7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் | 445 - 500 |
8. புண்ணிய கோடீசப்படலம் | 501 - 534 |
9. வலம்புரி விநாயகர் படலம் | 535 - 582 |
10. சிவாத்தானப்படலம் | 583 - 631 |
11. மணிகண்டேசப் படலம் | 632 - 698 |
12. சார்ந்தாசயப் படலம் | 699 - 750 |
13. சத்த தானப்படலம் | 751 - 763 |
14. பராசரேசப் படலம் | 764 - 791 |
15. ஆதிபிதேசப் படலம் | 792 - 797 |
16. முத்தீசப் படலம் | 798 - 814 |
17. பணாதரேசப் படலம் | 815 - 821 |
18. காயாரோகணப் படலம் | 822 - 835 |
19. சித்தீசப் படலம் | 836 - 839 |
20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் | 840 - 863 |
21. இட்ட சித்தீசப் படலம் | 864 - 888 |
22. கச்சபேசப் படலம் | 889 - 901 |
23. சகோதர தீர்த்தப் படலம் | 902 - 911 |
24. சுரகரேசப் படலம் | 912 - 956 |
25. தான்தோன்றீசப் படலம் | 957 - 970 |
26. அமரேசப் படலம் | 971 - 991 |
27. திருமேற்றளிப் படலம் | 992 - 1002 |
28. அனேகதங்காவதப் படலம் | 1003 - 1014 |
29. கயிலாயப்படலம் | 1015 - 1056 |
445 |
மெய்த்தவர் யாவரும் அங்கது கேட்டு விழித்துணை நீர்வாரக் கைத்தலம் உச்சி முகிழ்த்து மயிர்ப்புள கங்கள் மலிந்தயர்வார் முன்தி பெறற்குயர் காரணம் இன்று தொகுத்து மொழிந்தனைநீ அத்தல மேன்மை அனைத்தும் விரித்தரு ளென்றலும் அச்சூதன் (மலிந்து - நிறைந்து. அயர்வார் - பரவசப்படுவார். அயர்வாராகி எனப்பொருள் கொள்க) | 1 |
446 |
கச்சியுள் எண்புறு தீர்த்தம் நிறைந்துள காமுறு பலதானம் பொச்சமில் போகமும் வீடும் அளிப்பன போக்கரு மேன்மையவாம் அச்சம் அறுத்து வியாதன் எனக்கருள் செய்த முறைப்படியே இச்சையின் ஓதுவல் அந்தணிர் கேண்மின் எனச்சொல லுற்றனனால் (காமுறு - விரும்புகின்ற. தானம் - இடம். பொச்சம் - பொய். கோக்கரும் - நீக்குதலில்லாத ) | 2 |
447 |
இந்நக ரிற்புகல் சத்திய மாவிர தப்பெயரிற் குணபால் தன்னிகர் மெய்த்தலம் ஒன்றுள தங்கமர் சத்திய விரதீசர் என்னை யுடைப்பெரு மாட்டியும் ஓரிரு மைந்தரும் உடன்மேவ மன்னி இருத்தலின் அத்தல மேன்மையை யாவர் வகுக்கவலார் (குணபால் - கிழக்குப் பக்கம். ) | 3 |
448 |
சத்திய சத்தியர் சத்திய சோதகர் சத்திய சங்கற்பர் சத்திய காமர் இருத்தலின் அப்பதி சத்திய விரதமதாம் சத்திய நன்னெறி யார்க்கும் விரைந்தருள் செய்துறு தானமதிற் சத்திய மாவிர தத்தடம் ஒன்றுள தத்தட நீராடி (சத்தியம் - உண்மை. சத்திய சத்தியர் - அழியாத உண்மையை உடையவர். சத்திய சோதகர் - உண்மையைத் தொழிற்படுத்துபவர். சத்திய சங்கற்பர் - உண்மை நினைவுடையவர். நினத்ததை நினைத்தவாறே முடிப்பவர் என்றும் பொருள். சத்திய காமர் - உண்மையை விரும்புபவர். நன்னெறி - முத்திக்கு வாயிலாகிய நெறி; ஞானம். | 4 |
449 |
புதனமர் நாளினில் நீர்க்கட னாதி பொருந்த முடித்தங்கண் இதமுறு சத்திய மாவிர தீசரை ஏத்தி வணங்குநர்தாம் கதவினை தீர்த்தருள் உண்மை உணர்ந்து கலநநபர்கள் முத்தியினை மதமுறு காம மயக்கம் அனைத்தும் அறுத்துயர் முனிவீர்காள் (அமர் - விருப்பம். இதம் - இன்பம். கதம் - கொடுமை) | 5 |
450 |
மனைவியர் மக்கள் நிலங்கலை செல்வமும் மற்றெவை வேண்டிடினும் அனையவை முற்றும் அளித்துயர் வீடும் அளித்திடும் அத்தீர்த்தம் இணைய தடம்பதி இந்திர தீர்த்தமும் இந்திர புரமுமெனப் புனைபெய ரும்பெறும் அப்பெயர் எய்திய காரணமும் புகல்வேன் | 6 |
451 |
இந்திரன் அரசிருக்கை மதுமல ராளிதன் மேதகு கற்பம் வராகம துறுமாறாம் முதுமனு வந்தர நாட்சிவி என்றொரு வாசவன் முன்னுளனால் விதுவினை யொப்பன் அரம்பைய ராகிய மென்குழு தங்களிடைப் பொதுவறு தானவ மாக்கட லுக்கு வடாதெரி கனல்போல்வான் (மலராளி - பிரமன். கற்பம் - ஒரு கால அளவை. அது நித்ய கற்பம், மகாகற்பம் என இரண்டு வகைப்படும். நித்ய கற்ப மென்பது பிரமனுக்கு ஒரு நாள். மகாகற்ப மென்பது பிரமனுக்கு வாழ்நாள். ஒவ்வொரு கற்பமும் அதன்கண் நிகழும் நிகழ்ச்சியாற் பெயர் பெறும். பிரளய வெள்ளத்தில் அழுந்திய உலகத்தைத் திருமால் வெள்ளைப் பன்றி வடிவங் கொண்டு தனது கொம்பினால் எடுத்து நிலைநிறுத்திய கற்பம் சுவேத வராக கற்பம் எனப்படும். மனுவந்தரம் - மனுவின் காலம். மனுக்கள் பதினால்வர் உளர் என்ப. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வோர் இந்திரராகப் பதினால்வர் இந்திரர் உலர் என்ப. இப்பொழுது நிகழ்வது வைவச்சுத மனுவந்தரம். இப்பதினான்கு இந்திரர்கலும் அழிந்தால் பிரமனது பகற்காலம் முடியும் என்ப. விது - சந்திரன். வடாதெரியகனல் - வடவாமுகக்கினி. | 7 |
452 |
கடவுளர் சேனைப் பங்கய பானு கற்சிறை அரிவயிரப் படையவன் ஓர்நாட்கடவுள் அவைக்கட் பாசிழை வெதிர்பொருதோள் படவர லல்குற் சசிபுடை மேவப் பன்மணி அரியணைமேல் வடிவ மடங்கல் மேநநர் மடங்கல் போன்மென வைகினனால். கடவுளர் சேனை - தேவர்கள் கூட்டம். பங்கய பானு - தாமரைகளுக்குச் சூரியன். கல் - மலை. வயிரப்படை - வஜ்ராயுதம். கற்சிறை அரீ - ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன, அவற்றை இந்திரன் வஜ்ராயுதத்தல் அரிந்தனன் என்பது புராணக் கதை. பாசிழை - பசிய அணிகலன். வெதிர் - மூங்கில். சசி - இந்திராணி. | 8 |
453 |
இருபுடை வெண்கவ ரித்தொகை துள்ள மிகைக்குடை எழில்செய்ய விருதுநநந மாகதர் சூதர் முழக்க வியன்மணி மாநிதியைந் தருவொடு தேனு விழிக்கடை நோக்கினை நோக்குபு தலைநிற்ப அருகுறு கின்னரர் யாழமிர் தஞ்செவி யார விருந்தயர. விருது - கீர்த்தி. மாகதர் - இருந்தேத்துவார். சூதர் - நின்றேத்துவார். மணி - சிந்தாமணி. ஐந்தரு - கற்பகம் முதலாய ஐந்து மரங்கள். தேனு - காமதேனு. இவை வேண்டியவற்றை அளிப்பன. இவை இந்திரனின் குறிப்பை நோக்கி நின்றன., அவனால் அன்பு செய்யப்பட்டோர் விரும்பியவற்றை அளிப்பதற்கு. அயர - செய்ய. | 9 |
454 |
மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந் துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம் அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக விழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத. உறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல. | 10 |
455 |
அரம்பை உருப்பசி மேனகை நநதலிய அரிமதர் விழிமடவார் நிரம்பிய காம நலங்கனி அவிநய நெறிமுறை கரமசைப்ப பரம்பு மிடற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினோடும் வரம்பெறும் அற்புத மின்னவிர் கொடியென மகிழ்நடம் எதிர்புரிய அரி - செவ்வரி. மதர் - களிப்பு. பரம்பு - பரவிய. வரம் - மேன்மை | 11 |
456 |
மருத்துவர் வானவர் கின்னரர் சித்தர் வசுக்கள் மருத்துக்கள் உருத்திரர் சாத்தியர் கந்தரு வத்தர் உடுக்கள் நவக்கோள்கள் திருக்கிளர் மெய்த்தவர் யோகிகள் கையிணை சென்னி மிசைக்குவியா நெருக்கினுள் எய்தி இறைஞ்சி மருங்குற நிரல்பட நிற்பவரோ. மருத்துவர் - தேவ வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள். மருத்துக்கள் - திதி என்பவன் வயிற்றில் இந்திரனால் கூறுபடுத்தப்பட்டுப் பிறந்து காற்று வடிவமாய்ச் சஞ்சரிக்கும் நாரிபத்தொன்பதின்மர் என்பர். ந[த்தியர்- தருமனின் புதல்வர் பன்னிருவர் என்ப. | 12 |
457 |
கணங்கொள் தயித்தியர் யாவரும் வந்து கடைத்தலை வாய்தலின்மாட் டுணங்குபு செவ்வி கிடைத்திலர் நிற்ப ஒழிந்தவர் தங்குறைதீர்த் தணங்கரும் இன்பவெள் ளத்தில் அழுந்தி அளப்பரு செல்வத்தான் இணங்கலர் கோளரி இன்னணம் மேவுழி எண்ணினன் இவையெலாம் கணம் - கூட்டம். தயித்தியர் - அசுரர். கடைத்த்லை வாய்தல் - வாயிற்கடை. உணங்குபு - வாடி. செவ்வி - தக்க சமயம். அணங்கரும் - துன்பமற்ற. இணங்கலர்- இனக்கமில்லாத பகைவர்கள். கோளரி - சிங்கம். | 13 |
458 |
இந்திரன் அரசியலை வெறுத்தல் வேறு இருவினை யொப்பு வாய்ந்த பருவம்வந் தெய்தலாலே மருவருந் துறக்க வைப்பின் அரசியல் வாழ்க்கை தன்னை அருவருத் துவர்த்துக் காவற் சிறையிடை யகப்பட் டோ ரின் வெருவரும் பதைக்கும் அஞ்சும் வேறிவை கருத்துட் கொள்வான் இருவினை ஒப்பு - நல்வினைப் பயனாக வரும் இன்பம், தீவினைப் பயனாக வரும் துன்பம் இரண்டினையும் இறயருளாக ஏற்றுக் கொள்ளும் மனவமைதி. மருவருந்துறக்கம் - அடைவதற்கு அரிதான சுவர்க்கலோகம். அருவருத்து - கூசி வெறுத்து. | 14 |
459 |
அழியுமிவ் விடய வாழ்விற் களித்திருந் தந்தோ கெட்டேன் பழிபவக் கடலிற் காலப் பாந்தள்வாய்க் கிடந்தும் நாணேன் வழிமுறை அறியா மாய வல்லிருட் படுகர்ச் சேற்றுள் இழியும்ஊர்ப் பன்றி யேபோல் உழந்தவென் அறிவு நன்றால் பவக்கடல் - பிறவியாகிய கடல். காலப் பாந்தள் - காலமாகிய பாம்பு. படுகர் - குழி, பள்ளம்; பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை, கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினாயேஔ (திருமுறை 2:79:6) | 15 |
460 |
அருவினை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் காலம் கருவுறும் எவையும் கால வயத்தவாம் காலந் தான்மற் றொருபொருள் வயத்த தன்றாலுந்தியோன் கற்பத் தீரேழ் பொருவிலிந் திரர்கள் மாய்வர் பொன்றுவர் மனுக்கள் தாமும் | 16 |
461 |
ஓதுமிக் கற்பம் வேதற் கொருதினம் அந்நாள் முப்ப தாதலோர் மதியாம் திங்க ளாறிரண் டாயி னாண்டாம் ஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்த மாகப் போதரும் போதில் அன்னான் பொன்றுவன் மன்ற மாதோ பரார்த்தம் - பிரமன் வாழ்நாளிற் பாதி | 17 |
462 |
அம்மலர்க்கிழவன் காலம் அரிக்கொரு தினமன் னோனும் அம்முறைத் திங்கள் கூடு மாண்டுநூ றெய்திற் பொன்றும் அம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன் இம்மையில் வீடு பேற்றிற் குபாயமே அறிதல் வேண்டும். | 18 |
463 |
அவையகத் துள்ளார்க் கெல்லாம் விடையளித் தெழுந்து போந்து நவையற விரைவின் அந்தப் புரநநதினை நணுகி அங்கநந புவிபுகழ் குரவற் கூவிப் போற்றிநின் றிதனை விள்வான் சிவியெனத் திசைபோங் கீர்த்தித் தேவர்கட் கிறைவன் மன்னோ | 19 |
464 |
இந்திரன் தேவகுருவிடம் முறைகூறல் இவ்வர சியற்கை தன்னில் இனியெனக் காசை யில்லை அவ்விதி முகுந்தன் ஏனோர் வாழ்க்கையும் அவாவு கில்லேன் மெய்வகை உணர்ந்து முத்தி மேவுதற் குபாயம் ஒன்று செவ்வனோர்ந் துரைத்தி என்னத் தேசிகன் தேர்ந்து சொல்வான் | 20 |
465 |
இந்திரனுக்குத் தேவகுரு உபதேசித்தல் நன்றுநீ வினாய முத்தி நற்றவம் வேள்வி தானம் கன்றுபட் டினிவே றொன்றாற் காண்பரி தாகும் மைந்தா துன்றிய மாய வாழ்க்கைத் தொடக்கறுத் துய்யக் கொள்வான் என்றுமெம் பெருமான் உள்ளான் அவநநதிறம் இயம்பக் கேட்டி | 21 |
466 |
கலிவிருத்தம் குறைவிலா மங்கல குணத்த னாதலின் நிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின் அறைகுவர் சிவனென அறிவின் மேலவர் இறையவன் பெருமையை யாவர் கூறுவார் | 22 |
467 |
மேலெனப் படுவன எவைக்கும் மேலவன் மாலெனப் படுவன எவையும் மாற்றுவான் நூலெனப் படுவன எலாம்நு வன்றவன் வேலெனப் படும்விழி பாகம் மேயினான் | 23 |
468 |
பங்கயன் றன்னைமுன் படைத்து மால்முதல் புங்கவர் தம்மைப்பின் உதவும் பொற்பினான் அங்கவன் இலனெனில் அகில லோகமும் பொங்கிய வல்லிருள் பொதிந்த நீரவே | 24 |
469 |
பகலிர விளதுள தெனும்ப குப்பிலா அகலரு மிருள்பொதி அநாதி காலையில் உகலரும் பரசிவன் ஒருவனே உளன் மிகுமுணர் வவனிடை வெளிப்பட் டோ ங்குமால் (மிகுமுணர்வு - தடையிலா ஞானமாகிய பராசத்தி) | 25 |
470 |
எங்குள யாவையும் இவன்வ யத்தவாம் எங்கணு மிவனொரு வயத்தின் எய்திடான் எங்கணும் விழிமுகம் எநநநநம் கால்கரம் எங்கணுந் திருவுரு இவனுக் கென்பவே | 26 |
471 |
அரியயன் அமரர்கள் அசுரர் யோகிகள் இருளறு வேதவே தாந்தம் யாருமிப் பெரியவன் அடியிணை காணும் பெட்பினால் தெரிகிலா மாறுகொண் டின்னுந் தேடுவார் ) | 27 |
472 |
அவனவன் அதுவெனும் அவைதொ றொன்றுமிச் சிவனலான் முத்தியிற் சேர்த்து வாரில்லை துவலரும் இம்முறை சுருதி கூறுமால் இவனடி வழிபடின் முத்தி எய்துவாய் | 28 |
473 |
பன்னுவ தெவன்பல பரிந்த நெஞ்சினும் அந்நியர் தமையொநநத் தரனை ஏத்துதி இன்னதே வீட்டினுக் கேது வாமெனும் பொன்னுரை மனங்கொடு புகலு வான்சிவி | 29 |
474 |
குரவனே அயனரி குரவ னேசிவன் குரவனே தந்தைதாய் குரவ னேயெலாம் குரவனே என்றுநூல் கூறும் உண்மையைக் குரவனேயென்னிடை இன்று காட்டினாய் | 30 |
475 |
உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன் இன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி பொன்பொதி சடையனைப் போற்று மாறிது அன்பொடும் அடியனேற் கருளு கென்றலும் | 31 |
476 |
கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர் இடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம் விடலருஞ் சத்திய விரத தானத்தின் முடிவில்சத் தியவிர தீசன் முன்பரோ. | 32 |
477 |
மேற்றிசை சத்திய விரத தீர்த்தமொன் றாக்கவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப் போற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென் றூற்றெழுந் துறுதடத் துதந மாடியே. | 33 |
478 |
விதியுளி முடித்துநித் தியநை மித்திகம் புதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம் மதிநுதல் விளங்கிட அக்க மாமணி நிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே. 35 | 34 |
479 |
தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால் வெள்ளொளிச் சத்திய விரத நாதனை நநள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான் நள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய் | 35 |
480 |
என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ வென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால் தொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம் சென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான் (விரதங் கேள்வியால் -விரதத்தைக் கேள்வியால்) | 36 |
481 |
உள்ளது கூறினை உம்மை யாயிடை அள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள் வெள்ளச்சீர்ச் சத்திய விரதம் மூழ்கியீண் டெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய். 38 (மும்மை - முற்பிறப்பு. அள் - கூர்மை. குலிசி - வஜ்ராயுதத்தை உடையவன். புந்தி நாள் - புதன் கிழமை) | 37 |
482 |
ஒருபொழு தாடினார் உம்பர் கோனிடம் இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே மருவுவர் யாரதன் வண்மை கூறுவார் | 38 |
483 |
புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின் அந்தநாள் மூழ்கலின் அரச நீயுமிப் பந்தமில் வீடுறற் பாலை யாயினை மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன் (மந்தணம் - இரகசியம். வாசவன் - இந்திரன்) | 39 |
484 |
இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும் அப்புத வாரநாள் அதிக மாயதென் செப்புதி என்றலும் தேசி கப்பிரான் ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான். | 40 |
485 |
புதன் வழிபட்ட வரலாறு - கொச்சகக் கலிப்பா மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப் பதிக்கணணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ்செய்தான் | 41 |
486 |
மேதகுசத் தியவிரதப் பெருமானும் வெள்விடைமேல் மாதுமையா ளுடனேறி வயக்கரிமா முகனிளையோன் காதல்புரி அருள்நந்தி கணநாதர் புடைசூழ வாதரமோ டெழுந்தருளித் திருக்காட்சி அளித்தருள | 42 |
487 |
கண்டுபர வசனாகிக் கைதொழுது பெருங்காதல் மண்டியெழு மயிர்சிலிர்ப்ப மனத்தடங்காப் பேருவகை கொண்டுநில முறவீழ்ந்து குழைந்துருகி விழிதுளிப்பத் தொண்டனேன் உய்ந்தேனென் றெழுந்தாடித் துதிசெய்வான். | 43 |
488 |
நெடியோனும் மலரவனும் நேடரிய திருவடிகள் அடியேனுக் கெளிவந்த அருட்கருணைத் திறம்போற்றி ஒடியாத எண்குணங்கள் உடையானே எனையுடையாய் கடியார்சத் தியவிரத நாயகநின் கழல்போற்றி | 44 |
489 |
என்றேத்தி எந்தையென யான்கிரக நிலைபெறவுங் குன்றாதுன் திருவடிக்கீழ் மெய்யன்பு கூர்ந்திடவும் இன்றாதி யென்வாரத் தித்தீர்த்தம் படிந்துபொறி வென்றோர்முன் னையின் இரட்டிப் பயனெய்தி வீடுறவும் | 45 |
490 |
வேண்டுமென இரந்தேற்ப அளித்தருளி வெள்விடைமேல் யாண்டகையங் ககன்றனனால் அன்றுமுதல் அத்தீர்த்தம் பூண்டபுத வாரத்துச் சிறப்பெய்தும் புந்தியுறக் காண்டியெனுங் குரவனுரை காரூர்தி செவிமடுத்தான் புந்தியுற - புத்தியில் பொருந்த. காரூர்தி - மேக வாகனத்தை உடையவன், இந்திரன் | 46 |
491 |
இந்திரன் சத்தியவிரதம் அடைந்து வழிபடுதல் அப்பொழுதெ அரசுரிமை அம்மநநயோன் புநநவைத்துச் செப்பருஞ்சத் தியவிரதத் திருநகரின் விரைந்தெய்தி முப்பொழுதும் நீராடி முழுநீறு மெய்பூசி மெய்ப்படுகண் டிகைபூண்டு புண்டரமும் நுதல்விளங்க 48 | 47 |
492 |
உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன் திருப்பதங்கள் சிந்தித்துக் கோயிலினுள் சென்றெய்தி அருத்தியொடும் பூசனைசெய் தாராமை மீக்கொள்ளப் பெருத்தெழுந்த பேரன்பிற் பெருமானைத் துதிக்கின்றான் | 48 |
493 |
இந்திரன் துதித்தல் - அறுசீரடியாசிரிய விருத்தம் நநநநநடி வினும் தேறா மலர்சிலம் படியாய் போற்றி அறைபுனல் உலகம் எல்லாம் படைத்தளித் தழிப்பாய் போற்றி சிறைநிறை வாசத் தெண்நநர் சத்திய விரத தீர்த்தத் துறைகெழு வரைப்பின் மேய சுந்தர விடங்கா போற்றி மலர் சிலம்படி - விரிந்தும் சிலம்பை அணிந்தும் உள்ள திருவடி. அறி - ஒலிக்கின்ற. சிறை - கரை. சுந்தர விடங்கன் - பேரழகன். | 49 |
494 |
அண்ணலே விடயத் துன்ப மாற்றிலேன் ஓலம் ஓலம் எண்ணறும் யோனி தோறுந் திரிந்தலைந் தெய்த்தேன் ஓலம் கண்ணினுள் மணியே வேறு கண்டிலேன் களைகண் ஓலம் புண்ணிய முதலே இன்பப் பூரணா ஓலம் ஓலம் எய்த்தேன் - இளைத்தேன். களைகண் - பற்றுக்கோடு. புண்ணிய முதல் - புண்ணியங்களுக்குக் காரணமானவன். | 50 |
495 |
புழுப்பொதிந் தநநம்பு பாயும் புன்புலை உடலே ஓம்பிக் கழித்தனன் கால மெல்லாம் கடையனேன் பொறிகள் யாண்டும் இழுத்திழுத் தலைப்ப நொந்தேன் இனித்தினைப் பொழுது மாற்றேன் சழக்கறுத் தருள்வாய் உன்றன் சரணமே சரணம் ஐயா அசும்பு- அழுக்குநீர்க் கசிவு. புலை ? இழிவு. சழக்கு - பொய்.. சரணமே சரணம் - திருவடிகளே புகலிடம். இந்திரனுக்குச் சத்திய விரதர் காட்சி கொடுத்தல் | 51 |
496 |
அடைக்கலம் அடியேன் என்றென் றழுதிரந் தயருங் காலை விடைத்தனிப் பெருமான் அன்னோன் பத்தியின் விளைவு நோக்கி நடைப்பிடி உமையா ளோடு நண்ணிநீ வேண்டிற் றென்னை எடுத்துரை தருதும் என்றான் இந்திரன் தொழுது வேண்டும் | 52 |
497 |
வினைவழிப் பிறந்து வீந்து மெலிந்தநாள் எல்லை இல்லை அனையவற் றடிகேள் உன்றன் அடிதொழப் பெற்றி லேனால் நினவரும் தவத்தால் இன்று நின்னருட் குரிய னாயினேன் இனிவரும் பிறவி மாற்றி என்றனை உய்யக் கோடி | 53 |
498 |
இத்தலந் தீர்த்தம் என்றன் பெயரினான் இலக வேண்டும் அத்தனே என்ன லோடும் அவ்வகை அருளி மீளா முத்திசேர் கணநா தர்க்குள் முதல்வனாந் தன்மை நல்கிப் பைத்தபாம் பாரம் பூண்ட பண்ணவன் இலிங்கத் தானான் 55 | 54 |
499 |
அற்றைநாள் முதலச் சூழல் இந்திர புரமாம் அங்கண் கற்றைவார் சடையீர் ஓர்கால் கண்ணுறப் பெற்றோர் தாமும் வெற்றிவேற் காலன் றன்பால் விரவிடார் கருவில் எய்தார் இற்றதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார். | 55 |
500 |
சத்திய விரதம் காநநத் தருவளஞ் செறித லாலே சித்திசேர்ந் தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென் றித்திருப் பெயரின் ஓங்கும் எநநபரால் மாசு தீர்ந்த உத்தமக் கேள்வி சான்ற உணர்வடை உம்பர் மேலோர் காரைத் தருவனம் - காரை என்னும் ஒருவகை மரங்கள் பொருந்திய காடு | 56 |
501 |
செச்சைச்சடை அந்தணர் தேமலர் சூழ்ந்த மெய்ச்சத்திய மாவிரத்தத்தல மேன்மை சொற்றாம் கச்சிப்பதி யிற்கவர் புண்ணிய கோடி மேன்மை நச்சிப்புகல் கின்றனம் நன்கு மதித்துக் கேண்மின் (செச்சைச்சடை - சிவந்த சடை) | 1 |
502 |
மின்பாய்பொழிற் சத்திய மாவிர தத்த லத்தின் தென்பாலது புண்ணிய கோடிநந் தேவன் வைப்பு வன்பாலர்கள் எய்தரும் புண்ணிய தீர்த்த மாடே என்போலி கட்கும் சிவப்பேறெளி தெய்து மங்கண். | 2 |
503 |
இறைவனிடத்துத் திருமால் வரம் பெறல் மலர்மேயவன் மேகநல் வாகன கற்பம் ஒன்றில் தலமேழ்புகழ் நாரணன் தாமரை யாளி யாதி உலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர் கோனைப் பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான். | 3 |
504 |
நம்மான் இரங்கிக் கடைக்கண்ணருள் நல்கி மாலோய் வம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங் கிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும் அம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன் | 4 |
505 |
எந்தாயொரு நின்திருமேனி யிடப்புறத்து வந்தேன் அடியேன் உயர்நின்னருள் வண்மை தன்னால் நந்தாதயிவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும் பைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன் | 5 |
506 |
அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன் இவ்வாற்றல் கச்சிப் பதியெய்தி யிலிங்கந் தாபித் தொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை யாற்றின் செவ்வேபெறு கிற்பை யெனத்திருவாய்ம லர்ந்தான் | 6 |
507 |
திருமால் காஞ்சியில் இறைவனை வழிபடுதல் அங்கப்பொழு தேவிடை கொண்டருட் காஞ்சி எய்திப் பொங்கிப்பொலி தீர்த்த நறும்புன லாடிச் சூழும் தெங்கிற்பொலி இந்திர நன்னகர்த் தென்தி சைக்கண் துங்கச்சிவ லிங்கம் இருத்தி மெய்யன்பு தோன்ற | 7 |
508 |
தெண்ணீத்தடம் ஒன்று வகுத்துத் திருந்த மூழ்கி வெண்ணீற்றணி அக்க மணித்தொடை மெய்வி ளங்கக் கண்ணீர்க்கம லம்பல கொய்து கருத்து வாய்ப்ப வண்ணீர்ச்சிவ பூசனை நித்தலுஞ் செய்து வாழ்ந்தான் (கள்நீர்க்கமலம் - கண்ணீர்க்கமலம்- தெனாகிய நீறையுடைய தாமரை. வள்நீர் -வண்ணீர்- வளப்பத் தன்மை யுடைய) | 8 |
509 |
கசேந்திரன் தொண்டு செய்தல் வேறு அன்னோன் ஏவல் மெய்ப்பணி ஆற்றும் அன்புந்தத் தன்னே ரில்லா வோர்மத வேழந் தானெய்தி என்நா யகனே என்பணி கொள்வாய் யென்றேத்திப் பொன்வாள் தோன்று முன்னர் எழுந்து புனலாடி | 9 |
510 |
நாளலர் தாமரை பாதிரி வில்வம் நறும்புன்னை தாளுயர் சண்பகம் மல்லிகை தண்கழு நீர்மௌளவல் கோளறு கோங்கு முதற்பல கொய்து கொடுத்தென்றும் வேளை யளித்தவன் உள்மகிழ் வித்திடும் அந்நாளில் (வேளை அளித்தவன் - மன்மதனைப் பெற்றவன், திருமால்.) | 10 |
511 |
கசேந்திரனை முதலை பற்றல் ஓர்பகல் நீர்நிறை பூந்தடம் ஒன்றுறு பூக்கொய்வான் சீர்தகு திண்கரி சேறலும் அங்கொரு வன்மீனம் நீரிடை நின்று வெகுண்டடி பற்றி நிமிர்ந்தீர்ப்பக் காரொலி காட்டி யகன்கரை யீர்த்தது காய்வேழம் (வன்மீனம் - முதலை. காரொலி - இடியொலி ) | 11 |
512 |
இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை ஓவாமே தெவ்வுடன் ஈர்ப்புழி யாண்டுகள் எண்ணில சென்றேகக் கைவரை ஆற்றரி தாயல றிக்கரு மாமேகத் தவ்வடிவோனை யழைத்தது மூல மெனக்கூவி | 12 |
513 |
திருமால் கசேந்திரனைக் காத்தல் அண்ட ரெலாம்யாம் மூல மலேமென் றகல்போழ்திற் புண்டரி கக்கட் புண்ணியன் நன்புள் ளரசின்மேல் கொண்டெதி ரெய்திக் கரியர செய்துங் கொடுவெந்நோய் கண்டுளம் நெக்கான் அஞ்சலை யஞ்சேல் களிறென்னா | 13 |
514 |
ஆழி யெறிந்தான் அதன்உயிர் உண்டான் கரியோடும் வாழிய காஞ்சி மாநகர் எய்திச் சிவபூசை வேழம் அளிக்கும் மேதகு பள்ளித் தாமத்தால் ஊழ்முறை யாற்றித் தவம்நனி செய்தங் குறைகாலை | 14 |
515 |
எண்ணரு வானோர் இன்னமும் நாடற்கரியானைக் கண்ணினை யாரக் காண்டகு காதல் கைமிக்கங் குண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப் புண்ணிய வேதப் பழமொழி யோதிப் புகழ்கிற்பான். | 15 |
516 |
திருமால் துதித்தல் .கொச்சகக்கலிப்பா நீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய் ஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும் வேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம் பேராளா யெங்கள் பிரானே அடிபோற்றி | 16 |
517 |
அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தடக்கிக் கொண்டுநிறைந் தோங்கியபே ரின்பக் குரைகடலே தொண்டரெலாம் உண்ணத் தெவிட்டாச் சுவையமிர்தே தண்டலைசூழ் கச்சித் தலைவா அடிபோற்றி | 17 |
518 |
மாறா அறக்கடவுள் மான அடியேனும் ஏறாகித் தாங்க அருள்சுரந்த எம்மானே சீறா துமைகளிப்பத் தேவியாக் கொண்டெனைநின் கூறாட வைத்தகுணக் குன்றே அடிபோற்றி | 18 |
519 |
திக்காடை யாதி அணியோடு தீவினையே அக்கோடு கண்ணோ டுரியென் பணிந்தானே இக்காய் மழுமுதலாம் வான்படையோ டென்றனையும் தக்கோர் புகழ்கணையாக் கொண்டாய் சரண் போற்றி (அ+ கோடு-அந்தப் பன்றியின் கொம்பு. கண் - மீனின் விழி எலும்பு, ஓடு- ஆமை ஓடு. உரி - நரசிங்கத்தின் தோல். இரணியாக்கன், சோமுகன் இரணியன் என்னும் அசுரர்களை அழிக்கத் திருமால் வராக மச்ச நரசிங்கப் பிறப்புக்களையும் திருப்பாற்கடலைக் கடையும்போது மந்தரமலையாகிய மத்தைத் தாங்கும் பொருட்டு ஆமைப் பிறப்பையும் எடுத்தார். அச்செயல் முடிவில் அவை கொண்ட சினச் செருக்கைப் போக்குவதற்கு முருகர், ஐயனார், வீரபத்திரர், விநாயகர் ஆகியோரால் அவற்றை அழித்து அவற்றின் கொம்பு, விழி எலும்பு, தோல் ஓடு எனும் இவற்றைச் சிவபெருமான் தன்னாற்ரல் தோன்ற அணிந்து கொண்டான்; சருவ சங்கார காலத்தில் பிரமன் திருமால் முதலிய தேவர்களின் எலும்பை இறைவன் அணிகின்றான்;. திரிபுரம் எரித்தகாலைத் திருமாலை இறைவன் அம்பாகக் கொண்டான் என்பன புராண வரலாறுகள். கணி - அம்பு) | 19 |
520 |
மெய்யடியார் சாத்தும் விரைமலர்போல் அன்பிலாப் பொய்யடியேன் ஊன்விழியுங் கொண்டருளும் பொன்னடியாய் செய்யானே நந்தி கணத்தவர்போல் சேயேனும் எய்தியருட் கூத்தின் னியமுழக்கும் பேறளித்தோய் | 20 |
521 |
ஆலம் அளக்கரெழு மந்நாள் அடைக்கலமென் றோலமிடும் எங்கட் குயிரளித்த சீராளா காலமே காலங் கடந்த பெருங்கருணைக் கோலமே ஆனந்தக் குன்றே அடிபோற்றி | 21 |
522 |
இறைவன் காட்சி கொடுத்தல் - கலிவிருத்தம் என்னப் பலபன் னியிரந் தயரும் பொன்னுக் கிறைமே லருள்பொங் கியெழ மின்னற் சடையோன் விடைமீ துவரை யன்னத் தொடுகாட் சியளித் தனனனால் (பன்னி - பலமுறை சொல்லி. அயரும் - சோரும். வரை அன்னம் - இமயமலையின் மகளாகிய அன்னம் போன்றவளாகிய பார்வதி) | 22 |
523 |
கண்டான் இருகண் களிகூ ரமகிழ் கொண்டான் வறியோன் கொழிதெள் ளமுதம் உண்டா னெனவோ டினனா டினனால் வண்டா மரைமா துமணா ளனரோ 23 | 23 |
524 |
அதுகண் டுமைபால் அருணோக் குதவி விதுவொன் றுபொலஞ் சடைவிண் ணவனேர் முதிருங் குறுமூ ரல்முகத் தலர மதுசூதனகேட் டிவரந் தருகேம் (விது - சந்திரன். மூரல் - புன்முறுவல். சிவபெருமான் திருமாலினுடைய அன்பின் பெருக்கை இறைவிக்குப் பார்வைக் குறிப்பால் உணர்த்தினார் என்பது கருத்து.) | 24 |
525 |
நரர்வா னவர்தம் மினுநா ரணநீ பெருவான் வலிபெற் றுளையெம் மருளால் பொருபோ ரினுள்ளெம் மினும்வென் றிபுனை வரமெம் மிடைமுன் பெறுமா தவனே | 25 |
526 |
இறைவன் தன்னிடத்திலும் வெற்றி பெறும்படி திருமாலுக்கு வரங்கொடுத்தமை வாணேசப் படலத்திற் கூறப்படுகின்றது. எனவங் கருள்செய் தலுமிந் திரைகோன் மனமொன் றவணங் கிவணங் கியெழுந் துனதம் புயபா தயுகத் தடியேற் கனகம் பெறுபத் தியளித் தருளாய் (இந்திரை - இலக்குமி. அனகம் - குற்ரமின்மை, தூய்மை.) | 26 |
527 |
வரதா மரையோ னொடுமற் றுலகும் வரதா தரல்வேட்டமனத் தினன்யான் வரதா வரமீ துவழங் குதிநீ வரதா யெனவோ திவழுத் தினனால் (வர தாமரையோன் - மேலான தாமரை மலர்மேல் இருப்பொன். வரதா தரல் - வரும்படியாக படைத்தல். வரதா - வரத்தை ஈபவனே.) | 27 |
528 |
நின்னா சைநிரம் பவரங் களெலாம் இன்னே கொளநல் கினம்ஏ ரிழைமா மன்னா பலகால் வரதா எனநீ சொன்னாய் யெமையன் புதுளும் புறவே (ஏரிழை மா - அழகிய அணிகலன் அணிந்த இலக்குமி.) | 28 |
529 |
வாசத் துளவோய் யினிநீ வரத ராசப் பெயராற் பொலிவாய் யெமதாள் பூசித் தனைபுண் டரிகங் களினால் பேசிற் பதுமாக் கனெனப் பெறுவாய் | 29 |
530 |
அறுசீரடியாசிரிய விருத்தம் என்றருள் புரிந்த வள்ளல் இணையடி வணங்கி மாயோன் வென்றிவெள் விடையாய் இன்னும் விண்ணப்பம் ஒன்று கேட்டி நின்றிருப் பாதபூசை நித்தலும் அடியேன் ஆற்ற நன்றும் இவ்வத்தி யேவற் பணிநயந் தொழுகிற் றன்றே | 30 |
531 |
என்னிடை யன்பு சாலப் பூண்டதால் இதன்பேர் தன்னால் உன்னெதி ரடியேன் வாழும் உயர்வரைக் குடிமி யோங்கல் மன்னுசீ ருலகி னத்தி கிரியென வழங்கல் வேண்டும் கன்னலஞ் சிலைவே ளாகம் கனல்விழிக்குதவ வல்லோய் | 31 |
532 |
புண்ணிய தீர்த்தப் பொய்கைப் புனல்படிந் திங்கு ளார்செய் புண்ணிய மொன்று கோடி மடங்குறப் புரிந்து மற்றிப் புண்ணிய கோடி வைப்பின் உயிர்க்கெலாங் கருணை பூத்துப் புண்ணிய கோடி நாத இலிங்கத்திற் பொலிக நாளும் 32 | 32 |
533 |
அடியனேன் தண்டா தென்றும் நின்னெதிர் அமர்ந்து போற்றக் கடிகெழு கற்பத் தண்தார்க் கடவுளர் முனிவர் யார்க்கும் முடிவறு வரங்கள் நல்கி முழுதருள் சுரந்து வாழி கொடியவெஞ் சீற்றத் துப்பிற் கூற்றுயிர் பருகுந் தாளோய் (தண்டாது - நீங்காமல். கடிகெழு - வாசனை பொருந்திய) | 33 |
534 |
அண்ணலே யென்று வேண்ட அவற்கவை யருளி யெங்கோன் புண்ணிய கோடி நாத விலிங்கத்துட் புக்கான் அந்நாள் கண்ணுதற் பரனை மாயன் காருருக் கொண்டு தாங்கும் வண்மையாற் கற்பமேக வாகனப் பெயர்பூண் டன்றே | 34 |
535 |
நலம்புரி புண்ணிய கோடி நாதர்தம் புலம்புரி பெருமையைப் புகன்று ளேமினி நிலம்புரி தவத்தினிர் அத்தி நீள்வரை வலம்புரி விநாயகன் மாட்சி செப்புவாம் | 1 |
536 |
முன்னைநாள் அயனரி முனிவர் வானவர் கின்னரர் ஓரிடைக் கெழுமித் தங்களுள் பன்னுத லுற்றனர் படிறர் செய்வினை அந்நிலை ஊறின்றி அழகின் முற்றுமால் | 2 |
537 |
அங்கவர் தமக்கிடை யூற்றை யாக்கவும் நங்களுக் கூறுதீர்த் தினிது நல்கவும் இங்கொரு கடவுளைப் பெறுதற் கெம்பிரான் பங்கயத் திருவடி பழிச்சி வேண்டுவாம் | 3 |
538 |
விக்கின மகல விண்ணவர் வேண்டல் என்றுளந் துணிந்தனர் எய்தி மந்தரக் குன்றமீ தெம்பிரான் கோயி லுள்ளுறாச் சென்றனர் தொழுதனர் செவ்வி நோக்கிமுன் நின்றனர் மறைகளால் துதிநி கழ்த்தினார் | 4 |
539 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் சற்றிது திருவுளஞ் செய்துகேட் டருளுதி தலைவ னேவெங் குற்றமே துறுமனத் தானவக் கொடியவர் தொடங்கு செய்கை முற்றுறா தூறுபட் டழியவும் எம்மனோர் முயன்ற செய்கை இற்றுறா தூறுதீர்ந் தாக்கவுங் கருணைசெய் யெனவி ரந்தார். | 5 |
540 |
விநாயகர் திருவவதாரம் அம்மொழி செவிமடுத் தருள்புரிந் தகிலமும் உய்யு மாற்றால் இம்முறை புரிதுமென் றவர்க்கெலாம் விடையளித் தெழுந்து போந்து கொம்மைவெள் விடையினான் சித்திரச் சாலையைக் குறுகி அங்கண் செம்மைசால் சித்திரம் யாவையும் நோக்கினான் தேவி யோடும். | 6 |
541 |
வானகத் தச்சனால் அகிலமுஞ் சித்திரித் தெழுதி வாய்ந்த ஊனமில் சாலையுள் எழுதுமா மனுக்களோ டுபமனுக்கள் ஆனவெல் லாமுமைக் கெம்பிரான் காட்டுபோ தவற்றுள் ஆதித் தானமார் இருவகைப் பிரணவ மனுக்களைத் தையல் கண்டாள் | 7 |
542 |
உவகையாற் பற்பல்கால் நோக்கியிங் கிவையெவை யுரைத்தி என்னச் சிவபிரான் தேவியைத் தழீஇயினன் கூறுவான் செல்வி கேட்டி தவலிலிப் பிரணவம் நமதுகாண் மூவரைத் தந்த தாகும் நவிலின்மற் றதுநின தாகுமுச் சத்தியை நல்கு மூலம். | 8 |
543 |
மும்மறை முதலெலாம் ஈன்றிடும் இருமுது குரவ ரான இம்மனுக் கரியொடும் பிடியெனத் தோன்றலின் இவைக ளாகி அம்மநாம் புணர்துமென் றவ்வுருக் கொண்டன ராடு காலைச் சும்மைநீர் உலகெலாம் உய்யவந் துதித்தனன் தோன்றல் அன்றே | 9 |
544 |
கயமுகப் பிள்ளையை இருவருங் காதலான் எடுத்த ணைத்து வயமுற மடித்தலத் திருத்திமெய்க் கலன்பல அணிந்து வாழ்த்த இயல்புடைப் புதல்வனும் உவகையான் எழுந்தெதிர் நடித்தல் செய்தான் நயனமாக் களிகொள நோக்கினாள் உலகெலா மீன்ற நங்கை | 10 |
545 |
அங்கையான் ஒத்திநின் றாடல்கண் டகங்களி துளும்பி ஐயன் பங்கயப் பதந்தொழு திறைவநீ பயந்தசேய் இவனை யின்னே எங்குள கணங்களும் பல்கண நாதரும் எவரும் ஏத்தத் துங்கமாம் இறைமைஈந் தருளென வேண்டலுஞ் சூல பாணி | 11 |
546 |
கடவுளர் முனிவரர் அயனரி பலகண நாத ரெல்லாம் உடன்வரத் திருவுளஞ் செய்தழைத் தோதுவான் மடித்த லத்தின் மிடலுடைச் சிறுவனை இருத்திமற் றிங்கிவன் வெற்பின் வந்த மடமயிற் கினியவன் யாம்பெறு மூத்தமா மைந்தன் ஓர்மின் | 12 |
547 |
இவனையிவ் வுலகெலாந் தொழுதெழும் இறைமையின் இருத்து கின்றோம் குவிமுடி சூட்டுவான் வேண்டுப கரணநீர் கொணர்மின் என்றே அவரவை கொணர்ந்தபின் மைந்தனை மடங்கலா தனத்தி னேற்றிச் சிவபிரான் திருவபி டேகநீ ராட்டினன் மகுடஞ் சேர்த்தான் | 13 |
548 |
அரசினுக் குரியநல் லணிகளான் அலங்கரித் தன்பு கூரப் பிரமனை மாயனைத் தேவரை முனிவரைப் பெட்பின் நோக்கி உரனுடை யுமக்கெலாம் நாயகன் இவனிடை யூற்றி னுக்கும் கரவிலா நாயக னாகநாம் வைத்தனம் கண்டு கொண்மின். | 14 |
549 |
தீயவைத் தானவர்க் கூறிழைப் பானிவன் என்று செப்பும் தூயவன் வாய்மொழி தலைமிசைக் கொண்டனர் துதித்தி றைஞ்சி மாயவன் முதலியோர் கணேசனை வணங்கினர் கையு றைகள் ஏயுமா றுதவினர் விடைகொடு தத்தம திருக்கை சேர்ந்தார் | 15 |
550 |
விநாயகர் திருவிளையாடல் - கலிவிருத்தம் பொருவருந் தடநெடும் புழைக்கை ஏந்தலும் இருமுது குரவர்தாள் இறைஞ்சி மேவுநாள் ஒருவருங் கணங்களோ டுலவி யெங்கணும் திருவிளை யாடலிற் சிந்தை வைத்தனன் | 16 |
551 |
ஒளித்துநின் றுடன்பயில் உழைச்சி றார்மிசைத் தெளித்தெழு புழைக்கைநீர்த் திவலை தூஉயிது தளித்தது முகிலெனச் சொல்லி உள்ளகங் களிப்பவான் கருமையைக் காட்டி வஞ்சித்தும் | 17 |
552 |
புழைக்கையின் மோந்துயிர்ப் பெறிந்து பூமியைக் குழித்துமுன் அணிந்தன பழமை கூர்ந்தவென் றொழித்தகல் பாதலத் துரகம் யாவையும் இழுத்தெடுத் தணியெனப் புயத்தி னேற்றியும் | 18 |
553 |
ஒன்பது கோள்களும் உடுக்க ணங்களும் துன்பறப் பிணித்தசை துருவ சூத்திரம் வன்பனைக் கரத்தினாற் பறித்து மார்பிடை அன்பமர் நவமணீ யார மாக்கியும் (துருவம்- வடக்கே நிலை பெயராது காண்ப்படும் விண்மீன். இதுவே எனைய நாள்கோள்களை இயக்குமென்ப. அதனால், துருவ சூத்திரம் என்றார். சூத்திரம் - இயந்திரம்.) | 19 |
554 |
என்னைநீர் கண்டெழா திருப்ப தென்னெனப் பன்னகம் எவற்றையும் கனன்று பற்றிவான் மன்னிட வீசியங் குடைந்த வான்நதி தன்னுடைத் தந்தைபோற் சடிலத் தேந்தியும் | 20 |
555 |
கலிநிலைத்துறை இவ்வ கைப்பல சிறுகுறும் பெங்கணும் இயற்றிக் கெளவை நீர்விளை யாட்டினிற் காதலன் ஒருநாள் பௌளவம் யாவையும் உழக்கினனன் பாற்கடல் புகுந்தான் கொவ்வை வாயுமை பயந்தருள் குஞ்சரக் குரிசில் | 21 |
556 |
புகுந்து வெள்ளநீர் முழுவதும் புழைக்கையின் மடுத்தான் மிகுந்த பன்மணி நீருறை உயிர்கள்வெம் பணிக்கோன் முகுந்த னுந்தியன் றிருந்தநான் முகப்பிரான் முகுந்தன் சகுந்த மன்னவன் திருவுமப் புழைக்கையுள் சார்ந்தார். (பணிக்கோன் -ஆதிசேடன்; சகுந்தம் - பறவை; சகுந்த மன்னவன் - கருடன்) | 22 |
557 |
வறுங்க டற்பரப் பகட்டினில் எஞ்சுகூர் மங்கள் உறுங்க ரும்பெருஞ் சேற்றிடை ஒளிப்பன முன்னாள் நறுந்து ழாயணி ஆமையை நலிவுறப் பற்றிக் குறும்ப டக்கிய பிரான்வரு திறங்குறித் தனபோல் | 23 |
558 |
மாய மீன்விழி பறித்தவன் முன்வரும் இளவல் மேய வாறுகண் டனவெனத் துடிப்பன சிலமீன் பாய பூம்புனல் அரசன்நம் பனுக்கிடுந் திறைபோல் சேயபன்மணி வயிநன்தொறும் இமைப்பன சிலவே | 24 |
559 |
ஐயன் வார்செவிக் காற்றினில் அலைகள்மிக் கெறிந்து வெய்ய பேரொலி காட்டுவ பிறவியன் கடல்கள் மைய கன்றதம் கிளைவறங் கூர்ந்தமை காணூஉக் கையெ றிந்தழு திரங்கிவீழ்ந் தரற்றுவ கடுக்கும். | 25 |
560 |
இன்ன வாறுபாற் கடல்வறந் தழிவுற இருங்கை தன்னி லேற்றநீர் மீளவுந் தரைமிசை விடுத்தான் அன்ன நீருடன் வீழ்ந்தனர் அயனரி முதலோர் துன்னு நீர்படு துரும்பெனத் திசைதொறுஞ் சிதறி. | 26 |
561 |
பின்னர் ஓரிடைத் திரண்டுடன் குழீஇயினர் பெரிதும் இன்ன லுற்றமை தத்தமுட் பேசினர் எளியோம் முன்னை நல்வினைப் பயத்தினால் இன்றுமூ துலகம் தன்னில் வந்தவா மறுபிறப் பெனமதித் தனரால். | 27 |
562 |
திருமால் சங்கிழந்தமை அறிதல் மருட்சி தீர்ந்தபின்மாயவன் இடக்கையின் வழுவும் உருட்சி கூர்ந்தவெண் சங்கினைக் காண்கிலன் உயங்கி வெருட்சி கொண்டனன் தேடினன் வியந்திசைப் புறத்துத் தெருட்சி கொண்டது ஒலிப்பது கேட்டனன் செவியில் | 28 |
563 |
ஓசை யாலது பாஞ்சசன் னியமென உணர்ந்தவ் வாசை யிற்சிலர் தமைச்செல விடுத்தனன் அவர்போய் மாசி லைங்கரப் பிரான்கணம் வாயிடைக் கொண்ட வேச றுஞ்சுரி முகத்தினைக் கண்டுமீண் டுரைத்தார் | 29 |
564 |
திருமால் திருக்கையிலை அடைதல் சொன்ன வாசகம் கேட்டுளந் துளங்கிமற் றினிநான் என்னை செய்வலென் றுசாவினன் கணங்களோ டெழுந்து பன்ன கப்பகை அரசுமேல் கொண்டனன் படர்ந்தான் கன்னி பாகன்வீற் றிருந்தருள் வெள்ளியங் கயிலை | 30 |
565 |
அங்குநந் திதன் அருளினால் தடைகந் தணுகி எங்கள் நாயகன் திருமுன்பு வீழ்ந்துதாழ்ந் தெழுந்து பங்க யக்கரம் குவித்துநின் றிமவரை பயந்த நங்கை யோடுறை செவ்விகண் டின்னது நவில்வான் | 31 |
566 |
அண்ண லேயுன தாணையின் அடியனேன் கடலுள் கண்வ ளர்ந்தனன் ஆயிடை ஆடல்செய் கணேசப் பண்ண வன்கடற் புனலொடும் என்னையும் பனைக்கை யுண்ம டுத்தனன் விடுத்தனன் மீளவும் உலகில் | 32 |
567 |
மறுகு சூழ்மணி மன்றுளாய் நின்னருள் வலியான் மறுபி றப்பென உய்ந்துநின் பால்வரப் பெற்றேன் மறுகும் அப்பொழு தென்கையில் வழீஇன சங்கை மறுவில் ஐங்கரப் பிரான்கணத் தொன்றுவெள வியதால் | 33 |
568 |
ஐய னேயது அடியனேன் கரத்தெய்த அருளிச் செய்ய வேண்டுமென் றிரந்திரந் திறைஞ்சலும் சிறுமான் கையன் எம்பிரான் கவுரிபாற் கட்கடை செலுத்தி வையம் உண்டவ கேளென வாய்மலர்ந் தருள்வான் | 34 |
569 |
வலம்பு ரிந்தபே ராண்மையோய் யாமிது வல்லேம் வலம்பு ரிச்சங்கு நீபெறக் காஞ்சியில் வைகி வலம்பு ரிக்கண பதியைநின் அத்திமால் வரைமேல் வலம்பு ரிந்துதா பித்தருச் சனைபுரி மரபால் | 35 |
570 |
விஷ்ணு விநாயகரை வழிபடல் அன்ன வன்திரு வருளினாற் பெறுகெனு மருளைச் சென்னி மேற்கொண்டு விடைகொண்டு மீண்டுகாஞ் சியினில் கொன்னும் மேற்றிசை வாயிலார் குகையுடை அத்திக் கன்ன கந்தனில் வலம்புரிக் கணேசனை யிருத்தி. | 36 |
571 |
தருக்கு நீங்கியா வாகனம் பாத்தியா சமனம் அருக்கி யம்புனல் ஆட்டுடை பூணுநூல் கந்த வருக்கம் தூபதீ பம்பல பண்ணிய வருக்கம் குருக்கொள் சுண்ணமார் பாகடை குளிர்புனல் பிறவும் | 37 |
572 |
ஓங்கு தந்திகா யத்திரி மனுவினால் உதவி வீங்கு காதலால் வலஞ்செய்து புவியிடை வீழ்ந்தான் ஆங்கு நின்றுகை கொட்டினன் ஆடினன் அழுதான் தீங்கு தீர்மறை மொழிகளால் துதிபல செய்தான். | 38 |
573 |
விஷ்ணு விநாயகரைத் துதித்தல் ஐயா மறைமுடிவுந் தேராத ஆனந்த மெய்யா பிரணவத்தின் உட்பொருளே வேழமுகக் கையாய் வெளியாய் கரியானே பொன்மையாய் செய்யாய் பசியாய் பெருங்கருணைத் தெய்வமே | 39 |
574 |
நல்லோர்க்கும் வானோர்க்கும் நண்ணும் இடையூற்றுக் கில்லாமை நல்க அவதரித்த எம்மானே வல்லார் முலையுமையாள் ஈன்ற மழகளிறே பொல்லார்க்கும் தானவர்க்கும் ஊறிழைக்கும் புத்தேளே | 40 |
575 |
சூரனுயி ருண்டு சுரருலகங் காத்தளித்த வீரனுக்கு முன்பிறந்த வித்தகா முப்புரமுஞ் சேர வு ருத்த திருவாளன் ஈன்றெடுத்த வாரணமே எந்தாய் வலம்புரிக் குஞ்சரமே | 41 |
576 |
பண்ணியமும் வெண்கோடும் பாசாங் குசப்படையும் நண்ணியசெங் கைத்தலத்து நாதா ஒருகோட்டுத் தண்ணிய வெண்பிறைத் தாழ்சடையாய் மெய்யடியார் எண்ணிய எண்ணியாங் கீந்தருளும் வள்ளலே. | 42 |
577 |
வழிபடுவோர்க் கெய்ப்பிடத்தின் வைப்பே உமையாள் விழிகளிப்ப முந்நீர் விளையாடுங் காலை பொழிமதக்கை யூடு புகுந்துவரப் பெற்றேன் இழிவகன்று மெய்த்தூய்மை எய்தினேன் யானே | 43 |
578 |
அங்கப் பொழுதின் அடியேன் கரத்தகன்ற துங்கப் பணிலம் உனைச்சூழுங் கணநாதன் செங்கைத் தலத்துளதால் செல்வா எனக்கதனை இங்கிப் பொழுதே அளித்தருளா யென்றிரப்ப. | 44 |
579 |
விஷ்ணு பாஞ்சசன்னியத்தைப் பெறுதல் வேண்டுந் திருநெடுமாற் கெங்கோன் வெளிநின்று காண்டகைய பூத கணங்கரத்துக் கொண்டிருந்த மாண்டபுகழ்ச் சங்கம் அளித்தருளி மாயோனே ஈண்டு நினக்கின்னும் வேண்டுவதென் னென்றருள | 45 |
580 |
முன்னாய புண்ணியகோ டீசர் திருமுன்பென் றன்னோடிவ் வத்தித் தடங்கிரியில் வீற்றிருந்திங் கெந்நாளும் எல்லார்க்கும் எவ்வரமும் ஈந்தருளாய் மன்னாயென் றேத்த மகிழ்ந்தங்கண் வைகினனால் | 46 |
581 |
ஒன்னலரை வாட்டும் உலவைப் படைத்தேவும் பன்னகப்பூம் பாயல் திகிரிப்படைக்கோவும் அன்ன நடைக்குன்ற மால்வரையின் ஆருயிர்கட் கென்ன வரமும் அளித்தென்றும் மேவுவார் (உலவை-கொம்பு; நடைக் குன்றம்- யானை) | 47 |
582 |
மற்றிதனைக் கற்றோருங் கேட்டோரும் மாசிலர்க்குச் சொற்றவரும் ஊறு தவிர்தென்றுந் தொல்லுலகில் பெற்றமக வாதிப் பெருஞ்செல்வத் தோடுறைந்து பற்றறுத்து மேலைப் பரபோகம் மேவுவரால். | 48 |
583 |
அலம்புநீர் வாவிசூழ் அத்திமா மலைமிசை வலம்புரி விநாயகன் வரவிது போதினான் நலம்புரி பூசைசெய் நவில்சிவாத் தானமாம் புலம்புரி பெருமையைப் புகலுதுங் கேண்மினோ | 1 |
584 |
ஆதிநாள் சிவனிடத் துதித்தவன் அருளினாற் பேதியா துலகெலாம் படைத்திடப் பெற்றுள சீதநாண் மலர்மிசைத் திசைமுகன் றன்னைமால் மூதுல கோடுமுண் டாக்கினன் முறைமையால் | 2 |
585 |
நாரணனைப் படைக்க நான்முகன் வேண்டல் அதுமனத் தெண்ணினான் அழுக்கறுத் திளநிலா விதுமுடிப் பிரான்திருக் கயிலையின் மேயினான் பொதுவறத் தொழுதனன் போற்றிநின் றுரைசெய்வான் மதுமலர்ப் பொகுட்டணி மாளிகைப் பண்ணவன் அழுக்கறுத்து-பொறாமைப்பட்டு. விது- சந்திரன். பொது அறத் தொழுதல்- முதல்வனைப் பிற தேவர்களில் ஒப்ப ஒருவனாக வைத்து வணங்காமல், எவ்வ்யிர்களுக்கும் மேலான முழுமுதற் காவுளாகப் போற்றுதல். | 3 |
586 |
பெருமநின் இடப்புறத் தரிதனைப் பெற்றனை அருளொடும் வலப்புறத் தென்னைஈன் றளித்தனை உருவவை குந்தமுஞ் சத்திய உலகமும் இருவரும் பெற்றுளேம் எந்தைநின் னருளினால் | 4 |
587 |
படைப்பதுங் காப்பதும் பணியெமக் காக்கினை தொடைப்பொலங் கொன்றையந் துணர்துறுஞ் சடைமுடி விடைக்கொடியப் பகவனே விருப்பொடு வெறுப்பினை உடைத்தநின் னருட்கிரு வேங்களும் ஒத்துளோம் | 5 |
588 |
பத்திசெய் துன்னருள் பெற்றுவெம் பாம்பணை உத்தமன் என்னைஇவ் வுலகொடும் ஈன்றனன் அத்திறத் தியானுமம் மாயனோ டகிலமுஞ் சித்தனே படைக்குமா திருவுளஞ் செய்குவாய் | 6 |
589 |
என்றசொற் செவிமடுத் தெம்பிரான் உரைசெய்வான் ஒன்றுகேள் மைந்தனே உனக்கிது வேண்டுமேல் சென்றுகாஞ் சியினெமைப் பூசைசெய் திருத்தியால் மன்றவங் கெய்திநீ வேட்டவா வழங்குதும் | 7 |
590 |
காஞ்சியில் பிரமன் பூசித்தல் ஐயுறேல் என்றலும் அம்புயன் தாழ்ந்தெழுந் தொய்யெனக் கச்சியிற் போந்துமை கோன்வளர் கொய்பொழிற் புண்ணிய கோடியின் குணதிசை எய்துதன் பெயரினா லிங்கமொன் றிருத்தினான் | 8 |
591 |
போக்கரும் பிரமதீர்த் தப்பெயர்ப் பொய்கையொன் றாக்கினான் அங்குநீ ராடிநல் வினைமுடித் தூக்கமார் அன்பினான் மலரெடுத் துடையவன் பூக்கமழ் சேவடிப் பூசனை செய்தபின் | 9 |
592 |
பிரமன் வேள்வி செய்தல் தீயவிர் குடங்கையான் திருவுளங் களிவரக் காயழற் சோமயா கஞ்செயக் கருதினான் ஆயவக் கருத்துணர்ந் தண்டரும் முனிவரும் ஏயினார் ஆயிடை விண்ணவர் கோனொடும் | 10 |
593 |
மங்கருந் திறல்மொழிக் கிழத்திவா னாட்டவர் தங்களின் நீங்கிநீர் தன்னகத் துற்றனள் பங்கயன் வேள்வியைப் பற்றுமக் காலையில் துங்கமார் தருக்களில் தொக்கனள் என்பவே. | 11 |
594 |
எழில்வளர் நாமகள் என்றுமிவ் வுலகிடை முழவினில் வீணையில் முழங்குதீங் குரல்படுங் குழலினில் இசையெனக் குலவுகின்றா றாளெனப் பழமறை முழுவதும் பன்னுமிவ் வகையரோ | 12 |
595 |
ஆதலிற் காண்கிலான் அயனுஞ்சா வித்திரி வேதகா யத்திரி என்னுமின் னாருடன் ஏதமில் தீக்கையுற் றிருமகச் சாலையுல் போதலுங் கலைமகள் கேட்டுளம் புழுங்கினாள் | 13 |
596 |
நாவின் கிழத்தி நதியாய் வருதல் திருமகச் சாலையைப் பாழ்படச் செய்வலென் றிருவிசும் பூழிநாள் இடித்தெனக் கொதித்தெழுந் தொருநதி வடிவுகொண் டுருகெழத் தோன்றினாள் கருநிலை உயிரெலாம் ஈன்றருள் காரணி. படைத்தற் றொழிலுடைய சத்தியாகலின் `உயிரெலாம் ஈன்றருள் காரணி` என்றார். | 14 |
597 |
கலிநிலைத் துறை மலர்மிசை வருதிசை முகனுயர் மகவினை புரியிடமே அலவவ னுறைஉல கமுமுடன் அழிவுசெய் திடவெழல்போல் பலகுமி ழிகளலை திரைநுரை பயில்வுற அகல்ககனத் தலமிசை நிமிர்விசை யொடுவரு தகையது குலநதியே. | 15 |
598 |
வரியளி யினமுளர் நறைமது மலரவன் மகவினையைப் புரிவற இடமுத வியதொறு புவியிது எனவெகுளா விரிபண மணிவிட அரவிறை வெருவர உடல்நெளிய அரிலறு கடல்நிலம் முழுவதும் அகழ்வது குலநதியே | 16 |
599 |
விரவிய மறைவிதி யுளிமக வினைபுரி உபகரணத் திரவிய முழுதுத வினவிவை எனயெழு சினமதனால் பரவிய புனல்நிறை கழனிகள் பலகய நிரைபொழிலின் உரவியல் வளமுழு தழிவுசெய் துறுவது குலநதியே | 17 |
600 |
ஒடிவறு மகமது தனிலவி உணவரும் இருசுடரை இடைவழி யினிலெதிர் உறுதலும் எழுவெகு ளியினொடுகைப் பிடியென உடன்விரை வொடுகொடு பெயர்வது பொரவிருகேழ்க் கடிகெழு மரமலர் பலகொடு கடுகிடு வதுநதியே. | 18 |
601 |
அயனிடை உறும்வெகு ளியினணை பொழுதிணை விழியவைசேந் தியல்வது பொரஎரி மருள்குவ ளைகள்இடை யிடையொளிர வெயெரென உறைசித றிடமுலை மிசையணி துகில்குழறித் துயல்வரல் பொரவரை யொடுதிரை தொகவரு வதுநதியே | 19 |
602 |
அவியுண நிறைசுரர் பலரையு மலைசெய எழுசெயல்போற் கவிழ்தலை யனகுவ டுகளொடு வெதிர்களி னொடுகடுகிப் புவிமுதல் அறவரு பிரளய நிலையுணர் புரையவருஞ் செவியொடு விழிவெரு வரவரு திறலது குலநதியே | 20 |
603 |
அள்ளவி நிறைகள முழுவதும் அழிவுசெய் தபினதனின் உள்ளுற நடவென மிகுசின மொடுகற கறவழிபாற் கள்ளிகள் பலபல கொடுவிடு கணைநுதி நிகரயில்வாய் முள்ளுடை முதல்பல பலகொடு முடுகுவ துயர்நதியே. | 21 |
604 |
மேற்படு கலைமகள் நதியென வேற்றுரு வுறுசால்பிற் கேற்புற அவயவ மவைகளும் ஏத்தெழில் உருமாறித் தோற்றிய வெனவறன் மிசைவரு தூத்திரள் மணிமலர்கள் போற்றுறு பலகொடி யுடனெழில் பூத்தணை வதுநதியே | 22 |
605 |
வருநெறி எதிருறு புரிசைகள் மாளிகை நிரைஅகழுற் றுருமிடை யெனவதிர் தருமொலி யோடொரு நதிவடிவாய்ப் பருவரல் செய்யவிம் முறைவரு பாரதி செயலதனை முருகலர் அளியென இசைபயில் நாரத முனிகண்டான். | 23 |
606 |
நாரத முனிவர் நதியின் வரவு கூறல் வேறு கண்டு செய்யசடை கட்டவிழ் ஓடி முனிவன் புண்ட ரீகனை வணங்கியெதிர் நின்று புகல்வான் அண்டர் நாயகநின் வேள்வியை அழிக்க முனிவு கொண்டு வாணிநதி யாய்க்குறுகு கின்ற னளரோ | 24 |
607 |
கடிது நீதடை இயற்றுதி யெனக்க ழறலும் படியில் நான்முகன் உளத்திலுமை பங்கர் இருசே வடியி ருத்தினன் அறிந்தனர் அனைத்தும் இறைவர் நெடிய மாயனை விளித்திது நிகழ்த்த லுறுவார் | 25 |
608 |
வேள்வி நீவரத ராசவுயர் வேள்வி இறைநாம் வாழி அம்மகம் அழிப்பநதி வாணி வரலால் காழ றக்கடிது காத்திடுதி என்று கருதார் பாழி மும்மதில் அழித்தவர் பணித்த ருளலும் விஷ்ணுவை யக்ஞம் என்றும் இறைவனை யக்ஞபதி என்றும் வேதங்கள் கூறும். காழ் வாணியின் தணியாக் கோபம். பாழி- வலிமை | 26 |
609 |
நாரணன் நதியைத் தடுத்தல் உந்து வேள்விவினை காப்பமனம் ஊக்கி எதிர்சென் றைந்தி யோசனையில் நாகணை விரித்த தன்மிசை மைந்து நீலமலை போல்வழி மறுத்து மலரோன் தந்தை கண்வளர்தல் கண்டனள் கலைத்த லைவியே | 27 |
610 |
கண்டு சேயிடை அகன்று நெறிகண்டு வடபால் மண்டி யேகவது நோக்கியரி பாதி வழியின் மிண்டி நாப்பண்விழி துஞ்சமலர் வாணி விலகிக் கொண்ட வேகமொடு தென்திசை யுறக்கு றுகினாள் | 28 |
611 |
பின்னும் அங்கவன் விடாதுபிணை கச்சி நகரந் தன்னி டைக்குலை யெனக்கிடை கொளத்த வளமான் முன்னர் நோக்கிமுடி சாய்த்துநனி நாணம் முதிர அன்ன தென்திசையில் நீளிடை யகன்று விலகி | 29 |
612 |
வேள்வி செய்கள மதன்குண திசைக்கண் விரவி ஆழி யிற்செல நடந்தனன் அயன்றன் மனைவி தாழ்வு தீர்ந்தயன் உகந்தனன் மகிழ்ந்து தலைவன் சூழ்க ணங்களொடு மாயனெதிர் தோன்றி அருள்வான் | 30 |
613 |
நதியும் அரியும் நற்பெயர் பெறுதல் அறுசீரடி யாசிரியவிருத்தம் சொன்ன வண்ணஞ் செய்தநீ சொன்ன வண்ணஞ் செய்தவன் என்ன வென்றும் ஓங்குதி இத்தி ருப்பெ ருநதி மன்னு வல்வி னையெலாம் வாட்டு வேக வதியென இந்நி லத்தி னிற்சிறந் தின்ப வாழ்வ ளிக்கவே. | 31 |
614 |
இரவி ருட்கண் இந்நதி இப்ப திக்கண் எய்திடும் வரவு காண நீயொரு வாள்வி ளக்கொ ளியென விரவி னாய்வி ளக்கொளி விண்டு வென்ன மேவுகென் றருளி யெந்தை இம்முறை வேள்வி காத்த ளித்தபின் | 32 |
615 |
நன்னர் ஆற்று நீரென நண்ணி னாய்த ருக்களில் மன்னி நிற்ப நோக்கிவன் றாரு விற்செய் தண்டினோ டின்ன வாணி தன்னையேற் றேய்ந்த தீக்கை யுற்றனன் துன்னு சீர்க்க லையினாற் சோமம் ஏற்ற பின்னரோ 33 (வாணி முன்போலவே தருக்களில் சூக்குமமாகத் தங்கி யிருப்பப் பிரமன் அம்மரத் தண்டால் தண்டு செய்து அதிலுள்ள கலைமகள் அம்சத்துடன் இருந்து வேள்வி செய்யத் தொடங்கினான் என்றவாறு.) | 33 |
616 |
இன்ன வட்ப குத்திநீ இருத்து விக்கெ னப்படும் அன்ன வர்க்கெ னக்கிளந் தம்பு யத்தன் அக்கதை நன்ம யித்தி ராவரு ணன்க ரத்த ளிப்பவம் மின்னை வாங்கி மீட்டவர் வேதன் மாட்டி ருத்தினர். (இருத்து விக்கு- வேள்வியாசான். கதை- தண்டு. மயித்திராவணந் இருத்துவிக்குகள் பதினாறு பேரில் ஒருவர். ) | 34 |
617 |
வேறு மீண்டு திசைமுகன் றன்பால் மேவிய வாணி மகிழ்ந்தாங் கீண்டிய தன்னுருக் கொண்டே எச்சத் துணைவியு மாகிக் காண்டகு பாங்கர் இருப்பக் காதலன் வேள்வி முடித்தான் ஆண்டை விதிமுறைத் தெண்ணீர் ஆடினன் வல்வினை வென்றான். | 35 |
618 |
கண்ணுதற் கடவுள் காட்சி கொடுத்தல் அங்க ணிலிங்கத்தின் முன்ன ரணைந்து மனைவியர் மூவர் துங்க வசிட்டன் முதலோர் சுராசுரர் சூழ்ந்து துதிப்பத் தங்கும் அவைக்கண் இருந்து சம்புவை உள்ளத்தி ருத்திப் பொங்கிய அன்பில் தியானம் புரிந்து வழிபடும் போது | 36 |
619 |
வான இயங்கள் கலிப்ப மலர்மழை அண்டர் சொரிய ஊனமில் சாமரை ஏந்தி உருத்திர மாதர் இரட்டப் பான்மை யினாற்கந் தருவர் பாடி விருதெடுத் தோத ஞான சனந்தர் முதலோர் நண்ணி இருபுடை யேத்த. | 37 |
620 |
எண்டிசை யாளர் முடிகள் இணையடி தாங்கி நடப்ப வண்டுளர் கோதை உமையை மடித்தல மீதுறக் கொண்டு பண்டை மழவிடை ஏறிப் பண்ணவர் தம்பெரு மானும் விண்டலம் ஏர்கொள எய்தி விழைதகு காட்சி யளித்தான் | 38 |
621 |
கண்டு விரிஞ்சன் எழுந்து கரையறு காதல்கை மிக்குக் கொண்ட புளகங்கள் மல்கக் குவித்தகை சென்னியில் ஏற விண்ட மொழிகள் குழற இன்பவெள் ளத்திடை யாடி மண்டனில் வீழ்ந்து வணங்கி மறைமொழி கொண்டு துதிப்பான். | 39 |
622 |
நான்முகன் போற்றி செயல் அடியவ ரிழைத்த குற்றம் அனந்தமும் பொறுப்பாய் போற்றி கொடியவர் தம்மைச் செய்யுங் குற்றங்கண் டொறுப்பாய் போற்றி ஒடிவறு வணக்க முற்றுங் கைக்கொளு முடையாய் போற்றி முடிவிலா மொழிகட் கெல்லாம் வாச்சிய முதலே போற்றி. | 40 |
623 |
சீதநீர் உலகம் போற்றுந் தேவர்க்குந் தேவே போற்றி கோதற உண்மை காட்டுங் குரவர்க்குங் குருவே போற்றி பூதநா யகனே போற்றி புரீசர்க்கும் ஈசா போற்றி பாதியில் உமையை வைத்த பசுபதி போற்றி போற்றி | 41 |
624 |
ஒருமுறை பத்து நூறா யிரமுறை உனதாள் போற்றி மருவரும் பொருளே போற்றி மறுவலும் போற்றி போற்றி இருள்நிற மிடற்றாய் போற்றி யென்றுநாத் தழும்ப ஏத்தித் திருமலர்க் கடவுள் போற்றச் சிவபிரான் அருளிச் செய்யும் | 42 |
625 |
இறைவன் வரங் கொடுத்தல் உவந்தனம் மறையோய் உன்றன் பத்தியின் உறுதி நோக்கிச் சிவந்தரும் எம்பால் நீமுன் வேட்டவா திருமா லோடும் பவந்தரும் உலக மெல்லாம் படைத்தியால் என்று நல்கத் தவந்திகழ் வேதன் மற்றும் இதுவொன்று தாழ்ந்து வேண்டும். | 43 |
626 |
என்றனாத் தான மாக யானுறை இருக்கை தன்னை உன்றனாத் தான மாகக் கோடலான் உம்பர் ஏறே நன்றுமித் தானம் என்றும் நவில்சிவாத் தானப் பேரால் நின்றிட இங்கு நாளும் நீயினி துறைதல் வேண்டும். | 44 |
627 |
நின்னருட் குரியே னாகி நின்பணி தலைநின் றானா உன்னடி யிணைக்கீழ்ப் பத்தி உலப்புறா தடியேன் என்றும் நன்னெறி ஒழுகச் செய்யாய் நவில்சிவாத் தானத் தெய்தி என்னரே யெனினும் நின்னை ஏத்தினோர் உய்யக் கோடி | 45 |
628 |
உவாமுதற் சிறந்த நாளின் உடைதிரைப் பிரம தீர்த்தத் தவாவுடன் ஆடிச் செய்யுங் கடன்முடித் தடிகேள் உன்னைத் தவாதசீர்ச் சிவாத்தா னத்து வழிபடுந் தகையோர் செல்வக் குவாலொடும் இனிது வாழ்ந்து முத்தியிற் கூடச் செய்யாய் | 46 |
629 |
என்றிரந் தேத்த எல்லாம் அருள்புரிந் தெங்கோன் ஒன்றினன் அயனும் மாலை உலகொடும் விழுங்கி மீளத் தொன்றுபோல் முறையான் நல்கித் துகளறு சிவாத்தா னத்தின் மன்றவன் அருளான் முன்னர் வைகினன் உவகை கூர்ந்து. | 47 |
630 |
எழுசீரடி யாசிரிய விருத்தம் முந்துற மனத்தைத் தேற்றினன் அதன்பால் முழங்கு காயத்திரி யதனில் சந்தைகள் அவற்றிற் சாமந் தன்னிடை யெசுர்களங் கவற்றின் மைந்துடை நெடுமா லவனிடைப் பைங்கூழ் பயிர்களின் மதியமம் மதியின் உந்துறும் பசுக்கள் பசுக்களின் மகவான் உவனிடை உலகெலாந் தந்தான். படைப்பு முறை கூறப்பட்டது. பிரமன் முதலியோர் இறைவனின் அருளைப் பெற்ருப் படைக்கும் படைப்பு முறைகள் பல்வேறு வகைப்படும் என்பது இதனாற் பெறப்பட்டது. | 48 |
631 |
இம்முறை ஒருவர் ஒருவரைப் படைத்துச் செருக்கும்மற் றிவர்களைப் பரமென் றும்மையால் வினையான் மருளுநர் மருள்க உண்மைநூல் உணர்ந்தருள் கூடுஞ் செம்மையோ ரெல்லாம் விடமிடற் றடக்கித் தேவரைப் புரந்துயர் குணங்கள் மும்மையுங் கடந்த முதல்வனே யெவர்க்கும் மூலகா ரணனெனத் தெளிவார் | 49 |
632 |
சிமிறுகா லுழக்க முகையுடைந் தலர்ந்து நெட்டிதழ் வாய்தொறும் நறவம் உமிழ்மலர்த் தடஞ்சூழ் திருச்சிவாத் தானத் துண்மையைத் தெரிந்தவா றுரைத்தாம் அமிழ்தமும் கைப்பக் குழாங்குழா மாகி அறிஞர்தாம் கழகங்கள் தோறும் தமிழ்தெரி காஞ்சி வரைப்பினில் மணிகண் டேச்சரத் தலத்தியல் புரைப்பாம் | 1 |
633 |
தேவரும் அசுரரும் திசைமுகனை வேண்டல் பாட்டளி உளரும் கற்பக நறுந்தார்ப் பனிமுடிக் கடவுளர் தாமும் வாட்டிறல் படைத்த அசுரரும் முன்னாள் வல்வினை இறப்பினுக்கஞ்சி வேட்டனர் சாவா மருந்தினைப் பெறுவான் வெறிநறாக் கொப்புளித் தலர்ந்த தோட்டணிக் கமலக் கிழவனை எய்தித் துணையடி பழிச்சிநின் றுரைப்பார். 2 | 2 |
634 |
முக்குணப் பகுப்பின் மூவுருக் கொண்டு முத்தொழில் இயற்றிப்போய் எங்குந் தொக்கநின் விழிப்பின் இமைப்பினில் எமக்குத் தோற்றமும் ஒடுக்கமும் ஆமால் ஒக்கநாம் இறப்புக் கஞ்சிவந் தடைந்தேம் உலப்புறா திருந்துபோர் புரியத் தக்கதோர் உபாயந் தெரித்தெமக் குரையாய் தலைவனே என்பது கேட்டு | 3 |
635 |
மடநடைக் கலைமான் இளமுலை திளைக்கும் மாண்பினான் அவரொடும் எழுந்து நடலைதீர் காட்சி வைகுந்த வரைப்பின் நண்ணுபு விழியுறக் கண்டான் படவரா அணையின் முனிவரர் பழிச்ச மலர்மகள் பதாம்புயம் வருட அடர்சிறைக் கலுழன் முதலியோர் சூழ அறிதுயில் அமர்ந்தநா யகனை | 4 |
636 |
திசைமுகன் முதலோர் திருமாலுக் குரைத்தல் கண்டுநாத் தழும்பத் தனித்தனி துதித்துக் கண்துயில் எழுப்பிமுன் வணங்கி முண்டகன் முதலாஞ் சுராசுரர் குழுமி மொழிவரால் இறப்பினுக் கஞ்சி ஒண்டளிர்ச் சரணஞ் சரணமென் றடைந்தேம் உலப்பினைக் கடக்குமா றெமக்குத் தண்துழாய் அலங்கற் கருணையங் கடலே சாற்றென நாரணன் எழுந்து | 5 |
637 |
நெடிதுபோ தெண்ணிச் செய்வகை துணிந்து நீயிர்மற் றஞ்சலிர் இனிநாம் முடிவுறா திருப்பக் கடல்கடைந் தெடுத்து முனிவறப் பருகுவாம் அமிழ்தம் கடிபடும் அமிழ்தம் பருகிடின் இறப்பைக் கடக்கலாம் என்றலுங் களிகூர்ந் தடியிணை வணங்கிக் கடையுமா றெவ்வா றளக்கரை எனவினா யினரால் | 6 |
638 |
இந்திரை கொழுநன் உளத்திடை எண்ணி எறிபுன லருவியஞ் சாரல் மந்தரப் பறம்பு மத்தென நாட்டி வாசுகி கயிறெனப் பூட்டிச் சுந்தரத் திருபாற் கடலினைக் கடைந்து சுவையமிழ் தெடுத்துமென் றுரைப்ப அந்தநாள் அவர்தாம் பெற்றபே ருவகை யாரெடுத் தியம்பவல் லவரே | 7 |
639 |
திருப்பாற்கடல் கடைதல் கரைபொரு திரங்கும் வெண்டிரைத் திருப்பாற் கடலிடை யாவரும் எய்தி நிரைமணிக் குவட்டு மந்தரம் நிறுவி நெளியுடல் வாசுகி சுற்றி வரைபடு திரள்தோள் அசுரருஞ் சுரரும் வலிப்புழி யவர்தமை நோக்கி விரைநறாத் துளிக்கும் பசுந்துழா யலங்கல் விண்ணவன் ஒன்றுபே சுவனால் | 8 |
640 |
இருதிறத் தவருள் வான்சுவை யமிழ்தம் எறுழினாற் கடந்தெடுத் தவரே பருகிடத் தகுமால் ஏனையோர் எய்தற் பாலதன் றென்பது கேட்டுப் பொருதிறல் அசுரர் மகிழ்ந்தெழுந் தார்த்துப் பொறியரா இருபுடை பற்றித் தருவலி மிகையால் ஈர்த்தன ரசலம் தன்பெயர் நாட்டிய தன்றே | 9 |
641 |
இயக்க லாற்றாமை யிளைத்த தானவரை யெததிருறுங் கடவுளர் நோக்கி வியத்தக யெழுந்து நீரினி விடுமின் விடுமினென் றெய்தியவா சுகியை வயத்துடன் பற்றி ஈர்த்தனர் அவரும் வலியிழந் தெய்த்தனர் நின்றார் செயத்தகுந் திறமே தினியென யாருஞ் சிந்தையிற் கவலைகூர் பொழுது | 10 |
642 |
வலனுயிர் செகுத்த வானவ னுயிர்த்த வாலியாங் குரக்கினத் தலைவன் பலகலிடத்துஞ் சென்றுபாண் டரங்கன் பதாம்புய மருச்சனை புரிவான் புலனுயர் சிறப்பின் ஆயிடை இயல்பாற் போதலும் மாலயன் முதலோர் நலமுற நோக்கி உவகைமீ தூர நல்வர வேற்றுநின் றனரால். | 11 |
643 |
வந்தவன் அயனை மாயனை வணங்கி வானவர்க் கஞ்சலி அளித்துச் சிந்தனை ஒருக்கி நீரிவண் முயலுஞ் செயலிது வென்னென வினவக் கந்தமா மலரோன் உள்ளவா றுரைத்துக் கருதருந் தெய்வமிங் குன்னைத் தந்ததா லெமக்குநீ துணைசெய்யத் தகுமென இறுத்தன னவனும். | 12 |
644 |
பெருவலி படைத்த சுராசுரர் குழுமிப் பெறலருந் திறத்தினில் எளியேன் ஒருவனோ வல்லேன் யாமெலாம் ஒருங்குற் றுததியைக் கடைதுமேல் தெய்வந் தருவது காண்டும் எனநகைத் தியம்பித் தானவர் கடவுள ரெல்லாம் வருகென விளித்து வாலிமா சுணத்தின் வாற்புறம் பற்றிநின் றீர்த்தான் | 13 |
645 |
பருங்கொலைப் படத்தை அசுரருஞ் சுரரும் பற்றினர் தனித்தனி ஈர்த்தும் ஒருங்குநின் றீர்த்தும் ஆற்றலா துடைந்து தன்புடை ஒதுங்குதல் காணூஉக் கருங்கழல் வாலி விடுமின்நீர் என்னாக் கட்செவி வாலமும் பணமும் இருங்கையிற் பற்றி முறுகுற வாங்கி ஈர்த்தனன் கடைந்தனன் புணரி | 14 |
646 |
ஒருகரம் முடக்கி ஒருகரம்நீட்டி உவவுநீர் மதுகையிற் கடைபோ தருவரைக் குடுமி மந்தரங் கடலுள் ஆழ்தலுங் கச்சப வடிவாய்த் திருமறு மார்பன் தாங்கவச் சயிலம் தெண்கடல் மீச்செல மிதப்பக் கருமுகில் வண்ணன் கரமிசை நீட்டிக் கனங்கொள இருத்தினன் வரையே | 15 |
647 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் இருத்திய பின்னரி யேறும் இடம்வல மாக வரையைத் திரித்துக் கடுகச் சுழற்றித் தெண்டிரை வேலை அலறிக் கரித்து விரித்துப் பரந்து துள்ளிக் கொதித்தெழுந் தாட வருத்திக் கலக்கி மறுக வலித்துக் கடைந்திடு காலை | 16 |
648 |
ஆலாலத் தோற்றம் ஆற்றரி தாகி இளைப்புற் றரவிறை வாயின் நுரைகள் காற்றி உயிர்ப்பு விடலுங் கடுஞ்சுடு நீர்க்கட லெங்கும் தோற்று நுரைகள் பரம்பித் தொக்க கலப்பிடை நின்றும் கூற்றுறழ் ஆலால மென்னுங் கொடுவிடந் தோன்றிய தன்றே | 17 |
649 |
அளக்கர் முழுதும் வறப்ப அண்ட கடாகம் அழற்றத் துளக்கில் உயிர்த்தொகை முற்றுஞ் சுட்டெழும் வல்விடத் தீயின் கிளக்கரு வெம்மை கதுவிக் கேழுடல் வாடி வெதும்பி விளக்க முறும்புகழ் வாலி வெரீயினன் ஓட்ட மெடுத்தான் | 18 |
650 |
வருகனல் வல்விடந் தாக்கி மாயவன் வெண்ணிற மேனி கருகினன் அன்றுதொ டங்கிக் கரிய னெனப்பெயர் பெற்றான் திருமல ரோனுடற் பொன்மை தீர்ந்த புகைநிறம் உற்றான் வெருவு திசைக்கிறை யோரும் வேற்றுரு வெய்தி அழுதார். | 19 |
651 |
தேவர்கள் திருக்கயிலையை அடைதல் யாரும் பதைபதைத் தோட்ட மெடுத்தினிச் செய்வதென் னென்று சார்பு பிறிதொன்றுங் காணார் தாளோடு தாள்க ளிடற நாரண னேமுதல் வானோர் நண்ணினர்க் கின்ப மளிக்குஞ் சீர்கெழு வெள்ளிக் கயிலைத் திருமலை நோக்கி நடந்தார். | 20 |
652 |
வெங்கதிர் தாக்க உடைந்தோர் மென்னிழல் சேர்ந்தெனச் சென்று மங்கல வெற்பினை எய்தி வஞ்ச விடத்துயர் நீங்கி அங்கண் வரையை வணங்கி அருளொடும் ஏறி இளங்கால் தங்கிய போக புரமுன் சற்றிளைப் பாறி இருந்தார். | 21 |
653 |
வேறு படைத்தபெருந் துயர்நீங்கி நாற்றிசையுங் கண்விடுத்துப் பார்ப்போர் அங்கண் விடைக்கொடியோன் திருக்கயிலை விரிசுடர்வெண் கதிர்நீட்டும் விளக்கந் தன்பால் அடைக்கலமென் றுறுந்தம்மைத் தொடர்ந்துவருங் கொடுவிடமங் கணைவு றாமைப் புடைத்துந்தித் தள்ளுவான் நீட்டுதடங் கைகளெனப் பொலிவ கண்டார் | 22 |
654 |
கடலகடு கிழித்தெழுந்த விடவேகம் ஆற்றாது கழிய நொந்தார் இடர்பெரியர் அளித்தக்கார் அந்தோவென் றிரங்கினபோல் இலகும் வெள்ளித் தடவரைமேல் தூங்கருவி பனித்திவலை நீர்தங்கள் முகத்து வீசப் படரும்நெடுந் தடங்கொடிகள் சாந்தாற்றித் தொழில் செய்யும் பான்மை கண்டார். | 23 |
655 |
அச்சமுற வருவிடத்தை யானெடுத்துப் பருகுவலென் றாற்றல் சாலப் பச்சைவரை உயர்கயிலைப் பறம்புவா யங்காந்த பரிசே போலச் செச்சைமணி கிடந்திமைக்கும் முழைகள்தொறும் வெண்ணீறு திகழப் பூத்த பொச்சமிலா முனிவர்குழாம் நிரைநிரையா வீற்றிருக்கும் பொலிவு கண்டார் | 24 |
656 |
அழுந்தாழிப் புனலகத்து வடவையுமக் கடுவெம்மைக் காற்றா தங்கண் எழுந்தோடி முன்னாகத் திருக்கயிலைப் பருப்பதத்தில் எய்தி முன்னர் விழுந்தாறு தன்னில்வரங் கிடப்பதென வயங்கும் ஒளிமேவு செக்கர்ச் செழுந்தாம மணிபடுத்த நெறிநோக்கி யந்நெறிமேற் சேற லுற்றார். | 25 |
657 |
இந்திரனார் பட்டதுயர்க் குளமிரங்கி அவரூரும் எழிலிசேர வந்தணுகி எந்தைபிரான் எதிர்நின்று முறையிட்டான் மான முன்னர் முந்துகுட முழமுதலாம் பேரியங்கள் பலமுழங்கு முழக்கங் கேட்டுச் சிந்தைநனி களிகூரச் சார்ங்கனயன் முதலியோர் திளைத்துச் சென்றார். | 26 |
658 |
யாமெய்தி முறையிடும்போ தருள்தருமோ முனிந்திடுமோ எம்மான் என்று நாமெய்திச் செல்வோர்கள் ஆங்காங்குப் பூதகண நாதர் கூடித் தோமெய்திப் பிழைத்தோருஞ் சரணடையின் அருள்சுரக்கு மெங்கோன் என்று தாமெய்தித் தம்மியல்பிற் புகழெடுத்தோ துவகேட்டுத் தளர்வு தீர்ந்தார். | 27 |
659 |
தம்மினத்தோர் வரவுதனை முன்னெய்தி அறிவிப்பச் சார்வோரென்ன அம்மலைவாழ் எண்ணிலா அரிபிரமர் சேவைசெய்யும் அமையம் பார்த்துக் கொம்மைமழ விடைப்பெருமான் கோயிலினுட் சென்றணையக் குறித்து நோக்கி விம்மியெழும் பெருமகிழ்ச்சி தலைசிறப்ப மாலயனும் விரைந்து செல்வார். | 28 |
660 |
எம்பிரான் உருக்கொண்டங் குறைவோரை அவனெனச் சென்றெய்தி யோர்பால் அம்பிகையி லாமையினால் அவனல்லர் எனத்தெளிந்தே அப்பால் ஏகிச் செம்பதுமை வளர்மார்பன் அயன்முதலாம் யாவர்களுஞ் சேர ஈண்டி நம்பனமர்ந் தினிதுறையும் திருக்கோயிற் கடைத்தலையை நண்ணி னரால். | 29 |
661 |
கணங்கள்மிடை முதல்தடையில் தடையுண்டு நின்றனர்கள் கரும தேவர் உணங்குதயித் தியர்இரண்டிற் கடவுளர்கள் மூன்றிலொரு நான்கு தன்னில் அணங்கறுசாத் தியர்முதலோர் மருத்துக்கள் முனிவரெலாம் ஐந்தில் ஆறில் நிணங்கமழ்வேல் திசைக்கிறைவர் எண்மர்களுந் தடையுண்டு நின்றார் அன்றே. | 30 |
662 |
இறைவனை வணங்கல் தாமரையோன் திருமாலுந் தடையின்றி அணைந்துதனித் தடையின் வைகும் தேமருதார் நந்திபிரான் அடிபணிந்தார் அவன்கொண்டு செலுத்தச் சென்று காமருசீர் அரம்பையர்கள் ஆடலொடு பாடலறாக் கடியார் செல்வப் பூமருபே ரவைநாப்பண் அமர்ந்தருளும் பெருவாழ்வின் பொலிவைக் கண்டார் | 31 |
663 |
கண்டுபெருங் களிகூர்ந்த கணநாதர் பிரம்படியிற் கலங்கி ஏங்கி மண்டியபே ரச்சமுடன் அன்புமிரு புடையீர்ப்ப வணங்கித் தாழ்ந்தே அண்டனெதிர் நீளிடைநின் றஞ்சலிசென் னியிலேற விழிநீர் வாரக் கொண்டமயிர்ப் புளகமுறப் பலமுறையும் பணிந்தெழுந்து குடந்தம் பட்டார் | 32 |
664 |
கொச்சகக் கலிப்பா தூரத்தே இவர்நிற்ப அணித்தாகத் தொழுதணைந்து வாரத்தால் நந்திபிரான் மலரோனுந் திருமாலுஞ் சேரத்தாம் வந்ததிறம் விண்ணப்பஞ் செயக்கொன்றை ஈரத்தா ருடையானும் ஈண்டவரை தருகென்றான் . | 33 |
665 |
நந்திபிரான் திருப்பிரம்பை அசைத்தருள நாண்மலர்மேல் அந்தணனும் நெடியோனும் அஞ்சலிசேர் கரத்தோடும் வந்தணுகி மருங்குறலும் மணிநிலா நகைமுகிழ்ப்பப் பைந்தொடியாள் ஒருகூற்றிற் பரம்பொருள்மற் றிதுகூறும். | 34 |
666 |
மாயன்நீ இருந்தைஉரு வாய்த்தனையென் மலர்மேவும் தூயநீ புகையுருவந் தோற்றினையென் னென்றருளும் ஆயபொழு தாண்டாண்டுக் கணநாதர் அலைப்பமெலிந் தேயமுறை முறையிட்டார் புறம்நின்ற இமையவர்கள் (இருந்தை- கரி ) td valign="bottom">35 | |
667 |
ஆங்கவர்கள் மிகமுழக்கும் அரவோசை திருச்செவியேற் றீங்கிதெவன் என்றருள் அம்புயத்தோன் எதிர்வணங்கிப் பாங்குடைய சுராசுரருன் பாதங்கள் தொழப்போந்தார் பூங்கழற்கால் வெம்பூத கணந்தடுப்பப் புறம்நின்றார். | 36 |
668 |
விளித்தருளிக் கருணைசெய வேண்டுமெனத் திருநோக்கம் அளித்தெந்தை நந்திதனைப் பணித்தருள அவனெய்தித் தெளித்தெழுபல் கணத்தோரைத் தடுத்துள்ளாற் செல்கவெனத் துளித்தமதுப் பிரம்பசைத்துச் சுராசுரரைப் புகுவித்தான். | 37 |
669 |
உய்ந்தனமுய்ந் தனமென்றே உம்பர்களுந் தானவரும் முந்திமணி வாய்தலிடை முடிநெருங்க நுழைந்தேகி எந்தைபிரான் வீற்றிருக்கும் ஓலக்கம் எதிர்நோக்கிப் புந்திநிறை களிகூரத் தொழுதெழுந்து போற்றினார். | 38 |
670 |
பிரமன் முறையீடு அங்கவரை யெதிர்நோக்கி நகைத்தருள்கூர்ந் தருள்வாரி பங்கயத்தோய் உருமாறி முகஞ்சாம்பி மெய்பனிப்ப இங்கிவர்கட் குற்றதெவன் என்றருள மறைப்புத்தேள் செங்கையிணை முகிழ்த்திறைஞ்சி விண்ணப்பஞ் செய்கின்றான். | 39 |
671 |
ஐயனே அடியேங்கள் அறியாமைத் தொடக்குண்ட கையரேம் ஆதலினுன் கண்ணருள் பெற்றெய்தாது வெய்யநறுஞ் சுவையமிழ்தம் பெறற்பொருட்டு வெவ்வினையேம் பையரவான் மந்தரத்தாற் பாற்கடலைக் கடைந்தேமால் | 40 |
672 |
துன்றியதீஞ் சுவையமிழ்தந் தோன்றாது விடந்தோன்றி இன்றுசரா சரமனைத்து மெரிசெய்து நீறாக்கிற் றன்றினரூர் எரித்தாயுன் அருளன்றி முயல்வதெலாம் ஒன்றொழிய வொன்றாமென் றுரைக்கும்மொழி மெய்யாமே. | 41 |
673 |
இற்றொழிந்தோர் ஒழியவே றெஞ்சியயாம் சிலர்வந்திங் குற்றனம்வண் ணமும்மாறி உயங்கினேம் நீயலதோர் பற்றிலேம் இவ்வளவில் உலகமெலாம் பாழாகும் சற்றுமினித் தாழாது தண்ணளிசெய் திரங்காயால் | 42 |
674 |
இதுபொழுது காத்திலையேல் எமக்கிறுதி இன்றேயாம் விதுமுடித்த பெருங்கருணை வெள்ளமே என்றிரந்தான் மதுமலர்த்தார் விண்ணவரும் மனங்கலங்கி முறையிட்டார் அதுவுணர்ந்தெம் பெருமானும் அஞ்சலிர் என்றருளி. | 43 |
675 |
சிவபெருமான் நஞ்சுண்டருளல் - கலிநிலைத்துறை இருந்த வாறுளத் தெண்ணினான் மலர்க்கரம் நீட்டக் கருந்த ழற்கடு கமலமீச் சிறையளி கடுப்பப் பெருந்தி ருக்கரத் தெய்தியேர் செய்துபே ராளன் திருந்து பார்வையிற் சிற்றுரு வாயடங் கியதால். | 44 |
676 |
அண்டர் மாலயன் உலகெலாம் அதிர்வுறப் பரந்து மண்டு வெஞ்சினக் கடுவலி போய்மலர்க் கரத்தின் ஒண்ட ளிர்ப்பதத் தடியவர் சிந்தைபோ லொடுங்கக் கண்ட யெம்பிரான் பெருமையார் கட்டுரைத் திடுவார் | 45 |
677 |
தன்னடித்தொழும் பாற்றுமோர் தமிழ்முனி கரத்தில் உன்னு முன்கடற் புனலெலாம் உழுந்தள வாமேல் அன்ன தெண்கடல் தோன்றிய பெருவிடம் அம்மான் பொன்ன லர்க்கரத் தடங்கிய தென்பதோர் புகழோ | 46 |
678 |
சேயி தழ்த்தடம் பங்கயக் கரத்திடைச் சிவணுங் காயும் நஞ்சினைக் காண்தொறும் பதைக்கும்வா னவரைப் பாயு மால்விடப் பண்ணவன் பரிந்தெதிர் நோக்கித் தூய வெண்ணிலாக் குறுநகை முகிழ்த்தனன் சொல்வான். | 47 |
679 |
செறியும் நஞ்சினை உண்குமோ சேயிடைச் செல்ல எறிகு மோபுகல் மின்களென் றருள்செய இமையோர் வறிது மூங்கையர் போறலும் ஒருபுடை மணந்த நெறிக ருங்குழல் மலர்முகம் நோக்கினன் நிகழ்த்தும் | 48 |
680 |
அரிவை கேட்டியிக் கொடுவிடம் அகிலமும் ஒருங்கே எரிம டுத்ததுன் பார்வையால் இன்னமு தாமால் புரிவ தொன்றிலை பருகினாற் புகறிநீ என்ன வரிவி ழிக்கடை தோய்மணிக் கனங்குழை மடமான். | 49 |
681 |
உலகெ லாந்தரும் அன்னையவ் வுலகின்மேல் வைத்த அலகி லாபெருங் கருணையாற் கொழுநன்மாட் டமைந்த தலைமை யன்பினான் மலர்முகம் ஒருபுடை சாய்த்துக் குலவு செங்கையின் விடத்தினை நோக்கினள் குறித்து. | 50 |
682 |
மாழை யுண்கணி நோக்கலும் திருவுளம் மகிழ்ந்து பாழி மால்விடை கொடிமிசை உயர்த்தருள் பகவன் ஏழை வானவர்க் கிரங்கியே இனிதுகண் ணோடி ஆழி வல்விடம் பருகினான் அகிலமும் உய்ய | 51 |
683 |
பருகு வெங்கடு மிடற்றிடை யேகுழிப் பாரா மரும லர்ப்பிரான் முகுந்தனே வஞ்சநஞ் செம்மான் திருமி டற்றினுக் கழகுசெய் தமரர்சே யிழையார் அருமி டற்றுநூல் காத்தது காண்கென அறைந்தான் | 52 |
684 |
மிடற்றுச் செக்கர்வான் மிசைவிடக் கருமுகி லுறநோய் கெடத்த ளிர்த்தபைங் கூழெனச் சுராசுரர் கெழுமிக் கடற்பெ ரும்புனல் உடைத்தெனக் காதல்மீக் கூர அடற்க ணிச்சியோய் சயசய போற்றியென் றார்த்தார் | 53 |
685 |
நாரணாதியர் கிளர்ச்சியை நோக்கிநன் கருளிக் கோர வல்விடம் மிடற்றிடை அமைத்தனன் குழகன் ஆர வாயிடை வயிற்றிடை யன்றிமற் றிடைக்கண் ஆர மைத்திட வல்லவர் அமிழ்தமே யானும். | 54 |
686 |
சகமெ லாம்பொடி படுத்தெழுந் தழல்விடம் மிடற்றில் திகழ வைத்தனன் முப்புரம் எரியெழச் சிரித்தோன் அகல ருந்திறத் தெண்குணம் நிறைந்தபே ராண்மைப் பகவன் மேன்மைமற் றெம்மனோர் அளவிடற் பாற்றோ | 55 |
687 |
கந்த ரத்திடை யடக்கிய கறைவிடங் காணூஉச் சுந்த ரத்திரு மாலயன் சுராசுரர் முனிவர் இந்தி ராதியர் கவலைதீர்ந் தெண்ணருங் களிப்பால் சிந்தை அன்பொடும் அஞ்சலி சென்னிமேற் கொண்டு | 56 |
688 |
நீல கண்டனே போற்றியெண் குணங்களால் நிறைந்த மூல காரணா போற்றிமுன் சிறுவனுக் கிரங்குங் கால காலனே போற்றியின் றெம்முயிர் காத்த ஏல வார்குழல் பங்கனே போற்றியென் றிசைத்தார் | 57 |
689 |
என்ற போதருள் சுரந்துமக் காற்றலின் றளித்தேம் தொன்று போற்கடல் கடைந்துவான் சுவையமிழ் துண்பீர் பொன்றி லீரெனத் திருவருள் புரிந்தனன் புனிதன் ஒன்று பின்னரும் வேண்டுவர் மால்முதல் உம்பர். | 58 |
690 |
பொதுமை நீத்துநின் திருவடிக் கன்புபூண் டொழுகக் கதுவு நின்னருள் நாள்தொறும் எம்வயிற் கலப்ப விதுமு டிச்சடை வள்ளலே அருளென வேண்ட அதுவ ழங்கினன் விடைகொடுத் தருளினன் அமலன் | 59 |
691 |
விஷ்ணு வாதியோர் சிவபூசையால் பிறவாநலம் பெறல் மீண்டு மாலயன் முதலிய விண்ணவர் குழுமி ஈண்டு நம்பொருட் டிருள்விடம் பருகினன் இறைவன் பூண்ட விப்பெரும் பிழையறும் படிசிவ பூசை யாண்டு செய்துமென் றெண்ணினர் தெளிந்தனர் இதனை. | 60 |
692 |
தலமும் தீர்த்தமும் மூர்த்தியும் சிறந்தமெய்த் தானங் குலவு காஞ்சிமா நகரமாம் அந்நகர் குறுகி நலமு றச்சிவ பூசனை உஞற்றிடின் நசியா அலகில் பாவமும் நசிக்குமென் றப்பதி யெய்தி. | 61 |
693 |
அன்று தம்முயிர் அளித்தது மணிகண்ட மென்னும் நன்றி யான்மணி கண்டநா தப்பெயர் இலிங்கம் வென்ற புண்ணிய கோடிநா தர்க்குமேல் பாங்கர் ஒன்றும் அன்பினால் இருத்தினர் பூசனை உஞற்றி | 62 |
694 |
மணிகண் டேசர்தம் அருளினால் வன்பிழை தவிர்ந்து பணியி னாற்கடல் கடைந்தமிழ் தெடுத்தனர் பருகித் தணிவில் வெஞ்சினத் தானவர் தமைத்துரந் தகற்றிப் பிணியும் நீங்கினர் இறப்புறாப் பெருநலம் பெற்றார். | 63 |
695 |
பணாமணீசர் வரலாறு அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுஇயும் பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச் சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு நித்தம் அக்கரைக் கண்ணிருந் தருச்சனை நிரப்பி | 64 |
696 |
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி நணாவ சகத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள் மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான். | 65 |
697 |
கொங்க லர்ந்தபூந் துணர்தொறும் நறுநறாக் கொழிக்கும் பொங்கர் சூழ்கலிக் கச்சியுட் பழமறைப் பொருளாய் அங்கண் வாழ்மணி கண்டனை அருச்சனை ஆற்றித் துங்க முத்தியிற் சேர்ந்தவர் தொகுப்பினெண் ணிலரால் | 66 |
698 |
அறுசீரடியாசிரிய விருத்தம் அடுங்காலம் இதுவென்ன விடமெழலும் நனிவெருவி அயன்மால் ஏனோர் கொடுங்காலன் றனைக்குமைத்த குரைக்கழற்கீழ்ச் சரண்புகுதக் கொதித்து வாழ்நாள் பிடுங்காமல் அருள்புரிந்த பரம்பொருளை யன்றியுமோர் பிரானுண் டென்ன நடுங்காதார் தமைக்காணப் பெற்றிடினும் என்னுளம் நடுங்கும் மாதோ | 67 |
699 |
வளைந்த பாப்பணி அணிமணி நாயகனாம் முளைத்த வெண்பிறைக் கண்ணியோன் வரவிது மொழிந்தாம் விளைத்த சூளீனால் இளைத்துறும் வியாதனைக் காத்த இளைத்துச் சார்ந்தவர் சார்பினான் வரவினி யிசைப்பாம் | 1 |
700 |
வியாதன் பொய்யுரை கிளத்தல் பராச ரப்பெயர் முனிவரன் பழுதறு வரத்தால் தராத லத்திடைத் தோன்றிநான் மறைதனிப் பதினெண் புராண மேனவும் பகுத்துயர் புரவுபூண் டோங்கிப் பிரானெ னத்தகும் வியாதனாம் பெரியவன் மேனாள் | 2 |
701 |
கொடிய பாதகக் கலியுகம் வருநிலை குறித்துப் படியில் யாங்கினிச் செல்வதென் றஞ்சிமெய் பனித்துக் கடிந றும்புனற் கங்கைசூழ் காசியின் எய்தி முடிவில் மாதவஞ் செய்துவீற் றிருந்தனன் முறையால் | 3 |
702 |
அங்கண் மெய்த்தவர் யாவரும் அவனடி வணங்கி இங்கெ மக்குநீ மறைமுடி யுண்மையீ தென்னச் செங்கை நெல்லியின் தெளிவரத் தெருட்டுகென் றிரந்தார் வெங்கொ டும்பகை வினைக்குறும் பெறிந்துயர் வியாதன். | 4 |
703 |
மிருதி நூல்புரா ணத்தொகை வேதநூல் அங்கம் இருவ கைப்படு நியாயமா யுள்மறை எழிற்கந் தருவ வேதம்வில் வேதமோ டருத்த நூல் இவற்றின் பொருளின் உண்மைமற் றிதுயிது வெனத்தனி புகன்றான். | 5 |
704 |
பெருவ லித்தவ முனிவரர் கேட்டுளம் பிறழா தொருவ ழிப்படத் துணிந்தொரு வார்த்தையின் எமக்குச் சுருதிநூல்முடி பிதுவெனத் தொகுத்துரை என்றார் மருளின் மூழ்கிய சிந்தையின் வியாதமா முனிவன் | 6 |
705 |
வியாசர் பொய் கூறல் உறுவர் யாரையும் நோக்கிமுன் உரைக்குமா றாகத் தறுகண் ஆண்மையிற் கூறுதல் உற்றனன் தவத்தீர் அறிவு நூலெலாம் பன்முறை யாயினுந் தெளியப் பெறுவ தொன்றது நாரண னேபரப் பிரமம் | 7 |
706 |
வண்ண மாமறை நூற்குமேல் நூலிலை மதியோர் எண்ணு கேசவன் றனக்குமேல் தெய்வமும் இல்லை கண்ணும் எவ்வகை நூல்கட்குந் துணிபிது காண்மின் உண்மை உண்மையீ தெனக்கரம் எடுத்துநின் றுரைத்தான் | 8 |
707 |
கேட்ட மாதவர் வெரீயினர் கிளர்மறைப் பொருட்குக் கோட்ட மாமிது எம்மனோர் கோட்டக்க தன்றால் நாட்டி ஈங்கிவன் புகன்றதென் னென்றுளம் நடுங்கி நீட்டு செஞ்சடை முனிவரன் றன்னைநேர் நோக்கி | 9 |
708 |
வாத ராயண நீயிவண் மொழிதரு மாற்றம் வேத நூற்பொருள் உண்மையே யாமெனில் விசுவ நாத னார்திரு முன்பெமக் குரையென நவின்றார் ஓதுகேனென மூர்க்கனும் எழுந்துசென் றுற்று | 10 |
709 |
விச்சு வேசன்முன் நின்றிரு கரமிசை நிமிர்த்தாங் கச்ச மின்றிமுன் புகன்றதே புகன்றனன் அந்தோ விச்சை நூல்பல கற்பினுஞ் சிவனருள் விரவாக் கொச்சை யோர்தமை விடுவதோ கொடுமலச் செருக்கு | 11 |
710 |
அறிவு போலடர்ந் தெழுமறி யாமையின் வலியால் பொறியி லானிது கிளப்பவும் வெகுண்டிலன் புனிதன் மறுவில் கூற்றெலாந் தன்பெய ரெனுமறை வழக்கால் வெறிம லர்க்குழல் உமையொடு மகிழ்ந்துவீற் றிருந்தான். | 12 |
711 |
நாராயணன் முதலிய பெயர்களும் காரணப் பெயராகவும் ஆகுபெயராகவும் சிவபெருமனையே உணர்த்தி நிற்கும். எல்லாப் பெயர்களும் பரமசிவன் பெயர்களே என்பது வேதத் துணிபு.(சிவஞான மாபாடியம் சூ1.அதி2.3) | 13 |
712 |
நந்தி யெம்பிரான் வெகுண்டுநாண் மலர்க்கரம் எடுத்த அந்த வண்ணமே அசைவற நிற்குமா சபிப்ப மந்த னாயினான் நிமிர்த்தகை மடக்கவல் லாமை நிந்தை யாற்சிலைத் தூணமொத் தசைவற நின்றான். | 14 |
713 |
தெற்றற் செஞ்சடை யெம்பிரான் திருமுன்பு நாட்டும் வெற்றித் தம்பமொத் திலகிவல் லிடும்பைகூர் வியாதன் பற்றிச் சிந்தையில் நெடியமால் இணையடி பரவ அற்றைப் போதுமுன் தோன்றிநின் றச்சுதன் அறைவான் | 15 |
714 |
தெற்றல்- பின்னல். வெற்றித் தம்பம். ஜெயஸ்தம்பம், வெற்றித் தூண் வியாசருக்கு விண்டு புத்தி புகலுதல் என்ன காரியஞ் செய்தனை என்னையுங் கெடுத்தாய் பன்ம றைப்பரப் பியாவையும் பாற்படுத் தவற்றுட் சொன்ன மெய்ப்பொருள் உண்மையைத் துணிந்தநீ அந்தோ கொன்னும் இம்மயக் கெவ்விடைப் பெற்றனை கூறாய் | 16 |
715 |
“ஏனை யாரையும் அறத்துறந் தியாவரும் என்றும் பான்மை யிற்றியா னஞ்செயப் படுமொரு முதல்வன் மேன்மை கூர்சிவன் ஒருவனே” எனவிரித் தன்றே நான்ம றைத்தலை யாமதர் வச்சிகை நவிலும் | 17 |
716 |
யாமெ லாமவன் இணையடித் தியானஞ்செய் பசுக்க ளாமெ னத்தெளி யவனருள் சேர்தலிற் பசுவும் பூமி சைத்தியா னப்பொரு ளாமெனப் புனைந்து தோம றச்சில நூல்புகல் உண்மையுந் துணியாய் | 18 |
717 |
அறிஞர் கொண்டகோட் பாடிது அறிந்திலை அம்மா பிறிவில் ஆணவச் செருக்கினின் மயங்கிய பேதாய் வெறிய நீயினி யுய்வது வேட்டனை யாயின் குறிபி றழ்ந்திடா தென்னுரை மெய்யுறக் கோடி | 19 |
718 |
மந்தி ரத்தழல் மகத்தினுக் கிறையவன் மகவான் சந்த மாமறைக் கிறையவன் தாமரைக் கிழவன் இந்தி ராதியாம் உலகினுக் கிறையவன் யானே மைந்த னேயெனக் கிறையவன் மணிமிடற் றிறையோன். | 20 |
719 |
அகில நாயகன் அவற்குமே லிறையவ னில்லை அகில லோகமு மவன்திரு வாணையின் நடக்கும் அகில லோகமும் படைத் தளித் தழிப்பவ னவனே அகில நூல்களும் உரைத்திடுந் துணிவிது வாமால் | 21 |
720 |
வானம் ஏத்தயான் வைகுந்த வாழ்வுபெற் றதுவும் ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும் ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கைஎய் தியதும் ஆனு யர்த்தவன் அருட்குறி அருச்சனைப் பயனால். | 22 |
721 |
அன்ன வன்திரு வடிகளே சரணமென் றடைமோ இன்ன தாயநின் மயக்கினை விடுமதி யின்றேல் பின்னல் வேணிநீ கெட்டனை பிறரையுங் கெடுக்க உன்னு கின்றனை யெனவெகுண் டுரைத்தனன் திருமால். | 23 |
722 |
வியாதன் முனிவர்மேன் முனிதல் வாயு றுத்திய கடுமொழி கேட்டனன் மற்றைத் தூய வானவத் தொகையெலாந் துரும்பெனக் கழித்தான் பாயு மால்விடைப் பகவனே பரமெனத் தெளிந்தான் ஏயு மாறருள் கிடைத்துயர் இருந்தவத் தலைவன். | 24 |
723 |
மெய்த்த வத்தவர் தமையெதிர் நோக்கிமே தகையீர் இத்த கைத்தமால் உமக்குமென் போலவெய் தியதோ சுத்த மாமறை முழுவதுந் துகளறத் தெரிந்த சித்தர் காளெனை வினவிய தென்கொலோ செப்பீர் | 24 |
724 |
விச்சு வன்சிறைப் புள்ளர சுயர்த்தவன் விளம்பும் விச்சு வாதிகன் எறுழ்வலிச் சினவிடை யூர்தி எச்ச மேசுரும் புளர்துழாய் அலங்கலான் என்ப எச்ச நாயகன் பொலந்துணர் இதழிமா லிகையான் | 26 |
725 |
மாயை யாம்கொடு முரன்றனைச் செருத்துயர் வயவன் மாயை யாள்பவன் முப்புரம் கனற்றிய வள்ளல் சாயல் மாமயில் வனிதையே நாரனன் தரியார் சாய வென்றசீர்ப் புருடனாம் கண்ணுதல் தலைவன். | 27 |
726 |
என்ன மாமறை மிருதிநூல் புராணமற் றெவையும் பன்னு கின்றதில் ஐயுறற் பாலதொன் றுளதோ புன்ம ருட்சியில் மயங்கினேன் புலங்கொளத் தெருட்டா தென்னை இவ்வணங் கண்டனிர் இதுநுமக் கழகோ. | 28 |
727 |
சிவனை யாவரே அருச்சனை செயாதவர் சிவன்மற் றெவரை யாயினும் அருச்சனை இயற்றிய துண்டோ கவர்ம னத்தினை ஒழித்தினி யாமெலாங் கவலா தவன்ம லர்த்துணைச் சரணமே யடைதுமென் றியம்பி | 29 |
728 |
வியாசர் வேண்டுகோள் பவள முண்டகக் கிழத்திதோய் பணைப்புயக் குரிசில் தவள மேனியை நீனிறம் ஆக்கிவெண் சலதி துவள வந்தெழும் கொடுவிடம் மிடற்றினில் தூங்கக் கவளம் ஆக்குநின் பெருமையார் கணித்திட வல்லார். | 30 |
729 |
சிரித்தெ ரித்தனை முப்புரம் திறற்சமன் வாழ்நாள் இரித்த ழித்தனை உதையினில் இலங்கையார்க் கிறையை நெரித்து வீழ்த்தினை பெருவிரல் நுதியினின் நீறாப் பொரித்து விட்டனை காமனைப் பொறிநுதல் விழியால் | 31 |
730 |
பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய் சுரர்கள் யாரையும் சிறுவிதி வேள்வியில் தொலைத்தாய் நரம டங்கல்மீன் வாமனன் கூர்மம்நற் கேழல் உரமெ லாமறத் தடிந்தனை யொவ்வொரு கூற்றால் | 32 |
731 |
அந்த கன்றனை மாயனைச் சூலமீ தமைத்த எந்தை நின்பெருந் தகைமையான் என்னறிந் திசைப்பேன் சிந்தை மையலில் தொழுத்தையேன் செய்பிழை பொறுத்தே உந்து பேரருட் கருணையால் உய்வகை அருளாய் | 33 |
732 |
என்று கண்கள் நீர் சொரியநாத் தழும்பநின் றேத்தி ஒன்று காதலான் நெக்குநெக் குருகியான் பிரிந்த கன்று போல்பதைத் தலந்திரந் தயருமக் காலைக் கொன்றை வார்சடைக் குழகனும் கருணைகூர்ந் தருளி. | 34 |
733 |
இறைவன் திருவாய் மலர்ந்தருளல் வெள்ளி யங்கிரி யெழுந்தென விளங்கொளி விடைமேல் வள்ளை வார்குழை உமையொடு மகிழ்ந்தினி தேறிப் பிள்ளை வாரணக் கடவுளும் பிறங்கெரி வடிவேல் அள்ளி லைப்படை யேந்தலும் இருபுடை யணுக | 35 |
734 |
பிறங்கு சக்கர பாணியும் பிரமனும் இருபால் அறங்கு லாந்திரு வடியிணைத் தாங்கினர் நடப்ப மறங்கு லாம்படைக் கடவுளர் வான்மிசை மிடைந்து கறங்கு வண்டுறாக் கற்பக மலர்மழை பொழிய | 36 |
735 |
எட்டு மாதிரத் தலைவரும் போற்றெடுத் திறைஞ்ச வட்ட வெண்குடை நந்திதன் திருக்கரம் வயங்கக் கட்டு சாமரை உருத்திர கன்னியர் இரட்ட ஒட்டி மாகதர் சூதர்கள் வாழ்த்தொலி எடுப்ப | 37 |
736 |
நீண்ட செஞ்சடைப் புதுமதி இளநிலா விரிப்ப ஈண்டு பூதவெங் கணங்களோ டெதிரெழுந் தருளி மூண்ட பேரருள் ஊற்றெழக் குறுநகை முகிழ்த்து மாண்ட சீர்முனித் தலைவனை நோக்கிவாய் மலரும். | 38 |
737 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் எவனைநீ மதித்து நம்முன் சூளுற விசைத்தாய் இந்நாள் அவனிதோ காண்டி மற்றெம் மடியிணை தாங்கி நின்றான் சவலைநீ பேதை நீரால் சாற்றினை எம்மைத் தேறா துவலையாம் மதத்தில் பட்டோர் இடும்பை நோயுழப்பர் கண்டாய் | 39 |
738 |
உவலை ஆம் மதம்- பொய்ச் சமயம் வடிவுடை எமதி டப்பால் வந்தவன் மாய னேனைக் கடிமலர்ப் பொகுட்டு மேய கடவுளெம் வலப்பால் வந்தோன் இடிபுரி தகையோய் இன்ன இருவரும் எம்பால் அன்பாம் அடியவர்க் கடிமை பூண்டே அணுக்கராய் அமர்வர் கண்டாய் | 40 |
739 |
இடிபுரி தகையோய் -மேலோரால் இடித்துரைத்தற்கு உரியவனே கற்பங்கள் தோறுந் தோன்றும் கணக்கிலாப் பிரமர் மாயர் முற்பொன்று தலைகள் கோத்து நாற்றிய முளிபுன் மாலை பொற்பொன்று நமது சென்னி புயமரைசரணம் எங்கும் சிற்பங்கள் விளங்கப் பூண்ட திறமிது நோக்கிக் காணாய் | 41 |
740 |
மாண்டவிண் ணவர்கள் எற்பு மாலையும் பலவும் பூண்டேம் ஈண்டிவை பூண்ட தெற்றுக் கென்றியேல் நின்போல் வார்க்குப் பூண்டமால் ஒழிப்பான் அன்னோர் பொன்றுறும் அநித்த வாழ்வும் காண்டகும் எமது நித்தத் தன்மையுங் காட்டக் கண்டாய் | 42 |
741 |
சொன்மறை முடிபு தேறுந் தூயருள் தலைவன் நீயே பன்முறை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் எம்மை நன்மைகூர் வழிபா டாற்றி முத்தியில் நண்ணு கென்னாப் புன்மரு ளகல நல்கி மறைந்தனன் பூத நாதன். | 43 |
742 |
நாயகன் கிளந்த வெல்லாங் கேட்டுளம் நடுங்கி யஞ்சித் தீயனேன் அந்தோ கெட்டேன் என்னிது செய்தேன் இந்நாள் ஏயுமிம் மடமைக் கேதி யாதென வியாதன் எண்ணி ஆயதோர் மூர்த்தம் எம்மான் அடியிணை சிந்தை செய்து | 44 |
743 |
வியாசர் காஞ்சியை அடைதல் விருதுடைக் காசி வைப்பின் விச்சுவ நாதன் யார்க்கும் அருள்வது மெய்யே யாகு மாயினு மீங்கு வாழ்வார் தெருமரத் தேவர் கூடி யூறுகள் செய்ப வென்ப இருவினை யுடையேன் இங்கு வைகுதற் கிடையூ றீதால் | 45 |
744 |
இடையறு காசி மூதூர் தன்னினும் இருமை சான்ற இடையறாக் காஞ்சி மூதூர் எம்பிராற் கினிய தாகும் இடையொசி முலையாள் பாகன் கருணையால் எவர்க்கு மவ்வூ ரிடையிடை யூறொன் றின்றி முத்திவீ டெளிதி னெய்தும் | 46 |
745 |
காசியின் இறப்ப முத்தி காஞ்சியை நினைப்ப முத்தி ஆசற வுதவு மென்னு மரும்பொருள் துணிந்து சிந்தை மாசுதீர் முனிவர் கோமான் விரைந்து மாணாக்க ரோடும் தேசினால் திசைபோங் காஞ்சித் திருநக ரடைந்தான் மன்னோ. | 46 |
746 |
வியாசர் இறைவனை வழிபட்டு வரம் பெறல் திகழ்சிவ கங்கை யாடித் தேமலர் ஒருமா மூலப் பகவனை வழிபா டாற்றி மஞ்சள்நீர் நதியின் பாங்கர் நிகழ்மணி கண்ட நாத நெடுந்தகை நிருதி வைப்பில் தகவினா லிளைத்துச் சார்ந்தார் சார்பினான் றனைத்தா பித்து நிருதி வைப்பு- தென்மேற்குத் திசை. தகவினால் இளைத்து- முறைப்படி முயன்று | 47 |
747 |
விதியுளிப் பூசை யாற்றி விழைதகத் துதிக்குங் காலை மதிபொதி சடில மோலி வரதனும் மகிழ்ச்சி பொங்கி எதிரெழுந் தருளி வேண்டும் வரமெவ னியம்பு கென்ன முதிர்பெருங் காதல் நீடி முனிவரன் வேண்டு கிற்பான் | 49 |
748 |
ஐயனே யிளைத்துச் சார்ந்தேற் கரும்பெறற் சார்பா மிந்தத் தெய்வலிங் கத்து நாளும் செழித்துவீற் றிருந்து ஞாலம் உய்வகை யவர வர்க்கு வேட்டன வுதவாய் நின்தாள் மெய்வகைப் பத்தி நாயேற் கருளிவை வேண்டு மென்றான். | 50 |
749 |
அவ்வரம் முழுவதும் அந்நாள் வியாதனுக் கருளி யெங்கோன் பௌளவநீர் உலகம் போற்றப் பைத்தபரம் பல்குற் செங்கேழ்க் கொவ்வைவாய்க் களபக் கொங்கைக் குலவரைப் பிடியி னோடும் செவ்விதின் வியாத சார்ந்தாச் சிரயமா விலிங்கத் துற்றான் | 51 |
750 |
முழுதுணர் கேள்வி சான்ற வியாதனே முறைமை மாறிப் பழுதுபூண் டிவ்வா றெள்ளப் பட்டன னென்னி லன்னோ வழுவது நூலொன் றானு முள்ளவா றுனர மாட்டா இழுதையோர் தெளிவர் கொல்லோ யிருவருக் கரியா னுண்மை | 61 |
751 |
சாத்திரம் வல்ல வியாதனை யாண்டருள் சார்ந்தாரைக் காத்த பிரான்திறம் இங்கிது கட்டுரை செய்தேமால் ஏத்தரு மஞ்சள் நதிப்புடை யேழ்முனி வோரெந்தாய் சேர்த்தென வேத்திய வேழிட மேய வளங்சொல்வாம் | 1 |
752 |
அத்திரி குச்சன் வசிட்டன் அருட்பிரு குப்பாசங் கைத்துயர் கௌளதமர் காசிப ரோடங்கி ராவென்றேழ் மெய்த்தவ ரும்பனிசூழிம யக்கிரி மேல்முன்னாள் உத்தம மான வருந்தவ மாற்ற லுருங்காலை | 2 |
753 |
ஆயிதழ் அம்புய வாழ்க்கை நெடுந்தகை யாங்கெய்தி நீயிர் விழைந்தமை கூறுமி னென்றலும் நேர்போற்றிப் பாயிருள் சீத்து விளங்கொளி கான்றெழு பானுப்போல் மீயுயர் தோற்ற முறுந்தவ வேந்தர் விளம்புற்றார் | 3 |
754 |
முதுக்குறை வாளர் பெறத்தகு முத்தி யருட்செல்வம் மதிக்குறை வுற்றுழல் வோர்களும் மற்றெளி திர்கூடப் புதுக்கும் உபாயம் எமக்கரு ளென்ன மலர்ப்போதன் விதுக்குறை சூடி மலர்ப்பதம் ஏத்தி விரிக்கின்றான் | 4 |
755 |
பற்றிக லற்றுக் குற்றமில் சிந்தைப் பனவீர்காள் கற்றுயர் காட்சிக் கொற்றமி லோருங் கருநோய்தீர் பெற்றியின் உற்றுப் பெறலரும் முத்திப் பேறெய்தும் அற்றமி லேதுக் கேண்மின் நுமக்கின் றறைகிற்பேன் | 5 |
756 |
தருமமென் றியம்பும் ஒன்றே தழல்விடம் பருகும் எங்கோன் திருவுளங் கருணை பூப்பச் செய்யுமவ் வருளால் யார்க்கும் மருவரு முத்திப் பேறு வாய்க்கும் தருமந் தானும் அருள்சிவ தருமம் ஆவித் தருமமென் றிருகூ றாமால் | 6 |
757 |
பளகறும் இட்டி யாதி பசுதரு மங்கள் காலத் தளவையிற் கழியும் என்றும் வச்சிர அரிசி மானத் தளர்வுறா நிலைபே றெய்தும் உயர்சிவ தருமம் அன்பால் உளமுறச் சிவனை எண்ணல் முதற்பல உளவாம் அன்றே. | 7 |
758 |
சிவலிங்கப் பதிட்டை செய்தல் எவற்றுளுஞ் சிறந்த தாகும் சிவபத்தர் பதிட்டை தானும் அன்னதே இவைதாம் செல்வச் சிவனமர் தலங்கள் தம்மிற் செய்பயன் கோடி மேலாம் சிவநிறை காஞ்சி வைப்பிற் செய்திடின் அனந்த கோடி. | 8 |
759 |
காஞ்சியை நினைப்பிற் காசிக் கடிநகர் வசித்த பேறாம் காஞ்சியே எவற்றி னுள்ளுஞ் சிறந்தது காண்மின் என்னுங் காஞ்சிசூழ் அல்குல் வாணி கணவனார் மொழியுட் கொண்டு காஞ்சியை அடைந்தார் மாசு கடிந்துயர் எழுவர் தாமும் | 9 |
760 |
அருட்சிவ கங்கை நன்னீ ராடியே கம்ப வாணர் திருப்பதந் தொழுது மஞ்சட் செழுநதிக் கரையின் எய்தி அருத்திகூர் வியாத நாதன் அணிமையில் தத்தம் பேரான் இருத்தினர் இலிங்கம் பூசை இயற்றினர் ஆர்வத் தோடும் | 10 |
761 |
பச்சிலை பழம்போ தேனும் பறித்திட்டுப் பத்தி செய்வோர்க் கெச்சமில் இருமைப் பேறும் அளித்தருள் இறைவா போற்றி முச்சக முதலே போற்றி முலைச்சுவட் டணியாய் போற்றி நச்சினார்க் கினியாய் போற்றி எனத்துதி நவிலுங் காலை | 11 |
762 |
ஆயிடை வெளிநின் றெம்மான் அத்திரி பிருகு வாதித் தூயரை நோக்கி வைவச் சுதமனு வந்த ரத்தில் நீயிரெம் ஆணை யாற்றான் நிகழுமேழ் முனிவ ராயின் மாயிரு முத்தி யீற்றின் வழங்குது மென்று பின்னும் | 12 |
763 |
ஏழிலிங் கத்தும் எம்மைத் தரிசித்தோர்க் கிருமைப் பேறாம் வாழ்வளித் தருள்கேம் என்று வரங்கொடுத் தகன்றான் ஐயன் பாழ்வினை அறுக்குஞ் சத்த தானத்திற் பணியப் பெற்றோர் ஊழ்வலித் தொடக்கு நீங்கி உம்பர்கோன் அடியிற் சேர்வார். | 13 |
764 |
தருமம்பிற ழாத சத்ததா னத்தின் பெருமையுரை செய்தாம் சத்திபெறு மைந்தன் தருதந்தையர்க் கொன்ற வரக்கர்தம தாவி பருகவழி பட்ட பராசரஞ் சொல்வாம் | 1 |
765 |
விசுவாமித்திரன் சூழ்ச்சி மத்தப்புலன் வென்ற வசிட்டன் தரவந்தார் பத்தையிரு மக்கள் பதுமத்தவன் ஒப்பார் சத்திமுத லானோர் தகவாலிவர் வாழ்நாள் சுத்தநெறி தேர்விச் சுவாமித்திரன் என்போன் | 2 |
766 |
அசித்துப்புரஞ் செற்றோன் அருளானுயர்ந் தோங்கும் வசிட்டனுடன் என்றும் மாறுகொண் டுள்ளான் வசிக்குந்தவ வாழ்க்கை வசிட்டன்குல மெல்லாம் நசிக்கும்படி யொன்று நாடியிது செய்தான் | 3 |
767 |
அசித்து- நகைத்து. மன்னர்வழித் தோன்றி வசிட்டன்சா பத்தால் துன்னுமரக் கன்னாஞ்சு தாசனெனும் பேரோன் றன்னைவிளித் தேவத்தறு கண்ணனவன் எய்தி இந்நூற்று வர்தம்மை யெடுத்துவாய்ப் பெய்தான் | 4 |
768 |
வடமீனவ ளோடும் வசிட்டனது கேட்டுப் படர்கூர்ந்தழு தேங்கி யாற்றிப்பறம் பேறிப் புடவிமிசை வீழப் பூமாதுளம் நெக்காள் உடல்விண்டொழி யாமே தாங்கியுய் வித்தாள் | 5 |
769 |
வன்பற்பதம் ஏறி வீழ்ந்தும்மா யாமே அன்பிற்புவி தாங்க அயர்ச்சிதெளிந் தேங்கி இன்பமக வெல்லாம் இழந்தசோ கத்தால் துன்பக்கரை காணார் புலம்பிச்சோர் காலை. | 6 |
770 |
பராசரர் பிறத்தல் கொன்னும்வசிட் டன்தன் குலமைந்தரின் மூத்தோன் மன்னுந்தவச் சத்தி யென்பான்மனை யாட்டி அன்னசெயல் கேளா வரற்றிக்கருப் பத்தால் துன்னும்வயி றெற்றிப் புரளுந்துயர் கண்டான் 7 | 2 |
771 |
ஆவாவென் செய்தாய் அந்தோகெட் டேனென் றாவாச்சந் தானத் தானந்தனை எற்றி மூவாக்குலம் முற்றும் முடிக்கமுயல் கின்றாய் பாவாயென நைந்து கூறப்பணைத் தோளி 8 | 2 |
772 |
மாமன்மொழிக் கஞ்சி வாளாவமர் போது தூமென்மலர்க் கூந்தல் எற்றுந்துயர்க் காற்றாப் பூமென்கருப் பத்துட் பொலியுங்குழ விநைந் தாமென்கனி வாய்விண் டழுபேரொலி கேட்டு 9 | 2 |
773 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் இவ்வோதை யெவரோதை யெனவசிட்டன் தன்னுள்ளத் தெண்ணா நிற்கும் அவ்வெல்வைப் படநாகச் சேக்கைமிசைக் கண்படுக்கும் அறவோன் தோன்றிச் செவ்வாய்மை முனிவரநின் சந்தானந் தழைத்தோங்கத் தேயம் வாழ ஒவ்வாதார் குலஞ்சிதைய நின்மகனுக் கொருமைந்தன் உதிக்கின் றானால் | 10 |
774 |
அணங்கொருபா லமர்ந்தபிரான் திருவடிக்கு மெய்யன்பன் அகில நூலும் உணர்ந்துதெளிந் தெனையொப்பான் பாணியா தின்னேவந் துறுமா காணென் றிணங்கமொழிந் தேகியபின் வசிட்டனுந் தன்மனக்கவலை யின்றி வாழ்ந்து வணங்குமிடை அருந்ததியோ டானந்தந் தலைசிறப்ப வைகும் போது | 11 |
775 |
சத்திமனைக் கிழத்தியதிர் சந்திபால் உலகுய்யத் தருமம் வாழ உத்தமசீர்ப் பராசரன்வந் தவதரிப்ப யிராக்கதர்தம் மூர்கள் தோறும் மொய்த்தெழுந்து குருதிமழை பொழிந்தனவால் முனித்தலைவன் மகவை நோக்கி மெய்த்தமனங் களிகூர்ந்து சாதமுதற் சடங்கனைத்தும் விதியிற் செய்தான் | 11 |
776 |
அதிர்சந்தி- சத்தி முனிவர் மனைவி இளம்பிறைபோல் வளர்மைந்தன் ஒருஞான்று மடித்தலமீ திருந்து நோக்கி வளம்பயிலும் மங்கலமின் றிருந்தனையால் யாண்டையன்மற் றெந்தை யென்ன உளம்பரியப் பயந்தாளை வினாவுதலும் அவள்கேட்டங் குள்ளம் மாழ்கி விளம்புவாள் பிள்ளாயுன் தந்தைதனை வெகுண்டரக்கன் மிசைந்தா னென்று | 13 |
777 |
அழுதிரங்கிக் கண்ணீரான் இளமைந்தன் றனையாட்ட அருகு சூழ்ந்த வழுவகன்ற முனிமடவார் முனிவரரும் அருந்ததியும் வசிட்டன் றானும் தொழுதியெனக் கிடந்தரற்றி அழக்கண்டு சூலிதிருவருளால் இன்னே முழுதுலகும் வாய்மடுப்பல் லெனவெகுண்டான் முனிவரிள வேறு போல்வான். | 11 |
778 |
தொழுதி- பறவைக் கூட்டத்தொலி வசிட்ட முனிவர் உபதேசம் அம்மொழிகேட் டுயர்வசிட்டன் உலகெல்லாம் என்செய்யும் அப்பா அந்த வெம்மைநிலை யரக்கர்குலம் வேரறுப்பச் சிவபூசை விழையாய் யென்ன இம்முறையேல் விடையூர்தி என்பூசை கொண்டருளி இன்னே நல்குஞ் செம்மைநூல் துணியான சிறந்ததலம் யாததனைச் செப்பு கென்றான் | 15 |
779 |
கலிவிருத்தம் என்றலும் நன்றுநீ வினாய திந்நலம் துன்றிய பெரும்பதி தூய வானவர் முன்றிலும் அரங்கமும் முகிலு ரிஞ்சநீள் மன்றமும் முழவறாக் காஞ்சி மாநகர். | 16 |
780 |
மறுவறு வானவர் மனிதர் மற்றுளோர் உறுபெருந் தவரெனை யுள்ளிட் டோர்களும் பெறலரும் பேறுபெற் றெய்தும் பெட்பின திறுவழி நினைப்பினும் முத்தி யீவது | 17 |
781 |
பன்னருங் கொடியவெம் பாத கர்க்குமப் பொன்நகர் வரைப்பினோர் தினத்துள் போர்விடை மன்னவன் திருவருள் வாய்க்கு மேயெனைன் உன்னையொப் போர்க்கினி யோதல் வேண்டுமோ | 18 |
782 |
ஆயிடைச் செல்கெனும் வசிட்டன் அம்புயத் தூயமென் மலர்ப்பதந் தொழுதெ ழுந்துதன் தாயினை விடைகொடு தடங்கொள் காஞ்சியில் காய்பொறிப் பராசரன் கடுக வெய்தினான் | 19 |
783 |
பராசரன் சிவபூசை செய்தல் கம்பைநீ ராடியே கம்ப நாயகர் தம்பனி மலர்ப்பதந் தாழ்ந்து மஞ்சணீர் வம்பவிழ் கரைமிசை மணிகண் டேச்சர நம்பர்தம் வடகுட ஞாங்கர் நண்ணினான் | 20 |
784 |
தன்பெயர் இலிங்கமொன் றிருத்தித் தாவிலா அன்பினின் மலரெடுத் தருச்சித் தேத்துழிப் பொன்புரி வேணியோன் கருணை பூத்தெதிர் வன்பழ விடைமிசை வந்து தோன்றியே | 21 |
785 |
வேட்டன கூறுகென் றருள வேதநூற் பாட்டினாற் பலமுறை பழிச்சித் தாழ்ந்துமுன் வாட்கதிர் ஐம்படை மார்பிற் கிண்கிணித் தாட்டுணை மழமுனி சாற்றல் மேயினான் | 22 |
786 |
எறுழ்விடைப் பரிமிசை யெந்தை யெந்தையோர் குறுவலி யரக்கனாற் கோட்பட் டானவன் உறுகுல முழுவதும் மறலி யூர்புகத் தெறுவரம் எனக்கருள் செய்ய வேண்டுமால் | 23 |
787 |
ஈண்டுநீ யினிதமர்ந் தெவர்க்கும் இன்னருள் மாண்டகு சிறப்பினின் வழங்க வேண்டுமால் ஆண்டகை யென்றிரந் தன்பு மேதக வேண்டலு மெம்பிரான் விளம்பல் மேயினான் | 24 |
788 |
பராசரர் வரம் பெறல் மைந்தநின் பூசையில் தம்பி மாரொடு நுந்தைமற் றெமையடைந் துற்று நோன்மைசால் அந்தண னாமுனைக் காணும் ஆசையின் முந்துற நின்றவா காண்டி மொய்ம்பினோய் | 25 |
789 |
அரக்கரைக் கொலைசெயும் வேள்வி யாற்றியந் நெருப்பினி லவர்தமை நீறு செய்தியிவ் வரைப்பினி லென்றுநாம் மகிழ்ந்து வாழ்துமென் றுரைத்தனன் மறைந்தனன் வேதத் துச்சியில் | 26 |
790 |
பராபரன் திருவருள் பெற்றுப் பாய்புகழ்ப் பராசர நெடுந்தகை பணைத்த வேள்வியில் பராய்மனத் தரக்கரை நீற்றிப் பாற்றினான் பராயசீர் உறுவர்தம் பகர்ச்சி யாற்கதம் பராய்- ஒருவகை மரம்.இதன் முருட்டினை வன்மைக்கு எடுத்துக் காட்டுவர் "வன்பராய் முருடொக்கும் என்சிந்தை"(திருவா.செத் 4). பகர்ச்சி- சொல். கதம்-சினம் எழுசீரடி யாசிரியவிருத்தம் | 27 |
791 |
விரிபுனல் படிந்தோர் பருகினோர் தீண்டப் பெற்றுளோர் தமக்கும்வீ டளிக்கும் முரிதிரை முகட்டு வராலினம் உகளும் முழங்கொலி மஞ்சணீ ராற்றங் கரைமிசைத் தகைசால் முனிவரர் வழுத்துங் கண்ணுதல் வளாகங்கள் இன்னும் உரைசெயப் புக்கால் உலப்புறா காண்மின் உயர்நிலைப் பெருந்தவ முனிவீர் | 28 |
792 |
பராரை மாநிழற் பண்ணவன் மேவிவாழ் பராச ரேசம் பகர்ந்தனம் மாதவன் பராய பைம்பொழில் ஆதிபி தேச்சரம் பராக மாவினைப் பற்றற ஓதுவாம் | 1 |
793 |
‘வினைப்பற்று பராகமா அற’ எனக் கூட்டுக. பராகம் -தூள் அன்ன வூர்தி மகத்தை யழிப்பலென் றுண்ணி வாணி நதியுருக் கொண்டநாள் கன்னி பால்வளர் கண்ணுதல் ஏவலின் முன்னர் ஏகி முகுந்தன் தடுத்தனன் | 2 |
794 |
அங்கங் கெய்தித் தடுத்தும் அடங்கிடாப் பொங்கு வேகப் புதுநதி நள்ளிராத் துங்கக் காஞ்சியில் துண்ணெனத் தோன்றலுஞ் சங்க பாணி தளர்ந்தழி வுற்றரோ | 3 |
795 |
பெருவி ளக்கொளி யாகிப் பிறங்கிமற் கருணை மால்கரி காத்தவன் சூழலின் அருகு மேற்றிசை ஆதிபி தேசமென் றொருசி வக்குறி யுங்கண் இருத்தியே | 4 |
796 |
பூசை யாற்றிப்புரிவரம் பெற்றெழுந் தோசை நீத்தந் தடுத்துயர் வேள்விகாத் தாசை யாடை யவனெதிர் வைகினான் வீசு சோதி விளக்கொளி யண்ணலே | 5 |
797 |
செங்கண் மால்தொழும் ஆதிபி தேச்சரம் பொங்கு காதலிற் போற்றப் பெறுநர்தாம் இங்கண் வேண்டும் வரங்களும் எய்திமற் றங்கண் முத்திப் பதமும் அடைவரால் | 6 |
798 |
கற்றைச் செஞ்சடைக் காமரு கொள்கையீர் அற்றம் நீத்தருள் ஆதிபி தேச்சரஞ் சொற்ற னம்புள் ளரசு தொழுதுசீர்க் கொற்றம் உற்றமுத் தீச்சரங் கூறுவாம் | 1 |
799 |
காசிபர் மனைவியர் கலகம் விளைத்தல் மன்னு காசிபன் றன்மனை யாட்டியர் பன்னு கத்துருப் பாவை சுபருணை என்னும் மாதர் இருவரூந் தம்முரு நன்ன லத்தை நயந்துகொண் டாடினர் | 2 |
800 |
தத்தம் மேனித் தகைநலஞ் சாற்றுபு மெய்த்த பூசல் விளைத்தனர் தோற்றவர் உய்த்த வெஞ்சிறை மேவுகென் றொட்டினர் அத்த வத்தனை யண்மி வினாயினர் | 3 |
801 |
பைத்த பாப்பகல் அல்குற் பணிமொழிக் கத்து ருப்பெயர்க் காரிகை வேறலாற் சுத்த நீர்மைச் சுபருணைப் பேரிய மைத்த கண்ணியை வெஞ்சிறை மாட்டினாள் | 4 |
802 |
வீடு செய்யென அங்கவன் வேண்டலுங் கூடு மூன்றாம் விசும்பிற் குளிர்மதிப் பாடு தோன்றும் அமிழ்தமப் பண்ணவர் நீடு காவலின் உள்ளது நேரிழாய் | 5 |
803 |
அதுகொ ணர்ந்திங் களித்துநின் வெஞ்சிறை விதுமு கத்தி விடுவித்துக் கொள்ளெனக் கதிசெய் பூண்முலைக் கத்துரு கூறலும் மதிய ழிந்து வருந்திச் சுபருணை | 6 |
804 |
கருடன் பிறத்தல் ஆசில் மெய்த்தவம் ஆற்றி அரும்பெறற் காசி பன்னருள் பெற்றுக் கலுழனை மாசி லாத மகவென வீன்றனள் பேசி னாளம் மகற்கிது பெற்றியே | 7 |
805 |
கேட்டெ ழுந்து கிளர்ந்து விடைகொடு கோட்ட மில்புட் குலத்தர சன்னைதன் வாட்டம் நீப்ப வலிந்து கடுகிவிண் நாட்டின் இன்னமிழ் துற்றுழி நண்ணினான் | 8 |
806 |
அங்கண் வைகிய காவல ராயினார் தங்கள் வீரந் தபப்பொரு தேற்றெதிர் வெங்கண் வெண்கய வேந்தனை யொப்பினான் பொங்கு வேகப் பொலஞ்சிறைக் காற்றினால் | 9 |
807 |
அமிழ்தம் வௌளவி அகல்வுழி மாலெதிர்ந் தமிழ்சி னத்தின் உருத்துவெம் போர்செயத் தமிய னாய உவணனுந் தாக்கினான் இமிழி சைப்போர் இருவர்க்கும் மூண்டதே | 10 |
808 |
ஏழ டுக்கிய முந்நாள் இருவரும் தாழ்வொன் றின்றிச் சமர்பெரி தாற்றுழி ஆழி மாயன் அகமகிழ் கூர்ந்துயர் பாழி வன்சிறைப் பார்ப்பினை நோக்கியே | 11 |
809 |
வன்புள் வேந்தநின் வீரம் மகிழ்ந்தனன் என்பு டைவரங் கொள்ளென ஈங்கிவன் உன்பெ ருந்திறற் குள்மகிழ்ந் தேன்மற்றேன் றன்பு டைவரங் கொள்ளெனச் சாற்றினான் | 12 |
810 |
திருமால் வரம் பெறல் மாய னம்மொழி கேட்டு மகிழ்ச்சியின் தூயை யோதிய சொல்தவ றாயெனின் நீயெ னக்கு நெடுந்தகை யூர்தியாய் ஏயும் இவ்வரம் யான்கொள நல்கென்றான் | 13 |
811 |
ஆர்த்தி கூர்தர அம்மொழி கேட்டொரு மூர்த்தம் எண்ணி உயிர்த்து மொழிந்தமெய் வார்த்தை யிற்பிறழ் வஞ்சியற் றாகெனச் சீர்த்தி யாலன் விடைபெற்றுச் சென்றனன் | 14 |
812 |
கருடன் வரம் பெறல் மறுவில் கத்துரு மாட்டுச் சுதக்குடங் குறியெ திர்ப்பைக் கொளக்கொடுத் தன்னையைச் சிறையின் நீக்கினன் சீறர வங்கள்பால் கறுவு செய்து கொலைசெயுங் காதலான். | 15 |
813 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் கச்சி வைப்பினை யெய்தியா தீபிதக் கடிநகர் வடகீழ்ப்பால் நச்சும் அன்னைதன் சிறைக்குவீ டருளும்முத் தீசனைநயந்தேத்தி இச்சை யாற்றினிற் பெருவரம் பெற்றனன் எறுழ்வலிப் பணிக்கூட்டம் அச்ச முற்றிடச் சிறகெழு வளியினில் அலைத்தெழு புள்வேந்தன் | 16 |
814 |
சித்த மாசொரீஇ விளங்குமே காலியார் திருக்குறிப் புத்தொண்டர் அத்த லத்தினில் வீடிபே றெய்தினர் மற்றுமா யிடைப்போற்றி முத்தி சேர்ந்தவர் எண்ணிலார் மதிமுடி முழுமுதல் அடிப்போதின் வைத்த சிந்தையின் முக்குறும் பெறிந்துயர் மாதவத் தலைவீர்காள் | 17 |
815 |
கவைய டிக்கய வாய்க்கரு மேதிகள் உழக்கிய கடிவாவிச் சிவைந றும்புனல் வாளைமீன் குதிக்கும்முத் தீச்சரத் தியல்சொற்றாம் குவைம லர்க்செழும் பொதும்பரிற் பாட்டளி கொழிநறா மடுத்தும்ப ரவைவி யத்தகப் பண்பயில் பணாதரேச் சரமினி அறைகிற்பாம் | 1 |
816 |
பழுக்கச் சுட்டபொற் பிழம்பெடுத் தப்பிய பரிசுறழ் திருமேனிக் கழுக்க டைப்படை யேந்துமுத் தீசனொண் கழலடி தொழும்பேற்றால் இழுக்கித் தாங்கிளை முருக்குறுங் கலுழன தெறுழ்வலித் திறம்நோக்கி வழுக்கில் வெம்பணிக் குலங்களும் பிரானடி வழிபட நினைவுற்று | 2 |
817 |
தழங்கு தீங்கிணை முழக்கறாத் தடநெடுங் கச்சிமா நகர்சார்ந்து முழங்கு வெண்டிரை சுழித்துவான் நிமிர்ந்துநான் முகன்மகந் தபச்சீறி வழங்கு நன்னதி வடக்கணா தீபிதவளநகர்த் தென்பாங்கர்ப் பழங்கண் நோயறப் பணாதரேச் சரன்றனைப் பத்தியில் தாபித்து | 3 |
818 |
விதிமு றைச்சிவ பூசனை யாற்றிமால் விடைக்கொடிப் பெருமானின் புதிய பூங்கழல் அருச்சனைப் பேற்றினாற் புள்ளிறை மிடலெய்தி அதிர்வு றுத்தெமை யலைத்திட வெரீஇயினம் அடைக்கலம் புகுந்தேம்யாங் கதியெ மக்குவே றில்லையென் றிரத்தலுங் கண்ணுதல் அருள்கூர்ந்து | 4 |
819 |
பன்ன கங்களைப் பணியெனத் தாங்கினன் பன்னகா பரணன்றன் இன்ன ருட்பெறும் மதுகையான் மற்றவை யெந்தைபால் அரியோடும் துன்னு வெம்பகைக் கலுழனைக் `கலுழனே சுகங்கொல்`என் றஞ்சாமே பன்னி மேன்மையின் வினாயின விம்மொழி பாரெலாம் எடுத்தோதும் | 5 |
820 |
சிறிய ராயினார் சார்பினை விழையன்மின் திறல்கெழு பெரியோராம் அறிஞ ராயினார் சார்பினை விழைமினோ அலரிதழ் விரிகொன்றை வெறிந றுந்தொடை யெம்பிரான் சார்பினை விழைதலால் உரகங்கள் மறுவி லாற்றல்சால் கலுழனை வினாயின வாழ்ந்தனை யோவென்ன | 6 |
821 |
பவளச் செந்தளிர் நீட்டிய பைம்பொழிற் பணாதரேச் சரவைப்பிற் குவளைக் கண்ணியோ டுயிர்க்கெலாம் இன்னருள் கொழித்துவீற் றிருந்தோங்கும் கவளக் கைவரை யுரித்தவன் இக்கதை கற்றவர் கேட்டோர்க்கும் தவலப் பூதிகொள் வேணியீர் வெம்பணித் தழல்விடம் அணுகாதால் | 7 |
822 |
வயிறுளைந் தலறிச் சங்கினம் உயிர்த்த மணிநிலா யெறித்திருள் சீத்துப் பயில்விரை முளரி இலஞ்சிசூழ் கிடந்த பணாதரேச் சரமிது பகர்ந்தாம் துயில்வர வறியாப் பல்லியந் துவைக்குந் தூமணித் தெற்றிசூழ் காஞ்சிக் குயிரெனச் சிறந்த உத்தமத் திருக்கா ரோணத்தின் உண்மையை உரைப்பாம். | 1 |
823 |
பிரமனாதியோர் கால அளவு படுங்கலை முகுர்த்தங் காட்டைகள் என்றாப் பகலிராப் பக்கமே திங்க ளொடும்புணர் இருது வாண்டுகத் தொடக்கத் தோதிய அவயவப் பகுப்பான் இடும்பைதீர் காலங் கழிவுறுங் காலத் தொல்லையில் யாவரும் இறுவர் நெடும்புலக் குறும்பு கடந்துளீ ருலகின் நிலைப்பதோர் பொருளுமற் றிலதால் | 2 |
824 |
ஈண்டுமோ ரிருபா னாயிரந் தலையிட் டியன்றநாற் பத்துமுன் றிலக்க யாண்டெனப் படுவ நான்குகத் தளவை இம்முறை யாயிரம் இறந்தாற் காண்டகும் அயனுக் கொருபகல் அதுவே கற்பமா மிரவுமத் துணைத்தவ் வாண்டகைக் கந்நாள் முப்பதோர் திங்கள் அ·தொரு பன்னிரண் டாண்டே. | 3 |
825 |
பகர்ந்தவாண் டொருநூ றிருவகைப் பராத்தம் பற்றறில் வெள்ளிவண் டோடு தகர்ந்திட வுடைத்து முடங்குகால் ஞிமிறு தழங்கிசைப் பேட்டொடு நறுந்தேன் நுகர்ந்துபண் பயிற்றும் பொகுட்டலர் கமல நோன்மலர் அணங்கினுக் கரங்கம் நிகர்ந்தநா வகத்துப் பழமறை கொழிக்கும் நெடுந்தகைக் கிறுதிவந் துறுமால். | 4 |
826 |
அங்கது முகுந்தன் றனக்கொரு பகலாம் அம்முறையாண்டு நூறெய்தின் செங்கதிர்ப் பரிதி மழுங்கவிட் டெறிக்குஞ் சேயொளி விலைவரம் பிகந்த பைங்கதிர்க் கடவுட் கவுத்துவம் இமைப்பப் பசுந்துழாய் துயல்வரு மார்பில் கொங்கலர் கதுப்பின் திருவிளை யாடுங் குரிசிலும் எய்துவன் ஒடுக்கம். | 5 |
827 |
காயாரோகணம் - பெயர்க்காரணம் இருவரு மொருங்கே யிறவருங் காலை யெந்தையே யொடுக்கி யாங்கவர்தம் உருவமீ தேற்றிக் கோடலாற் காயா ரோகணப் பெயரதற் குறுமால் வருமுறை யிவ்வா றெண்ணிலா விரிஞ்சர் மாயவர் காயமேல் தாங்கிக் கருணையால் அங்கண் நடம்புரிந் தருளும் காலமாய்க் காலமுங் கடந்தோன் | 6 |
828 |
திருமகள் வழிபாடு ஆதலாற் சிறந்த திருநகர் அதனை யடைந்துளோர் இருமையு மெய்தி மேதகு துரியங் கடந்தபே ரின்ப வீட்டினைத் தலைப்பட வல்லர் சீதள கமலப் பொகுட்டணைக் கிழத்தி செஞ்சடைப் பிரானைவில் லத்தால் கோதற வழிபட் டச்சுதன் தனக்கக் கொழுநனாப் பெற்றனள் அங்கண் | 7 |
829 |
வியாழன் வழிபடுதல் பிறங்கொளி விசும்பிற் குரவனாம் வியாழப் பெருந்தகை யாயிடை யெய்திக் கறங்கிசை விளரிப் பாட்டளி யிமிர்ந்து களிமது வுண்டுதேக் கெறிந்தங் குறங்குபொ னிதழி நறுந்தொடை வேணி யொருவனை யருச்சனை யாற்றி அறங்கரை சிறப்பிற் சேந்தநாத் தழுப்ப வாரண மொழிகளால் துதிப்பான். | 8 |
830 |
பிராமணன் நீயே கடவுளர் தம்முள் பிஞ்ஞகா யேனையோர் தம்முள் பிராமணன் யானே பிராமணன் றனக்குப் பிராமணன் கதியுனை யிகழ்வோன் பிராமணன் அல்லன் தன்குல தெய்வம் விண்டுபின் னொன்றனைத் தொழுமப் பிராமணற் கிரண்டும் பயப்படா நிரையம் புகுவனென் றுயர்மறை பேசும். | 9 |
831 |
அடியனே னுன்னடைக்கலம் நீயே அன்னையு மத்தனும் குருவும் துடியிடைப் பதுமை கேள்வனு மயனுந் தொடர்வருஞ் சோதியே செல்வக் கொடிமிசை யிடபம் உயர்த்தருள் கருணைக் குன்றமே அருட்பெருங் கடலே படிபுகழ் மறைநூல் வடித்ததெள் ளமிழ்தே பகவனே இணையடி போற்றி | 10 |
832 |
வியாழன் வரம் பெறல் என்றெடுத் தேத்தும் ஆண்டளப் பானுக் கெம்பிரா னெதிரெழுந் தருளி நன்றுநீ வேட்ட கூறுகென் றருள வீழ்ந்துவீழ்ந் திறைஞ்சினன் நவில்வான் குன்றவில் குழைத்துப் புரிசைமூன் றிறுப்பக் குறுநகை முகிழ்த்தருள் குழகா நின்திரு வடிக்கீழ் இடையறாப் பத்தி நெறியெனக் கருள்செய வேண்டும். | 11 |
833 |
வளங்கெழு வேக வதிநதித் தென்பால் வயங்குமித் தீர்த்த நீர்படிந்து விளங்குமென் வாரத் துன்னடிச் சேவை விழைதகப் பெற்றுளோர் தத்தம் உளங்கொளும் உறுதிப் பயனளித் தருளி முத்தியும் உதவியீண் டென்றும் இளங்கதிர் முலையோ டினிதமர்ந் தருளாய் இவ்வரம் வேண்டுமென் றிரந்தான் | 12 |
834 |
இயமன் வழிபாடு அங்கவை வழங்கிக் கடவுளர்க் காசான் ஆம்பெருந் தகைமையும் நல்கிச் சங்கவெண் குழையான் இலிங்கத்தின் மறைந்தான் தருமன் அங்கெய்தியேத் தெடுப்ப புங்கவன் தோன்றித் தென்திசைக் கிறையாம் புரவளித் தெமைவணங் குநர்க்கு மங்கருந் தண்டம் இயற்றிலன் றுனக்கு மாளுமிப் பதமென விடுத்தான் | 13 |
835 |
தென்புலத் தவர்க்குச் செய்கடன் ஆங்குச் செலுத்திடின் வீடு பெற்றுய்வார் மின்பழுத் தன்ன நெறித்தவார் சடிலம் வீழென வெரிந்புறங் கிடப்பப் பொன்பழுத் தனைய ஐந்தழல் நாப்பண் புரிதவக் கொள்கையீர் அனேகர் அன்புசெய் தங்கண் பேறுபெற் றுயர்ந்தார் அத்தல மேன்மையார் மொழிவார். | 14 |
836 |
மருக்காவி வண்டூத மதுவூற்றும் வாவித் திருக்காயா ரோகணத்தின் சீர்மையிது சொற்றாம் கருக்காயும் மற்றதற்கு வடகீழ்சார் கண்டோர் தருக்காத சித்தீசந் தன்னியல்பு சொல்வாம் | 1 |
837 |
எண்சீரடியாசிரிய விருத்தம் கம்பை மாநதி யின்க ரைபெருங் காதல் கூர்தவம் ஆற்று மால்வரைக் கொம்பு மஞ்சளின் காப்ப ணிந்துமெய் குளிர வாடும்நீர் மணங்க மழ்ந்தெழூஉப் பம்பு மஞ்சள்நீர் நதியெ னப்புடை பரந்து சேறலும் பாய்பு னற்சடை எம்பி ரானருள் பொங்கும் ஓகையி னிலிங்க மாயவ ணெழுந்து தோன்றினான் | 2 |
838 |
கூடு கொள்கையால் குலவு மஞ்சணீர்க் கூத்த னென்றுபேர் கொண்ட நாயகன் ஆடு தாளிணை சித்தர் பற்பலர் அணைந்து போற்றிவான் சித்தி யெய்தலாற் பாடு சான்றசித் தீச னாம்பெயர் பார்வி ளங்கும் அவ்வண்ணல் சந்நிதி மாடு கூவலொன் றுன்னி னோர்க்கெலாம் வழங்கு சித்திசால் சித்த தீர்த்தமே | 3 |
839 |
ஒற்றை யாழியங் கொடிஞ்சி வையமீ தொளிப ரப்பிவீங் கிருள்து மித்தெழுங் கற்றை வெங்கதிர்க் கடவுள் நாளினும் கருமு டத்திறல் காரி நாளினும் ஏற்று தெண்டிரைச் சித்த தீர்த்தநீர் எய்தி யாடியவ் வேந்தல் தாள்தொழும் கொற்ற வாழ்வினார்க் கெழுபி றப்புநோய் கோடி யோசனைக் கப்பு றத்ததே 4 கதிர்க்கடவுள் நாள்- ஞாயிறு. காரி-சனி. | 2 |
840 |
புரிமு றுக்குடைந் தவிழ வாறடிப் புள்மு ரன்றுவாய் மடுக்கும் இன்னறை விரிம லர்த்தடம் புடையு டுத்தசித் தீச மேன்மையின் விளைவி யம்பினாம் உரிய மற்றதன் உத்த ரத்துறும் உவண வூர்தியாச் சிரம வைப்பினில் திரிவி லாவரி சாப வெம்பயந் தீர்த்த வானவன் சீர்த்தி கூறுவாம் | 1 |
841 |
சுராசுரர் கலகம் -மாதவன் கியாதியைக் கோறல் செப்பு முன்னைநாள் அதிதி மைந்தருந் திதியின் மக்களும் இடைய றாதுபே ரப்பு மாரிபெய் தெண்ணி லாண்டுகள் அழுக்க றுத்துவெஞ் சமரி யற்றுழி மைப்பு றுத்தகண் அரம்பை மார்முலை யுழுத மார்பினார் வலியி ழத்தலும் துப்பெ றிந்தபூங் கமல வாள்விழித் தோன்றல் எய்திவெம் படைவி திர்த்தனன் * அதிதிமைந்தர்- தேவர். திதியின் மக்கள்- அசுரர்.அதிதி, திதி இருவரும் காசிபரின் மனைவியர். அழுக்கறுத்து - பொறாமையுற்று. | 2 |
842 |
எஞ்சு தானவர் அஞ்சி ஓட்டெடுத் திருமை யோகுசெய் பிருகு மாமுனி தஞ்ச மாமனைக் கிழத்தி பூமகள் தாயெ னப்படுங் கியாதி தன்புடை வஞ்சம் இன்றிவந் தடைக்க லம்புக வருந்து றேன்மினென் றபய நல்கியப் பஞ்சின் மெல்லடிப் பாவை ஆச்சிர மத்தின் உள்ளுறப் பாது காத்தனள். | 3 |
843 |
சீற்றம் மிக்கெழச் சேந்த கண்ணினான் திகிரி ஓச்சியங் கெய்து மாதவன் போற்றி வாய்தலின் வைகு மாமியைப் பொருக்கெனச் சிரந்துணிந்து வீழ்த்தலும் ஏற்றேழுந் தகூகூ ஒலித்திரள் இருசெ வித்துளை ஏறு மாமுனி மாற்ற ருந்திறல் யோகு நீங்கிமுன் மனைவி பட்டதும் மற்றும் நோக்கினான் | 4 |
844 |
மாதவன் பிருகு சாபம் பெறல் கண்டு மாழ்கினன் துயரின் மூழ்கினன் கண்கள் சேந்தனன் இதழ்து டித்தனன் மண்டு வெங்கனற் பொறிடெ றிப்பவம் மாத வன்றனை வெகுண்டு நோக்கினான் ஒண்ட ளிர்க்கரத் தரிவை டன்னைமற் றுனக்கு மாமியைத்தறுக ணாளனாய் மிண்டி னாற்கொலை செய்து வீட்டினாய் வெய்ய உய்யு மாறெவன். | 5 |
845 |
எடுத்தி யம்பிய சைவமேயெவற் றுள்ளும் உத்தம மென்னில் யாங்களும் கடுத்த தும்பிய கண்ட னாரடிக் கமல மன்றிவே றறிகி லேமெனில் தொடுத்து ரைக்குமிச் சத்தி யத்தினால் துயரு ழந்துநீ நரக வல்வினை மடுத்த வெம்பிறப் பொருப தெய்துக வழுவு பாதகக் குழிசி யாயினாய். | 6 |
846 |
நின்ற னக்கடித் தொண்டு பூண்டவர் நெறிய லாப்புறத் தாற்று நூல்வழித் துன்று தீக்கையுற் றென்றும் முப்புரஞ் சுட்ட வெம்பிரான் திருவ டிப்பிழைத் தொன்று முன்றுதண் டேந்தி யீனராய் உலப்பி லாதவெந் நிரைய மேவுக மன்ற வங்கவர்க் கண்டு ளோர்களும் மறலி யூரினைக் குறுகி மாய்கவே. | 7 |
847 |
எவ்வ மேமிகுந் தமோகு ணம்பயின் றிழிந்த யோனியின் மீன மாதியாம் வெவ்வி னைப்பவந் தோறும் இன்னலே விரவு வாயென வெய்ய சாபமிட் டவ்வி யத்தொகை இரிய நூறுமப் பிருகு வெள்ளியால் ஆவி பெற்றெழு நவ்வி வாள்விழி மனைவி தன்னொடு நாரி பாகனை வழுத்தி வைகினான். | 8 |
848 |
மாதவன் காஞ்சியில் சிவபூசை செய்தல் நிறைமொ ழித்தவப் பிருகு ஓதிய சாபம் எய்திநெஞ் சழுங்கி ஏங்குபு நறைம லர்த்துழாய்ப் படலை மார்பினான் நாடி னானிதன் தீர்வி யாதென்ப பிறைமு டிச்சடைப் பிரானு ளன்மனுப் பிரமம் ஐந்துள யாமு ளேமினிக் குறையெ மக்கெவன் என்று தேறினான் கொழிதி ரைப்புனற் கச்சி யெய்தினான் | 9 |
849 |
தூய நீர்ச்சிவ கங்கை வாவியுள் தோய்ந்தெ ழுந்தொரு மாவின் நீழல்வாழ் நாய னாரடி வழுத்தி யேகியஞ் ஞாங்கர் வைகுமாச் சிரமம் ஒன்றமைத் தாயி டைசிவ லிங்க மொன்றுகண் டன்பு கூர்தர அருச்சித் தேத்தியங் கேயு மாறருள் பெற்று மாதவம் இயற்ற லுற்றனன் வயப்புள் ளூர்தியே | 10 |
850 |
பூதி மேனியன் நெற்றி தீட்டுமுப் புண்ட ரத்தினன் அக்க மாலையன் சீத வேணியோன் திருவு ருத்திரஞ் செப்பு நாவினன் அடகு நீர்கனி வாத உண்டியன் பிரமம் ஐவகை மனுக்க ணித்துளக் கமலம் நள்ளுற மாது பாகனை இருத்தி ஐந்தழல் மத்தி நின்றருந் தவமு ஞற்றினான். | 11 |
851 |
மாதவன் சிவப்பிரசாதம் பெறல் இன்ன வாறுபல் லாண்டு மாதவம் இவனி யற்றுழி முக்கண் நாயகன் பொன்னி மாசலப் பூவை தன்னொடும் புடைமி டைந்துபல் கணங்கள் போற்றுறப் பன்னும் அவ்விலிங் கத்தி னின்றெழூஉப் பாய்வி டைப்பரி மேல ணைந்துநீ நன்னர் வேட்டன கூறு கென்றலும் நறுந்து ழாய்மலர்ப் படலை மோலியான் | 12 |
852 |
எட்டு றுப்பினும் ஐந்து றுப்பினும் இருநி லத்திடை வீழ்ந்து வீழ்ந்தெழுந் தட்ட மூர்த்தியாய் போற்றி என்னையாள் அண்ணலே யடிபோற்றி என்வினைக் கட்ட றுத்தவா போற்றி மாறிலாக் கருணை வெள்ளமே போற்றி போற்றியென் றுட்ட தும்பிய காதலால்தொழு துருகி நீர்விழி சொரிய விள்ளுவான். | 13 |
853 |
ஐய னேயுனைச் சரணம் எய்தினேன் அடிய னேனினி மற்றொர் பற்றிலேன் பொய்யில் கேள்விசால் பிருகு மாமுனி புகன்ற சாபநோய்க் கஞ்சி நொந்துளேன் உய்யு மாறருள் செய்ய வேண்டுமென் றுரைத்த லந்துநின் ரிரப்ப வெம்பிரான் மையு லாம்விழிப் பதுமை கொங்கைதோய் மார்ப கேளென வாய்ம லர்ந்தனன் | 14 |
854 |
கலிநிலைத்துறை நடுவி கந்திடா நம்மடித் தொழும்பரால் நாட்டப் படுவ தொன்றெது அ·தவ்வப் பயன்றனைப் பயந்தே விடுவ தல்லது பழுதுறா தின்றுநீ மெலிய அடுமிச் சாபமும் அனுபவித் தல்லது விடாதால் | 15 |
855 |
தாங்கு கொள்கையின் உயர்ந்தநம் அடியவர் தமக்கோர் தீங்கி ழைத்திடுங் கொடியரைச் செருப்பதே கருமம் ஆங்கும் வல்லிருட் குழிவிழுந் தழுங்குவர் அந்தோ யாங்கண் உய்வரெம் அடியவர் தமக்கிடர் இழைத்தோர் | 16 |
856 |
பெருகும் அன்பினால் எம்மைநீ வழிபடும் பேற்றால் இருமை சால்முனி சபித்திடும் ஐயிரு பிறப்பும் திரிபு றாதுல கினுக்குப காரமாம் தெளிநீ அருளும் ஐந்தினில் ஐந்தினில் தண்டமும் புரிகேம் | 17 |
857 |
என்று வாய்மலர்ந் தருளலும் நெடியவன் இறைஞ்சி நன்றும் உய்ந்தனன் அடியனேன் ஞாலத்தின் நீயே சென்று தண்டமும் அருளும்மற் றியான்பெறச் செய்யின் மன்ற இப்பெரும் பேற்றினும் பேறுமற் றுளதோ | 182 |
858 |
இன்னும் ஓர்வரம் வேண்டுவல் எளியனேற் குன்பால் மன்னும் மேதகும் உழுவலன் பருள்மதி வள்ளால் பன்னும் இவ்வரி சாபவெம் பயந்தவிர் இலிங்கந் தன்னில் என்றும்நீ அமர்ந்தருள் என்றலும் தலைவன். | 19 |
859 |
வேட்ட யாவையும் வழங்கினன் உவகைமீ தூர்ந்து பாட்ட ளிக்குலம் விருந்தயர் பசுந்துழாய் மார்பன் தோட்ட லர்க்கரங் குவித்தெதிர் நிற்பமுச் சுடராம் நாட்டம் மூன்றுடை நாயகன் இலிங்கத்தின் மறைந்தான் | 20 |
860 |
ஞானேசம் முதலிய கோவில் அனைய சூழலின் குணாதுமுக் காலமும் அறிவான் முனிவர் சிறிசிலர் எய்திமுன் இலிங்கமொன் றிருத்தி இனிய பூசனை இயற்றிட அவர்க்கது ஈந்தார் கனியும் அன்பருக் கருளுமுக் காலஞா னேசம் | 21 |
861 |
மதங்கேசம், அபிராமேசம். விதந்த மற்றிதன் வடக்கது வெம்புலன் அடங்க மதங்க மாமுனி அருச்சனை புரிமதங் கேசம் அதன்கு டக்கபி ராமேசம் அச்சுதன் குறளாய்ச் சிதைந்து மாவலி தபத்தெற வழுத்திய வரைப்பு | 22 |
862 |
ஐராவதேசம் அத்த ளிக்குட பாலதன் றிமையவர் கடைபோ தத்தி மேலெழும் வெண்கரி அருச்சனை ஆற்றி அத்தி கட்கர சாகிவிண் ணரசினைத் தாங்க அத்த னாரருள் பெறுமயி ராவதேச் சரமால் | 23 |
863 |
துவற்று தேத்துளி துறுமலர்ப் பொதும்பர்சூழ் கிடந்த இவற்றுள் ஒன்றனில் எந்தைதாள் வழிபடப் பெற்றோர் கவற்றும் வல்வினைப் பிறவிவித் தாயகா மாதி அவற்றின் நீங்குபு மழுவலான் அடியினை சேர்வார். | 24 |
864 |
திகழரி சாபந் தீர்த்த திருநகர் முதல்வா னாடர் புகழயி ராவதீசப் பொன்மதில் வரைபீ றாக நிகழ்தரு தளிகள் சொற்றாம் நிறையயி ராவ தீசத் திகழ்தருந் தென்சா ரிட்ட சித்தீசத் துண்மை சொல்வாம் | 1 |
865 |
தொழுதகு பெருமை சான்ற சுக்கிரனங்க ணெய்திக் கெழுதகு பூசை யாற்றிக் கிடைத்தனன் சித்தி யெல்லாம்] முழுதருள் பெற்ற வன்னோன் மொழிவழித் ததீசி யெய்தி வழிபடு முறையி னேத்தி வச்சிர யாக்கை பெற்றான் | 2 |
866 |
உதீசி நாகங் கோட்டி முப்புர மொறுத்த வயிரா வதீச னுக்கணி யதென்பால் வைகிய வுணர்வுக் கெட்டா அதீதனை வழுத்தி யந்நாள் வச்சிர யக்கை பெற்ற தசீசியின் செயல்வி ரித்துச் சாற்ருவன் முனிவீர் கேண்மின். உதீசி - வடக்குத் திசை. நாகம் -மலை. இங்கு மேருமலை. கோட்டி- வளைத்து; ததீசி முனிவர் செய்கை | 3 |
867 |
பிருகுவின் மறபிற் றோன்றும் பிறங்கு சீர்த்ததீசி மேலோன் அருவிமா மதமால் யானைக் குபனெனு மரசன் றன்னோ டொருவருங் கேண்மை யெய்தி யளவளா யுறையுங் காலை யிருவரு மொருநாட் கூடி நகுபொழு தினைய சொல்வார். | 4 |
868 |
விப்பிரர் கொல்லோ வன்றி வேந்தரோ பெரியர் என்னும் அப்பொழு தந்தணாலர் அரசரிற் சிறந்தோ ரென்னச் செப்பினன் ததீசி மன்னன் மன்னரே சிறந்தார் என்றான் இப்பரி சிருவருக்கும் எழுந்தது வயிரப் பூசல் விப்பிரர்அந்தணர். வயிரம் = மனக்காழ்ப்பு. | 5 |
869 |
அழலென முனிவன் சீறி யடித்தனன் அடித்த லோடும் மழலைவண் டிமிரும் தாரான் வச்சிரம் சுழற்ரி வீசிப் பழமறை முனிவன் ஆக்கை இருதுணி படுப்ப அன்னோன் கிழமைகூர் வெள்ளி தன்னை நினைந்துகீழ் நிலத்து வீழ்ந்தான். | 6 |
870 |
சுக்கிரன் உபதேசம் சுக்கிரன் உணர்ந்து போந்து துணியுடல் பொருத்திக் கூட்டி அக்கணத் த்ழுப்பித் தேற்றி அறைகுவான் முனிவ கேண்மோ நக்கலர் கமல வாவிக் காஞ்சியின் நணுகி அன்பான் முக்கணற் றொழுதி யாண்டுங் கொலையுறா முதன்மை கோடி. | 7 |
871 |
இழைமணி மாடக் காஞ்சி இட்டசித் தீச வைப்பின் மழைதவழ் மிடற்ருப் புத்தேள் மலரடி வழுத்திப் பெற்றேஎன் விழைதகு மிருத சஞ்சீ வினியிது வதந்தென் பாங்கர்த் தழைபுகழ் இட்ட சித்தி தரும்புனல் தடமொன் றுண்டால் | 8 |
872 |
அத்தடம் படிந்தோர் நம்பால் ஆரருள் சுரக்கும் ஈசன் பத்தியால் அதனைக் கண்டோர் தீண்டினோர் பருகலுற்றோர் புத்தியோ டாடப் பெற்றோர் அறம்பொருல் இன்பம் வீடாம் சித்திகள் பெறுவார் என்றால் அதன்புகழ் செப்பற் பாற்றோ | 9 |
873 |
எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் மல்லல் நீரரி வாரம் மூழ்கிடின் மகவி லான்மக வீன்றிடும் இல்லம் இல்லவன் மனைவி யெய்துவா னாயு ளில்லவ ன·துறும் கல்வி யில்லவன் கல்வி யெய்துவன் கண்ணி லான்விழி பெறுகுவன் செல்வ மில்லவன் செல்வம் மேவுவ னரசி லானர செய்துமால் அரிவாரம்- ஞாயிற்றுக் கிழமை. | 10 |
874 |
அலகை பூதம தாதி அலைக்க நின்றவ ரிரவிநாள் குலவு மத்தட மாடி னங்கவை கோடி யோசனை பின்னிடும் கலிகெ ழுந்துயர் குட்ட வெம்பிணி முயல கன்பெரு நோயெலாம் விலகி நீங்குமந் நீர்படிந்திடு மக்க ணத்திது மெய்மையே | 11 |
875 |
காத ளாவிய குழைகி ழித்துவி டங்க னிந்து குமிழ்ம்மிசை மோது மையரி வாட்ட டங்கண் முகிழ்த்த கொங்கை நுணங்கிடை மாத ராயினும் மைந்த ராயினும் வந்த பூம்புனல் ஆடினோர் யாதி யாது விரும்பி னாலுமவ் விட்ட சித்தி யளிக்குமால் | 12 |
876 |
முந்து கந்தனில் வாணி தன்னோடுமுளரி மெல்லணை நான்முகன் வந்து மேதகும் இட்ட சித்தி மலர்த்த் டந்தனி லாடிநன் றுந்து சத்திய லோக வாழ்க்கை படைதி டுந்தொழி லோடுற இந்து சேகர னருள்கி டைத்தனன் எறுழ்வ லித்தவ முனிவனே | 13 |
877 |
ஏயும் நற்றிரே தாயு கத்தினென் றூழ்ப டிந்து மறைத்தனு வாயி ரங்கதி ராண்டு தன்றினத் தத்த டம்படிந் தோர்க்கரன் மேய சித்திகள் விரைவின் நல்கவும் விருச்சி கத்தினந் நாளுறின் வாயு மப்பயன் மிகவி ரைந்து வழங்க வும்வர் மெய்தினான் | 14 |
878 |
துவாப ரத்தரி பூவின் மாதொடு தோன்றி யத்தட மாடினான் தவாது பல்லுயிர் காக்கும் வாழ்வொடு மால்ப தந்தனைப் பெற்றனன் உவாம திக்கலை யான னாம்பிகை கலியு கத்திலந் நீர்படிந் தவாநி றைந்தருள் கம்ப நாயகர் பாதி மேனி யடைந்தனள். | 15 |
879 |
இவர்கள் நால்வரும் நான்கு கங்களுளுக் கிறைவ ராயினர் மற்ருமிச் சிவமு றும்புனல் ஆடி முந்தின கரனி ழந்தபல் லெய்தினான் தவள மாமதி முயல கப்பிணி சாடி னன்பக னென்பவன் துவளு மாறுயர் வீர பத்திரன் தொட்ட வால்விழி பெற்றனன். | 16 |
880 |
வடதி சைக்கிறை வரைம டக்கொடி வடிவு நோக்கி இழந்தகண் ணுடன ரற்கொரு நட்பு மெய்தின னோது துச்சரு மேளனும் உடல்க ணைக்கருவிழியு ருப்பசி யுகள் கொன்கை மணந்தனன் மிடல்கொள் கண்ணன் அளித்த சாம்பனுங் குட்ட வெம்பிணி நீங்கினான். | 17 |
881 |
நிடதம் மன்னிய நளன யோத்தி யிராமன் நீள்புகழ்ப் பாண்டவர் மடனி லிங்கியவர் முத்தி றத்தரும் மருவ லாரை யழித்துவென் றிடனி ழந்திடு மிறைமை யெய்தின ரிரியு மைம்புல வாழ்க்கையோய் தடவு மென்மலர் இட்ட சித்தி தருந்த டம்படி பேற்றினால். | 18 |
882 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் தோற்றமார் வடாது வெந்நோய் துமித்திடுந் தரும தீர்த்தம் போற்றருங் குணாது விண்ணோர் புகழ்தரும் அருத்த தீர்த்தம் கூற்றுருந் தெனாது மாறாக் குரைபுனற் காம தீர்த்தம் சாற்றிய குடாது முத்தித் தீர்த்தமத் தடத்து ளோங்கும். | 19 |
883 |
நாற்பயன் உதவுந் தீர்த்தம் நான்குடை இனைய தீர்த்தம் ஏற்புறத் திங்கள் தோறுஞ் சிறந்ததே யெனினும் சால மேற்படும் இஅபம் கும்பம் விருச்சிகம் கடகந் தன்னில் பாற்படும் அவற்ரின் மேலாம் கார்த்திகைப் பானு வாரம் | 20 |
884 |
பானுநால் விடியற் போதின் அத்தடம் படிந்தோர் யாவ ரேனுமங் கவர்கள் எய்தும் பேறெவர் இயம்பற் பாலார் தானம்நீ ராடல் ஓமம் கணித்தலத் தடவுக் கஞ்சத் தேனலர் இட்ட சித்தி தீர்த்தத்தொன் றனந்த மாமால் | 21 |
885 |
ஆதலின் அங்கண் மூழ்கி அருங்கொலை யுறாத மேன்மை தீதறப் பெறுகென் றோதி மிருதசஞ் சீவி னிப்பேர் மேதகு மனுவும் நல்கிச் சுக்கிரன் விடுப்பப் போந்து கோதிலா முனிவன் ஓகை கூர்ந்துகாஞ் சியினைச் சேர்ந்தான் | 22 |
886 |
ததீசி முனிவர் வச்சிர யாக்கை பெறுதல் சேர்ந்தவ னிட்ட சித்தி த்திர்த்தநீர்ப டிந்து கண்ணீர் வார்ந்திட இட்ட சித்தி வரதனை யருச்சித் தன்பு கூர்ந்த சின்னட் பின்னர்க் குழப்பிறை மோலி தோன்றி ஈந்தனன் வயிர யாக்கை யினிவருங் கொலையெய் தாமே | 23 |
887 |
அவ்வகை வரங்க ளெல்லாம் அண்னல்பாற் பெற்ரு மீண்டு மெய்வகைத் ததீசி யெய்தி வேத்தவை வேந்தன் சென்னி எவமில் இடத்தாள் ஓச்சி யுதைத்தனன் இவனுக் கென்று தெவ்வெனச் சமரின் ஏற்ற மாயனைச் செயிர்த்து வென்றான் 4 | 24 |
888 |
இடனுடைப் புரிசை சுற்ரும் இட்டசித் தீச வைப்பில் குடதிசை முகமா வைகுங் குழகனை வழிபட் டின்னும் நடலைதீர்ந் திட்ட சித்தி நண்ணினார் எண்ணி லாதார் புடவியில் அதன்றன் நீர்மை யாவரே புகலும் நீரார். | 25 |
889 |
கலிநிலைத் துறை ஓடரிக் கண்ணியார் ஆடலும் பாடலும் ஓவுறாச் சேடமை யுட்டசித் தீசமேன் மையிது செப்பினாம் ஆடமைத் தோளியோர் பாகர்வாழ் அன்னதன் தென்புடைத் தோடவிழ் சோலைசூழ் கச்சபே சத்தியல் சொல்லுவாம் | 1 |
890 |
பெருமான் உலகைப் படைத்தல் ஐவகைப் பூதம்மால் அயன்முத லாயபல் சராசரம் எவ்வகை யுள்லவும் ஈறுச்ய் திமயமா மயிலொடும் அவிர வாட்டயர்ந் தங்கவை மீஈளவும் ஆக்குவான் தெவ்வடு குறுநகைக் சிற்பரன் திருவுளஞ் செய்தனன் | 2 |
891 |
உலகெல மழிவுருங் காலையுந் தன்னுடைக் காவலிற் குலவுசீர்க் காஞ்சியிற் சோதிலிங்க கத்துருக் கொண்டெழுந் திலகுதன் சத்தியான் முன்புபோல் யாவையும் நல்கினான் அலகிலா நாமரூ பங்களும் ஆக்கினான் அண்ணலே | 3 |
892 |
பிரமன் வழிபட்டது போற்றுசீர் அவ்விலிங் கத்தினைப் போற்றினோர் யாவரும் மாற்றரும் வீடுபே றெய்துவர் நான்முகன் வாணியோ டாற்றலான் ஆயிடை மாதவம் ஆற்றியவ் வங்கணன் ஊற்றமார் அருளினால் படைத்திடுந் தலைமைபெற் றோங்கினான் | 4 |
893 |
திருமால் ஆமையாய் வழிபட்டது முன்னொரு பிர்மகற் பத்திடை நாரணன் மூரிநீர் மன்னுமந் தரமலை யாமையாய்த் தாங்கிவார் கடல்கடைந் தின்னமு தஞ்சுரர்க் கீந்தபின் வெஞ்செருக் கெய்தியாங் கன்னமுந் நீர்முழு துழக்கினான் உலகெலா மஞ்சவே | 5 |
894 |
அச்சம்நீத் தாருயிர் உய்வகை அருள்சுரந் தாங்குறீஇயிக் கச்சபத் தின்னுயிர் செற்றதன் ஓட்டினைக் கதுமென நச்சிய வெண்டலை மாலிகை நடுவுறக் கொண்டனன் பச்சிளங் கிள்ளைபால் வீற்றிருந் தருளிய பண்ணவன் | 6 |
895 |
இப்பெரும் பிழைதவிர்ந் துய்யுமா நாரனன் எம்பிரான் வைப்பெனுங் காஞ்சியிற் சோதிலிங் கத்தினை வழிபடூஉ மெய்ப்படு மன்பினா லிரந்திரந் தேத்தலும் விடைமிசைத் துப்புறழ் செஞ்சடைத் தோன்றல் அங்கவனெதிர் தோன்றினான். | 7 |
896 |
காண்டலுங் கண்கணீர் வார்தரக் கரையறு காதலின் பூண்டபே ரன்பினால் வீழ்ந்துவீழ்ந் திறஞ்சினன் போற்ரினான் ஆண்டகாயாருயிர்த் தலைவனே அங்கணா அடியனேன் வேண்டுவ யாவையும் தந்தருள் என்றெதிர் வேண்டினான். | 8 |
897 |
மழுவலா னுணையடிப் பொதுவறு பத்தியும் மால்பதத் தழிவிலா இறைமையும் அவ்விலிங் கந்தனக் கன்றுதொட் டொழிவருங் கச்சபே சத்திரு நாமமும் உம்பரார் தொழுதெழ வாங்கரன் உமையொடும் இனிதமர் தோற்றமும் | 9 |
898 |
அத்தலந் திகழவி முத்தமாந் தலத்த்னும் அதிகமா வைத்திடுந் தலைமையும் வரமெனக் கொண்டனன் வள்லலும் சித்தம்நீ டுவகையின் அங்கவை முழுவதுந் தேத்துழாய்ப் பத்தனுக் கருள்புரிந் தாயிடை மறைந்தனன் பரையொடும் | 10 |
899 |
அன்றுதொட் டென்றுமக் காஞ்சியின் நீங்கலா தமர்ந்திடுங் கொன்றைவார் சடையனைக் கச்சபே சன்றனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீதுதீர்ந் தொன்றியொன் றாநிலை மாறிலா முத்திபெற் றுய்வரே | 11 |
900 |
துர்க்கை முதலியோர் வழிபாடு துர்க்கையுஞ் சாத்தனும் இரவியும் வரவத் தோன்றலும் நற்கரி முகனுடன் ஐவருங் கச்சப நாயகன் பொற்கம லப்பதம் பூசனை யாற்றியங் குடனமர்ந் தொற்கமில் கணங்களோ டப்புரிக் காவல்பூண் டுறுவரால் | 12 |
901 |
சத்தியமொழி விநாயகர் சிறப்பு அந்தணீர்கச்சபே சக்குட வைப்பினில் ஆயிதழ்க் கந்தமா மலர்மிசைச் செல்விதன் கணவனார் போற்றிசெய் துய்ந்தசத் தியமொழி விநாயகன் உளனவற் போற்ரினார் எந்தவூ றுந்தவிர்ந் திம்மையே வேட்டவை யெய்துவார் | 13 |
902 |
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் வெள்ளிக்குப் பாயம் போர்த்தெனப் பொதிந்த வெண்டிரு நீற்றொளிக் கதிர்கள் அள்ளிக்கொள் வனைய மேனியீர் கச்ச பாலயம் அறைந்தனம் மலநோய் தள்ளிப்பே றுதவும் அத்தலக் குடபால் சகோதர தீர்த்தநீர்க் கரையில் புள்ளித்தோ லாடை புனைந்தநம் பெருமான் பொலிவுறும் இருக்கைகள் மொழிவாம் குப்பாயம் - சட்டை. | 1 |
903 |
மாண்ட கன்னீச வரலாறு மன்னுமெய்க் கிளவிக் கரிமுகன் தென்பால் மாண்டகன் னீசனை வழுத்திக் கன்னியோர் பாகன் அருளினான் மாண்ட கன்னிமா முனிவரன் என்பான் மின்னிடைக் கடவுள் மடந்தையர் ஐவர் வீங்கிள வனமுலை திளைத்துப் பொன்னுல கிடத்தின் நுகர்பெரும் போகம் புவிமிசை இருந்தவா நுகர்ந்தான் *மெய்க்கிளவிக் கரிமுகன் - சத்திய மொழி விநாயகர். மாண்ட கன்னி - அழகிய காதை உடையவன். | 2 |
904 |
மதமலம் அறுக்குஞ் சகோதரத் தடநீர் வரைப்பிடை வளாகம் ஒன்றியற்றி அதனிடை யினிது வீற்றிருந் தரம்பை யந்நலார் இளமுலைப் போகஞ் சதமகன் சமழ்ப்ப நுகர்ந்தனன் நெடுநாள் கடைமுறை முத்தியிற் சார்ந்தான் சிதரரித் தடங்கண் ஐயரம்பை யர்தந் தீர்த்தமென் றுரைப்பதத் தடமே | 3 |
905 |
வரிவிழி சேப்பக் குடமுலை மதர்ப்ப வால்வளை கறங்க வண்டிமிருந் தெரிமலர்க் கூழைத் தையலார் குடையுந் தெண்புனல் தடமதன் குலைமேல் எரியலர் குடங்கை மாண்டகன் னீசன் இனிதமர் இருக்கையின் குடசார் அரிலறுந் தருள்வன் னீசமொன் றுண்டால் அதுவருங் காரணங் கேண்மின் | 4 |
906 |
வன்னீச வரலாறு மூதழற் கடவுள் தன்னுடன் பிறந்த முன்னவர் மும்மையர் உள்ளார் பேதுறா மதுகை மூவரும் விண்ணோர் பெறுமவி சுமக்கலாற் றாது மேதகும் ஆவி இறந்தனர் அதனை விரிதழற் பண்ணவன் நோக்கி யாதினிப் புரிவல் எனக்குமிவ் விடும்பை யெய்துமே யென்றுள மழுங்கி 5 | 5 |
907 |
மகோததி யனைய ஐயரம் பையர்தம் வாவியி னுள்ளுறக் கரந்து சகோதரர் தம்மை இழந்தவன் றனக்குச் ச்கோதரம் நீதடம் புனலே உகாதெனைப் புரத்தி யென்றுரைத் தங்கண் உறைந்தனன் அன்றுதொட் டளிகள் முகேரெனப் பாயும் மலர்த்தடம் அதற்கு மொழிபெயர் சகோதர தீர்த்தம். மகோததி - பெரிய கடல். | 6 |
908 |
எரிதழற் புத்தேள் அன்னணம் உறைய இமையவர் எங்கணுந் துருவிப் பெரிதிளைப் பெய்தி யாண்டுவந் துறலும் பெருந்தடத் துறையுமீன் அவர்க்குத் தெரிதர வியம்பிற் றாகவெங் கனலோன் செயிர்த்தடைக் கலம்புகுந் தேனைப் பரிவுறக் காட்டிக் கொடுத்தநீர் தூண்டிற் படுகொலை யுறுகெனச் சபித்து * மீன்கள் அக்கினி தேவனைத் தங்களுக்குக் காட்டினமையால் தேவர்கள் அவற்றிற்கு இமையாநாட்டம் அளித்தனர் என்ப. | 7 |
909 |
மின்னென வெளிக்கொண் டிரந்துநின் றழைக்கும் விண்ணவர் தங்களை நோக்கி முன்னுறப் போமின் வருவலென் றியம்பி முளரிநீர்த் தடமதன் கரையின் மன்னுவன் னீச வள்ளலை யிருத்தி மரபுளி யருச்சனை யாற்றி அன்னவன் அருளாற் பெற்றனன் இமையோர் அவியெலாஞ் சுமந்திடு மாற்றல் | 8 |
910 |
தமையன்மார் மூவர் சுமக்கலாற் றாது தளர்வுறும் அவியெலாந் தானே கமையுறப் பொருக்கும் மதுகைபெற் றிமையோர் குழாத்தினுட் கலந்தனன் கனலோன் இமையவில் வாங்கிப் புரிசைமூன் றிருத்த யெந்தைவன் னீசனை யண்மி அமைவரும் அன்பால்வழி படப்பெற்றோர் அருந்திறல் எய்திவீ டடைவார். | 9 |
911 |
சவுனகேச வரலாறு விளம்புவன் னீசந் தனக்குமேற் பாங்கர் விழைதகுஞ் சௌனகேச் சரத்திற் களங்கனி விளர்ப்ப விடங்கிடந் திமைக்கும் கறைமிடற் றடிகளை யிருத்தி வளம்பயில் காதற் சவுனக முனிவன் மரபுளி யருச்சனை யாற்ரி உளம்பயில் மலநோய் தவிர்ந்துபே ரின்ப வீடுபே றுற்றதவ் வரைப்பு. | 10 |
912 |
எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் தாண்டவ மாடுதல் வல்ல பெம்மான் தங்குஞ் சகோதர தீர்த்தப் பாங்கர் மாண்ட கன்னீ சம்வன் னீசம் விண்ணும் மண்ணும் புகழுஞ் சவுன கேசம் ஈண்டு விளங்க எடுத்து ரைத்தாம் எம்மையும் நல்கிடுஞ் சவுன கேசத் தாண்டகை வைப்பின் வடக்கண் மேவும் அண்ணற் சுரகரம் பன்னு கிற்பாம். | 1 |
913 |
மந்தரமலைச் சிறப்பு கலிவிருத்தம் சுந்த ரத்திரு மால்முதற் சூழ்சுடர் அந்த தரத்தவர்க் காரமு தீந்தது கந்த ரத்து முனிக்கணம் யோகுசெய் மந்த ரப்பெயர் மால்வரை உண்டரோ | 2 |
914 |
சுற்றும் யாளி முழைதொறுந் துஞ்சுவ வெற்றி மத்தென வேலை கடைந்தநாள் அற்றம் நீக்கும் அமுதம் இடையிடைப் பற்றி நின்றிடும் பான்மை நிகர்க்குமால் | 3 |
915 |
வஞ்சிக் கப்படு தானவர் வாரியின் விஞ்சத் தீஞ்சுதை வேறு கடைந்தெய்தத் தஞ்சத் தற்பெயர்ப் பானகழ் தன்மையி னஞ்சப் புற்றங் ககழ்வ குடாவடி. | 4 |
916 |
துன்னு தானவர் சூழுஞ் செயலறிந் தன்ன குன்றம் பெயர்ப்பரி தாகமா மன்னு மார்பினன் பள்ளிகொள் மாட்சியின் மின்னு நீல்முகில் மீமிசைத் துஞ்சுமால் | 5 |
917 |
திரிபு செல்லி யங்குழல் வண்டிமிர் தேக்கடி வல்லி யங்குழ வாட்கண் படுப்புவ அல்லி யங்குழ லார்வெறி யாடிய பல்லி யங்கு லாற்பனித் தஞ்சுமால் | 6 |
918 |
இரண்டடிப் பாடக மடக்கு காம ரம்பு கனற்றம ரம்பரர் காம ரம்பு கனற்றம ரம்பரர் ஏம மல்கி யிருந்துணர் கான்றரு ஏம மல்கி யிருந்துணர் கான்றரும் | 7 |
919 |
வண்ட லம்படர் மாவரை யாரமை வண்ட லம்படர் மாவரை யாரமை பிண்டி யைவன நாறிய வில்லமுன் பிண்டி யைவன நாறிய வில்லமும் | 8 |
920 |
வான ரம்பைய ராவிற் பயந்துதாய் வான ரம்பைய ராவிற் பயந்துதாய் தானி ரப்பவி யக்கணத் துண்டிசை தானி ரப்பவி யக்கணந் துஞ்சுமே | 9 |
921 |
சித்திரகவி -முரசபந்தம் ஒவ்வோரடி ஒவ்வொரு வரியாக நான்கடியும் எழுதி மேலிரண்டு வரியும் தம்முட் கோமூத்திரியாகவும் , கீழிரண்டு வரியும் தம்முட் கோமூத்திரிகையாகவும், சிறுவார் போர்க்கப்பட்டு மேல்வரி யிரண்டாம் வரியினும் மூன்றாம் வரியினும் நான்காம் வரியினும் கீழூற்று மீண்டு மேல் நோக்கவும், கீழ்வரி அவ்வாறே மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கப்பட்டு இந்த வார் நான்கும் நான்கு வரியாக வருவது. வஞ்சி விருத்தம் தான மாந்தரு மஞ்சர் வான மாந்தரு மஞ்சரி தான மாந்தரு மஞ்சரி வான மாந்தரு மஞ்சரி | 10 |
921 |
தகர விகற்பத்தான் வந்த மடக்கு கலிவிருத்தம் தத்தை தித்தித்த தோதிதை தாதுதேத் தொத்து தித்துத் திதித்ததத் தித்துதூத் துத்தித் தேத்த தீதுதை தீத்தத்தத் தொத்த தாது ததைத்துத் துதித்ததே | 11 |
922 |
கோமூத்திரி இரண்டிரண்டு வரியாக ஒருசெய்யுள் எழுதப்பட்டு மேலுங் கீழும் ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவது. வான ளாவின வார்கனி யாவிரை கான றாவிள வார்கடி யாவரை தேன லம்பின தீங்கட மாருமான் தான வம்பன றாங்கெட வூருமால் | 12 |
923 |
கூட சதுக்கம் ஈற்றடி யெழுத்துக்கள் ஏனை மூன்றடியுள்ளும் கரந்து நிற்க வருவது கந்த மல்கிய காவிற் குலாய்க்கமழ்ந் தந்தி மானு மவிர்தளிர்க் கொக்குதிர் செந்து வர்க்கனி தித்திக்கு மாசினி மந்தி மாந்தி மகிழ்ந்து குதிக்குமால் | 13 |
924 |
மாத்திரைச் சுருக்கம் ஒருபொருள் பயக்கும் ஒருசொல் ஒருமாத்திரையைக் குறைப்ப வேறுபொருள் பயக்குஞ் சொல்லாய் வருவது. விடியற் காலத்தோர் மாத்திரை வீந்ததும் மடியும் நஞ்சொன்று மாய்ந்ததும் ஒன்றுமாய் அந்தியிற் கானவர் தங்களொன் றொடியு நீளறை யார்ப்பொ டுலம்புமால் | 14 |
925 |
மாத்திரை வருத்தனை ஒருபொருள் பயக்கும் ஒருசொல் ஒருமாத்திரை பெற்று வேறு சொல்லாய் வேறு பொருள் பயந்து நிற்பது. அளபொன் றேறிய வண்டதி ரார்ப்பினால் அளபொன் றேறிய மண்னதிர்ந் துக்கன அளபொன் றேறிய பாட்டல ரீர்ஞ்சுனை அளபொன் றேறழ கூடலைந் தாடுமால் | 15 |
926 |
எழுத்து வருத்தனை ஒருபொருள் பயப்பதோர் சொல் கூறி யதனில் ஒவ்வொரெழுத்து நீக்க வெவ்வேறு பொருள் பயப்பது. காந்தள் போல்வன காமுகர் வீழ்வன போந்து சேர்ப்பார்கள் பூக்குறி வைப்பன சாந்தம் நாறிய சரலின் நாரிமார் ஏந்து சீரெழிற் கைதகை கேதகை. | 16 |
927 |
உபய நாக பந்தம் இரண்டு பாம்பு தம்முள் இணைவனவாக உபதேச முறையான் வரைந்தவற்று ளிரண்டு கவியெழுதப்பட்டுச் சந்திகளினின்ற எழுத்தே மற்றையிடங்களினும் உறுப்பாய் நிற்க வருவது. ஆம்ப னீண்மருப் பாரமு மாசறு காம்பு மாண வுகுங்கதிர் முத்தமும் பூம்ப சும்பொழி னீடும் புரையிரு ளோம்பிப் பப்பொளி மேவுமுட் டாதரோ | 17 |
928 |
செம்பொ னன்சுனை சேர்முகை நீலமா வம்பு நீடு மருங்களி யாரவின் கொம்பு பூமலி பொன்னவிர் குன்றத்தூர் பம்பு சேணதி பாமருட் டாருமே | 18 |
929 |
சுழிகுளம் ஒரு செய்யுள் எவ்வெட் டெழுத்தாக நான்குவரி யெழுதப்பட்டு மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புற நின்று வந்துண் முடிய அவ்வரி நான்குமே யாகி யச் செய்யுள் வருவது வஞ்சித்துறை மதிபகவே யான்ற தினைமனிமா வாவன் பமர்துறுசே வாயா கனிதுவன்று மாவே | 19 |
930 |
சருப்பதோ பத்திரம் நிரையாக அறுபத்து நான்கறை கீறி எவ்வெட்டெழுத்தால் ஒவ்வோரடியாகத் தொடுத்த நான்கடியுமேனின்று கீழிழியவுங், கீழ்நின்று மேலேறவும் எழுதப்பட்டு மேனின்று கீழிழியவும் கீழ்நின்று மேலேறவும் முத்றொடங்கி யிறுதியாகவும் இறுதி தொடங்கி முதலாகவும் மாலைமாற்றாக நான்கு முகத்திலும் வாசித்தாலும் அச்செய்யுளே வருவது. கலிவிருத்தம் வீயா வாமா மாவா யாவீ யாவா யாரா ராயா வாயா வாயா டேமா மாடே யாவா மாரா மாதோ தோமா ராமா | 20 |
931 |
மாலை மாற்று ஒரு செய்யுளை ஈற்றடியை முதலாகக் கொண்டு வாசிப்பினும் அச்செய்யுளே வருவது. தேடா வாழை மாவீ டாதே தேனா ராமா வாழா யாதே தேயா ழாவா மாரா னாதே தேடா வீமா ழைவா டாதே | 21 |
932 |
காதை கரப்பு ஒருசெய்யுள் முடிய எழுதப்பட்டதனீற்று மொழியின் முதலெழுத்துத் தொடங்கி ஒவ்வோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுள் போதுவது. கலிவிருத்தம் இனநீடிய யானைவி லாரு லாவ வனமோடிட மாதவி யாரு நாவி புனமோடிட மாதவி லாருண் மன்னி யனல்வாயவி யாருவ கன்றி மாதோ. 22 | 22 |
934 |
காதை கரப்பிற் கரந்தது / வஞ்சித்துறை கருவி வானனி மருவி யாடின விருவி மாடின வருவி யாடின | 23 |
934 |
திரிபங்கி ஒருசெய்யுளாய் உறுப்பமைந்து ஒருபொருள் பயப்பதனை மூன்றாகப் பிரித்து எழுத வெவ்வேறு செய்யுளாய்த் தனித்தனியே பொருள் பயந்து தொடையும் கிரியையும் தனித்தனியே காண வருவது. காப்பியக் கலித்துறை சந்தனமார் தடஞ்சார லெலாந்தனி வானளவுங் கொந்துலர்வீ நெடுங்காவி னெலாங்குனி மாந்தருவி னந்தியதேன் படுஞ்சூழ லெலாநனி மாந்தர்விழை கந்தநிலாங் கடந்ததாழ்கரி போங்கனி வீழ்ந்தழியும் மேலைச் செய்யுளிற் பிரிந்த செய்யுள்கள் கலிவிருத்தம் 1. சந்தன மார் கொந்தலர் வீ நந்திய தேன் கந்தநி லாம். 2. தடஞ்சா ரலெலாம் நெடுங்கா வினெலாம் படுஞ்சூ ழலெலாம் கடந்தாழ் கரிபோம். 3. தனிவா னலவுங் குனிமாந் தருவின் நனிமாந் தர்விழை கனிவீழ்ந் தழியும்.24 | 24 |
935 |
பிறிதுபடு பாட்டு ஒருசெய்யுள் அடியையுந் தொடையையும் வேறுபடுப்பச் சொல்லும் பொருளும் வேறுபடாது வேறொரு செய்யுளாய் வருவது. கலிவிருத்தம் ஆன்றார்ந்த காவி னளியாடு பூந்தேன் மான்றீன்ற வேரன் மணியீர்ங்க வுண்மாச் சான்றோங்கு காட்டிற் றயங்கு மணிமுத்தோ டேன்றூர்ந்து நாட்டி னடக்கவெழு மார்த்து, | 24 |
936 |
ஆன்றார்ந்த காவினளியாடு பூந்தேன்மான் றீன்றவேரன் மணியீர்ங் கவுண்மாச் - சான்றோங்கு காட்டிற் றயங்குமணிமுத் தோடேன்றூர்ந்து காட்டை னடக்கவெழு மார்த்து. | 25 |
937 |
எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் இனைய வளம்பல பெற்று நீடி யிம்பரு மும்பரு மேத்த வாய்ந்து நனைம லர்க்காவு மருங்கு டுத்து நளிர்மழைப் போர்வைதன் மெய்யிற் போர்த்து கனைக திர்ப்பன்மணிச் சென்னி மேல்வான் கங்கை தலைச்சுற்று மான வோங்கிப் புனைபுகழ் மல்க வரசு வைகும் பொற்பமர் மந்தர வெற்பின் மாதோ | 26 |
938 |
குமாரசம்பவம் ஆருயிர் யாவையும் உய்யு மாற்றால் அற்புத மேனி யெடுத்து நின்று பேரருள் ஐந்தொழி லாட்டு கந்த பிஞ்ஞகன் கந்தனை நல்க வேண்டிச் சீரிமயத்து மடப்பிடியைத் திருமணஞ் செய்தபின் னெய்தி அங்கண் ஏரியல் அந்தப் புரத்தின் மன்னி இன்பக் கலவி நடாத்த லுற்றான் | 27 |
939 |
இங்குக் கூறப்படுகின்ற முருகவேள் திருவவதாரம் கந்தபுராணத்திற் கூறப்படும்
முறையிலிருந்து வேறுபட்டுள்ளது. இங்குக் கூறப்படுவது வடமொழியில் உள்ளவாறாம்.
இந்நூலாசிரியர் சிவஞான முனிவர் இவ்வரலாற்றை வடந்நூலிற் கிடந்தவாறே
கூறியருளினார். வண்டிமிர் கூந்த லிமய வல்லி வனமுலை தாக்க மகிழ்ந்து புல்லிக் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றுப் பன்னாட் கலவிப் பெருநலந் துய்க்குங் காலை அண்டர் உணர்ந்து வெருவி அஞ்சி அம்பிகை தன்பாற் கருப்ப வீறு கொண்டிடு முன்னஞ் சிதைவு செய்யுங் கொள்கையின் அங்கியை யேவினார்கள் | 28 |
940 |
ஏவலும் அங்கிமற் றங்கண் ஏகி எம்பெருமான் கோயில்வாயில் முன்னர்த் தேவி உகைக்கும் மடங்கல் வைகுஞ் செய்கையை நோக்கி மீண்டு மேவிய விண்ணோர் குழாத்தை நண்ணி வினவும் அவர்க்கு விளைந்த தோதி நீவிர்க ளேயவண் எய்தி ஊறு நிகழ்த்திடு மின்க ளெனக்க ரைந்தான் | 29 |
941 |
அரியய னாதி யமர ரெல்லாம் அம்மொழி கேட்டுள் அழுங்கி நொந்து பெரிதுயர் மந்தரப் பாங்கர் எய்திப் பேணி நிலமிசை வீழ்ந்தி றைஞ்சி உரிய முறையிற் பழிச்சி நின்றே ஓலிடும் மாற்றம் உணர்ந்து நம்மான் தெரிவையோ டாடும் புணர்ச்சி நாப்பண் சென்றனன் வெற்றரை யோடும் அங்கண் | 30 |
942 |
கண்டனர் காமனைச் செற்ற கோவைக் கழிபெருங் காதல் கரையி கப்பப் புண்டரி கக்கண் முகுந்தன் வாசப் பூந்தவி சாளி யுருத்தி ரர்கள் அண்டர் மருத்துவர் சாத்தி யர்கள் அனைவரும் எல்லையில் அன்பு பொங்கிக் கொண்ட மயிர்ப்புள கங்கள் மல்கக் குவித்த கரத்தோடும் ஏத்த லுற்றார் | 31 |
943 |
வெள்விடை பூங்கொடி மீது வைத்து வென்றி மழுப்ப டையேந்தி வஞ்சக் கள்ளர் கருத்தின் அகப்படாத கண்ணுதற் சாமிநின் தாளி ணையில் அள்ளல் அளக்கர் அமிர்தந் தன்னாற் பூசனை யாற்றி அமிர்த ரானோம் எள்ளரு மாமலர் இட்டி றைஞ்சிச் சுமன ரெனும்பெய ரெய்தி னேமால். | 32 |
944 |
இறைவன் ஆலகால விடத்தை உண்டபின் தேவர்கள் திருப்பாற்கடலைக்
கடைந்து அமுதம் பெற்ற காலத்தில் அவ்வமுதத்தால் இறைவனைப் பூசித்தனர்.
அதனால் அவர்கள் அமுதர் எனும் பெயர் பெற்றனர். சுமனர் - நல்லமனத்தை யுடையவர்.
ஆழியு டைப்புவி மீதொர் சிற்றூர் ஆள்பவர் தம்மை அடுத்த வரும் தாழ்வ ருமின்ப மகிழ்ச்சி யெய்தித் தகைபெற வாழ்கின் றார்க ளென்னில் பாழி யுயரகி லாண்ட கோடிப் பரப்பு முழுது மரசு செய்யும் மாழை விழியுமை பாக நின்னை வந்தடுத் தேங்களுக் கென்கு றையே | 33 |
945 |
துறந்தவ ருள்ளக் கமல மேவுஞ் சோதித் திருவுரு போற்றி போற்றி மறந்திகழ் வோரை யெறிந்து வீசும் மறந்திகழ் வாட்படை யாளி போற்றி உறந்த மலர்ப்பதம் போற்றி யாங்கள் உன்றன் அடைக்கலங் கண்டு கொள்ளென் றறந்தலை நின்ற அமரர் போற்ற அங்கணன் நோக்கி அருள்சு ரந்து | 34 |
946 |
வேண்டுவ கூறு மினுங்கட் கின்னே மேவர நல்குது மென்றருள ஈண்டிய மாயனை யுள்ளிட் டோர்தம் ஏவலின் நான்முக னேத்தி யெந்தாய் மாண்ட மலைமகள் பாற்க ருப்பம் வாய்ப்பது வேண்டிலர் மால்மு தலோர் காண்டக வந்தனர் மேலி யற்றுங் கடனறி யேங்கள் எனக்க ரைந்தான் | 35 |
947 |
அறுசீர்க்கழில் நெடிலாசிரிய விருத்தம் தனக்கெனச் சிறிதும் வேண்டாத் தன்மையான் உயிர்கட் கென்றே நினைப்பரு நடனம் பூண்ட நின்மலன் அற்றேல் இந்தப் பனித்தமுத் துருக்கி யன்ன வெண்புனல் பருகு மின்கள் எனப்புகன் றருள வல்லே யெரியிறை யங்கை யேற்றான். | 36 |
948 |
எண்ணரும் வருடங் காறும் ஆயிர இரவிப் பொற்பின் அண்ணல்பால் நின்று வீழும் அதனையவ் வனலோன் உண்ன விண்ணவர் எவர்க்கும் அந்நாள் மேவருங் கருப்பம் நீடத் துண்ணெனத் துளங்கி வெப்பு நோயினில் தொடக்குண் டார்கள் | 37 |
949 |
மீளவும் இரந்து வேண்டும் விண்ணவர் குழாத்தை நோக்கி வாளெனப் பிறழ்ந்து நீண்டு மதர்த்தரி பரந்து கூற்றை ஆளெனக் கொண்டு மைதோய்ந் தகழ்விழிச் சேனை வில்வேட் காளையை முனிந்த வீரன் கருணையால் விளம்ப லுற்றான் | 38 |
950 |
கராத்துயிர் பருகி வேழங் காத்தவன் முதலாம் நீவிர் பராய்த்தொழுங் காஞ்சி வைப்பிற் பயில்சுர கரேச மென்னச் சுராக்கனாம் அவுணன் ஆவி தொலையநாம் அமைத்த தானம் இராக்கதிர் எரிக்கும் இந்து முடிநமக் கினிய சூழல் | 39 |
951 |
சுரகரே சத்தின் பாங்கர்ச் சுரகர தீர்த்தம் உண்டால் விரவிநீர் படிந்தோர் பாவ வெப்புநோய் முழுதும் நீங்கும் இரவிநாள் கழிய நன்றாம் நீரவண் எய்தி நம்மைப் பரவிநீ ராடி லிந்த வெப்புநோய் பாறுங் காண்மின். | 40 |
952 |
ஆயிடை நீங்கிப் பின்னர் மேருவை அணுகி யங்கண் மேயவிக் கருப்பந் தன்னை விடுமினென் றகன்று நீங்க மாயனே முதலாம் விண்ணோர் மகிழ்ந்தெழு முள்ளத் தோடுந் தூயசீர்க் காஞ்சி யெய்திச் சுரகரந் தன்னைக் கண்டார். | 41 |
953 |
காண்டலு முவகை பொங்கிச் செயத்தகு கடன்கள் முற்றித் தீண்டினோர் பிறவி மாய்க்குஞ் சுரகர தீர்த்த மாடி மாண்டரு சுரக ரேச வள்ளலை அருச்சித் தேத்தி வேண்டினர் வேண்ட லோடும் வெப்புநோய் ஒழியப் பெற்றார். | 42 |
954 |
பெற்றபின் அங்கண் நீங்கிப் பெறலரு மேருக் குன்றின் உற்றமாத் திரையின் அன்னோர் வயாவுநோய் ஒழிவு பெற்றார் மற்றவர் அகட்டின் நீங்கி வளங்கெழு சுடர்பொற் சோதி பற்றிளம் பரிதி நூறா யிரமெனப் பரந்து தோன்றி. | 43 |
955 |
வடவரை முழுதுஞ் செம்பொன் வண்ணமாச் செய்து தெண்ணீர்த் தடநெடுங் கங்கை யாற்றாற் சரவணப் பொய்கை மேவிக் கடவுளர் முனிவ ரெல்லாம் உய்யுமா கருணை காட்டிச் சுடர்வடி நெடுவேல் அண்ணல் அறுமுகன் தோன்றி னானால். | 44 |
956 |
மேருமலை பொன்மயமாயதற்குக் காரனம் கூறியவாறு. முருகன் என்னாது
அறுமுகன் என்றது அவர் திருவுருவத்தைச் சுட்டிக் கூறியபடி. சுரந்தவிர்த் தமரர்க் காத்த சுரகர தீர்த்த மாடி வரந்தருஞ் சுரக ரேச வள்ளலை வணங்கிப் போற்றி நிரந்தர மன்பு செய்யப் பெற்றவர் நெடுநீர் ஞாலத் தரந்தைநோய் தவிர்ந்து முத்திப் பேற்றி னையடைவர் மாதோ. | 45 |
957 |
அறுசீர்க்கழில் நெடிலாசிரிய விருத்தம் கிளைத்தெழுங் குழவித் திங்கட் கீற்றிளங் கொழுந்து மோலி வளைத்தழும் பாளன் வைகுஞ் சுரகர வளாகஞ் சொற்றாம் திளைத்தவர் கருவில் எய்தாச் சுரகர தீர்த்தத் தென்பால் இளைத்தவர்க் கிரங்குந் தான்தோன் றீச்சரத் தியல்பு சொல்வாம் | 1 |
958 |
முழுமலத் தொடக்கு நீங்கி யாருயிர் முத்தி சேர்வான் மழுவலான் தானே தோன்றும் வாய்மையால் தான்தோன் றீசக் கெழுதகு பெயரின் ஓங்கும் கிளக்குமவ் விலிங்கந் தன்னைத் தொழுதொரு சிறுவன் தீம்பால் பெற்றவா சொல்லக் கேண்மின். | 2 |
959 |
உபமன்னியர் பாற்கடல் உண்ட வரலாறு சலிப்பறு தவவ சிட்டன் தங்கையை மணந்து ஞானப் புலிப்பத முனிவன் ஈன்ற புகழுப மனியன் என்னும் ஒலிச்சிறு சதங்கைத் தாளோன் மாதுலன் உறையுள் மேவிக் கலிப்பகைச் சுரபித் தீம்பால் உண்டுளங் களித்து வாழ்நாள் | 3 |
960 |
தாதையுந் தாயு மேகித் தநயனைக் கொண்டு தங்கள் மேதகும் இருக்கை புக்கு மேவுழிச் சிறுவன் தீம்பாற் காதரம் எய்தியன்னை அடிபணிந் திரப்ப வந்நாள் கோதறு நெல்மா நீரிற் குழைத்திது கோடி யென்றாள் ஆதரம் - விருப்பம். கோடி - கொள்வாயாக. | 4 |
961 |
ஏற்றனன் பருகித் தீம்பால் அன்றிது புனலென் றோச்சி மாற்றினன் மாது லன்றன் மனைவயின் பருகுந் தீம்பால் ஆற்றவும் நினைந்து தேம்பி அழுதழு திரங்க நோக்கிக் கோற்றொடி நற்றாய் நெஞ்சம் உளைந்திது கூற லுற்றான். | 5 |
962 |
தவம்புரி நிலையின் வைகுஞ் சார்பினேம் அதாஅன்று முன்னாட் சிவன்றனை வழிப டாமை இலம்படுந் திறத்தி னேங்கள் அவந்தெறும் ஆன்பால் யாண்டுப் பெறுகுவம் அப்பா முக்கண் பவன்றனை வழிபா டாற்றிப் பால்மிகப் பெறுதி கண்டாய். அதாஅன்று - அதுவுமன்றி. இலம்படு - வறுமையுற்ற. அவம் தெறும் - துன்பத்தைப் போக்கும். | 6 |
963 |
கச்சிமா நகரத் தெய்திக் கண்ணுதல் பூசை யாற்றி இச்சையின் ஏற்ற மாகப் பெறுவையென் றியம்பு மன்னை மெச்சிட விடைகொண் டேகி விழைதகு காஞ்சி யெய்தி முச்சகம் புகழுந் தான்தோன் றீச்சர முதலைக் கண்டான். | 7 |
964 | br>
கண்டுளங் குழைந்து நெக்குக் கரையிலாக் காதல் பொங்கித் தொண்டனே னுய்ந்தே னென்று தொழுதெழுந் தாடிப் பாடி இண்டைவார் சடிலத் தண்ணல் இணையடி யருச்சித் தங்கண் அண்டரும் வியக்கு மாற்றால் அருந்தவம் புரியு மெல்லை | 8 |
965 |
தகைபெறுஞ் சயம்பு லிங்கத் தலத்துறை கணிச்சிப் புத்தேள் உகைமுகில் ஊர்தி யண்ணல் உருவுகொண் டெய்திப் பத்தி மிகையினை அளந்து தானாந் தன்மையை விளங்கக் காட்டி நகைமுகம் அருளித் தீம்பாற் கடலினை அழைத்து நல்கி முகில் ஊர்தி அண்ணல் - இந்திரன். இறைவனார் இந்திரன் உருவமாக வந்துநின்று சிவபெருமானைப் பலவாறு நிந்திக்க, உபமன்னிய முனிவர் அதனைப் பொறாது அவ்விந்திரனை யழிக்கக் கருதி அகோராத்திர மந்திரத்தை உச்சரித்துத் திருநீற்றைத் தெளிக்க, அதனை நந்திதேவர் தடுத்தமையால், சிவாபராதம் செய்தாரைத் தண்டிக்க இயலாமைக்கு வருந்தி, மூலாக்கினியால் உயிர் விடத் துணிந்தார். உபமன்னிய முனிவரின் இச்செயலைக் கண்டு, இறைவர் தமது உண்மை வடிவைக் காட்டியருளிய செய்தி இங்குக் கூரப்பட்டது. இது வாயு சங்கிதையில் காணப்படுவது. | 9 |
966 |
முற்றுணர் தெளிவும் மூவா இளமையுஞ் சாக்கா டெய்தாப் பெற்றியு முதவி யின்னும் வேண்டுவ பேசு கென்றான் கற்பகம் சுரபி சிந்தா மணிவளை கமல மெல்லாம் பற்றுடை யடியா ரேவற் பணிசெயப் பணிக்கும் வள்ளல். வளை - சங்கநிதி | 10 |
967 |
என்னலும் முனிவன் போற்றி யெளியனேற் குனது நோன்றாள் மன்னுபே ரன்பு வேண்டும் மற்றுமிவ் விலிங்க மூர்த்தி தன்னிலெக் காலும் நீங்காத் தண்ணருள் கொழித்து வாழ்ந்து துன்னினோர் எவர்க்கும் பாவம் துமித்துவீ டுதவ வேண்டும். | 11 |
968 |
என்றுநின் றிரந்து போற்றும் இளவலுக் கருளிச் செய்து மன்றலங் குழலி யோடு மிலிங்கத்தின் மறைந்தா னையன் அன்றுதொட் டறிஞர்க் கெல்லாம் அருட்பெருங் குரவனாகி வென்றிவெள் விடையான் சைவம் விளக்கிவீற் றிருந்தா னன்னோன் | 12 |
969 |
கண்ணன் சிவதீக்கை பெறல் பிருகுமா முனிவன் சாபப் பிணிப்பினாற் பிறந்து வீயும் மருமலர்த் துளவோன் கண்ண னாயநாள் மனித யாக்கை அருவருப் பெனவாங் கெய்தி யத்தகு முனிவன் றன்பால் திருவளர் தீக்கையுற்றுத் தேகசுத் தியினைப் பெற்றான் | 13 |
970 |
பாண்டவர் தூத னென்னப் பயிலிய பெயரான் அங்கண் ஆண்டகை யடிகள் போற்றி வைகினான் அன்று தொட்டு நீண்டுல களந்த மாலை நிறைதிரு நீற்றுக் கோலம் பூண்டுயர் சைவன் என்னப் புகன்றிடும் உலக மெல்லாம். | 14 |
971 |
கலிவிருத்தம் தெத்தேயென வரிவண்டினம் முரலமதுச் சிந்துந் தொத்தேர்மலர்ப் பொழில்சுற்றுசு வாயம்புவஞ் சொற்றாம் முத்தார்துறை யதன்கீழ்த்திசை முப்பத்துமுக் கோடிப் புத்தேளிரும் வழிபாடுசெ யமரேச்சரம் புகல்வாம் | 1 |
972 |
தேவாசுரயுத்த வரலாறு வரிவண்டின் முரலாமண மாலைக்கட வுளரும் முரிநுண்ணிடைத் திதிமைந்தரும் முன்னாள் ஒருகாலத் தெரிமண்டி யெனச்சீறி யெதிர்த்துப்பொர லுற்றார் நரிபேய்கொடி சேனங்கழு குழலுங்கள ஞாங்கர் சேனம் - பருந்து | 2 |
973 |
முற்றிப்பல வுகமங்கவர் தண்டாதமர் முயலக் கற்றைச்சடை யிறையோன்மலை மகளோடுயர் ககனத் துற்றுச்சம ராடற்றிறம் நோக்கியுறைந் தனனால் வெற்றித்திறந் தோலாவகை மேன்மே லமர் மூண்ட. | 3 |
974 |
உண்ணாவமு தனையாளெனை யுடையான்முகம் நோக்கி எண்ணாலுணர் வரியாயிரு திறத்தோரிவர் தம்முள் மண்ணாவிறல் ஒருகூற்றினர் வாகைபுனை கெனலும் விண்ணாடரை வன்றானவர் வென்றார்திறல் கொண்டார் | 4 |
975 |
அதுகண்டுமை யந்தோபெரு மானேயருள் புரியாய் மதுவொன்றிய வெற்றித்தொடை வானோர்புனை கெனலும் விதுவொன்றிய சடையோனருள் விண்ணோர்புடை வைப்ப முதுவன்பகை அறவென்றனர் முடிவானவர் அம்மா | 5 |
976 |
திருவருளுடையோரே வென்றி பெறுவர் என்றவாறு வெற்றிப்பறை சாற்றிப்பெரு விறல்விண்ணவர் மீண்டு கொற்றத்துயர் கடவுள்ளவைக் களமேவரக் குறுகிச் செற்றுச்செரு வென்றோங்கிய திறலோடுறை குற்றார் மற்றப்பொழு துயர்வாசவன் மதமுற்றுரை செய்வான் | 6 |
977 |
அச்சோவென தாண்மைத்திறம் ஆர்கூறுவர் என்றான் அச்சீரவன் றனைவெங்கனல் அவனைச்சமன் நிருதி அச்சூரனை அவனைப்புன லரசன்வளி யவனை அச்சீலனை அளகைக்கிறை ஈசானனங் கவனை | 7 |
978 |
ஈசானனை மலரோனவன் றனைநாரணன் இகலிப் பேசாவிறல் பேசிப்பிணக் குறுபூசலை நோக்கித் தூசார்வன முலையம்பிகை துணைவற்றொழு தின்னோர் மாசார்செருக் கொழியும்படி வள்ளாலருள் என்றாள். | 8 |
979 |
பெருமான் தேவர்கள் அகந்தையை ஒழித்தல் எழுசீர்க்கழில் நெடிலாசிரிய விருத்தம் நிணம்புல்கு சூலம் வலமாக வேந்தி நெடுமால் விரிஞ்சன் முதலோர் பிணம்புல்கு காட்டின் நடமாட் டுகந்து பிறைவேணி வைத்த பெருமான் கணம்புல்கு தேவர் முரணைத் தவிர்ப்ப அவர்முன்பு காமரளிவீழ் மணம்புல்கு தொங்கல் அணிதோள் இயக்க வடிவொன்று கொண்ட ணுகினான். | 9 |
980 |
அணுகித் துரும்பை யெதிர்நட்டு மன்னர் இறுமாந்து வைகும் அவனைப் பணிலத்த னாதி இமையோர்கள் நோக்கி இவண்நீ பயிற்றும் இதுவென் துணிபுற்று வைகும் ஒருநீ எவன்கொல் புகலென்று சொல்லும் மொழிகேட் டுணர்விற் சிறந்த தவர்கண்டு கொள்ளுமு வனின்ன பேச லுறுவான் | 10 |
981 |
எவனேனு மாக வரும்நான் நுமாது வலியின் றளக்க லுறுவேன் துவளாது நம்முன் நடுமித் துரும்பு துணிசெய்ய வல்லன் எவனோ அவனே தயித்தி யரைவென்ற மீளி யறிகென் ருரைப்ப மகவான் இவரா வெழுந்து குலிசத்தை வீசி வறிதே யிளைத்த னனரோ | 11 |
982 |
மற்றைத் திசைக்க ணுறைவோரும் வன்மை முழுதுஞ் செலுத்தி வலியில் ஒற்றைத் துரும்பை அசைவிக்கும் ஆற்ற லிலரா யுடைந்து விடலும் செற்றத் தெழுந்த அயனார் தமாது படையைச் செலுத்த அரியும் அற்றப் படாத படைவீசி ஆர்ப்ப அவைகூர் மழுங்கி யனவே. | 12 |
983 |
இறைவி தோன்றி இமையவர்க்குப் புத்தி புகட்டல் துரும்பொன்று தன்னில் வலிமுற் றிழந்த சுரரச்சம் எய்தி வியவா இரும்பண்பு கூர எவன்நீ யியம்பு கெனலும் இயக்க வடிவாய் வரும்பாண்ட ரங்கன் உருவங் கரப்ப மறுகித் திகைக்கும் அவர்முன் கரும்பொன்று தோளி மலையான் மடந்தை யெதிர்காட்சி தந்த ருளினாள். | 13 |
984 |
எதிர்காண நின்ற கருணைப் பிராட்டி யிருதாள் பழிச்சி யிமையோர் முதிர்காதல் கொண்டு வழிபட்டு வண்கை முடிமீது கூப்பி யுலகம் பதினாலு மீன்ற முதல்வீ யியக்கர் பதியா யணைந்த அவன்யார் மதியே மெமக்கு மொழிகென் றிரப்ப மலைவல்லி யின்ன புகலும். | 14 |
985 |
எவன்வாணி கேள்வன் முதலோர் பதங்கள் நிலைபேறு செய்யு மிறைவன் எவனெப் பொருட்கு மாதாரமாகி யெவருந் தொழப்ப டுபவன் எவன்முற் றுமாக்கி நிலைசெய்து போக்கி அறிஞர்க் கினிக்கும் அமுதன் அவனென்று காண்மி னிமையீர் இயக்க வடிவாகி வந்த அழகன். | 15 |
986 |
எவனுக்கு முற்றும் வடிவங்க ளாகு மெவனுண்மை யாரும் மறியார் எவனெங்கும் யாவு மறிவுற்று நிற்ப னெவனால் நடக்கு முலகம் எவனைத் துதிக்கும் மறையீறு முற்றும் எவனங் கவைக்கு மரியான் அவனென்று காண்மின் இமையீர் இயக்க வடிவாகி வந்த அழகன் | 16 |
987 |
எவன்நாமம் எண்ணின் எவன்தாள் பழிச்சின் எவனைக் கருத்தின் நிறுவின் எவனன்பர் சேவை புரியிற் பவங்கள் இரிவுற்று முத்தி மருவும் எவனுண்மை யின்ப அறிவாகி நிற்பன் எவனிந்து வேணி முடியான் அவனென்று காண்மின் இமையீர் இயக்க வடிவாகி வந்த அழகன் | 17 |
988 |
ஒற்றைத் துரும்பின் நுமதாற்றல் முற்றும் ஒழிவித் தகன்ற அவனைப் பற்றுற்று நீவி ரறிகின்றி லீர்கள் பழையோன் அவன்றன் வலமே அற்றத்தின் நீக்கும் அவன்பால் உதித்த அகிலந் தனக்கு வலமாம் மற்றுத் தமக்கு முதலாய மண்ணின் வலியே கடாதி வலிபோல் | 18 |
989 |
இனிநீவிர் உய்தி பெறுமா றுரைப்பல் இமையாத முக்கண் இறையோன் பனிவீசு கம்பை நளிநீர் துளிக்கும் ஒருமா நிழற்ப டியிலென் றனையாண்டு கொண்டு மகிழ்காமர் கச்சி தனிலெய்தி வெள்ளை விடையோன் துனிதீர் சரண்கள் சரணென் றடைந்து தொழுமின்கள் உம்ப ருலகீர் | 19 |
990 |
தேவர்கள் சிவபூசை செய்தல் கலிநிலைத் துறை என்று கூறினள் மறைந்தனள் உலகமீன் றெடுத்தாள் அன்று மாலயன் தொடக்கமாம் அமரர்க ளெல்லாம் நன்று நம்மறி விருந்தவா றென்றுளம் நாணிச் சென்று சேர்ந்தனர் கச்சியந் திருநகர்த் தேத்து. | 20 |
991 |
திரித சேச்சரப் பெயரினாற் சிவக்குறி இருத்திக் கரிய கண்டனை அருச்சனை கரிசற வாற்றிப் பெரிது மாமிடல் பெற்றனர் வரங்களும் பெற்றார் அரிவை பாகனுக் கினியதாம் அத்திருக் கோயில். | 21 |
992 |
கலிநிலைத்துறை துளிம துத்தொடைக் கடவுளர் தொழுமம ரேசம் களிவ ரப்புகன் றனமுருத் திரகண முதலோர் அளியி னால்தொழு தேத்துமீ ரைம்பதிற் றொன்பான் தளிகள் ஈண்டெடுத் தியம்புதும் வழுத்தபு நெறியீர் | 1 |
993 |
சேகு தீரம ரேசத்தின் சேயிடைத் தென்பால் மாக வைப்பினை உரிஞ்சிய மணிமதிற் காயா ரோக ணக்குட பாங்கர்நூற் றுப்பதி னெட்டு நாகர் போற்றிட நலங்கெழு தலங்கள்நன் குளவால் சேகு - குற்றம். மாகம் - வானம். | 2 |
994 |
அண்டங் காத்தமர் உருத்திரர் நூற்றுவர் அருட்சீ கண்டன் வீரன்கு ரோதனே முதல்கரு தெண்மர் மண்ட லத்திறை யோரிரு நால்வரும் வழுத்திப் பண்டு பூசனை புரிந்திடப் பட்டவத் தளிகள் | 3 |
995 |
திருமால் சிவசாரூபம் பெற விரும்பல் இருமை யுந்தரு மேன்மையத் தளிகளை யென்றும் பொருவில் மெய்த்தவர் பற்பலர் அருச்சனை புரிவார் கருத ரும்புகழ் அவற்றிடைக் கண்டவர் கருநோய் ஒருவி வீடுறும் மேற்றளி என்பதொன் றுளதால் | 4 |
996 |
நவிலு மத்தலத் தெய்திமுன் நாகணைப் புத்தேள் கவிரி தழ்ச்சிறு நுணுகிடைக் கவுரிதன் களபக் குவிமு லைத்தடச் சுவடுதோய் குரிசில்சா ரூபம் புவிமி சைப்பெற விழைந்துமெய்த் தவம்புரிந் தனனால் | 5 |
997 |
ஐம்பு லன்களை அடக்கிநின் றறுபகை துறந்து நம்பு நீற்றணி அக்கமா லிகையுடன் நயந்து கம்பி யாதுருத் திரங்கணித் திதயநற் கமலத் தெம்பி ரானருள் வடிவினை யிடையறா திருத்தி | 6 |
998 |
ஆற்ற ருந்தவம் இயற்றுழி அழல்விழித் தறுகண் கூற்றை வென்றருள் பரம்பொருள் கருணகூர்ந் தடலா னேற்றின் மீதெழுந் தருளியெம் அடியரிற் சிறந்தோய் நோற்று நொந்தனை வேட்டன நுவறியென் றருள | 7 |
999 |
உந்தி பூத்தவன் அளப்பரும் உவகையுள் திளைத்துச் சந்த மாமலர் அடிமிசை வீழ்ந்துதாழ்ந் தெழுந்தான் எந்தை நீதர முழுவதும் பெற்றுளேன் இந்நாள் அந்தி லென்றனக் களித்தருள் ஐயநின் னுருவம். | 8 |
1000 |
சம்பந்தர் பாடலால் திருமால் சாரூபம் பெறுதல் என்ற வாய்மொழி திருச்செவி ஏறலும் எங்கோன் ஒன்று கூறுத லுற்றனன் உவணமீ துயர்த்தோய் நன்று தேர்வைவச் சுதமனு வந்தரம் நணுகும் அன்று நாலிரண் டீற்றுடை இருபதாங் கலியில் | 9 |
1001 |
காழி மாநகர்க் கவுணியர் குலத்தொரு காளை ஏழி சைத்தமிழ் ஞானசம் பந்தனெம் அடியான் யாழ நீபெற எம்முரு இங்குவந் தளிப்பான் ஆழி யோயது காறுமிவ் வரைப்பினில் அமர்ந்து. | 10 |
1002 |
ஈட்ட ருந்தவம் இயற்றுகென் றருளிநீங் குதலும் கோட்டம் இன்றிமால் அம்முறை வதிந்துபூங் கொன்றைத் தோட்ட லங்கலாற் றொழப்புகும் முத்தமிழ் விரகர் பாட்ட லங்கலால் பரஞ்சுடர் திருவுருப் பெற்றான் | 11 |
1003 |
கலிவிருத்தம் அச்சத ருத்திரத ராதியர் போற்றுபு மெச்சிய ப·றளி மேன்மை விளம்பினாம் எச்சமில் மேற்றளி யின்வட சாரமர் கச்சி யநேகதங் காவதங் கூறுவாம் | 1 |
1004 |
கறையடிச் சிறுவிழிக் கடுநடைச் சொரிமதப் பிறையெயிற் றெறுழ்வலிப் பிளிறொலிக் கரிமுகத் திறைபுகழ்க் கச்சியி லெய்தியெம் பிரான்றனை நிறையுமெய்க் காதலான் அருச்சனை நிரப்புவான். கரிமுகத்திறை - யானைமுகத்து விநாயகர் | 2 |
1005 |
சயமிகும் அனேகபேச் சுரனெனத் தன்குறிப் பெயரினால் இலிங்கமொன் றிருத்தினான் பெட்பொடு மயர்வரும் பூசனை மரபுளிப் புரிதரும் இயல்புகண் டெம்பிரா னெதிரெழுந் தருளினான். அனேகபம் - யானை | 3 |
1006 |
வேட்டதென் மைந்தனே விளம்பெனத் தாதைதன் தாட்டுணை மலர்மிசைத் தாழ்ந்தெழுந் திபமுகன் நாட்டினில் யான்செயும் பணியெவன் நல்கெனப் பாட்டளி துதைமலர்க் கொன்றையான் பகர்தரும். | 4 |
1007 |
கலிநிலைத்துறை கருதி நூல்முறை நிறுவவும் தூயவர் தொடங்கும் கருமம் ஊறுதீர்த் தளிப்பவும் தயித்தியர் கயமைத் திருவி லார்க்கிடை யூற்றினைச் செய்யவும் இவண்நீ வருதல் வேட்டெமை முன்னரே வழுத்தினர் வானோர் | 5 |
1008 |
ஆத லாற்புறச் சமயநூல் அரட்டருக் கென்றும் தீது சாலிடை யூற்றினை விளைமதி சிவநூல் வேத நன்னெறி ஒழுகுநர்க் கூறுகள் விரவா தேதம் நீத்தருள் புரிதியெம் மாணையின் வலியால் | 6 |
1009 |
உலகெ லாமுனை வழுத்துக வழிபடா தொழியின் கலிகொள் வேதியர் உம்பரா யினுமவர் கருமம் நிலமி சைப்பயன் எய்துறா தழிகநின் னிணைத்தாள் மலர்வ ழுத்தினோர் பெரும்பய னெய்துக மாதோ | 7 |
1010 |
மங்க லங்களும் அமங்கல மாமுனை வழுத்தார் தங்க ளுக்கிவை வரமுனக் கருளினம் தக்கோய் இங்கு நீயின்னும் ஒன்றுகேள் இரணிய புரமாம் அங்கண் வாழ்பவர் கேசியே முதற்பலர் அசுரர் | 8 |
1011 |
அவனி யாவையும் அலைத்துவெங் கொலைபுரிந் தமர்வார் அவர்கள் ஆருயிர் தாளினாற் செகுத்தவர் கருவுள் அவர்கள் சத்தியாம் வல்லபை அணங்குவீற் றிருக்கும் அவலை நாள்தொறுங் கெழீஇக்கலந் தன்புகொண் டமர்வாய் | 9 |
1012 |
வல்ல பைத்திரு வோடுனை வழிபடப் பெற்றோர்க் கொல்லை வேட்டன யாவையும் உறுகென அருளி எல்லை யில்பெருங் கருணையால் உச்சிமோந் தெடுத்துப் புல்லி யெம்பிரான் விடுத்தனன் மீண்டனன் புதல்வன் | 10 |
1013 |
மீண்ட நாயகன் இரணிய புரத்தினை மேவி ஈண்டு தானவக் குழுக்களைத் தாளினால் எற்ரிக் காண்ட குந்திறல் முருங்கவென் றழித்தவர் கருவின் மாண்ட சத்தியை வாங்கினன் மணந்துவீற் றிருந்தான். | 11 |
1014 |
விநாய கப்பிரான் அருச்சனை புரியவீற் றிருக்கும் அனேக பேசனை அனேகதங் காவதத் திறைஞ்சின் இனாத வெந்துயர்ப் பிறவிதீர்ந் தென்னையா ளுடையான் றனாது வெள்ளியங் கயிலையிற் சார்ந்துவை குவரால். | 12 |
1015 |
அல்லிப்பூஞ் சேக்கைமிசை அன்னச் சேவல் பெடைக்குருகைப் புல்லிக்கண் படுபொய்கை அனேக தங்கா வதம்புகன்றாம் எல்லைச்செய் மணிக்கோயில் அதன்மேல் பாங்கர் இறைஞ்சினவர்க் கொல்லைப்பே ரருள்கூருங் கயிலா யத்தை உரைசெய்வாம். | 1 |
1016 |
முப்புரத்தவர் ஒழுக்கம் நிலமீதும் அந்தரத்தும் நெறிதாழ் கூந்தல் அரம்பையர்வாழ் புலமீதும் வெவ்வேறு பொன்னின் வெள்ளி தனிலிரும்பில் வலமேவு மாதவத்தான் மயனார் வகுத்த முப்புரிசை உலமேவு புயத்தவுணர்க் குளவா யினவால் முன்னாளில் | 2 |
1017 |
அங்கவற்றின் உறுமவுணர் சுருதி மிருதி யாய்ந்துணர்ந்தோர் துங்கநிலை யாகமங்கள் முழுதுந் தேர்ந்து துகளில்லோர் கங்கையணி சடைப்பெருமான் வழித்தொண் டாற்றுங் கடப்பாட்டோர் தங்குதிரு வெண்ணீறு சண்ணித் தொளிகால் வடிவினோர் | 3 |
1018 |
சிவலிங்கத் தருச்சனையே செய்யும் நியதிக் கடன்பூண்டார் சிவதருமந் தலைநின்றார் திகழப் பூணுஞ் சாதனத்தார் சிவனடியார் தமைக்காணின் உவகை துளும்புஞ் சிந்தையினார் சிவநெறியிற் பிறழாத செயலில் தமக்கு நிகரில்லார் | 4 |
1019 |
எவ்விடத்துஞ் சிவகதையே இயம்பு வோரும் கேட்போரும் எவ்விடத்துஞ் சிவபணியே யியற்று வோரும் மெச்சுநரும் எவ்விடத்துஞ் சிவனடியார் எதிர்கொள் விருந்து புறந்தருதல் எவ்விடத்துஞ் சிவநாம முழக்க மன்றி இலையங்கண் | 5 |
1020 |
இத்தகைய தயித்திரியரால் இரியல் போகி உடைந்தழியுஞ் சித்தமுடைக் கடவுளர்போய்த் திருமால் சரணஞ் சரணடைந்தார் பைத்தபணிச் சேக்கைமிசை மலர்க்கண் படுக்கும் பசுந்துளபத் தொத்துவிரியும் நறுந்தாரான் அவரோ டிதனைத் தொடங்கினான் | 6 |
1021 |
வேதமனு எடுத்தோதிக் கொடிய வேள்வி புரிகாலைப் பூதமிகத் தோன்றினவா லவைதாம் மும்மைப் புரஞ்சிதையக் காதுகெனுந் திருநெடுமா லேவ லாற்றிற் கடிதணைந்து நீதிநிலைத் தயித்தியர்முன் நிற்க லாற்றா தழிந்தனவே | 7 |
1022 |
திருமால் சூழ்ச்சி அதுகாணூஉ நனிநடுங்கும் அமரர் தம்மை முகம்நோக்கி மதுவாரும் நறுந்துளப மாயன் இதனை வகுத்துரைப்பான் இதுகேண்மின் நமரங்காள் அச்சோ அவுணர் எல்லாரும் பொதுமேவி நடம்நவிற்றும் புத்தேள் சரணஞ் சரணடைந்தார் | 8 |
1023 |
தீத்தொழிலில் தலைநின்ற கொடிய ரேனுஞ் சிவபத்தி வாய்த்தவர்கள் சாவாத மதுகை யுடையவர் யாமவரைப் பூத்தநுதிக் கணையொன்றாற் பொருக்கென் றழிக்கும் வலியில்லேம் ஆர்த்தபுகழ்ச் சிவபெருமான் தானேயதற்கு வல்லவனாம் | 9 |
1024 |
கலிவிருத்தம் அனையவ னடிபேணி யடைந்தவர் அவர்கண்டீர் இனியவர் சிவபத்தி சிதைவுசெய் திடுகேம்யாம் நினைதரு மிதுவல்லாற் பிறிதிலை நெறியென்னாப் புனைபுகழ் நெடுமாயன் புகன்றிது புரிகிற்பான் | 1 |
1025 |
மறைநெறி பழுதென்றும் மறுமையொன் றிலையென்றும் உறைதரு பொருளெல்லாங் கணத்தழி வுறுமென்றும் அறைதரு மொருநூலை யாக்குபு வடிவத்திற் பொறைபுரி தன்கூற்றோர் புருடனை வருவித்தான் 'கணத்தழிவுறும் என்று அறைதறும்` என்றது கணபங்கங் கூறுதலை. கணபங்கங் கூறுதலாவது, எல்லாப் பொருளுங் கணந்தோறும் தோன்றியழியும் என்று கூறுதல். நூல் என்றது பிடகத்தை. புருடன் - ஆதிபுத்தன். விட்டுணுவின் கூறாய்த் தோன்றிய ஆதிபுத்தனே புத்த மதத்தை யுண்டாக்கினான் என்பது புராண வரலாறு. | 11 |
1026 |
அங்கவன் முகம்நோக்கி அடலரி புகல்கிற்பான் இங்கிது புத்தாகேள் இனையதொர் நூல்கொண்டே பொங்கிய சிவநேசம் பூண்டுயர் புரவவுணர் தங்களை மயல்பூட்டிச் சிவநெறி தபுவிப்பாய் சிவநெறி தபுவிப்பாய் - சிவநெறியினின்றும் நீக்குவாய் | 12 |
1027 |
நாரதன் துணையாக நடமதி யிருவீர்க்குஞ் சீரிய மறைவாய்மை சிந்தையின் நிலைபெறுகென் றேர்பெற விடைநல்க யாழிசை முனிவோனும் தேரனும் விரைந்தெய்தித் திரிபுரம் அணுகுறலும். தேரன் - புத்தன். | 13 |
1028 |
மீயுயர் புரமூன்றின் மேவுந ரவர்செய்யும் மாயையின் மருளுற்று மற்றவர் மாணாக்க ராயின ரவர்கூறுஞ் சாத்திர மதுநம்பித் தீயதொர் வழியொழொழுகிச் சிவநெறி தனைவிண்டார் | 14 |
1029 |
தாழ்நெறி தலைநின்று சாதனம் திருநீறு வாழ்வுறுஞ் சிவதருமம் மறைநெறி கைவிட்டார் ஊழ்வலி யெவர்வெல்வா ரூங்குவர் மனைவியரும் யாழ்முனி மொழிகேட்டுக் கற்பினை யிழந்தார்கள். | 15 |
1030 |
திருமால் திருக்கயிலை யடைதல் விழியுறக் கண்டதுவே மெய்யெனுந் துணிபினராய் இழிதொழில் பலபுரியு மிவர்செயல் முழுதோர்ந்து பழுதறு புகழ்மாயோன் பண்ணவர் புடைசூழக் கழிபெரு மகிழ்வோடுங் கைலையை யணூகினனால் | 16 |
1031 |
அங்கணைந் திறையோனை அடியிணை தொழுதேத்தி பங்கயக் கரங்கூப்பிப் பரிவோடு முரைசெய்வான் சங்கணி குழையாய்முப் புரமுறு தானவர்தாம் எங்களுக் கிடர்செய்ய நொந்தனம் இதுகாறும் | 17 |
1032 |
மாயையின் நெறிகாட்டும் புத்தனின் மருளுற்றுத் தூயநன் னெறிவிட்டார் துகள்படும் அவர்தம்மை மாய்வுசெய் தெமையாள்வாய் யாமளை வனிதைமுத லாயினர் தமைமுன்னாள் மருள்புரி யடிகேளோ | 18 |
1033 |
பெருமான் முப்புரம் எரித்தல் வஞ்சிவிருத்தம் என்று மாய னியம்புசொல் சென்று வார்செவி சேர்தலும் மன்று ளாடிய வான்பொருள் ஒன்று கூறுத லுற்றிடும் | 19 |
1034 |
கருவி மூதெயில் காதுபோர்க் கருவி யொன்றிலம் காண்வரக் கருவி கூடிற் கணத்தவர் கருவெ லாமிறல் காண்டியால் | 20 |
1035 |
என்னும் வாய்மொழி யெம்பிரான் முன்னர் நந்தி முகத்தினாற் சொன்ன காலைத் துழாயனும் அன்ன தேவரோ டாய்ந்தனன் | 21 |
1036 |
மேற்படி, வேறு உறுகெழு நிலமொரு வையமும் இருசுட ரிருபுடை யாழியும் சுருதிகள் துகளறு வாசியும் மருமல ரணைபவன் வலவனும் | 22 |
1037 |
தடநெடு வடவரை சாபமும் படவர விறைபகர் நாரியும் மடல்விரி துளவினன் வாளியும் கடவுளர் பிறர்பிற கருவியும் | 23 |
1038 |
ஆயின ரதுபொழு தண்ணலும் ஏய்வுறு மிரதம தேறினான் மாயிரு நெடியவில் வாங்கினான் காய்கன லுமிழ்கணை பூட்டினான் | 24 |
1039 |
எறுழ்வலி முழுவதும் எண்ணினான் கறுவுறு குறுநகை காட்டினான் முறுவலி னுயர்புரம் மும்மையும் நெறுநெறு நெறுவென நீறின. * திரிபுரத்தின் வலிக்குப் புன்னகையே போதுமெனக் கருதினர் என்பார், `எறுழ்வலி முழுவதும் எண்ணினார்` என்றார். | 25 |
1040 |
பரவுறு மிமையவர் பார்த்தனர் குரவையி னொடுமகிழ் கூர்த்தனர் பொருபுள கமுமுடல் போர்த்தனர் அரகர கரவென ஆர்த்தனர் | 26 |
1041 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். அனைய வானவர்க் கரும்பெறல் வரம்பல அருள்செய்து கயிலாயத் தெனையு டைப்பிரா னினிதெழுந் தருளின னிமையவ ரெல்லாரும் நனைம லர்த்துழாய் நாரண னயனொடு நலம்பெறக் குழீஇயந்நாள் வினையி கந்துல குய்யுமா றி·தொன்று விதிக்கலுற் றனர்மன்னோ. | 27 |
1042 |
இற்றை நாள்முதல் சைவலிங் கார்ச்சனை யில்லவர் வினைமாசு செற்ற நீற்றணி கண்டிகை யிகந்தவர் சிவன்பெயர் வழுத்தாதார் கற்றும் அஞ்செழுத் துருத்திரங் கணித்திடா ரெமக்கய லவராக அற்ற வாறவர் கடையரே யெனவகுத் தவரவ ரிடம்புக்கார். | 28 |
1043 |
புத்தனும் நாரதனும் பூசனை புரிதல் மன்னு நாரத முனிவனும் புத்தனும் மனங்கவன் றழிந்தேங்கி என்ன காரிய மியற்றின மிமையவ ரியம்பிய மொழிகேட்டுப் பன்ன ருஞ்சிவ பத்தரி லுயர்ந்தவர் பழமறை கரைகண்டோர் அன்ன தானவர் தமைவறி தேமயல் பூட்டினம் அந்தோவே | 29 |
1044 |
பழியில் வாய்மையர் பலர்தமைத் தீவழிப் படுத்தவிப் பெரும்பாவக் கழிவு வேதநூல் யாங்கணுங் கண்டிலேம் கற்பகோ டியின்மேலும் ஒழிவு றாதெமக் கிருள்நர கினிச்செயல் யாதென வுளம்நெக்கார் சுழிபு னற்பணைக் காஞ்சியி னெய்தினர் தொடுபழி வினைமாற. | 30 |
1045 |
கருத்த விர்த்தருள் மழுவலான் புரந்தருள் காஞ்சியிற் புகலோடும் இருப்புக் குன்றுறழ் திண்பெருந் தீவினை யெம்பிரா னருளாலே பருத்திக் குன்றென நொய்மைய தாயது பார்த்தன ரிருவோரும் அருத்தி கூர்ந்தன ரவ்விடம் பருத்திக்குன் றாமெனப் பெயரிட்டார். | 31 |
1046 |
அவ்வ ரைப்பினில் இருந்துகொண் டிருவரு மதன்வட கீழ்பாங்கர் எவ்வ மில்லதோர் விசித்திரக் கோயிலங் கியற்றின ரதனுள்ளால் சைவர் சூழ்கயி லாயநா தன்றனைத் தாபனஞ் செய்தேத்திச் செவ்வன் மாதவம் பன்னெடு நாளுறச் செய்தனர் அதுகாலை. | 32 |
1047 |
கயிலாயநாதர் காட்சி தந்தருளல் பளிக்கு மால்வரை நிமிர்ந்தன விடைமிசைப் பல்கணம் புடைசூழ ஒளிக்கு ழாந்திரண் டெழுந்தென வெழுந்தரு ளொருவனைக் கண்ணுற்றார் தெளிக்கு மின்னிசைத் திவவியாழ் முனிவனுந் தேரனும் விழிநீருட் குளிக்கு மேனியர் பலமுறை பணிந்தனர் கூறுத லுற்றாரால் | 33 |
1048 |
ஐய னேயுனக் கடியரை யடியரேம் அரில்படு புறநூலான் மையல் பூட்டினேம் இப்பிழை பொறுத்தருள் வள்ளலே யெனவேண்டத் தொய்யில் பூத்துவிம் மாந்தெழுந் தணிகெழு துணைத்தபூண் முலைக்கோபச் செய்ய வாயுமைக் கொருபுற மளித்தருள் சிவபிரா னிதுபேசும். | 34 |
1049 |
மேற்படி, வேறு கொடியநீர் இழைத்த பாவம் கோடியாண் டவதி யாற்றுங் கடன்நெறி யெவற்றி னானுங் கழிவுறா கண்டீர் நந்தம் அடியரைப் படிற்று நூலாற் பொருளினால் ஆசை காட்டிப் படிமிசை மயக்கு வோர்கள் படுகுழி நரகில் வீழ்வார். | 35 |
1050 |
பாதக மெவற்றி னுக்குந் தீர்திறம் பகரும் நூல்கள் மேதகு மடியார் தம்மை மயக்கிய வினையி னோர்க்கு நோதகு நரகே யன்றி நுவன்றிடா வேறு தண்டம் ஓதுழி யதுவுங் காஞ்சி யுற்றவர்க் கொழிவு கூடும். | 36 |
1051 |
கச்சியி லுறுத லாலும் கடுவினை மெலிதாய் விட்ட திச்சையி னிலிங்க மிங்க ணிருத்துபு வழிபா டாற்றும் அச்செயல் வலியாற் சாலக் கழிந்ததே யானுங் கேண்மின் முச்சகம் புகழும் நல்யாழ் முனிவனே புத்த ரேறே. | 37 |
1052 |
பிறர்க்கு பகார மாதற் பெற்றியா னொருகாற் பாவத் திறத்தினைப் புரிவ ரேனுஞ் சிவநெறிச் சிதைவு தன்னை மறப்பினு மெண்ண லோம்ப லெண்ணினோர் வழங்கல் செல்லா நெறிப்படு நரகின் வீழ்ந்து நீந்தரு மிடும்பை கூர்வார். பிறருக்கு உபகாரமாதற் பொருட்டு ஒருகால் பாவச்செயல் செய்தல் தகுமாயினும் அதன் பொருட்டாயினும் சிவநெறியை அழித்தலாகிய சிவாபராதத்தை நினைத்தலுங் கூடாதென்பார், `சிவநெறிச் சிதைவு தன்னை மறப்பினும் எண்ணல் ஓம்பல்` என்றார். | 38 |
1053 |
இன்றுநீர் வழுத்து மன்புக் கிரங்கினேம் நுமது பாவம் துன்றுபல் பிறவி தோறுஞ் சுழன்றலாற் கழியா தாகும் நன்றது கழியு மாறு நவிலுது மினைய வைப்பின் மன்றமற் றெமைப்பூ சித்து வலம்புரிந் துறைதிர் என்றும் 39 | 39 |
1054 |
வலஞ்செயப் புகுமப் போதும் வெளிக்கொளும் போதும் வாயிற் புலந்தனைச் சுருங்கை யாகப் புரிதுமங் கவையே கன்மப் பலங்களை நுகருந் தோற்றம் இறப்பெனும் பகுதி யாகி இலங்கவீண் டினிது வாழ்மி னிறுதியில் தருதும் முத்தி. | 40 |
1055 |
சித்திக ளெவையும் நல்கும் விசித்திரச் சிற்பம் வாய்ந்து சித்தர்க ளருச்சித் தேத்தத் திகழ்கயி லாய மேன்மை சித்தமா சகன்றோர்க் கன்றித் தெரிவுறா காண்மி னென்று சித்தசன் எரியநோக்குஞ் சேவகன் கரந்து போந்தான். | 41 |
1056 |
இருவரு மவ்வா றங்கண் இறைவனை வலஞ்செய் தேத்திக் கருவற நெடுநாள் வைகித் திருவருட் கலவி பெற்றார் திருவளர் காஞ்சி மூதூர்த் திண்பெருங் கயிலை போலும் ஒருதலமதுவே யன்றி யுலகமூன் றிடத்து மில்லை. | 42 |