நம்மாழ்வார் பூமாது குடி கொண்டு வீற்றிருந் தரசு புரி பொற்புலவு பாதுமா சனப் பொழி கருணை யொடு பெருகு ஞான வெள் ளத்தலை புரட்டு திரு முத்தி ரைக்கைக் கோமானை யெழுதரிய சதுமறையும் அள்ளிக் கொழித்து வண் தமிழ் படுத்திக் கூறுதிரு வாய்மொழி யோர் நாலாயிரஞ் செய்த குருகை முனி யைப்பர வுதும் தேமா நறுங்கனித் தேன் மதகி னூடுபாய் திருவழுதி வளநா டனைத் தென் திருப் பேரை நகர் காவலனை நூற்றெண்மர் சிந்தைகுடி கொண்டிருக்கும் மாமால் வருணன் வந் தடிபரவும் ஆழிநீர் வண்ணனைப் புயல் வண்ணனை வானப்பி ரானைநம் குலநாத னைப் புகழும் வண்தமிழ்ச் சொல்தழை யவே. | 1 |
சரஸ்வதி அஞ்சிறைய வரிவண் டுழக்கிக் கணைக் காலசைத்துப் பொலன்தா தளைந்(து) அடை கிடந் தாலித்து வாய் மடுத் துத் துதைந் துளிநறவு கூட்டுண்ணமென் பிஞ்சு மடல் முகை முறுக் கவிழும் வெண் தாமரைப் பீடத்தி னினிதிருக்கும் பெடை யோதி மஞ் செஞ்சொல் மடமாது வெண்ணிறப் பெண்ணுரு தாள்துதிப்போம். பஞ்சனைய பரிபுரத் தளிரடித துடியிடைப் பணை முலைக் கனிவாய் மொழிப் பைந்தொடிச் சீதையை மணம் புணர மிதிலையம் பதிபுகுந் தாடு ஜனகன் செஞ் சிலையி றுத்தமாக ரக்குழைக் கடவுளைத் திருவழுதி வளநா டனைத் தென் திருப் பேரைநகர் காவலனை வாழ்த்துமென் செந்தமிழ்ச் சொல்தழை யவே. | 2 |
ஆண்டாள் மண் மகளு மாய்ப் பின்னை மடமகளு மாய் மிதிலை வரு ஜனகனுக்கு மகளாய் மங்கலச் சொல் திருப் பல்லாண்டு செம்பவள வாய்திறந் தோதி னோன்தன் பெண்மகளு மாய்வந் தரங்கேசர் முதலைந்து பேருக்கு மொரு தே வியாய்ப் பேர்பெற்று மாலைசூ டிக் கொடுத் தருளிய பிராட்டியை வணங்கல் செய்வாம் தண் மதியி னகடுதொடு மாடமா ளிகை நெடிய தமனியப் பொற்குன் றமும் சதுமறைக் குரிய வேள் வியும்யாக சாலையும் சந்நிதியில் நூற்றெண் மரும் கண்மணி யெனத் தகைய பிள்ளைக்கு ழாமுமலி காவு சூழ் பேரை யூரன் கருணையொடு வருணன் அடிபரவும் மக ரக்குழைக் கடவுள் சொல் தழைய வென்றே. | 3 |
பொய்கையார் பாரரா வணனெனும் படுபழிக் கஞ்சாத பாவி கொலை களவு கபடம் பழகுபா தகன் மெளலி யொடு பதும துகன்படல் பண்டுகோ தண்டம் வாங்கும் வீரமே கந்திருக் கோவலூரிடைகழியின் வெளிநிற்ப ஒவ்வொரு வர்மேல் மிகநெருக் குண்டபுகழ் மூவரில் பொய்கையார் மென்சரணம் அஞ்சலி செய்வாம் தாரை வேல் விழிபாய வாலிமார் புருவ ஒரு சரம் விடுத் துக்கொன் றவன் தம்பிக்கு மகுடம் கவித்தர சளிக்கின்ற தாமோ தரக்கு ழகனைப் பேரையா திபனைநங் குலநாத னைத் துழாய்ப் பெம்மானை அம்மா னையே பேசுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக் குள்ள பேதைமை பொறுத் தரு ளவே. | 4 |
பூதத்தார் ஆரணப் பொருள் நான்கும் யாகமோரைந்து நூ லைந்தொடைந் தெட்டு நியமம் ஆறுதொண் ணூற்றாறு தத்துவம் சித்தியெட் டைம்புல டைக்கு ஞானக் காரணச் சுடர்விளக் கொளிகொண்டு யாவுமொரு கரைகண்டு புகழ் கொண் டசொல் கருணாகரக் குரிசில் உயர் பூத ஆழ்வார் கழற்கால் வணங்கல் செய்வாம் பூரணக் கலைமதியின் நிலவொழுக ஆம்பல் மென் புரிமுறுக் கவிழ் வாவியம் புனல் படியும் வன்கரா வதுவந் திழுக்க அப் பொழு தாதி மூலமென்றே வாரணப் பகடலறி வீரிடக் காத்தருள் செய் மையாழி நீர் வண் ணனை வானப்பி ரானைநங் குலநாத னைப்புகழும் வண்தமிழ்ச் சொல்தழை யவே | 5 |
பேயாழ்வார் தெளிக்கும் கொழும்பிரசம் ஊற்றிருக் கும் கலூழி திரை மண்டி மடு நிறையவே தேக் கெறியும் வெள்ளப் பெருக்கில் பொலன்தாது சிந்தக் குடைந்து பம்பிக் களிக்குஞ் சிறைச் சுரும் பிசைமுரல முகைவிண்ட கடிகமழ் பசுந்தண் துழாய்க் கடவுள் திரு வந்தாதி புகலு மயிலையர்கோன் கழற்கால் வணங்கல் செய்வாம் துளிக்குந் திரைப் பொருநை மதகினொலி யும் பழஞ் சுருதிமறை யவர்கள் ஒலியும் சொல்லரிய பிள்ளைக் குழாவொலியும் மங்கலத் தூயமுர சத்தொடு பரி மளிக்குந் திருப் பேரை மணி வண்ணனைப் புயலை மகரக்குழைக் கட வுளை வானப்பி ரானைநங் குலநாத னைப் புகழும் வண்தமிழ்ச் சொல் தழை யவே. | 6 |
திருமழிசை கொந்தர் பசுந்துளவு பழுது தள் ளிச்செழுங் குளிர் கறுந் தொடையல் சேர்த்துக் குலவுமணி முடிமீது கைபுனைந் தாழிமால் குரைகழ லிணங்கத் திரு அந்தாதி யொடுதிருச் சந்தநூற் றிருபதையும் அமுதூறு திருவி ருத்தம் ஆகச் சொல் மாலையணி யோகப்பி ரான் மழிசை யாதிபனை யே பரவுதும் நந்தா வளம் பெற்ற திருவழுதி நாடும் வளர் நகரமும் உரிய கோமான் நாரணன் பூலோக காணன் அச்சுதா னந்தகோ விந்தன் முற்றும் வந்தாத ரித்துவரு ணன்பரவும் ஆழிநீர் வண்ண நிகர் முகில்வண் ணனை வானப்பிரான் அதிர்வளைக்கை மகரக் குழைய மாதவன் சொல் தழையவே. | 7 |
குலசேகரர் வள்ளவாய் நெகிழத் துளிக்கும் பசுந்தேறல் மலர்மங்கை திகழ் வஞ்சியும் வளமை தரு குடநாடும் வான் பொருநையும் கொல்லிவரையும் உரிமைச் சேரர்கோன் புள்ளவா வுறு நீல மாலிகை கிடந்த புயபூதரன் சூலசே கரன் பொருசிலையை நெடிய வடவரை மிசை பொறித்த வண் புகழ் வேந்த னினிது காக்க, அள்ளல் வாய்ப் பழனத் தடந்தொறுஞ் சுரிசங்கம் அகடுளைந் தின்ற முத்தும் அம்பொற் பசும்பாளை தயைவிழ்க் கும் கமுகின் அணிமுத்தும் நிலவுங் காலக் கள்ளரு நறுமலர்க் குமுதம் விரி பேரை வரு கருணா கரக்குரி சிலைக் கடவுளைக் குலநாத னைப் புகழ்ந் தேத்துமென் கவிதையின் சொல்தழை யவே. | 8 |
பெரியாழ்வார் விடங்காலும் வாளரா வரசுக்கு முணர்வரிய மிக்க சங்கத் தமிழினால் மீனவன் மதிப்ப வரி யாசனமி ருந்தினிது வென்று மூதூர் மதுரையின் அடங்காத பரசமய மதமறுத் துக் கிளியறுத்துவே ழப்பிட ரிருந்து ஆழி மாலைக் கண்டு வாழிபா டும் பெரிய ஆழ்வார் தமைத்து திப்பாம் தடங்கா வடுக்கக் கிடக்கின்ற கல்லுருத் தவிர முனி பின்னடந்து சரண பங் கேருகத்து கலினிக்கும் பசுந்தண் டுழாய்க் கொண்டல் கேணிக் கிடங்கா னதிற் பகட் டிளவாளை துள்ள மைக் கெணடைவிளை யாடு புனல்சூழ் கெழுதகைய தென்பேரை வளமலிதருந்தூய கேசவன் சொல்தழை யவே. | 9 |
தொண்டரடிப் பொடி பண்ணாலிலை யிற்கண்டுயில் ஞான பராபரர் காவிரி நீர் படியு மரங்கர்க்குச் சொல்மாலை படிந்தடியிற் சூட்டி வண்டார் துளவத் தொடைமுடி சூடி வணங்கும் தவராசன் மண்டங் குடிவாழ் தொண்டரடிப் பொடி வர முனியைத் தொழுவாம். குண்டாரு நதிப்புனல் அனல் குமுறக் கோதண்டம் வாங்கிக் குழைய வளைத் தொரு மகழி கொடுத்தருன் கோமேதக நீலம் தண்டாமரை மலரும் பேரையில்வரு தாமோதரர் தூய தமிழ்தெரி பிள்ளைக் கவி வழுவாதெழு தரணியில் நிலை பெறவே. | 10 |
பாணர் வச்சிரக் குலிசபதி முனிவரிமை யவர் சது மறைக்கடவுள் மழுவ லாளன் வந்தடி பணிந்து தொழு மெந்தைக்கு முத்திதரு வைகுண்ட பதவியானுக்(கு) அச்சுதப் பச்சை மாலுக்கு அருமறைப் பொருட் கருமணிக் கண்மலர் படைத்(து) அமலனாதிப் பொருளுரைக் கின்ற குரிசில் பாணாழ்வாரையே பரவுதும் கச்சறப் பொருமிப் புடைத்துச் சினத்துக் கனத்தடி பரந்து விம்மிக் கண்கறுத் தமிர்தம் பொதிந்த குங்கும முலைக் கற்புடைச் சீதையாளை நச்சி தற்சிலை வளைக்கும் பசுந்தண்டுழாய் ராமாவதார தீர நாராயணன் வழுதிநாடன் நங்குலநாதன் நல்தமிழ்ச் சொல் தழையவே. | 11 |
திருமங்கை யாழ்வார் சிறியதிரு மடல்பெரிய திருமடல் திருமொழி செழுந்தமிழ் நெடுந்தாண் டகம் சிறக்கின்ற சொற்குறுந் தாண்டகம் விதிமுறை தெளிந்த வெழு கூற்றி ருக்கை நறிய துள வணியுமுகி லுக்குரைக் கும் மங்கை நாற்கவிப் பெருமா னைமுன் நான்மறைப் பொருளுக்கு மெட்டாவரும் பொருளின் நற்பொருள் கவர்கள்வனைப் பறிமுதல் திரும்பக் கொடாதனைத்துந் திருப்பணி செயும் புகழ் வேந்தனைப் பலகாலும் நெஞ்சில் வைத்தவனடிக் கமலமலர் பரிவொடு பணிந்தேத் துதும் உறிமிசையிருந்த அளை களவினால் வாரி அன்றொருதிவலை சிந்தாதுணும் உயர்புகழ்ப் பேரைவரு குலநாதன் முதுகவிதை உலகெங்கணும் தழையவே. | 12 |
மதுரகவி முடிக்கும் பசுந்துழாய்ச் சக்ராயுதக் கடவுள் முளரியங் கண்ணனுக்கு முதுமறை தெரிந்துதிரு வந்தாதி யாசிரியம் முறைவழா வடிதொறுஞ் சொல் வடிக்குஞ் செழுந்தமிழ்ப் பாடலாயிரமும் மகிழ் மாறனுரை செய்தரு ளவே வரிசை யொரு பட்டோலை எழுது மொரு மதுரகவி வரமுனி வனைப்பர வுதுங் குடிக்குந் தடந்திரைப் புனல்யாவு மொரு முகங் கொண்டு வரு ணன்படி யவே கூடு பொருனைத்துறைக் குலநாத னுயர்மாட கூடங்க டோறும் நெடுவான் இடிக்குங் கருங்கொண்டல் கண்படுக் கும் பேரை எம்பிரான் வானப் பிரான் இருசரணமலர் சூடுமெனது கன கவிதை உலகெங்கணுந் தழைய வென்றே. | 13 |
எம் பெருமானார் முதியகவி நாவலர் தம்பிரான் திருஞான முத்திரைக் கடவுள் திருவாய் மொழிதனக் குரைவிரித் தெழுது பிரவுடவாக்கி முழுதுமன் யர்க்கு வாழ்வு புது நறவு கக்கித் துளிக்குஞ் சரோருகப் பொற்கழற் கருணா கரன் புகலரிய பரசமய திமிராரி வண் புகழ்ப் பூதூர னைப்பர வுதும் சது மறையு மறிவரிய குலநாதன் முத்தொடலை தத்தும் தடம் பொருநையின் தருமநெறித் தவறாத் திருவழுதி வளநாடு தழையவரு கருணை மேகம் விதிமுறையி னொடு தொழுது வருணன் ஆ ராதனை செய் விமலன் மக ரக் குழை யமான் விரவுஞ் செழுந்தமிழ்ப் பிள்ளைக் கவிக்குள்ள மிக்கசொல் தழைய வென்றே. | 14 |
வானாடரும்பொற் பொகுட்டா சனப் பதும மண்டபத் தரசி ருக்கும் மறைக் கிழவ னும்சடை முடிக்கட வுளும் குலிச வச்ரா யுதத்த லைவனும் பூ நாறு வெட்சியந் தெரியல் புனை குமரனும் புகர் முகத் தவனு மதியும் பொங்கு சுடரிரவியுந் துங்கமுனி வரும் நெடும் பொற் கோயில் வலம் வந்து நம் கோனாக வருண னாராதனை செய் மஞ்சனக் கொலுவில் வந்தடி வணங்கிக் கும்பிட்டு நின்று சே விப்ப நற் சேவைபுரி கோசலைக் கிரு கண்மணியே தேனாறு பச்சைப் பசுந்துழாய் மேகமே செங்கீரை யாடி யருளே செல்லத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடிஇருளே!. | 1 |
முருகொழுகு பங்கயத் தடமு நீள் குளனும் அனை மோதும் புனற் சுழியினும் முதிராத விளமணலும் நடைவரம்பும் செய்ய முதுகுரம்பும் கரும்பும் அருகு நெட்டிலை முடத்தாழை நிழலும் வேலி அடரும் செழுஞ் சோலையும் அம்பொற் பசும்பாளை தளையவிழ்க்கும் கமுகின் அணி வனமுமதகி னூடும் சொருகு குழல் மகளிர் குடமுலை யசைய நுணுகிடைச் சுமக்கின்ற பொற்குடத்தும் சுடர்மணிப் பொற்றடந் தேரோடும் வீதியும் சுரிமுகச் சங்க மூரும் திருவழுதி நாடாள பரமபத வீடான செங்கீரை யாடியருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 2 |
அறுகால் வரிச் சுரும் படைகிடக் கும் குழ லரக்கி மண் டோத ரிகழுத் தழகு தா லிச்சரடு தரையில்வீழப் பருந் தாய் வெங்கழுகு மொய்ப்ப மறுகால் நெடுஞ்சிகர மாடமா ளிகையிடிய வலதுகட் கடைதுடிப்ப வாசல்தொறு நெய்தலம் பறைகொட்ட லங்கை யழல் மண்டி வான் முகடு தாவக் குறுகாத வல்லசுரர் செவியடைப் பக் கொழுங் குருதி வாய் கொப்பளிப்பக் கொடிய ராவணன் மகுடமுடி சிதற வரிசிலை குழைத்து வெஞ் சமர்மு கத்துச் சிறு நாணொலிக் கொண்டு விளையாடு மேகமே செங்கீரை யாடி யருளே செல்வத் திருப் பேரைவல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 3 |
இருகுழையு மணிகுதம்பையு மாட வெயில் விரிந் திலகு குறு முறுவ லாட இணைதிருக் கையிலணி வளையாட மென்சுரும்பு இசைமயில் துளவ மாடப் பொருவுமிரு சிலை நுதலில் வேர்வாட வே பொங்கு புழுதி திரு மேனி யாடப் புழுகொழுகு கரிய குழல் சரிய வரைவடமு நூ புரமுந் தயங்கியாட முருகுவிரி தருநறுங் கமல மதிமுக விட்டம் முழுநிலா வீசியாட முதிய வா வைர் முனிவ ரமரர் கோன் வாலையவள் முறை யெடுங் காண வந்தார் திருவரையின் மணியசைந் தாடக் குழைந்தினிது செங்கீரை யாடி யருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 4 |
சந்தன கதம்பப் படீரகுங் குமமுலைத் தையல் மர கதவல் லிசெஞ் சடிலேசர் வாமத் திருப்ப நான்பறைபரவு சது முகப் பிரமன் நாவில் இந்து நுதல் வாணி சந்தத மிருப் பப் பணிந் திருசரணமலர் சூடுவோர் இதயதாமரை மலரு நூற்றெண்மர் சிந்தையினும் இசைபாடி வண்டுக் கிண்டக் கொந்தவிழ் நறுங்கமல மலராசனக் கோயில் குடியிருக்கும் பரிமளக் கோமளக் கொடிவல்லி மாமதுர வாயாள் குழைக்காத நாயகியெனும் சிந்துரப் பிடியொடும் விளையாடு மேகமே செங்கீரை யாடி இருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 5 |
ஒள்ளொளி விரித்த சிறு கிண்கிணியு நூபுரமும் உபய சரணத்திலாட ஒளிர்மணிப் பட்டாடையாடஅரைவடமாட உச்சியின் மிலைச்சு பரிதி நள்ளிடை வயங்கு பொற்சூழியத் தொகையாட நகுநிலா முறுவலாட நவமணிச் சுட்டியொடு கட்டு பொற்பட்டமும் நன்னுதற் பொட்டுமாடத் துள்ளியெறி திரைமகர ஜலராசி படுசெழுந் துய்ய செம்பவள மேனி தொய்யக் குழைந்தாடு பண்டியுந் தொந்தியும் துணைநெடுங் குழையுமாடத் தெள்ளமுத மணிவாயினுள் ளொழுகி வழியவே செங்கீரை யாடி யருளே செல்வத்திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 6 |
நிரையும் பசும் பொன்னி மாடகூ டமும் மேடை நிழன் மணிச் சாளரத்தும் நெடுநிலா முற்றத்தும் வாவிதொறு நீராடி நிறை நறுந் தாது பூசி வருமந்த மாருதத் திளைய மென்காலசைய மாவிளங் குயில்கள் கூவ மயிலாட அளிபாட வேனில் வேளரசு புரி வழுதி வளநாடு தழைய விரையும் தடம் புனல் பெருக்காறெடுத் தோட எழில் மயில் தழைப் பீலியும் இணையிலா மணியாரமும் யானை வெண் கோடும் எற்றி யெற்றிச் சுருட்டித் திரைவந்து கரைமோது பொருநையந் தண்துறைவ செங்கீரையாடி யருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 7 |
எத்திக்கும் வண்புகழ் தழைத்த திருவாய்ப்பாடி இடையர்தங் குடில்கள் தோறும் இருகயிற் றுறியடுக் கியமணிக் கலசத் திருக்கும் தயிர்க் கட்டிகண் டொத்திக்கை யிட்டுரல் மிதித்தேறி யடிகுந்தி யொரு திவலை சிந்தாமலே ஒண்பவள வாய் மருந்துண்டிருங் கள்வனென் றுரலோடு கட்டியவர் கை மத்திட்டடிப்ப விருகண் பிசைந்தழு தரையன் மணிபொத்தியாடி மறுகால் வாயூறியச் சுவை கனிந்தாய்ச்சிய ரடைபட வற்றக் கறந்து காய்ச்சும் தித்தித்த பாலுக்கு மிச்சித்து நின்றவா செங்கீரையாடி யருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 8 |
தாதவிழ் பசுந்துளவ மாலையாடச் சிறிய தமனியச் சுட்டியாடத் தருண மரகத வயிர வலையமாடப் பொற் றடந் திருத் தோள்களாடக் காதுதிரு மணிமகரக் குண்டலமு மாடக் கவின்பொலியு மேனியாடக் கதிர்முத்து வடமாட மதுரித்த செந்தமிழ் கற்றவர்கள் கொண்டாடவே வாதுபுரி கொடிய சேனாபதி யிராவணன் மனவலிகள் திண்டாட நீள் வானத்திருந்து துந்துபியாட மலர்மாரி வானர் பொழிந்தாடவோர் சீதர முகுந்த பேராயிர முகந்தவர் செங்கீரை யாடி யருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே. | 9 |
அலைவலைக்குங் கருங்கடலும் வரன் முகடு தொடும் அம்பொற் கொடிக் குழா மொய்த்து ஆதவன் பொற்றடந்தேர் தடுக்குஞ் செம்பொன் அணிமாட கூடங்களும் நிலை வளைக்கும் பகழிலங்காபுரத் திறைவ னெடிய ராவணன் மகுடமும் நீலிதாடகை மார்பும் மாரீசனும் பார நிஷ்டூரவதி காயனும் கொலை வளைக்கும் கும்பகர்ணனும் நிகும்பனும் குறுகாத வல்லசுரரும் கொடிய வாலியு மரமொரே ழுருவக் குழைத்து வடிவாளி தொடவெம் சிலைவளைக்கும் திருக்கைத் தாமரைக் கொண்டல் செங்கீரை யாடி யருளே செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே! | 10 |
கயங் கொண்டலம்பித் திரையெறியுங் கடல் சூழுலக முழுவதும் வெண் கவிகை நிழற்கீழினி தடக்கிக் கருணை புரிந்து நாடொறு நின் றியங்குஞ் சரங்களனைத்தையு மற்றெல்லா உயிருந் தன்னுயிர் போல் இரங்கிக் காக்குமரசர் பிரான் எங்கோன் தசரதப் பெருமான் முயங்கும் பிராட்டிமார் மூவரவர்க்குள் முதன்மைத் தலைவி யெனும் முற்றா முலைக் கோசலை வயிற்றில் முளைத்து மடிமேற்கிடந்து தனி வயங்குங் கிரண மரகத மாமணியே தாலோ தாலேலோ மகரக் குழையே யென்னிரு கண்மணியே தாலோ தாலேலோ. | 1 |
பண்ணார் மதுரம் பழுத்தொழுகிப் பாகூற்றிருந்து கனிந்த மொழிப் பவளத் திருவாய் மணிமுறுவல் பங்கேருகக் குங்குமச் சுவட்டுப் பெண்ணார முதத் திருமடந்தை பிரியா மருமத் தினிதிருக்கும் பேராயிரம் பெற்றுடைய திருப் பேரைப் பிரானே முறுக்கவிழ்பூந் தண்ணார் துளவப் புயசயில தாமோதர சீதர முகுந்தா தமரக் கடலிற் புனல் முகந்து தழைக்குங் கயஞ்சூற் கார்மேக வண்ணா உலகன்றளந்த நெடுமானே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ. | 2 |
முளைக்குந் தவளக் கற்றை நிலா முழுவெண் திங்கள் திருவதன முற்றா முலைக் கோட்டர மகளிர் முதுபேராயத்தவர் மருங்குற் (கு) இளைக்குங் கொடிபோற் கொலி நுடங்க எழில் மாமணிச் சூளிகை முகட்டின் இணைக்கும் பசிய மரகதங் கான் றெறிக்குங் கிரணக் கொழுந்தோடிக் கிளைக்குந் துணர்க் கற்பகச் சோலைக் கிடையே தழைய வாகாச கெங்கைக் கரையில் பசும்புலெனக் கிட்டிச் சுரபி மணிநாவால் வளைக்கும் பசும் பொற்றலங்கள் மலி வளஞ்சேர் நாடா தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ. | 3 |
இடிக்குங் கடுஞ்சொற் கொடும் பாவி இழைக்குந் தறுகட்கஞ்சன் விடுத் திடுகோக்களிற்றின் புகர் முகத்திலேந்தும் பிறைக் கிம்புரி மருப்பை ஒடிக்குந் தடக்கைச் செழும்புயலே உணர்வுக் குணர்வே என்னுயிரே ஒழியாப் பிறவிக் கடல் சுவற்றி உயர் வீடளிக்கும் பெருமானே முடிக்கும் பசுந்தண் துழாய் மாலை முடிக்கும் குழகா வானவர்க்கும் முதுநான் மறைக்கும் எட்டாத மூலப் பொருளே பாகுபெற வடிக்குந் தமிழ்த் தெதிருப்பேரை மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ. | 4 |
கருதுஞ் சமய மோராறுங் கணிக்கும் பொருளே யவட்டெறியும் கருணைக்கடலே செழுங்கமலக் கண்ணா கண்ணினுண் மணியே திருகுஞ் சினவானவுணர் படச் சிலை கால் வளைத்துப் போர்முகத்துச் செல்லும் புயலே உறியில் வெண்ணெய் திருடும் குழகா பேய் முலைப்பால் பருகும் பவளக் கனிவாயா பசுந்தார்த் துளவம் அணிமுகுந்தா பங்கேருகச் செஞ்சரண நெடும் படப்பாந்தளின் மேல் நடித் திரட்டை மருதந் தவழ்ந்து சகடுதைத்த மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே யென்னிரு கண்மணியே தாலோ தாலேலோ. | 5 |
சொல்லற் கரிய கிரண நெடுஞ் சுடராழியினாற் கதிர் மறைத்த சுருதிப் பொருளே குருகூரன் சொற்பா அமிர்தங் கனிந்த செவிச் செல்வக் குழகா பாட்டாய்ந்து சிறைவண்டலம்பிக் கண்படுக்கும் செழுந்தார்த்துளவு மணங் கமழும் சிகரப்புய பூதர முகுந்தா அல்லிக் கமலப் பொகுட்டு மட அனஞ்சேர் வழுதித் திருநாடா அடிவைத்தெரரு மூவுலகமும் அன்றளக்கும் புயலே சேறுடைக்கும் மல்லர் பழனத் திருப்பேரை மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ. | 6 |
இடையிற் றொடியக் கனத் தடிக்கொண் டிளகித் ததும்பிப்பணைத் திறுமாய் தேந்து களபப் புளக முலையில்வத் துவர் வாயம்புயப் பொற் பெடையைத் தழுவியனு தினமும் பிரியா திருக்கும் திருமார்பா பெருவா ரிதி சூழ் நிலவலயம் பெண்ணுக் கிணங்கும் புயசயிலா படையிற் சுமந்த கொழு நுழைந்த பழனக் கொஞ் சேற்றினில் வரம்பில் பாகுபாடு நெட்டிலைக் கரும்பில் பசும் பூங்காவில் மணலினில் வாய் மடையிற் பணிலந் தவழ் பேரை மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ. | 7 |
அடியார் பிறவிக் கடல் சுவற்றி அழியாப் பரமபதங் கொடுக்கும் ஆழிப் புயுலே பணா மகுடத் தடல் வாளரவின் கண்பிதுங்சு நடியா நிற்கு மொரு குழகா நாராயண சீதா முகுந்தா நண்ணும் புலவன் கனி கணன்பின் நற்பாய் சுருட்டிச் சொல் தமிழ்க்கும் படிமேல் நடக்கு மிருசாண் பங்கேருக அன்றனல் கொளுந்தப் பரவைக் கொருகாய் கணை தொடுத்த பாரப்புய பூதரத் திலங்கும் வடிவார் திகிரிப் படை சுமந்த மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ | 8 |
கருணை பெருகி யுவட்டெறியக் கற்றா நினாயின் பின் நடந்து கானந் தழைப்பத் துணைக் கமலக் கழற்கால் பின்னிக் கன்றொடுகுன்(று) உருகும்படி வேய்ங்குழல் வாய்வைத்(து) ஊதும் புயலே அடியவர்தம் ஒழியாய் பிறவித் துயரகற்றி உள்ளத் திருக்கும் திருக்கறுத்து நிருதர் குலமும் வேரறுத்த நிமலா சமராடி டுந்திகிரி நீலக் குழகா மணநாற நிரைக்கும் பசுந்தண் துழாய் முகுந்தா வருணன் புரவும் இருசரண மாலே தாலோ தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலே தாலேலோ | 9 |
விட வாளரவக் கயிறு வெற்பிற் பிணித்து விசித்திறுக்க விரிதெண் திரை நீர்க்கடல் முகட்டின் விண்ணோர் அமுதங்கடைந்த அந்நாள் அடருங் கிரணக் கெளத்துவமும் அருமைத் திருவும் தடமார்புக்(கு) அமைத்துத் திருப் பாலாழி யினும் அரங்கத்தினுங் கண்துயில் பெரும குடவால் வளை சூலுளைந்து செத்தேன் கொழிக்கும் பொலன் தாமரைப்பொகுட்டில் குளிர் முத்துயிர்ப்ப, கருவென்னக் கொணர்ந்தஞ் சிறைய விளம்பேட்டு மடநாரைகள் கூண்டடை செறிக்கும் வளஞ்சேர் நாடா தாலேலோ மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே தாலோ தாலேலோ | 10 |
அரமகளிர் தங்கழுத்தணியுநாணகலாமல் ஐந்தருவடிக் கொடாமல் அயிராவதப் பெரும் பகடொளித்தோடி நீளலை கடல் புக்கிடாமல் திரளவடிகொண்ட தெள்ளமுதமது கொள்ளை போய்த் தேவர்கள் நடுக்குறாமல் தேவேந்திரற் கரசு மகுடபங்கம் வந்து சிறை சாரவுட்புகாமல் கரதூடணன் திரிசிரர நிகும்பன் கும்ப கன்னனிந்திர செயித்து கலங்காத ராவணன் மடிய லங்காபுரங் கனல் கொளுந்ததப் பெருவிரல் சரடு பூட்டிச் சிலைக் கடை குழைக்கும் கொண்டல் சப்பாணி கொட்டியருளே சந்தனச் சோலை செறி தெந்திருப் பேரை முகில் சப்பாணி கொட்டியருளே. | 1 |
அமரர் கின்னரர் முனிவர் கிம்புருடரும் பரவும் அயிராவதப் பாகனும் அம த்திடையுலவு கங்கைப் பெரும்பாவை அலை யெறிய விட்ட சடிலத்து உமையையொரு பங்குடைக் கடவுளுந் தொழுது உளமுவப்ப அமராரு சுடர்வேல் ஊறுபடு நயனப் படீர குங்கும முலைக்கு ஒல்குமொரு நுண் மருங்குல் குமுதவாய் மடம,ங்கை தேவகிக்குள்ளம் குழைந்து கண்களி கூரவே கோசலைக் கினிய கைக்கோமளக் குழவியே கோதிலா மழைவள்ளலே தமரவரி வண்டடை கிடந்த முளரிக் கைகொடு சப்பாணி கொட்டியருளே சந்தனச் சோலை செறி தென்திருப் பேரைமுகில் சப்பாணி கொட்டியருளே. | 2 |
வேதங்களோடைந்து பூதங்களும் அயன் விதிக்கின்ற பல்லுயிர்களும் மிக்கவைம் பொறிகளும் எட்டெழுத்தும் நின்று விளையாடுமொரு குழவியே எதங்களைத் தடியரிருவினை தடிந்து பேரின்பத்திருத்து மொளியே இலகு சுடர்வேல் விழி துரோபதை தனைச் சிறிதும் எண்ணாது துகிலுரிதரும் போதந்த வேளை வந்துதவு சீதர துழாய்ப் பூதரப்புய முகுந்தா பொருவரிய வண்டகோளகை முகடுகிறியப் பொன்னுலகு மேவுபாரி சாதங் கொணர்ந்தருள் பின்னைக் களித்தவன் சப்பாணி கொட்டியருளே சந்தனச் சோலைசெறி தென்திருப் பேரை முகில் சப்பாணி கொட்டியருளே. | 3 |
அடங்காத எழுபது வெள்ளஞ் சேனையுங்கை அமைக்கும் படைத்தலைவன் அநுமன் முதலாய் சுக்ரீவனுஞ் சென்று கடல் அணைகட்டி லங்காபுரம் தொடர்ந்தேறியொரு சிலைக் கடை குழைத்தருகணை துரந்திராவாணன் மகுடமும் துகள் படுத்திச் சனகி சிறைமீட்டதண்ணத் துழாய்க் காள மேகங் கொடு விடந்தாவு பஃறலைக் கட்செவி கிடந்தாட விரிதிரைக் கங்கையாட வேணியாடக் காளி தன்னுடன் வாதாடு வெள்ளிப் பொருப்பினன் பால் தடந்தாரு வேரொடு புரந்தான் கொணர்ந்தமான் சப்பாணி கொட்டியருளே சந்தனச் சோலை செறி தெந்திரும் மேரை முகில் சப்பாணி கொட்டியருளே. | 4 |
மண்டுதிரை யெறி மகர சல ராசி யேழு நெடுவரை யேழும் அகில மேழும் வானகமும் உயர்திசையும் வயிறு தங்கப்பவள வாய் மடுத்தங் காந்து முன் உண்டுமிழு நீனிறக் குழவி நெடுவாலி மார்(பு) உருவ வொரு சர்ம் விடுக்கும் ஒண்திறற் செங்கை தடங்குரிசில் வேதாந்த உபநிஷத ஞானதீபம் புண்டரிக மலர்முகை முறுக்கவிழு மோடையிற் புக் கிடங்கர்க்கு வெருவிப் போரானை மூலமென்றோதா முன்னோடியொரு புள்ளரசுமீது வருபைந் தண்டுழாய் புனை கொண்டலண்டர் நாயகனினிது சப்பாணி கொட்டியருளே. சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில் சப்பாணி கொட்டியருளே. | 5 |
வண்ணந் தழைந்த கடலுலக முழுதும் பரதன் மணிமுடி கவிப்ப நீ வெவ் வன மேகெனுஞ் சிறியதாய் சொல் தலைக்கொண்டு மணி நெடுஞ் சீரை சுற்றிப் பெண்ணென்ற சீதையொடு மிளையவன் தன்னொடும் பெருங்கானகத்தில் புகும் பெம்மான் நறுந்துளவ மாலிகாபரணன் முது பேரின்ப வீடளிக்கும் கண்ணன் சிலைக்கடை குழைத்திலங்காபுரங் கட்டழிக்கும் தேவர் கோன் கருணைப் பெருக்காறு வட்டெடுத் தலைமண்டு காளமேகந் துளி படும் தண்ணந் தடந்திரைப் பொருநையாம் தண்துறைவ சப்பாணி கொட்டியருளே சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை குயில் சப்பாணி கொட்டியருளே, | 6 |
உடுக்குந்திரைக் கருங்கடலாடை நிலவலயம் உதரத் தினுள்ளடக்கி ஒருசிறிய குறளுரு வமைந்த நெடுநேமிமரல் உபய சரணார விந்தத்(து) எடுக்கும் பனிக்குறுந் திவலைபடு மலரிட் டிறைஞ்சி வருணன் பரவுவோன் இசைபாடி ஒருகோடி அறுகாய்நுதைந்தாடும் ஈர்ந்து ழாய்ப்படலை மாயன் மடுக்குங் கொழுஞ்சுடர்ப்பருதி வானவனுதய வரை பசும்புரவி பூட்டி வருமணிப் பொற்றடந் தேர்க்கிடுஞ் சித்திர வட்டாழி யொட்டி முட்டித் தடுக்கும் பொல புரிசை சூழ் வழுதி நாடனொரு சப்பாணி கொட்டி யருளே, சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில் சப்பாணி கொட்டி யருளே, | 7 |
மான வேலரசர்தொழு மிதிலாபுரிச் சனகன் மாதேவி மணி முன்கைமேல் வைத்து முத்தாடும் பசுங்கிளி யெனத்தூய மஞ்சனஞ் செய்து செம்பொன் மேனி முழுவது நலங்கிடுசெய்து கொங்கைக்கு மென்களப மள்ளி யப்பி விரைநறுந்தார் குழலின் மீதணிந் தஞ்சனம் விளங்கு கட்டையி னெழுதிக் கூனிளம்பிறை நுதல் கஸ்தூரி தீட்டிநற் குளிர்மணிச் சுடிகை நாற்றிக் கோல்வளை திருத்தி மணிமேகலை மருங்கினிற் கொய்து கொய்தினிது டுக்கும் சானகி பெருங்காம வெள்ளந் திளைத்தவன் சப்பாணி கொட்டி யருளே சந்தனச் சோலை செறி தென்திருப்பேரை முகில் சப்பாணி கொட்டி யருளே. | 8 |
கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை கவர்ந்துயிர் குடிப்ப மறவி கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக் கடை குழைத்தடிகணை தொடுந் தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும் சுருதிநூல் முறை முடித்துச் சொல்லரிய முதிலாபுரிச் சனகன்வில் கண்டதுண்டப் படுத்து மெங்கோன் செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச் செஞ்சுடாவி மணிமுடிச் சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச் சிறந்தருள் புரிந்து சங்கு சக்கரத்துணை செங்கை யொக்க்கச் சிவப்பவொரு சப்பாணி கொட்டி யருளே, சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில் சப்பாணி கொட்டி யருளே. | 9 |
பட நடுங்கக்கண்பிதுங்கப் பணாமுடிப் பஃறலைக்கட் செவியின் மேல் பபுரி முறுகித்திருகி நடனஞ்செயும் சரண பங்கேருகக் குழகன் வெவ் விடரகற்றிச் செனன வலையறுத்துத் தொடரீரேறி வீடு குடிபுக்கு எக்காலமும் அரசிருப்பக் கடைக்கண்ணோக் கின்னருள் புரிந்த நெடுமால் மடமயிற் சாயற் பசுங்கிள்ளை யங்குதலை மணிவல்லி தூயவல்லி வளந்திருப் பேரை வல்லி குங்கும மிருகமத சந்தனப் பாளிதத் தடமுலைச் சுவடுபொருது பூதமணி மார்பனொரு சப்பாணி கொட்டி யருளே, சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில் சப்பாணி கொட்டி யருளே. | 10 |
சொற்ற நான்மறை புக்கிருக்கு மிடமாதலால் சுரிசங்கு இடம் புரிதலால் துய்ய மலர் மாளிகைச் செல்வி பேரமுதந் துளிக்குமென் றின்புறுதலால் மற்றுலகின் வாழ்பல்லுயிர்க் கிரங்குந் சத்யவாய்மை குடிகொண்டுறைதலால் மங்கலப் புனிதமாம் சகலமுந் திருவுள மகிழ்ந்திரங்கிச் சிறிது நீ முற்றுமதி யோடர வதுகெழுக் கம்பூவும் மொய்க்கும் செழுங் கொன்றையும் மூரித் திரைப்பாய் சுருட்டித்தருங் கய்கை முதுநீரும் வரவு சோதிக் கற்றைவார் சடைமுடிச் சிவனு மயனுந்தொழக் கனி வாயின் முத்தமருளே காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின் கனி வாயின் முத்தமருளே. | 1 |
தழைமடற் பச்சைப்பசும் பூகமணி மிடறு தளையவிழ்க்கும் பாளை வாய்த் தருமுத்தமும் பச்செணக் கிரண மடருமுது தாற்றிளங் கதலி வாழை உழைமுத்து முடலிழுக் குண்டுநியு மென்கரும்பு ஒளிர் முத்துமாலை வாயிட்டு உடனெருக்கும் பொழுது கணுவினில் வெடித் துதிரும் உம்பர் வான்முகடுதூங்கும் மழை முத்தமுந் துளிபடும் பொழுது செவ்வுக்கு வாராது வடிவுதகரும் வளர் புண்டரீகப் பொகுட்டு முத்தஞ்சிறைய வண்டு கால்கொடு துவைக்கும் கழை முத்தமுங்கதிர் வெதுப்புண்டு நீறுமொடு கதிர் முத்து நிகரல்லவே காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின் கனிவாயின் முத்தமருளே. | 2 |
முனியுமிள வலும்முடன் வரத்தன் திருந்தாளின் முளரித் துகட்க ருங்கல் முனியிட்ட சாபந் தவிர்த்து முன்னுருவெய்த முது கருணை யோடளித்துச் சனகன் மிதி லாபுரிச் சிலைவளைத் துச்சீதை தனைமணம் புணர் தண்டுழாய்ச் சக்ராயுதக் கடவுள் குலநாதன் முத் தத்தும் தடம் பொருநையான் இனிய சதுமாமரைக் கொகுமுதல்வன் வருணன்வந்து எக் காலமும் பரவுவோன் இலகுகொடி மணிமாட வழுதிவள நாடன் நூற்றெண் மரொடும் விளையாடுமால் கனியும் முதும்பாகு மூறிக் கலந்தசொற் கனி வாயின் முத்தமருளே, காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின் கனி வாயின் முத்தமருளே. | 3 |
பொருதிரை சுருட்டுமணி மகரசல ராசிதரு புது முத்தமுங் கைதொடேம் புலவு நாறிச்சுற வெறிந்துடல முவரிப் ரினற் பங்க மூடெழுதலால் பருக மதுரித்தபா கூற்றிருந் தொழுகும் பசும் கரும்பீன்ற முத்தும் பலமொழிக் கவடு படுமாதலால தனையும் படுபழி யறிந்து வேண்டேம் இருநிலத்துச் சிவத்துக் கண்டமும் கருப்பென்று வேய்முத்தம் தொடேம் இனிமேலு நினது கனிவாய் முத்தினுக் குவமை யேதெடுத்துக் கூறுவேன் கருதுமுது நான்மறைகொரு முதல்வனே செழுங் கனி வாயின் முத்தமருளே காவுசூழ் தென்பேரை ஆழிநீர் வண்ணநின் கனி வரயின் முத்தமருளே | 4 |
உலைவளைக்குங் கொழுங்களல் வாய்த்துருத்தி வைத்து ஊத வெம்பொறிசிந்த வெந்து உருகுங் கருங்கல்லுருக் கோடிரும்பு னாழ்து ஒன்றா யடித்து நீட்டித் தலை மடுத்ததை முனைபடுத்திக் குணக்கறத் தட்டியர மிட்டராவிச் சமைந்தொப்ப மிட்டுக் கடைந்தவடிவேல் பொரு தடங்கட் செழுங் குமுதவாய் மலை வளைக்குஞ் செழுங்களப குங்குமமுலை மடந்தை தெய்வீக போக மடமயிற் சீதைப் பிராட்டியை மணம்புணர வளமருவு மிதிலாபுரிச் சிலை வளைக்கும் பசுந்தண் துழாய் மேகமே திரு வாயின் முத்தமருளே தெந்திருப்பேரை வருநங் குழைக்காதநின் திருவாயின் முத்தமருளே | 5 |
பம்புதிரை வாரிதி வடிவம்பலத்துளி படுங்ககன முகடு கோத்துப் பரக்கும் படிக்கும் முன்பெய்தகண் மாறியிற் பதறியா நிரை கெடாமல் தம்ப மற்றிடையர் மடியா தேழுநானாமுது தடவரை யெடுத் தேந்துமென் தாமரைச் செங்கை தடங் குரிசிலே சங்கு சக்ராயுதக் கடவுளே கம்ப மதமால்யானை மூலமென் றோதஒரு கருடன் பிடர்த் தலைவரும் காராழி மணிவண்ண பேராயிரம் பெற்ற கருணாகரக் குரிசிலே செம்பளமுங் குமுதமுங் கவிருமொத்தநின் திருவாயின் முத்தமருளே தென் திருப்பேரை வருகங் குழைக்காதநின் திருவாயின் முத்தமருளே | 6 |
பொங்கு வெண்டிங்களங் கவிகை வருமிரணியன் புகல வவன் புகலாம் லெந்தை நாராயணன் தன்பெயர் புகன்ற திலெழுந்து கோபித்து அங்கை மலர்மீது சங்காழி யேந்தியும் அயனுமவிர் சடைப் பெருமானுமுன் அஞ்சிப் பதுங்கித் திரிந்தனர் மறந்தனைகொல் அரி யெங்கெனப் புடைப்பப் பங்கமுறும் அக்கனகன் மார்பம் பிளந்திழி பசுங்குடர் பிடுங்கி ரத்த பானம் பணித்தடந்தோள் மாலை சூடவே பண்டுகளி கொண்டோர் தூணில் சிங்கவடிவாய் வந்த எங்கள் குலநாதநின் திருவாயின் முத்தமருளே தென் திருப்பேரை வரு நம்குழைக்காதநின் திருவாயின் முத்தமருளே | 7 |
மூவா முதலா யுலகயொரு மூன்றும் பரவ அங்குரித்து முந்திக் கொரு வித்தாக வந்த முதுநான் மறையின் குலக்கொழுந்தே கோவா மொளரு மரகதமே கொடும் பேரரக்கர் குலக்கூற்றே கோவாதேதிய ருளக்கமலங் குடிபுக் கிருக்கும் பெருமானே தாவா வளமைக் கோசலைக்கோர் தவமே தவத்தின் பயனே யச் சனகன் தரு சானகி வேட்ட தடங்கை களிறே போரேறே தேவாவமிர்தம் கனி பவளத் திருவாய் முத்தம் தருகவே தெள்ளிப் பயிலும் தமிழ்ப்பேரைச் செல்வா முத்தம் தருகவே. | 8 |
துளிங்குந் திரைப் பாற்கடல் முகட்டுத் தூய தரங்கத் தனந்தபுரத் துறைவாய் விரிகண் துயில் கூருஞ் சோதிச் சுடரே பேரின்பம் அளிக்குக்குங் கருணைக் கருங்கடலே அழியா வீட்டுக் கொருவிளக்கே அமுதங் கடைந்து திரட்டியெடுத்து அமரர்க் குதவும் பெருமானே களிக்குஞ் சுரும்பர் துதைத்துணந்தேன் கக்குங் கமல முறுக்குடையும் கழனித் தடஞ்சூழ் திருநாடா கண்ணா அரிகேசவ முகந்தா தெளிக்கும் பொருநைந் தடந்துறைவா திருவாய் முத்தந் தருகவே தெள்ளிப் பயிலும் திருப்பேரைச் செல்வா முத்தந் தருகவே | 9 |
சந்தாடவியும் பாதிரியும் தடந் தாமரையும் விளை வயலும் சதுமா மறையும் விழாவொலியும் தழைக்கும் பிள்ளைக் குழாவொலியும் நந்தா வளமைத் திருவழுதி நாடா பரமபத வீடா நறுந் தாதளையும் பசுந்தளவ நாராயண சீதர முகுந்தா கொந்தார் மலர்ப்பூங் கரியகுழல் கொவ்வைக் கனிவாய் மணிமுறுவல் கொடிபோல் நுடக்குந் துடி இடையக் குலக் கோமளக் கோசலையளித்த சிந்தா மணியே மரகதமே திருவாய் முத்தந் தருகவே தெள்ளிப் பயிலுந் தமிழ்ப்பேரைச் செல்வா முத்தம் தருகவே. | 10 |
விதுரன் மனைவி லடிசில் நுகரும் விரதன் வருக வருகவே வித ரணிகமு மறிவு முடைய விமலன் வருக வருகவே அதிரு மணியு மரையின் வடமும் அசைய வருக வருகவே அழகு கரிய குழல்கள் சரிய அபிமன் வருக வருகவே புதிய மதியின் வதன வெயர்வு பொலிய வருக வருகவே பொழியு நறவு விறவு துளவு புனையு மனகன் வருகவே மதுர முறு செல்வதர வமுதம் உதரம் வழிய வருகவே வருணன் வருகு முபயசரண வரதன் வருக வருகவே | 1 |
எரியுமனல் கதுவும் விழி நிருதர்கு சமர்புரி இகல் தொலைய விடு கணையினால் இருவினையும் ஒருசிறிது தொடரவரிதென வருகும் எவர்தமையு மடிமை கொளுமால் முரிபுருவ நுதல வனிதை சனகி முலை முகருதழு முகலளித விதரணமு ளோன் முருகு விரிதரு துளவு மணமலிய நெடிய மணி முடியினணிபெற வணைகுவோன் உரிய சதுமறையு முனிவரரு மயனொடு பரவும் உபயபரிபுர சரண நீ டுலக முழுவது முதர மையவொரு தனிநுகரும் ஒளிரிரவி குல மரபினோன் நெரிய மருதமு முதிய சகருமுதை விதரணிகன் நிமலன ரவணை துயிலுமால் நிறைய மகிமையுமளவில் குணனும் வடிவழகுமுடைய நிகரில் முகில் வணன் வருகவே. | 2 |
புகலருஞ் சதுமறை யருந்தவர் புலவர் பண்டிதர் பலர்கொட புதிய பங்கய சரண் வணங்கிய புதிய வெண்டிரையுததி சூழ் செகமடங்கலு நொடியினுண்டுமிழ் திருமணந் தொளிர் பரவவோர் திரிபுரந் தழல்பட முனிந்தருள் சிவனயன் தொழ வருகவே தகர முங்கிய பரிமளங் கமழ்தரு தடம்புய செயதரா சமர் முகந் தனில் நிருதர் வெம்படை சரியிடுஞ் சிலையபிம நீள் மகரகுண்டலமசைய இங்கெதிர் மகர வண் குழை வருகவே வருணன் வந்திரு சரண் வணங்கி மனதிகழ்ந் தெதிர் வருகவே, | 3 |
கலை மணந் தொளிர் தவள வெண்பிறை கதுவிடுஞ் சிலை நுதலினாள் கவின வந்தரு சனகி சம்ப்ரம கனதனம் பொருது பூதமால் உலைமுகந்தனில் அடிபடும் பொழுது ஒளிரும் ஒண்சுடர் வயிரவா ளொடு முனிந்தடர அவுணர் பொன்றிய உயிரடுஞ் சமன் வருகவே திலகலஞ்சரி துவசைந் தொளி திகழ வண்டின முரலவய செழு நறுந்துகள் முகைவிரிந்தவர் சிறிய பங்கயமெனு நறு மலர்மடைந்தையும் நிலமடந்தையும் மருவுதிண் திறல் வரதநீள் மகரகுண்டலமசைய விங்கெதிர் மகர வண் குழை வருகவே. | 4 |
உளநெ கிழ்ந்திரு பொழுதும் வந்தனையொடும் உவந் து எநிர் பர வவே உபய செஞ்சரண் முடிபு னைந் தொளிர் உயர் பதந் தரு கருணைமால் அளை க வர்ந்திடை மகளிர் தங்குடில் அணைதருங் கயிறது கொடே அடிபடும் பொழுதுடல் குழைந்து அழுதது நின்றவன் வருகவே குளநிரம்பிய புனலினுங் கரை அருகு வண்டது மதகு நீள் குவலயம் படுதரு நெருங்கிய குளிர் நறும் பொழிலிடையும் வால் வளை முழங்கிய குருகையம்பதி மருவு நங்கை கண்மணி நள்ளு வலவனிங்கித கவிதை கொண்டருள் மகர வண்குழை வருகவே, | 5 |
முடிமீதொளிர் சூழியத் தொகையின் முழுவெண் திய்கள் கற்றை நிலா மூரிக் கடல் சூழ் புவன மெனு முற்றுந் தழைய வடிந்த வெள்ளைக் கொடி போலொசியுங் குழையுமணி குழையுங் குழையவுடல் குழையக் குழைத்து நுதலினிருந்திலதக் குறுவேர் வழிய விடைகழியின் அடிமேலடிவைத் திருகை சுவர் அதனைப் பிடித்து வருதலிற்றள் ளாடி விழுதத் தளிப்பின் மலர் அங்கை பதித்துதி தவழ்ந்தெனது மடிமீதிருந்து களப முலை வள்ளத்து அழுதுண்டிட வருக மகரக் குழையே யென்னிருகண் மணியே வருக வருகவே | 6 |
பண்டா லிலையிலரங் கத்துப் பாதாழியிற் கண்டுயில் கூரும் பச்சைப் புயலே பணா மகுடப் படப் பாந்தளின் கண்பிதுங்க நறுந் தண்டாமைரச் செஞ்சரண் பெயர்த்துத் தள்ளிக் கடைவால் பிடித்து நெறி தழைக்கும் படிக்சூ நடம்புரிந்த தலைவா கடல் சூழ் உலகமுழு துண்டாதர வோடுமிழ்ந் தளந்த வொளியே வொளிரு மரகதமே ஒரு வாணுதல் பண்டுளங்களிப்ப உயர்வான் முகடு கிழித்தெழுந்து வண்டார் தருவின் மலர் கொணர்ந்த மாலே வருக வருகவே மகரக் குழையே யென்னிருகண் மணியே வருக வருகவே | 7 |
சிந்தாமணியே மரகதமே தேவே தேவர் பெருமானே தேடும் பொருளே நாடோறும் செய்யும் தவமே தவப் பயனே எந்தாய் நந்தா விளக்கொளியே எங்கட்குயிரே பரகதியே எழுதாமறையின் வடிவே சொல் எழுத் தெட்டினுக்குபொரு மயமே கொந்தார் துளவப் பசுந்தாமக் கோவே நிருதர் குலக் கூற்றே கூடுபுனல் நீராடி வலங்கொண்டு திருமஞ்சனக் கொலுவில் வந்தாதரித்து வருணனடி வணங்கும் புயலே வருகவே மகரக்குழையே னென்னிருகண் மணியே வருக வருகவே | 8 |
ஆராவமுதத் தில வித ழின் அமுதத் திவலை மார்பெரழுக அரைநாண் வடமுமணியும் மருங்கு அசையக் குழையுங் குண்டலமும் சீரார் திருவிற் பொலியு நுதற்றீட்டுங் குறுவேர் வரும்ப வருள் செய்யுங் கமல முகமிலங்கத் திருத்தாட் டுனைப் பேறேறண்டையொலி பார்மீதெங்கள் செவிகுளிரப் பழக நெறி நாடோறும் வளர் பசுந்தார்த் துளவு மனங்கமழும் படிநீ நடந்துள்ளடி பெயர்த்து வாரார் களபக் குரும்பை முலை வள்ளத் தமுதுண்டிட வருக மகரக் குழையே யென்னிருகண் மணியே வருக வருகவே, | 9 |
அருமைப் பெருமான் பிறவியொழித்து அருளும் பெருமான் காதல சங் காழிப் பெருமான் வானவர்க்கும் அருநான் மறைக்கு மெட்டாத தருமப் பெருமான் பசுந் துளவத் தாமப் பெருமானேழுலகுந் தழைக்கும்படி கன்றளந்த நெடுஞ் சரணப் பெருமான் மன்னுயிர்க்குங் கருமப் பெருமான் முத்திவழி காட்டுப் பெருமான் பூம் பொருட்டுக் கமலாசனத்து வீற்றிருக்கும் மன்னிப் பெருமான் தமிழ்க் குருகும் பெருமைப் பெருமானென் னருமைப் பிள்ளைப் பெருமான் வருகவே பேராயிரம் பெற்றுயர்ந்த திருப்பேரைப் பெருமான் வருகவே. | 10 |
மதியுடைத் தாய் மண்டலம் பெற்று வான் முழு மதிக்கடவு ளெனவரு தலால் வடியிட்ட தெள்ளமுத மயமாகி யானந்த மகராலாயத் தெழுதலால் நதியொடர வறுகெருக் கணியுஞ் சடைக்காட்டு நம்பனுக் கொரு கண்ணதாய் நாடொறு முயிர்ப்பயிர் தழைப்ப அருள்பொழிதலால் நல்துணை யுனக்கிவன் காண் முதிர விளையுங் கொழும்பவளக் குலைச்சாலி மூடுதொறும் வாய்மடைதொறும் மூரிப் பகட்டு வரிவாளை வெடிதரவியலை மோதும் புனற் கேணியும் அதிரு மணிமதகும் வளையுகள் வழுதி நாடானுடன் அம்புலீ ஆடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ ஆடவாவே, | 1 |
இருவினைச் செனன வலைகட்டறுத்து அழியாத இன்ப வீடெய்தும் பொருட்(டு) இணை மலர்ச்சேவடி யடைந்தவர்க் குதவிடுவன் இவன் வருண னாதரிக்கும் திருந் திச் சமூக தீர்த்தத் துறைத் தீம்புனல் திவலையொரு சிறிதுபடிலோ செக மண்டலத்துன்முயல் முகமண்டல முகற்கறை சிதைத்து வண்டடை கிடப்ப முருகுவிரிதரு நறுங் குமுதவாய் மடமங்கை முகிழ்முலை மணம் புணர்ந்து முன்னுங் களங்கமற்றப் பாலும் வைகுண்ட முத்தி மண்டல மெய்தலாம் அருமறைக் குரியவொரு பொருளா யிருப்பானிவன் அம்புலீ யாடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாடவாவே. | 2 |
வெவ்வரா விடமொழுகு கறையனற் பகுவாய் விழுங்கி மீளவும் உமிழ்தரும் மச்சி லென்றுலகிலுரைசெய் வரதனாலுனுடல் வெளுத்தற மெலிந்து குப்புறற் றெவ்வுலகமுந்திரிந் தாவதென் பெரியோரை எளியோர் துணைக் கோடல்நன் றிருகனற் கட்செவிப்பகை முடித்தற் குவணன் இவனிட்ட ஏவல் கடவான் செவ்வுபட எட்டிரட்டித்தகலை யுடைய நீ சிந்திப் பதற் கரியவாம் திகழ் தருங்கலை யறுபத்து நாலுடைய வொரு செம்மலிவன் வைகுண்டமாம் அவ்வுலக முந்தாகத் தருவன ஃதறிந்து அம்புலீ ஆடவாவே ஆழிநீர் வன்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ ஆட வாவே | 3 |
பைத்தலை நெடுஞ் சுடிகை விடமொழுகு கட்செவிப் படவரவு தொடரினுநீ படரொளி மழுங்கி வான் முகடொளிக்குவை பெரும் பாம்பு தீண்டிக் கிடந்த நித்திரை மயக்கத்து மொளி மழுங்கானிவன் நெடிய வானிடை நுழைந்து நிலையிலா தோடித் திரிந்து ழல்வை நீயிவன் நீடூழி யடிபெயர்ந்து முத்த வாணகை விமலையடிவருட வானவர்கள் முனிவ ரஞ்சலி செய்யநீள் முத்திதரும் வைகுந்தம் வீற்றிருப்பவன் அந்த அம்புலீ ஆட வாவே அத்தகைமை தோறு முன்னிலு முயர்ந்தவன் இவன் அம்புலீ ஆட வாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாட வாவே. | 4 |
செங்குருதி யலைமண்டி யாறெடுத் தோடச் சிலைக்கால் வளைத்து விசயன் தேத்தரசனைக் கொன்று கூற்றருந்தும்படி சினத்திடும் போர் முகத்துப் பொங்குக திராயிரம் தங்கு செஞ்சுடரவன் பொழுது காணாம லொளிர்செம் பொன்னிறத் திகிரியாலிவன் மறைத்தனனன்று போதாக்குறைக் கொளிரும் வெண் சங்கு கொண்டுன்னையும் மறைந்திடாமற் கலை தளர்ந்து மெலிவெய்துறாமல் தாதள வெருப்பொடித் தெரியாமல் முன்றில் தவழ்ந்து விளையாட வாவென் றங்கை மலர்விரல் குனித்துனை யழைத்தவனிவன் அம்புலீயாட வாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாட வாவே. | 5 |
கூறருந்ததியை நீ யுடையவன் இவன் அமரர் கூறருந்துதியை யுடையோன் குறைபாடு தடங்கலை களையுடையை நீ இவனுமோ குறையாத கலைக ளுடையான் வீறுதரு முருவிலி மதிங்குடையை நீயிவன் விரதண மதிக் குடையவன் விண்ணிடை கரந்தொளி யொழிந்திடுவை நீயிவன் வேதநுண் பொருளி னொளியான் ஊறுபட வோடித் திரிந்திளைத் திடுவைநீ ஒருநாளு மிளையா னிவன் உவரிப் புனற் பங்க மூடுதிப்பாயிவன் உம்பரா ழியினுதிப் போன் ஆறலை புரட்டு பொருனாநதித் துறைவனுடன் அம்புலீ ஆட வாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழி மாதவனுடன் அம்புலீ ஆட வாவே. | 6 |
சந்தப் படாமுலைத் தார்குழல் கோமளத் தையல் சானகி பொருட்டுத் தடமதி லிலங்காபுரம் பொடி படுத்தித் தகர்த்து முடிபத்து மண்மேல் சிந்தச் சரந்தொட்ட சிலைவீர ராகவன் சிறு குழந்தைப் பிள்ளையாய் திருவிரற்றலை சுட்டியுனை யழைத்தால் வரச் செய்யா திருக்க முறையோ முந்தப் பெருந்தக்க வேள்வியில் தேவர்கள் முறிந்துதிசை கெட்டோடு நாள் முழுமதிக் கடவுள்நீ பரிபவப் பட்டகதை பொழியக் கணக்கு முண்டோ அந்தக் கணக்கின்று வந்திருக் கின்றதினி அம்புலீ யாடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீயாட வாவே. | 7 |
தவநெறிக் கௌதமன் பண்ணிய கலியுகைபுரந் தரனொடு மணந்த வதனால் தவமுனி யறைந்த சாபத்திலவள் கல்லுருத் தாங்கிய தொழித்த தெங்கோன் புவனமொரு மூன்றும் ஈரடியாலக் கின்ற பொற்களல் துகளுனக்கும் புனித பூரணசெவ்வி முகமண்டலக் கறைப் புரைதீர வரமளிக்கும் சிவனு மயனும் வெள்ளை அயிராவதத்தனும் செஞ்சுடர்க் கடவு ளோனும் தேவர் முப்பத்து முக்கோடியும் அறுமுகச் செம்மலுங் கைம்மலைக் கோட் டவனுமுறை முறைபரவு நிகரில்முகில் வண்ணனுடன் அம்புலீ யாடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாட வாவே. | 8 |
விண்டடவி முகமாயிரங் களுமொளித்து நெடு வெளியின் வந்தொரு முகமதாய் வெண்திரைக் கங்கைப் பெம்புள்னல் பரந்தென விரிந்தவவ் வெள்ளத்தின் மேல் தண்டரள மணியிழந் தாகாய நள்ளிடைத் தயங்கிய சஞ்சல மெனத் தாரகைக் குலமொடு தவழ்ந்து மேன்மேலுநீ தலைப்பட்டு வருத லானும் புண்டரிக மலர்முகை முறுக்குடைந்தலருமொரு பூவெனப் பொலிவு பெற்றாய் புகலரிய மதிவள முறைக்கில் முழுமதியெனப் புகல்கின்ற துண்மை கண்டாய் அண்ட பகிரண்டமும் நிரம்பிய இவன்றனுடன் அம்புலீ யாடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாடவாவே. | 9 |
என்னென்று நிகரிரவின் இருளன்றி நீயன்பர் இதய விருணீ க்கவறியாய் இருவிசும்பிற் பொலிகு வாயிவன் புவனர்கள் எங்கணும் பொலிவ தோராய் பொன்னந் தகட்டிதழ்க் குமுத மல்லாலுளப் புதுமலர் திறக்க வறியாய் போலியல்லா இவன் போலியன்றால் வந்து புதுநிலா மணிமுன்றில் வாய் மன்னுஞ் சரோருகப் படுகரும் புளினவண் மணற் குன்றமுஞ் சோலையும் மடவனப் பொடையோடு கூடிப் புணர்ந்தக மகிழ்த்து பிரியாது செஞ்சூட் டன்னங்கள் விளையாடு தென்பேரை மாயனுடன் அம்புலீ யாடவாவே ஆழிநீர் வண்ண னெனும் வாழிமாதவனுடன் அம்புலீ யாடவாவே. | 10 |
களிக்கும் சுரும்பர் துதைந் துழுது கணைக் காலசைத்துச் சில்லோரை கனிந் தூற்றிருப்ப மிழற்று தொறும் கக்குங் கலுழி நறவுபரி மளிக்கும் பசுந்தார்ச் செழுந்துளவு மணக்குங் குழகர் கார்மேக வண்ணா கருணை மடைதிறந்து வழியும் புயலே பேரின்பம் அளிக்கும் பெரிய தெருவீதி அருகே வழிக்குப் புறம்பாக அறியாப் பருவப் பெண்களொடுத் தமைக்கும் வண்டலிது கண்டாய் தெளிக்கும் தமிழ்த்தென் திருப்பேரைச் செல்வா சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 1 |
வேண்டக் கிடையா வாரமுதம் விரைதெண் டிரைநீர்க் கடன்முகட்டின் வெற்பைப் பிடுங்கி மத்தாக விடவா ளரவுக் கயிறுசுற்றிப் பூண்டக் கணமே சுவைமதுரம் பொங்கிப் பெருகக் கடைந்தெடுத்துப் புலவர்க் களிக்கும் பெருமானே! பொருந்தா நிருதர் போரேறே! காண்டற் கரிய கொழுங்கிரணங் கக்கும் பசிய மரகதமே! கதிரா ழியிற்செங் கதிர்மறைத்த கருணைப் புயலே பூமகள்கை தீண்டச் சிவக்கும் புலனருளாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா! சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 2 |
வள்ளைக் குழைவே னெருங்கருங்கண் மதிவா ணுதற்கோ மளப்புளக வனமா முலைக்குங் குமச்சுவடு மடவா ரொடும்போய் விளையாட அள்ளிக் குடிக்குந் தடம் பொருநை ஆற்றிற் கூடு புனற்றுறையின் அருகிற் சிறுபே தையர்களெடுத் தடங்கா விருப்ப மீதூர்ந்து தள்ளிப் பால்மாற் றரும்பசும்பொன் தகட்டின் வயீடூ ரியங்குயிற்றிச் சமைக்குந் திருமா மணிமுறத்துத் தருதா மரைக்கை சேப்பமணல் தெள்ளிக் கொணர்ந்து தரவிளைத்த சிறியேஞ் சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 3 |
தருக்கா மலர்ப்பூம் பொழிலும் வயல் தடமுந் தருதென் திருப்பேரை தழைக்கும் படிநூற் றெண்மர்தொழுந் தாமோதர சீதர முகுந்தா ஒருக்கா லெணுமவ் விருக்காலும் உணராப் பொருளே பரஞ்சுடரே ஒருவா ணுதல்பண் டுளங் களிப்ப உயர்வான் முகடு கிழித்தெழுந்து மருக்கால் நறுமென் மலர்கொணர்ந்த மதமோ பதினா யிரங்கோப மங்கை யர்கள் புளகமுலை மணந்து கனிவா யமுதுண்ட செருக்கோ வுனக்கீ தியல்பன்று சிறியேஞ் சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 4 |
கோவே கோவா மரகதமே கொடும்போ ரரக்கர் குலக்கூற்றே குளிர்பூந் துளவத் திருத்தொங்கல் குவவுத் தடந்தோட் காயாவாம் பூவே பூவின் பொலன்பொகுட்டுப் புதுமென் மணமே யருள்சுரந்து பொங்கிப் பெருகி யுவட்டெறிந்து பொழியும் புயலே! கற்பகப்பூங் காவே முதுகோ சலைதவமே கண்ணே கண்ணி னுண்மணியே கதிர்நித் திலவெண் மணல்நினது காலி னுறுத்தல் கடனன்றே தேவே தேவப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 5 |
வன்னக் களபப் புளகமுலை மடவா ரெனுங்கோ வியர்கள்திரு வாய்ப்பா டியிற்புக் களைகவர்ந்த மணிவாய்க் கள்வ னென்று கட்டி உன்னிப் பொருமி யழவடித்த துண்டே லவர்கள் விளையாடும் ஒளிர்நித் திலவெண் மணற்சிற்றில் உனக்கின் றழிக்க முறைகண்டாய் கன்னிக் கமுக மிடறொடியக் காய்க்கும் பசுங்காய்க் குலைசிதறக் கதலிக் குலங்க ளடிசாயக் கயல்பாய்ந் துளைந்து வாலறையுஞ் செந்நெற் பழனத் திருப்பேரைச் செல்வா சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | 6 |
பண்ணே றியமென் குதலைமொழிப் பவளக் கனிவாய்க் குறுநகையும் பாரித் தோங்கிப் பூரித்த பைம்பொற் புயமுங் கண்டழகு கண்ணே றெளியேம் பட்டனமென் றெண்ணிக் கருத்து வேறுபட கணக்கன் றுலகில் மன்னுயிர்க்குக் காவற் கடவுள் நீயன்றோ மண்ணே ழையுமுண் டுமிழ்ந்தளந்த மாலே வேலைப் புனல் சுவறி மறுகக் கணைதொட் டிடுமுகுந்தா வருணன் றினமா ராதனைசெய் தெண்ணீர்ப் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றில் சிதையேலே தெளிக்குந் தமிழ்த்தென் திருப் பேரைச் செல்வா சிற்றில் சிதையேலே. | 7 |
தடிக்குஞ் சிகரப் படாம்பொதிந்த தடமா முலைக்குங் குமச்சுவட்டுத் தழைக்குங் குறுக்கண் சந்தொழுகித் தருபா லசோதை மகிழ்ந்தூட்டக் குடிக்கும் புயலே யிலங்கையில்வெங் கொடும்போ ரரக்கர் குலக்கூற்றே குனிக்குஞ் சிலைக்கைத் தடக்களிறே கோவே பசுந்தண் டுழாய் மாலை முடிக்கும் பொருளே முத்தொழிற்கும் மூவா முதடல யழியாத முத்திக் கொருவித் தாகவந்து முளைக்கும் பொருளே பாகுபெற வடிக்குந் தமிழ்த் தென் திருப்பேரை மாலே சிற்றில் சிதையேலே மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே சிற்றில் சிதையேலே | 8 |
கொத்தோ டசையப் பசுத்துளவங் குடக்கூ டரும்பி முளைத்தெழுந்து கொழிக்குந் தவளப் பிறைநுதலிற் குறுவேர் வொழுக வணிந்தசுட்டி முத்தா னதுவெண் ணிலவெறிப்ப முகத்தா மரையி னகையிலங்க முதுகுண் டலமும் வார்காது முழுமா மணிபொற் சோதிவிட அத்தா வருணன் றினம்பரவும் அரிகேசவ நாரண முகுந்தா அடல்வா ளரவிற் கண்டுயிலும் ஆழிப் புயலே யாய்ச்சியர்கை மத்தா லடிப்ப வெண்ணையுண்ட வாயா சிற்றில் சிதையேலே மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே சிற்றில் சிதையேலே. | 9 |
அன்போ டணைத்து முலைகொடுத்தின் னமுதூற்றறிருக்கும் புனலாட்டி அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி ஆரந் திருத்திப் பட்டுடுத்தி உன்பே ரிடுவே னென் குழவிக் குள்ள தயவாற் றனிசமைத்த உயர்மா ளிகையு மாடரங்கும் ஒளிர்வே திகையு நீயழிக்க வன்பா லோடி வரவுனக்கு வழக்கன் றுலகிற் சிறுபேதை மகளி ருந்து விளையாடும் வண்டற் றுகள்சே வடிபடுமே தென்பே ரையினங் குலநாத சிறியேஞ் சிற்றில் சிதையேலே திரையார் பொருநைத் தடந்துறைவா சிறியேஞ் சிற்றி்ல் சிதையேலே. | 10 |
வானாடர் முப்பத்து முக்கோடி யுஞ்சது மறைக்கடவு ணான்முகவனும் மழுவலா ளனுமறு முகச் செம்மலுங்கைம் மலைக்கோட்டு வேழமுகனும் ஏனோரும் விச்சிரக் குலிசபதி யுமகிழ்ந் தெண்டிசா முகப்பாலரும் இருவிழியு மிருசெவியு மிதயதாமரை மலர்ந் தெக்கால முந்தழையவே கானூறு பச்சைப் பசும்பூக மடல்விண்டு கக்குங் கொழும்பிரசமுங் கதலிக் கொழுங்கனி யுடைந்துவழி மதுவுங் கலந்தோடி யலைமண்டிடத் தேனாறு பாயும்வயல் சூழ்வழுதி நாடனொரு சிறுபறை முழக்கியருளே தென்றிருப் பெரைவரு நங்குழைக் காதமுகில் சிறுபறை முழக்கியருளே. | 1 |
பூவாருங் கொன்றைச் செழுஞ்சடா டவிமுடிப் புனிதபூ ரணனிரட்டும் பொற்றுடி யெனச்சொற் றிறம்பாத கனகவிப் புலவர்திண் டிமமென்னவும் மேவுகதிர் மணிமகுட கோடிநிபு டஞ்செயும் விருதரசர் மணிவாசலின் விதரணக் கொடைவெற்றி மணவொலி கறங்குதெரு வீதிமும் முரசமெனவுந் தாவுசீ ரிட்டுடன் விசித்துறுக் கித்தொணி தழைத்ததொண் டகமென்னவுந் தவறாது சதிமுறையி னண்டகோ ளகைமுகடு தடவியது செவிடுபடவோர் தேவதுந் துயியெனத் திருவழுதி வளநாட சிறுபறை முழக்கியருளே தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்! சிறுபறை முழக்கியருளே. | 2 |
கறைகொளுஞ் சமரில்வடி வாளொடு இராவணன் கைகளிரு பதும்விழுதுபோற் காறுடர்மண் ணில்விள்ளிக் குப்புற்று நிற்குநிலை கண்டுதிரு வுளமிரங்கி உறுதிபட வின்றுபோய் நாளைக்கு வாவென் றுரைத்தராகவ! வெருவியன் றோரானை மூலமென் றோதாமுன் னோடிவந் துதவுமாதவ! சீதரா! நறையொழுக மடன்முகை முறுக்கவிழ்ந் தலருமொரு நளினப் பொகுட்டாசன நள்ளிடை பதிந்துபைந் தாதளைந் திசைபாடி நாகிளம் பேடையோடுஞ் சிறைவண்டு கண்படுக் கும்வழுதி நன்னாட! சிறுபறை முழக்கியருளே தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில் சிறைபறை முழக்கியருளே. | 3 |
அண்டபகி ரண்டமு மதிர்ந்துகுல வரையெட்டும் அசையாம லெண்டிசைதொறும் அளிகவுள கம்பக் கடாக்களிறு நிலைபெயர்ந் தடிச்சுவ டெடுத்திடாமற் கொண்டவட வைக்கனற் கண்பிதுங் கக்கொடுங் கோளரா முடியிற்படங் குலுங்காம லாமைநெடு முதுகுகுளுக் காவண்ட கோளகையின் முகடுவெடியா விண்டடவு தாரகைக் குலமடங் கலுமண்ணில் வீழாம லுயர்செழும்பொன் மேருகிரி சாயாம லோடியிரு கரைதோறும் வெண்ணிலா வுமிழுமுத்தந் தெண்டிரை சுருட்டுபொரு னாநதி நெடுந்துறைவ! சிறுபறை முழக்கியருளே தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில் சிறுபறை முழக்கியருளே. | 4 |
கங்கா நதிச்செழும் புனல்யமுனை சரசோதி கற்புரச் சுவைமணக்குங் காவிரி யெனத்தேவர் வடியிட்ட வமுதேகக் கமழுந் திரைப்பொருநையும் மங்காத சதுமறைக் குரியவேள் வியும்விழா வணியுமக வொலியுநாளும் வளமைபெறு குலநாத பரமபத வீடாள! வயல்கடொறும் வாய்மடைதொறுஞ் சங்கார வாரஞ்செய் தகடுகளைந் தலறிக் தவழ்ந்தேறி முத்துயிர்க்குந் தண்ணந் தடந்தா மரைப் பொகுட் டாசனத் தமனியப் பொற்கோவிலிற் செங்கா லனந்துயிலும் வழுதிவள நன்னாட! சிறுபறை முழக்கியருளே தென்திருப் பேரைவரு நங்குழைக் காதமுகில் சிறுபறை முழக்கியருளே. | 5 |
நீறபடு தவளவெண் பொடியாட வார்சடை நெடுந்திரைக் கங்கையாட நிலவாட முகைமுறுக் கவிழ்ந்தும்பை யாடவரன் நின்றாட வமரராடப் பாறுபடு நெட்டிலைச் சுடர்வேல் விடுங்கொடும் படையிரா வணன் மகுடமோர் பத்துந் தகர்ந்தாட வெம்பேய் குறும்பேய் பறந்தலை கவந்தமாடத் தாறுபடு கதலிக் கொழுங்கனி யுடைந்துவழி சாறுமாங் கனியினறவுந் தருமுடப் பலவீனற் கனியுடைந் துப்பெருகு தண்ணறவு மலைமண்டியே சேறுபடு பள்ளவயல் சூழ்வழுதி நாடனொரு சிறுபறை முழக்கியருளே தென்றிருப் பேரைவரு நங்குழைக் காதமுகில்! சிறுபறை முழக்கியருளே. | 6 |
பொருதிரை யெறிசல ராசி யுடுக்கும் புவனத் திருமாதும் பொங்கு சினந்தலை மண்ட வடுஞ்சமர் புக்கைதிர் வருவோர்செங் குருதி படும்படி பொருது மணம்புணர கொற்றக் குலமாதுங் கோதறு வண்புகழ் சேரனு கூலக் கோமள மாமாதும் மருமலி சததள மண்டபமீது மகிழ்ந்துறை பூமாதும் வடகலை தென்கலை முழுது முணர்ந்த சொல் மங்கையு நாடோறும் திருவுள மகிழ்தர வழுதி நன்னாடா! சிறுபறை கொட்டுகாவ தென் பேரையில் வருநங் குலநாதன் சிறுபறை கொட்டுகவே. | 7 |
உழுதுழு திசைபயி லளியொரு கோடி உதைந்து துதைந்தாட வொளிர் மடல் முகையவிழ் துளவமர் மால்குருகூர னுவந்தோதும் பழுதறு முதுதிரு வாய்மொழி நூல்செவி பற்பலவுறு நேயன் பண்டுல கங்களை யுண்டுபி னளவு படுத்துந் திருமாமால் முழுமறை முறையிடு மிருசர ணாலயன் மூரிக் கயமூடும் முதுபுன லோடையு மகழியுய் வால்வளை மொய்க்கும் கழனியினும் செழுமலர் மணமலி வழுதி நன்னாடன் சிறுபறை கொட்டுகவே தென் பேரையில் வருநங் குலநாதன் சிறுபறை கொட்டுகவே. | 8 |
புவனமு மண்ட கடாகமும் வேலைப் புணரித் திசையெட்டும் பொங்கழல் கதுவிய கண்களி யானைப் புகர்முக மலையெட்டும் குவடுபடும் பொலன் வடவரை முதலாங் குலகிரி யோரெட்டும் கொடுவிட முடவும் பஃறலை மகுடக கொளர வோரெட்டுந் தவமுனி வர்சுரர் மகபதி முக்கட் சடைமுடி புடையோனும் சதுமுக னறுமுக னொருகொம் பேந்திய தந்திமுகத் தோனும் செவிகுளி ரத்திரு வழுதி நன்னாட சிறுபறை கொட்டுகவே தென் பேரையில் வருநங் குலநாதன் சிறுபறை கொட்டுகவே. | 9 |
அளிசுற் றியதன் டறப்பொதியத்து அருஞ் சாரலிற் பைங்கிழங்கெடுக்கும் அம்பொற குழியிற் சுடர் விரிக்கும் அருங்கால் வயிரங் கிடந்திமைப்பத் துளி பட்டொழுகும் வரையருவி சுழிக்குந் தொறும்பொன் னொழுக்கெறியச் சுவையூற் றிருக்கும் புனற்பொருநை சுருட்டுதிரைச் செம்மணி கொழிப்பத் தளைவிட் டலரும் பசும்பாளைத் தலைப்பூங் கமுக மணிமிடற்றுத் தாங்கும் பவளக் குலைகவிப்பத் தடஞ்சால் வழியூர் தகடுளைந்து வளைமுத் துதிர்க்கும் வயற்பேரை மாலே சிறுபறை கொட்டுகவே மகரக் குழையே நூற்றெண்மர் வாழ்வே சிறுபறை கொட்டுகவே. | 10 |
உரைக்குஞ் சதுமா மறைதனக்கும் உயர்வான வர்க்குமெட்டாத உண்மைப் பொருளே கன்றொடுகுன்று உருகும்படி வேய்ங்குழலூதி நிரைக்குப் பின்னே நடந்தருளும் நீலப்புயலே போரேறே நிமலா சமராடிடுங் கொடிய நிருதர் குலத்துக்கொருகூற்றே வரைச்சந் தகிலும் செம்மணியும் மதவாரணக் கிம்புரி மருப்பும் மயிற் பீலியும் வெண்நித்திலமும் வாரிச்சுருட்டிக் கரைபொருது திரைக்குந் திரைத்தன் பொருநைநதிச் செல்வா தடந்தேருட்டுகவே தென் பேரையில் நங்குலநாத! செம்பொற்றடந் தேருருட்டுகவே | 1 |
மேல்பால் முளைக்கும் பிறையெயிற்று வெங்கட்கொடிய நிருதர்குழாம் வெல்லுந் தடக்கைச் சிலைராமன் விரிதெண்டிரை நீர்க்கடல் முகட்டின் பாலாட ரவிற் கண்டுயிலும் பசுந்தார்க் குழகன் கஞ்சன்வவிடு பாரச்ச கருமருது மொடி படத்தானெரிக்கு மொருமுகுந்தன் கால்வாய்ப் புனலிற் கேணியினிற் கழுநீர்க் குழியின் வாய்மடையிற் கருஞ் செற்றினில் நல்லருங் கயத்தில் கமழ்பூந்துறையில் வெகுண்டெழுந்து சேல்பாய் வழுதித் திருநாடா! செம்பொற்றடந் தேருருட்டுகவே தென் பேரையில் நங்குல நாத! செம்பொற்றடந்தேருருட்டுகவே. | 2 |
உருவா யுயிரா யணர்வாகி உள்ளும் புறனு முளனாகி உரைக்குஞ் சமய மாறினுக்கும் ஒன்றும்பலவு மாயடங்கி அருவாய் நிறைவு நின்பெருமை ஆர்க்குந் தெரிய வசமன்றே ஆழிப் புயலே யருட்கடலே அரிகேசவ சீதரமுகுந்தா மருவார் பொழியிற் கேணியில்வாய் மடையில் சுழியில் படுவரம்பில் வளைமுத் துயிர்க்குந் திருவழுதி வளநாட்டுறை யெம்பெருமான் தெருவீதியில் நூற்றெண்மர் தொழச் செம்பொற்றடந் தேருருட்டுகவே தென் பேரையில் நங்குல நாத செம்பொற்றடந் தேருருட்டுகவே. | 3 |
அன்பாற் பணிந்து தினம்வருணன் ஆராதனை கொண்டருள்முகுந்தா அடியா ராசைப் புரிமுறுக்கி அரும்பொற்கயிற்று வடம்பூட்டி வன்பால்விடுத்து நெகிழ்ந்து நெஞ்சம் மணிவிதியி னள்ளிடைநினைந்து வந்த ததியரிருமருங்கு மகிழ்ந்து முறையே பிடித்திழுப்பப் பொன்பொற் பொருந்து செழுந்திலதம் புவனத்திருவாள் நுதற்றிலதம் பொங்கிப் பரந்த சலராசி புடைசுற்றிய பூலோகத்துத் தென்பாற் றிலதமெனும் பேரைச்செல்வா தடந் தேருருட்டுகவே செழுந் தார்த்துளவு மணங்கமழும் தேவே தடந்தேருரட்டுகவே. | 4 |
தருநிழ லினிடையினிது வீற்றிருக்கும் புரந்தரரு முனிவரருமுளரிச் சதுமுகக் கடவுளும் முக்கட்கொழுங்கனிச் சடைமுடிச் சிவனும்வெஞ்சூர் பொருகிரண வேலுடைப் பரமன்முருகேசனும் புகர் முகத்தவனும் மதியும் பொங்குளைப் பச்சைப்பசும் பரவியேழ்கட்டு பொற்றடந் தேரிரவியும் பெருவாச லிற்புக நெருக்குண்டு சந்நிதிப் பேறுண்டு கிட்டுமென்றே பிறங்குபொற் கருடக் கொடிக்கம்பம் வலம்வந்து பெருக வஞ்சலிசெய்திடத் திருமேனி மண்டபத் தரசிருக்கும் கடவுள் சிறுதே ருருட்டியருளே தென் திருப்பேரைர வருநங் குழைக்காதமுகில் சிறுதே ருருட்டியருளே. | 5 |
தந்தா னெனக்கு வரமிரண்டுந் தலைநாளுரைத்த சொற்படிக்குன் தகப்பன் புரந் முறை தருமந் தழைப்பஒரு கோலோச்சியெங்கும் நந்தா வளமைப் பரதனிந் நாடாளுவன் நீகாடாள நடவென்று ரைக்க சிற்றவைசொல் நலமேற்றலைக் கொண்டொருபட்டுக் கொந்தார் குழவி சனகியொடுங் கூடப்பிறந்த இளவலொடுங் கொதிக்கும் பரல்வெங் கொடுங்கானம் குறுகும்போழுது குளிர்ந்தலர்ந்த செந்தா மரைப்போற் றிருமுகத்துச் செல்வா தடந்தேருகுட்டுகவே தென் பேரையில் நங்குலநாதன் செம்பொற்றடந் தேருருட்டுகவே. | 6 |
மத்தா லடிப்பு வுரல்மிதித்து மலர்த்தாள் குந்திட் டுறியில்வெண்ணை வாரிக் களவிலுண்ட கனிவாயா பரமபதந் தனக்கோர் வித்தாகவும் வந்தங் குரிக்கும் வேதப்பொருளே யருட்கடலே விரைநாறிய பூம்பசுந் துளவ மெய்யாபொரு வெங்கரிமருப்பும் முத்தோ டகிலும் செம்மணியும் முரித்திரைப்பாய் சுருட்டிமிக முழக்குங் கூடுபுனல் துறையா முதுவாளரக்கன் தலைகள்பத்தும் கொத்தோடற வஞ்சுறு வாளிகொடுக்குங் புயல் தேருருட்டுகவே கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக் கோவே தடந்தேருருட்டுகவே. | 7 |
புழைத்திண் திறற்கைம் மதசலதி பொழியும்பிரைச் சிம்புரிக்கோட்டுப் புகர்மா விடங்ககர்க் குடைந்து வெரீஇப் புதுபூங் கேணித் தடம்புனல்நின் றழைக்கும் புயலே நெட்டரவின் ஆடுங்குழகா ஒருநாளும் அழியாப் பரமபதம் ததியார்க்கு அருள்சீதர மாதவ முகுந்தா மழைக் கொந்தளகக் குரும்பைமுலை மதிவாணுதல் சானகிபொருட்டு மதிள் சூழிலங்கை யரக்கன் மணிமகுடஞ் சிதறக்கோதண்டம் குழைக்குந் தடக்கை ரகுராமா கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக் கோவே தடந்தேருருட்டுகவே. | 8 |
வாலப்பிறை வாணுதல் மடவரர் மலர்க்கைவளை கீழ்விழத்தொழுவோர் மாறாப் பிறவி வேரொடற வானத்தமரர் களிகூரச் சாலப்பெரு வாளசுரர் படத் தருமாகதர்கள் கொண்டாடத் தருமந் தழைப்பக் கனகவிதைத் தமிழ்நாவலர் ஈடேற ஏலக்குழல் சானகி கழுத்தினிடு மங்கலநாண் வாழ்வேற எக்காலமும் நூற்றெண்மர் குழாம் இதயத்திருந்து மகிழ்கூர்ந்து கோலத் தெருவில் விளையாடிக் கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக் கோவே தடந்தேருருட்டுகவே | 9 |
மகுவார் நறுமென் மலர்கொணர்ந்து வழிபட்டிரு சேவடி சொரிந்து மயங்கும் புனல்களைந்து மொன்றாய் வருணன் செயும் பூசனையுவந்த திருமா முகிலே தமிழ்க்குருகுஞ் செல்வக் குழகா பாட்டாய்ந்து சிறைவண் டலம்பிக் கண்படுக்கும் செழுந்தார்த் துளவப் புயமுகுந்தா அருநான்மறை நூற்றெண்மரும் வந்து அங்கீகரித்து வடம்பிடிப்ப அம்போருகப் பூந்திருவு முந்நீர் அவனித்திருவு மருங்கிருப்பக் குறுமாமணிப் பொன்மறுகி னெடுங் கொடிஞ்சித் தடந்தேருருட்டுகவே கொழிக்குந் தமிழ்த் தென்திருப்பேரைக் கோவே தடந்தேருருட்டுகவே. | 10 |