33. இந்திரன் கயிலை செல் படலம் | 1498 - 1517 |
34. அசமுகிப் படலம் | 1518 - 1549 |
35. இந்திராணி மறுதலைப் படலம் | 1550 - 1573 |
36. மகாகாளர் வரு படலம் | 1574 - 1603 |
37. அசமுகி சோகப் படலம் | 1604 - 1633 |
38. இந்திரன் மீட்சிப் படலம் | 1634 - 1642 |
39. சூரன் அரசிருக்கைப் படலம் | 1643 -1669 |
40. அசமுகி நகர்காண் படலம் | 1670 -1702 |
41. அசமுகி புலம்புறு படலம் | 1703 - 1717 |
42. சூரன் தண்டஞ்செய் படலம் | 1718 - 1788 |
43. அமரர் சிறைபுகு படலம் | 1789 - 1929 |
1498 |
அத்துணை தன்னில் அருந்துணை இல்லான் மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே சித்தம் வருந்தல் எனத்தௌ¤ வித்தான். | 1 |
1499 |
மாதினை அவ்விடை மன்னுற வைத்தே பேதுறு வானவர் பேரவை நண்ணிப் போதுமெ னக்கொடு போந்து விரைந்தே நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே. | 2 |
1500 |
அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி நந்திபி ரானுறை நன்கடை சேரா வந்தனை செய்து வழுத்தினன் நின்றான். | 3 |
1501 |
நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச் சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான். | 4 |
1502 |
நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான மூல வியோக முதற்பொருள் காட்டி ஏல இருந்தனன் யாவரும் ஏகக் கால மிதன்றென வேகழ றுற்றான். | 5 |
1503 |
தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன் கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து மாறியீ ழிந்திடு வல்விட மற்றும் ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான். | 6 |
1504 |
இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார் தம்பம தான தடம்புணை தாழ அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல். | 7 |
1505 |
செல்லல் உழந்து தியங்கிய தேவர் எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன் நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன் மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான். | 8 |
1506 |
தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக் காயுவொ டாற்றல் அளப்பில செல்வம் ஏயவை யாவும் இருந்தவ நீரால் நாயகன் முந்துற நல்கினன் அன்றே. | 9 |
1507 |
நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித் தீங்கு குறித்தெழு தீவினை சேர ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம் ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா. | 10 |
1508 |
சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும் மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம் ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில் தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும். | 11 |
1509 |
நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள் ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன் மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந் தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும். | 12 |
1510 |
அன்னது செய்திடின் அன்பறு சூரன் முன்னர் அருந்தவ முற்றிய காலைச் சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற் பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார். | 13 |
1511 |
அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில் நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம் தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால். | 14 |
1512 |
ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும் பாக நினைந்து பரம்பொரு ளானோன் மோகமி லார்பெற மோனக ஞான யோகியல் காட்டி யுறைந்துள னேகொல். | 15 |
1513 |
ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந் தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா. | 16 |
1514 |
மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை யாவதும் ஈதென அண்டரும் யானும் பூவுல கத்திடை போந்திடின் இன்னே தீவினை யார்சிறை செய்வது திண்ணம். | 17 |
1515 |
ஆதலின் ஆயிடை அண்டரும் யானும் போத லிலைப்புனி தன்கழல் காணத் தீதறு வேலை தனைத்தெரி வுற்றான் வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான். | 18 |
1516 |
பேர்பெறு நந்திபி ரானது கேளா ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர் சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான். | 19 |
1517 |
வானவர் கோனரன் மால்வரை தன்னிற் போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம் மானபு லோமசை செய்கையும் அல்லா ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம். | 20 |
1518 |
நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப் பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற் பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள். | 1 |
1519 |
சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள் காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். | 2 |
1520 |
கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால் உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில் வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக் கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். | 3 |
1521 |
கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும் இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். | 4 |
1522 |
பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும் நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின் முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின் சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். | 5 |
1523 |
கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர் வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். | 6 |
1524 |
பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன் துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய் கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின் மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். | 7 |
1525 |
பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ் செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள் துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன் பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். | 8 |
1526 |
சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள் மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங் காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள் தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். | 9 |
1527 |
மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும் மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச் சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே. | 10 |
1528 |
கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள் ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால் வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான் தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். | 11 |
1529 |
ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள் பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித் கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். | 12 |
1530 |
மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள் கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித் தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். | 13 |
1531 |
அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன் முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள் எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன் கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். | 14 |
1532 |
மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத் தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய் விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். | 15 |
1533 |
நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக் குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில் பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். | 16 |
1534 |
அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன் முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. | 17 |
1535 |
இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித் திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். | 18 |
1536 |
வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற் கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். | 19 |
1537 |
தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான் கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக் கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். | 20 |
1538 |
இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர் புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன் கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். | 21 |
1539 |
தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக் கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக் காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால் வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான். | 22 |
1540 |
ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான் தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும் ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக் கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். | 23 |
1541 |
நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். | 24 |
1542 |
எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும் பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. | 25 |
1543 |
ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன் மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள் பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச் சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. | 26 |
1544 |
இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற் பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். | 27 |
1545 |
தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன் புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால் இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான் அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். | 28 |
1546 |
அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான் பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான் கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. | 29 |
1547 |
அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான் தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென் றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங் கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. | 30 |
1548 |
எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக் கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன் உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. | 31 |
1549 |
பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும் அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ·தே உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம் என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள். | 32 |
1550 |
தக்க வேழகத் தலையள் கூறிய அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந் தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல் புக்க தேயெனப் பொருமி விம்மினாள். | 1 |
1551 |
கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி செம்மி வல்வினைத் தீர்வு நாடியே விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள். | 2 |
1552 |
ஏடி நீயிவண் இசைத்த தீமொழி நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற் கூடு தீமையார் குறிக்கற் பாலரே. | 3 |
1553 |
வேதம் யாவையும் விதித்த நான்முகன் காத லன்தருங் கடவுள் மங்கைநீ நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப் பேதை யாரெனப் பேச லாகுமோ. | 4 |
1554 |
தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர் தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர் ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால் ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ. | 5 |
1555 |
தருமம் பார்த்திலை தக்க மாதவக் கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. | 6 |
1556 |
பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ. | 7 |
1557 |
ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின் ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது தோன்று நீயிவை துணியல் வாழிகேள் சான்று நின்குலத் தகுவர் யாவரும். | 8 |
1558 |
இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ் சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன் வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. | 9 |
1559 |
நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங் கோன்மை யன்றியே கொடுமை செய்துள மேன்மை மன்னரும் வேறு ளார்களும் பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே. | 10 |
1560 |
மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான் நாளும் நாதனென் றறைதி யார்கணுங் கோளும் நல்லவுங் கறுகும் அல்லலும் நாளை உங்கள்பால் நணுகு றாதவோ. | 11 |
1561 |
நீதி யாகிய நெறியி லாதவள் ஆத லான்மிக அறிவு மாழ்கியே தீது கூறினாய் செல்வி தன்றரோ மாது நீயிது மறத்தி யுய்யவே. | 12 |
1562 |
ஏவ ரென்றனை எய்தற் பாலினோர் தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென் ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங் காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள். | 13 |
1563 |
என்ற காலையில் எயிறு தீயுகக் கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த் தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள். | 14 |
1564 |
மறுவில் வாசவன் மனைவி கூறிய உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில அறிவில் பேதையாய் அலகை தேறலால் வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல். | 15 |
1565 |
ஆன காலையில் அசமு கத்தினாள் ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால் வான வர்க்கிறை மாதை நோக்கியே தானு ரைத்தனள் இனைய தன்மையே. | 16 |
1566 |
கிட்டி நல்லன கிளத்தி னேனெனை ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை அட்டு நுங்குவன் அண்ணற் காகவே விட்ட னன்இது மெய்மை யாகுமால். | 17 |
1567 |
ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச் சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய் பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால் ஈத்துப் போகின்றேன் சரத மீதரோ. | 18 |
1568 |
முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந் தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும் விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே படர்வன் அன்னது பார்த்தி மேலெனா. | 19 |
1569 |
வெய்யள் அவ்வயி ராணி மென்கரங் கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய் மொய்யிற் போயினாள் முரணி லாதவள் ஐய கோவெனா அரற்றல் மேயினாள். | 20 |
1570 |
பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி ஆவி போந்தென அவச மாகியே ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள் காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள். | 21 |
1571 |
ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந் துய்ய தீம்படை* தோகை கண்ணுறா வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென மையு லாயகண் வாரி மிக்கதே. (* ஐயர் - அந்தணர்கள். அவுணர் - இங்குச் சந்தியா காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள். தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள். ) | 22 |
1572 |
காசி பன்தருங் கலதி கூற்றுவன் பாச மன்னகைப் பட்டு விம்மினாள் வாச வன்றனி மனைவி வெங்கொலைப் பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல். | 23 |
1573 |
நாரி லாதவள் நலிந்து கொண்டனள் பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ் சோரு கின்றவள் சுற்று நோக்கியே யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள். | 24 |
1574 |
பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும் ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார் கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர் மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். | 1 |
1575 |
ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங் காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம் பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம் வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். | 2 |
1576 |
ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள் ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். | 3 |
1577 |
சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர் வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். | 4 |
1578 |
இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம் வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன் உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன் கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். | 5 |
1579 |
கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட் கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். | 6 |
1580 |
வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள் பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். | 7 |
1581 |
ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும் மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர் யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித் தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். | 8 |
1582 |
வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக் குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். | 9 |
1583 |
தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். | 10 |
1584 |
கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார் வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ் மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். | 11 |
1585 |
தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான் காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ¢ளை வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர் வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். | 12 |
1586 |
என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன் பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற் சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். | 13 |
1587 |
புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான் சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. | 14 |
1588 |
குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும் முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல் எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. | 15 |
1589 |
படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக் கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள் விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. | 16 |
1590 |
காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச் சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச் சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. | 17 |
1591 |
சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக் கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங் கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். | 18 |
1592 |
வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். | 19 |
1593 |
ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற் கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும் இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். | 20 |
1594 |
இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத் தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். | 21 |
1595 |
வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர் ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். | 22 |
1596 |
தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர் அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். | 23 |
1597 |
பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். | 24 |
1598 |
என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால் அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். | 25 |
1599 |
துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக் கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின் வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால். | 26 |
1600 |
போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச் சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத் தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. | 27 |
1601 |
இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. | 28 |
1602 |
அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச் செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத் துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. | 29 |
1603 |
வேறு மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற் சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன் உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம் பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. | 30 |
1604 |
அறைபடு கழலினான் அவுண மாதர்கை எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால் திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங் குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. | 1 |
1605 |
திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக் கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள் வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள் விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். | 2 |
1606 |
மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள் வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள் உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப் புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். | 3 |
1607 |
புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித் துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும் இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. | 4 |
1608 |
கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக் குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத் துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே. | 5 |
1609 |
திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும் புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால் உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். | 6 |
1610 |
உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந் தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ¢குமே. | 7 |
1611 |
அற்றிடு கரத்தினை அறாத கையினால் தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும் ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர் இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. | 8 |
1612 |
வீவதே இனியெனும் வினையி னேன்றனக் காவதோ இ·தெனும் ஐய கோவெனும் ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற் போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. | 9 |
1613 |
காசினி தனில்வருங் கணவர் கைதொடக் கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப் பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர் ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். | 10 |
1614 |
தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம் போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி ஆவதன் முன்னரே அவரை யட்டுல கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. | 11 |
1615 |
பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும் ஆரழல் வடவையை அவித்தி டோவெனும் பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும் மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். | 12 |
1616 |
பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும் நாளினை முழுவதும் நாளு டன்வருங் கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். | 13 |
1617 |
சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன் ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். | 14 |
1618 |
கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய் அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத் தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். | 15 |
1619 |
செந்நலம் நீடிய தென்னங் காயிடைத் துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப் பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய் இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும். | 16 |
1620 |
இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச் செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர் வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். | 17 |
1621 |
தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந் தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ் ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். | 18 |
1622 |
வேறு ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள் சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள் பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள் வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். | 19 |
1623 |
வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். | 20 |
1624 |
வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச் செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்யும் ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால் கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. | 21 |
1625 |
பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ் சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின் ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். | 22 |
1626 |
ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர் நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய் ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும் போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். | 23 |
1627 |
வேறு ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில் வானவர் தங்களின் மடந்தை மார்களில் தானவர் தங்களில் தத்தம் மெய்களில் ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. | 24 |
1628 |
நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால் அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால் எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர் வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. | 25 |
1629 |
ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும் மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால் ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள். | 26 |
1630 |
வேறு மொழிந்து துன்முகி தௌ¤த்தலும் நன்றென முன்னா எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க் கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். | 27 |
1631 |
துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன் வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும் இப்பு றத்தினில் ஔ¤ப்பினும் இதுவன்றி அண்டத் தப்பு றத்தினில் ஔ¤ப்பினும் பிழைப்புமக் கரிதே. | 28 |
1632 |
மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின் உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில் சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். | 29 |
1633 |
உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம் எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன் தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங் கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். | 30 |
1634 |
அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன் உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில் தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன் புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான். | 1 |
1635 |
போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர் மானி னம்பிரிந் தற்றென அவ்வனம் வைகிக் கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால் ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான். | 2 |
1636 |
மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச் சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக் கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய் ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான். | 3 |
1637 |
நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட் கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித் துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே. | 4 |
1638 |
வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன் சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம் முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி. | 5 |
1639 |
கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த செம்மை யா£களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான் பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும் எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப. | 6 |
1640 |
நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத் துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச் சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி. | 7 |
1641 |
போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக் கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன். | 8 |
1642 |
சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான். | 9 |
1643 |
இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால் முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள் தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள் அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். | 1 |
1644 |
வேறு மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின், ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள், தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன, ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. | 2 |
1645 |
இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும், அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி, வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி, பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார். | 3 |
1646 |
தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய், தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில், ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற், பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். | 4 |
1647 |
பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி, தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப், பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி, அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ¤ரும். | 5 |
1648 |
மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந், தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே, அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி, எண்ணிலா தனவும் ப·றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். | 6 |
1649 |
பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின், உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ¤றுதா ரகையவட் குயிற்றித், தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத், திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். | 7 |
1650 |
ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின், மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித், தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க, வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். | 8 |
1651 |
மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக, கோலொடு வௌ¤ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு, பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும், வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. | 9 |
1652 |
காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும், ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத், தாரக விறலோன் ப·றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப, ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர. | 10 |
1653 |
எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச், செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி, அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல், மைவரை யனைய அவுணா¢கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. | 11 |
1654 |
உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில், தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத், தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய், விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. | 12 |
1655 |
நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற், பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி, மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித், துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. | 13 |
1656 |
ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும், வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும், ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால், கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. | 14 |
1657 |
மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப், பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா, இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித், தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. | 15 |
1658 |
விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக், கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி, எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத், தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். | 16 |
1659 |
தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம், வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர், தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர், ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. | 17 |
1660 |
ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா, வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர், நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை, முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய. | 18 |
1661 |
தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில், வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா, ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப், பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. | 19 |
1662 |
திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர், நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள, வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத், தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. | 20 |
1663 |
வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல், பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர், பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ், சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப. | 21 |
1664 |
பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட் டிடை தோறும், மின்றிகழ் நுசுப்பில் திருமக்ள் பலராய் வீற்றுவீ ற்றிருத்தலே போலக், குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று, துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற. | 22 |
1665 |
தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ செவ்வழி யென்னுநா னிலத்திற், பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய், மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட், கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப. | 23 |
1666 |
மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே, ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ், சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும், பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ. | 24 |
1667 |
கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால், தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ், சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச், சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய. | 25 |
1668 |
ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும், பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும், பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித் துகில் பிறவும், மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க. | 26 |
1669 |
தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி, ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின், ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும், ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன. | 27 |
1670 |
இன்னன பலபல எய்தச் சூரனாம் மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில் தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள் தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள். | 1 |
1671 |
மோட்டுறு மகேந்திர முதிய மாநகர் கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள் மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக் கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ. | 2 |
1672 |
கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன் பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார் அழிதரு துன்புகொண் டழலில் சீறினார் இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா. | 3 |
1673 |
மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந் தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல் ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி யானது கண்டனர் அவுணர் யாவரும். | 4 |
1674 |
வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத் திட்டனர் கவற்றினை இசைத்த சூளொடுங் கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர் விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர். | 5 |
1675 |
தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப் புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார் பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர். | 6 |
1676 |
கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர் ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர். | 7 |
1677 |
துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம் மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ் செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார் ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர். | 8 |
1678 |
ஊனமில் பலபணி யுடன்று சீறியே பானுவை நுகரவிண் படரு மாறென வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற றார்சிலர். | 9 |
1679 |
வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள் ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச் சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர். | 10 |
1680 |
குறிகெழு வௌ¤லொடு குற்றி நாட்டியும் அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா எறிகுறு படையினை எய்யுங் கோலினை நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர். | 11 |
1681 |
நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய் ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப் போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார். | 12 |
1682 |
வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங் காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள் வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர். | 13 |
1683 |
நாடக நூல்முறை நுனித்து நன்றுணர் கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர் ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங் கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார். | 14 |
1684 |
புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு நலப்படு வேள்விகள் நடத்திக் கேளொடு பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க் குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர். | 150 |
1685 |
மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர். | 16 |
1686 |
தோடுறு வரிவிழித் தோகை மாருடன் மாடம திடைதொறும் வதிந்த பங்கயக் காடுறு பூந்தடங் காமர் தண்டலை ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர். | 17 |
1687 |
சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங் கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார் உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார் தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர். | 18 |
1688 |
அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார் பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர் கனலொடு தீர்ப்புகை காலு யிர்ப்பினர் முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை. | 19 |
1689 |
வேறு அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார். | 20 |
1690 |
மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன் கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன் ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார். | 21 |
1691 |
சிரபத்தி அளவை யில்£த் திறலரி ஒருநாற் றந்தக் கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கஞ் செய்ய வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட் சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார். | 22 |
1692 |
வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங் கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப் பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். | 23 |
1693 |
பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண் வௌ¤ற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன் ஔ¤ற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக் களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார். | 24 |
1694 |
ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும் ஆசறு சங்கு கன்னன் அகட்டற் குண்டம் போல்வான் தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். | 25 |
1695 |
நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார் அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார் நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார். | 26 |
1696 |
புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார் கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார் இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார் நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார். | 27 |
1697 |
கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும் பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார் இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார் விழுப்பெரு முனிவா¢ சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார். | 28 |
1698 |
அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத் தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித் துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். | 29 |
1699 |
ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற் சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார். | 30 |
1700 |
கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார் நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார் மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும் ஓடியே அறிதும் என்பார் இனையன வரைத்த லோடும். | 31 |
1701 |
சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய் வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர் சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம் ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார். | 32 |
1702 |
அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப் பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானான். | 33 |
1703 |
மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக் கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத் திறலுடை முனைனை யோரைத் சிந்தையில் உன்னி யாண்டைப் பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள். | 1 |
1704 |
வேறு வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய், பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும், அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே, சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ. | 2 |
1705 |
தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற, மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம்என்பார், ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி, ஏகிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ. | 3 |
1706 |
வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப், பெருவீர முடன்வந்ததேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று, பொருவீர மாகாளன் அவளையுமீட் டேகினன் அப்பொதும்பர்க் கானில், ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ. | 4 |
1707 |
புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத, வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை, உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென், கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின். | 5 |
1708 |
மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான், போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான், ஏயினான் ஒருவனையே அவன்போன்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத், தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ. | 6 |
1709 |
எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும், உள்ளுற்ற பகையுண்டேன் கேடுளதென் றுரைப்பர் அ·துண்மை யாமால், தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல், கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின். | 7 |
1710 |
சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள், உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல், அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும், இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறயரென இகழ்ந்திட் டீரே. | 8 |
1711 |
முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை, வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ, இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான், அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா. | 9 |
1712 |
பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின், முறைசெய்த செங்கதிரோன்ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச், சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக், குறைசெய்து போதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே. | 10 |
1713 |
நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப், பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றான், ஈண்டாருங் குறும்பகைஞர் என்ரம்போந் திறமியற்ற இனிது வையம், ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா. | 11 |
1714 |
வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச் செல்ல, ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர், மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன் தூதன் வெகுண்டு வந்தென், கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ. | 12 |
1715 |
சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ், சேரவே புரந்ததனைநின் பரிதிசெங்கோல் குடை யெங்குஞ் செல்லா நிற்கும், ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும், வீரமா காளனிடைக் கண்டில னால்வலியர்முனம் மேவு றாவோ. | 13 |
1716 |
ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான், இந்நாளில் அ·தன்றி ஒருவனைக்கொண் டெனது கையும் இழப்பித் தாரே, பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ, மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழி வரவை மதிக்கி லாயோ. | 14 |
1717 |
காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண், ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ, ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ, பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ. | 15 |
1718 |
என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப் பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன் பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். | 1 |
1719 |
புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின் மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன் இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான். | 2 |
1720 |
என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய் உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான். | 3 |
1721 |
புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில் இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம் விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய். | 4 |
1722 |
என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய் துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம் வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல் மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில். | 5 |
1723 |
வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில் இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந் துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக் கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப. | 6 |
1724 |
புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும். | 7 |
1725 |
நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர் ஆடு கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர் பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார். | 8 |
1726 |
தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும் ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான். | 9 |
1727 |
பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன் ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே. | 10 |
1728 |
அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங் கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான் எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான். | 11 |
1729 |
மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன் கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள் ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ. | 12 |
1730 |
பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன் திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன் இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும் ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான். | 13 |
1731 |
விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன். | 14 |
1732 |
மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும் நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன் சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின் குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன். | 15 |
1733 |
கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன் இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ. | 16 |
1734 |
பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள் தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால் ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல். | 17 |
1735 |
நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில் தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென் பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ. | 18 |
1736 |
வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல் தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால் போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே. | 19 |
1737 |
இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள் வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான் ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே. | 20 |
1738 |
மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச் சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான். | 21 |
1739 |
நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன் செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான். | 22 |
1740 |
ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித் தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும் நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன். | 23 |
1741 |
வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும் இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே. | 24 |
1742 |
வலியர் ஆகியே பு£¤ந்தனர் எனினுமற் றவர்கள் மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார் அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர். | 25 |
1743 |
நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத் துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர் எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய். | 26 |
1744 |
முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற் கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர் கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின். | 27 |
1745 |
விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும் அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப் பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன். | 28 |
1746 |
அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம் எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச் செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன். | 29 |
1747 |
ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத் தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான். | 30 |
1748 |
ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச் சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற் சேர்த்தி வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப் போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான். | 31 |
1749 |
மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன் உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான். | 32 |
1750 |
எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப் பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான் நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான். | 33 |
1751 |
அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற் புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில் தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன். | 34 |
1752 |
என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து வன்றி றற்கரங் கூடுக மற்றிவா¢க் கெனலும் ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும் நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான். | 35 |
1753 |
அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன் தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல் முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து. | 36 |
1754 |
உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில் தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன். | 37 |
1755 |
சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல் கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த. | 38 |
1756 |
வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன் செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில். | 39 |
1757 |
இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக் களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித் தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில் விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி. | 40 |
1758 |
மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன் குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில் புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர் முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான். | 41 |
1759 |
நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக் காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின் மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர். | 42 |
1760 |
துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள் அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந் தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன். | 43 |
1761 |
வேறு தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின் வினைஞரிற் சிலா¢தமை விளித்து நீவிர்போய்த் துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான். | 44 |
1762 |
ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான் தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான். | 45 |
1763 |
வானிடை மண்ணிடை மாதி ரத்திடை மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும் ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால். | 46 |
1764 |
ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர் சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக் காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர் நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர். | 47 |
1765 |
தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர் பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல் உரையற நின்றனர் உலவைப் பண்ணவர். | 48 |
1766 |
வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய் நின்றிடு கால்களை நீடு கால்களிற் துன்றிய கனைகழற் சூர னென்பவன் ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ. | 49 |
1767 |
ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச் சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான் சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும் பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே. | 50 |
1768 |
திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின் குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண் டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத் தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார். | 51 |
1769 |
ஏவல ராயினோர் ஏகி யெல்லையின் காவலராகிய கடவு ளோர்தமைக் கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந் தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான். | 52 |
1770 |
புல்லிய மகபதி புணர்த்த அச்செயல் ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர் எல்லிரு மனமகிழ்ந் திருத்திர்¢ என்னொடுஞ் சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர். | 53 |
1771 |
நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர் இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால் வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும். | 54 |
1772 |
தூவலி கெழுவிய சூரன் பின்பில ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி காவலர் தமையெலாங் கடிது வம்மெனக் கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான். | 55 |
1773 |
தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந் தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள் ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே. | 56 |
1774 |
ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர் தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங் காக்குநா¢ தொகுதியைக் காவல் மன்னவன் நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான். | 57 |
1775 |
எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன் ஔ¤த்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர் அளித்தது சாவும் அழகி தாமரோ. | 58 |
1776 |
குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன் நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன் மறித்திரு முகனுடை மங்கை தன்கரம் அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர். | 59 |
1777 |
மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங் கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ. | 60 |
1778 |
ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே. | 61 |
1779 |
எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற் கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப் பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங் கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம். | 62 |
1780 |
தாயெனும் ஏழகத் தலையள் துன்முக ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி மாயமி தாகுமால் மன்ன என்னவே. | 63 |
1781 |
மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப் புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர் இடையுற என்வயின் இனைய தோர்பழி அடைவது மாயையாம் அழகிதே என்றான். | 64 |
1782 |
வேறு ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத் தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத் தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான். | 65 |
1783 |
சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான் சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான் சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான் சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான். | 66 |
1784 |
எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள் முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான். | 68 |
1785 |
மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர் இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும் உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான். | 68 |
1786 |
குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ் சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார். | 69 |
1787 |
வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர் சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர் நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார். | 70 |
1788 |
போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும் மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும் போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல் ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன். | 71 |
1789 |
எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய மழவுறு சூர்மகன் மாறி லாதபேர் அழகினை மெய்கொள் அணிந்து தொல்படை விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே. | 1 |
1790 |
இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும் ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த் திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில் விரைவினில் சுற்றின அனிக வௌ¢ளமே. | 2 |
1791 |
நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம் பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான் திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான். | 3 |
1792 |
கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள் வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந் தளர்ந்தன நௌ¤ந்தனன் தரிக்குஞ் சேடனே. | 4 |
1793 |
பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந் தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர் எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடியே உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல். | 5 |
1794 |
வேறு ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில் வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத் தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ குன்றின் ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே. | 6 |
1795 |
பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர் ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல். | 7 |
1796 |
மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றுந் துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வௌ¤யே செய்ய தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே. | 8 |
1797 |
முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம் நீங்கி அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச் சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான். | 9 |
1798 |
என்னலுங் குமர கேண்மோ எங்கரந் துணித்தோர் வீரன் மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில் அன்னதும் இ·தே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப் பன்னிரு பெயர்ச்சீ காழிப்* பழுமரக் காவிற் சேர்ந்தான். 10 (* பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகிய சீகாழிப்பதி.) | 1<0/td> |
1799 |
தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன் தானைத் தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவௌ¢ ளிடைய தாக்க வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான் காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான். | 11 |
1800 |
வேறு அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும் முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர் மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற் பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே. | 12 |
1801 |
எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ்வழல் வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர் கழிந்திடு திறலினர் ககன வாணர்கள் அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார். | 13 |
1802 |
மண்டல மேமுதல் வகுத்த வான்கதி கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள் விண்டொடர் செலவினில் விரவு பூழியால் அண்டமும் புவியென வையம் ஆக்கிய. | 14 |
1803 |
இலகிய பொன்னகர் எல்லை எங்கணும் அலைதரு மதநதி யாக்கி யாயிடை நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுன் டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே. | 15 |
1804 |
வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங் கொங்கிவர் தருமலா¢க் கூந்தல் வாசத்தால் அங்குள மாதர்மேல் அணுகி வையக மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே. | 16 |
1805 |
அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர் பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால் வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ் சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே. | 17 |
1806 |
மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன் முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற் பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே. | 18 |
1807 |
விடா¢நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர் இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற் கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே. | 19 |
1808 |
வேறு செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும் அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து வந்தான் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர் நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான். | 20 |
1809 |
எந்தை யாகுங் குரவன் இலை இமையோர் குழுவிற் பலரில்லை தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால் அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும், முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே. | 21 |
1810 |
பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர் கரக்கப் பழிவேலை வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற் கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே. | 22 |
1811 |
தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற அமரர்களும் பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர் ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும் போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ. | 23 |
1812 |
போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு மாறும் இல்லையதின் ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ ஈவ தில்லை யவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழவ திலையெதிர்ந்து சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. | 24 |
1813 |
அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி பொருளாக் கொள்ளாதார் நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்படியார் தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அ·தே போலத் தானவர்கோன் வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே | 25 |
1814 |
செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன் நீரும் எற்போற்றி வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கோண்மின் ஒருவீ ரன்றி, எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழ தருவீவேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேயே. | 26 |
1815 |
என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடருழவா உன்றன் உள்ளம் ஈதாயின் உமக்கு வேறோர் உணர்வுண்டோ வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும் பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார். | 27 |
1816 |
வேறு சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித் துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன் கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில். | 28 |
1817 |
கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம் மல்கிய கறைப்பத மருப்பிணை இரட்டை மெல்கிய புழைக்கரம் வௌற்றுடலின் வேழம் பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே. | 29 |
1818 |
இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி உந்தினன் நடாத்திஅயல் உம்பபர்புறம் மொய்ப்பப் புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான். | 30 |
1819 |
போகிதரு காளைபசும் பொற்புயல் நிறத்தான் ஆகம்வௌ¤ றாகும்அயி ராவதமி சைக்கண் வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற் சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன. | 31 |
1820 |
பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார் நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல். | 32 |
1821 |
பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும் உள்ளத் தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப் பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய் வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும். | 33 |
1822 |
ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப் பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக் கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும். | 34 |
1823 |
முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான் வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ் சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும். | 35 |
1824 |
வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார் தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார். | 36 |
1825 |
கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர் என்னா முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார் ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால் வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார். | 37 |
1826 |
எழுப்படை விடுத்தர் எடுத்தகதை விட்டார் மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார் நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார் சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி. | 38 |
1827 |
மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ் சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச் சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும் பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல். | 39 |
1828 |
அங்கமெம செங்குருதி ஆற்றின் நிமிர்ந்தோடி எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந் துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல். | 40 |
1829 |
நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின் கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி. | 41 |
1830 |
சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள் நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன. | 42 |
1831 |
இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக் கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான் தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான். | 43 |
1832 |
வேறு கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம் உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக் கொண்டான் குணத்தின் இரைகாட்டினன் கோட்டி நேர்போய் அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான். | 44 |
1833 |
பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த வீரர் மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ் சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார். | 45 |
1834 |
சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித் தந்த வௌ¢ளைக் கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள் வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல். | 46 |
1835 |
கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து சுற்றிச் செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால். | 47 |
1836 |
வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது தூர்த்து மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம் வாட்டிப் பின்வௌ¢ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான். | 48 |
1837 |
வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி எற்றுங் காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல் ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ் சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை. | 49 |
1838 |
நூறாய்ப் புகுதா னவர்வௌ¢ளம் நொடிப்பின் மாய வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம் மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட. | 50 |
1839 |
காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை தன்னில் பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய் தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன். | 51 |
1840 |
எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன் தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய் விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் மாரி தூர்த்தான். | 52 |
1841 |
தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர் தூண்டி வாளி தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால் வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான். | 53 |
1842 |
பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர் ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான் காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல். | 54 |
1843 |
சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ விட்டுத் தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித் துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான். | 55 |
1844 |
வேறு ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச் சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக் குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம் என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான். | 56 |
1845 |
மலைவுற்றெதிர் நின்றார்த்திட வாயற்றனன் மயங்கித் தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம் மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல். | 57 |
1846 |
சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன் மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன் தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர் ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார். | 58 |
1847 |
தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண் முன்னி ஆங்குற்றிடு பரபாற்பொரு தன்னான்புரி மாயம் நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார். | 59 |
1848 |
அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந் தலைவர் தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும் கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான் முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன். | 60 |
1849 |
வேறு அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன் இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான். | 61 |
1850 |
மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும் மாயை விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன் உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப. | 62 |
1851 |
ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென் றறிந்து மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித் தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான். | 63 |
1852 |
வருதி இந்திரன் மதலைநின் மாயையும் வலியும் கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய் பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன் பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன். | 64 |
1853 |
வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற· தில்லோர் அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே தொல்லை யூழ்முறை புணர்ந்திடும் நின்னைநீ துதிக்கச் செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன். | 65 |
1854 |
தேற்ற மோடிவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன் ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக் கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான். | 66 |
1855 |
சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ் சினத்து மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான் அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர் தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ வதுபோல். | 67 |
1856 |
பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம் பகைஞன் ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன் மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங் காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின். | 68 |
1857 |
அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன் அறுத்துத் துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான் இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும் மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல். | 69 |
1858 |
இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன் வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித் துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான். | 70 |
1859 |
அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன் அழலிற் செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய் உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து. | 71 |
1860 |
உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங் கணைதூய்ப் பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர் வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன. | 72 |
1861 |
வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற் றொருதேர் பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற கறித்துச் சேந்த மெல்லிதழ அதுக்கிவா னுருமெனத் தெழியா ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன். | 73 |
1862 |
கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி சோனை வெங்கணை தூண்டிவிற் றூண்யைத் துணித்துத் தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன் மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன். | 74 |
1863 |
வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல் சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும் மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர் செய்வ தற்குத் தௌ¤தலின் றாயினான். | 75 |
1864 |
நீண்ட வாளிக ளான நிறத்திடை ஆண்ட காலை அரிமகன் தந்திமேல் வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன் மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால். | 76 |
1865 |
நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந் தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத் துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே. | 77 |
1866 |
கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம் முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர் வற்ற போதும் அவன்சினக் கண்ணழல் வற்று வித்தமெய் வார்குரு திப்புனல். | 78 |
1867 |
சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே அயர்ந்த போதத் தலையவன் ஊர்தியாம் கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே. | 79 |
1868 |
காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும் ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப் பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன் வீய்ந்து போன தெழித்தது வேழமே. | 80 |
1869 |
பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர் மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத் தாண்டி வௌ¢ளையந் தந்தியைச் சீறினான் மூண்டு பானுவை முன்சிறை செய்துளான். | 81 |
1870 |
மற்ற வன்றன் மணியணி மார்பிடைச் செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும் பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின் இற்ற வால்அதன் ஈரிரு தந்தமும். | 82 |
1871 |
தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன் உந்து தொண்டலம் பற்றிமற் றோர்கையால் தந்தி வேந்தன் கவுளிடைத் தாக்கினான். | 83 |
1872 |
வேறு காழ்ந்த நெஞ்சினன் கரங்கொடு தாக்கலுங் கயமா ஆழ்ந்த தெண்டிரைப் பாற்கடல் உடைந்தென அரற்றி வீழ்ந்த யர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில் சூழ்ந்த தொல்லுணர் வெய்தலும் அவனிவை சொல்லும். | 84 |
1873 |
மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை தீயர் பற்றுவர் அழியுமிந் நகரெனச் சிறிது நீயி ரங்கலை இனிமன னேவிதி நெறிகாண் ஆயின் இங்கிவை என்றனன் சயந்தனாம் அறிஞன். | 85 |
1874 |
நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற் றுணிபு மனத்தில் வைத்திடும் இந்திர்கான்முளை மயங்கித் தனித்த நீர்மையுங் களிற்றோடு வீழந்ததுந் தளர்வும் அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார். | 86 |
1875 |
ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே போர்த்த தாமெனச் சுற்றினர் பற்றினர் புவிமேல் கூர்த்த வாலெயிற் றரவினம் யாவையுங் குழீஇப்போய்ச் சீர்த்த வெல்லையில் இரவியைக் கரந்திடுந் திறம்போல். | 87 |
1876 |
தடித்த மொய்ம்புடைச்சயந்தனைத் தானவத் தலைவர் பிடித்த காலையிற் கைதவன் கைதவன் பெரிதும் அடித்தி டுங்கள்குற் றிடுங்கள்இங் கிவனுயிர் அதனைக் குடித்தி டுங்களென் றா£¢எலா வவுணரும் குழுமி. | 88 |
1877 |
மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர் பொன்னே டும்பெருந் தேர்மிசைப் பொள்ளென ஏகிப் பன்ன ரும்புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித் துன்னி நின்றிடும் அவுணருக் கொருமொழி சொல்வான். | 89 |
1878 |
வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட மயங்கிப் பெரிது மெய்தளர் வுற்றனன் பேசவுங் கில்லான் கருத லானெ இவன்றனை வருத்தலிர் கடிதே சுரர்கு ழாத்தொடு புரிமினோ சிறையெனச் சொற்றான். | 90 |
1879 |
கொற்ற வன்மொழி வினவியே மந்தரக் குன்றைச் சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள் இற்ற கொல்லேன நாணினால் யாத்தனர் இமையோர் உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்குற உய்த்தார். | 91 |
1880 |
வேறு தொழிலிது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே தழியகா வலரை நோக்கிச் சயந்தனும் இருவரும் அல்லால் ஒழியநின் றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர் அழியஇம் மூதூர் செந்தீ அரசனுக் களித்திர் என்றான். | 92 |
1881 |
என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத் துறக்கம் யாண்டுஞ் சென்றனர் நாடி யேனைத் தேவரை மகளீர் தம்மை ஒன்றொரு வரையும் வீடா துடனுறப் பற்றி நாணால் பொன்றிரள் தடந்தோள் யாத்துப் புரவலன் முன்னர் உய்த்தா£ர். | 93 |
1882 |
உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச் சித்திரங் கெழுவு பொன்னந் திருநகர் எல்லை யெங்கும் புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே முத்திற வரைப்பும் எங்கோன் முறுவலான் முடிந்த வாபோல். | 94 |
1883 |
ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத் துறக்க மூதூர் பூழிய தான தன்றே புரந்தரன் வறியன் போனான் வீழுறு சிறையின் உற்றார் மிக்கவ ரென்றால் யாரும் வாழிய செல்வந் தன்னை நிலையென மதிக்க லாமோ. | 95 |
1884 |
அளிபட னின்றி யென்றும் அலர்தரு நிழற்றும் மூதூர் வௌ¤படு சுடலை போலாய் வேற்றுருக் கோட லோடுங் களிபடு பானு கோபன கண்டனன் அவுணர் தம்மில் ஔ¤படு காவ லோரை நோக்கியீ துரைக்கல் உற்றான். | 96 |
1887 |
தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ டுற்ற ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையுங் கொடுமுன் நீவிர் போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி ஆதவன் பகைஞன் மீளா அனிகமோ டவனி வந்தான். | 97 |
1886 |
மாநில மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக் கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச் சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று தானவர் மன்னன் முன்போய்த் தாள்முறை வணக்கஞ் செய்தான். | 98 |
1887 |
தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி எந்தாய் கண்டிலன் சசிய வானோர் காவலன் தனையுங் காணேன் அண்டரைச் சயந்தன் தன்னை யாரையுங் கொண்டு சென்றான் விண்டொடர் துறக்க முற்றும் வெங்கனல் கொளுவி என்றான். | 99 |
1888 |
என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு குமரற் புல்லித் தன்றிரு முன்னர் இட்ட சயந்தனை முதலி யோரைக் கன்றினன் உருத்து வாட்கைக் காவலர் சிலரை நோக்கித் துன்றிய இனையர் அங்கம் யாவையுந் துணித்திர் என்றான். | 100 |
1889 |
இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை வீடு பெற்ற உருகெழு புலிபாய்ந் தொப்ப ஒப்பிலா அரசன் சொல்லால் விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால் மேவித் துருவையின் முகத்தி காணத் துண்ணெனத் துணிக்கல் உற்றார். | 101 |
1890 |
கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ லத்தைக் கல்லென் றரற்றுறு கண்டந் தன்னை அணிகெழு துண்டந் தன்னைச் சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த நோன்பின் உரத்தினில் அவைக ளெல்லாம் உடனுடன் பொருந்த லுற்ற. | 102 |
1891 |
செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார் தம்மை யாருங் கொல்லா¤ திறையுங் அங்கங் குறைத்தலும் அரிதா மென்றாற் சொல்லரி தினையர் வன்மை தொலைந்ததெம் வரத்தா லென்னா வல்லரி புரைவெஞ் சூரன் மதித்துமற் றதனைக் கண்டான். | 103 |
1892 |
கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன் றானும் வீடா எண்டரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதி ரென்றே திண்டிறல் அசுரர் கேட்பச் செப்பலுஞ் சயந்தன் றன்னை அண்டரைப் பிடர்தொட் டுந்தி ஆங்ஙனங் கொண்டு போனார். | 104 |
1893 |
போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி ஏயினன் நங்கோன் இன்னோர் யாரையுங் காவல் கொண்மின் நீயிர்க ளென்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை ஆயவர் வல்லி பூட்டி அருஞ்சிறைக் களத்தில் உய்த்தார். | 105 |
1894 |
மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால் நோக்கி நின்னக ரத்திற் போதி நீயென அனையன் போனான் அன்னதோர் சூர பன்மன் அவையொரீஇ உறையுள் புக்கான் இன்னலங் கடலில் உற்றார் இருஞ்சிறைப் பட்ட வானோர். | 106 |
1895 |
வேறு காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கா¤ந்து பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான் நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரான் நல்கும் வீட தேயலால் துன்பறும் ஆக்கம்வே றுண்டோ. | 107 |
1896 |
வேறு படவர வனையதோர் பரும அல்குலார் இடுகிய நுண்ணிடை எழில ணங்கினோர் கொடுமைசெய் அவுணரூர் குறுகி வேடர்பால் பிடியுறு மஞ்ஞையிற் பெரிதும் அஞ்சினார். | 108 |
1897 |
சூரன்வாழ் பெருநகா¢ துன்னிக் காப்பொடு சீரிலா ஏவல்கள் செய்து மேவினார் கூரும்வாய் வெங்குரீஇக் குடம்பை உய்த்திடப் பேருறா திலகுமின் மினியின் பெற்றிபோல். | 109 |
1898 |
வாடிய மகபதி மதலை வானுளோர் ஆடுறு துயர்க்கடல் அழுந்திச் சூரர்கோன் வீடருஞ் சிறையிடை மேவி னாரவர் பாடுறு திறத்தையார் பகரற் பாலினோர். | 110 |
1899 |
இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந் தன்னவர் பெருஞ்சிறை அகற்றும் வன்மையார் பின்னெவர் உண்டுயிர் பெற்றுக் காத்திடு முன்னவர் தமக்கெலா முதல்வ நீயலால். | 111 |
1900 |
வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு சயந்தன்விண் ணுலகிடைச் சமர்செய் தெய்த்துழி வயந்தரு கோடுகண் மாய்ந்து தந்திவீழ்ந் தயர்ந்தது புவியிடை அணுகிற் றத்துணை. | 112 |
1901 |
வாலிய ஔ¤கெழு வனத்தில் ஏகியே மூலம தாகிய முக்கண் மூர்த்தியை மேலுள தாணுவின் மேவச் செய்துபின் சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே. | 113 |
1902 |
அறிவுள மால்கரி அமலன் தந்திர முறையது நாடியே முதிரும் அன்பினால் மறையுற வழிபடீஇ வைகும் எல்லையில் குறைபடு நாற்பெருங் கோடும் வந்தவே. | 114 |
1903 |
பா£¢ப்பதி மருங்குறு பகவன் ஆணையால் மாற்பெருங் களிற்றிடை வல்லை முன்புபோல் நாற்பெருந் தந்தமும் நண்ண நோக்கியே ஏற்பரு மகிழ்ச்சியோ டிருந்த தவ்விடை. | 115 |
1904 |
வேறு ஆயதோர் அமைதி யின்கண் அணங்கொடு மேரு வெற்பிற் போயின அமரர் கோமான் பொன்னகர் சூரன் மைந்தன் காயெரி கொளுவி அங்கட் கடவுளர் குழுவி னோரைச் சேயொடு பற்றி ஏகிச் சிறைசெய்த தன்மை தேர்ந்தான். | 116 |
1905 |
தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான் பன்னாள் வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச் சார்ந்துநிற் கென்னை வேண்டுஞ் சாற்றென முதல்வன் நீதி பேர்ந்தசூர் கிளையைச் செற்றெம் பேதுற வகற்று கென்றான். | 117 |
1906 |
என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை மேவி ஒன்றொரு குமரன் றன்னை உதவுவம் அவனே போந்து வென்றிகொள் சூர னாதி அவுணரை விரைவிற் செற்று மன்றநும் முரிமை ஈவன் வருந்தலென் றுரைத்துப் போனான். | 118 |
1907 |
சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க் கிறைவன் ஏனோர் ஏதிலர் தம்மால் வீடான் என்றுதன் உளத்தி லெண்ணிச் சோதிகொள் பரம மாகிதத் தோன்றிடு முதல்வன் நீயே ஆதலின் விமல மூர்த்தி அவரைமே லடுதி யென்றான். | 119 |
1908 |
அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு சூழ்ந்து மைவரு களத்தோன் தன்பான் மதனனை உய்ப்ப அன்னோன் மெய்விழி எரியின் மாய்ந்து வெறுந்துகள் படலுந் தேவர் எவ்வெவ ரும்போய் வேண்ட இரங்கியே கருணை செய்தான். | 120 |
1909 |
அரியயன் மகவான் தேவர் அருங்கணத் தலைவர் யாரும் பரவுற இமய வெற்பிற் படா¢ந்துபின் உமையை வேட்டுப் பிரிவருங் கயிலை நண்ணிப் பின்னெம திரக்கம் நாடிக் கருணையால் எந்தை நின்னை நெற்றியங் கண்ணால் தந்தான். | 121 |
1910 |
எந்தைநீ வந்த பின்றை இந்திரன் அயன்மால் தேவர் அந்தமில் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற ஆவி வந்தது போன்ற தம்மா வலியவெஞ் சூரற் செற்றுத் தந்தம தரசு பெற்ற தன்மையர் போல வுற்றார். | 122 |
1911 |
ஆழ்தத முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு வீழ்தரு வோர்கள் தம்பால் வியன்கல மொன்று சேர ஊழ்தரு தொடர்பாற் பற்றி உய்ந்தெனத் துன்ப வேலைக் கீழ்தரு வோர்கள் நின்னாற் கிளர்ந்துமேல் எழுதல் உற்றார். | 123 |
1912 |
புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம னோர்கள் அரந்தையை அகற்ற உன்னி ஐயநீ போந்த பின்னுந் தெரிந்திடு துணிபிற் சேர்ந்துந் தெம்முனைச் சூரற் கஞ்சிக் கரந்தனர் இருந்தார் காணிற் கடுஞ்சிறைப் பிணிப்ப னென்£. | 124 |
1913 |
எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில் தம்பெரு வடிவங் காணச் சாருவர் ஒழிந்த காலை உம்பர்கோன் முதலோர் தத்தம் உருக்கரந் துழல்வர் வான்மேல் வெம்பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமை யேபோல். | 125 |
1914 |
மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும் அறந்தவிர் சூர பன்மன் அடுபடைத் தலைவர்க் காணிற் பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை இறந்தன ராகிப் பின்னர் இன்னுயிர் பெறுவர் அன்றே. | 126 |
1915 |
வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில் அவுணர் கோனை நினைப்பினும் அவச மாவர் நெடுந்துயில் பெறாத நீரால் மனப்படு கனவு நீத்தார் மற்றது வருமேல் அங்கண் உனப்படு சூரற் காணின் உயிரையும் இழப்பர் அம்மா. | 127 |
1916 |
பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர ரோடு துன்னருஞ் சிறையுட் சேர்த்தித் துயர்ப்பெருங் கடலுள் வீட்டி மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும் இன்னமும் அவுணர் கோமான் இந்திரற் கலக்கண் சூழும். | 128 |
1917 |
ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலாற் சீரான் மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா வாற்றால் இப்பகல் வானோர்க் கெல்லாம் இடர்புரி கொடுமை நீரால் அப்பெருஞ் சூரற் கென்றும் ஆரம்நேர் அன்று மாதோ. | 129 |
1918 |
ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா றேனை ஆயிரத் தோரேழ் அண்டத் தவன்செயல் அறிதல் தேற்றாந் தூயதோர் பரத்தின் மேலாஞ் சோதியாய் எம்மைக் காப்பான் மேயின ஒருநீ அன்றி வேறியார் தெரிதற் பாலார். | 130 |
1919 |
தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை என்னில் கடந்திடல் புரியார் மாலுங் கமலமேல் அயனும் வானோர் அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர விருநா லண்டத் தொடுங்கிய உயிரும் அன்னோன் பெருமையார் உரைக்கற் பாலார். | 131 |
1920 |
முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு சூர பன்மன் கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீராற் படியறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கற் பாலார். | 132 |
1921 |
ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான் நாளும் இந்திரை கேள்வன் போர்செய் தெஞ்சினன் எவர்க்கும் மேலாய் முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான் பின்னர் வந்தடல் புரியான் நீயே மற்றவற் கோறல் வேண்டும். | 133 |
1922 |
ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை மைந்தர் ஏவர்கள் தமையும் அட்டே எழிலபெறு சயந்த னோடும் தேவர்தஞ் சிறையை நீக்கித் திசைமுகன் மகவா னாதிக் காவலர் பதங்கள் நல்கிக் காத்தருள் எம்மை யென்றான். | 134 |
1923 |
இவ்வஆஆ முகமா றுள்ள எம்பிரான் உளத்திற் கேற்ப உய்வுறும் அன்பாற் பொன்னோன் உரைப்பமுன் அறிந்த தொன்றை மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை ஓவாச் செவ்வியல் மகார்வாய்க் கேட்குந் திறனென வினவிச் சொல்வான். | 135 |
1924 |
புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும் ஒன்றிடை விடாது முற்றும் உள்ளவா றுரைத்தாய் நம்மு னன்றிது பனுவற் கெல்லாம் நாதனை ஒருநீ அன்றோ வென்றவன் புறத்தை நீவி இனிதருள் புரிந்தான் எங்கோன். | 136 |
1925 |
அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெஞ்சூர் இறுசெயல் நினைக்கி லாகும் ஈண்டையோர் ஆடல் உன்னிக் குறுகினை யதுபோல் அன்னோன் கொள்கையுந் தேர்ந்தாய் நிற்கோர் சிறியனேன் உரைத்தேன் என்னுந் தீப்பிழை பொறுத்தியென்றான். | 137 |
1926 |
பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித் துணையைப் பொன்னோன் மறத்தலில் அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்ற வெறித்தரு கதிர்வேல் அண்ணல் எம்முரை கொண்டு சொற்றாய் உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான். | 138 |
1927 |
வேறு பொன்னெனும் பெயரினான் பொருவில் கந்தவேள் இன்னருள் நிலைமைபெற் றிருந்த பின்னரே தன்னயல் நிற்புறு சதம கத்தனை அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான். | 139 |
1928 |
ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை மூண்டிடு சூர்குல முடிய வானுளோர் மீண்டிட இருஞ்சிறை விண்ப தத்தைநீ ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான். | 140 |
1929 |
இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும் மகபதி பரிவொடு வணங்கி வானவத் தொகையொடு போற்றியே துன்பெலாம் ஒரீஇப் புகலரும் மகிழ்ச்சியுட் பொருந்தல் மேயினான். | 141 |