pm logo

"Bharati Patalkal" - English Translation,
edited by Sekkizhar-Adi-p-Podi T.N. Ramachandran
(Thillaisthanam Natarajan Ramachandran)


பாரதியார் பாடல்கள் - ஆங்கில மொழிபெயர்ப்பு
தி. நா. இராமசந்திரன் (தொகுப்பு),
பாகம் 4 (பாடல்கள் 72-100)
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

BHARATI PATALKAL - English Translation - part 2 (verses 71-80)
edited by T.N. Ramachandran

Source:
BHARATI PATALKAL
Edited by Sekkizhar Adi-p-Podi T.N. RAMACHANDRAN
TAMIL UNIVERSITY, THANJAVUR Tamil Nadu - India
ISBN: 81-7090-137-5
Tamil University Publication No. : 117
Thiruvalluvar Year 2020; Purattasi - October 1989
Title : Bharati Patalkal :
Editor T. N. Ramachandran
Price : Rs. 100-00
Edition : First - 1989
Press : Tamil University (Offset) Press, Thanjavur - 613 001.
------------

72 ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!

நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
--------------
72. Light and Darkness (June, 1913).

1. The Sun's Light all over the skies;
the Sun's light on all the hills;
Over the wavy waters seas,
on the earth and above the trees,
in the woods and on the banks,
the Sun's light everywhere!
Ah, why then this darkness
in the human heart alone?.

2. Just when the flood of light moves
' like a vast sweep of brightness,
and the ocean of light, and blaze abundant
and light the goddess eternal
surrounds this world entire,
one lonely heart alone
gathers the darkness of envy
and beats on: what a shame!

3. Light like the nectar of fresh blossoms,
Light praised by numberless birds,
Light in whose effulgence earth,
• water, and wind embrace in joy,
such Light overflows the world;
and yet this despicable heart beats
in the miserable darkness
filled with countless evils.

4. The lights smile on the lake-waters;
the mountains laugh in their loveliness;
lightning spreads golden brightness
among the dark rain-laden clouds.
And yet a poor heart sits drooping
though it has learned the scriptures
and heard about the Vedic clue
to the heart of bliss.

- P.N.
Note: The Tamil original appeared first in Subramania Siva's journal Jnana Bhanu,
----------------

73. மது

போகி

பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ?

யோகி

பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ?

போகி

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம்.

யோகி

வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம்.

போகி

நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ?

யோகி

நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ?

ஞானி

மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே.

இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே.

இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
-----------

73. The Hedonist, the Yogi and the Seer (August, 1913).

The Hedonist

1. We will crush the fresh fruit of sweet cashew
And joyous singing, its essence distil
And quaff the liquor to our heart's content.
We will snap our fingers and laugh at them
The Vulgar --, who call our act an evil.
Woman to blandish and liquor to quaff
Are for ever the pleasures of this world;
Are there pleasures comparable to these?

The Yogi

2.The world is like unto the cashew fresh,
Singing indeed is the bliss of Siva,
In wish-fulfilment we will the world kill
And quaff the juice that is Sivam indeed.
Can this be for vulgar possible?
Lovely damsel is Kundali Sakti.
These are truly the pleasures of this world,
Are there pleasures comparable to these?

The Hedonist

3. We will lead the victorious armies,
We will attain renown great, among kings,
We will lift aloft the white parasol,
Thus will we thrive by the meek world obeyed.
Bedecked with soft wreaths of fragrant flowers, Belted by a bevy of bewitching belles,
And with puissant hearts proof against worry We will flourish on earth, quaffing liquor.

The Yogi

4. Over the senses five, we will triumph;
The world will fall at our feet and hail us;
The white parasol is flawless wisdom; True sovereigns are beholders of Sivam;
We will amidst these flourish ip glory;
The fragrant garland is true clarity;
Decked with that, we will quaff the wine of grace With Sakti -- Bird Divine --, We 'llive in joy.

The Hedonist

5. With minstrels in music very well-versed,
With smiling dancers -- mistresses of their art --,
We will keep company to banish worry And dance and dance in unbounded delight.
Tongue itself is aye sweetened when we say That we will hug the breasts in merry rounds
As music soft wafts, to struti married. Is there here a joy to equal this joy?

The Yogi

6. Music good is Siva's peerless Nada;
in the Court of Wisdom, seers are dancers;
Keep their company to banish all worry And dance and dance in never-ending bliss.
Sweet tastes the uttering tongue; To the sruti Of the ethereal orbs pirouetting
With tune entwined, dances the Court of Wisdom. Is there a wealth to match this, the peerless?

The Seer

7. Bewitching joy of woman's company,
Sweet joy of vernal airs and dance,
The many joys by loving bred,
The joy of wine, the joy of arts,
The sovereign joy of the world's reign:
These joys are not chimerical;
These are but Sakti's true nature.
Joy in these with delighted hearts.

8. Joy and pain mark this world alike;
These are native to the world's power;
Without origin or end, for ever
It is with Parasakti linked, in love
With Her and great Siva-Yoga are oned
The seers who 'll deem it joy when pain befalls
These enjoy pleasures discerning its relish.

9. The heroes choose not to worry
Over their lack of aught in the world.
Never do they go itching after
The joys of world with hearts enslaved.
They never beg; no madness bids them
Clutch at joy; they are unbewitched;
Nor do they follow them, the fools
Who do condemn joy as feckless.

10. They fear not though evil erupts;
Pure of heart, they have beheld Siva.
The joy of union and the like
They know to be God-given gifts,
They receive them total, in love.
To them "Here" is as good as "There";
All are our Siva's play divine;
All joys are truly His own joys.

11. There the voice of Vedic mantras,
There the breath of velvet flute,
There the dance with dainty damsels,
There the triumph in the field of war,
There the perfume of enlightenment,
There the rage of toddy frothy;
Whatever yields us joy, it is
The loving kindness of Mother.

The Chorus of the three

12. Wine, Wine, Wine! All heaven is wine for us!
As wine He flows, Hari is for us sweet!
Sun and Moon are wine to us; so too stars! Earth and water are our wine; so too hills:
Success and failure are wine; so too work! Joy of women is wine; so too wine-varieties!
Wine, Wine, Wine indeed is our mind and soul! As wine He flows, for us is Siva sweet:

- T.N.R.
Note: The Tamil original appeared in the monthly Jnana Bhanu. Bharati wrote this poem under the pseudonym, Nitya Dirar. The translation given here follows the Jnana Bhanu version.
------------

74. கண்ணன் - என் தாய்

நொண்டிச் சிந்து

உண்ணஉண்ணத் தெவிட்டாதே-அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே-என்தன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்
கண்ணனெனும் பெயருடை யாள்,-என்னைக்
கட்டிநிறை வான்எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே-பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.

இன்பமெனச் சில கதைகள்-எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள்-கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்தன் விருப்பம்-எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்;-அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.

விந்தைவிந்தை யாக எனக்கே-பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை-அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம்-பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு-அதன்
முகத்தொளி கூறுவதற்கொர் மொழியிலை யே.

வானத்து மீன்க ளுண்டு-சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிட வே-மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு-எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை.
மோனத்தி லேயிருக் கும்-ஒரு
மொழியுரை யாதுவிளை யாடவருங் காண்

நல்ல நல்ல நதிகளுண்டு -அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம்-விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்.
எல்லையதிற் காணுவ தில்லை;-அலை
எற்றி நரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே-அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்

சோலைகள் காவினங் கள்-அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய்-அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும்நிறைந் தே-மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே.
கோலமுஞ் சுவையு முற-அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள்.

தின்றிடப் பண்டங்க ளும்-செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறக் பழகுதற் கே-அறி
வுடையமெய்த தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மென இனி தாய்-இன்பக்
கொடுநெருப் பாய்,அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே-இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.

இறகுடைப் பறவைக ளும்-நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே-எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள்-எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்;.அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை.

சாத்திரம் கோடி வைத்தாள்;-அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே-நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்க ளும்-மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும்-இன
மூடர்தம் கவலையும் அவள் புனைந் தாள்;

வேண்டிய கொடுத்திடு வாள்;-அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்;அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடுவாள்;
யாண்டுமெக் காலத்தி லும்-அவள்
இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும்-பிற
--------------

74. Krishna - My Mother (October 1913)

The Realms of Life are Her bounteous breasts; and consciousness, her milk of endless delight; which she yieldeth unto my lips unasked; such grace is my Mother's.
They call her Krishna. Ah, She has clasped me in fond embrace with her arms of ethereal space! And, placing me on her lap of Earth, she loves to tell me endless stories, strange and mysterious.

1. And some of the tales I call by the name
of pleasures, evolutions,
victories. Yet others come to me as pains,
defeats and falls; stories, all these
that my Mother recounts
to suit my various moods and stages, lovingly told, ever entrancing.

And many are the wondrous toys and dolls which my Mother showeth me:

There is one that is named the Moon, and it sheds a nectar-like flood of light, And. there are herds of clouds, many-coloured toys, yielding rain.

There is the Sun too, foremost of my play-things, the beauty of whose face I have no words to depict.

2. Toys, toys, toys:
A heavenful of stars, sparkling
like tiny gems. Many a time,
but in vain, have I essayed to
count them all. And then those
green hills, that never stir
from their places, silent toys offering speechless play.

Rivers and rivulets, fair and playful, that wander all over the land and, in the end, flow into that marvellous toy, yon ocean, wide and boundless -- seeming, with dashing billows, spouts of spray and its long, continuous chant wherein my Mother's name is ever sounded: Om, Om ...Om.

3. Groves and gardens,
abounding in many-hued gems
of flowers; and delicious fruits, hanging
on the trees, strong in essence, rich in form.
Ah, the world is full of such exquisite playthings.
All these my Mother has given me.

4. Nice things to eat and songs all sweetness to hear,
companions gifted like me, with minds to play
with and become one with; and these fair girls,
enkindling love, the passion of flamming delight
like fiery nectar, killing-sweet.

5. Yet more playmates:
The winged birds, the beasts that walk the earth,
and countless fishes of many and many a kind,
there in that thundering sea.

What a tale of raptures, too many even to think of!

And endless sciences and arts she has ordained and nobler than
all these, divine wisdom for my serious hours.

But when the lighter mood is on me and I would fain laugh and be merry, many are the jokes she has planned to amuse me with: the lies of the priests, the comic feats of kings, the hypocrisies of age and the silly cares of youth.

Whatever I demand she gives, my Mother. Aye, she hastens with gifts, ere I tell her I'd like to have them.

With high grace does she protect me, and says she will make me a yogin, like Arjun, my brother in race. Always and in all places my work shall be to sing of the bounteous love of my Mother, And a long and shining life and other matchless glories, she will grant me as reward -- Krishna, My Mother.

- C.S.B.

Note: The Tamil original first appeared in part of Kannan Pattu -- 1917.
Jnana Bhanu . It later formed The English translation printed here is that of Bharati himself, as it appeared in New India dated June 26, 1915.
-----------

75. யோக சித்தி

விண்ணும் மண்ணும்தனியாளும் -- எங்கள்
.வீரை சக்தி நினதருளே -- என்றன்
கண்ணும் கருத்துமெனக் கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில்இட்ட நீரோ? -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ? 1

நீயே சரணமென்று கூவி -- என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி
தாயே எனக்குமிக நிதியும் -- அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு
வாயே என்றுபணிந் தேத்திப் -- பல
வாறா நினது புகழ் பாடி -- வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதோர் அழகோ? 2

காளீ வலியசா முண்டி -- ஓங்
காரத் தலைவியென் னிராணி -- பல
நாளிங் கெனையலைக்க லாமோ? -- உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ -- மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் -- அது
தாரா யெனிலுயிரைத் தீராய் -- துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் -- கரு
நீலியென் னியல்பறி யாயோ? 3

குறிப்பு: இப் பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின்
மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.

[முதற் பதிப்பு]:?தவறுவ தொருலகோ??

தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ? 4

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். 5

தோளை வலியுடைய தாக்கி -- உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு
மாறா வுடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6

எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
பாடத் திறனடைதல் வேண்டும். 7

கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்
போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என
விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்
சூழும் வீரமறி வாண்மை 8

கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
தாயே உனக்கரிய துண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை
முற்றும் விட்டகல வேண்டும்; 9

ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
ஓங்காரத் தலைவி என்இராணி. 10
--------------
75. Yoga Siddhi (December, 1913)

1. Thou sole ordainer of earth and heaven
Our own Veerai, Goddess of Power!
Thy Grace to win as my aim in life,
I have thawed and dissolved myself
Into love for thee ...
Shouldst all my prayers and oblations
In vain go like water on desert land?
Dost thou not have a mind and heart?
Else couldst thou foster this world?

2. 'Thou'rt my refuge', I cried and cried,
And with resolution great in heart
Thee I implored, Oh my Mother!
To grant me great riches and a skill
To preserve and foster righteousness,
I sang thy praise and prayed to thee
In a thousand ways, -- knowest thou not?
Tireless my tongue did chant thy myriad names.
Doth it become the world to fall off thy truth?

3. Kali! Puissant Chamundi!
Mistress of Omkara! Empress mine!
Should you make me gad about
In search of my heart's desire?
I fall at thy flowery feet for refuge;
Grant thou my boon or end my life;
No more my troubles can I endure,
And bear to live thus I cannot:
Neeli of ebon-hue, knowest thou not my mind?

4. Didst thou think I'll ignoble fall,
Like some farcical men of the world
That know only to seek their food
And sit and tell silly tales,
Sore entangled in dire distress,
And making others suffer by their acts
While they grow grey, senescent and die,
A prey to cruel death?

5. A few boons I shall ask of thee:
Straight shouldst thou give them to me!
The fruits of my evil deeds in the past
Shouldn't pursue me but perished be:
A new being make of me
Free from any carking care:
Make clear my intellect,
That ever happy I shall be:

6. Make my limbs sturdy and strong;
Remove all fatigue, fever and fret;
That even an axe shall hurtless break
Against the toughness of my hardy frame!
My face shall shine effulgent
As a flower at sight of the Day-star!
Teach me to subdue the God of Love,
And grace me with tapas great.

7. Whatever I think to do,
Thy Grace shall make a success.
Riches I need for industries
In which many shall co-operate.
Music that enchants the list'ning ear
Shall enter deep into my soul;
Grant me the valiancy to sing
Of a myriad various joys on earth!

8. A wonderland I'll make of this,
Victorious and trouble-free,
Rich with learning and brave manhood.
To make gravel into glittering gems
And copper base into solid gold,
And also to transmute with ease
Blades of grass into paddy stalks,
And lowly swine into lordly lions,
And mere sand into sugar sweet,
Grant me the virtue true!

9. Heaps of wealth ever increasing
Countless crafts requiring skill,
This land shall have by thy Grace;
That the fame of its people shall
On earth everywhere spread.
Grant me the power, Kali to quell:
Mother! Is there aught for thee impossible?
Murk of falsehood covering the mind
Should from me flee for good.

10. Doubt shall disappear for ever
And base fear be destroyed.
Why indulge in needless words?
May thy Grace save me and make me
The peer of Partha and Kannan of yore.
Mother, I pray to thee a myriad times,
Make me Lord of the universe!
Hail Mother! May thy Grace flourish!

- K.G.S.
Note: The Tamil original first appeared in Jnana Bhanu under Bharati's
pen-name A Utthama Desabhi mani. The manuscript of Bharati does not contain the stanza beginning with the words: Thedi Coru ni tham thinru. The translation here given follows the Jnana Bhanu version. Bharati in a note to this poem says that words like Kali, Sakti, Mari refer to the Mola-Sakti of Cosmos.

The following lines are found at the end of the poem in Bharati's Manuscript.

Om Kali! Puissant Chamundi!
Mistress of Omkara! Empress mine!
--------------

76. புதிய ஆத்திச்சூடி

காப்பு

பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

நூல்

அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய். 5

ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம். 10

ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல். 15

கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில். 20

கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள். 25

சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று. 30

செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ். 35

சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின். 40

ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல். 45

துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய். 50

தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய். 55

நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 60

நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு. 65

பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 70

பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை. 75

மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல். 80

மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 85

யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 90

ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 95

ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 100

(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 105

வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு. 110
----------------

76. no title (1913)

As the All-White One in mystic Silence
Crescent-crowned and wearing Atthi,
As the dark-hued one supine on the ocean of milk,
As the one that inspired Prophet Mohammed
And as the Father in Heaven of Jesus Christ,
The Supreme Ens that is one and the same
Though felt in symbols, yet unrealized,
In many forms and ways the religious seek.
Its nature is Intelligence of effulgence.
They are rid of misery that know its state;
Its Grace we have for life everlasting.

1. Of fear be rid
2. Lose not manliness
3. Weakness is despicable
4. Giving is wealth
5. Strengthen the body
6. Love your food
7. Thinking is great
8. Walk like a bull
9. Govern your five senses
10. Union is strength
11. Wilt not
12. Use Medicines sparingly
13. Practise what you have learnt
14. Waste not time
15. Support not too many relations
16. Be not afraid of the base
17. Stand erect like a hill
18. Work collectively 19. Fatigue spoils
20. Stand firm in ruin
21. Cherish manual work
22. Stand up against evil
23. Keep a staff handy
24. Do not let go what you have grasped
25. Be proficient in history
26. Fear not to die
27. Let your heart never break
28. Fly at those that provoke you
29. Be not afraid of burdens
30. Hail the valiant
31. Act resolutely
32. Do not break off friendships
33. Divine by gestures
34. Speak with clarity
35. Dispraise Astrology
36. Lose not courage
37. Live not like a cur
38. Hail the Sun
39. Enjoy life like the bee
40. Melting is by Grace
41. Foster affection
42. Lose not your nature
43. Behave not basely
44. Live as Lord of Wealth
45. Fear not the wicked
46. Forget misery
47. Do not scandalize
48. Know thou art God
49. Guard your nation
50. Honour women
51. Be not taken in by what is old
52. Be not upset by defeat
53. Do tapas daily
54. Think good always
55. Strive all day long 56. The desired will come to pass
57. Study ethical texts 58. Keep on to the end
59. Read books analytically 60. Wrinkle not your brow
61. Speak straight 62. Beat to tatters
63. The worn out dies 64. Leave not austerities
65. Increase wealth 66. Love music
67. Do not venerate corpses
68. Give no room for squalor
69. Desire novelty
70. Lose not land
71. Ask for bigger than the biggest
72. Fear not ghosts
73. Condemn falsehood
74. Learn the art of warfare
75. Mantra is potency
76. Cherish honour
77. Be not undone by poverty
78. Learn to retreat
79. Stand undaunted in the forefront
80. Give no room for ageing
81. Speak gently and with knowledge
82. Hail the plough
83. Do Tapas to acquire prowess 84. Hail silence
85. Kill idiocy 86. Endeavour like the Greeks
87. Respect everyone
88. Conserve youth
89. Be a connoisseur
90. Cultivate rajasam
91. Be governed by principles
92. Master many a taste
93. Perfect the form
94. Consume streaked berry (gooseberry)/seek out veins of ove
95. Avoid wailing
96. Learn to be indignant (if need be)
97. Many a drop gathers to a flood
98. Practise facility
99. The World is play
100. Dispraise the mean
101. Learn metallurgy
102. Be worldlywise
103. Accept happily whatever comes
104. Learn Astronomy
105. Sow good seed
106. Increase virility
107. Speak with clear articulation
108. Explicate vedas anew
109. Become the leader of the World
110. Avoid covetousness

- S.A.S.
Note: Putiya Athico ti was published at Pondicherry in 1913 by Bharati himself.
---------------

77. வேய்ங் குழல்

ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம்

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவ தோ?-அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி
மன்றி னின்று வருகுவதோ?-என்தன்
மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து)

அலையொ லித்திடும் தெய்வ-யமுனை
யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி
இலையொ லிகும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)

காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்
காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)

பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினிறுங் கின்னர ராதியர்
வாத்தியதினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)

கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
-------------

77. no title (January, 1914)

1. Whence this sound? Who breathes it my friend?
Is it from hill or branch of tree?
From court without? It bewilders me.       Whence this sound?

2. Is it from wave-tossed river Jumna?
Is this nectar from leafy grove?       Whence this sound?

3. From the wood? Or moon-showered airs?
By rural zephyr? Life it melts.       Whence this sound?

4. Can a bird sing such nectar-flame?
Is it unseen Kinnar's orchestra?       Whence this sound?

5. Ha, 'tis the flute that Kannan breathes:
For ear nectar, for bosom gall. No melody are these, my
Lady But song-arrows to kill amsels.

• T.N.R.
Note: The Tamil original appeared in Jnana Bhanu.
--------------

78. இறவாமை

தாயுமானவர் வாழ்த்து

வானைப் போல வளைந்து கொண்டா னந்தத்
தேனைத் தந்தெனச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
ஞானத் தெய்வத்தை நாடுவேன், நானெனும்
ஈனப் பாழ்கெட என்று மிருப்பேனே - தாயுமானவர்

992. என்று மிருக்க வுளங்கொண்டாய்
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்;
இன்று மிருத்தல் செய்கின்றாய்;
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ;
ஒன்று பொருளஃ தின்பமென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ !
நில்லா இகத்தும் நிற்பாய் நீ !
------------------

78. Tayumanavar (February, 1914).

You willed to live for ever,
a symbol of sweet Tamil.
You are young even today,
deathless like Tamil.
You knew that the One is That,
and That is utter Bliss.
Part of the undying heavens,
abide with our transience too!

- P.N.
Note: The Tamil original appeared in Jnana Bhanu. The poem is preceded
by a quotation from Tayumanavar, which in translation runs thus:

"I will seek the deity of true wisdom who protects like the encircling heavens.
And gives the honey of bliss, merging with me

That I may thrive for ever With my base and blasted 'I-ness' done away with."
--------------

79 வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.
--------

79. Success (1914)

1. Success in all the undertakings,
Success wherever the eyes do fall,
Success crowning each utterance,
These I sought and Kali gave!
Though a god should stand in the way
Or the race of man be ranged against,
Kali great in grace would quell,
That success on earth be mine own.

2. Success sure to all the thoughts,
Everywhere and in everything!
Dear to me as eyes and life,
Here graced me, Mother Kali!
Won't earth and air, and fire and water,
And heaven also before them bow,
Won't celestials adore and serve,
Such as hail Kali's feet?

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam -- 1914,
published by Saraswati Vilasa Achukkotam, Durban, South Africa. This and the following translations follow the versions of 'Matha Mani Vachakam.'
------------

80. அச்சமில்லை

[பண்டாரப் பாட்டு]

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே. 1

கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே. 2
-----------------

80. Fear We Not (1914)

1. Fear we not, fear we not, fear we not at all!
Though all the world be ranged against us,
Fear we not, fear we not, fear we not at all!
Though we are slighted and scorned by others,
Fear we not, fear we not, fear we not at all!
Though fated to a life of beggary and want,
Fear we not, fear we not, fear we not at all!
Though all we owned and held as dear be lost,
Fear we not, fear we not, fear we not at all!

2. Though the corset-breasted cast their glances,
Fear we not, fear we not, fear we not at all!
Though friends should feed us poison brew,
Fear we not, fear we not, fear we not at all!
Though spears reeking flesh come and assail us,
Fear we not, fear we not, fear we not at all!
Though the skies break and fall on the head,
Fear we not, fear we not, fear we not at all

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam,
------------------

81. ஹே காளீ!

எண்ணி லாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளீ;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்;
நான் விரும்பிய காளி தருவாள். 2

-----------------

81. Gift of Kali (1914)

1. Heaps of riches innumerable
Eminence and lordship of the earth,
Hardihood great, intellect and warmth
And light like that of the Sun in the sky,
The peace and grace of the moist Moon:
Kali, my Mother'll grant me these.
I will rid the woes of all on Earth
And chill penury chase from the Land.

2. Largesse, holy sacrifice, tapas;
I'll establish these on Earth;
I'll bid the skies to shower thrice;
And foison constant I'll cause;
Honour, heroism and manliness,
Rectitude and bounteousness --
These will I cause to be bestowed
And wisdom true increase!
Kali shall my will fulfil!

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
----------------

82. சங்கு

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம். 1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம். 2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம். 3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம். 4
----------------

82. Conch (1914)

1. Only after death, abodes we may reach
Of Siva and of Vishnu -- so they think;
Mad fellows. The science of life that they preach
Nothing but the Devil's gospel. Bethink,
And blow the Conch!

2. Who, on this earth itself, this very day,
At this instant, true bliss to apprehend
Seek the State of Pristine knowledge and stay In ecstasy --
they are the saints. Perpend,
And blow the conch!

3. Who, as false, false appearances rate,
Curtail their senses and cast them aside,
Freed from doubts, stay in an ecstatic state, --
They are the really great men -- Decide,
And blow the conch.

4. Freed from the delusion that the world is
Of eyes blackened and bright, and the gold,
Who, while they do the work that they do, miss
The sense that they do, they are the Siddhas. Behold,
And blow the conch:

- S.R.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
----------------

83. சூர்ய தரிசனம்

சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
------------

83. Surya-dharsan (1914)

1. The seers of the Vedas and the poets
Of pure and unsullied utterances,
Conscious of your great glory, have hailed you.
This witnessing, I have come to bless you.
O sun, First of all beings! O Surya!
Auric orb great of effulgent splendour!
I have come to offer my adorations;
Pray, reveal to me your bright-rayed visage.

2. To behold the flame by the Vedas hailed
And to chant hymns of yaga, I have come.
With the dulcet sound of ocean, I will
Blend the melody of Tamil words pure;
I 'II sing of your racing rays ethereal
That cross in a second a thousand leagues;
Oh sun! mine is the pleasure to hymn you;
Pray, reveal to me your bright ornate face.

- T.N.R.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam. The
poem is preceded by a note by Bharati which is as follows:- "These songs are addressed from the beach to the morning sun to reveal his face covered by clouds."
---------------

84. வெண்ணிலா

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே -- விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே.
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே-- நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே.
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே (இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே.
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே-- வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே. 1

மாதர் முகத்தை நினைக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே -- அஃது
வயதிற் கவலையின் நாவிற் கெடுவது
வெண்ணிலாவே.
காத லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே -- அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே.
மீதெழும் அன்பின் விளைபுன் னகையினள்
வெண்ணிலாவே -- முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
வெண்ணிலாவே.
சாதல் அழித அலாது நிரந்தரம்
வெண்ணிலாவே -- நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்
வெண்ணிலாவே. 2

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே -- நன்கு
நீயும் அமுது அழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே.
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே -- அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே.
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே -- இங்கு
தோன்று முலகவே ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே.
பின்னிய மேகச் சடையுமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே. 3

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே -- நினைக்
காதல்செய் வார்நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே.
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே -- வண
தேசு மிகுந்தவெண் டாமரை போன்றனை
வெண்ணிலாவே.
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே -- நீ
முத்தி னொளிதத் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே.
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே -- நலஞி
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே. 4

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே -- உன்றன
மேனி யழகு மிகைப்படக் காணுது
வெண்ணிலாவே.
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே -- மூடு
நற்றிரை மேனி நயமிக்க காட்டிடும்,
வெண்ணிலாவே.
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே -- நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே.
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே -- இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி,
வெண்ணிலாவே. 5
----------------------
84. To the Moon (1914)

1. Amidst the boundless ocean of the sky,
Beautiful Moon!
Thou art an island of delight on high,
The heart, the eye, the word--with what a spell,
Beautiful Moon:
Thy glory hath enchanted, wilt thou not tell?
Yea, I have seen the multi-coloured light.
Beautiful Moon!
But thine to dreams transformeth things in sight.
A sweetness strong and full like deadly wine,
Beautiful Moon!
I find here mingled with thy light divine.

2. To thee fair women's faces they compare,
Beautiful Moon!
Their beauty fades through age, disease and care.
A loved and fresh face of a maiden young,
Beautiful Moon!
Where Cupid's bows, those wondrous brows, are strung;
Where shines the smile of love's o'erflowing bliss,
Beautiful Moon:
As that bright face is lifted for a kiss:
Its beauty, though with no death nor decay,
Beautiful Moon!
How doth it light thy countenance always?

3. Upon the milky ocean of thy light,
Beautiful Moon!
Thou art arisen, creamlike in the sight.
The omnipresent Deity I find,
Beautiful Moon:
On that broad ocean at his ease reclined.
Here mighty Sakti, goddess azure-bright,
Beautiful Moon!
Is but the world arisen from thy light.
There Siva's cloudy tresses flying free,
Beautiful Moon!
Reveal the Ganges and thy face to me.

4. Thou burnest hearts of lovers, so they say,
Beautiful Moon!
But those who love thee pleasest every way.
On cool and liquid sapphire of the air,
Beautiful Moon!
Thou like a lotus white are blossomed fair.
The massive dusky clouds that thee would smite,
Beautiful Moon:
With light enrichest, till they are pearly bright.
To evil men to evil deeds inclined,
Beautiful Moon!
The great thus give of good and change their mind.

5. Thou who dost hide behind yon cloudy veil,
Beautiful Moon!
Thy beauties stronger for its folds prevail.
The fair and young thus hide their beauty bright,
Beautiful Moon:
Yet it doth stronger glow upon the sight.
As thou were shy of hearing spoken praise,
Beautiful Moon:
Completely hast thou veiled thy shining face.
My sin of boldness unto me forgive,
Beautiful Moon!
Shine fair, and of the darkness earth relieve,

H.J.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
------------------

85. அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே 10
---------------

85. Knowledge Alone is God (1914)

1. Ye, foolish folk, who roam about
In search of myriad fancied gods,
Have you not heard the myriad scriptures
Declare knowledge alone is God?

2. Why worship Bull-God, Wood-God, Hunter-God
When you have been told that the Awareness
Which pervades the Universe,
This and this alone is God?

3. Why stumble and fall into creeds insane?
Why not listen to the Shrutis
That say that Shiva is Pure Awareness?
The Vedas say a million forms
With a million names are manifestations
Of one sole Being. But you mistake
Appearances for Reality.

4. All states and moods are states and moods
Of one sole Sakti, Power Supreme.
The highest vedantic state discovered
By the sages is Shanti. Heaven is
But a good life lived here on this earth
Free from all care. Why must you think
Of rice and munch dry husk? The self,
The light that shines within all beings,
Is the Brahman you deem inaccessible.
Why go collecting gods and stories And spreading false beliefs? One, one
Sole Brahman is the Awareness in you.
The one eternal Brahman, the one
True Being, is the Awareness in you.

- K.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
---------------

86. மஹாசக்தி பஞ்சகம்

மஹா சக்தி பஞ்சகம்

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி,
மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும்,நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்;அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது;சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே!
----

86. The Mahasakti Pentad (1914)

1. Karana and Body to thee I dedicate;
Kali! Me thou shouldst save.
Death I fear not, nor disease,
Nor yet the dreaded Mara; Pain and pleasure, calumny and renown,
These to me import but little;
For refuge I bow at thy flowery feet;
Thy duty 'tis to save me, Mother!

2. Hailing thee that art in everything,
As matter innumerable and space infinite,
What though men should laud or assail me, I shall not bewildered be;
That blind fiend, mind called,
I shall scoff and jeer at;
Ever at peace I'll established be.
For refuge in thee, I take,
Mother, Whose locks do sport the cool crescent!

3. All these days I lost myself,
Seeking pelf to base men dear;
I fancied women; and wasted days
With false friends, unrighteous men.
No longer will I care for them;
She the bright One blue-hued, As intellect She doth empower the mind;
She doth shine effulgent,
In the blowing wind, in fire, in space;
In Her I seek refuge!

4. Gone are doubt and puzzlement;
Destroyed indeed is fear base,
And vile things like ire and lies.
Resoluteness I attained Following Her as my guide,
She that ever delights in making.
Preserving and destroying all the world,
She of the spotless white complexion,
She the Goddess ebon-hued!

5. Tapas facile She did make
And too, the yogic state unique;
Shivam She did sweeten,
And my fond mind enlighten;
Her divine Grace taught me
To hate the cycle of birth;
She did kill the 'l' in me,
She did make me one with Her!
Weeding out all evil,
She did emerge as intellect; May She here flourish for ever!

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
------------------

87. மஹா காளியின் புகழ்

காவடிச் சிந்து

[ராகம்-ஆனந்த பைரவி] [தாளம்-ஆதி]

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு --ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு -- தழல்
காலும்விழி நீலவன்ன மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு -- மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் -- இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் -- பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் -- ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். 1

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை -- இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை -- அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை -- அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியும் மாயை -- அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை -- எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனுந் தீயை -- எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயை. 2

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது. 3
---------------

87. In Praise of Maha Kali

1. A scarab divine named Kalisakti
Doth buzz around and haunt the boughs
Of a goodly tree called the Universe
That grows aloft in the wood of Time:
'Bright eyes burning blue, its legs
Sextile are the addhuvas primal'
Say the sages of yore that con the texts.
The Sakti flood goes up and down
And otherwhere on heaven and earth
Making many marvels by miraculous art;
And my poor heart doth pine for the flow
Within the recesses deep of my being,
Of this brave Sakti flood, the vibrant essence
Of the Veda of old and its primal sonance.

2. Love embodied, She causes pain:
Both weal and woe She metes and doles,
And those this cognize will saved be! Beginningless, She is the beginning!
She is intelligence vast and indivisible;
Thy mind is but a trace of Her frame:
A pool of bournless bliss She is!
Joy embodied, She causes pain:
For these are Her divine mayic play.
She is the shadow of the True Ens, The Primum Immobile!
The holy seers ever meditate and chant
'Om Sakti' to realise the flame of Gnosis
With which to burn and sweep away
The fiendish false egoity.

3. Siva primordial and His light Sakti
Do pervade here, there and everywhere:
If They be oned, All the world will dissolved be;
Without them there is naught;
There's nothing else but Them either!
All trouble 'Il cease if this be conned,
And this awareness is Wisdom supreme.
Such do reign righteously on earth
Enjoy riches without end and longevity,
Attain at will any state they seek,
As will reach the cool of the feet
Of Great Kali -- Eternal, Ever-free,
Ever Pure, Intelligent, Immutable --
Such, are untouched by aught of ill:
The righteous Vedas thus proclaim!

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
----------------

88. மஹா சக்தி வாழ்த்து

மஹாசக்தி வாழ்த்து

விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.

நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே.

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே.

வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!

சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை.
--------------

88. Hymn to Magna Mater (1914)

1. Inexplicable and unknowable
You abide as the vast skiey expanse!
You have fashioned in space a billion planets;
You have endued them with immeasurable speed.
If a mandala be pulverized, how many will be The atoms?
So many are the yojnas you have Devised betwixt them;
I will hail you Oh benign Beauty as Kali!

2. Though the subjects of a nation reckon
Their protecting ruler as their sovereign,
The babe of tinkling anklets will only
Know Him as its father and comforter.
You move and guard a billion planets!
Can I never comprehend your form?
I must hail all the beneficence with which
This bijou world abounds; grant me grace.

3. You choose to inhabit the orb of sun;
You are incandescent as its spreading rays;
You sail the heavens as the dark throng of clouds;
You smite and kill as the wind and lightning;
You save many lives as the rain that pours;
You wipe out lives, alas, as rising flood;
You are the expansive sea, full and vast;
May Kali my Mother triumph and thrive.

4. As moving air, you scale the whole of space;
You are the seat of life of all that lives;
As fire you exude the grace that is light;
You generate life from out of the dead;
As flowing power multifoliate
The world's enterprises are wrought by you.
Waning lives get killed by you; you foster
The living and bless them with felicity.

5. You are the hidden metals of the earth;
The sea-floor is your endless treasure-house
You are indeed the mountains and rivers
The forests and springs too of this old earth.
You have reared abundant families Of herbs, and crops to joy in their fruitfulness.
Mother, you have endowed all loves with sense;
I hail you and your grace divine! Praise be!

6. You have fashioned the great Ocean of Mind;
There you breed as karmic consequences.
Smashing breakers, a good many eddies, Tempestuous gales, deep undercurrents,
Stretches of sheer silence, belts of thick-ribbed ice And tsunamic streams of liquid fire
Are the teeming properties of the sea. Even so have you wrought the Sea of consciousness

- T.N.R.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
--------------

89. சரஸ்வதி தேவியின் புகழ்

ராகம்-ஆனந்த பைரவி, தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)
-------------

89. In Praise of Saraswati (1914)

1. She dwells in the white lotus
And the sound the Vina makes;
In the poet's heart whose song
Our inmost being takes;
She is the light at the end
Of the tunnel the Vedas explore;
And of the frank and compassionate words
Of sages, the essence and core.

2. In the witching songs our women sing
And in the children's patter;
On the tongues of her favourite birds
Koels and parrots that chatter;
In the faultless work of the artist,
In paintings and temple and tower,
You will find her Beauty incarnate
And feel her entrancing power.

3. She is the family goddess of those
That honestly work for a living;
Harness-makers, carpenters, masons
o their tasks strength and souls giving;
Traders in reliable goods
Pious priests and valorous kings
Find in her their sole refuge,
The goddess expert in all things.

4. The goddess who understands evil
And tells you what should not be braved;
The goddess who is the very life of life
To those that would have their souls saved;
The goddess whom all those pursue
Who are keen on a job well done;
The goddess of poets and Devas
And toilers whose bread is hard won.

5. All those who belong to this land,
Come, let us her favour invoke;
Her worship, you will soon discover,
Is more than a ritual joke;
To mutter a few old mantras
And with flowers and sandalwood paste
Bedeck a stack of palm-leaves
Is of time and thought but a waste.

6. The lamp of learning in every house,
In each street a school or two;
In the towns and cities of our land
Polytechnics not a few;
Where there is no research
To consign that place to the fire
Is the best way to win her favour,
The nectar of our desire.

7. The land of the Jews and Greeks,
The land of the rising sun,
Far off small-feet China,
And ancient rich Iran;
Turkey, and those other lands
Beyond the seas that part --
Bright shine the light all over
Of the goddess of learning and art!

8. This great land which is yours
Was once the soul of learning;
Today by neglecting knowledge
Only disgrace you are earning;
To live like the shameless beasts
Is not life, Sirs, by your leave --
Come, let us start a new chapter
Not over lost chances grieve.

9. To plant orchards, dig wells
And relieve the travellers' pains
With a thousand wayside choultries,
To build ten thousand fanes;
Establish numerous charities
That will our greatness reiterate --
A million times better than all this
Is to make one poor soul literate.

10. Let the wealthy give heaps of gold
And those who are poor small change;
The orator's words, the labourer's muscle,
From each what he can arrange;
Let all the honey-tongued women
Join our worship and sing,
Welcome for this great task
Is every talent you can bring!

- P.S.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
The first two lines of stanza 4 according to Bharati are as follows:
"It is the God that instructs all, Reveals evil and averts it."
-----------------

90. பரசிவ வெள்ளம்

உள்ளும் புறமுமாய்
உள்ளதெலாந் தானாகும்
வெள்ள மொன் றுண்டாமதனைத்
தெய்வமென்பார் வேதியரே. 1

காணுவன நெஞ்சிற்
கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும்
பிறப்பதந்த வெள்ளத்தே. 2

எல்லைபிரி வற்றதுவாய்
யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர்
என்றுமய லெய்துவதாய். 3

வெட்டவெளி யாயறிவாய்
வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள்
கூட்டிப் பிரிப்பதுவாயை 4

தூல வணுக்களாய்ச்
சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த்
தன்மையெலாந் தானாகி 5

தன்மையொன்றி லாததுவாய்த்
தானே ஒரு பொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த்
தான்பலவாய் நிற்பதுவே. 6

எங்குமுளான் யாவும்வலான்
யாவுமறி வானெனவே
தங்கு பலமதத்தோர்
சாற்றுவதும் இங்கிதையே. 7

வேண்டுவோர் வேட்கையாய்
வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை
யீட்டுவதாய் நிற்குமிதே. 8

காண்பார்தங் காட்சியாய்க்
காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,
வகுத்துரைக்க வொண்ணாதே. 9

எல்லாந் தானாகி
யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர்ரென்பர்
வாய்மையெல்லாங் கண்டவரே. 10

மற்றிதனைக் கண்டார்
மலமற்றார் துன்பமற்றார்
பற்றிதனைக் கொண்டார்
பயனனைத்துங் கண்டாரே. 11

இப்பொருளைக் கண்டார்
இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம்பெற்றிங்
கின்பநிலை யெய்துவரே. 12

வேண்டுவ வெலாம் பெறுவார்
வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை
யீசரெனப் போற்றுவரே. 13

ஒன்றுமே வேண்டா
துலகனைத்தும் ஆளுவர்காண்
என்றுமே யிப்பொருளோ
டேகாந்தத் துள்ளவரே. 14

வெள்ளமடா தம்பி
விரும்பியபோ தெய்திநின
துள்ளமிசைத் தானமுத
வூற்றாய்ப் பொழியுமடா. 15

யாண்டுமிந்த இன்பவெள்ளம்
என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம்
மிகவுமெளி தாகுமடா. 16

எண்ணமிட்டா லேபோதும்
எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே
ததும்பப் புரியுமடா. 17

எங்கு நிறைந்திருந்த
ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப்
போற்றி நின்றாற் போதுமடா. 18

யாதுமாம் ஈசவெள்ளம்
என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை
உள்ளுவதே போதுமடா. 19

காவித் துணிவேண்டா
கற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும்
பரமநிலை யெய்துதற்கே. 20

சாத்திரங்கள் வேண்டா
சதுமறைக ளேதுமில்லை
தோத்திரங்க ளில்லையுளந்
தொட்டுநின்றாற் போதுமடா. 21

.தவமொன்று மில்லையொரு
சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதெனச்
சிந்தைசெய்தாற் போதுமடா. 22

சந்ததமு மெங்குமெல்லாந்
தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று
வாய்சொன்னாற் போதுமடா. 23

.நித்தசிவ வெள்ளமென்னுள்
வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்
சிரத்தை யொன்றே போதுமடா. 24
--------------------------

90. The Parasiva Flood (The Primigenial Sea) (1914)

1. A flood there is, within and out,
And all that exists, is that flood;

2. Hailed as God by Vedio seers,
All that is perceived and heart-conceived
And all that fosters inmost thought, Take their birth in that flood.

3. 'Tis limitless, seamless and all unpropt.
"It is, It is not." Think the pandits ever perplexed.

4. As sheer space and Wisdom pure
As a cloud that pours variform powers
As that which fuses atoms all
And disjoins them back again;

5. As atoms gross and the subtle
And the subtlest of the subtle,
As Essence true of all that is;

6. As that which hath attribute none,
And as the Ens non-Pareil,
It is multinatured and multiform.

7, Omnipresent, omniscient, omnipotent,
So it is hailed by various faiths.

8. 'Tis the desire of the seeker
And the seeker himself;
'Tis the thing so desired
And that which yields the thing desired.

9. 'Tis the seer, the seen, and the seeing:
Its majesty none can ratiocinate,

10. Though it becomes all that is,
A few can yet apprehend, say the seers.

11. They that have This beheld
Become free from flaw and pain;
They that hold fast to
This Shall attain all the Good.

12. Such no further trouble will meet;
Blest with everything on earth,
They attain the state of Bliss.

13. They can come by all they seek;
Yet they seek nought at all:
And men on earth call them gods.

14. The world entire they will rule
Though they seek nothing at all:
For they dwell ever with
This In holy lone communion.

15. 'Tis a flood, Oh brother! that flows at will
Into thy heart, a spring of nectar.

16. Very simple is the device that can
Cause the fall of this flood of joy
For aye and ever into your heart.

17. Enough if you think of it:
The very thought'll help you feel
The brimming nectar cool within.

18. Enough if you just think and hail
That the all-pervading God-flood
Doth in your heart surge and swell.

19. Enough if you chant or even think
The God-flood which is everything,
Doth fill your being full.

20. No need for saffron robe, or matted locks:

Contemplation 'll do, to attain the state supreme.
21. No need for shastras, the Vedas four or holy hymns:
Enough if your heart is just knit with it.

22. No need for tapas or any sadhana:
Enough if you think, Sivam only is!

23. Enough if thy lips articulate:
"Sivam that abides ever in all
Forever gushes and flows within me."

24. Enough if you bear in heart in good earnest,
That Eternal Siva-flood filleth all your being!

- K.G.S.
Note: The Tamil original forms part of Matha Mani Vachakam.
------------------

91. குயில் பாட்டு
91. 1 குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை;
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; --
அந்த மாஞ்சோலை யதனிலோர் காலையிலே, 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல், 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை --
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே -- கண்டேன் யான்
கன்னிக் குயிலொன்று காவிடத்தே, பாடியதோர் 25

இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
“மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? 30

என்று பலவெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்! 35

-----------

91. Kuyil-Pattu: The Song of the Kuyil
91.1 Kuyil


The ocean was a piece of jade
set against fire,
set against the newborn sun,
set in the magic of dawn;
with her breakers crashing,
each one right in rhythm,
she sang the truth
of all scripture.

There was a city there,
a Tamil city,
with beaches and a breeze;

just west
was a grove
of mango trees,
where hunters
from all the villages
around came
to shoot birds.

One sacred morning
no hunters came,
and a little kuyil
sat herself way up
in a tree -- near the sky --
and mixed, it seemed,
a sweet ambrosia through the breeze
into everywhere.

The birds all gathered
and listened; they forgot
themselves, sunk
in the music.

The 'he-kuyils'
feathers stood on end
from sheer excitement, their strength
drained, and, inside, small
fires burned. Her song spread,
thin and very sweet,
like a taste of lightning.
It was as though an enchantress
had come from paradise
as a bird, to show off.

As I pondered the wonder of her music,
a poetic lunacy kindled in me,
my sight fogged, and I was standing
in the glow of a tall dream --
like what happens to poets in broad daylight.

Much caught me off guard
as I revelled in the song the virgin
kuyil sang that day in that grove.
If I dismissed my human body,
would I gain a kuyil's body,
Why couldn't I live forever united
to that sweet little bird, making love, to die
in the flames of her music? Could even the immortals have heard
what I heard that day?

All my secret thoughts rose up
Into consciousness, through the song
that kuyil sang.

I am going to tell her
truths, now,
to the whole world ...
What can I do, though,
for a voice
like hers,
o people of the world?

--------------------

91.2 குயிலின் பாட்டு

[ராகம் - சங்கராபரணம்] [ தாளம் - ஏகதாளம்]
ஸ்வரம் :- ஸகா-ரிமா-காரீ
பாபா பாபா - மாமா மாமா
ரீகா - ரிகமா - மாமா

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். (காதல்) 1

இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம்.
(காதல்) 2

நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்.
(காதல்) 3

தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்
கூளம், கூளம், கூளம்.
(காதல்) 4

பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்) 5

புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்
இகழே, இகழே, இகழே.
(காதல்) 6

உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. (காதல்) 7

கூடல், கூடல், கூடல்;
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்.
(காதல்) 8

குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங் காலை,
விழலே, விழலே, விழலே. (காதல்) 9
----------

91.2 The Kuyil's Song

Refrain: love, love, love,
if love leave,
when love goes
death, death, death.

1. grace, good light.
if light leave,
when grace goes:
black, black, black.
love, love, love ....

2. bliss, bliss, bliss.
if you see an end to bliss:
pain, pain, pain.
love, love, love ...

3. music, music, music.
if music perish:
ruin, ruin, ruin,
love, love, love ...

4. rhythm, rhythm, rhythm.
if rhythm stop short:
futile, futile, futile.
love, love, love ...

5. song, song, song.
were song sung flat:
mud, mud, mud.
love, love, love ...

6. honour, honour, honour.
if honour turn hollow:
scorn, scorn, scorn.
love, love, love ...

7. strength, strength, strength.
if strength snap:
the end, the end, the end.
love, love, love ...

8. sex, sex, sex.
if your man leave:
dry, dry, dry.
love, love, love ...

9. flute, flute, flute.
if flute split:
junk, junk, junk.
love, love, love ...

91.3 குயிலின் காதற் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்.
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5

வொற்றைக் குயில்சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று,
“பேடே, திரவியமே, பேரின்பப் பாட்டுடையாய்,
ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்,
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்” எனக்கேட்டேன். 10

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
“காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்” என்றதுவால்.
“வானத்துப் புள்ளெல்லாம் ஐயலுறப் பாடுகிறாய்,

15

ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்,
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா” தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று: --
“மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், 20

உண்மை முழுதும் உரைத்திடுவேன், மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.
அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும,
தேவர் கருணையிலோ, தெய்வச் சினத்தாலோ, 25

யாவர் மொழியும் எளிதுணரும் பேறுபெற்றேன்;
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30

நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்,
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங 35

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்,
சுண்ண மிடிப்பார் தஞ் சுவைமிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
40

வேயின் குழலொடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்
45

பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னேயோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.
மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்” என்றதுவே. 50

சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
‘காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
55

சாதலோ சாதல்’ எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீடத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறொர் ஒலியில்லை.
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60

சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்.
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்:
“காதல் வழிதான் கரடுமுர டாமென்பர்.
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65

அல்லலற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே!
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும். மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர்! வாரீரேல், 70

ஆவி தரியேன். அறிந்திடுவீர், நான்கா நாள்.
பாவியிந்த நான்கு நாள் பத்துயுகமாக் கழிப்பேன்;
சென்று வருவீர், என் சிந்தைகொடு போகின்றீர்,
சென்று வருவீர்” எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்ததுகாண். 75
---------

Her song stopped, and
the whole earth seemed cast
in a single silence.
A rush of joy and a pain
were tied up
together. And when I looked
around I saw that all the birds had disappeared, off somewhere.
There was only that
kuyil left. Her head
was bowed and she
looked miserable; she looked
wilted.

I went to her tree,
and I spoke:
"O my treasure,"
said I,
"You have sung the song
of the Great Bliss!
You light the Fires of Bliss
in all seven worlds!
This pain that has come to you --
what is it? Tell me!"

I asked.
And that magic bird spoke
a magic word in
the speech of men,
and my heart caught fire.

She answered me:
"I want love, and I am
falling to pieces. If there is
none, I want death,
and I crave it."

I asked her,
"How can it be
that you have no lover!
when your singing bewitches
all the birds
of the sky; when
in Wisdom, you
are so Magnificent?!"
And in a voice
full of pain, and bashful,
the forest kuyil
came to tell her story:

---------------

91. 3 The Kuyil's Story of Love

"O high-born one,
I will tell you the whole
truth. It will degrade me
in your eyes, and it will
hurt, but I don't care.
I beg you to pity me,
a girl, and
to be patient
with my shortcomings
I know I was born
a bird on this earth,
and that I am short
in intelligence and size;
yet somehow by God's grace --
or through His anger! --
I am able to understand
anyone's language.
I have looked into all
the habits of the human
heart. And
in the sounds of birds singing,
in the music
the wind plays in trees,
in the sound
of river water, and
in the roar
of a waterfall,
in the music
the great sea sings
with its forever waves,
in the honey-ocean that pours out
in love songs --
songs that
melt flesh --
burgeoning
in human girls,
in the music of
the water-lifter,
in the janglings of anklets
when women pound rice,
in the delicious songs of
lime-powder pounders,
in all the songs the farm girls sing,
in the sweet songs
girls sing while they dance
and clap, and bangles jingle,
and in song well performed
by men in nations and jungles with their mouths and hands
on flutes, veenas,
and all human instruments,

I lost
my heart.

Poor me.

And oh! I try
to speak words
which make me tremble --
but my sinful mind
snaps.
You pierce me
with your long stare.

Oh, man!
Don't you see
what is happening
in my heart?
I am dissolving:
I want love.
If none, I thirst:
I want death."

She stopped, and a new,
sweet fever covered
my heart
and soul.

There no longer existed
anything
but that one refrain
of the child-bird:
"Love! Oh, if there be
no love, then
death! oh, death!"
That air of hers
played on the lute
of my heart, and
there was no other
sound.

As I stood there,
dazzled and swimming
in my mind,
birds appeared again,
on all the branches,
and chirped.
The little blue kuyil heaved a sigh
and said,

"They say the way of love
is all knots and stumps.
But oh, you! You with
your bright, holy eyes!
You have come
as a boat with a promise
in an ocean of suffering! .
But now, again:
even in this joy I have
with you now, with you,
who have felt my sadness,
we have hit a knot.

Four days from now,
come back here,
please, oh please
come in your love!

Don't forget!
Oh, high-born one! You
are taking my heart
with you. If you don't come, I will lose
my soul. Remember:
the fourth day.
Oh, these four
days will be like ten aeons!
Go, and come then: you
are leaving with my heart!
Come back then!"

As she spoke, her pain
was unbearable; then
she disappeared.

Lovesick

I didn't know if
it was a dream,
what I had seen,
or if it was true.
I didn't even care,
I walked home,
not thinking;
I was like
a man possessed
by twenty devils:
my eyes and face
were flushed,
and the points
of Kama's arrows
sunk in my soul.
The world seemed
to be millions and
millions of forms
of that bird
on that branch.
As that day passed,
was there a rhythm
to all the situations
I was in? Were they
woven together? who experienced them?
That day passed.
I and my soul, we
stood, with the blue
statue. Kama and the magic
blue kuyil with her
great, magic, sweet song,
escaped us;
like a shadow,
like a magician's trick,
the whole world
escaped us.

As soon as dawn broke
the next morning,
I hurried out
without my senses,
without my judgement,
discernment, mind --
through Kama's magic --
like a marionette
on two legs:
I hurried to the grove
to see
the blue one.

I saw, but understood
nothing of the objects
along the way.
When I got to the grove, all the green trees gleamed
in the red sun's clear rays.
And all the birds
had gone off somewhere
else, as though they knew
the desire in my heart.
I came with harsh desire,
overloaded with love,
to find the little kuyil
who had worked on me;
and I looked,
I looked in all the nooks
and all the branches
of all the trees.

-----------------

91.4 காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்ட வன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே யமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5

ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற்,
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்?
நாளொன்று போயினது. நானு மெனதுயிருமம், 10

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சிநின்றோம் ஆங்கு, மறுநாள் விடிந்தவுடர்,
(வஞ்சனைநான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 15

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென,
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காணவந்தேன். நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20

சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென, என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்
வேறெங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிவரக் கொம்பையெலாம்
நோக்கி வந்தேன்.
-------------

91.4 The Story of Love which the Kuyil Related to the Monkey

But my heart stayed
my hand:
it wanted me to hear
what words that bird spoke,
before I killed them.
So I stepped behind
a great tree,
where I couldn't be caught
by their eyes,
yet where I could hear.
And the little Kuyil said:
"Oh, sir monkey!
Oh, your body is so
beautiful that I know
nothing to compare it to!
Oh, you are master of the
feminine, whatever species
we are born into!
Could your beauty ever be frustrated?
Your presence commands
passion.
Man boasts himself
head of all earthly life,
and so be it in certain ways --
town planning, temple administration, domestic government and such like!
but will man meet monkey
in physical beauty,
in the spoken word,
or in crouching?
Until he does,
even though he wear
eight kinds of clothing
to cover his body -- that
body without your silky fur --
even though he trim
his beard and moustache
to imitate the lusty face
of the monkey;
even though he gather together,
and drink, and dance,
and try to approach your
dancing and leaping;
even though
he climb
ladders (he can't
climb temples):
whatever he may try
in fast jumping will he ever
be like the monkey?
no matter how hard he tries?
And where will he go
for a tail?
Will the tucked-in fold
of his wretched dhoti do?
Some turbans have tails:
but will they lift him up
and set him flying
when he jumps,
the way the sacred tail God gave you does?
In this world of earth
there is but one lineage
like that of the monkey,
with his holy look
and pure vegetarian diet.
And I met you, you
jewel of a monkey,
even though I came to birth
as a beggar bird.
It must be through penances
I pursued in past lives that
I have the honour of your love.
I sing out of desire for you.
O Noble One!
Listen! and accept me."
I must have had some special
power, as I understood
what that magic kuyil
said in the language of the monkey.
And that revolting bird sang,
a taste of fire in her voice,
seething with desire,
and of ambrosia:

-----------------

91.5 குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை.
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே,-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே! --
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5

பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய்நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10

விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்,
அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும 15

சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.
கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்றுசற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே 20

பேடைக் குயிலிதனைப் பேசியது: -- ?வானரரே,
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே, நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே 25

எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால், ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்றசில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்,
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம். 35

ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்,
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 40

வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45

சைவசுத்த போசனமும், சாதுரியப் பார்வைகளும் --
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்.
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50

தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன். தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன். ஆரியரே, கேட்டருள்வீர்.?
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒருதிறத்தால்,
நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில 55

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: --
காதல், காதல், காதல்;
காதல், போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். முதலியன (குயிலின் பாட்டு)

காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே, 60

விக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்,
?ஆவி யுருகுதடி, ஆஹா ஹா!? என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்,
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
?ஆசைக் குயிலே, அரும்பொருளே, தெய்வதமே, 65

பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்.
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்.
எப்பொழுது நின்னை இனிப்பிரிவ தாற்றகிலேன்,
இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்? 70

என்று பலபேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே; கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறுகுரங்கென் வாளுக்குத்
தப்பி, முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75

ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80
-----------

91.5 The Kuyil and the Monkey

There was no kuyil
in the tree
where I had seen her
the day before.
Then!:
I came closer, and I saw...
I shook:
Liar! Woman:
Kama, you lying god!
Oh, heart!
Oh, justice of the ancient
laws! Oh, empty earth.
How can I write
what I saw
with my own eyes? Listen to me,
all you idiots,
whose judgement
has rotted
because of a
woman --
Listen to me,
all you poets,
who praise love --
Listen to me,
all you women -- and you listen
to me,
Fate:

That cheating bird
was sitting on one
branch of a tree,
sobbing, the tears just
flowing out of her eyes,
and her little body
shook with
the sobs.
Her mouth-spoke hot,
suffering words:
Oh, no! I saw her
there. She was saying something
to another male
- a monkey! --
on another branch.
And she wept.

What is evil?
What is good?
What is clear action?

In that instant
I wanted to kill
both her and that monkey;
and my hand
reached the dagger
at my side.

----------------

91.6 இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்.
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற்,
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,
நாணுந் துயரும் நலிவுறுத்த, நான் மீண்டு 5

பேணுமனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்து விட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலு புறமுமெனை நண்பர்வந்து சூழ்ந்துநின்றா.
“ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய், ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துசு் 10

சென்றனை என்கின்றாரச் செய்திஎன்னே? ஊணின்றி்
நின்றதென்னே?” என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்,
“என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம.
நாளைவருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன். இவ் 15

வேளை யெனைத்தனியே விட்டகல்வீர்” என்றுரைத்தேன்
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார். நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தா.
சற்றுவிடாய் தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்துவிட்டேன் 20

பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்,
மண்டு துயரெனது மார்பையெலாங் கவ்வுவதே.
ஓடித் தவறி உடையனவாஞ் சொற்களெலாம்;
கூடிமதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்.
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25

பேசு மிடைப்பொருளின் பின்னே மதிபோக்கிக்
கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான.
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்.
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். 30

தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி்
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி 35

விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல,
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி, 40

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சிதந்து
விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப்பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். 45

துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!
-------------

91.6 Darkness and Light

In the middle of the sky,
sending out his silent light,
the sun
was doing his service
in splendour and in strength.
And I was tired
all through my body, my eyes
blurred, and I knew
no way out. So again I went home.
I fainted
when I got home.
It was evening
when I came to,
and my friends were there,
standing all around me.

"Why did you
faint? Where did you faint?
What did you do? We heard
that your went
off alone to the woods
this morning before dawn,
before your bath:
what's going on? What's this
going without food
all about? ..."

They cracked question
after question;
but I didn't know what
to say to whom.
So I said, "I can't seem
to say much right now.
Come back tomorrow,
and I'll tell you everything
that happened. But ¨
just leave me alone for now."
And they all left.
My injured mother brought me
milk and cake; I
devoured them,
and plummeted
into total sleep.
Even now as I sing
what happened back then,
a pressing pain grows
in my heart. Words run,
fail, and splinter; and
events clutter into
my brain. I am not one
who knows how to stop
a ruinous story in the middle,
and send my intellect off
at a tangent, to
demonstrate a detail
with subtle proofs and
intuition; I am not
of the learned ones who can make a story
flourish and grow.
My mind is bashful;
it trembles even to tell
my story.
So I shall sing instead
in imagination
on the beauty
of the morning sun:

Melting gold, it lessened
the fire, and made honey --
did it not spread everywhere
a bliss? People sing
and praise the wonder of light
plundering the expanse of sky
and turning into sun-fire
all over; but do they find a simile?
Is it not a bliss
that, while eyesight is sweet,
the eye of eyes,
the light which measures
the heavens, is higher still?
The Great Ones who meditate silently
on the Root of all Being
say It is a swelling light:
how can anything on earth
compare to that Good Light?

I woke up the next morning
and opened my eyes;
I worshipped
the astonishing Light that makes grassblades laugh,
that turns a flower
into a surprise,
that cleans the earth,
that gives water its width,
that clears out the sky. Soon sounds of living rose up
on all four sides, and
I saw the moving world
in a blaze of joy.

Now I will tell you the rest
of my painful story, Listen ...

-------------------

91.7 குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்.
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5

நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும்,
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; 10

கொல்லவாள் வீசல் குறித்தேன். ‘இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சி’ யென
முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு, குயிலாங்கே கூறுவதாம்: -- “நந்தியே,

15

பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே,
காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே,
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ?
மானிடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர்தமை
மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20

காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீள முகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்,
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்
வானத் திடிபோல ‘மா’வென் றுறுமுவதும், 25

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத 30

சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான்பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து, காற்றிலே எற்றுண்டு,
மூடமனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்
சின்னக் குயிலின் சிறுகுலத்திலே தோன்றி 35

என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில்
போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40

சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை.
மூடமதியாலோ, முன்னைத் தவத்தாலோ,
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
45

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்; 50

வாலிலடி பட்டு மனமகிழ்வேன். ‘மா’ வென்றே
ஓலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்;
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்.
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்,
55

பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்.
காளை யெருதரே, காட்டிலுயர் வீரரே,
தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்.
காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். 60

ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்,
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாண முண்டோ?
தேவர்முன்னே அன்புரைக்கச் சிந்தைவெட்கங் கொள்வதுண்டோ? 65

காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசைதான் வெட்கம் அறியுமோ?” என்றுபல
நேசவுரை கூறி, நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே 70

காதல், காதல், காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். முதலியன (குயிலின் பாட்டு)

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்;
தன்னை யறியேன், தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன். படைப்புக் கடவுளே, நான்முகனே, 75

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,
காற்றைமுன்னே ஊதினாய், காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன் தொழில்வலிமை யாரறிவார்? 80

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85

பொல்லாப் பிரமா, புகுத்துவிட்டாய். அம்மாவோ!
காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பலஅனந்தம்;
சான்ற உயிர்கள் சமைத்து விட்டாய் நான்முகனே 90

சாலமிகப் பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார்யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே,
கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில், 95

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்,
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ? 100

செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்
கையில் வாளெடுத்துக் காளையின்மேல் வீசினேன்.
மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட,
வன்னக் குயில் மறைய, மற்றைப் பறவையெலாம் 105

முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க,
நாணமிலாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை;
-- கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே 110

காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும்,
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்,
இன்பக் கதையின் இடையே தடையாகப்
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
, ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல 115

தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்,
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்,
இத்தனை கோலத்தினுக்கும் யான்வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் -- 120

எண்ணியெண்ணிப் பார்த்தேன், எதுவும் விளங்கவில்லை;
கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.
----------

91.7. The Kuyil and the Bull

I got out of bed, and
again my legs pulled me
to the mango grove.
And again I looked everywhere.
(I no longer had
my own good sense.)
I saw none of the clusters
of beautiful birds.
But then I saw her,
the blue kuyil,
in a corner of the grove.
She was telling her long story
to a decrepit
old bull.
The buil stood below her
and listened,
all rapt attention
and desire.
I got mad.
I got upset.
I got a fire in my heart.
I was furious;
I roared;
my body burned;
I imagined myself
throwing my dagger
again to kill.
But I hid and
stood as before:
it would be most fitting to
kill after I had heard
what words
this cheating bird
would say.
And the kuyil told it
all over again,
the old lust story,
with a voice like gold
and words like new:

"Oh, Nandi! Oh, you are
a magnet to the
iron mind of a woman, Oh, Kama! Oh God
in the shape of a bull!
Is there anything on earth
as beautiful as a bull?
Even humans praise
their strong men
by comparing them to
bulls. And you!
You have the
greatest dignity
of all bulls:
Oh, Noble One!
Many times have I watched
Your great long face,
your erect horns,
your gigantic, sacred body,
your extra hump, your holy, valorous tail,
your bellowing "MAA"
like thunder in the sky,
and the precision of your flexing
your tail and obliterating
any small bird who happens
to alight on your back;
and I have come
to a harsh passion.
I was born as a pebble-drop bird.
no big body, no physical strength,
no gallant carriage,
no importance at all.
What good is my low birth
in the mean family of kuyils --
Kuyils who end up as food in
the stinking stomachs
of foolish men?
and I have to fight the wind
all night and day
to feed my own stupid stomach.
Is there a sinner
like me?

Everyone has heard of the lotus
in the mud, haven't they?
or of the pearl
in a putrid oyster?
Can one foil desire blossoming
in the heart of one born low?
Does Kama admit the mountains
of birth or of caste? It's no use
expanding, or going on talking.
May be it's because of my poor sense,
or may be it's because of past penance,
but of all the males in the world,
this slave-giri chose you.
Listen: after you, a god!
help those devils of men
raise rice for their stomachs,
and after you carry their hunchbacks
through their towns,
rest your body:
poor little me will come
and I will sing the
sweetest songs
in your honey-ear. And I will rejoice when
I am rapped by your tail:
I will shout along
with you, "MAA"!
I will kill ticks
so they won't squirm
on your back.
And when you are done grazing
in all the fields and woods,
and you're chewing your cud,
I'll tell you
lots of stories.
Young bull:
The greatest warrior
in the field!
I take refuge at your feet.
Please watch over
me, a woman.
I am withering,
struck by love.
I know it's unusual
for the woman to declare
her love first ... but, when
I have in me so uncommon
a love, how could I reach you without telling you
myself?

There is a certain modesty
among equals; but
is a poor man modest
before the high ones
on this earth?
Shall my heart feel shy
to declare its love
far its Lord? Won't slaves disclose
their wants to their masters?
Desire knows no shame!"

Thus spoke
that cheating woman kuyil,
and she heaved
a great
Then she sang as before:
she sang out her false song,
the one that had ruined me,
and all the Eight Directions felt
the swoon of bliss:

--------------------

91.8 நான்காம் நாள்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை;
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; --
அந்த மாஞ்சோலை யதனிலோர் காலையிலே, 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல், 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை --
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே -- கண்டேன் யான்
கன்னிக் குயிலொன்று காவிடத்தே, பாடியதோர் 25

இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
“மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? 30

என்று பலவெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்! 35
--------------

91.8. The Fourth Day

The fourth day.
The day appointed
for my return
by that kuyil
who had trickled me, who bewitched me
with her extraordinary
love. The fraud!
I sat on the roof-terrace and lost my sense of truth,
I was confused.
I didn't know
anything; I thought over,
again, all the shame
that canting had caused me.
While I sat there,
my eyes, wandered again
toward the grove,
and I saw a
black bird, there in the sky.
It was too far away
to show up clearly, and
I wondered,
"'Is this our
cheating kuyil"
My struggling mind
was not prepared to
let it get away:
so growing ever more confused,
I came down off the roof and stood in the street.
The form
was a black dot
in the ocean of light
to the west, and
I hurried after it.
I determined to know
for sure whether or not that
really was our immodest kuyil;
so I hurried.
And so did the bird. When I stood still,
it stopped, and when
I started, it started.
But I never came close enough for its body
to show up well.
I walked on the ground
with that dot in the sky alone guiding my way.
Finally we came
to the mango grove,
and that loose bird disappeared into it.
And stupid me! I
went into the grove.
There, on a tree branch
washed by waves of
flooding sunlight,
there was the little
black kuyil,
sitting nicely.
With the fresh sound
of a golden flute,
she sang the old song
of the old false love,
and I cringed.
I went up to her and said,
"You disgusting kuyil!
You ignorant lie:
So you have brought me here to listen
to you, while you dream
of your lusty monkey,
and your bull, and
sing your revolting
song of flesh."
I thought of killing
her. But again
I stayed, in mercy.
The lying bird steeled
her heart, and false tears
suddenly sprang into her eyes.
And that sinner
said, like refined music,
she said in her sweet voice,
"Lord! Desire of my soul!
Is it your holy wish for me
to live on here on earth?
Or do you wish to kill. me?
Tell me in one
word:
When her mate leaves,
the little annil -- bird dies.
When the sun scorches it,
can a water-lily live?
If a mother turn killer,
would her son have any
refuge?
If the gods turn angry,
what would become
of our little lives?
My desire! My king!
My noble lord:
If you are angry
with me
in your heart, I will
die. I will fall into fire.
I will fall into the mouth
of a wild animal.
I know you have
found fault with me.
I find no fault with you.
And I am faultless.
You will say
I softened up and
played love when I saw
that foul monkey and
that pack-beast bull. What can I say?
How can I explain? O my lord!
What will I do?
There is no way
to refute your word.
And yet there is no fault in me; but who
will believe this?
I put the whole burden
on you, O Fate!
I am ready: whether you make
my lord love me
and respect me, or
whether he won't believe me,
thinks me foul, ignores me,
leaves me, and I fall
into fire, and die,

I am ready. What,
Harsh Fate, shall I do?"
-------------------

91.9 குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தலி

“தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே!
போவதன்முன் னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
மாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5

ஆங்குவந்தார் ஓர்முனிவர். ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார். மற்றதன்பின்,
‘வேதமுனிவரே, மேதினியில் கீழப்பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன். சாதிக் குயில் களைப்போல் 10

இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாய்ந்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்’ எனவணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றார் ஐயர்: -- ‘குயிலே, கேள். முற்பிறப்பில்

15

வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனெனும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ. நல்லிளமை
முந்து மழகினிலே மூன்று தமிழ்நாட்டில் 20

யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன், மாடனெனும் பேர்கொண்டான்,
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன், 25

பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து, நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினாலில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்; 30

ஆயிடையே, நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்,
மொட்டைப் புலியனுந்தன் மூத்த மகனான 35

நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம்புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, “நின்னோர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்” என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை
40

ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்.
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன் கொண்டேகிடுவான் என்னும் அதுகேட்டு,
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னைவந்து
45

நாடிச் சினத்துடனே நானா மொழிகூற,
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
“காயுஞ் சினந்தவிர்ப்பாய், மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும், 50

மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ?
55

மற்றிதனை நம்பிடுவாய், மாடப்பா” என்றுரைத்தாய்;
காதலி னாலில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்.
(மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்,
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்.
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின், பெண்குயிலி, 60

நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடுதல் போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன். தனியே, துணைபிரிந்து, 65

மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து
நின்னைத் தனதாக்க நிச்சயித்தான். மாதுநீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டு விட்டாய். 70

நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கிநின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்.
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலுமென்றே
அஞ்சி மறைந்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே, 75

“வஞ்சித் தலைவன் மகன்யான்” எனவுரைத்து,
“வேடர் தவமகளே, விந்தை யழகுடையாய்,
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்றுபெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்” என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; 80

“ஐயனே, உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்.
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்;
மன்னவரை வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்; 85

கொல்லுமடற் சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ?
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை.
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய்வருவீர்.தோழியரும் 90

என்னைவிட்டுப் போயினரே. என்செய்கேன்?” என்றுநீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன்மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான். சினங்காட்டி 95

நீவிலகிச் சென்றாய் -- நெறியேது காமியர்க்கே? --
தாவிநின்னை வந்து தழுவினான் மார்பிறுக.
“நின்னையன்றி ஓர்பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி,
100

நீயே துணையெனக்கு, நீயே குலதெய்வம்.
நின்னையன்றிப் பெண்ணை நினைப்பேனோ? வீணிலே
என்னைநீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனத்தைச் சொல்வேன், எனது நிலையுரைப்பேன், 105

வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்,
மாதரசே” என்று வலக்கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய்; புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய், 110

காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய். மன்னவன்றன் திண்டோளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தைகொண்டாய். வேந்தன்மகன், தேனில்விழும் வண்டினைப்போல்,
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115

ஆவலுடன் நின்னை யறத்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, --
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய 120

ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன் --
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான்.
“பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப்பார்!
கண்ணாலங் கூட இன்னுங் கட்டி முடியவில்லை.
மண்ணாக்கி விட்டாள்! என் மானந் தொலைத்து விட்டாள்! 125

‘நிச்சய தாம்பூலம்’ நிலையா நடந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கிசெய்த பேதகத்தைப் பார்த்தாயோ!”
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே.
மாப்பிளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி 130

தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135

மாடனங்கு வந்துநின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போலே
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை.
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140

தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்.
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே.
மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு
தேவ சுகங்கொண்டு விழியே திறக்கவில்லை. 145

ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு.
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150

ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும்வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே.
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு பிணமாக் கிடந்துவிட்டார். 155

மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்.
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே,
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்: 160

“பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே
ஆவி துறப்பேன். அழுதோர் பயனில்லை.
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165

இன்னும் பிறவியுண்டு. மாதரசே, இன்பமுண்டு
நின்னுடனே வாழ்வனினி நேரும் பிறப்பினிலே”
என்றுசொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170

பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது
. வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொரு
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடுநல்ல 175

பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்
மீட்டுநின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே’ என்றந்தத
தென்பொதியை மாமுனிவர் செப்பினார். ‘சாமீ,
குயிலுருவங் கொண்டேன்யான், கோமானோ மேன்மை
பயிலு மனிதவுருப் பற்றிநின்றான். எம்முள்ளே 180

காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம்.
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாதோ?’ என்றிசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார்: -- ‘அடி பேதாய், இப்பிறவி
தன்னிலும்நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185

கன்னியெனத் தான்பிறந்தாய். கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே. இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190

நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கி லெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ?’
என்றார். ‘விதியே! இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195

வாதைப் படுத்தி வருமாயில், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே. மற்றிதற்கோர்
மாற்றிலையோ?’ என்று மறுகிநான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்: -- ‘பெண்குயிலே, 200

தாண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன் மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேச மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல்வேந்தன் 205

ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்.
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்,
சந்திஜபம் செய்யும் சமயமாய் விட்ட’தென்றே 210

காற்றில் மறைந்துசென்றார் மாமுனிவர். காதலரே,
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன். ஐயோ! திருவுளத்தில்
எப்படி நீர் கொள்வீரோ? யானறியேன். ஆரியரே,
காத லருள்புரிவீர். காதலில்லை யென்றிடிலோ 215

சாத லருளித் தமதுகையால் கொன்றிடுவீர்!”
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்.
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்,
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220

காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி்
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. 225

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான்
கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுது நோக்கினாள்; 230

சற்றே தலைகுனிந்தாள். சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235

பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினையான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை
நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும் 240

மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை,
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245

மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தபின்னே, 250

பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிக்கைக் கூட்டம், பழம்பாய் -- வரிசையெல்லாம் -- 255

ஒத்திருக்க ‘நாம்வீட்டில் உள்ளோம்’ எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன்.
ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே யானாலும், 260

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?
------------------

91.9 The Kuyil's Story of her Previous Birth

"My lord! O, my rare
treasure! my soul!
Before you leave me,
graciously hear me
once more:

One day long ago
I sat on a branch
in a mango grove near
the great Mount Potiyil;
I was musing over something
or other, when a
holy man appeared.
I was sure he was a great
personage, so I fell
at his feet and did obeisance.
The Master liked me,
and he blessed me.
'O holy sir,' I said,
I was born on earth
into a low caste of birds,
But why do I understand
everyone's language?
Why am I so different from ordinary kuyils?
Why do I have emotions
liken a human? Explain
this to me, please,
so that I may understand."
and I bowed
and listened,
The Master said,
'Kuyil, listen ...
In an earlier life
you were born and grew up
on a mountain
in the south of the prosperous Cera kingdom.
You were the daughter
of a hunter named
Vira Murukan,
the chief
of a strong hunting clan.
As you grew, so did
your fame, for there was no one of your beauty
in all three Tamil kingdoms,
One of the most propserous hunters,
and a cousin to you,
saw you and melted,
feed for Kama's arrows.
His name was Matan.
For months he wished he could marry you.
He came to you everyday,
and he gave you gold, flowers,
and fresh honey.
You were all
his thoughts, and his heart sorrowed,
o honey-words!
You promised to
place the garland
around his neck; not in passion,
but because you could not bear
his great sorrow.
Now, in the meantime,
as the great reputation
of your beauty
spread over all the lands,
it reached the hunter-king
Mottai-Puliyan
on the slopes of
Honey Mountain.
He was rich and of great valour, with deeds
to make all lands fear
and tremble; and he wanted
a good wife for his eldest
son, Nettai-Kurankan.
He settled on marrying
him to you, and approached
your father: 'I have in mind.
the marriage of your daughter
to my son,' he said.
---------------

The Song of the Kuyil

Love, love, love.
if love leave,
when love goes:
death, death, death.
Etc., etc.

Until the song stopped
I knew no earth,
I knew no sky,
I knew no grove of great trees, I did not know myself,
and like myself, I did not know
the bull:

I knew only the golden voice
and a glowing bliss.
O God of Creation:
O Four-Faced Lord!
You it was, they say,
who created the Earth
way back then.
You made the waters
and you made the land;
you cooled the waters
in the ancient fires;
you blew the wind,
and brought out the sky,
the space difficult to see!
Who understands the fineness
of your work?
You drive worlds forever
like a million
juggling -- balls, and
our hearts cannot comprehend
it all, not at all.
O sly Brahma you have Forced the powers in such a way
That they stand hidden.
You created
time; and you made the
untranscendable Directions,
and all the
infinite chains of birth, appearing, and disappearing
in all the worlds.
You fashioned all
our lives,
O Four-Faced One!
Look at all this,
this conjurer's feat!
Who is there alive
on Earth, able to explain it all?
Yet
Of all your wonders
the most wonderful of all
is your creation of the nectar of music.
The woods, the great sky,
the ocean and all
are wonderful,
yet still
there is no wonder
on earth like a song. Harmonizing the five elements
into a new creation
is a marvel;
but can it approach the bliss
of harmonizing sounds? When I consider
the millions of marvels
that bring forth desires,
the joy of music
allows no simile.
But then the magic ended,
that magic of the divinely
sweet song the worthless
bird had sung,
and I came to.
I grabbed my dagger
and threw it
at the bulle But he lumbered away just
before it could sink
into his body.
And the beautiful kuyil disappeared.
And as before,
all the other birds
came back
and sounded off
on the branches.
And I, shameless
and in love,
searched the sky
for the little kuyif.
And then I went home.

I pondered,
and I pondered,
and nothing made sense:
A wild kuyil telling me
her love-story, with tear --
drops in her eyes,
and dissolving my heart;
my falling in love with a bird!
And those stupid little birds
breaking up her story of joy!
Her causing the fire of love
to eat out my heart,
my heart, that nothing
can touch! Her confusing me;
the smouldering cruelty
of the mad monkey and
the barnyard bull becoming
my utter enemies.
And still I pondered,
I pondered this immense
cruelty, this cruelty
caught in insanity;
and my desire
did not end.
Nothing made sense.
My eyes closed,
and I sank into deep sleep.

---------------------

92. பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.       1

சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.       2

கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.       3

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.       4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, -- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.       5

காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.       6

பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.       7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.       8

துன்பம் நெருங்கிவந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.       9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.      10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.       11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.      12

வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.       13

வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.       14

சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.       15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா.       16
---------------

92. Child's Song
March, 1915.

1. Run about and play my sweet little child
And idle not sweet little child; In game and sport have inany mates
And revile not any one child.

2. Sweet and pretty like a love-bird
You wing and soar my little child; Behold the birds of iris hues
And be happy like them on child!

3. The bantam struts and pecks and eats,
Join that and play with it oh child! The crow in a swoop steals its food,
Be kind to it, my little child.

4. The cow, she gives abundant milk,
Know her to be good, my dear child; The dog it comes wagging its tail,
Know that to be a friend of man.

5. The goodly horse that pulls a cart,
The bull that ploughs the village-fields, The goat that does depend on us:
Foster all these, my little child.

6. Rise at dawn to learn your lesson,
Then sing such airs that are soothing, To games devote the whole evening,
Get habituated thus, oh child!

7. Abstain from lies my little child
And also from vile back-biting; God is our help, my little child,
Never will evil beset us.

8. Fear not at all my little child
When you meet with evil-doers; Smite them and kick them, oh my child!
And lo, at their face you shall spit.

9. When thronging sorrows assail us
We should droop not, my little child; God is there full of compassion
To quell all troubles oh my child!

10. Idleness is bad, very bad;
Mother you should ever obey; Peevish crying doth lame a child;
Stand firm and fight with all your might.

11. Adore the divine Tamil Nadu
As your own mother, oh my child! Than nectar itself is more sweet
This land of Aryas, oh my child!

12. Tamil is sweet amongst all tongues,
Adore it and cultivate it; Hindustan is full of riches;
Hail it as God, my little child.

13. There's no such thing as caste-glory;
Make not castes great or low, and sin. Those are the lofty who possess
Justice, clear intellect and love. 14. Foster love for all lives, my child,
Know Truth to be God, my sweet-child, As adamant, be firm in heart:
Know these to form the way of life.
- T.N.R.

Note: The Tanil original appeared in Jnana Bhanu.
The poem then contained only 14 stanzas. Two more stanzas were added as stanzas 13 and 14, when Parali Su. Nellai Appar published the poem as a small booklet in 1917. Slight and significant variations marked the re-published poem.
version.
The translation here given follows the Jnano Bhanu added stanzas are given below in translation. 117-16A

On the north the Himalayas,
On the south abiding Kumari The cape, on the east and the west
The seas: India's boundaries these!
This is the land of the Vedas
Where great and good heroes were born; Truly flawless is Hindustan;
Adore this as God, my dear child.
---------------

93. ஞானபாநு

திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின்.
------------------

93. On 'Jnana Bhanu'
April, 1915.

1. Life of wealth divine, fame,
Valour great, buddhi good, Heroism, lustrous arts,
Valiancy: All these Are by wisdoms secured.
To blaze our great glory The world over, is born
The child -- Jnana Bhanu.

2. Worries, meanness, illness,
Deceit, penury, pain: Than all these things, base,
Is more base -- wretched fear. These are demons of murk,
Created by Nescience. Arise, Jnana Bhanu!
May the demons perish!

3. To gods it renders all
And remains as the force In nobly righteous minds.
It is Agni, the God. Sun's rays are wisdom sure.
"If these two do combine Men will the Devas join.
And thrive" say the Vedas.

4. All attempts will with success
Be crowned, and flourish well, All thoughts with ease will be
Into deeds translated If we hail this "Wise Sun".
Lo, he comes with a smile And his message is indeed
Resoluteness of Thought.

- T.N. R.

Note: The Tamil original appeared in of Jnana Bhanu,
Jnana Bhanu and was sung in praise
----------------

94. புயற் காற்று

நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
ஒரு கணவனும் மனைவியும்
மனைவி:
காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்:
வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:
நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?
-------------

94. The Cyclone
22-11-1916.

1. Wife speaks:
The storm whirls, The sea swirls,
Waken, my dear, waken! Through window on the floor,
The lashing rain is shaken.
Bharati
246
2. Husband speaks:
The sky leaps angry, red, Earth quivers in dread,
Unto the Mother we pray. May her grace, Save us apace,
From the tearing elements' play.
3. Wife speaks:
But yesterday, In yonder hut we lay.
Had we stayed there tonight, What had been our fate? Death came, a storm of hate,
It was held by divine might.
- A.S.R.
Note: Bharati has mentioned the date on which the cyclone swept Pondi
cherry. It was on the night of Wednesday, the eight of Kartikai month of Nala (year).
The sub-title to the poem is as follows:- "A husband and his wife."
An article containing this poem was also published in Swadesamitran dated 27-11-1916.
-----------

95. பிழைத்த தென்னந் தோப்பு

வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
--------------

95. The Tope that was Spared
November, 1916.

1. With lucid water tasting sweet, is a tank
Midst stretches of fields; alone to its flank
Seeking solace I hied and reached its bank.
Who could ever keep count of the trees, alas
That lay like scattered seedlings in a mass
As the wind swept away the trees and grass.

2. In a high ground is a small coconut-tope;
It indeed is a poor man's only hope;
Bless the wind for it did not make him mope,

3. Fell a few only, stood there good many;
Here did no waste the wind accompany;
To the poor soul this is theophany.

4. I have known of solitude and it is
Charged with charm; the sunlight that did dismiss
The mist, is here indeed sweet as liquorice.

5. A mass of lovely light, sun stood on high,
Expansive grew its rays, pleasing the eye,
And as music sweet they did ramify

6. Under a greenwood tree of some umbrage
I stood and witnessed in the clearage
Lasting bliss and poesy in marriage.

7. Hail Parasakti! They that hail Her thrive
Hail Her, Muse! Be to this ever alive.
- T.N.R.

Note: The cyclone that laid waste Pondicherry did not cause any harm to
the tope which was frequented by Bharati. Our poet thanks the Wind God for his mercy.
-------------

96. மழை

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
-------------

96. Rain
12-7-1917.

Shattering the bounds of space Came the rain:
Dheem tarikita dheem tarikita dheem tarikita dheem!
The hills are rent And the waters burst and leap and sweep in a mad race;
The wind beats like a fiend in pain;
The world reels and is bent:
Dham tarikita dheem tarikita dheen tarikita dheem!
Lightning leaps in a clap,
And the sea Dashes its mane against Heaven's dome;
The clouds break and rumble; 10

The wind tears at the sky as at a trap,
And the sky beats a tattoo and laughs in mad spree.
The corners of space crumble.
Oh, the mighty rain.
Dham tarikita dheem tarikita dhom!
The universe quivers and shakes,
And lo! the snake
That bears the earth, hoods uplifted, springs amain. Space hills leap,
And in the sky, tumust of the Devas breaks
Into a mad sport where live flames crash awake,
Behold! Time and the elements dance in a sweep:
Tatarikita tittom! Oh, the rain, the wondrous rain!

- A.S.R.
Note: The Tamil original appeared in Swadesamitran dated 12-7-1917.
--------------

97. கண்ணன் -என் தோழன்

புன்னாகவராளி - திஸ்ர ஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே-இனி
என்ன வழியென்று கேட்சில்,உபாயம்
இருகணத் தேயுரைப் பான்;-அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன்-வந்திங்கு
உன்னை யடைந்தனன்”என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்.
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்;-பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்;-என்தன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்;-நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாமொரு
பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை,பசி நேரத் துணவென்தன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்;-எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான்;-என்தன்
காட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்உணர் வான்;-அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடு வான்;-நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்;-சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும்-பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
சிரித்துக் களித்திடு வான்;-நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான்;-அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடு வான்;-கண்ணன்
தன்னை யிழந்து விடில்,ஐயகோ;பின்
சகத்தினில் வாழ்வதி லேன்

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துத்
குலுங்கிடச் செய்திடு வான்;-மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளர்த்திடச் செய்திடு வான்;-பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்;-சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வரும்
தீமைகள் கொன்றிடு வான்

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடு வான்;-அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்;-நல்ல
பெண்மைக் குணமுடை யான்;-சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;மிகத்
தண்மைக் குணமுடையான்;சில நேரம்
தழலின் குணமுடை யான்.

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிகத் தானுடை யான்;-கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்;-என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடு வான்;-கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்.

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில்-பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்;-உயிர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்;-நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.
------------------

97. Krishna -- My Friend
1917
1. Love-lorn I sought his help t'elope
With Subhadra golden-hued;
At once he cheered me up with hope
O'the wedding which ensued

2. When up against that archer rare, --
Karna of matchless worth, --
He helped me out of my weak despair
To fell him to the earth.

3. Through all our wand'rings in the forest wide
He freed our minds from fear;
In the thick of the fight as my charioteer and guide,
He was without a peer.

4. When caught in the grip of sickness or pain,
He offers a certain cure;
But when distraught by worries vain,
His words are a tonic pure.

5. When empty pride my heart elates,
He humbles it to the dust;
The hypocrite he wholly hates,
And shuns him in disgust.

6. Where th'unclean heart like a stagnant pool
Is mantled o'er with green,
His grace like a flood of waters cool
Flushes it wholly clean.

7. When the mood is on, like a child he plays
With unself-conscious glee:
Perchance if maidens on him gaze,
He holds their hearts in fee.

8. Who can hope t'exhaust the list
Of his graces versatile, --
As singer, painter, strategist, --
Unique in theme and style.

9. He dwells in the hearts of Yogic seers,
The Vedas Him proclaim:
His Gita dispelled all my fears --
I'll glorify His name.
- P.M.

Note: The Tamil original forms part of Kannan Pattu published in 1917
by Parali Su.Nellai Appar. This book contained in all twenty-two poems.
To the second edition of this work published in 1919, V.V.S. Aiyar contributed a brilliant foreward.
The poem, 'Kannan, my King' was included in the second edition.
-------------

98. கண்ணன்-என் தாய்

நொண்டிச் சிந்து

உண்ணஉண்ணத் தெவிட்டாதே-அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே-என்தன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்
கண்ணனெனும் பெயருடை யாள்,-என்னைக்
கட்டிநிறை வான்எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே-பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.

இன்பமெனச் சில கதைகள்-எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள்-கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்தன் விருப்பம்-எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்;-அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.

விந்தைவிந்தை யாக எனக்கே-பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை-அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம்-பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு-அதன்
முகத்தொளி கூறுவதற்கொர் மொழியிலை யே.

வானத்து மீன்க ளுண்டு-சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிட வே-மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு-எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை.
மோனத்தி லேயிருக் கும்-ஒரு
மொழியுரை யாதுவிளை யாடவருங் காண்

நல்ல நல்ல நதிகளுண்டு -அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம்-விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்.
எல்லையதிற் காணுவ தில்லை;-அலை
எற்றி நரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே-அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்

சோலைகள் காவினங் கள்-அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய்-அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும்நிறைந் தே-மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே.
கோலமுஞ் சுவையு முற-அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள்.

தின்றிடப் பண்டங்க ளும்-செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறக் பழகுதற் கே-அறி
வுடையமெய்த தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மென இனி தாய்-இன்பக்
கொடுநெருப் பாய்,அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே-இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.

இறகுடைப் பறவைக ளும்-நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே-எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள்-எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்;.அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை.

சாத்திரம் கோடி வைத்தாள்;-அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே-நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்க ளும்-மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும்-இன
மூடர்தம் கவலையும் அவள் புனைந் தாள்;

வேண்டிய கொடுத்திடு வாள்;-அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்;அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடுவாள்;
யாண்டுமெக் காலத்தி லும்-அவள்
இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும்-பிற
நிகரறு பெருமையும் அவள்கொடுப் பாள்.
--------------

98. Krishna -- My Mother

The Realms of Life are
Her bounteous breasts; and consciousness,
her milk of endless delight, which she yieldeth into my lips unasked;
such grace is my Mother's.

They call her Krishna.
Ah, she has clasped me in fond embrace with her arms of ethereal space.
And, placing me on her lap of Earth, she loves to tell me endless stories,
strange and mysterious.
And some of the tales I call by the name of pleasures, evolutions, victories.
Yet others come to me as pains, defeats and falls;- stories, all these, that my
Mother recounts to suit my various moods and stages,
lovingly told, ever entrancing.
And many are the wondrous toys and dolls which my Mother showeth me:
There is one that is named the Moon, and it sheds a nectar-like flood of light.
And there are herds and herds of clouds, many-coloured toys, yielding rain.
There's the Sun, too, foremost of my playthings,
the beauty of whose face I have no words to depict.

Toys, toys, toys:
A heavenful of stars, sparkling like tiny gems.
Many a time, but in vain, have I essayed to count them all.
And then those green hills, that never stir from their places,
silent toys, offering speechless play.
Rivers and rivulets, fair and playful,
that wander all over the land and, in the end, flow into that
marvellous toy, yon ocean, wide and boundless --
seeming, with dashing billows,
spouts of spray and its long, continuous chant wherein
my Mother's name is ever sounded:
Om, Om, O...M.
Groves and gardens, abounding in many-hued gems of flowers;
and delicious fruits hanging on the trees, strong in essence,
rich in form. Ah, the world is full of such exquisite playthings.
All these, my Mother has given me.
Nice things to eat and songs all sweetness to hear,
and companions gifted, like me, with minds, to play with and
become one with; and these fair girls, enkindling love,
that passion of flaming delight like fiery nectar, killing sweet.
Yet more play-mates:
The winged birds, the beasts that walk the earth,
and countless fishes of many and many a kind, there, in that thundering Sea.
What a tale of raptures, too many even to think of!
And endless sciences and arts she has ordained and,
nobler than all these, divine wisdom -- for my serious hours.
But when the lighter mood is on me and I would fain laugh and be merry,
many are the jokes she has planned to amuse me with the
lies of priests, the comic feats of kings, the hypocrisies of age
and the silly cares of youth.
Whatever I demand, she gives, my Mother,
Aye, she hastens with gifts, ere I tell her I'd like to have them.
With high grace does she protect me, and says she will make me a yogin,
like Arjun, my brother in race.

Always and in all places, my work shall be to sing of the
bounteous love of my Mother.
And a long and shining life and other matchless glories,
she will grant me as reward -- Krishna, My Mother.
- C.S.B.
Note: The Tamil original appeared first in Jnana Bhanu in October 1913.
--------------

99 கண்ணன் - என் தந்தை

நொண்டிச் சிந்து

ப்ரதான ரஸம்-அற்புதம்

பூமிக் கெனையனுப்பி னான்;-அந்தப்
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே-இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்
சாமி இவற்றினுக் கெல்லாம்-எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறிதுரைப் பேன்.

செல்வத்திற்கோர் குறையில்ல;-எந்தை
சேமித்து வைத்த பொன்னுக் களவொன்றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன்-அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே-கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு
நல்வழி செல்லு பவரை-மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு.

நாவு துணிகுவ தில்லை-உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற் கே;
யாவருந் தெரிந்திட வே-எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு
மூவகைப் பெயர் புனைந்தே-அவன்
முகமறி யாதவர் சண்டைகள்செய் வார்;
தேவர் குலத்தவன் என் றே-அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப் பார்.

பிறந்தது மறக் குலத்தில்;-அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத் தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே;-சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்;-அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்;
துறந்த நடைக ளுடையான்;-உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டுநகைப்பான்.

ஏழைகளைத் தோழமைகொள் வான்;-செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழு வான்;
தாழவருந் துன்ப மதிலும்-நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வமளிப் பான்;
நாழிகைகொர் புத்தியுடை யான்;-ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்;-பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.

இன்பத்தை இனிதென வும்-துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்;-தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே.
வன்புகள் பல புரிவனான்;-ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே-பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

வேதங்கள் கோத்து வைத்தான்;-அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்களென்று புவியோர்-சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;

வேதங்க ளென் றவற் றுள்ளே-அவன்
தேத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றி யொன்றில்லை-இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைக ளெல்லாம்

நாலு குலங்கள் அமைத்தான்;-அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம்-இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென் றே-வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம்-இன்று
பொசுக்கி விட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்

வயது முதிர்ந்து விடினும்-எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை,மூப்பு மில்லை,-என்றும்
சோர்வில்லை,நோயொன்று தொடுவதில்லை;
பயமில்லை,பரிவொன்றில்லை.-எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்;-தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

துன்பத்தில் நொந்து வருவோர்-தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்புகனி வான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்;துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;
என்புடை பட்டபொழுதும்-நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணுபவர்கே-என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.
-------------

99. Kannan -- My Father
1917

1. Unto earth, he did send me and behold!
My brothers are dwellers of Mercury,
Ordained laws are there and orbs numberless
To these conform and gyrate; in these lands
Are men, and lo, they are of our race,
And their reign doth well match their will joyous;
Our Father is the Lord-God of these;
So let me a little, him historise.

2. Abundant is his wealth that knows no lack;
Limitless his acquisition of gold;
His learning is unsurpassed, and limit
There is none at all to the sweets -- his songs.
Multi-faceted is his glory great
Though dementia frequent marks his acts;
Singular in sooth, is his way,
I say, That tries them sore that tread the righteous way.

3. My tongue truly lacks courage, to disclose
His genuine name in open frankness
That all people may of it come to know;
"Our Lord" he is called and also Kannan.
In three-fold division they wrangle sore --
The men that cannot him identify --;
Some there are who know nought of him at all;
"He is of the race of Devas" say these.

4. He was born in the clan of heroes; he grew
Amid cow-herds with sense none of difference;
Great did he among the Brahmins become;
Familiar is he with some traders;
Dark is his complexion; he doth delight In maidens who in hue rival the gold;
Free are his ways and open and he laughs
At your Sastras false and thaumaturgic.

5. The poor are his friends and he is enraged
At the sight of the base hoarders wealthy;
To them of unflagging hearts, though misery
Flattens them, he gives abundant riches.
His weather-cock moods vary every hour;
A different man is he on earth new morn;
He seeks and dwells in the Void, and in songs
And stories he does all his hours lay waste.

6. Never in his thought does he hold 'Pleasance
As pleasant and Misery unpleasant;
Immense is his love; that clarity may
The thought of men inform and uplift them,
Atrocious acts of havoc he will work.
Called Fate, a minister my Father has;
What is of yore ordained, timely will he
Remind and compel men to eat it all.

7. He did the Vedas compose; these Vedas
Are not at all of the tongue of men, though.
The mere anthology of tales is not Vedas,
though men of world do deem them so.
He has in the Vedas truly intermixed
A thing or two which indeed are Vedas.
Mark well! the words of truth by wordly men
Uttered, are in sooth the very Vedas.

8. Four are the clans he founded. Alas!
These by the wanton tomfools were laid waste;
Right conduct, wisdom, purity in deed --
These make men great and their absence, aye, base,
Wherefore would he say, that good it would spell
To feed the fire with all books that are false
Classifying men into great or low
On the strength of mere birth and appearance.

9. Though in years well advanced, not a wrinkle
Mars my Father's face of eternal youth;
Neither sorrow nor dotage, nor fatigue
At any time, nor malady affects him.
Fearless is he and dispassionate too;
No sides he aids to plague the dissidents.
Full of great skill is he; standing neutral
He delights to watch the acts wrought by fate.

10. When the woe-begone complain unto him
Them he derides, but his love redeems;
"Unto Love hold fast! That very instant
Are burnt all thy sorrows:" so would he say.
Bones break; great is their ache and agony;
Yet they in grace endure; these then he loves.
Unto them that meditate happiness
Ever happy is he to grant happiness.
-
T.N.R.
--------------

100 கண்ணன் - என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா,நீ நேற்றைக் கிங்குவர வில்லை’யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாறென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்;ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;

சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு,கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ,செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்“இடைச் சாதி நான்”என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன்,மக்களை நான் காத்திடுவேன்;

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே;
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும்,கள்ளர்பய மானாலும்,

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற விததை யேதுமில்லை;காட்டு மனிதன்;ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன்;சற்றும் நயவஞ் சனைபுரியேன்”
என் றுபல சொல்லி நின்றான்.“ஏதுபெயர்? சொல்” என்றேன்
“ஒன் றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்,
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்,

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
“மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு”கென்றேன்.“ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்

ஆன வயதிற் களவில்லை;தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை;நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை“யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டுவிட்டேன்.அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக,நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்,என்குடும்பம்

வண்ணமுறக் காக்கின்றான்.வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்;வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி,வளர்ப்புத்தாய்,வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்

பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய்,நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான்,இடைச்சாதி யென்று சொன்னான்.
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,

தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாம்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
------------------

100. Kannan -- My Servant
1917
1. Forgetting every generous bonus,
They still pile up demand upon us.
When work is heaviest, on that day,
Quiet, at home, they stay away.
"Why were you absent yesterday?"
We ask; and we are answered duly:
"A scorpion in a pot, Sir, truly,
Bit me with its teeth most cruelly:
MY good wife, Sir, the best of women,
Was sore possessed by an evil demon!
It was the twelfth day ceremony
After the death of my poor granny!"       10

2. Such disobedience, and lies in dozens;
Such whispering in corners with our dear cousins!
Our inner chamber's small disgraces
Loud they proclain in public places.
They tell the world with drumbeats -- yes, ah me!
If we run somewhat short of sesame.
Yes; trouble and bother are all we gather
From servants; and yet we would far rather
Have a bad servant than none at all;
For without servants no work is done at all.       30

3. To me thus musing, sad and serious,
Came a lad from somewhere mysterious.
"I'm a shepherd," he said; and on he did rattle
Your children I'd cherish and graze your cattle;
Your house I'd sweep, your lamps I'd light,
And all your biddings do always right;
I'd keep with care your jewels and clothes;
And lovely lullabies I'd compose
And sing them; and dance and play, it may be,
To the great delight of little baby.
On robber-infested paths of the forest,
By day or night, in straits the sorest,
With you I'd wander and guard you from harm,
And artless, unlettered rustic, I am;
Yet something of fencing, boxing, wrestling I know,
but nothing at all of embezzling!" He paused for breath.
At once I spoke, "Say, what is your name?"
He answered, "Folk Call me Kannan, not much of a name!"       40

4. Stalwart he stood there, firm of frame,
With eyes gleaming goodness and words that bound him
To me for ever in love, "I've found him,"
I told myself. "the Boy I've been after."
For my heart was filled with silent laughter.
And turning to him, I said, half-taunting
"'Tali is your talk and full of vaunting.
You swear I'd find it most advantageous
To be your master; but, What are your wages,"
"Young though I look, I have lived for ages
With no wedded wife, no children to earn for.
Your love enough; it is love I yearn for.
Not lucre!" he said in a voice impassioned..
Overjoyed I engaged this foolish, old-fashioned
Fellow to serve me. Since then, I own,
The lad's love for us has, day by day, grown;       50

5. And the good he has done no words can render
As the eyelids guard -- alert and tender --
The eyes, he tends my family.
Not once have I heard him grumble.
But he Sweeps the street and cleans the rooms;
And even the housemaids he presumes
To chide and control! And to my children,

6. A tutor, nurse, doctor. he does bewildering
Services, manifold. He buys plenty
Of milk and butter and all things dainty
And stocks my pantry, somehow or other.
To the women he is like a loving mother;
And to me a friend, guide, teacher, brother.
A seeming servant indeed a god,
This shepherd lad, from somewhere abroad,
Has come to me -- for my merit's reward!
When did I do such penance hard?
From the hour that Kannan set his foot
Upon my doorstep, I have put
Away from me all thought and care.
My burdens are now his to bear.
Wealth, youth, strength, honour and renown.
Learning, wisdom poetry, the crown
Of Shiva-Yoga Shiva-Jnana's clear,
Calm brightness, overwhelm me here.
Oh! Joy, that as a servant-boy Kannan
I took in my employ! I've seen,
I've seen with my own eye His splendour.
Yet I wonder why, Why should Kannan serve me? Why?       80
- K.S.
-----------------


This file was last updated on 08 Jan 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)