13. எதிர்கொள் படலம் | 926 - 950 |
14. உருத்திரர் கேள்விப் படலம் | 951 - 962 |
15. நகர்செய் படலம் | 963 - 980 |
16. பட்டாபிடேகப் படலம் | 981 - 1004 |
17. அரசுசெய் படலம் | 1005 - 1025 |
18. தேவரை யேவல்கொள் படலம் | 1026 - 1050 |
19. புதல்வரைப் பெறு படலம் | 1051 - 1073 |
20. வில்வலன் வாதாவிப் படலம் | 1074 - 1104 |
21. இந்திரன் கரந்துறை படலம் | 1105 - 1152 |
22. விந்தகிரிப் படலம் | 1153 - 1181 |
23. அகத்தியப் படலம் | 1182 - 1209 |
24. கிரவுஞ்சப் படலம் | 1210 - 1222 |
25. விந்தம் பிலம்புகு படலம் | 1223 - 1235 |
26. வில்வலன் வாதாவி வதைப் படலம் | 1236 - 1267 |
27. காவிரி நீங்கு படலம் | 1268 - 1353 |
28. திருக்குற்றாலப் படலம் | 1333 - 1353 |
29. இந்திரன் அருச்சனைப் படலம் | 1354 - 1383 |
30. தேவர் புலம்புறு படலம் | 1384 - 1408 |
31. அயிராணி சோகப் படலம் | 1408 - 1429 |
32. மகா சாத்தாப் படலம் | 1429 - 1497 |
926 |
திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம் அண்டர்தந் துறக்கமேல் அடைந்த காலையிற் பண்டிமை யோர்களாற் படருந் தானவர் கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார். | 1 |
927 |
ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு நாயகற் கொற்றர்போய் நவில அன்னவன் தூயநல் லமுதினைக் கிடைத்துத் துண்ணென மேயின னாமெனக் களிப்பின் மேயினான். | 2 |
928 |
தானையம் படையொடு தகுவர் கோமக னானவெஞ் சூர்பெறும் அளப்பில் ஆக்கமுங் கூனலம் பிறைதவழ குடுமிச் செஞ்சடை வானவன் கருணையும் மணங்கொண் டேகினான். | 3 |
929 |
அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல மன்னனை உற்றிட வல்லை செல்லுவன் முன்னுற ஏகியெம் முறையுஞ் செய்கையும் பன்னுதி யென்றுமுன் படர்வ தாக்கினான். | 4 |
930 |
அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன் முன்னுற மானமேல் முடுகி ஏகலுந தன்னுறு கிளைஞருந் தானும் ஆங்கவன் பின்னுற மன்னவன் பெயர்ந்து போயினான். | 5 |
931 |
மாசறு பேரொளி மான மீமிசைத் தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில் காசிபன் அருள்மகன் கண்டு சேணிடை ஈசனை யெதிர்ந்தென எதிர்கொண் டேகினான். | 6 |
932 |
அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை நெஞ்சக மகிழவொடு நின்று தேசிகன் விஞ்சுக திருவொடு விசயந் தானெனா எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான். | 7 |
933 |
ஆயது காலையில் அனையன் பாங்கரின் மேயின அரிமுகன் வேழ மாமுகத் தீயவன் இருவருந் தேரொ டேகியே தூயதோர் புகர்அடி தொழுது போற்றினார். | 8 |
934 |
ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால் மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப் பார்த்தனன் உனக்கியாம் படுத்து கின்றதோர் வார்த்தையுண் டன்னது வகுத்துங் கேட்டிநீ. | 9 |
935 |
பங்கமில் காசிபன் பன்னி யாகிய நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான் சங்கையற் றிருந்ததா னவரைத் தாங்கினான் எங்களுக் கோர்துணை யென்னுந் தன்மையான். | 10 |
936 |
ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல் மூண்டிடு வெஞ்சமர் முற்றி வீரத்தைப் பூண்டனன் ஆதலிற் புழுங்கி மாரிநாள் மாண்டிடு கதிரென மாழ்கி வைகினான். | 11 |
937 |
அத்தகு மேலையோன் அவனி மீமிசை வித்திடு நாறுசெய் விளைவு காணுறா எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே. | 12 |
938 |
தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ் சிவன்புரி வரங்களுஞ் செப்பக் கேட்டனன் உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான் நிவந்தன ஆங்கவன் நெடிய தோள்களே. | 13 |
939 |
பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப் பெற்றதோர் வரத்தொடு பெயர்ந்திடு யாரையும் வெற்றிகொண் டிவண்வரும் மேன்மை கேட்புறா மற்றுனை அடைந்திட வருகின் றானெனா. | 14 |
940 |
வன்றிறல அவுணர்கோன் வருதல் காட்டியே புன்றொழில் படுத்திய புகரு ரைத்தலுந் துன்றிய கனைகழற் சூர னென்பவன் நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். | 15 |
941 |
ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன் சேர்ந்தனன் சூரனைச் செங்கையால் தொழாப் பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்த தோருடல் சார்ந்திடு கின்றதோர் தன்மை என்னவே. | 16 |
942 |
ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை நீயினி திருத்திகொல் என்ன நீயுளை தீயன அடையுமோ சிறுமை எய்துமோ மேயநுங் குலமுறை விளங்கத் தோன்றினாய். | 17 |
943 |
என்றிவை நயமொழி இயம்பி யேபுடை சென்றன மாயையின் செய்ய காதலன் துன்றிய தகுவர்தம் அனிகஞ் சூழதர வென்றியொ டவனிமேல் விரைவின் மீளவே. | 18 |
944 |
வேறு மண்ணுல கத்தில் வெஞ்சூர் வந்தனன் எனுஞ்சொற் கேளா அண்ணலங் கமலத் தேவும் அமரர் மானும் ஏனை விண்ணவ ராயுள் ளோரும் வியத்தகு முனிவர் யாருந் துண்ணென வந்து மாயோன் துயில்கொளுங் கடலிற் புக்கார். | 19 |
945 |
கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று கைதொழு திறைஞ்சித் தாங்கள் கனைகழற் சூரன் தன்னால் எய்திடு கின்ற தென்கொல் செப்புதி பெரும வென்றார். | 20 |
946 |
அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப் புன்றொழில் தக்கன் வேள்வி புகுந்திடுந் தீமை தன்னால் இன்றிது பொருந்திற் றம்மா யாரிது விலக்கற் பாலார் ஒன்றினிச் செய்யுந் தன்மை கேண்மின்என் றோத லுற்றான். | 21 |
947 |
பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான் அண்டமெங் கெவையும் வென்றான் ஆதலால் நம்மால் வென்றி கொண்டிடு திறத்தான் அல்லன் கொடியவச் சூரன் தன்னைக் கண்டுசென் றிடுதும் ஈதே காரியம் போலு மென்றான். | 22 |
948 |
செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும் இங்கிது கரும மென்றே இசைந்தன ராகி நிற்ப அங்கவ ரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித் துங்கம துடைய தொல்சீர் சூரனைக் காண வந்தான். | 23 |
949 |
மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந் திருத்தகு சூரன் நேரே சென்றுநின் றாசி கூறி அருத்திய தாகப் போற்ற அவர்களுட் பதினோர் கோடி உருத்திரர் தொகுதி யானோர் ஒருங்குடன் நிற்பக் கண்டான். | 24 |
950 |
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண் அண்டர்தம் பெருமான் என்ன அமைந்ததொல் வடிவ முள்ளார் எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கிவர் யாவ ரென்னத் தண்டுள வலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல் உற்றான். | 25 |
951 |
மன்னவர் மன்ன கேண்மோ மற்றிது புகல்வன் வேதா முன்னொரு கற்பந் தன்னில் மூவகை யுலகும் நல்கித் துன்னுயிர் முழுதும் நல்கித் துண்ணென அகந்தை கொண்டு தன்னையும் பரமென் றுன்னித் தாணுவை அயர்த்தான் அன்றே. | 1 |
952 |
எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடுந் தந்திடும் அளவே யன்றிச் சராசரம் பெருகா வாக நொந்தனன் குறையென் னென்றே நோக்கினன் எமைமுன் ஈன்ற ஐந்தொழில் முதல்வன் தன்னை அயர்த்தனன் போலு மென்றான். | 2 |
953 |
இனியவன் அருள்பெற் தன்றி இவ்விதி முடியா தென்னாத் தனயனும் அளவில் காலந் தவம்புரிந் திடவும் முக்கட் பனிமதி முடியோன் அன்னான் பாற்படா தொழிய அந்தோ வினையினேன் முன்னந் தாதை வௌ¤ப்படும் எவன்கொ லென்றான். | 3 |
954 |
கழியுடல் புயமேற் கொண்ட கண்ணுதல் உறாத துன்னி இழுதைய ரென்ன ஏங்கி இன்னலுற் றுயிர்த்து வல்லே அழுதனன் மகவென் செய்வான் அன்னதோர் வேலை கண்ணீர் விழவிழ அலகை யாகி மிகவெழுந் தீண்டிற் றன்றே. | 4 |
955 |
காண்டலும் அலகை ஈட்டங் கருத்திடர் உழப்ப வீழ்ந்து மாண்டனன் போலச் சோர மன்னுயிர்க் குயிராய் நின்ற ஆண்டகை யுணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி ஈண்டினி வருந்தல் மைந்த எழுகெனா அருளிச் செய்வான். | 5 |
956 |
மதித்தனை பரமென் றுன்னை மறந்தனை யெம்மை யற்றால் விதித்திறங் கூடிற் றில்லை விரைந்தது முடிய நந்தம் பதத்துளார் தம்மை உன்றன் பாங்குற விடுத்தும் என்றான் உதித்திடல் இறத்த லின்றி உலகளித் துதவும் ஐயன். | 6 |
957 |
அந்நெறி கனவிற் காணும் அற்புதத் தெழுந்து வேதன் செந்நெறி பூண்டு வைகிச் சிந்தையில் தேற்ற மெய்தி உன்னலும் அறுவ ரைவர் உருத்திர கணத்தோர் தாதை தன்னரு ளதனால் நெற்றித் தலத்தினும் போந்து நின்றார். | 7 |
958 |
நிற்றலும் அவரை நோக்கி நெற்றியந் தலத்தில் நீவிர் உற்றதை எவன்கொ லென்ன உன்செயல் முடியு மாற்றால் மற்றெமை விடுத்தான் நம்பன் ஆதலன் வந்தே மென்றார் பற்றலர் புரமூன் றட்ட பண்ணவன் வடிவங் கொண்டோர். | 8 |
959 |
பரமன துருவாய் நின்றோர் பதினொரு வோரும் இவ்வா றருள்செய விரிஞ்சன் கேளா அன்பினால் என்பால் வந்தீர் விரைவுடன் உயிர்கள் தம்மை விதிக்குதிர் என்னத் தத்தம் உருவுபோற் பதினோர் கோடி உருத்திரர் தொகையைத் தந்தார். | 9 |
960 |
ஆங்கது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கீ டன்றி ரூ¦ங்களிவ் வாறு செய்கை நெறியதன் றென்ன லோடும் ஓங்கிய உருத்தி ரேசர் ஒல்லையெம் பதத்திற் போதும் ஈங்கிவண் உயிரை முன்போல் ஈந்தனை இருத்தி யென்றார். | 10 |
961 |
என்றிவை உரைத்துப் போதன் யாவையும் படைப்பான் நல்கி ஒன்றிய உணர்வின் மிக்க உருத்திரர் யாரும் வௌ¢ளிக் குன்றுடை முதல்வன் தொன்னாட் கொடுத்திடும் புவனம் புக்கார் அன்றுதாம் அளித்து ளோரை அமரரோ டிருத்தி ரென்றார். | 11 |
962 |
அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார் அண்டந் தன்னில் புவனமே லிருந்தார் அன்னார் புரிந்திடத் தொன்னாள் வந்த பவர்முதல் உருத்தி ரேசர் பதினொரு கோடி யுள்ளார் இவர்சிவ னருளால் வானோர் இனத்துடன் ஈண்டி யுற்றார். | 12 |
963 |
எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான் அனையதற் பின்னர் ஆண்டை அமரர்கம் மியனை நோக்கி வனைகழற் சூர பன்மன் மற்றியாம் உறைதற் கொத்த புனைதிரு நகரம் வல்லே புரிமதி புலவ வென்றான். | 1 |
964 |
என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும் வென்றிகொள் மூதூ ருககு வியலிடம் உரைத்தி யென்ன நன்றெனப் புகரோன் தானே நகர்களுக் கெல்லை கூற அன்றவை வினவித் தென்பால் அளக்கரை அடைந்தான் அன்றே. | 2 |
965 |
ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள யோசனை எல்லை முன்னோன் உறுநக ராகக் கோலிக் காசினி வரைகள் தம்மால் கதுமெனத் தூர்த்து மிக்க பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப பின்றை. | 3 |
966 |
காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும் நாயகி நகர மென்ன நாடொறுஞ் சூழு மாற்றால் சேயுயர் விசும்பிற் போகச் செம்பொனால் மதிலைச் செய்து வாயில்கள் நான்க மைத்து ஞாயிலும் வகுத்து நல்கி. | 4 |
967 |
நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன மாற்பெருங் கோபு ரங்கள் மணிவெயில் எறிப்ப நல்கி நூற்படும் ஒழுக்கம் நாடி நூறியோ சனையொன் றாகப் பாற்படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ. | 5 |
968 |
முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி ஒப்பருந் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன் வைப்பெனச் செம்பொன் மாடம் வரம்பில வகுத்து மாதர் மெய்ப்படும் ஆடல் கூரும் வியலிடம் பலவுஞ் செய்து. | 6 |
969 |
மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில் கோளரி தயங்கு பொற்பிற் கோபுரங் குன்றம் அம்பொற் சூளிகை அரங்க மன்றஞ் சுடருமேற் றலங்கள் தூய சாளரஞ் சோலை வாவி தனித்தனி யாகத் தந்து. | 7 |
970 |
வேறு ஆயதன் நடுவுற அயுத வெல்லையில் பாயதோர் நெடுமதில் பயில நல்கியே மாயவள் திருமகன் வைக ஆங்கொரு கோயிலை எழில்பெறக் குயற்றி னானரோ. | 8 |
971 |
வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந் தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள் சீரணி தபனியச் சிகர கோபுரங் காரணி மணிவரை கவின்கொள் சூளிகை. | 9 |
972 |
ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம் சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம் தானவர் தலைவர்கள் சாருந் தொல்லிடம் ஏனைய அரக்கர்கள் இனிது சேரிடம். | 10 |
973 |
நாடரும் விசும்புறை நாரி மாரெலாம் ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம் பாடலின் முறைபயில் பைம்பொன் மண்டபம் மாடக யாழ்முரல் வயிர மண்டபம். | 11 |
974 |
மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி குயில்முத லாகிய குலவு மண்டபம் இயலுறு யூகமான் இரலை செச்சைகள் பயிலுறு வாரணம் பரவும் மண்டபம். | 12 |
975 |
சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம் முந்திய வேள்விகள் முயலும் மண்டபம் மந்திர வியல்பினோர் மருவு மண்டபம் இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம். | 13 |
976 |
திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட அரசியல் புரியுமத் தாணி மண்டபம் இருநிதி உளலொம் ஈண்டும் மண்டபம் பரனருள் படைக்கலம் பயிலும் மண்டபம். | 14 |
977 |
அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம் நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்தகில் பெருந்துவர்க் காயடை பிறவுஞ் சாலவும் இருந்திடு கின்றபேர் எழில்கொள் மண்டபம். | 15 |
978 |
மானனை யார்பலர் மருவு மண்டபம் ஆனதோர் ஊசலாட் டயரும் மண்டபம் பானிலா உமிழ்தரு பளிங்கின் மண்டபம் வானுயர் சந்திர காந்த மண்டபம். | 16 |
979 |
மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம் காமரு பவளமார் கவின்கொள் மண்டபம் ஏமரு மரகதத் தியன்ற மண்டபம் தாமரை உயிர்த்திடு தரள மண்டபம். | 17 |
980 |
கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன யாவையும் நல்கியே இதனுக் குள்ளுற மாவுறு சூரபன் மாவுந் தன்குலத் தேவியும் உறையவோர் உறையுள் செய்தரோ. | 18 |
981 |
இங்கிது சூழ்தர எண்ணி லாதன மங்கல நிறைதரு மாட வீதிகள் அங்கவன் துணைவிய ராகி வந்திடும் நங்கையர் மேவர நலத்தின் நல்கியே. | 19 |
982 |
காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி வாவிக ளோடைகள் பொய்கை வான்றொடு பூவியல் தண்டலை பொலன்செய் குன்றுடன் யாவையும் முறைபட இயற்றி னானரோ. | 20 |
983 |
அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே யுள்ளுறு நகரிடை உறையுங் கோயிலில் தள்ளரும் பொன்சுடர் தழைத்த பொற்பினால் வௌ¢ளிய தானது மேலைப் பொன்னகர். | 21 |
984 |
வேறு இன்னவையும் ஏனவையும் எண்ணிமனத் தால்அருளித் தன்னிகரில் அவுணர்பிரான் சயத்தோடு பெருந்தலைமை மன்னவரு தலின்வீர மகேந்திரமே யாமென்றே அந்நகருக் கோர்நாமம அணிபெறுத்தி அளித்தனனே. | 22 |
985 |
ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் சோமபுர மெனப்புகலுஞ் சுவேதபுரம் அவுணர்புரம் வாமபுரம் பதுமபுரம் மகேந்திரமா புரமென்னுங் காமர்புரத் தெண்டிசைக்குங் காட்சிபெற உதவினனால். | 23 |
986 |
மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி ஆண்டதுபோல் அகன்பரப்பில் ஆசுரம்என் றொருநகரம் நீண்டவட கடல்நடுவண் நிருதர்புகழ்ந் திடுமாற்றால் காண்டகைய சீயமுகக் காவலற்கு நல்கினனே. | 24 |
987 |
மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங் கொற்றமிகுஞ் சூரபன்மன் குலவுபெருந் தானையெலாஞ் சுற்றமுடன் மேவுதற்குத் தொன்னகரம் பலவமைத்துக் கற்றுணருஞ் சிறுவரொடுங் கம்மியன்மீண் டேகினனே. | 25 |
988 |
வேறு நீடு மேரு நெடுவரைத் தென்புடை நாடு சீர்கெழு நாவலந் தீவினில் கூடு கின்றபொற் கூடந் தனக்கொரு மாடு போந்தனன் மாமயன் தாதையே. | 26 |
989 |
பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில் தகுவர் போற்றிடுந் தாரகற் காகவே மகிழ்வின் நீரொடு மாயா புரமெனா நகர மொன்றை அணிபெற நல்கினான். | 27 |
990 |
வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும் இனைய வூர்கள் இயற்றியம் மாயையின் தனய னுக்கிவை சாற்றலும் நன்றெனா அனிக மோடங் கடைந்தனன் என்பவே. | 28 |
991 |
மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன் கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக் கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான். | 1 |
992 |
நண்ணு கின்றுழி நான்முக னாதியாம் விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும் அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ. | 2 |
993 |
கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு தாவில் பீடிகை தன்மிசை வைகியே மாவு லாவிய மால்கடல் தெண்புனல் தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான். | 3 |
994 |
ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர் சூடி ஒண்கலன் தூயன் பூண்டுபின் பீடு சேர்தரு பின்னவர் பால்வர நீடு காதல் நிருதர் புகழ்வே. | 4 |
995 |
நிகரி லாத நிருதர்க் கிறைதொழப் புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட மகப திக்கு மனந்தளர் வெய்தவே. | 5 |
996 |
வந்து சீய மணித்தவி சேறினன் அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும் இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான். | 6 |
997 |
கண்டு தானவர் காசிபன் காதலன் புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை உண்ட ளாரின் உளங்களிப் பெய்தினார். | 7 |
998 |
அன்ன வேலை அமரர் முனிவர்கள் பொன்ன வாநறும் போது கரங்கொடே மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார். | 8 |
999 |
வேறு பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான் தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார். | 9 |
1000 |
நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான் பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார் வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ வல்ல கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார். | 10 |
1001 |
முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும் எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப் பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார். | 11 |
1002 |
குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான் இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந் திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத் துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார். | 12 |
1003 |
அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித் திரம்பயில் நடனம் மூன்றுஞ்* செவ்விதிற் புரிய லுற்றார். ( * நடனம் மூன்று - தேசிகம், வடுகு, சிங்களம் என்பன.) | 13 |
1004 |
இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித் தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான். | 14 |
1005 |
களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித் துளித்திடு துழாய்மால் தன்னைச் சூரனாம் அவுணன் பாரா அளித்தவன் தன்மூ தாதை யாயினை அதனால் நின்னை விளித்திடு மெல்லை தோறும் விரைந்திவண் மேவு கென்றான். | 1 |
1006 |
செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத் துங்கமோ டரசு செய்யுஞ் சூரனாம வீரன் பாரா இங்குநின் மைந்த ரோடும் என்னிடந் தன்னி லேகி அங்கம்ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி யென்றான். | 2 |
1007 |
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய் எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி யென்றான். | 3 |
1008 |
அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப் பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும் மறைவொடு திரியு மாறும் மற்றினி விடுத்து நாளும் நிறைவொடு கதிரோன் போல்இந் நீள்நகர் வருதி யென்றான். | 4 |
1009 |
பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன விரைவின் நோக்கி இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின் அங்கவர் தம்பா லெய்தி அவர்பணி யாவும் ஆற்றிச் செங்கம லம்போல் யாவர் தீண்டினுங் குளிர்தி யென்றான். | 5 |
1010 |
சுடர்முடி யாவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப் படிமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தங் கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுணர் தம்மை அடுவது கனவும் உன்னா தஞ்சியே திரிதி யென்றான். | 6 |
1011 |
அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா எண்டரு நம்மூ தூரில் யாவரும் புனைந்து நீத்த தண்டுளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்தம் நுண்டுக ளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான். | 7 |
1012 |
காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில் நாவிவெண் பளிதஞ் சாந்தம் நரந்தமோ டளாவித் தீம்பால் ஆவியின் வௌ¤ய நொய்ய அரும்பனி நீரிற் கூட்டித் தூவுதி இடங்க டோறுங் காற்றது துடைக்க வென்றான். | 8 |
1013 |
வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன் தேசுறு துறக்கம் வைகுந் தேவர்தங் குழுவி னோடும் ஆசையங் கிழவ ரோடும் அருந்தவ ரோடும் போந்து பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான். | 9 |
1014 |
இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத் தன்னுறு பணியின் நிற்பான் சாற்றுலும் அனையர் அன்னது செய்து மென்றே அனையவர் றொழுக அன்னான் மன்னினன் அரசில் பின்றை மணஞ்செய உன்னி னானால். | 10 |
1015 |
மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த பதுமகோ மளைஎன் றோதும் பாவையைப் புகரோன் நாடிச் சதுர்முகன் முதலாந் தேவர் தானவர் பிறரும் போற்ற விதிமுறை வதுவை செய்து விழைவொடு மேவி யுற்றான். | 11 |
1016 |
அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர் கின்னரர் இயக்கர் நாகர் கிம்புரு டாதி யானோர் கன்னியர் அளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித் துன்னுபன் மலர்த்தேன் உண்ணுஞ் சுரும்பென இன்பந் துய்த்தான். | 12 |
1017 |
அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள திருமிகு விபுதை தன்னைச் சீர்மணஞ் செய்து நல்கி நிருதிதன் புதல்வி யான நேரிழை சவுரி தன்னைக் கரிமுக இளவல் சேரக் கடிமணம் புரிவித் திட்டான். | 13 |
1018 |
இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி மெய்வளம் பெறநுங் கட்கு விதித்திடும் மூதூ ரேகி அவ்விரு கோடி வௌ¢ளம் அனிகமோ டிருத்தி ரென்னாத் தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமா றேவி னானால். | 14 |
1019 |
ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி நீவிர்கள் இரண்டு கோடி நீத்தமாம் அனிகத் தோடு தீவுக டோறும் ஆழி இடந்தொறுஞ் செய்த மூதூர் மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான் மன்னோ. | 15 |
1020 |
மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற் கூறுபா தலங்கள் யாவும் ஒழிந்தவுங் குறுகி யேதன் ஈறிலா ஆணை போற்ற எல்லையில் அவுணர் தம்மை ஆறெனுங் கோடி வௌ¢ளத் தனிகமோ டேகச் செய்தான். | 16 |
1021 |
விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர் எட்டொடு பிலனோ ரேழும் ஏனைய வரைப்பு மாகிக் கிட்டின செறிந்து மொய்த்த கேடில்சீர் அவுணர் தானை மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே. | 17 |
1022 |
எங்கணுந் தனது தானை அடையறா தீண்ட லோடுந் துங்கவெஞ் சூர பன்மன் தானுரை தொன்மூ தூரில் அங்கணோ ரிலக்கம் வௌ¢ளத் தவுணர்தந் தானை தன்னை மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ. | 18 |
1023 |
கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம் அரிமரை முகத்து வீரர் அவணர்தந் தலைவ ரானோர் இருவகை நான்மை யோர்க்கும் எண்டிசை நகரும் ஈந்து வருபடை அயுதத் தோடும் மகேந்திரங் காக்கச் செய்தான். | 19 |
1024 |
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான வாயில்க டோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும் கோயிலின் இருக்கை தோறுங் குணிப்பிலா வீரர் தம்மை நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி யிட்டான். | 20 |
1025 |
துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன் வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத் தொக்கமந் திரிக ளாகத் துணைக்கொடே சூர பன்மன் மிக்கவா னவர்கள் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். | 21 |
1026 |
அரசு செய்தலும் அந்தர நாதனுஞ் சுரரு மேனை முனிவருந் தொக்குறீஇ வரைசெய் மாட மகேந்திர மாபுரத் தொருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார். | 1 |
1027 |
கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத் தலைவன் மாப்பதி சார்ந்தவர் தம்பதி பலவு மேகிப் பணித்தன ஆற்றியே உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார். | 2 |
1028 |
வேறு ஊனமுற்றோர் போலிவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன், வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித், தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்றோ தரங்க வேலை, மீனனைத்துஞ் சூறைகொண்டு வைகலுமுய்த் திடுதிரென விளம்பினானால். | 3 |
1029 |
உரைக்குமொழி யதுகேளா அனையரெலம் உள்நடுங்கி உயங்கி வௌ¢கித், திரைக்கடலின் மீன்றனக்குத் தருகென்றான் இதற்கினிநாஞ் செய்வ தேதோ, விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நந்தலையில் விதித்தான் என்னா, இரக்கமொடு மறுத்தலஞ்சி அத்திறமே புரிதுமென இறைஞ்சிப் போனார். | 4 |
1030 |
போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி, ஆகின்ற தெமக்கேயோர் பழியன்றோ அனையதுவந் தணுகா முன்னர்ச், சாகின்ற தேமிகவும் இனிதாகும் எமக்கதுவுஞ் சாரா தந்தோ, வேகின்ற சிந்தையினேஞ் செய்வதெவன் எனப்புலம்பி வேலை புக்கார். | 5 |
1031 |
அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த, மைவேலை தனக்கிறைவன் நீயன்றோ நின்னினுமோர் வலியா ருண்டோ, கைவேலைப் பணியியற்றித் திமிங்கிலமே முதலாய கணிப்பின் மீன்கள், இவ்வேலை ஏற்றுதியேல் இடர்வேலைக் கரையிலெமை யெடுத்தி யென்றான் | 6 |
1032 |
வௌ¢ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணுளோர்க்கு, வள்ளல்நீ இரங்குதியோ அத்தொழில்யான் புரிவனென வருணன் கூறி, அள்ளல்வே லையுட்புகுந்து தனதுபெருங் கரதலத்தால் அலைத்து வாரி, யுள்ளமீன் குலங்களெல்லாந் தடங்கரையில் வரையேபோல் உயர்த்த லுற்றான். | 7 |
1033 |
தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத், தடுக்கல்முழு வதுநோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்றலாலே, எடுப்பதுநுந் தொழிலென்றே இந்திரன்றான் விளம்புதலும் இமையோ ரெல்லாம், நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரங்குலைத்து நாணுக் கொண்டார். | 8 |
1034 |
சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால் வைகும், மன்னனுயிர் தலைவாங்கச் செங்கதிரோன் பெரும்புனலின் வடிவை வாட்டப், பன்னகரா கியதிறத்தாற் பிணித்திடும்அச் சுமையதனைப் பகட்டின் வேந்தன், இன்னலுறு வானவர்பால் எடுத்தவவர் கொண்டேகி இரங்கு கின்றார். | 9 |
1035 |
வேறு பன்னும் புகழ்ச்சூர பன்மனெனுந் தீயவனான் முன்னுந் துயர்க்கடலின் மூழ்கி முரணழிந்தேம் துன்னும் பழியாந் தொழலிதுவுஞ் செய்தனமால் இன்னும் படுவதொழில் ஏதோ உணரேமே. | 10 |
1036 |
பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால் ஆர்கின்ற தின்றோ ரலரே அ·துயிரை ஈர்கின்ற தந்தோ விதியே எமக்கிதுவுந் தீர்கின்ற காலம் உளதோநீ செப்பாயே. | 11 |
1037 |
பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும் பாவமென நூலில் பகருகின்ற இத்தொழிலை ஏவர்புரி கின்றார் எமக்கோவந் தெய்துமதோ தேவ கதியின் நிரயஞ் சிறப்புடைத்தே. | 12 |
1038 |
தக்க துணராத தானவர்கள் தங்களினும் மக்களினுந் தாழ்வாம் வலைஞர்தொழில் செய்தனமால் இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே. | 13 |
1039 |
வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள போத நெறியாம் அதற்குப் புறம்பனேம் தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தாற் செப்புகின்ற வேதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே. | 14 |
1040 |
தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும் வானவர்க ளென்றே மதிக்குந் தகைமையினோம் ஈனமொடு மீன்சுமந்தே எல்லோர் களும்நகைக்கத் தானவர்முன் செல்வதிலுஞ் சாதல்மிக நன்றுநன்றே. | 15 |
1041 |
என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத் துன்னு நிருதர்புகழ் சூரன் திருநகரின் மன்னுதிசை யாளரொடும் வந்தனரால் அவ்வளவில் அன்னசெயல் கண்டே அவுணர்உரை செய்குவார். | 16 |
1042 |
மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம் ஈதோ சிலமீன் தருகின் றனரென்பார் மீதோ டியபரிதி வெய்யோன்முன் னுண்டவெறுங் கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்றுரைப்பார். | 17 |
1043 |
தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார் ஈங்கிவர்க்கு நாணம் இலையோ சிறிதென்பார் தீங்கிழைக்கின் யாரேனுஞ் செய்யாத தேதென்பார் மூங்கையொத்து ளாரோ மொழியார் இவரென்பார். | 18 |
1044 |
முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும் பந்தத் துடன்வாழ் பரதவரே செய்கின்ற இந்தத் தொழிலும் இவர்க்குவரு மோவென்பார் சிந்திப்ப தென்னோ விதியின் செயலெனபார். | 19 |
1045 |
வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும் பேதை நெறியே பிடித்தார் இவரென்பார் கோதுபடா நந்தங் குலத்தை மிகநலிந்தார் ஏதுபடார் இன்னம் இமையோ ரெனவுரைப்பார். | 20 |
1046 |
மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும் விண்ணோர்க் கிறைவன் விரைவினுயிர் விட்டிலனாற் கண்ணோ பெரிது கருத்தோ சிறிதென்பார் பெண்ணோ அலிதானோ பேடோ வெனவுரைப்பார். | 21 |
1047 |
வேறு இந்த வாறு பலரும் இயம்பிடப் புந்தி நொந்து புலம்புபுத் தேளிர்கள் தந்தி யூருந் தலைவனை முற்கொடு வந்து தீயவன் வாய்தலுற் றாரரோ. | 22 |
1048 |
பரிதி வேந்தன் பணிமுறை நாடியே வருதிர் ஈண்டென்று வாயிலர் கூறிடப் பொருதி ரைக்கடல் மீன்கொடு போய்ச்சுரர் ஒருத னிப்பெருங் கோயிலுள் உய்த்தனர். | 23 |
1049 |
எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன் துளித்த தேன்றொடைச் சூர்முதல் காணுறீஇக் களித்து வந்து கடவுளர் வைகலும் அளித்தி ரென்ன அழகிதென் றேகினார். | 24 |
1050 |
என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே பொன்றி னாரின் புலர்ந்து புலம்புறீஇத் துன்று கின்ற துயர்க்கடல் மூழ்கியே ஒன்றும் வேத வொழுக்கமற் றாரரோ. | 25 |
1051 |
அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால் பதுமகோ மளையென் றோதும் பாவைதன் உதரம் போந்து புதுமதிக் குழவி யேபோல் பொற்பொடு பொலிந்து முன்னம் மதலையங் கொருவன் வந்தான் மறலிக்கு மறலி போல்வான். | 1 |
1052 |
வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ அந்தமில் மகிழ்ச்சி பொங்க அவுணர்தங் கிளைஞர்க் கெல்லாம் நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீச லுற்றான் இந்திரன் முதலி னோரும் யாவரும் இடுக்கண் எய்த. | 2 |
1053 |
வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர் ஆசிகள் புகன்று போற்றி அன்னதோர் மைந்தன் தன்னைக் காசொடு வயிர முத்தங் கதிர்பொலந் தொட்டில் சேர்த்தார் மாசகல் மதிய மேபோல் பைப்பய வளர்தல் உற்றான். | 3 |
1054 |
கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன் தொட்டிலில் துயிலு மெல்லை ஒருபகல் சுடரின் என்றூழ் விட்டதோர் நூழை தன்னால் மேவியே அனையன் மெய்யிற் பட்டதங் கதனை நாடிப் பரிதியைச் சுளித்துப் பார்த்தான். | 4 |
1055 |
பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ் சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக் கார்த்திடு புயங்கங் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு போத்துமோர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிதொன் றுண்டோ. | 5 |
1056 |
தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா ஆனதோர் செம்பொற் றொட்டில் அணிமணிக் காலி னூடே பானுவை வலிதிற் கட்டிப் பண்டுபோல் துயின்றான் அங்கண் வானவர் அதனை நோக்கி மனம்வெரீஇ மறுக்க முற்றார். | 6 |
1057 |
பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன் கருதியிந் திரனே ஏனைக் கடவுளர் யாருஞ் சூழ நிருதர்கோன் தன்பால் வந்து நீடிருட் பகைவன் தன்னைத் தருதிநின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி யென்றான். | 7 |
1058 |
வேறு மறைபு ரிந்தநான் முகன்இவை புகறலும் வானத் திறைபு ரிந்திடும் இரவியை என்மகன் இன்னே சிறைபு ரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக் குறைபு ரிந்ததென் பகர்தியென் றுரைத்தனன் கொடியோன். | 8 |
1059 |
சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல் அற்ற மில்சுடர் ஆதபந் தீண்டிய ததனால் பற்றி வெய்யவற் சிறைபுரிந் தானெனப் பகர்ந்தான். | 9 |
1060 |
மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந் தகுவர் கோன்மிக மகிழந்துநீர் என்மகற் சார்ந்து மிகவும் நன்மொழி கூறியே ஆங்கவன் விடுப்பப் பகல வற்கொடு போதிரால் ஈண்டெனப் பகர்ந்தான். | 10 |
1061 |
கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன் நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால் ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசையுறும் அண்ணல் மாட்டு மேவிநின் றளவையில் ஆசிகள் வகுத்தான். | 11 |
1062 |
அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான் என்பெ றும்பரி சுமக்கென இன்னதோர் இரவி துன்பு றுஞ்சிறை அகற்றுதி என்றலுந் தொல்லோய் உன்பெ ரும்படை தருதியேல் விடுவனென் றுரைத்தான். | 12 |
1063 |
உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ நிரைத்த செங்கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன் விரைத்த பயங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து பரித்தி யாலென உதவினன் மோகவெம் படையே. | 13 |
1064 |
படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு விடைய ளித்தனன் தாதையத் தன்மையை வினவி நடைய ளித்தனன் புதல்வனுக் கன்னதோர் நன்னா ளிடைய ளித்தனன் பானுகோ பன்எனும் இயற்பேர். | 14 |
1065 |
பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன் மானை நேர்விழி மங்கையர் மதனென மயங்க ஆன பேருரு வெய்தியே அம்புயத் திருவின் கோனொ டேபொரு தவன்றனைப் பெருந்திறல் கொண்டான். | 15 |
1066 |
பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால் நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர் இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார் மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான். | 16 |
1067 |
மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால் உய்த்து நல்கிடச் சூரனும் வெய்யவன் ஒருங்கே பத்து நூறுள மும்மைசேர் பாலரைப் பயந்தான் இத்தி றத்தவர் தம்முடன் அங்கண்வீற் றிருந்தான். | 17 |
1068 |
வேறு சீற்ற முற்றிடு சிங்க முகன்கணே தோற்றி னான்அதி சூரன்என் றோர்மகன் வீற்று நூற்றுவர் மேவினர் அன்னவர் ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே. | 18 |
1069 |
அந்த நாளில் அவன்றன் இளவலாந் தந்தி மாமுகத் தாரகன் தன்னிடை முந்து செய்தவ மொய்ம்பினொர் மாமகன் வந்து தோன்றினன் வான்கதிர்ப் பிள்ளைபோல்*. (* வான் கதிர்ப் பிள்ளை - பாலசூரியன். ) | 19 |
1070 |
ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற் கேம மான குரவன் இசைப்பஅந் நாமம் எய்தி நலம்பெறு காளையாய்க் காமன் என்னக் கவின்றனன் யாக்கையே. | 20 |
1071 |
ஓத ருங்கலை யாவும் உணர்கினும் ஏத மாவதோர் விஞ்சை இயற்றிடான் பாத கம்புரி யான்பழி பூண்கிலான் நீதி யன்றி எவையும் நினைகிலான். | 21 |
1072 |
வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர் மாறு கொண்டவர் உண்டெனின் மற்றவர் ஈறு கொண்டிட ஏற்றுர மேற்படை ஊறு கொண்டிட உன்னுந் தகைமையான். | 22 |
1073 |
சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான் அகரும்** நல்கி அமர்ந்தென அன்னதோர் மகனை நல்கி வளங்கெழு மாயமா நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன். (** அகர் - அகில்; பல அகில்களில் சதுரக்கள்ளி வைரமாகிய அகிலும் ஒன்று. ) | 23 |
1074 |
அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம் மன்னினள் ஒருவன்றன் மனையெனும் முறையில்லாள் தன்னிறை தவிர்கின்றாள் தருமம திலள்வானோர் பன்னியர் தமைமுன்னோர் படர்புயம் உறவுய்ப்பாள். | 1 |
1075 |
ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும் வேள்விநை யுறும்வண்ணம் வெந்தொழில் புரிகின்றாள் நீள்வினை வடிவானாள் நிருதர்ள் குலமெல்லாம் மாள்வினை யெனயாண்டும் வைகலும் உலவுற்றாள். | 2 |
1076 |
கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக் கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை அட்டனள் நுகர்கின்றான் அனையவள் ஒருவைகல் முட்டினள் துருவாச முனியுறு தனியெல்லை. | 3 |
1077 |
அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச் சிந்துவன் இவனின்னே செய்தவம் அ·தன்றி மைந்தர்கள் பெறுவேனால் வல்லையில் இவண்என்னாப் புந்தியில் நினைவாயே போய்அவன் எதிருற்றாள். | 4 |
1078 |
உறுதலும் முனிநாடி ஒண்டோடி தனியேநீ குறுகிய தெவன்மாதோ கூறுதி யெனலோடும் மறுவறு முனிநின்பால் மனமகிழ வொடுமேவிச் சிறுவர்கள் பெறவந்தேன் செப்புவ திதுவென்றாள். | 5 |
1079 |
என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி வென்றிகொள் மடமாதே மேலுறு தவமெல்லாங் குன்றிடும் உனையின்னே கூடுவ னெனின்நீயும் நின்றிடல் பழியல்லால் நீதியும் அலவென்றான். | 6 |
1080 |
முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள் இனியுனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம் மனநினை வொழிகென்றே வன்மையி னொடுபுல்லி அனையவன் இதமூறல் ஆரமு தயிலுற்றாள். | 7 |
1081 |
ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக் கூடினள் அதுபோழ்தில் குறுகினர் இருமைந்தர் ஈடுறு வலிமிக்கார் இன்னவர் தமையன்னை மாடுற வருகென்றே மகிழ்வொடு தழுவுற்றாள். | 8 |
1082 |
தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி மழகளி றனையீர்காள் வல்லவு ணரில்வந்தீர் விழுமிய தவமாற்றி மேவுதிர் வலியென்ன அழிதரு நிறைகொண்ட அசமுகி உரைசெய்தாள். | 9 |
1083 |
தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும் ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி ஆயதொர் பெயர்பெற்றோர் அன்னைதன் உரைகொண்டே தூயதொர் குரவோன்றன் துணையடி பணிகுற்றார். | 10 |
1084 |
மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப் பூண்டிடு திறன்மிக்க புதல்வரை யெதிர்நோக்கி வேண்டிய தெவனென்ன வெய்யவள் தருமைந்தர் ஈண்டுன தவமெல்லாம் யாம்பெற அருளென்றார். | 11 |
1085 |
ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன் வீற்றொரு பொருளுண்டேல் வினவுதிர் எனமேலோன் சீற்றம துளராகிச் சிறுவர்கள் இவன்ஆவி மாற்றுதும் இவண்என்னா வல்லையின் எழலுற்றார். | 12 |
1086 |
இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற சிறுவர்கள் செயல்நாடிச் சினமொடு முனிநீவிர் மறுவறு தவருக் வைகலும் இடர்செய்வீர் குறுமுனி நுமதாவி கொள்ளுக இனியென்றான். | 13 |
1087 |
இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா மனமுறு தனிவிஞ்சை மாயையின் மறைபோழ்தில் தனயர்கள் இருவோருந் தந்தைத னைக்காணார் அனைதனை விடைகொண்டே யாயிடை ஒருவுற்றார். | 14 |
1088 |
வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங் கோறலை மனமுன்னிக் குமரர்கள் இருவோரும் தேறிய வுணர்வோடுந் திசைமுக வனைநோக்கி ஈறகல் பகலாக எரியத னிடைநோற்றார். | 15 |
1089 |
செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண் வந்திலன் அதுநாடி மற்றொரு செயலுன்னி வெந்திறல் இளையோனை வில்வல னெனும்வெய்யோன் சுந்தர மணிவாளால் துணிபட எறிகுற்றான். | 16 |
1090 |
கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம் நெய்யுடன் அவியாக்கி நீடிய கனலூடே வையகம் அருள்தாதை மந்திர முறையுய்த்து வெய்யவன் ஒருவேள்வி விரைவொடு புரிகுற்றான். | 17 |
1091 |
தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே அவனியின் மிசைவந்தே அரியதொர் செயல்செய்வாய் எவனருள் பரிசென்ன இணையடி தொழுதேத்தி அவுணர்கள் வடிவாம்வில் வலன்இவை அறைகின்றான். | 18 |
1092 |
வன்னியில் அவியூணாய் மாண்டிடும் ஒருபின்னோன் மெய்ந்நிறை வடிவோடும் விரைவுடன் வரல்வேண்டும் என்னலும் வாதாவி எழுகென அயன்ஓத அன்னதொர் பொழுதின்கண் ஆர்த்தவன் எழுந்திட்டான். | 19 |
1093 |
ஆங்கனம் அசுரேசன் அதிசய முளனாகித் தீங்குடன் ஒருசூழ்ச்சி சிந்தையி னிடையுன்னிப் பூங்கம லத்தோனைப் போற்றிசெய் தடியேனுக் கீங்கொரு வரம்எந்தாய் ஈகென உரைசெய்வான். | 20 |
1094 |
புல்லயின் மறியேபோற் பொலிவுறும் வாதாவி ஒல்லையின் இனிமேலும் உடல்துணி படுவானேல் எல்லையில் பரிவால்யான் எம்பியை எழுகென்னத் தொல்லையில் வடிவோடுந் தோன்றிமுன் வரல்வேண்டும். | 21 |
1095 |
இப்படி வரமொன்றே யான்பெற அருள்கென்றே மெய்ப்படும் உணர்வில்லா வில்வலன் உரைசெய்ய அப்படி பலகாலம் அதுமுடி கெனநல்கிச் செப்பரு மறைவேதாச் சேணுடை நெறிசென்றான். | 22 |
1096 |
சேறலும் அதுகாலைச் சிறுவர்கள் இருவோரும் ஏறென அமர்சூர்முன் ஏகியுன் மருகோர்யாம் வேறல எனவோதி மேதினி முனிவோரைக் கோறல்செய் வெருவன்மை கொண்டதும் உரைசெய்தார். | 23 |
1097 |
மன்னவன் அவர்தம்மை மகிழ்வொடு நனிபுல்லி என்னுழை மருகீர்காள் இனிமையொ டுறுமென்ன அன்னவர் சிலவைகல் ஆயிடை தனில்வைகிப் பின்னுற இருவோரும் பெருநில மிசைவந்தார். | 24 |
1098 |
நவைதவிர் குடகின்கண் நால்வகை நெறிகூடுங் கவலையின் வளமல்குங் கானக விடைதன்னில் அவுணர்கள் தாம் அங்கோர் ஆச்சிர மஞ்செய்தே எவரெவ ரும்வெ·கும் எப்பொருள் களுமுய்த்தார். | 25 |
1099 |
அன்னதொ ரிடைதன்னில் ஆரிட ராயுள்ளோர் இன்னுயிர் கொளவுன்னி இருவருள் இளமைந்தன் பொன்னிவர் திரிகோட்டுப் பொருதக ராய்நிற்க முன்னவன் விரதஞ்செய் முனிவரின் இனிதுற்றான். | 26 |
1100 |
வில்வலன் எனவோதும் வெய்யவன் அவ்வெல்லைச் செல்வதோர் முனிவோரைச் செவ்விதின் எதிர்கொண்டு வல்விரை வொடுதாழ்ந்து மற்றும தடியேன்றன் இல்வரு வீரென்னா இயல்பொடு கொடுசென்றே. | 27 |
1101 |
இப்பகல் அடிகேளுக் கிவ்விடை உணவென்னா ஒப்பறு நெறிகூறி ஓதன வகையெல்லாம் அப்பொழு தினிலட்டே அயமெனும் இளையோனைத் துப்புறு கறியாகத் துண்டம துறுவித்தே. | 28 |
1102 |
உள்ளுறு குறியாகும் ஊன்முழு வதும்நாடி வள்ளுறு சுடர்வாளால் வகைவகை படவீர்ந்தே அள்ளுறு கறியாக அட்டபின் அவரவ்வூண் கொள்ளுற நுகர்வித்தே கூவுவன் இளையோனை. | 29 |
1103 |
கூவிய பொழுதின்கட் கொறியெனும் உருவானோன் ஆவிமெய் யுளனாகி அன்னவர் உதரத்தை மாவலி யொடுகீண்டே வருதலும் இருவோருஞ் சாவுறு முனிவோர்தந் தசையினை மிசைவாரால். | 30 |
1104 |
வேறு வீடுறு முனிவர்ஊன் மிசைந்து தொன்மைபோல் ஆடென முனியென அனையர் மேவிய நாடொறும் இச்செயல் நடாத்தி யுற்றனர் கேடறு முனிவர்தங் கிளைகள் மாளவே. | 31 |
1105 |
இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர் செப்பரு முனிவரைத் தேவர் தங்களை ஒப்பறு நரர்தமை ஒறுப்ப மாயைதன் வைப்புறு காதலன் அரசின் மன்னினான். | 1 |
1106 |
ஆயிரத் தெடடெனும் அண்டம் யாவையுஞ் சேயுயர் இந்திர ஞாலத் தேர்மிசை ஏயெனும் அளவையில் ஏகி வைகலும் நாயக முறையினை நடாத்தி நண்ணினான். | 2 |
1107 |
ஒருபகற் பாதலத் தூடு வைகிடும் ஒருபகல் மாதிரம் உலவிச் சேர்தரும் ஒருபகல் விண்பதந் தோறும் உற்றிடும் ஒருபகல் அயன்பதத் துன்னி மன்னுமே. | 3 |
1108 |
தண்ணறுந் துளவினான் தனது தொல்பதம் நண்ணிடும் ஒருபகல் நாளு மிவ்வகை எண்ணரும் உலகுதோ றேதி மாலையில் துண்ணென மீள்வனால் சூர பன்மனே. | 4 |
1109 |
அவ்வகை யால்அர சாற்றும் எல்லையில் எவ்வமில் சூர்முதல் இந்தி ரன்னெனுந் தெவ்வினை வன்சிறை செய்து தேவியை வவ்விய வுன்னினன் வருவ தோர்கிலான். | 5 |
1110 |
உன்னிய தீயவன் ஒருதன் தானையின் மன்னனை விளித்துநீ வாச வன்றனை இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றியென் முன்னுற விடுகென முன்னம் ஏவியே. | 6 |
1111 |
நீடிய தன்பெரு நிலயங் காப்பவர் கோடுறு நிசிசரர் குலத்துள் தோன்றினார் கேடகம் வாள்அயில் கெழுவு கையினார் பாடவ மடந்தையர் பவங்கள் போன்றுளார். | 7 |
1112 |
ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில் அன்புடன் விளித்துநீர் அமரர் தம்மிறை இன்புறு தேவியைப் பற்றி யீமென வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே. | 8 |
1113 |
போக்கலும் அவரெலாம் பொன்னின் நாட்டின் மேல் ஊக்கம தாகியே உருத்துச் சேறலும் நோக்கிய தூதுவர் நொய்திற் போகியே மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார். | 9 |
1114 |
வந்நனர் அவுணரும் வயங்கொள் மாதரும் அந்தமில் படையொடும் அடல்செய் நீரர்போல் சிந்தனை யாவதோ தெரிந்தி லோமென இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே. | 10 |
1115 |
பொம்மென அவர்தமைப் போக்கித் தீயினும் வெம்மைகொள் நெஞ்சினார் வினைய முன்னியே அம்மனை மனைவியோ டகன்று மாயையான் இம்மென இப்புவி தன்னில் ஏகினான். | 11 |
1116 |
ஏகிய வெல்லையின் இகல்வெஞ் சூர்விடப் போகிய மாதரும் பொருவில் வீரரும் நாகர்தம் மிறையமர் நகரை நண்ணினார் ஆகர முதலிய இடந்தொ றாய்குவார். | 12 |
1117 |
வினைவயிற் சென்றிடும் வீரர் யாவருந் துனைமத் திறைவனைத் துவிக் காண்கிலர் மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும் நினைவயர்த் துள்ளுறு கவலை நீடினார். | 13 |
1118 |
நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே ஏயின செயலினை ஈறு செய்கிலம் போயினன் சசியொடும் புலவர் கோனெனா ஆயவன் நகரெலாம் ஆய்வுற் றாரரோ. | 14 |
1119 |
சுற்றினர் நகரெலாந் துவித் தேவரைப் பற்றினர் விலங்கலின் பகைவற் காட்டென எற்றினர் புலோமசை யாண்டை யாளெனக் குற்றினர் வாய்தொறுங் குருதி பாயவே. | 15 |
1120 |
விண்ணவர் யாவரும் வேந்துந் தேவியும் நண்ணிய துணர்கிலம் நாங்கள் எங்களைத் துண்ணென வருத்தலிர் துயர்கின் றோமெனாத் தண்ணளி வருநெறி தளர்ந்து சாற்றவே. | 16 |
1121 |
விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர் முட்டினர் மகேந்திர மதிய மாநகர் கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வானிடைப் பட்டது புகன்றனர் பழிகொள் நெஞ்சினார். | 17 |
1122 |
போயினர் இருவரும் புறத்த ராயென ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன் தீயென வெகுண்டனன் தேடொ ணாததோர் தூய்மணி இழந்திடும் அரவின் துன்புளான். | 18 |
1123 |
ஒற்றரி பலர்தமை யொல்லை கூவியே பொற்றொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர் கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே சொற்றிடு வீரெனச் சூரன் தூண்டினான். | 19 |
1124 |
தோடவிழ் தெரியலான் தூண்டை ஒற்றர்கள் ஓடினர் வீற்றுவீற் றுலக மெங்கணும் தேடினர் காண்கிலர் திரிகுற் றார்இனி நீடிய பொன்னகர் நிகழ்ச்சி கூறுகேன். | 20 |
1125 |
வேறு செல்லெனும் ஊர்தி அண்ணல் தேவியுந் தானும் நீங்கச் சொல்லருங் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன எல்லியம் பொழுது போன்றே யாதுமோர் சிறப்பும் இன்றாய்ப் புல்லென லாய தன்றே பொருவில்பொன் னகர மெல்லாம். | 21 |
1126 |
அழிந்தன வளங்க ளெல்லாம் ஆகுல மயங்கிற் றின்பம் ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கிய துலக மெங்கும் எழுந்தது புலம்ப லோதை யாவர்தங் கண்ணுந் தெண்ணீர் பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்ற தன்றே. | 22 |
1127 |
இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவ லாகி மன்னிய உபேந்தி ரன்றான் வானவர் உலகை நீங்கி முன்னைவை குண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக் கன்னிகை நோற்று மேவுங் காஞ்சியை யடைந்த வாபோல். | 23 |
1128 |
சேண்பதந் தன்னை நீங்குஞ் சிறியதோர் தந்தை தன்னைக் காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன் மைந்தன் தூண்புரை கின்ற செம்பொற் றோளுடைச் சயந்தன் என்போன் மாண்பொடு சிறிது வைகல் வைகுண்டத் திருந்தான் அன்றே. | 24 |
1129 |
இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடுங் கரந்துடன் போந்த வாறுங் காமரு துறக்கந் தன்னில் விரைந்துவந் தவுணர் தேடி மீண்டிட விண்ணு ளோர்கள் அரந்தையோ டுற்ற வாறும் அங்ஙனந் தேர்ந்தான் அம்மா. | 25 |
1130 |
தந்தைதன் மெலிவு காணில் தங்குடித் தலைமை யெல்லாம் மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கதாம் அறனும் அ·தே எந்தையு மில்லை யான்போய் என்னகர் காப்ப னென்னாப் புந்தியி லுன்னி மைந்தன் பொன்னகர் தன்னில் வந்தான். | 26 |
1131 |
பொன்னகர் புக்க மைந்தன் புலம்புறு சுரரைக் கண்டு தன்னுயிர் போலுந் தந்தை தாய்தனைக் காணா னாகி இன்னலங் கடலின் மூழ்கி ஏக்கமோ டிரக்க மிக்குப் பின்னொரு செயலு மின்றிப் பித்தரே போல வுற்றான். | 27 |
1132 |
உற்றிடு மெல்லை தன்னில் உம்பர்கோன் மதலை யுள்ளந் தெற்றெனத் தௌ¤ப்ப வுன்னி நாரதன் என்னுஞ் சீர்சால் நற்றவ முனிவன் செல்ல நடுக்கமோ டெழுந்து தாழ்ந்து மற்றொரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான். | 28 |
1133 |
நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தஞ் செய்யும் வன்றிறற் சூரற் கஞ்சி மற்றெனைப் பயந்த மேலோர் சென்றனர் சென்ற வெல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை என்றினி யகலுங் கொல்லோ எம்பிரான் இயம்பு கென்றான். | 29 |
1134 |
தருக்கினை இழந்து நின்ற சயந்தன்இத் தன்மை கூறப் பொருக்கென முனிவன் ஓர்ந்து பொங்குபே ரருளால் நோக்கித் திருக்கிளர் கின்ற தாங்கோர் செழுமணித் தவிசின் மீதில் இருக்கென இருத்திப் பின்னர் இன்னன இசைக்க லுற்றான். | 30 |
1135 |
தீங்குவந் தடையு மாறும் நம்மைதான் சேரு மாறும் தாங்கள்செய் வினையி னாலே தத்தமக் காய அல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதநஞ் சிரண்டி னுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ. | 31 |
1136 |
இன்பம தடைந்த காலை இனிதென மகிழ்ச்சி எய்தான் துன்பம துற்ற போதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார் இன்பமுந் துன்பந் தானும் இவ்வுடற் கியைந்த வென்றே முன்புறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த நீரார். | 32 |
1137 |
வறியவர் செல்வ ராவர் செல்வர்பின் வறிய ராவர் சிறியவர் உயர்ந்தோ ராவர் உயர்ந்துளோர் சிறிய ராவர் முறைமுறை நிகழும் ஈது முன்னையூழ் வினையே கண்டாய் எறிகதிர் வழங்கும் ஞாலத் தியற்கையும் இனைய தன்றோ. | 33 |
1138 |
ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வு மெல்லாம் நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ளற் பாற்றோ மேக்குயர் கடவுட் டிங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை போக்கொடு வரவு நாளும் முறைமுறை பொருந்திற் றன்றே. | 34 |
1139 |
ஆதலின் உமது தாழ்வும் அவுணர் தம்உயர்வும் நில்லா ஈதுமெய் யென்று கோடி இந்நகர் தணந்து போன தாதையும் பயந்த தாயும் தம்முருக் கரந்து போந்து மேதினி வரைப்பி னூடு மேவினர் போலு மன்றே. | 35 |
1140 |
மைந்தநீ தோற்று முன்னம் வானவர்க் கலக்கண் செய்த தந்தியின் முகங்கொண் டுற்ற தானவன் துஞ்சும் வண்ணம் அந்தநாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல இந்தவெஞ சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய். | 36 |
1141 |
என்றிவை பலவுங் கூறி இன்னினி வெஞ்சூர் தானும் பொன்றிடும் உமது துன்பும் பொள்ளென அகன்று போரும் நன்றிது துணிதி யென்றே நாரத முனிவன் தேற்றிச் சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்ப மெய்தி. | 37 |
1142 |
வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளுந் திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல் இருந்தனன் சயந்த னென்போன் இருநிலத் திடைமுன் போன புரந்தரன் செய்த தன்மை யானினிப் புகலு கின்றேன். | 38 |
1143 |
மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப் பாரில் சித்திர மனைவி யோடுந் தெக்கிண தேயம் புக்குப் பத்துடன் இரண்டு நாமம் படைத்ததொல் காழி நண்ணி இத்தல மினிதே யென்னா இருந்தனன் இமையோர் கோமான். | 39 |
1144 |
அந்தநல் லிருக்கை தன்னில் அயர்வுயிர்த் திறைவி யோடும் இந்திரன் இருந்த பின்னர் என்றுநாம் இறைவற் போற்றிப் புந்திகொள் மகிழவாற் பூசை புரிதுமென் றுன்னி யாண்டோர் நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான். | 40 |
1145 |
சந்தகில் பலவு தேமாச் சரளமே திலகந் தேக்குக் கொந்தவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம் நந்திய கதலி கன்னல் நாகிளம் பூகம் வன்னி முந்துயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி. | 41 |
1146 |
சாதியே கோங்கு நாகஞ் சண்பகம் இதழி ஞாழல் பாதிரி வழையே குந்தம் பாரிசா தஞ்செ ருத்தி போதுறு நரந்தம் வில்வம் பொலிகா வீரஞ் செச்சை கோதறு மயிலை மௌவல் கொழுந்துசெவ் வந்தி முல்லை. | 42 |
1147 |
இவைமுத லாகி யுள்ள தருக்களும் புதலு மெல்லாம் நவையறந் தெரிந்து வைத்தோர் நந்தன வனத்தைத் செய்ய அவைமிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளுஞ் சிவனடி அருச்சித் தங்கட் டேவியோ டிறைவன் உற்றான். | 43 |
1148 |
உற்றிடு மெல்லை தன்னில் உலகினில் அவுணர்க் கெல்லாங் கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயந் துருவிச் செல்ல அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு மற்றவண் வேணு வாகி மறைந்துநோற் றிருந்தான் மாதோ. | 44 |
1149 |
வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளுந் தாணுவை வழிபட் டங்கட் சரமகன் சாரும் நாளிற் காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள் ஆணையிற் பெய்யா தாக அவ்வனம் வாடிற் றன்றே. | 45 |
1150 |
நீடிய காமர் பூங்கா நெருப்புறு தன்மைத் தென்ன வாடின நீரின் றாகி மற்றது மகத்தின் கோமான் நாடினன் கவன்று தொன்னாள் நான்முகத் தவனும் மாலுந் தேடரும் பரனை யுன்னி இரங்கின்ன் செயல்வே றில்லான். | 46 |
1151 |
திருந்தலர் புரமூன் றட்ட சேவகற் பரவ லோடும் பொருந்தலர் பூங்கா வாடிப் போயின எனினும் பொன்றா இருந்தலம் இதனில் யாறொன் றெய்துமால் மகவான் இன்னே வருந்தலை என்றோர் மாற்றம் வானிடை எழுந்த தன்றே. | 47 |
1152 |
எழுவதோர் செஞ்சொற் ளோ எம்பிரான் அருளீ தென்னாத் தொழுதனன் போற்றி மேனி துண்ணெனப் பொடிப்பச் சிந்தை முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே இருந்தான் அங்கண் அழகிய நதியொன் றுற்ற வரன்முறை அறைய லுற்றேன். | 48 |
1153 |
அந்தப் பொழுதத் தளிகொண் டுடையோர் சிந்தைக் கௌ¤தாஞ் சிவன்மெய் யருளான் முந்துற் றுணர்நா ரதமா முனிவன் விந்தக் கிரிமுன் னுறமே வினனால். | 1 |
1154 |
மேவிப் பலஆ சிவிளம் புதலுந் தேவப் படிவங் கொள்சிலம் புதொழா ஆவற் புதம்வந் ததெம்மண் ணலென கூவப் படுபான் மையிசைத் திடுவான். | 2 |
1155 |
மேருத் தனிவெற் புவிதிக் கரியோன் மூரிச் சிலையா கியமொய்ம் பதனால் தாரித் துலகீன் றவள்தன் மரபாற் பேரற் பொடுவந் துபிறக் கையினால். | 3 |
1156 |
குன்றுக் கிறையாய் உறுகொள் கையினால் என்றைத் தொடவிண் ணிலெழுந் துறலால் இன்றிப் புவியா வையும் நித் தன்அடும் அன்றைப் பகல்கா றும்அளித் திடலால். | 4 |
1157 |
ஓரா யிரமாம் முடியுள் ளதனால் காரார் களன்மே யகவின் கயிலை சாரா வொருசார் வுறுதன் மையினால் சூரான் அவனால் தொலைவில் லதனால். | 5 |
1158 |
தாழுங் கதிருந் தகுமேல் நெறியில் வாழுஞ் சசியும் மலிதா ரகையும் ஏழென் றிடுகோ ளுமியா வர்களுஞ் சூழும் படிநின் றிடுதொன் மையினால். | 6 |
1159 |
கொன்னே இமையோர் குடிகொண் டதனால் பொன்னேர் கொடுயர்ந் துபொருந் துதலால் பன்னே மிகள்சூழ வருபான் மையினால் தன்னேர் இலையென் றுதருக் கியதே. | 7 |
1160 |
பரந்தும் பர்நிமிர்ந் திடுபைம் பொன்வரை பெருந்தன் மைமதித் திடுபெற் றியைநீ தெரிந்தில் லைகொல்அன் னசெயற் கையெலாம் விரைந்துன் னொடுசெப் பியமே வினனே. | 8 |
1161 |
என்றான் முனிவோன் இதுகேட் டிடலும் ஒன்றா கியதே வுருவாய் எதிரும் வன்றாழ் கிரிமா மறமுற் றுயிரா நன்றால் இ·தென் றுநகைத் தறையும். | 9 |
1162 |
இல்லா புளதொல் லிறுமாப் பகலம் பல்லார் இகழப் பகரும் விதியான் அல்லா ரெனவே நனிநா ணமுறா வில்லா கிவளைந் ததுமேன் மையதோ. | 10 |
1163 |
பொன்னார் இமவான் புரிநோன பதனால் அன்னான் இடைவந் தமர்வுற் றனளால் மன்னா குமவன் மகளா யினளோ எந்நா ளுமியா ரையுமீன் றருள்வாள். | 11 |
1164 |
பாங்குற் றிடுபா ரினையாற் றுவனென் றோங்குற் றனன்எவ் வுலகும் பரியா ஆங்குற் றனவோ பலஅன் னவையுந் தாங்குற் றதுகண் ணுதல்சத் தியதே. | 121 |
1165 |
விற்சூழ் கதிரோன் முதல்விண் ணவர்கள் தற்சூழ்ந் தனல்அல் லதுசந் ததமும் எற்சூழ்ந் திலரோ எழுதீ வுளவாங் கற்சூழந் திலரோ கடல்சூழந் திலரோ. | 13 |
1166 |
பன்னிற் குவடும் பலவுண் டெனவே உன்னுற் றிடுமோ உயர்கள் ளிகளின் சென்னித் தொகையைத் தெரிசிக் கின்அயன் தன்னொத் திலனோ தலைநான் குளவே. | 14 |
1167 |
கடிதா கியசூ£¢ இதுகல் லெனவே அடரா மல்விடுத் தனன்அன் றுதனை நெடிதே யதுவுன் னிலன்நீள் பரிதிப் படையா னினும்ஆற் றல்படைத் துளனோ. | 15 |
1168 |
தண்ணுற் றிடுபொன் மைதயங் குருவம் நண்ணுற் றனமென் றுளநா டினனோ எண்ணுற் றவன்நல் லுணர்வெய் திலனான் மண்ணிற் புனைபா வைவனப் பதுவே. | 16 |
1169 |
தன்கண் ணுறுவா னவர்தாம் பலரும் என்கண் ணமரா மல்இகழ்ந் தனரோ நன்கண் ணுதல்நா யகனா¢ கயிலை யின்கண் அரகுற் றிலதெக் கிரியே. | 17 |
1170 |
திருவைத் தவர்கண் டுயில்செங் கண்அரா மருவித் தனைமுந் துமறைத் திடுநாள் விரைவிற் படரூ தைவெகுண் டுபறித் தொருமுத் தலைகொண் டதுணர்ந் திலனோ. | 18 |
1171 |
கிளர்ப்புற் றிடுசிம் புளொர்கே சரிமுன் அளப்பற் றிடுதன் னுருவண் டமெலாம் வளர்ப்புற் றிடுஞான் றொர்மணிப் பரல்போல் குளப்புற் றனன்ஈ துகுறித் திலனோ. | 19 |
1172 |
வரபத் திரைகேள் வன்மறம் புரியுஞ் சரபத் துருவுற் றுழிதாழ் சிறையின் விரவிப் படரூ தையின்மின் மினிபோல் திரிகுற் றனன்அன் னதுதேற் றிலனோ. | 20 |
1173 |
அறியுற் றிடுபா ரதமா னவெலாங் குறியுற் றிடதோல் முகர்குஞ் சரன்மேல் எறியுற் றமருப் பினிலே டெனலாய்ப் பொறியுற் றிடுமென் பதுபொய்த் திடுமோ. | 21 |
1174 |
தானோர் வரையல் லதுதா ரணியுண் கோனோ அலன்அல் லதுகோ கனத வானோன் அலன்வா சவன்அல் லன்அவன் ஏனோ தனைமே லெனவெண் ணியதே. | 22 |
1175 |
என்னா வடவெற் பையிழித் துரையா அந்நா கம்பியக் கும்அகந் தையினை நன்னா ரதநீக் குவனநா டுகெனா முன்னா வுருநீத் ததுமொய் வரையே. | 23 |
1176 |
வேறு எண்டரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை கொண்டனர் திரண்டு நீண்டு குலாய்நிமிர் கொள்கைத் தென்ன விண்டொடா விந்த மாங்கோர் விஞ்சையால் அகன்று சேண்போய்ப் புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்த தன்றே. | 24 |
1177 |
உருக்கிளர் விந்த மென்னும் உருகெழு பிறங்கல் மேல்போய்ப் பரக்கம் தாகி அம்பொற் பனிவரை காறும் ஆன்று நெருக்கிய தனைய பான்மை நிலமுழு தளந்த மேலோன் திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்தெனத் திகழந்த தம்மா. | 25 |
1178 |
விந்தமிந் நெறியால் ஆன்று மேக்குறக் கிளர்ந்து போகி அந்தர நெறியை மாற்ற அலரிவெண் டிங்கள் சேயோன் புந்திபொன் புகரே காரி புயங்கநாள் பிறரும் நோக்கிச் சிந்தையில் துணுக்க மெய்தி இனையன செப்ப லுற்றார். | 26 |
1179 |
தானவர் செயலோ என்பார் தருமமில் அரக்க வெய்யோ ரானவர் செயலோ என்பார் அல்லவேல் அயன்மா லென்னும் வானவர் செயலோ என்பார் மாயமீ தாகும் என்பார் மேனிமிர் பிறங்க லின்றி வௌ¢ளிடை இலைகொல் என்பார். | 27 |
1180 |
என்னிது வென்று போதத் தெம்பிரான் அருளால் நாட அன்னது தெரித லோடும் ஆமிது விந்த மேருத் தன்னுடன் இகலொன் றுண்டாய்த் தராதல வரைப்பில் வானில் சென்னெறி விலக்கிற் றென்று சிந்தனை செய்து தேர்வார். | 28 |
1181 |
செம்பொன்மால் வரையின் பாங்கிற் சிவனடி யுன்னி நோற்றே அம்புரா சியைமுன் னுண்டோன் அமர்ந்தனன் அவனீண் டுற்றால் உம்பர்போய் நின்ற விந்தம் ஒடுங்கும்என் றியாரும் ஓர்ந்து கும்பமா முனியை யுன்னி இனையன கூற லுற்றார். | 29 |
1182 |
பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யுங் கைந்நாக மாலை நினைந்தே கராவொன்று கௌவ என்னா யகனே எனத்தன் கையெடுத் தழைப்ப அன்னான்அங் கெய்தி விடுவித்த தறிகி லாயோ. | 1 |
1183 |
பூவார் கமலத் தயன்நல்கிய பூவை தன்மேல் தூவா மயலாய்க் கிளியாகித் தொடர்ந்து செல்லக் காவாய் பரனே எனலோடுங் கலங்கல் என்றே தேவாதி தேவன் அருள்செய்தது தேர்கி லாயோ. | 2 |
1184 |
சத்தார் பிருகு தனதில்லைத் தடிந்த வெல்லை இத்தா ரணியில் அளவில்பிறப் பெய்து கென்ன அத்தா அருளென் றரிநோற்றுழி ஐயன் வந்து பத்தாக என்று நிறுவுற்றது பார்த்தி டாயோ. | 3 |
1185 |
தேவர்க் கெனினும் நிலத்தின்கட் செறிந்து வாழ்வோர் ஏவர்க் கெனினும் ஒருதுன்புறின் எய்தி நீக்கல் காவற் குரியார் கடனாம்அக் கடமை தூக்கின் மேவற் கரிதாந் தனிமுத்தியின் மேல தன்றோ. | 4 |
1186 |
தௌ¢ளத் தௌ¤ந்த மறைக்கள்வனைச் செற்ற மீன்போல் அள்ளற் கடலை ஒருநீ அகன்கை யடக்கிக் கள்ளத் தவுணன் நிலைகாட்டிநங் கண்ணில் வைத்த கொள்ளைக் கருணை உலகெங்கணுங் கொண்ட தெந்தாய். | 5 |
1187 |
விந்தக் கிரிநாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போ டிந்தப் பொழுதத் திகல்கொண் டுலகெங்கும் ஈறாம் அந்தத் துயருங் கயிலைக்கிணை யாவ லென்றே சிந்தித் ததுகொல் எழுந்திட்டது சேண தெல்லாம். | 6 |
1188 |
மண்ணுற்ற வெல்லை அளவிட்டிடு மால்கொ லென்றே எண்ணுற் றெவரும் வெருக்கொண்டிட ஈண்டை விந்தம் விண்ணுற்ற அண்டத் துணையாய்மிசைப் போவ தையா கண்ணுற்ற நோக்கம் விடுத்தேயிது காண்கி லாயோ. | 7 |
1189 |
மல்லற் கிரிவிண் ணெறிமாற்றலின் மற்றெ மக்குஞ் செல்லற் கரிதாயது பாருடைத் தேய முற்றும் எல்லைப் பொழுது மயக்குற்ற இவற்றை நீக்க ஒல்லைக் குறியோய் வரல்வேண்டுமென் றுன்ன லுற்றார். | 8 |
1190 |
வேறு உன்ன லோடும் உலகம் நனந்தலைப் பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின் மன்னி நோற்றுறை வண்டமிழ் மாமுனி தன்னு ளத்தில்அத் தன்மைகண் டானரோ. | 9 |
1191 |
மேக்கு யர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை நீக்கி வான நெறியினைத் தொன்மைபோல் ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான் ஊக்கி னான்முன் உததியை உண்டுளான். | 10 |
1192 |
துள்ளி கண்ணிடைத் தூங்குறக கைதொழ உள்ளம் என்பொ டுருகவு ரோமமார் புள்ளி பொங்கப் புகழந்து பரிசடை வள்ளல் தன்னை மனத்திடை முன்னினான். | 11 |
1193 |
முன்னும் எல்லையில் மூரிவௌ¢ ளேறெனும் மின்னு தண்சுடர் வௌ¢ளிவெற் பின்மிசைப் பொன்னின் மால்வரை போந்தெனப் புங்கவன் துன்னு பாரிடர் சூழ்தரத் தோன்றினான். | 12 |
1194 |
ஆதி யுற்றுழி அச்சமொ டேயெழீஇ மூது ரைத்தமிழ் முற்றுணர் மாமுனி கோதை யுற்றிடக் கொம்பொடு வாங்கிய பாத வத்திற் பணிந்தனன் பன்முறை. | 13 |
1195 |
சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்துபின் முன்னர் நின்று முறைபட போற்றலும் மின்னு லாஞ்சடை விண்ணவன் வெ·கிய தென்னை மற்ற தியம்புரி யாலென்றான். | 14 |
1196 |
விந்த மால்வரை மேருவை மாறுகொண் டந்த ரத்தை யடைத்த ததன்வலி சிந்த என்கட் சிறிதருள் செய்கெனாச் சந்த நூற்றமிழ்த் தாபதன் கூறினான். | 15 |
1197 |
அக்க ணத்துனக் காற்றல் வழங்கினாம் மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டிஅத் தெக்கி ணஞ்சென்று சீர்ப்பொதி யத்திடைப் புக்கு வைகெனப் புங்கவன் செப்பினான். | 16 |
1198 |
என்ற லுந்தொழு தேத்திநின் பூசனை நன்று செய்ய நளிதடங் கூவலும் நின்றி டாப்புனல் நீடவுந் தென்றிசைக் கொன்றொர் தீர்த்தம் உதவுகென் றோதினான். | 17 |
1199 |
அனைய காலை அருங்கயி லாயமேல் இனிது வைகிய ஏழ்நதி தன்னுளும் புனித மாகிய பூம்புனற் பொன்னியைப் பனிம திச்சடைப் பண்ணவன் முன்னினான். | 18 |
1200 |
அந்த வேலை அ·துணர்ந் தேவெரீஇச் சிந்தை பின்னுறச் சென்று திருமுனம் வந்து காவிரி வந்தனை செய்தலும் எந்தை நோக்கி இதனை இயம்புவான். | 19 |
1201 |
தீது நீங்கிய தென்றிசைக் கேகிய கோதி லாத குறுமுனி தன்னொடும் போதல் வேண்டும் பொருபுனற் காவிரி மாது நீயென மற்றவள் கூறுவாள். | 20 |
1202 |
திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும் அண்ண லேயிவன் ஆண்டகை யாகுமால் பெண்ணி யானிவன் பின்செலல் நீதியோ எண்ணின் ஈதும் இயற்கையன் றென்னவே. | 21 |
1203 |
திரிபில் சிந்தையன் தீதுநன் கிற்படா ஒருமை கொண்ட உளத்தன்நம் மன்பருள் பெரியன் ஈங்கிவன் பின்னுறச் செல்கெனா அருள்பு ரிந்தனன் ஆல மிடற்றினான். | 22 |
1204 |
ஆங்க தற்கிசைந் தந்நதி யின்றியான் தீங்கி லாத முனியொடு பின்செல்வன் ஓங்கல் மேய வொருவ இவன்றனை நீங்கு காலத்தை நீயருள் கென்னவே. | 23 |
1205 |
நன்று நன்றிது நங்கைநின் காரணத் தென்று நோக்கி இவன்கரங் காட்டுவன் அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச் சென்று வைகெனச் செப்பினன் எந்தையே. | 24 |
1206 |
செப்பு மாற்றஞ் செவிக்கமு தாதலும் அப்பெ ரும்புன லாறவன் பின்செல ஒப்ப லோடும் உயிர்க்குயி ராகியோன் தப்பின் மாமுனிக் கின்னது சாற்றினான். | 25 |
1207 |
நீடு காவிரி நீத்தத்தை நீயினிக் கோடி உன்பெருங் குண்டிகைப் பாலென நாடி யத்திறஞ் செய்தலும் நன்முனி மாடு சேர்ந்தனள் மாநதி யென்பவே. | 26 |
1208 |
ஆய காலை அகத்திய தென்றிசைத் தேய மேகெனச் சீர்விடை நல்குறாப் பாயு மால்விடைப் பாகன் மறைந்தனன் போயி னான்செறி பூதரி னத்தொடும். | 27 |
1209 |
வேறு அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கண் நீங்கி மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர்கோன் பயந்த லோபா முத்திரை தனைமுன் வேண்டு*மு துக்குறைத் திண்மை சான்ற சிந்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான். ( * முதுக்குறைத் திண்மை சான்ற சித்தன் - புலத்திய முனிவன். முதுக்குறை - பேரறிவு. ) | 28 |
1210 |
24. கிரவுஞ்சப் படலம் பொன்றிகழ வரையின் நின்றுங் குறுமுனி புவியே ஆறாத் தென்றிசைக் கேகு மெல்லைத் திறலரிக் கிளவல் வாழ்க்கை வன்றிறல் மாய மூதூர் வந்தெய்த ஆண்டை வைகும் அன்றிலம் பேர்பெற் றுள்ள அவுணன்அத் தன்மை கண்டான். | 1 |
1211 |
வானுயர் உலகந் தன்னை வசுந்தரை யாக்ம் பாரை ஏனைய ககன மாக்கும் எறிதிரைப் பரவை தன்னை மேனிமியர் பிறங்க லாக்கும் வெற்பினைப் புணரி யாக்கும் பானுவை மதிய மாக்கும் மதியினைப் பகலாச் செய்யும். . | 2 |
1212 |
அணுவினை மேரு வாக்கும் அன்னதோர் மேரு வெற்பை நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனி தன்னைப் புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவன மாக்கும் இணருறு நேமித் தீயை எல்லைநீ ராகச் செய்யும். . | 3 |
1213 |
கன்னலின் அயுதத் தொன்றிற் கடவுளர்க் கேனும் நீத்தோர் என்னவர் தங்கட் கேனும் எனைப்பல மாயஞ் சூழ்ந்து பன்னெடுங் காலஞ் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா அன்னவன் வன்மை யாவும் ஆரறிந் துறைக்கற் பாலார். . | 4 |
1214 |
அத்தகு தகுவர் கோமான் அடற்கிர வுஞ்சன் அன்போன் மெய்த்தமிழ் முனிவன் செல்லும் வியனெறி விந்த மேபோல் கொத்துயர் குவடு மல்கிக் குன்றுருக் கொண்டு தன்பால் உய்த்திடு மாறு போக்கி உறுதலுங் குறியோன் கண்டான். . | 5 |
1215 |
காண்டலும் வியந்து நன்றிக் கடிவரை நடுவ ணாக ஈண்டிதோ ரத்தம் உண்டால் இவ்வழி நடத்தும் என்னா ஆண்டத னிடையே போக அந்நெறி குரோச வெல்லை மாண்டலும் இலதே யாக மற்றொரு சுரமுற் றன்றே. . | 6 |
1216 |
அந்நெறி கண்டு தொன்னூல் அறைமுனி ஏக லோடுஞ் சென்னெறி மேலின் றாகத் திரும்பினன் செல்லுங் காலை முன்னுள நெறியுங் காணான் முனிவரன் மயங்க ஓர்சார் பின்னொரு வட்டை கண்டு பேதுற லோடும் போனான். . | 7 |
1217 |
ஆறது செல்லுமெல்லை அடலெரி கனைந்து சூழச் சூறைகள் மயங்க மங்குல் துண்ணென மாரி தூவ மாறகல் உருமுச் சிந்த வல்லிருட் படலை சுற்ற வீறகல் மாயை சூழந்தான் எறுழ்வலி அவுணர் கோமான். . | 8 |
1218 |
மட்டுறு குறிய செம்மல் மற்றது நோக்கித் தீயோர் பட்டிமை யொழுக்கீ தென்னாப் பயின்றிடு போத நீரால் உட்டௌ¤ பான்மை நாட ஊழ்த்திறந் தெரித லோடுங் கட்டழல் என்னச் சீறிக் கரதலம் புடைத்து நக்கான். . | 9 |
1219 |
நன்றுநன் றவுணன் கொல்லாம் நமக்கிது புரியு நீரான் இன்றிவன் வன்மை நீப்பன் யானென அவுண வெய்யோன் குன்றுரு வதனிற் குற்றிக் குறுமுனி பாணித் தண்டால் துன்றிரும் பூழை யாக்கிச் சூளிவை புகல லுற்றான்.. | 10 |
1220 |
மாண்மதி பெறாத வெய்யோய் மற்றுநின் தொன்மை நீங்கி நீண்மலை யாகி ஈண்டே நின்றுநீ யவுணர்¢க் கெல்லாம் ஏண்மிகும் இருக்கை யாகி இருந்தவத் தோர்க்கும் ஏனைச் சேண்மலி கடவு ளோர்க்குந் தீத்தொழில் இழைத்தி பன்னாள். | 11 |
1221 |
மாற்படு நமது பாணி வலிகெழு தண்டால் உன்றன் பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெல்லாம் ஏற்புடை இருக்கை யாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள் வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான். | 12 |
1222 |
பழிதரும் இனைய சாபம் பகர்ந்துதன் சிரகந் தன்னில் உழிதரு புனலை வாங்கி உளங்கொள்மந் திரத்தால் வீசி அழிதர மாயை நீக்கி ஆண்டொரீஇ மீண்டு தென்பால் வழியது செவ்வன் நாடி வண்டமிழ் முனிவன் போனான். | 13 |
1223 |
அன்னனதா ரவுணர் கோமான் அன்றுதொட் டசல மாகித் துன்னெறி அவுணர் யாருந் துவன்றிய அரண மாகி நென்னலின் முதனாள் காறு நின்றனன் அனையான் தன்னை என்னையா ளுடைய நீயன் றியாவரே அடுதற் பாலார். | 1 |
1224 |
பைந்தமிழ் முனிவன் வான்றொய் பனிவரை யதனை நீங்கித் கந்தரஞ் செறியாற் கோட்டுக் கடவுளர் வரைச்சா ரெய்தி அந்தம தடைந்தோர்க் தங்கண் அருளினால் தனது மூல மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான். | 2 |
1225 |
கங்கைசென் றொழுகுங் காசிக் கறைமிடற் றகில நாதன் பங்கய அடிகள் தாழ்ந்து பரவல்செய் தாண்டு நீங்கித் துங்கதை கொண்ட விந்தத் தொல்வரைக் கொருசா ரேகி அங்கதன் நிலைமை நோக்கி அறிவன்ஒன் றியம்ப லுற்றான். | 3 |
1226 |
சேயுயர் நிவப்பிற் றாகிச் சேண்புகும் விந்த மென்னும் மாயிருங் குவடு கேண்மோ மற்றியாம் பொதிய வெற்பில் போயிருந் திடவே உன்னிப் போந்தனம் அதனுக் கின்னே நீயொரு சிறிது செல்லும் நெறியளித் திடுதி யென்றான். | 4 |
1227 |
எறிகதிர் மதிலி னுக்கும் ஏகருந் திறத்தால் வான நெறியினை யடைத்துத் தொல்லை நெடியமால் போன்று நின்றேன் குறியநிற் கஞ்சி யாறு கொடுப்பனோ எனது தோற்றம் அறிகிலை மீண்டு போகென் றவ்வரை மொழிந்த தன்றே. | 5 |
1228 |
கேட்டலும் அதனைச் சீற்றங் கிளர்ந்திட நகைத்து நாதன் தாட்டுணை யுன்னித் தொன்னாட் சதமகன் வேண்ட ஆழி மாட்டுறச் செறித்த கையை மலரயன் பதத்தின் காறும் நீட்டினன் தவமே யன்றி நெடும்பொருள் பிறவு முண்டோ. | 6 |
1229 |
அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவுங் குறியோன் விந்த வெற்பின தும்பர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி வற்புற வூன்ற வல்லே மற்றது புவிக்கட் டாழ்ந்து சொற்பிலம் புகுந்து சேடன் தொன்னிலை அடைந்த தன்றே. | 7 |
1230 |
அள்ளலை யடைகின் றோரில் அரம்புகும் அடுக்க லஞ்சி வள்ளலை யருளிக் கேண்மோ மற்றுனை வழிப டாமல் எள்ளலை யிழைத்து மேன்மை இழந்தனன் தமியன் குற்றம் உளளலை எழுவ தெஞ்ஞான் றுரையெனக் கூறிற் றன்றே. | 8 |
1231 |
அன்னதோர் பொழுது தன்னில் அலைகடல் செறித்த அங்கை முன்னவன் விந்த வெற்பின் மொழியினை வினவி யான்போய் இந்நெறி யிடையே மீளின் எழுதியால் நீயு மென்னா நன்னகை யோடு சொற்றான் நாரதன் சூழ்ச்சிக் கொப்ப. | 9 |
1232 |
வன்புலப் புவிக்குள் விந்தம் மறைதலும் அறிவின் நீராற் புன்புலப் பகையை வென்றோன் கரத்தைமுன் போலச் செய்து துன்புலப் புற்ற சிந்தைச் சுரர்கள்பூ மாரி தூர்ப்பத் தென்புலப் பொதிய வெற்பிற் செல்வது சிந்தை செய்தான். | 10 |
1233 |
ஆயிடை விந்தம் பார்புக் கழுந்திட அகல்வா னத்துத தேயம்வௌ¢ ளிடைய தாகத் தினகரன் முதலாந் தேவர் பாய்சுடர் விளக்கம் யாண்டும் பரந்தன சிறையை நீங்கி ஏயென அளக்கர் நீத்தம் எங்கணுஞ் செறிவு மாபோல். | 11 |
1234 |
அதுபொழு தலரி யாதி அமரர்கள் அகத்தி யன்பாற் கதுமென அடைந்து போற்றிக் கைதொழு தெந்தை செய்த உதவியார் புரிவர் நின்னால் உம்பரா றொழுகப் பெற்றோம் பொதியமேல் இனிநீ நண்ணி இருத்தியெம் பொருட்டா லென்றார். | 12 |
1235 |
என்றலும் விழுமி தென்னா இசைவுகொண் டமரர் தம்மைச் சென்றிட வானிற் றூண்டித் தெக்கிணந் தொடர்ந்து செல்லக் குன்றமர் குடாது தேயங் குறுகும்வில் வலன்வா தாவி அன்றுயிர் இழப்ப நின்றார் அகத்தியன் வரவு கண்டார். | 13 |
1236 |
கண்டனர் இவனே போலுங் காய்சினத் தவுணர் ஆவி கொண்டனன் வேலை முன்னங் குடித்துமிழ் கின்ற நீரான் அண்டரை யருள்வா னாங்கொல் அடைந்தனன் அவனுக் கின்னே உண்டியை யுதவி ஆவி கொள்ளுதும் ஊனொ டென்றார். | 1 |
1237 |
என்றிவை புகன்ற பின்னர் இளவல்வா தாவி யொன்போன் குன்றதன் புடையில் ஓர்சார் கொறியுருக் கொண்டு போந்து மென்றழை புதலின் மேய வில்வலன் என்னு மேலோன் ஒன்றிய புலத்தின் மிக்கோர் உருவுகொண் டுற்றான் அன்றே. | 2 |
1238 |
மீதுறு சடையும் நீறு விளங்கிய நுதலும் வேடங் காதணி குழையின் சீருங் கண்டிகைக் கலனும் மேற்கொள் பூதியுந் தண்டுங் கையும் புனையுரி யுடையு மாக மாதவ வேடந் தாங்கி முனிவனேர் வல்லை சென்றான். | 3 |
1239 |
மெய்தரு புறத்துக் காமர் வியனுருக் கொண்டு தன்னுட் கைதவங் கொண்டு செங்கேழக் காஞ்சிரங் கனிபோல் மேய மைதிகழ் மனத்தன் நோ¢போய் வண்டமிழ் முனிவற் போற்றி ஐதென வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான். | 4 |
1240 |
அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன் இன்று முடிவுற வந்தீர் யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன் கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனித மாகும் படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை. | 5 |
1241 |
பணிதலும் ஒருதன் கையிற் பரவையம் புனலை வாரி மணிபடு பதுமம் போல வாய்க்கொளும் முனிவன் தீயோன் துணிவினை யுணரா னாகித் துண்ணென வுவகை தோன்ற இணையறு தவத்தின் மிக்கோய் எழுதியென் றிதனைச் சொற்றான். | 6 |
1242 |
ஆறெதிர் எண்ம ராகும் ஆயிர முனிவர் தம்பால் வேறுள தவத்தார் தம்பால் மிக்கநின் னியற்கை தன்னில் கூறுசெய் அணுவின் காறுங் குணமில சரதம் ஈது தேறுதி இருககை யேது செல்லுதும் வருக வென்றான். | 7 |
1243 |
என்றருள் முனியை நோக்கி ஈதென துறையுள் என்னச் சென்றனன் முடிவான் வந்த தீயவன் அவற்கொண் டேகி மன்றதன் இருக்கை யுற்று மரபுறு தவிசிற் சேர்த்திப் பொன்றிகழ் அடிகட் கேற்ற பூசனை புரிந்து சொல்வான். | 8 |
1244 |
எந்தைநீ யானும் ஏனை என்குலத் தவரும் உய்ய வந்தனை போலும் இந்நாள் மற்றென திருக்கை வைகி வெந்திடு புற்கை யேனும் மிசைநதனை எனக்குச் சேடந் தந்தருள் புரிந்து போதி தவத்தரில் தலைவ என்றான். | 9 |
1245 |
சொல்வல முனிவர் மேலோன் சூர்முதன் மருகா யுள்ள வில்வலன் மாற்றங் கேளா விழுமிது பரிவின் மிக்கோய் ஒல்வதோர் உணவு நின்பால் உவந்தியாம் அருந்திப் பின்னர்ச் சொல்வது கடனா மென்று செப்பினன் தீமை தீர்ப்பான். | 10 |
1246 |
மேலவன் இதனைக் கூற வில்வன் வணங்கி எந்தாய் சீலமோ டடிசில் செய்வன் சிறிதுபோ திருத்தி யென்று காலையங் கதனில் ஆண்டோர் கயப்புனல் படிந்து மூழ்கிச் சாலவும் புனித னாகி அடுவதோர் சாலை புக்கான். | 11 |
1247 |
அத்தலை நிலத்தை நீரால் ஆமயம் பூசி யாண்டுஞ் சித்திரம் உறுத்தி யாவுந் தேடிவால் வளையின் சின்னம் ஒத்ததண் டுலமா சேக ஒண்புன லிடையே இட்டு முத்திறம் மண்ணி மற்றோர் முழுமணிக் குழிசி உய்த்தான். | 12 |
1248 |
தாக்குறு திறலின் வெய்ய தழல்பொதி கருவி யான ஆக்கிய செய்த தொன்றில் அழலினை அதனுள் மூட்டித் தேக்ககில் ஆர மாட்டிச் சீருணத் தசும்ப ரொன்றில் வாக்கிய வுலைப்பெய் தேற்றி மரபில்வால் அரியுள் ளிட்டான். | 13 |
1249 |
பதனறிந் துண்டி யாக்கிப் பாலுற வைத்துப் பின்னர் முதிரையின் அடிசி லட்டு முன்னுறு தீம்பால் கன்னல் விதமிகும் உணாக்கள் யாவும் மேவுற அமைத்துக் கொண்டு புதுமணங் கமழுந் தெய்வப் புனிதமாங் கறியுஞ் செய்தான். | 14 |
1250 |
ஆற்றலால் மேடம் போலாய் ஆரிடர் உயிரை யெல்லாம் மாற்றுவான் அமைந்து இளவலை வலிதிற் பற்றிக் கூற்றமே போல மேவும் முனிவன்முற் கொணர்ந்து கையில் ஏற்றகூர்ங் குயத்தாற் காதி இருதுணி யாக்கி னானே. | 15 |
1251 |
அணிப்படு போர்வை நீக்கி அங்கமும் அகற்றி வாளால் துணிப்பன துணித்தும் ஈர்ந்துஞ் சுவைத்திடும் உறுப்பூன் எல்லாங் குணிப்பொடு குட்ட மிட்டுக் குழிசிகள் பலவிற் சேர்த்தி மணிப்புனல் கொண்டு முக்கால் மரபினால் மணணல் செய்து. | 16 |
1252 |
உரைத்தவக் கறிக்கு வேண்டும் உவர்முதல் அமைந்த நல்கி வருத்துறு கனன்மேற் சேர்த்தி வாதியிற் புழுக்கல் செய்தே அரைத்திடு கறியின் நுண்தூள் ஆதிதூய் இழுது பெய்து பொரிப்பன பொரித்திட்டாவி போந்திடா வண்ணம் போற்றி. | 17 |
1253 |
கறியினுண் பொடியும் ஏனைக் கந்தமார் துகளும் அந்நாள் வரையல்போ குற்ற தூய வாலரிப் பொடியும் நீவி உரைகெழு துப்பும் வாக்கி பொழுகுபல் காயங் கூட்டித் திறனொடும் அளாவி யாங்கோர் சிற்சில பாகு செய்து. | 18 |
1254 |
பின்னரும் பலகால் வேண்டும் பெற்றியிற் கரித்துச் செம்மி முன்னுற அளிக்க நின்ற முதிரையின் புழுக்கல் அட்டுச் செந்நல நீடுங் கன்னல் தீம்புளிங் கறியுஞ் செய்யா அன்னதோர் தொடக்கம் யாவும் அருளினன் அருளி லாதான். | 19 |
1255 |
ஆசினி வருக்கை யாதி அளவையில் கனிகள் கீறித் தேசமர் கன்னல் தீந்தேன் சேர்தரச் சிவணி யேனை வாசமும் மலரும் இட்டு வரம்பில அமைத்துப் புத்தேள் பூசனைக் குரிய அன்பாற் பொருக்கெனக் குவவு செய்தான். | 20 |
1256 |
குய்வகை யுயிர்ப்பின் மாந்திக் குவலயம் விரும்பு கின்ற ஐவகை உணவும் ஆறு சுவைபட அளித்துப் பின்னும் எவ்வகை யனவுந் தானே இமைப்பினில் அமைத்து வல்லே கவ்வையி னோடுஞ் சென்று கடமுனி கழல்மேல் தாழ்ந்தான். | 21 |
1257 |
எந்தைநீ இன்ன காலை இரும்பசி யுடற்ற ஆற்ற நொந்தனை போலும் மேனி நுணங்கினை தமியேன் ஈண்டுத் தந்தனன் உணவி யாவுந் தளர்வற நுகரு மாறு வந்தருள் என்று வேண்ட மற்றதற் கியைந்து போனான். | 22 |
1258 |
அட்டிடு சாலை மாட்டே அகத்தியற் கொடுபோய் ஆங்கண் இட்டதோர் இருக்கை தன்னில் இருத்தியே முகமன் கூறி மட்டுறு தூநீர் கந்த மலர்புகை தீபங்கொண்டு பட்டிமை நெறியிற் பூசை புரிந்துபின் பதநேர் குற்றான். | 23 |
1259 |
வேறு தௌ¢ளுஞ் சுடர்ப்பொன் இயல்கின்ற தட்டை திருமுன்னர் வைத்து நிரையா, வள்ளங்கள் வைத்து மிகுநாரம் உய்த்து மரபில் திருத்தி மறையோன், உள்ளங் குளிர்ப்ப அமுதன்ன உண்டி யுறு பேதம் யாவும் உதவா, வௌ¢ளம் படைத்த நறுநெய்ய தன்கண் விட்டான்தன் னாவி விடுவான். | 24 |
1260 |
முறைவைப்பு நாடி முதன்மைக்கண் மேவு முதிரைப் புழுக்கல் மறியின், கறிவர்க்கம் ஏனை யவைசுற்றின் மேய கவினுற்ற கிண்ண மிசையே, உறவிட்டு நீட மதுரித்த யாவும் உடனுய்த் தொழிந்த வளனுஞ், செறிவித்து மேலை முனிகைக்குள் நீடு சிரகத்தின் நீரு தவினான். | 25 |
1261 |
பெருநீர் அடங்கு சிறுகையி னூடு பெறவுய்த்த தோயம் அதனை, இருபான்மை உண்டி யதுசூழும் வண்ண மிசையோடு சுற்றியதுதான், ஒருகால் நுகர்ந்து பலகாலி னுக்கும் உதவிப்பின் உள்ள படியும், அருகாது செய்து மிகவே விரும்பி அயில்வான் தவங்கள் பயில்வான். | 26 |
1262 |
அடுகின்ற உண்டி கறிவர்க்க மேலை அவையன்பி லாத அசுரன், இடுகின்ற தேது முடிவெய்து காறும் இனிதுண்டு பின்றை முனிவன், கடிகொண்ட நாரம் அனையன் கொணர்ந்து கரமுய்ப்ப நுங்கி யெழுவான், பொடிகொண்டு தன்கை மலர்நீவி மிக்க புனல்கொண்டு மண்ணல் புரியா. | 27 |
1263 |
மைக்காரின் மெய்யன் அருள்கின்ற நாரம் வாய்க்கொண் டுமிழ்ந்து பலகால், முக்காலின் நுங்கி வாய்பூ முறைநாடி அங்க மெவையும், மிக்கானுமூறு புரியாவ தன்றி வேறுள்ள செய்கை பலவும், அக்காலை யங்கொர் புடையுற் றியற்றி அவண்வீற் றிருக்கும் அளவில். | 28 |
1264 |
வேதா அளித்த வரமுன்னி யேவில் வலனென்னும் வெய்ய அசுரன், போதா விருந்த முனியாவி கோடல் பொருளாக நெஞ்சின் நினையா, வாதாவி மைந்த இளையாய் விரைந்து வருகென்று கூற முனிவன், தீதார் வயிற்றின் இடையே எழுந்து திறல்மேட மாகி மொழிவான். | 29 |
1265 |
வேறு எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல எனதூனும் உண்ட கொடியோன், உண்ணாடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரங் கிழித்து வருவன், அண்ணாவில் வலனேயெ னக்கூறி ஏதம்பி அரிபோல் முழங்கி யிடலும், மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்ய திட்ட மாயந் தெரிந்து வெகுள்வான். | 30 |
1266 |
ஊனகொண்ட கறியாகி நுகர்வுற்ற வாதாவி உயிர்போகி யுண்ட இயல்பே, தான்கொண்டு முடிகென்று சடரத்தை யொருகாலை தமிழ் வல்ல முனித டவலுங், கான்கொண்ட எரிமண்டு சிறுபுன் புதற்போன்று கடியோ னுமுடி வாகவே, வான்கொண்ட லெனஅங்கண் முன்னின்ற வன்தம்பி மாய்வுற்ற துன்னி வருவான். | 31 |
1267 |
மெய்க்கொண்ட தொன்னாள் உருக்கொண்டு முனிதன்னை வெகுளுற்றொர் தண்ட மதனைக், கைக்கொண்டு கொலையுன்னி வருபோழ்தில் முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை, மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில் வலன்றானு மடிவெய்தலும், அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம்நீங்கி அப்பால் அகன்ற னனரோ. | 32 |
1268 |
செங்கை தூங்கிய தீர்த்த நீரொடுங் கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி மங்கு கின்றஅம் மைந்தர் நேருறா அங்கண் மேவினார் அருந்த வத்தர்போல். | 1 |
1269 |
நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக் காரின் மேனியர் கறங்கு கண்ணினர் தீரர் ஆற்றவுஞ் சினத்தர் ஒல்லென ஆர வாரஞ்செய் தணுகி னாரரோ. | 2 |
1270 |
அண்மை யாகுவர் அகல்வர் மாமுனி கண்முன் எய்துவர் கரந்து காண்கிலார் விண்மு கிற்குளே மேவி ஆர்ப்பரால் மண்மி சைப்பினும் வருவர் சூழ்வரே. | 3 |
1271 |
கோதில் ஆற்றல்சேர் கும்ப மாமுனி ஈது நோக்கியே இவரை முன்னமே காதி னாம்நமைக் கருதி வந்தனர் மாத வத்தினோன் மைந்தர் ஆதலால். | 4 |
1272 |
பேர்கி லாதஇப் பிரம கத்திநோய் தீரு மாற்றினால் சிவன தாள்களை ஆர்வ மோடிவண் அருச்சிப் பாமெனா நேரின் மாமுனி நினைந்து நின்றரோ. | 5 |
1273 |
ஆசில் கொங்கினுக் கணித்தின் ஓரிடை வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ ஈச னார்தமை இலிங்க மேயில் நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான். | 6 |
1274 |
தூய குண்டிகைத் தோயம் அன்றியே சேய மாமலர் தீபந் தீம்புகை ஆய போனகம் ஆதி யானவை ஏயு மாற்றினால் இனிது தேடினான். | 7 |
1275 |
விழுமி தாகிய விரதர் வீயவே வழியி ருந்திடும் வஞ்சர் ஆவிகொள் பழிய கன்றிடப் பரமன் தாள்மிசை அழிவில் அன்பொடே அருச்சித் தானரோ. | 8 |
1276 |
மங்கை பாகனை மற்றும் பற்பகல் சிங்கல் இன்றியே சிறந்த பூசைசெய் தங்கண் மேவினான் அவன்க ணாகிய துங்க வெம்பவந் தொலைந்து போயதே. | 9 |
1277 |
அனைய காலையில் அரிய தீந்தமிழ் முனிவ ரன்செயல் முற்றும் நாடியே துனியல் நாரதன் தொல்லை வானவர்க் கினிய கோமகன் இருக்கை எய்தினான். | 10 |
1278 |
தாணு வின்பதந் தன்னை உன்னியே வேணு வாகியே மெய்த்த வஞ்செயுஞ் சேணின் மன்னவன் செல்லு நாரதற் காணும் எல்லையிற் கழல்வ ணங்கினான். | 11 |
1279 |
எழுதி மன்னவெண் றெடுத்து மார்புறத் தழுவி நன்றிவட் சார்தி யோவெனா உழுவ லன்பினால் உரைப்ப வாசவன் தொழுத கையினான் இனைய சொல்லுவான். | 12 |
1280 |
இன்று காறுநின் னருளின் யானிவண் நன்று மேவினன் நாதன் பூசனைக் கொன்ற துண்டுதீங் குரைப்பன் கேட்டியால் குன்ற மன்னதோர் குணத்தின் மேலையோய். | 13 |
1281 |
கோதின் மாமல்ர் குழுவு தண்டலைக் கேது நீரிலை இறந்து வாடுமால் போதும் இல்லையால் பூசை செய்வதற் கீத ரோகுறை யென்றி யம்பினான். | 14 |
1282 |
வேறு இன்னவை பலவுங் கூறி இந்திரன் தவிசொன் றிட்டு முன்னுற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக அன்னதோர் அறிஞன் நின்னூர் அரசியல் பிறவும் ஈசன் தன்னருள் அதனால் மேனாள் வருவது தளரேல் மன்னோ. | 15 |
1283 |
ஆறணி சடையி னானுக் கருச்சனை புரிதற் கிங்கோர் ஊறுள தென்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே மாறிடுங் காலம் ஈண்டு வந்ததப் பரிசை யெல்லாங் கூறுவன் கேட்டி யென்னாக் கோமகற் குரைக்க லுற்றான். | 16 |
1284 |
தன்னிகர் இலாத முக்கண் சங்கரன் பொதிய வெற்பின் முன்னுறை கென்று விதும்ப முனிவனை விடுத்த வாறும் அன்னவன் விந்தந் தன்னை அகன்பிலத் திட்ட வாறும் துன்னெறி புரிந்த வெஞ்சூர் மருகரைத் தொலைத்த வாறும். | 17 |
1285 |
அப்பழி தீரு மாற்றால் ஐதெனக் கொங்கின் நண்ணி முப்புர மெரித்த தொல்லை முதல்வனை அருச்சித் தேத்தி மெய்ப்பரி வாகி அங்கன் மேவிய திறனும் முற்றச் செப்பினன் பின்னும் ஆங்கோர் செய்கையை உணர்த்த லுற்றான். | 18 |
1286 |
அருந்தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித் தங்கண் இருந்திடு கின்றான் நாடி ஏகினன் அவன்வா லாகப் பொருந்துகுண் டிகையின் மன்னும் பொன்னியா றதனை இங்கே வரும்பரி சியற்றின் உன்றன் மனக்குறை தீரு மென்றான். | 19 |
1287 |
குரவன்ஈ துரைத்த லோடுங் குறுமுனி கொணர்ந்து வைத்த வரநதி தனையிக் காவில் வரவியற் றிடுமா றென்கொல் பெருமநீ யுரைத்தி யென்னப் பேரமு தருத்தி யேத்திக் கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை என்றான். | 20 |
1288 |
குணப்பெருங் குன்ற மன்ன கோதிலா அறிவன் இன்ன புணர்ப்பினை இரைதத லோடும் புரந்தான் பொருமல் நீங்கிக் கணிப்பிலா மகிழ்ச்சி யெய்திக் காசிபன் சிறுவர் கொண்ட அணிப்பெருந் திருவும் நாடும் அடைந்தனல் போன்று சொல்வான். | 21 |
1289 |
எந்தைநீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும் உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர் வந்திடு மாறும் ஈண்டு வரவுன தருளால் இன்னே தந்திமா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான். | 22 |
1290 |
அருள்முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே புரிகரி முகவற் கைய பூசனை யென்று கூறிப் பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து சுரரெலாம் பரவு கின்ற தொல்லையம் பதத்தி லுற்றான். | 23 |
1291 |
சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவுங் கங்கை யாறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன் றன்னை மாறகல் மேனி கொண்டு வரன்முறை தாபித் தன்னான் சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர். | 24 |
1292 |
இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியுந் தேனும் முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றுந் தொக்குறு மதுர மூலத் தொடக்கமுஞ் சுவைத்தீம் பாலும் மிக்கபண் ணியமு மாக விருப்புற நிவேதித் தானால். | 25 |
1293 |
இவ்வகை நிவேதித் தேபின் எம்பிரான் றன்னை ஏத்த மைவரை யனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல் கவ்வையோ டனந்த கோடி கணநிரை துவன்றிச் சூழ அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர் கோமான். | 26 |
1294 |
அஞ்சலை மகவா னென்ன ஐங்கரக் கடவுள் கூற நெஞ்சகந் துணுக்கம் நீங்கி நிறைந்தபே ருவகை யெய்தி உஞ்சன னென்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது செஞ்செவே சென்னி தீண்டச் சென்றுமுன் வணக்கஞ் செய்தான். | 27 |
1295 |
பூண்டிகழ் அலங்கல் மார்பில் பொன்னகர்க் கிறைவன் முக்கண் ஆண்டகை சிறுவன் தாள்மேல் அன்பொடு பணிந்து போற்ற நீண்டதோர் அருளால் நோக்கி நின்பெரும் பூசை கொண்டாம் வேண்டிய பரிசென் என்றான் வேழமா முகனை வென்றான். | 28 |
1296 |
இந்திரன் அதுகேட் டைய எம்பிராற் காக ஈண்டோர் நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச் செந்தழ லுற்றா லென்னத் தினகரன் சுடரால் மாய்ந்து வெந்துக ளான தண்ணல் மேலடு புரமே யென்ன. | 29 |
1297 |
என்னலும் ஏந்தல் கேளா ஏழ்பெருந் தலத்தின் நீரும் முன்னுறத் தருகோ வான முழுப்பெருங் கங்கை தானும் பன்னதி பிறவும் இங்ஙன் விளித்திடோ பரவை யாவுந் துன்னுறு விக்கோ ஒன்று சொல்லுதி வேண்டிற் றென்றான். | 30 |
1298 |
ஐங்கரக் கடவுள் இவ்வா றறைதலும் அனைத்தும் நல்கும் பங்கயத் தயனு மாலும் பரவுறு பழையோய் இங்ஙன் அங்கவற் றொன்றும் வேண்டேன் அதுநினக் கரிதோ யானொன் றிங்குனைக் கேட்ப னென்னா இனையன இசைக்க லுற்றான். | 31 |
1299 |
சகத்துயர் வடபொன் மேருச் சாரலின் நின்றும் போந்து மிகத்துயர் எவர்க்குஞ் செய்யும் வெய்யள் சிறுவர்ச் செற்று மகத்துயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன் பொற்றாள் அகத்தியன் கொங்கின் பால்வந் தருச்சனை புரிந்து மேவும். | 32 |
1300 |
அன்னவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே பொன்னியென் றுரைக்குந் தீர்த்தம் பொருந்தியேஇருந்த தெந்தாய் நன்னதி யதனை நீபோய் ஞாலமேற் கவிழ்த்து விட்டால் இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீரு மென்றான். | 33 |
1301 |
பாகசா தனன்இம் மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி மாகயா னனத்து வள்ளல் மற்றித செய்து மென்னா ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை தன்னில் காகமாய் முனிபா லான கமண்டல மிசைக்கண் உற்றான். | 34 |
1302 |
கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மிதிற் பொன்னி சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவனென் றோரான் இங்கொரு பறவை கொல்லாம் எய்திய தென்று கண்டான். | 35 |
1303 |
கண்டனன் பிள்ளை செல்லக் கரதல மெடாநின் றோச்ச அண்டருக் கலக்கண் செய்த கயமுகத் தவுணற் செற்றேன் குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர்புனற் கன்னி யன்னான் பண்டையில் இசைவு செய்தான் பாரில்நீ படர்தி என்றான். | 36 |
1304 |
என்னலுங் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை நன்னதி போல விண்ணும் ஞாலமும்நடுங்க ஆர்த்துப் பொன்னியா றுலகந் தன்னில் பொள்ளெனப் பெயர்ந்த தன்றே. | 37 |
1305 |
பெயர்தலும் உமைதன் பிள்ளை பிள்ளையின் உருவம் நீத்துப் பயிறரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன்போற் செல்லச் சயமிகு தவத்தின் மேலோன் தன்மையங் கதனை நோக்கி உயிர்முழு தடவே தோன்றும் ஒருவன்போல் உருத்து நின்றான். | 38 |
1306 |
தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின் மேலோன் யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டுறு நதியைச் சிந்திப் போவனோ சிறிது மெண்ணா அகந்தையன் போலும் அம்மா யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின் என்றான். | 39 |
1307 |
விரைந்தன பின்ன ரேக மெய்வழி பாடு செய்வோர் அரந்தையை நீக்கும் எங்கோன் அச்சுறு நீரன் போல இரிந்தனன் போத லோடும் இருகையுங் கவித்த மாக்கித் துரந்தனன் முனிவன் சென்னி துளக்குறத் தாக்க உன்னி. | 40 |
1308 |
குட்டுவான் துணிந்து செல்லுங் குறுமுனிக் கணிய னாகிக் கிட்டுவான் விசும்பி னூடு கிளருவான் திசைக டோறும் முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன் கைக்கும் எட்டுவான் சேய னாகி ஏகுவான் எவர்க்கும் மேலோன். | 41 |
1309 |
இப்படி முனிவன் சீற்றத் தலமர யாண்டு மேகித் தப்பினன் திரித லோடுஞ் சாலவுந் தளர்ச்சி யெய்திச் செப்பரி திவன்றன் மாயஞ் செய்வதென் இனியா னென்னா ஒப்பருந் தவத்தோன் உன்ன எந்தைய· துணர்ந்தான் அன்றே. | 42 |
1310 |
ஓட்டமோ டுலவு முன்னோன் ஒல்லையில் தனது மேனி காட்டினன் முனிவன் காணாக் கதுமெனக் கலங்கி அந்தோ கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ ஈட்டொடு துரந்தேன் கொல்லென் றேங்கினன் இரங்கு கின்றான். | 43 |
1311 |
இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான் கொண்ட கரங்களை எடுத்து வானில் காருரும் ஏறு வெற்பின் உரங்கிழி தரவே நீங்கா துரப்பினில் வீழ்வ தேபோல் வரங்கெழு தனாது நெற்றி வருந்துறத் தாக்கல் உற்றான். | 44 |
1312 |
தாக்குதல் புரிந்த காலைத் தாரகப் பிரம மான மாக்கய முகத்து வள்ளல் வரம்பிலா அருளி னோடு நோக்கியுன் செய்கை என்னை நுவலுதி குறியோய் என்னத் தேக்குறு தமிழ்தேர் வள்ளல் இனையது செப்பு கின்றான். | 45 |
1313 |
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச் சிந்தனை புரிந்தேன் யாதுந் தௌ¤விலேன் அதற்குத் தீர்வு முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி யென்றான். | 46 |
1314 |
என்றலுந் தவிர்ந்து முன்னோன் இணையடி மிசையே பல்கால் சென்றுசென்றிறைஞ்சி யன்னோன் சீர்த்திய தெவையும் போற்றி உன்றிறம் உணரேன் செய்த தவற்றினை உளத்திற் கொள்ளேல் நன்றருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான். | 47 |
1315 |
புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டோர் வரந்தரு காமர் தண்கா வைத்தனன் அதுநீ ரின்றி விரைந்தது பொலிவு மாழ்கி வெறுந்துகள் ஆத லோடும் இரந்தனன் புனல்வேட் டெம்மை இயல்புடன் வழிபட் டிந்நாள். | 48 |
1316 |
ஆதலின் கோடிபோல் யாமுன் னரும்புனற் குடிகை மீது காதலித் திருந்து மெல்லக் கவிழத்தனம் அதனை ஈண்டுப் போதலுற் றிடவுஞ் சொற்றாம் பொறாதுநீ செய்த வற்றில் யாதுமுட் கொள்ளேம் அவ்வா றினிதென மகிழ்தும் அன்றே. | 49 |
1317 |
ஈண்டுநீ புரிந்த தெல்லாம் எமக்கிதோ ராட லென்றே காண்டுமா லன்றி நின்பால் காய்சினங் கொண்டேம் அல்லேம் நீண்டசெஞ் சடையெம் மையன் நேயன்நீ எமக்கும் அற்றே வேண்டிய வரங்கள் ஈதுங் கேண்மதி விரைவின் என்றான். | 50 |
1318 |
வேறு என்னா இதுசெப் பலும்எம் பெருமான் முன்னா கியதோர் முனிவன் பணியா உன்ன ரருள்எய் தலின்உய்ந் தனன்யான் நன்னா யகனே எனவே நவில்வான். | 51 |
1319 |
நின்பா லினும்அந நெடுமா லுணரான் தன்பா லினுமே தமியேன் மிகவும் அன்பா வதொர்தன் மையளித் தருள்நீ இன்பால் அதுவெ· குவன்எப் பொழுதும். | 52 |
1320 |
இன்னே தமியேன் எனவே இனிநின் முன்னே நுதலின் முறையால் இருகை கொன்னே கொடுதாக் குநர்தங் குறைதீர்த்¢ தன்னே யெனவந் தருள்செய் யெனவே. | 53 |
1321 |
முத்தண் டமிழ்தேர் முனிஈ தறைய அத்தன் குமரன் அவைநல் கினமால் இத்தன் மையவே அலதின் னமும்நீ சித்தந் தனில்வேண் டியசெப் பெனவே. | 54 |
1322 |
கொள்ளப் படுகுண் டிகையிற் குடிஞை வௌ¢ளப் பெருநீர் மிசையுற் றடிகள் தள்ளக் கவிழ்வுற் றதுதா ரணிமேல் எள்ளிற் சிறிதும் இலதென் றிடவே. | 55 |
1323 |
ஊனாய் உயிராய் உலகாய்* உறைவோன் மேனாள் அருள்செய் வியன்மா நதிதான் போனா லதுபோற் புனலொன் றுளதோ நானா டிடவே நலமா னதுவே. ( * சிவஞானிகள், “மரத்தை மறைத்தது மாமத யானை” என்று திருமூலர் கூறியதுபோல் உலகாதிகளையும் சிவபெரு- மானாகவே காண்கின்றார்கள். அல்லாதவர்கள் உலகாதி- களாகவே காண்கின்றார்கள்; ஆதலின் உலகாய் என்றார். ) | 56 |
1324 |
அந்நீர் மையினால் அடியேற் கிவண்நீ நன்னீர் நவையற் றதுநல் கெனவே கைந்நீர் மையினாற் கடுகின் துணையாம் முந்நீர் அயிலும் முனிவன் மொழிய. | 57/td> |
1325 |
காகத் தியல்கொண் டுகவிழ்த் திடமுன் போகுற் றபுதுப் புனலாற் றிடையே மாகைத் தலநீட் டினன்வா னுலவும் மேகத் திறைமால் கடல்வீழ்ந் தெனவே. | 58 |
1326 |
அள்ளிச் சிறிதே புனலம் முனிவன் கொள்ளப் படுகுண் டிகையுய்த் திடலும் உள்ளத் தைநிரப் பியொழிந் ததெலாம் வௌ¢ளத் தொடுபார் மிசைமே வியதே. | 59 |
1327 |
முன்னுற் றதுபோல் முனிகுண் டிகைநீர் துன்னுற் றதுமேல் தொலையா வகையால் என்னிப் புதுமை யெனநோக் கினனால் தன்னுற் றமனத் தவமா முனியே. | 60 |
1328 |
பேருற் றிடுமிப் பெருநீர் அதனில் வாரிச் சிறிதே வருகுண் டிகையில் பாரித் தனன்இப் படிமுற் றுறுவான் ஆரிப் படிவல் லவரா யினுமே. | 61 |
1329 |
அந்தத் திருமால் அயனே முதலோர் வந்தித் திடவே வரமீந் தருளி முந்துற் றிடுமூ லமொழிப் பொருளாம் எந்தைக் கரிதோ இதுபோல் வதுவே. | 62 |
1330 |
என்றே நினையா இபமா முகவற் சென்றே பணியாச் சிறியேன் குறையா ஒன்றே துமிலேன் உதவுற் றனைநீ நன்றே கவிழும் நதிநீ ரையுமே. | 63 |
1331 |
முந்தே முதல்வா முழுதுன் னருளால் அந்தே யளவும் அளியில் சிறியேன் உய்ந்தேன் இனியும் முனையுன் னுழிநீ வந்தே அருள்கூர் மறவேல் எனவே. | 64 |
1332 |
அற்றா கவென அருள்செய் தயலே சுற்றா வருதொல் படையோ டுமெழாப் பற்றா னவர்நா டுபரம் பொருள்சேய் மற்றா ரும்பியப் பமறைந் தனனே. | 65 |
1333 |
வேறு மறைகின்ற எல்லைதனில் குறுமுனிவிம் மிதமாய்மன் னுயிர்கள் எங்கும், உறைகின்ற தனிமுதல்வன் புதல்வன்றன் கோலத்தை உணர்ந்து போற்றி, அறைகின்ற காவிரியைக் கண்ணுற்று நகைத்து வெகுண் டருள்கை நாடி, உறைகின்ற கொங்குதனை ஒருவித்தென் றிசைநோக்கி யொல்லை சென்றான். | 66 |
1334 |
செற்றாலம் உயிரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள், பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை மார்கள், பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி முகின் மேனிப் புத்தேள் வைகுங், குற்றாலம் ஆவதொரு வளநகரைக் குறுமுனிவன் குறுகி னானால். | 1 |
1335 |
அப்பதியில் அச்சுதனுக் காலயமொன் றுளதம்மா அவனி மீதில் ஒப்பிலதோர் திருமுற்றம் அ·தென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ் செப்புவரா யிடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார், மெய்ப்படுநூல் முறைகண்டு மோகத்தால் தமதுமத மேற்கொண் டுள்ளார். | 2 |
1336 |
அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக்காணின் அழன்று பொங்கி, மூன்னுறுதொல் பகைஞரென மிகஇகழந்து மற்றவர்தம் முகநோக் காராய்த், துன்னெறியே மேற்கொண்டு மறைபயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித், தந்நெறியும் புரியாதங் கிருந்தனரால் அ·துணர்ந்தான் தமிழ்நர் கோமான். | 3 |
1337 |
குறுமுனிவன் ஆங்கவர்தஞ் செயலுணர்ந்து குற்றால மென்னும் மூதூர், மறுகினிடை யேநடந்து மாயவன்தன் ஆலயமுன் வருத லோடும் நெறிவருமவ் வாலயத்திற் செறிகின்ற வைணவர்கள் நெடிது நோக்கிச், செறுநர்தமைக் கண்டுபதை பதைப்பார்போல் வெய்துயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார். | 4 |
1338 |
ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனையதனால் உலகில் தேவர், எல்லாரும் அறியவைய மேற்றோனுக் கடியவன்நீ ஈண்டு செல்லச், செல்லாது கைத்தலத்தில் ஒருகோலுங் கொண்டனையாற் சிறியை போலும், நில்லாயெம் பெருமான்றன் மாநரம் அணுகாது நீங்கு கென்றார். | 5 |
1339 |
என்றிடலும் வெகுளாது நகைசெய்து மறைநெறியை யிகந்து நின்றீர், துன்றியிவண் உறைகின்ற துணரேன்இத் திறமெவருஞ் சொன்னார் இல்லை, நன்றுநெறி யென்றுவந்தேன் நும்பான்மை உணர்வேனேல், நான்இம் மூதூர், சென்றிடவும் நினையேனால் முனியற்க யான்மீண்டு செல்வே னென்றான். | 6 |
1340 |
பொதியமலை தனிலேகும் முனிவன்இது புகன்றிடலும் பொறாது நீயிப், பதியதனில் வருவதுவும் பாவமாம் ஈண்டுநீ படர்தி யென்ன, இதுசரதம் மொழிந்தீர்கள் தொல்லோர்தம் நூன்முறையும் ஈதேயென்னா, விதியருளுந் தக்கனார் வழிமுறையோர் தமைநீங்கி மீண்டு செல்வான். | 7 |
1341 |
சிட்டர்புகழ் கயிலைமலை காத்தருளுந் திருநந்தி தேவன் செங்கேழ், மட்டுறுபங் கயத்துறையும் நான்முகத்தோன் துருவாசன் மறைநூல் யாவுந், தட்டறவே உணர்பிருகு கவுதமன்கண் ணுவமுனிவன் ததீசி இன்னோர், இட்ட பெருஞ் சாபமெலாம் பொய்த்திடுமோ எனவுன்னி ஏக லற்றான். | 8 |
1342 |
ஏகலுறு குறுமுனிவன் உயிர்க்குயிராய் நின்றோனை இகழ்வார் தங்கண், மோகமுறும் அகந்தையினை முதலோடுங் களைவனென முன்னி முன்னாட், போகியதன் மாயையினால் இரதத்தின் ஆவிபடு பொன்னே போலப், பாகவத மாகுவதோர் உருக்கொண்டான் கருணையினாற் பரவை போல்வான். | 9 |
1343 |
ஆளுடைய நாயகன்பால் அன்புடையான் மாயவன்றன் அடியனேபோல், கோளுடைய மாயத்தான் மேனிகொண்டு மீண்டுமங்கட் குறுக லோடும், நீளிடையில் வரக்கண்ட வயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித், தாளிடையில் வீழ்ந்திடலும் நாரணனுக் காகவெனச் சாற்றி நின்றான். | 10 |
1344 |
அடிமுறையின் வணங்கியெழும் வேதியர்தங் களைநோக்கி அரிபால் அன்பு, முடிவிலைநும் பாலென்று மொழிந்தனர்அங் கதுகாண முன்னி வந்தாம், படியதனில் உமக்குநிகர் யாருமிலை நுமைக்கண்ட பரிசால் யாமுந், தொடர்வரிய பேருணர்வு பெற்றெனமென் றேபின்னுஞ் சொல்லல் உற்றான். | 11 |
1345 |
முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் முன்னம் இன்னே, அத்திகிரி தனிலிருப்பச் செல்கின்றோம் நமபெருமான் அமருங் கோயில், இத்தல மேல் உளதென்பர் அதுபாவும் விருப்புடையோம் என்ன அன்னோர், கைத்தலத்தோர் விரற்சுட்டி அதுதிருமால் இருக்கையெனக் காட்டலுற்றார். | 12 |
1346 |
காட்டுதலுங் கைதொழுது மாலுறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி, ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி யேத்திப், பாட்டிலுறு தொல்லடியார் தமைநோக்கி இவரை வழி படுதற் குள்ளம், வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான். | 13 |
1347 |
நன்றெனவே சிலரேகித் தூயதிரு மஞ்சனமும் நறுமென் போதும், மன்றலுறு செஞ்சாந்தும் அணித்துகிலும் ஏனையவும் மரபிற் கொண்டு சென்றுமுனி வரன்முன்னம் உய்த்திடலும் அனையவர்தந் திறத்தை நோக்கி, இன்றிவரை யருச்சனைசெய் விதிமுறையைப பார்த்திடுங்கள் யாரு மென்றே. | 14 |
1348 |
அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை அகத்துட் கொண்டு, சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக், குறுகுகுறு கெனஇருத்தி ஔளரக்கிற் புனைபாவை கோல மீதும், அறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான். | 15 |
1349 |
அல்லிமலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும் அறியொணாத், எல்லையிலாப் பரம்பொருளைத் தாபித்து மந்திரங்க ளெடுத்தக் கூறித், தொல்லையுருக் கொண்டுமலர் மஞ்சனமே முதலியன தூய ஆக்கி, ஒல்லைதனில் அருச்சிப்பக் காண்டலும்அவ் வந்தணர்கள் உருத்துச் சொல்வார். | 16 |
1350 |
காயத்தான் மிகச்சிறியன் முப்புரத்தை நீறாக்குங் கடவுட் காற்ற, நேயத்தான் இவ்விடையே முன்வந்தான் யாமிகழ நில்லா தேகி, ஆயத்தான் பாகவத வடிவாய்வந் திச்சமயம் அழித்தான் அந்தோ, மாயத்தான் பற்றுமினோ கடிதென்று குறுமுனியை வளைந்து கொண்டார். | 17 |
1351 |
பற்றிடுவான் வளைகின்றோர் தமைநோக்கி எரிவிழித்துப் பரவை தன்பால், உற்றவிடம விடுத்ததென முனிவனறன் வெகுளித்தீ உய்த்த லோடுஞ், சுற்றியது சுற்றியவர் தமைப்பின்னும் பொறிபடுத்தித் துரந்து செல்ல, மற்றவர்கள் இரிந்தேதம் பதியிழந்து சிதறினரால் மண்மே லெங்கும். | 18 |
1352 |
அன்னோர்கள் போயிடலும் இன்றுமுதல் சிவன்இடமீ தாயிற்றென்று, முன்னோனை அருச்சித்துப் பணிந்துவிடை கொண்டுதென்பால் முன்னிச் சென்று, பொன்னோடு மணிவரன்றி அருவியிழி தருபொதியப் பொருப்பில் நண்ணி, மன்னோமெய்த் தவம்புரிந்து வீற்றிருந்தான் அப்பரமன் மலர்ந்தான் உன்னி. | 19 |
1353 |
வேறு பூவிரி கின்ற காமர் பொதும்பர்சேர் பொதிய வெற்பில் தாவிரி கும்பத் தண்ணல் வந்திடு தன்மை சொற்றாம் மாவிரி கின்ற சாதி வனத்திடை மலர்ப்பூங் காவில் காவிரி போந்த வாறும் ஏனவும் கழறு கின்றோம். | 20 |
1354 |
கொடியுருக் கொண்டு முன்னங் குண்டிகை இருந்த பிள்ளை படிமிசை அதனைத் தள்ளப் படர்ந்தகா விரியின் றன்மை விடலருந் தளையின் நீக்கி வியனெறிப் படுத்த லோடும் அடிகளின் அருளாற் செல்லும் ஆருயிர் போன்ற தன்றே. | 1 |
1355 |
பண்டொரு தந்தி யானோன் படர்சிறைப் புள்ளாய்த் தள்ளக் குண்டிகை இருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை எண்டருந் தடையால் வல்லோன் இருங்கடத் திட்ட பாந்தாள் மண்டலத் தொருவன் நீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே. | 2 |
1356 |
ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவனூல் ஒழுக்குந் தொல்லை வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும் நீரார் போதத்தின் ஒழுக்கும் எங்கோன் புரிதரு கருணை யென்னும் ஓதத்தின் ஒழுக்கு மென்னக் காவிரி யோடிற் றன்றே. | 3 |
1357 |
தள்ளரும் பரவை ஏழுந் தரணியைச் சூழ்ந்து நின்ற உள்ளுறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப் பொள்ளெனப் புகுந்த தென்னப் புவியெலாம் பரவி ஆர்த்துத் தௌ¢ளிதிற் கலங்கி நீத்தந் தௌ¤கிலா தொழுகிற் றாமால். | 4 |
1358 |
தெண்டிரைப் புணரி யெல்லாந் தினைத்துணை யாக வாரி உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டு மெல்லை அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தி லேந்துங் குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற் குவமை உண்டோ. | 5 |
1359 |
தொல்லையிற் குறியோன் வந்தான் துய்க்குமோ இன்னு மென்னா வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின் எல்லையிற் படர்ந்த தென்ன இலைசெறி பொதும்பர் ஈட்டம் ஒல்லையிற் பரித்து மேல்கொண் டோடிய தொலிகொள் நீத்தம். | 6 |
1360 |
சந்தமும் அகிலுஞ் சங்குந் தரளமுங் கவரி தானுஞ் சிந்துரத் தெயிறும் பொன்னும் மணிகளுந் திரைமேற் கொண்டு வந்திழி நதியின் தன்மை வருணன்இப் பொருள்க ளெல்லாம் இந்திரன் தன்பால் ஒச்ச ஏகுதல் போன்ற மாதோ. | 7 |
1361 |
வரையெனுந் தடம்பொற் றேரும் மதகரித் தொகையும் மாந்தர் நிரைகளுந் தரங்க மாவும் நெறிக்கொடு மகவான் தன்பால் விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க் கரசன் மீது பொரவிடு தானை வௌ¢ளம் போவன போன்ற தன்றே. | 8 |
1362 |
ஆவதோர் இனைய வாற்றால் அலையினால் அகல்வான் முட்டிக் காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பாற் போவதோர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து நோற்குந் தாவறு வனத்திற் போதார் தண்டலை புகுந்த தன்றே. | 9 |
1363 |
ஓடுநீர் நீத்தப் பொன்னி யொல்லையிற் காமர் காவில் பீடுற வருத லோடும் பேதுறு மகவான் காணா ஆடினான் நகைத்தான் எங்கோன் அருச்சனை முடிந்த தென்று பாடினான் முதல்வன் றாளைப் பரவினான் படர்ச்சி தீர்ந்தான். | 10 |
1364 |
சீரினை யகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர் ஊரினைக் கவர்ந்து தன்னோர் உயிருக்கும் இறுதி நாடுஞ் சூரனை வென்றால் என்னத் தொலைவிலா மதர்ப்பு மிக்கான் ஆரவன் உளத்திற் கொண்ட உவகையை அறைதற் பாலார். | 11 |
1365 |
பாடுறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவா னேபோல் வாடுறு கின்ற தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி ஆடுறு பசிநோ யுற்றோர் அரும்பெறல் அமிர்தம் வந்து கூடுற நுகர்ந்தால் என்னக் குளிர்ப்பொடு தளிர்த்த தன்னே. | 12 |
1366 |
வானிறை கின்ற கொண்மூ வார்துளி தலைஇய பின்றைக் கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றா லென்ன மேனியுறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதுந் தானிறை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா. | 13 |
1367 |
வேறு வானில மளவிட வளர்ந்த புன்னைகள் ஆனவை முழுவதும் அரும்பு கின்றன தூநகை நித்திலத் தொடையல் மெய்யுடை நீனிற மாயவன் இலைஇய தொக்குமால். | 14 |
1368 |
தண்ணுறு பாசடை தயங்கு புன்னைகள் கண்ணுறு வியன்சினை கவினப் பூத்தன எண்ணுறு தாரகை ஈண்டி மொய்த்திட எண்ணுற முகிலினம் விளங்கிற் றென்னவே. | 15 |
1369 |
பண்படும் அளியினம் பயிலு றாதன சண்பக அணிமரந் தயங்கிப் பூத்தன எண்படு தபனியத் தியன்ற போதினை விண்படு தருக்கொடு மேவல் போன்றவே. | 16 |
1370 |
புயற்பட லந்தொடும் புதுமென் பாடலம் வியற்பட மலர்ந்தபூ விழுமென் வண்டினம் அயற்பட வூதுவான் வயந்தக் கம்மியன் செயற்படு மணிச்சிறு சின்னம் போலுமால். | 17 |
1371 |
விண்டொடர் மதிகதிர் மிளிருந் தாரகை கண்டிட வைகலுங் கணிப்பில் கண்ணடி மண்டல நிரைத்துமண் மாது வைத்தெனக் கொண்டலை யளவிய கோங்கு பூத்தவே. | 18 |
1372 |
மாமலர்க் கொன்றையும் மணிமென் பூவையுந் தாமிரு புடையுறத் தளிர்த்த செய்யமா ஏமுறு மாலயன் இடையில் வந்தெழு தோமறு பரஞ்சுடர்த் தோற்றம் போன்றவே. | 19 |
1373 |
ஆதவன் மீதுபோய் அசையுந் தாழைகள் மேதகு பாளைகள் மிசைதந் துற்றன பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய கோதறு நித்திலக் கோவை போன்றவை. | 20 |
1374 |
வச்சிர மேனிய வரைகொள் காட்சிய பச்சிளம் பூகம்வெண் பாளை கான்றன நச்சுறு சோலையா நங்கைக் கெண்ணிலார் எச்சமில் சாமரை இரட்ட ஏந்தல்போல். | 21 |
1375 |
மேற்றிகழ் செங்கர வீர மானவை ஆற்றவுஞ் சினைதொறும் அரும்பு கின்றன நாற்றடம் புயமுடை நாதற் கிந்திரன் ஏற்றிய மணிச்சுட ரென்ன லாயதே. | 22 |
1376 |
அல்லிடை யனறியே அலர்ந்த மாலதி வல்லிகள் தருவெனும் மகிழ்நர் தங்களைப் புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல். | 23 |
1377 |
ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள் பாசடை யிடையிடை பரவு கின்றன தேசுறு தருநிழல் திருவில் துஞ்சிய வாசவன் விழிகளின் மல்கு கின்றவே. | 24 |
1378 |
தொல்லையின் முறைநெறி யொருவித் தோயமேல் வல்லையில் அங்கிகள் வந்துற் றாலென அல்லியுஞ் சேயன அரத்த ஆம்பலும் புல்லிய கிடங்கினிற் பொலிந்து பூத்தவே. | 25 |
1379 |
பாயிரும் புனற்கயம் பரந்த பாசடை ஆயின இடையிடை அவிழ்ந்த பங்கயச் சேயலர் வண்டினந் திளைப்பச் சேர்வன காயெரி புகையொடு கானம் புக்கபோல். | 26 |
1380 |
எண்ணுமித் தருக்களுங் கொடியும் ஏனவுங் கண்ணுற மலர்வதும் அரும்புங் காட்சியும் வண்ணம தெற்றெனின் மாலைச் செக்கரும் விண்ணுறும் உடுக்களும் விரவிற் றொக்குமால். | 27 |
1381 |
இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால் நந்தன வனமெலாம் நன்று பூத்தலும் அந்தநன் மலர்கொடே யாதிக் கன்பினால் முந்துறு பூசனை முயல முன்னினான். | 28 |
1382 |
விடியல்வை கறை* தனின் மேவி வண்டுதேன் புடையுறு முன்னரே புரையி லாததோர் கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுதல் அடிகளில் விதிமுறை அருச்சித் தானரோ. ( * விடியல்வைகறை - மிக விடியற் காலம். ) | 26 |
1383 |
அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை இப்படி அருச்சனை இயற்றி வைகலும் ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன் வைப்புறு சண்பக வனத்தின் வைகினான். | 30 |
1384 |
அந்நாள் அதனில் அவுணர்க் கிறைஏவல் தன்னான் மிகவுந் தளர்ந்து சிலதேவர் எந்நாள்இப் புன்மை எமைநீங்கும் என்றிரங்கிப் பொன்னாடு விட்டுப் புவிதன்னிற் போந்தனரே. | 1 |
1385 |
தீந்துமிழின் வைப்பான தெக்கிண தேயநண்ணி மாந்தர்புகழ் காழி வனம்போந்து வானவர்தம் வேந்துதனைக் கண்டு விரைநாண் மலரடிக்கீழ்ப் போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார். | 2 |
1386 |
ஒன்றே தருமம் ஒழிந்து புவனமெலாஞ் சென்றே அடுகின்ற தியவுணர் தந்துடக்கில் அன்றே எமைவிட் டகன்றாய் உனக்கிதுவும் நன்றே எமையாளும் நாயகனும் நீயன்றோ. | 3 |
1387 |
கோட்டுக் களிற்றோடுங் கோளரியோ டும்புவியை வாட்டுற் றிடுஞ்சூர வல்லியத்தின் வன்சிறையில் ஈட்டுற்ற தேவர் எனும்பசுக்கள் தம்மையெலாங் காட்டிக் கொடுத்துக் கரந்ததென்கொல் காவலனே. | 4 |
1388 |
ஏனம் பசுமான் இரலை மரைபடுத்த ஊனும் வடியும் ஒலிகடலின் உள்ளபல மீனுஞ் சுமந்து விறலசுரர்க் கேவல்செய்து மானங் குலைந்து மறந்தோம் மறைகளுமே. | 5 |
1389 |
மையார் களத்தார் வரம்பெற்ற சூரனுக்குச் செய்யாத ஏவலேலாஞ் செய்தோம் நெறிநீதி எய்யாத மான மிவையெல்லாந் தானிழந்தோம் ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே. | 6 |
1390 |
முந்நாளுந் தந்தி முகத்தவுணன் ஏவல்செய்து பன்னாள் உழன்றோம் பரமர் அதுதீர்த்தார் பின்னாளுஞ் சூரன் பெயர்த்தும் எமைவருத்த இந்நாடி ரிந்தோம் இனித்தான் முடியாதே. | 7 |
1391 |
எந்நாளும் உன்னைப் புகலென் றிருந்தவியாந் துன்னா அவுணராற் சோர்ந்து துயருழப்ப உன்னா ருயிர்காத் தொளித்திங் கிருந்தனையால் மன்னா உனக்குத் தகுமோ வசையன்றோ. | 8 |
1392 |
சூரன் முதலாச் சொலப்பட்ட வெவ்வசுரர் வீரங் குலைந்து விளிவதற்கும் இவ்வுலகில் ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள் தீரும் படிக்குஞ் செயலொன்று செய்வாயே. | 9 |
1393 |
என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும் மன்னா கியமகவான் மாற்றம் அவைகேளா அன்னார் மனங்கொண்ட ஆகுலத்தைக் கண்டுநெடி துன்னா அயரா உயரா உரைக்கின்றான். | 10 |
1394 |
மாயை உதவ வருகின்ற வெஞ்சூரன் தீய பெருவேள்வி செய்யத் தொடங்குமன்றே போய நமதுரிமை பொன்னாடுந் தோற்றனமென் றோயு முணர்வால் உமக்கங் குரைத்திலனோ. | 11 |
1395 |
அற்றே மகஞ்செய் தமலன் தருவரங்கள் பெற்றே நமது பெரும்பதமுங் கைக்கொண்டு சற்றேனும் அன்பில்லாத் தானவர்கோன் தாழ்வான குற்றே வலைநம்பாற் கொண்டான் குவலயத்தே. | 12 |
1396 |
நீள்வா ரிதியின் நெடுமீன் பலசுமந்து தாழ்வாம் பணிபிறவுஞ் செய்துந் தளர்ந்துலகில் வாழ்வா மெனவே மதித்திருந்தோம் மற்றதன்றிச் சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே. | 13 |
1397 |
என்னே அத்தீமை யெனவே வினவுங்காற் பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்குங் கொன்னே எனையுங் கொடுஞ்சிறையில் வைப்பதற்கு முன்னே நினைந்தான் முறியில்லாத் தீயோனே. | 14 |
1398 |
ஆன செயலுன்னி அனிகந் தனைநம்பால் வானுலகில் உய்ப்ப மதியால் அ·துணர்ந்து நானும் இவளும் நடுநடுங்கி அச்சுற்று மேனி கரந்து விரைந்துவிண்ணை நீங்கினமால். | 15 |
1399 |
மீனும் வடியும் வியன்தசையுந் தான்சுமந்த ஈன மதுவன்றி ஈதோர் பழிசுமக்கின் மானம் அழிய வருமே அதுவன்றித் தீன முறுசிறையுந் தீராது வந்திடுமே. | 16 |
1400 |
வெய்யவர்தம் வன்சிறையின் வீழின் முடிவில்லா ஐயன் அடிகள் அருச்சித் தியாமெல்லாம் உய்ய அவுணர் உயிரிழப்ப மாதவத்தைச் செய்யும் நெறியுண்டோ வெனச்சிந்தை செய்தனனே. | 17 |
1401 |
சிந்தை அதனில் இனைய செயலுன்னி அந்த மறுதுயரத் தாழும் நுமைவிட்டு வந்து புவியின் மறைந்துதவஞ் செய்துமுக்கன் எந்தை அடிகள் அருச்சித் திருந்தனனே. | 18 |
1402 |
அல்லல் புரியும் அவுணர்பணி யால்வருந்தித் தொல்லையுள மேன்மையெலாந் தோற்றனமே மற்றினிநாம் எல்லவரும் வௌ¢ளி மலைக்கேகி இறைவனுக்குச் சொல்லி நமது துயரகற்றிக் கொள்வோமே. | 19 |
1403 |
வம்மின் எனவுரைப்ப வானோர் அதுகேளா வெம்மி னதுகண்ட வியன்கண் டகியெனவும் அம்மென் மயிலெனவும் ஆடி நகைசெய்து தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றலுற்றார். | 20 |
1404 |
கோவுநீ எங்கள் குரவனுநீ தேசிகன்நீ தேவுநீ மேலாந் திருவுநீ செய்தவநீ ஆவிநீ மற்றை அறிவுநீ இன்பதுன்பம் யாவுநீ யாகில் எமக்கோர் குறையுண்டோ. | 21 |
1405 |
பார்த்துப் பணித்த பணிசெய்து நின்றன்னை ஏத்தித் திரிதல் எமக்குக் கடனாகும் நீத்துத் துயர நெறியுறுத்தி எம்மையென்றுங் காத்துப் புரத்தல் உனக்குக் கடன்ஐயா. | 22 |
1406 |
தேரா அவுணர் திறந்தன்னை முன்தடிந்தாய் சூரா தியருயிருங் கொள்ளுநெறி சூழ்கின்றாய் பாராள் பவர்க்கும் பலமுனிவர்க் குஞ்சுரர்க்கும் ஆராயின் நீயன்றி யாரே துணையாவார். | 23 |
1407 |
ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான் காதலாய் அத்தன் கயிலைக் கெமைக்கொண்டு போதுநீ யென்னப் புரந்தரனும் நன்றென்று கோதிலா உள்ளத் தொருசூழ்ச்சி கொண்டனனே. | 24 |
1408 |
ஆவ தொருகாலை அமரர்கோன் தானெழுந்து தேவர் தமைநோக்கிச் சிறிதிங் கிருத்திரென ஏவரையும் அங்கண் இருத்தியொரு தானேகிப் பாவை அயிராணி பாங்கர் அணுகினனே. | 25 |
1409 |
அன்னம் பொருவு நடையாள் அவன்வரலும் முன்னங் கெதிரா முறையாற் பலமுறையும் பொன்னங் கழலிணையைப் பூண்டு வணங்கியெழீஇ என்னிங்கொ ரெண்ணமுடன் ஏகிற் றிறையென்றான். | 1 |
1410 |
அம்மொழியைக் கேளா அரசன் உரைசெய்வான் வெம்மைபுரி சூரன் வியன்பணியா லேவருந்தி எம்மை யடைந்தார் இனையசில தேவர் தம்முன் இடர்பலவுஞ் சாற்றி இரங்கினரே. | 2 |
1411 |
அன்னார் மனங்கொண்ட ஆகுலமும் நந்துயரும் பொன்னார் சடைமுடியெம் புண்ணியற்குத் தாம்புகலின் இந்நாள் அவுணர்க் கிறுவாய் தனைப்புரிந்து தொன்னான் உரிமை யளிப்பன்எனுந் துணிவால். | 3 |
1412 |
ஆகின்ற துன்பத் தழலாற் பதைபதைத்து வேகின்ற சிந்தை வியன்அமரர் தம்முடன்யான் பாகொன்று தீஞ்சொல் உமைபாகன் பணிவரைக்குப் போகின்றேன் இது புகலுதற்கு வந்தனனே. | 4 |
1413 |
என்னும் பொழுதில் இடருற் றிகல்வாளி தன்னங்கம் மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென அன்னம் பொருவு நடையாள் அயிராணி மன்னன் திருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே. | 5 |
1414 |
வீழ்ந்தாள் தரிக்கரிதாம் வெய்ய துயர்க்கடலில் ஆழ்ந்தாள் தனதறிவும் அற்றாள் பிரியாது வாழ்ந்தாளென் செய்வாள் மகவான் அதுகண்டு தாழ்ந்தா குலத்தோ டெடுத்தான் தடக்கையால். | 6 |
1415 |
ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத்தன் ஊருமிசை யேற்றி உணர்ச்சிவரும் பான்மையெலாஞ் சேரவொருங் காற்றச் சிறிதே தௌ¤வுற்றாள் காரின் மலிகின்ற மின்போலுங் காட்சியினாள். | 7 |
1416 |
சிந்தை மயக்கஞ் சிறிதகன்று தேற்றம்வர முந்தை இடர்வந்து முற்றுந் தனைச்சூழ்ந்த வந்த மடமான் அதுபோழ்தில் தன்னுள்ளம் நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள். | 8 |
1417 |
பொன்னாடு விட்டுப் புவியின் வனத்திருந்து முன்னார் அருள்கொண் டுவப்புற்று மேவினனால் என்னா ருயிரே எனைநீ பிரிவாயேல பின்னர் துணையான் பிழைக்கும் நெறியுண்டோ. | 9 |
1418 |
வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும் மேகத் திறமும் வியன்மதியு மாவதுபோல் நாகத் துறைவோர்க்கு நாயகமே நீயலதென் சோகத்தை நீக்கித் துணையாவார் வேறுண்டோ. | 10 |
1419 |
அன்றி யுனைப்பிரிந்தும் ஆவிதனைத் தாங்கவல்லேன் என்றிடினும் யானொருத்தி யாருந் துணையில்லை ஒன்றுநெறி நீதி உணராத தீயவுணர் சென்றிடுவர் நாளும் அவர்கண்டால் தீங்கன்றோ. | 11 |
1420 |
நீடு புகழ்சேர் நிருதர்கோன் சூழ்ச்சியினால தேடரிய பொன்னுலகச் செல்வத்தை விட்டிந்தக் காடுதனில் வந்து கரந்து தவம்புரிந்து பாடுபடு மாறும் பழிக்கஞ்சி யேயன்றோ. | 12 |
1421 |
தீய அவுணர் திரிவர் அவர்சிறியர் மாயை பலபலவும் வல்லார் பவமல்லால் ஆய தருமம் அறியார் பழிக்கஞ்சார் நீயும் அ·துணராய் அன்றே நெடுந்தகையே. | 13 |
1422 |
உன்னன் புடைய வொருமகனும் இங்கில்லை துன்னுஞ் சுரருமில்லை தொல்களிற்றின் வேந்துமில்லை பின்னிங் கொருமா தருமில்லை பெண்ணொருத்தி தன்னந் தனியிருக்க அஞ்சேனோ தக்கோனே. | 14 |
1423 |
பல்லா றொழுகிப் பவஞ்செய் அவுணரெனும் ஒல்லார் எனைக்காணின் ஓடிவந்து பற்றினர்போய் அல்லா தனபுரிவ ரானால் அனையபழி எல்லாமுன் பாலன்றி யார்கண்ணே சென்றிடுமே. | 15 |
1424 |
மன்னே இதுவோர் துணிவுரைப்பன் மன்னுயிர்கொண் டின்னே தமியேன் இரேன்உலகில் யாவரையும் முன்னே படைத்தளிக்கும் முக்கணர்தம் வெற்பினுக்குன் பின்னே வருவேன் பெயர்வா யெனவுரையா. | 16 |
1425 |
பின்றாழ் குழலி பெருந்துயரத் தோடெழுந்து நின்றாள் இறையுன்னி நேயத் தொடுநோக்கி நன்றால் உனது திறனென்று நாகரிறை சென்றார்வ மோடவளைப் புல்லியிது செப்புகின்றான். | 17 |
1426 |
வாராய் சசியே வருந்தேல் அமரருடன் காரார் களத்தோன் கயிலைக் கியான்போனால் ஆராய்ந்து நின்னை அளிப்பவர்அற் றாலன்றோ பேரார்வ மோடெனது பின்நீ வருவதுவே. | 18 |
1427 |
செய்ய சடைமேற் சிறந்தமதிக் கோடுபுனை துய்யவனும் வேலைத் துயின்றோனுஞ் சேர்ந்தளித்த ஐயன் எமக்கோர் அரணாகி யேயிருக்க நையல் முறையாமோ நங்காய் நவிலுதியால். | 19 |
1428 |
ஏவென்ற கண்மடவாய் ஈசனருள் அன்னோனை வாவென் றளியால் வழுத்திமனத் துன்னின்இங்கே மேவுங் கயிலையில்யான் மீண்டு வருந்துணையுங் காவென் றுனைஅவன்பாற் கையடையா நல்குவனால். | 20 |
1429 |
ஆற்றல் பெரிதுடைய ஐயனே நின்றன்னைப் போறறியருள் செய்யும் பொருந்துதியால் ஈண்டேன்று தேற்றுதலும் அன்னான் சிறப்பெவன்கொல் செப்புகெனக் கோற்றொடிகேள் என்னா அமரேசன் கூறுகின்றான். | 21 |
1430 |
முன்னம் பரமன் அருளின்றி முகுந்த னாதி மன்னுஞ் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக் கன்னங் கரிய விடம்வந்துழிக் காரி னங்கள் துன்னும் பொழுதிற் குயில்போல் துணுக்குற் றிரிந்தார். | 1 |
1431 |
அண்ணற் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செந்தீ வண்ணத் தமலன் அடிபோற்ற வருந்தல் என்றே உண்ணற் கரிய பெருநஞ்சினை உண்டு காத்துக் கண்ணற்கும் ஏனை யவர்க்கும்மிவை கட்டு ரைப்பான். | 2 |
1432 |
இன்னுங் கடைமின் அமுதம் மெழுமென்று கூற அந்நின் றவர்பாற் கடலின்கண் அடைந்து முன்போற் பின்னுங் கடைந்தார் இபமாமுகப் பிள்ளை தன்னை முன்னம் வழிபட் டிலர்வந்து முடிவ தோரார். | 3 |
1433 |
என்னா யகற்கு வழியா டியற்றாத நீராற் கொன்னார் கடலின் நடுமத்தங் குலைந்து வீழ்ந்து பன்னாகர் வைகும் இடஞ்செல்லஅப் பான்மை நோக்கி அன்னானை அர்ச்சித் தனர்அச்சுத னாதி யானோர். | 4 |
1434 |
ஆரா தனைசெய்துழி மந்தர மாதி மைந்தன் பேரா அருளால் பிலம்நின்று பெயர்ந்து முன்போல் வாரா நிலைபெற் றிடலோடு மகிழ்ந்து போற்றிக் காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார். | 5 |
1435 |
கடைகின்றுழிச் செம்மதி யாமெனக் காமர் செம்பொன் அடைகின்ற கும்பத் தெழுந்திட்ட தமுத மங்கண் மிடைகின்ற தொல்லைச் சுரர்தானவர் யாரும் வெ·கி உடைகின்ற வேலையென ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார். | 6 |
1436 |
எம்மால் இதுவந் துளதால் எமக்கேயி தென்றே தம்மா சையினாற் சுரர்தானவர் தம்மின் மாறாய்த் தெம்மா னமுடன் பொரவுன்னலுந் தீர்வு நோக்கி அம்மால் விரைவின் ஒருமோகினி ஆயி னானே. | 7 |
1437 |
மூலம் பிறந்த விடம்போல் அழன்மூண் டிடாமல் நீலம் பிறந்து பிறர்அச்சுற நேர்ந்தி டாமல் ஞாலம் பிறந்தோர் சுரர்தானவர் நச்ச ஆங்கோர் ஆலம் பிறந்த தெனமோகினி யாகி நின்றான். | 8 |
1438 |
சேணார் உலகிற் புவிதன்னில் திசையி லெங்குங் காணாத வப்பெண் ணுருக்கண்டனர் காதல் கைமிக் கூணார் அமுதந் தனைவிட்டு முன்னொன்று கண்டோர் மாணா கியபல் பொருள்கண்டென வந்து சூழ்ந்தார். | 9 |
1439 |
மெய்த்தா மரையே முதலாய விசிக நான்கும் உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப் பித்தாய் உணர்வு பிழையாகிப் பெரிது மாலாய் அத்தா ருகமா முனிவோரினும் ஆர்வ மிக்கார். | 10 |
1440 |
எண்ணா அவுணர் தொகையல்லதை எந்தை மாயம் உண்ணாடு வானோர் களும்பெண்மயல் உற்று நின்றார் மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் பெண்ணாசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும். | 11 |
1441 |
பூண்டுற்ற கொங்கைப் பொலன்மோகினி யான புத்தேள் ஆண்டுற் றவர்தங் களைநோக்கி அமரை நீங்கும் ஈண்டுற் றனன்யான் அமுதும் முளதேது நீவிர் வேண்டுற்ற தும்பால் உறக்கொண்மின் விரைவின் என்றான். | 12 |
1442 |
மாலா னவன்அங் கதுகூற மனந்தி ரிந்து நோலா மையினால் இறக்கின்றவர் நோக்கி யெங்கள் பாலா வதுநீ யெனமுன்வரும் பான்மை நாடி மேலாம் அமுதே எமக்கென்றனர் விண்ணு ளோர்கள். | 13 |
1443 |
வானா டவர்நல் லமுதங்கொடு மாயை நீங்கிப் போனார் ஒருசார் அவரோடு பொருத தீயோர் தேனார் மொழிமோ கினியாகிய செங்கண் மாலை ஆனா விருப்பிற் கொடுபோயினர் ஆங்கொர் சாரில். | 14 |
1444 |
கொண்டே கியதா னவர்தங்கள் குழுவை நோக்கித் தண்டேன் மலர்ப்பா யலின்என்னைத் தழுவ வல்லான் உண்டே இதனில் ஒருவீரன் உவனை இன்னங் கண்டேன் இலையென்றனன் பெண்ணுருக் கொண்ட கள்வன். | 15 |
1445 |
ஈறாம் அவுணர் பலரும்மிது கேட்டெ னக்கு மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன் வீறா கியவீ ரனும்யானென வீற்று வீற்றுக் கூறா எனையே புணரென்று குழீஇயி னாரே. | 16 |
1446 |
கொம்மைத் துணைமென் முலையண்ணலைக் கூடயாரும் வெம்மைப் படலால் இகல்கொண்டனர் வேறு வேறு தம்மிற் பொருது முடிந்தார் கிளைதம்மி லுற்ற செம்மைக் கனலால் முடிவுற்றிடுஞ் செய்கை யேபோல். | 17 |
1447 |
அன்னார் தொகையில் இருவோர்அரி மாயை யுன்னி என்னாம் இவரோ டிறக்கிறனம் என்று நீங்கித் தொன்னாள் உருவந் தனைமாற்றிச் சுரர்கள் போலாய்ப் பொன்னா டவர்தங் குழுவோடு புகுந்து நின்றார். | 18 |
1448 |
மாண்டார் அவுணர் அதுநோக்கி வரம்பின் மாயம் பூண்டாரும் வெ·க மடமாதெனப் போந்த கள்வன் மீண்டான் அமரர் பலரும் விருப்புற்று மேவ ஈண்டாழி தன்னில் அமுதந்தனை ஈத லுற்றான். | 19 |
1449 |
ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தி னூடு போயங் கிருந்த இருகள்வரும் பொற்பு மிக்க மாயன் பகிரும் அமிர்த்ந்தனை மந்தி ரத்தால் ஆயும் படிகொண் டிலர்வல்லையின் ஆர்த லுற்றார். | 20 |
1450 |
தண்டா மரைக்குப் பகைநண்பெனச சாரும் நீரார் கண்டார் புடையுற் றவரிங்கிவர் கள்வ ரேயாம் உண்டார் அமுதங் கடிதென் றுளத்துன்னி யங்கண் விண்டான் அவற்குக் குறிப்பால் விழிகாட்டி னரால். | 21 |
1451 |
காட்டுற் றிடலும் அரிநோக்கியிக் கள்வ ரேயோ வீட்டுற்ற வானோ ருடன்உண்குவ ரென்று தன்கை நீட்டுற் றிடுசட் டுவங்கொண்டு நிருதர் சென்னி வீட்டிச் சுரருக் கமுதூட்டி விருந்து செய்தான். | 22 |
1452 |
அண்டத் தவர்முன் னருந்துற்ற அமுத மன்னார் கண்டத் திடையே வருமுன்னது கண்டு மாயன் துண்டித்த சென்னி யழிவற்ற துணிந்த யாக்கை முண்டத் துடனே துணிபட்டு முடிந்த வன்றே. | 23 |
1453 |
மாளாத சென்னி யுடைத்தானவர் மாண்பு நோக்கி நீளார் அமுதுண்டவர் விண்ணிடை நிற்ப ரென்னாத் தாளால் உலகம் அளந்தோன் அவர்தங் களுக்குக் கோளா நிலையை இறையோன் அருள்கொண்டு நல்க. | 24 |
1454 |
புன்னாகம் நாக மணிவான் அடிபோற்றி நோற்றுச் செந்நாக மோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப் பின்னாக முன்னந் தமைக்காட்டிய பெற்றி யோரை அந்நாக மீது மறைப்பார் அமுதுண்ட கள்வர். | 25 |
1455 |
வேறு கெழிய ராகுவுங் கேதுவு மேயென மொழிய நின்ற முதற்பெயர் தாங்கியே விழுமி தாகிய வெய்யவ னாதியாம் எழுவர் தம்மொ டிருவரும் ஈண்டினார். | 26 |
1456 |
ஈது நிற்கமுன் இன்னமு தந்தனை ஆத ரத்தொ டயின்றவிண் ணோர்தொழ ஓத வேலை யொருபுடை யாகவே மாது ருக்கொண்ட மாதவன் வைகவே. | 27 |
1457 |
நால்வ கைப்பட நண்ணிய சத்தியுள் மாலும் ஆதலின் மற்றது காட்டுவான் ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறுங் கோல மெய்திக் குறுகினன் அவ்விடை. | 28 |
1458 |
தண்டு ழாய்முடி யான்தனி நாயகற் கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான் உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ கொண்ட வேடம் இனிதென்று கூறினான். | 29 |
1459 |
ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும் நாணி இவ்வுரு நல்கிய தன்மையாள் காணி யாயுனைக் காதலித் துற்றனள் பேணி நிற்பதெ னென்னைப் பெருமநீ. | 30 |
1460 |
ஆதி காலத் தயன்செயல் முற்றிட மாதை மேவிட வந்துனை வேண்டினங் காத லோவன்று காரண னாகையின் மீது சேர்தரும் வீரியன் அல்லையோ. | 31 |
1461 |
நெற்றி யங்கண் நிமல உனக்கிகல் பற்ற தில்லையெப் பான்மையர் கண்ணினும் அற்ற தாக என்னாகந் தழுவுவான் உற்ற காதலும் உண்மைய தன்றரோ. | 32 |
1462 |
என்ன காரணம் எண்ணிக்கொல் ஏகினை அன்ன பான்மை யறிகிலன் எம்பிரான் இன்ன தாடலை நீயல்ல தேவரே பின்னை நாடி யறிவுறும் பெற்றியோர். | 33 |
1463 |
அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ. | 34 |
1464 |
என்று மாயன் இசைத்தலும் எம்பிரான் அன்று நீம் நமக்கொரு சத்திகாண் அன்று தாருகத் தந்தணர் பாங்குறச் சென்ற போழ்தினுஞ் சேயிழை யாயினாய். | 35 |
1465 |
முன்னை வேதன் முடிந்தனன் போதலும் உன்னொ டேவந் துவப்பொடு கூடினோம் பின்னர் இந்தப் பிரமனை யுந்தியால் அன்னை யாகி அளித்தனை அல்லையோ. | 36 |
1466 |
ஆகை யாலுன் அணிநலந் துய்த்திட ஓகை யால்இவண் உற்றனன் செல்கென மாகை யாரப் பிடிப்ப வருதலும் போகை யுன்னிப் பொருக்கென ஓடினான். | 37 |
1467 |
நாணி ஓடிய நாரண னைப்பிறை வேணி யண்ணல் விரைவுட னேகியே பாணி யாலவன் பாணியைப் பற்றினான் சேணி னின்று திசைமுகன் போற்றவே. | 38 |
1468 |
பற்றி யேகிப் படிமிசை நாவலாற் பெற்ற தீவிற் பெருங்கடற் சார்பினின் மற்று நேரில் வடதிசை வைப்பினில் உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான். | 39 |
1469 |
நண்ணி யேதனி நாயகன் அவ்விடைப் பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன் உண்ணெ கிழ்ந்து மயக்குற் றுருகியே எண்ணில் இன்புறக் கூடினன் என்பவே. | 40 |
1470 |
மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும் ஏன்று கூடிய வெல்லையில் அன்னவர் கான்று மிர்ந்த புனல்கண்டகி யென ஆன்ற தோர்நதி யாகிஅ கன்றதே. | 41 |
1471 |
அந்த நீரின் அகம்புறம் ஆழிகள் தந்து வச்சிர தந்தி யெனப்படும் முந்து கீட முறைமுறை யாகவே வந்து தோன்றின மாழையின் வண்ணமாய். | 42 |
1472 |
ஆய மண்ணில் அகங்கெழு பஞ்சர மேயெ னத்தந் திருந்து சிலபகல் மாயும் அவ்வுயிர் மாய்ந்தபிற் கூடுகள் தூய நேமிக் குறிகொடு தோன்றுமால். | 43 |
1473 |
நீர்த்த ரங்க நிரல்பட வீசியே ஆர்த்தி ரங்கி அணைவுறு கண்டகித் தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள் ஈர்த்து வந்திடும் இம்பர்கொண் டெய்தவே. | 44 |
1474 |
அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை இந்நி லத்தர்கொண் டேகி அகத்துறை பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே இன்ன மூர்த்தம் இ·தென நாடுவார். | 45 |
1475 |
நாடி யேயவை நாரண னாகவே கூடும் அன்பிற் குவலயத் தேசிலர் தேடி அர்ச்சனை செய்வர் அதன்பெயர் கேடில் சானக் கிராமம் தென்பரால். | 46 |
1476 |
மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே சால மேவு தனிநக ரேயிதன் மூல காரணம் ஆகையின் முந்தையோர் மேலை நாமம் அதற்கு விதித்தனர். | 47 |
1477 |
இந்த வண்ணம் இருக்க முராரியும் அந்தி வண்ணத் தமலனு மாகியே முந்து கூடி முயங்கிய வெல்லையில் வந்த னன்னெமை வாழ்விக்கும் ஐயனே. | 48 |
1478 |
மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ் செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய் உக்கி ரத்துடன் ஓர்மகன் சேர்தலும் முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான். | 49 |
1479 |
அத்த குந்திரு மைந்தற் கரிகர புத்தி ரன்எனும் நாமம் புனைந்துபின் ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும் வைத்து மிக்க வரம்பல நல்கியே. | 50 |
1480 |
புவனம் ஈந்து புவனத் திறையென அவனை நல்கி அமரரும் மாதவர் எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான் சிவன தின்னருள் செப்புதற் பாலதோ. | 51 |
1481 |
முச்ச கத்தை முழுதருள் மேனிகொண் டச்சு தன்றொழ அச்சுதன் போற்றிட மெச்சி யேயவ ருக்கு விடைகொடுத் தெச்ச மில்சிவன் ஏகினன் என்பவே. | 52 |
1482 |
நாய கன்செல நான்முகத் தோனைமுன் தாயெ னத்தருந் தாமரைக் கண்ணினான் சேய வைகுண்டஞ் சேர்ந்தனன் ஐயனும் போயி னான்றன் புவனத் தரசினில். | 53 |
1483 |
அங்கண் மேவி அரிகர புத்திரன் சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மொடும் எங்கு மாகி இருந்தெவ் வுலகையுங் கங்கு லும்பகல் எல்லையுங் காப்பனால். | 54 |
1484 |
மண்ண கத்தரும் வானவ ரும்மலர் அண்ண லுந்தினம் அர்ச்சிக்கும் நீர்மையான் கண்ண னும்புக ழப்படு காட்சியான் எண்ணின் அங்கவ னுக்கெதிர் இல்லையே. | 55 |
1485 |
அன்ன நீர்மையன் காணென தன்பினால் உன்னை வந்திக் காத்தருள் உத்தமன் என்ன லோடும் இசைந்துநின் றாளரோ பொன்னி னாடு தணந்த புலோமசை. | 56 |
1486 |
வேறு இந்திரன் மங்கை இசைந்தது காணா நந்தமர் கையனும் நம்பனும் நல்கு மைந்தனை உன்னி வழுத்துத லோடும் அந்தமி லாவெம தையன் அறிந்தான். | 57 |
1487 |
காருறழ் வெய்ய களிற்றிடை யாகிப் பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப் பூரணை புட்கலை பூம்புற மேவ வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான். | 58 |
1488 |
முன்னுற மேவலும் மூவுல கோர்க்கு மன்னவ னாகிய வாசவன் ஐயன் பொன்னடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப என்னிவண் வேண்டும் இயம்புதி யென்றான். | 59 |
1489 |
கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை மாட்டுறு சூரன் வருத்துத லாற்பொன் நாட்டினை விட்டனன் நானிவ ளோடுங் காட்டுறு வேயென வேகர வுற்றே. | 60 |
1490 |
நோற்றிவண் மேவினன் நோதகும் வானோர் ஆற்றரி தாவவு னன்செயும் இன்னல் சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப் போற்றுதி யென்று புலம்பின ரன்றே. | 61 |
1491 |
தள்ளரும் வானவர் தம்மொடு முக்கண் வள்ளல் தனக்கெம் வரத்த முரைக்க வௌ¢ளி மலைக்கு விரைந்துசெல் கின்றேன் எள்ளரி தாகிய இல்லினை வைத்தே. | 62 |
1492 |
தஞ்சமி லாது தனித்திவ் வனத்தே பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால் வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே அஞ்சினள் உன்றன் அடைக்கலம் ஐயா. | 63 |
1493 |
ஆத்தன் அமர்ந்த அகன்கிரி நண்ணி வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும் பூத்திடு காமர் புலோமசை தன்னைக் காத்தருள் என்றிது கட்டுரை செய்ய. | 64 |
1494 |
மேதகு செண்டுள வீரன் இசைப்பான் ஏதமு றாதநின் ஏந்திழை தன்னைத் தீதடை யாது சிறப்பொடு காப்பன் நீதனி யென்று நினைந்திடல் கண்டாய். | 65 |
1495 |
இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே அல்லுறழ் கண்டன் அருங்கயி லைக்குச் செல்லுதி யென்றருள் செய்து திரும்பித் தொல்லையெம மையனொர் சூழலின் உற்றான். | 66 |
1496 |
வாளமர் நீந்தி வயந்தனின் மிக்க காளனெ னப்படு கட்டுரை யோனை ஆளுடை அண்ணல் அருட்கொடு நோக்கிக் கேளிவை யென்று கிளத்திடு கின்றான். | 67 |
1497 |
மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப் போவது முன்னினன் பொன்னகர் மன்னன் தேவியி ருந்தனள் தீங்கு வராமே காவல் கொள்நீ யெனக் கற்பனை செய்தான். | 68 |