1. பாயிரம் (1-3) | 7. சூழ்வினைக்காண்டம் (289 - 339) |
2. அரசாட்சிக் காண்டம். (4-8) | 8. நகர்நீங்கிய காண்டம். (340 - 386 ) |
3. விவாககாண்டம். (24-186) | 9. காசி காண்டம். ( 387 - 419) |
4. இந்திர காண்டம் (187 - 206) | 10. மயான காண்டம்.(420-477) |
5. வஞ்சனைக்காண்டம். (207-237) | 11. மீட்சிக்காண்டம். (478-508) |
6. வேட்டஞ்செய் காண்டம் (238- 288 ) | 12. உத்தரகாண்டம். (509-529) |
1 |
காப்பு. சங்கிரக மாக வரிச்சந் திரன்சரிதம் பொங்குமுதற் பாவாற் புகலுதற்குத்-துங்கமுடி யாறுடையா னம்பொ னடியிணைக ணற்றுணையா வூறுடையா வெறகிங் குறும். | 1 |
2 |
அவையடக்கம். கைத்தலங் ளில்லான் கடைந்து பயோததியைப் புத்தமிழதந் தானளித்தல் போனமணிற்சீர் - வைத்த வரிச்சந் திரன்சரிதை யாய்ந்துணர்வொன் றில்லேன் றிரட்டிச் சொலுமிச் செயல். | 2 |
3 |
கற்றுணர்ந்த மேலோர் கருதார்க ளிந்நூலிற் குற்றமுள வேனுமிது கொள்வாரா - முற்றுலகி னெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு. | 3 |
4 |
திங்கள் வழியுதித்த பாண்டவர்தஞ் சீர்நாடு மங்கிழந்து சூதி லடவிநண்ணித் - தங்கவவட் காலற் கடந்ததவ வன்னிவரக கண்டவனைக் காலிறைஞ்சி நின்றார் கனிந்து. | 1 |
5 |
நின்றாருண் முன்னவனை நீத்தவன்வாழ்த் தாநோக்கிக் குன்றாதி வெந்துயராற் கோமானே - யன்றூழி னின்னினுந்துன் புறறா னிருபனரிச் சந்திரனென் றன்னவறகிக் காதைவிளவா னாய்ந்து. | 2 |
6 |
அம்போ ருகசதனத் தன்னம்போ லுப்பொழிய வரபோதி யார்ந்தெழிலி நல்கமிழ்தம் - பம்போடி வணசரயு வாயொழுக வான்பயிர்நீள கோசலமென் றொணசிறப்பி னோர்பொழிலிங் குண்டு. | 3 |
7 |
தானத் துயர்ந்ததன்ன தானத் தகைச்சுடர்க்குண் ஞானத் தனிச்சுடரா ஞாலத்தே - தீநித்த மாட்டிறசெய் வோர்செலவர் மன்னுமற வோரமரு நாட்டிற்குட் கோசலமா நாடு. | 4 |
8 |
ஓதலறி னொண்பொருளா னொல்கா விளைவதனாற் காதலுறு மா*லைத்தாயக் காய்பசிநோ - யீதிகளோ டேசலுறும் பலகுழுவின் றீர்புனலுங் கொண்டிலங்குங் கோசலமாங் கோட்டங் குறித்து, | 5 |
9 |
வேலை நிகர்கிடங்கும் வேண்டார்க் கணுகரிய கோல மிகுபொறியுங் கோட்டிமயம் - போலிடமு முன்னதமுந் திண்மையுமுற் றோங்குமதி லாற்பொலியு *சுன்ன ரயோத்தி நகர். | 1 |
10 |
நாந்தகவேல் வீரரோடு நற்றுரக நால்வாய்தேர் சோந்தணையத* தத*தந் திறையுய்ப்பான் - போந்த முடியணியும் பல்வேந்தர் மொய்குழாந் துன்னுங் கடிநகரக் கோபுரவாய்க் கண். | 2 |
11 |
ஆரணமுன் னூல்பயில்வோ ரார்ப்பும் விழாவியமுங் கூரணவும் வேல்விழியார் கூத்தொலியுங் - காரண் கடியமுர சோதையின்றிக் காரளநகர்ப் பாடில் கொடியமதிற் கோபுரமூ தூர், | 3 |
12 |
மலர்ந்தமுகத் தின்சொல் வழங்கி யெவர்க்குங் கலந்தவிருந் தேற்றயலான் காந்தை - நலம்வெறுத்துத் தீங்குபுரிந் தார்க்குநயஞ் செய்துநடு நின்றொழுகா ராங்கிலழுக் காற்றை யறுத்து. | 4 |
13 |
சந்த மலர்மணத்தாற் சார்ந்துமுரல் வண்டினத்துக் குந்துமர மெல்லாந்தே னூட்டுதலாற் - புந்திமிகு மந்நகரத் தார்வரையா தன்னியநாட் டாதுலர்க்குப் பொன்னளிப்பவ ரென்றுபுகழ் வென். | 5 |
14 |
வெற்புற்ற வார்நகில் வெண்டா மரையாளும் பொற்புற்ற செங்கமலப் பொன்னுமல்லாற்* - கற்பற்றுப் புல்லரையும் வீழ்ந்து புணருமவ ரெஞ்ஞான்று மில்*லொழுகு நல்லார்க்*கு ளில். | 6 |
15 |
எல்லார்க்கு மெண்ணு மெழுத்துமெனு மிவ்விரண்டா மெல்லாரு நோக்குமியற் கேள்வியெனச் - சொல்லாருங் காது மிருத்தலினாற் கண்ணில்லார் காதில்லா ரோத வொருவரங்குண் டோ. | 7 |
16 |
முப்புரிநூன் மார்பர் முதுமறையிற் செய்மகத்தி நப்புகையு மாளிகைக்க ணன்னமன்னார் - நெ*ய்ப்பயிலைம் பால்புலர்த்த விட்டவப்* பைம்புகையுங் கண்ணுற்று மால்பயத்தி னோடுநெடு* வான் | 8 |
17 |
தங்கவெள்ளிக் குன்றனைய தோற்றமுறு மாளிகையி னங்கணத்தி லாடுமகார் வீசியகேழ - பொங்குமணி வீதிதொறு மென்று மிளிர்தலினா லப்பதியை மீதிமையார் நோக்குவர் விண்ணோர், | 9 |
18 |
ஓதப் பரத்து ளுறையு மறுதொழிலோ ராதிச் சதுர்வருணத் தா*ரையணைஇ - நீதிபுரி வான்றவனவ் வங்கிசத்தான் வண்டார்த் திரிசங்கு வான்றவநன் கீன்ற மகன். | 10 |
19 |
கலவிப் பெரும்பரவைக் கங்குகண்டோன் சிர்சொரூபன் சொல்லைப் புரிந்து நிச*ஞ் சொல்லுவோ - னெல்லவர்க்குங் காட்சிக் கெளியன் சதனத்துப் பின்னிடையா மாட்சிக் கடற்படையான் மன். | 11 |
20 |
ஆறுநவை யில்லா னமர்ந்த குடிகளிடை யாரி*லொரு பங்குகொளவா னாண்மையுளான் தாயிகளைத் தண்டிப்பான் றாவா வறம்புரிவான் வேய்களைவிட் டாய்வான் விரைந்து. | 12 |
21 |
வாய்மைபகர் வாயான் மதியமைச்சர் கைப்புரையு நே*யமொடு கேட்கு நெடுஞ்செவியான் - மீயுலவுங் கந்தரநேர் கையான் கருமந் தரப்புயத்தா னந்திலரு ணாட்டத்தா னால். | 13 |
22 |
ஆர*மன்னர் கோமா னரிச்சந் திரனென்பான் சீர்மன்னு மன்னான் சிரத்துமுடி - யேர்மன்ன சோதிஉங்கண் மாமறையோர் சொல்லக் கவிவாண ரோதிடவ மங்கலத்தை யோர்ந்து. | 14 |
23 |
தொல்லமைச்சர் முன்னோர் தொழுது பணிகேட்ப மெல்லியலா ரொண்கவரி வீசவொளிர் - கல்லிழைத்த சிங்கா தனத்தே செழுங்கவிகைக் கீழிருந்தான் பொங்கா தவன்போற் பொலிந்து. | 15 |
24 |
அக்காலைப் பற்றிகந்த வந்தணரத் தரணியின்கட் பக்கா ருடனெழுந்து பூபாலன் - மிக்கார்தம் பாதமலர் சூடிப் பகராசி பெற்றவர்க்கொள் ளாதனமன் பிட்டிருத்தி யார்ந்து. | 1 |
25 |
ஐந்தவியா வற்பகலு மானந்தத் தேன்பருகுஞ் சந்த மறைமுனிவீர் சாற்றிடுமி - னந்தலுறு மெப்பொழிலிற் சென்றடைந்தீ ரெப்புனித நீர்குடைந்தீ ரெப்புதுமை கண்டீ ரியைந்து. | 2 |
26 |
என்றுரைப்பக் கேட்டறவோ ரே*மகிரி போல்வயனென் னன்றிருக்குங் கன்னோசி நாடதனிற் - றுன்றழுக்கீர் கண்டகியிற் புக்கரடிக் காணியநின் வாண்முகத்தை யண்டினமீங் கின்னுங்கே ளாங்கு. | 3 |
27 |
கன்னபுரி யென்னுங் கடிநகரை யாள்கின்ற மன்னன் மதிமருமான் சேரமதயன் - சென்னிநதி யாரிணங்க வைத்தா னருளவரத்தா லிந்துமதிப் பேரணங்கைத் தானெடுத்தான் பெற்று. | 4 |
28 |
தீம்பாற் கடலுண்ட செல்வன்ற னம்மான்வீழ் காம்பாருந் தோண்மடந்தை கற்பகனி - னாம்பயிர்ப்பு நாணமட நாற்குணனு நண்ணகத்தம் மாதெழிலிற் பூணகிலப் புண்டரிகப் பொன். | 5 |
29 |
காரிகைக்கு நீள்கருங்கட் கஞ்சமல ரானனத்துக் காரிகைக்குக் கல்யாணங் கண்டுகொடேன் - காரிகைக்கு மன்னளத்த னெம்மான் குறித்தமகற் கன்றியெனச் சொன்னதுண்டம் மானிசைநின் றோட்கு. | 6 |
30 |
என்றார் முறைதிறம்பா வேந்தலரிச் சந்திரன்மால் வென்றார் மொழிவளியான் வெங்காமத் - தன்றார லோங்கியுளந் தீக்கநிறை யோர்ப்பறிவோ டொண்பொறையு நீங்கியுட னின்றான் றளர்ந்து. | 7 |
31 |
பின்னரந்த மோகமெனப் பேசு*ழலை யுண்மையுணர் வென்னளிர்நீ ரானவியா வேந்தயிற்கை--மன்னவர்கோன் றிண்ணிலமீ தெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும். பண்ணவர்க டம்மைமுகம் பார்த்து. | 8 |
32 |
அல்லியனீள் கோதை யரவிந்தை யன்னாளை வல்லையடி யேற்கு மணம்புணர்க்க--நல்லகுணக் குன்றனையீர் நுங்கணருள் கூடினென்பா லின்னுயிர்தா னின்றுளதா மென்றா னெடுத்து. | 9 |
33 |
ஆவும் புலியுமடுத் தார்ந்து துறை யொன்றியங்கப் பூவலயந் தாங்கிறைவா பூவைதனை--நீவதுவை சூட்டயாஞ் செய்வதெவன் சூழ்ந்ததுதா னின்னதெனக் காட்டுவா யென்றிசைத்தார் காண். | 10 |
34 |
மானவிர்பொற் றேர்வேந்தன் வாய்புதைத்துக் கைம்மலரான் மோனநிலை மேயோர் முகநோக்கிப்--பானல்விழி மாதையடியேன் மணஞ்சூட்ட நீவிரரும் பாதைவன நீந்திப் படர்ந்து. | 11 |
35 |
கன்னிகையைப் பெற்றானைக் கண்டு மணமொழிந்து பின்னரவன் பேசுதிற மெல்லாங்கேட்--டென்னிடையே மீண்டு மெழுந்தருளல் வேண்டு மெனவினிமை பூண்டுரையாற் சொற்றான் புகழ்ந்து. | 12 |
36 |
சொற்றதுகேட் டைந்தவித்த தூயோர் கருணைபொங்க மற்றடந்தோண் மன்னா மறுவலும்யா--முற்றிடுவ மும்மணத்தைக் காண்பமெனி னோருறுதி வேறுண்டோ வம்மவெமக் கீதல்லா தாங்கு. | 13 |
37 |
என்றா ரெழுந்திருந்தா ரேந்தலரிச் சந்திரநின் குன்றா ரகலத்தக் கோதைநிற--மொன்றாக வென்றாசிகூறி யெழின்மண் டபமகன்று சென்றார் திருநகரி னின்று. | 14 |
38 |
மாதவர்கள் போயதற்பின் மாமண் டபந்தணந்து தாதவிழதார் வேந்தன் சயனவறைச் - சோதியணை யுற்றநங்கன் வாளி யுடல்குளிப்பக் காமமெனச் சொற்றகடல் வாய்விழுந்தான் சோர்ந்து. | 16 |
39 |
மாழாந்தா னுள்ளம் வருந்தினான் மெய்தளர்ந்தான் காழார்ந்த காமக் கடுங்கனலால் - வீழாவி சோர்ந்துசெய லற்றான் சுடர்மெழுகிற் றொக்குருகி யோரந்திவைநெஞ் சோடுரைத்தா னுற்று. | 16 |
40 |
பாயளக*கர் போலும் படையான பு*திய தன்றன் சேயரிக்கண் மஞ்ஞையன்னாள் சீயரொடு - மாயமா வணடியிவ ணெம்முளம்புக காருயிரை வௌவிக்கைக் கொண்டகன்றா ளோவறியேங் கூர்ந்து. | 17 |
41 |
தொட்ட கடலுலகம் யான்காவல் சூழ்ந்தவன்று தொட்டுக் கரவின்றித் தோய்ந்ததின்றோ - மட்டவிழதார்க் கூழைமட மானொன்றெம் மாவிகள்ளங் கொண் டதுதர* னேழைமையே மாண வெமக்கு. | 18 |
42 |
திங்கள்வழி வந்த திறற்சந் திரதயன்றன் பொங்குதவத் துறபவித்த பூங்கொடியே - யிங்கு வடுப்பிறக்குஞ் செய்கை மனமுவந்து வான்றோய் குடிப்பிறந்தார் செய்குவரோ கூறு. | 19 |
43 |
வல்லியிடைச் சென்ற மனமவட்கென் வாட்டத்தைச் சொல்லியிவண் யானாறத்துன்னிடுமோ - வல்லதிவ்வா றீந்திடுமோ வாதையெனக் கீதலுறும் வாதையது தாழ்ந்திடுமோ வேறிடுமோ தான். | 20 |
44 |
என்று கதழ்ந்துசுடு மேவா சுக**க்கணிமேற் சென்றிருளைக் கால்சீக்குஞ் செங்கதிர்முற் - றுன்றிவற்றிற் சாலவும்வெய் தாங்காமந் தான்கடவே மாழ்கிப்பூ யாவ னிருந்தனனிப் பால். | 21 |
45 |
மானிகர் கோமான் வதுவை சூட்ட மணமொழிவான் போனவருந் தாபதர்கள் பூகமலி-வான்பொழி லன்னமுறை பொய்கை யகன்றாறு கான்கடந்து கன்னபுரி மூதூரைக் கண்டு. | 22 |
46 |
ஏகியண்டர் போற்று மெழிற்கழற்கா லி*ந்துதயன் போகியின்மன் னோலக்கம் புக்கனர்க-ளோசை*யுடன் மன்ன னெழுந்திருந்து மாமுடிக்க ணவ்வுரவோர் பொன்னடிப்பூச் சூட்டிப் புரிந்து. | 22 |
47 |
வாழ்த்தியவன் னோர்க்கு மணிப்பீடம் வேறளித்துப் பூத்தவிசின் மீதமர்ந்து புண்ணியநீர்த்-தீர்த்தியாங் கண்டகிப்பா னீயிர் கசிவொடுநீ ராடிநுந்தாண் முண்டகப்பூச் சேர்ததென் முடிக்கு. | 24 |
48 |
போனீ ருடனே புகுந்தீர் புரிவெவன்கொ னானேயுணர நவிற்றுமென-வூனாரும் பற்றிரண்டு நீத்தவர்கள் பார்த்திவனைப் பார்த்தருளாற் கொற்றவயாங் கூறுகநீ கேள். | 25 |
49 |
சென்றிங் கயோத்திநகர் சேர்ந்தவட்செங் கோலோச்சி நின்றவரு ணெஞ்சனரிச் சந்திரற்கூ- ரொன்றுவள னின்னெறியு நின்றனயை வண்ணமும்யாம் பேசநின்பாற் றுன்னுவகை நின்றான் றுணிந்து. | 26 |
50 |
அறநெறியின் மிக்கோர்க் கருந்ததிபோற் கற்பின் செறிவுடைய மானினியைச் சேர்த்தன்- மறநெறியன் றாற்றுதவத் தோங்குநெறி யாதலினாற் போந்தனம்யாம் பாற்றினஞ்சேழ் வேலிறைநின் பால். | 27 |
51 |
காசினியெல் லாம்புகுந்து கண்டனம்பல் வேந்தர்தமைப் பாசிழையாள் பாகனல்க நீபயந்த-கேசரங்க ணன்றவிழ்தார் நங்கைக்கு நண்ப னவனலதில் லென்றருளிச் செய்தர ரெடுத்து. | 28 |
52 |
நசைந்துதுற வுற்றோர் நவின்றதனைக் கேளா விசைந்து மிசையானா யுள்ள-மசைந்தளியார் மொய்யலங்கன் மார்பன் முதல்வன் மொழிவகைக்குச் செய்வதென்னா மென்று திகைத்து. | 29 |
53 |
நீத்தாரைப் பார்த்தடிகே ணின்மலனா ரோதியதோ ரேத்தாருந் தேவ விராசியமுண*-டோர்த்தாரே யன்னதனை யாவரருங்கொழுநர் யானளித்த வன்னநடை யங்கனைக்கின் றால். | 30 |
54 |
*நண்டனயோத்தியர்கோ னெய்தி னறிந்திடலா மாண்டகையன் னானை யழைமினென்றா-னீண்*டுவகை விட்டபெரும் பாசத்தார் வேத்தவையி னீங்கிநகரக் கட்டகன்று போனார் கடிது. | 31 |
55 |
மங்கை சுயம்வரநா ளேழென்று மாநிலத்திற் கொங்கவிழ்தார் வேந்தர்க்குக் கூறுமென-வெங்களிற்று மன்னவர்கோன் றூதுவரை மாமுடங்க லோடுவிட்டா னன்னவர்போய்ச் சொற்றளித்தா ராங்கு. | 32 |
56 |
முத்திலகும் பிச்ச முடியரச ரெல்லோரு மெத்துவகை வேட்கையொடு வின்னுதலார்-புத்திமிகு மந்திரிக ணால்வகைய சேனை மருங்குறவே தந்தநகர் தேயந் தணந்து. | 33 |
57 |
முன்னாளிற் பொன்மாலை மூழ்கமரு மானழைப்பத் தொன்னார வேழ்கடலுந் துன்றியபோன்-மின்னாரற் காவலுறு மிப்பதியிற் காண்டகைய முன்றிலங்கா வாவியெலாம் வந்திறுத்தார் மன். | 34 |
58 |
போன முனிவரர்கள் புக்கா ரயோத்திநகர் கோனெழுந்தன் னோரைக் குலவ*ணையிற்-றானிருத்தி வாய்புதைத்து நீயிர் வலந்ததுவுங் கேட்டதுவுந் தாய்நிகர்த்தீர் சாற்றுமென்றான் றாழ்ந்து. | 35 |
59 |
வார்ந்தகரத் தண்ணா னினக்கே மணமுடிக்க நேர்ந்தவிடை மானை நிருபனுள -நேர்ந்தனனால் வல்லையவ ணீயும் வருகெம் முடனென்னாச் சொல்லினர்க டூயோர் தொகுத்து. | 36 |
60 |
ஆங்கது கேட் டோங்கு மநந்த குதுகலத்தான் வீங்கபுயக்கேயூரம் விண்டகல-வாங்கரும்பொற் குன்றினுநீள் கோயில் குரைகழற்காற் கோனகன்று முன்றின் முகத்தணைந்து நின்று. | 37 |
61 |
பூக்கமென வேழம் பொலிபழனக் கன்னோசி நோக்கியிவ்வூர் மன்னவர்க ணூல்வல்லோர்-நோக்கயிலார் மண்டனிக முன்னுகெனா வாய்மலர்ந்து சூதனைத்தேர் கொண்டணைக வென்றான் குறித்து. | 38 |
62 |
பாகனணி மான்கொடித்தேர் பண்ணிக் கொணர்ந்திரைஞ்ச மேகமென விம்மவளை வார்முரசஞ்-சாகரமாத் துண்டமுற வேலெறிந்த தோன்றனிகர் கோசலர்கோன் கொண்டதன்மே லூர்ந்தான் குறித்து. | 39 |
64 |
குற்றேவ லாற்றுபல கொற்றவர்த நீள்கொடிஞ்சிப் பொற்றேரும் பொன்னைப் புரையமைச்ச-ருற்றேறுந் தண்டிகையுங் காரிகையார் தாமிவரும் வாகனமு மண்டியிறை பானடைந்த மன். | 40 |
64 |
கந்தியுறழ் கண்டத் தருந்ததிதன் காந்தனுமொண் சந்திரனேர் யானமிசைத் தான்போத-விந்திரிய மாதங்கப் பாகர்ந* வாகனமேற் கொள்ளார்விண் மீதண்டிப் போனார் விரைந்து. | 41 |
65 |
கோட்டிமயம் போலுங் கொடிமணித்திண் டேருமந்தக் கோட்டமது*ங் கொண்டனிகர் யானையுமவ்-வீட்டமுகின் மேய்பரவை நேர்படையும் வேலையெழு வெண்டிரைநாண் பாய்பரியுஞ் சென்ற பரந்து. | 42 |
66 |
இன்னவகை யேகி யெழிற்சரயு யாறிகந்து கொன்னவில்வேற்கோமானுங் கோமதியென் - னன்னதியைச் சார்ந்தா னனீகமொடுஞ் சாயைநலந் துய்ப்பவனுஞ் சேர்ந்தான் குடகடலைச் சென்று. | 43 |
67 |
வண்டமர்தா ராடுநிற மன்னவன்றேர் விட்டிறங்க மண்டலிகர் மந்திரியர் வாட்கண்ணார் - கண்டநிலை யாவருந்தம் மூர்கி யிறங்கிநதி தீரத்தே மாவழுவை பூட்டா மரத்து. | 44 |
68 |
வானுண் மணன் ஞெமிரும் வண்டலிடை மாமணியிற் பானுண் படாத்திற் படங்கமைத்து - மேனிமிரும் பொன்முடிகள் வைத்துப் பொலிவார் பதாகைகட்டி மின்மணிக ணீளெழினி வீழ்த்து. | 45 |
69 |
ஆதவன்செம் பாந்தளஞ்சி யார்ந்ததென வேற்றியெங்குஞ் சோதிமணித் தீபந் துலங்கவிட்டு - வேதமுறை யந்திக் கடனனைத்து மாற்றி யயர்வுயிரா வந்தித் திருந்தனர்க ளாங்கு. | 46 |
70 |
வனப்புடையன் கொல்லோ மணவாள னென்னா வனத்தளகச் சந்த்ர மதிமுத் - தினத்தவிர்நீற் பாரகத்தைக் கீன்றெட்டிப் பார்த்தென்னத் தோன்றினன்மீ னாரிடத்திற் றண்கதிரோ னால். | 47 |
71 |
பானரலை பொங்கிப் பா*ந்தனைய வானிலவின் மானயன மாதரொடு காதலர்கள் - வானணையிற் றுஞ்சினர்கள் பூங்கழற்காற் றோன்ற றனிக்கிடந்து விஞ்சுவிர கத்துறக்கம் விட்டு. | 48 |
72 |
கன்னி யுரு வெளியிற் கண்டுவந்து நெஞ்சழிந்துந் துன்னிரவேர் டம்புலியைத் தூடித்து - மன்னினனாற் கண்டதனைக் கோழி கரைந்துரைப்பப் பொற்றேரிற் ச*ண்டனணைந் தான்விசும்பிற் சார்ந்து. | 49 |
73 |
வார்முரசஞ் சங்கதிர வைகையிற் செய்கடனைப் பார்முறைகோ டாதளிப்போன் பண்ணிநெடுந் - தேர்மிசைக்கொண் டெல்லோருந் தம்வையத் தேறிவர தானையொடு கல்லோத யாற்றைக் கடந்து. | 50 |
74 |
சந்தவரைச் சாரலிடைச் சார்ந்தமணப் பூம்பொழில்வாய் வந்திரதம் விட்டிழிந்தான் மற்றையருந் - தந்தமது வாகனத்தி னின்றிழிந்தார் வாரருவி வண்சுனையி லேகினர்நீ ராடி யினிது. | 51 |
75 |
கந்தமலர் குற்றுக் கஞல்வனமும் வார்புனமுந் தந்தமலி நீள்குகையுந் தண்பளிங்கி - னந்தறையுஞ் சென்றிரவி யுச்சிச் செறிபுதுமை யாவும்பார்த் தன்றிரவு வைகினர்க ளாங்கு. | 52 |
76 |
உற்ற புலரிதனி லொண்டளத்தோ டேறிரதம் வெற்றவயில் வேந்தரன்போய விண்ணினுறை - யற்றுமான் கோடுடனே தீந்து குவிந்திருப்பக் கானலற லோடுகடும் பாலையுற்றா னோர். | 53 |
77 |
அங்கணுய ராலயத்தே யாளிமணிப் பீடிகைமேல் வெங்கரியின் றோலுடுத்து விந்தைமகள் - பொங்கலகை பூத மிடர்*கினிகள் போற்றிப் பணிசெயமுக் காதிலைவே லேந்திக் கா*த்து. | 54 |
78 |
பாங்கி லரம்பையர்கள் பைங்கவரி வீசிநிற்ப வாங்கு திரையுடுத்த மண்ணவரு - மோங்குவணை வாழ்ந்திருக்கும் புங்கவரும் வந்துமுன்றில் வாய்த்துதித்தே தாழந்திறைஞ்ச வீற்றிருந்தா டான். | 55 |
79 |
அவ்வேலை யண்ண லரியனையான் றேரிழிந்து செவ்வேலை யேந்தியகைச் சேவகரு - மைவ்வீர மொத்தமத வாரணமு மூதையிற்செல் கோடரமும் வைத்துமணி வாயின் மருங்கு. | 56 |
80 |
நீடுவட மீன்றவனு நீத்தவருங் காவலருங் கூடிவர முன்றில குறுகிநிலத் - தூடிறைஞ்சி வாழ்த்தித் திருமளவில் வாயிலிறகல் லாகிநின்ற மாத்திகிரி விற்கணையை மற்று. | 57 |
81 |
பார்த்தனன்மா னந்தி பராயணனா மெய்ஞ்ஞானி பார்த்தருளப் பண்டுச்சி வன்னனெடும் - பார்த்தலத்தின் மாசற்று மன்னியபோன் மற்றவைதாம் பைங்கனகத் தேசுற்று நின்ற திகழ்ந்து. | 58 |
82 |
அங்கணது காணூஉ வரசனிறும் பூதெய்தி யிங்கணிவை யிங்ஙனுறற் கேதுவென்னென் - றங்குளத்தி லெண்ணா விருந்தா னிருண்டவடி வோடணைந்தா ளெண்ணீள் புயத்தா னினிது. | 59 |
83 |
செங்கை மலர்முகிழ்த்துச் சென்னிமிசை வைத்திறைமா தங்கி மலர்ப்பதத்திற் றாழ்ந்தன்னா - யிங்கணிவை முற்கலுரு வாகிப்பின் மொய்கனக மானதிற னெற்கருணீ யென்றா னினிது. | 60 |
84 |
மற்றதனைக்கேட்டருளி மாமகிட மர்த்தனிதான் கொற்றவனை நோக்கியது கூறுவல்கேள் - வெற்ற*துடி வேலிறைவ முன்பத்தி வேந்தனுயர் பொன்னிழைத்த கோலிவு*ளி விற்றேர் குறித்து. | 61 |
85 |
காசினிமேல் யாருங் கவராமே கல்லாகப் பேசியொரு சாபம் பிறங்*குமிவை - யேசிலெவர் பார்வையினாற் பண்டைப் பளகிலுரு வெய்துமவ ராரிவற்றிற் காமருக ரால். | 62 |
86 |
அன்னார் தமக்கே யளிந்தருள்வா யீண்டிவற்றை யன்னா யெனவைத் தகன்றனனீங் - கந்நாடொட் டிந்நெடுநாட் கல்லாய்நீ யின்றருளி னோக்கமுன்போன் ****னு* கொள்கென்றாண் மற்று. | 63 |
87 |
போற்றியவை கொண்டு புரவலன்பொற் றேரிவர்ந்து கூற்றமுறழ் கண்ணார் குலவமைச்ச - ரேற்றைநிகர் மண்டலிகர் மற்றெவரும் வையமிசைச் சூழ்வரமுன் றண்டுசெலத் தார்கவிகை சார்ந்து. | 64 |
88 |
விண்டா சினிகதலி மென்பழத்தின் சாறொழுகி மண்டாசி னெற்பணைசூழ வாவியிடை - வண்டாடு மின்னோசை கேட்டெகின மீரங்கமல மீதுறங்குங் கன்னோசி நாடணைந்து காண. | 65 |
89 |
ஆனதிணை பல்ல வகன்றாக நல்குபுனற் கானவியைச் சார்ந்திழிந்து தந்திமிசைத் - தானிவராத் தோய்ந்து நதியதனிற் றுன்றுவப்பின் யாவரொடு நீ*ந்தியெதிர்குலையை நேர்ந்து. | 66 |
90 |
ஆங்கணகன் றேகி யலைபணரி நேர்கி*டங்கி னோங்கியிரு ளோ*ட்டிரவி யொண்கதிர்த்தேர்-வாங்குதிரை மோதுகொடி வாய்ந்தவெயின் முற்றுகன்ன மாபுரியின் சோதிமணி வாய்துனைவிற் புக்கு. | 67 |
91 |
சோரணத்து நீழலமர் சோதிமணி வேதிகைமேற் பரணப்பொற் கும்பமொடு பொங்குசுட - ரே*ரிணங்கு ஞௌளவிகந் தேகியிப நின்றிழிந்து சந்த்ரதய வள்ளலவை யுற்றான் மகிழ்ந்து. | 68 |
92 |
வல்லையெழிஇக் கன்னபுரி மன்னன் மருங்கிருந்த வெல்லவாக ளோடு மெதிர்சென்று - சொல்லரிய வோகையுட னண்ணலரிச் சந்திரனை யொண்கரத்தா னாகமுறத் தான்கொண் டணைத்து. | 69 |
93 |
பின்னருடன் போந்த பெரியர்தமைத் தண்டனிட்டு நன்னரணை மீதிருத்தி நன்முகமன் - பன்னியணை மற்றெவரு மேவியபின் மன்னிமரு மான்வனப்பை யுற்றிமையான் பார்த்தா னுவந்து. | 70 |
94 |
பேணிமண மாங்கணைந்த பீடுறுதோட் காவலர்கள் யாணரம்பி னின்சொ லிடுகிடையார் - மாணமைச்சர் தாமுமரிச் சந்திரனைச் சற்றிமையார் பார்த்துரைத்தார் காமனிவ னென்றே கரைந்து. | 71 |
95 |
நாயகனாப் பொன்னிறத்து நம்பியிவன் றன்னை யொளிர் சாயகநாட் டத்துநங்கை தான்பெறுமே - லாயிழையை யாம்பெறுவா னாற்றுதவ மாதவமே யாகுமெனாத் தேம்பொதிதார்க் கோமான்சிந் தித்து. | 72 |
96 |
சேவுயர்த்தோன் சொற்படியே செல்விதனை யாமளித்து மேயுதிர்நீர் நாளை மிளிர்வதுவைக் - காவணத்தே யின்றுமது சார்புவயி னேகுமினென் றாங்கிசைத்தான் குன்றுறழ்தேர் மன்னர்க் குறித்து. | 73 |
97 |
அன்னதுகேட் டார மலங்குமதித் தண்கவிகை மன்னவர்போய்த் தத்தம் வழங்கிடத்துத் - துன்னினர்மற் றாளிநிகர் கோசலர்கோ னாங்ககன்று சின்றிபத்தின் மாளிகையைச் சார்ந்தான் மதித்து. | 74 |
98 |
நல்லா ளொருத்தி நரபதிய வைக்கணிகழ் வெல்லாந்தா னோக்கி யிறையுமவ - ணில்லாதே யோடியெழில் வாயிறணந் தொண்பணைத்தோ ளிந்துமதி கூடியநீள் கோயிலடைந் தாள். | 75 |
99 |
அடைந்தாள் வதனத்தை யாயிழையாள் கண்டு படர்ந்தாய்வல் லீண்டப் பரிசென் - மடந்தாய்சொல் லென்றாளம் மாதிறைஞ்சி யின்னிசைவான் மாங்குயிலை வென்றாய் விளம்புவல்கே ணீ. | 76 |
100 |
செந்திருவே நின்னைத் திருமணஞ்செய் வான்விரும்பி யந்தரமீ னென்ன வரசரிங்குன் - றந்தைசவை வந்திருந்தார் மற்றவருள் வான்சரயு நாட்டதிபன் சந்திரன்போல் வீற்றிருந்தான் சார்ந்து. | 77 |
101 |
அன்னான் றனாஅ தரிகண் முடியுரிஞ்சும் பொன்னார் கழல் புனைந்த பூஞ்சரணம் - பன்னாற்றி னீண்டுதிரள் சங்க நிலவஞ் செழுமுழந்தா டூண்டுகரிக் கைநாண் டொடை. | 78 |
102 |
சிங்கம் விழைமருங்கு றேசகன்ற தார்மருமந் துங்கநவக் கோளொடுநாள் சூழ்ந்துவருஞ் - செங்கனக மால்வரையை மானுமணி வாகுவுடன் யாவர்க்கு மால்வரையா தீயுமலர்க் கை. | 79 |
103 |
வண்*ணில மேய்ந்தகளம் வார்மகர குண்டல*க்கா தொண்கொடிறு நீண்டுயர்மூக்கோடுமின்சொற் - றண்ணமிழ்த மண்டர**த வாய்கருணை வார்தடங்கண் விற்புதல்வேர் கொண்டுபரந் தோங்கு குளம். | 80 |
104 |
பொங்களிதே னுண்டிமிரும் பொற்பதுமம் போலலர்ந்த துங்கமுகங் கண்டக்காற* சொர்க்கத்து - மங்கையர்தாம் பின்னுமொரு கோவை யணையப் பிறக்குளத்தான் முன்னுவரோ வென்றாண் முகந்து. | 81 |
105 |
வார்த்தையது கேட்டலுமே மங்கை கொடி மருங்கிற் சாத்துகலை யோடெழிற்கைச் சங்கமுந்தா - னீத்துலவா வாசைக் கடற்படிந்தா ளாதவனு மேற்றிரங்க வோசைக் கடற்படிந்தா னுற்று. | 82 |
106 |
ஒன்றுதிறல் வாணனுறை சோணிதமூ தூரெயில்போற் றுன்னியசெவ் வானைத் தொடர்மாலை - சென்றகல வேன்ற துணங்கறவன் றின்னலுறீஇ வாசகிதான் கான்ற கடுப்போற்பாய்ந் தன்று. | 83 |
107 |
சார்ந்தன*னாங் கம்புலியாந் தண்கவிகை மேல்வயங்க வார்ந்தகடன் மாமுர*ச மன்னியம்ப - வீர்ந்தண*லாக் கோற்கழையாம் வில்லுடன்மீன் கோட்டுகொடித்தென்றற்றேர் மேற்கொடுமெய் யற்றமதவேள். | 84 |
108 |
வேடன் விறற்கருப்பு வில்வணங்கித் தேன்பருகிப் பாடளிநா ணேற்றிப் பதுமமுத - னீடுகணை யேவமட மானாங்க வெய்ததாவி சோர்ந்துநனி பூவமளி மேற்புலம்பி வீழ்ந்து. | 85 |
109 |
சில*பளிநாண் விற்பூட்டித் தேமலர்க்கோ தூவிப் புலம்பறுவார் தம்மைப் பொருது - வலம்பெறூஉ மாரநினைத் தான்வயிறு வாய்த்தற்கென் னோற்றனளோ சீரியநின் றாய்மனத்திற் றேர்ந்து. | 86 |
110 |
தீவினைக்கோட் பட்டார்க்குச் செய்யமன மாதரவு மாவெனத்தீங் காற்றுகிற்பாள் போலுந்தண் - கோவினனே நின்னா சிகந்த நெடும*பி னுற்றவெனக் கின்னாங் கியற்றுதலா னீ. | 87 |
111 |
விந்தவியன் கிரியின் வீறடக்கித் தென்மலைவாழ் சிந்துமுனி மாடமெனச் செங்கரத்திற் - சிந்துநினைக் கொண்டுண்ட துண்மையெனிற் கூர்விழும மீண்டெனக்குக் கண்டின்று பொங்குவையோ காண். | 88 |
112 |
என்றுரையா நின்றா ளிகுவளையர்தாந் தென்மலயக் குன்றுயரா ரக்குறட்டைத் தண்பனிநீர் - துன்றவிட்டுத் தேய்த்து நரந்தாதி சேர்த்தவண்மேற் பூசியுக்கம் வாய்த்தமலர்க் கைவீச மன். | 89 |
113 |
நெய்சொரிய மூளு நெருப்பெனவெங் காமவனல் வெய்தெனமே லோங்குதலான் விற்றரள - கொ*ய்தடலை யாக விழியருவி பாய வணங்கனையாள் சோக மொடு கிடந்தாள் சோர்ந்து. | 90 |
114 |
அமணிருளி லாழ்ந்துசித னார்சுரத்தல் லா*பத் தமிழ்விரகர் கைவந்து தீர்த்தாங் - கமிழ்தனியாள் காமசுரத் தோடிருளைக் காய்வலெ*னா நற்றரணி யேமமணித் தேரணைந்தா னேய்ந்து. | 91 |
115 |
வாவிமரைத் தேனுகர்ந்து வண்டினங்கண் மொய்த் திரைந்த காவினெலாம் புட்கள் களித்திசைத்த - கோவிலெலாஞ் சங்கந்தழங்கினவே தார்வேந்தர் முன்றிலின்வாய்த் துங்கமுர சார்த்த துதைந்து. | 92 |
116 |
சொன்ன சுயம் வரத்திற் கேற்ற துகளறுநாண் முன்னலுமே முக்கனல்வேட் போருடனே - பொன்னவிழ்தார்க் குன்றுறழ்தோட் சந்த்ரதயன் றானிருந்தான் கோடித்த மன்றனெடும் பந்தர்க்கீழ் வந்து. | 93 |
117 |
நால்வகைய தானை நரபதிகள் பூங்கொம்பர் போல்வளையு நுண்மருங்குற் பூவையர்க - ணூல்வகையிற் றேர்ந்த மதியமைச்சர் செய்யமறை யோரெவருஞ் சேர்ந்தனர்கள் போந்து திரண்டு. | 94 |
118 |
பின்னரவண் வார்முரசம் பேர்வளையோ டார்ப்பமுகி லன்னகுழ லார்கவரி யாங்கிரட்ட - மின்னுகொடித் தேரணைந்து செம்மலரிச் சந்திரன்சேர்ந் தானிறங்கி யோருருளைத் தேரொளியோ னொத்து. | 95 |
119 |
வந்தவரெல் லோர்க்கு மதிதயனன் போடுபொன்னிற் த *ததவிசிட்டுத் தானிருத்தித் - தந்திடையீர் கொண்டணைதிர் கோல்வளைக்கைக் கோதையையென் றான்குழலாற் கொண்டலைவென் கண்டார்க் குறித்து. | 96 |
120 |
சென்றந்த மாதர் திகழ்மணிப்பூ ணான்மறைத்து மின்றந்த நேர்நுசுப்பு வீழிவாய்ப் - பொன்றன்னைப் பாற்கவரி துள்ளப் பரிபுரமேங் கப்பந்தர்க் காற்கொடுவந் தார்கள் கடிது. | 97 |
121 |
அன்னபொழு தாரமுத மன்னாளைக் காணுதற்கு மன்னர் மகிழ்ந்தெழுந்த வார்ப்புடனே - துன்னியத்தி னோதை துவன்றி யுகமுடிவிற் பொங்கியெழு மோதமுழக் கோடிருந்த தொத்து. | 98 |
122 |
ஆங்கிலச்சை யோடெருத்தங் கோட்டிநின்ற வர்ரமுதத் தீங்குதலைச் செவ்வாய்த் திருமகட்குப் - பாங்கியர்தா மன்னர் மரபும் வளநாடும் பேருமண்ணி யின்னணமோ துற்றா ரெடுத்து. | 99 |
123 |
வீயான தேவுணரா வேணியனோக் காந்தழலால் வீயாத வேளனைய மீளியிவன் - வீயாடும் வண்டாலத் தார்கண்ணி வார்ப் பொருநை நாடளிக்கும் வண்டாலத் தார்கண்ணி மன். | 100 |
124 |
காய்ந்துகளும் வேங்கைக் கதலிதனை முன்னுயர்த்துத் தேந்திகழார்த் தாரணிந்த செம்மலிவன் - சேந்த குமுதமுறழ் வாய்க்கிளியிற் கூறணங்கே பொன்னிக் குமுதமுறப் பாலிக்குங் கோ. | 101 |
125 |
அக்கார மென்கிளவி யல்லிமலர்ச் செந்திருவே *க்காரம் வேம்பினொடு நண்ணகலத் - திக்காளை மேகநக மாடகமா வீக்குகன்னி நாடேந்துங் கோகநக மாடகமார் கோ. | 102 |
126 |
பானற் கருநயனப் பர*வா யிவணுறையும் பானற் கதிர்த்தரளப் பைங்குடையோன் - பானற் குருத்தண் ணடையளிக்குங் கோக்கமுகி னோங்குங் குருத்தண் ணடையளிக்குங் கோ. | 103 |
127 |
மயிலையுறழ் வாணயன மாதரா யீண்டிவ் வெயிலையுமிழ் வேற்கரத்து வீரன் - கயிலையென வன்னித் திலத்தார் மகதவள நாட்டுரத்தே பன்னித் திலத்தார் பதி. | 104 |
128 |
சிந்துவள கத்துகண்டு சேல்கமுகின் காயுகுக்குஞ் சிந்துவள நாடோச்சுஞ் செங்கோல - னிந்துநுதற் சிந்தூர மஞ்சூருஞ் சேயிழையா யீங்கமருஞ் சிந்தூர மஞ்சூருஞ் சேய். | 105 |
129 |
தோகைபுரை சாயற் றுகிரதரக காரிகையே வாகைபுனை மாரனென மன்னுமிவன் - பூகமிசை யங்கவளக் கோட்டத்தி யன்னகுயின் கண்*படுக்கு மங்கவளக் கோட்டத் தரசு. | 106 |
130 |
கொய்வனசம் பங்கிபனை கோதைமட மானேகேண் மொய்வனசம் பத்தனிகர் மொய்ம்பனிவன் - செய்வனசத் தேஞ்சால நாட்டார்த் திருவினத்து முத்தீனும் பாஞ்சால நாட்டார் பதி. | 107 |
131 |
தேங்காவி யன்ன திருக்குடைய கோகிலமே பாங்காவில் வேலங்கைப் பற்றுமிவன் - பூங்காவிற் காலங்காந் தாரங் களிவண்டு பாடமயி லாலங்காந் தாரத் தரசு. | 108 |
132 |
கீட்டிசையிற் றோன்றுங் கிளரா யிரங்கரன்போற் சேட்டணையில் வீற்றிருக்குஞ் செல்வனிவன் - மாட்டினியல் வண்கலிங்க நாட்டுக்க வான்பிடி யே சொற்புலநீள் வண்கலிங்க நாட்டுக்க மன். | 109 |
133 |
காந்தாரம் பாடளிக்குக் கள்ளூட்டுங் கோதைநல்லாய் சாந்தார மார்பனிவன் றாம்வீழ்வார்த் - தீர்ந்தார்க்குக் கூற்றாம வந்திக்குக் குண்டலந்தை மீன்கமுகின் மேற்றாம வந்திக்கு வேந்து. | 110 |
134 |
ஓதிமங்குல் வீழ்மயிலே யொன்னலரை வேற்படையிற் காதிமங்கில சீர்படைத்த காளையிவ - னோசிமங்கண் மித்திரத்தா ரம்புயத்து வீத்துவன்று நீர்வயல்சூழ் மத்திரத்தா ரம்புயத்து மன். | 111 |
135 |
உட்களியின் வார் பிரச முண்டடர்ந்து மூவிருதாட் புட்களிமிர் பூந்தார்ப் புயத்தனிவன் - புட்கரிணி மாடமரு மச்சத்தார் வாள்விழியாய் வான்றவழு மாடமரு மச்சத்தார் மன். | 112 |
136 |
பூவிலிசை மாதமரும் பொற்புடைய நங்காய்கேள் கோவிலிசை மொய்மபிற குமரனிவன் - காவிலிசைப் பொங்கலிதங் காதளிக்கும் பூங்குயிலார் கேகயத்தே வெங்கலிதங் காதளிக்கும் வேந்து. | 113 |
137 |
மின்மருங்குற் காரளக விம்பவிதழ்ப் பூம்பாவாய் கன்மருங்கு லாமணித்தோட் காளையிவன் - றன்மருங்கு மாசலநாட் டார்மதிக்கு வானமிர்த மூற்றினனாங் கோசலநாட் டார்மதிக்குங் கோன். | 114 |
138 |
கோசலநாட் டார்மதிக்குங் கோனென்று கூறலுமே யாசையுட னன்னா னலாமுகத்தைக் - காசிழைகள் பூட்டுகள் நீட்டிப் பரிகுழலா ணோக்கினளான் மாட்டிணங்கி மார்புயத்தைத் தாழ்த்து. | 115 |
139 |
அண்ணலரிச் சந்திரனு மாவலொடு தன்னோக்கும் பொண்ணரசி வாண்முகத்தைப் பெட்புடனே - கண்ணுற்றான் மங்கலநாண மங்கையவள வண்பணில நேர்மிடற்றிற் றொங்கியிலங் கக்கண்டான் சூழ்ந்து. | 116 |
140 |
என்னேயிம மேதினிக்க ணிப்புதுமை யானவகை முன்னே மணம்பூண்ட மொழ்குழலாள் - பின்னேயோ ராடவனைச் சூட்டுங்கொ லாய்மலர்த்தா ரென்றுன்னிப் பாடவளைப் பெற்றோனைப் பார்த்து. | 117 |
141 |
கன்னபுரி மன்னவனே கல்யாண மானவொரு கன்னிதனை மீட்டுமணங் காண்குவரோ - வென்னையிவட் சின்னவர்போர் செய்தனைநீ யென்றா னயோத்தியர் தங் கன்னவிறோட் கோமான் கவன்று. | 118 |
142 |
அற்றதனைச் கேட்ட மதிதயன்றான் பேருவகை யுற்றனன்காட் டான்தனை யுள்ளடக்கிக் - கொற்றவர்காள் கோசலர்கோன் கூறியசொற் கோளாமோ மெய்யாமோ பேசு*கநீ ரென்றான் பிரித்து. | 119 |
143 |
அப்போ தரச ரயோத்திநகர் வேந்தனைப்பார்த் திப்போது கண்கூடாக் காட்டெமக்கே - யொப்போது கண்ணிகளத் தாலியெனாக் கையறைந்து மூக்கிறசேர்த் தண்ணலுரை பொய்யென்றா ராங்கு. | 120 |
144 |
மற்றடந்தோட் சந்த்ரதயன் மன்னவரை நோக்கியிந்த வெற்றவடி வேற்கரத்து வேந்தனியாம் - பெற்றகொடி மங்கலநாண் கண்டதுநீர் மற்றதுகா ணாததுவு மங்கருமோர் மந்தணமா மன். | 121 |
145 |
கங்கைபிறை வேணிபுனை கத்தன் வரந்தருநாண் மங்கையொடு தோன்றிட்ட மங்கலநா - ணங்கணினாற் கண்டவனே காரிகைக்குக் காதலனா மென்றமொழி யுண்டதாஅன் றின்னுமிங்கொன் றுண்டு. | 122 |
146 |
கேட்டிரது வேந்தீர் கிளக்குவல்யான் சிற்பரனார் நீட்டுவரத் துற்றநிலை நேருருவங் - காட்டியதிற் காண்பதன்றி நங்கைக்குங் கைக்கெய்தா யானெவருங் காண்கிலமா லென்றிசைத்தான் காண். | 123 |
147 |
அந்நிலையிற் சந்த்ரமதி யண்ணலரிச் சந்திரனை யுன்னியுளத் தொண்மாலை வானெறிந்தா - ளன்னதுபோய் வண்சரயு நாடன் வரைப்புயத்திற் றுன்னியதைந் தெண்கருவி யார்த்த வெழுந்து. | 124 |
148 |
வள்ளலரிச் சந்திரனா மார்த்தாண்டன் முற்பந்தர்க் குள்ளமர்ந்த மன்னர் குளிர்வதன - வொள்ளாம்பல் கூம்பினவே செல்விமுகக் கோகனகந் தாதைமுகத் தேம்பதுமம் விண்ட திகழ்ந்து. | 125 |
149 |
சோதிடர்கள் சூழ்ந்துரைத்த நாள்வாய் வசிட்டனைமுன் மாதவர்கள் வாழ்த்தெடுப்பப் பல்லியத்தி - னோதையெழ மாமன்றன் முற்றியபின் வல்லியொடு கோசலர்வேந் தேமஞ்ச ணம்மனைக்க ணேய்ந்து. | 126 |
150 |
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுளவென்னும் - பண்டைமொழி மெய்ப்பொருளைச் சோதித்தான் வீழ்ந்துபல நாட்கயற்கட் டுப்புறழ்வாய்த் தோகைமென்றோ டோய்ந்து. | 127 |
151 |
பொன்றுஞ்சு மார்பன் பொலங்கதிர்ப்பூண் மானொடுதன் மின்றுஞ்சு மாட வியனகர்க்குச் - சென்றெய்த வுன்னியதை மாமற் குணர்த்திவிடை கொண்டவனல் கின்னிபமுன் யெளதகமு மேற்று. | 128 |
152 |
ஐங்கவனக் கொய்யுளைமா னார்த்தமணிப் பொற்றேரிற் செங்கதிர்வேற் செம்மலெனச் செம்மாந்து - செங்கமலை யன்னா ளுடனிவர்ந்தங் காரப்பமுர சார்கலியின் மின்னார் குடைநிழற்ற மேல். | 129 |
153 |
அதிருடுக்கை நேர்மருங்கு லாயிழையா ரம்பொற் கதிருமிழுங் காற்கவரி வீசச் - சதுரங்க சேனைக் கடன்மிடைந்து செல்ல முனந்தயங்கப் பானற் பதாகை பறந்து. | 130 |
154 |
கும்பமுனி பின்னுதி*தோன் கோலமணித் தண்டிகையி னும்பரினி தேறியுற வொண்கயலோ - டம்பனுக்குங் கணமடவார் காய்களிற்றுக் காவலர்க ணூலமைச்ச ரண்மிவர வையத் தணைந்து. | 131 |
155 |
வார்பயிலு நீள்கிடங்கு வாய்ந்தொளிருங் கன்னபுரிக் கார்பயிலுங் காப்பின் கடையிகந்தங் - கேர்பயிலுஞ் செஞ்சரண வெண்டூவிச் சேவலெகின் பேடுதழீஇத் துஞ்சுமலர்ப் பண்ணையுற்றான் சூழ்ந்து. | 132 |
156 |
ஆதபத்தால் வெம்மை புறத்தே யடையினுமுட் சீதமறா நன்னீர்ச் செழுந்தடங்கண் - மாதவர்க ணெஞ்சை நிகர்ப்பனநீ நேரிழையாய் காணென்றான் மஞ்சை நிகர்த்தகர மன். | 133 |
157 |
இமிழுதமண் வான்வளிதீ யின்னுயிராய்ப் பற்றின் ற*மல னமர்வதுபோ லவிக் - கமலதள மீது நறுஞ்சலில் மேவித் திகழ்வதுகாண் காதயில்வேற் கண்ணாய் கடிது. | 134 |
158 |
கற்றாரைக் கற்றாரே காமுற்று நற்கழகத் துற்றாங்கு வெண்டூவி யோதிமங்க - ணற்றா மரைக்கயத்திற் சேர்ந்துறைவ வா*விழியிற் காண்டி விரைக்கதுப்பி னங்காய் விரைந்து. | 135 |
159 |
உற்றக்கா லொற்க முவர்த்தகலா தொட்டியுறும் பெற்றியர்போற் கொட்டியொடு பேராம்பல்-வற்றியநீள் பண்ணைக்கட் டுன்னுவநீ பாராய்செங் காந்தளங்கை விண்ணைப் பொருவிடையாய் வீழ்ந்து. | 136 |
160 |
சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை யாந்தனையுங் காக்கு மறிவினர்போற் - காய்ந்தெறியும் பள்ளர்க் கிருநிழலைப் பாலிக்கும் பாதவத்தைத் தெள்ளமுதச் சொல்லணங்கே தோ. | 137 |
161 |
நல்லார் பலரிடத்து நண்ணிநிலை பார்த்திருந்து கல்*லாக களிக்குமகன் போன்மலர்க - ளெல்லாம்போய்த் தேனுண் டளிகள் செருக்குவநீ காரிகைமை தானுண டொளிர்தடங்கண் சாத்து. | 138 |
162 |
இன்னாசெய் தார்க்கு மினியசெயுஞ் சான்றோரிற் றின்னார்வத் தாற்சற் சிறார்வீச - வன்னார்க்கும் பொங்கர் கனிசொரியும் பொற்பதனைப் பார்த்தருளாய் திங்கணுதற் செந்திருவே நீ. | 139 |
163 |
கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி வாளாதே போமாக்கண் மானம* - னீள்காக்கைக் கூட்டிற் குடம்பையுறக் கோகிலங்கள் சேணகல்வ பாட்டளிசூழ் பூங்குழலாய் பார். | 140 |
164 |
ஒப்புரவு தன்னைநயந் தூங்கியற்று நல்லவர்பாற் றுப்புறுநற் செல்வந் துவன்றியபோ - லப்படுவிற் சீதநறுந் தீர்த்தஞ் செறிந்திருத்தல் வள்ளையுறழ் காதளவு நீள்விழியாய் காண். | 141 |
165 |
ஒத்தவுர னுள்ளா ருறுந்துணையுங் காத்திருக்கும் வித்தகரி னேரிமடை மேற்குரணடந் - தத்துசிறு மீனேக விட்டுறுமீன் மேவளவுஞ் சோர்ந்தமர்வ மானேகண் சாத்தாய் மகிழ்ந்து. | 142 |
166 |
பெற்றார்க்கொன் றீகலான் பேரறஞ்செய் யானுடம்பைச் செற்றீட்டி வைத்திழக்குஞ் செல்வனைப்போ - னற்றாழை மேன்மாடு மேய்க்கியிறால் கொள்ளவளி விம்முவபார் பான்மானுஞ் சொல்லரி*ய பரிந்து. | 143 |
167 |
கொல்லையுழு வோர்படைக்குக் குற்றியினைச் சார்தருபுல் லொல்குதலின் றுற்றிருப்ப வல்லவரை - யல்லவர்சேர்ந் தொன்னலரை யுட்கா துறுவதுபோ லாமதுகாண் மின்னுருவ மாதே விழைந்து. | 144 |
168 |
நுண்ணறிவு மாந்தர்க்கு நூல்கற்ற வத்துணையே நண்ணுவது போற்களமர் நாற்றிறைப்ப - மண்ணகழ்ந்த கோணயெலா மூறுவபைங் கிள்ளைவிழை தீங்குதலை வாணுதலே நோக்காய் மகிழ்ந்து. | 145 |
169 |
தண்கதிரி னாற்புரக்குஞ் சந்திரனின் முன்னுருத்து வெகண்திரை வீழ்வதனத் தம்பிகையி - னன்கெழுந்து மங்கையிடத் தாரின் வயனிலவுஞ் சொற்பறம்பைக் கொங்கையுறு கோதாய் குறி. | 146 |
170 |
பாங்கிற் பழனவளம் பைந்தொடிக்குக் காட்டிமிளிர் ஞாங்கரமர் செங்கை நரபதிதா - னாங்ககன்று போகி யருஞ்சுரத்தைப் புல்லியவ ணாரணியைச் சோகமற வேத்தித் தொழுது. | 147 |
171 |
ஏகியவ ணின்று மிரும்பவத்தை யோப்பிடுமந் தாகினியொச் சேனையொடு சார்ந்தகனிற் - றோகையுட் னாணமொடு மூழ்கியரி யானைபுலி யார்வனம்வெற் போணமிவை யாவுமிகந் துற்று. | 148 |
172 |
தற்கியற்று நன்றிதனைத் தானறிந்து முல்லைநறும் பற்கிளரப் பற்பநகில் பொங்கவரிப் - பொற்கதிரை வானிற்கு நீட்டுமெழிற் கோசலமென் மாதுமுக மான வயோத்தி யணைந்து. | 149 |
173 |
வானுரிஞ்சு நொச்சி மணிவாயி லின்புறத்தே நூனிறத்து வேதியர்க ணூலமைச்சர்-தானைவெள்ள மூதறிஞர் மொய்த்தெதிர்ந்து மாமுகுலி னார்க்குமுர சோதையுடன் கொள்ளப் புகுந்து. | 150 |
174 |
தோரணத்து வீதிவயிற் றொண்டையுறழ் வாய்த்தோகை மாரரக்கு நீர்சூழ்த்*தி மண்கவிழ்ப்ப-வோரிகந்து பூசுரர்பொற் கும்பமெதி ரேந்திவரப் பொற்கோயி லாசறுநாட் புக்கா னமர்ந்து. | 151 |
175 |
அன்றினர்கண் மார்பமகிழ்ந் தாவி குடித்தொளிரும் வென்றிவடி வேற்கையரிச் சந்திரனுங் - கன்றணிகைப் பூவையுமோ வாகி*னிது புல்லியமர் போழ்துற்ற பாவைவயிற் கர்ப்பம் படர்ந்து. | 152 |
176 |
வேலனைய கண்குழிய மெய்ந்நரம்பு பைத்தொளிரப் போலனைய மென்றோட் பொலிவகல-வாலசடு வீங்கவிடை தோன்ற விர்ப்பமுக நங்கைநகிற் கோங்கின் முகங்கறுத்த கூர்ந்து. | 153 |
177 |
பன்னுமதி பத்தும் படர்ந்ததற்பின் சந்த்ரமதி நன்னரமர் நாளொடுகோ ளில்யோக - மின்னவைநன் குற்றதினத் தீன்றா ளுலகுவப்ப வோர்மகனைப் பொற்றரளஞ் சங்குயிர்ப்ப போல். | 154 |
178 |
பெற்றாண் மடவரலாண் பிள்ளையெனாச் சேடியர்வல் லுற்றார் கழற்பதந்தாழ்ந் தோதுதலும் - வற்றாத வோகை நெடும்புணரி யுட்டிளைத்தொன் னார்க்கடந்த வாகையரிச் சந்திரனா மன். | 155 |
179 |
சத்தியஞா னானந்தன் சார்தளியிற் றான்சிறப்பு மெத்தியவன் பானிகழ்த்தி வேதியருஞ் -ச த்தமுதற் றந்திரத்திற் றேர்ந்தவருந் தாம்வெறுப்ப வொண்ணிதியந் தந்திபரி பூண்டுகிலுந் தந்து. | 156 |
180 |
வெய்யசிறைச் சாலைநின்றும் வேந்தரைக்கால் யாப்பகற்றிக் கையசல மாநெடுந்தேர் காணிகொடுத் - துய்கவெனப் போக்கிக் கறைவிடுத்துப் பொக்கசத்தின் றாட்டிறந்தே யாக்கமிலார் கொள்கெனவிட் டார்ந்து. | 157 |
181 |
சுண்ணமொடு தூநெய் விழாவெடுப்ப நல்கிநகர்க் கண்ணமர்வோ ரெல்லாங் களிதூங்க - வண்ணமறை சாற்றுமர பாற்சேய்க்குச் சாதகமா திச்சடங்கை யாற்றி யகத்தா னமர்ந்து. | 158 |
182 |
விந்தமலை வீறடக்கு மெய்த்தவன்பின் னுற்பவித்த வந்தணன்முன் னோராசி யாங்குரைத்து - மைந்தனுக்குப் பேர்தேவ தரசனெனப் பேசமகிழ்ந் தேமகனைத் தார்மார் பெடுத்தணைத்துத் தான். | 159 |
183 |
எண்ணரிய வின்பமடைந் நேந்திழையாள் கைக்கொடுத்துத் தண்ணிலவு வீசுமணித் தாமம்பொன் - னண்ணரைஞாண் சுட்டி சதங்கை சுதற்கணிந்து மின்மணிப்பொற் றொட்டிலின்க ணேற்றிநன்னாட் சூழ்ந்து. | 160 |
184 |
மின்னுமதி யோர்நான்கிற் சந்தி மிதிப்பித்தங் கன்னமதி யாறி லமர்ந்தூட்டித் - தன்னொருசேய்க் காண்டதனிற் கேசவினை யாற்றி மகன்றவழ்ந்தே யீண்டுசிறு கைநீட்டி யீர்த்து. | 161 |
185 |
அளாவியகூ ழாரமிழ்தி னாயிழையோ டார்ந்து குலாவிவிளை யாடமகிழ் கூர்ந்தே - யெழாலெனப்பே சின்குதலை கேட்டின்ப மெய்திப் பயில்வித்து நன்கலைக ளையாண்டி னன்கு. | 162 |
186 |
ஆறாம் பருவத் தருமகற்கு முப்புரிநூல் வீறா ரணவிதியின் மேவியிட்டு - மாறா மகிழ்வுற்றான் சேயேழ வயதணைந்தா னந்தா ணிகழ்வுற்ற சொல்வா நிரந்து. | 163 |
187 |
அற்பகலுஞ் சாரா தவிர்கனக லோகத்தே பொற்பினம ராவதிப்பேர்ப் பூம்பதியிற் - சிற்பநன்னூல் வல்லமய னோர்ந்து வகுத்த சுதன்மையெனு மல்லலணி மண்டபத்தின் வாய். | 1 |
188 |
மின்னுமணி மேகலையார் மேவியிரு பாங்கரினு மன்னுமெழிற் சாந்தாற்றி வார்கவரி - பொன்னலர்க்கைக் கொண்டசைப்ப வெள்ளைக் குரூஉரித் திலக்குடைமேன் மண்டு நிழல்செய்ய மற்று. | 2 |
189 |
சூதரொடு மாகதர்கள் சூழ்ந்து விருதுகளை யோதநிதி யைந்தருவி னோடுமணி - யோதனமீ தேனுவிவை கட்கடையைத் தேர்ந்தியற்றக் கின்னரர்யா ழானுவமிழ் தார்த்தச் செவிக்கு. | 3 |
190 |
உருப்பசிமுன் னல்லா ரொளிர்மின் கொடிபோ னிருத்தமெதிர் செய்ய நெறியா - னுருத்திரர்கள் சாத்தியர்விண் ணோர்கந் தருவர்வகக் கன்சித்தர் நீத்தவரெல் லாம்பரவ நேர்ந்து. | 4 |
191 |
கோவைமருள் வாய்நெடுங்கார்க் கூந்தற் சசிமருங்கு மேவமணி மோலிசிர மீதிலங்கக் - கோவினுறை கொய்தபடை கையிற் குலவநறுங் கற்பகத்தின் மொய்துணர்த்தார் ஞான்றசைய மொய்ம்பு. | 5 |
192 |
சீற்றக் கடாக்களிற்றைச் சென்னிபிளந் துண்ணுமரி யேற்றி னெருத்தமுறு மாதனத்தே - வீற்றிருக்கு மாயிரநீள் கண்பூத்த வாகத்தா னோர்ஞான்று பாய வவைக்களத்தார்ப் பார்த்து. | 6 |
193 |
பூவுலகி லின்சொற் பொறைவாய்மை வெஃகாமை யீவளிசெங் கோன்மை யிழுக்கினடை - தீவினையை நாணலறி வாண்மைபுகழ் நற்கல்வி வீரமுளா ரேணமர்தோள் வேந்தர்க்குள் யார். | 7 |
194 |
என்று வினாயினனாங் கேனையர்வா ளாவிருப்பத் துன்று தவவசிட்டன் சொற்றவெலா - நன்றுடையன் றன்னே ரிலாதவரிச் சந்திரப்பேர் மன்னவர் கோ னென்னா விறுத்தா னினிது. | 8 |
195 |
அன்னதவன் கூறலுமே யன்றுமனக் கௌசிகன்றான் கொன்னும் வசிட்டாவிக் கோபதிமுன் - னெந்நலமும் புல்லானைப் பொய்யுரைக்கும் பூரியனைப் பாதகனை நல்லா னெனநவின்ற தென். | 9 |
196 |
என்றான் மறைவசிட்ட னீனமுறு செய்கைகுணந் துன்றாத தூயோனைச் சாலவிகழ்ந் - தின்றாடுங் கோசிகவாய் வெந்திலையே கோள்புகனீ வெந்திலையே யேசிறெய்வம் பொய்த்ததுன்பா லென்று. | 10 |
197 |
செப்பியவம் மாற்றஞ் செவிசுடலுங் கௌசிகன்றான் றப்பியம்புன் வாயே தவப்புழுக்கு - மெப்பொழுது மெய்கழறென் வாய்மனமும் வேவலகா ணென்றறைந்தான் வெய்தழல்போற் சேந்து விழி. | 11 |
198 |
குணமென்னுங் குன்றேறி நின்ற வசிட்டன் கணமல்கு காட்டி னடிக்கு - மணவி தழிச் செஞ்சடையன் போற்கண் டிசைகடொறுந் தீத்தெறிப்ப வெஞ்சினமுட் கொண்டெழுந்தான் வேர்த்து. | 12 |
199 |
தாங்கலனாய்க் கௌசிகனுந் தன்னுளத்திற் சீற்றமுருத் தோங்கவிழிக் கங்க முகுத்திட்டா - னாங்கவிரு பாலினுறு செங்கனலி பம்பிச் சுவாலித்து மேலெழுந்து போய் விறந்து. | 13 |
200 |
பொங்குதழல் போகிப் புனிதமறைப் புங்கவன்றான் றங்கு முலகதனைத் தாக்கலுமே - மங்குலிவர் வென்றிக குலிசத்தன் விண்ணொடுமண் ணென்படுமோ வென்று நடுங்கி யெழுந்து. | 14 |
201 |
அன்னமுனி வோர்சினத்தை யாற்றிநனி தேற்றியுள மென்னைசெயத் தக்க திழிதக்க - துன்னியுரை யாடுமின்வென் றாற்றோற்றா லந்தணிர்நீ ரென்றவரை நாடி யிசைத்தா னயந்து. | 15 |
202 |
சான்ற பராசரன்மூ தாதையரிச் சந்திரன்றான் மான்று மனம்பணைப்பின் மற்றிவனா - லேன்றதவம் விட்டுமண்டை யோடேந்தி மேவுவன்யான் றெற்கினெனாக் கட்டுரைத்தா னெஞ்சங் கனன்று. | 16 |
203 |
இன்னிசையாழ் மீட்டு மெழினா ரதமுனிவ னந்நிலையிற் காதி யளித்தமகன் - றன்னைமுகம் பார்த்து வசிட்டன் பகர்சபதங் கேட்டனைசூ ளோர்த்துளநீ யோதென்றா னுற்று. | 17 |
204 |
சத்திமுத லோர்ப் பயந்தோன் றானுறுவன் வென்றியெனின் மெய்த்தவத்திற் பாதி விழைந்தளிப்பன் - கத்தலனால் யானு மவன் போற் பெரும்பாடை யென்றிசைத்தான் வானிறைமுன் கௌசிகனு மற்று. | 18 |
205 |
சாலுமிஃ தேந்தலரிச் சந்திரன்பாற் சாற்றாமே யேலவிவ ணுற்றவெலா மேகியினி - நாலுசடைக் கோசிகநீ யன்னோன் குணஞ்செயலைச் சோதியெனப் பேசினனாற் பேர்யாழ் முனி. | 19 |
206 |
ஆங்கச் சபைகுலைய வைந்தவிந்த வந்தணர்க ணீங்கித் தமதிருக்கை நேர்ந்தனர்மேற் - றீங்கிழைப்ப வுன்மனத்தான் கௌசிகனு முற்றான் முனமமர்ந்த பொன் மலைநீள் சாரற் பொழில். | 20 |
207 |
பொன்மலைநீள் சாரற் பொழில்புகுந்த கௌசிகன்யாம் பொன்மலிநா டாளும் புருகூதன் - முன்மனமோங் கவ்வியத்தார் பேசுற்ற வம்மொழிமெய் யாக்கிடுமா றெவ்வகையென் றோர்ந்தா னிருந்து. | 1 |
208 |
இருந்தவிடத் தந்த விருடிதனைக் காண்*பா னருந்தவரெண் ணில்லா ரணைந்து - பொருந்துமன்பிற் சென்னி யவனடியைத் தீண்டமணில் வீழ்ந்தெழுந்து மன்னி மருங்கு மகிழ்ந்து. | 2 |
209 |
முக்குறும்பை வென்ற முதல்வாநீ விண்ணுலகம் புக்கபின்றை யாங்குப் புகுந்தவெலாந் - தொக்கவெமக் கொன்று *ன்பி னொன்றும் விடாமே யுரைத்தருளா யென்றவனை வேண்டினான் றே. | 3 |
210 |
சுத்தநெறி தேர்விச் சுவாமித் திரமுனிவன் முத்தநக ருற்றதொன்றும் விள்ளாதே - மெய்த்தவத்தீர் தேவரவைக் கட்பெரியோர் தேர்ந்தமகத் தோரருவேள் வாவலினீண் டாற்றவடைந் தேன். | 4 |
211 |
நீயிரெலா நெஞ்சுவந்து நேரிலரிச் சந்திரன்பாற் போயரிய வேள்விக் கியான்புகல்வ - தாயபொரு ணல்கும் வகைபொருத்தி நண்ணுதிரா லீண்டென்னாச் சொல்லினனோர் வஞ்சனையுட் சூழ்ந்து. | 5 |
212 |
நேர்ந்ததற்குப் பற்றிரண்டு நீத்தவர்க ளெல்லோரும் வார்ந்தவரைச் சைலம் வனநதியைச் - சார்ந்தகன்று பொன்னனையார் பந்தாடும் பூம்பொழில்சூழ் கோசலமா மன்னவையிற் புக்கார்கள் வந்து. | 6 |
213 |
வந்தமுனி வோரை வணங்கித் தவிசிருத்தித் தந்தமத யானையரிச் சந்திரன்றான் - பந்தமக லந்தணர்கா ளீண்ட னடைந்ததிறஞ் செப்புமெனாச் சிந்தைமகிழ்ந் தோதினன்முன் சென்று. | 7 |
214 |
கற்பகமு நாண்மலர்க்கைக் காவலகேள் வாசகமொன் றற்பினொடு கௌசிகனஃ தாடினனாற் - பொற்புறுநீ யீய வதுதுணிந்தா லின்னதெனச் சொல்வமென வாய்மலர்ந்தார் மாதவர்கண் மற்று. | 8 |
215 |
ஆருயிரே யானு மளிக்குவல்யா னெஞ்சுவந்து பேரறிவாஞ் செல்வம் பெரிதுடையீர் - நீரியம்பு மப்பொருளுண் டாமெனினல் சாதொழிவ னோவென்றான் றப்புரையாத் தாரிறைவன் றான். | 9 |
216 |
வானவர்க்கு மண்ணவர்க்கும் வாயாத வோர்வேள்வி தானியற்ற வெண்ணினம்யாஞ் சாற்றுமதற் - கானபொருள் வேண்டியுனை மேவினமால் விண்ணுறழ்கை வேந்தவென்றார் மாண்டதவத் தோர்வாய் மலர்ந்து. | 10 |
217 |
போதப் பெரிதே புகலும் பொருளெனினு மீத வெனக்கியல்பா மென்றிசைத்துக் - காதயில்வேற் றானையரிச் சந்திரன்றன் னேவலர்க்குச் சாற்றியிட்டா னீனமில்பொன் கொண்டணைதி ரென்று. | 11 |
218 |
இன்றிவ் விருநிதியம் வேண்டலம்யாம் யாகமியற் றன்றளிக்க வென்றறைந்தா ரந்தணர்க - ணன்றெனவே மன்னனிசைத் தானவனை வாழ்த்தித் தபோதனர்க ளந்நகரைத் தான் விட் டகன்று. | 12 |
219 |
வல்விரைந்து பஃறிணையும் வார்கடமு நீந்திவினை வெல்விசுவா மித்திரன்றான் மேவுடசம் - புல்லியவற் போற்றியரிச் சந்திரன் பொன் னல்கவிசைந் தானெனவே சாற்றினர்சென் றார்தமது சார்வு. | 13 |
220 |
தீயமனக் கௌசிகன்றான் றிங்கள்சில சென்றதற்பின் கூயகலப் புட்களதர்க் கட்குளமீன் - பாயநெடுங் காவலர்கண் ணீருறைப்பச் செந்நெற் கதிர்பனிப்பத் தாவிலயோத் திப்பதியைச் சார்ந்து. | 14 |
221 |
மந்தரவெற் பன்னகொலு மண்டபத்தி லெய்தவரிச் சந்திரன்சென் றம்முனியைத் தாளிறைஞ்சி - யந்தமணி யாதனத்தின் மீதிருத்தி யையாநீ வந்தநிப மோதுகென்றா னுள்ள முவந்து. | 15 |
222 |
சத்திமுத னூற்றுவரைத் தான்செகுத்த வெய்யமுனி மெய்த்தமறை வேள்விக் கியான்விடுத்த - வத்தவர்க்கு நீயிசைந்த வொண்பொருளை நீதியிற்பூ வாளுகிற்போ யீயெனக்கிங் கென்றியம்பினான். | 16 |
223 |
ஈகுவல்யா னின்னினியே யெத்துணைப்பொன் வேண்டுமது போகு நெடுஞ்சடிலப் புண்ணியனே -யோகையினீ வாய்மலரா யென்றிறைஞ்சி வாழ்த்தினன்வண் தேநறாப் பாய்மலர்த்தார் வேந்தர் பதி. | 17 |
224 |
யானைமிசை நின்றே யெறியுங் கவண்சிலைதான் போன வளவு பொருள்குவிப்பி - னீனமறு மாமகத்தை யாற்றிடலா மன்னவனே காணென்றான் றீமனத்துக் காதிமகன் றேர்ந்து. | 18 |
225 |
அவ்வகையே நல்குவன்யா னையா வெனமொழிந்து தெவ்வர்முடி தேய்த்துத் திகழ் கழலா - னிவ்வுழிநீர் வாரணத்தைத் தம்மினென வாதுவர்க ளோடிப்போ யோரிமைக்குட் கொண்டணைந்தா ரூங்கு. | 19 |
226 |
கண்டா னிபங்களித்தான் கௌசிகன்பின் பண்ணலைப்பார் தண்டா ரரியிசைந்த தேயமையு - மண்டோமஞ் செய்ஞ்ஞான்றீ நின்பாலென் செம்பொ னடைக்கலமா விஞ்ஞான்று வைத்தனன்கா ணென்று. | 20 |
227 |
செப்பித் தனாதிருக்கை சென்றோர் வியன்றருவின் கப்புநிழற் கண்ணமர்ந்து கண்ணினனா - லிப்புவிமே லூர்வனபுள் வெவ்விலங்கு முன்னெவையு மொல்லையிவட் சார்கவெனத் தன்னுளத்திற் றான். | 21 |
228 |
அக்கணத்தி லாகு வணில*கிமுன் னூர்வனவுங் குக்கில் கொடிகிளிபூழ் மஞ்ஞைமுதற் - பக்கிகளு மத்திபுலி யெண்கரியெய் யாமாமான் முன்விலங்கு மொய்த்திருடி முன்னணைந்து தாழ்ந்து. | 22 |
229 |
எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகு மெந்தாய்நீ துவ்வுமிரை கானிற் றுரீஇப்பசியாம் - வெவ்வடவை தீரப் புசித்துத் திரியுமெமை யின்றீண்டுச் சேரப் புரிந்தமையென் செப்பு. | 23 |
230 |
என்றலுமக் கௌசிகனீ ரேந்தலரிச் சந்திரனாட் டொன்றுமுயி ரோடுபயி ரோங்குபொழில் - சென்றினியே வேரினுட னேகளைந்து வெய்தெனவீங் கெல்லீரும் வாருமென வேவினான் மற்று. | 24 |
231 |
ஆங்க வவைதா மருந்தவனைத் தாள்வணங்கி நீங்கிவிரைந் திந்திரனார் நீலூர்தி - தூங்குமலர்ப் பொங்கரொடு பொற்கதிர்நீள் பூம்பணைசூழ் கோசலநா டெங்குமடர்ந் துற்றழித்த வே. | 25 |
232 |
அந்தவள நாட்டி லமர்ந்துறைவோ ரெல்லாருந் தந்திமுதற் கான்விலங்கு சார்ந்தியற்றும் - வெந்தொழிலைக் கண்டு மனமழுங்கிக் காவலயோத் திப்பதிபுக் கண்டியரிச் சந்திரன்முன் பார்த்து. | 26 |
233 |
தண்டனிட்டு நின்றெம்மைத் தாயிற் புகன்றளிப்போய் மண்டுமிடித்* தீயவிக்கு மாமுகிலே - யண்டலர்கள் கோளரியே நம்முடைய கோட்டத்தே மாவினத்திந் நாளணைந்த வோதுகங்கே ணன்கு. | 27 |
234 |
சிற்றுறவி யாகுவணில் செற்பதங்கம் பூழ்துரிஞ்சி னற்றுவர்வாய்க் கிள்ளைமயி னவ்விமரை - மற்றெறுழி தாழ்பனைக்கை யானைகவி தாசோகஞ் சோலையொடு பாழ்படுத்த பைங்கூழ் படர்ந்து. | 28 |
235 |
காவலிருந் தோரையெலாங் கங்குலிடைத் தேள்செய்யான் தீவிடநா கந்தீண்டிக் கொன்றனவாற் - றாவுபுலி யாளிபல்லங் கோணய்க ளானிரையோ டோட்டுநரை மூளையுண்ட வந்துபற்றி மொய்த்து. | 29 |
236 |
இந்நிலைக்க ணெம்மையெலா மீசாநீ காத்திலையேற கொன்னுணவே யாவேங் கொடுவிலங்கிற் - கென்னலுங்கேட் டஞ்சேன்மி னென்றியம்பி யத்தன்விளை யாட்டையுற நெஞ்சூடு கோமா னினைந்து. | 30 |
237 |
இல்லுமக்கீ ராண்டுக் கிறையென் றவர்தமக்கு நல்லதுகில் செம்பொன்*னி நல்கிநும்மூர்ச் - செல்லுமென்றா னன்னகுடி மக்க ளனைவருந்தம் மூரணைந்தார் மன்னன் மலர்த்தாள் பணிந்து. | 31 |
238 |
நாட்டவர்கள் போயபின்றை நள்ளலரூன் பாற்றினத்திற் கூட்டுமயில் வேலிறைவ னூர்க்கணின்று-காட்டுவிலங் கீண்டிப் புரிகொடுமைக் கென்செயலாங் கூறுமென்றான் மாண்ட மதியமைச்சர்ப் பார்த்து. | 1 |
239 |
ஆண்டளப்பா னன்ன வமாத்தியர்கை கூப்பினர்நின் றாண்டகைநீ யத்தமற வேடுவர்நா-யீண்டுகணத் தோடணைந்து வல்லை யுயிர்செகுத்தே மாவினத்தை நாடளிக்க வென்றார் நயந்து. | 2 |
240 |
அந்தமொழி கேளா வதிர்கழற்கான் மன்னவர்கோன் வெந்தறுகண் வில்வேடர் தம்மையெலாந்-தந்திடுமி னீங்கிமைக்கு முன்னீவி ரேகியெனா விண்டனனாற் பாங்கினின்ற தூதுவரைப் பார்த்து. | 3 |
241 |
தூதர் தொழுது சுடர்ப்பகையி னோடிப்போய்க் காதுழுவை தோலரிவாழ் கானெங்கு-மாதுதுரீஇக் குன்றவரைக் கண்டரையன் கூறியிட்ட கற்பனையை மன்ற வவர்க்கிசைத்தார் மன். | 4 |
242 |
அக்காலைச் செவ்வே ளமாநிலத்தெப் பாலினின்று மைக்கார் வடிவத்தர் வார்ந்திடுதந்-தக்காதா பீலிதிகழ் சூட்டினர்கள் பேரழல்கால் கண்ணர்கணி மாலை துயல்வருமார் பர். | 5 |
243 |
முழவுறழ்தோ ளேந்துமுளை மூரிச் சிலையா ரழலவிடம்பில் கம்பிடுமா வத்தர்-கெழுவிலுடை வாளர் மருங்கசைசெங் கச்சர்தொடு தோலணிந்த தாளர் கணக்கிறந்தார் தாம். | 6 |
244 |
போந்தின் கருக்கெயிற்றுப் போகு முகச்சருள்வாற் பாய்ந்துகுரைத் தேகடிக்கும் பாசியின-மோந்துவரத் தொண்டகத்தின் கூட்டந் துவைப்பக் கருங்கடல்போற் றண்டனிட்டு வேந்தனெதிர் சார்ந்து. | 7 |
245 |
நின்றெழுந்தை யாவெம்மை நீயழைத்த காரணமோ தென்று மறுவலுமண் ணில்விழுந்தா-ரன்றவர்கள் வத்திரஞ்சீர் மூவுலகும் வைத்த பிருதுமகன் புத்திரன்றோ னோக்கிப் புரிந்து. | 8 |
246 |
வாவன் முதற்ககமும் வாலெலிமுன் னூர்வனவும் வாவுமரி யாதிவன மாக்களுந்தாங்-காவினொடு பைங்கூழை நாடணைந்து பாழ்படுத்த லானவற்றை யிங்கேகி முன்னுகுமி னின்று. | 9 |
247 |
யாமு நுமக்குதவி யாக வருதுமெனா மாமணிப்பூ ணாடை வழங்கிநனி-யாமவர்க்கு நல்கிவிடை பின்னமைச்சர் நாடியனீ கத்தொடுநீர் செல்கவிரைந் தென்றியம்பித் தேர்ந்து. | 10 |
248 |
மண்டபத்தி னீங்கி மனைபுகுந்து மெய்க்கவசங் கொண்டுடுத்துச் சாமநிறக் கூறைமணி-மண்டுமுடி சூடியுடை வாள்வீக்கிச் சூலிதரு வில்லேந்தி யீடுறுமம் பாவமுது கிட்டு. | 10 |
249 |
பைங்களைத்தோள் வெண்டரளப் பற்கருங்கட் செந்துவர்வாய்ப் பொங்குசுடர்ப் பொன்வடிவப் பூவையொடு-சங்கலறக் கொய்யுளைமான் யாத்த குவடனைய பொற்கொடிநீள் வையமிசை வல்லை யிவர்ந்து. | 12 |
250 |
நாற்படைமுன் னண்ணவெழு பூழ்தி பதாகைநிரை காற்பெறுமுக் கத்துடனே வெண்கவிகை-மேற்பகலை மூடி யிருடோற்ற மொய்யரச ராரமுடி. நீடுமணி காட்ட நிலா. | 13 |
251 |
மஞ்சுறங்கு நீண்டமாட மாலை திகழ்மறுகி னெஞ்சனைய வூர்ந்து நெடுநகரத்-திஞ்சிமணி வாயில்* கடந்து மறவர்படைக் கார்க்கடலைப் போயணைந்தான் பானரலை போல். | 14 |
252 |
வேந்தர் பிரானையடி வீழ்ந்திறைஞ்சி வெங்கொலைஞர் போந்து பரந்தகணி பூம்பொழினீ-ரார்ந்ததட மெங்கும் வலைபிணித்து வாரொழுங்கி யேங்குபம்பை துங்க விரலை துடி. | 15 |
253 |
முழக்கிப் பிணிப்பகற்றி மொய்ஞ்ஞமலி யேவி யுழைக்குலமா மாக்கடமை யோரி-புழைக்கையிபங் கேழறகக் கெண்குகவி கேசரிமுன் வெவ்விலங்கு சூழவலைக்குண மேவத் துரந்து. | 16 |
254 |
எய்தெறிந்து குத்திச் செகுத்தனராங் கெண்ணிறந்த மொய்சிறைய புள்ளு முரண*விலங்கும்-பெய்கழற்கால் வேந்தர் கவணசிலையும் வெள்வேலுங் கொண்டிகு*தார் வீழ்ந்தபிண வெற்பெழுந்த விண. | 17 |
255 |
செயிரிற் றலைப்பிரியாக் காட்சிச் சிலவ ருயிரிற் றலைப்பிரிந்த வூனை -வயிற்*றெழுந்த வங்கி தணிய *ழற்பொசுக்கி நாய்க்கு மட்டுத் துங்கமடு நீர்பருகித் துய்த்து. | 18 |
256 |
வந்துமணி மௌலிபுனை மன்னவர்மன் முன்பிறைஞ்சி யெந்தையினி யெங்களுக்கே யென்னைவிதி-யிந்தவிடத் துற்றவிலங் குட்சில்ல வய்த்தகணை வேல்*பணைத்துச் செற்றுவலை சேணகன்ற வென்று. | 19 |
257 |
வினாயினர்கள் கேட்டிறைவன் வேடுவரை நோக்கி யெனாதுகருத் தின்றுவிலங் கெல்லாம்-விநாசமுறச் செய்தவைகள் சென்றதிசை தோறணுகிப் பின்னகரி யெய்துவதென் றேறியுய்த்தான் றேர். | 20 |
258 |
கோன்பதுமத் தாள்வணங்கிக் கோட்டுசிலைக் கைக்குறவர் கான்படர்ந்து காற்சுவடார்ப் பேபற்றி-மான்பறவைச் கூட்டமெலாங் கொன்று குறுங்காட்டைச் செங்கனலிக் கூட்டுனர்க ளொல்லை யுணவு. | 21 |
259 |
செந்தழற்குத் தப்பிச் சிலமிருகம் பாய்ந்தோடீ முந்துதமை யேய முனிவனெதிர்-வந்துவிழக் கண்டவனுட் பொங்கிக் கணக்கிலமா விட்டனமீண் டண்டினவைந் தாறென்கொ லென்று. | 22 |
260 |
எண்ணி யினைந்து தன்பா லெய்தியவவ் வெவ்விலங்கைக் கண்ணுற்றஞ் சாதிரெனக் கையமைத்து-நண்ணியவட் செய்ததுந்தார் வேந்*தனுமைச் செய்ததுநீர் செப்புமென வைதனைத்துஞ் சொற்ற வவை. | 23 |
261 |
அந்தமொழி கேட்டறவோ னங்கி விழித்துணைகள் சிந்த விழித்துச் சிரித்துசுகை-கந்தமுணர் நாசிமிசை வைத்தே சரயு நதியொழுகுங் கோசலமா மன்னைவெல்பாக் கு. | 24 |
262 |
உன்னி யகல்விசும்பி னுள்ளாரும் பாரகழ்ந்தோர் வன்னெடுங்கோட் டேந்தியமால வன்றியோ-மன்னுயிரைக் கொன்றுணும்வெங் கூற்றுமுரட் கோலவுருத் தாங்கியதோர் வென்றயிர்ப்பங் கெய்த வுளத்து. | 25 |
263 |
பொன்னுருவம் புட்பரா கத்தைப் புரைமிடறு மின்னுமணிக் கெவ்விழியும் பைம்முகமுந்-துன்னுபிறை நேரெயிறுந் துப்படியு நீல நிறக்குரமுஞ் சாரெறுழி தன்றவத்தாற் றந்து. | 26 |
264 |
நோக்கியதை நீசென்று நோன்கழற்கால் வீரரொடு தாக்கிச் சிலையெயினர் தம்முயிரைப்-போக்கித் திரிசங்கு பெற்றெடுத்த செல்வனைத்தான் கொண்டு விரைவிங்கு விட்டேகென் றான். | 27 |
265 |
அந்த விருடி யடிவணங்கி யக்களிறு வந்தெனச்சென் றாங்ககரையன் வற்*கினியோ-டுந்துகர விற்புளிஞர் தம்மையெலாம் வீட்டியது கூரெயிற்றாற் *பெயர்த்தோ டிற்றுக் கறை. | 28 |
266 |
தப்பியொரு வேடன் றராபதிதாள் சென்றிறைஞ்சிச் செப்பினனஞ் சேனையையெல் லாஞ்சிதைத்த-தொப்பிலா வெய்ய வராகமொன்று மேவியிவட் டேரினைநீ யைய திரித்தருள்க வென்று. | 29 |
267 |
சொற்ற வரைசெவியிற் றோய்தலுமே மன்னவர்கோன் செற்றமனத் தோங்கச் சிரித்தின்றீண்-டிற்றவர்தம் மாவியின்வன் மைத்தேநம் மாவியெனாக* கையெடுத்துத் தேவிதரு செம்பொற் சிலை. | 30 |
268 |
தங்கச் சயந்தனத்தைச் சாரதிவல் லூரப்போய்த் துங்கக் கரிபரியைத் தூளாக்கி-யங்கெதிர்த்தே சார்தருவெங் கேழற் றடநுதன்மே லுய்த்திட்டான். கூர்தருகோ லொன்று குறித்து. | 31 |
269 |
உய்த்தகணை யோசனையோர் பத்துக்கப் பாற்கொடுபோய் வைத்துடலும் பைங்கழைநீள் வான்கிரிமே-னெய்த்தவுட னின்றுதிரஞ் சோர நெடுங்கிருட்டி கௌசிகன்பாற் றுன்றவெழுந் தங்கோடிற் று. | 32 |
270 |
சிதறுண்டு போய படைஞரெலாஞ் சேர்ந்து பதமத்தாள் வந்து பரவ-வதிபன்றா னஞ்சாதி ரென்னாவங் கையமைத்துத் தேர்நடத்திச் செஞ்சோரி வார்களத்துட் சென்று. | 33 |
271 |
சேனையவட் பட்ட புதுமை தெரிசித்தே யேனமதைக் கொல்லவுளத் தெண்ணியது-போனதிசை காற்சுவடு பற்றிப்போய்க் கானம் பலபுகுந்து மேற்செறிய தூளி மிக. | 34 |
272 |
போந்தணைந்தான் கைவலமும் பொற்பிரச முண்டகமுங் சாந்திமிரு காவியொடு ஞானிகமு-மாந்துகிருஞ் செய்ய குமுதமுத்தோ டாமைவரால் சங்குறலாற் னு*றயுனிகர் தெண்ணீர்த் தடம். | 35 |
273 |
மண்டலத்திற் பாயிருளை வாரியுண்டு செங்கரத்தால் விண்டலத்தின் மேவருக்கன் வேந்தர்பிரா-னண்டிரதஞ் சென்றெழுந்து தன்மெய் செறிந்துகண் மண்ணவுற்றான் றுன்றுகுட முந்நர் துனைந்து. | 36 |
274 |
பின்றொடர்ந்த மந்திரிமார் பின்னிடையாத் தானைமன்னர் வென்றியரிச் சந்திரனு மேவூர்தி-நின்றிழிந்து பொய்கைநறுநீர்குடைந்துண் டாறிப்பூ ரித்திருந்தார் மைகுலவு பூம்பொதும்பர் வாய். | 37 |
275 |
சீதவனங் கொண்மார் சிலமுனிவ ராங்கணைந்தார் காதயில்வேற் றானையொடு காவலர்பார்த்-தோதினரீண் டாதவெவன் போந்தா யடலைசெயுஞ் சாபத்தாற் காதிமகன் கண்டக்கா லென்று. | 38 |
276 |
என்னவ் வடிகட்குச் சீற்றமடி யேனிடத்துக் கொன்னுமவற் கியான்குயின்ற குற்றமற்றுண்-டென்னி னவைதிருத்திப் பின்ன ரகல்கைகட னென்னாக் குவிகரத்தோ டாங்குரைத்தான் கோன். | 39 |
277 |
மன்னிசைத்த மாற்றமது மாதவத்தோர் கேட்டனர்கள் பின்னிகழ்வ காண்டியெனப் பேசினர்கண்-மன்னகன்றார் பின்பிரவு துன்னப் பிரியையொடு கூடாரத் தன்பினுற்றுக் கண்வளர்ந்தா னால். | 40 |
278 |
தாதவிழ்தார்ப் பார்த்திவர்கள் சார்ந்தறுவை யிற்றுயின்றார் பாதவத்தின் கீழ்த்துயின்ற பாய்பரிதேர்-லாதவன்பூங் காவிற் றொழுகியெழக் கங்குவறத் தோன்றினனீள் வாவி மரைமலர வந்து. | 41 |
279 |
சேனையொடு தேராசர் யாரு முணர்ந்தெழுந்தார் வானமளி வாய்க்களவி வள்ளலெழுந்-நானு*லவு மீனவிழி மெல்லியலாள் வேந்தனத்த மோர்ந்திறைவ வானதிற னிற்கெவனென் றாள். | 42 |
280 |
வானமிழ்த நாணுமொழி மானே நெருநலிரா வூனமுறு மோர்கனவு கண்டுணர்ந்தேன்- யானென் றிறையளித்துத் தூதரைநவேந் தேயினனூ லோரை யிறையினிட்டவட் டந்திடுதி ரென்று. | 43 |
281 |
இமைப்பினிலத்த தூதுவர்தா மேகி யழைப்ப வமைச்சரெலா மொல்*லை யணுகி-- யெமைக்*கடிகீண் டைய வழைத்தபரி சென்னருளக வென்ற நாயன் செய்யகழல் போற்றிநின்றார் சேர்ந்து. | 44 |
282 |
அந்தநிலை மற்றவர்ப்பார்த் தண்ண லெனை பயந்த தந்தைதனு வோடுவணை சார்ந்தவணின்--*ந்து*டு தாரகைலோ கத்தே தவிர்ந்தபின்னா னைந்தும்-- வானரமுயங் காவிருந்தே னால். | 45 |
283 |
யானே யருந்தவத் தோற் கீந்தனனோர் பேதையைப் போய்த் தானே யொருத்தியவற் சார்ந்தனளுண்*-டானறறோர் மாதகன்றாள் கண்ணிழந்தாண மற்றொருத்தி நின்றனளோர் கோதை யுறுதி கொடுத்து. | 46 |
284 |
இன்னணம்யா னென்ன லிராக்கனவி னேன்கண்டீ ரென்ன வினிவிளையு மோவறியேன்--கொன்னுமிந்தச் சொப்பனத்தாற் சார்திறனைச் சூழ்ந்துளத்து நீயிரெலா மிப்பொழுதிங் கேயுரைக்கென் றான். | 47 |
285 |
ஐவகையங் கத்துடனே யாள்வினைவன் கண்குடிகாப் பையமறக் கற்றறித லாங்குடையோன்--றுய்யமனச் சத்தியகீர்த் திப்பெயரோன் றான்பிருது பௌத்திரனைக் வைத்தவங்கூப் பித்தொழுது கண்டு. | 48 |
286 |
இந்த வினையெல்லா மெழுந்தவிறற் கௌசிகனா வந்தமுனி யாவணையு மேலந்த--மந்திறிரு நாடு நகரிழந்து நங்கைமகன் வெவ்வேறா வாடவனைப் பின்வேறும் யாம். | 49 |
287 |
என்றறைய மன்னா வெனைமகனை யிந்நாட்டை வென்றியிழந் தாலும் விதித்தமுறை-யொன்று மிழவற்க வென்னா விசைத்தா ளிறைவன் கழலரிவை தாழ்ந்து கசிந்து. | 42 |
288 |
கேட்டமைச்ச ரெல்லோருங் கேழ்கிளர்கண் ணீரருவி காட்டக் கலுழ்ந்தனர்கள் கண்டொழிமின்-வாட்டுதுய ரென்றவரைத் தேற்றியினி தேந்தலிருந் தானப்பாற் றுன்றியவை சொல்வாந் தொகுத்து. | 41 |
289 |
குடிதழீஇக் கோலோச்சுங் கோசலநாட் டண்ணல் விடுபகழி மெய்யதா வோடித் -துடிதுடித்துக் கோசிகன்முற் றான்பட்ட பாடனைத்துங் கூறியதால் வீசெயிற்றுக் கோலம் விழுந்து. | 1 |
290 |
நாட்டஞ் சிவந்துறுவ னாசிவிட்ட மூச்சினளிக் கூட்டுமலர்க் கூந்த லுருப்பசியுங்-கோட்டமுறும் பொற்பினிரு சண்டாளப் பூவையர்க டோன்றியவன் பற்பவடி நின்றார் பணிந்து. | 2 |
291 |
கண்டழைத்துக் காதிசுத னெண்ணெண் கலைகளையப் பெண்டிருக்குப் பெட்பிற் புகட்டினனாங்-கண்டியவற் றாழ்ந்தறவோர் கொற்றத் தரிச்சந் திரன்றளத்தோ டாழ்ந்ததடத் துற்றனனென் றார். | 3 |
292 |
எண்ணியதன் னெண்ணமெலா மீடேறு மென்றேம்ப னண்ணிமுனி நங்கையர்பார்த் தின்னேபோய்ப்-பண்ணியல்லாழ் வாசித்துக் கோமான் மதிக்*குடையல் லாற்கலவி நேசித்துக் கொண்டுறுக நீர். | 4 |
293 |
என்றுவிடை நல்கலுமே யேந்திழையார் மற்றவனை நன்றிறைஞ்சி யேகி நறுங்கமலந்-துன்றிலஞ்சி மாட்டுறையுஞ் சோதி மணிமகுடக் கொற்றவனைத் தாட்டுணை முற் றாழ்ந்துநின்று தான். | 5 |
294 |
மன்னா நினதெழிலை வண்மைதனைப் பார்த்தியம்பப் பன்னாக்கணாங்கள் படைத்திலமா-லென்னா வியந்துரைத்தார் கேட்டிறைவன் மின்னனையீர் நீர்யார் நயந்தடுத்த தென்னவில்கென் றான். | 6 |
295 |
கன்னலனுக்கு மி*ன்சொற் காரிகையார் காவலனே மின்னெழிலி தூங்கிவ் விபினத்து-மன்னுறும்யா நீசப் புலைச்சியர்க ணின்கழலைக் கண்டிறைஞ்ச வாசைப் படீஇயடைந்தே மால். | 7 |
296 |
புல்லறிவி னாயேங்கள் போற்றிசையாழ் கீதமொடு வல்லம் வறிதின்று கேட்கவெனாச்-சொல்லியெடுத் தியாழ்மா டகமுறுக்கித் தந்தியினி தேதடவிக் கேழோ வியத்திற் கிளர்ந்து. | 8 |
297 |
நாரதனுங் கின்னர*ரு நாணமுறப் பட்டமரம் பாரதனிற் பல்லவங்கள் காட்டா*வை-சீரவிருந் தேழிசையும் பாடினர்க ளிந்துமதி யோடுதிரு வாழகலத் தண்ணன் மகிழ்ந்து. | 9 |
298 |
நுண்மருங்கு வார்வதன நோக்கிமலர்க் கையள*மத்தே யொண்மணிப்பூண் பீதாம் பரமுதவிக்-கொண்மெனலு மின்னவையாங் கொள்ளியரீண் டெண்ணியடைந் தேமல்லே முன்னியவை கேட்க வுவந்து. | 10 |
299 |
இல்லையெனா தெண்ணியதொன் றேற்போர்க் களிக்குமன்னா சொல்லுமிவை நின்னருளாற் றுன்னியளே-மல்லிலெழுந் திங்கணிகர் நின்றன் செழுங்கவிகை யீந்தருளா யெங்களுக்கின் றென்றா ரெடுத்து. | 11 |
300 |
தொன்றுதொட்டு வந்த துலங்கு மணிக்குடையை யின்றுமக்கி யான்வழங்க மாட்டேனீ-தன்றிவே றொன்றினைநீர் வேண்டி னுதவுவன்மன் னென்றுரைத்தான் குன்றினைநே ரம்புயத்துக் கோன். | 12 |
301 |
கேட்டதனைப் பச்சையிளங் கிள்ளைமொழி யாரிறைவ மாட்டாய் மணிக்கவிகை நல்கவெனிற்-கேட்டுணையைப் புல்லியெமக் கின்பம் புரந்தருள்க வென்றலுமெய்ச் சொல்லமைச்சன்றோகையர்ப்பார்த்து. | 13 |
302 |
கொடுப்ப சொடுப்பர் கொடாத சொடாஅர் விடுப்ப விடுப்பர் விடாத-விடுக்கிலராற் சொல்லத் தகுவனநீர் சொல்லி யடுப்பகொள்க வல்லதுசெல கென்றறைந்தா னாங்கு. | 14 |
303 |
வள்ளலென யாமடைந்தேம் வந்திரப்போர்க் கொன்றீயாக் கள்ளனெனக் கண்டால் வருகலமென்-றள்ளிலைவேற் கண்ணார் புகன்றார் கதமடைந்து தள்ளுமென்றான் மண்ணாளும் வேந்தன் மனத்து. | 15 |
304 |
கேகயமன் னார்தம்மைக் கிங்கரர்கள் வானுறலுக் தேக நடுங்கியவர் செங்கையின்யாழ்-போகவிட்டு நண்ணரிய காட்டோடி நன்குதிர முட்கீறும் புண்ணொழுக நெஞ்சழிந்து போந்து. | 16 |
305 |
விட்டவிறற் கௌசிகன்முன் வீழ்ந்தலறி யாங்குத்தாம் பட்டவிட ரெல்லாம் பகர்ந்தனர்கேட்-டட்டபுல வாழ்க்கையன்வெங் கோப மனத்தெழக்கட் டீத்தெறிப்ப மீக்குலவேற் றிற்சிரித்து வேர்த்து. | 17 |
306 |
வேகத் துடனெழுந்து மெய்த்தவத்தோர் சூழ்ந்துவரப் பூகத்தின் வாளையுகள் பொய்கையின்மாட்-டேகினன்ச*ண் டாங்கிறைவன் சென்றெதிரி வந்தனவென் கோபமெனாத் தாங்கினன்கம் மேலவன்பூந் தாள். | 18 |
307 |
மாக்களை முன் கொன்றாய் வராகத்திற் கூறுசெய்தாய் பூக்குழலென் காதற் புதல்வியர்தம்-வாக்கிலெழும் பாட்டைப் பழித்தாய் படுபாவி நீயென்றான் கேட்டைக் குறித்தமுனி கேட்டு. | 19 |
308 |
நாடுநகர் பூம்பொழிலை நாசப் படுத்திடினு மீடுடைய நீவிடுத்தா யென்றறிந்தா-னீடு*கணை தூய்விலங்கை வீட்டுவனோ தொல்வினையேன் செய்பிழையைத் தாயைநிகர்த் தாய்பொறுக்கென் றான். | 20 |
309 |
வேந்தனுரை காதிலுற விச்சுவா மித்திரன்றான் சேந்துவிழி நோக்கித் தெரிவையர்பாப்-போந்திசைத்தா லன்னாரை நீயடித்தே யாங்கோட்டு காரணமற் றென்னாடென் றானே யிடித்து. | 21 |
310 |
தக்கபடி பேசாத தன்மையினா லிந்நின்ற விக்குமொழி யேந்திமையார்த் தள்ளுவித்தேன் - புக்கதிஃ தன்றியுநின் மக்களிவ ரென்ப தறிந்திலன்யா னின்றிதனை நீசமிக்க வென்று. | 22 |
311 |
ஓதி மலர்ப்பதத்தை யொண்முடிசேர்த் தானிருபன் கோத மகலாத கோசிகனென் - கோதையரை நீவதுவை செய்க*க்கா னின்பிழையை யான்பொறுப்பேன் காவலனே காணென்றா னால். | 23 |
312 |
வேத முடிவுணர்ந்தோய் வேந்தர் புலைக்குலத்து மாதர்தமை வேட்டன் மரபோவென் - றோதினன்மன் சாவத்தாற் சண்டாள னானவன் சேய் நீயிவரை மேவத தகுமென்றான விண்டு. | 24 |
313 |
அன்றுமல ரோன்மதலை யாடுகொடுஞ் சாபத்தாற் றுன்றுபுலை தீர்த்திட்ட தூயோனே - யின்றெனைநீ சண்டாள னாக்கத் தனிமனத்து முன்னியதென் விண்டே விளம்பென்றான் வேந்து. | 25 |
314 |
முன்னுனது தாதை முழுப்புலையை நீக்கினனா வின்னுமது செய்த வெனக்*கரிதன் - றென்னுரைகேட் டேந்தலே யானின்ற வேழையரைச் சேர்கென்றான் வாய்ந்தவிற்ற காதி மகன். | 26 |
315 |
அம்மொழியு மன்னன் மறுத்திடலு மவ்விருடி வெம்மையழ லென்ன விழிவைந்தே - யிம்மணிடை வெட்டிமைசெய் பஞ்சமற்கு வேதந்தொழும் பாதியென விட்டனன்வெஞ் சாப மெடுத்து. | 27 |
316 |
அன்னையன்னா யென்னை யறச்சி றிடின்வெருவ லென்னாநவில வாரா ரிருநிலத்தே - யென்னகரு நாடுநிதி வேண்டிடினு நல்குவனிப் பெண்டிரையான் கூடலனென் றான்கோன் குனிந்து. | 28 |
317 |
சொன்னமொழி தப்பாமற் றோன்ற லினியெனக்கு நன்னரவை நீர்வார்த்து நல்கிடுவா - யென்னமுனி சொற்றிடலுங் கேட்டுச் சுடர்கழற்கான மன்னவர்கோன் மற்றவகை செய்தான் மகிழ்ந்து. | 29 |
318 |
இவ்வுலகை யானாள யேந்தனின தாழிமுடி தெவ்வ*வாள கேயூரஞ் செய்யகழ - னவ்விவிழி மாதணியு மைந்தன் மணிப்பணியுந் தரவென்றான் மாதவன்வள் ளல்வதனம் பார்த்து. | 30 |
319 |
அன்னவகை யெல்லா மளித்துநின்ற கோமானைப் பின்னருமக் காதிசுதன் பேசினன்கண் - டின்னவைமன் வீடுபெறத் தந்தனைநீ மெல்லியல்சேய் சாத்துவிலை நீடுடையை நீட்டியக லென்று. | 31 |
320 |
ஆரையினிப் போயிரப்போ மாடையளித் தாலெனக்கோன் கூரஞர்கொண் டானுணர்ந்து கோசிகன்றன் - சீரையினை மூவகையாக கீழ்ந்திட்டா னேற்றன் முனியாது *தா விற்கு சங்குமகன் றாழ்ந்து. | 32 |
321 |
தானுந் தனிகமனுத் தையலுஞ்செங் கற்றுணியை மானங் கெடாமை மகிழ்ந்துடுத்தார் - வானுமண்ணும் போற்றுமிறை பிற்கழித்த பொற்கலையைக் கொண்டுவைத்தா னாற்றலற வோன்முன் பணைந்து. | 33 |
322 |
மெய்த்தவனே நல்காய் விடையெனக்கென் றானிருபன் குத்திரமார் நெஞ்சத்துக் கோசிகன்கேட்-டித்தினத்தே யானறிஞர் வந்திரப்ப விட்டிக்கு நேர்ந்தபொரு ணீநல்கி நீங்கென்றா னால். | 34 |
323 |
எப்பொருளு நாடுநக ரெய்ந்தாய் நினக்களித்தே னிப்பொழுதென் பால்யாது மில்லைமொழி - தப்புலன்யா னன்றிரங்கி நீயவதி நல்கியெனக் காள்விட்டான் மன்றபொரு ளீவலென்றான் மன். | 35 |
324 |
சொற்றிறம்பு வாயாயிற் சூளுறவே தென்றிறையை நற்றவத்தோன் கேட்டா னரேந்திரன்யான் - சொற்றவறி னன்னியன்ற னாயிழையை யாதரித்தன் னான்கடைவாய் மன்னுமவ னாவனென்றான் மன். | 36 |
325 |
நாற்பதின்மே லெட்டியைந்த நாலையிலென் னாள்கரத்தின் பாற்பொழிவாய் பொன்னெலாம் பார்த்திவனே-மேற்புகன்ற காலத்து ணல்காயேற் காசுனக்காங் காணென்றான் கோலச் சடைமுனிவர் கோன். | 37 |
326 |
வணங்கிவிடை பெற்றகலு மன்னவனைக் கூய்நீ யிணங்கியெனக் கீந்தபொரு ளெல்லாங் - குணஞ்சிறந்தோ யென்னுடனே வந்துபதி யேகொப்புந் தந்தென்றான் மன்னுதவக் கௌசிகனா மன். | 38 |
327 |
அவ்வண்ணம் யான்புரிவ லந்தணநீ போதுகெனாச் செவ்வண்ண நெஞ்சிறைவன் செப்பிளனாற் - தெவ்வண்ண லொ*ண்ணாப் புரிசைநக ரொப்பனைசெய் தாரவண்முன் னண்ணாச் சிலமுனிவர் நன்கு. | 39 |
328 |
காவலனுங் காதலனுங் காரிகையுங் கானடந்து மேவமத மாவிவுளி மேலேறித் - தாவதர்பின் போதமுனஞ் சேனைசெலப் பொன்னிரத மீதிவர்ந்து மாதவனவ் வாவி யகன்று. | 40 |
329 |
மாநகரில் வாழுநர்தம் மன்னையெதிர் கொள்ளவுற்றுத் தேனகுதா ரோதித் திருவொடுசேய் - மானவனுந் தேர்மிசைவா ராமே திருவடிகள் சேப்பவரல் கார்விழியாற் கண்டுகுப்ப நீர். | 41 |
330 |
வல்லை யயோத்தி வளநகரி யின்புறத்துப் புல்லுபுதேர் விட்டிழிந்தான் பூபாலன் - சொல்லிருடி தன்னைநக ருட்கொடுபோய்த் தன்பொருளெல் லாநதந்தே மின்னுமரி மாதனத்தின் மீது. | 42 |
331 |
வீற்றிருப்பச் செய்தவனை வேரிமலர்த் தாள்பரவிப் போற்றிநின்றான் போந்த புர வலரு - நூற்றுறைதேர் மந்திரிமார் மங்கையரு மள்ளரும்பின் னவ்வறிஞன் சுந்தரத்தா டாழ்ந்து துதித்து. | 43 |
332 |
நிற்கின்ற தங்க ணிருபனைக்கண் டேயழுதார் கற்கொன்ற தோளரசன் கையமைத்தீண்-டெற்கொன்று மன்பொடுநீர் முன்செய்த வப்பரிசே யிம்முனிவற் கின்புறுமா செய்கமுறை யின்று. | 44 |
333 |
என்றியம்பி னான்வினவி யெல்லோரும் வள்ளலடி நன்றிறைஞ்சி வாய்புதைத்து மெய்ந்நடுங்கி - நின்றிறைவ நின்னுரையை யார்மறுப்பர் நீளுலகி லென்றழுதா ரன்னதவன் பார்த்தவச னாய். | 45 |
334 |
இந்நகரு நாடு மிருநிதியு நீமகக்கு முன்னளிக்க நேர்ந்தபொருண் முற்றுமியான் - மன்னிழப்பே னென்மகளிர் தம்மைமணந் திங்கிருத்தி யென்றிறைவன் பொன்மலர்க்கை தொட்டான் புரிந்து. | 46 |
335 |
புல்லருந்து மேயரிமாப் பொங்குபசி யுற்றாலு நல்லமறை கற்றுணர்ந்தோய் நானுனக்குச் -சொல்லலுமன் வேண்டுமோ விச்சொல் விடுகவெனா வேதியன்கால் பூண்டனன்கை யாற்கோன் புகன்று. | 47 |
336 |
ஆயினெனது பொருட் காளைவிடு வேனாளைப் போயகனீ மன்னா புறத்தின்றென்-றாயுமறைக் கோசிகன்சொற் றான் வினவிக் கோசலர்கோ னாயேன்செய் யாசெவையு நீபொறுத்தி யால். | 48 |
337 |
என்றுபுலஞ் செற்றோ னிணைச்சரண்மேல் வீழ்ந்திருந்தா னன்றெழுதி நான்சமித்தே னற்குணத்தோ-யென்றறவோன் சொல்ல வெழுந்திருந்து தோன்ற லமைச்சரைக்கை மெல்லப் பிடித்து விழைந்து. | 49 |
338 |
காட்டியிவர் செய்யுங் கடும்பிழையு நீகருத னீட்டுசடை யோய்நின் னடைக்கலமென்-றேட்டளக மாதுடனே சேயை வணங்குவித்துப் போற்றிவிடை நீதருகென் றானகன்றா னேர்ந்து. | 50 |
339 |
முப்புரிநூன் மார்பு முதுமறைதேர் நாவினொடு துப்புறள்நீள் வேணியுள தூயோர்க-ளெப்புடையுஞ் சூழமுடி வேந்தர் துதைத்திறைஞ்சக் கௌசிகனு மாழியுல காண்டா னமர்ந்து. | 51 |
340 |
அப்பா லுலகனைத்து மந்தணனுக் கீந்தன்பி னெப்பாலுஞ் சொன்னிறுத்த வேந்தலவிர்-துப்பாரும் வாயணங்குங் காதன் மகனு முடன்வரப்பொற் கோயினின்றுங் கோலமறு குற்று. | 1 |
341 |
கண்டவர்க ளெல்லோருங் காலமழை யாதித்தன் கொண்டளிக்குந் தாயில் குழவியொடு-முண்டகமும் பைங்கூழு மாகப் படர்ந்து சர யுத்துறையை யங்காரை நீங்கி யடைந்து. | 2 |
342 |
அந்நதியின் கூலத் தளிமிழற்றும் பூம்பொழில்வாய்ப் பின்னழுது பெட்பினுற்ற மந்திரியர்-மன்னரொடு புக்கிருந்தான் மேலைப் புணரியிடைப் போய்விழுந்தான் செக்கதிரோன் றீமைபொறான் சேந்து. | 3 |
343 |
அக்காலை யாங்கணிகழ் செய்தியறி வான்முனிவன் புக்கான் கரந்துறைந்தான் பூபதிமீண்-டெக்கால மீங்கணைவா யென்றமன்ன ரெண்ணரைப்பார்த் தண்ணலினி யீங்கணையேன் மீண்டென்றா னே. | 4 |
344 |
அந்தவுரை கேட்டினைந்தார் வேந்த ரமாத்தியர்பின் பெந்தமிறை வாயா மிதுபொழுதவ்-வந்தணனை வேணிபிடித் தீர்த்துவன மேவச்செய் கின்றனநீ யேணிபுரப் பான்வருகென் றார். | 5 |
345 |
மன்னன் வினாயதனி மாபாவ மாமந்தா முன்னளித்த வாங்கன் முடிந்தாலு-மென்னுயிர்யான் கோசிகனுக் கீந்தவள நாடினிக்கொள் ளேனென்று பேசமுனி கேட்டெதிர்ந்தான் பேர்ந்து. | 6 |
346 |
கண்டெழுந்து தாழ்ந்தரச னின்றிடலுங் காதிமகன் கண்டவனைக் காவலநீ யெற்களித்த-மண்டலத்தை வாங்கிலையேல் யான்வழங்க மற்றிவர்க ளின்றுரைத்த தீங்கனைத்துஞ் செய்தையென்றான் றேர்ந்து. | 7 |
347 |
இன்னாசெய் தார்க்கு மினியசெயுஞ் சால்புடையா யுன்னாதி யின்றிவர்க ளோதுபிழை-முன்னேநிற் கீந்த வரசுரிமை யானினிவாங் கேனென்றான் வேந்தனவ னுற்றான் மெலிவு. | 8 |
348 |
என்னையிவர் வைதபிழையான்பொறுத்தேன் வேள்விக்கு முன்னளிப்ப னென்றபொருண் முற்றுமெற்கு-மன்னவநீ நல்குவையோ நல்காயோ வென்றுரைத்தான் மாமுனிவன் கொல்களிற்றுக் கோனதனைக் கேட்டு. | 9 |
349 |
வாழ்வுவள நாடனைத்து மாதவயா னிற்கீந்த போழ்திப் பொருளுமுடன் போனதெனாச்-சூழ்வுற்றே னாயினுங்கோ பத்தா லளிப்பனென்ற சூள்வழுவே னாயனையே னல்குவனிப் பொன். | 10 |
350 |
நீவிடுக வாளென்று நீத்தவன்பூந் தாள்பணிந்தா னீவதுமுன் மாற்றிவிழி யொன்றிழந்த-தேவனைக்கூய் வீறுதவ விச்சுவா மித்திரன்றா னன்னவனை வேறிடத்தே வைத்து விழைந்து. | 11 |
351 |
ஆனையின்மே னின்றெறியு மக்கவண்கற் போமளவு மானபொரு ணீபோ யளித்தாற்கொள்-போனநிற்கு வேதனமும் வேந்தன்பால் வேண்டுகனி யாதிதந்தா லோதனங்கே ளேலா துவர்த்து. | 12 |
352 |
சொன்றிதரின் வேண்டாவென் றோன்றலிவ னூண்பெற்றா லன்றுநிதி நல்கா தகலலுணற்-கென்றுதடு நங்கெடுவு நண்ணிற் கரிகுறித்து நின்றவரைத் தங்கலைவா மற்றைநா டான். | 13 |
353 |
மன்ன யதிக்குரைத்த மாநிதிநல் கேனென்றா லுன்னரசை வாங்கி யுதவுவனென் -னன்னதற்குச் சம்மதித்தாற் கொண்டணைதி சாலுநமக் கஃதென்னா வம்மவியம் பாக்கூட்டு விட்டு. | 14 |
354 |
வள்ளலுக்கு நல்கிவிடை வந்தவழி மீண்டகன்றான் வள்ளிலைவேற் சேனை மகீபரொடு-தெள்ளுமதி மந்திரியர் தம்மையெலா மாதவன்பின் னேகமொழி தந்துதிரி சங்குமகன் றான். | 15 |
355 |
உத்தமநீ நீப்பினுயிர் வாழலன்யா னென்றுற்ற சத்தியகீர்த் திப்பெயரோன் றான்றொடாத - தைத்தியர்தந் தேசிகன்முன் போதத் தெரிவைசுதன் சேர்ந்துவர மூசிருள்போ முன்ன ரெழுந்து. | 16 |
356 |
பாதமலர் கன்ற வயோத்திப் பதிகடந்து மீதழலை வீசுசுர மேவியவட் - காதலனைத் தோளி லமைச்சன் சுமந்தியங்கப் புன்புழுப்போற் பாளைக் குழறுடிப்பப் பார்த்து. | 17 |
357 |
பட்டமர மேடுசுழி பாறைவழி யெங்குமுனி விட்டபணி தேள்குளவி வெம்பூரங் - கட்டுறவி யீண்டி யிடர் விளைப்பத் தீவினையை நொந்தகன்று கூண்டினனற் கோமதிபே ராறு. | 18 |
358 |
என்மரபி லுற்றவிவ னின்னலினி நோக்கியிரே னென்னுமவ னென்னவெல்லோன் போய்மறைந்தா-னன்னபொழு தன்னநடை நங்கைமக னண்ணனதி வண்டுறையைத் துன்னியற லுண்டிருந்தார் சோர்ந்து. | 19 |
359 |
மார்க்க நடந்த வருத்தமதி மந்திரிதான் பார்க்கலனாய்ப் பல்காய் பழங்கிழங்கு - பூக்கமழுஞ் சோலைவனம் புக்குத் துரீஇக்கொண்டு வந்துசெய்ய கோலிறைமுன் வைத்தான் குனிந்து. | 20 |
360 |
கண்டெடுத்து நல்ல கனியவற்றுட் கோசலர்கோ னுண்டருணீ யுத்தமவென் றீந்திறைஞ்ச - மண்டுசினங் கொண்டுகவி யுண்டிவற்றைக் குக்கிவளர்க் கேன்பானெய் வண்டயிர்சோ றல்லதென்றான் மற்று. | 21 |
361 |
எங்களர சையமுனிக் கீந்தடவி புக்கவெமைப் பங்கமிலான் பாலடிசி னீகேட்பி - னெங்கினிப்போய்த் தேடிக் கொணர்ந்தளிப்பே மென்றிறைவன் சீதகன்பொற் றாடுணைவி யோடுபணிந் தான். | 22 |
362 |
சற்றிரங்கி வெள்ளி தருபலநீ ருண்டமர்ந்தான் மன்றிறைசேய் மங்கையொடு மந்திரியும் - பொற்றடக்கை யாற்கனியைக் கொண்டருந்தி யாம்பருகிப் புற்றரைப்பாய்ப் பாற்கண் டுயின்றார் படுத்து. | 23 |
363 |
கோசிகன்ற னாணையினாற் கொண்மூ விடித்துமின்னி யாசுகமும் வேகமுட னாங்கெழும்பி-வீசமழை யூற்றநனைந் தாடை யுடனடுங்கிப் பார்க்கலவனைப் பாற்றினஞ்சூழ் வேற்கரத்தோன் பார்த்து. | 24 |
364 |
மாறுவது மில்லை மழைதான் சதுமறையோ யாறுபெரு *காமுன்ன மப்புறத்தே - சேறுமென வீரமிலாச் சுக்கிரனீ ரேகுநகர் தோறுமுறக் காரணமெற் கென்னென்றா ர்*காண. | 25 |
365 |
எந்நகரிற் புக்கே மிடைவனத்தை விட்டினியோர் நன்னகரஞ் சேர்ந் தாலந் தா*ளடியேன் - சொன்னபொரு ணிற்களிப்பன் வேதியனே நீவருக வென்றரசன் சொற்கவியைத் தாழ்ந்தான் றுதித்து. | 26 |
366 |
வஞ்சமுனி மாற்ற மதித்தெழுந்தான் சல்லியனு மஞ்சனைத்தோள் வைத்தமைச்சன் முன்னடப்ப-வஞ்சிகர மோர்கரத்திற் கோன்பற்றி யோர்கரத்திற் கோலூன்றி யூர்குடிஞை தன்னுளிழுந் துற்று. | 27 |
367 |
நீந்திக் கரையேறி யாங்கொருசார் நீள்பழுவத் தேய்ந்திருப்பக் காதிமக னேவியபேய் - காந்துவிழிப் பூதமுன்பின் வந்து புரிந்த கொடுமையினை யோதமுடி யாதனந்தற் கும். | 28 |
368 |
மாரியொடு வல்லிருளு மாய்ந்தொழியக் காலிலியூர் தேரிலணைந் தான்சாயா தேவிபதி - தாரினன் முன் னைவருமற் றத்தலத்தை விட்டகன்று கங்கையெனுந் துய்யநதி சார்ந்து துனைந்து. | 29 |
369 |
பல்வளனும் பார்த்தந்தப் பாகீ ரதிதன்னிற் சொல்விதியாற் றோய்ந்திழிந்து நீந்தியெதிர் - புல்கரைமே லேறியவ ணோர்பொழிற்க ணெய்தினர்க ளெய்தினனற் சீறிரவி மேனரலை சென்று. | 30 |
370 |
மாமுனிவன் மாயத்தால் வாரணமோ டெண்குகரு மாமடங்கல் வெந்தரக்கு வந்தந்த - மாமலர்க்காத தன்னிலிறை முன்னோர்க்குப் பீதி தவவிளைத்துப் பின்னடைந்த தஞ்சூழல் பேர்ந்து. | 31 |
371 |
அன்னபொழு தாசா னரிச்சந் திரனைவிளித் தென்னுரைகே ளின்றளவு முற்றவினை - தன்னமினி மேலுறுவ வெண்ணிலவாம் வேந்தமுனிக் கீயேனென் னேலரசை வாங்கியளிப் பேன். | 32 |
372 |
இன்னதியா னின்னுடைய விட்டளங்கண்டோதுகின்றேன் பின்னணைவ காண்டியெனாப் பேசினனா - லன்னாதுகேட் டன்றிசைத்த சொற்றவறே னையாவென் கேளுடனே கொன்றிடினு மென்னையென்றான் கோன். | 33 |
373 |
காலையவ ணின்றுங் கனைகழற்காற் றார்வேந்தன் கோலவிழி மங்கைபிறர் கூடவரக் - காலியங்கிச் சோணமுறீஇத் தோய்ந்தகன்று காளிந்தி சேர்ந்தாடி நீணனையார் காவமர்ந்தா னேர்ந்து. | 34 |
374 |
மாயமனக் கௌசிகப்பேர் மாதவன்வந் தானவனைக் காயுமிபக் காவலர்கோன் கண்டெழுந்து - போயிறைஞ்சி யாரணநூ னன்குணர்ந்த வாரியனே யீ ண்டடைந்த காரண மென் னென்றான் கசிந்து. | 35 |
375 |
காதிசுதன் பார்த்திவனைக் கண்டடவி நீகுறுகி வேதனையான் மெய்தளர்ந்தா யென்றுநொந்தே - னாதலினா லெறகளித்த நாடுநக ரில்லென் ன லான்மணந்து செற்குழலென் மக்களைநீ சேர். | 36 |
376 |
வந்துனது நாட்டின் மகிழ்ந்தரசா ளென்றியம்ப மந்தரத்தோண மன்னன் முனிவநிற்குத் - தந்தபொருள் பொய்புகன்று கொள்ளேன் புணரேனின் மக்களையெற் கொய்திடினு மென்றான் குனிந்து. | 37 |
377 |
மற்றதனைக் கேட்டு மறைமுனிவ னெஞ்சழன்று வெற்றிமன்னா மேல்வருவ காணடியெனாச் - சொற்றகன் று சேய்க்கணின்று சீமைபல போதித்துச் சைகையினாற் கூய்க்கலியைச் சென்றான் குழைந்து. | 38 |
378 |
பின்னர்ப் பிருகு பெறுதனயன் வந்துறலு மன்னமன்னாள செல்வ னமைச்சனொடு - மன்னர்பிரா னத்தலம்விட் டோர்கழைக்கா னாங்கியங்க விச்சுவா மித்திரன்கூய விட்டனன்வெந் தீ. | 39 |
379 |
அவ்வனத்தை யங்கி யடர்*ந்தெரிப்பக் கண்டிறைவ னிவ்வழலிங் கேதெனலு மேந்தாலின் - றிவ்வன்னி மன்மரபி லோருயிரை வாய்மடுத்த லாதேகா தென்னவெள்ளி சொற்றா னெடுத்து. | 40 |
380 |
செந்தழலோன் வெய்யபசி தீரவெனை யுண்ணியர்நீ ருய்ந்தகல்க வென்றரச னோடினன்முன் - மந்திரியென் புல்லுடலைத் தீக்களிப்பேன் பூபதிசேய பொன்னைவிட்டுச் செல்லலென்றான் சேவடியில் வீழ்ந்து. | 41 |
381 |
சிதலை தினப்பட்ட வாலமர மூன்று மதலையா மற்றதன்வீ ழன்றே - கதழனற்கு ளென்னீன்றீர் யான்சென்று வீழ்வேனீர் மந்திரியோ டின்னேபோ கென்றனனற் சேய். | 42 |
382 |
தையலந்தச் சொற்கேட்டுத் தன்மகனை மோந்துதழீஇச் செய்யபற்கள் வீழ்ந்தில்லாய் செல்வனே - தெய்யவுனக் கித்துணிவு மிவ்வறிவு மெங்கடுத்த தென்றுமுகங் கைத்தலத்தின் மோதிக் கலுழ்ந்து. | 43 |
383 |
மாதருக்குக் காதலரான் மைந்தரா லிவ்வுலகி லாதரவா மாதலினீர் நின்மினெனா - வோதுபுசென் றொல்லையண்ட கோளத்தை யுற்றடரு மச்சேர்ந்தார்க் கொல்லிமுன்* நின்றுகும்பிட் டு. | 44 |
384 |
மறைநெறிநில் லாமே வருவிருந்தோம் பாமே முறைதிறம்பி மூத்தோ ரிகழ்ந்து - பிறர்பொருளை வௌவியய லார்மேன் மனம்வைத்தே மாயினெனைச் செவ்வழனீ செற்றிடுக வென்று. | 45 |
385 |
பாய்ந்திடலும் பாவகன்றான் பாவை தனாதுசற்பாஞ் சேந்தவட வைத்தீத் தெறுநமையென் - றோர்ந்துளர்த்தி லார்ப்படங்கிக் காலை யலர்கதிரைக் கண்டபனிப் போர்ப்பெனவே போனான் மறைந்து. | 46 |
386 |
மண்டு மழறணிய வான்வரைக்கான் முற்றுநெய்தல் புண்டரிகம் பூத்திலஞ்சி யாய்ப்பொலியக் - கண்டுமகிழ்ந் தாயிழையாள் கற்பை யரசன் புகழ்ந்தணைந்தான் றூய்வா ரணவாசி சூழ்ந்து. | 47 |
387 |
வாரணவா சிப்பெயரின் மாநதிநீள் வண்டுறையிற் சிருசனன் மந்திரிசேய் தேவியொடு - வீரமிகு கோனிறங்கி மெய்ச்சுருதி கூறுமுறை யான்மூழ்கி யீனமற வேறி யிகந்து. | 1 |
388 |
திண்களிறு மாய்கின்ற செந்நெற் கதிர்மிளிருந் தண்கழனி சூழ்காசி சார்ந்துமறைப் - பண்குலவு நாவினர்முன் னீரிருவர் நண்ணுமணி மாடநிரை பாவுமறு கூடேகிப் பார்த்து. | 2 |
389 |
மண்ணுமணிக் கோயிலிடை வாழ்விசுவ நாதனடி யெண்ணி யிறைஞ்சியகன் றோர்பொதியி - னண்ணியவட் கொண்டமைச்சன் றந்தபண்டங் கோதைசமைத் தன்பினி* வுண்டிருந்தா னூழ்வினையை யோர்ந்து. | 3 |
390 |
அன்றடுத்த நாளி லசுரகுரு பார்த்திறையைக் குன்றடுத்த தோளாய் கொடுத்தியெனி - னின்றுகொடு வட்டபுல வாழ்க்கையன்முன் னாடுபொரு ணீயென்று கட்டுரைத்தா னெஞ்சங் கனன்று. | 4 |
391 |
எவ்வகையோ விப்பொருணா மின்றளிப்ப தென்றெண்ணித் தெவ்வடுவேற் கோன்விழிநீர் சிந்திநிற்பக் - கொவ்வையிதழ்ப் பொன்கண்டு மாற்றம் புகலா திறையழலென் பன்னென்று கேட்டாள் பரிந்து. | 5 |
392 |
கன்னல் புளிக்குமின்சொற் காரிகையே நீயறியாப் பொன்னுளதோ வென்பாற* புகலென்று - மன்னிசைத்தா னன்னதனைக் கேட்டுழுவ லன்புடைய மாதரசி யின்னமொரு நாளவதிக் கெல். | 6 |
393 |
பல்லநினைந் தென்னை பதியெனையு மைந்தனையும் வில்லளிநீ பொன்னென்றாள் வேந்தனனி - யல்லலுழந் தெல்லிதுவா மென்ன விறைவவிடு மோ நமையூழ் சொல்லுகென்றா ணங்கை துணிந்து. | 7 |
394 |
ஆயினது செய்வலெனா வண்டலர்க்குச் சீயமன்னான் றேயுமிடை மானின் சிரமிசையு - நேயமகன் சென்னி மிசையுஞ் சிறுபுதல் வைத் தேகண்டார் மன்னிரங்க முன்னடத்தி மற்று. | 8 |
395 |
முன்னை வினைமுடுகி முற்றுதலாற் றீவினையே னென்னிளஞ்சே யில்லா ளிவர்களையின் - றிந்நகரிற் போந்துவிற்கின் றேனொண் பொருளுடையீர் கொண்மினெனா வாந்தெருவிற் சென்றா னறைந்து. | 9 |
396 |
என்னை விலையிவர்கட் கென்றுமறை யோனொருவன் முன்னணைந்து கேட்டான் முடிவேந்தன் - வன்னெடுங்கை யானைமிசை நின்றெறியு மக்கவண்கற் போமளவுக் கானபொரு ளென்றிசை த்தானாங்கு. | 10 |
397 |
அந்த விருநிதியை யாரிடத்தே யீவதெனாச் சந்தமறை யோன்வினவத் தாரிறைவ - னிந்தமகன் கையிலளிக் கென்றுணர்த்தக் காப்பியனுக் கன்னோனுங் கையறைந்தா னீவலென்று காண். | 11 |
398 |
உன்கரத்தே மாநிதிய முற்றதோ வென்றரசன் மின்கவியைப் பார்த்துரைத்தான் வெள்ளியும்பொன் - னென்கரத்தே சேர்ந்ததுநீ தீட்டுமுறிச் சிட்டுடன்சேய் மாதிவரை யீந்திடுகிவ் வந்தணற்கென் றான். | 12 |
399 |
அந்தவகை மாநிலமன் னாற்றவடி தாழந்தரிவை யெந்தமக்கு நெஞ்சழுங்க லேந்தலினி - யெந்தநா ணின்வதனங் காண்குவனோ நீவிடைதா வென்றகன்றாண் மின்விழிநீர் சிந்தி மிக. | 13 |
400 |
அங்கணமா ஞால வரும்பொறையைத் தாங்கலனாய்ப் புங்கவன்றோள் வைத்தீண்டுப் போந்தவெனக் - குங்களைமேற் றாங்கலெங்ஙன் கூடுமென்று தாயெனையு நீத்தனையோ பூங்கழற்கா லையா புகல். | 14 |
401 |
என்றுசுதன் வேந்த னெழிற்களத்தைப் பூண்டரற்றக் கன்றுசினத் தீத்தெறிப்பக் பண்டுவிரைந் - தொன்றுகரம் பற்றியிழுத் தேகொடுபோய்ப் பார்ப்பான் றனதகத்தை யுற்றனன்யாய் செல்ல வுடன். | 15 |
402 |
அக்கொடுமை பார்த்தரச னாற்றலனாய் மூர்ச்சித்துச் சக்கரமேன் மாழ்கிவிழத் தாங்கியுடன் - மிக்கமதி மந்திரிதான் றேற்றலுமே மன்னவனு முட்கவலை சிந்தி யெழுந்தான் றெளிந்து. | 16 |
403 |
பின்மிருத சஞ்சி வினிப்பேர் மனுப்பெற்றோன் மன்முகத்தை நோக்கி மறைமுனிக்குச் - சொன்னபொரு ளீந்தனைநின் பின்னுழன்ற வென்றனக்குக் கூலியினி வேந்ததரு கென்றான் விளித்து. | 17 |
404 |
நல்குவன்வா வென்று நவின்றமைச்சற் பார்த்தென்னை வில்கொடுநீ பொன்னிந்த வேதியற்கென் - றொல்கலில்சீர் வேந்துரைப்ப நாயேனை விற்றளிபொன் னென்றன்னோன் விழ்ந்துரைத்தான் வள்ளலடி மேல். | 18 |
405 |
அன்னவகை செய்யி னருந்தவற்கஃ தேலாவா லின்னினியே யென்னைவிற்றீ பொன்னென்று மன்னிசைத்தான் கேட்டென்ன பாவங் கெழுமியதெற் கென்றுள்ளி வாட்டமுற்று மந்திரியு மன். | 19 |
406 |
ஆலைவய லோங்குபழை யாறையமர் நீதிதன்னைப் போலுமரிச் சந்திரன்றன் பொன்முடியின் - மேலொருபுல் வைத்தென்ன ராயிடினும் வள்ளலிவற் கொள்ளுமொழி கைத்தென்றன் கைக்*கணளித் தென்று. | 20 |
407 |
போகு மறுகுதொறும் போய்ப்பகர வோர்வீர வாகுவெனும் பேர்ப்புலைஞன் வள்ளூரம் - வரகுவயிற் காவினன்முன் வந்தெய்திக் காவிறக்கி வாய்புதைத்து நீவியங்கை யாலொடுக்கி நின்று. | 21 |
408 |
ஐயே புலைத்தொழிலை யாற்றிடுமென் போல்வார்க்கு மெய்யேசொல் விற்கத் தகுதியுண்டே - கையீந்தா னீகருதிக் கேட்கு நிதியமெலா மின்றென்று தாகமொடு கேட்டான்முன் றாழ்ந்து. | 22 |
409 |
மன்னனுடம் பாடுகொண்டு மந்திரிவிற் பேனுனக்கிங் கென்னவிலை யேதென்றா னக்கொலைஞன் - மின்னுபதி னாயிரம்பொன் னென்றமைச்ச னாடலுமற் றன்னோனுந் தூயவஃ தீவலென்றான் சூழ்ந்து. | 23 |
410 |
மந்திரிதன் பேரால் வரைந்தா வணமவற்குத் தந்து பொருள்வாங்கித் தானவர்தம் - மந்திரிக்கீந் தையநீ போய்வருக வென்றறைய வாங்குமகிழ்ந் தையெனவே போனா னவன். | 24 |
411 |
வாய்மை விதரணத்தின் மற்றொருவர் நேரில்லாத் தூய்மனத்துத் தோன்ற றுணையடியைப் - பாய்மார்க்க ணீராட்டி யின்றோடு மெற்கிறைவ நின்பணிசெய் பேராட்சி பேர்ந்ததுவோ வென்று. | 25 |
412 |
சாற்றி யரற்றிநின்ற சத்தியகீர்த் திப்பெயரோற் றேற்றிவிடை நல்கிச் செழுமறையா - நாற்றமிகு மூனிட்ட காவை யுலம்பொருதிண் டோண்மீதிற் றானிட்டுத் தன்விதியை யோர்ந்து. | 26 |
413 |
புன்றொழிற்சண் டாளவுருப் பூண்ட தறுகண்*மன் பின்றொடர்ந்து பீடில் புலைச்சேரி - துன்றியவன் றங்குமுடை நாறுந் தனிக்குடி*லைச் சார்ந்துசுமை யங்கிறக்கி யீந்துநின்றா னால். | 27 |
414 |
ஆங்கம் மறலி யரசனைப்பார்த் தீமத்தே பாங்கிற் பிணஞ்சுடற்குக் காற்பணமு - மோங்குகொள்ளி யாடையுநீ வாங்கி யளித்தெனக்கு வாய்க்கரிசி வாடலின்று யட்டுண்டு வாழ். | 28 |
415 |
என்றியம்பி னானாக வேந்தலரிச் சந்திரனு நன்றெனவே வெஞ்சுடலை நண்ணியவட் - பொன்றினர்மெய் கொண்டெறிந்த பாடைக் கொடுங்கழியாற கொட்டிலொன்று கண்டுபுக்குச் சொன்னபணங் கால். | 29 |
416 |
வெய்யகொள்ளி யாடை வெறாதுரியோர் பால்வாங்கி யையகொள்ளென் றாண்டாற் களித்தவைவாய்ப் - பெய்யரிசி புட்டிலின்கண் கைத்தட்டி முன்பிணங்கொண் டேபோட்ட கட்டிலின்கண் வீற்றிருக்குங் கால். | 30 |
417 |
அந்நகரோ ரம்பலத்தில் யாமினியந் தித்தேதன் மன்னவனைத்தேடி மதியமைச்சன்-றுன்னியிடு காட்டிற் சிறுகுடிலிற் கண்டிறையை யேங்கிமனம் வாட்டமுற்று வீழ்ந்தலற மண். | 31 |
418 |
நன்றாங்கா னல்லவாக் கண்டு நுகர்ந்தயா மன்றாங்கா லல்லற் படலாமோ-வின்றாடாய் தோச்சித் துணைவவெனத் தேற்றியவன் கைக்களித்தான் வாய்ச்ச வரிசிதனை மற்று. | 32 |
419 |
மற்றதனை மந்திரிமா மன்னனடி தாழ்ந்தேற்றுப் பெற்றமதற் குப்புல்லிற பெட்பினல்கிப்-பிற்றைமயத் தோடுவிழுந் தண்டுலத்தை யுற்றெடுத்துக் குத்தியட்டுப் போடவிறை நின்றான் புசித்து. | 33 |
420 |
பின்னடிமை கொண்ட பிராமணனாம் வன்கண்னிற் றுன்னியசேய் மாதிவருட் டோகையன்னாள்-பன்னுமல கிட்டு மனைமெழுக னெற்குத்த லெப்பணியுந் திட்டமுறச் செய்தொழுகத் தேர்ந்து. | 1 |
421 |
கோமகனுங் கோலஞ்சித் தூக்கமொழிந் தேவியடிச் சாமமெனத் தானெழுந்து போய்வனத்தி-லோமவிற கிந்தனம்பைங் கூர்ச்சமிவை கொய்தெடுத்துக் கொண்டணைந்து தந்திடுங்கூ ழுண்டுதரித் தான். | 2 |
422 |
உற்றசிறா ரோடொருநாட் போய்த்தேவ தாசனெனுங் கொற்றவன்சேய் கானங் குறுகியவண்-வற்றுதுவர் கட்டிச் சுமந்து திரும்பிவருங் காற்கண்டு வட்டைக்கோர் பால்வண் குசை. | 3 |
423 |
கொய்யவது தன்சுமையைக் கோளியி்ன்கீழ் வைத்திறக்கி யையெனப்போ யாங்குப் பறித்திடலும்-வெய்யமுனி கற்பனையால் வந்து புதர்க்கட் கரந்துறைந்த சர்ப்பங் கடித்தபடந் தாழ்த்து. | 4 |
424 |
அக்கணமே மாய்ந்தா னலறிவெரீஇ வீழ்ந்திளைஞன் சக்கரமார் பொற்றேர்த தரணிகண்டு-நுக்கமொடு பாய்ந்தோடும் பச்சைப் பரிசெலுத்திப் போய்க்குடபான் மாய்ந்தான் மறிகடற்குள் வீழ்ந்து. | 5 |
425 |
நந்த மெலுவனின்ன நண்ணாமைக் கேதுவென்னென் றந்தவடக் கீழமர்ந்த மக்களிலா-முந்தியவன் சென்றதிசை சென்றிறந்து நிற்பப் புரட்டினர்பார்த் தொன்றிநனி செல்ல லுளத்து. | 6 |
426 |
மீண்டங்குத் தத்தம் விறகிடுத்துக் கொண்டொல்லை மாண்டநகர் மாலையொடு புக்குமகற்-றேண்டிநின்ழற தாயுடனன் னான்மடிந்த தன்மையிட நன்கறைந்து போயினர்தம் மில்லம் புரிந்து. | 7 |
427 |
ஆயிழையாள் கேட்டழுங்கி யவ்வுரையை மெய்ம்மறந்து வாயிலிடை வீழ்ந்தெழுந்தங் குண்மருவி-யேயபுணி யாவு மறவியற்றி யாளுடைய பூசுரன்றன் சேவடிமுன் சென்று விழுந்து. | 8 |
428 |
நாகத்தான் மாண்டொழிந்தா னான்பெற்ற வோர்குமர னேகத்தா வாங்குவிடை யென்றழலும்-வேகத்தாற் சீறிமறை யோனடிமை செத்தானிற் கேனட்டஞ் சேறலொழி தேமொழிநீ யென்று. | 9 |
429 |
சொற்றனன்கோட் டொண்ணுதலா டோன்றலிறந் தானின்றாற் பெற்றவயின் பேயேற் கெரியாதோ-சற்றிரங்கி நல்குவிடை போயிடுத்து நானடக்கஞ் செய்திங்கே யெல்வருமுன் னெய்துவனென் றாள். | 10 |
430 |
நின்மொழிதப் பாமைநடப் பா யெனினீ யேகென்று கன்மனநைந் தன்னோன் ச*ழறலுமே-மின்மருங்குற் காரிகைதன் கால்பின்னக் கார்க்குழல்கண் ணீருடனே சோரவுள முந்தத் துனைந்து. | 11 |
431 |
சுற்றனகர் தாண்டிமசார் சுட்டி யுரைத்துழிபோ யுற்றலகை யோரிகுறள் சூழநடுப்-பெற்றமகற் கண்டு கணையெறிமான் போலிறுகி மெய்ம்மறந்து மண்டலமேன் மாழ்கிவிழுந் தாள். | 12 |
432 |
பின்னெழுந்து பேதை பெருங்கயற்க ணீராட்டிப் பொன்னலர்க்கை யாலெடுத்துப் புத்திரனை-துன்னவுடை தங்குமடி மேல்வைத்தே சாதகம்பே யும்மிரங்கச் செங்குமுத வாயைத் திறந்து. | 13 |
433 |
இந்திடத்தின் மாசுணத்தா னீகடியுண் டேயிறப்ப முந்துவினை யாது முயன்றறியே-மைந்தாவோ வென்னிறையு யானுமினி யாரைநம்பி வாழ்வமுரை யென்ன வரற்றி யிசைத்து. | 14 |
434 |
தன்னமைத்தோண் மீதிற் றனிமகனை வைத்துக்கொண் டன்னத்தின்றூவி யனிச்சமஞ்சம்-பொன்னடிக்கட் கன்முள் ளுறுத்தக் கணங்குறள்செந் நாயடர்ப்பப் புன்முடைநா றீமம் புகுந்து. | 15 |
435 |
வானவர்தங் கரப்பின் மகனைவைத்தே கிக்கரிந்து போனகுறைக் கட்டை பொறுக்கிவந்து-தானடுக்கிச் சிங்கனலை மூட்டிச் சிறுவனையக் கட்டையின்மே லங்கெடுத்து வைத்தா ளழுது. | 16 |
436 |
கண்டு கனல்விளக்கங் காவலவன் சார்ந்தேடி மண்டிருளில் வந்துதனி வாய்க்கரிசி-துண்டறுவை காற்பணநல் காதே சவஞ்சுடலென் னென்றெறிந்தான். காற்கொடெடாக் கான்முளையைக் காய்ந்து. | 17 |
437 |
சேவடிமேல் வீழ்ந்து தெரியாதிவ் வூர்வழக்கம் பாவியெனக் கேது பணம்வழங்கத் - தாவிலருட் கண்ணவர* வான்மடிந்த காதலனை யான்றகனம் பண்ணவரு ளென்றாள் பதைத்து. | 18 |
438 |
செந்திருவே தீண்டலெனை யான்புலையற் கோரடிமை தந்துமுழத் தானைபணங் காலாண்டாற் - கிந்தநிலை நின்மகனை நீசுடுக வெற்குரிய வாய்க்கரிசி மன்விடுவன் காணென்றான் மன். | 19 |
439 |
காசுங் கடும்புமுளே னாயினிவ ணிம்மகனைப் பாசுறழ்தோ ளேற்றிப் படர்ந்துசு* - லேசெனவே யெண்ணாது செய்குவனோ வென்றிரந்தாள் கோதைகழுத் தொண்ணானைக் கண்டான்கோ னுற்று. | 20 |
440 |
வஞ்சி நினது வளைமிடற்றின் மங்கலநாண் டுஞ்சித துலங்கப் பொருள்சுரத்திற் - கொஞ்சமுமில் லென்றிசைத்த வேலா திதனையெனக் கீதியென்றான் குன்றிசைக்குந் தோளான் குறித்து. | 21 |
441 |
வார்*முரசங் கேட்டசுண மான மடப்பிடிதான் பார்*மிசைவீழ்ந் தேபதைத்திங் கென்கணவ - னாரொருவர்க் கல்லதுமற் றியார்க்கு மறிவருநா ணிவ்விழிஞ னொல்லுமதொ கண்நாண லுற்று. | 22 |
442 |
இத்தலத்தே புக்கபின்னை யெம்பெருமா னார்மொழியும் பொய்*ததுவோ மாயோன்புராரியினு-மெய்த்தவனோ வல்லனின்றென் வாடரிய கற்பொழிவ தென்னென்று சொல்லிச் சொரிந்தனள்கண் முத்து. | 23 |
443 |
வாய்மை யதுவினவி, மன்னன் மனமறுகிச் சேய்முகத்தைப் பார்த்தேங்கச் சீறியரா-வார்கடித்த போதனையும் பூவையையும் விற்றகொடி யேனைநொந்தென் னோகினையன் புற்றசெல்வா வோ. | 24 |
444 |
அன்றெனது கந்தரத்தை யார்வமொடு பூண்டநீ துன்றுசின வேதியின்கை தொட்டீர்ப்ப - நின்றிருந்தேன் பாவையுனைத் தோட்கொணர்ந்து பாலகனே தீச்சுடலும் பாவியின்று காலெறிந்தேன் பார்த்து | 25 |
445 |
வென்றிவடி வேற்றாதை வெட்டியாற் காட்பட்டா னென்றுமினி யெய்திநமை மீட்கவல்லா - னென்றெணியோ வாருயிரை நீத்திட்டா யப்பாவோ வென்றரற்றிப் பாரகத்தே வீழ்ந்தான் பதைத்து. | 26 |
446 |
கொண்கனிவனாமென்று கோதைதுணிந் தேந்தலடித் தண்கமல தாழ்ந்துதலை வாபுவின் - கண்ணெவர்ககுந் தெய்வம் வகுத்ததல்லாற் சேராது வேறினிநீ நையலற முன்னென்றா ணைந்து. | 27 |
447 |
நீசனுக்கி யான்றொழும்ப னீலவிழி யாயவற்குத் தூசுபண நல்கேனேற் றுன்னுரவை - நீசடிதி போந்துனையான் வோற்குப் புகன்றுடைபொன் வாகிவந்தெற் கீந்துசுடுன் மைந்தனையென் றான். | 28 |
448 |
வன்பானிகர்த்த மனத்தினிப்பொன் னோடுடை யன்பாற் கொடாஅ னறககொடியோன் - றுன்போவி யிம்மகனைப் பார்த்திருந்தி யேகியளித தாற்கொணர்வல் செம்மலிவ ணென்று தெரித்து. | 29 |
449 |
தாரணிமா மன்னன் றனயன னின்றழுங்க நேரிழையாள் வெஞ்சுடலை நீத்தொல்லைக் - காரியலுங் கன்மதில்சூழ் காசி கடிநகரி வாய்நுழைந்து பொன்மனையார் வீதியிடைப் புக்கு. | 30 |
450 |
ஆங்க ணுவளகத்தே யணமிச் சிலபடிறர் பாங்கினெடுத்துப் படர்ந்த புறந் - தூங்களவிற் கரசணிகள் கைக்கொண்டு காதி யெறிந்திட்ட தாசியிறை கான்முனையைக் கண்டு. | 31 |
451 |
இம்மதலை யார்மதலை யென்னவல மந்துகண மெம்மதலை தன்னை யெறிந்ததுகொ-லம்மவெனா வாடுற்றுச் சேயை வனசமலர்க் கையேந்தி நாடுற்றாண் மெய்க்குறியை நன்கு. | 32 |
452 |
விடிந்திடுமு னவ்வூர் விறற்கா வலர்க ளிடிந்தமதி லேறி யிழிந்தாங்-கடைந்திறைவன் செத்தமக வோடு தெரிவைதனைக் கண்ணுற்று மொத்துபுகை யார்த்து முனிந்து. | 33 |
453 |
மண்டபத்தில் வீற்றிருக்கு மாமகுட மன்னவன்முன் கொண்டுவிட்டுக் கும்பிட்டுக் கொற்றவனே-கண்டிரவுன் மைந்தனையிம் மாது மறுகெடுத்துக் கொண்டிகுக்கத் தந்தனமீண் டென்றிசைத்தார் தாழ்ந்து. | 34 |
454 |
அந்தமொழி கேட்டரச னங்கை யமைத்தவரை வந்தபடி யாவுமுரை வல்லியெனச் - சந்தி*ரமதிப் போத்தெரிவை தாளைப் பெருமலர்க்க ணீரருவி வார்த்தலம்ப நின்றிறைஞ்சி மற்று. | 35 |
455 |
என்று நரரை யெடுத்தருந்து மோரரக்கி வென்றிவடி வேலிறைவ நின்னகர்வந்-தின்றிரவிற் றினறிடயா னின்மகனைத் தேர்ந்து புறங்கொடுபோய்க் கொன்றனன்கா ணென்றாள் குழைந்து. | 36 |
456 |
இன்னற் கடல்கடப்பா னேந்திழையா ளோர்ந்துளத்துச் சொன்னமொழி கேட்டுத் துணைவரைப்பார்த்-தந்நிருபன் செய்ய முகத்திவளே செல்வனைக்கொன் றாளென்னு மையமெனக் கில்லென்றா னாய்ந்து. | 37 |
457 |
அந்த நிலைக்க ணரிவைகரம் யாத்தீர்த்து வந்தவர்கண் மன்னா மகனையெடுத் - துந்தடிப்பின் சென்றிக் கொடியள் செகுப்பக்கண் டீர்த்தணைந்தே மின்றுயிர்சாம் விட்டிடினென் றார். | 38 |
458 |
சொன்னவடி தானிச் சுரிகுழலா டன்னடியோ பின்னை யெவரடியோ பேர்ந்தோடி-யிந்நொடிக்க ணோக்கி யணைதிரெனா நோன்கழற்காற் காசியர்கோன் போக்கினன்சில் லோரைப் புகன்று. | 39 |
459 |
போற்றி யிறையடியைப் போந்தவர்க ளந்நெறிக்கண் மாற்றி மறைமுனிவன் றீட்டிவைத்த-கோற்றொடியா டன்னடியே கண்டோடித் தாழ்ந்திவள்கால் வைப்பல்லான் மன்னவிலை மற்றடியென்றார். | 40 |
460 |
சொல்லுதிநீ யுண்மையெனத் தோகைமுகந் தானோக்கிக் கல்லுறழ்தோள் வேந்தன் கழறவெனை-யல்லதிலை கள்ளி யெனவறைந்தாள் காவலன்கே ளாவியந்தே யுள்ளங் கசிந்தா னுற. | 41 |
461 |
அந்நிலையிற் கங்கு வருந்தவன்செய் மாயமொடு மன்னனரிச் சந்திரன்றன் வல்வினையு-மன்னிரிய மங்கையின்கைக் கட்டுடனே வாரிசத்தின் கட்டவிழச் செங்கதிரோன் வந்தனன்கீழ்த் திக்கு. | 42 |
462 |
புத்திரனை யந்தப் புரங்கொடுபோ மாறிசைத்து முத்தை விதிப்பயனை முன்னிமுன்னி-மெத்தநொந்து மாசிலாக் கற்புடைய மானைவதை செய்விப்பான் காசிபதி யேய்ந்து கருத்து. | 43 |
463 |
தூதுவரைக் கொண்டழைத்துத் தொல்வீர வாகுவெனுங் காதகனைக் கண்டிந்தக் கள்ளிதனைக்-காதுகநீ கட்டுடனே கொண்டேகி காய்களத்தி லின்றென்று கட்டளை செய்திட்டான் கவன்று. | 44 |
464 |
கோள்வீர வாகுக் கொலைஞன் குரிசிலிணைத் தாள்வீழ்ந்து போற்றித் தளரணங்கைத்-தோள்வீக்குந் திண்கயிற்றாற் பற்றித் திரும்பிப் புலைச்சேரிக் கொண்குடிசை தன்னையடைந் துற்று. | 45 |
465 |
தன்றொழும்ப னானவரிச் சந்திரற்கூய் மன்மகனைக் கொன்றவிந்தக் கள்ளியைநீ கொண்டேகி-யின்றெறிக வென்ன விளம்பிடியோ டீந்தா னவன்கரத்தே மின்னுதன்கை வாளை விதித்து. | 46 |
466 |
வாளுடனே மாதை மலர்க்கரத்திற் கொண்டிறைவேய்த் தோளியைத்தான் பார்த்தழுங்கத் தோகைகண்டு-வேளனையா யென்பொருட்டு நீயிரங்க லென்றாள்கோன் பின்றொடர்ந்தா னன்பமைச்சன் வந்திறைஞ்சி யாங்கு. | 47 |
467 |
பின்னர்த் திரண்டு சனங்கள்பல பேசிவரக் கன்னி கைதோள் யாத்த கயிறுபற்றி-மன்னவர்கோன் வன்னமணித் தோரணநீள் வாயிகந்து வந்திறுத்தான் பொன்னகரி னொச்சிப் புறந்து. | 48 |
468 |
வண்டமர்தார் வள்ளலுக்கு வஞ்சமனக் கௌசிகன்றான் கண்ட விடர்முடிவு காண்பதற்கன்-றண்டரொடு வாசவனை நாரதனை மாவசிட்டன் கூட்டிக்கொண் டாசினிக்கண் வந்துறைந்தா னால். | 49 |
469 |
வந்துவிசு வாமித் திரமுனிவன் மன்னனெதிர் தந்திலன்யா னாடுனக்கென் றேசாற்றி-யுய்ந்தரசு மிவ்வயிரு நீபெறுக வென்னவவன் றாள்பரவி நவ்விவிழி யோடரச னைந்து. | 50 |
470 |
ஒழுக்க முடையாரிற் கூற்றுக்கோ லன்ன விழுக்க லுடையார்க கிசைப்ப-வழுக்கியுந்தம் வாயினாற் றீய வழங்குபவோ பொய்யியம்ப நீயெமக்குச் சொல்லுவதென் னேர்ந்து. | 51 |
471 |
சேய்மையுடன் சேறலினா னற்றுணைவ னெவ்வொளிக்கும் போயொழியா வெவ்விருளைப் போக்குதலாற்-பாயவொளி செம்பொருளைக் காட்டுதலாற் றேசிகன்மெய் யாலுன்சொன் னம்பி யதனைவிடே நாம். | 52 |
472 |
நில்லாத யாக்கையையு நீளரசின் வாழ்வினையு மெல்லா நிலியினவென் றெண்ணியிசைக் - கொல்லாத வெய்ய நரகத்தே வீழ்விக்கும் பாவத்தைச் செய்யத் துணியலம்யாந் தேர். | 53 |
473 |
என்ன முகம்புலர்ந்து மாய்ந்திருடி யேகினன்கூ யன்னவனை மானீ யறைந்ததிற - மிந்நிலைக்கட் கண்டகல்க வென்றுரைப்பக் காதிமக னாணமுட னண்டியவ னோடமர்ந்தா னாங்கு. | 54 |
474 |
பேதைகைநாண் பற்றிப் பிணஞ்சுடுகோ லாற்றள்ளித் தாதவிழ்தார்க் கோசலர்கோன் றன்னிறந்த - காதலனண் ணத்தலமுற் றுன்றெய்வ மன்பினினைந் தேத்தியிரு நெய்தகுழல் பூர்வமுக நின்று. | 55 |
475 |
என்றறையத் தெய்வந் தொழாஅ ளிதயத்தி னன்றுபராய் நாயகனை நன்னுலதா - ளின்றெளியே னாவியிறப் பஞ்சி யறம்வழுவல் வாழியெனாக் காவலனைத் தேற்றிநின்றாள் கண்டு. | 56 |
476 |
நின்மலனாய்ப் பூரணனாய் நித்தியனாஞ் சிற்பரனாற் பன்மறையின் பல்லறத்துண் மிக்கவுண்மை - நன்னெறிக்க ணின்றனனே லுண்டே னிறையிவண்மாட் டீறின்மை யொன்றுகெனா வீசின்னொள் வாள். | 57 |
477 |
மாசடையா நெஞ்சத்து மன்னன் கர்தெடுத்து வீசியவவ் வெள்ளயில்வாள் வீழ்ந்தன்று - மூசரிக்கு நற்பிரசம் வாக்கு நறுமலர்த்தார் போலசையாக் கற்புடைய நங்கை களத்து. | 58 |
478 |
அங்கண் விசும்பி னடலரவ முண்டுமிழுந் திங்களெனத் தேவி திகழ்ந்தனளாற்-றுங்கமுனி மாயப் பெருநெருப்பின் மன்னினன்மா மன்னவர்கோன் றூயொளிய பொன்னிற் சுடர்ந்து. | 1 |
479 |
வானிந் திரன்முன்னோ ரோடு மறைவசிட்ட னானந்த மாடி யவனியுற்றான்-கோனின்று நன்மையுற்றா னென்னினெனா நக்கியம்பி யாடினனாங் கன்மனத்துக் கௌசிகனுங் கண்டு. | 2 |
480 |
மாயவன்முற் றேவர்களு மன்னு கணத்தவருங் காயுமிப மாமுகனுங் காங்கெயனும்-பாயபுடை நண்ணமலை மாதுடனே நம்பனற வெள்விடைமே லண்ணலெதிர் வந்தா னமர்ந்து. | 3 |
481 |
கண்டுவிழி நீர்பொழியக் காவலர்கோன் றேவியுட னண்டர் பிரானை யணங்குடனே-தண்டெனமண் வீழ்ந்திறைஞ்சி யேத்தியன்பின் வெவ்விடர்தீர்ந் தின்பவிள்ளத் தாழ்ந்தவச னாய்நின்றா னாங்கு. | 4 |
482 |
அப்பூதி நற்புதல்வ னன்றெழுந்த வாறேபோற் றப்போதா வள்ளலரிச் சந்திரன்சேய்-துப்போதி வீசயிறகை வேள்விளிப்ப வீழ்ந்தெழுந்து தாள்பணிந்தான் காசியர்கோன் மைந்தனொடு கண்டு. | 5 |
483 |
பால ருயிர்த்தெழுதல் பார்த்தங் கயோத்தியர்மன் பாலிகழுந் தீங்குதலைப் பாவையன்னாள்-சாலிவயல் சூழ்ந்திலங்குங் காசிபதி சூழ்ச்சித் துணைவனன்பாற் றாழ்ந்திசைத்தார் சங்கரனற் றாள். | 6 |
484 |
ஆயபொழு தெம்மா னழைத்துமுனி கௌசிகனை நீயிறைவற் கூறு நிகழ்த்துவகை-யேயதிற னிந்நிலையா ரெல்லா மினிதுணர வின்றெடுத்துப் பன்னுகெனா வாய்மலர்ந் தான் பார்த்து. | 7 |
485 |
கோசிகனெஞ் சுட்கிக் குறுமதியச் செஞ்சடையான் வாசமலர்த் தாள்வணங்கி வாழ்த்திநின்று-வாசவன்முன் மாவசிட்டன் வாய்மொழிக்குத் தான்மாறாச் சொற்றமுதல் யாவையுஞ்சொற் றானங் கெடுத்து. | 8 |
486 |
பின்னமலன் பேதாய் பெரிதிழைத்துந் தீங்கிறைக்கு நின்னெணமுற் றாயிலையே நிமனத்து-ளுன்னிநனி வென்றியையார் தோல்வியையார் மேயினர்க ளீண்டுரைக்க வென்றியம்ப வெய்தியகத் தீடு. | 9 |
487 |
விச்சுவா மித்திரப்பேர் மேயமுனி வீழ்ந்திறைஞ்சி நச்சுவாய்ப் பாம்பணிந்த நாயகனே-பிச்சனே னண்ணலரிச் சந்திரன்ற னாசில் குணஞ்செயலை யெண்ணியறி யாதிகழ்ந்தே னேற்று. | 10 |
488 |
வேத முணர்வசிட்டன் வென்றவன்யான் றோற்றவனென் மாதவத்திற் பாதி மகிழ்ந்தரகற்-கீதலுட னன்றவனெற் கீந்த வரசுரிமை யாவுமவற் கின்றளித்தல் செய்தனனென் றான். | 11 |
489 |
காய்ச்சியபொன் னாணியினைக் கன்னத்தி லிட்டாங்குப் பேச்சதனைக் கேட்டுப் பெரிதுருகி-மாச்சுரும்பார் தாரதிப னேற்றோர்குத் தந்ததுபின் வாங்கிவீ *ழே னாரளற்றி லந்தணவென் றான். | 12 |
490 |
பார்த்திவகேள் யானோ படர்ந்தபடர்ந் தாங்குதவஞ் சீர்த்தவமே விட்டுன் செழுநிலத்தைக்-காத்தமர்வேன் மான்வசிட்ட னோடுரைத்த வஞ்சினத்தா லுன்முறைமை யான்மதித்துச் சோதித்தே னீண்டு. | 13 |
491 |
ஆளுகநின் னாடென் றருந்தவத்தோன் சொற்றலுங்கோ னாளிழிஞற் சாயீமங் காத்திருந்தேன்-காளையொடு மாதைமறை யோகுவிற்று மாநிலமேல் யானாள் *னீதியன்று நீயாள்கென் றான். | 14 |
492 |
அந்தவுரை கேட்டணுகி யங்கியான் முன்பிறைஞ்சி மைந்தனையு மங்கையையு மெறகுவிற்ற - னிந்தனையோ காவலவன் னோர்பொருட்டுக் காசினித்தே வாய்க்கொண்ட வாவணமீ தென்றிட்டா னாங்கு. | 15 |
493 |
காலனுமக் காலமலன் காலணைந்து தாழ்ந்தேத்திக் கோலமுடி வேந்தைக் குறித்திவணீ - சீலமிலா நீசனுக்கா ளாவையென்று நீசனாய்த் தோன்றியுனை யரசறக்கொண் டேன்முறியீ தாம். | 16 |
494 |
நீயிருந்து காத்த நெடியசுடு காடனைத்தும் பாயமகச் சாலையே பாரென்ன - வீயுடலைத் தீக்குமிடஞ் சொன்ன திறந்திகழக கண்டடைந்தான் வீக்குகழற் காலோன் வியப்பு. | 17 |
495 |
செம்மலைக்கண் டன்பாற் றிகழுமயோத் திப்பதிசேர்ந் திம்முனிவ னோர்தவமு மேற்றாண்டு - செம்மைமுடி தாங்கி யெமதுபதஞ் சார்கவந்தத் தென்றிறைபின் பாங்கின் வலாரிமுகம் பார்த்து, | 18 |
496 |
நீயு முனிவர்ரு நீள்கா சியர்பதியும் வாயிலயோத் திப்பதியிம் மன்னனுடன் - போயிவற்கு மாமகுடஞ் சூட்டி மகிழ்ந்துறையுள் சேர்கவெனா வாய்மலர்ந்து போனான் மறைந்து. | 19 |
497 |
சொற்றபணி தாழ்ந்து சுடர்முடிக்கட் கொண்டுநின்றார் கற்றடிவேற் கைம்மகவான் முன்னோர்கண் - மற்றைக் கடவுளர்தஞ் சார்பு கலந்தனர்போ யந்தச் சுடலை யகன்று துனைந்து. | 20 |
498 |
கூர்த்தவிரு ணீங்குதலுங் கோபதிமா யோகியர்சொல் வார்த்தை மறுப்பஞ்சிக் காசியர்மன் - னேர்த்தகொடித் தேரிவர்ந்து கோசலர்கோன் றேவிசுத னோடமைச்சன் சாரவவர் தாமுமுட னூர்ந்து. | 21 |
499 |
காசிபதி சேனை கருங்கல்போன் முன்னடப்பத் தூசிகுடை யாதபத்தாந் துன்பமற-மூசியெழ வார்முரச மார்ப்ப வளநகரை நீத்தணைந்தான் வாரணவா சிக்கரையின் வாய். | 22 |
500 |
அந்நதிநீ ராடி யகன்றங் கனைவருடன் றென்ன யமுனை சிவணியதி-னன்னருற மூழ்கித் தணந்து முதிர்பவத்தின் மூலத்தைப் போழ்கங் கையையடுத்தான் போந்து. | 23 |
501 |
சேர்ந்து விதியுளியத் தீர்த்தத்திற் றோய்ந்திறைவன் றீர்ந்திந் திரன்முதலோ ரோடுதில்லம்-வார்ந்தகிரி மண்டு தடம்பலவு மற்றிகந்து கோமதியின் வண்ட லிடையிறுத்தான் வந்து. | 24 |
502 |
கூட்டிக் கொடுபதியைக் கோவணனாங் குற்றதிறங் கேட்டுவகை பூத்துக் கிளர்கடற்பா-லோட்டநதி போலரையர் தானை புரசனங்கள் போந்திறையைக் காலிறைஞ்சி வீழ்ந்துநின்றார் கண்டு. | 25 |
503 |
பொன்னகர்க்கோ னாதியரும் போதவிரு சேனையுட னந்நதிவிட் டேகி யயோத்திநகர்-மன்னவன்பொற் கோயில் குறுகிக் கொடித்தே ரிழிந்துபுக்கான் பாயமணி மண்டபத்தின் பால். | 26 |
504 |
வாய்மையரிச் சந்திரனை மாமகுட மைந்தவித்தோர் வாய்மலர்ந்து வாழ்த்தெடுப்ப வாசவன்றன்-சேயமலர்க் கையெடுத்துச் சூட்டிக் கரைந்தாசி போய்ப்புகுந்தா னையவம ராவதிக்க ணாங்கு. | 27 |
505 |
ஆசியுரைத் தந்தணரு மாங்ககலக் காதிமகன் கோசலர்கோ மானே கொடுத்தனன்கொண்-மாசிலுனக் கென்றவத்திற் பாதி யெனவுதக மங்கையெடுத் தன்றெவருங் காண வளித்து. | 28 |
506 |
யானறியா துன்னை யிகழ்ந்தவெலா நீபொறுப்பாய் மோன வெனாஅ முனிவசிட்டற் - கானுவுரை சொற்றிறையைத் தேற்றிமகன் றோகையொடு மந்திரியை யுற்றனன்கான் வாழ்த்தி யுவந்து. | 29 |
507 |
மின்னு மணிக்கவரி வீசவரிச் சந்திரன்பின் பொன்னணைமேல் வீற்றிருப்பப் பூமகன்சேய் - தன்னைமற மந்தணர்க்கு மாமோ வெனப்பரவிக் கேட்டனனாற் கொந்தவிழ்தார்க் காசியர்தங் கோன். | 30 |
508 |
தோய நிலத்தியல்பாந் தொல்குணமே கௌசிகனுக் காயதெனா மாவசிட்ட னாங்கறைய - நீயெனக்கோ தன்னான் வரலாறென் றண்ணலடி தாழ்ந்துரைப்பச் சொன்னான் முனிவனிது சூழ்ந்து. | 31 |
509 |
கன்னல் வயலுடுத்த காசிபதி நீகேட்டி பொன்னலர்வாழ் வோன்மரபிற் போந்தகுசன் - றன்னெழுவாய் மைந்தன் குசற்குக் கிரிவிரிச மாநாடு தந்துகுச நாபற்குத் தான். | 1 |
510 |
செந்நெலுயர் கௌசாம்பித் தேயம் வதூர்த்தனுக்குத் தன்னிகரில் வாரணமுந் தார்வசுவுக் - கன்னமமர்ந் தார்வனசம் பொய்கைக் கலரும் வசுமதியு மார்வமுட னேயளித்தா னால். | 2 |
511 |
அங்கவரிற் கௌசாம்பி யாள்குசநா பற்குதித்த மங்கையர்தா நூற்றுவரோர் வாசமலர்ப் - பொங்கரகத் தாடச் சமீரணன்கண் டாயிழையீ ரெற்குநலங் கூடிக் கொடுத்திரென்றான் கூர்ந்து. | 3 |
512 |
எங்கள் பிதாவறிய வெம்மை மணம்புரிந்தா லங்குனைச்சேர் வோமென் றவரியம்பப்-பொங்குசினங் கொண்டு முதுகொடியக் கோதையரை மோதிநனி மண்டனில்*வீழ் வித்தகன்றான் வாயு. | 4 |
513 |
வாளிகழுங் கண்ணார் மனையடைந்தீன் றோற்குரைப்ப மீளியினைந் தியார்க்குமது விள்ளாது-சூளியென்போன் பெற்ற பிரமதத்தப் பேர்மகற்குப் பேதையரை நற்றமுறத் தந்தா னயந்து. | 5 |
514 |
பின்னர்க்குசநாபன் பேணிப் புரிமகத்தே நன்னரெழிற் காதியெனு நாமனுற்றா-னன்னவற்கு நவ்விவிழிக் கௌசிகப்பேர் நந்தனிக்குப் பின்னுதித்தான் றெவ்விகுக்குங் கௌசிகனாஞ் சேய். | 6 |
515 |
தேசிருசி கத்தவனைச் சேர்ந்தவன்வெஞ் சாபத்தாற் கோசிகைதான் கோமதிப்பே ராறானாள்-கோசிகனாம் வேந்த னொருஞான்று வேட்டைசெய வோர்விபினஞ் சேர்ந்துழைபின் னோடித் திரிந்து. | 7 |
516 |
தானையொடு சோர்ந்து தவஞ்செய் யிடம்புகுத யானிரங்கி வெம்பசியை யன்னவற்குந்-தேனுவினாற் றீர்த்தபின்ன ரிக்காம தேனுவைத்தா வெற்கென்று பார்த்தறைந்தான் வீழ்ந்தென்பதத்து. | 8 |
517 |
யானுரிய னல்லே னிதற்கெனலுஞ் சேனையொடு கோனந்தக் கோவை வளைந்துவடத்-தானிமிழ்ப்பா* னேகுதலுஞ் சீறி யிகுத்துப் படையனைத்து நாகமிசை யுற்றதவ்வா னன்கு. | 9 |
518 |
அங்கரசன் மைந்தரென தாவி கொளக்கருதிப் புங்கமழை போந்து பொழிந்தனர்யான்-வெங்கனலி சிந்தவிழித் தேநோக்கச் செத்தொழைந்தார் நூற்றுவருஞ் சிந்தைகொதித் தேந்த றெரிந்து. | 10 |
519 |
மேவிக் கொடும்படைகள் விட்டனனென் மீதுகண்டு தாவிலெறுழ்த் தண்டத்தை நாட்டினன்யான்-றூவுசர மாதிச் சுதனமெலா மாங்கதுதா னுங்கிடலு மேதிவனை வெல்வதியா மென்று. | 11 |
520 |
மீண்டு தனதுபதி விட்டனைத்துங் கீழ்பாலின் பீண்டுந் தவத்தை யியற்றிடலுந்-துண்டசனிச் செங்கரத்த னேவுந் திலோத்தமையாற் றீர்ந்துதவ மங்கவளைப் பின்புசபித் தாய்ந்து. | 12 |
521 |
தென்றிசையி னேகிச் சிவன்சே வடிபடர்ந்து நன்று தவமுஞற்ற நாதனணைந்-தன்றவற்கு வேண்டும் வரமளிப்ப வீறினனந் நாட்பிருது மாண்ட மதலைதிரி சங்கு. | 13 |
522 |
மெய்யுடனே விண்புகுதல் வேண்டுமரு ளென்றலும்யா னையவஃதொல்லா தெனவறையத்-துய்யவனே யெய்துவனென் னெண்ணத்தை யின்னே யடைந்துபிற செய்தவர்பா லென்றான் றிரிந்து. | 14 |
523 |
இன்னா துரைத்தமையா னீபுலைய னாகெனயான் சொன்னேன் புலையனாய்த் துன்பெய்தி-யென்னோடு மாறுற்று நிற்குமந்த மாதவனைக் கண்டுரைப்ப வீறும் விமானம் விளித்து. | 15 |
524 |
கள்ளவிழ்தார்க் காவலனே யேறிதன்மே லென்னவிறை பொள்ளெனவே றிப்புகலும் பொன்னாடு-தள்ளிரனால் வானவர்கள் வீழுமவன் மாமுனிவற் கோலமிட மீனுலகில் வேந்தைவைத்தான் வேர்த்து. | 16 |
525 |
என்னோ டெதிர்த்தவ் விருடி யெடுத்தவெலாங் கொன்னே யழிந்திடலாற் கோசலர்தம்-மன்னிவன்பா லின்றிழைத்தும் வெவ்விடர்க ளெய்திலனால் வென்றியெனா மன்றவிசைத் தான்வசிட்டன் மற்று. | 17 |
526 |
மற்றதனைக் கேட்டெழுந்து வாரணவா சிக்கிறைவன் செற்றபுல வேந்தர் திறமனைத்து-நற்றவநீ யல்ல தவனிமிசை யாரறிய வல்லரெனாச் சொல்லிப் பணிந்தான் றுதித்து. | 18 |
527 |
திங்களுறைந் தாங்குத் திகழ்கா சியரதிபன் றுங்க வசிட்டற் றொழுதுகொண்டு-மங்குலுற ழங்கையரிச் சந்திரனை யன்பிற் றழீஇவிடையூர் பொங்குபடை யோடணைந்தான் போய். | 19 |
528 |
வள்ள லயோத்தியிற்பின் மாமடங்க லாசனமேல் வெள்ளொளிமுத் தின்கவிகை மின்னவமர்ந்-தள்ளிலைவேற் கையரசர் மந்திரியர் காலிறைஞ்சிப் போற்றமுறை செய்திருந்தா னின்பந் திளைத்து. | 20 |
529 |
வாழ்த்து வேதஞ் சிறக்கமனு நீதி விளங்கவிப்பா ராதங்க மாறவிசும் பாஞ்சொரிக-வோதுஞ்சொற் றாமவரிச் சந்திரன்ற னற்சரிதங் கற்குநருந் தாமமர்க வோங்கித் தழைத்து. | 21 |