pm logo

வீரபத்திரக் கவிராயரவர்கள் இயற்றிய
"குமரமாலைப் பிள்ளைத்தமிழ்"


kumaramAlaip piLLaittamiz
by vIrapatrak kavirAyar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V Devarajan, Sakthikumaran, Manjula Balaji, Nalini Karthikeyan,
R. Navaneethakrishnan, V. Ramasami and R Rajasankar and M. Elangovan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 16 Sept. 2011

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வீரபத்திரக் கவிராயரவர்கள்
திருப்புல்வயலி லெழுந்தருளியிருக்கும் குமரக்கடவுள்பேரில் பாடிய
"குமரமாலைப் பிள்ளைத்தமிழ்"

Source
புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலி லெழுந்தருளியிருக்கும்
குமரக்கடவுள்பேரில் "குமரமாலைப் பிள்ளைத்தமிழ்"
இது இராயபுரத்திலிருக்கும் குன்றாக்குடித் திருவண்ணாமலையாதீன மடத்து வித்வான்
புகழேந்தி வங்கிஷவாணிதாச வீரபத்திரக் கவிராயரவர்கள் பேரரும்,
முத்துச்சாமிக் கவிராயரவர்கள் குமாரருமாகிய வீரபத்திரக் கவிராயரவர்களால்
இயற்றப்பட்டு, *மேற்படியூர் நா.கதி.கதிரேசன் செட்டியாரால்
சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பற்றது
1909
--------------
உ : கணபதி துணை
சிவமயம்

சிறப்புப்பாயிரம் -1
புதுக்கோட்டை சமஸ்தானம் இராயபுரம் ப்ரஹ்மஸ்ரீ
தி. செ. இராமஸ்வாமி சாஸ்திரிகள் இயற்றியது

கிரந்த எழுத்து கொண்டு எழுதப்பட்ட இந்த பாயிரம் கிரந்த எழுத்துக்கள் ஒருங்குக்குறியீட்டில்
இல்லாமையால் இங்கு பதிக்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம் -2

இராயபுரத்திலிருக்கும் மழவைத் திருவிளையாடற்
சுப்ரமண்ய பாரதியவர்கள் புத்திரர் ப்ரஹ்மஸ்ரீ இராமசுவாமி ஐயரவர்களியற்றியது

நிலைமண்டிலவாசிரியப்பா

திருவளர் செந்நெலுந் திகழ்தரு கன்னலு
முருகெழு கமுகுதெங் கோங்கிவா னளந்து
மருவிய நந்தா வனச்சோ லைகளும்
பெருகிய மாமறை பேசுசா லைகளும்
பங்கயப் பூமலர்ப் பாயல்போல் விரித்
தங்கயற் றேனுக ரளிகளி னீட்டமு
நீர்நிறை யோடையு நிலவு தடாகமு
மேர்பல கொண்டுயர்ந் தேந்திய சிகரமொ
டாமதின் மண்டப் மாலர ணத்துடன்
காமரு மங்கையற் கணியொடு சுந்தரர்
வாழ்வுறு கோயிலு மறையவர் வீதியு
மேழ்நகர் வணிக ரிசைந்திடு மாடமு
மெங்கினுஞ் சித்திர மியற்றிய கூடமுந்
தங்கிடு மவர்க்கூண் டருமறச் சாலையும்
பன்னரும் பல்வளம் பரவிய விராய
நன்னகர் தன்னி னாடொறும் வாழ்வோன்
எண்ணான் கறங்களு மீயுந் திறங்களும்
விண்ணார் தனபதி வியந்துரை செல்வராம்
வணிகர்தம் மரபின் மருவிய விரணியூர்ப்
பணிதருங் குலத்திற் பாங்கமர் வாழ்வாஞ்
சிதம்பரம் பெறுநாச் சியப்பன் றவத்தா
ஸிதம்பெற வருகதி ரேச வணிகன்
சந்ததி வேண்டித் தழைக்கும் புல்வயற்

குந்த மணிந்திடு குமரே சன்மேற்
பிள்ளைத் தமிழ்க்கவிப் பிரபந் தத்தைக்
கொள்ளை கவிக்குழாங் கொண்டுவப் பெய்தவும்
வேண்டிய வண்ண நீண்ட புகழ்சேர்
வள்ளற் பெருங்கவி வான்புக ழேந்தியின்
விள்ளற் கரியதாய் விளங்கு மரபினான்
திருவணா மலையா தீனம் விளங்க
வருபரம் பரையின் மயின்மலை மலையாக்
குன்றாக் குடியுள குன்றாக் குடிநகர்
*செ*ன்றா மடமதி னண்ணிய வித்துவான்
பகர்ந்திடும் வீர பத்திரக் கவிஞன்
மகிழ்ந்திடு சுதனா மான்முத் துசாமி
புத்திரன் வீர பத்திரக் கவிஞன்
கருதிப் பொருளைச் சுருதியின் வழியே
சுருதியுட் கமலக் கண்ணக நிறீஇ
யெந்தல முந்தரு சொன்னலம் புணர்த்திக்
கன்ன லமுதெனக் கன்னம் கிற்கொளப்
பன்னினன் புலமையிற் றன்னின் மேலலாச்
சேயருள் கொண்டே சேயருள் செயவே.
---------------
சிறப்புப்பாயிரம் -3
இராயபுரத்திலிருக்கும் இந்நூலாசிரியர் மாணாக்கருளொருவரான
ப்ரஹ்மஸ்ரீ ஆ பஞ்சாபகேசய்ய ரவர்களா லியற்றியது

நிலைமண்டிலவாசிரியப்பா

பூங்கடல் சுலவும் புடவியிற் சிறந்து
நீங்கரும் வளங்க ணிதமுறுஞ் சோழ
மண்டலந் தன்னிற் றொண்டமா னிசைகூர்ந்
தரசுசெய் புதுவை யம்பதி யடுத்த
சரசுலாம் புல்வய றனிலொரு தொண்டனுக்
காகவே பழனி யணிவரை நின்று
தாகம தாகத் தண்டா யுதமுடன்
ஓங்கும் பிரணவத் துட்பொரு ளுணரா
தேங்கும் விதியை யிருஞ்சிறைப் படுத்தி
யத்தன் மொழியா லவன்சிறை விடுத்தப்
பித்தன் கேட்கப் பிரணவப் பொருளைக்
கூறிய குமரன் குக்குட கேதனன்
ஆறிரு கைய னணிபத மிரண்டினான்
தரணியின் மாந்தர் தம்வினை யகற்ற
விருதயத் துன்னி யெழுந்துடன் போந்து
மஞ்சுலாங் குமர மலையினின மேவுங்
குஞ்சரி மருவுங் குமரே சன்மேற்
றென்னுறும் பாண்டி தேய மதிலார்
மன்னில வளமும் வாய்ந்தபொற் பதியாங்
குன்றாக் குடியிற் குன்றாக குடியான்
மன்புக ழேந்தி வங்கிஷத் துதித்தே
யியலிசை நாடக மென்னுமுத் தமிழு
நயமுறு நாற்கவி நன்குறப் பயின்றும்
பற்பல நூல்கள் பாங்குற வியற்றியும்
விற்பன் ரெவரும் விம்மித முறவே
நலமிகும் புலவர் நாமல வெனவும்
புலவர் சிகாமணிப் புங்கவ னெனச்சொல்
பாவலன் வீர பத்திரக் கவிஞன்
ஒவருந் தவத்தா லுதித்தருண் முத்துச்
சாமிக் கவிஞன் சந்திதி விளங்கி
மாமிக் கோங்க வந்திடும் வீச*
பத்திரக் கவிஞன் பத்தியாய்ப் பிள்ளைத்
தமிழினைச் சொற்றான் றரணியோர் செவிவா
யமிழ்திது வென்றே யருந்திட மாதோ.
----------
சிறப்புப்பாயிரம் -4
இராயபுரத்திலிருக்கும் மழவைதிருவிளையாடற்
சுப்பிரமணிய பாரதியவர்கள் பேரரும்,
சுப்பராமய்யர் குமாரரும், இந்நூலாசிரியர் மாணாக்கரு
ளொருவருமாகிய, ப்ரஹ்மஸ்ரீ கிருஷ்ணய்யரவர்கள் இயற்றியவை.

அறுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

உலகுவக்கும் புகழ்சேர்தென் பாண்டிநா டெனப்பெயர் பூண்
        டுயர்கன் னிக்கோ
ரிலகுநுதற் றிலகமெனு மிறைநகர்வாழ் நாச்சியப்ப
        னிரணி யூரிற்
குலவுசிவ புரந்தேவி யாட்கொண்ட நாதரருள்
        கூட்ட முன்செ
யலகிறவப் பேறெனவே யவதரித்த சிதம்பரவேட்
        கருமைத்தம்பி. (1)

இருந்தவத்தோர் பெருங்களிகூர்ந் திடக்கோயி லூரினமர்ந்
        தெழில்வே தாந்த
மொருங்குணரன் ணாமலைச்சா மிக்கிலக்கு வற்குமுத
        லுதித்த சீவன்
திருந்துதன பதிக்குமிருந் தனபதியா யெஞ்ஞான்றுஞ்
        செல்வ மோங்க
வருங்குணவான் கதிரேச வணிகனெனத் திருநாமம்
        வனை வள்ளற்கே. (2)

புத்திரப்பே றுண்டாகி வாழையடி வாழையெனப்
        புவியின் வாழச்
சித்திதருங் குமரமலைக் குகன்மேற்பிள் ளைத்தமிழைச்
        செய்தத் தேவார்
அத்திருவின் முத்தமிழின் சுவையறிநா வலவரதி
        சயிப்பப் பூவி
னெத்திசையும் புகழ்வீர பத்ரகவி வாணனரங்
        கேற்றி னானால். (3)
---------
சிறப்புப்பாயிரம் -5
காரைக்குடியிலிருக்கும் ப்ரஹ்மஸ்ரீ சதாவதானம்
பாலசுப்பிரமணிய ஐயரவர்கள் இயற்றியது.

அறுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

இயலிசைநா டகமூன்று தமிழினும்பற் பலதமிழ்க
        ளிசைந்திட்டாலும்
உயர்வுநிறை பருவமிலாக் காரணத்தால் வள்ளிகொண்க
        னுவக்கான் மேலு
நயமுதவா வெனத்தேர்ந்தே வீரபத்தி ரக்கவிஞ
        னம்பி னோர்பாற்
செயமுதவுங் குமரமலைக் குகற்கொருபிள் ளைத்தமிழே
        சேர்த்திட்டானே. (1)
-----------
சிறப்புப்பாயிரம் -6
இராமநாதபுரம் சிவகங்கையென்னும் உபயசமஸ்தான வித்வான்
வேம்பத்தூர் சிலேடைப்புலி ப்ரஹ்மஸ்ரீ பிச்சுவய்ய ரவர்களியற்றியது.

வெண்பா

பிள்ளைத் தமிழாம் பெருந்தமிழ்க்கெல் லாமிஃதோர்
தள்ளையெனப் பாவலர்கள் சாற்றியே கொள்ளைகொளக்
கற்பனையாய்ப் புல்வயல்வாழ் கந்தற் குகந்துரைத்தா
னற்புகழ்சேர் வீரபத்தி ரன். (1)
----------
சிறப்புப்பாயிரம் -7
ஸ்ரீ விஷ்ணுபுராண நூலாசிரியராகிய
செந்நெற்குடி சாமிக்குட்டி ஐயரவர்களென்று பெயர்விளங்கும்
ப்ரஹ்மஸ்ரீ சுப்பராய ஐயரவர்கள் இயற்றியது.

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

மாமேவி வளர்புல்லை வளநகர்வாழ் குமரமலை
        மன்னிநாளும்
பூமேவு மானிடர்தம் மிடர்தவிர்க்கு மாறுமுகப்
        புனிதன் றோண்மேற்
றேமேவு செந்தமிழ்ப் பிள்ளைத்தமி ழாங்கவிமாலை
        சிறப்ப வேய்ந்தான்
காமேவு மிராசநகர் தனில்வளரும் வீரபத்ரக்
        கவிஞன் றானே. (2)
-----------
சிறப்புப்பாயிரம் -8
மேற்படியார் கனிஷ்ட சகோதரர்
ப்ரஹ்மஸ்ரீ வீமகவியவர்களியற்றியது.

இணைக்குறளாசிரியப்பா

பூவிருந் தொளிரும் புகழ்பெறு மதுவினை
வண்டுந் தேனு மகிழ்ந்தினி தருந்திச் செவ்வழிபாட
நான்முகன் விண்டு நந்தியூர்ந் திடுவோ
னாகுமுதத் தேவர்க் கடுத்திடு சத்திக
ணிறமென விளந்தளிர் தளிர்முதி ரிலைகளைத்
தன்னகத் தமைத்தத் தளிரியல் கண்கள்போற்
றீவிளி காட்டித் தேவர்த முலகுறை
வளந்தனை நோக்க வளர்ந்திடு பான்மையின்
வயங்குந் தேமா மன்னிய குயில்கண்
மணவினை நடாத்தும் வளங்கெழு பொழில்சூழ்
குன்றைமா நகரிற் குலவிய திருவார்
அண்ணா மலையா தீனத் தமர்ந்திடு
தலைமைப் புலவர் தங்குல மதனின்
மகுடமென் றோங்கி வந்திடு புலவன்
புகடனை யேந்து புகழேந் தியென்னும்
பெருந்தமிழ்ப் புலவனைப் பேசுதன் குலத்தின்
முதல்வனாகக் கொண்டு விளங்கிய முதல்வன்
வீரபத் திரனென வியற்பேர் பெறு
மருங்கவிப் புலவனைச்
சலதரந் தாங்கு தடித்தது நீங்கிப்
புவியிடை யமர்ந்து பொற்கல சத்தினைத்
தாங்கிநின் றொல்குந் தன்மையின் முலைகளைத்
தாங்கிடு மயிலனார் சஞ்சரித் திலகும்

தடம்பெரு வீதியார்
இராய புரத்தி லிருந்திடு தனதன்
கரிணியார் வீதியி ரணியூ ருடையான்
வைசியர் குலத்தின் வந்தவ தரித்தோன்
கதிரைமா நகரிற் கண்ணிய முதல்வன்
றன்பேர் தாங்கு சதிருடை யறிஞன்
மகிதலந்தன்னின் மகப்பே ரொடுமிகு
நிதியினை யருலு நின்மல மூர்த்தியாம்
புனிதமார் குமரனா மெய்ப்பொருண்மீது
பிள்ளைத் தமிழ*னைப் பேருலகத்தோர்
மகிழ்ந்திடப் பாடித் தருகெனத் தந்தனன்
அறிஞரும் வியப்ப வமிழ்தென மன்னோ.
-------------
சிறப்புப்பாயிரம் -9
திருமெய்யம் வைக்கீல்
ப்ரஹ்மஸ்ரீ வயித்திநாதய்யரவர்கள் இயற்றியது.

எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

வளர்கலியு காப்தமையா யிரத்துப் பத்தின்
        மருவுலகீ லகவருடந் தைவெண் பக்கங்
கொளுங்கதிர்நா டித் திகைநற் சதையந் தெய்தி
       குலவுமிரா றிற்குமர மலைவேண் மீதி
லளகேச னிகர்கதிரே சன்பே ரோங்கி
       யாண்மகப்பே ருறப்பிள்ளைக் கவியைப் பாடித்
தளர்வறவே வீரபத்ரக் கவிஞன் வித்வ
       சபையொருங்கே மெச்சவரங் கேற்றி னானே.
---------
சிறப்புப்பாயிரம் -10
மதுரை ஜில்லா கோட்டையூர் மீனாட்சி சுந்தரமய்யரவர்கள் புத்திரர்
ப்ரஹ்மஸ்ரீ சுப்பய்யரவர்களால் இயற்றியது.

அருசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

சீர்பூத்த கடல்வளைக்கும் புவிமதிக்கும் புகழ்நலத்தாற்
        செழித்தோன் முல்லைத்
தார்பூத்த மணிநிறத்தான் றனவணிகர் குலமணியாத்
        தழைக்குஞ் சீமான்
கார்பூத்த கரதலத்தான் கதிரேச னெனும்பெயரான்
        கருத்தின்வேண்டு
தார்பூத்த மொழிநயந்து மெழுவகைச்சீர்த் தியினுமொன்றாய்
        நாடிமன்னோ. (7)

பமரமலித் திடுமிதழித் தொடைமிடையுஞ் சடையுடையான்
        பரமன் பாகத்
தமரமலைக் கொருபுதல்வ னமரர்தமக் கொருமுதல்வ
        னகில மெல்லாஞ்
சமரமலைத் திடவடுகை யசுரர்களைப் பொடிசெய்நெடுந்
        தனிவேற் கந்தன்
குமரமலைக் கொருதலைவன் சேயெனப்பேர் கொளலாலக்
        குழகன் மீதே. (8)

கள்ளமுதற் றிருக்கறுத்த மொழியுடையான் கலைமகடங்
        கருணை யாகும்
வெள்ளமுத தியிற்கவர்ந்த வெழிலியெனக் கவிபொழியு
        மேன்மையாளன்
தெள்ளமுதத் தினுமிகுந்த மதுரமுற்ற தெனப்புலவர்
        செவிவாய்த் தேக்கி
யுள்ளமுதத் தொடுபுகழச் சிறந்தபிள்ளைத் தமிழ்பாடி
        யுயர்ந்தா னன்றே (3)

அத்தகைய பெருந்தகையா னியாவனெனி னுரைக்கு நுமிவ்
        வகிலந்தன்னி
னெத்தகைய பெருவளமு முடைத்தாகி நிலமகட்கோ
        ரிழைபோன் மிக்கோர்
சித்தநயனங்களிக்கு மெழிலுடைத்தா மிராசநகர்
        செழிக்க வந்தோன்
முத்தகைய தமிழ்களினுங் கவியுரைக்குந் திறந்தெரிந்த
        முதன்மை யாளன். (4)

நலமிகுந்த கலைகளெனு நரலையளவறிந்தகற்பா
        னளினத் தாடங்
குலமிகுந்த புயமுடையான் முத்துச் சாமிக்கவிஞ
        னுஞற்றுஞ் செய்ய
குலமிகுந்த தவத்துதித்தோன் கொடைக்கரத்தோன் குணங்கலின்முற்
        குணத்தைச் சார்ந்தோன்
புலமிகுந்த வீரபத்திரப்பெயரா னெந்நாளும்
        புகழ்மிக் கோனே. (5)
-----------------
சிறப்புப்பாயிரம் -11
மேற்படியூர்,பெ.அ.க.சிதம்பரஞ்செட்டியார் குமாரர்,
சோமசுந்தரஞ்செட்டியாரால் இயற்றியது.

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

பூங்கமலத் துறையயனார் போற்றவருள் புங்கவனம்
        போல்வா ருய்யத்
தாங்கமலப் பரம்பொருளாங் குமரமலைக் கிழவனறுந்
        தருவே யென்னப்
பாங்கமலர்ப் பொழில்சூழ்கோ நகர்வீரபத்திரமால்
        பரிவிற் பெய்யுந்
தேங்கமலச் சேய்த்தமிழ்மேற் கொள்லாலப்பெயர் புலவோர்
        செப்பினாரே.
--------



சிவமயம்.

பருவத்தொகை
வெண்பா

சாற்றரிய காப்புசெங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - யேற்றுசீ
ரம்புலியே சிற்றிலே யாய்ந்த சிறுபறையே
பம்புசிறு தேரோடும் பத்து.

1. காப்புப்பருவம்:-அஃதாவது, திருமால், சிவபிரான், உமா தேவி, விநாயகர்,பிரமன்,இந்திரன், இந்திரை, சரசுவதி, முப்பத்து மூவர், என்றிக்கடவுளரை, பிள்ளையைக் காக்கும்பொருட்டு வேண்டிப்பாடுவது.

2. செங்கீரைப்பருவம்:-அஃதாவது, பிள்ளைகள் ஒருகாலை முடக்கி ஒருகாலை நீட்டி யிருகைகளையு நிலத்திலூன்றித் தலைநிமி
த்து முகமசைத் தாடுநிலை.

3. தாலப்பருவம்.:-அஃதாவது,பிள்ளைகளைத் தொட்டிலிற் கிடத்தி மாதர் நாவசைத்துப்பாடுநிலை.

4. சப்பாணீப்பருவம்:-அஃதாவது, கையுடனேகை சேர்த்துக் கொட்டு நிலை.

5. முத்தப்பருவம்:-அஃதாவது, பிள்ளையினது வாய்முத்தத்தை விரும்பிக் கூறும் நிலை.

6. வருகைப் பருவம்:-அஃதாவது, குழந்தையை, நடந்து வருக என்று அழைக்கு நிலை.

7.அம்புலிப்பருவம்:- அஃதாவது பாட்டுடைப்பிள்ளையுடன் விளையாடவரும்படி மாதர் அப்பிள்ளையை ஒக்கலிலிருத்தி வைத்துக்கொண்டு சந்திரனைச் சாமபேத தானதண்டங்களாற் கூறியழைக்கு நிலை.

8.சிறுபறைப்பருவம்:- அஃதாவது, பாட்டுடைக்குழவியைச் சிறுபறை கொட்டும்படி வேண்டும் நிலை.

9.சிற்றிற்பருவம்:-அஃதாவது சிற்றிலிழைக்குஞ் சிறுமியர் தஞ்சிற்றிலைச் சிதைக்கவேண்டாவென்று பாட்டுடைக்குழவியை வேண்டும் நிலை.

10.சிறுதேர்பருவம்:-அஃதாவது பாட்டுடைக்குழவியைச் சிறு தேருருட்டும்படி வேண்டும் நிலை.


அவையடக்கம்.
------------

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

தேன்றுளிக்குங் கற்பகமா ரிறைவேண்டக் குஞ்சரிதோன்
        சேரவேட்டு
மானகட்டி னுதித்திழிஞர் மனைவளர்கன் னியைவலிய
        வாஞ்சித் தேனற்
கானினுற்றார் புலவர்சிகா மணியாமிந் நூற்குரிய
        கடவுளென்றால்
நானியற்றிப் புன்கவிநன் கவியெனத்தா நயவாரோ
        நாவல் லோரே.
-----------


நூற்பயன்.

---------
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கடத்தேறு சலந்தோறுங் காணு மொன்றாங்
      கதிர்போல வகண்டபரப் பிரமந் தானாய்ப்
படத்தேறு மோவியம்போ லுலகின் மாயா
      பந்தத்திற் சிக்கிவினைக் கீடாய்த் தோன்று
சடத்தேறு முயிர்க்குயிராய் நின்ற வெங்க
      டனிமுதலன் படியருக்கே தாயன் னான்குக்
குடத்தேறு கொடியுயர்த்தோன் வல்லி தேவ
      குஞ்சரிக்கு மணவாளன் குழகன் செவ்வேள். (1)

பன்னிருசெங் கதிருதயஞ் செய்தா லென்னப்
      பன்னிருபொற் குண்டலங்க ளிலங்கு காதும்
பன்னிருமா மணிவலயந் தரித்த வாகைக்
      பன்னிருபொற் கிரியனைய தோரு நாளும்
பன்னிருதிண் படையகலா தமருஞ் செய்ய
      பன்னிருகைக் கற்பகமுங் கருணை பூத்த
பன்னிருகண் மலர்முகமுங் கழலை யார்க்கும்
      பன்னிருதா மரைப்பதமுங் கொண்ட கோமான். (2)

செங்கமலை மணிமார்ப னயனுங் காணாச்
      செழுங்கமலை வேணியற்குக் குருவாய் வந்த
தங்கமலை நிகருமிணைத் தனத்தின் பாரந்
      தயங்கமலைக் கோரிளஞ்சேய் தக்கோ ரஞ்சம்
அங்கமலைப் பொருவுநிறத் தவுண ராக்கம்
      அடங்கமலை வளர்த்திடுங்கூ ரயில்வி டுத்தோன்
கொங்கமலைக் கும்பொழில்வான் குலவ நீண்ட
      குமரமலைக் குமரேசன் மீதிற் சாற்றும். (3)

பைந்தமிழ்ப்பிள் ளைக்கவிப்ர பந்தந் தன்னைப்
      பாருலகின் மன்பதையாய்ப் பிறந்தோர் தம்முட்
சிந்தையுறக் கற்றோருங் கேட்போர் தாமுஞ்
      செல்வமொடு நன்மகப்பே றுடைய ராகி
நிந்தையறப் பிணியகன்று பகையும் வென்று
      நிகழிந்த்ர போகமுந்துய்த் தெவரும் போற்றச்
சந்ததமு மழியாத ஞான மோங்கிச்
      சாயுக்ய பதந்தனையே சார்வர் மாதோ. (4)
----------


கணபதி துணை.

குமரமலைக் குமரேசர் பிள்ளைத்தமிழ்.


பூமேவு சிமயப் பொலங்குவட் டினைவலம்
        புரியுமிரு சுடரொளி களைப்
பொன்மணிக் கிம்புரி மருப்பொன்றி னொளிகளும்
        புவிமருங் குடைவா ரியைத்
தாமேவு முக்கட் பெருங்கருணை வாரியுஞ்
        சலதரம் பொழியு மழையைத்
தனிஞான மதமழையு நுங்கமே லோங்கத்தி
        சரணமல ரேத்தெடுப் பாம்
மாமேவு மாயிரத் தெட்டண்ட முழுதுமிறை
        மருவநூற் றெட்டுயுக நாள்
வல்லாணை முன்செலுத் துஞ்சூர் தடிந்தும்பர்
        மகிழமணி முடியு மரசுங்
கோமேவும் வாசவன் கொண்டுவா னாடுசெங்
        கோனாட தாகவருள் செய்
குமரவெற் பமருமயின் முருகனற் புதவினிய
        குமரனற் றமிழ்தழை யவே.
----------------

காப்புப்பருவம்.

திருமால்.

பொன்மேவு பதுமா சனத்தேவை யுதவிப்
        புரக்குந் தொழிற்செய் வலவோர்
*போகிமணி முடியிற் கிடந்தொளிரு மகிமான்
        பொரிக்குநா யகனம ரினிற்
கொன்மேவு மாழிவிட் டிதழியிட் டமிமனைக்
        கொல்சிந்து பதியை மறுநாட்
குலவந்தி வருமுன் செகுத்திடுவ லென்றுசூழ்
        கூறுபற் குனனுய்ய வா
ளின்மேவு மோராழி யிரதம்விடு கதிரொளியை
        யெல்லிற் புதைத்தரு ளிமுன்
னேயாதி மூலமென வோலமிடு வாரணத்
        தினையாளு மால்காக்க வே
தென்மேவு நேமியங் கிரிபொலங் கிரியிற்
        சிறந்திமைய மலையு நாணச்
சிகரமுய ரியகுமர் மலையின்வளர் முருகனுமை
        சிவைகவுரி யருண்மக வையே. (1)
----------------
*போகி-பாம்பு

தியாகராஜர்.

புதிய நிலவொழு குமிள விதுநதி
        புரிச டிலமே வாதியைப் பாற்கடல்
புலவர் கடையமு னெழும மரிபுகழ்
        பொலிய மணிவா யேவுணப் போழ்த்தனர்
புணரி யிடையிடை யெறிகி வலைநுரை
        பொருவு சிறுவாழ்வே யெமக் கோட்டினர்
புவன முயக்கு புனகை கொடுதிரி
        புரமெ ரியமா றாயபற் காட்டினர்
*அதுல +விதுரர்பொ னசல விலரிமை
        யமலை சுதைதழு வாகர்மெய்ப் பார்த்தன்வி
லடிகொண் முடியர்கை யபய வரதர்சொ
        லரிணர் மழுவாரோடுசற் பாத்திரர்
அரிய யனுமடி முடிய ரிவரிய
யலகி லொளிமீ கீழுறத் தோற்றினர்
        அரவ விருகுழை யடுசெ வியரென
        வறைத ருதியா கேசரைப் போற்றுதும்
மதுப மிசைசெய்து மதுர கறையுண
        வருகு மணநீ பாசலத் தோட்டுணை
மதுவ சனவன சரிவெ ளிபமகண்
        மருவு மணவா ளாவெனப் போற்றுநர்
மனதி லிளகிய பொருளை யுமைவிழி
        மணியை மணிசூழ் சோதியைச் சாட்குண
மலையை யெமதுயிர் நிலையை யருமறை
        வடிவை யடியார் மாசுகப் பேற்றினை
குதுக லமொடுக லகல வெனமணி
        குளிறு மடியார் கேகயச் சீர்ப்பரி
குலவி விழிபொழி கருணை மழையது
        குளிரு மலரா றானனத் தூற்றிடக்
குறுமு னிவனக மகிழ வருகுல
        குருவை யிகலோர் மாயையிற் சீற்றனைக்
குதலை மொழிபயின் மகவையினியகு
        மரம லையின்வாழ் வேலனைக் காக்கவே.(2)
---------
*அதுலம்-உவமையின்மை + விதுரன்- அறிஞன்.

கமலாம்பிகை.

உலகினி *னுறவிமு+ னாம்பன்மட் டீற்றுள
        உயிர்பல தொகைகளை யீன்றமெய்ப் பாட்டினள்
உத்தியின் வடவையி னோங்குகட் டீப்பொறி
        யுகவரு நமனுயிர் வாங்கரற் கேற்பவள்
நிலையுணர் முனிவரர் காண்டவப் பேற்றென
        நிகழுமு தல்விதனை வேண்டுகிற் பார்க்கருள்
நிருமலி பயிரவி வேய்ங்குழற் பாட்டிசை
        நிகரறு கிளிமயின் மாங்குயிற் கூற்றினள்
சிலையைமி னிழையுரு வாய்ந்திடக் காற்றுகள்
        சிதறிட வழிநடை போந்தவற் கேர்த்துணை
**சிதமதி கதிர்பல தோன்றலிற் பூட்புனை
        சிமயவி மயமலை கான்றநற் பார்ப்பதி
அலைமகள் கலைமக ளார்ந்தகட் பூக்களின்
அருண்மழை பொழிகம லாம்பிகைத் தாட்டுணை
அலரினை மனனுறு தீங்கறுத் தேத்துதும்
அணிகொள்கு மரமலை யேந்தலைக் காக்கவே.(3)
----------------------------------------------
*உறவி-எறும்பு.+ ஆம்பல்-ஆனை. ** சிதம்-வெண்மை.

விநாயகர்துதி.

கங்குலெழு வன்னக் கருங்கொண்ட லென்னக்
        #களேபரந் திகழுமிரு பான்
கரதலங் கொடுவெளிக் குன்றெடுத் தோன்கருங்
        காயம் $ வெண் காய மீது
பங்கமுற வீசொரு மருப்பிரு முறக்கனம்
        பாய்மும் மதங்கணால் வாய்
யாரவஞ்சு கரமாறு சிரமெழு மணித்தோள்
        படைத்தவே ழத்தைநினை வாம்
புங்கவர் பெருந்திருவை யெங்கள்குல வாழ்வைப்
        புராந்தகற் கினிய செல்வப்
புத்திரப் பேற்றையடி யாருளத் தளியினொளிர்
        போதமய மணிவிளக் கைச்
சங்கமா தவர்தேடு மாதபோ நிதியினைச்
        சாட்குணிய வடிவ மோங்கு
சற்குருவை நற்குமர வெற்பரசை யற்பினொடு
        சந்தத முகந்த ருளவே. (4)
-----------------------------------------------------------
# களேபரம்-உடம்பு.$ வெண்காயம்-வெள்ளி ஆகாயம்.

பிரமதேவர்.

செங்கே ழடுக்கிதழ்ப் பைந்தேறன் மாந்துஞ்
        சிலீமுக மலர்ப்பீட மேற்
றெய்வநான் மறையெனு மகாரைநா வென்னுநாற்
        செவிலியந் தாயர் வேட்டு
மங்காது மல்குற வளர்த்தெடுத் திடவந்த
        மண்பொதுத் தந்தை நந்தை
மருவுமணி வண்ணமெய்ப் புயல்சூற் கொளாதருளு
        மதலையை யகத்து ணினைவாம்
பொங்கேழ் கடற்புவன மியாவுநுதல் விழியிற்
        பொடித்தங்க முழுது மீமப்
பொடிபூசி யெண்ணரு முயிர்த்தொகைக ளுய்யவருள்
        புரிகுவா னட்ட மாடிக்
கொங்கேறு தாதகி தரித்தவெண் புயவரைக்
        கோமா னளித்த புல்லை
குலவுநக ரேசனைக் குமரமலை வாசனைக்
        குகனையருள் புரிய நிதமே. (5)

தேவேந்திரன்.

நறைமருவு கற்பகத் தாரணி புயக்குன்றி
        னாளுமயி ராணி கொம்மை
நகிலந் திளைத்துமவ ளிதழமுத வொடுகீர
        *நரலையரு ளமுத மாந்தி
யிறைமருவு பனிவரை முகட்டெழு கருங்கொண்ட
        லேய்ப்பவோங் கயிரா வதத்
தெருத்தமிசை வருவான் மருத்துவ னிணைச்சரண
        மிதயத் திருத்திநினை வாம்
பொறைமருவு மயில்கே டகங்கண்டை நளினமுயர்
        பொற்புறுந் தண்டு சேவல்
போரிடங் கம்பகழி வாளபய வரதம்விற்
        பூணுமா றிருகரனை வெண்
பிறைமருவு செஞ்சடைக் கயிலைப் பிரானெம்
        பிராட்டிக்கு மகவாகி வான்
பிறங்கநிவர் குமரப் பிறங்கல்வரு சண்முகப்
        பிள்ளையைக் காக்க வென்றே. (6)
-------------------------------
* நரலை-கடல்.

திருமகள்.

வேறு.

தரங்க மெறிபாற் கடலுதித்துச்
        சலசத் தனிமா ளிகைதழைப்பத்
தாமோ தரப்பேர்க் கொழுகொம்பிற்
        றனியே படர்ந்தா ரன்பரக
வரங்கத் தளியாற் காலசைப்பா
        லாடல் புரிந்து மின்னருள்பூத்
தழகின் மதவேட் கனிபழுத்த
        வரும்பொற் கொடியி னடிதொழுவாம்
கரங்க மீரா றாறினொடு
        கமல விமலத் தடந்தோன்றிக்
ககனத் தறுமீன் முலையமுதங்
        கனிவா யருந்திக் களிகூருங்
*குரங்க மானு மதிமானுங்
        கூர்ங்கண் முகக்குஞ் சரிமானுங்
குறப்பெண் மானு மகிழ்குமரக்
        குன்றெம் மானைப் புரந்திடவே. (7)
--------------------------------------
*குரங்கம்-மான்

கலைமகள்.

வேறு.

பொறிதங்கு மார்பகப் புத்தேளி னுந்தியம்
        பூவுதவு நான்மு கத்துப்
புங்கவனுடன்முதுக் குறைவாளர் மணிநாப்
        புறத்திருந் தேழுல கமுஞ்
செறிதங்கு நல்லொலி யெழுப்பியிசை யொடுநித்
        திலப்பணிக ணில வெறிப்பச்
சின்முத் திரைக்குறியை யங்குலிகொண் முண்டகச்
        செல்வியை நினைந்து தொழுவாம்
முறிதங்கு கற்பகா டவியுழக் கிக்கோடு
        மூதண்ட முகடு பொத்து
முனைமுகத் தெவ்வஞ்ச வன்னெஞ் சிடித்துலவை
        முரணற விகைத்து லவுதிண்
+கொறிதங்கு பிடரேறு சேவகத் திறல் கொண்ட
        கொற்றவயி லுற்ற குமரக்
*கோமா னெவர்க்குமுயர் கோமா னிசைப்பரிய
        குமரேச னைக்காக்க வே. (8)
---------
+கொறி-ஆடு *கோ-மலை.

சத்தமாதர்கள்.

விடையுவண மஞ்ஞைவா ரணமலகை யோதிமம்
        விறற்சிங்க வேறு கைத்து
வில்லாழி யெஃகம்வச் சிரமுத் தலைக்கழுமுள்
        விரியுமறை கூரலத் திண்
படைகொண்மா கேச்சுவரி நாரணிகௌ மாரிவான்
        பாவிந்தி ராணி யுக்ர
பயிரவியொ டபிராமி வாராகி யெழுவரிரு
        பதுமசர ணங்கணினை வாம்
நடையைவே றற்குறு மனப்பெடைகள் கண்டுள்ள
        நாணமீக் கொண்டு படரும்
நலமுடைப் பிடிநடைக் கொடியிடைக் கடைசியர்
        நறும்பணைசெல் சோணா *டனை
கடைவாயின் முகிலொலி யடங்கமணி முழவங்
        கறங்குமா டங்கொள் புல்லைக்
ககனவிஞ் சையர்பரவு குமரவொண் கிரிமருவு
        கமழ்கடம் பனைய ருளவே. (9)

முப்பத்துமூவர்.

வேறு.

மலர்தலைப் புவனத்தும் வானகத் தினுமுள்ள
        வல்லிருட் டொகுதி யகல
வான்மதிக் குரியசெங் குமுதங்கள் குவிதர
        வயங்கொளி பரப்பி யெங்கும்
பொலியுமா றிருவர்பதி னொருவரெண் வசுக்களொடு
        புகழ்மருத் துவரிரு வராம்
புத்தேளிர் வர்க்கமுப் பத்துமுக் கோடியவர்
        பொற்பதத் தைத்துதிப் பாம்
அலகில்பற் பலவுயிர்த் தொகையனைத் துந்தந்
        தளித்தவையி லயமா வதற்
காதிமத் யாந்தரகி தப்பொருளுமா *யுழுவ
        லடியவர்க் கெளியவுரு வாய்க்
குலவியவ ரவர்மனக் கோதகற் றிக்கதி
        கொடுத்தற்கு வந்த புல்லைக்
குழகனதி யழகனைக் குலிசன்மகள் கொழுநனைக்
        குமரமலை யனைய ருளவே. (10)
-----------------------
உழுவல்-விடாது தொடர்ந்த அன்பு.

காப்புப்பருவம் முற்றிற்று.
---------

செங்கீரைப்பருவம்.

பூரண விலாசமுக் கட்கருணை யமுதமும்
        புரிசடை யிலங்கு திங்கள்
பொங்கமுத முங்கங்கை யமுதமொடு விரவிப்
        பொலிந்தவா னந்தவுரு வாம்
நாரணன யற்கரிய காரணக் கடவுள்வாழ்
        நற்கயிலை வெற்பு மேனை
நகிலப் பயம்பாய வளர்மர கதக்கொடி
        நயந்தவிம யாச லமுடன்
வாரணங் குலவுமந் தரசயில மைநாக
        வரையிரவி மதிய மென்றும்
வலஞ்சுலவு பொன்மகா மேருமலை யஞ்சக்ர
        லாளகிரி முதலெ வைக்கும்
சீரணி மணித்திலக மாங்குமர மலைமுதல்வ
        செங்கீரை யாடியருளே
தில்லையம் பகவனருள் புல்லையம் பதிமுருக
        செங்கீரை யாடிய ருளே. (1)

கதிகொண்ட செஞ்சூட் டுடைக்கிரண பானுவெங்
        கதிர்பாய வொண்பருக் கைக்
கன் *முளரி முளரியந் தாள்பாய வேனலங்
        கானக நடந்தி தணமேற்
றுதிகொண்ட சேற்கட் குறக்கொடி யுறக்கண்டு
        துவரிதழ்ப் பருகி வதுவைத்
தொடையளித் தற்கா தரங்கொண்டு வாதாடு
        சொல்லிற் கிணங்காமை யான்
மதிகொண்ட செஞ்சடைக் கடவுண்மத வாரண
        மருட்டித் துரத்த வஞ்சி
வஞ்சியுங் கெஞ்சியணை யக்கொஞ்சி மணிமுலையின்
        மருவுபன் னிருவா கனே
+திதிகொண்ட மான்மருக குமரவே தண்டகுக
        செங்கீரை யாடிய ருளே
தில்லையம் பகவனருள் புல்லையம் பதிமுருக
        செங்கீரை யாடிய ருளே (2)
----------------
*முளரி-முள் +திதி-காத்தல்

பத்திவிதை வித்தியா னந்தநீர் விட்டுநற்
        பயனுறக் கருதுமடி யார்
பதுமவித யக்கோயின் மேவியழி யாமுத்தி
        பற்றியே றற்கேணி யாம்
நித்தியத் துவமான மெஞ்ஞான வந்நெறியு
        ணேயமுறு வான்கரு ணையி
னிலைமையீ தென்னவறி குறியாற் றெரித்தருளு
        நிமலசற் குருநா தனே
பித்திகை நிரைத்தமணி மாடவெண் கொடியண்ட
        பித்திகை துளைத்தண்டர் கால்
பின்னிலான் வானரம் பைஙருக்கு வெள்குறும்
        பெற்றியுட் கொண்டுதிகை யாச்
சித்திரம் போலுறப் புரிகுமர மலையதிப
        செங்கீரை யாடிய ருளே
தில்லையம் பகவனருள் புல்லையம் பதிமுருக
        செங்கீரை யாடிய ருளே. (3)

கருமா னிடங்கலந் துலவுசெம் மானைக்
        *கரத்திட்ட கடவு ணெற்றிக்
கண்ணினுகு மூவிரு புலிங்கத்தை யுலவைலெங்
        கனலியந் தேவினோ டெம்
பெருமா னிருங்கருணை வலியா லெடுத்துப்
        பிறங் கதிரை மணிகொ ழிக்கும்
பீடார் பகீரதி விடுக்கவோ நூறுருப்
        பெற்றார லறுவர் முலையுண்
டிருமானு மானும்விழி யுமையாண் மகிழ்ந்தொருங்
        கிருகர மணைக்கவும் பன்
னிருகர முடன்சண் முகங்கொளோர் வடிவிசைந்
        தினிதாடல் புரிவ தேய்ப்பத்
திருமான் வியக்குந் திருக்குமர மலையாளி
        செங்கீரை யாடிய ருளே
தில்லையம் பகவனருள் புல்லையம் பதிமுருக
        செங்கீரை யாடிய ருளே. (4)
ஓராறு முகமுடன் பன்னிருகை யுங்குலவ
        உயர்கங்கை மருவி நாளும்
ஒங்கமலை யோடுவிண் பார்வதித ரப்போந்
        துலாவியயில் வேலை யுறலால்
நீ*ரா ரலைத்துடைக் குந்தரத் தாற்காண *
        நீள்கதி தனைக்காட் டலா
னிகழுமா திக்குமறை யின்பொரு ளுணர்த்தலால்
        நிகரினிற் சாருவார் நின்
பேராயி ரங்கொண்டவிண்டுவு முரைப்பரும்
        பேறதாஞ் சாரூ பமே
பெறுவா ரெனப்பரவு வாச்சியந் திண்ணமென்
        பெற்றிதெரி வித்தல் போலச்
சிரார்சு வேதநதி சூழ்குமர மலைவாச
        செங்கீரை யாடி யருளே
தில்லையம் பகவனருள் புல்லையம் பதிமுருக
        செங்கீரை யாடி யருளே. (5)

வேறு.

இமையோர் மருவர மகளீர் முகமொடு
        மிதயங் களி கூற
வெழுதோ ணிசிசர** மடவா ரழும்விழி
        யிணைகள் சிவந்தா ரச்
சமரே றியபுய வலியார் நிருத
        தளங்களு டன் பொரு சூர்
தனைவா ரணமுக னரிமா முகமுறு
        தானவ னாதிய ரை
யுமைநூ புரநவ மணிகான் மடவிய
        ருதவொன் பது வீர
ருடனே சென்றமர் புரியா வென்றிகொ
        ளும்பர்க டம்பெரு மான்
அமரா வதிபுகழ் குமரா சலபதி
        யாடுக செங்கீரை
அல்லற் றவிர்பதி புல்லைக் கதிபதி
        யாடுக செங்கீரை. (6)
---------------
* ஆர் - பூமி

சீலப் பழமறை யோலிட் டனுநனி
        தேடற் கரியபொரு*ள்
தேவர்க் குறுதுப ரோடச் சிறையது
        தீரக கருணைசெ ய்வோய்
மேலைக் கடலர சேலச் சலதியை
        வேலைப் புருகியுற
வேவிட் டறுகிய காலத் துயரிய
        மேருச் சிலைதகரக்
கோலப் படைகொடு மோதிக் கிரியிறை
        கூசப் பொருள்கொணர் செங்
கோலைப் புரிதரு கோனுக் ரவழுதி
        கூடற் கதிபதியே
யாலக் களனினி தாகத் தருமக
        வாடுக செங்கீரை
அல்லற் றவிர்பதி புல்லைக் கதிபதி
        யாடுக செங்கீரை. (7)

வீழிக் கனிதுவர் வாயுற் பலம்விழி
        மென்குயி லஞ்சு கமும்
வேறற் கரிதென வோடப் புரிமொழி
        விண்யரு குஞ்சுதையின்
கூழுக் கிரைபயி லியாழுக் கிணையகர்
        குஞ்சரி தன்பதியே
கோவைக் கவியவை பாடக் கருணைசெய்
        கும்பிமு கன்றுணைவா
ஊழிக் கடைவளி யோவிற் றெனவளி
        யொன்ற விருஞ்சிறையா
னோதக் கடலெழ மோதிக் கடையன
        லுண்க ணிரண்டையுமார்ந்
தாழிப் புவிபுகழ் கோழிக் கொடியவ
        ஆடுக செங்கீரை
அல்லற் றவிர்பதி புல்லைக் கதிபதி
        யாடுக செங்கீரை (8)

கூனார் மதிசிர மானார் கரமலர்
        கொண்டார் மைந்தாநின்
கொங்கலர் செஞ்சர ணம்புய நம்புவர்
        கொண்டா டுந்தேவே
வானா றதினுகள் சேல்பாய் தடமலி
        *வண்டா னஞ்சூமும்
வண்டலை தண்டலை கொண்டலை யளவி
        வளந்தா னந்தாத
மேனா டதினுயர் சோணா டழகுற
        மின்பார் வந்தாய்நல்
வெண்கரி தங்கரி சங்கரி மருக
        வியன்கூர் விண்டேவர்
சேனா பதிபர ஞானோ தயவர
        செங்கோ செங்கீரை
செல்வத் திருவளர் புல்லைக் கதிபதி
        செங்கோ செங்கீரை. (9)
------------------
*வண்டானம் - நாரை

தவமும் புரிகில மரபுந் தழைசுத
        சந்தா னந்தாநற்
றமர்தந் தையெவருநினையன் றிலையடி
        தந்தா ளெந்தாயென்
றவிழ்நெஞ் சகமல குருகும் படியெம
        தன்பே யன்பேயென்
றவர்சஞ் சலமற வருளுஞ் சுருதியி
        னந்தா கந்தாவெம்
பவனம் பயில்விசை மயிலின் பிடரமர்
        பண்பா நண்பாரும்
பரசங் கரகுரு குறமங் கையுமகிழ்
        பங்கா சிங்காரா
சிவமன் குமரம லையின்வந் தமர்குக
        செங்கோ செங்கீரை
செல்வத் திருவளர் புல்லைக் கதிபதி
        செங்கோ செங்கீரை. (10)

செங்கீரைப்பருவம் முற்றிற்று.
-----------------

தாலப்பருவம்

வேறு

பூகம் பழுத்த நறுந்தாற்றிற்
        புயலார் தெங்கின் பழம்வீழப்
பொறாது சிதறிப் பொய்கையின்வாழ்
        புள்ளின் குலத்திற் படவிரிதன்
மோகம் பழுத்த வாடவர்தோண்
        முயங்கு மடவார் நசையொழித்தும்
முற்றுந் துறந்த மூதறிவான்
        மூவா வின்பம் பெறற்கெண்ணி
யோகம் பழுத்த நெஞ்சகலா
        *வுறுவ ரனையத் திகழவிண்மட்
டுயர்தண் டலைசூழ் சோணாடா
        வும்பர்க் கதிபா வளவாவெண்
போகம் பழுத்த புல்லைநகர்ப்
        புனிதா தாலோ தாலேலோ
புனமான் றந்த குறமானைப்
        புணர்வோய் தாலோ தாலேலோ (1)
----------------
*உறுவர்-முனிவர்

ஏமா சலத்தைச் சிலையெனக் கொண்
        டிமயா சலத்தின் மகட்புணரு
மெம்மான் கையா வுரிபோர்க்கு
        மியமா னிகமா கமம்பரவுங்
காமா ரிசெழுங் கமலமலர்க்
        கைமாங் கனியைத் தரவேட்டுக்
கருதற் கரிய புவனமெலாங்
        கணத்திற் சூழ்ந்து வருநீபத்
தாமா விரிஞ்ச னோடுபரந்
        தாமா தியரும் பணிந்தேத்துந்
தரமார்* நவிரப் பரியூர்சுந்
        தரமார் தருசண் முகத்தரசே
பூமான் பாமான் புகழ்புல்லைப்
        புரியாய் தாலோ தாலேலோ
புனமான் றந்த குறமானைப்
புணர்வோய் தாலோ தாலேலோ. (2)
--         ------------
* நவிரம்-மயில்

என்னார்க் கருட்சிந் தாமணியே
        யிகழ்வார் மருட்சிந் தாமணியே
யிமயா சலக்கற் பகக்கனியே
        யீன்ற வான்கற் பகக்கனியே
நள்ளா ருரத்தொரு மித்துருவே
        னாட்டுமன் பர்க்கொரு மித்துருவே
நலிவுற் றடைந்தார்க் கரும்பொருளே
        நானா வேதத் தரும்பொருளே
விள்ளார் கடப்பத் தாரணிவாய்
        விண்ணோர் கடப்பத் தாரணிவாய்
வெஞ்சூர் தடிந்த வாகையனே
        மிளிர்பன் னிரண்டு வாகையனே
புள்ளார் மலர்ப்பூந் தடப்புல்லைப்
        புரனே தாலோ தாலேலோ
புனமான் றந்த குறமானைப்
        புணர்வோய் தாலோ தாலேலோ. (3)

மகத்திற் சனிபோற் பிறவிதொறும்
        வரும்வெவ் வினையிற் பட்டுநெஞ்ச
மயங்கித் தியங்கிக் காலமெலாம்
        வறிதிற் கழித்தே மையவினி
யிகத்திற் பரத்திற் பெறுஞ்சுகத்தி
        லிச்சை யுடையே மல்லமுன்றா
ளிணையம் புயத்திற் கன்புசெய
        விசைந்தே மென்பார்க் கருண்முதலே
சகத்திற் றோன்று மன்பதைசஞ்
        சலமார் வந்தித் துவமகலத்
தடுத்தெவ வரமுந் தரக்குமர
        சயிலத் தெழுந்தோய் தனியில்பெரும்
புகழ்க்கா கரமா யிலங்குபுல்லைப்
        புரியாய் தாலோ தாலேலோ
புனமான் றந்த குறமானைப்
        புணர்வோய் தாலோ தாலேலோ. (4)

கன்ன லொடித்துக் கடாவடித்துக்
        கருங்கா லுழுந ருழுஞ்சாலிற்
கமலத் தரும்பு மரும்பொடுசெங்
        காவி யரும்பின் முருக்கவிழப்
பன்னு மிசைவண் டினமூசும்
        பதும நாளங் கடைசியர்செம்
பதுமத் தடிபின் னலிற்பெயர்ந்து
        படரா நிலைகண் டவணாரும்
அன்ன மனையார் நடைக்குமுன
        மாற்ற ததிநா ணுற்றனமீ
தற்ற மாமே ளனஞ்செயற்கென்
        றார்க்கும் பணைசூழ் சோணாடா
பொன்னின் மருவு புல்லைநகர்ப்
        புலவா தாலோ தாலேலோ
புனமான் றந்த குறமானைப்
        புணர்வோய் தாலோ தாலேலோ. (5)

வேறு.

கலகச் சமணிகழ் சமயத் துறையொடு
        கவிழப் படுகுழிவீழ்
கழையைச் சுளிமத கயமொத் திடுகவு
        ரியன்மெய்ப் படுமுதுகூ
னலையக் கணநிமிர் தரவைத் ததிசுர
        நலிவெப் பறவருளா
நதியிற் பெருவழ னடுவிற் பொறி * யிதழ்
        நகவிட் டிசைபரவப்
பலபொய்த் தொழில்புரி யமணப் பதிதர்கள்
        பலமற் றுயர்கழுவிற்
படவிட் டொருசிவ சமயப் பயிர்நனி
        பலுகத் தழிம்மதுரைத்
தலனிற் கிருபையெனு மழையைப் பொழிமுகில்
        தாலோ தாலேலோ
சமரத் தயிலவ குமரச் சிலையிறை
        தாலோ தாலேலோ (6)
-----------------
*இதழ்- ஏடு

விதுவிற் பொலிதரு தரளக் குவையொளி
        வீச நறுங்குமுதம்
விகசித் தெழுமது மலரிற் கடைசியர்
        மிளிர்செந் துகிர்நிகர்வா
யிதழொத் தலினறை மிசையத் தெருளறி
        வின்றளி சூழ்பணையோ
டெழில்விட் புலமொடு படர்தற் கரிதென
        வென்று பசும்பரிகட்
புதையப் புதுமலர் பொழிகட் புனலொடு
        பூந்தா துகள்சிதறும்
பொழில்கற் பகவன நிகரக் கெழுமிய
        புல்லை வளம்பதியாய்
*சதபத் தெனும்விழி யவனுக் குமருக
        தாலோ தாலேலோ
சமரத் தயிலவ குமரச் சிலையிறை
        தாலோ தாலேலோ. (7)
---------------
*சதபத்து - ஆயிரம்.

விண்டல மண்டல மண்டல மும்புகழ்
        வீரா தாலேலோ
விஞ்சையர் விஞ்சை மகம்புரி விஞ்சையர்
        விமலா தாலேலோ
கண்டகர் தங்குடி கண்டகழ் வேலநி
        கண்டா தாலேலோ
கங்கை யணிந்தவொர் கங்கையன் மைந்த
        கடம்பா தாலேலோ
+தொண்டக மாயவொர் தொண்டக மானவர்
        தொண்டா தாலேலோ
துங்க மிகுஞ்சிகி யொண்பரி தங்கு
        சுரேசா தாலேலோ
தண்டரு தண்டலை சூழ்தரு புல்லைத்
        தலனே தாலேலோ
சமரத் தயிலவ குமரச் சிலையிறை
        தாலோ தாலேலோ. (8)
-------
+ தொண்டகம் - அநாதிமலம்

கொண்டல் படிந்தயி லுங்கட லுண்டவர்
        குருவே யருவுருவே
கும்பிடு செங்கையொ டன்பர் பணிந்துரு
        குதலாய் சிவமதலாய்
வண்ட ரலம்பு கடம்பி வரும்புய
        மலையே மிலைவோனே
வஞ்சிம ருங்கிடு குந்தன குஞ்சரி
        வரனே சுபகரனே
கண்ட மகண்ட மடங்கலு நின்றருள்
        கரியே மதகரியே
கண்களி கொண்ட விளங்களி றொன்றிய
        கதிர்சூழ் மழகதிரே
சண்ட விருங்கதி விண்கரி தன்பதி
        தாலோ தாலேலோ
சமரத் தயிலவ குமரச் சிலையிறை
        தாலோ தாலேலோ. (9)

வேறு.

அனித்த பிறவிக ளெடுத்து மிகமிக
        வலுக்கும் வகையினி நாடாமே
அடக்கு கமடம துறுப்பி னிகழ்பொறி
        யடக்க நிதநிதம் வாடாமே
பனிப்ப வுடல்புள குதிப்ப விழிதுளி
        பனிப்ப வரவட நீறாரப்
பரத்வ நிலையக மடுத்து முயர்துதி
        படித்த குழறிய நாவோடே
யினித்த பலகனி யவற்பொ ரிகடலை
        யிசைத்த நறுநறை பாலோடே
யிதத்தி னடியவர் படைக்க வரமரு
        ளிபக்க டவுளிளை யோனேவான்
றனைத்த குவர்குல முழக்க வடுதுயர்
        தவிர்க்க வருகுக தாலேலோ
தழைத்த குமரச யிலத்தி னினிதவ
        தரித்தி டுகுழக தாலேலோ. (10)

தாலப்பருவ முற்றிற்று.
------------

சப்பாணிப்பருவம்.

பன்னரிய தரளங் கொழிக்கும் பகீரதி
        பயந்தவே ளெனுமகவை யுட்
பரிவினொடு காண்டற்கு முக்கனிமு தற்கொடுசெல்
        பரிசின் வெண்கு டிஞையிற்
பொன்னின்மலி கற்பகா டவியினறு நீழற்
        பொலிந்தவா னரம களிர்தம்
பொற்பை விண் *ணரமகளிர் கண்டுக
        ணிமைக்கிமை பொருந்தாது நோக்க னோக்கி
அன்னநடை யந்நில மடந்தையர்த மினமென
        வணைந்துநீ ராட்ட யர்தரும்
அமரர்தம் பதிகுலவு மளகையம் பதியொடு
        மனந்தனுறை யும்பதி தொழத்
தன்னிகர் தரும்புல்லை சேர்குமர வெற்பினிறை
        சப்பாணி கொட்டியருளே
சத்தாகி யுயர்ஞான வித்தாய் முளைத்தவா
        சப்பாணி கொட்டி யருளே. (1)
-----------
*விண்ணரமகளிர் விள் - நரமகளிர்

வண்ணச் செழுங்கமல முகைவிண் டளிக்குழா
        மதுவுண்டு பாண்முரலு மோர்
வாவியின் மணிக்கூல மேவிவிண் ணாரச்சு
வத்தநின் றோர்பா சடை
யொண்ணப் பினிற்கரையின் வீழ்ந்துபப் பாதியிலை
        யோங்குமீ னம்புளு ருவா
யொன்றையொன் றீர்த்திடும் வியப்புநெஞ் சீர்ப்பச்செய்
        யோகம் பிழைத்த தெனவே
யெண்ணியிப் பாரிடத் தினிவரு பிழைப்பின்
        றெனப்பெரும் பாரிட மெடுத்
தேகிப் பொருப்பின்முழை யுய்ப்பமா ழாந்துதுதி
        யேற்றுநக் கீரனுய்யத்
தண்ணற் பெருங்கருணை புரிகுமர மலையதிப
        சப்பாணி கொட்டி யருளே
சத்தாகி யுயர்ஞான வித்தாய் முளைத்தவா
        சப்பாணி கொட்டி யருளே. (2)

கோடரங் குதிகொண்டு லாவுவேய் மருவிறாற்
        குலமுடைந் தொழுக வொழுகுங்
கோற்றேனு நீள்பணைப் பருமப் புழைக்கைகொடு
        கூர்ங்கோட்டு மத்தமத மாச்
சேடகத் தும்பருறை கற்பக மலர்க்கான்
        சிதைத்துழக் கலினொழுகு செந்
தேறலு முதிர்ந்தமுக் கனிவெடித் தொழுகுதீந்
        தேறலு மொருங்கள வளாய்
நீடலை செறிந்ததிர்ந் தோங்குதே னருவியாய்
        நீரருவி யோடுற்று நா
னிலனும் புதைப்பப் படர்ந்தேறி வயல்குள
        நிரப்பிவெங் கலியக லவே
சாடுபு வளங்குலவு குமரமலை யாதிபதி
        சப்பாணி கொட்டியருளே
சத்தாகி யுயர் ஞான வித்தாய்மு ளைத்தவா
        சப்பாணி கொட்டியருளே. 3

மண்ணில்வா ழெண்ணரிய மன்பதைக் குலமொடுபொன்
        வளநகர்க் கதிப னாய
மகபதியும் விஞ்சையர் வணங்கிரு நிதிகிழான்
        மற்றைவா னமரர் தம்மின்
உண்ணரு மருந்துண் டறாததம் பிணிநிலை
        யுணர்ந்துநின் றிருவி னெய்தி
யுயர்ஞான பண்டித னெனப் பரவி யந்நோ
        யொழிக்க வரு வாரை நோக்கிக்
கண்ணகன் ககனப் பரப்புவ ட்டத்தென்று
        கவனமாக் கடவி வினதை
கான்முளைத் னற்றகான் முளைமுழுக் காலுறக்
        கருதி வரலொப்ப வலமார்
தண்ணிய மலர்த்தாரு சூழ்குமர மலையதிப
        சப்பாணி கொட்டியருளே. (4)

வானகத் தினைவசுந் தரையாய் வசுந்தரையை
        வானகமதாக வேலா
வலயம் பொருப்பா யடுக்கன்முந் நீரதா
        மார்த்தாண்டன் வெண்மதி யமாய்ப்
பானிலா மதியிரவி யாயணுவை மேருவாய்ப்
        பகர்மேரு வணுவாய்ப் புறப்
பவ்வமாய்ப் புவனியைப் புவனமா கப்புறப்
        பவ்வத்தை வடவை நீராய்
ஞானியர்க ளும்பர்க ளெவர்க்கேனு மொருகன்ன
        னண்ணுமயு தத்தி னொன்றி
னாள்பலப் பலசெலவு மாயஞ்செய் கிரவுஞ்ச
        நகமுந் தகர்த்த வடிவேற்
றானையணி செங்கரங் கொடுகுமர மலையதிப
        சப்பாணி கொட்டி யருளே
சத்தாகி யுயர்ஞான வித்தாய் முளைத்தவா
        சப்பாணி கொட்டி யருளே. (5)

வேறு.

சீரிதழ் நளினத் தளியிற் குலவிய
        செய்யவண் மணிமார்பச்
செம்மலு மொள்ளிய வெள்ளிய சலசைச்
        செல்வனு மைந்தரு வாழ்
கார்முகி லூர்திக் கடவுட் குலிசக்
        கடவுளி லேகரு மாய்க்
கதறக் கதற வரந்தை யியற்று
        கடும்பணி யாலிளையாப்
பாரி னெமக்குமை யன்றியொர் புகலிலை
        பார நுமக்கடியார்
பரம தயாளு வெனக்குறை கூறப்
        படருஞ் சூர்மாவைக்
கூரயில் கொண்டு துளைக்க விடுத்தவ
        கொட்டுக சப்பாணி
குமரச் சிலைவதி யமார்க் கதிபதி
        கொட்டுக சப்பாணி. (6)

தவனக் கரிமிசை வருசக் கரனரு
        டனையை தனக்குவடுந்
தகரத் தளவணி யளகக் குறமயி
        றடமுலை யின்குவடுஞ்
சுவடுற் றிடநனி தழுவத் தழுவிய
        தோள்வடு வன்றிவழுச்
சொலுதற் கிலையென வொளிர்மெய்ச் சிவகுரு
        துன்புசெய் தாரகனா
மவுணக் கொடியென துடலைக் கிழிய
        வடர்ந்துகு செம்புனனீ
ரதியுக் கிரமொடு பருகித் திசைதிசை
        யஞ்ச மடங்கல்வரு
குவதொப் பெனவரு மயலைப் பயில்கர
        கொட்டுக சப்பாணி
குமரச் சிலைவதி யமரர்க் கதிபதி
        கொட்டுக சப்பாணி. (7)

பதகத் தொழில்புரி குநரைப் படரெம
        படர்கைப் படவுதவிப்
பவமுற் றியகொடு நரகுக் கறுதி
        படுத்துவ தெப்பொருண்முற்
சதுர்வத் திரனரு ளுலகிற் றனமனை
        தரைநச் சுறுமனதைத்
தருவித் தொருநெறி தனில்விட் டுறுகனி
        சருகிலை நீர்பருகி
யுதகத் தெரியெரி நடுவிற் றலைகீ
        ழொன்றியு நின்றுமிருந்
துயர்மெய்த் தவமுயல் பவர்நிட் டையின்முடி
        வொன்றெதெ னெஞ்சுருகக்
குதலைக் கிழவிசொன் மகவெ தியாவுநீ
        கொட்டுக சப்பாணி.
குமரச் சிலைவதி யமரர்க் கதிபதி
        கொட்டுக சப்பாணி (8)

பங்கய மியாவுமெ ழுந்தெம தையநின்
        பனிமதி முக நோக்கிப்
பகரி னிதற்கீ டிலையா மென்று
        பயத்தொடு பங்கமரீஇச்
சங்கையி லாவளி கண்ணீ ராறு
        தழீஇயு மதிப்பகையாற்
றலைநா ணுறல்கொண் டிதழ்வாய் மூட
        றவாதுற வெய்த்த னமா
லங்கணின் முகசா ரூபம் பெறவரு
        ளாயென வொருதாணின்
றரிய வனந்தனி லுரிய தவஞ்செய
        வாற்றிடு கவினுடையாய்
கொங்கலர் நீப மணிந்தபு யாசல
        கொட்டுக சப்பாணி
குமரச் சிலைவதி யமரர்ச் கதிபதி
        கொட்டுக சப்பாணி. (9)

தெண்டிரை நீர்நிலை யோடையி னோக்குநர்
        சிந்தை கவர்ந்தெழிலிற்
றிகழெகி னம்புய முற்றந் நீரொடு
        தெரியுந் தன்சாயற்
கண்டொரு பேடிது வென்று திளைப்பக்
        காமுறு மாடுவாரால்
காவி நறும்பா சடையிற் றங்கிய
        காமரு குருகுடனத்
தண்டினை வாய்கொண் டீர்ப்பத் தவறித்
        தண்புனன் மூழ்குபெழீஇத்
தழைசிறை யுதறியுள் வெள்குறும் வளமலி
        தருசோ ணாடணிசீர்
கொண்டு தினந்திகழ் புல்லைப் புரியாய்
        கொட்டுக சப்பாணி
குமரச் சிலைவதி யமரர்க் கதிபதி
        கொட்டுக சப்பாணி. (10)

சப்பாணிப்பருவ முற்றிற்று.
------------

முத்தப்பருவம்.

பத்தித்திரு மணிமாளிகை
        பகலைப் * பகல் செய்யும்
பணிவெங்கயி றிட்டண் டர்கள்
        பயவாரி மதிக்கும்
மத்திற்பொரு செய்குன் றொடு
        மதிமாமணி வாயின்
வழியேசெல வளர்கோ புரம்
        வடமேருவை நேர
வெத்திக்கும்வில் வீசிப் பட
        ரிரவுக்கிற வெய்த
விமையோர்தப தியுநா ணுற
        வெழிலைத்தரு புல்லை
முத்தர்க்கருண் முத்திக் கிறை
        முத்தந்தனை யருளே
முருகாதிரு மருகா வொரு
        முத்தந்தனை யருளே. (1)
------------
*பகல்-பிளத்தல்

வேலைச்சுடர் வாளைப் பழி
        விடவார்விழி மடவார்
மேருத்தன பாரத் துணை
        விம்மப்பிரி கணவர்
மாலைப்புய மாவெற் பொடு
        மருவற்குறு மூடன்
மதியைத்தடை புரியக் கழி
        மணிசேரணி மறுகின்
பாலுற்றொளி ரத்தீ பிகை
        பலவைத்தன புல்லைப்
பதிவாழரு ணிதியே யுமை
        பதிகாதினில் வேத
மூலப்பொரு ளுரைவாய் மணி
        முத்தந்தனை யருளே
முருகாதிரு மருகா வொரு
        முத்தந்தனை யருளே. (2)

பாவாணரின் மலர்வண் டிசை
        பாடுங்குயில் கூடும்
பலவின் கனி சாடுங் கவி
        பசுமாமயி லாடுங்
காவார்தரு வளனும் பணை
        களினேர்தரும் வாளனுங்
கனநீர்தரும் வளனும் பல
        கவினுஞ் சோணாடா
கோவார்தரு குமரா சல
        குமராசல முறும்வை
குந்தாவை குந்தா திபர்
        குலிசன்புகழ் தேவே
மூவாமுழு முதலே யொரு
        முத்தந்தனை யருளே
முருகாதிரு மருகா வொரு
        முத்தந்தனை யருளே. (3)

*ஆசைக்கரி யோடத் தனி
        + யாசைக்கிரி யாட
வமராவதி யுலகோ டுபொ
        னமராவதி கூட
நாசத்தினை யுறுமென் னவு
        நாசத்தை யிழந்து
நமனாருயிர் தடுமா றமு
        னமநாரத னயரும்
மாசைத்தவிர் வேள்விக் கிடை
        வருவாயுவி னுலகம்
**வருடைப்பரி யிவர்புல் லையின்
        வாழ்வேயளி மேவி
மூசக்கமழ் நீபப் புய
        முத்தந்தனை யருளே
முருகாதிரு மருகா வொரு
        முத்தந்தனை யருளே. (4)
-------------------------------------------
*ஆசை-திக்கு.+ ஆசை-பொன்.** வருடை-ஆடு.

நந்தாவன முந்தா பதர்
        நண்ணுந்தா வளமும்
களிர்சந்தருண் மணநா றுநல்
        வளமுந்தரு பொதிகை
மந்தானிலம் வந்தா நில
        மருவிக்கடை சியர்கூழ்
மாறென்களை களையக் களை
        மாற்றுஞ்சோ ணாடா
செந்தாமரை யடிமீ தணி
        செந்தா * மரை வாயிற்
றிகழ்நூபுர மொடுதண் டை
        சிலம்பத்தனி வந்து
முந்தார்மறை முதலே யொரு
        முத்தந்தனை யருளே
முருகாதிரு மருகா வொரு
        முத்தந்தனை யருளே. (5)
--------------
* மரை - தவளை

வேறு.

கார்கொண்ட முகிலைப் பிழிந்துண் டுமிழ்ந்தெனக்
        கட்டுடைந் தூற்று நீத்தக்
கரடக் களிற்றுரிக் கஞ்சுகக் கிஞ்சுகக்
        கனிவாய்க் கனிக்கி டந்தந்
தேர்கொண்ட செம்பவள மேனியணி வெண்ணீற்
        றிரும்யொடித் தொகையி னோடங்
கெய்துசெஞ் சீறடிப் பொடியுங் கலந்துற
        விவர்ந்துவிளை யாட னோக்கி
வார்கொண்ட துத்திப் பணப்பணி யுடன்கலா
        மதிவீற் றிருந்த முடிமேல்
வளருமப கீரதி பரிந்தெடுத் திலகமடி
        வைத்தணிகள் பலதிருத் திச்
சீர்கொண்ட மகவுரிமை காட்டிமுத் தாடுபவ
        திருவாயின் முத்த மருளே
சிகரன்ட வரைதணிய வளர்குமர மலையதிப
        திருவாயின் முத்த மருளே. (6)

அந்தரத் தமரரொரு புடைநிற்ப வொருபுறத்
        தவுணர்நின் றரவை நாணா
யார்த்துத் தரங்கஞ் சுருட்டும் பயோததி
        யலம்பப் புலம்ப மேனாண்
மந்தரமெ னுங்கிரி நிறீஇமதிக் கத்தோன்றும்
        வானமுதொ டஃறி ணைப்பேர்
மரூஉங்கோ கிலந்தத்தை யோசெய்ய கற்றாவின்
        மடிகொன்று கவர முதமோ
பைந்தொடிக் குறமான் மொழிக்குவமை யாமெனப்
        பகருமென் கிழவியந் தேன்
பன்னிரு செவித்துளை நிரப்பியுட் போந்துளம்
        பரவவன் பேயுரு வமாய்ச்
சிந்தையொத் தவண்மணிக் கவுளின்முத் திட்டவா
        திருவாயின் முத்த மருளே
சிகரவட வரைதணிய வளர்குமர மலையதிப
        திருவாயின் முத்த மருளே. (8)

சங்குறழ் மிடற்றுத் திருத்தங்கு மருமச்
        சரோருகக் கண்ண னீன்ற
தாமரைக் கண்ணனை விளித்துநின் பணியாது
        சாற்றென்ன நீவி னவலும்
பங்கமற வுலகம் படைத்தலென் றொழிலெனப்
        பழமறைக் காதிமனு வின்
படுபொரு ளுணர்த்தெனத் தெரியாமை கண்டுபத
        பதுமத்தி னாலு தைத்து
மங்கவனை நாற்றலை குலுங்கக் கரங்குட்டி
        யடுதாட் டுணைக்கு நிகள
மார்த்தச் சுறக்கந்த மாதனக் குகைதனி
        லருஞ்சிறைப் பட்டு ழலவே
செங்கனியு நாணப் பணித்தசெம் பவளநேர்
        திருவாயின் முத்த மருளே
சிகரவட வரைதணிய வளர்குமர மலையதிப
        திருவாயின் முத்த மருளே. (8)

வேறு.

தன்னின் மிக்கோ ரிலையெனற் கோர்
        சான்றாய் மழுவைக் கரந்தூக்குந்
தனியில் கருணைப் பெருந்தகையாஞ்
        சசிவேய் மணிவே யீன்றமுத்து
முன்னி னரிய தவநெடுநா
        ளோவா துஞற்றுந் தாபதரோ
டுகளக் கமலத் துறைமடவா
        ருவக்குங் கொழுநற் கரிவரிதாய்ப்
பொன்னின் குவடுஞ் சிறுவிதியும்
        புரிமா தவப்பே றெய்தியிறும்
பூதுண் டாகத் தடநதியிற்
        பூந்தா மரையும் பணிலமுமீன்
கன்னி முத்து மீன்றவிளங்
        காளாய் முத்தந் தருகவே
கந்தா குமர மலைக்குகந்தாய்
        கனிவாய் முத்தந் தருகவே. (9)

கொம்பிற் றேனை நசைகொண்முடக்
        குலமா னிடனு மடமையினாற்
கோதாட் டயர்ந்தெட் டாப்பொருளைக்
        கோடற் கழுகுஞ் சிறாருமொப்ப
வம்பைப் பெருக்கும் பலஞ்சமெனும்
        வாழ்விற் கிடாது கொடுநிரய
வாழ்க்கைக் காக்கைப் பொறைநிதமும்
        வளர்ப்பார் நினைப்புக் கரியநின்றா
ணம்பு மன்பர்க் கருட்செல்வ
        நல்கிப் பெறும்பே ரின்பசுக
நாளுந் துய்ப்பக் கடைக்கணித்தா
        ணவைதீர் ஞானப் பெருஞ்சுடரே
கம்பக் களிற்றுக் கிளையசிறு
        களிறே முத்தந் தருகவே
கந்தா குமர மலைக்குகந்தாய்
        கனிவாய் முத்தந் தருகவே. (10)

முத்தப்பருவம் முற்றிற்று.
--------------------

வருகைப்பருவம்

செங்கதி ரொளிக்கற்றை வெந்நிடக் கமலமென்
        சிற்றடித் துணையின் மேய
சிற்றொலிக் கிண்கிணி மணிச்சிலம் பொளிரத்
        திருக்கைவிர லாழி மின்ன
வைங்கணைக் கிழவனை யடர்க்குநின் றாதைநுத
        லக்கத் துதித்த வுணரா
மடையலரை யடையவென் றிடும்வாகை யம்புயத்
        தணிவாகு வலய மிளிரப்
பொங்குமலர் முகமொடு நுதற்சுட் டியுங்கருணை
        பொழிவிழிக் கடையு மோங்கப்
பொற்பவள வெற்பினிடை சூழ்மினற் கொடியுறிற்
        புரையுமரை ஞாணி லங்கத்
தங்கவரை நூறத் தகர்த்தசெண் டாயுதந்
        தாங்குசே வகவ ருகவே
சம்புசங் கரிமதலை யின்புறுங் குமரமலை
        தங்குகண் மணி வருகவே. 1

ஓதரிய மறைகளு மரந்தையுற் றுந்துருவ
        வொல்லாமை கண்டுமு ணர்வின்
றொப்பனை செயற்கொருவ ராலுமொண் ணாநினக்
        கொப்பனையி யற்றல் போலப்
பேதையே முள்ளத் தவாமிக்க தன்மையாற்
        பீடுலகி னன்ப ருக்கே
பிள்ளைப் பெருங்கலி துடைத்தரு ணினைச்சிறிதொர்
        பிள்ளையுரு வாய மைத்து
நாதனென லாயவுனை நன்னீரி லாட்டியொண்
        ணறுநுதற் றிலத மிட்டு
நவமணிப் பணிகளிட் டுன்னழுகு காணநனி
        நாடிவா வெனவ ழைத்தேஞ்
சாதுசங் கம்பரவி நேயமிகு புல்லைத்
        தலேசசண் முகவ ருகவே
சம்புசங் கரிமதலை யின்புறுங் குமரமலை
        தங்குகண் மணிவ ருகவே. 2

பொன்மணி யினொளிவீசு வடிவேற் படைக்கரம்
        பொலியுமணி யெப்பு வனமும்
புகழுமணி பெண்சிகா மணியிருவர் நாப்பண்
        பொருந்துசெம் மணிய டியராற்
சொன்மணி மறைக்குமெட் டாதமணி யீராறு
        தோளுடைய மணிகொ டுங்கோற்
சூர்தடிந் தமரருக் கருடயா மணிபரம
        சுகபோக ஞான மணிநீ
பன்மணி நிகர்க்குங் கருங்கட் சிவந்தவாய்ப்
        பதுமாச னத்தி னோங்கும்
பச்சைப்ப சுங்கொண்டன் மார்பில ணையுந்திருப்
        பாவைநித மேவு புல்லை
தன்மணி தனக்கிணையி லாதசண் முகமணி
        சதானந்த மணிவ ருகவே
சம்புசங் கரிமதலை யின்புறுங் குமரமலை
        தங்குகண் மணிவருகவே. (3)

கடியேறு கற்பகக் கானேறு நீரின்று
        கமரேற வெண்குவ டுநேர்
கவினேறு படிவப் புழைக்கைவெள் ளிபநெஞ்சு
        கரிசேற வானா டுவெங்
கொடியேறு கேதனக் கொடிசெயர சொடுகொடுங்
        கோலேற வேறு மாண்மை
கொண்டபுய வெற்பமர கண்டகர்கள் குன்றுரங்
        குன்றாத வுர முமேகத்
திடியேறு மஞ்சத் தரங்கவன் குணிலேறு
        மெழின்மார பேரி யகடு
மீர்தரக் கூவுசெஞ் சேவலங் கொடிபடைத்
        தேறுக ரவனச மலரிற்
றடியேறு கூனற் பழங்கிழமெ னப்புனந்
        தன்னில்வரு சேய்வ ருகவே.
சம்புசங் கரிமதலை யின்புறுங் குமரமலை
        தங்குகண் மணிவ ருகவே. (4)

*குண்டலஞ் செவியுறப் பரிதியுத யஞ்செய்து
        குறுநகையு டன்வ ரத்தன்
கொண்கண்வர வெனவறிந் தம்புயக் கோதைமகிழ்
        கூர்வதென முகிழ்வி ரிப்பக்
கண்டழுக் காளறுங் கொண்டல்லி யங்கோதை
        கண்மூடி யேதன் மதியாங்
கணவற் றணந்தபிரி வாற்றாது சுரிமுகங்
        காட்டலென வலர்மு கிழ்ப்ப
வெண்டகு தடந்திகழ் குரம்பைவா னதிசெலற்
        கிட்டசோ பானமெ னவே
யிலகிய வளங்குலவு சோணாடு புகழ்புல்லை
        யிறைமறைப் பொருளு மறியாத்
தண்டணிவி திக்குமொரு தண்டனைவி திக்குமுத்
        தண்டனே நீவ ருகவே
சம்புசங் கரிமதலை யின்புறுங் குமரமலை
        தங்குகண் மணிவ ருகவே. (5)
-----------------
*குண்டலம்- ஆகாயம்.

வேறு.
இந்தப் பிறவி தனிலெமக்கு
        னிருங்கட் கருணை வாராதே
லினியெப் பிறவி களினுனதா
        ளிணையிற் கலப்பேங் கலவேமேற்
சிந்தத் துமிக்கும் யமபடராற்
        செகுக்கும் பாசந்தனைக் கழற்றிச்
சினமீக்கொண்டு கவரவரிற்
        செய்யுந் தொழிலொன் றறியேமா
லந்தப் பொழுதெம் மாகுலநீத்
        தருள வருக வென்னுமன்பர்க்
கன்பே வருக புல்லைநகர்க்
        கத்தா வருக வமரேசன்
சொந்தக் குமரி காமுறுமெய்த்
        துணைவா வருக பசுஞ்சூட்டுத்
தோகை விரித்து நடஞ்செய்மயிற்
        றுரங்கா வருக வருகவே. (6)

எழுதா *வேதப் போலிதனை
        யெழுதா ரணியும் புகழ்ந்தேத்த
வேமச் சிலையேட் டொருகோட்டா
        லெழுதும் பிரானோ டகங்களிப்பப்
பொழுதார் மாலை மதிநுதற்செம்
        பொற்பூ தரத்தா யணைத்தெடுத்தும்
பொருந்த மடியாந் தொட்டிலிட்டும்
        புறனுந் தட்டி விழிதுயிற்று
முழுதா ரளிசூழ் கடம்பணிதோ
        ளும்பா வருக தகட்டிலைவேற்
குடையாய் வருக குறச்சிறுமிக்
        குறவா வருக வாதரத்திற்
றொழுதார்க் கருளும் புல்லைநகர்த்
        துங்காவருக பசுஞ்சூட்டுத்
தோகை விரித்து நடஞ்செய்மயிற்
        றுரங்கா வருக வருகவே. (7)
------------
* வேதப்போலி-பாரதம்.

ஈமத் தாடி விதிதலையோ
        டேந்திப் பணியா ரமுஞ்சுமந்து
மியற்றுந் தவமா முனிமகற்கா
        வியமற் றடிந்தும் வரலறியாக்
காமற் காய்ந்த பெருங்கடவுள்
        கல்லா னிழற்கீழ்க் கற்றவர்க்குக்
கருதற் கரிய மறைப்பொருளைக்
        காட்டா நிற்கு மன்னாற்கே
மாமிக் குயர்ந்த முதன்மனுவை
        வழுத்துங் குருவே வருகபுல்லை
மன்னா வருக குமரமலை
        வாசா வருக வோராறு
சோமத் திருமண் டலமுகங்க
        டுலங்க வருக பசுஞ்சூட்டுத்
தோகை விரித்து நடஞ்செய்மயிற்
        றுரங்கா வருக வருகவே. (8)

சுகந்த மறப்ப ரூடலினார்
        சொல்ல மறப்பர் சீர்கணிப்போர்
சுவர்க்க மறப்ப ரவிசயில்லார்
        துன்ப மறப்ப ரின்பமுளர
ரகந்தை மறப்பர் ஞானியர்க
        ளைய மறப்பர் விவேகியர்க
ளாகமறப்பர் யோகியர்க
        ளமரும் புல்லைக் கிறைவருக
திகந்தந் துதிக்கக் கருணைபுரி
        செவ்வேள் வருக சிவைக்குகந்த
செல்வா வருக மணிநிறத்துத்
        தேகா வருக வனவரதந்
தொகுந்தோந் தொந்தோந் தொந்தோந்தொந்
        தோமென் றிலகு பசுஞ்சூட்டுத்
தோகை விரித்து நடஞ்செய்மயிற்
        றுரங்கா வருக வருகவே. (9)

பணவா ளெயிற்றுப் பணிக்கரசும்
        பதுமா சனனு நின்பேற்றைப்
பகர்தற் கரிதா மோராறு
        படைவீ டமர்ந்தன் பருக்கருள்வோய்
கணமார் குணங்கு துணங்கைகொட்டக்
        களம்புக் கமரி னிணங்கமழுங்
கதிர்வேல் விடுத்துச் சுரர்பகையின்
        கருவே ரறுக்க வருமுதலே
மணமார் பொழிற்றேன் மிசைந்தளிவிண்
        வழிபோஞ் சத்த மாவுடலை
மறைப்பக் கதிர்நீ னிறப்பரியாய்
        மருவற் கென்னோ வெனவயிர்ப்பத்
துணர்வான் பொதுளும் புல்லைநகர்த்
        தோன்றால் வருக பசுஞ்சூட்டுத்
தோகை விரித்து நடஞ்செய்மயிற்
        றுரங்கா வருக வருகவே. (10)

வருகைப்பருவம் முற்றிற்று.
---------

அம்புலிப்பருவம்

செங்கமல முகமா றுறத்தோன்ற லான்மிக்க
        தெண்ணிலாப் புன்னகை யினாற்
றிருவல்லி முகமலர மலருவித் தங்கவுட்
        டிகழுமுத் தந்தரு தலாற்
கங்கையொடு குலவிமான் மருமானெ னப்படுங்
        காட்சியாற் சூரனோ டக்
கனகமணி வடவரையிண் மொய்ம்பின்வல மருவலாற்
        கவினுமொண் வேலை யார்ந்து
பொங்குசின வரவம் பிடிக்கலா லந்தரப்
        புலவர்களி னொருவனெ னலாற்
பொற்புமிகு கற்கடக வேந்தென்ன லாலெங்கள்
        புங்கவனு நீயுமொப் பாம்
ஐங்கரற் கிளவலென வந்தநற் குழகனுட
        னம்புலீ யாடவா வே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (1)

கனிதரப் பரமனை விரும்பித்து திக்கையுறு
        கடவுண்மா வுடனு தித்துக்
கவினுநற் குணவாரி யுற்றுமே லாசையங்
        கடன்மூழ்கி முன்னமொரு நாள்
வனமருவு பொற்பூங் கொடிச்சிற் றிடைச்சிமேன்
        மயல்கொடு கொடுஞ்சா பமும்
வாங்கியக் கணமங் கிராதவொளி யுருவாகி
        மண்டலம் பரவவர லாற்
றனையொக்கு மென்றோ நினைச்சுட்டி வாவெனத்
        தானழைக் கின்றபொ ழுதே
தனியனா னோமெனக் கருதிவா ராதினுந்
        தாழ்ப்பதெவ னீசொற் றிடா
யனவரத மடியர்மன வனசமுறை சரணனுட
        னம்புலீ யாட வாவே.
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (2)

கண்டபே ரண்டத்தி னுலவிவரு வாயிவன
        கண்டவெளி யுருவா னவன்
கண்ணுதன் முடிக்கண் கிடப்பையம் முடியிவன்
        காறுவைத் தாடுமிட மாம்
துண்டவெண் பிறையெனக் கிளர்வையெவ ரினுமிக்க
        தூயபரி பூரண னிவன்
சுகதுக்க மனவரத முடையனீ யினையற்கொர்
        சுகதுக்க மென்றுமலை யா
லெண்டருஞ் சோடச கலைக்குமீ றுடையனீ
        யெண்ணில்கலை முழுது முள்ளா
னிரவித் தந்திரிவை யிவனிராப் பகலற்ற
        விடமுறைந் தருள்வ னதனா
லண்டர் பணி கின்றவனை நேரா யழைக்கினிவ
        ணம்புலீ யாடவாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (3)

வட்டவடி வத்தம் பரத்துலா யொண்கிரண
        வருடம் பொழிந்து சிதமார்
மதிக்கலை யுருக்கிநீ ருகுவிப்பை யையனெ
        மனக்கலை யுருக்கி விழியிற்
கொட்டமிக் கானந்த பாட்பகீ ரைப்பெருக்
        குவன்முத முதவுநா ணீ
கோளுரைத் தொருகோ ளிடர்ப்பட்டை யினையனெக்
        கோள்செயிட ருந்தவிர் ப்பன்
உட்டகவி லர்க்கரிய வுருவாயி னானிவற்
        கொருசிறிது முறழாய் நித
மும்பர்பதி யைப்புகி தியற்றியணி செயினுமிதை
        யொக்குமோ வென்னவழ கார்ந்
தட்டலக் குமிமருவு புல்லைமுரு கேசனுட
        னம்புலீ யாட வாவே
யனகன்கன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (4)

குலவுநின் மரபினுக் கிரவழுதி யாவரு
        குலாபிமா னங்கரு தியோ
குடிலத்தி னத்தன்வேய் மாலையின் விசிட்டமிக்
        கூர்ங்கண்ணி யெனவுன் னியோ
வுலகுபுகழ் புகழினுக் குவமிக்கும் வத்துவென
        வோகைநெஞ் சிற்பொங்கி யோ
வுபயநா யகியர்தந் திருமுகத் திற்கிடந்
        தொளிருவா மதியென் னவோ
சலதியை யுழுந்தெலைத் தாகப்பு ரிந்துண்ட
        தமிழ்முனிக் கருளுமெங் கள்
சற்குருக டாட்சம்வைத் துனைவருக வென்றனன்
        சமையுமா தவமென் கொலோ
வலகையுயிர் முலையினெறி நுகருமரி மருகனுட
        னம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (5)

களங்கனென் றுலகோ ருனைப்புகல்வ ரிவரெனக்
        களங்கமு மகன்றதூ யோன்
*கள்வனிற் குடிகொண்டு பணிவாயுண் மெலிவையக்
        கள்வனிவன் மனையர் சானு
வளங்குல வெழிற்கொல்கி டுங் # குகுவி னின்கலை
        வழிப்பறி பறிக்கவொவ் வோர்
மதியிலா தவர்தமை யடுப்பையிவ னுயிர்தொறு
        மதிக்குமதி யானவன் காண்
விளங்கர சிளங்குமரர் மறுகுலா வருமிரத
        மெல்லியர் பிணங்கி நீத்து
வீசுசெம் மணியணிப் பணிகளை யறைப்பவவை
        மேயசந் துகளதாய் விண்
ணளந்து செவ்வானநிக ரும்புல்லை முருகனுட
        னம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (6)
---------------------
*களவன்; இல் - கற்கடகவீடு. #குகு - அமாவாசை.

முப்புவன மன்றியெப் புவனமு நினக்கேவன்
        முறைசெயச் செய்தருளி நின்
மூளியுரு மாறியென் றென்றைக்கு மீளிகொளு
        முழுமதி யெனப்புரி குவன்
செப்பினொரு பரிகார மில்குருத் துரோகமுந்
        தீரக் கடைக்கணிப் பன்
றிக்கெங்கு மோடித் திரிந்துழலு நின்றொழிற்
        சிரமந்த விர்த்தாளு வன்
துப்புறழு மேனிப் பரன்குரூஉச் சடிலந்
        துலங்கிவாழ் பதமுமொரு காற்
சொற்றவறி நீப்பினுந் தணவா துறற்குறுதி
        சொற்றிடுவ னாதலா லென்
னப்பனினை வாவென விளித்தபொழு தேயிவனொ
        டம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (7)

நன்மையிவை தீதிவை யெனும்பகுத் தறிவின்மை
        நாடினைகொ லிவனருள் பெறின்
ராசயோ கம்பெ றுவை கயரோகி யென்னுமொரு
        நாமமுந் தவிர்வை யென்றுந்
தொன்மையா வருமசுர பகையச்ச மியாவுந்
        துரந்திடுவை நின்னின் மிக்கார்
சொல்லின்வே றெவணுமிலை யதிசயத் தம்பந்
        துலங்கிட நிறீஇயா ளுவாய்
பன்மையுள வேதோப நிடதங்க ளன்மைமொழி
        பற்பல பகர்ந்து பரவிப்
பற்றுத லுறாமைகண் டின்னமுந் துருவெங்கள்
        பகவன்ற னுறவு வேண்டி
னன்மைநிக ருங்குழற் கொம்பிருவர் பங்கனுட
        னம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (8)

உயர்திணைப் பொருளன்றி யஃறிணைப் பொருளுமா
        யுடையமுப் பாலுமாகி
யுணர்தன்மை முன்னிலை படர்க்கையா நாமாதி
        யுயிர்கள் பலபேத மாய்
மயலுறுந் திணையா லிடம்வேற்று மைத்தொகையின்
        வடிவங் கடந்து மேலாம்
வாசாம கோசரப் பொருளாய பிரமமே
        மகிதலத் தன்ப ருய்யப்
புயமாறி ரண்டாறி ரண்டுகரு ணைக்கொண்டல்
        பொழிவிழிக் கடைவாரி சம்
பொலிசண் முகத்திருக் குமரனா வருமறைப்
        பொருளையறி யாதயிர்க்கு
மயனைநிக ளந்தரித் தனநினையு மாற்றுவ
        னம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (9)

சிறுமதலை யெனவெள்ளி யெக்கழுந் தங்கொடு
        திரிந்திவண் வராமை நோக்கத்
திகழுநவ வீரர்களி னொருவனை விடுத்துனைச்
        சிக்கெனத் தனிகொணர்ந் தே
நறுமதலை வேணியனும் வந்துபல நயமொழி
        நவிற்றினும் வேண்டு கோட
னயவா துனைச்சிறையி லிடுவனஃ தன்றிமா
        னரகேச ரிப்படி வமா
யுறுமதலை தன்னின்வந் தாடகனு ரங்கீண்
        டுயிர்ப்பலியை வாங்க லொப்ப
வுனதுயிர் குடிக்கவே லொன்றுடைய தாகலா
        னொருதர மழைத்தபொழு தே
யறுமதலை யாகியா றாரன்முலை யுண்டவனொ
        டம்புலீ யாட வாவே
யனகனகன் மேருநிகர் குமரமலை யாளியுட
        னம்புலீ யாட வாவே. (10)

அம்புலிப்பருவம் முற்றிற்று.
-----------

சிற்றிற்பருவம்.

காவிற் பொலியு மலரரும்பின்
        கட்டு நெகிழ்த்துந் தாதளைந்துங்
கானம் புரிந்துஞ் செழியநறாக்
        களிகொண் டருந்து மதுகரஞ்சூழ்
பூவிற் பொலியும் படிசிறந்தும்
        பொறிவண் டுச்சிட் டக்கலமாப்
புலரா விருளிற் புலர்ந்தலரிப்
        போதின் மலர்செம் பதுமமொவ்வாக்
கோவிற் பொலிந்தெம் பிராட்டிதனக்
        குவடு மெம்மான் புயத்தனித்திண்
குவடுஞ் சுவடு படவாடல்
        குயிற்று மணித்தாண் மலர்நோவத்
தேவிற்பொலியுந் தேவெளியேஞ்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (1)

இந்தக் கடல்சூழ் புவனமெலா
        மெமையே பேதைத் தனமுடையா
ரெனலும் பெண்க ளெனிற்பேயு
        மிரங்கு மெனலுஞ் சரதமன்றோ
சந்தத் திருநான் மறைமுடிவே
        சாற்றற் கரிய வருள்வடிவே
சாரன் படியர் செயுந்துதியே
        தன்னை யுணர்ந்தா டயாநிதியே
யுந்தைக் குரிய சந்ததியே
        யுயர்வொப் பிலாத பழம்பதியே
யுபயக் கரங்க ளிடையவளை
        யுடையப் புரிந்தே மையவிஃதைச்
சிந்தச் செயினி னருட்கழகோ
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (2)

பேய்த்தேர்* நிலையின் பிரபஞ்சப்
        பித்தைத் துடைத்துன் சரண்மலரே
பேணுந் தொண்டர் பழவினையாம்
        பிணியைத் தணிக்கு மருமருந்தே
வேய்த்தோ ளுமைசீ ராட்டிநிதம்
        விரும்புங் கரும்பே மகபதியான்
மிலைச்சும் பொற்பூந் தாரணிந்த
        விறற்சிங் கேறே யமைக்கவொணா
வாய்த்தான் சமைந்த செழும்பாகே
        வடிவேல் விடுத்துச் சூர்மாவின்
மறுவில் வாழ்வும் புயவலியு
        மணித்தேர் வலியும் பின்வாங்கச்
சீய்த்தே ழகத்தா ரோகணித்தாய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (3)
--------------
*பேய்த்தேர்-கானல்

முனந்தத் தைய தையவென
        முரணிற் கெழுமு முயலகன்றன்
முதுகிற் புலியும் பதஞ்சலிமா
        முனியுங் காணப் பொதுநடஞ்செய்
தனந்தப் பணியோ டிலகியவா
        ளனந்தம் பணியும் புனைந்தடியா
ரனந்தம் பணிக்கே யருள்புரியு
        மம்மான் மதலாய் பொய்மானா
வனந்தத் துறச்சென் மாரீசன்
        மறுகத் தெறுமான் மருமானே
வணக்குஞ் சலதி சுவறிடவே
        வடிவேல் விடுத்த பெருமானே
தினந்தத் தைகள்சூழ் பொழிற்புல்லைத்
        தேவே சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (4)

முருகு பருகி யளிமுரன்று
        மூசும் பசுந்தண் படலையைம்பான்
முடித்துப் பணிபற் பலதிருத்தி
        முடங்கொண் மதியிற் களங்கமெனக்
கருகுந் திலக வாணுதலுங்
        கனிவாய் முறுவற் றளவரும்புங்
கவினப் பொற்பூந் துகின்மருங்குல்
        கதுவப் புனைந்தா வணமருங்கி
னருகுற் றுகந்து மணற்சோறட்
        டாடற் கமைத்தே மதிற்பொறிதெவ்
வனைத்துங் கடந்து செயசங்க
        மார்த்தா லெனச்சங் கொலிகிடங்கிற்
றிருகு சினமா வுழக்குபுல்லைத்
        தேவே சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (5)

அண்டத் துலவைந் தருநிழற்கீ
        ழமர்வா னமுதா சனர்திளைக்கு
மரம்பைக் குழுவுக் கணிகலம்போ
        லார்பொற் படிவச் சசிமுதலோர்
கண்டத் தொளிர்மங் கலநாணின்
        காசில் யாப்புக் கழலாமே
காக்கும் வடிவேற் படைத்திறமுன்
        கருணைத் திறமோ டெடுத்துரைப்பேம்
வண்டர்க் கொதுங்கு மாசுரமா
        வளர்தண் பொழிற்பூந் துணர்க்குவைகண்
மருத நிலப்பெண் மகட்குழுநர்
        வதுவை யாற்றற் கமைத்தமலர்ச்
செண்டிற் பொதுளுஞ் சோணாடா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (6)

தட்டா மரையிற் சுருளருந்தித்
        தழையுஞ் சிறக ரொடுக்கிநறுந்
தண்பூஞ் சேக்கை மிசைத்துஞ்சுந்
        தவள வனமே னறைமிசையும்
பாட்டா ரளிகண் *மூழ்க்கவதைப்
        பாய்வெஞ் சுறவு தாக்கவஞ்சிப்
பரவச் சுரும்பர் தணந்தேகப்
        படரு மெகின்வான் மீப்போதல்
வீட்டா வளவில் பவந்தவத்தான்
        வீட்டிக் கதிமேற் செல்வாரின்
விளங்கத் தோன்றும் படிசிறந்து
        மேவுந் தடஞ்சூழ் சோணாடா
தீட்டா மறைக்கு மரிவரியோய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (7)
-----------------------------------
* மூழ்த்தல் - மொய்த்தல்.

பணிகைக் கொளிர்கங் கணமெனக்கொள்
        பரம யோகிக் கருமறையின்
பயனைத் திருவாய் மலர்ந்தருளெம்
        பகவ நினக்கெப் பொருளரிதாங்
கணிநற் றருவெங் கிராதனுமாய்க்
        காமர் வடிவந் திரிந்துகிழக்
காயந் தரித்துக் குறமினையற்
        களவிற் கற்பி னியலழித்த
துணிவிற் புரிசிற் றிலுமழிக்கத்
        துணிந்தாய் கொல்லீ தழகோநீர்ச்
சுழிவெற் பொடுகை வரையுருட்டுஞ்
        சுவேத நதிசூழ் சோணாடா
திணிகற் புயமீ ராறுடையோய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (8)

வண்டா னஞ்சூழ் வலிகடக்க
        மாட்டா னெனில்யார் வல்லரந்தோ
மதியும் விதியின் வழியன்றி
        மருவா வெனுநூல் கற்றுணர்ந்து
கொண்டார் தமக்கு மல்லவர்க்குங்
        கூறற் கரிய பேரின்பங்
குலவற் குனதின் னருளிலையேற்
        கூடா வெனலும் பொய்யாமோ
கண்டா யைய நின்மாட்சி
        கழறற் பாற்றோ நான்முகனுங்
கருதற் கரிய புகழ்ப்புல்லைக்
        கருணைக் கடலே வெற்புடைத்த
செண்டா யுதக்கைத் தலமுடையோய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9)

எழுநா விழியற் குனையீன்ற
        வெந்தா யிமையா சலக்கொடியும்
இன்னா மொழியு முருகுநின்னா
        வின்சொற் குதலை செவிமாந்தி
வழுவா தியம்பக் கேட்டுவகை
        மனங்கூர்ந் துனது முகநோக்கி
வாவா விருகண் மணியெனக்கூஉய்
        வாரி யெடுத்து மார்பிறுகத்
தழுவா நின்ற நின்றிருமெய்
        தனிவித் துருமா சலத்தொருசார்
தயங்கு மிளம்பா னுவினுதயந்
        தனையே சிவணப் பிறங்கிடுமாற்
செழுமா நீபத் தடந்தோளாய்
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திகழுங் குமர மலைக்கரசே
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (10)

சிற்றிற்பருவம் முற்றிற்று.
---------

சிறுபறைப்பருவம்.

மகிதலம திக்குமர வமணிகள்கு யிற்றியொளிர்
        மணிமகுட வர்த்தனர் குழாம்
மகரதர் நெருக்கமுய ரதிரதர் வருக்கமொடு
        வருசம ரதத்தரு டனே
நகுகுருகு லத்தரசர் பகையதிக ரித்துவர
        நவிலிருதி றத்தரு முனா
ணரபலிகொ டுத்தளவில் பலபடையெ டுத்துமமர்
        நடைபெறுக ளத்தளவ ளாய்
முகின்மழையெ னக்கணைகள் விடவிழியி லிக்குரிய
        முதன்மகன்மு தற்படை யெலா
முடியவிச யத்தொடைய லணியவைவ ருக்குதவு
        முசலியிள வற்கும ருகா
சிகிமுதுகி னிற்பவனி வருசரவ ணப்பெரும
        சிறுபறைமு ழக்கி யருளே
திசைதிசைமு கத்தளவு குமரமலை யிற்குமர
        சிறுபறைமு ழக்கி யருளே. (1)

அருணகம லக்குலமொர் சிறிதுமுற ழற்கரிய
        வணியதுப டைத்த கரநீ
டதிமதுர முத்தமிழி னிடையிடைத மிழ்ப்புலவ
        ரகநெகவர் னித்தகர மேன்
மருமருவு கற்பகமென் மரநிழலி னிற்குலவி
        மகபதிமு தற்சொல்புல வோர்
வதியவசு ரக்குழுவின் வழிமுதல றச்செருவின்
        வருமயிலெ டுத்தகரம் வான்
றரைசொல்கர டத்தறுகண் வெளிறுமெயு டற்றும்விழி
        சதுர்நெடும ருப்பரசு வா
தருசுதைம ணத்தினுயர் விதிவழிபி டித்திடுகை
        தகவினொடு குற்றடிமை சேர்
திருவடிய ருக்கருளு மபயவர தக்கைகொடு
        சிறுபறை முழக்கி யருளே
திசைதிசைமு கத்தளவு குமரமலை யிற்குமர
        சிறுபறைமு ழக்கி யருளே. (2)

கமகமளெ னக்கமழும் வனசமல ருற்பலநி
        கழுநறைநி றைத்தொழு கவே
கழனியின்வி டுப்பவரு பயனையுற நட்டபயிர்
        களைவளரு வித்துத வியே
யமைதரவி யற்றுமென வதுபுகலி னற்பர்பெற
        லருமுதவி யைச்செ யினுமே
யவருறவு மிக்கமிகை யெனவிடுவர் கற்றறியு
        மறிஞரென வுட்கரு தியே
தவமனியவ ரைக்கனைய தனதடவு ழத்தியர்க
        டகுகளையெ னக்களைகு வார்
தழுவும்வள வப்பைதிர மதிலுயர்வ ளப்பநனி
        தழைதருதி ருப்புல்வய லாய்
திமிதிமிதி மித்ததிமி தணதணத ணத்தவென
        சிறுபறைமு ழக்கி யருளே
திசைதிசைமு கத்தளவு குமரமலை யிற்குமர
        சிறுபறைமு ழக்கி யருளே. (3)

மறைபயின்ம றைச்சிறுவர் சுருதிகளி சைக்குமொலி
        மருவுமில றத்தர்ம றுகே
வருமதிதி யர்க்கமுது தரவுபச ரித்தவரை
        மனைவரவ ழைக்குமொலி நீள்
கறையடிம தக்களிறு நீழலொடுபொ ரப்பிளிறு
        கனவொலியு ளைத்திண்வய மாக்
கடவொலியி யக்கிரத மணிநிரைக லிக்குமொலி
        கவிஞர்கள்ப டிக்குமொ லிசேர்
குறையறுத வத்தடிய ரரகரவே னச்சொலொலி
        குகுதர்மக தர்க்கதி பர்வாழ்
குடகர்வடு கர்க்கிறைவ ரெவரும்வள வர்க்கரசு
        குலவுமணி முற்ற மிசையே
திறையினைய ளக்குமெலி விரவுபுல்வ யற்கிறைவ
        சிறுபறைமு ழக்கி யருளே
திசைதிசைமு கத்தளவு குமரமலை யிற்குமர
        சிறுபறைமு ழக்கி யருளே. (4)

கரையறு தரங்கக் கருங்கடற் கலையுடைய
        காசினிக் கிருகண் மணியாக்
கதிக்குமுயர் குன்றைப்ப திக்குளோ ரன்பன்
        களேபரத் துற்றகுடர் நோய்
பிரிவறவ ரந்தையுற் றஃதகல நினதருட்
        பிரசாதம் வேண்டி யுனதாள்
பேணத் தெரிந்துநந் திருமுனர் மணிக்* காப்
        பிரார்த்தனை செலுத்தென் னவே
யுரியபே ரன்பொடு மியற்றப் பெருங்கருணை
        யுகளக் கடைக்க ணமுதா
மோவா மருந்தருளி யொருவாத வன்பிணியை
        யொருவித்த பரம குருவே
திரிவித குணாதீத சுத்தநிட் களரூப
        சிறுபறைமு ழக்கி யருளே
திசைதிசைமு கத்தளவு குமரமலை யிற்குமர
        சிறுபறைமு ழக்கி யருளே. (5)
-------------------
*கா-காவடி

வேறு.
கண்டலின் வண்டலெ னும்படி சிந்திய
        கம்புளின் முத்தமு நீள்
கந்தடு குஞ்சர மொன்றிய கொம்பு
        கழன்றுகு நித்தில மும்
ஞெண்டுல கந்தொடு விண்டுவும் விண்டு
        நெகிழ்ந்த மணித்தொ கையும்
நின்று கலந்து கிடந்தொளிர் கின்றது
        நீணில வுதயமெ னத்
தெண்டிரை கொண்ட கருங்கடன் மண்டு
        செழும்புன லுண்டு நபஞ்
சென்றுப டர்ந்துதி ரண்டுதி ரண்டு
        செறிந்து பொழிந்து மழைக்
கொண்டன் முழங்கிடு புல்லைவ ரும்பதி
        கொட்டுக சிறுபறை யே
கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
        கொட்டுக சிறுபறை யே. (6)

முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
        முதற்படு பிரணவ மா
முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
        முகத்தருள் விழியுடை யாய்
இச்சக மற்றுள வெச்சக முற்றினு
        மிச்சக மொடுபுகழ் வோய்
இக்குவி லிக்குயர் மைத்துன* செச்சை
        யியக்குறு மழகளி றே
+கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
        கட்கய லகலிகை யாய்க்
கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
        கருத்தெழ வருசுதை யாங்
கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
        கொட்டுக சிறுபறை யே
கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
        கொட்டுக சிறுபறை யே. (7)
-----------
*செச்சை-ஆடு +கச்சபம்-ஆமை.

நவமணி யருள்சிறு மியர்சுத ரொடுமிள
        நடைபயில் பொற்ப தனே
நளினசு முகசசி மகபதி சுதையிரு
        நகில்புணர் கற்பு யனே
தவரிணை நுதலுமை விழிமணி யெனநினை
        தவம்வரு புத்தி ரனே
தகுவர்கள் குலமுழு வதுமற வமர்புரி
        தருமொரு சத்தி ரனே
அவிருமி ரவிகளி ரறுவரை நிகர்குழை
        யணிகொள் செவித்த லனே
அனவர தமுமன லிடுமெழு கெனவுரு
        கடியர கத்த லனே
சிவகுரு பரசுக மருள்பவ னெனவொலி
        சிறுபறை கொட்டுக வே
திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
சிறுபறை கொட்டுக வே. (8)

*கானின் வாழைக் கனியொடு மாவின்
        கனியும்வி ருப்பமு றுங்
காமரு மேனிக் கோமள செல்வக்
        கடவுளர் நாய கமே
மானின் மானக் கயல்விழி கூறும்
        மடவியர் நட்புற மெய்
வாடியு நேடித் தீநர கெய்தும்
        வகையற வேநினை யே
கோனென் பாரைப் பரகதி சேர்மின்
        குறைக டவிர்ப்பி ரெனக்
கூரிய ஞானப் பேறருள் சைவக்
        குலமொளிர் தீப கமே
தேனின் னீபப் புயசயி லேச
        சிறுபறை கொட்டுக வே
திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
        சிறுபறை கொட்டு கவே. (9)
---------------------------------------------
*கானின்வாழ் ஐ கன்னி-வள்ளிநாயகி
மா இன் கன்னி-தேவகுஞ்சரி

தனுர்விஞ் சையினொரு விசையன் பொருவிய
        தனுர்விஞ் சையின்வல ரும்
தனதன் றனைநிகர் தனவந் தருமகி
        தலையொன் றரவினின் விற்
பனமிஞ் சறிவினர் களுமொன் றலினொளிர்
        பகலென் றுறழ்பிர தா
பமுமொண் கலைமுழு மதியந் தனையிணை
        பரவும் படிபுக ழும்
நனிதுன் றிடுதவ முனிபுங் கவனென
        நவிலுஞ் சனகனின் ஞா
னமுமன் றியுநில வளமும் புனல்வள
        நலமுஞ் செறிவள முந்
தினமொன் றுபுல்வயல் வருசுந் தரகுக
        சிறுபறை கொட்டுக வே
திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
        சிறுபறை கொட்டு கவே. (10)

முத்தப்பருவம் முற்றிற்று.
------------

சிறுதேர்ப்பருவம்.

கருணைப் பெருந்தே ருகைத்துநீ வந்தஞ்சு
        கனலெனுந் தூண் நட்டுக்
கவினிருந் தட்டுவிண் மண்* கூவி ரம்யோ
        கமாமுறுதி யச்சி ணைத்துப்
பொருவிலைம் பொறிகறங் குருளூசி நடுவெனும்
        பொறிபீட மேலமைத் துப்
புந்தியென் கின்றபா சம்பிணித் திடுமெனப்
        புரவியாத் திட்டொர்நெறி யிற்
பரபக்கு வப்பாகன் விடுதவத் தேரூரு
        பவர்சீவன் முத்தரா கப்
பகர்சோ தனைப்போர் புரிந்துஞா னாக்கினிப்
        பகழியை விடுத்து மனையார்
+திரிபுரத் தைத்தகித் தருள்பரம யோகியே
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமராசலத் திறைவ
        சிறுதே ருருட்டி யருளே. (1)
--------------------------------------------
* கூவிரம்-தேர்க்கொடிஞ்சி. + திரிபுரம்-தூல,சூக்கும, காரணம்.

நரலைப் பெரும்புன லுடுத்துபுவ னக்கொடியி
        னறுநுதற் றிலக முறழ
நண்ணுதய வெற்பி++னிருள் வலியெழவு மன்பதைக
        ணளினத் தடந்த ளியினார்
பொருவிலிமை யெனுமிணைக் கதவந் திறந்திடப்
        பொலிமணிப் பாவை யன்பர்
புந்திப் புலத்தைத் திருத்திவிளை வித்தமெய்ப்
        போதக் கரும்ப ரும்பும்
இரசமிப முழைமகளிர் விழையுமின் பத்தேன
        லெழின்மதுர கவிபொழி யுமோ
ரியற்கவிஞ னுயிருய்ய வருளுங்க்ரு பாமுத
        மெனத்துதி யவர்க்க ழிவிலாத்
திருவும் பெருங்கல்வி யறிவுந் தருங்குழக
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே. (2)
---------
++இருன்வலி-சூரியன்.

மாமேவு னீபச்செ ழுந்தார் மணித்தோளின்
        வரைநின்றெ ழும்பிரதா பம்
வான்கதிரெனத்தோன்றி நீலக்கடாவூர்தி
        வச்சிரவ ணனக னலிநீள்
காமேவு வைதூரி யக்கணயி ராணிமகிழ்
        காவலன் மருத்து நிருதி
கடலிறை முதற்றேவர் முக்கமல மோடகக்
        கமலமலர் தரவோங் குபொற்
*கோமே தகச்சூ ரெனுந்திமிர மகலநறை
        குளிர் +புட்பராக மலர்சேர்
குழன்முத்த நகையிமய மரகதக் கொடிபடரு
        கொழுகொம் பெனத்திக ழுமோர்
சேமேவு பவளவரை தந்தமா ணிக்கமே
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே. (3)
------------
கோமேதக-தேவருலகம் மேன்மையடைய. + புள்-பரா வண்டுகளையுடைய பூந்தாது.

வீறுபடு சைவமென் பதினொற்று விட்டுமுன்
        மேவெழுத் தந்தம் வைத்து
விரவுமொழி யொன்றுபர சமயத்தை முற்பாதம்
        வினவிமு னெடுத்தமொ ழியிற்
கூறுபடு முன்னெழுத் துட்பொருளி னைக்கண்டு
        கூறியறி ஞோருய்ய வக்
கோதுறு புறச்சமய வுற்பாத மாய்த்தெவ்வு
        கொண்டுசிவ சமய மோங்கத்
தாறுபடு கந்திக் குலத்தரம் பைக்குலத்
        தாறுகண் முதிர்ந்த கனியின்
சாறுகுத் தம்பரம ளந்தழ கியற்றிவளர்
        தண்டலைகள் சூழ்காழியிற்
றேறுபடு கவுணியர் குலத்துதித் திட்டவா
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே (4)

உதகம்விடு ஞெகிழியு மிருந்தையா குறல்போலும்
        உறையிடுங் கீரமெ னவும்
ஒளிர்தரும் பொன்னிற் பொலிந்தும்வரு சஞ்சலத்
        துறுபுணர்ப் பின்றரத் தாற்
குதிகொண்டு டன்னெறியி லும்புக்கு மனமாங்
        குரக்கைநின தாணை யென்னுங்
கொடியபா சங்கொடு பிணித்துமுன் செய்வினைக்
        கோல்கொண்டு தட்டி யாட்டித்
ததிகண்டு தனுகரண புவன்போ கங்களைத்
        தானுண வருந்தி மீட்டுச்
சாரங்கம் வௌவநலி காட்டல்போன் மானிடச்
        சட்டைபூண் டுயிர்க ளுய்யத்
திதிகொண்ட சற்குருவின் வடிவமாய் வருபெரிய
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே (5)

தருத்தேவ ராதியர் செருக்குந் தயித்தியத்
        தலைவரா கியமுப் புரத்
தானவர் செருக்குமழி யச்செருப் புரிகாதை
        சாற்றினகை யாகுமெ னவே
மருத்தே னளிக்கமல வாசிமறை வாசிவிடு
        வலவன்மா மகிழ்வ லவனே
மருவலவ னிரவியே யுருளாழி வங்கூழ்
        மணிக்கறங் குலவு பாசம்
பருத்தேர் படைத்தா யிரத்தெட்டு முடியுடைப்
        பரியூர்தி யாக்கொண்டு பார்த்
திருத்தே ருருட்டிவரு செம்மலுக் கிளையசேய்
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே (6)

பாரோடும் வானப் பரப்போடு நீடும்
        பதாகைநுதி மதித ழுவலிற்
பலமனர் மதிக்கவிகை நிழலிருந் தரசியல்செய்
        பரிசின்மா டங்கொள் புல்லைத்
தாரோடு கிம்புரி மருப்போடு குத்துமுட்
        டாறுபாய் கவுளோ டுவிண்
டருக்கோடு சாயச் செருக்கோடு போமுரற்
        றாண்முறச் செவிமத் தமாக்
காரோடு தெண்டிரைக் கடன்மடை திறந்தெனக்
        கவிழ்தான மோடந் தணர்
கைத்தான மோடறம் வளர்ப்பா ருகந்துவிடு
        கைத்தான நீரோடு பொற்
றேரோடு பரியோடு தெருவோடு நீமணிச்
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா கூலத்திறைவா
        சிறுதே ருருட்டி யருளே (7)

கொக்கிற கணிந் தரி மதிக்கொக்கி னான்மறைக்
        கொக்கேறு கூடலிறை சேய்
கொக்கைப் பிளந்தொகர மாவரா கத்தூர்ந்து
        குக்குடங் கொடியா கவேய்ந்
தெக்குலத் தினுமுள பசுக்குழா முயந்திட
        விடைத்தொழில் புரிந்துவ ணமார்ந்
தெண்குவினை யுண்டமான் மகளாய் வல்லிய
        விருங்கா னடக்கு முன்றாட்
பொக்கெனக் கடமைப் படும்பத்தர் நிரயம்
        புகாவண மெடுத்தா ளவே
பொலிதரும் பஞ்சா னனத்தோ டதோமுகம்
        பூத்தகரு ணைக்கொண் டலே
திக்கெங்கு முவகை கூர் தரவுறு மிளங்களிறு
        சிறுதேரு ருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதேரு ருட்டி யருளே (8)

அம்பரா வேணிப் பரஞ்சுடர்க் காசிரிய
        வம்பறா வேணீ யென
ஆதரித் தரைமே லுனைத்தொழார் நினையன்பி
        னாதரித் துப்ப ரவியே
யும்பரா குநரிம்பர் வாழ்வினொடு மன்றிவா
        னும்பர்வாழ் வெனினும் வேண்டா
துன்னுபய சரணபங் கயநிழற் கிழமைபூண்
        டொழுகவருள் புரியும் வள்ளால்
கொம்பரா சினியுலக மீச்சென்று கற்பகக்
        கொம்பரொடு கூடிம கவான்
குலவியே யயிரா வதத்துலா வரமறுகு
        கொட்டுபொற் சுண்ண மொப்பச்
செம்பரா கஞ்சிதறு காமேவு புல்லையிற்
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதே ருருட்டி யருளே (9)

கூரோங்கு மதியெனு மருப்பெழுத் தாணிகைக்
        கொண்டுமா றாயமூடர்
கொடியநெஞ் சென்னுமிதழ்க் கீறிக் கவிப்பொருட்
        குளிர்சுவைக் கவளமுண்டு
பேரோங்கு நிறையென்னுங் கந்துட் பிணிப்புண்டு
        பீடுசான் முத்த மிழெனப்
பிறங்குமும் மதமழை பொழிந்தட்ட திக்குமொளிர்
        பிரதாப மிக்கபு கழாந்
தாரோங்கு புலவப் பெருங்களிற் றுக்குழாந்
        தழையவருண் ஞானம தமே
தங்குதெய் வப்புலமை யரசுவா வென்னவெத்
        தாரணியு மேத்தெடுப்பச்
சீரோங்கு புல்லைப் பழம்பதியின் வந்தவா
        சிறுதே ருருட்டி யருளே
சிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவ
        சிறுதேரு ருட்டிய ருளே (10)

சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.
குமரமாலைப் பிள்ளைத்தமிழ் முற்றிற்று
-----------------

This file was last revised on 15 Nov. 2021.
Feel free to send corrections to the webmaster