பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
பாகம் 3 (சூத்திரங்கள் 2311 -3030)
pingkala nikaNTu, part 3
of pingkala munivar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Libtrary of India for providing a scanned image version
of this work. This etext has been prepared using the Distributed Proof-reading Implementation
and we thank the following volunteers for their assistance in the preparation of this work.
Anbu Jaya, Karthika Mukundh, R. Navaneethakrishnan, P. Thulasimani,
V. Ramasami, A. Sezhian, SC Tamizharasu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 3
(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)
Source:
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
இஃது இன்ஸ்பெக்டிங் இஸ்கூல் மேஷ்டர் பென்சனர்
வீராட்சிமங்கலம் தமிழ்ப்புலவர் தி. சிவன்பிள்ளை
பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து இயற்றிய உரையோடும்,
கவர்னர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த
சோடசாவதானம் தி-க. சுப்பராயசெட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து,
மேற்படி சிவன்பிள்ளையால் காஞ்சி-நாகலிங்க முதலியாரது
சென்னை: இந்து தியலாஜிகல் யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
விகுர்தி வருடம் ஆவணி மாதம்
Registered Copy-right., 1890.
---------------------------
பிங்கல முனிவரின் பிங்கல நிகண்டு
மூன்றாம் பாகம் (சூத்திரங்கள் 2311 – 3030)
உள்ளடக்கம்
எட்டாவது மாப்பெயர்வகை 2311- 2649
1. புள்வகை (2311-2409)
2.விலங்கின்வகை (2409 – 2600)
(விலங்கினாண்மரபு, விலங்கின்பெண்மரபு, விலங்கின்பிள்ளைமரபு)
3. பாம்பின்வகை (2601 - 2615 )
4. சலசரவகை (2616 - 2650)
ஒன்பதாவது. மரப்பெயர்வகை 2650 - 3030
(ஒவ்வொரு பெயர்வகைக்கும் சூத்திரங்களுக்குப்பின் பெயர் பிரிவு கொடுக்கப் பட்டுள்ளது)
--------------------
எட்டாவது - மாப்பெயர்வகை
1-வது புள்வகை.
2311. அன்னத்தின்பெயர்-அன்ன மெகின மஞ்ச மோதிமமென்னடை வக்கி ராங்கம் விகங்கம். (1)
2312. மற்றுமன்னத்தின்பெயர்-பிணிமுக மராள மென்னவும் பேசுவர். (2)
2313. அன்னத்திறகின்பெயர்-தூவி யன்னத் திறகெனச் சொல்லும்.
2314. மயிலின்பெயர்-சிகியே நவிர மஞ்ஞை பிணிமுகஞ்-சிகண்டி மயூரங் கேதார மொகரஞ்-சிகாவள ஞமலி கலாபி பீலி-தோகை கேகய மயிலெனச் சொல்லும். (4)
2315. மயிற்றோகையின்பெயர்-சரணஞ் சிகண்டங் கூந்தல் சந்திரகந்-தொங்க றோகை தூவியு மாகும். (5)
2316. மற்றுமயிற்றோகையின்பெயர்-பீலியுங் கலாபமுங் கூழையுமதற்கே. (6)
2317. விரிதருதோகையின்பெயர்-மேசக மென்பது விரிதருதோகை.
2318. மயிற்குரலின்பெயர்-அகவ லால லேங்கன் மயிற்குரல். (8)
2319. மயிற்சிகையின்பெயர்-அநந்தர மயூர விரிசிகை யாகும். (9)
2320. இறகினடிமுள்ளின்பெயர்-முருந்தே யிறகின் முதன்முள்ளாகும். (10)
2321. கருடன்பெயர்-வைன னுவணன் வைன தேயன்-பறவை வேந்தன் பன்னக வைரி-கலுழன் றார்க்கியன் சௌரி கருடன். (11)
2322. மற்றுங்கருடன்பெயர்-இமையிலி யெனவு மியம்பப் பெறுமே.
2323. கழுகின்பெயர்-பவணை யுவணஞ் சகுந்தம் புண்டர-மெருவை கங்கமுங் கழுகென விசைப்பர். (13)
2324. மற்றுங்கழுகின்பெயர்-பூக மென்பது மப்பெயர் புகலும்.(14)
2325. சக்கரவாகப்புள்ளின்பெயர்-நேமிப்புள் சக்கரவாகப்புள்சகோரம். (15)
2326. பெருங்குருகின்பெயர்-யானையுண் குருகு பெருங்குருகென்ப.
2327. எண்காற்புள்ளின்பெயர்-சிம்புள் வாருண்ட மம்பர வாணஞ்- சம்பரம் வருடை துரோணஞ் சரப-மெண்காற் பறவைக் கெய்தும் பெயரே.
2328. பருந்தின்பெயர்-பாறு சேனங் கங்கம் பருந்தே.
2329. மற்றும்பருந்தின்பெயர்-கூறிற் பார சிகையுங் கூறும். (18)
2330. நிலாமுகியின்பெயர்-சகோரம் பேராந்தை நிலாமுகி யாகும். (19)
2331. பொய்யாப்புள்ளின்பெயர்-சலாங்கென் கிலவி பொய்யாப்புள்ளே. (20)
2332. அசுணமாவின்பெயர்-அசுணமா விசையறி பறவைகே கயப்புள். (21)
2333. சாதகப்புள்ளின்பெயர்-நவில்சா ரங்கஞ் சாதகப் புள்ளெனல். (22)
2334. வானம்பாடியின்பெயர்-கலிங்கம் வானம் பாடி யாகும். (23)
2335. மற்றும்வானம்பாடியின்பெயர்-மேகப்புள் ளென்றும் விளம்பலாகும். (24)
2336. கிளியின்பெயர்-சாரு வன்னி யவந்திகை தத்தை-கீரங் கிள்ளை கிளிப் பெயராகும். (25)
2337. மற்றுங்கிளியின்பெயர்-அரி சுவாகதஞ் சுகமு மாகும். (26)
2338. குயிலின்பெயர்-காள கண்டங் கோரகை பரபுட்டங்-கோகிலம் பிகத்தொடு குயிலின் பெயரே. (27)
2339. கோட்டான்பெயர்-கூகை குடிஞை குரா அல் கௌசிகம்-ஊம னிசாசரியு லூகங் கோட்டான். (28)
2340. பெருங்கோட்டான்பெயர்-கௌசிக மூமன் குடிஞை கூகை- பெரும்பு ளென்ப பெருங்கோட் டான்பெயர். (29)
2341. அன்றிலின்பெயர்-கவுஞ்ச மன்றில் கிரவுஞ் சமுஞ் சாற்றும்.
2342. காடையின்பெயர்-கபிஞ்சலங் குரும் பூழ்காடை யாகும். (31)
2343. கரிக்குருவின்பெயர்-காரி பிள்ளை கபிலங் கஞ்சனங்-கயவாய் கரிக்குரு விப்பெய ராகும். (32)
2344. வலியன்பெயர்-கஞ்சனங் கிகிணி கஞ்ச ரீடம்-வயவன் பாரத்து வாசம் வலியன். (33)
2345. காரிப்பிள்ளையின்பெயர்-வஞ்சுளன் வயவன் வயான் காரிப்பிள்ளை. (34)
2346. கோழியின்பெயர்-குக்குடங் குருகு வாரணங் கோழி. (35)
2347. மற்றுங்கோழியின்பெயர்-ஆண்டலைப் புள் காலாயுத மாகும். 36()
2348. சம்பங்கோழியின்பெயர்-கம்பு ளென்ப சம்பங் கோழி. (37)
2349. நிலங்கின்பெயர்-நிலங்கு பூழ். (38)
2350. கானாங்கோழியின்பெயர்-காதம்பம் கானாங் கோழி. (39)
2351. கருங்கிளியின்பெயர்-கீரங் கிள்ளையரி கருங்கிளிக் கேற்கும். (40)
2352. கரும்புறாவின்பெயர்-கபோதம் பாரா வதங் கரும் புறாவே (41)
2353. புறாப்பொதுவின்பெயர்-தூதுணங் கபோதங் களரவம் புறாவே. (42)
2354. கவுதாரியின்பெயர்-சிரவங் கவுதாரி. (43)
2355. பகண்டையின்பெயர்-சில்லை பகண்டை. (44)
2356. நாகணவாய்ப்புள்ளின்பெயர்-பூவை சாரிகை நாகண வாய்ப்புள். (45)
2357. கல்சிலையின்பெயர்-பல்லி யென்ப கல்சிலையாகும். (46)
2358. உள்ளான்பெயர்-உள்ள யென்பது உள்ளா னாகும் (47)
2359. மாடப்புறாவின்பெயர்-கன்மேய்வு காளபதம் மாடப் புறாவே. (48)
2360. தூக்கணங்குருவியின்பெயர்-சிதகஞ்சிந்தன்றூக்கணங்குருவி. (49)
2361. இராகப்புள்ளின்பெயர்-மிதுனங் கின்னர மிராகப் புள்ளே. (50)
2362. தலையிலாக்குருவியின்பெயர்-மழைக்குயில் தலையிலாக் குருவியாகும். (51)
2363. சிச்சிலியின்பெயர்-சிரல்கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி. (52)
2364. மீனெறிசிறுபறவையின்பெயர்-சிரலே மீனெறி சிறுபரவையாகும். (53)
2365. ஊர்க்குருவியின்பெயர்-கலிங்கஞ்சகடங்குலிங்கமூர்க் குருவி.
2366. மற்றுமூர்க்குருவியின்பெயர்-புலிங்க மென்றும் புகலப் பெறுமே. (55)
2367. காகத்தின்பெயர்-கரடங் கெரடிபலி புட்டங் காரி-வாயசங் கரும்பிள்ளை யரிட்டங் காகம். (56)
2368. அண்டங்காக்கையின்பெயர்-காலோல மண்டங் காக்கை யாகும். (57)
2369. நீர்க்காக்கையின்பெயர்-அர்க்கமும் கரண்டமு நீர்க்காக்கை யாகும். (58)
2370. செம்போத்தின்பெயர்-குக்கில்செம்போத்துச் சகோரமு மதற்கே. (59)
2371. சிவலின்பெயர்-கோரசம் புல்லோ டிதல்சிவ லாகும். (60)
2372. ஆந்தையின்பெயர்-இருடி பிங்கலை கின்னர மாந்தை. (61)
2373. பேராந்தையின்பெயர்-சகோரம் பேராந்தை தனக்குப் பெயரே. (62)
2374. கொய்யடிநாரையின்பெயர்-குருகு வெண்டானங் கொய்யடி நாரை. (63)
2375. பெருநாரையின்பெயர் - பெருநாரை போதா பிதாவு மாகும்.
2376. கருநாரையின்பெயர் - சிகரிகரு நாரையெனச் செப்பினரே.(65)
2377. வெண்ணாரையின்பெயர் - சாரசம் வெண்ணாரை யெனச் சாற்றுவரே. (66)
2378. கொக்கின்பெயர் - குரண்டமும் வலாகமும் பகமுங் கொக்கே.
2379. நீர்வாழ்பறவையின்பெயர் - உன்னங் கிராமமுற்கு ரோசங் - கின்னர நீர்ப்பற வைப்பெய ராகும். (68)
2380. துருஞ்சிலின்பெயர். ஆலாலந் துருஞ்சில். (69)
2381. வாவலின்பெயர் - அஞ்சலிகை வாவல். (70)
2382. வண்டின்பெயர் - அறுபத ஞிமிறளி யார்பதம் பிரமரஞ் - சிதரந்தேனே மந்தி சிலீமுகந் - தும்பி கரும்புள்சஞ் சாலிகங் கழுது – புண்டரீகஞ் சுரும்புசந் திரகஞ் - சூதங் கேசர மதுகரங் கீத - மாவரி சஞ்சரிகம் வடுவரி வண்டே. (71)
2383.ஆண்வண்டின்பெயர் - சுரும்பு மதுகரந் தும்பியாண் வண்டே.
2384. தேனீயின்பெயர் - பிரச மதுகரஞ் சரகந் தேனீ. (73)
2385. ஈசலின்பெயர் - ஈசல் சிதலாம். (74)
2386. மின்மினியின்பெயர் - மின்மினிகச் சோதம். (75)
2387. சிள்வீட்டின்பெயர் - சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு.()
2388. விட்டிற்பறவையின்பெயர் - பதங்கமுஞ் சலபமும் விட்டிற்பறவை. (77)
2389. கொதுகின்பெயர் - நுளம்பே நிலம்பியு லங்கே கொதுகெனல்.
2390. மற்றுங்கொதுகின்பெயர் - அலகுஞ் சகலு நொள்ளலு மதற்கே.(79)
2391. சலகொதுகின்பெயர் - மசகந் துள்ளல் சலகொது காகும். (80)
2392. நுளம்பின்பெயர் - அஞலமு ஞலவலு நொள்ளலு நுளம்பே. (81)
2393. புட்பொதுவின்பெயர் - பதங்கம் பக்கி பதகம் பத்திரி - விகங்கஞ் சகுந்தம் விகிரஞ் சகுனங் - குடிஞை பறவை குரீஇ வியமே - பிணிமுகங்ககமே போகில்புட் பொதுப்பெயர். (82)
2394. இறகின்பெயர் - பறையுஞ் சதனமும் பக்கமும் பிஞ்சமுஞ் - சிறையுந் தூவியுஞ் சிறகுந் தோகையுங் - கூழையுஞ் சதமுங் குரலுங் கூரலும் - வாசமும் பத்திரமு மிறையுமிற கின்பெயர். (83)
2395. மற்றுமிறகின்பெயர் - ஈரீ கச்ச மென்ன லாகும். (84)
2396. முட்டையின்பெயர் - அண்டஞ் சினைகோச மரிட்ட முட்டை.
2397. வாயலகின்பெயர் - துண்டமுஞ் சுவவு மூக்கும் வா யலகே.(86)
2398. புள்ளின்மூக்கின்பெயர் - புள்ளின் மூக்குச் சுச்சுவெனப் புகலும்.
2399. புட்சிறகடித்துப்புடைத்துக்கூப்பிடுதலின்பெயர் -- புட்சிற கடித்துப் புடைத்துக் கூப்பிட -- லோசனித்த லென்பதாகும். (88)
2400. எழாலுமயிலுமொழிந்தபறவையினாண்பெயர் -- எழாலுமயிலொழிந்த
வேனைப் பறவைகள் -- வழாஅ வாணின் பெயர் சேவ லாகும். (89)
2401. மயிலெழாலென்னுமிரண்டினாண்பெயர் -- மயிலுமெழாலு மாண்
பெயர் மரபு -- புகலுங் காலைப் போத்தென லாகும். (90)
2402. கோழிகூகைகளின்பெண்பெயர் -- * கோழியுங் கூகையு மல்லாப்
பெண்பெய -- ராயுங் காலையள கெனற்கமையா. (91)
2403. மற்றும்அவ்வளகென்னும்பெயர் -- அப்பெயர்க் கிளவி மயிற்குமாகும். (92)
2404. புள்ளின்பெண்பெயர் -- பேடை பெடை பெட்டை புள்ளின் பெண்பெயர். (93)
2405. பறவைக்குஞ்சின்பெயர் -- பிள்ளையும் பார்ப்புங் குஞ்சின் பெயரே. (94)
2406. பறவைக்குரலின்பெயர் -- குரலது புகலிற் பயிரா கும்மே. (95)
2407. புட்கூட்டத்தின்பெயர் -- தொழுதி புட்கூட்டம். (96)
2408. புட்கூட்டத்தோசையின்பெயர் -- துழனி யோசை. (97)
2 - விலங்கின் வகை
2409. சிங்கத்தின்பெயர்- ஆளி வாளரி யரிமிரு காபதி – கோளரி கண்டீ ரவம்பஞ் சானனஞ் -- சீயமடங்கல் கேசரி முடங்குளை அரிமா – வயப் போத்துப்பஞ்ச நகாயுதம் -- வயமா வயப்புலி சிங்கப் பெயரே. (98)
2410. யானையாளியின்பெயர் -- அறுகை பூட்கை யானை யாளிப்பெயர். (99)
2411. புலியின்பெயர் ---வியாக்கிரம் வேங்கை வியானம் பாய்மா- தரக்குச்
சித்திர காயஞ்சார்த் தூலம் -- வயவரி புண்ட ரீகம் வல்லியங் -- கொடுவரி
யுழுவை குயவரி வயமா -- புல்லுத் தீவி புலியின் பெயரே. (100)
2412. யானையின்பெயர் - தும்பி கரிணி தோல்சுண் டாலி - கும்பி
கறையடி குஞ்சரம் பகடு -- களிறு பூட்கை கரிமா தங்கம் - வழுவை வேழம்
வாரண மொய்யே -- யும்ப லெறும்பி யுவாவே பொங்கடி --- தந்தி யத்தி கடிவை
கயமே - நாகஞ் சிந்தூரந் தூங்க னிருமதம் - புழைக்கை வல்விலங்கு நால்வாய்
புகர் முகம் - மதாவளந் தந்தா வளமருண் மாவே - கைம்மாப் பெருமா மதமா
வயமா - மந்த மாவே மதகய மாம்ப - லிபமே போதகங் களபம் யானைப்பெயர். (101)
-----------
*அடியில் வருஞ்சூத்திரத்தால், அளகெனற்குரிய என்னும் பாடத்தை அளகெனற்
கமையா எனக்கொண்டாம். தொல்காப்பியம் பொருள் - மரபியலில் "கோழி கூகை
யாயிரண்டல்லவை சூழுங்காலையளகெனவமையா. அப்பெயர்க் கிளவி மயிற்குமாகும்" எனவருஞ்சூத்திரங்களாலுங் காண்க.
2413. மதயானையின்பெயர் - மதகரி தந்தி களிறு மதயானை. 102
2414.உதவிசெய்யானையின்பெயர் - உதவி செய்யானை யூத நாதன்.
2415. பெண்யானையின்பெயர் - அத்தினி கரிணி வடவை பிடிபெண் யானை. 104
2416..யானைக்கன்றின்பெயர் - கயந்தலை போதகந் துடியடி களபங் - கயமுனி யானைக் கன்றா கும்மே. 105
2417.யானைநுதலின்பெயர் - மதகமுங் கும்பமு மத்தகமு நுதலே.
2418.யானைத்துதிக்கையின் பெயர் - தொண்டை தொண்டலஞ் சுண்டை துதிக்கை. 107
2419. யானைக்கைந்நுனியின்பெயர்-கைந்நுனி புட்கரம். 108
2420. யானைக்கடைக்கண்ணின்பெயர் - கடைக் கண்ணிரி யாணம்.
2421. யானைக்கொம்பின்பெயர் - தந்த மெயிறுகோடு மருப்புக் கொம்பே. 110
2422. யானைகொம்பினடுப்பெயர் - பிருதி மானங் கொம்பினடு வென்ப. 111
2423. யானைமுன்காலின்பெயர் - காத்திர முன்கால். 112
2424. யானைப்பின்காலின்பெயர்- அபரம் பின்கால். 113
2425. யானைமுதுகின்பெயர் - முதுகு மஞ்சாகும். 114.
2426. யானைமத்தகத்தின்பெயர்- மத்தகம தோற்கடம். 115.
2427. யானைவாலின்பெயர்- வாறால வட்டம். 116.
2428. யானைவானுனியின்பெயர் - வானுனி வேசகம். 117.
2429. யானைவாற்கீழிடத்தின்பெயர்- வெருகம்வாற் கீழிடம். 118.
2430. யானைச்செவியின்பெயர்- செவிகன்னந் தாலம். 119.
2431. யானைநடுச்செவியின்பெயர்- வட்ட நடுச்செவி. 120
2432. யானைசெவியடியின்பெயர் - சூளிகை செவியடி. 121
2433. யானைவாயின்பெயர் - தளவு வாயெனல். 122
2434. யானைமதச்சுவட்டின்பெயர் - கடமே கொடிறு கரடவடு. 123
2435. யானையுமிழ்நீரின்பெயர் - உமிழ் நீர் விலாழி. 124
2436. யானைப்பல்லடியின்பெயர் - கரீரம் பல்லடி. 125
2437. யானைமதத்தின்பெயர் - மதங்கடம் தானங் கடாமு மாகும்.
2438. யானைத்தோட்டியின்பெயர் - அங்குசந் தோட்டி. 127
2439. யானைப்பிடரின்பெயர் - இயாதம் பிடரே. 128
2440. யானைப்புகர்முகத்தின்பெயர் - புகர் முகஞ் சிந்துரம். 129
2441. யானைநுதலணிசிந்தூரத்தின்பெயர்--நுதலணி சிந்தூரஞ் சாமோற் பலமே. (130)
2442. யானைமேற்றவிசின்பெயர்--யானை மேற்ற விசிலகட மாகும். (131)
2443.. யானைநோயின்பெயர்--பாகலம் யானை நோய். (132)
2444. யானைபடுகுழியின்பெயர்--படுகுழி பயம்பாம். (133).
2445. யானைபடுக்குமிடத்தின்பெயர்--படுக்குமிடம் வாரி. (134)
2446. யானைநுதற்பட்டத்தின்பெயர்--பட்ட மோடை. (135)
2447. யானைத்திரளின்பெயர்--கடகம் யானைத்திரட்பெயர்க் கட்டுரை. (136)
2448. பிறந்தநிலப்பெயரைப்பெற்றயானைபெறும்பெயராவன-- கிரிசரம் வநசர நதிசர மடுத்துப - பெறுமே யானை பிறந்த நிலப்பெயர். (137)
2449. குதிரையின்பெயர்--பரியே பாடலம் பாய்மா புரவி—யரிகன வட்ட மத்திரி கோரம் - வாசி துரங்க மாவே கந்துகந் - தூசி யிவுளி துரகந் துரகதங் - கோடகஞ் சயிந்தவங் கோணங் குரகதங் - கந்தருவங் கிள்ளை மண்டிலங் கற்கி - யச்சுவ முன்னி யயமே கொக்குக் - கொய்யுளை சடிலங் குந்தங் கண*ணுகங் - கோடைவயமா குதிரையின் பெயரே. (138)
2450. பாண்டியன்குதிரையின்பெயர்--அவற்றுள்- கனவட்டமென்பது வழுதி யூர்மா. (139).
2451. சோழன்குதிரைப்பெயர்--கோர மென்பது சோழ னூர்மா. (140)
2452. சேரன்குதிரைப்பெயர்--பாடல மென்பது சேர னூர்மா. (141)
2453. குறுநிலமன்னர் குதிரையின்பெயர்--கந்துகங் குறுநில மன்ன ரூர்மா. (142)
2454. குதிரைமயிரின்பெயர்--சுவல்குசை கூந்தல் மேசக மயிரே. (143)
2455. குதிரைக் குளம்பின்பெயர்--குரமுங் குரச்சையுங் குரசுங் குளம்பே. (144)
2456. குதிரைபோமார்க்கத்தின்பெயர்--மாதிக மதுபோ மார்க்க மாகும். (145)
2457. குதிரைவாலின்பெயர்--வாலதி தோகை வால தாகும். (146)
2458. பசுவின்பெயர்--கோவே பெற்றங் நிரைகுடஞ் சுட்டுத் - தேனுசுரை பத்திரை கபிலை சேதா - வாவே சுரபி யான்பசு வாகும். (147)
2459. தெய்வப்பசுவின்பெயர்--தேனுவுங் கபிலையுந் தெய்வப்பசுவே. (148)
2460. நற்பசுவின்பெயர்--பத்திரை நற்பசு. (149)
2461. குணமில்லாப்பசுவின்பெயர்--சுதைகுண மிலாப் பசு. (150)
2462. ஓரீற்றுப்பசுவின்பெயர்-- கிட்டியோ ரீற்றுப் பசு. (151)
2463. மலட்டுப்பசுவின்பெயர்--வற்சை மலட்டுப் பசு (152)
2464. கன்றைவளர்க்கும்பசுவின்பெயர்--வற்சலங் கன்றை வளர்க்கும் பசுவே. (153)
2465. பசுவின்முலைப்பெயர்--சுரைமுலை யென்ப. (154)
2466. பசுக்கோட்டத்தின்பெயர்--பசுநிலைகோட்டம் (155)
2467. மடியின்பெயர்--செருத்த லாபீன மடியெந வகுப்பர். (156)
2468. பசுவின்கன்றின்பெயர்--தன்னம் வற்சந்தனம் பசுவின்கன்றே. (157)
2469. பசுக்கூட்டத்தின்பெயர்--காலிநிரைதொறுகதுப்புக் காலேயம் பசுக்கூட்டம். (158)
2470. எருதின்பெயர்--பாறல், சேவிடை,பாண்டில், பெற்றம், பூணி குண்டை, புல்லங் காளை- யிறாலே கொட்டியமூரி யெருதெனல். (159)
2471. ஏற்றின்பெயர்--குத்தமும்விடபமுங் கூளியு நந்தியு-முக்கமு மிடபமு மேறென வுரைப்பர் (160)
2472. பேரெருதின்பெயர்--பகடு தூரியம் பாறல்பே ரெருதே. (161)
2473. பொதியெருதின்பெயர்--தூரியந்,தூர்வகம்பொதியெருதாகும். (162)
2474. எருதின்முரிப்பின்பெயர்--இமிலே யேற்றின் றிரண்முரிப் பாகும். (163)
2475. பொலியெருதின்பெயர்--ஏறு கூளி யிடபம் பொலி யெருதே. (164)
2476. எருமையின்பெயர்--காரான் மகிடங் கவரி காரா- காசாச் சைரிபம் வடவை கயவாய், மேதி யெருமை மூரியு மாகும். (165) .
2477. எருமைப்போத்தின்பெயர்--பகடுங்கடாவுமவற்றின்போத்தாம்
2478. மலட்டெருமையின்பெயர்--மைமை யென்பதுமலட்டெருமைப் பெயர் (167)
2479. ஆட்டின்பொதுப்பெயர்-- அருணங் கொச்சை, துருவை, மேழக மசமுத டுள்ளன் மறிமை வெறிகொறி-புருவை, சாகமாட்டின் பொதுப்பெயர். (168)
2480. செம்மறியாட்டின்பெயர்--உதள்கொறி துருவை யொரு வேபுருவை-யருண மேடஞ். செம்ம றியாடென்ப. (169)
2481. துருவாட்டின்பெயர்--துருவை கொறி மைதுருவாடாகும். (170)
2482. துருவாட்டேற்றின்பெயர்--மேழகங் கம்பளந் தகரே திண்ணகம்--ஏழதங், கடாதுருவாட்டி னேறே (171)
2483. ஆட்டுக்குட்டியின்பெயர்--குட்டன் சோரன் மறிபறழ்குட்டி (172)
2484. வெள்ளாட்டின்பெயர்--வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாடே. (173)
2485. வெள்ளாட்டேற்றின்பெயர்--மேடஞ் செச்சைசாக மோத்தை-யசமை கடாவெள்ளை யாட்டினேறே. (174)
2486. வெள்ளாட்டுமறியின்பெயர்--வெள்ளையென்பது மறிக்கு மாகும (175)
2487. பள்ளையாட்டின்பெயர்--வெள்ளை வற்காலி பள்ளையாடே. (176)
2488. வரையாட்டின்பெயர்--வருசை சரபம் வரையா டாகும். (177)
2489. காட்டாவின்பெயர்-- ஆமாகவையமா காட்டாவாகும். (178)
2490. மரையின்பெயர்--ஆவிதங் கானக் குதிரைமரை யாகும். (179)
2491. ஒட்டகத்தின்பெயர்--அத்திரி நெடுங்கழுத்தறா சேரகங் கனகதம் - அயவன மிரவண மொட்டகமாகும். (180)
2492. கழுதையின்பெயர்--வேசரி கோகு கரம்வாலேபங் - காள வாயே கர்த்தபங் கழுதை. (181)
2493. கோவேறுகழுதையின்பெயர்--வேசரி யத்திரி கோவேறு கழுதை. (182)
2494. கரடியின்பெயர்--பல்லூக மெண்கு உளியம் பல்ல-மிளிறு மெலுவுங் குடாவடியுங் கரடி. (183)
2495. கவரிமாவின்பெயர்--ஏகின மானமா பட்டங் கவரிமா. (184)
2496. சவரியின்பெயர்-- ஆகு கவரி சீகரஞ் சவரி. (185)
2497. மற்றுஞ்சவரியின்பெயர்--சாமரம் வெண்மயிருஞ் சவரியாகும். (186)
2498. மானின்பெயர்-- அரிண நவ்விகுரங்கஞ் சாரங்க மறியுழை சூனம் மேணம் பிணை மானின்பெயர். (187)
2499. மானேற்றின்பெயர்--இரலை வச்சய மவற்றி னேறே. (188)
2500. மற்றும் மானேற்றின்பெயர்--கலைகரு மானென வருமா னதற்கே. (189)
2501. புல்வாயின்பெயர்--இரலை புல்வா யென்னலாகும். (190)
2502. பன்றியின்பெயர்--கேழல் குரோடங் கிரிகிடி கிருட்டி - மோழல் வராகம் போத்திரி கோல- மெறுழி வல்லுளி யேனஞ் சூகரங்- கனலி யிருளி கருமா கோணி - போழ்முக மரிமைம்மாகளிறுபன்றி. (191)
2503. முட்பன்றியின்பெயர்--சல்லியமுளவு மெய்யே முண்மா. (192)
2504. மற்றுமுண்மாவின்பெயர்--சல்லக முட்பன்றி நாமமாகும். (193)
2505. முட்பன்றிமுள்ளின்பெயர்--சல்லமுஞ் சலமு மவற்றின் முள்ளின் பெயர். (194)
2506. குரங்கின்பெயர்--வலிமுகங் கலியே மர்க்கடமரியே – வானரங் கோடரங் கீசகங் கோலம்- பிலவங்கந் தோரணமந்தி யூக - நிரந்தர நா*கங் குரங்கின் பெயரே. (195)
2507 பெண்குரங்கின்பெயர்-மந்தி யூக மற்றதன் பெண்பெயர் (196)
2508 கருங்குரங்கின்பெயர்-காரூகம் யூகங் கருங்குரங் கின்பெயர்(197)
2509 முசுவின்பெயர்-ஓரியுங் கலையுங் கள்வனு முசுவே (198)
2510 மற்றும்முசுவின்பெயர்-கோலாங் கூலமைம் முகனுமதற்கே
2511 நாயின்பெயர்-ஞமலி யுச்சி யெகினங் குக்கன்-கூரன் சூரன்சார மேயன்-சுனகன்புரோகதி குரைமுகன் ஞாளி - சுணங்கன் முடுவல் பாட்டி கவாவே - பாசியிவை நாயின் பெயரெனப் பகரும் (200)
2512 பெண்ணாயின்பெயர் -- முடுவல் பெண்ணாயாகமொழிப (201)
2513 செந்நாயின்பெயர் -- விருகமுங் கொக்கு மண்டிகமுஞ் செந்நாய் (202)
2514 முயலின்பெயர் -- சசமும் வயமு முயலா கும்மே (203)
2515 நரியின்பெயர்-ஓரி யிகல னூளன் சம்பு - செந்து குரோட்டங் கோமாயுச் சிருகால -- னொண்டன் பூரிமாயு நரியின்பெயரே. (204)
2516 முதுநரியின்பெயர் -- முதுநரி யிகலன் கோமாயு வோரி (205)
2517 கொம்பிலாமிருகத்தின்பெயர் -- குமரமென்பது கொம்பிலா மிருகம் (206)
2518 பூஞையின்பெயர் -- வெருகு மண்டலி யிற்புலி விலாளம் –பவன மோதிமார்ச் சாலம் பாக்கன்-பூசை யலவன் விடருகம் பூஞை (207)
2519 காட்டுப்பூஞையின்பெயர் -- கான்புலி மண்டலி பாக்கன் கான் பூஞை (208)
2520 ஆண்பூஞையின்பெயர் -- விலாளமுங் கடுவனும் வெருகு மாண் பூஞை (209)
2521 அழுங்கின்பெயர்-பளிங்கு மறியு மழுங்கா கும்மே (210)
2522 அழுங்கின்குருளையின்பெயர்-மற்றிதன் குருளை மறியென லாகும் (211)
2523 நாவியின்பெயர் -- மறுவி மிருகமத நாவி யாகும் (212)
2524 கத்தூரியின்பெயர் -- மான்மதந் துருக்க நரந்த நானங் கத்தூரி (213)
2525 கீரியின்பெயர் -- நகுலங் காத்திரி தீர்வையுங்கீரி (214)
2526 உடும்பின்பெயர் -- முசலிகை கோதா தடியுடும் பாகும் (215)
2527 அணிலின்பெயர் -- வரிப்புறம் வெளிலணி லிலுதையு ,மாகும்
2528 பச்சோந்தியின்பெயர் -- கோம்பி சரடம் சாயானத முசலி-ஓதி தண்டோடோத்தி மயிற் பகை -- காம ரூபிபச் சோந்தியு மாகும் (217)
2529 ஓந்தியின்பெயர் -- ஓமா னோதி யோத்தியோந்திப்பெயர் (218)
2530 மூஞ்சூற்றின்பெயர் -- சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூ-- றாகுஞ் சுவவுமப் பெயராமே (219)
2531. பெருச்சாளியின் பெயர் -- மூடிகங் களதமுந் துருப்பெருச்சாளி. (220)
2532. காரெலியின் பெயர் -- கருப்பைகாரெலி. (221)
2533. சீறெலியின் பெயர் -- சிகிரி சீறெலி. (222)
2534. அகழெலியின் பெயர் -- இரும்பனகழெலி. (223)
2535. இல்லெலியின் பெயர் -- ஆகுவில்லெலி. (224)
2536. கெவுளியின் பெயர் -- புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள் -- பல்லி கெவுளிப் பெயராகும்மே. (225)
2537. எறும்பின் பெயர் -- உறவி பிலஞ் சுலோபம் பிபீலிகை யெறும்பே. (226)
2538. கறையான் பெயர் -- சிதலை யாழல் செல்லே கறையான். (227)
2539. தேளின் பெயர் -- தெறுக்கால் விருச்சிக நளிவிடந் தேளே. (228)
2540. மற்றுந்தேளின் பெயர் -- நளியே துட்டன் விடமு
ளென்பதுமாம். (229)
2541. இந்திரகோபத்தின் பெயர் -- ஈயன் மூதாதம் பலமிந்திர கோபம். (230)
2542. விலங்கின் பொதுப் பெயர் -- மாவு மிருகமு மானுங்குரங்க மு- மாகும் விலங்கின் பொதுப்பெயராகும். (231)
2543. விலங்கின் வாலின் பெயர் -- தோகை வாலதி கூலம் வேசகம் --
வால தென்ப விலாங் கூலமு மாகும். (232)
2544. விலங்கின்வாற்கீழிடத்தின் பெயர் -- வாலின் கீழ் வெருகம். (233)
2545. விலங்கின் கொம்பின் பெயர் -- கோடு மருப்பு முலவையுங் கொம்பே. (234)
2546. மற்றும்விலங்கின் கொம்பின் பெயர் -- சிருங்கமும் விடாணமுமப்
பெயர்தெரிக்கும். (235)
2547. புலாலின் பெயர் -- புறணி புலாலே புலையு மாகும். (236)
2548. மற்றும் புலாலின் பெயர் -- ஊழ்த்தசைபூதியென்றுரைக்கப்படுமே. (237)
2549. இறைச்சியின் பெயர் -- ஊழ்த்த றசையுந் தடியூன் வள்ளுரம் - பிசிதம் விடக்குத்தூவும் பூழ்தியு மிறைச்சி. (238)
2550. ஆவினிறைச்சியின் பெயர் -- ஆவினிறைச்சி வள்ளுரமாகும். (239)
2551. முடைநாற்றத்தின் பெயர் -- பூழ்தி யூழ்த்தல் புலவு முடையே. (240)
2552. தோலின் பெயர் -- சருமங் கிருத்திமம் வடகந் துவக்கு - வுரிவையுரியதள் புறணி பச்சை -- துருத்தி பத்துந் தோலென் றாகும். (241)
2553. இரத்தத்தின் பெயர் -- செந்நீர் குருதி சோரி யெருவை புண் - ணீர் சோணிதங் கறைசுடுவனுதிர--மின்னவை யிரத்த மென்னலாகும். (242)
2554. சூலின் பெயர் -- பீளுஞ் சினையுங் கருவுஞ்சூ லென்ப. (243)
விலங்கினாண்மரபு
2555. விலங்கினாண்பெயர்-களிறும் போத்துங் கலையுங் கடுவனும்- பகடுஞ் சேவு மொருத்தலுந் தகரு-மேறு மும்பலு மேட்டையு மாவு-மோரியுஞ் சேவலும் விலங்கி னாண்பெயர் (244)
2556 அவற்றுள்-களிறென்னுபெயர்-கரியுஞ் சுறவுங் கேழலுங் களிறே (245)
2557 போத்தென்னும்பெயர்-மரையான் காரான் காட்டாப் புல்வாய் புலி *சலசாதியனைத்தும் போத்தே (246)
--------------
*சலசாதியனைத்தும் என்றது-சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை இவ்வாறனையும் "நீர்வாழ் சாதியுள*றுபிறப்புரிய" என்ற தொல்காப்பியம்-பொருள், மரபியல் சூ-ஆல் உணர்க.
2558 மற்றும்போத்தென்னும்பெயர்-யானை வெருகு குதிரை போத்தே (247)
2559 கலையென்னும்பெயர்-மானு முசுவுங் கலையென வருமே (248)
2560 கடுவனென்னும்பெயர்-கவியும் பூஞையுங் கடுவனென்ப (249)
2561 பகடென்னும்பெயர்-யானையு மெருமையும் பெற்றமு மற்றிவை பான்மை-யிலுரைக்கிற் பகடென்றாமே (250)
2562 சேவென்னும்பெயர்-குதிரை யெருது புல்வாய் சேவெனல்
2563 ஒருத்தலென்னும்பெயர்-கவரி யானை பன்றி கரடி-யுரியவாகு மொருத்தற் பெயர்க்கொடை (252)
2564 தகரென்னும்பெயர்-துருவாடும் வேழமும் யாளியுஞ் சுறாவும்- தகரெனு நாமஞ் சாற்றப் பெறுமே (253)
2565 ஏறென்னும்பெயர்-புலியுழை மரையாப் புல்வா யெருமை-யரிசு றாச்சங் கேயேறெனலாகும் (254)
2566 உம்பலென்னும்பெயர்-யானையும் யாடு மும்பலென்ப (255)
2567 எட்டையென்னும்பெயர்-எருமையும் வெருகு மேட்டை யென்ப (256)
2568 மாவென்னும்பெயர்-குதிரை யானை பன்றி மாவே (257)
2569 ஓரியென்னும்பெயர்-முசுவு நரியு மோரி யாகும் (258)
2570 சேவலென்னும்பெயர்-கோழியு மன்னமுஞ் சேவலாகும் (259)
விலங்கின்பெண்மரபு
2571 விலங்கின்பெண்பாற்பொதுப்பெயர்-பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவு-மாவுமானும் பிடியு நாகும்-மந்தியு மூடுங் கடமையு மென்வை-பிறவும் விலங்கின் பெண்பாலாமே (261)
2572 பிணையென்னும்பெயர்-அவற்றுள்-உழையு நாயும் பன்றியும் புல்வாயும்-பிணையெனும் பெயர்க்கொடை பேசப்படுமே (262)
2573 பாட்டியென்னும்பெயர்-பன்றியு நாயும் பாட்டியென்றாகும் (263)
2574 மற்றும்பாட்டியென்னும்பெயர்-நரியிற் பாட்டி நடை பெற்றியலும்-ஒரு சார்விலங்கின் பெண்பெயர்க்குரைப்பர் (264)
2575 பெட்டையென்னும்பெயர்-ஒட்டகங் குதிரை கழுதை மரைசிங்கம்-பெட்டை யென்னும் பெயர்க்கொடை பெறுமே (265)
2576 பிணாவென்னும்பெயர்-பன்றி புல்வாய் நாயென மூன்றும்- பின்றாக் காட்சிப் பிணாவொடு வருமே (266)
2577 ஆவென்னும்பெயர்-எருமையும் பசுவும் மரையுமா வென்ப (267)
2578 ஆனென்னும்பெயர்-ஆவு மெருமைம மரையு மானே (268)
2579 பிடியென்னும்பெயர்-கரியும் யூகமுங் கவரியும் பிடியே (269)
2580 நாகென்னும்பெயர்-மரையும் பெற்றமு மெருமையு நாகே (270)
2581 மற்றும்நாகென்னும்பெயர்-நந்து நீர்வாழ் சாதியு நாகே (271)
2582 மந்தியென்னும்பெயர்-குரங்கும் யூகமு முசுவ மென்றிவை- வருங்காற் பெண்பெயர் மந்தியென்றாகும் (272)
2583 மூடுகடமையென்னும்பெயர்-மூடுங் கடமையு மாடல பெறாவே (273)
2584 பெண்பிணாவென்னும் பெயர்கள்-பெண்பா லெவையும் பெண்ணும் பிணாவுமாம் (274)
2585 ஆணென்னும்பெயர்-ஆண்பா லெவையு மாணெனப் படுமே
விலங்கின்பிள்ளைமரபு
2586 விலங்கின்பிள்ளைப்பெயர்-குருளையுங் குட்டியும் பறழும் பிள்ளையு-மறியுங் கன்றுங் குழவியும் பார்ப்பும்-மகவும் விலங்கின் பிள்ளைப் பெயரே. (276)
2587 குருளை, பறழ், குட்டியென்னும்பெயர்கள்-அவற்றுள்-புலி முயல் பன்றி நரிநா யென்றிவை-குருளையும் பறழுங் குட்டியு மாகும, (277)
2588 பிள்ளையென்னும்பெயர்-பிள்ளைப் பெயர்நா யொழியப் பெறுமே (278)
2589. மறியென்னும்பெயர் - ஆடுங்குதிரையுமா னழுங்குமறியெனல்.
2590. கன்றென்னும்பெயர் - கலையு மானுங் கழுதையு மரையும்-பசுவு
மெருமையுங் கடமையும் யானையு-மொட்டகமுங் கவரியுங் கராமுங் கன்றென்ப. (280)
2591 குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பென்னும்பெயர்கள்- குரங்கு முதலாய்க் கோட்டில் வாழம்-விலங்கின் பெள்ளைப் பெயரினை விளம்பிற்-குழவியு மகவுங் குட்டியும் பிள்ளையும்-பறழும் பார்ப்புமப் பண்பா கும்மே (281)
2592 பறழ், குட்டியென்னும்பெயர்கள்-வெருகு நரியு முயலு மென்றிவை-பறழுங் குட்டியு மாகும் பண்பே (282)
2593 பிள்ளை, பார்ப்பு ,பறழென்னும்பெயர்கள்-பிள்ளையும் பார்ப்பும்
பறழுமென் பெயர்க-டள்ளருஞ் சிறப்பிற் றவழ்வன பெறுமே (283)
2594 குழவியென்னும்பெயர்-யானையுங் கடமையு மரையு மெருமையு-மானுங் குழவிப் பெயரோடடையும். (284)
2595 குருளை கன்றென்னும்பெயர்கள்-குருளையுங் கன்று மானிற் கொளலே. (285)
2596 குழவியென்னும்பெயர்-குழவி முசுவின் குணநடை பெறுமே (286)
2597 பிள்ளையெனும்பெயர்-நந்தி னேற்றையும் மானின் குருளையும்- வந்துழி-யொருசார் வழங்கும் பிள்ளைப்பெயர் (287)
2598 பறழ்குட்டியென்னும்பெயர்கள்-*பாக்கனுமணிலும்பறழொடு குட்டி (288)
-------------
*பாக்கன்-பூனை
2599 பார்ப்பு, பிள்ளையென்னும்பெயர்கள்-பார்ப்பும்பிள்ளையுந் தவழ் சாதிக்குரிய. (289)
2600 விலங்கின்கூட்டத்தின்பெயர்-சாலம் வியூகம் யூதம் விருந்தங்- குலமார்கணமும் விலங்கின் கூட்டம் (290)
3-வது பாம்பின்வகை
2601 பாம்பின்பெயர்-அரவு கட்செவி யங்கதம் வியாளம்-உரகம் பன்னக நாகஞ் சர்ப்ப-மரியே மாசுணம் புயங்கம் பாந்தள்-பணியகிதந்த சூகம் போகி-விடதரங் கும்பி நசங்கா கோதர-மராளஞ்சக்கிரி யனைத்தும் பாம்பே (291)
2602 மற்றும்பாம்பின்பெயர்-வாகுவவகதங் கூடபதமும் பாம்பே (292)
2603 சாரைப்பாம்பின்பெயர்-துண்ட மிலஞ்சி சாரைப் பாம்பே (293)
2604 மண்டலிப்பாம்பின்பெயர்-மண்டலியாவுங் கோளகமாகும் (294)
2605 கண்குத்திப்பாம்பின்பெயர்-மாலுதாசனன் மற்றது கண்குத்தி
2606 பாம்பின் படத்தின் பெயர் - பையும் பணமும் பாம்பின் படமே.
2607 பாம்பின் படப்பொறியின் பெயர் - உத்தியுந் துத்தியு முரகபடப் பொறி. (297)
2608 நஞ்சின் பெயர் - காளாங் காரி கரள நீலங்கர - மாலால மாலங் கடுவிட நஞ்சே. (298)
2609 பாம்பினச்சுப்பல்லின் பெயர் - கட்செவி நஞ்சு காலும்பல் தட்டம். (299)
2610 நாகரவண்டின் பெயர் - நாகர வண்டினாம நொள்ளை. (300)
2611 சிலந்தியின் பெயர் - சிலம்பி யுலூதை காவன் சிலந்தி. (301)
2612 உளுவின் பெயர் - உளுவென் கிளவி யுசுவாகு மென்ப. (302)
2613 நாங்கூழின் பெயர் - நாங்கூழக் கிளவி பூநாகமு மாகும். (303)
2614 உலண்டின் பெயர் - கோற்புழு வுலண்டு கீட மாகும். (304)
2615 புழுவின் பெயர் - கீடமும் பொட்டுங் கிருமியும் புழுவே. (305)
4-வது சலசரவகை
2616 மகரமீனின் பெயர் - மானே சுறாக்கலை மகரமீனின் பெயர். (306)
2617 மற்றுமகரமீனின் பெயர் - மீனே றென்பதும் விளம்பப் பெறுமே. (307)
2618 இறான்மீனின் பெயர் - இறவே யிறான்மீன். (308)
2619 கெளிற்றுமீனின் பெயர் - கெளிறு கெளிற்றுமீன். (309)
2620 பெருமீனின் பெயர் - யானைமீன் பனைமீன் றிமிலம் பெருமீன். (310)
2621 யானைமீனைவிழுங்குமீனின் பெயர் - யானையை விழுங்குமீன் றிமிங்கிலமாகும். (311)
2622 அம்மீனைவிழுங்குமீனின் பெயர் - அம்மீனை விழுங்குமீன் றிமிங்கில கிலமே. (312)
2623 ஆரான்மீனின் பெயர் - ஆரலாரான்மீன். (313)
2624 கெண்டைமீனின் பெயர் - சபரங் கெண்டைமீன். (314)
2625 மலங்குமீனின் பெயர் - ஏனையு நூறையு மலங்கென் றாகும். (315)
2626 அயிரையின் பெயர் - அயிரை நொய்ம்மீன் சிறுமீ னாகும். (316)
2627 மீன்பொதுப்பெயர் - மயிலையு மானு மச்சமு மீனமும் - புழலு மீனின் பொதுப்பெய ராகும். (317)
2628 முதலையின் பெயர் - சிஞ்சு மார மிடங்கர் வன்மீ - னிங்கிவை கராவே காரமுதலை யென்ப. (318)
2629 ஆண்முதலையின் பெயர் - கராவதனாணெனக்கருதல் வேண்டும். (319)
2630 சிப்பியின் பெயர் - இப்பி சுத்தி சிப்பி யாகும். (320)
2631 பறவையென்னும் பெயர் - தோற்சிற கெல்லாம் பறவை யெனப்படும். (321)
2632 ஆமையின் பெயர் - கமடங் கூர்மங் கச்சப முறுப்படக்கி-கடிப் புமாமைப் பெயராகும்மே. (322)
2633 பெண்ணாமையின் பெயர் -துளி பெண்ணாமை யாமெனச் சொல்லுப. (323)
2634 சங்கின் பெயர் - நந்து சுத்தி நாகு பணிலம் - வண்டு கோடு வளையே சுரிமுகங் - கம்பு வெள்ளை யிடம்புரி சங்கே. (324)
2635 மற்றுஞ்சங்கின் பெயர் - தராவுமதன்பெயர்சாற்றப் பெறுமே. (325)
2636 வலம்புரிச்சங்கின் பெயர் - வலம்புரி கொக்கரை. (326)
2637 சலஞ்சலத்தின் பெயர் - சலஞ்சலம் பணிலம். (327)
2638 இடம்புரிச்சங்கென்னும் பெயர் - இப்பி யாயிரஞ் சூழ்ந்த திடம்புரி. (328)
2639 வலம்புரிச்சங்கென்னும் பெயர் - இடம்புரி யாயிரஞ் சூழ்ந்தது வலம்புரி. (329)
2640 சலஞ்சலமென்னும் பெயர் - வலம்புரி யாயிரஞ் சூழ்ந்தது சலஞ்சலம். (330)
2641 பாஞ்சசன்னியமென்னும் பெயர் - சலஞ்சலமா யிரஞ்சூழ்ந்தது பாஞ்ச சன்னியம். (331)
2642 நத்தையின் பெயர் - கருநந்து நாகு சுரிமுக நத்தை. (332)
2643 கிளிஞ்சிலின் பெயர் - ஏரலு மெருந்து மூரலுங் கிளிஞ்சில். (333)
2644 தவளையின் பெயர் - அரிமண் டூகந் தேரை தவளை. (334)
2645 மற்றும்தவளையின் பெயர் - நுணலையும் பேகமு நுவல்பெயர் பெறுமே. (335)
2646 ஞெண்டின் பெயர் - கள்வ னலவ னள்ளி கர்க்கடகங் – குளிரே கவைத்தாண் ஞெண்டின் கூற்றே. (336)
2647 ஆண்ஞெண்டின் பெயர் - அலவ னாண்ஞெண்டாகு மென்ப. (337)
2648 பலகறையின் பெயர் - பட்டி கவடி யலகு பலகறை. (338)
2649 அட்டையின் பெயர் - உருவே சளூக மட்டையென மொழிப. (339)
எட்டாவது -- மாப்பெயர்வகை முற்றிற்று.
ஆக சூத்திரம் - 2649
-----------------------------------------------------------
எட்டாவது -- மாப்பெயர்வகை - பெயர்ப்பிரிவு.
புள்வகை.
2311. அன்னத்தின்பெயர்-எகினம், அஞ்சம், ஒதிமம், மென்னடை, வக்கிராங்கம், விகங்கம். (6)
2312. மற்றுமன்னத்தின்பெயர்-பிணிமுகம், மராளம். ஆக(8)
2313. அன்னத்திறகின்பெயர்-தூவி. (1)
2314. மயிலின்பெயர்-சிகி, நவிரம், மஞ்ஞை, பிணிமுகம், சிகண்டி, மயூரம், கேதாரம், ஒகரம், சிகாவளம், ஞமலி, கலாபி, பீலி, தோகை, கேகயம்.
(14)
2315. மயிற்றோகையின்பெயர்-சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், தொங்கல், தூவி. (6)
2316. மற்றுமயிற்றோகையின்பெயர்-பீலி, கலாபம், கூழை. ஆக(9)
2317. விரிதருதோகையின்பெயர்-மேசகம். (1)
2318. மயிற்குரலின்பெயர்-அகவல், ஆலல், ஏங்கல். (3)
2319. மயிற்சிகையின்பெயர்-அநந்தரம். (1)
2320. இறகினடிமுள்ளின்பெயர்-முருந்து. (1)
2321. கருடன்பெயர்-வைனன், உவணன், வைனதேயன், பறவை வேந்தன், பன்னகவைரி, கலுழன், தார்க்கியன், சௌரி. (8)
2322. மற்றும்கருடன்பெயர்-இமையிலி. ஆக (9)
2323. கழுகின்பெயர்-பவணை, உவணம், சகுந்தம், புண்டரம், எருவை, கங்கம். (6)
2324. மற்றுங்கழுகின்பெயர்-பூகம். ஆக (7)
2325. சக்கரவாகப்புள்ளின்பெயர்-நேமிப்புள், சகோரம். (2)
2326. பெருங்குருகின்பெயர்-யானையுண்குருகு. (1)
2327. எண்காற்புள்ளின்பெயர்-சிம்புள், வாருண்டம், அம்பரவாணம், சம்பரம், வருடை, துரோணம், சரபம். (7)
---------
2328. பருந்தின் பெயர்--பாறு, சேனம். கங்கம். (3)
2329. மற்றும் பருந்தின் பெயர்--பாரசிகை. ஆக (4)
2330. நிலாமுகியின்பெயர்--சகோரம், பேராந்தை. (2)
2331. பொய்யாப்புள்ளின்பெயர்-சலாங்கு (1)
2332. அசுணமாவின்பெயர்--இசயறிபறவை, கேகயப்புள் (2)
2333. சாதகப்புள்ளின்பெயர்--சாரங்கம். (1)
2334,. வானம்பாடியின்பெயர்.--கலிங்கம். (1)
2335. மற்றும் வானம்பாடியின்பெயர்--மேகப்புள். ஆக (2)
2336..கிளியின்பெயர்--சாரு, வன்னி, அவந்திகை, தத்தை, கீரம்,
கிள்ளை. (6)
2337. மற்றுங்கிளியின்பெயர்--அரி, சுவாகதம்,சுகம். ஆக (9)
2338. குயிலின்பெயர்--காளகண்டம், கோரகா, பரபுட்டம், கோகி
லம்,பிகம். (5)
2339. கோட்டான்பெயர். கூகா, குடிஞை, குரால், கௌசிகம்,
ஊமன், நிசாசரி, உலூகம். (8)
2340. பெருங்கோட்டான்பெயர்--கௌசிகம், ஊமன், குடிஞை,
கூகை, பெரும்புள். (2)
2341. அன்றிலின்பெயர்--கவுஞ்சம், கிரவுஞ்சம். (2)
2342. காடையின்பெயர்--கபிஞ்சலம், குறும்பூழ். (2)
2343. கரிக்குருவியின்பெயர்--காரி,பிள்ளை, கபிலம், கஞ்சனம், கயவாய். (5)
2344. வலியன்பெயர்--கஞ்சனம், கிகிணி, கஞ்சரீடம், வயவன்,
பாரத்துவாசம். (5)
2345. காரிப்பிள்ளையின்பெயர்--வஞ்சுளன், வயவன், வயான். (3)
2346. கோழியின்பெயர்--குக்குடம், குருகு, வாரணம். (3)
2347. மற்றுங்கோழியின்பெயர்--ஆண்டலைப்புள், காலாயுதம். ஆக (5).
2348. சம்பங்கோழியின்பெயர்--கம்புள். (1)
2349. நிலங்கின்பெயர்--பூழ். (1)
2350. கானாங்கோழியின்பெயர்--காதம்பம். (1)
2351. கருங்கிளியின்பெயர்--கீரம், கில்ளை, அரி. (3)
2352. கரும்புறாவின்பெயர்--கபோதம், பாராவதம். (2)
2353. புறாப்பொதுவின்பெயர்--தூதுணம், கபோதம், களரவம். (3)
2354. கவுதாரியின்பெயர்--சிரவம். (1)
2355. பகண்டையின்பெயர்--சில்லை. (1)
2356. நாகணவாய்ப்புள்ளின்பெயர்--பூவை, சாரிகை. (2)
2357. கல்சிலையின்பெயர்--பல்லி. (1)
2358. உள்ளான்பெயர்--உள்ளல். (1)
2359. மாடப்புறாவின்பெயர்--கன்மேய்வு, காளபதம். (2)
2360. தூக்கணங்குருவியின்பெயர்--சிதகம், சிந்தன். (2)
2361. இராகப்புள்ளின்பெயர்--மிதுனம்,கின்னரம். (2)
2362. தலையிலாக்குருவியின்பெயர்--மழைக்குயில். (1)
2363. சிச்சிலியின்பெயர்--சிரல்,கவுதம்,பொன்வாய்ப்புள், தித்திரி, (4)
2364. மீனெறிசிறுபறவையின்பெயர்--சிரல். (1)
2365.. ஊர்க்குருவியின்பெயர்-- கலிங்கம், சகடம், குலிங்கம். (3)
2366. மற்றுமூர்க்குருவியின்பெயர்--புலிங்கம். *ஆக(4)
2367. காகத்தின்பெயர்--கரடம்,கொடி,பலிபுட்டம், காரி, வாயசம்,
கரும்பிள்ளை, அரிட்டம். (7)
2368. அண்டங்காக்கையின்பெயர்--காலோலம். (1)
2369. நீர்க்காக்கையின்பெயர்--அர்க்கம், கரண்டம். (2)
2370.. செம்போத்தின்பெயர்--குக்கில், சகோரம். (2)
2371. சிவலின்பெயர்--கோரசம், புல், இதல். (3)
2372. ஆந்தையின்பெயர்--இருடி, பிங்கலை, கின்னரம். (3)
2373. பேராந்தையின்பெயர்--சகோரம். (1)
2374. கொய்யடிநாரையின்பெயர்--குருகு, வண்டானம். (2)
2375. பெருநாரையின்பெயர் - போதா, பிதா. (2)
2376. கருநாரையின்பெயர் - சிகரி. (1)
2377. வெண்ணாரையின்பெயர் -சாரசம். (1)
2378. கொக்கின்பெயர் - குரண்டம், வலாகம், பகம். (3)
2379. நீர்வாழ்பறவையின்பெயர் - உன்னம், கிராமம், உற்குரோசம்,
கின்னரம். (4)
2380. துருஞ்சிலின்பெயர் - ஆலாலம். (1)
2381. வாவலின்பெயர் - அஞ்சலிகை. (1)
2382. வண்டின்பெயர் - அறுபதம், ஞிமிறு, அளி, ஆர்பதம், பிரமரம்,
சிதரம், தேன், மந்தி, சிலீமுகம், தும்பி, கரும்புள், சஞ்சாலிகம், கழுது,
புண்டரீகம், சுரும்பு, சந்திரகம், சூதம், கேசரம், மதுகரம், கீதம், மா, அரி,
சஞ்சரிகம், வடு, வரி. (25)
2383.ஆண்வண்டின்பெயர் - சுரும்பு, மதுகரம், தும்பி. (3)
2384. தேனீயின்பெயர் - பிரசம், மதுகரம், சரகம். (3)
2385. ஈசலின்பெயர் - சிதல். (1)
2386. மின்மினியின்பெயர் - கச்சோதம். (1)
2387. சிள்வீட்டின்பெயர் - சில்லை, நெடி, சில்லிகை, சிமிலி.(4)
2388. விட்டிற்பறவையின்பெயர் - பதங்கம், சலபம். (2)
2389. கொதுகின்பெயர் - நுளம்பு, நிலம்பி, உலங்கு. (3)
2390. மற்றுங்கொதுகின்பெயர் - அலகு, சகல், நொள்ளல். (3)
2391. சலகொதுகின்பெயர் - மசகம், துள்ளல். (2)
2392. நுளம்பின்பெயர் - அஞலம், ஞலவல், நொள்ளல். (3)
2393. புட்பொதுவின்பெயர் - பதங்கம், பக்கி, பதகம், பத்திரி, விகங்
கம், சகுந்தம், விகிரம், சகுனம், குடிஞை, பறவை, குரீஇ, வியம், பிணிமுகம்,
ககம், போகில். (15)
2394. இறகின்பெயர் - பறை, சதனம், பக்கம், பிஞ்சம், சிறை, தூவி,
சிறகு, தோகை, கூழை, சதம், குரல், கூரல், வாசம், பத்திரம், இறை.(15)
2395. மற்றுமிறகின்பெயர் - ஈர், ஈ, கச்சம். *ஆக (18)
2396. முட்டையின்பெயர் - அண்டம், சினை, கோசம், அரிட்டம்.(4)
2397. வாயலகின்பெயர் - துண்டம், சுவவு, மூக்கு. (3)
2398. புள்ளின்மூக்கின்பெயர் - சுச்சு. (1)
2399. புட்சிறகடித்துப்புடைத்துக்கூப்பிடுதலின்பெயர் - ஓசனித்தல்.
2400. எழாலுமயிலுமொழிந்தபறவையினாண்பெயர் - சேவல். 1
2401. மயிலெழாலென்னுமிரண்டினாண்பெயர் - போத்து. 1
2402. கோழிகூகைகளின்பெண்பெயர் - அளகு. 1
2403. மற்றும்அவ்வளகென்னும்பெயர்- மயில். 1
2404. புள்ளின்பெண்பெயர் - பேடை, பெடை, பெட்டை. 3
2405. பறவைக்குஞ்சின்பெயர் - பிள்ளை, பார்ப்பு. 2
2406. பறவைக்குரலின்பெயர் - பயிர். 1
2407. புட்கூட்டத்தின்பெயர் - தொழுதி. 1
2408. புட்கூட்டத்தோசையின்பெயர் - துழனி. 1
விலங்கின்வகை.
2409. சிங்கத்தின்பெயர்- ஆளி, வாளரி, அரி, மிருகாபதி, கோளரி, கண்டீரவம், பஞ்சானனம், சீயம், மடங்கல்,கேசரி, முடங்குளை, அரிமா,
வயப்போத்து, பஞ்சநகாயுதம், வயமா, வயப்புலி. 13
2410. யானையாளியின்பெயர் - அறுகு, பூட்கை. 2
2411. புலியின்பெயர் -வியாக்கிரம், வேங்கை, வியாளம், பாய்மா, தரக்கு, சித்திரகாயம், சார்த்தூலம், வயவரி, புண்டரீகம், வல்லியம், கொடுவரி,
உழுவை, குயவரி, வயமா, புல், தீவி. 13
2412. யானையின்பெயர் - தும்பி, கரிணி, தோல்,சுண்டாலி, கும்பி,
கறையடி, குஞ்சரம், பகடு, களிறு, பூட்கை, கரி,மாதங்கம், வழுவை, வேழம்,
வாரணம், மொய், உம்பல், எறும்பி, உவா, பொங்கடி, தந்தி, அத்தி, கடிவை
கயம், நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம், புழைக்கை, வல்விலங்கு, நால்
வாய், புகர்முகம், மதாவளம், தந்தாவளம், மருண்மா, கைம்மா, பெருமா, மத
மா, வயமா, மந்தமா, மதகயம், ஆம்பல், இபம், போதகம், களபம். 43
2413. மதயானையின்பெயர் - மதகரி, தந்தி, களிறு. 1
2414.உதவிசெய்யானையின்பெயர் - யூதநாதன். 1
2415. பெண்யானையின்பெயர் - அத்தினி, கரிணி, வடவை, பிடி. 4
2416.யானைக்கன்றின்பெயர் - கயந்தலை, போதகம், துடியடி, களபம்,
கயமுனி. 5
2417.யானைநுதலின்பெயர் - மதகம், கும்பம், மத்தகம். 3
2418.யானைத்துதிக்கையின் பெயர் - தொண்டை, தொண்டலம், சுண்டை. 4
2419. யானைக்கைந்நுனியின்பெயர்-புட்கரம். 1
2420. யானைக்கடைக்கண்ணின்பெயர் - நிரியாணம். 1
2421. யானைக்கொம்பின்பெயர் - தந்தம், எயிறு, கோடு, மருப்பு. 4
2422. யானைகொம்பினடுப்பெயர் - பிருதுமானம். 1
2423. யானைமுன்காலின்பெயர் - காத்திரம். 1
2424. யானைப்பின்காலின்பெயர்- அபரம். 1
2425. யானைமுதுகின்பெயர் - மஞ்சு. 1
2426. யானைமத்தகத்தின்பெயர்- மதோற்கடம். 1
2427. யானைவாலின்பெயர்-தாலவட்டம். 1
2428. யானைவானுனியின்பெயர் - வேசகம். 1
2429. யானைவாற்கீழிடத்தின்பெயர்- வெருகம். 1
2430. யானைச்செவியின்பெயர்- கன்னம், தாலம். 2
2431.யானைநடுச்செவியின்பெயர்- வட்டம். 1
2432.யானைசெவியடியின்பெயர் - சூளிகை. 1
2433.யானைவாயின்பெயர் - தளவு. 1
2434.யானைமதச்சுவட்டின்பெயர் - கடம், கொடிறு, கரடம். 3
2435. யானையுமிழ்நீரின்பெயர் -விலாழி. 1
2436. யானைப்பல்லடியின்பெயர் - கரீரம். 1
2437.யானைமதத்தின்பெயர் - கடம், தானம், கடாம். 3
2438.யானைத்தோட்டியின்பெயர் - அங்குசம். 1
2439.யானைப்பிடரின்பெயர் - இயாதம். 1
2440.யானைப்புகர்முகத்தின்பெயர் - சிந்துரம். 1
2441. யானைநுதலணிசிந்தூரத்தின்பெயர்--சாமோற்பலம். (1)
2442. யானைமேற்றவிசின்பெயர்--இலகடம். (1)
2443. யானைநோயின்பெயர்--பாகலம். (1)
2444. யானைபடுகுழியின்பெயர்--பயம்பு. (1)
2445. யானைபடுக்குமிடத்தின்பெயர்--வாரி. (1)
2446. யானைநுதற்பட்டத்தின்பெயர்--ஒடை* (1)
2447. யானைத்திரளின்பெயர்--கடகம். (1)
2448. பிறந்த பெயரைப்பெற்ற யானைபெறும்பெயராவன--கிரசகம், வநசரம், நதிசரம். (3)
2449. குதிரையின் பெயர்--பரி, பாடலம்,பாய்மை, புரவி, அரி, கன
வட்டம், அத்திரி, கோரம்,வாசி, துரங்கம், மா, கந்துகம், தூசி, இவுளி, துரகம், துரகதம், கோடகம், சயிந்தவம், கோணம், குரகதம், கந்தருவம், கிள்ளை
மண்டிலம், கற்கி, அச்சுவம், உன்னி, அயம், கொக்கு,கொய்யுளை, சடிலம்
ஞந்தம், கண்ணுகம், கோடை, வயமா. (34)
2450. .பாண்டியன்குதிரையின்பெயர்.--கனவட்டம் (1)
2451. சோழன்குதிரையின்பெயர்--கோரம். (1)
2452. சேரன்குதிரையின்பெயர்--பாடலம். (1)
2453. குறுநிலமன்னர்குதிரையின்பெயர்--கந்துகம். (1)
2454. குதிரைமயிரின்பெயர்--சுவல், குசை,கூந்தல், மேசகம். (1)
2455.. குதிரைக்குளம்பின்பெயர்--குரம், குரச்சை, குரசு. (3)
2456. குதிரைபோமார்க்கத்தின்பெயர்--மாதிகம். (1)
2457. குதிரைவாலின்பெயர்--வாலதி, தோகை. (2)
2458. பசுவின்பெயர்--கோ, பெற்றம், நிரை, குடஞ், சுட்டு, தேனு,
சுரை, பத்திரை, கபிலை, சேதா, ஆ, சுரபி, ஆன். (12)
2459. தெய்வப்பசுவின்பெயர்--தேனு,கபிலை. (2)
2460. நற்பசுவின்பெயர்--பத்திரை. (1)
2461. குணமில்லாப்பசுவின்பெயர்--சுதை* (2)
2462, ஓரீற்றுப்பசுவின்பெயர்--கிட்டி. (1)
2463. மலட்டுப்பசுவின்பெயர்--வற்சை. (1)
2464. கன்றைவளர்க்கும்பசுவின்பெயர்--வற்சலம் * (1)
2465. பசுவின்முலையின்பெயர்--சுரை. (2)
2466. பசுக்கோட்டத்தின்பெயர்--பசுநிலை. (1)
2467. மடியின்பெயர்--செருத்தல், ஆபீனம். (2)
2468. பசுவின்கன்றின்பெயர்--தன்னம், வற்சம், தனம். (3)
2469. பசுக்கூட்டத்தின்பெயர்--காலி,நிரை, தொறு, கதுப்பு, காலேயம். (5)
2470. எருதின்பெயர்--பாறல், சே, விடை,பாண்டில், பெற்றம், பூணி, குண்டை, புல்லம், காளை, இறால், கொட்டியம், மூரி. (12)
2471. ஏற்றின்பெயர்--குத்தம், விடபம், கூளி, நந்தி, உக்கம், இடபம். (6)
2472. பேரெருதின்பெயர்--பகடு, தூரியம், பாறல். (3)
2473. பொதியெருதின்பெயர்--தூரியம்,தூர்வகம். (2)
2474. எருதின்முரிப்பின்பெயர்--இமில். (1)
2475. பொலியெருதின்பெயர்--ஏறு, கூளி, இடபம். (3)
2476. எருமையின்பெயர்--காரான், மகிடம், கவரி, காரா, காசா, சைரிபம், வடவை, கயவாய், மேதி, மூரி. (10)
2477. எருமைப்போத்தின்பெயர்--பகடு, கடா. (2)
2478. மலட்டெருமையின்பெயர்--மைம்மை. (1)
2479. ஆட்டின்பொதுப்பெயர்-- அருணம், கொச்சை, துருவை, மேழகம், அசம், உதள், துள்ளல், மறி, மை, வெறி, கொறி , புருவை, சாகம். (13)
2480. செம்மறியாட்டின்பெயர்--உதள், கொறி, துருவை, ஒருவு
புருவை, அருணம், மேடம். (7)
2481. துருவாட்டின்பெயர்--துருவை, கொறி, மை. (3)
2482. துருவாட்டேற்றின்பெயர்--மேழகம், கம்பளம், தகர், திண்ணகம், ஏழகம், கடா. (6)
2483. ஆட்டுக்குட்டியின்பெயர்--குட்டன், சோரன், மறி, பறழ். (4)
2484. வெள்ளாட்டின்பெயர்--வெள்ளை, வற்காலி, கொச்சை. (3)
2485. வெள்ளாட்டாணின் பெயர் - மேடம், செச்சை, சாகம், மோத்தை,
அசம், மை, கடா. (7)
2486. வெள்ளாட்டுமறியின் பெயர் - வெள்ளை. (1)
2487. பள்ளையாட்டின் பெயர் - வெள்ளை, வற்காலி. (2)
2488. வரையாட்டின்பெயர் - வருடை, சரபம். (2)
2489. காட்டாவின்பெயர் - ஆமா, கவையமா. (2)
2490. மரையின்பெயர் - ஆவிதம், கானக்குதிரை. (2)
2491. ஒட்டகத்தின்பெயர் - அத்திரி, நெடுங்கழுத்தல், தாசேரகம்,
கனகதம், அயவாணம், இரவணம். (6)
2492. கழுதையின்பெயர் - வேசரி, கோகு, கரம், வாலேபம், காளவாய்,
கர்த்தபம். (6)
2493. கோவெறுகழுதையின் பெயர் - வேசரி, அததிரி. (2)
2494. கரடியின்பெயர் - பல்லூகம், எண்கு, உளியம், பல்லம், மிளிறு, எலு, குடாவடி. (7)
2495. கவரிமாவின்பெயர் - எகினம், மானமா, பட்டம். (3)
2496. சவரியின்பெயர் - ஆகு, கவரி, சீகரம். (3)
2497. மற்றுஞ்சவரியின்பெயர் - சாமரம், வெண்மயிர்.*ஆஉ(5)
2498. மானின்பெயர் - அரிணம், நவ்வி, குரங்கம், சாரங்கம், மறி,
உழை, சூனம், எணம், பிணை. (9)
2499. மானேற்றின்பெயர் - இரலை, வச்சயம். (2)
2500. மற்றும்மானேற்றின்பெயர் - கலை, கருமான். (2)
2501. புல்வாயின்பெயர் - இரலை. (1)
2502. பன்றியின்பெயர் - கேழல், குரோடம், கிரி, கிடி, கிருட்டி,
மோழல், வராகம், போத்திரி, கோலம், எறுழி, வல்லுளி, ஏனம், சூகரம்,
கனலி, இருளி, கருமா, கோணி, போழ்முகம், அரி, மைம்மா, களிறு.(21)
2503. முட்பன்றியின்பெயர் - சல்லியம், முளவு, எய், முண்மா. (4)
2504. மற்றுமுண்மாவின்பெயர்- சல்லகம். (5)
2505. முட்பன்றிமுள்ளின்பெயர் - சல்லம், சலம். (2)
2506. குரங்கின்பெயர் - வலிமுகம், கவி, மர்க்கடம், அரி, வானரம்,
கோடரம், கீசகம், கோலம், பிலவங்கம், தோரணம், மந்தி, யூகம், நிரந்தரம்,
நாகம். (14)
2507 பெண்குரங்கின் பெயர் -- மந்தி, யூகம். (2)
2508 கருங்குரங்கின் பெயர் -- காரூகம், யூகம். (2)
2509 முசுவின் பெயர் -- ஓரி, கலை, கள்வன். (3)
2510 மற்றுமுசுவின் பெயர் -- கோலாங்கூலம், மைம்முகன். ஆக (5)
2511 நாயின் பெயர் -- ஞமலி, உச்சி, எகினம், குக்கன், கூரன், சூரன்,
சாரமேயன், சுனகன், புரோகதி, குரைமுகன், ஞாளி, சுணங்கன், முடுவல்,
பாட்டி, சுவா, பாசி. (16)
2512 பெண்ணாயின் பெயர் -- முடுவல். (1)
2513 செந்நாயின் பெயர் - விருகம், கொக்கு, அண்டிகம். (3)
2514 முயலின் பெயர் -- சசம், வயம். (2)
2515 நரியின் பெயர் -- ஓரி, இகலன், ஊளன், சம்பு, செந்து, குரோட்டம்,
கோமாயு, சிருகாலன், ஒண்டன், பூரிமாயு. (10)
2516 முதுநரியின் பெயர் -- இகலன், கோமாயு, ஓரி. (3)
2517 கொம்பிலாமிருகத்தின் பெயர் -- குமரம். (1)
2518 பூஞையின் பெயர் -- வெருகு, மண்டலி, இற்புலி, விலாளம், பவனம்,
ஓதி, மார்ச்சாலம், பாக்கன், பூசை, அலவன், விடருகம். (11)
2519 காட்டுப்பூஞையின் பெயர் -- கான்புலி, மண்டலி, பாக்கன். (3)
2520 ஆண்பூஞையின் பெயர் -- விலாளம், கடுவன், வெருகு (3)
2521 அழுங்கின் பெயர் -- பளிங்கு, மறி. (2)
2522 அழுங்கின் குருளையின் பெயர் -- மறி. (1)
2523 நாவியின் பெயர் -- மறுவி, மிருகமதம். (2)
2524 கத்தூரியின் பெயர் -- மான்மதம், துருக்கம், நரந்தம், நானம். (4)
2525 கீரியின் பெயர் -- நகுலம், காத்திரி, தீர்வை. (3)
2526 உடும்பின் பெயர் -- முசலிகை, கோதா, தடி. (3)
2527 அணிலின் பெயர் -- வரிப்புறம், வெளில், இலுதை. (3)
2528 பச்சோந்தியின் பெயர் -- கோம்பி, சரடம், சாயானதம், முசலி,
ஓதி, தண்டு, ஓத்தி, மயிற்பகை, காமரூபி. (9)
2529 ஓந்தியின் பெயர் -- ஓமான், ஓதி, ஓத்தி. (3)
2530 மூஞ்சூற்றின் பெயர் -- சூரன், சுண்டன், சுந்தரி, சுவவு. (4)
2531 பெருச்சாளியின்பெயர் -- மூடிகம், களதம், உந்துரு (3)
2532 காரெலியின்பெயர் -- கருப்பை (1)
2533 சிறெலியின்பெயர் -- சிகரி (1)
2534 அகழெலியின்பெயர் -- இரும்பன் (1)
2535 இல்லெலியின்பெயர் -- ஆகு (1)
2536 கெவுளியின்பெயர் -- புள்ளி, கோகிலம், பொந்து, மனைக்கோள், பல்லி (5)
2537 எறும்பின்பெயர் -- உறவி, பிலஞ்சுலோபம், பிபீலிகை (3)
2538 கறையான்பெயர் -- சிதலை, ஆழல், செல் (3)
2539 தேளின்பெயர் -- தெறுக்கால், விருச்சிகம், நளிவிடம் (4)
2540 மற்றுந்தேளின்பெயர் -- நளி, துட்டன், விடமுள். ஆக (6)
2541 இந்திரகோபத்தின்பெயர் -- ஈயல், மூதா, தம்பலம். (3)
2542 விலங்கின்பொதுப்பெயர் -- மா, மிருகம், மான், குரங்கம். (4)
2543 விலங்கின் வாலின்பெயர் -- தோகை, வாலதி, கூலம், வேசகம்,
இலாங்கூலம். (5)
2544 விலங்கின்வாற்கீழிடத்தின்பெயர் -- வெருகம் (1)
2545 விலங்கின்கொம்பின்பெயர் -- கோடு, மருப்பு, உலகை. (3)
2546 மற்றும்விலங்கின்கொம்பின்பெயர் -- சிருங்கம், விடாணம். (2)
2547 புலாலின்பெயர் - புறணி, புலை., (2)
2548 மற்றும்புலாலின்பெயர் -- ஊழ்த்தசை பூதி. ஆக (4)
2549 இறைச்சியின்பெயர் -- ஊழ்த்தல், தரை, தடி, ஊன், வள்ளுரம்
பிசிதம், விடக்கு, தூ, பூழ்தி. (9)
2550 ஆவினிறைச்சியின்பெயர் -- வள்ளுரம். (1)
2551 முடைநாற்றத்தின்பெயர் -- பூழ்தி. ஊழ்த்தல். புலவு. (3)
2552 தோலின்பெயர் --சருமம், கிருத்திமம், வடகம், துவக்கு, உரிவை
உரி, அதள், புறணி, பச்சை, துருத்தி. (10)
2553 இரத்தத்தின்பெயர்- - செந்நீர், குருதி, சோரி, எருவை,
புண்ணீர், சோணிதம், கறை, சுடுவன், உதிரம். (9)
2554 சூலின்பெயர் -- பீள். சினை. கரு. (3)
விலங்கினாண்மரபு
2555 விலங்கினாண்பெயர்-களிறு, போத்து, கலை, கடுவன், பகடு,
சே, ஒருத்தல், தகர், ஏறு, உம்பல், ஏட்டை, மா, ஓரி, சேவல். (14)
2556 அவற்றுள்களிறென்னும்பெயர்-கரி சுறவு கேழல் ஆகியமூன்றற்குமாம் (3)
2557 போத்தென்னும்பெயர்-மரை, ஆன், காரான், காட்டா, புல்வாய், புலி ,சலசாதி. (7-ம்)
2558 மற்றும்போத்தென்னும்பெயர்-யானை, பூனை, குதிரை (1-ம்)
2559 கலையென்னும்பெயர்-மான், முசு (2-ம்)
2560 கடுவனென்னும்பெயர்-குரங்கு, பூஞை (2-ம்)
2561 பகடென்னும்பெயர்-யானை ,எருமை, பெற்றம் (3-ம்)
2562 சேவென்னும்பெயர்-குதிரை, எருது, புல்வாய் (3-ம்)
2563 ஒருத்தலென்னும்பெயர்-கவரி, யானை, பன்றி, கரடி (4-ம்)
2564 தகரென்னும்பெயர்-துருவாடு, வேழம், யாளி, சுறா (4-ம்)
2565 ஏறென்னும்பெயர்-புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை,
பன்றி,சுறா, சங்கு (9-ம்)
2566 உம்பலென்னும்பெயர்-யானை, யாடு (2-ம்)
2567 ஏட்டையென்னும்பெயர்-எருமை வெருகு (2-ம்)
2568 மாவென்னும்பெயர்-குதிரை, யானை, பன்றி (3-ம்)
2569 ஓரியென்னும்பெயர்-முசு, நரி (2-ம்)
2570 சேவலென்னும்பெயர்-கோழி, அன்னம் (2-ம்)
விலங்கின்பெண்மரபு
2571 விலங்கின்பெண்பாற்பொதுப்பெயர்-பிணை, பாட்டி, பெட்டை, பிணா, ஆ, ஆன், பிடி, நாகு, மந்தி, மூடு, கடமை (11-ம்)
2572 பிணையென்னும்பெயர் -- உழை, நாய், பன்றி, புல்வாய். (4-ம்)
2573 பாட்டியென்னும்பெயர் -- பன்றி, நாய். (2-ம்)
2574 மற்றும்பாட்டியென்னும்பெயர் -- நரி, ஒருசார், விலங்கின்
பெண்பாற்கும் பொது. (6-ம்)
2575 பெட்டையென்னும்பெயர் -- ஒட்டகம், குதிரை, கழுதை, மரை,
சிங்கம். (5-ம்)
2576 பிணாவென்னும்பெயர் -- பன்றி, புல்வாய், நாய். (3-ம்)
2577 ஆவென்னும்பெயர் -- எருமை, பசு, மரை. (3-ம்)
2578 ஆனென்னும்பெயர் -- ஆ, எருமை, மரை. (3-ம்)
2579 பிடியென்னும்பெயர் -- கரி, யூகம், கவரி. (3-ம்)
2580 நாகென்னும்பெயர் -- மரை, பெற்றம், எருமை. (3-ம்)
2581 மற்றும்நாகென்னும்பெயர் -- நந்து, நீர்வாழ்சாதி. (2-ம்)
2582 மந்தியென்னும்பெயர் -- குரங்கு, யூகம், முசு. (3-ம்)
2583 மூடுகடமையென்னும்பெயர் -- ஆடு. (1-ம்)
2584 பெண்பிணாவென்னும்பெயர் -- அஃறிணையில்வரும்
பெண்பாலிவற்றிற்குமாம். ()
2585 ஆணென்னும்பெயர் -- அஃறிணையில்வரும்
ஆண்பாலெவற்றிற்குமாம். ()
விலங்கின்பிள்ளைமரபு
2586 விலங்கின்பிள்ளைப்பெயர் -- குருளை, குட்டி, பறழ், பிள்ளை
மறி, கன்று, குழவி, பார்ப்பு, மகவு. (9)
2587 குருளை பறழ் குட்டியென்னும்பெயர்கள் - புலி, முயல், பன்றி,
நரி, நாய். (5-ம்)
2588 பிள்ளையென்னும்பெயர் -- நாயொழிந்தவற்றிற்காம். (1)
2589 மறியென்னும்பெயர் -- ஆடு, குதிரை, மானன், அழுங்கு. (4-ம்)
2590 கன்றென்னும்பெயர் -- கலை, மான், கழுதை, மரை, பசு, எருமை
கடவை யானை ஒட்டகம் கவரி கராம். (11-ம்)
2591 குழவு, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பென்னும் பெயர்கள் -
குரங்கு முதன்மரக்கோட்டில் வாழ்விலங்கின் பிள்ளைகட்காம். ()
2592 பறழ், குட்டியென்னும் பெயர்கள் - வெருகு, நரி, முயல். (3-ம்)
2593 பிள்ளை, பார்ப்பு, பறழென்னும் பெயர்கள் - தவழ்சாதிகள். (1-ம்)
2594 குழவியென்னும் பெயர் - யானை, கடமை, மரை, எருமை, மான். (5)
2595 குருளை, கன்றென்னும் பெயர்கள் - மான் (1-ம்)
2596 குழவியென்னும் பெயர் - முசு (1-ம்)
2597 பிள்ளையென்னும் பெயர் - சங்கேறு, மான்குருளை (2-ம்)
2598 பறழ், குட்டியென்னும் பெயர்கள் - பாக்கன், அணில் (2-ம்)
2599 பார்ப்பு, பிள்ளையென்னும் பெயர்கள் - தவழ்சாதிக்குரியன. (1-ம்)
2600 விலங்கின் கூட்டத்தின் பெயர் - சாலம், வியூகம், யூதம், விருந்தம்,
குலம், கணம். (6-ம்)
3. பாம்பின் வகை
2601 பாம்பின் பெயர் - அரவு, கட்செவி, அங்கதம், வியாளம், உரகம்,
பன்னகம், நாகம், சர்ப்பம், அரி, மாசுணம், புயங்கம், பாந்தள், பணி, அகி,
தந்தசூகம், போகி, விடதரம், கும்பிநசம், காகோதரம், மராளம், சக்கிரி. (21)
2602 மற்றும்பாம்பின் பெயர் - வாகுவவகதம், கூடபதம். ஆக (26)
2603 சாரைப்பாம்பின் பெயர் - துண்டம், இலஞ்சி. (2)
2604 மண்டலிப்பாம்பின் பெயர் - கோளகம். (1)
2605 கண்குத்திப்பாம்பின் பெயர் - உதாசனன். (1)
2630 சிப்பியின் பெயர் - இப்பி, சுத்தி (2)
2631 பறவையென்னும் பெயர் - தோற்சிறகுள்ளனவற்றிற்கெல்லாம். (*)
2632 ஆமையின் பெயர் - கமடம், கூர்மம், கச்சபம், உறுப்படக்கி, கடிப்பு (5)
2633 பெண்ணாமையின் பெயர் - துளி. (1)
2634 சங்கின் பெயர் - நந்து, சுத்தி, நாகு, பணிலம், வண்டு, கோடு,
வளை, சுரிமுகம், கம்பு, வெள்ளை, இடம்புரி. (11)
2635 மற்றுஞ்சங்கின் பெயர் - தரா. (1)
2636 வலம்புரிச்சங்கின் பெயர் - கொக்கரை. (1)
2637 சலஞ்சலத்தின் பெயர் - பணிலம். (1)
2638 இடம்புரிச்சங்கின் பெயர் - இப்பியாயிரஞ் சூழ்ந்தது.
2639 வலம்புரிச்சங்கென்னும் பெயர் - இடம்புரிச்சங்காயிரஞ் சூழ்ந்தது.
2640 சலஞ்சலமென்னும் பெயர் - வலம்புரிச்சங்காயிரஞ் சூழ்ந்தது.
2641 பாஞ்சசன்னியமென்னும் பெயர் - சலஞ்சலஞ்சங்காயிரஞ்சூழ்ந்தது.
2642 நத்தையின் பெயர் - கருநந்து, நாகு, சுரிமுகம். (3)
2643 கிளிஞ்சிலின் பெயர் - ஏரல், எருந்து, ஊரல். (3)
2644 தவளையின் பெயர் - அரி, மண்டூகம், தேரை. (3)
2645 மற்றும்தவளையின் பெயர் - நுணலை, பேகம். ஆக (2)
2646 ஞெண்டின் பெயர் - கள்வன், அலவன், நள்ளி, கர்க்கடகம்,
குளிர், கவைத்தாள். (6)
2647 ஆண்ஞெண்டின் பெயர் - அலவன். (1)
2648 பலகறையின் பெயர் - பட்டி ,கவடி, அலகு. (3)
2649 அட்டையின் பெயர் - உரு, சளூகம். (2)
எட்டாவது - மாப்பெயர்வகை பெயர்பிரிவு முற்றிற்று.
-----------------------------------------------------------
ஒன்பதாவது - மரப்பெயர்வகை. – சூத்திரங்கள்
2650 ஐந்தருவருக்கமாவன - சந்தானந் தேவதாரங் கற்பகம் – மந்தாரம் பாரிசாதமைந்தருவருக்கம். (1)
2651 இவ்வைவகைமரத்தின் பெயர் - இம்மர மைந்துந் தெய்வமரமென்ப. (2)
2652 கற்பகஞ்சேர்கொடியின் பெயர் - கற்பகஞ் சேர்கொடி காமவல்லி. (3)
2653 சந்தனமரத்தின் பெயர் - சாந்த மலயசஞ்சந்திர திலகமேய்ந்த *ரஞ் சந்திவை சந்தனம். (4)
2654 செஞ்சந்தனத்தின் பெயர் - பிசனஞ் செஞ்சந்தனத்தின் பெயர். (5)
2655 அகிலின் பெயர் - அகருவும் பூழிலுங் காழ்வையுமகிலே. (6)
2656 மற்றும்அகிலின் பெயர் - பகரிற் காக துண்டமுமாகும். (7)
2657 குங்குமமரத்தின் பெயர் - மரவமுந் துருக்கமுங் குங்குமமரமே. (8)
2658 சண்பகத்தின் பெயர் - சம்பகஞ்செண்பகஞ் சண்பகமரமே. (9)
2659 சிறுசண்பகத்தின் பெயர் - சாதி மாலதி சிறுசண்பகமே. (10)
2660 செவ்வந்தியின் பெயர் - பட்டிகை செவ்வந்தி (11)
2661 புரசைமரத்தின் பெயர் - பிரமதருப் பலாசம் புரசைமரப் பெயர். (12)
2662 மற்றும் புரசைமரத்தின் பெயர் - புனமுருக் கென்றும் புகலப் பெறுமே. (13)
2663 ஆலமரத்தின் பெயர் - வடமரந் தொன்மரம் பூதவங் கான்மரம் *ழுமர நியக்குரோதங் கோளியா லென்ப. (14)
2664 தேக்கின் பெயர் - சாதி சாகந் தேக்கந் தருவே. (15)
2665 வேங்கைமரத்தின் பெயர் - பீதசாலங்கணி திமிசு திமில் வேங்கை. (16)
2666 கொன்றைமரத்தின் பெயர் - இதழிகடுக்கைதாமங்கொன்றை. (17)
மரப்பெயர் வகை
2667 மற்றுங்கொன்றை மரத்தின் பெயர் - மதலை யார்க்கு வதமென்றாகும். (18)
2668 அரசின் பெயர் - சுவலையச் சுவத்தம் பிப்பலம் போதி திருமரங் குஞ்சராசனம் பணை கணவமரசு. (19)
2669 ஆச்சாமரத்தின் பெயர் - சாலமராமர மாவுமாச்சா. (20)
2670 மகிழமரத்தின் பெயர் - வகுள மிலஞ்சி கேசர மகிழே. (21)
2671 அசோகின் பெயர் - பிண்டி செயலைகா கோளி யசோகு. (22)
2672 மருதின் பெயர் - அருச்சுனம் பூதவ மருதமாகும். (23)
2673 இறலியின் பெயர் - இரத்தியிறலி. (24)
2674 தான்றியின் பெயர் - கலித்துருமந்தரன்றி. (25)
2675 குராவின் பெயர் - கோட்டங்குடிலங்குராவாகும்மே. (26)
2676 மற்றுங்குராவின் பெயர் - கோபி தாரமுங் குராமரமாகும். (27)
2677 நாவலின் பெயர் - நாவலா ருகதம் சம்பு நேரேடம். (28)
2678 குழிநாவலின் பெயர் - சாதே வங்குழி நாவலாகும். (29)
2679 வேம்பின் பெயர் - நிம்பம் வேம்பு பிசிதமு மாகும். (30)
2680 அனிச்சமரத்தின் பெயர் - நறவஞ் சுள்ளி யருப்பலமனிச்சம். (31)
2681 பாதிரியின் பெயர் - பாடலம் புன்காலி பாதிரி யாகும். (32)
2682 ஞாழலின் பெயர் - நாகம் பலினி ஞாழலாகும். (33)
2683 கோங்கின் பெயர் - கன்னி காரந் துருமோற் பலமே – குயாகூன் பிணரே கோங்கா கும்மே. (34)
2684 நாரத்தையின் பெயர் - நார நரந்த நாரங்க நாரத்தை. (35)
2685 குமிழின் பெயர் - கூம்பல் கடம்பல் குமிழெனக் கூறுப. (36)
2686 அதிமதுரத்தின் பெயர் - யட்டி மதுரமதுக மதிங்கம் - தட்டின்றுரைப்பிற் சல்லியு மதுவே. (37)
2687 மஞ்சாடி மரத்தின் பெயர் - திலகமஞ்சாடி. (38)
2688 குடைவேலின் பெயர் - உடைகுடைவேலே. (39)
2689 புன்னையின் பெயர் - புன்னைபுன்னாகம். (40)
2690 சுரபுன்னையின் பெயர் - வழைசுரபுன்னை. (41)
2691 வெட்சியின் பெயர் - சிந்தூரமும் குல்லையுஞ் செச்சையும் வெட்சி. (42)
2692 செருந்தியின் பெயர் - பஞ்சரஞ் செருந்தி செங்கோடு மாகும். (43)
2693 அலரியின் பெயர் - கவீரங் கணவீரங் கரவீர மலரி. (44)
2694 மற்றுமலரியின் பெயர் - அயமர மடுக்கு மென்ப தாகும். (45)
2695 முண்முருக்கின் பெயர் - கவிரே கிஞ்சுக முண்முருக் காகும். (46)
2696. பெருங்குறிஞ்சியின்பெயர் - கோரண்டம் குரண்டகம் *பெருங்குறிஞ்சி யாகும். 47
-----------
*குறிஞ்சி மருதோன்றி. இது ஐந்துவகைப்படுதலால் ஐவ்வண்ணம் எனக் காரணப் பெயர்பெறும்.
2697. பொன்வண்ணக்குறிஞ்சியின்பெயர் - பீதை பொன்வண்ணக் குறிஞ்சி யாகும். 48
2698. வாடாக்குறிஞ்சியின்பெயர் - குரவகம்வாடாக் குறிஞ்சி யாகும்.
2699. மழைவண்ணக் குறிஞ்சியின் பெயர் - பாணநீலி மழைவண்ணக் குறிஞ்சி. 50
2700. பவளக்குறிஞ்சியின்பெயர் - நீடு தீண்டியம் பவளக் குறிஞ்சி. 51
2701. மகரவாழையின்பெயர் - மருகுந்தானமு மகரவாழை. 52
2702. இருவேலியின்பெயர் - வேரிபீ தகமூல கந்தமிரு வேலி. 53
2703. குருக்கத்தியின்பெயர் - அதிக முத்தக மாதவி வாசந்தி – குருகு நாகரி யிவை, குருக்கத்தியாகும். 54
2704. பலாவின்பெயர் - பாகல் வருக்கை பனசம் பலாவே. 55
2705. ஈரப்பலாவின்பெயர் - ஆசினி பலாச மீரப் பலாவே. 56
2706. மாமரத்தின்பெயர் - மாந்தியுஞ் சூதமுங் கொக்கு மாவு - மாமிர முமாழையு மாமர மாகும். 57
2707. புளிமாவின்பெயர் - நாளினி யிபங்க மாழை சிஞ்ச - மாம்பிர மெகினஞ் சூதம் புளிமா. 58
2708. தேமாவின்பெயர் - ஆமிரஞ் சக்காரஞ் சேதாரந் தேமா. 59
2709. புளியமரத்தின்பெயர் - சிந்தூரஞ் சிந்தகந் திந்திருணி யெகினஞ் - சஞ்சீவ கரணி யாம்பிலம் புளியே. 60
2710. இலவின்பெயர் - பொங்கர் சான்மலி பூரணியிலவே. 61
2711. இலந்தையின்பெயர் - குல்லரி குவலி கோற்கொடி கோலி - இரத்திரிவதரி யிலந்தையாகும். 62
2712. இலந்தைப்பழத்தின்பெயர் - அதன்பழங் கோலமுங் கோண்டையுமாகும். 63
2713. அத்தியின்பெயர் - அதவே கோளி யுதும்பர மத்தி. 64
2714. விளாவின்பெயர் - விளவு கபித்தம் வெள்ளில் விளாவே. 65
2715.காயாவின்பெயர் - பூவை யஞ்சனி யல்லிபுன்காலி - காசை வச்சி காயா வாகும். 66
2716. களாவின்பெயர் - களவங்களாவே. 67
2717. நுணாவின் பெயர் - தணக்கு நுணாவே. (68)
2718. எலுமிச்சையின் பெயர் - சம்பீர முருகு சதாபலஞ் சம்பள -
மருணமிலிகுச மெலுமிச்சையாகும். (69)
2719. நெல்லியின் பெயர் - ஆமலக நெல்லி யாகு மென்ப. (70)
2720. கடுக்காய்மரத்தின் பெயர் - அரிதகி கடுவேபத்தியன் கடுக்காய். (71)
2721. மாதுளையின் பெயர் - மாதுளங்க மாதுளங்கழுமுண்மாதுளையே.(72)
2722. தாதுமாதுளையின் பெயர் - தாடிமந் தாதுமாதுளையென்ப. (73)
2723. வில்வத்தின் பெயர் - கூவிளம் வில்வமாலூரங் கூவிளை. (74)
2724. மற்றும் வில்வத்தின் பெயர் - மாவிளம்வில்லுவ மற்றதன்பெயரே. (75)
2725. வஞ்சியின் பெயர் - வானீரம்பிசின் வஞ்சியாகும். (76)
2726. செங்கருங்காலியின் பெயர் - சிறுமாரோடஞ் செங்கருங்காலி. (77)
2727. கருங்காலியின் பெயர் - கதிரங்கருங்காலி. (78)
2728. ஈந்தின் பெயர் - கர்ச்சூர மீந்தே. (79)
2729. வெட்பாலையின் பெயர் - குடசங் கிரிமல்லிகை வெட்பாலை. (80)
2730. அழிஞ்சிலின் பெயர் - அழிஞ்சில் சேமர மங்கோலமாகும். (81)
2731. கடம்பின் பெயர் - கதம்பமும் விசாலமு நீபமுங் கடம்பே. (82)
2732. மற்றுங்கடம்பின் பெயர் - இந்துள மராவும் வந்துழிக் கொளலே. (83)
2733. குருந்தமரத்தின் பெயர் - குந்தங்குருந்தே. (84)
2734. செம்பரத்தையின் பெயர் - மந்தாரஞ் செம்பரத்தை யாமெனவகுப்பர்.(85)
2735. வெண்ணொச்சியின் பெயர் - சிந்து வார நீர்க் குண்டி வெண்ணொச்சி. (86)
2736. தேற்றுமரத்தின் பெயர் - சில்ல மில்லங் கதலிகந் தேற்றே. (87)
2737. ஆத்தியின் பெயர் - ஆரேதாதகி சல்லகி யாத்தி. (88)
2738. அகத்தியின் பெயர் - அச்சமுனியே கரீரமகத்தி. (89)
2739. பச்சிலைமரத்தின் பெயர் - பச்சிலை தமாலம் பசும்பிடி யாகும். (90)
2740. முருங்கையின் பெயர் - கருஞ்சனஞ் சிக்குரு முருங்கை யாகும். (91)
2741. எட்டியின் பெயர் - காளங் காஞ்சிரை கோடர மெட்டி. (92)
2742. சதுரக்கள்ளியின் பெயர் - வச்சி ராங்கங் கண்டீர்வ மயிலி - வச்சிரம்
விருக்கஞ் சதுரக்கள்ளி. (93)
2743. வாகையின் பெயர் - சிரீடம் பாண்டில் வாகை யாகும். (94)
2744. ஓடையின் பெயர் - உலவையோடை. (95)
2745. உழிஞ்சிலின் பெயர் - உன்னமுழிஞ்சில். (96)
2746. சீக்கிரியின் பெயர் - முன்னந்துரிஞ்சி லுசிலை சீக்கிரி. (97)
2747. இலுப்பையின்பெயர்-குலிக மிருப்பை மதூகமிலுப்பை. (98)
2748. மற்றுமிலுப்பையின்பெயர்-சந்தானகரணி யெனவுஞ் சாற்றும்.
2749. தெங்கின்பெயர்-தாழையிலாங்கலி தென்னையுந் தெங்கே. (100)
2750. மற்றுந்தெங்கின்பெயர்-நாளி கேர மென்பது நவிலும். (101)
2751. பன்னாடையின்பெயர்-நாரி நெய்யரி யதன்பன்னாடை. (102)
2752. கமுகின்பெயர்-கந்தி பூகம் பூக்கமுங் கமுகே. (103)
2753. கூந்தற்கமுகின்பெயர்-தாலங்கூந்தற் கமுமாகும்மே. (104)
2754. பாக்கின்பெயர்-கோலந் துவர்க்காய் பாகு பாக்கே. (105)
2755. பனையின்பெயர்-போந்துதாலம் பெண்ணைபுற்பதி-தாளிகரும் புறம்புற்றாளியும்பனை. (106)
2756. இளம்பனையின்பெயர்-போந்தையிளம்பனை. (107)
2757. கூந்தற்பனையின்பெயர்-தாளிகூந்தற்பனை. (108)
2758. வாழையின்பெயர்-கதலி யரம்பை கவரே சேகிலி-திரணபதி யோசை வாழையின்பெயரே. (109)
2759. மூங்கிலின்பெயர்-வெதிரும் வேயும் விண்டும் விண்டடலும்- பணையுநெடிலும் வரையு மரியுந்-தட்டையுந் திகிரியுந் தடமு மமையும்- வேரலுங் கழையுந் தூம்பும் வேழமுங்-காம்புங் கிளையுங் கீசகமும் வேணு- மோங்கலு முளையு முடங்கலுஞ் சந்தியு-மூங்கிலின் பெயர் முந்தூழு மாகும். (110)
2760. மற்றுமூங்கிலின்பெயர்-சானகி திரிக ணேமி பாதிரி-யாம்ப றொளையுஞ் சபமுமதன்பெயர். (111)
2761. மூங்கிலரிசியின்பெயர்-வேர றோரை மூங்கிலரிசிப்பெயர். (112)
2762. தாழையின்பெயர்-முண்டக மடியே கைதை முடங்கல்- கண்டல் கேதகை முசலிதாழை. (113)
2763. பட்டிகையின்பெயர்-பறிவைபட்டிகை. (114)
2764. கரும்பின்பெயர்-கழைவேழ மிக்குக் கன்னல்கரும்பே. (115)
2765. பூவாதுகாய்க்குமரத்தின்பெயர்-கோளி பூவாது காய்க்கு மரமே.(116)
2766. மற்றும்பூவாதுகாய்க்குமரத்தின்பெயர்-வானரப் பிரத்தி பத்திமும் வரையார். (117)
2767. வண்டுணாமலர்மரமாவன-சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர்மரம். (118)
2768. வன்னிமரத்தின்பெயர்-கலிசஞ் சமியே குலிசம்வன்னி. (119)
2769. ஓமைமரத்தின்பெயர்-ஓமையுகாவே. (120)
2770. புனமுருங்கையின்பெயர்-புன்குபுனமுருங்கை. (121)
2771. ஒடுவின்பெயர்-ஒடுவேயுடுப்பை. (122)
2772. புன்கின்பெயர்-நத்தமாலம் புன்கு காஞ்சனமு நவிலும். (123)
2773. ஆண்மரத்தின்பெயர்-எகினே சேமர மாண்மர மென்ப. (124)
2774. பராய்மரத்தின்பெயர்-பசுநாவிட்டில்புக்குப்பராய்மரம். (125)
2775. நறுவிலியின்பெயர்-அலியுஞ்செலுவும் வலியு நறுவிலி. (126)
2776. செம்புளிச்சையின்பெயர்-தேவ தாரஞ் செம் புளிச்சை யென்ப. (127)
2777. புனவெலுமிச்சையின்பெயர்-புனவெலு மிச்சை குருந்தெனப் புகலுவர். (128)
2778. எருக்கின்பெயர்-அருக்கஞ் சல்லியகரணி யெருக்கே. (129)
2779. ஆமணக்கின்பெயர்-எரண்டஞ்சித்திரமென்பதாமணக்கே. (130)
2780. பருத்தியின்பெயர்-பரியேபன்னல் கார்ப் பாசம்பருத்தி. (131)
2781. மருந்தென்னும்பெயர்-புல்லு மரனும் புதலும் பூடும்-வல்லியும் பெயர்பெறுமருத்துச் சஞ்சீவி. (132)
2782. நால்வகைமருந்தாவன-சல்லிய கரணி சந்தான கரணி-சமயகரணி முதலி லுதித்த-மிருதசஞ்சீவனி மருந்துநால் வகையே. (133)
2783. அத்திரசத்திரந்தைத்த புண்மாற்றுமருந்தின்பெயர்-தைத்தவத்திரஞ் சத்திரந்தணிக்கு - மெய்த்தருமருந்தேசல்லிய கரணி. (134)
2784. துணிபட்டவுறுப்பினைப் பொருத்து மருந்தின்பெயர் - துண்டமான வுறுப்புத் துணையினைச் சந்து செய் மருந்தே சந்தானகரணி. (135)
2785. விரணந்தழும்புகளைநீக்குமருந்தின்பெயர்-விரணமுந் தழும்பு நீக்கி மெய்யினைத் - தகைமைசெய் மருந்தே சமனியகரணி. (136)
2786. உயிர்தருமருந்தின்பெயர்-உயிர்தருமருந்தே மிருதசஞ்சீவனி.
2787. மற்றுமுயிர்தருமருந்தின்பெயர் – அதகமுமமுதுஞ்சீவனியுமென்ன - வுயிர்தரு மருந்தினுறுபெயராகும். (138)
2788. நோய்தீர்க்குமருந்தின்பெயர்-உறுநோய்தீர்க்கும் மருந்துறை யென்ப.(139)
2789. மருந்தின்பெயர்-உறையே குளிய மோடதி யௌடத - மதகமும் யோகமு மருந்தெனலாகும். (140)
2790. மரப்பொதுவின்பெயர்-பாதபந் தாரு தருவே தாவர-மோதிய மூலமரப் பொதுப்பெயரே. (141)
2791. மற்றுமரப்பொதுப்பெயர்-அகமேயங் கிரி விருக்கந் துரும-மகலியஞ் சாதியென் றனைத்து மப்பெயரே. (142)
2792 மரக்கன்றின் பெயர் - போதகம் பிள்ளைபோத்துக் குழவி – காலிள மரத்தின் கன்றின்பெயரே. (143)
2793 மரவுரியின் பெயர் - மரத்தோல் வற்கலை சீரை மரவுரி. (144)
2794 மற்றுமரவுரியின் பெயர் - இறைஞ்சியு மதற்கு வியைந்த பெயரே. (145)
2795 மரக்கொம்பின் பெயர் - கோடே விடபங் கோடரம் பொங்கர் - சாகை கவடு வுலவை தாருச் - சினைபணை கொம்பர் கவலைமரக்கொம்பே. (146)
2796 சேகின் பெயர் - சம்ப மாசினி காழே காழ்ப்புச் - சாரம் வயிரங் கலையரி சேகெனல். (147)
2797 தழையின் பெயர் - உலவை தழையே. (148)
2798 கப்பின் பெயர் - கவையுங் கவரும் கப்பெனலாகும். (149)
2799 இளங்கொம்பின் பெயர் - வளாஅர் மெல்லியன் மற்றிளங்கொம்பே. (150)
2800 தளிரின் பெயர் - வல்லரி குழைமுறி மஞ்சரி கிசலயம் - பல்லவ மலங்கல்கிளை பைந்தளிரெனல். (151)
2801 தளிர்த்தலின் பெயர் - இலிர்த்தலுஞ் சிலிர்த்தலுங் குழைத்தலுந் தளிர்த்தல். (152)
2802 அடிவெண்குருத்தின் பெயர் - முருந்தே முதலிற் செறிவெண் குருத்தே. (153)
2803 மலர்க்கொத்தின் பெயர் - கொத்துமஞ்சரி துணரிணர் தொடர்ச்சி - மற்றிவை யனைத்து மலர்க்கொத்தென்ப. (154)
2804 இலையின் பெயர் - பலாசம் பன்னம் பத்திரந்தகடு - பாசடைதண்ணடை சாகை தமால - மோலைதழை பச்சிலை யுலவையடை யிலைப் பெயர். (155)
2805 மற்றுமிலையின் பெயர் - சதனஞ் சதம்பத் திரிதலமு மாகும். (156)
2806 பரலினுட்படுகுருத்தின் பெயர் - பயினே பரலி னுட்படு குருத்தே. (157)
2807 மொட்டின் பெயர் - கலுவட நனைமுகை கன்னிகை யரும்பே - முகிளங் கலிகை சாலகங் கோரகம் - போகினகை மலரு மொக்குண்மொட்டென்ப.(158)
2808 மலரின் பெயர் - தாமங் குசுமந் தாரேயலர்வீ – போதுசுண்ணஞ் சுமனசம் பூவே - சுமந்துண ரலரி யாலநன் மலர்ப்பெயர். (159)
2809 மலர்த்தாதின் பெயர் - கோசர மகரஞ் சிதரே கொங்கு – கேசரந்து ணரிணர் கிளர்மலர்த்தாதே. (160)
2810 தாதின்றூளின் பெயர் - மகரந்தஞ் சுண்ணந் தாதின் றூளே. (161)
2811 மற்றுந்தாதின்றூளின் பெயர் - பராக மென்றும் பகரப் பெறுமே. (162)
2812 மலர்த்தேனின் பெயர் - மகரந்தமலர்த்தேன். (163)
2813 பூவிதழின் பெயர் - தாது மதழுந் தண்டுந்தோடு - மேடும் பூவி
னிதழ்ப்பெய ரென்ப. (164)
2814 அகவிதழின் பெயர் - அல்லியகவிதழ். (165)
2815 புறவிதழின் பெயர் - புல்லிபுறவிதழ். (166)
2816 மரத்தின் குலையின் பெயர் - தாறும் படுவுஞ் சாறுங் குடும்புங் -
கோடுங் கொத்துமரத்தின் குலையே. (167)
2817 முளையின் பெயர் - காலேயங்குர முளையெனலாகும். (168)
2818 வேரின் பெயர் - தூருஞ் சடையுஞ் சிவையும்வேரே. (169)
2819 கிழங்கின் பெயர் - மூல மூலகங் கந்தங் கிழங்கே. (170)
2820 மற்றுங்கிழங்கின் பெயர் - சகுன மெனவுஞ் சாற்றப் பெறுமே. (171)
2821 சிற்றரும்பின் பெயர் - முகைமுகிழ் மொக்குண் முகிளஞ் சிற்றரும்பே. (172)
2822 உலர்ந்தபூவின் பெயர் - உணங்கல் சாம்பல் வாடலுலர்ந்த பூ. (173)
2823 மலர்ச்சியின் பெயர் - அலர்த லவிழ்தல் விள்ள னகுதன் - மலர்தல் விரிதன் மலர்ச்சிப்பெயரே. (174)
2824 விரிமலரின் பெயர் - இகமலர் வெதிர்தொடர்ப்பூவிரிமலரே. (175)
2825 பழம்பூவின் பெயர் - செம்மல் சாம்பறேம்பலும் பழம்பூ. (176)
2826 விதையின் பெயர் - வீசம்பரலே விச்சுவிரைவிதை. (177)
2827 மற்றும் விதையின் பெயர் - காழுங் கொட்டையு மாகு மென்ப. (178)
2828 பிஞ்சின் பெயர் - வடுவெலுப்பிஞ்சு. (179)
2829 பசுங்காயின் பெயர் - தீவிளிபசுங்காய். (180)
2830 பழத்தின் பெயர் - பலமுங் கனியும் பழமென்றாகும். (181)
2831 கனித்தோலின் பெயர் - கனித்தோல்செகிளுங் காழு மாகும். (182)
2832 காய்மரத்தின் பெயர் - பலினங்காய்மரம். (183)
2833 காயாதமரத்தின் பெயர் - அவகேசியலாமரம். (184)
2834 தழைமரத்தின் பெயர் - மலினந்தழைமரம். (185)
2835 உலர்மரத்தின் பெயர் - வானமுலர்மரம். (186)
2836 ஆண்மரத்தின் பெயர் - அகக்காழ் வன்மர மாண்மர மாகும். (187)
2837 பெண்மரத்தின் பெயர் - புறக்காழ் புன்மரம் பெண்மரமென்ப. (188)
2838 அலிமரத்தின் பெயர் - இருதிறத் தலாதன மரமலி வெளிறே.
2839 இலைக்கறியின் பெயர் - அடைசாகம் பன்னமடகு மிலைக்கறி.
2840 சோலையின் பெயர் - அரிநந் தனவனந் தண்டலை பொழிலே - யாராமந் துடவை தோட்டமுய் யான - முபவன முத்தியானஞ் செய்கான்மரச் செறிவு - சோலை யிளமரக் காவெனச் சொல்லும். (191)
2841 ஊரொடுசேர்ந்த சோலையின் பெயர் - ஊரொடு சேர்ந்த சோலை வன மென்ப. (192)
2842 மலையிடு சேர்ந்த சோலையின் பெயர் - மலையொடு சேர்ந்த சோலையா ராமம். (193)
2843 கழிக்கரைச்சோலையின் பெயர் - கான லென்பது கழிக்கரைச் சோலை. (194)
2844 செய்குன்று சேர்ந்தசோலையின் பெயர் - செய்குன்று சேர்ந்த சோலை தோப்பாகும். (195)
2845 வயல்சூழ் சோலையின் பெயர் - வயல்சூழ்சோலை யிளமரக் காவே. (196)
2846 சிறுதூற்றின் பெயர் - அரிலு மறலும் பதுக்கையுஞ் சிறுதூறு. (197)
2847 குறுங்காட்டின் பெயர் - குறுங்காட்டின் பெய ரிறும்பென மொழிப. (198)
2848 பெருங்காட்டின் பெயர் - பெருங்காடு வல்லை யெனப்பெயர் பெறுமே. (199)
2849 காவற்காட்டின் பெயர் - கணைய மிளையரண் காவற் காடே. (200)
2850 முதுகாட்டின் பெயர் - முதையே யிலை யுதிர் வுமுதுகாடென்ப. (201)
2851 கரிகாட்டின் பெயர் - பொச்சையுஞ் சுரமும் பொதிகரி காடே. (202)
2852 வேலியின் பெயர் - அடைப்புங் காப்பும் வேலியாகும். (203)
2853 மரப்பொந்தின் பெயர் - பொக்குப் பொத்துப்பொய் பொதும்பு பொள்ளல் - பொந்தாமரமெனப் புகன்றனர் புலவர். (204)
2854 முள்ளின் பெயர் - கண்டகமுள்ளே கடுவுமாகும். (205)
2855 தூற்றின் பெயர் - இறும்பே மிடைதூ றெனவிளம் பினரே. (206)
2856 மரச்செறிவின் பெயர் - பொதும்பர் கோடர முலவைமரச்செறிவே. (207)
2857 விறகின் பெயர் - முளரி கறலே முருடுகாழ் காட்ட – ஞெகிழி யிந்தனஞ் சமிதைநீள் விறகே. (208)
2858 முட்செடிப்பொதுவின் பெயர் - முளரி முண்டக முட்செடிப் பொதுவே. (209)
2859. விரிதூற்றின் பெயர் - அதிரல், விரிதூறு. (210)
2860. சுண்டியின் பெயர் - சுச்சுச்சுண்டி. (211)
2861. வறட்சுண்டியின் பெயர் - சுமங்கை வறட்சுண்டி. (212)
2862. ஆவிரையின் பெயர் - பகரியாவிரை. (213)
2863. வஞ்சியின் பெயர் - வானீரம், வஞ்சளம், வஞ்சியாகும். (214)
2864. துத்தியின் பெயர் - கோளியந்துத்தி. (215)
2865. ஆடாதோடையின் பெயர் - ஆடா தோடை வாசை யாகும். ()
2866. சித்திரமூலத்தின் பெயர் - சித்திர மூலங் கொடிவேலி யாகும்.
2867. தும்பையின் பெயர் - துரோணந்தும்பை. (218)
2868. ஆதொண்டையின் பெயர் - தொண்டையாதொண்டை. (219)
2869. மரலின் பெயர் - அரலை மரலாம். (220)
2870. கற்றாழையின் பெயர் - குமரிகற்றாழை. (221)
2871. நாயுருவியின் பெயர் - கரமஞ் சரிநா யுருவியாகும். (222)
2872. கொழிஞ்சியின் பெயர் - கொழிஞ்சியின் பெயர் கோளியென்றாகும்.
2873. ஊமத்தையின் பெயர் - உன்மத்த மூமத்தை. (224)
2874. கஞ்சாவின் பெயர் - கஞ்சங் குல்லை கஞ்சாவாகும். (225)
2875. பொன்னூமத்தையின் பெயர் - மதமத்தை பொன்னூமத்தையாகும். (226)
2876. நீலியின் பெயர் - அவுரி பத்திய நீலி யாகும். (227)
2877. துழாயின் பெயர் - குல்லைமுடி துளவம் வனமுந் துழாயெனல்.
2878. மற்றுந்துழாயின் பெயர் - பிருந்தமு மப்பெயர் பேசப் பெறுமே. (229)
2879. தூதுளையின் பெயர் - தூதுளந் தூதுளை. (230)
2880. வீழியின் பெயர் - விழிமிவீழி. (231)
2881. காஞ்சொறியின் பெயர் - கண்டூதிகாஞ்சொறி. (232)
2882. கிலுகிலுப்பையின் பெயர் - பகன்றைகிலுகிலுப்பை. (233)
2883. தண்ணீர்க்குடத்தின் பெயர் - கான வாழை தண்ணீர்க்குடமே.
2884. பிரம்பின் பெயர் - சாதி வேத்திரஞ் சூரல் பிரம்பே. (235)
2885. கழற்கொடியின் பெயர் - கழங்கு முழல் கர்ச்சூரங் கொடிக்கழல்.
2886. கழற்காயின் பெயர் - கழற்காய் முழலுங் கழங்கு மாகும்.(237)
2887. இண்டின் பெயர் - இண்டை புலிதொடக்கி யீகை யீங்கை - யிண்டென மொழிப வியல் வல்லோரே. (238)
2888. சூரியின் பெயர் - விந்தஞ்சூரி. (239)
2889. புனற்றுளசியின் பெயர் - குல்லைபுனற் றுளசி. (240)
2890 சிறுபூளையின் பெயர் - உழிஞைசிறுபூளை. (241)
2891 பாற்சொற்றிச் செடியின் பெயர் - பாற்சொற்றிபாயசம். (242)
2892 செங்காந்தளின் பெயர் - தோன்றி பற்றையிலாங்கலி செங்காந்தள். (243)
2893 வெண்காந்தளின் பெயர் - கோட றோன்றி கோடை வெண்காந்தள். (244)
2894 வெண்கிடையின் பெயர் - கோடல் வெண் கிடை பூசைவெரு காகும். (245)
2895 காக்கணத்தின் பெயர் - கிகிணி கன்னி காக்கணங் கருவிளை. (246)
2896 வெண்காவிளையின் பெயர் - உயவை வெண்காவிளை. (247)
2897 தாளியின் பெயர் - மஞ்சிகந்தாளி. (248)
2898 சிவேதையின் பெயர் - சிவேதை பகன்றை. (249)
2899 குன்றியின் பெயர் - குஞ்சங்குன்றி. (250)
2900 கொத்தான் பெயர் - நத்தைகொத்தான். (251)
2901 சத்திக்கொடியின் பெயர் - தாடி மஞ்சஞ் சத்திக் கொடியே. (252)
2902 சாறணையின் பெயர் - திரிபுரி சாறடை சாறணையாகும். (253)
2903 சீந்திற்கொடியின் பெயர் - அமுதவல்லி சீந்தில் சீவந்தி யாகும். (254)
2904 பாலையின் பெயர் - பாலை சீவந்தி சீவனி யாகும். (255)
2905 கூதாளியின் பெயர் - துடிகூ தாளங் கூதாளி யென்ப. (256)
2906 கோவையின் பெயர் - விம்பமுந் தொண்டையுங் கொவ்வையுங் கோவை. (257)
2907 சிலந்திக்கொடியின் பெயர் - தலைச்சுருள்வள்ளி சிலந்திக்கொடியே. (258)
2908 வள்ளிக்கொடியின் பெயர் - வள்ளியிலதை வள்ளிக்கொடியே. (259)
2909 பிரண்டையின் பெயர் - வச்சிர வல்லி பிரண்டையாகும். (260)
2910 இசங்கின் பெயர் - இசங்கு குண்டலி முத்தா பலமே. (261)
2911 கக்கரியின் பெயர் - கக்கரிவாலுங்கி. (262)
2912 செங்கிடையின் பெயர் - கந்தூரிசெங்கிடை. (263)
2913 மற்றுஞ்செங்கிடையின் பெயர் - முதலையு மதன்பால் மொழியப் பெறுமே. (264)
2914 முந்திரிகையின் பெயர் - மதுரசங்கோத்தனி முந்திரிகையாகும். (265)
2915 முள்ளுடைமூலமெல்லாவற்றிற்கும் பெயர் - முண்டக முள்ளுடை மூலமென்ப. (266)
2916 இஞ்சியின் பெயர் - நல்ல மல்ல நறுமருப்பிஞ்சி. (267)
2917 வழுதலையின் பெயர் - வழுதுணைவங்கம் பிருகதிவழுதலை. (268)
2918 கையாந்தகரையின் பெயர் - கோகண மறுபதங் கையாந்தகரை. (269)
2919 பொன்னாங்காணியின் பெயர் - சீதை பொன்னாங்காணியாகும். (270)
2920 சிறுகீரையின் பெயர் - சில்லிசாகினி மேகநாதஞ்சிறு கீரை. (271)
2921 சேம்பின் பெயர் - சாகினி சேம்பு சகுடமாகும். (272)
2922 வள்ளையின் பெயர் - நாளிகம்வள்ளை. (273)
2923 பசிரியின் பெயர் - பசிரிபாவிரி. (274)
2924 வெள்ளரியின் பெயர் - உருவாரம்வெள்ளரி. (275)
2925 சிறுகிழங்கின் பெயர் - சுரசஞ்சிறுகிழங்கு. (276)
2926 கருணைக்கிழங்கின் பெயர் - கந்தஞ் சூரணங் கருணைப்பெயரே. (277)
2927 பாகலின் பெயர் - கார வல்லி கூலம் பாகல். (278)
2928 பீர்க்கின் பெயர் - பீரம்பீர்க்கு. (279)
2929 பெரும்பீர்க்கின் பெயர் - படலிகைபெரும்பீர்க்கு. (280)
2930 கொடிக்கொத்தான் பெயர் - நூழில் கொடிக்கொத்தான். (281)
2931 சுரையின் பெயர் - தும்பியுமலாபமுஞ் சுரையாகும்மே. (282)
2932 பேய்ச்சுரையின் பெயர் - புற்கொடிபேய்ச்சுரை. (283)
2933 கொடியின் வகைப்பெயர் - கோற்கொடி மென்கொடி கொடியென் றாகும். (284)
2934 கொடியின் பெயர் - இலதை வல்லி நூழில் கொடிப்பெயர். (285)
2935 வெற்றிலையின் பெயர் - நாகவல்லி மெல்லிலை தாம்பூல மூல வல்லியிலைக் கொடிவெற்றிலை. (286)
2936 மிளகின் பெயர் - கறியு மரீசியுங் காயமுங் கலினையுங் – கோளகமுந் திரங்கலு மிரியலுமிளகே. (287)
2937 ஏலத்தின் பெயர் - இலாஞ்சி துடியே யேல மாகும். (288)
2938 மஞ்சளின் பெயர் - பீதங் காஞ்சனி நிசியரி சனமுட – னோது மரித்திராபமு மஞ்சட்குறுபெயர். (289)
2939 வெண்கடுகின் பெயர் - அந்தில் கடிப்பகை யையவி சித்தார்த்தம் - வெண்சிறு கடுகென விளம்பலாகும். (290)
2940 திப்பிலியின் பெயர் - பிப்பிலி காமன் சிறுமூ லகமே – மாகதி கலினி திப்பிலி யாகும். (291)
2941 கொத்துமலியின் பெயர் - உருளரிசி கொத்துமலியென் றுரைப்பர். (292)
2942 வெண்காயத்தின்பெயர் - காய முள்ளி வெண்காயமாகும் ()
2943 வாசந்தருபலபண்டத்தின்பெயர் - தகரந்தக்கோலங்கோட்டஞ் சாதிக்கா யிலவங்க மேலங் கச்சோல மாஞ்சி பகரும்வா சந்தரும் பண்டப் பெயரே (294)
2944 மல்லிகையின்பெயர் - மாலதி யநங்கம் பூருண்டி மல்லிகை
2945 வனமல்லிகையின்பெயர் - மௌவ லென்பது வனமல் லிகையே (296)
2946 இருவாட்சியின்பெயர் - மயிலை யநங்க மிருவாட்சி (297)
2947 சாதிப்பூவின்பெயர் - கருமுகை பித்திகை சாதியாகும் (298)
2948 முல்லையின்பெயர் - தளவமுல்லை சாதி பிச்சி (299)
2949 ஊசிமுல்லையின்பெயர் - தளவுமாகதிகை திகை யூசிமுல்லை (300)
2950 கொடிமல்லிகையின்பெயர் - விசலிகை யென்ப கொடிமல் லிகையே. (301)
2951 நந்தியாவர்த்தத்தியின்பெயர் - வலம்புரி நந்தியா வர்த்தமாகும்
2952 மருக்கொழுந்தின்பெயர் - தமனக மருக்கொழுந்து (303)
2953 மலைப்பச்சையின்பெயர் - குளவிமலைப்பச்சை (304)
2954 அடம்பின்பெயர் - அடம்புபாலிகை (305)
2955 வெட்டுவேரின்பெயர் - முடிவாழைவெட்டுவேர் (306)
2956 துவரையின்பெயர் – ஆடகிதுவரை. (307)
2957 அவரையின்பெயர் – அவரைசிக்கடி. (308)
2958 உழுந்தின்பெயர் – மாடமுழுந்து. (309)
2959 கடலையின்பெயர் – மஞ்சூரங்கடலை. (310)
2960 காராமணியின்பெயர் - காரா மணியிதை கூலமு மாகும். (311)
2961 பசும்பயற்றின்பெயர் - பாசி முற்கம் பசும்பய றாகும். (312)
2962 கொள்ளின்பெயர் - காணங் குலுத்தங் கொள்ளெனக் கருதுவர். (313)
2963 துவரைஅவரைமுதலியவற்றின்பெயர் - இனையவை முதிரை யென்னவு மாகும். (314)
2964 சோளத்தின்பெயர் - சொன்னலு மிறுங்குஞ் சோளமாகும் ()
2965 வரகின்பெயர் - மருவுகோத்திரவம் வரகெனலாகும் (316)
2966 கருந்தினையின்பெயர் - இறடியுங் கங்குங் கருந்தினையென்ப ()
2967 செந்தினையின்பெயர் - கம்புங்கவலையுஞ்செந்தினை யென்ப ()
2968 பைந்தினையின்பெயர் - எனல்குரனுவணை பைந்தினை யென்ப ()
2969 தினைத்தாளின்பெயர் - அருவி தினைத்தாளிருவியு மாகும் ()
2970 எள்ளின்பெயர் - எண்ணுந் திலமு நூவுமெள்ளாகும் (321)
2971 இளையெள்ளின்பெயர் - குமிகை யிளையெள் (322)
2972 எள்ளிளங்காயின்பெயர் - கவ்வையெள்ளிளங்காயாகும்மே ()
2973 நெல்லின்பெயர் - சொல்லும் விரீகியும் வரியுஞ் சாலியும் - யவமு நெல்லின் பொதுப்பெயராகும் (324)
2974 குளநெல்லின்பெயர் - நீர்வாரங்குள நெல்லாகும்மே (325)
2975 மலைச்சாரல் விளை நெல்லின்பெயர் - ஐவன மலைச்சாரல் விளை நெல்லாகும் (326)
2976 செஞ்சாலியின்பெயர் - செந்நெனன்னெல் செஞ்சாலிப் பெயர்.
2977 பயிரின்பெயர் - பயிரே பசும்புல் பைங்கூழாகும். (328)
2978 பதரின்பெயர் - பதடிபதரே பொல்லு மாகும். (329)
2979 இளஞ்சூலின்பெயர் – இளஞ்சூல்பீட்டை. (330)
2980 இளங்கதிரின்பெயர் – பீளிளங்கதிரே. (331)
2981 கதிரின்பெயர் - எனலுங் குரலுங் கொழுங்கதிரென்ப. (332)
2982 கோதுமையின்பெயர் – கோதிகோதுமை.. (333)
2983 தோரைநெல்லின்பெயர் - இயவை தோரை. (334)
2984 போரின்பெயர் - போர் சும்மை சூடும் போர்ப்பு மாகும். (335)
2985 தூற்றாநெற்சூட்டின்பெயர் - பொலி பொங்கழி தூற்றா நெற்சூடாகும். (336)
2986 வைக்கோலின்பெயர் - வையே பலாலம் வழுது வைக்கோலே.
2987 நெல்லினாற்றின்பெயர் - நாறுநெல்லி னாற்றாகும்மே. (338)
2988 விழலின்பெயர் - விழலே விரணம் விளம்புங்காலே. (339)
2989 வேயரிசியின்பெயர் - வேரல்வேயரிசி தோரையுமாகும். (340)
2990 தருப்பையின்பெயர் - குசை குமுதங் கூர்ச்சங்கு முதந்தருப்பை. (341)
2991 நாணலின்பெயர் - கானசரமே காமவேழம் - நவையில்சரவண நாகணற் பெயரே. (342)
2992 மற்றுநாணலின்பெயர் - சிவேதை காசை நாணலெனச் செப்புவர். (343)
2993 கொறுக்கையின்பெயர் - எருவை வேழங் கொறுக்கை கொறுக்கச்சி. (344)
2994 திரட்கோரையின்பெயர் - எருவைசாய் பஞ்சாய் திரட்கோரையென்ப (345)
2995 வாட்கோரையின்பெயர் - செருந்தி வாட்கோரையென்னச் செப்புவர். (346)
2996 பச்சறுகின்பெயர் - பதமுந் தூர்வையும் பச்சறுகாகும். (347)
2997 பசும்புல்லின்பெயர் - சட்பம் பசும்பல். (348)
2998 உலர்ந்தபுல்லின்பெயர் – திரணமுலர்ந்தபுல். (349)
2999 புற்பிடியின்பெயர் – காசைபுற்பிடி. (350)
3000 இளம்புல்லின்பெயர் – இளம்புல்பதமே. (351)
3001 ஒருவகைப்புல்லின்பெயர் - புதவொருவிகற்பப்புல்லாகும்மே (352)
3002 நீர்முள்ளியின்பெயர் - நீர்முள்ளி முண்டகம் (353)
3003 நீர்க்குளிரியின்பெயர் - கல்லார நீர்க்குளிரி. (354)
3004 கத்தூரிமஞ்சளின்பெயர் – சுவாங்கிகத்தூரி. (355)
3005 கிடையின்பெயர் - சடையே கிடையெனல். (356)
3006 பாசியின்பெயர் - நாரஞ் செவிரஞ் சடைசவ்சி சைவலம் - பாசியென்பர் பதியமுமாகும். (357)
3007 தாமரையின்பெயர் - அம்புய மம்போ ருகமர வெந்தம் - பங்கயம்
புண்ட ரீகம் பதுமம் - முண்டக நளின முளரி சரோருகஞ் - சதபத்திரிகோ கன
தஞ் சலசம் - வனசங் கமலம் வாரிசங் கஞ்சந் - திருமால் கொப்பூழ்திருமலரிண்
டை - பங்கேருகந் தாமரைப்பெயராகும் (358)
3008 தாமரைமலரின்பெயர் - இறும்பிரா சீவநறுந்தண்பூவே. (359)
3009 தாமரைக்கொட்டையின்பெயர் - பூவினுட் கொட்டை பொருட்டே கன்னிகை. (360)
3010 தாமரைச்சுருளியின்பெயர் - விசியும் வளையமுஞ் சுருளெனப் பேசுவர் (361)
3011 தாமரைக்காயின்பெயர் - வராடகம் வராண்டம் வண்காயாகும். ()
3012 செங்குவளையின்பெயர் - அரத்தமுற்பல மாஞ்செங்குவளை. ()
3013 மற்றும்செங்குவளையின்பெயர் - எருமணங் கல்லாரஞ் செங்கழு நீருமாமே. (364)
3014 கருங்குவளையின்பெயர் - பானல் கருங்குவளை (365)
3015 மற்றுங்கருங்குவளையின்பெயர் - நீலமுற்பலம் நீலோற்பலமுமாம். (366)
3016 கருநெய்தலின்பெயர் - நீல மிந்தீ வரங்கரு நெய்தல் (367)
3017 மற்றுங்கருநெய்தலின்பெயர் - நீலோற்பலமும் நிகழ்த்தப் பெறுமே (368)
3018 வெண்ணெய்தலின்பெயர் - வெள்ளாம்பல் குமுதம் வெண்ணிற நெய்தல். (369)
3019 செவ்வாம்பலின்பெயர் - சேதாம்பலரக்காம்பல் செவ்வாம்பல் செங்குமுதம். (370)
3020 மற்றுஞ்செவ்வாம்பலின்பெயர் - செவ்வல்லி செவ்வாம்பல். (371)
3021 வெள்ளாம்பலின்பயர் - அல்லி வெள்ளாம்பல் கைரவமாகும்.
3022 மற்றும்வெள்ளாம்பலின்பெயர் - வெள்ளல்லி வெள்ளாம்பல். (373)
3023 குமுதவகைப்பெயர் - வெள்ளாம்பல் சேதாம்ப லென்றிரு விகற்பங் - கொள்ப மன்னோ குமுதப்பெயரே. (374)
3024 குமுதத்தின்பெயர் - ஆம்பலு நெய்தலு மல்லியுங் குமுதம். (375)
3025 செங்கழுநீரின்பெயர் - கல்லாறமுற்பலஞ் செங்கழுநீரே. (376)
3026 சிகைமாலையின்பெயர் - சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை. (377)
3027 மார்பிலணிமாலையின்பெயர் - மஞ்சரி யிலம்பக மார்பிலணிமாலை. (378)
3028 தோளணிமாலையின்பெயர் - தொடைய றாமந் தோளணிமாலை.
3029 கொண்டைமாலையின்பெயர் - கோதை தொங்கல் கொண்டைமாலை. (380)
3030 மயிர்ச்சூட்டுமாலையின்பெயர் - வாசிகை யலங்கன் மயிர்ச்சூட்டு மாலை. (381)
ஒன்பதாவது மரப்பெயர் சூத்திரங்கள் முற்றிற்று.
ஆக சூத்திரம் 3030.
-----------
ஒன்பதாவது மரப்பெயர்வகை - பெயர்ப்பிரிவு
2650 ஐந்தருவருக்கமாவன-சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிசாதம் (5)
2651 இவ்வைவகைமரத்தின்பெயர்-தெய்வமரம்என்றுகூறுவர்
2652 கற்பகஞ்சேர்கொடியின்பெயர்-காமவல்லி (1)
2653 சந்தனமரத்தின்பெயர்-சாந்தம், மலயசம், சந்திரதிலகம், ஆரம், சந்து (5)
2654 செஞ்சந்தனத்தின்பெயர்-பிசனம் (1)
2655 அகிலின்பெயர்-அகரு, பூழில், காழ்வை (3)
2656 மற்றும்அகிலின்பெயர்-காகதுண்டம் ஆக 4)
2657 குங்குமமரத்தின்பெயர்-மரவம், துருக்கம் (2)
2658 சண்பகத்தின்பெயர்-சம்பகம், செண்பகம் (2)
2659 சிறுசண்பகத்தின்பெயர்-சாதி, மாலதி (2)
2660 செவ்வந்தியின்பெயர்-பட்டிகை (1)
2661 புரசைமரத்தின்பெயர்-பிரமதரு, பலாசம் (2)
2662 மற்றும்புரசைமரத்தின்பெயர்-புனமுருக்கு ஆக (3)
2663 ஆலமரத்தின்பெயர்-வடமரம், தொன்மரம், பூதவம், கான்மரம்,
பழுமரம், நியக்குரோதம், கோளி (7)
2664 தேக்கின்பெயர்-சாதி, சாகம் (2)
2665 வேங்கைமரத்தின்பெயர்-பீதசாலம், கணி, திமிசு, திமில் (4)
2666 கொன்றைமரத்தின்பெயர்-இதழி, கடுக்கை ,தாமம் (3)
2667. மற்றுங்கொன்றைமரத்தின்பெயர்-மதலை, ஆர்க்குவதம். *ஆக(5)
2668. அரசின்பெயர்-சுவலை, அச்சுவத்தம், பிப்பலம், போதி, திருமரம், குஞ்சராசனம், பணை, கணவம். (8)
2669. ஆச்சாமரத்தின்பெயர்-சாலம், மராமரம், ஆ. (3)
2670. மகிழமரத்தின்பெயர்-வகுளம், இலஞ்சி, கேசரம். (3)
2671. அசோகின்பெயர்-பிண்டி, செயலை, காகோளி. (3)
2672. மருதின்பெயர்-அருச்சுனம், பூதவம். (2)
2673. இறலியின்பெயர்-இரத்தி. (1)
2674. தான்றியின்பெயர்-கலித்துருமம். (1)
2675. குராவின்பெயர்-கோட்டம், குடிலம். (2)
2676. மற்றுங்குராவின்பெயர்-கோபிதாரம். *ஆக (9)
2677. நாவலின்பெயர்-ஆருகதம், சம்பு, நேரேடம். (3)
2678. குழிநாவலின்பெயர்-சாதேவம். (1)
2679. வேம்பின்பெயர்-நிம்பம், பிசிதம். (2)
2680. அனிச்சமரத்தின்பெயர்-நறவம், சுள்ளி, அருப்பலம். (3)
2681. பாதிரியின்பெயர்-பாடலம், புன்காலி. (2)
2682. ஞாழலின்பெயர்-நாகம், பலினி. (2)
2683. கோங்கின்பெயர்-கன்னிகாரம், துருமோற்பலம், குயா, பிணர். (4)
2684. நாரத்தையின்பெயர்-நாரம், நரந்தம், நாரங்கம். (3)
2685. குமிழின்பெயர்-கூம்பல், கடம்பல். (2)
2686. அதிமதுரத்தின்பெயர்-யட்டி, மதுகம், அதிங்கம், சல்லி. (4)
2687. மஞ்சாடிமரத்தின்பெயர்-திலகம். (1)
2688. குடைவேலின்பெயர்-உடை. (1)
2689. புன்னையின்பெயர்-புன்னாகம். (1)
2690. சுரபுன்னையின்பெயர்-வழை. (1)
2691. வெட்சியின்பெயர்-சிந்தூரம், குல்லை, செச்சை. (3)
2692. செருந்தியின்பெயர்-பஞ்சரம், செங்கோடு. (2)
2693. அலரியின்பெயர்-கவீரம், கணவீரம், கரவீரம். (3)
2694. மற்றுமலரியின்பெயர்-அயமரம், அடுக்கு. *ஆக (5)
2695. முண்முருக்கின்பெயர்-கவிர், கிஞ்சுகம். (2)
2696. பெருங்குறிஞ்சியின்பெயர் - கோரண்டம், குரண்டகம். 2
2697. பொன்வண்ணக்குறிஞ்சியின்பெயர் - பீதை. 1
2698. வாடாக்குறிஞ்சியின்பெயர் - குரவகம். 1
2699. மழைவண்ணக் குறிஞ்சியின்பெயர் - பாணம், நீலி. 2
2700. பவளக்குறிஞ்சியின்பெயர் - தீண்டியம்.
2701. மகரவாழையின்பெயர் - மருகு, தானம். 2
2702. இருவேலியின்பெயர் - வேரி, பீதகம், மூலகந்தம். 3
2703. குருக்கத்தியின்பெயர் - அதிகம், முத்தகம், மாதவி, வாசந்தி,
குருகு, நாகரி. 4
2704. பலாவின்பெயர் - பாகல், வருக்கை, பனசம். 3
2705. ஈரப்பலாவின்பெயர் - ஆசினி, பலாசம். 2
2706. மாமரத்தின்பெயர் - மாந்தி, சூதம், கொக்கு, மா, ஆமிரம்,
*மாழை. 6
2707. புளிமாவின்பெயர் - நாளினி, இபங்கம், மாழை , சிஞ்சம்,
*ஆம்பிரம், எகினம், சூதம். 7
2708. தேமாவின்பெயர் - ஆமிரம், சக்காரம், சேதாரம். 3
2709. புளியமரத்தின்பெயர் - சிந்தூரம், சிந்தகம், திந்திருணி, எகினம்,
சஞ்சீவகரணி, ஆம்பிலம். 6
271. இலவின்பெயர் - பொங்கர், சான்மலி, பூரணி. 3
2711.இலந்தையின்பெயர் - குல்லரி, குவலி, கோற்கொடி, கோலி,
*ரத்தி, வதரி. 6
2712. இலந்தைப்பழத்தின்பெயர் - கோலம், கோண்டை. 2
2713. அத்தியின்பெயர் - அதவு, கோளி, உதும்பரம். 3
2714. விளாவின்பெயர் - விளவு, கபித்தம், வெள்ளில். 3
2715.காயாவின்பெயர் - பூவை, அஞ்சனி, அல்லி, புன்காலி, காசை, *ச்சி. 6
2716. களாவின்பெயர் - களவு. 1
2717. நுணாவின்பெயர்-தணக்கு. (1)
2718. எலுமிச்சையின்பெயர்-சம்பீரம், முருகு, சதாபலம், சம்பளம்,
அருணம், இலிகுசம். (6)
2719. நெல்லியின்பெயர்-ஆமலகம். (1)
2720. கடுக்காய்மரத்தின்பெயர்-அரிதகி, கடு, பத்தியம். (3)
2721. மாதுளையின்பெயர்-மாதுளங்கம், மாதுளம், கழுமுள். (3)
2722. தாதுமாதுளையின்பெயர்-தாடிமம். (1)
2723. வில்வத்தின்பெயர்-கூவிளம், மாலூரம், கூவிளை. (3)
2724. மற்றும்வில்வத்தின்பெயர்-மாவிளம், வில்லுவம். ஆக (5)
2725. வஞ்சியின்பெயர்-வானீரம், பிசின். (2)
2726. செங்கருங்காலியின்பெயர்-சிறுமாரோடம். (1)
2727. கருங்காலியின்பெயர்-கதிரம். (1)
2728. ஈந்தின்பெயர்-கர்ச்சூரம். (1)
2729. வெட்பாலையின்பெயர்-குடசம், கிரிமல்லிகை. (2)
2730. அழிஞ்சிலின்பெயர்-சேமரம், அங்கோலம். (2)
2731. கடம்பின்பெயர்-கதம்பம், விசாலம், நீபம். (3)
2732. மற்றுங்கடம்பின்பெயர்-இந்துளம், மரா. ஆக(5)
2733. குருந்தமரத்தின்பெயர்-குந்தம். (1)
2734. செம்பரத்தையின்பெயர்-மந்தாரம். (1)
2735. வெண்ணொச்சியின்பெயர்-சிந்துவாரம், நீர்க்குண்டி. (2)
2736. தேற்றுமரத்தின்பெயர்-சில்லம், இல்லம், கதலிகம். (3)
2737. ஆத்தியின்பெயர்-ஆர், தாதகி, சல்லகி. (3)
2738. அகத்தியின்பெயர்-அச்சம், முனி, கரீரம். (3)
2739. பச்சிலைமரத்தின்பெயர்-தமாலம், பசும்பிடி. (2)
2740. முருங்கையின்பெயர்-கருஞ்சனம், சிக்குரு. (2)
2741. எட்டியின்பெயர்-காளம், காஞ்சிரை, கோடரம். (3)
2742. சதுரக்கள்ளியின்பெயர்-வச்சிராங்கம், கண்டீர்வம், அயிலி,
வச்சிர விருக்கம். (4)
2743. வாகையின்பெயர்-சிரீடம், பாண்டில். (2)
2744. ஓடையின்பெயர்-உலவை. (1)
2745. உழிஞ்சிலின்பெயர்-உன்னம். (1)
2746. சிக்கிரியின்பெயர்-முன்னம், துரிஞ்சில், உசிலை. (3)
2747 இலுப்பையின்பெயர்-குலிகம், இருப்பை, மதூகம் (3)
2748 மற்றுமிலுப்பையின்பெயர்-சந்தானகரணி ஆஷக (4)
2749 தெங்கின்பெயர்-தாழை, இலாங்கலி, தென்னை (3)
2750 மற்றுந்தெங்கின்பெயர்-நாளிகேரம் ஆக (4)
2751 பன்னாடையின்பெயர்-நாரி, நெய்யரி (2)
2752 கமுகின்பெயர்-கந்தி, பூகம், பூக்கம் (3)
2753 கூந்தற்கமுகின்பெயர்-தாலம் (1)
2754 பாக்கின்பெயர்-கோலம் துவர்க்குய் பாகு (3)
2755 பனையின்பெயர்-போந்து, தாலம், பெண்ணை, புற்பதி, தாளி,
கரும்புறம், புற்றாளி (7)
2756 இளம்பனையின்பெயர்-போந்தை (1)
2757 கூந்தற்பனையின்பெயர்-தாளி (1)
2758 வாழையின்பெயர்-கதலி, அரம்பை, கவர், சேகிலி, திரணபதி,
ஓசை (6)
2759 மூங்கிலின்பெயர்-வெதிர், வேய், விண்டு, விண்டல், பணை, நெடில், வரை, அரி, தட்டை, திகிரி, தடம், அமை, வேரல், கழை, தூம்பு, வேழம், காம்பு, கிளை, கீசகம், வேணு, ஓங்கல், முளை, முடங்கல், சந்தி, மூந்தூழ் (25)
2760 மற்றுமூங்கிலின்பெயர்-சானகி, திரிகண், நேமி, பாதிரி, ஆம்பல், தொளை, சபம். ஆக (32)
2761 மூங்கிலரிசியின்பெயர்-வேரல், தோரை (2)
2762 தாழையின்பெயர்-முண்டகம், மடி, கைதை, முடங்கல், கண்டல், கேதகை, முசலி (7)
2763 பட்டிகையின்பெயர்-பறிவை (1)
2764 கரும்பின்பெயர்-கழை, வேழம், இக்கு, கன்னல் (4)
2765 பூவாதுகாய்க்குமரத்தின்பெயர்-கோளி (1)
2766 மற்றும்பூவாதுகாய்க்குமரத்தின்பெயர்-வானப்பிரத்தி, பத்தியம் (2)
2767 வண்டுணாமலர்மரமாவன-சண்பகம், வேங்கை (2)
2768 வன்னிமரத்தின்பெயர்-கலிசம், சமி, குலிசம் (3)
2769 ஓமைமரத்தின்பெயர்-உகா (1)
2770 புனமுருங்கையின்பெயர்-புன்கு (1)
2771 ஒடுவின்பெயர்-உடுப்பை (1)
2772 புன்கின்பெயர்-நத்தமாலம், காஞ்சனம் (2)
2773 ஆண்மரத்தின்பெயர்-எகின், சேமரம் (2)
2774 பராய்மரத்தின்பெயர்-பசுநா ,விட்டில், புக்கு (3)
2775 நறுவிலியின்பெயர்-அலி, செலு, வலி (3)
2776 செம்புளிச்சையின்பெயர்-தேவதாரம் (1)
2777 புனவெலுமிச்சையின்பெயர்-குருந்து (1)
2778 எருக்கின்பெயர்-அருக்கம், சல்லியகரணி (2)
2779 ஆமணக்கின்பெயர்-ஏ*ரண்டம், சித்திரம் (2)
2780 பருத்தியின்பெயர்-பரி, பன்னல், கார்ப்பாசம் (3)
2781 மருந்தென்னும்பெயர்-புல், மரம், புதல், பூடு, வல்லி-கொடி
சஞ்சீவி (7)
2782 நால்வகைமருந்தாவன-சல்லியகரணி, சந்தானகரணி, சமனியகரணி, மிருதசஞ்சீவனி (4)
2783 அத்திரசத்திரந்தைத்த புண்மாற்றுமருந்தின்பெயர்-சல்லியகரணி (1)
2784 துணிபட்ட வுறுப்பினைப்பொருத்து மருந்தின்பெயர்-சந்தானகரணி (1)
2785 விரணந்தழும்புகளைநீக்குமருந்தின்பெயர்-சமனியகரணி (1)
2786 உயிர்தருமருந்தின்பெயர்-மிருதசஞ்சீவனி (1)
2787 மற்றுமுயிர்தருமருந்தின்பெயர்-அதகம், அமுது, சீவனி. ஆக (4)
2788 நோய்தீர்க்குமருந்தின்பெயர்-உறை (1)
2789 மருந்தின்பெயர்-உறை, குளியம், ஓடதி, ஔடதம், அதகம்,
யோகம் (6)
2790 மரப்பொதுவின்பெயர்-பாதபம், தாரு, தரு, தாவரம், மூலம் (5)
2791 மற்றுமரப்பொதுப்பெயர்-அகம், அங்கிரி, விருக்கம், துருமம்,
அகலியம், சாதி (6)
2792 மரக்கன்றின் பெயர் - போதகம், பிள்ளை, போத்து, குழவி, கால். (5)
2793 மரவுரியின் பெயர் - மரத்தோல், வற்கலை, சீரை. (3)
2794 மற்றுமரவுரியின் பெயர் - இறைஞ்சி. ஆக(4)
2795 மரக்கொம்பின் பெயர் - கோடு, விடபம், கோடரம், பொங்கர்,
சாகை, கவடு, உலவை, தாரு, சினை, பணை, கொம்பர், கவலை. (12)
2796 சேகின் பெயர் - சம்பம், ஆசினி, காழ், காழ்ப்பு, சாரம், வயிரம்,
கலை, அரி. (8)
2797 தழையின் பெயர் - உலவை. (1)
2798 கப்பின் பெயர் - கவை, கவர். (2)
2799 இளங்கொம்பின் பெயர் - வளார், மெல்லியல். (2)
2800 தளிரின் பெயர் - வல்லரி, குழை, முறி, மஞ்சரி, கிசலயம், பல்லவம்,
அலங்கல், கிளை. (8)
2801 தளித்தலின் பெயர் - இலிர்தல், சிலிர்த்தல், குழைத்தல். (3)
2802 அடிவெண்குருத்தின் பெயர் - முருந்து. (1)
2803 மலர்க்கொத்தின் பெயர் - தொத்து, மஞ்சரி, துணர், இணர்,
தொடர்ச்சி. (5)
2804 இலையின் பெயர் - பலாசம், பன்னம், பத்திரம், தகடு, பாசடை,
தண்ணடை, சாகை, தமாலம், ஓலை, தழை, பச்சிலை, உலவை, அடை. (13)
2805 மற்றுமிலையின் பெயர் - சதனம், சதம், பத்திரி, தலம். ஆக (17)
2806 பரலினுட்படுகுருத்தின் பெயர் - பயின். (1)
2807 மொட்டின் பெயர் - கலுவடம், நனை, முகை, கன்னிகை, அரும்பு,
முகிளம், கலிகை, சாலகம், கோரகம், போகில், நகை, மொக்குள். (12)
2808 மலரின் பெயர் - தாமம், குசுமம், தார், அலர், வீ, போது, சுண்ணம்,
சுமனசம், பூ, சுமம், துணர், அலரி, ஆலம். (13)
2809. மலர்த்தாதின்பெயர் - கோசரம், சிதர், கொங்கு, கேசரம்,
துணர், இணர், கிளர். (8)
2810. தாதின்றூளின்பெயர் - மகரந்தம், சுண்ணம். (2)
2811. மற்றுந்தாதின்றூளின்பெயர் - பராகம். (1)
2812. மலர்த்தேனின்பெயர் - மகரந்தம். (1)
2813. பூவிதழின்பெயர் - தாது, அதழ், தண்டு, தோடு, எடு. (5)
2814. அகவிதழின்பெயர் - அல்லி. (1)
2815. புறவிதழின்பெயர் - புல்லி. (1)
2816. மரத்தின்குலையின்பெயர் - தாறு, படு, சாறு, குடும்பு, கோடு,கொத்து. (6)
2817. முளையின்பெயர் - கால், அங்குரம். (2)
2818. வேரின்பெயர் - தூர், சடை, சிவை. (3)
2819. கிழங்கின்பெயர் - மூலம், மூங்கம், கந்தம். (3)
2820. மற்றுங்கிழங்கின்பெயர் - சகுனம். (1)
2821. சிற்றரும்பின்பெயர் - முகை, முகிழ், மொக்குள், முகிளம். (4)
2822. உலர்ந்தபூவின்பெயர் - உணங்கல், சாம்பல், வாடல். (3)
2823. மலர்ச்சியின்பெயர் - அலர்தல், அவிழ்தல், விள்ளல், நகுதல்,
மலர்தல், விரிதல். (6)
2824. விரிமலரின்பெயர் - இகமலர், வெதிர், தொடர்ப்பூ. (3)
2825. பழம்புவின்பெயர் - செம்மல், சாம்பல், தேம்பல். (3)
2826. விதையின்பெயர் - வீசம், பரல், விச்சு, விரை. (4)
2827. மற்றும்விதையின்பெயர் - காழ், கொட்டை. *ஆக(6)
2828. பிஞ்சின்பெயர் - வடு, எலு. (2)
2829. பசுங்காயின்பெயர் - தீவிளி. (1)
2830. பழத்தின்பெயர் - பலம், கனி. (2)
2831. கனித்தோலின்பெயர் - செகிள், காழ். (2)
2832. காய்மரத்தின்பெயர் - பலினம். (1)
2833. காயாதமரத்தின்பெயர் - அவகேசி. (1)
2834. தழைமரத்தின்பெயர் - மலினம். (1)
2835. உலர்மரத்தின்பெயர் - வானம். (1)
2836. ஆண்மரத்தின்பெயர் - அகக்காழ், வன்மரம். (2)
2837. பெண்மரத்தின்பெயர் - புறக்காழ், புன்மரம். (2)
2838. அலிமரத்தின் பெயர் - வெளிறு. (1)
2839. இலைக்கறியின் பெயர் - அடை, சாகம், பன்னம், அடகு.(4)
2840. சோலையின் பெயர் - அரி, நந்தனவனம், தண்டலை, பொழில்,
ஆராமம், துடவை, தோட்டம், உய்யானம், உபவனம், உத்தியானம்,
செய்கால், மரச்செறிவு, இளமரக்கா. (13)
2841. ஊரோடுசேர்ந்த சோலையின் பெயர் - வனம். (1)
2842, மலையோடு சேர்ந்த சோலையின் பெயர் - ஆராமம். (1)
2843, கழிக்கரைச் சோலையின் பெயர் - கானல். (1)
2844, செய்குன்றுசேர்ந்த சோலையின் பெயர் - தோப்பு. (1)
2845. வயல்சூழ் சோலையின் பெயர் - இளமரக்கா. (1)
2846. சிறுதூற்றின் பெயர் - அரில், அறல், பதுக்கை. (3)
2847. குறுங்காட்டின் பெயர் - இறும்பு. (1)
2848. பெருங்காட்டின் பெயர் - வல்லை. (1)
2849. காவற்காட்டின் பெயர் - கணையம், இளை, அரண். (3)
2850. முதுகாட்டின் பெயர் - முதை, இலையுதிர்வு. (2)
2851. கரிகாட்டின் பெயர் - பொச்சை, சுரம், பொதி. (3)
2852. வேலியின் பெயர் - அடைப்பு, காப்பு. (2)
2853. மரப்பொந்தின் பெயர் - பொக்கு, பொத்து, பொய், பொதும்பு,
பொள்ளல். (5)
2854. முள்ளின் பெயர் - கண்டகம், கடு. (2)
2855. தூற்றின் பெயர் - இறும்பு, மிடை. (2)
2856. மரச்செறிவின் பெயர் - பொதும்பர், கோடரம், உலவை. (3)
2857. விறகின் பெயர் - முளரி, கறல், முருகு, காழ், காட்டம்,
ஞெகிழி, இந்தனம், சமிதை. (8)
2858. முட்செடிப்பொதுவின் பெயர் - முளரி, முண்டகம். (2)
2859. விரிதூற்றின்பெயர் - அதிரல். (1)
2860. சுண்டியின்பெயர் - சுச்சு. (1)
2861. வறட்சுண்டியின்பெயர் - சுமங்கை. (1)
2862. ஆவிரையின்பெயர் - பகரி. (1)
2863. வஞ்சியின்பெயர் - வானீரம், வஞ்சுளம். (2)
2864. துத்தியின்பெயர் - கோளியம். (1)
2865. ஆடாதோடையின்பெயர் - வாசை. (1)
2866. சித்திரமூலத்தின்பெயர் - கொடிவேலி. (1)
2867. தும்பையின்பெயர் - துரோணம். (1)
2868. ஆதொண்டையின்பெயர் - தொண்டை. (1)
2869. மரலின்பெயர் - அரலை. (1)
2870. கற்றாழையின்பெயர் - குமரி. (1)
2871. நாயுருவியின்பெயர் - கரமஞ்சரி. (1)
2872. கொழிஞ்சியின்பெயர் - கோளி. (1)
2873. ஊமத்தையின்பெயர் - உன்மத்தம். (1)
2874. கஞ்சாவின்பெயர் - கஞ்சம், குல்லை. (2)
2875. பொன்னூமத்தையின்பெயர் - மதமத்தை. (1)
2876. நீலியின்பெயர் - அவுரி, பத்தியம். (2)
2877. துழாயின்பெயர் - குல்லை, முடி, துவளம், வனம். (4)
2878. மற்றுந்துழாயின்பெயர் - பிருந்தம். *ஆக(5)
2879. தூதுளையின்பெயர் - தூதுளம். (1)
2880. வீழியின்பெயர் - விழிமி. (1)
2881. காஞ்சொறியின்பெயர் - கண்டூதி. (1)
2882. கிலுகிலுப்பையின்பெயர் - பகன்றை. (1)
2883. தண்ணீர்குடத்தின்பெயர் - கானவாழை. (1)
2884. பிரம்பின்பெயர் - சாதி, வேத்திரம், சூரல். (3)
2885. கழற்கோடியின்பெயர் - கழங்கு, முழல், கர்ச்சூரம். (3)
2886. கழற்காயின்பெயர் - முழல், கழங்கு. (2)
2887. இண்டின்பெயர் - இண்டை, புலிதொடக்கி, ஈகை, ஈங்கை, (4)
2888. சூரியின்பெயர் - விந்தம். (1)
2889. புனற்றுளசியின்பெயர் - குல்லை. (1)
2890 சிறுபூளையின்பெயர்-உழிஞை (1)
2891 பாற்சொற்றிற்செடியின்பெயர்-பாயசம் (1)
2892 செங்காந்தளின்பெயர்-தோன்றி, பற்றை, இலாங்கலி (3)
2893 வெண்காந்தளின்பெயர்-கோடல், தோன்றி, கோடை (3)
2894 வெண்கிடையின்பெயர்-கோடல், பூசை, வெருகு (3)
2895 காக்கணத்தின்பெயர்-கிகிணி, கன்னி, கருவிளை (3)
2896 வெண்காலிளையின்பெயர்-உயவை (1)
2897 தாளியின்பெயர்-மஞ்சிகம் (1)
2898 சிவேதையின்பெயர்-பகன்றை (1)
2899 குன்றியின்பெயர்-கஞ்சம் (1)
2900 கொத்தான்பெயர்-நந்தை (1)
2901 சத்திக்கொடியின்பெயர்-தாடிமஞ்சம் (1)
2902 சாறணையின்பெயர்-திரிபுரி, சாறடை (2)
2903 சீந்திற்கொடியின்பெயர்-அமுதவல்லி, சீவந்தி (2)
2904 பாலையின்பெயர்-சீவந்தி, சீவனி (2)
2905 கூதாளியின்பெயர்-துடி, கூதாளம் (2)
2906 கோவையின்பெயர்-விம்பம், தொண்டை, கொவ்வை (3)
2907 சிலந்திக்கொடியின்பெயர்-தலைச்சுருள்வள்ளி (1)
2908 வள்ளிக்கொடியின்பெயர்-வள்ளி, இலதை (2)
2909 பிரண்டையின்பெயர்-வச்சிரவல்லி (1)
2910 இசங்கின்பெயர்-குண்டலி முத்தாபலம் (2)
2911 கக்கரியின்பெயர்-வாலுங்கி (1)
2912 செங்கிடையின்பெயர்- *கந்தூரி (1)
2913 மற்றுஞ்செங்கிடையின்பெயர்-முதலை (1)
2914 முந்திரிகையின்பெயர்-மதுரசம், கோத்தனி (2)
2915 முள்ளுடைமூலமெல்லாவற்றிற்கும்பெயர்-முண்டகம் (1)
2916 இஞ்சியின்பெயர்-நல்லம், அல்லம், நறுமருப்பு (3)
2917 வழுதலையின்பெயர்-வழுதுணை, வங்கம், பிருகதி (3)
2918 கையாந்தகரையின்பெயர்-கோகணம், அறுபதம் (2)
2919 பொன்னாங்காணியின்பெயர்-சீதை (1)
2920 சிறுகீரையின்பெயர்-சில்லி, சாகினி, மேகநாதம் (3)
2921 சேம்பின்பெயர்-சாகினி, சகுடம் (2)
2922 வள்ளையின்பெயர்-நாளிகம் (1)
2923 பசிரியின்பெயர்-பாவிரி (1)
2924 வெள்ளரியின்பெயர்-உருவாரம் (1)
2925 சிறுகிழங்கின்பெயர்-சுரசம் (1)
2926 கருணைக்கிழங்கின்பெயர்-கந்தம், சூரணம் (2)
2927 பாகலின்பெயர்-காரவல்லி, கூலம் (2)
2928 பீர்க்கின்பெயர்-பீரம் (1)
2929 பெரும்பீர்க்கின்பெயர்-படலிகை (1)
2930 கொடிக்கொத்தான்பெயர்-நூழில் (1)
2931 சுரையின்பெயர்-தும்பி, அலாபு (2)
2932 பேய்ச்சுரையின்பெயர்-புற்கொடி (1)
2933 கொடியின்வகைப்பெயர்-கோற்கொடி, மென்கொடி (2)
2934 கொடியின்பெயர்-இலதை, வல்லி, நூழில் (3)
2935 வெற்றிலையின்பெயர்-நாகவல்லி, மெல்லிலை, தாம்பூலம், மூலவல்லி இலைக்கொடி (5)
2936 மிளகின்பெயர்-கறி, மரீசி, காயம், கலினை, கோளகம், திரங்கல், மிரியல் (7)
2937 ஏலத்தின்பெயர்-இலாஞ்சி, துடி (2)
2938 மஞ்சளின்பெயர்-பீதம், காஞ்சனி, நிசி, அரிசனம், அரித்திராபம் (5)
2939 வெண்கடுகின்பெயர்-அந்தில், கடிப்பகை, ஐயவி, சித்தார்த்தம் (4)
2940 திப்பிலியின்பெயர்-பிப்பிலி, காமன், சிறுமூலகம், மாகதி, கலினி (5)
2941 கொத்துமலியின்பெயர்-உருளரிசி (1)
2942 வெண்காயத்தின் பெயர் - காயம், உள்ளி. (2)
2943 வாசந்தருபலபண்டத்தின் பெயர் - தகரம், தக்கோலம், கோட்டம்,
சாதிக்காய், இலவங்கம், ஏலம், கச்சோலம், மாஞ்சி. (8)
2944 மல்லிகையின் பெயர் - மாலதி, அநங்கம், பூருண்டி. (3)
2945 வனமல்லிகையின் பெயர் - மௌவல். (1)
2946 இருவாட்சியின் பெயர் - மயிலை, அநங்கம். (2)
2947 சாதிப்பூவின் பெயர் - கருமுகை, பித்திகை. (2)
2948 முல்லையின் பெயர் - தளவம், சாதி, பிச்சி. (3)
2949 ஊசிமுல்லையின் பெயர் - தளவு, மாகதி, நைதிகை. (3)
2950 கொடிமல்லிகையின் பெயர் - விசலிகை. (1)
2951 நந்தியாவர்த்தத்தின் பெயர் - வலம்புரி. (1)
2952 மருக்கொழுந்தின் பெயர் - தமனகம். (1)
2953 மலைப்பச்சையின் பெயர் - குளவி*. (1)
2954 அடம்பின் பெயர் - பாலிகை. (1)
2955 வெட்டுவேரின் பெயர் - முடிவாழை. (1)
2956 துவரையின் பெயர் - ஆடகி. (1)
2957 அவரையின் பெயர் - சிக்கடி. (1)
2958 உழுந்தின் பெயர் - மாடம். (1)
2959 கடலையின் பெயர் - மஞ்சூரம். (1)
2960 காராமணியின் பெயர் - இதை, கூலம். (2)
2961 பசும்பயற்றின் பெயர் - பாசி, முற்கம். (2)
2962 கொள்ளின் பெயர் - காணம், குலுத்தம். (2)
2963 துவரையவரையின்முதலியவற்றின் பெயர் - முதிரை. (1)
2964 சோளத்தின் பெயர் - சொன்னல், இறுங்கு. (2)
2965 வரகின் பெயர் - கோத்திரவம். (1)
2966 கருந்தினையின் பெயர் - இறடி, கங்கு. (2)
2967 செந்தினையின் பெயர் - கம்பு, கவலை. (2)
2968 பைந்தினையின் பெயர் - ஏனல், குரல், நுவணை. (3)
2969 தினைத்தாளின் பெயர் - அருவி, இருவி. (2)
2970 எள்ளின் பெயர் - எண், திலம், நூவு. (3)
2971 இளையெள்ளின் பெயர் - குமிகை. (1)
2972 எள்ளிளங்காயின் பெயர் - கவ்வை. (1)
2973 நெல்லின் பெயர் - சொல், விரிகீ, வரி, சாலி, யவம். (5)
2974 குளநெல்லின் பெயர் - நீர்வாரம். (1)
2975 மலைச்சாரல்விளைநெல்லின் பெயர் - ஐவனம். (1)
2976 செஞ்சாலியின் பெயர் - செந்நெல், நன்னெல். (2)
2977 பயிரின் பெயர் - பசும்புல், பைங்கூழ். (2)
2978 பதரின் பெயர் - பதடி, பொல். (2)
2979 இளஞ்சூலின் பெயர் - பீட்டை. (1)
2980 இளங்கதிரின் பெயர் - பீள். (1)
2981 கதிரின் பெயர் - ஏனல், குரல். (2)
2982 கோதுமையின் பெயர் - கோதி (1)
2983 தோரைநெல்லின் பெயர் - இயவை. (1)
2984 போரின் பெயர் - சும்மை, சூடு, போர்ப்பு. (3)
2985 தூற்றாநெற்சூட்டின் பெயர் - பொலி, பொங்கழி. (2)
2986 வைக்கோலின் பெயர் - வை, பலாலம், வழுது. (3)
2987 நெல்லினாற்றின் பெயர் - நாறு. (1)
2988 விழலின் பெயர் - விரணம். (1)
2989 வேயரிசியின் பெயர் - வேரல், தோரை. (2)
2990 தருப்பையின் பெயர் - குசை, குமுதம், கூர்ச்சம், குசம். (4)
2991 நாணலின் பெயர் - கானரசம், காமவேழம், சரவணம். (3)
2992 மற்றுநாணலின் பெயர் -சிவேதை, காசை. (2)
2993 கொறுக்கையின் பெயர் - எருவை, வேழம், கொறுக்கச்சி. (3)
2994 திரட்கோரையின் பெயர் - எருவை, சாய், பஞ்சாய். (3)
2995 வாட்கோரையின்பெயர்-செருந்தி (1)
2996 பச்சறுகின்பெயர்-பதம், தூர்வை (2)
2997 பசும்புல்லின்பெயர்-சட்பம் (1)
2998 உலர்ந்தபுல்லின்பெயர்-திரணம் (1)
2999 புற்பிடியின்பெயர்-காசை (1)
3000 இளம்புல்லின்பெயர்-பதம் (1)
3001 ஒருவகைப்புல்லின்பெயர்-புதவு (1)
3002 நீர்முள்ளியின்பெயர்-முண்டகம் (1)
3003 நீர்க்குளிரியின்பெயர்-கல்லாரம் (1)
3004 கத்தூரிமஞ்சளின்பெயர்-சுவாங்கி (1)
3005 கிடையின்பெயர்-சடை (1)
3006 பாசியின்பெயர்-நாரம், செவிரம், சடைச்சி, சைவலம், பதியம் (5)
3007 தாமரையின்பெயர்-அம்புயம், அம்போருகம், அரவிந்தம், பங்கயம், புண்டரீகம், பதுமம், முண்டகம், நளினம், முளரி, சரோருகம், சதபத்திரி, கோகனதம், சலசம், வனசம், கமலம், வாரிசம், கஞ்சம், திருமால்கொப்பூழ், திருமலர், இண்டை, பங்கேருகம் (21)
3008 தாமரைமலரின்பெயர்-இறும்பு, இராசீவம் (2)
3009 தாமரைக்கொட்டையின்பெயர்-பொகுட்டு, கன்னிகை (2)
3010 தாமரைச்சுருளின்பெயர்-விசி, வளையம் (2)
3011 தாமரைக்காயின்பெயர்-வராடகம், வராண்டம் (2)
3012 செங்குவளையின்பெயர்-அரத்தம், உற்பலம் (2)
3013 மற்றுஞ்செங்குவளையின்பெயர்-எருமணம், கல்லாரம், செங்கழுநீர் ஆக (5)
3014 கருங்குவளையின்பெயர்-பானல் (1)
3015 மற்றுங்கருங்குவளையின்பெயர்-நீலம், உற்பலம், நீலோற்பலம் ஆக (4)
3016 கருநெய்தலின்பெயர்-நீலம், இந்திவரம் (2)
3017 மற்றுங்கருநெய்தலின்பெயர்-நீலோற்பலம் ஆக (3)
3018. வெண்ணெய்தலின் பெயர் - வெள்ளாம்பல், குமுதம். (2)
3019. செவ்வாம்பலின் பெயர் - சேதாம்பல், அரக்காம்பல், செங்குமுதம். (3)
3020. மற்றுஞ்செவ்வாம்பலின் பெயர் - செவ்வல்லி. ஆக (4)
3021. வெள்ளாம்பலின் பெயர் - அல்லி, கைரவம். (2)
3022. மற்றும்வெள்ளாம்பலின் பெயர் - வெள்ளல்லி. ஆக (3)
3023. குமுதவகைப் பெயர் - வெள்ளாம்பல், சேதாம்பல். (2)
3024. குமுதத்தின் பெயர் - ஆம்பல், நெய்தல், அல்லி. (3)
3025. செங்கழுநீரின் பெயர் - கல்லாரம், உற்பலம். (2)
3026. சிகைமாலையின் பெயர் - சிகழிகை, படலிகை, வாசிகை. (3)
3027. மார்பிலணிமாலையின் பெயர் - மஞ்சரி, இலம்பகம். (2)
3028. தோளணிமாலையின் பெயர் - தொடையல், தாமம். (2)
3029. கொண்டைமாலையின் பெயர் - கோதை, தொங்கல். (2)
3030. மயிர்ச்சூட்டுமாலையின் பெயர் - வாசிகை, அலங்கல். (2)
ஒன்பதாவது மரப்பெயர்வகை பெயர்பிரிவு முற்றிற்று.
------------------------------------------------------------------------