பெரும்பாணாற்றுப்படை
நச்சினார்கினியர் உரை
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)
perumpANARRuppaTai
with the notes of naccinArkiniyar
edited by U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
PDF version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பத்துப்பாட்டில் நான்காவதான : பெரும்பாணாற்றுப்படை
Source:
பத்துப்பாட்டு மூலமும்
மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம்,
வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை: கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
[மூன்றாம் பதிப்பு]
பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] 1931 [விலை ரூபா.5.
பெரும்பாணாற்றுப்படை - மூலம்
அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத 5
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப் 10
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் 15
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக் 20
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி
வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்
டியாமவ ணின்றும் வருது நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் 30
திரைதரு மரபி னுரவோ னும்பன்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கு
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்.
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி 35
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் 40
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமு முரறா தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவழி யசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங் 45
கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்ற மழைசுமந் தன்ன
வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் 50
வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி
நாடக மகளி ராடுகளத் தெடுத்த 55
விசிவீங் கின்னியங் கடுப்பக் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் 60
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி 65
யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு ளருந்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின் 70
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்.
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி 75
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு 80
முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்பா லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி 95
னீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் 100
வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யொண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் 105
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு 110
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் 115
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட் 120
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த்
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர் 125
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற்
களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன 130
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வரைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்
யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் 135
சூன்மகண் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு 140
நாளா தந்து நறவுநொடை தொலைச்சி
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடு்வட் சிலைப்பச்
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப் 145
பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி 150
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் 155
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சிமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் 160
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ 165
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை 170
யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் 175
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
யந்நு ணர்விர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
னின்றீம் பாலை முனையிற் குமிழின் 180
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் 185
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக் 190
கருவ "வய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூளப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் "வங்க வீகண் டன்ன
வவர வான்புழுக் கட்டிப் பயில்வுற் 195
றின்சுவ மூரற் பெறுகுவிர் ஞாங்கர்க்
குடிநிற வல்சிச் செஞ்சா லுழவர்
நடநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித் 200
தொடுப்பெறிந் ழுத ளர்படு டவ
யரிபுகு பொழுதி னிரியல் "பாகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ள தழீஇக் குறுங்காற்
கறயணற் குறும்பூழ் கட்சிச் "சக்கும் 205
வன்புல மிறந்த பின்ற மென்"றான்
மிதி"லக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவ னளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி 210
னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் 215
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலை யாரச்டிப்
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் 220
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி
னிரும்புவடித் தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி 225
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉ
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் 230
றூம்புடைத் திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற் 235
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப
துரும்பு நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற் 240
செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைப்
பகட்டா வீன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு
லேணி யெய்தா நீணெடு மார்பின் 245
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லிற்
றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
வூரா நற்றே ருருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் 250
செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சு மழகுடை நல்லிற்
றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல்வல்சி 255
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
கெந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை 260
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறும்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த 265
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்
இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு பிறழும்
செவ்வரிக்கயலொடு பச்சிறாப் மானச் 270
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்
அவையா வரிசி ங்களித் துழவை 275
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த 280
வெந்நீ ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக் 285
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு ளொண்பூ வடைத லோம்பி 290
உறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
அகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர் 295
பெருநா ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் 305
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் 310
வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த 315
வேள்வித் தூணத் தசைஇ யவனர்
ஓதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவில்
சிலதர் காங்குஞ் சே ணுயர் வரைப்பின்
நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா 325
மேழகத் தகரோ டெகினங் கொட்கும்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்ல்பவையோற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் 330
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடும் 335
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின் 340
ஈர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாள்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் 345
வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்
திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி
உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும் 350
துறைபிறுக் கொழியப் போகிக் கறையடிக்
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின் 355
தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி றாழைக் குழவித் தீநீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் 360
தீம்பஃறார முனையிற் சேம்பின்
முளைப்புறா முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆயாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் 365
சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா வள்ளியின் வலம்பல தரூஉம் 370
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் 375
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்
நிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் 380
சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல் 385
நறவுபெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயின் 390
அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும்
கருங்கோட் டின்னிய மியல்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
கடுஞ்சூன் மந்தி கவருங் காவில் 395
களிறுகத னடன்கிய வெளிறில் கந்தின்
திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின் 405
இழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ 410
விழவுமேம் பட்ட பழவிறன் மூதூர்
அவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வாய்
அந்தி வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் 415
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆரா செருவி னைவர் போல
அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக்
கச்சி யோனே கைவண் டோன்றல் 420
நச்சிச் சென்றோர்க் கேம மாகிய
அளியுந் தெறலு மெளிய வாகலின்
கலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும் 425
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோரும்
கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்
இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் 430
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்கள்
ஒருமரப் பாணியிற் றூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் 435
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்
கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவல்
இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் 440
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
இடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் 445
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் 450
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினும்
ஒன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ 455
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி 460
வந்தேன் பெரும வாழிய நெடிதென
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழுஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை
நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க 465
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்
இரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக் 470
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல்
அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் 475
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும் 480
ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி.
பரவுக்கடன் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் 485
தொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத் 490
தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெ லிவுளியொடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க்
கின்னர முரலு மணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி லிறும்பில் 495
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவில்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே. 500
# பெரும்பாணர் - குழலர் பாணர் முதலாகிய பெரிய இசைக்காரர் (சிலப். 5 : 37, அடியார்): "பெரும்பா ணிருக்கையும்" (மதுரைக். 342): "பெரும்பாண் காவல் பூண்டென" (நற். 40 : 3)
இந்நூலின் பெயர் பாணாறு எனவும் வழங்கும்; (தக்க. 562), உரை,
----
குறிப்புகள்
1. நாற்சீரடி பதின்மூன்றெழுத்தால் வந்ததற்கும் (தொல். செய். சூ. 50, இளம்.), நேரும் நிரையுமொன்றி நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை ஆயதற்கும் (தொல். செய். சூ. 56. பேர். ந.) இவ்வடி மேற்கோள்.
2. "கல்சேர்கையினாலே இருள் வாராநிற்க அது பொறாது மதி தோன்ற என ஒரு வினையாக முடிக்க; ‘பகல் கான் ....... பருதி' என்றார் பிறரும்" (கலித். 119. ந.): "கதிர் காற்றியும்-கிரணங்களைக் கக்கியும்" (கல். "நண்ணியபாதி" மயிலேறு,) என்பதற்கும், "கான்று என்னுமிடக்கர் அணிகுறித்துப் பிறிதொரு பொருண்மேல் நிற்றலின் மறைக்கப்படாது; தன் பொருண்மேல் நின்றுழி மறைக்கப்படும்" (தொல். எச்ச. சூ. சே. 47, ந. : நன் - வி. சூ. 267 ; இ. வி. சூ. 168. உரை ; நன், சூ. 267, இராமாநுச.) என்பதற்கும் இவ்வடி மேற்கோள்.
1 - 2, "வெயில்கான் றிருள்சீத்தெழு வெங்கதிர்ச் செல்வன்" (கூர்ம. இராவணவதை. 17): திணைமா. 94.
அடியெதுகைக்கும் வழக்கொடுபட்ட மரபு பிறழவும் செய்யுளின் பம்படின் அவ்வாறு செய்க (தொல். செய், சூ. 93, மேற்படி. மரபு. சூ. 1, பேர்.) என்பதற்கும், செய்தென்னும் வாய்பாடு செய்யாநின்றெனச் சிறுபான்மை நிகழ்காலப் பொருளிலும் வரும் (தொல். வினை. சூ. 31. ந; இ-வி, 246, உரை கல் "பாய்திரை", "கண்ட காட்சி" மயிலேறு.) என்பதற்கும், கட்டளையடிச் சீர்வகையடிதொடுத்த அடியெதுகைக்கும் (தொல். செய். சூ, 93, ந,), சமாதியென்னுமலங்காரத்திற்கும் (தண்டி. பொது. 25; இ - வி. சூ. 635) இவ் வடிகள் மேற்கோள்; விட்டும்விடாத இலக்கணைக்கு இவ்வடிகள் உதாரணமாகக் காட்டப்படும்;(நன். சூ. 269), இராமாநுச,
"உயிருண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், ‘அகலிரு......பருதி' என்றாற்போல ஓரணி குறித்து நின்றது"(புறநா. 230, விசேடவுரை)
3. காய்சினந்திருகிய: "கடுஞ்சினந்திருகி" (மணி. 22 : 157)
4. (பி-ம்.) ‘ஒழிந்த பராஅரை'
5.(பி-ம்.) ‘வகிர்ந்ததன்'
5-6. (பி-ம்.) ‘வைத்ததனுள்ளம்'
7. (பி-ம்.) ‘பாளையின் பசும்பூ', 'பாளையின் பசுங்காய்'
8. (பி-ம்.) ‘சிறுதுளை'
7 - 8. அன்ன : மெய்யுவமவுருபு, தொல். உவம. சூ. 13. இளம். மேற்.
9. "விசியுறு போர்வை" என்பதற்குத் தெரியாமற் போர்த்த போர்வை யெனப் பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர்: சீவக, 559, ந.
10. வறுவாய்: பொருந. 12.
13. ஏய்க்குமென்பது உவமவுருபு(தொல். உவம. சூ. 17. இளம்,) என்பதற்கும், வினையுவமவுருபு(தொல். உவம, சூ. 12. பேர்,) என்பதற்கும் இவ்வடி மேற்கோள்.
12 - 3. பொருந. 14 - 5; மலைபடு. 21.
15 - 6.சிறுபாண். 34 - 5-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.
17. (பி-ம்.) ‘வெங்கதிர்க்கனலி', ‘வெந்திறற்கனலி' வெந்தெறற்கனலி: "தெறுகதிர்க் கனலி வெம்மை"(புறநா. 43 : 2)
18. (பி-ம்.) ‘தண் கடல் வயத்து'தாங்குநர்ப்பெறாது: "புரவலரின்மையின்"(புறநா. 69 : 2)
17 - 8. முக்காலத்துமுள்ள இயல்பையுடைய பொருளை நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல்லாற் சொல்லவேண்டும்(தொல். வினை. சூ. 43,ச ந: இ-வி. சூ. 303) என்பதற்கு மேற்கோள்.
20. பொருந. 64-ம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
21. கல்லென் சுற்றம்: "கல்லென் சுற்றக் கடுங்குரல்"(குறிஞ்சிப். 151)' "வரிசை யறியாக் கல்லென் சுற்றம்", "கல்லென் சுற்றமோடு கையழிந்து"(புறநா. 184 : 8 . 240 : 12)
22. புல்லென்யாக்கை: "நின்னினும் புல்லியே மன்னே"(புறநா. 141 : 8)
24. (பி-ம்) ‘தளி சொரிந்தாங்கு' "கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென"(சீவக. 2752)
23 - 4. "கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும்"(கலித். 38 : 12); "நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக், கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங் காடொத்தனன்"(தக்க. 200); "காரிற் குளிர்ந்து குழைந்தசெழுங் கானம் பூத்த தெனக்கவினி" (வி. பா. 12-ஆம் போர். 82)
26. (பி-ம்.) ‘என்னிரும்பேர்'"ஆடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு"(பொருந. 61); புறநா. 370 : 3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
28.மு. சிறுபாண். 143: மலைபடு. 53.
27-8. சிறுபாண். 142 - 3 ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.
29. திருமறு மார்பு: ''திருமறு மார்பநீ யருளல் வேண்டும்'' (பரி.1 : 36) ; ''திருமகளாதலால்,‘புனைமறு' என்றார்'' பரி. 4 : 59. பரிமேல்)
30.(பி-ம்.) ‘புறங்கடை'
33. பொருந. 54-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
36.(பி-ம்.) ‘அல்லவை'
38. ''கேட்சின் வாழி கெடுகநின் னவலம்'' (மதுரைக். 208)
40. ''களவேர் வாழ்க்கையர்'' (மணி. 23 : 126)
40-41. ''தனிநீர் கழியினுந் தகைக்குந ரில்லென'' (சிலப். 13: 134)
50. (பி-ம்.) ‘வார்வை வேய்ந்த'
மு. "ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடத்து" (அகநா. 301 : 7)
52. (பி-ம்.) ‘கூட்டுடை'
le="text-indent: 50">53. இரும்பிடி முழந்தாள்; "முழந்தா ளிரும்பிடி" (குறுந். 394 : 1)
60. படலைக்கண்ணி: பெரும்பாண். 174; "முறிமிடை படலை மாலை" (சீவக. 1889; சூளா, துறவு. 23); "இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணி". "இலைப்பொலிதார்", "முறிமலர்த்தார்" (பு. வெ. 6, 74, 136)
60 - 61. மு. நெடுநல். 31 - 2.
63 - 5, ஒழுகையும் உமணரும்: சிறுபாண். 55.
69. படம் புகுதல்: "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66)
70. "பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" (தொல். புறத். சூ. 8. ந. மேற்.) என்று ஓரடி காணப்படுகிறது.
73. "சுரிகையும் பூங்கச்சிடைக் கோத்து வாங்கி"(சீவக. 698, மேற்.)
75. கடம்பம் நெடுவேள்:முருகு, 225-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
நெடுகவேள்: "வென்றி நெடுவேள்"(குறுந். 111 : 2) "நெடுவேள் குன்ற மடிவைத் தேறி" (சிலப். 23: 190); முருகு. 211-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க
75 - 6. உவமையிற் பால் மயங்கியதற்கு இவை மேற்கோள்; தொல். உவம. சூ. 6, பேர்.
78. (பி-ம்.) ‘கடுப்ப நெறியில்' , ‘கடுப்ப நெரியல்'.
80. அணர்ச்செவிக் கழுதை: "அணர்ச்செவிக் கழுதையாயரண்டுத் தோன்றிய"(பாகவதம், 10, அரவின்மேலாடிய. 6)
79 - 80. (பி-ம்.) ‘நோன்புறக் கணர்ச் செவி' உல்கு: "உறுபொருளும்"(குறள், 756)
81. பழ. 60,
83.(பி-ம்.) ‘நீள்வரை'
83 - 5. இலவங்காய் அணிலுக்கு உவமை: "தோன்றுபூ விலவத் தங்கட்டொகையணி லனைய பைங்காய், கான்றமென் பஞ்சி"(சீவக. 1701)
87. "கருவி நுதிகொ ணெறியிலை யீந்து" (கல்.)"பொருப்பு"(மயிலேறு .)
88. புல்லினுள் ஒரு சாரன இலையெனவும் பெறுமென்பதற்கு இவ்வடி மோற்கோள்; தொல். மரபு. சூ.87, பேர்.
87 - 8. (பி-ம்.) ‘நெடுந்தோட் டீந்திலை'. ‘நெடிந்திட ரீத்திலை'
85 - 8. "ஈந்து மேய்ந்திடைக், கருப்பையா டாக்குடில் கஞல்வ"(ஆனைக்காப். நாடு. 112); விநாயக. நாடு. 46.
83 - 8. தொல். உவம. சூ. 34, பேர். மேற்.
89. மான்றோற்பள்ளி: "வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழை"(அகநா. 58 : 4); "சீரூர் மரையத ளிற்றங்கு கற்குற் சிறு துயிலே"(திருச்சிற். 398) தொல். மரபு. சூ. 23. பேர். மேற்.
88 - 9. ஈத்திலை வேய்ந்த குரம்பை, தோற்பள்ளி: "இலைவேய் குரம்பை யுழையதட் பள்ளி"(மதுரைக். 310)
90. பிணா உயர்திணைப் பெண்பான் மரபுப் பெயர்; தொல். மரபு. சூ. 61, பேர். மேற்.
93. (பி-ம்.) ‘இடு நிலக்கரம்பை'
94. (பி-ம்.) ‘நுண்புலடுக்கிய'
95. (பி-ம்.) ‘பறைத்தாள்' விளவில் விலங்குகளைக் கட்டுதல்: "கொடுஞ்செவி ஞமலி யாத்த, வன்றிரள் விளவின்" (பெரிய. கண்ணப்ப. 3)
89 - 96. " அவை, ‘மான்றோற் ............... பெய்து' என்றவழி உவமஞ் செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும் உவமத்தாற் பொருட்பெற்றி தோன்றச் செய்தாற்போல அந்நிலத்திற்கும் பயம்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவம இலக்கணத்துள் இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது"(தொல். உவம. சூ. 34, பேர் , தொழிற்றன்மையணி; தண்டி. பொருளணி. சூ. 3. மேற்.
97. ஓச்சி-குத்தி; பெரும்பாண். 118.
100. (பி-ம்.) ‘ஆறாதட்ட'. 'வாறாதட்ட'
102. (பி-ம்.) ‘ஒண்பொறிக்'ஓடாத்தானை: "ஓடாத யானை யுருமுக்குர லோடை யானை" (சீவக. 7.); "ஓடாத தானை, நளனென் றுளனொருவன்" (நள. சுயம்வர. 18)
104. (பி-ம்.) ‘மடைவயிற்' இலை - மரத்துறுப்பினைச் சொல்லும் வாய்பாடு; தொல் மரபு. சூ. 87. பேர். மேற்
104. தேக்கிலையிலுண்ணுதல். அகநா, 107 : 10, 311 : 11,
103 - 5. "மான விறல்வேள் வயிரிய மெனினே, நும்மில் போல நில்லாது புக்குக், கிழவிர் போலக் கேளாது கெழீஇச், சேட்புலம் பகல வினிய கூறிப், பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு, குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்"(மலைபடு. 164 - 9)
107. (பி-ம்.) ‘வானமடி' என்றும் கொள்ள இடமுண்டு.
110. (பி-ம்.) ‘வளையெயிற்றேன வரவு'
109 - 10. ஏனக்கொம்பிற்கு அகத்திப்பூ: "அப்பன்றியைக் கொன்றருளி அதன் கொம்பைச் செவ்வகத்திப் பூவாகச் சாத்தி யருளின கதை"(தக்க. 630, உரை)
108 - 10. பயம்பினிருந்து ஏன வேட்டையாடுதல்: "சேணோனகழ்ந்த மடிவாய்ப் பயம்பின், வீழ்முகக் கேழ லட்ட பூசல்"(மதுரைக். 294 - 5)
112. பைம்புதலெருக்கி: "சேணாறு பிடவமொடு பைம்புதலெருக்கி"(முல்லை, 25)
114. முள்ளரைத் தாமரை: சிறுபாண். 183-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
தாமரைப் புல்லிதழ்: "புலிநா வன்ன புல்லிதழ்த் தாமரை"(தண்டி. மேற்.)
117. (பி-ம்.) ‘இறந்த வும்பர்'
119 - 20 எஃகம் பலகையொடு நிரைஇ: "பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து"(முல்லை. 41); "கிடுகுநிரைத் தெஃகூன்றி" (பட்டினப். 78)
121. (பி-ம்.) ‘சாத்திய'
125. "கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப், பாசந்தின்ற தேங்கா லும்பர், மரையதண் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை"திருவாரூர் மும். 13 : 10 - 12)
126. வாழ்முள்வேலி.....படப்பை: "இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின்"(பெரும்பாண். 154)
128. கழு நிரைத்த வாயில்: எறிவேற் பெருங்கடை", "பல்வேன் முற்றம்". "பொருவேன் முற்றம்"(பெருங். 1. 34 : 39, 35 : 66, 37 : 98)
129. (பி-ம்.) ‘எயினர் குறும்பிற்'
132. "மனாவனைய மென்சூன் மடவுடும்பு" (சீவக. 278)ஙமலி-திசைச்சொல்; தொல், மொழி. சூ. 31, ந. இ - வி. சூ.27, மேற்.
135. நீனிற விசும்பு: முருகு. 116-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
134 - 6. அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். மெய் . சூ. 8, பேர்.
138. (பி-ம்.) ‘அணர்க்காளை' வீரனுக்குப் புலிப்போத்து உவமை: "உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்"(சிறுபாண். 122); "புலிக்கணமும்.....போல்வார்", "குயவரி வேங்கை யனைய-வயவர்", "இனவேங்கை யன்ன விகல் வெய்யோர்"(பு. வெ. 25, 58, 63); "வயப்புலிப் போத்தன்னார்" (பெரிய. ஏனாதி. 13) புலிப்போத்து, "பொறிவரி யிரும்புலிப் போத்துநனி வெரீஇ."(பெருங்.1. 54 : 37); "புலிப்போத்துக் கொடி" (தக்க. 4, 8, உரை)
புல்லணற்காளை: "மையணற் காளை, " (ஐங். 389 ; புறநா. 83 : 1. பு. வெ. 12) போத்தென்னும் பெயர் இளமைக்கும் ஆண்பாற்கும் முறையேயுரித்து; தொல். மரபு சூ. 24, 41 பேர், மேற்.
139. (பி-ம்.) ‘செந்நாய்'
141. (பி-ம்) நாளா: "தாளித் தண்பவர் நாளா மேயும்" (குறுந். 104 : 3)
கள்விலைக்கு ஆவைத்தரல்: "முருந்தே ரிளநகை காணாய் நின்னையர், கரந்தை யலறக் கவர்ந்த வினநிரைகள், கள்விலை யாட்டி .... முன்றினிறைந்தன"(சிலப். வேட்டுவ. 16); "அறாஅ நிலைச்சாடி யாடுறுதேறன், மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை", "வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற்சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்"(பு. வெ. 2, 16)
142. தோப்பி: "தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்", "பாப்புக்கடுப் பன்ன தோப்பி"(அகநா. 35 ; 9, 348 ; 7); "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து"(மணி, 7 : 71)
143. மதவிடை: இ - வி சூ. 282, மேற்.
(பி-ம்.) ‘விடைதெண்டி'
142 - 3. "நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்"(புறநா. 262 : 1); "செங்கண் மழவிடை கெண்டிச் சிலைமறவர், வெங்கண் மகிழ்ந்து விழவயர" (பெரும்பொருள்.)
144. "மடிவாய்த் தண்ணுமை நடுவ ணார்ப்ப"(நற்.130 : 2)
146. (பி-ம்.) ‘முனைதலையிருக்கை'
134 - 46. மறங்கடைக் கூட்டிய துடிநிலை யென்னுமீ புறத்திணைத் துறைக்கு இவை மேற்கோள்; தொல். புறத். சூ. 4, இளம்.
151 - 2. (பி-ம்.) ‘உதணெடுந்தாம்பு'தொல். மரபு. சூ, 47. பேர், மேற்.
154. இடுமுள்வேலி: அகநா. 394 : 8; சிலப். 12 : 10 ; 13 : 42.
155. "புலரி வியற் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு. 448)
156. தயிர்கடையும் ஓசைக்குப் புலிமுழக்கு :"கடையலங் குரல வாள்வரி யுழுவை"(அகநா. 277:5); "இடும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு, நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம்" (தொல். அகத். சூ. 41, ந; நம்பி. சூ. 182, மேற்.); "கடைதயிர்க் குரல வேங்கை"(சீவக. 2717); "தயிர் கடையு மோதை, கொல்புலி முழக்கமென்ன வயின்றொறுங் குழுமும்" (நைடதம், நாட்டுப்.15)
157. (பி-ம்.)‘வான்முகிழ்', ‘கூம்புமுகை'
157 - 8. தயிர்க்கு ஆம்பி: "புனிற்றா, எழுந்த வாம்பிக ளிடறின செறிதயி ரேய்த்த" (கம்ப. கார்காலப். 47); "அளைசித றியபோற் கிடந்தன வாம்பி" (கல்.) "கலியாப்பராரை" (மயிலேறு.)
159. பூங்சுமட்டிரீஇ; பூஞ்சுமட் டிரீஇப் போற்றுவனர் தந்த"(பெருங். 2. 5 : 49) 160. பெரியாழ். 3. : 9
163. அளைவிலையுணவு: "அளைவிலை யுணவி னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப். 16 : 3)
164. "நெய்விலைப் பசும்பொற் றோடும்"(.சீவக. 488)
165. நாகு: தொல். மரபு. சூ. 26, 62. பேர். மேற்.
166. மடிவாய்க் கோவலர்: "மடிவிடு வீளையர்"(குறிஞ்சிப்.161); "இடையன், மடிவிடு வீளை கடிதுசென் றிசைப்ப"(அகநா . 274 : 8 - 9): "நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறர"(சீவக. 120); "செந்நா மடிவிளி" (கூர்ம, பிலக்கமுத. 30)
170. அகநா. 54 : 10.
171. ‘உறிக்கா வாளரொடு"(சிலப். 15 : 205); பெரியாழ். 3. 1: 5
174. (பி-ம்.) ‘பன்மலரடுக்கிய', ‘பன்மலர்மிடைந்த' படலைக்கண்ணி: பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரை பார்க்க.
175. மலைபடு: 417; அகநா. 21 : 22
176. "கன்றம ராயங் கானத் தல்கவும்"(புறநா. 230 : 1)
177. (பி-ம்.) ‘புகை பிறப்ப'
178. ஞெலி யென்பது வினைச்சொல்லென்பதற்கு இவ்வடி மேற்கோள்; கலித். 101, ந.
179. ‘தொட்ட' என்றும் கொள்ள இடமுண்டு.
183. பல்காற் பறவை: "மழலைப் பல்காற் பறவை"(பாகவதம். கோவியரை. 28)
188. (பி-ம்.) ‘சாட்டுருளி', 'சாத்தி'
190.(பி-ம்.) ‘பாய்மழை'
192
கருவ "வய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூளப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
192. (பி-ம்.) ‘நெடுங்காற்'
194-5. அவரப்புழுக்கிற்கு "வங்கப்பூ: "செவ்வீ "வங்கப் பூவினன்ன....அவர" (மலபடு.434-6)
195-6. (பி-ம்.) "அட்டிப் பயற்றின் றீஞ்சுவ மூரல்'
199. "வழம், வறனுழு நாஞ்சில்"பான் மருப்பூன்றி நிலஞ்சர" (கலித்.8: 4-5); "யானத், தூம்புடத் தடக்க வாயொடு மிந், நாஞ்சி லொப்ப நிலமிசப் புரள" (புறநா.19: 9-11); "வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவன"பா, லெல்லாக் களிறு, நிலஞ்"சர்ந்த" (களவழி. 40); "க"ம் மத்தகமும் கொம்பும் கலப்பக்கு ஒப்பென்ப" (தக்க. 259, உர) "அலப்பட யனயதூங்குவாய் நெடுங்க யலசெவி வாரணம்." (விநாயக. நகரப். 21)
200. "உடுப்பு முகத்த கூர்ங்கொழுவி னுழுநற்செயல்" (கூர்ம. வருணச். 15)
204. அகநா. 63:7.
205. "கட்சி-காடு; ‘கற....."சக்கும்' இ பெரும்பாணாறு" தக்க. 102, உர,
206-7. மென்"றான் மிதி"ல: "உலவாங்கு மிதி"தால் "பால" (குறுந். 172: 6)
207 - 8. அலவன்தாளுக்கு முறிந்த கொடிறு: "கொடிறு முறித்தன்ன கூன்றா ளலவன்" (கபிலர்சிவ. திருவிரட்டை. 28)
209. (பி-ம்.) 'பஞ்சாய்' 210. தொல். செய். ந. மேற்.
211. (பி-ம்.) ‘உழவுநுண்'
உழாஅ நுண்டொளி: "உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய" (சிலப்.10 : 120)
217 - 8. பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல்: "பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி" (சீவக. 438.); "பல்லினாற் சுகிர்ந்த நாரில்.....போதுகட்டிய குழங்கன் மாலை" (கூர்ம. பிலக்க. 43.)
212 - 9. நற்.90 : மு.
220. (பி-ம்.) ‘சண்பின்'
பொன்காண் கட்டளை: "பொன்னின், உரைதிகழ் கட்டளை"(குறுந். 192 : 3 - 4); "வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத், தலங்கு குலை யலரி தீண்டித் தாதுகப். பொன்னுரை கட்டளை கடுப்ப" (அகநா. 178 : 9 - 11)
கண்பு: மதுரைக். 172; "கண்பகத்தின் வாரணமே" (திருஞா. தே. திருத்தோணிபுரம்)
220 - 21. இரட்டைக்கிளவி இரட்டை வழித்தானதற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டி, "காண்பின் சுண்ணம் புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடும் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளவி இரட்டை வழித்தாயிற்று" என்றெழுதுவர்" தொல். உவம. சூ. 22. பேர். உழவர்கண்பின் தாதை அப்பிக் கொள்ளுதல்.
226. விறந்து: தொல். உரி. சூ. 50, சே. ந. தெய்வச். இ-வி. சூ. 282, மேற்.
226 - 7. உலக்கையிடிக்குப் பறவைகள் அஞ்சல் : "பாசவலிடித்த பெருங்கா ழுலக்கைக் கடிதிடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு" (அகநா. 141 : 18 - 9)
230. (பி-ம்.) ‘செய்நெல்லின்'
229 - 30. "மென்செந் நெல்லி, னம்பண வளவை யுறைகுவித் தாங்குக், கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்" (பதிற். 71 : 4 - 6)
232. அகநா. 39 : 16
234. (பி-ம்.) ‘கைபிணைந்து'
235. துணங்கை: முருகு. 56; தக்க. 53-ஆம் தாழிசையின் விசேடக் குறிப்பைப் பார்க்க.
235 - 6. சிலம்பிநூலுக்குத் துகில்: "சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின்" (பதிற். 39 : 13); "சிலம்பிபொதி செங்காய், துகில்பொதி பவள மேய்க்கும்" (யா.கா. மேற்.); "முழுமெய்யுஞ் சிலம்பி வலந்ததுபோற் போர்வை போர்த்து" (சீவக. 340); "நுட்சிலம்பி வலந்தன நுண்டுகில்"(கம்ப. எழுச்சி. 46); "பாடி வீடுகொள் படங்கெனக்....சிலம்பி நூல்கொடு கவிக்குமே" (தக்க. 54); "சிலம்பி, பொருவினூல் வலந்து தங்கிய வலையம்" (தணிக்கைப். நந்தியுபதேச. 29)
239. (பி-ம்.) ‘துரும்பும் போக்கி'
240-41. நெற்குவியலுக்குப் பொன்மலை:பொருந. 244, ந,
237-41. "சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக், காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டி லீட்டம்,......மிக்க தன்றே","வைதெரிந் தகற்றி யாற்றி மழைபெயன் மானத் தூற்றிச், செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பு மென்னக், கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற் குன்றால்" (பெரிய. திருநாட்டுச். 24-5)
242. மு. பொருந. 169-ஆம் அடியையும், அதன் அடிகுறிப்பையும் பார்க்க.
243. (பி-ம்.) ‘தளர்நடைக்குழவி'
247. குமரி மூத்த: "குமரி மூத்தவென் பாத்திரம்" (மணி.14 : 77)
246-7. பழம்பல்லுணவிற் குமரி......கூடு: "குமரிக் கூட்டிற்கொழும்பல் லுணவு" (சிலப், 10:123)
248-9. "தச்சன் செய்த சிறுமா வைய, மூர்ந்தின் புறாஅ ராயினுங் கையி, னீர்த்தின் புறூஉ மிளையோர்" (குறுந். 61: 1-3.)
249-50. "தேரொடு, தளர்நடைப் புதல்னை" (ஐங். 66:2-3)
256.(பி-ம்.) ‘மனையுறை'
மனை வாழளகு:"மனையளகு, வள்ளைக் குறங்கும் வளநாட" (திருவள்ளுவ. 5)
அளகு-கோழி: இவ்வடி, தொல். மரபு. சூ.56, பேர். மேற்.
257. மழை விளை யாடும் அடுக்கம்: "மழைவிளையாடுங் குன்று" (குறுந். 108:1)
260. எந்திரம்: "கழைக்கரும் பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்"(சீவக. 1614)
259-60. "கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்" (ஐங்.55); "இரும்பினன்ன....ஆலையெந் திரங்கள்" (திருவிளை. திருநகர.11)
265. பறி: அகநா. 300:3; நள.3:39.
268. (பி-ம்.) ‘கிளையுடன் குழீஇ' மு. அகநா. 30:4; நற், 207:7.
269. புலவுநுனைப்பகழி: "புலாஅ லம்பிற் போரருங் கடிமிளை" (புறநா. 181:5): "புலவுக்கணை" (பு.வெ.10)
269-70. இறாவுக்குச் சிலை: "இறவுக்கலித்துப், பூட்டறு வல்விலிற் கூட்டுமுதற் றெறிக்கும்" (அகநா.9:1-2); "முடங்கிறவு பூட்டுற்ற வில்லேய்க்கும்"(திணைமாலை.131); "பூட்டுசிலை யிறவினொடு" (சீவக. 1788)
277. புற்றிற் குரும்பி: "புற்றத் தீர்ம்புறத் திறுத்த, குரும்பி" (அகநா. 8:1-2)
280-81. "வழைச்சறு சாடிமட் டயின்று" (சீவக, 1614); "பாளைவிண் டொழுகு வழைச்சறு தேறல்" (இலிங்க. சூரியன் வங்கிச. 11)
284.(பி-ம்.) ‘கொலைவல் பாண்மகன்
286.(பி-ம்.) ‘வடிதலை'
284-7. ஐங்.111; அகநா.216: 1-2
290. "தாமரையை, கடவுள்........ஓம்பி' எனக்கூறுதலானும் அவர் பறியாராயிற்று" (சீவக.51,ந.)
289-90. தாமரைக்கு நெருப்பு: "சுடர்த்தாமரை" (மதுரைக். 249 ; "விளக்கி னன்ன சுடர்விடு தாமரை" (நற். 310:1) சுடர்ப்பூந் தாமரை", "எரியகைந் தன்ன தாமரை" (அகநா. 6:16, 106:1, 116:1) "செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த, தீயொடு விளங்கு நாடன்" (புறநா.397:19-21); "தாமரை யழற்போது" (பெருங். 1. 40:245); "நிரை நெடுங்கய நீரிடை நெருப்பெழுந் தனைய, விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையின் மேவி" (பெரிய. உருத்திர. 5); பதிற். 19:20.
292-4. பலநிற மலர்களுக்கு இந்திர வில்; "சிலைத்தார்-இந்திரவிற் போலும்மாலை" (புறநா. 10:10,36:12,61:14, உரைகள்); "பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போற், றிருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ, வருதும்" (கார்.1)
298. பைஞ்சேறு: "பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம்" (மணி. 19:115)
300. வளைவாய்க் கிள்ளை: "கிள்ளை, வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்", "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 67: 1-2, 141:1)
299-301. அந்தணர் தெருவில் கோழியும் நாயும் துன்னாமை: "பார்ப்பாரிற் கோழியும் நாயு புகலின்னா" (இன்னா. 3)
302-4. கற்புக்கு அருந்ததி: "அருந்ததி யனைய கற்பின்" (ஐங்.452); "வடமீன் போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித்.2:21);"வடமீன் புரையுங் கற்பின் மடமொழி, யரிவை" (புறநா.122:8-9);"தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்று, மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக், காதலாள்", "வடமீன் கற்பின் மனையுறை மகளிர்" (சிலப். 1: 28-9,5:229)
305. (பி-ம்.)‘பெயர்ப்படுபத்தம்'
309. கொக்கின் நறுவடி: "நறுவடிமா" (மலைபடு.512)
312, "புனலாடு மகளி ரிட்ட வொள்ளிழை" (ஐங், 100:1)
313. மணிச்சிரல்: சிறுபாண், 181: மணி.4:24.
315-6. "அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ"(புறநா. 2:22-3)
317. சீவக.65.
318. (பி-ம்.) 'பையத்தோன்றும்' பைபய: பெரும்பாண். 334.
319-20, பாற்கேழ்ப்புரவி : "பால் புரை புரவி" (பொருந. 165)
325-6. (பி-ம்.) 'துன்னா தேழகத் தகரோடு'
330-31. மகளிர் நடைக்கு மயில் நடை: "மணிவரைச் சாரல் மஞ்ஞை போல, அணிபெற வியலி யடிக்கல மார்ப்ப" (பெருங்.3.13:50-51); முருகு. 205-ஆம் அடியின் அடிகுறிப்பைப் பார்க்க.
333. வரிப்பந்து: "வரிப்பந்து கொண்டோடி"( கலித்.51:3); முருகு.68-ஆம் அடியின் குறிப்பைப் பார்க்க.
331-3. "காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப், போதுடனே நின்று புடைபெயரத்-தாதுடனே, வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து, கொண்டாட நான்கண்டேன் கொம்பு" (கிளவித் தெளிவு.)
334. (பி-ம்) 'கைப்புனை', 'பைப்பய'
335. முத்த வார்மணல்: "முதிர்வா ரிப்பி மூத்த வார்மணல்"(புறநா.53:1)
பொற்கழங்காடுதல்: "குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்" (புறநா.36:3-4); "கைச்செம் பதுமராகக்கழங்கும் பொற்கழங்கும், பச்சை மயிலியலின் பைங்கழங்கும்-மெச்சவெடுத்து"(திருக்காளத்திநாதருலா, 302)
337. கள்விற்போர் கடையிற் கொடிகட்டுதல்: "கள்ளின் களிநவில் கொடியொடு"(மதுரைக்.372); "கட்கொடி நுடங்கு மாவணம் புக்கு" (பதிற்.68:10); நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்" (அகநா. 126:10)
337-8. கள் விற்போர் கடைவாயிலில் கொடிகட்டிப் பூவைத்தூவுதல்: "மணற் குவைஇ மலர்சிதறி, பலர்புகுமனைப் பலிப்புதவி, னறவுநொடைக் கொடியோடு, பிறபிறவு நனிவிரைஇப், பல்வே றுருவிற் பதாகை நீழற், செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பில்" (பட்டினப்.178-83)
339-40. அகநா. 96:1-2; பெருங்.1, 40: 71-2.
343. "நுறுங்குபெய் தாக்கிய கூழார வுண்டு, பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்" (அறநெறிச். 78)
348. "விண்டோய் மாடத்து" (பெரும்பாண். 369)
349-51. "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்.6:141)
352. புறநா. 38:1. 42:2
357. குழவி ஓரறிவுயிரின் இளமைப்பெயர்: தொல், மரபு. சூ. 24, பேர். மேற்.
363. "மேகமேய்க்கு மிளங்கமு கம்பொழில்" (தே.பிரமபுரம், "வியங்கயனூர்")
370. "வாடா வள்ளியங் காடு" (குறுந். 216:2): "வாடாவள்ளி வயவர்" (தொல். புறத்.சூ.5)
372-3. "பைந்நாகப் பள்ளி மணிவண்ணனிற் பாயல்கொண்டு, கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி"(சீவக.17)
பாம்பிற்குக் காந்தள்: "திருமணை யுமிழ்ந்த நாகங் காந்தட், கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி, நன்னிற மருளு மருவிடர்"(அகநா.138:17-9)
374. மு.மணி. 4:5 "வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற், குயிலாலும்" (கலித்.30: 7-8); "கதிர்நுழை கல்லா மரம் பயில் கடிமிளை (புறநா. 21:5); "வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பு"(பெருங்.1.33:27); "காய்கதிர் நுழையாக் கடிபொழில்" " (பொருளியல்); "வெய்யோன், றானுழை யாவிருளாய்....... காட்டுமொர் கார்பொழிலே" (திருச்சிற். 116)
377. (பி-ம்.) ‘கூவியன்'
"கூவியர்-அப்பவாணிகர்; 'காரகற்......பிடித்த' என்றார். பெரும்பாணாற்றிலும்"(சிலப்.5:24. அடியார்,)
380. "புனல்கால் கழீஇய மணல்வார் புறவு" (மலைபடு. 48)
384-5. சுறவுவாயென்னும் தலையணிக்கு அரவு: "எரிகதிர் மகரவாய் பொறித்த, திலகமே லிடத்துச் செங்கதிர் தொடர்ந்த சேயொளி யரவென நாற்றி" (ஆனைக்காப், அகிலாண்ட.29)
390. (பி-ம்.)'கொள்பவரொடும்'
392. இவ்வடி வினைமுற்று வினையெச்சமானதற்கு மேற்கொள்; நன்.சூ.350 மயிலை; நன். வி, சூ.351.
394. (பி-ம்.) 'நெய்மிதி'
"நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ" (புறநா.44:2); "நெய்ம்மலி கவளங்கொள்ளா" (சீவக.1076); "நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின் றடர்க்கு நிகழ்சுளி தறுகண்மால் யானை" "கைம்முகந்தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக் களிறு" (கூர்ம. சூரியன் மரபு. 8,22)
395. கடுஞ்சூல்: ஐங். 386;சிறுபாண்.148-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க.
393-5 மந்தி பிறர் சோர்வுற்றதைஅயறிந்து உணவுப்பொருளைக் கவர்தல்: "மகளிர், இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச், சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து, பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்" (குறுந். 335:1-4)
397. "கடுங்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்" (அகநா. 326. :4. புறநா. 15:1)
402. "நீனிற வுருவி னேமி யோனும்" (புறநா. 58:15); "நீல மேனி நெடியோன்"(சிலப்.5:172)
402-4. முருகு. 164-5.
405. (பி-ம்.) ‘நெடுமதில் வரைப்பு'
சுடும ணோங்கிய வரைப்பு: "சுடும ணோக்கிய நெடுநிலை மனை" (மணி. 3:127);"சுடும ணெடுமதில்" (பு. வெ. 113)
சுடுமண்: சிலப். 14:146; மணி. 18:33.
402-5. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப், பூவொடு புரையுஞ் சீரூர் பூவி, னிதழகத் தனைய தெருவ மிதழகத், தரும் பொகுட் டனையதே யண்ணல் கோயில்" (பரிபாடல், தி . 7); இராசகிரிய நகரத்தைத் தாமரை மலராகவும் அந்நகரின் உறுப்புக்களை அம்மலரின் உறுப்புக்களாகவும் பெருங்கதை (3. 3: 50-114)யிற் கூறியிருத்தல் இங்கே அறிந்து மகிழத்தக்கது.
407. (பி-ம்.) ‘சினைஇய'
407-8. "கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்" (சிலப்.16:24)
415. "ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய" (புறநா. 2:15)
416. கொடுஞ்சி நெடுந்தேர்:பொருந. 163; மதுரைக். 752.
419. "ஒன்னாத் தெவ்வருலைவிடத்தொழித்த"(பெரும்பாண்.416);தார்த்தென" (மலைபடு. 386)
398-420. இவ்வடிகளிற் காஞ்சிநகரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
421.(பி-ம்.) 'ஏமமாக'
422. (பி-ம்.) 'அளியுந் தெறலுந்தனக் கெளிய'
அளியும் தெறலும்: "வலியுந் தெறலு மளியு முடையோய்" (புறநா. 2:8); "குடையையும் வாளையு முடையோ னெனவே அளியுந் தெறலு முடைமை கூறினார்" (சிலப். 19: 19-20, அடியார்.)
423-4. கருத்து: "நீ, உடன்று நோக்கும் வாயெரி தவழ, நீ நயந்து நோக்கும் வாய்பொன் பூப்ப" (புறநா. 38: 5-6)
427. "இருங்கடற் கூங்கிவரும் யாறென" (பரி. 16:27)
429. (பி-ம்.) ‘இமையோர்'
மேருமலையில் தேவருறைதல்: "தெய்வத வரையே மேலைத் தேவரா லயமே" (திருவிளை. மேருவைச். 24); "சுரலாயமே மேரு" (சூடாமணி, 5:13)
432. (பி-ம்.) ‘நீர்ப்போகும்'
ஒருமரம்: "ஒரு மரத்தோணியும் மேல் கொண்டு" (பு. வெ. 111, உரை)
428-35. மன்னர்.........செவ்வி பார்க்கும் முற்றம்: "கோக்கள் வைகும் முற்றத்தான்" (கம்ப. குகப்.65)
441-2.பொருந. 135-6.
443-5. "முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற் கெளியனாய்" (குறள், 386, பரிமேல்.) "முறைவேண்டுபொழுதிற் பதனெளியோர்" (புறநா. 35:15)
445. (பி-ம்.) ‘இடைதெரிந்து'
446. "கொடைக்கட னிறுத்த செம்மலோய்" (மலைபடு.543); "கொடைக்கட னிறுக்கு மிக்குவா குப்பெயர்ப் பெரியோன்" (கூர்ம. சூரியன்மரபு.8)
447. (பி-ம்.) ‘உருப்பில்'
"உரும்பில் கூற்றத் தன்ன" (பதிற்.26:13)
இவ்வடியின் பாடபேதம் போற்றோற்றும்' "உருமில் சுற்றம்" என்னும் பகுதியை, உருமென்பது அச்சமென்னும் பொருள் தருதற்கு மேற்கோளாகக் காட்டினர்; தொல். உரி. 67, இளம். சே. ந.
448-9 பொருந. 140-42.
451, "தொல்லிலங்கை குடுமி கொண்டு"(கூர்ம. சுவேத. 5)
455-6 இடையின வெதுகைக்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். செய். சூ.94, பேர். ந.
457-8 முருகக்கடவுள் கடலிற் சூர்கொன்றமை: முருகு. 45-6-ஆம் அடிக்குறிப்பையும், மேற்படி
45-61-ஆம் அடிகளின் அடிக்குறிப்பையும் பார்க்க.
454-8. "தொண்டையோர் மருக......சேய்' என்றாற்போல்வன ஏகாரத்தாற் பொருள் கூறுமாறு உணர்க" (தொல். விளி. சூ. 34. ந.)
459. (பி-ம்.) 'நொடிந்தாங்கு'
துணங்கை: பெரும்பாண். 235- பார்க்க.
"பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு "(கலித். 89:8), "காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல்போல"(தொல். மெய்ப். சூ. 12, பேர்.) என்பவற்றாலும் பரணி நூல்களில் உள்ள, ‘காளிக்குக் கூளி கூறியது' என்னும் பகுதியாலும் இங்கே கூறப்படும் செய்தி அறியப்படும்.
458-9. முருகு. 258.
460. தண்டா வீகை: "தண்டா வீகைத் தகைமாண் குடுமி" (புறநா.6:26); "தண்டாம லீவது தாளாண்மை" (தமிழ்நா. 33) பெரும்பெயர்: முருகு, 269-ஆம் அடியின் அடிகுறிப்பைப் பார்க்க.
461. (பி-ம்.) ‘வாழிய பெரிதென'
முருகு. 285-ஆம் அடியையும் அடிகுறிப்பைப் பார்க்க.
463. கைதொழுஉப் பழிச்சி: "கைதொழுஉப் பரவி" (முருகு. 252)
465. நாவலந்தண் பொழில்: "நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை" (பரி.5:8); "நாவலந் தண்பொழில் மன்னர்", "நாவலந் தண்பொழி னண்னார் நடுக்குற" (மணி, 22:29); "நாவலந் தண்பொழி னண்ணா ரோட்டி", "நாவலந் தண்பொழி னலத்தொடு தோன்றி" (பெருங். 2.18:76,5.3:183); "பூமலி நாவற் பொழிற்கு", பூமலி நாவற் பொழிலகத்து" (பு. வெ. 208,226)
466. (பி-ம்) 'நிலைமை நோக்கி'
மு. பொருந. 176.
469. "புகை முகந் தன்ன மாசி றூவுடை" (முருகு. 138) என்பதையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.
468-70. பொருந. 153 - 7-ஆம், அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க.
475. (பி-ம்.) 'அயிரொடு பிறவும்'
477. "கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ"(புறநா. 392:17)
479. மு. சிறுபாண். 245.
478-9. முகனமலர்ந்தூட்டி: "முகனமர்ந்து நல்விருந் தோம்புவான்", "முகத்தா னமர்ந்தினிது நோக்கி" (குறள், 84, 93)
481. (பி-ம்.) ‘அழலிவர்'
"ஆடும்வண் டிமிராத் தாமரை" (புறநா. 69:20)
482. (பி-ம்.) ‘பித்திகை'. 'நிவப்பச் சூடி'
481-2. வண்டு இமிரா மாலை: கற்பக மாலை; "ஆடு .... சூடி பாணாறு" (தக்க. 562, உரை)
483. (பி-ம்.) ‘புலவுக் கடல்)'
486. (பி-ம்.) ‘விறலியர் வேய'
480-86. பாணர் பொற்றாமரையையும் விறலியர் மாலையையும் உபகாரிகளாற் பெறுதல்: பொருந. 159-62-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க.
489. நால்கு-நான்கு; "நால்கு பண்ணினர்" (சீவக. 1774)
488-9. பொருந. 165.
490. பரிசிலர்க்குத் தேரைக் கொடுத்தல்: சிறுபாண்,142-3-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க.
491. (பி-ம்.) ‘ஒழிந்த'
"ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து" (பெரும்பாண். 419)
492. (பி-ம்.) ‘விசும்புதோ யிவுளி'
491 -92. சிறுபாண். 247-8-ஆம் அடிகளையும் அவற்றின் அடிகுறிப்பைப் பார்க்க.
494. கின்னரங்கள் பாடுதல்: "பாடு கின்றன. கின்னர மிதுனங்கள் பாராய்" (கம்ப. சித்திரகூட.12); "பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே"(தக்க.114)
496,பத்துப் - 14 (பி-ம்.) 'மலர்சூழ்'
498-9. யானை தந்த விறகினால் முனிவர் தீவேட்டல்: "கானயானை தந்த விறகிற், கடுந்தெறற் செந்தீ வேட்டு" (புறநா. 251: 5-6)
500. மலைகிழவோன்: முருகு. 317-இன் அடிகுறிப்பைப் பார்க்க.
மலைகிழவோன்: "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திர உரையில் விதவாதவற்றுள்ளும் உயிர்முன் ககரம் மிகாததற்கு இது மேற்கோள்; நன், சூ. 164, மயிலை.
497-500. "யானை தந்த முளிமர விறகிற், கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து, மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி, மந்தி சீக்கு மணங்குடை முன்றில்" (புறநா. 247: 1-4)
இதன் பொருள்
1. அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி - #தன்னையொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே, அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத்திடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்கா நின்று (பி-ம். மறைத்து),
அகலிருவிசும்பென்பது, "நோய்தீருல்மருந்து" (கலித். 60:18) போநின்றது. பருகியென்னுஞ் @செய்தெனெச்சம் நிகழ்காலம் உணர்த்தி நின்றது.
2. பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி - மறைந்த §பகற் பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலைச்செய்யும் பல கிரணங்களையுடைய கனலி,
3. காய் சினம் திருகிய கடுதிறல் வேனில் - கோபிக்கின்ற $சினம் முறுகிய கடிய வலியையுடைய முதுவேனிற் காலத்தே,
4. பசு இலை ஒழித்த பரு அரை பாதிரி- பின்பனிக் காலத்தே பசிய இலைகளைஉதிர்த்த பரிய தாளினையுடைய பாதிரியினது,
---------
# "தன்னை யொழிந்த பூதங்கள் விரிதற்குக் காரணமாகிய பெருமையையையுடைய ஆகாயம்" (மதுரைக்.266.7, ந.); "அனைத்தும் வழிபோம் விண்ணுநீ " (தக்க.717)
@ "தொல். வினை. சூ. 42,பார்க்க.
§ "பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும்" (மதுரைக்.7)
$. சினம் - வெயிலென்று கூறுவாருமுளர்.
------
5-6. வள் இதழ் மா மலர் வயிறு இடை வகுத்ததன் உள் அகம் புரையும் ஊட்டுஉறு பச்சை-பெருமையையுடைய உடைத்தாகிய வண்டையுடைய பூவினுடைய வயிற்றிடத்தைப் பிளந்த புலாலினுடைய (பி-ம்). பூவினுடைய) உள்ளிடத்தை யொக்கும் #நிறமூட்டுதலுற்ற தோல்,
7-8. பரிய அரை கமுகின் பாளை அம் பசு பூ கரு இருந்தன்ன கண் கூடு செறி துளை- பரிய தாளினையுடைய கமுகினது பாளையாகிய அழகினையுடைய பசிய பூ விரியாமற் கருவாயிருந்தாலொத்த இரண்டு கண்ணுங் கூடின செறிந்ததுளை,
9. உருக்கி அன்ன பொருத்துறு போர்வை - உருக்கி ஒன்றாக வார்த்தாற்போன்ற தோல்களின் வேறுபாடு தெரியாமல் இசைத்தலுறும் போர்வையினையும்,
பச்சைப்(6) போர்வை; பொருத்துறு போர்வை; துளையினையுடைய (8) போர்வை.
10. சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறு வாய்-சுனை வற்றி உள் இருண்டாலொத்த இருள்செறிந்த @உண்ணாக்கினையில்லாதவாயினையும்,
11. பிறை பிறந்தன்ன பின் ஏந்துகவை கடை- முதற்பிறை பிறந்து ஏந்தியிருந்தாற்போன்ற, பின்பு ஏந்தியிருக்கின்ற கவைத்தலையுடைய கடையினையும்,
12-3. நெடு பணை திரள் தோள் மடந்தை முன் கைகுறு தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்-நெடிய மூங்கிலையொத்த திரண்ட தோளினையுடைய மகளுடைய முன் கையிற் குறிய தொடியை யொக்கும் §நெகிழ வேண்டிய வழி நெகிழ்ந்து இறுகவேண்டிய வழி இறுகும் வார்க்கட்டினையும்,
14. மணி வார்ந்தன்ன மா இரு மருப்பின்-நீலமணி ஒழுகினாலொத்த கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையுமுடைய,
15-6. பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி- பொன் கம்பியாய் ஒழுகினாலொத்த முறுக்கடங்கின நரம்பின் கட்டமைந்த யாழை,
கேள்வி: ஆகுபெயர்.
போர்வையினையும்(9) வாயினையும்(10) கடையினையும்(11) திவவினையும்(3) மருப்பினையுமுடைய(14) யாழையென முடிக்க.
----------
#. "துவரூட்டின கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வை" (சிறுபாண்.225-6, ந.)
@. "அண்ணா வில்லா வமைவரு வறுவாய்" (பொருந. 12)
§. "நெகிழ வேண்டுமிடத்து நெகிழ்ந்தும் இறுக வேண்டுமிடத்து இறுகியும் நரம்புதுவக்கும் வார்க்கட்டினையும்" (சிறுபாண். 221-2,ந.)
---------
16. இடம் வயின் தழீஇ-இடத்தோட்பக்கத்தே அணைத்து,
17. வெ தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்- வெய்ய தெறு தற்றொழிலையுடைய ஞாயிற்றேடே திங்களும் #மேருவை வலமாகத் திரிதலைச் செய்யும்,
18. தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது- குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெறாமல்,
19. பொழி மழை துறந்தபுகை வேய் குன்றத்து-பெய்கின்ற மழை துறத்தலால் நிலத்தின் கண்ணெழுந்த ஆவிசூழ்ந்த மலையிடத்தே,
20. பழு மரம் தேரும் பறவை போல - @பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப்போல,
21. கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்-பசிமிகுதியால் அழுகின்ற சுற்றத்தாருடனே ஓரிடத்திராமற் பயனின்று ஓடித் திரிதலைச் செய்யும்,
22. புல்லென் யாக்கை புலவு வாய் பாண- பொலிவழிந்த வடிவினையும் கற்ற §கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுமுடையபாண,
"சில்செவித் தாகிய கேள்வி நொந்து" (புறநா. 68:3) என்றார் பிறரும்; புலால் நாறுகின்ற வாயுமாம்.
கேள்வியைத் தழீஇத்(16)தாங்குநர்ப் பெறாது(18)குன்றத்தே(19) கடுந்திறல் வேனிற்காலத்தே(13)பறவைபோலத்(20) திரிதரும்(21) பாணவென முடிக்க.
---------
#. "ஏர்பு வலன் திரிதரு-எழுந்து மகாமேருவை வலமாகத் திரிதலைச் செய்யும்" (முருகு.1,ந.)
@. பறவைகள்-வௌவால்;"மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி, இரந்தழைப்பார் யாவருமங் கில்லை" (ஒளவையார்)
§. வறுமையினாற் கல்வியை வெறுத்துக் கூறுதலுக்கு, "அடகெடு வாய் பலதொழிலு மிருக்கக் கல்வி யதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில் லாமல், திடமுடன்மோ கனமாடக் கழைக்கூத் தாடச் செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை, தடநகில்வே சையராகப் பிறந்தோ மில்லை சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம், இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை யென்னசென்ம மெடுத்துலகி லிரக்கின் றோமே" (தனிப்,) என்னும் பாடலும் இதுபோன்ற பிறவும் சான்றாகும்.
---------
23-4. பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென கருவி வானம் துளி சொரிந்தாங்கு - பெரிய வற்கடமிக்க (பி-ம். 'வறட்காலமிக்க')
காடு உழவுத்தொழில் முதலியவற்றால் ஆரவாரமிகும்படி தொகுதியையுடைய மேகம் துளியைச் சொரிந்தாற் போல,
25-6. பழ பசி கூர்ந்த எம் இரு பெரு ஒக்கலொடு வழங்க தாவஅ பெரு வளன் எய்தி-தொன்றுதொட்ட பசிமிக்க எம்முடைய கரிய பெரிய சுற்றத்தோடே யாங்கள் பிறர்க்குக் கொடுக்கவும் மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று,
27-8. வால் உளை புரவியோடு வய களிறு முகந்து கொண்டு யாம் அவணின்றும் வருதும்-வெள்ளிய தலையாட்டத்தையுடைய குதிரையோடே வலியினையுடைய யானைகைளையும் வாரிக்கொண்டு யாம் அவனூரின்றும் வாராநின்றேம்;
28. நீயிரும்-நீங்களும்,
29-37. [இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த், திரைதரு மரபி னுரவோ னும்பல், மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தானை மூவருள்ளும், இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும், வலம்புரி யன்ன வசை நீங்கு சிறப்பின், அல்லது கடிந்த வறம்புரி செங்கோற், பல்வேற் றிரையற் படர்குவி ராயின்:]
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் (32) முரசு முழங்கு தானை மூவருள்ளும் (33) - அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும் முரசு முழங்குகின்ற நாற்படையினையுமுடைய சேர, சோழ, பாண்டியரென்னும் மூவரிலும்,
இலக்குநீர் பரப்பின் வளை மீகூறும் (34) வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் (35)- விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்கில் மேலாக உலகம்கூறும் வலம்புரிச்சங்கையொத்த குற்ற நீங்கும் தலைமையினையும்,
அல்லது கடிந்த அறம் புரி செகோல்(36) - மறத்தைப்போக்கின அறத்தை விரும்பின செங்கோலினையுமுடைய,
இருநிலம் கடந்த திரு மறுமார்பின் (29) முந்நீர் வண்ணன் பிறங்கடை (30) உரவோன் உம்பல்(31) -பெரிய நிலத்தையளந்த திருவாகிய மறுவையணிந்த மார்பினையுடைய கடல்போலும்நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாகிய சோழன் குடியிற்பிறந்தோன்.
மூவருள்ளும்(33) சிறப்பினையும்(35)செங்கோலினையுமுடைய(36) உரவோ னென்க.
திருமால் குடியில்தோன்றிய உரவோன்.
அந்நீர்(30) திரை தரு மரபின் (31)பல்வேல் திரையன் (37)-அக்கடலின் திரை கொண்டுவந்த ஏறவிட்ட மரபாற் பலவேற்படையினையுடைய திரையனென்னும் பெயரை உடையவன், என்றதனால், நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வே னென்றபொழுது, தொண்டையை அடையாளமாக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று, அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் #திரை தருதலின் திரையனென்று பயர்பெற்ற கதை கூறினார்.
திரையன் படர்குவிராயின்(37) நின் உள்ளம் சிறக்க(45) - திரையனை நினைப்பீராயின் அவனை நினைத்தலின் நின் நெஞ்சு சிறப்புக்களைப் பெறுக;
சிறக்க நின்னுள்ளம்(45) என மேல் வருவதனை இதனோடும் கூட்டுக.
38. [கேளவ னிலையையே கெடுகநின்னவலம்:]
நின் அவலம் கெடுக - அங்ஙனம் அவனை நினைத்துப் போகின்ற நீ @அவன் தன்மையைக் கேட்பாயாக;
39-41. [அத்தஞ் செல்வோ ரலறத்தாக்கிக், கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடைவியன்புலம்:] அவன் கடி உடை வியல் புலம் அத்தம் செல்வோர் அலற தாக்கி கைபொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை கொடியோர் இன்று - அவனுடைய காவலையுடைத்தாகிய அகலத்தையுடைய நிலம், வழிப்போவாரைக் கூப்பிடும்படி வெட்டி அவர்கள் கையிலுள்ள பொருள்களைக் கைக்கொள்ளும் களவே உழவுபோலும் இல்வாழ்க்கைப் பொருளாகவுடைய கொடுமையையுடையோரில்லை;
42-3. உருமும் உரறாது அரவும் §தப்பா காடு மாவும் உறுகண் செய்யா - உருமேறும் இடியாது; பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா; காட்டிடத்துப் புலி முதலியனவும் வருத்தஞ்செய்யா ; ஆகலின்,
இஃது $அவனாணை கூறிற்று.
----------
#. திரைதந்தமை: "மாக்கடலார்ப்பதூஉம், ........திரையனை யான் பயந்தே னென்னுஞ் செருக்கு" (பெரும்பாண். இறுதி வெண்பா)
@. (பி-ம்.) ‘அவ்வழியை அவன்தன்மையை'
§. தப்பல் - கொல்லுதல்; "ஆளன்றென்று வாளிற் றப்பார்" (புறநா. 74:2);"மைந்துடை வாளிற் றப்பிய வண்ணமும்","வாளிற் றப்பிய வல்வினை யன்றே" (மணி.பதிகம், 76, 21:60)
$. "கோள்வ லுளியமுங்கொடும்புற் றகழா, வாள்வரி வேங்கையு மான்கணமறலா, அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும், உருமுஞ்சார்ந்தவர்க் குறுகண் செய்யா, செங்கோற்றென்னவர் காக்கு நாடென" (சிலப். 13:5-9)என்பதும், ‘இவற்றான் இவனாணையும்
------
43-5. [வேட்டாங், கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்சென்மோ:]
ஆங்கு அசைவுழி அசைஇ - அக்காட்டின்கண்இளைத்தவிடத்தே இளைப்பாறி,
நசைவுழி வேட்டு தங்கி சென்மோ - எங்களிடத்தே நீ தங்கிப்போக வேண்டுமென்று நச்சினவிடத்தே நீயும் அதற்கு விரும்பித் தங்கிச் செல்வாயாக;
45. இரவல-இரத்தற்றொழிலை வல்லோய்,
45-7. [சிறக்கநின் னுள்ளம், கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து, முழவினன்ன முழுமர வுருளி:]
முழவின் அன்ன முழுமரம் திருந்து நிலை ஆரத்து கொழு சூட்டு அருந்திய உருளி-மத்தளத்தையொத்த குறட்டிடத்தே தைத்த சிக்கென்ற தன்மையையுடைய ஆரிடத்தே நன்றாகி வளைந்த மரம் சூழ்ந்து கிடக்கப்பட்ட உருளையையும்,
#.அச்சுக் கோக்கின்ற இடமுமாம். அக்குறட்டிலேதைத்துக்கிடக்கின்றது ஆர். சூட்டு-விளிம்பில் வைத்த வளைந்த மரம்.
48. எழூஉ புணர்ந்தன்ன பரூஉ கை நோன்பார்-கணையமரம் இரண்டு சேர்ந்தாலொத்த பருத்தகைகளையுடைய வலிய பாரையுமுடைய,
அச்சுமரத்தின் மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் நெடுகக் கிடக்கின்ற பருமரங்களைப் பரூஉக்கை யென்றார். அம்மரங்களிரண்டினையும் நெருங்கத் துளைத்துக் குறுக்கே ஏணிபோலக் கோத்தனைப் பாரென்றார்.
49-50. [மாரிக் குன்ற மழைசுமந் தன்ன, ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடம்:]
குன்றம் மாரி மழை சுமந்தன்ன ஆரை வேய்ந்த அறைவாய் சகடம்-மலை மாரிக்காலத்து மேகத்தைச் சுமந்துநின்றாற் போன்ற @தொத்துளிப்பாயாலேவேய்ந்த ஒலிக்கின்ற வாயையுடைய சகடம்,
"ஆர்வை வேய்ந்த' என்று பாடமாயின் நிறைந்தவரகு வைக் கோலாலே வேய்ந்த வென்க.
ஐவகை நிலத் திற்குரிமையும் கூறினார்' (அடியார்.) என்ற விசேட உரையும் இங்கே கருதற்குரியன.
அந்த இரண்டு மரத்திலும் கால்களை நட்டுக் குடிலாகக் கட்டி வசம்பு முதலியவற்றைக் கயிற்றாலே கோத்த பாயெடுத்தலைக் கூறினார்.
உருளியையும் (47) பாரையுமுடைய (48)சகட மென்க.
----------
# "குறடு-அச்சுக்கோக்குமிடம்" (சிறுபாண்.252-3, ந.)
@ (பி-ம்.) ‘தொத்தளி', ‘கொத்தளி' "ஆரைகொத்தளிப்பாய்" (திவா,)
---------
51-2. வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப கோழி சேக்கும் கூடு உடை புதவின்-யானையைப் புனத்தில் தின்னாமல் காக்கின்ற தொழிலை யுடையார் இதண்மேலே கட்டின குடிலையொப்பச் சிறுகக்கட்டின கோழி கிடக்கும் கூட்டையுடைய தாகிய குடிலின் வாசலிலே,
53 - 4. முளை எயிறு இரு பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரை சிறு உரல் தூங்க தூக்கி - மூங்கில் முளை போலும் கொம்பினையுடைய கரியபிடியினது முழந்தாளை யொக்கும் துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை அசையும்படி தூக்கி,
கோத்து நாற்றுதற்குத் துளையிடுதலின், ‘துளையரைச் சீறுரல்' என்றார்.
55-6. நாடகம் மகளிர் ஆடு களத்து எடுத்த விசி வீங்கு இன் இயம்கடுப்ப-நாடகமாடு மகளிர் ஆடும்களத்தே கொண்டு வந்த வாரால் பிணித்தலிறுகின இனிய முழவை ஒப்ப,
56-7. கயிறு பிணித்து காடி வைத்த கலன் உடை மூக்கின் - தகராதபடி கயிற்றாலே வரிந்து காடி வைத்த மிடாவையுடைய அப்பாரில் தலையிலே,
#புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் காடியென்றார்; இனிக் காடி நெய்யென்பாருமுளர்; இனிப் பாரிற் @கழுத்தானவிடத்தே வைத்த மிடாவென்றுமாம்.
58. மக உடை மகடூஉ பகடு புறம் துரப்ப-குழவியைக் கைக்கொண்ட மகள் இருந்து பூண்டஎருத்தை முதுகிலே அடிப்ப,
சகடப்(50) புதவின்(52) மூக்கின் கண்ணே(57) வேப்பிலைமிடைந்த (59) மகடூஉஇருந்து துரப்பவென முடிக்க.
59. கோடு இணர் வேம்பின் §ஏடுஇலை மிடைந்த மகடூஉ (58). கொம்பிடத்தேபூங்கொத்தையுடைய வேம்பினுடைய மேன்மையையுடைய இலையைப் பிள்ளைக்குக் காவலாகக்கொண்டிருக்கின்ற மகடூஉ,
60. படலை கண்ணி-தழை விரவினமாலையையும், பரு ஏர் எறுழ் திணி தோள்-பரியஅழகினையும் வலியினையுமுடைய இறுகின தோளினையும்,
--------
#, "காடி-ஊறுகறி" (பெரும்பாண்.308-10. ந.)
@. காடி-கழுத்து; பொருந. 115-6-ஆம் அடிகளின் உரையையும் குறிப்பையும் பார்க்க.
§. "ஏடு" என்பதற்குமேன்மையென்னும் பொருள், "ஏடுமதிக்கண்ணியானை" . (தே.திருநா. ஐயாறு) என்றவிடத்தும் பொருந்துதல் காண்க.
------
61. முடலை யாக்கை-முறுக்குண்ட உடம்பினையும்,
முழுவலி மாக்கள் - நிரம்பிய மெய்வலியினையுமுடைய மாக்கள்,
62-3. [சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிறைத்த, பெருங்கயிற் றொழுகை:] சிறு துளை கொடு நுகம் பெரு கயிறு நெறிபட நிரைத்த ஒழுகை-சிறிய துளையினையுடைய கொடிய நுகத்தின் கண்ணே பெரியகயிற்றாலே எருதுகளை ஒருவழிப்பட நிரைத்துக்கட்டின சகடவொழுங்கினை,
துளைகளிற் செருகின கழிகள் கழுத்தசையப்பட்டு நிற்றலின், கொடு நுகமென்றார். ஒரு சகடத்திற் பல பூட்டுதல் கூறினார்.
63. மருங்கில் காப்ப-எருதுகள் திருகாமல் அச்சு முறியாமல் பக்கத்தே காத்துச்செல்ல,
64. சில் பத உணவின்-இடப்படும் பொருளுக்குச் #சிறியவாக இடப்படுஉணவினது,
என்றது உப்பை. பதம்-பக்குவம்.
கொள்ளை சாற்றி-விலைசொல்லி,
65. பல் எருது உமணர் பதி போகு நெடுநெறி-இளைத்தாற் பூட்டுதற்குப் பல எருத்தையும் அடித்துக் கொண்டு போம் உப்பு வாணிகர் ஊர்கள்தோறும் செல்லும் நெடிய வழியினையும்,
பதிபோலப் போகுமென்றுமாம்.
மகடூஉத் துரப்ப (58) மாக்கள் (61)காப்பச் (63) சாற்றிப் (64) போகும் நெடு நெறியையுமென்க.
66. எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக-பகற்பொழுது போவார்க்கு இளைப்புத் தீர,
--------
# "உப்பமைந்தற்றால்" (குறள்,1302) என்பதன் உரையில், ‘உப்பு மிக்கவழித்துய்ப்பது சுவையின்றானாற்போல' (பரிமேல்.) எனவெழுதிய உரை இக்கருத்தைக் குறிப்பித்தல் காண்க.
---------
67-76. [மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம், அரும்பொருளருத்துந் திருந்துதொடை நோன்றாள், அடிபுதை யரண மெய்திப் படம்புக்குப், பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின், விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள், வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச், சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக், கருவி லோச்சிய கண்ணகனெறுழ்த்தோட், கடம்பமர் நெடுவே ளன்ன மீளி, உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்:]
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்(67) அரு பொருள் அருத்தும்(68) ஓடா வம்பலர்(76)-மலையிலுள்ளனவும் கடலிலுள்ளனவுமாகிய மாட்சிமையையுடைய பயனைக் கொடுக்கும் பெறுதற்கரிய பொருள்களை உலகத்தோரெல்லாரையும் நுகரப்பண்ணும் பிறக்கிடாத புதியோர்,
என்றது, மாணிக்கமும், முத்தும்,சந்தனமும்முதலியன கொண்டு போய் விற்றுத் திரிவாரைக் கூறிற்று.
பொரு கணை தொலைச்சிய புண் தீர்மார்பின்(70)- பொருகின்ற அம்புகள் தசையைப்போக்கின புண்கள் தீர்ந்த மார்பினையும்,
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை(73)- பத்திரம் செருகப்பட்ட கட்டுதல் இறுகும் சேலையினையும்,
கரு வில் (74) திருந்து தொடை(68)ஓச்சிய கண் அகல் எறுழ் தோள்(74)-கொடிய வில்லைத் தப்பாத தொடையிலே நிரம்பவாங்கின இடமகன்ற வலியினையுடைத்தாகிய தோளினையுமுடைய,
கடம்பு அமர் நெடு வேள் அன்ன(75)வம்பலர்(76)- கடம்பிடத்தேயிருந்த நெடிய முருகனையொத்த வம்பலர்,
மீளி (75) உடம்பிடி தட கை ஓடாவம்பலர் (76)-#கூற்றுவனையொத்த வேலைப் பெருமையையுடைய கையிலேயுடைய பிறக்கிடாதவம்பலர்,
மார்பினையும்(70), உடையினையும்(73),தோளினையுமுடைய(74) வம்பலர்,
வரை ஊர் பாம்பின் (72) வெள்கை ஒள் வாள் விரவு வரி கச்சில் (71) பூண்டு புடை தூங்க(72)- மலையிடத்தே யூர்கின்ற பாம்புபோலேயானைக்கொம்பாற் கடைந்திட்ட வெள்ளிய @ஆசினையுடைய ஒள்ளிய வாள் தன்னிடத்தில் விரவினவரியையுடைய கச்சினாலே தோளிலே கோக்கப்பட்டு ஒரு பக்கத்தே தூங்காநிற்க,
நோன் தாள் (68) §அடி புதை அரணம் எய்தி (69)- நடந்து வலியையுடையவாகிய காலில் அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து,
படம் புக்கு-சட்டையிட்டு,
வம்பலர்(76) தூங்க(72) எய்திப்புக்கு(69) வழங்கும்(80) பெரிய வழி (81) என்க.
77-8. தடவு நிலை பலவின் முழுமுதல் கொண்ட சிறு சுளை பெரு பழம் கடுப்ப -பெருமையையுடைய நிலையினையுடைய பலாவினடியிலே குலை கொண்டசிலவாகிய (பி-ம்: சிறியவாகிய) சுளையினையுடைய பெரிய பழத்தையொப்ப, நல்ல பழம் சுளைமிக இராதென்றார்.
------------
#. "கால வேலான்" (கம்ப.கையடைப்.11)
§. அடிபுதை அரணம்: இச்சொல்பாதரட்சை யென்பதன் மொழிபெயர்ப்பாதல் காண்க.
-----------
78-80. [மிரியல், புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத், தணர்ச்செவிக் கழுதை:]
மிரியல் புணர் பொறை தாங்கிய கழுதை - மிளகினது ஒத்த கனமாகச் சேர்த்த பாரத்தை தாங்கிய கழுதை,
வடு ஆழ் நோன் புறத்து அணர் செவி கழுதை - வடுவழுந்தின வலியினையுடைய முதுகினையும் எடுத்த செவியினையுமுடைய கழுதை,
80-81. கழுதை சாத்தொடு வழங்கும் உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் - கழுதையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரளோடேவம்பலர்(76) வழங்கும் பெரிய வழியில் கவர்த்த வழிகளையும் காத்திருக்கும்,
உல்கு-சுங்கம்.
82. வில்லுடை வைப்பின் -விற்படையிருக்கின்ற ஊர்களில்,
வியல் காடு இயவின் - அகன்றகாட்டு வழிகளில்,
83-5. நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த பூளை அம்பசு காய் புடை விரிந்தன்ன வரி புற அணிலொடு - நீண்ட தாளினை யுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்ந்த பஞ்சினைந்யுடைய அழகினையுடைத்தாகிய பசிய காயினது முதுகு விரிந்து பஞ்சு தோன்றினாலொத்த வரியை முதுகிலேயுடைய அணிலோடே,
85. கருப்பை ஆடாது-எலியும் திரியாதபடி,
86-8. [யாற்றறல் புரையும்வெரிநுடைக் கொழுமடல், வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக, ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக்குரம்பை:]
யாறு அறல் புரையும் வெரிந் கொழுமடல் உடை நெடு தகர் ஈந்து-யாற்றினது அறலையொக்கும் முதுகினையும் கொழுவிய மடலினையுமுடைய நெடிய மேட்டு நிலத்தில் நின்ற ஈந்து,
மடலின் அடி தன்னிடத்தே நிற்க மேல் அறுப்புண்ட ஈந்து அறல் போன்றிருக்குமாறு உணர்க.
வேல் தலை அன்ன வை நுதி ஈந்து இலை வேய்ந்த எய் புறம் குரம்பை - வேலின் முனையை யொத்த கூர்மையினையுடைய முனையினையுடைய ஈந்தினுடைய இலையாலே வேய்ந்த எய்ப்பன்றி முதுகு போலும் (பி-ம். எய்ப்பன்றி போலும்)புறத்தினையுடைய குடிலில்,
89-90. [மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி, ஈன்பிண வொழியப் போகி:] ஈன் பிணவு மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஒழிய போகி-பிள்ளையைப்பெற்ற எயிற்றி மான்றோலாகிய படுக்கையிலே அப்பிள்ளயோடே முடங்கிக் கிடக்க ஒழிந்தோர் போய்,
"பெண்ணும் பிணாவு மக்கட் குரிய"(தொல். மரபு. சூ.61) என்பதனால் வந்த பிணாவென்னும் 1#ஆகாரவீறு அல்வழிக்கண் வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச்சினை கெட்டு உகரம் பெறாது நின்றது.
90-92. [நோன்காழ், இரும்புதலையாத்த திருந்துகணை விழுக்கோல், உளிவாய்ச்சுரையின் மிளிர மிண்டி:] இரும்பு தலை யாத்த திருந்து கணை நோன்காழ் விழு கோல் உளி வாய் சுரையின் மிளிர மிண்டி-பூண் தலையிலே அழுத்தின நன்றாகிய திரட்சியையும் வலியையுமுடைத்தாகிய வயிரத்தினையுமுடைய சீரிய கோல் செருகின உளிபோலும் வாயினையுமுடைய பாரைகளாலே கட்டிகள் கீழ்மேலாகக் குத்துகையினாலே,
கோல் செருகப்படுகின்றசுரையையுடைமையிற் சுரையென்றார்; ஆகுபெயர்; சுரை-குழைச்சு.
93. இரு நிலம் கரம்பை படு நீறு ஆடி-கருநிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியைஅளைந்து,
94. நுண் புல் அடக்கிய வெள் பல் எயிற்றியர்-மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக் கொண்ட வெள்ளிய பல்லியுடைய எயின் குடியிற் பிறந்த மகளிர்,
போகி(90) மிண்டுகையினாலே(92) ஆடி(93) அடக்கிய எயிற்றிய ரென்க.
@மிகவிளைந்து உதிர்ந்த புல்லை எறும்இழுத்துச் சேரவிட்டு வைத்த இடம் அறிந்தெடுத்தல் அந்நிலப்பண்பு.
95-6. பார்வை யாத்த §பறை தாள் விளவின் நீழல் முன்றில் நிலம் உரல்பெய்து-பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து,
97. குறு காழ் உலக்கை ஓச்சி-குறிய வயிரமாகிய உலக்கையாலே குத்தி (பி-ம்: குற்றி),
97-8. நெடு கிணறு வல் ஊற்று உவரி தோண்டி-ஆழ்ந்த கிணற்றிற் சில்லூற்றாகிய உவர் நீரை முகந்து கொண்டு,
98-9. தொல்லை முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி-பழைய ஒறுவாய் (பி-ம்: வெறுவாய்) போன பானையிலே வார்த்த உலையை முரிந்த அடுப்பிலேவைத்து,
-----------
#. தொல். உயிர்மயங்கியல்,சூ.32-
@ அகநா.377:3-4.
3§. பறைதல்-தேய்தல்: "சுவர்பறைந்த - சுவரிடத்தில் தேய்ந்த" (பெரும்பாண்.189. ந.)
----------
100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]
வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,
எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்டழுக்கலென முடிக்க.
வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,
101-2. [வாடாத் தும்பை வயவர் பெருமகன், ஒடாத் தானை:] ஓடா தானை வாடா தும்பை வயவர் பெருமகன்-முதுகிடாத படையினையுடைய கெடாத தும்பை சூடின போரைவல்ல வீரருடைய தலைவனாகிய,
102-3. #ஒள் தொழில் கழல் கால் செ வரை நாடன் சென்னியம் எனின்-ஒள்ளிய தொழில்களையுடைத்தாகிய வீரக்கழலணிந்த காலினையுடைய செவ்விய மலைநாட்டையுடையவனுடைய பாணச்சாதியேம் (பி-ம்: பாண்சாதியேம்) என்று கூறுவீராயின்,
104. தெய்வம் மடையின் தேக்கு இலை குவைஇ-தெய்வங்களுக்குச் சேர இட்டுவைத்த பலிபோலே புழுக்கலையும் (100)தேக்கிலையிலே குவிக்கையினாலே,
104-5. [நும், பைதீர் கடும்பொடு பதமிகப் பெருகுவிர்:] பதம்நும் பைதீர் கடும்பொடு மிகப் பெறுகுவிர்-அவ்வுணவை நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத்தோடே மிகப் பெறுகுவீர்;
வியன்காட்டியவுகளில் (82)உல்குடைத்தாகிய (81) நெடுநெறியையும் (65) வம்பலர்(76) கழுதைச்சாத்தொடு வழங்கும் (80) உல்குடைப் பெருவழிக் கவலையையும் காத்திருக்கும் (81)வில்லுடை வைப்பின் (82) குரம்பையில் (88)எயிற்றியர் (94) தாங்களட்ட புழுக்கலையும் வாடூனையும் (100) எல்லிடைக்கழியுநர்க்கு ஏமமாகத்(66) தேக்கிலையிலே குவிக்கையினாலே (102)அப்பதத்தைப் (105) பெருமகனாகிய (101) வரைநாடன் சென்னியமெனின் (103)நும்(104) கடும்பொடு மிகப் பெறுகுவிர் (105)எனமுடிக்க.
உல்கு-இரண்டுவழிக்குங் கொள்க.குவைஇயென்னும் செய்தெனெச்சம் காரணகாரியப்பொருட்டு.
106. [மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்:] மயங்கு மான் அடி பொறித்த அதர்மருங்கின்-நீரின்மையின் மயங்கித் திரியும் மானடி அழுந்திக் கிடக்கின்ற வழியிடத்திலே,
----------
#. "ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்" (பதிற். 34:2) என்பதன் உரையில் ‘ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென்றவாறு' என்றெழுதியுள்ள பகுதி இங்கே உணரற்பாலது.
------
107-8. வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த அகழ்-மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தே நீர் நிற்கவேண்டுமென்று நச்சுதலாலே குழித்குதளம்,
அகழப்படுதலின் அகழென்றது ஆகுபெயர்.
108. சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி-அதனைச் சூழப்பறித்துக் கிடக்கின்ற மட்டுக்துகுழிகளினுள்ளே மறைந்ஒதுங்கி,
தண்ணீர் குடிக்க வருமென்று குளத்தைச் சூழப் பறித்த குழி,
109-10. புகழா வாகை பூவின் அன்ன வளை மருப்பு ஏனம் வரவு பார்த்து இருக்கும் -அகத்திப்பூவினையொத்த வளைந்த கொம்பினை யுடைய பன்றியினது நீருண்ண வரும் வரவைப் பார்த்திருக்கும்,
111. அரை நாள் வேட்டம் அழுங்கின்-நடுவியாமத்து வேட்டைஒழிந்தார்களாயின்,
பகல் நாள்- அதன் பிற்றை நாளிலே,
112-7. [பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித், தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி, முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும், நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇ:]
முள் அரை தாமரை புல் இதழ் புரையும் நெடு செவி குறுமுயல் போக்கு அற - முள்ளைத் தண்டிலேயுடைய தாமரையினது புறவிதழை யொக்கும் நெடியசெவியினையுடைய குறிய முயல்களை ஓரிடத்தும் போக்கில்லாதபடி,
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி வளைஇ-குவிந்த இடத்தையுடைய வேலியுடத்தேஒன்றோடொன்று பிணைத்த வலைகளை மாட்டி (பி-ம்: மூட்டி) வளைத்து,
பகு வாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி - அங்காந்த வாயையுடைய நாய்களுடனே சென்று பசிய தூறுகளைஅடித்து அவற்றிற் கிடவாமஓட்டி,
116-7. [கடுங்கட் கானவர் கடறுகூட்டுண்ணும், அருஞ்சுரம்:]
கடறு கூட்டுண்ணும் அரு சுரம் -காட்டிலுள்ள முயல்களைக் கொள்ளை கொண்டுண்ணும் அரிய பாலைநிலம்,
கடுங்கண் கானவர்-தறுகண்மையையுடைய கானவர்,
கானவர் (116) பயம்பின் ஒடுங்கிப்(108) பார்த்திருக்கும் (110) இராவேட்டம் அழுங்கிற்பகனாளிலே (111) முயலைப் போக்கறவளைத்து (115)எருக்கிக் (112) கூட்டுண்ணும் (116) அருஞ்சுரமென முடிக்க.
117. அரு சுரம் இறந்த அம்பர்(பி-ம்: உம்பர்) குறும்பில் சேப்பின் (129)-இவ்வரிய நிலத்தைக் கைவிட்ட மற்றை நிலத்திற் குறும்பில் தங்கின்,
குறும்பிற்சேப்பின்(129) என்பதனை இவ்விடத்துக் கூட்டுக.
---------
இதனால் #நண்பகலும் வேனிலுமாகிய பாலைநிலம்கூறி அதனைக் கலந்த நிலமும் கூறினார்.
இனி நீங்கள் அருஞ்சுரத்தைக்கடந்த பின்னரென்றுஉரைப்பர்.
117-8. [பருந்துபட, ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி:] ஒன்னா தெவ்வர் நடுங்க பருந்து பட ஓச்சி-பொருந்தாத பகைவர் அஞ்சப்பருந்துகள் படியக் குத்தி,
119-20. வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் வடி மணி பலகையொடு நிரைஇ - கூர்மையையுடைய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேலை வடித்த மணி கட்டின பலகைகளோடே நிரைத்து வைத்து,
120-21. முடி நாண் சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்-தலையிலே முடிந்த நாணையுடைய வில்லைச் சார்த்திவைத்த அம்புத்தங்கும் அகற்சியையுடைய வீடுகளையும்,
122. ஊகம் வேய்ந்த உயர் நிலைவரைப்பின்-ஊகம் புல்லாலே வேய்ந்த உயர்ந்த நிலைமையினையுடைய மதிலையும்,
123-4. வரை தேன் புரையும் கவை கடைபுதையொடு கடு துடி தூங்கும் கணை கால் பந்தர்-மலையில் தேனிறாலையொக்கும் குதையினையுடைத்தாகிய அடியினையுடையஅம்புக்கட்டுகளுடனே ஓசை கடிய துடியும் தூங்கும் திரண்ட காலையுடைய பந்தரினையும்,
125. தொடர் நாய் யாத்த துன் அருகடி நகர்-சங்கிலிகளாலே நாய்களைக் கட்டிவைத்த கிட்டுதற்கரிய காவலையுடைய வீட்டினையும்,
126. [வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை:] முள் வாழ் வேலி சூழ் மிளை படப்பை -முள்ளையுடைய வாழ்வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற்காட்டினையுடைத்தாகிய பக்கத்தினையும்,
127. கொடு நுகம் தழீஇய புதவின் -கொடிய கணையமரம் ஏறட்ட உட்கதவையுடைய வாயிலினையும்,
127 -8. செ நிலை நெடு நுதி வய கழுநிரைத்த வாயில் - செவ்விய நிலையினையும் நெடிய முனையினையுமுடைய வலியையுடைய கழுக்கள் நிரைத்த ஊர்வாசலினையுமுடைய,
பகைவரைக் குத்துதற்குக் கழு வைத்தார்.
129. கொடு வில் எயின் குறும்பில் சேப்பின்-கொடிய வில்லையுடைய எயினச்சாதியிலுள்ளாருடைய அரணிலே தங்கின்,
கணைதுஞ்சு வியனகர் (121)முதலியவற்றையுடைய குறும்பென்க,
130-131. களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி-களர்நிலத்தே வளர்ந்த ஈந்தினது விதையைக் கண்டாற்போன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை
-------
#."நடுவுநிலைத் திணையேநண்பகல் வேனிலொடு, முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே" (தொல். அகத். சூ.9.)
-------
132-3. ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் வறை கால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்-நாய்கடித்துக் கொண்டுவந்த அக்கு மணி போலும் முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனைகடோறும் பெறுகுவிர்;
சேம்பிற் (129) பெறுகுவிரென்க.
134-6. யானை தாக்கினும் அரவு மேல் செலினும் நீல் நிறம் விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை யானை தன் எதிரே செல்லினும் பாம்பு தன் மேலே செல்லினும் நீல நிறத்தையுடைய மேகத்திடத்தே வலிய உருமேறு இடிப்பினும் சூற் கொண்ட மகள் அவையிற்றிற்கு அஞ்சி மீளா மறத்தைப்பூண்ட வாழ்வினையும்,
137. வலி கூட்டுணவின் வாள் குடிபிறந்த - தமது வலியாற் #கொள்ளை கொண்டுண்ணும் உணவினையுமுடைய வாட்டொழிலே செய்யும் குடியிற் பிறந்த,
138. புலி போத்து அன்ன புல் அணல்காளை-புலியினது போத்தை யொத்த புல்லென்ற தாடியையுடையந் அந்நிலத்துத் தலைவன்.
139-40. @செல் நாய் அன்ன கரு வில்சுற்றமொடு கேளா மன்னர் கடி புலம் புக்கு - தான் குறித்த விலங்கின் மேலே செல்கின்ற நாய் அதனைத் தப்பாமற் கொள்ளுமாறு போன்ற கொடிய வில்லையெடுத்த காவலாளருடனே தன் வார்த்தை கேளாத பகைவருடைய காவலையுடைய நிலத்தே சென்று,
141. நாள் ஆ தந்து §நறவு நொடைதொலைச்சி-விடியற்காலையிலே அவர்கள் பசுக்களை அடித்துக்கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்குவிலையாகப் போக்கி,
142. இல் அடு கள் இன் தோப்பிபருகி - அதற்குப் பின்பாகத் தமது இல்லிலே சமைத்தகள்ளுக்களில் இனிதாகிய 3நெல்லாற் செய்த கள்ளையுண்டு,
---------
#. "கைப்பொருள் வௌவுங்களவேர் வாழ்க்கைக், கொடியோர்" (பெரும்பாண்.40-41)
@. "நாயகர்க்கு நாய்கள்போனட்பிற் பிறழாது, கூஉய்க் குழாஅ முடன்கொட்கு -மாய்படை, பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர்,சென்றெவன் செய்வர் செரு" (தொல். உவம. சூ. 37.பேர். மேற்,) என்ற விடத்து வீரர்களுக்கு நாயை உவமித்திருத்தல் காண்க.
§."நறவுநொடை நெல்லினாண்மகி ழயரும்" (அகநா. 61:10)
-----
143. மல்லல் மன்றத்து மத#விடை கெண்டி-வளப்பத்தினையுடைய மன்றிலே வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று,
144. மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப - தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் தங்களுக்கு நடுவே முழங்காநிற்ப,
145-7. [சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சிவலன் வளையூஉப், பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை, முரண்டலை கழிந்த பின்றை:] சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ பகல் மகிழ்தூங்கும் தூங்கா முரண் தலை இருக்கை கழிந்த பின்றை-வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைந்து பகற்பொழுதிலே மகிழ்ச்சியுடனே ஆடும் அசையாப் பொருதலையுடைய குடியிருப்பினைக் கடந்தபின்பு.
இதனாற் குறிஞ்சிநிலம் முற்கூறி அதன் பகைப்புலமும் பிற்கூறினார்.
147-8, மறிய குளகு அரை யாத்த குறுகால்- ஆட்டுமறிகள் நின்று தின்னும் தன்மையைஉடையதழைகளைத் தம்மிடத்தே கட்டின குறிய கால்களையும்,
148-9. [குரம்பைச், செற்றை வாயிற் செறிகழிக் கதவின்:]
செற்றை வாயில்-சிறுதூற்றையுடைய வாயிலினையும்,
குரம்பை-குரம்பையினையும்,
கழி செறி கதவின்-கழிகளாற்கட்டப்பட்ட கதவினையும்.
150. [கற்றை வேய்ந்த கழித்தலைச்சாம்பின்:] கழித்தலை கற்றை வேய்ந்தசாம்பின்-வரிந்த கழிகளிடத்தே வரகு கற்றைகளாலேவேய்ந்த சேக்கையையும்,
151. [அதளோன் றுஞ்சுங் காப்பினுதள:] உதள அதளோன் துஞ்சும்காப்பின்-கிடாயினுடைய தோல்களைப் பாயலாகஉடையமுதியோன் துயில் கொள்ளுங் காவலையு உடைய,
@"மோத்தையுந் தகரு முதளுமப்பரும், யாத்த வென்ப யாட்டின் கண்ணே"என்றார் மரபியலில்.
காலினையும்(148) வாயிலினையும் கதவினையும்(149) சாம்பினையும் (150) காப்பினையும் (151)உடைய குரம்பை (148) என்க.
152. நெடு தாம்பு தொடுத்த குறு தறிமுன்றில் - §தாமணி தொடுத்த நெடிய தாம்புகள்கட்டின குறிய முளைகளையுடைய முற்றத்தினையும்,
----------
#. விடை-கிடாயென்று முன்எழுதினர்; முருகு.282, ந.
@. தொல். மரபியல், சூ.47.
§.தாமணி: (பெரும்பாண். 243-4,ந.); "வானவர் தேனுவெல்லாந் தந்தா மணியிற்செறிபசு வாக"(திருவாரூர்க்கோவை, 35.)
------------
153-4. கொடு முகம் துருவையொடு #வெள்ளை சேக்கும் இடுமுள் வேலி எரு படு வரைப்பின் - வளைந்த முகத்தினையுடைய செம்மறியாட்டுடனே வெள்ளாடும்கிடக்குங் கட்டுமுள்ளாகிய வேலியினையும் உடைய எரு மிகுகின்ற ஊரிடத்து,
குரம்பையினையும் (148)முன்றிலினையும் (152) வேலியினையு உடைய வரைப்பென்பக.
155. [நள்ளிருள் விடியற் புள்ளெழப்போகி:]
நள் இருள் விடியல் புள் எழ -செறிந்த இருள்போகின்ற காலத்தே பறவைகள் துயிலெழாநிற்க,
போகியென்பதனை மேலே கூட்டுக.
156. புலி குரல் மத்தம் ஒலிப்பவாங்கி-புலியினது முழக்கம் போலும்முழக்கத்தை உடைய மத்தை ஆரவாரிக்கும்படி கயிற்றைவலித்து,
157-8. ஆம்பி வால் முகை அன்ன கூம்புமுகிழ் உறை அமை தீ தயிர்கலக்கி-குடைக்காளானுடைய வெள்ளிய முகைகளையொத்த குவிந்த முகிழ்களையுடைய உறையாலே இறுகத்தோய்ந்த இனிய தயிரைக் கடைந்து,
முகை-மொட்டு.முகிழ்-ஆடையின்மேல் புடைத்து நிற்பது.
158. @நுரை தெரிந்து-வெண்ணையை எடுத்து,
159. புகர் வாய் குழிசி பூ சுமடு இரீஇபோகி (155)- தயிர் புள்ளியாகத் தெறித்த 3வாயையுடையமோர்ப்பானையைப் பூவாற்செய்த சுமட்டைத் தலையிலே வைத்து முற்கூறிய குறிஞ்சி நிலத்துஏறப்போய்,
160. நாள் மோர் மாறும்-காலையிலே மோரை விற்கும்.
நல் மா மேனி - நன்றாகிய மாமையாகிய நிறத்தினையும்,
161. சிறு குழை துயல்வரும் காதின்-தாளுருவி அசையும் காதினையும்,
பணை தோள் - மூங்கில்போலும்தோளினையும்,
162. குறு நெறி கொண்ட கூந்தல்-குறியதாகிய அறலைத் தன்னிடத்தே கொண்ட மயிரினையுமுடைய,
ஆய்மகள்-ஆய்ச்சாதியிற்பிறந்த மகள்,
மேனி முதலியவற்றை உடைய மகள்.
163. அளை விலை உணவின் கிளை உடன் அருந்தி - மோர் விற்றதனால் உண்டாகிய நெல் முதலியவற்றாலே சுற்றத்தாரெல்லாரையும்உண்ணப்பண்ணி,
--------------
1. வெள்ளை-வெள்ளாடு: "சிறுதலை வெள்ளைத் தோடு" (குறுந்.163:2)
2, அகநா. 101:8
3. (பி-ம்.) 'நிறத்தையுடைய'
--------
164. நெய் விலை கட்டி பசு பொன் கொள்ளாள் - பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பசும்பொன்னை வாங்காளாய், #அட்டியென்று பாடமோதி வார்த்தென்று கூறுதலுமாம்.
165. எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்குடி (166)- பாலெருமையையும், நல்ல பசுவையும், கரிய எருமை நாகினையும் நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கும்குடி,
குறிஞ்சிநிலத்தே நெய்யை விற்று அவர்கள் அடித்துக்கொண்ட எருமை முதலாயவற்றை விலையாக வாங்கினாளென்க.
166. மடி வாய் கோவலர்:சீழ்க்கை பிடித்தலாலே மடித்த வாயையுடைய இடையர்,
குடி வயின் சேப்பின்-குடியிருப்பிலே தங்குவீராயின்,
167-8. [இருகிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்:] ஞெண்டின் இரு கிளை சிறு பார்ப்பு அன்னபசு தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் - நண்டினது பெரிய சுற்றமாகிய சிறிய பார்ப்பையொத்த செவ்வித் தினையரிசியா ஆக்கின சிலுத்த சோற்றைப் பாலுடனே பெறுகுவிர்;
புள்ளெழாநிற்க (155) வாங்கிக் (156)கலக்கித் தெரிந்து (158) இரீஇப் (159) போகி (155)மாறும் (160) ஆய்மகள் (162) என்க.
மடிவாய்க்கோவலர்(166)வரைப்பிடத்து (154) ஆய்மகள் (162) அருத்திக் (163)கொள்ளாளாய்ப் (164) பெறூஉங் (165)குடிவயிற்சேப்பின்(166) மூரல் பாலொடும் பெறுகுவிரெனமுடிக்க.
169. தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி - செருப்பு விடா மற் கிடந்த வடு அழுந்தின வலியை உடைய அடியினையும்,
170. விழு தண்டு ஊன்றியகை-பசுக்களுக்கு வருத்தம் செய்யும் தடியையூன்றின கை,
மழு தின் வல் கை - மரங்களை @ஒடியெறிந்து கொடுக்கும் கோடாரியால் தழும்பிருந்த வலிய கையினையும்,
171. உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்-இரண்டு தலைகளிலும் உறியினையுடைய காக்கள் மேலேஇருந்ததனால் உண்டாகிய தழும்புமிக்க மயிர் எரெழுந்த தோட்கட்டினையும்,
172. மேம் பால் உரைத்த ஓரி-எல்லா மணமும் பொருந்தும் பசுக்கறந்த பாற்கையைத் தடவின மயிரையும்,
-----------
#. ‘நெய்விலைக்கட்டி' (164)என்பதை நெய்விலைக்கு அட்டியெனப் பிரிக்க.
2@. ஒடியெறிதல்:"ஒடியவெறிந்தென்பது ஒடியெறிந்தென விகாரமாயிற்று" (கலித்,68:12. -5, ந,);"ஒடியெறிந்து வாரொழுக்கி" (பெரிய.கண்ணப்ப.75.)
-------
172-4. [ஓங்குமிசைக், கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட, பல்பூ மிடைந்த படலைக் கண்ணி:] காட்ட ஓங்கு மிசை கோட்டவும் கொடியவும் பல் பூ விரைஇ மிடைந்த படலைக் கண்ணி-காட்டிடத்தனவாகிய உயர்கின்ற உச்சியினையுடைய கொம்புகளில் உள்ளவும் கொடிகளில் உள்ளவுமாகிய பல பூக்கள் கலந்து நெருங்கிய #கலம்பகமாகிய மாலையினையும்.
175. ஒன்று அமர் உடுக்கை-ஒன்றாய்ப் பொருந்திய உடையினையும் உடைய,
கூழ் ஆர் இடையன் -பாற்சோற்றை உண்கின்ற இடையன்,
அடி (169)முதலியவற்றை உடைய இடையன்.
176. கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி - கன்றுகள் பொருந்தின பசுத்திரளோடேகாட்டிலே தங்கி,
177-9. [அந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று, ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச், செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்:]
ஞெலி கோல் அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று கொண்ட செ தீ ஞெகிழி தோட்ட கருதுளை குழலின்-தீக்கடை கோலாலே அழகிய நுண்ணியதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்துகொண்ட சிவந்த நெருப்பினையுடைய @கடைக்கொள்ளியால் துளையிட்ட கரிய துளையினையுடைய குழலால் எழுப்பின.
பெருவிறலென்பதனை இடையன் எபதனோடு முன்னே கூட்டி எண்ணுக.
இனி ஞெலிகோல்-படுத்த கோல், ஞெகிழி-கடைகின்றகோல் என்று உரைப்பர்
180. இன் தீ பாலை முனையின்-மிகவும் இனிய பாலை என்கிற பண்ணைத் தான் வெறுக்கின்,
180-82. [குமிழின், புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின், வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி:] குமிழின் புழல் கோடு தொடுத்தமரல் புரி விரல் எறி நரம்பின் வில் யாழ் இசைக்கும் குறிஞ்சி-குமிழினது உட்பொய்யாகிய கொம்பிடத்தே வளைத்துக்கட்டின மரற்கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் நரம்பினையுடைய வில்லாகிய யாழொலிக்கும் குறிஞ்சிஎன்கிற பண்ணை,
-----------
#. "களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல்கொண்டடியிணை பணிவான்" (திவ். திருப்பள்ளி. 5.)
@. "குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி"(புறநா. 108:1.)
----------
183. பல் கால் பறவை கிளை செத்து ஓர்க்கும்-பல காலினைஉடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிச் செவிகொடுத்துக் கேட்கும், "நண்டுந் தும்பியும்" (தொல்.மரபியல். சூ.31) என்னும் சூத்திரத்திற் #செவிப்பொறியான் இவை உணர்தல் கூறினாம்.
184. புல் ஆர் வியல் புலம் போகி-புல்லு நிறைந்த அகற்சியையுடைய நிலத்தைக் கடந்துபோய்,
முன்னர் இடையர் குடியிருப்புக் கூறிப் பின்னர் அவர் பசுக்கள் முதலியன நிற்கின்ற முல்லை நிலமும் கூறினார்.
184-5. முள் உடுத்து எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பின்-முள்ளுத் தன்னிடத்தே சூழ்ந்து எழுகின்ற @விடத்தேதொடரி முதலிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களைஉடைய ஊர்களில்,
இது பசுக்கள் முதலியன மேயாமற் காக்கின்ற இளங்காட்டைஉடைய படைத்தலைவர் இருப்புக் கூறிற்று.
186. பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்-பிடித்திரள் நின்றாற்போன்ற வரகுமுதலியன நிற்கும் குதிர்களையுடைய முன்றிலினையும்,
187. களிறு தாள் புரையும் திரி மரம் பந்தர்-யானையினது காலை யொக்கும் வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தரினையும்,
----------
#. இங்கே காட்டிய சூத்திரத்திற்குரிய நச்சினார்க்கினியருரை இப்பொழுது கிடைத்திலது; எனினும் சீவகசிந்தாமணி 892-3 ஆம் பாட்டுக்களின் விசேடவுரையில் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட பகுதி இங்கே பயன்படும்: " ‘நண்டுந்......பிறப்பே' என்று தும்பிக்குச் செவியின் றெனவே இவற்றிற்கும் செவியின்றாமாதலாலே வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று; இவை ஈண்டு வந்து கரிபோதலில; 'கேள்வியில்லன வருதலென்னை?' என்பது கடா; அதற்கு விடை: ஆசிரியர், ‘நண்டுந்தும்பியும்' என்று தும்பியைப் பின் வைத்தது, மேல் வருஞ் சூத்திரத்தின், ‘மாவுமாக்களு மையறி வென்ப' (தொல்,மரபு. சூ. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க; இதனை வாராததனால் வந்தது முடித்தலென்னும் தந்திரவுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரைகூறிப்போந்தாம்; அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோருணர்ந்தன்றே, 'பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த, தாதுண் பறவை பேதுற லஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன்' (அகநா. 4: 10 - 12) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக்கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்."
@: விடத்தே தொடரி- ஒருவகை முள்மரம்; விடத்தர், விடத்தேர், விடத்தேரையென இப்பெயர் வழங்கும்; "திரிகாய் விடத்தரொடு" (பதிற்.13:14);"தள்ளா விடத்தேர்" (தண்டி. மேற்.);"விடத்தேரை மன்னும்வனம்" (திருவரங்கத்தந்.93.)
----
188-9. குறு சாடு உருளையொடு கலப்பை சார்த்தி நெடு சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்-குறிய சகடத்தில் உருளைகளோடே கலப்பையையும் சார்த்தி வைக்கையினாலே நெடியசுவரிடத்தில் தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய,
நெடுகக்கட்டி ஒருபக்கத்திலே அடுப்பெரித்து ஒருபக்கத்திலே தொழிலொழிந்த நாளில் சகடையில் உருளையையும் கலப்பையையும் சார்த்தி எருதுகளும் கட்டில் நிற்றலிற் கொட்டி என்றார்.
190-91. பருவம் வானத்து பா மழைகடுப்ப கரு வை வேய்ந்த கவின் குடி சிறு ஊர்-மாரிக்காலத்தை உடைய விசும்பிடத்தே பரந்த மேகத்தை ஒப்ப வரகு வைக்கோலாலே வேய்ந்த அழகினையுடைய குடியிருப்பினை உடைய சிறிய ஊர்களிலே,
சீறூர்-அம்முல்லை நிலத்து உழுதுண்பர் இருப்பு.
192-3. நெடு குரல் பூளை பூவின் அன்ன குறு தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி-நெடிய கொத்தினையுடைய சிறுபூளையினது பூவை யொத்த குறிய தாளினையுடைய வரகினது சிறிய அவிழ்களாகிய சோற்றை,
194-5. புகர் இணர் வேங்கை வீகண்டன்ன அவரை வால் புழுங்கு அட்டி - நிறத்தை உடைய கொத்தினை உடைய வேங்கைப்பூவைக் கண்டாலொத்த அவரை விதையினது நன்றாகிய பருப்பை மிகவிட்டு,
வேங்கைப்பூ வரிகளை உடைய விதைக்கு உவமை. புழுக்கு-புழுங்க வெந்தது; #கும்மாயமுமாம்;பருப்புச்சோறுமென்ப.
195-6. @[பயில்வுற், றின்சுவை மூரற் பெறுகுவிர்:]
இடையன் (175) அல்கிப் (176)பாலையைத் தான்முனையின் (180) அதனைக் கைவிட்டு விரலாலே வாசிக்கும் குறிஞ்சியைப் (182)பறவையோர்க்கும் (183) புலத்தைப் போகி (184)வரைப்புக்களின் (185) முன்றில் (186)முதலியவற்றை உடைய சீறூர்களிலே (191)வரகின் சொன்றியைப் (193)புழுக்கை யட்டி (195)மூரலோடே பெறுகுவிரென முடிக்க.
-----------
#.கும்மாயம்-புழுக்கிய பச்சைப்பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி; இஃது இப்பெயரோடு விஷ்ணு வாலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது; "பயற்றுத் தன்மை கெடாது கும்மாய, மியற்றி" (மணி .27:185-6)"கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி" (திவ்.பெரியாழ்வார். 3. 3:3)என்பதில் கும்மாயமென்பதற்கு ஸ்ரீமணவாள மாமுனிகள்,'குழையச் சமைத்த பருப்பு' என்றுபொருள் செய்திருக்கின்றனர்;"பயற்றது கும்மாயம்" (நன்.சூ.299,மயிலை.மேற்.)
@. இதற்கு ஒரு பிரதியிலும் உரை கிடைத்திலது; கலத்தலினாலே இனிய சுவையினையுடைத்தாகிய மூரலோடே பெறுகுவிர் என்க.
---------
196.ஞாங்கர்-அந்நிலத்திற்கு மேல்,
197. குடி நிறை வல்சி சொல் உழவர்-அக்குடியிருப்பு நிறைந்த உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவுத்தொழிலை உடையோர்,
ஒருசால் இருசால் என்றல் உழவுத்தொழிற்கு மரபு.
198. நடை நவில் பெரு பகடு புதல் பூட்டி- உழவுத்தொழிலிலே பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
199-200. பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் உடும்பு முகம் முழு கொழு மூழ்க ஊன்றி-பிடியினது வாயைஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையுனுடைய உடும்பினது முகத்தை ஒத்த பெருங்கொழு மறைய அமுக்கி,
201. தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை-முற்பட வளைய உழுது விதைத்த பின்னர் இடையே உழுத களைகளைக் களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,
202. அரி புகு பொழுதின் -அறுக்கும் பருவம் வருங்காலத்தே,
202-5. [இரியல் போகி, வண்ணக் கடம்பி னறுமல ரன்ன, வளரிளம் பிள்ளை தழீஇக்குறுங்காற், கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்;]
குறு கால் (204) கறை அணல் குறும்பூழ்(205) -அதன்கண் தங்கும் குறுங்காலினையும் கருமையை உடைய கழுத்தினை உடைய குறும்பூழ்,
வண்ணம் கடம்பின் நறு மலர் அன்ன(203) வளர் இள பிள்ளை தழீஇ (204)-வெள்ளிய நிறத்தை உடைய கடம்பினது நறுநாற்றத்தினை உடைய பூவை ஒத்த வளருகின்ற இளைய பிள்ளைகள் மிகவும் பறத்தலாற்றாதனவற்றையும் கூட்டிக்கொண்டு,
"பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை" (தொல்.மரபியல், சூ. 4)என்றார்.
இரியல் போகி (202) கட்சி சேக்கும் (205) - அவர்கள் ஆரவாரத்திற்கு அஞ்சிக் கெடுதற்றன்மையை உடையவாய் ஆண்டு நின்றும் போய்க் காட்டிலே தங்கும்,
206. வல் புலம் இறந்த பின்றை-முல்லை நிலத்தைப் போனபின்பு,
இதனால், முற்றும் குடிச்சீறூர் உழவரால் உழுதற்குரிய முல்லை நிலமும் கூறினார். இது மருத நிலத்தைச்சேர்ந்த முல்லை நிலம்.
உழவர்(197) பூட்டி(198) ஊன்றி (200)உழுத துடைவை (201) அரி புகு பொழுதில் (202) குறும்பூழ் (205)பிள்ளை தழீஇப் (204)போகிச் (202) சேக்கும்(205)வன்புலம் என்க.
206-7. மெல் தோல் மிதி உலை கொல்லன் முறி கொடிறு அன்ன-மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையில் கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை ஒத்த,
208. கவை தாள் அலவன் அளறு அளை சிதைய - கப்பித்த காலை உடைய ஞெண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழைகெடும்படி,
209-10. பை சாய் கொன்ற மண் படு மருப்பின் கார் ஏறு பொருத கண் அகல் செறுவின்-பசிய கோரையை அடியிலே குத்தி எடுத்த மண் கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடம் அகன்ற செய்யின்கண்,
211. உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்-தாம் உழப்படாத அந்த நுண்ணிய சேற்றை ஒக்க மிதித்த உழவர்,
212. முடி நாறு அழுத்திய நெடுநீர் செறுவில்-முடியாகக் கிடக்கின்ற நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில்,
சிதையக் (208) கொன்ற மருப்பின்(209) ஏறு பொருத செறுவில் (210) தொளியை நிரவிய வினைஞர்(211) நாற்றைய அழுத்திய செறுவென்க.
213-4. களைஞர் தந்த கணை கால் நெய்தல் கள் கமழ் புது பூ முனையின்-அச்செய்யில் களைகளைப் பறிப்பார் பறித்து ஏறட்ட திரண்ட தாளினையுடைய நெய்தலினது தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின்,
214-6. [முட்சினை, முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக், கொடுங்கான் மாமலர் கொய்துகொண்டு:] முகை சூழ் முள் சினை முள்ளி தகட்ட கொடு கால் பிறழ் வாய் மா மலர் கொய்து கொண்டு -அரும்புகள் சூழ்ந்த முள்ளை உடைய கொம்புகளை உடைய முள்ளியின் இதழை உடைய வாகிய வளைந்த காலையும் மறிந்த வாயையும் #கருமையையும் உடைய பூவைப் பறித்துக்கொண்டு,
216-8, அவண பஞ்சாய் கோரை @பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி-அந்நிலத்திலுண்டாகிய தண்டானாகிய கோரையைப் பல்லாலே மென்று மென்று கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை,
219 ஈர் உடை இரு தலை ஆர சூடி -ஈருடைத்தாகிய கரிய தலை நிறையும்படி சூடி.
220. பொன் காண் கட்டளை கடுப்ப 3கண்பின்-பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரைகல்லையொப்பக் கண்பினது,
--------------
# முள்ளிமலர் கரியதென்பதை,"கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்" (சிறுபாண்.148) என்பதனாலும் அறியலாகும்.
@ பல்-நாரைக் கிழிக்கும் ஒரு கருவியென்றும் சொல்வது உண்டு.
§ பி-ம். ‘கணப்பின்' ,‘சணப்பின்'
--------
221. புல் காய் சுண்ணம் புடைத் தமார்பின்-புல்லிய காயில் தோன்றின தாதை அக்கதிரை முறித்து அடித்துக்கொண்ட மார்பினையும், தாது நீளக் கிடந்தது உரைத்தாற்போன்றது.
222. இரும்பு வடித்தன்ன மடியா மெல் தோல்-இரும்பைத் தகடாக்கினால் ஒத்த திரையாத மெல்லிய தோலினையு உடைய,
223. கரு கை வினைஞர் காதல் அம்சிறாஅர்-வலிய கையால் தொழில் செய்வாருடைய விருப்பத்தை உடைய அழகிய சிறுபிள்ளைகள்,
224. பழ சோறு அமலை முனைஇ-பழைய சோற்றினது கட்டியை வெறுத்து,
224-6. வரம்பில் புது வை வேய்ந்தகவி குடில் முன்றில் அவல் எறி உலக்கை பாடுவிறந்து-வரம்பிடத்துப் புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடிலினுடைய முற்றத்தே அவலை இடிக்கும் உலக்கையினது ஓசை செறிகை யினாலே,
குடில்கிள், பன்றி முதலியவற்றைக் காத்தற்குக் கட்டினவை.
226-7. அயல் கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம்-அதற்கு அயலிடத்தனவாகிய வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்கு உண்டாகின்ற பகையாக நினைத்து அஞ்சும்,
228. நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி- இடையறாத புது வரு வாயினை உடைய வளையும்கதிரினை உடைத்தாகிய கழனியிடத்து,
229. கடுப்பு உடை பறவை சாதி அன்ன-எறியப்பட்டார்க்குக் கடுக்குந் தன்மையைக் கொடுத்தலை உடைய குளவித்திரளை ஒத்த.
230. பைது அற விளைந்த பெரு செ நெல்லின்-பசுமையறும்படி முற்றின பெரிய செந்நெல்லினுடைய,
231. தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் - உள்ளுப்பொய்யை உடைத்தாகிய திரண்ட தாளை அறுத்த தொழில்செய்வார்,
232. பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்-பாம்பு கிடக்கின்ற மருதினது உயர்ந்த கொம்பால் உண்டாகிய நிழலிலே,
பழைய மரமாதலிற் பாம்பு கிடக்கும் என்றார்.
233. பலி பெறு வியல் களம் மலிய ஏற்றி-ஆண்டு உறையும் தெய்வங்கள் பலி பெறுகின்ற அகன்ற களங்களிலே மிகவும் நிறையப் போராக விட்டு,
234-5. [கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடும், துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோல்:] கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து துணங்கை ஆடும் அம் பூதம் துகில் உடுத்தவை போல்-திரட்சி கொண்ட தம்முடைய சுற்றத்தோடே ஒழுங்காகச் செறிந்துநின்று துணங்கைக் கூத்தாடுகின்ற அழகினை உடைய பூதங்கள் வெள்ளிய துகிலை உடுத்து நின்றவைபோல, என்றது, தம்மில் விளையாடுவதற் குத்திரண்ட பூதமென்றவாறு.
236-7. சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் குழுமு நிலை #போரின் முழு முதல் தொலைச்சி-சிலந்தியினது வெள்ளிய நூல்சூழ்ந்த பக்கத்தினை உடைய பலவாகத் திரண்ட தன்மையினை உடைய போர்களினுடைய பெரிய அடியை வாங்கி விரித்து,
238. பகடு ஊர்பு இழிந்த பின்றை-ஏர்கள் கடாவிட்டுப் போன பின்பு,
238-9. துகள் தப வையும் துரும்பும் நீக்கி-குற்றம் அறும்படி வைக்கோலையும் கூளத்தையும் அதனிடத்துநின்று நீக்கி,
239.பைதுஅற-@ஈரம் உலராநிற்க,
240. குடகாற்று எறிந்த குப்பை-மேற்காற்றாலே கையாலே தூவித் தூற்றின பொலி,
240-41. வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்-வடதிசைக்கண் உளதாகிய மேருவாகிய மலைபோல மிகும்படி தோன்றும்,
242. தண் பணை தழீஇய தளரா இருக்கை-மருதநிலம்சூழ்ந்த அசையாத குடியிருப்புகளில்,
மார்பினையும் (221) தோலினையு முடைய(222) வினைஞர் சிறார்(223)முனைஇ (224)அவலெறியுலக்கைப்பாடுவிறக்கையாலே (226) கிள்ளை வெரூஉம் (227) கழனிகளில் (228) விளைந்த நெல்லினைத்(230) துமித்த வினைஞர் (231) ஏற்றித் (233) தொலைச்சி(237) நீக்கி (239) எறிந்த குப்பை (240) தோன்றும் இருக்கை எனக் கூட்டுக.
243-4. பகடு ஆ ஈன்ற கொடு §நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்-பெருமையை உடைய பசுக்கள் ஈன்ற வளைந்த அடியை உடைய கன்றுகளைக் கட்டின $தாமணியை உடைய நெடிய உதாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
£ "முழுவலி துஞ்சும் நோய்தபு நோன்றொடை , நுண்கொடி யுழிஞை வெல்போரறுகை" என்றார் பிறரும். கவை: ஆகுபெயர்.
245. [ஏணி யெய்தா நீணெடுமார்பின்;] நீள் ஏணி எய்தா நெடு மார்பின்-நீண்ட ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும்,
246. முகடு துமித்து அடுக்கிய பழ பல் உணவின்-தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையு உடைய, பல்லுணவென்றார், செந்நெல்முதலிய சாதிப்பன்மை கருதி.
-----------
# பி-ம்.‘போர்பின்'
@ "பைதுஅற-பசுமையறும்படி "(பெரும்பாண்.230. ந,)
§ நடை-அடி: "நடைநாலும்" (தக்க.716.)
$ பெரும்பாண். 152, உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.
£ பதிற். 44 : 9 - 10.
-------
247. குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்-அழியாத்தன்மையவாய் முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்லினையும்,
அல்குலினையும், மார்பினையும், உணவினை உடைய கூடென்க.
248-9. தச்சச் சிறாஅர் நச்சபுனைந்த ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்-தச்சச் சாதியிற்பிறந்த தொழில்செய்தற்குரிய சிறியோர் பிறர் விரும்பும்படி பண்ணின பிறராலே ஏறப்படாத நல்ல சிறுதேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்,
250. தளர் நடை வருத்தம் வீட-தமது தளர் நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி,
250-52, அலர் முலை செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்-பால்சுரந்த முலையினை உடைய செவிலித்தாயராகிய அழகினையுடைய மகளிரைத் தழுவிக்கொண்டு அம்முலையிற் பாலை நிறைய உண்டு தமது படுக்கையிலே துயில்கொள்ளும் அழகை உடைத்தாகிய நல்ல இல்லினையும்,
செவிலியம் பெண்டிர் என்பது ஒருமை பன்மை மயக்கம்.
253-4. தொல் பசி அறியா துளங்கா இருக்கை மல்லல் பெரு ஊர் மடியின் - ஏனை நாட்டிற்கு இயல்பாகிய பழையமிடியை அறியாத அசையாத குடியிருப்பினையு உடைய வளப்பத்தை உடைத்தாகிய பெரிய ஊரின் கண்ணே தங்கின்,
254-6. மடியா வினைஞர் தந்த வெள் நெல் வல்சி மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்- தொழிலொழிந்திராத தொழில்செய்வார் கொண்டுவந்த வெள்ளிய நெற்சோற்றை மனையின் கண்ணே வாழும் கோழிப்பெடையினாற் சமைத்த பொரியலோடு பெறுகுவிர்;
"கோழி கூகை யாயிரண் டல்லவை, சூழங் காலை யளகென லமையா"(தொல். மரபியல்.சூ. 55) என்றார்.
செறுவிற்(212) புதுப்பூ முனையின் (214)மாமலர் கொய்துகொண்டு (216) சவட்டிப் (217)பெய்த கண்ணியைச் (218) சூடித் (219)தளரா இருக்கைகளிற் (242) கூடோங்கு நல்ல இல்லையும்(247) அழகினையுடைய நல்ல இல்லையும் (252)துளங்கா இருக்கையினையும் உடைய (253) பேரூரிலேதங்குவீராயின் (254) வல்சியை (255) வாட்டொடும் பெறுகுவிர் எனக் கூட்டுக.
257-9. [மழைவிளை யாடுங் கழைவளரடுக்கத், தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன், கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு:] மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து அணங்கு உடை யாளி தாக்கலின் கணம் சால் வேழம் பல உடன் கதழ்வு உற்றாங்கு - .
மேகங்கள் விளையாடித் திரியும் மூங்கில்வளர்கின்ற பக்கமலையிலே தம்மை வருத்து தலை உடைய #1யாளிபாய் கையினாலே திரட்சி அமைந்த யானை பலவும் கூடிக் கலங்கிக் கூப்பிட்டாற்போல,
260-61. எந்திரம் சிலைக்கும்துஞ்சா கம்பலை விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்-ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையை உடைய கருப்பஞ்சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்கள்தெடாறும்,
ஆலை: ஆகுபெயர்.
262. கரும்பின் தீ சாறுவிரும்பினிர் மிசைமின்-கரும்பினது இனிய சாற்றை முற்படக் குடித்துப் பின்னர் அக்கரும்பின்கட்டியைத் தின்பீராக;
@ "மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி", § "வீழ்களிறு மிசையாப் புலியினும்" என மிசைதல் தின்றற்றொழில்மேநின்றது.
263-5. [வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத், தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த, குறியிறைக் குரம்பை:] வெள் கோடு விரைஇ வேழம் நிரைத்து தாழை முடித்து தருப்பை வேய்ந்த குறியிறை குரம்பை-வஞ்சிமரமும் காஞ்சிமரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றி வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழைநாராற் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறியஇறப்பை உடைய குடிலினையும்,
முடிதந்து முடித்தென விகாரம். குறியிறை பண்புத்தொகையாதலின், $மருவின்பாத்திதாய் நின்றது.
265. பறி உடைமுன்றில்-மீனை வாரியெடுக்கும் பறிகளை உடையமுற்றத்தினையு உடைய,
266-7. கொடு கால் புன்னை கோடுதுமித்து இயற்றிய பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர் - வளைந்த காலை உடைய புன்னைகளுடைய கொம்புகளை வெட்டியிட்ட பசிய காய்கள் நாலும் பரந்த மணலை உடைய பந்தரிலே,
பைங்காய்-சுரைக்காய் முதலியன; புன்னங்காயுமாம்.
268. இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி-இளையவர்களும் முதிர்ந்தவர்களும் சுற்றத்துடனே நிறைந்திருந்து பின்பு,
269-71. புலவு நுனை பகழியும் சிலையும்மான செ வரி கயலொடு பசு இறா பிறழும் மை இரு குட்டத்து மகவொடு வழங்கி -புலால்நாறு முனையுனை உடைய அம்பையும் வில்லையும் ஒப்பச் சிவந்தவரியினை உடைய கயல்களோடே பசிய இறாப் பிறழும் கருமையை உடைய பெரிய ஆழ்ந்த குளங்களைப் பிள்ளைகளோடே உலாவி மீனைப் பிடித்து,
---------------
# யாளி-இங்கே அத்தியாளி.
@ கலித்தொகை,50:2.
§ அகநானுறு, 29:3.
$ தொல். குற்றியலுகரப். சூ.77.
---------
272-3. கோடை நீடினும் குறைபடல் அறியா தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்-கோடைக் காலம்நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழ்ந்தும் குளங்களினுடைய கரையைக்காத்திருக்கும்,
"வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற், களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி, யளித்தவை பாடி யாட"(சீவக, 804.) என்றார் பிறரும்.
274. கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்-வளைந்த முடியுனை உடைய வலையை வீசுவாருடைய குடியிருப்பிலே தங்குவீராயின்,
பந்தரிலே (267) துவன்றி(268)வழங்கிக் (271) காத்திருக்கும் (273) வலைர் என முடிக்க.
குரம்பையினையும், முன்றிலினையும்(265) உடைய குடி (274) என்க.
275. அவையா அரிசி அம் களி துழவை-குற்றாத கொழியலரிசியை அழகினை உடைய களியாகத் துழாவி அட்ட கூழை,
276. மலர்வாய் பிழாவில் புலர ஆற்றி-அகன்ற வாயை உடைய தட்டுப் பிழாவிலே உலர ஆற்றி,
277-8. பாம்பு உரை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூ புறம் நல் அடை அளைஇ-பாம்பு கிடக்கின்ற புற்றின்கண்கிடக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும் பொலிவுபெற்ற புறத்தினை உடைய நல்ல முளையை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து,
நெல்லடையும் பாடம்.
278-9. [தேம்பட, எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி:] தேம்பட இரு எல்லையும் இரு இரவும் முறை கழிப்பி - இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து,
280-81. [வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த, வெந்நீ ரரியல் விரலலை நறும்பிழி:]
வல் வாய் சாடியின் வழைச்சு அறவிளைந்த-வலிய வாயினை உடைய சாடியின் கண்ணே இளமை அறும்படி முற்றின,
விரல் அலை அரியல் வெ நீர் நறுபிழி-விரலாலே அலைத்து அரிக்குந் தன்மையை உடைத்தாகிய வெவ்விய நீர்மையை உடைய நறிய கள்ளை,
282. தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - மிகவும் உலராத மீனைச் சுட்டதனோடே இளைத்த அளவிலே பெறுகுவிர்;
ஆற்றி (276) அளைஇக் (278) கழிப்பி(279) விளைந்த (280) பிழி (281) என்க.
குடிவயிற் சேப்பின் (274)பிழியைப் (281) பெறுகுவிரெனமுடிக்க.
283. பசு ஊன் பெய்த சுவல் பிணி பைந்தோல்-செவ்வியான இறைச்சி இட்டுவைத்த தோளிடத்தே கோத்து நாற்றின பசியதோலினையுடைய.
என்றது, தூண்டிலிற் கோக்கும் இரையிட்டு வைக்குந் தோற்பையை.
284. கோள் வல் பாண் மகன்-மீனைத் தப்பாமற் பிடிக்கவல்ல பாண்சாதியிற் பிறந்தவன்.
284-7. [தலைவலித் தியாத்த, நெடுங்கழைத் தூண்டி னடுங்க நாண் கொளீஇக், கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப், பொதியிரை கதுவியபோழ்வாய் வாளை:]
நெடு கழை தலை வலித்து யாத்த நாண் தூண்டில் கொளீஇ பொதி இரை-நெடிய மூங்கிற்கோலைத் தலையிலே வலித்துக்கட்டின கயிற்றிடத்தே தூண்டிலைக் கொளுத்தி அதனை மறையப் பொதிந்த இரையை.
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்பநடுங்க கதுவிய போழ் வாய் வாளை - வளைந்த வாயினை உடைய தூண்டிலினது மடித்த தலை இரையின்றித் தனிக்கும் படியாகக் கயிறு நடுங்க அவ்விரையைக் கௌவி அகப்படாது போன அங்காந்த வாயை உடைய வாளை மீன்
288-9. நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் நீத்து உடை நெடு கயம்-நீர்க்கு அணித்தாய் நின்ற பிரம்பினது காற்றாலசையும் நிழலை நீரிற்கண்டு அஞ்சும் பெருக்கினையுடைய நெடிய குளத்திலே,
289-90. தீ பட மலர்ந்த கடவுள் ஒள் பூ அடைதல் ஓம்பி-நெருப்பின்தன்மை நீரிலேயுண்டாகப்பூத்த கடவுள் சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூவைப் பறித்து முடித்தலைப் பரிகரித்து,
291-2. [உறைகான் மாறிய வோங்குயர் நனத்தலை, அகலிருவானத்துக் குறைவி லேய்ப்ப:]
ஓங்கு உறை கால் மாறிய உயர் அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப-ஓங்குகின்ற துளி கால்விழுதல் தவிர்ந்த உயர்ச்சியையுடைய அகன்ற பெரிய வானத்திடத்துக் குறைவில்லாகிய இந்திரவில்லையொப்ப,
293-4. [அரக்கிதழ்க் குவளையொடுநீல நீட, முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை;] அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி முரண்பூ மலிந்த முதுநீர் நன தலை (291)பொய்கை-சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடே நீலப்பூவும் வளர்ந்து ஒன்றற்கொன்று நிறம் மாறுபடுதலையுடைய ஏனைப் பூக்களும் மிக்க முதிய நீரையுடைத்தாகிய அகன்ற இடத்தையுடைய பொய்கைகளிடத்தே,
295-6. குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் பெருநாள் அமயத்து பிணையினிர்கழிமின்-பறிப்பார் நுங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களைப் பெரிதாகிய நாட்காலத்த்தே சூடிப்போமின்;
வாளை (287) வெரூஉம் (288) கயத்திலே மலர்ந்த (289) பூவை ஓம்பிக் (290) குறைவிலேய்ப்பப் (292) பூமலிந்த பொய்கைகளிடத்தே (204) குறுநரிட்ட மலரைப் (295) பிணையினிர் கழிமினென முடிக்க.
297. செழு கன்று யாத்த சிறு தாள் பந்தர்-வளவிய கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தரினையும்,
298. [பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்:]
பைஞ்சேறு மெழுகிய நல் நகர்-ஆப்பியான் மெழுகிய நன்றாகிய அகங்களையும்,
படிவம்-தாம் வழிபடுந்தெய்வங்களையுமுடைய உறைபதி (301) யென்க.
299. மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது-மனைகளிலே தங்குங் கோழிகளுடனே நாயுஞ்சேராமல்,
300. வளை வாய் கிள்ளை மறைவிளி பயிற்றும் - வளைந்தவாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்,
301. மறை காப்பாளர் உறை பதி சேப்பின்-வேதத்தைக் காத்தற்றொழிலைச் செய்வார் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின்,
துன்னாமல் (209)உறையும் பதியென்க.
302. பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்-பெரிய நன்றாகிய விசும்பிடத்து வடதிசைக்கண்ணே நின்றுவிளங்கும்,
303. சிறுமீன் புரையும் கற்பின்-அருந்ததியையொக்குங் கற்பினையும்,
நறு நுதல்-நறிய நுதலினையுமுடைய,
304. வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட - வளையையுடைய வாகிய கையையுடைய பார்ப்பனி பதமறிந்து அட்டனவற்றை,
என்றது பாற்சோறு பருப்புச்சோறு முதலியவற்றை.
305. சுடர் கடை - ஞாயிறுபட்ட காலத்தே,
பறவை பெயர் படு வத்தம்-பறவையினது பெயரைப்பெறுநெல்லு,
என்றது, இராசான்னமென்னும் பெயர்பெறுகின்ற நெல்லென்றவாறு, ஆகுதி பண்ணுதற்கு இந்தநெல்லுச்சோறே சிறந்ததென்று இதனைக்கூறினார். இனி மின்மினி நெல்லென்பாருமுளர்;இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச்சிறவாமையுமுணர்க.
306-8. [சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத், துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து, கஞ்சக நறுமுறி யளைஇ :] மாதுளத்து பசு காய் கறி கலந்து கஞ்சகம் நறு முறி அளைஇ சேதா நறுமோர் வெண்ணெயின் உருப்பு உறு போழொடு-#கொம்மட்டிமாதுளையினுடைய பசியகாய் மிளகு பொடிகலக்கப்பட்டுக் கருவேம்பினது நறிய இலை அளாவப்பட்டுச்சிவந்த பசுவினது நறியமோரின் கண் எடுத்தவெண்ணெயின்கண்ணேகிடந்து வேகலின் வெம்மையுறுகின்ற வகிரோடே,
308-10. [பைந்துணர், நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த தகை மாண் காடியின் :]நெடுமரம் கொக்கின் பைந்துணர் நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின் -நெடிய மரமாகிய மாவினது பசிய கொத்திடத்து நறிய வடுவினைப் பலவாகப்போகட்ட அழகுமாட்சிமைப் பட்ட ஊறுகறியோடே,
310. வகைபட பெறுகுவிர்-சோற்றின்கூறுகளுண்டாகப் பெறுகுவிர்;
சேப்பின் (301) மகடூஉ (304)வத்தத்தானுண்டான அரிசியை (305) அட்டனவற்றைக் (304)சுடர்க்கடையிலே (305) போழோடே (307) காடியோடே பெறுகுவிரென்க.
311-2. வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை -விளையாட்டினையுடைய திரள்களோடே நீருண்ணுந் துறையிலேகூடி நீராடுகின்றமகளிர் போகட்டுப்போன பொன்னாற்செய்த மகரக்குழையினை,
313. இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென- இரையைத்தேடுகின்ற நீலமணிபோலும் சிச்சிலி தனக்கு இரையாகத்துணிந்தெடுத்ததாக,
314. புள் ஆர் பெண்ணை புலம்பு மடல், செல்லாது-பறவைகள் நிறைந்திருக்கின்ற பனையில் தனித்தமடலிற்போகாமல்,
315-6. கேள்வி அந்தணர் அரு கடன் இறுத்த வேள்வி தூணத்து அசைஇ-நூற்கேள்வியையுடைய அந்தணர் அரு கடன் இறுத்த வேள்வி தூணத்து அசைஇ-நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த யாகசாலையிடத்து நட்டயூபத்தின்மேலேயிருந்து,
316-7. [யவன, ரோதிம விளக்கினுயர்மிசைக் கொண்ட:] யவனர் உயர்மிசை கொண்ட ஓதிமவிளக்கின்-சோனகர் கூம்பின்மேலிட்ட அன்னவிளக்குப்போல,
ஈண்டுக் @காரன்னமென்றுணர்க.
-----------
# "மாதுளங்காய்-கொம்மட்டிமாதுளங்காய்; புளித்தகறி ஆக்குதற்குக் கொம்மட்டி மாதுளங்காய் சிறக்கும்" சிலப். 16 : 52. அரும்பத.
@ "காரன்ன முண்மையின், வெள்ளையன்னம் இனஞ் சுட்டிய பண்பு" (சீவக. 930. ந.)என்பதனாலும், "பள்ள நீர்குடைந் தஞ்சிறைப் பாசிபோர்த் தெழுந்த, வெள்ளை யன்னத்தைக் காரன மெனப் பெடை வீழ்ந்த, உள்ள மீட்டலமர" (திருவிளை. நகரச்.12) என்பதனாலும்,
-----------
318. வைகுறும் மீனின்-இராக்காலம் விடிதற்குக் காரணமான வெள்ளியாகிய (பி-ம். வெள்ளியதாகிய) மீன் போல,
பைபய தோன்றும்-ஒளி விட்டுவிளங்காது தோன்றும்,
319. #நீர்ப்பெயற்று எல்லை போகி-நீர்ப்பெயற்றென்னும் ஊரினெல்லையிலே போய்,
அசைஇ (316) விளக்கின் (317)மீனிற்றோன்றும் (318)நீர்ப்பெயற்றென்க.
319-21. பால் கேழ் வால் உளைபுரவியொடு வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர் படப்பை-பால்போலும் வெள்ளியநிறத்தினையும் வெள்ளிதாகிய தலையாட்டத்தினையுமுடைய மேற்றிசைக்கண் உளவாகிய குதிரைகளுடனே வடதிசைக்கண் உளவாகிய நுகரப்படும் பொருள்களைக் கொண்டுவந்துதரும் மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கப்பட்ட பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
322-4 [மாட மோங்கிய மணன்மலி மறுகிற், பரதர் மலிந்த பல்வேறு தெருவிற், சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் :]
மணல் மலி மறுகின் சிலதர்காக்கும் சேண்உயர் வரைப்பின்-மணல் மிக்க தெருவுகளில் தொழில்செய்வார் காக்கப்படும் மிகவுமுயர்ந்த பண்டசாலைகளையும்,
தொழில்செய்வார்-கம்மகாரர்.
பரதர் மலிந்த மாடம் ஓங்கிய பல்வேறு தெருவின்-@பரதவர்மிக்க மாடங்களுயர்ந்த பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,
325-7. நெல் உழு பகட்டொடு கறவை துன்னா மேழகம் தகரோடு எகினம் கொட்கும் கூழ் உடைநல் இல்-நெல்லினைப் பெறுதற்கு உழுகின்றஎருதுகளுடனே பசுக்கள் நெருங்காவாய் மேழகக்கிடாயோடே நாயும் சுழன்று திரியும் சோறுடைய நன்றான அகங்களையுமுடைய பட்டினம் (336),
இது §திமிலர் முதலியோரிருப்புக் கூறிற்று.
327. [கொடும்பூண் மகளிர்:]
"காரனங் குலாய்ப்படிந்த காட்சியொப்ப" (காஞ்சிப். கழுவாய்ப்.16)என்பதனாலும் காரன்னமுண்மை அறியப்படும்.
உயர்நிலை (332) வான் தோய் மாடத்து (333) கொடு பூண் மகளிர் - உயர்ந்த நிலைமையையுடைய தேவருலகத்தைத்தீண்டும் மாடத்துறையும் வளைந்த பேரணிகலங்களையுடைய மகளிர்,
----------
#1 மதுராந்தகம் தாலூகாவில் ‘நீர்ப்பேர்' என வழங்கும் ஒரூர் உண்டு; அஃது இதுவாக விருக்கலாமென்று தோற்றுகின்றது.
@ "விலங்குவலைப் பரதவர் மீன்றிமில் விளக்கமும்"(சிலப்.6 : 142)
§ திமிலர்: "வன்கைத் திமிலர்"(மதுரைக். 319); திமில்-மீன்படகு.
----------
328-9. கொன்றை மெல் சினை பனி தவழ்பவை போல் பைங்காழ் அல்குல் நுண் துகில் நுடங்க-கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளிலே பனிமாசுகிடந்து தவழ்கின்றவை போலப் பசிய மணிகள்கோத்த வடங்களையுடைய அல்குலிற் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய,
330-31. மால் வரை சிலம்பின் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி-பெருமையையுடைய பக்கமலையிலே மனவெழுச்சிமிக்கு ஆரவாரிக்கும் தோகையையுடைய மயில்போலே உலாவி.
331-3. [கால, தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை, வாய்றோய் மாடத்து வரிப்பந் தசைஇ :]
தமனியம் கால பொன் சிலம்பு ஒலிப்ப வரி பந்து அசைஇ-பொற் பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப நூலால்வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
334-5. [கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய, முத்த வார்மணற் பொற்கழங் காடும் :] முத்தம் வார் மணல் பைபய கை புனை குறு தொடிதத்த பொன் கழங்கு ஆடும்-முத்தையொத்த வார்ந்தமணலிலே மெத்தென மெத்தெனக் கையிற்புனைந்த குறுந்தொடியசையப் பொன்னாற்செய்த கழலைக்கொண்டு விளையாடும்,
மாடத்து (333) மகளிர் (321) நுடங்க(329) இயலி (331) ஒலிப்ப (332) அசைஇப் (333) பின்னர்க் கழங்காடும் (335) பட்டினம் (336) என்க;
இது வணிகரிருப்பைக் கூறிற்று.
படப்பையினையும் (321)வரைப்பினையும் (324) தெருவினையும் (332) இல்லினையு (327)முடைய பட்டின (336) மென்க.
336. பட்டினம் மருங்கின் அசையின்-பட்டினத்திடத்தே இளைப்பாறுவீராயின்,
முட்டு இல்-முட்டில்லையாக,
பெறுகுவி (345) ரென மேலே கூட்டுக.
337. பைங்கொடி நுடங்கும் பலர் புகுவாயில்-பசியகொடிகள் அசையும் கள்ளுண்பார் பலரும் புகுகின்ற வாயிலிடத்து,
338. [செம்பூத் தூய செதுக்குடைமுன்றில்:] தூய செ பூ செதுக்கு உடை முன்றில்-தெய்வத்திற்குத் தூவின செய்ய பூவாடலையுடைய முற்றத்தில்,
339-40. கள் அடு மகளிர் வள்ளம் நுடங்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்-கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவின வடிந்து சிந்தும் சிலநீர் பலகால்வடிதலின் நிறைந்துவழிந்த குழம்பிடத்து,
341-2. #ஈர் சேறு ஆடிய இரு பல் குட்டி பல் மயிர் பிணவொடு ஈரத்தையுடைய சேற்றை யளைந்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே,
வாயிலிடத்து (337) முற்றத்துக் (338)குழம்பிடத்துச் (340) சேறு (341) என்க.
342. @பாயம் போகாது-புணர்ச்சியைக்கருதுங்கருத்தாற்போகாமல்,
என்றது புணரிற் கொழிப்பின்றாமென்றவாறு.
343-5. பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறு தாள் ஏற்றைகொழு நிணம் தடியொடு-பலநாள் குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின் கொழுவிய நிணத்தையுடைய தசையோடே,
§"ஆற்றலொடு புணர்ந்த வாண்பால்" ஆதலின் ஏற்றையென்றார்.
345. கூர் நறா பெறுகுவிர்-களிப்புமிக்க கள்ளைப் பெறுகுவிர்;
போகாமற் (342) குழிநிறுத்து (344)என்க.
அசையிற் (336) பெறுகுவிரென்க.
346-8. [வான மூன்றிய மதலை போல,வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி, விண்பொர நிவந்த வேயா மாடத்து:]
வானம் ஊன்றிய மதலை போல (346)விண் பொர நிவந்த மாடம் (348)-ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த ஒருபற்றுக்கோடு போல விண்ணைத்தீண்டும்படி ஓங்கினமாடம்,
சாத்திய ஏணி ஏற்றி அரு சென்னி (347) மாடம் (348)-தன்னிடத்லுச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய மாடம்,
$வேயா மாடத்து (348)-கற்றைமுதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்திடத்தே,
-----------------
# "விழியாக் குருளை மென்முலைசுவைப்பக், குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி" (தொல். மரபு. சூ. 8, பேர். மேற்)
@ பாயம்-மனத்திற்கு விருப்பமானதென்று பொருளெழுதுவர்; குறிஞ்சிப். 58.
§ "ஆற்றலொடு புணர்ந்தவாண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவியுரித்தென மொழிப" (தொல். மரபு. சூ. 49)
$ "வேயாமாடம்-தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன" (சிலப் . 5:7,அரும்பத.)
---------
349. இரவில் மாட்டிய இலங்கு சுடர்-இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு.
349-51. [ஞெகிழி, யுரவுநீ ரழுவத் தோடு1கலங்கரையும், துறை:] உரவு நீர் அழுவத்து ஞெகிழி ஓடும் கலம் கரையும் துறை-உலாவுகின்ற கடற்பரப்பிலேவந்து நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறொரு துறைக்கண் ஓடுங்கலங்களை இது நம் துறையென்று அழைக்குந் துறை,
இனி, ஞெகிழியைக் கடைக்கொள்ளியாக்கி அதனை எரித்துக் கொளுத்தின இலங்குசுடரென்றுமுரைப்பர்.
351: பிறக்கு ஒழிய போகி-பின்னே கிடக்கப்போய்,
351-3. [கறையடிக், குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும், வண்டோட்டுத் தெங்கின் :]
குன்று உறழ் கறை அடி யானை மருங்குல் ஏய்க்கும் தெங்கும்-மலையோடு மாறுபடுகின்ற உரல்போன்ற அடியினையுடைய யானையின் உடம்பையொக்கும் சருச்சரையையுடைத்தாகிய தெங்கினுடைய,
353. [வாடுமடல் வேய்ந்த :]
வள் தோட்டு (353) வாடு மடல்வேய்ந்த-வளவிய @இலையினையுடைய உலர்ந்த §பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (355) யென்க.
354. மஞ்சள் முன்றில்-மஞ்சளையுடைய முற்றத்தினையும்,
மணம் நாறு படப்பை - மணம்நாறுகின்ற பூந்தோட்டங்களையுமுடைய,
355. தண்டலை உழவர் தனி மனை சேப்பின் - தோப்புக்குடிகளுடைய ஒப்பில்லாத மனைகளிலே தங்கின்,
356. [தாழ்கோட் பலவின்சூழ்சுளைப் பெரும்பழம் :]
தாழ் கோள் பலவின் பழம்-தாழ்ந்த குலைகளையுடைய பலாவினது பழம்,
சூழ் சுளை பெரு பழம்-தின்பார் விரும்பிச்சூழும் சுளையையுடைய பெரிய பழத்தையும்,
357. $வீழ் இல் தாழை குழவி தீ நீர்-விழுதில்லாத தாழையாகிய தெங்கின் இளைதாய இனிய நீரையும், "பிள்ளை குழவி கன்றே போத்தெனக், கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே" (தொல். மரபு. சூ. 24) என்றதனாற் குழவித்தீநீர் என்றார்.
-----------
1# கலங்கரைவிளக்கமென்னும்பெயர் ஈண்டு அறியற்பாலது.
@ தென்னையின் மட்டையையும் இலையென்று ஆன்றோர் வழங்குவர்;
"இலையார் தெங்கிற் குலையார் வாழையின், பாளைக் கமுகின் பழம் வீழ்சோலைப் பழன நகராரே"(தே. திருஞா.)
§ பழுத்தல்-பழுப்பு; கீறி இதனால்முடையப்பட்டது கீற்று.
$ வீழில் தாழையென்பது தென்னைக்குவெளிப்படை; மற்றொன்று"வீழ்த்தாட்டாழை" (நற் .78:4.) "வீழ்தாழ் தாழை யூழுறு கொழு
-------
358. கவை முலை இரு பிடி கவுள் மருப்ப ஏய்க்கும்-கவைத்த முலையையுடைய பெரிய பிடியினுடைய கவுளிடத்துக் கொம்புகளையொக்கும்,
359. [குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் :] குலை கூனி முதிர் வாழை வெள்பழம்-குலைகள் தம்பெருமையாலே நிலத்தே தாழ வளைந்து முற்றின வாழையினது வெள்ளிய பழத்தையும்,
360-61. திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் தீ பல்தாரம் முனையின்-திரண்ட அடியையுடைய பனையினது நுங்கோடே வேறும் இனிய பலபண்டங்களையும் வெறுக்கின்,
361-2. [சேம்பின், முளைப்புறம் :] முளை புறம் சேம்பின் முளையை இடத்தேயுடைய சேம்பினது இலையோடே,
362. முதிர் கிழங்கு ஆர்குவிர்-முற்றின வள்ளிமுதலிய கிழங்குகளைத் தின்பீர் ;
சேப்பிற் (355) பழத்தையும் (356) நீரையும் (357) பழத்தையும் (359) நுங்கோடே (360)பலபண்டங்களையும் முனையிற் (361) கிழங்கார் குவிரென்க.
362-4. பகல் பெயல் மழை வீழ்ந்தன்ன மா தாள் கமுகின் புடை சூழ் தெங்கின் -பகற்பொழுதிலே பெய்தலையுடைய மழை கால்விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய,
364. முப்புடை திரள் காய்-மூன்றுபுடைப்பினையுடைய திரண்டகாய்,
பழுத்தால் அடி மூன்றாகப்புடைத்தல் அதற்கியல்பு. இனி மூப்புடைத்திரள் காயும் பாடம்.
365-6. ஆறு செல் வம்பலர் காய் பசி தீர சோறு அடு குழிசி இளக விழூஉம்-வழிச்செல்கின்ற புதியோர் தமது மிக்கபசி தீரும்படி சோற்றை ஆக்குகின்ற பானை அடுப்பினின்றும் அசைந்துவிழும்வடி நிலத்தே விழும்,
367. வீயா யாணர் வளம் கெழுபாக்கத்து-விடாத புதுவருவாயினையுடைய செல்வம்பொருந்தின பாக்கத்திடத்து,
368. பல் மரம் நீள் இடைபோகி-பலமரங்கள் வளர்ந்த இடத்திலே போய்,
முகை"(குறுந். 228:1). "தாழை வீழ்கயிற் றூசல்" (அகநா. 20:6) எனக் கூறப்படுதல்காண்க.
368-9. [நன்னகர், விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த :] விளங்கு சுவர் உடுத்த விண் தோய் மாடத்து நல் நகர்-விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நன்றாகிய ஊர்களிலே,
370-71. #வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை-வாடுங்கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக்கூத்தின் வளப்பம் பலவற்றையுந் தருதற்குக்காரணமாகிய புறநாடுபலவற்றையும் போனபின்பு,
வளம்பலவென்றார், இக்கூத்து ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய் வருதலின்.
என்றது, சிறப்புடைநாடுகளைப்பாடித் தாழ்ச்சிபெற்ற இழிகுலத்தோருறையும் புறநாடுகளைப் பாடாமல்தொகுக்கின்றார், அவை புறநாடென்பதுதோன்ற அவர்கள் காண்டற்குரிய வள்ளிக்கூத்தினைக்கூறி அதனை வெளிப்படுத்தினார். இது, புறத்தினையியலில், "வெறியறிசிறப்பு"(தொல். புறத்.சூ. 5) என்னுஞ்சூத்திரத்து, ‘வாடாவள்ளி' என்பதனானும், @ "மண்டம ரட்டமறவர் குழாத்திடை" என்னுமுதாரணத்தானும் உணர்க.
371-2. நீடு குலை காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு-நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடைய அழகிய பக்க மலையிலே யானை கிடந்தாற்போல,
373. பாம்பு அணைபள்ளி அமர்ந்தோன் ஆங்கண்-பாம்பணையாகிய படுக்கையிலே துயில்கொண்டோனுடைய §திருவெஃகா விடத்து, காந்தளென்றதற்கேற்பப் பாம்பணையென மெலித்தார்.
------------
# "வாடாவள்ளி-வாடுங்கொடியல்லாத வள்ளிக்கூத்து ; அஃது இழிந்தோர் காணுங் கூத்து. உ-ம். ‘மண்டம.........பெரிது' இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப்பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும்பற்றி" (தொல். புறத். சூ. 5,ந. ) என்பது இங்கே கூறியசெய்திகளை விளக்கும்.
@ "மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக், கண்ட முருகனுங் கண்களித்தான்-பண்டே, குறமகள் வள்ளிதன் கோலங்கொண்டாடப், பிறமகள் நோற்றாள் பெரிது" (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)
§ திருவெஃகாவென்பது திருமாலினுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளுளொன்று. இது காஞ்சிப்பதியிலுள்ளது. இங்கே திருமால் சேஷசயனத்திருக்கோலமுடையவராக எழுந்தருளியிருக்கின்றார் ; "பாந்தட்பாழியிற் பள்ளி விரும்பிய, வேந்தனைச்சென்று காண்டும் வெஃகாவுளே" (திவ். பெரியதி. 10, 1 : 7)
----------
374. # [வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் :]
வெயில் நுழைபு அறியா பொதும்பர்-ஞாயிற்றின்கதிர் தோன்றிய காலத்தும் படுகின்றகாலத்துமுட்படச் சிறிதும் செல்லுதலறியாத பொதும்பர்,
குயில் நுழை பெரதும்பர்-இலைநெருக்கத்தாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்காவில்,
375-6. குறு கால் காஞ்சி சுற்றிய நெடு கொடி பசு இலை குருகின் புன்புறம் வரி பூ-குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடியகொடியினையும் பசிய இலையினையுமுடைய குருக்கத்தியினுடைய புற்கென்ற புறத்தினையும் வரிகளையுமுடைய பூக்கள் உறைப்ப (379) வென்க.
377-8. கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த இழை சூழ்வட்டம் பால் கலந்தவை போல்-கரிதாகிய சட்டியிலே அப்பவாணிகர் பாகுடனே வேண்டுவனகூட்டிச் சேர்க்கப்பட்ட நூல்போலச் சூழ்ந்துகிடக்கின்ற @அப்பம் பாலிலே கிடந்தவைபோல,
சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவைபோலவென்க.
பிடித்த வட்டமென்க.
379. நிழல் தாழ் வார் மணம் நீர்முகத்து §உறைப்ப-நிறங்கிளர்கின்ற வார்ந்த மணலிடத்துக் குழிகளின்ற நீரிடத்தே மிகவிழும்படி,
உறைப்பவென்றதனைத் துளிப்பவென்றால் ஈண்டு ஒப்பன்மையான் உப்புறைப்ப என்றாற்போலக்கொள்க.
380. புனல் கால் கழீஇய பொழில் தொறும்-நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கடோறும்,
என்பதனால், முன்பு நீர்நின்றுபோகலிற் 4பூத்தவென்றார்.
---------
# "விரிகதிர்ச் செஞ்ஞாயிற்றின் வெயில்புகாப் பொதும்பர் தோறும்"(சீகாளத்திப். கண்ணப்பச். 66)
@ "அப்பம்-இப்பொழுது இடியப்பமென்று வழங்கும் ஒருவகைச் சிற்றுண்டி.
§3 "உறைப்பு மிகுதியைக்குறித்தல்";"ஓது காத லுறைப்பி னெறி நின்றார்" (பெரிய. திருக்கூட்டச்.7)
$ "பூத்தவென்றது குருக்கத்தி பூத்தமையைக் குறித்தபடி.
---------
380-82. திரள் கால் சோலை கமுகின் சூழ் வயிறு அன்ன நீலம் பைங்குடம் தொலைச்சி -திரண்ட தண்டினையுடைய சோலையிடத்துநிற்குங் கமுகினுடைய சூற்கொண்ட வயிற்றையொத்த #பச்சைக்குப்பிகளை உண்டு போக்கி(பி-ம்.) நேராக்கி).
382-3. நாளும் பெரு மகிழ் இருக்கை மரீஇ - நாடோறும் பெரிய மகிழ்ச்சியையுடைய இருப்பை மருவி,
383-4. சிறு கோடு குழவி திங்கள் கோள் நேர்ந்தாங்கு-சிறிய கோட்டையுடைய @இளைதாகிய பிறையைச் செம்பாம்பு தீண்டினாற்போல,
இஃது §இல்பொருளுவமை.
385. சுறவுவாய் அமைத்த சுரும் புசூழ் சுடர் நுதல்-மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின சுரும்புகள்சூழும் ஒளியையுடைய நுதலினையும்,
386. $நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழை கண்-கள்ளினை உண்டுபொருந்திய நன்றாகிய அழகினையுடைய குளிர்ச்சியையுடைத்தாகிய கண்ணையுமுடைய,
வள்ளத்தினறவைத் தம்முள்ளே ஆக்கினமையிற் பெயர்த்தென்றார்.
387. £மடவரல் மகளிரொடு பகல் விளையாடி-மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடே பகற்பொழுது விளையாடி,
-----------
# பச்சைக் குப்பிகளிலிருந்த கள்ளை உண்டார்களென்பது கருத்து. கள்ளைக் குப்பியிலே இட்டுவைத்தல், "கள்ளி னிரும்பைக் கலஞ்செலவுண்டு" (மதுரைக்.228) என்பதனாலும், ‘கள்ளினையுடையவாகிய பெருமையினையுடைய குப்பிகள் வற்றும்படியாகக் கள்ளினையுண்டு' என்னும் அதன் உரையாலும் உணரப்படும்.
@ இளைதாகிய-இளையதாகிய ;"இளைதாக முண்மரங் கொல்க' (குறள், 879)
§ பிறையைப் பாம்பு தீண்டுதலின்மையின் இங்கே இல்பொருளுவமை யாயிற்று; "இளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா, தணங்கருந் துப்பி னரா" (நாலடி, 241) என்பது இதனை வலியுறுத்தும்.
$ நறவம்பூவினிதழை மகளிர்கண்ணுக்கு உவமை கூறுதலும் பண்டைவழக்கமாதலால், நறவுப்பெயர்த்தமைத்த வென்பதற்கு நறவம் பூவினிதழைப் பெயர்த்தமைத்தாற்போன்ற வென்று பொருள் கொள்ளுதலுமாம்; "பேர்மகிழ் செய்யும் பெருநறாப் பேணியவே, கூர்நறா வார்ந்தவள் கண்"."நயவரு நறவிதழ் மதருண்கண்" (பரி, 7:63-4. 8:75), "நறவின், சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலிர்கொளீரிமை" (அகநா. 19:9-11) என்பவையும் இதனை வலியுறுத்தும்.
£ "மடவரல் வள்ளியொடு" (முருகு. 102) ; ‘மடவரல்-மடப்பம்' (புறநா. 89;2, உரை)
----------
388-9. பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூமலி பெரு துறை-பெறுதற்கரிய பழமையுடைத்தாகிய புகழினையுடைய துறக்கத்தை யொக்கும்தப்பாமல் நீர்வருமுறைமையினையுடைய பூ மிகுகின்ற பெரியதுறையிடத்தே,
துறை, நுகர்பொருள்குறைவின்மையின், துறக்கமேய்க்குமென்றார்.
390. செவ்வி கொள்பவரோடு அசைஇ - இளவேனிற்செவ்வியை நுகர்வாரோடு இளைப்பாறி,
390-91. அவ்வயின் அரு திறல் கடவுள் வாழ்த்தி-அத் #திருவெஃகாவணையில் அரியதிறலினையுடைய திருமாலை வாழ்த்தி,
391-2. [சிறிதுநுங், கருங்கோட்டின்னிய மியக்கினிர் கழிமின்:] நும் கரு கோடு இன் இயம் சிறிது இயக்கினிர் கழிமின்-நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழைச் சிறிது வாசித்து அவ்விடத்துநின்றும் போமின் ;
ஆங்கட் (373) பொதும்பர்க் (374) குருகின்பூ (376) உறைப்பக் (379) கழீஇய ஒளபாழிறொறும் (380) மகளிரோடே பகல்விளையாடிப் (387) பெருந்துறைச் (339) செவ்விகொள்பவரோடசைஇ (390) நீலப்பைங்குடந் தொலைச்சி (382) மரீஇக் (383) கடவுள்வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமினென முடிக்க.
393-6. [காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ, நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம், கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற் களிறுகத னடக்கிய வெளிறில்கந்தின் :]
@வெளிறு இல் கந்தின் கதன் அடங்கிய களிறு கீழ நெடு கையானை....... களுந்தின்கின்ற,
நெய் மிதி கவளம்-நெய்யை வார்த்து மிதித்த கவளங்களை,
§கடு சூழ் மந்திகாழோர் இகழ் பதம் நோக்கி கவரும் காவின் –
முற்பட்ட சூலையுடைய மந்தி $பரிக்கோலையுடையோர் நெகிழ்ந்தசெவ்வியைப்பார்த்து எடுத்துக்கொண்டுபோய்த் தின்னும் சோலையினையும்,
-------------
# இது, பிரமதேவர் செய்த வேள்வியை அழிக்கவந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளிகொண்டு அணைபோன்றுகிடந்த தலம் ; இங்கே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாஸேது என்பது திருநாமம். இது தமிழில் திருவெஃகாவணையென வந்ததென்பர் ; இது திருவெஃகணை யெனவும் வழங்கும்; "வெஃகணைக் கிடந்ததென்ன நீர்மையே" (திவ். திருச்சந்த. 63)
@ இந்தப் பாகத்துக்கு எந்தப்பிரதிகளிலும் உரைகிடைத்திலது ; வயிரமுள்ள கந்தினாற் கோபத்தையடக்கிய ஆண்யானைகளும், கீழே தாழ்ந்த நெடிய கைகளையுடைய பெண்யானைகளுந்தின்கின்றவென்க.
§ சிறுபாண். 158 உரையையும் குறிப்புரையையும் பார்க்க.
$ பரிக்கோற்காரர் - குத்துக்கோற்காரர் : "கோலோர் - பரிக்கோற்காரர்", "காழோர்-பரிக்காரர்" (மதுரைக். 381 658, ந.) ; இவர்கள் யானை வலிசெய்யுமாயின் அதனைக் குத்துதற்கு அதன் முன் நடந்து செல்பவர்கள்; "எதிர்பரிக் கார ரோட" (பெரிய. எறிபத்த. 12)
--------
397. திண் தேர் குழித்த குண்டு நெடு தெருவின்-திண்ணியதேர்கள் பலகால் ஓடிக்குழித்த தாழ்ச்சியையுடைய நெடிய தெருவினையும்,
398-400.[படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க், கடைகால் யாத்த பல்குடி கெழீஇக், கொடையுங் கோளும் :]
தொலைபு அறியா மைந்து மலி பெரு புகழ் படை(398) - கெடுதலறியாத வலிமிகுகின்ற பெரிய புகழினையுடைய படையினையும்,
@கொடையும் கோளும் (400) கெழீஇ கால் யாத்த பல் குடி கடை (399)-பண்டங்களை விற்றலும் கொள்ளலும்பொருந்தி அவ்விடத்து நெருங்கின பல குடிகளையுடைய கடையினையுமுடைய மூதூர் (411)
400-401. §வழங்குநர் தடுத்த அடையா வாயில்-உலகத்துக் கொடுப்பாரைக் கொடாமல் தடுத்த $பரிசிலர்க்கு அடையாத வாசலினையும்,
இவன் கொடைபெருமையாற் பிறர்தவிர்ந்தாரென்றார்.
401. மிளை சூழ் படப்பை-காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்,
402-4. [நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ், நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி :] நான்முக ஒருவன் பயந்த நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் பல் இதழ் தாமரை பொகுட்டின் காண் வர தோன்றி - நான்குமுகத்தையுடைய ஒருவனைப்பெற்ற நீலநிறத்தையுடைத்தாகிய வடிவினையுடைய திருமாலுடைய திருவுந்தியாகிய பல இதழையுடைய தாமரையினது கொட்டைபோல அழகுவிளங்கத்தோன்றி,
இதனாற் பழமையும் (பி-ம்.பெருமையும்) சிறப்பும் தூய்மையுங் கூறினார்.
---------
@ "கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது" (பட்டினப். 210)
§ இதன் பொருள்நயம் பாராட்டத்தக்கது.
$ "நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்" (பொருந. 66) ; "அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சடையப்பனூர்" (தனிப்.)
----------
405. #சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்-செங்கலாற்செய்யப்பட்டு உயர்ந்த புறப்படைவீட்டைச்சூழ்ந்த மதிலினையும்,
406-7. [இழுமென் புள்ளினீண்டுகிளைத் தொழுதிக், கொழு மென் சினைய கோளியுள்ளும் :] கொழு மெல் சினைய இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி கோளியுள்ளும்-கொழுவிய மெல்லிய கொம்புகளிடத்தனவாகிய இழுமென்னும் ஓசையையுடைய புறவினுடைய திரளுகின்ற சுற்றத்திரட்சியையுடைய பூவாமற்காய்க்கும் மரங்களில் விசேடித்தும்,
408. பழம் மீ கூறும் பலா போல-பழத்தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலாமரத்தையொக்க,
409-10. புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால்நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த @ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்,
410-11. §பலர் தொழு விழவுமேம்பட்ட பழ விறல் மூதூர் - பலசமயத்தாரும் தொழும்படி எடுத்த விழாக்களாலே ஏனைநகர்களின் மேலான வெற்றியினையுடைய பழைய ஊராகிய,
412-3. $அவாய் வளர் பிறை சூடி செவானத்து அந்தி வாய் ஆடும் மழை கடுப்ப-அழகிய இடத்தையுடைய வளரும்பிறையைத் தன் மேலே சூடிச் செக்கர்வானமாகிய அந்திக்காலத்தே உலாவுகின்ற மேகத்தையொப்ப,
கொம்பும் யானையும் குருதியும் உவமிக்கப்படும்பொருள்.
414-7. [வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப, வீரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப், பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே, ராராச் செருவி னைவர் போல :]
வெள் கோடு இரு பிணம் குருதி ஈர்ப்ப (414) பொருது (416)-வெள்ளிய கொம்புனையுடைய கரிய யானைப்பிணத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துக்கொண்டு போம்படி பொருது,
ஈரைம்பதின்மரும் களத்து அவிய (415) பெரு அமர் கடந்த (416) ஐவர் போல (417)-துரியோதனன் முதலிய நூற்றுவரும் களத்திலேபடும்படி பெரிய போரைவென்ற தருமன் முதலியோரைப்போல,
--------
# "சுடுமண்-ஓடு" (சிலப். 14:146, அடியார்,
@ "வான்கவிந்த வையகமெல்லாம்" (நாலடி.பொறை.10)
§ "பலர் புகழ்-எல்லாச்சமயத்தாரும் புகழும்" (முருகு. 2.ந.)
பல சமயத்தெய்வங்களுக்கும் காஞ்சி இடமாக இருத்தலின், பலரென்பதற்குப் பல சமயத்தாரென்று பொருள் செய்தனர்; "பரமசிவன் சத்தி குமரன்மால் புறத்தோர் பலரும்வீற்றிருப்பதப் பதியே" (கந்த. நகர. 90)
$ அ-அழகு: "அவ்விதழ்-அழகிய இதழ்" (நெடுநல். 41. ந.) "அச்சோலை-அழகிய சோலை" (தக்க. 65, உரை)
-----------
#கொடுஞ்சி நெடு தேர் (416) ஆரா செருவின் ஐவர் (417)-முன்னே தாமரைமுகையினையுடைய நெடியதேரினையும் தொலையாத போரினையுமுடைய ஐவர்,
418. அடங்கா தானையோடு உடன்று மேல் வந்த- ஓரெண்ணின் கண் அடங்காத படையுடனே கோவித்துத் தன்மேல்வந்த,
419. ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து-தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே வெற்றிக்களிப்புத்தோன்ற ஆரவாரித்து,
420-21. [கச்சி யோனே கைவண் டோன்ற, னச்சிச் சென்றோர்க்கேம மாகிய :] கைவள் தோன்றல் நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய கச்சியோனே - கைவளப்பத்தையுடைய தலைவன், தன்பரிசிலைவிரும்பித் தன்பாற் சென்றோர்க்குப் பாதுகாவலாகிய காஞ்சீபுரத்தே யிருக்கின்றோன் ;
படப்பையினையும் (401) காவினையும் (395) வரைப்பினையும் (405) அடையாவாயிலினையும் (401) தெருவினையும் (397) கடையினையும் (399) படையினையு (398) முடைய மூதூர் (411) என்க ;
காண்வரத்தோன்றிப் (404) பலாஅப்போல (408) விழவுமேம் பட்ட மூதூர் (411)என்க.
கைவண்டோன்றல் (420) ஐவர்போலக்(417) குருதியீர்ப்பப் (414) பொருது (415) ஆர்த்து (419)ஏமமாகிய (421) மூதூராகிய (411)கச்சியிடத்தேயிருக்கின்றோன் (420) என்க.
422-3. [அளியுந் தெறலு மெளிய வாகலின், மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட :]
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட தெறலும்-@தன்னுடனே பொருதார் தேயத்திலூர்களின் மன்றுகள் மக்களில்லையாய்ப் பாழாம்படி அழித்தலும்,
------------
# "கொடுஞ்சி- தாமரைப்பூவாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது" (மதுரைக். 751-2. ந,); "நெடுந்தேர்க் கொடுஞ்சி பற்றி நின்றோன்" (அகநா. 110:24-5), "நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்" (புறநா. 77:5). "மணித்தேர்க் கொடுஞ்சிகையாற் பற்றி" (மணி. 4:48) என்பவற்றாற் கொடுஞ்சி யென்பது தேரூர்பவர்கள் கையாற் பற்றிக் கொள்ளப்படுவதென்று தெரிகிறது.
@ "செய்யார் தேஎந் தெருமரம் கலிப்ப" (பொருந. 134); "சிலைத்தா ரகலமலைக்குந ருளரெனிற், றாமலி குவர்தமக் குறுதியாமவ, னெழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர், வாழக் கண்டன்று மிலமே" (புறநா. 61: 14-7) "செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக், கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ" (பு. வெ. 42)
----------
422. எளிய ஆகலின்-தனக்கு எளியவாய் நடக்கையினாலே,
424. [நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப :] நயந்தோர் தேஎம் நல்பொன் பூப்ப அளியும் (422)- #தன்னை விரும்பியிருந்தோர் தேயம் திருமடந்தை பொலிவுவெற்றிருப்ப அளித்தலும்,
425. நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்-மலையலாகாதென்று உறவு கொள்ளுதலைவேண்டி அவன்றாளைவிரும்பினவர்களும்,
426. துப்பு கொளல் வேண்டி துணையிலோரும் -அவன் பகையைத்தெறும் வலியைத் தமக்குப்பெறவேண்டின வேறோர் உதவியில்லாதவர்களுமாய்,
427. கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு-@மலையினின்றும் விழுகின்ற அருவி அம்மலையிலுள்ள பண்டங்களை வாங்கிக்கொண்டு கடலுக்குக் கொடுப்பதாகச் சென்றாற்போல,
428.பல்வேறு வகையின் பணிந்த மன்னர்-பலவாகிய வேறு பட்ட திறைகளின் கூறுபாட்டோடே சென்று வணங்கின அரசர்,
429-31. [இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை, வெண்டிரை கிழித்த வினங்குசுடர் நெடுங்கோட்டுப், பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கை :]
இமையவர் உறையும் சிமையம் செவரை (429) விளங்கு சுடர் நெடு கோடு (430)-தேவர்களிருக்கும் உச்சியையுடைய சிவந்த மேருவினது விளங்குகின்ற ஒளியையுடைய நெடியசிகரத்தினின்றும்,
பொன் கொழித்து இழிதரும்போக்கு அரு கங்கை (431)-பொன்னைக் கொழித்துக் குதிக்கும் மாக்கட்குக் §கடத்தலரிதாகிய கங்கையாகிய ஆற்றிலே,
வெள் திரை கிழித்த (430) கங்கை (431)-கடலிடத்து வெள்ளிய திரையைக் கிழித்துச்சென்ற கங்கை,
432. பெரு நீர் போகும் இரியல் மாக்கள்-பெரிய நீரைக்கடந்து போம் கெடுதலையுடைய மாக்கள், கெடுபட்டுப்போவார் ஒருவர்க்குமுன்னே ஒருவர் விரைந்துபோதலைக் கருதுவர்.
-------------
# "திருந்தடி பொருந்த வல்லோர், வருந்தக் காண்ட லதனினுமிலமே" (புறநா.61 : 18-9)
@ "இனி மலையிற் பொருள்களை வாரிக்கொண்டு யாறு கடலை நோக்கிப் போனாற்போல அவ்விடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு வருகின்றே மென்றுமாம்" (மலைபடு. 51-2, ந.) என்று பின்னும் இவ்வாறே உவமையைவிளக்குதல் காண்க.
§ "ஆழ நெடுந்திரையாறு கடந்திவர் போவாரோ" (கம்ப. குகப். 15)என்று கங்கையைப்பற்றிக் கூறியது இங்கே கருதற்குரியது.
---------
433. ஒரு மரம் பாணியில் தூங்கியாங்கு-விடுகின்ற தோணியா கையினாலே அது வருங்காலம் பார்த்திருந்து தூங்கினாற்போல,
434-5. தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து-கெடாத யானை முதலிய செல்வங்களோடே நெருங்கா நின்று திரண்டு காலம்பார்த்திருக்கும் வளவிய நகரின் முற்றத்தினையுடைய வியனகர் (440),
எளியவாகலின் (422) நயந்திசினோரும் (425) துணையிலோருமாய்ப் (426)பணிந்தமன்னர் (428) தூங்கியாங்குச் (433)செவ்விபார்க்கும் முற்றமென்க.
436-7. பெரு கை யானை கொடு தொடி படுக்கும் கரு கை கொல்லன்-பெரிய கையினையுடைய யானைக்கு வளைந்துகிடக்கும் பூணைச் சேர்க்கும் வலிய கையுனையுடைய கொல்லன்,
437-8. இரும்பு விசைத்து எறிந்த கூடம் திண் இசை வெரீஇ-இரும்பைக் கையை உரத்துக்கொட்டின கூடத்தெழுந்த திண்ணிய ஓசையை வெருவி,
438-40. [மாடத், திறையுறை புறவின் செங்காற் சேவ, லின்றுயிலிரியும் பொன்றுஞ்சுவியனகர் :]
மாடத்து புறவின் செ கால் சேவல் இன் துயில் இரியும் நகர்-மாடத்திடத்துப் புறவினுடைய சிவந்த காலையுடைய சேவல் இனிய துயிலை நீங்கும் நகர்,
இறை உறை நகர்-இறைவன் இருக்கும் நகர்,
பொன் துஞ்சு வியல் நகர்-திருத்தங்குகின்ற அகலத்தையுடைய கோயிற்கண்ணே இருந்தோன் (447),
441-2. குணகடல் வரைப்பில் #முந்நீர் நாப்பண் பகல் செய்மண்டிலம் பாரித்தாங்கு-கீழ்க்கடலாகிய எல்லையிடத்து நிலத்தைப்
படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்றுதொழிலையுடைய நீர்க்குநடுவே @பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கிரணங்களைப் பரப்பித் தோன்றினாற்போல,
-----------
# "முந்நீர் ................... பௌவம் - மூன்று நீர்மையையுடைய ............ கடல்" (மதுரைக்.75-6. ந.), "நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுமுடைமையின், முந்நீர்-ஆகுபெயர்" (சீவக. 5, ந.) என்று நச்சினார்க்கினியரும், "முந்நீர்-கடல்; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை யென்பார்க்கு அற்றன்று ; ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழிஊற்று நீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று ; முதிய நீரெனின், ‘நெடுங்கடலுந் தன்னீர்மைகுன்றும்' என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது ; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது ; முச்செய்கை
@ "பகற்கதிர்-பகற்பொழுதைச் செய்யுங் கிரணங்கள்" (பொருந. 135. ந.) ; "பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு" (மதுரைக் .7) ; "காலைசூழ் செங்கதிர்: சூழல்-செய்தல்" (தக்க.279, உரை) ; சூரியனுக்குப் பகலைச் செய்வோனென்னும் பொருள்படும் திவாகரன் என்னும் பெயருண்மையையும் அறிக.
443-50. [முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி, யுடைத்தெரிந் துணருமிருடீர் காட்சிக், கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத், துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப், பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான், கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப், புலவர் பூண்கடனாற்றி :]
இடைதெரிந்து உணரும் இருள் தீர்காட்சி (445)-நடுவுநிலையை ஆராய்ந்தறியும் மயக்கந்தீர்ந்த அறிவாலே,
@முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் (443) வேண்டுப வேண்டுப அருளி(444)-முறைப்பாட்டை விரும்புவார்க்கும் காரியங்களை விரும்புவார்க்கும் அவரவர் விரும்புவனவற்றை விரும்புவனவற்றை அருளிச்செய்து,
புலவர் பூண் கடன் ஆற்றி(450)-புலவர்க்குப் பேரணிகலங்களையும் கொடுத்தற்குரிய பிறகலங்களையுங் கொடுத்து,
வேண்டினர்க்கு (444) கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து (446) உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி (447) - வேண்டிவந்த பரிசிலர்க்குக் கொடையாகிய கடனை முடித்த குவியாத நெஞ்சத்தோடே கொடுமையில்லாத3மந்திரச் சுற்றத்தோடே இருந்தோனை அணுகி.
யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணையழித்தலும் மண்ணைக்காத்தலுமாம்" (சிலப். 17. உள்வரி, : §அடியார்.) எனப்பிறருமெழுதுதல் காண்க :"மும்முறை நீர்" (கம்ப. அதிகாயன். 21) என்பதும் இங்கே அறியத்தக்கது. "யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழை நீருமுடைமையால், கடற்கு முந்தீரென்று பெயராயிற்று ; அன்றி முன்னீரென்றோதி, நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப" (புறநா. 9 விசேட உரை ) என்பது ஒரு சாரார் கொள்கை.
-----------
@ முறைவேண்டுநர்-வலியரால் நலிவெய்தினார் ; குறைவேண்டுநர்-வறுமையுற்றிரந்தார் ; 386-ஆம் திருக்குறளுரையைப் பார்க்க.
§ "மந்திரச் சுற்றத் தாரும்" (கம்ப. கும்ப. 5)
----------
ஞாயிறுபோல இருளைக்கடிந்து முறைவேண்டுநர்க்கும் குறைவேண்டுநர்க்கும் வேண்டுவன வேண்டுவன முடித்துக்கொடுத்தலின், அவனை உவமித்தார்.
கடலைச் சுற்றத்திரட்சிக்கு உவமையாக்கலுமொன்று.
#பொறி வரி புகர் முகம் தாங்கிய வய மான் (448) கொடுவரிகுருளை கொள வேட்டாங்கு (449)- ஒளியினையும் வரியினையுமுடைய யானையைப்பாய்ந்த வலியையுடைய சிங்கத்தினுடைய வளைந்தவரியினையுடைய குருளை அவ்வியானையின் மத்தகத்தைக் கொள்ள விரும்பினாற்போல,
450-52. பகைவர் கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது- பகைவரது காவலையுடைய மதில்களையழித்து ஆண்டிருந்த அரசருடைய முடிக்கலமுதலியவற்றை வாங்கிக்கொண்டு வீரமுடிபுனையும் வெற்றியினை விரும்புதல்லது.
இதனால், "இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணுமங்கலம்" (தொல். புறத். சூ .13) என்னுந்துறை கூறினார் ; @குடுமிகொள்ளும் வென்றியெனவே மண்ணுமங்கலமாயிற்று.
452-4. வினை உடம்படினும் ஒன்றல் செல்லா உரவு வாள் தடகை கொண்டி உண்டி தொண்டையோர் மருக-அம்மதிலரசர் §சந்து செய்தற்கு உடம்பட்டாராயினும் அதற்கு மனம் பொருந்துதல் நிகழாமைக்குக் காரணமாகிய உலகெங்கும் பரக்கும் வாளையுடைத்தாகிய பெருமையையுடைய கையினையும் பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையுமுடைய $தொண்டையைச் சூடினோருடைய குடியிலுள்ளவனே.
455. மள்ளர் மள்ள-வீரர்க்கு வீரத்தைக்கொடுக்கின்றவனே. மறவர் மறவ - கொடியோர்க்குக் கொடியவனே.
456. செல்வர் செல்வ-செல்வமுடையோர்க்கும் கொடுத்தலை விரும்புபவனே, செரு மேம்படுந-போர்த்தொழிலிலே மிக்கவனே. பெரும(461) - பெருமானே,
457-8. வெள் திரை பரப்பில் கடு சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மா மோடு-வெள்ளிய திரையினையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக்கொன்ற பசிய பூணினையுடைய முருகனைப்பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும்,
-----------
# பொறி-ஒளி: "கண்பொறி போகிய-கண்ணொளி மழுங்கிய" (புறநா. 161 : 13,உரை)
@ "குடுமிகொள்ளு மண்ணு மங்கலம்" (கூர்ம,)
§ சந்து செய்தல்-பொருத்துதல்.
$ தொண்டையைச் சூடிய வரலாற்றை,பெரும்பாண். 30-31-ஆம்அடிகளின் உரையிற் காணலாம்.
--------
459. துணங்கை அம் செல்விக்கு அணங்கு #நொடித்தாங்கு-பேய்களாடுந் துணங்கைக்கூத்தினையும் அழகினையுமுடைய இறைவிக்குப் பேய்மகள் சில @நொடி சொன்னாற்போல,
460-61. [தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி, வந்தேன் பெரும வாழிய நெடிதென :]
தண்டா ஈகை நின் பெரு பெயர் ஏத்தி வந்தேன் நெடிது வாழியஎன-அமையாக்கொடையினையுடைய நின் பெரிய பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்துவந்தேன், நெடுங்காலம் வாழ்வாயாகவெனச் சொல்லி.,
462. இடன் உடை பெரு யாழ் முறையுளி கழிப்பி-தனக்குக் கூறுகின்ற இலக்கணங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய யாழை வாசிக்குமுறைமையிலே வாசித்து,
முறையுளி : §உளி :பகுதிப்பொருள்விகுதி.
463. கடன் அறி மரபின் கைதொழுஉ பழிச்சி-முற்படக் கண்டாக்காற் செய்யுங்கடனை அறிந்தமுறைமையோடே கையாற்றொழுது வாழ்த்தி,
அ நிலை-நீ நின்ற அந்த நிலைதன்னிலே,
465. நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க-நாவலாற்பெயர்பெற்ற அழகினையுடைய குளிர்ந்த உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி,
466. $4நில்லா உலகத்து நிலைமை தூக்கி-யாக்கையும் செல்வமும் முதலிய நிலையில்லாத உலகத்திடத்து நிலைபேறுடைய புகழை நாம்பெறுதல் நன்றென்று ஆராய்ந்து,
467. அ நிலை அணுகல் வேண்டி-முற்படிநின்ற சேய்நிலத்து நின்று தன்னை அணுகுதற்கு விரும்பியழைத்து,
--------------
# நொடித்தாங்கு - நொடி சொன்னாற்போல" (கலித். 89:8, ந,)
@ "புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்" (பெருங்.1, 33:72)
§ "பழுதுளி ; உளி : பகுதிப்பொருள் விகுதி' (மலைபடு. 153, ந,)
$ "மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்" (தஞ்சை. 21) ; "நிற்ப தேதுகொ னீடிசை யொன்றுமே நிற்கும்"(வி.பா. நச்சுப்.57); பொருநா.176, ந. குறிப்புரையைப்பார்க்க.
--------
467-8. நின் அரை பாசி அன்ன சிதர்வை நீக்கி-நின்னுடைய அரையிற்கிடந்த கொட்டைப்பாசியின் வேரையொத்த சிதரின சீரையைப்போக்கி,
469-70. [ஆவி யன்ன வவிர்நூற் கலிங்க, மிரும்பே ரொக்கலொ டெருங்குடனுடீஇ :] ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் உடன் இருபெரு ஒக்கலொடு ஒருங்கு உடீஇ-#பாலாவியையொத்த விளங்குகின்ற நூலாற்செய்த துகில்களைப் படிசேரக் கரிய பெரிய சுற்றத்தாரோடே சேர உடுக்கப்பண்ணி,
471-2. கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை வல்லோன் அட்ட பல் ஊன் கொழு குறை-வளைந்த அரிவாளைக்கொண்ட வடுவழுந்தின வலியையுடைத்தாகிய கையினையுடைய மடையனாக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும்,
பலகாலும் அறுத்தலால், தழும்பிருந்த கையென்றார். கதுவுதல் கைக்கொள்ளுதல்.
473-4. அரி செத்து உணங்கிய பெரு செ நெல்லின் தெரி கொள் அரிசி திரள் நெடு புழுக்கல்-நிறத்தால் ஞாயிற்றையொத்து உலர்ந்த பெரிய செந்நெல்லினுடைய பொறுக்கிக்கொண்ட அரிசியலாக்கின திரண்ட @இடைமுரியாத சோறும்,
அரிசெத்தென்றதற்கு உவமையின்றாகவென்றுமாம் : இனி அரிசெய்தென்று பாடமாயின் அரிதலைச் செய்தென்று கூறுக.
475. அரு கடி தீ சுவை அமுதொடு-பெறுதற்கரிய மிகுதியையுடைய இனிய சுவையினையுடைய கண்டசருக்கரை முதலியவற்றோடே, பிறவும்-கூறாதொழிந்தனவும்,
476. விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் - விருப்பமுடைத்தாகிய முறைமையினையுடைய தலையாப்புப் பரத்தலையுடைய அடிசிலை,
அமுதோடே (475) குறையும் (472) புழுக்கலும் (474) பிறவுமாகிய (475) அடிசிலைப் (476) பரப்பி (477) ஊட்டி (479) யென்க.
477-80. [மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி, மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந், தானா விருப்பிற் றானின் றூட்டி, மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும் :]
மங்குல் வானத்து மீன் பூத்தன்ன வால் கலம் திங்கள் ஏய்க்கும் வால் கலம் மகமுறை பரப்பி-திசைகளையுடைய ஆகாயத்திடத்தே உடுக்கள் தோன்றினாற்போன்ற சிறிய §வெள்ளிக்கலங்களையும், திங்களை யொக்கும் பெரிய வெள்ளிக்கலங்களையும் நும்முடைய பிள்ளைகளுக்கு இடையே பரப்பி,
எனவே தலைவராயினார்க்குப் பொற்கலம் பரப்புவரென்றார்.
தான் முகன் அமர்ந்து ஆனா விருப்பின் மகமுறை நோக்கி நின்று ஊட்டி-தான் முகம்பொருந்தி அமையாத ஆசையுடனே நும்முடைய பிள்ளைகளைப் பார்த்து நின்று உண்ணப்பண்ணுவித்து,
---------------
# "பாலாராவிப் பைந்துகில்" (சீவக.1094)
@ பொருந. 113-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
§ "மகிழ்தரன் மரபின் முட்டேயன்றியு, மமிழ்தன மரபி னூன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டல்" (புறநா. 390 : 16-8)
---------
481-2. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இருபித்தை பொலிய சூட்டி-உலாவும் வண்டுகள் ஒலியாத நெருப்பிடத்தே கிடந்து விளங்கின பொற்றாமரையை நீண்ட கரிய மயிரிடத்தே அழகு பெறச் சூட்டி,
பொற்றாமரை திங்களையொக்குமென்றல் பொருந்தாமையுணர்க.
483-4. உரவு கடல் முகந்த பருவ வானத்து பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு-பலவுஞ்சேர உலாவுகின்ற கடலிடத்தே முகந்த கூதிர்க்காலத்து மேகத்தினின்றும் பகற்காலத்தே பெய்தலையுடைத்தாகிய துளியின்கண்ணே மின் ஓடினாற்போல,
486-6.புனை இரு கதுப்பகம் பொலிய பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய - கைசெய்த கரியமயிரிடம் அழகுபெறும்படி, பொன்னாற்செய்து சேரக் கட்டுதமைந்த மாலையை விறல்பட ஆடு மகளிர் சூடாநிற்க,
487-9. [நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல், வளைகண்டன்ன வாலுளைப் புரவி, துணைபுணர் தோழில நால்குடன் பூட்டி :] நூலோர் புகழ்ந்த மாட்சிய துணை புணர் தொழில் மால் கடல் வளை கண்டன்ன வால் உளை புரவி நால்கு உடன் பூட்டி- # குதிரைநூல் கற்றோர் புகழ்ந்த அழகினையுடையவாய்த் தனித்துத் தொழில்செய்யாமல் இனங்களோடே கூடுந் தொழிலையுடையவாய்க் கருமையையுடைய கடலிற் சங்கைக் கண்டாற்போன்ற வெள்ளிய கழுத்தின் மயிரையுடைய குதிரைகள் நான் கைச்சேரப்பூட்டி,
நான்கு நால்கெனப் பெயர்த்திரிசொல்.
490. அரி தேர் நல்கியும் அமையான்-பொன்னாற் செய்த தேரைத் தந்தும் கொடைமேல் விருப்பந்தவிரானாய்,
490-92. செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து பொருதோருடைய போர்களை
--------
# குதிரையின் இலக்கணங்களைக் கூறும் சாலிகோத்திரம் என்று ஒரு நூலுண்டென்பது தக்கயாகப்பரணி, 665-ஆம் தாழிசையுரையாலறியப்படுகின்றது ; "உன்னய முதலாம் புரவிநூ லறிவோன்" (வி.பா. நாடுகரந்துறை. 21) என்பதனால் உன்னய மென்பதொருநூலுமுண்மை பெறப்படும்.
-----------
மாளப்பண்ணித் தன் ஏவலைப் பொருந்தாத பகைவர் முதுகிட்டவிடத்து விட்டுப்போன ஆகாயத்தே செல்கின்ற குதிரைகளுடனே பசிய பொன்னாற்செய்த @பக்கரைகளையுந்தந்து,
493. [அன்றே விடுக்குமவன் பரிசில் :] அவன் அன்றே பரிசில் விடுக்கும்-அவன் நீ சென்ற அற்றைநாளே இவையொழிந்த பரிசில்களையுந்தருவான் ;
493-4. இன் சீர் கின்னரம் முரலும் அணங்குடை சாரல்-இனியதாளத்திலே கின்னரமென்னும் பறவைகள்பாடுந் தெய்வங்களையுடைய சாரலிடத்து,
495. மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்-மயில்களாரவாரிக்கும் மரம் நெருங்கின இளமரக்காட்டினையுமுடைய,
496. கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்-முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும்,
497. மந்தி சீக்கும் மாதுஞ்சும் முன்றில்-மந்திகள் அவ்விடத்துக் கிடந்த §துராலை வாரும் மானும்புலியும் துயில்கொள்ளும் முற்றத்தே,
புறவினையும் (496) இறும்பினையும் (495) உடைய சாரலிடத்து (494) முன்றிலிலே (497) வேட்கு (499) மென்க.
498.செ தீ பேணிய முனிவர் - சிவந்த தீயைக் கவிடாமற்காத்துப் போந்த இருகடிகள்,
498-9. வெள் கோடு களிறு தரு விறகின் வேட்கும்-வெள்ளிய கொம்பினையுடைய களிறு முறித்துக்கொண்டுவந்த சமிதையாலே வேள்வியைச் செய்யும்,
மந்தி சீத்தலும், மாத் துஞ்சலும், களிறு விறகுதருதலும் இருடிகளாணையால் நிகழ்ந்தனவென்றுணர்க.
500. [ஒளிறிலங் கருவிய மலைகிழவோனே :]
ஒளிறு மலை-இவற்றால் விளங்குமலை ,
இலக்கு அருவிய மலை-விளங்குகின்ற அருவிகளையுடையமலை,
மலைகிழவோன்-இச்சிறந்த மலையையாளும் உரிமையையுடையோன்.
----------
# பொருந 165
@ பக்கரை - சேணம்
§ கழுத்தின் மயிர் தலையாட்டமெனவும் வழங்கும்
$ தூரால் - செத்தை
புலவுவாய்ப்பாண (22), பெருவளனெய்தி (26) முகந்துகொண்டு (27) யாம் அவனூரினின்றும் வருகின்றோம் ; நீயிரும் (28) திரையற்படர்குவிராயின் (37) நின்றுள்ளஞ்சிறக்க (45) ; நின்னவலங்கெடுக (38); இரவல (45), அவனிலைகேள் (38) : அவன்புலம் கொடியோரின்று (41) ; அதுவேயன்றி அப்புலத்தில் உருமுமுரறாது; அரவும் தப்பா (42) ; மாவும் உறுகண்செய்யா ; ஆகலின், ஆங்கு (43) அசைவுழி அசைஇத்தங்கிச் (44) சென்மோ (45) ; அங்ஙனஞ்செல்லூங்கால் வில்லுடைவைப்பிற் (82) குரம்பையில் (88) எயிற்றியர் (94) தாங்களட்ட புழுக்கலையும் வாடூனையும் (100) எல்லிடைக்கழியுநர்க்கு ஏமமாகத் (66) தேக்கிலையிலே குவிக்கையினாலே (104) அப்பதத்தைப் (105) பெருமகனாகிய (101) வரைநாடான் சென்னியமெனிற் (103) கடும்போடே மிகப்பெறுகுவிர் (105) ; பின்னர் அருஞ்சுரமிறந்த அம்பர்க் (117) குறும்பிற் சேப்பின் (129) சொன்றியை (131) வறைகால்யாத்தது வயின்றொறும் பெறுகுவிர் (133) ; பின்னர்த் தூங்கா (146) முரண்டலை (147) யிருக்கை (146) கழிந்தபின்றைக் (147) குடிவயிற்சேப்பின் (166) மூரல் பாலொடும் பெறுகுவிர் (168) ; பின்னர்ப் பறவையோர்க்கும் (183) புலத்தைப் போய்ச் (184) சீறூர்களிலே (191) வரகின் சொன்றியைப் (193) புழுக்கையட்டி (195) மூரலோடே பெறுகுவிர் ; பின்னர் ஞாங்கர் (196) வன்புலமிறந்தபின்றை (206) ; மல்லற்பேரூர்மடியின் (254) வல்சியை(255)வாட்டொடும் பெறுகுவிர்(256) ; பின்னர்க்கரும்பின்றீஞ்சாறுவிரும்பினிர் மிசைமின் (262) பின்னர் வலைஞர் குடிவயிற் சேப்பின் (274) பிழியைச் (281) சூட்டொடு பெறுகுவிர் (232) ; பின்னர்த் தீப்பட மலர்ந்த (289) பூவையோம்பிக் (290) குறுநரிட்டமலரைப் (295)பிணையினிர்கழிமின் (296) ;பின்னர்மறைகாப்பாளர் உறைபதிச்சேப்பின் (301) வத்தத்தாலுண்டான அரிசியை (305); வளைக்கைமகடூஉ வயினறிந்தட்டனவற்றைச் (304) சுடர்க்கடையிலே (305) போழோடே (307) காடியோடே பெறுகுவிர் (310) ; பின்னர் நீர்ப்பெயற்றெல்லை போகிப் (319) பட்டினமருங்கினசையின் முட்டுப்பாடின்றாகக் (336) கொழுநிணத்தடியொடு கூர்நறாப்பெறுகுவிர் (345) ; பின்னர்த் துறை பிறக்கொழியப்போகித் (351) தனிமனைச்சேப்பின் (355) ஆண்டைத் தீம்பஃறாமுனையிற் சேம்பிலையோடே (361) முதிர்கிழங்கார்குவிர் (362) ; இவற்றை இவ்வழியின் கண்ணே பெற்றுப் பின்னர்ப் பன்மர நீளிடைப்போய் (368) நாடுபலகழிந்தபின்றைப் (371) பள்ளி யமர்ந்தோன் ஆங்கட் (373) பொழிறொறும் (380) ஆடி (387) அசைஇத் (390) தொலைச்சி (382) மரீஇக் (383) கடவுள்வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமின் (392) ; இங்ஙனஞ்சென்று கைவண்டோன்றல் (420), இப்பொழுது ஐவர்போலக் (417) குருதியீர்ப்பப் (414) பொருது (415) ஆர்த்துப் (419) பகைமேற் செல்லுதலின்றிநச்சிச்சென்றோர்க்கு ஏமமாகிய (421) படப்பை முதலியவற்றையுடைய (401) விழவு மேம்பட்ட மூதூராகிய (411) கச்சியிடத்தே யிருந்தோன் (420), அவ்வூரிற் பணிந்த மன்னர் (428) செவ்விபார்க்கும் முற்றத்தினையுடைய (435) பொன்றுஞ்சு வியனகர்க்கண்ணே (440) பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (442) மிக்ககாட்சியாலே (445) அருளிப் (444) பூண்கடனாற்றிக் (450) கடனிறுத்த உள்ளத்தோடே (446) சுற்றத்தோடே இருந்தோனைக் குறுகித் (447) தொண்டையோர் மருகனே (454), மள்ளனே, மறவனே (445), செல்வனே, செருமேம்படுநனே (456), பெருமானே (461), செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு (459) நின் பெயருட் சிலவற்றைச் சொல்லிப் புகழ்ந்து (460) வந்தேன் ; வாழியவெனச் சொல்லிக் (461) கழிப்பிப் (462) பழிச்சி (463) நின்னுடைய கலைகளெல்லாந் தனக்குத்தெரிவதற்கு முன்னே (464) மலைகிழவோன் (500), நில்லாவுலகத்துநிலைமை தூக்கி (466) அந்நிலையணுகல் வேண்டி அழைத்துச் (467) சிதர்வை நீக்கி (468) உடீஇ (470) அமுதோடே (475) குறையும் (472) புழுக்கலும் (474) பிறவுமாகிய (475) அடிசிலைக் (476) கலங்களைப் பரப்பித் (477) தான் (479) முகனமர்ந்து மகமுறைநோக்கி (478) முன்னின்றூட்டி (479) விறலியர் மாலை வேயாநிற்க (486) நுமக்குத் தாமரை (481) பொலியச்சூட்டி (482) அரித்தேர் நல்கியும் அமையானாய் (490) இவுளியொடு பசும்படை தரீஇ (492) அவன் அன்றே (493) அந்நிலையிலே (464) நாவலந்தண்பொழில் வீவின்று விளங்கும்படி (465) இவையொழிந்த பரிசில்களையும் தரும் (493) என வினைமுடிவு செய்க.
இப்பாட்டில் ஒருமைபன்மை மயக்கம், "முன்னிலை சுட்டியவொருமைக் கிளவி.......போற்றல் வேண்டும்" (தொல். எச்ச.சூ.66) என்பதனாற் கொள்க.
தொண்டைமானிளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
வெண்பா
கங்குலு நண்பகலுந் துஞ்சா வியல்பிற்றாய்
மங்குல்சூழ் மாக்கட லார்ப்பதூஉம் -வெஞ்சினவேற்
கான்பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை
யான்பயந்தேனென்னுஞ் செருக்கு
------------
This file was last updated on 20 Dec. 2014
Feel free to send corrections to the webmaster.