1 |
பூமேவு திசைமுகனுஞ் செங்கணெடு மாலும் புத்தேளிர் கணங்களுமா தவத்தோரும் போற்றத் தேமேவு குழலுமையாள் கண்டுவப்ப மன்றிற் றிருநடஞ்செய் பேரொளியைச் சிந்தைதனில் வைத்துக் காமேவு கிளியென்னக் கொழுஞ்செழுந்தே னென்னக் கடலமுத மென்னமிளிர்கனித்துவர்வாய் மாதே பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும் பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவன் யானே. |
2 |
யாப்புவிதி யெழுத்தசைசீர் பந்தமடி தொடைபா வினமிவையிற் குறினெடிலொற் றுயிர்மெயுயி ராய்தம் கோப்புடைக்குற் றுகரங்குற் றிகரமையென காரக் குறுக்கமே வல்லினமெல் லினமொடிடை யினமே நீப்பரிய வுயிரளபொற் றளபசையி னெழுத்தாம் நெடில்குறில்க டனித்துமொற்றை யடுத்தும்வரி னேராம் சாய்ப்பரிய குறிலிணைகள் குறினெடில்க டனித்துந் தமதுடனொற் றடுத்தும்வரி னிரையசையு மாமே. |
3 |
நிரலியற்சீர் நேர்நேர்தே மாநிரைநேர் புளிமா நிரைநிரையே கருவிளமே நேர்நிரைகூ விளம்பின் வருநேர்காய் வெள்ளைநிரை வரிற்கனிவஞ் சிச்சீர் மற்றுநேர் நிரைவரிற்றன் நிழல்நேர்நேர் தண்பூப் பரவுநிரை நேர்நறும்பூ நிரைநிரைவந் தக்காற் பகருநறு நிழலாமீ ரெட்டிவைநா லசைச்சீர் விரவுவஞ்சி நாண்மலரோ ரசைச்சீரீ ரசைச்சீர் மேவியபோற் றளைதமக்கு விளங்கிமரு விடுமே. |
4 |
மருவுவிள முன்னர்நிரை நிரையொன்றா சிரிய மாமுன்னேர் வரினேரொன் றாசிரியத் தளையாம் விரவியகாய் முன்னர்நேர் வெண்சீர்வெண் டளையா மின்னே மீட்டுங்காய் முன்னர்நிரை * கலித்தளையா கருதுகனி முன்னர்நே ரொன்றாத வஞ்சி கனிமுனிரை யொன்றியவஞ் சித்தளையா மாமுன் னிரையும்விள முன்னேரு மியற்சீர்வெண் டளையாம் நிழல்கனியாம் பூக்காயா நிகழ்பொதுச்சீர்த் தளைக்கே. |
5 |
நிகழிருசீர் குறளடிமுச் சீர்சிந்து நாற்சீர் நேரொடள வடியைஞ்சீர் நெடிலடியா றாதி திகழ்தருசீர் கழிநெடில்வெள் ளடியிரண்டு மூன்றா சிரியம்வஞ்சி மூன்றுகலி நான்கிழிபு பெருமை யகல்பொருண்மட் டெழுத்தசைசீ ரடியந்த மாதி யாமந்தா தித்தொடையே யடிமுழுது மொருசொற் புகல்வதிரட் டைத்தொடையா மோனைமுத லாகப் புகன்றதொடை புகலாது புகல்வதுசெந் தொடையே. |
5 |
தொடையெழுவா யெழுத்தொன்றின் மோனையியை பிறுதி சொல்லிரண்டா மெழுத்தொன்றி னெதுகைபொருண் மொழிகள் யுடன்முரணின் முரணளபு வருதலடி யளவே யுயரிசீ ரிணைதலிணை முதலொடுமூன் றாஞ்சீர் அடைபொழிப்பு நடுவிருசீ ரகறலொரூஉ வடியி னடர் தருமுச் சீர்கூழை முதலயற்சீர் நீங்கல் கெடலருமேற் கதுவாயே யீற்றயர்சீர் நீங்கல் கீழ்க்கதுவாய் சீர்முழுதுங் கிடைத்திடின்முற் றாமே. |
6 |
ஆர்வெண்பா வகவல்கலி வஞ்சிப்பா நான்கி னள வடிவெண் பாச்செப்ப லிசைமுச்சீ ரந்தங் கூர்காசு பிறப்புநாண் மலர்முடிவீ ரடிவெண் குறள்குறள்வெண் பாவிரண்டா யோராசீ ராசு நேருகினுந் தனிச்சொற்பெற் ரொன்றிரண்டு விகற்பம் நேரிசைவெண் பாத்தனிச்சொ லின்றியடி நான்காய்ப் பார்விகற்ப மொன்றுபல வின்னிசைவெண் பாவப் படியடியீ ராறுவரும் பஃறொடைவெண் பாவே. |
7 |
பலவடியா யளவிலவா யொரூஉவெதுகை யிரண்டாம் பாதங்க டொறும்பெறினும் வெள்ளடிகுன் றாவாங் கலிவெண்பா நேரிசையின் னிசைபோன்மூன் றடியேற் கருதப்பேர் சிந்தியலொப் பீரடிசெந் துறையீற் றிலகடிகுன் றுதல்குறட்டா ழிசையடிமூன் றாய்ச்சிந் தீற்றடியா யிறல்வெண்டா ழிசையடிமூன் றீறேழ் குலவடியந் தங்குறையும் வெண்டுறைநான் கடியுங் கொண்டடிகடொறுந்தனிச்சொற்பரவல்வெளிவிருத்தம். |
8 |
பரவகவ லகவலிசை யளவடியீற் றயலிற் பாதமுச்சீர் நேரிசையெவ் வடியுமள வொத்த லருநிலைமண் டிலமிடைச்சீர் குன்றலிணைக் குறளா மாதிநடு வந்தமுறி னடிமறிமண் டிலவா சிரியமூன் றடியொத்த றாழிசைநான் கடியாய்ச் சீரிடையிற் குறைதலிடை மடக்கலீற் றயலின் மருவடிநை வது துறைநான் கடியொத்தா றாதி வளர்சீர்கள் பலவருத லாசிரிய விருத்தம். |
9 |
ஆசிலிசை துள்ளலள வடிகலிப்பாத் தரவொன் றடைவிற்றா ழிசைமூன்றுந் தனிச்சொல்சுரி தகமா மாசிலநே ரிசையொத்தா ழிசைக்கலிப்பா வளவே மன்சிந்து குறளடித்தா ழிசைப்பின்பு வருமே லேசிலம்போ தரங்கவொத்தா ழிசைக்கலிப்பா விவற்றோ டிடையரா கம்வரில்வண் ணகவொத்தா ழிசையே பேசியவெண் பாவியைந்து சிந்தடியீற் றடியாய்ப் பிறதளைதன் றளையோசை பெறுவதுவெண்கலிப்பா. |
10 |
பெறுதரவு தரவிணையே சிலபலதா ழிசையாற் பிறழ்விலவு மயங்கினவு மப்பெயர்க்கொச் சகமாம் இறுதிநீண் டளவொத்தல் பலவடிதா ழிசையே யெழிலைஞ்சீ ரடிநான்கு கலித்துறைநே ரடிநான் குறுதல்கலி விருத்தமிசை தூங்கலடி குறள்சிந் தொடுதனிச்சொற் பெற்றகவ லிறும்வஞ்சி யிருசீ ரறையடிநான் கொருமூன்று தாழிசையாங் கவற்றொன றாந்துறைமுச் சீரடிநான் காம்வஞ்சி விருத்தம். |
11 |
ஆந்தளைசீர் கெடிலிகர வுகரத்தேய் வொற்று மாமலகு பெறாவளவை யௌக்குறுமைக் குறிலா மேய்ந்தவுயி ரோரளபு மீரளபு மாகி யீரசையா மூவசையா மொற்றளபு குறினேர் சேர்ந்தசையா மொற்றிலையே லொற்றாமொற் றளவாஞ் செறிவிலீ ரொற்றுமூ வொற்றுமொரொற் றாமுன் சார்ந்தகுறில் விட்டிசைக்கி னேராம்வெண் பாவெண் டளையலது தயங்காது மயங்கிடுமெப் பாவும். |
12 |
மயங்கும்படி யெப்பாவும் வெண்பாவுக் கன்றி மன்னினமுந் தளையுமயங் கிவரும் அஆ ஐஔ நயங்கொள்ளும் இஈஎ ஏஉஊ ஒஓ ஞணனநம வசதவெனு மோனைமெய்யு மோனை யியங்குமின நெடில்வருக்கம் வரிலெதுகை மோனை யரலவழவொற் றாசிடையிட் டுயிருமிரண்டடியுந் தயங்கிய மூன்றாமெழுத்து மெதுகைகடை யிணைபின் சார்கூழை யிடைப்புணரு முரண்டொடைக்குஞ் சாற்றே. |
13 |
சாற்றெல்லை கட்குநெடி லடியாதி மோனை சாரெழுவா யெழுத்துமலா தநுமோனை விதியாற் றேற்றெதுகை மோனையுடன் வரிற்சிறப்பெத் தொடையுஞ் சீரிடையீ ரநுவும்வருந் தொடைகள்பல தளைகள் தோற்றின்முதல் வந்ததொடை யாற்றளையாற் பெயராஞ் *சுருங்குதா ழிசைதரவிற் றரவடிமூன் றிழிபே யேற்றபா விரண்டேவெண் பாவகவல் வெண்பா விடத்தில் வருங் கலியகவ லிடத்தில்வரும் வஞ்சி.ç |
14 |
இதுகுறளின் சிதைவுஞ்செந் துறையிழிபுங் குறட்டா ழிசையாம்வேற் றொலிவரினும் வெண்டுறையொற் றெண்ணா தறையடிநேர் பதினாறு நிரைபதினே ழெழுத்தா யடிநான்கு தொறும்வரிற்கட் டளைக்கலித்து றையே யுறுபொருள்சூத் திரங்குறித்த யாப்பிற்றாய் நாற்சீ ரோரடியும் பலவடியும் வருநூற்பா வகவல் புறநிலைவா யுறைவாழ்த்துச் செவியறி்கைக் கிளைகள் பொருளாய்முன் வெண்பாப்பின் னகவல்வரு மருட்பா. |
15 |
வருதனிச்சொற் கூன்பொருளோ டடிமுன்வரு மதுவே வஞ்சியீற் றினுமாம்வெண் பாவகவ லீற்றாற் சுரிதகமாம் வேறுமடி பாவிசையாற் றளையாற் சூழெழுத்தெண் ணால்வகுத்த வகுப்பாற்கா ரணத்தாற் பெருகியிடுங் காலவழக் காற் பலவாஞ் செய்யுட் பெயரெழுத்து முதலெட்டு வகைவிரிவுங் குவிவும் பரவுவகை யுளிவணப்பு வண்ணவகை மற்றும் பலவுமடங் காதடக்கிப் பகருவர்சான் றோரே. |
16 |
பகர்செய்யுள் மங்கலச்சொல் லெழுத்துத் தானம் பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப் புகரில்கண மெனப்பத்தும் பிறங்கு கேள்விப் புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர் செம்பொற் சிகரகிரி யெனப்பணைத்துப் புடைத்து விம்மித் திரண்டெழுந்து வளர்ந்திளகிச் செறிந்த கொங்கைத் தகரமலர்க் குழற்கருங்கட் குமுதச் செவ்வாய்ச் சரிவளைக்கைக் கொடியென்னத் தயங்கு மாதே. |
17 |
மாமணிதேர் புகழமுத மெழுத்துக் கங்கை மதிபருதி களிறுபரி யுலகஞ் சீர்நாள் பூமலைகார் திருக்கடனீர் பழனம் பார்சொற் பொன்றிகிரி பிறவுமுதன் மொழிச்சீர்க் காகும் நாமவகை யுளிசேர்தல் பொருள தின்மை நலமிலதாய் வைத்தல்பல பொருளாற் றோன்ற லாமினிய சொல்லீறு திரிதல் போலு மாதிமொழிக் காகாவா னந்த மாமே |
18 |
ஆனவெழுத் தொன்பதே ழைந்து மூன்றாம் ஆகாதெட் டாறுநான் காதிச் சீர்க்கே யூனமிலா அஆவும் இஈ ஐயும் உஊவும் எஏயும் ஒஓ ஒளவுந் தானமிதை வகையாமந் தாதி தன்னிற் றலைவன்பேர் முதலெழுத்திற் பால னாதி மேனிரையெண் ணிற்பால குமர ராசர் வேண்டிடும்வேண் டாவிருத்த மரணந் தானே. |
19 |
மருவுகுறி லாணெடில்பெண் ணவரி வர்க்கா மயங்கினுமாம் வரலாகாபேடொற் றாய்த முரியகச தநபமவ வேழோ டாதி யுயிர்க்குறினான் கிவையமுத மாதிச் சீர்க்கும் அரிய தசாங் கத்தயற்கு நலம தாகு மமுதமொழிக் கல்லாத வெழுத்துங் கான்மாத் திரையளவஃ கேனமுடன் மூன்று நஞ்சாய்ச் செப்புமெழுத் திவையெல்லாந் தீதாம ன்றே. |
20 |
தீதிலுயி ரீராறு முதலொற் றாறுந் திருமறையோர்க் கடைவேயோ ராறு வேந்தர்க் கேதிலவ ரனக்கள்வணி கர்க்கா மற்றை யெழுத்துளவை சூத்திரர்க்கா மியன்ற சாதி யோதிமன்றன் படைப்புயிரே யரன்மால் செவ்வே ளும்பர்கோன் பருதிமதி மறலி நீர்க்கோன் காதலள கேசன்முத லிவ்வி ரண்டாய்க் கம்முதன்மூ வாறொற்றுங் கருதிச் செய்தார். |
21 |
கருதுமுயி ரடைவேநான் கைந்து மூன்று கார்த்திகையே பூராட முத்தி ராட முரறருகவ் வரியினான் கிரண்டு மூன்று மூன்றோண மாதிரையே புனர்தம் பூச மிருமைகொள்சவ் வரியினான் கைந்து மூன்றி ரேவதியச் சுவனிபரணி ஞகர மூன்று வருமவிட்டந் தகரமிரண் டேழு மூன்று வளர்சோதி விசாகமே சதைய மன்னும். |
22 |
சதிதிகழ்நவ் வினிலாறு மூன்று மூன்றுந் தருமனுடங் கேட்டையே பூரட் டாதி திதமிகுபவ் வரியினான் கிரண்டோ டாறுத் திரமுதன்மூன் றாமவ்வி லாறு மூன்று மிதமுடன்மூன் றும்மகமா யிலியம் பூர மியாவுத்தி ரட்டாதி யூயோ மூல முதலியவும் முதனான்கு மொழிந்த நான்கு முரோகணியா மிருகசீ ரிடமாம் பேர்நாள். |
23 |
பேர்நாளுற் பவனாளா தன்மூ வொன்பான் பிறித்தொன்று மூன்றைந்தே ழாகா தெட்டாங் கூராசி யும்வயினா சிகமு மாகா குறில்வன்மை யீறொழிக்கில் வானோர்க் காகும் நேர்நெடிலின் முதல்நான்கீ றில்லா மென்மை நிலமக்கள் கதிமுதற்சீர்க் காகும் ஒஓ யேர்மருவு யரலழற விலங்கா மற்றை யெழுத்துநர கக்கதிமுன் னிவைவா ராதால். |
24 |
வானிலகு நேர்குருவே நிரையாம் வெண்சீர் வரில்நபத வகணநாட் பரணி மும்மீன் ஊனமிகு புனர்பூசம் பூசம் வாணா ளுற்றபுகழ் சூனியநோய் பலன்க ளாகுந் தேனனையாய் வஞ்சிச்சீ ரடைவே நான்குந் திகழ்சரம யகணநாட் சோதி யாரல் தானமுறு கேட்டைசத யந்தான் கேடு சாவுதிரு மகிழ்ச்சிபலன் றரத்தொ டங்கும். |
25 |
துறக்கமதி வான்பருதி காய்ச்சீர் முன்னுஞ் சூழ்காற்றுத் தீநிலநீர் கனிச்சீர்ப் பின்னு நிறுத்துகண மிவ்விரண்டா மகவற் சீரின் நேரீ று வெள்ளைச்சீர் நிரைவஞ் சிச்சீர் சிறப்புடையிவ் விரண்டுமாங் கணப்பேர் மற்றுந் திகழியற்சீ ரயன்றிருக்கோக் கருடன் முன்னாம் வெறுத்தபின்னு மாமென்ப விறைவ னாட்கு மேவுகண நாட்பொருத்தம் வேண்டு மாதே. |
26 |
ஆவதுமங் கலத்தேற்ற பரியா யச்சொ லடைகொடுத்து முதற்சீருக் கடுத்த செய்யுண் மேவுதலை யிடைகடைமங் கலச்சொல் வைத்து விதியெழுத்துப் பால்வருண மயங்கு மென்ப வாவுமொரு நற்கதியால் முன்னோர் நூலின் மங்கலத்தால் நஞ்சுசில வமுத மாகுந் தூவமுத மெனிற்கதியிற் பழுது போமேற் றொடர்கலப்பா மரபினதுதொடக்கஞ் சொல்வாம். |
27 |
துறுகொலைநீக் கித்தெய்வக் காப்பாய் சுற்றத் தொகையளவு வகுப்பகவல் விருத்தந் தன்னால் முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி முத்தம்வா ரானையம் புலியி னோடு சிறுபறைசிற் றிற்சிறுதே ரிவைபின் மூன்றுந் தெரிவையர்க்குப் பெறாகழங்கம் மானை யூசல் பெறுமூன்று முதலிருப்பத் தொன்று ளொற்றை பெறுந்திங்க டனிற்பிள்ளைக் கவியைக் கொள்ளே. |
28 |
கொண்டபுயந் தவமதங்கம் மானை காலங் குறங்களிசம் பிரதமறம் பாண்கார் தூது வண்டுதழை கைக்கினைசித் திரங்க லூசல் மடக்குமருட் பாவகவல் விருத்தம் வெண்பா வெண்டுறைவஞ் சித்துறையா சிரியம் வஞ்சி விருத்தப்பாக் கலியினமந் தாதி யாகக் கண்டவைமுன் னாதியொரு போகு வெண்பாக் கலித்துறைநேர் கூறல்கலம் பகமா மன்றே. |
29 |
அன்புறுதே வர்க்குநூ றிழிபைந் தையர்க் கரசர்க்குத் தொண்ணூறு வணிகர்க் கைம்பா னினிபுறுமுப் பானுழவர்க்கமைச்சி னுள்ளோர்க் கெழுபதெனுங் கலம்பகத்தம் மானை யூசல் முன்பொருபோ கொழித்தது பன்மணிமா லைப்பேர் மொழிவெள்ளை நூறுகலித் துறைநூ றாதல் நன்குறிலந் தாதிகலித் துறைநா னூறாய் நடப்பதகப் பொருட்கோவை நாம மன்னோ. |
30 |
மன்னிருபான் வெள்ளைகலித் துறையி ரட்டை மணிமாலை நூறுவெள்ளை பகவல் வஞ்சி பின்னர்கலித் துறையதிணை மணிமா லைப்பேர் பேசகவல் வெள்ளைகலித் துறைமுப் பானாற் சொன்னதுமும் மணிக்கோவை வகுப்பு முப்பான் சூழொலியந் தாதிவெள்ளை யகவற் பாவாற் பன்னுமிரு பாவிருப திவையந் தாதி பயோதரங்கண் ணுரைத்திடிலப் பேர்ப்பத் தாமால். |
31 |
பத்தியல்வெண் பாவின்மலை நதிநா டூர்தார் பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின் மெத்துதசாங் கப்பத்தாந் தசாங்கந் தன்னை வெண்பாவாற் றொண்ணூறேழ் பஃது முப்பா னித்தகைமை மொழிவதுசின் னப்பூ வாகு மெழிற்கொடைசெங் கோனாடூர் வில்வாள்வென்மா அத்திதனித் தனியகவல் விருத்தம் பத்தா லறைவிருத்த விலக்கணமா மமுதச் சொல்லாய் |
32 |
சொற்கலித்தா ழிசையகவல் விருத்த மாதல் சுற்றமுடன் றாழிசையாய்ச் சொல்வ தூசல் வற்கவுயிர் கசசநப மவவெட்டின் சூழ் மருவகவல் வரின்வருக்க மாலை வெள்ளை நற்கலியின் றுறையகவ லந்தா தித்த நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர் மேலோ ரொற்கமிலா சிரியவிருத் தத்தைக் கூட்டி லொருநாற்பான் நான்மணிமா லைக்கென் றோதே. |
33 |
ஓதும்வெள்ளை கலித்துறையா சிரியமன்பா வுறுவிருத்தம் வகுப்பைந்தா லுரைக்கி லம்ம கோதிலலங் காரபஞ்ச கப்பே ரெட்டுக் குலவகவல் விருத்தமுறு தெய்வங் காப்பா மீதட்ட மங்கலமிப் படியொன் பானா மெத்துநவ மணிமாலை .யெப்பாட்டேனுந் தீதிலொரு பானொருபா வொருபஃ தென்ப செப்பிவைக ணான்கையுமந் தாதி தன்னால் |
34 |
அகவல்விருத் தம்வகுப் பாதல்பத் தாதி யந்தநூ றாகும்பல். சந்த மாலை புகழவ லாற்புலவர் பாணர்***** பொருநர் முத வவருரை***** பகருமதாற் றுப்படையாங்***** பாதாதி கேசங்கே சா***** மகிழவுரைத் திடிலந்தப் பே***** வகையுரைக்கின் வெளி***** |
35 |
மாசில்குல மகளுக்கு வகுப்பு***** வருபொருளொன் பாெ***** றேசுயர்மங் கலவெள்ளை வே***** திகழ்கீர்த்தி யுரைப்பது***** பேசுகுணப் பேரடுக்கி மடவ பெரும்புகழ்ச்சி மாலையப் படியாண் பாற்கு மாசகல வுரைக்கிலது நாம மாலை வருங்காம மொருதலைக்கைக் கிளைய தாகும் |
36 |
குழமகனை யடையாளங் கலிவெண் பாவாற் கூறியவன் மறுகணையக் காதல் கூரேழ் *ற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன் றியன்மங்கை பத்தொன்பான மடந்தை யையைத் தழகரி வை முப்பதஃதோர் தெரிவை நாற்பா னாம்வயது பேரிளம்பெண் முதலா யுள்ளோர் தொழவுலாப் போந்ததுலாத் தலைவன் பேர்க்குத் தொடையெதுகையொன்றிலின்ப மடலாய்ச்சொல்லே. (10) |
37 |
சொன்னமா தரைக்கண்டு கனவிற் சேர்ந்தோன் துணிவன்மடலென்றதுலா மடல்பாங் கற்கு ளின்ன லுரைத் திடுதலனு ராக மாலை யிருதிணையை விடறூதிவ் வைந்து முப்பாப் பன்னுபொரு ளிடங்காலந் தொழின்முப் பானாற் பானெழுபான் தொண்ணூறு நூறால் வெண்பா மன்னுகலித் துறையாதல் புகலப் பேரான் மாலையுமா மெண்ணாலு மருவும் பேராம். |
38 |
*கிழ்**ர்கொள் வதுவெட்சி கரந்தை மீட்டல் மாற்றார்பாற் செலல்வஞ்சி யூன்றல் காஞ்சி பகர்மதிலைக் காக்குமது நொச்சி சுற்றிப் படைவளைத்த லுழிஞைபொரல் தும்பை வென்று புகழ்படைத்தல் வாகையது மாலைப் பேராற் போற்றுவது மாலையுமாப் புதல்வர் தானை யகலமுரைப் பதுதானை மாலை தூசி யணிவகுப்பிற் றாராகைமா லையைச்சொல் லாய்ந்தே |
39 |
ஆய்ந்ததசப் பிராதுற்ப வம்பத் தான வரிபிறப்பா சிரியவிருத் தத்தால் வாழ்த்தில் ஏய்ந்திடுநா ழிகைவெண்பா மன்னர்க் கீசர்க கெய்தியநா ழிகைவெண்பா நாலெட்டாய்ச்சொல் வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல் வரலாற்று வஞ்சிபல வரலா றோதல் பாய்ந்திடுமும் மதத்தானைத் தொழினேர் கொல்லும் படைக்களிற்றைக் கண்டரசன் பற்றிச் சேர்தல். |
40 |
படைபுக்கா யிரவேழம் மெதிரார் போரிற் படப்போர்செய் தானுக்குக் கடவுள் வாழ்த்து கடைதிறப்புப் பாலைநிலங் காளிகோட்டங் கழுதுநிலை காளிக்குப் பேய்ச்சொல் பேய்க்குத் தொடர்காளி சொலலதனாற் றலைவன் கீர்த்தி சொல்லலவன் சேறல்புறப் பொருடோன் றப்போ ரடுதல்களம் விரும்பலிவை நாற்சீ ராதி படியிரண்டி லேறாமற் பரணி பாடே. |
41 |
பாடுநெறி வணக்கம்வாழ்த் தொன்று நாலாய்ப் பகர்பொருண்முன் வரவிறைவன் வெற்பு வேலை நாடுநகர் பொருள்பருவமிரு சுடர்பெண் வேட்டல் நண்ணன்முடி பொழில்புனலா டல்கள் ளுண்டல் கூடுமகிழ் வூடறுனி புதல்வர்ப் பேறு கூறிடுமந் திரந்தூது செலல்போர் வென்றி *டுசந்தித் தொடர்ச்சிசுை************தொன்ற நிகழ்த்தலம்ப முதற்பெ******பியத் *** |
42 |
அறையுமிதிற் ச்லகுறைபா டென்*****ங்குன்றா தறம்பொருளின் பம்வீட்டிற் கு****டாகப் பெறுவதுகாப் பியமாகும் புராணமா**** பேசின்முத னூல்பொருளோ டளவு ****** செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னானுந் திகழுமிடு குறியானு நூற்குப் பேரா முறுகலிவஞ் சிப்பாக்கை யறத்துக் காகா வுரைப்பதினி வாழ்த்தினுக்கெப் பாவு மாமே. |
43 |
பாடுமுறை தொடர்செய்யு டெரிக்க வல்ல பாவலனாற் குணங்குலஞ்சீ ரொழுக்க மேன்மை நீடழகு சமயநூல் பிறநூல் மற்று நிகழ்த்துநூ லிலக்கணநாற் கவுயுள் ளானாய் நாடுறுப்பிற் குறைவிலனாய் நோயி லானாய் நாற்பொருளு முணரந்துகலை தெளிந்து முப்பான் கூடும்வய திகழ்ந்தெழுபான் வயதி லேறாக் குறியுடைய னாகிலவள் கவிதை கொள்ளே. |
44 |
கொள்ளுமிடம் விதானித்துத் தொடைய னாற்றிக் கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பந் துள்ளுபொரி விளக்கொளிர முரசி யம்பத் தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த வெள்ளைமலர்கத் துகில்புனைந்*து தவிசின் மேவி வேறுமொரு தவிசிருத்திச் செய்யுள் கேட்டே யுள்ளமகிழ் பொன்புவிபூ ணாடை மற்று முதவியே ழடிபுலவ னுடன்போய் மீளே. |
45 |
உடம்படச்செய் யான்செய்யுட் பிறர்பாற் கூறி லுற்றதிரு வவனிடைப்போ யொதுங்கு மன்றித் திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித் தெருவுமயா னம்புற்று காளி கோட்டத் *னிலங் கவன்றன்னை நினைந்து சுட்டா லீராறு திங்கடனி லிறுதி யாவன் ளடர்ந்துசெயா துளநொந்தாற் சுற்றத் தோடுந் தொலைவனிஃ துண்மையகத் தியன்றன் சொல்லே. |
46 |
அகத்தியன்சொல் லெழுத்துமுதற் குற்றஞ் செய்யுட் கடையாமற் றொடைகொண்டா லடையுஞ் செல்வ மகத்துயர்நோ யகலு மகலாது சுற்றம் வாணாளு மதிகம்வழி மரபு நீடுந் தொகைக்குற்றம் பாட்டுறிற்செல் வம்போம் நோயாஞ் சுற்றமறு மரணமுறுஞ் சோருங் காலுஞ் சகத்தவர்க்கீ தன்றியே தேவர்க் காகிற் றப்பாதிப் பலன்கவிதை சாற்றி னார்க்கே |