கல்விதருவான் கலைமங்கை @ கருமைதருவாள் மலைமங்கை செல்வந்தருவாள் திருமங்கை செயத்தைத் தருவாள்# செயமங்கை எல்லாந்தருதற் கெவராலு மேலாதென்ப ரிவ்வுலகில் எல்லாந்தரவல் லதுபணமே யென்னிற்பணத்துக் கிணையென்னே. @ கருமை = வலி # செயமங்கை = துர்க்கை | 1 |
வேறு அந்தணன்படைத் தற்றொழிலொன்றையே ஆற்றும் %இந்திராபதி காத்திடுந்தொழிலையே யியற்றும் சந்த்ரசேகர னழித்திடுந்தொழிலையே சவைக்கும் நந்தலில்பொரு ளியாவையுமிழைக்கு $ நாயகனாம். % இந்திராபதி = விஷ்ணு $ நாயகனாம் = பிர்மம் | 3 |
வேறு மாமகள் பொற்றா மரையுற்றது மஞ் சாம்பவி செம்பொற் #ற்றடம்வந்தது ஞ்சா$ மாம்பரன் பொன்னம் பலமார்ந் ததுவும் நாம்புக ழாடக நசையா லன்றோ. #நடம் = மலை $ சர்மாம்பரன் = சிவன் | 3 |
வேறு பொன்னெனுந்திருப்பேர் கமலைபூண்டதுமம் புதவணன் வாசுதேவப்பேர், நன்னருற்றதுஞ்சீ ரிரணியகருப்ப னாமத்தைவிரிஞ்சனத் தியதும், மின்னிடுவெள்ளி மலையொருவீடா விடையவன்மேயது மேலாம், உன்னுடைவாஞ்சை யாலெனிற்பணமே உன்னையேயுள்கு மென்னுளமே. | 4 |
வேறு பூசுவது செஞ்சாந்தம் பூணுவது நெட்டங்கி கூசுவது நல்லோரைக் கூடுவது தீயோரைப் பேசுவது மாமயம் பேணுவது பேரகந்தை காசுபணம் உற்றவொரு கணிகைமகன் கண்டாமே. | 5 |
வேறு சாதியீனனைநற் குலத்தினனாக்கும் சற்குலத்தவனையே தாழ்த்தும், வேதமோதியவனைப் புலைக்குலம்புகுத்தும் விபுதனைச் சிதடனா வியற்றும் மாதரைவிலைக்கு விற்றிடப்புரியும் மக்களைவதைத்திடச் செய்யும், ஆதலாற்பணத்தின் ஆண்மையையுரைக்க அவநியிற்கற்றுளோர் யாரே. | 6 |
பாவலர்க்காணி லோட்டமேபிடிப்பாய் பதடிகள்கையிலே நடிப்பாய், காவியங்கண்ணார் காந்தையர்கற்பைக் கணத்தினிலழியக்குவை கற்றோர், நாவினிலடங்கா மாயங்களாற்றி நரர்களைவாட்டுவை நாளும், பூவினிற்புதைப்போர் தங்கள்வாய்மண்ணைப் போடுவாய் புகல்வதென் பொருளே. | 7 |
சந்தணிகொங்கைத் தடங்கண்மங்கையர்தஞ், சாதியின்முறைமைகள் தவிர்ந்து, தந்தையர்தாயர் தம்முடைமக்கள் தம்பதிசகோதரர்த் துறந்து, நிந்தனைவளரச் சோரரைத்தழீஇத்தந் நிறையழிந்தோடுதல் பணத்தின், தந்திரமென்னிற் பணக்குறுபெருமை சாற்றுதற்கியாவரே தக்கோர். | 8 |
அந்தனைக்கமலக் கண்ணனேயென்றும் அழகிலான்றனைமத னென்றும், மந்தனைமதிசால் மந்திரியென்றும் மறம்புரிபாவியைத் தரும, நந்தனென்றும் உலோபியைநித்த நரர்துதிகன்னனே யென்றும், புந்திகொடுரைத்தல் பொருட்பொருட்டன்றோ புகலுவீர் புவிபுகழ் புலவீர்! | 9 |
தேவடியாளை யருந்ததியென்று செகத்துளோர் செப்பவுஞ் செய்வை, மாவடிவுடைய கற்பினாள் வேசி மகளென வழங்கவும் புரிவை, காவடிப்பயலைக் காவலனாக்கிக் கசடர்கையுற்றுநீ விழிப்பாய், மூவடிவுற்றோர் விரும்புதற்குரிய மோகராவாகிய பவுனே. | 10 |
தாயொருதாசி தகப்பனோசலுப்பன் தம்பியின்மனைவிதன் தாரம், நேயனோமூடன் சேய்பலர்குரங்கு நீந்துதல்மதுக்கடல் நிமிரும், நோயெலாமிவன்பால் வாயெலாமுழுப்பொய் நோக்கினிற் சாக்கடைப் பன்றி, யாயினுமிவனை மனிதனென்றெண்ணல் அம்ம! நற்பணத்தினால் அன்றோ? | 11 |
தாயொருசாதி தந்தையோர்சாதி தன்னுடைமக்களோர் சாதி, வாயிலேதென்னை பனைமரச்சாதி# மனையவள் தம்பிபெண் சாதி, காயினைக்கனியாக் கனியினைக்காயாக் கழறுதலிவன்குணங் கடற்பார், %வாயினிலிவனை மானிடனாக மதித்திடல்பொருளினா லன்றோ. # சாதி = கள்ளு % வாய் = இடம் | 12 |
கல்வியுமறியான் கேள்வியுமறியான் கற்றவர்பாலிருந் தறியான் பல்லலங்காரக் காவியும்படித்த பாவலன்றோனெனப் பகர்வான் நல்லவையொன்றுங் கனவிலுநலுவான் றீயவைநாடொறு மியற்றும் புல்வறிவான் நாயினுயவனைப் புருடனாப் புரிந்தது பொருளே. | 13 |
கல்வியிற்பெரியன் கேள்வியிற்பெரியன் கவிஞரிற்பெரியவன் #கரையும், பல்வகைப் புராணப் பொருள்விரித்துரைக்கும் பாவலனழகில்மன் மதனே, நல்லிசைப் பெருமான் %நடலையில்நாவான் நற்குண நாயகனெனினும், செல்வமொன்றிலனேற் செகத்துளோரிவனைச் சிறியவர் ## கோட்டியிற் சேர்ப்பார். # கரைதல் = சொல்லுதல், % நடலை = பொய், ## கோட்டி = கூட்டம் | 14 |
வேறு காசினாலுறுங் கல்வியுஞ் செல்வமும், காசினாலுறுங் #கங்ககல் கீர்த்தியும் காசினாலுறுங் காமமுஞ் சேமமும் காசினாலுறுங் கற்றவர் ஞானமே. # கங்கு = கரை | 15 |
வேறு புவநம்பலவும் படைத்தளித்துப் புகுமந்தத்தி லறவழிக்கும் புநிதர்மூவர் பிரமமல புறத்தோர்தேவும் பிரமமல தவநவன்மதிதீ யைம்பூதச் சமுதாயங்கள் பிரமமல சருவம்பிரமந் தனிப்பிரமஞ் சருவாதார பரப்பிரமம் அவனையவளை யவரையதை யவையையண்டப் பரப்புகளை ஆக்கும்பிரமம் வஞ்சியரை யணைக்கும்பிரமம் அரும்பிரமஞ் சிவனைமாலைத் தேவர்களைச் சிலையிற்படைத்துத் திகழ்பிரமஞ் @சேருமருத்தப் பிரமமொன்றே சேகத்தோர்தியாநஞ் செய்பிரமம். @ அருத்தப்பிர்மவாதியர் = பொருளேபிர்மமென்று வாதிப்போர். | 16 |
வேறு பணமுடையான் குணமுடையான் பணமுடையான் மணமுடையான் பணமுடையான் உணர்வுடையான் பணமில்லான் பிணமொப்பான். # # இச்செய்யுள் ஆவன் என்னும் எச்சப்பயனிலை கொண்டது. | 17 |
வேறு குணமொன்று மில்லாத குருடனேனுங் கொச்சைமிகு குலத்திலுற்ற குலாலனேனும் பணமென்னும் பொருளுளனேற் பாரிலுள்ள பாவையரும் பாவலரும் @ பதமற்றோரும் குணக்கடலே யருட்கடலே கோவேதேவே கோபாலா பூபாலா கூறுஞ்சீலா இணையிகந்த இந்திரனே காமாசாமா எங்கள் குலதெய்வமே யெனச் சொல்வாரால் @ பதம் = சோறு. | 18 |
நெடுங்கால மோரிடத்தில் நில்லாதுற்ற நேயர்களைப் பகையாக்கும் பகைநட்பாக்கும் கடுங்காவற் படுத்திங்கால் விலங்கைவெட்டும் கணிகையர்கை வசமாக்குங் கலகஞ்செய்யும் மடந்தையர்கற் பழிக்கும்ரச வாதம்பண்ணும் வழிகாட்டி யவர்வாயில் மண்ணைப்போடும் திடமுடைய செல்வர்பிச்சை யேற்கச்செய்யுஞ் சிற்றறிவோர் தமைவிபுத ராக்குங்காசே. | 19 |
பொய்ச்சாட்சி சொலிவிலங்கைத் தரிப்பார்காலில் பொய்ப்பத்தி ரம்வரைந்து தீவிற்போவார் பொய்த்தேவர் தமைப்போற்றி நரகஞ்செல்வார் பொய்ச்சன்னா சம்பூண்டு புரட்டுச்சொல்வார் பொய்ந்நூல்கள் பலவுளறிப் போதிப்பாரால் பொய்யுரைத்துப் பொய்யுரைத்து நாவுந்தேய்வர் பெரய்மெய்யா மெய்பொய்யாப் புரியுஞ்செய்ய பொருள்சிறிது படைத்தபெரும் பொறியற்றாரே. | 20 |
வேறு சொல்லுறுமுலகந் தூற்றுதற்குரிய துர்க்குணஞ்சுமந்த வோர்சுமடன், புவலுறுசமய மொன்றையு நம்பாப் புலையனம்புவிக்கணே பொருந்து, செல்வமொன்றுளனேற் றிநகரனவனே திரியம்பகதேவனு மவனே, அல்லியும்பகலும் பலர்தரிசிக்கும் ஆண்டகையவனலாலுண்டோ. | 21 |
முகநகப்புகழ்வன் புறத்தினிலிகழ்வன் முழுப்புரட்டினர்க்கெலாந் தலைவன், மிகுமரியாதை யுள்ளவன்போல விதம்பல்பேசுவன் வீணன், சகுனியைத்துச்சா தநன்றனையொத்த தப்பிலியாயினுங் கடல்சூழ், சகத்தினிலிவனை மானுடனாகச் சாற்றுதல் பணத்தினா லன்றோ. | 22 |
மன்மதன் நிகர்த்த வடிவழகுள்ளான் மாவரிச்சந்திரன் மெய்யில், தன்மதேவதைநற் செய்கையிற்கலைகள் கற்றவோர்சாருவ பெளமன், நன்மையைப்பயக்கு @மொழுக்கிலேபெரிய நாயினுநானிலப் பரப்பிற், பொன்சிறிதேனும் படைத்திலனாயிற் புல்லறிக்கடையனென் றிகழ்வார். @ ஒழுக்கு = சதாசாரம் | 23 |
அறம்பொருளின்பம் வீடெனுநான்கை யளித்திட ஆக்கிக்காத் தழிக்குந், திறம்பெறுமூவர் தம்மையும்படைத்துச் சிறப்பொடுபூசனை புரிய, எறும்பினுமிழிவா யாயினேரேத்து மிந்திரனாக்குற என்றும், உறும்புகழ்ச் செல்வப் பொருளினையன்றி @உரமற்றைப்பொருள்களுக் குளதோ. (24) @ உரம் = வலி | 24 |
ஒருநொடியளவு நல்லுரைசொல்லான் உண்மையைமறந்துமே உரையான், நரைதிரைமூப்பு வருமென எண்ணான் நாடொறுங்கோடக @நாய்போல், தெருவெலாந்திரிவான் சேட்டைகள்புரிவான் தீநர்கள்தம் வயி றெரியப், பொருளினைக்கவர்வான் ஆயினுமிவனோர் பொருளெனப் புரிந்தது பொருளே. @ கோடகம் = நாற்றெரு கூடுஞ்சந்தி. | 25 |
வேறு தசவாய்வு மிடம்விட்டுப் புறம்பிலோடத் தனிவாத பித்தமைய மேகோபிக்க இசிவுடலெங் கும் வருத்தக் கண்ணீர்வார இருகாலு மிருகையு மீரங்கொள்ளக் @குசப்பாலு மிறங்காமற் கடைய்வாய்சோரக் குடர்நடுங்கக் கூகூவென் றுறவோரேங்க நிசிக்காலன் கைப்படும்போ தெல்லாம்நீங்கும் நிகர்ப்பற்ற பொன்னாசை நீங்காததன்றே. (26) @ குசப்பால் = முலைப்பால், | 26 |
திசைநாறு மழுக்குடையன் அழகெனும்பேர் சென்மமுதற் கேட்டறியான் றீயன்பேயன் நிசமுரைக்குங் குலத்திலுறா நீசன் நாசன் நீணிலத்தில் $ வேசரியை நிகர்ப்பானேனும் %வசுவுடையானென்னிலவன் மதனேயென்று மாதரவன் பின்றொடர்ந்து மருவாநிற்பர் இசைப்புலவர் கவிதைபுனைந் தேத்தாநிற்பர் எல்லாரு மவன்மொழி நால்மறையென்பாரால். (27) $ வேசரி = கழுதை, % வசு = பொன் | 27 |
வேறு விறகுவிராட்டி தையலிலை வீதிதொறும்போய் விற்றலைந்த்தும் வேசைமாதர் நேசர்களை வெருட்டியவர்பாற் சேர்த்துவந்தும் நிறைவுசுமைகள் எடுத்துழன்றும் நிமித்தமின்றிப் பொய்யுரைத்தும் நிதியுற்றவர்பாற் பல்லிளித்தும் நீலக்கடாப்போற் றிரிந்தவர்கள் @பொறியுளாரை வஞ்சித்தோ பூமிப்புதையல் கண்டெடுத்தோ பூவைமாரைப் புனைசுருட்டுப் புரிந்தோசெல்வம் படைத்தபின்னர் நறுநெயுண்டி பொற்சிலை நகைகளுற்று நானிலத்தோர் நாளும்புகழச் செய்தல்பலர் நாடும்பணத்தா லன்றியெனே. (28) @பொறி = செல்வம் | 28 |
வேறு பொய்மொழிமாறாப் பொதுமகள்புதல்வன் புந்தியில்புல்லன்மா மடையன், @கையரிறகடையன் கர்த்தபநடையன் கடுஞ்சொலனாயினுஞ் காசொன், றெய்துவனாயி லவன்பிதற்றியவை %ஏற்புடைத்தென்பரிவ் வுலகோர், #பையுடையுலகிற் பணக்குளபெருமை பண்ணவரியாவரே படைத்தார். (29) @கையன் = கீழ்மகன், % ஏற்புடைத்து = அங்கீகரிகத்தக்கது, # பை = ஆதிசேடன்படம். | 29 |
பிறந்தவரிறப்ப ரிறந்தவர்பிறப்ப ரென்பதுபெருமறைத்துணிவு, பிறந்தநாள்தொட்டு த்தினகரன்றிங்கள் பெருவிசும்புறையுநாள் அளவும், இறந்தனனெஞ்சொல் லெய்திடேன்யானே யெனப்பலதீமைகளியற்றி, அறந்தபுபாவி யாயினேனகந்தை யடைதலிப்பணத்தினா லன்றோ. | 30 |
வேறு காசேயுனக்குநல் லாசீர்வசநங் கழறுகின்றேன் தூசேயவெள்ளிரூ பாவேயுனைத்திந முந்தொழுவேன், தேசோமயங்கொளுஞ் செம்பொன்னு ருவந்திகழ் பவுனே, ஆசாரத்தோடுநின் பாதாம்புயந்தனை அர்ச்சிப்பனே. | 31 |
வேறு என்னுடை பாக்கள்வாழ்க இரும்புவி மாந்தர்வாழ்க, மன்னவர்வாழ்கவாழ்க மங்கையர் கற்பும் , பொற்பும், மின்னுறு தாயர்மூவர் மணவாளர்மூவர் வாழ்க பொன்வெளி செம்புரூபப் பொருணிதம்வாழ்க மாதோ. | 32 |