உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 10- 24 / பாடல்கள் (597-1240 )
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
1.10 | பாதை போந்த படலம் | 597 - 679 | மின்பதிப்பு |
1.11 | சுரத்திற் புனலழைத்த படலம் | 680 - 699 | மின்பதிப்பு |
1.12 | பாந்தள் வதைப் படலம் | 700 - 722 | மின்பதிப்பு |
1.13 | நதி கடந்த படலம் | 723 - 753 | மின்பதிப்பு |
1.14 | புலி வசனித்த படலம் | 754 - 767 | மின்பதிப்பு |
1.15 | பாந்தள் வசனித்த படலம் | 768 - 785 | மின்பதிப்பு |
1.16 | இசுறா காண் படலம் | 786 - 840 | மின்பதிப்பு |
1.17 | கள்வரை நதி மறித்த படலம் | 841 - 856 | மின்பதிப்பு |
1.18 | ஷாம் நகர் புக்க படலம் | 857 - 900 | மின்பதிப்பு |
1.19 | கரம் பொருத்து படலம் | 901 - 966 | மின்பதிப்பு |
1.20 | ஊசாவைக் கண்ட படலம் | 967 - 996 | மின்பதிப்பு |
1.21 | கதீஜா கனவு கண்ட படலம் | 997 - 1033 | மின்பதிப்பு |
1.22 | மணம் பொருத்து படலம் | 1034 - 1096 | மின்பதிப்பு |
1.23 | மணம்புரி படலம் | 1097 - 1215 | மின்பதிப்பு |
1.24 | ககுபத்துல்லா வரலாற்றுப் படலம் | 1216 - 1240 | மின்பதிப்பு |
597 |
குரைகட லனைய செல்வக் குறைஷியின் குலத்து நாப்ப ணரசிளங் குமர ரான வப்துல்லா வரத்தில் வந்த முருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தமக்குச் சார்ந்த திருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே. | 1.10.1 | 598 |
பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி வீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச் சாரமும் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும் வாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே. | 1.10.2 | 599 |
பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு சீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா ரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங் காருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே. | 1.10.3 | 600 |
அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற புகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித் துகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை முகம்மதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார். | 1.10. 4 | 601 |
குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை படித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து மிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற் பிடித்திடும் பொருள தன்றிப் பிறிதலை யுலகத் தன்றே. | 1.10.5 | 602 |
ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப் பெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத் திருநகர் ஷாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே வருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார். | 1.10.6 | 603 |
மகனுரைத் தவையுந் தங்கண் மனைவறு மையையு மெண்ணி யகநினை யறிவு நீங்கி யாகுலக் கடலின் மூழ்கி வகையுறத் தேறிச் செவ்வி முகம்மதின் வதன நோக்கி நகுகதிர் முறுவற் செவ்வாய் திறந்த்பின் னவில லுற்றார். | 1.10.7 | 604 |
என்னுயிர்த் துணைவ னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந் நன்னிலத் தரிய பேறே நங்குடி குலத்துக் கெல்லாம் பொன்னுநன் மணியு மென்னப் பொருந்துநா யகமே தேறா வொன்னலர்க் கரியே கேளென் னுளத்தினி லுற்ற தன்றே. | 1.10.8 | 605 |
மன்றலந் துடவை சூழ்ந்த மக்கமா நகரில் வாழ்வோன் றென்றிசை வடக்கு மேற்குக் கிழக்கெனுந் திக்கு நான்கும் வென்றிகொள் விறலோன் செம்பொன் விழைதொழி லவருக் கெல்லாங் குன்றினி லிட்ட தீபங் குவைலிது வென்னும் வேந்தன். | 1.10.9 | 606 |
இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீந்த தாலு மரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங் கருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன் வரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான். | 1.10.10 | 607 |
தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த மீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய கூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி வான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை. | 1.10.11 | 608 |
பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற் செங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந் தங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த மங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே. | 1.10.12 | 609 |
குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட் டோங்கி நலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச் சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற் கலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை. | 1.10.13 | 610 |
இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட் புனையிழை யனைக ரான பொன்னிதழ்க் கமல் நாப்பண் வனைதரு பதும ராக மணிமடி யிருந்ஹ செவ்வி யனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார். | 1.10.14 | 611 |
குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைலிதன் பரிதிற் பெற்ற வரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருகண் ணாரப் பருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந் தெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே. | 1.10.15 | 612 |
வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந் தானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன தானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத் தேன்மொழி கதிஜா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை. | 1.10.16 | 613 |
வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம் பொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி யருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட திருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை. | 1.10.17 | 614 |
வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ ரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங் குணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப் பணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே. | 1.10.18 | 615 |
மின்னென வொளிம றாத விளங்கிழை கதிஜா வென்ன மன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு மின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப் பொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார். | 1.10.19 | 616 |
கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு மலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்போ னிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந் தொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே. | 1.10.20 | 617 |
தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க வானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித் தூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி யானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே. | 1.10.21 | 618 |
தரைத்தலம் புகழும் வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு முரைத்தவை யனைத்துந் தேர்ந்து முகம்மது முளத்தி னூடு வருத்தமுஞ் சிறிது நேர மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக் கருத்தினி லிருத்திக் தாதை கழறல்சம் மதித்தி ருந்தார். | 1.10. 22 | 619 |
குங்குமத் தடந்தோள் வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு செங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதிஜா வென்னு மங்கைதம் பெயருஞ் சித்ர வடிவுநின் றுலவ மாறாப் பொங்கறி வதனான் மூடிப் புந்தியின் மறைப்ப தானார். | 1.10.23 | 620 |
மம்மரை மனத்துள் ளாக்கி முகம்மது கதிஜா வென்னும் பெய்ம்மலர்க் கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு மம்மறு கிடத்திற் போக்கும் வரத்தும தாகி வாசச் செம்மலர்ச் சுவடு தோன்றாத் திருவடி நடத்தல் செய்தார். | 1.10.24 | 621 |
இப்படி நிகழ்கா லத்தோ ரிளவன்மா மறைக்கு வல்லான் மைப்படி கவிகை வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட கைப்படு குறியுஞ் சேர்ந்த கதிர்மதி முகமு நோக்கிச் செப்பிடற் கரிய வோகைத் திருக்கட லாடி னானே. | 1.10.25 | 622 |
பெரியவன் றூத ராகப் பிறந்தொரு நபிபிற் காலம் வருகுவர் சரத மென்ன மறையுண ரறிவர் கூடித் தெரிதர வுரைத்த தெல்லா மிவரெனத் தேறும் வாளா லிருளறுத் துண்மை யாயுள் ளிருத்தினன் பெருத்த நீரான். | 1.10.26 | 623 |
கண்டவ னுளத்தி னூடு கண்கொளா வுவகை பொங்கிக் கொண்டுகொண் டெழுந்து சென்று குவைலிது மனையு ளாகி வண்டுகண் படுக்குங் கூந்தன் மடமயில் கதிஜா வென்னு மொண்டொடி திருமுன் முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான். | 624 |
குவைலிது தவத்தின் பேறே குரைகடன் மணியே நீண்ட புவியிடை யமுதே பொன்னே பூவையர்க் கரசே யென்றன் செவியினிற் பெரியோர் கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான். | 1.10.28 | 625 |
வன்மன நஸ்றா வென்ன வருபெருங் குலத்திற் றோன்றிப் பன்முறை மறைக டேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி நின்மனந் தேறக் கண்ட புதுமையை நினவ றாமற் சொன்மென மயிலே யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான். | 1.10.29 | 626 |
முல்லைவெண் ணகையாய் தொன்னாண் முறைமுறை மறைக ளெல்லாம் வல்லவர் தௌிந்த மாற்ற மக்கமா நகரிற் பின்னா ளெல்லையில் புதுமை யாயோ ரிளவல்வந் துதித்துப் பாரிற் பல்லருந் தீனி லாகப் பலன்பெற நடக்கு மென்றும். | 1.10.30 | 627 |
ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதம் மெய்யின் மாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ் சேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங் கூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும். | 1.10.31 | 628 |
வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மென்றுங் குயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை மயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும் நயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன். | 1.10.32 | 629 |
முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும் நின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம் மன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் பொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான். | 1.10.33 | 630 |
கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிஜா வென்னுஞ் சிலைநுத றௌியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி யலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித் தலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான். | 1.10.34 | 631 |
ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங் காவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று பாவலம் பிய செந் நாவார் பன்முறை வழுத்தப் போதா மேவலர்க் கரியே றென்னு முகம்மதை விரைவிற் கண்டான். | 1.10.35 | 632 |
கண்டுகண் களித்துள் ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி யொண்டொடி கதிஜா வென்னு மோவிய முரைத்த மாற்றம் விண்டுவிண் ணப்பஞ் செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட் கொண்டறன் செவியு நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே. | 1.10. 36 | 633 |
கூறிய கூற்றைக் கேட்டுக் குறித்துள கரும மின்று மாறிலா தடைந்த தென்ன முகம்மது மனத்தி லுன்னித் தேறியங் கெழுந்து போந்தார் தேனினு மதுர மாறா தூறிய தொண்டைச் செவ்வா யொண்ணுதன் மனையி லன்றே. | 1.10.37 | 634 |
சித்திர வனப்பு வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப் பத்திரக் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக முத்தணி நிரைத்த பீட முன்றிலிற் காந்தட் கையால் வைத்திவ ணிருமென் றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார். | 1.10.38 | 635 |
எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந் திருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும் விரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு மருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும். | 1.10.39 | 636 |
பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச் சார்பினிற் கதிஜா வென்னுந் தையறன் கரிய வாட்கட் கூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி வாரிச வதனஞ் சேர்ந்து மறுக்கமுற் றிருந்த வன்றே. | 1.10.40 | 637 |
பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப் பூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக் கூர்த்தவா வௌிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச் சேர்த்ததம் முளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றார். | 1.10.41 | 638 |
மெய்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து மொய்மலர்க் கதிஜா செவ்வி முழுமதி வதன நோக்கிச் செய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே எய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விடுத்துச் சொன்னான். | 1.10.42 | 639 |
விரும்பிய காம நோயை வௌிவிடா தகத்துள் ளாக்கி யரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டோ யிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி வரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக லென்றார். | 1.10.43 | 640 |
காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா னோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தம் மாதின் மாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக் கோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார். | 1.10.44 | 641 |
மடங்கலே றனைய செம்மன் மனையில்வந் திருந்த போழ்தே படங்கொள்பூ தலத்தி ராசப் பதவியும் பெரிய வாழ்வு மிடங்கொள்வா னகத்தின் பேறு மௌிதினி னும்பாற் செல்வ மடங்கலு மடைந்த தின்றென் றறைந்துபண் டிதன கன்றான். | 1.10.45 | 642 |
தெரிந்துணர்ந் தறிந்தோர் மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா விரிந்தநூ லுரையும் பொய்யா விளங்கொளிர் வடிவ தாக விருந்தவர் நபியே யாமு மிவர்மனை வியரே யென்னக் கருந்தடங் கண்ணா ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார். | 1.10.46 | 643 |
படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியு நிகரொவ் வாத வடிவெடுத் தனைய வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங் கடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண் பிடிநடைக் கதிஜா வென்னும் பெடையென முறைந்த தன்றே. | 1.10.47 | 644 |
தம்மனத் துறைந்த காத றனைவௌிப் படுத்தி டாமற் செம்மலு மிருந்தார் மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர் மும்மதம் பொழியு நால்வாய் முரட்கரி யபித்தா லீபு விம்மிதப் புயம்பூ ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார். | 1.10. 48 | 645 |
தெரிதரத் தௌிந்த சிந்தைத் தேமொழி கதிஜா பாலில் விரைவினிற் சென்று செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ மருளொடு மீந்தா ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம் வரையற விலையென் றோதில் வருகுவம் வருக வென்றார். | 1.10.49 | 646 |
உரைத்திடுந் தந்தை மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி விரைத்தகாக் குழற்க தீஜா மெல்லிழை நினைவு நெஞ்சும் பொருந்திய வகத்தி னூடு புக்கிடத் திருவாய் விண்டு கரைத்தனர் நாளைக் காண்போங் கருதிய கரும மென்றே. | 1.10.50 | 647 |
வேறு மருக்கொள் பூதரப் புயநபி முகம்மது விருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர கருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை 1.10.51
| 648 |
நிறையும் வானக மலர்தரு முடுவின | கறையி லாக்கலை முழுமதி மடிமிசை மறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி குறைவி லாதுரத் துடனணைக் கவுமகங் 1.10.52
| 649 |
கண்ட காரண மாதுல னெனவரு | விண்டு கூர்த்திடப் பார்த்தனன் றௌிந்திவர் வண்டு லாம்புய நபியுனை யிதமுற குளிர்ந்திருந் திடுநேரம். 1.10.53
| 650 |
மதும மார்த்தெழு புயவபித் தாலிபு | விதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன் புதுமை யாய்நடந் தணிநில வெறித்திடப் சுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர் 1.10.54
| 651 |
இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந் | சொரியு மென்கதி ராதனத் திருத்திநந் வரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ தெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர் 1.10.55
| 652 |
இந்த மாநிலத் தொருநிதி யேயென | சுந்த ரப்புய னப்துல்லா வெனதுறு மைந்த ரிங்கிவர் மனத்திருள் கெடவொரு சிந்தை நேர்ந்திவ ணடைந்தன ருமதுரைத் 1.10.56
| 653 |
சிறிது பொன்னென திடத்தினி லளித்திடிற் | யுறுதி ஷாமினுக் கேகியிங் கடைகுவ வறிய வர்க்கொரு மணநிறை வேறிடு தறுதி யில்லெனி லதுதுவுநன் றெனவபித் 1.10.57
| 654 |
நிரைத்த செவ்வரி பரந்தகட் கடைமயி | புரைத்த வார்த்தையுந் தம்ம்னக் கருத்தையு திரைத்த டத்தலர் மரையென முகமலர் வருத்த மின்னினை வின்படி முடிந்தென 1.10.58
| 655 |
பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு | மாத வத்தினென் பொருளுள தெவையுநின் மாத ரத்துறு மொழிவழி நடப்பதற் காத லித்துரைத் தார்விரைத் தார்குழற் 1.10.59
| 656 |
இனிய வாசக மிருதுளைச் செவிபுக | துனிப றந்தன வுவகையும் பிறந்தன தனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு வனச மென்மலர் முகமலர்ந் திருந்தனர் 1.10.60
| 657 |
கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன | தடிசி லும்மறு சுவைப்பொரிக் கறிகளு வடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன் யிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ 1.10.61
| 658 |
அனம ருந்திய வரசர்க டமைமணி | நனைத ருந்துவர்க் காயிலை பாளித புனையு மென்றுகிற் கஞ்சுகி சிரத்தணி சினவு வேல்விழி பொருள்கொடு வருகென 1.10. 62
| 659 |
ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு | மூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர் நீடி லக்கநூ றயிரத் தொன்பதி மாடை தானெடுத் தீந்திடக் கொண்டனர் 1.10.3
| 660 |
கொடுத்த தங்கம லாற்பெரும் ஷாமெனக் | வெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு விடுத்த கப்பரி வாரத்தி லுரியவர் தொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந் 1.10.64
| 661 |
வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம் | நெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு நடையி லோர்பகற் கொருபதின் காவத கடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர் 1.10.65
| 662 |
மல்ல லம்பிய புயமுகம் மதுநபி | செல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச் மெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை வில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல் 1.10.66
| 663 |
இவையெ லாநபிக் களித்த பினேவலி | நவைய றத்தம தருகினி லிருத்திவெண் புவியி னின்னிலு மெனக்குரி யவரிலைப் மவய வந்தனைக் காப்பவர் போனபிக் 1.10.67
| 664 |
ஏகும் பாதையிற் பண்டித னொருவனுண் | வாக னெம்மினத் தவரிலு முரியவன் நீக ருத்துட னெனதுச லாமையு மோக முற்றியான் கண்டிடுங் கனவினை 1.10.68
| 665 |
பாதை யுற்றிடுஞ் செய்தியு மிவர்க்கிடர் | வாதை யுற்றிடு வருத்தமுங் காரணத் போதி னிற்பெரும் புதுமையு மிங்கிவர் சூதர் தம்மொடு மிருப்பது மினமெனச் 1.10.69
| 666 |
இற்றை நாட்டொடுத் தந்நகர்க் கேகியிங் | யற்றை நாளைக்குங் கண்டிடுங் காரண ஒற்றர் தம்வயி னெழுதியுங் கனுப்பியென் குற்ற மில்லதோர் நபியுடன் வருகென 1.10.70
| 667 |
இத்தி றத்துரை பகர்ந்தன ரழகொளி | மத்த கக்கட கரிமுகம் மதினெழின் யுத்த ரப்படிப் பணிகுவ னவரையென் முத்தி ரைப்படி வருகுவன் காணென 1.10.71
| 668 |
முருகு லாங்குழன் மயிலபித் தாலிபு | யரசர் நாயக நின்மனைக் கெழுகென பரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப் றெரித ராமுகம் மதுநபி யாத்திரைத் 1.10. 72
| 669 |
கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய | மேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண் சான்ற பேர்கட மனத்ததி சயமுறத் தோன்ற றோன்றின ரணிமணி மறுகிடைச் 1.10.73
| 670 |
அருந்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட | திருந்தி லாமனத் தபுஜகி லொடுங்கலை பொருந்தக் கூடிய மாக்களி மிடபமும் வருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும் 1.10.74
| 671 |
ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு | தேற றூற்றிய சோலையு மரம்பையின் கூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச்சிறு சாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ் 1.10.75
| 672 |
கடந்து காவத நடந்தொரு பொழிலிடை | மிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன விடிந்த காலையின் முன்னிலை யெவரென மடைந்த பேர்களின் முகம்மது முதலென 1.10.76
| 673 |
முகம்ம தென்றுரை கேட்டலு மபுஜகில் | மிகமு னிந்தன னிவர்தமை முன்னிலை திகழெ னப்பலர் கூறவுங் கேட்டில றகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி 1.10.77
| 674 |
ஒட்டை மீதினில் வருன்பொழு தவ்வழி | கட்டை தட்டிட வொட்டையுஞ் சாய்ந்தொரு முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் கொட்டி னானெழுந் தானபு ஜகிலெனுங் 1.10.78
| 675 |
உதிரங்கொப் பளித்து முகமழிந் துடைந்தான் | நிதமுரைத் ததனா லபுஜகி லினமு றதிர்தர வுரைத்துப் பல்லருங் கூண்டிவ் மதுரமென் மொழியா னுத்பா வலது 1.10.79
| 676 |
கூறுமென் மொழியா னுத்பா வென்னுங் | தூறடை நெறியுஞ் சிறுபரற் றிடருந் யாறிடை வீழ்ந்தான் முன்னிலை யிளவ 1.10.80
| 677 |
நிலமிசை கலங்கி யுத்துபா வீழ | யலைபடப் பிடித்தங் கடவியி னடைய செலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத் பலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப் 1.10.81
| 678 |
ஆய்ந்தபே ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங் | வாய்த்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார் வேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி சாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான் 1.10.82
| 679 |
அலரிவெண் டிரைமே லெழுந்தனன் கீழ்பா | நிலைதளர்ந் திருந்த வுத்துபா வென்போ தலைவரை வேறு நிறுத்துமென் றுரைத்த யிலைமலி வேலா னாசெனுங் குரிசின் 1.10.83
| |
680 |
முன்னிலை யாசு நடந்திட நடந்து றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற் யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண பன்னரும் பாதைத் தலைதடு மாறப் 1.11.1 | | 681 |
மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப் செட்டரு மெருதும் புரவியு மிடைந்து மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி 1.11.2
| 682 |
ஆசெனு மரச னொட்டகக் கயிற்றை | வாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும் தேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல் வீசிய கானற் சுடச்சுடக் கருகி 1.11.3
| 683 |
பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப் | தன்னகங் களித்து வடவையின் கொழுந்து பன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட வுன்னதக் ககன முகடற வுருக்கு 1.11.4
| 684 |
பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும் | கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங் மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந் மருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங் 1.11.5
| 685 |
பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற் | சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர் காலறத் தேய்ந்த பலகலை மேலோர் 1.11.6
| 686 |
கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க் | புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள் முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள் 1.11.7
| 687 |
மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப | யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ 1.11.8
| 688 |
சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து | காந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு மாந்தரு மாவுந் திசைதடு மாறி யேந்தெழில் கருகி மனமுடைந் துருகி 1.11. 9
| 689 |
மன்னவ னாக முன்னடந் ததற்கோர் | வின்னைநா ளகில மடங்கலுந் தழலா முன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த பன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம் 1.11.10
| 690 |
பாடுறு புனலறத் றொவ்வொரு காதம் | மோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட் வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின் தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ 1.11.11
| 691 |
ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த | வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும் பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப் தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத் 1.11.12
| 692 |
பாலையி லடைந்து பசியினா லிடைந்து | வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும் கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங் சாலவு முரைத்தா னீதியை வெறுத்த 1.11.13
| 693 |
மூரிவெற் பனைய புயமுகம் மதுவை | தாரையிற் செலுநம் மிடர்களுந் தவிருந் வேரியங் கமல வாவியங் கரையாம் றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா 1.11.14
| 694 |
ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா | பாதையி னடப்பப் பெரியவ னருளின் பேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப் றீதற நெறியுங் தெரிந்தன நான்கு 1.11.15
| 695 |
தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச் | நிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது 1.11.16
| 696 |
மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து | கந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின் சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித் சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச் 1.11.17
| 697 |
ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி | தேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத் வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ் 1.11.18
| 698 |
வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும் | பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப் சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச் குற்றமி னதியி னிருகரை மருங்குங் 1.11.19
| 699 |
நானமும் புழுகும் பாளிதக் குலமு | தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட யூனமி னதிய னொருகைநீ ரருந்தி யானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங் 1.11.20
| |
700 |
கனலுண்ட கடுஞ்சுர மீதுநறும் புனலுண்டு பொருந்தின ரவ்வுழையின் சினமுண்டெழு செங்கதிர் பொங்குமிரு ளினமுண்டு குணக்கி லெழுந்ததுவே. | 1.12.1 | 701 |
மருதங்கள் கலந்த வனத்திலிருந் தெருதும்பரி யும்மெழி லொட்டகமும் பெருகுந்திர ளும்படி பின்செலவே வரதுங்க முகம்ம தெழுந்தனரே. | 1.12.2 | 702 |
வடிவாலொளி வீசிய வானவர்கோன் படிமீதுறு பாதையின் முன்செலவே நெடியோனபி பின்செல நீணெறியிற் கடிமார்பர் கலந்து நடந்தனரே. | 1.12.3 | 703 |
கானந்தனி லேகிய காலையினிற் றானந்தரு தாரை தனைத்தெரியா தீனந்தரு வல்லிரு ளெய்திநெடு வானுந்தெரி யாது மறைத்ததுவே. | 1.12.4 | 704 |
இருள்கொண்டு பரந்திட யாவருமோர் மருள்கொண்டவர் போல மயங்கினரா லருள்கொண்ட முகம்மது மன்புறவே தெருள்கொண்டு நடந்தனர் செல்வழியே. | 1.12.5 | 705 |
கொடுவல்லிரு ளுண்டு கொழுங்கதிர்பைங் கடலந்தரை மீதெழு காரணமுற் றிடருந்தவி ரும்மிவ ராலெனவே மடனெஞ்சமி லாது மகிழ்ந்தனரே. | 1.12.6 | 706 |
மருமிக்க புயத்தெழில் வள்ளலுடன் கருமத்தொழில் காரரு மற்றவரு மொருமித்து நடந்துறு வாவெனுமோ ரருவிக்கரை மேவி யடுத்தனரே. | 1.12.7 | 707 |
வண்டார்பொழி லார்வரை யூடருவி யுண்டார்சில ருண்கிலர் காணெனவே கண்டார்நபி வல்லவ னைக்கருதிக் கொண்டார்புன லுங்குதி கொண்டதுவே. | 1.12.8 | 708 |
அளித்தானுண நீர்கிடை யாதகரை யுளித்தானிலை யாதிட வோடுபுனற் குளித்தார்குடித் தார்மகிழ் கொண்டுடலங் களித்தாடி நடந்தனர் காளையரே. | 1.12.9 | 709 |
மகிழ்கொண்டு நடந்த வனந்தனிலே துகடுன்றி விசும்பு துடைத்திடவே நிகழ்கின்ற நெடுந்தொலை சென்றதின்மே லுகழ்கின்றொரு வன்வர வுற்றனனே. | 1.12.10 | 710 |
கையோடிரு காலு நடுங்கிடவே வையோடிய வேர்வைகள் சிந்திவிழ வையோவிதி யோவென வாயலறி யுய்வாறினி யேதென வோதினனே. | 1.12.11 | 711 |
மயமாறிட வாய்குழ றிக்குழறித் துயரோடுற வந்து சுழன்றவனை வயவீரர்கள் கண்டுன் மனத்திலுறும் பயமேதுகொ லென்று பகர்ந்தனரே. | 1.12.12 | 712 |
சினமுண்ட செழுங்கதிர் வேலுடையீர் வனமுண்டரை நாழிகை யுள்வழியிற் கனமுண்டொரு காரண மாமலையி னினமுண்டு பருத்தெழு கின்றதுபோல். | 1.12.13 | 713 |
அரவொன்றுள தத்திரி யும்பரியுங் கரமொன்று கரித்திர ளும்மெதிரே வரவுண்டிடும் வாறலை நீளமதை யுரமொன்றி யுரைத்திட நாவரிதே. | 1.12.14 | 714 |
கண்ணின்கன லுங்கடை வாய்புரளப் பண்ணுங்கவை நாவொடு பற்களுறும் வண்ணந்தனை யோதிட வானவருந் துண்ணென்றுட லங்க டுணுக்குறுவார். | 1.12.15 | 715 |
திருகுஞ்சின மாயது சீறிவெகுண் டிருகுன்று கடந்தென தின்னுயிரைப் பருகும்படி வந்தது பாருமதோ வருமின்றது காணென மாழ்கினனால். | 1.12.16 | 716 |
அலைவுற்றவ னம்மொழி கூறிடலு நிலையற்றவர் நின்று நினைந்துநினைந் துலைவுற்றுட லங்க ளொடுங்கிமன மலைவுற்று மயங்கி வருந்தினரே. | 1.12.17 | 717 |
வந்தானுரை செய்தது மற்றவர்க ணொந்தாவி பதைத்திட நோக்கினரா லுந்தாதுறு பாதையி லொட்டகம்விட் டிந்தாரெழில் வள்ள லிறங்கினரே. | 1.12.18 | 718 |
அதிர்கொண்டது நாசியி லங்கியெழக் கொதிகொண் டுறுகோ பமதாயரவஞ் சதிகொண்டு நடந்தது தாரையிலென் றெதிர்கொண்டன ரெங்கண் முகம்மதுவே. | 1.12.19 | 719 |
அரிகண்டு வெகுண்டடல் வாயினைவிண் டெரிகொண்ட விழிக்கன லிற்றுவிழ விரிகின்ற படத்தை விரித்துவிடஞ் சொரிகின்ற தெனத்திசை தூவியதே. | 1.12.20 | 720 |
கழிகின்ற துரும்பொரு கைமுழமுண் டெழில்கொண்ட முகம்ம தெடுத்தெதிரெ வழிகொண்டதை வீசிட வல்லுடல மிழிகொண்டு திரங்க ளெழுந்தனவே. | 1.12.21 | 721 |
அடிபட்ட வித்திர ளத்தனையும் பொடிபட்ட துருண்டு புரண்டுவயின் மடிபட்டொரு கற்குவை வாயினிடைக் கடிபட்டது பட்டது கட்செவியே. | 1.12.22 | 722 |
வரைபோலுர கத்தை வதைத்ததுகண் டிரைவோடுபு கழ்ந்திவர் செங்கனிவா யுரையூடொழு கிச்செலு மென்றுவகைத் திரையூடு குளித்தனர் தேசிகரே. | 1.12.23 |
723 |
கட்செவி பகையறுத் தரிய கானகத் துட்படு மிடர்தவிர்த் தொளிரும் வள்ளலை வட்படும் வேலுடை மாக்க ளியாவரு நட்பொடு கலந்துட னடந்து போந்தனர். | 1.13.1 | 724 |
குறுபொறை கடந்துபோய்க் குவடு சுற்றிய சிறுநதி யாறுகள் கடந்து சென்றபின் மறுவுறு மதிதொடு மலையு மம்மலைப் பெறுமுறை யருவியும் பிறங்கத் தோன்றின. | 1.13.2 | 725 |
அம்மலை நதிக்கரை யடுத்துச் சீரிய செம்மலுந் சூழ்ந்தே சிகரு நீங்கிலாச் சும்மைகொண் டிறங்கிநீ ராடித் தூநறைப் பொம்மலுண் டரும்பகற் பொழுது போக்கினார். | 1.13.3 | 726 |
மதுப்பிலிற் றியமரை மலரின் கொள்ளையும் விதுக்கதிர் படத்தனி விரியுங் காவியு மெதிர்ப்பொடு களிப்புமா குலமு மெய்திடக் கதிர்க்கதி ரவன்குட கடற்கு ளாயினான். | 1.13.4 | 727 |
நீருறை பறவையின் குலமு நீடரு பாரினில் விலங்கின மியாவும் பண்ணறாக் காருறு சோலைவாய்ச் சுரும்புங் கண்படைத் தூர்வன வெவையுநல் லுறக்க முற்றதே. | 1.13.5 | 728 |
போதடைந் திருளெனும் படலம் போர்த்திட மாதவ ரெனுமுகம் மதுவு மன்னருந் தாதவிழ் நதிக்கரைத் தருவி னீழலிற் சோதிமா முகமலர் விழிக டூங்கினார். | 1.13.6 | 729 |
வனநதிப் பெருக்கெடுத் தெறிந்து மால்வரை தனையமிழ்த் திடவரு வதுகொல் சார்ந்தநும் மினமுட னெழுகவென் றிலங்கும் வள்ளறங் கனவினிற் ஜிபுறயீல் கழறிப் போயினார். | 1.13.7 | 730 |
மருப்பொலி புயமுகம் மதுதங் கண்விழித் தொருப்பட வெழுந்துழை யுற்ற பேர்க்கெலாம் விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்துநம் மிருப்பிடம் புரட்டுமீங் கெழுக வென்னவே. | 1.13.8 | 731 |
தெரிதர வுரைத்தசொற் றேர்ந்தி யாவரும் விரைவினிற் சோலைவாய் விடுதி நீங்கியே புரவியொட் டகம்பொதி பொருளுங் கொண்டணி வரையினுச் சியினிடை மலிய வைகினார். | 1.13. 9 | 732 |
படர்தரு திரைவயி றலைத்த பைம்புனற் கடலிடை குளித்துச் செங்கதிர்க் கரங்களா லடைபடு மிருட்குல மறுத்துப் போக்கியே சுடரவ னுதயமா கிரியிற் றோன்றினான். | 1.13.10 | 733 |
அரிசினக் கொடுவரி யமிழ்ந்து போதரப் பொரியரைத் தருக்களைப் புரட்டிப் பொங்கிய நுரையிரு கரைகளு நுங்க மானதிப் பிரளய மிடனறப் பெருகி வந்ததே. | 1.13.11 | 734 |
குறவரைக் குறிஞ்சிவிட் டீழ்த்துப் பாலையின் மறவரை முல்லையி லாக்கி மாசுடைத் தொறுவரை நிரையொடுஞ் சுருட்டி வாரியே யறைபுனற் பெருக்கெடுத் தடர்ந்த தெங்குமே. | 1.13.12 | 735 |
கரைசுழித் தெறிந்துநீள் கயங்க ளாக்கின திரையெறி கயத்தினைத் திடர தாக்கின விரைகமழ் சோலைவே ரறுத்து வீழ்த்தின வரைகளைப் பிடுங்கின மலிந்த நீத்தமே. | 1.13.13 | 736 |
கரைபுரண் டுள்ளகங் கலித்துக் கானிடைத் திரவியந் திரைக்கரத் தெடுத்த்ச் சிந்தியே குரைகட லெனுநதி குரிசி னந்நபி மரைமல ரடிதொழ வந்த போலுமே. | 1.13.14 | 737 |
மானதி பெருகியெவ் வரையுஞ் சுற்றிய நானிலத் திசைநெறி நடப்ப தின்மையாற் றானவன் றூதொடு சார்ந்த மன்னரு மீனமின் மூன்றுநா ளிருந்து நோக்கினார். | 1.13.15 | 738 |
மலைமிசை மூன்றுநா ளிருந்து மானதி யலைதெடுத் தெறிந்துயர்ந் தடர்ந்த தல்லது நிலைதரக் காண்கிலோ மென்ன நீண்டசஞ் சலமெனுங் கடற்குளாய்த் தவித்து வாடினார். | 1.13.16 | 739 |
மனத்தினிற் றுன்புற வருந்தி மாழ்கிய வினத்தவ ரியாரையு மினிதி னோக்கியே கனத்தமைக் குடைநிழல் கவின்பெற் றோங்கிய நனைத்துணர்ப் புயத்தவர் நவில லுற்றனர். | 1.13.17 | 740 |
இற்றைநா ளிரவிவ ணிருந்து கண்டுநா மற்றைநாட் போகுவம் வருந்த லென்றனர் வெற்றியும் வீரமுந் தவத்தின் மேன்மையு முற்றிய மாட்சியா ரலங்கன் மொய்ம்பினார். | 1.13.18 | 741 |
இருகரை களுந்தெரிந் திலவிம் மானதி பெருகுவ தடிக்கடி பேது றாதுபி னொருமொழி யுரைத்தவ ருளத்தின் பெற்றியைத் தெரிகிலோ மெனமனந் தேம்பி னாரரோ. | 1.13.19 | 742 |
அவ்வுழி ஜிபுறயீ லடைந்து கண்டுயில் செவ்விநேர் முகம்மது கனவிற் செப்பினா ரிவ்விருள் விடிந்தபி னெழுந்து முன்னரோர் நவ்விதோன் றிடும்வழி நடத்தி ரென்னவே. | 1.13.20 | 743 |
மனமுற ஜிபுறயீல் வந்து சொல்லிய கனவினைச் கண்டகங் களித்துக் கண்ணிணை யினைவிழித் தெழுந்தன ரெழுந்த காலையிற் றினகர னெழுந்தனன் பரந்த செங்கதிர். | 1.13. 21 | 744 |
வரைபுரை புயமுகம் மதுமன் மாவொடு நிரைநிரைத் தொறுவையு நடத்திர் நீவிரென் றுரைசெய்தி பெருக்கெடுத் தோங்கு மானதிக் கரையினின் மரைமலர்க் காலி னேகினார். | 1.13.22 | 745 |
ஒட்டகம் புரவிமற் றுள்ள பேர்களு மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிடத் தொட்டவெண் டிரைக்கட லகடு தூர்த்திட முட்டிய புன்னதிக் கரையின் முன்னினார். | 1.13.23 | 746 |
அள்ளிய பொன்னெடுத் தமைத்து வெள்ளியாற் புள்ளிக ளணியணி பொறித்து வைத்தன வொள்ளிய மெய்யழ கொழுக வொல்லையிற் றுள்ளிய வுழையுழை யிடத்திற் றோன்றிற்றே. | 1.13.24 | 747 |
நதியிடை வந்துமா னடப்பக் கண்டுமா மதிநிகர் முகம்மது மனத்தி லின்பமுற் றிதமுற நடந்துபி னேக யாவரும் புதுமைகொ லிதுவெனத் தொடர்ந்து போயினார். | 1.13.25 | 748 |
உடற்பொறிப் புள்ளிக ளொளிர முன்செலு மடப்பிணை பின்செலு மக்க ளியாவர்க்குங் கடற்பெருக் கெனக்கரை கடந்து வீங்கிய தடப்பெரு நதிமுழந் தாட்கு ளானதே. | 1.13.26 | 749 |
பெருகிய பிரளயப் பெருக்கைப் போக்குதற் கொருவனே யலதுவே றிலையென் றுன்னியே தெருளுறச் செல்குநர் செல்க வென்றனர் வரையிரண் டெனுமணிப் புயமு கம்மதே. | 1.13.27 | 750 |
இம்மொழி நன்கென விசைந்தி யாவருஞ் செம்மலோ டினிதுறச் செல்லுங் காலையில் விம்மிதப் புயநபி விரித்த வாசகஞ் சம்மதித் திலனொரு தறுக ணாளனே. | 1.13.28 | 751 |
புந்தியிற் புத்தினைப் புகழ்ந்து போற்றித்தன் சிந்தைவைத் தவ்வுழைச் செல்லும் போழ்தினி லுந்தியின் றிரைசுழித் துருட்டி யீழ்த்திட நந்தினா னபியுரை மறுத்த நாவினான். | 1.13.29 | 752 |
விதியவன் றூதர்சொன் மேவி லாதவ னதியினி லிறந்தன னடுக்க மின்றியே யிதமுற வுண்மைகொண் டிசைந்த பேர்முழுக் கதிபெறு பவரெனக் கரையி லேறினார். | 1.13.30 | 753 |
சிந்துவின் றிரைப்பெருக் கெறியத் தீதிலா நந்தியத் திரிபரி யாவு நன்குற வந்தவை முகம்மதின் பறக்கத் தாலெனத் தந்தம ரொடுபுகழ்ந் தெடுத்துச் சாற்றினார். | 1.13.31 |
754 |
படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக் கடந்து கான்பல கடந்தரு நெறிசெலுங் காலை கொடுந்த டக்கரித் திரெளுனுங் குழுவினு ளொருவ நடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால். | 1.14.1 | 755 |
நிகழுந் தாரையிற் காவதத் துள்ளுறை நெடுநீ ரகழி போன்றவோ ரோடையுண் டதனினுக் கணித்தாய்ப் புகலு தற்கரி தடவியுண் டவ்வுழிப் பொருந்தி யுகளு மாங்கொரு பாதகக் கொடுவரி யுழுவை. | 1.14.2 | 756 |
நீண்ட வானிலம் புடைத்திடக் கிடந்துட னிமிர்ந்து கூண்ட கான்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்பப் பூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ வீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடு மிருக்கும். | 1.14.3 | 757 |
நிரம்பும் வள்ளுகிர் மடங்கலி னினங்களி னிணமுண் டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட் டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினு மலறும். | 1.14.4 | 758 |
அதிர்ந்தி டுந்தொனி செவியுற வடவியி லடைந்த முதிர்ந்த மேதியுங் கவையடிக் கேழலு முழுதும் பொதிந்த மெய்மயி ரெண்கினங் களுமரைப் போத்தும் பதிந்த காறடு மாறிட வீழ்ந்துடல் பதைக்கும். | 1.14.5 | 759 |
புறந்த யங்குமஞ் சிறையறு பதப்பொறிச் சுரும்பு திறந்து தேனையுண் டணிதிகழ் தொடையணி திறலோய் மறந்த யங்குவேன் மாந்தரவ் வேங்கையின் வாய்ப்பட் டிறந்த தன்றியொட் டகம்பரி யெண்ணிலக் கிலையே. | 1.14.6 | 760 |
என்ற வாசகஞ் செவிபுக வெழிலிரு புயமுங் குன்று போலுற வீங்கின முறுவல்கொண் டிடராய் நின்ற வேங்கையெவ் வுழியென நிகழ்த்தின ரவனும் வென்றி வாளர சேயணித் தெனவிலம் பினனே. | 1.14.7 | 761 |
இலங்கு செங்கதிர் வேலொரு கரத்தினி லேந்தி நிலங்கொ ளப்பரந் தரியமெய் யொளிபுடை நிலவ நலங்கொள் குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தா ருலங்கொ டோண்முகம் மதுபுலி யுறைநெறி யுழையில். | 1.14.8 | 762 |
மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம் பூத ரப்புய மசைதரப் புளகிதத் தோடுங் காது செங்கதிர் வேல்வலக் கரத்திடை கவின வீதி வாய்வரக் கண்டது பெருவரி வேங்கை. | 1.14.9 | 763 |
கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக் கொண்டு மென்மெல நட்ந்துதன் பெருஞ்சிரங் குனிந்துத் தண்ட ளிர்ப்பதத் தெரிசனைக் கெனச்சலா முரைத்துத் தெண்ட னிட்டது வள்ளுகிர் திண்டிறற் புலியே. | 1.14.10 | 764 |
நலன்பெ றுங்குறை ஷிகளினில் வந்த நாயகமே நிலம்ப ரந்துதீன் பெருகிட வெழுந்தநீ ணிலவே புலன்க ணின்புறக் கண்டனன் களித்தனன் பொருவில் பலன்பெ றும்படி யாயின னெனப்பகர்ந்து ததுவே. | 1.14.11 | 765 |
வந்து தெண்டனிட் டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப் புந்தி கூர்தரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை மந்த ராசல் முகம்மது நனிமன மகிழ்ந்து சந்த மென்மணிக் கரத்தினாற் சிரமுகந் தடவி. | 1.14.12 | 766 |
இன்று தொட்டிவ ணெறியினி லுயிர்செகுத் திடுவ தன்று வெறொரு காட்டினிற் புகுகவென் றறைந்த மன்ற றுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை. | 1.14.13 | 767 |
படுகொ லைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத் தடிவ ணங்கிய காரண வதிசய மதனா லுடைய வன்றிருத் தூதரே யுண்மையென் றுன்னித் திடமு டைத்தநெஞ் சாயின ரறிவினிற் றௌிந்தோர். | 1.14.14 |
768 |
வேங்கை போயபின் வள்ளலு மனைவரும் விரைவிற் றாங்க ருஞ்சுமை யொட்டகம் புரவியுஞ் சாய்த்து நீங்க ரும்பரற் கானையா றுகளையு நீந்தி யோங்க லுஞ்சிறு திடர்களுங் கடந்துட னடந்தார். | 1.15.1 | 769 |
துன்று மென்மதி முகந்துலங் கிடவெகு தூரஞ் சென்ற பிற்றையிங் கிவர்களி லொருவர்செப் பினராற் குன்று தோன்றுவ ததன்கிழக் கொருகுவ டடுப்ப வன்றி றற்கொடும் பாந்தளுண் டவண்வழிக் கெனவே. | 1.15.2 | 770 |
பாந்த ளொன்றுள தெனுமொழி செவிபுகப் பசுந்தேன் மாந்தி வண்டிசை பயிலுமொண் டார்ப்புய வள்ளல் கூந்தன் மாவுடன் பின்னிட வருகெனக் குழுவை நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின். | 1.15.3 | 771 |
சீத வொண்புனற் குட்டமுந் துடவையுஞ் செறிந்த பாதை நீந்தியங் கொருகுவ டடியினிற் படரக் கோது கோடைமா ருதமுயிர்த் துணங்குகுன் றனைய தீது றுங்கொலைப் பாந்தளைக் கண்டனர் திறலோர். | 1.15.4 | 772 |
கண்க ளக்கினிக் குவையெனப் பொருதிசை கதுவ மண்க ளெங்கணு மிருளுற நச்சுமா சுமிழ்ந்து விண்கொ ளும்பிறைக் கீற்றென வெள்ளெயி றிலங்கப் புண்கொ ளுங்கடை வாய்கவை நாவிடை புரள. | 1.15.5 | 773 |
புள்ளி வட்டவெண் பரிசைக ளெனவுடல் போர்ப்பத் தள்ளி வாலசைத் திடுதலிற் றரையிடம் பிதிர்த்திட் டள்ளி விட்டெறிந் தெனத்திசை திசைதுக ளடைய விள்ள ருஞ்சிரச் சூட்டொரு கதிரினும் விளங்க. | 1.15.6 | 774 |
கண்டு தம்மனத் திடையினி லொருபயங் கரஞ்சற் றுண்ட தில்லைகொ லென்னவந் துதித்தவந் நொடிக்கு ளண்டர் போற்றிய முதலிறை யவன்றிரு வருளாற் கொண்டு சத்தமொன் றெழுந்தது குவலயங் குலுங்க. | 1.15.7 | 775 |
முகம்ம தேயும தடியிணை காணவிவ் வழியி னிகரில் வாளர வடைந்தது பயங்கர நினையா தகம கிழ்ந்திடச் செலுமென வரசர்கோன் களித்துப் புகர றத்தினி நடந்தடுத் தனர்புயங் கனையே. | 1.15.8 | 776 |
இரந்து மூச்சொடுங் கிடந்தகட் செவிதலை யெடுத்து விரிந்தெ ரிந்தகட் கடையினான் முகம்மதை விழித்துத் தெரிந்து நோக்கிநம் மிறையவன் றூதெனத் தௌிந்து வருந்து துன்பமின் றொழிந்தன மெனமகிழ்ந் ததுவே. | 1.15.9 | 777 |
மலைகி டந்துயர்ந் ததையென விரிந்தவாய் பிளந்து தலையெ டுத்துநா விரண்டினா லொருசலாஞ் சாற்றி நிலைய சைந்தொளி நெட்டுடல் குழைந்திட நௌிந்து பலபொ றிப்படந் தரைபடப் பணிந்துபின் பகரும். | 1.15.10 | 778 |
கோல வார்கழற் குரிசில்நும் மடிக்கொழுங் கமலத் தால னேகமென் போலஃறி ணைக்கொடுஞ் சாதி சீல மேவிய பதமுறு மென்பதைக் தௌிந்தெக் காலங் காண்குவ னெனக்கிடந் தனனெடுங் காலம். | 1.15.11 | 779 |
பிறந்த நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குநும் பெயரை மறந்தி ருந்தநா ளறிகில னினைக்கிலென் மனத்தி லிறந்தி டாமுன மின்றுகண் டிடும்பல னெனைப்போ லறந்த வம்புரிந் தவர்களும் பெறுவதற் கரிதால். | 1.15.12 | 780 |
ஆதி நாயகன் றிருவொளி வினிலவ தரித்த வேத நாயக மேயுமைக் கண்டதால் விளைத்த பாத கம்பல தவிர்த்துமுற் பவங்களை யறுத்துத் தீதி லாதநற் பதவியும் படைத்தனன் சிறியேன். | 1.15.13 | 781 |
என்று கூறியிம் மலரடி யிணையினை யௌியே மென்று காண்குவ மோவென வயர்ந்துடைந் தெண்ணி யென்று மின்றுபோற் காண்குவ மெனமனத் திருத்தி யென்றுந் தீன்பயிர் விளங்குற வாழியென் றிசைத்தே. | 1.15.14 | 782 |
பணிப ணிந்தெனக் கெவைபணி விடையெனப் பகர வணிய ணிந்தெனச் செவியுறக் கேட்டதி சயித்து மணிகி டந்தொளிர் புயவரை விம்முற மகிழ்ந்தார் திணிசு டர்க்கதிர் வேல்வல னேந்திய திறலோர். | 1.15.15 | 783 |
பொருப்பி டத்தினு மடவிக ளிடத்தினும் புகுந்து விருப்பு றும்படி வாழ்வதல் லதுநெறி மேவி யிருப்பி னின்வயி னிடர்வரு மெனவெடுத் திசைத்தார் சுருப்பி ருந்துதே னிடைதவழ் தொடையணி தோன்றல். | 1.15.16 | 784 |
ஒடுங்கித் தெண்டனிட் டுறைந்திட மிகழ்ந்தொரு மருங்கி னெடுங்கி ரிப்புறந் தவழ்ந்தென வுடறனை நௌித்து மடங்கல் வெங்கரி கொடுவரி யடவியின் மறைந்து நடுங்கி டத்தனி போயது பெருந்தலை நாகம். | 1.15.17 | 785 |
நாக முற்றதுங் கிடந்ததும் பாதையி னயினார் பாக முற்றுமெய் வணங்கிநன் மொழிசில பகர்ந்து போகை யென்றதிற் போயதும் புதுமைகொ லெனவே யாக முற்றதி சயித்தன ரனைவரு மன்றே. | 1.15.18 |
786 |
எரிந்த கட்பொறி யரவுவந் துறையிட மிவணே யருந்த வப்பொருண் முகாது மடையிட மிவணே தெரிந்து காண்பதற் கிவையிவை குறியெனச் சேர்த்தி விரிந்த தம்பெருங் குழுவுட னடந்தனர் விறலோர். | 1.16.1 | 787 |
பரல்ப ரந்திடந் துகளெழப் படுமுனைத் திரிகோட் டிரலை மென்பிணை கன்றுடன் றிரிந்தகா னேகி விரித லைச்சிச்று முள்ளிலைச் செங்குலை விளைந்த கரிய மென்கனி சொரிதரும் பொழிலையுங் கடந்தார். | 1.16.2 | 788 |
ஈத்தம் பேரட விகள்பல கடந்தய லேகப் பூத்த மென்மலர் செறிதரு பொழில்புடை சூழ வாய்த்த நற்குடிப் பெயருடன் வழியிடை நெடுநாட் காத்தி ருந்தபண் டிதன்மனை தெரிதரக் கண்டார். | 1.16.3 | 789 |
வேறு இரைதரு வாரி யேழு மெடுத்துவாய் மடுத்துண் டோடிச் சொரிதரு மேகம் போலச் சொல்லுமெய்ம் மறைக ளென்னுங் கரையில்வா ருதியை யுண்டு கருத்தினி லிருத்தி யார்க்குந் தெரிதர வறிவு மாரி பொழிந்திடத் திறகும் வாயான். | 1.16.4 | 790 |
ஆதமே முதலீ றாக வருநபி யவர்கட் கெல்லாம் பேதமொன் றின்றி வந்த பெருவர மறையின் றீஞ்சொ லோதிய முறைமை யந்தா ளொழுகிய வொழுக்க மிந்நாண் மாதவர் குறிப்புந் தேர்ந்து வகுத்தெடுத் துரைக்கும் வாயான். | 1.16.5 | 791 |
பல்வித நூலிற் றேர்ந்து பலசம யங்க ளாகச் செல்வழி யனைத்து நோக்கிச் சென்றுமட் டறுத்துத் தேறிக் கல்பினி லிருத்தி மாறாக் கதிப்பதி சேர்க்குந் தூய நல்வழி தெரிந்து காண நடுவெடுத் துரைக்கு நாவான். | 1.16.6 | 792 |
அறிவுநல் லொழுக்கம் வாய்மை யன்புறு மிரக்க மிக்கப் பொறைதவங் குணம்வ ணக்கம் பொருவிலா சார மேன்மைத் திறநிறை யருணன் மானந் தேர்ச்சியிற் றௌிந்த கல்வி குறைவறப் பெருகி நாளுங் குடிபுகுந் திருந்த நெஞ்சான். | 1.16.7 | 793 |
தருந்தரு வனைய செங்கைத் தனபதி யிசுறா வென்னும் பெருந்தவ முடைய வள்ளல் பிறங்கொளி தவழு மாடத் திருந்தன னிருந்த போதி லெழுகதிர் துகளான் மூடிப் பரந்திடும் வரவு நோக்கிப் பார்த்ததி சயித்து நின்றான். | 1.16.8 | 794 |
மெய்த்தவம் பொருந்து மக்கா புரத்துறு வேந்தர் கொல்லோ பத்திவிட் டொளிர்ஷா மென்னும் பதியுடைத் தலைவர் கொல்லொ முத்தவெண் மணியிற் றோன்று முகம்மதின் வரவு கொல்லோ வெத்தலத் தவரோ விங்ங னெதிர்ந்தவ ரென்று நின்றான். | 1.16.9 | 795 |
ஒட்டகம் புரவி தூர்த்திட் டுறுதுக ளுதயன் மாய மட்டறப் பொலிந்து தோன்றி வருமவர் தமக்கு மேலா யிட்டதோர் கவிகை மேக மெழிலுறத் துலங்கக் கண்டு கட்டிய மாலைத் திண்டோள் கதித்தெழப் புளகம் பூத்தான். | 1.16.10 | 796 |
வேதவா சகத்தி லீசா விளம்பிய வசனந் தேர்வான் கோதறு கரிய மேகக் குடைநிழ றொடர்ந்து வந்த பாதையோர் தம்மை நீங்காப் பரிவினை நோக்கி நோக்கித் தீதறு முகம்ம தென்னத் தௌிந்தனன் செவ்வி யோனே. | 1.16. 11 | 797 |
கருந்தடங் கவிகை வள்ளல் வரவுகண் களித்து நோக்கி யருந்தவம் பெற்றே னின்றென் றருகிருந் தவனைக் கூவி விருந்திவ ணருந்தி நந்தந் துடவையில் விடுதி யாக விருந்தவ தரித்துப் போமி னெனவெடுத் தியம்பு கென்றான். | 1.16.12 | 798 |
என்றவ னுரைப்பக் கேட்டங் கெழுந்தனன் பாதை யோர்முன் சென்றனன் விரைவின் வந்த தேசிகர் தம்மை நோக்கி மின்றவ ழலங்கல் வேலிர் சோலைவாய் விடுதி யாகிச் சொன்றியுண் டெழுக வென்னச் சொல்லினன் முதியேர னென்றான். | 1.16.13 | 799 |
விருந்தெனு மாற்றங் கேட்டு மெய்மகிழ்ந் தராகம் பூரித் திருந்தனர் விரிந்த காவி லிடபமத் திரிமா வெல்லா மருந்தின குளகு நீருண் டவ்வயி னுறைந்த பின்னர் திருந்திய பண்ட மியாவுஞ் செறித்தொரு புறத்திற் சேர்ந்தார். | 1.16.14 | 800 |
மறந்தலை மயங்குஞ் செவ்வேற் கரமுகம் மதுதாம் வந்தங் குறைந்திடத் தருக்க ளியாவுந் தளிர்த்தன வொண்பூக் கோட்டி னிறைந்தன வீன்ற பைங்காய் நெருங்கின கனிக ளெங்குஞ் சிறந்தன தேம்பெய் மாரி சிந்தின திசைக ளெல்லாம். | 1.16.15 | 801 |
மறைதெரி இசுறா வென்போன் முகம்மது தமக்கன் பாக முறைவிருந் தளிக்கு முன்ன முகிழ்நனி தருக்க ளெல்லா நிறைமலர்த் தலைகள் சாய்த்து நீண்டமென் றளிர்க்கை தன்னால் வெறிநறாக் கனிகள் சிந்தி விருந்தளித் திட்ட வன்றே. | 1.16.16 | 802 |
விரிபசுந் டோடு விண்டு மென்முகை யவிழ்க்கும் பூவி னரியளி குடைந்து தேனுண் டகுமதின் புகழைப் பாட மரகதக் கதிர்விட் டோங்கு மணிச்சிறை விரித்து நீண்ட கரைகளிற் றருவி னீழற் களிமயி லாடு மன்றே. | 1.16. 17 | 803 |
மடலவிழ் வனச வாவி வைகையம் பதிக்கு வேந்த னடலுறை யபுல்கா சீம்தம் மருங்குடிச்செல்வம் போலப் புடைபரந் தலர்கள் சிந்திப் பொங்குதேன் கனிக டூவிச் சுடரவன் கதிர்க டோன்றாச் சோலைவாய் விளங்கிற் றன்றே. | 1.16.18 | 804 |
மருப்புகுஞ் சோலை வேலி நீழலில் வரவு மொட்டார் நெருப்புநீ ருப்பென் றாலு நினைத்தெடுத் தளிக்கி லாதார் பொருப்பென வுயர்ந்த செந்தேம் பொழிலிடைப் புகுந்து நந்தம் விருப்பொடு மிருப்பச் செய்தார் முகம்மதின் வியப்பீ தென்பார். | 1.16.19 | 805 |
சீதநீர் குடைவா ராடிச் செழும்பொழின் மலர்கள் கொய்வார் கோதறு கனிக டுய்ப்பார் கொழுந்தழை விலங்குக் கீய்வார் போதினி லமளி செய்வார் பூத்தொடுத் தணிந்து கொள்வார் மாதவர் முகம்ம திங்ஙன் வரப்பெறும் பலனீ தென்பார். | 1.16.20 | 806 |
கனிபல வருந்தித் துண்டக் கரும்படு சாறு தேக்கிக் குனிதலை யிளநீ ருண்டு கொழுமடற் றேனை மாந்தி நனிவயி றார்ந்தோம் பொய்யா நாவினன் மனையிற் புக்கி யினியெவர் விருந்துண் பாரென் றெழின்முக மலர்ந்து சொல்வார். | 1.16.21 | 807 |
இன்னண மியம்பிக் காவி லினிதுறைந் திருக்குங் காலைச் சென்னெறி வேத நன்னூ றௌிந்தறி யிசுறா வென்போன் றன்மனை விருந்துண் டேக வருகவென் றிருவர் சார்ந்திம் மன்னவர் தம்மைப் போற்றி மனங்களி குளிர்ப்பச் சொன்னார். | 1.16.22 | 808 |
மடிவுறு மனத்த னாகி வருமபூ ஜகுலென் றோதுங் கொடியவன் கவட மாயோர் சூழ்ச்சியைக் குறித்து நீண்ட கடிகமழ் சோலை வாயின் முகம்மதைச் சரக்குக் காக்கும் படியிருத் திடுக யாரும் பரிவுட னெழுக வென்றான். | 1.16.23 | 809 |
வஞ்சக னுரைத்த மாற்றங் கேட்டபூ பக்கர் மாழ்கி நெஞ்சகம் புழுங்கிச் சென்றார் நிரைமலர்த் தேனை மாந்திச் சஞ்சரி கங்கள் பாடுந் தண்டலை நீங்கி யாரும் விஞ்சையு மறையுந் தேர்ந்த வேதியன் மனையிற் புக்கார். | 1.16.24 | 810 |
மூதுரை வழிவ ழாதோன் முன்றில்வந் தவர்க ளோடுஞ் சீதவொண் கவிகை நீழற் காண்கிலன் றெருமந் தேங்கிப் பாதக ரிவரியா ரென்றன் பவக்கட றொலைய வந்த மாதவ ரிலையென் றெண்ணி வாடிய மனத்த னானான். | 1.16.25 | 811 |
மறந்திகழ் வேலீ ரிங்கு வந்தவ ரன்றிக் காவி லுறைந்தவ ருளரோ வென்ன வுறுவினைத் துடரை நீக்கித் துறந்தவ னுரைப்பப் பாவம் பகையொரு தொகையாய்க் கூடிப் பிறந்தபூ ஜகுலென் றோதும் பெயரினன் பெயர்ந்துஞ் சொல்வான். | 1.16.26 | 812 |
வடுக்கதிர் வேற்க ணங்கை மனைப்பொருட் பண்ட மற்று மடுக்கிய துணர்ப்பைங் காவி லகுமதென் றிருவ னல்லா லெடுக்கருந் த்வத்தின் மேலோ ரியாவரு மடைந்தோ மென்ன நடுக்கமொன் றின்றிச் சொன்னா னஞ்சுறும் வெஞ்சோ லானே. | 1.16.27 | 813 |
தீயினுங் கொடிய மாற்றஞ் செவிமடற் றுளையி லோடிப் போயது சிந்தை யூடு புகைந்திடப் புழுங்கிப் பொங்கி வாயினீர் வறந்து கண்ணில் வளர்தழற் கொழுந்து காட்டிக் காய்சின வேறு போன்றான் கவலுநூற் புலமை யோனே. | 1.16.28 | 814 |
சினத்தினை யடக்கித் தேறாச் சிந்தையைத் தேற்றி நந்த வனத்தினி லிருந்த செவ்வி முகம்மதைக் கொணர்க வென்ன நினைத்தவ னுரைப்பக் கேட்டங் காரிது நெடிதிற் புக்கிக் கனைத்துவண் டிருந்த தண்டார் ஹபீபுதம் மிடத்திற் சார்ந்தான். | 1.16.29 | 815 |
மங்குலங் கவிகை யீர்நம் வரவினைக் காணான் சீற்றச் செங்கதிர் தெறிக்கக் கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் பொங்குமா தவத்தோன் கோபப் புரையற வேண்டு மல்லா லெங்களைக் காக்க வேண்டும் படியெழுந் தருள்க வென்றான். | 1.16.30 | 816 |
சிலைவய வரியா ரீது செப்பிய மாற்றங் கேட்டு மலையெனும் புயங்க ளோங்க மகிழ்ந்துபுன் முறுவல் கொண்டு கலைவல னிசுறா வென்னுங் காவலன் களிப்பச் சேந்த விலைமலி கதிர்வே லேந்தி முகம்மது மெழுந்தா ரன்றே. | 1.16.31 | 817 |
சலதரந் திரண்டு நீங்காத் தனிக்குடை நிழற்றப் சோதிக் கலைமதி பொருவா மெய்யிற் கதிர்புடை விலகி மின்ன நிலமிசை வழிக்குக் காத மான்மத நிறைந்து வீச மலரடி படிதீண் டாது மாதவன் மனையிற் புக்கார். | 1.16.32 | 818 |
தொட்டபாழ்ங் கிணறுண் டாங்கு துவலைநீ ரசும்புந் தோன்றா திட்டமுள் ளிலையீந் தங்ங னிருந்திறந் தனேக காலக் கட்டையொன் றுளது தன்பால் ஹபீபுமெய் கவின்க னிந்து விட்டொளி பரப்பத் தோன்றி விரைவின்வீற் றிருந்தா ரன்றே. | 1.16.33 | 819 |
குறைபடுங் கூவல் கீழ்பாற் குமிழிவிட் டெழுந்து மேல்பா னிறைபட் பொங்கி யோங்கி நிலம்வலஞ் சுழித்திட் டேறி யிறையவன் றூதர் செவ்வி யிணைமலர்ப் பதத்திற் றாழ்ந்து துறைதொறும் பெருகும் வெள்ள நதியெனத் தோற்றிற் றன்றே. | 1.16.34 | 820 |
இருந்தது தொல்லை நாளி லிறந்தபே ரீந்தின் குற்றி கரிந்திடம் பசந்து செவ்வெ கதித்தெழக் குருத்து விட்டுச் சொரிந்தநெட் டிலைவிட் டோங்கித் துடர்துணர் தோறும் பாளை விரிந்துபூச் சிந்திக் காய்த்து மென்கனி சிதறிற் றன்றே. | 1.16.35 | 821 |
கோதறப் புனலுண் டாகிக் குற்றியுந் தளிர்ப்பக் கண்ட மாத வன்மனமுங் கண்ணு மகிழ்வொடு களிப்புப் பொங்கிச் சீதரக் கவிகை வள்ளன் முகம்மதின் சேந்த செவ்வி பாததா மரையிற் றாழ்ந்து பைந்துணர் மௌலி சேர்த்தான். | 1.16.36 | 822 |
மறைதெரி யறிவ னீதி முகம்மதி னடியைப் போற்றி யிறையவன் றூத ரேயிவ் விருநிலத் தரசர் கோவே குறைபடா திருந்த வெற்றிக் கொழுமணிக் குன்ற மேயா னறைவகேட் டருள்க வென்ன வடுத்துவிண் ணப்பஞ் செய்தான். | 1.16.37 | 823 |
இந்நிலக் திருந்தேன் பன்னா ளிறையவன் றூத ரான மன்னவ ரீசா விங்ஙன் வந்தன ரவரைப் போற்றிப் பொன்னடி விளக்கி யின்னம் புவியிடை நபிமா ருண்டோ வென்னலு மென்னை நோக்கி யெடுத்தினி துரைக்க லுற்றார். | 1.16.38 | 824 |
அருந்தவத் தவனே யாதி யருளொளி யவனி னீங்கா திருந்துள தாத மெய்யி னிடத்தவ தரித்துத் தொல்லை வருந்தலை முறைக ளெல்லாம் வந்தினி மேலும் பின்னாட் பெருந்தலம் புரக்க வல்லே நபியெனப் பிறக்கு மன்றே. | 1.16.39 | 825 |
மக்கமா நகரில் வாழும் அப்துல்லா மதலை யாகித் திக்கெலாம் விளக்குஞ் செங்கொல் தீனிலை நிறுத்தி வேறு பக்கமுன் மதங்க ளென்னும் பகையறுத் தரிய காட்சி மிக்கவ ராகு மற்ற நபிகளின் மேன்மை யாமால். | 1.16.40 | 826 |
புவியின் முகம்ம தென்னப் பொருந்திய பெயருண் டாகு மவரலா னபிபின் னில்லை யவரும்மத் தானோர்க் கெல்லாம் பவமறுங் கதியுண்டாகும் படைப்புணும் வானோ ரெல்லாஞ் சுவைபெறுங் கலிமாச் சொல்வ ரென்னவே சொல்லி னாரால். | 1.16.41 | 827 |
ஆரணக் குரிசி லீசா வுரைத்தபி னவரைப் போற்றி பூரண மதியம் போலும் புகழ்முகம் மதுவென் றோதும் பேரறி வாள ரெந்நாட் பிறப்பரென் றிசைப்பக் கேட்டுச் சீர்பெற வறுநூ றாண்டு செல்லுமென் றிசைத்தா ரன்றே. | 1.16.42 | 828 |
அம்மொழி கேட்டுக் காண்ப தரிதென வௌியேன் சிந்தைச் செம்மலர் கருகத் துன்பத் தீயினிற் குளித்தோன் றன்னை வம்மெனத் திருத்திச் செவ்வி முகம்மதைக் காணு மட்டு மிம்மரச் சோலை வாயி னிருமிறை யருளா மாதோ. | 1.16.43 | 829 |
பலன்பெறு முகம்ம திங்ஙன் ஷாமெனும் பதியை நாடி நலம்பெற வருவர் நீரு நன்குறக் காண்பி ரென்னத் தலம்புக ழீசா கூறத் தாழ்ச்சிசெய் தடியே னெந்த நிலந்தனிற் காண்பே னென்ன நிகழ்த்தின னிகழ்த்தும் போதில். | 1.16.44 | 830 |
இந்நெறி வந்து முன்னா ளிறந்தவீந் தடியிற் றோன்றப் பன்மலர் சொரிந்து காய்த்துப் பழமுதிர்த் திடும்பா ழூற்று முன்னிடப் பெருகி யோடு முறைமைகண் டறிந்து நீரந் நன்னெறிக் குரிசிற் கென்றன் சலாமையு நவிலு மென்றார். | 1.16.45 | 831 |
இன்னண மியம்பி யாதி யிடத்திரந் தரிதா யென்றன் றன்னுயிர் நிற்கச் டெய்து சார்ந்தன ரவணி லீசா மன்னவ கேட்டேன் கண்டேன் மணத்தெனை யெடுத்த டக்கிப் பின்னெழுந் தருள்க வென்ன வுரைத்தனன் பிறங்கு தாரான். | 1.16.46 | 832 |
வேறு மாலை தாழ்புய முகம்மது கேட்டுள மகிழ்ந்த காலை யவ்வயி னுறைந்தவேற் காளையர்க் கெல்லாம் வேலை வாருதி யமுதென விருந்தெடுத் தளித்தான் சோலை முக்கனி தேனொடும் பாகையுஞ் சொரிந்தே. | 1.16.47 | 833 |
ஆகங் கூர்தர விருந்தளித் தவரவர் கரத்திற் பாகு பாளிதம் வெள்ளிலைச் சுருளொடும் பகிர்ந்து தேக மெங்கணுஞ் சந்த்னக் குழம்பினாற் றீற்றி யோகை கூர்தர நன்மொழி யெடுத்தெடுத் துரைத்தான். | 1.16.48 | 834 |
தெரியு மெய்மறைக் குரியவ விச்செக தலத்தில் வரிசை நந்நபி முகம்மதை யொருநொடிப் பொழுதும் பிரியல் வாய்மொழி மறுத்திட லிப்பெரும் பேறுக் குரியர் நீரல தெவரென அபூபக்கர்க் குரைத்தான். | 1.16.49 | 835 |
கரிக ருங்குழல் வெண்ணகைப் பசியமென் றோகை வரிவி ழிக்கதி ஜாமனை மைசறா தன்னை யருகி ருத்திநன் மொழிபல வெடுத்தெடுத் தறைந்தான் விரியு நூற்கடற் செவிமடுத் துண்டமெய்த் தவத்தோன். | 1.16.50 | 836 |
வரிசை வள்ளற னிணையடிச் செழுமல ரதனைச் சிரசு றப்பணிந் திருவிழி மனிகளாற் றேய்த்து மரும லர்க்குழன் மனையவர்க் குறுமொழி வகுத்துத் தரையி னிற்புகழ் பெறும்படி யணைமிசைச் சாய்ந்தான். | 1.16.51 | 837 |
துணைவ ரும்முயிர்த் துணைவியும் புதல்வருஞ் சூழப் பணர்வி ரிந்தன கேளிரும் பாங்கினி லிருப்ப மணமெ ழும்புய வள்ளலை யடிக்கடி வாழ்த்தி யணையின் மீதினிற் சாய்தலும் விண்ணில கடைந்தான். | 1.16.52 | 838 |
பொருத்து மெய்மொழி மாதவ னிறந்தவப் போதிற் கருத்த ழிந்திரு கண்கள்முத் துகுத்திடக் கலங்கி வருத்த முற்றவர் சிலரணி வயிறலைத் தலறிச் சிரத்தி னிற்கதுப் பறப்பறித் தெறிந்தனர் சிலரே. | 1.16. 53 | 839 |
சிந்தை தேங்கிட வழுதவர் தங்களைத் தேற்றி மைந்த ரியாவருந் திரண்டெழு மணத்துட னெடுத்துக் கந்த மென்மலர் கமழ்ந்திட வடக்கினர் ஹபீபு மந்த மில்லவன் றனைப்புகழ்ந் தேத்தின ரன்றே. | 1.16. 54 | 840 |
முதிய கேள்வியன் சடங்குள தெவ்வையு முடிப்பக் கதிர வன்கதி ரொடுக்கிமேற் கடலினிற் சார்ந்தான் மதிவிண் ணெய்திட வசிகரு முகம்மது மகிழ்வா யுதிரு மென்மலர்ச் சோலைபுக் குறங்கின ரன்றே. | 1.16.55 |
841 |
பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ ரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து முருகு லாவிய பொழிகடந் தருநெறி முன்னித் திருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே. | 1.17.1 | 842 |
சிறுபொ ருப்படர்ந் தடவிக ளுறைநெறி சேர்ந்து வறுப ரற்படர் பாலைக ணீந்திமுள் வகிர்ந்திட் டறல்கொ ழித்திடுங் கானையா றுகள்கடந் தகன்று குறைவில் சந்தகில் செறிநெடு வரைகுறு கினரே. | 1.17.2 | 843 |
பள்ள மும்பசுஞ் சோலையும் வெண்மணற் பரப்பு முள்ள தோரிட மவ்வையி னுறைந்தன ருரவோர் வள்ள றம்மிடத் தொருவன்வந் திவ்வரை வனத்திற் கள்ள ருண்டெனு மசுகையுங் கண்டன னென்றான். | 1.17.3 | 844 |
இருந்த வவ்வையிற் கள்ளருண் டெனுமொழி யிசைப்பத் தெரிந்து கண்டன மென்றனர் சிலர்சிலர் திகைத்தார் விரிந்த செங்கதி ரோனுமேற் றிசையினிற் புகுந்தான் வருந்த லென்றவர்க் குரைத்தனர் புகழ்முகம் மதுவே. | 1.17.4 | 845 |
சோர ருண்டென மனந்துணுக் குறல்சுடர் வரையி னேர தாயொரு நதியுள நிலங்சுழித் தெழுந்து கோர மாய்வருங் கள்ளருங் குறுகிடா ரெனவே காரெ ழுங்குடை முகம்மது கனவுகண் டனரே. | 1.17. 5 | 846 |
கனவின் செய்தியை யவரவர்க் குரைத்திடுங் காலைத் தினக ரன்குணக் கெழுந்தன னதிசுழி கிளறி வனம டங்கலும் வகிர்ந்தெடுத் திருகரை வழிந்திட் டினம ணிக்கருங் கடல்வயி றிடைமடுத் ததுவே. | 1.17.6 | 847 |
இருந்த பேரனை வருமெழுந் திருநதிக் கரையிற் பொருந்தி நன்னெறி யீதென நடக்குமப் போதில் வருந்திக் கள்வரு மறுகரை யிடத்தினின் மறுகித் திருந்த நோக்கினுங் காண்கிலா தெழுந்தன திரைகள். | 1.17.7 | 848 |
ஆறு வந்தது புதுமைகொ லெனவதி சயித்து மாறு கொண்டவர் திரண்டொரு பெருவரை முகட்டி லேறி நின்றுதே சிகர்தமை நோக்கலு மெழுந்து மீறி வெண்டிரை புரட்டிமீக் கொண்டலு வெள்ளம். | 1.17.8 | 849 |
கள்ளர் வந்தவ ணிருந்தன ரெனக்கெடி கலங்கி யுள்ள நொந்தனம் முகம்மதிங் குறுபொருட் டதனால் வெள்ளம் வந்தது மறித்தது காணென வியந்து வள்ள லைப்புகழ்ந் தார்வழி நடந்தனர் வசிகர். | 1.17.9 | 850 |
தஞ்ச மீங்கிவ ரெனப்புகழ்ந் தவர்தமை நோக்கி யஞ்ச லாதுநின் றபுஜகில் மனத்தினி லழன்று விஞ்சை யான்முகம் மதுபடித் திவணிடை விளைத்த வஞ்ச னைத்தொழி லலதுவே றிலையென மறுத்தான். | 1.17.10 | 851 |
படிறு ளக்கசட் டபுஜகில் பகர்ந்திடு மொழிகேட் டடல பூபக்கர் மனத்தடக் கினுமடங் காதாற் கொடிய தீவினைக் குரியவர் சொல்லினைக் குறித்தோர் கெடுவ ரென்பதற் கையமி லெனக்கிளத் தினரே. | 1.17.11 | 852 |
கரிந்த புன்மனச் சிறியவர் கழறிய கொடுஞ்சொற் றெரிந்த மேலவர் செவிக்கிடா ரென்னுமத் திறம்போல் விரிந்த கார்க்குடை நிழலிடை வரைப்புயம் விளங்க வருந்த வப்பொருண் முகம்மது நடந்தன ரன்றே. | 1.17.12 | 853 |
சிந்து நன்மணிக் கதிரெழத் திரைக்கரத் தெறிந்து வந்த மாநதிக் கணியெனு மொருகரை மருங்கிற் கந்த மென்மலர் செறிதருங் காவகங் கடந்து புந்தி கூர்தர மக்கிக ளனைவரும் போனார். | 1.17.13 | 854 |
சீத வொண்புனற் செழுமல ரோடையிற் செறிந்த கோதில் வெண்சிறைப் பெடையொடுங் குருகின மிரியப் பாதை போந்தனர் ஷாமெனுந் திருப்பெயர்ப் பதிக்கோர் காத மாமென விறங்கினர் கடிமலர்க் காவில். | 1.17.14 | 855 |
ஒட்ட கத்திர ளனைத்தையு மொழுங்குறா நிரைத்துக் கட்டி வாம்பரித் திரளையுஞ் சேர்த்தனர் கடிதின் விட்ட பாசறை யிடங்களி னிவைவியப் பெனவே செட்டர் சூழ்தர விருந்தனர் செழுமலர்க் காவில். | 1.17.15 | 856 |
சோலை வாயொரு வாகன மெனச்சுடர் திகழக் கோல வார்கழற் குறைஷிகள் குழுக்கண நாப்பண் வேலை வெண்டிரை முகட்டெழு மதியினும் வியப்ப மாலை தாழ்புய முகம்மது வந்துவீற் றிருந்தார். | 1.17.16 |
857 |
காவ கத்திலன் றிருந்திருள் கடிந்துவெங் கதிரோன் மேவு வெண்டிரைக் கடன்முகட் டெழுதலு மேலோர் தாவு வெம்பரி யொட்டகைத் திரளொடுஞ் சாய்த்தே யேவி லங்கையி லேந்திய வேந்தலோ டெழுந்தார். | 1.18.1 | 858 |
கடிகொண் மென்மலர்த் துடவையுங் கருஞ்சுரும் புதைப்ப வடியுந் தேன்மலர் வாவியும் வளர்கழைக் குலம்போ னெடியக் பச்சிலைக் கரும்புடைக் கழனியு நிறைந்த கொடியி லைச்சிறு கேணியுங் குறுகிட நடந்தார். | 1.18.2 | 859 |
கூய்த்தி ரண்டளி யினங்குடைந் துழிநறாக் குளித்துத் தோய்த்த பொற்குவ டெனவிரு வரைப்புயந் துலங்க வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கிக் காய்த்தி ரட்குலை சாய்த்துநின் றிறைஞ்சின கதலி. | 1.18.3 | 860 |
வேந்தர் வேந்தவ ணருகுற வடைதலும் விரிந்த மாந்த ருச்சினை யிடைபழத் தொடுந்துயல் வருதற் றேந்த ருங்கனி யுண்டெழுந் தருளெனச் செறிந்து சாய்ந்த மென்றளிர்க் கரத்தினா லழைப்பதொத் தனவால். | 1.18.4 | 861 |
தேக்கும் வெண்டிரைப் புவிக்கொரு தனிச்செங்கோல் செலுத்திக் காக்கு நாயக முகம்மது வரும்வழி கவின வாக்கும் பொற்குட நனிநிரை நிரையணி யணியாய்த் தூக்கி வைத்தபோன் முட்புற நறைக்கனி தூங்கும். | 1.18. 5 | 862 |
வெள்ளி வெண்மலர் சொரிந்தன பாளைவாய் விரித்துத் தெள்ளு செம்பொனாற் சமைத்தபோற் செழுங்குலை தாங்கி வள்ள லார்வரு னெறியலங் கரிப்பென வயங்கும் புள்ளி வண்டொடு பசுமடல் விரிதலைப் பூகம். | 1.18. 6 | 863 |
விரிந்த மென்மலர்க் கொம்பினி லளியினம் வீழச் சரிந்து மென்றுக ளுதிர்வது வானவர் தலத்தி லிருந்த பொன்னெடுத் தருநபி யிணைமல ரடியிற் சொரிந்து விட்டது போல்வயின் வயின்றொறுந் தோன்றும். | 1.18.7 | 864 |
தெறித்த முத்தொளிர் கழனிவா னகமெனச் சிறப்பத் தறித்த பூங்கரும் பாட்டுசா றடுபுகை தயங்கிக் குறித்த சோலைமேற் றவழ்வது குரைகட லேழும் பறித்த ருந்திய கருமுகிற் படல்மொத் துளதால். | 1.18.8 | 865 |
பாட லத்தரு நிழன்மர கதக்கதிர் படர வாடி நிற்பன முகம்மதைக் கண்டகங் களித்து வீடின் மெண்சிறை பட்டகண் ணனைத்தையும் விழித்துக் கூடி நோக்குவ தொத்தன களிமயிற் கூட்டம். | 1.18.9 | 866 |
கோட்டு மென்மலர் வாசமுங் கொடிமலர் விரையுஞ் சூட்டு நீர்மலர் நிலமலர் வாசமுந் தூர்த்துப் பூட்டும் விற்கர முகம்மது மெய்யினிற் பொங்கிக் காட்டு மான்மதங் காவதங் காவகங் கமழும். | 1.18..10 | 867 |
ஒரும னைப்பிறந் தொருமனை யிடத்தினி லுறைந்து கருவ ரத்தரித் தீன்றுதன் கணவனை யிகழாப் பெருவ ரம்புறும் பெண்கொடி யெனத்தலை சாய்த்துத் திருவுஞ் செல்வமுந் திகழ்தரக் காண்பன செந்நெல். | 1.18.11 | 868 |
துன்னு மெல்லிதழ் வனசமும் பானலுஞ் சுரும்புண் டின்னி சைப்பட வூட்டுதேங் குவளையு மிடையிற் செந்நெ ருப்புநா விரித்தசே தாம்பலுஞ் செறிந்து வன்ன மென்படம் போர்த்தபோன் றிருந்தன வாவி. | 1.18.12 | 869 |
துய்ய சைவலச் சுரிகுழ றுயல்வரச் சுனைமென் றைய லுள்ளகங் குளித்துடற் களிப்பொடுந் தனது கையின் வெண்மலர்ப் பந்தெடுத் தெறிவது கடுப்பச் செய்ய தாமரை மீதனஞ் சிறந்தெழுந் ததுவே. | 1.18.13 | 870 |
பண்ணை வாய்ச்செழுங் கமலங்கள் செவ்விதழ் பரப்பி யுண்ணி றைந்தமா மணியொடு மொளிர்வன வவைகள் வண்ண வார்கழன் முகம்மது வருநெறிக் கெதிரா யெண்ணி றந்தகை விளக்கெடுத் தேந்தின ரியையும். | 1.18.14 | 871 |
வண்டி னத்தொனி மறுத்தில மலர்சொரி வனங்கண் முண்ட கத்தட மலர்ந்தில புள்ளொலி முழக்கந் தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிக டோறும் பண்டி யின்றொகைக் கம்பலை மறுத்தில பாதை. | 1.18.15 | 872 |
வடந்த யங்கிவம் மிதத்தெழுங் குவிமுலை மடவார் குடைந்து நீர்விளை யாடிய வாவியுங் குறுகிப் படர்ந்த மல்லிகை மாதுளைப் பந்தரு நோக்கிக் கடந்தி லங்கிய ஷாமெனுந் திருநகர் கண்டார். | 1.18. 16 | 873 |
முதிர்ந்த பேரொளி முகம்மது வருநெறி முன்னி யெதிர்ந்தி றைஞ்சுதற் கிந்நக ருறைந்திடு மரசீர் பொதிந்த பூணொடு மேகுமி னெனக்களி பொங்கி யதிர்ந்தி டக்கர மசைத் தல்போ லசைந்தன கொடிகள். | 1.18.17 | 874 |
மதுக்கொண் மாலிகை நாற்றிநன் மணிபல குயிற்றிச் செதுக்கி மின்னுமிழ் தமனியத் தசும்புகள் செறித்து விதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப் புதுக்கு வான்றொழில் புரிந்தபோ லசைந்தபொற் கொடிகள். | 1.18.18 | 875 |
சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக் கவிந்த கார்க்குடை நிழலிட வருவது கண்டு நிவந்த வெண்சுதைப் பளிக்குமே னிலைவயி னின்று குவிந்த கைவிரித் தழைத்தபோ லசைந்தன கொடிகள். | 1.18.19 | 876 |
வேறு இச்செக மதிற்றபதி யற்றொழிலி யற்றி விச்சையி னமைத்துகொ லோவமரர் விண்ணி லச்சொடுபி றந்திவ ணடைந்ததுகொ றானோ வச்சிர மணிக்கதிர் பரப்புமணி மாடம். | 1.18.20 | 877 |
சுந்தரந பிக்குரிசின் மெய்ப்புகழ் துலங்கி யந்தரமு மண்டபகி ரண்டமு நிறைந்து மந்தரமி தென்றுதற வளைந்தர வழிந்து சிந்துவ தெனச்சுதை தௌித்தமணி மாடம். | 1.18.21 | 878 |
எங்கணபி யிங்ஙன மெதிர்ந்தனர்கொ லென்னத் திங்கடவாழ் சாளர விழிக்கடை திறந்து பொங்கழகு நோக்குவன போலுற நிவந்த பைங்கதிர் விரித்தொளி பரப்புமணி மாடம். | 1.18.22 | 879 |
கந்தநறும் வெண்சுதை கலந்தணி யிலங்கி வந்துநக ரந்தனை வளைந்தமதி லாடை யிந்தநில மெங்குமெதி ரின்றென வியந்தே யந்தர மடங்கலு மளந்தது வளர்ந்தே. | 1.18. 23 | 880 |
சீதவக ழாடையை யுடுத்தணி சிறந்தது மோதியிட றுங்கரு முகிற்குழன் முடித்தே யாதிமணி வாயின்முக மாகவழி யாத மாதர்தமை யொத்தது வளைந்தமதி ளம்ம. | 1.18.24 | 881 |
பந்திபெற நின்றபட லந்தனி யெழுந்தே யந்தர நடந்துதிர ளாரமணி வாரிச் சிந்துதிரை வாரியற வுண்டது திரண்டு வந்துநனி மஞ்சடை கிடக்குமதி ளன்றே. | 1.18.25 | 882 |
கந்துகமொ டுந்துமிர தங்களு மிடைந்து தந்தியின மும்பிடிக ளுந்தலை மயங்கிச் சுந்தரம டந்தையரு மைந்தரொடு துன்றி வந்தவ ரெதிர்ந்தவர் நெருங்குமணி வாயில். | 1.18.26 | 883 |
ஈறுதெரி யாதென வுயர்ந்தெழி றவழ்ந்து மாறுபகர் கின்றரிய மாமதிண் மதிக்கோர் வீறுபெற நின்றபரி வேடமென லாகி யூறுபுனல் கொண்டுகட லொத்தவக ழம்மா. | 1.18. 27 | 884 |
தும்பிகள் குடைந்துபுன றுய்ப்பமக ரங்க ளும்பரி னெழுந்துமுத லைக்குல மொதுங்க வெம்பியுக ளுந்தொறு மிடைக்கயல் வெருண்ட கம்பலை யறாதலை கலிக்குமக ழன்றே. | 1.18.28 | 885 |
இந்துதவழ் கின்றமதி ளும்மக ழிருந்த கொந்தல ருறைந்துவரி வண்டுகள் குடைந்து சிந்தமு தருந்துகய லங்கரை தியங்க வந்துநனி கண்டக மகிழ்ந்தனர்க ளன்றே. | 1.18.29 | 886 |
கண்டுநக ரந்தனை மனத்திடை களித்து வண்டுதுதை கின்றபுய மைந்தர்களி யாருங் கொண்டல் கவி யுந்திற லுடைக்குரிசி றானு மெண்டல மதிக்குமதி ளின்புற மிறுத்தார். | 1.18.30 | 887 |
பந்தியி னிரைத்தனர் பரித்திர ளனைத்து முந்துமிட பத்திரளொ டொட்டக நிரைத்தா ரிந்துகதிர் கொண்டென விலங்கறை யிடத்தில் வந்தபல பண்டமு மணித்தொகையும் வைத்தார். | 1.18.31 | 888 |
வித்தக ரனைத்தும்விடு தித்தலைகள் புக்கார் மைத்தவழ் முகிற்குடை மறைக்குரிசி லோடு மத்தல மிலங்கவபூ பக்கரு மிருந்தா ருத்தம குணத்தினொடு மக்கிகளு றைந்தார். | 1.18.32 | 889 |
புவிவளர நன்கனி பொழிந்ததரு வூடோர் சுவையுமற நஞ்சுகள் சொரிந்தசெடி யென்னப் பவடமிறு வஞ்சனை படுங்கொலை படைத்த அபுஜகிலெ நுங்கொடிய பாவியு மடைந்தான். | 1.18.33 | 890 |
எவ்வுழி யிருந்திவ ணடைந்தவர்க ணீவிர் செவ்விய திறர்குரிசி லியார்தொழிலி யாதென் றவ்வுலகி லந்நக ரடைந்தவர்கள் வந்தே யொவ்வொரு வரைத்தனி யுசாவினர்க ளன்றே. | 1.18.34 | 891 |
மக்கநக ரத்துபுதுல் முத்தலிபு மன்ன ருக்குரிய பேரருயிர் போன்முகம்ம தென்போர் தக்கபுக ழுக்குமதி மிக்கவர் சரக்கோ டொக்கலொடு வந்தன மெனத்தனி யுரைத்தார். | 1.18.35 | 892 |
ஷாமுநக ரத்துநசு றானிக டமக்குண் மாமறையின் மிக்கனவன் வந்துமைச றாவைத் தேமலர் புயத்திலணி செம்மலொ டிருப்பக் காமருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான். | 1.18.36 | 893 |
அன்னிய ரெனாதுமைச றாதனை யடுத்து வன்னமலர் மாலைதிகழ் மார்புற வணைத்து முன்னைநெடு நாளுறவ தானமுதி யோனு மென்னக மடைந்தினி தெழுந்தருளு மென்றான். | 1.18.37 | 894 |
கோதைகதி ஜாவுரை மனத்திடை குறித்து மாதிர மெதிர்ந்துபொரு வாதபுய வள்ளல் பாதகம லத்துறு பணித்தொழி லிகழ்ந்தோர் போதினு மகன்றதிலை யென்றுரை புகன்றான். | 1.18.38 | 895 |
கோலமொடு கூறுமொழி கொண்டுடல் களித்துச் சீலநபி பாதமிசை செங்கணிணை வைத்துப் பாலரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே சாலவு மளித்தவனு மேதரக னானான். | 1.1839 | 896 |
வந்தவர்கொ ணர்ந்தபணி மாமணி சரக்கோ டிந்துகலை யென்றகலை யாவையு மெடுத்துச் சிந்தைகளி கொண்டவர் செழுங்கர மறைந்தே யந்தநக ரத்துவணி கர்க்கினி தளித்தார். | 1.18. 40 | 897 |
வேறு மிக்கசெம் மணிபணி விற்று மாற்றிய மக்கிகண் மறுசரக் கெவையும் வாங்கித்தம் மொக்கலோ டின்புற வுவக்கும் போதினி லக்கண மொருவன்ற னமைதி கூறுவான். | 1.18. 41 | 898 |
உற்றதென் வயினுறை சரக்கொன் றாயினும் விற்றில முகம்மதென் விடுதி புக்கிடி லற்றையின் மாறியூ தியமுண் டாக்குவேன் மற்றடப் புயர்த்திர்க ளென்று வாழ்த்தினான். | 1.18.42 | 899 |
என்றவ னுரைத்தலு மெழுந்து வள்ளலுஞ் சென்றவ னுறைந்திடும் விடுதி சேர்ந்தபின் மின்றவழ் மணிகலை விலையென் றோதிய தொன்றிரண் டெனத்தொழி லுறுதி யானதே. | 1.18. 43 | 900 |
தன்னிடத் துறைந்தபொற் சரக்குங் கோவையு முன்னிய விலைக்குவிற் றொடுக்கி யந்நகர் மன்னிய பண்டமும் வாங்கி வள்ளறன் பொன்னடி தன்முடி பொலியச் சூட்டினான். | 1.18. 44 |
901 |
மறங்கிளர் வேற்கர வள்ளன் மக்கிக ளிறங்கிய விடுதிபுக் கிருக்குங் காலையிற் கறங்கிய ஷாமினிற் காபி ரிற்சில ரறங்கிளர் நபியைவந் தடுத்து நோக்கினார். | 1.19.1 | 902 |
மேனியிற் கதிர்விரி வியப்பு மெய்யினின் மான்மதங் கமழ்தலும் வடிந்த கைகளுந் தூநிறை மதியென முகமுந் தோள்களுந் கானிலந் தோய்தராக் கார ணீகமும். | 1.19.2 | 903 |
பன்னருஞ் சிறப்புடை யருட்கட் பார்வையு மன்னிய வவயவத் தழகு மாசிலா நன்னிலை மொழிபல நவிற்றுஞ் செய்கையு மின்னன பலவுங்கண் டேகி னாரரோ. | 1.19. 3 | 904 |
கண்டவர் காண்கிலாக் கார ணீகமொன் றுண்டென நகரவர்க் குரைப்பக் கேட்டவர் விண்டவர் விளங்கிட வேதம் பேசிய கொண்டலங் கவிகையா ரென்னக் கூறினார். | 1.19.4 | 905 |
மறைதெரி சமயமு நமரு மாய்ந்திட வுறைகுவ னொருவனுண் டணித்தென் றோதுநூற் றுறைவலார் நாடொறுஞ் சொற்ற சொற்படி பிறவியா னிவனெனப் பின்னும் பேசினார். | 1.19. 5 | 906 |
தருபெரும் பதவிச் சமயம் பாழ்பட வருபவன் றன்னுயிர் வானி லேறிடக் குருதிநீர் சிந்திடக் குவல யத்திடைச் செருவிளைத் திடுதலே திறமென் றோதினார். | 1.19.6 | 907 |
அறைதிரைக் கடலென வதிர்தன் மாறியிங் குறையுமின் வேறொரு பாய சூழ்ச்சியான் மறைபட வரவழைத் தவன்றன் வல்லுயிர் குறைபட ரகசியக் கொலைசெய் வோமென்றார். | 1.19.7 | 908 |
சூதர்கள் கூண்டினி துரைத்த சொல்லையோர் பாதகன் கருத்தினுட் படுத்தி மாமறை வாதியென் றவனுயிர் மாய்க்க வேண்டுதற் கீதலா லுறுமொழி யொன்று மில்லென்றான். | 1.19. 8 | 909 |
உரைவழி யவைசெய் துபாய மாகிய கரைமதிக் காபிரி னால்வர் கள்ளமாய் நிரைமணிப் புரிசையின் வாயி னீங்கியே விரைசெறி முகம்மதின் விடுதி நண்ணினார். | 1.19.9 | 910 |
வஞ்சனை கொலைகப டனைத்து மாட்டிய நெஞ்சினர் மக்கிக ணிறைந்த நாப்பணிற் கஞ்சமென் மலர்ப்பதக் கார ணீகரை யஞ்சலித் தன்புட னடுத்து நின்றனர். | 1.19.10 | 911 |
ஆங்கவர் தமையழைத் தருகி ருத்திநீ ரீங்குறை கருமமே தெடுத்தி யம்புமென் றோங்கிய முகம்மது முரைப்பச் சாமிக டீங்குறு மனத்தினை யடக்கிச் செப்புவார். | 1.19. 11 | 912 |
மருக்கமழ் சோலைசூழ் மக்க மாநகர்ச் சரக்குள தெனிலது தருக சேரலார் செருக்குறுத் தவருடற் சிதைத்துத் திக்கெலாம் பெருக்கிய கீர்த்தியீ ரென்னப் பேசினார். | 1.19. 12 | 913 |
உறுதிகொள் சரக்குவிற் றொடுக்கி யிப்பதி மறுசரக் கெவையையும் வாங்கி னோமினிச் சிறிதுள சரக்கெனச் செப்பச் சாமிக ளறுதியின் விலைக்கெடுத் தருள்க வென்றனர். | 1.19.13 | 914 |
அனையவர் கூறவக்கேட் டடுத்த மக்கிகண் மனையினுற் புகுந்தெடுத் தியாவும் வைத்தனர் வினையமற் றுறுவிலை விள்ளச் சம்மதித் தினையன சரக்கெலா மிசைந்து வாங்கினார். | 1.19. 14 | 915 |
சொல்லிய விலைப்பொருட் டொகையை நும்வயி னொல்லையி னுதவுதற் குறுதி யாகவே மல்லுடைப் புயத்திறன் முகம்ம தேயெம தில்லிடை வருகவென் றிசைத்திட் டாரரோ. | 1.19.15 | 916 |
ஷாமுநாட் டவருரை யனைத்துஞ் சம்மதித் தாமினா திருமக னகம கிழ்ச்சியாய் நேமிவா னவர்திரை நிறைந்து சுற்றிய பூமிநா யகர்தொழப் புறப்பட் டாரரோ. | 1.19. 16 | 917 |
மக்கிகள் சிலருடன் மைச றாவுந்தன் பக்கலில் வரக்கதிர் பரப்பி மெய்யொளி திக்கினில் விரித்திடச் செறிந்த செங்கதிர் மிக்கபொற் புரிசையின் வயின் மேயினார். | 1.19.17 | 918 |
வேறு விரைநறை கமலச் செல்வி மேவுசை னயினார் பாலன் றரைபுக ழபுல்கா சீஞ்சீர் தருங்கொடைப் புகழே போல நிரைசுதை வெள்ளைதீற்றி நிலாமணி குயிற்றி வெள்ளி வரையென நிமிர்ந்து தோற்றி மறுவிலா தொளிரும் வாயில். | 1.19.18 | 919 |
இரசித நிலையிற் செம்பொ னிணைமணிக் கபாடஞ் சேர்த்தி விரிகதிர் மணிக டூக்கி விரிந்தவா யிலினிற் புக்கிக் கரிமத மாரி சிந்திக் களிவழி வழுக்கல் பாயுந் துரகதக் குரத்தூண் மாய்க்குந் தோரண மறுகு சார்ந்தார். | 1.19.19 | 920 |
அகிற்புகை வயங்கு மாட மணிபணி யிமயம் போன்றுந் துகிற்கொடி நுடங்கும் வெள்ளி வரையெனச் கதைகொண் மாட மிகச்செறி சாந்த மாட மேருவைப் போன்றும் வீதி தொகுத்தவத் திசைக டோறு மெண்ணில தோன்றக் கண்டார். | 1.19.20 | 921 |
துகிர்சிறு வேர்விட் டோடிச் சுடரொடுந் திகழ்வ தேபோற் பகிர்விரற் சிறுகான் மென்மை படர்சிறைப் புறவின் கூட்டந் திகழ்தரக் கூவு மோதை தெரிவையர் கூந்தற் கூட்டும் புகையினைப் பொறாது மாடம் புலம்புவ போன்ற தன்றே. | 1.19.21 | 922 |
நித்தில நிரைத்த மாட நிரைதிரை போன்ற நாவா யொத்தன கரடக் கைமா வொண்கொடிப் பவளம் போன்ற கைத்தொடி மகளிர் செல்வக் கடிமுர சறைத லோதை நித்தமு மறாத வாரி நிகர்த்தது நகர மன்றே. | 1.19. 22 | 923 |
தாறுபாய் தந்தி மாதேர் தானைமும் முரசு வேத மீறுபண் ணினைய வெல்லா மெங்கணும் விளங்கு மோதை மாறிலா தெழில்கொண் டோங்கும் வளமைமா நகரம் வாய்விண் டீறிலான் றூதர் வந்தா ரெனவெடுத் தியம்பல் போலும். | 1.19. 23 | 924 |
மாலைவாய்ப் பலபூண் டாங்கி மான்மதங் கமழ்ந்து வீங்குங் கோலமார் பொருப்புத் திண்டோட் குரிசிறன் கதிர்க டாக்கி நீலமா மணியிற் செய்து நிரைகதி ரெறித்த வீதி வேலைவாய்த் தரளச் சோதி விளங்குவ போன்ற தன்றே. | 1.19.24 | 925 |
பந்தரிட் டலர்கள் சிந்திப் பரிமள மரவ நாற்றிக் சந்தகில் கலவைச் சேறு தடவிய மகுட வீதி யிந்தெழின் மழுங்குஞ் சோதி யிறையவன் றூதர் மெய்யின் கந்தமூ டுலவி யெங்கு மறுவியே கமழ்ந்த தன்றே. | 1.19.25 | 926 |
முத்தணி பவளத் திண்கான் முறைமுறை நிறுவித் தேர்ந்த சித்திரமெழுதி வாய்த்த செறிமயிர்க் கற்றை தூக்கிப் பத்திவிட் டெறிக்குங் காந்திப் பன்மணி பரப்பி யோதை நித்தமு மறாது செல்வ நிகழ்ந்தவா வணமுங் கண்டார். | 1.19.26 | 927 |
அடையல ரொடுங்க மோதும் படைமுர சதிரு மோதை யிடைபடு வறுமை யோட விடுகொடை முரசி னோதை கடைபடு வடிவேற் கண்ணார் கடிமண முரசி னோதை முடியுடை யரசர் வீதி யெங்கணு முழங்கக் கண்டார். | 1.19.27 | 928 |
வாரியின் மதங்கள் சிந்தி வாரண மிடைந்து செல்லத் தேரினந் திரண்டு கூடிச் செழுங்கொடி நுடங்கி நிற்பப் பாரிடை துகள்விண் டூர்க்கும் பரித்திரண் மலிந்து தோன்ற வாரவார் முரச றாத வரசர்வீ திகளுங் கண்டார். | 1.19.28 | 929 |
புகர்முகச் சிறுகண் வேழப் பொருப்பொடு பொருப்புத் தாக்கி யிகல்பொர மூட்டுஞ் செல்வி யிளையவர் குழாத்தி னோசை முகிலொடு மசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணு மகிலமு மதிரத் தோன்று மணிமறு கிடமுங் கண்டார். | 1.19.29 | 930 |
வன்னியின் கொழுந்து போற்செம் மணிக்கதி ரூச லேறி மின்னனார் பாடி யாடும் வீதிவாய் மலிந்த தோற்றந் துன்னிதழ்க் கமலப் போது துயல்வர நாப்பண் வைகு மன்னமொத் திருப்ப நோக்கு மகமகிழ்ந் தினிது கண்டார். | 1.19.30 | 931 |
கந்துக மெடுத்துக் காந்தட் கரத்தினி லேந்தி யாடு மந்தர மனைய கொங்கை மயிலனார் முகத்தின் வேர்வை சிந்தக டுளைந்து தத்துந் திரைமிகட் டெழுந்து தோன்று மிந்துமுத் துகுப்ப தென்ன விடந்தொறு மலியக் கண்டார். | 1.19.31 | 932 |
கருமணிக் கழங்கு கஞ்சக் கரத்தினி லெற்றி யாடச் சுரிகுழன் மலர்வண் டென்னச் சுரும்பினந் தாவ நோக்கி யரிவைபுன் முறுவ றோன்ற வணிநகைக் கதிரின் முத்தாய்த் தெரிதரப் புதுமை காட்டுந் தெருத்தலைச் சிறப்புங் கண்டார். | 1.19.32 | 933 |
மாசறு வாயி றோறும் வயங்கிய கதலி நெற்றிப் பாசடை துயல்வ திந்தப் பாரினிற் குபிரென் றோங்கு மாசற வுதித்த வள்ள லகுமதி னழகு மெய்யின் வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவுங் கண்டார். | 1.19.33 | 934 |
முருக்கிதழ் கரிய கூந்தன் முத்தவெண் ணகையி னார்தம் பெருக்கொடு திரண்டு நன்னீர் குடைதலிற் பிறங்கு மெய்யின் றிருக்கிளர் கலவைச் சேறு நானமும் புழுகுஞ் சேர்ந்து மருப்பொலி வாவி யாவு மணங்கமழ்ந் திருப்பக் கண்டார். | 1.19.34 | 935 |
பரதமா டிடமுங் கீதப் பண்ணொலி யரங்குஞ் சீர்மை விரதமா மறையோ ரோதும் வேதமண் டபமுஞ் செவ்விக் கரதலஞ் சேப்ப வள்வார்க் கருவியா ரிடமுஞ் செல்வர் நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவுங் கண்டார். | 1.19.35 | 936 |
இன்னன பலவு நோக்கி யெழில்கனிந் தொழுகிக் காந்தி மின்னொளி மழுக்குஞ் சோதி மெய்முகம் மதுமன் பாகத் தன்னுயிர்த் தோழ ரோடுந் தரகனு மைச றாவும் பின்னுற வரவக் காபிர் பெருந்தலைக் கடையிற் சார்ந்தார். | 1.19.36 | 937 |
அருளினி லறத்திற் றேர்ந்த வடிவினி லெவரு மொவ்வாக் குரிசினான் மறைக்கும் வாய்த்த கொண்டலங் கவிகை வள்ளல் விரிகதிர்க் கலைக ளோடும் வெண்மதி காலி னேகி யிருளிடம் புகுவ போல விவர்களில் லிடத்திற் புக்கார். | 1.19.37 | 938 |
கள்ளவிழ் மரவத் திண்டோட் காரணக் கடலே யன்ன வள்ளலை யவர்கள் போற்றி மாளிகை வயின்கொண் டேகித் தெள்ளிய மணியிற் செய்த செவ்வியா சனத்தி லேற்றி வெள்ளிலை யடைகாய் சந்தம் விரைவின்வைத் திருந்தா ரன்றே. | 1.19.38 | 939 |
மைதவழ் குடையீ ரிந்த மனையிடை புகுத யாங்கள் செய்தவப் பலனோ முனோர் திளைத்தபுண் ணியத்தின் பேறோ வெய்திய பெற்றி யென்ன விசைந்தநன் முகம னாகப் பொய்திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார். | 1.19.39 | 940 |
நன்னய மொழிக ளாக நவிற்றியங் கிருந்த காலை வன்மனக் கொடிய காபிர் மனத்துறு சூழ்ச்சி யாக மின்னொளி கரக்கு மாட மேனிலை செறித்த கற்பாற் சென்மெனக் கடைக்கண் ணாரச் செப்பின னொருவன் சென்றான். | 1.19.40 | 941 |
தீங்குறு மனத்த னேகிச் செறித்தமேற் பலகை மெல்ல வாங்கியங் கிருந்த கல்லை வரைப்புயம் பிதுங்க வுன்னித் தாங்கலி லுருட்டி மெல்லத் தள்ளினன் றள்ள லோடு நீங்கருங் கரத்தைக் கவ்வி நெரிபட விறுக்கின் றன்றே. | 1.19.41 | 942 |
கரத்தினிற் பதிந்த கல்லைக் கழற்றினன் கழற்ற லாகா துரத்தொடுங் காலை யூன்றி யுதைத்திழுத் தசைத்து வெள்வாய் நிரைத்தபல் லதரங் கவ்வி நெற்றிமேற் புருவ மோட்டி வரைத்தடப் புயங்கள் வேர்ப்ப வலித்தறச் சலித்து ழன்றான். | 1.19.42 | 943 |
உரம்புவன் கையைக் கல்லோ டுதறுவ னுதற டாம னிரம்பநெட் டுயிர்ப்புச் செய்வ னிலைதளர்ந் திடுவன் வாசிக் குரம்படை துகள்போ லாவி குலைகுலைந் திடுவ னிந்தத் தரம்பட விதியோ வென்னத் தயங்குவன் மயங்கு வானே. | 1.19.43 | 944 |
மாதிரங் கையைப் பற்றி வரவர நெருக்க மேன்மேல் வேதனை பெருக வாடி வேர்த்துட லயர்ந்து சோர்ந்து பாதகம் பலித்த வாற்றாற் பதைபதைத் துருகி யேங்கி யேதினிச் செய்வோ மென்ன விடைந்துநெஞ் சுடைந்து நின்றான். | 1.19. 44 | 945 |
இணையன துன்ப மெய்தி யிவனிவ ணிருப்ப வன்னோர் மனையிடை பொருள்கொண் டீங்கு வந்திலன் காணு மென்னச் சினமுடன் சொல்வார் போலச் செப்பிமே னிலையிற் போந்தார் புனைமணிக் கரங்கல் லோடும் புரண்டவன் கிடப்பக் கண்டார். | 1.19.45 | 946 |
மாட்டுவந் திருந்து நின்பால் வந்தவை யெவைகொ லென்னப் பூட்டிய கல்லுந் தானும் புரண்டவன் றெருண்டு சொல்வான் வீட்டினிற் புகுமின் பாரம் வீழ்த்துமி னென்னு நுஞ்சொற் கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டே னென்றான். | 1.19.46 | 947 |
வேறு வருந்திக் கல்லிரு கையினும் பிடிமட மயங்கி யிருந்த வன்னிடத் தெய்திய பேரதி சயித்துச் சரிந்து வீழ்ந்திட வீழ்த்தன ரீழ்த்தவர் தவித்தார் விரிந்தி டாதுமேன் மேலற விறுகிய விலங்கல். | 1.19.47 | 948 |
இல்லி னுட்புகுந் தவரொரு முகம்பட விருந்து பல்லி னாலித ழதுக்கிமெய் யுரத்தொடும் பறிப்பச் சொல்லொ ணாதுயிர் பதைத்திட வுடறுடி துடிப்பக் கவ்வி னுட்புக வற்றன வவன்மணிக் கரங்கள். | 1.19. 48 | 949 |
கரங்கள் போயின கல்லொடு மெனநிலை கலங்கி யிரங்கு வாரிடை வாரிது விதிகொலென் றேங்கி மரங்கி டந்தெனக் கிடந்தவர் மாட்டினின் றொருவ னரங்கு நின்றிழிந் தியல்புறுந் தரகனை யடைந்தான். | 1.19. 49 | 950 |
தரக னுக்குரைத் தழைத்துயர் மேனிலை சார்ந்து விரகர் செய்தொழி லனைத்தையு மொன்றற விரித்தான் கரைக ணீருகக் கேட்டவன் மனங்கடு கடுத்து நரக வாதிக ளாயினீ ரெனநவின் றனனே. | 1.19. 50 | 951 |
பாரி டைப்பெரி யவர்களுக் கிடர்படுத் திடவென் றோரு வன்மனத் தவர்களுக் குறுபொரு ளுலகிற் சாரு மக்கலு மனைவியுந் தாமுந்தம் பொருளும் வேரொ டுங்கெடு மென்பது நிசமென விரித்தான். | 1.19.51 | 952 |
ஓங்கு மாநில மாக்களி லொருவருக் கொருவர் தீங்கி யற்றிட நினைத்திடுங் கொடியவத் தீமை நீங்கி டாதவ ருயிரினைப் பருகநே ரலர்கை தாங்கும் வாளென வொல்லையி லுறச்சமைந் திடுமே. | 1.19.52 | 953 |
ஈர மற்றபுன் மனச்சிறி யவர்திரண் டிகலிக் கோர மாகிய பழியையெண் ணாக்கொடுங் கொலையாய்த் தேரு நல்லறி வாளருக் கிழைத்திடுந் தீங்கு நீரி டைக்கன னெருப்புகுத் திடுவொத் திடுமே. | 1.19.53 | 954 |
மக்க மாநகர் முகம்மது தமக்கல மறுவிற் றக்க பேர்க்கிடர் நினைப்பதுந் தகுவதன் றேயான் மிக்க வார்ததையில் விளம்புவ தென்கொலுநும் வினையால் கைக்கு மேற்பலன் பலித்தது காண்டினி ரென்றான். | 1.19.54 | 955 |
ஆதி தூதுவ ரொருவர்வந் தடைகுவ ரெனவே வேத வல்லவ ருறுமொழி நமக்குமுன் விரித்தா ரேத மற்றவ ரவரிவ ரலதுவே றிலையாற் போதி ணைச்சரண் பணிந்திவை புகலுவ மென்றான். | 1.19. 55 | 956 |
பொருத்து நன்மொழி யிதுகொலென் றேமிகப் புகழ்ந்து கருத்த ழிந்தவக் கருத்தினி னன்கெனக் கருதித் தரித்த பேரனை வருமெழுந் தனரதிற் றரக னொருத்தன் முன்னெழுந் தணிமுகம் மதினிடத் துற்றான். | 1.19.56 | 957 |
ஏத முற்றவன் மனைகொடி யவர்களில் லிடத்தோர் பாத கத்தினை விளைத்தனர் பலித்ததங் கவர்பால் வேத னைப்படர் விள்ளுதற் கரிதுவெள் வேலோ யீது வந்தவை யெனப்பணிந் துரைத்தவ ணிருந்தான். | 1.19. 57 | 958 |
இருந்த காலையி லனைவரும் வந்தெழி லிலங்கிச் சொரிந்த மாமுக முகம்மதி னிணையடி தொழுது புரிந்த தீங்கினால் வந்தவை யனைத்தையும் புகன்றார் விரிந்த வாய்புலர்ந் தேங்கிய மனத்தொடு மெலிவார். | 1.19. 58 | 959 |
வெறுத்த புன்மனக் கொடியம்யாம் விளைத்திடும் வினையைப் பொறுத்து நல்லரு ளெம்வயின் புரிகெனப் போற்றி மறுத்து நன்மொழி புகன்றனர் வளருநல் லறத்தை யறுத்துத் தீவினைப் பயிர்விளைத் திடநினைத் தவரே. | 1.19.59 | 960 |
வருந்தி நன்மொழி தரகனங் குரைத்தது மருவார் பொருந்தி நின்றவை புகன்றது மனத்தினிற் பொருந்தித் திருந்து வெண்புகழ் முகம்மது செழுங்கரம் போக்கி யிருந்த வன்றனைக் கொணர்கென வாய்மலர்ந் திசைத்தார். | 1.19.60 | 961 |
சொன்ன போதினி லோடினர் சோரிநீர் சொரியத் தன்னி ருங்கர மிழந்தவன் றனைச்சடு தியினின் மன்னர் மன்னவர் முன்கொணர்ந் தனர்மணிக் கரத்தைப் பின்ன மாக்கிய சிலையையுஞ் சிறுமையிற் பெரியோர். | 1.19. 61 | 962 |
கல்லி னுட்புதைந் துறைந்திடுங் கரங்களுங் கரம்போ யல்ல லுற்றிடைந் தழுங்கிடு மவனையு நோக்கிச் செல்ல லம்பிய கரதல முகம்மது தௌியாப் புல்லர் வஞ்சக நெஞ்சகந் தெரிதரப் புகல்வார். | 1.19.62 | 963 |
கரிய கல்லினிற் பதிந்திடுங் கரத்தினின் கரத்தைத் தெரிய வைத்திடென் றோதிய மொழியினைத் தேறிச் சொரித ருங்குரு திகளொடுந் துடுப்பெனுங் கரங்க ளரிதி னீட்டியே தொட்டிட வொட்டின வன்றே. | 1.19.63 | 964 |
உறையுங் கல்லினிற் கரங்களை நெகிழென வுரைப்பக் குறைவி லாதுற வாங்கின னீரினிற் குளித்து மறையு மென்கரம் வாங்கின தெனமறுத் தழும்பு கறையு மில்லென விலங்கின தவனிரு கரங்கள். | 1.19.64 | 965 |
முன்னை நாளினும் பெலனுறு முழுமலர்க் கரத்தால் வன்ன மாமலர் முகம்மதி னிணையடி வருடி யின்ன னீக்கினை யிருகரம் பொருத்தினை யினியென் றன்னை யாளுதி கடனென வடிக்கடித் தாழ்ந்தான். | 1.19.65 | 966 |
கொடிய சூதர்கள் வன்னசு றானியின் குலத்தோர் நெடிய காரண மெனமுகம் மதுதமை நெகிழா தடியி னிற்பணிந் தாசரித் தாசனத் திருத்திக் கடிதி னும்பொரு ளிவையெனக் கணக்குடன் கொடுத்தார். | 1.19.66 |
967 |
மிக்க செம்போனீந் தவர்க்குநன் மொழிபல விளம்பிப் புக்கி ருந்தவ டுடனெழுந் தகன்றுபொன் றிகழத் தக்க மாமணிக் கதிர்விடு மறுகினிற் சார்ந்தோ ரக்க சாலையி னிடத்துவந் திருந்தன ரன்றே. | 1.20. 1 | 968 |
நெருப்பு குத்திடுந் தெறித்திடுஞ் சுடுஞ்சுடு நெறியீ ரிருப்பி டந்தவிர்ந் தெழுமெனத் தபதிய னிசைப்ப வொருப்ப டத்துணுக் கெனப்புறத் தொதுங்கின ருழையோர் விருப்ப முற்றிருந் தெதிரகு மதுவிளக் கினரால். | 1.20. 2 | 969 |
தோற்ற நும்மிடத் தலதுவே டிலைச்சுடுங் கனலை யாற்றும் பேற்றியா லுமதிடத் தடைகுவ தலது வேற்றி டம்புகா புக்கினு மெய்யினில் வெதுப்ப வூற்ற மின்றதற் குறுகுணந் தானுமின் றெனவே. | 1.20. 3 | 970 |
மெலிவி லாதசொற் கேட்டலுங் கம்மியன் வெகுண்டவ் வுலையி னிற்கரும் பொன்புகுத் துமியொடு கரியும் பொலிய வைத்தெரி மூட்டினன் புகையிருட் படல மலித ரக்கனல் கொழுந்துவிட் டெழுந்தது வளர்ந்தே. | 1.20. 4 | 971 |
உருகி வெந்தவல் லிரும்பினை யுலைமுகத் தெடுத்துக் கருகு மேனியன் கட்கடைக் கனற்பொறி கதுவ வருகி ருந்தெழுந் தங்கைகள் சிவப்புற வடித்தான் பெருகு மக்கினிக் கொழுந்துக டெறித்தன பிதிர்ந்தே. | 1.20. 5 | 972 |
சரிந்து வீழ்ந்திடச் சிதறிய செங்கதிர்த் தழல்கள் விரிந்து நன்கதிர் குலவிய முகம்மது மெய்யி னெரிந்த சந்தனச் சேறுபன் னீரொடுங் குழைத்துச் சொரிந்த தாமெனக் குளிர்ந்தது சோர்வற வன்றே. | 1.20. 6 | 973 |
இத்தி றத்தெழில் கண்டுகம் மியனெதிர் நோக்கி யுத்த மக்குலப் பெயர்தலை முறைப்பெய ரூர்ப்பேர் பத்தி யின்னுமக் கிடுபெய ரிவைபடிப் படியாய் வித்த காதெரி தரவுரை யெனவிளம் பின்னே. | 1.20. 7 | 974 |
மக்க மூர்கிலா பருள்குசை யப்துல்மு னாபுக் கக்க மானஹா ஷீமுத லப்துல்முத் தலிபு தக்க மன்னவர் மைந்தரி லப்துல்லா தவத்தான் மிக்க னென்பெயர் முகம்மது வெனவிளம் பினரே. | 1.20. 8 | 975 |
அறபின் மக்கமா நகரின் முகம்மதென் றணித்தா யுறவு தித்துநஞ் சமயங்க ளுலைப்பனென் றுரவோர் மறையி லோதிய வரன்முறைப் படியQ துணர்கிற் குறைவி லாதவ னிவனெனக் குறித்துளங் கொதித்தான். | 1.20.9 | 976 |
வருந்தி லாமறை யவர்களே ஷாமின்மன் னவரே திருந்து நல்லறி வாளரே தேவத மனைத்தும் பொருந்து றாதற வழித்திட நகரிடைப் புகுந்திங் கிருந்த வனிவன் காணெனக் கூக்குர லிட்டான். | 1.20. 10 | 977 |
வேறு கனைவாருதி நிகர்ஷாமுறை கதிர்மாமுடி வீரர் தனுவாளயி லெறிவேல்கணை தண்டம்பல வேந்தி முனையாரெவ ரெதிர்வார்முறை யிடுவாரெவ ரென்றே சினமாயெழு புலிபோல்பவர் சிலர்வந்துவ ளைந்தார். | 1.20. 11 | 978 |
கருதார்வரு திறலாலிடு கலகந்தர மன்றென் றிரைவாகிய சினத்தான்ய குணத்தாற்றிர ளினத்தாற் பொருவோமெனு மனத்தாலதி புகழார்முகம் மதுவை மருவார்மன மலையக்கொடு மதிளின்புறம் வந்தார். | 1.20. 12 | 979 |
நறைதுன்றிய சுதைவெண்கதி ரெயிலின்புற நண்ணி யுறையும்விடு தியில்வந்தன ரொளிமாமுகம் மதுவுந் துறையின்றொழில் வகையுந்தொகை நிதியும்முறை முறையாய் நிறைகின்றன குறையின்றென நெறியேகிட நினைவார். | 1.20.13 | 980 |
எருதொட்டக மடல்வெம்பரி யிருபக்கமு நிறைய மரவத்தொடை புயமுங்கிட வருமக்கிக டாமுந் தருமத்துரை நயினாரொடு சதுரன்மைச றாவும் புரிசைப்புற நகர்விட்டணி பொழில்புக்கி நடந்தார். | 1.20. 14 | 981 |
குருகார்கழ னிகள்வாவிகள் குளிர்சோலை கடந்தே யிருகாதமு மொருகாதமு வெழிலாக நடந்து கருமாமுகி னிழறாவிய ஹபிபாமுகம் மதுவும் வருபாதையி னடுவேயொரு வளமாமனை கண்டார். | 1.20. 15 | 982 |
கனமாமதி யுடையோனெதிர் களைகால முணர்ந்தோன் மனமூடுறை யறிவான்முகம் மதுவார்வழி யறிவோன் குனிவார்சிலை நசுறானிகள் குருவாகிய வூசா வெனுமாமறை முதியோனுறை யெழின்மாமனை யேகார். 16 | 983 |
மேகக்குடை நிழலுங்கதிர் விரிவாகிய மெய்யும் பாகத்திடை கமழும்பரி மளமும்மதி முகமு நாகத்தொடு தனிபேசிய நயினார்முகம் மதுவென் றாகத்திடை கண்டானவ ணடைந்தானரு கிருந்தான். | 1.20. 17 | 984 |
இருந்தான்முகம் மதுதண்கதி ரெழின்மாமுக நோக்கித் திருந்தாரட லரியேதரு செழுமாமழை முகிலே பெருந்தாரணி தனினும்பதி குலம்பேரவை யனைத்தும் வருந்தாதுரை யீரென்றனன் மறையோதிய மதியோன். | 1.20.18 | 985 |
அதுனான்கிளை ஹாஷிம்குல மமரும்பதி மக்கம் பிதிராநிலை யபுத்தாலிபு பின்னோரபு துல்லா சுதனாமுகம் மதுநானெனச் சொன்னார்மறை வல்லோ னிதமாகிய நபியாமென விசைந்தான்மன மகிழ்ந்தான். 19 | 986 |
வடிவாரிடை யகலாதுறை மைசறாதனை நோக்கிக் கொடியார்கழ லடலோய்நுமர் குலமேதென நவிலக் கடுவார்விழிக் கொடியாரிடை கதிஜாவெனு மயிலா ரடியாரினி லௌியேன்மிக வுரியேனென வறைந்தான். | 1.20.20 | 987 |
மடமாயில் கதிஜாவென வளர்கோதையை யுதவு மடலாரரி குவைலீதெனு மறிவோன்மறை மொழியைக் கடவாதநன் மதியோனுயர் கனபேரரு ளானென் னுடலாருயி ரெனவேமுத லுறவானவ னென்றான். | 1.20. 21 | 988 |
முன்னாளுற வெனவோதிய முதியோன்முக நோக்கி யென்னாருயி ரனையீரும திடுபேர்சொலு மெனவே மன்னாகிய மைசறாசொல் மறையோனு மகிழ்ந்தே யொன்னாரரி யேயென்பெய ரூசாவென வுரைத்தான். | 1.20.22 | 989 |
வேறு உரையினி லுறவு குவைலிதென் றூசா கரைவழிந் தொழுகு மகிழ்ச்சியாய் மைசறா திருமொழி யுரைத்த திவனெனக் கருதிச் புரையற நுமக்குச் சொல்வதொன் றுளது 1.20. 23
| 990 |
குறைஷியங் குலத்துக் கொருமணி யெனவுங் | மறைதிரைக் கடலி லமுதெனப் பிறந்த நிறைமதி மடியிற் றவழவுந் துகிலிற் னுறைபடும் பொருளை யுணர்கெனச் சலாமு 1.20. 24
| 991 |
அம்புய வதனன் குவைலிது வருந்து | கொம்பென வொசிந்த நுண்ணிடைக் கதீஜா கம்பிதஞ் செய்து கருத்தினுண் மகிழ்ந்து மிம்பரின் விளங்க மைசறா மகிழ 1.20.25
| 992 |
அகிலமுந் திசையுஞ் சுவனமும் விளங்க | முகம்மதென் றுதித்து தீன்பயி ரேற்றி பகரரு நபியாய் வேதமு முடைத்தாய் நிகரருங் குரிசி லிவரல்லா லிந்த 1.20. 26
| 993 |
கலைநிறை மதியாய் மடிமிசை யிருப்பக் | நிலைமிசை யிவர்க்கே மனைவியா யிருந்திந் குலமிகப் பெருகுஞ் செல்வமும் வளருங் மலகிலா தடைந்த தென்னவு முரைத்தே 1.20. 27
| 994 |
மறைதெரி யறிவ னுரைத்தசொற் கேட்டு | நிறைபதி தனைவிட் டிற்றைநாள் வரைக்கு குறைவிலா தெழுதி முத்திரை பொருத்திக் கறையிலா மதிய மெனுமயில் கதீஜா 1.20. 28
| 995 |
விண்ணபத் திரத்தை மக்கமா நகரில் | பண்ணினிற் சிறந்த மறைமுறை தேர்ந்த வண்ணவார் தடக்கை முகம்மதைப் புகழ்ந்து வெண்ணிறந் தனைய மக்கிக ளெவரு 1.20. 29
| 996 |
பாதையிற் புகுத மூதறி வுணர்ந்த | தீதற வெழுந்து முகம்மதின் வனசச் கோதறப் பழுத்த செழுங்கனி கொடுத்துக் மாதவர் தமையு மடிக்கடி போற்றி 1.20.30
| |
997 |
முகைமுறுக் கவிழ்ந்து முருகுகொப் பளிக்கு நகைவிரித் தனைய குவளையுந் துகிரி திகழ்தருஞ் சேதாம் பலுங்குடி யிருந்து யுகடொறும் வெருவி யொதுங்கிய சிறைப்புள் 1.21. 1 | | 998 |
புனன்முகி லசனி யதிர்தொறுங் கிடந்து சினமுடன் சிலம்பப் புகர்முகச் சிறுகட் நனைமல ருதறுங் காவகத் தொதுங்கு ளினமணிச் சிறைவிட் டருநடம் புரியு 1.21. 2
| 999 |
படுகொலைப் பார்வை காருடற் கழற்காற் | கொடுமரங் குனித்துத் தூணியுந் தாங்கிக் புடைபுடை பரந்த மானினம் வீழ்த்திப் விடர்படர் கானற் பாலையுங் கடந்தார் 1.21.3
| 1000 |
தொண்டையங் கனிக டோன்றியிற் சிறப்பத் | விண்டலர் விரித்துக் காய்த்தன போலும் வண்டுறை பிடவுங் கொன்றையுஞ் செறிய வெண்டயி ருடைக்கு மொலிமறா முல்லை 1.21.4
| 1001 |
பரித்திர ளனைத்து மொருபுற நெருங்கப் | யெருத்தின மணிக ளொலித்திட வொருபா கரத்தினி நெடுவே லேந்திய மாக்கள் விரித்தவெண் குடையுந் துவசமு மலிய 1.215
| 1002 |
சந்தகில் திலகங் குரவுதேக் காரந் | சிந்துர மசோகு மாதவி நெல்லி மந்தரை கமுகு புன்னைநா ரத்தை குந்தமா சினிமா கடம்பில விதழி 1.21. 6
| 1003 |
நித்திலத் திரளி னரும்பிளம் புன்னை | கொத்தரும் பலர்த்திச் சண்பகத் தொகுதி பத்தியிற் செறிந்த பாடலம் விரித்த புத்தரி சொழுக்கு நிரைமகிழ் செறிந்த 1.217
| 1004 |
முள்ளிலை பொதிந்த வெண்மடல் விரிந்து | கொள்ளைமென் கனிகள் சிதறுமுள் ளீந்து வெள்ளிவெண் கவரி விரிந்தபோற் பாளை றெள்ளுநீர்க் குரும்பைக் குலம்பல சுமந்த 1.21.8
| 1005 |
தூய்திரட் பளிக்குக் கனியையா மலகஞ் | காய்கதிர் நீல மணியென நாவற் சேயுயர் தேமாச் செழுந்தலை குழைத்துத் சாய்பணர்க் கொழுவிஞ் சியின்கனி சிவந்த 1.21.9
| 1006 |
தேங்குட மனைய முட்புறக் கனிக | மாங்கனி யமுதத் திவலைக டெறிப்ப பூங்குலைக் கூன்காய் பொன்பழுத் தொளிர்வ றீங்கில்பொற் கலசம் விண்டுசெம் மணிகள் 1.21.10
| 1007 |
உலகமுந் திசையும் புகழுசை னயினா | சலதர மனைய கரத்தினி லேற்றோர் நிலமிசை கிடையாப் பெருவளஞ் சுரந்து வலகிலாச் செல்வங் குறைவறா திருந்த 1.21.11
| 1008 |
அறிவினுக் கறிவா யரசினுக் யரசா | மறுவிமெய் கமழ்ந்த முகம்மதுங் கூண்ட நிறைவளம் பலகண் டகங்களி கூர்ந்து துறையின்முத் திறைக்குந் திரைத்தடஞ் சூழ்ந்த 1.21.12
| 1009 |
வானிழிந் தமர ரெண்ணிலக் கிலபேர் | தேனிமர் மரவத் தொடையலுந் தரித்துத் பானுவின் கதிர்கள் பொருவுறா தியன்ற கான்மலர் தூயொட் டகத்தின்மே லேற்றிக் 1.21.13
| 1010 |
பல்லியங் கறங்கக் கொடித்திர ணுடங்கப் | வெல்லவன் கதிரிற் படைக்கலஞ் செறிய செல்லுறழ் கரட மதகரி நெடுங்கச் வல்லியின் கொடிபோ லமரர்தம் மகளிர் 1.21.14
| 1011 |
பரித்திர டொடர வானவ ரீண்டிப் | தெருத்தலை புகுந்து பவனியி னுலவிச் கருத்துடன் கண்ணுங் களிப்புற நோக்கிக் திருத்திழை மணியிற் குருத்தெனுங் கதீஜா 1.21.15
| 1012 |
கனவினை நனவென் றகமகிழ்ந் தெழுந்து | வினமத கரியும் பரியொடி ரதமு மனமல ருறைந்த முகம்மது தமையும் புனைமணிக் கொடொயுங் கவிகையுங் காணார் 1.21.16
| 1013 |
இருடுணித் தெழுந்த மின்னெனப் பிறழு | சுரிகுழன் முடியார் தோளணி தரியார் சரிகரத் தணியார் மேகலை யிறுக்கார் மருமலர் சொருகார் வடுவெனச் சிறந்த 1.21.17
| 1014 |
கந்துகங் கழங்கம் மனைகரத் தேந்தார் | சிந்துரப் பிறைநன் னுதலியர் திளைத்த மந்தர மதிண்மண் டபத்திடைப் புகுந்து சுந்தரக் கமலச் சீறடிக் கிசைந்த 1.21.18
| 1015 |
பஞ்சணை பொருந்தா ரிருவிழி துயிலார் | கொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார் கஞ்சமென் மலர்த்தாள் பெயர்ந்திட வுலவார் வஞ்சிநுண் ணிடையார் தம்மிடத் துறையார் 1.21.19
| 1016 |
வேறு | மருமலர்ப் புயமுகம் மதுபொன் மாமதிற் றிருநகர்த் தெருவரு பவனி சேர்தரு முருகலர் குழலிதங் கனவின் முற்படக் கருதிய துயரெனும் கடற்கு ளாயினார். 1.21.20
| 1017 |
மலைநிகர் புயமுகம் மதுநன் மாமணத் | துலவிய பவனியின் கனவொன் றுற்றிடக் கலைமதி நிகர்கதீ ஜாதங் காதலா லலைதுயர்ப் பெருக்கினி லாழ்ந்திட் டாரரோ. 1.21.21
| 1018 |
துதிபெறுங் குவைலிது கருத்துத் துன்புறப் | பதியர்பே தகப்படப் பகர்வ ரோவெனு மதிநிகர் முகம்மதிம் மனைவி யாகவென் விதிவசம் பொருத்துமோ விலக்கு மோவெனும். 1.21.22
| 1019 |
மடிமிசை மதிவரும் வரவு மாமறை | நெடியவன் மணமென நிகழ்த்தும் வார்த்தையுங் கடிமணப் பவனியின் கனவு மாதுலன் றிடமுறும் வசனமுந் சிதையு மோவெனும். 1.21. 23
| 1020 |
கருத்தினுள் ளுறைமுதற் கனவை மைசறா | விரித்தெடுத் துரைத்தலும் விளங்கத் தேர்ந்துபொன் வரைத்தடப் புயத்தனூ சாதன் வாக்கினா லுரைத்ததென் னோவென வுளத்தி லெண்ணுமால். 1.21.24
| 1021 |
நிலமிசை நபிப்பெயர் நிறுத்தும் பேர்களுக் | கலைவுறப் பெரும்புகை யவதி யுண்டெனக் கலைவல ருறைத்தசொற் கருத்தி லெண்ணமுற் றுலைதர வுடன்மெலிந் துருகி வாடுமால். 1.21.25
| 1022 |
உரிமையி னுடனெழுந் தொழுகு மைசறா | வரைதரு பத்திரம் வரவுங் காண்கிலே மெரிசுரப் பாலையிற் செய்தி யாவையுந் தெரிதர விலையெனத் திகைத்துத் தேம்புமால். 1.21.26
| 1023 |
விம்முறு மேங்குமெய் வருந்தும் வெய்துயிர்த் | தம்மவோ வெனுமுளத் தடக்கி யாழ்கடன் மம்மரைக் கடப்பதெவ் வகைகொ லோவெனச் செம்மலர் முகங்கரிந் திருந்து தேம்புமே. 1.21.27
| 1024 |
மன்னவன் குவைலிது வரத்திற் றோன்றிய | பொன்னிளங் கொடிவிழி பொருந்தி லாதிருந் தின்னன துயரமுற் றெண்ணி யேங்கியே தன்னுளத் தடக்கிமெய் தளருங் காலையில். 1.21.28
| 1025 |
வழுவற நன்மொழி யெடுத்து மைசறா | வெழுதிய பத்திர மடைந்த தின்றெனச் செழுமலர்க் குழலிய ருரைப்பத் தேமொழி விழைவொடுங் கரத்தினில் விரைந்து வாங்கினார். 1.21.29
| 1026 |
முத்திரை தனைவிடுத் தெடுத்து மூரிவெண் | பத்திரந் தனைவிரித் துவந்து பார்த்ததி னுத்தரந் தனையுணர்ந் தறிய வுள்ளமும் புத்தியுங் களித்துடல் புளகம் பூத்ததே. 1.21.30
| 1027 |
விரிதருங் காரணம் விளக்கி நற்புகழ் | தெரிதர முகம்மதென் றெழுதுஞ் சித்திர வரிதொறு மிருவிழி வைத்து முத்தமிட் டுரியதம் முயிர்பெறு முவகை யாயினார். 1.21.31
| 1028 |
உரைப்பருங் காரணத் துறுதி யாவையும் | வரைப்புயன் மைசறா வரைந்த பத்திரந் திரைப்படுங் கடலிடை தியங்கு வார்க்கொரு கரைப்படுத் திடுமரக் கலத்தை யொத்ததே. 1.21.32
| 1029 |
தூயவர் காரணந் தொகுத்த பத்திரம் | பாய்திரை யமுதெனப் பிறந்த பைந்தொடி காய்கனன் மெழுகெனக் கருத்துச் சிந்திட மாய்வுறுந் துயர்க்கொரு மருந்து போன்றதே. 1.21.33
| 1030 |
விரைமல ருடுத்திகழ் மேக வார்குழற் | கரியமை விழிக்கதீ ஜாதகங் கையினிற் பிரிவுறா துறைந்தபத் திரத்தைப் பெட்புட னரசபித் தாலிபுக் கனுப்பி னாரரோ. 1.21.34
| 1031 |
வந்தபத் திரந்தனை வாங்கித் தம்முயிர்ச் | சந்ததி விளைத்தகா ரணத்தின் றன்மைநேர்ந் திந்தநற் பதவிக ளியன்ற தோவெனச் சுந்தரப் புயவரை துலங்க வீங்கினார். 1.21.35
| 1032 |
வியனுறு பத்திரம் விளம்புஞ் செய்திகண் | டுயரபுத் தாலிபென் றோது மன்னவர் செயிரறு முகம்மது வெனுஞ்சஞ் சீவியா லுயிர்பரந் திடுவதோ ருடல தாயினார். 1.21.36
| 1033 |
தருநிகர் கரத்தபீத் தாலி பாகிய | குரிசி லுங்கதீ ஜாவெனுங் கோதையும் வருமதிக் கின்புறு மலர்க ளொப்பென விருவரு முவகையிற் களித்தி ருந்தனர். 1.21.37
| |
1034 |
உடல்குழைத் தெழுந்து செந்தே னொழுக்கிய மலர்ப்பைங் காவில் வடவரை யனைய திண்டோள் வள்ளலு மறுவி லாத கடகரி யனைய வெற்றிக் காளையர் பலருஞ் சேர்ந்த விடபமும் பரியுந் துன்ன வெழுந்தனர் விரவி னன்றே. | 1.22. 1 | 1035 |
சோலைவாய் விடுத்து நீந்தித் துவசமுங் குடையு மல்க நீலமா மங்கு லங்கேழ் நெடுங்குடை நிழற்ற வெற்றிக் காலவேல் கரத்தி லேந்திக் காளையர் மருங்கு சூழ மாலையொண் புயத்தி லோங்க முகம்மது மினிதின் வந்தார். | 1.22. 2 | 1036 |
அகிலமுஞ் சுவன நாடு மமரரும் போற்றி வாழ்த்த மிகுபுகழ் குவைலி தீன்ற மெல்லியல் களிப்புப் பொங்க நகிலணி துகிர்க்கொம் பென்ன நாரியர் புளகம் பூப்ப முகம்மது வென்னும் வள்ளன் மக்கமா நகரின் வந்தார். | 1.22. 3 | 1037 |
காரணக் கடலை யொண்கேழ்க் கதிருமிழ் மலையை யாதி யாரணக் குரிசி லென்னு மகுமதை யெதிரிற் புக்கித் தாரணிந் திலகு தோட்பூ தரத்தபூத் தாலிப் வெற்றி வீரமுந் திறலும் வாய்த்த மென்கரத் தணைத்து மோந்தார். | 1.22. 4 | 1038 |
அணியிழை சுமந்த செவ்வி யனையெனும் பாத்தி மாவந் திணைவிழி பெற்றே னென்ன விருகையாற் றழுவிப் பைம்பொன் மணமலி பீடத் தேற்றி முகம்மதை யினிது போற்றிக் கணநிரை யயினி நீராற் கண்ணெச்சிற் கழுவி னாரால். | 1.22. 5 | 1039 |
மறமுதிர்ந் திலங்கும் வெள்வாண் முகம்மது மினிது புக்கார் திறலபூ பக்க ரென்னுஞ் செம்மலு மனையிற் சேர்ந்தார் தொறுவினத் தொடுமப் பாசு மாரிதுஞ் சுபைறு தாமு மறபிக ளெவருந் தத்த மணிமனை யிடத்திற் சார்ந்தார். | 1.22.6 | 1040 |
கட்கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவ முட்பட வளர்த்த மெய்யா னுறுமொழி யறுதி யில்லா னட்பினைப் பகைத்துச் செய்த நன்றியைக் கொன்று நஞ்சார் மட்படு கலமே யன்ன மனத்தபூ ஜகிலும் போனான். | 1.22.7 | 1041 |
பாங்கினிற் கணக்கர் சூழப் பரிசனக் குழுவந் தீண்ட வாங்குவிற் றடக்கை வெற்றி மலிபுகழ் மைச றாவு மோங்குமா நகரம்புக்கி யொளிர்மணித் தவிசி னாய தேங்குழற் கதீஜா பைம்பொற் சீரடி வணக்கஞ் செய்தான். | 1.22.8 | 1042 |
தெரிமலர்க் கரங்கள் கூப்பிச் சேவடி வணங்கி நின்ற வுரிமைதன் முகத்தை நோக்கி யொண்டொடி கதீஜா வென்னு மரிவையாங் குற்ற செய்தி யறைகென வறைய மாரி மருமலி புயங்கள் விம்ம வாய்புதைத் துருந்து சொல்வான். | 1.22.9 | 1043 |
கரும்பெனத் தோன்றிச் செம்பொற் கதிருமிழ்ந் திருந்த கொம்பே சுரும்பிருந் திசைகொ டிண்டோட் டோன்றல் காரணங்க ளியாவுந் தரம்பெற விவைகொ லென்னத் தானள வறுத்து மட்டிட் டிரும்பெரும் புடவி தன்னு ளியாவரே யியம்ப வல்லார். | 1.22.10 | 1044 |
சேயுய ரமரர் போற்றுஞ் செவ்விய முகம்ம தென்ன மாயிரும் புவியுட் டோன்றி மானுட வடிவு கொண்ட நாயகர் புதுமை யெல்லா நானெடுத் துரைக்க நானூ றாயிர நாவுண் டாகி லதிற்சிறி துரைப்ப னென்றான். | 1.22.11 | 1045 |
மரப்பதம் வழுத்தி யன்னோர் வாய்மொழி மறாது நின்றோர் திரைப்பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் நிரைப்பெரு நரக மாழக் கெடுவர்நீ ணிலத்தி லென்னா லுரைப்பதென் சிறியேன் றீட்டு மோலையே யுரைக்கு மென்றான். | 1.22.12 | 1046 |
மரவமுங் கியபொற் றிண்டோன் முகம்மது வரவு கண்டேன் கரையிலாக் காட்சி கண்டேன் காசினி தோயாப் பாதம் பிரிவுறாப் பதவி கண்டேன் பெண்களுக் கரசே யின்றுந் திருவடி கண்டேன் காணாச் செலவமொன் றில்லை யென்றான். | 1.22.13 | 1047 |
தெண்டிரைப் புவன மேழுஞ் சேந்தபொன் னுலக மெட்டுங் கொண்டுதன் னேமி யொன்றாற் கொற்றவெண் குடையு ளாக்கி வண்டணி துதையுந் தண்டார் முகம்மதே புரப்பர் தேனுங் கண்டுமொத் த்னைய சொல்லாய் காண்பது திண்ண மென்றான். | 1.22.14 | 1048 |
கடிகமழ் மரவத் திண்டோட் காளைதம் புதுமை யாவும் வடிவுறத் தௌிந்து தேர்ந்த மைசறா வுரைத்த மாற்றம் படிபுகழ் கதீஜா மெய்யிற் பசலைபூத் தெழுந்த காமக் கொடிபடர்ந் தேற நாட்டுங் கொழுங்கொம்பு போன்ற தன்றே. | 1.22.15 | 1049 |
மனையினுக் குயிராய் வந்த மைசறா வுரைத்த மாற்றஞ் சினவுவேற் கருங்கட் பாவை செவிநுழைத் தகத்திற் புக்கி நனிதுய ரூறு தொட்டு நதிப்பெருக் காக்கிப் பின்னுங் கனைகடல் விரிவ தாக்கிக் கதித்தெழப் பெருக்கிற் றன்றே. | 1.22.16 | 1050 |
செயிரறு கனவு மிங்கு செப்பிய மொழியு மோலைப் பயனுமுன் னணித்துக் கணட பார்வையுங் கலந்தொன் றாகி நயனுறு கதீஜா வுள்ள நடுக்கநெட் டுயிர்ப்பு மீறுந் துயர்நெருப் பெழுக மூட்டுந் துருத்தியின் வியத்த தன்றே. | 1.22.17 | 1051 |
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண வையமி லமரர் மாத ரருந்தவம் புரிவ ரென்றாற் செய்யகண் குளிரக் கணட செழுமுகிற் கரிய கூந்தற் றையற முளத்தின் காதற் பகுதியார் சாற்றற் பாலார். | 1.22.18 | 1052 |
பெருகிய துயர மென்னும் பெருங்கட னீந்தி நீந்திக் கரைபெறற் கரிதாய்ச் சோர்ந்து கண்படை பெறாது வாடிப் பருவரல் படர்ந்து புந்திப் பயிரெனுங் கருத்தை மூடத் திருமயி லின்பு றாது சிலபகல் கழிந்த பிற்றை. | 1.22. 19 | 1053 |
மண்ணினுக் கரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து கண்ணினுங் கருத்து மாறா தடிக்கடி தோற்ற நாணிப் பண்ணெனச் சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி யெண்ணிலா தெண்ண முற்றாங் கிருந்தவர் துயிலுங் காலை. | 1.22.20 | 1054 |
வயிரவே ரூன்றிச் சேந்த மாணிக்கப் பணர்விட் டோடி யியன்மர கதத்தின் சோதி இளந்தளிர் குழைப்ப வீன்று நயனுறு நகரை மூடி நற்கனி யுகுத்து வாசச் செயமல ரிடைவி டாது சிரமிசைச் சொரிய மாதோ. | 1.22.21 | 1055 |
வானமட் டோங்கி நீண்ட மாணிக்கத் தருவின் பொற்பூ நானில முழுதும் விண்ணு நறைகமழ்ந் திடுவ நோக்கித் தேனமர் குழலி னாருஞ் செல்வரும் பெரிது போற்றப் பானலங் கடந்த கண்ணார் பயனுறுங் கனவு கண்டார். | 1.22.22 | 1056 |
மெல்லியல் கனவு கண்டு விழித்தெழுந் திருந்து நெஞ்சைக் கல்லிய துயரி னோடுங் கருத்தொடுந் தௌிந்து பார்த்து வல்லவ னுறக்கத் தென்னு மறைவலான் றன்னைக் கூவி யல்லினிற் றெரியக் கண்ட காட்சியை யடுத்து ரைத்தார். | 1.22.23 | 1057 |
மடந்தைதங் கனவைக் கேட்டு மனத்தினுட் படுத்தித் தேர்ந்து கடந்தநூன் முறையி னாலுங் கல்வியோர் கேள்வி யாலும் படர்ந்ததன் னறிவி னாலும் பகுத்துச்சீர் தூக்கிப் பார்த்துத் தொடர்ந்தபுன் முறுவ றோன்றத் தோகையர்க் குரைப்ப தானான். | 1.22.24 | 1058 |
இருநிலத் துறைந்த வேரீ மானிலை யெழுந்து நின்ற தருமுகம் மதுநல் வாசந் தழைத்தல்தீன் விளக்க மின்பம் வருகனி கலிமா வாழ்த்து வானவர் செயல்பூ மாரி தெரிதரச் சொரித லும்மைத் திருமண முடித்த லென்றான். | 1.22.25 | 1059 |
புதியதோர் கனவி னுட்பப் பொருளினைத் தேர்ந்து சோதி மதிநுதற் குரைத்துப் போற்றி மனமகிழ்ந் தெழுந்து வீரங் குதிகொளும் வெள்வேற் செங்கைக் குவைலிது மருங்கிற் புக்குத் துதிசெய்தங் குற்ற செய்தி யனைத்தையுந் தொகுத்துச் சொன்னான். | 1.22.26 | 1060 |
அவிரொளி விரிக்கு மேனி யகுமதின் மனைவி யாகப் புவியெனும் வானும் போற்றப் பொருந்தனும் பொன்னே யென்னக் குவைலிது கேட்டா நந்தக் கொழுங்கடற் குளித்துக் கூர்ந்து தவமுய ரறிவ னோடுஞ் சம்மதித் திருந்தா னன்றே. | 1.22.27 | 1061 |
சுரும்பிமிர் கரிய கூந்தற் சுடர்த்தொடி கதீஜா தம்பா லரும்புகழ் மைச றாவை யழைத்தரு கிருத்தி நெஞ்சின் விரும்பிய வுவகை கூரக் காரண வேந்தர்க் கன்பாய்ப் பெரும்புவி மணத்தின் கோலம் பெற்றிலா தென்கொ லென்றார். | 1.22.28 | 1062 |
கூறிய மொழியை வேய்க்குங் குயிலுக்குங் கொடுத்துச் செந்தேன் மீறிய மதுரச் சொல்லாய் விரும்பிய பயன்க ளியாவுந் தேறிய கரணம் போகஞ் செழும்புவி யாக்கை போல வூறிய வூழி னன்றி முடியுமோ வுலகத் தென்றான். | 1.22. 29 | 1063 |
சினப்படைச் செழுங்கட் கொவ்வைச் செவ்விதழ் சிறுவெண் மூர லனப்பெடை கதீஜா பால்விட் டடலரி மைச றாமன் கனப்பெருங் கவிகை யோங்கக் கடுவிடப் பாந்தண் மாய்த்த வனப்பிருந் தொழுகுஞ் சோதி முகம்மதி னிடத்திற் சார்ந்தான். | 1.22.30 | 1064 |
வந்துதாள் வழுத்திச் செவ்வி மலர்க்கொடி கனவுங் காதற் சிந்தையு ணினைவும் வேதந் தௌிந்தவ னுரையுந் தேனார் கொந்தலர் மரவ மாலைக் குவைலிது மகிழ்வுங் கூறிட் டந்தரங் கத்திற் சொன்னா னாண்மையு மறிவு மிக்கான். | 1.22.31 | 1065 |
மானவேற் றடக்கை வீரன் மைசறா வசனங் கேட்டுக் கானம ருடலு முள்ளக் கருத்தும்பூ ரித்துச் சிந்தித் தானவ னருளை யுன்னி யகத்தினி லடக்கி யுண்மைத் தூநெறி வழுவா வள்ளற் றோற்றிடா வுவகை கொண்டார். | 1.22.32 | 1066 |
பொற்றொடிக் கதீஜா பாதம் போற்றிய மைச றாசொல் வெற்றியுங் குவைலி தென்னும் வேந்தனுக் குறக்கத் தோதும் பெற்றியின் மகிழ்ந்த வாறும் பெட்புறு கனவி னாலங் குற்றவை யனைத்துந் தந்தைக் குரைப்பதற் குன்னி னாரால். | 1.22.33 | 1067 |
அணிநிரைத் தெதிர்ந்த வொன்னா ராருயிர் சிதைத்துச் சேந்து திணிசுடர் விரிக்கும் வெற்கைத் திறலபித் தாலிப் தம்பாற் பணிமறா தொழுகிச் செய்யும் பாலகன் மைச றாவை மணிவகுத் தனைய திண்டோண் முகம்மது கூட்டிச் சென்றார். | 1.22.34 | 1068 |
தந்தைமாட் டேகி யங்ஙன் சார்பிட மறிந்து சார்ந்து நந்தமர் தனிலு மிக்க நண்பின னிவனெவன் றோதி மந்திர மொழியா யேதா வாசக முளதென் றான்றன் சிந்தையை விளக்க மாகக் கேளுதி தெரிய வென்றார். | 1.22.35 | 1069 |
மன்னர்மன் சொற்கேட் டந்த மைசறா தன்னைக் கூவித் தன்னக மடைந்தன் பாகத் தனித்துவைத் துள்ளத் துற்ற நன்னய மொழிக ளியாவு மறையினி னவிற்று கென்னப் பொன்னெடுத் துரைத்த தென்னப் புகன்றெடுத் துரைக்க லுற்றான். | 1.22.36 | 1070 |
நேரிழை கதீஜா பாலி னிகழ்ந்தது முறக்கத் தென்னும் பேரறி வாளன் றேர்ந்து குவைலிதுக் குரைத்த பேச்சு மூர்மனத் துயராற் றன்பான் மணமென வுரைத்த வாறுஞ் சோர்விலா துரைத்தான் மிக்க சூழ்ச்சியிற் றௌிந்த நீரான். | 1.22.37 | 1071 |
நிரைத்தெடுத் துரைத்த சொற்கேட் டருளுறை யபித்தா லீபு புயவரை பூரித் தோங்கிப் பொருவிலப் பாசா ரீது வயவரி ஹமுசா வீறாய் மன்னுசோ தரரை யெல்லா நயனுற வழைத்தி ருத்தி நடந்தசொல் லனைத்துஞ் சொன்னார். | 1.22.38 | 1072 |
பாட்டளி மிழற்றுந் தேறற் படலைவீற் றிருந்த வீரத் தோட்டுணை யபித்தா லீபு சுடர்நகை முறுவல் வாயாற் கேட்டசொல் லமிர்தந் தன்னாற் கேகய முகில்கண் டென்னப் பூட்டிய சிலைக்கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார். | 1.22.39 | 1073 |
உடைமையிற் பணத்திற் சாதி யுயர்ச்சியில் வணக்கந் தன்னின் மடமயி லழகி லொவ்வா மாட்சியிற் கதீஜா தம்மைக் கடிமண முடிக்க நாடிக் கருதின பேர்க ளெல்லா மடிகளென் றுரைநா நீட்ட வச்சமுற் றிருந்தா ரன்றே. | 1.22.40 | 1074 |
அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம் நன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி யின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது முன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே. | 1.22.41 | 1075 |
அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம் நன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி யின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது முன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே. | 1.22.42 | 1076 |
வல்லமை யறிவிற் றேர்ந்த வார்த்தையுத் தரத்திற் சூழ்ச்சிச் சொல்லினுட் பொருளி னுட்பத் துடரறிந் துரைக்க வேண்டி னல்லெழில் ஹமுசா வல்லா னகரின்மற் றுண்டோ வென்னப் பல்லரும் போற்று மாற்றம் பகர்ந்தன ரபுத்தா லீபே. | 1.22.43 | 1077 |
வேறு திறலறிவ ரபித்தாலி புரைத்தமொழி யனைவருந்தஞ் துறுமலர்ப்பொற் புயத்தமுசா தமையழைத்து மணமொழியைத் நிறைநிலைமை தவறாத குவைலிதுபா லினிதேகி றறைதருமுன் னவர்மாற்றம் பின்னவருந் தலைமேற்கொண் 1.22.44
| 1078 |
மனமகிழ்வு மனக்களிப்பு மருங்குவர வெழுந்தமுசா | யினமணியொண் கதிர்மாடத் திடுமணிவில் லெறிப்பவட தினகரன்மெய் மறுகுமணி மறுகூடு மறுகாது கனகமழை பொழிமேகக் குவைலிதுவாழ்ந் திருந்ததலைக் 1.22.45
| 1079 |
அபுத்தாலிப் திருத்துணைவ ரறத்தாறு வழுக்காத | கவுட்டான மொழுகுமுரட் கரித்தானை நெருங்குமணிக் புவித்தாரை நடத்திமறு புறத்தேசப் பொருளனைத்தும் குவித்தானை சொலற்கரிய குலத்தானைக் குவைலிதைக்கண் 1.22.46
| 1080 |
இருந்தவனு மெதிராகி ஹமுசாதம் மெழிற்கரந்தங் | பெருந்தவிசி னினிதிருத்தி யருகிருந்து பிரியமொழி விரிந்தபிள வரிந்தவிலைக் கருப்பூர முடனளித்து யருந்தவமே யெனப்போற்றி யிவணடைந்த வரவாறே 1.22.47
| 1081 |
தெரிந்தமறை முறையாலுந் தேர்ந்தவர்சொற் டௌிவாலுந் | யருந்தவமா யெம்மினத்தோ ராருயிரா யருமருந்தா லிருந்தமணி யாயுதித்த முகம்மதெனும் விடலைகருத் பொருந்தமண முடிப்பதற்கு வந்தேனென் றினையமொழி 1.22.48
| 1082 |
இந்நகரிற் குறைஷிகணம் மினத்தவரின் மதித்தவர்தம் | பொன்னனைய மடவாரைத் தருதுமென வவரவரே றன்னவரிற் பெரியாரின் மதியாரிற் றவத்தோரிற் னின்னையல திலையெனவே வவருரைத்த மொழியனைத்து 1.22.49
| 1083 |
மாற்றுரைநுங் கருத்திலுறும் படிகேட்டு வருதியென | போற்றியுரைத் தனரெனது முன்னோரி னுரைப்படியே தேற்றமுறு மனத்தாய்ந்து நிகழ்காலம் வருங்காலச் யூற்றமுட னுரைத்திடுக வவ்வுரையின் படிநடப்ப 1.22.50
| 1084 |
தீட்டிதிறற் புகழ்ஹமுசா வுரைத்தமொழி யமுதமழை | நாட்டமுறு மனத்தடத்தை நிரப்பிடச்செம் முகமலர்ந்து கூட்டுமுத லவன்விதிப்பு மகள்கனவு மிவைநிகழ்ந்த பூட்டுமணிக் கதிர்வலய நெகிழவடிக் கடிபுயங்கள் 1.22.51
| 1085 |
வடிவாலுங் குணத்தாலுங் குலத்தாலும் முகம்மதுநேர் | படியாளு முதியாரி லியாவரவர் மணம்பொருந்தப் பிடியாரு மென்னடைக்கொம் பினைக்கதீஜா வெனத்தமியேன் கடியாரு மலர்சூட்டி நும்மிடத்திற் றருகமனங் 1.22.52
| 1086 |
எம்மனத்தி னுறுங்களிப்பு நுந்துணைவர்க் கியம்பியநும | தம்மனத்துக் கிசைந்தபடி நன்மொழிகள் சிலதெரிந்து செம்மலிளங் களிறனைய முகம்மதையென் மருகரெனச் வம்மெனமற் புயத்தமுசா தமையனுப்பி யினிதிருந்தான் 1.22.53
| 1087 |
நினைத்தபடி முடிந்ததென மனத்தடக்கி யெழுந்தமுசா | சினத்தடக்கை மலையெனவுட் களிப்புமத மொழுகமணித் கனைத்தகடன் முகட்டெழுந்த கதிர்கடுப்ப வருவதுகண் யினத்தவர்முன் னவரிதய முககமல நகையினொடு 1.22.54
| 1088 |
முன்னவர்தம் முன்னேகிப் பின்ன்வரு மிருகரங்கண் | தன்னிதய மலர்மொழித்தே னாவழியே யொழுகியவர் மன்னவர்மன் குவைலிதுதன் மருங்கிருந்து மணமொழியின் சொன்னதுவு மவன்மறுத்துச் சொன்னதுவும் விரித்தெடுத்துச் 1.22.55
| 1089 |
திருத்துணைவ ருரைத்தமொழி யபித்தாலிப் கருத்தூடு | பெருத்தகுலத் தவர்க்கோதிக் குறைஷிகளின் முதியாரைப் பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவெனப் பொருவி லாத 1.22.56
| 1090 |
ஆரிதுகு தம்சுபைறு அப்துல்ககு பாஅபூல | காரேயும் லிறாறப்பா சுடன்ஹமுசா வுடனேமு சீரேறு மபித்தாலிப் அப்துல்லா மதலையெனுஞ் தாரேறு வதுவைமொழி பகரவரும் வரவாறு 1.22.57
| 1091 |
அருமறைதேர் குவைலிதுகேட் டகத்திலடங் காவுவகைப் | மிருகரையும் வழிந்தகடற் குளித்துநடு வெழுந்துமிதந் தருவனைய அபுத்தாலிப் தம்முடனே மன்னவர்க தெரிகதிரா சனத்திருத்தி யனைவருக்கு முறைமுறையே 1.22.58
| 1092 |
சொல்லரிய காரணத்துக் குறுபொருளாய் நமர்க்குயிராய்த் | செல்லுலவு கவிகைநிழல் வள்ளலுக்கு மணமுடிக்குஞ் வல்லமைஹா ஷீம்குலத்துக் கனைவோருங் குறைஷிகளு னில்லிடத்தில் வரமுதனாட் கிடையாத பெருந்தவஞ்செய் 1.22.59
| 1093 |
அவ்வுரைகேட் டபுத்தாலி பகக்களிப்புத் தலைமீறி | மௌவல்கமழ் குழன்மயிலை யென்மகற்கு மணமுடிக்க பௌவநதி சூழ்பாரைக் புரந்தளிக்கும் பெரும்பதவி மெவ்வெவையும் படைத்தேனிங் கினிக்கிடையாப் பொருளுமெனக் 1.22.60
| 1094 |
இருவருஞ்சம் மதித்துரைத்தா ரெனக்குறைஷிக் குலத்தரச | மருமருபூங் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை தெரிதருசீ தனப்பொருளு மின்னதென வகைவகையாய்த் பொருவரிய பொற்பிளவும் வெள்ளிலையுந் தருகவெனப் 1.22.61
| 1095 |
வெள்ளிலைபா கேலமில வங்கமுடன் றக்கோலம் | மள்ளியசந் தனச்சேறும் பொற்கலத்தில் குவைலிதெடுத் வள்ளியோர்க் கினிதீந்து மறையோர்க்கு மெடுத்தருளி தெள்ளியநன் முகூர்த்தமுதற் றிங்களென வகுத்தரைத்தார் 1.22.62
| 1096 |
இலங்கிலைவேற் குவைலிதுபா லிருந்தபசா ரத்தினுட | வலங்கலென புயத்துணைவ ரனைவரொடு மபூத்தாலி விலங்கலணி வளர்மாட நகர்வீதி தனைக்கடந்து குலங்கெழும மனைபுகுந்து மனைவியர்க்கு மணமொழியைக் 1.22. 63
| |
1097 |
குறைஷி மன்னவ ருடனபுத் தாலிபுங் குழுமி நிறைசெய் மாமதி முகம்மதின் மணவினை நிலவ விறைவ ரியாவரு மறியவிந் நகர்க்கெழின் முரச மறைக வென்றலு மெழுந்தனன் கடிமுர சறைவான். | 1.23.1 | 1098 |
ஒட்டை மீதினின் மணமுர சினையெடுத் துயர்த்தி விட்டு வெண்கதி ருமிழ்மணி மறுகிடை மேவி வட்ட வாருதிச் செல்வமொத் திந்நகர் மாக்க ளிட்ட மாயினி தூழிவாழ் கெனவெடுத் திசைத்தே. | 1.23.2 | 1099 |
ஹாஷி மாகுலத் தப்துல்லா மகரணி மருவி வாச மெய்முகம் மதுபெறும் புதுமணக் கோலம் காசி லாவிதுக் கிழமையி னிரவெனக் காட்டிப் பாச முற்றவர்க் குரைப்பதுண் டெனப்பகர்ந் திடுவான். | 1.23.3 | 1100 |
நறைகொள் வாயிலின் மகரதோ ரணங்களை நடுமி னிறையு மாடங்கள் புதுக்குமின் கொடிநிரைத் திடுமி னுறையும் வெண்சுதை மதிடொறுங் கரைத்தொழுக் கிடுமின் குறைவி லாதபொற் பூரண குடங்கள்வைத் திடுமின். | 1.23.4 | 1101 |
பூணு நல்லிழை பூணுமின் குழற்ககிற் புகைமின் காணொ ணாவிடைக் கம்பொன்மே கலைகவின் புனைமின் பாணி யிற்சரி தோளணி பலபரித் திடுமின் வாணு தற்கணி கடுவரி விழிக்குமை வரைமின். | 1.23. 5 | 1102 |
இரவ லர்க்கினி தருளொடு மின்னமு திடுமின் வரைவி லாதெடுத் தேற்பவர்க் கணிவழங் கிடுமி னிருமை யும்பலன் பெறுமினென் றினையன வியம்பி யரவ மீக்கொளக் குணிலெடுத் தணிமுர சறைந்தான். | 1.23. 6 | 1103 |
இந்த மாமொழி பகர்ந்தெழு தினமுர சியம்ப மந்த ராசல மாளிகை மறுகுக டோறுங் கந்த மென்மலர்த் துகடுடைத் திருநிலங் கவினச் சுந்த ரக்கதிர் மடந்தையர் கதைமெழுக் கிடுவார். | 1.23.7 | 1104 |
இடன றத்திருக் காவண நிரைநிரைத் திடுவார் நடலை யுள்ளற மகரதோ ரணம்பல நடுவார் விடுசுடர்ப்பட மெடுத்துயர் வௌியடைந் திடுவார் குடுமி மாடத்தி னணியணிக் கொடித்திர ணடுவார். | 1.23. 8 | 1105 |
இடைப ழக்குலை யொடுகத லிகணிரைத் திடுவார் மடல்வி ரிந்தபூங் கமுகினை நிறுவிவைத் திடுவார் கடிந றாவொழு கிடக்கொடிக் கரும்புக ணடுவார் துடர ணிக்குலைத் தெங்கிள நீர்கடூக் கிடுவார். | 1.23. 9 | 1106 |
நறவு சிந்திடக் கனியொடு சூதங்க ணடுவார் நிறையும் பொற்சுளை முட்புறக் கனிநிரைத் திடுவார் மறுவின் மாதுளைக் கனியொடும் பூவொடும் வனைவார் செறிதி ரட்கொழு விஞ்சியுங் கனியொடு சேர்ப்பார். | 1.23. 10 | 1107 |
வன்ன பேதபட் டாடைகொய் தணிநிரை வனைவார் பொன்னி னன்மலர் மாலைக டுயரறப் புனைவார் நன்ன யம்பெற நறுக்கிய நறுக்குநாற் றிடுவார் துன்னு வெண்கதிர்க் கற்றைபோற் கவரிதூக் குவரால். | 1.23.11 | 1108 |
முல்லை சண்பகம் படலஞ் செவ்விதழ் முளரி மல்லி கைமடற் கைதைமா மகிழ்மருக் கொழுந்து பல்ல வத்தொடு நிரைநிரை பன்மலர் தொடுத்தாங் கெல்லை யில்லெனத் தூக்குவ ரெழில்விளங் கிழையார். | 1.23.12 | 1109 |
சால வெண்முகைப் புன்னையின் றண்மலர் தொடுத்து நால விட்டதிற் றும்பிக ணடுநடு வதிந்த கோல மாக்கட லீன்றமுத் திலங்கிடக் கோத்து நீல மாமணி யிடையிடை தொடுத்தன நிகர்த்த. | 1.23.13 | 1110 |
குவளை மைவிழிச் சுரிகுழ லியர்கொழுங் கரத்தாற் றுவளு மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்துத் தவள மாமணிப் பந்தரிற் றூக்கிய தன்மை பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர். | 1.23.14 | 1111 |
சலதி வெண்டிரைத் தரளவெண் மணியொடு தயங்கக் குலவு நீலமா மணியிடை கோத்தவை தூக்கி யிலகு பூந்துகிற் பந்தரின் வயினிடு கதிர்க ணிலவு வெண்கதி ரொடுமிருள் பரந்தென நிகர்த்த. | 1.23.15 | 1112 |
மாச டர்த்தெறி மரகத மணிநிறை வடங்க ளூச லாயணி நான்றிட வுமிழ்பசுங் கதிர்கள் பூசு சந்தனச் சுவர்தொறும் வாயிலின் புறத்தும் பாச டைத்திரள் விரிந்தன பாரினும் பரப்பும். | 1.23. 16 | 1113 |
மிக்க செம்மணித் தொடையலில் விளங்கிய கதிர்கள் பக்க மீக்கொளப் பந்தரின் வயிர பந்திகளி னொக்க வெங்கணும் பரந்தது நிறைந்திட வுயர்ந்த செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும். | 1.23.17 | 1114 |
அறைப்பு றத்தினு மாலயத் திடத்தினு மணியாற் சிறப்பு மிக்கன செய்தவத் தெருத்தலை தோறு முறப்ப சந்தசெங் குமிழ்க்கிளி யினத்தொடு மொழுங்காய்ப் பறப்ப தொத்தன பாசிலைத் தோரண பந்தி. | 1.23. 18 | 1115 |
கனக மாமழை பொழிதர வருமபுல் காசீ மனதி னன்னெறி யொழுங்குறு மாட்சிஒயின் மான வினம ணிக்கதிர் தவழ்நிலை மேனிலை யெவையும் புனைமு கிற்குல மொத்தென வகில்புகைத் திடுவார். | 1.23. 19 | 1116 |
காக துண்டமுஞ் சந்தனக் கடிகையுங் கலந்து தோகை மாரிடு புகைத்திர ளிடையிடை தோன்று மாக மூடெழு மண்டபக் கொடுமுடி வயிர மேக மூடுறை மின்னெனப் பிறழ்ந்தொளி மிளிரும். | 1.23. 20 | 1117 |
குங்கு மஞ்செறி தனத்தியர் செழுங்குழல் விரித்துப் பொங்கு பன்னறை யூட்டிய காழகில் புகைப்ப தெங்க ணும்பரப் பிடவொளி திகழெழின் முகங்கண் மங்கு லூடுவெண் மதியமொத் திருந்தன மாதோ. | 1.23.21 | 1118 |
நிலைகொண் மாடத்து மண்டப மருங்கினு நிமிர்ந்த சிலைநி கர்த்தமே னிலையினுஞ் செவ்வரி விழியார் குலிக மார்ப்பற வரைத்தெடுத் தெழுதிய கோல மலைகண் மீதினும் பவளங்கள் படர்ந்தென வயங்கும். | 1.23.22 | 1119 |
புகைத்த காரிருட் குழன்முடித் தருமலர் புனைவார் பகுத்த நன்னுத றுலங்கிடச் சுடிகைகள் பதிப்பார் தொகுத்த காதினிற் பலவணித் தொகைசுமத் திடுவார் மிகைத்த வேல்விழிக் கஞ்சனம் விரித்தெழு துவரால். | 1.23.23 | 1120 |
பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மனிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார். | 1.23.24 | 1121 |
உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலத்ங்க ளணிவா ரவிருங் கேழலத் தகமிரு பதத்தினு மணிவார். | 1.23.25 | 1122 |
சந்த மான்மதஞ் செழும்பணி நீரொடு சாந்தங் கந்த மென்னறும் பொடியொடு விரையெழக் கலக்கி யிந்து வெண்கதிர் பரப்பிய மதிணடு விடுவார் சிந்து வார்தெருத் தலைதொறு மிடனறத் தௌிப்பார். | 1.23.26 | 1123 |
வட்ட வான்மதி முகத்திய ரிடத்தும்வாள் விரித்து விட்ட வேற்கர வீரர்க ளிடத்தினு மெதிர்ந்து தொட்டி தோறும்பன் னீர்சொரிந் தருநறை மறுவி யிட்ட சந்தனக் குழம்புகள் கரைத்திறைத் திடுவார். | 1.23.27 | 1124 |
கொந்து றைந்தபூம் பாளைவாய் வெள்ளிவெண் குடங்கள் சந்த மென்னறை மெழுக்கிடுந் தலத்திடை தயங்கப் பந்தி யாகவைத் திருப்பது பானிலாக் கதிரோ டிந்து வாயில்க டோறும்வந் திருந்தன வியையும். | 1.23.28 | 1125 |
பால னத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க் கிடுவார் கோல மென்றுகி னாடகர் கரத்தினிற் கொடுப்பார் சோலை வாய்க்குயி லெனுமிசை யவர்க்கணி சொரிவா ரேலு நன்மறை யவர்க்கிரு நிதியெடுத் திறைப்பார். | 1.23.29 | 1126 |
வான மாமுகி லெனச்சொரி தரவரு மாந்தர் தூந றுங்கதிர் மணியொடு நிதியினைச் சுமந்து தீன ரியாசக ரியாரெனத் தெருத்தொறுந் திரிந்து தான மேற்பவ ரில்லென மனத்திடைச் சலிப்பார். | 1.23.30 | 1127 |
மதியின் மிக்கவ ரொருவரால் வருங்கிளை யனைத்துங் கதியும் வெற்றியும் வீரமும் பெறுவரக் கதைபோற் புதிய பேரொளி முகம்மதின் மணவினைப் பொருட்டாற் பதியும் வீதியு மாடமு மணம்படைத் தனவே. | 1.23.31 | 1128 |
வேறு சிறுபிறை நுதற்க தீஜா திருமனை யிடத்தும் வெற்றி விறலபித் தாலி பென்னு மெய்மையோர் மனையின் முன்னு மறபிகண் மனையுஞ் செம்போ னாவணத் திடத்தும் வேந்தர் மறுகுக டோறுஞ் செல்வ மணச்சிறப் பியன்ற பின்னர். | 1.23.32 | 1129 |
வேறு அற்புதமாய் விண்ணவரும் புகலரிய ஆபுஸம்சத் பொற்குடத்தி லெடுத்தமுதக் கதிர்க்கிரண மலைமிசையே சிற்பரியற் றியபலகை நடுவிருத்தி முகம்மதுதஞ் சொற்பழுத்த மறைமுதியோர் மங்கலவாக் கியங்கறங்கச் 1.23. 33
| 1130 |
மஞ்சனத்தீ ரம்புலர்த்தி விரைவாசப் புகைக்கொழுந்து | பஞ்சினின்மென் றுகிலரையி னெடுத்தணிந்து செழுங்சுவன ரெஞ்சலில்வெண் கதிர்திரண்டு வந்திருந்த தெனச்சருவந் கஞ்சமல ரெனச்சேந்த கண்னிணையிற் சுறுமாவுங் 1.23.34
| 1131 |
பொன்காலுந் திரண்முலையார் கண்ணேறு படராது | சின்காத வழிக்ககலும் வேதமொழி யனைத்தும்வந்து வன்காபிர் விழிக்கணங்க டிருமேனி தீண்டாது மின்கால வெண்கிரணக் குப்பாய மெடுத்தணிந்த 1.23.35
| 1132 |
மருந்தமுத மெனுங்கலிமாத் தனையிணங்கா ருயிரனைத்தும் | விருந்ததென வயிரமணிப் பிடியுடைவா ளெடுத்துமருங் விரிந்தசெழுங் கரகமல விரலிதழின் மணியாழி பரிந்தணிந்தா ரழகுவெள்ளம் வழியாது மருங்கணைக்கும் 1.23.36
| 1133 |
மண்முழுது மாறரியச் சிவந்தகதிர் மணிக்கோவை | வெண்மணிநித் திலவடமு மேருவெனும் புயவரையில் கண்முழுது மடங்காத வெழினோக்கி யவரவர்கண் தண்மதியும் வெஞ்சுடரும் கரநீட்டி யிருபுறத்துந் 1.23.37
| 1134 |
பொன்னிதழ்க்குங் குமத்தொடையன் முகம்மதுதம் வயிரவரைப் | மின்னிடவெண் மணித்தொடையுஞ் செம்மணியும் போற்காந்தி தன்னிலைமை தவறாத முதியோரை யெவரேனுஞ் நன்னிலநற் குணமறிவு பெறுவரெனும் பழமொழியை 1.23.38
| 1135 |
அவனிதனிற் றனியரசை நயினாரை முகம்மதையா | கவினொழுக வலங்கரித்துப் பவனிவர வெனவெழுகச் சுவனபதி தனைத்திறமி னிரயமடைத் திடுமினெனத் பவனமுமண் ணுலகுகடன் மலையுந்திசை திசையனைத்தும் 1.23.39
| 1136 |
வானவர்பொற் பூமாரி சொரிந்திடமண் ணவர்வாழ்த்த | தானமென வேற்பவர்க்குப் பொன்பணிதூ செடுத்தருளிச் கானமர்பூங் குழன்மடவா ரயினிநீர் கொணர்ந்தெடுத்துக் வீனமில்பல் லியமகரக் கடலெனவார்த் தெடுப்பவினி 1.23.40
| 1137 |
வேறு | கானறு மல்லிகை கமல மெல்லிதழ்ப் பூநறும் பாயலி நடந்து பொங்கொளி தேனறுந் தெரியலார் செம்பொ னாட்டுறை வானவர் வாழ்த்திட வாசிமேற் கொண்டார். 1.23.41
| 1138 |
முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி | சிறுபறை சல்லரி பதலை திண்டிம மறுவறு பேரிகை முரசு மத்தளி யறைதிரைக் கடலொலி யடங்க வார்த்தவே. 1.23.42
| 1139 |
பெருகிய கடன்முகட் டெழுந்த பேரொளிப் | பரிதியொத் திருந்தன குரிசில் பான்மைமேல் விரிதரு மதியெனக் கவிகை வெண்ணிலாச் சொரிவன கற்றையங் கவரி தூங்கின. 1.23.43
| 1140 |
அவிரொளிக் கொடிமிடைந் தடர வண்ணலார் | பவுரியு னடுமுறைப் பணில மார்த்தெழக் குவிகைகொம் புகள்குமு குமெனப் பல்லியஞ் செவியடைத் தனதெருத் தலைக ளெங்குமே. 1.23.44
| 1141 |
மதித்தென மறுகிடை விண்ணின் மண்ணெழப் | பதித்தன குளம்புவிட் டெறிந்து பாரிடை மிதித்தென வில்லென வேக மீக்கொளக் குதித்தன நெருங்கின குதிரை யீட்டமே. 1.23. 45
| 1142 |
மதங்களைச் சிந்தின மறுகின் மாந்தர்தம் | பதங்களை வழுக்கிடப் படர்செ விச்சுள கிதங்கொள்வண் வினம்புடைத் தெழுப்ப வெங்கணுங் கதங்கொடு நெருங்கின கரியின் கூட்டமே. 1.23.46
| 1143 |
கடுவிடப் பணத்தலை நௌியக் கண்ணகன் | படிகுழித் தெழுதுகள் பரப்பிப் பாங்கினிற் கொடிநிறைத் தசைந்தகோ லாரி வண்டில்க ளிடைவௌி யின்றென வெங்கு மீண்டின. 1.23.47
| 1144 |
இசையொடு பல்லிய மியம்பி யார்த்தெழ | வசையறு காளையர் மருங்கு சுற்றிடத் சசியெனக் கதிரொளி தவழும் வீதியிற் றிசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே. 1.23.48
| 1145 |
பிடிபடு குசைப்பரி மீதும் பெய்மழை | கடகரி மீதினுங் கதிர்கொண் மாமணிப் படமிடு சிவிகையின் மீதும் பாங்கெலாஞ் சுடரணி திகழ்ந்தெனக் கிளைஞர் சுற்றினார். 1.23.49
| 1146 |
வெள்ளணி யுடையினர் விரிந்த கஞ்சுகர் | கள்ளவிழ் மாலையர் கலன்கொண் மேனிய ரள்ளிய வழகின ரரச வீதியி னெள்ளிட மிலையென வெங்கு மீண்டினார். 1.23.50
| 1147 |
செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய் | வழுவறு பவனியின் வருகுன் றாரென வெழுவகைப் பேதைபே ரிளம்பெ ணீறதாய்க் குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினார். 1.23.51
| 1148 |
மணிப்பளிக் கறைநிலை மாட மீதினுங் | குணிப்பருங் கூடகோ புரத்து மீதினும் பணிப்பரு மேனிலைப் பரப்பு மீதினுந் தணிப்பிலா துயர்ந்தமண் டபத்தின் சார்பினும். 1.23.52
| 1149 |
சச்சையின் முகப்பினுஞ் சாள ரத்தினும் | வச்சிர மழுத்திய வாயின் மீதினுங் கச்சணி முலைச்சியர் கதிர்கொண் மால்வரைப் பச்சையங் கிளியெனப் பரந்து தோன்றினார். 1.23.53
| 1150 |
வெண்முகிற் கவிகையிற் பிறந்த மின்னென | வண்ணமென் பசுங்கதிர்த் தோகை மஞ்ஞைகள் கண்ணினக் கவிகையைக் கண்டு வந்தென வெண்ணிறந் தனையமா மாத ரீண்டினார். 1.23.54
| 1151 |
வழிகதிர் முகம்மதின் வனப்பு வெள்ளமீக் | கெழுதிரைக் குவந்தன மெழுந்த கூட்டம்போற் பொழிகதிர்க் கலன்பல புரள வெங்கணுந் தொழுதிகொண் டுற்றனர் தோகை மாதரே. 1.23.55
| 1152 |
தேனென வமிர்தெனத் திரண்ட பாகெனத் | தூ நறுங் கனியெனச் சுடருங் கொம்பெனப் பூநறுங் கரும்பெனப் பொருவின் மாதரார் வானவ ரமிர்தென வளைந்து சுற்றினார். 1.23. 56
| 1153 |
வேறு | வண்ணவார் முலைக்கொம் பன்னார் மருங்கொசிந் தசைய நோக்கிக் கண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி யண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப் பெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பார். 1.23.57
| 1154 |
கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா னிழற்ற வந்த | வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக் கொடியிடைக் கதீஜா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப் பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை யென்பார். 1.23.58
| 1155 |
பொன்னெனப் பூங்கொம் பென்ன மணியெனப் பொருந்து மாதர் | மின்னொளி கரக்குஞ் சோதி மெய்யெழின் முகம்ம தென்னு மன்னினைக் கதீஜா செலவ மனைமண முடித்த போதே யெந்நிலப் பொருளும் வாழ்வு மிவர்க்கினி யெய்து மென்பார். 1.23.59
| 1156 |
வனைந்தபூ மரவத் திண்டோண் முகம்மதின் வடிவை நோக்கித் | தனந்தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடிக் கனந்துதைந் தொதுங்கு மாடக் கதிர்நிலா வீதி வாயிற் றினந்தொறும் பவனி காணச் செய்தவஞ் செய்வோ மென்பார். 1.23.60
| 1157 |
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி | யுருசிக்க மலர்த்தே னுண்ட வொண்சிறைப் பறவை போலப் பரிசிப்ப தொத்து நீங்காப் பவனியி லிருகண் ணாரத் தெரிசிக்க நம்போன் மிக்க செனனமார் பெறுவ ரென்பார். 1.23.61
| 1158 |
ஆரவா ருதியிற் றோன்று மமுதனார் பரியை நோக்கிப் | பாரிடை பையப் பையச் செல்லெனப் பரிவிற் சொல்வார் வாரமா மறுகிற் போத மனமற மறுகி நின்னைக் கோரமென் றிதற்கோ பேரிட் டுலகெலாங் கூறிற் றென்பார். 1.23.62
| 1159 |
பொருத்துதற் கரிய செவ்விப் புரவல ரழகைக் கண்ணா | லருத்திய துயரக் காற்றா லவதியுற் றலைந்து காந்தட் கரத்தணி பணிக ளியாவுங் கருத்துட னிழந்து வாசம் விரித்தபூ வுதிர்த்த கொம்பாய் விளங்கிழை யொருத்தி நின்றாள். 1.23.63
| 1160 |
கோதறு கருணை வள்ளல் குவவுத்தோள் வனப்பைக் கண்ணாற் | றீதற வாரி யுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொற் பூதரக் கொங்கைச் சாந்து முத்தமும் பொரிவ தென்கொல் காதினி லுரைமி னென்றோர் காரிகை தன்னைக் கேட்டாள். 1.23.64
| 1161 |
திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல் | வருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையி லேந்திக் கரத்தினைப் பொருத்தச் செய்த காளைபா லேகி யென்ற னுரத்தினைப் பொருத்தச் சொல்லென் றோதும்வா யொழிகி லாளே. 1.23.65
| 1162 |
கதியுறு பரியின் மேலோர் காளையை நோக்கி நோக்கிப் | புதியதோர் செவ்வி வாய்ந்த பொலன்கொடி யொருத்தி யிந்தப் பதியினிற் பிறந்து செய்த பலத்தினுக் குற்ற பேறாய் மதியினைக் கொடுத்துக் கொள்ளா மாலையே வாங்கிக் கொண்டாள். 1.23.66
| 1163 |
இனமணிச் செழுங்கொம் பன்னா ருடனெழுந் தெதிரிற் புக்குச் | சினமதக் கரியுந் தேருஞ் சிவிகையும் பரியுஞ் சூழப் புனன்முகிற் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கிக் கனவெனத் தௌிவு றாமற் கலங்கிநின் றொருத்தி போனாள். 1.23.67
| 1164 |
கனமுகி லனைய கூந்தற் காரிகை யொருத்து யுள்ள | நினைவெலாங் குரிசி றோன்று நெறியிடை யெதிரிற் போக்கி யினமெங்கே யாய மெங்கே யெவ்விடத் தேகின் றேனென் மனமெங்கே யான்றா னெங்கே யெனநின்று மறுகு கின்றாள். 1.23.68
| 1165 |
மயற்கடற் படிந்து கூந்தன் மலர்மணிக் கலையும் போக்கிச் | செயற்கையிற் பணிக ளியாவுந் தெருத்தலை தோறுஞ் சிந்திப் புயற்குடைக் குரிசி றந்த பொன்னெலா முடலம் பூத்த வியற்கையே போது மென்ன விளங்கிழை யொருத்தி போனாள். 1.23.69
| 1166 |
பருமித்த முலையி னார்ந்த பன்மணிக் கலன்க ளீய்ந்து | மருமொய்த்த குழலா ளாசை மதிப்பிலா வயிரந் தான்கொண் டொருமுத்தி லுதித்த வள்ள லுறுகதி ரழகுக் காகப் பெருமுத்த வாரி கோடி யிறைத்தனள் பெரிய கண்ணால். 1.23.70
| 1167 |
காயிள நீரும் வேயுங் கதலியுங் கமுகுங் காந்தி | பாயொளி யாம்ப லுஞ்செம் பதுமமுங் குவளை மானுஞ் சேயரி கருங்க ணல்லார் செறிந்துகொண் டெழுந்த தோற்றந் தூயமே னிலைக ளெல்லாந் துடவைபோன் றிருந்த மாதோ. 1.23.71
| 1168 |
குரும்பைமென் முலைக டாங்கிக் கொடிநிலை மாட மீதிற் | கரும்பெனு மமுதத் தீஞ்சொற் கன்னியர் செறிந்த தோற்றந் தரும்பெரும் புவியும் வானுந் தழைக்கவந் துதித்த வள்ளல் வரும்பெரும் பவனிக் கேற்ற மாணிக்க விளக்கம் போன்றார். 1.23.72
| 1169 |
தாவிய பரிமேற் சேனைத் தளத்தொடும் வீதி வாயின் | மேவிய வள்ள லார்த மெய்யெழி னோக்கி நோக்கி யாவியு ளடங்கி நெஞ்சத் தறிவுதிர்த் திமைப்பில் லாது பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலு மன்றே. 1.23.73
| 1170 |
கண்களி லடங்காக் காட்சிக் காளைதம் வனப்பு நோக்கும் | பெண்களி லமுத மன்னார் பேரெழின் முகத்தின் றோற்றம் விண்கதி ரடருஞ் சோதி மேனிலை வாயி றோறுந் தண்கதிர் கிளைத்த செவ்விச் சசியின முளைத்தல் போலும். 1.23.74
| 1171 |
வடிசுதை மெழுக்கிட் டோங்கி வளர்ந்தமண் டபத்தின் சார்பிற் | படர்கதி ரரத்தந் தோய்ந்த பல்கணி வாயி றோறுங் கடிமணப் பவனி நோக்குங் கன்னியர் கதிர்வேற் கண்கள் கொடிதுடர்ப் பவளத் தூடு குவளைகள் பூத்த போன்ற. 1.23.75
| 1172 |
தண்ணில வுமிழுஞ் சோதி தவழ்நிலை வீதி வாயின் | மண்ணகத் தெவரு மொவ்வா முகம்மதின் பவனி நோக்கி யெண்ணகத் தடங்கா மாத ரிவ்வண்ண நிகழும் வேலை விண்ணவ ரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்துச் சொல்வாம். 1.23. 76
| 1173 |
வேறு | உம்ப ருள்ளங் களித்தெழுந் தோடிநீள் செம்பொ னாட்டுயர் ஜென்னத்தின் மாமணிக் கம்பை சேர்த்துங் கபாடந் திறந்தன ரிம்பர் நாட்டு மெழுந்தன சோதியே. 1.23.77
| 1174 |
விரைவி னாதி யுரைப்படி விண்ணவர் | நிரயந் தன்னை யடைத்து நெருப்பையும் பரவி லாதவித் துள்ளுறைப் பாழ்ங்குழி யிரையு மூச்சு மடக்கின ரென்பவே. 1.23..78
| 1175 |
அவனி மீதி லகுமது மாமணப் | பவனி வந்தனர் பாருமின் பாரெனக் கவன வேகத் தமரர் களிப்பொடுஞ் சுவன நாட்டுறை தோகையர்க் கோதினார். 1.23.79
| 1176 |
மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர் | சொன்ன போதிற் சுவன மடந்தையர் முன்னி ருந்த வடிவினு மும்மடங் கென்ன லாகி யிருங்களிப் பேறினார். 1.23..80
| 1177 |
விதிக்கு மேலவ னேவலின் விண்ணினிற் | குதிக்குஞ் சோதிக் கொடியிடைக் கொம்பனார் பதிக்கும் பூரண மாய்ப்பல கோடிமா மதிக்கு லம்வந்தெ ழுந்தது மானுமே. 1.23.81
| 1178 |
மாக நன்னதி யாடி மணங்கம | ழாக மீதி லணியணிந் தந்நலா ரேக மாயெழுந் தெங்கணு மெண்ணிலா மேக மண்டல மின்னெனத் தோன்றினார். 1.23.82
| 1179 |
தீனெ னும்முதற் செம்மறன் வீதிவாய் | வான நாடுறை மங்கைய ரங்கையா னான மம்பர் நறுங்கறுப் பூரம்பொற் பூநி றைத்திறைத் துப்பொழிந் தார்களே. 1.23.83
| 1180 |
விண்ணி னுற்றவர் வீசியி றைத்தலாற் | கண்ண கன்ற கடன்மலை கானகம் பண்ணை சூழ்நக ரும்பல சோலையு மண்ணும் விண்ணு மலிந்தன வாசமே. 1.23.84
| 1181 |
வள்ள லார்திரு மேனியின் வாசமுந் | தெள்ளி மேலவர் சிந்திய வாசமுங் கள்ளு லாவிய காவினி னால்வகை யுள்ள பூவினு முள்ளுறைந் தோங்கிற்றே. 1.23..85
| 1182 |
திருத்து கூந்தலுந் தேங்கமழ் மாலையும் | விருத்த பூந்துகி லும்மணி மெய்யினும் பருத்த கொங்கையி னும்புவிப் பாவையர் கருத்தி னூடுங் கலந்ததவ் வாசமே. 1.23.86
| 1183 |
விரைகொ ணானமும் வெண்கருப் பூரமும் | வரிசை வள்ளன்மு கம்மதின் வீதியி லரிதி னிற்சொரிந் தம்பர மங்கையர் பெருகுந் தம்மனத் தாசையிற் பேசுவார். 1.23.87
| 1184 |
குற்ற மற்ற கொழுங்கதிர் மெய்யெழில் | வெற்றி வள்ளலை வீதியிற் கண்டன முற்று றாத முகத்திமை யாவிழி பெற்ற பேறின்று பெற்றமென் பார்சிலர். 1.23.88
| 1185 |
தண்ணந் தாமரைப் பாதந் தழீஇத்தொழு | மண்ணின் மாதர்க ளேவலி யாரென்பார் பெண்ண னார்கதி ஜாவொடும் பெட்புற விண்ணி னூடும் விளங்குவர் காணென்பார். 1.23. 89
| 1186 |
வழுத்து வீரிவ ராரென மற்றவர் | பழுத்த பொன்னிலைப் பன்மணி மின்னவே யழுத்து வாயிலின் மேலிரண் டாம்வரி யெழுத்தெ லாமிவர் பேரென் றியம்புவார். 1.23.90
| 1187 |
தடந்த யங்குபொன் னாட்டினிற் றானென | நடந்து கொண்டவ னன்னெறி நற்பத மிடைந்து கெட்டிபு லீசென் றெரிநர கடைந்த தும்மிவர் தம்பொருட் டாலென்பார். 1.23.91
| 1188 |
எந்நி லத்தினு மிக்குய ரேந்தெழின் | மன்னர் மன்னர் முகம்மது தம்பத நன்னி லத்தொடு நாம்புகழ்ந் தேத்திடப் பொன்னி னாட்டைப் புரந்தில ரென்னென்பார். 1.23.92
| 1189 |
பூவி னன்கலி மாவைப் பொருந்துற | நாவி லோதிய நம்மண வாளர்க டாவி லெண்ணிறந் தோரொடுந் தாநமர் சேவை செய்திடச் சேர்குவர் காணென்பார். 1.23.93
| 1190 |
கால மேகக் கவிகையி னீழலோ | நீல மோநறை நானநி றைத்ததோ கோல வார்குவ வுப்புயக் குங்கும மாலை யூடுறை வண்டின மோவென்பார். 1.23.94
| 1191 |
மண்ணி டந்தெரி வின்றென வந்தடர் | பெண்ணி னங்கள் பெருத்திடு மாசையாற் சுண்ண மும்மல ருந்திகழ் தோண்மிசைக் கண்ணின் பேரொளி கான்றது காணென்பார். 1.23.95
| 1192 |
தௌிய வந்துறுஞ் சிந்தையர் சிந்தையி | னளியெ லாமிகழ்ந் தாசையி னாவலா லொளியெ லாமிவ ருள்ளுறை யாலிந்த வௌியே லாமந்த மெய்யுருக் காணென்பார். 1.23.96
| 1193 |
வார்த்த டக்கரி வண்முலை விம்முற | வேர்த்து நின்று வெதும்பிவெ தும்பியே கூர்த்த தங்கருத் துள்ளுறை கொண்டலைப் பார்த்த கண்கள் பறிப்பரி தென்பரே. 1.23.97
| 1194 |
மன்னைப் பார்த்து மதிமுகம் பார்த்துநின் | றென்னைப் பார்க்கிலர் காணென வேங்குவார் மின்னைப் பார்த்த விளங்கிழை யார்களென் றன்னைப் பார்த்தனர் காணவர் தாமென்பார். 1.23.98
| 1195 |
வண்ண வார்புய மன்னவர் மெய்யெழிற் | கண்ணி னூடுங் கரந்ததென் பார்சில ரெண்ணி னூடு மிருந்ததென் பார்சில ருண்ணி னைவொடு முற்றதென் பார்சிலர். 1.23.99
| 1196 |
ஏந்து கொங்கை யணியிழப் பார்சிலர் | கூந்தல் சோரக் குழைந்துநிற் பார்சிலர் காந்தி மேனி கரிந்திடு வார்சிலர் மாந்தி யாசை மயக்குறு வார்சிலர். 1.23.100
| 1197 |
வேறு
| வானவர் மகளி ரின்னண மியம்பி தேனிமி ரலங்கற் செழும்புயக் குரிசிற் கானமர் குழலார் செவ்வரி வேற்கட் தானவா ரணமும் பரிசுளு மிடையச் 1.23.101
| 1198 |
சலதரக் கவிகை நெடுநிழல் பரப்பச் | குலவிய கொடியுங் கவரியும் விரியக் பலகதிப் பரியு மரசரு மிடையப் கலைவலன் குவைலி தினிதலங் கரித்த 1.23.102
| 1199 |
வரைதிரள் வயிரப் புயமுகம் மதுநன் | திரையினிற் பிறந்த வமுதெனு மொழியார் விருபுற நெருங்கி யயினிநீர் சுழற்ற பரவையின் மறையுங் குரவையுஞ் சிலம்பப் 1.23.103
| 1200 |
பணித்தொகை சுமத்தி யிளைத்தநுண் ணிடையார் | மணிப்பதம் விளக்கித் துகிலினாற் றுடைத்து துணர்ப்பசுங் கொழுந்து மலர்கலுளுஞ் சொரிந்த கணிப்பருங் கதிர்கள் பாய்மணித் தவிசின் 1.23.104
| 1201 |
அமரர்விண் ணுலகும் புவனமும் விளக்கு | தமனியத் தசும்பு நனிவிரை கமழ்ந்த யுமிழ்கதிர்க் கொடியை வெண்ணிலாக் கலைவந் சுமையிருட் காவின் முகிறவழ்ந் தென்னச் 1.23.105
| 1202 |
இருட்குல மனைத்தும் பிடித்தொரு தலத்தி | யருட்டமுண் டறுகாற் சுரும்பின மலம்பு திருத்திய முகிலிற் சசிக்கிடை கதிருஞ் பொருத்திளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் 1.23.106
| 1203 |
வள்ளையைக் கிழித்துக் குமிழினைத் துரந்த | கொள்ளைவெண் கதிர்விட் டுமிழ்மணிப் பணியைக் தெள்ளிய பணிலச் செழுமணிக் கழுத்திற் விள்ளரும் பசிய கழைக்குலம் பொருவா 1.23.107
| 1204 |
கரவளை தரித்து விரலணி பொருத்திக் | சரணினைச் சிலம்புஞ் சில்லரிச் சதங்கை விரிகதிர்ப் பவளக் கொடியெனும் விரல்கள் பருதியின் கரங்கண் டுவக்குறும் வனசப் 1.23.108
| 1205 |
மறுவியும் புழுகுஞ் சுண்ணமுஞ் சாந்தும் | பொறிநிகர் பொருவாச் செழுங்குழை யமிர்தப் சிறுநுதற் பெருங்கட் குவிமுலைச் செவ்வாய்ச் கறைதவிர் மதியந் தொழுமுழு மதிக்குக் 1.23.109
| 1206 |
செறிந்தசந் தனமுங் கலவையும் புழுகுஞ் | வெறிந்தசா மரையின் கதிர்கள்கொப் பிளிப்ப வுறைந்தபா ளிதம்பா கிலையெடுத் தேந்தி நிறைந்தபூண் சொரிந்த கோடிகஞ் சுமந்து 1.23..110
| 1207 |
பேரழ கொழுகும் பெண்ணலங் கனியைப் | யாரணக் கடலுக் கமுதநா யகியை பாரினிற் செறித்த மலர்மிசை நடத்திப் வார்பொரு முலையார் முகம்மது மருங்கின் 1.23.111
| 1208 |
பொருவருங் கதிர்விட் டெழும்பொருப் பிடத்திற் | தெரிதரு மறிவின் றருநிழ லுறைந்த முருகவிழ் மலரிற் றேன்றுளித் தெனவு பரிவுட னிருப்ப வமரருங் களிப்பச் 1.23.112
| 1209 |
இருகிளை யவருஞ் சம்மதித் தைந்நூ | கருமுகிற் கவிகை முகம்மது தமக்குங் மருமலர் தொடையல் புனையுநிக் காகை பெருகிய ஹாஷிம் குலத்தவ ரனைத்தும் 1.23.113
| 1210 |
முதியவ ருவந்து நீதிமுன் மார்க்க | மதிவலன் குவைலி தகமகிழ்ந் தெழுந்து புதுமதி வதனச் செழுங்கொடிக் கதீஜா கதிர்மதி யுளநாள் வாழ்கவென் றிசைத்துக் 1.23.114
| 1211 |
செறிதரு மடவார் குரவைக ளியம்பத் | வறிவினர் வாழ்த்த வாணர்க ளேத்த குறைவிலா துயர்ந்து த்ழைத்தினி தோங்குங் மறைபடா தெழுந்த மதிமு கம்மதுவு 1.23.115
| 1212 |
மணிகொழித் ததிருந் திரைக்கட லனைய | பணிபட ரவனித் திலதநா யகியும் கணிபடா வழகு கண்களிற் பருகிக் யணிகிள ரின்பப் பெருக்கெடுத் தெறியு 1.23.116
| 1213 |
திண்டிறற் புவியின் முகம்மது தமக்குத் | கண்டதிங் களுமோ ரிரண்டுநா ளிரண்டிற் வெண்டிசை முழுதுந் திருப்பெயர் விளங்க வண்டுறை மரவச் செழுந்தொடை புனைந்து 1.23. 117
| 1214 |
அரவினை வதைத்த கரதல நயினா | பரல்செறி சுரத்திற் புனறரு நயினார் வரியளி யலம்பும் புயனபுல் காசீ தெரிமலர் கதீஜா நாயகி நயினார் 1.23.118
| 1215 |
மக்கமா நகருஞ் செலவமும் வாழ | தக்கமெய்ப் புகழுங் கிளைஞரும் வாழத் மிக்கநன் னெறிநேர் முகம்மதுஞ் சிறந்த விக்குமென் மொழியா ரெனுங்கதீ ஜாவு 1.23.119
| |
1216 |
தருமமனு நெறியறிவு பொறையொழுக்க கருமுகிலின் செழுங்கவிகை யினிதோங்கக் வரிவிழிச்செங் கனித்துவர்வாய்க் கொடியிடையார் பெருகுமிள மயில்கதீஜா ஸயினபெனும் 1.24.1 | | 1217 |
ஸயினபெனு மணியீன்ற வலம்புரிநே ரனை குயின்மொழிறுக் கையாவை யீன்றும்முக் செயிரறநா லாவதிலாண் பிள்ளைகா நயமுறப்பின் தையிபெனுஞ் சேயீன்று 1.24.2
| 1218 |
மன்றல்கமழ் முகம்மதற்கை யேழாண்டு நிறைந்த | மின்றவழ்வ தெனவொளிருங் கதீஜாநா துன்றுமணி யெனப்பூவின் மடந்தையர்க்குஞ் மென்றுமர செனவிருப்பப் பாத்திமா வெனுமயிலை 1.24.3
| 1219 |
வேறு | ஆதி நாயகன் றிருவுளத் தகமரர்க ளிறங்கிப் பூத லத்தினி லறமெனுந் தலநடுப் புகுந்து சோதி யெங்கணும் பரந்திடக் ககுபத்துல் லாவைத் தீதி லாதுறச் சுவனமா மணத்தொடுஞ் செய்தார். 1.24.4
| 1220 |
அந்த நாட்டொடுத் தளவிடற் கருநெடுங் காலஞ் | சுந்த ரத்தொடு மமரர்கள் புகுந்தவண் டொழுது பந்தி கூர்ந்துடற் புளகுற விறைவனைப் புகழ்ந்து சந்த தம்மிவை தொழிலெனத் திரிந்தவண் சார்வார். 1.24.5
| 1221 |
ஆத நன்னபி யமருல கிழிந்தவ ணடைந்து | மாதவ் வாவுட னின்புற வாழுமந் நாளிற் காதல் கூர்தரக் ககுபத்துல் லாவினைக் கடிதி னேத முற்றிடா திடம்பெறப் பின்னியற் றனரால். 1.24.6
| 1222 |
முதிருங் கேள்விய ராதத்தின் மக்களின் முதியோர் | கதிரு மிழ்ந்துகா ரணம்பல விளங்குகஃ பாவைப் பிதிர்த ரும்படி கண்டதைப் பெலத்தொடு நிறுவி யதிக மாய்ச்செய் துயர்த்தின ரழகொடு மிலங்க. 1.24.7
| 1223 |
உரந்த ரும்படி நின்றெழில் பிறங்கிட வொளிகள் | பிரிந்தி டாதகஃ பாவெனும் பேரின்பத் துறையை விரிந்த காரண நூகுதங் காலத்தில் விண்மட் டிரைந்தெ றிந்திடும் பிரளயத் திடிந்தை யன்றே. 1.24.8
| 1224 |
நிறைந்தி லங்கிய திடிந்தது கிடந்தது நெடுநாட் | பிறந்தது நூகுதம் பதினொரு தலைமுறைப் பின்னர் துறந்த பேரிபு றாகிம்நன் னபியெனுந் தூயோர் சிறந்தி லங்கிடக் ககுபத்துல் லாவினைச் செய்தார். 1.24.9
| 1225 |
கன்னல் வேலிமக் காபுரக் ககுபதுல் லாவை | நன்ன யம்பெறு நெறியிபு றாகிம்தன் னபிக்குப் பின்ன மாலிக்கத் தென்பதோர் கூட்டத்திற் பெரியோ ருன்ன தம்பெற விடம்பெறச் செய்துயர்த் தினரே. 1.24.10
| 1226 |
அறப மாலிக்கத் தென்பதோர் கூட்டத்துக் கணித்தாய்ச் | சுறுகு மென்னுமக் கூட்டத்தி னரசர்கள் சூழ்ந்தே யிறைவ னேர்வழிக் ககுபத்துல் லாதனை யியல்பாய் மறைப டாதொளி பெருக்கிடச் செய்துவைத் தனரே. 1.24.11
| 1227 |
விசய மிக்குயர் சுறுகுமாங் கூட்டத்தின் வீரர் | திசைவி ளங்கிடச் செய்தன ரிருந்தது சிலநா ளிசைய நல்லெழிற் ககுபத்துல் லாதனை யிறக்கிச் குசையு வென்பவ ரதிகமா யியற்றினர் குறித்தே. 1.24.12
| 1228 |
பெருகு நற்குலக் குசையெனும் வேந்தற்க்குப் பின்னர் | முருகு பூம்பொழின் மக்கமா நகரியின் முதிர்ந்து செருகு மாமழைத் தாரையிற் பிரளயஞ் சிதைப்பத் தருகை மன்னவர் குறைஷிகள் செய்துவைத் தனரால். 1.24.13
| 1229 |
கணம மணித்திரள் கதிருமிழ் ககுபத்துல் லாவைப் | பிணைய றாங்கிய புயவரைக் குறைஷிகள் பெரிதா யிணைபி றப்பதற் கிலையென வெழிலொடு மிலங்க மணமு றும்படிச் செய்துவைத் திருக்குமந் நாளில். 1.24.14
| 1230 |
அருளி லாமனக் கொடுங்கொலைக் கரவிட ரடுத்துப் | பொருளங் குண்டெனக் ககுபத்துல் லாநடுப் புறத்திற் றிருடுங் கன்னம்வைத் தறப்பறித் தடிமதிள் சிதைப்ப விருள றுங்கதிர் மேனிலை யொடுமிந் ததுவே. 1.24.15
| 1231 |
புடைப்ப றித்ததி லுட்படச் சோதனை போக்கி | யுடைப்பெ ரும்பொரு ளில்லெனக் கரவிட ரொதுங்கி யிடைப்ப டாததற் கிசைந்தன மெனமன மிடைந்து துடைப்ப ரும்பெரும் பழிசுமந் தயலினிற் போனார். 1.24.16
| 1232 |
கறையி லாமுழு மதியெனுங் ககுபத்துல் லாவைக் | குறைஷி மன்னவ ரனைவரு மொருங்குறக் கூண்டு நறையு றுஞ்சுதை மதிடனை நாலுபங் காகத் துறைபெ றும்படி பிரித்துச்செய் தொழிறுணிந் தனரே. 1.24.17
| 1233 |
வசையி லாக்குலக் குறைஷிக ளனைவரு மதித்துத் | திசையும் வானமும் போற்றிய செவ்விய ஹஜறு லசுவ தென்னுமக் குவட்டினை யணைத்தெடுத் தசையா திசையுந் தானத்தில் வைத்திடு பவரெவ ரென்றார். 1.24.18
| 1234 |
அன்ன காலையிற் செவ்விய நெறிபனீ ஹாஷீ | மென்னும் வங்கிடத் தொருவரிப் பள்ளியி னிடத்து முன்ன தாகவந் தவர்நிறு வுவரென முதலோன் பன்னு மாமறை தௌிந்தவர் சிலர்பகர்ந் தனரே. 1.24.19
| 1235 |
ஈது நன்றெனக் குறைஷிக ளனைவரு மிசைவுற் | றோதும் வேளையி லகமலர்க் களிப்புட னுலவித் தூத ராகிய முகம்மது மவ்வுழித் தோன்றத் சீத வொண்கம லானனங் குளிர்தரச் சிறந்தார். 1.24.20
| 1236 |
நீங்கி டாக்கனற் சுரத்திடை நிறைபுன லளித்து | வேங்கை யோடுரை பகர்ந்தசெங் கதிர்வடி வேலோய் பாங்கி னுற்கருங் குவட்டைமுன் பதித்திடுந் தலத்திற் றாங்கி வைத்திடு மென்றனர் நிலைபெறுந் தலத்தோர். 1.24.21
| 1237 |
உரைத்த தங்குல மன்னவ ருளங்களிப் பேற | வரைத்த டம்புய மேலுறு போர்வையை வாங்கி விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க விருத்தி னார்செழுங் கரத்தினிற் கருங்கலை யெடுத்தே. 1.24.22
| 1238 |
வெற்றி மன்னவர் தலைவரி னால்வரை விளித்துப் | பொற்ற டந்துகின் முந்தியி னான்கினும் பொருந்த விற்று றாவகை யெடுமென விவரொடு மெடுப்பக் குற்ற மின்றிமுற் ற்லத்திடை யிருத்தினர் குறித்தே. 1.24.23
| 1239 |
வலிய வீரர்க ளுரைத்திடும் படிமுகம் மதுவு | நலிவி லாதெடுத் திருத்திய நறுங்கருங் குவட்டை யொலிகொ ளும்படித் தொட்டுற முத்தமிட் டுவந்து நிலைத ரும்படி சதுர்தர மதிணிறு வினரே. 1.24.24
| 1240 |
பொன்ன கத்தினுந் தீவினும் பூவினும் பொருவா | மின்னி லங்கிய மக்கமா நகரினில் வியப்பா மன்னர் மன்னவர் மதித்திடச் சிறந்தகஃ பாவை முன்னி ருந்ததின் மும்மடங் கெனும்படி முடித்தார். 1.24. 25
| |