சிவகாமியம்மை | சந்திரன் |
1. சிவனின் இடப்பாகத்தில் இருந்து விளையாடுவாள். |
சிவந்த சடையில் விளையாடுவான் |
2. சிவனிடக்கண் (சிவனது இடப்பக்கமாகிய
இடம்) ஆவாள். |
சிவனிடக்கண் (சிவனது மூன்று கண்களில் இடப்பக்கம் இருக்கும் கண்) ஆவான். |
3.கவனமுறுகலை வாகனம் - ஆகாயத்திலடையும்
இடபவாகனம் (கலை -விலங்கேற்றின் பொது). |
கவனமுறு கலையுள்ளான் - வளர்வதும் குறைவதுமான கலக்கம் நிறைந்த 16-கலைகளையுடையான். |
4. கருணைவிழியினால் அமுதங் கொடுப்பாள் |
ஆகாயத்திலுள்ள தேவர்க்கு முதற் பதினாறு நாளில் அமுதங் கொடுப்பான். |
5. பராபரக் கடலிலுதித்தவள். | நாகலோகம் வரை ஆழ்ந்த பாற் கடலிலுதித்தவன். . |
6. சிவந்த கைகளில் குவளை மலரை யேந்துவாள். |
குவளை மலருக்கு நண்பன். (சந்திரன் தோன்றினவுடன் மலரும். எனவே இங்ஙனம் கூறினர்). (1) |
சந்திரன் | சிவகாமியம்மை |
1. இவன் கிரணத்தினின்று ஒளிவாய்ந்த முத்துப்
பிறக்கும். (சந்திரனுக்கு முத்துப்பிறப்பது ஒன்று
கூறி சிவகாமிக்கு இரண்டிடம் கூறியதால் சந்திரன் தாழ்ந்தான்.) |
மூங்கிலையொத்த தோளினிடத்தும், கழுத்தாகிய பாக்குமரத்திடமும் பிறக்கும். வேயீன்ற முத்தம் - சிவபெருமான். வேதங்கள் பிரளய காலத்தில் தமக்கு ஆபத்து ஒன்றும் இல்லாதிருக்க வேண்டுமென்று கேட்டபடி சிவன் கட்டளையால் மூங்கிலாக வந்து அவை பிறக்க அவற்றில் தான் முத்தாகத்
தோன்றின ராதலால் இங்ஙன் கூறினர். |
2. அழகுவாய்ந்த விமானத்தில் உலகவிருள் நீங்க மேரு
மலையை வலம் வருவான். |
அழகிய விமானத்தில் தேவர்களும் தங்களது அஞ்ஞான புத்தியினிருள்
நீங்க இவளது பாதத்தைச் சுற்றிவருவர். |
3. கற்புடைய பெண்கள் வணங்க மாட்டார்கள்.
| இவளை யாவரும் பணிவதால் கற்கும் கல்வி மிகும். கற்பு + அது - கற்பது,
அது பகுதிப் பொருள் விகுதி - பெண்கள் கற்பு எனலுமாம். |
4. எந்நேரமும் குறிப்பாக மூன்று காலங்களில் பார்க்கக் கூடாது.
(சதுர்த்தி, கிரகணகாலம், உதயகாலம் இவைகளில் பார்க்கலாகாது. அங்ஙனம்
பார்த்தால் பரிகாரம் செய்யவேண்டும்).
| எப்போதும் காணலாம். |
(3)