Holy Bible - Old Testament
Book 13. Chronicle - I (in Tamil, Unicode/utf-9 format)
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai
for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his
help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in Unicode /utf-8 format.
So you need to have a Unicode font with the Tamil character block and a
unicode-compliant browser to view the Tamil part properly.
Several Unicode Tamil fonts are available free download at
Tamil electronic library website (http://tamilelibrary.org/index.php?download)
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of
electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 13. - குறிப்பேடு - முதல் நூல்
அதிகாரம் 1.
1. ஆதாம், சேத்து, ஏனோசு:
2. கேனான், மகலலேல், எரேது,
3. ஏனோக்கு, மெத்பசேலா, இலாமேக்கு,
4. நோவா, சேம், காம், எப்பேத்து.
5. எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், பபால், மேசேக்கு, தீராசு,
6. கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.
7. யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.
8. காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.
9. கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா: இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான்.
10. கூசுக்கு நிம்ரோது பிறந்தார்: அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.
11. எகிப்தின் வழிவந்தோர்: ழதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,
12. பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.
13. கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,
14. மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
15. இவ்வியர், அர்க்கியர், சீனியர்,
16. அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.
17. சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, ழது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,
18. அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.
19. ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்: ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.
20. யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
21. ஆதோராம், ஊசால், திக்லா,
22. ஏபால், அபிமாவேல், சேபா,
23. ஓபீர், அவிலா, யோபாபு: இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.
24. சேம், அர்பகசாது, சேலா,
25. ஏபேர், பெலேகு, இரெயு,
26. செருகு, நாகோர், தெராகு,
27. ஆபிராம் என்ற ஆபிரகாம்.
28. ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்: அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:
29. இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,
30. மிஸ்மா, பமா, மாசா, அதாது, தேமா,
31. எற்டிர், நாபிசு, கேதமா: இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.
32. ஆபிரகாமின் மறுமனைவி கெற்டிரா பெற்றெடுத்த மைந்தர்: சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.
33. மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா: இவர்கள் அனைவரும் கெற்டிராவிடம் பிறந்த புதல்வர்.
34. ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்: ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.
35. ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.
36. எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.
37. இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.
38. சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.
39. லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்: லோத்தானின் சகோதரி திம்னா,
40. சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்: சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.
41. அனாவின் மகன் தீசோன்: தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.
42. ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்: தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.
43. இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ: இவரது நகரின் பெயர் தின்காபா.
44. பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
45. யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
46. ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.
47. அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
48. சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார்.
49. சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.
50. பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி: மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.
51. அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்: திம்னா, அலியா, எத்தேத்து,
52. ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.
53. கெனாசு, தேமான், மிபுசார்,
54. மக்தியேல், ஈராம்: இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.
அதிகாரம் 2.
1. இஸ்ரயேலின் மைந்தர்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2. தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.
3. யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.
4. யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு: யூதாவின் புதல்வர் மொத்தம் ஜந்து பேர்.
5. பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.
6. செராகின் புதல்வர்: சிமிரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஜந்து போர்.
7. விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார் கர்மியின் புதல்வருள் ஒருவன்.
8. ஏத்தானின் மகன் அசரியா.
9. எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெழபாய்.
10. இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.
11. நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.
12. போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
13. ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எலியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
14. நான்காம் மகன் நெத்தனியேல், ஜந்தாம் மகன் இரதாய்,
15. ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.
16. இவர்களின் சகோதரரிகள்: செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.
17. அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.
18. எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.
19. அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்: அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.
20. கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.
21. பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.
22. செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்தன.
23. கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்டிர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.
24. எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.
25. எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்: தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.
26. எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.
27. எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.
28. ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா: சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.
29. அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில்: அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.
30. நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்: செலேது புதல்வரின்றி இறந்தார்.
31. அப்பயிம் புதல்வர், இசி: இசியின் புதல்வர், சேசான்: சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.
32. சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.
33. யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா: இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.
34. சேசானுக்கு புதல்வர் இல்லை: புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.
35. சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.
36. அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்: நாத்தானுக்குப் சாபாத்து பிறந்தார்.
37. சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்: எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.
38. ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.
39. அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்: ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.
40. எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்: சிஸ்மாய்க்குச் சல்ழம் பிறந்தார்.
41. சல்ழமுக்கு எக்கமியா பிறந்தார்: எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.
42. எரமகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்: தலைமகன் மேசா: இவர் சீபின் தந்தை: இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.
43. எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.
44. செமாவுக்கு இரகாம் பிறந்தார்: இவர் யோர்க்கயாமின் தந்தை. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.
45. சம்மாயின் புதல்வர்: மாகோன்: மாகோன் பெத்சூரின் தந்தை.
46. காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்: ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.
47. யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.
48. காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.
49. மேலும் அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான சொவாவையும் பெற்றெடுத்தார்: காலேபின் புதல்வி அக்சா.
50. இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.
51. பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.
52. கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, ஆட்சி மெனுகோத்து.
53. கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.
54. சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.
55. யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்: இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.
அதிகாரம் 3.
1. எபிரோனில் தாவீதுக்குப் பிறந்த புதல்வர் இவர்களே: இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாம் பெற்றெடுத்த தலைமகன் அம்னோன்: கர்மேலைச் சார்ந்த அபிகாயில் பெற்றெடுத்த தானியேல் இரண்டாமவர்:
2. கெசூரின் அரசன் தல்மாய் மகள் மாக்கா பெற்றெடுத்த அப்சலோம் மூன்றாமவர்: அகீத்து பெற்றெடுத்த அதோனியா நான்காமவர்:
3. அபித்தால் பெற்றெடுத்த செப்பத்தியா ஜந்தாமவர்: மனைவி எக்லா பெற்றெடுத்த இத்ரயாம் ஆறாமவர்.
4. இந்த ஆறு பேரும் எரிரோனில் அவருக்குப் பிறந்தவர்கள். அங்கே அவர் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செலுத்தினார். எருசலேமிலோ முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
5. எருசலேமில் அவருக்குப் பிறந்தோர் இவர்களே: அம்மியேலின் புதல்வி பத்சூவா பெற்றெடுத்த சிமயா, சோபாபு, நாத்தான், சாலமோன் ஆகிய நால்வர்.
6. ஏனையோர்: இப்கார், எலிசாமா, எலிப்பலேற்று,
7. நோகாகு, நெபேகு, யாப்பியா,
8. எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று ஆகிய ஒன்பது பேர்.
9. இவர்கள் அனைவரும் தாவீதின் புதல்வர்: மற்றும் இவர்களின் சகோதரி தாமார்: இன்னும் மறுமனைவியர் மூலம் அவருக்கு வேறு புதல்வரும் இருந்தனர்.
10. சாலமோனின் புதல்வர்: இரகபெயாம், அவர் மகன் அபியா, அவர் மகன் ஆசா, அவர் மகன் யோசபாத்து.
11. அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு,
12. அவர் மகன் அமட்சியா, அவர் மகன் அசரியா, அவர் மகன் யோத்தாம்,
13. அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே,
14. அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா.
15. யோசியாவின் புதல்வர்: தலைமகன் யோகனான், இரண்டாமவர் யோயாக்கிம், மூன்றாமவர் செதேக்கியா, நான்காமவர் சல்ழம்.
16. யோயாக்கிமின் புதல்வர்: அவர் மகன் எக்கொனியா, அவர் மகன் செதேக்கியா.
17. சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்: அவர் மகள் செயல்தியேல்,
18. மல்கிராம், பெதாயா, செனாட்சர், எக்கமியா, ஒசாமா, நெதமியா.
19. பெதாயாவின் புதல்வர்: செருபாபேல், சிமயி: செருபாபேலின் புதல்வர்: மெசுல்லாம், அனனியா, அவர்களின் சகோதரி செலோமித்து
20. மற்றும் ஆசுபா, ஒகேல், பெரக்கியா, அசதியா, “யூசபு கெசேது“ என்னும் ஜவர்.
21. அனனியாவின் புதல்வர்: பெலற்றியா, ஏசாயா: அவர் மகன் இரபாயா: அவர் மகன் அர்னான்: அவர் மகன் ஒபதியா: அவர் மகன் செக்கனியா.
22. செக்கனியாவின் புதல்வர்: செமாயா: அவர் புதல்வர்: அற்டிசு, இகால், பாரியகு, நெயரியா, சாபாற்று ஆக மொத்தம் அறுவர்.
23. நெயரியாவின் புதல்வர்: எலியோவனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூவர்.
24. எலியோவனாயின் புதல்வர்: ஓதவியா, எலியாசிபு, பெலாயா, அக்கூபு, யோகனான், தெலாயா, அனானி என்னும் எழுவர்.
அதிகாரம் 4.
1. யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.
2. சோபாலின் மகன் இரயாயாவுக்கு யாகத்து பிறந்தார்: யாகத்துக்கு அகுமாயும் இலாகாதும் பிறந்தனர்: சோராவியர் குடும்பங்கள் இவையே.
3. ஏத்தாம் என்னும் மூதாதையின் வழிமரபினர் இவர்கள்: இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு: அவர்களின் சகோதரி பெயர் அட்சலெல்போனி.
4. மேலும் கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள்.
5. தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூருக்கு ஏலா, நாரா என்னும் இரு மனைவியர் இருந்தனர்.
6. நாரா அவருக்கு அகுசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தாரி ஆகியோரைப் பெற்றெடுத்தாள்: நாராவின் புதல்வர் இவர்களே.
7. ஏலாவின் புதல்வர்: செரேத்து, இட்சகார், எத்னான்.
8. அனுபு, சோபேபா, ஆரூம் மகன் அகரகேலின் குடும்பத்தினர் ஆகியோருக்குக் கோசு தந்தை.
9. யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் “நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்“ என்று சொல்லி அவருக்கு “யாபேசு“ என்று பெயரிட்டார்.
10. யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.
11. சூகாவின் சகோதரருக்குக் கெலுபுக்கு மெகீர் பிறந்தார். அவர் எஸ்தோனின் மூதாதை.
12. எஸ் தோனுக்கு பெத்ராபா, பாசயாகு, ஈர்னகாசின் மூதாதை தெகின்னா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் இரேக்காவில் வாழும் மனிதர்கள்.
13. கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா: ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய்.
14. மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்: கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார்.
15. எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்: ஏலாவின் மகன் கெனானி.
16. எகலலேலின் புதல்வர்: சீபு, சிப்பா, தீரியா, அசரேல்.
17. எஸ் ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்:
18. மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்: கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல்.
19. நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்: கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை.
20. சீமோனின் புதல்வர்: அம்னோன், ரின்னா, பென்கனான், தீலோன்: இசீயின் புதல்வர்: சோகேத்து, பென்சோகேத்து.
21. யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயாவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள்,
22. யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை.
23. அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.
24. சிமியோனின் புதல்வர்: நெமுவேல், யாமின், யாரிபு, செராகு, சாவூல்
25. அவர் மகன் சல்ழம், அவர் மகன் மிப்சாம், அவர் மகன் மிஸ்மா.
26. மிஸ்மாவின் புதல்வர்: அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி.
27. சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்: அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை: அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை.
28. அவர்கள் குடியேறிய இடங்கள்: பெயேர்செபா, மேலதா, அட்சார் சூவால்,
29. பில்கா, எட்சேம், தோலாது,
30. பெத்துவேல், ஒர்மா, கீக்லாகு,
31. பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன.
32. அவர்கள் வாழ்ந்த ஜந்து வேறு இடங்கள்: ஏத்தாம், அயின்: ரிம்மோன், தோக்கேன், ஆசான்:
33. இந்நகர்களைச் சுற்றிலும் பாகால்வரை அமைந்த அனைத்துச் சிற்டிர்களும் அவர்களுடையவை. இவை அவர்களின் குடியிருப்புகள்: அவர்கள் தங்களுக்கென ஒரு தலைமுறைக் குறிப்பேடு வைத்திருந்தனர்.
34. மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா,
35. யோவேல், அசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூ,
36. எலியோவனாய், யாக்கோபா, எசோகாயா, அசாயா, அதியேல், எசிமியேல், பெனாயா,
37. செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா.
38. பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர்.
39. அவர்கள் தங்கள் மந்தைக்கு மேய்ச்சலைத் தேடிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் கெதோர் நுழைவுவரை சென்றனர்.
40. அங்கே அவர்கள் செழிப்புமிகு, நல்ல மேய்ச்சலைக் கண்டார்கள். நிலம் விரிந்து பரந்து, அமைதியுடனும் வளத்துடனும் இருந்தது. காமைச் சார்ந்தோர் முன்பு அங்குக் குடியிருந்தனர்.
41. பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள்.
42. சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஜந்மறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.
43. அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
அதிகாரம் 5.
1. இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை.
2. யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று.
3. இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்ழ, எட்சரோன், கர்மி.
4. யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,
5. அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,
6. அவர் மகன் பெயேரா: ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான்.
7. அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்: தலைவர் எயியேல், செக்கரியா,
8. யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.
9. அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்: கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.
10. அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்: கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.
11. அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.
12. பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.
13. அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
14. இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்: அவர் கிலெயாதின் மகன்: அவர் மிக்கேலின் மகன்: அவர் எசிசாயின் மகன்: அவர் யாகுதோவின் மகன்: அவர் பூசின் மகன்.
15. கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.
16. அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.
17. அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.
18. ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுமற்று அறுபது பேர் இருந்தனர்.
19. அவர்கள் ஆகாரியர், எத்பர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.
20. அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
21. அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஜமபத்தாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஜம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.
22. அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.
23. மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.
24. அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே: ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
25. அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.
26. ஆதலால் இஸ்ரியேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.
அதிகாரம் 6.
1. லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.
2. கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.
3. அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.
4. ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்: பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.
5. அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்: புக்கிக்கு உசீ பிறந்தார்.
6. உசீக்கு செரகியா பிறந்தார்: செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார்.
7. மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்பபு பிறந்தார்:
8. அகித்பபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.
9. அகிமாசுக்கு அசரியா பிறந்தார்: அசரியாவுக்கு யோகனான் பிறந்தார்.
10. யோகனானுக்கு அசரியா பிறந்தார்: சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.
11. அசரியாவுக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்பபு பிறந்தார்.
12. அகித்பபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு சல்ழம் பிறந்தார்.
13. சல்ழமுக்கு இல்க்கியா பிறந்தார்: இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார்.
14. அசரியாவுக்குச் செராயா பிறந்தார்: செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார்.
15. ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.
16. லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி,
17. கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே: லிப்னி, சிமயி,
18. கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.
19. மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி: இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள்.
20. கேர்சோமின் புதல்வர்: லிப்னி: அவர் மகன் யாகத்து: அவர் மகன் சிம்மா:
21. அவர் மகன் யோவாகு: அவர் மகன் இத்தோ: அவர் மகன் செராகு: அவர் மகன் எயத்தராய்.
22. கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு: அவர் மகன் கோராகு: அவர் மகன் அசீர்:
23. அவர் மகன் எல்கானா: அவர் மகன் எபியசாபு: அவர் மகன் அசீர்:
24. அவர் மகன் தாகத்து: அவர் மகன் ஊரியேல்: அவர் மகன் உசியா: அவர் மகன் சாவூல்.
25. எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து,
26. அவர் மகன் எல்கானா: அவர் மகன் சோப்பாய்: அவர் மகன் நாகத்து,
27. அவர் மகன் எலியாபு: அவர் மகன் எரோகாம்: அவர் மகன் எல்கானா.
28. சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா.
29. மெராரியின் புதல்வர்: மக்லி: அவர் மகன் லிப்னி: அவர் மகன் சிமயி: அவர் மகன் உசா,
30. அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா: அவர் மகன் அசாயா.
31. ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.
32. எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.
33. அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே: கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்: அவர் யோவேலின் மகன்: அவர் சாமவேலின் மகன்:
34. அவர் எல்கானாவின் மகன்: அவர் எரோகாமின் மகன்: அவர் எலியேலின் மகன்: அவர் தோவாகின் மகன்:
35. அவர் சூப்பின் மகன்: அவர் எல்கானாவின் மகன்: அவர் மாகாத்தின் மகன்: அவர் அமாசாயின் மகன்:
36. அவர் எல்கானாவின் மகன்: அவர் யோவேலின் மகன்: அவர் அசரியாவின் மகன்: அவர் செப்பனியாவின் மகன்:
37. அவர் தாகத்தின் மகன்: அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்: அவர் கோராகின் மகன்:
38. அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்: அவர் லேவியின் மகன்: அவர் இஸ்ரயேலின் மகன்.
39. ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்: அவர் சிமயாவின் மகன்.
40. அவர் மிக்கேலின் மகன்: அவர் பாசேயாவின் மகன்: அவர் மல்கியாவின் மகன்:
41. அவர் எத்னியின் மகன்: அவர் செராகின் மகன்: அவர் அதாயாவின் மகன்:
42. அவர் ஏத்தானின் மகன்: அவர் சிம்மாவின் மகன்: அவர் சிமயியின் மகன்:
43. அவர் யாகாத்தின் மகன்: அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.
44. ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்: அவர் அப்தியின் மகன்: அவர் மல்ழக்கின் மகன்,
45. அவர் அசபியாவின் மகன்: அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்:
46. அவர் அம்சியின் மகன்: அவர் பானியின் மகன்: அவர் செமேரின் மகன்:
47. அவர் மக்லியின் மகன்: அவர் மூசியின் மகன்: அவர் மெராரியின் மகன்: அவர் லேவியின் மகன்.
48. அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.
49. ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, பபப் பீடத்தில் பபம் காட்டினர். அவர்கள் திருத்பயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.
50. ஆரோனின் புதல்வர் இவர்களே: பினகாசின் மகன் எலயாசர்: அவர் மகன் அபிசூவா:
51. அவர் மகன் புக்கி: அவர் மகன் உசி: அவர் மகன் செரகியா:
52. அவர் மகன் மெரயோத்து: அவர் மகன் அமரியா: அவர் மகன் அகித்பபு
53. அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.
54. லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே: ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.
55. அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.
56. அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்டிர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன.
57. ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்: எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்: யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்:
58. ஈலேன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: தெபீர் அதன் மேய்ச்சல் நிலங்கள்:
59. ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்-செமேசு அதன் மேய்ச்சல் நிலங்கள்.
60. பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை: கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.
61. எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.
62. கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.
63. மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.
64. இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர்.
65. இவ்வாறு அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.
66. கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.
67. அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்: எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்:
68. யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்:
69. அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள்,
70. மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.
71. கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை: பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
72. இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை: கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
73. இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆனேம் அதன் மேய்ச்சல் நிலங்கள்.
74. ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை: மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்:
75. உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
76. நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கிரித்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
77. மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
78. எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்:
79. கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்: மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
80. காத்து குலத்திலிருந்து கிடைத்தவை: கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்:
81. கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
அதிகாரம் 7.
1. இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர்.
2. தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஜமறாக இருந்தது.
3. உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஜவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர்.
4. அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர்.
5. இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர்.
6. பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.
7. பேலாவின் புதல்வர்: எட்சபோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஜவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தனர். அவர்களுள் வழமரபு அட்டவணையில் குறிக்கப்பட்டோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு.
8. பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர்.
9. அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருமறு.
10. எதியேலின் புதல்வர்: பில்கான்: பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர்.
11. எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருமறு.
12. சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள்: ஊசிம் அகேரின் புதல்வர்.
13. நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்ழம்: இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.
14. மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர்.
15. குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர்.
16. மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம்.
17. ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர்.
18. கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்: இஸ்கோது, அபியேசர், மக்லா.
19. செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம்.
20. எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு: அவர் மகன் பெரேது: அவர் மகன் தகாத்து: அவர் மகன் எலயாதா: அவர் மகன் தகாத்து:
21. அவர் மகன் சாபாது: அவர் மகன் சுத்தெலாகு: மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.
22. அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர்.
23. எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில் தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.
24. எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.
25. எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு: மற்றும் இரசேபு: அவர் மகன் தெலாகு: அவர் மகன் தாகான்:
26. அவர் மகன் லாதான்: அவர் மகன் அம்மிகூது: அவர் மகன் எலிசாமா:
27. அவர் மகன் மன்: அவர் மகன் யோசுவா.
28. அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே: பெத்தேல், அதன் சிற்டிர்கள்: கீழ்ப்புறத்தில் நாரான்: மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்டிர்கள்: செக்கேம், அதன் சிற்டிர்கள்: அய்யா, அதன் சிற்டிர்கள்.
29. மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்டிர்கள்: தானாக்கு, அதன் சிற்டிர்கள்: மெகிதோ, அதன் சிற்டிர்கள்: தோர், அதன் சிற்டிர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர்.
30. ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா: அவர்களின் சகோதரி செராகு.
31. பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை.
32. ஏபேருக்குப் பிறந்தோர்: யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா.
33. யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து: இவர்கள் யாப்லேற்றின் புதல்வர்.
34. செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம்.
35. அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.
36. சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா.
37. பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா.
38. எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா.
39. உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா.
40. ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்.
அதிகாரம் 8.
1. பென்யமினுக்குப் பிறந்தோர்: தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
2. நான்காமவர் நோகா, ஜந்தாமவர் இராப்பா.
3. பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,
4. அபிசூவா, நாகமான், அகோகு,
5. கேரா, செபுவான், ஊராம்.
6. ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்:
7. நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.
8. சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
9. ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்: யோபாப், சிபியா, மேசா, மலகாம்.
10. எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.
11. ஊசிம் மூலம் அவர் அபிபபையும் எல்பாகாலையும் பெற்றார்.
12. எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்டிர்களையும் கட்டி எழுப்பினார்.
13. பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.
14. அகியோ, சாசாக்கு, எரேமோத்து,
15. செபதியா, அராது, ஏதேர்,
16. மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர்.
17. செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர்,
18. இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர்.
19. யாக்கிம், சிக்ரி, சப்தி,
20. எலியேனாய், சில்தாய், எலியேல்,
21. அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.
22. இஸ்பான், ஏபேர், எலியேல்,
23. அப்தோன், சிக்ரி, ஆனான்,
24. அனனியா, ஏலாம், அன்தோதியா,
25. இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.
26. சம்சராய், செகரியா, அத்தலியா,
27. யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.
28. இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
29. கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.
30. அவரின் தலைமகன் அப்தோன்: மற்றவர்கள்: சூர், கீசு, பாகால், நாதாபு,
31. கெதோர், அகியோ, செகேர்,
32. மிக்லோத்து: இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
33. நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தா+ சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
34. யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
35. மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.
36. ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்: யோயாதாவுக்குப் பிறந்தோர்: ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
37. மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா: அவர் மகன் எலயாசர்: அவர் மகன் ஆட்சேல்.
38. ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன: அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.
39. அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.
40. ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் மற்று ஜம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.
அதிகாரம் 9.
1. இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று மலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
2. தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதலாகக் குடியேறியவர்கள் இஸ்ரயேலரும் குருக்களும் லேவியரும் கோவில் பணியாளருமே.
3. யூதா, பென்யமின் எப்ராயிம் மனாசே மக்களுள் எருசலேமில் குடியிருந்தவர்:
4. ஊத்தாய்: இவர் அம்மிகூதின் மகன்: இவர் ஓம்ரியின் மகன்: இவர் இம்ரியின் மகன்: இவர் பானியின் மகன்: இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்: இவர் யூதாவின் மகன்.
5. சீலோன் மரபில் தலைமகன் அசாயாவும் அவர் புதல்வரும்.
6. கேராகின் புதல்வருள் எகுவேல்: அவர் உறவினர் அறுமற்றுத் தொண்ணூபேர்.
7. பென்யமின் புதல்வருள் சல்ழ: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் ஓதவியாவின் மகன்: இவர் அஸ்னுவாவின் மகன்:
8. எரோகாமின் மகன் இப்னயா: மிக்¡£யின் புதல்வராகிய உசீயின் மகன் ஏலா: இப்னயாவின் புதல்வராகிய இரகுவேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
9. தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஜம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர்.
10. குருக்கள் எதாயா, யோயாரிபு, யாக்கின்:
11. அசரியா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெராயோத்தின் மகன்: இவர் கடவுளின் இல்லப் பொறுப்பளாரான அகித்பபின் மகன்.
12. அதாயா: இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்: இவர் அதியேலின் மகன்: இவர் யாகிசேராவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் மெசில்லேமித்தின் மகன்: இவர் இம்மேரின் மகன்.
13. அவர்கள் உறவினரும் அவர்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களுமாயிருந்த ஆற்றல்மிகு வீரர் ஆயிரத்து எழுமற்று அறுபது பேர். இவர்கள் கடவுளின் இல்லப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
14. லேவியருள் செமாயா: இவர் அசூபின் மகன்: இவர் அஸ்ரிகாமின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர்.
15. பகபக்கர், எரேசு, காலால்: ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா.
16. எதுத்பனின் புதல்வன் காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா: நெற்றோபாவியரின் சிற்டிர்களில் வாழ்ந்த எல்கானாவுக்குப் பிறந்த ஆசாவின் மகன் பெரக்கியா.
17. வாயில் காப்போர் சல்ழம், அக்கூபு, தல்மோன், அகிமான், மற்றும் இவர்கள் உறவினர்: சல்ழம் இவர்களின் தலைவர்.
18. இவர்கள் இன்றுவரை கிழக்கில் அரச வாயிலைக் காத்து வருகின்றனர். இவர்களே லேவியர் பாளையத்தின் காவலராய் இருந்தவர்கள்.
19. கோராகின் புதல்வர் எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்ழமும் அவர் தந்தையின் வீட்டாரும் உறவினருமாகிய கோராகியரும் கூடார நுழைவாயில் மேற்பார்வைப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். முன்பே அவர்களின் மூதாதையர் ஆண்டவரது பாளையவாயிலைக் காத்து வந்தனர்.
20. எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார்.
21. மெசல்லேமியாவின் மகன் செக்கரியா சந்திப்புக் கூடார நுழைவாயிலின் காவலராக இருந்தார்.
22. நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருமற்றுப் பன்னிரண்டு பேர். இவர்கள் தங்கள் சிற்டிர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள்.
23. அவர்களும் அவர்கள் புதல்வரும் கடவுளின் இல்லக் கூடாரத்தின் வாயில்களைக் காத்து வந்தனர்.
24. வாயில் காப்போர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்தனர்.
25. சிற்டிர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும்.
26. தலைமை வாயில் காவலராகிய நான்கு லேவியரும் கடவுளின் இல்லப் பண்டக சாலைகளுக்கும், கருவூலங்களுக்கும் பொறுப்பாளர்களாய் இருந்தனர்.
27. காவல் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் கடவுளின் இல்லத்தைச் சுற்றிலும் இரவில் தங்கியிருந்து காலைதோறும் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.
28. அவர்களில் சிலரிடம் வழிபாட்டுக்குரிய கலங்களின் பொறுப்பு இருந்தது. அவற்றை உள்ளே கொண்டு போகும் போதும் வெளியே கொண்டு வரும்போதும் எண்ணிச் சரிபார்ப்பர்.
29. மற்றும் சிலரிடம் தட்டுமுட்டுகள், எல்லாப்புனித கலங்கள், மிருதுவான மாவு, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப்பொருள்கள் ஆகியவற்றின்மேல் பொறுப்பு தரப்பட்டிருந்தது.
30. குருக்களின் புதல்வர் சிலர் நறுமணப் பொருள்களில் இருந்து நறுமணக் கலவை தயாரித்தனர்.
31. கோராகியரான சல்ழமின் தலைமகன் மத்தித்தியா என்ற லேவியருக்குத் தட்டைச் சட்டியில் பண்டங்கள் சுடும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.
32. அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
33. இவர்களில் லேவியரின் மூதாதையருள் பாடகர் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கயிருந்தனர். ஏனெனில் அவர்கள், இரவும் பகலும், பணி செய்ய வேண்டியிருந்ததால், பிற பணியின்றிக் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கியிருந்தனர்.
34. தலைவராகிய இவர்களே தலைமுறை அட்டவணைப்படி லேவியருள் குடும்பத் தலைவர்கள்: எருசலேமில் குடியிருந்த தலைவர்கள்.
35. கிபயோனில் கிபயோனின் தந்தை எயியேல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் மாக்கா.
36. அவர் தலைமகன் அப்தோன்: மற்றவர்கள் சூர், கீசு, பாகால், நேர், நாதாபு,
37. கெதார், அகியோ, செக்கரியா, மிக்லோத்து.
38. மிக்லோத்திற்கு சிமயாம் பிறந்தார். இவர்கள் எருசலேமில் தங்கள் உறவின்முறையாரோடு வாழ்ந்து வந்தார்கள்.
39. நேருக்குக் கீசு பிறந்தார்: கீசுக்கு சவுல் பிறந்தார்: சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
40. யோனத்தானின் மகன் மெரிபு பாகால்: மெரிபு பாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
41. மீக்காவின் புதல்வர்கள் பித்தோன், மெலேக்கு, தகரேயா, ஆகாசு.
42. ஆகாசுக்கு யாரா பிறந்தார்: யாராவுக்கு அலமேத், அஸ்மாவேத், சிம்ரி பிறந்தனர். சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
43. மோட்சாவுக்கு பினேயா பிறந்தார்: இவர் மகன் இரபாயா: இவர் மகன் எலயாசர்: இவர் மகன் ஆட்சேல்.
44. ஆட்சேலுக்கு ஆறு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அசிரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயர்யா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆட்சேலின் புதல்வர்கள்.
அதிகாரம் 10.
1. பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்: கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.
2. பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வரையும் துரத்திப் பிடித்துச் சவுலின் புதல்வர் யோனத்தான், அபினதாபு, மல்கிசூவா, ஆகியோரை வெட்டி வீழ்த்தினர்.
3. சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில்வீரர் அவரைக் கண்டு கொண்டதும் அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.
4. அப்போது சவுல் தமது போர்க்கலன் சுமப்போனை நோக்கி, விருத்த சேதனம் அற்ற இவர்கள் என்னை ஏளனம் செய்யாதபடி உன் வாளை உருவி என்னைக் கொன்று விடு என்றார். அவர் தம் போர்கலன் சுமப்போன் மிகவும் அச்சமுற்று அவ்வாறே செய்யமாட்டேன் என்றான். எனவே சவுல் தம் வாளை நட்டுவைத்து அதன்மேல் வீழ்ந்தார்.
5. சவுல் இறந்ததை அவர்தம் போர்க்கலன் சுமப்போன் கண்டு அவனும் தன் வாளின்மேல் விழுந்து மடிந்தான்.
6. இவ்வாறு சவுலும் அவர்தம் புதல்வர் மூவரும் மடிந்தனர். அவரோடு அவர் குடும்பம் முழுவதும் அழிந்தது.
7. பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ரயேலர் தங்கள் படை புறமுதுகிட்டு ஓடியதையும், சவுலும் அவர் புதல்வரும் இறந்துபோனதையும் கண்டு, அவர்கள் தங்கள் நகர்களைவிட்டுத் தப்பி ஓடினர். பெலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.
8. பெலிஸ்தியர் மடிந்தோரின் உடைகளை உரிந்துகொள்ள மறுநாள் வந்தபோது, சவுலும், அவர்தம் புதல்வரும் கில்போவா மலையில் கிடப்பதைக் கண்டனர்.
9. அவர்தம் உடைகளை உரிந்து, தலையை வெட்டி, போர்க்கலன்களையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் தம் வழிபாட்டுச் சிலைகளுக்கு முன்னும், மக்களுக்கும் அந்த நற்செய்தியை அறிவிக்குமாறு பெலிஸ்தியர் நாடெங்கும் ஆள்களை அனுப்பி வைத்தனர்.
10. அவர்தம் போர்க்கலன்களைத் தங்கள் தெய்வத்தின் கோவிலில் வைத்தனர். அவரது தலையைத் தாகோன் கோவிலில் கட்டித் தொங்க விட்டனர்.
11. பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லாம் யாபேசு-கிலயாதுவாழ் மக்கள் அனைவரும் கேள்வியுற்றனர்.
12. அப்போது அவர்களுள் வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர்.
13. இவ்வாறு சவுல் தம் துரோகங்களை முன்னிட்டு மடிந்தார். அவர் ஆண்டவர் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்குத் துரோகம் செய்தார். மேலும் இறந்தோர் ஆவியிடம் ஆலோசனை கேட்டார்:
14. ஆனால், ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. ஆகையால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவர் அரசை ஈசாயின் மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.
அதிகாரம் 11.
1. எனவே இஸ்ரயேலர் அனைவரும் ஒன்றுதிரண்டு எபிரோனிலிருந்த தாவீதிடம் வந்து, இதோ நாங்கள் உம் எலும்பும் சதையுமாய் இருக்கிறோம்.
2. சென்ற நாள்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், நீர்தாம் இஸ்ரயேலரின் எல்லாப் போர்களிலும் தலைமை தாங்கினீர். “என் மக்களாகிய இஸ்ரயேலை நீ மேய்த்து, அவர்களின் தலைவனாயிருப்பாய்“ என்று உம் கடவுளாகிய ஆண்டவரும் உம்மிடமே சொன்னார் என்றார்கள்.
3. இஸ்ரயேலின் மூப்பர்கள் எல்லாரும் எபிரோனிலிருந்த அரசரிடம் வந்தார்கள். ஆண்டவர் திருமுன் தாவீது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆண்டவர் சாமுவேல் வழியாக உரைத்தபடி அவர்கள் தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார்கள்.
4. பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
5. எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே “தாவீதின் நகர்“ ஆயிற்று.
6. தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.
7. தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது “தாவீதின் நகர்“ என்று அழைக்கப்பட்டது.
8. அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்: யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.
9. படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.
10. ஆண்டவர் இஸ்ரயேலரைக் குறித்து உரைத்த வாக்கின்படி தாவீது அரசராவதற்கு இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் அவருக்கு உறுதுணையாய் இருந்த தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் தலைவர்கள் இவர்களே:
11. தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் பெயர்ப்பட்டியல்: அக்மோனியின் மகன் யாசொபயாம்: இவர் முப்பதின்மர் தலைவர்: தம் ஈட்டியால் முந்மறு பேரை ஒரே நேரத்தில் குத்திக் கொன்றவர்.
12. அவரை அடுத்து அகோகியராகிய தோதோவின் மகன் எலயாசர்: இவர் மாவீரர் மூவருள் ஒருவர்.
13. பெலிஸ்தியர் போரிடப் படைதிரட்டிக் கொண்டு வந்திருந்த பொழுது, பஸ்தம்மில் தாவீதுடன் இருந்தார். வாற்கோதுமைப் பயிர் நிறைந்த ஒரு வயல் அங்கிருந்தது. மக்களோ பெலிஸ்தியருக்கு அஞ்சி ஓடினர்.
14. அப்போது அவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பெலிஸ்தியரை முறியடித்தனர். இவ்வாறு ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தருளினார்.
15. பெலிஸ்தியரின் படை இரபாயிம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கி இருந்தபோது, முப்பதின்மர் தலைவருள் மூவர் அதுல்லாம் குகைக்குச் சென்றனர்.
16. தாவீது கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியரின் பாளையம் பெத்லகேமில் இருந்தது.
17. ஒருநாள் தாவீது, பெத்லகேம் நுழைவாயிலில் உள்ள கிணற்று நீரில் கொஞ்சம் யாராவது குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்கும் என்று ஆவலுடன் கூறினார்.
18. அப்போது அந்த மூவரும் பெலிஸ்தியரின் பாளையத்தினுள்ளே துணிந்து சென்று, பெத்லகேம் நுழைவாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தார்கள். தாவீதோ அதைக் குடிக்கமனமில்லாமல், அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டிவிட்டார்.
19. நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாத இந்த மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பது எப்படி? இவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இந்தத் தண்ணீரைக் கொண்டுவந்தனரே! என்று கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார். அந்த மாவீரர் மூவரும் இத்தகையவற்றைச் செய்தனர்.
20. யோவாபின் சகோதரராகிய அபிசாய் முப்பதின்மருள் தலைசிறந்தவர். இவரே தம் ஈட்டியால் முந்மறு பேரைக் கொன்றவர்: எனவே முப்பதின்மருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.
21. இவர் முப்பதின்மருள் மிகுந்த புகழ் பெற்றிருந்தார். எனவே அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆயினும் முந்தின மூவருக்கு அவர் சமமானவர் அல்ல.
22. கப்சியேலைச் சார்ந்தவரும் வலிமைமிக்கவருமான யோயாதாவின் மகன் பெனாயா தீரச் செயல்கள் பல புரிந்தார். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றார்: மேலும், உறைபனி நாளில் ஒரு குழியினுள் இறங்கி அங்கிருந்த சிங்கத்தைக் கொன்றார்.
23. ஜந்து முழ உயரமுடைய ஒரு எகிபத்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில் இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று, அந்த எகிபத்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.
24. யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.
25. அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.
26. படையின் மாவீரர் பின்வருமாறு: யோவாபின் சகோதரர் அசாவேல்: பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்:
27. அரோரியரான சம்மோத்து: பெலொனியரான ஏலேசு,
28. தெக்கோவாவைச் சார்ந்த இக்கேசின் மகன் ஈரா: அனதோத்தியரான அபியேசர்,
29. ஊசாயரான சிபக்காய்: அகோகியரான ஈலாய்:
30. நெற்றோபாயரான மகராய், நெற்றோபாயரான பானாவின் மகன் ஏலேது.
31. பென்யமின் குலத்தில், கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்: பிராத்தோனியரான பெனாயா:
32. காகசு நீரோடைப் பகுதியைச் சார்ந்த ஊராய்: அர்பாயரான அபியேல்:
33. பகரூமியரான அஸ்மவேத்து: சால்போனியரான எல்யக்பா:
34. கீசோனியரான ஆசேமின் புதல்வர்: ஆராரியரான சாகேயின் மகன் யோனத்தான்:
35. ஆராரியரான சாகாரின் மகன் அகியாம்: ஊரின் மகன் எலிப்பால்:
36. மெக்கராயரான ஏபேர்: பெலோனியரான அகியா:
37. கர்மேலியரான எட்சரோ: எஸ்பாயின் மகன் நாராய்:
38. நாத்தானின் சகோதரர் யோவேல்: அக்ரியின் மகன் மிப்கார்:
39. அம்மோனியரான செலேக்கு: பெயரோத்தியரான நகராய்: இவர் செரூயாவின் மகனான யோவாபின் படைக்கலன் சுமப்பவர்.
40. இத்ரியரான ஈரா: இத்ரியரான காரேபு:
41. இத்ரியரான உரியா: அக்லாயின் மகன் சாபாது:
42. ரூபன் குலத்தலைவரும் சீசாவின் மகனுமான அதீனா: இவரோடிருந்த முப்பது பேர்:
43. மாக்காவின் மகன் ஆனான்: மித்னியரான யோசபாற்று:
44. அஸ் தராயரான உசியா: அரோயேரியரான ஓதாமின் புதல்வர் சாமா, எயியேல்:
45. தீட்சியரான சிம்ரியின் மகன் எதியவேல்: அவன் சதோதரர் யோகா:
46. மகவாயரான எலியேல்: எல்னாமின் புதல்வர் எரிபாய், யோசவியா: மோவாபியரான இத்மா:
47. மெட்சோபாயரான எலியேல், ஓபேது, யகசியேல் என்பவர்களே.
அதிகாரம் 12.
1. தாவீது, கீசின் புதல்வர் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிக்லாகு என்னுமிடத்தில் தங்கியிருக்கையில், அவரிடம் வந்தவர்கள் இவர்களே: அவர்கள் போரில் தோள் கொடுத்த ஆற்றல்மிகு படை வீரர்.
2. அவர்கள், வில்வீரர்: கவண்கல் எறிதற்கும், வில்லினால் அம்பு எய்தற்கும், வலக்கை இடக்கைப் பழக்கமானவர்களாயும் இருந்தனர். அவர்கள் பென்யமின் குலத்தவரான சவுலின் குடும்பத்தவர்கள்.
3. அவர்களுள் முதன்மையானவரான அகியேசர், யோவாசு இருவரும் கிபயாவைச் சார்ந்த செமாயாவின் புதல்வர்கள். அஸ்மவேத்தின் புதல்வர்களான எசியேல், பெலவேற்று, பெராக்கா, அனதோத்தியரான எகூ:
4. முப்பத்தின்மருள் ஆற்றல்மிக்கவரும் முப்பதின்மருக்குத் தலைவருமான கிபயோனியர் இஸ்மாயா, எரேமியா, யகசியேல், யோகனான், கெதேராவியரான யோசபாத்து,
5. எழசாய், எரிமோத்து, பெயெலியா, செமாரியா, அருப்பியரான செபத்தியா:
6. எல்கானா, எஸ்யா, அசரியேல், யோவேசர், கோராகியரான யாசொபெயாம்:
7. கெதோரியரான எரொகாமின் புதல்வர்கள் யோவேலா, செப்தியா.
8. பேராற்றலும் படைத்திறனும் கேடயம், ஈட்டி கையாள்வதில் தேர்ச்சியும், சிங்கத்தின் முகமும், மலைவாழ் கலைமானின் வேகமும் உடைய காத்தியர் சிலர் பாலைநில அரணில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
9. அவர்கள் யாரெனில்: தலைவரான ஏட்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாபு,
10. நான்காவது மிஸ்மன்னா, ஜந்தாவது எரேமியா,
11. ஆறாவது அத்தாய், ஏழாவது எலியேல்,
12. எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சாபாது,
13. பத்தாவது எரேமியா, பதினொன்றாவது மக்பன்னாய்.
14. இவர்களே காத்தின் புதல்வர்களான படைத்தலைவர்கள். இவர்களில் சிறியவர் மறுபேருக்கும், பெரியவர் ஆயிரம் பேருக்கும் சமம3
15. யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக் கடந்து, பள்ளத்தாக்குகளில் வாழ்ந்துவந்த யாவரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தி அடித்தவர்கள் இவர்களே.
16. பென்யமின், யூதா புதல்வர்களில் சிலர் அரணில் இருந்த தாவீதிடம் வந்தனர்.
17. தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்து அவர்களை நோக்கி: நீங்கள் சமாதான நோக்குடன் எனக்கு உதவி செய்ய வந்துள்ளீர்களென்றால், நான் உங்களை இதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். மாறாக, குற்றமற்றவனான என்னை என் எதிரிகள் கையில் ஒப்புவிக்கும் பொருட்டு வந்துள்ளீர்களென்றால் நம் முன்னோரின் கடவுள் அதைக் கண்டு தீர்ப்புக் கூறட்டும் என்றார்.
18. அப்போது முப்பதின்மர் தலைவராகிய அமாசாயை ஆவி ஆட்கொள்ளவே, அவர்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்: ஈசாயின் மகனே! நாங்கள் உம்மோடிருப்போம்: வெற்றி! உமக்கே வெற்றி! உமக்கு உதவிசெய்வோருக்கும் வெற்றி! ஏனெனில் , உம் கடவுள் உமக்குத் துணைநிற்கிறார் என்றார். அப்போது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு தம் படைக்குத் தலைவர்கள் ஆக்கினார்.
19. தாவீது, பெலிஸ்தியரோடு சேர்ந்து சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயருள் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டனர். பெலிஸ்தியத் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, தாவிது தன் தலைவன் சவுலோடு சேர்ந்து கொண்டால், நம் தலை உருளும், என்று சொல்லி அவர் உதவி பெறாமல் அவரை அனுப்பிவிட்டார்கள்.
20. தாவீது சீக்லாகுக்குத் திரும்பி வந்தபோது மனாசேயருள் ஆயிரத்தவர்க்குத் தலைவர்களான யோசபாத்து, எதியவேல், மிக்கேல், யோசபாத்து, எலிகூ, சில்தாய் ஆகியோர் மனாசேயைவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டனர்.
21. அங்கே வந்த கொள்ளைக்காரரை முறியடிக்க இவர்கள் தாவீதுக்குத் துணை நின்றனர். ஏனெனில் இவர்கள் அனைவரும் வலிமைமிகு வீரர்கள்: ஆற்றல்மிக்க படைத்தலைவர்கள்.
22. இவ்விதமாகத் தாவீதுக்கு உதவிசெய்வோர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். எனவே அவர்கள் கடவுளின் படையெனப் பெரும்படை ஆயினர்.
23. ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே:
24. யூதா புதல்வரில், கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர்க்கோலம் பூண்ட ஆறாயிரத்து எண்ணூறு பேர்:
25. சிமியோன் புதல்வரில் போரிடத் தயாரான ஆற்றல் மிகு வீரர் ஏழாயிரத்து மறு பேர்.
26. லேவி புதல்வர்களில் நாலாயிரத்து அறுமறு பேர்.
27. ஆரோன் வழிவந்த தலைவரான யோயாதா மற்றும் அவரோடிருந்த மூவாயிரத்து எழுமறு பேர்:
28. ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.
29. பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்: அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்:
30. எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.
31. மனாசேயின் பாதி குலத்தில், பதினெட்டாயிரம் பேர்: அவர்கள் பெயர்ப் பட்டியலின்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.
32. இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு மறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்:
33. செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஜம்பதாயிரம் பேர்.
34. நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.
35. தாணைச் சார்ந்த போருக்கு அணிவகுத்து நின்ற இருபத்து எட்டாயிரத்து அறுமறு பேர்.
36. ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.
37. யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.
38. இந்தப் போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும் எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
39. அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர்.
40. மேலும் இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.
அதிகாரம் 13.
1. தாவீது ஆயிரத்தவர், மற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.
2. தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.
3. சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம் .
4. இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.
5. எனவே தாவீது கடவுளின் பேழையைக் கிரியத்எயாரிமிலிருந்து கொண்டு வரும்படி எகிப்தைச் சேர்ந்த சீகோர் முதல் ஆமாத்து எல்லைவரை வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று கூட்டினார்.
6. பின்னர் கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத்எயாரிம் என்னும் பாகலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர்.
7. அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.
8. தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்.
9. அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
10. நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்: அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.
11. ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் “பேரேட்சு உசா“ என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.
12. அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி? என்று சொல்லி,
13. தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.
14. கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார்.
அதிகாரம் 14.
1. தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் பதர்களையும் அவருக்கு ஓர் அரண்டனை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தர், தச்சரையும் அனுப்பிவைத்தார்.
2. இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார்.
3. எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர்.
4. அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
5. இப்கார், எலிசுவா, எல்பலேற்று,
6. நோகாசு, நெபேகு, யாப்பியா,
7. எலிசாமா, பெகலியாதா, எலிப்பலேற்று.
8. தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார்.
9. பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.
10. தாவீது கடவுளிடம், நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா? என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன் என்றார்.
11. தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, அவர்களை அங்கே முறியடித்தார். வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார் என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் “பாகால் பெராசிம்“ என்று பெயரிட்டனர்.
12. பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்: தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர்.
13. பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.
14. தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா.
15. அம்மரங்களின் உச்சியல் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு: ஏனெனில் பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார் என்றார்.
16. கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர்.
17. தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது: அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.
அதிகாரம் 15.
1. தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
2. பின்னர் தாவீது, கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறெருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது என்றார்.
3. ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.
4. அவ்வாறே தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
5. கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் மற்றிருபது பேர்:
6. மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருமற்றிருபது பேர்:
7. கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் மற்று முப்பது பேர்:
8. எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செய்யா, அவர் உறவின்முறையினர் இருமறு பேர்:
9. எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்:
10. உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் மற்றிப் பன்னிரண்டுபேர்.
11. தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார்.
12. தாவீது அவர்களை நோக்கி, நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்: ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் பய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
13. முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவ உண்டாகச் செய்தார். ஏனெனில் நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம் என்றார்.
14. எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் பய்மைப்படுத்திக் கொண்டார்கள்.
15. பின்பு லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.
16. தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
17. எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும்,
18. அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.
19. பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.
20. செக்கரியா, அசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் “அலமோத்து“ இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள்.
21. மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள்.
22. லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும்.
23. பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர்.
24. குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.
25. இவ்வாறு தாவீதும், இஸ்ரயேலின் பெரியோரும், ஆயிரவர் தலைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஓபேது-ஏதோம் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டு வரச் சென்றார்கள்.
26. ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்த லேவியருக்குக் கடவுள் உதவி செய்தபடியால், அவர்கள் அவருக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும் பலி செலுத்தினர்.
27. தாவீதும், பேழையைச் சுமந்த லேவியர் எல்லாரும், பாடகரும், பாடகர் தலைவரான கெனனியாவும், மெல்லிய நார்ப்பட்டு அங்கி அணிந்திருந்தனர். மேலும் தாவீது நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தார்.
28. இஸ்ரயேல் அனைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆர்ப்பரிப்போடும், இசைக்கொம்பு, எக்காளம். கைத்தாள ஒலியோடும், தம்புரு சுரமண்டல இசையோடும் கொண்டு வந்தார்கள்.
29. ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் புதல்வி மீக்கால் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். அப்பொழுது, தாவீது அரசர் அக்களித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரைத் தன்னுள்ளத்தில் இகழ்ந்தாள்.
அதிகாரம் 16.
1. அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
2. தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
3. அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.
4. பின்பு அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.
5. ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலம் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,
6. பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.
7. இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்:
8. . ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
9. அவருக்குப் பாடல் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
10. அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
11. ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
12. அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
13. அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!
14. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.
15. அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்: ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்!
16. ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்!
17. யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.
18. “கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்: அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்“ என்றார் அவர்.
19. அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்: அங்கே அன்னியராய் இருந்தார்கள்.
20. ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்துதிரிந்தார்கள்.
21. யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை: அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்:
22. “நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்: என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்“, என்றார் அவர்.
23. உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!
24. பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
25. ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்: பெரிதும் போற்றத்தக்கவர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே!
26. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!
27. மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன!
28. மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!
29. ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்: பய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்!
30. உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்: உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது: இனி அது அசைக்கப்படுவதில்லை.
31. விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! “ஆண்டவர் ஆள்கின்றார்“ என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!
32. கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்: வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!
33. அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்.
34. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!
35. எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்:
36. “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக“ என்று சொல்லுங்கள். அப்பொழுது, மக்கள் அனைவரும் “ஆமென்“ என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.
37. பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.
38. ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி வெய்யவேண்டும். எதுத்பணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.
39. குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.
40. இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.
41. இவர்களோடு ஏமானையும் எதுத்பனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் “ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது“ என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்:
42. இவர்களோடு ஏமான், எதுத்பன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்: எதுத்பனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.
43. பின்னர் மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்: தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.
அதிகாரம் 17.
1. தாவீது தம் அரண்மனையில் வாழ்ந்து வரும் நாளில் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி, இதோ நான் கேதுரு மரத்தாலான அரண்மனையில் வாழ்கிறேன். ஆனால் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ திரைக்கூடாரத்தில் இருக்கிறதே என்றார்.
2. அதற்கு நாத்தான் தாவீதை நோக்கி, நீர் விரும்புவதை எல்லாம் செய்யும். ஏனெனில் கடவுள் உம்மோடு இருக்கிறார் என்றார்.
3. அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:
4. . என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: “ஆண்டவர் கூறுவது இதுவே: நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.
5. இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை: நான் என்றுமே திருக்கூடாரத்தில் இருந்து, ஒரு கூடாரத்தைவிட்டு மற்றொரு கூடாரத்துக்கு மாறி வந்துள்ளேன்.
6. இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் நான் பயணம் செய்த நாள்களிலும், அவர்களை வழிநடத்த நான் ஏற்படுத்திய எந்த ஒரு விடுதலைத் தலைவரிடமும், எனக்குக் கேதுரு மரத்தால் ஏன் ஒரு கோவிலைக் கட்டவில்லை எனக் கேட்டேனா?“
7. எனவே நீ என் ஊழியனாகிய தாவீதிடம் சொல்ல வேண்டியதாவது: “படைகளின் ஆண்டவராகிய நான் சொல்வது இதுவே: வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை ஆடுகளை மேய்ப்பதினின்று என் மக்கள் இஸ்ரயேலை ஆள்பவனாக மாற்றினேன்.
8. நீ சென்றவிடமெல்லாம் உன்னோடிருந்து, உன் முன்னிலையில் உன் எதிரிகளை அழித்தேன். உலகின் பெருந்தலைவர்களுக்கு இணையான புகழை உனக்கு அளிப்பேன்.
9. என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஓர் இடத்தைத் தயாரிப்பேன்: அங்கே அவர்களை வேர் கொள்ளச் செய்வேன். எனவே அவர்கள் நிலையாய்க் குடிவாழ்வர், ஒருகாலும் அலைந்து திரியார், முன்புபோல் கொடியோர் கையில் சிறுமையுறமாட்டார்:
10. என் மக்களாகிய இஸ்ரயேலர்மேல் நீதித்தலைவர்களை நான் ஏற்படுத்திய நாள்களில் இருந்தது போல் சிறுமையுறார். நான் உன் எதிரிகளைப் பணியச் செய்வேன். மேலும் ஆண்டவர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று அறிவிக்கிறேன்.
11. உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள்-உன் புதல்வர்களுள்-ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன்.
12. அவன் எனக்குக் கோவில் கட்டுவான்: அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்.
13. நான் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்: அவன் எனக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து என் பேரன்பை நான் விலக்கிக் கொண்டதுபோல அவனைவிட்டு விலக்கிக்கொள்ள மாட்டேன்.
14. மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும்.
15. இவ்வாக்குகள் அனைத்தையும், இக்காட்சி முழுவதையும் அப்படியே நாத்தான் தாவீதிடம் அறிவித்தார்.
16. அப்போது, தாவீது அரசர் ஆண்டவர்முன்பாகச் சென்று அமர்ந்து கூறியது: கடவுளாகிய ஆண்டவரே, என்னை இவ்வளவு உயர்த்தியமைக்கு எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன அருகதை?
17. ஆயினும், கடவுளே! அதுவும் உமக்குச் சிறியதாய்த் தோன்றிற்று: உம் அடியானுடைய வீட்டுக்கு வரவிருக்கும் பெரும் சிறப்பைப் பற்றி வெளிப்படுத்தினீரே! கடவுளாகிய ஆண்டவரே! நீர் ஏற்கெனவே என்னைப் பெரியவனாக மதித்து வருகிறீர்.
18. நீர், உம் அடியானாகிய என்னைப் பெருமைப்படுத்தியதற்கு ஈடாக தாவீதாகிய நான் சொல்ல வேறு என்ன உளது? ஏனெனில் நீர் உம் அடியானை அறிந்திருக்கிறீர்.
19. ஆண்டவரே, நீர் உம் அடியான்பொருட்டு, உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்கள் அனைத்தையும் செய்ததுமன்றி, இத்தகைய மாண்புமிக்க செயல்களையெல்லாம் அறிவித்தீர்.
20. ஆண்டவரே, உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: எங்கள் காதுகளினாலே நாங்கள் கேள்விப்பட்டதின்படி உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை.
21. உம் மக்களாகிய இஸ்ரயேலுக்கு இணையான வேறொரு மக்களினம் உலகில் உண்டோ? அவர்கள் உம்முடைய மக்களாயிருக்கவும், நீர் பெரும் புகழ் பெறவும், அவர்களை மீட்கும்படி கடவுளாகிய நீர் தாமே முன்சென்றீர். எகிப்திலிருந்து நீர் மீட்டுக்கொண்ட உமது மக்கள் முன்பாக வேற்றின மக்களைத் துரத்தும்படி அச்சத்திற்குரிய செயல்களைச் செய்தீர்.
22. உம் மக்களாகிய இஸ்ரயேலர் என்றும் உம் மக்களாக இருக்கச் செய்தீர்: ஆண்டவராகிய நீர்தாமே அவர்களுக்குக் கடவுளானீர்.
23. இப்போதும் ஆண்டவரே, நீர் உமது அடியானையும், அவன் வீட்டையும் குறித்துக் கூறிய வார்த்தைகளை என்றென்றும் உறுதிப்படுத்தும். நீர் கூறியபடியே செய்தருளும்.
24. “இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுள்“ என்று உமது பெயர் மாட்சியுற்று எந்நாளும் நிலைபெற்றிருப்பதாக! உம் அடியானாகிய தாவீதின் வீடும் உமக்கு முன்பாக உறுதி பெற்றிருப்பதாக!
25. என் கடவுளே, நீர் உம் அடியானின் வீட்டை நிலைப்படுத்துவேன் என என் காது கேட்க வெளிப்படுத்தினீரே! எனவே உம் அடியானாகிய நான் உமக்கு முன்பாக வேண்டுதல் செய்ய மனத்துணிவு பெற்றேன்.
26. ஆண்டவரே! நீரே கடவுள்: இந்த நன்மையை உம் அடியானுக்குக் கொடுப்பதாய்க் கூறியுள்ளீர்.
27. இப்போதும் உம் அடியானின் வீடு என்றும் உமக்கு முன்பாக நிலைநிற்கும்படி அதற்கு ஆசி வழங்கினீர்: ஏனெனில், ஆண்டவரே! உமது ஆசி பெற்றது என்றென்றும் ஆசி பெற்றதாகவே இருக்கும்.
அதிகாரம் 18.
1. அதன் பின்னர் தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களைப் பணியச் செய்தார்: காத்து நகரையும் அதன் சிற்டிர்களையும் பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2. அவர் மோவாபைத் தோற்கடித்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி வரி செலுத்தினர்.
3. சோபாவின் மன்னனான அதரேசர் தன் ஆட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் யூப்பிரத்தீசு நதியோரம் செல்கையில் தாவீது அவனையும் காமாத்தின் அருகே புறமுதுகு காட்டச் செய்தார்.
4. அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாள் படையினரையும் அவர் கைப்பற்றினார். அவற்றுள் மறு தேர்களுக்கான குதிரைகளை வைத்துக்கொண்டு ஏனைய தேர்க்குதிரைகளின் கால் நரம்பையும் வெட்டிப் போட்டார்.
5. சோபாவின் அரசனான அதரேசருக்கு உதவி செய்ய தமஸ்கு நகர் சிரியர் வந்தனர். தாவீது சிரியரில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்று குவித்தார்.
6. மேலும் தாவீது தமஸ்கு நகரின் நடுவில் பாளையங்களை அமைத்தார். சிரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்கு வரி செலுத்தினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
7. மேலும் தாவீது அதரேசரின் அலுவலர் வைத்திருந்த பொற்கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
8. அதுரேசரின் நகர்களாகிய திப்காத்திலும், கூனிலுமிருந்தும் தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு சாலமோன் வெண்கலக் கடலையும் பண்களையும் தேவையான வெண்கலங்களையும் செய்தார்.
9. தாவீது சோபாவின் அரசனான அதரேசரின் படைகள் முழுவதையும் புறமுதுகு காட்டச் செய்தது பற்றிக் காமாத்தின் மன்னனான தோகு கேள்விப்பட்டான்.
10. அவன் தாவீது அரசருக்கு வாழ்த்துக் கூறவும், அதரேசரோடு போரிட்டு அவன்மீது வெற்றி கொண்டதற்காக தாவீதுக்குப் பாராட்டுக் கூறவும், தன் மகன் அதோராமை அனுப்பினான். ஏனெனில் அதரேசர் அதுவரை தோகுவுடன் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தான். மேலும் தோகு பொன், வெள்ளி, வெண்கலத்தாலான அனைத்துக் கலங்களையும் தன் மகன் மூலம் அனுப்பி வைத்தான்.
11. தாவீது அரசர் இவற்றையும், தாம் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய வெள்ளி, பொன் யாவற்றையும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்தார்.
12. செருயாவின் மகன் அபிசாய் உப்புப்பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தினார்.
13. அவர் ஏதோமில் பாளையங்களை அமைத்தார். ஏதோமியர் யாவரும் தாவீதுக்கு அடிமைகளாயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
14. தாவீது இஸ்ரயேலர் எல்லாருக்கும் அரசராய் இருந்தார். அவர் தம் மக்கள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்தார்.
15. செருயாவின் மகன் யோவாபு படைத்தலைவராய் இருந்தார். அகிழதின் மகன் யோசபாத்து பதிவாளராய் இருந்தார்.
16. அகிபபின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அபிமெலக்கும் குருக்களாய் இருந்தனர். சவ்சா எழுத்தராய் இருந்தார்.
17. யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியர் பெலேத்தியருக்குத் தலைவராய் இருந்தார். தாவீதின் புதல்வர் அவர்தம் அரசில் உயர் பதவிகள் வகித்தனர்.
அதிகாரம் 19.
1. இவற்றின்பின் அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.
2. அப்பொழுது தாவீது, அடீனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன் என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி பதர்களை அனுப்பினார். அவர்கள் ஆடீனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.
3. அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆடீனை நோக்கி, தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா? உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ? என்று கூறினர்.
4. எனவே ஆடீன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.
5. அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள் என்று கூறினார்.
6. அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆடீனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.
7. அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.
8. தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.
9. அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.
10. யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.
11. மற்றப் படைவீரரைத் தம் சகோதரன் அபிசாயின் தலைமையில் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.
12. யோவாகு அவனை நோக்கி, சிரியர் என்னை விட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நீ எனக்கு உதவியாக வரவேண்டும்: அம்மோனியர் உன்னைவிட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நான் உனக்கு உதவியாக வருவேன்.
13. மனஉறுதியுடன் இரு! நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக! என்றார்.
14. பின்பு யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.
15. சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
16. தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், பதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.
17. அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.
18. சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்: படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.
19. அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.
அதிகாரம் 20.
1. ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார்.
2. தாவீது அவர்கள் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்துக் கொண்டார். அது ஒரு தாலந்து பொன் எடையுடையது. அதில் ஒர் இரத்தினம் இருந்தது. அதைத் தாவீது தம் மகுடத்தில் பதித்துக்கொண்டார். மேலும் நகரினின்று ஏராளமான கொள்ளைப் பொருள்களையும் கொண்டு வந்தார்.
3. தாவீது அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி இரம்பம், கடப்பாரை, கோடரி ஆகியவற்றால் அவர்களை வேலை செய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர் மக்களுக்கும் இவ்விதமே செய்தார். பின்னர் அவர்தம் மக்கள் அனைவருடனும் எருசலேமுக்குத் திரும்பினார்.
4. அதன் பின்னர் கெசேரில் பெலிஸ்தியரோடு போர்நடந்தது. அதில் ஊசாவியனான சிபக்காய் அரக்கர் இனத்தானான சிபாயைக் கொன்றான். அதனால் பெலிஸ்தியரும் அடிபணிந்தனர்.
5. மேலும் ஒரு போர் பெலிஸ்திரோடு நடந்தது. யாயிரின் மகன் எல்கானான் இத்தியனான கோலியாத்தின் சகோதரன் இலகுமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடி தறிக்கட்டை அளவு பெரிதாயிருந்தது.
6. காத்தில் மற்றொரு போரும் நடந்தது. ஒவ்வொரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்தி நான்கு விரல்களைக் கொண்ட அரக்கர் இனத்தானான நெட்டையன் ஒருவன் அவ்வூரில் இருந்தான்.
7. அவன் இஸ்ரயேலைப் பழித்துரைத்தான். தாவீதின் சகோதரராகிய சிமயா மகன் யோனத்தான் அவனைக் கொன்றார்.
8. காத்து ஊரிலிருந்த அரக்கருக்குப் பிறந்த இவர்கள் தாவீதாலும் அவர் அலுவலராலும் சாகடிக்கப்பட்டனர்.
அதிகாரம் 21.
1. சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் பண்டினான்.
2. தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும் என்றார்.
3. யோவாபு பதிலுரையாக, ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் மறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்? என்றார்.
4. இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
5. போருக்குத் தகுந்த ஆள்களின் தொகையை யோவாபு தாவீதிடம் அறிவித்தார். வாளேந்தும் வீரர் இஸ்ரயேலில் பதினோர் இலட்சம் பேரும், யூதாவில் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.
6. எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.
7. இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.
8. தாவீது கடவுளிடம், நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன் என்று சொன்னார்.
9. அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது:
10. நீ தாவீதிடம் சென்று, “ஆண்டவர் கூறுவது இதுவே: நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்: அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்: அவ்வாறே உனக்குச் செய்வேன்“ என்று சொல் என்றார்.
11. காத்து தாவீதிடம் சென்று ஆண்டவர் கூறுவது இதுவே: “நீயே தேர்ந்துகொள்:
12. மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் பதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?“ இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும் என்றார்.
13. தாவீது காத்தை நோக்கி, நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்: ஆண்டவர் கையில் நான் சரண் அடைவதே மேல்! ஏனெனில் அவர் மிகவும் இரக்கம் உள்ளவர். மனிதர் கையில் நான் அகப்படக்கூடாது என்றார்.
14. எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.
15. பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு பதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த பதரைப் பார்த்து, போதும் உடனே நிறுத்து! என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் பதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.
16. தாவீது தம் கண்களை உயர்த்தியபோது, ஆண்டவரின் பதர் மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் நடுவே, தன் கையில் உருவிய வாள் பிடித்து, அதை எருசலேமில்மீது நீட்டியிருக்கக் கண்டார். அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி முகம் குப்புற விழுந்தனர்.
17. தாவீது கடவுளை நோக்கி, மக்களைக் கணக்கிடச் சொன்னவன் நானல்லவா? நானே குற்றவாளி: நானே தீமை செய்தேன்: இந்த ஆடுகள் என்ன செய்தன? என் கடவுளாகிய ஆண்டவரே! உமது கை என்மேலும் என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும், கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும் என்று வேண்டினார்.
18. ஆண்டவரின் பதர் காத்தை நோக்கி, எபூசியனான ஒர்னாவின் களத்திற்குச் சென்று ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்புமாறு தாவீதுக்குச் சொல் என்றார்.
19. ஆண்டவர் பெயரால் காத்து கூறிய வாக்கின்படி தாவீது சென்றார்.
20. அந்நேரத்தில் ஒர்னான் கோதுமை போரடித்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது பதரைக் கண்டார். அவரோடிருந்த அவருடைய நான்கு புதல்வர்களும் ஒளிந்து கொண்டனர்.
21. தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் தலைநிமிர்ந்து பார்த்து, போரடிக்கும் களத்தை விட்டு வெளியேறி, முகம்குப்புறத்தரையில் விழுந்து அவரை வணங்கினார்.
22. தாவீது ஒர்னானை நோக்கி, உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்: அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன் என்றார்.
23. ஒர்னான் தாவீதை நோக்கி, என் தலைவராகிய அரசர் அதை எடுத்துக்கொண்டு தாம் விரும்பும் வண்ணம் செய்வாராக! இதோ! எரிபலிக்காக மாடுகளும் விறகுக்காகப் போரடிக்கும் கருவிகளும் படையலுக்காகக் கோதுமையும் இருக்கின்றன. அனைத்தையும் நான் தருகிறேன் என்றார்.
24. அரசர் தாவீது ஒர்னானை நோக்கி, அப்படியல்ல, நான் அதை முழு விலைக்கு வாங்குவேன். உமக்கு உரியதை ஆண்டவருக்காக எடுத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எந்தச் செலவுமின்றி எரிபலி செலுத்தவும் மாட்டேன் என்றார்.
25. அவ்வாறே தாவீது அறுமறு பொற்காசுகளை ஒர்னானுக்குக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்.
26. தாவீது அங்கு ஒரு பலிபீடத்தை ஆண்டவருக்குக் கட்டி எலிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தார். அவர் பலிபீடத்தின் மேலிருந்த பலியின்மேல் வானின்று இறங்கிய நெருப்பின்மூலம் ஆண்டவர் பதிலளித்தார்.
27. பதரிடம் அவருடைய வாளை மறுபடியும் அதன் உறையில் வைக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்.
28. அப்பொழுது தாவீது எபூசியரான ஒர்னானின் களத்தில் ஆண்டவர் தமக்குப் பதிலளித்ததைக் கண்டு அங்கேயே பலி செலுத்தினார்.
29. மோசே பாலைநிலத்தில் எழுப்பிய ஆண்டவரின் திருக்கூடாரமும், எரிபலிபீடமும் அந்நாள்களில் கிபயோனின் தொழுகை மேட்டில் இருந்தன.
30. தாவீது ஆண்டவரின் பதரது வாளுக்கு அஞ்சியபடியால், கடவுள் அருளும் வாக்கைப் பெற அவர் அங்குச் செல்ல இயலவில்லை.
அதிகாரம் 22.
1. அப்பொழுது தாவீது, கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும் என்றார்.
2. தாவீது இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்துவந்த அன்னியரைக் கூடிவரச் செய்தார். கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட கற்களைத் தயார் செய்வதற்கென்று கல் தச்சரை அவர் நியமித்தார்.
3. தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.
4. அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள்.
5. தாவீது, என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட்ட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்த வைப்பேன் என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார்.
6. மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார்.
7. தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன்.
8. மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்: எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்.
9. இதோ! உனக்கு ஒரு மகன் பிறப்பான்! அவன் அமைதியின் மன்னனாய் இருப்பான்! சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனுக்கு அமைதியை அருள்வேன்! எனவே அவனுடைய பெயர் சாலமோன் எனப்படும்! அவனுடைய வாழ் நாள்களில் இஸ்ரயேலுக்கு நிறைவாழ்வும் அமைதியும் அருள்வேன்.
10. அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்: அவன் எனக்கு மகனாய் இருப்பான்: நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்: இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்“ என்றார்.
11. இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக!
12. உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக!
13. ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே!
14. இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் டன் பொன்னும், நாற்பதாயிரம் டன் வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்: மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்: நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய்.
15. வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர்.
16. எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! என்றார்.
17. மேலும் தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது:
18. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருந்து, எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார் அல்லவா? உலகில் வாழ்வோரை என் கையில் ஒப்படைத்துள்ளார். ஆண்டவருக்கு முன்பாகவும், அவர் தம் மக்களுக்கு முன்பாகவும், உலக நாடுகள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன.
19. இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும்.
அதிகாரம் 23.
1. தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார்.
2. அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.
3. லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.
4. அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,
5. நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பெரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.
6. தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:
7. கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்:
8. இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்:
9. சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.
10. சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.
11. இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.
12. கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.
13. அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்பயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் பபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.
14. கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
15. மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,
16. கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.
17. எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.
18. இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.
19. எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.
20. உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.
21. மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.
22. எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
23. மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.
24. தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.
25. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.
26. அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை என்று தாவீது கூறினார்.
27. தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் பதிவு செய்யப்பட்டனர்.
28. அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் பய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்:
29. திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும்.
30. ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்:
31. அத்தோடு, ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.
32. ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும்.
அதிகாரம் 24.
1. ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.
2. நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.
3. தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.
4. இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பத்தில் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரிலும் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
5. எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
6. நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
7. சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு யோயாரிபுக்கு: இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு:
8. மூன்றாவது ஆரிமுக்கு: நான்காவது செயோரிமுக்கு:
9. ஜந்தாவது மல்கியாவுக்கு: ஆறாவது மியாமினுக்கு:
10. ஏழாவது அக்கோட்சுக்கு: எட்டாவது அபியாவுக்கு:
11. ஒன்பதாவது ஏசுவாவுக்கு: பத்தாவது செக்கனியாவுக்கு:
12. பதினொன்றாவது எலியாசிபுக்கு: பன்னிரண்டாவது யாக்கிமுக்கு:
13. பதின்மூன்றாவது உப்பாவுக்கு: பதினான்காவது எசேபயாவுக்கு:
14. பதினைந்தாவது பில்காவுக்கு: பதினாறாவது இம்மேருக்கு:
15. பதினேழாவது ஏசீருக்கு: பதினெட்டாவது அப்பிசேசுக்கு:
16. பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு: இருபதாவது எசக்கேலுக்கு:
17. இருபத்தொன்றாவது யாக்கினுக்கு: இருபத்திரண்டாவது காமுலுக்கு:
18. இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு: இருபத்து நான்காவது மாசியாவுக்கு.
19. இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.
20. எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்: சூபாவேலின் புதல்வருள் எகதியா:
21. இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.
22. இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்:
23. இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.
24. உசியேலின் புதல்வர், மீக்கா: மீக்காவின் புதல்வர் சாமீர்:
25. மீக்காவின் சகோதரர் இசியா: இசியாவின் புதல்வருள் செக்கரியா:
26. மெராரியின் புதல்வர் மக்லி, மூசி: மற்றும் அவர் மகன் யகசியா:
27. மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்: சோகாம், சக்கூர், இப்ரி.
28. மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்:
29. மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல்.
30. மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.
31. இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
அதிகாரம் 25.
1. தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்பன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு:
2. ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர்.
3. எதுத்பனும், கெதலியா, சொ£, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்பனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்பனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.
4. ஏமானின் புதல்வர் புக்கியா, மத்தனியா, உசியேல், செபுவேல், எரிமோத்து, அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்த்தி, ரோமம்த்தி, எசேர், யோசபக்காசா, மல்லோத்தி, ஓதிர், மகசியோத்து.
5. இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் புதல்வர். ஆற்றலை உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியின்படியே, கடவுள் ஆமானுக்குப் பதினான்கு புதல்வரையும் மூன்று புதல்வியரையும் அளித்திருந்தார்.
6. இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு ஆசாபு, எதுத்பன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
7. இவர்களும் இவர்களின் உறவின்முறையினராக ஆண்டவரின் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் மொத்தம் இருமற்று எண்பத்து எட்டுப்பேர்.
8. முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.
9. சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு: இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,
10. மூன்றாவது சக்கூர், அவர் புதல்வர்கள் அவர் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
11. நான்காவது இட்சரி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
12. ஜந்தாவது, நெத்தனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
13. ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
14. ஏழாவது அசரேலா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
15. எட்டாவது ஏசாயா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
16. ஒன்பதாவது மத்தனியா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
17. பத்தாவது சிமயி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
18. பதினொன்றாவது அசரியேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
19. பன்னிரண்டாவது அசபியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
20. பதின்மூன்றாவது சூபாவேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
21. பதினான்காவது மத்தித்தியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
22. பதினைந்தாவது எரேமோத்து, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
23. பதினாறாவது அனனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
24. பதினேழாவது யோசபக்காசா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
25. பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
26. பத்தொன்பதாவது மல்லோத்தி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
27. இருபதாவது எலியாத்தா, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
28. இருபத்து ஒன்றாவது ஓதீர், அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
29. இருபத்து இரண்டாவது கிதல்த்தி, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
30. இருபத்து மூன்றாவது மகசியோத்து, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்.
31. இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும்.
அதிகாரம் 26.
1. வாயில் காப்போரின் பிரிவுகளாவன: கோராகியரில், ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த கோரேயின் மகன் மெசலேமியா:
2. மெசலேமியாவின் புதல்வருள் செக்கரியா மூத்தவர்: இரண்டாமவர் எதியவேல், மூன்றாமவர் செபதியா, நான்காமவர் யாத்தனியேல்
3. ஜந்தாமவர் ஏலாம், ஆறாமவர், யோகனான், ஏழாவது எல்யகோவெனாய்.
4. ஓபேதுஏதோமின் புதல்வருள், செமாயா மூத்தவர், இரண்டாமவர் யோசபாத்து, மூன்றாமவர் யோவாகு, நான்காமவர் சாக்கார், ஜந்தாமவர் நெத்தனியேல்,
5. ஆறாமவர் அம்மியேல், ஏழாமவர் இசக்கார், எட்டாமவர் பெயுலத்தாய்: கடவுள் ஓபேது ஏதோமுக்கு ஆசி வழங்கியிருந்தார்.
6. அவருடைய புதல்வர் செமாயாவுக்கும் புதல்வர் பிறந்தனர்: அவர்கள் ஆற்றல் மிக்கவராய் இருந்தனர்: தங்கள் தந்தையின் குடும்பத்தின்மீது ஆட்சி செய்தனர்.
7. செமாயாவின் புதல்வர்: ஒத்னி, இரபாவேல், ஓபேது, எல்சபாது. அவர்கள் சகோதரர் எலிகூ, செமக்கியா ஆகியோர் ஆற்றல் மிக்கவராயிருந்தனர்.
8. ஓபேது ஏதோமின் புதல்வருள் அவர்களின் புதல்வரும் உறவின் முறையினரும் அறுபத்து இரண்டு பேர். அவர்கள் தங்கள் வேலையில் திறமைமிக்கவராய் இருந்தனர்.
9. மெசலேமியாவின் புதல்வருள் அவர்கள் சகோதரரும் திறமைமிக்கவர்கள்: இவர்கள் பதினெட்டுப் பேர்.
10. மெராரியின் புதல்வருள் ஒருவர் கோசா. இவர்தம் புதல்வருள் சிம்ரி தலைமகன் அல்லாதவராயிருந்தும், அவர் தந்தை அவரைத் தலைவராக்கியிருந்தார்.
11. இரண்டாமவர் இலிக்கியா, மூன்றாமவர் தெபலியா, நான்காமவர் செக்கரியா. கோசாவின் புதல்வரும் சகோதரருமாகப் பதின்மூன்று பேர்.
12. இந்தப் பிரிவுகளில் இருந்த அவர்கள் சகோதரரைப் போல் வாயில்காப்போர் தங்கள் தலைவர்கள்கீழ் ஆண்டவரின் கோவிலில் பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.
13. அவர்கள், தாங்கள் காவல் புரியவேண்டிய வாயிலைத் தெரிந்துகொள்ளுமாறு, தங்கள் தந்தையின் குடும்பங்களின்படி, சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, சீட்டுப்போட்டனர்.
14. கிழக்கு வாயிலுக்கான சீட்டு செலேமியாவுக்கு விழுந்தது. அவர் மகனும் விவேகமுள்ள ஆலோசகருமான செக்கரியாவுக்கு வடக்கு வாயிலுக்கான சீட்டு விழுந்தது.
15. தெற்கு வாயிலுக்கான சீட்டு ஓபேது ஏதோமுக்கு விழுந்தது: அவர் புதல்வருக்குப் பண்டசாலைகளுக்கானது விழுந்தது.
16. சுப்பிமுக்கும், ஓசாவுக்கும் மேற்கு வாயிலும், மேட்டுப்பாதை நோக்கிய சல்லக்கேத்து வாயிலும் விழுந்தன. காவல் முறை ஒரே சீராக அமைந்திருந்தது.
17. கிழக்கே லேவியர் ஆறு பேரும், வடக்கே நாளுக்கு நான்கு பேரும், தெற்கே நாளுக்கு நான்கு பேரும், கருவூலத்தில் இரண்டு இரண்டு பேரும்,
18. நெடுஞ்சாலை நோக்கிய மேற்கு பண்வரிசை வாயிலில் நால்வரும், உட்புறத்தில் இருவரும் நியமிக்கப்பட்டனர்.
19. கோராகின் புதல்வருக்கும் மெராகியின் புதல்வருக்கும் குறிக்கப்பட்ட காவல்முறை இதுவே.
20. லேவியருள் அகியா என்பவர் கடவுளுடைய கோவிலின் கருவூலத்திற்கும் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்ட கருவூலத்திற்கும் பொறுப்பேற்றிருந்தார்.
21. இலாதானின் புதல்வர்: இலாதான் வழிவந்த கெர்சோனியர்: கெர்சோனியரான இலாதாவின் வழிமரபில் மூதாதையர் குடும்பத் தலைவரான எகியேலி,
22. எகியேலின் புதல்வருள் சேத்தாமும் அவர் சகோதரராகிய யோவேலும் ஆண்டவரின் இல்லக் கருவூலத்திற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
23. அம்ராமியர், இட்சகாரியர், எப்ரோனியர், உசியேலியர் ஆகியோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.
24. மோசேயின் மகனான கெர்சோமின் வழிமரபில் தோன்றிய செபுவேல் கருவூலத்திற்குப் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்.
25. அவர் சகோதரர் எலியேசர், இவர் மகன் இரகபியா, இவர் மகன் ஏசாயா, இவர் மகன் யோராம், இவர் மகன் சிக்ரி, இவர் மகன் செலோமித்து.
26. தாவீது அரசரும், மூதாதையர் குடும்பத் தலைவர்களும், ஆயிரத்தவர் தலைவர்களும், மற்றுவர் தலைவர்களும், படைத்தளபதிகளும், அர்ப்பணித்த புனித பொருள்களின் கருவூலம் முழுவதற்கும் இந்தச் செலோமித்தும் அவர் சகோதரரும் பொறுப்பாய் இருந்தனர்.
27. அவர்கள் போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருள்களினின்றும் எடுத்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்காக அர்ப்பணித்திருந்தனர்.
28. அவ்வாறே, திருக்காட்சியாளர் சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செரூயாவின் மகன் யோவாபு ஆகியோர் அர்ப்பணித்திருந்தவை யாவும், செலோமித்தினுடையவும், அவர் சகோதரருடையவும் பொறுப்பில் இருந்தன.
29. இட்சகாரியரில், கெனனியாவும் அவர் புதல்வரும் இஸ்ரயேலின் மேல் பொதுநிர்வாகப் பணியை ஏற்று அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.
30. எப்ரோனியரில், அசபெயாவும் அவர் உறவின்முறையினருள் திறமை மிக்க ஆயிரத்து எழுமறுபோர் யோர்தானுக்கு மேற்குப்புற இஸ்ரயேலின் மேல் ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தனர்.
31. எப்ரோனியரில், எரியா தன் மூதாதையின் தலைமுறை அட்டவணைப்படி தலைவராய் இருந்தார். தாவீது ஆட்சி நாற்பதாம் ஆண்டில் எப்ரோனியருள் ஆற்றல்மிகு வீரர்களைத் தேடியபோது, அவர்கள் கிலயாதிலுள்ள யாசேரில் இருப்பதாகத் தெரிய வந்தது.
32. ரூபன் குலம், காத்தின் குலம், மனாசேயின் பாதிக்குலம் ஆகியோர்க்குக் குறிக்கப்பட்ட ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்துப் பொறுப்பையும் வலிமைமிகுந்தவர்களும் மூதாதையர் குடும்பத் தலைவர்களுமான எரியாவின் உறவின்முறையினர் இரண்டாயிரத்து எழுமறு பேரிடம் அரசர் தாவீது ஒப்படைத்தார்.
அதிகாரம் 27.
1. இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், மற்றுவர் தலைவர்கள், மற்றும் அரச அலுவலர்கள் ஆகியோர் இவர்களே: ஆண்டின் ஒவ்வொருமாதமும் வெவ்வேறு பிரிவினர் மாறி மாறி அரசருக்கான பணியில் பங்கேற்றனர். அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
2. முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
3. பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.
4. இரண்டாம் மாதத்தில் இரண்டாம் படைப்பிரிவுக்கு அகோகியரான தோதாய் தலைவராய் இருந்தார். மிக்லோத்து இவரின்கீழ் படைத்தலைவராய் இருந்தார். இவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
5. மூன்றாம் மாதத்தில் மூன்றாம் படைப்பிரிவுக்கு குரு யோயாதாவின் மகன் பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
6. இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.
7. நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.
8. ஜந்தாம் மாதத்தில் ஜந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
9. ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
10. ஏழாம் மாதத்தில், ஏழாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்துப் பெலோனியரான ஏலேசு தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
11. எட்டாம் மாதத்தில், எட்டாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த ஊசாயரான சிபக்காய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
12. ஒன்பதாம் மாதத்தில், ஒன்பதாம் படைப்பிரிவுக்கு பென்யமின் குலத்து அனத்தோத்தியரான அபியேசர் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
13. பத்தாம் மாதத்தில், பத்தாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த நெற்றோபாயரான மகராய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
14. பதினொன்றாம் மாதத்தில், பதினொன்றாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்து பிராத்தோனியரான பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
15. பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
16. இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்: சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா:
17. லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா: ஆரோனியருக்குச் சாதோக்கு:
18. யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ: இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி:
19. செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து:
20. எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா: மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்:
21. கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்:
22. தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்: இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.
23. இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன் என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை.
24. செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை.
25. அரசரது கருவூலத்திற்கு அதியேல் மகன் அஸ்மாவேத்து பொறுப்பேற்றிருந்தார். வயல்வெளிகள், நகர்கள், சிற்டிர்கள், கோட்டைகள் ஆகியவற்றிலிருந்த கருவூலங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பேற்றிருந்தார்.
26. வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகளுக்குக் கெழபின் மகன் எஸ்ரி கண்காணியாய் இருந்தார்.
27. திராட்சைத் தோட்டங்களுக்கு இராமாவைச் சார்ந்த சிமயி: திராட்சை ரசக் கிடங்குகளுக்கு சிபிமியரான சப்தி:
28. செபேலாவின் ஒலிவமரங்களுக்கும் அத்திமரங்களுக்கும் கெதேரியரான பாகால்கானான்: எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாசு:
29. சாரோனின் மாட்டு மந்தைகளுக்கு சாரோனியரான சித்ராய்: பள்ளத்தாக்குகளின் மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாபாத்து:
30. ஒட்டகங்களுக்கு இஸ்மயேலரான ஓபில்: கழுதைகளுக்கு மெரோனோவியரான எகுதியா,
31. ஆட்டு மந்தைகளுக்கு ஆகாலியரான யாசிசு. இவர்கள் எல்லாரும் அரசர் தாவீதின் உடைமைகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
32. தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
33. அகித்தோபல் அரசரின் ஆலோசகர்: அர்கியரான ஊசாய் அரசரின் நண்பர்.
34. அகித்தோபலுக்குப் பின் பெனாயாவின் மகன் யோயாதாவும், அபியத்தாரும் அவர் பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைத் தலைவராய் இருந்தார்.
அதிகாரம் 28.
1. பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், மற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.
2. பின்பு அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: என் சகோதரரே! என் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்: அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.
3. ஆனால் கடவுள், “நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில் நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்“ என்றார்.
4. ஆயினும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேல்மேல் என்றென்றும் அரசனாய் இருப்பதற்கு என் தந்தை வீட்டாரிலெல்லாம் என்னைத் தேர்ந்துகொண்டார். தலைமை ஏற்குமாறு யூதா குடும்பத்தையும், யூதா குடும்பத்தில் என் தந்தை வீட்டையும் தேர்ந்து கொண்ட என் தந்தையின் புதல்வருள் என்மேல் விருப்பமுற்று இஸ்ரயேல் அனைவர் மேலும் என்னை அரசன் ஆக்கினார்.
5. ஆண்டவர் எனக்குப் புதல்வர் பலரை அளித்துள்ளார். அவர்களுள், இஸ்ரயேலில் ஆண்டவரது அரசின் அரியணைமீது அமர்வதற்கு, என் மகன் சாலமோனைத் தேர்ந்து கொண்டார்.
6. அவர் என்னை நோக்கி, “உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.
7. அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் இவன் அரசை என்றென்றும் நிலைநாட்டுவேன்“ என்றார்.
8. எனவே இப்பொழுது ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, நான் கூறுவது: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக! அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
9. என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்: ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்: எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்: நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.
10. இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்! துணிவுடன் அதைச் செய்வாயாக!
11. தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகன், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.
12. மேலும் தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.
13. அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறை குறிப்புகளைக் கொடுத்தார்.
14. ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும்,
15. பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,
16. திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும்,
17. அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார்.
18. பபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.
19. தாவீது, இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார் என்றார்.
20. தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்: உன்னைக் கைவிடார்.
21. இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன: எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும் தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.
அதிகாரம் 29.
1. தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே!
2. நான் என்னால் முடிந்தவரைக்கும் என் கடவுளின் கோவிலுக்கென்று, பொன் வேலைக்குரிய பொன், வெள்ளி வேலைக்குரிய வெள்ளி, வெண்கல வேலைக்குரிய வெண்கலம், இரும்பு வேலைக்குரிய இரும்பு, மரவேலைக்குரிய மரம் ஆகியவற்றையும், பதிப்பதற்கான கோமேதகக் கற்கள். மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், எல்லாவகை விலையுயர்ந்த கற்கள், சலவைக் கற்கள் ஆகியவற்றையும் பெருவாரியாகச் சேர்த்து வைத்துள்ளேன்.
3. என் கடவுளின் கோவிலின் மேல் நான் வைத்துள்ள பற்றார்வத்தால், திருத்தலத்திற்கென்று நான் சேர்த்து வைத்துள்ள யாவற்றையும் தவிர, என் சொந்தக் கருவூலத்திலிருந்து என் கடவுளின் கோவிலுக்குப் பொன்னையும் வெள்ளியையும் வழங்குகிறேன்.
4. கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து பய வெள்ளியும் கொடுக்கிறேன்.
5. மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்? என்றார்.
6. அப்போது மூதாதைவீட்டுத் தலைவர்களும் இஸ்ரயேல் குலத் தலைவர்களும் ஆயிரத்தவர், மற்றுவர் தலைவர்களும் அரசப் பணிக்கான அலுவலர்களும் தன்னார்வக் காணிக்கை செலுத்தினார்கள்.
7. அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஜயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள்.
8. விலையுயர்ந்த கற்கள் வைத்திருந்தோர் ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் சேர்ப்பதற்கென்று கேர்சோனியனான எகியேலின் கையில் கொடுத்தனர்.
9. அவர்களின் தன்னார்வக் காணிக்கையை முன்னிட்டு மக்கள் மகிழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் முழுமனத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவருக்குக் கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
10. ஆதலால் சபையார் அனைவரின் பார்வையில் தாவீது ஆண்டவரை வாழ்த்தினார். அவர் கூறியது: எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!
11. ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.
12. செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன.
13. இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.
14. இவ்வாறு இந்தத் தன்விருப்பக் காணிக்கையை அளிப்பதற்கான ஆற்றலை நாங்கள் பெறுவதற்கு, நான் யார்? என் மக்கள் யார்? யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம்.
15. உம் திருமுன் நாங்கள் எம் மூதாதையரைப் போலவே அன்னியரும் நாடோடிகளுமாய் இருக்கிறோம். மண்ணுலகில் எங்கள் வாழ்நாள்கள் நிழல் போன்றவை: நிலையற்றவை.
16. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது: உமக்கே உரியது.
17. என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.
18. ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்னும் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களின் இத்தகைய இதய நோக்கங்களையும் எண்ணங்களையும் என்றென்றும் காத்து, அவர்களின் நெஞ்சங்களை உம்பால் திருப்பியருளும்.
19. என் மகன் சாலமோன் உம் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், இவை அனைத்தையும் செய்து நான் வைத்துள்ள இந்த இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நிறைவான உள்ளத்தையும் அவனுக்கு அளித்தருளும்.
20. பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள் என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்: அரசனையும் வணங்கினர்.
21. அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.
22. இவர்கள் அன்று உண்டு, குடித்து ஆண்டவர் திருமுன் பெரிதும் மகிழ்ந்தனர். தாவீதின் மகன் சாலமோனை இரண்டாம் முறையாக அரசன் ஆக்கினார்கள். ஆண்டவரின் பெயரால் அவரைத் தலைவராகவும் சாதோக்கைக் குருவாகவும் திருப்பொழிவு செய்தனர்.
23. அவ்வாறே, சாலமோனும் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாக ஆண்டவரின் அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செலுத்தினார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்குப் பணிந்திருந்தனர்.
24. எல்லாத் தலைவர்களும், வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர் அனைவரும் சாலமோன் அரசரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டனர்.
25. ஆண்டவர் சாலமோனை உயாத்தி, இஸ்ரயேலர் அனைவர் பார்வையிலும் பெருமைக்குரியவர் ஆக்கினார். அவருக்குமுன் இருந்த இஸ்ரயேல் அரசர் எவரும் பெறாத அரச மாண்பை அவருக்கு அளித்தார்.
26. இவ்வாறு ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தினார்.
27. அவர் இஸ்ரயேலில் ஆட்சி செலுத்திய நாள்கள் நாற்பது ஆண்டுகள்: எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.
28. அவர் முதிர்ந்த வயதினராய்ச் செல்வமும் மேன்மையும் பெற்று நெடுநாள்கள் வாழ்ந்தபின் இறந்தார். அவர் மகன் சாலமோன் அவருக்குப் பதிலாக ஆட்சி செலுத்தினார்.
29. தாவீது அரசரின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, திருக்காட்சியாளர் சாமுவேலின் குறிப்பேட்டிலும், இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும் திருக்காட்சியாளர் காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.
30. அக்குறிப்பேடுகளில் அவரது ஆட்சி பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் பற்றியும் இஸ்ரயேலுக்கும் அதைச் சுற்றியிருந்த அரசுகளுக்கும் நேர்ந்தவை பற்றியும் காணக்கிடக்கின்றன.
This page was last updated on 15. September 2006.
Please send your comments and corrections to the Webmaster.