pm logo

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 5B
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது & நெல்விடுதூது
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு


ciRRilakkiyat tiraTTu,
part 5B, tUtu (2)
edited by vaiyApurip piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 5b
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது & நெல்விடுதூது
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு

Source :
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த
சிற்றிலக்கியத் திரட்டு
பொதுப்பதிப்பாசிரியர் இ. சுந்தரமூர்த்தி
பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக் கழகம்
நூலகத்திற்கு அன்பளிப்பு
சென்னைப்பல்கலைக்கழகம் , 2001
Chitrilakkiyath thirattu
First Edition: November - 2001
University of Madras
வடிவமைப்பு: வே.கருணாநிதி
PRINTED IN INDIA
The PARKAR , 293, Ahamed Complex 2nd Floor
Royapettah High Road, Chennai - 600 014.
----------------
VII. தூது
14. இராமலிங்கேசர் மீது பணவிடு தூது (1934)
15. துகில்விடு தூது (1927)
16. தெய்வச்சிலையார் விறலிவிடு தூது (1936)
17. நெல்விடு தூது (1933)
------------

16. ஸ்ரீ குமார சுவாமி யவதானி இயற்றிய
தெய்வச்சிலையார் விறலிவிடுதூது

காப்பு
தென்னவனா டாளுமங்கைத் தெய்வச் சிலைமீது
சொன்ன விறலிவிடு தூதுக்கு - முன்னிற்பன்
சிந்தைமகிழ் மாறன்மேற் செந்தமிழ்வே தம்பாடு
மெந்தைமகிழ் மாற னிசைந்து.

நூல்
1 பார்கொண்ட திண்புயத்துப் பச்சைமா லுந்தியினில்
வேர்கொண்ட செங்கமல மென்பொகுட்டில் - நேர்கொண்

2 [1]டுதித்துப் பிரம னொருவ னிருந்து
விதித்துலகெல் லாம்படைக்கு மேனாட் - கதித்ததொரு

3 கற்பகத ருப்படைத்துக் காமதே னுப்படைத்துப்
பற்பநிதி சங்கநிதியைப் படைத்துப் -பொற்புடைய

4 சிந்தா மணிபடைத்துச் செங்கை பழகியபின்
பிந்தாத வண்மைப் பெருங்கொடையா - லெந்தை

5 யிவன்புரப்பன் வையகத்தை யென்று கருதி
யவன் படைக்க வந்துதித்த வண்ணல்- [2]நிவந்ததொரு

6 பொன்மேறு வுக்குப் புருஷமக மேருவாய்
நன்மேதி னிக்கு [3]ணடுநின்றான் - தொன்மைத்

7 திருமாது வாசல் திறக்கு மொருபோ
தொருபோ தடைக்குமது வொப்போ - இதுபோது

8 மந்தணர்க்குஞ் சைவர்க்கு மாதுலர்க்கந் தன்னைநம்பி
வந்தவர்க்குஞ் செந்தமிழ்ப்பா வாணர்க்குஞ் - சிந்தை

9 சடையாது நல்குந் தயவினா லென்று
மடையாத வாச லபையன் - சுடர் மணிப்பொற்

10 றண்டிகையுந் தாமுமாய்த் தங்காரி [4]யங்கள்சொல்ல
மண்டலிகர் வந்திருங்கு மாளிகையான் - பண்டுசெய்த

11 பூசா பலனெவரும் புண்ணியவா னென்றுசொல்ல
வாசா லகனான மானபரன் - பேசு

12 முவமானம் வேறில்லா வுத்தமனெந் நாளுந்
தவறாத வாய்மையரிச் சந்த்ரன் - எவர்மீது

13 மாறாக் கொடுங்கோபம் வாராது வந்தாலுஞ்
சீறாக் கருணைத் திருமுகத்தான் - பேறுதரு

14 தன்மம் நினைவதல்லாற் சற்றா கிலும்பிறர்மேல்
வன்மம் நினையா மனத்தினான் - சொன்மதுர

15 சார மிகுந்த தமிழ்நா வலர்க்குளென்மெல்
வார மிகுந்த மனதுங்கன் - போர்வீமன்

16 என்னா ருயிரனையா னென்கண் மணிபோல்வான்
பொன்னா பரணப் புயசயிலன் - தன்னுடனே

17 எந்த மலைவந் தெதிர்த்தாலு மெள்ளளவுஞ்
சிந்தை மலையாத் திடபுருஷன் - அந்தநாள்

18 வாலி முதுகுருவ வாளிதொட்ட செங்கையினாற்
சூலிமுது கில்விருந்து சோறளித்தும் - நீலவிடந்

19 துன்றுமிடற் றெம்பிரான் சோதினைக்குக் கங்குலின்வா
யன்றுமுளை வாரி யமுதிட்டும் - நன்றுபெறு

20 [5]தண்ணென்ற நெஞ்சத் [6]தயவாற் புலைமகனை
யுண்ணென்று தன்கலச்சோ றூட்டியும் - பண்ணமைந்த
______________________________________________________________
(பி - ம்.) [1] டுதித்த, [2] நிவந்துற்ற, [3] நடுநின்றான்.
[4]. யஞ்சொல்ல, [5]. தண்ணென்று, [6]. தயவாய்ப்
______________________________________________________________
21 பாவலர்க்குத் த்யாகமாய்ப் பாம்பின்வாய்க் கைநீட்டிச்
சீவரத்னம் வாங்கிச் செலவிட்டு - நாவலவன்

22 பன்னு தமிழ்க்குப் பரிசி லடிமையென்று
மன்னு கிளைக்கெல்லா மாற்றளித்துத் - தன்னுடைய

23 நாணாற் றுகிலை நடுக்கீறி யாவருக்குங்
காணாத் துடைச்சிலந்தி காட்டியும் [7]வாணாட்கு

24 வன்பழிசெய் நீலிதன்னால் வந்த படாப்பழிக்குத்
தன்பழியீந் தப்பழியைத் தள்ளியும் - அன்பனிவன்

25 என்கை நிறுத்து மியற்கையா லீசனுக்குத்
[8]தன்கையுரைத் துச்சந்தஞ் சாத்தியும் - நன்கருணை

26 காட்டுகின்ற கீர்த்திவெரு கற்பகா லம்வரைக்கு
நாட்டுகின்ற தொண்டைவள நாட்டரசாய்த் - தீட்டுபுகழ்க்

27 கச்சிவிசு வேந்திரன் [9]கிட்டிணப்பன் காலத்தே
மெச்சுமதி மந்திரியாய் வீற்றிருந்து - முச்செகத்தை

28 யந்நாளி லாண்ட வரியநயி னான்மகிபன்
றன்னா ருயிர்மருகன் றானாகி - யிந்நிலத்தில்

29 ஆதிவட வேங்கடவ ராட்கொண்ட னுக்கிரிக்க
நீதிகொள்கிட் ணாபுரத்தை நிர்மித்து - வீதிகண்டு

30 வானமுதற் றூவிவரை [10]வாழ்வேங் கடமாயர்க்
கானதொரு கோயி லமைத்தருளி - மேனிமி(ர்)ந்த

31 சுற்று மதிளுந் தொகுத்தநிலைக் கோபுரமும்
மற்றுமுள்ள தெல்லாம் வகுத்தற்பின் - கொற்றத்

32 திருவளரத் தேருஞ் சிறப்புட னுண்டாக்கிப்
பெருமையாய்க் கீர்த்திமுன்பு [11]பெற்ற - முருகுயிர்க்கு

33 [12]மன்றலந்தார்க் கூவ மயிலேறி வம்சமென்னுங்
குன்றுதனி [13]லிட்ட குலதீபம் - என்றுமென்றுந்
_____________________________________________________________
(பி-ம்) [7].வாணாட்கு; வானாளில், [8]. தன்கை யரைத்த சந்தஞ், [9.] கிட்டிணன்,
[10]. வான்வேங், [11]. பெற்றான், [1]2. மன்றலர்ந்தார் மார்பன், [13]. ல்வைத்த
_____________________________________________________________
34 தேசமுற்றுங் காக்கவருஞ் செங்கோல் மனுவேந்தர்
வாசலுக்குத் தூண்டா மணிவிளக்கு - வீசுகொடைக்

35 கன்னாவ தாரனுயர் கங்கைமுதற் கன்னிவரை
யின்னானென் றெங்கு மிலக்கானோன் - தன்னாலே

36 கோடி குடும்பங் குறைதீர்ந்து வாழ்ந்திருக்க
நாடிமிகுந்த நடக்கைபெற்றோன் - நீடியபூஞ்

37 சோலைவைத்த [14]தென்னத் தொலையாப் பெரும்பாதை
சாலைவைத்தெல் லொர்க்குந் தகைதீர்த்தோன் - நீலமணி

38 வெற்பனைய மங்கியல்வாழ் வேங்கடமா யர்க்குவெகு
கற்பணிகள் பொற்பணிகள் கட்டளைகள் - பற்பலவுஞ்

39 செய்துபுதுத் தேர்வகுத்துத் [15]தெப்பக் குளங்கண்டு
மைதவழ்பூஞ் சோலைசுற்றும் வைப்பித்து – மெய்தந்த

40 வைகுண்ட லோகமிந்த மங்கைநக ரென்னவளம்
செய்கின்ற கீர்த்திச் செயவிசையன் - கைகொண்டு

41 தானே கொடுப்பதன்றித் தானேற்ப தில்லையென்று
மேனாளிற்பூண்ட விரதத்தோன் - ஆனதொரு

42 தெற்ப சயனமுதற் றெய்வத் தலங்கடொறும்
பற்பலக யிங்கிலியம் பண்ணினோன் - பொற்புவியைச்

43 சேய கமலத் திருவடியி னாலளந்த
மாயனுருப் போல வளர்ந்தோங்கி - யாயவன்

44 கள்ளவிழ்தார் மார்பிற் கவினுமுத்த ரீகமென
வெள்ளருவி பாய்பொதிய வெற்பினோன் - புள்ளறாச்

45 சோலை [16]யிருமருங்குந் தோன்றநடு வேசென்று
வேலையள வம்புகுந்து மேன்மையால் - ஞாலமகள்

46 கூந்தல் வகிர்ந்த வகுப்பிலே கொத்தணியும்
வாய்ந்தசுட்டி முத்துவட மாலையாய்- ஏய்ந்த
____________________________________________________________
(பி-ம்.)[14] தென்றற், [15] தெற்பக், [16]. யிருவருகுந்
_____________________________________________________________
47 கருமண லுங்குழல்போற் காட்டும் பொருனைத்
திருநதியோன் மேவலர்கள் சிங்கம் - பெருமையாய்ச்

48 சுற்றுங் கடலாடைத் தொன்னிலமா மாதுக்கு
மற்றுளநா டெல்லாம் வனைகலன்கள் - நெற்றிதனிற்

49 செங்கையாற் றீட்டுந் திலகமிந்தச் சீவல
மங்கைநா டென்னும் வளநாடன் - [17]பொங்குபுகழ்

50 இந்த்ரதருத் தெய்வச் சிலைப்பெருமா ளென்றெங்கும்
வந்து பிறந்த மகிமையால் - முந்திமையோர்

51 பொன்னகருமாகிப் பொலிந்த செல்வத் தாலளகை
நன்னகரு மானமங்கை நன்னகரான் - முன்னீர்

52 முழுகுதிரை கீண்டு முளைத்தவெய்யொன் றேரி
னெழுகுதிரை யைப்பார்த் திகழ்ந்து பழுதுங்கள்

53 [18]ஐங்கதியென் காற்கதிக்கொப் பாமோ வெனச்சிரித்து
வெங்கடுப்பாற் காறியுமிழ் வீறுபோற்-றங்குமனு

54 மானமும் வாயில் விலாழியும் வாய்த்ததொரு
பானிறவே கக்கவனப் பாய்பரியான் - தானே

55 பிறையிரண்டு தாங்கியொரு பெய்முகில்வந் தன்ன
கறையடிவெண் கோட்டுக் களிற்றான் - முறைமுறையே

56 மற்றக் கொடிகள் வணங்கநடு வேவிளங்குங்
கொற்றக் கெருடக் கொடியினான் - கற்றறிந்தோர்

57 சொன்மாலைக் [19]கேற்குந் துணைப்புயத்திற் பூந்துளப
நன்மாலை யும்புனைந்த நாகரிகன் - தன்மைகண்டு

58 தெம்முரசு வாயடங்கத் த்யாகமுர சாயதிர
மும்முரசு வாய்முழங்கு முன்றிலான் - [20]எம்மறையும்

59 பேசாத வுண்மைப் பெருநெறிகாட் டுஞ்சடகோ
பாசாரி யார்பதத்தி னாணையான் - காசினிமேற்
________________________________________________________________________
(பி-ம்.)[17].பொங்குகொடை, [18]. ஐங்கதிதன்,
[19]. கேற்ற துணைப்புறத்திற், [20].எம்மையும்
____________________________________________________________________
60 றள்ளரும் வாய்மைத் தசரதனார் தம்வயிற்றிற்
பிள்ளையென ராமன் பிறந்ததுபோல் - உள்ளமகிழ்

61 விந்தை மருவுதிரு வேங்கடநா தன்வயிற்றில்
வந்தவதா ரஞ்செய் மகராசன் - கொந்தவிழ்பூந்

62 தாராரு மார்பனிவன் சற்புருஷ னென்றுலகிற்
பேரா மழகப் பிரானுக்கு - மாராயும்

63 பாடலுங் கல்விப் பயிற்சியும் [21]வல்லதனி
ஆடல் மதவே ளனந்தனுக்கு - நாடெல்லாந்

64 தானரசு செய்யச் சமைந்ததொரு கற்பகக்கன்
றானதிரு வேங்கடத் தப்பனுக்கு - மேனாளிற்

65 பின்னுதித்த மூவருக்கோர் பிராணபத [22]ராமனைப்போல்
முன்னுதித்து வந்த முகில்வண்ணன் - இந்நிலமு

66 நாற்றிசையும் வாழ்த்துதலால் நல்லவனென் றெல்லோரும்
போற்றுமி ராமானுஜ பூபதிக்கும் - ஏற்றமுள்ள

67 மன்னுலகில் மீதுகன வாழ்வுக் களகேச
னன்னதிரு வேங்கடத் தப்பனுக்கும் - பன்னுதமிழ்

68 வாணிபுருஷ வடிவான கல்வியுரை
யாணியெனு மெங்களரு ளாளனுக்கும் - வேணதொரு

69 நன்மருகன் பூதலத்தில் நன்மையெல்லாங் கூடியொரு
சென்மமென்று வந்துதித்த சீராளன் - தன்மவான்

70 ராமா னுஜனீன்ற வெங்க ளனந்தனெனு
மாமால் வணங்கிநன் மைத்துனவேள் -[23]பூமகள்வா

71 ழெங்கோனி வனேயென் றெவ்வுலகும் வாழ்த்துமொரு
செங்கோன்மைத் தெய்வச் சிலைப்பெருமாள் - பைங்கோதை

72 மோகன மங்கையர்வேள் முத்தமிழ்க்குப் பொன்பொழியுந்
த்யாகமுகில் தெய்வச் சிலைபெருமாள் - லோகமெங்கும்
_____________________________________________________________
(பி-ம்.) [21]. வல்லதனில், [22]. ராமன்போல், [23]. பூமகள்பாய்.
_____________________________________________________________
73 பெய்யுமழை போற்சகல பேர்க்கு முபகாரஞ்
செய்யுமொரு தெய்வச்சிலைபெருமாள் - மெய்யறிஞர்

74 மும்மையுல கத்தெவர்க்கு முன்னேசொல் லத்தகைய
செம்மைபெறு தெய்வச் சிலைப்பெருமாள் - எம்மைமுகம்

75 பார்த்தவுட னெங்கள் பரதாக மோர்வாக்கால்
தீத்தருளுஞ் தெய்வச் சிலைப்பெருமாள் - கீர்த்தியாய்த்

76 தொல்லுலக மெங்குந் துரைத்தனக் கிள்ளாக்கை
செல்லுமெங்கள் தெய்வச் சிலைப்பெருமாள் - நல்லதிரு

77 நெல்வேலி வாசல்நிர் வாகம் முழுதுந்தன்
சொல்வேலிக் குள்ளே தொழிற்படுத்தி - வல்ல

78 பிறிவுக் குடம்பிடிக்கை பேசுவதும் சொன்ன
நறியிற் பணஞ்செலுத்து நேர்ப்பு - முறைமைக்

79 கணக்குடனே சீமைக் கனரேகை லெக்கம்
பணக்குறைவா ராதுகொள்ளும் பண்பும் -[24]இணக்கி

80 விரவுகள் பார்த்தெழுது மேலோ சனையு
மரமனைக்கோர் தீபரங்க ளானால் - திரவியங்கள்

81 வத்தகற்கோர் வார்த்தைசொல்லி வாங்குவதும் [25]வாங்கியபொன்
தித்திவிக்கும் வல்லமையுந் த்ராணியும் - புத்தியிலே

82 அப்பாசி யூகி [26]சமுத்தி யிவர்களிலு
மெய்யப்பான புத்தி விதரணமும் - இப்புவனந்

83 தாங்கு மரசுரிமைத் தாட்டீகம் பெற்றதினால்
ஓங்குநர வாகன யோகமும் - பாங்கி

84 லடுத்த சனங்க ளவாவறிந்து செம்பொன்
கொடுத்து நடத்துங் குணமும் - எடுத்து(ப்)

85 பறுவகா லங்கள்தொறும் பன்னுமறை யோர்கள்
சறுவரும்வந் தேற்குந் தருவாய்(ப்) - பெறலரிய
__________________________________________________________________
(பி - ம்.) [24] இணக்கும், [25].வாங்கியபின், [26]. யுமபத்தி.
__________________________________________________________________
86 பூதானங் கன்னிய(ர்) தானமுதற் பூசுரர்க்கு
மாதான மெல்லாம் வழங்குவதும் - ஈதன்றி

87 யாசக ரூபமதா யெங்கோன் கனகமணி
வாசலிலே யெத்தனைபேர் வந்தாலும் பேசி

88 யவரவர்க்குச் செய்தனுப்பு மாதரவுஞ் சற்றுங்
கவலையில்லா வுள்ளக் களிப்பும் - இவனைப்போற்

89 கண்டதில்லை விட்ணு [27].கலையிந்த ரூபமென்று
மண்டலத்தி [28]லெல்லோரும் வாழ்த்தவே - பண்டைத்

90 திருவடி தேசமுற்றுஞ் செங்கோ னடாத்தி
யொருகுடையா லாள [29]வுதித்தோன் - இருபொழுதும்

91 அட்டதிசை யெல்லாந்தன் னாணைக்குப் பண்புசெய்யச்
சட்டமிடும் பாண்டித் தமிழ்நாட்டில் - நெட்டைமுழு

92 மாவகங் கீற வடிவேல் விடுத்தமுழுச்
சேவகன் வாழுந் திருச்செந்தூர்க் - கோவிலுக்கு

93 நம்பிமார் தம்மில் நடலிங்க பட்டனென்போ
னம்புவிகொண் டாடு மறிவாளன் - வம்பவிழ்பூந்

94 தேனேறு தண்சோலைத் தென்றிருப் பேரையூர்க்
கோனேரி பட்டன் குமாரத்தி - யான

95 திருமகளைக் கல்யாணஞ் செய்துசில காலம்
மருமலரும் வாசமும்போல் வாழ்ந்து - பொருவரிய

96 பாலகனைப் பெற்றெடுத்த பக்குவத்தே தானுமந்தக்
கோலமதி வாணுதல்பைங் கோதையுமாய் - நீலநெடு

97 மஞ்சனைய மேனி மகரக் குழைக்காதர்
செஞ்சரணச் சேவையின்மேற் சிந்தனையாய் - நெஞ்சமகிழ்

98 மாமனா ரூரகத்தில் வந்திருந்த பின்பொருநாள்
ராமா யணப்ரசங்க மெய்துதருந் - தாமே
_________________________________________________________________
(பி - ம்.)[27]. சிலையிந்த, [28].லுள்ளவர்கள், [29]. வுரித்தாய்
_________________________________________________________________
99 ஒருவர்க் கொருவ ருரையிடுமவ் வேளை
இருவர்க்கு மாங்கார மெய்தி - மருமகனைப்

100 பார்த்துநூ லெல்லாம் படித்துமறி வில்லாத
தூர்த்தாபோ வென்று துடுக்காக - வார்த்தைசில

101 சொன்னதுண்டு மாமனந்தச் சொல்லைச் சகியாமல்
அன்னநடை மின்னு மறியாமல் - முன்னே

102 நடந்துவிட்டா [30]னப்பொழுது நாயகனைத் தேடி
மடந்தைதிருச் செந்தூர்க்கு வந்தாள் - தொடர்ந்துதொடர்ந்

103 தாள்விட்டுங் காணா ளருந்துதிபோற் கற்புடைய
வாளொத்த கண்ணாள் மலைத்தழுதாள் - நாளிலே

104 மெல்லிடைபோற் றேகம் மெலிந்தாள் புனல்காணா
வல்லியம் பூங்கொடி போல் வாடினாள் - எல்லையிலா

105 வாதையுடன் றென்னிலங்கை மாநகரிற் போயிருந்த
சீதையினும் பாரச் சிறையானாள் - சோதிநெடு

106 வாளனைய கண்ணிமண வாளனையே யெண்ணியொரு
நாளொருக மாயிருக்கும் நாளிலே - நீளமுழுச்

107 செங்கரனார் கோடித் தினகரனார் போல்விளங்குஞ்
சங்கரனார் கோவிற் றலத்தாரில் - ஐங்கரனார்

108 பின்னுதித்த சண்முகத்தெம் பெம்மான்றன் சீரலைவாய்ச்
சன்னதிசே விக்குந் தயவினால் - முன்னூலும்

109 பைந்தாம் மார்புமிலங்கப் பழமறையோர்
வந்தார் சிலபேர் வழிப்போக்காய் - முந்தும்

110 விருத்தராய்த் திண்ணையின்கண் வீற்றிருந்தார் தம்மைத்
திருத்தகுநல்லாள்வணக்கஞ் செய்தாள் - வருத்தமென்ன

111 பெண்ணே யகத்திற் பிராமணனெங் கேயென்றார்
கண்ணீர் [31].ததும்பக் கவிழ்ந்துநின்று – புண்ணியரே
______________________________________________________________
(பி-ம்.) [30].ன்றன்னுடைய, [31]. துளும்பக்.
_______________________________________________________________
112 எங்கள் தகப்பனா ரேதோசொன் னாரென்று
தங்கள் மனதிற் சகியாமல் - எங்கேயோ

113 போனார் வருஷமொன்றா யென்றுபொருமினாள்
ஆனா லறிவோ மடையாளந் - தேனனையாய்

114 ஒன்று நினைத்தயரே லுன்னா யகன்வருவா
னென்றுகண்ட செய்தியி யம்பினார் - வென்றிபெறு

115 சங்கரனார் கோவிலிலே தன்கணவன் போனதுவு மங்கொருத்தி கையிலகப் பட்டதுவுஞ் செங்கைத்

116 திரவியத்தை வீணிலே சிந்துவதுங் கேட்டாள்
வரிசைபெற்ற கற்புடைய மங்கை - பரிவுடன்வந்

117 தந்தணரைப் பின்சென் றனுப்பினாள் தன்னுடைய
சிந்தை மறுக்கஞ் சிலதீர்ந்தாள் - மைந்தனுடன்

118 பூங்குழலாள் வீற்றிருக்கும் போது பிறகொருநாள்
தூங்கிசைநல் யாழ்விறலி தோன்றினாள் -[32]பாங்குடனே

119 கேட்டருணீ யென்று கிரணமணி யாழெடுத்து
மூட்டு நரம்பை முறைதிருத்திப்- பாட்டி

120 னிசையும் நரம்பி னிசையும் பழத்தைப்
பிசையுநறும் பால்மதுரம் பில்க - [33]வசையிலாப்

121 பெண்பெருமாள் செங்கை பிடித்த மணவாளன்
பண்புடைய பேரெடுத்துப் பாடினாள் - [34]ஒண்பது(ம)

122 மங்கை முறுவலித்தாள் வாராய் விறலி(யே)
சங்கரனார் கோயில் தனைப்பாடி - அங்குள்ள

123 தாசிகளைப் பாடியவர் தங்கள் தொழில்பாடிப்
பாசிழையாய் பின்பவரைப் பாடென்றாள் - ஓசைபெறப்

124 பாடுவது மந்தப் படிப்பும் பரிவுடன்கொண்
டாடுவதுங் கேட்டா ளணங்கரசி – வாடிபெண்ணே
_________________________________________________________
(பி-ம்.) [32]. பாங்கொடம்மா, [33]. அசைவில்லாப், [34]. ஒன்பது
_________________________________________________________
125 தோளுமென் கண்ணுந் துணைவ ரெனைப்பிரிந்த
நாளில் வலந்துடிக்க [35]நானுயிர்த்தேன்-காள

126 விடந்துடிக்க மைக்கண் விறலியின் றென்றோ
ளிடந்துடித்த காரணஞ்சொல் லென்றாள் - உடந்தைபெற்ற

127 நல்வரவிங் கென்வரவு நங்கா யுனைப்பிரிந்த
செல்வர்வரு வாரென்று தேற்றினாள் - வல்லி

128 பரிசில் கொடுக்கப் பயில்யாழ் விறலி
வரிசைகொடு வீதிவரலும் - புரிகுழலை

129 விட்டுநெடு நாளாய் வெறுத்ததறு கண்ணானைப்
பட்டு மனந்தெளிந்த பான்மையனைத் - தெட்டும்

130 பரத்தையர் மோகமெனும் பாம்பின்வாய் நீங்கிச்
சிரத்தைபெறு திங்களனை யானைக் - கரத்திலவர்

131 சேர்த்துநகம் வைத்த சிறுதழும்பை யுத்தரிகம்
போர்த்து மறைத்த புயத்தானை - ஊர்த்தலைக்கண்

132 வந்தவுட னச்சமுநாணமும் வந்துடற்றச்
சிந்தனைதள் ளாடுஞ் செயலானைச் - சந்த

133 நறைகமழும் பூந்தார் நடலிங்க னைத்தான்
கறைகெழுவேற் [36]கண்ணெதிரே கண்டாள் - விறலியுஞ்

134 சென்றா ளிணையடிமேற் றெண்டனிட்டா ளய்யாநீர்
நன்றாக வந்ததே நன்மையென்றாள் - நின்றா

135 ளகத்திலுள்ள செய்திகளு மங்கே குழந்தை
சுகத்தி லிருப்பதுவுஞ் சொன்னாள் - மிகத்தளர்ந்து

136 நொந்தீர் திருவுடம்பில் நோவுண்டோ வித்தனைநாள்
செந்தூரை விட்டுத் திரிந்தீரோ- [37]தொந்தமில்லாத்

137 தேவடியா ராசையெல்லாந் தீர்ந்ததோ யின்னமுண்டோ
சாவடியிற் போம்போம் தகைப்பாற - மேவி
___________________________________________________________
(பி - ம்.) [35]. நானிருந்தேன், [36]. கண்ணியெதிர், [37].சொந்தமில்லாத்
______________________________________________________________________
138 [38]நரைக்கோலம் கொண்ட நயனத்தால் நங்கை
சிறைக்கோலம் பாருமினிச் சென்று - மறைக்கோல

139 வள்ளலே யென்றாள் விறலியவள் வார்த்தைகேட்
டுள்ளசெய்தி யெல்லா முரைசெய்தான் - பிள்ளை நீ

140 ஆதலினா லுன்னுடனே யந்தரங்கம் வேணபடி
யோதலா மன்றியதற் கொல்குவதேன் - கோதாய்கேள்

141 வாராத வூழிவிதி வந்து முடிந்ததென்றால்
ஆராலே கூடு மமைப்பதற்குத் - தோராயம்

142 எந்தப் பழிநடந்த தென்கோப முற்கோபம்
அந்தக் குணம்நீ [39]யறியாயோ - செந்தூரில்

143 [40]வாணுதல்நீ கேளாயென் மாமனார்க் கும்மெனக்கும்
வீணிலொரு பேச்சால் வெறுப்புவந்து - ப்ராணபத

144 மைந்தனையு நீத்து மனையாட்குஞ் சொல்லாமல்
அந்தரங்க மாய்ச்செலவுக் காயிரம்பொன் - சொந்தமாய்ப்

145 பையிலே கொண்டு பயணம்போ யன்றைக்குத்
தையலேசீ வைகுண்டஞ் [41]சார்ந்திருந்தேன் - செய்யதமிழ்க்

146 கிட்ணா புரமறுநாள் சேர்ந்தேன்கிட் ணாபுரம்போற்
பட்டணம்வே றுண்டோவிப் பாருலகிற் - கட்டழகன்

147 சீமா னமிர்தகுணன் தெய்வச் சிலையெனுமெங்
கோமான்செய் தெப்பக் குளச்சிறப்புங் காமருபூஞ்

148 சோலையுங் கோபுரத்தின் றோற்றமும் வேங்கடவ
ராலையமுங் கண்டங் ககமகிழ்ந்தேன் - மேலோங்குங்

149 காதலுடனேவய்யன் கட்டளையிற் சென்று சம்பாச்
சாதமும் வாங்கிநன்றாய்ச் சாப்பிட்டேன் - போதுபுக

150 நெல்லைத் தலத்திலே சென்றே னிமலனுக்குத்
தில்லைத் தலம்போற் சிறந்ததலம் - நல்லதொரு
__________________________________________________________
(பி-ம்.)[38]. நறைக்கோலங் கண்ட, [39]. யறிவாயே,
[40]. வாணுதலே, [41]. சார்ந்தேன்.
__________________________________________________________
151 பொற்றா மரையிற் புனலாடிப் பண்டைவினை
சற்றா கிலுமின்றித் தள்ளினேன் - முற்றுதவக்

152 கம்பை நதிக்கவுரி[42] காந்திமதி யம்மனிரு
செம்பொன் மலர்ப்பாதஞ் சேவித்தேன் - நம்பன்

153 திருவா திரைமறுநாள் தெர்சனையுஞ் சேவித்
தொருமாதம் நின்றேனவ் வூரில் - வருவா

154 ரறிந்த மனுஷரென் றவ்வூரை நீங்கிச்
சிறந்த புடைமருதூர்ச் சேர்ந்தேன் – பிறந்திறவாச்

155 சித்தனுக் காகத் திருமேனி சாய்ந்திருந்த
கததனைக் கண்டிரண்டு கண்குளிர்ந்தேன் -[43]வித்தகன்

156 தென்பிரம தேசத்தே சென்றுகயி லேசனையும்
அன்பினொடு செம்பொ னடிபணிந்தேன் - [44]பின்புசென்றவாழ்

157 பாவநா சத்தலத்தைப் பார்த்தாலு மாங்கவனைத்
தேவனா கச்செய்யுந் [45]திவ்யதலம் - மேவி

158 அருவிநீராடி [46]யமல னையுஞ் சேவித்
[47]தொருவினையு மில்லா தொழிந்தேன் - இருபொழுதும்

159 ஆங்காரம் [48]வேறின்றி யங்கங்கே சஞ்சரித்துப்
பாங்காய்த் தலவாசம் பண்ணினேன் - ஓங்கும்

160 உருவெழுத வொண்ணா வொருபொருளை யுக்ரப்
பெருவழுதி கண்ட பிரானை - மரவுமன்பர்

161 பேராசைக் கேயிணங்கு பெம்மானைப் புன்னைவனச்
சீராசைக் கேசென்று சேவிப்ப - ஓராசை

162 பற்றி நடந்தேனென் பாக்கியம்போற் சித்திரைக்
[49]கொற்றவிழா வுக்குக் கொடியேறிப் -பொற்றொடிக்கை

163 யாவுடைய தேவியுமென் னய்யனுமாய் வெள்விடைமேற்
சேவைதரு நாலாந் திருநாளிற் - கோவிலின்முன்
______________________________________________________________
(பி - ம்.) [42].காந்திமதியினிரு, [43]. பித்தன்வாழ், [44].இன்பவனைப்,
[45]. தெய்வதலம், [46]. யமலனைச் சேவித்தே, [47]. னொரு வினையு,
[48]3 வேறன்றி, [49]. கொற்ற திருவிழா
________________________________________________________________
164 சன்னதி வாசலிற்போய்ச் சந்தித்தேன் தெண்டனிட்டேன்
இன்ன லெல்லாந் தீர்ந்துகரை யேறினேன் - முன்னவனும்

165 வீதிவலம் வந்தருளி மீண்டான் றிருவாசற்
சோதிமணி மண்டபத்தின் சுற்றெல்லாம் - வேதியரும்

166 சைவரும் வேறுள்ள சனங்களுங்கை கூப்பிநிற்குந்
தெய்வச் சபையின் சிறப்பெளிதோ - வெய்ய

167 பிணிமாற மண்கொடுக்கும் பேரருளெங் கோமான்
பணிமாறு காலம் பணிந்தேன் - தணியாத

168 ஆனந்த வெள்ளத் தழுந்தினேன் காமவெள்ளந்
தானந்த வெள்ளத்தைத் தாண்டிவிட-மானேந்து

169 மைவிழியார் தட்டி வளையம் வருதலுமோர்
பெய்வளையைக் கண்டுமயற் பேய்கொண்டேன் - தொய்யுமவள்

170 சிற்றிடையும் பட்டுடை யுஞ்செண்பகப் பூம்பந்துகொண்டு
சுற்றிய கொண்டைச் சொருக்கழகும் - பொற்குழையும்

171 வச்சிரத் தோடுமவள் மாணிக்கப் [50]பூண்முலைமேற்
கச்சு மணிக்கடகக் கைவீச்சுங் - கெச்சமும்

172 பாதத் துணைச்சிலம்பும் பாடகமு மென்னறிவைப்
பேதித்த கோலப் பிடிநடையுஞ் - சோதிமணி

173 மூக்குத்தி முத்து முகந்த திருப்பவள
வாய்க்குட் குறுஞ்சிரிப்பின் மார்க்கமும் - நோக்கத்தால்

174 பார்த்தேன் மிகவும் பரவசமா னேனுடம்பு
வேர்த்தே னுயிர்த்தேன் வெதும்பினேன் - கீர்த்திபெறு

175 மெங்கோனுங் கோயிற்கெழுந்தருளும் வேளையிலே
பைங்கோதை நல்லாளும் பாங்கியரும் - அங்கேயென்

176 ஆவியுங் கண்ணு மறிவுமவள் பின்தொடரக்
கோவிலுக்குள் ளேநடந்தாள் கொஞ்சமோ - பாவி

177 மணியிழந்த பாம்புபோல் வாசலிலே நின்றேன்
பணிமொழியாள் தன்வரவு [51] பார்த்தேன் - துணிவென்னாம்

178 என்னிரு கண்களுக்கும் ஏதோ சடுதியிலே
கன்னி வருவதுபோற் காண்பிக்கு - மந்நேரஞ்

179 செஞ்சிலம்புங் [52]கேட்டுத் திகீர்திகீ ரென்னுநெஞ்சங்
கொஞ்சமல்ல வென்விரகக் கோட்டாலை - வஞ்சியவள்

180 தட்டியுங் கையுமாய்ச் சாய்ந்துநின்ற தூணைப்போய்க்
கட்டி [53]யணைக்கவுங்கை காலெழும்புங்-கெட்டேன்

181 இதுவென்ன மோக மிதுவென்ன தாகம்
இதுவென்ன [54]சோக மெனக்கு - மதுமலர்ப்பூங்

182 கோதையு மத்தறுவாய் கோவிற் றொழினிமுடித்தென்
வேதனை தீர வெளிவந்தாள் - மாதரசி

183 சந்த்ரோ தையஞ்சூழ்ந்த தாதியரே நட்செத்ர
மிந்த்ராணி யுந்த்ராணிக் கீடல்ல – பைந்தொடியைக்

184 கண்ட ரிஷீசுரருங் காமிப்பார் நானாசை
கொண்ட தபூர்வமென்று கூறுமோ - ஒண்டொடிதன்

185 பாங்கியரி லேயொருத்தி பற்பமுக வல்லியெனும்
பூங்குழலாள் கிட்டமெள்ளப் போயடுத்தேன் - ஈங்குமக்கு

186 முன்னே நடக்குமிந்த மோகினியார் பேரேது
மின்னே சொல்லென்று [55]விளம்பினேன் - தன்னுருவுங்

187 கண்(ண)னுருவு மொன்றாக் காட்டிநின்ற சீராசைப்
[56]பண்ணவன்றன் கோயிற் பரிகலத்தில் - எண்ணு

188 முதன்மைக் குடிப்பிறந்த மோகன ரம்பை
மதனுக் கபிஷேக மாலை - யிதமித்த

189 நங்கள் குடிக்கு நடுநா யகமான
திங்கள் வதனத் திருப்பாவை - மங்கைபேர்
_________________________________________________________
(பி - ம்.) [50] பூண்முலையிற் [51]. பார்ப்பேன், [52].கேட்குந், [53]. யணைக்கவுமென், [54]. சோப [55].விசாவினேன், [56]. பண்ணவனார்
__________________________________________________________
190 அந்தணரே கேளு மதிரூப [57]ரத்னமென்றாள்
இந்துநுத லாளுக் கிணங்குமே - தொந்தமங்கே

191 கூட்டுவித்தா லார்தடுத்துக் கொள்வார் சிவன்செயல்நின்
றாட்டுவித்தா லாரொருவ ராடாதார் - கேட்டு

192 மடிவுவா ராமல் வயிரவனுக் கங்கே
நெடியவட மாலைக்கு நேர்ந்தேன் - துடியிடையாள்

193 சன்னதி வீதிவிட்டுச் சந்திக்குத் தென்புறமாய்த்
தென்னமர நிற்குந் தெருவாசல் - அன்னதொரு

194 பாரமனை யுட்புகுந்தாள் பாங்கியெனும் பற்பமுக
நேரிழையாள் மாத்ரமங்கே நின்றுகொண்டாள் - வாருமையா

195 வேதியரே யெங்கே விடுதியென்றாளென் வரவை
யாதி முதலா யறிவித்தேன் - பாதியும்நான்

196 சொல்லுமுன்னே யென்கருத்தைக் கண்டாள் சுகக்காரி
வல்லமைபோ லில்லையொரு மாதருக்கு - நல்லதிங்கு

197 நில்லுமென்று போனாள் நினைத்தபடியே முடிப்பாள்
இல்லையென்று வாராளென் றெண்ணினேன் - ஒல்லையிலே

198 வந்தா ளவள்பிறகே வந்தொருத்தி கைலாகு
தந்தாள் நடந்தேன் தரிப்பேனோ - [58]முந்தநான்

199 உள்ளுத் தலைவாச லுட்போனே னப்போதோர்
வெள்ளைத் [59]தலைச்சி வெளிவந்தாள் – தள்ளரிய

200 பேரனார் வந்தீரோ வென்றாள் பிறகொருத்தி
வாருங் கொழுந்தனார் வாருமென்றாள் - ஓர்சிறுபெண்

201 அத்தா னெனவந் தழைத்தா ளவரவருக்
[60]குத்தாரஞ் சொல்லிமனை யுட்புகுந்தேன் - சித்திரப்பூம்

202 பட்டக சாலையிலே [61]பாய்விரித்தார் போயிருந்தேன்
தட்டுநிறை யச்சுருளுந் தான்பரப்பிப்-பெட்டியிலே
__________________________________________________________
(பி - ம்) [57]. ரத்னமென்றால், [58] முந்தனாள், [59]. தலைநாச்சி வெளியில்வந்து - தெள்ளரிய, [60]. குத்தரங்கள், [61]. பாய்விரித்தாள்
_____________________________________________________________________
203 [62]கெந்தப் பொடிவைத் தனுப்பினாள் கிஞ்சுகவாய்ப்
பைந்ததொடியைப் பெற்ற பழிகாரி - வந்தெதிரே

204 நில்லாளா முள்ளரங்கி [63]லேநின் றுபசாரச்
சொல்லா லுரு(க்)கத் தொடங்கினாள் - கல்லு

205 முருகுமே யன்றைக் கொருநன் னிமித்தங்
கருட தரிசனங்கண் டாளாம் - பெரியதிண்ணை

206 மூலையிலே சொன்ன முகிழ்த்தக் கெவுளியொருக்
காலுமில்லை யாம்விடியற் காலத்தே - பால்வார்த்துத்

207 தங்கச்சி சோறுண்ணுந் தாலத்தோ சீனியிலோ
யெங்குக் கிடந்துதோ யெவ்வகையோ - செங்கைக்குள்

208 மஞ்சளகப் பட்டுதாம் வந்துதுகல் யாணமிது
கொஞ்சமல்ல நன்மையென்று கொண்டாளாம் - நெஞ்சுதனில்

209 எண்ணியவா றிங்கே யெழுந்தருளி னீர்நாங்கள்
[64]பண்ணியபூ சாபலத்தின் பாக்யமன்றோ - புண்ணியரே

210 கைந்நிறையப் பொன்கொடுத்துக் கண்ணிறைந்த மாப்பிள்ளையை
மெய்ந்நிறையக் கட்ட விதிகண்டீர் - மைந்நிறைந்த

211 கண்ணாளுக் கேற்ற கணவர்நீர் கண்டவுடன்
உண்ணாமற் பூரித்த தென்னுடம்பு - பெண்ணனையீர்

212 ஆரங்கே மெத்தைதட்டிப் போடுங்கோ ஆடரங்கை
வேருங் கொழுந்தும் விதானியுங்கோ - பாருங்கோ

213 குத்து விளக்கையென்றாள் கூறும் வெகுமான
மித்தனையுஞ் சும்மாவந் தெய்துமோ - பத்திவிடு

214 காதிற் கடுக்கனுமென் கைந்திறைந்த மோதிரமு
[65]மாதிப் பசும்பொன் னரைஞாணும் - கோதி

215 முடிந்த குடுமி முடிப்பூவுங் காதில்
வடிந்த சவாது மணமும் - படிந்ததொரு
_________________________________________________________________
(பி - ம்.) [62]. கெந்தபொடி மேல் வைத், [63]. ல் நின்றாளுபசாரத்,
[64]. பண்ணிய பூசா பலனன்றோ, [65]. மாணிப்
_______________________________________________________________
216 பட்டுக்கை வாளையுமென் பையிற் கலீரென்று
விட்டுக் கிலுங்கும்வெள்ளி வெண்டையமு - மிட்டவரிச்

217 சந்தனமு நானிருக்குந் தந்தியுங் கண்டுவிட்டால்
வந்து விடாதோ மரியாதி - சொந்தமாய்

218 ராச வரிசை நடக்குதல்லால் [66]உன்னாணை
வேசைமகள் பாங்கோ விளம்புங்கால் - வாசமலர்க்

219 கோதையும் வெந்நீர்க் குளித்தாளென் றாங்கொருத்தி
ஓதினாள் மற்றொருத்தி யோடிப்போய் - மாதரசி

220 கட்டுவற்கங் கொண்டுவந்தாள் கண்ணாடியு முடைமைத்
தட்டு மெடுத்தொருத்தி தாங்கினாள் - திட்டிநுழைந்

221 தத்தனையுங் கொண்டுபோ யாடம் பரஞ்செய்தா
[67]ரெத்தனையுந் திட்டென் றியம்புவேன் - சுத்தரத்ன

222 வல்லியென்றார் பாங்கியென்னை வாருமென்று கைகொடுத்தாள்
[68]மெல்லி நல்லாள் தன்படுக்கை வீட்டிலே - செல்ல

223 விடுத்தாளங் கேகிடந்த மெத்தையிலோர் போது
படுத்தாலுந் தீருமே பாவம்- தொடுத்தசையுஞ்

224 சங்கிலியோ தூங்குமஞ்சக் கட்டிலோ சாளரமோ
இங்குலிக வன்னத் தெழிற்கதவோ - வங்காளப்

225 பச்சையும் பஞ்சுமிட்ட பாரத் தழுவணையோ
மெச்சியமேற் [69]கட்டு விதானிப்போ - இச்சையுடன்

226 பார்த்துடம்பு பூரித்தேன் பாங்கியருந் தானுமா
யார்த்தசிலம் போசைகலீ [70]ரென்றலம்பப் - போர்த்த

227 சலவையுங்குப் பென்ற சவாது மணமுங்
கலவை மணமுங் கமழக் - குலவுபெடை

228 யன்னமென வந்தெ னருகே கவிழ்ந்துநின்றா
ளின்னநினைத் தாலுமன மேங்குமே - சன்னையாய்ப்
_______________________________________________________________
(பி - ம்.) [66]. என்னாணை, [67]. ரெத்தனையந் தத்தென், [68].மெல்லியலாள்,
[69]. கட்டிவிதானமோ, [70].ரென்றியம்பப்
________________________________________________________________
229 பாங்கியரும் போய்மறைந்தார் பையவந்து மாமியா
ரோங்குமதிட் பக்கத் தொதுங்கிநின்று- நீங்களிங்கே

230 வந்ததே பாக்யமப்பா மார்க்கண்டன் போலிருப்பீ
ரிந்தவூர் பொல்லா விடும்பையூர் - அந்தரங்கம்

231 போலப் பழகுவார் பொல்லாப்புண் [71]டாக்குவிப்பார்
காலப்ர மணக் கலிகண்டீர் - வாலப்

232 பருவமிது தேவடியார் பாசாங்கு செய்வார்
திருவுளமுண் டேயுதவி [72]செய்ய - ஒருவருக்கு

233 மிங்குப் பொறுப்பில்லை யெங்கள் குடியிருப்புச்
சங்கைப்பா [73]டென்னத் தகாதுநீர் - நங்கை

234 சிறியாள் லவலேசந் தேவடியார் மாற்கம்
அறியாள் பசலைப்பெண் ணய்யா - நெறியாய்

235 நடக்கினும்பொல் லாப்பாய் நடந்தாலு முற்றும்
அடைக்கலமாய்க் கைக்கொண் டருளும் - படைக்கிற்

236 பணமேது பாஷாணம் பண்பாய் மனுஷர்
குணமே பணமென்று கொள்வேன் - மணவறையி

237 லின்றுதந்த காட்சிபோ லென்சீவ னுள்ளமட்டும்
நன்றிபெற வாழ்ந்திருங்கோ ணான்காண்- என்று

238 மகளை யழைத்தாள் மணிமுதுகை நீவி
முகமுந் தடவியுச்சி மோந்தாள் - சுகமே

239 யிருமகளே யென்றனுப்பி யேகினாள் வந்தென்
னருகிலிருந் [74]தாள்பெண் ணரசி - பொருமலைநான்

240 எங்கேயடக்குவே னென்றீபரத்து முன்னே
அங்கேயு முண்டோ [75]வபிமானஞ் - சிங்கார

241 வாச லடைக்கவில்லை வாடை பரிமளங்கள்
பூசவில்லை பாக்குமுதற் போடவில்லை - பேசுவதென்
______________________________________________________
(பி - ம்.) [71]. டாக்கிவைப்பார், [72]. செய்யும்,[73]. டெண்ணத்,
[74]. தாளென்னரசி, [75].அடிமாணம் - சங்கையாய்.
_______________________________________________________
242 ஆடை முழுதும விழ்க்கவில்லை பூண்முலைமேல்
வாடை ரவிக்கைமுந்தி வாங்கவில்லை - கூடி

243 [76]எடுத்தே னணைத்தேன்ரதிகேளியாடத்
தொடுத்தே னிதென்ன துரியம் - படுத்த

244 சுகங்கள் மிகுந்து துவண்டுதுவண்டு
முகங்கள் முகந்து [77]முயங்கி - நெகிழ்ந்து

245 குலைந்தது கொண்டை [78]குழைந்தது கொங்கை
உலைந்தது செம்பொ னுடம்பு-கலைந்த

246 திலங்கு பசும்பொ னிணங்கு நிதம்ப
மலங்க முகங்க ளலம்பி - நலங்கொள்

247 நறுந்துகி லெங்கும் நனைந்து (நனைந்து)
மறந்திகு சிந்தை மருண்டு - சிறந்த

248 பெருந்துடை யுந்துடை யும்பிரி வின்றி
நெருங்க மருங்கு நெளிந்து வருந்த

249 இதழ்க்குறி தைக்க வெனக்கு மவட்கு
மதத்த களிப்பு [79]மயக்க - இதத்த

250 [80]பிடர்க்குளிறுக்கு பிறைக்குறி வைக்க
மடற்கமு கெட்டு வகுப்பில் - நடத்து

251 சிறுக்குரல் மிக்க செவிக்கமிர் தொப்ப
[81]வுறிக்கை யிணைக்கை யுடற்குள் - இறுக்க

252 வளைகள் சிதற [82]மழலை பதற
முளைவெண் ணிலவின் முறுவல் - விளைய

253 இருவ ருடலு மிருவ ருயிரு
மிருவர் மனது மிளக - வருகுது

254 போக மெனக்குப் பொறாதடா வென்றுசண்ட
வேக [83]முடனெழும்பி மேற்கொண்டாள் - நாகரிகக்
____________________________________________________________
(பி - ம்.) [76]. எடுத்தணைத் தேனரதி; கேளிக்கையாடத், [77]. முயங்க,
[78]. குலைந்தது, [79]. மயக்கு - மிதத்த, [80]. விடிகுஞ்சிரக்கள்; பிடர்க்குளி றுக்கப்,
[81]. வுறுக்கி, [82]. மலைகள், [83].முடனேயெழும்பி
______________________________________________________________
255 காதோபொன் னோலையோ காருண்ய வாண்முகத்தின்
மீதோ டியகோல வேர்வையோ - மாதுநல்லாள்

256 [84]தத்தரமோ வண்டுறுக்கோ தப்பி முறைமயங்கு
முத்தரமோ கூடு மொருமிப்போ - எத்தையென்று

257 சொல்வே னுபரித் தொழிலுக் கவளுடனே
வில்வே ளனுபவிக்க வேண்டாவோ-கொல்வாள்

258 எளிதாய் விடுவாளோ யானுமொரு வாறு
நெளியா துளம்பெலத்து நின்றேன் - களிகூர

259 மெச்சினா ளாடவனீ [85]யாமய்யா வேறொருவர்
[86]கிச்சியா துள்ள மினியென்றாள் - சச்சாய்

260. நடந்துதோ சம்போக நாகரிக மாகக்
கிடந்துதோ ராண்டுசெல்லுங் கேட்கக் - [87]கடந்ததொரு

261. காமசல ராசிப்ர வாகம் கரைபுரண்டு
பூமலர் மெத்தைப் புறநனையத் - தாமதஞ்சற்

262. றில்லாது போக மிருபேர்க்கு மொத்திருந்த
சல்லாப [88]போக சமயத்தே - கொல்லாமற்

263. கொல்லவோ வந்தாய் கொலைகாரா வென்றுசற்றே
மெல்ல மழலை மிழற்றினாள் - வல்லியங்கே

264. தன்களையும் வேர்த்த சரீரமுமோர் சோபைதர
என்களப மார்பினிடைவீழ்ந்தாள் - மின்கொடியை

265. அத்தறுவாய் பார்க்கவெனக் காயிரங்கண் வேண்டாவோ
முத்தியசெவ் வாயும் முகமுமாய் - நித்திரைபோய்

266. அங்கே விடாய்தீர்ந் தெழுந்திருந்தா எய்யாமற்
றெங்கே துகிலென் றெனைக்கேட்டாள் - செங்கையினால்

267. வாங்கியொரு தட்டுடுத்தாள் மற்றத் துகில்கொடுங்கை
தாங்கினாள் நானுமவள் தானுமாய் - ஆங்கே
______________________________________________________________
(பி - ம்.)[84]. தத்தமே, [85]. யாமடா, [86].கிச்சையதுள்ள மினிதென்றாள்- அச்சாய்,
[87]. கிடந்ததொரு, [88]. சோக.
____________________________________________________________
268. [88]வெளியில்வந்து நின்று விடாயாறி மீளத்
தளிரணைமேற் சென்ற தறுவாய் - இளமுலையைப்

269. பார்த்தாள் நகக்குறியைக் கண்டாள் பழிகாரா
தூர்த்தாவென் றாள்சரிந்தாள் தோளின்மேல் - வார்த்தையினும்

270. பெண்மையினும் சம்போக [89]லீலையினும் பேயாக்கி
உண்மை மனத்தை யுருக்கினாள் - கண்மயங்கு

271. நித்திரையிலேகொடுங்கை நீங்கினா லுஞ்சகியாள்
அத்தனையும் பொய்யென் றறிவேனோ - சத்தியமாய்

272. உள்ளபடி கொண்டே னுதயகா லத்திலந்தக்
கள்ள நெடுநீலி கையிலே - கொள்ளையாய்

273. எண்பதுபொன் வாரிக் கொடுத்தே னெழுந்திருந்தேன்
தண்புனல்பாய் நாகசுனை தன்னிற்போய்ப் பண்புடனே

274. சந்திபண்ணி னேன்சோமன் தப்பினேன் தப்புதற்குச்
சிந்தை பொறாது திகைத்துநின்றேன் - முந்தமுந்த

275. மஞ்சள் துவண்ட [90]மணம்படிந்து போவதுதான்
கொஞ்சமோ வுள்ளங் கொதியாதோ - நெஞ்சுமகிழ்ந்

276. தந்தணர்கள் வீதியிலே சென்றேனப் பேதொருத்தி
சந்தனக்காப்பாய்ப்பெற்ற தாயைப்போல் - வந்தெனது

277. பிள்ளையைப்போ லேயிருந்தாய் பிள்ளாய்நீ யாரென்றாள்
உள்ளபடி சொன்னேன்பே ரூரெல்லாம் மெள்ள

278. அகத்திற் கொடுபோனா ளன்புடனே யெல்லாம்
முகத்தில் தெளிந்துகொண்டாள் முற்றும் மிகத்தயவா

279. யுண்ணப் பழையதிட்டாள் உள்ளிருந்து சாப்பிட்டேன்
எண்ணப் படாதுகறி என்னாணை - புண்ணியவதி

280. தேகமிந்தத் தேகநான் செய்ததிலே பாரமில்லை
ஆகிலும் நான்பிள்ளை யவளுக்கே - ஓகைபெறு
____________________________________________________________
(பி - ம்.) [88]வெளியில்வந்தேக, [89]. லீலையெனும், [90]. மயம்படிந்து.
______________________________________________________________
281. காலத் திருநாளிற் கண்ணுக் கடங்காதென்
மாலைக் குழலி வருங்காட்சி - லீலைவிளைத்

282. தென்னுடனே ராத்ரி யிருந்து வருந்திவிட்ட
வன்னமுள்ள பொன்னுடம்பின் வாட்டமும் - பின்னுமுன்னுந்

283. தள்ளிநெருங் [91]குந்திருநாட் சந்தடிக்குள் ளேயுமென்மேற்
கள்ளமுடன் போட்ட கடைக்கண்ணும் பிள்ளும்

284. அதரக் குறியு மதைப்பிறர்கா [92]ணாமல்
பதலப் படுத்திவரும் பண்பும் - இதமாய்ப்

285. [93]பிடரியில்நான் வைத்த பிறைக்குறியுங் கண்டேன்
உடலம் பூரித்தே னுடனே - தொடர்பிடியாய்

286. ஆள்விட் டழைத்தாள் அழைத்தவுடன் போய்ப்புகுந்தேன்
வாளொத்த கண்ணாள் மனையிலே - நாளிட்டுச்

287. [94]சோதிடம் சொன்னான் சுகமென்று மாமியார்
காதல் மகளையுமென் கைக்கொடுத்து - மாதரசி

288. சென்மித்தாள் வேண்டியதைத் தேடினா ளும்முடைய
தன்மத்தி லுண்டெல்லாச் சம்பத்தும் - என்மட்டோ

289. நாலு தலைமுறையாய் நாங்க ளொருவன்கீழ்
மாலிமையாய்ப் பெண்டிருந்து வாழ்ந்ததல்லால் - சாலமாய்த்

290. தேடியுண்ண மாட்டோமென் சேயிழையிந் நாள்வரைக்கும்
நாடியது மில்லையொரு நாயகனைக் - கூடிய

291. நேரபல னோவலியச் சொன்னா ளவள்நினைத்த
காரியநான் மீறக் கடவேனோ - நீரிவளைப்

292. பெண்டுவைத்துக் கொள்ளுமென்று பேசினாள் முற்றுமிவள்
உண்டுநமக் [95]கென்றுநம்பி யொப்பினேன் - பண்டுள்ள

293. மாப்பிள்ளை மாரை மறந்தா ளவளெடுத்த
கோப்பெனக்கு நல்லதோ கூறுங்கால் - சாப்பிடத்தான்
______________________________________________________________
(பி-ம்.) [91]. கித்திருநாட், [92]. ணாமல்மறை, [93]. பிடரில்நகம்,
[94]. சோதிரிஷம், [95]. கென்று சொலி
____________________________________________________________
294. நேரமுண்டோ வேறே நினைவுமுண்டோ ஆண்பிளைக்கு
வீரமுண்டோ பெண்மோக மேற்கொண்டால் - பாரமென்மேல்

295. வைத்தாள் செலவுக்குமா தவழி நூறுபொன்னும்
உத்தார மென்றேன் ஒறுப்பேனோ - முத்துமுத்தாய்ப்

296. பெண்டுவைத்த மாப்பிள்ளையைப் பேர்சொல்லா ளாமத்தை
கண்டமட்டி லேஒழிப்பாம் கைநெரிப்பாம் - முண்டையவள்

297. அக்காள் கொழுந்தன்மேல் ஆணை கடவாளாம்
சிக்காதோ என்போல்வார் சிந்தனைதான் - எக்காலும்

298. தூக்கமுண்டோ கண்ணுக்குத் தூங்காச் சிவன்ராத்ரி
நீக்கமுண்டோ எங்களுக்கு நித்தமுண்டு -நோக்கமற

299. மாத மொருக்கால் மனைவிலங்கு நான்மூன்று
மோதுவதேன் மூன்று யுகமன்றோ - வேதனையாய்ப்

300. பள்ளி யறைக்குட் படுத்திருப்பே னாலாநாள்
வெள்ளி யுதிக்குமுந்தி மெல்லியல்போய்த் - தெள்ளு

301. புனலாடி வந்தாள் புணர்ச்சியின்றி யெவ்வா
றெனைநீ மறந்திருந்த தென்றாள் - கனவிலே

302. கண்டேனுன் னோடுதினங் கைகலந்தே னென்றுமுத்திக்
கொண்டேனைக் கண்சிவந்து கோவித்தாள் - உண்டாச்சோ

303. நித்திரையுன் கண்களுக்கு நீகனவு காணவென
மெத்த மனம்பொருமி விம்மினாள் - அத்தனையும்

304. சொல்லும் பொழுதெளிதோ தோகைநல்லாள்
[96]பாவனையிற் கல்லுங் குழைந்து கரையாதோ - சொல்லுகின்ற

305. கைப்பொருளை யெண்ணுமோ கன்னியனு போகமே
மெய்ப்பொருளென் றெண்ணினேன் வேறில்லை - யிப்படியே

306. [97]தேனு மதுரித்த தீம்பாலும் போற்கலந்து
நானு மவளும் நடக்குநாள் - மானூர்க்
_________________________________________________________________
(பி-ம்) [96]. பாவனைக்குக், [97]. தேனுங்க துசித்த; தேனுந்திரித்த
_________________________________________________________________
307. குடியிருந்த வேதியரிற் கோதண்ட னென்போன்
முடியமறை நூலுணர்ந்த முன்னோன் - வடிவிலே

308. கன்னல்வில்வே ளொப்பான் கனகாவி யப்ரசங்கி
யென்னுடனே நட்பாய்வந் தெய்தினான் - பின்னமற

309. வெங்களிலே யொன்றா யிருந்தோ மவனேயென்
வங்கணத்துக் கேற்றபிள்ளை மாணிக்கம் - அங்கொருநாள்

310. என்செய்தி யைக்கேட்டான் யான்சொன்னே னப்பொழுது
தன்செய்தி யைக்கேளாய் தம்பியென்றான் - முன்செய்த

311. கன்மவினை யாராற் கடக்கப்படு மெனக்குச்
சென்மதல மானூர் சிலகாலம் - நன்மையாய்த்

312. தாதைசொல்லுக் கீழே நடந்தேன் தமையன்கை
மோதிரக் கல்லின் முகாந்திரமாய் - நீதிகெடச்

313. சொல்லாத வம்புதும்பு சொன்னான் பிதாவுமெனைப்
பொல்லாத துர்ச்சனா போவென்றான் - நல்லதென்றே

314. அன்னைகிட்டப் போய்நின் றழுதே னவளுக்கு
மென்னிடத்தில் வார மெளிதல்ல - சன்னையாய்

315. உள்ளுக்குப் போனா ளொருசாளி கையெடுத்தாள்
மெள்ளக் கொடுத்தாள் வெளிவந்து - பிள்ளாய்

316. சதுருடனே போய்வடக்குத் தாண்டிப்போ காமல்
மதுரைமட்டி லேதிரும்பி வாவென் - றுதிர் தடங்கண்

317. நீராலே என்னை நிறையமுழுக் காட்டினாள்
ஆராலே கூடுமிந்த ஆதரவு - தோராயந்

318. தாயா ரடியிணைமேல் தாழ்ந்தேன் விடைகொண்டேன்
பேயான பாவி பிறப்பட்டேன் - போயுலகில்

319. அங்கங்கே சஞ்சரித்தே னப்பாலுன் போலிந்தச்
சங்கரனார் கோவில் தனில்வந்தேன் - உங்கள்

320. அதிரூப ரெத்னமெனு மாயிழைக்கு மூத்த
சதிகாரி மோகவல்லி தன்பால் - விதிகொடுபோய்

321. விட்டதினா லிந்த வெறுமையா னேனென்று
பட்டதெல்லாஞ் சொன்னானோர் பாரதம்போல் - மட்டுண்டோ

322. முன்பு [98]தலைமகளாய் மோகவல்லி மாத்ரமல்லாற்
பின்பு நெடுநாளாய்ப் பிள்ளையின்றிப் -பொன்பறிக்கும்

323. அத்தையனு ராகவல்லி யம்மையார் நோன்பிருந்து
நித்தியலு நாகசுனை நீராடிச் - சுத்தமாய்

324. உண்டுசி வாலயத்தி னுள்ளே [99]தவங்கிடந்து
கெண்டையங்கண் [100]ணாட்கதுவே கெற்பமாய் - ஒண்டொடியைப்

325. பெற்றா ளதிருபரெத்னமென்று பேரிட்டாள்
வற்றாத [101]செல்வம் வளர்த்தியாய் - முற்றினாள்

326. பேதை பெதும்பைபோய்ப் பின்னைத் [102]திரண்டுவிட்டாள்
மாதுபன்னி ரண்டு வயதிலே-கோதைக்குப்

327. புத்திசொன்ன தாய்ப்பாவி பூராயங் கேளென்றா
னத்தனையு மெங்கே [103]யறிந்தானோ - குத்துமுலை

328. பாக்களவு தோன்றும் பருவத்தே தன்மகளை
ஆக்கமுட னாட்கொண் டருகழைத்துப் - பாக்ய

329. மொருவர் வசமோ யுனக்குநல்ல வாலப்
பருவமிது தேடியுண்ணப் பக்வங் - குருவசனந்

330. தப்பினுந் தாய்வார்த்தை தன்னை யுபதேச
மெய்ப்பொருளாய் கொள்ளுவதே மேம்பாடு - கைப்பொருள்கள்

331. உள்ளவரை முற்பணையங் கேளாதே யுள்படுத்துக்
கள்ளவித மெல்லாங்கேள் கண்மணியே- மெள்ள

332. வரவழையுன் வீட்டிலே வந்தா லெதிர்போய்ப்
பரவு வெகுமானம் பண்ணு - தெருவிலே

333. கண்டா லெழுந்திருந்து நில்லு கனமோகங்
கொண்டார்போல மெத்தக் குழைந்துவிடு - பெண்டாக
___________________________________________________________
(பி - ம்.)[98]. தலைமகள், [99]. தவங்கிடந்தாள், [100].ணாளதுவே,
[101].செல்வ, [102]. திரண்டாளாம், [103]. யறிந்தாளோ
__________________________________________________________
334. வைத்தருளம் வேறே மனம்பிடிக்கு தில்லையென்று
சத்தியமாய்ச் சும்மா தலையிலடி - [104]நித்திரையை

335. ஆசைப் படாதே யரைவிளைந்தா லன்றிநம்போல்
வேசைக்கு வெள்ளாண்மை வேறுண்டோ - பேசையிலே

336. வேற்றொருத்தி பேச்செடுக்க வொட்டாதே விம்மியழு
தூற்றுகளக் கண்ணீரு குத்துவிடு- தூற்றுங்

337. களவுவெளி வாராமல் கைந்நகத்துக் குள்ளே
மிளகுபொடீ வைத்தவளே வேசை - இளநேரம்

338. வீதியிலே வந்துநில்லு வேடிக்கை பண்ணுகொண்டை
கோதி முடிக்குங் குணாலம்போல் - மாதேயுன்

339. னுத்தரிகஞ் சோர வுபயமுலை காட்டிமறை
யத்தனையும் வேசைக்கடைவன்றோ - துத்தாகத்

340. [105]தெட்டித் தொழில்நடத்தும் தேவடியார்க் கல்லவோ
கட்டித் திரவியங்கள் கைசேரும் - சட்டமாய்ச்

341. [106]சஞ்சரிப்போர் வந்தால் தராதரத்துக் கேற்றபடி
கொஞ்சி மலரணைமேற் கூடியிரு - மிஞ்சு

342. கடினக்கா ரர்வந்தாற் கைச்சரசத் தோடே
குடிலத்தாற் கொஞ்சிக் குணாம்பிப் -[107]பிடிபாடாய்ச்

343. செய்யுந் தொழிலறிந்து செய்து வசப்படுத்தி
மெய்யெங்கு மோடி விரீரென்றாற் - பையவெழுந்

344. தந்நேரங் கூடியது கொண்டு பூரையிடு
பொன்னேசும் மாவுடம்பைப் போடாதே - பின்னை

345. மதனூல் படித்து வருவார் சிலபேர்
இதமாகக் கூடியி ருந்தாற் - பதறாமற்

346. கூச்சமினிப் பொறேன் கொல்லாதே கார்யமெனக்
காச்சுதென்று கட்டி யணைத்தெடுத்து - மூச்சடக்கிக்
____________________________________________________________
(பி - ம்.) [104].நித்திரையில், [105].செட்டித், [106]. தராதலத்துக், [107]. பிடிபடாச்.
___________________________________________________________
347. கன்னத்திற் பூணக் கடித்தா லதுகொண்டு
தன்னைத் தனக்குள்ளே தான்மகிழ்ந்து - பின்னைத்தான்

348. பாராட்டான் விட்டு விடுவான் பழிகாரி
சீராட்டோ காமஞ் செலவிடுதல் - போராட்டாய்த்

349. [108]தம்பனைக்கே தேனு மொன்றைப் பூசித் தழுவவரும்
வம்பரைப்பே யாக்க மருந்துண்டு -- செம்பரத்தம்

350. பூவிலூ [109]மத்தப் புழுப்போட் டரைத்தபொடி
தூவிலங்ங னேயடங்குந் துன்மார்க்கம் - நாவலவர்

351. வந்தாலுஞ் சும்மா வரச்சொல்லு நாலிரண்டு
தந்தாலு மாதாயந் தக்கினது - விந்தையாய்

352. எப்படித்தான் கூடி யிருப்பினும்பின் வாங்காமல்
அப்படியே கூடி யனுப்பிவிடு - தப்பரையும்

353. பொய்யா சையுமல்லாற் பொன்னே யொருவர்மேல்
மெய்யாசை கொண்டவளும் வேசையோ - கைப்பிடியாய்

354. ஊர்மணியக் கார னழைத்தா லுடனேபோ
பேர்மகிமை கொண்டு பிழைக்கலாம் - ஆர்வரினும்

355. முன்புமடிச் சீலை முடிப்பு நெகிழ்க்கவிட்டுப்
பின்பு [110]நெகிழ்ந்துன் பிடைவையைநீ -யன்புபெறச்

356. சல்லித் தனம்பேசுந் தாறுமா றுக்காரக்
[111]குல்லைத் திருடரைநீ கூடாதே - கல்லுக்குள்

357. நாருரிக்கி றாள்சிறுக்கி நாலாங் குடியாள்தன்
காரியத்தைக் கேட்டாற் கதைகண்டாய் - பேராய்த்

358. தலையெடுக்கு நாளி லொற்றைத் தாலிமுதலில்லை
விலைமதிக்கக் கூடாதென் மின்னே - முலையிலிட்ட

359. முத்துவட மிப்போது முச்சூடும் தேடினா
ளத்தனையும் பூண்டா லசைவாளோ- இத்தனையும்
_________________________________________________________
(பி - ம்)[108]. தம்பனத்தே, [109]. மத்தம் பொழுப்போட்
[110] நெகிழுன், [111]. குல்லத் திருடருடன்.
_________________________________________________________
360. பெற்றதாய் சொன்ன பிடிப்பின் படிநடந்தோ
மற்றதிலோ சொல்லாய் மகளேநீ - யிற்றைவரை

361. யென்காலம் போக்கினே னேழைப்பெண் மூத்தமகள்
உன்கால மாச்சுதினி யுன்னிச்சை - மின்கொடியே

362. புத்தியுண்டாய் வாழென்று போதித்தாள் வெள்ளரி
வித்திவிடப் பாகல் விளையுமோ [112]தத்தியமீன்

363. குஞ்சுக்கு நீச்சுக் கொடுத்ததா ரத்தனையும்
வஞ்சிக்குத் தன்படியே வாராதோ - மிஞ்சிப்போய்

364. அந்தச் சணமே யணிவிளக்கி லேகொளுத்தும்
பந்தத்தைப் போலோடிப் பற்றினாள் - சந்ததமும்

365. அப்படியே யெல்லா மவளுக்கே தேடியிட்டுக்
கைப்பொருளைத் தோற்றுக் கழிவோருமைப்படிவேற்

366. கண்ணாள் பொருட்டாற் கடன்காரர் வந்திழுக்க
உண்ணா மறிப்பி லுடைவாரும் -பெண்ணரசி

367. பாரமனை வாசலையே பார்த்தகண்ணும் பூத்துப்போய்த்
தேரடியில் நின்று திகைப்பாரும் - ஓரொருகால்

368. ஆவலுடன் கேட்பாளென்றானவெள்ளை வெற்றிலையும்
சீவலுமாய்ப் பின்னே திரிவாரும் - ராவெல்லாம்

369. திட்டியரு காகத் [113]தெருமதிளை யொட்டிநின்று
கிட்டியனு போகவிதங் கேட்பாரும் - வட்டமுக

370. வாட்டத்தி னாலவள்மேல் வாடைமஞ்ச ளைத்திருநாள்
கூட்டத்திற் போயிழுசிக் கொள்வாருஞ்-சூட்டுமலர்ப்

371. பூங்குழலாள் மேல்வழக்குப் போடலா மென்றுமுதல்
வாங்கியதை டாப்பெழுதி வைப்பாரும் - ஏங்கியுடல்

372. வேர்த்துப்போய் வேறோருவன் மேலே யவள்நோக்கம்
பார்த்துப் பாத்துள்ளம் பதைப்பாரும் - வார்த்தைக்
__________________________________________________________
(பி - ம் ) [112]. தத்திமீன், [113]. திருமதிலை யொண்டி நின்று.
__________________________________________________________
373. கடங்குமோ உங்க [114]ளதி ரூபரத்ன மென்னுந்
தடங்கண்ணாள் செய்யுமிந்த்ர சாலம் - இடங்கேடாய்ச்

374. சென்றுசிக்கிக் கொண்டாய் சிறுபிள்ளாய் கண்டசெய்தி
இன்றுரைத்தே னப்பாலுன் னிச்சையென்றான் - நன்றி பெறக்

375. கூறுமவன் புத்தியிங்கே கொள்ளுமோ நெட்டிமுளை
பாறையிலே வைத்தறைந்தாற் பாயுமோ-மீறுகின்ற

376. காமப்பேய் கொண்டாரைக் கள்ளுண்டா ரென்பாரே
தாமப்பேய் கொள்ளா தவரன்றோ - சீமாட்டிக்

377. காதியிலே கொண்டகட னத்தனையும் தீர்ந்தொழியப்
பாதியிலே நீங்குமோ பாண்சனியன் - நீதியெல்லாங்

378. கூர்த்தறிந்தும் பட்டறிந்துங் கோதண்டன் புத்திசொன்ன
வார்த்தையெல்லா மங்கே மறந்துவிட்டேன் - பார்த்த

379. பெரியோர் நகைக்கப் [115]பிராமணிக்க மும்மென்
மரியாதை யுஞ்சுருட்டி வைத்தேன் - பரிவாக

380. மன்றலம்பூங் கோதைக்கு மாத வழிச்செலவுக்
கன்றுசொன்ன நூறுபொன்னு மல்லாமற் - குன்றுடையான்

381. செட்டி கடையிலேசில்வான மென்று ரொக்கங்
கட்டிக் கொடுத்தேன் கணக்கேது - குட்டியென்ற

382. பாலிடைச்சி வாங்கினாள் பத்துப்பொன் நெய்க்காரிக்
காலகுட்டிக் கொன்பதுபொன் கைக்கொடுத்தேன் - சீலை

383. எல்லா நிரந்தரமாய்ப் பார்க்கி லிருபதுபொன்
செல்லுமொரு மாத்தைக்குத் [116]திட்டமதா - யல்லாவிலை

384. தொருதினத்தி லேகலவி யுச்சிதங்க ளாகி
யிருவருக்குஞ் சந்தோஷ மெய்தும் - பெருமிதத்தில்

385. என்னையவள் கேட்டாளோ வேதோ பயித்தியமென்
பொன்னரைஞா ணைக்கழற்றிப் பூட்டினேன் - பின்னியகாற்
__________________________________________________________
(பி-ம்.) [114]. எதிரூபி யென்னுந், [115].பிராமாணிக்க, [116.]திட்டமாய் - நல்ல.
__________________________________________________________
386. கெச்சமென்று முந்தியுடையென்றுங் கிண்ணமுலைக்
கச்சென்றுஞ் சொல்லிக் கணக்கிட்டு - நிச்சயமாய்

387. வாங்கினது நாற்பதுபொன் னுண்டொருவன் வல்லமையாய்த்
தாங்குவதோ வந்த சமுசாரம் - பாங்குடனே

388. சோற்றுப் புரைமணியஞ் சூரியனென் சொற்படியே
கீற்றுப் பிறைநுதலாள் கேட்டவுடன் - ஏற்றமுள்ள

389. கோயிற் பணியார மெல்லாங் கொடுப்பனவ
ளாயிக்கும் பட்ச மதின்மேலே - ஞாயக்

390. கணக்கோவீண் கொள்ளைக் கணக்கெழுதி வாங்கிப்
பணக் கோட்டை கட்டினாள் பாவி - குணக்கேடன்

391. [117]ஆரியமுத் தென்பா னவள்தமையன் மீதிலொரு
காரிய மாய்ச்சுமந்த காணிக்கை - சேரப்

392. பிறிவுக்குச் சீட்டிட்டார் பிள்ளைமார்க் கந்த
மறுவற்ற பெண்கொடிமேல் வன்ம - முறியிட்டுத்

393. தந்தபிணைக் காறர் தமைத்தொடர்ந்து காணாமல்
வந்திவளைத் தொல்லையிட்ட மாத்திரத்தே - சிந்தை

394. பொறுக்குமோ மேற்போட்டுக் கொண்டு தண்டல் போக
இறுக்கும்பொன் தொண்ணூ றிறுத்தேன் - வெறுக்கரிது

395. தொந்தமுள்ளநாள் வரைக்குந்தோற்றாதுவேறொன்றுஞ்
செந்தளிர்க்கை நல்லாள் திரண்டநாள் - வந்துதொட்ட

396. மாடனென்ற தேவதைக்கு வைச்சு வணங்குவளாம்
ஆடுபன்றி கோழியிவை யல்லாமற் - பாடுகின்ற

397. வில்லா முரசாம்கை வெட்டுங் கணியானாம்
எல்லா வகைக்கு மெழுபதுபொன் - செல்லுமென்று

398. கேட்ட படிக்குக் கொடுத்தேன் கிழவியவள்
பாட்டிவந்து பேய்க்கொடையைப் பாரப்பா - தோட்டத்தே
_______________________________________________________
(பி - ம்.) [117]. ஆரியமுத்த னவன்தமையன்
_________________________________________________________
399. யென்றாளங் கேபோ யிருந்தேன் மதினிமே
லொன்றான தேவதைவந் துன்னூட்டு - நன்றென்று

400. பேசி விபூதிதந்தாள் பேய்துரத்து நம்பியான்
பூசினேன் வாங்கியிது போதாதோ - காசுபட்ட

401. பாடுபட்ட தென்கைப் பணமெல்லாம் நட்டுவனாற்
கேடெனக்குக் கொஞ்சமோ கேட்குங்கால் - நாடளக்கும்

402. அத்தை யுடனே யவன்பழக்க மாய்மாலக்
குத்திர வித்தைக் குடுக்கையவன் - துத்திவேர்

403. நின்று சிணுங்கி [118]நிலம்பரண்டி நாவடக்கி
கொன்றைவேர்க் கொல்லங்கோ வைக்கிழங்கு-[119]வென்றிதரும்

404. ஆனை வணங்கி [120]அழிஞ்சில் முறைமசக்கி
பூனை வணங்கி புழுக்கைவேர் - ஏனையுள்ள

405. சீதேவி யார்செங் கழுநீர் திகைப்பூடு
[121]மாதிகரா மான வளக்குவெல்லி - பாதிரிவேர்

406. ஆடையொட்டி யோடே [122]சுவரொட்டி யானதண்டைப்
பூடுசுற்றி மேற்படர்ந்த புல்லுருவி - மூடுகட்டும்

407. வெட்டிவேர் பூலாங் கிழங்குலா மிச்சம்வேர்
தட்டிலாக் கொண்டோ சனைக்கிழங்கு- கிட்டுங்

408. கடைமருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள்
[123]சடைமாஞ்சி நாகணமஞ்சட்டி - அடைவுபெறு

409. செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதா ரம்மரத்தை
தங்குபச்சைக் கற்பூரஞ் சாதிக்காய் - பொங்கும்

410. அவின்புழுகு சட்டமிவை யத்தனையுங் கூட்டிக்
கவின் பெறத்தூ ளாக்கிக் கலந்து - குவிந்ததொரு

411. புற்றுப் பெருங்கரையான் [124]பூனைநிணம் பாம்புவிஷம்
வற்றிக் கிடந்த மரவட்டை - முற்றிய
__________________________________________________________
(பி - ம்.)[118]. நிலம்புரண்டி நாட்டக்கி, [119]. வென்றிபெறும், [120]. அளிஞ்சு,
[121]. மாதிகரமன் வளக்கும் வெல்லி, [122]. சுரோட்டியா மாதண்டைப்
[123]. சடமாஞ்சி நாகணஞ்செஞ்சட்டி, [124]. பூனைக்கண்.
____________________________________________________________
412. செவ்வரணை யின்கொழுப்புச் சேரவே யம்மியிலிட்
டொவ்வொரு நாளைக் கொருச்சாமம் - எவ்வமறக்

413. கூட்டியொரு மாத மரைத்துக் குணம்பார்த்து
வாட்டமில்லாச் செண்பகப்பூ மல்லிகைப்பூ -சூட்டுகின்ற

414. முல்லைப்பூ வோலைப்பூ முற்றுமிதி பாகற்பூ
வில்லைப்பூ வாச மிகவூட்டி வல்லதொரு

415. காடேறி [125]யொன்பதுநாள் காளிசிவம் பத்துநாள்
ஈடா மகோரமிருபதுநாள் - நாடுகின்ற

416. மோகினி நாற்பதுநாள் முற்று முருவேற்றி
வாகுபெறக் கூட்டுமவன் வாடையினால் - தோகைநல்லாள்

417. என்னை வசஞ்செய்தா ளிதுவெல்லாங் கோதண்டன்
சொன்னதுண்டு முன்னே சொலமறந்தேன் - பின்னைத்தான்

418. ஆடுதின மொவ்வொன் றடிப்பாள் பழிகாரி
வீடுதினம் பொல்லா வெடிநாறும் - சூடுமலர்ப்

419. பூங்குழலாள் வாயதரப் புத்தமுத பானத்தைத்
தீங்கெனவு மோரொருகாற் சிந்திக்கு - மாங்கிஷத்தின்

420. கோவைமுன்றி லூடென் குடுமியைத்தீண் டக்குனிந்து
போவெனிது போதாதோ பூசுரர்க்குப் - பாவையரிற்

421. கண்டதிலேகேட்டதிலே [126]யுண்டோவக்கள்ளிதன்மேல்
கொண்ட மயக்கமென்ன கொஞ்சமோ - முண்டகத்தின்

422. பூவல்லி [127]யங்கோதைப் பொன்வல்லி வீற்றிருக்குஞ்
சீவில்லி புத்தூர்த் திருவிழா - ஆவலுடன்

423. பார்க்கத் துணிந்து பயணம் புறப்பட்டாள்
ஆர்க்குத் தெரியுமவ ளாட்டமெல்லாஞ்- சேர்க்கையாய்ப்

424. பாங்குடனே நானும் நடந்தேன் பணம்பறிக்கும்
பூங்குழலா ளென்னைவிட்டுப் போவாளோ - ஆங்கே
_____________________________________________________________
(பி-ம்.) [125].யெண்பதுநாள் காளிக்குக் கண்பது நாள்,
[126]. யுண்டோவவள் தன்மேல், [127]. யங்கோவிற்
________________________________________________________________
425. யொருநாள் பகலிலென்னை ஒத்திக்கை பண்ணித்
திருநாட் கடைபார்க்கச் சென்றாள் - பெருமிதமாய்

426. முத்துவ கைவிற்கு முதலிசெட்டி தன்கடையில்
கொத்துவட மொன்றெடுத்துக் கொங்கையின்மேல் -ஒத்ததெனப்

427. போட்டா ளெனைப்பார்த்துப் பொங்கமோ சொல்லுமென்று
கேட்டா ளதைமதினி கேட்டுநின்று கோட்டாலை

428. கொள்ளுவதேன் மீளக் கொடுத்துவி டென்றாளதற்கு
வள்ளமுலை மாதுமுகம் வாடிநின்றாள் - உள்ளபடி

429. சொல்லு கிரையமென்றேன் தொண்ணூறு பொன்னென்றான்
நல்லதென்று ரொக்கமாய் நல்கினே - னெல்லாங்

430. கதைகாண் பவளக் கடையிலே சென்றாள்
இதைவாங்கு மென்றா ளெடுத்தாள்- அதுவுமவள்

431. கைக்கட்டுக் கேற்ற கனத்த வுருட்டதைத்தான்
ஒக்கிட்டா [128] னந்த வுருட்சியாய் - மைக்கட்

432. புரிகுழலாள் கேட்டாள் பொறுக்குமோ நெஞ்சும்
பரிவுடனே செட்டிதனைப் பார்த்தேன் - தெரியவிலை

433. கேட்டேன்பொன் முப்பதென்றான் கீழ்ப்படச்சொன்னேன் குறைக்க
மாட்டோமென் றான்கொடுத்து வாங்கினேன் - பேட்டைச்

434. சவுளிக் கடைக்காரன் சங்குமுத்து செட்டி
யிவளுக்கு மச்சாவி யென்றா- ளவள்தமக்கை

435. மோகவல்லி மாப்பிள்ளையா முன்னா ளவன்வசத்தில்
நாகரிக மாம்பெரிய நார்ணவன்ன - மேகாங்கிப்

436. பொன்னெழுத்துச் சேலையொன்று பொற்சரிகை வேலையிட்ட
வன்ன ரவிக்கையொன் றுவாங்கியபின் - இன்னமொரு

437. வீரவா ழிப்பட்டு வேணுமென்றாள் சொன்னபடி
சேரவிலைபார்த்துத் திட்டமா-- யோர்முடிப்பாய்
________________________________________________________
(பி-ம்.)[128]. னேந்த
_________________________________________________________
438. முத்திரைபோட் டெண்பதுபொ னீந்தேன்முதல் கொடுத்து
வைத்த கடக்காரி வாங்காளோ - குத்துவிளக்

439. குண்ணவொரு தாலமுயர்ந்த கொட்டுக்கூடை யெண்ணெய்க்
கிண்ணமிது வல்லாமற் கெண்டியொன்று - வண்ணப்

440. படிக்கமொன்று செம்பொன்று பைந்தொடிபால் வார்த்துக்
குடிக்க வொருசின்னக் கும்பா - நொடிக்குமுந்திப்

441. பன்னிரண்டு பொன்னளித்துக் கொண்டேனப் பாதகிமட்
டென்னிரண்டு கைக்கு மெலும்புண்டோ - பின்னிரண்டு

442. பாற்பசுக்கள் வாங்கினதும் பத்துப்பொன் பாவைநல்லாட்
கேற்றசப்ர மஞ்ச மிருபதுபொன் - மேற்படியாள்

443. ஒப்புடனே யித்தனையு முருக் கனுப்பினாள்
தெப்பமறு நாளிருந்து சேவித்துக் - கொப்பிலகு

444. காதாளும் பாங்கியருங் கன்னிதனைப் பெற்றெடத்த
மாதாவு [129]மூத்தவரி கண்டுமாய் - நீதியுள்ள

445. சங்கரனார் கோவிலிலே வந்தோந் தனித்தொருநாள்
புங்கவனார் கோபுரத்திற் போயிருந்து - மங்கைநல்லாள்

446. கூடிய சித்திரை மாத்தைக் குறிப்புமுத
லாடிவரைக் குள்ளசெல வத்தனையும் - நாடி

447. யெழுதினே னெல்லா மிரண்டுமாத் தைக்குப்
பழுதிலையென் [130]னாத்தியெனப் பார்த்தேன் - முழுது

448. மறங்கிளர்வேற் கண்ணியொரு மாத்தையிற்கைக் கொண்டாள்
வெறுங்கை முழமிடுமோ மீள - நொறுங்கவே

449. நின்றுதின்றால் குன்றுந் தொலையாதோ நீலிகிட்ட
வென்றுசென்றேன் அன்றுமுத லென்கையினாற் - சென்ற

450. செலவல்லா லாதாயத் தேட்டுண்டோ பஞ்சிப்
பலவெல்லாஞ் சொல்லியென்ன பாவங் - குலவு
__________________________________________________________
(பி-ம்.)[129]. விரிகண்டியும், [130]. னாஸ்தியெல்லாம்
_________________________________________________________
451. கனந்தருமென் காதிற் கடுக்கனெல்லா நல்லூ
ரனந்தபட்டன் வைத்த அடகு - தினந்தோறு

452. மொன்றொன்றாய் விற்றேன் ஒருமாதந் தாங்கினேன்
நன்றன்றோ [131]நானடந்த நாகரிகம் - என்றென்றும்

453. பொய்வாய்மை சொல்வேனோ போக்கற்றேன் தோராயங்
கைவாளை வெண்டயத்திற் கைவைத்தேன் - மைவிழியாள்

454. இத்தனையும் நாள்வழியே கண்டா ளிவனுக்கெள்
ளத்தனையு மில்லை யவகாசம் - வைத்தினிமேற்

455. [132]றள்ளவென் றேற்றிட்டாள் சயனத் தலத்திலொரு
கள்ளநித்ரை யுண்டாச்சு கண்களுக்கு - மெள்ளமெள்ள

456. வார்த்தை சொல்வதும் போட்டாள்மார்போ டெடுத்தணைத்துச்
சேர்த்தளவில் வைது சிணுங்குவாள் - பார்த்திருக்க

457. முற்றுமோ கெட்டேன் முகந்திருப்பி முத்தமிட்டாற்
சற்றுமோ வாய்திறவாள் சாதிப்பாள் - நெற்றிதனைக்

458. கையாற் பிடித்துக் கடினத் தலைவலிபோற்
பொய்யாய்க் கிடந்து புலம்புவாள் பைய

459. உடைநெகிழ்க்கக் கைவைத்தா லுள்வளைந்து கொண்டு
துடைநெருக்கிக் கொள்ளத் தொடுத்தாள் - இடையில்

460. வலிமையா லோரொருகால் [133]மல்லுப்பிடித்துக்
கலவிநான் செய்தாலும் கள்ளி - மலர்முகத்தைச்

461. சுண்டி வயிற்றைச் [134]சுருக்கி வலிக்குதென்பாள்
கண்டிதமாய்க் கூடிவிட்ட காலத்தே - பெண்டிருந்து

462. நான்பெற்ற பேறுமெத்த நன்றாச்சு தில்லையோ
தான்செத் துலகாள்வார் தானுண்டோ - ஊன்வற்றி

463. யுன்னாலே கெட்ட வுடம்பலவோ வேசையுடம்
பெந்நாளுங் கல்லா யிருக்குமோ - சொன்னாலுங்
_____________________________________________________________
(பி-ம்.) [131]. தானடந்த, [132]. தள்ளவெனத் தேற்றிட்டாள்,
[133]. மல்பிடித்துத் தீராக், [134]. சுருட்டி
__________________________________________________________
464. கேளாய் விடுபோ கொடுவாயென் [135]பாளிதுவும்
நாளா சிறுதியிலே நான்கண்டேன் - மீளவுநான்

465. அஞ்சாறு நாட்டிரிந்தேனப்பா லொளித்தொளித்துச்
சஞ்சாரம் வேறாய்த் தலைப்பட்டாள் - நெஞ்சு

466. தரியா தொருநாள் தலைமயிரைப் பற்றி
எரியாத சிந்தை யெரியப் - பெரியகட்டிற்

467. காலுடனே சேர்த்தெனது காலா லுதைத்திட்டேன்
கோலமதி வாணுதலாள் கூவென்றாள் -நீலிதனைப்

468. பெற்றதா யோடிவந்தாள் பேய்கொண்ட பார்ப்பானீ
மற்றவள்போ லெண்ணாதே வம்பிநான் - [136]முற்றுமுற்றும்

469. வைத்து நடத்திவந்த மாப்பிளையோ வென்மகள்தா
னத்தனைக்கு வெள்ளாட்டி யானாளோ - புத்திகெட்டுப்

470. போமோகைக் கில்லையென்றாற் [137]போய்க்களைந்து போகாம
லாமோ வுனக்கிங் கடிபிடியோ - தாமதமேன்

471. பிச்சைக்கு வந்தவன்நீ பெண்ணுக்கு மாப்பிளையோ
இச்சைப் படியே யெழுந்திருந்து - சச்சைவரு

472. முன்னே நடவென்றாள் மும்மடங்கு நானவளைச்
சொன்னேன் விடுவேனோ சொல்லாமல் - அந்நேர

473. மூத்தமக ளோடிவந்து முந்திதொட்டா ளோரறைநான்
தீத்தெறிக்க வைத்தென் செவியோடே - சூத்திரரி

474. லஞ்சாறு பேர்வந்தவர்களையு மென்னையுங்கை
மிஞ்சா திடையே விலக்கினார் - பஞ்சாரத்

475. தாய்மாரும் [138]பெண்களுமாய்த் தாசிகளைக் கூட்டமிட்டார்
மாய்மாலக் காரியார் மாமியார் - ஞாயமின்றித்

476. தூர்த்தத் தனம்பேசுந் [139]தோழ்ப்பாடி வித்தையிலோர்
வார்த்தைப் பசப்பியார் மாமியார் - சேர்த்திறுகத்
__________________________________________________________
(பி - ம்.) [135]. றாளிதெலாம். [136].முற்றமுற்ற, [137]. போய்க்கழிந்து,
[138]. மக்களுமாய், [139]. தோள்ப்பாடி.
___________________________________________________________
477. தைச்சாலும் வாயைத் தமக்கிளைய பேரைமுதல்
மச்சாவி யென்றழைக்கு மாமியார் - அச்சுமழிந்

478. தோடை யெனப்பல்போ யுட்குழிந்த கன்னத்தை
வாடைமஞ்ச ளால்மினுக்கு மாமியார் - கூடுமெங்கள்

479. பூசலைக்கேட்டுப்பழைய [140].பொங்காரந் தீராமல்
வாசலையெட் டிப்பார்க்கு மாமியார் - தூசதனைத்

480. தம்பலச்சாற் றால்நனைத்துத் தான்விலக்கம் [141]வந்தவர்போல்
வம்பில் தலைநனைக்கு மாமியார் - சொம்புகெட்டுக்

481. கொக்கிறகு போல்வெளுத்த கூந்தலுக்குக் கப்பேற்றி
மைக்குழல்போ லொக்கிடுவார் மாமியார் – ஒக்கநின்ற

482. தாசிகளுந் தானுமாய்ச் சந்தியில்நின் றங்கங்கே
யாசையுள்ள மாப்பிள்ளைமார்க் காள்விட்டாள் - பேசவொரு

483. பின்னுமுன்னு மில்லாமற் பேய்கொண்டாற் [142]போல்விழிக்கு
மென்னையிழுத் தம்பலத்தே யேற்றினாள் - மன்னவரே

484. நாயன்மா ரேகேளும் நன்றி நடுவிலையோ
மாயமாய்ப் பொல்லா மருந்தையிட்டுப் - பேய்மகளை

485. நிந்தனைக்குள் ளாக்கிநல்ல நெல்லுக்குக் கீழ்க்களைபோல்
வந்தடுத்த நாலாறு மாதமாய்த் - தந்ததிலே

486. ஆறுநூ றுண்டோ அசல்வீ டறியாதோ
தாறுமா றெங்கே தலைசெய்யும் - வீறுகளேன்

487. தாலிகட்டிக் கொண்டானோ தாசிம களையிவன்
வேலிகட்டிக் காக்க விதியுண்டோ - வாலிபத்தே

488. தாசிமகள் வீட்டில் தகப்பன்கீழ்ப் பிள்ளையாய்
ராசியமாய்ப் போய்வருவார் [143]ராச்சியத்திற் - பேசியிவ

489. னம்பலத் தேசென் றளப்பளந்தா லென்னைமுழு
வம்பியென்று சொல்லாரோ மற்றப்பேர் – தம்பி
___________________________________________________________
(பி-ம்.) [140]. பூங்காரந், [141[. ஆனவர்போல், [142]. போலவிழித்து, [143]. இல்லையோ
______________________________________________________________
490. தமைய னொருவீட்டிற் சஞ்சரிப்பா ருண்டே
அமையுமோ வென்வீட்டி லய்யா - சுமைதலையாய்ச்

491. சாடிசொல்லு வான்மறுநாள் சண்டைகளுண் டாக்குவிப்பான்
தேடியுண்பா ரில்லையோ சீமையிலே - நாடியொரு

492. பெண்ணென்று மாப்பிள்ளைமார் பேசிவந்தா லுங்கிரந்தி
புண்ணென்று தான்முதலே போதிப்பான் - மண்ணறுவான்

493. வந்தபணை யத்தை வரவுமொட்டான் தான்கொடுத்த
முந்திரிகைக் காசாலே முற்றுமோ - அந்திபகல்

494. சஞ்சாரம் பண்ணுமிவன் தந்துதர வேண்டியது
அஞ்சாறோ உண்டா மதைக்கேட்டுக் - கெஞ்சினாள்

495. தந்தானோ சோற்றுக்குத் தட்டழிவு கொஞ்சமல்ல
வந்தா ரறிந்த மனுஷரென்று - பைந்தொடியாள்

496. போவென்றா ளென்றவளைப் போட்டுமிதித் தானழுது
கூவென்றாள் கைசலிக்கக் குத்தினான் --சாவாளோ

497. ஏதோ கிடக்கிறா ளென்னுடைய மூத்தமகள்
காதோ டறைந்தானென் கண்காணப் - போதுமினிக்

498. கேட்டாலே கேளுங்கோ கேளா திருந்துவிட்டால்
நாட்டா ரெலாமறிய நான்போறேன் - தேட்டுணும்

499. எங்கள் குடியிருப்பு மின்னா ளிவளென்ற
சங்கையெல்லாம் போச்சுதென்று தாய்க்கிழவி - செங்கைதட்டிச்

500. சொன்னாள் சிவனேயத் தோதகத்தி வார்த்தைமுன்னேவுமென்
என்னாகு மந்நேர மென்வார்த்தை - பின்னாகக்

501. கூச்சமேன்னைத் தள்ளவுமென் கோபமுன்னே தள்ள
பேச்சைநடு வர்க்கறியப் பேசினேன் - பூச்சியத்தோ

502. டங்குநான் சென்றதுவு மப்பா லவள்வீட்டிற்
பொங்குபே ராசையினாற் போனதுவும் - மங்கைநல்லாள்

503. வைப்பென் றிருந்ததுவும் வைப்பா யிருக்கையிலே
தப்பாய் நடந்ததுவுந் [144]தான்சொன்னென் - கைப்பொருள்க

504. ளெல்லா மிவள்மகட்கே யீந்தே னவளொருத்தி
யல்லாம லென்மே லசுகையுண்டோ - நல்லமுழுப்

505. பூசணிக்காய் சோற்றிற் புதைக்கிறாள் கள்ளியுங்கள்
யோசனைக்குத் தோற்றாத தொன்றில்லை - ரோஷமில்லாத்

506. தாய்க்கிழவி சொன்ன சமத்தெல்லாம் நீர்கேட்டும்
வாய்க்கணக்காய்ச் சொல்லவென்றால் மட்டேது - பேய்க்குணத்தால்

507. கொள்ளை [145]கொடுத்த தற்குங்கொண்டு வந்தகைமுதற்கும்
உள்ள படிகணக்கிங் குண்டென்று -மெள்ள

508. எடுத்தே னடுக்கேளு மெப்படியு மென்று
கொடுத்தேனன் றுள்ளிட்டுக் கொண்டார் - கெடுத்தீர்

509. இரும்பு குடித்ததண்ணீ ரெப்படியு மீளத்
திரும்புமென்றோ தேவரீர் சித்தம் - விரும்பி முன்னாள்

510. ஆசைப்பட் டாலவளுக் காயிரந்தான் செய்தாலும்
வேசைக்குப் போனபொருள் மீளுமோ- யோசனையில்

511. ஏதுவிவ காரமென்றா ரென்றளவில் மூத்தமகள்
காதிலடி [146]கொணர்ந்து காட்டினாள் - மாதுநல்லாட்

512. கத்தனைபே ருங்கூடி யாளுக்கோர் வார்த்தைசொன்னா
லெத்தனை பேர்க்கென் றெதிர்நிற்பேன் - மொய்த்துவருங்

513. காகபந்துக் கட்டாகக் கண்டவனும் நின்றவனும்
ஏகபந்துக் கட்டானா லென்செய்வென் - ஆகிலுநீர்

514. செய்யாத காரியத்தைக் செய்தீர் விலைமகளைக்
கையா லடிக்கக் கணக்குண்டோ - அய்யாமுன்
_________________________________________________________
(பி-ம்.) [144] தான் சொல்லிக், [145]. கொடுத்ததுவுங், [146]. கொண்டு வந்து
_________________________________________________________


515. பட்டசள மெல்லாம் பழையகோ தண்டனதோ
கிட்டநிற்கி றானவனைக் கேட்டீரோ - விட்டொழிந்து

516. போவதே தன்மமென்றார் புத்தியற்றால் மற்றவரை
நோவதே னென்னூரை நோக்கினேன் - ஆவுடையாள்

517. [147]சன்னதியில் தெண்டனிட்டேன் தாயே யடியேன்கைப்
பொன்னையெல்லாங் கையாடிப் போவென்று - சொன்னவளைச்

518. சீக்கிரத்திற் கேட்டாலே தெய்வநீ யென்றெனது
வாய்க்குவந்த தெல்லாம்நான் வாழ்த்தினேன் - ஆக்கமுடன்

519. சங்கரரைத் தெண்டனிட்டேன் சன்னதியில் வந்தேனைப்
பங்கமிவை யெல்லாம் படுத்தினீர் - எங்கணுநீர்

520. பிச்சை யெடுத்துண்ணும் பேறெனக்குத் தந்தருளி
வைச்ச துமக்கே வரிசையென்றேன் - இச்சையுள்ள

521. தாயினுமன் பாய்வளர்த்துத் தாபரித்த சந்தனக்காப்
பாயிமுன் போயென் பொருமலாறினேன் - வாயமர்த்திப்

522. புத்தியிது வோமகனே பொன்னைநீ தேடினையோ
சித்திரமாய்ப் பொன்னுன்னைத் தேடினதோ - சத்தியமாய்ச்

523. சொன்னே(னே) யின்றுனது தோஷமெல்லாம் போச்சுதினி
முன்னே நடந்ததிலு மும்மடங்கு - பொன்னுண்டாய்க்

524. கட்டாக வாழ்ந்திருநீ யென்று கலங்கழுவி
யிட்டாள்நான் சாப்பிடுமவ் வேளையிலே - விட்டானோ

525. [148] மானூரிற் கோதண்டன் வந்தானுன் செய்தியென்ன
நானூர்க்கு நாளைப் பயணமென்றான் - ஏனடா

526. தாமதமேனின்ன மென்றான் தன்னந் தனியேநான்
போமளவிற் கூடப் புறப்பட்டான் - சீமானீ
___________________________________________________________
(பி - ம்) [147]. சன்னதியைத், [148]. மானூருக்.
___________________________________________________________
527. சொன்னபுத்தி கேளாது தோற்றேன்கைப் பொன்னையெல்லாம்
என்னபுத்தி யாயிருந்து தென்புத்தி - முன்னாளென்

528. தாதைதினந் தோறுந் தலையாற் சுமடெடுத்து
சீதமிகுங் கேரள தேசத்தே - பாதை

529. மலையேறித் தேடிவைத்த வைப்பெல்லாங் கள்ளி
முலையேறிப் போக்கடித்தேன் முற்றும் - தொலையாக்

530. குலுக்கைநெல்விற் றெங்களன்னை கூட்டியதை நீலி
[149]துலுக்குநடைக் கேமுழுதுந் தோற்றேன் - விலக்கரிய

531. [150]தானத்தைத் தேடுந் தனத்தை யவளதர
பானத்தை நம்பிப் பறிகொடுத்தேன் - மேனாளில்

532. மாமனார் செய்த [151]வரிசையெல்லா மிப்போது
காமனார் கொள்ளையிலே கைமறந்தேன் - [152]போமுன்

533. பசிக்குச் சமைத்திட்ட பாப்பாத்தி வைத்துப்
பொசிக்கக் கொடுத்தேனோ போத-வசைக்குமுற்றும்

534. பேரான தல்லாற் பிராமணர்கை யிற்கொடுத்துத்
தீராத பண்டைவிதி தீர்த்தேனோ - தோராய

535. முய்யும் [153]படியோர்ந் துணர்ந்து சிவாலயத்தே
செய்யுந் திருப்பணியைச் செய்தேனோ - அய்யோ

536. பொதுவே பணத்தையெல்லாம் போக்கடித் தேனென்
றிதுவே பலநினைவா யெண்ணி - யதுவே

537. கருத்தா யிருபேருங் கண்ணுறக்க மின்றித்
தரித்தோம் நடுவழியில் தங்கிச் - சிரித்தாற

538. வேணுமினி யென்மனந்தான் மெத்தவுந்தா னேழைமனம்
வாணுதலாள் மேல்கிடந்த வன்மம்போய் - நாணுமின்றித்
__________________________________________________________
(பி - ம்.) [149]. துலக்கு நடைக், [150].தானத்தில், [151]. வரிசையிலே வந்ததெல்லாங்,
[152]. போமென், [153]. படிதோர்ந்.
______________________________________________________________
539. தாயுந் தமக்கையும்போற் [154]றான்வழக்கில் வாராத
நேயந் தனைநினைந்து நெட்டுயிர்த்தேன் - சாய

540. மெடுத்துமினியந்தநினை வெண்ணுவதே னென்று
தடுத்ததொரு புத்தி [155]தனியே - படுத்திருந்து

541. காணும் பொழுதிலெழுந்து கழைவனத்தில்
தாணுவுறை நெல்லைத் தலஞ்சேர்ந்தோம் - சேணளந்த

542. தேங்கமழ்பூஞ் சோலைசுற்றுங் [156]செந்தமிழ்க்கிட் ணாபுரத்தில்
வெங்கடமா யர்க்கு வியப்பாக - ஓங்குதனிச்

543. செங்கோல் மனுபதியாந் தெய்வச் சிலைராயன்
நங்கோன் சிறப்பாய் நடத்திவைக்கப் - பொங்கு

544. பெருநா கரிகமெல்லாம் பெற்றபுரட் டாசித்
திருநா ளெனக்கேட்டோஞ் செய்தி - யிருபேரும்

545. ஆவலுடன்சென்றோ மன்றைத் தினங்கருட
சேவை கிடைத்துத் தெரிசித்தோம் - பூவுலகில்

546. எத்தலத்தும் வேண திருநாளுண் டித்திருநாட்
கொத்திருக்கு மென்றுரைக்க வொண்ணுமோ - [157]நித்தியலும்

547. வந்த பிராமணர்க்கு மற்றச் சனங்களுக்குஞ்
செந்தமிழ்த் தெய்வச் சிலைராயன் - சந்ததமு

548. மன்ன சொன்னமுங் கொடுக்குமவ் வூரிற்சென்றவர்க்குப்
பின்னையும் வேறூர் பிடிக்குமோ - கன்னனென்று

549. கெட்டிருப்ப தல்லாமற் கீர்த்திமா னிங்கிவன்போல்
நாட்டினுக்குள் ளேகொடுப்போர் நாங்காணோம் - தாட்டீகர்

550. [158]தம்பிமா ரொவ்வொருத்தர் சற்குணங்கள் பார்க்குங்கால்
அம்புவிமேலுண்டோ அவர்க்குவமை-சொம்புபெறக்
_________________________________________________________
(பி-ம்.) [154]. றான்வளவில், [155]. தனையே. [156] சேர்ந்தகிட், [157]. நித்தநித்தம்,
[158]. தம்பியர்களோ ரொருத்தர்,
________________________________________________________
551. கண்ணுக்குத் தந்தபெருங் காட்சியெல்லாங் கண்டோம்விண்
மண்ணுக்கு மொன்றாய் [159]வளர்ந்துநின்றோன் - பெண்ணுக்கோர்

552. கல்லுருவந் தீர்த்தபொற்றாட் கண்ணனெழுந்தருளுஞ்
சில்லி நெடுங்கொடிஞ்சித் தேர்ப்பவுஞ்சு - மல்லாது

553. தெப்பமீ தேறுந்திருப் பவிஞ்சுஞ் சேவித்தோம்
ஒப்புவே றுண்டோ வுலகத்தே - யிப்படியே

554. சிங்கார மானதொரு தெய்வத் திருவிழாக்
கொங்கார் துழாய்மாயர் கொண்டருளி - யங்கொருநாள்

555. த்யாகநிதி தெய்வச் சிலைப்பெருமாள் பின்னுதித்த
பேகனழகப் பிரா னனந்த - னாகவிவர்

556. முன்புவந்த மூவருக்கோர் மோகனமுத் தாமென்னப்
பின்புவந்த தம்பிப் பெருந்துணைவ - னன்பும்

557. பொறையு முதாரமும் [160]புத்திதயவு
நிறைகுணமும் பெற்ற நிபுணன் - நறைகமழுந்

558. தேனொழுகு வார்த்தைத் திருவேங் கடத்தப்பன்
மானபரன் கண்டபுது மண்டபத்தே - ஆனதொரு

559. வேங்கடவர் வந்து விடாயாறி வீற்றிருக்கப்
பாங்குபெறு கற்பகப்பூம் பந்தரின்கீழ் - ஓங்குகுடைக்

560. கன்னன் திருவேங் கடத்தப்பன் தந்ததிந்தப்
பொன்னின் சிவிகையின்மேற் போந்ததற்பின் - மன்னும்

561. வரைகளி லேற்றமுள்ள மாமேருப் போலத்
துரைகளி லேற்றமுள்ள தூயோன் - தரைபுகழும்

562. வாகனனபாயன் மார்க்கண்டன் போலவச்ர
தேகனெங்கள் தெய்வச் சிலைப்பெருமாள் - நாகரிக
__________________________________________________________________
(பி-ம்.) [159]. வளர்ந்து நின்ற, [160]. புத்தியந் தயவு.
__________________________________________________________________
563. தண்டிகை மேலுபய சாமரை நின்றிரட்ட
எண்டிசையு மேள மெழுந்தார்ப்ப - மண்டலிகர்

564. பல்லக்கு மாற்றுப் பவிஞ்சு தொடர்ந்துவர
வல்லொக்குங் கொங்கை மடமாதர் - மெல்லப்

565. பரதவித கேளிக்கை பாராட்டத் தாள
சுருதியிசை பாகவதாள் சுற்ற - இருபுறத்தும்

566. பஞ்சவன்னப்பாவாடை வீசப் பரராசர்
தஞ்சமென வந்து சரண்புகுதக் -[161]கொஞ்சி

567. வருகுதிரைக் காரரெல்லாம் வந்துசலாஞ் செய்து
[162]பொருபுலிபோ லேமருங்கு போற்ற - அருவிகட்டும்

568. வல்லயக் காரார்முதல் மாலுதா [163]ரக்காரர்
வில்லுமுத லானபடை வீரர்களும் - நல்வரிசை

569. யூழியக் காரருடன்வேவு காரருமத்
தாழ்வில காளாஞ்சி தாங்கினரும் - சூழுகின்ற

570. கட்டியக் காரருடன் கைகட்டி வாய்புதைத்துக்
கிட்டி ரகசியங்கள் கேட்போரும் - மட்டில்லா

571. வத்தகருங் கோடிதுரை மக்களும் யாசகரும்
முத்தமிழ் தேர்ந்த முதியோரும் - புத்திவல்ல

572. மந்திரி மாரும் வரிசைக் கணக்கருஞ்
சந்திரருந் தாரா கணமும்போல் - அந்த

573. முறைமுறையே செல்ல முகமண் டலத்தில்
நிறைகருணை பொங்கி நிரம்பத் - திறைகொணர்ந்த

574. வங்கர் தெலுங்கர் மராட ரிலாடர்கள்
கொங்கர் கலிங்கர் குருநாடர் – சிங்களர்
____________________________________________________________
(பி - ம்.) [161]. கொஞ்சு, [162]. பொருபுலிகள் போல்மருங்கு போத, [163] ரிக்காரர்
____________________________________________________________
575. ஈழர் மகத ரியாழ்ப்பாணர் கொச்சிமலை
யாளர் குகுதரே யாதியாய்ச் - சூழ்கவிகை

576. மன்ன வரும்நங்கோன் வந்தான்வந் தானென்று
சின்ன மிருமருங்குஞ் சேவிப்பத் - தன்னுடைய

577. மெய்த்ததுணைத் தம்பிமார் மிக்கான தேசிகள்மேல்
கொத்துமுத்து வட்டக் குடைநிழற்கீழ் - ஒத்திருக்கும்

578. சீவக ரூபமுள்ள சிங்கத்தின் கன்றுகள்போல்
மூவருந் தண்டிகைக்கு முன்செல்லப் பூவுலகு

579. முற்றத்தன் செங்கோல் முறைசெலுத்து மெங்கோமான்
சுற்றத்தா ரெல்லோருஞ் சூழ்ந்துவரக் - கொற்றப்

580. பரிசை யிரண்டுமிரு பக்கங் கவிப்ப
வரிசையுடன் மண்டபத்தில் வந்தான் - தெரிசிக்க

581. வேளை [164]முகத்துவிசையீ பவாவென்று
காளமுகி லன்னான்முன் கைவிரித்தோம் - நாளமலர்க்

582. கஞ்ச மனையதடக் கையமைத்த மாத்திரத்தே
[165]நெஞ்ச முறுகவலை நீங்கினேன் - கொஞ்சமோ

583. மாக மளாவு மகமேரு வைச்சார்ந்த
காகமென லாசிக் கலிதீர்ந்தோம் - தோகையர்கள்

584. ஆடலும் பாடலும் அச்சுதனார் வீற்றிருப்பும்
கோடி வயிணவர்கள் கூட்டமும் - தேடரிய

585. தம்பி திருவேங்க டத்தப்பன் தான்கண்ட
செம்பொன் மணிமண்டபத்தின் செய்சிறப்பும் - வம்பமணி

586. வாய்க்கு ளிளமுறுவல் வந்தரும்பக் கண்டிதுநம்
பாக்கிய மென்றுள்ள மொருபட்சமுற-நோக்கதொறும்
__________________________________________________________
(பி - ம்) [164]. கிடை (க்க), [165]. நெஞ்சிலுறுகவலை
__________________________________________________________
587. பூரித்து வேங்கடவர் பொற்றாள் பணிந்தெழுந்து
வேரித் துழாயர் விடைகொடுக்கப் -பாரித்த

588. மிக்ககணித் தண்டிகையின் மீதுசென் றேறியிரு
பக்கமு மன்னர் பவிஞ்சுவரத் - தக்க

589. திருமா [166]ளிகைபுகுந்து தெய்வச் சிலை(யெம்)
பெருமாள் பெரிய கொலுவாகி-யருமையுள்ள

590. தம்பிமார் மூவருந் தந்தம் முறைமையுடன்
எம்பெருமான் பக்கத் [167]தினிதிருப்பச் - செம்பொன்

591. [168]வடமேரு வொன்றதனை மற்றமலை யெல்லாம்
புடைசூழ்ந் திருந்ததன்மை போலும்-கடலில்

592. வலம்புரி யாதியாய் மற்றுளசங் கெல்லாம்
சலஞ்சலத்தைச் சூழ்ந்ததன்மை போலும் - நிலம்புரக்கும்

593. மன்னவ ராதியாய் மற்றச் சனங்களெல்லாம்
தன்னைமுறை சூழ்ந்த சமூகத்தே - பொன்னிதழ்ப்பூஞ்

594. செந்திருவாழ் மார்பனெங்கள் தெய்வச் சிலைராயன்
[169]இந்திர னைப்போ லிருந்தளிக்கச் - சந்தமலர்ச்

595. சேக்கை தனிலந்தத் திருமா லமுதுசெய்த
பாக்கிலையெல் லோர்க்கும் பகுந்தளித்துப் - பூக்கமழுஞ்

596. சந்தனந் துப்பட்டி சாலுவை வேண்டியதும்
வந்தவர்க் கெல்லாம் வழங்கினான் - செந்தமிழைச்

597. சூட்டுங் குமார சுவாமி யவதானி
[170]பாட்டும் படிப்பும் பகுத்தறிந்து - நாட்டமுடன்

598. வேணுமென்ற ரொக்கமு மேலான சாலுவையும்
பூணுநவ ரெத்னப் பூஷணமுந் - தோணிறைந்த
__________________________________________________________
(பி-ம்) [166].ளிகை புகுந்த, [167]. தினிதிருந்தார், [168]. வடமேருப் போன்றதனை,
[169]. இந்திரன் போல்வீற் றெழுந்தருளி, [170]. (பகுத்)தருளி
__________________________________________________________
599. சீனச் சரப்பளியுந்த்யாகங் கொடுத்துவெகு
மானத் துடனே வரிசைசெய்தான் -தானே

600. வருஷம் பொழிவதுபோல மாமறையோர்க் கெல்லாம்
[171]பெருகுங் கனகமழை பெய்தா - னிருபேரும்

601. அவ்வேளை சென்றொ மனகா வகளங்கா
செவ்வே ளனைய திறல்வீரா - கவ்வையெல்லாம்

602. மாற்றியெம்மை வாழ்விக்கும் வள்ளலே மண்டலிகர்
போற்றிசெயு மாஸ்த்தான போசனே - சாற்றும்

603. வடநூற்ப்ர சங்கமுமெம் வாக்கினால் கேட்டெம்
இடர்தீர்த் [172]தருளுதிநீ யென்றே(ம்) - [173]புடையிருத்திக்

604. கேட்டருளும் போதுவிட்ணு கீர்த்தனத் தைச்சங்கீதப்
பாட்டு டனேப்ரசங்கம் பண்ணினோம் - தோட்டுமலர்ச்

605. செங்கமலம் போலும் திருநயனத் தால்நோக்கி
யுங்கள் [174]மெலிவே துரைசெய்யு - மிங்குநம்பால்

606. வந்ததென்ன சொல்லுமென்ற மாத்திரத்தே [175]காரியத்தை
யந்தரங்க மாக வறிக்கையிட்டோம் -[176]முந்தச்

607. செலவழிந்த துக்கதிகஞ் செம்பொன் வழங்கிச்
[177]சலவையும் பாக்கிலையுந்தந்து - சொலவென்றும்

608. நல்வாய்மை சொல்லி யனுப்பினான் நாங்களுமவ்
வில்வே ளனானை வியந்தேத்திச் - [178]செல்வம்

609. பதினாறும் பெற்றிருநீ பாக்கியவா னென்று
துதிநாவால் மங்கள முஞ்சொல்லி - நிதியஞ்

610. செகராசர் நித்யந் திறையளக்க மேலு
மகராச னாகநன்றாய் வாழென் - றகமகிழ்ந்தங்
____________________________________________________________
(பி - ம்) [171]. பெருகக், [172]. தருள்வது நீ, [173]. புடையிருந்து, [174]. மெலிவையுரை செய்யு,
[175]. செய்திதன்னை, [176]. முந்திச், [177]. சலுவையும், [178]செல்வா.
_______________________________________________________________
611. காசிபல கூறியெம் மய்ய [179]னனுக்கை பெற்று
வாசமுட னூர்க்கு வழிகொண்டோம்[180] - நேசமாய்க்

612. கூடியிருந்த நண்பன் கோதண்டன் மானூர்க்கு
நாடிநடந் தான்வந்தே னானிங்கே - பாடினிகேள்

613. கூட்டுவிக்கும் நாள்விதியே கூட்டுவிப்ப தன்றிமற்றோர்
மூட்டுவிப்ப தாலே முடியுமோ - கோட்டி

614. பிடித்தலைந்த காரியத்தைப் பேசுவதே னெல்லாம்
படித்தவனான் [181]பட்டசளம் பார்க்கில் - தொடித்தளிர்க்கைத்

615. தாசிக ளாசை தனையினிமேல் நம்புமோ
சீசியதை [182]நன்றாகத் தேர்ந்தொழிந்தேன்-பேசியபா

616. டெல்லா மறிந்தனைநீ யிப்படிநி னன்னைமுன்போய்ச்
சொல்லா தொருவிதமாய்ச் சொல்லியே - வல்ல

617. குறைகளெல்லா மென்மேற் குறித்துநெடு நாளாய்ச்
சிறையிருந்தாள் தன்னைத் திருத்த - விறலிநீ

618. போவென்றான் தூதிவளும் போனா ளவளிவளை
வாவென்றாள் திவ்யவஸ்து வந்ததென்றாள் - [183]தாவென்றாள்

619. வாசலிலே யெங்களய்யர் வந்தாரென்றாளவளும்
பூசலுட னுள்ளரங்கிற் போய்ப்புகுந்தாள் - பேசவல்ல

620. உத்தரமெல் லாம்பேசி யொக்கிட்டா ளப்பொழுதிற்
சித்த மிரங்கித் திருமகளும் - புத்ரனுடன்

621. வந்தாள் தெருவில் மணவாள னைத்தொழுதாள்
செந்தா மரைத்தாள்மேல் தெண்டனிட்டாள் - ஐந்தருவும்

622. தேனுவும்போல் நல்குகொடைத் தெய்வச் சிலைராயன்
தானுதவும் வேண்டியசம் பத்தினால் -வானவர்கள்
________________________________________________________________
(பி-ம்.) [179]. னிருக்கைபெற்று, [180].நேசமுடன், [181].பட்டசனம்,
[182]. நன்றாய்த் தெளிந்தொழிந்தேன், [183]. ஆவென்றாள்
________________________________________________________________
623. போற்றுகும ரேசனைப் பூசிக்கும் வேளையினும்
யேற்றமுள்ள சந்திபண்ணு மெல்லையினும் - வேற்றரசர்

624. சிங்கமெனுந் தெய்வச் சிலைரா யனைவாழ்த்தி
நங்கையுடன் கூடி (யெந்நாளுமே) - பங்கயப்பூம்

625. பெண்மயிலும் மாலும் பிரியாமல் வாழ்வதுபோல்
வண்மையுடன் வாழ்ந்தார் மகிழ்ந்து.

தெய்வச்சிலையார் விறலிவிடுதூது முற்றும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

17. நெல்விடு தூது

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பள் - வெள்ளை
யரியா சனத்துள் ளரசரோ டென்னைச்
சரியா சனத்துள்வைத்த தாய்.
சீர்கொண்ட வெள்ளிச் சிகரமும் பொற்சிலம்பும்
வார்கொண்ட கந்தரந்தேர் மந்தரமும் - பேர்கொண்ட
வெவ்வேறாய் நின்றால் விடையேறு மெங்கோனுக்
கவ்வேறு சிந்தனையுண் டாமென்று வெவ்வேறாய்
மூன்று மலையுங் கொடுமுடிகள் மூன்றாகத்
தோன்றுந்த்ரி கூடமெனுந் தூயமலை - யான்றபற்ப
சிங்கா சனமாகச் செண்பகப்பூங் காவனமே
கொங்கார் பதியாய்க் கொலுவிருப்போன் - மங்கை

குழல்வாய் மொழிபாகன் குற்றாலத் தெம்மா       5
னிழல்பாய் குறும்பலவி னித்தன்-அழகை...
செங்கமலத் தாள்பரவச் செய்யசடை மேலிருக்குங்
கங்கைகுலத் தேயுதித்த காராளன் - தங்கப்
பொருப்புச் சிலையானைப் போற்றுதற்கா யந்தக்
கருப்புச் சிலையொளித்த காமன் - விருப்பமுடன்
முன்னா ளரனை முனியாய் வணங்குமலை
மன்னாகி நித்தம் வணங்கவென்றும் - அந்நாளில்
செண்டா லடித்துத் திருப்பியொரு சேலேழுதிக்
கொண்டா னவனாடு கொள்ளவென்றும் - தண்டாமல்

அத்தம் படைத்ததனை யாதுலர்க்கெல் லாங்கொடுத்து       10
நித்தம் புகழ்படைக்க நேமித்துச் - சித்தமுற
அன்புந் தயவு மறிவு பொறையுடைய
வின்பமு மாறா விரக்கமும் - நின்பொருட்டால்
சந்ததமும் பொன்மேருத் தன்பேர் மறைத்துலகில்
வந்த புருஷ மகாமேரு- [1]முந்துகுட
வேலைதனிற் கொள்ளாமல் மேலமலை யேறாமற்
காலமென்றுங் கோடையென்றுங் காட்டாமல் - நாலுகலை
பேசுதமி ழோர்க்குப் பெருகுநிதி மாரிபெய்யக்
காசினியில் வந்துதித்த கார்மேகம் - [2]தேசுபெறு
______________________________________________________________
(பிரதி) [1] முந்தகடகு, [2] தேசப்பெரு
________________________________________________________________

கல்விக்குக் கம்பன் கவனப் பரிநகுலன்       15
வில்லுக்கு வாய்த்த விறல்விசையன் - பல்லுயிர்க்குத்
தந்தைபோ லாதரவுந் தாய்போற் றயவுடைய
சிந்தையுமாய் வந்துதித்த சீவரத்னம் - விந்தைமணிப்
பொன்னின் முடிகவிக்கும் போர்வேந்தர் வாள்வேலிச்
செந்நெல் முடிகவிக்குஞ் சென்னியான் - இந்நிலத்தோர்
காதல் மதிகுளிரக் கண்குளிரக் காட்சிதருஞ்
சீதமதி போலுந் திருமுகத்தான் - போதில்
அருணமலர்க் கஞ்ச [ம]முதம்விளைந் தென்னக்
கருணை கொழிக்குமிரு கண்ணான் - ஒருமலஞ்சேர்

முன்பாரச் சேடன் முடிப்பார மத்தனையும்       20
தன்பாரங் கொண்ட தடம்புயத்தான் - இன்பமதப்
போர்விசைய பாணத்தைப் பொன்மலைமேல் வைத்ததெனத்
தார்புனையு நீலத் தடமார்பன் - போர்விசும்பைத்
தப்பவிட்டு வந்ததொருதாரு[வ]னை யான்றருவிற்
கப்புவிட்ட தானதடங் கையினான் - செப்பமிடுங்
காரியத்திற் சொல்லிற் கணக்கிற் றமிழ்தெலுங்கில்
ஆரியத்தின் மீறு மவதானி-போரடித்து
நீணித் திலங்கொழித்து நெற்பொலிக்குக் குப்பையென்று
மாணிக்கந் தூ[ர்]த்தொதுக்கும் வாசலான் - ஆணிப்பொன்

கொத்தளக்குஞ் செல்வக் கொலுவினான் செந்நெலொடு       25
முத்தளக்குங் கோலமணி முன்றிலான் - இத்தலத்தோர்
கன்மநெறி தப்பிக் கடல்வரம்பு தப்புகினுந்
தன்மநடுச் சொல்வரம்பு தப்பாதான் - வன்மம்
வருத்துவார் மிண்டன் மலைகலங்கி னாலுங்
கருத்துக் கலங்காத கண்டன் - அரிச்சந்த்ர
மன்னன்மொழி பொய்த்தாலும் மாமறைநூல் பொய்த்தாலுஞ்
சொன்னமொழி பொய்யாத் துரந்தரிகன் - முன்னமே
சூலி முதுகிற் சுடுசோறுவந்தளித்து
[3]நீலி பழிகழுவும் நீதிமான் - ஞாலமெய்க்கப்

பண்டோர் கலத்திற் பறையனையும் பாலிருத்தி       30
யுண்டோ னுபயகுலோத் துங்கன் - மண்டலத்திற்
பாலான கோடி பலசனமாம் [4]பட்சிகட்கோ
[5]ராலார் விருட்சநிக ராகினோன் - மாலேறு
நவ்விப் படைவிழியார் நாடோறுந் தீட்டுமடல்
செவ்விக் கடங்காத் திருவழகன் - தவ்வரியில்
ஓரெழுத்தைச் சொல்லி யுலகில்வரு வோர்க்குநித்த
மீரெழுத்தாய் நல்கு மியல்பினான் - பாரில்
அரியென் றெழுதுவிக்கு மன்றே லகர
வரியென் பதுமறந்த வள்ளல் - [6]திரைவளர
________________________________________________________________
(பிரதி) - [3] நீதி பனிகழுவும்; [4] பட்சிகற்குக்;, [5]கோலார்; [6]திரைவாள,
__________________________________________________________________

வட்டமிட்ட தென்சீமை [7]வட்டமெல்லா மொற்றைவரிச்       35
சட்டமிட்ட நாள்மணியச் சட்டமிட்டோன் - துட்டமிட்ட
வாதெடுத்த சத்துருவும் வந்தடுத்துத் தம்பமென்றால்
ஆதரிங்குங் கீர்த்தி யபிராமன் - பார்தலத்தில்
வெய்யோனைத் தீண்டியரா விட்டதுபோற் புற்றிலொரு
கையோச்சி நாகரத்னங் காண்பித்தோன்- செய்யகன
புத்தியிலே யூகிபொ றையிலே தன்மதுரை
யுத்தியிலே யப்பாசி யொப்பானோன் - பத்தி
முறையுடைய கோமான் முழுதுலகங் காக்கும்
நிறையுபைய கீர்த்தி நிபுணன் - குறையிரந்தோர்

சோளியலின் முன்கிடந்த கொம்புதள்ளித் துன்னாதார்       40
சாளியலின் [8]முன்கிடத்துந் தாட்டீகன் - [9]வாழியதன்
காலாலே யூன்றினதைக் கையாலு மன்னவர்செங்
[10]கோலாலு மேயசைக்கக் கூடாதான் - மேலெதிர்த்தோர்
[11]வில்வாங்க விட்டெறிந்து மெல்லணையில் மாதர்சொன்ன
சொல்வாங்க வில்சாங்குஞ் சூரத்தான் - மல்வாங்கு
போர்காட்டுந் தெ{வ்]வர் புறங்காட்டித் தம்மகவைப்
பேர்காட்டிக் காணும் பெருஞ்சமுகன் - பாருலகில்
[12]வானேற்ற சக்ர மலைதான்றவறுகினுந்
[13]தானேற்ற வாரந் தவறாதான் - மேனாளில்

மட்டறவே செய்துசெய்து வாய்த்தசிவ புண்ணியத்தின்       45
விட்டகுறை யாய்ப்பிறந்த மீனவன் போற் - சிட்டர்
திரிகூட நாதர் திருப்பணியே செய்ய
வரிசைபெறத் தென்குடிகை வந்து - திரிகூட
மண்டபமுஞ் சித்ரசபை மண்டபமுந் தேரடியில்
மண்டபமுமீசர் கொலு மண்டபமும் - அண்டர்பிரான்
ஆலையஞ்சூழ் மண்டபமும் ஆறாட்டு மண்டபமு
மாலைதிருப் பூம்பலகை மண்டபமும் - பால்சுரக்குங்
கோவா லையமுங் குவலையத்தில் மற்றுமுள்ள
தேவா லையமுஞ் சிவாலையமும் - மேவுநடை
_________________________________________________________________
(பிரதி)- [7]விட்டமெல்லா; [8]முன்கிடந்த; [9]வாளியதின்;[10]கோலாழும்,
[11] வில்வாங்கு; [12] வானேத்த; [13]தானேத்த
_________________________________________________________________

சாலைகளு மன்னசத்ர சாலைகளுந் தென்னைமரச்       50
சோலைகளுஞ் செண்பகப்பூஞ் சோலைகளும் - மாலைகளும்
நந்தா வனங்களு நறுமலர் வாவிகளும்
நந்தா வனம்பயிலு நன்னகர்க்கு - நந்தாத
தட்டொடு தூவிகளுஞ் சந்தனா தித்தயிலக்
கட்டளை பூசையறைக் கட்டளையும்-இட்டமுள்ள
தேருந் திருநாளுந் தெப்பமும் வாகனமும்
பாருலகங் கொண்டாடப் பாலித்துத் - தார்சடையோன்
மெய்யபர மானந்த வீதிக்கு நேர்வடக்காய்த்
துய்யபர மானந்தத் தோப்புவைத்துப் பொய்[ய]மரா

அப்புநெடும் பாற்கடலி னன்றுநடு மந்தரம்போல்       55
தெப்பநடு வேசிகரஞ் செய்வித்துத் - தப்பாமல்
தன்மகன்பூ சித்தலிங்கந் தாயும்பூ சிப்பதுபோல்
பொன்மஞ் சனக்குடமும் பூரித்து - முன்முடித்த
வாலமதி யைத்தொடர்ந்து வட்டமதி வந்ததுபோல்
தாலமிசை வெள்ளித் தளிகை செய்து - மேலை
அரிதேடச் சித்ரசபை யம்பலங் கொண்டாற்குத்
திரிகூட வம்பலமுஞ் செய்து - [14]பரிவாகிக்
குற்றாலந் தன்னிற் குடிகையர்கோன் செய்தபணி
முற்றாக நானுரைக்க முற்றுமோ - பற்றாகக்

காணவென்றா லாயிரங்கண் கண்டுவகை யாய்ப்புகழ       60
வேணுமென்றா [15]யிரநா வேணுமே - தாணுவுக்குச்
செய்தபடி யேயிலஞ்சித் தேவசே னாபதிக்குக்
கைதவர்கோன் [16]முன்முகித்த கற்பணியில் - நொய்துபடா
மண்டபமுஞ் சாயாமல் வாழ்கிணறுஞ் சாயாமல்
விண்டபெருங் கற்றூணும் வீழாமல் - தொண்டர்குழாஞ்
சற்றுமலை யாமற் றரியிட்டா னம்மம்மா
கொற்றமுடிப் பாண்டியனாற் கூடுமோ-முற்றுஞ்
சரவணை மண்டபமோ சக்ரகிரி போலத்
திருமலை [17]தன்சித்திரமோ - பெருகுதமிழ்க்

காசிவிசு வேசர் கனத்தகொலு மண்டபமோ       65
மாசிலாத் தென்புலியூர் மண்டபமோ பேசும்
வரகுணன்றன் கோவில் வளமாக்கிப் பூசை
[18]விரகுபண்ணிக் கொண்ட விதமோ - திரமாகக்
கட்டளைகள் வைத்ததோ கட்டளைக் கெல் லாநிலங்கள்
விட்டசம்ப்ர தாய விதங்களோ - சிட்டனிவன்
சென்ம(வ) வதாரச் [19] சித்தனெனக் கொண்டாடத்
தன்ம மொருவடிவாய்த் தான்வந்தோன் - தொன்மையாய்
ஆதியுல காளை அகிலே சனைப்பரவி
நீதியுல காள நெறிபெற்றோன் - வீதிபெறுந்
________________________________________________________________
(பிரதி) - [14] பரிவாக்கி; [15] லாயிரநாள்; [16] முன்முகிர்த்த;
[17] தான் முகிர்த்த சித்திரமோ; [18] விரவு; [19] சித்தனெனவே
_________________________________________________________________

தென்காசி [20]நாடனைத்துஞ் சின்னணைஞ்ச பூபாலன்       70
தன்காசு மாணையுமே தான்செலுத்திப் பொன்காசு(ம்)
உண்டென்று வாழ்குடியை யூர்மணிய காரர்செய்யுந்
தெண்டம் பரும்பிடிகள் தீர்ப்பித்துப் - பண்டைநாட்
காட்டுவரி யானகொடுங் காடுகா வல்வரியை
வீட்டுவரி பேர்லே விலக்குவித்து - நாட்டில்
இடைமிடைஞ்ச லாய்ச்சனங்க ளேழுமலை யேறிப்
படைபடையென் றோடுபயந் தீர்த்துக் - கொடைநீதிச்
சோழவள மாக்கினான் சுக்ரீபன் வந்தானென்
றேழைச் சனங்களெல்லா மேத்தெடுப்பத் தாழாது

நன்குடிகை தாங்கி நடத்துமனு நீதிகொண்டு       75
தென்குடிகை யூராளுஞ் சீராளன் - என்கோன்
அனந்தபற்ப [21]நாபனரு ளாரமுத வாரி
சினந்தவர்கள் [22]பீடறுக்குஞ் சிங்கம் - முனஞ்சேர்
தயித்திய(ன்)முன் முவடிக்காய்த் தான்வடிவாய்ச் சென்ற
வயித்திய நாதமகி பாலன் - செயித்தபெருந்
தென்பாண்டி ராச்சியமும் [23]செஞ்சிதஞ்சை கேரளமுந்
தன்பாற் கவிக்குந் தனிக்குடைக்கீழ்ப்-பொன்சேர்
வடகரைக்குள் ளேயிருந்து [24]வற்கீழ்கரைக்குங்
குடகரைக்குஞ் சீட்டெழுதுங் கோமான் - அடல் பெருகுந்

தென்மதுரை ராச்சியத்திற் செங்கோல் செலுத்துமொரு       80
தன்மதுரை செய்சுமுக [25]தானபதி - சொன்னபதி
சேதுபதி மெச்சுந்த்ரி கூடபதி காத்தமண்ட
லாதிபதி தென்கிழுவை யாதிபதி -நீதிபதி
செம்புலிக்கு மாரதுரைச் சின்னணைஞ்சபூபதியாம்
நம்பெரிய சாமி நரபதிக்குப் - பம்புமிசைச்
சீர்நாட்டி யெங்குஞ் செயத்தம்ப நாட்டியொரு
பேர்நாட்டும் வாசற் பிரதானி - போர்நாட்டும்
மண்டலிகர் கண்டன் மருதூர் வயித்தியப்பன்
பண்டைநாட் செய்தபெரும் பாக்கியத்தாற்-கொண்டாடுஞ்
_______________________________________________________
(பிரதி) [20] நாடனைத்துந் துரைச் [21]நாதனரு; [22]வீடறுக்குஞ்,
[23] தெஞ்சிதஞ்சை, [24] வற்கரைக்குங், கீழ்கரைக்குங், [25] தானாபதி.
__________________________________________________________

சங்கநிதி பற்பநிதி தானிரண்டு பார்புரக்கு       85
மங்கலமாய் வந்துதித்த வண்மைபோற் - பொங்குபுகழ்த்
தந்தச் சிவிகைச் சவரிப் பெருமாள்முன்
வந்தபிச்சப் பிள்ளை மகிபதிக்குச் - சொந்தம்
உரிமைக் குரித்தா யுரியகிளை தாங்கு
மருமைத் திருமரு[26] னானோன் - பெருமையிட்டுப்
பாவேந்த ரைப்புரக்கும் பாங்காய்த் தமிழ்நாட்டு
மூவேந்தர் வந்த முறைமைபோல் - ஆவல்
பெயராருடைப் பெருமாள் பிள்ளைப் பெருமாள்
செயராக் கதப்பெருமாள் தீரன் - நயகுணவான்

குற்றால நாதனென்னுங் கொண்டலிரு பேர்தமக்கும்       90
பற்றாக முன்னுதித்துப் பார்புரப்போன் - பொற்றாரு
வென்னுங் கொடையா னிருளப்ப பூபதிக்கு
முன்னுதித்து வந்த முகிர்த்தவான் - நன்னகர்க்கோன்
பொங்குமுச்சிக் கட்டளையும் பூஞ்சப்ர முஞ்சமைத்த
சங்குமுத்து ராயர் தயாநிதிக்கும் - எங்குமுன்
தேசந் திறையளக்கத் தென்மருதூ ராளவந்த
போசன் வயித்தியப்ப பூபதிக்கும் - பேசுகன
வாகன் விவேகன் மதுரகவி யுத்தண்டன்
நாகரிகன் குற்றால நாதனுக்கும் - மோகமாய்

மால்பெரிய மின்னார் மடரெழுதுஞ் சங்க்ராம       95
மால்பெரிய நாயகம கீபதிக்கும் - சா(ல்)புடைய
நண்பு மறிவு நயகுணமும் நீங்காத
செண்பகக் குற்றால தீரனுக்கும் - பண்பாகக்
கைத்திறஞ்சேர் பாண்டவர்க்குக் [27]கண்ணன் போலன்புடைய
மைத்துனப்ர தாப மகராசன் - முத்துமுத்தாய்
நாவியலுஞ் சொற்புலவோர் நாட்டுபுரா ணங்களொடு
காவியத்தின் முன்பதிக்குங் காப்புப்போல் - [28]மேவியதான்
ஆற்றுந் திருப்பணிக ளாயிரங்கோ டிக்குமுன்னே
போற்றும் விநாயக பூசைபோல் - ஏற்றமாய்

நம்பலவி னாயகராம் நம்பர்திருச் [29]சன்னிதிக்கோ       100
ரம்பலவி நாயகனுண் டாக்கினோன் - சம்பு
வடவருவி குற்றால நாதருக்கு வாய்த்த
தடவரைசூழ் சித்ரநதிச் சார்பில் - அடைவாய்முன்
தென்னவனுங் காணாத தீர்த்தப் படித்துறையைச்
சன்னிதியிற் காணத்தவம் பெற்றோன் - நன்னகர்வாழ்
பண்ணவற்கும் வேணுமேர்ப்பார்(ப்) பதிக்குங் கொண்டுவந்து
விண்ணவர்கோன் வைத்த விமானம்போல் - திண்ணமாய்த்
தன்னிரண்டு கையால் தனிமேருவை வளைத்தான்
முன்னிரண்டு மேரு முளைப்பதுபோல் - [30]இந்நில
____________________________________________________________
(பிரதி)- [26] னாகினோன், [27]கன்னன்போ, [28]மேவியதின்,
[29] சன்னதிக்கோ. [30]. இந்நிலமாம்,
________________________________________________________________

மாமத்தேர் சாய்ந்தாலும் வாசலிலொன் றுக்கிரண்டு       105
சேமத்தேர் நான்முகத்தோன் செய்ததுபோல் - கோமகற்குத்
தென்குறிஞ்சிப் பெண்பொருட் டாஞ்சீதனஞ் செய்குன்றுபோற்
பொன்குறிஞ் சிரண்டமைத்த பூபாலன் - நன்றாய்முன்
கார்க்கடலிற் பாதைகண்ட காரணம்போல்சித்ரநதிப்
பாற்கடலிற் பாலமொன்று பாலித்தோன் - தீர்க்கமாய்
ஆதிக்கஞ் செய்யு மனந்தபற்ப நாபமன்னன்
சாதிக்குந் தர்மந் தலைசெய்து - நீதிக்குஞ்
செல்வக் குடி(தன)க்குஞ் சீவரெத்னம் வைத்(த)தென
நல்கும் வயித்திய நாதமன்னன் - வல்லமையாய்ச்

செங்கோல் செலுத்திச் செகதலத்தை யாளவந்த       110
நங்கோன் வயித்திய நாதமன்னன் - வெங்கோண்மை
மன்மலையுங் கீர்த்தி வடமலையிற் சென்றேறத்
தென்மலையை யாளுஞ் செயதுங்கன் - பன்மலரும்
நானதியுந் தேனும் நவநிதியுந் தன்பொருளை
மானதியுஞ் சேர்கடனை மாநதியான் - [31]சேனைநிலை
கூட்டினான் வெ(ல்)வேற் குமரனென்றே வொப்பம்நிலை
நாட்டினான் முள்ளிவள நாட்டினான் - ஊட்டுசுவை
கண்டாடுடஞ் செல்வியர்கள் கைக்கழங்கு போற்கமல
வண்டாடுந் தென்குடிகை மாநகரான் - சண்டமதன்

ஓரானை பின்காட்ட வோடைவெயில் முன்காட்டுங்       115
[32]காரான கும்பக் கடகளிற்றான் - சீரார்தென்
காசியான் வாணர் கலிநோயைத் தீர்ப்பதுபோல்
வாசியான் பொற்கவன வாசியான் ஓசையால்
வீர முரசும் [33]விவாக கொடைமுரசு
மாரன் முரசொலிக்கும் வாசலான் - [34]பேரருளால்
ஆழிப் பெரும்படையை யங்கவரை யாயடக்கி
மேழிக் கொடியுயர்த்த மேகவண்ணன் - வாழ்கனகன்
தூணநிலை கொண்ட சுதகரன்போற் சற்குருவி
னாணைநிலை கொண்ட வவதானி - நாணேற்றும்
_______________________________________________________
(பிரதி)- [31] சேனைநிளை, [32]. காரானை,
[33] விபாக, [34].பேருளவால்,
_________________________________________________________

ஆலையார் செஞ்சிலைய ரன்றுபகற் போதுதந்த       120
மாலையான் செங்கழுநீர் மாலையான் - மேலை
யிடத்தும்வலத்தும்விசைய னேறிய தொன்ற
நடத்தும் வயித்திய [35]நாதன் - அடக்கத்தில்
வாம னெதிர்த்தவரை வாயடக்கு மந்திரியாம்
நாமன் வயித்திய நாதமன்னன் - கோமகிமைப்
பண்பன் சுகீர்த்திப் பரிபாலன் பூமடந்தை
நண்பன் வயித்திய நாதமன்னன் - முன்றிலொடு
வீடெங்கும் பொன்னாற வீதி தமிழ் நாறுமுள்ளி
நாடன் வயித்திய நாதமன்னன் - நீடாளுந்

தேசத்துக் காரியமுஞ்சீமைவழிக் காரியமுங்       125
காசினியி லோங்குகுடிக் காரியமும் - பேசும்
அரண்மனைக் காரியமு மங்கங்கே யுள்ள
கரைமணிய காரர் கருத்தும் - துரைகிழுவைச்
சின்னணைஞ்ச ராய செயபெரிய சாமிமன்னன்
தன்னுடைய காரியம்ப்ர தானமாய் - மன்னுஞ்
சிவகாரி யக்கணக்குந் திட்டவட் டங்கேட்டு
விவகாரஞ் செய்திருக்கும் வேளை - யவரவரே
என்கரும முன்கரும மென்று சிலமன்னியர்கள்
தங்கருமங் கேட்குஞ் சமுகத்தில் - சிங்கேறு

போலிருந்த கோனைப் புகழ்வயித்ய நாதனையித்       130
தாலம் புகழ்துரையைச் சந்தித்தேன்-மேலிரவி
…………………………………………………………..
……………………………………………………………..
மெய்யாக நான்முகத்தோன் வெள்ளையன்ன மேறுவது
மய்யாவுன் பேரிலருமைகாண் பொய்யாமல்
___________________________________________________________________
(பிரதி) - [35]நாதமன்னன்.
ஏட்டுப்பிரதியில் இதன்பின் மூன்றுபக்கம் எழுதப்பெறவில்லை;
சுமார் 18 கண்ணிகள் இங்கே விடுபட்டிருக்கலாம்.
____________________________________________________________________

மண்ணி லிரவொழிய வான்கதிர்கள் வீசுமுனை       150
விண்ணி விரவியென வேண்டாமே - தண்ணமுதாற்
சந்திரனும் நீயே தரைமேல் மகவானென்
றிந்திரனார் பேருமுனக் கேற்குமே - மந்திரிநீ
யில்லாத நாடு மிருட்டுநா டல்லவோ
செல்லா தொருகருமஞ் செல்லுமோ-வல்லாளா
மேகத்தி லேபிறந்தாய் மேதினியி லேவளர்ந்தாய்
லோகத்தை நீவளர்த்தா யுத்தமா - மாகத்தில்
கற்கோட்டை யிட்ட கடல்சூ ழுலகமெல்லாம்
நெற்கோட்டை யிட்டதுரை நீகண்டாய் - வற்கான

காசியிம சேதுமுதற் கன்னியும்பொன் னித்துறையும்       155
தேசமெங்கு முன்னாணை செல்லுமே- வாசமாய்ச்
சொல்லு மராடந் துலுக்காண ராச்சியங்கள்
வல்லகிளைக் கெல்லாம் வகுப்புவைத்தாய் - அல்லாமற்
கோதும்பை யென்னுமொரு கோட்கார னைக்குறியாய்ப்
போதென்று தாணையமும் போடுவித்தாய் - வீதி
வடவேங் கடந்தொடுத்து வாழ்குமுரி மட்டுந்
திடமாக நீயிருக்குஞ் சீமை - கடலோடீ
ழங்கிரிசு சீமைமுத லேழுதீ வாந்திரமும்
பொங்குகப்ப [36]லேபவனி போய்வருவாய் – நங்கண் மேல்

வாரந் தவறான் வயித்தியநா தன்குடிகை       160
பாரம் பரைபெருகு பாக்கியவான் - பேருழவால்
ஆண்டிருக்கும் பண்ணை யரசிருக்கு மாஸ்த்தான
பாண்டிவள நாடுனக்குப் பட்டணங்கா - ணீண்டவயற்
காடெல்லாம் வீடுகள மெல்லா மூடையங்கள்
நாடெல்லாஞ் செங்கோல் நடத்துமிடம் - நீடுபொலி
செய்யும் பொலிமுகமும் சேருங் களஞ்சியமும்
அய்யன் கொலுவிருக்கு மாசாரம் - வையகத்திற்
பாவீடு பள்ளியறை பட்டடையு னுப்பரிக்கை
கோவேயுன் பெத்தரிக்கங் கொஞ்சமோ-[37]சேவே

கனகுதிரை யேறி மொட்டைக் காளைமேலேறி       165
[38]மனைகுதிரை யேறுவாய் மன்னா - தினமுமறை
சொன்னவ ரெல்லாமுனக்குச் சொல்லும் புரோகிதர்கள்
மன்னவரெல் லாமுனக்கு மந்திரிமார் - உன்னுடைய
சேனா பதிகள்பயிர் செய்துவருங் காராளர்
தானா பதிகள்செட்டுத் தந்திரிமார் - ஆனாத
சூழிக் கலப்பை துரையேயுன் [39]மந்திரவாள்
மேழிக் கொடியுனது மேல்விருது - மேழிதொடு
கையுடைய மள்ளர் கனபடைக்குன் காலாட்கள்
செய்யுழவு கோலுனக்குச் செங்கோலே-வெய்யபெருங்
_______________________________________________________________
(பிரதி)-[36] லெப்பலெறிப், [37]சேவேறிக், [38]. மனகுதிரை, [39]. மந்திரிவாள்
______________________________________________________________

கம்புதினை சோளமென்று காடுமலைக் கேகிடக்கும்       170
வம்பருனைப் போற்றுகுறு மன்னியர்கள் - தும்பையென்றும்
வாய்வகுக்குஞ் சாமியென்றும் வன்குதிரை வாலியென்றும்
காய்வகுத்த புன்காடைக் கன்னியென்றும் - பேய்வரகு
நீதியற்ற [40]கேப்பையென்றும் நித்தமுனக் கேவல்செய்யுந்
தாதிமக்கள் மூப்பிமக்கள் தான்கண்டாய் - சீதவயல்
மட்டடங்காத் தீங்கரும்பு மஞ்சளிஞ்சி வாழையெல்லாம்
அட்டதிக்குங் காத்ததலை யாரிமார் - எட்பயறு
மொச்சை கடலை முதுரை துவரையெல்லாங்
கச்சைகட்டு முழியக் காரர்காண் - இச்சைதரும்

மாங்காய் பலாக்காய் வழுதலைங்காய் மற்றுமுள்ள       175
தேங்காயு முன்னோடுஞ் [41]சேவகர்காண் - பாங்கான
வெண்கலமா யீயமாய் வெள்ளிசெம்பு பித்தளையாய்
மண்கலமாய் பொன்கலமாய் வந்தோரு- [42]முன்கவரு
போசனமாய் நீவகுத்த புண்ணியவா னைத்தினமு
மாசனமாய்த் தாங்கிநிற்பா ரல்லவோ - நேசனே
நெல்லென்ற வுன்பேர் நிகழ்த்தமுடி யாதெனிலுஞ்
சொல்லென்ற வுன்னருளாற் சொல்லுவேன் - நல்லநல்ல
கோடைக் குறுவை குளவாளை செங்குறுவை
காடைக் கழுத்தான் கருங்குறுவை - நீடிய

மொட்டைக் குறுவை முழுத்தநெடு வாற்குறுவை       180
மட்டுப் படாதகுறு வைக்கிளையான் - கட்டையன்
மூக்கன்சம் பார்ச்சிறிய முள்ளுச்சம் பாமிளகி
காக்கைநிற மான கருஞ்சம்பாத் -தாக்கான
நேரிய சம்பா நிறைந்த புழுகுசம்பா
சீரகச்சம் பாவழகு செஞ்சம்பாப் -பேரா(ன)
தென்னரங்கன் சம்பா திருக்குறுங்கை நம்பிசம்பாப்
புன்னைவனச் சம்பாப் புழுகும்பா - வன்னவன்ன
சம்பாக்க ளென்றுந் தனியானைக் கொம்பனென்றுஞ்
செம்பாளை யென்றும் [43]சிறகியென்றும் - செம்பாய்ப்
_________________________________________________________________
(பிரதி) -[40].கெற்பமென்றும், [41]. சேவிகாண்,
[42]. முன்கவெரு, [43]. சிறுதியென்றும்,
_________________________________________________________________

பறக்குஞ் சிறுகுருவி பாற்கடுக்க னென்றும்       185
நிறக்கும் [44]பனை மூக்கனென்றும் - கறுத்தநிற
வாலன்சிறை மீட்டான் வளர்பூசைப் பாடிவெள்ளை
மீளுஞ்சிறை மீட்டான் மலைமுண்டன்-வாணன்
கருஞ்சூரை சூரை கறுத்ததிக்க ராதி
விரும்புகன வெள்ளையதிக் ராதி - பெருங்கடல் போற்
கத்தும் பொலிவீர கஞ்சுகன் போலவெள்ளை
முத்துச் சொரிகுரும்பை முத்துவெள்ளை - யித்தனையோ
போரிறங்கல் மீட்டான் புழுதி புரட்டியென்றும்
நேர்பெருகு சொக்கன்சம்பா நெல்லென்றும் - மாராச

வாணனென்றும் வாள்சுறுணை வாலனென்றுஞ் சீராம       190
பாணமென்றுங் கீர்த்தி படைத்ததல்லாற் – சேணுலகில்
ஆதிதில்லை நாயகனென் றாறகுரு மைபேரும்
வீதி விடங்கனென்ற மெய்ப்பேரும் - நீதிதிருக்
குற்றால மென்றுலகங் கொண்டா டியபேரும்
பெற்றாயுன் பேரொருவர் பெற்றாரோ-வுற்றபிரான்
தன்பேர் படைத்த [45]தவம்படைத்தா யாகிலுமோ
உன்பேர் படைத்தவற்கே யோகங்காண் - நின்பேராஞ்
செஞ்சாலி [46]மீன்பார்க்குஞ் செல்வமணப் பெண்களுக்கோர்
அஞ்சாலி யோயருமைக் கல்லவோ - மஞ்சாலே

நீலியிட்ட மூங்கில்வனம் நெல்வேலி யானதுனை       195
வேலியிட்டுக் காத்த விசேஷமோ - ஞாலமெல்லாஞ்
சொல்லுகின்ற உன்பேர்த் துணிவன்றோ சாக்கியனார்
கல்லுண்டை சாத்திக் கதிபெற்றார் - மெல்லமுதத்
தாதாவே யுன்பேரில் தாகமோ தாசர(தி)
சீதாபோ கந்தனையே சிந்தித்தான் - போதாமல்
சேணிலங்கை கட்டழித்துச் சீதைநிறை மீட்டுவந்த
பாணமுமுன் பேருடைய பாணமே - பாணம்போய்
நீர்குடித்த வாரிதிதா னின்றமணல் வாரியென்றுன்
பேர்படைத்த தாலே பிழைத்ததே - கார்வண்ணன்

சித்திர காலியின்பின் சென்றதெல்லாம் உன்னுடைய       200
முத்திரைப்பேர் தன்னில்வைத்த மோகமே - கொத்திருந்து
வையத்திற் பூம்பாளை மாதர்குழல் போற்றுவதும்
துய்யமல்லி கைகட்டிச் சூட்டியதும் - மெய்குழல்போல்
வள்ளைக் கொடிக்கழகு வாய்த்ததுமுன் பேருடைய
பிள்ளைதனக் கான பெருமாளே - தெள்ளியநீ
யுண்டாக்கி லிவ்வுலக முண்டுநீ யில்லையென்றாற்
கண்டதார் கேட்டதார் காவலா - தண்டாய்
[47]அயலூர்போ னாலு மறுசுவை கூட்டித்
[48]தயவா யமுதூட்டுந்தாயே- இயலறியாப்
_______________________________________________________
பிரதி)- [44] பனைமூக்கனதிக்கிராதியென்றும். [45] தவறப்படைத்தா,
[46] பொன்றுவதும். [47]அயலூரிற்போ, [48]தயவாயன் பொடமுதூட்டுந்
_______________________________________________________

பேதலித்த பேர்க்கும் பெரியபுத்தி சொல்லிநன்றாய்       205
ஆதரித்துத் தந்தியிடும் அப்பனே - மீதுலகும்
அம்புவியுந் தோன்றியநா ளன்னமெனத் தோன்றுமொரு
தம்பிமுன்னே தோன்றும் தமையனே - கம்பட்ட
மேனியுமாய் ராசிபுது மின்னலுமாய் முன்னுதித்தால்
தானியமாய்ப் பின்னுதிக்குந் தம்பியே - ஈனமாய்
ஆர்தடுத்துச் சொன்னாலு மஞ்சாமல் நானெனப்போய்
மார்புதட்டிப் பெண்கொடுக்கு மாமனே - தார்குழலார்
கொந்துமண மாப்பிள்ளை கூடத்தி லேறுமுன்னே
வந்துமண வீடேறு மச்சானே - சிந்தினையாய்

வாட்டும்விலைக் காலமதில் வந்துவிலை மாதரெல்லாங்       210
கூட்டமிடு மோகக் கொழுந்தனே - கேட்டவர்க்குக்
கன்னியழி யாதவர்போற் காசலையாய்த் தேடியுண்ணும்
பொன்னனையார் கள்ளப் புருஷனே - முன்னேரம்
வந்தமுறை தானிருக்க மாற்கமுறை பேசுமின்னார்(க்)
கந்த வடுகமுறைக் கம்மானே - தந்தபொருட்
காமியா ராகிக் கனசபைக்குள் நாணாத
மாமியார் நாணு மருமகனே - பூமுடித்த
மஞ்சனைய கூந்தலார் மாரிசமும் சூதுமிட்ட
[49]நெஞ்சடியே தோன்றும் நிலவரையே - நஞ்சுவிழி

மூங்கில்வைக்குந் தோளார் முலைதெரியா முக்காடு       215
வாங்குவிக்குஞ் சூறா வளிக்காற்றே - பூங்குவளைக்
காட்டார் கருங்குழலார் காமரசப் பொக்கிஷத்தைக்
கோட்டானைத் தாழ்திறக்குங் குச்சிலே - யாட்பேரைக்
காணயிலே போயொளிக்குங் கள்ளமனக் காரிகைமார்
நாணவெணும் நட்டளக்கும் நாழியே - வேணபேர்
கொஞ்சிநலஞ் செய்யக் குறிகாரன் வைத்திருக்கும்
வஞ்சியர்க்கு வாய்த்தகன்ன வாசலே - விஞ்சையார்க்
குள்ளமெனு மீன்படுக்கு மொண்டொடியார் மாயவலைக்
கள்ளவிழிமான்படுக்குங் கண்ணியே - துள்ளுதிரை
______________________________________________
(பிரதி) [49] நெஞ்சடியைத்.
___________________________________________

யூற்றுக் கடலி லொ(லி)த்த பரவரெல்லாந்       220
தூற்றுக் குடியில்வந்து சூழாமல் - ஏற்ற
கரைதுறைக ளேழிலுள்ள கண்கார ரெல்லாம்
[50]நிரைதோணி விட்டுநில் லாமல் - ஒருதோணி
மண்டக்க னேறாமல் வந்துகுளி யாளாகக்
குண்டக்கன் போய்ப்போய்க் குதியாமல் – அண்டைக்கே
சங்குசிப்பி வாழுமிடந் தான்தேடித் தேடியவன்
முங்கிமுங்கிப் போய்முச்சு முட்டாமல் - பைங்கொடியார்
தேன்கொழிக்குஞ் செவ்வாய்ச் சிவந்தபவ ளத்துறைக்கே
தான்கோழிக்கு முத்துச் சலாகமே - வான்செழிக்குஞ்

சந்திரனைக் கீழே தறிநாட்டிப் பின்னையொரு       225
மந்தரத்தைத் [51]தந்திரமாய் மத்தாகி – அந்தரத்தோர்
பாம்புகயி றாய்ப்பிணித்துப் பாற்கடலைக் கிண்டாமல்
தேம்பியம ரேசர் திகையாமல் - தாம்புதொட்டு
வண்ணமுகில் மேனியான் மத்தெறிந்து காட்டாமல்
தண்ணமுதங் காட்டுஞ் சமுத்திரமே - எண்ணினர்க்கு
மின்னைவிளை விக்குமொரு மேகம்போல் வேணபடி
பொன்(னை)விளை விக்குமொரு பூமியே - உன்னையினிப்
பொன்னென்றோ தங்கமென்றோ பூவென்றோ மாலையென்றோ
யென்னென்றோ வாழ்த்திடுவே னென்கோவே- பொன்னுக்குத்

தோழனுமாம் நல்ல துணைவனுமாம் நீங்காத       230
கேள்வனுமா மென்பதுநான் கேட்டிருந்தேன் - தோழனைநீ
அண்ணனென்று கோட்டிகொண்டாய் ஆசாரக் கள்ளாவுன்
னிண்ணையங்க ளென்னவென்று நேமிப்பேன் - மண்ணுலகோர்
நாடுகுடி யேறுவதற்கு நாட்கால்கள் நாட்டுதற்கு
வீடு குடிபுகுதும் வேளைக்கும் - ஏடுபிடி
[52]கல்விக்குப் போவார்க்கும் கன்னியுங்காப் புந்தொலையச்
செல்வக் கலியாணஞ் செய்வார்க்கும் - நல்லதுதிக்
கையாரைப் போற்றியிரு கையால் நிறைநாழி
வையாமல் தெட்சணைமுன் வையாரே - தையலார்
__________________________________________________________
(பிரதி)- [50] நிரைநிரையே தோணிவிட்டு நில்லாமல்,
[51] தந்தரமாய், [52]. கல்விக்கும்.
__________________________________________________________

வாசமணப் பெண்பேசி வாரவரு முன்பேரைப்       235
பேசியல் லோபணத்தைப் பேசுவார் - ஆசைமனு
நின்னைவிடப் பேசினபேர் நெல்லுடையார் வீடுதொறும்
பொன்னலையக் காதலையப் போயலைவார் - பின்னையுநீ
அந்தரங்கமாக அடுக்களையிற் போய்ப்ப ணத்தைப்
பந்தலிலே யாடவிட்டுப் பார்த்திருப்பாய் - எந்தவிதம்
ஆனாலும் பொன்னா லமையாத காரியமும்
தானாக நின்று தரியிடுவாய் - நீநாட்டிப்
போகாத காரியத்திற் (போவாரார்) பொன்னாலே
யாகாத காரியத்துக் கண்ணனென்பாய் ஓகோகோ

நேயவித்தை போலுலகில் நீயாடும் வித்தைவெகு       240
மாயவித்தை கண்டாய் வகைகாரா - தாயாக
ஏழுலக மீன்றாளி எண்ணான் கறம்வளர்த்து
வாழுமக மாயிகுழல் வாய்மொழித்தாய் - சூழ்பெருமை
அத்தனைக்குங் குற்றாலத் தய்யரளக் கும்படிதான்
நித்த மிருநாழி நெல்லன்றோ - உத்தமியார்
அவ்வளவு கொண்டே அகிலாண்ட மும்வளர்த்தால்
எவ்வளவென் றுன்பெருமை எண்ணுவேன் - செவ்வியர்தாம்
உன்னைப் படியளந்தார் ஓங்குமலை யாய்வளர்ந்த
பொன்னைப் படியளக்கப் போகாதே- பொன்னாலே

ஊட்ட மெல்லாம்நல்கி உயிர்ப்பயிரெல் லாம்வாழ்த்தும்       245
வாட்ட மெல்லாம் தீர்ப்பதற்கு வஞ்சகமோ - நாட்டகத்திற்தான்
பொன்னும் பணமும் புலையன் படைப்பானே
அன்னம் படைப்பதுன்போல் ஆர்க்குவரும் - என்ன
தாயார்கைப் பொன்னிருந்து(ம்) தன்கைத் தவிடாமோ
தோயாத பொன்னையுன்முன் சொல்லுவதோ- பேயாபோ
எண்ணாமற் பொன்னை யிகழ்வாருண் டேவுலகில்
உண்ணாமல் வாழு முயிருண்டோ - விண்ணாளும்
நீலமுகில் பொய்யாமல் நெல்லுமுகங் காணாமல்
காலங் கொடியபஞ்ச காலமாய் - ஞாலமொக்கப்

பேய்புகுந்த காலத்திற் பிள்ளையைத்தாய் பார்ப்பாளோ       250
தாய்முகத்தைப் பிள்ளைதான் பார்க்குமோ - நாயகமே
சாதிமுறை யுண்டோ தமையனுக்குப் பாதியுண்டோ
நீதியுண்டோ மேல்வரம்பு நிற்குமோ - வீதிதொறும்
ஏற்பாரைச் சுற்றமென்றே எண்ணுவா ரோபிறரும்
பார்ப்பாரைத் தெய்வமென்று பார்ப்பாரோ - நேர்ப்பான
கட்டி வராகனுண்டே கல்லுவகை யொன்பதுண்டே
சட்டியிலே யிட்டவித்தால் சாதமுண்டோ - இட்டிருந்து
பார்த்தாற் பசிபோமோ பாவிமகள் செப்பிலிட்டுக்
காத்தாற் பசிபோமோ கர்மமோ - பூத்தான

நெல்லுமணி யில்லாத நீணிலத்திற் காசுபணம்       255
கல்லுமண்ணு மல்லவோ காஉலவா - எல்லையில்லாய்
பொன்னிலத்தி லேயிருந்து போக்குமுட்டித் தேவரெல்லா
மிந்நிலத்திற் பாற்கடலை யேன்கடைந்தார் - சொன்னமயம்
என்னமயந் தானிருந்து மிந்த மயமாமோ
அன்னமய மல்லவே அப்பனே - பொன்னிருந்தும்
காவலனுந் தேவியுமாய்க் கன்னிமணஞ் செய்யவென்றும்
ஆவலிரு போதுமன்றைக் குண்ணாமற் - கேவலமாய்
ஓர்பொழுதா யுண்டபல னொன்(றோ) சிவசிவா
ஆர்படுவார் அன்றைக் கவர்வருத்தம் - பாரறியச்

செங்கை பிடித்துத் திருக்கால் பிடித்தகையாற்       260
கொங்கை பிடிக்கவொரு கூச்சமோ - மங்கலநாள்
என்றுவரு மென்றுவரு மென்றிருந்தார் ராத்திரிபோய்
அன்றுசிவ ராத்திரிபோ லானதோ-ஒன்றாக
நித்திரைவா ராமல் நெடுமூச்சும் ஏச்சுமாய்ச்
சித்திரம்போற் சித்திரப்பூம் பாவைபோல் - முத்திரைகள்
போட்டிருந்த பொன்போற் புறக்கணித்துப் பார்த்திருக்கும்
கோட்டியெல்லாங் கள்ளாவுன் கோட்டிகாண் - ஊட்டமிலாக்
கண்டனைய சொல்லாரைக் கண்டாலு மேதுசெய்வார்
உண்டவர்க ளெல்லாம் உரஞ்செய்வார் - மண்டுபெருங்

கற்பூசை போல்நடத்துங் [53]காமகுரு பூசையுன்       265
[54]னுட்பூசை யில்லாம லோடாதே - நட்புடையார்
பூணழகு கொங்கை புடைத்தழகு காட்டுவதும்
ஊணழகு கண்டா யுடையோனே வீணழகாய்க்
கொங்கை யிருந்தென் குழலிருந்தென் கோப்பிருந்தென்
மங்கையரில் மோக வடிவிருந்தென் - சங்கையாய்க்
கண்ணிருந்தென் மூக்கிருந்தென் கட்டழகா நீயில்லாப்
பெண்ணிருந்த வீடு பிழையன்றோ - கிண்ணமுலை
காவிவிழி மாதருன்னைக் காணாத கண்ணிலந்தச்
சீவகனைக் கண்டாலுஞ் சீயென்பார் - ஓவாயன்
________________________________________________________
(பிரதி)- [53] காமங்குரு பூசையுன்னுடைய, [54]. யுயிர்ப்பூசை.
_________________________________________________________

கண்ணறைய னானாலுங் காதறையன் மூக்கிழந்த       270
பண்ணறைய னானாலும் பாராரோ - வண்ணமற்ற
ஊமனே யானாலும் உன்பெருமை கண்டபெண்கள்
காமனே யென்றடப்பங் கட்டாரோ-கோமளமாய்
அத்தையார் நாணாரோ அங்ஙனே நாலாறு
மைத்துனிமார் வட்டமிட்டு வாராரோ-முத்தனையார்
மஞ்சட் குளியழகோ மையழகோ பொட்டழகோ
கொஞ்சத் தலைகவிழ்ந்த கூச்சமோ - கெஞ்சியவன்
வீசுகலை தொட்டவுடன் மெல்லணையி லேறுவதோ
கூசுதலைப் பேச்சோ குணாலமோ- பேசையிலே

சேலைத் தலைநெகிழுஞ் சித்திரமோ கொத்துமலர்       275
மாலைக் குழல்சரியும் மாற்கமோ - மேலுமவர்
கட்டுமட்டுங் காணவிரு கண்கொளுமோ கண்பகட்டி
வெட்டிவிட்ட பார்வையிலே மெய்சோர்ந்தால் - கெட்டிகெட்டி
எங்கே நினைத்தீர் எவள்மேலே சிந்தைவைத்தீர்
அங்கே யுமக்கவள்மே லாசையோ - மங்கையர்சொற்
பொய்யென் றிருந்தேன் புருஷரையும் நம்புவரோ
மையல்கொண்ட கள்ளிக்கு வாயினியேன் - அய்யய்யோ
உண்டோ விதைப்பா ருடனே கண்ணீரும்வருங்
கெண்டையங்கண் சொன்னபடி கேட்குமே - ஒண்டொடியீர்

தாபமோ தந்தமனத் [55]தாபமெணுங் கன்னியிதழ்       280
கோபமே தந்தாற் குணங்கண்டீர் - பாவமோ
பன்னீர்த் தடமிரு(க்)கப் பச்சிளநீ ரங்கிருக்க
வெந்நீர் கொடுத்தால் விடாய்போமோ- [56]மின்னார்கள்
தேர்முந்தக் காண்பதொரு செந்தமிழ்க்கோ வைத்துறைக்குக்
கார்முந்தக் காண்பதுண்டோ காரிகையீர் - நீரினித்தான்
பார்த்தருளீரென்றவுடன் பாசாங்கு மாய்க்குடில
வார்த்தையுமா யங்கே மனந்திரும்பச் - சேர்த்ததுடை
காலோடு கால்பிணையக் கைகள்முடிமேற்பிணைய
மேலோடு வண்டால் விளக்கணையச் - சேலையொரு
_______________________________________________
(பிரதி) - [55] தாபமெனுங், [56].முன்னார்கள்
________________________________________________

தட்டவிழ வச்ரமணி தைக்குமரை யிற்கொடிகள்       285
கட்டவிழ வட்டமுலை கச்சவிழ விட்டமதன்
முத்தூர் மனைக்குளொரு முத்தமிடு மட்டொருகை
எத்துதட னத்தொனியெ டுத்தெறிய - நித்திரையை
விட்டபுல விக்கொருவி தத்தொழிலெ டுத்துநய
மிட்டதுசி கத்தைவிலை யிட்டெழுத- வட்டமிடு
கொங்கையென்ப துங்குழைந்து கொண்டையென்ப துஞ்சரிந்து
சங்கை(யின்ப) மிஞ்சுதென்று சங்கலம்ப - மங்கைதங்க
நூல்மருங்கு வாடுதென்று நூபுரங்கள் வாய்புலம்ப
மேலெழம்பு போகமுங்கை மீறுதென்று - பாலெனு(ஞ்) சொற்

கத்துத் தமிழ்தெலுங்கு கன்னடிய முங்குழறிப்       290
பத்தொன்ப தாம்பாசை பாலிக்க - முத்துவடக்
கொங்கையிட்ட வாடை குபீரென்ன நெற்றியிலே
சங்கையற்ற வேர்வை சலீரென்னச் - செங்கையொலி
பட்ட தடனம் பளீரென்னத் தொட்டிறுக்கி
விட்ட சரீரம் விரீரென்ன - எட்டியுதை
காலிற் சிலம்பு கலீரென்ன மேனியெல்லாஞ்
[57]சீலித்து ரோமஞ் சிவீரென்னப் - பாலிக்கும்
ஆலிங் கனமைந்து மாரமுதம் நிற்கும்நிலை
பாலிங் கனமோர் பதினாறும் - மேலதர

பானம் பதினொன்றும் பண்பாய் நகமெழுதுந்       295
தானங்க ளேழுந் தடனமெட்டு - மானப்
பறவைக் குரல்களெட்டும் பாங்காக் கரண
மறுபத்து நாலு மடைவாய் - முறைவைத்து
வித்தையா டுங்கலக வேசையர்கள் மோகமெல்லாம்
முத்தையா வுன்மீதில் மோகங்காண் - கத்தனே
உன்னை யுடையார் உலகுடையா ரல்லாமல்
பின்னை யுடையார் பிறருண்டோ - மன்னர்
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழலவரென் - றுலகுடைய

வள்ளுவர்தான் சொன்ன மறைநூல் விதியதனைத்       300
தள்ளுவார் தாமுண்டோ தாரணிமேல் - தெள்ளிமையா
யோதுவா ரெல்லா முழுவான் தலைக்கடைக்கென்
றேதுவாய்ச் சொன்னமொழி யேற்குமே-மோதுகுடை
பாலும் பவிஷ(துவு)ம் பண்ணையும் பாக்கியமும்
மேலும் [58] பயிர்க்கோவை மீசுரமும் - நாலுதிக்கில்
நெல்லும் பணமும் நிலங்களும் பாவீடும்
வல்லியரும் செல்வநடை மைந்தர்களும் - நல்ல
முடுக்குப்பல் லாக்கேறு முற்கமுந் தங்கக்
கடுக்கனீ டுஞ்சலவைக் கட்டும் - எடுப்பான

பேருளவர் வாழும் பெரும்பெருத்த வாழ்வெல்லாம்       305
வாருதியே நீகொடுத்த வாழ்வுகாண் - போராடச்
சாரி நடத்துந் தளகர்த்தர் பின்சூழக்
[59]காரியக் காரர்வந்து காத்துநிற்க - நேரே
திறையிடுவார் கோடி செகவேந்தர் கோடி
நிறைதளமாய் வந்து நெருங்க - நிறைகொலுவில்
பத்திபத்தியாகப் பகல்வத்தி நின்றிலங்க
முத்துமுத் தாய்க்கொலுசு முன்னிலங்க -வுத்துங்கா
செய்யா வரிசை யிடச்செய்யு மாதிக்கம்
அய்யாவுன் னாதிக்க மல்லவோ - வையகத்தோர்
_________________________________________________________
(பிரதி)-[57]சீலிரித்து, [58]. பயிர்க்கோர்வை, [59]. காரிகைக்.
_________________________________________________________

கும்பிடுவார் மன்னரிலே கோவேயுன் னன்னமெனுந்       310
தம்பிதனைக் [60]கும்பிடார் தாமுண்டோ - சொம்பாக
நெற்கணக்குக் கேட்டு நிலவழியு மானியமும்
[61]சொற்கணக்கும் தீர்வைத் துகையுங்கேட் - டெற்குளசொன்
னாதாயங் கூட்டு பருக்கை யனுசரித்து
மீதாம் விசேள வகைகூட்டு - மாதாந்தம்
தன்தவணை கூட்டு தலத்துச் செலவுதள்ளு
பின்தவணை கூட்டிப் பிசகுதள்ளு -முன்தவணைக்
குத்தார மென்ன வொடுக்கென்ன தண்டலென்ன
சுற்ற நிலுவையென்ன சொல்லென்று- மொத்தத்

தவணையாய்க் கூட்டித் தலமணிய கார       315
ரவரவரை யெல்லா மதட்டி - யிவரவரே
யென்மணிய முன்மணிய மென்பார் மணியமெல்லா
முன்மணியங் கண்டா யுடையோனே - நன்மணியச்
சம்பிறுதி யென்றுந் தலத்துக் கணக்கென்றும்
அம்பலஞ்சே யத்தாந் தரமென்றும் - வம்பளக்கும்
எத்துவழி யென்றும் எதிர்கணக்குங் கைவளையும்
அத்தகங் கூட்டமிடு மங்கணத்தில் -ஒத்தெழுத்தும்
அட்டவணை யோவிரசோ ஆயக்கட்டோ வொழுகோ
பட்டோலை யோதீர்வைப் பஞ்சரிப்போ - கெட்டோடே

ஆயிரம்பொன் கூட்டுவதோ ஆயிரம்பொன் பிள்ளையும்நீ       320
போயிருந்தா லில்லையெனப் போவதோ - நீயிகழ்ந்தால்
அத்தனையுங் கூட்டுவதோ ஆரறிவார் உன்னுடைய
சித்து விளையாட்டார் சீமானே - மெத்தவுனைக்
கொண்டுகட்டுஞ் செட்டிகளும் கோட்டைக்குக் கால்வாசி
கண்டுவட்டி வாங்குகன வர்த்தகரும் - மண்டுகடற்
கப்பல்வியா பாரிகளும் காசுபடைக் கும்பெருமை
யப்பனே யுன்பெருமையல்லவோ-ஒப்பனைக்குச்
செப்பாடல் வட்டமென் றுஞ் சித்தறுதல் வட்டமென்றும்
வைப்பா மிடைக்குறைச்சல் வட்டமென்றும் - ஒப்பாத
____________________________________________________________
(பிரதி)-[60] கும்பிட்டார், [61]செற்கணக்குமயுத் தீருவைத்துகை கேட்டு வெற்குளசொன்.

இதனை யடுத்து மூன்று பக்கங்கட்குமேல் வெற்றேடுகள் காணப்படுகின்றன.சுமார்
20 கண்ணிகள் மறைந்திருக்கலாம். ஆனால் பொருளின் தொடர்ச்சியை நோக்கும்போது
ஒரு சில கண்ணிகளே விடுபட்டிருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
________________________________________________________________

பிள்ளலுக்கு வட்ட(ம்) பிடுங்கலுக்கு வட்டமென்றும்       345
கள்ளனென்றுஞ் சேர்வைக் களியென்றுங் - கொள்ளையாய்
எண்கோடி சொல்லி யிரைக்குநோட் டக்காரர்
கண்கூ லியுமுனது கைக்கூலி - பண்கூட்டுந்
தித்தி யடக்கிச் சிறுமத் தளமடக்கி
கைத்தாள மென்றுசற்றே கைகாட்டி – எத்து
முகவணையைச் சேகரித்து மொய்த்தசபை யூடே
மிகவிருது பாத்திரத்தை விட்டு - முகவணையின்
மிச்சவொலி தாளவொளி மேளவொலி மூன்றுமவள்
கெச்சவொலிக் குள்ளே கிடந்தொலிப்ப - வச்சிதமாய்

ஆடலுங் கூத்து [62]மவிநயமும் பாவரசப்       350
மேலாடக் காமுகர்முன் மெய்யாட நாடகத்திற்
காலாடக் காரியத்திற் கண்ணாடச் - சேல்விழியார்
தாமாட நட்டுவனைத் தானொருபா லாட்டுவிப்பாய்
கோமாளிக் கூத்துநல்ல கூத்துக்காண் - ஆமொருவன்
பேரெழுதி நல்ல பிரபந்தக் கொத்தெழுதிச்
சீருடைய நாட்டுச் சிறப்பெழுதி - நேரமெல்லாம்
ஏடுவைத்துப் பாட்டெ ழுதியெழுதிக்கிறுக்கிச்
சோடுபெற்ற சொல்லிலொரு சொற்பிழைத்தால் – வாடியே

யேடொருக்காற் பார்த்தும் எழுத்தாணி யைப்பார்த்தும்       355
வீடொருக்காற் பார்த்து வெளிப்பார்த்தும் - பாடுபட்டுத்
தேடியொரு சொல்லாய்த் தெரிந்தெடுத்துச் சேகரித்துப்
பாடியரங் கேற்றிப் பரிசுபெற்றுக் - கூடிநின்று
பாவேந்தர் கொண்டாடும் பாராட்டுஞ் சீராட்டுங்
கோவேந்தே வுன்னுடைய கொண்டாட்டு - மேவரிய
இந்திர சாலவித்தை [63]யேத்தரிய நோக்குவித்தை
யந்தரமாய்ப் பொய்க்காலி லாடும்வித்தை - மந்திர
வாதவித்தை யாகாச மார்க்கமுதல் வித்தையெல்லாம்
வேதவித்தை நீபடைத்த வித்தைகாண் - வாதங்கள்

செய்வார் பிழைப்பும் திருடியலை வார்பிழைப்பும்       360
வைவாரைப் போற்றிரி வார்பிழைப்பும் - பொய்வார்த்தை
சொல்வார் கொடும்பிழைப்புஞ் சூதாடி வாதாடி
வெல்வார் பிழைப்பும் வெறும்பிழைப்பும் - புல்லறுத்து
விற்பார் பிழைப்பும் விலைப்பட்டுத் தொண்டுபண்ணி
நிற்பார் பிழைக்கும் நிலைப்பிழைப்பும் - அற்பராய்ப்
பஞ்சுக் குலாமர் பதிதோறுஞ் சென்று சென்று
கெஞ்சித் திரிவார் கெதிபிழைப்பும் - தஞ்சமற்றோர்
எல்லார் பிழைப்பும்நீ யில்லா வயிற்றளவும்
பொல்லாப் பிழைப்பலவோ புண்ணியா - செல்லாச்
________________________________________________________________
(பிரதி)-[62].மன்புநயமும், [63].யேற்றதிய.
_________________________________________________________________

சதிசாம மந்திபகல் சாகரத்தினூடே       365
மதியாமற் கப்பல்விடு வாரும் - உதையாதி
துஞ்சவிட மில்லாமற் சோறுண்ண (நேர)மின்றி
யஞ்சலிலே யோடி யலைவாரும் -- மிஞ்சுமலை
அட்டைகடு வாய்(க்)கடிக்கும் அஞ்சாமற் காட்டுமரம்
வெட்டி விறகெடுத்து விற்பாரும் - வட்டிக்கிட்
டன்னியரை யெல்லாம் அறாவட்டி வாங்கியுள்ள
பொன்மலியக் கீழ்வழி போவாரும் - என்னசெய்தும்
ஆகாத சாண்வயிற்றால் ஆயுதத்திற் சேவித்துப்
போகா வினைக்களத்திற் போவாரும் [64]வாகாகக்

கையாடி வேந்தர்முன்னே கண்ணாடி நட்டுவன்போல்       370
நெய்யாடும் வாளுருவி நிற்பாரும் - தெய்யென்னத்
தாள மெடுத்துத் தவிலடித்துக்கொம்பூதி
மேள மடித்து மெலிவாரும் - நாள்வழியில்
ஆயங்கள் வாங்கி அனியாயஞ் செய்வாரும்
பாயும் புலிபோற் பறிப்பாரும் - மாயமாய்ச்
சொக்குப் பொடிதூவித் தூக்கத்தி லேதிருடிப்
பக்கத்தி லேபதுங்கும் பாதகரும் - கைக்குட்
பிடியாளாய் ஆண்பாடும் பெண்பாடும் பட்டுக்
குடியாத கஞ்சிகுடிப் பாரும் - தடிபோலே

நெட்டாளாய்த் தான்திரிந்து நீறுகுத்திச் செங்கல்கட்டி       375
முட்டாளின் வேலை முயல்வாரு-மெட்டாளின்
சம்பளங்கள் வாங்கியுண்டு சாடியொரு கோடிசொல்லி
வம்பளந்த நாழிபோல் வாழ்வாரும் - அன்பதுமேல்
மண்பவளங் கட்டி வதவல் நரைத்தலைக்குக்
கண்பகர [65]மாகக் கறுப்பேற்றிப் - பெண்பகட்டாய்ப்
பூசிப்பு னைந்து பொழுது கருக்கலிலே
காசுக் கடைகாக்குங் கன்னியரும் - வாசமாய்
வெற்றிலையை விற்பார்போல் மேகலைக்குள் வாழுமொரு
சிற்றிலையின் வாணியமுஞ் செய்வாரும் - நற்றயிர்பால்

மெல்லமுதம் விற்பார்போல் மிக்ககனி வாயமுதைச்       380
சொல்லமுதங் கொண்டுவிலை சொல்வாரும் - எல்லாரும்
எண்ணுங் கருமமெல்லா [66]முண்ணுங் கருமமல்லால்
நண்ணுங் கருமமுண்டோ நாயகமே - புண்ணியத்திற்
பாரம் பரையாய்ப் பழகுதுரை மக்களுக்கெந்
நேரம் நிறைகுடம்போல் நீயிருப்பாய் - சேரவற்ப
போக்கிகளுக் கெல்லாம் புதுவாழ்வு வந்துசற்றே
பாக்கியம்வந் தாற்பிறரைப் பாராரே -யோக்கியர்க்கும்
காணக் கிடையாதாம் கண்டவுட னேயவர்க்குக்
கோண வலிப்புவந்து கூடுமாம் - வேணுமென்று
___________________________________________________________
பிரதி)-[64].வாகுத்தா, [65]. மாகவொரு கறுப்பேத்திப், [66]. முன்னுங்.
___________________________________________________________

காதல் மனுஷர்வந்தால் கண்தெரியா - நோய்வருமாம்       385
பாதகருக் கிந்தப் பழிவருமோ - நீதமற்ற
ஈனாதி மாந்தர்க் கிடையில்வந்த நோயிதுநீ
போனா லொழிந்தவர்க்குப் போகாதே- ஆனதமிழ்ப்
பாடுவார் பாட்டெல்லாம் பஞ்சரிப்பாங் கோவெனக்கூத்
தாடுவா ராடுவதே யாதரிப்பாம் - சாடிசொல்லு
மெத்தருக்கு நல்ல விரண்டுகையும் போதாதாம்
முத்தமிழோ கேட்டால் முழங்கையாம் - [67]தத்துமொழித்
தாசிசொல்லும் வார்த்தை தனில்விருப்பாம் வேதியர்கள்
ஆசிசொல்லும் வார்த்தை யருவருப்பாம் - பூசை

தருமந்த்ரம் வேசை தலைகாணி மந்த்ரங்       390
குருமந்த்ர மெல்லாம் [68]குமிந்த்ரம் - வருமந்தப்
பொல்லாதார் தேடுபொருள் புல்லர்க் குதவுமல்லால்
நல்லார்க் குதவாதே நாயகமே - எல்லார்க்குந்
தாயிருந்தா லென்னபெற்ற தந்தையிருந் தாலுமென்ன
நீயிருந்தாற் போல நிறக்குமோ - வாயிருந்துங்
கையிருந்தும் நல்ல கவிபாட வாக்கிருந்தும்
மெய்யிருந்து கல்விகற்ற மேலோரை - ஐயனே
பேயிருந்து கெஞ்சுதல்போல் பேசறியார் வாசலிலே
போயிருந்து கெஞ்சவைத்தாய் போதாதோ - நீயிரங்கி

வாழவைத்தால் ஓர்குடியை வாழவைப்பாய் வாழாமல்       395
தாழவைத்தால் ஓர்குடியைத் தாழவைப்பாய் -வாழ்வதுவும்
தாழ்வதுவு மாகத் தயக்குவா (யே) யுனது
சூழ்வினையை [69]மாற்றத் துலங்காதே-கேள்பருகி
உண்டிருக்கச் சோறுநீ உண்டாக்கு வார்க்குநித்தம்
கண்டிருக்கக் காட்சியுண்டே காவலா - உண்டுடுக்க
ஏங்குவார் ஏக்கமுன தேக்கமே வாசலிற்போய்த்
தூங்குவார் தூக்குமுன தூக்குமே -- பாங்கான
நீடான சாதிமணி நெல்லுமணி மற்றதெல்லாம்
கூடாக் கரியமணி குன்றுமணி – யீடான
_____________________________________________________
(பிரதி) -[67]தூத்துமொளி, [68].குமிந்த்ரமாம், [69]. மாற்றந்.
________________________________________________________

நெல்லுப்போ ரேபோர் நிலத்தில்மற்றப் போரெல்லாம்       400
அல்லற்போர் சல்லிப்போ ரக்குப்போர் - வல்லத்துக்
கற்கோட்டை நிற்குமோ காவலரும் நிற்பாரோ
நற்கோட்டை நீபிரிந்த நாழிகையில் - மற்பூட்டும்
வாட்படையும் விற்படையும் வாழ்வு தரும்படையும்
ஆட்படையும் கோடிபடையானாலும் - கோட்படைசேர்
பாளையப்பட் டெல்லாம் படியொருநாள் முட்டானாற்
சாளையப்பட் டொடாதோ தாடாளா - நாளிலே
மண்ணாசை விட்டு மகவாசை தன்னைவிட்டுப்
பெண்ணாசை விட்டுப் பெரியோராய்க் - கண்ணான

பொன்னாசை தன்னைவிட்டுப் போயொழிந்த யோகியரும்       405
உன்னாசை விட்டொழிந்தா ருண்டோகாண் - எந்நாளும்
தன்னைமறப் பாருமுண்டு தாயைமறப் பாருமுண்டு
நின்னைமறப் பாருமுண்டோ நீள்புவியில் - மன்னவனே
தானமுநீ நல்ல தவமுநீ தன்மமுநீ
மானமுநீ நீதி வரம்புநீ - யானகுலம்
சாதியுநீ என்று சயத்தம்பம் நாட்டினேன்
வாதிகளுண் டானால் வரச்சொல்லாய் [70]ஈதெல்லாம்
இல்லையென்ற பேரை யிடுப்பிலே பொன்சேர்த்துக்
கல்லறைக்குள் ளேயடைத்துக் கட்டேனோ - அல்லாமல்

அன்ன வலையி லரன்வந்து சிக்குமென்று       410
சொன்னதிரு மந்திரத்தைச் சொல்லேனோ - முன்னவனே
உன்னையொப்பா ரிந்த வுலகுதனிற் கண்டதில்லை
நின்னையொப்பாய் நீயே நெடியோனே - மன்னர்
அருமையிடுங் கோமான் அனந்தபற்ப நாபன்
பெருகுகிளை வாழப் [71]பிறந்தோய்-உரைசேர்
தயித்திய னாததமிழ் முள்ளி நாடன்
வயித்திய னாத மகீபன் - பயிற்சியுப
சாரம்போ லன்புபோற் சந்ததமென் மீதில்வைத்த
வாரம்போல் வந்தாய் நீ வாழிகாண் - பாரெங்கும்

நென்முகமாய்க் காட்சிதந்தாய் நின்முகம்நான் கண்டவுடன்       415
என்முகமெல் லாங்குளிர்ந்தே னென்கோவே - முன்முகந்த
கேவரகைத் தண்டெடுத்துக் கேப்பையென்று சாப்பினேன்
தீவரகைச் சந்திதொறுஞ் சிந்தினேன் - பேய்வரகைக்
காடுதனில் விட்டெறிந்தேன் கம்புதனைக் கம்பளத்தார்
வீடுகளில் விட்டெறிந்து விட்டெனே - நாடுதனில்
தேடுந் திரவியநீ தெய்வம்வெளி யானபின்பு
பீடந் [72]தொழுவார் பிறருண்டோ - ஈடான
தானிய லட்சுமிநீ சற்றே முகம்பார்த்தால்
மாநிலத்தில் வேணபொருள் வாராதோ -நானுன்னாற்
_____________________________________________________
(பிரதி) - [70] நீயெல்லா, [71]பிறந்தோனே. [72].தொழுவார் வேறே,
________________________________________________________

பண்ணைகளும் வைத்தேன் [73]பயிர்க்கோவை சேகரித்தேன்       420
மண்ணுலகில் வேண்டும் வளமைபெற்றேன் - அண்ணேநான்
கூழ்குடித்த வாயாற் குழம்புப்பா லுங்குடித்தேன்
வாழ்குடிக்கும் மேற்குடியாய் வாழ்கின்றேன் - சூழ்பயிரும்
அன்னம் படைப்பதுவும் ஆபரணம் பூண்பதுவும்
சொன்னம் படைத்துச் சுகிப்பதுவும் - இன்ன
மிடுகின்ற பிச்சையு மேத்தும் [74]விளக்குங்
குடி(கை) யர்கோன் புண்ணியங்காண் கோவே - குடிகை
வயித்தியனா தேந்திரன்போல் வாழ்வித்தாய் நீயே
அயிக்கமுனைப் போலெனக்காரய்யா - உயிர்த்துணைபோ

லொத்திருந்தா யாகையினால் ஒன்றுங் குறையிலைகாண்       425
வித்தகனே யின்னமொரு விண்ணப்பம் - சித்ரசபை
அய்யர்திரி கூடருக்கு மம்மைகுழல் வாய்மொழிக்கும்
செய்யபுரட் டாதித் திருநாளில் வையத்
தமரிக்கை பேசிமத [75]னாடலுக்குள் வந்து
சமரிக்கை கூட்டுந் தறுவாய் - குமரிப்பெண்
பட்டுடைய விட்டுமறு பாவாடை சுற்றயிலே
தட்டுடையுஞ் சிற்றுடையுந் தள்ளாடத் - தொட்டொருகை
தாங்கப்போ யென்மனது தள்ளாடிக் கொள்ளாமல்
ஏங்கப்போ னேன்விழித்தே னென்செய்வேன் - தூங்கப்போய்

என்ன சளம் வந்ததென்றே யென்னுடைய பாயலெல்லாம்       430
கன்னிதனைத் தேடினேன் காண்கிலேன் - பின்னையந்தப்
பக்கமெல்லாந் தேடினேன் பாவரங்கிற் றேடினேன்
கைக்கதவுந் தாழ்திறக்கக் காண்கிலேன் மைக்கண்ணார்
எங்கே யொளித்தாரோ என்னமயக் கிட்டாரோ
சங்கேதம் இன்னம் தவிர்கிலேன் - கொங்கேறிக்
கொங்கைமுகம் வீங்கினார் கூடாம லென்னுடைய
சங்கமுக வீக்கந் தவிராதே - அங்கவர்பால்
ஆர்தூது சொன்னாலும் ஆவதில்லை நீயெனக்கா
[76]யேர் தூது சொல்லிவா வென்றேனே - தாரணியில்
_____________________________________________________________
(பிரதி) - [73]பயிர்க்கோர்வை, [74]. திருவிளக்குங்,
[75] னுடலுக்குள், [76]யோர்தூது.
________________________________________________________________

என்னையா ளுந்துரைநீ யென்றாலும் நெல்லரசே       435
யுன்னைநான் தூதனுப்ப வொண்ணாதே - முன்னமே
வேதமொழி மா(ந்)தருக்கும் வேந்தருக்கும் எப்போதும்
தூதுசொல்லச் சாதித்த தோழிகண்டாய் -ஆதிநாள்
தன்னையே [77]பாடினற்காய்த் தம்பிரான் தூதுசென்றார்
நின்னைநான் பாடினதும் நீயறிவாய் - முன்னைநாட்
சூரனுக்குத் தென்னிலஞ்சிச் சுந்தரவேள் தூதுவிட்ட
வீரனைப்போல் வீரம் விரும்பாதே - பார்வேண்டிக்
காதலுட னைவர்விட்ட கண்ணனையுங் கண்ணன்விட்ட
தூதனையும் போற்சிலுகு சொல்லாதே-மாதர்பால்

மின்காலும் வச்சிரத்தான் விட்டநள ராசனைப்போல்       440
தன்காரி யப்புலியாய்ச் சாராதே - முன்காதல்
சொல்லிவந்த கிள்ளையைப்போற் சொன்னதையே சொல்லாதே
வல்லிசொன்ன வார்த்தையிற்பின் வாங்காதே - கல்விநளன்
பேராசை தீர்த்தவுந்தன் பேர்க்குடியா மன்னம்போல்
தாராளம் பேசித் தனக்காக்கிக் - காரிகையார்
மாலைப் போலிவ்வளவா [78]மாபோ சனசாலை
சேலைச் செலவு தினச்சலவை - காலையந்தி
மஞ்சட் குளிக்குமவர் மஞ்சனசா லைச்செலவு
கஞ்சக் கலங்களப கஸ்தூரி - மிஞ்சுபுகை

சுற்றிலைகள் [79]தீம்பாக்குத் துய்யசுருள் வெள்ளிமடல்       445
வெற்றிலை கர்ப்பூர வேதிமுதல் - முற்றுமவர்
பூண்டு பொறுத்திருக்கப் பொன்னுடையமை யத்தனையும்
வேண்டுவதுநீ கொடுத்து மேல்வாங்கிப் - பூண்டகள்ளச்
சோழியக்கா மப்பயலைச் சொல்லிவச மாக்கியந்த
ஊழியக்கா ரர்தொழிலென் னுள்ளாக்கி - ஏழையேன்
வாசமவர் காமகொலு மண்டபத் துள்ளாக்கி
நேசமெல்லாம் என்மேல் நிலைப்பாக்கித் - தேசமெல்லாம்
விற்றாரை வெம்புறா வில்லாரை காமகலை
கற்றாரை நெஞ்சுகருங் கல்லாரை- பற்றாசை

தந்தாரைச் செண்பகப்பூந் தாராரை யன்றெதிரே       450
வந்தாரைக் கும்பமுலை வாராரைச் - சுந்தரப்பெண்
மையாரைக் கண்ணிலிடு மையாரை வெள்ளிவளைக்
கையாரை வாயிதழ்த்தேன் கையாரை - சையல்பண்ணிப்
போனாரை நெஞ்சைவிட்டுப் போகாரை மின்னுருவ
மானாரைக் கள்ளவிழி மானாரைத்-தேனாரை
[80]மெல்லியா ரைச்சுரத [81]மெல்லியா ரைக்காழ
வல்லியா ரைக்கூட்டிவா.
________
(பிரதி) [77] பாடினதற்காய்த், [78] மகாபோ, 79தீன்பாக்குத், [80]வெல்லியா, [81] வெல்லியா.
__________

நெல் விடு தூது முற்றும்



This file was last updated on 03 August 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)