(மேகத்தின் சிறப்பு) பொன்பூத்த தண்ணம் புயல்பூத்த பூங்கமல மின்பூத்த சோதி மிளிர்மார்பா!-கொன்பூத்த நேமி சுடராய் நிலாவளை பான்மதியாய் பூமடந்தை மின்னுருவாய் பூவைநிறங்-காமர் புயல்முகந்த காவிப் புதுநிறமாய் பொன்நாண் இயல்முகந்த வில்லி னியல்பாய்-செயல்முகந்த மேகமே! எல்லா வுயிர்க்குமொரு வித்தாகத் தாகமே தீர்க்கும் தருமமே!-நாகத்துக் கொண்மூவே! விண்ணாடர் கண்டுதொழுங் தகைய எண்மூவர் தங்களுக்கு மேற்றமே!-தண்மூடு | 5 |
மஞ்சே! குழற்குவமை வாய்ந்து தலைக்கொண்டே செஞ்சொல் விளிமாஏர் செல்வமே!-எஞ்சாத கொண்டலே! கொண்தண்டார் குறித்தநா ளின்றளவும் உண்டலே! ....... வுருகினேன்-தண்டாத மையே! மணவைமால் மாலழித்த நாளளவு மெய்யே! உருகிவெதும் பினேன்-பெய்யு மழையே! உலக மகிழ்விப்ப தன்றிப் பிழையேதுஞ் செய்யாத பேறே!-குழையும் எழிலியே! வானி லெழுந்துதிக்குந் திங்கள் அழலியே வீழ்ந்த மெழுகானேன்-பழியாத | 10 |
காரே! புவிக்குதவுங் கற்பகமே! நின்னையல்லால் யாரே என்னாவிக் கிரங்குவோர்?-சேருங் குயினே! இளவுகமாய்க் கூடா திருக்கண் டுயினேர் வொருமாற்றஞ் சொல்லாய்!-பயமுடைய கந்தரமே! என்போல்வார் காதல் சுமந்திருப்ப தந்தரமே யாகுமால் பிந்தாத-வண்டுவே! ஏழிசையாம் வெவ்விடத்தை வாய்தோறு முண்டு வேயவே கக்குவது முண்மைகாண்!-தண்டாத மங்குலே! தண்டுளப மாலைபெறா நாளெனக்கோர் கங்குலே யூழியுகங் காட்டுங்காண்!-சிங்காத | 15 |
மாலே! மணவை வருமாய னீங்காத காலேக வண்ணத்தைக் காடலோய்-நீலநிறச் செல்லே! அருள்சுரக்குந் தெய்வமே! மையல்வேள் வில்லே! கொடுங்கூற்றை வெல்லுங்காண்-நல்ல கனமே! இரங்காமற் காதலிக்குஞ் சுற்றந் தினமே பகைத்தா லென்செய்வேன்?-புனல்முகந்த சீதமே! வெண்ணிலவில் தேம்பித் தினந்தினமும் ஏதமே கூறாது ரட்சிப்பாய்!-நீதி முகிலே! துயர்தணிப்பான் முன்னுவாய் மின்னார் அகிலேறுங் கூந்தற் கணியே!-செகதலத்தோர் | 20 |
காமப் பிணிதீர் கட்டுரைக்குந் தூதுசென்றோர் மாமத்தை நாடா நவிலுங்கால்-நேமியங்கை மையாழி வண்ணன் வருபாண் டவர்விடுப்பப் பொய்யாது போனதுவும் பொய்யாமோ?-மையலார் பாதிமதி வேணி பாவைக்குஞ் சங்கிலிக்குந் தூது நடந்ததுவுஞ் சொல்லாரோ?-சீதைபால் அன்றனுமன் தென்னிலங்கைக் காழி கடந்தகதை இன்றளவு மண்மே லிசையன்றோ!-வன்றிறல்சேர் தென்நிடத வேந்தர்கோன் தேவர்கோன் தூதாக முன்நடந்த தின்னும் மொழியன்றோ!-மன்னளவோ | 25 |
மாகா வியங்கடொறு மன்னவர்தூ திற்பிரிதல் போகா வெழுத்தின் பொறியன்றோ!-நீகாதல் கொண்டார் வரவு குலமகட்குக் கூறியதும் எண்டா ரணிக்கு ளிசையன்றோ!-பண்டிவர்போல் தூது நடந்தவரைச் சொல்லப் பலருண்டு சீத முகிலே!யென் செல்வமே!-ஆதலால் என்பால் நிறையும் எழிலும் மடநாணுந் தன்பாற் கவர்ந்தானைச் சாற்றக்கேள்!-தென்பால் (தசாங்கங்கள்) (மலை) வடவரை யீதென்ன வயங்கியு முங்கட்கு இடமெனவே கண்டுயிலுக் கேய்ந்துங்-கடகளிறும் | 30 |
கோளரியுங் கொல்புலியுஞ் சாரங்கமு மதியும் வாளரவு மொன்றி மறங்கூறா-தாளுநறுஞ் சந்தனமும் காரகிலும் கோங்குந் தகரமுஞ் சிந்தூரமும் சாதிச் சிறுதேக்குங்-கொந்தவிழ்நன் காகமும் செண்பகமும் நற்கதலி யுந்தாற்றுப் பூகமு மாகப் புயறடவி-மோகிக்கும் பொன்னும் புதுமணியுந் தண்டமிழுங் கொண்டருவி மன்னும் பொதியவரை மீனான்-புன்னாகப் (நதி) போதுங் கரிக்கோடு பூங்கவரி யும்புதுப்பூந் தாது மகிற்குறடுஞ் சந்தனமும்-மோதுந் | 35 |
திரைதோறுந் தெண்ணீர்ச் சிறைதோறு மேறுங் கரைதோறுங் கால்தோறுங் கான்று-நிரைநிரையே தூர்க்குங் கடவுட் சுரநதிபோ லெஞ்ஞான்றும் ஆர்க்குந் திரைப் பொருனை யாற்றினான்-வார்க்கோலக் (நாடு) கொங்கைத் தரளநகைக் கோதையர்பூ கத்ததிக மங்கைவடந் தோட்டூச லாடியுந்-துங்கக் குயிலோடு கூவியுங் கோலக் குடு மயிலோடு மாடி மகிழ்ந்தும்-பயிலுநறுந் தண்டலையும் வாவித் தடமுந் தடமலர்மேல் வண்டலையுந் தேமா வனநிரையுங்-கொண்டாடும் | 40 |
இடலமுக மலருந் தரளைக் குழாமும் மடலவிழும் பூக வனமும்-குடவளையின் ஆரமும் சென்னலணி தாளமுங் கரும்பிற் சேரு மணியுஞ் செற்றிவாம்பில்-ஆர வயலி லயலோடும் வாய்க்காலில் மள்ளர் செயல்புரியுஞ் சாலிற் றிகழக்-கயலுகழச் செந்தா மரைமலருந் தெண்ணீர்ப் பழனவளம் நந்தாத சீவலவ நாட்டினான்-பந்தைப் (ஊர்) பழிக்கும் படாமுலையா ராடங்கும் வேதம் கொழிக்குந் தமிழோர் குழாமும்-பழிப்பில்லா | 45 |
வேதம் பலபகரும் வேதியரும் மென்னரம்பின் நாதம் பலபகரும் நாட்டியருங்-கோதிலாத் தாளாண்மை மன்னர் தனிச்செல்வம் போன்றதொழில் வேளாளர் சூழ்ந்திருக்கும் வீதியும்-வானொளிசேர் மாட மறுகும் மறுகுதொறும் முத்தமிழ்நூல் பாட லிசைகழகப் பந்தியுங்-கூடித் திகழும் பெருவளத்தாற் சேமப்பொன் நாடென்னப் புகழும் மணவர் புரியான்-பகையரண் (யானை) நீறுபட வெகுண்டு நேரிலா நின்றதிரத் தாறுபடு மதமா லானையான்-மாறாமல் | 50 |
(குதிரை) ஆயும் ஒருநான்கு வேதமணி தாளாய் பாயுந் திறல்வாம் பரியினான்-காயுலகலிற் (முரசு) தெம்முறை கெட்டோட செழுந்தேவர் கைகுவிப்ப மும்முறைநின் றார்க்கும் முரசினான்-வெம்மைக்கா (கொடி) மோட்டரவ மாயெட்டு முழுமேனிக் காரமெனக் கோட்டுங் கருடக் கொடியினான்-பாட்டளியின் (மாலை) பண்ணார் தாமரையாள் பாயலென வீற்றிருக்குந் தண்ணார் வண்டுளபத் தாமத்தான்-விண்ணாடர் ((ஆணை) ஓது கலையு மொழிந்த பலகலையும் ஆதிமறை யுத்துதிக்கு மாணையினான்-சோதி | 55 |
(திருமால் வடிவங்கள்) உருவாய் உருத்தோறு முண்மையாய்த் தோன்றா வருவாய் ஓரணு வாகித்-தெருளாய் ஒளியா யொளிமயமாய் உற்றுணர்ந்தோர்க் கெட்டா வெளியாய் வெளிக்குளோ ருயிரன்னாய்-வளியாய்க் கனலாய் விசும்பாய் காசினியில் நீண்ட புனலாய் மணங்கமழும் போதாய்த்-தினகரனும் விண்மதியு மாயுயர்ந்த வெற்பாய் சராசரமாய்க் கண்மதிக்க வொட்டாதக் காந்தியாய் - உண்மதிக்கும் அண்டமாய் அண்டத் தடுக்காய் அதிலுறையும் பிண்டமாய்ப் பேதாதி பேதமாய்க்-கொண்டதோர் | 60 |
ஆணா யலியா யழகுதிகழ்ந் தொளிருங் கோணாதப் பெண்ணுருவின் கோலமாய்-மாணமைந்த வேதமா யெண்ணிறந்த வேதண்டத் துச்சியின்மேல் ஆதரமாய் மற்றுமோ ராதியாய்க்-கோதிலா மூலமா யீறாய் நடுவாய் முருக்கியபேர் ஆலமா யுண்ணு மமுதாகி-ஞாலம் படைத்து மளித்தும் படைத்தவெல் லாமீளத் துடைத்தும் விளையாடித் தோன்றிக்-கடற்றலையின் மீனமாய்க் கூர்மமாய் மேதினியைக் கீண்டகோட்டு ஏனமா யாளரியா யீன்றாளுந்-தானிகனாம் | 55 |
வாமனமாய் வில்லுமழு வும்வலமுங் கைக்கொண்டி ராமவுரு மூன்றா யிகல்புரியுங்-கோமளஞ்சேர் கண்ணர் பிரானுமாய்க் கல்கியுமாய் மேனாளில் வண்ண மெடுக்கும் வடிவினான்-தண்ணார்ந்த (திருமால் வைகுந் தலங்கள்) பொன்னி நடுவுட் புளினத் தரங்கத்து மன்னுந் திருக்குடந்தை மானதரிற்-றென்னாட்டு அனந்தாப் புரியிலவர் நட்டாற் றிடையிலன்பிற் கனந்தா வுகாற்கரையிற் கஞ்சத்-தினந்தழையுந் தென்புலி யூரிற் றிருவைகுந் தாபுரியில் பொன்பொலியு மாடப் புளிங்குடியில்-நன்கமைந்த | 70 |
தங்காவில் மேவுகுழந் தாபுரியில் வெள்ளரையில் கொங்காருஞ் சோலைக் குறுங்குடியில்-மங்காத நாவாயிற் கோளூரில் நாகை நகரில் பூவார் கனமங்கைப் பொன்நகரில்-மேவியே நின்று மிருந்துங் கிடந்துநிலை பேறாகி என்றும் பயிலுமியல் தக்குபுபொற்-குன்றில் வருவேங் கடத்துரையு மாய விதுதென் திருவேங் கடமெனத் தேர்ந்து-தருவோங்கு சோலைத் தமிழ்மணவைத் தொன்நகரத் தோர்தவத்தால் ஞாலத் தவர்துதிக்க நண்ணினோன்-மேலொருநாள் | 75 |
திருமாலின் சிறப்பியல்பு ஆர்க்குங் கடல்புவன மெல்லா மணிவயிற்றில் காக்குந் திருவேங் கடநாதன்-மேக்குயர்ந்த பண்டை யிலங்கைப் பதிக்கேத வாரியணை கண்ட திருவேங் கடநாதன்-அண்டர்பிரான் நீட்டும் பழிசுமந்த கல்லுருவை யேந்திழையாய்க் காட்டுந் திருவேங் கடநாதன்-தோட்டிய நாலு கடல்புவியு முண்டு நறுங்கனிவாய்க் காலுந் திருவேங் கடநாதன்-நீலநிறக் கண்ணன் சிறைவண்டு கட்டவிழ்க்குங் காயாம்பூ வண்ணன் கரியமணி வண்ணன்-விண்ணவர்கோன் | 80 |
வாய்முலைப்பால் வைத்தவள்தன் மன்னுயிரோ டுங்கொடிய பேய்முலைப்பால் உண்ட பெருவாயன்-வேயிசையால் ஆக்குவிய வெற்பேந்தி யண்டர்கோன் கன்மாரி போக்குவித்த தண்டுழாய்ப் பூந்தாமன்-தேக்குகடல் ஆலமென முதலை யன்றடர்த்தப் போதுகைமா மூலமென வோடி முன்வந்தோன்-நீலக் கடல்சிவப்பத் தாமரைப்பூங் கண்சிவப்ப விற்கொண்டு அடல்சிவக்குந் திண்டோள் அபயன்-மடலெடுத்தப் பூந்துழாய்க் கோதை புதுவா புரிக்கோதை சாந்துழாவும் பொற்றடங் கொங்கை-மோந்து | 85 |
முயங்கக் கிடையாதால் மொய்குழலிற் சூட்டித் தயங்கக் களைந்த பூந்தாமம்-வயங்கும் இடந்தோறுந் தேடி யெடுத்ததனைச் செங்காட்டுத் தடந்தோறும் தோள்தோறும் சாத்தி-நடம்புரியுங் கூத்தன் குடக்கூத்தன் கோபாலன் பூபாலன் பார்த்தன் தடந்தேர்ப் பரிபாகன்-ஏத்துந் ததிபாண்டு வின்கைத் தலத்தில் அகப்பட்டு மதியாத வந்தாமம் வைத்தோன்-புதியதமிழ்ப் பாமாலை ஒன்பதிமர் பாடலுந் தென்புதுவை பூமாலைக் கோதை புனைதமிழும்-ஓம | 90 |
முனிவோர் மொழிந்த முதுமொழியும் வேதந் தனியோதி யம்முறைமை தானுங்-கனியவே ஒண்மாடக் கூடப் பொருனைத் துறைக்குருகை நன்மா நகரில் நயந்தழைவா!-முன்மால் உருக்கொண் டுதையவன்போ லுற்பவித்த மாறன் மருக்கொண்ட தண்ணிலஞ்சி மார்பன்-இருக்குமுதல் வேதவுப நிடதமெய் ஞானத் துட்பொருளை ஆதிமுறை நூற்பஞ்ச வதிகாரத்-தோதுந் திருவாய் மொழியெனுமத் தெள்ளமுதுக் காகத் தருவாக நின்று தயங்கும்-உரக | 95 |
புளிக்கா வணநிழற்கீழ் புத்தேளி ரோடும் அளிக்கால் இமிர்துழாய் ஆடும்-வளைப்புயங்கள் தம்மின் நெருங்கத் தனியே நெருக்குண்டு மும்மைத் தமிழ்புனைந்த மூதுணர்வோன்!-கைம்மாவின் கோடுஞ் சகடுங் கொடும்புரியும் பைப்பாம்பும் ஓடும் படியடக்கு முள்ளத்தான்!-பாடியே அன்று ஆநிரைப்பின் அயர்ந்தோன்! கவடுபடுங் கன்றால் விளவின் கனிவீழ்த்-தொன்றுரல்வாய் நண்ணிக் குடத்தயிர்பால் நாடிக் குடத்தியர்கைக் கண்ணிச் சிவதாபாற் கண்டுண்டோன்!-வண்ணவிழிச் | 100 |
சீதையொடுந் தம்பியொடுந் திண்கா னகம்புகுந்து தாதைமொழி நிறுத்துந் தாசரதி!-நீதியிலும் திருமால், பவனி வருதலின் சிறப்பு தொண்டர் வணங்குபுர சாதித் திருநாளில் கொண்ட றடிங்கோம மறுகில்-தண்டான காவணமு மென்பூங் கமுகுங் கலியுங் கோவணஞ் செய்து கிளர்ந்தோங்கப்-பூவணி தோரணி நின்று சுடர்தூண்டப் பத்திதொறும் பூரண கும்பம் புடைவீங்க-வாரண வேதிய ராசி விளம்ப விளங்கிழை மாதர்கள் பல்லாண்டு வாழ்த்தெடுப்ப-ஆதி | 105 |
மறைத்தமிழ் மாலை வைணவர் செபிப்ப முறைத்தமிழ் வாணர் மொழிய-நிறைத்தசெழுஞ் சந்தனமுங் கற்பூரஞ் சாந்தும் பசுந்தாதும் சிந்தி யிளைஞர் செறிந்தீண்ட-வந்ததோர் துந்துபி யோங்கச் சுரிசங்க மார்ப்பெடுப்ப வந்தவை சின்ன மெடுத்தூத-முந்திய பல்லிய வாத்தியங்க ளெங்கும் பரந்தார்ப்ப வில்லியல் கொண்டநுதல் மெல்லியரால்-சொல்லுங் குயில்போல் அனப்பெடைபோற் கொம்புபோற் கோல மயிபோல் கலையகலா மான்போற்-பயிலும் | 110 |
பிடிபோல் அழகும் பிறங்க மலர்பஞ்சு அடிபோத நூபுரங்க ளார்ப்ப-நெடிநெருங்கப் பத்திப் பவளத்திற் பொன்னிற் பசுமணியில் முத்தில் பதித்தகுடை மொய்த்துவர-நெய்த்துப் பொருவால் வண்கவரி பொற்காம்பிற் சேர்த்த திருவால வட்டந் திகழ-நிரைநிரையாய் பத்தர் குழாங்கள் பதுமக் குழாமாக மந்தத் தமிழ்மா ருதம்வீச-நந்தாத தென்மாறை வேந்தன்! செழுந்துழாய்ப் பூந்தாமன்! முன்மால் வளங்கண்ட மூதறிவோன்!-நன்மைதரு | 115 |
நம்பி வைணவர்கள் நம்பி அழகிய நம்பி குலத்தொண்டர் நயந் தேத்த-செம்பொனொளி ஓங்கு சிவிகையும் பொன்னூஞ்சல் திருக்குறடும் பாங்கவர்க்குப் பூணுமணி பணியும்-பாங்காய் அளித்துத் திருமா லிருஞ்சோலை ஆழ்வான் களித்து நின்றுபோற்றிக் கருத-வெளிக்கிசைந்த மையுந்து மேருவைப்போல் மன்னுசித்ர கூடமொன்று செய்யுந் தலமறிந்து உகந்தோன்!-வைகுந்தை நாயனருள் போற்றி யடியான் நரபாலன் தூய சரணம் தொழுதிறைஞ்ச-ஆய்வளையார் | 120 |
(ஐந்தாம் நாள் திருவிழா) வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால் சிந்தை மகிழ்ந்தஞ்சாந் திருநாளில்-தந்ததோர் தாயவலந் தீரத் தமனியச்செம் பூடுதித்த தூயசிறைக் கருடன் தோண்மீதிற்-சேயொளிசேர் செம்பொற் பொருப்பிற் செறியுங் கருமுகில்பொல் அம்பொற் றருவி லளிக்குலம்போல்-பம்பிய செக்கர் விசும்பில் செறிந்தகரு ஞாயிறுபோல் மிக்குடையோர் வேள்வி விழுப்புகைபோல்-புக்கெழுந்த வீதிவாய் சிற்றில் விளையாட நீணிலத்து மாதரா ரோடு மணங்களித்துப்-போதவே | 125 |
(தலைவி, திருவேங்கட நாதனின் திருவுலாக் காட்சியைக் கானுதல்) கட்புலனுக் கெட்டக் கவின்றழையும் பொற்சிறகாப் புட்பிடரில் அம்மானைப் போற்றுதலும்-பெட்புறவே தேவியர்கள் நோக்குதோறும் செம்பொற் குழைகிழிக்குங் காவிநிறங் கொண்டக் கருநிறமும்-பூவுதித்த சானகிக்கு வில்லிறுத்தத் திண்டோளும் தண்கமல மானிருக்கும் அம்பொன் மணிமார்புந்-தேனிருக்கும் பூந்துழாய்த் தாமம் பொலியும் அபிடேகமும் சேந்த மதிபோற் றிருமுகமும்-வாய்ந்த கருணையறாக் கண்ணுங் கனிவாயுஞ் சோதி வருணத்தாள் வைகும் வனப்பும்-இருணீக்குங் | 130 |
கோல மகரக் குழைக்காது மங்கறத்தூர் நீலத் திருநாம நெற்றியும்-ஞாலமெல்லாம் ஈன்றாளைத் தாமரையோ டீன்றதிரு வுந்தியும் வான்றாவு பீதாம்பர மருங்கு-மேன்றொருவன் புல்லுருவ மெண்ணாத பூங்கொடிக்கு நீங்காத கல்லுருவ மாற்றும் கழற்காலும்-தொல்லாழி சங்குந் தனுவுந் தனித்தண்டும் நாந்தகமுந் பொங்கிப் புடைவயங்கும் பொற்பிணையு-மங்கப் (தலைவி, திருவேங்கடநாதன்மீது காதல் கொள்ளுதல்) புளக மெழக்குறித்துப் போற்றினேன் போற்றி உளமகிழ்வுற் றாவியும் உவந்தேன்-வளமலியும் | 135 |
புள்ளுக் கரசனொடும் பூந்துழாய் வேங்கடமால் உள்ளுக் கரசா யும்வந்திருந்து-மெள்ளமெள்ள வீதிவாய்ப் போதரலும் வேதச் சிறையுடையாய்! ஆதியாய்! அன்னைக் கமுதளித்தாய்-போதியேல்! இன்னும் ஒருகால் எளியேன் எதிர்கொணர்ந்து பின்னகல் எற்கென்னப் பேசினேன்-அன்னவொலி கேளார்போல் முன்புசிறை பெற்ற கிளர்வரைபோல் வாளா மறுமறுகில் வாய்ந்தகன்றான்-கோளரவு நன்றேயம் மாருதியு நல்லவனே கேசரியும் இன்றேறு வானி லிறங்குமே-என்றுலைவேன் | 140 |
(தலைவி, தலைவன்பால் நாணழிதல்) ஆழிதனை யாழியால் அங்கை வளைவளையால் சூழ்ந் துகில்போல் துகிலினால்-தாழாத நாணும்போல் நாணால் நல்லெழிலுந் தன்னெழிலால் காணுங் குறிகாட்டிக் கைக்கொண்டான்-பாணிக் கரையின் மகளிர் கலைபல கொண்டார்க்கென் அரையிற் கலைதான் அரிதோ?-தரைமீதில் அன்றுபதி னாறாயிரர்க் கன்பளித் தாருக்கு இன்றெனைமா லாக்குவதும் எண்ணமோ?-நின்றேன்முன் (மாறன் போர் தொடுத்தல்) அந்தப் பவனிபோய் ஆடல் அனங்கவேள் மந்தத் தமிழ்மா ருதத்தேரிற்-சிந்தக் | 145 |
கரும்பே சிலையாய்க் கடிகமழு மென்போது அரும்பே பெரும்பாண மாகிச்-சுரும்புருவ நாணாகி வேழமே நள்ளிருளாய் வெண்கலைவிற் கோணா மதியே குடையாகி-ஆணை குறிக்கின்ற சின்னங் குயிலாய்க் கடல்வாய் மறிக்குந் திரைமுரச மாகி-வெறிக்குழலார் சேனையாய் பூந்தாது செண்ப ரகமாய்த் தானையோ டும்போந்து சமரடக்க-மானனையார் (தலைவியின், காதல்நோய் தீரவேண்டுவன செய்தல்) கொண்டு பெயர்ந்தார் குளிர்பளிங்குப் பள்ளியின்மேல் தண்டளிர் மென்பூந் தளிமத்து-மண்டு | 150 |
தழலிற்கிடத்துவபோற் றட்பங்கள் செய்தார் அழலு நிலாமுத் தளித்தார்-நிழலொழுகப் பூசினார் சாந்தம் புனைந்தார் தரளவடம் வீசினார் போலவே மதுப்பினார்-ஆசைநோய் வெம்மை பிடித்தவரை வெம்புனலில் வீழ்த்தினால் மும்மடியா மென்பதனை முற்றுவித்து-கொம்மை (தலைவி, வெம்மைநோய் தாங்காது வருந்தல்) முலையார் அறிவிலர்போல் மொய்த்த திதஞ்செய்ய மலையான் நிலக்கொழுந்து வாட்டக்-கொலையுருவாய்த் திங்கள் பரந்துசிறு சாளர நுழைய வங்கக் கடன்முரசின் வாய்முழங்க-அங்கமெல்லாம் | 155 |
நொந்தேன் உலைந்தேன் நுவலுவதும் போனேன் செந்தேனை வெவ்விடம்போற் சிந்திதேன்-நந்தா (தலைவி, மேகத்தைப் புகழ்ந்து கூறல்) மேகமே! எப்பொருட்கு மெய்ப்பொருளே! எவ்வுயிர்க்குந் தாகமே தீர்க்கும் தனிமருந்தே!-மோகிக்கும் இம்மா நிலத்தோர்க் கிரங்குவத லாலவர்பாற் கைம்மாறு கொள்ளாக் கடவுளே!-மெய்ம்மை உணர்வே! அலர்மே லுறைமங்கை மார்பன் மணவே சனவேங் கடவாணன்-குணநிறமும் எம்பால் அளகத்தி னிருணிறமும் பெற்றதால் நும்பால தன்றோ நுவலுவதுங்-கம்ப | 160 |
(தலைவி, மேகத்தினிடம் தூதுரைக்குங் காலங்கூறல்) கரடதட வெண்கோட்டுக் கைம்மலைமேற் கொண்டு வருபவனி யூடெதிர்நீ வாராய்ந்தால்-பொருபகையென் றெண்ணப் படுமதுவிட் டேழாந் திருநாளில் வண்ணப் பசுமஞ்சள் வாய்ந்தநீர்-சுண்ணமட மாத ரோடு மகிழ்ந்துவிளை யாடுமிட மாகுமவ் விடத்துமே கரதடன்-மாவிற் சாரி வருமிடத்துச் சாரதே வன்பரிகொண் டாரி னகப்பட்டய் யாரமுதே!-ஊருந் திருத்தேர் வருமறுகிற் செல்லுமிட மென்றே கருத்தேற நீலக் ககனமே!-தெருத்தலையிற் | 165 |
சத்தா பரணந் தனிற்பவனி யொன்றுண்டு கொத்தார் பூப்பந்தற் குளிர்நிழல்-மொய்த்துப் பலவாத் தியங்கள் பயிலார் பணிவோர் சிலவாக்கம் தீர்ந்து சேவிப்ப-நிலனமைந்து சொற்பா வலவர் தொக்கும் இயலிசையின் நற்பால் அமுதின் நலனுண்டு-பொற்புடைத்தாய் (தலைவி,தன்குறை இரந்து தூது வேண்டல்) போதுந் திருப்பவனி பொன்மறுகி லென்னுளத்துள் ஏதம் அனைத்தும் எடுத்தியம்பி-ஆதி பரனே! பராபரனே! வேட்டவை பாலிக்கும் அரனே! பரந்தாம வாழ்வே!-நரலையெழுந் | 170 |
தெள்ளமுதே! தெள்ளமுதத் தீஞ்சுவையே! சிந்தித்தோர் உள்ளம் உணரும் உபாயனே!-புள்ளரசில் போதும் பவனிதனிற் பூவையரோ டுஞ்சிறிய மாதொருத்தி நின்னை வணங்கினாள்-யாதும் அறியாள் அடவியரோ டாடுவ தொன்றுங் குறியாள் உனக்குமால் கொண்டாள்-பிறிதுமொரு மாலானாள் யானவட்கு மாலாவேன் நீயுமொரு மாலானாய் பேயொன்றாய் வாய்த்ததால்-பால்வளைதன் சிந்தா குலந்தீரத் தேவதே வே! கருணை தந்தாலுந் தன்மை மனங்கொண்டால் - முந்துறநீ | 175 |
அன்றெடுத்த வெற்பேபோல் ஆலக்கா லைபயந்த குன்றெடுத்தால் வேறு குறையுண்டோ!-வன்றிறல்கால் புள்வாய் குளித்தாய் பொருந்தனைக் கூ டங்குயிலின் வள்வாய் குளித்தால் வழக்குண்டோ?-வெள்ளைவிடார் ஆகு மதிபி னழலவிய வாதவன்மேல் ஏகுஞ் சுடராழி இல்லையோ?-மோகஞ்செய் நாவாய்க் கடலின் நலத்தினை யடக்குந் தீவாய்ப் பகழி திரந்தீரோ?-காவான தன்று பிடுங்கி யலைத்த நரம்பீனும் அன்றிலிள மாம்பனைக்கு மாட்டோமோ!-என்று | 180 |
(மாலை வாங்கிவர, மேகத்தை ஏவுதல்) உரைக்கு முரையே யுரைப்பவெல் லாஞ்சொல்லி வரைக்குங் குமத்தோள் வனப்பும்-விரைக்கோலத் தாம மணிமார்புஞ் சங்காழிக் கைத்தலமுங் காம ரபிடேகக் காட்சியும்-பூமடந்தைக் கண்ணுக் கணியாங் கமலத் திருமார்பும் விண்ணுக் கணியான் மென்பதமும்-வண்ணக் கிளிநோக்கி பாதாதி கேசவரை எல்லாம் வளிநோய்க் கிலாது படைத்து-அளிகொண்டு நிற்கின்ற வண்ணமெலேம் நீலமுகி லேகிளிர்ந்த சொற்கொண் டிதம்பார்த்துச் சொல்லியு-முற்பணிந்து | 185 |
வில்லியல் கொண்டரக்கர் வென்றிகொண்டு மேற்கொண்ட மல்லியல் கொண்டு மறங்கொண்ட-நல்லெழில்சேர் வண்டுளவத் தாதொழுகு மால்வேங் கடநாதன் வண்டுளவத் தார்வாங்கி வா. (வெண்பா) மேக மெனமணவை வேங்கடமா மாயனுக்கென் மோகமே சொல்லு முறைசொல்லி-தாகமே மாலைதர வேழையேன் வாடாமல் தண்டுளவ மாலைதர நீவாங்கி வா. |