pm logo

ஸ்ரீகுமாரதேவர் அருளிய
"சாத்திரக்கோவை"
(குமாரதேவர் வாழ்க்கைச்சரித்திரத்துடன்)

cAttirakkOvai of srikumaratEvar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing a scanned images version of the work.
Etext preparation and proof-reading:
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons for their help in the preparation and proof-reading of the etext:
Ms. Deeptha, S. Karthikeyan, Ms. Nalini Karthikeyan,
A.K. Rajagopalan, M.K Saravanan, Yogeshwaran, S. Subathra,
TS Krishnan, V. Devarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருச்சிற்றம்பலம்.
விருத்தாசலத்தில் ஸ்ரீபெரியநாயகியார்
வரப்பிரசாதியாயெழுந்தருளியிருந்த
ஸ்ரீகுமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய
சாத்திரக்கோவை


இஃது,
சிதம்பரம் கருணானந்தசுவாமிகள் அவர்களால் பரிசோதித்துச்
சிந்தாத்திரிப்பேட்டையிலிருக்கும் பிரபாகர அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1868ம் வருடம்

குமாரதேவர் அருளிச்செய்த சாத்திரங்கள் -16

1. மகாராஜா துறவு. - 1279. வேதநெறியகவல்.
2. சுத்த சாதகம்.- 10110. சகச நிட்டை.-11
3. விஞ்ஞான சாரம் - 10011. பிரமசித்தியகவல்.
4. அத்துவிதவுண்மை. - 10012. உபதேச சித்தாந்தக் கட்டளை.
5. பிரமானுபூதி விளக்கம். -10113. சிவதரிசன அகவல்.
6. ஞானவம்மானை.- 10014. ஆகமநெறியகவல்.
7. வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளை.15. பிரமானுபவ அகவல்.
8. வேதாந்தத சகாரியக்கட்டளை.16. சிவசமரசவாத அகவல்
--------


குருவே துணை.
குமாரதேவர் அருளிச்செய்த சாத்திரங்கள் பதினாறினுள் முதலாவது :

1. மகாராஜா துறவு.


(காப்பு)

அமரர்கள்பரவுந் திருமுதுகுன்றி
      லாழத்துப்பிள்ளையைச்சிகரிக்
குமரசற்குருவை யிமகிரிராஜ
      குமாரியாம் பெரியநாயகியை
முமலமுமொருங்கே யகற்றிடுமுக்கண்
      முதல்வனைச் சாந்தநாயகனை
நமதெணப்படியே முடிந்திடத்தினமு
      நாடிநின்றிறைஞ்சி வாழ்த்திடுவாம்.
1
குருவணக்கம்.

மறைமுடிவதனில் விளங்கிடுமொளியே
      மனிதரைப் போலவந்தெனது
சிறைதவிர்த்தாண்ட சிவப்பிரகாச
      தேசிகன் றன்னைமற்றவன்றன்
நறைமலரடியைப் போற்றிடுஞ்சாந்த
      நாயகன்றன்னை மற்றவன்றன்
நிறையருள்பெற்ற பழனிமாமுனியை
      நெஞ்சினு ளிருத்தியேபணிவாம்.
2
பாயிரம்.

ஆழத்துப்பிள்ளையார்துதி.

தொய்யின்முலைக்கோடிரண்டுகவான்
      றுதிக்கை மூன்றுவிழிதுரிசில்
துய்யசைவமுதன்மதமுந்
      துலங்கவருமொண்பிடியுலகம்
உய்யவுதவுமொருகளிற்றை
     யுலவாவிருத்தசைலத்தில்
வையம்பரவுமாழத்துவாழைங்
      கரனைமனநினைவாம்.
1
(வேறு - விருத்தாம்பிகை துதி.)

இருட்கலிவலியின் ஞானநன்னெறிக
      ளிறந்துயிர்கொடுநெறிமேவி
மருட்கொடுகலங்காவகைகலியென்றும்
      வந்தணுகாப்பதிதன்னில்
தெருட்சத்திக்கருணையுருவதாய் நின்று
      தெளிவிக்குமிறைவியெங்ருகுவோர்
அருட்கடல் பெரிய நாயகியுலகுக்கனை
      முதல்வியைப்பணிந்திடுவாம்.
2
(சபாநாயகர் துதி)
திங்களாற்சடையிற்கங்கைநீர் துளிப்பத்
      திருந்திழையுமையுளங்களிப்பப்
பொங்கராவொடுநற்புலிமுனிவர்கண்மால்
      போதயனமரர்கள் போற்றத்
துங்கநான்மறைகடுதித்திட வைந்துதொழில்
      விரிந்திடப்பொதுவதனிற்
செங்கழலதிர நடஞ்செயும்பொருளைத்
      தினம்பணிந்திடரொழித்திடுவாம்.
3
(வேறு - சிவகாமியம்மை துதி)
அருளுருவாயுயிர்கடமக்கன்னையாகி
      யஞ்ஞானந்தனையகற்றி யமலமாகி
மருளிலதாய் மெய்ஞ்ஞான மாகுமுத்தி
      வாய்த்திடவேகாத்தருளி வானோ[**not clear]ரத்த,
இருள்கெடவே மிளிருமிருங்கழல்களார்ப்பயிறை
      புரியுந்திருநடத்தாற்களித்துவாழும்
தெருண்மருவுமறைநான்கும் பரவுந்தில்லைச்
      சிவகாமசுந்தரியைச்சிந்தைசெய்வாம்.
4
(வேறு - விநாயகர் துதி.)
செக்கர்போன்றொளிர் முக்கட்சிலம்பினை
மிக்கபேரருள்வேலையை யோர்கொம்பால்
தக்கவன்பர்க்குதவுந்தருவினை
இக்கதைநிறைவேற விறைஞ்சுவாம்.
5
(வேறு - சுப்பிரமணியர் துதி.)
கடிகமழ்கரியகூந்தற் கனிமொழித்
     துவர்வாய்த்தெய்வப்-
பிடிதனக்கோட்டால் வள்ளிப்பெண்
     கொடிபடருஞ்செய்ய-
படிபுகழ்புயமாங்குன்றிற்பாய
      வண்கழுநீர்நீப-
மடலவிழ்செழுந்தார்ச்செவ்வேண்
      மலரடி வணக்கஞ்செய்வாம்.
6
(வேறு - அடியார்துதி.)
வண்டுழாயலங்கன் மாயவன்மலர்மேல்
     வதிந்த நான்முகன்மறையறியாத்-
தொண்டைவாய்க்கெண்டைவிழிக்கழை
     மொழியொண் டுடியிடையுமையையோரிடத்தில்-
கொண்டகோனருளைப் பொருளெனக்கருதிக்
      குலவியசாதனந்தரித்து-
மண்டியவடியார்யாவர்மற்றவர்தாண்
     மனத்தினுஞ் சிரத்தினும்வைப்பாம்.
7
(வேறு - அவையடக்கம்.)
சகரர்தம்வலியையுந் தடந்திரைக்கடல்
அகலமும்பின்புளோ ரகழிலஞ்சிதான்
புகழுறவிளக்கலே போலவிச்செயுள்
தகைதருகலைஞர்நூ றனைவிளக்குமால்
8
(வேறு)
நூன்முதலியபொருளும்- நூற்பயனும்- நூலாசிரியர்பெயரும்.

திங்களொண்கவிகைத் திகிரியந்திணிதோட்
      டிகழ்கடற்றானைமாராஜன்-
அங்கண்மாநிலத்திற்றுறந்து வீடடைந்தவரிய
      விக்காதையைத்தமிழால்-
இங்குமாதவித்தோரிசையுமென்றிசைப்பவிசைத்தனன்
     வீடுறக்கேட்டோர்-
கொங்கவிழ்பொழில்சூழ் பழமலையுறையுங்
     குமாரதேவென்னுமாமுனியே.
9
(வேறு - வாழ்த்து.)
சிவன்றிருவுருவாமைந்து சின்மயவெழுத்தும் வாழி-
நவந்தருநீறும் வாழிநயன நன்மணியும் வாழி
கவின்றருங் குமாரதேவன் கழலிணையிரண்டும் வாழி
அவன்றிருவடியா ர்தம்மோடா ருயிரனைத்தும் வாழி.
10
பாயிரமுற்றிற்று.

நூல்
நைமிசாரணியரிஷிகள்

(மகாராஜன் சரித்திரஞ்சொல்லும்படி கேட்கச்சூதர்
சொல்லத்தொடங்கல்.)

தருக்கிளர் நைமிசாரணியத்திற்றங்கிய
      முனிவர்கள்சூதன்-
வரப்பணிந்தேத்திக் கதைகள்பற்பலவாவகுத்
      துரைத்தனைமகாராஜன்-
திருக்கதையெங்கட்குரைத்திலையதுநீ
      செப்பெனச்சுருதியிற்சொல்லும்-
சுருக்கமில்காதையிதுவெனத்தொகுத்துத்
      தோமறக்கேண்மினென்றுரைக்கும்
11
(இது-முதல்.எ-பாட்டு-அரசன்சிறப்பு)

குழைத்ததண்சினைத்தேமாவி னொண்கனித்தேன்
     குலவியபலவினற்பலத்தேன்-
தழைத்திடுகதலிப் பழனுகுத்திடுதேன்
      றான்றிரண்டி லஞ்சியிற்ற தும்பி -
விழுத்தகுவயலிற் பாய்தர விளையு
      மிகுகருணாட தேசத்தான்-
இழைத்தநற்றவத்தாலுயிரெலாம்புரந்
      தங்கிருந்தரசாளுமோர்குரிசில்
12
(வேறு.)
மஞ்சமரிஞ்சிசூழ்மாபுரத்திருந்
தெஞ்சலிலெண்டிசையிறைவர்தாடொழத்
தஞ்சமென்றடைந்தவர்தம்மைக்காத்திகல்
வஞ்சகர்க்காய்மகாராஜமன்னனே.
13
(வேறு.)
தருநிழலரசுவைகுஞ் சதமகன்றிருவின்மிக்கான்-
உருவினின் மதனின்மிக்கா னுலத்தினிற்பலத்த தோளான் -
செருவினிவரியேறன்னான்றேனொடுஞி மிறும்பாட -
முருகுடைந்தொழுகுந்தாரான்மூவுல களிக்கும்வேலான்
14
(வேறு.)
அரசர்வந்திடுதிறை யளக்குமுன்றிலான்
முரசுகளனுதின முழங்குமன்றலான்
கரைபொருதிரையெறிகடலந்தானையான்
அருவரைமார்பினான்யாளிமொய்ம்பினான்
15
அரசர்தம்முடியுழுதவிருந்தாளினான்
எரிதவழ்திகிரியையேந்துந்தோளினான்
மருவலர்வலியினைமாற்றும்வாளினான்
தருநிதிக்கொடையினான்றருக்குநாளினே
16
(வேறு.)
கவரியோடால வட்டங்காரிகையார்கள்வீசப்
பவளவாயரம் பையன்னார் பாகடையுதவமுத்தத்
தவளவாணகையார் கீதந்தனிநடஞ் செய்யநின்று
குவலயமன்னர் போற்றக் குரைகடற்றானைசூழ
17
இந்திரனாலயம் போலிலங்கிய மண்டபத்தில்
சுந்தர மிருகராஜன் சுமந்த பூவணையின்மீது
வந்திருந்த வனிதன்னை மனுநெறி முறையிற்காத்தே
அந்தமில் போகந்துய்த்தங்கிருந்திடு மரசர்கோமான்
18
(அரசன்றனக்குப் புத்திரனின்மையால் வியாகுலமுற்றது)

தூம்புடைப்பிறையெயிற்றுத் துத்தியீராயிரந்தோள்
பாம்பினாற்பரிக்கலுற்ற பாரினைப்பரிக்கப்பின்னர்
மேம்படு புதல்வர்நந்தம் வீறுடை வயிற்றில்லென்று
தேம்படு தெரியன்மார்பன் சிந்தையா குலங்களுற்றான்
19
(இது முதல் உ-பாட்டு தீர்த்தயாத்திரை
முதலிய புண்ணியங்கள் செய்தமை.)

கங்கையே முதலாமிக்ககடவுண்மாநதியிற்றோய்ந்தும்
பங்கயாசனன் மாறிங்கட்பவளவார் சடையான்றன்னை,
அங்கையாற் பூசைசெய்து மதிதிகட்களித்துந்தீயில்
பொங்குமாகுதிகளீந்தும் பூவலம் வந்துந் தேவர்
20
ஆலயஞ்சாலையக் கிராரநந்தன வனங்கள்
கோலமாரிலஞ்சி கூபங்குளம் பலசெய்துமீரெட்
டேலுமாதானத்தோடே யிரணிய முதலீரைந்து
சாலநற்றானமீந்துந் தரும மெண்ணான்குசெய்தும்.
21
(இது - முதல் உ - பாட்டு
புத்திரோற்பத்தியும் சாதகன்மமுதலியன செய்தமையும்.)

தவம்பல புரிந்துவேந்தன் றனையனைப் பூத்தபின்னர்
பவந்தனைத்துடைத்தேன்மேலாம் பரமநற் பதமு முண்டென் -
றுவந்துசாதககன்மத்தோடொழிவறு கருமமெல்லாம் -
நவந்தரச்செய்துநாமநன் மகாராஜனென்றே
22
(வேறு.)
வேதநீதியிற்கூறிவியன்றர
ஓதவெண்ணென் கலையுமுணர்த்துவித்
தேதமற்ற குரவற்கிரணியம்
போதுமென்னப் பொழிந்தனன் கொண்டல்போல்
23
(இரதபரீக்ஷைமுதலியவற்றிற் பயிற்றுவித்தபின்
விவாகத்துக்குப் பிரயத்தனஞ்செய்தமை.)

கொடிநெருங்குங் கொடிஞ்சியந்தேர்பரி
கடமலிந்தகயமொண் சிவிகையிப்
படியிலூரப் பயிற்றுவித்தாசிலா
வடிவிலங்கு மகற்குமணஞ்செய்வான்
24
(அரசர்களுக்கு விவாகபத்திரமனுப்புதல்.)

மடங்கலன்ன பலமுள்ள மாமன்னன்
இடங்கொளொண்ணெழுதே சத்திறைவர்க்கும்
முடங்கள் போக்கினன்கண்டு முடிமன்னர்
தடங்கொள் சேனைகள் சூழ்வரச்சார்ந்தனர்
25
(வேறு.)
(இது - முதல் 2 - பாட்டு
நகரமலங்கரித்தல் )

வடிகொள்வெண் சுதையாற்பித்திகை தீற்றிவானு
     றமணிக்கொடிநிரைத்துக் -
கடிநறுஞ்சாந்தங்குங்கு மந்தன்னாற்
      கமழ்தரமறுகெலாமெழுகிப் -
பொடிகொள் சிந்துரத்தாற் கோலமேபுனைந்து
      பூமலர்பொரிநனிசிதறிக் -
கொடிகொண்மூதெயின் மேன்மாட
      மொண்சிகரி கோதறபுதுக்கியேகுலவ
26
(வேறு.)
கதலியங்க முகுநட்டுக் காவணமலங்கரித்துப்
புதிய தோரணங்கள் கட்டிப்பொற்குடஞ்செறித்துத் தீபம்
இதமுறவெங்கும் வைத்தே யிந்தி நகரம்போல
மதுமலர்த்தாம நாற்றிமா புரியலங்கரித்தார்
27
(இது - முதல் 3 - பாட்டு
பெண்ணின்சிறப்பும் விவாகஞ்செய்தலும் - வேறு.)

வில்லி லங்குகைவேந்தர்மரபினில்
நல்லசாமுத்திரிக நூனன்கதாச்
சொல்லிலக் கணத்தோடுதுரிசிலா
முல்லைமாலை முருகுவிரியவே
28
மூவுலகதனிலுள்ள முகிழ்முலைக் கருங்கட்செவ்வாய்ப்
பாவைய ரெழிலிற்போதன் பகுத்தெடுத்துயிரோடேய,
ஓவியந் தீட்டினானென்றுல கினிலுரைக்கச் செய்ய,
பூவுறை திருவிரும்பும் பொற்புடனவதரித்தே
29
(வேறு.)
இலங்கியவாலொண்டளிர்குழைத்தினிய
      விருதனக்கோங்கிணையரும்பி -
நலங்கிளராம்பல் குமிழிருகுவளை
     நண்ணுசெஞ்சரோருகம்பூத்துத் -
துலங்கிய புயலைச் சுமந்திருதாளாற்றோமிலா
      மின்னெனநுடங்கிப் -
பலந்தரப்படருங்கொடியினைவேதப்
      பண்பினின்மன்றல்செய்வித்தே
30
(மகாராஜனுக்குப்பட்டாபிஷேகஞ்செய்தல்.)
(வேறு.)
அருந்ததிகணவன் முதன்முனிவரர்களரு
      மறைக்கிழவர்கடம்மால் -
பொருந்தியகங்கைப்பூம்புனலாட்டிப்
      பொன்னவமணிகளாற்குயின்ற -
விரிந்திடுமடங்கன்மென்றவிசேற்றி
      மிளிர்நவமணிமுடி கவித்துப்,
பருந்தடர்வேலான் பௌவமார்புவியைப்
      பரியெனத்தோன்றல்பாலளித்தான்
31
(மகாராஜன் மனைவியோடு வாழ்ந்திருந்தானெனச்
சூதர்சொன்னமைகேட்டுரிஷிகள்பின்னும்
வினவச்சூதர் சொல்லத்தொடங்கல்.)

சோகமேயின்றியிருந்தனன்வேந்தன்
     றோன்றலும் பார்பொதுநீக்கி -
ஏகமாச்செங்கோலெங்கணுஞ்செல்ல
      வெண்டிசைவிசயமுஞ்செய்தே -
மாகநாடென்னப்போகமேதுய்த்து
     மடந்தையோ டிருந்தனனென்றான் -
வாகைவேலவன்பி னென்செய்தானென்ன
     மறையவர்க்குயர் முனிவகுக்கும்
32
(இது - முதல் 2 - பாட்டு -
மகராஜன் முத்திக்கு ஞானமேசாதன மென்றுணர்தல்.)

மனைவியுந்தானுமோர்நினைவாகி
      மாறுபாடின்றியோர்காலும் -
தனையுணர்யோகிதந்தைதாய்
      கடவுடங்களையனுதின மிறைஞ்சி -
அனையவருரைத்தநெறிதனினடந்து
      மருத்தங் கண்மனசினிற்றரித்தும்-
வினையமதுடனே நூன்முறையவரை
      வினவியுஞ்சிலபகல்போக்கி
33
தனியிடமதனிலிருந்திருவர்களுந்தங்
     களிற்றாமுணர்ந்துசாவித் -
துனிசெய்மாமாயைப் பிறப்பதுநீங்கிச்
      சுகமதையடைந்தனுதினமும் -
இனிமையதாகவிருக்கலாஞானத்
      தென்றெணிஞானிகட்சார்ந்து-
நனியவர்பாதபூசனைபுரிந்து
      நாடொறும் வினவினர்நன்றாய்
34
(இது-முதல்-3-பாட்டு-
அந்தஞானம் சற்குருசேவையின்றி விளங்காதெனத்துணிதல்.)

இருவரிலரசன்றனக்கறிவோங்க
      விருவகைச் சார்வையுமகற்றிக்-
குருவுடற்காவறனையுங்கைவிடுத்துக்
      கருத்தசையாது மெய்யுணர்வை-
மருவிடிலகப்பற்றற்றுமேல்வீடு
      வாய்த்திடுமதற்கு மெய்ஞ்ஞானக்-
குருவருளின்றிவிளங்கிடாதெனவே
      கொண்டனன் மனத்தினிற்றுணிவே
35
மனைதனிலாசைபொருந்தியேநின்று
      மகிமையின் ஞானியாமெனவே-
தனைமிகமதிப்போன்றன்னை வந்தொருவன்
      றந்திடு ஞானமென்றிரந்து-
வினவன் மட்டையினைப்பருகுவோன்றன்னை
      வேண்டித்தென்னம் பழந்தனையே-
இனம்பணித்திரிவோன் புத்திபோன்மென
      வேயியம்புவர் முற்றுணர்பெரியோர்.
36
வேதவாகமசாத்திரபுராணங்கள்
      விளங்கவேகற்றுணர்ந்தவற்றைத்-
தீதறவெவர்க்குந் தெளிவுறவோதிச்
      செப்பியவந்நெறியதனில்-
சாதகமிலாத குருவினையொருவன்
      றானடைந்தானந்தம்வினவல்-
ஏதமாங்கழுதை தன்னைக்குங்குமத்தி
     னியல்புகேட்டிடுதல் போன்மென்றே
37
(சற்குருவையடைந்து விண்ணப்பங்கூறல்.)

சீவர்களிடத்திலருள் சிவபத்தி திருந்திய
      துறவுமெய்ஞ்ஞானம்-
ஆவதோர்வடிவாம் வேதமாமுனியைய
      மலவாரணியத்திலடைந்தே-
தேவர்கடேவே துன்பமோர்காலுஞ்
      சென்றிடாமுத்திதானெய்திச்-
சாவதும்பிறப்பு நீங்குமோர்நெறியைச்
     சாற்றெனத் தாழ்ந்திடமுனிவன்
38
(சற்குருமாணாக்கனுக்கு உபதேசித்தல்.)

இருவகைச் சார்வாம் புறப்பற்றைநீக்கி
      யிச்சையின்மீட்டதினினைவு-
மொருவியேயுடற்காவலையுங்கைவிடுத்தே
      யட்சரணங்கள் வாதனையும்-
குருவருணெறியே யொடுக்கிடில்வீடுங்
      கூடுந்தானாகவேபவத்தின்-
கருவழிந்திடுமிந்நெறியைநீவிரைவிற்
      கைக்கொண்டுசெல்லெனவுரைத்தான்
39
(மகாராஜன் சிலகாலத்தின்பின் தனித்திருந்து
உபதேசமொழிகளைச்சிந்தித்தல்.)

அந்நெறிகுருவாலையமுந்திரிவுமகன்
      றிடத்துணிவதாக்கேட்டு-
முன்னெறியான வரசியற்கையினின்
      முயன்றனன்சிறிதுநாளொருநாட்-
பின்னெறியதனை நினைந்தனைவரையும்
      பெயர்ந்திடவிடை கொடுத்தரசன்-
மன்னெறிக்கோல மகன்றந்தப்புரத்தில்
      வதிந்தனனொருவனாய்த் தனித்தே
40
(இது-முதல்-2-பாட்டு-தன்னைவந்துகண்ட
அரசர்முதலாயினோர்க்கு இனிஅரசியற்றலைவே
ண்டாது துறவுபூண்டுவீடடைவேனெனக்கூறல்.)

அரசர்களமைச்சர் புரோகிதர்
     பெரியோரனைவருமவ்விடத்தேகி-
அரசனை நோக்கிநித்திய கருமமகன்று
     வாளாவிருந்திடுதல்-
அரசிலக்கணமன்றெனவவர் வேண்டவவர்களை
      நோக்கியேவேந்தன்-
அரசியற்கையினை வேண்டல னென்னை
      யறியவே வேண்டினனன்றே
41
ஆண்டதோரரசுதனிலும்போகத்து
     மாசையற்றேனினி வேண்டேன்-
மாண்டதோர்வனத்தி லொருவனாய்த்தனித்தே
     மனத்தசைவறுத்துவீடடைவேன்-
பூண்டவென்மனமிங்கினித் திரும்பாதுபோகத்தைப்
     பொருளெனவெண்ணி-
வேண்டலனீங்களர சனாவேறேவிதித்துக்
      கொளுங்களென்றுரைத்தான்
42
(இது-முதல்-3-பாட்டு-இராச்சியத்தைவிடலாகா
தெனமந்திரிமார்வற்புறுத்த-மகாராஜன்
இராச்சியத்தின் துன்பமும் முத்தியினின்பமுமுரைத்தல்.)

ஆதியினினதுதாதையிநினையே
      யரசினினிளை மயிற்சூட்டத்-
தீதின்றியுனதுபுயவலிமையினிற்
      செகமதைத் தாங்கினையினிமேல்-
நீதியினுணிய மதியினாத ரவினின்னைப்
      போலொருவர்மற்றுளரோ-
ஈதியற்கையதன்றிவ்வுடலுடனேயிச்
     செல்வமன்றி வேறுளதோ.
43
அலதுநீயேகி னவனியுங் காப்பற்றவத்திலே
      யலைந்திடும்யாமும்-
சலனமதுறுவேமித் தகையெமை
      நீதவிக்கவிட்டேகுதல்கடனன்-
றிலகிடவெமக்கீதருளெனவமைச்
      சரியம்பிடவரசனும்பார்த்தே-
உலகமெய்யனவெண்ணுறு மதியுடையோர்க்
      குரைப்பினுமுணர்வுதியாதால்
44
இவ்வரசியற்கை யற்பமற்றிதனாலெய்திடுந்
      துன்பமிக்களவின்-
றவ்வகையதனை யூகமின்மையினாலறிகிலிர்
      நீங்களின்பென்றே-
எவ்வகைநினைந்தீரினியெக் காலுங்கட்கீதின்
      பமலதெனத்தோன்றும்-
ஒவ்வமற்றிதனுக்கூகமேதோன்றா
      துங்களுக்குலகயூகுதிக்கும்.
45
(மகாராஜன் நகரைவிட்டுப்போம்போது
நகரத்தார் போயழுதல்.)

என்றுமற்றனேகமாவிரித்தரசனெடுத்தமைச்சர்
      கடமக்கியம்பி-
நின்றுபின்னவரை நிலுமென நிறுத்தி நிதிதுனும்
      பொன்மனைவிடுத்தே-
சென்றுபின்னகாவீதியினடக்கத் திரண்டனைவர்களும்
      பின்றொடர்ந்து,
வன்றுயரடைந்து வாடியே மெலிந்து
      வாரியினோசையி னழுதார்
46
(இது-முதல். 2-பாட்டு-நகரத்தாருடைய
துக்கத்தைச் சாந்திபண்ணல்.)

அவரவர்வினையினவரவர்
      வருவாரவரவர்வினையளவுக்கே-
அவரவர்போகமென்றதே
      யாயினாருக்கார்த்துணையதாகுவர்கள்-
அவரவதேகமுளபொழுதுடனே
      யாதரவாரெனநாடி-
அவரவரடைதனெறிகன்
      மத்தடையுமாதர வாதரவாமோ
47
வினையுளவளவுங் கூடியேநிற்கும்
      வினையகன்றிடிற்பிரிந்திடுமால்-
வினையினால் வருமா தரவினினியற்கை
      மெய்யுணர் வத்தகையலவே-
வினையிலையுங்களிடத்தினானிருக்க
      மெய்யுணர் வொன்றையேநாடி-
வினையறுகானம் புகுதவேவேண்டி
      விரும்பினே னீர்நிலுமிங்ஙன்
48
உறவினர்கள் தமதுறவு பாராட்டி-
அரசனைத் தடைப்படுத்தல்.

என்றுதல் வேந்தனேதிலார்போலவே
      கினனனை வருங்கண்ணீர்-
நின்றெதிர்சொரியவாய் விட்டேயலறி
      நின்றனர்தமர்கள் பின்னேகி-
இன்றெமையாவர்காத் தளித்திடுவரினியை
      நீயேகுதனீதி-
அன்றெனவுரைத்தாரவர்களை
      நோக்கி யரசனீதுரைத்தன னன்றே
49
(வேறு) (அரசன் உறவுபகை வேறெனல்.)
உறவாகுமெனவெனைநீர் தொடர்பதியல்
      பன்றாகுமுயிர்கட்ெகல்லாம்-
உறவாகுஞான நனி பகையாகு
      மஞ்ஞான முய்த்துநோக்கின்-
உறவானவதையடைந்து பகையான
      விதைநீங்கியொருமையாக-
உறவாத றனக்குத்தா னேயென
      மற்றுறவுவிடுத் துறையுமென்றான்.
50
(தாய்தந்தையர் அரசனைத்தடுத்தல்.)

தந்தைதாயிருவருந்தம் புதல்வனெனும்
      வாஞ்சையினாc றான்பின்னேகி-
மைந்தவா வெங்களிருவரையுமெவர்
      காப்பதற்கு வைத்தாய்ந்தான்-
சிந்தை தானுனக்கெங்கே மகனேயுன் றிரு
      முகத்தைத் திரும்பிக்காட்டாய்-
நொந்துதான் பெற்றவயி றெரிகின்ற
      தெனவுரைக்க நோக்கி மன்னன்
51
(அரசன்நீவிர் தாய்தந்தையரன்றெனல்.)

அறிவை நோக்கிடிலதறகுத் தாய்தந்தையிலை
      யி்வுடலதனைநோக்கில்-
இறையுநீருபாதான காரணமன்றிரு
      மாயையினிலுண்டாகும்-
குறியிதுவிங்காயி்ன் மண்ணிலெனைப்
      பெறாதவரிலையக் கொள்கை நீரு-
நிறைமதியிலரேநீர் நில்லுமென
      விருவரையுநீத்துப் போனான்
52
(மனைவிவந்து தடுத்தல்.)

அரிவையர்கடமக் கிலக்கணங்கூறு
      நூல்தனில்தனையெல்லாம்-
உரிமையதாவுடையவளா மினியமனை
      தொடர்ந்தேகியுருகிநின்று-
பரிவினுடனடிகள் பணிந் தரற்றியே
      பதைபதைத்துப் பனிகண்பாயத்-
தரியெனுமை விடுத்துலக மதனிலொரு
      கணமேனுஞ் சாவேனென்றாள்
53
(அரசன் நாயகன் வேறெனல்.)

நின்னுடையநாயகனை நினதுள்ளேயுற
     நோக்கி நிற்கமாட்டா-
துன்னுடையநாயகனென் றென்றனையே
     கருதிநீ யழல்வதென்னே-
மின்னனைய விடையாய்கே ளனைவருக்கு
      நாயகனோர் மேலாமீசன்-
அன்னவனையேதேடிப் போகின்றே
     னெனவரசற்கரிவைசாற்றும்
54
(மனைவிபெண்களுக்குக் கணவனையின்றிக்
கதியில்லையெனல்.)

ஞானமானது பொதுவேநூல தனிற்றறவதற்கு
      நவில்வதில்லாள்-
ஆனமாதினையலவோவிடுகவெனவறையும்
      பதியானவுன்னை -
ஈனமாவிடுகவெனவறையுமதோதுறவறமிங்
     கெனக்கென்சொல்லும் -
ஆனதாலுமையொழிந்து கதியிலையேயென
     வெணியானடுத்தேனென்றாள்
55
(அரசன் மறுத்துச்செல்லல்.)

ஆகமத்தின் விதிதவறா தறைந்தனைநீ
      விவேகியேயாவானும்-
தேகமுதற் பிரபஞ்ச மதனினசைவிடுத்து
     வனஞ்செல்லாநின்றேன்-
நாகமுலையாயெனுரை தடுத்தலுன்றன்
      விரதமல நாடுதன்னில்-
போகுதியென்றவளை விடுத்தேதிலரைப்
     போலதன்று போகாநின்றான்
56
(இது-முதல்.2-பாட்டு-மனைவிபுலம்பிக்கொண்டு
மாமன்வீட்டிற்குப்போய்விடல்.)

விரிவாய ஞானமதையுணர்ந்தாலு
      மடந்தைபதிவிலங்கநிற்றல்-
அரிதாய தகைமையினாலேங்கியேபதை
     பதைத்துமவனைநோக்கித்-
தரியாலுகதறியே வினைதனையே
      நொந்துதான்றளர்ந்துநின்று-
தெரியாது மறைந்தவிடந்தனின்
மிகவுமுருகியே தேம்பிவீழ்ந்து
57
வேந்தனேயுனைவிடுத்து முலகமதி
லிருக்கவோ விதித்தானீசன்-
தீர்ந்ததோவுமக்கெனக்கும் வினைதானு
     மின்றளவிற் சேர்ந்துநிற்கும்-
போந்தவுமையெக் காலங்காண்பேனானி
னியெனவே புலம்பிமாதும்-
சார்ந்தனள்பின் றிரும்பியே நகரதனின்
      மாதுலன்றன்சார்புதன்னில்
58
(இது-முதல்.4.பாட்டு-
அரசன்வனத்திலே ஞானியாய்த்திரிதல்.)

அரசனந்த நகர்விடுத்துத் தேசநாடுகளு
      மகன்றடவிசென்றே-
இரவுபகலக நிலையே நிலையான
     விருந்தவர்களிடமே சேர்ந்து-
பரகுரு வினுபதேசத்தரிய பொருள்
      வினவியவர்பகரக்கேட்டுத்-
திரமனமாயொருவராற்
      கலங்காதஞானியாய்த்தீரனாகி
59
(வேறு.)
நகர்தனிலேபிச்சை நண்ணியே மனைகடோறும்-
அகமகிழ்ந்தங்கையேற்றே யவ்விடத்தருந்தியாங்கே-
செகமுளோர்பேயென்றெண்ணிச்சிரித்திடநாணமின்றி-
இகபரத்திச்சையற்றேயேகனாயுலாவலுற்றான்
60
பொருந்திவாழிடமொன்றாகிற்
     பொருந்திடும் பற்றென்றெண்ணி-
இருந்திலனோரிடத்து மெங்கேங்கு
      மொருவனாகித்-
திருந்தியசமாதிவிட்டுத் திரும்பிடா
      துறைகவுன்னி-
இருந்திருந்திடங்களெங்கு மேகமே
      நோக்கிநின்றான்
61
தோன்றிடு முலகமெங்கே தோன்றிடு
      மென்னநோக்கித்-
தோன்றிடுநினைவிலென்றே தோன்றிய
      நினைவுதானும்-
தோன்றிடுமிடத்தைப்பார்த்துத் தோன்றிடுஞ்
      சொரூபத்தென்றே-
தோன்றிடும்பொருள்களெல்லாஞ்
     சொரூபமேயென்றுகண்டான்
62
தோன்றிடும் பொருள்களுண்டாய்த்
      தோன்றியேயின்பமாகித்-
தோன்றிடு மதனாலந்தச்
சொரூபமேயென்றுகண்டு-
தோன்றிடுஞ் சொரூபந்தன்னிற்
றோன்றுமீதசத்தேயென்று-
தோன்றிடுஞ் சொரூபந்தானாய்த்
துளக்கமற்றிருந்தான் வேந்தன்
63
கடிநகர்தோறுஞ் சென்றுங்கானகந் தோறுஞ்சென்றும்-
படிவலமாகவந்தும் பார்வை மாறாட்டமின்றி
மடிவிலாமனத்தனாகி மாசிலா நிலைமைபெற்று-
முடியுடைவேந்தர்வேந்தன் முத்தியேவடிவமானான்
64
முத்தியேவடிவமான முடியுடைவேந்தா வேந்தன்-
எத்திசைதனக்கும் ராஜனெமை விடவேறில்லென்று-
சத்தியமாகவெண்ணித்தன்னிட மதனிற்றன்னைச்-
சுத்திசெய்தனைத்துமாகிச் சுயஞ்சோதியாகிநின்றான்
65
தன்னையேயன்றியொன்றுந்தானுதியாவிடத்தின்-
மின்னையேயொத்தவைய மித்தைகற்பிதமதென்றும்=
பொன்னையேயன்றிவேறுபூடணமிலதுபோல-
என்னையேயன்றியொன்றுமில்லெனத்தேர்ந்தான்வேந்தன்
66
உலகினைவேறதாகவுணர்ந்திடிற்பந்தமாகும்,
உலகினைத் தானேயாகவுணர்ந்திடின்முத்தியாகும்,
இலகிடத் தோன்றலெல்லாமென்னினை வேயென்றெண்ணி,
இலகிடக்கண்டு வேறற்றிருந்தன னிளைமைவேந்தன்
67
ஏகசக்கரமதாக விருந்தரசாள்வோன் செல்வப்
போகமுந்திரணமாமப் போதநாட்டரசியற்கை-
யூகபுந்தியினாலா சானுப தேசத்தாளவந்தச்,
சோகமற்றிடு நாடெய்தித் தொழிலெலாமுடித்தான் மன்னன்
68
பந்தம்வீடென்றுமில்லை பரம்பொருளொன்றேயென்றும்-
தந்தஞ்சங்கற்பத்தாலேசாலமோகிப்பர்தீயோர்-
அந்தமாதிகளுமில்லா வரும் பொருணாமேயென்று,
சந்ததநோக்கியந்தத்தற்பரந்தானேயானான்
69
குறைவிலாநிறைவதாகிக்குளிர்ந்திளைப்பாறிவேந்தன்,
இறையளவேனுந்துன்பமின்றியேயின்பமாகி,
உறைவிடமின்னதென்ன வோரிடமின்றியெங்கும்,
நிறைவதேயிடமாய்நின்றானிகரின்மாராஜன்றானே
70
எங்குமாய் நிறைந்துநின்ற வேகராச்சியம தாள்வோன்-
தங்குதலின்றி யெங்குந்தானெனக் கண்டு தூயோன்-
இங்குறைந்த கன்றபாண்டத்தியல் பினெஞ்சருவம்பற்றி-
அங்குருவகற்றி நின்றானானந் தியாகிவேந்தன்
71
சீவன்முத்தர்கள் பானிற்குஞ் செப்பியமனத்தரூபம்,
மேவரும்பரம முத்திமேவிடினாசமாகும்-
தாவருநிலைமை நன்றாச் சற்குருவருளாற்பெற்றுக்-
கேவலமாகி நின்றான் கேடிலாஞானவேந்தன்
72
(இது-முதல்-4-பாட்டு
-மந்திரி அரசனிடத்திற்போய் அவன்றன்மையக்காணுதல்.)

இத்தகை ஞானம்பெற்றே யெழின்முனியாகியெங்கும்-
சித்தனாய்த் திரிதறன்னைச்செப்பு முன்னமைச்சர்தம்முள்-
வித்தகனொருவன் கேட்டுவினவிடவேண்டுமென்றே-
கத்தனாமரசைத் தேடிக்கண்டடி பணிந்துநின்றான்
73
பூவணையாகி வானம் பொருந்துமே மேற்கட்டியாகித்,
தீவமாதாகியிந்து செங்கதிர் வீசுங்காற்று-
மேவு சாமரமதாகி விடுதலை மனைவியாகிக்-
கேவலமின்பமாகிக் கிளர்ச்சியாய் நின்றான்வேந்தன்
74
ரதமுதற்சேனை சூழரத்ந சிங்காசனத்தில்,
விதவலங்காரத்தோடு வீற்றிருந்தமரும் வேந்தன்-
உதவுகோவணனாய் மேனி யுருத்தெரியாத நீறாய்-
முதன்முடிவிரித்துநின்றான் முனிவனாயொருவனாகி
75
கரிரதமிவர்தலின்றிக் கானடையாகி யெங்கும்,
உரியதோர்மனை யூணின்றியூரெங்கு முண்பானாகி-
அரியராசாங்கக் கோலமகற்றியேத வாங்கமாகித்-
திரியுமவ் வரசைநோக்கிச் செப்பினனமைச் சன்றானே
76
(இது-முதல்-2பாட்டு-மந்திரி அரசனைவினாவுதல்.)

அவனியினினக்கு மேலோராசனு மில்லையிந்தத்-
தவவடிவாகி யெங்குஞ்சரித்திட லெற்றினுக்கோ-
நவமதாயுடலிதோடே நண்ணுவதெனை யீதன்றி-
இவணெனக் கருளவேண்டு மெனக்கறிவோங்குமாறே
77
பதத்தினை வேண்டின்முன்னம் பற்றிநின்நில்லறத்தைப்-
பதப்பட நிறுத்தியேகல் பண்பதாமேலாமுத்திப்-
பதத்தை வேண்டிடிலோ ஞானப்பார்வையிற் கூடுநீயெப்-
பதத்தினை வேண்டியிந்தப் பரதேசியானதென்றான்
78
(இது-முதல்-34-பாட்டு-அரசன்மந்திரிக்கு உத்தரங்கூறல்.)

அமைவுடையமச்சின் மிக்கோ யடைவுடன்வினவிக்கேட்டாய்-
இமையளவேனுஞ் சித்தமிதுவது வெனவோடாது-
சமைவுடன் கேணீசொன்ன சங்கைக்குத் தரங்கணன்றாய்-
நமைவிடவேறோர் வேந்துநாட்டிலை யென்பதொக்கும்
79
பதமதைவேண்டினில்லைப் பதப்படநிறுத்தியேகல்,
இதமென்றலொக்கு முத்தியெய்துதன் ஞானப்பார்வை,
விதமதிற்றோன்றுமென்றாய் விருப்பமாக் குடும்ப பாரத்-
திதமதாய ழுந்துவோருக் கெங்ஙனம் பார்வைதோன்றும்
80
மனமிரு பொருளைப்பற்ற மாட்டாதட்டாவதான
இனமவை புறநோக்கான வேதினாற் கூடும்வீடு-
கனவுண்ணோக்காகு மில்லங் கருதியபுற நோக்காகும்-
அனக விவ்வூகந் தோன்ற வறைகுவநாமே கேளாய்
81
வேறு.
தென்றிசை நடப்போர்கங்கை சென்றுதோய்ந்திடுவரோதான் -
அன்றியு மவனிவாழ்க்கைக் கமைச்சர்களுடனே காந்தம் -
ஒன்றியோயூகஞ் செய்வோருலக வேந்தாயினோர்கள் -
நின்றிதைநோக்காயில்லினிற்பவர் முத்திசேரார்
82
பாசந்தான் பகையதாகப் பார்வை பெற்றிடிற்பாசத்தில்-
பாசந்தான் வைத்துப்பின்னும் பற்றவுங்கூடுமோதான் -
பாசந்தான் பகையதென்றே பகருநூன்மட்டேகற்றோர் -
பாசந்தான் விடவுமாட்டார் பரமெலா மெனவாய்ப்போக்கும்
83
அந்தமாதியு மிலாவீடடைந்துடற் பிறப்பறுக்கச்
சுந்தரஞானம் போதுந் துறவறமேதுக்கின்றே-
மந்ததிகாரி யோரை மதித்து நூலுரைக்குஞ்செய்தி,
அந்தமதான பேருக் கத்தகை விளம்பாதென்றும்
84
வேறு.
தோன்றுகின்ற பொருளியல்புந் தோற்றுவிக்கும்
     பொருளியல்பும்-
தோன்றவுனக்கியா முரைக்கச் சோகமறக்
      கேட்டிடுவாய்-
தோன்றுபொருள் களநித்தமுமாய்த் தூய்மையின்றித்
      துக்கமுமாய்த்-
தோன்றுந்தோற்றுவிக்கும் பொருள்
      சுகமாய்ச் சுத்தநித்தமுமாம்
85
பாலனான பருவம்போம்பன்னு குமாரப்பருவம்போம்-
கோலமான தருணம்போங் கோலையூன்றிக் குனிந்தெழுந்து-
காலன்மாய்க் கவனைவர்களுங் கல்லென்றழுது பேர்மாற்றி-
ஏலப்பிணமென்றொரு பெயரிட்டிடுகாட்டிடுத லொருதலையே
86
கருவினின்று மகிழ்ந்து போங்கண்ட குழந்தையினுங்குமரப்-
பருவந்தனிலும் போந்தருண பருவந்தனிலு மழிந்துபோம்-
வுருவநடுங்கு மூப்பதினுமொடுங்குமெந்தக்காலையினும்-
ஒருவியழிதலியல் பாகுமுலகத்துடலின் வாழ்க்கையுமே
87
பஞ்சபூதமழிந்துபோம் பானுத்திங்களுடுக்கள்போம்-
வஞ்சவசுரர் மடிந்திடுவர் மாகர்பதம்போம் வல்லரக்கர்-
துஞ்சுவார்கள் போகிபதந்துஞ்சும் பிரமன் பதந்தானும்-
துஞ்சுந்திருமால் பதந்துஞ் சுந்துஞ்சாதொன்றே பரமபதம்
88
தோலிரத்தமெலும்பிறைச்சிசுக்கல
      மேதைமச்சையொன்றாய்த்-
தூலிகரித்தவுடம்பாகுந் தொட்டவெவை
      யுந்தன்வடிவாய்க்-
கோலியடக்கிக் கொளுமிதனைக்
      கூறாநோக்காது-
போலியுணர்வோர் மகிழ்வெய்தும்
      புனிதமென்றும் பரமபதம்
89
அரந்தையதனை யொழுங்காக
      வறையக்கேணீய வனியெல்லாம்-
பரந்தசிருட்டிதிதி யொடுக்கம்
      பண்டாநிகழுஞ் சிருட்டிதனில்-
பொருந்து பெரியதுன்பைந்துபோய்
      மாண்டுறில தெண்மடங்கே,
இருந்ததிதியு மிரண்டாகு
      மிளமையென்றுமூப்பென்றும்
90
விருத்தபருவ மிகத்துன்பம் விளங்குமிளமை
      யிரண்டவையின்-
வருத்துபிணியின் மிகத்துன்பம்
      வளமையிளமை மூன்றாகும்-
கருத்ததறியாக் குழந்தையென்றுங்
      குமாரனென்றுங் காளையென்றும்,
அருத்தமறியாததிற்றுன்ப
      மடையும்பாலப்பருவத்தில்
91
தந்தை தாயராசிரியர் தாங்கண் முனிதறனக்கஞ்சிச்-
சிந்தை கலங்குங்கவு மாரஞ்சிறந்த காளைப்பருவத்தின்
முந்துபசி நோய்காம நோய்முடுகித் தணிக்கப்பொருடேட-
இந்த்ப்புவனத்திரவு பகலிடையறாத் தொழிற்றுன்பம்
92
பொருளுண்டாகிற் காப்பதனாற் பொருந்துந்துன்பமரசாகின்-
ஒருதம் மிகுத்தவரசரா லுதவுந் துன்பமொருகுடைக்கீழ்-
நிருபனாகினோய் மரணநேருமென்னும் பயத்தானும்-
வருவதெனையோ மறுமையினிலென்றும் வாடித்துன்புறுமே
93
மாகர்க்கசுரர் பகையுளது மகிழ்ச்சிவாட்டமிகவுமுள-
தாகத்தகலா நோயுமுளதனங்கனுளது நசையுளது-
போகத்தழுந்தன் மிகவுளது பொன்றலுளது கற்பத்தே-
சோகத்திறங்களிவை யுடைய துறக்கத்தென்னை சுகமுளதே.
94
தேவர்மனிதர் துன்பத்தின் றிறங்களிவ் வாறாகியிடில்-
ஆவகீழாமிருக முதலரசமீறாமை வகையில்,
ஒலில்லாத்துன்புக்கோ ருவமையில்லை நிரயத்தில்,
நோவதுன்பஞ் சொல்வதெனை நோயேபவத்திற் சுகம்வீடே
95
(வேறு.)
இந்த விழிவையுடைய விந்தமாயையகத்தே,
அந்த வுயர்வையுடைய வந்தப்பிரமஞ்சத்தே-
தந்த மனதிற்றேர்ந்தோர் தள்ளியஃதைநிற்பர்-
உந்தன் மனதினன்றா யூகித்தமைச்சபாராய்
96
பொய்யென்றிதனை யறிந்தோர் பொருந்திநிற்பதுளதோ-
மெய்யென்றதனை யறிந்தோர்மேவா திருப்பதுளதோ-
ஐயமுளதோ விதனிலமைச் சபாராய் நன்றாய்,
உய்யவறிவிலா தோருழல்வா நீக்கமாட்டார்.
97
பொய்யை மெய்யென்றறிந்து போதமின்மையாலே-
மெய்யைப் பொய்யென்றெண்ணி மெலிந்தே யுழல்வருலகர்-
பொய்யைப்பொய்யென்றறிந்துபோத குருவினருளின்-
மெய்யை மெய்யென்றறிந்தே மெலிவுதீர்வ ருயர்ந்தோர்
98
துன்பந்தோன்றி லெவருந் துறந்தேகராய்த்தனித்தே-
இன்பந் தேடலியற்கை யின்ப மென்றே தோன்றில்-
அன்பதாக நீங்காரவர்கட் கெங்கன்கூடும்-
நன்பரம ஞானநாட்டமமைச்ச சொல்லாய்
99
இழிவை யுணர்ந்தாலுணர்வை யெவருந்தேடிநோக்கும்-
இழிவை யுணராருயர்வை யெய்தநோக்காரென்றும்-
இழிவை யிழிவென்றுணர வெந்தக்காலம் வாய்க்கும்-
இழிவை யுடையோர்க்கமைச்ச விதனையூதித்துணராய்
100
பேதவாதிகளைப் போற்பிரபஞ்சம் வேறெனவே,
ஈதகன்றதலவே யெமையன்றியதில்லென்றே-
போதவிழியிற்றுறந்த புனிதத்துறவே கண்டாய்-
சீதமதிபோற் குளிர்ந்து செனனவெப்பந் தீரும்
101
இருந்தவிடத்தி லிருந்தே யெய்தலாமென் றுரைக்கில்-
திருந்து நிமலமனத்தோர்தீரரெனினுமொழிந்தே-
பொருந்தியே காந்தத்திற் போதமடக்கவேண்டும்-
வருந்துமனத் தோர்க்கென்னை வாய்க்குமமைச்ச சொல்லாய்
102
முனமேமனைத்து முடித்துமுழுது முணர்ந்தோரில்லின்,
இனமேசென்று நின்று மேகநீங்காரென்னில்
தினமேயகமாய் நிற்போர்செகத்தினியல் பையுணரா
ர்கனமாம் யாழ்ப்பாணத்தின்கப்பலோட்டம்போல
103
ஒருத்தனோரூருளனை யொருவெந்தரக் கின்முன்னம்-
இருக்குமிடத்தைநீக்கியேக ராசதானி-
இருக்குமன்றி முன்கணிருக்குமோதான்சொல்லாய்
திருக்கு ஞானமுடையோர் செகத்தைமெய் யென்றுழலார்
104
(வேறு)
மனையினின்றாலும் பொருளுயிர்ச்சார்வின்
      வருத்தனங்கெடுதலின் மகிழ்ச்சி-
இனிமையில்வாட்டம் விடையவின்
      பதனிலெட்டுணையாயினு மாசை-
பினையிதிற்றமது பிரவிர்த்திதானும்
      பேசுமிந் நான்குமில்லெனினும்-
தனையுணர்வதற்குச்சாதகஞ் செயுங்காற்
      றள்ளியின் னிற்றலேதகுதி
105
தீதுறுமனையின் பினையிகழ்ந்தந்தச்
      செம்பொருளின்பமே வேண்டிச்-
சாதகமதனிற்றொடங்கு கால்விடையந்
      தடையதான் சாத்தியமான-
போதினி லவையுந்தோன்றிடா தந்தப்
     பொருவிலானந்த மேலிடவே
ஆதலிற்றுறவின்ஞான மஞ்ஞான
     மாகுமென்றறைகுவர் பெரியோர்
106
இல்லற மதனிலுறைந்துளோரிடத்தி
      லிருப்பினு ஞானக்கீழிரும்பில்-
பில்லிய மாரத்தினமெனவிளங்கும்
      போக்கியில்லினைத் துறவென்னும்-
நல்லறமடைந்தோரிடத் துறைஞான
      நற்றங்கமிசை யிரத்தினம்போல்-
எல்லையிலொளியாய் விளங்கிடுவாயினில்
      கிறப் பன்றுஞானிகட்கே
107
முனமனைவர்களு முறைவதுமில்ல
      முத்தியையுணர்ந் தறிஞர்களும்-
பினமதினின்ற படியினாற்
      சங்கைபேசுவர் துறவுடையோரை-
இனமதை விடுத்துமில்லறமது
      வேதலையென வியம்புவதுண்டோ
மனமதனிதனையூகி நீயமைச்ச
      மகிமையன்றில்லை ஞானிகட்கே
108
ஆடிய சகலமடங்குகேவலமு
      மகற்றியே யொளிப்படைகொண்டு-
மூடிய விருளை முழுதையும்
      வீசிமுடிவில் வீடதனையேயுணர்ந்தோர்-
நீடிய ஞாலமிசையினிற் பாலனிச
      மருளுடையன் பேய்பிடித்தோன்
கூடிய குணத்தினூரிற் போய்க்குடியின்
      கூலியாளினினியல் படைவோர்
109
வினைகளோரிரண்டுஞ் சமமதாய்ஞான
      மேலிடு காலையினிந்த-
மனையின் பங்கான்றசோற்றிற் கண்டுவர்த்து
      மாற்றியேகை விடவருமேல்-
தனையுளபடியே யனுபவமதனிற்
      றானுணர்தானந்த மடைந்தோர்-
பினையுமவ் விடையம் பூண்பர்களெனவே
      பேசுதல் வழங்குமோ சொல்லாய்
110
விடையவின்பதனினசையுளோர் தமக்கும்
      விரிவதாம் பேரின் பச்சுவையின்-
அடைவினைச் செவியிற் கேட்டவக்கணமேய
      வற்றினைய கற்றிட வருமேல்
இடைமுதலீநின் ஞானவானந்த
      மெய்தினோர்களும் பினுமிந்தக்-
கடைமனை வாழ்வை நினைவர்களென்றாற்
      கண்டனர் நகையரோ சொல்லாய்
111
பற்றிலையாயினவை யினிலிருப்பேன்
      பழையவூழ் வினையெனிலாசை-
சற்றெனு முதிப்பித்தல்லவோ வூட்டுஞ்சகவின்
      பிலிறை யெனுமிச்சை-
முற்றுணஞானத்தோர்கள் பூண்பர்களோ
      முடிவிலானந்த மேபருகி-
நிற்றலே மீட்டும் விழிப்பினுக்கானனீரிற்
      கண்டுண் முகமடைவோர்
112
பவமதை யினிமை யெனவெணி விடையம்
      பற்றி நின்றுழன்றவர்தாமே-
பவமதை யினிமையல வெணிவிடையம்
      பற்றறுத்தருட்குருவடைந்தும்,
பவமதை யறுக்குநெறியணர்ந்தருளிற்
      பரவின்பமடைந்தவர் தாமும்-
பவமதை யினிமையென வெணினலவோ
      பற்றுவர் விடையவின் புரையாய்
113
கொடிமுதல்வாடும்வேர் முழுதினையுங்
      கோதறக் களைந்திடிற்களைந்தும்-
படிமிசை கொடிபூகாய் பழமோங்கல்
      பகரதிசயமஃதினைப்போல்-
அடிநடுவீறில் பிரமந்தானாகிய
      பற்றையறுத்த வரிடத்தும்,
மடிவுறமனையில் விரும்பியே நெஞ்சம்
      வருத்தனமாத லென்றறைவார்
114
ஆணவமதனைத் தோய்ந்திடவினை
      நானாமெனக்கின வெறிவவையப்-
பேணலைச் சுகமென்றுண் மகிழ்ந்திடுவோன்
      பேரின்பத்தாசையதாகிப்-
பூணவஞ்ஞான மிலையதின் ஞானம்பொருந்தியச்
      சொரூபந்தானாகி
எணவானந்தத் தழுந்துவோன் விடையமெய்திடின்
      ஞானமேயிலையால்
115
(வேறு.)
கனவதனிலுணர்விலது காணுந்தனுவாதிகளைக்
      கருதியேநின்,
றுனும வரினிதுகனவென் றுணர்ந்தவர்
      கணசையில தினுலகுதன்னில்,
தனது சயவுருவதனையனு பவத்திற்றானுணர்ந்திச்
      சகமதெல்லாம்,
மனமதனிற்சாலமென வுணர்ந்தவரிவ்
      வுலகின்பின்மையனீங்கும்
116
கதிரவன் முன்னிருளிருக்கு நயனமுடை
      யொருவன் குழிக்கண்ணேவீழும்-
அதிக வலிச்சூரனமர்க்களக்கு
      வெருவுவன் கிருதமறையக்காரம்-
இதமுள பாயசமுநிரம் பருந்தினன் கூழ்தனிற்
      செய்வ னிச்சையென்றால்-
விதமிவைநான்கினுக்குங் குறையதின்
      ஞானிக்கிழுக்காகும் விடையஞ்சென்றால்
117
இங்குறைந்த பாண்டமதின்வாதனையில்
      வாதனைகளிருக்கு மென்றல்-
துங்கவறிவுடையோர்கட் கின்றியமையாத
      தொழிறொடங்கி நிற்றல்-
அங்கியைத் தம்பனம் வல்லார்க்கனல்
      சுடாததின் வினை களடுக்காதென்றல்,
தங்கும்வினைக்கேதுவாம் விடையமதில்
      விருப்பாதி சாராதென்றல்
118
உணர்வுடைய ஞானியெவை புரிந்திடினுமிழி
      விலிழிவுரைத்ததாகின்-
இணையிலிருதீய னென்பர் யூகமிலவதனான்
      மற்றெவைகள் செய்தும்-
அணைவதிறாழ் வெனுமவனே தீயன்
      மிகஞானமதற் காகுந்தாழ்வான்,
நணுகினன்றோ ஞானமொருவனை
      ஞானியெனப்பெயரு நண்ணிநிற்றல்
119
கருவயிற்றை யுடையதுவுங் கனவயிற்றை
      யுடையதுவுங் கருதிப்பெண்ணிண்-
உருவதனைக் குறிப்பதினோக் கிடிற்றோன்று
      முளபடியே யுலகுதன்னில்-
குருவை யடைந்தவனருளிற் சொரூபத்தை
      யனுபவமாக் குறித்துளோரும்-
இருவையத்திடம்ப மாய்த்தமை
      ஞானியென் பொருமேதிற்றோன்றும்
120
அருச்சுனற் குமிராமருக்கு மதிகாரமவை
      பார்த்தேயறைந்த நூலின்-
கருத்தறியாய் ஞானமொன்றே பிரமாணஞ்
      சரிதையது கணக்கன்றாகும்-
விருத்த மறிவாசாரமுடையோனே
      ஞானியில்லோன் விருத்தனாகும்-
திருத்தமுட னமைச்சவிது துணிவென்றேயுட்
      கொள்வாய்த்தீரனாகி
121
(பின்பு அரசன் சமாதியிலிருக்கக்கண்டு மந்திரி அதிசயித்தல்.)
(வேறு.)
என்று மனேகமாய்விரித்தே
      யிராசயோகியுரைசெய்து,
நின்றுவாக்குத் தனையடக்கி
      நிமிடத்தகற்றி மனத்தினையும்-
ஒன்றுமில்லா வெறும்பாழா யொன்றாஞ்
      சமாதி தனையடைந்தான்-
நின்றங்கமைச்சனிது கண்டிந்
      நேர்மைபுதி தென்றதிசயித்தான்.
122
மந்திரிசென்றுநகரத்தாருக்கு அரசன்தன்மைகூறல்.

இந்தவுணர்வு நமக்கின்ன மெய்தவில்லைநா மிங்கே,
எந்தவுணர்வு கொடுநிற்பே மென்னவமைச்சன்யூகித்து-
வந்தவழியே தான்றிரும்பி வளப்ப முடையமாபுரிக்கே-
பந்தமுடையோ ருடனிருந்து
      பகர்ந்தானரசனியற்கை யெல்லாம்
122
(இது-முதல்.2-பாட்டு-கேட்டோர்கள் அரசனைக்கண்டவிடத்து
அவன்பேசாதிருத்தலினுக்குத்திரும்பி விடப்பின்
அரசன்விதேகமுத்தியடைதல்.)

கேட்டபேர் கண்மிகவியந்து கிட்டாதென்றுமிம் முனிபோல்-
தேட்டமுடனே யவரவர்கடேடிவந்து பணிந்திடவும்-
வாட்டமுடனேதாய் தந்தைமனையாள் பதத்தில் வீழ்ந்திடவும்-
நாட்டமாறுபாடின்றி நகைசெய்திருந்தானற்றவனே
124
வந்தபேர்களுடன் வார்த்தை மலரா திருப்பதவரறிந்து-
பந்தமுடையே நமக்கென்னை பகர்ந்தாற் றோன்றுமெனத் திரும்பித்-
தந்தமிடத்திற் சென்றார்கடவனுஞ் சிறிதுநாட்கழித்துத்-
தொந்தமொன்று மில்லாத சுயமாமுத்திதானானான்.
125
நூற்பயன் (வேறு.)

இந்தமாராஜன்சென்ற விதிகா சந்தன்னைப் பார்ப்போர்-
சிந்தனை யொன்றுமின்றித் தீரவே துறவராகி,
அந்தமுமாதி யில்லாவ மலமே வடிவமாவர்-
எந்தமையரு ளினாண்டவெழிக்குருபறையே வாழி
126
(வேறு.)

அரியது துறவறமல்ல தில்லையான்
மருவிய துறவறமொருவி மன்னனாய்
உருகெழு முடிகவித் துலகமாள்வது
பெருவிலை மணியினைப் பிண்டிக்கீதலே
127

முதலாவது - மகாராஜாதுறவு-முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
ஆக-பாடல்-127


சிவமயம்

2. சுத்தசாதகம்.

காப்பு
பாயிரம்
ஆழத்துப்பிள்ளையார் துதி

சூதான மாயையோரைத் துதிக்கையா லெடுத்துமேலா-
ஆதாரமான வந்தவருளினிலிருக்க வைக்கும்,
தாதாவாய் விருத்தவெற்பிற் றங்கியே பிரகாசிக்கும்,
பாதாளத்தானை பாதம் பணிந்து போற்றிடுதல் செய்வாம்
1
(வேறு.)விருத்தாசலேஸ்வரர் துதி.

அருமறையுச் சிதனில் விளங்குவதா
      யனாதியாய மலன்மற்றமலை-
இருவர்க்கு நிகழ்ச்சியா யந்தவிறைவற்கிதைய
      மாயிலிங்கரூபமதாய்-
ஒருகிரிவடிவாய்க் கொடுமுடியனந்த முடைத்த
      தாயுலகெங்கு நிறைவாய்த்-
திருமுதுகிரியென் றொருபெயர்படைத்ததேவை
      நாடொறுமிறைஞ்சிடுவாம்
2
பெரியநாயகியார் துதி.

மரகத வடிவு மதித்திருமுகமு மலர்க்
      குழலுங் குறுநகையும்-
கரகமல முங்கூர்விழியுஞ் செவ்வாயுங்கச்
      சணிதனமுநூலிடையும்-
அரகரவென் போர்க்களித்திடும்பதத் தோடஞ்சலென்
      றென்னெதிர்தோன்றி-
உரகதியளித்த பெரியநாயகியை
      யுளத்தினிலிருத்தி வாழ்த்திடுவாம்.
3
இதுவுமது.

பங்கயன்றிருமாற்கரியதோர் பரமன்
      பங்கியே பெரியநாயகியே-
சங்கைகளில தாய்த்தடைகண்மற்றில தாய்த்
      தத்துவ மசிக்கருத்தமதை-
அங்கை யினெல்லியென விளக்குவதாய
      மலையே யுனக்கிதையமதாம்-
துங்க நன்னெறியொன் றுளத்தினும்விளக்கித்
      தொண்டனேன் வாக்கினுமுரைப்பாய்
4
நூல்வரலாறு.

உலகிலெச் சமயங்களு முரைத்திடுதற்கொரு
      விரோதங்களூமின்றி-
இலகுமச் சமயங்களுக்கு மேலாகியிலங்
      கிடுமுபநிடநெறியை-
அலகிலெம் மண்ணலருளியவகை யுன்னகத்திலும்
      விளக்கி வாக்கினிலும்-
குலவிடவுரைப்பேமென்றனள்விருத்தக்
      குன்றில்வாழ் பெரியநாயகியே.
5
இதுவுமது.
பெரியநாயகிதற் கருணையலிங்குப்
      பிராரத்தமும் மொழிந்தோர்க்குத்-
திரிவதாமாயா வடிவது கரைந்து
      திருவருளேவடிவாக-
அரியவாஞ்சாமத்தசியுரைப் படியே
      யமைத்திந்தச்சுத்த சாதகத்தைக்-
தெரிவிலாவெளியேன் வாக்கினினின்று
      திருவுளம் பற்றியதிதுவே
6
பாயிரமுற்றும்.

நூல்.
ஈசனதுரையுங் கிரியையதென்று
      மியற்றிடு முபாசனையென்று-
பாசமதகன்ற சித்தமதென்றும் பகர்ந்திடு
      மூன்றுகாண்டமதாம்-
நேசநற்கிரியை சைவம் வைதீக நிகழ்ந்திடு
      முபாசனை சுத்தம்-
ஆசில் சிவாத்துவிதமிமை மூன்று
      மடங்கிடுந் தத்துவமசியே
7
கிரியையினெறியை யிலங்கிடவியம்புங்
      கிளர்தந்திரம்மெழுநான்கும்-
அரியநல்லுபாச னாநெறியதனை
      யறைந்திடுமறையொருநான்கும்-
உரியவச்சுத்தநெறிதனையுரைக்கு
      முபநிடச்சுருதியெண்ணான்கும்-
கிரியைதொம்பதந்தற்பதமுபாசனையக்
      கேடில்சுத்தம் மசிபதமே
8
இருக்கு முன்னான்கின்முடிவி லெண்ணான்கா
      யிலகிடுமுபநிடமவையே-
வருக்க முமிரண்டாம்பூருவமென்றும்
      வயங்கிடு முத்தரமென்றும்-
சுருக்க மதின்றியத்தியான்மீகஞ்
      சொற்றிடும் பூருவபாகம்-
திருக்கு களின்றியங்கலிங்கயிக்கஞ்
      செப்பிடு முத்தரபாகம்
9
முத்தியாமிடத்துமும்முத லென்றே
      மொழிபுமாகமுமங்கொன்றாம்-
அத்தியான்மீக மறையுப நிடமுமவனியில்
      வழக்கமேயன்றிப்-
பத்தியாளடையு மங்கலிங்கயிக்கம்
      பகர்ந்திடுமுபநிட மென்றாம்-
அத்தினாலிவையி லடக்கமதென் பரதை
      விளக்கிடுந்தொந் தத்தசியே
10
சைவ நன்னெறியுந் தந்திரமவையுந்
      தற்பரன் முகத்தினின்றுதிக்கும்-
துய்ய வைதீகமும்மறை யவையுஞ்
      சுவாசமற்றதனினின்றுதிக்கும்-
உய்யு மச்சிவாத்துவித நெறியதுவு
      முபநிட மும்முளத்துதிக்கும்-
ஐய முந்திரிவுமறவிவைக்கருத்த
      மறைந்திடுந் தத்துவமசியே
11

ஆக மமிருபத்தெட்டினின்
      முடிவாகமம் வாதுளமதனில்-
ஏக மென்றியம்புமறையனு சரித்தேயியம்பிடு
      நான்மறையவையில்-
பாக மதுறுஞ்சாமத்தின் முன்னெறியும்பகர்
     சிவாத் துவிதவன் னெறியும்-
யூக மதிலங்கவியம்பிடுமதனா
      லுண்மை சாமத்தினின்முடிவே
12
பந்தமதகன்று சுத்தமாயிருத்தல்
      பரமமா முத்தியதென்றும்-
அந்த நல்லதிட்டானம்பது தானே
      யாகுதன் முத்தியதென்றும்-
நந்தலில் சிவத்துங்கக்கமா யிருத்தனன்
      குறுமுத்தியதென்றும்-
தந்திரமறையுப நிடமிம்மூன்றுஞ்
      சாற்றுந்தாற்பரிய நீகேட்பாய்
13
பந்தமதுறுமான்மாவையே நோக்கிப் பந்த
      நீங்குதன் முத்தியென்றும்-
அந்தநற்சுத்தான் மாவையே நோக்கியவ்
      வதிட்டான நீயென்றும்-
நந்தலில் பரமானவனையே நோக்கி
      நற்சிவத்தங்க நீயென்றும்-
தந்திரமாதி மூன்றுகாண்டமதுஞ்
     சாற்றிடுமிவை தொந்தத்தசியே
14
முன்பத சிருட்டிப் பதிபசுபாச மூன்றையு
      மனாதியாய் நிறுவும்-
பின்பத சிருட்டிச் சகமித்தையந்தப்
      பிரமமேயுளதென நிறுவும்-
சின்பதமான வசிபத சிருட்டிச்
      சிவசத்திலீலையாய் நிறுவும்-
மன்பத மூன்றும்பின்னைய பினையு
      மாசறு சிவமுமென்றுணர்வாய்
15
முன்பதமானதொம்பதப் பசுவே
      மூடிருணீங்கிச் சுத்தமதாய்ப்-
பின்பதமானதற் பதவருளிற் பிறங்குந்
      தாதான் மியமடைந்தே-
சின்பதமான வசிபத சிவத்தைச் சேர்ந்ததற்
      கங்கமாய் நின்றால்-
மன்மர முத்திமுடிந்ததுவாகு மற்றவை
      தனினிற்கிற் குறையே.
16
கங்கையுமிடைச்சேரியு மொன்றுக்கொன்று
      கைவிட்டதது விட்டதொக்கும்-
இங்கனங்குந்தம் மும்மொருவனு மற்றிடை
      விடாதது விடாதொக்கும்-
எங்கனமவனுமிவனு மற்றிடை விட்டிடை
      விடாதிருத்தலுங்கூடும்-
துங்கவவ்வசிக்குப் போந்திடுமருத்தந்
      தோன்றிடாமறை நெறியோர்க்கே.
17
சீவனது பாதியீசனதுபாதி தீர்ந்து
      சித்திரண்டதுமொன்றே-
ஆவது விட்டுவிடாதலைக் கணையென்ற
      றைந்திடிலுபாதி யோரிரண்டும்-
மேவலை நீங்கல் விட்டலக்கணையாம்
      விளங்குஞ் சித்திரண்டது மொன்றே-
ஆவது விடாதலக்கணையாகுமவைக்கு
      மேலிலக்கணையின்றாம்.
18
விட்டலக்கணையும் விடாதலக் கணையும்விட்டு
      விடாதலக்கணையும்-
திட்டமதுற வேதேர்ந்திடிற்பந்தந் தீர்ந்திடல்
      விட்டலக்கணையாம்-
இட்டநல்ல திட்டானம் மதுதானாயிருத்தலே
      விடாதலக் கணையாம்-
மெட்டறுசிவத்துக் கங்கமாயிருத்தல் விட்டு
      விடாதலக்கணையே...
19
தத்துவ மசியென்றுரைக்கு முப்பதத்திற்றகு
      வன்ன நான்கதாமவையும் -
ஒத்துறுதொந்தற் பதமவைதன்னி
      லொன்ரொன்றா மசியினி லிரண்டாம் -
தொத்துதலகன்று சுத்தமாயிருத்த
      றொல்ல திட்டானந்தானதால் -
ஒத்துறுமவையிலொன்றேய
      சியிலோரிரண்டங்க முஞ்சிவம்மே.
20
சுத்தமாய் நின்றாலிச்சை சுத்தியதாந்
      தொல்லதிட்டானமாய் நின்றால் -
சித்தமான ஞானஞ்சுத்தியதாகுஞ்
      சிவத்தினுக் கங்கமாய்நின்றால் -
மத்தமாங்கிரியைசுத்தியதாகும் வகுத்தவிம்
      பூன்று மற்றொழுங்கில் -
சித்தமாய்சுத்தி யிலாவிடின் மீட்டுந்
      தேகமொன்றெடுக்குமென் றுணர்வாய்
21
தொம்பதம் விளங்கின்மேல் வினைமறத்த
      தொல்லிருளகன்று போயொளிக்கும்-
தம்பதமான தற்பதம் விளங்கிற்
      சஞ்சிதமாயை போயொளிக்கும்-
அம்டதமான வசிபதம் விளங்கிலரும்
      பிராரத்தம் போயொளிக்கும்-
செம்பரவருளே வடிவதாயான்மாச்
      சிவத்தினுக் கங்கமாய்நிகழும்
22
அடுத்த மற்றிரண்டு சனனத்தில் வீட்டை
      யடைந்திடுந்தொம்பத நெறியோர்-
அடுத்த மற்றொன்று சனனத்தில் வீட்டை
      யடைந்திடுந்தற் பதநெறியோர்-
அடுத்த விச்சனனந்தனிலடைந்திடும்
     வீடசிபதநெறியுளோரி வரும்-
அடுத்த விவ்வுடலோடைந்திடாவிடின்
     மேலாக்கையொன் றெடுக்குமென்றுணர்வாய்
23
ஒடுங்கிடுங்காலந் தோன்றினவடைவினொடுங்கிடு
      மென்றுரைப்பதனால்-
ஒடுங்கிடுங்காலஞ் சத்தியவாதிக் கொடுங்குமிவ்
      வுடறன் மாத்திரையின்-
ஒடுங்கிடுங்காலம சத்தியவாதிக் கொடுங்குமிவ்
     வுடலசத்தியமாய்,
ஒடுங்கிடுங்கால முடலிங்கே வீழ்ந்தாலொடுங்கின
     தில்லை யென்றுணர்வாய்
24
மேலொருவடிவை யெடுத்ததேயாகின்
      மேவுமிவ்வுடலிங்கேவீழும் -
மேலொருவடிவை யெடுத்ததின்றாகின்
     மேவுமிவ்வுடலிங்கேவீழா-
மேலொருசிவத்தைச் சீவன்சென்றடையு
     மேவுமிவ்வுடலிங்குத்தானே-
மேலொருசிவத்தின்வடிவதாமருளாய்
     வெளியதா யலகுகண்டிடவே
25
சூக்கும மதனினின்று முன்வினையிற்
      றூலதேகமு முளதாகும்-
சூக்குமந்தன துகாரணமடையிற்றூல
      முஞ்சூக்குமத்தடையும்-
சூக்குமந்தனது காரணமடையத்தூல
      மிங்ககன்றதேயென்றால்-
சூக்குமந்தனது காரணம் விடுத்துத்தூல
      மொன்றெடுத்த தென்றுணர்வாய்
26
தூலவிவ் வுடலைவிடுத்து நில்லாது
      சூக்குமஞ்சூக்குமம் விடுத்துத்-
தூலநில்லா தீதிரண்டையும் விடுத்து
      தொல்லுயர் நிலாவுயிர்விடுத்துத்-
தூலசூக்கு மங்கணின்றிடாதுயிருஞ்
      சூக்குமமும் முடிவடைந்தால்-
தூலமுமுடிவை யடைந்திடாதிந்தத்
      தொல்லுலகினில் விழுந்திடுமோ
27
வினையினிலெடுத்த விவ்வுடன் மேலும்
      வினையுள தெனிலிங்கெயகலும்-
வினையில தெனிலிங் கிவ்வுடறானே
      வினையறுமோ மயமாகி-
வினையுடவுடல் போற்றோற்றன் மாத்திரமாய்
      விளங்கியே வெந்துறுபுரிபோல்-
வினையிலாப்பரம முத்தியில் வெளியாய்
      விமல நல்லருளதாய்விடுமே
28
சீவசிற்றறிவுமிம் முத்தவறிவாய்த்
      திகழ்ந்திடினுடண் மருள்வடிவும்-
தாவருமோங்காரவ் வடிவாகுந்தக்க
      சீவன் முத்தவறிவும்-
மேவரும்பர முத்தவ்வறிவாகில்
      விளங்குமோங்கார வவ்வடிவம்-
ஓவலிலந்த வருள்வடிவாகு
      மொழுங்கிதே யென்றுணர்ந்திடுவாய்
29
பிறாரத்த முடன்பாடென்றெந்த நெறியும்
      பேசிடு மின்னெறியதற்குப்-
பிறாரத்த முடையோருகரேயன்றாம்
      பிராரத்தம் புசித்திடுவோர்கட்-
கறாதிந்த மாயாதனு கரணங்களதனினாற்
      சிவத்துவ மதனை-
உறாதுயற்றவரைச் சீவன் முத்தர்களென்றுரைத்
      திடப்படுவதெப்படியோ
30
அன்னைதன் முலைப்பாலருந்திடும் பருவமகன்றப்
      பாற்பருவம் வந்ததற்பின்-
அன்னைதன் முலைப்பாலருந்த வேண்டிடினுமம்
      முலைவற்றியே யிடும்போல்-
பின்னையின் போகம் புசித்திடும் பருவம்
      பெயர்ந்தப் போகருவம் வந்ததற்பின்-
பின்னையின்போகம் புசிக்க வேண்டிடினும்
      பிராரத்த நீங்கியே விடுமால்
31
இந்த நல்லொழுங்கின் முன்னிருபதமு
     மெய்தியிவ் வசிபதத்தடைந்தால்-
பந்தமில் சிவத்தை வடிவொடுமடையும்
      பகுத்தவை யொன்றிலொன் றொதுங்கிச்-
சந்ததந் தருக்கியசி பதத்தருத் தந்தனைத்தத்த
      மபதத்தினிலொடுக்கும்-
அந்தகர்தமக்கு மற்றொருகாலு
      மசிபத முத்தியேகிடையா
32
முத்தியிற் சிவமு முயிரிரண்டாகின்
      முத்திசாயுச் சியமின்றாம்-
முத்தியிற் சிவமு முயிருமொன்றாகின்
      முத்தியே பெற்றவனின்றாம்-
முத்தியிற் சிவத்துக் குயிரங்கமாயின்
      மொழியி மற்றவை யுண்டாமதனான்-
முத்தியிற் சிவமு முயிருஞ்சையோக
      மொழியுந்தாதான் மியங்குறையே
33
சச்சிதானந்தத் தற்பரசிவமே தனது
      தன்னிலையிலே நிற்க-
அச்சிதானந்த லீலையினாலே
      யனேகமாய்ச் சராசரமாகி-
சச்சிதானந்த மேயுடல் பொறிகடகு
      கரணங்களாய்க் கொண்டே-
அச்சிதானந்த லீலையினடித்து மடைந்திடும்
      பண்டை யப்படியே
34
ஏகமாயசையாத் தற்பரலிங்கமி
      லீலையிற் சரமனேகமதாய்-
மோகமாயிருளாயவ் விருளதனின்
      மூடமாய்ச் சிறிதுநாளிருந்துஞ்-
சோகமாயிந்த விருளதாய தனிற்றுமக்குண்டு
      சிறிது நாணடித்தும்-
பாகமாமோ வாயதிற்சின்னாணடித்தும்
      பண்டு போனின்றிடு மன்றே
35
சலமதுதானே திரண்டுப்பதாயச் சலம்வந்துள்
      பகவந்தச்சலமாய்-
நிலமதின்விளங்கு மஃதினைப்போல
      நிமலமா மருவருடானே-
குலவுலீலை யினாற்றிரண்டுருவாகிக்
      கூறின்றிக் கூறதாய் நடித்தும்-
இலகன்மாத்திரமாய் நடித்துமுன்போலு
      மிருந்திடும் பண்டையப்படியே
36
சரமந்தவிருளிலிருந் திடுங்காலைத்
      தனுமுதனான்குமவ் விருளாம்-
சரமந்த மருளினடித் திடுங்காலைத்
      தனுமுதனான் குமம்மருளாம்-
சரமந்த வோவினடித் திடுங்காலைத்
      தனுமுதனான்குமவ்வோவாம்-
சரமந்த வருளி னின் றிடுங்காலைத்
      தனுமுதனான்குமவ் வருளாம்
37
இருள்வடிவதுவு மருள்வடிவதெனிலெய்தியே
      மறைந்திடுமிந்த-
மருள்வடிவதுவு மோவடிவதனி
      மறைந்திடுமோ வடிவதுவும்-
அருள் வடிவதனின் மறைந்திடுமந்த
      வருள்வடிவதுமச் சிவத்தில்-
தெருள்வடிவான சத்தியாய் முன்போற்றி
      கழுமென்றசி யுரைத்திடுமே
38
அருளுறுவடிவே முன்னியல்பான்மா
      வாணவ விருளுறுமன்றே-
இருளுறு சுழுத்தி விழுங்கிடு மதனுக்கிந்த
      மாயையின் சிருட்டியதாம் -
மருளுறு கனவு விழுங்கிடுமதற்கு
      வந்தது பிரணவசிருட்டி-
தெருளுறு மந்தப்பிரணவம் விழுங்கத்
      திகழுமவ் வருட்சிருட்டியதே
39
மருள்வடிவதனில் னீங்குதலின்றி
      மற்றுமொன்றறி விலாக்குழந்தை -
வெருவருங்குமாரந்தருண மூப்பென்றே
      விளங்குதல் போல வான்மாவும்-
அருள்வடிவதனி னீங்குதலின்றி
      யாணவமாயையோ வருளாம்,
பருவ மற்றவையிலந்தந்த வடிவாய்ப்
      பண்டுகோன் முடிவினின்றிடுமே
40
இருளினிற் பகுப்பின் றியசட்மயமாமிம்
      மருளுதையமதாகின்,
உருவதாம் பஞ்சபூதமே மயமாமோ
      வொளியுதையமதாகின்-
உருவருபஞ்சாக்கரமதே மயமாமோங்
      கருளுதையமதாகின்-
அருவதாம்பஞ்சசத்தியே மயமாமாருயிர்
      வடிவமென்றுணர்வாய்.
41
வடிவதின்விருள தாய்நிற்குங் காலை மன்னுயிர்
      பசுவதாய்நிற்கும்-
வடிவதிம்மாயை யாய்நிற்குங் காலை மன்னுயிர்
      சீவனாய் நிற்கும்-
வடிவதவ்வோவதாய் நிற்குங் காலை மன்னுயிர்
      சீவன் முத்தனுமாம் -
வடிவதவ்வருளதாய் நிற்குங் காலை மன்னுயிர்
      பரம முத்தனுமாம்
42
இருளுறு பசுவதாய் நிற்குங்காலை
      யிருளதுவாகியே நிகழும்,
மருளுறு சீவனாய் நிற்குங்காலை
      மருளதுவாகியே நிகழும்-
தெருளுறுமோவின் முத்தனாங்காலைத்
      தெருள்பிரணவமதாய் நிகழும்-
அருளுறு பரமமுத்தனாங் காலையருளுதாய்
      நிகழுமவ்வருளே
43
இருளதுவாகி நிகழ்ந்திடுங் காலையிரும்
      பதியாகியே நிகழும்-
மருளதுவாகி நிகழ்திடுங் காலை மக
      பரமாகியே நிகழும்-
தெருள்பிரணவமாய் நிகழ்ந்திடுங்காலைச்
      சிவலிங்கமாகியே நிகழும்-
அருளதுவாகி நிகழ்ந்திடுங் காலையச்
      சிவமாகுமச் சிவமே
44
அரியவவ் வருளேமூன்றியல் பதுவு
      மைந்தூற் குறியுமாய் நிகழும்-
இரியதலில்லாச் சத்தையாய்ச் சித்தாயின்பமாய்
      நிற்குதலியல்பாம்-
கிரியையு ஞானமும்மிசையதுவுங்
      கிளர்திரோதையும் பரையதுவும்-
உரியதுகுறியாம் விரியிலையைந் தாயொடுங்கிடி
      லொன்றதாய்நிற்கும்
45
பிரணவமதுவு மூன்றியல்பதுவும் பிறங்கு
      மைங்குறியுமாய் நிகழும்-
திரமுறவவ்வு முவ்வுமவ்வது
      மாய்த்திருந்தவே நிற்குதலியல்பாம்-
உரமுறு நவ்வுமவ்வுமச்
      சிய்யுமோங்கிவவ்வும் யவ்வதுவும்-
விரவுறு குறியாம் விரியிலையைந்தாய்
      மேவிடிலொன்றதாய் நிற்கும்
46
மருளுறுமாயை யதுவுமூன்றியல்பும்
      வகுக்குமைங்குறியுமாய் நிகழும்-
உருவுறுதமசுரசத சத்துவமா யொன்றியே
      நிற்குதலியல் பாம்-
பிருதிவி யுஞ்சலமுமனலதுவும்
      பெருகிய வாயுவும் வானும்-
வருகுறியாகும் விரியிலையைந்தாய்
      வந்தொடுங் கிடிலொன்றாய் நிற்கும்
47
ஐந்துநற்குறியு மூன்றியல்பதுவுமாகிய
      வருளதேயருவாம்-
ஐந்துநற்குறியு மூன்றியல்பதுவுமாகிய
      வோவருவுருவாம்-
ஐந்துநற்குறியு மூன்றியல்பதுவுமாகிய
      மாயையே யருவாம்-
ஐந்துநற்குறியு மூன்றியல்பதுவுமாகிய
      வினவயிலூ ணுளவாம்
48
உருவமா முணவே யெதிரதாமுபைய
      முளத்தினிலுருசி மாத்திரமாம்-
அருவமா முணவே திருத்திமாத்திரமா
      யறிவினில் விளங்கிடுமந்த-
உருவமா முணவே சீவருக்குரித்தாமுபையமிம்
      முத்தருக்குரித்தாம்-
அருவமா முணவேயம் முத்தருக்குரித்
      தாமெனவறைந்திடு மசியே
49
உருவமா முணவாலுருவ மாமுடைய
      வுணவினாலுபையமே மயமாம்-
அருவமா முணவாலருவமே மயமாமச்
      சிவாங்கிசன் வடிவதுவே-
உருவமா முணவாற்சீவனா முபையவுண
      வினாற்சீவன் முத்தனுமாம்,
அருவமா முணவாற் பரமமுத்தனு
      மாமச்சி வாங்கிசனுயிரதுவே
50
அன்னிய தசையை யருந்துதன் மனிதர்க்கடாது
      மற்றதை யருந்திடுவோர்-
அன்னிய மிருகாதிகளென வறையலாகு
      மற்றதின்சிவாங்கிசரும்-
அன்னிய மாயா வுணவருந்திடுத லடாது
      மற்றதையருந்திடுவோர்,
அன்னிய மாயா சகீதசீவர்களென்
      றறைந்திடாலாகு மென்றுணர்வாய்
51
அசுத்தவிவ் வுணவே புசித்திடுமளவு
      மச்சுத் தாவத்தையைநீங்கி-
அசுத்தவத்தையினை விழுங்கிடுஞ் சுத்தவவத்தை
      வந்தடைதலே யிலையாம்-
அசுத்தவிவ் வுணவைச் சுத்தமதாகவத்தினிற்
      பாவனை செய்தால்-
அசுத்தவிந் நினைவைநீங்கியந் நினைவை
      யகத்தினிற் பொருந்தியேநிற்கும்
52
திரிவித குணத்திற்றாமதமோகந்
      திகழுமிராசத மிராகம்-
உரியசத்துவமே ஞானமதாகு
      முலகிலிம் முக்குணவுணவே-
விரியுமற்றவையி லெவை புசித்ததுவோ
      விளங்கிடுமக் குணமல்லால்-
அரியசுத்தவத்தை யடைவதேயிலை யவ்வவத்தை
      வந்துறும் வகைகேட்பாய்
53
அன்னைதன் வயிற்றிற் புசித்தவக் குணமாயாக்கையும்
      பொறியுமம் மனமும்-
மன்னியும் பினுமப் புசிப்புமேன் மிகவும்
      வாஞ்சையுற்றருந்தியே மேலும்-
உன்னலும் பொறியுமுடலுமும் மூன்று
      மொத்திடுமெனத் தெளிந்துணர்ந்து-
தன்னதுள்ளவையிலுருருசி
      திருத்திதனில் வயிராகமேயாகும்
54
உலகினில் விடைய விச்சையை
      யுடையோனுணவதற் கேற்கவேகூட்டி-
இலகிடப்பு சித்தான் முயற்சி மேன்மேலுமேறியே
      வளர்ந்திடுமதுபோல்-
குலவிடும் வீட்டிலிச்சையே யுடையோன்
      கொண்டதற் கேற்கவேயுணவை-
இலகிடப்பு சித்தான் முயற்சிமேன்
      மேலுமேறியே வளர்ந்திடுமன்றே
55
தமகுணப்புசிப்பே மயக்கத்தையளிக்குந்
      தருமிராசத குணப்புசிப்பே-
மமதையை யளிக்குஞ்சத்துவப்
      புசிப்பே மயக்கமுமதையுமகற்றி-
அமலநல்லுணர்வே யளித்திடு
      மதனாலவை யிரண்டினுநசையகற்றி
நிமலசத்துவவே வருத்தனையாக
      நீன்று சத்துவப் புசிப்பருந்தும்
56
அடிசின்முன்னுரைக்குமறுசுவையவையை-
      யருந்திடுகாலையினோக்குக்-
கடினமுமுரைப்புமிராசதமவையிற்-
      கழிந்திடும்புராதனமூசன்-
மடிவுறுதமசென்றிருமையுமகற்றி
      மாலைகாலைப் பொழுதகற்றிக்-
கடினவுச்சியிற்சத்துவகுணப்புசிப்பே
      கைக்கொண்டுதினமருந்திடுமால்
57
இடம்பொருளேவன்மூன்றையு
      முடையோர்க்கித்தகையுணவுறுமந்த-
இடம்பொருளேவன்மூன்றையு-
      மகன்றோர்க்கித்தகைவுணவுறாததனால்-
திடம்பெறவூரினுச்சியிலேகித்
     திருவருள் புசிப்பித்தலென்றெ
விடம்பெறினுங்கைப்பெற்றதையருந்தில்
      விமலமாய்நின்றிடுஞ்சித்தம்
58
தந்திரகிரியைநெறிதனிலிசன்றந்திடப்
      புசிக்கும்புன்மறைசொல்-
அந்தநல்லுபாசனாநெறியதனிலனைத்து-
      நாமெனக்கண்டுபுசிக்கும்-
இந்தவவ்வுணவின்மாறுபாடின்றி-
      யிருமையுமிடிந்ததேயாகின்-
தொந்தமில்சிவமேசடுமுகமாகித்
      தொக்கிருந்தருந்தன்மேனினைவாம்
59
இருவகைநெறியும்வரவுபோக்குடைத்-
      தாயியங்கிடுமிதுவன்றிமாயை-
ஒருமுதலென்றுமித்தையதென்று-
     முறைத்திடுநிட்டையும்விகற்ப-
நிருவிகற்பமுமாய்நிகழ்ந்திடுஞ்சகச
      நிட்டையெக்காலையு மின்றென்-
றொருவிமற்றவையைச்சகச-
      நிட்டையரையுலகெங்குந்தேடியேயிடுமால்
60
முன்புறுநிட்டைசவிகற்பமாகி-
     முத்தியின்மூன்றுநின்றிலகும்-
பின்பறுநிட்டை நிருவிகற்பமதாய்
      பிரமமற்றென்றுநின்றிலகும்-
வன்புறந்நிட்டையிருமையமுறினும்-
      வரவுபோக்குடையதாய்நிகழும்-
இன்புறிந்நிட்டைசகசமாதிகி-
      யிலங்கிநின்றிடு நின்றபடியே
61
சவிகற்பநிருவிகற்பநிட்டையதுஞ்
      சத்துவகுணத்தில்வந்ததுவாம்-
இவிகற்பநீங்கிவருடமாயிர-
      மங்கிருந்திடினும்பினும் விழிக்கும்-
செவிதனிலடையுஞ்சகசநிட்டையதே
      திருவருடன்னில்வந்ததுவாம்-
தவிருதல்கூடலின்றியேயங்குத்-
      தங்கிநின்றிடுநின்றபடியே
62
சகசநன்னிட்டையியல்புதம்முயற்சி-
      சற்றொன்றுமின்றியேயருளால்-
சுகமதும்போகமதுவுந்தம்முடலுந்தகு-
      கரணமுமவையெவையாய்-
அகமதிலுதித்தததுமறையாமலகன்ற
      துபின்னுதியாமல்-
அகமுரைகாயவருத்தமேயின்றிய-
      மர்ந்துநின்றிடுநின்றபடியே
63
அருளண்டமாகி லுயிர்பிண்டமாகு
      மண்டமுந்தோற்றன்மாத்திரமாய்-
அருள்நின்ற தாகிற்பிண்டமுமது-
      போலாகியேநின்றிடுமண்டம்-
அருள்வடிவாகிற்பிண்டமுமுயிராயருளிற்
      றாதான்மியமடையும்-
அருளந்தச்சிவத்துக்கங்கமதாகியமர்ந்து
      நின்றிடுநின்றபடியே
64
இருளினிலிருந்தும் பருவம்வந்ததற்
      பினியற்றிடுமுயற்சியொன்றின்றி-
மருளினிலடைந்துமருள்வடிவாகி
      வயங்கிடுஞ்சகசமேபோல-
மருளினிலிருந்தும்பருவம்வந்ததற்பின்
      வருந்திடுமுயற்சி யொன்றின்றி-
அருளினிலடைந்திங்கருள்வடிவாகி
      யமர்ந்துநின்றிடுநின்றபடியே
65
மருள்வடிவதற்குமஃதைநானென்றே
      மனுஞ்சீவனுக்குமாதரவாய்-
மருள்வடிவமுதம்புசித்திடுமதுவே
      வயங்கிடுமற்றதையொருவி
அருள்வடிவமுதமுறிடவருந்திய
     ஃதுமிச்சீவனுங்கரைந்தே-
அருள்வடிவதுவுஞ் சிவாங்கிசனும்மா
      யமர்ந்துநின்றிடு நின்ற்படியே
66
சாக்கிரமதனினிற்குந்தத்துவத்திற்
      சாற்றுங்கேவலத்தினிற்சிறிது-
நீக்கிமற்றதற்குநிற்குந்தத்துவத்தை
      நிறுத்துதல்போலநின்மலமாம்-
சாக்கிரமதனினீக்குதலின்றித்தத்துவ
      மனைத்துஞ்சுத்தத்தில்-
ஆக்கியேநிறுத்துந்திருவருளதனாலடைந்து
      நின்றிடுநின்றபடியே
67
மருள்வடிவாகியிருந்திடுமிடமு-
      மருளதாய்ப்புசிப்பதுமருளாய்-
அருளிதின்மறைந்துநிற்குமென்பதுவு
      மன்றியேநின்றமுன்போல-
அருள்வடிவாகியிருந்திடுமிடமு
      மருளதாய்ப்புசிப்பதுமருளாய்-
மருளிதின்மறைந்து நிற்குமென்பதுவு
     மாற்றிநின்றிடுநின்றபடியே
68
சகசநிட்டையது லபித்திடுங்காலை
      தம்முயற்சியதொன்றுமின்றிச்-
சகசமதாசித்தன்னுளமதினிற்-
      றானின்றிங்கிடைவிடாதூறும்-
சுகவருளமுதமதனையேயந்தி
      தொல்வடிவதுமெள்ளக்கரைந்து-
சுகவருள்வடிவாய்ச்சுட்டெலாமறுளாய்த்
      தோன்றிநின் றிடுநின்றபடியே
69
அருளொளியிச்சைய துதனிலு
      திக்கிலசைவறநின்றிடுஞ்சித்தம்-
அருளொளிஞானமதுதனிலு
      திக்கிலகிலமவ்வருளதாத்தோன்றும்
அருளொளிகிரியையதுதனிலு
      திக்கிலகத்தினின்றருளமுதூறும்-
அருளொளியமுதமருந்தியவ்வடிவா
      யமர்ந்துநின்றிடுநின்றபடியே
70
இருளுறுமவத்தையடைந்தெங்கு
      மிருளாயிருந்தபின்விழித்திடல்போலும்-
அருளுறுமவத்தைவடைந்தெங்கு
      மருளாயமர்ந்துபின் விழித்திடுமென்னில்-
இருளுறுமவத்தைத்தமசினாலடைந்தே
      யிராசதத்தாற்பினும்விழிக்கும்-
அருளுறுமவத்தைச்சத்துவத்தடைந்தே
      யந்தராசதத்திற்பின்விழிக்கும்
71
மாயையிதடைந்தபின்பிருளவத்தை
      வந்தடையாதுபின்படைதன்-
மாயையின்றமசாலரதலாற்போக்கும்
      வரவுமாய்நிகழ்ந்திடுமதன்மேல்-
ஆயவவ்வருளைபடைந்தபின்மாயை
      யடைவதேயிலைபினுமடைந்தால்-
ஆயவல்வருளையடைந்ததேயின்றா
      மடைந்ததுமாயைசத்துவத்தால்
72
இருளினிலடைந்துதானுமவ்-
      விருளாயிருந்தங்குநின்றதாயிடினும்-
அருளினி லடைந்துதானுமவ்
      வருளாயமர்ந்தங்குநின்றதாயிடினும்-
மருளினிலடைந்தவடிவநில்லாது
      வடிவதிங்கிருத்தலேதென்னில்-
இருளருளவத்தைதனிற்குண
      போதமிலங்கியங் கிருத்தலினன்றே
73
சத்துவகுண மேவருத்தனையாகித்தங்கியே
      யுளத்தினுணின்றால்-
ஒத்துறுநிட்டை கூடிடுமிலதே
      லொருவியிச் சகலகேவலத்தைத்-
தொத்துறுமன்றிக் குணமுமாமையினிற்
      றோன்றினதாதலாலிந்த-
ஒத்துறுநிட்டையுண்மையேயன்றா
     முபாசக நிட்டையென்றுணர்வாய்
74
ஆதலிற்சகலகேவல சுத்தமடைந்திடலிங்கு
      மாயையதாம்-
வாதனை யொழிந்துங்குணமிருத்தலினிவ்
     வடிவகன்றிடிற் பினுஞ்சித்த-
சாதமுற்றிடுதலன்றியே வீட்டைத்
      தானடைந் திடுதலேயின்றாம்-
ஏதமிலருளிலுண்மை நிட்டையினை
      யெய்தினோர் சீவன்முத்தர்களே
75
சீவனிம்மாயை தனின்முத்த னருளிற்
      சீவன்முத்தன் னடுவோவின்-
மேவலிற்சீவன் றனக்கந்த வருளு
      மெய்முத்தன் றனக்கு மாயையு மில்-
சீவன்முத் தனுக்கே ரியின் கரை மீதிற்
      றிகழ்ந்திடு வோனைப் போற் றோன்றும்-
ஆவதுநாகங் கண்கரிதுதிக்கை யரிதல்
      போற் காகங்கண் மணிபோல்
76
அந்தர வடிவசீவன் முத்தர்களிவ்
      வடிசிலைப் புசித்ததேயின்றாம்-
இந்தவிவ் வுலகிலிது புசித்திடுவென்றிந்
      நெறியோர் கணின்றிறைஞ்சித்-
தந்திடிலுணவுமளவின்றிப் புசிக்குஞ்ச
      மித்ததுமலமதுமாகா-
மந்திரமதனைவடிவதாய்க்கொண்ட
      மகிமையி லென்றுணர்ந்திடுவாய்
77
எங்கெங்கு நோக்கின் மருண்மயமாகி
யிருந்திடும் பந்தமாந்திசையில்-
தங்குந்தன் வடிவமருண்மயமாகித்
      தயங்கியே நின்றதுகுறிபோல்-
எங்கெங்கு நோக்கிலருண் மயமாகியிருந்திடு
      முத்தியாந் திசையில்-
தங்குந்தன்வடிவமருண்மயமாகித்
      தயங்கியே நிற்குதல்குறியே
78
அருள்வடிவதுவே பார்வையிற்றொக்கி
     லகப்படாதென்று நின்றிலகும்-
மருள்வடிவதுவே பார்வையிற்றொக்கில்
வந்தகப்பட்டு நின்றிலகும்-
அருண்மருணடு வாமோவடிவதுவே
      யகப்படும் பார்வையொன்றுக்கே-
மருள்வடிவுலகுமோவடிவோர்க்கு
     வாய்த்திடும் பார்வையொன்றுக்கே
79
பழுதையிற்கிளிஞ்சில் கட்டையினின்றும்
     பாம்பும் வெள்ளியுங் கள்வனும்போல்-
எழுதருமாரேரபிதமதிட்டான
      மிலங்கிடிலிலாலது போலும்-
முழுதுணர்சிவம்வந்துதித்தவிச்சீவன்
      முத்தருக்குலக மின்றுதித்தல்-
கழுதிரதம்போற்காட்சி மாத்திரமாய்க்
      கவும் விவகாரமேயின்றாம்
80
கனவதுபோல் விவகாரமுண்டென்னிற்
      கனவதுநீங்கியே விழித்தால்-
கனவிதென்றுணருமாங்கவர் தமக்கக்கனவு
      வந்துதவுதலுண்டோ
கனவுமுன்கண்ட நினைவு மாத்திரமாய்க்
     காணுறு மகத்ததுபோல-
கனவிந்தவுலகுஞ்சீவன் முத்தருக்காணன்
      மாத்திரமதாய் நிகழும்
81
சொற்பன மதனிற்கனவி தென்றிடுமோர்
      சொற்பனசாக்கிர நடுவே-
நிற்பனபோலுமருள் மருண்டுவே
      நின்றிடும் பிரணவவடிவம்-
சிற்பரசீவன் முத்தனவ் வடிவாய்ச்
     செகமிதுஞ் சிவமதுந்தோன்ற-
நிற்பனதனக்குநிழலின்றிநிழற்போனிலத்
      தடியின்றியே நிகழும்
82
வெந்துறுபடமும் வறுத்திடும்வித்தும்
     விளங்கிடுங்கானலிற் சலமும்-
இந்திரதனுவுங் கனலிருந்தகன்றவிட
      மதுமிங்கு முன்னிருந்த-
முந்துறுகடமுங்கடமதையெடுத்து
     முடிந்தபின்றிகிரியிற் சுற்றும்-
கந்துறுநகரும்போன்முத்தர்வடிவுங்
      காட்சிமாத்திரமதாய் நிகழும்
83
மண்ணினிற்றடுக் கச்சலத்தினின்னைக்
     கவருங்கனலிற் சுடவளியால்-
நண்ணின்றசைக்க வெளியிடம்விடவே
     நணுகிடாவதன்று நின்றிலகும்-
புண்ணியசீவன்முத்தர் தம்வடிவம்
      பொற்புறவ்வடிவு கண்டளவே-
விண்ணின்மண்ணினிற்பா தலத்தினினுள்ளோர்
      வியப்பொடு மெழுந்திறைஞ்சிடுவோர்
84
மூன்றுநற்சுடரினின்னை யொப்பவராய்
      மூன்றுகால முமுணர்ந்தவராய்-
மூன்றுலகத்து முவமையில்லவராய்
      மூன்றுலகும் மறிந்தவராய்-
மூன்றுநற்காண்ட முந்தெரிந்தவராய்
      மூன்றுசிற்பதமு முற்றவராய்-
மூன்றுமுன்மல முமொருங்கறுப்பவராய்
      மூன்றுதாபமும கன்றவராய்
85
அகவிருண்மாயைக் கருமமிம்மூன்று
     மகற்றியே சுத்தங்கமாக்கித்-
தகநிறுத்திடுதல்கைய
      தாமப்பாற்றன்னு யிராகியேநிகழும்-
சுகசிவவுதையமாக்குதறீயாஞ்
      சொற்றிடு தீக்கையினருத்தம்-
ஜெகமிதிலவையிற் பாவனைகடந்து
      செய்தங்கு நிறுத்தவல்லவராய்
86
பிரணவவமுதே புசித்தனுதினமும்
      பிரணவமயமதேயாகி-
மரணமதுறுமிம் மனிதரைப் போல
      வடிவமாத்திரமதே தோன்றிப்-
புரணநல் லொளிக்குமாயைக்கு நடுவே
      புகுந்திருந்திலங்கு நற்குருவைச்-
சரணெனவடைந்திங்கவனருளாலே
      தரிக்கப் பெற்றாய்கத்திலிங்கம்
87
தேகமும்பொறியுங்கரணமு
      முயிருந்திருவுறு மாயையின்மயத்தை-
ஏகநின்றகற்றித் தீக்கையிலாசானி
      வைக்க திட்டானமந்திரமே-
ஆகநின்றமைத்தவகை குருவருளால
      றிந்ததிற் பாவனைதிடமாய்-
ஊகமதுடனே முன்னினை
      வகற்றியுளத்தினிற் சகசமேபிறந்து:
88
இக்குலந்தனக்கிச் சமையமதென்று
      மியம்புதலிலையதனாலே-
இக்குலந்தனை விட்டெச்சமையத்து
      மெய்துதனியாயமதாகும்-
இக்குவல யத்திலெச்சமையத்து
      மிலங்கிடுஞானமுண்டதனால்-
இக்குவலயத்திலெச் சமையத்து
      மியற்கையைவிட்டிடலாகா
89
அன்னிய சத்தங்க வருதலகற்றி
      யன்னிய ரசனையுமகற்றி-
அன்னிய ரூபநோக்குதலகற்றி
      யன்னிய பரிசமுமகற்றி-
அன்னியசத்தங்கேட்குதலகற்றி
      யன்னிய நினைவதுமகற்றி-
அன்னியருடனேயிணங்குதலகற்றி
      யன்னியருறை விடமகற்றி
90
அன்னியற் கையில் வாங்குதலகற்றி
      யன்னியர்க் கீகுதலகற்றி-
அன்னிய கடவுள் வண்ங்குதலகற்றி
      யன்னிய கிரியையுமகற்றி-
அன்னிய நூலை யோதுதலகற்றி
      யன்னிய கேள்வியுமகற்றி-
அன்னிய பாகமருந்துதலகற்றி
      யன்னியவகை யறத்துடங்கி
91
சமைய நற்கிரியையனைத்தையும் விடினுந்
      தனக்கந்தப் பிரணவவமுதம்-
அமைய நின்றூரி யதனையே
      யருந்தியவ் வடிவாயிடுமளவும்-
சமையிகள் பாகமதனையே கொண்டு
      தற்பர நிவேத்தியம் புரியும்-
அமைதியைவிட்டான்மேற்கொளாதென்ப
     தறிந்ததை நியமமாய்க்கொள்ளும்
92
புரிசடையோனுக் கற்பித்துக்கொளினும்
      பொருந்திய பொருளதேவேண்டும்-
திரிவின்றி யொன்றாய்பாவித்துக் கொளினுஞ் செல்லல்
      போலொருங்கதேவேண்டும்-
அரியநல்லறத்தை வேண்டிடிற் பொருளுமறமதா
      யீட்டவேண்டிடும்போல-
உரியதற்சமையத்தொழுங்கினிற்புசித்தா
      லுளத்தழுக்கின்றியேவதியும்
93
ஞான சங்கமத்துக்கிந்நெறியதனி
      னவிற்றிடுஞ்சகியுஞ்சமையத்-
தீனமிலாசாரமும் விசாரித்தலியகையே
      யன்றவரேனும்-
ஊனமிலக்கந் தனிலிங்கமொன்றே
      யுளபிர மாணமாய்க் கொண்டங்-
கானநற்பயிர்க்கமவர் மனைதோறு
     மங்கையேற் றருந்திடலாமால்
94
சடுத்தலமதினுமிலிங்கமேயாகித்
      தானெனல் விடுத்தருந்தியபின்-
கொடுத்தவன்றானுங் கொடுத்திடு பொருளுங்
      கொள்ளுவோன்றானு மொன்றாக-
அடுத்தவிம்மாயா வடிவதைநோக்கி
      யகற்றியவ்வோமயமாக-
விடுத்தனுதினமும் புசித்திடிலனைத்தும்
      விமலவோ மயமதாய்விடுமே
95
இன்னதன்மையவாஞ் சுத்தபாவனையி
      லிரும்பிராரத்தம் போயொளித்துத்-
தன்னதுணின்றிங் கிடைவிடா
      தூறுந்தக்க தோற்பிரணவவமுதம்-
அன்னதையருந்தி முன்வடிவதுவு
      மங்ஙனமோ மயமாகி-
இன்னிலமதனிற்றோற்றன் மாத்திரமா
      யியங்குதற் சீவன்முத்தியதே
96
அறிவிலாக் குழந்தைப் பருவத்தின் முலைப்பால
      ருந்திடுங்கு மாரங்காளையினில்-
அறிவிலாக் குழந்தையருந்துதல் கண்டு
      மதினசை சகசமாயிலதின்-
அறிவிலாச் சீவத்துவப் பருவத்தினருந்திடு
      மாயையி னுணவை-
அறிவிலாச் சீவரருந்துதல்கண்டு
      மதினசை சகசமாயின்றான்
97
அனமதும்பாலுஞ் சருக்கரைகண்டு
      மங்கினிவகை களுந்தேனும்-
இனமவையொன்றாய்க் கூட்டியருசியினிதைய
      நின்றிடை விடாதூறும்-
கனபிரணவவமுதத்தையே யருந்திக்
      களிப்பவர் மீட்டுமிச்சகத்தின்-
பினமுறுவிடைய வின்பையெண்ணிடுமோ
      பிராரத்தமும் மிலையவர்க்கே
98
உபையநல்லமுதே புசித்தனுதினமு
      முபையமேவடிவதுவாகி-
அபைய மென்றுரைக்கு முயிர்களுக்
      கிரங்கியஞ்சலென்றவர்களை நோக்கி-
உபைய வந்நெறியின்பயனை முன்னுணர்த்தி
      யுபநிடச்சுருதி நின்றுரைக்கும்-
அபையமற்றொன்று மிலாதவிந்நெறியே
      யனுக்கிரகம் புரிந்திடுமால்
99
இந்நிலை சின்னாட் சீவர்கணிமித்த
      மிருந்தனுக் கிரகமே புரிந்தும்-
தந்நிலைய தனினின்றருள
      முதந்தான்புசித் தருண்மயமாகி-
அந்நிலை பரமமுத்தியிற் சிவத்துக்
      கங்கமாய் நிகழுமுன்போலென்-
றிந்நிலை சாமத்தசிபதமுரைக்குமிது
      சிவாத்து விதமென்றுணர்வாய்.
100
என்றெனையாண்ட விருத்தவம்பிகையே
      யிதையத்தும் விளக்கியென்வாக்கும்-
நின்றுரைத்திந்த நெறிசொலு மருத்த
      நினக்கும் வாய்த்திடுமென்று வாழ்த்திச்
சென்றெனதுடலுங்காண முஞ்செகமுஞ்
      சேர்ந்திடும் போகமுந்தானாய்-
நின்றனள் கண்டேனிதற்குக்
      கைம்மாறென்னிரு மலைவாழிநீடூழி
101

சுத்தசாதகம்-முற்றிற்று.
------


திருச்சிற்றம்பலம்

3. விஞ்ஞானசாரம்.

காப்பு
பாயிரம்
விநாயகர் துதி

அஞ்சுகரமுடைக் - குஞ்சரந்தனைத்
தஞ்சமென்றுநில் - கொஞ்சமென்றுமில்
வேறு - பெரியநாயகியார் துதி

அமலபஞ்சகிருத்தியங்கண்டத்து
      மதற்காதாரமாகினாளை
விமலருளத்தகலாளையெனையொர்
      பெருளாயாண்டவிஞ்சையாளை -
நிமலமுதுகிரியிலமர்பெரியநாயகியை
      யொருநிமலைதன்னை-
முமலவிருட் கிரவியையென்கண்மணியைப்
      பணிந்திடுவா மூன்றுபோதும்.
வேறு - இதுவுமது.
ஊனாயுழல்வென்றனையாண்டவுமையே
      பரையேயுயிர்க்குயிரே-
தானாய்நிகழுஞ்சுயவொளியேதாயே
      விருத்தவம்பிகையே-
ஞானானந்த ரசம்விளக்கும்
      ஞானசாரமெனக்கருளி-
நானாய்நீயேயென்னுடைய
      நாவினின்றுமுரைசெய்வாய்
1
அருளுமுமையினடிபணிந்தே
      யஞ்ஞானத்தின்றிமிரகன்று-
மருளுமயமுமில்லாதமாவீட்டின்
      பரசம்விளங்கச்-
சுருதிநெறியிற்பிசகாது சொல்லார்த்
      தங்கடமையமைத்திவ்-
வொருவிஞ்ஞானசாரமதையுரைத்தேன்
      பரையினருளாளே
2
பாயிரமுற்றும்.
நூல்.
முன்னாட்புரிந்ததவப்பயனான் முதல்வனொருவனுளனென்றே-
அன்னான்பணியேமுத்திபதமடையக்கூட்டுமெனவெண்ணிப்-
பின்னாசான்முன்னுருமூன்றும்பேணியொழுங்கிற்சாதனங்கள்-
மன்னான்கினையுமுடையோனேவகுத்தவிந் நூற்குரியவனாம்
3
சத்யாசத்யவத்துவினைத் தகவேபிறித்துத்தானறிதன்-
மித்தையானபோகத்தின் விராகம்பெறுதல்சமையாதிக்-
கொத்தானவைகளோராறுங்கொள்கைதனிலேபெற்றிடுதல்-
அத்தியான்மீகமுத்திதனிலபேட்சையாதலிவைநான்காம்
4
சித்தம்பிரகாசத்தையறிற் சேருநான்கு சாதனமும்-
சத்தினிபாதந்தான்பிறக்கிற் சாருமொளிசித்தந்தனிலே-
ஒத்துவினைகடள்ளுபடினுண்டாஞ்சத்தினிபாதமதும்-
பத்திபுரியின் மூவடிவிற்பண்டார் வினைகள்சமமாகும்
5
விடையமதின் மோகியைப்போல விமலந்தானேமூவுருவாய்-
அடையுமெனவேகண்டவுடனடிகள்பரவியன்பாகத்-
தடைகளிலதுகாயமனந்தனமீந்திடிற்சார்ந்திடுகன்மம்-
உடையுமலது மற்றொன்றாலுடையாதிதுவேயொழுங்காமால்
6
தந்தைதனது சுதர்கையின்முன்றந்து பொருளைத்தானேபின்-
சிந்தைமகிழ்ச்சியுடனிருக்குஞ் செய்திபோலமூவடிவாய்-
வந்துசிவமேயிரப்பாகவாங்குந்தன துமாயையினை-
இந்தவகையையுணர்ந்தீயினிரியும்வினைகளென்றறிவாய்
7
மூன்றுவடிவாய்மும்மலத்தை மூன்றுபங்காய்த்தான்கொண்டு-
மூன்றுங்கெடுத்துநமதுடையமூன்றுபொருளும்பங்காக்கி-
மூன்றுவடிவங் கைக்கொளவேமூன்றுமுதலுமானசத்தே-
மூன்றுவடிவாமெனப்பொருள்கண்மூன்றுமீந்தேபணிபுரிக
8
இந்தத்திறனிற்பணிவிடைக ளியற்றியவினைகள்சமமாகில்-
அந்தத்தடங்களொத்துநிற்குமந்தத்தராசினாவேபோல்-
புந்திக்கிலேசமேயின்றிப்போதஞ்செவிதாம்வினைகள்கெடும்-
சந்திப்பதுவாமப்பொழுதேசத்தினிபாதந்தான்பிறத்தல்
9
சத்தினிபாதந்தான் பிறந்துசாற்றுமந்தக்கரணங்கள்-
சுத்தியதாகினவ்விடத்திற்றோன்றுநான்குசாதனமும்-
எத்திற்றானும்வேறொன்றாலெய்தாதெய்கிற்றாயினும்பின்-
குத்திரமாகிப்போமெனவேகொள்ளார்மேலோரீதன்றி
10
சத்தாசத்துவத்துவினைத்தகவேபிறித்துத்தானறிபில்-
கொத்தாய்மற்றுமும்மூன்றுங்கூடவுடன்வந்தவனையுறும்-
அத்தாலதுநீயென்றுரைக்குமமலவாக்கியப்படியே-
ஒத்தாற்பிரமந்தானாயேயுணருங்குருவினருளாலே
11
இந்தநான்கு சாதனமுமில்லாதவர்கட்கொருக்காலும்-
அந்தஞானம்வெளியாகாதங்கிநயனத்தொடுதோன்றிப்-
பந்தமறவேயுரைத்திடினும்பாழுக்கிரைத்தநீரொக்கும்
முந்தநான்கு சாதனமு முத்தியடைவோர்க்குறவேண்டும்
12
பண்டித்தலத்தையுழவாளர் பண்டி முகத்திற்கொழுப்பிணிக்கின்-
மண்டித்தடையற்றுழுமஃதின்மயக்கமுடையோர்க்கறிவருளின்-
மிண்டிப்பயமுமறமும்விட்டுவேண்டும்படியேசரிக்குமெனக்-
கண்டிச்சிறத்தோர்க்குபதேசங் கழலார்ஞானசற்குருவே.
13
இந்நேர்நெரியிற்சாதனங்களிவைநான்கினும்வந்தெய்தியதேல்-
தன்னோர் குரவன் றனையடைந்துசாற்றுஞ்சீடாசாரமுறை-
அந்நேர்பிசகா தேவல்புரிந்தருடன்மீதிற்சுரப்பளவும்-
பின்னேதிரிந்துமவன் கொடுக்கப்பெறவேண்டும் விஞ்ஞானம்
14
ஞானமார்க்கமிருவகையாய் நவில்வர்விகங்கம்பிபீலிகையென்-
றானவவையில்வகங்கமேயமலவேதமுடிவதனின்-
ஞானமாகும்பிபீலிகையே நவிறந்திரத்தின் ஞானமாம்-
ஆனவிகங்கத்துணராமற் றதனின் வழியேயுணர்ந்திடுவாய்
15
ஆசான்மாணாக்கன்னுடைய வதிகாரங்க ளவைபார்த்தே-
பேசானிற்கும் விகங்கமதைப்பிரமமொன்றுமேமெய்யாய்-
மாசாருலகம்பொய்யாகமாணாக்கன்றனனுபவத்தில்-
தேசாய்விளங்கியக்கணமே சிரத்தைபிறந்துதிடமாக
16
தோன்றுமுலகமெய்யாகிற்றோன்றுமதிலைவிடயங்கள்-
தோன்றுபந்தவிடயமதைத்தோன்றவரியவைம்பூதம்-
தோன்றுமிந்திரியந்தோன்றுந்தோன்றிமந்தக்கரணங்கள்,
தோன்றும்புருடன்காலபரந்தோன்றும்வியோமம்பரந்தோன்றும்
17
உலகமெதினின்றுதித்திடுமென் றுன்னிநோக்கினினைவதனில்-
இலகவுதிக்குமென நினைவு மெதினின்றுதிக்கு மென்நோக்கில்-
திலகவறிவுதனிலென்றேசேரவனைத்துமறிவானால்-
கலகமிடுதத்துவமெல்லான்களங்காவறிவாயேகரையும்
18
உலகமிலங்கும்வகையுண்டா யுதித்தின்பமதாயுருநாமத்-
திலகவிளங்குமிவையைந்திலியம்புமுன்முன்றங்கிசமும்-
குலவுசொரூபசம்பந்தங்கூறும்பினிரண்டங்கிசமும்-
கலகமாயாசம்புந்தங் கருதினோக்கிற்கற்பிதமே
19
மூன்றங்கிசமுமதிட்டானமொழியும்பினிரண்டங்கிசமும்-
ஆன்றவதிலாரோபிதமாமதனாற்சொரூபங்காரணமாய்-
தோன்றுமுலகுமசத்தாகுஞ்சொரூபமொன்றேசத்தாகும்-
ஊன்றிநோக்கிலெக்காலுமுளதேதோன்றுமிலதிலமே
20
நாமரூபந் தனைமெய்யாய் நாடுமிடத்தின்முப்பொருளாம்-
நாமரூபந்தனைப்பொய்யாய்நாடுமிடத்திலொருபொருளாம்-
நாமரூபந் தனைமெய்யாய்நாடிற்சீவநவனேயாம்-
நாமரூபந்தனைப்பொய்யாய்நாடிற்பிரமமவனேயாம்
21
ஆடியதனிற்றோன்றுநிழலதுபோல்விகற்பந்தீர்ந்தறிவில்-
கோடிவிவிதசகத்தோன்றுங்கொளுங்காரணகாரியமின்றி-
நாடிவேறுபோற்பாய்தனாகமதத்தாற்றன்னிழலை-
ஓடிப்பாயுமதுபோலென்றுரைப்பர்பிரமவாதிகளே
22
ஒருவிகற்பங்களுமில்லாவொன்றாம்பிரமவதினின்றே-
ஒருவிகற்பநினைவாலேயுலகுசீவபரமாகும்-
ஒ*விநினைவைமுப்பொருளு மொடுங்குமதுவேமுப்**ழும்-
ஒருவிகற்பநினைவதனுக்குதிக்கவொடுங்கவிமிதுவே
23
தனதுமாயைதன்னாலேதனையேயனேகமாய்க்காணும்-
தனதுஞானந்தன்னாலேதனையேயேகமாய்க்காணும்-
தனதுசத்தியிவையிரண்டுஞ்சத்திமானாந்தனையன்றி-
தனதுசத்திவேறாகாததனாற்றானே தானிகழும்
24
என்றுநிலையிலொருபடியாயிருந்துதனையே கண்டிருக்கச்-
சென்றுநினைவிற்பரசீவ செகமாய்விரியு முன்னிலையில்-
நின்றுநினைவைத்தானொடுக்கினேரேமூன்றுஞ்சென்றொடுங்கும்-
என்றுகண்டோன் மூன்றாம்பாழிறந்தசொரூபமேயன்றோ
25
அடியுமுடியுநடுவுமிலாவகண்டவொளியாமொருதனையே
கடியநினைவாமாயையினாற்கலங்கிவேறாயனேகமாய்ப்
படிகமலையிற்சுணங்கனைப்போற்பார்த்தலெனவேயதிட்டான
முடிவிறன்னைத்தான்கண்டேமோகமின்றிப்பார்த்திருப்பர்
26
இந்தநெறியிலுணராதார்க் கியம்பும்பிபீலிகையினெறியை-
வந்தவழிக்கும்போம்வழிக்கும்வாதமின்றியொழுங்காகக்
பந்தமவையைநியதிகொடுபார்த்தே யொன்றொன் றாய்கற்றி-
எந்தப்பொருணின்றதைக்கண்டே யெல்லாமதுவா யுணர்ந்திடுக
27
வந்தவாறுநெறியுரைக்கின் மாயை தோன்றும்பிரமத்தில்-
அந்தமாயைதனிலீசனகிலவிடையமாய்நிகழும்
இந்தவான்மாமற்றவையி லேகதேசவிடையமாம்-
வந்தவாறே யொடுக்கிவிடில் வயங்கும் பிரமமேயென்றும்
28
அந்தப்பிரமந தனினின்றே யனுர்வாச்சியமாம் பினைதோன்றும்-
அந்தப்பினையின் மாயைவருமதனிற்பரதத்துவமதனில்-
வந்தபடியே வியோமமதில் வருங்காலபரமதினின்றே-
தொந்தப்புருடன்புருடனிலே தோன்றும்பகுதிபகுதியின்மான்
29
மதியினகங்காரந் தோன்றி வகுத்து மூன்றுகுணமாகும்-
அதிகசாத்துவிதகுணத்திலாகு மனஞானேந்திரியம்-
விதியாயிராசதகுணத்தில்வெளியாங்கருமவிந்திரியம்-
ஒதியதமசுகுணத்தினா னுண்டாந்தன்மாத்திரையைந்தும்
30
அவையைப் பஞ்சீகரணஞ்செய் யிலாகுமைந்துமாபூதம்-
இவைகளிருபத்தெட்டுமுட னியம்புமாயைபின்னையுமே-
கவைசெய்முப்ப தாகுமிவைகண்டப்படியேதானொழுங்கில்-
சிவையினருளா னியதிபணிற் சேரும்பிரமந்தானாக
31
முப்பதினையு நீங்கிநிற்க மொழியுமவத்தைப் பத்தாகச்-
செப்புநனவுகனவினுடன் சீவசுழுத்திபரநனவு-
வெப்புவகன்ற பரகனவு வியோமஞ் சிவசாக்கிரன்கனவு-
ஒப்புமிலது மூன்றாம்பா ழுண்மையானகுருவொன்றே
32
(வேறு)
நனவதனில்விசுவன் கனவினிற்றை சதனாகும்-
      ந்ண்ணரிய சுழுத்தியினிற்பிராஞ்ஞன் பரநனவில்-
கனவிராட்டன்கனவிலிரணிய கெர்ப்பனுமாங்
      கருதரியபரப்பாழி லவ்வியாகிருதன்-
உனவரியசிவநனவிற்சிற்சொலிதைவிசுவம்-
      ஒடுங்கியிடுஞ் சிவகனவிற் பிரசாபத்தியனாம்-
வினவரியபின்னையினிற்பொற்புவிசுரந்தனுமாய்-
      விளம்பிடுவாபிமானியவத்தை யொன்பதினுமே
33
நனவதனிற்பூதஞ்சூக்குமபூதமறியும்-
     ஞானவந்தியங்கன்மவிந்திரியமிவைகள்-
கனவதனின் மனமதிற்றகங்காரமூன்று-
     கறுத்தொடுங்குஞ் சுழுத்தி யினிற்பகுதிபரநனைவில்-
அன்பருடன்பரகனவிற்கால*ரமவியோமம்-
     அதீதமதிற்சிவநனவிற் பரதத்துவ**தக்-
கனவதனின்மாயையுப சாந்தமதிற்பின்னை
      கடிவ்வொழுங்கினிலகற்றிற்காணுமந்தவீடே
34
(வேறு)
பிண்டந்தானாய்நின்றறிவைப்பிறிக்கிலந்தவனுபவத்தில்-
அண்டந்தானாய்நின்றிடுமற்றந்தவறிவைத்தான்பிறிக்கில்-
கண்டவிவைகட்குட்புறப்பாய்க்கலங்காவறிவாய்நிகழுமிதை-
உண்டபொழுதேபொனிற்பணிகளொன்றாம்போற்சித்தொன்றேயாம்
35
பூதநீங்கிற்பகுப்புபோம்பொறிகணீங்கிற்காட்சிபோம்-
ஓதந்தக்கரணம்போகிலுளவாதனைபோமிருள்போகில்-
போதன்றோன்றும்புருடன்றான் போகிற்சரவஜூத்வாதி-
போதம்போகுங்காலபரம்போகிலவ்வாதனைபோகும்
36
வந்தவியோமநீங்கியிடில்வாங்குமிரண்டாம்பாழ்பரத்தின்-
தொந்தநீங்கிலுலகம்போந்தோன்றுமாயைதானீங்கில்-
பந்தமுறுமவ்வாதனைபோம்பகரவொண்ணாப்பினைநீங்கில்-
அந்தமூன்றாம்பாழ்போகுமனைத்துமானசிவந்தோன்றும்
37
ஏதேதகன்றததுமுன்ன மியற்றிந்தொழில்கடன்னிடத்தப்-
போதெயகன்றவ்வனுபவத்திற் போக்கவேண்டியதெலாமகற்றி-
ஈதேயுளமற்றவையெல்லாமில்லதெனவேயுணர்ந்தவையும்-
ஈதேயெனக்கண்டச்சிவத்தையிடைவிடாதேபார்த்திருப்பார்
38
நேரே நெறியிலடைவோர்க்கு நியதிநெறியிலடைவோர்க்கும்-
ஊரேதொன்றே யோரொருவர்க்கோரொன்றதனிற்சம்மதமாம்
ஆரேயெனினுமினவயிலொன்றிலாசானூன்மாணாக்கனெத்தால்-
சாரேதொன்றுமில்லாததனிவீடேதாமாகுவரால்
39
அறையிவ்வொழுங்குகளிலொன்றி லாசானூன்மாணாக்கனெவ்வக்-
கறைசெய்யைம்பூதங்கண்முதற்கழறொணாதபினையீறாய்-
இறையேயெனினும் வேறின்றியெல்லாந்தானாயேகண்ட-
நிறைவோரறிவின்மகிழ்ச்சியினானின்றுகூறுநிலைகேளாய்
40
நானேயென்றுமெவ்விடத்து நன்றாயுண்டாயிருக்குகேன்-
நானேயென்றுமெவ்விடத்து நன்றாய்தோன்றிவிளங்குகேன்-
நானேயென்றுமெவ்விடத்துநன்றாயின்பமாய் நிகழ்கேன்-
நானேயென்றுமெவ்விடத்துநன்றாய்விளையாடாநிற்கேன்
41
உண்டாயென்றுமெவ்விடத்து முளதாயிருந்தலென்சத்தே-
உண்டாயென்றுமெவ்விடத்துமுளதய்விளங்கலென்சித்தே-
உண்டாயென்றுமெவ்விடத்துமுளதாமின்பமென்னின்பே-
உண்டாயென்றுமெவ்விடத்துமுளதாயென்னுள்யான்மகிழ்கேன்
42
இருந்தேதோன்றியிடவேண்டு மெந்தப்பொருளேயானாலும்-
இருந்தேதோன்றியிடும்பொருளேயின்பமாகியேநிகழும்-
இருந்தேதோன்றுமெவ்விடத்துமென்றுநிகழ்தலொருநானே-
இருந்தேதோன்றுமென்னிடத்திலின்பமாயானேமகிழ்கேன்
43
எனதுசுயலீலையினாலேயென்னைத்தானேநானாவாய்-
எனதுசத்திதன்னாலேயின்னானன்னானிதுவதுமற்-
றெனதுபிறரதிதுவதுவென் றெண்ணிமானமுடைத்தாகி-
எனது கண்ணேயான்றானே யிருந்துவிளையாடாநிற்கேன்
44
எங்கும்விடையமாய்நிகழு மீசனானாயங்கங்குத்
தங்குமுயிர்களவைநானாய்ச் சாற்றுஞ்சங்கற்பமுநானாய்-
அங்குநாமரூபமதையையஞ்செய்யுமன நானாய்-
அங்குத்துணியுமதிநானாயபிமானகங்காரமு நானாய்.
45
சித்தநானாய்ச் சத்தமுன்னாய்ச் செப்புங்கந்தமீறாக-
ஒத்தவிடையமைந்தினையு முணருஞானேந்தியநானாய்
சத்தமுதலைந்தினையுணர்ந்து சாற்றும்வசனாதிகள்செய்ய-
வைத்தகருமேந்தியநானாய் வகுத்துவிளையாடாநிற்கேன்
46
உம்பர்நானாய்நரர்நானா யூர்வநீருறைவநானாய்
வெம்புமிருகங்களுநானாய் விகங்கநானாய்த்தாபரநானாய்-
அம்புநானாய்ப்புவிநானா யனலுநானாய்வளிநானாய்த்-
தம்பமவாகாயமுநானாய்த் தானேவிளையாடாநிற்கேன்
47
தந்தைநானாய்த்தாய்நானாய்த்தனையர்நானாய்த்தமர்நானாய்ச்-
சிந்தைமகிழ்தாரமுந்தவனுஞ்செப்புதமைடன்றம்பியுநானாய்-
விந்தைபுரிபூடணதானாய்வீடுதாதாபொருணானாய்-
விந்தையுடன்மகிழ்தலுநானாய்மேவிவிளையாடாநிற்கேன்
48
தோற்றறானாய்த்திதிநானாய்த் துடைத்தனானாய்த்திரோபாவம்-
ஏற்றமானவனுக்கிரகமிரண்டுநானாயிவையைந்துள்-
சாற்றலான தொழிலனைத்துந்தகவேயடைக்கியன்றுமுதல்-
தேற்றமானசத்தியினாற்றிருந்தவிளையாடாநிற்கேன்
49
தங்கத்தனந்தவிதமாகித்தானேநிகழும் பணிதியெல்லாம்-
தங்கத்தினுக்கோர்காலையினுந்தான்வேறாகத்தோன்றாதின்-
பங்கற்றொளிரு மென்னிடத்திற் பலவாய்நிகழும்சகமுழுதும்-
பங்கற்றொளிரும்யானென்றேபார்த்துவிளையாடாநிற்கேன்
50
சத்தையின்றியொருபொருளுந்தானேயுண்டாயிருக்குமோ-
சிந்தையின்றியொருபொருளுந்தேஜசுண்டாய்விளங்குமோ-
மித்தையானசகமுழுதும்விளங்குமதினின்றதினாலே-
எத்தைநோக்கிமகிழ்ந்திடினுமியானேயென்றுமியான்மகிழ்கேன்
51
நித்தமாகியேநிற்கினிகழுங்காலபரிச்சேதம்-
ஒத்தபரிபூரணமாகிலோதுந்தேசபரிச்சேதம்-
மத்தமானதேகமேயாகின்வத்துபரிச்சேதஞ்-
சித்தமாகி யிம்மூன்றுஞ் செல்லாயென்னுள் யாமகிழ்கேன்
52
சத்தைவேறொன்றிலாமையினாற்சாதிபேதமதுமாயை-
சித்தைவிடவேறிலாமையினாற் செப்பும்விசாதிபேதமது-
வித்தைதானிர்வயமாகின்வேறுவேறாஞ்சுவகதமும்-
மித்தையானவென்னிடத்தின்மேவிவிளையாடாநிற்கேன்
53
என்னையெனதுநினைவினாலிதுவாய்நானாவாய்க்காண்கேன்-
என்னையெனதுநினைவிலதி னேகமாயதுவாய்க்காண்கேன்-
என்னையன்றியொருபொருளுமிங்குமங்குமிலையதனால்-
என்னையிங்குமங்குமாயானேகண்டுநான்மகிழ்கேன்
54
எல்லாநானாயன்றுமுதலிருந்துவிளையாடாநிற்க-
எல்லாம்வேறென்றெண்ணியே யிருந்துமோகமடைந்தேனை-
எல்லாமுடையவருட்சத்தி யிரங்கிமோகமறவீச-
எல்லாநானாய்ப்பண்டைப்படி யிருந்துவிளையாடாநிற்கேன்
55
இதுவே துணிவென்றறியாதா ரென்றுநீந்தாரிடர்க்கடலை-
இதுவேதுணிவென்றறிந்தோர்களென்றுநீந்தார்சுகக்கடலை-
இதுவேவேத முரைப்பதுவுமீசன்முதலோரனுபவமும்-
இதுவேதுணிவென்றங்கையினிலெடுப்பேன்மழுவைச்சத்தியமே
56
இந்தஞானமகிழ்ச்சியுளோர்க் கியம்பஞானசரிதைப்படி-
அந்தவூழேநின்றிடுமற்றவைகளெல்லாமகன்றிடுமால்-
வந்ததேவர்மானிடர்க்குமாதர்முதலோர்சங்கமில்லா-
அந்தவூழேநின்றிடல்போலாமென்றறைவோர்கற்றுணர்ந்தோர்
57
குலத்தையுடையோர்தங்களுக்குக் குலாசாரத்தின்வழிநிற்கும்-
நலத்தையுடையசமையிகட்குநவிற்றுநெறியேதானிற்கும்-
பலத்தையுடைய ஞானிகட்குப்பகரும்படியேதானிற்கும்-
வலத்தையுடையவூழென்றேவகுத்தேயுரைக்குமுயர்ந்தோரே
58
விடையமீதிலுபாதியு மேவுமுயிர்மேனனியருளும்-
அடையுமாசான்மேலன்பு மந்தப்பிரமஞானமுமே-
தடையேயன்றியிவைநான்கோர் தனுவாயுடையோர்தமைஞானம்-
உடையோரென்பரல்லாரையுரைப்பர்சோரஞானியென்றே
59
ஆசாரங்களவையில்லா வசடரிடத்தில் விஞ்ஞானம்-
தேசாய்விளங்காதபரமதுஞ்சிறப்பேயின்றிச்சண்டாளர்-
மாசார்பாண்டந்தனிலுரையும்வான்கங்கையீனீரினீனிழிவாம்-
ஏதாகினும்யோக்கியத்தானத்திருந்தாற்பிரகாசத்தையுறும்
60
கான்றசோறின்விடையமதைக் கண்டுமுனங்கைவிடுத்தொழிந்தே-
ஆன்றவாசானடிபரவியமலவேதநெறிசென்று-
தோன்றவனுபூதியிற்பரம சுகத்தையடைந்தோர்பினும்பேய்த்தேர்
போன்றவிடையமேவிடுமோபொருந்திலவர்ஞானியையொக்கும்.
61
இமயநியமத்துடையரா யெழிலா ஞானயோககராய்-
உயர்நற்குருவினருளாலே யோரஞ்ஞானநிவிர்த்தியையும்-
சுயசித்தாந்தவாயையுந் தோன்றுமனுபூதியிலடைந்தோர்-
பயனில்விடையந் தனைவிரும்பார்பற்றாயழலுமற்றையரே
62
மனனசமாதியுடையோர்க்கு வகுத்தவியமநியமமுமில்-
சனனமரணவித்தான தகுநீடிருளுநிவிர்த்தியுமில்-
கனநற்பரமானந்தமதுங் கைகூடாதுதான்வாளா-
மனனமதிலேமகிழ்வெய்திவசனஞ்செயுமுன்படிமயங்கும்
63
அந்தரங்கத்தொருவனையோ ரரிவையொருத்திதான்புணரும்-
அந்தவகையின்வெளியாகுமரிவைவடிவிலதுபோல-
பந்தமறுதத்துவமுணர்தல்பரமாந்தரங்கமானாலும்-
தொந்தமகன்றவகைதோன்றுஞ்சொல்லானடையாற்பாவனையால்
64
மருளையுடையபித்தனையு மருளில்லாதசுத்தனையும்-
மருளையிலரேதுணிவாகமதிக்குமதுபோலீதன்றே-
தெருளையுடையஞானியையுந் தெருளில்லாதஞ்ஞானியையும்-
தெருளையுடையோரேதுணிவாய்த் தேறுமவர்சொன்னநடையினுமே
65
தத்துவங்களெழுநான்குஞ்சாற்றுமாயைதானிவையின்-
கொத்துகளைப்பார்த்தறவீசிக்கூறுமூன்றாம்பாழ்கடந்து-
தொத்துமற்றொன்றில்லாதசுவையானந்தப்பூவையையே-
அத்துவிதமாத்தினம்புணர்வோரழியும்போகம்வேண்டிடுமோ
66
யோகமதனிலுறுபயனையுவர்த்தேஞானநெறிமேவி-
ஏகமெனுமப்பிரமபதமெய்தி யாரூடம்பிறந்தோர்-
தேகவடிவாயேநின்றுசிந்தித்தனுசிந்திக்கிலுள-
போகமதனை மேவிடுமோ பொருந்திலூர்ப்பன்றிடையொக்கும்
67
அலைவையிறந்தவிடத்தந்த வானந்தம்மற்றவ்வின்பம்-
அலைவையுடையவிடத்தென்றலறியாமையினாலெவ்விடத்தும்-
அலைவையிறந்தபுடத்தன்றி யானந்தஞ்சற்றும்முதியா-
தலைவையுடையவிடத்தரந்தையென்றேயறிஞாலையாரே
68
சுணங்கன்றனதுரசமிதென்றே
      தோன்றவறியாதெலும்பின்கண்-
இணங்கிமகிழுமதின்பமெய்தும்
      வருகாணாதென்போல்-
பிணங்களெல்லாஞ்சுகமென்றே
      பேணிப்போகந்தனைவிரும்பும்-
குணங்கொள்ஞானியொருவனுமே
      கொள்ளானின்புண் டெனப்போகம்
69
உள்ளபொருட்கேயின்பென்றுமுளதாமென்றுமில்லாத-
கள்ளமுடையபோகத்திற்காணுஞ்சுகமேதின்பென்றே-
உள்ளமகிழுமசத்தரெலா முணர்ந்தஞானியொருவனுமே-
பொள்ளலுடையயோகத்தைப்பொருந்தான்பொய்யாதலினாலே
70
ஊனதாகிநிற்போற்கேயுலகனென்றுபேருடைத்தாம்-
ஆனவூனிதனக்கறிவானந்தந்தோன்றுமோவஃதின்-
ஞானமாகிநிற்போர்க்கே ஞானியென்றுபேருடைத்தாம்-
ஆனஞானிதனக்கிந்த வகிலவின்பந்தோன்றாதே
71
ஏகதேசதேகமதாயிருந்தேயறிவானந்தமதை-
ஏகபோகஞ்செயக்கூடாததுபோற்சொரூபஞானிக்கும்-
ஏகதேசவின்பத்தை யெங்கும்பூர்ண மாயிருந்தே-
ஏகபோகஞ்செயக்கூடா தீனமுடையோர் கூடுமென்பார்
72
எங்கெங்கிருந்தெய்திடுமின்பமெழில்வீட்டின்பமெனவேகண்-
டங்கங்கருந்துவோமென்னிலறிஞர்கூறுமுறையன்றே-
இங்கங்கென்றில்லாவின்பமெய்தினோர்கட் கொருக்காலும்-
இங்கங்கென்றேதோன்றிடுமோ வென்றும்புணரமியல்பானால்
73
பங்கேதோன்று மில்லாத பரமாயெங்குநிற்கினுமுன்-
இங்கேநின்றவாதனைகளிருக்குமெனின்முன்சாதகத்தில்-
தங்கேதோன்று மில்லாமற் சரித்ததாகிலதேநிற்கும்-
இங்கேயுறைந்த பாண்டத்தி லிலுப்பைப்பூவின் மணமுண்டோ
74
இமயநியமமியற்றாம லெழிலர்நிட்டையடைவோர்க்குச்-
சுயநற்சொரூபாநந்தமதுந்தோன்றாதிருளுமாறாது-
பயந்தபரமமடைந்தவர்போற் பாவித்துளத்திற்பினுமிந்தக்-
கயவர்க்குரித்தாம்போகத்தைக் கருதியிருந்துந்தொடர்ச்சியென்பர்
75
தனதென்றுரைக்குமவையெல்லாந் தள்ளியினிமேற்றனதென்னாக்-
கனவவ்வறிவுதானாகக்கண்டானந்தமடைந்தோர்க்கு-
மனதில்வருந்துமவையெல்லாம்வந்துவருத்தாதுடலினையே-
தினமும்வருத்திவிடப்படாச்செய்கையதுவே வாதனையாம்
76
உடந்தையானஉடன்முதலையுயிர்க்குவேறுகூறாக்கிக்-
கடந்தசிவமேதானாகக் கண்டுதெளிந்தோர்க்குடன்முன்னாத்-
துடர்ந்தபோகங்கலங்கிவிடுந்துடர்ந்தேநிற்கிற்றேறினதில்-
கடைந்ததயிருங்கடையாத கட்டித்தயிருந் தோன்றிடுமே
77
ஆகுவுறையுங் கட்டியிதென்
      றறியப்போமோவெனிலந்த-
ஆகுவுறைதற்கானதிலே
      யையந்தோன்றுமதுபோல-
ஆகுமொழியையுடையோர்க
      ணையந்தோன்றுஞானமதற்-
காகும்விடையமுடையோர்கணையந்
      தோன்றாதுணர்ந்தோர்க்கே
78
அகத்திலுளதேபுறத்துண்டா மகத்தில்லாதேபுறத்தில்லை-
சகத்திலுள்ளோரேரதிடுமித் தகைமையென்றுமதுபோலத்-
தகர்த்திவ்விடையமனுபவமாய்த் தனையேகண்டோர்புறத்துறினும்-
தகர்த்தபடியேநின்றுவிடுஞ்சாராதிதையத்துளபடியே
79
போடவேண்டும்புடமெல்லாம் போட்டுத்தங்கமாகினதில்-
கேடதானகளிம்பென்றுங் கிட்டாதஃதினியதிபணிச்-
சேடமானசிவமாகித்தினமுமதுவாய்நின்றிடுவோர்க்-
கீடதானமாயையென்றுமிலதேயாகிப்போய்விடுமால்
80
உலகத்துளவெப் பொருள்களையு முளலக்கணங்கொண்டிகுதீதென்- றிலகக்குணிக்கலாமஃதினில்லாமாயையில்லெனவே-
விலகியிதனுக்கதிட்டான மெய்யாம்பிரமமானோரைக்-
குலவுமுணர்வுசரிதை கொண்டேகுணிக்குமாயையொழிந்தோரே
81
பிணிகளொழிங்கிலாயுமற்றைப்பேசுந்தெய்வீகத்தாயும்-
தணியிலுடையிற்சுகம்பிறந்து தணிந்து தோன்றுமதுபோல-
எணியவெணியாங்கெவ்விதத்து மெய்திமகிழ்ந்தோர்தமதறிவில்-
கணமதேனும் விடையமதிற்கலங்காதறிவாய்த்தணிந்திருக்கும்.
82
எறியிற்கதிரோன்சாளரத்திலிருந்துதோன்றும்பூதவணு-
அறவிட்டெறியும்பேரொளியிலஃதுதோன்றாததுபோல-
அறிவிற்றோன்றுமுலகெனினுமகண்டாகாரவறிவதனில்-
செறியத்தோன்றாச் சிற்றறிவிற்செகம்போல்விளங்கியிடுமன்றே
83
தரையுளோர்கண்மிகவருந்தித் தரினுமுடையூணிவையன்றிப்-
புரையிலோர்கண் மற்றொன்றைப்பொருந்தநினையாரென்போலும்-
வரைவிலோர்கண்மிகவருந்திவாங்கிப்பொருந்திமயங்கியிடும்-
கரையில்கருமந்தன்னாலேகைவிட்டொழிந்தஞானிகளே.
84
உடலைக்குறித்தோபாலருந்தலூரைக்
      குறித்தோவவரவர்க்கே-
நடலையுலகையொழிந்தந்த
      நாட்டம்பிறந்தவ்வானந்தக்-
கடலையமிழ்ந்த லெனிலந்தக்க
      கடலிலமிழ்ந்துமன்னோரைக்-
கடலைமண்டைக் கொண்டோனாக்
      காணுமதுபோற்றோன்றிடுமே
85
கனியும்பாலுஞ்சருக்கரையுங்கலந்தவன்ன நிரம்பவே-
அனிசம்புசிப்போர்நீர்க்கூழையருந்தநினைக்குமோனஃதின்-
இனியகுருவினருளாலேயிருளுநீங்கியானந்தம்-
நனியுமுடையோர் விடையமதை
      நணிகார்நணுகினகைக்கிடமே
86
ஞானமுடையோர்க்கேதுறினு நணுகாகுற்றமெனத்துறவோர்-
ஊனமனையோருரைத்திடின்மற்றொன்றேகுற்றமனையுடையோர்க்-
கீனமுடையதுறவியர்க்கேயிரண்டாங்குற்றம் பரப்பிரட்டும்-
ஆனதுறவிலிழிவுமெனவறையுமகன்றபெரியோரே
87
அபாஞானமுயர்குருவாலையந்திரிவுமறக்கேட்டு
விபரமாகவந்நெறியின் மேவிப்பூதமாத்திரமே-
சபலமாகநீங்கிடத்திற் சகத்திலொன்றும் வேண்டாது- கபடஞானமுடையோரே கண்டோமெனும்போகத்துமுறும்
88
அந்தமுகத்தின்புறுவோர்களழியும்போகமின்பென்றே-
இந்தமுகத்திற்றிரும்பார்களென்றுமீன்ஞானியர்கள்-
அந்தமுகத்தின்புர்றோரினறையுஞ்சொன்மாத்திரமாகி-
இந்தமுகத்திப்போகமதையின்பென்றழுந்துமெப்போதும்
89
போகத்துறைவோன்றன்மனையைப்
      பொருந்திப்பிறர்க்கீந்திடுவதுண்டோ-
ஏகத்துறைவோன்றன்மனையையிதைய
      மொத்துப்பிறர்தமக்குச்-
சோகத்திறனாம்போகத்தைச்
      சுகமென்றியுமோவீயின்-
மோகத்துறைவேரறகன்றோர்கண்
      மொழிவரவரைப்பதிதரென்றே
90
இடைமுன்னிறிலகண்டபரத்தேகமாகி யானந்தம்-
உடையவறிஞர்தமக்கிச்சா வூழேசற்றுமிலவாகும்-
விடையமதனில்விருப்பமாய்மேவியூழுழென்றிடுவர்-
கடையிலியமதூதர்களாற் கலங்கியூழுழென்றிடுவர்
91
இதுவேநான்குசாதனமு
      மியல்பாயுடையோரெய்துநெறி-
இதுவேயென்றுமாறாத
      விருளின்றிமிரைத்தானறுக்கும்-
இதுவேஞானானந்தரசம்ரமிக்கச்
      செய்யும்விஞ்ஞானம்-
இதுவேயுனக்குமுறுதியென
      விசைத்தாளெனையாளருளுமையே
92
இந்தநெறியில் விகங்கமதையெய்தியானுமவளருளால்-
பந்தமகன்றுபரவொளியைப்பார்த்தேனனைத்துந்தானாகி
அந்தநடுமுன்மூன்றுமில்லை வகண்டாகாரவடிவாகித்-
தொந்தமென்றுமிலதாகிச்சுயமாய்விளங்கியிருந்ததுவே
93
வேறு. நிமலமாம்பிரமவனுபவமுரைத்
      தேனின்றதுசிருட்டிமுன்னானாய்-
நிமலமாமெனது நிலையினின்றேனினை
      வெனுமாயையிற்பாய்ந்து-
நிமலமாம்பரமாயுயிர்களாயுலகாய்
      நிலையதுபோலவேவிரிந்து,
நிமலமாமென்கணப்படியொடுக்கி
      நின்றிடி வேனிதுநிசமே
94
அலைவிற்சிற்சொரூபமஃது மல்லாதா
      யதைவிடவேறுமல்லாதாய்-
அலைவுசெய்யஞ்ஞானத்திசைத்தாய
      தகன்றிடும் பொழுதசத்தாய்-
அலைவின்றித்தேறின்முக்காலுமில்லா
      தாயனாதியாயனிர்வசனமதாய்-
அலைவுறுமாயையுடையமாயா
      வியானனானாகியசோகம்
95
பரசொரூபத்துக்கபினமும்பினமும்பகர்
      பினாபின்னமுமலதாய்-
நிரவயமலதாய்ச்சரவயமலதாய்
      நிரவயசரவயமலதாய்த்-
திரசத்தையசத்தைச்சதசத்தையலதாய்ச்
      செப்பியவனிர்வசனமதாய்ப்-
பரபிரகிருதிதமசெனுமகிமை
      பண்டையிலுடையவிச்சோகம்
96
எனைமறைப்பறைச்சி தீண்டியுமகத்தி
      லிருளிறந்தும்மொளிபிறந்தும்-
பினைநனிமாயைதூரத்தியாயும்
      பிரவஞ்சமருந்தியுமிவையின் -
உனிநின்றுபார்க்கிற்பஞ்சசூதகமு
      முண்டெனக்கேயிவைதீரா-
துனிநின்றுபார்க்கினிவைகட்காளானே
      னொருவிருத்தாசலமடைந்தே
97
என்னையேதோன்றாவகைகொலைபுரிந்து
      மினியதோர்ஞானமாணிக்கந்-
தன்னையேகளவுபுரிந்துமற்றதன்மேற்றவிர்ந்திடா
      மயக்கத்தைக்கொண்டு-
பின்னையுமதிலேகாமத்தைப் பெற்றும்
      பேச்சிறந்ததுவெனவுரைத்தும்-
இன்னவைம்பாதகங்கட்காளானே
      னெழில்விருத்தாசலமடைந்தே
98
இத்தகைசூதங்கள்பாதங்க
      ளெய்தியுமிடமுதற்பற்றும்-
ஒத்தாவிவ்வுடலிந்தியங்கரணங்களொன்றுந்
      தாக்கறவெட்டவெளியில்-
வைத்தெனக்கண்டுபாழ்செய்ததந்தோ
      மலையையேநம்பியுமுலகில்-
இத்தனைகொடுமையுடையவித்தலந்தானெனக்
      கென்றேயிருந்ததோவறியேன்
99
வேறு.
விருத்தகிரிவடிவானவிறையவனும்வாழ்க-
      வினையனேற்கருள்விருத்தவம்பிகையும்வாழ்கக்-
கருத்திலுறவெனக்கருளும்பிரணவமும்வாழ்கக்-
      காரணியையடையுமடியாருநனிவாழ்கத்
திருத்தமுடன்றலமுமிகச்சிறப்பதாய்வாழ்கச்-
      சேர்ந்துறையுமியாவர்களுஞ்செல்வமுடன்வாழ்க
இருத்தியெனையுமையருளாயாலுணர்ந்தபடியே-
      எல்லோருமுணர்ந்துவாடுதலறவேவாழ்க
100

விஞ்ஞானசாரம் - முற்றிற்று.

4. அத்துவிதவுண்மை.

காப்பு.
பாயிரம்.

ஆழத்துப்பிள்ளையார் துதி

பொங்கரவதுவுமிந்தும்புரிசடையதனிற்சேர்த்தி
அங்கரந்தனிலிடத்திலழகியமானையேந்தும்
சங்கரன்சேயம்பாசந்தகர்த்தைந்துமொருங்கருக்க
ஐங்கரங்கொண்டவாழத்தையனைவணக்கஞ்செய்வாம்
பெரிய நாயகியார் துதி.

ஆண்டகுருவேகண்மணியேயருளேநீநானொன்றாகப்
பூண்டவடிவையென்னுடையபுந்தியதனுணின்றுணர்த்தி
ஈண்டப்படியே யென்னாவிலிருந்து முரைக்க வேண்டிடுநீ
நீண்டமாலுமயன் போற்று நிமலவிருத்த நாயகியே
பாயிரமுற்றும்.

நூல்.
மேலாஞ்சதுட்டசாதனங்கண்மேவி நிறைந்தபோக்குரைக்கின்
மேலாமதுநாமெனத்திடமாய் விளங்குமவையில்லாதவர்க்கு
மேலாம்பரமன்மான்மழுவாய்விளங்கியுரைத்தும்விளங்காது
மேலாஞ்சா தனங்கள்வரமேவவேண்டுஞ்சாதுசங்கம்
1
உண்டாய்த்தோன்றிரமித்திடுத லொருநம்வடிவேயுருநாமம்
கண்டேயிடன் மாத்திரமல்லாற் கருதிப்பார்க்கின்வேறில்லை
பண்டேமுதலித்தகவாகும்பலவாய்க்காணன்மைத்திரிவால்-
விண்டாற்றிரி வையேகமாய்விளங்குநமதுவடிவமே
2
எந்தச்சத்திலசத்தாகுமிந்தவுலகுசத்தாகும்-
எந்தச்சித்திலசத்தாகு மிந்தவுலகந்தான்விளங்கும்
எந்தவின்பிற்றுன்பாகுமிந்தவுலகமின்பாகும்
அந்தச்சச்சிதானந்தமதுவேநமதுவடிவாகும்
3
எல்லாநாமேயெனவறிந்தா லெஃதைநினைவானினைத்திடுதல்-
சொல்லாலெஃதையுரைத்திடுதறொழிலாலெஃதைச்செய்திடுதல்-
நில்லாவுலகைவேறென வேநினைதலுரைத்தறொழில்புரிதல்-
நல்லாரனைத்து நாமெனவேநாடாரவையினொன்றையுமே.
4
நானாவாகத்தோன்றியிடுநாமரூபமிவையனைத்தும்-
நானாவல்லவொருநாமேநாடிமகிழுஞ்சித்திரங்கள-
தானாஞ்சித்தாகாசத்திற்றன்னைத்தானேதான்றானே-
தானாங்கருவியினில்வரைந்துதானே நோக்கிமகிழ்ந்திடுதல்
5
தங்கந்தானேபணிதியாய்ச் சாற்றும்விதமாய் விளங்குதலின் -
அங்கமுதலாஞ்சகங்களாயறிவே விளங்குமயலில்லை-
இங்கங்கென்றே பங்கொன்றுமில்லையகண்டவறிவொன்றே-
துங்கவறிவு தோன்லளவுந்தோன்றுநானாவிதரூபம்
6
இன்னானன்னானிதுவதுவென் றியம்புமுலகம் வேறன்று-
தன்னானந்தலீலையினாற் றன்னைத்தானே தன்னிடத்தில்-
அன்னானின்னானதுவிதுவென்றனந்த விதமாய்த்தான்பகுத்தே-
உன்னாநின்று தானடிக் குமொருகூத்தெனவேயியம்புவரால்
7
தங்கமொன்றேபணிதிகளிற் சாற்றும்விதங்கள் வெவ்வேறு-
தங்கவிலக்கணமுமன்று தங்கம்விடவும்வேறன்று-
தங்கமழியாப்பணியழியிற்சாற்றுமிந்தத்தகமைபோல்-
எங்குநிறைசித்தாநம்மிலிலகுமிந்தவுலகமே
8
தானுண்டாகிலுலகுண்டாந் தானுண்டாகிலுயிருண்டாம்-
தானுண்டாகிற்பரமுண்டாந்தானுண்டாகில்வீடுண்டாம்-
தானுண்டாகிற் பஞ்சதொழிற்றானுண்டாகுந்தனையன்றித்-
தானுண்டோமற்றவையதனாற்றானேயனைத்தும்வேறில்லை
9
மந்தவிருளிற்கயிற்றரவின் மாறுபாடாய்த் தோன்றுதல்போல்-
இந்தவுலகு முயிர்களுமவ் வீசன்றானுமுயிரடையும்-
பந்தம்வீடுமீசன்செய்பஞ்சகிருத்தியங்களுமே-
அந்தநமது சொரூபத்தி லாரோபிதமாய் நின்றிலகும்
10
அனந்தவிதமாய் கீற்றையுடைத் தாகுஞ் சிலையொன்றதைப்பார்க்கின்-
அனந்தவிதமாய்த்தோன்றயிடுமந்தக்கீற்றுஞ்சிலையொன்றே-
அனந்தமுடையநம்மிடத்திலகிலமந்தத்தகமைபோல்-
அனந்தவிதமாயத்தோன்றியிடுமறிவேயன்றிவேறில்லை
11
மையேமிகுநித்திரைமோக மயக்கிற் கனவைக்கனவதனில்-
பொய்யேயெனத்தோன்றாதவர்க்கே புகலவேண்டு நனவுணர்ந்தோர்-
மெய்யேபோலத்தோன்றிநனி வினங்குஞ்சகஞ் சற்குரு வன்றிப்-
பொய்யே யெனததிட்ட்மதாகப் பொருந்தத் தொறாதொருக் காலும்
12
கனவினனவே யுணர்ந்துயர்ந்தோர் கனவென்றொருவற் குரைத்திடினும்-
கனவிதென வேகாணாது காணுந்தனக்கென்றறிவு திக்கின்-
வினவிலதுபோனனவையுந்தம் விகற்பமெனவேயுரைத்திடினும்-
நினைவினிசமாய்க்கொள்ளாது நிசமாந்தனக்கென்றறிவு திக்கில்
13
கனவைக்கனவென்றுணர்ந்தவனைக் கனவினீயாரெனவொருவன்-
வினவிலவனுநனவதனில்விளங்குந்தனையேயுரைப்பனதில்-
நனவைநினைவென்றுணர்ந்தவனைநனவினியாரெனவொருவன்-
வினவிலவனுமகண்டமதாய்விளங்கும்பிரமமேயென்பன்
14
நனவிற்றானோரிடத்திருக்க நவி னித்திரையின் மோகத்தால்
கனவிற்றேசாந்தரமுதலாய்க் காணுமனேகவிதமஃதின்
வினவினாமுமகண்டமதாய்விளங்கியசையாதிருந்திடவே
கனவிம்மாயைதனில்விதமாய்க்காணுந்தே சாந்தரமுதலாய்
15
கனவிற்றோன்றும்பொருளெல்லாங்கனவிற்கனவென்றுணர்ந்தக்கால்
நனவில்விவகாரந்தோன்றுநவிற்றுமிந்தத்தகமைபோல்
நனவிற்றோன்றுஞ்சகமனைத்துநமதுசங்கற்பம்மெனவே
நனவிற்றோன்றியிடுங்காலை நமதுசொரூபந்தோன்றியிடும்
16
மனத்திற்கனவிற்கனவெனவே மதிக்கினந்தவிவகாரத்
தனத்தமுறினுங்கலக்கமுறானதிகமுறினுமகிழ்ச்சியுறான்
மனத்தினனவில்விவகார மயங்கிநீங்காதிருப்பனதின்
கனத்தசகஞ்சங்கற்பமெனக் கண்டாற்றனை நீங்காதிருப்பார்
17
சிங்காதனத்தில் வீற்றிருக்குஞ்சிறப்பாராசுங்கனவடைந்து
மங்காய்ப்புலைத்தன்மையைமேவி வருந்துவோன்றனனவுணரின்
அங்காஞ்சோகமோகமெலாமந்தக்கணமேநீங்குமதின்
இங்காஞ்சீவத்துவமோகமிரியுந்தனைத் தேர்ந்தக்கணமே
18
கனவைக்கனவென் றுணர்ந்தந்தக் கனவினனவைநோக்கிடினக
கனவையொழிந்த வக்கணமே காணுநனவில்விழிக்குமதின்
நனவைச்சங்கற்பமென்றுணர்ந்துநனவிற்றனையேநோக்கியிடின்
நனவையொழிந்துவக்கணமே நமதுசொரூபத்தேவிழிக்கும்
19
கனவையொழிந்து நனவதனைக்கண்டார்நனவினின்றுபினக்
கனவைநோக்கி யிடின் முன்னங்கண்டபடியேதோன்றுமதின்
நனவையொழிந்துதன் சொருபநன்றாயுணர்ந்தோரதினின்று
நனவைநோக்கிநினைவுகொடுநாடின் முனம்போற் றோன்றிவிடும்.
20
உறக்கமோகமதிற்கனவி லுலகமுயிர்கள்விவகாரம்
சிறக்குமெய்போற்றோன்றியதைத் தேரிற்பொய்யாவிடுமஃதின்
மறக்குமாயாமோகமதின்மாசார்பந்தம்வீடதெனப்
பிறக்குமவைகடனைத்தேரிற்பேசும்பொய்யாய்ப் போய்விடுமால்
21
ஒருவனுளதாகையிற்கனவு முண்டாமுறக்கமோகமதின்
ஒருவனிலதாகையிற்கனவு மொருகாலையினுமிலதாகும்
சொரூபநமதுண்டாகையினற்றோன்றுநானாவிதஞ்சகநம்
சொரூபமிலதேயிலையதனாற்றோன்றுமனைத்துஞ் சொரூபமே
22
படிகத்தடுத்தநிறங்களதிற் பத்திபாயுமந்நிறமாய்ப்
படிகமாகிநீங்கினதிற் பகருமிந்தத்தகமைபோன்
முடிவினமதுசொரூபத்தின மோகஞ்செயுமாயையிற்றோன்றும்
முடிவில்பந்தம் வீடது மின்மொழியமாயை யென்பதுமில்
23
பழுதையதனிற்றோன்றியிடும்பாம்பையுள்ளபடிநோக்கில்
பழுதையாயேதோன்றியிடும்பாம்புமதுவாய்விடுமஃதிந்
பழுதில்சிவத்திற்றோன்றியிடும்பன்மையுலகைநோக்கியிடின்
பழுதில்சிவமேயாய்தோன்றும்பன்மையுலகு மதுவாய்போம்
24
தோன்றிவிளங்கும்பொருளெல்லாநதொல்வேதாந்தவிசாரனையில்
ஊன்றிநோக்கியனுதினமும்யூகமதனிற்பரிசயித்தால்
தோன்றிவிளங்கு மறிவொன்றேசொன்மாத்திரமாய்விடுமுலகம்
ஊன்றிநோக்காதவர்கட்கே யுளதுபோலத்தோன்றிவிடும்
25
ஏகமாகிநின்மலமா யிருக்குநமக்கிப் பந்தமெனும்
மோகம்வந்ததேதென்றுமுன்பின்பாராதிப்பந்தம்
போகவழியேதெனநாடிப்பொருந்தும் வேதவிசாரணையால்
யூகமதனிற்சிதைக்கினதி னுள்ளவியல்பு பின்றோன்றும்
26
பரவைதானேயோரலைவிற் பலவாய்விளங்குமோரலையில்
பரவை நீங்கியொன்றாகிப்பழையபடியேவிளங்குமதின்
பரவுஞ்சொரூபாஞ்சங்கற்பப்பகுதியதனிற்பலவாகிப்
பரவுமசங்கற்பத்தொன்றாய்ப்பழையபடியே விளங்கியிடும்
27
கடங்கடமதுகாரணத்தைக்காட்டிடாதுமுன்விளங்கும்
படங்கடானுமப்படியேபகர்காரணமுநீங்காது
சடங்களாகுமிச்சமுந்தான்முன் விளங்குங்காரணமாம்
இடங்கொள்சொரூபத்தையுங்காட்டாதிருக்குமதைவிட்டகலாதே
28
மரத்தைநோக்கின்மதகரியுமறைந்து விளங்குமதைநோக்கில்
மரத்தைமறைத்துத்தான்விளங்கும்வாறுபோலச்சகமுழுதும்
பரத்தைநோக்கினதின்மறந்துபரமாய்விளங்குஞ்சகநோக்கில்
பரத்தை மறைத்துத்தான் விளங்கும்பரமேயனைத்துமாதலினால்
29
நாகத்துதிக்கைதனைநோக்கினாசிகரமுந்தோன்றியிடும்
நாகநயனந்தனைநோக்கினயனஞ்செவியுந்தோன்றியிடும்
ஏககருவிபார்த்தபடியிலகுமுலகுஞ்சித்ததுமாய்
30
ஊனாம்போகமெமதென்றேயுன்னல்விசாரமிலாமையினால்
நீதானவைகளிவைகளெனநிலைபோல்விளங்கியிடுமிந்த
நானாவிதமாஞ்சகமுழுதுநாமேயன்றிவேறில்லைத்
தானாய்நோக்கிற்றனாகுஞ்சகமாய்நோக்கிற்சகமாகும்
31
மாயையெனு மிவ்வுரைக்கருத்தமதிக்கின்யாதொன்றிலாததுவே
மாயையெனவிப்படியிருக்க மதிபரதனையிருவகையாய்
மாயைமெய்யென்றுரைத்திடுவர்மயக்கப்பட்டுத்தனைமறந்தோர்
மாயைபொய்யென்றுரைத்திடுவர்மயக்கநீங்கித்தினையறிந்தோர்
32
நாமரூபந்தனைநோக்கிநாடன்மனமும்புறமுகமும் -
நாமரூபந்தனைநீக்கிநாடலறிவுமுண்முகமும்
நாமரூபத்தெவ்வளவுநாட்டஞ் சொரூபந்தோன்றாது-
நாமரூபநாட்டம்விடினமதுசொரூபந்தோன்றியிடும்
33
அரையகுமாரன்புலையருடனணுகிமறந்து மொருவரால் -
அரையகுமாரனெனவறியிலஃதெப்போதுமறிவாதின்-
தரையிலாசானெழுந்தருளித்தனைப்பார்த்ததுநீயெனவுரைக்கின்-
புரையி லதுவாமூவவத்தைபொருந்தும்பொழுதுமறவானால்
34
படியிற்பொருளின்மெய்யென்றுபடிறொன்றிந்தவிருவகையும்-
முடிவின்மெய்பொய்யறுந்திடலாமொழியுமிந்தத்தகைமைபோல்-
கொடியவுலகைமெய்யெனவேகூருமதையுமறிந்திடலாம்-
முடிவிற்சகம்பொய்யேயாகு முத்தியொன்றே மெய்யாகும்
35
அகிலந்தோன்றும்பொழுதுமறைந்ததிட்டானமதாய்விளங்கியிடும்-
அகிலநீங்கிற்றான்விளங்குமந்தச்சச்சிதானந்தம்-
அகிலந்தோன்றும்பொழுதுமறைந்ததுதோன்றுதல்போலதுதோன்றில்-
அகிலந்தோன்றாததனின்மறைந்ததனாகிலமசத்தாமே
36
முத்தியாதோவெனவெண்ணியமுயக்கவேண்டாமிஃதறுதி-
முத்தியுளதேற்பந்தமுண்டாமுத்தியொருகாலையுமில்லை-
முத்திதானாஞ்சகம்வேறின் மோகமதிற்காண்பதைப்போக்கின்-
முத்தியாகுமிந்நிலையைமுயன்றுவருந்திநிலைகொள்வாய்
37
இல்லாமாயைதங்கணிலையாருநிற்கவம்மம்ம
பொல்லாப்பிறப்பிற் பட்டதுமாய்ப் பொக்கமிகவுந்தவிர்த்ததுமாய்-
நல்லாரிணக்கஞ் சேர்ந்ததுமாய்ஞானவிசாரமுதித்ததுமாய்-
எல்லாமாம் வீடடைந்ததுமாயார்க்குங்காட்டிமறைந்திடுமே
38
எல்லாநீங்கிச்சற்குருவையெங்குந்தேடியடைந்தருளி,
நால்லாருணருஞானநூனவின்றுவிசாரஞ்செய்வதுவும்
பொல்லாமனத்தையொடுக்கிநிட்டைபொருந்திநோக்கல்லாநோக்கும்-
இல்லா மாயைதனைத்துணிவாயில்லையெனவேகாண்குதற்கே
39
விளங்குஞ்சகங்களனைத்தினிலும்விளங்குநாமாதிகணீங்கி-
விளங்குமதைமாத்திரநோக்கில் விளங்கும்பிரமமக்கணமே-
விளங்குநாமாதிகளுமதாய் விளங்கும்வேறாய்விளங்காது,
விளங்குமிந்தநிலையெவர்க்கும் விளங்குமவிரோதமதாயே
40
நாமரூபம்விளக்கல்பரம்நாடலுயிராமனவமாயை-
நாமரூபந்தனைநோக்கிநாடச்செய்தலஞ ஞானம்-
நாமரூபத்திவ்வளவுநாட்டமெனவே செய்தல்வினை-
நாமரூபந்தனைநோக்கி நாடுமிடத்திலிவைநிகழும்
41
உருவநாமநோக்கிடத்திலுளதாமிந்தைவைவகையும்,
உருவநாம்நீக்கிடத்திலொன்றுமிவைகளிற வாகிச்
சொரூபமொன்றேநிகழ்தலினாற்சொன்னவிவைகளைவகையும்-
சொரூபமன்றிவேறில்லைதோன்றும் விவகாரத்திசையில்
42
விவகாரத்திற்பகுப்புகளாய்விரியும்பரமார்த்தம்மதனில்-
சிவகாரமதாய்விளங்கியிடுஞ் சிவமேயனைத்துமாதலினால்-
பவகாரியத்தையுடையோர்க்குப்பகுப்பேயென்றுந் தோன்றியிடும்,
பவகாரியத்தையொழிந்தோர்க்குப்பகுப்பொன்றின்றிச் சிவந்தோன்றும்
43
பந்தத்திசையிற்பலவென்றும் பரமார்த்தத்திலொன்றென்றும்-
இந்தச்சடங்கு சொரூபத்திலென்றுமில்லைநோக்கியிடின்-
எந்தக்காலுமொருபடிததாயிலங்குஞ்சொரூபமிவைமாயா-
தொந்தத்ததனிற்றோன்றியிடுஞ்சொரூபத்தாரோபிதமாகும்
44
மித்தியவாதிவேதாந்தி விளங்குஞ்சைவசி்த்தாந்தி-
சத்தியவாதியிருவர்களுஞ் சாற்றுந்தங் கட்கடுக்காதை-
மித்தியவாதிசகத்தனுக்கு விளம்புஞ்சிருட்டிமுடிவினின்றும்
சத்தியவாதிசிவமொழிந்துசற்றும் வேறில்லென வுரைக்கும்
45
சகமதென்பதிலையெங்குந்தானேநின்றுவிளங்கியிடும்-
சகமதெனவேதோன்றிடுதல் தமதுசங்கற்பம்மதனில்-
அகமதனிலேகண்டுணராதவையிற்சிக்கிப்பந்தமுறும்-
அகமதனிலேகண்டகற்றி லப்போப்ண்டைப்படி நிகழும்
46
பந்தமின்றிவீடின்றிப்பரமேயெங்கும்விளங்கிடவும்
பந்தம்வீடென்றெனவுரைத்தல் பார்க்கின்மாயாமோகமதில்-
சிந்தைவிரிவேபந்தமதாஞசிந்தையொடுக்கமேவீடாம்-
இந்தவகையாம்பந்தம்வீடியம்புமப வாதவதாகும்
47
தோன்றிநிகழுமுலகெலாஞ் சொரூபமேமற்றுருநாமம்-
தோன்றிநிகழ்தன்மாயையே சொரூபம்விடவும்வேறன்று-
தோனறி்நிகழு முருநாமஞ்சொரூபம்விடவேறெனவுன்னி-
தோன்றிநிகழ்தல்பந்தமதாஞ் சொரூபமெனவேயுனல்வீடாம்
48
உருவநாமமவைக்கிருப்புமுதிப்புஞ் சொரூபத்தினையன்றி-
உருவநாமமவைதனக்கே யொருகாலையினுமிலதாகும்-
உருவநாமமவைநோக்கலொருவிநமையே நோக்கியிடின்-
உருவநாமநிகழ்ந் திடாதொருநம் வடிவாயே நிகழும்
49
பந்தமென்றும் வீடென்றும்பயிலுநினைவேபந்தமதாம்-
பந்தமெங்காம்வீடெங்காம் பரத்தைவிடவேறி்லாமையினால-
தந்தஞ் சங்கற்பந்தனிலே தாமே மோகித்திடுமுயிர்கள்-
தந்தமசங்கற்பந் தனிலே தாமெநீங்கியிடு மோகம்
50
உருவநாமந்தனைநோக்கி லொருதன்னிலையை நீங்கினதாம்-
உருவநாமந்தனைநீக்கி லொருதன்னிலையேநின்றதுவாம் -
உருவநாமமவையிரண்டுமொருதன்வடிவேயெனக்காணில் -
உருவநாமந்தானேயாயொளிருமதுவேமுத்தியுமாம்
51
கொள்ளுநெறியேதேதுபந்தங்கூடுமவீடேதெனவேண்டாம் -
உள்ளும்புறம்புமெனுமிவையிலுதவுமெஃதுதனக்கதனின் -
றெள்ளுஞ்சங்கற்பங்களெல்லாமிரியநோக்கிநின்றதன்னை -
உள்ளும்புறம்புமின்றியெங்குமொளியாய்க்காணலாகியிடும்
52
ஒளியேயெங்கும் விளங்கிடுமவ்வொளியில்விளங்குமுலகெல்லாம்-
ஒளியேயன்றிவேறாமோவொளியையறியாருலகென்பர் -
ஒளியேயன்றியுலகுதனக்கொருகாரணமுமிலையதனால் -
ஒளியேயனைத்துந்திரைநுரைகளுவரியலதுவேறாமோ
53
மாயைவேறென்றெனவுன்னிமதிக்கவேண்டாம் பேதவதி -
மாயையாகுமற்றஃதைவருந்திமுயன்று பேர்த்திடுக –
மாயைநீங்குமிந்தமதி வந்தவழியேதெனவேண்டாம் -
மாயைநெறியிலம்மதியை வதைக்கில துவந்ததுதோன்றும்
54
விளங்கியிடுமிவ்வுலகெல்லா மித்தைவடிவேயென்பதுவும்-
விளங்கியெங்குந்தற்சொருபவிமலவடிவேயென்பதுவும்-
விளங்கிலருத்தமொன்றேயாம் வேறாய்க்காணுமஃதகற்றி-
விளங்கு மொளியாயேகாண்கில்விளங்குமருத்தமொன்றாயே
55
தனதுசங்கற்பந்தனிலே சகங்களாகிவிளங்கியிடும்-
தனதசங்கற்பந்தனிலேசகம்போயொடுங்குமதனாலே-
தனதுவடிவேசகங்களெல்லாந்தன்னைவிடவேறிலைத்தங்கம்-
தனதுவடிவைவிடப்பணிகடான்வேறாகிவிளங்கிடுமோ
56
நிலைமைநீங்கிற்சகமுதித்துநிசமுமாகுமற்றவையின்
நிலைமைஞானவிசாரணையினிசம்போயொடுங்குந்தோற்றரவு-
நிலையாகுந்தனைநோக்கினீங்கிமறையுமிச்சகத்திநன் -
நிலைமையொருவேதுவிலுதிக்குநீங்குமிருமையேதுவினில்
57
எல்லாநாமெப்படியாவோமென்னவேண்டாமிலக்கணம்பார்த்-
தெல்லாநோக்கியிடுமிடத்திலிருப்புந்தோற்றரவுமின்பும்-
எல்லாவிடத்துமுண்டாகுமியல்புமவையே பிறித்திட்டால்-
எல்லாமெங்கேதோன்றிடுமோவிதனாலெல்லாநாமாகும்
58
வெள்ளிவிகற்பமதிற்கிளிஞ்சில்விள்ங்கும்விகற்பந்தனைநீக்கித்-
தள்ளின்வெள்ளியென்பதுபோய்த்தானேவிளங்குமக்கிளிஞ்சில்-
வெள்ளியென்றபொழுதுமலவிகற்பவென்றபொழுதுமது-
வெள்ளியாகிநீக்கினதில்விமலத்ததுபோன்மாயையுமே
59
ஒன்றேயென்னின்முத்தியில்லை யொருவன்வேறேயுண்டென்னில்-
ஒன்றேயாகமாட்டாமற்றொன்றாமென்னிலொன்றுகெடும்-
ஒன்றேயென்றவாதிகட்குமோதுமிரண்டேயென்றவர்க்கும்-
ஒன்றேயிரண்டுமாமென்றேயுண்மைகற்பிதம்மிரண்டே
60
விகற்பமிலதுமுதற்றோன்றி விளங்கும்விமலமதினின்றும்-
விகற்பமதனிற்சகந்தோன்றும்விண்ணிற்பீலிதோன்றுதல்போல்-
விகற்பமதிற்றோன்றுவதொழிந்துவேறில்லெனவேவிடுத்ததனை-
விகற்பமின்றியேநோக்கின்விளங்கும்விமலந்தானாயே
61
இந்தவிடையமவையில்வரு மின்பும்பேரின்பத்திருந்தே-
வந்தலேசமிட்டமதுவந்துகிடைத்தவக்கணமே-
அந்தமுகமாய்மதிதிரும்பி யறிவானந்தங்கணம்பொசிக்கும்-
அந்தமுகமேயெக்காலுமானனைத்துமடைந்ததுமாம்
62
விருத்தியொன்று மில்லாமல் விளங்குநிலையே நாமதனில்-
விருத்திதோன்றின்முன்பினின்றிவிளங்குஞ்செகசீவபரங்கள்-
விருத்திநீங்கின் முப்பொருளும்விளங்கிடாமற்றதனாலே-
விருத்திதானேபந்தமதாம்விருத்தியொழிவேவீடாகும்
63
நிருவிகற்பநமதிடத்தினின்றுவிகற்பமுதித்தளவில்,
ஒருமுப்பொருளுமுதித்துவிடுமொருங்கேமூலவிகற்பமதை,
ஒருவிநமதுநிலைதோன்றுமொருமுப்பொருளுமதுவாகும்-
குருவினருளி னிந்நிலையைக்கூடவேண்டுநெறிநின்றே
64
ஏகபரத்திற்றோன்றுலகிலெங்கும்விடையமாதல்பரம்-
ஏகவிடையமாதலுயிரிந்தவுயிர்க்கேமுத்தியினி-
ஏகவிடையமுதற்றள்ளியெங்குமாகும்விடையமதும்,
ஏகத்தள்ளிமற்றுலகு மிறக்கிற்பண்டைப்படிநிகழும்
65
எங்கும்விடையமாம்பரத்துக்கிருளெக்காலுமிலையாகும்-
தங்குமுயிர்க்கேமறதியுண்டாந்தன்னாற்றளவேகூடிடா-
எங்கும்விடையமாம்பரமேயேகவிடையவுயிர்போலத்-
தங்கிக்குருவாயெழுந்தருளித்தள்ளுமுயிர்கண்மறதியெலாம்
66
மாயையதனில்மும்முதலும்வகுப்பாய்விளங்கியிடுமந்த-
மாயைநீங்கிலொருமுதலாய் வகுப்பொன்றின்றிவிளங்கியிடும்-
ஆயபிரமமென்றுளதோவன்றேயில்லாமாயையுமுண்-
டாயபிரமமுள்ளளவுமந்தமாயைக்கழிவில்லை
67
இந்தமாயைக்கழிவிலதே னிந்தவுயிருக்கொருக்காலும்-
அந்தமுத்தியிலையென்னி லறையுமுயிர்கடமைமறந்த-
பந்தநீங்கினக்கணமேபரமாய்விளங்குமதையன்றி-
இந்தவில்லாமாயைக்கழிவிலதினலைவீடெனல்கூடா
68
தன்னைமறைத்தபந்தமதைத் தள்ளிநீங்கிற்றான்விளங்கும்-
தன்னைமறந்ததேபந்தத் தன்னையறிந்தேமுத்தி-
தன்னைவிடவோர்பொருளில்லைத்தானே பிரமமாயையும்பின்-
தன்னைவிடவேறாய்விளங்காதானேயாகிவிளங்கியிடும்
69
தன்னையறியாவியற்கையினிற் சத்தேபோல விளங்கியிடும்-
தன்னையறிந்தவுடனசத்தாய்த்தானே விளங்குமிவ்வுலகம்-
தன்னையறியுமளவமிவைதன்னைவிடவேறிலையெனவே-
தன்னைநோக்கியிடினவையுந்தானாய்விளங்குமுடிவதனில்
70
இல்லாமாயைதானிருந்தென் னிறந்தென்னவைபந்தமதாகா-
இல்லாமாயைதனைமெய்யா யெண்ணுமதியேபந்தமதாம்-
இல்லாமாயைதனைப் பொய்யாயெண்ணுமதியேமுத்தியதாம்-
இல்லாமாயையில்லையென்றேயியல்பாய்த்தோன்றுந்தன்னிலையில்
71
நினைவேமூலமற்றதனினின்றுவிரியுமும்முதலும்-
நினைவைநீங்கிலவைமூன்று நினைவிலொடுங்குமதனாலே-
நினைவேபந்தநினைவொழியினிலைமையான முத்தியுமாம்-
நினைவேநீங்கியனுதினமு நின்றநிலையேநின்றிடுக
72
நினைவுநீங்கிலுருநாமநீங்குமவையைத் தள்ளிடினும்,
நினைவுநீங்குமற்றவையினினக்கேதிச்சையதினின்று,
நினைவுநீங்கிநின்றடமேநிலைமையானமுத்தியென்றும்-
நினைவுகொண்டந்நிலையைவிட்டுநீங்காதென்றுநின்றிடுக
73
நினைவைநீக்கிநோக்கியிடினிமலசொரூபந்தோன்றியிடும்-
நினைவைமேவிநோக்கியிடி னிலையிலுலகந்தோன்றியிடும்,
நினைவிலுலகமறிந்ததுவுநீங்கிச்சொரூபமறிந்ததுவும்-
நினைவினோக்கிற்றானில்லைநிகழுமாயாமோகமதில்
74
தனதுநிலையிற்றானிற்கச் சாற்றுமாயா மோகமதில்-
தனதுவடிவைமறந்துயிர்போற் றங்கிநீங்கிற்றனிகழும்-
தனதுவடிவு தோன்றளவுஞ் சத்தேபோல விளங்கியிடும்-
தனதுவடிவு தோன்றளவிற்றானே யசத்தாய் விளங்கியிடும்
75
கானனீருங்கயிற்றரவுங் கட்டையதனிற்கள்வனுமே-
ஆனவவைதம்மதிட்டானமாகுமவைகடோன்றளவும்-
ஆனதவைமெய்போற்றோன்றுமதுபோற்சகமுமதிட்டானம்-
ஆனசொரூபந்தோன்றளவுமசத்தல்லாது போல்விளங்கும்
76
அதிட்டானமதுதோன்றளவு மதுமெய்போல விளங்கியிடும்,
அதிட்டானமதுதோன்றியபின் னசத்தேயாகிவிளங்கியிடும்-
அதிட்டானமதுதோன்றளவுமசத்தென்றெணியே நோக்ககற்றி-
அதிட்டானமதாந் தானைநோக்கிலசத்தேயாகி விளங்கியிடும்
77
தன்னைச்சீவனெனத்திரிவாய்த் தானின்றுணர்தலஞ்ஞானம்-
தன்னைப்பிரமமெனத்துணிவாய்த்தானின்றுணர்தலேஞானம்-
முன்னைத்துடர்ச்சிவிடையமதுமூலவரவும்வாதனையும்-
பின்னையொருங்கேயொழிந்துவிடும்பேணல்விடுதலவைவேண்டா
78
நிமலநெஞ்சை யுடையோர்க்கு நிலத்திலாகானெழுந்தருளி-
விமலதத்துவமசியெனவேவிளம்பிலவனுக்கக்கணமே-
முமலநீங்கிச்சிவம்விளங்கு மோகநெஞ்சை யுடையோர்க்கு-
முமலச்சார்வாம் வாதனையே மூடிமிகவுநிறைந்திடுமே
79
எங்கேநிறுத்தினங்கிருக்கு மியல்பையுடையநெஞ்சுடையோர்க்-
கிங்கோர்மயக்கங்களுமில்லை யிச்சையிறந்தநிலையாகின்-
அங்கேயாசா னெழுந்தருளியதுநீயெனவேயுரைத்தவுட-
அங்கேசொரூபநாமெனவே யறுதியாகத் தோன்றியிடும்
80
ஒருவவேண்டுமனைத்துமென வுன்னவேண்டாவினை நீங்கில்-
ஒருவுமனைத்தும்வினையுளதேலொன்றிமேவுமற்றவையை-
ஒருவல்பற்ற லவையைவிடுத்துள்ளபடியேமுடியுமெனச்-
சொரூபநாமேயெனத்திடமாய்த்தோற்றமதற்கேமுயன்றிடுக
81
சொரூபநாமேயெனத்திடமாய்த்துணிந்தபேர்களில்லறத்தை-
மருவிநீங்காதிருந்திடினு மற்றோர் குறையுமவர்க்கில்லை-
சொரூபநாமேயெனத்திடமாய்த்துணியாதவர்களில்லறத்தை-
ஒருவிநீங்கினதுகொண்டேயுளதோமுத்திபவமறுமோ
82
மருவியில்லினிருந்தவர்க்குமருருவுஞ்சோகமோகமென்றும்-
ஒருவித்துறவையடைந்தவர்கட்கொருவமென்றுங்கூடாது-
சொரூபநாமென்றறியார்க்குச்சோகமோகமற்றுவிடா-
சொரூபநாமென்றறிந்தவர்க்கேசோகமோகமற்றுவிடும்
83
மித்தையதனைப்பற்றிடவும் விடவும்வேண்டாவிவ்வுலகை-
மித்தையெனக்காண்குதல்போதும்விட்டுநீங்குமுடனொருங்கே-
எத்தைவிடுத லெதைப்பற்றலென்னிற்சிவத்துவமான-
அத்தைவிடுகதனைநோக்குமதைப்பற்றிடுகநெறியாகும்
84
இல்லமென்றுந்துறவென்றுமெண்ணவேண்டாமற்றவையில்-
அல்லனீங்கியொருநினைவாயசைவற்றிருந்துசொரூபமதைச்-
செல்லவிடையூன்றியதைச் சேர்ந்தேனென்றுதன்னிலையைப்-
புல்லவிடையூறாகுமதைப்போக்கிவிடுகவேதானும்
85
விளக்குஞ்சொரூபநோக்காவிளக்குமுலகைநோக்கியிடின்-
விளக்குஞ் சொரூபாந்தோன்றாதுவிளக்குமுலகேதோன்றியிடும்-
விளக்குஞ் சொரூபந்தனைநோக்கிவிளங்குமுலகைநோக்கமறில்-
விளக்குஞ்சொரூபமேதேன்றும் விளங்குமுலகுமதுவாய்ப்போம்
86
தன்னைமறைத்தபந்தமதைத் தள்ளிநீக்கித்தனையறியில்-
தன்னைவிடவோர்பொருளுமின்றித் தானேதானாய்விளங்கியிடும்-
தன்னையறியு மவ்வளவுந்தன்னைவிடவேறிலையென்றே-
தன்னைநோக்கியொருநினைவாய்ச்சாதித்திடவேமிகவேண்டும்
87
மூலவக்காம்மதனின் மூன்றக்கரமுநின்றதுபோல்-
நீலவுற்பலம்மதனினிறமுன்மூன்றுநின்றதுபோல்
சீலமதனினோக்கியிடிற்சீவன்பரமச்செகமூன்று
கோலமவையுஞ்சொரூபமதாய்க்கூடிநிகழுமொன்றாயே
88
எல்லாமாகுந்தற்சொரூபமிருக்குமளவுமாயையுமுண்-
டில்லாமாயையுள்ளளவுமீசன்புரியும்பஞ்சதொழில்-
இல்லாதொழிந்துபோவதில்லையிதனாற்சீவபரமுண்டு
சொல்லாநின்றவிவர்க்குக்கரிசொரூபந்தானேபகுத்துநிற்கும்
89
பகுத்துநின்றதற்சொரூபம் பரசீவருக்குச்சாட்சியதாய்ப்-
பகுத்துநிற்குஞ் சாட்சியையேபாரத் துத்தத்துவமசியென்று-
வகுத்துமாவாக்கியங்கூறுமற்றிச்சீவன்றனையல்ல-
தொகுத்துக்கேட்டதிவனெனினுஞ்சொன்னதிவன்சாட்சியைப்பார்த்தே
90
இந்தச்சீவன்கற்பிதமே யின்றிவேறோர்பொருளல்ல-
அந்தசொரூபமிவனாகானந்தச்சீவ னொன்றாகும்-
இந்தச்சீவனதுநாமென்றெண்ணிச்சோகம்பாவிக்க-
அந்தச்சொரூபமாய்விடுவனவனைவிடவேறிவனிலதின்
91
இதனாற்பந்தமுத்தியுமுண் டிதனாற்பந்தமுத்தியுமின் -
றிதனான்முத்திபெற்றவனுண்டிதனான்முத்திபெற்றவனின் -
றிதனாற்பலவேயாகியிடு மிதனாலொன்றேயாகுமென-
இதனால்விரோதமதாகுமிதுவேநமதுசித்தாந்தம்
92
இந்தநெறியிலணுதினமுமேகாந்தத்திலொருநினைவாய்ப்-
பந்தமுத்திமார்க்கமதைப்பகுத்துவந்தவழிப்படியே-
தொந்தமகற்றிப்பழையபடி சொரூபமதனினின்றிடென-
இந்தவகையே யருள்புரிந்தாளெனையாள்விருத்தவம்பிகையும்
93
கோர்த்துப்பத்துத்திசைகளி னுங்குலவும்பதினாலுலகத்தும்-
பார்த்துநோக்கு மிடமெல்லாம்பரமேநிற்கயாணவமாய்க்-
கூர்ந்துநோக்கிப் பாராதுகொடுமைகளிலே நாட்கழித்தேன் -
ஈர்த்துவிருத்தவம்பிகைநின்றிந்தோவென்றாள்யான்கண்டேன்
94
கொக்குமிரைதேருதலினருட் குருவினருளிலியானோக்கத்-
திக்குலோக மென்றதெல்லாந்தெரியவேண்டியுரைத்ததுவாய்த்-
திக்குலோக மும்மிறத்துதேருமியானுமிறந்ததுவாய்-
ஒக்குமுவமையில்லாததொளியாயெங்குநிறைந்ததுவே
95
அந்தோவந்தோ யாளாவிவ் வனுபூதீயினையறியாது-
வெந்தோர்மயக்கிலகப்பட்டுவீணினாளைக்கழித்துவிட்டேன்-
இந்தோபாரென்றருட்சத்தியெனக்குங்காட்டயான்கண்ட-
சந்தோடத்தைச்சொலப்படுமோதானேதானின்றறிவதுவே
96
எந்தனுடைய சரித்திரங்களெனக்கேநகைவந்திடுநினைக்கில்-
இந்தக்குறைகள்பாராமலெனையும்வலிதிற்பிடித்திழுத்து-
பந்தமுத்திவிவகாரம் பறித்தேயெறிந்துபழையபடி-
அந்தவெனது நிலையில்வைத்தவன்னைக்கெனையோகைம்மாறே
97
எனதுவடிவையறியாமலிந்தவுயிராய் நின்றதுவும்-
மனதுமிகவும்வாடினதும் வழிகாணாமலேங்கினதும்-
தனதுகணிற்றோன்றிடுநெருப்பிற் றருவேவதுபோல்வெந்ததுவும்- தனதுகடைக்கண்ணாலொழித்ததாய்க்குமெனையோகைம்மாறே
98
என்னையறியாதிதுவரையுமேங்கியழன்று கிடப்போற்குத்
தன்னைநிகாரம்விருத்தகிரிதங்குமுமையேதயவாகிப்-
பின்னையானுந்தானுமொன்றாம்பிரமந்தனையேயறிவித்து-
முன்னைமயக்கந்தனைக்கெடுத்தமுதல்விக்கெனையோ கைம்மாறே
99
எழிலார்விருத்தாசலவடிவாமெந்தைவாழ்கவெனையாளும்-
எழிலார்விருத்தவம்பிகையுமென் றும்வாழ்கவெனக்கருளும்-
எழிலார்பிரணவமும்வாழ்கவெந்தாயருளைநோக்கியிடும்-
எழிலாரடியார்களும்வாழ்கவெனைப்போலெல்லார்களும்வாழ்க
100
வேறு.
ஏரூரும்விருத்தகிரிக்குமாரதேவவெனுமுனிவனிசைக்குநாவாய்க்-
காரூரும்பழமலையிற்பெரியநாயகியிருந்தேகழறுமிந்தச்-
சீரூரும்மத்துவிதவுண்மையனுபவமுணர்ந்தோர்திகழ்பரரென்றும்-
தேரூருஞ்சிவனாணைமுத்திபெறலுண்மையிதுதிண்ணந்தானே
101

அத்துவிதவுண்மை-முற்றிற்று.
------------

சிவமயம்.

5. பிரமானுபூதிவிளக்கம்.


அனுபூதியரனுரைக்கவாழத்துப்பிள்ளையெனக்
கனுகூலமாயிருந்தேயடைவாய்முடித்திடுமே (1)

பிரமானுபூதியினைப்பெரியநாயகியெனக்குத்
திரமாகவருளியவாசெப்புவேனவனருளால் (2)

அவளருளினாலேயனுபூதியின்விளக்க
மிவணுரைக்கேனந்நிலையையெய்தினோரேகளிக்க (3)

இவ்வனுபூதியையுரைக்கேனிவ்வனுபூதியைநன்றாய்ச்
செவ்விதியினறிந்தோர்கள்தேர்ந்துமிகக்களிக்க (4)

வடிவினைநோக்காதுளத்தின் வண்மையைத்தேருதலினெந்தன் -
கொடியவுரைபாராதுகொள்ளுவர்மேலோரருத்தம் (5)

அறிவறியாக்குழந்தைதனதனைமுன்னேகுழறுதலின்
பிறிவறியாதவர்முன்னே பேசுகேனனுபூதி (6)

குழந்தைகுழறும்மொழிக்குக்கொண்டாடுமனைபோல-
இழந்தவுயர்ஞானிகளு் மென்னுரைகெட்டுண்மகிழ்வர் (7)

முத்தியைவேண்டிடினிப்பேர் முயலவே வேண்டுமெனப்-
புத்தியெனக்கருள்செய்தபொதுவை யெங்குங்கண்டனமே (8)

தனைத்தவிரவொன்றைத்தான்வேறாய்க்கண்டுவிடிற்
பினைச்சென்மநீங்காதுபிரமானுபவமலவே (9)

தன்னைவிடவேறொன்றுந் தானில்லாத்தன்னிடத்திற்
றன்னினைவினாலேசகம்போலத்தோன்றிடுமே (10)

எங்குஞ்சிதம்பரமாயெங்குநிறைந்திருக்கத்
தங்குநினைவாலஃதேசகம்போலத்தோன்றிடுமே (11)

தங்குநினைவதனைச்சாராதுநீக்கிடத்தில்.....
எங்குஞ்சிதம்பரமாயிருளறவேகண்டனமே (12)

மந்தவிருளிற்கயிறுமாசுணம்போற்றோன்றுதலி
னிந்தவுலகென்னிடத்திலில்குமாரோபிதமாய் (13)

பழுதையினின்றோர்சத்தி பாம்புபோற்றோன்றுதற்குப்-
பழுதையினுண்டதைப்போலப்பரத்தினுமுண்டோர்சத்தி (14)

சூனியஞ்சித்துப்பிரமஞ் சுத்தசிவம்பரமென்று
தானிகழ்தல்வேறில்லைத் தனக்கேபரியாயம (15)

சங்கற்பசத்தியினாற் சகம்போலத்தோன்றியிடுஞ்
சங்கற்பசத்தியதுந்தன்னைவிடவேறில்லை (16)

......ன்சத்தையேயுண்டாய்த் தானிருக்குமெப்போது
......தன்சத்தைதன்னிற்சகத்திற்குத்தானிருப்பே (17)

தன்சித்தேதோன்றித்தானிருக்குமெப்போதுந்
தன்சித்தனாலே சகசமும்விளங்கிடுமே (18)

தன்னின்பேயின்பாய்த்தானிருக்குமெப்போதுந்
தன்னின்பினாலேசகமின்பாய்த்தோன்றிடுமே (19)

தானந்தமில்லாததானேயுண்டாய்விளங்கி
யானந்தமாகியென்றுமன்றேநிகழ்ந்திடுமே (20)

தனதுசங்கற்பத்திற்றனுண்டாதலிற்சகமுந்
தனதங்கிசமூன்றுஞ்சகத்தினிகழ்ந்திடுமே (21)

தனதங்கிசமூன்றுந்தான்பிறித்துத்தானோக்கிற்
றனதங்கிசந்தோன்றுஞ்சகம்போயொளித்திடுமே (21)

சகமாகநோக்கியிடத்திற்றன தங்கிசமூன்றுஞ்.
சகமாகக்காரணமாய்த்தானதிட்டானமதாகும் (23)

சகமாகநோக்கிடத்திற்றானதிட்டானமதாகிச்
சகமாகவிளங்குதலாற்றனைத்தவிரவொன்றில்லை (24)

தானாய்ப்பார்த்திடுமிடத்திற் சகலமுந்தானாய்த்தோன்றுந்,
தானாய்ப்பாராவிடத்திற் சகலமும்வேறாய்த் தோன்றும் (25)

தனைத்தவிரவேறொன்று தான்காணிலவனுக்குப்
பினைப்பயமும்போகாதுபெரும்பயமுநீங்காது (26)

தன்னினைவினாலேசகமாய்விரிந்ததென்ன
தன்னினைவைநீங்கித் தானாயிருந்தனமே ... (27)

உண்டாயொடுங்குவதுமுண்டானதன்னிடத்தே
யுண்டாகுமென்றேயொடுங்கியிருந்தனமே (28)

ஐந்துதொழிலுமைந்தொழிலைத்தானடத்து... ...
மைந்துகருத்தாவுமாகியிருந்தனமே ... (29)

இவ்வடிவுநரமல்ல வென்றுநியதிபண்ணி
யவ்வடிவைநோக்கிடத்திலனைத்துநாமேயானோம் (30)

இவ்வடிவுபந்தமெனவெண்ணியேநீக்கிடத்தி
னெவ்வடிவந்தானாயிருந்தேனதிசயமே ... (31)

இப்பந்தம்போகவெண்ணியேநீக்கிடத்தி
லெப்பந்தமுமாகியிருந்தேனதிசயமே (32)

இவ்வடிவந்தானாகியெங்குந்திரிவேனுக்
கெவ்வடிவுந்தானாயிருக்கிலினியென்செய்தேன் ... (33)

ஒருவடிவுகாக்கவுழன்றுதிரிவேற்கு
வருவடிவெல்லாமாகின் வாட்டமறக்காப்பதெங்கே,

சீவனாய்நீங்கிற்றிகைத்தனனோருருவுக்குத்
தேவனாய்ப்பேர்நீக்கிற் றிகையேனொன் றினைக்குறித்தும் (35)

உலகமுயிர்பரமென் றுரைத்திடுமுவகைப்பொருளு
மிகலவேயானாகவென்னனுபூதியிற்கண்டேன் (36)

எனைத்தவிரவேறொன்றுமில்லையெனக்கண்டளவிற்
பினைத்தவிப்புநீங்கிப் பிரமமாயேயிருந்தேன் (37)

தன்னுடையசன்னிதானத்தனினின்று .
பின்னுலகமெல்லாம்பிறவின்விளங்கிடுமே ... (38)

சங்கற்பசத்திதானனந்தமாய்விரியு ...
மங்கப்படிநிகழுமண்டபிண்டமானதெல்லாம் (39)

சங்கற்பமென்றுஞ்சகமென்றும்வேறில்லை
சங்கற்பமேசகமுஞ்சகமேசங்கற்பமதும் ... (40)

ஓரிடத்திற்கூவுமுறைமப்படியெதிரிட்
டோரிடத்திற்கூவுதலினுலகுநினைவேயாம் (41)

நினைவென்றசங்கற்பநிசவடிவைநோக்கிடத்திற்
றனையன்றிவேறில்லைத் தங்கத்திற்பணிதியைப்போல்.

யானாகேனென்றகற்றும்யாதும்பிறிவின்றி
யானாகிநிற்குகேனென்னவதிசயமே ... (43)

ஆங்காரஞ்சித்தமந்தவனமதியிறந்து
நீங்காதவென்னிடத்தினிலையாயிருந்தனமே (44)

சங்கற்பமுண்டாகிற்சாற்றுமகக்கரண
மங்கப்போதுண்டாகியகங்காரமாதிகளாம் (45)

ஐய்ந்துணிவுலபிமானஞ்சிந்தனைகள்
செய்யுமகக்கரணச்சித்தமுதனான்கும் .. (46)

ஓசைபரிசமுருவஞ்சுவைகந்த
மாசையினிற்றானறியவறிவிந்தியந்தோன்றும் (47)

அறிவிந்தியமதனிலறிந்துசெயக்கருமப்
பொறியைந்துந்தோன்றும் பொருந்துமிவைபதினாலாம்

சங்கற்பம் வேறாகிர்றான்பதனாலும்வேறாஞ்
சங்கற்பந்தானாகிற்றானாய்விளங்கிடுமே (49)

எவ்வெவ்வடிவுதொறுமிருந்துநினைவெப்படியோ
வவ்வவ்வடைவேயடைந்ததேயிருந்தனமே (50)

அவ்வவ்வடிவுமவ்வவர்க்கேதோன்றியிடு
மெவ்வடிவுமியாமென்ன விருந்தனுபூதியி லறிந்தே

எல்லாவடிவுமியாமெனவேகாண்பதன்றி
யெல்லாரனுபவமுமியாமறியவேண்டுமதில் (52)

ஒரொருவற்கண்டிடலுமுயிராச்சித்தியிற்காண்டற்
பேருருவைக் கண்டவர்க்கும் பிறிதொன்றுங்காணாதே (53)

எல்லோரனுபவமுமிதுவெனவேகண்டிடலு
நில்லாநினைவதனினிசமாகக்கூடியன்றோ (54)

நினைவதனைநீக்கிநிசசொருபங்கண்டவர்க்கு
நினைவதனைக்கூடநினையாதொருக்காலும் (55)

எந்தப்பொருள்களினின்றெய்தியிதிமின்பனைத்து
மந்தப்பிரமத்தினானந்தலேசமதே (56)

அந்தப்பிரமவானந்தந்தானடைந்தோர்
எந்தெப்பொருள்களினு மின்புவதென் றெண்ணுவரோ (57)

சகலகர்மங்களையுந்தானேககாலத்தி
லகமகிழ்வேயடைந்தவதிசயமும்பெற்றனமே (58)

ஒருகுடைக்கீழரசாள்வோனோரூருக்கரசாகக்
கருதுவனோவதினொன்றுங்கலங்காதிருந்தனமே (59)

காண்பதெல்லாந்தன் னுருவாய்காண்பதன்றிவேறாகக்
காண்பதுவமுண்டோகயிற்றைவிடவரவுண்டோ (60)

இத்தகைநிச்சயமுணர்ந்தேயிதிற்கலக்கமில்லாமற்
பத்திசமாதானத்தைப்பொருந்தல் சமாதியதாகும். (61)

பேதவாதியைக்குறித்துபேசுமறைசெகசிருட்டி
பேதநீங்கின்றதென் றும்பிரமமேயுளதாகும் (62)

தோற்றமொடுக்கமில்லைத்தோற்றமொடுக்கத்திலுள்ள
மாற்றறியபெத்தமுத்திமருளென்றறிந்தனமே (63)

முத்தியிள்ள தென்றெண்ணின் மொய்ப்பந்தமுண்டாகும்
புத்தியினி லஃதொருவிப்போதமாயிருந்தனமே (64)

வாரிபலவடிவான வாறுபோற்சங்கற்ப
நேரினாற்றான்றானே நிலையில்சகமாய் நிகழும் (65)

சகமென்றுந்தானென்றுஞ்சாற்றிடுதன்மாத்திரமே
யகமதிற்றேர்ந்திடுமிடத்திலகண்டமாயிருந்ததுவே. (66)

சத்தேயளதென்றுஞ் சகமதனிற்றானின்று
சத்தேபோற்றோன்றியிடுந்தான்சித்தேயெக்காலும். (67)

தோற்றிடுத றன்சத்தே தோற்றிடுந்தன் சத்தையினிற்-
றோற்றிடுமிச்சகமனைத்துஞ் சோற்றிடுங்கற்பிதவடிவே (68)

சத்தைக்கே தோற்றரவு தாணுண்ட சத்தினுக்குச்-
சத்தைப்போற் றோற்றமில்லைச் சத்தையினிற்றானிகழும் (69)

சத்தையிடமாய்நின்றே தான்வேறு போற்றோன்றிச்-
சத்தைபோலேநிகழுஞ்சகமசத்தேயல்லவோ (70)

அசத்தொருகாலையுந்தோன்றாதந்தவுளசத்தையே
யசத்தையுளதினிவ்ளக்குமதிட்டானமாய்நின்றே (71)

தோற்றிடுமிச்சகமனைத்துஞ்சொல்லாய்முடிந்ததுவே
றோற்றிடுமிச்சகமனைத்துஞ் சொல்லாய்முடிந்ததுவே (72)
சத்தைக்கேதோற்றரவுஞ் சார்ந்திடுமானந்தமதுஞ்.
சத்தையில்லாதிந்தச்சகத்தினுக்குத்தானுண்டோ (73)

சித்துக்கேயுள்ளிருப்புஞ்சேர்ந்திடுமானந்தமதுஞ்
சித்தில்லாதிந்தச்செகத்தினுக்குத்தானுண்டோ (74)

ஆனந்தமானதற்கே யானவிருப்பும்முதிப்பு
மானந்தமில்லாதவகிலத்துக்கும்முளதோ (75)

சச்சிதானந்தத்திற் சகங்கற்பிதமாகிச்
சச்சிதானந்தத்தைத்தான்விடாதேநிகழும் (76)

தோன்றுவதுசித்தேதொல்லுலகுநானாவாய்த்
தோன்றுவதுகற்பிதமேசொரூபமன்றிவேறுண்டோ (77)

சொரூபலக்கணஞ்சகற்றோன்றிவிளங்குதலாற்
சொரூபமேயென்றுதுணிந்தேயமைந்தனமே (78)

அறியாமையாலேயகிலம்போற்றோன்றியிடு
மறியாமைநீங்கிடத்திலறிவாயேதோன்றியிடும் (79)

என்னமொருபடியாயிருந்தபடியிருக்க
நின்றபடிபாராமுன்னிலைகலங்கிநின்றனமே (80)

நிலைபிறிந்தபோதுநிலையினில்வந்திடுபோது
நிலைபிறியாதேநிகழுநிஜசொருபமல்லவோ (81)

நிலைபிரிந்ததென்றுநிலையினினின்றேநோக்கி-
னிலைபிரிந்ததேயிலையாய்நிஜசொரூபந்தோன்றினதே. (82)

பந்தமுத்தியென்னப்பகர்ந்திடுமிரண்டென்று
மந்தபரிபூரண்த்திலன்றேயிலையலவோ (83)

தன்னையேகண்டுதானிருக்கவெல்லோருந
தன்னையாரென்றேதவிப்பதுவுமென்னையோ (84)

கண்டிடுதலெல்லாங்கனசொரூபமேயன்றோ
கண்டிடுதல்வேறென்றுகலங்குவதுமென்னையோ (85)

தோன்றிவிளங்குவதுதொல்லுலகுக்குமுண்டோ
தோன்றிவிளங்குவதுசொரூபத்துக்கேயன்றோ (86)

ஆதலினாற்காண்பதெல்லாமறிவுரு வேயெனக்கண்டு
போதவிழிதிறந்துபொருளாயிருந்தனமே (87)

முன்வினையாஞ் சஞ்சிதத்தின் முடிச்சை யவிழ்த்தனமே-
பின்வினையா காமியத்தைப்பிடுத்துப்பிசைந்தனமே (88)

வீடுபந்தமென்றிடுதன்மித்தையேயாதலினா
வீடுவினையிரண்டுமெங்கேயுளதாகும் (89)

ஒருகாலுநிலைகலங்கா துண்டாய்ப்பெற்றதிலமைந்த.
வருகாலஞ்செல்காலமதியாதிருந்தனமே (90)

தெரிசனத்தின் முத்தியெனச செப்புஞ சிதம்பரத்தைக்-
கரிசனமாய்க்கண்டுகருக்கழியநின்றனமே (91)

பார்த்தவிடமெங்கும்பரிபூரணமாகிக்
கோத்திருந்தபாழ்தனிலேகுடியாயிருந்தனமே (92)

செகமதையுந்தான்விழுங்கிச்சீவனையுமுள்வாங்கி
யகமதுவும்வுறமுமிலாவகண்டமாய்நின்றனமே (93)

அதுவிதுவென்றிடவில்லாவகண்டபரிபூரணமாம்
பொதுவதனிற்குடியாகிப்புகுந்தேயிருந்தனமே (94)

தந்தையார்தாயார்தாரமார்புத்திரரார்
பந்தமாரெல்லாம்பரமாயிருந்ததே (95)

ஊரேதுலகேதுடலேதுண்பொருளேது
சார்பேதுளவெல்லாந்தானாயிருந்தனமே (96)

படித்தறிந்தபோதேபலகலையாகமங்களெல்லா,
மெடுத்தெரிந்துவிட்டேனெனைவிடவேறிலையென்றே (97)

தெருள்விழியோர் துணிவிதெனத் தேர்ந்தனுபூதியிற்கொள்வர்-
மருள்விழியோர்திரிவிலிரை மாயாவாதமதென்பர் (98)

ஓவதனின்மூவெழுத்துமோரெழுத்தேயானதுபோற்-
சீவபரசிவமூன்றுஞ்சித்தொன்றேயல்லவோ (99)

புத்தியில்லாவென்றனக்கும் போதவிழிதான்றறிந்து
முத்திபதங்காட்டுவித்த முதுகிரிக்கென்கைம்மாறே

யாணுணர்ந்தவிப்படியேயிப்பிரமவனுபூதி
தானுணர்ந்தேயெல்லோருஞ்சதிராய்வாழ்ந்திடவேண்டும் (100)

முமலவிருளினைநீக்கிமுத்திபதமெனக்களித்த
நிமலவிருத்தாம்பிகையேநீடூழிதான்வாழ்க (101)

பிரமானுபூதிவிளக்கம்-முற்றும்.
-------------

6. ஞானவம்மானை.


ஆழத்துப்பிள்ளையடிதொழுதம்மானே (1)
ஐயந்திரிவையறுத்தேன்காணம்மானே (2)
விருத்தவம்பிகைப்பதமேவியேயம்மானே (3)
மெய்ஞ்ஞானக்கண்ணைவிழித்துப்பின்னம்மானே(4)
கருத்திற்றுணிவைக்கருதிநின்றம்மானே (5)
கண்டபடியேகழறுகேனம்மானே (6)
தந்தைதாய்தாரந்தமரேனுமம்மானே (7)
சாற்றுமுயிர்ச்சார்வுதனம்பணியம்மனே (8)
புவிகாணியென்னும்பொருட்சார்வும்மானே (9)
புறப்பற்றெனுமிவைபொருந்திநின்றம்மானே (10)

குலஞ்செல்வமுங்குழகுங்கோலமம்மானே (11)
குறைவில்லையெனவெணிக் கொண்டுழன்றம்மானே (12)
திரிதருகின்றேன்சிலகாலமம்மானே (13)
செம்மைநெறிதனைச்சிந்தியாதம்மானே (14)
சிவநேசந்தவந்தானஞ்செய்யாமலம்மானே (15)
சித்தந்தெளிந்ததுதெய்வீகத்தம்மானே (16)
அனித்தமசுத்தமரந்தையேயம்மானே (17)
ஆனவிம்மாயையசத்தேகாணம்மானே (18)
நித்தியநின்மலநீடின்பமம்மானே (19)
நிஜமானமுத்திநிலைசந்தேயம்மானே (20)
என்னவுணர்ந்தபினில்லின்பையம்மானே (21)
ஏறநோக்காதிளைமைதனிலம்மானே (22)
பொய்யெனவிட்டுப் புறப்பட்டேனம்மானே (23)
போதகுருச்சாந்தன பொன்னடிக்கம்மானே (24)
வந்துதுதித்து வணங்கினேனம்மானே (25)
மலரடியென்சென்னி வைத்துப்பின் னம்மானே (26)
முத்திநெறியை மொழிந்துட னம்மானே (27)
முதுகிரியிற்றவ முயலென்றானம்மானே (28)
அவனுரைத்தபடியங்கிருந்தம்மானே (29)
அல்லும்பகலு மசைவறமம்மானே (30)
மேவிநின்றேதவ மேவினேனம்மானே (31)
விருத்தவம்பிசைவந்து விளங்கினானம்மானே (32)
அவள்விளங்கநன்றா யனுபவமம்மானே (33)
ஐயந்திரிவற வறிந்தேன்காணம்மானே (34)
எம்மதத்தோர்க்கு மெழில்வீட்டிலம்மானே (35)
ஏகமாயனன்னிய மெய்துதலம்மானே (36)
சம்மதமத்தகைசம்மதிக்கம்மானே (37)
தத்துவமசியென்றுசாற்றிடுமம்மானே (38)
இந்தச்சம்மதிக்குயிரீசனுமம்மானே (39)
இருமுதலென்றலிழியுகாணம்மானே (40)

ஒன்றாகின்முத்தியுமொன்றாதென்றம்மானே (41)
உரைத்திடிலபின்னையிலொன்றுங்காணம்மானே (42)
பின்னையிலிருமுதல் பேசரமலம்மானே (43)
பேசொணாதபினையிற் பிரமமொன்றம்மானே (44)
அபினையிலேகமாமனுபவமம்மானே (45)
ஐந்தாகும்பின்னையி லனுபவமம்மானே (46)
சத்தியின்றியுண்டு சத்தியமானம்மானே (47)
சத்திமானையின்றிச் சத்தியிலம்மானே (48)
பந்தத்துக்கேதுவாம் பகர்பின்னையம்மானே (49)
பந்தம்விடற்கேது பகர்மற்றதம்மானே (50)

இப்பந்தம்வீடின்றியிருந்திடுமம்மானே (51)
ஏகமதையன்றியிவையில்லையம்மானே (52)
அதனாலேகமென்றலாந்துணிவம்மானே (53)
ஆந்திரிவிருமுதலாகுமென்றம்மானே (54)
பிரத்தியக்கமதாகபபேசுகேனம்மானே் (55)
பிராகாபாவமதிற்பிரமமொன்றம்மானே (56)
நினைவிற்கூடியபின்னைநிகழ்மாயையம்மானே (57)
நிஜமாய்நோக்கிடிலிரண்டாய்நிகழுங்காணம்மானே (58)
நினையுந்தனையன்றிநில்லாதென்றம்மானே (59)
நீக்கிடிற்றானேயாய்நிகழுங்காணம்மானே (60)

தோன்றுதலெல்லாஞ்சொரூபமென்றம்மானே (61)
தோன்றுதல்வேறென்றுசொல்லிடிலம்மானே (62)
ஐந்துபதார்த்தமுமாறாதுமம்மானே (63)
ஆகிவேறுபோலமர்ந்திடுமம்மானே (64)
அனைத்துஞ்சொரூபமென்றனுபவத்தம்மானே (65)
ஆறாறுமைந்துமதுவாங்காணம்மானே (66)
இதனாலெல்லாநாமேயென்றுகண்டம்மானே (67)
ஏதும்பதைப்பற்றிருந்தேன்காணம்மானே (68)
என்சத்தேயுண்டாயிருக்குங்காணம்மானே (69)
என்சித்தேதோன்றியிடும்பின்னையம்மானே (70)

என்னின்பேயின்பாயெய்துங்காணம்மானே (71)
எல்லாஞ்சத்துச்சித்தின்பங்காணம்மானே (72)
என்னாலெனையுங்கண்டெய்தினேனம்மானே (73)
இன்பமேயெய்தியிருந்தேன்காணம்மானே (74)
எந்தப்பொருளிலுமின்பெய்தலம்மானே (75)
என்னின்பமேயென்றிசைந்தேன்காணம்மானே (76)
இனியோர்பொருளையுமெண்ணிநின்றம்மானே (77)
இச்சைசெய்யேனதிலின்பமில்லம்மானே (78)
ஆசைபயமவையற்றேன்காணம்மானே (79)
ஆனந்தநித்தியனாதாலம்மானே (80)

நிகழ்காலமதுதனினேரிட்டதம்மானே (81)
நிராசையிற்றுய்த்துநிலைநிற்கேனம்மானே (82)
என்னினைவிலென்னையிதுவென்றேயம்மானே (83)
இன்னானாவாய்கண்டிருக்கேன்காணம்மானே (84)
என்னினைவிண்மையிலேகமாயம்மானே (85)
என்னையேயான்கண்டிருக்கேன்காணம்மானே (86)
இங்குமங்குமென்னையானேகண்டம்மானே (87)
ஏதுங்கவலையற்றிருக்கேன்காணம்மானே (88)
அசைவுசெய்பின்னையிலன்றேநின்றம்மானே (89)
ஆடுகுதலிதென்றறிந்தேன்காணம்மானே (90)

என்னாணையெனையன்றியிலையொன்றுமம்மானே (91)
இதுதுணிவெனமழுவேந்துவேனம்மானே (92)
என்னையறியாமலிவ்வளவம்மானே (93)
ஏங்கிவழிகாணாதேற்குமேயம்மானே (94)
தன்னைநிகராகுஞ்சங்கரியம்மானே (95)
தண்ணருள்செய்ததயவினுக்கம்மானே (96)
என்னகைம்மாறுமுண்டென்னிடத்தம்மானே (97)
இனியவளடியவர்க்கெழிற்பணியம்மானே (98)
விரும்பியேசெய்வதுவிதியிந்தவம்மானே (99)
விருத்தகிரித்தலம்விளங்கிடவம்மானே (100)

ஞானவம்மானை-முற்றிற்று
-------------

திருச்சிற்றம்பலம்

7. வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளை.


மோக்ஷமுண்டென்கின்ற வெம்மார்க்கத்துக்கும்
உபக்கிரமத்திற்பந்தமும்,உபசங்காரத்தின்முத்தியுஞ்
சித்தாந்த மாகையினாலே இம்மார்க்கத்தி னுடைய-
பெந்தமுத்திவிவகாரஞ் சுருக்கமானச்சொல்லப்படா
நின்றதெப்படியெனில், சத்தியம்-ஞானம்-அனந்தம்-
ஆனந்தமென்னும் இலக்கணத்தையுடையசுயம்பி
ரகாசமாகிய பரவத்துவின் கண்ணின்று வாசகஞ்செயவொணாத
பின்னாசத்திதோன்றும்-அதினின்று மாயைதோன்றும்-
அதில் ஊர்த்தமாயையினின்றும் பரதத்துவந் தோன்றும்-
அதினின்றும் வியோமந்தோன்றும்-அதிற் காலபரந்தோன்றும்-
அதோமாயையினின்றும புருடன்றோன்றும்-
அதின் மூலப்பகுதி தோன்றும்-அதின்மான்தோன்றும்-
அதிலாங்காரந் தோன்றும்-அந்தவாங்காரந் திரிகுணமாகவிரியும்-
அவையிற் சாத்துவிதாங்காரத்தின் மனமும்
ஞானேந்திரியங்களைந்துந்தோன்றும்-இராசதவாங்காரத்தில்
கன்மேந்திரியங்க ளைந்துந் தோன்றும்- தாமதவாங்காரத்தில்-
சத்தாதிகளைந்துந்தோன்றும்-இந்த சத்தாதியைந்தையும்
ஒவ்வொன்றை யிரண்டு கூறுபண்ணி-
அவையிலொருகூறில்-ஒவ்வொன்றை நன்னாலுகூறாகப்
பண்ணிதனது கூறல்லாத நாலினுங்கூட்ட பஞ்சீகரணதூலபூதமாம்-
உபக்கிரமமுற்றும் இனிதத்துவங்களினுடையவகை யெப்படியென்னிவ்,
பஞ்சீகரண தூலபூதமைந்து சத்தாதியைந்து
ஞானேந்திரியமைந்து-கன்மேந்திரியமைந்து-
அந்தக்கரணங்கணாலு-புருடன்-காலபரம்-வியோமம்-பரம்-
ஆக தத்துவமிருபத்தெட்டு-மேல்மாயை யொன்று-
பின்னாசத்தியொன்று ஆக 30.இவையே பந்தம்-இனியிவை
முப்பது நீங்கி மேற் சுயம்பிரகாசத்தை யடைதலே
உபசங்காரம்-இதற்கு மார்க்கமெப்படியென்னில்,
தூல் பூதமைந்து-சூக்ஷபூதமைந்து-ஞானேந்திரியமைந்து-
கன்மேந்திரியமைந்து ஆக இருபதுஞ்சீவசாக்கிரம்-
இதிற்றிரோதாயிநீங்கும்- மனம்புத்தியாங்காரமூன்றுஞ்
சீவசொற்பனம்-பிரகிருதிசீவசுழுத்தி புருடன்பரசாக்கிரம்-
இதிற்பிரகிருதிநீங்கும்-கால பரம்பர சொற்பனம்-இதில்-
அசுத்தமாயைநீங்கும்-வியோமம்பரசுமுத்தி-பரம்சிவசாக்கிரம்-
மாயைவிசுவக்கிராசம்-இதிற்கன்மநீங்கும்-பின்னாசத்தி
உபசாந்தம் இதிற் சுத்தமாயை நீங்கும்-சுயம்பிரகாசமே குருதுரியம்-
இதில் ஆணவநீங்கும்-ஆகவவத்தைபத்து-இதுவே முத்தி-
இவ்வொழுங்கி-ஞானாசாரியர்கைகாட்டுப்படிக்குச் சமாதியிலிருந்து-
அனுபவம் பண்ணிக் கொள்ளவேண்டியது.

வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளைச்சுருக்கம் - முற்றும்.
--------

8. வேதாந்தத சகாரியக்கட்டளை.


நித்திய நைமித்திய காமியப் பிராச்சித்த உபாசனாதிகன்மங்களை
யனேக ஜென்மாந்திரங்களிலே பண்ணப்பட்டு கிருதகிருத்தியனாய்-
நித்தியா நித்தியவத்து விவேகம்-
இகமூத்திரார்த்த பலபோகவிராகம்-
சமையாதி சட்கம் முமூட்சத்துவம்-
என்கிறசாதன-சதுஷ்டயசம்பத்தியுடைய-
அதிதீவர பக்குவமுடையோர்-
மேற்செனன மெடாதவகைக்கு-
பிரம்ம கைவல்லியஞ் சமாதியிலிருந்தடைகுதற்கு
மேலான மார்க்கம் வேதமுடிவாகிய்-
உபநிடத்தில்தேசகாரியமாகவிருக்கும்-
இதற்குத் தொகையெப்படியெனில்-
மாயாரூபமென்றும்-மாயாதெரிசனையென்றும்-
மாயாசத்தியென்றும்-சீவரூபமென்றும்-
சீவதெரிசனை யெனறும்-சீவசுத்தியென்றும்-
பிர்ம்மரூபமென்றும்-பிர்ம்மதெரிசனையென்றும்-
தேககைவல்லியமென்றும்-விதேககைவல்லியமென்றும்-
ஆக-பத்து-இது தொகையாகிய சிரவணம்.
இதற்கு வகையெப்படியென்னில்-
மாயாரூபமாவது-
சர்வப்பிரபஞ்சங்களும் இத்தனை அங்கிசத்துடனேகூடி-
விளங்குமெனக் காண்கை-
மாய தெரிசனமாவது-
அந்த அங்கிசத்தில் இத்தனையங்கிசம்-
மாயா சம்பந்த மெனக்காண்கை-
மாயா சுத்தியாவது-
அதினுடையவ திட்டானத்தைக் காண்கை-
சீவரூபாவது-
விளக்க-விளங்கப்பட்ட மாயாரூபத்தைக்காண்குதற்கோ
ரறிவுண டெனக்காண்கை-
சீவதெரிசனமாவது-அவ்வறிவைத் தானெனக் காண்கை-
சீவசுத்தியாவது-அவ்வறிவின திட்டானத்தைக் காண்கை-
பிர்ம்மரூபமாவது-மாயாரூபத்துக்குஞ் சீவரூபத்துக்ககு
மதிட்டானம் பிரமமெனக் காண்கை-
பிரமதெரிசனமாவது-ஆரோபிதமு மதிட்டானத்தைவிட
வேறில்லாததுபோல மாயையுஞ் சிவனும்
பிரமாகத் தானே காண்கை-
தேககைவல்லியமாவது-அந்தப் பிரமமாகத்தானே
காண்கிறபோதமு நீங்கிஆனந்த மயமாய்நிற்கை-
விதேககை வல்லியமாவது-அந்தப் பிரமானந்ததீதத்தை யடைகை-
இதுவகையாகிய மனனம்-
இனிவிரிவெப்படி யென்னில்-
சத்தாதி விடையத்திலவாவறுத்து-
ஒரே காந்தத்திலிருந்து-
நிதித்தியாசனத்தில சமாதியைப்பொருந்தி-
சாட்சாத்கரிக்கும்வகை-
மாயாரூபமாவது இதுவென்று காணப்பட்ட
சர்வம் பிரபஞ்சமு முண்டாய் விளங்கிரம்மியமாய்
நாமரூபமாய் இவை ஐந்தங்கிசத்துடனே
விளங்குதலைக் காண்கை-
மாயாதெரிசனையாவது-அந்த ஐந்தங்குசத்தில்-
பின்பு சொல்லப்பட்ட நாமரூபமாகிய விரண்டங்கிசமு
மாயையெனக்காண்கை-
இனிமாயாசுத்தியாவது- இந்தமாயா சம்பந்தமாகிய-
நாமரூபத்துக்கு முன்சொல்லப்பட்ட உண்டாய்விளங்கி
இரம்மியமாகிய மூன்றங்கி சத்தையுடைய அதிட்டானத்தைக் காண்கை-
சீவரூபமாவது- ஐந்தங்கிசத்துடனே விளங்கப்பட்ட சர்வத்தையுநோக்கி
அவையில் பின்பு சொல்லப்பட்ட-
இரண்டங்கிசமு மாயாசம்பந்தமென்றும்,
அந்த மாயாசம்பந்த முன்பு சொரூபசம்பந்தமாகிய-
சச்சிதானந்தத்தைவிட வேறின்மையென்றுங்
கண்டவறிவொன்றுண்டெனக் காண்கை
சீவதெரிசனையாவது- நாமரூப மயமாகிய கேவலமுநீங்கிச்,
சச்சிதானந்தமாகிய- பிர்மத்தைப் பற்றிநிற்கை-
இதுசாக்கிர அவத்தை- சீவசுத்தியாவது- அந்தச் சச்சிதானந்தமயமாகிய-
பிரமத்தை அவ்வொளியே கண்ணாகக்கொண்டிருந்து-
அதிற்சீவத்துவ போதமடங்கி அச்சீவனுக்கு அதிட்டானமாகிய-
பிரமந்தானாய்நிற்கை - பிரமரூபமாவது-
மாயாரூபமாகிய நாமரூபத்திற்கும்- அதையுணருஞ் சீவனுக்கு
மதிட்டானமாய் விளக்கப்பட்டது, சச்சிதானந்தமே யெனக்காண்கை,
இதுசொற்பன வவத்தை- பிரமதெரிசனையாவது-
பழுதை-கிளிஞ்சில்-கட்டை-சூரியன்-தங்கம்-
மண்முதலிய எந்த வதிட்டானங்களில் கற்பிக்கப்பட்ட பாம்பு-
வெள்ளி- கள்வன்- கானனீர்- ஆபரணம்-
கடகலசமு லிவ்வாரோபிதம் விசாரித்தவிடத்தில் -
அவ்வதிட்டானமேயாய் விளங்குதல்போல
ஆரோபிதமாய் விளங்கப்படுகிற நாமரூபமயமாகிய மாயையும் -
அம்மாயையை யறியப்படா நின்றசீவனும்-
அதைவிளக்கப்பட்ட பரமும்-
நாம்ரூபமு மறியப்பட்டதானும் அறிவிக்கப்பட்ட
பரமேயெனக் காட்டாமல்
நாமரூபத்தை யுந்தன்னையும் வேறுபோல் விளக்கப்பட்ட
அஞ்ஞானமும் அதற்கு நியதமாகிய கர்மமும்
இந்த ஐந்து பதார்த்தமும அதிட்டானமாகிய சச்சிதானந்த
சொரூபமேயாய்க் காண்கை-
இதுசுழுத்தி-தேககை வல்லியமாவது-
அப்படிஅந்த ஐந்துபதார்த்தமுஞ் சொரூபமேயாய்க் காணப்பட்ட
வாதனையுநீங்கி அவ்விடத்திற் பிரகாசிக்கப்பட்ட
சொரூபானந்தத்தைப்பெற்று நிற்கை
இதுதுரியம்-விதேககைவல்லியமாவது-
அந்தசொரூபானந்தத்தைப் பெற்று ஆனந்தாதீதனாய்-
வாக்குமனாதீத கோசரமரமாகிய பிரமகை வல்லியத்தைப் பெறுகை
இதுதுரியாதீதம்-இவ்வொழுங்கில் குருகாருண்ணியத்தினாலே-
சென்றுதெச காரியமுமனுபவப்பட்டு பிரமகை வல்லியமடையில்-
அப்போது பந்தமுத்தி விவகாரஞ் சொற்பனம் போலக்கண்டு
பண்டைப்படியாய் நின்றுமேற் செனனத்து-
வித்தாகிய ஆசைபயமிரண்டும்-
தான் சர்வானந்தத்திற்கு மதிட்டானமாகிய
பிர்ம்மானந்த மயமாகையால் ஆசையும்-தற்சொரூபமாகிய-
பிரமத்தைத விரபிரத்தியக்கா வேறொன்று மில்லாத தாகையால்
பயமுமொழியும்.

வேதாந்ததசகாரியக்கட்டளை முற்றும்.
-----

9. வேதநெறியகவல்.


சாதனநான்குந்தன்னிடத்துதித்த
பின்னர்விசாரம்பேதமபேதம்
எனவிரண்டவையளீசனுமுயிரும்
இருமுதலென்றேயியம்புதறிரிவு
ஒருமுதலென்றலொள்ளியகாட்சி
ஆகையின்வேதத்தந்தவிசாரம்
செய்திடவேண்டுஞ் சிறப்பெனிலாகமம்
அன்றறுசிறப்பாமத்தியான்மீகம்
சொல்லியபிரபலசுருதியேசிறப்பு
இத்தகவன்றியெழிலார்சுருதி
அரசனதுரையினவைமற்றெல்லாம்
மற்றோருரையின்மறையினைப்பற்றி
நிற்குமதன்றிநிமலன்சுவாசம்
வேதமாகமம்விளங்கியவாக்காம்
அதனான்முந்தியதருமறையாகும்
இதற்கதிகாரமின்றியவைசியர்
சூத்திரராதிசொல்லியபேர்க்கும்
விசாரணைபண்ணிவிளங்கிடலாகும்
அவரவர்சரிதையவரவர்க்கேயாம்
பத்தியுஞானமும்பகர்வயிராகமும்
எக்குலத்தோர்க்குமெய்திடலாகும்
அறிவேகுலமென்றறைந்திடுமுலகம்
நற்குலம்வினையினண்ணினதாகும்
மூன்றுகடனுமுனமுடித்தோர்க்கே
ஞானவிசாரணை நாடிமேற்கொள்ளும்
நாமாரிந்தநானாவிதமாம்

பிரவஞ்சத்தின்பிறப்பிடந்தானே
தெவரினையுடையதெமக்கிப்பிறவி
எய்தினதெந்தவேதுவினிஃதும்
இறந்திடுமெந்தவேதுவினென்றும்
தேர்ந்திடவேண்டுந்தேசேந்திரியாதி
நாமலசித்தேநமதுருவகிலம்
பழுதையையிரவிற் பாம்பென்பதுவின்
சிவமஞ்ஞானத்திருக்கிற்றிரிவாய்ச்
சகமெனத்தோன்றுஞ்சங்கற்பத்தில்
பழுதையிணுளதாய்ப்பகர்ந்திடும்வடிவே
ஆரோபிதமாமரவிற்றங்கலில்
அச்சிவவடிவேயகிலந்தங்குஞ்
சகப்பொருளெல்லாஞ்சத்துசித்தின்ப
வடிவநாமமுமிவ்வகையைந்தியல்பில்
உதித்திடுமுன்னமுரைத்திடுமூன்றும்
சொரூபசம்பந்தன் சொல்லும்பினிரண்ம்
மாயைச்சம்பந்தமற்றிவைதன்னை
யூகித்துணராதுணர்வுடைத்தாகித்
தோன்றிடும்பொருள் துவக்கிற்பிறவி
சிதைந்திடுஞ்சகலத்தியாகந்தன்னில்
சகலத்தியாகந்தானெ துவென்னில்
பாம்பெனநீக்கிப்பழுதையென்றறிதல்
போலநாமாதிபோக்கிச்சொரூபம்
பெற்றிடலஃதெப்பெற்றியிலுண்டாம்
அரவெனும்பிராந்தியகன்றிடுந்தீபம்
வந்துவிளக்கில்வகையதுபோல
ஆசானருளிலருமறையந்த
ஞானவிசாரமேஞானதீபமுமாம்
அவ்விளக்கங்கொண்டறிந்திடவேண்டும்
அதிட்டானந் தோன்றிலாரோபிதம்போம்
தனையாரென்றேதான்முதற்றேரின

துளபடியுணரினொருங்கேயனைத்தும்
தோன்றிடும்பழுதை தோன்றினவுடனே
கட்செவியென்றல்காணாதெஃதின்
அகிலமுநீங்கலன்றியேதோன்றில்
பேய்த்தேர்போலப்பிரவர்த்தகமும்
கனவதுபோலக்காண்டிடுமவையாய்
நின்றிடலொருவிநித்திரைதன்னில
கண்டிடுங்கனவிற்காட்சியீதென்று
தனைவேறாகத்தாணுணர்ந்திடலின்
உடன்முதற்றள்ளியொருசிவநாமென்
றிருளகன்றுறுதியிதையத்துதித்துக்
கந்தர்ப்பநகரங்கண்டிடலிற்சகம்
கண்டிவ்வுறுதிகலக்கமில்லாமல்
நிற்றல்சமாதிநிலையிதுவாகும்
உடலந்தத்திலொன்றுவன்முத்தி
இதுநின்மலமுடையிதையருக்காகும்
மலினநெஞ்சுடையமகற்குமுன்னானா
விதமாமசுத்தம்விலக்கும்பொருட்டுச்
சுத்தவாதனையைத்தொடங்கி
மனோலயஞ்செய்யின்வாய்த்திடும்வீடே

வேதநெறியகவல் முற்றும்.
------

10. சகச நிட்டை.


சவிகற்பநிருவிகற்பத்தகநிட்டையெனவுரைக்கும்
இவிகற்பமென்றுமின்றியிடைவிடாச்சகசநிட்டை
செவியதினெனக்குநீயுந்திருவுளஞ்செய்யவேண்டும்
அவியமில்விருத்தவெற்பிலம்மையேயன்பர்வாழ்வே (1)

பொதுவுறத்தருமம்பண்ணிப்புகல்வினைச்சமமதாகி
அதுவிததென்னுஞ்சித்தமமலமாயநித்தநித்தம்
இதுவெனவுணர்ந்தநித்தத்திகபரத்திச்சையற்ற
சதுரர்களிடத்திற்பரசந்தகர்ந்திடும்பத்திதோன்றும் (2)

பத்திதான்பதிந்தகாலைப்பகரங்கத்தலமடைந்து
சுத்தியாயங்கமந்தத்தொல்லருட்சத்தியாகி
நித்தியானந்தலிங்கநேரதாய்த்தரிக்கப்பட்டுத்
தித்தியாநின்றவின்பந்திருத்தியிற்களிக்குமென்றும். (3)

சமரசம்பதிந்தகாலைத்தலமயிக்கியத்தடைந்திங்
கமரங்கமானவான்மாவந்தச்சிற்சத்தியாகி
விமலமாலிங்கந்தன்னைவிளங்குநெஞ்சினிற்றரித்து
நிமலமாம்பரமானந்தநிஜதிருத்தியிற்களிக்கும் (4)

ஆனந்தம்பதிந்தகாலையச்சரணத்தடைந்து
வானந்தத்தங்கமாகுமகபராசத்தியாகித்
தானந்தப்பிரசாதத்தைத்தரித்துச்சோத் திரத்திலென்றும்
ஊனந்தமில்லாவின்பவேசையிற்களிக்குமென்றும். (5)

அனுபவம்பதிந்தகாலையடைந்துநற்பிராணலிங்கத்துத்
தெனுமங்கவாயுநின்றங்கெழிலாதிசத்தியாகி
உனுஞ்சரலிங்கந்தன்னை யொன்றுந்தொக்கினிற்றரிகததுப்
பனுமந்தப்பரமானந்தபரிசத்திக்களிக்குமென்றும் (6)

அவதானம்பதிந்தகாலையடைந்தந்தப்பிரசாதத்தை.
இவனானதேயுவங்கமிச்சைநற்சத்தியாகி
நவமானசிவலிங்கத்தைநயனமற்றதிற்றரித்திங்
குவமானமில்லாவின்ப வுருவினிற்களிக்குமென்றும். (7)

நயிட்டியம்பதிந்தகாலைநன்மயேசுரத்தடைந்து
சயித்தியசலமாமங்கந்தகுஞானசத்தியாகி
வியப்புறுங்குருலிங்கத்தைமேவுநாவினிற்றரித்திங்
குயப்பெறுபரமானந்தவுருசியிற் களிக்குமென்றும் (8)

சற்பத்திபதிந்தகாலைத்தகும்பதத்தலமடைந்து
முற்பகர்தரையாமங்கமொய்யதாங்கிரிகையாகித்
தற்பராசாரலிங்கந்தரித்துநாசினியிலந்தச்
சிற்பரானந்தகந்தந்தேர்ந்ததிற்களிக்குமென்றும் (9)

ஒருபத்திதானேயாருயொருதலந்தானேயாறாய்
ஒருவங்கந்தானேயாறாயொருசத்திதானேயாறாம்
ஒருலிங்கந்தானேயாறாயொருமுகந்தானேயாறாய்
ஒருவின்பந்தானே யாறாயொன்ரதாய்க் களிக்குமென்றும் (10)

அனாதியிற்சிவமேலிங்கமபினையேயங்கமாகும்
அனாதியவ்வபினைவேல்வங்கமதாயிற்றென்றால்
அனாதியச்சிவமேயந்தவங்கத்திற் புறம்புந்தோன்றும்
அனாதியக்குருவத்தீக்கைக்கருத்தமுவிவையேயாகும் (11)

சகசநிட்டை-முற்றும்.
---------------

11. பிரமசித்தியகவல்.

எழுவகைப்பிறப்பிலெடுத்தற்கரிய
மானிடப்பிறவிவாய்ப்பினிலொருவற்
காயிடினதுகொண்டம்முத்தியினை
அடைகுதலேபயனஃதினையன்றிச்
சித்திபுத்திகளிற்சிந்தனைசெய்யின்
ஏதமதாகுமெதினாலென்னில்
உலகத்தின்கண்ணொப்பிலொருவன்
அன்புகிடைத்தாலவனாலாகிய
பயன்பெறுகுதலேபழுதில்சிறப்பும்
அஃதினைப்போலலவனியின்மனிதப்
பிறப்பினைக்கொண்டேபிறவாநெறியை
அடைந்திடுமதற்கறிதற்கரிய
அவதியியல்பென்றறிந்துளபோதே
எத்தனம்பண்ணாதிருப்பவன்றனக்குத்

தான்வஞ்சகனெனச்சாற்றலுமாகும்
இத்தகவாகினியம்பிடுசித்தி
அடைந்திடுகுதல்பய னலவோவென்னில்
அனந்தசித்தியடைந்திடுமதற்குள
பிரமசித்திபெறுகுதலேபயன்
அணிமாதிசித்தியடைகுதல்பயனன்
றிஃதையுமன்றியியம்பிடுமட்ட
யோகந்தானுமொள்ளியபிரம
சித்திக்கங்கஞ்செப்பியவவையின்
கருத்தறியாதுகருதிமாறாக
அனுட்டித்தேயவ்வணிமாதிதன்னைப்
பெறுவர்கருத்தைப்பேசக்கேண்மின்
காமாதிகளைக்கைவிடலியமம்
விட்டபொருள்கண்மேவிடிற்றள்ளி
நிற்குதனியமநிருபாதிகமாய்
ஒராதனத்திலுறைகுதலாதனம்
நாமரூபத்தைநாடுமனத்தை
இருதயமதனிலிருக்கப்புகுத்தல்
பிராணாயாமம்புறவிடயத்தைப்
பெயர்த்துளேமீட்டல்பிரத்தியாகாரம்
விடையவாதனையைவிகற்பறநிறுத்தல்
தாரணையாகுந்தற்சொரூபத்தை
நாடறியானநவிற்றிடுபுறமும்
உள்ளுமறவவ்வொளிதானேயாய்
ஒத்துநின்றிடலேயோங்கியசமாதி
ஆதிலினிந்தவட்டயோகமதும்
பிரமசித்திபெறுதற்கங்கம்
என்னலுமாகுமினிப்புத்தியதும்
பயனலவோவெனிற்பகர்ந்திடுபுத்தி
இடம்பொருளுறவுவின்பங்கீர்த்தி
என்றைவிதமாமிவையைந்தினையும்

நன்றாய்த்தேரினன்முத்தியதாம்
இஃதினையன்றியிம்மாயாவித
சம்பந்தந்தனைத்தரனினைந்திடுதல்
அறியாமையாகு மஃதினைக்கேண்மின்
இடமுமழியாவிடமேயிடமாம்
பொருளுமழியாப்பொருளேபொருளாம்
உறவுநீங்காவுறவேயுறவாம்
சுகநிரதிசயசுகமேசுகமாம்
புகழும்பெரியோர்புகழ்தலேபுகழாம்
ஆகையிற்புத்தியாகியவிதங்கள்
எழிலார்வீடேயிவ்வகையன்றி
மாயையிலுளதாய்வந்திசித்தி
புத்திகளென்றுபுகலிரண்டினையும்
அடைந்திடநினைத்தலபமதாகும்
எதினாலென்னியம்பிடுமாயா
சம்பந்தத்தைத்தானடைகுதற்கும்
சத்தியமுத்திசம்பந்தத்தை
அடைந்திடுமதற்குமாகியவருத்தம்
எட்டுணையானுமிச்சையச்சங்கள்
உள்ளின்றியேவிட்டொன்றியகாயக்
கிலேசம்பண்ணிக்கிளர்தவமதனில்
அடைந்திடவேண்டுமாகியவிந்த
இரண்டுவகைக்குமேற்றமுந்தாழ்வும்
இன்றிவருத்தமெய்தல்சமமாம்
இத்தகைவருத்தமெய்தப்பட்டும்
அனித்தப்பொருளையடைகுதல்சபலம்
அழியாப்பொருளையடைகுதல்சபலம்
அன்றியுதன்றாயறிந்தவிடத்தில்
அவைகளிரண்டுமசத்தாதலினால்
இன்பமோர்காலுமிலையவைதன்னின்
றடைந்திடுமின்பமலையாவறிவின்

ஆனந்தலேசமஃதறியாமையில்
இவைகளினிடமாயெய்திவந்ததுபோல்
அறிந்திடுமதனாலறிவானந்தம்
பொருந்திடிற்சகலபுத்திசித்திகளும்
எக்காலத்திலெய்தினதாகும்
இதுவன்றிவேதமெழிலாகமத்தும்
புருடார்த்தமாகப்புகனான்கினிலும்
சிவமடைகுதலேசிறப்பெனவோதும்
அச்சிவமென்னுமழகியவீட்டை
ஐயந்திரிவுமறவேயடைதல்
எம்மார்க்கத்தாலென்றிடில்வேத
முடிவினின்மொழியுமொய்நெறியதனில்்
அடைந்திடவேண்டுமம்மார்க்கத்தின்
ஒழுங்கைக்கேண்மினுபநிடமதனில்
ஏகமேவாவத்துவிதீயம்
பிரமமேயென்றுபேசிடுமதற்குச்
சுசாதிவிசாதிசுவகதபேதம்
சொல்லியமூன்றுஞ்சொரூபத்தின்மை
என்ற துவாகினெழில்வேதாந்தப்
பக்கந்தனக்குப்பகர்ந்திடும்பந்தம்
வீடிவையிரண்டின்விவகாரத்துணி
வெத்தகையென்னிலியம்பிடக்கேண்மின்
நித்தியமாகையினிகழ்ந்திடுகால
பரிச்சேதமதும்பரிபூரணத்தும்
ஆகையிற்றேசவறைபரிச்சேதமும்
ஏகமதாகினியம்பிடுவத்து
பரிச்சேதமதும்பகர்ந்திடவொண்ணா
தறிவாய்ச்சத்தாயானந்தமதாய்ப்
பந்தமுத்தியெனப்பகர்விவகார
அதீதமாகியசைவறவிளங்கும்
தன்னிடந்தனிலேசங்கற்பசத்தி

சஙகற்பமல்லாத சங்கற்பசத்தி
என்றிவையிரண்டுண்டிவையிற்சங்கற்ப
சத்தியேதென்னிற்சாற்றிடக்கேண்மின்
நினைவுரூபமதாநிகழ்ந்திடுமதற்கு
வடிவேதென்னில்வகுத்திடுநாமம்
உருவமயமேயோரோரிடத்தில்
ஒருவன்கூவுமுறையதுதானே
எதிரிட்டப்படியெழுவதுபோல
நினைவதுவென்றுநிகழ்ந்திடுநாமம்
உருவதுவென்றுமொருபேதமுமில்
நவிற்றிடுரூபநாமமயமும்
மாயாமயமேமாயையென்றதுதான்
யாதொன்றில்லாததுமாயையாகும்
உள்ளதுமலவாயுருப்பெயர்மயமாய்
நினைவுரூபமாய்நிகழ்சங்கற்ப
சத்திசத்தாயதற்சொரூபமதாம்
அதிட்டானத்திலாரோபிதமாம்
ஆரோபிதமுமதிட்டானமின்றி
விளங்காததுபோல்விளக்கிடுந்தன்னைத்
தவிரச்சஙகற்பசத்தியுந்தோன்றா
தித்தகைதோன்றுமிருஞ்சங்கற்ப
சத்திமயமாஞ்சருவஙகளையும்
சத்தாய்நிகழுந்தற்சொரூபத்தில்
ஆரோபிதமென்றறிந்தமையாது
புறம்பெனச்சத்தியபுத்தியைப்பண்ணிப்
பார்த்திடுமிடத்தில் பரமுயர்செகமென்
றுரைத்திடப்பட்டவொருமுப்பொருளும்
விளங்கிடுமவையைவிளம்பிடக்கேண்மின்
சங்கற்பசத்திதன்மயமான
நாமரூபமதேநாட்டிடுசெகமாம்
அவையினைநோக்குமறிவேயுயிராம்

அவையினைவிள்க்குமறிவேபரமாம்
இத்தகையாகவியம்புமுப்பொருளும்
உதித்திடுமிந்தவுயிர்பரமிரண்டில்
மேற்பரஞ்சர்வவிடையமதாகும்
சீவனோவேகதேசவிடையம்
இந்தச்சீவனிப்படிபொய்யாய்ச
சடமாய்த்தோன்றுஞ் சகத்தினுடைய
புணர்ச்சியிற்சடமாய்போதவடிவை
விட்டுடனிச்சைவிளங்கிடுஞானக்
கிரியையுடைத்தாய்க்கிளக்குமிவையில்
கன்மமுண்டாய்க்கன்மந்தன்னால்
தோற்றமுடைத்தாய்த்தொன்றுதொட்டுச்
செனனமரணஞ்சென்றுடன்வரும்
இத்தகைபுரியுமிச்சங்கற்ப
சத்தியேபந்தந்தகுஞ்சங்கற்ப
சத்தியின்வடிவினிற்சாற்றக்கேண்மின்
பிராந்தியிலொருவன்பிசகிமாறாகத்
திக்குகடன்னைத்தேருமிடத்தில்
சூரியனின்றுதோற்றியதிசையைக்
கண்டுந்துணிவாய்க்காண்குதல்கூடா
தையமாய்த்தோன்றுமடுத்தபிராந்தி
உண்ணின்றுநீங்கிலுள்ளபடியே
துணிவாய்நேரேதோற்றுமதன்றி
மந்தவிருளின்மறைந்திடுகயிற்றைப்
பாம்புபோலப்பார்த்திடுமிடத்தில்
பாம்பலவென்றும்பழுதையேயென்றும்
ஆறதனாலேயறிந்திடுபோதும்
துணிவதுவாகத்தோன்றாதந்த
மந்தாந்தகாரமாறிடிற்றோன்றும
அஃதினைப்போலவறிந்திடுசாத்திர
ஜென்னியஞானஞ்செப்புதலன்றி

கிருதகிருத்தியனாய்க்கிளர்சாதனங்கள்
நான்குமுடைத்தாய்ஞானாசிரியர்
அருளதினாலேயாரணமுடிவாம்
மாவாக்கியத்தின்வகுத்திடுபொருளை
விருப்பமதுடனேவிசாரணைபண்ணி
இச்செகஜீவவிருபரம்மவைக்
கதிட்டானமாகியவப்பரசொரூபம
தானேயென்றுதன்னுள்ளிருளை
யகன்றுசமாதியென்றறைந்திடுகின்ற
சமாதானபுத்திதானதுபிறந்து
தனதுசங்கற்பசத்தியினாலே
ஆரோபிதமாயனேகத்துவங்கள்
விளங்கினதென்றும் விளங்கிடுமிவைக்கதிட்
டானந்தானேயாமெனவென்றும்
பழுதையினிடத்திற் பாம்பொருகாலும்
இல்லாதஃதினிவ்வாரோபிதம்
இலையெனநீங்கியெழிலதிட்டானம்
ஆய்நிற்குதலேயசங்கற்பசத்தி
இதுவேமுத்தியிச்சங்கற்பம்
அசங்கற்பமென்னவறைந்திடுமிவைக்
கதீதனேதானாகையிலவையின்
ஊதாம்பந்தமோங்கியமுத்தி
இவைதனக்கதீதனென்னலுமாகும்
இத்தகையொருவனெழிற்குருவருளில்
ஐயந்திரிவறவறிந்துசொரூபம்
தன்னுடசன்னிதானமதனில்
சங்கற்பத்திற்றானானாவாய்
விரிந்ததுவென்றும் விரிந்திடுமெவையும்
அசங்கற்பத்திலடங்கிடுமென்றும்
இவையேபந்தமெழில்வீடென்றும்
இவைகளிரண்டுமென்கணோர்காலும்

இலையிவைவிளங்கலெம்மிடமதனில்
ஆரோபிதமென்றறிந்தவறிவு
கலக்கமில்லாமற்காத்திரநீங்கும்
தன்னளவதனுந்தயிலதாரையினில்
நின்றிடின்முடிவினிகழ்பந்தமுத்திக்
கதீதமதாகுமழகியபிரம
சித்தியதனைச்சேருவனேரே

பிரமசித்தியகவல்-முற்றும்.
---------

12. உபதேசசித்தாந்தக்கட்டளை

ஆத்மாக்களை முத்தியிலே விடவேண்டி வாக்குமனாதீத
கோசரமாகிய அருட்சத்தி-தானே-பாசவயிராக்யஞ்-
சீவகாருண்ணியம்-ஈஸ்வரபக்தி பிரமஞானமென்கின்ற
நான்குமே ஒருதிருமேனியெனக் கொண்டருளிய-ஞானாசாரியர்
இனிப்பிறவாத முடிந்த பிறப்பில் நித்தியா நித்திய வத்துவிவேகம்-
இகமூத்தாத பலபோகவிராகம்-சமையாதி சட்கம்முமூட்சத்வமென்கின்ற
சாதனசதுஷ்டய சம்பத்தியே-ஓர்வெனக்குண்டசற்சீடனுக்கு-
அனுக்கிரகம் பண்ணுமுறைமை-உலகத்தின் கண்ணே
வயித்தி்யராயினோர்-ஒருவனதுவியாதியை-
நிச்சயம் பண்ணியித்தனை தினத்தின்மேல்-
அவுடதங் கொடுக்க வேணுமென்று நியமமிருப்பினும் ஒரோர
அசாத்திய வியாதியையுடையவனுக்குக் கண்டவக்கணமே-
கனமாகியபூபதி முதலிய-அவுடதங்களைக் கொடுத்து
உடனே திருப்பவேண்டும் அதைப்போலச் சாதனங்களையுடைய
தீவாதர பக்குவனுக்கும் ஓராண்டாகிலுஞ் சோதித்து அனுக்கிரகம்
பண்ண வேணுமென்றாலும் ஓரோர் அதிதீவரதர பக்குவனுக்கு
அந்தக்கணமே இந்த உபதேச சித்தாந்தத்தை அனுக்கிரகம்
பண்ணி பவரோகத்தை யுடனே நிவிர்த்தி பண்ணவேண்டும்-
இந்த உபதேச சித்தாந்த மார்க்கத்திலொழிந்து மற்றைய
மார்க்கத்தினாலே பவரோக நீங்காதோவென்னில்- பாதாதிகேச
பரியந்தம்-அக்கினி பற்றிக்கொண்டவனுக்கு விழுந்த துறையிலே
அவனை விழுங்கி மேலிடப்பட்ட மடுவிலேயன்றிக் கொஞ்ச ஜலத்தில்
பிரவேசிக்கில் உடனேய விந்துமுடியாது-அதைப்போல-
அதீத பக்குவனுக்குடனே-அவனையும் விழுங்கி மேலிடப்பட்ட
அகண்டா காரஞானம்-இம் மார்க்கத்திலே பிரவேசித்த-
அக்கணமே யுண்டாம்-அதெப்படி யென்னில்-சற்குரு சந்நிதியிலே
சற்சீடனானவன்- தேனிரம்பிய மலரைத்தேடும் அளிகள்போல்
பூதலமெங்குந் தேடி வெப்பந்தீராமல் வந்தடைந்து கண்ட அக்கணமே-
உள்ள மகிழ்ச்சியையடைந்து தாரகமாகிய சிவமே யெனக்கண்டு-
அவருடைய அருள்சுரக்கும்படி பண்ணிக்கொண்டு (சுவாமி நானார்
இந்தநானாவாகிய உலகமேது-இது ஆரையுடையது-எனக்குச்செனன
மரணம் வந்தவாறேது-இது யாதினாலே நீங்கும்-இவற்றை யனுக்கிரகஞ்
செய்ய வேண்டும்-இவையிற் பிரதமத்தில்-அடியேன்
நானாரென்னும் விண்ணப்பஞ் செய்தபடிக்கு என்னையறிவத்தால்-
மற்றைய நாலும் அடியேனே விண்ணப்பஞ் செய்வேனென்று
சற்சீடன் நானாரென்று கேட்க ஆசாரியனுக் கிரகம் பண்ணுகிறார்
நல்லது உன்னைக் கரதலாமலகம் போலக் காட்டுகிறோம், நீ நன்றாகப்
பார்க்கக்கடவாயென்று திருவடியைச்சூட்டி-அஸ்த
மத்தக சையோகம் பண்ணி கிருபாதிஷ்டியினாலே நோக்கியிங்கே
யுண்டாய் விளங்குவதெல்லாம் நீயேயென்னில்
சுவாமீ யிங்கேயுண்டாய் விள்ங்குவதெல்லாம் நானெப்படியாவேன்
ஆனாலுனக்கிங்கே-என்னபிரகாசியா நிற்குதென்னில்-
(சுவாமீ) நாமரூபமயமாகிய உலகமே தோன்றுது-ஆனாலந்த
உலக மெவ்விடத்தினின்று தோன்றுதென்னில்-
(சுவாமீ) யென்னுடையநினைவிலேநின்று தோன்றுது-
ஆனால் நினைவு வேறுஉலகம் வேறோவென்னில்-
(சுவாமீ) உலகமெதிரிட்டுக்கான்கையினாலே வேறுதானே-
ஆனால் உலகமாகிய நாமரூபத்தைநீக்கி நினைவைப்பாரென்னில்-
(சுவாமீ) அப்படி பார்க்குமிடத்தில் நினைவைக் காணேன்- ஆனால்
நினைவைநோக்கி நாமரூபத்தைப்பாரெனில் (சுவாமீ)
அப்படி பார்க்குமிடத்தும் நாமரூபத்தைக் காணேன்-
ஆனால், நாமரூபமயமாகிய உலகமேதென்னில்
(சுவாமீ) யென்னுடைய நினைவுதானே-ஆனால்
அந்நினைவு எங்கே நின்றுதோன்று தென்னில்
(சுவாமீ) என்னிடத்திலே நின்றூதோன்றுது-ஆனால்
நினைவுவேறு நீவேறோவென்னில்-
(சுவாமீ) என்னினை வாகையினாலே-வேறின்றிநான்றானே-
ஆனால் நினைவை நீக்கியுன்னைப் பாரென்னில்-
(சுவாமீ) யான் பிரகாசியாநிற்கின்றேன் ஆனால் நினைவு-
நீயெப்படி யாவாயென்னில்
(சுவாமீ) நினைவு என்னைவிடவேறுதானே-ஆனால்
உன்னைப் பிறித்து நினைவைப்பாரென்னில்-
(சுவாமீ) அப்படி பார்க்குமிடத்தில் நினைவைக்காணேன்-
ஆனால் நினைவுயாதோவென்னில்-
(சுவாமீ) நினைவானது நானுமல்ல என்னைவிடவேறுமல்ல-
ஆனாலஃதெப்படியென்னில்,
(சுவாமீ) தங்கத்தினிடத்திலே பணிதியானது
தங்கமுமல்லாமல் தங்கத்தைவிட வேறுமல்லாமல்
கற்பிக்கப்பட்டதுபோலநினைவு மென்னிடத்திலே கற்பிதம்-
ஆனாலிந்தநினைவு வேறேசத்தையோவென்னில்,
(சுவாமீ) அதற்குவேறே சத்தையில்லை-என்னுடைய
சத்தையே தோன்றிவிளங்கா நிற்குது-ஆனாலிங்கே
தோனறுவதெல்லாம்-யாதென்னில்.
(சுவாமீ) இங்கே தோன்றி விளங்குவதெல்லாம் நானே-ஆனால்-
நாமுன்னம், எல்லா நீயேயென்று சொன்னோமே-
அதற்குனக்கு ஐயந்தோன்றிற்றே-இப்போது எல்லாநானே
யென்று நீ சொன்னது திரிவோந்ன்றாய்ப் பாரென்னில்
(சுவாமீ) முதற்றிரிவினாலே எல்லாம் நானெப்படி
யாவனென்று கேட்டேன்.சுவாமி கடாக்ஷத்தினாலே-
திரிவு பண்ணிக்கொண்டிருந்த அஞ்ஞான விருள்
போய்த் துணிவாகத்தானே-எல்லா நானேயெனக்கண்டேன்-
ஆனால் உன்னைக் கண்டஇடத்தில் அனுபவ மெப்படியிருந்ததென்னில்-
(சுவாமீ) அகண்டாகாரமயமாய்ச்-சுட்டிறந்த சுகாதீதமாய்
பழுதையினிடத்தி்ற் பாம்பொருக்காலுமில்லாததுபோல்-
உலகமுயிர் பரமென்பது-ஒருக்காலு மில்லாததாய் பிரகாசியா நிற்குது-
ஆனாலிதுவே தற்சொரூபமுத்தி-யிதிற்கலக்கமில்லாமல்
தேகதனபரியந்தம் நிற்பாயாக-இதன்றி அந்தமுத்தி நீயானதுக்குக்குறி-
மற்றைநாலும்-நீயுன்னனுபவப்படிக்குச் சொல்லென்னில்-
(சுவாமீ) நானாவிதமாகிய பிரபஞ்சம் என்னிடத்திலே
ஆரோபிதம்-அது சங்கற்பத்தையுடையது-அந்தச் சங்கற்பத்தையுடைய
ஆரோபிதமாகிய பிரபஞ்சம்-அதிட்டானமாகிய என்னைவிட
வேறல்லவென்று காணாத திரிவினாலே எனக்குச்செனன
மரணமில்லை-இப்படி மற்றைநாலும் சுவாமி கடாக்ஷத்தினாலே
எனக்கனுபவமாச்சுது-நல்லது நம்முடைய அனுபவமிதுவே
சுருதியினுடைய முடிவிலே சொல்லுவதுமிதுவே-
உன்னுடைய வனுபவமு மிப்படியே யாகில் இதுவே-
உபதேசசித்தாந்தம்-என்று இதிற்கலக்கமில்லாமல்
வாழ்வாயாக வென்று ஆசீர்வாதம் பண்ணினார்.

உபதேச சித்தாந்தக்கட்டளை முற்றும்
------------------

13. சிவதரிசன அகவல்.

உரோமசமுனிகளுண்மகிழ்ச்சியுடன்
பணிந்திடுகின்ரபழங்கிரிமேய
விருத்தவம்பிகையேவிண்ணப்பமொன்றுண்
டுரைக்கேன்யானுமுன்செவிசாத்தி
அருள்செயவேண்டுமறைநீயென்னில்
கடையனேன்றனக்குங்கருணையதாக
சுட்டிறந்தொளிருஞ்சுயம்பிரகாச
சிவதெரிசனத்தைச்செப்பிடவேண்டும்
நல்லதுனக்குநாமேயகவிருள்
நீக்கிமுன்படியேநிலையினில்வைத்த
வகைப்படியேநீவகுத்துரையென்னில்
இருளறநீக்கியிதுவறநோக்கில்
இவ்விடத்துண்டாயிலகுவதேசிவம்
விளம்புமச்சிவத்தைவிளக்குவதேநீ
நீவிளங்குஞ்சிவநின்றறிகுதல்யான்
இவ்வனுபவத்திலியம்பியஞாதுரு
ஞானநேயம்மிவைநண்ணீநிற்கையினில்
சிவதெரிசனமெனச்செப்பிடலாகா
என்றெனில்யானுரையெழிலனுபவத்தில்
சிவம்நீயானெனச்செப்பியமூன்றும்
உரைமாத்திரமவையொருமுதறானே
எப்படியோர்முத லென்றெனிற்சொல்கேன்
சச்சிதானந்தத்தன்மயஞ்சிவமெனச்
சாற்றுதல்போலுஞ்சாறறுமோங்காரதறு்
தடங்கிநின்றிடு மூன்றக்கரம்போலும்
நீலோற்பலமெனநிகழ்த்திடல்போலும்
கடமடமகதாகாயமெனவே
சாற்றுத்ல்போலுஞ்சாற்றியவிவையில்
உரையேபின்னமூளபடிநோக்கில்
ஏகமேயாமித்தகைபோல
நானீசிவமெனநவிற்றிடுமூன்றும
சொன்மாத்திரமேசொரூபமதொன்றே
ஒன்றேயாகிலுயிர்க்கிதுவதுவென்
றுரைத்திடப்பட்டவுருப்பெயர்மயமா
மாயைதோன்றும்வகையேதென்னில்
அஞ்ஞானத்தாலச்சொரூபத்தை
மறந்துயிரிதுவெனுமாயையைக்காணும்
ஒருமுதலானவுயிக்கிருளென்றால்
பரசிவமதற்கேபந்தமுண்டாகும்
மேலுமோர்சிவம்விளங்குதலிலையில்
ஒருகாலையினுமொருவாபந்தம்
என்றெனிலந்தவெழிற்சொரூபற்குப்
பந்தமுத்திபகர்ந்திடலாகா
உன்னருளதனிலுபக்கிரமத்தை
அன்றெனக்குநீயருளீயவகையே
சொல்கேனந்தச்சொரூபவொளியில்
கதிரொளிதோன்றுங்கானலேபோலப்
பேசவொண்ணாதபின்னாசத்தி
தோன்றிடுமதனிற்சொரூபசிற்சத்தி
சாயைபதியிற்சகமுயிற்பரமென
ஒர்முப்பொருளுடனேவிளங்கும்
எத்தகைெயன்ன்னிலியம்பியபின்னை
திரிகுணசமுகஞ்சேர்ந்துநிகழும்
சத்துவகுணத்திற்சாயையேபரம்
எண்ணிறந்தவிராசதகுணத்தில்
சாயைகளேயுயிர்தாமதமிரண்டாம்
இருண்மாயையெனவிருளுயிர்வையை
மறைத்தேநிற்குமாயைசெகமாம்
தனுமுதலானசகமதுண்டாகக்
கணக்கதுவாகக்கன்மமுநிகழும்
இத்தகைபின்னாவிருஞ்சத்திதன்னில்
ஐந்துபொருளுமன்றேநிகழும்
இதிற்பந்தமுத்தியிசைத்திடலாகும்
இராசதகுணத்திலிசைந்திடுசாயை
ஆகியவுயிர்களகிட்டானமான
தற்சொரூபத்தைத்தாமதவிருளால்
மறந்துமூவகையாய்மாயையிலுழலும்
ச்சத்துவகுணபரந்தனக்கொருகாலும்
இருளேயில்லாவியற்கையிலருளில்
தனதங்கிசமுயிர்தானெனவறிந்து
கூபத்தில்வீழ்ந்தகுழந்தையெடுக்கத்
தாயேவீழ்ந்ததகமையின்பரமே
மாயைதனிலேவந்துருவைக்கொண்
டைந்தொழிலுமடைவுடனடத்தி
இருளினைமாற்றியெழிலதிட்டான
தற்சொரூபத்தைத்தானடைவிக்கும்
இருளதுநீக்கியிருந்தவிடத்தில்
உயிர்பரமிரண்டு முடலுயிர்போலப்
பின்னாசத்தியிற்பெற்றிடுமுத்தி
உயிர்பரமிரண்டுமொன்றேயாகி
அபினாசத்தியிலடைந்திடுமுத்தி
அபினையைப்பார்த்தேயதுநீயென்ன
அருமறையோதுமதுவறியாமல்
பின்னையைப்பார்த்தேபேதவாதிகள்
பாவனையென்றேபகுத்துரைசெய்வர்
உயிரின்சாக்ஷியொருநானேயாம்
பரத்தின்சாட்சிபரைநீயேயாம்
அப்பால்விளங்குமதுசிவமேயாம்
பின்னாசத்தியிற்பிறிவைக்குறித்தே
இவ்வகைமூன்றாயியம்புரையன்றிப்
பார்த்துடனோக்கிற்பரம்பொருளொன்றே
இப்பரம்பொருளேயெழிற்சிவதரிசனம்
என்றேமுன்னேமியம்பியதுமையே
சுட்டொடுநோக்கிற்றோன்றிடுமூன்றாய்
சுட்டின்றிநோக்கிற்றோன்றிடுமொன்றாய்
மூன்றுமிறந்தமுப்பாழதனில்
தற்சிவசொரூபந்தானாய்விளங்கும்
பின்னாசத்தியிற்பிறந்ததுமூன்றும்
பின்னைதனிலே பெயர்ந்தேயொடுங்கும்
அப்பால்மவுனத்தழகியசிவமே
அழகியசிவத்திலாரோபிதமாய்ப்
பின்னைநிகழும்பெயராதொன்றும்
அதிட்டானமானவச்சிவநேயம்
உலகமாய்த்தோன்றிலுயிருமருளும்
விளங்கிடுஞ்சிவமாய்விளங்கிடும்போதில்
உயிருமருளுமொருசிவமேயாம்
இத்தகைகண்டேனெழிற்சிவதரிசனம்
சிவம்நமக்கருளியசிவதரிசனத்தின்
படியேயுனக்குநம்பார்வையிலுண்டாய்
விளங்கிற்றந்நிலைவிட்டுநீங்காது
நில்லெனவருளினிமலநாயகியே
மலத்தினுநாயைவளப்பமதுடைய
சிங்காதனத்திற்சேர்த்திவைத்ததுபோல்
எனக்கேநகைவருமெனதுசரித்திரம்
எனக்குமிந்தவெழிற்சிவதரிசனம்
அளித்தனையிதற்கோரறைகைமாறென்
பரையேயுனக்கேபரங்காணென்னைக்
காத்ததுகாத்தாய்கடைபோகக்கண்
பார்த்தெனைவிடாதுபரிந்துகொண்டருளே

சிவதரிசன அகவல்-முற்றும்.
---------------------

14. ஆகமநெறியகவல்..

சத்தினிபாதந்தான்பிறந்திதையம்
சுத்தமதடைந்துதொல்லைமூவுலகும்
கான்றசோறதனிற்கண்டெனவிடுத்து
வீட்டின்பினையேவிரும்பிடினாகம
விசாரணைசெய்யவேண்டிடுமுத்தி
உண்மையின்மும்முதலுண்மையதாகும்
அஃதையுமன்றியவனியிலோர்பொருள்
உணர்ந்திடுமிடத்திலுருவுடனாமம்
தோன்றுதன்முன்மேதோன்றிடுஞ்சிவமதை
இருளினிற்றெரியாதிதுவெனச்சுட்டி
எய்திடுமாயையிருவினையதனின்
ஆசையிற்பதிபசுவாணவமாயை
கருமமுந்தோன்றுங்கருவிதினோக்கின்
மும்முதலவையின்முத்தியிற்பசுவும்
விடவேண்டுமென்னும்விருப்பமதனில்
இருவகையாகுமிரும்பதிபசுவும்
மூவகையாகுமும்மலந்தனின்மற்
றவைதனக்குக்குறியதுவிதுவாகும்
அதுவிதுநீங்கிலவைமூன்றகலும்
அவையினின்மூலமாணவமாகும்
அறுவைக்கழுக்கையகற்றிடுமூவரும்
சாணமும்போலச்சாற்றியவிரண்டு
மூலங்கெடுக்கமூலனேகூட்டி
உற்பவமுதலாயுரைத்திடுமைந்து
தொழில்செய்திடுவன்றொன்மையிலேநின்
றந்தகன்கண்ணிலப்படலந்தனை
எடுத்திடுமுனமதற்கேற்றவுடதங்கள்

சேர்த்திடினிதமாயத்தீர்ந்திடுகாலம்..
பொறாததுபோலும்புகன்றிடுமாயைப்.
பிறப்பினுக்கஞ்சிப்பிறப்பைநேர்நீக்கும்
நெறியயதெனெவந்நெறியினையுரைப்பார்
ஆரெனத்தேடியரற்றிடுகாலையின்.
சிவமேஞானதேசிகனாகும்.
அவனருளாலேயாகமநெறியின்.
ஐந்துதொழிற்குமரனேபுரியன்..
ஆமென்றுயிர்பொருளச்சார்பவையும்.
உடற்காவலையுமொருங்கேநீக்கி.
அருளினநோக்கியாசானருளில்.
உச்சியினிற்குமுவலம்போல.
ஆணவமாயையவையினிற்றோன்றும்.
மறப்புநினைப்புமாற்றிடிலம்பகல்.
அற்றவீடென்றேயறைந்திடுமாகமம்..
அவ்வீடதனினனுபவந்தன்னின்.
பெத்தத்தினிற்கும்பெற்றியைப்போல
இதுவெனத்தோன்று மெவையவையனைத்தும்
நியதிசெய்ததுவாய்நிற்றல்சமாதி
சமாதியைநீங்கியசாக்கிரந்தனினும்.
சிவமேயைந்துசெய்கையினடித்தல்
கண்டுதற்செயலைக்கைவிடவேண்டும்
இத்தகைநெறியையெய்திப்பாலன்
பித்தன்பசாசன்பெற்றகுணங்கள்.
மருவியேநிற்றல்வாய்மைநெறியாம்
தேகாந்தத்திற்சிவமேசேர்வன்
இஃதாகமநெறியினியாரணநெறி.

ஆகமநெறியகவல்-முற்றும்
--------------------

15. பிரமானுபவ அகவல்.

நன்னெஞ்சேவாநானுரைக்கக்கேள்
பிரமானுபவத்தைப்பிரத்தியக்கமதாய்
அருட்குருவருளிலறைகுவன்கேளாய்
யாதோர்பொருளும்யாவராயினும்
சுருதியுத்தமதாய்ச்சொற்றிடவேண்டும்
மனவுரையதனின்மதித்திடவொண்ணாச்
சச்சிதானந்தத்தற்சொரூபத்தில்
சிறந்தசிற்சக்திசெகசத்தியென்றும்
இருவகைசத்தியெனவன்றேயுள
தவையிதிற்பின்னையகிலத்துக்கேது
சிற்சத்திமுத்திதானதற்கேது
பரத்தினிலபினாபாவமாயொன்றாய்
சிற்சத்திநிக்குஞ்செகசத்தியதும்
தற்சொரூபத்தைத்தானதுவிடாமல்
வேறுபோற்றோன்றிவிளங்குமுக்குணமாய்
சாத்துவிதராசததாமதமெனவே
சத்துவகுணத்திற்றாக்கியசாயை
பரமாயெங்கும்பார்த்திடுமிராசத
சாயையுயிராந்தாமதமிரண்டாம்
இருண்மாயையெனவிருளுயிர்த்தடுக்கும்
இருளினையிரியயிருமாயைசேர்க்கக்
கணக்கதுவாகக்கருமமுண்டாகும்
ஆகவைவிதமுமன்றேநிகழும்
இவ்வைவிதமாயிலங்கியபின்னை
பரத்தினையன்றிப்பார்த்திடிலில்லை
சர்வவிடையதற்பரஞ்சுவாசம்
சுருதியதாகுஞ்சொல்லாகமமாம்
என்றெனவோதுமெழிலார்சுருதி
இஃதேதுணிவென்றெம்மையுமாண்ட
அருட்டேசிகனுமறைந்தனனன்றோ
நானாரெனவேஞானநற்குருவை
வினவிடிலித்தகைவிளங்கியபிரமம்
நீயேயென்றுநிச்சயமாகத்
தத்துவமசிகொடுசாற்றினனன்றே
இவ்வுரைப்படியேயிருந்தனுபவத்தில்
காட்டுகேனுனக்குக்கருத்தசையாவது
நன்றாய்நோக்காய்நன்னெஞ்சகமே
அரசன்றன்சேயடாதார்சேரி
சேர்ந்தவரினம்போற்றிரிந்திடுமவனை
அறிந்தவனொருவனவ்விடத்தேகி
அன்னோனிடத்திலரசவிலக்கணம்
காட்டியணர்த்துங்கணக்கதுபோல
நீசீவன்போனிற்குமுன்கண்ணே
சிவத்தின்குறியைச்செப்பிடக்கேளாய்
சாக்கிரமதனிற்றாக்கிடும்பொருளில்
நினைவெழுமுனமேநின்றிடுநிலையே
நின்மலநிலையந்நிலையினினோக்கின்
விளங்கிடுஞேயம் விளக்கிடுஞானம்
நோக்கிடுஞாதுருநுவலுமிம்மூன்றும்
நாமேயாகநன்றாய்விளங்கும்
அவ்விடத்தறிந்ததமலசத்தியினால்
அபினாபாவமாயேகமுமாம்
அந்நிலைநின்றேயசைவுசெய்நினைவில்
அடைந்திடுமிடத்திலைவகைப்பொருளும்
முன்பின்னன்றிமுழுதுநிகழும்
இஃதுணர்ந்திடுதலிரும்பின்னையினில்
அசைவுசெய்நினைவிறடைந்தவக்கணமே,
சுவாசமங்கிசமெனத்தோன்றிடும்வாக்கு.
நான்றானெனெவேநவிற்றிடாநிற்கும்.
இவையேசுருதியெழிலாகமமாம்.
நிலையினிலொன்றாய்நினைவினிலைந்தாய்.
விளங்குநம்மிடத்தின்மேவுசத்திகளால்.
இத்தகையன்றேயிருந்துடனிகழும்.
இதனானாமேயிருஞ்சிவமாகும்.
இவ்வனுபவத்தையிலங்கிடநீயும்..
கண்டுடனிருந்துங்கலக்கமதுற்றுக்.
கண்டிடும்பொருளைக்கருதிவேறாகச்.
சீவனைப்போலத்தியங்கினையினிநீ...
நின்றநிலையேநிலையெனநிற்கில்.
கண்டிடைம்பொருளுங்கரையுநாமாக..
நினைவொடுநிலையேநிலையெனநிற்கில்
விளம்புமைம்பொருளும்வேறாய்விளங்கும்
நின்றமுன்னிலைக்கு நினைவொடுநிலைக்கும்
நாமேயிடமெனநம்மையேபோற்றி
விளங்காதென்றும்விளங்கிடுமுன்னிலை
சற்சத்தியென்றுஞ்சாற்றியபின்னிலை
அசற்சத்தியென்றுமவையின்முற்சத்தி
சுயசத்தியென்றுஞ்சொல்லுபிற்சத்தி .
கற்பிதமென்றுங்கருதியுணர்ந்தே
அனைத்துநாமெனவேயறிந்தந்தறிவே
இடைவிடாதிவ்வுடலிறந்திடும்
வரையுநிற்றிடில்வாய்க்குநம்வீடே
      -------

பிரமானுபவ அகவல்-முற்றும்.
----------------------

16. சிவசமரசவாத-அகவல்.

கலிவலியினதுகறக்கமோர்காலும்
சித்தமாயில்லாதிருமுதுகிரிவாழ்
என்னையும்பொருளாவெண்ணியாண்டருளும்
விருத்தவம்பிகையேவினையனேற்கிஃதொன்
றையமிவ்வையமனையேநின்னால்
அன்றிமற்றொருவராரினுநீங்கா
திவ்வையந்தனையானின்றகற்றத்
துணிவிதுவென்னச்சுருதியின்முடிவின்
அருளியபடியேயருள்செயவேண்டும்
ஏதெனிற்சொல்கேனெழில்வேதாகமத்
துயிர்பரமேகமோரிரண்டெனவே
ஓதியவகையிலும்பர்கண்முனிவர்
ஆரியர்தந்தமகமிசைக்கொண்ட
படியினிற்சென்றுபரமடைந்தனர்கள்
அவையிலொன்றையலநெறியென்றே
தள்ளுதல்கூடாச்சமரசமாகத்
திரிவையமறச்சிவையேயுனதின்
அனுபவப்படியேயனுக்கிரகஞ்செய
வேண்டிடுமோர்நெறிமேவியேமுயலும்
சாதகர்தமக்குச்சமரசவாதம்
அருளில்விளங்காதனுட்டித்தீறில்
தானிகழ்முத்திதானானவர்கட்
கருளிவிளங்குமருளாலுனக்குத்
திருவடிசூட்டித்திரிவுசெய்யிருளைத்
தீரவகற்றிச்சிவமதினாமே
வைத்தபரிசேவகுத்துரையென்னில்
உரைக்கேனியானுமுன்னருளதனில்
இதுவதுவென்னுமியல்புகளில்லாச்
சச்சிதானந்தத்தற்சொருபத்தில்
பேதவப்பேதப்பேசுதலின்றி
அநிர்வசனமதாயதுவுளபோதே
சயிற்றினிலரவுகற்பிதம்போல
நினைவுரூபமதாய்நிகழ்ந்திடும்பின்னை
அஃதனில்விளங்குமறைமுப்பொருளும்
எத்தகையென்னிலியம்பியநினைவும்
சுட்டியேநிற்கும்சுட்டிக்கண்டிடில்
செகமதுவாகுஞ்செப்பியவதனைக்
காண்குதலுயிராங்காணவிளக்கல்
பரமதுவாகும்பற்றியசகத்தில்
செகமதுமாயைசெகத்தினைநோக்கப்
பண்ணலஞ்ஞானம்பார்த்திடுமிடத்தில்
அதுவிதுவெனலாலருள்வினையில்வகை
நினைவினின்மும்மலநிகள்பரமுயிரென்
றைவகைப்பொருளுமனாதியேநிகழும்
சொரூபமுன்னளவுஞ்சொத்திடும்பின்னை
கற்பிதவடிவாய்ககலந்துடனிற்கும்
நினைவதுவில்லாநிஜசொரூபத்தைக்
குறித்திவைகற்பிதங்குறியாவிடத்தில்
கற்பிதமாகவைந்துநிகழும்
நினைவில்சொரூபநிகழ்வேதாந்தம்
நினைவொடுசொரூபநிகழாகமாந்தம்
அதனாலிரண்டுமனாதியதாகும்
நிஜசொரூபற்குநிகழ்பந்தமுத்தி
ஒருகாலமுமிலுளநினைவதனின்
பந்தமுத்திபகர்ந்திடலாகும்
நினைவிலுண்டாய்நிகழ்ந்திடுமியானும்
மறதியிலுயிர்வோன்மயங்கியுழன்று
நின்னருளதனினியதிசெய்தனைத்தும்
நீயுமியானுநினைவினிலுயிருடன்
போலவேநின்றும்போக்கியவிடத்தில்
ஒன்றாய்க்கண்டேனுறுதியதாக
இரண்டென்றவர்க்குமிரண்டதாய்நிற்கும்
ஒன்றென்றவர்க்குமொன்றதாய்நிற்கும்
இத்தகைகண்டேனெழின்முத்தியதை
இதனாலொன்றின்னையுறுதியாய்க்கொண்டே
ஒன்றினைத்தள்ளவொருக்காலுங்கூடா
நினைவில்சொரூபநிகழ்ந்திடுமிரண்டாய்
இஃதினிலையமெள்ளளவானும்
இன்றியந்தேனிவ்வனுபூதி
திரிவோதுணிவோசெப்பிடவேண்டும்
வராய்புதல்வாமாசறநீயும்
சமரசவாதஞ்சாற்றியபடியே
என்னுபவமுமெழின்மறைமுடிவும்
இதுதிரிவல்ல வெழிற்றுணிவேயாம்
நமதருளாலேநன்றாயறிந்தாய்
இதினீவாழ்வாயென்றெனைவாழ்த்தி
இதுபிரமாணமெனவென்றெனக்கு
உறுதியாய்நீயேயுரைக்கிலுன்னருளில்
திரிவையமறத்தேர்ந்து
சமையிகளுடனேதற்கித்தலற்றேன

சிவசமரசவாத அகவல் - முற்றும்.

திருச்சிற்றம்பலம்
------------------


ஸ்ரீ குமாரதேவர் சரித்திரம்.

ஸ்ரீஅகண்டபரிபூரண சச்சிதானந்தஸ்வரூபமே ஓருருவாகத்தடித்த ஸ்ரீகுமாரதேவரர் முற்பிறப்பில் பரமசிவத்தை நோக்கி மல்லிகார்ச்சுன பர்வதத்தில் நிஷ்காமதவஞ்செய்கையில்-அந்தச்சுவாமிகளோடுகூட- வேறொருவர்-அந்தப் பர்வதத்தின்கண்-தவஞ்செய்துக் கொண்டிருந்தார்- அப்போது, பரமசிவம்-அவரது தவத்திற்கிரங்கிப் பிரத்தியட்சமாயெழுந்தருளி வந்து, உனக்கு-என்ன வரம் வேண்டுமென்று கேட்குமளவில்-அவரோ- ஒன்றைக்கருதி-ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்-பரமசிவம்-திருவுளத்தில் முனிவுகொண்டு-அடா நீ-ஜடா முனியாகக் கடவதென்று சபிக்க-அது கேட்டு-அவரும்-திடுக்கிட்டெழுந்துநின்று-(சுவாமீ) இந்தச் சாபம்-அடிமைக்கு-எந்தக் காலத்தில் விமோசனமாகுமென்று கேட்க- அடா நீ போய்-விருத்தாசலத்தில்-மணிமுத்தா நதிக்கரையிலிருக்கின்ற- அரச மரத்தின் மேலிருந்தாயாகில்-இந்தப்பர்வதத்தில்-உன்னோடு- தவஞ்செய்து நிற்கின்ற-எமது அன்பனாகிய ஒருவன்-கன்னடதேயத்தில் ராஜனாகவவதாரஞ்செய்து-சிறிது நாள் அரசு பண்ணி-பிற்பாடு- விரத்தியுண்டாய்-பேரையூர்ச் சார்ந்த லிங்கசுவாமிகளிடத்தில்- அனுக்கிரகப் பெற்றுக்கொண்டுஷ-ஆசிரியருத்தாரப்படி விருத்தாசலம் வந்து-நீ இருக்கின்ற அரசமரத்தினீழலில்-உள்க்காருவான்-அப்போது- நீ அவனைக்கண்டு வணங்கிக் கேட்டால்-அவன்-விமோசனஞ் செய்வானென்று, திருவாய் மலர்ந்தருளிய மாத்திரத்தில்- அந்த ஜடாமுனியும்-(சுவாமீ)அவருக்கு-முத்தித்திசை-எப்போதென்று கேட்க-அடா-இந்த-அன்பன்-இதற்கு முன்னர்-ஐந்து சுத்ததேகமெடுத்து- நம்மை நோக்கி-நிஷ்காம தவஞ்செய்திருக்கிறான் இஃது ஆறாவது தேகம் இன்னம்-ஒருதேசத்தில் முத்தியைப் பெறுவானென்றருளிச் செய்ய- அதுகேட்டு-ஜடாமுனியும் பாக்கியமென்று சுவாமியிடத்தில் விடை பெற்றுக்கொண்டு-போய்-மேற்சொல்லிய அரசமரத்தின் மேலிருந்து எப்போது விமோசனகாலம் நேரிடுமென்று வழி பார்த்துக் கொண்டிருந்தான்.

குமாரதேவரோ வென்றால் - பரமசிவத்தின் -திருவருட்படி-அருளே- திருவுருக்கொண்டபோதினும்-ஆசிரியர் வேண்டியிருப்பதால்- கன்னடதேயத்திலவதரித்து-சிறிது நாளரசு செய்து-துறவு பூண்டு ஒருநாள் தம்மிடத்திலுள்ள மந்திரிமார்களில்-முதல் மந்திரியானவரால் தமது சரித்திர முழுதும் பேரையூர்ச்சாந்த லிங்கசுவாமிகளுக்குத் தெரிவித்த பின் பூதரமேபோய் ஷசுவாமிகளைக்கண்டு-வணங்கி நிற்ற, அது தெரிந்து சுவாமிகளும் இவரது பரிபாகத்தை நோக்கும் பொருட்டு- தம்மிடத்திருக்கும்-கையேட்டுத் தம்பிரானைப்பார்த்து-அப்பா இவனைப் பார்த்தால்-அரசனைப் போலிருக்கின்றது-இவன்- இந்த வழிக்குப் பாத்திரவானல்ல-ஆதலால்-இவனை அரசுக்கே- போகும்படி சொல்லென்று சொல்ல-அதற்கு-அந்தத் தம்பிரானும் (சுவாமீ) இந்த அரசனிடத்தில்-அதிதீவர பக்குவமுடைய சற்சீஷருக்குள்ள- பதினெண்குறியும் உண்டாயிருக்கிறதேயென்று-சைகையாகச் சொல்ல சுவாமிகளும் முன்பே-அறிந்திருப்பதால்-இவனை நமது எருதுக்குப் புல்லறுத்துப் போடச்சொல்லென்று கட்டளையிட்டருள-அப்படியே- தம்பிரான்-அரிவாளும்-புல்லு கட்டுங் கயிறுங் கொடுத்தனுப்ப- மேற்படி குமாரதேவரும்-அந்தத் திருப்பணியைச் சிரசாவகித்துக் கொண்டு-வயலுக்குப்போய்-பள்ளர்கள் புல்லறுப்பதைப் பார்த்து- தாமும்-அறுக்கநினைத்து-இடக்கையால்-புல்லைப்பற்றி-வலக்கையிலுள்ள அரிவாலைப் புல்லின் மேற்பூட்டாமல் இடக்கை மேற்பூட்டியிழுக்க- கையறுபட்ட மாத்திரத்தில் மேற்படி வலக்கையைப் பார்த்துக் கோபித்தார்- இந்தஅதிசயத்தை-மேற்படி-பள்ளர்கள்கண்டு, நீர்-ஆரென்று கேட்க-நான்இன்ன-சுவாமிகளுடைய வாகனத்திற்குப் புல்லறுப்பவனென்று சொல்ல-அதுகேட்டு அவர்கள்-ஆச்சரியமடைந்து இவர் அரசனைப் போலிருக்கிறதென்றெண்ணி தாங்களே-புல்லறுத்து- கட்டுகட்டி-அவர் திருமுடிமேல் வைக்க-அந்தச் சுமை பொறாமல்- திருமுடி சாய்ந்து போவதைக்கண்டு-அப்பள்ளர்களே அந்தப் புற்சுமையை எடுத்துவந்து-மேற்படி-மடாலயத்து வெளியில் வைத்துப்போனார்கள்.

இந்தப்படி-இரண்டு நாள் சென்றபின்பு மூன்றாவது நாள்- மேற்படி புற்சுமையை எடுத்துவந்த பள்ளன்-இவர் சேதி முழுதும் கையேட்டுத் தம்பிரானுக்குத் தெரிவிக்க- அவரும்-இவர்கையறுப்புண்ட சேதியை சுவாமிகளுக்குக் குறிப்பாகத் தெரிவிக்க, அது தெந்து- சுவாமிகளும், குமாரதேவரைப் பார்த்து-முனிவு கொள்ள, அவரும் பயந்து பேசாமலிருந்துவிட்டார்.

பிற்பாடு அன்று ராத்திரி சுவாமிகள் கையேட்டுத் தம்பிரானை யழைத்து- அப்பா எங்களிருவருக்கும் வெவ்வேறே கட்டமுதுகட்டி- ஒரு தண்டத்தில் மாட்டி,அரசனிடத்திற் கொடுத்து-நம்மோடுகூட- அனுப்பிவையென்று கட்டளையிட்டருள-அவரும் அப்படியே செய்து அனுப்பிவைக்க-சுவாமிகள் முன்னும்-குமாரதேவர் பின்னுமாய்ப் போகையில்-சிலதூரம் போய் சுவாமிகள்-இவரைத் திரும்பிப் பார்த்து என்ன தாமசமென்ற தட்ட-அதுகேட்டு-இவரும்-பயந்து சுவாமீ ஒருபுறம்-அச்சிலிங்கம்-மற்றொருபுறம் கணாயுத் தமிழுக்கின்றதேயென்று சொல்ல-அந்தக் குறிப்பறிந்து சுவாமிகள்- தமக்குத்தாமே மகிழ்சியடைந்து-அவிடத்துள்ள-ஒரு குளக்கரை மேலிறங்கினார் அவிடத்தில் இருவரும் ஒன்றாக-உட்கார்ந்து, இரண்டன்னத்தையும் ஒன்றாகச் சேர்த்து-ஸ்ரீகுமாரதேவர் சுவாமிகளூக்குப் பரிமாற ஷசுவாமிகள் நைவேத்தியங் கொண்டபின்பு சேடமான மகாபிரசாதத்தைத்-தாமும்-உட்கொண்டு-சிறிது நேரம் அவிடத்தில்இருவரும்-வசனித்துக்கொண்டிருந்து-பிற்பாடு- மடாலயத்திற்கு வந்துசேர்ந்து சில நாள்கழித்து-மேற்படி- சுவாமிகளிடத்தில்.அனுக்கிரகம் பெற்றுக்கொண்டு-சாதனை செய்து முதிர்ந்த காலத்தில்-ஒருநாள் சாந்தலிங்க சுவாமிகள் இவரை மகாராஜா வென்று பெயரிட்டழைத்து அப்பா நீ விருத்தாசலத்துக்குப் போக வேண்டுமென்று கட்டளையிட்டருள- அங்கனே நல்லதென்று விடை பெற்றுக்கொண்டு விருத்தாசலத்தை நோக்கி வருகிறவழியில்-சின்னசேலத்திற்குக் கீழ்ப்புறமான காட்டில் இவர் நிமித்தம் அன்புகூர்ந்து-பழமலை நாதரே-ஒருபிராமண ரூபமா யெழுந்தருளிவந்து-தண்ணீர்ப் பந்தல் வைத்துக் கொண்டிருந்து இவரைக்கொண்டு அப்பா நீ ஆயாசமாய்ப் போகிறபடியால் நால்வகை ஜலமுமிருக்கின்றது-உனக்கு வேண்டிய மட்டும்-சாப்பிட்டு விடாய் தீர்க்கலாமென்றுபசரித்துத்-தண்ணீர்க்கொடுக்க-இவர் அதைச் சாப்பிட்டு- தாக நிவிர்த்தி பண்ணிக்கொண்டு-விருத்தாசலம் வந்துசேர்ந்து- மணிமுத்தா நதிக்கரையிலிருக்கின்ற அரசமரத்தினீழலில் ஆயாசமாய்ச் சயனித்துக் கொண்டு-பிரமானந்த நித்திரையிலிருந்தருளினார்.

அதுசேதி பெரியநாயகியாரறிந்து தனத பிடேகத்திற்கு சுவண பாத்திரத்தில் வைத்திருந்த பசுவின் பாலை ஏந்திக்கொண்டு ஓர் பிராமண ஸ்திரீயைப்போல இவரிடத்தில் வந்து- தலை மாட்டிலுட்கார்ந்து-தனது திருமடியின்மேல்- இவரது திருமுடியைத் தூக்கிவைத்து-அந்தப் பாலைப் புகட்டினபின்பு- இவர் ஆயாசந் தீர்ந்து-கண்ணை விழித்து-நீ- ஆரம்மாவென்று கேட்க அப்பா குமாரதேவா-நான்தான் பெரியநாயகி நீ எப்போதும் என்னிடத்தில் தானே சுகமா யிருவென்று திருவாய் மலர்ந்தருளி-உடனே மறைந்துவிட்டாள் இதை மேற்படி- ஜடாமுனி கண்டு-மரத்தை விட்டுக் கீழேயிறங்கி- பிராமணவுருவமாய் வண்ங்கி நிற்க-இவர்-அந்த ஜடாமுனியைப் பார்த்து- நீ யாரென்றுகேட்க நான் ஜடாமுனி யென்றுசொல்ல நீ இவிடத்திற்கு வந்த காரியமென்னவென்று கேட்ட மாத்திரத்தில் ஜடாமுனி தனது சரித்திர முழுதும் விவரமாகச் சொல்ல-அதுகேட்டு- குமாரதேவரும்-சந்தோஷமாய் ஜடாமுனியின் சாபநிவர்த்தி பண்ணி சிறிதுநாள் அவிடத்திற்றானேகர பாத்திரம் பண்ணிக் கொண்டிருக்குங் காலத்தில் அவிடத்திலுள்ள ஒரு குடும்பியானவன் இவரை மகாமுனியென்றறிந்து-நாள் தோறும் உண்மையாய்த் தரிசனம் பண்னிக்கொண்டேவர- அவனுக்கு நாளுக்கு நாள் சகல சம்பத்தும்-அபிவிர்த்தியடைந்து வருகையில் ஒருநாள் அவன்,குமாரதேவரைக் கண்டு வணங்கி-(சுவாமீ) அடியேனுக்கு ஏதேனும் ஒர் திருப்பணிக்கட்டளை யிட்டருள வேண்டுமென்று வருந்திக்கேட்க-குமாரதேவரும்-அப்பா-அப்படி உனக்கிஷ்டமிருந்தால்- ஸ்ரீ பெரியநாயகியார் சந்நிதானத்திற்கெதிராக்-ஒரு மண்டபங்கட்டிவை யென்றுகட்டளையிட்டருள அவனும் அப்படியே மகாபாக்கியமென்று மண்டபங்கட்ட எத்தனித்துக் கட்டும்போது-உத்திரக்கல் மேலேறாமல் வருத்தமடைந்து-குமாரதேவருக்குத் தெரிவிக்க குமாரதேவரும், விபூதியைக் கொடுத்து இதை-அந்தக் கல்லின்பேரில் போட்டுத் தூக்கென்றுத்தரவு செய்ய- அப்படியே செய்துமுடித்த பின்பு- அந்தக் குடும்பியும் சந்தோஷசித்தனாய்-குமாரதேவரை வணங்கி நின்று (சுவாமீ) தேவருடைய பிரபாவத்தை இன்னதென்றளவிட்டுச் சொல்ல- ஆராலாகுமென்று நானாவிதமாகத் தோத்திரன் செய்ய- குமாரதேவரும்-அவனை அழைத்துக் கொண்டுபோய் கோபுரவாயிலிற் செய்து வைத்திருக்கும்-இரண்டு துவாரபாலகருடைய முதுகும் உரைபட்டிருப்பதைக் காண்பித்து-இவர்களுக்குத் தவனகஞ்சிகாய்ச்சி நைவேத்தியம் பண்ணென்று கட்டளையிட்டருள-அவனும்-மகா பாக்கியமென்று அப்படியே செய்வித்து-கிருதகிருத்தியனானான்.

பிறகு ஒருநாள் குமாரதேவரும் ஓர்குடும்பி வீட்டுவாசலில் கரபாத்திரத்திற் குச்சென்றுகையேந்த-அவர்கள் இவரது மகிமையறியாதவர்களாய்- தங்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த-மச்சத்தை அன்னத்தோடு கலந்து இவர்கையிற்பறிமாற அதுதெரிந்து ஸ்ரீகுமாரதேவரும் அங்ஙனே குளக்கரைக்குச் செல்ல அந்த மச்சம் உயிரோடு குளத்திற் குதித்துப் போய்விட்டது.

இப்படியிருக்க ஒரு குஷ்டரோகியானவன் தனது தேகவருத்தம் நீங்கவேண்டுமென்று நாள் தோறும் இடைவிடாமல்-ஸ்ரீகுமாரதேவரைக் கண்டு தரிசனம் பண்ணிக்கொண்டே வருகையில் ஒருநாள் அதிக வாதனையினால்ச கிக்கப்படாதவனாய் ஸ்ரீகுமாரதேவரது திருவடியில் வந்து விழுந்து கோவென்று முறையிட்டுச் சொல்ல குமாரதேவரும்-அப்பா நாம் வயித்தியனல்லவேயென்று சொல்ல அவனும் (சுவாமீ) தேவரது திருக்கையினால் விபூதி கொடுத்தால் எனது ரோக நிவர்த்தியாகுமென்றிரங்கிக் கேட்க,குமாரதேவருந் திருவுளமிரங்கி விபூதியையள்ளி அவனது இடக்கையில் வைத்து வலக்கையால் மூடிக்கொள்ளச்சொல்லி பழமலையார் சந்நிதானத்தினுள் ஒரு மாடத்திலிருக்கும் விக்கினேஸ்வரரைக் குறியாகக்காண்பித்து நீ அந்த விக்கினேஸ்வரர் முன்னேபோய் இரண்டு கண்களையு மூடிக்கொண்டு நின்று அங்கே நடக்கின்ற அதிசயத்தை நமக்கு வந்து சொல்லென்று கட்டளையிட்டருள அவனும் அப்படியே போய் நின்றமாத்திரத்தில்அவனுக்குச் சுழுத்தி போற்றோன்ற அத்தருணத்தில் அந்த விநாயகக் கடவுள் தமது துதிக்கையை நீட்டி இவனது இடது கையிலிருந்த விபூதியைத் தொட்டதுபோலக் கண்டுவிழித்துச் சுவாமிகளிடத்திற்கு வந்து விண்ணப்பஞ் செய்த மாத்திரத்தில் குமாரதேவரும் ஆனந்தமாய்-அந்த விபூதியைத் தொட்டுத் தரித்துக்கொண்டு அவனையும் தரித்துக் கொள்ளும்படி உத்தரவு செய்ய அவன் அப்படியே தரித்து வருங்காலையில் அவனது குஷ்டரோகம் நிவிர்த்தியாகிச் சவுக்கியமடைந்தான்.

இப்படியிருக்கின்ற நாளையில் ஒருநாள் ஸ்ரீகுமாரதேவரும் திருவாரூர் மகோச்சவத்திற்குப் போயிருந்தபோது-ரதோச்சவத்தினன்றைக்கு- தியாகராயர் ரதமேறிமாட வீதிவருகையில் அந்த ரதத்திற்கு நேரே குமாரதேவர் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை இரண்டு சைவர்கள் கண்டு ஒருவருக்கொருவர் விகடமாய் வீரசைவமருளைப் பார்த்தீர்களோவென்று பேசிக்கொள்ள-அந்த விகட வார்த்தையைக் குமாரதேவர் கேட்டு ரதத்தில்வருந்தியாக ராயரைப் பார்த்து- (தியாகராயா) வீரசைவம்-மருளானால் ரதம் நடக்க அருளானால் ரதம் நிற்கவென்று திருவாய் மலர்ந்தருளி சில தூரம்போய் ஒரு மரத்தினிழலில் உட்கார்ந்திருந்தார்-அது தெரிந்து அத்திருவிழாவின் தர்ம் மகர்த்தாவாகிய தஞ்சாவூர்-அரசன்-ரதமானது-நிலைவந்து சேர்ந்தபிறகு போஜனஞ் செய்கிறதென்னும் நிச்சயமுடையவனாதலால்- என்ன செய்வதென்றச்சமுற்று-இவிடத்தில் நடந்த-ரகசியந் தெரியாதபடியினால்- சாயங்கால பரியந்தமும்-அந்த ரதம் நடக்கும்படிஅனேக- பிரயெத்தினங்கள் செய்வித்தும் அஃது, சற்றாகிலும் அசையாது நிற்க பிறகு மேற்படி அரசன் இவிடத்தில் நடந்த ரகசியத்தைக் கேள்விப்பட்டு ஸ்ரீகுமாரதேவரிடத்திற்கு வந்து அவரைக்கண்டு வணங்கி விண்ணப்பஞ்செய்ய ஸ்ரீகுமாரதேவரும் அரசனைப் பார்த்து இந்த மருளனிடத்தில் உங்களுக்கு என்ன அலுவல் போங்களென்று சொல்ல அரசனும் (சுவாமீ) இந்தப் பிழையை மன்னித்து ரதத்தை நடப்பித்தருள வேண்டுமென்று வெகுவாகத் தோத்திரஞ் செய்ய அதற்கு ஸ்ரீகுமாரதேவரும் திருவுளமிரங்கி அந்த ராஜனுடனுஞ் சேனைகளுடனும் எழுந்தருளி வந்து ரதத்தின் முன்னே நின்று தியாகராயரைப் பார்த்து (தியாகராயா) வீரசைவம்-அருளானால்-ரதம் நடக்க மருளானால் ரதம் நிற்கவென்று திருவாய் மலர்ந்தருளின மாத்திரத்தில்- ரதம் ஜரேலென்று நடந்து நிலையிற்போய்ச்சேர்ந்தது.

இப்பால் குமாரதேவர் மறுபடியும் விருத்தசைலம் வந்து அவ்வரச மரத்தின்கீழ் வாசம் பண்ணிக் கொண்டிருக்குங் காலையில்- பிற தேசத்திலுள்ள ஓர் மாந்திரீகனானவன் விருத்தசைலத்திலுள்ள பத்திரகாளியைத் தன்கைவசமாக்கிக் கொள்ள எண்ணி- தனது நாட்டை விட்டு மணிமுத்தாநதியின் வடதிசையாக வருகையில் மேற்படி பத்திரகாளியறிந்து அச்சமுற்றவளாய் ஒரு ஸ்திரீயைப் போல ஸ்ரீகுமாரதேவரிடத்திற்கு வந்து அவரைப் பிரதக்ஷிண நமஸ்காரம் பண்ணி அவருக்கெதிரே நிற்க-அது கண்டு குமாரதேவரும் நீயாரென்று வினவ- சுவாமீ நான் பத்திரகாளி என்னையிந்தப் பிரகாரஞ் செய்யும்படி ஓருசண்டாளன் வருகிறான் அதனால் பயந்து வந்தேனென்று விண்ணப்பஞ் செய்ய அதற்கு குமாரதேவரும் என்னால் உனக்கு ஆகவேண்டிய தென்னென்று வினவ- பத்திரகாளியும் சுவாமீ தேவரது திருவடிகளை அடியாள் சிரசின்மேல் வைத்தால் எனது ஆபத்து நீங்குமென்று விண்ணப்பஞ்செய்ய - ஸ்ரீகுமாரதேவரும் திருவுளமிரங்கி அங்ஙனே நல்லதென்று பத்திரகாளி சந்நிதிக் கெழுந்தருளிவந்து அந்த விக்கிரகத்தின் முடிமேல் தமது திருவடியைத் தூக்கிவைத்த மாத்திரத்தில் அந்த மாந்திரீகனுடைய இரண்டு கண்களும் அவன் மனம்போலவே இருளடைந்தது- அது தெரிந்து அந்த மாந்திரீகனும் பயங்கொண்டு இந்த ஸ்தலத்தில் பெரியவாள் வாசஞ் செய்கிறாற் போலிருக்கிற தென்றெண்ணி அவிடத்தில் விசாரிக்க - ஸ்ரீகுமாரதேவரிருக்கிறதைக் கேள்விப்பட்டு- அவரிருக்கு மிடந்தேடி வந்து அவரைக் கண்டு வணங்கிநிற்க- ஸ்ரீகுமாரதேவரும் அவனைப் பார்த்து நீயாரென்றுவினவ- சுவாமீ நான் மாந்திரீகன் - நான் இவிடத்திற்கு இந்த உத்தேசமாய் வந்தஇடத்தில் எனக்கு இவ்வகையான ஆபத்து நேரிட்டது இதைத் தேவரே தீர்த்தருள வேண்டுமென்று வெகுவாகத் தோத்திரஞ் செய்துநிற்க- ஸ்ரீகுமாரதேவரும் சற்றே திருவுளமிரங்கி அடா உன் சரீரமுள்ளவரையிலும் இந்த மாந்தரீகத்தை விட்டிருப்பையாகில் உனக்கு ஓருகண் மாத்திரந் தெரியுமென்று ஆக்கியாபித்தருளிய மாத்திரத்தில்- அவனும் அப்படியே நல்லதென்று ஸ்ரீகுமாரதேவரது திருவடியைத் தொட்டுச் சொன்னவளவில் ஓருகண்தெரிந்து தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.

இப்பால் ஓருகுடும்பியானவன் புத்திரா பேக்ஷையினால் ஸ்திரீயுந்தானும் நெடுநாளாய் விசனப்பட்டுக் கொண்டு ஸ்ரீகுமாரதேவரைக் கண்டு நாள்தோறுந் தரிசனம் பண்ணி வருகையில்-ஒருநாள் குமாரதேவர் திருவுளமிரங்கி ஷகுடும்பிக்கு விபூதியளிக்க அவ்விபூதி முன்னிலையால் அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்து அதுகள் வளர்ந்து ஐந்து வயதாகி பள்ளிக்கூடத்தில் வைத்து வித்தியாப்பியாசஞ் செய்வித்த பிறகு-அந்தப் பிள்ளைகளுக்கு இலக்கணாப்பியாசஞ் செய்விக்கவேண்டி இலக்கண வித்துவானாகிய சிதம்பர பிள்ளையென்பவரை, மதுரையிலிருந்து வரவழைத்து,ஷஇரண்டு பிள்ளைகளுக்கும் இலக்கணாப்பியாசஞ் செய்வித்து வருங்காலத்தில்- ஒரு நாள் ஸ்ரீகுமாரதேவர் குக்ஷிபாதை நிமித்தம் அந்தக்குடும்பி வீட்டுக்கு வருகையில் ஷ சிதம்பர பிள்ளையென்னும் உபாத்தியாயர் இவரிடத்தில் மதிப்பற்று இறுமாந்திருப்பதைக் கண்டு அவரைத்தடுத்தாட் கொள்ளத் திருவுளங்கொண்டு அவரை நோக்கி ஓர் வாக்கியத்தைக்கூறி- அதற்குப் பயன்வினவ-அவருக்கென்ன வித்வசாமர்த்தியமிருந்த போதினும் இந்தச் சந்நிதானத்தில் நாவெழாமையால் பயன்கூறாது மயங்கிநின்று சற்றே தெளிவுண்டாகி குமாரதேவரது திருவடியில் விழுந்துவணங்கி சுவாமீ அடிமையை ரக்ஷித்தருள வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்து-அது முதல் துறவுபூண்டு ஷகுமாரதேவரது பின்னாகவே சாயைபோற்றொடர்ந்து தானுங்கர பாத்திரம் பண்ணிக்கொண்டிருந்தார்,

அவரது ஆராமையையும்,மெய்யன்பையும், குமாரதேவரறிந்து அவரைத் தமது ஆசிரியரிருக்கும் திருப்பேரையூருக்குக் கூட்டிக்கொண்டு நடந்து, மடாலயத்திற்குச் சமீபமாகப் போகையில்- விடியற்காலையாகையினால் எழுந்திருந்து வெளியே வந்து நிற்கிற தம்பிரான்களைக் கண்டு சுவாமிகளிருக்குஞ் சமையமெப்படியென்று வினவ-சுவாமிகள் பரநிட்டையிலெழுந்தருளியிருக்கின்ற தெனக்கூற- ஆனால் நாம் பணிசெய்வோமென்று நினைத்து- ஸ்ரீகுமாரதேவர் சாணச்சட்டியெடுத்துக்கொண்டு திருமெழுகிட- சிதம்பர சுவாமிகளும் திருவலகெடுத்துக்கொண்டு திருவலகிட்டார்-

இத்திருப்பணி முடித்தபின்பு சுவாமிகள் திருக்கண் விழித்தருளியசேதி தெரிந்து-இவ்விருவர்களும் மடாலயத்துட்சென்று சுவாமிகளைக் கண்டு வணங்கிநிற்க- சுவாமிகளும் குமாரதேவரைப் பார்த்து அப்பா உன்னை யடுத்துநிற்கின்றவன் யாரென்று வினவ-தென்னாட்டுச் சைவனென்று சொல்ல-இவனை ஏனழைத்து வந்தாயென்று கேட்க அதற்குக் குமாரதேவர் மௌனமாயிருந்துவிட்டார்-

இப்படி இரண்டு தினஞ் சென்றபின்பு-சிதம்பரசுவாமிகளது நடையைக் கையேட்டுத் தம்பிரானறிந்து சுவாமிகளை வணங்கி நின்று- சுவாமீ இந்தச்சைவன் மிகுந்த வல்லவனா யிருக்கிறபடியால் இவனைத் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளவேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய-அதற்குச் சுவாமிகளும் ஷதம்பிரானைப் பார்த்து அப்பா நமக்கிருக்கிற சந்ததி போதும்- நமது சந்ததிக்குச் சந்ததி நெடுநாளாயில்லாதிருந்து இப்போது கிடைத்தபடியால் அப்படியே செய்விக்கவேண்டுமென்று கட்டளையிட அதற்குத் தம்பிரான் மௌனமாயிருந்துவிட்டார்-இப்படி இரண்டு நாள் கழிந்தபின்பு மூன்றாவது நாள் சாந்தலிங்கசுவாமிகள் குமாரதேவரைஅழைத்து நீஊருக்கு போவென்றுசொல்ல குமாரதேவரும் இவன் இவிடத்திலிருக்கட்டுமென்று விண்ணப்பஞ் செய்ய-சுவாமிகள் இவிடத்தில்வேண் டாம்நீயேயழைத்துக் கொண்டுபோவென்றுசொல்ல ஸ்ரீகுமாரதேவரும் இவனைக்கொண்டுபோய் அடிமை என்ன செய்கிறதென்று கேட்க-சுவாமிகளும் ஸ்ரீகுமாரதேவரைப் பார்த்து அப்பா நீ இவனைக்கொண்டு போய் பக்குவமறிந்து உனக்குச் சொன்னதை இவனுக்குகுச் சொல்லிவை யென்று கட்டளையிட குமாரதேவரும் மகாப்பிரசாதமென்று விடைபெற்றுக் கொண்டு இருவரும் விருத்தாசலம் வந்துசேர்ந்து- பிறகு சிதம்பரசுவாமிகளது பக்குவஞ்சோதித்து அனுகிரகஞ் செய்தருளினார்- அவர்தான் திருபோரூர்ச் சந்நிதானம் விளக்கிய சிதம்பரசுவாமிகள்.

இப்படி நடந்து வருங்காலத்தில் பெரியநாயகியாரும் குமாரதேவரால் சாஸ்திரஞ் செய்விக்கும்படி திருவுளங்கொண்டு குமாரதேவரதுயோகில் வந்து அப்பா குமாரதேவா-நீ சாஸ்திரஞ் சொல்லவேண்டுமென்று திருவாய்மலர்ந்தருள- குமாரதேவரும் அம்மா` அடிமையாற்சொல்லமுடியாதென்று விண்ணப்பஞ்செய்ய பெரியநாயகியாரும் ஆனால் நாமே உனது நாவில்நின்று சொல்லி முடிக்கிறோமென்று ஆக்கியாபித்து-அங்ஙனே இந்த ஷோடசமகா சாஸ்திரங்களையுஞ் சொல்லிமுடித்தருளினார்.
இப்படிஅனந்த மகத்துவங்களைச்செய்து அந்தத்தில் ஸ்ரீகுமார தேவரும் சொருபசாக்ஷாத்கார பரிபூரணதிசையையடையுஞ் சமயமறிந்து இரண்டாவது அடிமையாகியரெட்டி சிதம்பரசுவாமிகள் ஸ்ரீகுமாரதேவரைப் பார்த்து சுவாமீதேவர் பரிபூரணமானபின்பு அடியார்கள் தரிசனஞ் செய்து உய்யும்பொருட்டு ஓர் திருப்பணிகட்டளையிட்டருள வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,அதற்கு ஸ்ரீகுமாரதேவர் நாம் செத்தும் நமது பெயரிருக்க வேண்டுமாவென்று அகண்டபரிபூரண சாக்ஷாத்கார சொரூபவியாபகத்திற் கலந்தருளினார். இப்பால் ரெட்டி சிதம்பரசுவாமிகளும் ஸ்ரீபெரியநாயகியாருத்தாரப்படி-ஸ்ரீகுமாரதேவர் திருநாமத்தினால் கோயில் மடாலய முதலாகிய துகளுஞ் செய்வித்து, பிறகு தாமுப் பரிபூரணதிசையையடைந்தருளினார்.

இஃது, மேற்படி சுவாமிகள் மரபிலுள்ள அடியார்களில் ஒருவரால் சுருக்கமாகத் தெரிந்தெழுதப்பட்டது இரண்டாமுறை விரிவாக அச்சிடப்படும்.

ஸ்ரீகுமாரதேவர் சரித்திரம் முற்றிற்று.
-----------------------------------------------------------

This file was last updated on 10 August 2008.
Feel free to send corrections to the Webmaster.