pm logo

இரங்கசாமி தாஸன் இயற்றிய
"குதிரைப்பந்தய லாவணி"

kutiraippantaya lAvaNi
by irangkacAmi tAcan (in Tamil, Unicode format)


Acknowledgements:
Our sincere thanks to the Tamil Heritage Foundation for providing us with a scanned image version of this work.
This small piece of work on the horse races in Singapore by irangkacAmi tAcan was first published in Singpore in 1893.
This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
S. Karthikeyan, V. Devarajan and Kumar Mallikarjunan.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in Unicode format
This page was first placed online on 16 August 2007.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குதிரைப்பந்தய லாவணி.
இரங்கசாமி தாஸன் இயற்றியது

கடவுள் துணை.



இஃது,
சிவன் கண்ணால் தகித்தக்காமனை அந்தக்காமன் யெரியலையென்றுரைக்கும் சரிகை கிரியை யோகம் ஞானம் அத்வீத மரைவழியாயம் வண்டுமொய்க்கும் மலர்மாலையணிந்த புலவோர்கட்கும் கந்தமிகுந்த கமிஷணிந்த காமனெரியாக் காவிக்காறருக்குரைக்கும் மகா-ள-ள-ஸ்ரீ, குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாயரின் மாணாக்கன், மகா-ள-ள-ஸ்ரீ, ஆதி திருக்குடந்தை சரபக்கொடி நா.வ. இரங்கசாமி தாஸனால் இயற்றியது மற்றும் கனவான்கள் இப்போது யிந்தக்குதிரைப்பந்தயலாவணியை யெரிந்தகக்ஷியி புகலும்படி கேட்டுக் கொண்டதால் யானாகியயெளியேன் யெடுத்துரைத்தமையால் தத்துவங் கடந்து காரிகை நன்னூலிலக்கிய கற்றகனவான்கள் யிச்சிங்காரத்தில் அநேக பிழையிருந்தாலும் பொருத்தருள்க.
---------------
முதற்பாகம்.

இந்தப்படி நா.வ.இ.தாசன்
1893-வருடம் ஏப்பிரல் மாதம் இன்னும் விநோத புஸ்தகம் வருகிறது.
சிங்கப்பூர்.
தீனோதயவேந்திரசாலையி லச்சிட்டது.
------------

சிங்கை நகர்
சுப்பிரமணியர் பேரில் பதம்.

(பல்லவி)
ஆறுமுகனே ஆள யிதுசமயம் வா

(அநு பல்லவி)
பாரியான் கடைத்தேற பலதமிழ்கள் கூற
பக்ஷம் வைத்து வந்தாளும் சமயம் முருகா. (ஆரு)

(சரணங்கள்)

1.
தத்துவங்கடந்தசாமி மெய்ப்பொருளே
சரசவள்ளிலோலா சண்முகா வுமைப்பாலா
தாமேயென்மீதில் கோபம் வேண்டாம்-முருகா. (ஆரு)

2.
வேதனைச்சிதையில் விதித்தருள் துரையே
ஓமாதவசிங்காரா மகிழுமயில் வீரா
ஆதாரமுனையன்றியில்லை-முருகா. (ஆரு)

3.
பாலனானன்னை பணிந்தேனா னுன்னை
பலவினைகள் தீரும் பரமபதந் தாரும்
சுவாமி பச்சைமயில் மீதில்வரும்-முருகா (ஆரு)

4.
யேழைபங்காளா யெழில்வள்ளி லோலா
யெங்குமுன்னைத்தேடி யிரங்கசாமி பாடி
யிங்குவந்தே னென்னைக்காரும்-முருகா (ஆரு)

(இதுவுமது)
என்னைக்கார் வடிவேலவனே ஜெகதீசனருவிழியால் வருமுருகேசனே

1.
வாசவன்மகள்புய மருவியதோளா
வனசமலருதை மகிழ்மலர்த்தாளா
நேசமுடனேயடியவர்வினைத்தூளா
நிமிஷத்திலெனை வந்திடத்தகுந்தாளா (என்னை)

2.
தோகைமயிலுமிசை நடமிடும் வீறா
சுந்தரமெங்கடமணி மலர்த் தீறா
யேகனே அடிதொழுபவர்க் குபகாரா
யெந்தனவினையகல் வந்து நிற்பீறா (என்னை)

3.
பாவிகள்மேற்கவி பாடிடுகாதே
பலவழியிலுமனம் போயலையாதே
தேவியை மணலிடை மனமுருகாதே
சித்தங்கள் வைத்துயென்னை ஆள்வதுதோதே. (என்)

4.
கந்தனே யுமையவளருளிய பாலா
கார்க்கயிதுசமயம் வாவடிவேலா
அந்தமுடையரெங்க சாமியான்பாலா
அடியேனென்வினை யகற்றிடுகுணசீலா. (என்னை)

பரமகருணாநிதியே துணை.

குதிரைப்பந்தய லாவணி.

(குறள்) "அகரமுதலவெழுத்தெல்லாமாதி
பகவன் முதற்றே யுலகு."

இலாவணி.

1.
பொய்யூர்நகரைவிட்டு நாகைப்பதியைக்கிட்டி
      போவோம்வா சிங்கைநகரடிமானே,
பூவுலகம்புகழ் குதிரைப்பந்தயமிடும்
      புதுமையைப் பார்த்து வருவோம் தேனே,
வையகம்புகழ்ந்திட அனந்தநாராயணசாமி
      வாத்தியார்வீடுமடமானே,
வளமையுடனவர்கள் பாதம்பணிந்து யிப்பால்
      வாடியென்னோடு நீ செந்தேனே,
மெய்யோர் போற்றிடும் நாகப் பட்டணமதிசயம்
      விளம்புவன் கேளடிநீதானே,
விபரமாய்ச் சொல்லுதற்கு யென்னால்முடியாதடி
      விள்ளுவேன் கொஞ்சசேதி யடிமானே.

பய்யவேகரிமுகன் றாளடியைப்பணிந்து
      பலவிதபக்ஷணங்கள் விற்குங்கடையுகந்து
துய்யவேமிட்டாய்கடை தோன்றுததில்நுழைந்து
      தோணும்பலசாமான்கள் வாங்கியிப்பாலேவந்து
கையைவீசிநடந்துறதிமானே காவர்புகழ்சிங்கை குதிரைப்பந்தயம் பார்த்து
      கடுகியே திரும்பிடலாம் தேனே. (பொய்யூர்)

2.
சித்தினிப்பெண்ணேயிந்த புத்தூர்சத்திரமதை
      சேர்ந்துப்பாரடிஉந்தன் கண்ணாலே,
சேயிழையாளேதஞ்சை மில்ட்டேரிகிளப்பிது
      சேரும யீறோஜிறாவ் கடைமயிலே.,
உத்தமியேநாகப் பட்டணங்கடைத்தெரு
      ஓடிவருவாயுன்னரிவாலே,
ஒழுங்குள்ளபலவகை லண்டன்சாமானிது
      ஒளியினால் விழிகூசுமன்பாலே.

பத்திரமாய்நடந்து பாவைறதியேவாடி
      பாரும்புல்லர்புசிக்கும் மார்க்கட்டதனைத்தேடி
அத்தியாளேபுஷ்பக் கடையதனைப்பாரடி
      அகமதிலரிந்துநீ புகுமிடஞ் சந்ததடி
சித்தங்கலங்கவேண்டாம் பெண்றதியே
      சிற்பரன் புகழ்ந்திடருதி (பொய்யூர்)

3.
பல்லரும்பாளேயிந்தக் கடற்கரையோரந்தனிற்
      பகருங்கிட்டங்கு இளைப்பாறாயே,
பண்புள்ளயிங்கிலீஷ்கொடி பறக்குதுயிதோபாரு
      விளக்கு வீட்டைவெகுஒளியே,
வில்லமுடனேயிப்பால் கணபதியாப்பிள்ளை
      விரைந்துஆபீஸ்தனைச்சேரடியே,
வேகமுடனேசென்று ஆடரை வாங்கிவாறேன்
      நின்றிரு அந்தனிழல் மறத்தடியே.

தொல்லையில்லாமலேயான் தொகைபணங்கொடுத்திட
      துன்பமில்லாமலவர் சீட்டுகள் தந்திட
மல்லர்கள்புகழ்ந்திட வாங்கிக்கைபிடித்திட வந்துமறத்தடியி
லுந்தனைப்பார்த்திட ஜல்தியில்ஆடர்வாங்கி வந்தேனடி
      சாதுகள்புகழ்ந்திடும் குதிரைப்பந்தயம்
      பார்த்து தங்கமேவந்திடலா மெழுந்திறடி. (பொய்)

4.
மடமயிலாளேயினிப்படவதனிலிறங்க
      வரைநாழிசெல்லுமடிபார்ளிவே,
வாங்கிக்கொடுத்தஆடர்பத்திரமடிபெண்ணே
      வாறார்போலீஷ்கமின் வெகுதெளிவே
துடர்ந்துசவுக்கண்டிக்குள் புகுந்தாலே சனங்களை
      துககணக்காயெண்ணுறார் மிகவொளிவே
துன்பப்படாமலிந்த படவில் நாமுன்னிறங்கி
      சொல்லும்செய்தியைக்கேளடி வொளிவே

படபடப்பாய்வறாமல் சற்றுனில்லடிபெண்ணே
      பலபலசரக்குமூட்டை முந்தியெடடிகண்ணே
திடமுடன்கட்டுசாத மூட்டையுந்தாடிமின்னே
      சேல்விழியாளேகையைப் பிடித்துமெதுவா
யண்ணேடதடப்பாய்வறாமல் மெதுவாகவே
      சங்கையென்பதைவிட்டு சாதுவா கைபிடித்து
      தங்கமேகுதித் துவா மிகத்தெளிவே. (பொய்யூர்)

5.
அன்னமே படவதி லைந்தாருபேர்கூடி
      யசட்டையாய்த் தள்ளுகிறதெம்பாரு.
அட்டியில்லாமலிதோ அலையொன்றுவருகிற
      ததிர்ச்சியைப்பாடி வெகுசீரு,
தன்னகத்தோர்புகழுந் தருகாமணவறா
      சாயலில் தெரியுது நீபாரு,
சந்தோஷத்துடன்மீறாசாய்பே
      அன்புடன்சரணங்கள் செய்திடமனகோரு

வின்னமில்லாமற் சிலர் விரைந்து பித்தமேயோங்கி
      மேல்நோக்கும் வாந்தியது மெடுக்குறார்மிகத்தாங்கி
உன்னதமாகஜீடி யிறக்கிவைக்கிறார்வாங்கி
உகந்துயான்முந்தியேரி ஓர்செய்தி சொல்வேன்
      பாங்கின்னல்வில்மதன் காமரத்தினமே
கலங்கிபுலம்பவேண்டாங்காரிழையாளேகையைக்
      கவனமுடன்பிடித்து சீக்கிரமே. (பொய்யூர்)

6.
அங்கம்பூபாவையரே தங்குமிடமதனை
      அவசியம்பார்த்துவாறேன் சற்றுநில்லு,
ஆனாற்கேளவ்விடத்தில் அபுதுல்காதர்
      மரைக்காரகப்பட்ட யிடமெந்தன் சொல்லு,
பங்கமில்லாமலே பாயைவிரித்துப்போட்டேன்
      பாங்கியேருந்திநீ சேதிசொல்லு,
பாலும்பழமுங்கூட்டி தேனுஞ்சீனியுமூட்டி
      பூவுடனிளப்பாறப் பாகந்துல்லு.

சந்தேகம்வையாமலே சாதமிளப்பாரடி
      சாப்பிட்டுக்கையலம்பி ஜல்திதனிற்குந்தடி
முந்தியேயெனக்கொரு முத்தங்கொடுக்கவாடி
      முகக்களையாற்றிடத் தாம்பூலம் புசியடி
அந்திசந்தியுமொரு நாளாச்சு அன்பர்கள்புகழ்சிங்கை குதிரைப்பந்தயமடக்க
      அவஸ்தையுன்னாலேயான் படலாச்சு. (பொய்யூர்)

7.
பொழுதுவிடிந்து ஐந்துநாழிகையாகுதே
      பெண்ணேசமையல் செய்யஓடிவாரும்,
போகத்துடன்சமைத்து பாகத்தாலிளப்பாரி
      புகழுவேலப்பலதிசயம்பாரும்,
பழுதுவாறாதயிந்த பாய்மறவேடிக்கையைப்
      பார்த்த மனம்பதைக்குதே சீரும்,
பண்புள்ள அணியத்தினதிசயம்பார்த்துநாம்
      பழகியே உவர்ஜல மிகத்தேரும்

மழுவும்போலேயிருக்கும் நங்கூறசங்கிலிப்பார்
      மாறடிஅளவிற்குமேல் கொடிமறமுந்தேர்
தொழுதுபறமனடி வடக்கயர்களையுங்கூர்
துஷ்டக்கடலிந்த மக்ஷங்களைக் கண்டுசீர்
அழுதுப்புலம்பவேண்டாம் பெண்மயிலே
      அரைநாழியொருநாழி அரிந்திட மணியொன்று
      அன்பாய்கட்டியிருக்குத் தலைமேலே. (பொய்யூர்)

8.
மூக்குத்திக்கழன்றுதன் முந்தி விழுவுதடி
      மெள்ளயெடுத்துதந்தேன் வாங்கிக்கொள்ள,
மூர்க்கமுடையயிந்த நகரில் பாக்குகள் மிச்சம்
      மின்னலே அச்சக்கரை பார்மெள்ள,
தாக்கியதையாகக்கிட்டா மலையுங்கடந்தேனினிச்
      சார்ந்திடுங் குருவிப்பீர்மலைபுல்ல,
சந்தோஷத்துடனிங்கு வந்தேன் கோலப்பினாங்கில்
      சட்டமாய்க்கோட்டைமுனை நான்விள்ள

பக்கத்தில்சத்தமிதோ கேழ்க்குதடியமாதே
      பாரும் நங்கூறத்தை யிறக்குறான்கடல் மீதே
மக்கலடையாமலேச் சுற்றிலும்பார்த்தோதே
      வந்தார்படவுக்காரர் யேறடி சீடிமீதே
சக்கரைப்பெண்ணேஓர் செய்தியடி
சல்தியி லிறங்கிநாம் சாப்பிட்டிளப்பா
      சாக்கிறதையாகயிங்கே வரலாமடி. (பொய்யூர்)

9.
பட்டாளம் நிரைந்திட்ட கோட்டைமுனையிறங்கி
      பலகாரம் விற்கு மிடந்தனைப்பாரடி,
திட்டமாய்கோப்பிக்கடை டீப்பம்பசியாறநாம்சேர்வோ
      ம்றாஜாத்திமேடுதனைக் கூறடி,
திறமாம்தண்ணீர்ப்பீலியில் ஸ்நானஞ்செய்த
      பிறகு செல்லுவோம் கிஷ்ணசாமிதனைக்கோரடி.

சட்டமாய்கிளப்கடை தன்னைநாம்சார்ந்திட
      தயவுடன்மாரியம்மன் சன்னதிதாண்டிட
பட்டுபட்டாவளிகள் கடையுமுகந்துதேட
      பாவையேகளிப்பாக்கு வெற்றிலையும்வாங்கிட
கஷ்டமில்லாமலிந்தப்படவிலேரு
      கன்னியேநம்மஊர் காரிமுகம்மது
      கடுகியே ஓடுவான் வேகுசீரு (பொய்யூர்)

10.
ஓகோயென்மன்னவரே ஓர்செய்திசொல்லுகிறே
      னுரையுங்கவிச்கமே நீர்தானே,
உண்மையில்லாமலிதோ ஒற்றைப்படவிலேறி
      ஒருவன்ட்டுக்கப்பித்தான் வாறானே,
தாகத்தால்நாவறண்டுபோக முள்ளமிலாக்
      சார்ந்திட்டோம் பத்திக்கூடுமன் மதனே,
தங்கம்யான் சின்னகதைசொன்னது போரும்சுவாமி
      தானேநீர்சொல்லிவந்தால் கேழ்ப்பேனே.

பாகமொழியினாளே யிடதுகை பக்கமதில்
      பண்பாய்சினாட்டுசிங்கப்பூர் மலைகொடியதில்
தேகஞ்சிலிர்க்குதடி யிடதுகைபக்கந்தனில்
      தேனேபொறமலைபினுள்ளே வேலையாதெனில்
வேகமுடனெதிரிகப்பல் வந்தாலிருக்குஞ்சுத்துப்
      பீரங்கிமருந்துக் குண்டையும்போட்டு
      விதமாய்க்கொளுத்திவிடுவான் கண்டால். (பொய்யூர்)

11.
பாரடியேதஞ்சம்பாக்கார் டோக்கிதுசகி
      பகரும்வானோர்சபை யிற்கிணை,
பாணங்களையெரிந்தார்போல் சுக்கான்திருப்பி
      பாறைதனில் நெருக்கிவாறானை,
சேறடியேயென்னை சித்தகன்கணையினால்
      சித்தங்கலங்குதுபார் மடமானே,
சிறப்புடன்கப்பலை பாறைதனில் நெருக்கி
      சீடீயைவைத்து விட்டான் செந்தேனே.

காரணியேயிப்பால் கோரிதனைப்பாரடீ
      கருதியயிஞ்சின்வெகு திறமையைக் கூறடி
பூரணமதியுள்ள பெண்ணேசற்றுதங்கடீ
      பொருத்துப்போகலாங்களை யாற்றினாமிகும்படி
ஆரணப்பேதையரே பார்னீனே
      அழகுள்ளடோக்கினில் பழுதுவந்திடாமம
      அன்புடன் காக்கும்டாணா யிதுதானே. (பொய்யூர்)

12.
காரிழையேசிறு குதிரைக்காடியிலேறி
      கடந்திட்டோம் யின்சிங்றாட்டப்பாலே,
கண்மணியேயினிமேல் சப்ர்ஜிறோட்டதுவும்
      காணுமாரி யம்மனைப்பார்த்தாலே,
பூரில்மிகுந்தமாரியம்மனிருதாள்போற்றி
      புகழுவேன்பள்ளியையான் கண்டாலே,
போதனெறிகள்தவறாமல்நடத்திவரும்
      போலீஷ்வேடிக்கையினிச் சேர்த்தாலே

பாரிலுகந்தநூற் கிண்ணாறோட்டையுமேபார்
      பரமலோகன்கட்டடம் சாட்டர்பேங்கிதுதேர்
மீரியேடல்லிகிறாப் புதியவலங்காரங்கூர்
      மிக்கஜெயின்பாதமேன் கத்திரிஸ்காட்டையுஞ்சீர்
வீரிட்டதிவேகமாய்க்குதிரையுமே
      வேடிக்கையாயிருக்கும் அங்கோன் செங்காய்
      பேங்கை விலக்கியிப்பால்வருது பாரினமே, (பொய்)

13.
அஷ்டதிசையும்புகழ் போஸ்டாப்பீஸ் கடந்துநாம்
      அன்றியிரும் விசைப்பாலமதே,
அகமதிலரிந்துப்பார் பெரியகோட்டுத்தாண்டி
      யதுவும் றோப்பாஓட்டல் தான்மாதே,
யிஷ்டமுடனேயொருவருஷத்திற்கொருதினம்
      ஏற்படுத்திய வெள்ளைக்காரர்மீதே,
யின்பமுடைய ஜனவரித்திடலதும் பார்த்தோம்
      யேந்திழையே கிர்ச்சாகோர்மாதே.

பட்சமுடையபீச்சு றோட்டதின்மேலை
      பாசார்தெரியுதுபார் புதுமையின்வேலை
கஷ்டமாய்நார்த்பிரிக்ஷ் றோட்டுமேவாலை
      கன்னிமக்காக்காரிகள் கண்டிட்டோம்சாலை
துஷ்டர்கள்புகழ்ந்திடஜப்பொன்காரி
      தொல்புவியோறரியகன்னத்தில் டாவிட்டு
      சூக்ஷ்மாயிருப்பதைப்பார்கோரி. (பொய்யூர்)

14.
அந்தமிகுந்தப்பெண்ணே கோரங்கிஸ்திரீகளை
      அசட்டையாமள்ளிவிட்டு யிப்புறம்பார்,
அழகுபொருந்துமிடம் பால்க்கம்பம் கந்தசாமிய்யா
      வனுமதியால் வெகுவாகத்தேர்,
சந்ததம்புகழ்ந்திடஜெய சரபக்கெயைத்தானே
      வெற்றியடைந்து நாட்டினென்தேர்,
தவமைபொருந்தும் தம்பியய்யா வவரும்தானே
      வெகுமதிகள் மிகவுஞ்செய்தார்

செந்தமிழ்ப்பாவலரை ஜெயிற்றுக்கொடியைஏற்றி
      சிறந்தவிக்டோரியாக்கூத்து மேடையுந்தூற்றி
கந்தமொழியெரூமா பாஞ்சாங்கொடியைப்பொற்றி
      கனமுடனிருந்துநாம் யெழுந்துக்களைகளாற்றி
தந்தைதாய்மகிழ்ந்திடவந்தமடி
      தாசர்கள்புகழ்ந்திடும் டோப்பிக்கம்பத்துக்கப்பால்
      தானேயிரும்புப்பாலம் வெகுநேறடி. (பொய்யூர்)

15.
வேடிக்கையாகயிதோ கூடுமாட்டுக்கடையை
      விதமாய்க் கதோமடி யுல்லாசர்,
வேணபொருள்படைத்த திமிர்புஜம்கவாத்செய்யும்
      லையில்முதல்நம்பர் விசுவாசர்,
நாடிடுமப்பாசாமி பேதாவேலைக்காறறோ
      ணாவுக்குகந்திடு மலர்வாசர்,
நங்கையேயெந்தனுக்கு சீஷனவரைப்போட்டிலே
      கண்டதில்லை யதிநேசர்

நீடுமவர்சமுசாரம்பிள்ளையினோடு
      நீயிருந்துசற்றுநேரங்களைப்பையாடு
தேடுங்குதிரைப்பந்தயம் பார்க்கயெல்லோருங்கூடு
      சீக்கிரத்தில்வாருங்கள் டாணாவைத்தாண்டிப்பாடு
பாடினேன்சிறாங்றோட்டும் பப்ளிறோட்டை
      பலவிதமருந்துகள் யிருக்கு ஆசிப்பத்திரிபார்த்து
      ஒவ்வொன்றாய் சொல்வேன் பின்னாட்டை (பொய்)

16.
வேதியர்குழுமிந்த குதிரைப்பந்தயத்தெடல்
      விபரத்தைச்சொல்லயென்னால்முடியாதா,
வேகமாய்போகவேண்டியாசானிருக்குமிடம்
      விரிதுரைக்கவில்லையடிதோதா,
மாதவத்தோர்புகழு மனேகபிரஜைகளை
      வயைச்சுற்றிப்பாரடிகோதா,
மன்னவர்துதித்திட பக்கிசாரட்சோடிகள்
      வகைவகையாயிருக்குதடிவாதா

சாதனையாகயிந்த வாடிக்குள் நுழைந்திட
      சந்தோஷத்துடன்பேதா பாறாவும்நெருங்கிட
பாதகத்தாலே நீ யள்ளுரைத்தாண்டிட
      பதைக்குதேயென்னெஞ்சஞ் சனங்களைப்பார்த்திட
ஆதியாயதிசயம்புல்வேனடி
யன்பர்கள்புகழ்சிங்கைக் குதிரைப் பந்தயமிட
      ஆச்சுது அசுவங்கள் வந்தடி. (பொய்யூ)

17.
அச்சமில்லாமலிதில் மெக்ரீஷனானவனும்
      அவசரமாகவாறான் பார்மயிலே,
அடுத்தாப்போல்டாலனவன் ஒற்றைக்குதிரையேறி
      யகத்தின் முன்னோடிவாறான்கேள்தையலே,
பட்சத்துடன்சிரித்துப்பாலனிபுறாமடி
      பந்தயத்துடன்வந்தான் பார்குயிலே,
பலதேவர்புகழ்ந்திட நாமிருவருங்கூடி
      பந்தயங்கட்டிக்கொள்வோம் வாமெய்யிலே

உச்சிதமாகயிங்கு உரைக்கிரேனொருசேதி
      உண்மைநீதோற்றுவிட்டா லுகந்தென்னைச்சேரநீதி
கச்சிதமுடன்யினி கழறிடவேணும்செய்தி
      கண்ணேயினிமேற்பட கருத்தாய்ச்சொல்லிடகியாதி
கூச்சப்படாமற்ஜல்திசொல்லடியே
      கூடும்பந்தயமதைவிடுகிறசமையந்தான்
      கூறிடவேண்டும் நீ பெண்ரதியே. (பொய்யூ)

18.
பார்த்தால்தெரியுதய்யா டாலன்துரையுமவன்
      பண்புடன்முந்தி றான்யென்சுவாமி,
பகர்ந்திடமருநான்கு குதிரையும்பிந்துறது
      பாருமெ சொல்லை நிர்மிக்நேமி,
சேர்த்துவிட்டான்பெண்ணே தீறனிபுறானடி
      செதிதோற்றுவிட்டாயடி காமி,
சிறப்புள்ள மங்கையேயென் பந்தயங்கெலித்து
      சீக்கிரத்திலென்னைச் சேரநேமி

கூத்துப்பார்த்தவிடத்தில் பேய்பிடித்ததுபோலே
      கூடியசொக்குத்தூளை போட்டீர்களோகண்ணிலே
காற்றுப்போல்வாறானையா பாருங்களெதிராலே
      களைத்துப்போச்சுதுயெந்தன் பந்தயம்வீணாலே
      வளர்ந்திட்டயிம்மலைபேர் யென்னஐயா
வகையுடன்வளவுக்குச் சென்றிடலாம் வாரும்
      வாகாயிவர்களைனீர் பிரியுமய்யா. (பொய்யூர்)

19.
அவுசுடனப்பாசாமிமுதலியைப்பிரிந்துன்
      அடுத்தக்கெவுனர்மலை தனிலேறடி,
அக்குமுடையயிந்த கெவுணர்வாசல் கடந்து
      அன்புள்ளதோட்டமதின் திறம்பாறடி,
கவனமுடன் தோட்டத்தைச் சுற்றிப்பார்த்திருவருங்
      கடந்திடில் கேட்டுவாசல்காறடி
கண்மணிப்பெண்ணேயினி தங்களியன்பாசார்
      காட்டிட்டேன் மேட்டுத்தானதைக்கோறடி.

புவனமதிலறிந்த கருப்பண்ணவாத்தியார்
      பொற்பாதந்துதிசெய்ய வூருக்குப்போயிருக்கார்
மொனமாயெந்தனுக்குப் பாடிடச்சொல்லிவைத்தார்
      மாறாமல்ராமசாமி பத்தரவரையும்பார்வுசாக
அங்கிருந்து யெழுந்துவாடி
      மாதவங்கள்புரியும் சிவன்சன்னதியைத்
      தேடிவன்புடன் சரணங்கள் செய்யக்கோறடி. (பொய்யூர்)

20.
வாறாய்சிவன்கோயிலைத் தாண்டியிப்பால்நடந்தால்
      மாதர்கள் ங்கோல்கம்பம் பாரினமே,
வங்கணமுள்ளவேலைக்கண் காக்ஷி வேடிக்கையை
      வரும்போதுசொல்கிறேன் கேளினமே,
பாறாய்க்ஷௌறகர்கள்வாழுமிடமிதடி
      பண்பாய்புதுப்பள்ளியைக் கார்மனமே,
பலவிதஒயின்சாறாயம் விற்கும் கடையைப்
      பாழாகத்தள்ளிவா வண்டினமே

தீறாதாவழக்கெல்லாந் தீர்க்கும் வீரனையோது
      திறமுடன்டோப்பிக்கம்பம் சந்தினுள்ளேவாது
மாறாதசுப்பையாவை துப்பாஸ்வேலையிற்பாது
      மகிழ்வுட னவர்பாதம் போற்றிசெய்சபைமீது
மாறனவரைக்கண்டு
      நாமெழுந்து மங்களமாகயினி பாற்கம்பம்
      தன்னி வாகாயெப்போது மிருப்போமுகந்து. (பொய்யூர்)

21.
மங்காதகீர்த்திபெற்ற யெங்கும்பிரபல்யதுஜம்
      சங்கம்புகழத்திருக்குடந்தைவாசன்,
மறைநூலறைவேள் தறையோர்புகழ்
      சேர்மதியால் சிந்திடுஞ்சிவதாசன்,
குங்குமபுயகொங்கை மடவார்மடவரையமிங்கீர்த
      குவான கலியோகன்,
குரிசேர் அரிசேர்வரிசேரிதுசோர்குமுரும்
      அத்வீதவமரையாகன்

தங்கும்படிக்கிக்கவி மழைபொழிந்திடும்நேசன்
      சாதுக்கள் புகழ்ந்திடுஞ் சறபக்கொடியுல்லாசன்
யெங்குஞ்சிறந்தரெங்கசாமியான் பூபாலன்யியற்றினேன்
      சிங்காரமரிந்துக்கொள் குருபாலன்
செங்கைவேள்மதன்கணை மீருதடி
      சீக்கிரம்வந்துயென்னைச் சேர்ந்து சுகம்
      கொடுத்து சித்தம்வைத்தாளவாரதியேடி. (பொய்யூ)

குதிரைப்பந்தய லாவணி முற்றிற்று.
கொடுத்த மேற்காப்பிபடி அச்சடுக்கப்பட்டது.
------------------------------

This page was last revised on 29 October 2021.
Feel free to send corrections and comments to the webmaster (pmadurai AT gmail.com)