யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே - 252 | 1 |
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - 270 | 2 |
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே - 532 | 3 |
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற் கண்ணாடி போலக் கலந்துநின் றானே - 603 | 4 |
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே - 725 | 5 |
அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே - 916 | 6 |
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழு மாறே - 1680 | 7 |
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே - 2290 | 8 |
ஆசூச மில்லை அருநிய மத்தருக் காசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க் காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக் காசூச மில்லை அருமறை ஞானிக்கே - 2552 | 9 |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே - 2716 | 10 |
செய்யுள் எண் | திருமந்திர நூல் அல்லது கருத்து | நூல் | நூற்பகுதி | ஒப்புமை நூல் மூலம் அல்லது கருத்து | |
1 | ஐந்து வென்றனன் | தே – சம் | 1-113-10 | வென்றவன் புலனைந்தும் | |
தே – அப் | 5-98-7 | வென்றானைப் புலனைந்தும் | ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான், ஐந்து வென்றனன் ஆறுவிரிந்தனன்.. | திருப்புகழ் | 389 | தொல்லை முதல் தானொன்று, மெல்லியிரு பேதங்கள், சொல்லு குண மூவந்தம் எனவாகித், துய்ய சதுர் வேதங்கள், வெய்யபுலனோ ரைந்து, தொய்யு பொருளாறங்கம் எனமேவும்... ஆனந்த பௌவம் |
7 | தன்னையொப்பா யொன்றும் இல்லாத் தலைமகன் | திருக்குறள் | 7 | தனக்குவமை யில்லாதான் | |
தே-சம் | 2-62-3 | தன்னோர் பிறரில்லானை | |||
தே-அப் | 6-1-2 | மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை | |||
31 | கண்ணகத்தே நின்று காதலித் தேனே | திருவாச | திருப் பள்ளி-9 | கண்ணகத்தே நின்று களிதரு தேனே. | |
81 | என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே | கந்-அநு | 17 | யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் (வேலவர் தாம்பெறவே தந்ததனால்) | |
95 | ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை | தே-சம் | 3-112-1 | இவர் தன்மை அறிவார் ஆர்? | |
தே-அப் | 4-112-10 | நின்னைக் காணும்படித்தன்று நின் பெருமை | |||
6-11-8 | ஆரொருவர் அவர் தன்மை அறிவார் | ||||
121 | உடம்பொடு செத்திட்டிருப்பர் சிவயோகி யார்களே | கந்-அலங் | 19 | நின்னை யுணர்ந்துணர்ந்து எல்லாம் நிர்க்குணம் பூண்டு, என்னை மறந்திருந்தேன் இறந்தேவிட்ட திவ்வுடம்பே. | |
123 | அளித்தான் உலகெங்கும் தானான உண்மை. | திருமுரு | 293 | உலகத்தொரு நீயாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல் குமதி. | |
126 | முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்கு | கந்-அநு | 47 | ஆறாறையும் நீத்ததன் மேல்நிலை யைப் பேறா அடியேன் பெறுமா றுளதோ | |
" | ஆனந்தத்துள்ளொளிபுக்கு...சிவங் கண்டு | கந்-அலங் | 55 | ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவங் கண்டு | |
129 | தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முளே | கந்-அலங் | 55 | முருகன் உருவங்கண்டு தூங்கார் | |
திருப்புகழ் | 757 | உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி | |||
140 | தானே தனித்தெம் பிரான் தனைச் சந்தித்தே | கந்-அலங் | 95 | சத்தியம்...சான்றாகும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே | |
167 | காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென், பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற் பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும், கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே. | நாலடி | யாக்கை நிலை யாமை-6 | நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென், பல்லோர் பழிக்கிலென், தோற்பையுள் நின்று தொழிலறச் செய் தூட்டுங், கூத்தன் புறப்பட்டக் கால் | |
171 | ஈட்டிய தேன்பூ.. கூட்டி வைத்திடும்..ஓட்டித் துரத்திட்டது வலி யார் கொள.. கைவிட்ட வாறே | நாலடி | செல்வ நிலை யாமை-10 | கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர்.. உய்யத்தீட்டும் தேனீக் கரி | |
172 | கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே | " | " - 6 | கூற்றங் குதித்துய்ந்தார் ஈங்கில்லை | |
188 | ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே | கந்-அலங் | 84 | ஐவருங் கைவிட்டு மெய்விடும் போது | |
234 | அந்தண்மை பூண்ட..அந்தணர் | திருக்குறள் | 30 | அந்தணர்..செந்தண்மை பூண் டொழுகலான் | |
297 | வழித்துணையாய் மருந்தா யிருந்தார் | தே-சுந் | 7-70-9 | வானநாடனே வழித்துணை மருந்தே! | |
331 | இராப்பகல் அற்ற இடத்தே இருந்து ...பராக்கற | கந்-அலங் | 74 | ஐவர் பராக்கறல் வேண்டும்..எ றால் இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே | |
409 | அப்பரி செண்பத்து நான்கு நூறாயிரம்... உயிராய் நிற்கும் | தே-சம் | 1-132-4 | உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் | |
603 | எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணாரமுதனைக் கண்டறிவாரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே | கந்-அலங் | 85 | காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே....மூச்சை யுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே | |
632 | போதுகந்தோறும் புரி சடையான் | திருக்குறள் | 3 | மலர்மிசை ஏகினான் | |
தே-சம் | 1-21-5 | மலர்மிசை யெழுதரு பொருள் | |||
1178 | அரனுக்குத் தாயும் மகளும் நல்தாரமு மாமே | திருவாச | பொற்சுண்ணம்-13 | எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் | |
திருக்கோவையார் | 112 | அவனத்தனாம் மகனாம் தில்லையான் | |||
1350 | சுவையொளி யூறோசை | திருக்குறள் | 27 | சுவையொளி யூறோசை | |
1459 | சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது | திருப்புகழ் | 239 | சீவன் சிவச் சொரூபம் | |
1527 | இருவினை நேரொப்பில் இன்னருட் சட்டி குருவென வந்து | கந்-கலி வெண்பா | 21-24 | சத்திநிபாதம் தருதற் திருவினையும் ஒத்து வருங்காலம்... குருபர னென்றோர் திருப்பேர் கொண்டு | |
1529 | மாலை விளக்கும் மதியமும் | தே-அப் | 5-90-1 | மாசில் வீணையும் மாலை மதியமும் | |
1538 | குற்றந் தெளியாதார் குணங் கொண்டு கோதாட்டார் | திருவாச | 20 | அம்மானை குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி | |
1593 | உரையற் றுணர்வற் றுயிர்பர மற்று..கரையற்ற சத்தாதி | கந்-அலங் | 61 | உரையற் றுணர்வற் றுடலற்றுயிரற்று.. கரையற்..றிருக்கு மக் காட்சியதே | |
1644 | சித்தம் சிவமாக | திருவா | அச்சோ-1 | சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி | |
1722 | என்னுடல் கோயில் கொண்டானே | திருவா | பிடித்த-10 | புன்புலால் யாக்கை..பொன் னெடுங் கோயிலாப் புகுந்து | |
1751 | ஆரும் அறியார் அகாரம் அவ னென்று | திருக்குறள் | 1 | அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | |
1753 | அகர முதலா யனைத்துமாய்நிற்கும் | " | " | " | |
1848 | ஊனினை நீக்கி யுணர்பவர் | தே-அப் | 4-25-3 | ஊனையே கழிக்கவேண்டில் உணர்மின்கள் உள்ளத்துள்ளே | |
1876 | உலகம் படைத்தான் | " | 6-3-3 | முந்தி உலகம் படைத்தான் | |
1934 | ஒருபுற் பனிபோல் அரிய துளிவிந்து....வளரும் காயத்திலே | திருப்புகழ் | 862 | அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆகமாகி | |
1953 | மாதரை மாய வருங்கூற்றம் என்றுள்ள | " | 734 | காலன் பெண் தனக்குள கோலா கலம் இன்றெடுத்து இளையோ ராவிகள் மன்பிடிப்பது போல் நீள்வடிவுடை மாதர் | |
2053 | நேயத்தே நிற்கும் நிமலன் | திருவா | சிவபுரா-13 | நேயத்தே நின்ற நிமலன் | |
2090 | பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் | கந்-அலங் | 67 | பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன் | |
2262 | இருவினை ஒத்திட இன்னருட் சத்தி மருவிட | கந்-கலி வெண்பா | 21-24 | திருமந்திரம் 1527-என்பதன் நேர் பார்க்க | |
2271 | ஆறாறுக் கப்பால் அரனினி தாமே | கந்-அநு | 47 ...12 | 6- என்பதன் நேர் பார்க்க | |
2300 | வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை | கந்-அலங் | 15 | விடுங்கோள் வெகுளியை | |
2367 | அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி | திருப்புகழ் | 1019 | அறிவும் அறியாமையுங் கடந்த அறிவுதிருமேனி யென்றுணர்ந்து | |
2362 | அறிவறியாமை கடந்தறிவானால் | " | " | " | |
2580 | அறிவறியாமை இரண்டும் அகற்றி | " | " | " | |
2365 | தித்திக்கும் தீங்கரும்பாய் அமுதாகி நின் றண்ணிக்கின்றானே | திருவா | திருவே சறவு-10 | தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் | |
" | " | தே -அப் | 5-61-5 | கருப்புச்சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே | |
2388 | அண்டங்கள் ஏழுங் கடந்தகன்று | " | 6-97-1 | அண்டங்கடந்த சுவடு முண்டோ? | |
2428 | எந்தையும் என்னை யறிய கிலானாகில் எந்தையை யானும் அறிய கிலேனே | " | 5-91-8 | என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் | |
2436 | காமம் வெகுளிமயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்திருந்தேன் | திருக்குறள் | 360 | காமம் வெகுளி மயக்கம் இவை மூன்ற னாமங் கெடக்கெடு நோய் | |
2550 | தேயத்துளே யென்றும் தேடித்திரி பவர் காயத்துள் நின்ற கருத்தறி யாரே | தே-அப் | 4-9-12 | தேடிக்கண்டு கொண்டேன்..என்னுளே தேடிக்கண்டு கொண் டேன் | |
2586 | எவ்வா யுயிரும் இறையாட்ட ஆட லால் | " | 6-95-3 | ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே | |
2593 | கரியுண் விளவின் கனிபோல் | சீவக சிந்தாமணி | 1122 | வெஞ்சின வேழமுண்ட விளங்கனி போன்று | |
திருப்புகழ் | 57 | வேழமுண்ட விளாங்கனியதுபோல | |||
2616 | அடுவன பூதங்கள் ஐந்தும் | தே-அப் | 4-76-10 | அடுவன அஞ்சு பூதம் | |
2639 | பாலினுள் நெய்யாம் பழத்துள் இரதமும் | " | 6-15-1 | பாலின் நெய்யாம் பழத்தின் இரத மாம் | |
2831 | பாலொடுதேனும் பழத்துள் இரதமும் | " | " | " | |
2646 | ஆதிப்பிரான் தந்த வாளங்கைக்கொண்டபின் . . என்னைவிலக்க வல்லாரில்லை | கந்-அலங் | 25,64,69 | ஞானச்சுடர் வடிவாள் கண்டா யடா அந்தகா--கட்டிப் புறப்படடா சத்திவாள் என்றன் | |
2968 | நமன்வரில் ஞானவாள் கொண்டே எறிவன் வல்லாரில்லை | " | 25,64,69 | ஞானவாளென்று சாதித்தருள் கந்தச்சுவாமி எனைத்தேற்றிய பின்னர்க்காலன்...என்னை என் செய்யலாம் சத்திவா ளொன்றினால் சிந்தத் துணிப்பன்..த்ரி சூலத்தையே | |
2744 | விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும் | தே-சம் | 2-18-1 | வெருவா விழுமால் | |
2850 | வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் ..நாதனை நாடுவன் நானே | தே-அப் | 4-112-8 | வானந் துளங்கிலென்..தண் கடலும் மீனம்படிலென்.. ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே | |
2970 | நினைப்பும் மறப்பு மிலாதவர் | கந்-அலங் | 55 | நினைப்பும் மறப்பும் அறார் | |
2976 | விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே | " | 6 | பரமானந்தம் தித்தித் தறிந்த அன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக்கைத்ததுவே |