1 |
மூஇலை நெடுவேல் ஆதி வானவன் இடமருங்(கு) ஒளிக்கும் இமயக் கள்வி தனிக்கண் விளங்கும் நுதல்பிறை மேல்ஓர் மிகைப்பிறை கதுப்பின் சூடி வளைக்கையின் வாள்பிடித்(து) ஆளி ஏறித் தானவர் மானக் கடும்பொர் கடந்த குமரி மூவா மெல்லடித் திருநிழல் வாழி காக்கஇம் மலர்தலை உலகே (அறம் 1-கடவுள் வாழ்த்து/உமையவள்-7) 7 |
2 |
எளி(து)என இகழாது அரி(து)என உரையாது நுமக்குநீர் நல்குதிர் ஆயின் மனத்திடை நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளரும் தொழில்படின் சினைவிடூஉப் பயக்கும் உணர்த்தின் இவணும் உம்பரும் துணையே அதனால் துறைதொறும் துறைதொறும் நோக்கி அறம்நிறுத்தி ஆய்மின் அறிந்திசி னோரே (அறம் 4-அறன்வலி உறுத்தல்-22) 39 |
3 |
வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக மணித்தோடு பெய்து வாள்முகம் திருத்தி நால்நிலம் வளைத்த பரவையடு கெழீஇய கான்யாற்று வருபுனல் ஆடலும் தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவாழ் ஒருசிறை நிலமகள் புணரும் சேக்கையும் மாமுதல் மெல்உரி வெண்துகில் உடையும் தொல்வகைப் படைஉழா விளையுளில் உணவும் மந்திரத்துச் சுடர்முதல் குலமுறை வளர்த்தலும் வரையாது வருவிருந்து ஓம்பும் செல்வமும் வரைமுதல் காடுகைக் கொள்ளும் உறையுளும் என்(று)இவ் எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை காக்கும் ஆற்றலொடு வென்றுவிளங்கு தவத்தினர் அரசியல் பெருமை மாக்கடல் உடுத்த வரைப்பின் யார்க்(கு)இனி(து) என்(று)அ•(து) அறியுநர்ப் பெறினே (அறம் 28-தவம்-15) 279 |
4 |
அரையது துகிலே மார்பின(து) ஆரம் முடியது முருகே நாறும் தொடையல் புடையன, பால்வெண் கவரியின் கற்றை மேலது, மாலை தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை முன்னது, முரசு முழங்கும் தானை இந்நிலை இனைய செல்வத்து ஈங்(கு)இவர் யாவ ரேயோ தேவர் அல்லர் இமைப்பதும் செய்தனர் மாந்தரே என மயக்கம் நீங்க களிற்றுமிசை வந்தனர் நெருநல் இன்றிஇவர் பசிப்பிணி காய்தலின் உணங்கிய துணியும் உடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையடு தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே (அறம் 36-செல்வம் நிலையாமை-18) 349 |
5 |
யாணர் வரவின் மேல்நாள் ஈங்(கு)இவன் இளமை செவ்வி நயந்த பேதையர் காதல் உண்கண் வருபனி நீங்கி இன்னும் துயில்கொண்(டு) இலவே இன்(று)இவன் போர்வைப் பாசறை உணங்கிப் பாணர் பழந்தலை சீறியாழ் போலக் குரல்அழிந்து நரம்பு மடித்(து)யாத்த யாக்கை மூப்(பு)உற பதிகெழு மூதூர் மன்றத்துப் பொதியில் புறம்சிறைச் சார்ந்தனன் மன்னே (அறம் 38-இளமை நிலையாமை-12) 361 |
6 |
உள்ளது கரக்கும் கள்ள யாக்கை மேம்படு குற்றம் மூன்றொடு வழங்கலின் உண்டிநல் அரசு தண்டத்தின் வகுத்த நோன்பிணி அகப்பட் டிருப்பினும் தோன்றுவது முன்னர் காப்பது பின்னே (அறம் 38-யாக்கை நிலையாமை-23) 384 |
7 |
நெருநல் என்பது சென்றது நின்ற இன்றும் செல்லா நின்றமுன் சென்று வருநாள் கண்டவர் யாரோ அதனால் ஒருநாள் அகப்படுத் துடையோர் இன்மையின் இல்லது நாடுமின் உள்ளது கொடுமின் வாழ்வில் இன்பமும் புணர்மின் அ•தான்று கீழது நீரகம் புகினும் மேலது விசும்பின் பிடர்தலை ஏறினும் புடையது நேமி மால்வரைக்(கு) அப்புறம் புகினும் கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து வீளிக் கொடுநா விலக்குதற்(கு) அரிதே (அறம் 39-பல்வகை நிலையாமை-10) 394 |
8 |
தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ மழைகரல் ஊன்றா வளவயல் விளையா வாய்மையும் சேட்சென்று கரக்கும் தீதுதரப் பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே கடும்சினம் கவைஇக் காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே (பொருள் 19-கொடுங்கோன்மை-7) 667 |
9 |
குடிபிறப்(பு) உடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தீதறு நடு(வு)நிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா(று) இன்மை அவாஅ இன்மைஎன இருபெரு நிதியமும் ஒருதர மீட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடன்மரீஇ இருக்கை ஒருநாள் பெறும்எனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறை தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலைஅழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே (பொருள் 32-அவை அறிதல்-11) 815 |
10 |
தாமரை வண்கிழங்கு விரவி ஓராங்குக் கருமலங்கு மிளிரக் கொழுமுகந்(து) இயக்கிய பழஞ்சேற்றுப் பரப்பில் பருமுதல் எடுத்து நெடும்கதிர் இறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து வாளில் துமித்த சூட்டே மாவின் சினைகளைந்து பிறக்கிய பேரே எருத்தின் கவைஆடி வைத்த உணவே மருதின் கொழுநிழல் குவைஇய குப்பையோ(டு) அனைத்தினும் மலர்மகிழ்ந்(து) ஊங்க உலகுபுறம் தரூஉம் மாவண் சேணாட்(டு) ஊர்தொறும் ஏரோர் களவழி வாழிய நெடிதே (பொருள் 33-நாடு-19) 834 |
11 |
சிறுபுனம் சில்என் நெடுவெளி ஆனா மரம்பயில் தானத்துப் பரல்புறம் கொண்ட அடியர் நெடுநெறிச் செல்வாய் உடையது முல்லை வருந்தில் போகிப் புல்அருந்திக் கானியாற்றுத் தெள்நீர் பருகாமுன் கன்றுபால் அருந்துபுக்(கு) என்றன மாதோ முன்பல் அரும்பிய பால்நாறு செவ்வாய்ப் புன்தலை மகாஅர்த் தந்த கன்றுசூழ் கடிமனை கவைஇய நிரையே (பொருள் 64-நிரை கோடல்-10) 1212 |
12 |
மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து கான்உறை வாழ்க்கை கலந்த இராமன் மாஅ இரலை வேட்டம் போகித் தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது சுற்றமும் சேணிடை யதுவே முற்றிய நஞ்சுகறை படுத்த பூண்மிடற்(று) இறைவன் உலகுபொதி உருவமொடு கோதையைத் தலைநாள் வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி வன்தோள் தடக்கை ஊன்ற அன்றோர் சொல்முறை மறந்தனம் வாழி வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே (பொருள் 73-எயில் கோடல்-11/1) 1301 |
13 |
மாதர் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக் குவளை நிறுமும் பாழ்பட இலங்கை அகழி முற்றும் ஆக்கிய கருங்கால் நெடுங்கழைக் கண்ணும் விளிம்பிழிந்து பெருநீர் உகுதல் மாதோ குரங்குதொழில் கொண்ட இராமன் அலங்கு தடந்தோள் வாள்சுழித்த ஞான்றே (பொருள் 73-எயில் கோடல்-11/2) 1301 |
14 |
இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை எண்கிடை மிடைந்த பைங்கண் சேனையின் பச்சை போர்த்த பல்புறத் தண்ணடை எச்சார் மருங்கினும் எயில்புறத்(து) இறுத்தலின் கடல்சூழ் அரணம் போன்றது உடல்சின வேந்தன் முற்றிய ஊரே (பொருள் 73-எயில் கோடல்-12) 1302 |
15 |
மேலது வானத்து மூவா நகரும் கீழது நாகர் நாடும் புடையன திசை காப்பாளர் தேயக் குறும்பும் கொள்ளைச் சாற்றிக் கவர்ந்துமுன் தந்த பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக் கண்ணுதல் வானவன் காதலின் இருந்த குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழில்உறத் தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை வலம்படு மள்ளர்க்கு வீசி இலங்கையில் வாடா நொச்சி வகுத்தனன் மாலை வெண்குடை அரக்கர் கோவே (பொருள் 74-எயில் காத்தல்-10) 1312 |
16 |
இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க முடு(கு)இயல் பெருவிசை உரவுக்கருங் கொட்பின் எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும் ஒருதனி அநுமன் கைஅகன்று பரப்பிய வன்மரம் துணிபட வேறுபல நோன்படை வழங்கிய கம்பத் தோள்படை யாக ஓச்சிஆங்(கு) அவனும் முன்கையில் அழுத்தலின் தனாது வன்தலை உடல்புக்குக் குளிப்பக் கரிந்(து)உயிர் போகும் செந்நெறி பெறாமையின் பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே (பொருள் 76-தானை மறம்-11) 1338 |
17 |
பொருபோர்க் - - - - - - னெ தமிழ்சிறு கெண்டை இமையத்(து) அமைத்து வடதிசை ஆண்ட தென்னவன் கடிகொள முனிந்தக் கூற்றத்துப் புருவம் போல வாங்கிரும் கொழுங்கடை வளைந்த வேம்பின் இலைஅவன் சூடும் பூவே (பொருள் 83-புகழ்-28) 1460 |
18 |
சிறுசெவி யன்னே பெரும்கேள் வியனே குறும்கணி யன்னே நெடும்காட் சியனே இளையன் ஆயினும் அறிவின்மூத் தனனே மகளிர்ஊ டிடினும் பொய்அறி யலனே கீழோர் கீழ்மை செய்யினும் தான்தன் வாய்மை வழக்கம் மறுத்தல் அஞ்சி மேல்நெறி படரும் பேரா ளன்னே ஈண்டுநலம் தருதல் வேண்டிப் பாண்டியர் பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடித் துன்றக் கன்னியம் பெரும்பதிச் சாஅல்பு மேல்மேல் தோன்றிய தாழி காதலின் மேவலன் பிறர்பிறர்க் கீந்து தானும் உண்டு விருந்(து)உண்டு மிகினே (பொருள் 83-புகழ்-29) 1461 [ஈங்கு பாடல்களின் கடையில் பிறைக் குறியுள் காண்பன நீதித் திரட்டார் தான் கொண்ட கருத்தின் இனமாகும் தலைப்புகளே. ஆகலின் மூலநூலின் (ஆசிரிய மாலை) தாங்கு பொருளும் ஒழுக்கும் அல்ல என துணிக] |
19 |
ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன் வேள்வி போற்றிய இராமன் அவனொடு மிதிலை மூதூர் எய்திய ஞான்றை மதிஉடன் பட்ட மடக்கண் சீதை கடுவிசை வில்ஞாண் இடிஒலி கேளாக் கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித் துயில்எழுந்து மயங்கினள் அதாஅன்று மயிலஎன மகிழ் - - - - - - - - - (நச்சி.தொல்.அகத்.சூத்.54) |
20 |
கடலும் மலையும் நேர்படக் கிடந்த மண்ணக வளாகம் நுண்எயில் துகளின் நொய்தால் அம்ம தானே இ•(து)எவன் குறித்தனன் நெடியான் கொல்லோ மெய்தவ வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன் அடிபொறை ஆற்றின் அல்லது முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே (நச்சி.தொல்.புறத்.சூத்.76) |
மேற்படி | மயிலையார் | நீதித் திரட்டு | பெருந்தொகை | நச்சி. உரை புறத்திரட்டு | |
வரிசை # | வரிசை # | வரிசை # | வரிசை # | வரிசை # | சூத். # |
1 | 1 | 7 | 113 | ||
2 | 2 | 39 | 225 | ?? | XX |
3 | 3 | 279 | 328 | ?? | XX |
4 | 4 | 349 | 309 | ?? | XX |
5 | 5 | 361 | 302 | ?? | XX |
6 | 6 | 384 | 303 | ?? | XX |
7 | 7 | 394 | 294 | ?? | XX |
8 | 8 | 667 | 350 | ?? | XX |
9 | 9 | 815 | 369 | 827 | 76 |
10 | 10 | 834 | XX | ?? | XX |
11 | 11 | 1212 | XX | ?? | XX |
12 | 13% | 1301/1$ | 482/1$ | ?? | XX |
13 | 14% | 1301/2$ | 482/2$ | ?? | XX |
14 | 15% | 1302 | 481 | 1334 | 67 |
15 | 16% | 1312 | 461 | ?? | XX |
16 | 17% | 1338 | 536 | ?? | XX |
17 | XX | 1460 | XX | ?? | XX |
18 | 12 | 1461 | XX | ?? | XX |
19 | XX | XX | 688 | ?? | 54 |
20 | XX | XX | 747 | ?? | 76 |
1 |
கலித்துறை முன்தான் பெருமைக்கண் நின்றான்முடி வெய்துகாறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக் குழந்தான் அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களன்றே அறத்துப்பால்-1 கடவுள் வாழ்த்து,சித்த சரணம்-5 / 5 |
2 |
கலித்துறை நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவைநோக்க கில்லார் தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை ஓரார் போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கென் வாய்க்குற்றம் சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே அறத்துப்பால்-2 அவையடக்கம்-4 / 12< |
3 |
கொச்சகக் கலிப்பா வாயுவினை நோக்கிஉள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கிஉள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்கும்இயல் சிந்தனையும் இல்லா துயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம் அறத்துப்பால்-21 தீவினை அச்சம் -15 / 201 |
4 |
அறுசீர் விருத்தம் வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகைஎழும் காதல் தன்னால் துய்த்தியாம் துடைத்தும் என்பார் அகைஅழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ அறத்துப்பால்-30 புணர்ச்சி விழையாமை-14 / 298 |
5 |
அறுசீர் விருத்தம் அனல்என நினைப்பில் பொத்தி அகம்தலைக் கொண்ட காமம் கனலினை உவப்பு நீரால் கடையற அவித்தும் என்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார் புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார் அறத்துப்பால்-30 புணர்ச்சி விழையாமை-15 / 299 |
6 |
அறுசீர் விருத்தம் போதா உயிர்த்த ஆவி புகஉயிர்க்(கு) இன்ற தேனும் ஊதியம் என்று கொள்வார் உணர்வினால் மிக்க நீரார் ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்(கு) அழிதல் வேண்டா காதலால் அழிதும் என்பார் கண்அணி களையல் உற்றார் அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-19 / 380< |
7 |
அறுசீர் விருத்தம் அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை மருவினால் தீயஆகா வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் தங்கட்(கு) ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின்யார் உய்த்தும் என்பார் அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-20 / 381 |
8 |
அறுசீர் விருத்தம் பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறு இளமை செத்தும் மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும்நாள் சாகின் றாமால் நமக்குநாம் அழாத தென்னே அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-21 / 382 |
9 |
அறுசீர் விருத்தம் கோள்வலைப் பட்டும் சாவாம் கொலைக்களம் குறித்தும் சென்றே மீளினும் மீளக் காண்டும் மீட்சிஒன் றானும் இல்லா நாளடி இடுதல் தோன்றும் நம்உயிர் மருகும் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழிகின் றோமோ அறத்துப்பால்-38 யாக்கை நிலையாமை-22 / 383 |
10 |
அறுசீர் விருத்தம் நன்கென நாறும்இ தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயின் ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்கு சொரியத் தின்பதோர் நாயும் இழுப்பத் திசைதொறும் சீப்பில்கு போழ்தின் இன்பநன் நாற்றம் இதன்கண் எவ்வகை யால்கொள லாமே அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-8 / 402 |
11 |
அறுசீர் விருத்தம் உறுப்புகள் தாம்உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை மறைப்பில் விழவற்கு சார்வாய் மக்குவ தேல்இவ் வுறுப்புக் குறைந்தன போல அழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பில் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-9 / 403 |
12 |
அறுசீர் விருத்தம் மாறுகொள் மந்தரம் என்றும் மரகத வீங்கெழு என்றும் தேறிடத் தோள்கள் திறத்தே திறத்துளிக் காமுற்ற தாயின் பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றின போழ்தின் ஏறிய இத்தசை தன்மாட் டின்புறல் ஆவதிங் கென்னோ அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-10 / 404 |
13 |
அறுசீர் விருத்தம் எனதென சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேன் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய உடம்பினைப் பாவி யான்என தென்னலு மாமே அறத்துப்பால்-40 துய்யத்தன்மை-11 / 405 |
14 | கலிவிருத்தம் இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய் உறைந்த தம்மைஎல் லாம்உடன் ஒக்குவான் பிறந்த மூர்த்திஒத் தால்திங்கள் வெண்குடை அறம்கொள் கோள் அண்ணல் மும்மத யானையான் பொருட்பால்-1 இறைமாட்சி 21 / 483 |
15 | கலிவிருத்தம் சீற்றம் செற்றுப்பொய் நீங்கிச்செங் கோலினால் கூற்றம் காய்ந்து கொடுக்க எனும்துணை மாற்ற மேவிநன் றான்தடு மாற்றத்துத் தோற்றம் தன்னையும் காமுறத் தோற்றினான் பொருட்பால்-1 இறைமாட்சி 22 / 484 |
16 | அறுசீர் விருத்தம் மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா விண்ணுளார் புகழ்தற் கொத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையனார் கறையன் றென்பார் பொருட்பால்-6 குற்றம் கடிதல் 9 / 539 |
17 | கலித்துறை வேரிக் கமழ்தார் அரசன் விடு கென்ற போழ்தும் தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதல் என்றி வற்றால் பொலிவின்றி நின்றான் பாரித் தெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான் பொருட்பால்-25 இடுக்கண் அழியாமை 14 / 712 |
1 |
மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓர்இனமாய்ப் பொன்னின் பெயர்படைத்தால் போல்வதே - கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ(து) ஆங்கே அளிப்பாரும் மக்கள்ஆ மாறு (அறம்-23 ஈகை-12) 224 |
2 |
இளையர் முதியர் எனஇருபால் பற்றி விளையும் அறிவு எனல் வேண்டா - இளைஞனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தானும் காண் (பொருள்-5 அறிவுடைமை-15) 530 |
3 |
யானை நிரைஉடைய ரேனும் எழில்சிறந்தார் ஏனை நிரைஉடை ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கு வென்றி பயக்கும் பகட்டுஏர் உடையோர்க்கு அரசரோ ஒப்பு (பொருள்-58 குடிமரபு-9) 1130 |
4 |
நிலம்பொறை ஆற்றா நிதிபல கொண்டும் குலம்பெறும்தீங்(கு) அந்தணர் கொள்ளார் - நலம்கிளர் தீவாய் அவிசொரியத் தீவிளங்கும் ஆறுபோல் தாவா(து)ஒளி சிறந்தார் தாம் (பொருள்-58 குடிமரபு-10) 1131 |
5 |
ஈட்டிய(து) எல்லாம் இதன்பொருட்(டு) என்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையும் சங்கும்போல் தந்து (பொருள்-58 குடிமரபு-11) 1132 |
6 |
வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியால் செவ்வானம் செல்கின்றதுபோல் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்கும் கழல்ஒலி ஆங்கண் படாலியரோ போர்க்கும் துடியடு புக்கு (பொருள்-64 நிரை கோடல்-2) 1204 |
7 |
வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால் தாள்வல் இளையவர் தாம்செல்லின் - நாளைக் கனைகுரல் நல்ஆ,தன் கன்றுஉள்ளப் பாலால் நனைவது போலும்நம் ஊர் (பொருள்-64 நிரை கோடல்-3) 1205 |
8 |
வந்த நிரையின் இருப்பும் மணியுடன் எந்தலை நின்றலை யாம்தருதும் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோல்ஓங்கக் கொற்றவை கொற்றம் கொடு (பொருள்-64 நிரை கோடல்-4) 1206 |
9 |
திரைகவுள் வெள்வாய் திரிந்துவீழ் தாடி நரைமுதியோன் நின்றுரைத்த நற்சொல் - நிரைஇன்றி எல்லைநீர் வையம் இறையோன் களிக்குமால் வல்லையே செல்மின் வழி (பொருள்-64 நிரை கோடல்-6) 1208 |
10 |
பிறர்புலம் என்னார் தமர்புலம் என்னார் விறல்வெய்யோர் வீங்கிருள்கண் சென்றார் - நிறையும் கடாஅம் செருக்கும் கடும்களி யானை படாஅம் முகம்படுத்(து) ஆங்கு (பொருள்-64 நிரை கோடல்-7) 1209 |
11 |
அழுங்கல்நீர் வையகத்து ஆர்உயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடு கொண்டற்றால் - செழுங்குடிகள் தார்ஆர் கரந்தை தலைமலைந்து தாம்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை (பொருள்-65 நிரை மீட்சி-1) 1214 |
12 |
அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்த்தற்(கு) அன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாவாம்கொல் வாள்ஆர் துடியர் வளம் (பொருள்-65 நிரை மீட்சி-2) 1215 |
13 |
கங்கை பரந்தாங்கு கானப் பெருங்கவலை எங்கும் மறவர் இரைத்(து)எழுந்தார் - தம்கிளைகண் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்வில் கண்டு (பொருள்-65 நிரை மீட்சி-3) 1216 |
14 |
கடல்புக்கு மண்எடுத்தக் கார்ஏனக் கோட்டின் மிடல்பெரி(து) எய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருந்தாழ் குழாஅம் துரந்து நிரைமீட்ட தோள் (பொருள்-65 நிரை மீட்சி-6) 1219 |
15 |
கல்கெழு சீரூர்க் கடைகாண் விரும்பினான் மெல்ல நடவா விரையும் - நிரைஎன்னோ தெள்ளநல் கானியாற்றுத் தீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை (பொருள்-65 நிரை மீட்சி-7) 1220 |
16 |
காட்டகம் சென்றுயிர் போற்றான் கடும்சுரையான் மீட்ட மகனை வினவுறான் - ஓட்டந்து தன்எதிர் தோன்றும் புனிற்றா தழீஇக்கலுழும் என்னதுயர் பட்டாயோ என்று (பொருள்-65 நிரை மீட்சி-8) 1221 |
17 |
யாமே பகுத்திட வேண்டா இனநிரை தாமே தமரை அறிந்தனகொல் - ஏமுற அன்றீன்ற தம்மை அறிந்துகொள் கன்(று)ஏய்ப்பச் சென்(று)ஈண்டும் ஆங்கவாபால் சோர்ந்து (பொருள்-65 நிரை மீட்சி-9) 1222 |
18 |
விண்ணசைஇச் செல்கின்ற வேல்இளையர் ஆர்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபால் படர்தரக் கண்டு ஒன்னார்தம் உள்ளம் இருபால் படுவ(து) எவன் (பொருள்-66 பகைவயிற்சேறல்-4) 1226 |
19 |
போர்ப்படை ஆர்ப்பப் பொடியாய் எழுமரோ பார்ப்புரவு எண்ணான்கொல் பார்வேந்தன் ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலன்நெளிய நீளிடைப் புல்லா மேல்செல்லும் பொழுது (பொருள்-66 பகைவயிற் சேறல்-5) 1227 |
20 |
மூதில்வாய் தங்கிய முல்லைசால் கற்புடை மாதர்பால் பெற்ற வலிஅளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற அழிவு (பொருள்-67 பாசறை-4) 1241 |
21 |
மாற்றுப்புலம் தொறும் போர்மண்டி மாக்களம்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்(கு) - ஏற்ற படைஒலியில் பாண்ஒலி பயில்கின்றால் ஒன்னார் உடையன் தாம்பெற்(று) உவந்து (பொருள்-67 பாசறை-5) 1242 |
22 |
தழிச்சிய வாள்புண்ணோர் தம்இல்லம் தோறும் பழிச்சியசீர் பாசறை வேந்தன் விழுச் சிறப்பில் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்அணலார் வெய்(து)உயிர்க்கும் புண் (பொருள்-67 பாசறை-7) 1244 |
23 |
பகல்எறிப்(து) என்கொலோ பால்மதி என்(று)அஞ்சி இகல்அரணத்(து) உள்ளவர் எல்லாம் - அகம்நலிய விண்தஞ்சம் என்ன விரிந்தகுடை நாள்கொள்ளக் கண்(டு)அஞ்சி சிம்புளித்தார் கண் (பொருள்-73 எயில் கோடல்-2) 1292 |
24 |
தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுள் பேணி அழுது விழாக்கொள்வர் அன்னோ - முழுதளிப்போன் வாள்நாள்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்ந்தார் நீள்நாள்கோள் என்று நினைந்து (பொருள்-73 எயில் கோடல்-3) 1293 |
25 |
இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றி பொன்தேரான் போனகங்கை கொள்ளானால் - ஏற்றாம்கொல் ஆறாத வெம்பசித்தீ ஆற உயிர்பருகி மாறா மறலி வயிறு (பொருள்-74 எயில் கோடல்-7) 1297 |
26 |
தாய்வாங்கு கின்ற மகனைதனக் கென்று பேய்வாங்கி அன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு (பொருள்-74 எயில் கோடல்-8) 1298 |
27 |
வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி ஒதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்தோய் புரிசை பொறியும் அடங்கின ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு (பொருள்-74 எயில் கோடல்-9) 1299 |
28 |
பொருவரு மூதூரில் போர்வேட்டு ஒருவர்க்(கு) ஒருவர் உடன்(று)எழுந்த காலை - இருவரும் மண்ணோடு சார்த்தி மதில்சார்த்திய ஏணி விண்ணோடு சார்த்தி விடும் (பொருள்-74 எயில் கோடல்-10) 1300 |
29 |
முற்றரணம் என்னும் முகில்உருமுப் போல்தோன்ற கொற்றவன் கொற்றவாள் நாள்கொண்டான் - புற்(று)இழிந்த நாகக் குழாம்போல் நடுங்கின என்னாம்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து (பொருள்-74 எயில் காத்தல்-4) 1306 |
30 |
இடியான் இருள் முகிலும் ஏறுண்ணும் என்னும் படியால் பக(டு)ஒன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்னர் இமையாத கண்கொண்(டு) அறிந்(து)ஆர்த்தார் வானோரும் ஆங்கு (பொருள்-75 அமர்-4) 1316 |
31 |
ஆளும் குரிசில் உவகைக் கள(வு) என்னாம் கோள்அன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து (பொருள்-75 அமர்-5) 1317 |
32 |
வான்துறக்கம் வேட்(டு)எழுந்தார் வாள்மறவர் என்பதற்குச் சான்(று)உரைப்ப போன்றன தம்குறை - மான்தேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட உயிர்விடாப் பாய்ந்தன மேல்மேல் பல (பொருள்-75 அமர்-6) 1318 |
33 |
வெய்யோன் எழாமுன்னம் வீங்(கு)இருள் கைஅகலச் செய்யோன் ஒளிவழங்கும் செம்மற்றே - கைஅகன்று போர்தாங்கும் மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை (பொருள்-76 தானை மறம்-4) 1331 |
34 |
மம்மர் விசும்பின் மதியும் மதிப்பகையும் தம்மில் தடுமாற்றம் போன்றதே - வெம்முனையில் போர்யானை மன்னர் புறம்கவித்த வெண்குடையைக் கார்யானை அன்(று)அடர்த்த கை (பொருள்-78 யானை மறம்-12) 1367 |
35 |
வான்தோய் கழுகினமும் வள்உகிர்ப் பேய்க்கணமும் ஊன்தோய் நரியும் உடன்தொக்க - மூன்றும் கடமா நிலம்நனைக்கும் கார்யானைக்(கு) இட்ட படம்ஆறு நீப்(பு)அதனைப் பார்த்து (பொருள்-78 யானை மறம்-13) 1368 |
36 |
மாயத்தால் தாக்கும் மலையும் மலைபோல் காயத்தூறு அஞ்சாக் களிற்றொடும் போய்ச் - சாயும் தொலைஅறியா ஆடவரும் தோன்றினார் வான்மேல் மலைஉறையும் தெய்வம்போல் வந்து (பொருள்-78 யானை மறம்-14) 1369 |
37 |
வென்று களம்கொண்ட வேந்தன்தேர் சென்றதன்பின் கொன்ற பிணக்கூழ் கொற்றவை - நின்(று)அளிப்ப உண்டாடு பேய்க்கண்(டு) உவந்தனவே போர்ப்பரிசில் கொண்டாடின குரவைக் கூத்து (பொருள்-80 களம்-12) 139 |
38 |
உலகு பொதிஉருவம் தன்உருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவும்கொல் என்போல் புலவுக் களத்தே(டு) இகல்நெடுவே லானை இழந்து (பொருள்-81 இரங்கல்-19) 1422 |
39 |
கண்ணுதலோன் காப்ப கடிநேமியான் காப்ப எண்ணிருதோள் ஏந்திழையாள் தான்காப்ப - பண்ணியல்நூல் சென்னியர்க்(கு) அளிக்கும் தெய்வம் நீஇ மன்னுக நாளும்இம் மண்மிசை யானே (பொருள்-84 வாழ்த்து-) |
பெ.பொ.வி. | நீதித்திரட்டு | புறத்திரட்டு | நச்.உரை (எ.கா.) | பெருந்தொகை |
மேற்படி # | வரிசை# | வரிசை# | தொல்.புற.இயல் வரிசை# | சூத்.# |
1 | 224 | 228 | 90 | 274 |
2 | 530 | 542 | 76 | 359 |
3 | 1130 | 1159 | 76 | 397 |
4 | 1131 | 1160 | 75 | 289 |
5 | 1132 | 1161 | 75 | 279 |
6 | 1204 | 1236 | 58 | 429 |
7 | 1205 | 1237 | 58 | 420 |
8 | 1206 | 1238 | 58 | 425 |
9 | 1208 | 1239 | 58 | 422 |
10 | 1209 | 1240 | 58 | 428 |
11 | 1214 | ?? | ?? | ?? |
12 | 1215 | 1245 | 58 | 441 |
13 | 1216 | 1246 | 58 | 446 |
14 | 1219 | 1247 | 58 | 442 |
15 | 1220 | 1248 | 58 | 445 |
16 | 1221 | 1249 | 58 | 444 |
17 | 1222 | 1250 | 58 | 447 |
18 | 1226 | 1255 | 63 | 450 |
19 | 1227 | ?? | 60 | 451 |
20 | 1241 | 1271 | 76 | 544 |
21 | 1242 | 1272 | 67 | ?? |
22 | 1244 | 1273 | 63 | 457 |
23 | 1292 | ?? | 68 | 475 |
24 | 1293 | 1326 | 68 | 476 |
25 | 1297 | 1927 | 67 | 487 |
26 | 1298 | 1328 | 68 | 490 |
27 | 1299 | 1329 | 68 | 496 |
28 | 1300 | 1330 | 68 | 485 |
29 | 1306 | 1338 | 68 | 464 |
30 | 1316 | ?? | 72 | 535 |
31 | 1317 | ?? | 72 | 542 |
32 | 1318 | 1350 | 71 | 540 |
33 | 1331 | 1363 | 72 | 504 |
34 | 1367 | ?? | ?? | 507 |
35 | 1368 | ?? | ?? | 508 |
36 | 1369 | 1401 | 72 | 506 |
37 | 1398 | 1430 | 76 | 546 |
38 | 1422 | 1501 | 90 | 713 |
39 | 1469 | 1439 | 79 | ?? |
1 |
நேரிசை வெண்பா வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார் வியத்தக்க தாக வியப்பர் - வியத்தக்க அல்ல எனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர் இனிது (அற.2 அவையடக்கம்-1) 9 |
1 |
ஆசிரியப்பா கிழிந்த சிதாஅர் உடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி உண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கத் தோலுரித்த கோலா துவர்மன்னும் ஆடையர் பாடின் அருமறையர் நீடின் உருவம் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே (அற.3 நீத்தார் பெருமை 5) 17 |
1 |
பஃதொடை வெண்பா நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணன் ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றம் ஒன்றக் கொடுக்கும் மகன்தோன்றும் தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன் (அற.23 ஈகை 11) 223 |
4 |
பஃதொடை வெண்பா இறப்பப் பெருகி இசைபடுவ தல்லால் சிறப்பில் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை (பொரு.18 செங்கோன்மை 6) 654 |
5 |
இன்னிசை வெண்பா அறம்புரிந்தன்(று) அம்ம அரசில் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயல்ஈயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு (பொரு.18 செங்கோன்மை 7) 655< |
6 |
பஃதொடை வெண்பா சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர் சொல்லிய சொல்லைச் செலச் சொல்லும் - பல்லார் பழித்தசொல் தீண்டாமல் சொல்லும் விழுதக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேல் பூக்குழலாய் நல்வயலூரன் நறும்சாந் தணிஅகலம் புல்லின் ஊடல் இனிது (பொரு.21 சொல்வன்மை 11) 744 |
7 |
இன்னிசை வெண்பா கால வெகுளிப் பொறைய கேள்நும்பியைச் சாலும் துணையும் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேல்சேறல் வேண்டா அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி (பொரு.29 தூது 10) 764 இதனில் சேரன்பால் (பெருஞ்சேரல் இரும்பொறை) புலவர் (பொன்முடியார் ?) உன் தாயாதியையும் அவன்துணையாக வந்தோர் மேலும் கோபித்து போரிட வேண்டாமே நல்லோர்தம் நெறி அதுதானே என அறிவுறத்துகிறார் போலும் |
8 |
இணைக்குறள் ஆசிரியப்பா ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே வினவுதி யாயின் கேண்மதி சினவாது ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும் இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்உறு பொழுதில் கைபோல் எய்தி நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே, நோதக முன்னவை வரூஉங் காலை நும்முன் நுமக்குத் துணை யாகலும் உரியன், அதனால் தொடங்க உரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான் துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன் பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல் வேண்டின் பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே (பொரு.30 மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் 1) 773 "ஓடையடு பொலிந்த வினைநவில் யானை" நெடுநல். 169. ஓடை= யானைக்கு இடும் முகபடாம். ஈங்கு தங்கத்தால்ஆன முககவசம் புலவர், ஈங்கும் நல்ல ஏதுக்களைக்காட்டி அரியன செய்வான் அடங்கிட வேண்டும் என அமைச்சன் போல் அடக்கமுடைமையை வலியுறுத்துகின்றார். மிக மிக அரிய பிறப்பாக பறவைக்கு ஓர் மெய் இருதலைகள் உள்ளதாக காணப்பட்டமை ஆவணப்படுத்தப் படுகின்றது. ஈங்கு அதியமான் தெடுமான் அஞ்சியும் சேரர் குல மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையும் தாயாதிகள் ஆகும் என்பதற்கு அகச்சான்று |
9 |
ஆசிரியப்பா மொய்வேல் கையர் முரசெறிந் தொய்என வையகம் அறிய வலிதலைக் கொண்டது எவ்வழி என்றி வியன்தார் மார்ப எவ்வழி ஆயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எ•கின வயவர்க் காணின் புண்கூர் மெய்யின் உராய்ப் பகைவர் பைந்தலை துமித்த மைந்துமலி தடக்கை ஆண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டல் தகாது வேந்துடை அரணே (பொரு.30 மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் 2) 774 புலவர், அம்மன்னனின் (அதியமான் நெடுமான் அஞ்சி) கோட்டை வலிமிக்கது வீரம்மிக்க வீரர் காப்பதால் வெல்லுவதற்கு எளிதன்றென சேரனுக்கு விளக்குகின்றார் தொல்.பொரு.புறத்.நச்சி.உரையில் 'கொள்ளார் தேஎம்' எனும் 67 ஆம் சூத் 'உடன்றோர்வருபகை' எனும் அடி விளக்கத்திற்கு 'இதுபொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது' என காட்டுகிறார். பெருந்தெகை எனும் மற்றுமோர் திரட்டு நூல் 462 பாடலிலும் "பொன்முடியார் சேரமானுக்குத் தகடூரின் தன்மை கூறியது" எனும் அதே தலைக் குறிப்புள்ளது. |
10 |
ஆசிரியப்பா பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்(து) இட்டவித்(து) எஞ்சாமை நாறுக நா(று)ஆர முட்டாது வந்து மழைபெய்க பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க அக்கிளை பால்வார்(பு) இறைஞ்சிக் கதிர்ஈன அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம்நிறைக அக்களத்துப் போர்எல்லாம் காவாது வைகுக போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பொடையடு நாரை இரியும் விளைவயல் யாணர்த் தாகஅவன் அகன்தலை நாடே (பொரு.33 நாடு 17) 832 பயிர் விளைச்சலின் செயற்பாடுகள் நிரல்பட வைத்து எதினிலும் இடர் வாராது நாட்டு வளம் நனிசிறக்க என புலவர் வாழ்த்துகிறார் |
11 |
நேரிசை வெண்பா அரும்பொன் னார்கோட்டி ஆர்உற்ற கண்ணும் கரும்புதின் பார்முன்னர் நாய்போல் - கரும்பலவர் கொண்டொழிப ஒன்றோ துயில்மடிப அல்லாக்கால் விண்டுரைப்பர் வேறாய் இருந்து (பொரு.44 புல்லறிவாண்மை 14) 981 கரும்பின் இனிய சுவை அறியா நாயினைப்போல் என்று சிற்றறிவினார்தம் புன்மைதனை உவமித்தது |
12 |
ஆசிரியப்பா நாளும் புள்ளும் கேளா ஊக்கமோ(டு) எம்கோன் எயினன் ஆதலின் யாமத்துச் செங்கோல் வெட்சியும் தினையும் தூஉய் மறிக்குரல் குருதி மன்றுதுகள் அவிப்ப விரிச்சி ஓர்தல் வேண்டா எயில் புறம் தருதும்யாம் பகைப்புல நிரையே (பொரு. 64 நிரைகோடல் 5) 1207 எம்'கோன்' எயினன் என்றதால் அ•து ஓர் மன்னன் பெயரும் ஆகும். நிரை கவர் வெட்சியில், விரிச்சி ஓர் துறை."எம்தலைவன் 'எயினன்' ஆகவே நிமித்தம் முதலியன பார்க்காமலே இரவு விரிச்சியில் நாங்கள் பகை நாட்டாரின் நிரைகளை மீட்டு கோட்டை வெளியே கொணர்ந்து விடுவோம்" என சூளு¨ர்தது புறத்திரட்டு 1241 (நிரைகோடல் 10) மற்றும் பெருந்தொகை 423 ம் பாடலாக, தொல்.பொரு. புற.இயல் நச்சி.உரையில் "விரிச்சி விலக்கிய வீரக் குறிப்பு" எனும் தலைப்புடன் காண்பது |
13 |
ஆசிரியப்பா இருநில மருங்கின் எப்பிறப் பாயினும் மருவின் மாலையே இனிதே இரவின் ஆகோள் மள்ளரும் அளவாக் கானத்து நாம்புறத் திருந்தனம் ஆகத் தாம்தம் கன்றுகுரல் கேட்டன போல் நின்றுசெவி ஏற்றன சென்றுபடு நிரையே (பொரு. 65 நிரைமீட்சி 4) 1217 மீட்ட ஆநிரைகள் அவைகளை செலுத்தப்படும் இரவுக் காலத்தே ஈன்ற பசுக்கள் தம் கன்றுகளின் அழைகுரல் கேட்டது போல் சிறிது நின்று சென்றன. புறத்திருத்தலும் ஆகோளும் வெட்சித்திணைக்கு உள்ளதான துறைகள் தொல்.பொரு.புறத்.நச்சி.உரையில் 'மறவர் கூற்று', எனவும், பெருந்தொகை 431 ம் பாடலாக 'புறத்திறை' எனும் வெட்சித்துறைத் தலைப்புகளுடன், புறத்திரட்டு 'நிரைமீட்சி'-1251 ம் பாடலாகவும் காண்பது |
14 |
நேரிசை வெண்பா செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர் வெங்களம் மகிழ்ந்து விழவயர - அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தான்எம் கோ (பொரு.66 பகைவயிற்சேறல் 1) 1223 வெட்சியில் கடந்து வஞ்சியில் செல்வது. வணக்கிய= பணியச்செய்த, குஞ்சிமலைத்தல்=ஒர் மெய்ப்பாடு |
15 |
வெண்பா முன்னர் முர சிரங்க மூரிக் கடல்தானை துன்னரும் துப்பில் தொழுதெழா - மன்னர் உடைவாள் உலந்தனவால் ஓதநீர் வேலிக் குடைநாள் இறைவன் கொள (பொரு.66 பகைவயிற்சேறல் 2) 1224 உலந்தன=உலர்ந்தன |
16 |
வெண்பா வேத்தமர் செய்தற்கு மேல்செல்வான் மீண்டு வந்(து) ஏத்தினர்க் கீத்தும்என் றெண்ணுமோ - பாத்திப் படைக்கல மான்தேர் உடன் ஈத்தான் ஈத்த படைக்கலத்தில் சாலப் பல (பொரு.66 பகைவயிற்சேறல் 6) 1228 போர்க்களந் மேல் செல்லும் தலைவன் தன் படையின் பிரிவுக்குத் தக்கபடி தேவையான கலன்களை அளித்தமை 'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 458 'கொடை வஞ்சி' எனும் தலைப்பினில்.காண்பது. 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'இயங்குபடை அரவம்' எனத் தொடங்கும் 63ஆம் சூத்திரம் 'கொடுத்தல் எய்திய கொடைமையானும்' எனும் அடி விளக்கத்தில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் குறிக்கவில்லை. புறத்திரட்டில் பாடல் 1257 |
17 |
வெண்பா உண்டியின் முந்தாது உடன்உண்பான் தண்தேறல் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறமிக்கு உயிர்நேர்ந்தார் மன்னர்க்(கு) உறவிலார் கண்ணோடார் ஓர்ந்து (பொரு.66 பகைவயிற்சேறல் 7) 1229 வெற்றிக்குப்பின் போரிட்டோருடன் தானும் அமர்ந்து கள் அருந்தி மகிழ்ந்து ஊக்கிவிப்பது 'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண்456 'பெருஞ்சோற்றுநிலை' எனும் தலைப்பின்கீழ் தொல்.பொரு.புறத்.சூத்63. "பிண்டமேயபெருஞ் சோற்று" எனும் அடி விளக்கதில் "துறைஎனவே கள்ளும் பாகும் அப்பால்படும்" எனக்கூறி இந்தப் பாடலைக் மேற்கோள் காட்டுகிறார் |
18 |
ஆசிரியப்பா குழிபல ஆயினும் சால்பா னாதே முழைபடு முதுமரம் போல்எவ் வாயும் மடைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண் நெய்இடை நிற்றல் ஆனாது பைஎன மெழுகுசெய் பாவையின் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப் படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே (பொரு.68 பாசறை 6) 1243 போர்களத்தே பட்ட பெரிய அளவிலான விழுப்புண்ணிற்கு (கிழிப் பொதியல்=ஒத்தடம்) முதலிய மருத்துவம் உரைப்பது |
19 |
ஆசிரியப்பா கலிமா னோயே கலிமா னோயே நாகத் தன்ன நீள்நெடும் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித் துப்புகேன் ஆயின் உள்ள(து) இரப்போன் இன்மை கண்டும் காப்போன் சிறுமை யான்உறு கவ்வே (பொரு.71 வஞ்சினம் 4) 1273 கலிமா=குதிரை, பொதுவாக குதிரை என பொருள் கூறுவர். எனினும் கூர்ந்து நோக்கின் கலப்பின குதிரையைக் குறிக்கும். (கலி=கலப்பு) பரி, இவுளி என சொற்கள் வேறுபடின் கொள்ளும் பொருளும் வேறுபடும். மற்றும் குதிரையிலும் உயரம் மிகுந்தது தாழ்ந்தது என பல வேறுபாடுடன் காணப்படும். கோஏறு கழுதை எனவும் ஒன்றுண்டு. இ•து கழுதை-குதிரை கலப்புமா ஆகும். இதனில் சூலேற்கும் பெண்மாவினை கொண்டு இருவகை பெறப்படும் என்பர் இவை கன்று ஈனும் தன்மை இழந்தவையே. ஓயே=விளிஅசை |
20 |
பஃறொடை வெண்பா கூற்றுறழ் முன்பின் இறைதலை வைத்தபின் ஆற்றி அவனை அடுதல் அடாக்காலை ஏற்றுக்களத்தே விளிதல் விளியாக்கால் மாற்றம் அளவும் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து (பொரு.72 படைசெருக்கு 8) 1283 தலைவன் படைவீரரிடம் போர் மரபுரைத்து அவர்கள் சிறப்புற பணியாற்ற முனைப்படுத்தல் |
21 |
பஃறொடை வெண்பா தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாம்அவற்கு ஒற்கத்து உதவினான் ஆகுமால் பின்பின் பலர்ஏத்தும் செம்மல் உடைத்தான் பலர்தொழ வான்உறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர் மேன்மை இழப்பப் பழிவருவ செய்பவோ தாமேயும் போகும் உயிர்க்கு (பொரு.72 படைசெருக்கு 9) 1284 செம்மல் / மல்-மல்லன்-போர்வீரன், சீர்பெற வளர்ந்த தோள்வலி உடையான் 'புறத்திரட்டு' தனில் 1315 (படைச்செருக்கு-9) ஆம் பாடல் 'பெருந்தொகை' யில் 'தும்பை-தானைநிலை' என தலைக் குறிப்படைய 505 ஆம் பாடல் மற்றும் 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'தானை யானை குதிரை என்ற' எனத் தொடங்கும் 72ஆம் சூத்திரம் 'இனிப்போர்த் தொழிலால் தானை நிலைவருமாறு' எனும் குறிப்பின் கீழ் மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பது. இளம்பூரணார் உரையில் "ஒருவீரன் கூற்று" என காண்ப தாக மயிலை சீனி வேங்கடசாமி குறிக்கினறார். |
22 |
பஃறொடை வெண்பா நகைஉள்ளும் நல்லவை எய்தார் பகைநலிய ஞாட்புள்ளும் நல்லவை எய்தார் விழைவொடு வேற்றுக் களத்தில் ஒருவர் தமராக செற்றார் ஒருவர்மேல் செம்மாந் தடர்த் தாற்றி புண்ணும் படுக்கலார் தாம்படார் போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று (பொரு.72 படைசெருக்கு 10) 1285 ஞாட்பு=போர், செம்மாந்து=பெருமிதம் |
23 |
பஃறொடை வெண்பா வேல்தானை வெள்ளம் நெறிதர ஆற்றுக் கடும்புனல் கல்சிறை போல நடுக்காது நிற்பவற் கல்லால் எளியவோ பொற்பார் முறிஇலைக் கண்ணி முழுவுத்தோள் மன்னர் அறியுநர் என்னும் செருக்கு (பொரு.72 படைசெருக்கு 11) 1286 நெறிதர=முன்னேற, கல்சிறை=கற்களின் தொகுப்பால் (ஆற்றுநீர்) ஓடிவிடாமல் தடுத்து நிறுத்தும் மடை= கல்லணை |
24 |
இன்னிசை வெண்பா பிறந்த பொழுதேயும் பெய்தண்தார் மன்னர்க்(கு) உறழ்பு கொடுத்தாரே மூத்தார் உடம்பொடு முற்றுழிக் கண்ணும் இளையரே தம்கோமான் குற்றுழிச் சாவா தவர் (பொரு.72 படைசெருக்கு 12) 1287 உறழ்பு=திரள்தோள், 'இடிஎதிர்கழறும்கால் உறழ்பு எழுந்தவர்' , 'உறழ்த்தோள்',= பரிபாடல் |
25 |
நேரிசை வெண்பா பரவை வேல்தானை பகல்அஞ்சுவேனோ இரவே எறிஎன்றாய் என்னை - விரைவிரைந்து வேந்துநீ ஆயினாய் அன்றிப் புகுவதோ போந்தென்னைச் செல்லிய நா (பொரு.72 படைசெருக்கு 13) 1288 பரவை=பரந்த நீர்பரப்பினை உடைய கடல் (உவமையாக) |
26 |
வெண்பா வான்வணக்கி அன்ன வலிதரு நீள்தடக்கை யனைக்கீது என்கையில் எஃகமால் - தானும் விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலம்காணேன் நாணுத் தகும் (பொரு.72 படைசெருக்கு 14) 1289 வான்வணக்கிஅன்ன=வானவில் போல் குமிழ்த்த |
27 |
வெண்பா காலாளாய்க் காலாள் எறியான் களிற்றெருத்தின் மேலான் எறியான் மிகநாணக் - காளை கருத்தினதே என்று களிறெறியான் அம்ம தருக்கினனே சான்றோன் மகன் (பொரு.72 படைசெருக்கு 15) 1290 எருத்து=பிடரி=கழுத்தின் பின்புறம்.சான்றோன்=போர்வீரன் "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" புற-312 |
28 |
ஆசிரியப்பா பல்சான் றீரே பல்சான் றீரே வீழ்ந்த புரிசை சோர்ந்த ஞாயில் கணையில் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லல் மூதூர் பல்சான் றீரே பல்நாள் வருந்தி இளைஞரும் முதியரும் நல்நுதல் மகளிரும் இன்னும்கண் டுவப்ப யாமம் கொள்பவர் ஒழிய மேல்நாள் கொல்படை மொய்த்த குன்றுயிர் விழுப்புண் நெய்யுடைப் பஞ்சி சேர்த்திப் பைஎனக் கருங்குரல் நொச்சி மிலைந்த திருந்துவேல் விடலை காப்பமைந் தோனே (பொரு.74 எயில்காத்தல்8) 1310 புறம் 195, 246 லும் முதலடி ஈதே. சான்றோர்=(விளியில் சான்றீர்) போர்த்தொழில் கொண்டோர். ஈழகுலச் சான்றார் ஏனாதி நாயனார் என்பார் சேக்கிழார் சான்றார் திரிபு சாணார் என்பார் மயிலைசீனிவேங்கடசாமி. ஞாயில்=எளிதில் சாய்ந்து வீழாது நிலைகொள வளைஉருவில் துருத்தி அடியில் பருத்துள்ள மதில். புரிசை=காப்பு அரணுடை கோட்டை, [எயில்=எய்+இல், நின்று வேல் கணை எய்ய ஏற்ற மதிலுருப்புடைஅரண்]. கிடங்கு = அரணுக்கு மேலும் துணையாக தேர் குதிரை யானைப் படைகள் அணித்தே நெருங்க இயலாது இயற்கையாக நீர் தேங்கு உருப்புடன், (கராம் முதலை முதலிய கொடிய நீர்வாழ் உயிரினமும் கூடியதும்) ஆகிய பகுதி [அகழி=செயற்கையாக அகழ்ந்த கிடங்கு] விடலை = ஆணில் போர் செய்ய தகுந்த பருவம் எய்தியவன் நொச்சி= பகைவர் தம்முடை அரணைத் வெளியினின்று தாக்க ஓர் மன்னன் அதனை ஊள்ளிருந்து எதிர்ப்பது |
29 |
ஆசிரியப்பா இவனே பொறிவரிஅன்ன பொங்குளை வயமான் மேலோன் யாரென வினவின் தோலா உரன்உடை உள்ளத்து ஒன்னார் உயிர்க்கும் சுரைஅமை நெடுவேல் சுடர்ப் பூணோனே அவனே எம்இறை ஈதவன் மாவே கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே யாவறும் குறுகல் ஓம்புமின் குறைநாள் மறவீர் நெருநல் எல்லி நிரைவரு கடும்திறல் பருமத யானை பதைக்க நூறி அடுகளத் தொழிந்தோன் தம்பி தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை அச்சம் அறியான் ஆரணங் கினனே (பொரு.74 எயில்காத்தல்) 1311 பொறிவரி அன்ன=வரியினை பொறியாக உடைய புலி போன்ற, பொங்குளை வயமான்= நெருங்கிக் கொத்தாக காணும் மயிற் தொகுதி உடைய சிங்கம், அணங்கினன்= பாய்நிலை சீற்றத்தினன் |
30 |
வெண்பா கார்தரும் புல்அணல் கண்அஞ்சாக் காளைதன் தார்பற்றி ஏர்தரும் தோள்நோக்கித் தார்ப்பின்னை ஞாட்பினுள் யானைக் கணம்நோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கி பின்னைக் கிணைவனை நோக்கி நகும் (பொரு.76 தானை மறம் 5) 1332 கார்தரும் புல்அணல்=கருமைநிற இளமைத் தாடி "மை அணல் காளை"-ஐங்குறு-389/புறம்-83, 'புல்அணலோனே'-புறம்310, மா=(ஈங்கு) குதிரை, கணை=பகழி/அம்பு, கிணை=போர்மேல் செல்வோர் சீர்பெற்று ஏக ஒலிக்கும் கருவி தொல்.பொரு.புறத்திணைஇயல் நச்சி.உரை சூ.63 "இயங்குபடை அரவம்" த்தின் "வருவிசைப் புனலை கற்சிலைபோல . . . " எனும் அடிக்கு மேற்கோளாக, மற்றும் புறத்திரட்டு 1370ஆம்பாடலாக"பொன்முடியார் ஆங்கு அவனை கண்டு கூறியது" எனும் தலைப்புடன் காண்பது இப்பாடல் |
31 |
ஆசிரியப்பா இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மறவீர் கண்இமைப் பளவில் கணைசெல் கடுவிசைப் பண்அமைப் புரவி பண்புபா ராட்டி எல்இடை படர்தந் தோனே கல்என வேந்தூர் யானைக் கல்லது ஏந்துவான் போலான்தன் இலங்கிலை வேலே (பொரு.76 தானை மறம் 12) 1339 |
32 |
ஆசிரியப்பா அதிராது அற்றம் நோக்கும் ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவின் இளையோன் இன்றுதன் குதிரை தோன்ற வந்துநின் றனனே அவன்கை ஒண்படை இகழ்தல் ஓம்புமின் விழுச்சீர் விண்பெரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகினன் இவன்கைத் திண்கூர் எ•கம் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டே (பொரு.76 தானை மறம் 13) 1340 எ•கம்=கையில் ஏந்தி எறிந்து தாக்கும் படைக்கலன் |
33 |
ஆசிரியப்பா கட்டி அன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே கிட்டிய அதுவும் களிறே ஒட்டிய தனை முழுதுடன் விடுத்துநம் யானை காமின்அவன் பிறிதெரி யலனே (பொரு.76 தானை மறம் 14) 1341 கட்டி=வீரம் மிக்க ஓர் குறுமன்னன், (நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்அருங் கடுந்திறல் கங்கன் கட்டி பொன்அணி வல்வில் புன்றுறை ......அகம்-44) காரி=கரியநிற குதிரை |
34 |
ஆசிரியப்பா அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே பயறு காவலர் பந்தர் அன்ன அலறுதலை முதியாள் அஞ்சுதக் கனளே வெஞ்சமத்து என்செய் கென்னும் வேந்தற்கு அஞ்சல் என்பதோர் களிறீன் றனனே (பொரு.76 தானை மறம் 15) 1342 வெஞ்சமம்=போர்க்களம் |
35 |
ஆசிரியப்பா வல்லோன் செய்த வகைஅமை வனப்பின் கொல் வினை முடியக் குருதிக் கூர்இலை வெல்வேல் கைவலன் ஏந்திக் கொள்எனின் கொள்ளும் காலும் மாவேண் டானே மேலோன் அறிவொடு புணர்ந்த நெறியின் புரவிக் கழல்கால் இளையோன் அழல்திகழ் வெகுளி இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னீர் தொல்லை ஞான்றைச் செருவினுள் இவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தல் பிறக்கம் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே அதனால் வல்லோர் பூழை நில்மின் கல்என வெஞ்சமம் குரைப்பக் கூர்தலின் அஞ்சுதக(வு) உடைத்(து)இவ் ஆற்றலோன் நிலையே (பொரு.76 தானை மறம் 16) 1343 |
36 |
ஆசிரியப்பா உண்டது கள்ளும்அன்று களிபட் டனனே ஊர்ந்தது புள்ளும்அன்று புறத்தயங் கும்மே மேலோர் தெய்வம் அல்லன் மகனே நொய்தாங்குத் தெரிஅலர் எடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோனே வேலே பைய நிமிர்ந்து பருந்தின் ஓடிக் கழிந்தார்த் தன்றவன் எறிந்ததைக் கழல்தொட்டு ஏந்துவரை இவரும் புலிபோல் வேந்துவந் தூரும் வெஞ்சினக் களிறே (பொரு.76 தானை மறம் 17) 1344 |
37 |
ஆசிரியப்பா நிலைஅமை நெடும்திணை ஏறி நல்லோள் இலைபொலி புதுப்பூண் கணவனொ(டு) ஊடி சிந்தி அன்ன சேடுபடு வனப்பின் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே குண்டுநீர்க் கிடங்கின் கெண்டைப் பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம் அணிநல் யானைக் கூ(று)அளக் கும்மே (பொரு.76 தானை மறம் 18) 1345 சிரல்=பாய்ந்து மூழ்கி மீன் கவ்வு புள்-மீன்கொத்தி |
38 |
ஆசிரியப்பா வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் வெரூஉக் குதிரை ஒருவே லோனே இருகை மாக்களை யா(ன்)அஞ் சலனே நாற்கை மாக்கள் நாட்டகத்(து) இல்லை அவனும் தாரொடு துயல்வரும் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை எற்குறித் தனனே யானும் கடிகமழ் உவகைக் கைவல் காட்சியன் துடியவன் கவன்அரை அறுவைஈந் தனனே அதனால் என்னா தாகினும் ஆக மூந்நீர் நீர்கொள் பெருங்குளம் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சம் குளிப்ப அவன்தாய் மூழ்குவள் ஒன்றோ அன்றேல் என்தாய் மூழ்குவள் ஒன்றோ அறியேன் தாயும் யாயும் உடன் மூழ்குபவே (பொரு.76 தானை மறம் 19) 1346 |
39 |
வெண்பா அடுதிறல் முன்பினன் ஆற்ற முருக்கிப் படுதலை பாறுண்ண நூறி வடிஇலைவேல் வீசிப் பெயர்பவன் ஊர்ந்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்கும் துடியன் துடிகொட்டும் பாணியில் கொட்டும் குளம்பு (பொரு.77 குதிரை மறம் 4) 1350 |
40 |
ஆசிரியப்பா என்கண் டறிகோ என்கண் டறிகோ என்மகன் ஆதல் என்கண் டறிகோ கண்ணே கணைமுழ் கினவே தலையே வண்ண மாலை வாள்விடக் குறைந்தன வாயே பொருநுனைப் பகழி மூழ்கலின் புலால்வழிந்து ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே நெஞ்சே வெஞ்சரம் கடந்தன குறங்கே நிறம் கரந்து பல்சரம் நிரைத்தன அதனால் அவிழ்பூ அப்பணைக் கிடந்தகாளை கவிழ்பூங் கழற்றின் காய்போன் றனனே (பொரு. 79 மூதின் மறம் 4) 1375 'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 702 'மூதின் முல்லை' யில் "துறக்கத்துப்பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப் பெயல்நிலை" எனும் தலைப்புடன் காண்பது. மற்றும், 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் 79ஆம் சூத்திரம் 'நல்லோள் கணவனொடு நனிஅழல்புகீஇ' என்றடியின் விளக்கத்து மேற்கோளில் மேற்கண்ட அதே கொளுவுடன் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பது இப்பாடல். |
41 |
ஆசிரியப்பா வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோலா ததனகத் துள்ளீன் றனனே பொருந்தா மன்னர் அருஞ்சமம் முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த எ•கம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே எம்மில் செய்யா அரும்பழி செய்த கல்லாக் காளையை ஈன்ற வயிறே (பொரு. 79 மூதின் மறம் 7) 1378 'பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 705 மேற்படி குறிப்பு பொருந்துவது. மற்றும், 'புறத்திரட்டு' தனில் 1407. 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். "கரியிடை வேலொழியப் போந்தற்குத் தாய்தப வந்த தலைப்பெயல் நிலை" கொளுவுடன்'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பது இப்பாடல். |
42 |
வெண்பா தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதே - செருமுனையில் கோள்வாய் மறவர் தலைதுமிய என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின் (பொரு. 79 மூதின் மறம் 8) 1379 ['பெருந்தொகை' திரட்டினில் பாடல் எண் 706 மேற்படி குறிப்பு பொருந்துவது] |
43 |
வெண்பா இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ அன்பின் உயிர்மறக்கும் ஆரணங்கு - தன்கணவன் அல்லாமை உட்கொள்ளும் அச்சம் பயந்ததே புல்லார் மெய்சிதைத்த புண் (பொரு. 79 மூதின் மறம் 9) 1380 'புறத்திரட்டு' தனில் 1405ஆம் (மூதின்மறம்82) 'பெருந்தொகை' யில் 'ஆஞ்சிக்காஞ்சி' பாடல் எண் 707 மற்றும், 'நச்சினார்க்கினியர்' தொல்.பொருள் புற. இயல். 'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் சூத்.79 'நீத்த கணவன் தீர்த்த வேலின்' என்றடியின் விளக்கத்து மேற்கோளில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என குறிப்பது இப்பாடல். |
44 |
வெண்பா இரவலர் வம்மின் எனஇசைத் தல்இன்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரைஅழுங்க வேற்கண் ணியர்அழுத வெம்பூசல் கேட்டடங்கா தோல்கண்ண போலும் துடி (பொரு. 81 இரங்கல் 2) 1405 'புறத்திரட்டு' தனில் 1438ஆம் (இரங்கல் 3) பாடல் 'பெருந்தொகை' யில் 'பூசல்மயக்கம்' 710 மற்றும் 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'மாற்றரும் கூற்றம்' எனத் தொடங்கும் 79ஆம் சூத்திரம் 'ஆய்ந்த பூசல் மயக்கத்தானும்' என்றடியின் உரை மேற்கோளில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என குறிப்பது இப்பாடல். |
45 |
ஆசிரியப்பா இழும்என முழங்கும் முரசமொடு குழுமிய ஒன்னா மள்ளர்த் தந்த மூன்னூர்ச் சிறையில் விலங்கிச் செவ்வேல் ஏந்தி ஆண்டு பட்டெனனே நெடுந்தகை ஈண்டுநின் றம்ம அணியின் பெரும்புகழே (பொரு. 81 இரங்கல் 14) 1417 (ஒவ்வோர் பாடல் கடையிலும் பிறைக்குறிக்குள் காண்பவை நீதித்திரட்டினில் இப் பாடல்கள் வைகும் வரிசை எண் குறிப்பு) |
46 |
நேரிசை வெண்பா செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெரிந்த கவ்வை நெடுவேல் கொணரானேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவில் சென்று விரைந்து தகடூர் யாத்திரைப்பாடலாக் புறத்திரட்டினில் உள்ள 44 (மயிலை சீனி வேங்கடசாமி) பாடல்களில் ஒன்று |
47 |
ஆசிரியப்பா கலைஎனப் பாய்ந்தமாவும் அலை என மயங்கமர் உழந்த யானையும் இயம்படச் சிலைஅலைத் துய்ந்த வயவரும் என்றிவை பலபுறம் கண்டோர் முன்னான் நீயே அமர்புறம் கண்ட பசும்பூண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயல் கிடப்பக் களையாக் கழல்கால் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் கெறுத்தனர் ஆர்ப்ப மிளைபோய் இன்று நாளை நாமே உரும்இசை மொண்ட மயிர்க்கண்(டு) இருமுர சிரங்க ஊர்கொள் குவமே இப்பாடல், நச்.தொல்.பொருள்.புற.'கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்' எனத் தொடங்கும் 67ஆம்சூத். 'அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்' என்ற அடி உரையில் 'தகடூர் யாத்திரை'ப் பாடலாக மேற்கோள் காட்டுவது. ''இ•து சேரமான்'பொன்முடியா' ரையும் 'அரிசில் கிழா'ரையும் நோக்கித் 'தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது' எனும் கொளுவுடன் காண்பது. பெருந்தொகை 483 பாடலுக்கு மேற்கண்ட வாறே தலைக் குறிப்பு உள்ளது. |
48 |
ஆசிரியப்பா மெய்ம்மலி மனத்தின் எம்எதிர் நின்றோன் அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டில் கைஇகந்து அமரும் தைஅணல் புரவித் தளைஅவிழ்க் கண்ணி இளையோன் சீறின் விண்உயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்அறும் கடாஅம் உமிழ்ந்த வெண்கோட்(டு) அண்ணல் யானை எறிதல் ஒன்றோ மெய்ம்மலி உவகைய நம்மருங்கு வருதல் கடிஅமை கள்உண் கைவல் காட்சித் துடியன் உன்கண் நோக்கிச் சிறிய கொலைமொழி முன்னிச் சிதர்ந்தனையதன் வேறிரித் திட்டு நகுதலும் தகுமே இப்பாடல், 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'இயங்குபடை அரவம்' எனத் தொடங்கும் 63ஆம் சூத்திரம் 'பொருளின்றி உய்த்த போராண் பக்கமும்' என்பதன் உரையில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என மேற்கோள் காட்டுவது இபப்பாடல் ''இ•து அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் (பெருஞ்சேரலிரும்பொறை) முனைப்படை நின்றானைக் கண்டு 'அரிசில் கிழார்'கூறியது'' எனும் கொளுவுடையது. |
49 |
ஆசிரியப்பா மறனுடைய மறவர்க் கேறஇடன் இன்றி நெய்யோ டைஅவி அப்பிய எவ்வாயும் எந்திரப் பறவை இயற்றின நிறீஇக் கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபட பரப்பி பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் என்றிவை பலவும் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை இயற்றிப் பின்றை எய்பெரும் பகழி வாயில் துக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும் தாக்கரும் தானை இறும்பொறை பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே அக்காலத்து போர்களங்களிலேயே மனித ஆற்றலை தேக்கிவைத்து எய்யும் யந்திர கல்லெறி பெரும்கவண், கணைஎறி பொறி, சூடேற்றிய நெய்யை விசிறும் கலம் வட்டவடிவிலான எறியும் எரிபந்தம் (திருமால்கை ஆழி) என இக்லத்து பீரங்கி முதலியவை களின் முன்னோடி கள் எயில் தாக்கலில் பயன் கொண்டமை ஈங்கு குறிக் கப்படுகின்றன. "கற்பொறியும்" எனதொடங்கும் புறப் பொருள் வெண்பாமாலை பாடல் இவற்றையே குறித்து மேலும் பாம்புகள் கடிக்கும் குரங்குகள் முதலியனவும் பயன்பட அதனை விலக்கியே எயில் ஏறுவார் என 'ஏணி மற'த்தில் காட்டும். கிடங்கு/அகழிகளைக் கடக்குங்கால் முதலை, கராம், சுறவு என பலவும் தாக்க வருவன அறிவோம். மதில் ஏறுவோறும் நன்கு பழக்கிய உடும்பினை பயன்கொள்வதும் அறிவோம். கிளிகளை பழக்கி அவைகொணரும் கதிர்மணிகளால் கோட்டைக்குள் சிறைபட்டோர் பயன்கொண்டமையும் சங்கநூல் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஈங்கு தொங்கி தூக்கும் நிலை கோட்டை வாயில்கள் குறிப்பிடப்படுகின்றன. நச்சினார் தம் உரையில் யவனர் சிலவற்றை வடிவமைத்தனர் என்பார். மேலும் தொல். பொரு. புறத். இயல் நச்சி. உரை "கொள்ளார் தேஎம் குறித்த" 67 ஆம் சூத்திரத்தின் "தொல் எயிற்கு இவர்தலும்" எனும் அடியின் விளக்கமாக பாடல் மேற் கோள் மற்றும் "பொன்முடியார் பாட்டும் இது" என குறிப்பும் உள்ளது |
50 |
ஆசிரியப்பா இல்எழும் வயலை இலையு மூழ்த்தன சொல்வன் மாக்களில் செல்லும் அ•கின மயிலடி இலைய மாக்குரல் நொச்சிப் பயிலிணர் நறும்பொழில் பாவையும் தமியள் ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு பேதை போயினள் பிறங்குமலை இறந்தென மான்ற மாலை மனையோர் புலம்ப ஈன்ற தாயும் இடும்பையள் எனநினைந்து அங்கண் வானத் தகடூர்ந்து திரிதரும் திங்களம் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரில் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமியம் செல்வம் குன்றினும் குன்றாய் தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை ஒண்புகழ் தந்தைக் குறுதி வேண்டித் தயங்குநடைத் முதுமை தாங்கித் தான்தனி இயங்குநடை இளமை இன்புற் றீந்த மான்தேர் அண்ணல் தோன்றுபுகழ் போலத் துளங்கிருள் இரவினும் மன்ற விளங்குவை மன்னாஇவ் வியலிடத் தானே இதனில் சிலவரிகள் தந்தையின் முதுமையை வாங்கிக்கொண்டுதன் இளமையை தந்தைக்கு அளித்த யயாதி கதை குறிக்கின்றது போலும் தொல். பொரு. புறத். இயல் நச்சி. உரை "தன்னும் அவளும் சுட்டி" 36 ஆம் சூத்திரத்தின் விளக்கமாக மேற்கோள் பாடலாக" இது தெய்வத்தை நோக்கிக் கூறியது" எனும் குறிப்புடன் காண்பது |
51 |
ஆசிரியப்பா கனவே போலவும் நனவே போலவும் முன்னிய தன்றிஎன் உள்ளகம் நடுக்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிற கூகையும் இருவகை உயர்திணைக் கேந்திய கொடியடும் வெருவந்த தோற்றத்தால் உருவின பலகூளிக் கணங்கள் குருதிமண்டை சுமந்தா டவும் பறைஅன்ன விழித்தகண்ணாள் பிறைஎன்ன பேர்எயிற்றாள் குவடன்ன பெருமுலையோள் இடைகரந்த பொருமாட்டாள் இடிஅன்ன பெரும்குரலாள் தடிவாயால் தசைபுதைத்தாள் கடலன்ன பெருமேனியாள் தாள்பின்னாக் கமழ்கோதையாள் சிலைஎன்ன புருவத்தாள் சென்றேந்திய அகல்அல்குலாள் மழையும் அஞ்சும் வளியும் போலும் செலவினாள் ஒருபெண் டாட்டி தலைவிரித்துத் தடக்கை நாற்றி மறன்அறிந்து மாறு கொண் டறியா அறிவுக்(கு)இம் முறைநாள் இவ்வள(வு) அன்றே பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன் கைகளால் நிலன்அடித்துத் தூரை இடம்செய்து காடு புகுதல் கண்டேன் என்றும் கவலை நெஞ்சமொடு அவலம் நீத்தினாள் அன்றது மன்றஅவ் அதிகமான் தாய்க்கே தக்கயாகப் பரணி உரையாசிரியர் காளிக்குக் கூளி கூறிய 397 ஆம் தாழிசைக்கு மேற்கோள் காட்டுவது இப்பாடல் என மறைந்த தமிழ் நூல் பாடல்களை தொகுத்த பெரியார் மயிலை சீனி வேங்கடசாமி தன் தொகுப்பு நூலில் குறித்துள்ளார். |
52 |
ஆசிரியப்பா வீங்குசெலல் பரிதி வெவ்வெயில் எறித்தலின் நோங்கண் நோக்கா தாங்கு நீபோய் அரசுநுகம் பூண்ட பின்னர் நின்னலை முரசுடை வேந்தர் முகம்திரிந் தனரே அ•தான்று உவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே அதனால் அதரும் கோடு முதலிய கூட்டுண்(டு) இகலின் இசைமேஎந் தோன்றித் தீதில ஆகிய நீபெறு நாளே தொல்.பொரு.புறத்.இயல் நச்சி.உரை "வெறியறி வெவ்வாய் வேலன்" எனும் 60 ஆம் சூத்திரத்தின் "தாவா விழுப்புகழ் பூவைநிலையும்" எனும் அடியின் விளக்க மேற்கோளாக"இது முடியும் குடையும் ஒழித்து அரசற்கு உரியன கூறி இழித்துக் கூறியும் புகழ் மிகுத்தது" என மற்ற மேற்கோள் பாடல்களுக் குள்ளன போல் ஓர் புலவர்-அரசன் தொடர்பு காட்டப் படுதலால் தகடூர் யாத்திரையைச் சேர்ந்ததாகத் தோன்றுகின்ற மேலும் பெருந்தொகை கண்ணும் (பாடல் 724) "அரசு புகழைக் காட்டு வாழ்வோர்க்குக் கூறியது" எனும் தலைப்புக் குறிப்புள்ளது. அதான்று ஆசிரியப்பாவில் இடை இடை 'அ•தான்று', 'அதனால்' என தனிச்சொற்கள் 8, 34, 35, 36, 38, 40 ஆம் பாடல்களைப்போல் யாப்பமைப்பு காணப் படுதலாலும் உரையிடை இட்ட (தனிச் சொல்) கொண்டநூல் என உரையாசிரியர்களால் குறிக்கப் படுததாலும் 'தகடூர்யாத்திரை' பாடலாகலாம். |
53 |
நேரிசை வெண்பா தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்(து) ஊக்கம் உடையோர் ஒதுங்கியும் - கார்க்கண் இடிபுறப் பட்டாங்கு எதிர்ஏற்றார் மாற்றார் அடிபிறக் கீடும் அரிது [தகர்= (மறி)ஆடு] 'புறத்திரட்டு' தனில் 1341ஆம்பாடல் (எயில் காத்தல் 7) . 'பெருந்தொகை' யில் 'எயில்காத்தல்' எனும் தலைக் குறிப்புடைய 470 ஆம் பாடல் மற்றும் 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'குடையும் வாளுநாள் கோளன்றி' எனத் தொடங்கும் 68ஆம் சூத்திரம் 'புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்' என்றடியின் உரை மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் எனவும் "இ•து அகத்தொன் வீழ்ந்த புதுமை" என குறிப்புடன் விளக்குகிறார்.ஆனால் நீதித்திரட்டினில் 'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது" |
54 |
வெண்பா மழுவான் மிளையோய் மதிலான் அகழ்ந்தூர்ந்(து) எழுவாள் ஆன் ஏற்று உண்ட(து) எல்லாம் - இழும்என மட்(டு)அவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட மிகை 'புறத்திரட்டு' தனில் 1340ஆம் (எயில் காத்தல்) பாடல் 'பெருந்தொகை' யில் 'புறத்தோன் வீழ்ந்த புதுமை' எனும் தலைக்குறிப்படைய 497 ஆம் பாடல் மற்றும் 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'கொள்ளார் தேஎம்' எனத் தொடங்கும் 67ஆம் சூத்திரம் 'உள்ளியதுமுடிக்கும்' என்றடியின் உரையில் மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பதில் ஒன்று இப்பாடல். ஆனால் நீதித்திரட்டினில் 'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது |
55 |
வெண்பா பொருசினம் ஆறாப் புலிபோத் துறையும் அருவரை கண்டார்போல் அஞ்சி ஒருவரும் செல்லா மதில்அகத்து வீற்றிருந்தான் தேர் வேந்தன் எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து [புலிபோத்து=ஆண்புலி] 'புறத்திரட்டு' தனில் 1339ஆம் (எயில் காத்தல் 5) 'பெருந்தொகை' யில் 'உழிஞை-அகத்தொன் செல்வம்' எனும் தலைக்குறிப்படைய 460 ஆம் பாடல் மற்றும் 'நச்சினார்க்கினியர்'-தொல்.பொருள்.புறத்திணைஇயல். 'கொள்ளார் தேஎம்' எனத் தொடங்கும் 67ஆம் சூத்திரம் 'அகத்தோன் செல்வம்' என்றடியின் உரையில் மேற்கோள் காட்டுவதில் 'தகடூர் யாத்திரை'ப் பாடல் என காண்பது இப்பாடல்.ஆனால் நீதித்திரட்டினில் 'பெரும்பொருள்விளக்க' ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது |
56 |
நேரிசை வெண்பா குன்றுயர் திங்கள்போல் கொற்றக் குடைஒன்று நின்றுயர் வாயில் புறம்நிவப்ப - ஒன்றார் விளங்குருவப் பல்குடை விண்மீன்போல் தோன்றித் துளங்கினவே தோற்றம் தொலைந்து தொல்.பொரு.புறத்.இயல் நச்சி.உரை "குடையும் வாளும் நாள் கோள்" எனும் 68 ஆம் சூத்திரத்தின் முதலடியின் விளக்க மேற்கோள் பாடலாக" இ•து அகத்தோன் குடைநாட்கோள்" என குறிக்கின்றார். புறத்திரட்டு 1337 எயில்காத்தல் 3 ஆக காண்பது ஆனால் நீதித்திரட்டினில் 'பெரும்பொருள்விளக்க'ப் பாடலாக காட்டப்பட்டுள்ளது |
தகடூர் யாத்திரை | நீதித்திரட்டு | பெருந்தொகை | நச்சி. மேற்கோள் புறத்திரட்டு |
மேற்படி 12 | 1207 | 423 | 1241 |
மேற்படி 13 | 1207 | 431 | 1251 |
மேற்படி ? | 443 பூசன்மாற்று | பூசன்மாற்று- கண்டோர் கூற்று |
1 |
ஆவூர் எறிந்து நிரையடு பெயர்ந்த வெட்சி மறவர் வீழவும் உள்காது கயிறியல் பாவை போல வயிறிரித்(து) உழைக்குரற்கு உணர்ந்த வயப்புலி போல முற்படு பூசல் கேட்டனர் பிற்பட நிணமிசை இழுக்காது தமர்பிணம் இடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் மாக்கெட நெருப்புப் போல நோக்குபு வெஞ்சிலை விடலை வீழ்ந்தனன் அஞ்சுதக்க அன்றான் செஞ்சோற்று நி¨ உழை=மான், / ஆவூர்=இரவூர்-பாடபேதம் / [இஃது போர் நிகழ்ச்சியை புலவர் நேரில் பார் விளக்குவதாக உள்ளமை காண்க] தகடூர் யாத்திரை=?;பெருந்தொகை 459 உண்டாட்டு; நச்சி. மேற்கோள் உண்டாட்டு |
2 |
பகைவர் கொண்ட படுமணி ஆயம் மீட்டிவள் தந்த வாள்திறல் குரிசில் முழவுத் துயில்மறந்த மூதூர் ஆங்கண் விழவுத் தலைகொண்ட விளையாட்டு ஆயத்து ஊன்சுடு கொழும்புகை கருங்கொடி உம்பர் மீனசுடு புகையின் விசும்பு வாய்த்தன்றே கைவல் கம்மியர் பல்கூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம் பரந்தன்றே காவில் காவில் கணங்கொள் வண்டெனப் பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே சந்தியும் சதுக்கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடிதோறும் கொள்வினை மாற்றாக் கொடையடு கள்விலை ஆட்டுடியும் கைதூ வாளே தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 453 கொற்ற வஞ்சி; நச்சி. மேற்கோள் அடுத்தூர்ந்திட்ட-கொற்றமும் |
3 |
நீள்நில வேந்தர் நாள்செல் விருப்பத்துத் தோள்சுமந்(து) இருத்தல் ஆற்றார் ஆள்வினைக் கொண்டி மாக்கள் உண்டியின் முனிந்து முனைப்புலம் மருங்கில் நிலைப்பரும் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ ஆங்குள கொல்இனி ஊங்குப்பெறும் செருவே [இஃது நச்சினார் உரை மேற்கோளசூத். 58 "அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்" என வரும் அடியின் விளக்கத்தினுள் காண்பது.] [இஃது காலத்தினால் நீண்ட போர் நிகழ்ச்சியை புலவர் நேரில் பார்த்திருந்து விளக்குவதாக உள்ளமை காண்க] தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 558 அறிவன் வாகை நச்சி. மேற்கோள் நெறியினாற்றிய அறிவன்தேயமும் |
4 |
வாய்மை வாழ்ந மூதறிவாள நீயே ஒருதனித் தோன்றல் உறைபதி யாருமில் ஒருசிறை யானே தேரின் அவ்வழி வந்தநின் உணர்வுமுதல் தங்கும் தொல்நெறி மரபின் முயவகை நின்றன காலமும் நினனொடு வேறென யாரோஓ பெருமநின் றேர்கு வோரே இஃது நச்சினார் உரை மேற்கோளசூத். 75 "நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்" என வரும் அடியின் விளக்கத்தினுள் காண்பது. [இஃது புலவர் சேரமன்னனை அவன் தொல்மரபு வழி வந்த தோன்றல் உனக்கு பதி என்று யாரும் இல்லை என பலவாறு நல்நெறியை முன்னிலையில் கூறுவதாக உள்ளமை நோக்குக] |
தகடூர் யாத்திரை | நீதித்திரட்டு | பெருந்தொகை | நச்சி. மேற்கோள் புறத்திரட்டு |
மேற்படி 17 | 1229 | 456 | 1241 |
மேற்படி 16 | 1207 | 458 | 1257 |
மேற்படி 55 | பெ.பொ.வி< | 460 | 1339 |
மேற்படி ? | < | 701 | மறக்காஞ்சி |
5 |
பொருது வடுபட்ட யாக்கை நாணிக் கொன்று முகம்தோய்ந்த எ•கம் தாங்கிச் சென்று களம்புக்க யானை தன்னொடு முன்மலைந்து மடிந்த ஓடா விடலை நடுகல் நெடுநிலை நோக்கி ஆங்குதன் புண்வாய் கிழித்தனன் புகழோன் அந்நிலை சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை அரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண இவன்போல் இந்நிலை பெறுகயான் எனவே. [ இஃது நச்சினார் உரை மேற்கோளில் சூத். 79 "பண்புற வரும் பகுதி நோக்கி" என வரும் அடிக்கான விளக்கத்தின் கீழ் காணப்படுகின்றது] தகடூர் யாத்திரை (மேற்படி 40); நீதித்திரட்டு 1375; பெருந்தொகை 702; நச்சி. மேற்கோள் தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 703 மூதின் முல்லை; நீதித்திரட்டு 1382 மூதின் மறம் |
6 |
குரங்கு மேனித் திரங்குமுகச் செதுமுலை நரைமூ தாட்டி வினவுதி யாயின் நும்மகன் கொல்லோ அறியேன் இம்மகன் கொற்ற வெண்குடை மன்னர்க் குதவி செஞ்சோற் றருங்கடன் வெஞ்சமத் தாற்றி களிறுதலை அடுத்து மாகால் நீட்டிப் பிளிறுகுரல் முரசம் மெத்தணை யாக பருந்தின் செறுநிழல் பந்தர் ஆக அழிபிணக் குன்றே வேலியாகக் கழுகுணக் கிடந்த காளை நும்மகன் கொல்லை நான் அறியேனே தகடூர் யாத்திரை=?; பெருந்தொகை 704மூதின் முல்லை; நீதித்திரட்டு 1383 மூதின் மறம் |
7 |
வாழிய துடிய வாழிய துடிய என்மகன் ஆர்த்தெறிந் தனனோ ஆர்த்தெறிந் தனனோ ஆர்த்தும் எறியான் எறிந்தும் அமரான் கையது வேலே காலது கழலே மெய்யது சினனே மேல்சென் றனனே வேந்தர் எல்லாம் தன்நோக் கினரே நோக்கி நோக்கான் முறுவலன் தாக்கித் தழீஇம் தாம்எனத் தண்ணுமை சுழித்தான் ஒள்வாள் வீழ்ந்தன களிறே |
தகடூர் யாத்திரை | நீதித்திரட்டு | பெருந்தொகை | நச்சி. மேற்கோள் புறத்திரட்டு |
மேற்படி 41 | 1378 | 705 | 1308 |
மேற்படி 42 | 1379 | 706 | |
மேற்படி 43 | 1380 | 707 | 1405 |
மேற்படி 44 | 1405 | 710 | 1438 |