தனர்.
29. இதற்கிடையில் ஆகாபின் மகனான யோராம் ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டில் அகசியா யூதாவின் அரசனானான்.
30. ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தான்.
31. ஏகூ நகர வாயிலில் நுழைந்த போது அவள், உன் தலைவனைக் கொலை செய்து, சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா? என்று கேட்டாள்.
32. அவன் முகத்தை உயாத்தி பலகணியைப் பார்த்து, என் சார்பாக இருப்பது யார்? யார்? என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர்.
33. ஏகூ, அவனைக் கீழே தள்ளிவிடுங்கள் என்றான். அவ்வாறே அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும் அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.
34. அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள் என்றான்.
35. அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை.
36. எனவே அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
37. இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரயேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே “இதுதான் ஈசபேல்“ என்ற கூற முடியாது! என்றான்.
அதிகாரம் 10.
1. ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால் ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே:
2. இம்மடல் உங்களை வந்தடைந்தவுடன் உங்கள் தலைவரின் மைந்தர்கள் உங்களோடு இருப்பதாலும், தேர்களும், குதிரைகளும் அரண்சூழ் நகரும் படைக்கலங்களும் உங்களிடமிருப்பதாலும்,
3. உங்கள் தலைவரின் மைந்தர்களுள் சிறந்தவனும் தகுதி உடையவனுமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய தந்தையின் அரியணையில் அமர்த்தி, உங்கள் தலைவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுங்கள்.
4. ஆனால் அவர்கள் மிகமிக அச்சமுற்று, அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்? என்றனர்.
5. எனவே அரண்மனை மேற்பார்வையாளனும், நகரின் ஆளுநனும், பெரியோர்களும், ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களும், ஏகூவிடம் பதனுப்பித் தெரிவித்ததாவது: நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் அரசனாக்கப் போவதில்லை உமக்கு நல்லதென்றுபடுவதையே செய்தருளும் என்று தெரிவித்தனர்.
6. அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரயேலுக்குக் கொண்டு வாருங்கள். அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர்.
7. அம்மடலை அவர்கள் பெற்றுக்கொண்டவுடன், அரசனின் மைந்தர்களைப் பிடித்து அந்த எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து ஏகூவிடம் இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தனர்.
8. பதன் ஒருவன் அவனிடம் வந்து அரச மைந்தர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர் என்றான். அதற்கு அவன், நாளைக் காலைவரை அவற்றை நகரின் நுழைவாயிலில் இரு குவியலாக வையுங்கள் என்று சொன்னான்.
9. மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்றுகொண்டு கூறியது: நீங்கள் குற்றமற்றவர்கள். என் தலைவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றவன் நான்தான். இவர்கள் எல்லாரையும் கொன்றது யார் தெரியுமா?
10. ஆகாபின் குடும்பத்திற்கு எதிராகக் கடவுள் உரைத்த வாக்கில் எதுவும் பொய்க்கவில்லையென்று இப்பொழுது அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் தம் அடியான் எலிசாவின் மூலம் உரைத்ததை அவரே நிறைவேற்றினார்.
11. பின்னர் ஏகூ இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் எஞ்சியிருந்த அனைவரையும்-அவனைச் சார்ந்த பெரியோர்கள், உற்ற நண்பர்கள் அர்ச்சகர்கள் அனைவரையும்-வெட்டி வீழ்த்தினான்: அவனைச் சார்ந்த எவனையும் விட்டு வைக்கவில்லை.
12. பின்பு ஏகூ புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவன் இடையர்களின் பெத் ஏக்கதை அடைந்தான்.
13. அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, நீங்கள்யார்? என்று கேட்டான். அவர்கள், நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம் என்று மறுமொழி கூறினர்.
14. அவன், இவர்களை உயிரோடு பிடியுங்கள் என்று கட்டளையிட, அவன் ஆள்கள் அவர்களைப் பிடித்துப் பெத்ஏக்கதில் இருந்த குழியருகே வெட்டி வீழ்த்தினர். அவர்கள் நாற்பத்திரண்டு பேர்: அவர்களுள் எவனையும் விட்டுவைக்கவில்லை.
15. அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது: என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா? என்று கேட்டான். அதற்கு யோனதாகு ஆம் என்று பதிலுரைத்தான். அப்படியானால் கை கொடு என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.
16. மேலும் அவன் அவனை நோக்கி, நீ என்னோடு வந்து ஆண்டவர்மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்! என்றான். இவ்வாறு அவன் அவனைத் தன்னோடு தேரில் பயணம் செய்யச் செய்தான்.
17. அவன் சமாரியாவுக்கு வந்தவுடன், எலிசாவுக்கு உரைத்த ஆண்டவர் வாக்கின்படி ஆகாபின் குடும்பத்தவருள் அங்கு எஞ்சியிருந்த அனைவரையும் அழித்தொழித்தான்.
18. பிறகு ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன்.
19. எனவே பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில் நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும், உயிரிழப்பர் என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான்.
20. மேலும் ஏகூ, பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள் என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான்.
21. அவர்களுள் எவனும் வரத்தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது.
22. அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு என்றான். அவ்வாறே அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.
23. பிறகு ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான். அவன் பாகால் ஊழியர்களை நோக்கி, உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றான்.
24. பிறகு அவர்கள் பலிப்பொருள்களையும், எலிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால் ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள் என்று கூறியிருந்தான்.
25. எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள் என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர்.
26. அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் பண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர்.
27. இவ்வாறு பாகாலின் சிலைத் பண்களை எரித்து, பாகாலின் கோவிலையும் இடித்து, அவ்விடத்தைக் கழிவறை ஆக்கினர்: இன்றுவரை அப்படியேதான் பயன்பட்டு வருகிறது.
28. இவ்வாறு ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான்.
29. ஆயினும் இஸ்ரயேலரைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியினின்று ஏகூ விலகவுமில்லை: பெத்தேலிலும் தாணிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிடவுமில்லை.
30. பின்பு ஆண்டவர் ஏகூவை நோக்கி, என் பார்வையில் செம்மையானதை நீ நன்கு செய்து முடித்ததாலும், ஆகாபின் குடும்பத்தினர்க்கு எதிராக நான் விரும்பியவற்றையெல்லாம் நிறைவேற்றினதாலும், உன் புதல்வர்கள் இஸ்ரயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர் என்றார்.
31. ஆனால் ஏகூ இஸ்ரயேலின் கடவுளாகிய தன் ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை. அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரோபவாமின் பாவ வழியினின்று விலகவில்லை.
32. அக்காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேல் நாட்டின் அளவைக் குறைக்கத் தொடங்கினர். அசாவேல் அதன் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றலானான்.
33. காத்து, ரூபன், மனாசே ஆகிய குலங்களுக்குரிய, யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கிலயாது நாடு முழுவதிலும், அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள அரோயேர் முதல் கிலயாது, பாசான் நாடுகள் வரையிலும் அவன் வெற்றி பெற்றான்.
34. ஏகூவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் வீரச் செயல்கள் யாவும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
35. ஏகூ தன் மூதாதையருடன் துயில் கொண்டான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோவகாசு அரசனானான்.
36. ஏகூ சமாரியாவிலிருந்து கொண்டு இருபத்தெட்டு ஆண்டுகள் இஸ்ரயேலை ஆட்சி செய்தான்.
அதிகாரம் 11.
1. அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.
2. அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் பக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான்.
3. அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.
4. ஏழாம் ஆண்டில், அரச மெய்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் மற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார்.
5. அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.
6. அடுத்த பங்கினர் சூர் வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.
7. ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.
8. யோவாசு அரசனை ஒவ்வொருவனும் படைக்கலங்களுடன் பாதுகாத்து உங்களை நெருங்குபவன் எவனாயினும் அவனைக் கொல்லவேண்டும். அரசன் வந்து போகுமிடம் எல்லாம் நீங்களும் அவனோடிருக்க வேண்டும்.
9. குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்ததையும் மற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர்.
10. அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் மற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
11. காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.
12. பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி அரசர் நீடுழி வாழ்க! என்று முழங்கினர்.
13. மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள்.
14. மரபுக்கேற்ப, அரசன் பணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, சதி! சதி! என்று கூக்குரலிட்டாள்.
15. அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த மற்றுவர் தலைவர்களை நோக்கி, படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள் என்று கட்டளையிட்டார். அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது என்றும் கூறியிருந்தார்.
16. எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.
17. பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.
18. பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்: பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.
19. மேலும் அவர், மற்றுவர் தலைவர்கள், அரச மெய்க்காப்பாளர், காவலர், நாட்டு மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டினார். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தினின்று காவலர் வாயில் வழியாக அரசனை அழைத்துக் கொண்டு வந்தடைந்தனர். அரசன் அரியணையில் ஏறி அமர்ந்தான்.
20. நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.
21. ஏழாம் வயதிலேயே யோவாசு அரசனானான்.
அதிகாரம் 12.
1. ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.
2. யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.
3. ஆயினும் தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் பபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.
4. யோவாசு குருக்களை நோக்கி, ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம்-கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள்.
5. ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும் என்றான்.
6. ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.
7. எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள் என்றான்.
8. அவ்வாறே குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.
9. குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.
10. அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.
11. இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களும், கொத்தர்களுக்கும்,
12. சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும் அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.
13. ஆயினும் ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.
14. ஏனெனில் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.
15. வேலையாள்களுக்குப் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.
16. குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குப் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் அவை குருக்களுக்கு உரியவை.
17. அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.
18. எனவே யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.
19. யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20. யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.
21. அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
அதிகாரம் 13.
1. யூதா அரசன் அகசியாவின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இருபத்து மூன்றாம் ஆண்டில் ஏகூவின் மகன் யோவாசு சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் நாட்டைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து வந்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் பாவ வழியிலேயே அவனும் நடந்து வந்தான்.
3. எனவே ஆண்டவருக்கு இஸ்ரயேல்மீது சினம்மூள அவர்களைச் சிரியா மன்னன் அசாவேலின் கையிலும் அசாவேலின் மகன் பெனதாதின் கையிலும் நீண்டநாள் விட்டுவிட்டார்.
4. ஆனால் யோவகாசு ஆண்டவரின் கருணைப் பார்வையை நாட, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். ஏனெனில் சிரியா மன்னன் பிடியில் இஸ்ரயேல் நசுக்குண்டு கிடப்பதை அவர் கண்டார்.
5. இஸ்ரயேலுக்கு ஆண்டவர் ஒரு மீட்பரைத் தரவே, இஸ்ரயேலர் சிரியரின் பிடியினின்று விடுதலை அடைந்தனர். இஸ்ரயேல் மக்கள் முன்னைய நாள்களில் இருந்தது போல் தங்கள் சொந்த வீட்டில் குடியிருந்தனர்.
6. ஆயினும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரொபவாம் வீட்டாரின் பாவ வழியை விட்டு விலகாது வாழ்ந்தனர். மேலும் அசேராக் கம்பம் சமாரியாவில் இன்னும் நின்று கொண்டிருந்தது.
7. யோவாசுக்கு அவன் குடிகளுள் ஜம்பது குதிரை வீரரும் பத்துப் தேர்களும் பதினாயிரம் காலாள் படையினரமே எஞ்சியிருந்தனர். ஏனெனில் சிரியா மன்னன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்துத் பசிபோல் ஆக்கியிருந்தான்.
8. யோவகாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் பேராற்றலும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
9. யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.
10. யூதா அரசன் யோவாசு ஆட்சியேற்ற முப்பத்தேழாம் ஆண்டில், யோவகாசின் மகன் யோவாசு, இஸ்ரயேல் நாட்டின் அரசனாகி, சமாரியாவில், இருந்துகொண்டு பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
11. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்: இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியிலேயே நடந்து வந்தான்.
12. யோவாசின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசன் அமட்சியாவுடன் போரிட்டபொழுது காட்டிய பேராற்றலும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
13. யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், எரொபவாம் அரியணை ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ரயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.
14. எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான்.
15. எலிசா அவனை நோக்கி, வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள் என்றார். அவ்வாறே அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.
16. அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, வில்லை உன் கையால் வளை என்றார்.
17. எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, ஓர் அம்பை எய் என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், அது ஆண்டவரது மீட்பின் அம்பு: சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு: நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய் என்றார்.
18. அவர் மீண்டும் அம்புகளைக் கையில் எடு என்றார். அவற்றை அவன் எடுக்கவே அவர் இஸ்ரயேல் அரசனைத் தரையில் அம்பு எய் என்றார். அவன் மூன்று முறை எய்துவிட்டு நிறுத்தினான்.
19. எனவே ஆண்டவரின் அடியவர் அவன்மேல் சினம் கொண்டு, நீ ஜந்து அல்லது ஆறுமுறை எய்திருந்தால், சிரியரை முற்றிலும் கொன்றழித்திருப்பாய்! ஆனால் இப்பொழுதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பாய் என்றார்.
20. இதன்பின் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம்.
21. மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்: எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.
22. யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.
23. ஆனால் ஆண்டவர் அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டி அவர்களைப் பரிவுடன் பாதுகாத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவரோடு தாம் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை அழிக்கவோ, தம் திருமுன்னின்று தள்ளிவிடவோ இன்றுவரை அவர் மனம் ஒப்பவில்லை.
24. சிரியாவின் மன்னன் அசாவேல் இறந்தவுடன், அவன் மகன் பெனதாது அவனக்குப் பின் மன்னன் ஆனான்.
25. யோவகாசின் மகன் யோவாசு தன் தந்தையின் கையிலிருந்து அசாவேலின் மகன் பெனதாது கைப்பற்றியிருந்த நகர்களை மீண்டும் கைப்பற்றினான். யோவாசு மூன்றுமுறை அவனை முறியடித்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான்.
அதிகாரம் 14.
1. இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதா அரசன் யோவாசின் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
2. அவன் அரசனான போது அவனுக்க வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த யோவதீன் என்பவளே அவன் தாய்.
3. அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும் தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.
4. தொழுகை மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் பபம்காட்டியும் வந்தனர்.
5. ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.
6. ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில் ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டமலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது: பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர்.
7. அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் “யோக்தவேல்“ என்ற பெயரை இட்டான்.
8. பின்பு அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் பதனுப்பி, வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம் என்று சொல்லச் சொன்னான்.
9. அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் பதனுப்பி, “என் மகனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடு“ என்றதாம்: ஆனால் லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்!
10. நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால் உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்? என்று சொன்னான்.
11. அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் பறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
12. யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
13. இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நாடீறு முழ நீளம் இடித்துத் தள்ளினான்.
14. ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.
15. யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளது அல்லவா?
16. யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.
17. இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
18. அமட்சியாவின் பிற செயல்கள் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
19. எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து,
20. அவனது சடலத்தைத் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
21. பின்னர் யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22. அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.
23. யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
24. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அகலவில்லை.
25. இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
26. ஏனெனில் இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்.
27. ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார்.
28. எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை-ஆகியன பற்றி இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
29. எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.
அதிகாரம் 15.
1. இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான்.
2. அவன் ஆட்சியேற்ற பொழுது அவனக்கு வயது பதினாறு. அவன் எருசலேமில் ஜம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.
3. அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்.
4. ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் பபம் காட்டியும் வந்தனர்.
5. எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.
6. அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் “யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
7. அசரியா தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோத்தாம் அரசன் ஆனான்.
8. யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.
9. அவனும் தன் மூதாதையர் செய்தது போல் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அவன் விலகவில்லை.
10. யாபேசின் மகன் சல்லு¡ம், அவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனை இப்லாயமில் வெட்டிக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
11. செக்கரியாவின் பிற செயல்கள் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
12. உன் மைந்தர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருப்பர் என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறிய வாக்கு இவ்வாறு நிறைவேறிற்று.
13. யூதா அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், யாபேசின் மகன் சல்லு¡ம் அரசனானான்: சமாரியாவில் அவன் ஒரு மாதமே ஆட்சி செய்தான்.
14. காதி என்பவனின் மகனான மெனகேம், திர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, சல்லு¡மை வெட்டிக் கொன்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
15. சல்லு¡மின் பிற செயல்களும் அவன் செய்த சதியும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
16. பிறகு மெனகேம் திப்சாவையும் திர்சா முதல் அதன் எல்லைகள் அனைத்தையும் அதில் இருந்த அனைவரையும் அழித்தான். அவர்கள் தங்கள் நகர் வாயில்களைத் திறக்கவில்லையாதலின், அவன் அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு, கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.
17. யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், காதியின் மகன் மெனகேம் இஸ்ரயேலின் அரசனாகி, சமாரியாவில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
18. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். மேலும் அவன், தன் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.
19. அசீரியா மன்னனான பூல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்பொழுது மெனகேம், பூலுக்கு, அவன் ஆற்றலினால் தன் அரசை உறுதியாக்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பதாயிரம் வெள்ளி கொடுத்தான்.
20. மெனகேம் இஸ்ரயேலில் இருந்த செல்வர்களிடமிருந்து இப்பணத்தை, ஆள் ஒன்றுக்கு ஜம்பது வெள்ளிக் காசுகள் வீதம், அசீரியா மன்னனுக்குக் கொடுக்கும்படியாக வசூலித்தான். அசீரியா மன்னனும் அங்கே தங்காது நாட்டை விட்டு வெளியேறினான்.
21. மெனகேமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
22. மெனகேம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப்பின் அவன் மகன் பெக்ககியா அரசன் ஆனான்.
23. யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஜம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.
24. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை.
25. இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஜம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
26. பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
27. யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஜம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
28. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவவழியை விட்டு அவன் விலகவில்லை.
29. இஸ்ரயேல் அரசன் பெக்காவின் ஆட்சிக் காலத்தில், அசீரியா மன்னன் திக்லத்-பிலேசர் படையெடுத்து வந்து, ஈயோன், ஆபல்பெத்மாக்கா, யானோவாக்கு, கெதேசு, ஆட்சோர் ஆகிய நகர்களையும் கிலயாது, கலிலேயா, நப்தலி ஆகிய நிலப்பகுதிகளையும் கைப்பற்றினான்: மேலும் மக்களை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.
30. ஏலாவின் மகன் ஓசேயா, இரமலியாவின் மகன் பெக்காவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, அவனை வெட்டிக் கொன்றுவிட்டு, அசரியாவின் மகன் யோத்தாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், பெக்காவுக்குப் பின் அரசன் ஆனான்.
31. பெக்காவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
32. இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான்.
33. அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.
34. அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான்.
35. ஆயினும் அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் பபம் காட்டியும் வந்தனர். கோவிலின் உயர்வாயிலைக் கட்டியவன் இவனே.
36. யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
37. அந்நாள்களில் ஆண்டவர் சிரியாவின் மன்னன் ரெட்சீனையும் இரமலியாவின் மகன் பெக்காவையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.
38. யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.
அதிகாரம் 16.
1. இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.
2. ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
3. இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான்.
4. மேலும் தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் பப வழிபாடு நடத்தி வந்தான்.
5. அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
6. அவ்வேளையில், ஏதோம் மன்னன் தன் நாட்டிற்காக ஏலத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து வருகின்றனர்.
7. எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் பதனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர் என்று சொன்னான்.
8. மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
9. அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.
10. எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.
11. அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.
12. அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.
13. அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்: தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.
14. மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.
15. பிறகு அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும் என்றான்.
16. அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.
17. அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான்.
18. மேலும் அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.
19. ஆகாசு செய்த பிற செயல்கள், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20. ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார்.
அதிகாரம் 17.
1. யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2. அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான். ஆயினும் முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்களைப்போல் அவ்வளவு தீயவனாக இல்லை.
3. அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான்.
4. ஆனால் இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் பதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான்.
5. பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான்.
6. ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
7. ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
8. மேலும் இஸ்ரயேல்மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர்.
9. இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்: மேலும் காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்:
10. உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர்.
11. அங்கு அவர்கள் பபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
12. “இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது“ என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.
13. ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.
14. ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்:
15. ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்: “வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது“ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
16. தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்: இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்:
17. தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்: ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.
18. எனவே ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
19. யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமறைகளைப் பின்பற்றி வந்தனர்.
20. எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார்.
21. அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
22. இவ்வாறு எரொபவாம் நடந்த பாவ வழிகளில் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.
23. ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
24. பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
25. அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.
26. எனவே அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில் அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது.
27. எனவே, அசீரியா மன்னன், நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும் என்று கட்டளையிட்டான்.
28. அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்.
29. ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.
30. பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,
31. அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும் செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம்மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர்.
32. அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். ஆயினும் தொழுகை மேடுகளில் பணிபுரியத் தங்களுக்குள் அர்ச்சகர்களை நியமித்துக் கொண்டனர்.
33. அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்து போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.
34. இன்றுவரை அவர்கள் தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை: மேலும் ஆண்டவரால் “இஸ்ரயேல்“ என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை.
35. ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்: அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்: அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம்:
36. ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும்.
37. அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
38. நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
39. உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.
40. ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர்.
41 அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர்.
அதிகாரம் 18.
1. இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகன் ஓசேயா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில், ஆகாசின் மகன் எசேக்கியா யூதாவின் அரசனானார்.
2. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியாவின் மகளாகிய அபி என்பவரே அவருடைய தாய்.
3. அவர் தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார்.
4. அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினர். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்கத் பபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது.
5. அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும், அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை.
6. அவர் ஆண்டவர்மீது பற்றுக் கொண்டு அவரிடமிருந்து விலகாமல், ஆண்டவர் மோசேக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றினார்.
7. ஆதலால் ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும் அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.
8. அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.
9. இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகனான ஓசேயா ஆட்சியேற்ற ஏழாவது ஆண்டில், அதாவது அரசர் எசேக்கியாவின் நான்காம் ஆட்சி ஆண்டில், அசீரிய மன்னன் சல்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
10. மூன்று ஆண்டுகளின் முடிவில் அவன் அதைக் கைப்பற்றினான். அரசர் எசேக்கியா ஆட்சியேற்ற ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ரயேல் அரசன் ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சமாரியா கைப்பற்றப்பட்டது.
11. அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்: அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
12. ஏனெனில், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்காமல், அவரது உடன்படிக்கையையும் ஆண்டவரின் ஊழியர் மோசே இட்ட கட்டளைகள் யாவற்றையும் மீறினார்கள். ஆவர்கள் செவிகொடுக்கவுமில்லை, கீழ்படியவுமில்லை.
13. எசேக்கியா ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
14. அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் பதனுப்பி, நான் பாவம் செய்துவிட்டேன். எனவே என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன் என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம், வெள்ளியையும் ஆயிரத்து இருமறு கிலோ கிராம் பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.
15. எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.
16. இச்சமயம் யூதா அரசர் எசேக்கியா, ஆண்டவரின் இல்லக் கதவுகளிலும் கதவு நிலைகளிலும், தாம் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரிய மன்னனுக்குக் கொடுத்தார்.
17. ஆயினும் அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.
18. அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால் அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.
19. அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே:
20. உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்?
21. இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.
22. நீ ஒருவேளை, “எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்“ என்று சொல்லலாம். ஆனால் யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, “நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்“ என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?
23. இப்பொழுது என் தலைவராகிய அசீரிய மன்னன் சார்பாகச் சவால் விடுக்கிறேன். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். அவற்றுக்குத் தேவையான குதிரை வீரர்களை உன்னால் தர முடியுமா?
24. தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தை நம்பியிருக்கும் உன்னால் என் தலைவரின் பணியாளருள் கடையனான ஒரு படைத் தலைவனைக் கூட எதிர்த்து நிற்க முடியுமா?
25. ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, “நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு“ என்று கூறியுள்ளார் என்றான்.
26. அப்போது இல்க்கியாவின் மகன் எலியாக்கிமும், செபுனாவும், யோவாகும் இரப்சாக்கேயை நோக்கி, உம் பணியாளராகிய எங்களோடு சிரியா மொழியிலேயே பேசும். அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் இருக்கும் மக்கள் காதில் விழும்படியாக யூத மொழியில் எங்களோடு பேச வேண்டாம் என்றனர்.
27. அதற்கு அவன் அவர்களிடம், என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும் என்றான்.
28. இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.
29. அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
30. அவன், “ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந்நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது“ என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான்.
31. எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.
32. பின் நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு, தானியமும் திராட்சைக் கனியும் மிக்க நாட்டுக்கு, அப்பமும் திராட்சைத் தோட்டமும் மிகுந்த நாட்டுக்கு, ஒலிவ மரங்களும் தேனும் மிகுந்த நாட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் சாகாமல் உயிரோடு இருக்கப் பாருங்கள். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று கூறி உங்களை ஏமாற்றும் எசேக்கியாவுக்குச் செவி கொடாதீர்கள்.
33. எந்த ஒரு நாட்டின் தெய்வமாவது தன் நாட்டை அசீரிய மன்னரிடமிருந்து மீட்டதுண்டா?
34. ஆமாத்து, அர்ப்பாது நகர்களின் தெய்வங்கள் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவை சமாரியாவை என் கையினின்று விடுத்தனவா?
35. அத்தனை நாடுகளின் தெய்வங்களில் ஒன்றாவது தன் நாட்டை என் கையினின்று விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, ஆண்டவரால் எவ்வாறு எருசலேமை என் கையினின்று விடுவிக்க முடியும்?
36. ஆனால் மக்கள் மெளனமாய் இருந்தனர். ஒரு வார்த்தைகூடப் பதில் கூறவில்லை. ஏனெனில், “அவனுக்கு ஒரு பதிலும் கூறவேண்டாம்“ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.
37. பின்பு அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும், பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் தம் ஆடைகளைக் கிழித்து விட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து, இரப்சாக்கே கூறியவற்றை அவருக்குத் தெரிவித்தனர்.
அதிகாரம் 19.
1. அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.
2. அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.
3. அவர்கள் அவரிடம், எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது: ஆனால் பெற்றெடுக்கவோ வலிமையில்லை.
4. வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும் என்றனர்.
5. அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,
6. எசாயா அவர்களை நோக்கி, உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.
7. இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன் என்றார்.
8. அவ்வாறே, “அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்“ என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
9. அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் பதரை அனுப்பி,
10. யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: “எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது“ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.
11. இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?
12. என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?
13. ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே? என்று கூறியிருந்தான்.
14. எசேக்கியா பதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
15. மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!
16. ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். பதனுப்பி என்றுமுள கெரிபின் சொற்களைக் கேட்பீராக!
17. ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
18. அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல: மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே: எனவே அவற்றை அழிக்க முடிந்தது.
19. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.
20. அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.
21. அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்: உன்னைப் பார்த்து நகைக்கிறாள்: மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.
22. யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்? இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ!
23. நீ உன் பதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, “எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன்.
24. நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்“ என்றாய்!
25. நீ கேட்டதில்லையோ? நான் தான் பல நாள்களுக்கு முன்பே இதை முடிவு செய்தேன். நான்தான் தொன்று தொட்டே இதைத் திட்டமிட்டேன். அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டுமென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன்.
26. அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்: வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப் பூண்டு போலவும் ஆயினர்.
27. நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும் எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.
28. நீ எனக்கு எதிராகப் பொங்கி எழுந்தாலும் உன் ஆணவம் என் செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன் வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்!
29. எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்: இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்: அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்: ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்: திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.
30. யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.
31. ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
32. ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்: அதில் அம்பு எய்ய மாட்டான்: அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.
33. அவன் வந்த வழியே திரும்பிப் போவான்: இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.
34. இந்நகரை நான் பாதுகாப்பேன்: என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.
35. அன்றிரவு ஆண்டவரின் பதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து என்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
36. எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
37. தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.
அதிகாரம் 20.
1. அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர் என்றார்.
2. எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு
3. ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும் என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.
4. எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று:
5. நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, “உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.
6. உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்“ என்று சொல்.
7. அப்பொழுது எசாயா, ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள் என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.
8. எசேக்கியா எசாயாவை நோக்கி, ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்? என்று கேட்டார்.
9. அதற்கு எசாயா, ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா? என்று கேட்டார்.
10. அதற்கு எசேக்கியா, நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும் என்றார்.
11. அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.
12. அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான்.
13. எசேக்கியா அவர்களை வரவேற்று, தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.
14. இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, வெகுபரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள் என்று மறுமொழி கூறினார்.
15. அவர், உம் அரண்மனையில் எதைப் பார்த்தானர்? என்று கேட்டார். அதற்கு எசேக்கியா என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை என்றார்.
16. அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, ஆண்டவர் கூறுவதைக் கேளும்:
17. இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.
18. மேலும் நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர் என்று சொன்னார்.
19. அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, “ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!“ என்றார். ஏனெனில் அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
20. எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டி கால்வாய் அமைத்துக் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
21. எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.
அதிகாரம் 21.
1. மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஜம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.
2. இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
3. அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்: பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்: இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்: வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.
4. “எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்“ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான்.
5. ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.
6. மேலும் அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்: குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
7. மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன்.
8. நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.
9. ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.
10. ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
11. யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.
12. எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.
13. சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுமலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த பக்குமலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் பய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் பய்மையாக்குவேன்.
14. எனவே எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.
15. ஏனெனில் அவர்களின் நாள்முதல் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்.
16. மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.
17. மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
18. மனாசே தன் மூதாதையரோடு துயில் கொண்டு, “ஊசாப் பூங்கா“ என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.
19. ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சா¡ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.
20. அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
21. தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்: தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.
22. அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் பறக்கணித்தான்: ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.
23. ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.
24. ஆனால் நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
25. ஆமோனின் பிற செயல்கள், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
26. ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனு¨.டய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
அதிகாரம் 22.
1. யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தொன்று ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.
2. பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார்.
3. தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது:
4. நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல்.
5. அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைகாரர்களுக்குக் கொடுக்கட்டும்.
6. அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.
7. பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.
8. தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட மலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்மலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
9. பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர் என்று சொன்னான்.
10. மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு மலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.
11. அரசர் சட்டமலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.
12. பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:
13. நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்மலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்மலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது என்றார்.
14. குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்: அர்கசின் புதல்வனான திக்வாயின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லு¡ம் என்பவனின் மனைவி.
15. அவர் அவர்களை நோக்கி, இஸ்ரயேலின் கடவுளாசிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:
16. ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த மலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.
17. ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.
18. ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,
19. “இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்“ என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
20. ஆதலால் இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய் என்றார். அவர்கள் திரும்பிச்சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.
அதிகாரம் 23.
1. அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர்.
2. அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை மலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார்.
3. அரசர் பணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும் அந்மலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
4. அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், பயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார்.
5. அத்தோடு, யூதாவின் நகர்களிலும் எருசலேமைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த தொழுகை மேடுகளில் பபம் காட்டுமாறு யூதா அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்களை நீக்கினார். மேலும் பாகால், கதிரவன், நிலா, விண்மீன்கள், வானத்துப் படைத்திரள் அனைத்திற்கும் பபம் காட்டியவர்களையும் நீக்கினார்.
6. ஆண்டவரின் இல்லத்திலிருந்து அசேராவை அகற்றி எருசலேமுக்கு வெளியே உள்ள கிதரோன் நீரோடைக்குக் கொண்டு சென்றார். அங்கே அதைச் சுட்டெரித்துத் பளாக்கி அத்பளைப் பொது மக்களின் கல்லறைகளின்மேல் பவுமாறு பணித்தார்.
7. மேலும் ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.
8. அவர் யூதா நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் எருசலேமுக்கு அழைத்துக் கொண்டார். மேலும் அவர் கேபா முதல் பெயேர்செபாவரை அர்ச்சகர்கள் பபம் காட்டிவந்த எல்லாத் தொழுகை மேடுகளையும் மாசுபடுத்தினார். நகர வாயிலின் இடப்புறம், நகரின் ஆளுநனான யோசுவா நுழைவாயிலின் முகப்பில் எழுப்பியிருந்த தொழுகை மேடுகளையும் இடித்துத் தள்ளினார்.
9. ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.
10. மேலும் மோலெக்கு சிலைக்கு எவனும் தன் மகனையோ மகளையோ பலியாக்காதவாறு, பென்இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கும் தொப்பேத்தையும் மாசுபடுத்தினார்.
11. அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார்.
12. மேலும் யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் பளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார்.
13. எருசலேமுக்குக் கிழக்கே, அழிவின் மலைக்குத் தெற்கே இருந்த தொழுகை மேடுகளை அவர் மாசுபடுத்தினார். இவை, சீதோனியரின் அருவருப்பான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் இழிபொருளான மில்க்கோமுக்கும் இஸ்ரயேலின் அரசர் சாலமோனால் கட்டப்பட்டவை.
14. மேலும் அவர் சிலைத்பண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.
15. இஸ்ரயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாம் பெத்தேலில் எழுப்பியிருந்த தொழுகை மேட்டையும் அதன் பலிபீடத்தையும், அவர் தகர்த்துத் தீக்கிரையாக்கினார்: அசேராவைத் பள்பளாக்கி நெருப்பிலிட்டார்.
16. யோசியா திரும்பிப்பார்த்தபோது, அங்கு மலையின்மேல் கல்லறைகள் இருக்கக் கண்டார். அவர் ஆளனுப்பி அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவந்து, கடவுளின் அடியவர் உரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க, அவற்றைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து மாசுபடுத்தினார்.
17. பின்பு அவர், அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது? என்று கேட்டார். அந்நகர மக்கள், அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான் என்றனர்.
18. அதற்கு அவர், அப்படியே இருக்கட்டும். அவருடைய எலும்புகளை ஒருவனும் தொடவேண்டாம் என்றார். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியவைச் சார்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் அங்கேயே விட்டு வைத்தனர்.
19. ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார்.
20. அவர் அங்கிருந்த தொழுகைமேடுகளின் அர்ச்சகர் அனைவரையும் பலிபீடங்களின்மேல் கொன்றார். அப்பலிபீடங்களின்மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தப்பின், அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்.
21. பிறகு அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, இவ்வுடன்படிக்கை மலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.
22. இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலக்குத் தலைமை தாங்கிளய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.
23. யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
24. குரு இல்க்கியா ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த மலில் எழுதப்பட்டிருந்த திருச்சட்டத்தின் சொற்களை நிறைவேற்றும்படி, யூதா நாட்டிலும், எருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும், குலதெய்வங்களையும், சிலைகளையும், அருவருப்புகளையும், யோசியா அகற்றினார்.
25. இவரைப் போல், தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் மோசேயின் சட்ட மலுக்கேற்ப ஆண்டவர்பால் திரும்பிய அரசர் அவருக்குமுன் இருந்ததில்லை: அவருக்குப்பின் தோன்றியதுமில்லை.
26. எனினும், மனாசே செய்திருந்த அனைத்தையும் முன்னிட்டு யூதாவின் மேல் ஆண்டவர் கடும் சினம் கொண்டிருந்தார்: அதாவது கொடிய சினம் இன்றும் தணியவில்லை.
27. எனவே, ஆண்டவர், நான் இஸ்ரயேலைப் போல் யூதாவையும் என் திருமுன்னின்று தள்ளவிடுவேன். நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரையும் “எனது பெயர் இங்கு விளங்கும்“ என்று நான் கூறின கோவிலையும் உதறித் தள்ளுவேன் என்றார்.
28. யோசியாவின் பிற செயல்களும் அவர் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
29. அவரது காலத்தில் எகிப்து நாட்டின் மன்னன் நெக்கொ என்ற பார்வோன் அசீரிய அரசனை நோக்கிச் செல்கையில், யூப்பிரத்தீசு ஆற்றை வந்தடைந்தான். அப்பொழுது அரசர் யோசியா அவனைத் தாக்கப்புறப்பட்டு வந்தார். ஆனால் பார்வோன் மெகிதோவில் அவரோடு போரிட்டு அவரைக் கொன்றான்.
30. அவருடைய பணியாளர் அவருடைய சடலத்தை மெகிதோவிலிருந்து எருசலேமுக்குத் தேரில் கொண்டுசென்று, அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவகாசைத் தேர்ந்தெடுத்து, திருப்பொழிவு செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக்கினர்.
31. யோவகாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவனுடைய தாய்.
32. யோவகாசு தன் மூதாயைர்கள் செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
33. அவன் எருசலேமில் அரசாளாதபடி ஆமாத்து நாட்டு இரிபலாவில் பார்வோன் நெக்கோ அவனைச் சிறையிலிட்டான். மேலும் யூதா நாடு நாலாயிரம் கிலோ வெள்ளியும், நாற்பது கிலோ பொன்னும் கப்பமாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டான்.
34. பார்வோன் நெக்கோ யோசியாவின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரசனாக்கி, அவனுடைய பெயரை யோயாக்கிம் என்று மாற்றினான். பின்னர் அவனால் எகிப்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவகாசு அங்கேயே இறந்தான்.
35. பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியையும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான்.
36. யோயாக்கிம் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து அவன் பதினோர் ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டான். ரூமாவைச் சார்ந்த பெதாயாவின் மகள் செபுதா என்பவளே அவனுடைய தாய்.
37. யோயாக்கிம் தன் மூதாதையர் செய்த அனைத்தின்படியே, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
அதிகாரம் 24.
1. அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான்: பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
2. ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மகக்ளினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
3. உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும் அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன.
4. மேலும் அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார்.
5. யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
6. யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
7. எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.
8. யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.
9. யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
10. அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.
11. அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான்.
12. எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.
13. பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துக் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான்.
14. மேலும் அவன் எருசலேம் முழுவதையும1 தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை.
15. மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
16. மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
17. யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் செதேக்கியா என்று மாற்றினான்.
18. செதேக்கியா அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவன் தாய்.
19. யோயாக்கிம் செய்ததுபோல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.
20. ஆண்டவர், எருசலேமையும் யூதாவையும் தம்முன்னின்று தள்ளிவிடும் அளவுக்கு, அவற்றின் மீது சினம் கொண்டார். மேலும் செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
அதிகாரம் 25.
1. செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.
2. இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
3. அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
4. அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
5. கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்: அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
6. அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
7. பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.
8. பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஜந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான்.
9. அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான்.
10. மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.
11. மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான்.
12. மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
13. ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்பண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் பள்பளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
14. சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
15. மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.
16. சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு பண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.
17. முதல் பண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் பணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.
18. தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்படித்தான்:
19. போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஜவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.
20. மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
21. பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.
22. மேலும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.
23. பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.
24. கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது என்று ஆணையிட்டுக் கூறினான்.
25. ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.
26. அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.
27. யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.
28. அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.
29. அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான்.
30. அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.
This page was last updated on 15 September 2006.
Please send your comments and corrections to the Webmaster.