pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 16 (1925 - 2026)
துறைசையமகவந்தாதி.


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 16 (verses 1925 - 2026)
tuRaicaiyamakantAti
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S.Karthikeyan, Rathna, V. Devarajan, Vijayalakshmi Periapoilan and S. Anbumani
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put on the Net on 17 Jan. 2007.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 17 (1925 - 2026)
துறைசையமகவந்தாதி.


உ- கணபதிதுணை
திருச்சிற்றம்பலம்.
பாயிரம்.

1925
கணையாவனமணிமாலைச்செய்தோனவன்கண்மலர்சூ
டிணையாவனசமலர்ப்பதத்தோனருளெய்தல்குறித்
தணையாவனநடைசெய்பூந்துறைசையந்தாதிசொல்லத்
துணையாவனநம்மழகியவேழந்துணைவந்ததே.       1

நூல்.

1926     குருவணக்கம்.

பாவன்புதீரென்றலைமீதும்வைகியின்பஞ்செய்தது
பேவன்புலவுக்கடன்மாற்றருட்சுப்பிரமணிய
தேவன்புடையுறாவாழ்வான்றுறைசைச்சிவன்முனமா
லாவன்புகழ்க்குருவம்பலவாணனடிமலரே.      2

நூல்.

1927
திருவம்பரவமலமாயைகன்மஞ்சிதைதரவ
திருவம்பரவமகலத்திகழ்சிவஞானத்துமு
திருவம்பரவமருமாவடுதுறைச்செல்வபுற்றோல்
திருவம்பரவமாவென்றுசிந்தைசெயின்மனமே.       1

1928
மனமாதவநந்தவேமுயலாநிற்குமாதர்தங்க
மனமாதவநந்தவேதமுற்றேனருள்வாமத்துச்ச
மனமாதவநந்தவேதாதுறைசைவள்ளால்வளைவா
மனமாதவநந்தவேற்றியென்றாயெங்ஙன்வாய்ப்பதுவே.       2

1929
பதுமத்தவளைநிகர்வாட்குமாரன்பகழிதுளைப்
பதுமத்தவளைகழல்வதுந்தீமதிபாரித்திறைப்
பதுமத்தவளைமுரல்வயற்கோமுத்திபற்றலரொப்
பதுமத்தவளைகவர்விடையாயறப்பார்த்தருளே.       3

1930
பாராதரிக்குமதிகாயுமாரன்பகழியொன்றும்
பாராதரிக்குமதிவேதனையுறும்பற்றநினைப்
பாராதரிக்குமதிலரசூருவப்பாரெனுந்தேர்ப்
பாராதரிக்குமதிமாலஃதோவப்பரிந்தருளே.       4

1931
பரம்பரமானந்தவாவரசூரபலியிடுகற்
பரம்பரமானந்தவாங்கிழப்பான்சென்றபண்பவெங்கும்
பரம்பரமானந்தவாங்குழையாயென்படர்மனம்பம்
பரம்பரமானந்தவாழ்க்கையெவ்வாறுறும்பாவமற்றே.       5

1932
பாவனஞ்செய்யவொருநீநினையிற்பலிக்குமதப்
பாவனஞ்செய்யவுழல்பிறராலென்படுமஃதப்
பாவனஞ்செய்யமருமாவடுதுறைப்பண்ணவவொப்
பாவனஞ்செய்யவுணர்ந்துநின்கண்டம்பதிந்தமர்ந்தே.       6

1933
பதம்படையாவந்தியேனடியார்க்குப்பல்பாவெனச்சொற்
பதம்படையாவந்திவன்றானெனவுழல்பாவிக்கும்வாய்ப்
பதம்படையாவந்திரைக்கடலாய்செய்யபங்கிக்குறும்
பதம்படையாவந்திவண்ணாதுறைசைப்பதியினென்னே.       7

1934
பதிகந்தரங்கவமுதெனமூவரும்பாடினர்கைப்
பதிகந்தரங்கநடிக்குநின்றாளெமர்பற்றற்கன்றோ
பதிகந்தரங்கமரசூர்முளைபணியாய்விடமுட்
பதிகந்தரங்கரியாயுணரேமெப்படியுய்வதே.       8

1935
படியாதவனிகமங்கூறுமாற்றுமெய்ப்பத்தியெய்தப்
படியாதவனிகமும்பரமுந்தவிர்பாவியிந்தப்
படியாதவனிகராசாற்கன்பில்லவன்பண்புறலெப்
படியாதவனிகவாதேத்துகோமுத்திப்பண்ணவனே.       9

1936
வனத்தாமரையரக்காம்பற்றுறைசைவனப்பர்விரை
வனத்தாமரையரக்காம்பற்படாத்தர்வைவாய்ந்தசடை
வனத்தாமரையரக்காம்பற்றலையணிவார்விடிற்க
வனத்தாமரையரக்காம்பற்றினோர்திமடநெஞ்சமே.       10

1937
மடக்கொடியாரையினிதோம்பல்வேட்டுவளந்தபுசு
மடக்கொடியாரைமரீஇத்திரிவாஞ்சைநின்மாட்டுவர
மடக்கொடியாரைவனைசடையாயன்னமாமலைகூர்
மடக்கொடியாரைமதிலாவடுதுறைமாமணியே.       11

1938
மாவலங்காரத்தனத்துமையாண்மணவாளனின்றே
மாவலங்காரத்தண்கோமுத்திவாழுமம்மானிடமம்
மாவலங்காரத்தநேர்நிறத்தாரைவைத்தான்களம்விம்
மாவலங்காரத்தழைவானலாற்கதிமற்றிலையே.       12

1939
மத்தாகமந்தரமாநீர்நட்டாருமருவருமே
மத்தாகமந்தரமாணாவெனக்கருள்வாயருள்வா
மத்தாகமந்தரமாலாய்தென்கோமுத்திவாழ்பவகா
மத்தாகமந்தரமாக்கிடுவானுனைவந்திப்பனே.       13

1940
வந்தனங்காமருவாளியெய்வாய்நின்வலிவளமு
வந்தனங்காமருவாவடுதண்டுறைமன்முன்செலின்
வந்தனங்காமருவார்சடையாயென்பைமற்றதுநி
வந்தனங்காமருவாவென்றுநாணமருவிலையே.       14

1941
மருவளகத்துமைமாதோடுயிரின்பவாழ்வுறக்கா
மருவளகத்துமையற்றுறையாரின்மன்னுங்கொன்றைத்தா
மருவளகத்துமையில்லார்புயத்தின்வண்காவிசுவை
மருவளகத்துமையாமவர்கோமுத்திமாநகரே.       15

1942
நகரமகரந்தகர்த்தாளிறைவர்க்குநற்றுறைசை
நகரமகரந்தகட்குழலோடுநயந்தமர்சி
நகரமகரந்தகப்பயில்வாரிதிநஞ்செனத்தி
நகரமகரந்தகர்மேவுமுன்னங்குநண்ணனன்றே.       16

1943
நந்தாவரத்தநகர்ஞானக்கோமுத்திநம்பவருள்
நந்தாவரத்தநமானாக்கியதெய்வநாதகுழை
நந்தாவரத்தநகுதோட்பஞ்சாக்கரநாமகுரு
நந்தாவரத்தநமென்றுகொள்வாஞ்சையிந்நாய்க்கருளே.       17

1944
அரவாவரையிலருண்ஞானக்கோமுத்தியையமறை
அரவாவரையிலகுங்கயிலாயத்தநாமயபொய்
அரவாவரையிலடியேனையேற்றலடல்விடைமேல்
அரவாவரையிலழல்கால்கட்கூற்றமணுகுமுன்னே.       18

1945
அண்ணாமலையத்தனைஞானக்கோமுத்தியண்ணலையாம்
அண்ணாமலையத்தனைவினையாலயர்ந்தாந்தமிழை
அண்ணாமலையத்தனையாண்டவாபல்லமரருக்கும்
அண்ணாமலையத்தனையொப்பவாவென்றறைந்திலமே.       19

1946
அறையாகமநம்படைத்தானயனெற்கதுதுயர்சார்
அறையாகமநம்பலவாநின்சீர்த்தியவாவச்செவி
அறையாகமநம்பகோமுத்திவாணவருளொடுநீ
அறையாகமநம்பமாட்டேனெவ்வாறுன்னடியுறலே.       20

1947
அடியாரையாவடுவேற்கண்ணிபாகவரவுமுடி
அடியாரையாவடுதண்டுறையாய்மலமாதிகுற்றம்
அடியாரையாவடுவென்றாய்தலின்றியமரயன்மால்
அடியாரையாவடுப்பேன்பவமாய்த்தின்பமர்வதற்கே.       21

1948
தக்கசிதம்பரவாந்தொழிறீரச்சுதாவருணந்
தக்கசிதம்பரவாதங்கொள்ளேலெனத்தண்டித்தவா
தக்கசிதம்பரவாவொளிர்நீற்றதண்கோமுத்திமே
தக்கசிதம்பரவாகதியுன்னைத்தவிர்ந்திலையே.       22

1949
தவந்தானஞ்சற்றுமிலானாளென்றேநந்தமக்கினிதோ
தவந்தானஞ்சற்றுநிலானென்றுநீயெனைத்தள்ளுதல்கை
தவந்தானஞ்சற்றுறுங்கண்டத்தினாவடுதண்டுறைநா
தவந்தானஞ்சற்றுநின்றன்மையென்றாளத்தடையெவனே.       23

1950
ஏதங்கலங்கப்பணிவார்முன்னிற்பவரெண்ணில்வலி
ஏதங்கலங்கப்பணிவார்துறைசையிறைவர்பணி
ஏதங்கலங்கப்பணிவார்திருவரசீயுநிழல்
ஏதங்கலங்கப்பணிவார்சடையிலென்பார்முத்தரே.       24

1951
முத்தனையானைக்கொடியிடையொப்பின்முலையுவந்த
முத்தனையானைக்கொடியமைத்தானைமுழங்குமவி
முத்தனையானைக்கொடியானைமூர்த்திமுதனவிலு
முத்தனையானைக்கொடியேன்றுறைசையின்முன்னுவனே.       25

1952
முன்னவராகந்தவாதாவடுதுறைமுற்றிநல
முன்னவராகந்தமாதியபொய்முகக்குங்கரண
முன்னவராகந்தகுபாற்பசப்பினர்மொய்கழறேர்
முன்னவராகந்தனக்கரியாரெங்ஙன்முந்துவரே.       26

1953
வரசங்கமங்கையுதித்தார்கலேற்றவவண்டுறைசை
வரசங்கமங்கையுடையவெள்ளேற்றுவருபவதா
வரசங்கமங்கையுறாவாறளவியவாவனலி
வரசங்கமங்கையுயுமாறிழந்தும்வளமிலையே.       27

1954
வளவாகுரவையுடைமதவேளெய்மலர்க்கணையெவ்
வளவாகுரவையுவக்குமளகமயிலெனுமி
வளவாகுரவையுமொவ்வாதின்பத்துமருவுபுதி
வளவாகுரவையுள்ளார்ஞானக்கோமுத்திவானவனே.       28

1955
நவகோடிசித்தமிறோலவவாதநகர்வருப
நவகோடிசித்தமையுநூலெனமுனநல்கியவா
நவகோடிசித்தமுகவனக்கேழனண்ணாக்கழலோய்
நவகோடிசித்தபுரவாசவென்னுநறுநுதலே.       29

1956
தலையாலங்காடவர்சாராப்பிறவுந்தலம்பதம்வி
தலையாலங்காடவர்கோன்றலைப்பாச்செய்வதவன்முளைமு
தலையாலங்காடவர்காணத்தந்தார்நட்பர்தாரணிம
தலையாலங்காடவர்தொண்டர்நங்கோமுத்திச்சங்கரற்கே.       30

1957
சங்கந்தரங்கங்குழையாவமாயன்சரம்பதநஞ்
சங்கந்தரங்கங்குழைவார்மன்றாற்றுதல்வாகனம்பஞ்
சங்கந்தரங்கங்குழையாரரவஞ்சடைக்கலமெச்
சங்கந்தரங்கங்குழைநேர்வர்சூழ்துறைசைப்பரற்கே.       31

1958
பரவாதவத்தன்மையுற்றேயவத்தைப்படுங்கொடியேன்
பரவாதவத்தன்மைபற்றிநிற்பேன்மறைபன்னுசிதம்
பரவாதவத்தன்மைதீரமுராரிபணிதுறைசைப்
பரவாதவத்தன்மைதந்திருபந்தமும்பாற்றுகவே.       32

1959
பாலத்தனையத்தனையோவழற்கட்பரமனைக்கா
பாலத்தனையத்தனையரசூரனைப்பன்மறைக்க
பாலத்தனையத்தனைமநமாய்த்தளிப்பானையுமை
பாலத்தனையத்தனைநேர்பவனையுட்பற்றினமே.       33

1960
பற்றம்பலமங்கைமார்நல்கக்கொள்வர்பரவிமறை
பற்றம்பலமங்கைகூப்பார்துறைசைப்பதிநினையம்
பற்றம்பலமங்கையாரிசையாயறப்பற்றலரும்
பற்றம்பலமங்கையாகூற்றரிக்கவர்பாழ்ம்பலமே.       34

1961
பலமாவருக்கவங்கம்பெறுசோலைப்பதித்துறைசைப்
பலமாவருக்கவங்கம்புனைவாரைப்பற்றான்கணையுற்
பலமாவருக்கவங்கம்பணிவான்மகன்பண்ணுவன்றேர்ப்
பலமாவருக்கவங்கம்பெறீனீந்தப்படுமிருளே.       35

1962
இருப்புவனத்தையடையானையுண்குளகெய்துங்கொலெய்த்த்
இருப்புவனத்தையுணிற்றாகம்போங்கொலிருந்துறைசை
இருப்புவனத்தையணிவிடையாளர்க்கென்றெய்திப்பணி
இருப்புவனத்தையெவராற்கடந்தின்பமெய்துவிரே.       36

1963
விரகம்பரமையவாங்கணல்லார்கண்விடுத்தொழிவான்
விரகம்பரமையவாற்றிப்பின்னாளுமெய்க்கோமுத்திய
விரகம்பரமையமாய்ப்பான்மகிழ்ந்தமர்விண்ணவத
விரகம்பரமையவென்னும்பொல்லாதவிரதத்தையே.       37

1964
விரியம்புவனம்பறிப்பானெரியவிழித்தவன்கா
விரியம்புவனம்பயில்கோமுத்தீசனைவிட்டயனீ
விரியம்புவனம்பரிப்பானைவேண்டலம்வேதமென்ற
விரியம்புவனம்பதினாலுங்கேட்கவிரித்திடுமே.       38

1965
விரையாக்கலியையொழித்திடமானிடர்மேற்கவிசொல்
விரையாக்கலியையுள்ளீர்ஞானக்கோமுத்திவிண்ணவனா
விரையாக்கலியைச்செயுங்கயிலாயத்தன்மேற்புகல்வீர்
விரையாக்கலியைதராவெருக்குஞ்சடைமேவியதே.       39

1966
வியவருகந்தபயன்பெறவும்மிளிர்கோமுத்திமே
வியவருகந்தபவோங்கரசாருன்னின்மேன்மையுத
வியவருகந்தபரனத்தர்மாமொழிவிட்டமர்வெவ்
வியவருகந்தபவுத்தர்சொல்வேட்பதுவெந்நரகே.       40

1967
நரம்பாயவம்பலம்போன்மொழிமாதுமெய்ந்நாடிமத
நரம்பாயவம்பலம்யாஞ்செய்வதாயிற்றுநாரதகிந்
நரம்பாயவம்பலம்வாழ்வாய்முகிலுநடுங்குறவா
நரம்பாயவம்பலம்வீழ்பொழிற்கோமுத்திநாயகனே.       41

1968
கனகத்தியாகந்தபப்போழ்ந்தபோதுங்கடுந்தழல
கனகத்தியாகந்தனைமானமூட்டினுங்கண்ணுதலே
கனகத்தியாகந்தர்பாற்சேறியென்றவன்காத்துறைசைக்
கனகத்தியாகந்தந்தானையல்லாதுகருதிலமே.       42

1969
> கரும்பாவியங்கங்கங்கங்கவராமுன்கரிசுகட
கரும்பாவியங்கங்கணிசாறுறைசைக்கனமலிந
கரும்பாவியங்கங்கபத்திரம்வேதங்கரியவனே
கரும்பாவியங்கங்கமின்றியென்றாயுன்கருத்துறவே.       43

1970
கருத்தாதரித்தமைநோக்கியையோர்கையணைத்தனைய
கருத்தாதரித்தமைசாய்த்தியல்காவிரிக்காத்துறைசைக்
கருத்தாதரித்தமைதீருடைபோயுனைக்காமுற்றினிக்
கருத்தாதரித்தமைவாளுமின்பெய்தவோர்கையணையே.       44

1971
கையிலாயமானும்பலவளக்கோமுத்திக்கட்பொலியங்
கையிலாயமானும்பரசுமுள்ளான்கஞ்சன்வாய்பரிவாழ்க்
கையிலாயமானும்பர்சூழ்பாற்கடலமர்கண்மலைமங்
கையிலாயமானும்படர்வினைதீர்ப்பனங்கைதொழுமே.       45

1972
கைதவமேதகவாற்றிநின்றேனரகத்தமரு
கைதவமேதகவாள்வதென்றோகற்றுளாரியற்று
கைதவமேதகவாணம்வண்டார்க்குமங்காமதுரைக்
கைதவமேதகவாய்மாடக்கோமுத்திக்காவலனே.       46

1973
காவியங்கண்ணியமார்பாநெய்த்தோர்கவிழ்த்தாய்புவனங்
காவியங்கண்ணியமந்தவிர்ந்தாமென்றகாவலநின்
காவியங்கண்ணியநாவலர்கோமுத்திக்கட்சென்றுடைக்
காவியங்கண்ணியயாவருமாமுத்தர்கட்டுரையே.       47

1974
கட்டளையாவும்பன்மாமதங்கோடல்கடுத்துழல்வேன்
கட்டளையாவும்பறிமாயைவாதக்கலப்பெனும்புன்
கட்டளையாவும்பரோங்கரசூரகமழுநின்வாய்க்
கட்டளையாவும்பரேத்தடியாரிற்கலப்பித்திடே.       48

1975
கலக்கந்தரமஞ்சவாமேனிமானொருகண்பதிற்றுக்
கலக்கந்தரமஞ்சளாங்குழல்சோரக்கரைந்துநெஞ்சு
கலக்கந்தரமஞ்சலிப்பாடுறைசைக்கபாலிமறங்
கலக்கந்தரமஞ்சநஞ்சமுண்டான்வந்துகாப்பதென்றே.       49

1976
காப்பரவத்தையலைவாரிநஞ்சைக்கைகண்டங்கொண்டார்
காப்பரவத்தையலைவாய்துறைசைக்கண்ணார்கழிநீங்
காப்பரவத்தையலைவாமங்கொண்டவர்கட்டறுத்துக்
காப்பரவத்தையலைவாயதோவக்கலப்பளித்தே.       50

1977
கலகலவார்க்குங்குலமாமறைக்கழலாயிடஞ்ச
கலகலவார்க்குங்குமமுலையாய்கடுக்கைத்தொடைய
கலகலவார்க்குங்குளநேர்துறைசைக்கண்ணாய்நமனி
கலகலவார்க்குங்குளிர்தாளளித்தலென்காதன்மையே.       51

1978
காதம்பலபலசெல்வோநிற்சூழக்கடுமுடநீங்
காதம்பலபலவாண்மடவார்கண்ணென்றேத்துவமங்
காதம்பலபலமுற்றோந்துறைசைக்கண்ணாளகுழைக்
காதம்பலபலமென்றடைவோநினைக்கண்டுவந்தே.       52

1979
வந்திக்குமண்ணும்பரித்தனராவெனும்வண்டுறைசை
வந்திக்குமண்ணும்படியெங்ஙன்மன்மதரேநனிசி
வந்திக்குமண்ணும்பகழியும்வாட்டுவமாற்றுமெனும்
வந்திக்குமண்ணும்பகீரதியாரருள்வாரென்னுமே.       53

1980
வாரம்படைத்தகைவெய்யோர்குலஞ்செற்றவாளிமுளை
வாரம்படைத்தகைகொண்டமராடன்மகிழுமுழ
வாரம்படைத்தகையார்புகழ்கோமுத்திவாணர்வரு
வாரம்படைத்தகையாகாதலங்கரிமாளிகையே.       54

1981
மாளிகைத்தேவனைசித்தார்துறைசைவயிற்றிதழி
மாளிகைத்தேவனைமெய்ம்மாலதென்பன்வல்லேறுபெரு
மாளிகைத்தேவனையத்தோன்றுமின்பமருவுந்திரு
மாளிகைத்தேவனையுந்தொழுவேனுண்மயக்கறுத்தே.       55

1982
மயக்கந்தரத்தரைமேற்சீவர்போன்றுழல்வானவர்ச
மயக்கந்தரத்தரையிற்றோலரைவண்டுறைசைநிரா
மயக்கந்தரத்தரையாலாலமுண்டுவயங்குமெழின்
மயக்கந்தரத்தரையேத்தாரவர்கொடுவல்வினையே.       56

1983
வல்லியங்குஞ்சரங்கொங்கைகண்ணாகவயங்குமலை
வல்லியங்குஞ்சரமென்னநின்றார்மன்னுகோமுத்தியார்
வல்லியங்குஞ்சரந்தைப்படவேங்கும்வரைச்சரிவாய்
வல்லியங்குஞ்சரநீந்திநம்மாட்டுவரல்கொடிதே.       57

1984
வருந்தவரும்பணிநஞ்சன்னகாலன்வருமுனமே
வருந்தவரும்பணியும்பறம்பென்பர்வயங்குமறி
வருந்தவரும்பணிமாயோன்செய்கோமுத்திவாணர்விண்ண
வருந்தவரும்பணியும்பதம்போற்றுமின்மானிடரே.       58

1985
மானக்கஞ்சாறமையிக்கின்சொன்மங்கைமருவிடக்கோ
மானக்கஞ்சாறவிருங்கோவைபூண்டவன்வானத்தைவி
மானக்கஞ்சாறருகோமுத்தியான்மகளோதிநன்றான்
மானக்கஞ்சாறவென்றானென்றுகூறுநம்மாமயிலே.       59

1986
மாமதலையரியாதியர்போற்றவனைவனுண்க
மாமதலையரியாவட்டதென்னமகிழ்ந்தவன்புன்
மாமதலையரியாயென்றசித்தவன்வாழிடம்பூ
மாமதலையரியார்வயற்கோமுத்திமாநகரே.       60

1987
மானாகமாதுளங்காச்சூழ்துறைசைவரதனணி
மானாகமாதுளங்காப்பூதமாபடைவண்கரக்கோண்
மானாகமாதுளங்காவரையாவிலென்பாள்வயங்கம்
மானாகமாதுளங்காமுற்றிவ்வாறுதன்வாய்மலர்ந்தே.       61

1988
மலராதனத்தமருவோன்றிருநெடுமாலெனுமும்
மலராதனத்தமின்னோனரசுர்சொலல்வல்லர்விடா
மலராதனத்ததிபனாணப்பூணியுள்வார்முடிக்க
மலராதனத்தமிலராதன்மெய்யெனுமாமறையே.       62

1989
மறையாகமந்தவவோதிமெய்ஞ்ஞானமருவினர்க்கு
மறையாகமந்தவமாயேவிளங்கும்வயங்கியெதிர்
மறையாகமந்தவறிவாள்பவர்க்குவண்கோமுத்திச்செம்
மறையாகமந்தவழ்வான்றிருப்பாதமறைவனவே.       63

1990
வனமணமாலைமலரோனைவேட்டுமதிப்பொருவு
வனமணமாலையுறேன்பிறவேண்டலன்வாழ்தரப்பு
வனமணமாலையுமையாளொடுமையன்வாழரச
வனமணமாலையுற்றேன்பவங்கான்முன்மலர்ந்தபஞ்சே.       64

1991
பஞ்சாக்கரவைபதந்தொழுமாறுபணிவினைதீப்
பஞ்சாக்கரவைநிகர்மலமாயைபறித்தெறியின்
பஞ்சாக்கரவைபவமாகவாவினன்பற்கடகர்ப்
பஞ்சாக்கரவையகோமுத்திமேயபராபரனே.       65

1992
பரந்தாமனுக்குமரியவிடையைப்பணைத்தமுலைப்
பரந்தாமனுக்குமரியமர்தோணமர்பார்த்துச்சிவப்
பரந்தாமனுக்குமரியவிவ்வாய்தலில்பங்கயற்கும்
பரந்தாமனுக்குமரியர்துறைசைப்பதியணங்கே.       66

1993
பத்தவளக்கரும்பாசமினீயும்பயிலிடத்த
பத்தவளக்கரும்பாவியுமேவப்பணிநகையின்
பத்தவளக்கரும்பார்மொழிபாகபரவுபுயம்
பத்தவளக்கரும்பாலாய்துறைசைப்பதியரசே.       67

1994
அரசவனத்தைமகிழ்மாசிலாமணியையமலை
அரசவனத்தையணைத்தெழுந்தாயெங்குமாய்வயங்கும்
அரசவனத்தையணிமாலயன்முதலாயவர்சீர்
அரசவனத்தையவாவேனின்சீர்த்தியமுதைவிட்டே.       68

1995
அம்மனையாடுதிபந்தாடுதிகழங்காடுதியென்று
அம்மனையாடுதிவாவீர்ந்துமாற்றிலல்ளன்னமிடத்து
அம்மனையாடுதிசெய்கோமுத்தீசரருள்புரிந்தால்
அம்மனையாடுதிவைவாண்மதனெடுத்தார்ப்பினுமே.       69

1996
ஆரத்தனத்தையலையாலவாய்மணமாற்றியின்பம்
ஆரத்தனத்தையலையாடவேழழைத்தோனணிநா
ஆரத்தனத்தையலையாதமைத்தவனாய்ந்தவிடத்து
ஆரத்தனத்தையலையாற்றுகோமுத்தியாய்கைநன்றே.       70

1997
கையரும்பாவரும்பாராத்துறைசைக்கமழ்தெருவேற்
கையரும்பாவரும்பாசாங்குசருங்கனக்குமழுக்
கையரும்பாவரும்பாமாமுலையுங்கலக்கவிண்வாழ்க்
கையரும்பாவரும்பான்மையெம்போலியர்கண்ணருளே.       71

1998
கண்ணப்பரைவரையாதுவந்தாள்வர்கரையொளிருங்
கண்ணப்பரைவரையோடேற்றினார்கனிந்தூனருத்துங்
கண்ணப்பரைவரைக்காளத்தியாண்டவர்கட்டுசடைக்
கண்ணப்பரைவரைமாய்ப்பார்துறைசைகலந்துய்ம்மினே.       72

1999
கலவரையாதவமாற்றாரெனினுங்கடுவினைய
கலவரையாதவமாற்றுவதேநின்கருணைதலைக்
கலவரையாதவமாலையுற்றேற்கென்கதிசிலைய
கலவரையாதவமாலேக்கொள்கோமுத்திக்காரணனே.       73

2000
காமாசிலாமணியார்க்குமுன்வாங்கிக்கரும்பிணர்நீங்
காமாசிலாமணிவார்குழல்சோரவெய்கண்ணின்மைதீங்
காமாசிலாமணிகற்றார்மருவக்கமழரசக்
காமாசிலாமணிநின்சீர்நறவங்கவரும்வண்டே.       74

2001
வண்டலம்பாவைகும்பூங்குழன்மாதுமதியெழத்து
வண்டலம்பாவையழலாவுடைத்தென்றுமாழ்கிநசை
வண்டலம்பாவைமுதலியநீத்தனள்வாழ்துறைசை
வண்டலம்பாவையடியார்புனையவதிபவனே.       75

2002
பவனாசனார்த்தனன்மூண்டடையார்கட்படர்கடுப்பாம்
பவனாசனார்த்தனன்பானீர்த்துறைசைப்பதிமருவு
பவனாசனார்த்தனன்காணரியாப்பரனாவென்பன்காய்
பவனாசனார்த்தனன்றானென்றுசெய்வன்பரிந்தருளே.       76

2003
பரவலந்தீர்த்தமுழுகிலங்கோமுத்திப்பண்ணவசிற்
பரவலந்தீர்த்தநமனஞ்சுசேயுயிர்ப்பாலபரா
பரவலந்தீர்த்தவயனைவைத்தாயென்றும்பாடிலமன்
பரவலந்தீர்த்தநின்பாதாம்புயமெங்ஙன்பாலிப்பதே.       77

2004
பாலக்கரத்தர்துறைசைத்தியாகர்பழமறைக்க
பாலக்கரத்தர்நெடுமறையந்தப்பயனெனுமைம்
பாலக்கரத்தர்சிலைவேளெரியப்படர்ந்தநுதற்
பாலக்கரத்தர்பதம்பணியார்சிலபாதகரே.       78

2005
தகரங்கலந்தகுழல்பாகராவடுதண்டுறைவித்
தகரங்கலந்தவழ்வெம்முலையாரத்தழுவுறின்யாந்
தகரங்கலந்தவஞரென்றிடாதுதபும்பலவன்
தகரங்கலந்தபொழுதுமென்னாமிந்தத்தையலுக்கே.       79

2006
தையலையாதரியாதெழும்வீழுந்தசம்படவத்
தையலையாதரியாதேகுமோவெனுஞ்சார்மதியத்
தையலையாதரியாரெனும்வேளைத்தவிரெனுமுத்
தையலையாதரியாக்கோமுத்தீசசெய்தண்ணருளே.      80

2007
தண்ணந்தமருகமேற்றார்க்கிடந்துறைசையுவமை
தண்ணந்தமருகவாய்வைக்குமால்விடைசாற்றுடைதோல்
தண்ணந்தமருகமெண்ணில்கண்டார்குழைசங்கொடுபாந்
தண்ணந்தமருகவென்பான்மலையிறைதார்கொன்றையே.      81

2008
தாரங்கடுக்கைசிலைமலைபூதஞ்சமர்பொருது
தாரங்கடுக்கையடியாருளமுற்றுந்தந்தநற்றாய்
தாரங்கடுக்கைமலம்போக்கல்வேலைதனியிடங்கே
தாரங்கடுக்கையமைத்துண்பதுதுறைசைப்பரற்கே.       82

2009
கேதனமாவடுகோட்டேறுமேவிக்கிளர்தருநி
கேதனமாவடுதண்டுறையாவென்றுங்கேடிறனக்
கேதனமாவடுநேர்விழியாவென்றுங்கேட்பளிவட்
கேதனமாவடுமாற்றிடுவானெழுகேண்மையனே.       83

2010
அனேகந்தரத்தகைமாபாதகம்புரிந்தாங்கொடுமை
அனேகந்தரத்தகையேனளற்றாழவருட்டுறைசை
அனேகந்தரத்தகையேற்றாலந்துஞ்சவயின்றொளிரை
அனேகந்தரத்தகைவிட்டாலெனக்கினியார்துணையே.       84

2011
ஆராவமுதையனையநின்சீரறையேநினக்கியாம்
ஆராவமுதையடைந்தான்கவரவடையும்பச்சை
ஆராவமுதையலாக்கான்வெள்ளேற்றவவிர்சடைமேல்
ஆராவமுதையனேயுரசூரவருள்புரியே.       85

2012
புரப்பானலங்கண்டவாவளமோங்கும்புகழ்த்துறைசை
புரப்பானலங்கண்டவாணர்கொண்டாடப்பொலிபவநூ
புரப்பானலங்கண்டவாமொழிமாதுபொருந்தியொளிர்
புரப்பானலங்கண்டவாதமியேன்பவம்போக்குறவே.       86

2013
வேதண்டவில்லியைவாய்வான்வெரீஇத்தொழமேலெழுவெள்
வேதண்டவில்லியைவார்தெருவான்மிளிர்கோமுத்திக்கோ
வேதண்டவில்லியைவாய்போலடைதல்விலக்கெனவவ்
வேதண்டவில்லியைவாழ்த்தார்பிறப்பென்னவீண்பிறப்பே.       87

2014
பிறவித்துருமங்கவடுவிட்டோங்கிப்பிறங்குமதன்
பிறவித்துருமங்கவுய்வதென்றியான்வெண்பெருமுத்தங்கள்
பிறவித்துருமங்கள்சூழ்கோமுத்தீசநின்பெய்கழற்கன்
பிறவித்துருமங்கமுந்தண்ணென்றாநினைப்பேசுநர்க்கே.       88

2015
நரந்தந்தகரங்கமழ்குழல்வான்செயுநற்றவத்தி
நரந்தந்தகரங்கடிகட்டொழில்சொனகாவிடைகிந்
நரந்தந்தகரங்கடுப்பார்துறைசைநல்லாளியல்வா
நரந்தந்தகரங்கனிவான்கொண்மாம்பொழினாடிடமே.       89

2016
நாடரும்பாதகமாயாநவிலொருமாத்திரையில்
நாடரும்பாதகவுரிபங்காகற்பநண்ணியவான்
நாடரும்பாதகவார்சூழ்துறைசைநம்பாநெடுமால்
நாடரும்பாதகமலமென்றோவொருநான்பெறலே.       90

2017
நானந்தவாதகுழலார்புணர்ச்சிநசைஇயுழலு
நானந்தவாதமறாதுசெய்வேனுய்யநாடுமறை
நானந்தவாதமயில்பணியாய்நவின்றாய்செவிவாய்
நானந்தவாதவன்சூழ்பெருங்கோமுத்திநாயகனே.       91

2018
அகங்காதரசங்கமந்தவிர்ப்பானுன்னையாதரித்தை
அகங்காதரசங்கரவோரிருவரறையிசைகூர்
அகங்காதரசங்கவார்குழையாயென்றறைகுவனென்
அகங்காதரசங்கவின்வனஞ்சூழச்செயற்புதனே.       92

2019
அற்பரவைக்கட்புகுதாமன்மாமயிலன்னவர்மை
அற்பரவைக்கட்குடியாமற்கோமுத்தியையகண்டத்து
அற்பரவைக்கட்கநேர்விழிபாகவன்பாற்றுநர்பால்
அற்பரவைக்கட்டடியேனவினைநின்னருளழலே.       93

2020
அரும்புங்கவருமணிமுலைபாகனருமறையை
அரும்புங்கவருமணிதருகோமுத்தியண்ணலம்பொன்
அரும்புங்கவருமணிமைநின்றேத்துமரசிறைமால்
அரும்புங்கவருமணியேயென்னுள்ளத்தவிரொளியே.       94

2021
ஏதம்படரும்பலதொழிலாற்றியிளைத்திடுதற்கு
ஏதம்படரும்விழியார்மயன்முன்னியமரிறை
ஏதம்படரும்வரவிடுவாரினியானியற்றல்
ஏதம்படரும்பயிர்நான்றுறைசையிறையவனே.       95

2020
இறைக்கும்வளைக்கும்பொருத்தமின்மாமதியென்பதழல்
இறைக்கும்வளைக்கும்பொருகழைவேள்விடுமேவெனுமய்
இறைக்கும்வளைக்கும்பொருவாக்கடலிரைக்குந்துறைசை
இறைக்கும்வளைக்கும்பொருட்கீர்சொல்வாரினிலையருளே.       96

2023
இலையமலைக்கவளந்தீரிருவரையெண்ணலம்பொன்
இலையமலைக்கவளவாந்துறைசையிறைக்கன்புசெய்து
இலையமலைக்கவளருந்திருமடத்திற்கலப்புற்று
இலையமலைக்கவளமார்ந்தின்பெய்தவெழுமனமே.       97

2024
மனம்புதைக்கும்பலமாயவெங்காமமதிசுடுங்கா
மனம்புதைக்கும்பலமின்றென்றுயிரைவருத்திவிடா
மனம்புதைக்கும்பலவின்றேமொழிக்குவளங்கொள்பொன்னி
மனம்புதைக்கும்பலகால்பாய்தென்கோமுத்திவானவனே.       98

2025
வானம்பரவுமையாள்கணவாவெனின்வாழவருள்
வானம்பரவுமையாறன்றென்கோமுத்திவாணனணி
வானம்பரவுமையான்வருமென்னுமயின்மதனொவ்
வானம்பரவுமையாலோசிறந்துயிர்வாழ்வதுவே.       99

2026
வதனமைந்தான்குஞ்சியாகாயன்சேய்முனம்வந்தநம
வதனமைந்தான்குஞ்சிதையாவியமன்றன்வாழ்வுமைந
வதனமைந்தான்குஞ்சிசூழ்வயற்கோமுத்திமன்னினிய
வதனமைந்தான்குஞ்சிதபாதமேபல்வளத்திருவே.       100

துறைசையமகவந்தாதி முற்றிற்று.

This file was last revised on 29 Oct. 2021.
Feel free to send corrections and comments to the webmaster (pmadurai AT gmail.com)