மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென | 5 |
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதி பெயர | 10 |
மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு கோடுகூடு மதிய மியலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண் டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு கருவி வானந் தண்டளி தலைஇய | 15 |
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய பனிவார் விண்டு விறல்வரை யற்றே கடவு ளஞ்சி வானத் திழைத்த தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் | 20 |
வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்ட னனையைமன் னீயே வண்டுபட ஒலிந்த கூந்த லறஞ்சால் கற்பின் குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின் | 25 |
இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்து | 30 |
அடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள் ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப் புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர் நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந் தற்றுநின் றானை போர்மிகு குருசினீ மாண்டனை பலவே. | 36 |
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும் முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று துப்புத் துவர்போகப் பெருங்கிளை யுவப்ப | 5 |
ஈத்தான் றானா விடனுடை வளனும் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந கொன்னொன்று மருண்டென னடுபோர்க் கொற்றவ நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப் | 10 |
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத் தடந்தா ணாரை படிந்திரை கவரும் முடந்தை நெல்லின் கழையமல் கழனிப் பிழையா விளையு ணாடகப் படுத்து வையா மாலையர் வசையுநர்க் கறுத்த | 15 |
பகைவர் தேஎத் தாயினும் சினவா யாகுத லிறும்பூதாற் பெரிதே. |
வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாள் கடிமரத்தாற் களிறணைத்து நெடுநீர துறை கலங்க மூழ்த்திறுத்த வியன் றானையொடு | 5 |
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் காரிடி யுருமி னுரறு முரசிற் | 10 |
கால்வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே. |
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் இருநிலந் தோயும் விரிநூ லறுவையர் செவ்வுளைய மாவூர்ந்து நெடுங் கொடிய தேர்மிசையும் | 5 |
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும் மன்னிலத் தமைந்த.......... மாறா மைந்தர் மாறுநிலை தேய முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ | 10 |
அரைசுபடக் கடக்கு மாற்றற் புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே. |
5 | |
தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை அந்திமாலை விசும்புகண் டன்ன செஞ்சுடர் கொண்ட குருதிமன் றத்துப் பேஎ யாடும் வெல்போர் வீயா யாணர் நின்வயி னானே. | 10 |
தாவா தாகு மலிபெறு வயவே மல்ல லுள்ளமொடு வம்பமர்க் கடந்து செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன் | 5 |
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார் மாவு மாக்களும் படுபிண முணீ இயர் பொறித்த போலும் புள்ளி யெருத்திற் புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல் குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய | 10 |
நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந் துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக் குருதிச் செம்புன லொழுகச் செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. |
வாய்மொழி வாயர் நின்புக ழேத்தப் 1பகைவ ராரப் பழங்க ணருளி நகைவ ரார நன்கலஞ் சிதறி ஆன் றவிந் தடங்கிய 2செயிர்தீர் செம்மால் | 5 |
வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத் தொன்னிலைச் சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக் | 10 |
கோடற வைத்த கோடாக் கொள்கையும் நன்றுபெரி துடையையா னீயே வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே. |
எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் எயின் முகஞ் சிதையத் தோட்டி யேவலின் | 5 |
தோட்டி தந்த தொடிமருப் பியானைச் செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற் செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை வாணுதல் கணவ மள்ள ரேறே | 10 |
மையற விளங்கிய வடுவாழ் மார்பின் வசையில் செல்வ வான வரம்ப இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவினெஞ் சத்துப் பகுத்தூண் டொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே. | 16 |
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர் துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக் கறுத்த தெவ்வர் கடிமுனை யலற எடுத்தெறிந் திரங்கு மேவல் வியன்பணை | 5 |
உருமென வதிர்பட்டு முழங்கிச் செருமிக் கடங்கா ராரண் வாடச் செல்லும் கால னனைய கடுஞ்சின முன்ப வாலிதின், நூலி னிழையா நுண்மயி ரிழைய பொறித்த போலும் புள்ளி யெருத்திற் | 10 |
புன்புறப் புறவின் கணநிரை யலற அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச் சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் தவரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் | 15 |
சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே. |
போர்நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத் திறாஅ லியரோ பெருமநின் றானை இன்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப் புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக் காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் | 5 |
வந்திறை கொண்டன்று தானை யந்திற் களைநர் யாரினிப் பிறரெனப் பேணி மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க ஒன்னார் தேயப் பூமலைந் துரைஇ வெண்டோடு நிரைஇய | 10 |
வேந்துடை யருஞ்சமம் கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி வென்றி யாடிய தொடித்தோண் மீகை எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த | 15 |
தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல் புன்கா லுன்னஞ் சாயத் தெண்கள்§ வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத் தான்றர வுண்ட நனை நறவு மகிழ்ந்து நீரிமிழ் சிலம்பி னேரி யோனே | 20 |
செல்லா யோதில் சில்வளை விறலி மலர்ந்த வேங்கையின் வயங்கித ழணிந்து மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப் பாணர் பைம்பூ மலைய விளையர் இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து | 5 |
நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத் தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று பாக ரேவலி னொண்பொறி பிசிரக் காடு தலைக்கொண்ட நாடுகா ணவிர்சுடர் அழல்விடுபு மரீஇய மைந்தின் தொழில்புகல் யானை நல்குவன் பலவே. | 31 |
வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக் கிள்ளி யீன்றமகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி | 5 |
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்ப லருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு மாறா வல்வி லிடும்பிற் புறத்திறுத் துறுபுலி யன்ன வயவர் வீழச் | 10 |
சிறுகுர னெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து பழையன் காக்குங் கடுஞ்சினை வேம்பின் முழாரை(1) முழுமுத றுமியப் பண்ணி வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் | 15 |
பல்லிருங் கூந்தன் முரற்சியாற் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச்செருவினாற் றலையறுத்துக் கெடலருந் தானை யொடு | 21 |
புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப் பண்ணமை முழவும் பதலையும் பிறவும் (1)கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவிற்(2)றகைத்த துறைகூடு கலப்பையர் | 5 |
கைவ லிளையர் கடவுட் பழிச்ச மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன் மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச் | 10 |
சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் மழைபெயல் மாறிய கழைதிரங் கத்தம் ஒன்றிரண் டலபல(3) கழிந்து திண்டேர் | 15 |
வசையி னெடுந்தகை காண்குவந் திசினே தாவ லுய்யுமோ மற்றே தாவாது வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ்சமத் தரசுபடக் கடந்து வெவ்வ ரோச்சும் பெருகத் தெவ்வர் | 20 |
மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின் எடுத்தே றேய கடிப்புடை வியன்கண் வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து காலுளைக் கடும்பிசி ருடைய வாலுளைக் | 25 |
கடும்பரிப் புரவி யூர்ந்தநின் படுந்திரைப் பனிக்கட லுழந்த (4) தாளே. |
இரும்பனம் புடைய லீகை வான்கழல் மீன்றோர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் 5 அம்புசே ருடம்பினர் *நேர்ந்த்தோ ரல்லது | 5 |
அன்னோர் பெரும நன்னுதல் கணவ அண்னல் யானை யடுபோர்க் குட்டுவ மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீ இ 10 இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் | 10 |
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழ வாடியல் 15 உளையவர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் | 15 |
மன்பதை மருள வரசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரோடு மன்ன ரேத்தநின் 20 தேரொடு சுற்ற முலகுடன் மூய | 20 |
மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பெளவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே. |
கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசன் மேவற் சேயிழை மகளிர் உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற் பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள் விருந்தின் வீழ்பிடி யெண்ணு முறைபெறாஅக் | 5 |
கடவு ணிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி வழித்த | 10 |
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக் குன் றுவறங் கூரச் சுடர்சினந் திகழ அருவி யற்ற பெருவறற் காலையும் அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக் | 15 |
கடியோர் பூட்டுநர் கடுக்கை மலைய வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந் தார்கலி வானந் தளிசொரிந் தாஅங் குறுவ ரார வோம்பா துண்டு நகைவ ரார நன்கலஞ் சிதறி | 20 |
ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை வென்றி மேவ லுருகெழு சிறப்பிற் கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக | 25 |
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகலவன் பெறுக மாவே யென்றும் இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும் தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் | 30 |
தொலையாக் கற்பநின் னிலைகண் டிகுமே நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது நிரம்பகல் பறிய வேறா வேணி நிறைந்து நெடிதிராத் தகம்பின் வயிரியர் உண்டெனத் தவா அக் கள்ளின் வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. | 36 |
நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற அரிய வென்னா தோம்பாது வீசிக் கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும் | 5 |
களைகென வறியாக் கசடி னிஞ்சத் தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர் காணிலி யரோநிற் புகழ்ந்த யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை | 10 |
1சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து | 15 |
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை 2யுய்த்தோய் கொழுவில் பைந்துணி 3வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித் | 20 |
துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே. |
பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின் நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் விழுமியோர் துவன்றிய வன்க ணாட்பின் | 5 |
எழுமுடி மார்பி னெய்திய சேரல் குண்டுக ணகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக் கதவங் காக்குங் கணையெழு வன்ன | 10 |
நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப் பிணம்பிறங் கழுவத்துத் துண்ங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிசில் ஓடாப் பீட ருள்வழி யிறுத்து முள்ளிடு பறியா வேணித் தெவ்வர் | 15 |
சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல் அனைய பண்பிற் றானை மன்னர் இனியா ருளரோநின் முன்னு மில்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல் | 20 |
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே. |
இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் | 5 |
பணியா மரபி னுழிஞை பாட இனிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலிற் சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் | 10 |
கோடுநரல் பௌவங் கலங்க வேலிட் டுடைதிரை பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே. |
அட்டா னானே குட்டுவ னடுதொறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற் சொரிசுரை கவரு நெய்வழி புராலின் | 5 |
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல நன்னுதல் விறலிய ராடும் தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே. |
பைம்பொற் றாமரைப் பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர் | 5 |
கொள்ளாப் பாடற் கெளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் கைவ லிளையர் நேர்கை நிரப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை முனைசுடு கணையெரி யெரித்தலிற் பெரிதும் | 10 |
இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்பநின் பெயர் வாழியரோ நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டும் மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற் பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை | 15 |
மேவரு சுற்றமொ டுண்டினது நுகரும் தீம்புன லாய மாடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே. |
யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின் துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் கொளைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர் களிறுபரந் தியலக் கடுமா தாங்க ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப | 5 |
எஃகுதுரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து மொய்வளஞ் செருக்கு மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் | 10 |
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரச நடுவட் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் | 15 |
கருஞ்சின விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே. |
மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக் கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக் கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச் செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் | 5 |
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை கொல்களிற்று, உரவுத்திரை பிறழ வல்வில் பிசிரப் புரைத்தோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க் | 10 |
கரண மாகிய வெருவரு புனற்றார் கன்மிசை யவ்வும் கடலவும் பிறவும் அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து நல்லிசை நனந்தலை யிரிய வொன்னார் | 15 |
உருப்பற நிரப்பினை யாதலிற் சாந்து புலர்பு வண்ணம் நீவி வகைவனப் புற்ற வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் | 20 |
பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ எவன்பல கழியுமோ பெரும பன்னாள் பகைவெம் மையிற் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறுதுயி லியலாது கோடு முழங் கிமிழிசை யெடுப்பும் பீடிகெழு செல்வ மரீஇய கண்ணே. | 26 |