1. | கடவுள் வாழ்த்து | 31 (1-31) |
2. | திருநாட்டுச்சிறப்பு | 60 (32-91) |
3. | திருநகரச்சிறப்பு | 90 (92-181) |
4. | புராண வரலாறு | 46 (182-227) |
5. | 1-ஆவது தலவிசிட்டவத்தியாயம் | 48 (228-275) |
6. | 2-ஆவது, தோணிபுரமானவத்தியாயம். | 41 (276-316) |
7. | 3 -ஆவது. பிரமபுரமானவத்தியாயம். | 50 (317-366) |
8. | 4-ஆவது. திருவிழாவத்தியாயம் | 81 (367-447) |
9. | 5-ஆவது. பூதவிமோசனமானவத்தியாயம். | 45 (448-492) |
10. | 6-ஆவது. ஸ்ரீகாளிபுரமானவத்தியாயம். | 61 (492-553) |
11. | 7 -ஆவது. வெங்குருவானவத்தியாயம். | 39 (554-592) |
12. | 8-ஆவது. காகவிமோசனமானவத்தியாயம். | 44 (593-636) |
13. | 9-ஆவது புகலியானவத்தியாயம். | 39 (637-675) |
14. | 10 - ஆவது. சிரபுரமானவத்தியாயம். | 24 (676-699) |
15. | 11-ஆவது. குருத்துரோகவிமோசனமானவத்தியாயம். | 50 (700-749) |
16. | 12-ஆவது. சண்பையானவத்தியாயம். | 34 (750-783) |
17. | 13 - ஆவது, கொச்சையானவத்தியாயம். | 37 (784 -821 ) |
1 |
பிரமேசர் பூத்தபேரொளியாயுயிர்க்குயிராயகண்டிதமாய்நிறைவாய்நீங்காப் பேர்பூத்தகுணங்குறிகளிகந்தபழமறைக்கொழுந்தாய்ப்பெருமைசான்ற பார்பூத்தபரையினொடுகலந்துகுருவாதிமும்மைப்படிவமாகிச் சீர்பூத்தகாழிநகரமர்ந்தபிரமேசனையாஞ்சிந்தைசெய்வாம். | 1 |
2 |
திருநிலைநாயகி ஒருநிலையேயுலகனைத்தும்பொருணிலைசேர்வெண்டிருநீறுயுர்ந்துவேதம் தருநிலையால்வளர்ந்தோங்கவிரங்குமருமறைக்குகுழவிதன்பாலன்பால் பெருநிலைசேர்லைக்கண்ணுஞ்சிலைக்கண்ணுமிரங்கியவெம்பிராட்டியன்பந் கருநிலைதீர்த்தருள்காழித்திருநிலைநாயகிதுணைத்தாள்கருத்துள்வைப்பாம் | 2 |
3 |
பெரியநாயகர் அரியநாயகனாரணனாயகனணங்கராமுடிவாய்ந்த கரியநாயகன்காணருநாயகன்கவுணியமுனிகாட்டத் தெரியுநாயகன்றோணிமேலோங்குயர்தெய்வநாயகன்காழிப் பெரியநாயகன்கைமணிநூபுரம்பிறங்குசேவடிபோற்றி | 3 |
4 |
பெரியநாயகி அகலினாயகிமணியெனச்சுடரையுய்த்ததற்கருமறைக்காட்டின் இகலினாயகிலாண்டால்கியமுதலிடத்திருந்தொருகோடி பகலினாயகியாதியைப்படைத்துநீள்பழமறைக்கொழுந்தாய் புகலினாயகிபெரியநாயகிமலர்ப்பொன்னடித்துணைபோற்றி | 4 |
5 |
சட்டைநாதர் துங்கமாமணித்தூணில்வந்திரணியன்றோள்வலிதனைவாங்கும் சிங்கவேற்றுரியரைக்கசைத்துலகெலாந்தேர்ந்தளந்தவன்மேனி அங்கம்யாவுமோர்கதையதாய்க்கொண்டதளங்கியாப்புனைகாழிச் சங்கவார்குழைச்சட்டைநாயகன்றுணைத்தாமரைச்சரண்போற்றி | 5 |
6 |
ஆபத்துக்காத்த பிள்ளையார் பூத்தபிள்ளையனத்தன்புகழ்நிலாக் கோத்தபிள்ளைமதியணிகோமகன் மூத்தபிள்ளையைமுன்னினராபத்துக் காத்தபிள்ளையைக்கைதொழுதேத்துவாம் | 6 |
7 |
குமாரக்கடவுள் அலமடையுங்கொடுஞ்சூரன்குலமடியப்புள்ளினங்களமரைவேட்ட பலமடையப்பெரும்பூமிபலமடையக்கரும்பகட்டிற்படருங்கூற்றன் வலமடையுங்கரம்வருந்தாநலமடையப்பிரமாதிவானோர்தங்கள் தலமடையத்தனதுகரதலமடையும்வேலெறிந்தோன்சரணம்போற்றி | 7 |
8 |
திருநந்திதேவர் ஆதியிடையீறில்லானருளேகண்ணாகநின்றோனமலன்பாத மீதிலிறைஞ்சிடநணுகும்வாசவனான்முகனெடியோன்மிடைந்தபோது போதிர்விலகுதிரெனலாற்றருமலரம்புயந்துளபம்பொதிந்ததெய்வத் தீதின்மணம்படைத்தமணிப்பிரம்புடையதிருநந்திதிருத்தாள்போற்றி | 8 |
9 |
கலைமகள் கருமழைத்தண்டுளிபொழியுங்காலமதியொளியுமொளிகாலுமுத்தின் பருமணிமாலையும்பயவரதமும்புத்தகமும்வடப்பளிங்குந்தாங்கி முருகுயிர்க்குநறுந்தவளமுளரியாலயத்திருந்தமுதுபிராட்டி இருபதமுங்கடைப்பிடித்தேனெப்பதம்வாராதபதமெனக்குமன்னோ | 9 |
10 |
திருஞானசம்பந்தசுவாமிகள் குழுவேறச்சமணமூகரழலேறவிடுத்ததனைக்கூடற்கோமான் வழுவேறுமுடலேறவுடன்முரணுமனமுரணுமாற்றியன்னார் கழுவேறவெண்ணீறுமைந்தெழுத்தும்விரித்துலகைக்கதியிலேற்றி மழுவேறுங்கரத்தான்றனருளேறுங்கவுணியர்கோன்மலர்த்தாள்போற்றி | 10 |
11 |
திருநாவுக்கரசுசுவாமிகள் விடற்கரியகொடும்பாசத்தொடரறுத்தைம்புலனாயவேழஞ்சீறி அடற்கரியன்மும்மதமுமமணருடைத்துன்மதமுமழியநூறித் தடக்கடலைக்கன்மிதவையாலுழக்கிச்சிவஞானதானம்வீசும் கடக்களிறென்றுலகேத்தவருநாவுக்கரசர்பதங்கருதிவாழ்வாய் | 11 |
12 |
சுந்தரமூர்த்திசுவாமிகள் இருக்காதிமறைகாணாவிணைத்தாளைமறலிமூடியிடறுந்தாளைத் திருக்கேள்வன்விழிபுனைந்தசெழுந்தாளையரக்கன்முடிதிரித்ததாளை ஒருக்காலுக்கிருக்காலாய்ப்பரவைமனையகந்தேடியுறுமாசெய்தோன் மருட்தாழாதலர்ந்ததுணைமலர்த்தாளையகத்தாழவணக்கஞ்செய்வாம் | 12 |
13 |
மாணிக்கவாசகசுவாமிகள் விலங்குமனத்தினர்கடுக்கையுடுக்கையர்கார்மயிற்பீலிவிளங்குகையர் புலம்புமொழிக்கட்டறுத்துநிறைதிருவாசகவமுதப்புணரிதேக்கி இலங்குமதித்திருக்குலத்தான்பிறப்பறுத்துமணிமன்றத்திறைதாள்சேர்ந்தோர் அலங்குசினைப்பொழில்புடைசூழ்வாதவூரடிகளடியகத்துள்வைப்பாம் | 13 |
14 |
சண்டேசுரநாயனார் எந்தைதாள்முறுவாரிருவினைத்தாளறுக்கவெனா முந்தையாரணம்புகன்றமுதுக்குறைவானதுபொதிந்த சிந்தைதானரனடிக்கேசெறிவித்துச்சினந்துவரும் தந்தைதாளோரிரண்டுந்தடிந்தவன்றுடலைக்கொள்வாம் | 14 |
15 |
அறுபத்துமூவர் அத்திமான்கலைமானைந்தருநிழன்மானயில்விழிக்கஞ்சனமமைத்த புத்திமானென்றேகடுவடையாளம்பொறித்தகந்தரமுளபெம்மான் சத்திமான்காழித்தடவரையெம்மான்றன்னடிநீழலிற்சேரும் முத்திமான்றனைச்சேரோரறுபத்துமூவர்தாண்முடிமிசைவைப்பாம் | 15 |
16 |
பட்டினத்துப்பிள்ளை. துறவாதமும்மைவினைத்தொடர்பரிந்துமையல்விழிக் குறவாயபொருணீக்கியுழுவலன்பிற்கழுமலர்த்தார்க் கிறவாமும்மணிமாலையியற்றியருள்வழிநின்று பிறழாதபட்டினத்துப்பிள்ளையிணையடிபோற்றி. | 16 |
17 |
அட்டவைரவர். துண்டமதிபுனைந்தகல்விண்டோய்சிகரத்தினிதமர்ந்த அண்டர்பிராங்கணத்தலைமையசிதரங்கன்காபாலி சண்டனுருருக்குரோதன்சங்கரன்பீடணன்சீர் கண்டருளுன்மத்தனிவர்கழற்கமலம்பரவுதுமே. | 17 |
18 |
காலவித்தரசர் சுருதிவழியுலகனைத்துந்தனிக்கவிகைநிழற்றிமுதுதோணியர்க்கு மிருதிபுகழ்கயிலைவரைச்சிகரமுங்கோபுரமுமெயில்விதமுமன்பால் கருதியெனைப்பலபணியும்புரிந்துபிறவாநெறியைக்காணிகொண்ட பருதிகுலத்தவதரித்தகாலவித்துமகிபதிதாள்பணிந்துவாழ்வோம். | 18 |
19 |
குணதலைப்பாடியுடையார் கலைப்பாடியூர்ந்தாற்போற்கண்டுணர்ந்துகாழிநகர் மலைப்பாடிவளவென்னாமாணிதியாலமைத்துவினை அலைப்பாடியுழலாமேயமலனடியடைந்தகுண தலைப்பாடியுடையாரென்றனையாளவுடையாரே. | 19 |
20 |
பரிசாரத்தொண்டர்கள். தாயினுமன்னுயிர்க்கினியசண்பைன்நகர்க்காவலன்வாழ் கோயின்மணிமுன்றிறொறுங்குயின்றதுராலகற்றுமுது வாயினரையீறாகவழுவில்பரிசாரகணம் ஆயினசீர்த்தொண்டர்துணையடியெமதுமுடிவைப்போம். | 20 |
21 |
வாழ்த்து. தெண்ணீர்குதட்டும்புயறிங்களின்மூன்றுபெய்க எண்ணீரரசன்றிருக்கோன்முறையேந்தியாள்க பண்ணீரறநீடுகநன்னெறிபல்கவெங்கோன் வெண்ணீறொடொரைந்தெழுத்தோங்குகமேதினிக்கே. | 21 |
22 |
நூல் செய்ததற்குக் காரணம். பண்டேபழிச்சாமையினாற்பவம்பற்றினேமி னுண்டேயெனவாழ்த்தினுமேற்பவமுற்றிடேமால் வண்டேய்பொழில்வேணுபுரத்தானையிம்மாண்பில்யாக்கை கொண்டேதுதிப்பாமிஃதெம்முடைக்கோளதன்றே. | 22 |
23 |
வேறு நாதனாலருணந்திபாற்றெளிசனற்குமரன் வாதராயணற்குரைப்பமற்றவன்புகல்வழியே சூதனோர்ந்ததைநைமிசாரணியம்வாழ்துகடீர் மாதவர்க்கெலாம்வழங்கியபுராணமூவாறில் | 23 |
24 |
முறைதரும்பவுடிகத்துமுன்கேத்திரகாண்டத் தறைதருந்தனியாதிபாகத்தினுங்காந்தத் திறைதரும்பரிச்சேதமூன்றாவதனிடத்தும் பொறைதருந்திருப்புகலிமான்மியமிதுபுகலின் | 24 |
25 |
இனையகாதையீண்டியம்பவும்வல்லனோதருமை முனைவனன்புசால்சிதம்பரநாதமாமுனிவன் வனையுமாரியமொழிவழியருந்தமிழ்வகையால் எனைவிளம்புகென்றோதலுமிதுதுணிந்தனென்யான் | 25 |
26 |
அவையடக்கம் விண்ணலங்கொள்காரெழிலிநீர்விரிதிரையுடுத்த மண்ணலங்கொளமஞ்சமமாயினவல்லோர் எண்ணலங்கொள்பேரவைபுகுந்தினியவாய்க்காழி அண்ணலஞ்செவிக்காவனவளியனேன்புன்சொல் | 26 |
27 |
வேறு பொருமாலேற்றுக்கொடியுயர்த்தபுகலிபெருமான்புகழையளந் தொருநான்மறையும்வரம்பறியாதுழலவேயுமுரைப்பெனெனத் தருமாதரவால்வினையேனுஞ்சமைத்தவாறுவான்கிளைத்து வருநாண்மதியைவருகென்றுமகவொன்றழைத்தவாறேயால் | 27 |
28 |
குறுமையிலையேனெடுமையதன்குணமாரறிவாரெனதுமொழிச் சிறுமையிலேயேன்முதுமைமொழித்திறமெவ்வாறுபுலப்படுங்கார் உறுமையிழைத்தலிருட்பிழப்பாருறையிங்கிலயேலுரகன்முடிப் பொறுமைநிலத்துக்கதிர்த்திங்கட்புத்தேட்பொலிவும்பொலிவின்றே | 28 |
29 |
பொற்காலகத்தைம்பேரமளிப்பொறிவாய்விளக்கிட்டாயிழையார் நற்கால்வருடமகிழ்வார்முனடுநாளிருளின்மின்மினியிட் டொற்காவரிபுற்குடம்பையுட்பேட்டுடனேமகிழுங்குரீஇக்கணம்போல் சொற்காவலர்செந்தமிழியன்முன்சிறியேன்புகலத்துணிந்தேனே | 29 |
30 |
சிறப்புபாயிரம் -- சிதம்பரநாதமுனிவரியற்றியது மாத்தவருஞ்சிலையாகமணிநாணும்பணியாகவான்காத்தின்பம் பூத்தவருந்தகைவாழுஞ்சீகாழிமான்மியத்தைப்புலமைசான்ற நாத்தவரும்வியந்ததமிழ்புனைந்தருணாசலக்கவிஞனாளுமன்பர் ஏத்தவருங்குருலிங்கசங்கமசந்நிதியிலரங்கேற்றினானே | 30 |
31 |
செவியுணருந்தமிழ்க்கடல்வாயநாமணிமந்தரநிறுவித்தெளிசாலன்பின் அவிரொளியமண்வடந்தொட்டான்றமைந்ததொல்கேள்வியறிவாலீர்த்துப் புவிபுகழுமாலருணாசலமதித்துச்சீகாழிப்புராணமென்னும் கவியமுதந்தனையளித்தான்புலவரெலாமுண்டுமனங்களிக்கமாதோ. 31 |
32 |
பொன்னீரிமையப்பொலன்குவட்டிற்புவியையிழைத்துக்கலியிருடீர்த் தின்னீர்முளரிப்பண்ணவனீன்றிருள்வாய்ப்பாந்தண்முடிவளர்த்தி முன்னீருடுத்தநிலமகளைமுறையான்மணந்தசெம்பியர்வாழ் சொன்னீர்வளமைபழுத்ததமிழ்ச்சோணாட்டணியீண்டுரைசெய்வாம். | 1 |
33 |
வேறு. முடங்கல்வாயகலமேந்தினானுருவெனமுதுவான் இடங்கலந்துசென்றிமிழ்திரைமுகட்டுநீராழி அடங்கமேய்ந்துபாட்டளிமுரலல்லியங்கமலத் தடங்கணானுருக்கொண்டுமீண்டனசலதரங்கள். | 2 |
34 |
விழையுமார்கலியிறைமகனீண்டுமெய்யன்பு தழையுமீயுயர்சையமால்வரைத்தடங்குவட்டில் குழையினீண்டகட்குலமனைக்கிழத்தியைக்கூவும் உழையர்போன்மெனவுற்றனமழைக்குலமொருங்கே. | 3 |
35 |
வகுத்தகார்மகண்மறிதிரையாடினண்மலர்த்தா துகுத்தவார்குழல்விதிர்த்தெனவுதறிவள்ளுகிரான் மிகுத்துலாமயிர்க்காறொறுமுளர்ந்தெனவிரிந்து பகுத்தவால்வகிர்காட்டினமின்னலின்பரப்பே. | 4 |
36 |
அண்ணன்மால்வரையலர்முலைக்கட்டிரையாடை வண்ணமாகவெள்ளருவிவேய்ந்துளநிலமகளைக் கண்ணழன்றிருட்களிறுகைத்தைங்கணைக்காளை தண்ணலங்கணைபெய்வதொத்தனமழைத்தாரை. | 5 |
37 |
மண்டிலம்படுமணிதழீஇநித்திலம்வரன்றித் திண்டிறற்கரிமருப்பெறிந்தகிற்றுணிசிதறிக் கண்டிரண்டவேயடர்வரைவளனெலாங்கவர்ந்து கொண்டிழிந்தனகறங்குநீர்க்கோதைவெள்ளருவி. | 6 |
38 |
அறனெலாமிழைத்துலகருளன்னையையடல்சேர் விறல்கெழுங்குவட்டிமயவேந்தளித்தெனவிண்கீண் டுறநிவந்தமால்வரைதருசெவிலிபோன்றொழுகிப் புறவமேயதுநளிர்புனற்புண்ணியப்பொன்னி. | 7 |
39 |
குயின்றமூரலுண்டகட்டிருபுடைபுறங்கோப்பு அயின்றமாக்களிற்காந்தள்கைம்மறிப்பவாண்டொருவி எயின்குழாங்களாறலைத்ததாறலைத்ததென்றிரையப் பயின்றபல்பொருண்மடுத்தகன்பாலைவிட்டதுவே. | 8 |
40 |
அள்ளற்பூம்புனல்வெளியபாலொளியினாலரனாய் உள்ளத்தாழியுள்வெண்ணெய்வாய்மடுத்துமாலுருவாய் வள்ளத்தாமரையொடுவிராய்மலரயனுருவாய் வெள்ளத்தாழ்புனல்வியன்பணைமருதமேவியதே. | 9 |
41 |
பாட்டகன்றிரைத்தலைமகன்குலமனைப்பன்னி வேட்டகம்பெறமருதமான்விரியிதழ்க்கமல வீட்டமெல்லிலைத்துளியினீராஞ்சனமேந்திக் காட்டவெண்மணற்புன்னையங்கானலெய்தியதே. | 10 |
42 |
முரண்டடஞ்சினைப்புன்னைமுத்திறைத்துமொய்த்தலர்ந்த திரண்டகாலெனநெய்தலின்விழிகளாற்றெரித்துப் புரண்டவெண்டிரைக்கைகொடுபுல்லியப்புணரி அரண்டனிற்புகுந்தகலிடம்பொலிந்ததையன்றே. | 11 |
43 |
வேறு. அள்ளற்றண்புனல்பாய்மதகாத்தொலி கொள்ளப்பண்முழவொத்திரைகொள்கைதான் மள்ளமாக்களிரட்டுமருதநீள் வெள்ளநீர்ப்பறைவீங்கொலிமாய்க்குமே. | 12 |
44 |
நானமும்புழுகுந்நறுஞ்சந்தமும் தானவாரணக்கோடுந்தலைசிறந் தூனமின்மணியும்பொனுமுய்த்தலால் மானவாணிகமாக்களுமானுமே. | 13 |
45 |
அணையுலாந்திரையாற்றிலெலாமடுத் துணையெலாமலர்ச்சோலையெலாமகன் றிணையெலாநறுஞ்சேயிதழ்க்காவியம் பணையெலாஞ்சென்றுபாய்ந்ததுவெள்ளமே. | 14 |
46 |
ஏறுபைம்புயலேழுங்கலங்கிய ஆறுதானுங்கலங்கியருட்புனல் ஊறுகங்கையுறுங்குடிமன்னர்சொல் தேறுநீரிற்றெளிந்ததுதண்புனல். | 15 |
47 |
அயர்விலாவொலியொன்றெழுத்தாயஃ துயிருறுப்புயிர்மெய்யெனவோதல்போல் இயல்குளங்கிடங்கேரிதண்காலெனப் பயிலுநாமம்படைத்தனவாரியே. | 16 |
48 |
உழுநரோதையுமொள்விசிவார்கிணை தெழிநரோதையுமிந்திரதெய்வதம் தொழுநரோதையுந்தூநறைவாய்மடுத் தெழுநரோதையுமேழ்களலோதையே. | 17 |
49 |
கயத்துவாய்ப்பகடோச்சியகாளையர் நயத்தவேர்செலநல்குமிசைத்தமிழ் பயக்குமேகக்குழாத்திடைப்பண்ணமைத் தியக்கர்பாடுமிசையமுதொக்குமே. | 18 |
50 |
இலங்குமள்ளர்பிறையிரும்பின்னிழல் மலங்குகொல்லெனமாதரலமரக் கலங்கிநோக்கினர்கண்ணிழல்சேலென விலங்குகாளையர்வீழ்ந்துநகுபவே. | 19 |
51 |
ஏய்க்கும்பன்மொழியீட்டத்தைப்பேர்முத லாய்ப்பபகுத்தவையாக்குநர்போல்வயல் வாய்க்குழீஇயபன்னாறுகள்வாங்கினர் போய்க்கரும்புலத்தூன்றுவர்பொற்பவே. | 20 |
52 |
பெருமனைக்கண்வளர்ந்தோர்பெருந்தகை உறுமனைக்கணின்றோங்கியமாதரின் மறுபுலத்திடைமன்னியநாறெலாம் சிறுபசுங்கிளிபோனிறஞ்செய்தவே. | 21 |
53 |
கோலிநாட்டமுங்கொம்மைவதனமும் ஏலுமாதரையிண்டையுநீலமும் போலிகாட்டினவென்னப்புலம்புநீர் வேலிவாய்க்களைவீசியெறிபவே. | 22 |
54 |
உள்ளுகாமமெனக்கருவுற்றுலா எள்ளுமூடலெனநெறித்தன்னலார் கள்ளநீத்தகலவியிற்பைங்கதிர் கொள்ளமல்கியந்நாணிற்குனிந்தவே. | 23 |
55 |
பொருமழுப்படைப்பிஞ்ஞகன்பூங்கழற் குருகுசிந்தையினோங்கிவளைந்தவை பெருகுதொண்டர்திறத்தவன்பேரருட் டிருவிளைந்தெனச்செந்நெல்விளைந்தவே. | 24 |
56 |
எழினல்லாரியலாய்ந்தினகல்வியின் ஒழுகுமின்சுவையிற்பயனோங்குபு கெழுதடம்பணைவாய்க்கிளர்செந்நெலின் குழுவனைத்துங்குயங்கொடுகொய்வரால். | 25 |
57 |
அரியுநெல்லரிசுமு்மையிட்டாரழல எரிவிழிப்பகட்டேற்றின்மிதித்துவை பரியநீத்தநெற்பற்பலகுன்றென உரியபூமியுவப்பக்குவிப்பரால். | 26 |
58 |
வழுவகன்றுமதுரித்துமென்பொருள் தழுவிநின்றசொற்சால்கவியீட்டம்போல் அழிவிலாநெற்குவையையலங்கொளி பொழியுமாடத்திற்போந்துதொகுப்பரால். | 27 |
59 |
தவர்க்கும்வானப்பிரத்தர்க்குந்தன்னிலை யவர்க்கும்வன்னியர்க்கும்மமுதூட்டலால் எவர்க்குமின்பந்தனித்தனியேதரும் சுவர்க்கமென்பதுதொன்மனைமாலையே. | 28 |
60 |
வேறு. தளர்வருமன்னஞ்செந்நீர்தனைத்தரத்தந்தவூன்கொண் டிளகியபொறியாலாவியிசையவெவ்வுலகுமுண்டாய் அளவறுமின்பந்துய்க்குமளப்பருங்கடவுளாட்சி வளவநாடிதற்குநேராய்வந்தநாடெந்தநாடே. | 29 |
61 |
முட்டுவவறுமைநோயேமுருக்குவகழையேயாண்டும் தட்டுவவயலோர்நூலேதாழ்வனநறையைம்பாலே வெட்டுவவினைக்கண்வாளேமெலிவசிற்றிடையேமாதர் கட்டுவகணவர்திண்டோள்கடியனநெடியபைங்கர். | 30 |
62 |
வேர்த்தவெங்களிறுமாயவேலிசெய்சாலியெல்லாம் வார்த்தகாரெழிலிபெய்துவளர்ப்பதென்வெறுக்கையோடும் ஆர்த்தநான்மறைவல்லாளரங்கையில்வீழ்ந்துதுன்பம் தீர்த்தநீரோடும்பொன்னித்தீர்த்தநீர்வளர்க்குமாதோ. | 31 |
63 |
மடையெலாமுத்தஞ்செம்பொன்வரம்பெலாமுத்தம்பூகத் திடையெலாமுத்தஞ்செந்நெலிடமெலாமுத்தம்வில்வேள் படையெலாமுத்தஞ்சூல்வெண்பணிலங்களுயிர்த்தகால்வாய் அடையெலாமுத்தமோடையகமெலாம்வனசமுத்தம். | 32 |
64 |
பரம்பெலாநாறுசேறுபாலெலாநாரைதேரை கரம்பெலாமோங்குகோங்குகயமெலாங்கஞ்சமஞ்சம் வரம்பெலாம்வாழைதாழைவயலெலாங்கன்னல்செந்நெல் குரம்பெலாநாகம்பூகங்குறையெலாஞ்சாலைசோலை. | 33 |
65 |
உள்ளவாங்குழக்கன்றுன்னியொழுகுபாலுவட்டவாயால் பள்ளவான்செந்நென்மேய்ந்துபசுங்கதிர்ப்பாலும்பில்க வெள்ளநீர்திரிந்துதீம்பால்வெள்ளலையாழியென்னப் புள்ளவாங்கவைக்கான்மேதிபுயலெனத்திரியும்பண்ணை. | 34 |
66 |
பாசிலைக்கமலப்பள்ளிபண்ணளிகுமுறச்செந்நெல் வீசிளங்கவரிதூங்கமென்பசுந்தவளைபாணி பேசிடவெடிகொள்வாளைபெருநடங்கவினக்கண்டு காசினிவேந்தரென்னக்களியனங்களிக்குமோடை. | 35 |
67 |
நிரையிதழ்க்கதவஞ்சாயநிறைமதுப்பிலிற்றும்வெண்டா மரைமலர்மலர்ந்துவாவிவயின்வபினிருந்ததோற்றம் குரைபுனற்பொன்னிவைப்பிற்குளிர்புனலாடிக்கொண்ட புரைமறுக்கழுவுந்திங்கட்பூரணக்கடவுள்போலும். | 36 |
68 |
பிரிவுநோயகலக்கேள்வர்பெருமணித்தடந்தேர்மீட்சி உரியதங்கற்பினல்லார்க்குணர்த்துறுபாணரேபோல் விரிகதிர்மணித்தேர்தோன்றமெல்லிதழ்பொதுளுஞ்செய்ய வரிமலர்க்கமலந்தோறும்வண்டுபாண்மிழற்றும்பொய்கை. | 37 |
69 |
தோடலர்சினைமுட்டாழைத்துறுமலர்த்துறைவாய்நீர்க்கண் ஆடல்செய்நிழலையாவிப்பெடையெனவயிர்த்துநோக்க நீடல்செய்கயல்களோடிநிழலிங்காமையுன்னி ஊடலினாளித்தென்னாவுருகுமால்கருங்கால்வெண்புள். | 38 |
70 |
வரியிலைப்பலவின்வீழ்ந்தமாண்சுளைவவ்விக்காலால் அரிமலர்புனங்கொய்தாறிட்டளைபுகுமலவன்காட்டும் பெருவலித்தெவ்வராண்டபேரெயிலுடுத்தகொற்றத் திருவினைத்தடிந்துசெல்லுமிறைமகன்படைஞர்செய்கை. | 39 |
71 |
நெடியதன்னிலையினல்குநெறிபிறழ்ந்திடுனும்வான்செய் குடிமையார்தமதுசெய்கைகுறைபவோகுடக்காய்த்தெங்கின் ஒடிகனிமுட்பலாவைக்கதலயையுலையமோதித் தடிதொறுமெருக்கள்செய்யுந்தன்னிலைதிரிந்தபோதும். | 40 |
72 |
வெள்ளெயிற்றுழாவேமேதியொருத்தலைவிலக்குமாலை உள்ளுகுகதிர்கான்முத்தங்கருவெனக்கொடுபோயுற்ற தெள்ளொளிப்பசியசூட்டுத்தோலடிசிறகரன்னம் முள்ளரைக்கமலச்சேக்கைமுகட்டடைகிடக்குமன்றே. | 41 |
73 |
உடைதிரைக்குடிஞைதோறுமுறுசிறைவிரித்துமீக்கண் அடைகயல்வேட்டுப்பல்காலாழ்ந்தெழுசிரல்கள் காட்டும் இடையிடைதருவவேண்டியிழிந்தெழுந்தும்பரேறிக் கொடைகுறித்துழலும்வேழக்கூத்தியராடற்றன்மை. | 42 |
74 |
குருச்சுடரிதழ்வண்டாடக்கொல்லழனிகர்த்தவிண்டை நெருக்கிடைமுகிழ்த்துநீலநிற்பனபருவக்கொல்லன் இருப்பெனவங்நகனாளுமெய்கரவாளிபண்டை உருத்துருசகற்றிநீட்டியொண்கணையமைத்தல்போலும். | 43 |
75 |
மொய்ம்மலர்குடிஞைதோறுமுளரியங்கொடினையன்னார் கொமைவெம்முலையிற்றோய்ந்தகுங்குமநறுநீர்பாய்ந்து வெம்மைசால்சுறவுபண்டைவிரிபுலான்மாறலாலே தம்மின்வேறென்னவையுற்றிரிவனசலதிப்பன்மீன். | 44 |
76 |
தழைதருநெல்லின்சும்மைசாரலென்றெண்ணியாண்டே பிழைவழியிழியவேர்க்கட்பெருவிறன்மள்ளர்பூட்டி உழைதொறுமுழுங்காலஞ்சியொல்கிமீண்டொருசார்தூங்கும் மழையெனமருதநீழல்வைகுவமேதியேறு. | 45 |
77 |
கரப்பதுசெய்யார்நல்குங்கடமையார்கரத்தக்காலும் இரப்பதுபூண்டோர்யாண்டுமெய்துபவன்றேமோட்டுப் பரப்பணையன்றிவேரிற்பழுபழம்வெடித்தவாய்புக் கரற்றுவஞிமிறுந்தேனுமள்ளிலைப்பலவுதோறும். | 46 |
78 |
பைந்துழாய்மெளலிமள்ளன்சுராசுரப்பகடுபூட்டி மந்தரவலத்துப்பாந்தள்வடங்கொளியாழிப்பண்ணை முந்துறமுயன்றுதாவாமொய்யுயிரெவையுமுண்ணச் சந்ததமமுதுநல்லூண்டருவனமருதவைப்பு. | 47 |
79 |
காசறநிவந்ததெங்கின்காவெலாங்ககனந்தோயப் பாசொளிப்பசுங்காயெண்ணில்பரித்தனகண்ணனீந்த தேசமுதொருநாளென்றுதினந்தொறுமும்பருண்ண வாசநீரமுதம்பெய்துவைத்ததண்குடங்கள்போலும். | 48 |
80 |
அள்ளிலைப்பலவும்யாத்தபுதுக்கலமனையசெங்காய் வெள்ளகன்சினைசெய்யாலுமாவொடுமிடைந்துநீழல் கொள்ளவாறியங்குஞ்சோலைகுறைவிலாநிறைமைத்தேனும் ஒள்ளொளிப்பரிதிப்புத்தேளுறுசுடர்க்குறையொன்றுண்டே. | 49 |
81 |
புனிதனும்புனிதநல்கும்பொன்னியுமன்னும்வீட்டை நனிதருபதியுமுள்ளநாடரோவிதனைநண்ணார் கனிதரப்பெற்றுந்தீயகாய்க்கவாவுறுதல்போலாம் மனிதரோரறத்தைவேண்டிமற்றொருநாட்டைச்சேறல். | 50 |
82 |
கிணறெலாம்புனிதமந்தாகினிமலர்த்தடங்களெல்லாம் துணர்செய்மானதப்போரோடைதுருமமைந்தருவானெல்லாம் குணமலிசுரபிவைத்தகுரமெலாந்தீர்த்தந்தூய மணலெலாமிலிங்கமென்றால்வழுத்தலாந்தகைமைத்தன்றால். | 51 |
83 |
ஆன்றநீர்ஞாலமீன்றதகன்புன்ற்பொன்னிபொன்னி ஈன்றதுதிருவையன்னதியலிசைநாடகங்கள் மூன்றையுமீன்றதன்னமுதுக்குறைவீன்றவாய தீன்றதுவீட்டையெல்லாமீன்றதுவளன்செங்கோல். | 52 |
84 |
ஆயிரங்கலையிலொன்றேயகலிடத்தளிகடோறும் மேயினபூசைவேட்டுமீண்டுயர்கனகமன்றக் கோயிலாளுடையான்மேனிகுலவலாலுலகில்யாண்டும் போயினுமுத்திநல்கும்புண்ணியநாடிந்நாடே. | 53 |
85 |
மாவலானாதிவிண்ணோர்வந்தடிபரவிவாயிற் காவலான்கடைக்கணோக்கங்கண்ணியகயிலையெம்மான் பாவலான்விடுப்பக்கங்குல்பழுத்தபானாளிலந்தோ ஏவலானாகப்பெற்றதெத்திருநாடுமன்னோ. | 54 |
86 |
ஒருமறைக்கிழவன்றன்னையுலகுண்டானிலகுநாபித் திருமலரீன்றதன்றேதெய்வநூறிவளுமார்பின் அருமறைக்கிழவரெண்ணிலவரையிப்பொன்னிநாடாம் ஒருமலரீன்றதென்றாலொக்குமோவனையானுந்தி. | 55 |
87 |
பையழற்பகுவாய்ப்பாந்தட்படலையானுலகமென்கோ நெய்யொளிர்பவளக்கொண்டனீடுலகென்கோவோரெண் கய்யரசுலகமென்கோகாவிரிநாட்டையீதென் றையமற்றுரைத்தறேற்றேனறிஞர்தமதியின்மேற்றே. | 56 |
88 |
கூற்றவளோடுமிந்நாட்டணிவளங்குறித்தோபொன்னி ஆற்றுநீர்விருப்போவேனையடியர்பத்திமையினாலோ நாற்றியலென்னநாதன்றளிதொறுநண்ணலாலே சேற்றியல்கம்பமானதென்னுளஞ்சென்னிநாட்டில். | 57 |
89 |
தமிழ்முனிதென்னாட்டென்னத்தக்கதென்னவனையீன்ற கமழ்மலர்முனிவன்பூசைக்கடவுண்மாமுனிவன்காதில் அமிழ்துறுகுடிலையோதியருண்முனிமகவாய்த்தோன்றித் தமிழ்வளம்படைத்தாலீதேதண்டமிழ்நாடுமாதோ. | 58 |
90 |
தீர்த்தகோடிகள்போயாடுஞ்செழுந்திரைக்கங்கைதன்மேல் கூர்த்தவல்வினைகடீரக்குரைதிரைப்பொன்னிவைப்பில் வேர்த்தவெள்ளரிமேல்வேந்தன்மேவியவாண்டிற்கும்பம் பார்த்துவந்தாடுநாட்டைப்பகர்வதென்பார்க்கப்பல்கால். | 59 |
91 |
ஏமமாதவத்தோர்முத்திக்கேணியாய்வேணிவாய்ந்த சோமனார்க்கிருக்கையாகுஞ்சோழநாடெனுமாண்பூண்ட வாமநல்லாரமாகிவயங்கிசைதருமீராறு நாமநீர்வளஞ்சூழ்காழிநகர்வளம்பகரலுற்றாம். | 60 |
92 |
அகலிடக்கொடியணிகெழுமேனியம்புவியே புகரில்பல்வளமல்கியபொன்னிநடனையாள் முகமலர்ச்செழுங்கமலமேயம்மலர்முகத்தின் நகையுலாமணித்திலகமேகாழிமாநகரம். | 1 |
93 |
தானமெண்ணிலவுழன்றருட்குரவனைச்சாரின் ஆனமுத்திவீடெய்துமீதருமறைவழக்கே மோனவீடுமவ்வீடெளிதேயுறமொழியும் ஞானதேசிகனிருக்கையுங்காழிமாநகரம். | 2 |
94 |
சுற்றுமோரிருகோளும்வந்தனைசெயத்தொலையா முற்றும்வல்வினையிருள்கெடமுதுக்குறையடியார் பெற்றநீற்றொளிவெண்ணிலாவயங்கிடப்பிறந்த நற்றமிழ்க்கதிரிமைப்பதுகாழிமாநகரம். | 3 |
95 |
தரைப்புறத்தினைமறைப்பனகொழுநிரைத்தண்ணீர் திரைப்புறத்தினைமறைப்பவெள்வளைக்குலஞ்செந்நெல் நிரைப்புறத்தினிற்கடுங்களைகட்டலானீண்ட கரைப்புறத்தினைமறைப்பனவள்ளிதழ்க்கமலம். | 4 |
96 |
காயும்வெங்கதக்களிறுகால்யாத்திடக்கரத்தால் மாயிருந்தொடர்கொடுத்தெனமள்ளர்கையெறிந்த சேயிருங்குவளையுங்கமலமுங்கொடுசிலைவேள் பாயநொந்தனருழத்தியர்விழிவலைப்படுவார். | 5 |
97 |
மடையுஞ்செம்புனல்வளாகமுமண்முதுகுடைக்கும் படையுமென்கிளிநிறத்துநெட்டிலைவளைபசுநெற் கிடையுமுட்டுநீர்வாலரிக்கற்றைகள்கிளைத்த தொடையுமன்றிவெள்ளிடைபெறாவகல்வயற்சூழல். | 6 |
98 |
உள்ளடங்கிநல்லுருக்கொளீஇயுரத்திறுமாந்தாங் கள்ளிடங்குழைந்தவாப்பெருந்தன்னிலைபிறழ்ந்து கள்ளநோக்கியரெழுபருவந்தொறுங்காட்டும் எள்ளறீர்முலைநிகர்த்தனகதிர்த்தநெல்லீட்டம். | 7 |
99 |
கருவிபோழ்தருநூழைபோங்கள்வனைக்காணா ஒருவனீர்த்திடவொலித்தலின்மகளிரார்த்தென்னத் திருகளைப்புகுந்தேரையைநீரராப்பற்ற வெருவியார்த்தலினார்த்தனவிரிசிறையன்னம். | 8 |
100 |
வாலிதாமுளையொருபுறம்வளர்செறுவொருசார் பாலிநெல்லொருசாரொருசாரரிப்பறம்பு சாலிவேலையோர்சாரிவைதலைமயக்குறலால் வேலியாயிரம்விளையுளென்பதுமிதன்மேற்றே. | 9 |
101 |
குண்டலாதிபனிடுபணிதலைக்கொடுகுமுறி மண்டலத்துநீருமிழ்கரும்புயலெனவயவர் திண்டடக்கையாலிடுகழையுண்டுவாய்சிலைப்ப எண்டருஞ்சுவைமழைபெய்வதாலையெந்திரங்கள். | 10 |
102 |
குறுத்ததாழ்சினைவருக்கையுங்கோழரையரம்பை பொறுத்தபைங்கனியீட்டமும்பொரியரைத்தேமா இறுத்தமென்கனிப்பெருக்குநல்லெருக்களாயீண்டிக் கறுத்தசேதகத்தெழுவனநாற்றிளங்கானம். | 11 |
103 |
எழுந்துலாங்கதிர்ப்புரவிபுக்கயர்வுயிர்த்தேகச் செழுந்தணீழலைச்செய்வதோவியப்பமஞ்சிறைத்தேன் விழுந்தநாண்மலர்ப்பொதும்பரின்கோடுகள்விசைத்துக் கொழுந்துதேய்த்தலிற்களங்கமுற்றிடுமுயற்கூடு. | 12 |
104 |
வளர்ந்தநாண்மலர்ப்பொதும்பரிற்சேயொளிவாய்ந்த இளந்தளிர்க்குழாமெரிக்குழாங்கொல்லெனவிரங்கிக் கிளர்ந்துகூவியயாழிசைமிடற்றகோகிலத்தைத் தளர்ந்தநோய்கெடத்தைவருந்தவழ்நடைத்தைன்றல். | 13 |
105 |
வீங்குதெண்டிசைமுகடுகீண்டெழுகதிர்வேந்தை ஈங்கிருட்பகைதுடைத்தனைவருதியென்றெதிரே பூங்குடத்தினீரேந்தினபோன்றுமுப்புடைக்காய் தாங்கிநிற்பனநெட்டிலைவிரிதலைத்தாழை. | 14 |
106 |
கூடல்வைகையோர்கவுணியமுனிவரன்குணத்தைப் பாடல்கொண்டறிவுறுத்தியதென்றுதண்பனிநீர் ஆடல்செய்துளோர்க்கவனருட்குணத்தையக்கணத்தே கூடல்செய்நதிக்கழுமலமந்நகர்க்குடிஞை. | 15 |
107 |
கல்லெனார்ப்பினாற்கலினமான்றிரையினாற்கனகச் சில்லியந்தடந்தேர்ப்பெருங்கலத்தினாற்சிறுகண் வல்விலங்கெனுஞ்சுறவினான்மணியினாற்பசித்தோர் செல்லறீர்த்தலாமுதவாரிதியனதெருக்கள். | 16 |
108 |
பாழிசாலிருங்கொடிநிரைபரிதிவானவன்பொன் ஆழிதட்பனமேலிடத்தன்னலார்புலப்பால் வீழிருங்கலன்மிடைந்துதேர்வேத்திளங்குமரர் ஆழிதட்பனகீழிடத்தகன்மணிவீதி. | 17 |
109 |
வேனில்வேளனார்முடிமணியுறைத்ததயன்மிதித்த கானிலாமொழியாரடியலத்தகங்கரையப் பானிலாமதிக்கெதிருமிழ்நறும்புனல்பரப்பும் வானிலாவுமிழ்சந்திரகாந்தநீண்மாடம். | 18 |
110 |
செறித்தமாமணியிழைத்ததெற்றிகடறுஞ்செங்கேழ் எறித்தமென்சுடர்க்கற்றையந்தளிர்களையெட்டிக் கறித்தபைங்குளககறறிவன்றொடரறக்கழுத்தால் நெறித்துநாநிமிர்த்தயில்வனநெட்டையொட்டகங்கள். | 19 |
111 |
நேர்ச்சிநுண்மருங்கலம்வரநிரைவளைகறங்கக் கார்ச்சிகண்டிபோன்மாதராடரங்கமுங்கலைநூல் தேர்ச்சிவல்லவரறிவினாற்செம்பொருடுணிந்த சோர்ச்சிவல்லவர்கழகமும்பதமலிதொடைகள். | 20 |
112 |
நலத்தமேலவர்நன்னரன்பொடுதமைநட்டார் கலக்கமில்குணமாவரென்பதுமிவண்கண்டேம் இலக்குவெண்பளிக்குபரிகையயனின்றவெவையும் புலப்படுத்திநின்றோங்கினபுயலுரம்பொறுத்தே. | 21 |
113 |
நீட்டுகையொடுமடுபுகர்முகத்தொடுநெறிவெண் கோட்டுவாரணப்போர்புரியமலையிற்குரைத்தே தீட்டுகாலவாய்நிணம்பொதியலகவாய்ச்சிலைக்கும் சூட்டுவாரணப்போர்புரியிளையவர்துழனி. | 22 |
114 |
கற்றைவெண்டிரைகலந்திடத்தோணியிற்கலந்த வெற்றிவானவன்பொற்றொடிக்கின்னருள்விளக்கும் கொற்றவன்றனாதிருக்கையைப்பொன்னெடுங்குன்றம் முற்றல்போன்றனமுழுமணிக்கொடிநுடங்கெயில்கள். | 23 |
115 |
ஈறிலாமையால்விதிமுகங்காட்டலாலெவர்க்கும் கூறொணாமையாற்பலவணங்குவலாற்புலவோர் ஆறுமஞ்சுநன்மதியொடுமுடித்தலாலளவால் தேறுநான்மறைநிகர்த்தனசெயிரில்பொன்னெயில்கள். | 24 |
116 |
கலவியாலுகுத்தமுத்தமுங்கணவர்பாலடுத்த புலவியாலெறியிழைகளும்பொன்னணிமறுகில் குலவுவேற்கணார்வண்டலில்விண்டிடக்குயின்ற கலனுமல்லதுகுப்பையென்றுறுபொருள்காணா. | 25 |
117 |
ஆளியன்னவரகலமேலாலைவில்லநங்கன் வாளிபாய்ந்தபுண்ணழல்கெடமணிவடம்புனைந்த கேளியாலுறவழுத்தியுங்கிஞ்சுகச்செவ்வாய்க் கோடிலாமருந்தூட்டியுந்தணிப்பர்கொம்பனையார். | 26 |
118 |
வசனமென்கிளிவாயிதழ்கொவ்வைவெண்மடங்கல் அசைமருங்குலகண்ணானவைமான்முகமதியம் இசையுமெல்லடிநளினமாய்ப்பகைத்தமெல்லியலார் பசையுமன்பர்தாரளியொடும்பகைப்பர்தம்பதத்தால். | 27 |
119 |
வேறு. நெட்டிலையயிற்கணல்லார்நிலாமணிமுன்றிலேறி மட்டின்மேனிலைக்கண்ணாடவாங்கியபொன்னம்பந்து முட்டியைந்தருவினொண்கேழ்மொய்ம்மலருகுப்பமாரன் புட்டில்வாய்மலர்களோடும்பூமழைபொழியும்வீதி. | 28 |
120 |
சேலைவென்றடர்த்துநீண்டசில்லரித்தடங்கண்மாதர் வேலைவெள்ளாரம்வேய்ந்தவெம்முலைமதுகைமாந்தர் ஆலைவில்லநங்கன்வாளியஞ்சினரணைந்துநிற்ப மாலைவெள்ளருவிதூங்குமலையரண்கடுக்குமன்றே. | 29 |
121 |
அன்னமென்னடையார்செம்மாந்தணிந்தவெம்முலையிற்சாந்தம் பொன்னிலத்திறைத்துமைந்தர்புரவிமான்குரத்தாலெற்றுண் டெந்நிலவரைப்புஞ்சூழ்போயெண்டிசைபரிக்கும்யானை மன்னெடுங்கரடத்தாழ்ந்தவண்டினமுயிர்க்குமாதோ. | 30 |
122 |
அதிரொலிகலினமான்றேரார்ப்பொலியடுங்கையானை முதிரொலிகறங்குவள்வார்முரசொலியரசர்கோயிற் சதிரொலியனைத்துமிண்டித்தரைசெவிடெறிவதொன்றோ பொதிரெறிந்திடுமாலந்தண்புயல்படுககனகூடம். | 31 |
123 |
நடையறிகின்றதேர்ச்சித்துணைவரைநயவாதுள்ளக் கடையரைநயந்தவேந்தைக்கடுத்தனகாகப்பந்தர் அடைவுறக்கவிப்பப்பாகனங்குசநிமிரவம்பொற் புடைமணிக்கவ்வைபோர்ப்பப்புனைமறுகியங்கும்யானை. | 32 |
124 |
நாகிளஞ்சுரும்பர்பாடக்குவளையுங்குமிழுநான்ற பாகவள்ளையுஞ்சேதாம்பலலரியும்பனிவெண்முல்லைச் சேகருமுகையுங்காட்டிச்சிறைப்புனற்பழனத்தன்றிப் பூகமென்முளரிவைகும்புயறொடுகுடுமிமாடம். | 33 |
125 |
மறங்கிளர்வேற்கணாருமைந்தருமாடத்தும்பர் உறங்குழியுறங்காவிற்கையுருவிலியானைமீக்கொண் டிறங்கிவெண்கோல்கொண்டெற்றியின்பறாக்காமப்பைங்கூழ் திறம்பெறவளர்ப்பிப்பான்போற்றிங்களங்கதிர்பாய்ந்தன்றே. | 34 |
126 |
தண்ணளிநூல்களாகத்தாழ்மொழியலர்கள்சேர்த்திக் கண்ணளியாசைமாலைகைபுனைந்திளைஞர்சூட்டப் பெண்ணலங்கனியநின்றார்பெருவளைக்கையாற்கட்டி விண்ணமுதுவர்ப்பச்செவ்வாய்விருந்தமுதூட்டுவார்கள். | 35 |
127 |
கன்னலின்புகையுமட்டிற்காரகிற்புகையுநல்லார் பின்னலின்புகையுமல்கிப்பகலிருள்பிறக்கவில்வேள் அன்னிலைவாளியெய்தலருமையேயவிவேட்டன்றோ இன்னவென்றுணரார்விண்ணோர்நோக்கின்றாரிமைப்பிலாராய். | 36 |
128 |
பருதிவாய்பற்றலாணிபண்வழிதிருத்திச்செவ்வாய்ச் சுருதியாழ்நரம்போடொன்றத்தூக்கிமெல்விரனடாத்திக் குருதிவேலனையகண்ணார்பாடலற்குமரரன்னார் கருதியுள்ளுடைவதொன்றோகவின்றதூண்டளிர்க்குமென்றால். | 37 |
129 |
குளங்கிளர்சுதையின்மாணக்கோட்டியகிளியுமாதர் மணங்கிளர்கரத்துத்தீஞ்சொன்மழலைவாய்க்கிளியுஞ்சோதிக் கணங்கிளர்பளிக்குததூணிற்காண்பனகல்விசான்ற நுணங்கியகேள்வியார்முன்னுண்ணறிவில்லார்போலும். | 38 |
130 |
புட்பிணியளகக்காட்டிற்புணர்முலைக்களிற்றின்மென்சொல் பட்பிணிவலையினம்பொற்பகட்டெழிலல்குற்றேரின் நட்பினிற்படுத்திப்போர்செய்தாடவர்நனவைப்போழ்ந்த கட்படைக்கணிகைமாதர்கற்பகப்பொலன்கொம்பன்னார். | 39 |
131 |
வான்படுமயிலஞ்சாயன்மணிநகைமுறுவல்கோட்டித் தேன்படுகிளவிதன்னாற்சிலைத்துமீதலத்துநின்று கூன்படுபுருவத்தூண்டிற்கூர்விழிமுள்ளிலாசை உடன்படுத்திளைஞருள்ளமீன்படுத்தூற்றங்கொள்வர். | 40 |
132 |
பொன்னலர்காமவல்லிபுறந்தரப்பாணியொற்றிக் கன்னன்மென்றனையசொல்லார்காமகீதங்கள்பாடித் தென்னிளங்காளையன்னார்சிந்தையைப்பரிசில்வாங்கிப் பன்னிலவரைப்பும்பெட்பப்பட்டிமைவிளைப்பர்மாதோ. | 41 |
133 |
எழுந்தளந்தெடுத்தபாடலெழுவகைநரம்பினல்யாழ் ஒழுங்குறமாதர்பாடவுணர்ந்ததோவியமொன்றேயோ அழுங்கவர்வரிந்தவுள்ளத்தரவர்வேட்டிரங்கப்பைம்புற் கொழுந்தையுந்தின்னாதன்றோகோவிளம்பசலைக்கன்று. | 42 |
134 |
தருமமுந்தருமந்தாங்குந்தானமுந்தானமோங்கும் கருமமுங்கருமங்காக்குங்கருணையுங்கருணைதீரா வருமமும்பலன்களாகவைகலும்பழுத்ததெய்வத் துருமமேயனையாரின்னதொன்னகர்மேழிச்செல்வர். | 43 |
135 |
ஆடியற்பாவைபோலவகன்றுழியகலாதென்று நீடியசீர்த்திப்பாவைநிலவியசெஞ்சொன்மாலை பாடியபனுவன்மாக்கள்பருவரலுழந்துபன்னாள் வாடியவறுமைநோயைவறுமையாய்ச்செய்யவல்லார். | 44 |
136 |
பிச்சிநாண்மலர்செய்வேணிப்பிஞ்ஞகனடியார்க்காணின் உச்சிநீரவலிற்பாய்ந்தாங்குழுவலன்போடுந்தாழா எச்சமிலமுதந்தெண்ணீர்க்கிணற்றிடையெழப்பெற்றார்போல் இச்சையோர்ந்தளிமிக்கூறிக்குறித்தவாறிழைத்தல்செய்வார். | 45 |
137 |
முழுமதிசிதறியன்னமுளிதயிர்வெருகின்கண்போல் எழுதருங்குய்யறாதவின்புறுகருணைவாசம் ஒழுகுமுக்கனிநெய்வாரியூட்டியாளுடையானன்பர் கெழுமனமகிழ்ச்சிதூங்கக்கிழமைபூண்டேவல்செய்வார். | 46 |
138 |
மலைதருவனவுநீண்டமலையெனச்சுழவுமாழி அலைதருவனவுந்தூவெள்ளலைபுரள்கலுழிக்கானத் தலைதருவனவுஞ்சூழ்தண்டலைபலகிளைத்தவேலி நிலைதருவனவுமுண்டுநிவந்தபீடிகைமாடங்கள். | 47 |
139 |
பதித்தவெண்பளிக்குவேதிப்பவளக்கானிறுவிப்பைங்கேழ் கதிர்த்தல்கல்விடங்கமூட்டிக்கண்ணகல்விண்ணாடேய்ப்ப மதித்துணியனையவொள்வாள்வயிரமுந்துகிரும்பொன்னும் கொதித்தெரிகலனுமுத்துங்குவிந்தனபயின்றகூடம். | 48 |
140 |
நனந்தலையுலகத்துள்ளார்நல்குரவிரவுமோவாத் தினந்தருமிரவுஞ்சீய்க்குஞ்செம்பொனாவணத்துச்செல்வர் கனந்தருங்கண்டன்காழிக்கடவுண்மூவுருவானானென் றினந்தருந்தோழன்வெவ்வேறியைத்தனவியந்தார்மாதோ. | 49 |
141 |
உரைசெயாரியமேமுன்னாமொன்பதிற்றிரண்டுகூற்று வரைபடாவொலியாலார்க்கும்புட்பொழின்மானுங்கூலம் புரைபடாதுறுபல்வேறுபொருள்களாலுலகமுண்ட விரைசெயுந்துளபப்பைந்தார்மேலவனுதரம்போன்ற. | 50 |
142 |
வண்டலமருமென்கூந்தன்மாணிழைமகளிர்செம்பொற் குண்டலந்திருவில்வீசக்கோழிமேல்வீழ்த்தமுன்றிற் கண்டலக்கவைக்கான்மேதிகாலுறைத்தழுங்குமென்றால் மண்டலத்திவர்தஞ்செல்வவளனெடுத்துரைக்கற்பாற்றோ. | 51 |
143 |
உறைகழித்தொளிறுவாளாலொன்னலார்மடவார்மைக்கண் கறைகழித்துயர்திண்டோளிற்களிறுவீழ்ஞாட்பிற்பட்ட நிறைபடச்சுவட்டின்மாதர்முகிழ்விரலுகிரினேர்ந்த பிறைகழிப்பில்லாவேந்தர்பெருவிறலாளியன்னார். | 52 |
144 |
வானிரப்படைகள் போழுமணிநிறத்தணங்கனார்கண் வேனிறத்தாழத்தொங்கல்விளரியஞ்சுரும்பர்பாடக் கோனிறக்கணையிற்றூண்டிக்கோவிளங்குமரர்வாய்ந்த தூனிறக்கவரிநெற்றித்துரகத்தேரூர்தல்செய்வார். | 53 |
145 |
இருணக்கபவளக்காலின்முழுமதியிருத்தியன்ன வருணத்தண்குடைக்கீழ்மன்னர்மல்லடுபோருங்கூன்கோட் டருணத்தின்போருங்காண்பாரமலையான்மலிந்ததம்மா கருணைக்குன்றனையான்காழிக்கடிமணிமாடவீதி. | 54 |
146 |
சூலம்வாள்கதைகணிச்சிசுரிகைசக்கரங்கள்பிண்டி பாலநீள்குலிசமேறுபலகைகப்பணமுலக்கை கோலெழுஞாங்கர்வன்றோல்கொடுமரமலிந்தகூடம் சேலுலாந்தடங்கட்கன்னித்திருமகள்சகூடம்போலும். | 55 |
147 |
புனன்மடுத்தெழுகொண்மூவைப்பொங்குளையரிமானேறு சினமடுத்துரத்தாலென்னத்தீவிழிகாலச்சீறிக் கனன்மடுத்துழலும்வைவேற்காளையர்கைவாளோச்ச இனமடுத்தூறச்சோனையெனமதம்பொழிவயானை. | 56 |
148 |
பொன்பொலிவடிவுகாணப்பொலிதலான்மதனின்மிக்கார் இன்பொருளறிந்துநாவொன்றியைந்தனந்தனிலுமிக்கார் ஒன்பதுநிதிக்குமேலாயுயர்ந்துபிங்கலனின்மிக்கார் அன்பினிற்கவடிலாமையளித்தலாற்றருவின்மிக்கார். | 57 |
149 |
இலையயிற்குமரனன்னாரியங்குதண்டலைகளெங்கும் தலைவிரிகுழையத்தேமாத்தண்மலருகுப்பமாரன் கொலைமுகப்பகழிக்காற்றார்குளிர்நிழல்புகல்புக்காங்கும் தொலைவறுகாமத்தீக்குத்துப்புறைபொழிதல்போலும். | 58 |
150 |
இருமணித்தடக்கைநல்லாரிழைத்திடுவண்டல்வீட்டில் உருமணிமுத்தம்வெண்சோறோரைமார்செங்கைதீண்டக் குருமணியாதல்கண்டுகுறுநகைவிளைத்துப்பண்டைப் பருமணிமுத்தமாகவிளநிலாவிரிக்கும்பாங்கர். | 59 |
151 |
பெறவருங்கொடிமென்முல்லையில்கரும்பீன்றதென்னா நறைவிரியலங்கலோதிநங்கையர்வதுவையாற்றும் சிறுகணார்முழவமார்த்தவின்னொலிசெவியின்மாந்தி அறிமுகிலென்னமஞ்ஞையாலுவசோலைதோறும். | 60 |
152 |
அறுசுவைகனிந்துவிண்ணாட்டமிழ்தினுமியன்றுமுல்லைக் குறுமுகைகவற்றுமூரற்குழைவுறுமுகமன்வுறி மறுவறுமனுக்களார்ந்தவாயினின்மறைதேர்வாழ்க்கை உறுவரையருத்திவெவ்வேறொக்கலோடுண்பரன்றே. | 61 |
153 |
மந்திரத்திறலார்காலமும்மையும்வரம்புகண்டார் எந்திரப்பவத்ததைவேர்கீண்டெறிபடையடனையநாவார் சுந்தரமுளரிமாலைத்தொழுதகுதெய்வமன்னார் அந்தரத்தயனையொப்பாராணிநகரந்தணாளர். | 62 |
154 |
மறைகளுமங்கமாறுமறுவின்மூவறுபுராணத் துறைகளுமிருதிநூலுந்துளக்கறவிளக்கிச்சூழ்ந்த இறைகொடுத்தெதிர்வினாக்கொண்டெவற்றினுந்தோய்ந்துந்தோயா நிறைபரம்பொருண்மேலுள்ளநிறுவியவறிவின்மிக்கார். | 63 |
155 |
கிளந்தறியாதவேதக்கிடையிடைப்பதங்கள்கோவை அளந்தபேரோதைப்பொம்மலண்டகோளகையுமுட்ட வளந்துநான்முகத்துத்தங்கள்பெருந்தகைமகிழவோதும் இளந்துணைமறைச்சிறார்களீட்டமெண்ணிலவுமீண்டே. | 64 |
156 |
அருள்விளைபுலத்திற்காமமாதியபூடுபூத்த இருவினைக்களைகட்டார்வத்தெயிலுடுத்துயிர்க்கூறஞ்சும் திருமணிபிழைத்தஞானச்சேயிழையொடுகுலாய கருணையங்கோயில்வைகுங்கடவுளர்மடங்களெங்கும். | 65 |
157 |
வடநிழல்விரித்தநாலேழ்மருத்துநூலுரைத்தவாறே கடவுள்கண்மணியாலைந்தக்கரத்துமந்திரத்தால்வெண்ணீற் றடல்கெழுமருந்தால்யார்க்கும்பிறவிநோயறுக்குஞ்சைவத் தொடர்கொள்வேதியர்தாமாயுள்வேதியராயதொல்லோர். | 66 |
158 |
இருவிரல்கூட்டிநால்வர்க்கிசைத்தமெய்ப்பொருளையீதென் றொருவிரல்காட்டிப்பாடுமொருவனைப்பயந்தோன்சுற்றத் தருமறைபயின்றசெந்நாமுனிவரராற்றல்சான்ற தருமநூன்மருமச்செல்வர்தனிமடமாலையெங்கும். | 67 |
159 |
பைந்தமிழ்ப்பாவையாடும்பன்மணியரங்குநீலக் கந்தரனடியார்காணிகாசினித்திலகம்யோக மந்திரர்முத்திவைப்புமறைவிளைதெய்வப்பூமி அந்தணர்க்குறையுள்சீர்த்தியணங்கினுக்கிணங்குபீடம். | 68 |
160 |
உறக்கமென்பனநல்யோகமுணர்வுசால்புருவான்கண்கள் திறப்பனநிறைமெய்ஞ்ஞானஞ்செப்புவமனுக்களிவ்வூர்ப் புறத்துளார்செயலுமெம்மான்பூசனையெனவீதேபோல் துறக்கநாட்டகத்துமோரூர்தொல்லைவையகத்துமின்றே. | 69 |
161 |
வேறு விண்கொண்டகாவலவன்வேணுவுருவெய்திப் பண்கொண்டடித்துணைபழிச்சவருள்வீசும் வண்கொண்டலன்னவன்மணிச்சினகரத்தான் தண்கொண்டபேரொளிதருங்கயிலைபோலும். | 70 |
162 |
நாதித்தவெள்ளருவிநன்மலைமுகட்டில் ஆதித்தமண்டிலமமைந்தொளிர்வதென்னா மிதிற்கிளர்ந்திருள்விழுங்கியொளிகாலும் சோதித்தசும்பொடுதுளங்குறுவிமானம். | 71 |
163 |
நீரேறுமன்பர்பிழைநேரினுமவர்க்கே சீரேறுநன்றிபலசெய்கடனெனக்கென் றாரேறுவேணியனசைத்தகொடிபோலும் போரேறிலங்குகொடிபொங்குமணிமுன்றில். | 72 |
164 |
சேல்பாய்வயற்கழுமலச்சிவனைவேதன் சால்பாயருச்சனைசெய்தன்மையதுணர்ந்து மால்வாய்நெடுந்திசைவழாதுகடைநின்ற நால்வேதமேயனையநற்கோபுரங்கள். | 73 |
165 |
மின்றோய்நெடுஞ்சிகரிவிண்ணகடுதோயத் தன்றேசுலாவுமதிசாளரவழிக்கண் சென்றேகுறைந்தமைதெரிந்துபுடைசெல்வேன் என்றோவிரண்டயனாமெய்தினனவ்வெய்யோன். | 74 |
166 |
நன்றாயகோளுமுதுநாளுமணிமாலை என்றாய்விளங்கவதினேறுகொடியின்கால் கன்றாமலர்த்தருவனக்காமவல்லி குன்றாதணைத்தகொழுகொம்பரெனநின்ற. | 75 |
167 |
மைந்நாடுகொண்டல்கள்வளைந்துருவமூடிப் பொன்னாடுகஞ்சுகபுராணனைநிகர்ப்பத் தன்னாதனெத்தகையனத்தகையதானை என்னாவிரும்புவியிசைப்பதையிசைக்கும். | 76 |
168 |
மய்யார்வினைப்பவம்வராதகலுகைக்கோ பொய்தீருஞானவொளிபொங்கியெழுகைக்கோ மெய்யானதொண்டர்கள்விரும்பிவருகைக்கோ வெய்யாதலங்குவவிலங்குதுவசங்கள். | 77 |
169 |
வேறு. ஐம்பொறிமிசையவூட்டுமமுதுவாலறிவன்சொன்ன செம்பொருளாகமங்கடெளித்ததெள்ளமுதுமூவர் தம்புலத்தமைத்தஞானத்தண்டமிழமுதுமிக்கார் இம்பரிற்புணர்த்தசெஞ்சொலமுதுமேயெவ்விடத்தும். | 78 |
170 |
விடுபொருள்விடுத்துமேற்கொள்வினாவெதிர்மறுத்துஞ்செவ்வே தொடுபொருளிலக்கியங்கடொகைவகைவிரித்துந்தொன்னூற் படுபொருள்வரம்புகண்டார்பனுவலந்தமிழைக்காழி வடுகனேமகிழ்ந்தாலேனைவானுளோரென்படாரே. | 79 |
171 |
வேதநாவலர்கள்வாயும்வீதியுந்தழைவவாசி போதருநிதியுமன்னர்புயங்களுந்தருமறங்கள் கோதையர்விழியும்வீடுங்குவவுறுமயில்கண்ஞானப் போதகர்கையுஞ்செய்யும்பொலிவனபலவண்டானம். | 80 |
172 |
தன்மைநீர்க்கிடங்குமன்னசாலையும்பாலனங்கள் புன்மைதீரியலும்பைம்பூம்பொங்கருமறுபதங்கள் நன்மறுகிடமும்யாருநவின்மதவாரணங்கள் பன்மையோர்தொழிலுங்காவும்பலவிரதங்கண்மாதோ. | 81 |
173 |
மாதர்தமருங்குமம்பொன்மாடமும்விலக்குமின்னல் கோதையர்கையுமன்னர்கோன்மையுமளிக்குமையம் சீதமென்பொழிலுமுத்தீச்செயல்களுஞ்சிறப்பவாவி வீதியினயலுஞ்செந்நெல்வேலியும்பொலிவவேழம். | 82 |
174 |
விளரிவண்டொலியுஞ்சூழும்வேலியுஞ்சந்தக்கானம் வளைகரும்பிடத்துமேலோர்மனத்தினுங்கொழிப்பவாரம் நளிபொழிலிடத்துமந்தணதிதொறும்வாசவண்டல் இளநலார்குழலுமில்லுமிலங்குகாசறையுமாதோ. | 83 |
175 |
காசிற்றபுலமைசான்றகாப்பியக்கலைகளெல்லாம் வாசித்துமிழுக்கொன்றில்லாமாசறுகாட்சியாரை நேசித்துங்காழிமேயநிருமலக்கொழுந்தின்றாளைப் பூசித்தும்பொழுதுபோமாற்பொன்னகர்மாக்கட்கெல்லாம். | 84 |
176 |
எண்ணருங்காதையெல்லாமிலக்கணநெறியாற்பாடல் பண்ணவுந்தருமமாதிப்பயக்குநூலியற்கையாய்ந்து நண்ணவுஞ்சுவையாறெள்ளிநவச்சுவைபிறந்தகேள்வி உண்ணவும்போவதல்லாலொல்லையும்போகாவீணில். | 85 |
177 |
சசிமுளைகிடந்தவேணிச்சண்பைநாயகற்குவேண்டிக் கசிவுடைத்தொண்டராற்றும்விழவையார்கணிக்கற்பாலார் பசியகட்பேழ்வாய்மோட்டுப்பறந்தலைக்கருந்தாட்பேய்கள் நிசியிடைத்துயில்யாமத்துநிரைமுழவுறங்காமூதூர். | 86 |
178 |
பாடுவார்பல்லோரென்னிற்பழிபடாநிதியாலின்பம் கூடுவாரவரிற்பல்லோர்குழகனதடிக்கீழன்பு சூடுவார்பல்லோரென்றாற்றுவருறத்துறந்துமுத்தி வீடுகாண்குறுவாரின்னவியனகர்வளமைகாண்பார். | 87 |
179 |
பொறிவழிப்புலன்கள்செல்லும்புரையொடுபசுபோதங்கள் அறவெறிந்தடுமுப்பாழையகன்றருள்வழியேயுள்ளம் பிறிவறக்கலந்தார்க்கன்றிப்பெருநகரிதன்மாண்பெல்லாம் சிறிதுணரறிஞர்வாயாற்செப்பவும்பெறுமோதேர்ந்து. | 88 |
180 |
பழிப்பிலோரெழுத்தான்மெய்ந்நூற்பரப்பெலாம்பரமன்காதில் ஒழுக்கியவொருவன்றோன்றியுவமைதீர்கவிகளாக்கி வழுக்கில்பல்லெழுத்தாற்கூறும்வளநகரியல்பையின்றோ ரெழுத்தையுமுணரமாட்டேனென்னெடுத்தியம்புமாறே. | 89 |
181 |
காமரஞ்சுரும்பர்பாடக்கடிமுகையவிழ்ந்ததண்ணந் தாமரைக்கிழத்திவாழுந்தனிநகர்வளனீதாகப் பூமகட்கணியாமிவ்வூர்ப்புண்ணியக்காதைவெவ்வே றாமவைபலவென்றாலுமறைகுவாமறிந்தவாறே | 90 |
182 |
மழைவாய்ந்தன்னகருமிடற்றுவரதன்காழிமான்மியத்தைக் குழைவாயன்பர்தமக்குரைப்பான்குறுகுஞ்சூதமுனியென்பான் கழைவாய்வழிதீஞ்சுவைமொழியாற்கரையமுனிவர்கணங்கொண்ட தழைவாய்குரம்பைத்தவப்பள்ளிதன்னையறிந்தவாறுரைப்பாம் | 1 |
183 |
வேறு தெய்வவெண்டிரைக்கங்கையங்கரையதுசிறந்தோர் மெய்வளந்தரப்பொலிவதுவேதநூலாதி சய்வநூல்களானிகழ்வதுமாயையின்றனயர் அய்வருஞ்செருக்கொழிவதுநைமிசாரணியம் | 2 |
184 |
ஏன்றவல்வினையிருளொழிந்தெமக்குளத்தூய்மை தோன்றவோருழைதருகெனமுனிவரர்தொழலும் ஈன்றநான்முகனுருட்டுபுவிடுத்தவீன்றருப்பை ஆன்றவாழிசென்றிறுத்ததுநைமிசாரணியம் | 3 |
185 |
மெய்யராரணக்கிழவர்வெண்ணீற்றொளிமேனி அய்யர்தன்னளியுளத்தராணவத்தைவேரரிந்த செய்யமாதவத்திறலர்முக்குற்றமுந்தீர்ந்த துய்யரெண்ணிலார்பிறங்குவதவ்வனச்சூழல் | 4 |
186 |
குணத்தின்மிக்கவரோம்புமுத்தீவளர்குண்டத் துணக்குவாய்ந்தபல்சமித்துகண்மனுமுறையூட்டி அணக்கும்வெஞ்சுடர்க்கின்றுணையாய்வளியாட்ட மணப்பொதும்பரிற்சிறைவிரித்தாடுவமஞ்ஞை | 5 |
187 |
புதையவிண்கவித்தோங்குயர்பொழிலிருள்போக்கித் ததையுமெல்லிணர்த்தீபகத்தருச்சுடர்தாங்க இதையநல்லவர்க்கேந்தியசிரகமென்றிலையால் துதையுமென்சினைநீட்டுவபுதுக்கனிச்சும்மை | 6 |
188 |
மலக்குறும்பறவெறிந்தநான்மறைபயில்வாழ்க்கை அலக்கனில்லவரிமிழ்திரைக்கங்கைநீராடி நலத்ததொல்கடனிரப்புபஞாங்கரினின்று புலர்த்தும்வேணியைக்காட்டுவபூங்கனிக்கொன்றை | 7 |
189 |
எல்லொளித்தழலிறையவனெழுவகைநாவால் அல்லறீர்மகப்பொருணுகர்ந்தரும்புகையீட்டம் எல்லைநீத்தநாக்கொடுபுகையீட்டுதலேய்க்கும் செல்லினங்கிடந்துறங்குதண்குழைநறுந்தேமா. | 8 |
190 |
போதுகொள்பவர்சமித்தொடுசெல்பவர்புரைதீர் வாதுகொள்பவர்நல்லருட்குரவர்தாள்வனசத் தாதுகொள்பவர்மனோலயவின்பசாகரமேல் காதுகொள்பவர்கணிப்பிலர்தாபதகணங்கள். | 9 |
191 |
நாமநூன்முதுவோர்தவப்பள்ளியின்ஞாங்கர் காமநூறெரிவிடரெனக்கடுவனின்றிரங்க ஏமவைம்பொறியவித்துளவிரதரினீண்டைக் காமதன்றெனவகலுவகருவிரன்மந்தி. | 10 |
192 |
புந்திவல்லவர்மகவினைப்பொடிகளைக்கரத்தால் சிந்திமெய்வெளிறடைந்தவெஞ்சினக்கடகளிற்றை இந்திரன்றனாதுயரியமருப்புடையிமையாத் தந்தியாங்கொலென்றயிர்ப்பனதளர்நடைப்பிடிகள். | 11 |
193 |
முன்னமெம்முருவடைந்துளோன்காணருமுளரி அன்னசேவடியிவையெனப்புல்லுறைத்தழுங்கா தின்னமாதவர்மெல்லடியியங்கலாறெல்லாம் கொன்னவின்றவெங்கோட்டினாலகழ்வனகோலம். | 12 |
194 |
கொம்மைச்சூதத்திற்கதலியிற்பலவினிற்குழைந்த அம்மைத்தீங்கனிச்சாற்றினாலாணவமாதி மும்மைப்பங்கமுமகன்றுளாரேனுமிம்மூன்று செம்மைப்பங்கமீண்டகலுமாறறிந்திலர்திரிவார். | 13 |
195 |
ஏகமாமுனிசுகமுகமெண்ணிலாமறையும் யோகநூல்களும்விரிந்ததுகடுப்பநல்லுரவோர் யாகசாலையின்மருங்கெலாமெழுதொணாக்கிளவி மோகநீத்தநூல்விரிப்பனபலசுகமுகங்கள். | 14 |
196 |
நன்றுசெய்ததோருயிரெனினக்குலநன்மை என்றுமேசெயுமென்பதீண்டறிந்தனமெரிகட் கன்றுவெஞ்சினவுழுவையும்புயங்கமுங்கனக மன்றுண்முன்னுளோர்பணிதலைக்கொள்ளுமவ்வனத்துள். | 15 |
197 |
புரங்கடந்தவற்கடிமைசால்கற்றுகில்புனைவார் தரங்கநீர்படிந்தெழுந்துழித்தாங்கும்வற்கலையை மரந்தெரிந்துகூர்நகம்பொதுத்துரித்துவல்லியங்கள் இரங்கிநல்கநின்றீர்ங்கலையேந்துவகவிகள். | 16 |
198 |
ஆசிலிவ்வனத்தருந்தவர்பெருமையையளந்து பேசில்வாளராவிறைவனுமிற்றெனப்பெறுமே பாசிலைத்துழாய்முகிலுநேடரியபொற்பதத்தை ஏசிலன்புநூல்பிணித்துளத்திருத்தினரென்றால். | 17 |
199 |
புலனடக்குநர்புவிக்கெலாந்தண்ணளிபூப்பார் நலன்விளைந்தநன்னெறியொழுக்கத்தினர்நாதத் தலனகன்றசின்மயப்பெருவெளியினிற்சலியா துலவுநோக்கினருறங்கலாவுறக்கமிக்குடையார். | 18 |
200 |
கூறிவித்ததையத்திரிகோதமன்குமுதன் மாறில்கண்ணுவன்வாமதேவன்சுகன்வசிட்டன் வேறில்காசிபன்சவுனகனாதியர்மேனாள் ஈறில்சத்திரவேள்வியொன்றிழைக்குவவ்வெல்லை. | 19 |
201 |
இயலிலங்குபன்மறைகளுங்கலைமுதலெவையும் மயலகன்றுளவாதராயணமகோததியில் பயனுகர்ந்துயிர்ப்பயிர்க்கெலாமின்னருள்பணிக்கும் புயலையேநிகர்சூதமாமுனிவரன்போந்தான். | 20 |
202 |
அடைந்தவண்ணலையாயிடையந்தணரடியேம் மிடைந்தவெல்விடாய்க்காய்ந்துநூற்கடலெலாமீண்டே கடைந்துதெள்ளமுதளிக்குமெங்கருணையம்பொருப்பே மிடைந்தசெல்வமேயென்றனரெதிர்கொடுவிருப்பால். | 21 |
203 |
அருக்கியாதிதந்தாய்மணிப்பீடமிட்டதன்மீ திருத்தியெம்பிரானீண்டெழுந்தருளினையென்னா விருத்தவேனில்வாய்க்கருவிமாமழைத்துளிவீசக் குருத்தசெந்நெலிற்களித்தனரோருரைகொடுத்தார். | 22 |
204 |
மறுவின்மூவறுபுராணமும்வளரிதிகாசத் திறனுமோதினைபலதருமாதியுந்தெரித்தாய் உறுதிவாய்ந்திலாவெமக்கடிகேண்மனத்துண்மை பெறவழங்கியபற்பலதலங்களும்பேசின். | 23 |
205 |
வேறு. உடனுறைமடவார்யாருமோம்புநரின்றிவாடும் மடவரன்மகப்பேறெய்தவல்விழிமூடிமற்றை இடவிழிநோக்கிப்போற்றியெந்தையாயானதேனை அடல்வினையறுப்பதாங்கொல்லதுசிராப்பள்ளிக்குன்றம். | 24 |
206 |
நொய்யகாற்சிலம்பிமாட்டுநூலிழைப்படலஞ்சாய்க்கும் வெய்யகால்யானைமாட்டுமொருநிலைவெளிப்பட்டோங்கும் அய்யநீர்த்திரளாயென்றுமமர்ந்தவானைக்காவென்று பொய்யிலாத்திருநீறிட்டபுரிசைசூழ்கிடந்ததொன்றே. | 25 |
207 |
மெய்யாறு முகக்கோன்றந்தைமேதகுவதகுவடிவும்வாழ்வும் கய்யாறுபிரம்புங்கோயில்காவலுஞ்சுடிகைப்பேறும் உய்யாறுபெறுவானந்தியொருவன்முன்பணிந்ததுண்டால் அய்யாறுமாறுநீங்குமருளாறுந்தருமையாறு. | 26 |
208 |
காரகன்மிடற்றுமுக்கட்கனிசெவிகொடுத்துத்தாழத் தாரகப்பொருண்மையோதுஞ்சண்முகத்தொருவன்கோட்டம் பாரகப்பரிக்குஞானப்பண்ணவர்துதைந்துபோற்றும் ஏரகமென்னுந்தெய்வவின்பவீடளிப்பதொன்றே. | 27 |
209 |
குடம்பொலிமுனிக்குமன்றற்கோலமுங்காட்டியெம்மான் இடம்படுகோவணங்கொண்டியலமர்நீதியுய்ய மடந்தையைமணியைப்பொன்னைமகவைமற்றுளவையெல்லாம் அடங்கலுஞ்சூறைகொண்டாங்களித்ததொன்றுளதுநல்லூர். | 28 |
210 |
பன்னருவினைகளெல்லாம்பலதலஞ்சாரப்பாறும் என்னநீள்சுருதியாவுமிசைத்திடுந்தன்பாற்செய்த துன்னருவினையும்யாண்டுந்தொலைவுறாவினையுமெல்லாம் தன்னகத்தெளிதுதீர்க்குந்தலங்குடமூக்கொன்றுண்டே. | 29 |
211 |
பத்தியங்கிலரேனுங்கண்படைகொள்ளினன்றேயோரெண் சித்தியும்பெறுவர்மேலுஞ்சிவனருள்பெறுவரென்னா முத்தியங்கனியைவேட்டுமுழுமணிச்சுடிகைச்சேடன் துத்தியஞ்செய்யுநாகீச்சுரமொன்றுதுலங்கிற்றம்மா. | 30 |
212 |
பூசநீர்ப்படிந்ததொண்டர்பூங்கழற்றோய்ந்தசின்னீர் பாசநீருடலிற்றோயப்பரித்தநீர்வேணியான்றன் வாசநீரிருக்கவென்னாவரன்றருமறலருஞ்சாயற் கேசநீர்ப்பொன்னிசூழக்கிளரிடைமருதொன்றுண்டால். | 31 |
213 |
கோவோடுபுலவரீண்டிக்கூன்பிறைக்கோட்டுநல்லான் மாவடிவெய்திப்போற்றமதிநுதலதிதியீன்ற தேவடுசெறுநர்ச்செற்றதிரிபிலைம்படையான்வைகும் ஆவடுதுறையென்றுண்டாலரும்பதியொன்றுமாதோ. | 32 |
214 |
மற்றாலம்புனைந்தோன்வேப்பங்கண்ணியான்வயங்குசோதி பற்றாலம்புயத்தைவென்றுபன்னிறந்தருதாட்சென்னி பொற்ராலம்போற்றுமந்தண்பொன்னிசூழ்துருத்தியாய குற்றாலமென்னமன்னுங்கோநகரஃதொன்றுண்டால். | 33 |
215 |
முதுசெல்வச்செழியனேவமுதல்வன்மண்பரித்தவாற்றால் அதுவையைக்கரைக்குவார்த்தையாயதென்றமலனேற்ற புகுவெள்ளப்பொறைதான்கொண்டுபூந்திரைசிவிறிப்போற்றும் மதிபுனற்பொன்னிசூழுமணியெயின்மயிலையொன்றே. | 34 |
216 |
உடம்படுமாயைபுக்கவுயிரெலாந்தமிழான்முத்தித் தடங்கரையேற்றுஞானசம்பந்தர்துறைகாண்மூதூர் முடங்குளைமடங்கலானோன்முதுபவந்தேறுமுச்சீர்க் கடந்திருமறையோர்போற்றுங்கடவுண்மாநகரமொன்றே | 35 |
217 |
கள்ளியல்பொழில்சூழிஞ்சிக்கார்சிராநனியேகாட்டுப் பள்ளிநான்கினுமிக்காயபள்ளிபூம்பள்ளியானும் வெள்ளியந்திரைபுரட்டும்வெண்கடற்பள்ளியானும் தெள்ளியராதப்போற்றுந்திருச்செம்பொன்பள்ளிமாதோ. | 36 |
218 |
தென்னவன்கூனுங்காமன்சிலையுடைக்கூனுமாற்றும் மன்னவனடியார்க்கன்பனானவனரக்கியாய கன்னிமாதிரங்கக்கூனிக்கலையற்குநிமிர்ந்துகாட்டும் மன்னவன்கருணைகூர்ந்தவளநகரதுபனைந்தாள். | 37 |
219 |
கருக்கொடியொழிக்கும்பொன்னிக்கரைக்கொடியடைந்துகும்பன் மருக்கொடிமலர்கடூவிமனமிறுமாப்பனின்போல் உருக்கொடிமும்மையன்பருளரெனவுருவிற்காட்டிச் செருக்கொடியகலக்காத்தான்றிருக்கோடிகாவொன்றுண்டே. | 38 |
220 |
விருப்பங்கூர்ந்துமையாளேத்தவெள்ளியங்கிரியிலென்றும் இருப்பங்கேயென்னமேவுமிறையவன்வினைவெங்கோடை உருப்பந்தீர்த்தருளுஞானவொண்முகிலானோன்வாழும் திருப்பங்கூராயதொன்மைச்சிவலோகநகரொன்றுண்டால். | 39 |
221 |
கானமர்கடுக்கைவேணிக்கடவுளேயடல்குன்றாத மானமந்திரத்தாலேனைமருந்தினாலுலகில்யார்க்கும் ஊனவல்வினையுமோவாவுற்பவவினையுந்தீர்க்கும் மானபுள்மறைபூசித்தவகன்பதிவேளூருண்டால். | 40 |
222 |
போதியன்முலைதொட்டுண்ணாமகவைத்தம்பொழிபாலூட்டும் நீதியன்னையர்போன்முக்கணருளைநீடுயிருண்டுய்ய மாதியல்பாகனன்பால்வகுத்தமுக்குளத்தினோங்கும் ஆதிவெண்காடாமாதியம்பலமென்பதொன்றே. | 41 |
223 |
பண்ணவந்தகக்கூவேனற்குயின்மொழிப்பேதைபாகத் தண்ணல்கண்ணனல்சான்றாகவாழிநீர்க்கிழவன்பொன்னித் தண்ணலங்கொடியைவேட்டசங்கமத்துறைநீராடி விண்ணலங்கனிந்தோன்போற்றும்வியன்சாயாவனமொன்றுண்டால். | 42 |
224 |
எனவருஞ்சையவோங்கலிடைநிகழ்பிரமகுண்டம் முனமதாய்க்கன்னிப்பொன்னிமுயங்குசங்கமமீறாக மனவுடைப்பணியானூர்மான்மியமெலாம்வகுத்தாயெந்தாய் உனதுழையடியேங்கேட்பவுரைத்ததொன்றுண்டுமேனாள். | 43 |
225 |
மற்றதன்முன்னும்பின்னும்வரம்பறுகாதையெல்லாம் சொற்றனையெம்மனோர்க்குத்துளக்கறமுன்வினாய பெற்றியையளித்தாயல்லைபெரிதுறவிழைந்தவெம்பால் முற்றுறவருளல்வேண்டுமுழுதொருங்குணர்ந்ததொல்லோய். | 44 |
226 |
வேறு. திருத்தலத்திலுத் தமமுமெய்த் தீர்த்தத்துத் தமமும் கருத்தர் தம்மிலுத் தமனையுந் தனித்தனி கரைந்தாய் நிருத்த னேகுரு லிங்கசங் கமமென நிலைபெற் றருத்தி வீடருள் பதியுமொன் றுண்டென வறைந்தாய். | 45 |
227 |
மூல வல்வினை யிருள்கெட வருணிலா முகிழ்க்கும் சீல வெண்கதிர்த் திங்களே யந்நகர்ச் சிறப்பை ஏல வெங்களுக் குணருமா றருளுதி யென்னாக் கால மும்மையு மொருங்குணர் சவுனகன் கரைந்தான். | 46 |
228 |
மறுவின்மாதவனுவற்சியைச்செவித்தொளைமடுத்துத் தெறுசினத்தழலவித்தமாமுனிவரன்செவ்வே உறுமுளத்தில்வைத்தோதியிலுணர்ந்தனனறனக்கோ ரிறுதியில்லவனெழிலுலாங்காழிமான்மியமே. | 1 |
229 |
வேறு. குரவுவார்சோலைக்கழுமலவாணன்குரைகழல்வியப்பமுமாங்கண் உரவுநீர்ப்பொன்னிவியப்பமுநினைந்துள்ளுருகிமெய்சிலிர்ப்பவாய்மலரக் கரமலர்குவியவறிவறியாமைகடந்தபூரணப்பெருங்கடலில் பரவசமடைந்தமுனிவர்தம்பெருமான்பகருவானிகரிலாதனவே. | 2 |
230 |
முன்னுமேறகதியைத்தருபலதலனுமொழிந்தனமுதல்வனேமூன்று வன்னமாய்க்கதியைத்தருதலமொழிந்தாமற்றுநீர்விழைதலாலதன்சீர் உன்னுமாறரிதாமேனுமெம்மறிவாலுணர்ந்தவாறுரைத்துமென்றுரைத்தான் மன்னுநான்மறையாலெண்ணிலாரணங்கள்வடித்தவனடித்துணைமனத்தான். | 3 |
231 |
உருண்டபொறபழுத்தபொரியரைக்கருங்கோட்டுயரியவெதிரிகாச்சிரமத் திருண்டபொறகளத்தான்கழுமலத்தியலையெம்முகத்தளித்தநாளெவையும் தெருண்டநங்குரவனெவர்க்குமிவ்வியலைச்செப்பலையென்றனன்பவத்தால் வெருண்டபக்குவத்தீர்க்குறைத்ததுமெமக்காம்வேட்டலுநுமக்கரனாமால். | 4 |
232 |
புரையறுதவத்துமுனிவிர்காளந்தண்பொன்னிசூழ்வரக்கிடந்தமையால் லிரைமலரங்கன்மிலைந்ததுபோன்றும்வினைக்குறும்பேறொணாவியப்பால் கரைபொருதலைக்குநீரரண்போனறுங்கடவுளப்புலன்கெழுகோட்டு வரையகத்துறலாற்கயிலையேபோன்றும்வயங்குமான்மணிமதிட்காழி. | 5 |
233 |
வண்டுழத்திரந்தகமலமண்டபத் துவானவன்மலர் தலையுலகம் பண்டுகைம்மலர்தூய்ப்பழிச்சியவாற்றாற்படைத்திடற்களித்தும்பன்னீர் மொண்டுகொண்டணைந்துகொண்டலாட்டயருமுரிதிரைக்கலலெழூஉங்கடை நாள், மண்டுபொற்றோணியுருக்கொடுகுடிலைவலியடைந்துவுமிந்ந்கரே. | 6 |
234 |
நீடுநல்லறங்களிழைத் துளோர்கயிலைநேர்வரீ தருமறைநெறித்தே தேடுமவ்வறத்துக்குறுபதமளிப்பான்சிவனலாற்றேவரில்யாரே நாடுமச்சிவனேமூவுருவாகிநற்றலம்பற்றினனென்றால் கூடுமோவிதறகுவேறொருதலத்தைக்குவலயத்திணையெனக்குறித்தல். | 7 |
235 |
உறுவரிலுயர்ந்தபராசரன்மேனாளொண்மலர்க்கிழவனைமறைநூல் நெறிபிறழ்கலியின்வலிதவவலிக்குநெடுந்தலநிகழ்த்துகென்றிரப்ப அறிவகேளெம்மான்கயிலையிலுமைக்கீதறைவுழியறிந்தயான்றெளிய பெறுதலமெதையுங்காழியுமிருபாற்பிறங்கிருதட்டினும்வைத்தே. | 8 |
236 |
துலையிடைநிறுப்பவிந்நகர்க்கவைதாந்தொகுபதினாறிலோர்கூறு நிலைபெறாதொழியவெற்றினுமோங்கிநிலவியதடியகநெறித்தாய்த் தலைமையெய்தியதுசந்ததமென்போற்சதுமுகரளவிலார்பணிந்த துலைவறுதவத்தோய்நீயவணேகினுன்னியவெய்துமாலொருங்கே. | 9 |
237 |
எனவருட்பனுவலாட்டிதன்கேள்வனியம்பலுமனையவன்விடையால் மனவலிகடந்தபராசரன்றொன்னாள்வந்தரும்பூசனைபுரிந்து சினவிடைப்பாகன்றிருவருள்பெறலாறறிகழ்ந்தகேத்திரவரமெனும்பேர் பனவரேத்தெடுப்பக்கொடுங்கலிவலியைப்படுத்திமீதுயர்ந்ததிப்பதியே. | 10 |
238 |
ஆதிதெய்விகமேயாதிமுத்துயரவடவியைவடவைபோற்காய்வ தீதிடைவதிவோரருந்தவந்தானம்யாகநற்பலன்களெய்துவரால் ஆதலினதணைகலார்மேலாமரும்பதமணைந்திடாரணைந்தார் போதருமறிவாலழைத்தவல்வினைகள்போகுமாலிரவிமுன்பனிபோல். | 11 |
239 |
விரதமெண்ணிலவுமெண்ணிருதானவிகற்பமும்வேள்விகள்பலவும் சரதமாமறைநூற்பயிற்சியநாளுந்தவரின்முத்தழலுஞற்றுதலும் பரவுமட்டாங்கயோகமுமளிக்கும்பலனெலாமரியுரிபோர்த்த வரதனென்றொருகாலுன்னினர்பலத்தைமானுமோவணுவளவேனும். | 12 |
240 |
சேயமென்கமலத்தயன்முனங்கொணர்ந்ததெய்வதாருவைமுறைவணங்கித் தூயமென்றளிரைமுடித்துளோரிடந்தொடருறுபிணிகளுமுடிப்பார் ஆயதன்னடிமண்ணுதன்மிசையணிவாரும்பெறன்முத்திவீடணிவார் பாயதண்ணிழற்கீழோர் மனுக்கணித்தோர்பலமனுச்சித்திநண்ணுவரால். | 13 |
241 |
வீதியினங்கப்பிரதக்கணம்புரிந்தோர்விமலனோடளவளாயிருப்பார் நீதியின்வணங்கிவணங்கியோநடந்துநிகழ்வலமொன்றொருகோடி போதுதுவலமென்றோரடிநடக்கிற்புகன்மகமாயிரகோடி மாதியல்பாகற்குவப்புறுபூசைவலஞ்செயலன்றிவேறுளதோ. | 14 |
242 |
கற்பநாண் முடிவி னரும்புறு மனம்போற் கலந்துமென் போதலர் மணம்பொல் உற்பவ நாளி லோங்கியுங் காழி யுயர்சிவன் விளங்குமன் னவன்பால் பொற்புறு மாய னாதிமன் னுயிர்கள் புக்கொடுங் குறுமுய ரிலிங்கத் தற்பமின் மாயை ஒடுங்குமுற் பயத்தி னடங்கிய முறையுதித் திடுமால் | 15 |
243 |
ஏந்தெழிற் காழி மான்மிய மனைத்து மியம்பபுறி லாயிர முகத்துப் பாந்தள்வேந் தனுக்கு யெண்ணில்பல் லுகங்கள் பகறினு முலப்புறா வதனால் பூந்துண ரிதழிச் சடிலவா னவனே புலனுறத் தெரிகுவ னல்லால் ஆந்தனி மறையுந் தெறிவுறா தந்தோ வன்னது சத்திய மாமால் | 16 |
244 |
பிறந்துளோர்க் கருளு முத்தியை யாரூர் பிணக்குறு நிணப்பொதி யாக்கை துறந்துளோர்க் கருளு முத்தியைக் காசி துணைவிழி களிப்புற கண்டு சிறந்துளோர்க் கருளு முத்தியைப் புலியூர்ச் சேரவும் பிறந்துளோ ரிறந்தோர் அறந்தகக் கண்டோ ரனைவர்க்கு முத்தி யருளுமிந் நகர்வியப் பதே | 17 |
245 |
கல்லையன் னவருங் கண்படை கொள்ளிற் கணமரைக் கணவமண் வதியின் தொல்லைவல் வினைகள் பரிதிமற் பனிபொற் றொலையபட் டிரியல்போல் எல்லைகண் டவரு மெல்லைக் டறியா விறையிருட் கடல்படிந் திடலால் ஒல்லையம் பதிபுக் கவர்க்கே கிளையோ டோங்கலங் கயிலைபுக் குறைவார் | 18 |
246 |
தோற்றமு மீறு முகந்துயிர்க் குயிராய் துணையிலி யாம்பரம் பொருளே சாற்றரு லிங்க மனமெனக் குரவன் வாக்கெனச் சங்கம முடலென் றாற்றுமுக் கரண மிவைகொடு மூல மலமதன் மூன்றையு மாற்றி ஏற்றருங் கதியுந் தரும்பொருட் டன்றே வினிதுவீற் றிருந்ததிந் நகரில் | 19 |
247 |
ஆதலாற் றலங்கட் கதிகமா கியதிவ் வணிநக ராய்பரஞ் சுடரெங் கோதிலான் முலையே யிலிங்கநல் லுறுப்பே குரவன்மா வதனமன் றோதலா லிந்தத் தலத்தின்வா ழன்பர்க் கூழ்முறை பணிபுரிந் துள்ளோர் சீதவான் கொழுந்தணி வேணிச் செம்மலா குவரிது திண்ணம் | 20 |
248 |
ஒல்கலில் பசும்புன் முலையகத் திடினு முடன்மிசை யுறுத்தினு நறும்பால் பில்குமோ துளியு மிலிங்கமுங் குருவும் பேணினார் பெரும்பய னனைத்தால் மெல்கிய வறுவகை முகத்தருத் துவரோன் மேனியுங் குளிர்ந்துபான் முலைக்கண் மல்குமா லதனா லிருபொருட் கூங்கே வதிகுவான் சங்கம வடுகன் | 21 |
249 |
மனமெனு மிலங்கத் தாணவ மாயும் வாக்கெனும் குருவின்மா யைகள் போம் துணிவின்மெய் யெனுஞ்சங் கமத்தினால் வினைபோஞ் சொல்லிலொன் றொன்றினாற் நினைவிலோர் கருவி யோர்கரு வியதாய் நிகழ்ந்திடா மும்மலப் பரப்பை வி¡னவலி தன்னை யித்தலம் போல் மேதினித் தலங்கள்போக் கறியா | 22 |
250 |
அல்லியிண் டையின்கா லிறினுநூ லிறுவ தருமைபோல் யாக்கையிற் றாலும் புல்லிய பிருவினை போகா போக்கறச் சமநிலை பெறுநாள் ஒல்லியற் கடலை பிணைகொடு கடந்தாங் குறுகரை காண்டல்போற் கண்டால் மல்லியன் ஞானம் வரும்பர கதியும் வருமது மன்னுயிர்க் கரிதால் | 23 |
251 |
மூவகை மலமு மூவகை வடிவ முருக்குமித் திருக்கிளர்த் தலத்தை எவரே நயந்தா ரேனுமேல் வீட்டை யெளிமையி னெய்துவர் யாண்டும் மாவளந் தருநீர்க் குய்யகா சியும்நீண் மத்திய சிதம்பரந் தானும் ஆவதிந் நகராலாதலி னிதன்சீ ரறிகுநர் யாரருந் தவத்தீர் | 24 |
252 |
அலம்வரு மிடற்றான் காழியைத் துதித்தா லலமரு மரதந்தைதோய் யகல்வார் வலம்வர னென்பா னீரண் டிலக்க வலம்வரு பிறவியு மாயும் பலம்வரப் பணிந்தால் விண்ணில்வா னவர்தம் பலமவர் தமக்குறு முடிக்கீழ் தலமுறத் தொழுத ரனைபுண் டீரேழ் தலம்வரு மவரடித் தலத்தே | 25 |
253 |
சாணள வாடை யொருவர்மா லிந்தத் தலத்துற வளித்தவர் தகைசால் பாணளி மிழற்றும் பசுந்துழா யலகற் பண்ணவன் பதவியைப் பெறுவர் தோணியா ளுடையான் றிருமுன மொடுகாற் றெழுதெழிற் சஞ்சித மாதி ஏணிலா வினைப்பே ராழியை நீந்தி யிறையருட் கரையில் வீற்றிருப்பார் | 26 |
254 |
தேசுறு திங்கட் டிருநுத லழகி திருநிலை யழகி தன்றிருமுன் மாசறு பிரம தடத்துவெண் டிரைக் காலீர்ந் துளி மன்பதை யுடன்மேல் வீசுற விமல ராவரஞ் செழுத்தை விரிப்பரேற் காசியே முதலா ஏசறு தலத்தி லிட்டிகள் பலவு மிழைத்தபே றெளிதிலெய் திடுவார் | 27 |
255 |
இகலறு குணத்தாற் கெளிவரும் பிரம லிங்கநே ரிலிங்கமு மிருட்டீர் அகிலதே சிகனெம் பெரியநா யகன்போ லருட்பழத் தளிந்ததே சிகனும் பகவனார் முடைவெண் டலைபுனை தண்ட பாணிநேர் சங்கமமப் பொருளும் புகலில்வே றில்லை மட்புலத்தினிலும் புலவர்சேர் விட்புலத் திலுமே | 28 |
256 |
வேறு பணிப் பெருந்துயில் வானவ ராதியர் பசும்பு லான்முடைநாறும் கணிச்சி யெம்பிரா னருள்வழி நான்முகன் கண்டவிவ் வண்டத்துள் இணைக் குமேழ்பெருந் தீவிடை நாவலம்தீவுமற் றிதனுள் அணிப்பொலங் கிரி யெண்பதிற் றீரண் டாயிர நிவப்பிற்றாய் | 29 |
257 |
முடிப்ப ரப்புமுப் பரனிரண் டாயிர முற்றியன் னதிற்பாதி அடுப்ப ரப்புரீஇ யன்னபே ரளவதா யுவிரிரு சுடர்சூழ் வடித்த நிலமுஞ் சிரங்கமும் விடையுமா வரைகளுத் தரங்காண படிகுண மந்தரம் கிழக்குற விபுலமாம் பரப்பத மேற்காக | 30 |
258 |
இமைய மால்வரை நிடதமால் வாரயொடு மெம்கூடப் பேராண் அமைய மால்வார தென்தி¡ச தொன்ற விவ் வகவிதழ் பலபூத்துச் சமையயு மேருவாம் பொகுட்டொடு நீடிரை தவபூதி னிறவேலை அமையுதி ருந்தடத் தலர்ந்தசெந் தாமரை யாகிய தணிவாய்ந்தே | 31 |
259 |
பொன்பரா வுமிந்நா வலந்தீ விடைபுகன்ற யோசனை யெல்லை ஒன்பதா யிரம் பரதகண் டத்துமே லும்பர்மா லயனாதி அன்பரால் மைத்தவ முளைத் தெழுந்தது மளவிலாத் தானங்கொண் டென்பரா பரனியமுன் மலயமட் டிருந்தன னிவைதம்மில் | 32 |
260 |
கறையகன்றவிக்கருமபூமியினிடைக்காசியேகயையேசீர் உறைபிரயாகையேதில்லையேகுடந்தையேயோங்குதென்னாரூரே மறைபழிச்சியகானமேதிருவிடைமருதமேயெனவெட்டா இறைதருந்தலமிவைகளையதிகமென்றியம்புவபலநூல்கள். | 33 |
261 |
ஈண்டுநாலிருதலத்தினுமுயர்ந்ததாலித்தலமெவற்றென்றால் சேண்டயங்குநீர்புதைத்தபேரூழியிற்றிரிபிலாததனானும் பூண்டவைதிகசைவநாட்டியதமிழ்ப்புதல்வரைப்பெறலானும் ஆண்டநாயகன்குருமுதன்முப்பொருளாய்வதிதரலானும். | 34 |
262 |
ஐங்குரோசமட்டெல்லையின்வைகியவழிவுள்ளோரறிவில்லோர் தங்குகிற்பனபறப்பனதிரிவனதவழ்வனகிடந்தூர்வ மங்குபுற்கொடியாவையுமயற்புலம்வந்திவணிறந்தோரும் பொங்குகூற்றடுந்திருவடிநிழலிற்புகுதல்சத்தியமாமால். | 35 |
263 |
வருபதங்கனைமலைமகன்றந்தையால்வானவர்க்கிறைமாட்சி ஒருபதம்பெறவுன்பதம்புகலெனுமொலியறுபதம்பாடிப் பொருபதந்திகழ்கடம்பணிதடம்புயன்புகலிநாயகன்காட்சி தருபதம்பணிந்தைம்பதம்பெற்றனன்றறபதம்பெறவிண்ணோர். | 36 |
264 |
துகிருலாஞ்சடையலமரப்பணித்தொடைதுயல்வரக்குழையாட வகிருலாம்பிறைவயங்கவின்னருணகைவதனமண்டலம்பூப்ப நகிலிளங்கொடிகாண்வரவாரணனரைமுதுதலைகொய்த உகிருலாங்கரத்தொருவனிப்பதியிலன்பொடுங்குனித்தனன்மேனாள். | 37 |
265 |
குன்றிருஞ்சிறையொருங்குறவரிந்தவாட்குலிசவேலிறைமுன்னாள் வென்றியெண்டிசைத்தலைவருமந்நகர்விடைவலானடிபோற்றி மன்றவோரொருகடவுளுந்தடமுமவ்வயினிறீஇவழிபாட்டால் என்றுமேதகவிருந்தனர்வரன்முறையெண்ணில்விண்ணவரோடும். | 38 |
266 |
வாணிலாமணியிழைத்தபொற்குவட்டினில்வதிந்தருளியதண்ட பாணிமுன்னமர்பீடமேன்மலர்கடூஉய்ப்பார்க்கவன்றினத்தேத்தி ஏணிலாவியபுழுகணிந்தள்ளிருளிடத்தவன்றிருத்தாளைப் பேணினார்க்கொருவறுமைவல்வினையெழுபிறப்பினுந்தொடராதால். | 39 |
267 |
இயக்கர்கின்னரர்சித்தர்வித்தியாதரரிமையவருரகேசர் பயங்குமைங்குரோசத்தளவெல்லையும்பலவகையிலிங்கங்கள் நயக்குமானிறீஇவழிபடவிருத்தலினகரமிங்கிதைமேலோர் மயக்கமில்லிலிங்காடவியென்றலான்மணலுமவ்வடிவாமால். | 40 |
268 |
துஞ்சல்போயதெள்ளமுதுண்டேழிசைத்துழனிசூழ்தருநீழற் பஞ்சிமெல்லடிச்சசிமுலைமுயங்கலாற்பணைப்புயத்தணைதூளை நெஞ்சினல்லவரருவருத்துறுப்பினானிகழ்வலம்புரிந்தந்தோ கஞ்சமாதுறையிந்நகர்வீதியிற்கலந்ததூளணிகிற்பார். | 41 |
269 |
கண்ணகன்றசேட்புலத்தினிற்சிகரிகள்கண்ணுறக்கரங்கூப்பித் தெண்ணறும்புனல்படிந்துநீறணிந்துருத்திரமணித்தொடைவேய்ந்து புண்ணியப்பொலன்சினகரம்புக்குமுப்பொருளையுந்தொழப்பெற்றார் அண்ணலஞ்சரணிழலிடையொன்றியொன்றாநிலையடைவாரே. | 42 |
270 |
விழுதுவிட்டமென்புரிசடையந்தணன்வியன்மணித்தடங்கோயில் பழுதுபோக்குவோர்புதுக்குவோரிட்டிகைபரப்புவோர்புல்லாதி உழுதுமாற்றுவோர்மேனிமாசகலுமாறுலகுபூத்தருளன்னை தொழுதகுந்திருவுத்தரீயங்கொடுதுலக்கநன்மகவாவார் | 43 |
271 |
அரவவேணியன்றிருமுடித்தலத்திலானைந்தமுதொருங்காட்டிற் பரனருட்கடல்படிந்தினிதாடுவார்பதியிதிற்சிவநாமத் திரவில்யாமநான்கெவலயும்வரன்முறையெந்தைதாள்பணிந்தேத்தி விரவுவார்க்கலாதயலவர்ககிடங்கலோமேலரும்பெறல்வீடு | 44 |
272 |
எண்ணிலாதொல்வலிங்கமும்பெயருநல்லெழிற்றடங்களும்வாய்ந்து நண்ணியோங்குவலிந்நகரிவற்றின் முன்னான்குபுண்ணியமூர்த்தி தண்ணிலாவியதடங்கண்முன்னான்கபிதானமுந்நான்காக உண்ணிலாவுமாலிவற்றிறும்பூதெலாமுரைசெயக்கரையின்றே. | 45 |
273 |
தோணியம்புரத்தொடுபிரமாபுரந்தொல்லியறசெழுங்காழி தாணுவெங்கு ருபுகலிவண்சிரபுரஞ்சண்பைநகரகொச்சை வேணூர் புரங்கழுமலம்புறவமேர்மிக்கபூந்தராயென்றே காணுமிப்பெயராறிரண்டையுமுளங்கருதுவாகதிசோவார் | 46 |
274 |
நனியுரைப்பதென்னிழிகுலத்தழிபுலனாறுமென்கொடிமென்றோள் முனிமுயக்குறவாங்கவன்சிறுமையைமுழுவதுமகன்றோடத் துனிவகற்றிமூவறுபுராணங்களுந்தொகைவகைவிரியாகத் தனியெனக்கருள்குருவருட்குருவெனத்தந்ததித்தலமென்றால் | 47 |
275 |
இன்னுமான்மியமெண்னிலகண்ணியதிசைத்தனமிருடீரப் பொன்னொழுக்கியபுரிசடைமாதவப்பொருப்புறழ்முனிவீர்காள் கன்னிமூதெயிலிந்நகர்ப்பெயரியற்காரணமீராறில் முன்னதாகியதோணியம்புரிவரன்முறையினையறைகிற்பாம். | 48 |
276 |
என்னவேணிமெளலிச்சவுனகாதிமுனிவர்க் கன்னவூர்திநிகராயமுதுசூதமுனிவன் கன்னலஞ்சுவையெனக்கடவுளாரமுதெனச் சொன்னகாதையதனிற்சிறிதுசொல்லுவனரோ | 1 |
277 |
வெம்புமாயைதிரிவெவ்வினைமணிக்கயிறுசூழ் பம்பரம்பொரவுழன்றலைபடாதுபரிவால் வம்பராமுளைமதிச்சடிலமாமுனிவனோ ரைம்பெருந்தொழிலியற்றுவனுயிர்க்கருளினால். | 2 |
278 |
மறைவலாளனில்வகுத்துநெடுமாயனிலளித் திறையுருத்திரனிலீறுபுரிவித்துவினையின் பொறைமகேசனின்மறைத்துநிறைபோதமுதல்வன் சிறையுயிர்க்கருளுமைவகையசெய்கையிவையே. | 3 |
279 |
மாசிலிவ்விறைவனாணைவழிவைகுவனவாம் ஆசிலண்டநிரையெண்ணிலவைகட்கிடனதாய் ஏசிலாவலையிலேழ்கடலையுந்திவலைபோல் வீசுமூலநெடுவேலையஃதொன்றுளதரோ. | 4 |
280 |
வேலையன்னதில்விராட்புருடன்மெய்ம்மயிர்தொறும் பாலெலாமுதுபழம்பொதியுதும்பரமெனச் சாலவண்டநிரைதங்கநடுநின்றனனிவற் றேலுமண்டமிதனெல்லையைவிளம்புவனியான். | 5 |
281 |
தோமிலாவுலகமீரெழுமைதொக்கவிதனுள் ஏமமால்வரையிலங்குமிதனைத்தழுவுமால் சேமநாவலுறுதீவுமதுசேருவரியும் தாமியோசனைதனித்தனியிலக்கவிரிவாய். | 6 |
282 |
அறையுமவ்வியலிரண்டெனுமிலக்கமகலத் திறலியென்றமுதுதீவுமயலிக்குவடிசா றுறைதடங்கடலுமோங்குமதனுக்கயலிலே சிறைகுலாமிலவுசேருமொருதீவுமுளதால். | 7 |
283 |
நாலெனுந்துணையிலக்கமதைநண்ணுமதுவார் வேலையும்புகலினத்துணைவிளங்குமயலே சால்புநீள்குசைதயங்குமொருதீவுமருகே ஏலுநெய்க்கடலுமெட்டளவிலக்கமுறையே. | 8 |
284 |
அதனிரட்டிகிரவுஞ்சமடுதீவுமதுசூழ் ததியுடைக்கடலுமத்துணைதயங்குமதன்மேல் முதியசாகமுளதீவுமலைமோதுநிறைபால் உத்தியுந்துணைதனித்தனியிரட்டியுறுமே. | 9 |
285 |
மண்டலம்புதையிருட்படலம்வாரிநுகரும் சண்டபானுவுதயந்தருவதுந்தனிவலங் கொண்டுமேல்கடல்குளிப்பதுமதற்குளெனவே பண்டைநான்மறைபயின்றவர்பகர்ந்தனரரோ. | 10 |
286 |
மற்றதற்கயல்வயங்குவதுபுட்கரமெனச் சொற்றதீவுமதுசூழ்வருபுனற்புணரியும் முற்றும்யோசனைகண்முன்னதினிரட்டியனவாம் பெற்றயோசனையிலக்கவகைபேசியிடினே. | 11 |
287 |
வேறு. அயலிலீரைந்துகோடியகன்றபொற்பூமியப்பால் உயர்பதினாயிரத்தியோசனையாழிவெற்பாம் பெயர்வருமயலினீண்டபெரும்புறக்கடலினெல்லை இயலுமோர்கோடிமேலுமிருபத்தேழிலக்கமப்பால். | 12 |
288 |
மய்யாருமிருளுலோகம்வகுத்தயோசனைகள்கோடி அய்யேழினொடுபத்தொன்பானிலக்கநான்கயுதமாமால் எய்யாதவண்டப்பித்திக்கணங்கோடியெல்லையென்ப மெய்யார்யோசனைகளின்னவிரியினித்தொகையுஞ்சொல்வாம். | 13 |
289 |
வளமலியம்பொன்மேருமத்திதொட்டண்டப்பித்தி அளவும்யோசனைகடேரினைம்பதுகோடியாக விளைதருகிழக்கினெல்லைவிரித்தனமேனைமுன்று தளர்வருதிசையுமிவ்வாறகன்றனசாற்றுங்காலே. | 14 |
290 |
தெரிவுறுவகலநூறுகோடியோசனைசெறிந்த விதிபுவிக்குக்கீழ்தொட்டுமேன்மட்டுநூறுகோடி துரிசறுமுயர்வாமண்டமீங்கிதைத்தொலையாவெள்ளப் புரிபுறக்கடல்பாய்ந்தெற்றிப்புகுந்ததோரூழிநாளில். | 15 |
291 |
அலையினமலையிற்பொங்கியண்டகோளகையைமுட்டி நிலைகுலைத்தடுக்கையெல்லாநெரிநெரித்தார்ப்பினோங்கித் தலைபடுஞ்சுழியாலெட்டுத்தடந்திசையொடுங்கவோரெண் கொலைமதக்களிறுஞ்சாயக்குமைத்ததுமுதுநீர்க்கொள்ளை. | 16 |
292 |
ஆழிமால்வரையுமோரெட்டாகியவரையுஞ்செம்பொன் ஊழிமால்வரையுமேல்கீழுயரியவரையுமாநீர்ப் பாழிவெண்டிரைகள்பாயப்பொடிந்தனபடிந்தபல்வே றேழிரண்டுலகில்வாழெவ்வரையுமவ்வரையின்மாதோ. | 17 |
293 |
நாளறாவலிசான்மோட்டுநாலிருதிசையினின்ற கோளராவினமுநாளுங்கோளும்விண்ணோரும்விண்ணில் வாளறாக்குலிசனாதிமாதிரத்தவருஞ்செம்பொற் றூளறாத்தருவும்வேறுசுடர்களுமிரிந்தமாதோ. | 18 |
294 |
பேர்வனபறப்பநிற்பபிறங்கிருணிரயந்தம்மில் ஆர்வனநீரில்வாழ்வதத்துவவரவமாதி ஊர்வனதவழ்வவெவ்வேறுலவிலாமனிதராகிச் சார்தருமுயிர்களெல்லாஞ்சாய்ந்தனதேய்ந்தவன்றே. | 19 |
295 |
கமலநாரணனொடுங்குங்கடையினுமுதல்வனாவான் நிமலனேயன்றிவேறுநிலையுநர்யாரேயார்க்கும் தமரசாகரநீர்மோதத்தம்முயிர்தேம்பினாரை அமரரென்றுறுரைப்பாரன்னோர்பெற்றியையறியாரன்றே. | 20 |
296 |
சொல்விரிபொருள்கடாமெத்துணையவத்துணையவெல்லாம் வல்விரைந்தழியவாங்கண்மன்னுயிரீட்டம்யாவும் மெல்லியமானமாயையிடத்தவாயொடுங்கலோடும் அல்விரவியதாலெங்குமாழிநீர்பரக்கமாதோ. | 21 |
297 |
மின்கிளர்ந்தனையாங்கேவிழுங்குறுமேகமென்ன முன்குறித்தண்டந்தொக்கபொருளெலாமுரிந்துமாயை தன்கணேயொடுங்கிப்பன்னாட்டகைந்தனதகைதலோடும் வன்கறைமிடற்றுத்திங்கள்வகிரணிவரதனன்பால். | 22 |
298 |
நூக்கியவொருவனாட்டநுடங்குபாவையினைச்சின்னாட் போக்கியமற்றெடுப்பான்போன்றுபுவனகோடிகளைமுற்றும் தாக்கியதலைவன்றானேதன்னருள்வலியான்முன்போல் ஆக்கியதுணிந்தானெல்லாமளித்தழித்தாக்கவல்லான். | 23 |
299 |
நஞ்சுமிழுரகப்பூணுநகைநிலாக்கொழுந்தும்வாசப் பைஞ்சுடரிதழித்தாரும்பாய்புலியதளுமின்றி மஞ்சுறழ்கருமென்கூந்தன்மாதொடுமருவியெண்ணெண் துஞ்சருங்கலைகளென்னுந்துலங்குபொற்கலைகடாங்கி. | 24 |
300 |
பருமையாய்ச்சிறுமையாகிப்பதங்களாய்வண்ணமைந்தாய் நிருமலமாய்முத்தேவாய்நிகிலமாய்க்குணமோர்மூன்றாய் இருமையாயெழுத்தாய்நாதவெல்லையாய்வேதமாதி பெருமைசாலொலியாய்நின்றபிரவணந்தோணியாக்கி. | 25 |
301 |
கரியநாரணனாலந்தண்கமலவாகனனாலேனை உரியநான்மறையான்மிக்காருளத்தினாலளவையாலும் தெரிவிலாவொளியாய்நின்றசின்மயன்றானேதெய்வப் பெரியநாயகனென்றோதும்பேர்புனைந்துருவமெய்த. | 26 |
302 |
ஏறினானென்பவெம்மானெழில்கனிந்தொழுகுமேனி தேறினவிமலமாயதிவளொளிக்கற்றைசுற்ற மாறினவிருள்கண்மேனாண்மலைமகளமுதமாந்தி ஊறியஞானச்சேயாலொதுங்கமணிருட்டுப்போன்றே. | 27 |
303 |
பெய்யுநீர்த்திரைசுருட்டும்பிரளயவத்திநீத்தத் தையனாண்மலர்த்தரிளூன்றியருள்கனிந்தொழுகவூர்ந்தான் பொய்யிலாமறையினீறும்பொருப்பிறைமடந்தைகண்ணும் மையிலாவுரிமைத்தொண்டர்*ன்முமேயனையதோணி. | 28 |
304 |
தோட்டமுண்டகத்துப்புத்தேடொழில்புரியண்டகூடம் பாட்டகன்றிரைநீர்ப்பவ்வப்பாயலையலைப்பவெற்றுண் டீட்டமாம்பொருள்கள்யாவுமிறுதிகண்டிரங்குமுந்நீர் கோட்டமேலூர்ந்தானன்பர்குணத்துமேலூருங்கோமான். | 29 |
305 |
அருமைசாலறத்துக்கென்றுமழிவிலையென்றமேலோர் பொருண்மையைவிளக்கியண்டம்புறக்கடன்மடுத்தஞான்றும் இருமைசாலுயிர்கள்பன்னாளிழைத்திகலெறிந்ததெய்வத் தருமமேவடிவாய்நின்றதலத்தரசிதனைக்கண்டான் | 30 |
306 |
காண்டலுமுவகைதூங்கிக்கரமலரசைத்துநோக்கா நீண்டபேரண்டமுட்டிநிமிர்பிரளயத்துஞ்செவ்வே பூண்டதோரிறும்பூதுன்னிப்புவனகோடிகளிலீதே ஏண்டகுமூலாதாரகேத்திரமென்றான்வள்ளல். | 31 |
307 |
காலமிதாகக்கோடிகதிர்புரையுருவத்தாதி மூலகாரணனைமாநீர்முகட்டிடைக்கண்டான்மேலைக் கோலமாதிரமுங்கோட்டுக்கோட்சுறாவேறுஞ்சோதிப் பாலதாந்தரளத்தாரும்படைத்துளவருணப்புத்தேள். | 32 |
308 |
ஒண்மலரடிச்செஞ்சோதியுண்மலரென்னவாய்ந்த கண்மலர்பதித்துநீண்டகரமலர்குவித்துவாயால் பண்மலர்புகழ்ச்சியோதிப்பனிமலர்த்தாண்முன்வீழ்ந்தான் விண்மலருடுமினன்னவெண்மணிமுத்தமாரி. | 33 |
309 |
சுருக்கமின்முளரியன்னதுணையடிபணிந்துபோற்றத் திருக்கிளர்கடைக்கணோக்காற்றெண்டிரைக்கடல்வாழ்வானை அருட்கடலாழவைத்தானகந்தைவேரரிந்துளாரைக் கருக்கடல்வீழாதேற்றுங்கருணையங்கடலான்றானே. | 34 |
310 |
கணத்திடையெயின்மூன்றட்டகண்ணுதற்சாமிபின்னர்க் குணிப்பிலாவண்டஞ்சிந்துங்கொள்ளைநீர்வெள்ளஞ்சூழ மணத்தபூங்குழலாளோடும்வன்பிறத்தம்பியூடே தணிப்பிலாதமர்ந்தானின்னதலத்திடையளப்பில்காலம். | 35 |
311 |
விரிதிசைபுரப்பானெட்டுவியன்கணத்தலைவர்க்கேவிக் கிரிபுரைதண்டமேந்திக்கேத்திரபாலனாதி புரிசடைமுதல்வர்சூழ்ந்துபுறந்தருந்தோணிமேற்கொண் டரில்படாதுலகங்காக்குமன்னையோடிருந்தானெந்தை. | 36 |
312 |
முழுமலாமுளரிப்புத்தேண்முடிவுநாள்காறுமாநீர் அழுவமுற்றிருந்தானுன்னவாசறவறந்ததன்னான் விழியனலுண்டதோநாள்வேற்றுமைகுடித்ததேயோ மழுவலான்விளையாட்டென்னோவிளம்பறா**நீத்தம். | 37 |
313 |
ஏணிலாத்தெய்வதங்களிறினுமோரிறுதியின்றிப் பேணிவீற்றிருக்குந்தெய்வப்பெரியநாயகனாமெந்தை தோணிமேல்வைகுமாற்றாற்றோணியம்புரமீதென்றே காணியவிருந்ததின்னுங்காரணப்பேர்வேறுண்டால். | 38 |
314 |
காமருவருடைநள்ளிகலைதுலையிரவிதோற்றம் தேமலிசிலையிற்செங்கைசிவநிசிதெறுதேளாரல் ஆமெழுதினமுமெந்தைக்கணிநறும்புழுகுமன்னைக் கேமுறுசாந்துஞ்சாற்றினெவையவர்க்கரியமாதோ. | 39 |
315 |
பதனறாமணிவித்தென்றும்பயன்படுவிளைவுகுன்றா முதனிலம்புக்காலென்னமுதக்குறைவறிஞர்பேணும் விதமலிவிரதந்தானம்வேள்விகண்மனுக்கண்மற்றும் இதமலிந்தொன்றுகோடியெனத்தருந்தலமீதொன்றே. | 40 |
316 |
மங்கலம்பொலியுமிந்தத்தலத்திலைம்பதத்தைவாழ்த்தும் அங்கவரன்றோசெந்தோட்டம்புயனிழலுமாழிப் புங்கவனிழலுமந்தண்பூந்தருநிழலுமேவார் திங்களங்கண்ணியெம்மான்சேவடிநிழலொன்றல்லால். | 41 |
317 |
பொங்காழிசுற்றவொருதோணிபெற்றபுரமான்மியத்தினியல்போல் எங்காதன்மிக்கபிரமாபுரத்தினியலுந்தெரித்தருளென அங்காதரத்தினுரவோர்வியப்பவறவோனுரைத்தமுறையே பங்கேருகத்துமுனிவன்பணிந்துபலனுண்டகாதைபகர்வாம். | 1 |
318 |
மங்கும்பிறப்பினழியாதணுக்கள்வழிகண்டுமுத்திபுகுவான் பொங்கும்படைப்புமுதலைந்தொழிற்செய்புரவென்பதொன்றுடைமையால் எங்கும்புதைத்தபுனல்வற்றவண்டமிசைவிக்கவெண்ணுமிறைவன் தங்கைந்துசத்திகளினன்புவைத்துநெடுமாயைதந்துதகைவால். | 2 |
319 |
நாதாதிதந்துநழுவாதமந்திரபதம்வன்னநல்கியதனின் மீதேகலாதிநிலநீரசுத்தவிரிதத்துவங்களுதவிப் போதாவிரட்டைவினைசேதனங்கள்புகுமாறுசெய்துமுறையே கோதாடுமும்மைபெறுதேவர்மும்மைவினைசெய்யவென்றுகுறியா. | 3 |
320 |
குலநான்மறைக்குமதலோனைமிக்ககுணராசதத்தின்வருவித் தலமேறுசாத்துவிதமாகுணத்தினடலாழிவெற்பையருளி வலமேறுகொற்றமருவானைவெற்றிவளர்தாமதத்தினுதவி உலவாதமைத்திநெறியாலளித்தியொழியாதொழித்தியெனலும். | 4 |
321 |
அணியம்புகத்துமலரோனவர்க்குளடியேனமைக்கவடிகேள் துணியென்றதற்கோர்வலியில்லையெந்தைதுணையுண்டெனிற்சிறுமைசால் அணுவொன்றுவெற்பினுருவாகும்வெற்புமணுவாமதற்கருமையே பணியென்கணிட்டபடிசெய்வலாதிபகவாவருட்கணுளதேல். | 5 |
322 |
மற்றின்னகூறுமறையோனையண்ணன்மகிழ்வெய்திமாயைவழியில் பற்றின்றியெங்குநிறைவாய்நிறைந்தபரமொன்றுநித்தமிடையே உற்றுள்ளயாவுநிலையாவெனாநல்லுணர்வாலுணர்ந்தவொருநீ முற்றும்படைக்கலுறுசத்தியின்றிமுடியாதுனக்குமதுவே. | 6 |
323 |
அச்சத்திதானுமெனதேவலின்றியணையாதியானுமடைவே இச்சிக்கிலின்றியணையேனுளத்திலெனையெய்துமாறுவினையைக் குச்சித்துமூலமறையாகமஞ்சொல்குறியேமனுக்கள்வழியால் நச்சிப்பராவுமவர்பாலிருப்பனானென்பதொன்றுமறினே. | 7 |
324 |
அம்மந்திரங்களெழுகோடியாகுமவையிற்சிறந்துளனவாம் மெய்ம்மந்திரங்களொருநூறும்வேதவிதியிற்சிறந்தவையாம் செம்மந்திரங்கள்பலவற்றிலாதிதிருவைந்தெழுத்ததிகமால் இம்மந்திரத்தின்வலிபெற்றிசத்தியெவையும்படைத்தியெளிதே. | 8 |
325 |
நந்தாமலிந்தமனுவைம்பதத்தினடைபெற்றியங்குமவைதாம் ஐந்தாவிளங்குபதிசத்தியாவியபிதானமாமலமெனா ஐந்தாமெழுத்தின்முதலீரெழுத்துமதன்மேலெழுத்துமதன்மேல் முந்தாமெழுத்துமதன்மேலெழுத்துமுறையேகுறிக்கொண்மறையோய். | 9 |
326 |
மூதண்டகோடிவகையிற்பிறத்தன்மூதண்டகோடிவளர்தல் பேதுண்டுசாய்தல்வழிகண்டணுக்கள்பிணியுண்டமும்மைமலமும் கோதுண்டுபோகவறியாதறிந்தகுணவாரிமூழ்கன்முதலா ஓதிங்கனைத்துமாமென்றிருத்தியோரைந்தெழுத்திலெனவே. | 10 |
327 |
அம்போருகத்துமுனிவன்பராவியவைகூறுமண்ணலடியில் பைம்போதுதூவியடிநீழனின்றுபரநாதபோற்றியடல்சேர் வெம்போதகத்தினுரிதோலசைத்தவிடையூர்திபோற்றியெனையாள் செம்போதபோற்றியருளாளபோற்றிசிவபோற்றியென்றுதொழுதே. | 11 |
328 |
அல்லைப்பொறுத்துமயலிற்குளிக்குமளியேன்மனத்தையுருகாக் கல்லைக்கரைத்தமொழியைப்பணித்தகனிவாயபோற்றியிமையத் தொல்லைப்பொருப்புவில்விட்டரண்கடுகளாய்விளைத்துமடியான் வில்லிட்டதற்குவடுவிட்டசென்னிவிறல்வாளிபோற்றியெனவே. | 12 |
329 |
பலகாலெழுந்துபலகால்விழுந்துபதமேலிறைஞ்சியருளால் உலகாதியுய்யவெனையுய்யஞானவொளியாய்நிறைந்தருளுநின் மலர்வாய்திறந்தமனுவானதொன்றைவருமாறிரங்கியருளென் றலரோன்விளம்பவிளமூரல்கொண்டவமுதானனன்கருணையால். | 13 |
330 |
கொய்யாதலர்ந்தவனசங்குவிந்துகுமுதம்புதைத்தவியல்போல் கய்யான்மணத்தகனிவாய்புதைத்தகமலாலயன்செவியினில் செய்யாமறைக்குமுதலாகநின்றதிருவைந்தெழுத்துமனுவைப் பொய்யார்பிறப்பினலையைக்கடத்துபுணையைப்புகன்றருளியே. | 14 |
331 |
உன்போலநேகர்தலமீதிறைஞ்சியொளிபெற்றமூலவுருவில் முன்பூசைசெய்துதடமொன்றுகண்டுமுழுமுத்திபெற்றமுறையே நின்பூசைசெய்துவலியும்படைத்துநிகிலம்படைத்திடுதிநீ நின்போதமென்றுநினையேன்மறந்துமென்போதமென்றுநினைவாய். | 15 |
332 |
குணராசதத்தினிலைநிற்றிவேறுகுணமற்றிருத்தியருளும் துணையேறுசத்தியிதனூடெழுந்தசுடராலடைந்திடுதிமேல் மணிநூல்கிடக்குமருவாவுனக்குவகையாயுளுக்குவரைநாள் அணியேறுகற்பமுறுநாளதற்குமளவானதைத்தெரிதியால். | 16 |
333 |
வேறு. இயற்கைமாந்தர்குறிப்பின்றியிமைக்குமிமையீரொன்பதுறின் அயிர்ப்பில்காட்டையதுமுப்பானமையிற்கலையாங்கலைமுப்பான் பெயர்ச்சிகணமுந்நான்குகணம்பேரின்முகுர்த்தமதுமுப்பான் மயக்கிலொருநாளைம்மூன்றாய்வருநாள்பக்கமறைவல்லோய். | 17 |
334 |
பக்கமிரண்டுமதியாம்பகருமிரண்டுமதியிருது தக்கவிருதுமூன்றயனஞ்சாருந்தெற்குவடக்குமெனப் புக்கவயனமிரவுபகல்புலவோர்க்கொருநாண்மூந்நூற்றோ டொக்கவறுபதுறினாண்டீதொருநூற்றின்விண்ணவராயுள். | 18 |
335 |
உம்பருகமீதெழுபத்தொன்றுற்றான்மனுவதாமீரேழ் பம்புமனுநாள்பகலாகப்பகுத்தநாளிலாண்டாக நம்பும்வருடமொருநூறுநண்ணினுனதுகற்பமெனச் செம்பொன்முளரித்திருமனையிற்செறிவாயென்றான்பிறைசூடி. | 19 |
336 |
வரிவண்டுழக்கமுகையவிழ்ந்துமதுவூற்றெடுக்குமடற்கமலத் தெரியன்மார்பனிதழிமலர்ச்செழுந்தார்மார்பன்மொழிந்தனகொண் டுரியசெவிநாலிரண்டாலுமுவட்டாவமுதுண்டுடல்சிலிர்ப்பப் பரியுமலர்க்கணருவிதரப்பணிந்தான்விடைபெற்றெழுந்தானால். | 20 |
337 |
எழுந்தானார்வத்தொடுமிமையாவெகினவூர்திதிகழ்சோதிக் கொழுந்தாயொளிருந்திருமூலக்குறிக்கீசானத்திசையூடே அழுந்தாமணிநீர்த்திரைக்கரத்தாலடலாணவப்பேரிருள்சீக்கச் செழுந்தாமரைப்பூஞ்சுடரேந்துந்தீர்த்தத்தடத்தைக்கண்ணுற்றான். | 21 |
338 |
எறிக்கும்படிகத்திரடெளித்தாலெனநின்றிலங்கித்தன்பெயரைக் குறிக்குந்தடத்தீம்புனலாடிக்கொய்பூங்கலைகண்மெய்தாங்கிப் பொறிக்கண்டிகையாற்பூதியினாற்பொலிந்துநியதிச்சடங்காற்றி நெறிக்கொண்டருமாமறைக்கொழுந்தாய்நின்றான்றிருமுன்சென்றானே. | 22 |
339 |
இருளாய்வெளியாய்ப்பரபதமாயேகமாகிப்பலவாகித் தெருளாயகண்டமுழுமுதலாய்ச்செறியாதெவையுஞ்செறிந்தபரம் பொருளாய்ப்பசுபோதங்கடந்தபுரையோருள்ளத்தகம்பழுத்த அருளாய்நின்றபிரமேசனடித்தாமரைகண்டஞ்சலித்தான் | 23 |
340 |
உருகியுருகிநெக்குள்ளுடைந்துகுழைந்துமலர்விழிகள் அருவிகொழிப்பவுறுப்பைந்தாலாட்டங்கத்தால்வீழ்ந்திறைஞ்சிப் பெருகியொளிகால்சிவலிங்கப்பேரானந்தப்பெருஞ்சுடர்முன் மருவிநறுமஞ்சனமாட்டிவழிபாடிழைத்துமலர்தூவி | 24 |
341 |
தென்பால்வடபான்மேல்கீழ்பால்சிகைவெஞ்சுடர்செயருக்கன்மிசை இன்பால்விழிவைத்தைந்துமவித்திழைத்தாயிடையாண்டாயிரமும் நன்பாலாற்றிவளியுண்டுநலஞ்சேரைந்துபதங்கூறி அன்பாலாறுமடக்கியெந்தையாராதனையுங்கடைப்பிடித்து | 25 |
342 |
கோவேபோற்றியாதிமறைக்கொழுந்தேபோற்றியருள்குழைக்கும் காவேபோற்றிமெய்ஞ்ஞானக்கண்ணேபோற்றியென்னிடும்பை மாவேதனைக்கோர்மருந்தாகிமதிமாசகற்றிமறித்தாண்ட தேவேபோற்றிதோணிபுரச்செல்வாபோற்றிசிவபோற்றி | 26 |
343 |
பின்னன்மவுலிப்பெருமுனிவர்பெட்பமறையின்பொருளனைத்தும் மன்னுங்குருவாய்வடநிழற்கீழ்வதிந்துபுகன்றவியல்போற்றி முன்னமறையின்விரிவையெல்லாமுழங்குந்தவளக்கிண்கிணிக்கால் கன்னன்மழலைமகவுரைப்பக்காதுகொடுத்தநிலைபோற்றி | 27 |
344 |
வடுவார்தடங்கண்முனிவர்மனைவைகுந்தவத்துப்பன்னியர்கை இடுமூணயந்தின்னெழில்காட்டியிரங்குங்கருணைமுகம்போற்றி கடுவார்நோக்கினரமகளிர்கனிவாயமுதுமமுதுமுண்ணப் படுமால்விடமுண்டும்பர்தமைப்பரிந்துபுரிந்தவருள்போற்றி | 28 |
345 |
இனையபலவும்வாழ்த்தெடுக்குமீர்ந்தணகமலத்திறையோன்முன் முனைவனிமயப்பாவையொடுமுக்கட்பெருமானெதிர்தோன்றி இனையலுவந்ததளித்துமெனவேறூர்தோன்றாலுன்கழற்கால் வனையுமலர்த்தாமரையடியேன்மனவாவியினிற்பெறல்வேண்டும் | 29 |
346 |
ஏணியாயவிவ்வண்டமினிதுபடைக்கலுறுசத்தி பேணியளித்தாட்கொளல்வேண்டும்பெருமானினதுதிருத்தொண்டில் கோணிலாதகுற்றடிமைக்குழுவோடெனையுங்குறிக்கொள்ள மாணிலெளியேன்பெறல்வேண்டும்வரமீகென்றான்பரமேட்டி | 30 |
347 |
அள்ளற்கமலத்திறையிவ்வாறறையக்குறையாவரமனைத்தும் கொள்ளக்கொடுத்துப்பேரருளுங்கொடுத்துக்ககனத்திடைமறைந்தான் தெள்ளித்தெளிந்தவமுதநிலாத்திசைசூழ்வளைப்பச்சுடர்கொழிக்கும் வெள்ளிப்பொருப்பிலிவர்ந்ததெனவெள்ளேறிவர்ந்தவிரிசடையோன் | 31 |
348 |
கதிர்காலொற்றைக்குழைக்கிழவன்ககனத்திடைபோக்கயர்தலொடும் கொதிவேலலைத்துக்கயன்மருட்டிக்குழையோடெதிர்பேர்மழைமதர்க்கண மதிவாணுதலார்நிலையழகிமலர்த்தாள்பரவியிருவருக்கும் துதிசால்கனகபெருங்குடுமிச்சுடர்ப்பூங்கோயிலினிதமைத்து | 32 |
349 |
வெண்ணந்துயிர்த்தமணிமுத்தம்வெடிவாயாம்பன்முகையவிழ்க்கும் தண்ணந்துறைநீர்ப்படித்துறையுந்தடமாமதிலும்புடைதிருத்தி எண்ணும்பெறுசீர்பிரமதடத்தென்னக்கடவுட்டீர்த்தமெல்லாம் நண்ணும்படியுய்த்தளிதுளும்பநான்குமருங்குந்தளமமைத்து | 33 |
350 |
விதிப்பேரண்டப்பரப்பகத்தமேல்கீழுலகுநெடுந்திசையும் நிதிச்சாகரழுநடப்பனவுநிற்கின்றனவுமோரிரண்டு கதிர்க்காவலரும்பிறபொருளுங்கண்டான்றண்டாமரைக்கரத்தால் பதித்தான்கடவுட்கணித்தாகப்பாரிசாதத்தருவொன்றை | 34 |
351 |
ஆள்வேட்டுழன்றுசெவ்வரிதோய்ந்தயிலைத்துரந்துகயலலைத்து வேள்வார்கணையைப்புறங்கொண்டுவிழையப்படர்ந்துகுழைகடந்து வாள்போற்பிறழும்விழிகளுங்கைம்மலரும்பரதவழிச்செல்ல நாள்வாயெழுந்தமின்போன்றுநம்பன்றிருமுன்னடிப்பாரை | 35 |
352 |
ஓலிக்குங்கருவியைந்துமிசைத்தொழுகுவாரைச்சிறையறுகால் கலிக்குமலர்ப்பூந்தெரியல்வினைக்கைவல்லாரைச்சிவகருமம் பலிக்குங்கிழமைச்சைவதவப்பான்மையோரையிருள்பருகிச் சொலிக்குஞ்சுடர்ச்செந்தீபநிரைத்துகடீர்செய்கைத்தொழிலோரை | 36 |
353 |
பாயதிருமஞ்சனமெடுக்கும்பரிசாரகரைத்திருமேனிக் காயபசும்பொற்கலநிறைத்தவரைக்காவலரைச்சுரபிகளை ஏயபணியிற்பழுதுதுடைத்திடுகிற்பாரையிறையடிக்கே தூயகருத்தானகம்படிமைத்தொழிலாலுயர்ந்ததொல்லோரை | 37 |
354 |
வல்லையியங்குஞ்சாரணரைமடைவல்லோரைமாகதரைக் கொல்லவினைஞர்மட்பகைஞர்குவளைக்களத்தெந்தோணிபுரிச் செல்வன்முடிக்காட்டுநராதிசெறியுந்துகண்மாற்றுநரீறா எல்லையிகந்தபணிவிடையிலிகவாதொழுகுமியல்பினரை | 38 |
355 |
முளரிமாலைக்கவுணியர்கோதமலர்முற்கலர்பாரத்துவசர் வளரரரீதரெனக்கிளந்தமறைக்கோத்திரத்துமுனிவரரைப் புளகமறையாகமமலர்ந்தபுணரிமடுத்தமுதுகேள்வித் தளராவாதிசைவகுலத்தகுமைம்பான்மைக்கடவுளரை | 39 |
356 |
சேராரிணைச்செஞ்செவிபுதைக்குஞ்சீர்த்திபுனைந்தபார்த்திபரைப் பாராவறுமையிருடுரக்கும்பானுவனையவணிகர்தமைச் சாராதுலரைக்கடவுளரைத்தமையொக்கலைத்தென்புலத்தாரை ஏராலுழந்துபுறந்தந்தாங்கிறையேவலின்வாழ்பின்னவரை | 40 |
357 |
மங்குலுறங்குங்குறுங்கோட்டுவருக்கையழிசாறுவட்டெடுத்துச் சங்குதவழுமடையுடைக்குந்தடஞ்சூழ்தோணிபுரம்புரக்கும் செங்கண்விடைப்பாகனுக்குரியசெய்கைக்குடிமைத்திறலிவரை ஐங்குரோசத்தெல்லையினுமமைத்தானிழலுஞ்சமைத்தானே | 41 |
358 |
வைகறோறுமைந்துமகமாறாக்குடிகள்பற்பலவும் செய்கலாற்றாவளனோங்கிச்செம்பொனுலகினெழில்காட்டக் கைகொளுரகக்கங்கணத்தான்கடிவிழாவுமினிதாற்றி மெய்கொண்மறையோனுயிர்க்குயிராய்விர்ந்தான்பூசைபுரிந்தானே | 42 |
359 |
பலநாளினையபணிபிழைத்துப்பரவுங்கமலமுனிகாணக் குலமாமறைதேர்சிவலிங்கக்குறியூடெழுந்தின்னருள்பூத்து நலனாலுனதுபணிமகிழ்ந்தேநாளுமெமதுதிருத்தொண்டிற் புலனாலுயர்ந்தவுனையாரேபொருவாரென்றான்பொருவில்லான் | 43 |
360 |
முன்னாளுன்னேர்மறைமுதல்வர்மூழ்கிக்கண்டதடமிதனிற் பொன்னாரமுதநிறைமதியம்புணர்சித்திரையிற்சித்திரைசேர் அந்நாள்படிந்தாரிடும்பைவினையதனிற்படியாரருண்ஞானம் பன்னாள்படைத்துநின்னாலும்படையாநிலைமைபடைப்பாரே | 44 |
361 |
கிழமைபூண்டுமதியாறிக்கெழுநீராடின்வந்தியரும் மழலைமிழற்றுமிளந்தளிர்வாய்மகப்பேறடைவார்துறக்கமிசை முழுமாமதிவாண்முகத்தியர்தோண்முயங்குவாருஞ்சலசரமாய் ஒழுகவிழைவாரென்னினெடுத்துரைப்பதெவனோபரப்பாக | 45 |
362 |
உறுதிபயப்பநின்னுழையாமுரைத்தவோரைந்தெழுத்தையுளத் தறனில்லவர்பாலுரையற்கவான்றகறபமுடிவுழிபோம் திறனில்வருகவெனமூலக்குறியூடொளித்தான்செருக்ககனறு மறனில்லவர்க்கோர்களைகண்ணாமாறாக்கருணைவானவனே | 46 |
363 |
துன்றும்பழையமூதண்டந்தொலைந்தஞான்றுந்தொலையாமல் என்றும்பிரமன்றனைத்தந்துமேனைப்பொருளுந்தரலாலீ தொன்றும்பிரமபுரமதில்வாழொளியேபிரமலிங்கமிந்நீர் என்றும்பிரமத்தடமெனவேயெறிநீர்ஞாலத்திலங்கினவே | 47 |
364 |
கன்னிக்கமுகினெருத்தலைத்தகமஞ்சூற்பாளைமுகங்கிழித்துச் செந்நெற்படைப்பவிளிம்புடையச்செந்தேனாடிச்சினவாளை பொன்னித்துறையாட்டயர்தோணிபுரத்தான்றிருமுனிக்காதை முன்னிப்புகன்றோரெவரேனுமுத்திநிலத்துவித்தாவார் | 48 |
365 |
இன்னகடவுண்மான்மியத்தையினிதுகேட்போரெழிற்புலன்சூட் டன்னவூர்தியுலகிலவனாயுள்வரையுமாங்கிருந்து பின்னரிழுக்காவிழுக்குடியிற்பிறந்துஞானப்பெரும்படையால் முன்னைவினையின்கட்டறுத்துமோனவீடுமெய்துவரால் | 49 |
366 |
கோட்டுமதியந்தவழ்மாடக்குடுமிதொடுத்தகொடிநிரைகள் நாட்டுங்ககனத்தலம்புதைப்பநகைவெண்சுதையாலமுதநிலா வீட்டும்பிரமபுரத்தியலீதென்றானகந்தையிகலெறிந்து வாட்டுந்தவத்துச்சவுனகனேமுதலோருவப்பமாமுனிவன் | 50 |
367 |
ஏற்றியலுமெந்தைபிரமாபுரியியற்கை சாற்றியசொல்லாரமுதுதஞ்செவிமடுத்துப் போற்றியதவர்க்கருள்புராணமுனிவேதன் ஆற்றியவிழாவணியறிந்ததுரைசெய்வாம். | 1 |
368 |
மாற்றுமகநின்றகமதத்தின்வழியெய்தித் தேற்றுமறைவாய்மைகடெளிந்துசிவனன்பர் காற்றுணைபடிந்துபலகாலும்விரதாதி நோற்றவர்களேபரமநூலைவிழைகிற்பார். | 2 |
369 |
ஆதிசிவலீலைகளையார்வமொடுபாரித் தோதினருமன்னதையுகந்தவரும்வைத்துப் போதமொடருச்சனைபுரிந்தவருமன்றோ சீதரன்மலர்க்கண்ணிசேவடியில்வாழ்வார். | 3 |
370 |
எய்தரியமானுடமெடுத்துமிறைகாதை அய்துமுணராதுபுல்லடர்ந்துநிலம்விட்டு மெய்தளர்பசிக்களரின்மேவியபசுப்போல் வெய்துறுவர்காலனிடைமேலுறுவதென்னா. | 4 |
371 |
வாரமுறுமெய்த்தவவரத்துமுனிவீர்காள் பாரமுதுவானரகுபாரிவியல்பூத சாரமொடுபூதமதுசார்ந்தபரிநாம மாருமுடலெய்தலுறுமாருயிரவற்றுள். | 5 |
372 |
புத்தியொடுநல்வினைபுரிந்தவர்களின்பத் சுத்தவெளிமேவியதுறக்கிமிசையெய்திப் பத்தியொளிகாலெழில்படைத்தடிநிலத்தே வைத்திடலொழிந்துபுலராமலர்மலைந்தே. | 6 |
373 |
ஓர்பொறியறிந்தபுலனோர்பொறியினூடே சார்தலிலதாமதுதனக்குநிகராக வேர்படருமின்பநிலையேயுணர்வதல்லால் சூர்படுமிடும்பைநிலைசூழ்ந்துமறியாரே. | 7 |
374 |
மய்ம்மலிநெடுங்கணரமங்கையர்கள்கொங்கைக் கொம்மையெழிலாடுமிருகோடுகளுழக்கச் செம்மைமுகைவிண்டுவிழிதேனொழுகுதண்டார் மொய்ம்மலிபுயத்தர்கண்முகிழ்த்தறிகலாதார். | 8 |
375 |
அம்பவளவாயரணிமூரலரலர்ந்த செம்பதுமவாண்முகவர்தெள்ளமுதின்வந்த கொம்பரனையார்கலவிகொள்ளமுதுமேனாள் உம்பர்கடைவேலையமுதும்பருகலோவார். | 9 |
376 |
வெம்புதுளிவேர்வையறுமேனியிசைவானா வழ்பவிழுமைந்தருவின்மாநிழல்வதிந்து பம்புமிசையைங்கருவிபல்குமிசையுண்டும் தம்புலநயப்பொடுதணப்பர்பலகாலம். | 10 |
377 |
நாகமொழிநாள்கள்பதினைந்தெனவிமைப்பார் சோகமுறுவாருயிர்துறக்கமுமிழப்பார் மோகமுறுதீவினைமுயன்றுபெறுபூத தேகருறுமாநிரயமுஞ்சிலதெரிப்பாம் | 11 |
378 |
வாஞ்சையுறுதீவினைஞர்வம்மெனமறித்துப் பூஞ்சிகையவொள்ளெரிபுதைந்தநிரயத்தே நாஞ்சிலொடொறுத்துமெரிநாந்தகநிறைத்தும் தாஞ்சமனடும்படர்சவட்டலொழியாராய் | 12 |
379 |
வறுத்தமணல்கீழுமனன்மாரிதலைமேலும் பொறுக்கவழியிட்டடியினூசிகள்புதைத்தும் செறுத்துலருபங்கியொடுதீயெழவிழித்தும் தறிப்பருடலின்றசைதகர்ந்துதிரவன்றே. | 13 |
380 |
துடிப்பவொளியாடெரிதுளும்புசுடுபாளம் கொடிற்றிடையிருத்தியெறிகுந்தமிசையுய்ப்பார் கடிப்புனலிடைத்திரிகயற்குலம்வளைத்துப் பிடித்துயிரகற்றியபிரட்டர்களையம்மா. | 14 |
381 |
கைப்படுகுடம்பையுறுபுட்கவருவாரைத் துப்பெரிவிலங்கொடுதுவைப்பரயல்வாழும் மைப்புருவமங்கையைமணந்தவரைவெந்தீச் செப்புருவமங்கையொடுசேரவணைவிப்பார். | 15 |
382 |
நோதகவிலங்குகளைநூல்வலையிலார்க்கும் காதகரைஞாளிகள்கனன்றெயிறுகவ்வப் பாதமடியொட்டிநுதிபாயவிழிசெந்நீர் போதரவுறுத்துவர்பொருப்பனையதோளார். | 16 |
383 |
சார்நிலைபெறாதுயிர்தளர்ந்தழுவிலங்கைக் கூர்கருவியாலுடல்குறைத்தமடவோரை வேர்மறலிவீரர்தனமெய்ம்மயிரினொன்றுக் கோர்தசைபடப்படவுரித்தரிதல்செய்வார். | 17 |
384 |
மின்படுசடைப்புனிதன்மெல்லடியைவிள்ளா அன்பர்களெதிர்ப்படினடித்துணைதொழாரை வன்புறுவிழிக்கெரிமணிச்சுரிகையிட்டுத் துன்புறுதடக்கைகடுணித்திடுவர்வாளால். | 18 |
385 |
நாதன்முதுகாதையைநயப்பொடுவிரும்பாக் காதகர்மனத்தர்தலைகாதொடுதெறிப்பக் கோதுறமலைந்துசதகோடியுருமென்னத் தூதுவர்புடைப்பவரர்சொல்லியலுமற்றே. | 19 |
386 |
வள்ளலடியார்தமைவருத்துநரணுக்கத தெள்ளளவுமேவரிசைவார்மறையிசைக்கும் பிள்ளைமுனியால்வலிபிழைத்தமைவழுக்கா துள்ளவனுருப்பதையுரைப்பதெவனேயோ. | 20 |
387 |
மழுக்களெறிபட்டுதிரவாரிமிசைபாயப் புழுக்கள்குடையப்பதைபதைத்துடல்பொறாராய் எழுக்கலடியாலழலெரிச்சிகையினால்வெங் கழுக்கடையினாலளவில்காலம்வதையுண்டார். | 21 |
388 |
செக்கினுழல்வார்திரிகையிற்சுழலுவார்தீப் புக்கயருவாருறுபுலாலழிகுவாரால் முக்கணமலன்பழையமூவறுபுராண மெய்க்கதையினைப்பெறவினாவுமறிவில்லார். | 22 |
389 |
வன்றொடரினிற்கழுவின்மாமுளிலவத்திற் கொன்றுமெழுவித்துநடுவன்றமர்குமைப்பக் கன்றியபசுங்கணனல்காறெயிறுகாட்டி நின்றலறுவார்கொடியநீணிரயவாணர். | 23 |
390 |
நீர்நசைபெறாதுதசைநீர்பெருகியங்கட் சோர்பவருயிர்க்குதவிதூதருழையுண்டோ காரெலியைவாயொடுகவர்ந்துதறுபூசை யாரழினுமெள்ளளவதற்குதவியின்றே. | 24 |
391 |
காந்துதயரன்றியொருக்காலுநலமின்றித் தேய்ந்துநரகத்துறுநர்செய்தியிவையின்னும் ஏய்ந்துயிரினோடுறுமிரட்டைவினைதம்மால் போந்துபயனுண்ணுமுடல்பூதபரிளமம். | 25 |
392 |
வேறு. இப்பூதபரிநாமயாக்கையினையிருவினையின் வைப்பூறுகதிவயத்தால்வரப்பெறினும்பொருப்பகமும் கைப்பூறுவறுங்கூவற்கடறுடையநாடுமொரீஇ அப்பூறவளனூறுமணிகெழுநாட்டுறலரிதே. | 26 |
393 |
வெண்ணிணத்தவெயிற்றெயினரிழிகுலமுமீன்படுக்கும் கண்ணிரைத்தவலைவினைஞர்கழிகுலமுமகன்றொருவிப் புண்ணியத்தொல்குலத்தினிடைப்புகவரிதாமதிற்புகினும் பெண்ணொழித்துப்பழுதொழியப்பெறுதலுமிக்கரிதன்றே. | 27 |
394 |
இன்னணமேசெந்நிறத்தவெழிற்பவளத்தடம்புலத்தில் பொன்னணிமுத்துருக்கனையபொறிபரந்தவமயத்து மின்னலுமொக்குளும்போன்றுவீயினும்வீந்திடுமிலையேல் பின்னரும்வெண்ணெயிற்றிரண்டுபிறந்திடவும்பெறுமதுவே. | 28 |
395 |
கூன்புறத்தயாமையுருக்கொண்டறினுமறுமின்றேல் ஊன்புறத்திலுறுமமயத்தொழியினுமாங்கொடிநாபி ஈன்புழைக்குளிரதமடுத்தெழினுமெழுமுழுமதிபோல் தான்புறத்திலுதித்தளவேசாயுமதுதணந்திடினும். | 29 |
396 |
விரிநிதியமிரவலர்பால்வீசிப்பேர்புனையுழியும் இரியுமகன்குளத்துமலரெனவளர்ந்துமையாடி முரியவுமாமுருகெறிபமூதுணர்கேள்விகடுறைபோய் வரிநெடுங்கண்ணியருருகமாமதின்மாயாதேல். | 30 |
397 |
பஞ்சிபுனைசெம்பதுமப்பாட்டிசையக்கிண்கிணிக்கால் வஞ்சியர்தோணலம்பருகிமல்கியநாட்பலசனமும் நெஞ்சுருகியழன்றுசெங்கைநெரித்தலறவுருத்தெழுந்த செஞ்சிகைவெங்கூற்றணுகச்சிதையுமிதுதிறம்பிடினும். | 31 |
398 |
மழலைமொழிச்சிறுவரொடுமாழாந்துமூப்பலைப்பக் கழலுறுப்பிலுரையாடிக்காய்பிணிவெம்புலிபாயக் கிழவனகன்றொருபிணமாய்க்கிளைக்கவைநாவளைத்தயிலும் அழல்கதுவும்புறங்காட்டிலணையுமதுவொருதலையே. | 32 |
399 |
வெள்ளிடையின்விளக்கமெனவிளியுமிதனிலையாமை உள்ளியுணர்ந்தவர்வாளாவொளிப்பரோவொருகணமும் கிள்ளைமொழிப்பாகனிசைகிளக்கவுங்கேட்கவுநமர்காள் உள்ளதவப்பேறிதனினுண்டுகொலோவுயிர்க்குறுதி. | 33 |
400 |
அளக்கரியதவப்பேற்றாலழுக்கறநல்லான்வயிற்றில் கிளக்கரியபலநூறுகிடைக்கின்மறையவனாவான் இளக்கமுறவதிற்பரமனியல்கேளாரிழுக்குடம்பு துளக்குமரப்பாவையன்றோதோன்றிடினுந்தொழுகுலத்தே. | 34 |
401 |
தொழுகுலத்தாரேனுமொருதோடுடையான்றிருக்காதை முழுமதியினொடுங்கேளார்முகனோக்கக்கிடைத்தவினை எழுகொளிவெம்பரிதியழலுதகமறையவர்பசுக்கள் மழவிடையாதியகண்டுமாற்றுவரான்மதிவல்லோர். | 35 |
402 |
வாலாமைப்பிறவியதின்மழுவலான்புகழ்கேட்டல் மேலாராதனையிழைத்தன்மெய்யடியாரடிபோற்றல் ஏலாதேலென்னுறுதியிதுகேட்கவிரும்புமுமைப் போலாரேயுளராவார்பூதலத்துமீதலத்தும். | 36 |
403 |
பின்னுமுனிவரர்கேட்பப்பெருந்தவத்துக்கயமுனியால் துன்னுமறையெழுதுமுனிதுணையடிகடொழுதமுனி மன்னுமலர்க்கமலமுனிமதிமிலைந்தமுடிமுனிக்குப் பன்னுபிரமாபுரத்திற்பணித்தவிழாவளனுரைப்பாம். | 37 |
404 |
திரியுமிரட்குறும்புடைத்ததிங்கண்முளைகிடந்திமைக்கும் முருகலர்வேணியன்மகிழமுதன்மதியின்வளர்மதியின் விரிநிலமுங்கீழ்மேலாவிரிநிலமுமுணரமதக் கரிமுதுகினெந்தைவிழாக்கடிமுரசமிரட்டுதலும். | 38 |
405 |
உரைதருவேதியர்முன்னாவுள்ளவர்களெள்ளருஞ்சீர் வரையறுதொல்லுருத்திரர்வாழுலகமெனமகிழ்தூங்கி விரைமலராளரசிருக்கைவீதிமனைமாலைதொறும் கரையறுபல்வளனூட்டிக்கடிநகரமெழில்புனைவார். | 39 |
406 |
கற்பாருமடந்தையருங்காளையருங்கைதூவார் பொற்பாருமலர்த்தொடையற்பொலிநறுங்குப்பைகள்களைவார் எற்பாருமணியலகாலெம்மருங்குந்துகள்விளக்கி நற்பூழியுள்ளடங்கநறியபனிநீர்தெளிப்பார். | 40 |
407 |
வருங்கொடியேற்றென்றென்பார்மான்றலைநாளெனவுரைப்பார்க் கொருங்குவகைதலையுய்ப்பாரோர்தினமோருகமென்பார் அருங்கடிகாணியவென்றோவலர்விழியுமகலமுமே மருங்குதுடித்தனவென்பார்மனவெழுச்சியொடுநிகழ்வார். | 41 |
408 |
சுதைகொடுபித்திகைபுனைவார்தோரணங்கள்பலநிரைப்பார் இதமலிகுங்குமமெழுகியெரிமணித்தெற்றிகள்புனைவார் நிதிமணியோவியம்பொறிப்பார்நிறைகுடமும்பாலிகையும் விதமலியும்பளிக்குமணிவேதிகைகடொறுமமைப்பார். | 42 |
409 |
பூவணத்தன்புனறெளிப்பார்பொற்றிரள்கால்பத்திபுனை காவணத்திற்பழக்குலையகதலிகமுகொருங்கமைப்பார் தூவணத்தசுடர்நிரைபொற்றுளங்கொளியாடிகள்பதிப்பார் மாவணத்தபாவைபெறுமணிவிளக்கினிரைநிறுப்பார். | 43 |
410 |
தண்ணளிக்கோர்வரம்பாயதலைமைமறைப்பொருள்விரிக்கும் அண்ணலடியவரிருக்கையவிர்மணிப்பீடிகைசமைப்பார் சுண்ணமிறைத்தெம்மருங்குந்துயல்வருபூந்தொடையசைப்பார் வண்ணமணிநித்திலமுமரகதமாலையுஞ்செறிப்பார். | 44 |
411 |
கோட்டுமதவரைமுகத்திற்குங்குமமோடைகளணிவார் ஆட்டுபரியணிகளமைத்தைங்கதியுமியறெரிவார் பூட்டுமணித்தேருதயப்பொருப்புறழத்திருப்புனைவார் நாட்டுருப்பொற்கலமேந்திநவமணித்தீவகமிடுவார். | 45 |
412 |
காசறையுங்கற்புரமுங்கமழமணிக்கலனேந்திக் கோசிகமென்கொம்பரெனக்குயிலின்மொழிந்தயிலின்விழித் தேசறுமெவ்வகையுயிருமிரங்கமணியாழ்வருடி வாசமனைதொறுமடவார்மங்கலங்கள்பலபுகழ்வார். | 46 |
413 |
அருட்கடமைமறைக்கிழவர்க்கறுசுவைநால்வகையமுதம் ஒருப்படவங்கினிதளிப்பாரும்பர்பிரான்பழவடியார் திருக்குறிப்பினெறிநின்றதெள்ளமுதமடுத்திடுவார் ஒருத்தரின்முனொருத்தரின்னவோகையினிலழுந்துவரால். | 47 |
414 |
வேறு. இவ்வாறெங்குங்களிசிறப்பவீர்ந்தண்கமலாசனத்திறைவன் சைவாகமச்சுப்பிரபேதஞ்சாற்றுமியறேராற்றலினால் செவ்வாரழற்காசினத்தாலுஞ்செம்பொனாலுந்திசைபொதிந்த மைவானிருள்சீத்தொளியுமிழுமணிமண்டபமொன்றலங்கரித்தான். | 48 |
415 |
பவளம்பழுத்துமரகதத்தபசும்பாசிலையிட்டொளிமுத்தம் திவளும்பாளைவெண்பொன்னாற்செழித்தகணைக்காற்கமுகநிறீஇத் துவளுங்கனகத்தாற்றரம்பைசூழவிருத்திநீடியவிட் புவனமலர்மீனனையமுத்தின்புல்லார்மாலைப்படங்கசைத்து. | 49 |
416 |
செம்பொற்சினையதருக்குலங்கடிசைதோறூன்றியிருளுடைக்கும் பைம்பொற்படிமக்கலந்தூக்கிப்பைம்பூந்தென்றல்புறந்தவழும் அம்பொற்சிறுசாளரந்திருத்தியரிவாய்வயிரச்சுடர்பரப்பி விம்பப்பொகுட்டுக்குறுத்தமுளைவிரைப்பாலிகைபற்பலநிறைத்து. | 50 |
417 |
வானின்றிழிந்தவிருநிதியுமணியும்பொருத்தியலையுயிர்த்த தேனின்றிழிபூங்குழன்மடவார்செங்கைக்கோலம்பெறவளைத்துக் கானின்றொளிர்சாமரைதோட்டிக்கயல்கண்ணடிமென்கொடிமுரசு தானின்றலர்பூஞ்சுடர்நிறைநீர்த்தசும்போடெண்மங்கலந்துலக்கி. | 51 |
418 |
வெளிறுபனிநீர்குங்குமநீர்விரைமான்மதஞ்சாந்தொருநான்காம் அளறுமெழுகியகம்புறமென்றறியாப்படிகச்சுவர்தோறும் களிறும்பிடியுமறிப்பிணவுங்கலையுங்கோட்டிக்கனகநிறத் தோளிறும்பாவைதுணைக்கரத்திலொளிமாமணிச்செஞ்சுடரேத்தி. | 52 |
419 |
தாமமாலைகற்பகப்பூந்தருவின்மாலைதவராற்றும் ஓமமாலைமந்திரநூல்யோகமாலைநறியவிரைத் தூமமாலையேனையவுந்தொடுத்தமாலையயனியற்றும் ஏமமாலைவிழாவிறைஞ்சவெழுந்தார்மேல்கீழிருந்தார்கள். | 53 |
420 |
மென்றுநிணநீர்முடைமாறாவிறலார்கணிச்சிப்பெருந்தடக்கைக் குன்றுபுரைதோயுருத்திரர்கள்கோடியமைந்தபதினொருவர் சென்றுதிரைநீரெறிமுகட்டிற்சிலைமத்தெறிந்தமலர்க்கரத்தால் கன்றுகுணிலாக்கனியுகுத்தகாயாமேனிப்பசுந்துளவோன். | 54 |
421 |
ஓராயிரங்கண்மலர்பூத்தவுருவத்தொருவன்முதலெட்டுப் பேராகியமாதிரத்தலைவர்பெருகத்திறலேழ்மருத்துக்கள் சூராதபர்தாமாறிருவர்துளிக்கும்முதகலைத்திங்கள் ஆரார்விழியன்னையரெழுவராயுள்வேதமருத்துவர்கள். | 55 |
422 |
சித்தரியக்கர்வசுக்கண்மணிச்சிரத்துநாகரரமாதர் நித்தர்வடுகர்வேதாளர்நிருதர்யோகர்கந்திருவர் வித்தியாதரர்நாரதன்சனகன்வியாதன்புலியன்பதஞ்சலியோன் வைத்தவசந்தன்குறுமுனிவன்வருடமயனம்பருவங்கள். | 56 |
423 |
மதிசூழ்பக்கம்பகலிரவுவாரிநதிகளருவரைகள் விதியைம்பூதந்திக்கயங்கள்வேதாகமங்கடிருவாணி முதிர்மாதவத்துள்ளவர்பிறருமுறையேதத்தமூர்திமிசைக் கதியாலணைந்தாரயனாற்றுங்கடியார்வீதிமுருகாரூர். | 57 |
424 |
எழுந்தசீலர்பிரமபுத்தியன்மேற்கருத்தருருகுபுனல் பொழிந்தவிழியர்பணிவேட்கும்புலவரொடும்போந்தலர்மேலோன் பழங்கணீக்குஞ்சிவபெருமான்பாதம்பழிச்சியெம்மடிகேள் குழந்தைமதியேனிழைக்கும்விழாக்கொள்வாயென்றின்னருள்பூண்டு. | 58 |
425 |
குவளைக்குறுங்கட்பிறைக்கோட்டுக்கொழிக்குங்கரடத்தழைசெவிய கவளக்களிற்றைங்கரன்பூசைக்கடன்களாற்றிமறுகுதொறும் அவிர்தத்தகுசாந்தியுமாற்றியடரங்குரத்துவினைமுடித்துப் புவனப்பெருமான்றலைசிறப்பப்போற்றும்பெருமான்றலைநாளில். | 59 |
426 |
எடுக்குஞ்சமயத்துறைதோறுமேற்றம்பாசுபதமென்றும் அடுக்குந்திருத்தொண்டுடையார்மாட்டடையாதனமும்மலமென்றும் நடுக்கும்பவத்துக்கொருமருந்துநன்னீரென்றுமோனமுத்தி கொடுக்கும்பெருமான்பிடித்ததனிக்குணவெள்ளேற்றுக்கொடியேற்றி. | 60 |
427 |
இருமங்கலதூரியமியம்பலிசைமங்கலஞ்செய்தனையசிவ தருமங்கலந்தமறைமுதல்வன்றகைசாலன்பினருள்பூத்த மருமங்கலந்தவிதழியினான்மனத்தாறறிந்தவளகேசன் திருமங்கலத்தினெழில்புனையச்செம்பொன்மழைக்கீட்செலவயந்தான். | 61 |
428 |
வாதத்துறையும்பரசமயவழுக்குத்துறையுநீத்தொருதன் பாதத்துறையன்பினர்க்கருளப்பாகத்துறையும்பூவையொடு நாதத்துறையுநாதாந்தநவிற்றுந்துறையுமளப்பரியான் வேதத்துறையின்முறைபிறழாவேள்வித்துறையின்றலைவந்தான். | 62 |
429 |
வேறு. சந்தைப்பெருமறைமுந்தைத்திருமொழிதருமுந்நூலவனொருபொன்னூல் பந்தத்தோழின்முதலாராதனைசிவபாராயணர்செயவருவான்முன் கந்தப்புரிகுழல்விந்தைக்கிளிபணிகயலார்விழியுமைமயில்காணத் தந்தித்திருமுகனந்தக்குகனிவர்தகைசெய்யொளியொடுமெழில்செய்ய. | 63 |
430 |
ஓராயிரவளைபேரோதையின்முதிரோதக்கடலெனநாதிப்பச் சீரார்கரமிசைநேரேநிரைகொடுசென்றேபலகணநின்றூதப் பேராதயலயல்பூதத்தலைவர்கள்பெருமங்கலவொலியெழுவிக்க வாராருருமினமொருகோடிகளெனவாணன்குடமுழவொலிபம்ப. | 64 |
431 |
வானத்தவரிசைபலதுந்துபியொலிமடவார்நடவொலிகடமாவின் தானப்புனலொலிதாரைத்திரளொலிதாளச்சதியொலிமணிவீணை கானத்திரளொலிபலபல்லியவொலிகல்லென்றுறுதிசைசெல்லச்சூழ் ஞானக்கடலொடுசூரற்படைகொடுநந்தித்திருமுனிவந்திக்க. | 65 |
432 |
மகவானுயர்தருமலர்சிந்திடவெதிர்வருணன்பனிமழைநனிபெய்யப் பகலோன்கலைமதிபளிதச்சுடர்நிரைபணிமாறினரிருபுடைபோதத் தொகுமாரழலிறைதூபந்தரவொருதோழன்றமனியமலர்தூவ நகைகாண்வருமுனிவரர்வாழிகள்சொலநதிநாரியர்கவரிகள்வீச. | 66 |
433 |
நீடஞ்சலிபுரிமாரன்பரிவொடுநிறைமாலிகைதரநிறைமன்றின் ஆடங்கணன்முனமாடக்கணநிரையணிவீசணிகொளவனிலேசன் சேடன்பணமணியடருஞ்சுடர்கொடுதிசைநாலிலும்வளரொளிசெய்யக் கோடம்பெறுகடன்மதிபோலலர்குடைகுண்டோதரன்முறைகொண்டேக. | 67 |
434 |
ஞானக்கொடிபுணர்நளினாலயமுனிநலியாதிறையருள்வழிநிற்பச் சேனக்கொடியடலெகினக்கொடியிடிசெறியுங்கொடியடுசிலைமாரன் மீனக்கொடிபலசேவித்துடன்வரவிடையின்கொடியவைநடுவாக வானத்தெழுதரமகதித்திருமுனிமணியாழிசைசெவியமுதூற. | 68 |
435 |
படகஞ்செறிகிணையொளியாகுளிவயிர்பதலைக்குலமடல்கெழுமொந்தை துடிதுந்துபிமுழவடுசல்லரியிசைதொகுதண்ணுமைவகைபலபொங்கி அடருங்கடலெனவெவையுங்குளிறிடவரன்வந்தனனொருகளிறீன்ற பிடிவந்தனளெனவொலிதந்திசையொடுபீலிக்குலமவையாலிக்க. | 69 |
436 |
கண்ணன்கரமலர்நண்ணும்பொழுதொருகரபங்கேருகமலர்வைத்துத் தண்ணஞ்சுடர்மணிமானத்தினிலுயர்தானத்தவர்தொழவினிதேறிக் கண்ணம்புயமலர்மலரக்கரமலர்குவியப்பலமுனிவருநாளும் வண்ணந்துதிசெயமணிமாநகர்வலம்வந்தானெளிமையின்வாராதான். | 70 |
437 |
மாரிமாரிகளெனவடியாருருகுகண்மணிநீர்பொழிதரவடநூலின் பாமாரிகள்விரிதிக்கெட்டினுமறைபயின்மாமுனிவரரியலோதத் தேமாரிகண்முழுமணிமாரிகளெறிதிரையார்கலிதரநிறைவிண்ணோர் பூமாரிகள்பொழிதருமாலயமதுபுக்கானெவரினுமிக்கானே. | 71 |
438 |
வடிவம்பொலிவழகொழுகுந்திருமுகவனசம்பலமலர்பலசெம்பொன் கொடியொண்சுடர்நிரைபணிமாறிடவருள்கூறுந்திருமுனநேர்நின்றோர் முடிமண்டிலமிசையிருசெங்கரமலர்முகிழும்படியரகரவென்றே அடிகண்டவரவர்தொழமண்டியவொலியதிருண்டதுமுதுபகிரண்டம். | 72 |
439 |
மாலைப்புரிகுழலுமையோடெழுகொளிவளருஞ்சினகரமதிலெய்திக் காலைப்பவனியுமனம்வைத்தினையனகரைதீர்வளமலிமறுநாள்வாய் ஏலக்குழலொடுபூதப்பரிமிசையிலகிப்பவனியுமுலவிச்சீர் மூலப்பழமறையோலிட்டவனொருமுன்னாளெனவருமந்நாளில். | 73 |
440 |
கோணைப்பெருவரைதிரியப்பொருதிரைகுமுறக்கடல்வருமொருபுத்தேள் யாணர்த்திருமலர்பொலிகற்பகமிசையிமையோர்மணிமுடியடிதோயக் காணப்பவனிசெய்தோணிப்பரனொளிகாலாரழல்கொடுநாலாநாள் மாணத்திருமணிமானத்தெழில்பெறவந்தானுறுவலிசிந்தாதான். | 74 |
441 |
இறைவேலனையகண்மடவார்நடமிடவிகலாரிரவொருபகலாகத் துறைதோறொளிவிடுமுடிசேரமரர்கதிபேரொலிவிரிதிசைமூடப் பிறைவாதறிருநிலைநாயகியருள்பின்றானடன்வரவைந்தாநாள் மறைநாவலர்தொழவலம்வந்தனனொருவடமாலெனுமுயர்விடைமீதில். | 75 |
442 |
அரவார்மணிமுடியுரவோனுறுதினமாறிற்பொருதிறல்வேழத்தும் இரவாதுயரியகரையானதுதருமேழிற்புனைகயிலாயத்தும் துரகாதிபனிலுமிருநாலெனவருதொகைநாளிடைநகர்வலமாகப் பிரமாதியர்பணிசெயவந்தனனொருபெண்பாலவளொடுமொன்பானாள். | 76 |
443 |
அரவப்பெருமணிசுடரக்கொடிநிரையடர்துந்துபியொலிகடல்பொங்கத் தரணிக்குலவரைபரவத்திசைதடவித்தளநிலைபுடையொற்றக் குருமைக்குடைபலமிடையத்தலைபுனைகும்பந்தினகரவிம்பம்போல் உருவத்தரைநெளிநெளியப்படர்வதொரூழிக்கிரிநிகராழித்தேர். | 77 |
444 |
மதியேறியவழியறியார்களையுநல்வழியேறிடநுவன்மறைவாசிக் கதியேறிடவுமைபதியேறினன்முதுகலைகற்றவர்புகழ்நிலையத்தேர் பதிநாயகமதில்வலம்வந்துறுநிலைபயிலுற்றுயர்சினகரமுற்றே விதிபேர்புனைதடநீர்நல்கினன்மறைவித்தானவனொருபத்தாநாள். | 78 |
445 |
ஞானத்தவர்களும்வானத்தவர்களுநளினாலயமுனிதடமாடி ஏனைப்பகிரதிகுலபாலகர்பணியிசைமண்டபமிசைபதினொன்றாம் மானத்தினமதில்வளர்கங்கணனடிமலருந்தொழுதுபினொருதோணித் தானத்தினுமலர்தூவித்தொழுதனர்தண்டாவருளமுதுண்டார்கள். | 79 |
446 |
உரகங்களினியல்கரகங்கணமும்வில்லுமிழுங்குழைகளுமணிநூலும் கரதண்டமுமழகொழுகும்புழுகணிகனகாசலநிகரியதோளும் வரகஞ்சுகமொடுவளரும்பயிரவவடிவம்புனைமலைவடுகேசன் சரணந்தொழுதனர்விடைகொண்டவரவர்தந்தம்பதியிலணைந்தாரால். | 80 |
447 |
பிறவும்பலபலபணியும்புரிதருபிரமன்றனையருள்பெறவைத்தே உறுநின்பதமெனவிடைகொண்டகிலமுமுதவுஞ்செயலினின்முயல்கின்றான் இறையின்றிருமுருகிதுவென்றனனுயரிசையேபுனைதருவசைதீர்நூல் முறையின்படிபுகலீரொன்பதினொடுமுன்னூலையுமுணர்முனிசூதன் | 81 |
448 |
கொழுதிவண்டினமலமருஞ்செழுமலர்க்கோயிலாளுடைப்புத்தேள் முழுதினாற்றியபெருவிழாவொருவழிமொழிந்தனமினியோர்வெங் குழிவயிற்றழலெரிமயிர்ப்பசியகட்குறியதாட்டெறும்பூதப் பழிதுடைத்தொருமன்னவனன்னெறிபடர்ந்ததும்பகர்கின்றோம். | 1 |
449 |
கடிவருங்கழைத்தலைதொறுங்கவிழ்தலைக்கருவிரற்சூன்மந்தி படிதமாற்றுநீடருவியந்தடவரைபரந்தமாளுவதேயத் துடல்சினம்பொருவாளரியன்னவனொண்மதிமரபுக்கோர் கொடுமறுப்பிறந்ததுவெனப்பிறந்தனன்கொலைவிடூரதனென்பான் | 2 |
450 |
நிலைவழங்குதன்குலப்பெரும்புகழெலாநீடொளிதருந்திங்கட் கலைவிழுங்குவாளரவெனவிழுங்கியகருமனத்துறுதீயோன் பலகைநால்வகைவன்னவல்லாடுவான்பகலிடையிரவெல்லாம் குலவிநால்வகைவன்னவல்லாடுவான்கோதையரகலத்தே. | 3 |
451 |
அறங்கடிந்துவெவ்வினைகளைவித்திநல்லார்வமென்களைபோக்கித் தெறுஞ்சினப்புனலூட்டுபுவேலியாய்ச்சிற்றினம்படக்கோலி உறும்பவப்பயனடைந்தவனுயிர்க்கெலாமூழிவெங்கூற்றன்னான் இறங்குபுள்விலங்கிடுபுறங்காடெனவிழுக்குடையுதரத்தான். | 4 |
452 |
கோலிழுக்குறவைம்பெருந்தீவினைகுயிற்றிவெம்பொருள்யாவும் வேலிருந்தடறொழித்தவாட்கண்ணியர்விடயமேற்செலவுய்ப்பான் நூலிழுக்குறார்மகத்தழலவிந்துகநுவலருந்துயர்காட்டி மேலழற்றுவதிவனடுசினத்தழன்மிக்கவர்வயிற்றெல்லாம். | 5 |
453 |
வெள்ளிவெண்டிரைமுகட்டெழும்விடமெனவெண்மதிக்குலவேந்த ருள்ளிவன்பிறந்தரசியலிழுக்கினையொன்னலர்புறங்கூறக் கள்ளுங்காமமுங்கொலைகளும்புலைகளுங்கனிந்தொருதாய்பெற்ற பிள்ளைபோலிவன்வளர்ப்பதேபெற்றனன்பெற்றிலன்பிறிதொன்றை | 6 |
454 |
மானிரப்புறாசிறுபுலப்பயன்களும்வயக்கரிநிலைநாடித் தானளித்திடிலடுபசிகெடுமதுசார்ந்துபுக்குணில்வேலி ஆனதென்னினும்வாலினுங்காலினுமழிந்துவாய்புகலின்றிப் போனதாமதுபோன்றதவ்விறைமகன்புவியெலாம்பொலிவற்றே. | 7 |
455 |
வனையுமெல்லணிவாரொடுதுறந்துமேல்வரவரத்தலைசாய்த்த புனைகலன்கழிமங்கையர்கொங்கையிற்பொலிவுபோய்ப்புல்லென்று கனைகரும்புயல்வறப்பமாநிலமெலாங்கலிபரந்ததுதேர்ச்சி வினைஞரின்மையாற்கோடழிகுளனெனவீறழிந்தனன்வேந்தன். | 8 |
456 |
விடையத்தீப்பிணிவெதுப்புநல்லாருயிர்மெலியவாயுளுங்குன்றி அடையச்செல்வமுமரும்பெறலரசும்வேற்றரசுகொண்டேமாப்பக் கடையிற்போந்தெழுகார்புரைபகட்டின்மேற்கனன்றுகட்கடைதோறும் வடவைத்தீயுகவந்தகூற்றுவன்படர்வலையிடைத்துவக்குண்டான். | 9 |
457 |
நுதியயிற்குல்மழைபொழியாறுபோய்நுவலருநிரயத்தே கொதியழற்சுடவெண்ணில்பல்காலம்வெங்கொடுமையாற்கொட்புற்றுப் பதியதங்ககன்றரின்மிடைவிந்தமென்பருவரைத்தடஞ்சாரல் கதியடைந்தனனவுணனாய்விடுக்குமோகழிவினைத்தொடரம்மா. | 10 |
458 |
பேதுசெய்துபல்விலங்கெலாமாழியபிலத்துவாய்புகப்பெய்தும் ஓதுமந்தணராருயிர்வவ்வியுமொண்டடியார்க்கொன்றும் தீதுபூத்தலர்நெஞ்சினான்வைகலுஞ்செய்கொலைத்திறத்தாலே காதுமுத்தலைக்காலனுமுயிர்கொளுங்கைவினைகைதூவான். | 11 |
459 |
வைகலுங்கொலையயின்றவாயவுணன்முன்வையகக்கொடுங்கோன்மை செய்கையிற்சிறிதறனிழைத்தனன்கொலோதேமறைப்புள்ளார்க்கும் பொய்கையானவாங்கீரன்வாழ்பாசிலைப்புரையுள்புக்கறவோனைக் கைகவர்ந்துவாய்மடுப்பலென்றொளித்தனன்கண்டனன்றவக்கோமான். | 12 |
460 |
கரந்திவண்புகுங்கள்வனீயாரைநின்கயமையாலெமைவாட்டி அரந்தைவெம்பசிதணிப்பவந்தனைகொலெம்மடிகளார்நும்முன்னோர் பரந்ததொல்லுயிர்பருகுமாலுதிரநீர்பருகும்வித்தகரன்றே தரந்தெரிந்திலாயகலுதியென்றனன்சதுமுகன்வழித்தோன்றல். | 13 |
461 |
அகல்வதுன்னுயிரருந்துவதெனதுவாயன்றிநீபலவாளா புகல்வதென்னையென்பொலிவெலாமறையவர்புதுநிணப்பொலிவன்றோ பகரலென்றுகண்பொறியுகக்செறிமயிர்ப்பங்கியங்கியிற்காண இகனெடுங்கரமெடுத்தொருகூனிபோலெய்தலுமுனிகண்டான். | 14 |
462 |
கண்டுபொள்ளெனக்காலமூன்றையுமுணர்கடவுண்மாமுனிதெய்வக் குண்டிகைப்புனல்விதிர்த்தவன்றொன்மையுங்குடிப்பிறப்பையுங்கூறி மண்டுமிவ்வுருவேகொடுதிரிகெனமற்றவன்முரட்சாபம் கொண்டுபாழிவாயவுணன்வல்லுருவுபோய்க்கூளியாகினனன்றே. | 15 |
463 |
சிரகநீரதுதெறித்தலுஞ்சாபமுந்தெளிவுவந்தனபோலும் உரவனேயுனைப்பிழைத்தநானிப்பழியொழிப்பதெங்ஙனமெந்தாய் விரவுநீர்க்கடல்வெதுப்புறிலாங்கதைவிளாவுநீர்பிறிதுண்டோ குரவனேயிதுபொறுக்கெனக்கருநெருங்குன்றின்வீழ்ந்ததுகூளி. | 16 |
464 |
திருகுவெஞ்சினத்தளலயிராவதத்தேவனும்பழிபூண்டான் கருநிறப்பசுங்கொண்டலும்பவம்பலகண்டனன்றொகைகாணார் முருகுயீர்த்தபூங்கொன்றையான்றொண்டர்வாய்முனிவுபெற்றனனென்றால் ஒருவனெய்துதல்வியப்பமன்றெனமுனியுன்னினஃதுய்ய. | 17 |
465 |
எமதுதாபதப்பள்ளிபுக்கனையுனக்கிப்பெரும்பழிநீத்து விமலமாகுமாறுணர்த்துவெனகேண்மதிமிக்கதக்கணதேயத் தமலனாதரம்பெருகியதிருவநீளணிகெழுசோணாட்டில் இமிழ்தடந்திரைப்பொன்னிநீருண்டதையெய்துதியதன்மாடே. | 18 |
466 |
வடக்கினிற்பெருங்குடக்கனிக்குறும்பலாவழிந்தசாறிழிந்தாறாய்த் தடக்குரம்பினிற்பரமபினில்வேலியிற்புறஞ்சூழ்போய்க் கிடக்கவாடகப்புலத்தினின்மரகதக்கிளரொளிக்கொழுந்தேய்ப்பப் படப்பைநாறுகள்வீறுசெய்தோணியம்பழம்பதியதுகாண்டி. | 19 |
467 |
அற்புதன்றிருவுளத்ததுமுத்திவீட்டகத்தபரஞானச் சிற்பரப்பொருண்மூன்றதுதோன்றுறுசேகொழிப்பதுமாயை உற்பவநதரும்பொருளெலாமயனொடுமொருங்குலப்புறுமூழிக் கற்பகம்வென்றதுகருதியார்கருதுவகாட்டுவதம்மூதூர். | 20 |
468 |
தாளதாமரைத்தாக்கணங்குறையுமத்தனிநகரதுபுக்கால் தோளறாவரியரவணியந்தணன்றுணையடிப்புணைபற்றிக் கோளறாவிழிப்பிறந்தையார்கலிதனைக்குப்புறுங்குணமிக்கான வாளறாமணிவேணியான்காலவமாமுனிதனைக்காண்பாய். | 21 |
469 |
தயங்குமம்முனிமறைநெறிபுரிதருசத்திரப்பெருவேள்வி முயங்குமெல்லையினிரந்தனைநிற்றியேனமுனிவனாகுதியொன்றால் பயங்கொள்பாரிடப்படிவமும்பழவினைப்பளகுநீக்குவன்றோல்போய் வயங்கராவெனப்பொலிகுவையென்றனன்மறைமுடிப்பொருள்வல்லான். | 22 |
470 |
கோதகன்றவன்றிருமொழிகரிந்தபைங்கூழ்முகத்தினிற்பெய்த சீதமாமழைகடுத்தலாற்செவியினுஞ்சிந்தையிற்களிகொண்டு பூதரங்களுங்கடறுடைக்கடங்களும்பொருதலைக்கான்யாறும் பாதவங்களுங்கடந்தவாசியின்றிசைபடர்ந்ததுகரும்பூதம். | 23 |
471 |
பாரகத்திருமடந்தைமேலணிந்தபொற்பணிபுரைசோணாட்டில் பேரகன்றிரைப்பொன்னியாற்றடைகரைப்பிறங்குதீசியின்மாடே காரகிற்கொழும்புகைதவழ்மனைதொறுங்கடிமுரசுறங்காத சீருலாம்பிரமாபுரஞ்சேர்ந்ததுசிவபதந்தனிற்சேர்வான். | 24 |
472 |
கேழினான்முகன்பிரளயநீத்தமேற்கிளர்ந்ததோணியின்மீதே கோழிளம்பிறைக்கண்ணியானுறைதிருக்கோயிலின்குடக்காக வேழ்விவேட்டுயிர்வேதவாணிபர்நடுவிளங்குகாலவனென்னும் தாழ்விலாமுதுமாதவக்குன்றனான்றன்னைநோக்கியதாங்கன். | 25 |
473 |
புகரின்மும்மையாயிரத்துநான்மறைமொழிப்புலமையோர்புடைசூழப் பகருநீணிலப்பதிதொறுநதிதொறும்பணிந்தனன்வலம்போந்து புகரில்பொன்னிநீராடியெந்தோணிவாழ்புண்ணியனடிபோற்றி அகனுறும்பொருள்யாவையுஞ்சுரபியாலமைத்தெரிவளர்ப்பானை. | 26 |
474 |
கிருதுகோசிகனங்கசத்துருவிறல்கெழுஞ்சவுபரிவேதத் தெரிசியாதிமாமுனிவரோடளவாய்த்திண்டிறற்றண்டீசன் வருபதஞ்சலிபுலிமுனிதிருநந்திவானவருள்பூண்டு குருமுகத்தழன்முழங்குமுக்குண்டமுங்கோட்டியசெயலானை. | 27 |
475 |
உதிர்ந்தபூவெனப்பலபொரிநெய்விராய்யூபவாயழற்பேணி அதிர்ந்தமாமணியிரட்டுறமனுவழியாகுதிவகையாற்றி முதிர்ந்ததெய்வதவெண்ணிரண்டிருத்துவைமுறைமுறைபணிவானை எதிர்ந்துநின்றதாற்புரையெயிற்றுரகம்வாழிருஞ்செவிப்பெரும்பூதம். | 28 |
476 |
கரிந்தகையெடுத்தலம்வரவுயிர்ப்பினிற்கருவரைக்குலஞ்சாய எரிந்தகுஞ்சியினழல்விழிசுழற்றியாண்டெதிரியபூதத்தைத் திருந்துமாறிருதினமுமாகுதிவினைசெய்துபன்மூன்றாநாள் வரும்பிராசதமனமெனுமாகுதிவழங்குமாமுனிகண்டான். | 29 |
477 |
புடைகலந்ததொல்லுறுவருமெறுழ்வலிப்புணரியினிடைப்பட்ட உடைகலம்படுமாந்தரினிரியலிட்டோடினரிதுகாணா விடையம்வென்றவனிங்கொருபாரிடமெய்தியதெனவந்தோ இடையிலம்மகம்பிழைக்குமேயெனக்குழைந்தினையலுற்றனன்பல்கால். | 30 |
478 |
இனையுங்காலவன்படரடச்சிறுமுனிக்கேற்றகூற்றுவன்சாய முனையுங்காலவன்கஞ்சுகன்செஞ்சரண்முளரியையுளப்போதில் புனையுங்காலவனெனக்கிடர்வருவதுபொறுப்பனோவெனப்போற்றி நினையுங்காலவன்முன்னர்முப்புவனமுநீண்டகாலவன்போற்ற. | 31 |
479 |
வேறு. ஆடுமணிகுஞ்சியுமகோரமுகமுந்துடியுமங்கையுமுகந்தடியும் கோடுமணிகஞ்சுகமுநஞ்சுரகமுங்குழைகுலுங்குமிருகாதுமறைநால் தோடுபுனைசெங்கரமுமங்கியொளியுந்திரிவிலோசனமுமொண்புழுகுமா சேடுபடுமோருருவினெய்தினனெடுஞ்சயிலதெய்வவடுகேசனருளால். | 32 |
480 |
ஐந்துபடுதுந்துபிகளுங்குணில்பெருந்துழனியண்டமுகடெங்குமதிரக் கந்தமலர்வந்தமரர்சிந்தவெதிர்முந்தியகணங்கள்புடைகொண்டுமிடைய நந்துகண்முழங்கவிசைகந்திருவர்பம்பவொலிநண்ணுபலசின்னநிரைகள் வந்தனனரன்பசியகஞ்சுகதரன்கடவுள்வந்தனனெனுந்துதிசெய. | 33 |
481 |
சூலமுதன்மூவறுபடைக்கலமெடுத்துநிறைதூரியமியம்பமறையோர் நாலுமறையோலமிடநாலிருவர்காரியர்கண்ஞாளிமிசையேறினர்வரப் பாவலைமகோததியினீறுபுனைமேனியர்பணிந்தனரணைந்துபரவக் காலவனிருந்தமுதுவேள்விமலிசாலையதுகண்டருளவந்தருளினான். | 34 |
482 |
நேசசரணஞ்சரணமுத்தியடியார்க்குதவுநித்தியநிர்வாணசரணம் வாசசரணஞ்சரணமாதியிடையீறுதவிர்மானசிவஞானசரணம் தேசசரனைஞ்சரணம்யோகசனகாதியர்தெளிந்தகுருநாதசரணம் ஈசசரணஞ்சரணமென்றுமுனிகாலவனுமேவருமெழுந்துதொழுதார். | 35 |
483 |
செம்மலுமவன்பணியுமம்முனிவருக்கருள்செங்கடமையான்முனிவிர்காள் உம்மகமுடிப்பளவும்யாமிவணிருத்துமெனயோகதலமீதமர்தலும் எம்மடிகளுக்கரியதென்னையிதுவேள்விபுரியேழையடியேமருளவோர் பொம்மலுருபூதமிவண்வந்ததெனநின்றதொருபூதமதுமாதவனொடே. | 36 |
484 |
என்னையுயிரஞ்சும்வினைகண்ணியுளபூதமெனவெண்ணலையிரங்கியடிகேள் முன்னையொருதாண்முளரியந்தணன்மகன்றமுரட்பழிபடைத்துளனியான் அன்னவரவென்னையெனின்மாளுவநெடும்புவியிலாய்மதிகுலத்திலொருவென் உன்னரியதீவினைசெய்மன்னவன்விடூரதனென்னூழ்வினையுருப்பவுயிர்போய். | 37 |
485 |
காலபடர்கொண்டுநிரயத்தினிலழுத்தினர்கழிப்பவருசேடமதனால் மாலிருநெடுங்குடுமிவிந்தவரைவாயடர்வனத்தினிலரக்கனுருவாய்க் கோலுறுமெறும்புகடையானைமுதலானவைகுறைத்துநுகர்நாளிலொருநாள் ஆலுமனல்பொங்குமெனகட்டினிரைகொள்வலெனவங்குமுனிவன்புரையுளில். | 38 |
486 |
பாரிடவுருக்கொடுபடர்ந்தவனைநுங்கவருபான்மையினையன்னமுனியாம் கீரனெனையிவ்வுருவொடேதிரிகெனப்பழிகிடைத்தனெனிரங்கியவனே ஒருகதியுண்டுபிரமாபுரியில்வேள்விகளுஞற்றுமுனிகாலவனுழைச் சாருதியொராகுதிபலன்றருவனிப்பழிதணந்திடுதியென்றருளினான். | 39 |
487 |
மற்றவன்விடுப்பவிவணுற்றனெனுனைப்பரவவந்தவழியிந்துமௌலிக் கொற்றவனையும்பரமமுத்தரையுமென்விழிகுளிர்ந்திடவெதிர்ந்தனெனியான் உற்றபழிவிட்டகலநற்கருணைவைத்திடுதியூனவடிவானசிறியோர் குற்றமவையெத்துணையிழைத்திடினுநற்றவர்குணத்தொடுகுறிக்கொளுவரால். | 40 |
488 |
முந்தையியலுந்துருவிவந்தவிகலும்படமொழிந்துபணிகூளிபெறுமா றந்தமுனிமேதகுபிராதசமனந்தனிலொராகுதிபலன்றருதலும் நிந்தையுறுபூதவுடலந்தொலையவானமிசைநீளொளியின்மாளுவபிரான் வெந்துறுகளிம்பகலவேறுபடுசெம்பொனெனவீறுபடநின்றனனரோ. | 41 |
489 |
ஆயிடையுதித்தகதிர்ஞாயிறெனவிட்புலவராதரவினுய்த்தவொருதேர் மேயினன்முளைத்திகிரிமாயனிடுசட்டையணிமேனியனைமுற்பரவியும் தாயினுமுயிர்க்கினியகாலவனடித்துணைதனக்குமலர்கொண்டுதொழுதும் தீவினையகற்றியவிடூரதன்வழுக்கறுசிவானுபவமுற்றனனரோ. | 42 |
490 |
மாளுவபதிக்கருளுமாமுனியுமத்தகையமாமகமுடித்துவிமலன் தாளிணைபழிச்சிவழிபாடுபுரியக்கருணைதானுருவமானிபரமன் கோளறவிழைத்தவுனதியாகநிறைவுற்றதுகுறித்தமையுரைத்தியெனலும் நாளுமுனடிக்கமலநீழலின்மிகக்குலவிநானினிதிருக்கவருள்வாய். | 43 |
491 |
மாதவர்களோதுபிரமாபுரியிதற்கயலில்வாழுநர்தமக்குமடல்சேர் பூதமிடிநோய்வறுமைகோள்பகைபசாசமிவைபோம்வழிபுணர்த்தருளுவாய் ஆதிமுதல்வித்தகவெனாமுனியுரைத்துளவனைத்தையுமளித்துமுனிவோர் ஏதமறுதத்தநிலையேறவருள்செய்திறைவனேறினனிருந்தசிகரம். | 44 |
492 |
அட்டவடுகத்தலைவரப்பதிபுறந்தரவமைந்தபரிசோமுனிவர்கோன் முட்டலின்மகத்தொழின்முடித்தபரிசோகுறண்முரட்பழிதொலைத்தபரிசோ சட்டையணிவித்தகனிருந்தபரிசோவுறுதலத்தியல்விளங்குபரிசோ சுட்டவளவில்லையெனமாதவகணங்களொடுசூதமுனியோதினனரோ. | 45 |
493 |
மைம்மலிபசுங்கட்கூளிவன்பழிதொலைந்துமுத்திச் செம்மறாளடைந்தகாதைதெரித்தவன்றில்லைமோடி இம்மணிநகர்வாய்நோற்றவியலையுந்தெரித்தவாறே அம்மவீண்டரியதேனுமறைகுவாமறிந்தவாற்றால். | 1 |
494 |
கொடிமுகிறுழாவுமாடக்கொழுமணிக்குப்பைவீதி முடிவிலாமுனிவராற்றுமுழுமறைச்சடங்கும்பன்னாள் ஒடிவில்பேரறமுமோவாவுற்சவப்பொலிவுமுன்னா அடியர்மாட்டுவகைதோன்றவளவில்பேரருளான்மேனாள். | 2 |
495 |
அருவமாயுருவமாகியருவுருவந்தானென்றாய் நிருமலமாகியெங்குநிறைந்துசொற்பதங்கடந்த பொருவிலாவொருவன்பொன்னம்பொதுவினின்முதுவர்போற்றக் கருணைமாநடனமொன்றுகாட்டுவானாட்டம்வைத்தான். | 3 |
496 |
வய்த்தலுமிமயச்செல்விவடிவினில்வாய்ந்துநீண்ட நெய்த்தலைவேற்கண்மோடிநின்மலன்றிருமுனெய்தி இத்தலைகுனித்தலெந்தைக்கிதுநகைப்பாலதென்னா அத்தனையிழித்தால்பேதைக்குறியினையறிவிப்பாள்போல். | 4 |
497 |
நிரைவளைமடவார்க்கென்றனிலையுமாடவருக்கென்றால் புரைபடுமன்றேயாடிற்புகலுபசற்சனத்தோ டுரையங்கம்பிரத்தியங்கமுபாங்கமென்றுரைத்தவாடல் வரையறுவிகற்பமெல்லாம்வல்லையேல்வருதியென்றாள். | 5 |
498 |
என்றலுமியைந்தவாறேயியைந்திருவிழியிலாதான் றன்றடிபிடித்துலானுந்தலர்நடையியற்றுவான்போல் அன்றியல்வென்றிதோல்வியவையுளார்தெரிப்பரென்னாக் கன்றியவையையாடக்கண்ணுதலாடல்செய்தான். | 6 |
499 |
எழுதொணாக்கிளவித்தொன்னூலேத்தொலிதழங்கவெண்ணீற் றெழுகொளிவாணன்றெய்வவொண்குடமுழவமார்ப்ப முழுதுணருரகவேந்துமுனைவரிநகங்கடோறும் விழிமலர்பூத்தவேங்கைவேந்துநின்றேத்தெடுப்ப. | 7 |
500 |
ஈரிருகுடுமிப்புத்தேளேந்துபொற்றாளம்பேணக் கார்புரையுருவத்தண்ணல்கணைதுடியிரட்டஞானப் பாரதிமகரவீணைபரித்தனளிசைப்பவானத் தோரிருசுடருமாங்கண்வேய்ங்குழலொலிப்பமாதோ. | 8 |
501 |
இறைதருநந்திசெங்கையின்னொலிமுழவமேங்க முறைதருஞ்சுருதித்தீந்தேன்முனிவரோரிருவர்பெய்ய அறைகழலமரர்வெவ்வேறமர்ந்துபல்லியந்துவைப்பப் பொறைமலியன்பர்செங்கட்புளகநீரருவிகால. | 9 |
502 |
வேறு. பிறவருத்தமாவருத்தமசுவபாதம்பிறத்துருதமுபத்துருதம்விளம்பமேரு விறலுபகாலனம்பிரசாதனமனாதவிப்பிரமம்வலமிடச்சுற்றிலகுதீர்க்கம் நிறைகவுடம்பின்னபிரபின்னநேமிநிவ்வருத்தமகமேருநேத்திரப்பூ உறைகுறுக்குப்பார்வையாகாசப்பார்வையுபபின்னம்புட்கலாவருத்தத்தோடும் | 10 |
503 |
குணிப்பரியபலபரதத்துறைகள்யாவுங்குழகனு வந்தாடும்வண்ணங்குன்றாவென்றித், தணிப்பரியதெறுஞ்சினத்துக்கடலந்தானைத்தாருகனைப் பொருதழித்தாடானுமாட, மணிச்சடிலப்பெருமுனிவர்வானோரேனோர்மதி மருளக்கதிரொளிகால்வடிவமொன்று, கணிப்பரியகாலமவைசெல்லக்கொண்டகண்ணுத லோன்றிருவுளத்தோர்கவவுகொண்டான். | 11 |
504 |
வேறு. சிட்டர்கோடிநின்றிறைஞ்சுசெம்பொன்மன்றநடுவணோர் நட்டமாடவென்றுகொண்டநம்பனம்பொன்வடிவுதான் விட்டபேரொளிக்கரங்கள்வீசியூழிமுடிவினில் பட்டவாழியிற்கிளந்தபானுகோடியொத்ததே. | 12 |
505 |
உச்சியங்கியுரறுபங்கியுடனழன்றமுயலகன் பச்சைமேனிவெரிநெளிந்துபடியநந்தன்முடியுகப் பொச்சையங்குலஞ்சுழன்றுபுவிகுலுங்கவவிரொளிக் கைச்சரோருகங்கள்சென்றுககனகூடமுலவவே. | 13 |
506 |
இட்டமார்பினுத்தரீயமேமவெற்பினருவிபோல் தொட்டுமீதுதுயல்வரச்சுடர்க்குழைக்கண்வெயில்வரப் பட்டவாணுதற்பகீரதிப்பெணாடல்பயிலுநீள் வட்டவார்சடைக்குலங்கண்மாதிரம்புதைப்பவே. | 14 |
507 |
அரவமந்தரம்பிணித்ததாமெனத்திரண்டதோள் உரகதுங்கவலயமாடவுபயபாதமவையிலோர் சரணபங்கயந்தராதலம்பொருத்திவலமலர்க் கிரணபுண்டரீகம்விண்கிழித்துமீதலம்பவே. | 15 |
508 |
தொடித்தலங்கடித்தபைந்தொடைக்குலம்புடைக்கவும் படித்தலந்துடிப்புறும்படிக்கெழுந்துடிக்குலம் தடுத்தியம்படைக்கவுந்தடுப்பருந்திடத்துநின் றடிச்சிலம்பிலிப்பமன்றிலையனாடல்செய்வனால். | 16 |
509 |
உய்யுமாறுசெய்யுமின்னவூர்த்ததாண்டவத்திலேழ வய்யமாடமேருவாதிவரைகளாடநாடகம் செய்யலாமெனப்படர்ந்துதீதுலாயவாதுகூ றய்யைகண்டுநாணமாடவையனாடல்செய்வனால். | 17 |
510 |
மய்யளாயகண்டன்மற்றுமண்ணும்விண்ணுமிணையடித் துய்யபோதலர்த்திநின்றுதூண்டுமின்னதாண்டவம் தய்யலாயுன்னாடலோடுசமதைகோடியோவெனப் பய்யநாணெதிர்ந்தவல்லிபக்கன்மிக்கெழுந்தவே. | 18 |
511 |
நீணிலத்திலன்றிமேனிவந்துதாளெடுக்குமக் கோணியண்ணலாடுகின்றகொள்கைகண்டுவெள்கியே நாணியங்கம்வேர்வரும்பிநகையொடுங்கிமுகிழ்விரற் றாணிலங்கிளைத்துவஞ்சிதலைகவிழ்ப்பவவையுளார். | 19 |
512 |
குழகனாடுபாதமின்றுகூடவாடுகிற்பெனென் றழலரங்குமீதுவெண்ணெயாயபாவையாடல்போல் உழலுமாடலாடியின்றுடைந்ததுன்றனடமெனாக் கழகமாமுனிக்கணங்கள்கழறியொன்றுநுவல்வரால். | 20 |
513 |
கூனுடைப்பிறைத்துகிர்க்கொடிப்பிரானிடத்துவாழ் நீனிறக்கொடிக்குள்வந்தநின்னையாதுமுன்னலான் ஆனவன்றனைப்பிழைத்தியாதலாலழுக்கிலா மேனியுங்கறுக்கவுன்றன்வென்றியுங்கறுத்ததே. | 21 |
514 |
நஞ்சுயிர்க்குமுரகவாய்நடுக்கரங்கொடுப்பதூஉம் வெஞ்சினந்தணித்தலின்றிமேன்மைஞானம்வருவதூஉம் துஞ்சுகற்பிணித்திருந்துறைக்கடற்கடப்பதூஉம் தஞ்சநெஞ்சொருப்படாதுதக்கமுத்தியடைவதூஉம். | 22 |
515 |
அதிதியர்க்கருத்தலானகத்திருந்துவாழ்வதூவும் முதிர்மறைப்பழக்கமின்றிமுடிவினைத்தெரிவிப்பதூஉம் மதிமிலைந்தவரதனோடுவருகவாடவருகவென் றெதிரினாடனீகுறித்தெழுந்ததூஉமிழுக்கரோ. | 23 |
516 |
நுண்ணியற்கையாயநூல்கணூறுகோடிபழகினும் பெண்ணியற்கைபோவதன்றுபேதைநீகந்தையால் அண்ணலைப்பிழைத்தபாவமகலுமாறுமற்றவன் கண்ணருள்கிடைக்கினுன்களங்கம்விட்டிகக்குமால். | 24 |
517 |
நீரகத்தெழுந்தசேறுநீரகத்தொழித்தல்போல் போரகத்திலாடகப்பொருப்புவிற்குழைத்தவன் பேரகற்றிநின்றிவண்பிழைத்ததீமையவனருட் காரகம்பிடித்திநீகடத்தியென்றுகூறினார். | 25 |
518 |
முழுதொருங்குணர்ந்ததில்லைமுதுவர்சொன்னவிதியறிந் திழுதையேன்செய்வினைவிலங்கவிறைவனன்புபுரியுமோ ஒழிவதென்றுபெறுவலென்றவுணர்வறிந்ததுணையிலான் குழைகடந்தவிழியைநெஞ்சுகுழையலென்றுமொழ்குவான். | 26 |
519 |
பாவமென்பவற்றின்மிக்கபாவநின்புறத்திலே மேவநின்றதிதுகடக்கும்வினயமொன்றுநினைதியேல் பூவளஞ்செய்தோணியம்புரத்திலெம்பதத்திலே நீவணங்குகென்றளிப்பநின்றமோடிநன்றெனா. | 27 |
520 |
வேறு. பவளமுருக்கும்புரிசடையான்பணிகொண்டெழுந்துபுனைகலன்கள் திவளுமலர்ப்பூங்கொம்பரெனத்தென்பாலணைந்துபெண்பாகம் கவரும்பாகன்பதிதோறுங்கதிர்வால்வளைமுத்தலர்தூவிக் குவளைவிழிக்கும்புனற்பொன்னிகுடைந்தாள்வடபாலணைந்தாளே. | 28 |
521 |
மாநீர்த்திரையின்வெடிவாளைமடைவாய்க்கருங்காற்குருகிரியத் தீநீர்க்குரும்பைக்குலைசிதற்றுந்தென்னைவனஞ்சூழ்தோணிபுரித் தூநீர்மணியாடகத்தசும்பிற்சுடருந்திருக்கோபுரநான்கும் வேநீரிருங்கண்ணெதிர்காணவிழித்தாளிடரையொழித்தாளே. | 29 |
522 |
மணக்கும்கமலவாவிகளும்வரிவண்டிமிர்தண்டலைபலவும் இணக்குங்கனகத்தனிமறுகுமெங்கும்வலங்கொண்டிடுகிடையை அணக்குமிருபொற்குடம்வணக்குமதுபோன்மதிவாணுதலுடலை வணக்குமொருபொற்குடமிருந்தமானக்கோயிலகம்புக்காள். | 30 |
523 |
கதியாவர்களும்பெறவழங்குங்கடவுட்பிரமத்தமூழ்கி விதியானியமச்சடங்காற்றிவெண்ணீறாடிக்கலைமகடன் பதிநாயகனைப்பணிவான்போற்பணிந்துமூலப்பதிதுகுந்தாள் கொதிவேலனுக்கிக்கயன்மருட்டுங்குடங்கைக்கடங்காத்தடங்கண்ணாள். | 31 |
524 |
பண்டாடகப்பேரவையினின்றபரமவெளியாகியகுறியைக் கண்டான்மலர்மஞ்சனமாட்டிக்கனிந்துபூசைக்கையாறு கொண்டாள்பவளக்கொடிபோலக்குழைந்தாள்கருணைக்கொழுந்தேறல் உண்டாண்மேலைத்தடங்கோயிலுற்றாளெண்டோள்பெற்றாளே. | 32 |
525 |
வேயாலாவின்கணங்குவித்தவிபுதாதியர்மற்றெவரெவர்க்கும் மாயாமயத்தோணியிலிருந்துமாசையகற்றுந்தேசிகனைப் போயாயிடைப்புக்கிறைஞ்சியொருபொன்னஞ்சிகரத்தென்னையருள் தாயாகியகஞ்சுகனடியுந்தலைமேற்கொண்டாடவங்கொண்டாள். | 33 |
526 |
குருக்கும்பிறைவாணுதல்பின்னோர்குளிர்நீர்த்தடம்பொற்றளிமேல்பால் இருக்கும்படிகண்டதிலாடியிறைகோளிலிங்கமொன்றிருத்தி உருக்குங்கருத்தானருச்சனைகளோவாதுஞற்றவதனினின்றும் பெருங்கருணைக்கடலனையபெருமான்வந்தான்பொருமான்மேல். | 34 |
527 |
மாலைக்குழல்சூழ்முகத்தியொடும்வல்லேறூர்ந்தநல்லோனைக் கோலைப்பழித்தவிழியருவிக்குளிப்பத்தாழ்ந்தகொடியனையாள் மேலைப்பவத்தின்பொறையிழித்துவீழ்ந்தாலெனத்தாண்மிசைவீழ்ந்து சோலைக்கிளிகண்மருளநின்றுதுதித்தாளருளைமதித்தாளே. | 35 |
528 |
மறையோனறியாதருவரையாய்வானங்கடந்துமேனிவந்து நிறைவாளரக்கிநறைமாலைநீட்டக்குனிந்தவியல்போற்றி நறைமாமலர்கோலிறைமாரனகையாருருவம்புகையூட்டிக் கறைதீரிரதிமனங்களிப்பக்காத்தகருணைப்புகழ்போற்றி. | 36 |
529 |
வேணிமுடித்தபெருந்தவத்துமிக்கார்தமக்குமிக்கான காணிவனத்திரரனுருவங்காட்டிநடந்தகதிபோற்றி ஆணமலிதாய்வரும்வழிபார்த்தழுதசூலிக்கன்னையெனப் பேணியெழிலார்பெண்ணுருவம்பெற்றுநடந்தநெறிபோற்றி. | 37 |
530 |
எண்காற்பறவையுருக்கொடுமானுடவாளரியினிகறடிந்து தண்பூமடந்தைமங்கலநாண்டகையாலளித்ததகைபோற்றி பண்பாவலர்சூழ்மணிமன்றிற்பரமாவுனதுதிருமுன்னர்ப் பெண்பேதைமையால்யானிழைத்தபிழையைப்பொறுக்குமருள்போற்றி. | 38 |
531 |
பலவுமினையதுதிகூறிப்பணிமாதரசைத்துணிவாய்ந்த நிலவுபொதிந்தசடைமுனிவனெஞ்சமினையேலுனைத்தொடர்ந்த பலபாதகத்துந்தலையாயசிவநிந்தையுமாபாதகத்தால் இலகுங்களங்கவினையுமகன்றிடுதியான்முன்னெழில்பூண்டே. | 39 |
532 |
செம்மாந்தணந்தவனமுலையிற்சேயிழாய்நின்றிருநாமம் இம்மாநகர்க்குநீவழிபாடியற்றக்குயிற்றுமுருவினுக்கும் மைம்மாசகன்றதடத்தினுக்குமலிந்தோங்குகவித்தடம்படிந்தோர் எம்மாநிலத்துமெமைப்பிழைத்தவதிபாதகந்தீர்த்திலங்குகவே. | 40 |
533 |
புடைக்குஞ்சிறைவாரணங்கூடயபுலரிக்காலத்துன்பெயரைப் படைக்கும்பதியீங்கிதைமுக்காற்பகர்ந்தோரகந்தைவினையனைத்தும் துடைக்குந்தலத்துந்துடைப்பரியதொல்லைச்சிவநிந்தனைமுதலா அடைக்கும்பவங்களெவையுமொரீஇயமலராகவாயிழையே. | 41 |
534 |
தெரிசதினத்தித்தடமூழ்கிச்செய்தென்புலவர்கடன்முடித்தோர் துருசுபொதிந்தவிருவினையின்றொடர்ப்பாடகல்வார்கார்த்திகையாம் புரியுமதியிற்கதிர்நாளிற்புக்காடுவரேலெவ்வினையும் பரிசியாமலொழிவரிந்நீர்படிந்தாரடித்தூள்படிந்தாரும். | 42 |
535 |
மண்ணாமணிச்சூட்டரவணிந்தவரதனினையவரங்கொடுத்துப் பெண்ணாரமுதம்பணிகுறியிற்பெருமான்மறையவிறற்காளி பண்ணார்பலபல்லியந்துவைப்பப்பனிநீர்மழையின்றளிதமெனக் கண்ணார்கலவமயிலாடுங்கனகமணிமன்றினிற்புகுந்தாள். | 43 |
536 |
வேறு. இழைதவழ்கொம்மைவனமுலைக்காளியிறைஞ்சலாற்காளியெம்புரியென் றழகியவொருபேரிந்நகர்க்குற்றதன்றியுங்காளிதனெனுமோர் புழையெயிற்றுரகவேந்தனாற்காளிபுரமெனும்பேருமன்றுளதென் றுழையதட்போர்வைமுனிவர்கேட்டுவப்பவுறுதவச்சூதனாண்டுரைப்பான். | 44 |
537 |
தொழுதகுகற்பிற்காசிபன்மகிழுந்துணிவறுவினதைதன்பாலன் பழுதருமமரரளித்ததொல்வலியாற்பலவரிக்கொடுஞ்சிறைபுடைத்துக் குழிவயிற்றழலும்பசிகெடவெறிநீர்க்குரைதிரைவளாகமேலடல்சேர் முழுமணிச்சுடிகைமோட்டராவினத்தின்மொய்யுயிர்படுத்துணுங்காலை. | 45 |
538 |
மாயிருஞாலத்தரவெலாம்பறவைமன்னவவுருத்தொருபகலே நீயெடுத்துண்ணவாற்றலமடியேநித்தமோருணவுநீவிரும்பித் தாயினம்புரத்தியென்றலுமுறையேதரத்தரநுகர்ந்தனனிருப்ப ஏயினவநந்தனாதிவாளரவவிறைவரிற்காளிதனென்பான். | 46 |
539 |
வேந்துபுள்ளினுக்கோவெனக்குமோவுணவைவீசுமாறென்னையென்னூறு காந்துவாய்படைத்துமெலிவெனோவென்னாக்கரைந்துதன்சுற்றநின்றிரங்கப் போந்துதெண்டிரைநீரரண்புகுந்துழியும்புவிபலபொதிந்தசேவடியை ஏந்துபொற்றோளான்முறையினாலாடுபோரேற்றனனவனுநின்றேற்றான். | 47 |
540 |
குருமணிச்சுடிகைநாகராவேறுங்கொடுஞ்சிறைக்கலுழனுஞ்சீறிச் செருவிடையுடன்றுவரையொடுவரைபோர்செய்தனவையகங்கலங்கக் கருவரைசுழலவிருசுடர்திரியக்கடுஞ்சமம்புரிந்துழிக்கடுங்காற் பொருசிறையடிக்கும்வரிநகப்புடைக்கும்போயினனுறுவலிபுயங்கள். | 48 |
541 |
ஈட்டியவலிசாய்ந்தகிபதிமேனாளெய்தருஞ்சாபமொன்றடைந்து தோட்டிவாயுவணத்திறைபுகாயமுனைத்துறையினோர்மடுவினிற்கரந்தான் கோட்டியமலர்த்தாளண்ணலங்கண்ணன்கொன்றையந்தீங்குழலிசைத்துக் காட்டியபசும்புற்கறித்தவானிரைகள்கண்டனயமுனையின்மடுநீர். | 49 |
542 |
புனல்விடாய்த்தயராவுகளுமான்கன்றும்புனிற்றிளம்கோக்களும்பெருநீர் மனவிடாய்தணிப்பருகலுமுயிர்போய்மறிந்தனநிரைசுரைகிடப்பக் கனைகடன்முகடுகிழியமத்தெறிந்தகண்ணனுங்காரிநீரென்னா அனையதுதெரிவானிறங்கலுமவனையணங்கராவளைந்ததையன்றே. | 50 |
543 |
அரும்பெறற்சித்தியெட்டினுமகிழாவானதையுன்னினன்பெருகப் பெரும்பொறியரவய்தளர்ந்ததுபிணிக்கப்பெற்றிலதாங்கவனணிமா விரும்புகழ்ச்சித்தியெண்ணினன்சுருங்கியெறுழ்வலிவால்பிடித்திவர்ந்தான் பரும்பொறிபரந்ததொள்ளைவெள்ளெயிற்றுப்பள்ளவாய்ப்பாந்தளின்றலைமேல். | 51 |
544 |
ஆயிரம்பகுவாயநந்தனிற்பதிற்றோன்றியபடந்தொறுமுகைத்துத் தாயினன்பவுரிபிடித்தனனடிப்பத்தலைதொறுந்தகர்ந்திழிசெந்நீர் வாயிழிகரைநீரிரண்டினுமாலைவயங்கலவ்விரணியனுரம்போல் போயினபடங்களமரர்கோவாகப்போரரியாகினன்புனிதன். | 52 |
545 |
விரிந்தவாயரவத்திறைவனுமெலிந்துவிடுதிநீவிடுதியெய்யாமை புரிந்தனெனினதுபுண்ணியநாறும்புனைகழல்பொறுத்தலாலுன்னைத் தெரிந்தனென்மலர்த்தாள்பரித்தவனறையச்சிதைந்தநானின்னடியடிபீண் டரிந்தமாவாற்றேனென்றலுமிழிந்தவண்ணலுமவனவாவறிந்தான். | 53 |
546 |
கடுவளிபுடைக்குமடுசிறைக்கலுழன்கதத்தினாற்றிறத்தைநீங்கியதும் தொடுகடற்றுறந்தீண்டுற்றதுமுணர்ந்தேந்துதித்தநீயலமரேலுனக்குப் படுவனபகர்தியெனமருதிடந்தபண்ணவனுரைத்தலுமென்பால் விடுவதுவெகுளிதன்னையீண்டுண்டேல்வேண்டுவவுண்டெனக்கரைந்தான். | 54 |
547 |
கேழ்கிளர்கமலத்தடங்கணாயளியேன்கிளைஞரைப்பிழைத்தகாதரமும் ஆழ்கடல்வரைப்பிற்கலுழனுக்குடையாவாற்றலுமெய்துமாறருள்கென் றூழ்முறைபழிச்சவுலகொருங்கீன்றவுந்தியானுளமகிழ்பூத்துத் தாழ்தடம்பணைசூழ்தோணியம்புரியிற்சதுமுகனாடியதளத்தில். | 55 |
548 |
வரன்முறையாடிப்பிரமநாயகனைமஞ்சனமாட்டிநன்மலர்தூஉய்ப் பரவினையெனினீவிழைந்தனவாதிபரம்பரனருளுவனென்னா அரவணைச்செல்வன்விடுப்பமற்றவனுமந்தணீர்ப்பொன்னிபுக்காடிப் பிரமமாதடத்தின்மூழ்கியாளுடையபிஞ்ஞகன்றிருமுனமிறைஞ்சி. | 56 |
549 |
குழகனைவேதக்கொழுந்தனைஞானக்கோதைநந்திருநிலையழகிக் கழகனைமலர்மஞ்சனமுதற்பொருளாலருச்சனைவினைமுடித்தாதி முழுமுதல்போற்றிமுக்கணாபோற்றிமூவெயின்முருக்கியநுதற்கண் மழுவலாபோற்றியிழுதையேனரந்தைமாற்றருள்போற்றியென்றிரந்தான். | 57 |
550 |
இரந்துதாமரைத்தாள்வணங்கராவரசையிறைவனுமகிழ்ந்துநின்பூசை நிரம்பினபெறுகோவரம்பலவென்னநின்மலாவெனமனச்செருக்கின் அரந்தையுங்கிளையையிகழ்ந்ததீவினையுமடுஞ்சிறைக்கலுழனுக்குடையா நிரந்தரவலியுநின்னடிபுரியாநேயமுந்தருகெனநிமலன். | 58 |
551 |
கூறியபலவுமளித்தனமம்பொற்கொடிமணிவீதியிந்நகர்க்குத் தேறியநின்பேர்விளங்கவுமளித்தாந்திருமனைக்கிழத்தியரொடுநீ ஈறளந்தறியாவளனெலாநுகர்ந்துன்னிறுதியிலெம்முழைவருகென் றாறுதாழ்வேணியந்தணனுமையோடாலயக்குறியிடையடைந்தான். | 59 |
552 |
கொடிநிழல்கவித்தநெடுமனைமுகட்டிற்குடுமிமாமயிலணைந்தாடும் ஒடிவறுவளஞ்சேர்தோணியம்புரியாளுடையவன்விடைகொடுதான்வாழ் கடிநகரெய்திவாளராவெவையுங்களிப்புறக்கலந்தனனிருந்து பொடியணிபுயத்துப்புண்ணியன்கமலப்பொன்னடிநீழலிற்புகுந்தான். | 60 |
553 |
கறையணற்பகுவாய்க்காளிதனாலுங்காளியம்புரியெனவொருபேர் இறைகெழுஞாலத்திலங்கியதிதன்சீரேவரேதெரிவுறநோக்கி அறைகுவரென்னாவருட்கடன்பூண்டவறுதொழின்முனிவரருவப்ப முறைதெரிவேதத்துறையறிசூதமுனிவரன்கனிவுறவுரைத்தான். | 61 |
554 |
பொன்றரும்புகழ்க்காளியம்புரியியல்போற்றி மன்றமாநகர்வெங்குருப்பெயர்புணர்வரவை வென்றிமாதவன்சவுனகர்க்குரைத்ததொல்விரிவில் இன்றறிந்தவாறியம்புவாமொருவழியெடுத்தே. | 1 |
555 |
வெறிமலர்க்கமலாலயன்பதியிடைமேனாளள் தெறுசினத்துவாளவுணர்வந்தடிதொழுஞ்செருக்கால் உறுமனக்கொடுசென்றநாளயன்வெகுண்டொழிப்ப மறுகிவீழ்ந்தனன்கிழக்குறப்பிருகுவின்மைந்தன். | 2 |
556 |
தானவன்புகுந்துற்றதுஞ்சதுமுகன்றருக்கும் மானவென்றிவேனிருதருக்குரைத்துவானவர்மேல் தானையோடெழீஇவெஞ்சமந்தொடங்கியசமைந்தான் ஆனகாலையின்மகதியாழ்முனிவனாண்டணைந்தான். | 3 |
557 |
முனியையாதனத்திருத்திநல்விழுத்தகுமொழியால் இனியகூறியகவிமுகநோக்கினனேழாய் முனிவராட்சியைமுண்டகன்பதவியைநின்போல் புனிதமில்லவரெய்துமாறெவ்வழிபுகலாய். | 4 |
558 |
தெரிவைசெய்வினையாடவனெய்துறுந்தேயத் தரியவல்வினைகாவலனெய்துமாணாக்கன் புரியும்வல்வினைகுரவனெய்துறுமரோபுகலுன் பரிவிலார்வினைபற்றினநின்னையும்பளிங்கே. | 5 |
559 |
கோறல்வல்லவர்கொழுந்தசையூணினர்வளைவாய்ப் பாறலம்புவெம்படையினர்தருமநூற்பழக்கம் மாறன்மிக்கவரின்னவர்புன்மதிவளரத் தேறல்செய்குருநீயெனினுன்னிலார்தீயார். | 6 |
560 |
இழுக்கிலோர்பொருள்வெஃகியாறிரட்டியாண் ஒழுக்கினூசிநூல்கட்கிமையுடற்குயிர்போலப் பழுத்தபண்பிலாதவனுமப்பதகனுக்கொருசொல் வழுத்தினானுமேநிரயமேற்பயிதெனவளர்வார். | 7 |
561 |
குரவன்மேலவனாயினுங்குணமிழிசீத்தை விரவுசீடனாய்விடினவன்கெடுவதுமெய்யே உரியதெண்ணிலாவாயிடையும்பர்களுண்ணப் பரியுமாரமுதங்கணத்துக்கவடிப்படிபோல். | 8 |
562 |
ஒட்பமிக்கநீயுன்னுடையிழுக்கினாலோரெண் கட்பிரானுலக்கன்றுகீழுற்றனைகவ்வேல் விட்பசும்பிறைமிலைந்தவன்பூசையான்மேலோர் உட்பதங்களுமுலவதிசீலனோடொத்தே. | 9 |
563 |
என்றிரங்கியைம்பதத்தையுமருளியிவ்வண்டம் பொன்றினுங்கடாவொருபிரமாபுரிப்புனிதன் றன்றிருப்பதம்பணிதியென்றளித்தனன்றணந்தான் ஒன்றுமின்னிசைமகதியாழ்முனிவரனொருசார். | 10 |
564 |
மகதிவல்லவனருள்கொடுமாடநீள்கொடிகள் பகல்செய்வானவன்பரிக்கெதிர்வீசணிபரப்பும் இகலில்காளியம்புரிபுகுந்திரணியகருப்பன் புகரறுந்தடத்தீர்ம்புனலாடினன்புகரோன். | 11 |
565 |
விரவுபற்பலகடன்முடித்தணிமணம்விரிக்கும் வரமலர்ப்பிரானாட்டியதருநிழல்வதிந்த பிரமநாயகனடிப்பராயருச்சனைபெருக்கி அரவணிந்தவனயலவாசியினெயிலகத்துள். | 12 |
566 |
தெய்வலிங்கமொன்றிருத்தியாராதனைதிறம்பா தைவகைப்புலனடக்கியைம்பதத்தினாரமுதைப் பொய்யிலாவுயிர்த்துணையைநாத்தழும்புறப்போற்றி எய்யவாங்கணையளவையாமியத்திசையெய்தி. | 13 |
567 |
நந்துலாந்திரைநளிதடமொன்றுதன்னாமத் தைந்துகோணமிட்டணிகெழுகங்கையாதியநீர்ச் சிந்துமான்மியமெவையுமுய்த்தாயிடைத்திருத்தி இந்துசேகரன்றன்னையீரிடத்தினுமிறைஞ்சி. | 14 |
568 |
பொறிபுலாதிகளவித்துமுக்குறும்பையும்புறங்கண் டறிவினாலறியாதறியறிவன்மாட்டறிவைப் பிறிவறக்கலந்தூழ்சருகருந்தியும்பெருநாள் எறியுமேல்வளிபருகியுந்தவம்புரியிவன்முன். | 15 |
569 |
பருதியாயிரங்கோடியிற்பாயொளிபரப்பிச் சுருதிநாயகனுலகெலாந்தொகுத்தசிற்றுதரத் தருமநாயகியொடுமெழுந்தருளலுந்தாழ்ந்தான் அருவியென்பதோர்பொருளினையலர்விழிகாட்ட. | 16 |
570 |
தருமசுந்தரசச்சிதானந்தபாண்டரங்க பெருமபிஞ்ஞகபிரளயவிடங்கவென்றேத்தி இருபதம்பணிந்துருகியபிருகுவையெம்மான ஒருவராற்றுறாவருந்தவமகிழ்ந்தனமொழிவாய். | 17 |
571 |
விழைந்தவென்னெனவெண்ணிலாவமுதொளிவிரிக்கும் குழைந்தவெண்பிறைக்கண்ணியாய்தயித்தியகுருவாம் பழங்கணீக்குறுபவுத்திரப்படிவமுநின்பால் அழுங்கல்செய்கலாவார்வமுந்தருகெனவமலன். | 18 |
572 |
நம்பியிந்நகர்வியப்பறிந்தெமைப்பணிநலத்தால் உம்பர்தேசிகன்சமத்துவம்பெறுதியென்றுதவி வெம்புறாதநன்மிருதசஞ்சீவனவிஞ்ஞை எம்பிரானவன்பெறும்வகையுதவினனெழுந்தான். | 19 |
573 |
தன்னுடைப்பெயரிலிங்கமூடெம்பிரான்சாரப் பொன்னுடைத்தவமெய்தியகவியும்விண்போனான் அன்னவன்பெருந்தடத்தினிலன்னவன்றினத்தின் முன்னியாடுநர்கனவினும்வறுமைநோய்முன்னார். | 20 |
574 |
தலையிற்கோமயவறுகொடுவெள்ளிநாட்சார்ந்து துலையிலாடுநர்தொலைவிலாவினையெலாந்தொலைவார் அலைவளாகமேலிருசுடர்நிலையுநாளளவும் நிலையுமேதருபுகழொடுநிலவுவர்நெடுநாள். | 21 |
575 |
தலையுவாவிலித்தடம்படிந்தருங்கடன்சமைத்தோர் அலைவிறென்புலத்தவரொடுங்கயிலைவிட்டகலார் கொலையும்வாள்விழிப்பிணிகுருப்பிணிமுதற்பிணியால் மலைவிலாரொருதினமதிற்படியினுமாதோ. | 22 |
576 |
விருப்பினாற்றயித்தியகுருப்பணியவெங்குருவாம் இருக்குமிந்நகரன்றியுமெருமையேறுகைக்கும் ஒருத்தனாலும்வெங்குருப்பெயரிப்பதிக்குற்ற விருத்திதன்னையுங்கேண்மெனமுனிவரன்விரிப்பான். | 23 |
577 |
வேறு. ஆறாடுஞ்சடைமுதல்வனருளாணைத்திறநாடியறியாறெடடைக் கூறாடுநிரயமிசைக்குமைந்தாடுநரகரெல்லாங்குழுமிமேனாள் நீறாடிநெய்மிதந்துமுடைநாறிப்புடைதோறுநிணச்சேறாடிப் பாறாடுமூவிலைவேல்பரித்தாடுமறலியடப்பரித்தார்மன்னோ. | 24 |
578 |
அரும்பெறல்யாக்கையைவரைவானயலவன்கைத்தீட்டாணியதனைப்பற்றி வருந்தியுறவரையாமுனிழந்ததெனவிழுந்துகடுமறலியூர்போய்த் திருந்துமனையெரிகதுவத்தணிக்குமருங்கூவன்முன்னேசெய்காலாற்றா திருந்தழுவாரெனநிரயத்திருந்தழுவார்மறலிதன்னையினையசொன்னார். | 25 |
579 |
மூவாவின்னமுதருந்தித்துறக்கமிசையரமகளிர்முகிழ்மென்கொங்கை ஓவாதுபுல்லுநருமண்ணகத்திற்பலபோகமுறுகின்றாரும் தாவாயின்னணமிருப்பவெம்முழையினின்கிளைஞர்தண்டஞ்செய்ய ஆவாவிங்ஙனமாற்றேந்தறுகண்ணாவென்செய்கேமளியேமென்றார். | 26 |
580 |
சமிக்கரியமுள்ளறைந்துமூசிமிசைச்சவட்டியுஞ்செந்தழல்வாய்ப்பெய்தும் உமிழ்தழலூட்டியுங்கூடத்தோச்சியும்வாய்ச்சிகளாடியொறுத்தும்வேறாய்த் துமித்ததுணிகூட்டியும்வெம்புழுக்களொடுகழுக்களிடைசோரச்சோர அமிழ்த்தியுமிவ்விருத்தியிலேவிளிவற்றாயெவரிடத்துமளியற்றாயால். | 27 |
581 |
ஒருத்தரின்முந்தொருத்தரிவ்வாறரற்றியபேரோதைவளியுயிர்க்கநூறு துருத்தியழல்பொருத்தியசெஞ்சுடர்ப்படையாற்செவித்தொளையைத்தொளைத் தாற்போன்று, கருத்திளகிக்கண்பனிப்பக்கையறவுமீதூரக்கவன்றகூற்றன் பெருத்தவினைத்தொடரறியாதுரைக்கினுமிவ்வுரையெனக்கோர்பிழையாமன்றே. | 28 |
582 |
நல்வினையின்பயனுகரந்நாளிலெனையுன்னினரோநன்மைநீங்கி அல்வினையின்பயனுகரச்சுளித்தனராலவரவரவறிவைநீக்கித் தொல்வினையின்றொடரறியுமறிவையறிவுறுத்தும்வழிதொடுப்பலென்னா வெல்வினையின்முடைத்தருமனடறபிரமாபுரம்பணியமேவினானால். | 29 |
583 |
கண்ணடருங்கழைக்கரும்புதுவைத்திழிசாறெரித்தபுகைக்கருங்காரென்னா அண்ணலங்கட்சிறைமயில்களாலுமலர்ச்சோலைகளுமகன்றுவேதப் பண்ணலங்கொள்பழம்பாடன்முனிவர்பணிசினகரத்திற்பதுமத்தண்ணல் எண்ணலஞ்சேர்தடமூழ்கிப்பிரமேசன்றிருமுனம்வீழ்ந்திறைஞ்சியேத்தி. | 30 |
584 |
கருநீர்மையறவெறியுந்திருமூலப்பரஞ்சுடரிற்கனிவாலந்தண் பெருநீர்மஞ்சனமாட்டியருச்சனையின்றுறைமுடித்துப்பிறழுந்தீபத் திருவாராதனையாற்றியாணர்முகைவிரிந்ததடஞ்சினையதெய்வத் தருவாருநாண்மலர்தூஉய்த்தடக்கைமுகிழ்த்தேத்திசைத்தான்றருமமூர்த்தி. | 31 |
585 |
வேறு. அந்தமறைகாணாதாதியிடையீறிகந்த சுந்தரமாய்நின்றிலங்குதோணிநிலைபோற்றி தோணிநிலையூர்ந்துசுலவுங்கடல்புதைத்த பாணிநிலைகண்டபகவாநின்றாள்போற்றி. | 32 |
586 |
சாயைமறைகாணாத்தாவாவிழுப்பொருளாய் மாயமயத்தோணியின்மேல்வந்தநிலைபோற்றி வந்தநிலையான்மலரோன்முதலெவர்க்கும் பந்தமறுத்தாளும்பகவாநின்றாள்போற்றி. | 33 |
587 |
கவ்வைமறைகாணாதகாரணாதீதமமாய்த் தெய்வமலிதோணிவருந்தேவாநின்றாள்போற்றி தேவாதிதேவாய்ச்சிவகுருவாயெவ்வுயிர்க்கும் பாவாதிமாற்றும்பகவாநின்றாள்போற்றி. | 34 |
588 |
வேறு. படரகலவுருகியின்னபலதுதிகளெடுத்தேத்திப்பணிந்தசெங்கோற் கடவுண்முன்மடலேற்றிற்கயிலைமிசையிவர்ந்ததெனக்கதிர்வேலுண்கண் மடவரலோடெழுந்தருளிமறலியுளமகிழ்பூப்பமைந்தாவின்றுன் இடரகலவிழைத்தபணிமகிழ்ந்தனநீவிழைந்தனகேளெனவெங்கூற்றன். | 35 |
589 |
புண்ணியநின்னடிக்கமலப்போதினிலென்னுளக்கமலம்புனைதல்வேண்டும் கண்ணிநிரயத்துயிர்களெனைநோக்கியினையாமற்காத்தல்வேண்டும் அண்ணுமிருவினைத்தொடரினிருபயனுமவ்வவுயிரறிதல்வேண்டும் நண்ணியமாநகரிதற்குநின்னடியேன்பேரேநல்கவேண்டும். | 36 |
590 |
நடுவனிவையிசைத்திரப்பவடுவகிரினெடியவிழிநாரிபாகன் கடுவினையின்பயனுயிர்களறியுமறிவளித்தனநீகவலேல்கண்ணில் படுவனகண்ணினையறியாதாடியெதிர்விழித்தறியும்படிபோலுன்றன் நெடுமுகநோக்கியவளவேயவரவர்தந்தீவினையைநினைந்துநொந்தே. | 37 |
591 |
இருவினையுமுத்திபுகற்கிடர்வினையாமுயிர்களிவையிகப்பவேண்டி ஒருவினையைத்துறக்கமிசையுய்த்தகல்வித்திடினுமரோவொன்றையுன்கை தருவினையானிரயமிசைசவட்டியொழித்திடுமாமித்தகைமைத்தால்வெங் குருவெனப்பேர்புணர்ந்தனைநீபணிந்தமையாலிந்நகர்வெங்குருவாமன்னோ. | 38 |
592 |
பொன்பழுத்தமணித்திதலைப்பொறிபழுத்தபுளகமுலைப்பூவைபாகன் அன்பழுத்துமறமகற்கிவ்வருள்பழுத்துவிந்துளியினகத்துப்புக்கான் பின்பழிச்சியொருதருமன்றன்பதத்தினினிதிருக்கப்பெற்றானென்னா முன்பழிச்சுமுனிவரர்க்குமுறைபழிச்சினான்கலைகண்முழுதும்வல்லான். | 39 |
593 |
மங்கலம்பொலியுமிந்நகர்க்குமாண்டகு வெங்குருப்பெயரியல்விரித்துவெங்கொடி இங்கிதிலுயர்ந்ததுமிசைப்பலென்றருட் புங்கவன்புகன்றதுபுகலுவாமரோ. | 1 |
594 |
முச்சகமிசைநிலாமுயங்கமுன்னைநாள் எச்சமிலிந்திரதிருவுமெய்தினோன் அச்சமிலடல்விகடாங்கன்கன்னியர் குச்சமென்புவிப்பொறைகொண்டதோளினாள். | 2 |
595 |
தெறுகலியிருள்கெடத்தெண்ணிலாவுமிழ் நெறிமதிக்கவிகையினிவந்தகாட்சியான் துறுவலியொன்னலர்துதைந்தசேகரப் பொறிமுடியுழுதெழும்பொன்னந்தோளினாள். | 3 |
596 |
சுகமழையுய்த்தவானவர்க்குத்தூமமென் மகமழையுய்ப்பவன்வாரிநீத்தநீர் அகனுறுகயலெனவவனித்தொல்லுயிர் சுகனுறமனுநெறிதுலங்குங்கோலினான். | 4 |
597 |
பொறையினிலிரும்புவிபொற்பின்வேனில்வேள் கறையறுநயனுடைக்கல்விக்கெல்லைநூல் முறையினிலறமகன்முரணுந்தெவ்வர்கைத் தெறைவரைரமீதுலாஞ்சினவெள்ளேறனான். | 5 |
598 |
பொன்னடிமருவலர்புகழ்ச்சிபாவலர் அன்னசீர்மறையவராணைநீணிலந் தன்னருளாதுலாசாற்றுமுப்பொறி முன்னவன்றமர்கொளமுறைமைசெய்யுநாள். | 6 |
599 |
ஆழியொன்றுருட்டிநீடவனிமங்கையை வாழிரும்புகழ்ப்படாம்வனைந்தகோமகன் ஊழொளிமாப்படுத்துலவுவேட்டமேல் ஏழுயர்களிற்றினானெழுந்துசென்றனன். | 7 |
600 |
வலைஞருமண்டமர்கடந்தமள்ளரும் கொலைஞருமறவருங்கூர்ம்பன்ஞாளியும் மலைமுரிகடலெனவாரத்தானையும் இலையயின்மன்னருமியைந்தசூழ்வர. | 8 |
601 |
மொய்யுறுவெரிநிடைமுகந்தகூன்சிலை எய்யுறுகணைக்குமுன்னெய்துகூந்தலம் கொய்யுளைப்பரியிவர்குமரன்சேனையால் மய்யன்மாவுழிதருவனத்தைமுற்றினான். | 9 |
602 |
தலைத்தலையெறிவலைவிசிறித்தானையை நிலைத்தலைநிறுவிவேலெறிந்துநீனெயி றுலைத்தலைஞாளியினுரப்பிப்பல்லியம் சிலைத்தலும்விலங்குகடிரண்டுமாண்டவே. | 10 |
603 |
கார்க்கடமுதுகடல்கறைகள்வைகறை வார்ப்படைகில்லியர்மாமந்தேகர்வெம் போர்க்கணைகதிர்களாப்புரவியொன்றுவா பார்க்கிறையிருளடுபதங்கன்போலுமால். | 11 |
604 |
அவையிலோர்கேழல்கையகலமன்னவன் கவையறுகவிழ்குரக்கலினமானிழிந் தெவருநின்றலமரவெண்ணில்காவதம் நவையறுகருங்கழனாலவோடினான். | 12 |
605 |
பெருந்தகைமற்றதைப்பிழைப்பில்வேல்கொடு தெரிந்துயிர்கொண்டனன்சேனைவேறுவே றிரிந்தனவுச்சிவாயிறையென்றூழ்படக் கரிந்தனனடுபசிகனற்றவெம்பினான். | 13 |
606 |
பொருபசியகஞ்சுடப்புறத்தென்றூழ்சுடக் கருதியதனிமகன்கண்ணுற்றானுயிர் வெருவராநடையெனன்விமலன்வெள்ளிநூல் மருமன்மேதாதிதிமடத்தினொண்புகை. | 14 |
607 |
துருவியாண்டேகலுந்தோமின்மாதவன் திருமுகங்கையினன்மலர்த்திச்செல்வனை வருதியென்றரும்பெறல்வாழிகூறினான் குருசிலும்வரன்முறைகூறினானரோ. | 15 |
608 |
செங்களம்புனம்படத்திரிந்துநால்வகை அங்கமுமென்பெயரடையயானொரு வெங்கருங்கேழல்பின்மேவிநுன்னுழைத் தங்கவந்தனன்பசிதணிப்பவெண்ணியே. | 16 |
609 |
அறைழலரசரேறனையகூறநான் மறைவலானென்றவமாண்டதிவ்வுழி உறைதியென்னிறந்துளோர்க்கூட்டும்வேள்வியின் துறைமுடித்துன்பசிதுடைப்பலென்றனன். | 17 |
610 |
துடைப்பதுபசியெனிற்றுண்ணென்றின்னுணாப் படைத்தருள்பின்னெனல்பரந்தவாரழல் உடைப்புறுமுறையுளாங்கொருவிவேறொரு புடைச்சிறுதுச்சிலைப்போற்றல்போன்றதே. | 18 |
611 |
துலைமணிநாவெனத்துலங்குகோன்மையால் மலர்தலையுலகருண்மதலைகேட்டியால் புலனுறுமறையவர்ப்போக்கியேனைய குலனுணுங்கான்மகங்குறையுமுண்மையே. | 19 |
612 |
ஒழுக்கமும்வழக்கமுமோங்குதண்டமும் வழுக்கறநாடினைவழக்கொழுக்கினால் இழுக்கினார்தமைத்தெறுமெந்தைக்கிச்செயல் வழுக்கெனமுனிசொலமன்னன்சீறியே | 20 |
613 |
புழுங்கியெய்துழையரைப்புகுத்திவெண்பலி உழந்திடுகருணைநல்லோசைமென்றுவை அழுங்குறவவ்வியுண்டரசுதேக்கெறிந் தெழுந்தனன்முனிவெகுண்டினையசொல்லினான். | 21 |
614 |
அருங்கடிமனைபுகுந்தயின்றவேள்வியை முருங்கினைபலியினமுகந்தகாக்கையின் இருங்கடிநகர்புகாதெரிவெங்கானிடைக் கருங்கொடியாகெனக்கழறிநீக்கினான். | 22 |
615 |
முனைவனல்கியமுரட்சாபமூண்டுவெங் கனையிருட்காரியாய்க்கவிகைக்காவலன் துனைவினாலுழன்றனனென்னிற்றூயவர் இனையறுதவவலிக்கேற்றம்யாவதே. | 23 |
616 |
ஆய்பதனுண்டிபோயலறுகாகமாய்ப் பூபனும்பன்னிருவருடம்போயபின் மாபதன்கோதமனென்றமாசறு தாபதனுறைதவச்சாலைநண்ணினான். | 24 |
617 |
நண்ணலுமழல்வினைநடத்திநண்பகல் பண்ணுறுபலியிடுபகவன்கண்டனன் விண்ணிமிர்சிறையொடும்வெடித்தவார்ப்பொடும் கண்ணுழல்காரலகார்வெங்காக்கையை. | 25 |
618 |
மேலதனியற்கையும்வேட்டமேயதும் சீலமாமுனிவரன்செய்தசாபமும் சாலையினிடைந்ததுந்தன்னுட்கண்டனன் காலமூன்றையுமுணர்கடவுண்மாதவன். | 26 |
619 |
முனிவனைக்காண்டலுமுன்னராக்கமும் துனிபடுமிவ்வுருத்தொடர்ந்தவாற்றையும் நனியுணர்ந்திறைமகன்ஞானவாரியை இனியெனக்கருளெனவிரங்கியேத்தினான். | 27 |
620 |
பேமுறுமொருகரும்பிள்ளைவேந்திவை ஏமுறவுரைத்தலுமிதயத்தெண்ணினான் நாமுறுமுனிபழிநலியவாழியான் தோமறுத்துயரியதொல்லைக்காழியை. | 28 |
621 |
வார்ந்தகாவிரிமுதலிறுதிமாதலம் ஓர்ந்தனமவற்றின்மிக்குபயவாளியிற் கூர்ந்தநூற்கும்பனுந்தானுங்கோட்டிய ஈர்ந்தடத்தினிலிரண்டிலிங்கமுள்ளதை. | 29 |
622 |
ஆலுமாமறையவர்ப்பிழைத்தலாதியும் சாலநூறியவிதிதடங்குலாயதைக் காலுலாந்திசையின்முக்கணையினெம்பிரான் வேலினாற்றியதடம்விளங்கநின்றதை. | 30 |
623 |
கருதுபுமன்னவகவலன்மாகநாள் மருவியதெம்மொடும்வருதிநின்னுடை ஒருவிழிப்பவமின்னேயொழிப்பமென்றுகொண் டருண்மலிபொன்னிபுக்காடிமேலவன். | 31 |
624 |
வேறு. சேட்டிளஞ்செவ்விவாய்ந்ததிண்கழைகுதட்டுமேதி பாட்டிளந்தும்பிபாடப்பரிசிலர்க்குதவுவாரிற் காட்டிமாமருதநீழற்கண்முகிழ்ந்துறங்குமந்தண் கோட்டநீள்காழிமூதூர்க்கொடிமதிட்கோயில்புக்கான். | 32 |
625 |
மாகநீர்ப்படிந்தமேனிவனசநீர்த்தடத்திலாட்டி நாகநீர்வேணியெந்தைநற்பதம்பரவிச்சூலத் தேகநீர்த்தடத்துமாடியிரும்புனறெளிப்பவெங்கட் காகநீருருவமாறிக்காவலன்பொலிந்தான்மாதோ. | 33 |
626 |
சிறுவரையடைந்தமாசுதெண்டிரையனையநீர்மை உறுவரையடைந்தாற்றீர்வதுண்மையேயிவனிந்நீரின் மருவரையொருவனாடிவருடமீராறுநீங்காப் பெருவரையனையமாசைப்பிரிந்தனன்றெறிந்தநீரால். | 34 |
627 |
பின்னெடுங்குணக்குன்றன்னபெருமுனியிறும்பூதெய்தி அந்நெடுந்தகைக்கோரைந்துபதத்தையுமளிப்பவன்னான் முன்னெடுஞ்சாபமீந்தமுனிவரன்வேள்விமுற்றித் தன்னெடுந்துயர்விண்டென்னத்தன்றுயர்விண்டான்வேந்தன். | 35 |
628 |
முத்தலைத்தடம்புக்காட்டிமுரட்டடங்கரையினூடே பைத்தலையரவவேணிப்பரமனைநிறுவிப்போற்றிப் பித்தலைத்தென்னையாண்டபிரமநாதனையும்வாசத் தொத்தலைத்தருமென்கூந்தற்சுந்தரிதனையும்போற்றி | 36 |
629 |
ஆனமுதைந்துஞ்சேதாவளிநறும்பாலுந்தேனும் ஏனவுமாட்டிப்பன்மாமலர்கடூஉயிமயமீன்ற பானலங்கண்ணியோடுபணிந்துசூக்குமம்பகர்ந்த மாநலங்கொண்டெம்மாற்குமணமுருகாற்றினானே. | 37 |
630 |
சந்ததம்விழவுகாணத்தகும்பொருள்கோடிநல்கி நந்நியூர்பகவன்கோயினற்பணிபழுதுபோக்கி மைந்துறவிரித்துதாவாவல்லிருட்பிழம்புசீக்கும் செந்தழல்விரிக்குஞ்சோதித்தெய்வதவமணியொன்றீந்தான். | 38 |
631 |
நிருமலபோற்றிகுன்றாநித்தியபோற்றிமேனாள் குருவரபோற்றியொற்றைக்குழவலாய்போற்றிமேனாள் அருமுனையாழியான்மாமலர்விழிகவர்ந்துதெண்ணீர் இருமணிச்சூலத்தாலென்னிருவிழியளித்தாய்போற்றி. | 39 |
632 |
போற்றியென்றமலன்காழிப்புண்ணியனிச்சைபூண்டு சீற்றவேரரிந்ததெய்வமுனியையும்பணிந்துசெவ்வே தூற்றுசீர்முகில்பெறாதசெந்நெலிற்றுவண்டுகண்கள் நாற்றிசைபரப்புந்தொல்லைநகர்வயினடைந்தான்மன்னோ. | 40 |
633 |
பின்னிருகூந்தனல்லார்பெருங்களியமுதமாந்தித் தென்னிசைவளர்த்துந்தெவ்வர்சேண்முடிபணித்துநேமி இந்நிலத்தோச்சிமேலுமிறுதியினிறுதியில்லான் பொன்னடிநீழல்புக்கான்பொருந்தலர்க்கடந்தவேலான். | 41 |
634 |
காகமோசனமாமின்னகாரியம்புரத்தியாரேனும் ஏகநாலரைநாள்யாமங்கண்மரைக்கணமிருந்தோர் நாகமாலிகையான்றொல்லைநல்லுலகடைவதல்லால் போகபூமியினும்போய்ச்சார்ந்தடைவரோபுகலினம்மா. | 42 |
635 |
மெய்ப்படுமெண்ணெயெள்ளும்வெண்ணெய்தீம்பாலுங்கட்டி துப்படுசாறுமூரற்றொகுதிநல்லனவுமாகா அப்பரிசறத்தாற்காளிபுரத்தவதரித்துளாரும் ஒப்பிலியாவரல்லாலுற்பவத்தினராகாரே. | 43 |
636 |
பன்னியகாகநீங்கிமறுபவம்படைத்தலாலே பொன்னிசூழந்தண்காழிபுனர்சன்மபுரமென்றோர்பேர் மன்னியதென்றானெண்ணின்மறைபலவடித்தகேள்வி துன்னியமுனிவன்றாளைத்தொழுமுடிமுனிவன்றானே. | 44 |
637 |
விண்ணியலுருவக்காரிவேற்றுருவமைந்துதோணி நண்ணியவொருவன்றாளைநண்ணியதுரைத்தமேலோன் புண்ணியப்புகலியாயபொருளையுந்தெரித்தவாறே கண்ணியவறிவுகொண்டுகழறுவான்கருதினேனால். | 1 |
638 |
அறந்தலைபணிப்பநீதியரசுகோல்கோடநீண்ட மறந்தலையெடுப்பநான்குவருணமுமருண்டுதத்தம் திறந்தலைகலங்கமாதர்செயிரறுகற்புநீங்கி இறந்தலைபடப்பொல்லாதவிருட்கலிபரந்துமேனாள். | 2 |
639 |
பரந்தவன்கலிப்புத்தேளைப்படிறுடைக்குறளைநூலின் அரந்தைமந்திரத்தாற்பல்லோரழுகணீராட்டியெள்ளிச் சுரந்தபொன்மலரிற்பேதைக்கோயிலுட்சூட்டிக்காம நிரம்பமுதருத்திப்பூசைநீணிலமன்னனாற்ற. | 3 |
640 |
மானநூன்மறையோர்யோகமகளிராலவிந்தவேறு தானமெண்ணிலவேட்டங்கைத்தழலும்வீறழிந்தவாக்கில் ஆனபொய்யுரையால்வாழ்த்துமாசிகளவிந்தபல்லோர் போனகம்பயில்வால்வேதம்போற்றலுமவிந்தமாதோ. | 4 |
641 |
தொழுகுலத்தவர்மாழாப்பச்சுருதிநூழற்றுறைகள்யாவும் இழிகுலத்தவன்விரிக்குமிறையில்லைவினைகளில்லை முழுவதுந்தானேயென்றுமொழிந்துமுற்றுணர்ந்தார்போல இழுதைகளொடுசெம்மாக்குமிகம்பரமில்லையென்றே. | 5 |
642 |
அரிவைதன்கொழுநன்கேட்டவாய்மதியுறுத்துமன்னான் தெரிவிலவதற்குமைந்தன்றெருட்டுறுந்தெருட்டுங்காலை உரியதன்றெனமறுத்தாலுணர்விலியஞ்ஞையின்னும் பிரிவிலன்மருந்திற்றீராப்பித்தனென்றெள்ளுமாங்கே. | 6 |
643 |
மறப்பதுகுரவன்வாய்மைமடுத்தினிதுண்பவேரி துறப்பதுபெரியோர்கேண்மைதொடங்குவவிடும்பைசூது சிறப்பதுகயமைச்சூழ்ச்சிசெய்வதுகாமப்பைங்கூழ் இறப்பதுகடவுட்பூசையிசைப்பதுபுலனில்கோட்டி. | 7 |
644 |
வற்புறுமகங்கடேய்ந்துமழைவளஞ்சுருங்கிமாதர் கற்பிகந்தான்பாலஃகிக்காசினிபொய்த்துத்தேயம் பொற்பழிந்தொழுக்கமாறிப்பொய்கொலைகளவுகாமம் பற்பலகளியாட்டாடப்படர்கலியாடுமந்நாள். | 8 |
645 |
புறக்கொடுகளைகண்மொய்ப்பபுலம்புறுபைங்கூழ்போன்று திறப்படுமுலகமெங்குஞ்செறிகலிபுதைப்பநோக்கி இறப்பருந்துயராலோர்சாரிருந்துதன்னிலம்பாடுன்னி அறப்பெருங்கடவுளுள்ளத்தாரஞரெய்தினானே. | 9 |
646 |
ஆடகக்கொடிமென்சாயலன்னையோடமர்ந்தஞான நாடகக்கொழுந்தைவெள்ளிநகத்திடைப்பரவிப்போந்த மாடகப்பருதிபற்றன்மகதியாழ்முனிவனந்த நீடகங்குழையாநின்றதருமனைநெறியிற்கண்டான். | 10 |
647 |
என்கொலோதருமப்புத்தேளீண்டிருந்தனைநின்சோதி மின்குலாமேனிவாடிமெலிந்தனையிளவெண்மூரல் உன்குலாமுகத்திற்காணேமுற்றதுசொற்றியென்ன நன்குலாந்தருமச்செல்வனாணியீதுரைக்குமன்றே. | 11 |
648 |
முன்னுகமதனினான்காய்மொழிந்தபின்னுகத்தின்மூன்றாய்ப் பின்னுகமதிலிரண்டாய்ப்பிறழுமிக்கலியினொன்றாய்ப் பன்னியவறங்களின்னபாங்கிலேதாழத்தாழ்ந்து மன்னியதாள்கடேய்ந்துவருந்தினேன்வருந்தினேனால். | 12 |
649 |
கலியிடைச்சுருங்கியொற்றைக்கால்கொடுதிரிகலாற்றேன் வலியுடைத்தாளோர்நான்கும்வரும்வழியருளுகென்ன மெலிவினையறிந்ததெய்வவீணையங்கிழவனீண்டே நலியலைதருமவென்றுநகைமுகமலரச்சொன்னான். | 13 |
650 |
களித்தபுள்விலங்குதம்மிற்கனிவுகூர்ந்தீன்றதாய்தம்; அளித்தலைப்பிரிந்தஞான்றேயயலெனத்திரியுமாபோல் சுளித்தலையில்லோயுன்னைத்தோய்ந்தநாளுன்னாள்பொச்சாந் தொளித்தநாள்கலிநாளல்லாலுன்னில்வேறுண்டோகூறாய். | 14 |
651 |
பொன்வலிகாட்டும்வேணிப்புண்ணியனுளத்துவந்தாய் நின்வலிநீயுங்காணாய்நிகழ்த்துமுன்னுகத்திற்குன்றா மன்வலித்தவமாசாரம்வளரருண்மெய்ம்மைமல்க உன்னுடைநான்குதாளாயுற்றனநினக்குவேந்தே. | 15 |
652 |
அதுவழியுகத்தாசாரமருண்மெய்ம்மைமூன்றுமோங்கக் கதுவுபொற்றாளோர்மூன்றிற்கவின்றனைமற்றையூழி பொதுவுடைக்கருணைமெய்ம்மைபொலிந்திடத்துணைத்தாள்பெற்றாய் முதுகலிமடங்கன்மெய்யேமுயங்கவோர்தாள்பெற்றாயால். | 16 |
653 |
மெய்யொன்றேநின்றவாற்றால்விதிசுடரிரண்டுஞ்செல்ல மய்யொன்றுபுணரிநிற்கமன்பதைமலைந்துதம்முள் பொய்யொன்றுமுள்ளந்தேறப்புகன்றுசூளறவுகாணக் கய்யொன்றுமழல்சான்றாகக்கண்ணுவபலவுங்கண்டாய். | 17 |
654 |
ஆதலினொருதாளுற்றாயணுக்கள்செய்வினைக்கீடாக மாதொருபாகன்றந்தவகுப்பலாற்கலிவேறொன்றோ நீதுயருறவாயல்லைநிகழ்ந்துளபரதகண்டத் தோதுதென்றிசையிற்பொன்னியுத்தரதிசையினூடே. | 18 |
655 |
வாரடமிடைந்தகொங்கைமடநலாரோடும்வைவேல் சூரடமெலிந்தவிண்ணோர்துதைந்தனர்புகலான்மூதூர் ஏரடர்புகலியென்றேயிலங்கியதிறுதிவேலை நீரடவிழியாதொன்றிநின்றநீயுங்காண்டி. | 19 |
656 |
அனையதிலெம்மானோர்மூன்றருளுருப்புணர்ந்தான்றன்னை நனைமலர்கொடுதூஉய்ப்போற்றிநான்குறுதாளும்பெற்று வினையறவிலங்குகென்றுவிடுத்தலும்வீணைச்செல்வன் புனைகழலிறைஞ்சிப்போந்தான்யுண்ணியவுருவத்தோன்றல். | 20 |
657 |
வேறு. தருமாதிதருந்தருமத்தொருவன் திருமாதுறைசெம்பியநாடணுகிப் பெருவால்வளைவீசுபெருந்துறைநீர் வருகாவிரியாடினன்மாடுறவே. | 21 |
658 |
மடபான்மயில்வால்சிறைவீசியகால் அடல்வேல்விழியார்மணியூசலசைந் துடனாடவுலாதருதண்டலைசூழ் இடனார்பிரமாபுரமெய்தினனால். | 22 |
659 |
பொன்னாரெயின்முற்றியபொற்றளிவாழ் தன்னேரிலிதாடொழுதாய்மறையோன் முன்னாடுதடத்தினின்மூழ்கியதன் பின்னாதனருச்சனைபெட்புறவே. | 23 |
660 |
வழிபாடுவழாதுமுடித்தயலே மொழிதாருவினீழலின்முக்கணனைப் பழிபோயதனாமமுறப்பயில்வித் தொழியாதிருதானமுமுண்மையினால். | 24 |
66§ |
வந்தித்துவணங்கினன்மாவருடம் பந்தித்தொருநூறுளர்கால்பருகிச் சந்தித்ததவந்தருமன்செயலால் அந்திப்பிறைவெணியனவ்வுழியே. | 25 |
662 |
முகிலூர்குழன்மின்னொடுமூவிலையார் இகல்வேலொடுமெய்தலுமீரடிமேல் அகலாதவருத்திகொடாய்மலர்தூஉய்ப் புகவீழ்ந்துபுகழ்ந்துபணிந்தனனால். | 26 |
663 |
பணிகின்றவன்மேனிகளைப்பணிதோய் அணிசெங்கையினீவியருந்தவநீ தணியெவ்வரமுந்தருதுந்தருமா பணியென்றபணித்தொடையானெதிரே. | 27 |
664 |
உன்மாணடியுள்ளமிருந்ததெனா என்மாமுதுகெய்தவுமீரிருதாட் சொன்மாவலிகொண்டுசுமக்கவுமுன் பொன்மால்விடைபோல்வலியுந்தருவாய். | 28 |
665 |
என்றின்னவிரந்தவரம்பலவும் பொன்றுன்னுபொலன்சடையானுதவி என்றுந்தனியேறுருவாயுறைகென் றொன்றுங்கரமுச்சியில்வைத்தறைவான். | 29 |
666 |
செம்மாமறையுஞ்சிவகண்டிகையும் மெய்ம்மானவெண்ணீறுமொரைம்பதமும் இம்மானுடைநின்னொடுமைந்திவையே எம்மோடொருதன்மையவென்றறிநீ. | 30 |
667 |
வேறொன்றும்விளம்பலைமெய்விரதன் நீறும்பதமைந்துநிறைத்துளவன் ஏறும்பொறையன்பிறனிற்கவரான் வீறுஞ்சிவபூசைகள்மேவுழியும். | 31 |
668 |
அரசோடுதுழாயணிவிளமா னிரைவேதநெடுந்தளிசந்தமடம் முறைநூல்விரிவேள்வியுஞற்றுழியும் வரையாதுவதிந்துவிளங்குகநீ. | 32 |
669 |
நீயெவநெடுந்தவமாமவையே நாமேவுவநம்மருள்கொண்டுலகம் தாமேவவிளங்குகரோதகையால் யாமேவுலகெங்குநிறைந்தமையால். | 33 |
670 |
இவணீசெயுமிலிங்கமிதைப்பணிவார் பவமாறுகபாய்பரிமேதபலன் துவமோடினிதெய்துகதூயொளிவிட் டவராளுகநங்கயிலாயமதே. | 34 |
671 |
பொருமாடைபுனைந்தவர்மாவருணன் திருமேவுகசெய்வழிபாடுடையார் ஒருகோடிமகப்பலனுற்றுமணந் தருமாதியினெய்துகசந்ததமே. | 35 |
672 |
வெடிசந்தமிழைப்பவர்மிக்கமகம் படியொன்றுபவுண்டரிகம்பெறுக நொடியிங்ஙனிருப்பினுநோதகவற் றடியந்தமிலாவுலககாளுகவே. | 36 |
673 |
நடநாதனிவ்வாறருணல்கியுகந் தடலேறுருவானவன்மாமுதுகில் படநாகணையான்விழிபற்றியநீள் மடலார்வனசங்களைவைத்தனனால். | 37 |
674 |
இடையிற்கொடியோடினிதேறியபொற் சடைமுத்தெனருட்கொடுதன்னுருவோர் விடைபெற்றவன்மேலும்விடாவிடையேற் றடையத்தனரும்பதமுற்றனனால். | 38 |
675 |
பரிவார்தருமன்பணிபண்ணவனும் தெரியாநிலைசென்றனனென்றுலவா விரிவார்முதுவேதவியாதனருட் பிரியாமுனிபேசினன்மாசறவே. | 39 |
676 |
பரவுகொடுங்கலிநலியமெலிந்துயிர்பதறிநெடுந்தருமன் சரணமடைந்துளநெறியிவையிங்கிதுதனிலொருவன்பணியச் சிரபுரமென்றொருபெயரின்விளங்கியதிறனும்விளம்புவெனென் றுரவன்விளம்பியகதையையுணர்ந்ததிலொருவழியிங்கறைவாம். | 1 |
677 |
அமரரும்வெம்பியவசுரருமந்தரவருவரைகொண்டெறிபால் இமிழ்திரையுந்தியினடுதறிசந்திரனிடுமுரகங்கயிறாய்த் தமரநெடுங்கடல்குமுறவிரும்புவிதகர்படவெண்டிசையும் திமிதமிறைந்திடவமுதம்விழைந்துறுதிறலினருங்கடைநாள். | 2 |
678 |
சுலவுதடங்கடலலமரமண்டியசுடுகடுவெங்கறைநீர் அலர்மகளைந்தருமுழுமணிவெம்பரியடுகரியும்புவிசூழ் நலனுறுமங்கையர்சுரபிகள்வந்தபினரைதிரைதுஞ்சலிலா திலகுமருந்தெனுமமுதமெழுந்ததிலெவருமகிழ்ந்தனரால். | 3 |
679 |
எழுமமுதந்தனையிருமுதுபந்தியினினிதுபகுந்திடுமா றொழுகியவன்பினின்மழையுறழுந்திருவுருவனெழுந்துணர்வால் முழுவலிதுன்றியநிருதருமுண்டுழிமுரணிமுடிந்திலராய் அழிவறுவெஞ்சமம்விளையுமிவஞ்சரையடுதிறமெங்கணெனா. | 4 |
680 |
மதிவதனம்புனைதிலதமும்வெண்பிறைவரிநுதலுங்குழையோ டெதிர்பொருதுந்துணைவிழியுமருங்கொடியிடையுநறுங்குழலுந் திதலையரும்பியவிளமுலையுங்கொடுதிருவளர்பெண்கொடியாய் அதிர்செய்சிலம்பொலிகுமுறநடந்தனனசுரர்மயங்கிடவே. | 5 |
681 |
குறுநகைவெங்கயலெறிவிழிபொன்புனைகுவிமுலைகண்டிவளே உறுகதியென்றுகணினைபறியுண்டவருணர்வுமழுங்கியிடத் தெறுவியொர்செங்கையிலமுதொருசெங்கையில்வரும்வ** முறையினிருந்தகைநிறையநறுஞ்சுதைமுதல்வ.....** | 6 |
682 |
வேறு. அந்நிலையேமருங்குநரிலடற்சயிங்கிகேயனென்பானமரர்பந்தி தன்னிலிருசுடர்க்கிடைவேற்றுருக்கொடுபோயிருந்தமுதந்தனைக்கொள்காலை மின்னுறுமாழியன்கதிர்வானவர்குறிப்பாற்றெறுவிகொடுவிசைத்துவீசப் பின்னரவன்றலைதுணிந்துவிசையினில்வீழ்ந்ததுகாழிப்பெருவீதிக்கண். | 7 |
683 |
அவ்வெழில்வீதியின்கீழ்பாலொருகுரோசத்தளவிலனையவெய்யோன் வெவ்வெழில்யாக்கையும்வீழ்ந்ததிருகூறுமமுதமுண்டவியப்பினாலும் இவ்வெழிற்காழியையடைந்தநலத்தாலுமிருபாந்தளிறைவராகிச் செவ்வியொடுபணிகுவராலன்னவரின்முடிக்கூற்றுத்திறலோனிப்பால். | 8 |
684 |
வேறு. நோதகவித்துணைநானடையத்தனிநோனலரிற்பிழைகூ றாதவமிக்கதிவாகரனைத்தெறுமாறுநினைத்திமையோர் நாதனையிப்பிரமாபுரிமுத்தனைநாலுமறைச்சிகைவாழ் பாதனையர்ச்சனைபேணிவலித்தெதிர்பற்றியமுற்றறிவால். | 9 |
685 |
நீடலகைக்குழுவார்கண்முகிழ்க்கினுநீள்கண்முகிழ்த்தறியா ஆடலிசைப்பலதூரியமிக்கொலியாலயமுற்றலரோன் ஏடடர்பொற்றடமூழ்கியருட்பிரமேசனடித்துணைமேல் ஊடுருகிப்பலபூசைமுடித்தயலூதநிலைத்திசைவாய். | 10 |
686 |
மாணுறுமோரிருகோலளவாயொருவாவிசெய்தாயிடையோர் தாணுவையாலயமீதுசெய்தோரிருதானமுமேன்மையினால் ஆணமற்வழிபாடுடையானசையாமலைவாயழல்வாய் ஊணிலியாய்வளிபூணுகர்மாதவமோவறவாடினனால். | 11 |
687 |
கார்படுநாளையிலேவெளிமேலொருகாலினிலேநிலையா ஓர்பனிநிளையினீரிடைமூழ்கிநல்யோகினிலேயுணர்வாய்ச் சூர்படுமாணவவேரறவீசுசுகோதயவாரியிலே ஆர்படுநேயமறாதருளேபொருளாயுறைவானெதிரே. | 12 |
688 |
பரையொருபக்கலிலிலகமலைக்கிணைபகர்விடையிற்கரமேல் வரதமழுப்படைபொலிதரமுக்கணும்வலியவரைப்புயமா உரகமணித்தொடையசையமுகத்தருளொழுகவரிச்சிலைவேள் முரணையகற்றியபிரமபுரிக்கிறைமுதல்வனுதித்தனனே. | 13 |
689 |
எந்தையெழுந்தமைகண்டிருகண்களினும்புளகந்தருநீர் முந்தவுடம்புகுளிர்ந்திருசெங்கைமுகிழ்த்துமுகுந்தன்முனோர் சிந்தையுகந்துகுழைந்துபொதிந்தசெழுஞ்சரணங்களின்மேல் வந்தனையுந்துதியும்பலதந்துவருந்தியிரந்தனனால். | 14 |
690 |
எஞ்சலிலண்டரினஞ்செறிபந்தியினின்பமருந்துணநான் செஞ்சுடர்வெண்சுடரின்குறிகண்டுதெரிந்துநறுந்துளவோன் வெஞ்வினமண்டியரிந்திடவிங்குவிழுந்தனெனின்பணியால் உஞ்சனெனென்கண்விரும்பியிரங்குவதொன்றுளதெம்பெருமான். | 15 |
691 |
புரைபடுமுற்பழிவரினவரைப்பழிபுரிவதெமக்கியல்பால் நரைதிரையற்றதெள்ளமுதமெடுப்புழிநலிவுசெயுஞ்சுடராம் அரையரவர்க்குளவ்விரவிதனைத்தெறுமடலைபணித்தியெனா வரைபொருவப்பொருகரியரியுத்தமன்மனமலரப்புகல்வான். | 16 |
692 |
வேறு. பொறிபுலாதிகள்புறக்கடைகண்டொருபுனைதாள் நிறுவிமாதவமிழைத்துளராநினனிகர்யாரே உறுதியின்னதேலளித்தனமுன்னுடலாய வெறுள்செய்வாளராவேந்தனுந்துணைபடைத்திகலால். | 17 |
693 |
இயலுநள்ளியோடளரிபிருசுடரமைய முயலுமால்புகர்சேய்மறையோன்சனிமுறையே அயலயற்களையிரண்டினுமமைவருமமைந்த வியனுலாவியசோதிசக்கரத்திருவீரும். | 18 |
694 |
வருடையாதிபன்னிரண்டினுமவரன்முறையெதிரே பொருதிராகுகேதுக்களாயேழினேழ்பொருந்தத் திரிதிரீருவாவொழிந்தநாட்சுடர்களைத்தீண்டீர் ஒருபதத்தினோர்மீனிலோர்வீட்டுறிலிருப்பீர். | 19 |
695 |
துத்தியம்புரிந்தருஞ்சிரந்தவம்புரிதொடர்பால் இத்திருப்பதிசிரபுரமாகவிவ்விலிங்கம் பத்தியாற்பணிந்தித்தடம்படிந்துளாரோரெண் சித்தியெய்துகவுளத்தழுக்காறுகடீர்ந்தே. | 20 |
696 |
என்றுநல்வரமளித்துமையவளொடுமேற்றுக் குன்றிவாந்தவன்மறைதலுங்குழகனதருளால் அன்றனுக்கைபெற்றரும்பதம்புக்கிருசுடர்மேல் என்றுமின்னணம்படங்கொடுமறைத்தனரிருந்தார். | 21 |
697 |
முறுக்குகோட்டுமானிரலைகண்டூதியான்முடிமேல் செறித்ததாண்மடக்குண்டெனச்செழுஞ்சுடரிரண்டும் குறித்ததம்முடைமொழியினாற்சுடுவிடங்கொழித்துப் பொறித்தமாசுணம்படக்கதிர்மழுங்கினர்போவார். | 22 |
698 |
கொள்ளைவெள்ளெயிற்றரவரசிரண்டொடுங்குழுமா எள்ளல்போய்கோளொன்பதாகெனவிவண்வதிந்த வள்ளறன்செயலுரைப்பரிதென்றனன்மறைநூல் தெள்ளுமாமுனியிணையடிதொழுமுனிச்செம்மல். | 23 |
699 |
மன்னிரும்புயறவழ்கொடிமாகமூடறுக்கும் கன்னியாரெயிலுடுத்தபொற்காழிமாநகரத் தென்னையாளுடையான்முனமிக்கதைபடித்தார் பன்னிவேட்டுளாரிருவருமேபவம்படியார். | 24 |
700 |
பிறைவாளெயிற்றோரரவண்ணல்பெருஞ்சிரப்பே ரிறைமாநகர்க்குற்றதுகூறியிதற்குளாசான் குறையால்வருதீவினைபோயதுகூறிகின்ற நிறைமாதவன்சொல்வழியானுநிகழ்த்துவேனால். | 1 |
701 |
பூவாளிதாழப்பொறியட்டவர்நேமிவாய்ந்த தேவார்மனம்வாழ்திருமாமுனிச்செல்வர்மேனாள் மூவ்யிரருஞ்சிவகாதையின்முன்னமிக்கார் தாவாவருட்சூதனையொன்றுவினாதல்செய்வார். | 2 |
702 |
மஞ்சூருமைம்பால்வனவல்லிமணந்தகோவும் நஞ்சூர்களத்தானடியேவல்செய்நந்திதானும் நெஞ்சூரருட்டேசிகனின்னொடுமூவரன்றே தஞ்சூருலகுக்குருவென்பதலத்தின்மிக்கார். | 3 |
703 |
கவனம்படுபல்லுயிருங்கதிகாட்டியுய்ப்பான் சிவகண்டிகையுந்திருநீறுமெழுத்தொரைந்தும் புவனத்தொறுமாரழலாடிபுணர்த்ததேபோல் தவனம்படுமெம்முழைநின்னையுந்தந்தவாற்றால். | 4 |
704 |
ஆசானியல்பும்பிழையாதடியான்செய்மாண்பும் கூசாதவனைப்பிழைத்தான்படுகோளுமெல்லாம் மாசானதுபாறிடநின்றிருவாக்கினின்று பேசாவிடினெவவழியுய்வதுபேதையேங்கள். | 5 |
705 |
எனவாதரத்தோடிவைகூறியசவுனகாதி முனிவோருவப்பமுகிழ்வாணகைபூத்தசோதிக் கனிவாய்மலர்ந்துகருணைக்கண்மலர்ந்ததொன்னூல் தனிவார்கலியன்னவனின்னனசாற்றலுற்றான். | 6 |
706 |
நன்றேயிவணீர்வினவுற்றதுஞானவாசான் என்றேபிரமீசனேயெய்திலியம்பலொல்லா ஒன்றேயெனினுமுணர்ந்தாங்குரைசெய்வெனென்னாக் குன்றேய்குணத்தான்குரவோனியல்கூறுகின்றான். | 7 |
707 |
தோளாமணிபோற்றொழுதொல்குலமேவியீன்ற கேளாரிருதெய்வதபூசைகிடைத்துவேதத் தாளாலுயர்வைதிகசைவமுந்தாங்கியெம்மாற் காளாகிநின்றானவனென்பவறிந்தவாசான். | 8 |
708 |
காரன்னவீகைக்கதிரன்னநுவற்சிவான்றோய் நீரன்னதூய்மைநிறைகோன்முறையன்னநீதி பாரன்னவாற்றல்பனிமால்வரையன்னதோற்றம் சீரன்னநோன்புதிரையன்னதொல்கேள்வியாய்ந்தே. | 9 |
709 |
நடையேபலவங்கமுநலகநவிற்றுமன்னான் இடையேபலதெய்வமுமெய்தவியம்புமாதிக் கொடையேயிருமைப்பயனுந்தரக்கோதிலான்கண் கடையேவினைப்பாடறுத்துக்கதிகாட்டுமேலோன். | 10 |
710 |
நன்மார்க்கனோரைம்பதத்தோடறுநான்கும்வல்ல சன்மார்க்கனாற்றுந்தழலன்றருமாதியோதும் சொன்மார்க்கன்வெண்ணீரொடுகண்டிகைதோய்ந்தவுண்மைப் பன்மார்க்கன்முக்குற்றமுநீத்தபழிப்பின்மேலோன். | 11 |
711 |
இவனேகுரவோனிவனன்றியுமானமுன்னோன் நவைதீர்விரதனசிவவாச்சியநன்குணர்ந்தோன் சுவைநீரமுதீபவனச்சமகற்றுந்தொல்லோன் புவிமேலிவருங்குருவென்பபொருட்டுணிந்தார். | 12 |
712 |
அய்யந்திரிபொன்றிலாதாயறத்தாறுகூறி மெய்யென்றுயிர்போற்பலமன்னுயிர்மேலுமன்பு செய்யுந்தகையால்வழிபாடுடைச்சீடனுக்கே கய்யொன்றுநெல்லிக்கனிபோற்பொருள்காட்டல்வேண்டும். | 13 |
713 |
காலம்புனைகற்பனையில்லிகனிந்துயிர்க்கா ஆலம்புனைநீண்முடியைந்துமுகத்தினின்று நாலைந்துமெட்டுநயந்தோதியஞானநூல்கள் ஓலம்புரிகிற்பனமுப்பொருளுண்டுமாதோ. | 14 |
714 |
பதியென்றுதொல்லைப்பசுவென்றடர்பாசமென்று துதிநின்றமூன்றிலுயிரோடுறத்தோய்ந்துதோயா அதிபன்பதியாமவனாரருளொன்றையென்றும் பதியும்பொருளேபசுவாமிவைபன்னின்மன்னோ. | 15 |
715 |
மாமாயைமாயைவினையாண்வமேமறைப்பே ஆமாமிவைபாசமநாதியருட்பெறுங்கால் போமாலருளும்புணரப்புணர்கின்றவின்பத் தேமானொளியேபொருளென்றனர்தேர்ச்சிவல்லார். | 16 |
716 |
விளியாவிருட்டைவிழுங்கிச்சுருங்காததீப வெளியாதவனோடொருவாதுறவுண்டதேபோல் தெளியாமலப்பாழிருள்சீக்குமோர்தெய்வஞான ஒளிகாரணத்தேவனொளியோடுறவுண்டதுண்மை. | 17 |
717 |
இவ்வாருயிர்கட்குயிராம்நெறியெங்குமொன்றாய்ச் செவ்வாய்த்தெளிந்தோரறியாதறிசித்ததாகி ஒவ்வாவொருபேரொளியென்பவுயர்ந்தகாழி மொய்வாய்வரைமேலமருங்குருமூர்த்திதானே. | 18 |
718 |
அல்லார்மிடற்றானணியாலினிழற்கீழன்று சொல்லாதுசொன்னபொருட்பாடுதொகுத்துரைக்க வல்லானருட்டேசிகனன்றியுமற்றோர்தெய்வம் எல்லாரையும்வீடெளிதுய்க்குமதியாதுகண்டீர். | 19 |
719 |
மண்ணங்கறிசோறமைத்துண்டமகாரின்யாமே எண்ணும்பிரமமெனக்கூறியவீணராதி கண்ணுங்கயமைத்துறைஞர்க்கிதுகாட்டலாகா நண்ணும்பருவத்தவர்க்கீதுநவிற்றலாமால். | 20 |
720 |
அருகித்தருபஞ்சடர்குண்டிகைபேறலாகா பெருகிப்பயில்வார்க்குதவாமடற்பெண்ணைபோன்று தருநர்க்கிலைகாயுதவாமுடத்தாழைபோன்றும் உருகிப்பணிவாரொழித்தல்லவர்க்கோதலாகா. | 21 |
721 |
இருளொன்றுதன்னைத்தெரிக்குந்தெரியாவிருட்டாய் மருளும்மலவல்லிருட்சத்திருகாரமாக ஒருவுஞ்செயலாகுவதோதுறுகாரமாகக் குருவென்றசொற்குப்பொருளீதுகுறிக்கொள்வீரால். | 22 |
722 |
வேறு. ஏதமிலனையகுரவனையடுத்தாங்கிரவினும்பகலினும்விள்ளாக் காதன்மீக்கூரமுன்னொடும்பின்போய்க்கைவிடாதுடலிடைநிழல்போல் கோதகன்மனத்தாற்குணத்தொடுபழகிக்குறிப்பறிந்தொழுகியுள்ளவர்மாட் டாதுலர்போன்றுமரசிளஞ்செல்வரடுத்துழியிழிந்தவர்போன்றும். | 23 |
723 |
வெருவருமுளத்தன்பொறிவழிபுலன்கள்விடுக்கிலாவிரதன்வெந்தழலன் தருமநூலறிஞனிருமுதுகுரவர்தம்மடித்தொழும்பினன்யாண்டம் பொருவருங்குரவன்மக்களிலொருவன்போலுமென்றெண்ணலான்பொறையன் பருவமோர்நாலையியற்றுறும்பருவம்பயின்றவன்படிறுதீர்மொழியான். | 24 |
724 |
பாசிலையரம்பையீர்ந்துணிதழல்வாய்ப்படிந்தனபருவமுங்கவைநா வீசியதழல்வாயிந்தனத்திரளைவீழ்ந்தனபருவமுங்கரிகள் மூசியதழல்பெய்தனபருவமுமிம்மூன்றுமற்றாரழன்முகத்தில் ஆசியல்பஞ்சிபோன்மெனும்பருவமடுத்தவனெடுத்தமாணாக்கன். | 25 |
725 |
துலைநிலைதுன்னீளிருவினையொத்துத்தொடக்குறுமிப்பருவத்துக் கலைபலதேர்ந்துகுரவனீரடியைக்கைகொடுவினைக்கடல்கடப்பான் மலைவில்கண்டிகையுநீறுமைந்தெழுத்தும்வனைந்தமாணவன்றிறத்தொருசொல் உலைவறவளித்தகுரவனுமவனுமுறுவரால்வீடுபேறொருங்கே. | 26 |
726 |
மூவெயில்படுத்தானடியரைப்பணிதன்முதல்வனாராதனைவிரும்பல் ஆவலிற்புரிதலிறையடிபணிதலான்றவொப்பிலிபுகழ்கேட்டல் பூவலர்கண்ணீரரும்பமெய்சிலிர்த்தல்புண்ணியன்பணிகொடுண்ணாதல் ஓவறுபணியடெண்வகைப்பத்தியொழுக்கிலார்க்கோதுதலிழுக்கே. | 27 |
727 |
பூதகாரியத்தினெழுவெயிலொளியைப்பொருண்மிசையுற்றலாற்கண்ணால் பேதறக்காண்டலரிததிலரிதாய்ப்பிரிவிலாதுயிர்க்குயிர்தானாய் வாதமுங்கடந்துகுணங்குறியகன்றுவரவுபோக்கிறந்தபேரொளியைப் போதமேற்காட்டுங்குரவதனடியேபொருளெனார்க்குணர்த்தலும்புரையே. | 28 |
728 |
உதகநீத்தமுதுண்ணோதிமம்போலவுறுதியையுணர்த்துமென்கிளிபோல் நுதலியபொருண்மைக்கடைப்பிடித்தாங்கேநுவன்றுமொல்லொளியுணரேற்றி இதனுவல்போற்றியுணர்ந்துமேற்கோளிலேக்கறவெய்தியுங்குரவன் பதமலாநிழற்கீழின்னணம்பயிலாப்பதகருக்குரைப்பதுபழுதே. | 29 |
729 |
அடுத்தவாணகையன்குரவனினிருப்போனனுச்சையிலவனவன்பொருளை எடுத்தவனவன்சொன்மறுத்தவனெதிர்போயிருக்கையீந்திறைஞ்சலான்வன்சொல், விடுத்தவன்றுயில்வோன்பேதைபொச்சாப்பன்வெகுளியன்விரகியனென்சொற், படுத்தவர்திறத்தொன்றளிப்பதுகளர்வாய்ப்பட்டவால்வித்தினும்பழுதே. | 30 |
730 |
கூன்குரங்கெறியும்விளங்கனிகல்லாற்கொள்பவர்போற்குரையாது தான்குளகருந்துமாட்டின்வெவ்வேறுதலையுழலாதொருநிலைக்கண் மான்கொளுமான்போல்மானுடம்வாய்ந்துவள்ளலேதனதுகுற்றேவல் நான்கொளவந்தானென்றொருங்கெண்ணாநலமிலிக்குரைப்பறுநவையே. | 31 |
731 |
மானமாதவத்துமுனிவிர்காளாசான்மலரடிபிழைத்தமாணாக்கன் ஈனமாநிரயத்தெய்துவன்பரமற்கிழைத்தவல்வினைபெரிதேனும் ஆனவன்றொலைப்பானவனருள்பிழைத்தவருவினையமலனுமகற்றான் தானதுதெரியக்கேண்மினோமேனாட்டன்னருட்குரவனைப்பிழைத்தோன். | 32 |
732 |
கழைமுகந்தொடுத்ததேனிறாலிழியக்கரைமிசைவைத்ததாளலவன் நுழைவளைப்பெருகாதளிக்கருஞ்சேற்றினுண்கதவடைக்குநீர்வேலிக் குழைமுகம்பொதிந்தமழைமலர்ப்பொங்கர்குலுங்கியகலிங்கநாடளிப்போன் முழைபகவிடிக்குஞ்சிங்ககேதனத்தான்மூரிவேன்மன்னவர்மன்னன். | 33 |
733 |
அன்னவனொருநாட்பரிமகமியற்றுமாதரத்தினில்வெகுசுருதன் என்னுநீள்குலத்துக்குரவனைத்தொழலுமெழின்மகவன்றியிவ்வேள்வி உன்னரிததனாலாண்டினின்மகப்பேறுறுகுவைபரிமகம்யானே நின்னகமகிழமுடிப்பெனென்றுரைப்பநிருபனும்பழவினைச்செருக்கால். | 34 |
734 |
அயலுடையிரதிதரமுனிமுதலவந்தணர்பலரொடுங்குழுமி முயலரும்வேள்விதொடங்கினனிழைப்பமுனிவனுமுனிவுறாதெறிநீர்க் கயமலர்ப்பொதுளங்கமழலந்துறைசேர்கனைதிரைதுங்கபத்திரையாற் றியலடைவசிட்டன்பாசிலைப்புரையுளெய்தினனளவளாயிருந்தான். | 35 |
735 |
தேசிகன்றருசொன்மறுத்தலின்வேள்விசிதைந்துவானவரவிதேய்ந்து காசினியதிபனாயுளும்வாளாகரைந்துவெங்கதழ்சினப்பகுவாய் மூசியதழற்கண்மறலிவெந்தூதர்முரண்வலையீர்த்தனர்தூர்ப்பக் கூசிருள்புதைந்தநிரையவாயெல்லாங்குளித்தனனயுதமாண்டெல்லை. | 36 |
736 |
நிரையவெந்துயரிற்குளித்தவன்பின்னர்நீள்பனிமுயங்குகோட்டிமய வரையகந்தனில்வேதியப்பெரும்பேயாய்மண்டியபசியடச்சுழன்றான் உரைபடுந்தீயோரிடத்திலோருறுப்பிலுறுமலர்க்குரவனைப்பிழைத்துப் புரைபடுந்தீபோல்யாண்டுமெப்போதும்புக்குழிப்புக்குயிர்சுடுமே. | 37 |
737 |
வய்கலும்பசியாலூனுறக்கின்றிவானுயரரசிலைநுதிநீர்க் கய்கலனாகவெடுத்துவாய்மடுத்துங்கனன்றுவெவ்வழல்சுடக்கரிந்தும் உய்கலனாகிமுன்னைநாளறியாதுஞற்றியவினைப்பயனோர்ந்து செய்குறைநினையாக்குரவனைநினைந்துதேம்புவானினையனதெரிவான். | 38 |
738 |
மெய்யெழுத்தியக்குமுயிரெழுத்தேபோன்மெய்புகுந்தெனையசைத்தாண்ட வய்யவென்னுயிரேயிழுதையேன்றனைநீத்தணைந்ததெவ்வுழியறிந்திலென்யான் கய்யர்நோதகவுற்றிழைப்பினும்பெரியோர்காப்பதுசரதமின்றெளியேன் உய்யுமாறெதிரேபோதராயென்னினொழிவருந்துயரமென்றொழிவேன். | 39 |
739 |
பெருகுகண்ணிரயத்தயுதமாண்டாகப்பேதுறுதுயரெலாமனையான் உருகணத்துறுநோய்க்கிணைபெறாதாவியுருகியுநெட்டுயிர்ப்பெறிந்தும் அருவினைத்தொடராலுலகலமருவானரற்றியவோசைபுக்கதுவால் ஒருதனிமுளரிவானவன்சிறுவனுறையுள்புக்கிருந்தவன்செவியுள். | 40 |
740 |
செவித்துணைபுகலுமெழுந்தமாமுனிவன்செயிரறுமேனிதோயிளங்கால் குவித்தகையலகைத்தலைவன்மேலுறலுங்கூறுணர்வெயதியைம்பொறியும் அவித்துளார்முடிதோயந்தளிரடிமேலடுத்தடுத்திறைஞ்சிவல்வினையால் கவித்தவென்னுருவைத்துடைத்தியானுய்யுங்கதிதனைத்தருகெனக்கரைந்தான். | 41 |
741 |
மாசறுதவத்துக்குறுமுனியவன்கொண்மம்மர்நோயகலுமாமதித்தான் ஆசறுபரதகண்டமேற்பொன்னியகல்வயற்புகலியம்பதிவாழ் ஏசறுவடமேற்றிசையினிலிருகோலெல்லையிலிராகுமுன்னமைத்த வாசநீர்த்தடத்தையதிபவமாதிமாபவந்தொலைக்குமாமருந்தை. | 42 |
742 |
பின்னெடுந்தகையைமருளலையென்னாப்பெருகுவாய்பருகுநீரளித்து நன்னெடுந்திவசமொருபதினைந்தினளிபுனற்பொன்னிநாடணுகி அந்நதியாடிச்சிறுபசுங்குழவியடுபிணிக்கருமருந்தயிலும் தன்னிருதாய்போலதன்வடக்காகச்சார்ந்தனனிருவினைசாரான். | 43 |
743 |
தெளிநிலாவிரியமுகிழ்த்தவாய்முளரிச்சிறைப்படுநாகிளஞ்சுரும்பர் வளரொளிப்பரப்பிவைகறைவிளக்குமானவனரசியல்புரிநாள் எளிவரமருவார்சிறைவிடுத்தெனநின்றிரங்குநீர்வேலிகள்சூழ்ந்த ஒளியெயிலுடுத்தகாழியாளுடையவொருத்தன்வாழ்திருத்தளிபுகுந்தான். | 44 |
744 |
மரைமலர்க்கிழவனாடியபிரமமலர்த்தடங்குடைந்துபூங்கொன்றை விரைமலர்வேணிப்பிரமநாயகனைவிதிமுறைபூசனையாற்றிக் கரைபொருதலைக்குமிராகுமுன்கண்டகடிமலர்த்தடம்படிந்தந்நீர் உரைமனுவழியாற்றெளிப்பமுன்னுருவோடோங்கினன்மடங்கலேறுயர்த்தோன. | 45 |
745 |
பொங்கழல்கட்டுமுறையுறழ்படிவாய்ப்பொரியரைக்கருநெடும்பனைத்தாள் அங்கவல்லல்லகைமுரணிரும்பாகவறவனோர்சித்தர்கோவாகத் துங்கவல்வினையின்காளிமம்படுநீர்த்துவலையாங்குளிகையினொருவச் சிங்ககேதனத்தோன்செம்பொனிற்பொலியச்சித்தநீராயதத்தெளிநீர். | 46 |
746 |
முழுமதிமுகமுமொழுகொளிநகையுமொய்ம்மணிச்சுடிகையுமுரணார் கொழுமணிமார்புமெழுவுறழ்தோளுங்குடைக்கடனிறுக்குநீள்கரமும் செழுமலர்விழியும்வேனில்வேளனையசெவ்வியும்வாய்ந்துமுன்றோய்ந்த கழுதுருவகன்றுகலிங்கர்கோன்பொலிந்தகாட்சியையாவரேநுவல்வார். | 47 |
747 |
நன்னகர்முழுதுநலனெடுத்தேத்தநளிதடம்படிந்துமேற்கரையில் பொன்னவிர்கடுக்கைப்புரிசடைமுதல்வன்பூசனைவரன்முறையாற்றித் தன்னருட்குரவன்முடிப்பமுன்பரிமான்றருமகப்பலனுமாங்கெய்தி ஒன்னலர்க்கடந்தமுழவுறழ்தடந்தோளொளிருவேன்மன்னவன்பொலிந்தான். | 48 |
748 |
சூட்டழன்முகத்துப்பாட்டுருமுகுக்குந்துலங்கொளிக்குலிசவேலென்ன நாட்டுறுகுரவர்பிழைத்தவெவ்வினையைநகர்வயினிழந்தவனிரட்டைக் கோட்டுவெண்பிறைதாழவேணியற்களவில்கோடிபொன்னடியுறைகொடுத்துச் சேட்டிளம்பரிதித்தெரியல்சூழ்மார்பன்றிருமுனமிறைஞ்சினன்சென்றான். | 49 |
749 |
கன்னியந்திங்கட்டெரிசநாளந்நீர்க்காவலன்படிந்துபார்முழுதும் தன்னியலாழியொருதனியுருட்டித்தவலரும்வீடுபுக்குறலால் இந்நிலத்தன்னாளத்தடம்படிவாரிடரறுத்திகலறநூறி உன்னியபொருண்மையாவையுமெளிதேயுறுவர்வீடுறுகுவருண்மை. | 50 |
750 |
தன்னிகரிலொருமுனிவன்முடங்குளையாளரிக்கொடியான்றணப்பில்வெந்நோய் இந்நகரிலகற்றியவாறியம்பியொருகடவுண்மணியிமைக்குமார்பில் பொன்னியலுந்திகிரியினான்பழிகழுவிச்சண்பையெனப்புனைபேர்வாய்ந்த இன்னியலைமுனிவன்விரித்திசைத்தவழியளியேனுமியம்பலுற்றேன். | 1 |
751 |
மெய்ம்மலியுமறம்பலவுந்தலைநிறுவிக்கறங்குதிரைவிரிநீராடை மொய்ம்மலிமாநிலமுழுதும்பொதுநீக்கியைவரையுமுறையினாட்டி மைம்மலியுநருங்கூந்தற்பொதுவியர்தோண்மணந்துவடமதுரையாளும் பொம்மலணிவண்டிமிருந்தண்டுளபப்பசும்படலைப்புனிதன்மேனாள். | 2 |
752 |
வீங்குமொலிமுரசுயர்த்தாற்கரும்பெறல்வேள்விகள்பலவும்விருப்பினாற்றித் தாங்குநிலப் பொறையனைத்துந் துடைத்தொருதன் பெரும்பதத்திற்சார்வானெண்ணி, ஈங்கெமதுகிளையுரிமையாதவரெண்ணிலரிவரீண்டிருப்பின் மேலைத் தீங்குபயக்குறுமிவரைத் தெறினுலகம் பழிக்குமெவன் செய்துமென்பான். | 3 |
753 |
வனமணியுமம்புயத்தாடனமணியுமழுந்துமணிமார்பனிவ்வா றினமணியும்பருவரையோரெட்டையும்வட்டுருட்டுமுரத்திளைஞர்தம்மை முனமணியப்பதத்திலுய்ப்பான்மனமணியுமமயத்துமூரிமோட்டுக் கனமணிவெந்தலைநாகத்தினமணியை விழுங்குறுநாள் கண்டதன்றே. | 4 |
754 |
காண்டலும்விண்டொடுபுரிசைவடமதுரைமாசனங்கள்கனைநீராழி மூண்டதெனவயக்களிறுமயக்குழுவும்வியக்குமணிமுடித்திண்டேரும் தூண்டியருட்கடலனையசாரணர்கொசலனாதிதுறவோர்சூழ ஏண்டருபூந்திரைசுருட்டும்பிரபாதநதிக்கரைவந்திறுத்தவன்றே. | 5 |
755 |
பழமைமறைப்பொருடுணிந்தபண்ணவரோடுபராகப்பனிநீராடும் கிழமைகொடுபோந்தவரில்வல்லுவணப்புள்ளூர்திகேண்மைமாக்கள் நுழைபுலநான்மறைக்கிழவர்தொழுகுலவாய்மையும்பிறவுநோக்கிநோனார் குழுவுமியவருக்கநிலையறிதுமெனமனத்துறுகோள்கொண்டுசூழ்வார். | 6 |
756 |
தம்மிலெழிற்சாம்பனுக்குமணிவளையுமணிகலையுந்தரித்துவாசக் கொம்மைமுலைபொருத்தியடிவயிற்றின்மடக்கசைத்துநறுங்கூந்தல்வாரி அம்மலர்மெல்லடிபெயர்ப்பவந்தணர்பேரவையினிலுய்த்தாணோபெண்ணோ இம்மகடன்கருநிலையோர்ந்துரைத்திரெனவடிநிழற்கீழிறைஞ்சுமேல்வை. | 7 |
757 |
அனலூட்டிப்பின்னுகருங்கபிலமுனிவரனெறிபாலலையுட்டோன்றி மனவேட்கையழுக்கின்மிசைவைத்துளமீனெனநெடியோன்வழியின்மாக்கள் கனலூட்டுங்கயமையராய்த்திரிந்தனரென்றறிந்திவள்பாற்கரும்பொன்வாய்ந்த தனியேற்றபெருமுசலமதனில்வருமுமக்குலகிற்சரியவாழ்க்கை. | 8 |
758 |
முதுமுனியிவ்வணமளித்தமுரட்சாபவலியினிலோர்முசலமாங்கே கதுமெனவந்தடிநிலத்திலிடிபொருவவீழ்ந்ததரோகதிருஞ்சோதி மதியுமெனுமிருகுலமுமற்றையுவாவினில்விழுங்கிமதுகைப்பாந்தள் எதுகுலமும்விழுங்கமணிப்படமொடுக்கிப்பெருந்தரையிலிழிந்தாலென்ன. | 9 |
759 |
குருலக்கைவிழவெருவித்துகள்படுத்திநீரில்விடத்துகட்கொவ்வொன்றாய்க் கோரையயில்வாளுருவிற்கிளைப்பமடம்படுமவலக்குணத்தாலொவ்வொன் றோரொருவர்க்கோரொருவர்பற்றினரெற்றினருயிர்போயுலந்தார்மண்மேல் ஆரொருத்தன்வல்லவன்கைப்புல்லுமாயுதமென்பதறிவிப்பார்போல். | 10 |
760 |
வெறிக்களிவண்டிசைமுரலும்புண்டரிகப்பெருந்தடங்கண்விமலன்கேளாக் குறித்தமுறைமுடிந்ததெனவரக்கடவுள்வலிபாடிக்கொடியசாபம் மறித்தெனையுந்தொடருமிதுதுடைப்பினுமாறாதினியான்வளைவாய்க்கோட்டுப் பிறைச்சடிலத்திறைமலர்த்தாளருச்சனையாற்றுடைப்பலெனப்பெரிதுமோர்ந்தே. | 11 |
761 |
சகரர்குலந்துகள்படுத்ததழல்விழியந்தணன்முனிவாற்சாம்பனாதி நிகரில்வலிதரும்புதல்வகுலந்தவினைதொலைந்தகலநிறைநீர்ப்பொன்னி அகல்வயல்சூழ்பிரமபுரத்தடிகளடிக்கருச்சனைசெய்தருளாலன்னான் புகரின்முனித்துவமடைந்தான்யானுமதுபணிவெனெனப்போந்தான்மன்னோ. | 12 |
762 |
இடிமுரசக்கொடித்தானைப்புடைநிறுவிப்பூமடவாரிருவர்சூழக் கொடிமுகிறோய்மண்மாடக்காளிபுரத்தாளுடையான்கோயில்புக்குக் கடிமலர்வானவன்றடந்தோய்ந்தருநியமச்சடங்காற்றிக்கடவுட்கங்கைப் பிடிபயிலுநெடுவேணிப்பிரமேசன்றனையொருபாற்பேதையோடும். | 13 |
763 |
பனிமலரும்கற்பகப்பூந்தனிமலருங்கொடுத்திரைவெண்பசும்பாலாழித் தனியமுதுங்கனியமுதுமானைந்துந்தேனாறுஞ்சாந்தச்சேறும் பனுவன்மரபுளியாட்டிநனிவழிபாடாற்றியருட்பகவன்கோயில் அனிலதிசையினின்முக்கோலளவையினிற்கிளரொளிகாலாழிதன்னால். | 14 |
764 |
ஒல்லொலிநீர்த்தடங்கண்டுசில்லரிக்கட்டிருமனையாரொடுபுக்காடி அல்லலறுத்தமலவுருவடைந்தனனோபுயலுருவத்தருட்கண்ணீர்சாய்த் தொல்லையில்வெண்புயலுருவிற்பொலிந்தனனோவெனவெண்ணீற்றொளியின்மூழ்கி மல்லல்வளர்கண்டிகையுமைம்பதமுமுவந்திறைதாண்மனத்திலூன்றி. | 15 |
765 |
பற்பலவாமுதுகடவுட்டீர்த்தமமைத்தாழியின்பேர்பகர்ந்துஞானத் தற்புதநீடொளியிலுளமிருத்தியாறிருபருவமருநோன்பாற்றிச் சொற்பதந்தீரருளுருவப்பரஞ்சுடரைமுப்போதுந்தொழுவான்முன்னர்ப் பொற்பமருநறுங்கடுக்கைச்சிகழிகையானகமகிழப்போந்தானன்றே. | 16 |
766 |
ஆரணமாய்மறைமுடிவாயளப்பரியபேரொளியாயளவைகாணாப் பூரணமாய்வரவுபோக்கிறந்தபெருங்குணக்கடலாய்ப்பொருமாலேற்றின் வாரணந்தபுளகமுலைக்கொடிபுணரப்புணர்ந்தெதிரேவயங்காநின்ற காரணகாரியங்கடந்தவொருபொருளையிருவிழியுங்களிப்பக்கண்டான். | 17 |
767 |
பணிந்துமிசையேத்தெடுத்துப்பாடியுமூடியவிருளைப்பறித்ததாளை அணிந்துமலர்விழியருவியாடியுமுன்பரவுமடலாழிவேந்தைத் துணிந்ததவமகிழ்ந்தனநீவிழைந்தனகேளெனவமலன்சுடர்வாய்பூப்பத் தணிந்தமனத்தளிதூங்கத்துவரைநகர்க்கிறைவனிதுசாற்றுகின்றான். | 18 |
768 |
அலகிலுயிர்க்குயிராயதனிமுதல்வாநின்னடிக்கீழடியேன்மைந்தர் பலருமுலப்புறக்கபிலமுனிமொழியால்வருமுசலபழிவாட்கோரை உலகிலெனைநலியாதுமுசலசேடத்தாலென்னுலகூடெய்தி மலர்பொருமுன்றாண்மறவாநிலைதருதியெனவிரப்பமழுவாளண்ணல். | 19 |
769 |
ஆயிரவாயரவணையிலறிதுயில்வோயஃதளித்தேமகலாதென்று நீயிவணோர்கலையுருவினிலைபெறுகவாட்சண்பைநினைத்தொடாது தூயவலிபெறுமிவ்வூர்சண்பையெனவிளங்குகவென்றருளித்தொல்லை ஞாயில்படுந்தடம்புரிசைநகுமணியாலயம்புகுந்தானங்கைபாகன். | 20 |
770 |
போரவுணக்கடல்கடந்தவொருதிகிரிமலர்க்கரத்துப்புனிதன்பின்னர் ஏரகலாமணிவீதிக்காளிபுரிக்குத்தரத்திலிருகுரோசத் தோரகத்திலொருகடவுட்டடமதுகண்டயலிருகோட்டொருவெண்டிங்கட் டாரணியுமறைக்கொழுந்தையிருத்தியருச்சனைபுரிந்தான்றவத்தின்மிக்கான். | 21 |
771 |
அங்கதிலெண்ணருங்கோடியருந்தானம்வீசியிறையடிமைமாறாப் புங்கவர்தம்முளமகிழநிகழ்வித்தவொருபறவாப்பூவைவண்ணன் பங்கமில்சீருணர்வறிந்துபேருவகைமீதாடப்பரிவுள்ளாட அங்கணாயிரம்பருவமாடினானவன்பணிகொண்டாடினானே. | 22 |
772 |
ஒற்றைநெடுங்குழைக்கிழவனுவந்துவரந்தரலானுமொருகோட்டங்கைக் கொற்றவன்மெய்த்திருநாமம்பெறலானுமாய்பசும்பொன்கொழித்துவாய்ந்த கற்றைநெடுந்திரைத்தடமிக்காசினியிற்சிறந்ததனாற்கலசத்திங்கள் முற்றிலுமந்நீர்பணிந்தார்முற்றிலும்வல்வினையகன்றுமுத்திசேர்வார். | 23 |
773 |
முப்பகலந்நீர்படிந்துமுத்துறழ்வாலரிசிபெய்துமுக்கண்வேணி அப்பனடியார்க்களிப்பினோரரிசிக்கோர்பருவமருவித்தண்கோ டொப்பருதென்கயிலையில்வீற்றிருப்பரெழுத்தோரைந்துமொருக்காலோதில் எப்பெரியதலங்கடொறுமொருகோடிகணித்தபலனெய்துவாரே. | 24 |
774 |
ஒருமாசித்திங்கள்வருமுழுத்திங்கடனிலாடிலுரவோர்சாபம் அருமாசுவினைபலவுமரன்பாதமறியவிரிந்தகலுமேனாள் பெருமான்மின்னொடுமிருந்துகயிலையிற்கற்பகத்தருக்கட்பேசமுன்னம் திருமால்கொள்ளைம்பதத்தையித்தடத்தில்விரிப்பவரேசீவன்முத்தர். | 25 |
775 |
தகலருந்தேசிகனருளாற்பிரணவத்தோடாறெழுத்துஞ்சாரவெட்டுப் பவவிருளைத்துடைப்பவர்க்கும்வேண்டுமிடம்வினவுதிரேற்பகருங்காலை நுவலரியவருட்குரவனெதிர்ந்துழியேசாலுமெனநுவல்வாரன்றிச் சிவபெருமான்முளைத்துழியுமுனிவர்முதலமைத்தபிரதிட்டைக்கண்ணும். | 26 |
776 |
காசிபிரயாகைகயைதிருச்சயிலங்காளத்திகாஞ்சிதில்லை ஆசின்மயூரங்கழுக்குன்றருணையிடைமருதுகுடமூக்கையாறு வாசமலிபழமலைவெண்காடுகடவூர்வேதனங்கோடிக்கா ஓசைபெறுகோகரணமிவற்றினுமைந்தெழுத்தையினிதுரைக்கற்பாற்றே. | 27 |
777 |
விரித்தபலதலந்தோறுங்குருகுபெயர்க்குன்றெறிந்தோன்வேழக்குன்றை உரித்தபிரானேவல்புரிதிருநந்திசீடரிவருபதேசிக்கின் பரித்திடலாம்பிரமபுரத்தொருமுதல்வன்குருவடிவம்படைத்துவாய்மை தெரித்தசிவாசாரியமர்புரமெனலாலீண்டுரைசெய்திறத்தைக்கேண்மின். | 28 |
778 |
சிவகுலவேதியர்முதலீரிருவருணத்தவருமுபதேசஞ்செய்யத் தவறிலருட்டேசிகராய்வயங்குவர்மற்றவரடிக்கீழ்த்தாழ்ந்துளோரும் நவமணிதோயிருஞ்சுடிகைநாகராப்பசுங்குருளைநகுமதாணிப் பவனுலகந்தனிலெய்திப்பழிப்பரும்வீட்டின்பநலம்பருகுவாரே. | 29 |
779 |
மெய்ப்போதமிலரேனுங்காளிபுரத்தாளுடையான்விமலன்வேடம் தப்பாதுவனைந்தனரேன்ஞாளிதனக்கூணிழைக்குந்தகையரேனும் அப்போதவருட்குரவராங்கவரேயீங்குரைக்கோரையமுண்டேல் இப்போதேசென்னிதெறித்திப்பாரின்வீழ்ந்துபுரண்டிடுகமாதோ. | 30 |
780 |
துளக்கருஞ்சூள்புகன்றதெனதுளச்செருக்காலன்றடிநாட்டொடுநீர்வேலி வளப்பெரும்பாரணிபுயத்துக்கவுடபதிக்கித்தலத்தோர்மனைக்கட்டீஞ்சொற் கிளக்குறுமாமடக்கிளியொன்றைந்தெழுத்தாலிருட்படலங்கிழியவோதி விளக்கருந்தீவினையகற்றிவிடுத்தலினான்மக்கள்வலிவியப்பாமன்றே. | 31 |
781 |
குருவுருவாயிருந்துவிதிகொடுப்பவனுங்கொடுத்தவிதிகொண்டுபோற்றத் தருவுருவாயெழுந்தசிவலிங்கபரம்பரனுமுளந்தடுத்தாட்கொள்ள அருவுருவாயமைந்ததொருசங்கமனுமோரிடத்தில்வைகக்கண்டும் பெருநிலமேலிதையறியார்விளக்கிருந்துந்தீக்குழலும்பித்தராமால். | 32 |
782 |
பூதானமிவணளித்தார்புண்டரிகன்றானமுமென்பூவைநல்லார் மாதானமிவணளித்தார்வனமாலிதானமும்பொன்மறைவல்லார் மாட் டியாதாமிவணளித்தாருருத்தினபெறலாலியல்வழாமல் ஆதானமிவணளித்தாராதியிடையீறிலிதாளடைவரன்றே. | 33 |
783 |
குலைத்தலைநெட்டிலைத்தாழைக்குமரியிளங்குடப்பசுங்காய்குலையமாநீர் துலைத்தலைவாழைகள்வெடிபோந்திருப்புகலிவியப்பனைத்துஞ்சொல்வான்புக்கால் சிலைத்தலைவாணுதற்பரைசேர்திருத்தன்விரித்திசைப்பதல்லாற்சிறியேனென்னில், மலைத்தலையுமறிவென்றான்வாதராயணனிருதாண்மறவாமேலோன். | 34 |
784 |
பச்சையந்துளபத்திருமறுமார்பன்பழிவிடச்சண்பையென்றொருபேர் இச்சையினியன்றவாய்மையீதாகவிதிலொருமுனிவரனிறைஞ்சிக் கொச்சையென்றுறுபேர்புனைந்ததுஞ்சவுனகாதியர்க்காரருள்கொழிக்கும் நிச்சயமுனிவன்விரித்தாவாதொகுத்துநிகழ்த்துவாமொருமருங்கெடுத்தே. | 1 |
785 |
தாமரைத்தெரியனான்மறைக்கிழவன்றனைநிகாமுனைவர்தம்பெருமான் மாமறைப்பொருடேர்வசிட்டன்மாதவம்போல்வருமுனிசத்தியன்பாலன் ஆமருட்கடன்பூண்டாரழல்வேட்குமாரணத்தறிஞனெவ்வுயிர்க்கும் ஏமமர்குணத்தானிதியுறழ்வத்தானியல்பராசரமுனிமேனாள். | 2 |
786 |
ஆடகக்கடுக்கையலங்கறாழ்வேணியந்தணன்பதிகள்பற்பலவும் நாடருங்கடவுணதிகளும்படிந்துநனந்தலையுலகெலாம்வலங்கொண் டேடவிழ்கமலத்தண்ணலம்பொலன்சூட்டெழினலமிறைகொளநறைவாய்ப் பாடல்வண்டிமிருங்கவுதமையாறும்படிந்தனனிடும்பைநோய்படியான். | 3 |
787 |
இமிழ்திரைசுருட்டுங்கவுதமையாடியிரும்புனல்கடக்குமாறெண்ணிக் கமழலந்துறைக்கணோடமுய்ப்பவரைக்காணலனாயிடைக்கண்டான் அமிழ்துறுமொழியுந்தமிழிளந்தென்றலசையினுமொசியுமென்மருங்கும் உமிழ்கதிர்பூணுங்குமிழ்பொருங்கண்ணுமுடையதோர்வலைமடவரலை. | 4 |
788 |
மடவராலிந்நீரோடமுய்க்குநர்யார்மற்றுநீவல்லையேலின்னே கடவுதியெனலுமக்களாயிரவர்கலந்துழியன்றியிந்நாவாய் விடவரிதெனவேற்படைபொருதடங்கண்மெல்லியலுரைப்பாவாயிரவர் உடனுறுபொறையீண்டமைக்குவென்கணத்தேயொண்ணுதல்விடுகெனவுரவோன். | 5 |
789 |
கோலொருதலையங்குடமொருதலையுங்கூன்புறத்திமிலிருதலையும் மேலவனிருத்திமச்சகந்திப்பேர்மின்னொடுதானும்வீற்றிருந்து சேலுலாந்திரைநீர்ச்செல்லுழிமுனியைச்சிவனெனநோக்குறாவடிநாள் பாலலோசனத்தாற்றெறுபழிமீட்பப்பகழிகடுரந்தனன்படைவேள். | 6 |
790 |
மாரவேள்வாளிக்குரனழிந்தயர்வான்வலைஞர்தந்திருவினைநொக்கிச் சூரரமகளிரெழினலங்கனிந்தசுடரிழாய்தெய்வநீராற்றுள் பேரலைகடத்துமோடமீதென்னப்பெருவலியநங்கன்வெஞ்சமத்து நீரலைகடத்துமோடநீயல்லானேடினுமில்லைநீணிலத்தே. | 7 |
791 |
குறுநகைநிலவாலிருட்களிறதுபோங்குறுநடையனத்தின்மீன்கொடிபோம் இறுமிடையரவாற்றென்றலந்தோர்போமிணைமுலைநேமியாற்குடைபோம் தெறுசிலைப்புருவத்தடுசிறைப்பரிபோந்தீவிழியுருத்திரனுதல்போல் பொறிநுதல்விரித்தசிந்துரத்தெழிலாற்போர்மதனாண்மையும்போமால். | 8 |
792 |
இடைக்கணேயெழுந்துந்தலைக்கணார்மருங்குலிளைப்பநின்றெழுமுலையின்னே உடைக்குநீரிடைநீரோடமூர்ந்துழிமுன்னூற்றமின்றியுந்தனிவாளா இடைக்கணேயுறுவேற்கிரங்குறாவெனினுமிரங்கிவந்தடைந்துளோர்க்களித்தல் அடைக்கலநூலினியற்கையேவேலையகத்தினும்பெறலருமமுதே. | 9 |
793 |
பழுத்தபண்கொழித்துமழலைவண்டுழலும்பங்கயப்பொகுட்டினிதமர்ந்த முழுப்பெருங்கிழத்திமுதன்மடவாரைமுறைவகுத்துன்னையும்வகுத்தான் எழிற்கனிந்தவர்கண்டனையவாவெள்காவெண்ணியோநான்முகனுள்ளத் தழுக்கறாமையினோநின்னியன்மணத்தையழிபுலாலாக்கினனணங்கே. | 10 |
794 |
தேம்படுமெறிபான்முதுபயோத்தியிற்றேவர்தெள்ளாரமிழ்தருந்தித் தாம்படுமிறப்பொன்றொழிந்தனரல்லாற்சரமதன்போர்தொலைந்திலரால் காம்படுகழைவார்சிலையலர்பாயவிடையிலேமுரியுமிக்கலகத் தோம்புநின்கனிவாயமுதுறாதெவ்வாறுய்யுமாறையநுண்ணிடையாய். | 11 |
795 |
உருவிலிவாளியொருங்குறப்பாய்ந்தவுரம்படுபுண்முகங்குளிர இருமுலைப்புளகவேதுகொண்டொத்தியிலவிதழ்வாய்மருந்தூட்டிக் குருகணிகரத்தாலிருகுறப்பிணித்துக்குறைவருபுதுமணம்புணர்ப்பின் பொருவிலிக்கணமேயானுமுடலைப்புதுமணம்புணர்த்துவென்பொன்னே. | 12 |
796 |
குழைபொருதலைத்தவிழியினுமழலைக்குயில்பொருமொழியினும்பைம்பூண் இழைதவழ்சிகரமுலையினுமதியோடிகலியநுதலினுமதிபோய் அழல்படுமெழுகும்வான்மணலெக்கரலைத்தலைப்பொருமுதுநீத்தத் துழைபடுகரையுமெனவுடைந்திவ்வாறுருகியவொருவனோடரிவை. | 13 |
797 |
என்னைமாமுனியீண்டியம்பியதென்னாவெழுமடமாதினாற்குணமும் தன்னையேநலியநகைமுகங்கோட்டித்தாழ்குழற்சிறுபுறஞ்சாய்த்து முன்னையாயிரவர்பெரும்பொறையுய்த்தமொய்ம்மலிமாதவத்தோன்றால் தன்னையேயுணர்வார்க்கிழிகுலத்தறியாட்டமுலைமுயங்கவுந்தகுமே. | 14 |
798 |
ஊன்படுவலைஞர்காவலனெந்தையுணர்ச்சியுமறிந்திலன்பெருநீர் தான்படுபுலன்கோடிரண்டினுமாக்கடதைந்தனர்திருவுளமறியேன் வான்படர்யாழோர்புணர்ச்சியினின்னைமணக்கவுமியைந்தனென்மாறா மீன்படுமுடைபோய்நறுமணங்கமழவித்தகாதருகெனப்பணிந்தாள். | 15 |
799 |
அற்றமின்முனிவனதுகணத்தொருதன்னாற்றலாற்பணிகொடுகவித்துப் பற்றருந்தெய்வமலர்மணமளிந்துப்பரிமளகந்தியென்றனையாள் முற்றருங்குரும்பைமுகிண்முலைகுழையமுகமணைதரக்கரமிறுகப் பொற்றொடிகறங்கநறையிதழுறைப்பப்பூங்குழலலமரப்புணர்ந்தான். | 16 |
800 |
பூங்கலைதிரையாவுரவர்தந்திலகன்புயவரைநாகமாவிழிகள் வாங்கரும்புளகவனமுலைமலையாமற்றிருவோருளத்தார்வம் ஆங்கணின்றிர்ப்பப்பெண்ணலங்கனிந்தவரிவையந்தடங்கடலந்நாள் நீங்கருமின்பக்கலவியாரமுதைநிறைமுனிக்களித்ததையன்றே. | 17 |
801 |
மெய்யிரண்டுயிரொன்றெனநடுநாவாய்மேலிருவருநலந்திளைப்ப நெய்யிருங்கூந்தனெருங்குபூண்முலைபானேமியான்கலையெழில்வாய்ந்து மய்யறுதவமுமனுவும்வேள்வியுநான்மறைகளுமுறைகளுமுயிர்கட் குய்யவந்துதிப்பநிகரில்பேரெழிலாலுதித்தனனொருபெருந்தனயன். | 18 |
802 |
தனையன்முற்றுணர்ந்தான்மனமலர்களிப்பத்தயங்கலும்வயங்கெழிற்றையல் முனைவனைவணங்கிமுன்னைமாணெலிலுமுருகுலாமகவையுந்தருகென் றினையமேலவனவ்வெழிலினையருளியிம்மகவேண்டுமேல்யாண்டும் நினைவுழிவருவனிவனையீண்டளிப்பினின்னுடைக்கன்னிமைக்கிழுக்கே. | 19 |
803 |
அங்கைநீரிறைப்பமுன்னெழில்வாய்ந்தவரிவைகேளாய்வலைவினைஞர் மங்கையென்றுன்னேல்யாழ்வல்லோர்குலத்தோர்வசுவெனுமிறைமகன்றேர்மேல் அங்கண்வான்வழிக்கொண்டிவ்வுழிமேனாளணைந்தவனருமனைக்கிழத்தி கொங்கையைநினைப்பவிளகியதாதிக்குடிஞையினடுவண்வீழ்ந்ததுவே. | 20 |
804 |
வெடிகொண்மீனொன்றுவீழ்ந்தவீரியத்தைவிழுங்கலுமதன்வயிற்றோன்றிக் கடிபுலரல்வினைஞர்மனையிடைவளர்ந்தாய்காலமூன்றையுமுணர்திறனால் அடியியலறிந்துனிளமுலைவேட்டேனாதலினலமரேனின்னில் படிபுகழைவர்முடிபுனைகதையும்பல்குமாலுன்னுழைப்பாவாய். | 21 |
805 |
மோட்டறாமுடிமேற்கிடந்தநீராடைமுழுநிலமொருபுயத்தேந்தும் ஈட்டுதொல்புகழான்சந்தனுவெனும்பேரிறைபுணர்சத்தியவதியாய்த் தீட்டுமால்வென்றிச்சித்திராங்கனையும்விசித்திரவீரியன்றனையும் தோட்டுவார்குழலாய்நீயினிதீன்றுதுலங்குவைமற்றவர்வழிநாள். | 22 |
806 |
திருத்தகுகுலத்துமடநலாரிருவர்செங்கைபற்றினருயிருலப்பப் பெருத்ததொன்மரபுக்குறுமகாரின்றிப்பேதுறுமேல்வையீண்டளித்த ஒருத்தனாலனையாரிருவரும்பாண்டுவொடுவிழியில்லியைப்பயந்து விருத்தியால்வழியேபாரதப்பெரும்போர்விளையுமேலுணர்குவைமின்னே. | 23 |
807 |
என்னமாமுனிவனன்னவட்கோதியென்னெழிற்குரவனைக்கொடுபோய் நன்னெந்தகைசால்வெதிரிகாச்சிரமநண்ணினன்முளைமதியிமைக்கும் பொன்னவிர்வேணிப்புனிதனாரருளாற்பொறிக்குறும்பெறிந்தமாதவத்தீர் கன்னிகாகாமியெனப்பராசரனைக்கரைந்தனரன்றுதொட்டுலகோர். | 24 |
808 |
ஆன்றமைகேள்விமுனிவனுக்கிழிவென்றறையுநீரலைகடற்றோய்ந்து தோன்றினுமுவருட்டோய்விலாமீன்போற்சுந்தரமின்றியெவ்வினைக்கும் ஏன்றவனிறைவனொருவனேகெடுப்பானெடுப்பவன்றடுப்பவனெவைக்கும் சான்றவனெனமெய்ப்போதமுற்றமலன்றாளிணைக்காள்வினைப்படலால். | 25 |
809 |
அளிவினையுளத்துமுனிவரன்சிறுநாணடைந்தஞரெய்தினனந்தோ விளிவினைமுனியுமெய்துமோவென்னாவிரட்டுறக்கருதலீர்யாண்டும் தெளிபொருட்டிறத்தோரையமுந்தெளியாத்திரிபொருட்டிறத்திலோர்துணிபும் விளிவருநிரயம்பயக்குமாலுலகில்விரகிலரிகழநோனாது. | 26 |
810 |
கோதகல்குணக்குன்றனையவனினையகொச்சையையகலுமாறெண்ணிச் சீதவான்பொன்னித்திருநதியாடித்தேனினமுரன்றுதாதருந்திப் போதலர்பொதுளிக்கருகிநெய்த்திருண்டபுனைகுழற்றிருநிலையழகி மாதுபாலொருவன்மனமகிழ்பூத்தமணிமதிட்காழிவந்தடைந்தான். | 27 |
811 |
கடையளந்தறியாவளமலிமாடக்கடிமணிவீதிகள்வலங்கொண் டிடைவளர்முருகார்விழுமணித்தளிபுக்கினவளைநித்திலமிறைப்பப் புடைநிலாவளைக்கும்பிரமமாதடத்துப்புண்ணியப்புனல்படிந்தெனையா ளுடையகாரணனைவிதிமுறைவழிபாடுழுவலன்பொடுமினிதாற்றி. | 28 |
812 |
அண்ணலங்குடுமியாடகமானத்தணியகோணத்திலேடவிழ்பூங் கண்ணியங்கொன்றைப்பராசரேசுரனைக்காதலினிருத்தியாயிடையோர் புண்ணியக்கூவமிருத்திநாத்தழும்பப்புகரிலைம்பதமுறைபோற்றி நண்ணருந்தழல்வாயாறிருபருவநற்றவமுற்றுறவிழைத்தான். | 29 |
813 |
புனிற்றிளந்திங்கட்புரிசடைமுனிவன்புகழ்பராசரமுனிக்கருள்வான் பனிக்குமென்கமலப்பாடகமுளரிப்பைங்கிளியொடுமடலேற்றின் முனிக்கணமிறைஞ்சக்கருணைவார்ந்தொழுகுமுகமலர்முகிழ்நகைபூப்பத் தனிப்பரஞ்சுடரோன்வருதலும்விழிநீர்ததும்பமெல்லடிமிசைபடிந்தான். | 30 |
814 |
உருகிமெய் யரும்பித் தழுதழுத் தவச மொடுபராய் மலர்கடு யவணை முருகியல் வேணி முதல்வனு மகிழ்ந்து முன்னிய தென்னென முதல்வா பருகியுன் னருளே பொருளெனப் பெறுமென் பாலிட ரெய்துமோ வெளியேன் இருநிலத் தொருபேர் கன்னிகா காமி யெனுங்கொடு வாய்தணிக் லொளலே | 31 |
815 |
குறுநிலா விரித்த சிறுபிறை யலங்கற் குழகனுங் கொச்¨சயி னகன்று பெறுவர மளித்தே முனவரேத் தெடுக்கும் பெருந்தகை யாதியிந் நகர்க்கும் உறுபெயர் கொச்சை யெனவகன் ஞாலத் தோங்குக வெனவொருங் களித்து மறுவினா லமைத்த குறியினின் மறைந்தான் மாசற வயங்கினன் முனிவன் | 32 |
816 |
தேண்மதி யடுத்த முழுமதி தினத்துந் தீர்த்தமீ தடியா யிடையில் கோண்மதி மிலைந்த பராசரே சுரனைக் குளிர்மலர்த் தூயடி பணிந்து நீண்மதி விளைநெல் ளித்துளோ ரொவ்வோர் நெற்கொரு பருவநீ டொளிகால் காண்வரும் வனப்பிற் கயிலைமால் வரையிற் கண்ணுத லுருவுபெற் றிருப்பார் | 33 |
817 |
அயன்மனை விழைத லூனவூன் மிசைத லருநறை மடுத்தலான் றவரை நயனிலகூறன் மனையிளங் கொடியை நாளலா நாளிடைப் புணர்தல் கயமைசூழ் வினைக ளெவையும்விண் டாதி கமலநீ டுலகினூற் றெட்டுப் பயனுறு குலத்தோ டுறைவரிக் கூவல்படிந்துநற் றானமென் றளித்தோர் | 34 |
818 |
துலைமதி யாதி தகர்மதி யாதி சுலவுமீ ரயனவெம் பாந்தள் அலர்கதிர் தொடுநா ளிவற்றினீ ராடி யரியதென் புலச்சடங் காற்றி உலைவரு மெண்ணீ ரிறைத்துளோர் மேல்வீட் டுறுகுவ ருகமொரு நான்கின் மலையுறு கவிக்கட் டானமே யெவைக்கும் வலிதென மறைவழங் குதலால் | 35 |
819 |
நுவலருங் கடவுள் மான்மிய மிதற்கே நோக்குறி னளவிலை யடிநாட் பவனிகா முனிவன் கொச்சைபோ யதனாற் பராசர கேந்திர மெனும்பேர் கவினுமிந் நகரம் புனைதலாற் குலமே காரண மன்றுசெய் வினையால் உவமமி லுயர்வுந் தாழ்வும்வந் துறலா லொழுக்கமே விழுமிதென் றுணர்வீர் | 36 |
820 |
அள்ளிதழ் முளரி வானவன் றனைநே ரண்ணலஞ் சுருதியாழ் முனியும் தெள்ளிய நுமக்கீங் கிதுபுகல் யானுஞ் சேயரி பரந்தகட் கணிகை எள்ளிய வயிறுவாய்ந் தனமேனு மிறைவனை வழிபடுந் திறனால் ஒள்ளிய ரெனும்பேர் வாய்ந்தன மென்ப வுறுவிற்கா ளெனவவ ருரைப்பார் | 37 |
821 |
எந்தைநின் வரவொன் றிசைத்ததெஞ் செவியி லேறில தெவ்வகை யுயிர்க்கும் தந்தைநீ யென்றே யெம்முளம் பெறலாற் சாலவு மெம்மனோர்க் குனைப்போல் சிந்தைமா சகன்ற குரவர்யா ரென்னச் சேகறு முகமனன் குரைத்தார் முந்தைநூற் சூதமுனிவர னவர்பான் முகமலர்ந் தொருகதை மொழிவான் | 38 |