அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் செவிதொறுங் கனிந்த செந்தேன் தெளிந்தசொல் தவறுண் டேனும் புவிபுகழ்ந் தெடுத்த பேரைப் புகழ்க்கலம் பகத்தைக் காக்க! பவவிலங் கறுத்த புள்ளின் பாகணைத் தொடர்ந்து பற்றிக் கவிமதம் பொழியும் ஞானப் பராங்குசக் களிறு தானே, |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக் குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக் கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல் ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற் பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப் பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே |
வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத் தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலைகுனிப்ப நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக் கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர் செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத் தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின் ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட் காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும் ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே இஃது பன்னீரடித்தரவு கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன் னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற் கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே. விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால் பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே இவை மூன்றும் நாலடித்தாழிசை பயிரவி யெனவரு படுகொலை யலகையின் உயிரையு முலையுட னொருவழி பருகினை பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட வடிமத கரியொடு வலிகொடு பொருதனை ஒருபத சிரமொடு மிருபது கரமுடன் பருவரை புறமிடு பரிபவ மருளினை இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது சதுமறை படவற சமயமு மருளினை. இவை நான்கும் ஈரடி அராகம் மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச் சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும் பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே. இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம் துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே பட்டவா ரமுதமரர் பசிக்குவிருந் தளித்தனையே. இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம் மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம் மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம் எனவாங்கு - இது தனிச் சொல் அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும் கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து கண்ணும் வாயும் வண்ணவார் குழையும் திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக் கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண் மகரக் குழையன் மலரடி நோக்கி யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல் வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற் சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. | 1 |
இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம் நேரிசை வெண்பா மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு போகவலைப் பட்டமனம் போதாதோ - நாகவணைக் கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற் கன்புரக்கு மோவொருகா லம். | 2 |
கட்டளைக் கலித்துறை ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான் முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச் சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே | 3 |
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந் தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும் தமிழுடன் பிறந்த மந்த மாருதமும் தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும் குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங் கொதித்துயிர் குடிக்குமென் னளவிற் கொடுவினை விளைந்த காலநல் லனவுங் கொடியவா மென்பதின் றறிந்தேன். கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து காழகிற் குழாமுறித் தெதிர்ந்து கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து கனகமுந் தரளமுங் கொழித்து மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து வணிகர்போற் கடைநிலம் புரக்க வருபெரும் பொருளைத் துறைவனே குவளை வளைவயற் பேரைமா தவனே. | 4 |
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு தனைநினையு மறிவிலி யைமா கவலைபடு விகடபக டனையகப டனையுனது கழலிணைக ளடிமை கொளுவாய் நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு நறைகமழு மமுது மெடவே திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர் தெளியுமரு மறைமு தல்வனே. | 5 |
சந்தத் தாழிசை மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத் தவழு மாயனார் வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித் தொழுகி யருவியாய் நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித் தொழுகு வெற்பனே நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட மொழிந்த தேன் பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல் பட்டசடை யில்லையே பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய விட்டநகை யில்லைமா கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரது பாலமிலை யெங்கள்மால் கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக் கடவ தாகுமே | 6 |
சந்தவிருத்தம். ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர் வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர் கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. | 7 |
கட்டளைக் கலித்துறை குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப் பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென் முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. | 8 |
வண்ண விருத்தம் வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல் வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. | 9 |
சந்தவிருத்தம் கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால் ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. | 10 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன் பவனி கண்டபின் தோழி மீரவன் துளப மாலையென் துணைமு லைக்கிடார் குழல்மு டிக்கிலார் ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே றழல்கொ டுத்ததும் கோழி வாயையுங் கூவொ ணாமல்மண் கூறு கொண்டதும் கொடிய தாயரே. | 11 |
நேரிசை வெண்பா ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண் கூடவிழுங் கண்ணீர் குறையாதோ - மாடமதில் வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை நீதிமக ரக்குழைய னே. | 12 |
கட்டளைக் கலித்துறை குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங் கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப் பிழைத்திருப் பாருமுன் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. | 13 |
தாழிசை பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற செங்கனி வாயிர்னா பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை யம்பதி யன்னமே யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி னெகிழ்த்துவே றடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி யாமலர் முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை கங்குல்வாய் முளரி யம்பத நோவ வன்பினில் மூத றிந்தவர் போலவந் தென்னை யிப்படி வாழ வைத்தது மின்ப மோகநல் வாழ்வுபற றியான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பி றப்பினி லில்லையே. | 14 |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும் புலை ரேனுமுட் சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும் புனித வாழ்வுதா னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத் தமர்ச ரோருகப் பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத் தளவி லாததே. | 15 |
தரவு கொச்சகம் அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர் விளைவறியாப் பேதைமயல் வெள்ளத்தி லழுந்துவளேற் களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற் றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. | 16 |
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன் ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. | 17 |
அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன் நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே.. | 18 |
ஊசல் - கலித்தாழிசை வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச் சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச் சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச் சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித் தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில் மேதகுசீர் வளம்பாடி யாடி ரூசல் விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு வேதியர்தம் புகழ்பாடி யாடி ரூசல் ஆழிவலம் புரிபாடி யாடி ரூசல் அவங்கருடக் கொடிபாடி யாடி ரூசல் ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடி ரூசல் அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. | 19 |
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் ஆடி லாள்கழலாடி லாள்கனை யாடி லான்பனிநீர் போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான் பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ்முகிலே நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே | 20 |
நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ ணாவாலு மேதுபய ணவர்புகழே யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி யானாலு மேதுபய னறிவிலிகாள் காரான சோதியழ காராத காதலொடு காணார்க ணாலுமொரு பயனுளதோ வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம் வாராத காலுமொரு பயனிலையே.. | 21 |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. | 22 |
கட்டளைக் கலித்துறை ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும் பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற் காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. | 23 |
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக் கருந்தடத் திருட்படாய் விரித்துக் கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங் கரந்துகொண் டனவெனத் தணிந்து விண்ணகம் புதைத்த பரிதியு மதியும் விழுங்கியுண் டொருபுடை செறிப்ப வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல் விடிவிலாத் தகைமையே துரையாய் மண்ணகம் புதைத்த துணையடி முனிவர் மனத்தகம் புதைப்ப வேழ்புலியும் வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி மார்க்கமும் புதைப்பநீ வெருவிப் பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப் பருமணிக் குழைபிடித் தாடப் படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப் பதிவளம் புரக்குமா முகிலே. | 24 |
நேரிசை வெண்பா மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக் காவளர்த்தா ரென்று குழைக் காதரே - நாவளைத்துச் செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின் முற்றார் நகைவெடிக்கு மோ. | 25 |
சுரம் போக்கு - கட்டளைக் கலித்துறை வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம் பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில் வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித் தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே | 26 |
மறம் - சந்தத் தாழிசை தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு நிலத்துளோர் தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு வருதூதனே வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம் வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும் வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம் மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. | 27 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் இல்லத் தடங்கா மடந்தையர்கற் பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன் றீயா தவர்கைப் பொருள்போலு மிரவிக் கிருள்போ லவுமடியார் சொல்லத் தொலையா வெழுபிறப்புந் துடைகுங் கருணைக் குழைக்காதர் துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற் சுற்றிக் கிடக்குங் கருங்கடலே கொல்லத் துணியா தன்னையருங் கொதியார் மதியு மதன்படையுங் கூப்பிட் டழையாக் கருங்குயிலும் கொடுமை படுத்தாக் குழலிசையு மல்லற் படுத்தா வயலவரு மளித்துப் பிரியீ ரெனவுரையா தயர்த்துக் கொடுத்த மனமிருக்க வாரை வெறுக்கக் கடவேமால். | 28 |
சம்பிரதம் கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல் கடுகி லும்புகுது மூசிவே ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு மெமது சம்பிரத மீதெலா முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை யுலக ளந்தமுகில் பேரைமா லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு மரிய சம்பிரத மானதே. | 29 |
நேரிசை வெண்பா தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல் கோவியர்தா மன்றுகுழைக் காதரே - தாவி யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது பிடிக்கும்கைம் மாறோ பெரிது. | 30 |
கலிவிருத்தம் பெருவிட வரவணைப் பேரை மாதவன் மருவிட நினைகிலான் மங்கை மாதரே தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. | 31 |
கட்டளைக் கலித்துறை உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக் குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர் துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச் சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. | 32 |
தூது - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல் செழும்பே ரையுத் தமர்பால் அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை யனங்கா ளுரைத் தருள்வீர் இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு திரங்கா மனத்தவர் போன் மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு மனந்தா னெமக் கிலையே. | 33 |
வெண்பா எமக்குமுகம் வாட விருந்தா மரைகள் தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் - அமைத்துரையும் பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள் தன்மதியி லுண்டோ தழல். | 34 |
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார் தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார் குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார் கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும் நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. | 35 |
பின்முடுகு வெண்பா ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ - தேவியுடன் மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு கால்கிளர்ந்த நீலவண்டு காள். | 36 |
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத் தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற் கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. | 37 |
வஞ்சி விருத்தம் கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற் பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன் அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர் தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே | 38 |
கட்டளைக் கலித்துறை தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித் தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச் செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே | 39 |
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும் தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன் கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல் எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. | 40 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத் திளங்கோ மகளிர் வீரனெறிப்ப வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை யிடறி நெறித்துக் கடர்புறத்துச் சுரும்பை நெறித்து வழிகறங்கச் சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத் துங்கக் களிற்றின் மிசைப்பவனி தொழுதாள் விரகம் தொலையாதோ? கரும்பை நெறித்து முடப்பலவின் கனியை நெறித்து மடைமுதுகிற் கதலிப் படலைக் குலைநெறித்துக் கன்னிக் கமுகின் மடனெறித்துக் குரும்பை நெறித்துத் தேனொழுகுங் குவளை நெறித்துப் புடைத்துவரால் குதிக்கும் புனற்பே ரையின் மகரக் குழையே யெவர்க்குங் கோமானே. | 41 |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந் தானென்பார் பதியென்பார் வழியே தென்பார் தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார் கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங் குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. | 42 |
கழித் தாழிசை தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர் நாமோதர மாமோகினி நலமோதர மறியீர் ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப் போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. | 43 |
கலிவிருத்தம் தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை யானாத கல்வி யறிவார் பயனன்றோ கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. | 44 |
கலித்தாழிசை பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ் சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண் மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. | 45 |
கட்டளைக் கலித்துறை வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப் பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர் குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும் படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே | 46 |
கழித்தாழிசை கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால் தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர் சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. | 47 |
மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக் குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற் றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே | 48 |
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர் மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ் கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர் இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே | 49 |
பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் விதிக்குந் தொழிலாற் பலகோலம் வெவ்வே றெடுத்து நடித்தொருவன் விளையா டுவபோற் றொலையாத வினையிற் சுழன்று தடுமாறி எதிற்குந் சிறிதா மெறும்புகடை யானை முதலாந் தொல்குலத்தி லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய் குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக் குறுங்கட் பெருவான் மழைமதித்துக் கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக் குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று மதிக்கும் புகர்மத் தகமுகத்து வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து மதவா ரணத்துக் கருள்புரியும் மகரக் குழையெம் பெருமானே. | 50 |
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன் மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன் பகதற்கரி தாகும் பரதத்துவ போதன் பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய் சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ் சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந் தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந் தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. | 51 |
சந்தக்கலி விருத்தம் எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால் வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார் சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. | 52 |
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக ரக்குழைமால் கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு நரைக்குருகீர் பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி விற்குணமே யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை வெறுப்பதுவே. | 53 |
பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம் ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள் போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற் புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு மாயனார் மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து முயங்குபைந் தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும் பெற விட்டதோர் சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில தாகியே. | 54 |
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி யொளியாகநீ பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி பலதேவ ரறிவார்களோ மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை நகராளனே சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத தெளிஞான முடையோர்களே. | 55 |
புய வகுப்பு முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம் உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத் திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன உரலைக் கதவுக் கடையிட் டுயரத் துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட் டசுரரை யெமபுர மளவு துரந்தன உயிரைப் பருகக் களவிட் டலகைப் பணைவரை முலைமுக நெருடி யிருந்தன. படியிற் றுடைபட் டுழலக் கனகனை நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன பனையிற் கனியொத் திருபது முடியத் தலையுருள் படவடு பகழி சொரிந்தன பரிதிக் கதிருட்புதையத் தமணப் படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன பருமச் சிகரக் கயிலைப் பரனுக் கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின கடலைக் கடையப் பருமத் துவலித் திமையவர் பசியற வமுதம் விளம்பின களபத் தெளியிற் றுளபத் தொடையில் பரிமள ம்ருகபத முழுகி யளந்தன கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப் பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன கமலத் தவளைத் தழுவிக் களவியி லிளகிய புளகம தொழுகி மலிந்தன மடையிற் கழியிற் பொருனைத் திரையினி லுதறிய வரிமண லலகு நெடும்புழை மதகிற் கதலிப் படலைக் குலையினில் வளமுக கடவியில் மருவி வலம்புரி வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற் குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை மகரக் குழையுத் தமனித் தியனுயர் பரகதி முத்லவ னணிபொற் புயங்களே. | 56 |
குறம் - பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் புயங்க சேகர முயங்கு நாடதி புகழ்ந்த பேரையை வணங்கியே புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி புகன்று வாழ்குற மடந்தை நான் இயங்கு மாகெவு ளியும்பொ லாதல விருந்த மாநில மிணங்கவே யிசைந்து மாநிதி துலங்க வேயருள் பொருந்தி வாழுவை யிலங்கிழாய் வயங்கு மாதலை வரைந்து பேரதில் வளங்கொள் சேவக ரிரண்டுபேர் வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு வனுந்த ராதலம் வணங்குவோ னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு குழந்தை வாய்பசி யடங்கவே யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு கிழிந்த தூசுரு ளுறங்கவே. | 57 |
கொற்றியார் - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய லகஞ்சுற்று பேரை நகர்வாய் விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில் விளைந்துக்க மாமணி கொலோ கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு கலந்திட்ட தாவடமு மாய் வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது மருங்கொற்றி யாரறி வரே | 58 |
சந்தக்கலி விருத்தம் வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர் பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. | 59 |
நேரிசை வெண்பா உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் - அயனார் பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து மருத்துளதிக் கேமயலா வாள். | 60 |
எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம் மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள் வயிரப் பொருப்பி னயல்சூழ் முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென முகவட்ட மிட்டு வருவீர் புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை புளகிக்கி விற்று வீடும்வே ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே மழியத் துடைப்ப தழகே. | 61 |
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய் நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே | 62 |
ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம் இளங்கொடி யிணங்குமுது சூழல் நெருங்கிய பொதும்பர்வெளி நீழல் இதண்புடை யிருந்து விளையாடி நீர் விளம்பிய குளிர்ந்த மொழி யூடு கரைந்தது கருங்கலினை வீசி வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ வளந்தலை மயங்குதமிழ் நாடர் செகந்தனில் முகுந்தர்வரு பேரை மடந்தையர் வணங்கு மபிஷேகமே தெளிந்தசொ லினிங்களென நூறு பசுங்கிளி விழுந்தபுன மீது செழுந்தினை விளைந்துகரை யேறுமே. | 63 |
களி - பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு கயல் படைத் துலவு பேரை மால் கருணையைப் புகழ வரு பரப்பிரமர் களியர்கா னறியு நறவுமாய் வரிசையிட்டன ளிலச்சி யாகினி வலைச்சியைத் தொழு மடத்துளே மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை வளைய வைத்து நட மாடுவோம் விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும் விடமிடற் றிடை செறித்ததும் வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில் வென்றதும் பொருது கொன்றதும் அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி யறுதலைக் குறை முளைத்ததும் அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை யன்றி வேறு வரமல்லவே. | 64 |
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக் கழுத்தொடிய வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற் றுளைத்து கரையேறி நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து பணிலமணி நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால் பொருனைத் திருநாட்டின் வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே யமுதுருவே வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர் மழையருவி கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந் தொலைத்தன னென் கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக் கடவீரே. | 65 |
வஞ்சித்துறை வீர மாரனா லார மாலை வேம் நேர மாலை தா நேர மாலை தா பேரை மாயனே. | 66 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன் மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. | 67 |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் கார் காலம் தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத் தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம் தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம் திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம் நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். | 68 |
தரவு கொச்சகக் கலிப்பா மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக் கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப் புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. | 69 |
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை நின்றுதன் னிழற் கோலங் காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென் கன்னியைத் தழுவாயோ தூணி லாடக னுரம் பிளந் துயிருணத் தோன்றிய நெடுமாலே கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ் திருந் தெழிற் குரியானே. | 70 |
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய் விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. | 71 |
கட்டளைக் கலிப்பா கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக் குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும தடியளந்த வுயிர் யாவும் வாழவன் றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர் படியளந்தது போதாம லன்னமும் படைத்திருப்பது பாலனென்றோதலால் மிடியளந்த வறிஞரைப் போலன்று வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே | 72 |
பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம் என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந் தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந் தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக் கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச் செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந் திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. | 73 |
கட்டளைக் கலித்துறை மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர் நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப் பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற் றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே | 74 |
எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால் தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர் அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன் காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. | 75 |
அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம் கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய் பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. | 76 |
சித்து ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம் அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல் முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு முழுமூடு படமோதி வரைவா யிறங்கி யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து தத்திவீழ் பொருநை வந்தநாள் அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து\ கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி யகிலார மணநாறு வெகுசே றளைந்து முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த முத்த வால்வளை கறங்கவே மருவீதி மலராடை புனைமார் பணிந்து துறைதோறு மருகோடி விளையாடி யங்க ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து கடுமேதி தடுமாற வுளவான் மலங்க வெக்கர் பாய்மணல் மருங்குறா மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு புடை போல வளர்பூக முடல்கூன மந்தி தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த சித்தரேமடி பணிந்து கேள் திருமாது பிரியாத மடமாது செம் பொன் றுருவான தொருவேரி லதுமா லறிந்த வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன் னிறமான பிரமாண மறைநூலி லுண்டு சிலையான வடமேரு வரனா ருகந்த துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன் வைத்த தார்பெருமை யும்பரூர் சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள் குருநாதர் பரிவான மதிபார முண்டு மதராஜ னுபதேச மொருபூ மருந்து மடமாத குறவோடு விளைபா டகங்கள் திரைதாவு கடலூடு படுதீவி லொன்று பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற வித்தையோ புதுமை யின்று நீ சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு தலைவாச லடைதாழி டருகே யிருந்து குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி லரிதார மிடுதார முதலா மிரும்பு தனிலூத விடிவேறு தவறாது செம்பொ னதுவார முடனோது முபதேச மந்த்ரம் அப்பனே அமுது கொண்டுவா. தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று பொரிகாடை கதுவாலி மிளகான நன்று சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து பணியார வகைபோடு நளபாக முண்ட தப்படா களப சந்தமே. | 77 |
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம் டங்குளித் தாசலாடுவீர் பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே* மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* | 78 |
மடக்கு-கட்டளைக் கலிப்பா தாவு யுண்ப துறிமுகப் பாலையே சயன போகத் தலமுகப் பாலையே தேவி யென்பது பங்கயத் தாளையே தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே யாவு மாய்வந் துதிப்பது மாயனே யென்று பன்னித் துதிப்பது மாயனே. நாவி லோதுவ துன்றிருப் பேரையே நான் வணங்குவ துன்றிருப் பேரையே. | 79 |
வஞ்சி விருத்தம் பேரி யம்பிலன் பேரைமால் வேரி யம்புனல் வெற்பில் வேள் காரி யம்பறை கண்கள் வேல் வாரி யம்பெனன் மாறுமே. | 80 |
பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து மதியுடம் பழுக்கறத் துடைத்து வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து மாசறக் கடைந்தவேல் கிடத்திக் கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக் கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக் குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த குளிர்முகத் திருவை நீ தருவாய் கானகம் புகுந்து வீராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து போனது மரக்கன் புகுந்தது முடிவிற் புரந்தரன் பெருந்தவ மெனமுன் பொருதவா மகரக் குழையனே கருணைப் புனல்வளம் பொழிந்தகார் முகிலே. | 81 | ||||||||||||||||||||||||
அம்மானை - கலித்தாழிசை காரையூர் வண்ணர் குழைக் காதர்சிலைப் போர் விசயன் தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை | 82 | ||||||||||||||||||||||||
கைக்கிளை மருட்பா அம்மா னகையு மடுகின்ற மால்பேரை யெம்மாவி கொண்ட திவணகையே - பெம்மான் வரிசிலை வடவரை வளைத்த பின்றைத் திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே | 83 | ||||||||||||||||||||||||
நேரிசை வெண்பா நகைத்தா மரைபுரைதாள் நாயகனார் பேரை யகத்தா மரையமுதே மன்னாள்--முதத்தழகு தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல் வான் பிடித்த தன்றோ மதி | 84 | ||||||||||||||||||||||||
ஒன்பதின்சீர் வண்ண விருத்தம் மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை முடிக்கும்பெரு மாளய னாரிரு வருக்கும்பெரு மானெனு மாமறைநூல் துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை பொறுக்கும்பெரு மாளடி யார்வினை தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே குதிக்குங்கயல் போல்விழி யீரினி யிறக்குங்குழை யார்முனம் வார்மனங் கொதிக்கும்பத மானது தானறியீர் அதிக்கும்பசி யென்னது தூதையில் வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும் அறத்தின்பய னாவது தானிதுவே | 85 | ||||||||||||||||||||||||
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம் பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர் தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே மாயவெம் பிறவி நோய்க்கு வாகட மருந்து தானே. | 86 | ||||||||||||||||||||||||
மதங்கியார் - எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால் வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார் முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும் முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும் இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும் இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற் றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும் உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. | 87 | ||||||||||||||||||||||||
மேற்படி விருத்தம் மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற் சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற் றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப் படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. | 88 | ||||||||||||||||||||||||
பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப் பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக் கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு | 89 | ||||||||||||||||||||||||
|