கங்கையணிதீபங் கற்பூர தீபமலை மங்கயொருபங்கில் வளர்தீபம் - பங்கயன்மால் விண்பாரு நேடும்வண மேவியவண் ணாமலையிற் பண்பாருங் கார்த்திகைத்தீ பம். | (1) |
அன்ன மளிக்குந்தீப மண்டினரை யாதரித்துப் பொன்னு மளிக்குந்தீபம் பொற்றீப-மன்னு மராவணிநேர் காட்டுமெங்க ளண்ணா மலைமேற் பராவருங் கார்த்திகைத்தீ பம். | (2) |
மோகாந்த கார முறிந்தோடச் செய்தீப மோகாந்த மாவந் திடுந்தீப-மாகாந்த னாங்கார்ந்த தென்றுரைக்க வண்ணா மலைமுடிமேற் பாங்கார்த்த கார்த்திகைத்தீ பம் | (3) |
பந்துமுலைப்பாவையர்க்காம் பாங்காருங் கூடலிலே வந்து வளையல் விற்ற மாதீபங்-கொது மலர் மலியுஞ் சோண மலைத் தீபம்போற்றிப் பலர்மலியுங் கார்த்திகைத்தீ பம். | (4) |
இட்டவிதி சாப மிரிந்தோடப் போற்றிசைக்கு மற்ற வசுக்கட் கருடீபஞ்-சிட்டர் வதிதரு சீர்ச் சோண மலைத்தீப மெம்முட் பதிதருசீர்க் கார்த்திகைத்தீ பம். | (5) |
ஆதுலரா னீரென்றே யன்றொருசேய்க் காவழக்கு மாதுலரா வந்துரைத்த வண்டீபந்-தாதுலரா நந்தனஞ்செய் சூழுஞ்சோ ணாசலத்தி லன்பரன்பிற் பந்தனஞ்செய் கார்த்திகைத்தீ பம் | (6) |
நீடுகற்பி னாளுடன்வாழ் நீல்கண்டர் தம்மிடம்வந் தோடுகவர்ந்த தாண்ட வொருதீப - மாடுமயிற் கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப் பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். | (7) |
செங்கமல வேதா திலோர்த்தமையைப் பின்றுரத்த வங்களுக் காவேட னாந்தீபம் - திங்கடவழ் சோணமலைத் தீபமிகத் தோத்திரஞ்செய் தென்றுமுயர் சாணர்மகிழ் கார்த்திகைத்தீ பம் | (8) |
மண்ணிடந்துங் காணா மலரடியின் மாயவனார் கண்ணிடந்து சாத்திக் களிதீப-மெண்ணிறந்த கீர்த்திபெறுஞ் சோண கிரித்தீபந் தென்மதுரைப் பார்த்திபனாங் கார்த்திகைத்தீ பம். | (9) |
எல்லா வுலகு மிசைய வருச்சுனன்கை வில்லா லடியுண்ட மெய்த்தீப-பொல்லாக் கவிதீர்க்குந் தீபங் கனவருணைத் தீபம் பலியேற்குங் கார்த்திகைத்தீ பம். | (10) |
சீரார் சிறுத்தொண்டர் செல்வன் கறியுண்ணப் பேராரை வைத்த பெருங்தீபங்-காரா ரருணைகிரித் தீபமனத் தல்லும் பகலும் பருணிதர்பேற் கார்த்திகைத்தீ பம். | (11) |
உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங் கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்டீபம்-வெள்ளமதி மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற் பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். | (12) |
தொண்டர்க்குத் தோன்றாத் துணையான் தீபநல்ல வண்டர்க்கு மெட்டா வருட்டீபம்-வண்டமருந் தோடுடைய பூம்பொழில்சூழ் சோணமலைத் தீபநன்மேம் பாடுடைய கார்த்திகைத்தீ பம். | (13) |
வென்றுனே வன்புலனை வீட்டியுணர் கும்பமுனிக் கன்றுமணக் கோலமரு டீபஞ்-சென்றுவியன் விண்ணளக்குஞ் சோணகிரி மேற்றீப மன்பருக்குப் பண்ணளிக்குங் காத்திகைத்தீ பம். | (14) |
போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்-சாற்றுமறை யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம் பன்னரிய கார்த்திகைத்தீ பம். | (15) |
சிற்றம் பலத்திற் றிருகடனங்செய் தீபமன்பர் குற்றம் பலகுணமாக் கொள்தீப-மற்றந் துடைத்தருளுஞ் சோணமலைத் தோன்றியதீ பஞ்சீர் படைத்தருளுங் கார்த்திகைத்தீ பம் | (16) |
கஞ்சமலர்க் கண்ணனயன் காண்பரிய தீபமெனுள் வஞ்சமல மகற்றும் வான்றீப-நஞ்ச மயிலுமுயர் தீபமெழி றண்ணா மலைமேற் பயிலுமொரு கார்த்திகைத்தீ பம் | (17) |
அன்பருளத் தேயகலா வானந்த தீபம்பே ரின்பருளத் தோன்று மெழிற்றீபம்-வன்பருளத் துற்றறியா தீபம்வள மோங்குமரு ணாசலத்திற் பற்றகலாக் கார்த்திகைத்தீ பம். | (18) |
ஆலால் சுந்தரரை யன்றுமணந் தடுத்து மேலா வுவந்தாண்ட மெய்த்தீபம்-பாலாழி யோர்புதல்வ னுக்கருளி யோங்குமரு ணைத்தீபம் பார்புகழுங் கார்த்திகைத் தீபம். | (19) |
வாதவூ ரன்பர் மகிழப் பெருந்துறையிற் போதமளித்த புகழ்த்தீப-மேத மகலவருந் தீபமுய ரண்ணா மலையிற் பகலவனேர் கார்த்திகைத்தீ பம். | (20) |
முத்திக்கு வித்தா முளைத்தெழுந்த தீபமெழிற் சத்திக் கொருபால் தருதீப-மெத்திக்கு மார்த்துமிக்கு மன்புடனே யண்ணா மலைமீது பார்த்துவக்குக் கார்த்திகைத்தீ பம். | (21) |
போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசைக்கும் தீபம்விந்து நாதாந்த முங்கடந்த நற்றீபம்-வேதாந்தச் சித்திதருந் தீபந் திருவருணைத் தீபநல்ல பத்திதருங் கார்த்திகைத்தீ பம். | (22) |
பாணனுக்கோர் சத்துருவாம் பாடகனைக் கூடலிலே நாணமுற்றே டப்பாடு நற்றீபம்-பேணி யயனுமரி யுங்காணா வண்ணா மலையிற் பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். | (23) |
முத்திநெறி காணவென்று முன்னுமன்ப ருக்குமுன்னம் பத்திநெறி காட்டிப் படர்தீபச்-சத்திநெறி யோடுதவஞ் செய்யருணை யோங்கிதீ பம்பெரியோர் பாடுமெழிற் கார்த்திகைத்தீ பம். | (24) |
சத்தான தீபமுயர் சன்மார்க்க ருள்ளத்தி வித்தா முளைத்து மிளிர்த்தீப-முத்தான மோங்கு கரிக ளுலவுமரு ணாசலத்திற் பாங்குபெறுங் கார்த்திகைத்தீ பம். | (25) |
இன்பந்த தருதீப மேத்திப் பணிந்தோர்க டுன்பவிரு ளோட்டுஞ் சுடர்த்தீப-மன்ப ரவமறுக்குந் தீப மருணைவளர் தீபம் பவமறுக்குங் கார்த்திகைத்தீ பம். | (26) |
அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீப-மெஞ்ஞான்றுஞ் சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும் பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். | (27) |
நட்டம் புரிதீப நல்லடியார் தங்கள்கொடுங் கட்டங்களையே களைதீப-மட்ட திசைமேவு மெங்கடிருவருணைத் தீபம் பசைமேவுங் கார்த்திகைத்தீ பம் | (28) |
நாடியடி யார்ப்பரவு ஞானதீ பம்மறைக்கு நேடி யரியா நெறித்தீப-நீடுந் திருவருணைத் தீபந் தினமமரர் போற்றிப் பருவரல்தீர் கார்த்திகைத்தீ பம். | (29) |
நாலா ரணமு நவிலரிய ஞானமெனு மேலான போகம் விளைதீப-மாலால் முண்டமரர் தங்களிட ரோட்டருணைத் தீபமன்பாய் பண்டமருங் கார்த்திகைத்தீ பம். | (30) |
சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங் கன்மவினை போக்குங் கனதீப-மன்பதனை யங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம் பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். | (31) |
மாமறைக்கு மெட்டா மணித்தீப மேழைகட்குச் சேமமளித் துக்காக்குஞ் சீர்த்தீபந்-தாமரையு நத்துமெளிர் வண்சுனைச் சோணாசல தீபந்திசைகள் பத்துமொளிர் கார்த்திகைத்தீ பம். | (32) |
கற்றைச் சடைமுனிவர் காண்டீப மாரூரிற் புற்றையிடங் கொண்டுறையும் பொற்றீப-மொற்றைத் தவளவநத் தந்தனைமுன் றந்த வருணைப் பவளவநக் கார்த்திகைத்தீ பம். | (33) |
மன்னு மிளசைநகர் மாறன் முளைவாரி யன்னமிடைச் சேவை யருடீபம்-வன்னச் சிகரநெடுங் கோபுரஞ்சேர் தென்னருணைத்தீபம் பகரமிகுங் கார்த்திகைத்தீ பம். | (34) |
நாவுக்கு வேந்து நமச்சிவா யப்பதிகப் பாவுக்குக் கன்மிதக்கப் பண்டீபம்-வாவித் கயன்மேய்க் கமுகுடைக்குங் காமரரு ணைக்கோன் பயன்மேவுங் கார்த்திகைத்தீ பம். | (35) |
சிந்தைக் கலக்கந் தெளிவிக்குந் தீபந்தாய் தந்தைக் கிணையாகச் சார்தீபம்-விந்தை மதினிலவுக் காறா வளரு மருணைப் பதிநிலவுங் கார்த்திகைத்தீ பம். | (36) |
மன்னுயிர்கட் கோருயிரா வந்தருளுந் தீபமறை யுன்னுதற்கு மெட்டாத வோர்தீபம்-பொன்னுலகைக் கீழாக்குஞ் சோணகிரித் தீபம் வெவ்வினையைப் பாழாக்குங் கார்த்திகைத்தீ பம். | (37) |
மூவருக்கு ளாதி முதலான தீபமுயர் தேவருக்குங் காண்பரிய சீர்த்தீப-மேவருவி யாலிக்குஞ் சோணமலை யார்ந்தசெழுந் தீபமின்பம் பாலிக்குங் கார்த்திகைத்தீ பம். | (38) |
கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர் தந்தனையுஞ் சேயாத் தருதீப-மெந்தமைக்க ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப் பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். | (39) |
வேலனைநேர் மார்க்கண்டேயர் மேவுசிவ பூசைக்காக் காலணையு தைத்த கனதீபம்-கோல விதுமகிழுஞ் சோணகிரி வேணுவின்மேற் சூடும் பதுமநிகர் கார்த்திகைத்தீ பம். | (40) |
தக்கனுக்கு மேடத் தலையளித்த தீபமென்று நக்கனெனப் பேர்படைத்த தற்றீப-மிக்க விருப்பதனாற் சார்ந்தார் வினைதீர்க்குஞ் சோணப் பருப்பதஞ்சேர் கார்த்திகைத்தீ பம். | (41) |
கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க் குற்றதுணையா வுறுதீபஞ்-சொற்றகதிக் கேணிநிகர் சோணகிரி யேர்முடிமே லஞ்சலெனும் பணிநிகர் கார்த்திகைத்தீ பம். | (42) |
பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான் பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்-விண்ணுடனே சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப் பாரமலைக் கார்த்திகைத்தீ பம். | (43) |
தந்தைதிருத் தாடடிந்த சண்டே சுரருக்குச் சிந்தைமகிழ் தீபஞ் செழுந்தீப-முந்தை யொருமுடிவில் லாமலுய ரருணை வெற்பின் பருமுடியிற் கார்த்திகைத் தீபம். | (44) |
பஞ்சாக் கரத்தைமிக்கு பத்தியுட னுன்னுணர்க்கு விஞ்சாக்க மாக மிளிர்தீப-மஞ்சார்க்கச் சிஙகமுழை விட்டகலாத் தென்னருணை வெற்புறுமோர் பங்கதழ்வாங் கார்த்திகைத் தீபம். | (45) |
பந்தவினைப் பாசத்திற் பட்டுழலும் பாதகனேன் மந்தமதி நீக்கும் வண்டீபஞ்-சந்ததமுங் கொக்குமிசை நற்குயில்கள் கூவருணைத் தீபமுயர் பக்குவர்காண் கார்த்திகைத் தீபம். | (46) |
ஏதம் பெரிதுடையே னேத்துந்தீ பஞ்சாம் வேதம் பெரிதும் விழைதீபங்-கேதம் புலிக்குங்கோ விக்குமிலாப் பொன்னருணை வெற்பிற் பலிக்குஞ்சீர்க் கார்த்திகைத் தீபம். | (47) |
வன்னிமதி சென்னிமிசை வைத்தருளுந் தீபமறை பன்னி மதிக்கப் படாத்தீபங்-கன்னிமதிற் சூரியற்கு மேலுயருஞ் சோணமலை மீதுவளர் பாரிநற் கார்த்திகைத் தீபம். | (48) |
ஆர்த்துவந்தி டுங்கொடுங்க யாசுரணை யன்றெருநா னீர்த்துரித்துப் போர்த்த வெழிற்றீபம்-பார்த்துரைக்க வொண்ணாத சோணகிரி யோங்கியதீ பங்கோபம் பண்ணாத கார்த்திகைத் தீபம். | (49) |
பொய்வசமாம் வஞ்சமனம் போமழியா மூவர்களாற் சைவசமயந் தருதீபந்-தெய்வ முனிவர்நித்த முண்மகிழ்ந்து மெய்யருணை சார்ந்தார் பணியகற்றுங் கார்த்திகைத் தீபம். | (50) |
பாரருந்தி னோன்றுதித்தல் பண்டீபம் வாவிகரை சீரிருந்தி யேறக் கிளர்தீப-நீரருந்திச் சீவனஞ்செய் மாதவர்வாழ் தென்னருணைத் தீபமெம்மைப் பாவனஞ்செய் கார்த்திகைத் தீபம். | (51) |
தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை கூருகிரினா லுரித்துக் கொள்தீப-மேருமுக லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமரு ணாசலத்திற் பாங்குமலி கார்த்திகைத் தீபம். | (52) |
நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற் சென்றுரச வாதமது செய்தீபங்-கன்றுகளுக் கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப் பம்பிவளர் கார்த்திகைத் தீபம். | (53) |
மாயப் பசுவமணர் மாமதுரைக் கேவவதை வீயச்சமர்செய்விடைத்தீப-நேயமா னீராட் டுவனேர்க்கார் நீள்சோண வெற்பிலன்பர் பாராட்டுங் கார்த்திகைத் தீபம். | (54) |
போதனந்த ரத்தவரும் போற்றுந் தீபங்கொடியேன் கோதனந்த மும்பொறுத்துக் கொள்தீப-நாதனண்டந் தாங்கனிகர் பண்டுபலாத் தாங்கிவளர் சோணமலைப் பாங்கமருங் கார்த்திகைத்தீ பம். | (55) |
பொன்புரையுஞ் செம்மேனிப் புண்ணியதீ பஞ்சிறிய வென்புரைமுற் றுந்தீர்த் திடுந்தீப-மன்புரைகொண் டேத்தியமாத் தொடண்டர்களுக் கென்றுமரு ணாசலத்திற் பார்த்தியபாங் கார்த்திகைத்தீ பம். | (56) |
பாவிகளும் வந்தேத்திடப் பார்த்துப் பணிவாரேன் மேவிவினை தீர்த்தருளு மெய்த்தீபம்-தேவிமுலை தீட்டுதொய்ய னேர்மயில்சேர் கென்னருளை வெற்பிலன்பர் பாட்டுவக்குங் கார்த்திகைத்தீ பம். | (57) |
சோமனைக் காருண்ணியமாச் சூடுந்தீ பங்கொடிய வேமனைக்கால் கொண்டோச் செழிற்றீபந்-தாமரைக ணெற்றிவளர் கண்போல நீளுமரு ணாசலத்திற் பற்றிவளர் கார்த்திகைத்தீ பம். | (58) |
கோளுங் கொலையுங் குடிகெடுப்பு மாணவமு நீளுமவர்க் கெட்டாது நீடிப-நாளுந் திடமிக்குஞ் சோணமலைச் சென்னிவளர் நாகப் படமொக்குங் கார்த்திகைத்தீ பம். | (59) |
தில்லையம்ப லத்திற் றிருநடனஞ் செய்தீப மொல்லையினி லின்பமுத வுந்தீப-மெல்லை யிலாண்டுதவஞ் செய்தவரா லேரருணை வெற்பிற் பல்லாண்டுபெறுங் கார்த்திகைத்தீ பம். | (60) |
ஆணிப்பொன் மேருவில்லா வம்பரியாச் சேடனையே நாணியெனக் கொண்டூர் நகைத்தீபம்-வேணி விழுதிலா ரத்தவர்கண் மேவருணை வெற்பிற் பழுதிலாக் கார்த்திகைத்தீ பம். | (61) |
மின்னார் மணியரவும் வெண்மதியு நேசிக்கப் பொன்னார் சடைமேற் புணைதீப-நன்னாரி பூரிக்குங் கும்பமுலை போலோங்குஞ் சோணமலைப் பாரிக்குங் கார்த்திகைத்தீ பம். | (62) |
பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ் சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்-செந்நெற் கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். | (63) |
பாகத் துமையும் படர்சடைமேற் சானவியு மோகத் துடன்வாழ் முதிர்-தீபமேகத் துழனிமிக்கார் சோணமலைத் தூய்முடிமேன் ஞானப் பழநிகர்க்குங் கார்த்திகைத்தீ பம். | (64) |
பொல்லா மலவிருட்டைப் போக்குந்தீ பம்புவன மெல்லாந்தா மாகு மெழிற்றீபம்-வல்லாளன் மைந்தனென வந்த மகிமையரு ணாசலத்திற் பந்தமிகுங் கார்த்திகைத்தீ பம். | (65) |
எங்கெங்கே யன்பரிருந் தெவ்வாறு வேண்டுகினு மங்கங்கே யவ்வா றருடீபஞ்-சிங்கக்கேட் டஞ்சமுகட் டார்ந்துமுகி லார்க்குமரு ணாசலத்திற் பஞ்சமுகக் கார்த்திகைத்தீ பம். | (66) |
எட்டுமிரண் டுந்தெரியா வேழையே மென்பாருட் கட்டுப்பட் டோங்குங் கனதீப-மட்டிலா மேன்மைதரு சோணகிரிமேவும்பிறைக் கொழுந்தின் பான்மைதரு கார்த்திகைத்தீ பம். | (67) |
கங்கைதனை யேவியெழிற் கம்பாநதியிலுமை கொங்கை வலைத்தழும்பு கொள்தீபஞ்-சங்கையிலாப் புங்கவர்சேர் சோணகிரிப் பொற்சடையாற் றீற்பூதப் பங்கயநேர் கார்த்திகைத்தீ பம். | (68) |
செம்மையடி யார்பூசை செய்துவந்த காரைக்கா லம்மைக்கா லங்காட் டருடீபம்-வெம்மை யரிகரிக்கு மில்லா வருணையடைந் தார்நோய் பரிகரிக்குங் கார்த்திகைத்தீ பம். | (69) |
காணரிய மெய்ஞ்ஞானக் காட்சியரு டீபமன்பர் வேணவரந் தந்தருளு மெய்த்தீபஞ்-சோண கிரிமுடிக்கண் மேவியொளி கேழ்புவன முற்றும் பரிமளிக்குங் கார்த்திகைத்தீ பம். | (70) |
பாண்டுமகன் வில்லாற் பரிந்தடிக்கப் பாசுபத மாண்டுமையோ டெய்தி யருடீப-நீண்டு விசும்புருவு சோணகிரி வெந்தழலி ளிட்ட பசும்பொனிகர் கார்த்திகைத்தீ பம். | (71) |
பன்னற் கரியசெழும் பச்சைப் பவளமென வன்னமிரண்டா வளர்தீபந்-தென்னருணை வெற்பரனும் வெந்தழலின் வெந்திட்ட வெண்கட்டிப் பற்பநிகர் கார்த்திகைத்தீ பம். | (72) |
மான்மேற் புலிபோல் வருமிடரெல் லாம்போக்கி பானமே லிவர்ந்தெனைவந் தாடீப-மேன்மை பணிகொ ளருணாசலமா மம்புயமே லுற்ற பணிலநிகர் கார்த்திகைத்தீ பம். | (73) |
தேடரிய தீபஞ் சிதம்பரத்தி லாலெடுத்து நாடறியப் பேர்படைத்த நற்றீப-நீடக் கசியார்க் குவக்காக் கனவருணை சார்ந்தார் பசிதீர்க்குங் கார்த்திகைத்தீ பம். | (74) |
சாகையுடன் சாத்திரமுஞ் சாற்றரிய பல்கலையு மாகமபு ராணமுத லாந்தீபந்-தேகப் பிணியகல வந்தெவரும் பேசிமகிழ்ந் தேத்திப் பணியருணை கார்த்திகைத்தீ பம். | (75) |
துப்பற்ற வென்னையுமோர் தொண்டாகக் கொள்தீபந் தப்பற்ற சேவை தருதீப-மொப்பற்ற வட்டாங்க யோகிகள்வாழ் வார்ந்தவரு ணாசலத்திற் பட்டாங் கார்த்திகைத்தீ பம். | (76) |
தூர்த்தவடி வாய்வந்து தோரா வியற்பகையார் சீர்த்தவில் லாளைக்கொண்டு செல்தீபந்-தீர்த்த நலனாகுஞ் சோணமலை நாடுனர்க்குக் கிட்டும் பலனாகுங் கார்த்திகைத்தீ பம். | (77) |
கொக்கிற்கும் வெள்ளெருக்குங் கோணாகலாமதியு மக்கு மணியு மணிதீப-மிக்க வரிசைநிற்ற சோணகிரி வாழ்த் துநர்க்கு வேண்டும் பரிசளிக்குங் கார்த்திகைத்தீ பம். | (78) |
இக்கடன்ஞா லத்தி லிறப்புப் பிறப்பென்னுந் துக்கமுறு வோற்கருளுந் தூய்தீப-மிக்க திருமணிசேர் சோணமலைச் செம்மலரின் முத்தின் பருமணிநேர் கார்த்திகைத்தீ பம். | (79) |
மான்மீ னிகர்த்தவிழி மாதரார் மையலுற்ற நான் மீளக் காண்பார்க்கு நற்றீபம்-வான்மீ னுதிர்ந்ததென வேய்முத் தொளிர்சோண வெற்பிற் பதிந்ததிருக் கார்த்திகைத்தீ பம். | (80) |
தீங்கினில்வீ ழாதடியார் சீராரு முத்தியெனும் பாங்கினிலே செல்லப் பகர்தீப-முங்கின்மதி சத்திரமேந் துங்காம்பாத் தானோங்குஞ் சோணவெற்பிற் பத்திரமாங் கார்த்திகைத்தீ பம். | (81) |
பந்தத் தொடக்கைப் பரிகரிக்குந் தீபநிதம் வந்தடியே னுள்ளம் வதிதீப-மிந்தத் தரணிபணி சோணா சலமிடியினல்ல பரணிவரு கார்த்திகைத்தீ பம். | (82) |
கானகவே டன்றனலிற் காய்ச்சியெடுத் துண்டீந்த ஊனக மகிழ்ந்தினிதென் றுண்டீப-மான சராசரமும் போற்றுந் தனியருணை வெற்பிற் பராபரமாங் கார்த்திகைத்தீ பம். | (83) |
காசிமன்னன் றன்னைக் கவியாக்கிப் பின்பவன்சீர் மாசிலுரு வந்தந்த வண்டீபங்-காசினிமீ னாற்றுதவம் போலாங் கருணைவள ரன்பர்வினை பாற்றுமெழிற் கார்த்திகைத்தீ பம். | (84) |
கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ் சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்-கொல்லா விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற் பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். | (85) |
மெச்சிநக ராசமகள் வேண்டுநல்ல கம்பனெனக் கச்சிநகர் வாழுங் கனதீபம்-கொச்சையெயின் மாமகளிர் வண்டன் மகிழருணை தன்னிலன்பன் பாமருவுங் கார்த்திகைத்தீ பம். | (86) |
ஆனஞ் சாடுந்தீப மன்பர் பிறப்பிறப்பா மூனஞ் சாடுந்தீப மொண்டீபம்-வானஞ் செவித்திர வெல்லும்போற்றிச் சேரருணை வெற்பிற் பவித்திரமாங் கார்த்திகைத்தீ பம். | (87) |
கேட்டவர மெல்லாங் கேடுபடமற்கொடுத்தே நாட்டமுட னாண்டருளு நற்றீபம்-வாட்டமில்லாப் புள்ளிசேர் மான்கள் பொலியருணை கண்டுகடற் பள்ளிதாழ் கார்த்திகைத்தீ பம். | (88) |
மானாய கன்னியுடன் மால்விடைமேல் வேய்ங்குழல்கேட் டானாயர் முன்வந் தருடீபம்-வானார் தருவதினி லுஞ்சிறந்த தாருவளர் சோணிப் பருவதம்வாழ் கார்த்திகைத்தீ பம். | (89) |
ஏறி வருந்தீப மேத்துமவர் வல்வினையை றூறி வருந்தீப நோன்றீபஞ்-சீறிவரு மஞ்சிபமா வுற்றறிகாண் மாவருணை வெற்பினிலின் பஞ்சிறந்த கார்த்திகைத்தீ பம். | (90) |
பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார் தாம்பணியுந் தீபந் தனித்தீப-மாம்பல் விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற் பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். | (91) |
நன்களிக்குந் தீப நவிலருமுண் ணாமுலையா மின்களிக்குந் தீபம் விழை தீபம்-வன்களிறு தண்ணருவி பெட்டையுடன் றணாடுஞ் சோணாவெற்பிற் பண்ணவர்தேர் கார்த்திகைத்தீ பம். | (92) |
மங்களஞ்சேர் தீபமொரு மாசடையா மாசடையிற் றிங்களஞ்சேர் தீபந் திருத்தீபம்-வேங்களுஞ்சேர் மாலுமிரு வர்க்கரிதா மன்னருணை வெற்பிடைவிண் பாலுயருங் கார்த்திகைத்தீ பம். | (93) |
பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ ராதார மாகி யருடீபம்-போதாருங் கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென் பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். | (94) |
சங்கரிக்கோர் பங்குத் தகையுடனே மற்றையொரு பங்கரிக்கும் மாகப் பகிர்தீபம்-வெங்கரித்தோல் போத்ததென மங்குல் பொலியருணை வெற்பிலன்பர் பார்த்தருள்சேர் கார்த்திகைத்தீ பம். | (95) |
ஆணிப்பொன் னம்பலத்தி லாடுந்தீபம் பொல்லா மாணிக்க தீபமகி மைத்தீபம்-வேணிக்க ணீராருந் தீபமொழி னீடுமரு ணாசலத்திற் பாராருங் கார்த்திகைத்தீ பம். | (96) |
அந்தச்சிராங்கதனை யச்சுவத்தின் கீழ்வருத்திப் பிந்தவ னேத்தவருள் பெய்தீபம்-வந்தார்க் குதவிசெய்வோ மென்றருணை புற்றடியார் வேண்டும் பதவிதருங் கார்த்திகைத்தீ பம். | (976) |
பண்டுபுள காசுரனைப் பாவந் தவிர்த்தாண்டு கொண்டுவகை கூர்த்த குணதீபந்-தொண்டு கரவிலா மற்செய்வார் காணருணை வெற்பிற் பரவிவாழ் கார்த்திகைத்தீ பம். | (98) |
சிந்தா மணிகாம தேனு பதுமநிதி யுந்தாழ்ந் தவக்கருள்செ யுந்தீப-நந்தா வியப்புள்ள சோணமலை மேற்றிய நல்ல பயப்புள்ள கார்த்திகைத்தீ பம். | (99) |
புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல் சித்தீதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக் குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப் பயிராகுங் கார்த்திகைத்தீ பம். | (100) |
வாழி வான்வாழி மண்வாழி மன்னவனும் வாழியுய சோபனவண் ணாமலையுந் தூயதிருக் கார்த்திகை நற்றீபமும் வாழி சிறந்து. |