திருமாலிருஞ் சோலைமலை
அழகர் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கவி காளருத்திரர் (?)
tirumAlirunj cOlaimalai azakar piLLaittamiz
of kavi kALaruttirar (?)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Distributed Proof-reading Implementation and we thank the following for their assistance:
Anbu Jaya, CMC Karthik, R. Navaneethakrishnan, P. Thulaisimani, V. Ramasami,
A. Sezhian and SC Tamizharasu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருமாலிருஞ் சோலைமலை
அழகர் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கவி காளருத்திரர் (?)
Source:
திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழ்
இது மதுரை தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்" ப்பத்திராதிபர்
திரு. நாராயணையங்காரால் பரிசோதிக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.
மதுரைத் தமிழ்ச் சங்கம்
THE MADURA TAMIL SANGAM
செந்தமிழ்ப் பிரசுரம்-40
தமிழ்சங்க முத்திராசாலைப் பதிப்பு.
1919. - விலை அணா 8
--------------
ஸ்ரீ:
திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ்
முகவுரை
அமிழ்தினுமினிய தமிழ்மொழியகத்தே, அன்பும், இன்பும், அறனும், மறனும் சான்ற அகத்திணை புறத்திணை தழுவிய துறைவகைகளில் தொன்றுதொட்ட வழக்காயுள்ள பனுவல்கள் எத்துணையோ பலவுள்ளன; அவற்றுள் 'பிள்ளைத்தமிழ்' என்னும் பிரபந்தவகையுமொன்று.*
-------------
*இங்குக்கூறிய காமப்பகுதியாவது, பெறலரும் பிள்ளையைப் பெற்றதாய் முதலியோர் பாராட்டுதற்குரிய 'குறுகுறு நடந்து சிறுகைநீடடி, இட்டுந்தொட்டுங் கௌவியுந்துழந்து நெய்யுடையடிசின்மெய்பெற விதிர்த்தும், விளையாடுதன் முதலிய செயல்களை அனுபவிக்குமவரிடைத் தோன்றும் ஒருதலையின்பம். இதனை 'மக்கண் மெய் தீண்டலுடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டலின்பம் செவிக்கு, என்றற்றொடக்கத் தானுமறிக. இதனாலவர் விளையாட்டுக்காண்டலும் கட்கின்பமென்பது போதரும்.
'பிள்ளைத்தமிழ்'என்பது, பெறலருஞ் சிறப்புவாய்ந்த மக்கட் குழவியைப் பாராட்டிப்பாடும் இனியபாடல்களாலாகிய பிரபந்தம் என்று பொருள்படும். இங்கு 'தமிழ்' என்னுஞ் சொல் பிரபந்தத்தை யுணர்த்துமென்பதை, இந்நூலாசிரியர் தம் ஞானாசிரியர் வணக்கத்துள், 'வேதப்பாட்டிற்றருந் தமிழ்' என்று திவ்யப்பிரபந்தங்களை வழங்குதலாலும், இயலிசைநாடக நூல்களை இயற் றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் எனவும், முத்தமிழ் எனவும் வழங்குதலாலுமறிக.
இப்பிரபந்தம், புறப்பொருள் வகையாகிய பாடாண் திணையில் 'குழவிமருங்கினுங் கிழவதாகும்' என்ற தொல்காப்பியச் சூத்திரத்தாற் கொள்ளப்பட்ட *காமப் பகுதியின் பாற்பாட்டு மக்கட் குழவிக்குரித்தாக வழங்கப்படுமாயினும், ஒரோவழி, தெய்வத் தோற்றமாகிய மக்கட் குழவியின் பருவத்தை ஆரோபித்தலால், அக்குழவியோ டொற்றுமையுடைய தெய்வத்துக்கும் உரியதாக வழங்கப்படும். இச்சூத்திரத்தில், கிளப்பதாகும் என்னாது 'கிழவதாகும்' என்ற குறிப்பால் குழவிப்பருவங்கழிந்த முதியரை அவரது குழவிப்பருவம்பற்றிப் பாராட்டிப்பாடினும், அப்பாட்டில், அம்முதியரோ-டொற்றுமையுடைய அக்குழவிக்கு உரிமையுடைமையால் அது வழுவாகாதென்று கொள்ளப்படும்.
இப்பனுவலைப் பன்னிருபாட்டியலுடையார் பிள்ளைப்பாட்டென வழங்கி, இலக்கணம் பல தர மியம்பியும், ஆன்றோர் கூறிய சில இலக்கணங்களை யெடுத்துக்காட்டியும் போந்தனர்; வெண்பாமாலையுடையார் (* 'இளமைந்தர் நலம்வேட்ட வளமங்கையர் வகையுரைத்தல்' என்னும் குழவிக்கட்டோன்றிய காமப்பகுதியின் பாற்படுப்பர்.
-----------
*(இளமைந்தர் நலம் வேட்ட வளமங்கையர் வகையுரைத்தலாவது) கண்ணபிரானது இளமைப்பருவ விளையாட்டின்பத்தை விரும்பிய யசோதைப்பிராட்டியும் இடைப்பெண்களும் பாராட்டியபடியைப் பெரியாழ்வார் அனுகரித்தல் போல்வது.
'வழக்கொடு சிவணியவகைமையான' என்ற தொல்காப்பியச் சூத்திரத்துள், 'சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்தி வந்த பகுதிக்கண்ணேயான பொருள்களுள்' குழவிமருங்கினுங் கிழவதாகிய பிள்ளைப்பாட்டுப் பொருள்களையும் அகப்படுத்துக் கூறியிருத்தலால் இப்பிரபந்தவகை தொல்காபியர்காலத்துக்கு முற்பட்ட சான்றோராற் செய்துபோந்த பழையவழக்குடையதென விளங்குகின்றது. இதற்குதாரணமாகப் பெரியாழ்வார் திருமொழியுட் பலவேறு பொருள் வகைகளாலும் பிள்ளைப்பாட்டுப் பாடப் பெற்றிருப்பது காணத்தகும். அதன்கண், தால், சப்பாணி, செங்கீரை முதலியவற்றுடன் இக்காலப் பிள்ளைத்தமிழி லில்லாத பிறப்பின் உவகை, பாதாதிகேசக்காட்சி, தளர் நடை, அச்சோவச்சோ, புறம்புல்கல் அப்பூச்சிகாட்டல், நீராட்டல், பூச்சூடல், காப்பிடல், அம்மமூட்டல், முதலிய பலவேறு பொருள் பற்றிய பாராட்டல்கள் உள்ளன.
இங்ஙனம் பல பொருள்களிருப்பவும், ஒருபொருள்பற்றிப் பாராட்டும் பாட்டுப் தனித்தனி பதிகமாகவும், பிரபந்தமுழுதும் சதகமாகவும் ஓரளவுடையதாக முடிக்க வேண்டிக் காப்புமுதற் சிறுதேரிறுதியான பத்துப்பொருள்களை இப்பிரபந்தத்துக்-குரியனவாகப் பிற்காலத்தார் தெரிந்தெடுத்து நியமித்துப் போந்தனர்போலும்.
இங்ஙனம் பழமையும் அருமையும் வாய்ந்த பிரபந்தவகையிற் சேர்ந்த பிள்ளைத்தமிழ்களிற் சிறந்தவற்றுள் இத்திருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழும் ஒன்றென்றெண்ணத் தக்கது.
இவ்வழகர் பிள்ளைத்தமிழ், காப்புமுதற் சிறுதேரிறுதியாகப் பத்துப் பருவப் பாராட்டலையு முடையதாய்ப் பலவேறு சந்தப்பாடல்களாற் சிறந்தது. காவியங்கற்பார்க்கு, இலக்கிய விலக்கண வழக்கு வகை பலவுமெளிதுனுணர்த்திச் சொற்பொருளுணர்ச்சியைத் திட்பமுறச் செயயுந் திறமையுடையது; செய்யுட் செய்வார்க்கு விடயமில்லாவிடத்தும் பொருத்தமுள்ள விசேடணங்களை வருத்தமின்றித் தொடுத்துப் பொருளை விசேடித்துப் பலபடியாகச் செய்யுளை யழகுபெறச்செய்து முடிக்குமாற்றலையளிக்கவல்லது, ஐந்திணை மயக்கம், நானிலவருணனை, கற்பனை, அலங்காரமுதலிய பலநயங்களமைந்தது. திருமாலினவதாரமாக வந்த கண்ணபிரானது குழவிப்பருவத்தை ஒற்றுமைபற்றி அழகர் மேல்வைத்து, அக்கண்ணபிரானது இளமைநலம்வேட்ட யசோதைப் பிராட்டியுமிடைப் பெண்களுமாகிய "வளமங்கையர்" படியை அத்தியவசித்து மிகவும் பாராட்டிப் பாடப்பெற்றுள்ளது.
இப்பிரபந்தத்தின் பாயிரச்செய்யுளில் 'வள்ளைத்தமிழ்கூர் வேம்பத்தூர் வருமாண்புலவோர்வகுத்தது' என்று சொல்லப்பட்டிருத்தலால் இதனையியற்றியவர் பிறந்தவூர் வேம்பத்தூர் என வெளியாகிறது. இவ்வூரின்கட் டொன்றுதொட்டே ஆசு, மதுர, சித்ர, விஸ்தார கவிகளும், பிரபந்தங்களு மியற்றிப்போந்த பலபுலவர்களிருந்து வந்திருக்கின்றனரென்பதை, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பின் முகவுரையில் மஹாமஹோபாத்தியாய பிரும்மஸ்ரீ வெ. சாமிநாதையரவர்களெழுதி-யிருப்பதால் அறியலாம். இப்பாயிரச்செய்யுளில் "புலவோர்வகுத்தது" என்ற பன்மைக்கிணங்க வேம்பத்தூர்ச் சங்கப்புலவர் பலர்கூடி இப்பிரபந்தத்தை யியற்றினரென்று சிலர் ஓர் ஐதிகம் சொல்வது முண்டு.
பழிச்சினர்ப்பரவலின் பன்னிரண்டாம் செய்யுளிலே "பேசுபய வேதாந்ததேசிகன் றாடொழுவல் பேரழகனூறழையலே" என்று தொழுவலென்னும் ஒருமையால் அழகனூலாகிய இப்பிரபந்தமுழுதும் தழைதற்கு மங்களங்கூறியிருத்தலாலும் மற்றும் சில பாடல்களிலும் மங்களங்கூறியவிடங்களிலெல்லாம் இவர் இப்பிரபந்தத்தை "என்கவி" என்று தாமே கூறியிருத்தலாலும், இப்பிரபந்தம் ஒரேபுலவராற் பாடப் பெற்றிருக்கலாமென்று தோன்றுகின்றது.
இதற்கனுகுணமாகவே சேதுசமஸ்தானவித்வான் ஸ்ரீமத் ரா. ராகவையங்காரவர்கள் அரிதின் ஆராய்ச்சிசெய்தெழுதிச் "செந்தமிழில்" வெளியிட்ட சேதுநாடும் தமிழும்* என்ற வியாசத்தில் இந்நூலியற்றியவரது பெயர், சாமிகவிகாளருத்திரர் என்று எழுதியுள்ளார்கள். கவிகாளருத்ரர் என்பது பிறரால் வெல்லப்படாத ஆற்றல்பற்றி வழங்கும் "கவிராக்ஷஸன்" என்பதுபோல இவரது கவித்திறமைபற்றிப் பின்பு வந்த சிறப்புப்பெயராயிருக்க வேண்டுமாதலால், அப்பெயர்க்குமுற்பட்டு "மாந்தரக் கொங்கேனாகி" என்பழிப்போலப் பண்புத்தொகை நிலைமொழியாய்நின்ற சாமி என்னும் பெயரே இவரது இயற்பெயராயிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.
பழிச்சினார்ப்பரவலின் பதினான்காம்பாட்டில் இவர் தாம் அழகர் கோவிற் புரோகித நிர்வாகம் பெற்றிருந்த தோழப்பர் என்னும் ஸ்ரீவைஷணவரால் "தொண்டர்குழுவாகிய அத்தியாபககோஷ்டியிற் சேர்க்கப்பட்டவரென்று கூறியிருத்தலால், இவர் பஞ்சசமஸ்காரம்பெற்றுத் திவ்யப் பிரபந்தங்களோதிச் சாத்தினவரென்பதும் "வேதப்பாட்டிற்றருந் தமிழுமிருநாலெழுத்தும்"......"அலங்காரர் படிவும் என்னெஞ்சகத்துள்நாட்டி" என்றமையால் பகவத்விபாதிகிரந்தஎங்களும், திருமந்த்ரார்த்த வியாக்யானமும், அர்த்தபஞ்சகாதி ரஹஸ்யங்களும் தோழப்பரிடம் அதிகரித்தவரென்பதும் "நற்றமிழ்ச்சீர்பதிப்போன் " என்றதனால் அரிய தமிழிலக்கிய விலக்கணங்களையும் அத்தோழப்பரிடமேகேட்டு நெஞ்சிற் பதியக் கொண்டவரென்பதும் விளங்குகின்றன. இதனால் இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறத்தாழ நூற்றைம்பதுவருடங்கற்குமுன்பு திருமாலை யாண்டார் சந்ததியாருள் ஒருவர்க்கு மாதுலராய்வந்து அழகர் கோவிற்புரோஹித நிர்வாஹம் பெற்றிருந்த தோழப்பர்கால மென்றறியத்தக்கது.
இவர் வேதாந்ததேசிகரையும் மணவாளமாமுனிகளையும் வழிபடும் பாசுரங்களால் வடகலைதென்கலையென்னு முபயவேதாந்தங்களுக்கும் முறையே பிரவர்த்தர்களான அவ்விருவரையும் வழிபாடுபுரியும் தென்கலை வைஷ்ணவரென அறியலாம்.
-------------
*செந்தமிழ் தொகுதி 13 பகுதி 2 பக்கம் 51.
இந்நூலிலுள்ள பலபாடல்களையும் பார்க்கும்போது, சங்கநூல்முதலிய பழைய தமிழ்நூற் பயிற்சியிற் றேர்ச்சியுற்ற பெரும்புலவரென்பதும், பலரும் சொல்லாத வண்ணச் சந்தங்களைக் கற்பித்துக்கொண்டு சொல்லின்பமும் பொருளின்பமும் சுவையும் அலங்காரமு மிலங்கக் கௌடவிருத்தியிலும் கவிகளியற்று மாற்றலுடையவரென்பதும் விளங்கும்.
இவர் வைஷ்ணவத்தில் மிக்க ஊற்றமுடையராயிருப்பினும் காப்புப் பருவப்பாராட்டிற் பரவுதற்குரியரென விதிக்கப்பட்ட சிவபெருமான், விநாயகர், முருகவேள் முதலியோரையும் நன்கு பரவுதலால் விதிமுறைதவறாதொழுகு மியல்புடையவரென்பதும் விளங்கும்.
இந்நூல் சிலபத்தாண்டுகளுக்கு முன்னரே ஒருவாறச்சிடப் பட்டிருப்பினும் இப்பொழுது அச்சுப்புத்தகம் எங்கும் கிடைக்காமையால் இதனை அச்சிட்டாற் காவியங் கற்பார்பலர்க்கும் மிகப்பயன்படுமென்று கருதி மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்த இரண்டு குறைப்பிரதிகளையாம் ஓரச்சுப் புத்தகத்தையும் வைத்துப் பரிசோதித்துச் "செந்தமிழ்" வாயிலாக வெளியிடலாயிற்று.
இந்நூற் பரிசோதனைக்குக்கிடைத்த இரண்டொரு பிரதிகளும் பிழைமலிந்திருந்தமையால் அவற்றுள் தெரிந்தவற்றைத் திருத்தித் தெரியாதவற்றை யிருந்தபடியே வைத்துப் பதிப்பிக்கலாயிற்று. ஆதலாற் செந்தமிழ்ப்பயிற்சியிற் றேர்ச்சியடைந்த பெரியோரிதனைக் கண்ணுற்று, சுத்தப்பிரதிகொண்டு, திருத்தவேண்டுமவற்றைத் திருத்தி எனது தவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இதனை அச்சிடுதற்குத் தமிழ்ச்சங்கக் கலாசாலை யுபாத்தியாயர் நல்லசிவன்பிள்ளை பிரதி எடுத்துக்கொடுத்தும், அச்சுச் சேர்க்கையை ஒப்பு நோக்கித் திருத்தியும் உதவிபுரிந்தது பாராட்டற்பாலது.
திரு. நாராயணையங்கார்.
-------------
உ
ஸ்ரீராமஜெயம்
திருமாலிருஞ்சோலைமலை அழகர்பிள்ளைத்தமிழ்
பாயிரம்
துதிகவி
அருசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
வெள்ளைத்தமிழ்கொடுலகினிற்பல்புலவர் விருப்பால்விளம்பேனைப்
பிள்ளைத்தமிழ்பிள்ளைத்தமிழேபெருமானலங்காரன்பொருட்டால்
வள்ளைத்தமிழ்கூர்வேம்பத்தூர்வருமாண்புலவோர்வகுத்ததனைப்
பிள்ளைத்தமிழேயெனுஞ்சிறுமைபெருமைபெரியதமிழெனுமால்.
காப்பு
நேரிசைவெண்பா.
செய்யாடிருமார்பன் செங்கமலக் கண்ணினான்
மையா ரழகன் மலர்த்தாளின்-மெய்யாகச்
செப்புபிள் ளைத்தமிழ்க்குச் சிந்துரமுன் வந்தளித்த
துப்பனைய பாதந் துணை.
அவையடக்கம்
நீரறா மானதப பெருவாவி பூத்ததொளை
நெடுநாள* முளரியேறி
நீறுபடு பொற்சுண்ண மாடிமது வுண்டு
#மகிழ் நிலவுதெரி தூவியன்னம்.
ஆரறா யுகளவும் புனலறு கருஞ்சேற்றி
னடைவாடு புல்லிதழ்ப்பூ
வாம்பலின் மணந்தது கடுக்குமறை யொருநான்
கரற்றுநெடு மாலாயிரம்
பேரறா தோதுநா வீறுபெறு குருகைமுனி
பிரமன் பாதசரன்முதற்
பெற்றமுனி முதலாம் வரத்தினர் முகத்தினிற்
பெரு(1)விழவு கொண்டிருக்கும்
வாரறா தண்ணாந் தெழுந்ததுணை முலைவாணி
மதிதவழ வமுதுபாயும்
மாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை
வழுத்துமென் னாவாழ்ந்ததே. (1)
-----------------
#மதி-பி-ம்.
ஆகத் திளந்தென்ற றைவரச் செந்தழ
லரும்பிலைச் சூதத்தின்வாழ்
அஞ்சிறைய யாழிசை மிடற்று(2)குயி லோசையென்
னமிர்தமிசை யுண்டசெவிகள்
காகத்தின் வெம்புலாற் பகுவாய் திறந்தலறு
கடியகுர லாயதீய
கடுவூண் மிசைந்தது நிகர்க்குமருண் மாலையிற்
கதிரொளி பரப்பு(3) மங்கண்
மாகத்து மீன்கண நறுந்துண ரொளிப்பவிசை
வண்டுழு படப்பைமுதலின்
வாவியலை கரை(4)தாவி மீனொளிக் கும்புதுவை
வல்லிதமிழ் கேட்டுநாக
போகத்து வெண்டிரைப் பாற்கடலின் விழிதுஞ்சு
பூந்துழாய்க் கொண்டல்சோலைப்
பொருப்புறையு மாயவன் மாலலங் காரனென்
புன்கவிச் சொற்கொண்டதே. (2)
------------------
1) விழைவு-பி-ம்
2) குயில்கூவுமின்னமிர்தமொழி பி-ம்
3) பரப்பியங்கண்.பி-ம்
4) தூவ பி-ம்
வழியும் பசுந்தேன் பெருக்கா றெடுத்தோட
மலர்விண்ட முள்ளரைத்தாள்
மரகதத் தண்பா சடைக்கமல வீட்டுறையு
மறைய*வன் சென்னிமுதல்பா
இழியுங் குலத்தினவர் கழிமுடைத் தலைகடை
யிரந்துமண் கொள்ளமறைநான்
கிருக்குந் துணைத்தாள் பதித்தது நிகாக்குமட
விளையநில வேறுகண்டற்
கழியும் புனற்*சுழியும் வலையுழுஞ் சோலைமலை
காவலன் றுளவநெடுமால்
கண்ணகன் கோநகர்ப் புதுவைகுடி வாழிளங்
கன்னியுந் தாய்முலைக்கண்
பொழியும் பசும்பாலுறாமழலை மாறன்+முதல்
புலவர்பதின் மரும்வழுத்திப்
புனையுந் தமிழ்ப்பாடல் கொண்டதோ ளடியென்மொழி
புன்கவித் தொடைகொண்டதே. (3)
விரவுந் திரைப்புனற் கங்கையங் கடவுணதி
வெள்ளம் பரந்திருப்ப
வினைபுரி குறுந்தொழுவர் தருமிழி கலந்துநீர்
விதுரனின் றாள்சொரிந்தெட்
டரவுங் குலக்கிரியு மணையும்வண் கடல்வேலி
யவனிதிரு வயிறிருப்ப
அவன்மனைப் புன்சுவைச் சிற்றடிசி லன்றுனக்
கவனளித் ததுநிகர்க்கும்
குரவும் ப*கந்துளவு மணநாறு கொந்தவக்
கொடியிடைப் புதுவைவாழும்
கோதையுஞ் சங்கணி துறைக்குருகை மாநகர்க்
குழவிமுத லவாபதின்மரும்
பரவும் பழம்பாடன் மறைமொழிச் செந்தமிழ்ப்
பாமாலை கொண்டதோளிற்
பழவடியென் வழுவுடைச் சொன்மாலை சூட்டியது
பைந்துழாய் மலையழகனே. (4)
அவையடக்கமுற்றும்.
-----
*மறையயன். பி.ம். +முதல்புலவர்-வினைத்தொகை.
பழிச்சினர்ப்பரவல்.
முதலாழ்வார் மூவர்.
*தெங் களைந்தடிய ருயிரொடு மணப்புற்ற
விருவினை தணப்பவோரேழ்
இசைமுறை பழுத்தவந் தாகிகொடு நெடியமா
லிருசரண மேததுபொய்கை
பூதந் தவங்கொள்பே யாழ்வா ரிமூவரைப் போதி*சண்
**டி*மை வழுத்திப்
பூந்தா மரைத்தாள் வணங்குவென் றெய்வப்
புரந்தர னுலோகபாரி*
சாதங் கொணர்ந்தெழிற் பின்னைக்கு விளையாடு
தளையவிழ் படப்பையாக்கத்
தாழ்சிறைப் புட்கபூத் தேறிமணி வாய்வைத்த
சங்கவெண் மிடறுகக்கும்
நாதங் கொழித்தமரா* கூட்டங்கள் சிதறவவர்
நாட்டங்கள் கூட்டுவித்த
நாரணனை மாலலங் காரனை வழுத்துமென்
னாத்தருஞ் சொற்றழையவே. (1)
பெரியாழ்வார்.
மறுத்தலை துடைத்தமதி மலர்*முகத் தேனுடன்
வண்டுவ*வ மதுமாலையும்
மாயவன் றிருமார்பு பொற்பக் கொடுத்துவள
மதுரையிற் *றாங்குகிழிதான்
அறுத்தலைச் செய்திப வெறுத்தத் துலாப்புரிந்
தாரணந் தமிழ்படுத்தி
ஆழி*மா லிருபதமும் வாழிபா டும்புதுவை*
யந்தணன் றாடுதிப்பென்
கருத்தலை நெடும்புணரி யேழ்விசும் பேறியிரு
சபையழிந் தொழுகிநின்ற
கன்மாரி காப்பப் பசுந்தா மரைச்சிறிய
கைக்கொண்ட வரையேழுநாள்
பொறுத்தலைச் செய்திடையர் சுற்றமுங் கன்றும்
புனிற்றாவு நின்றளித்த
பொங்கர்த் தடஞ்சோலை மலையலங் காரனைப்
புகழுமென் கவிதழையவே. (2)
நம்மாழ்வார்.
மறைவாக் குரைத்தபொரு ளுள்ளவை யடங்கலும்
வைத்துநா மணிமுறத்தில்
வழுவறத் தெள்ளியவை கோதற வடித்திரதம்
வாய்ப்பவள நாறுதமிழின்
துறைவாக் கெனுங்கலன் பெய்தன்பு நீரிற்
றுழாய்மணப் பதநோக்கிமால்
தொண்டர்க ளருந்தவிய லமுதினை வடித்தமுனி
துணையடி துதிப்பென்மதுவோர்
முறைவாக்கி வைத்தபைங் கழைநிறைத் திலவென்று
முதுகுடுமி யிடறியொழுகும்
முழுமதியி னமுதமுங் குறவர்மட மகளிரொரு
முறையாக்கி வழியவார்த்து
நிறைவாக்கி விளையாடு மலையலங் காரர்பத
நித்தலும் வழுத்தியேத்த
நிறைவாக்கு நாளும் பெருக்கா றெடுத்தோடி
நிலைபெற்று வாழ்வதற்கே. (3)
குலசேகராழ்வார்.
கெடப்பா யொளிச்செக்கர் மணியார நறவுபாய்
கிளைதுழாய்க் கொண்டலடியார்
கேண்மைகொள் பவர்ருகு மணுகாத வுரைசெவிக்
கேற்பதன்றென்று பகுவாய்க்
குடப்பால் விடப்பெரும் பாந்தள்வாய் கையிட்ட
கோவேந்த னரசரேறு
கோப்பெருஞ் சேரமா னடியிணை வழுத்துவென்
குழுமிவா னுலவுதெய்வ
மடப்பாவை மார்பொய்தல் வண்டலாட் டயரவுகை
மணிபூச லாடமேலை
மங்குல்வாய் நெஞ்சம் பிளக்கவுயர் சிமயத்து
மதிவந்து போனவழியே
நடப்பாக வந்துசதி ரிளமாதர் தம்மோடு
நாளும்விளை யாடுமலைவாழ்
நாரணனை மாலலங் காரனை வழுத்துமென்
னன்கவிதை வாழ்கவென்றே. 4
திருமங்கையாழ்வார்.
பொருமட னெடுஞ்சுடர்ப் போராழி மால்கரப்
பொன்னாழி கொளவந்தமால்
புட்பிடர் வரக்கண்டு மெய்ஞ்ஞான வெள்ளம்
புறம்பொங்க வுட்களித்துத்
திருமடனெடுந்தாண்டகங்குறுந் தாண்டகச்
செய்யுண்முதல் பலவுரைக்கும்
திருமங்கை முனிகலிய னாற்கவிக் கொண்டல்பூஞ்
சேவடி துதிப்பென்முந்நீர்
இருமடங் கூறுங் கடாங்கவுட் டூங்கவிழி
யிருகடையும் வடவைதூங்க
இருசெவித் தலைகடைத் தாறூங்க மாமன்விடு
மிகல்கரி மருப்புவாங்கி
வருமடங் கற்குருளை மாலிருஞ்சோலமலை
மாலலங் காரர்பச்சை
வண்டுழாய் மணநாறு மிருதோள் மிருதாளும்
வாழ்த்துமென் கவிதழையவே. 5
திருமழிசையாழ்வார்.
சூட்டுநா கப்பணப் பள்ளிப் பெரும்பாய்
சுருட்டித் தமிழ்க்கச்சியிற்
றுளவக் கருங்கட னடைப்பக் குடைந்தையிற்
றுயிலுமுகி றலையணப்பப்
பாட்டுநா வுரைசெயுந் திருமழிசை வேந்தன்
பரந்துலாஞ் சிந்தைபொறியின்
பாலணு குறாவகை நிறுத்துமுனி தாமரைப்
பாதந் துதிப்பென்மலர்பூ
வீட்டுநான் முகமுனியு நாட்டமா யிரமுடைய
வேந்தனும் விபுதர்குழுவும்
வெட்சியந் தெரியல்புனை வேளும்வா ரணமுகனும்
வெள்ளிவெண் கோடுகூடாக்
கோட்டுநா கிளமதிக் கண்ணியங் கடவுளுங்
கூண்டுவலம் வந்திறைஞ்சும்
குலமலைத் தலையறையு மாமலங் காரனைக்
கூறுமென் கவிதழையவே. (6)
தொண்டரடிப்பொடியாழ்வார்.
இருமாலை யாகப் பரந்தபூங் காவிரி
யிரண்டிடைச் சூட்டுநெற்றி
யெரிமணிப் பாம்பணைத் துயில்கொள்ளு மொருமாலை
யிசைமுறை பழுத்தசெஞ்சொற்
றிருமாலை சூட்டுபவர் தொண்டர்த மடிப்பொடித்
தெய்வமுனி யறிவின்வடிவாம்
செந்தா மரைத்தா ளுளத்தா மரைத்தலஞ்
சேர்த்துவென் றன்னைமுன்னாட்
டருமாலை யப்புணரி நீத்திளந் தெய்வமான்
றருணமணி யாரமார்பிற்
றார்பட்ட தண்டுழாய்க் காட்டுள்விளை யாடமகிழ்
சங்கேந்து கொண்டல்கன்னற்
பொருமாலை விண்டசா றோடமத வேழம்
புழைக்கர மெடுத்துநீந்தும்
பொங்கர்மலி யிடபகிரி மாலலங் காரனைப்
புகழுமென் கவிதழையவே. (7)
திருப்பாணாழ்வார்.
விழித்தா மரைத்துணையின் வேறுநோக் கலமென்று
விரிதிரைப் பொன்னிநாப்பண்
விழிதுயில் கருங்கொண் டலைப்பரவி யானந்த
வெள்ளத்து மூழ்கியியலின்
மொழித்தாம மொருபத்து மிருதோ ளணிந்தந்த
முகிலின்வடி வுட்கரந்த
முனிவன் றுணைப்பதம் வழுத்துவென் கொல்லையம்
முல்லைப் புலத்துலாவித்
தெழித்தா மழக்கன்று தேடிமுலை யமுதந்
தெருத்தலை நனைப்பவோடிச்
செல்லமருண் மாலையிற் பின்செலுங் கண்ணனைத்
திசைமுக னிருக்குமுந்திச்
சுழித்தா மரைக்கடவுண் மாலலங் காரனைச்
சோலைமலை வீற்றிருக்கும்
சுந்தரத் தோளனைத் தொண்டனேனுரை செயுஞ்
சொற்பாடல் வளர்வதற்கே. (8)
சூடிக்கொடுத்தநாச்சியார்.
பாடற் *கரும்புழு துழாய்வாட வெயினின்று
பவளவா யீரமாறாப்
பச்சைப் பசுஞ்சொற் புதுப்பாட லுஞ்சுருள்
பனிக்குழன் முடித்துதி*ர்க்கும்
வாடற் பழஞ்சருகும் வேட்டரங் கேசனும்
மலைகுனிய நின்றமுகிலும்
மாலலங் காரனு மிரப்பவருள் புதுவைவரு
வல்லியிரு தாடுதிப்பென்
*சேடற் பெரும்பள்ளி விழிதுஞ்சு பாற்கடற்
சேர்ப்பற்கு மணிவரன்றிச்
சிலம்பாறு பாயுஞ் சிலம்பற்கு வெள்ளவொளி
தேங்கியலை வைகுந்தவா
னாடற்கு முல்லைப் புலத்தா நிரைப்பின்
னடந்ததா ளண்ணலுக்கு
நான்மறைப் பொருளாய வழகற் குரைக்குமென்
னன்கவிதை வாழவென்றே. (9)
---------
* சேடற்பெரும்பள்ளி - ஒன்றியற்கிழமைக்கண்வந்த ஆறாம்வேற்றுமைத்
தொகை, றகரம், வலித்தல் விகாரம்.
மதுரகவியாழ்வார்.
மட்டோ லிடுந்தொங்கல் வகுளமண நா றுதோண்
மாறன்வண் டமிழ்படுத்தி
வனசவீட் டுறையுமுனி தன்னுலு மெழுதொணா
மறைநாலு மெழுதுவிக்கப்
பட்டோலை யெழுதியாங் கவனையீ ரைந்துகவி
பாடிநெடு மாறன்னையும்
பாடாத மதுரகவி யிருதா டுதிக்குவென்
பைங்குவளை மென்றுமேதி
நெட்டோடை யுட்புகச் சுரிசங்கு துண்ணென்
நிலாமணிக் கருமுதிர்ந்து
நெடுவரம் புந்தவழந் தேறிவிளை வயல்புகுத
நெற்குலை யரிந்தமன்*வர்
கட்டோடு தலைமீதி லாகியுதிர் நெலலுடன்
கதிர்மணி யுகுக்கும்யாணர்க்
காமலையின் மாலலங் காரனைப் பாடுமென்
கவிதழைத் தோங்கவென்றே. 10
எம்பெருமானார்.
மறைமயக் கெவரும் புலப்பட வுணர்ந்தறிய
வாய்மைபெறு பொருளுரைத்து
மாறுபடு சமயங்கள் வாக்கினால் வென்றுதிரை
வாரிதி வளாகத்தின்வாய்
இறைமயக் கந்தவிர்த் தியாவர்க்கும் யாவைக்கு
மேபிரா னாழிசங்கம்
ஏந்துமா லென்றுறுதி யாக்கிரா மானுசன்
னிருசரண நெஞ்சுள்வைப்பென்
பிறைமயக் குங்குறு நுதற்கோவி மார்குழிசி
பெய்தவளை யெற்றுபந்து
பிறழொளி மணிக்கழங் கிவைகொண்டு நாளும்
பெருங்கலக மிட்டுமுடனே
குறைமயக் குங்கண் பிசைந்தழு தசோதைதன்
கோபந் தணிப்பமணிவாய்க்
+ குறுநகை விரித்தமுகின் மாலலங் காரனைக்
கூறமென் கவிதழையவே. (11)
வேதாந்ததேசிகர்.
திருமாற் பயோதகி*த திருமந்*த்ர வமுதினைத்
திருமகட் குயின்முகந்து
சேனைமுத லிக்கோப் பெயக்காரி *ரேய்ச்சுனைத்
தேங்கிநா தமுனி யாகும்
அருமாற் சடம்வார்ந் துயக்கொண்ட வள்ளன்மடு
வார்ந்துசீ ராமரென்வா
யால்வழீஇ யாமுனா ரியவுந்தி யூர்ந*துபூர்
ணாரியக் காலினொழுகிக்
கருமாற் றிராமா னுசக்குளங் கழுமியெழு
பானான்கு தூம்புகாலக்
காசினிப் பாணையுயிரக் கூழ்வளர வயன்மதக்
காராக்சண் மேயந்தடாது
பெருமாற்கு விளையுள்வீ டடையப் புற*நதுரும்
பெருவேலி யாமெம்பிரான்
பேக*பய வேதாந்த தேசிகன் றாடொழுவல்
பேரழக னுறழையவே. (12)
----------
+ கோபம் - பி-ம்.
மணவாளமாமுனிகள்
குணவா யதித்தெற்று வேலைஞா லத்திருட்
கொள்ளைவெயில் சீத்தகற்றும்
கோகனக மணவாள னெனவடியர் தொல்லைநாட்
கொண்டவினை யிருளகற்றும்
மணவாள மாமுனிவன் மகிழ்வுடன் கருணைபொழி
மலர்விழியி னெம்மைநோக்கி
வயிறுபசி யாமனா வறளாம னாளுமறை
வாய்த்தவிரு நாலெ ழுத்தே
உணவாக நஞ்செவியி லிருபுறமும் வழியவார்த்
துயிர்தளிர்ப் பித்தவெங்கோன்
ஒளியீட்டு திருநாட்டு வழிகாட்டு தாட்கமல
முளமீது வைப்பனெட்டைப்
பணவா ளராவுலக முடைநாறு வெண்ணெய்பேய்ப்
பாவைதன் முலையுளமுதம்
பருகிச் செவந்தவாய் மாலலங் காரனைப்
பாடுமென் கவிதழையவே. (13)
ஞானாசாரியர்.
ஒட்டிக் கடிந்துநெடு நாடொட்டு வருதீய
வூழ்வினைக டம்வயத்தில்
ஒடுமைம் புலனையு மனத்தோடு நெறியினின்
றொருவழிப் படநிறுத்திக்
கூட்டித் தடஞ்சோலை மலைநிழன் மலர்கரங்
கோத்துவலம் வந்துகண்ணீர்
கொழிப்பமெய்ம் மயிர்பொடித் துளமுருகு தொண்டர்தங்
குழுவுடன் கூட்டிவேதப்
பாட்டிற் றருந்தமிழு மிருநா லெழுத்தும்
பசுந்தேன் பெருக்கெடுக்கும்
பைந்துழாய்ப் பள்ளியந் தாமத் தலங்காரர்
படிவுமென் னெஞ்சகத்துள்
நாட்டித் தளிர்ப்பித்த திருவாளர் தோழப்பர்
நற்றமிழ்ச் சீர்பதிப்போன்
நலமருவு மழகன் பரோகிதன் புனிதபத
நாண்மலர் வழுத்துவேனே. (14)
அடியார்கள்.
அண்டர்க்கு நான்முகக் கடவுட்கும் வானநீ
ராறுபாய் சடிலருக்கும்
ஐரா வதப்பெரும் பாகற்கு மெட்டாத
வாழிமால் பதமிலையுநற்
றொண்டர்க்கு மன்புபுரி தொண்டர்தந் தொண்டர்க
டுணைத்தா டுதிப்பெனலைவாய்ச்*
*சுரிசங்க மூசலா டுங்கடற் பள்ளநீர்*ச்
சூற்கொண்டு திங்கணிறையும்
கொண்டற் குலஞ்சொரியு முத்துங் கழைக்கண்
கொழிக்கின்ற முத்தும்வேழக்
கோடுசொரி முத்தமும் பூகத்தின் முத்தமுங்
குறமகளிர் பொய்தல*யரும்
வண்டற் குரற்புகா வரிசியா கர*சந்த
மதுமலர்க் கறியமைக்கும்
மாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை
வழுத்துமென் னாவாழ்வதே. (15)
பாயிரம் முற்றும்.
1. காப்புப்பருவம்.
திருமால்.
நீர்கொண்ட நெடுந்தாரை குறுங்கை தோய
நேமிவரைப் பெருவேலி சூழு மேழு
பார்கொண்ட தாளாள னோங்குஞ் சோலைப்
பருப்பதத்த னலங்காரன் றமிழைக் காக்க
கார்கொண்ட காரொன்று கட லிரண்டோர்
காலத்துத் தலைமணந்த தென வசோதை
ஏர்கொண்ட கண்ணினிழல் பாயக் கைம்மீ
தேந்துமலர்ச் செந்துவர்வா யிளைய மாலே. (1)
திருமகள்.
வேறு.
வளர்க்கும் பசுங்கிளிக் கமுதமும் பூவைக்கு
வரிமிடற் றளியலம்பும்
வளர்தருச் சோலையும் புறவுக்கு நிழலுமிழ்
மணிததூது மானுக்குவான்
விளக்குங் கலைத்திங்க ளும்பெடை யனத்துக்கு
விரிபொகுட் டருகுகுக்கும்
விளைநறைக் கமலமுங் கொண்டுவெண் டிரையின்வரு
மெல்லிய லளிக்கமேருத்
துளங்குங் கடுங்கான் முகந்திறைக் குஞ்சிறைத்
துகள்பம்பி யுத்திகண்டச்
சுழன்றிமை கரிக்கக் கடைக்கண் டழற்கற்றை
*தாண்டர் சினத்தபுள்வாய்
பிளக்கும் பிரானிசை முரன்றிதழ் குடைந்தூது
பிள்ளைவண் டாடுதுளபப்
பிரசமெறி சுந்தரத் தோளாவன் மறைமுதற்
பேராள னிசைதழையவே. (2)
பிரமதேவர்
ஆட்டுந் திரைக்குண்டு நீரக ழிலங்கைக்கு
ளாறுகால் பாயநறவம்
ஆறுபாய் தாமரைக் குலமாதை யுங்கடவு
வாழியங் கதிரோனையும்
கூட்டுங் கடுங்கார் முகக்கொண்ட லைத்தழைக்
கொய்துழாய்ச் சாச*னமேருக்
குவடுபடு சுந்தரத் தோளனைத் திருமங்கை
கொண்கனைக் காத்தளிப்பான்
*ஈட்டும் பிழம்பனற் குளியா துலைக்கொல்ல
னில்லம் புகாதரத்தால்
எறியுணா தொலிபொங்க வடியுணா துயர்தட்டி
லேறாது கூர்மழுங்கா
தூட்டுந் துகிற்றலையி னெய்யுணா துறைபுகா
துடல்கறை படாதிருந்தும்
உடற்றும் பெரும்படை தொலைக்கும்வாக் காயுதத்
தொருகமல மறைமுனிவனே. (3)
சிவபெருமான்
வேறு.
அருமறைமொழியு நூலினைநறிய கமலக்கரங்கள் யாப்பவும்
அளியுளர்பதும மாளிகைமுனிவன் வதுவைச்சடங்கு காட்டவும்
அருள்விளையிமய மாதுலனொழுகு புனலைத்தடங்கை வார்க்கவும்
அடைபொதிதுளவ நாரணன்வெளிய பொரியைக்கொணர்ந்து தூற்றவும்
இருவருநறுநெய் தூவியவெளிய வலனிற்சுழன்று போற்றவும்
இருகரமுளரி நாண்மலர்சிலையின் மயில்பொற்பதங்க ளேற்றவும்
எழுகதிருலவு வான்வடதிசையி லுடுமுற்றம்வந்து காட்டவும்
இடுதுகின்முகப டாமுலைபுணர வுமையைப்பரிந்து வேட்டவர்
மருமலர்பொதுளி வானுழைவளர மருதைத்தவழ்ந்து சாய்த்திடை
மடவியரிழுது தோய்முடைவிரவு துகிலைக்குருந்து சேர்த்துளம்
மகிழ்வருகுரவை நாடகமயர விரலைத்தெரிந்து கோத்திலை
மனைநடுவுறியின் வாயளைகளவு கொளவற்றநின்று பார்த்தலை
பெருகமுதுகொள வானிரைவயிறு நிறையப்பசும்புன் மேய்த்தரை
பிணையணைகயிறு நார்முடைபடலு மடையப்பிணைந்து தூக்கிய
பிடவணைபடலை யாயனைவிபுல வெளிதொட்டணைந்த கோட்டயல்
பிறைதவழிடப மால்வரையுறையு முகிலைப்பரிந்து காக்கவே. (4)
தேவேந்திரன்
வேறு.
நறைகமழ் $ காழகில்சுட்டபுனமுழப்
பதம்வாய்ப்பமதனெழுசீயப்போத்துகள்
நடையடிகானவரொற்றிநடவையிற்
சுவடேய்ப்பவிடைபறழ்நாலத்தாய்க்கலை
நனைவிளை தாழ்சினைதத்தி * முழைமுடக்
குடில்சாய்ப்பமடமயில்கூடிக்கூத்தெழ
நரையுருமேறுசிலைப்பமுடிவிதிர்த்
தரவாற்றல்கெடவிடர்தேடிப்போய்ப்புக
உறைநுகர்சாதகம்விக்கல்விடவிடைக்
குலமாக்கள்படன்முடையோலைக்கீழ்ப்புக
ஒளியெழுகோபநிரைப்பநிலவுபுட்
சிறையாட்டி மகிழ்பெடைமூடிச்சேக்கையில்
உறைதரவோசனைபட்டமணமுதைப்
புனம்வீக்கமுனிவரர்சாலைப்பாட்டிள
வுழைகலையோடுதெவிட்டவனசமொட்
டிருள்சீக்குமிளவெயில்காணற்கேக்கற
அறைகடனீர்விளையிப்பிவிழுமழைத்
துளியேற்றுநிலவுமிழாச்சக**சூற்கொள
அகன்மடல்கோடல்விரிப்பவெயிறுநட்
டுளை காற்றிநெடுமயிரேனச்சாத்துழ
அகழ்படுகூவல்கொழிக்குமமுதுவெப்
பெழமாத்துவதிகுயில்வாயைத்தாட்கொள
அகமகிழ்கேள்வர் தமக்குமரிவையர்க்
குளமூட்டுமளவறுகாமத்தீச்சுட
மறைமொழியாளர்வழுத்தியனலொழுக்
கவியேற்றுவலம்வருமோதைக்கார்ப்புயல்
மலர்நிலமாதுகுளிப்பமழைகொழித்
தெழநோக்குசுரர்பதிதாளைப்போற்றுதும்
மணிநிரைமேயவெடுத்தகழைமிடற்
றிசையூற்றிமலர்புரைதாளூட்சேப்புற
வனநடுவோடியிளைத்தவழகனைப்
பொழில்வாய்த்தகுலமலைமாலைக்காக்கவே. (5)
---------
$ காரகில் பி-ம் * யுறைமுடக் பி-ம்
ஆதித்தன்
வேறு
பரியரை யுரற்பிறை நகப்பிண ரடிக்கைப்
பருப்பதந் தண்டுறைதொறும்
படியமடை படுகரட வாய்திறந் திழிமதம்
பாயமணி யமுனைதோயும்
முரிதிரைப் பகிரதி கடுக்குஞ் சிலம்பாற்று
முதல்வனைக் கடவுள்வேத
முறையிடுந்தாமரைத் தாளானை வண்டுழாய்
முகிலைப் புரக்கவெள்ளைப்
புரிமுக வலம்புரி முழங்கச் சகோரவெண்
புட்கிரை யளிக்கும்வானம்
பூத்தமதி கரமொழிய விளைஞரைக் காமன்
பொருள்கணை துறப்பவெழுபண்
தெரிவண்டு சிறைவிட் டுவப்பக் குணாதுவளர்
திக்குவெள் ளணியெடுப்பத்
தேமுளரி தளைவிடப் புவியிரவு விடவலைத்
திருவவ தரித்தசுடரே. (6)
விநாயகக்கடவுள்
ஊற்றும் பசுந்தே னகிற்கா டெறிந்தெயின
ருழுபுனந் தினைவிதைப்ப
ஊட்டழ லிடுஞ்சாரன் மலைமுதுகு பொதிவெப்ப
முடைதிரைத் திவலைதூற்றி
ஆற்றும் புனற்சிலம் பாற்றருகு விளையாடி
யாயிரம் பொங்கர்தங்கி
யாயிரம் குண்டுநீர் மடுவுட் படிந்துவரு
மானையைக் காக்ககங்கை
தூற்றுந் தரங்கவொலி யிற்றுஞ்சி யறுகிவந்
தோட்டிணர்* விழைந்து செங்கைத்
$ துணைச்சிறு பறைக்குர லெ*திர்ந்திதழி நெடுவனஞ்
சூழ்ந்துடலி னிலவுவெள்ளம்
காற்றும் பொடிப்பூழி கால்சீத் தெறிந்திறைவி
கழைசெ*டுந் தோள்வரிக்கும்
கரும்பினிற் கைவைத்து வெள்ளிப் பொருப்பெந்தை
களிகூரவரும் வேழமே. (7)
------------------
*வனைந்து. பி-ம் $ தொளை. பி-ம்
முருகவேள்
வள்ளைகா னீக்கிச் செழுங்குவளை மென்றுகய
வாயெருமை குழவியுள்ளி
மடிவளஞ் சொரியமுது மடுநிறைப் பக்கமல
மண்டபத் தரசவன்னப்
பிள்ளையா லும்புன றுறந்தமு தருந்திவெண்
பேட்டினந் தாயெகினம்வாய்
பெய்யிரை தெவிட்டுமகன் மாலிருஞ் சோலைப்
பிறங்கன்முகி லைப்புரக்க
கள்ளையூ றுந்தருத் தறியுணா மற்றேவ
கன்னியர் களஞ்சூழுநாண்
கழலாம லைரா வதப்பெரும் பகடழற்
கானம் புகாமலமுதம்
கொள்ளைபோ காமற் புரந்தரன் படுசிறைக்
கூடம் புகாமல்வெந்தீக்
கொளுந்தாம லகனெடும் பொன்னக ரளிக்கின்ற
கோழிப் பதாகையானே. (8)
வைரவன்
வேறு.
புடைவள ராரப் பரியரை பேரப்
புதறலை சாயத் துடிபட விருகரை
புகர்மணி வாரிக் குனிதிரைவீசிப்
புனலுமிழ்வாவிக் குருகெழநடுவுயர்
திடரகழாய்நெட் டகழ்திடராகச்
சிறைபொரும்யாணர்ப் பரிபுரநதிவரு
சினைவளர்சோலைத் திருமலைவாழ்கைச்
சிலைமுகில்காவற் புரவலன்வெளிபொதி
கடையிருள்வேர்விட் டெழுமுழுமேனிக்
கடல்விடுசோரிப் புலவெழுவடிபுரி
கவைபடுசூலப் படைதொடுபாணிக்
கனலபிழிவேணிச் சுடாமணிநிறைவிரி
படமுடிநாகப் புரியுபவீதப்
பலிகொள்கபாலப் புயலுருமெறிகுரல்
படுசுருடோகைக் கழலவிழி ஞாளிப்
பணைமுதுகேறித் திரிதருமிறைவனே. (9)
சத்தமாதர்.
வேறு.
வருபுனலவனி புதைப்பக்கோட்டின்
முழுகிநிமிர வலைவறவெடுத்தவள்
மதமழைகரட முடைத்துச்சாய்க்கும்
வெளியகரியின் முதுபிடர்புரப்பவள்
மரகதவளறு திரட்டிக்கோட்டு
நெடியபசிய களமயிலுகைப்பவள்
மலர்பொதுளிதழி தழைப்பப்பூக்கு
மமுதமொழுகு மதிவகிர்முடிப்பவள்
இருகடைவிழியு நெருப்பைக்காற்று
மலகைசுழல வருபிணனுகைப்பவள்
இமையவர்வயிறு நிறைப்பத்தேக்கு
மமுதகருணை கடைவிழிபழுத்தவள்
எறிவளியுதறு சிறைக்கொத்தேற்றை
யெகினநடவு மறைமொழிமிடற்றினள்
எனவிவருலகு துதித்துப்போற்று
மெழுவர்முளரி யடிமுடியிருத்துதும்
அரன்முதலெவரு நினைத்துப்பார்த்து
மறியவரிய விழைபெருமயக்கனை
அகிலமுமுதர மடுக்கடபூத்த
கமலநறிய நறைவழிபொகுட்டனை
அழகியகுரவை நடத்துக்கேற்ப
வொருகைநடுவ ணலமருகுடத்தனை
அலைகடலமலை யுதித்துத்தோற்ற
வுருவுவிளையு மளவறுகளிப்பனை
விரியொளியுததி கொழித்துக்கோத்த
வழிவில்பரம பதமுதுபுரத்தனை
விடையுரமுழுத மருப்புக்கீற்றி
லிடையர்மகளி ருழுமுலைமுகட்டனை
விரிதலையருவி தெழித்துத்தாக்கு
மெழிலிதவழ நிலவியபொருப்பனை
விளையிளநறவு சுழித்துத்தூற்று
துளவமுகிலை யழகனையளிக்கவே. (10)
முப்பத்துமூவர்
வேறு.
விரிதடமத்தகத் துச்சிதாழ்சுழிக்கடல்
விளைகடம்விட்டொழுக் கெட்டுவாரணத்தினர்
விரியுளை நெற்றியிற் கொட்டும்வாலெழிற்குரம்
விரைபெரிபெற்றிரட் டித்தவான்மருத்துவர்.
இருகடையுட்குழைத் தொற்றைமேருவிற்றொடும்
இறையவர் பத்தொடொற் றித்தவேறுகைப்பவர்
இருபதிலெட்டொழிப் பித்ததேர்துரப்பவர்
எனவிவர்தொக்களித் தற்கியாம்வழுத்துதும்.
சொரிபருமுத்திணர்க் கக்குபூகநெட்டிலை
தொடுசடைநெற்குலைக் குப்பைநாவளைத்துழு
கரிவளைமட்கரைப் பற்றிமேதியுட்குளி
தொடுகுளமுக்குளித் தெற்றுநீரொலிப்பெழ
மரையுயர்பொற்பறக் கொட்டைபாழ்படச்சிறை
மடவனம்விட்டெழப் பெட்டவாளைசெய்ப்புகும்
மலர்வதிபுட்குலக் கத்தறாததொத்தளி
வளர்பொழில்வெற்பினிற் பச்சைமாறழைக்கவே. (11)
காப்புப்பருவம் முற்றும்
-----------
இரண்டாவது - செங்கீரைப்பருவம்
சுருள்விரிமுழுமுதல் வாழைக்கூனற்
குலையினின்மிடறுடை பூகப்பாளைத்
தலையினிலறைநடு விண்டாழுஞசீதச்
சுனையினின்முகைநெகிழ் காவித்தாழிப்
புடையினினெடுமணல் வாரித்தூதைக்
கலனணிமகளிர்க ரங்கோலுஞ்சாலைச்
சுவரினிலலமரு மூசற்காலிற்
படுவினிலொழுகிய சோனைத்தேனிற்
சுழல்படுமளிகள்கு டைந்தாடுங்காவிற்
சொரியுமுளுடல்பொதி யோலைததாழைப்
பரியரையினின்மறி நாகைத்தேடிக்
கவரிகண்முலையில்வ ழிந்தூறும்பாலிற்
கரைதவழ்முரிதிரை பாய்நெட்டோடைச்
சுழியினில்வழியினி னீர்குத்தோதைச்
சிறையினின்மளவர லம்பாயுஞ்சாலிற்
கழனியிலரைதிரள் காய்நெற்சோலைத்
தலைவளைகுலையரி தூரிற்றூமக்
குழலிடைமடவியர் வண்டோடுஞ்சூடிக்
கடையினிலுதறிய தாரீற்றாவிப்
புலவெழுமுதுசுற வாளைப்பாயசுற
றகழியிலருமழை கண்சூழும்பானுக்
கதிரெழுபுரிசையி லூரிற்போரிற்
றெளியினினடவினில் யாணாக்கானற்
றுறையினின்மதரம்வி ளைந்தோடும்பாகிற்
பொருபுனலெழுவரி வாளைப்பூசற்
படவிடுபெருமடை வாயிற்சாதித்
தொடரிணர்நறுவழை சிந்தாரம்போலும்
பொதிமுகையவிழ்மலர் வேரிப்பாயற்
றுணைவிழிதுயில்வதி மேதிப்பாழிச்
சுவலினில்வனச முகங்காலுந்தாதிற்
புழைபடுநெடுநிலை நாளப்பானற்
கழியினின்மதனடு சாபக்கானிற்
சரிகயலணவியெ ழுந்தேறுஞ்சாரிற்
புதல்படுதுகிர்கொடி மூடித்தீகக்
கடவியிலிளவெயி றோய்பொற்பூழித்
தெருவினிலிளைஞர்க ணின்றூருந்தேரிற்
றிருவளர்கடிமனை மாடத்தேணிப்
பழுவினினிலவுமிழ் தூவிப்பேடைக்
குருகெழுநதியலை சென்றேறுங்கூலத்
தினில்விளைபுனவிதண் மீதிற்கால்பட்
டுடலுளைமணிபொதி சூலைக்காலச்
சுரிமுகவரிவளை வந்தூருஞ்சாரற்
றிருமலையழகர்த டாகத்தோடைப்
புகர்முகமதகரி கூவச்சேனப்
பிடர்வருமழைமுகில் செங்கோசெங்கீரை
திருமடமகண்மகிழ் கூரப்பாடக்
குருமணியிடறிய மார்பிற்பீடத்
தினையிடுமழைமுகில் செங்கோசெங்கீரை (1)
வேறு.
தொளைபடுகரட மூற்றெழத்தேங்கி
வழிமதம் வண்டோடுஞ்சாயச்
சுழல்வருபெடையெ னாக்கரத்தூர்ந்த
புயறொடல் கண்டூடுங்காதற்
களிவருபிடித ழீப்பணைச்சார்ந்த
கறையடி மென்றார்வங்கூரக்
கவுளுழைசெருகி நாட்பிறைப்போன்ற
நகநுதி மண்சீவுந்தூளைக்
குளிர்புனலலைய வாட்டுடற்பாங்கர்
வழியவெ றிந்தாரந்தூவக்
குளிறியவருவி நீர்க்குரற்கேன்று
கரிநிரை கண்சாயுஞ்சாரற்
றெளிமதுவொழுகு காக்கிரித்தோன்று
மழைமுகில் செங்கோசெங்கீரை
திருமலையழக வாக்கிசைக்காம்ப
மழைமுகில் செங்கோசெங்கீரை. (2)
வேறு
இருவிழிசெவந்து கயலொடுமயங்க
வெறியுமாநீ ரோடைகுடைந்தா*யு
இடைவெளிநுடங்க விருபுறம்விழுந்த
கயிறுகால்பூ ணூசலுதைந்தாடி
ஒருமுறையகங்கை யொருமுறைபுறங்கை
யறையவோவா நால்வருபந்தாடி
யொருபதமகண்ட நிலவு* புகழ்கொண்ட
முதன்மைபாடா வேழுகழங்காடி
வருகுறவர்தந்த மடமகளிர்வண்டல
விழவுமாறா நீர்பொதிமஞ்சாடு
மதியுழவழிந்த வமுதநதிபொங்க
வருடைகாலாழ் வேரலிளஞ்சாரல்
அருவிவரைநின்ற வழகவிதழ்பம்பு
துளவமாலே யாடுகசெங்கீரை
அருமறைவிரிஞ்ச னிமயமயிலகொண்க
னமரர்கோவே யாடுகசெங்கீரை (3)
-----------------
*(வெளி பி-ம்)
முலையமுதலம்பி விழநெடுவரம்பு
குறியகாலாழ் மேதிகயம்பாய
முருகிதழ்பொதிந்த குவளைகண்மயங்க
விடறிவாலால் வாளைவெருண்டோடி
இலைதலைவிரிந்த கமுகமடல்விண்ட
மிடறுவாய்சூழ் பாளைபிளந்தேகி
இமையவரருந்து மதியமுதகும்ப
முடையநீர்மேய் மேக$விகம்பூறி
மலையுடல்குளிர்ந்து விடவெளியெழுந்து
முழுகுதீயா டாலைநறும்பாகு
வழியும்வயன்மஞ்ச ளிலைமிசைவிழுந்து
களிறுபோலே சாரன்மணந்தோதை
அலையருவிதுஞ்சு மிடபமலைநின்ற
துளவமாலே யாடுகசெங்கீரை
அருமறைவிரிஞ்ச னிமயமயில் கொண்க
னமரர்கோவே யாடுகசெங்கீரை (4)
-----------------
$ (மேகமசும்பூறி, பி-ம்.)
வேறு
இருகுழைமதர்விழிகிழிப்ப வலமருமகிழ்குரவை
தொட்ட பொதுவிய ரோதிபுறந்தாழ
இளநிலவுமிழ்மதிபகுத்த சிறுநுதல்குறுவெயர்முளைப்ப
வமைபொரு தோள்புளகங்கூர
மரகதவரையகலமுற்ற தினிவருசுரர்பதிவருத்தம்
இலையென வார்வம்விளைந்தோடு
வரைவெளிகுழுமிநடமிட்ட தெனவொசிகொடியிடையொளிப்ப
இளையப யோதரநின்றாட
விரியுலகமுமுலகொடுக்கு முதரமுமசையவலர்செக்கர்
மலர்புரை தாள்கள்செவந்தேற
விரைகெழுதுளவு நறைகக்க வொருகரமிசைகுடமுருட்டி
இசைவழி யாடுபரந்தாம
அருவினைபுறமிடவெருட்டி யடியவரளவினருள்வைத்த
மழைமுகி லாடுகசெங்கீரை
அளியுழுபொழில்புடையுடுத்த வுடுபதிதவழிடபவெற்பின்
மழைமுகி லாடுகசெங்கீரை. (5)
வேறு.
முளைக்குந் திருப்பாற் கடற்பெருஞ் சூன்முலை
முகக்கண் கறாமல்வட்ட
முகமதி வெளுப்புறா மற்பச்சை மரகதம்
முகடிளகி யொழுகுபாடம்
விளைக்குங் குழம்புதோய்த் தெற்றுபல நூலென்ன
மெய்ப்பசு நரம்பெடாமல்
வேய்நெடுந் தோள்கண்மெலி யாமலா லிலைவயிறு
வீங்காமன் மனைமதிற்பால்
வளைக்கும் புகைப்படலை மண்டொடா மற்சால
வயவுநோய் கூராமனாள்
வளர்திங்கள் பத்தும் புகாமற் பெருந்தூணம்
வாய்த்தகோ ளரிகளித்துத்
திளைக்கும் பெடைக்குருகு சூழ்சிலம் பாற்றிறைவ
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (6)
சாய்க்குங்* கடும்புனல் பரந்தோட வுரகனற்
றருணமணி யணவுசூட்டுத்
தாழ்கடம் பிற்குதித் தாடலுங் கொங்கையந்
தடநெடுங் கிரிசுமந்து
மாய்க்குமெ னுசு*ப்பிளங் கோவியர் வளைக்கர
மலர்த்துணை பிணைத்தாடலும்
வட்டவாய் முடைபடுங் குழிசியிற் றீயாடி
வழியுமின் பால்பதத்திற்
றோய்க்குந் தயிர்த்தலையின் மத்தெறியு மிழுதுணத்
துளவோடு கரியமேனி
துவளநின் றாடனும் முன்புள்ள விப்போது
தொண்டர்தம் வினையிரண்டும்
தேய்க்குந் திருத்தாள் குனித்துநின் றழகனே
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (7)
--------------
* (பெரும், பி-ம்)
முருகுண்டு நாகிளம் பெடைவண் டியாழினிசை
முரலவளி தடவவாடும்
முகைமுக முறுக்குடைந் தவிழ்தரும் பூவைகிரி
முதுகுவலம் வந்துவீழ்ந்து
கருகுந் திரைப்பரவை மேய்ந்தகல் விசும்பாடு
கருவிமழை யாடுகொள்ளைக்
கண்ணகன் பொய்கைக் கருங்காவி யாடிளங்
கருவிளந் தொகுதிபிள்ளைக்
குருகுஞ் சலஞ்சலமும் விழிதுஞ்சு துஞ்சாக்
கொழுந்திரை கொழித்ததிவலைக்
குளிர்புனல் பரந்தாடு காளிந்தி யெனவலை
கொதிப்பக் கடுங்கார்முகம்
செருகுங் கணைக்குரிசி றிருமேனி துவளநீ
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (8)
கறைபாய்ந்த குலிசப் படைப்பாக சாதனக்
கடவுளும் விபுதர்குழுவுங்
கடும்பொடு கடும்பசி கெடுத்தருந் தப்பணக்
கட்செவிப் பாப்பெயிற்றுப்
பிறைவாய்ந்து காந்துங் கடுங்காள கூடவெம்
பேழ்வாய் திறந்துறுத்துப்
பிடித்துக் குதட்டியுமிழ் மிச்சிலும் போகமலர்
பிரசங் கொழித்திறைக்கும்
அறைபாய்ந்த நீருடற் கழுவிநெடு வெண்ணிலா
வமுதுணா மதியளிக்கும்
ஆடுதலை யருவிபாய் திசைநான்கும் வெளியின்றி
யளிகோடி புடையலைக்கும்
சிறைபாய்ந்த வளிதருஞ் சோலைமலை யழகனே
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (9)
ஈற்றுவண் டறுகால் குடைந்தாடு பொங்கர்விளை
யிளநறாத் துளிதூங்கியும்
இறாலுடன் முரக்கலை குதிப்பப் பசுந்தே
னிழிந்துமதி தவழநடுவு
தூற்றுவெண் டிரையமுது சுழியெறிந் துந்திரைத்
தொடுகடற் புனன்முகந்து
சூற்கொண்ட கருவிமுகி லிடறியுந் நாளத்
தொளைக்கைப் பொருப்புந்தியை
ஊற்றுவெங் கடநீர் கொழித்துமக விதழ்நெரிந்
துடையும்வண் டுளவமாலை
யொழியாது மதுவோட வுனதுசெந் திருவின்முலை
யுழுதலா லிளகுகளபச்
சேற்றுறு புயம்போ லசும்பறா மலைவாண
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (10)
குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங்
கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ்
குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட
கடுஞ்சிறை கிடந்தகூடக்
கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய்
உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்பிலத்
துள்வீழ் நான்மறைக்கும்
ஊன்றுகோ லாகமுடி பத்துடைய கள்வன்மே
லொருகோ லெடுத்துமுகிலைத்
திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (11)
செங்கீரைப்பருவ முற்றும்.
-------------
மூன்றாவது - தாற்பருவம்.
உடலியலவுண னாட்டியநெடிய தூணாவேசாநால்
உகம்வருமளவு தோறியவீருண நானாரூபாநாள்
முடியிடைமுதலி லாத்தனியுறையு மூவாமூதாளா
முனிமகமுடிவு காத்திடுசரண சாலாகார்வானா
மடிநிரைபுரவு மேய்ததுழலிளைய கோபாலேசாவான்
மகிதலநிறைவு காட்டியகரிய மாயாமாகாயா
அடியிணைகருதி யேத்திடுமழக தாலோ தாலேலோ
அரவணையுததி மேற்றுயிலழக தாலோ தாலேலோ. (1)
அடியவரளவி னோக்கியகருணை யாசாபாசாபூ
வயனொடுவயிறு சூற்கொளுமுதிய லோகாலோகாதே
மடழவிழ்கமல வீட்டுறைவனிதை லீலாகாராநேர்
வருசகடுடைய நீட்டியசிறிய தாளாதாள்சூடா
முடியுடையவுண ரோட்டெழநடவு சேனாரூடாபாண்
முரலளிநறவு வாக்கியதுளவு தோடோயாமோதர
உடுபதியிடறு காக்கிரியழக தாலேதாலேலோ
உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ. 2
வெருவரநிய மூட்டியகொடிய தீவாய்வீழாதே
விழைவுறுமடியர் வீட்டுறநயமில் கோதாய்வேதாநால
அருமறைமுதன்மை கீழ்ப்படவமுத மாராவாயாலே
அருள்குடமுனிவ னாத்தமிழ்புனையு நூலாலோவாதே
இருபுயம்வகுள நாற்றியமதலை மாறாபாடாய்நீ
யெமையெனவழுதி நாட்டுளகுருகை மூதூராழ்வார்பால்
உருகெழுசிறுக னீர்ததிடநடவு தாளாதாலேலோ
உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ 3
தொடுகடலலையின் மோத்துறுமுதிய கோண்மீன்மேயாமே
துகள்வெளிவயிறு போய்ப்புகநிலவு தீயேழ்நாமேயா
அடுபசிதணிய வேற்றெறிவளியி னாவாயோடாமே
அரிதுகிர்பொரிய மோட்டுடலலகை யூர்த்தேரோடாநீர்
இடுமணல்சுழல வார்த்திரநிவக மேகாவாய்காவாய்
இருநிலம்விடவெ டாச்சிலைவலிய கால்பூணான்வாயே
விடுமடல்புனைவி ழாப்பொலிசயில நாடாதாலேலோ
விரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 4
மழைபடிகடலு லாத்திரிபடவு சூழ்பாய்மீதேபோய்
மடமயிலகவி யாட்டெழவளைகள் கால்சூறூதாயா
அழகியபுறவு கூட்டுணவரிகொள் போர்மேல்வாமானேர்
அடிவிழவுகள வீற்றுளவிளைய சேதாவாய்பாய்பால்
எழுதினைகவர வேட்டுவர்வலைகள் பீறாவாலாலே
எறிசுறவறைய நாட்டிதணடுவு சூழ்கால்கீழ்மேலாய்
விழநிலம்விரவு கரப்பயில்சயில நாடாதாலேலோ
விரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 5
வேறு
முடக்குந் திரைப்பா லாழிநெடு
முகட்டிற்றுயில விருசெவியில்
மூல மென்னுங் குரல்புகுமுன்
முளரிப் பொகுட்டு வீட்டிலொற்றை
வடக்குங் கமச்சேற் றிருகொங்கை
மங்கை விளைந்த தெதுவென்று
மலர்க்கை நெரிப்ப வரவர*க
வணங்க வுதறி விசும்பிமைப்பிற்
கடக்குங் குடகாற் றெறிசிறையக்
கலழச் சேவற் பருமபிடர்க்
கழுத்தின் மேற்கொண் டப்புள்ளைக்
கால்கொண் டணைத்து விண்பறந்து
தடக்குஞ் சரத்தின் முன்சென்ற
தலைவா தாலோ தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (6)
எடுக்கு மிழுதோ டழுதோடி
யேகத் தொடரு மசோதைகரத்
தெட்டப் படவு மொருவருக்கு
மெட்டப் படாத புயல்புயலைக்
கடுக்குந் திருமே னியினடிபுக்குங்
கைம்மா றிருப்பப் பின்னுதவும்
கைம்மா றிலாத கடலபசிய
கனக வுடுக்கைத் திருமங்கை
உடுக்கும் பாசங் கிடப்பவுளத்
தொன்றின் பாச மிலாதபச்சை
யோங்க லென்று மறைநாலு
முரைப்ப விரவி யுருட்டாழி
தடுக்குந் திருமா லிருஞ்சோலைச்
சயிலப் புயலே தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (7)
யாழுங் குழலும் பழித்தமொழி
யிடையர் மகளிர் குழைகிழிய
வெறிந்து செவந்த விழிவாளி
யிருக்கும் பகுவாய்த் தூணியலை
சூழுங் கடலீன் றளித்தமணி
தூற்றுங் கதிர்வெப் பொழியநிலத்
தோகை முகத்து மகரந்தந்
துளிக்குஞ் சிவிறி திருமார்பில்
வாழுங் கமலப் பொகுட்டுமயின்
மலர்த்தாட் டுணையிற் பொதிந்ததுகள்
மாற்றும் பசும்பட் டாடையென
வரைத்தோள் கிடக்கு மளிப்படலம்
தாழுந் துளபத் திருப்பள்ளித்
தாமப் புயலே தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (8)
நறைக்கட் பொகுட்டு மலர்குவிய
நளினந் திகைப்ப முகைக்குமுதம்
நாட்பூ வெடிப்பத் திகைப்பவெறி
நளிநீர்க் கயத்து ளுறைநேமிச்
சிறைப்புட் பேடை யுடல்பிரியத்
திகைப்பச் சகோர நிலவேட்கத்
திகைப்ப விலங்கு வதிதேடத்
திகைக்கப் பறவை பார்ப்புள்ளிப்
பறப்பத் திகைப்ப நறைப்பொழில்கள்
படியத் திகைப்ப வேள்சிலையிற்
பாணங் கொளுவத் திகைப்பவெயில்
பம்புஞ் சுடரை யெல்லெனவான்
மறைப்பத் திகிரி தொடுஞ்சோலை
மலையிற் புயலே தாலேலோ
மந்தா கினியும் பரிபுரமும்
வளரும் பதத்தாய் தாலேலோ. (9)
வேறு.
மகரங் குளிறுங் கனைகடன் மேய்ந்துயர் மலையின் றலைதுஞ்சும்
மழைமுகி லென்றெக் காலமுமிதழி மலர்ந்தலர் பொன்றூற்றச்
சிகரந் தொறுமட மயினட மாடச் செக்கர்க் கோபமெழச்
சினைவளர் காயா வகமட லூழ்ப்பச் சிதறுந் தளிபகுவாய்
நுகருஞ் சாதக மவத்தளவந் நுனைமுகை விடமின்போல்
நுண்ணிடை துவளச் சதிரிள மங்கையர் நுரைவிரி சுனைகுடையத்
தகரங் கமழும் குலமலை தங்குந் தலைவா தாலேலோ
சங்கந் தவழும் பரிபுர நதியின் றலைவா தாலேலோ. (10)
வேறு.
அளிக்குந் தரைக்கங் காந்தவுண
னகங்கை நிறைந்த நீர்வார்க்க
ஆழிப் பொருப்பு வேலியுல
கடிக்கொண் டோங்கி மழைக்கருணை
துளிக்குங் கமல மிரண்டுமறை
தோயுங் கமல மொன்றுமொளி
தூற்றுஞ் செக்கர்த் துகிருமிரு
சுடருஞ் சுரும்பி னிரைபரந்து
களிக்குந் தோட்டு நறைத்துளவக்
கானுஞ் சுமந்து வெளிவளரும்
கரிய பூவை மதிதவழ்ந்து
காலு மமுதப் பெருக்கிலுடல்
குளிக்குஞ் சிமய விடபநெடுங்
குவட்டுக் குரிசி றாலேலோ
குன்ற மெடுத்து மழைதடுத்த
கோவே தாலோ தாலேலோ (11)
தாற்பருவமுற்றும்
-----------
நான்காவது - சப்பாணிப்பருவம்
ஒருமுறையுனது வயிற்றுமலர்க்கு ளுத்தவனப்பாகன்
உமைமடமயிலை யிடத்திலிருத்தி யிருக்கும்வலப்பாகன்
உடலியலவுண ருடற்கறைகக்க வழுத்துமுகிர்ச்சேனம்
உததியினடுவு துயிற்சுவைமுற்றிய வட்டவணைச்சேடன்
இருள்புறமிரிய நிரைக்கதிர்விட்ட வலக்கண்வெயிற்பானு
இதழ்பொதிகுமுத மலர்த்துமிடக்க ணொழுக்கமுதப்பானு
எழுதுதலரிய மறைத்தமிழ்முற்ற வடித்தவிசைப்பாணன்
இழுதெழுமுடைகமழ் கொச்சையிடைச்சியர் பெற்றகுலப்பூவை
முருகுடைகமல மலர்த்தவிசுச்சி யிருக்குமனைத்தீபம்
முகின்முதுகிடறு கடற்றலைவட்ட மளிக்கும்வெதிர்க்கோலன்
முகைநெகிழ்தொடையன் முடித்துதறித்தரு சொற்புதுவைக்கோ
முதுகிடவிபுதர் மிடற்றுமுழக்கு குரற்கடவுட்கோடு
குருகுலநிருப ரமர்க்கணிருட்டை யழைத்தபகட்டாழி
குரைகழலடியை வழுத்தியுளத்தின் மகிழ்ச்சியுறப்பாடு
குனிதிரையெறியரு விக்குலவெற்பிறை கொட்டுகசப்பாணி
குவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (1)
விழிதுயில்பெறமணி நெற்றிகுயிற்றிய தொட்டிலலைத்தேமும்
விரைகெழுபுழுகுநெய் பொத்திமுகத்தலை பித்தைமுடித்தேமும்
எழுகதிர்விழுபொழு துப்பிலைசுற்றி யனற்றலையிட்டேமும்
இளநிலவுமழ்மதி சுட்டுமுனக்கெதிர் முற்றமழைத்தேமும்
அழுகுரறணிய மருட்டியணைத்தொசி யொக்கலைவைத்தேமும்
அடிதொழுமிமையவர் வர்க்கமுமொப்ப வுவப்பமுடத்தாழை
கொழுமடனகவளி புக்குழுவெற்பிறை கொட்டுகசப்பாணி
குவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (2)
திருவயிறமைவர வைத்தருள்வைத்த வளப்பிலுயிர்ப்பால
திரைவிரிபுனல்வெளி பொத்துவடத்திலை முற்றுதுயிற்பால
வரிசிலைகடைகுழை யக்கடல்சுட்ட விழிக்கடையுட்கோப
மழைமுகிலெறிதுளி தட்டுமலைக்குடை யிட்டநிரைக்கோப
முருகெழுமிளநறை கக்குபசுத்தபு னத்துளபத்தாம
முடைகமழிடைமகள் கட்டவொடுக்கிய சிற்றுதரத்தர்ம
குருகுகடலையரு வித்துயில்வெற்பிறை கொட்டுகசப்பாணி
குளிர்மதிதவழ்பொழில் கற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி (3)
திருமகடழுவிய பச்சையுடற்புற முத்தவெயர்ப்பேறத்
திரைதருமமுதென லுற்றிதழிற்றுளி சுற்றுதரத்தாரக்
கருகியசுரிகுழ லுச்சிமுடிப்பிணி விட்டுமுகத்தாடக்
கதிரிளவெயிலெழு முச்சிமிலைச்சிய சுட்டிநுதற்றாழப்
பெருகிளநிலவுமிழ் கொத்துவளைக்குல மிட்டபுயத்தாலப்
பிணிநெகிழ்நறைபிழி செக்கமலத்துணை யுட்கைசெவப்பூறக்
குரைமதுவொழுகு தொடைத்துளபப்புயல் கொட்டுகசப்பாணி
குளிர்மதிதவழ்பொழில் சுற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி. (4)
வேறு.
இடைதடுமாறக் குழல்புறமலைய மெய்ப்பூணொலிப்பவொலியா
இருகுழையூசற் றெழில்வரநிலவு முத்தாரமொப்பமுலைமேல்
முடைகமழ்தாழிப் புறமெறிதிவலை தொத்தாவெளுப்பமதிபோல்
முகம்வியர்வாடக் கயிறுடல்வரியு மத்தாலுழக்கியுறைபால்
கடையுமசோதைக் கருள்வரவிழிகள் பொத்தாமயக்கியுடனே
கரமலர்கோலித் தடவினிலிழுது தொட்டோடுபச்சைமுகிலே
தடமலிசோலைத் திருமலையழகா சப்பாணிகொட்டியருளே
தழையவிழ்தாமத் துளவணியழகா சப்பாணிகொட்டியருளே. (5)
வேறு
வாராட்டு கொங்கைக் குறுங்கண் டிறந்தூறி
வழியுமின் பாலருத்த
மலர்விழிக் கஞ்சனங் குவளையெழில் படவெழுத
வரிகுழற் புழுகுபெய்ய
நீராட்ட மஞ்சட் பசும்பொற் பொடித்திமிர
நிரைவளை கரந்தொடுப்ப
நிலவொழுகு* வேண்ணீறு பிறைநுதல் விரிப்பவெயி
னிழன்மணித் தொட்டிலாட்டிப்
பாராட்ட வெவருமற் றண்டகோ ளகைவிண்டு
பாய்பெரும் புனலிலாலம்
பாசிலைப் பள்ளியிற் றுயில்பசுங் குழவியேழ்
பாட்டளி சிறைக்காற்றினால்
தாராட்ட வண்டுளவு தேனொழுகு மணிமார்ப
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (6)
--------------------
*வெண்ணீறு-புழுதிக்காப்பு. இது "சீரார்செழும்புழுதிக்காப்பு: என்று தமிழ்மறை நுதலியது.
பாட்டா யிரஞ்சுரும் பறைபொழிற் புதுவையிற்
பாவைகுழல் சூடியுதறும்
பனிமலர்ச் சருகுதே டிக்குப்பை நாடொறும்
பயிலாம லவள்புனைந்த
தோட்டா ரிதழ்ச்செல்வி மாலைதரு வேமணிச்
சூட்டரா வணைசுருட்டிச்
சொற்றமிழ்ப் பின்புசெல் லாமல்வண் டமிழ்மாலை
சூட்டுபதின் மரையழைப்பேம்
கோட்டா வெருத்துகட் குடிலில்வெண் ணெய்க்கிளங்
கோவிமார் கன்றுகட்டும்
குறுங்கயிற் றணையுண்டு நில்லாம லாயிரங்
குடவெண்ணெய் கொள்ளையிடுவேம்
தாட்டாழை வேலித் தடஞ்சோலை மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (7)
பூக்கும் பொலன்றா மரைத்தாளின் முன்பொத்து
புவியடங் கலுமுந்தியின்
புடைவைத்த தொப்பல வழைக்கைக் கெனப்பழம்
புனிதமறை யாளனாட்டத்
தேக்குந் திரைக்கங்கை நீராடு தண்டையஞ்
சீரடி யெடுத்துமழலைச்
செய்யவா யிதழ்பெரு விரற்றலை சுவைத்துவெண்
டெண்ணிலா மூரல்கான்று
கோக்குந் தழைக்கூரை முடையாடை யிற்றுயிற்
கொண்டமுகி லுழவரோட்டும்
கூனுட லலம்பாய வெளிதாவு பகுவாய்க்
குறுங்கண்ண வாளைவாலால்
தாக்குண்ட சூன்மேகம் விழிதுஞ்சு மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (8)
திங்கட் புகுந்துபெற் றுவகைமலி தாய்தந்தை
தீஞ்சுவைச் சோறளிப்போர்
செங்கதிர்ப் பொன்கொடுத் துத்தொண்டு கொண்டவர்
செழும்புகைப் படலைவானில்
பொங்கக் கிளைத்தெழு கடுந்தழ னெடுங்குப்பை
புயலுறு முடன்பகைத்துப்
பொருகுரற் பகுவாய ஞமலிநள் ளிருளுடற்
பொசிகழுது கடையுருட்டு
வெங்கட் குறுங்கா னரிக்கொள்ளை குடவள்ளி
விரைந்தெடுத் தெழவிறைக்கும்
விரிசிறைப் புட்குல மெமக்கெமக் கென்னுமுடன்
மீளவு மெடாமலடியார்
தங்கட்கினருள்சுரந் தெழுபிறப்படருமுகில்
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே 9
எட்டுவகை யோகத் தினிற்பிரம ரந்திர
மெழுந்தங்கி யங்கடவுணாள்
ஈரைந்தொ டைந்துவெண் ணிறவைகல் வடவயன
மீரிரண் டோடிரண்டு
பட்டுவளர் திங்கள்வரு டம்பவனனாதவன்
பனிமதி தடித்துவருணன்
பாகசா தனன்மறைக் கடவுள்வழி காட்டநீர்
பாய்ந்தாடு விரசைபுக்கு
விட்டுமூ துடலமா னன்றீண்ட வாதனையும்
விட்டழிவின் மெய்படைத்து
வெண்சங்கு மாழியுங் கைக்கொண்டு பரமபத
மேவுநின் றொண்டர்மீளல்
தட்டுமணி மண்டபத் துடனுறைய வைக்குமுகில்
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே 10
அகையுந துணர்த்தழைக் குடிலிருந் தந்தணர்க
ளரியகட வுளரைவேள்வி
அவியமுது கொள்ளப் பழம்பாடன் மறைகொண்
டழைக்குங் குரற்கற்றுநாள்
முகையுண்டு வண்டறை பொதும்பரி னிளங்கிள்ளை
முகமலர்ந் தெழவிளிப்ப
மும்மைமூ துலகமும் பாழ்படத் தேவரும்
முனிவரும் வந்துபம்பிப்
புகையுந் தழற்குழியும் யூபமுஞ் *சா**யம்*
பொரியிடுங் கலனுநெய்வான்
பொங்கிவழி குழிசியுங் காணாம லலமரும்
புணரியெழு மிரவிபொற்றேர்
தகையுந் தடங்குடுமி யிடபநெடு மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (11)
சப்பாணிப்பருவ முற்றும்.
---------
ஐந்தாவது - முத்தப்பருவம்.
முருகொழுகிறாலி னறவுகுதிபாய மழுவறுத்தகவட்டகில்
முருடுசுடுவாச மெழுபுகைவியோம வுடல்புதைப்பமதுத்துளி
முகிழநெகிழ்சாதி மலர்குளவிமூடு புதலருக்குபுனத்திடை
முகடுபுதைபூழி யெழவெயினர்மூரி யெருதுறப்பிவிடப்புனம்
அரவரசுசூடு குருமணிநிகாய மெனவுடுப்பமுகக்கொழு
அயின்முழுகுகூன னுதியின்மணியேற வலனுழைத்துமுழுத்திடா
அவல்வயிறுதூர நிரவிமுளைநாறு விதைபிடித்துவிதைத்திள
அளிவிளரிபாடு மடைபொதுள்படீர முதறறித்துவணக்கிய
கரியகுரலேனல் புரவுபெறவேலி புறனிரைத்துநிரைக்கிளி
கடிகவணிலேன மிரியமணியார ம்ந்றியமத்தவிபக்கிளை
கதழெரியலாத மெனவெருவியோட விழைபுனிற்றுமடப்பிடி
சுயமுனியைநாடி நடவையெதிர்மீள வரவொருத்தல்குழித்தலை
சரிகரையையோடி யுயர்கரையிலேற விடவழுத்துகுறத்தியர்
தமதுகுலம்வாழ வுனதுபுகழ்பாடி மடையளிப்பமதிக்குறை
தவளவளமேவு மிடபமலைவாண தவளமுத்தமளிக்கவே
தபனவெயிலேறு பவளவிதழூறு தவளமுத்தமளிக்கவே. (1)
வேறு.
வருமதபொருப்பு நடுவளைமருப்பு வயிறுதருமுத்த
மொளிகளைத்த பழுப்புறும்
வரைமுளியமுற்று மனலெழுவனத்து வளரும்வெதிர்முத்த
முடல்கொதிப்ப வெதுப்பெழும்
வரியளியிசைக்கு மனமுருகிமொட்டு மலர்வனசமுத்த
நிலவுசெக்கர் முகத்தெழும்
மகிணர்கரமுற்ற கலவியிலிறுக்கு மகளிர்களமுத்த
முருளுமுச்சி யதுக்குணும்
உருகெழவெளுத்த பிறைபுரையெயிற்ற வுரகமணிமுத்தம்
விடவழற்பொடி பட்டிடும்
உலகுடலிருட்டு முகிறுளிதுவற்ற வுடனொழுகுமுத்த
மொழுகிருட்டொளி யுட்படும்
உடைதிரையுடைப்ப வுவரிவிளையிப்பி யுமிழுமணிமுத்த
நெடியவெக்கர் மணற்படும்
ஒழுகமடைபட்ட மதுமடலுடைக்கு முயர்கமுகமுத்த
மரகதத்த பசுப்பெழும்
வெருவிவலைகட்ட வணவியலைதத்தி விழுசுறவமுத்த
மயினுதித்தலை முட்படும்
மிடறொலியெடுப்ப வெழும்வளியுலர்த்த வெளியவளைமுத்த
மறவெறித்தெழு நெய்ப்பறும்
விளைகழனிநெற்கண் விரவுபருமுத்த முலவியவெருத்த
கவையடிப்பட விட்புணும்
விரிகதிர்பரப்ப விலைதழையுமிக்கு விளையுமுழுமுத்த
முரலரைப்ப விழைப்புணும்
இருநிலமடுத்து முகமுழுகளிற்றி னெயிருசொரிமுத்த
முருபரற்க ணறுப்புறும்
இவைதவிரமுத்த மணிசிலவிரட்டை படுமொளிமறுக்கு
மெனவனைத்து முவக்கிலெம்
எறிபுனலுடுத்த தலையருவிசுற்று மிடபநெடுவெற்ப
விதழின்முத்த மளிக்கவே
இளமதியொழுக்கு மமுதருவிசுற்று மிடபநெடுவெற்ப
விதழின்முத்த மளிக்கவே. (2)
வேறு.
உலகைகரிவெப்பு வனமடைகுழைப்ப வெதிரிசையழைத்தும்விடவாய்
உரகனைவரித்த கொடிநிருபனுட்க வரிவளை குறித்துமுரிதோய்
கலனுதரமெத்த விடைமகளிர்வைத்த முடையளைகுடித்துமவர்தாழ்
கயிறரையிறுக்கி யுரலுடனணைப்ப வழுதிதழ்நெளித்துமனையாம்
அலகையுயிரொக்க வமுதொடுகுடிப்ப முலைதலைசுவைத்துமெறிநீர்
அலைசலதிவட்ட மகிதரைமடுத்து மகவிதழ்செத்ததுவர்வாய்
மலரெமர்பொருட்டு மொருமுறைசெவப்ப மழலைமணிமுத்தமருளே
மதியமுதொழுக்கு மிடபநெடுவெற்ப மழலைமணிமுத்தமருளே. (3)
வேறு.
ஆகத்து ணீங்கியுயிர் யாதனை யுடற்புக்
கனற்புகை யிருண்டகங்குல்
ஆரிருட் பக்கமறு திங்கடெற் கயனநில
வலர்திங்கள் வழிகாட்டமீ
மாகத்து நரகம் புகீஇப்பயன் றுய்த்தொழியும்
வழிநாளி லந்தவுருவம்
மாயமூ தாவியொடு தபனகிர ணத்திமைய
வரையிமத் துடனடைந்து
மேகத் துவந்துகும் பெயலினிற் பாரிடன்
வீழ்ந்துநளி புனலோடுநா
விழையும் பொருட்டொறு மணைந்துபல் லுடறொறும்
மேவியிங் ஙனமளவினாள்
போகத் திரிந்துவர விளையாடல் புரியுமுகில்
பூங்குமுத முத்தமருளே
பொறிவண்டு கண்படுக் குஞ்சோலைசூழும்
பொருப்பமணி முத்தமருளே 4
ஈட்டும் பெருந்தவ முனிப்புனித னென்புடல
மிரலையுட லதளுடுப்ப
வெரிவிழிப் பிணருடற் பிலவாய் நெடும்பே
யிபத்தோ லுடுப்பமுனிவன்
மூட்டுந் தழற்குழியினெய்சொரிய நரியுதர
மூளெரிக் குழியிலுடலம்
முழுகுநிண நெய்விடத் தவமுனி தருப்பையடி
முறைப்படுப் பக்குடற்கோத்
தாட்டுஞ் சிறைப்பருந் தடிபடுப் பத்தவத்
தரியமுனி கடவுள்யாவும்
அழைப்பவெங் காகங் கரைந்தின மழைப்பமுனி
யனன்மகங் காத்தெடுப்பக்
கோட்டுஞ் சிலைக்கணையி னிருதரைக் காய்ந்தமுகில்
குழைபவள முத்தமருளே
கூராழி கைக்கொண்ட வாயிரம் பேராள
குழைபவள முத்தமருளே. 5
வரையெடுத் தேழுநா ணின்றநீ கோபால
மகளிர்சிறு சோற்றினுக்கு
மடிமண லெடுத்ததா லுடலிளைத் தும்வானின்
மந்தார மலர்கொய்தநீ
விரையெடுத் தெறிபூங் கறிக்குமல ரெட்டாமல்
விரல்குந்தி யடிகன்றியும்
வேழவெண் கோட்டைப் பிடுங்குநீ வண்டன்மனை
விளையாடு பாவைக்குவெண்
திரையெடுத் தெறிபுணற் காய்பிடுங் கிக்கரஞ்
சேந்துமுன னொந்தவென்று
செய்கின்ற மாயங்க ளறிகிலேங் குறமகளிர்
செங்கணிழல் குருகுநோக்கி
இரையெடுத் தல்லாமையாலழியு மருவிமலை
யிறைவமணி முத்தமருளே
யெற்றுந் திரைச்சிலம் பாறுசூ ழிடபகிரி
யிறைவமணி முத்தமருளே 6
மட்பாவை தோயுந் துழாய்ப்பள்ளி யந்தாம
மார்பின்கண் வாய்த்தவந்த
மதியத்து மார்பினு மிருந்தா னெனப்பருதி
வருபுலத் தொருநான்குதோட்
புட்பாக னும்மறலி யுறைபுலம் வெண்ணிறப்
புனிதனும் வருணராசன்
புலத்தினிற் பச்சுடற் றேவும்வெள் ளிதழ்நறும்
பூங்குமுத பதிபுலத்தில்
கட்பா சடைப்பற் பராகவொளி கான்றமெய்க்
கடவு முடன்விதிக்கில்
காவல்பூண் செயமங்கை பூதம்வெம் புலிகொடுங்
கனைகுரற் சீயம்நிற்ப
விட்பால் வருந்திங்க ளுருவுகொள் விமானத்தின்
மேவுமுகின் முத்தமருளே
வெண்ணிலா மதிதுஞ்சு தண்ணிலா வாரம
வெற்பமணி முத்தமருளே. 7
வேறு
படைத்துத் திருவைத் தருந்தேவர்
பாக சாலை சுட்டிலங்கைப்
பாடி தொலைத்துக் கரும்பேய்க்குப்
பாக சாலை யளித்தறத்தைப்
புடைத்துத் தருக்கு மரக்கர்குழுப்
போக நரக வழிதிறந்து
புலவுச் சுடர்வெம் மழுப்படைக்கைப்
புனிதன் போக நரகவழி
அடைத்து முதன்மை முறைமாற்றி
யடைவு கெடுக்குந் தனிப்பகழி
ஆடற் சிலையி னாண்கொழிக்கு
மழுக்குப் போகக் கொடிவிசும்பைத்
துடைத்துத் திவளு மலையிறைவ
துவர்வாய் முத்த மளித்தருளே
தோணான் கைந்து படைசுமக்குந்
தோன்றன் முத்த மளித்தருளே. 8
வேறு
தாள்பற்றி யேத்தப் புரந்தரன் கரிமுகன்
சதுமுகப் பதுமயோனி
தண்ணறுஞ் செச்சையந் தார்முருக னிமையவர்
தடஞ்சுறாக் கொடியுயர்க்கும்
வேள்பற்று தீயிற் குளிப்ப*நு/துத னாப்பண்
விழித்தகட் சூலிசெம்பொன்
வெயின்முடிச் சேனைநா தன்பிரம் படிதாக்க
மீதிலெழு மணிகடொத்திக்
கோள்பற்று வடபுலக் குன்றெனப் பத்துமுன்
கொண்டவெண் படிமணந்த
கொண்டறுஞ் செழுநிலத் திருவாசல் பொலிநங்கள்
குன்றின் றுழாய்ப்படப்பைத்
தோள்பற்று சுந்தரத் தோகையொடு வாழுமுகி
றுகிரில்விளை முத்தமருளே
தொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்
றுகிரில்விளை முத்தமருளே. 9
சேடற் கெருத்துளுக் கக்கடற் பள்ளத்
திரைத்தலை வரைத்தலையனைத்
தெசமுகக் கபடனை வெகுண்டெழும் வானரச்
சேனா பராகமண்ட
கூடத் தெழுந்துவான் கங்கைக்கு மண்கட்டு
கூலம் பசுந்தகட்டுக்
கொய்துணர்த் தருவினுக் காலவா லஞ்சங்கு
கொட்டுமா னதவாவியல்
பாடற் சுரும்பூது முவரிநெடு நாளமுதல்
பதிகொள்ள வள்ளறெய்வப்
பாவையரை யமரர்புரி வதுவைக்கு முளைநாறு
பாலிகைப் பூழியாக
ஆடற் கருஞ்சிலையி னிருகடை குனித்தவன்
னம்பவள முத்தமருளே
அருள்பெருகி யலையெறுயு மரவிந்த லோசனன்
னம்பவள முத்தமருளே. (10)
உடைக்குந் திரைக்கொ ளராவணைத் துயில்கொளு
முனைக்கடு தொடற்கஞ்சியே
ஒழுகுமளை முடைநாறு மணையாடை பலகாலு
முதறிப் படுத்துமீளப்
படைக்கும் பெரும்புவன மீரேழு முண்டநின்
பண்டிக்கு மலைகுடிக்கும்
பால்செறித் தற்குப் பசும்பரைத் தூட்டியும்
பைம்பொற் பொருப்புநீறாப்
புடைக்குஞ் சிறப்புட்க டாய்வரு முனக்குமொரு
புட்டோடம் வந்ததென்று
புனல்சொரிந் தும்பொதுவர் மங்கையர் மயக்குறப்
பொதுவினின் மயக்கியிழிவைத்
துடைக்குந் துணிர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்
துகிரில்விளை முத்தமருளே
தொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்
துகிரில்விளை முத்தமருளே. (11)
முத்தப்பருவமுற்றும்.
------
ஆறாவது - வாரானைப்பருவம்.
மடலவிழ்பொழின் முதன்மேற்பட நிமிர்தலைகவிழ்ந்து
பார்பூப்பவெறியுமகில்சுடு
மணமெழுபுனம்விளைகாய்த்தினை கவரமழகன்று
நாநீட்டவகவியலம்வரும்
மடமயிலுகள்விடையேற்றிமி னெடுமுகடிருந்து
தாள்பேர்ப்பவிளையகுறவர்தம்
மடவியர்விழுகிளியோச்சிய விதண்முதல்பறிந்து
கீழ்நாற்றநடுவுதுறுமிய
விடரகம்வெறுவயிறாய்ப்பெரு வெளிபடமுழங்கு
கோளேற்றையுழுவையரிவிழ
விரிபொரியவிர்தலைதூக்கர வருணமணிதுன்று
வாய்காற்றவிருளுமுகமுசு*
வெளியினில்விழுகிசிறுபார்ப்பினை விசையுறவெழுந்து
தாயேற்பவமுதநதிபடி
விடுமடிநிரைகடைவாய்ப்புற** மிசையுறுபசும்பு
லீயோட்டவெயினர்தறியணை
கடகரிகுனியிருகோட்டிள நுதியுழவிழந்து
கார்காட்டவயிரம்வெயில்விடு
கதிர்மணிமரகதமீர்த்திழி யருவிகள்பரந்து
வீழ்நாட்டவெறியும்வளிதரு
கருகியசிறுசிறையீக்கண மலமறவழிந்தி
றாறூற்றுநறவம்விழவிரு
கரைதவழ்மறிதிரையாட்டிய புனல்சுனைமறிந்து
வாய்சா *ய்ப்பநறியகுவளைகள்
புடைவிடுமடன்மதுவூற்றெழ வகன்மழைபொழிந்து
நீராட்டமகரமலையொடு
பொருகடல்கவர்புயலீட்டிய புறன்மழைதடிந்து
தோடூழ்த்தமுளரிநடுவுயர்
பொகுடெனவரையெழுநாட்பொழு தொருசிறுபசுங்கை
மீதேறறகுரிசில்வருகவே
புகர்முகமதமலை நூற்றுவர் கெடவிசயனின்ற
தேரோட்டுமழகன்வருகவே. (1)
-------------------
** (அசையிடு, பி-ம்)
வேறு.
முடையுறிபொறுத்த சுவலினர்வெளுத்த நறியதளவிள
முகையெனு*மெயிற்றின் வழுவிரவுகொச்சை யுடையமொழியினர்
முடலைபடுநெட்டை யுடலினரழுக்கு முறுகுமறுவையர்
முருகொழுகுவெட்சி யிதழிநறைகக்கு பிடவமதுமலர்
இடைவிரவியிட்ட குழையினர்குலத்தின் முதன்மையறன்வழி
எமதுமகள்சுற்க மிதுவெனவிதிப்ப முதலுமொருபகல்
இமின்முகடசைத்து விழியெரிபரப்பி யுதறியுடலினை
இடியெதிர்சிலைத்து நிமிர்செவிகுவித்து நெடியகவைபடும்
அடிகொடுதுகைத்த துகள்வெளிபரப்பி யறவியறுமுகன்
அயிலொருபுறத்து மழுவொருபுறத்து முறையிலிருபுறம்
அலைவறவிருத்தி வடிபுரி மருப்பின் வயிரநுதியினின்
அறுபதினிரட்டி யிடையர்கள்புயத்து முரீ*ணும்விடையெழு
தொடைமணியெருத்த நெரிபடவுழக்கி யருணமணிபொதி
சுறவெறிமழைக்க ணிடைமகள்களித்து மகிழவடமிடு
துணைமுலையுழக்க வதுவைசெய்புயத்தி னழகன்வருகவே
துணர்சினைவிரித்த பொழில்வளர்பொருப்பி னழகன்வருகவே. (2)
---------
*(மெயிற்றா பி-ம்)
வேறு.
மணிபொதியுமோலி புனையுமுடிதாழ விழுதுவிட்டவிர்சடைமுடி
வனையவொளிர்பீத வுடையினையுடாது திருவரைப்புறன்மரவுரி
அணியமலர்மாது கரம்வருடநாணி யுடல்சிறுப்பெழுமலர்புரை
அடிகருகவான மழைபருவமாறு மயினுதிப்பரலடவியின்
உணர்வுவறிதாய வறம்வழுவும்வாய்மை யுடையசிற்றவைவிடைதர
உவகையொடுபோன வருமயிலைநாளு முலையளித்துனதருள்பெறும்
பணிவிடை செய்தாய ரெமதுரைமறாது பழமறைப்பொருள்வருகவே
பருவமழையாடு குடுமிமலைமேவு பழமறைப்பொருள்வருகவே (3)
வேறு
வினைபுரியுங் கடியவிடப மழல்கடை
விழியுதறுங் கொடியகுருகு வெளியுழு
சினையிணர்பம் புபயமருது புடையுருள்
திகிரிதொடும் பரியசகடு முலைதர
அனையெனவந் தடருமலகை யிவையிவை
யவுணன்விடும் பணியில்வருமுன் விரைவினில்
நனைபொதியுந் துளவனழகன் வருகவே
நமதுபுறந் தழுவவழகன் வருகவே. (4)
தடவமுதம் புகையின்முழுகு மனைமுலை
தறிபயில்கன்றலகு செருகு நிரையுடன்
அடவிபுகும் பொதுவன்வருவ னவனுடன்
அரியவிருந் துவகைபொழியு மழன்முகம்
இடுமிழுதின் பதமுமுறுகு மிலைமனை
யிடைதமியன் புகுமுன்முலையி லமுதுண
மடல்பொதுளுந் துளவவழகன் வருகவே
மறைகதறுங் கடவுளழகன் வருகவே. (5)
இணைவிழியும் பொலிவுவரவு மடியர்தம்
எழிலுடலம் புளகம்வரவு முகபடம்
மணிமுலைபொங் கமுதம்வரவு நிறைமதி
வதனமலர்ந் துவகைவரவு முனதரை
அணிமணிபம் பரவம்வரவு மொருமுறை
அடியிணைநொந் தருணம்வரவு முயர்கண
பணவுரகந் துயிலுமழகன் வருகவே
பழமறையின் கடவுளழகன் வருகவே. (6)
எமதுகருங் குழிசியமுத முறைதயிர்
எமதுபொலன் குயிலெமரிய குழமகன்
எமதிடுமண் புனையுமணிய டிசில்கறி
எமதெறிபந் திழுதுமுறையி னிறைதுகில்
எமதுகழங் குனதுமதலை திருடினன்
எனவெவரும் பொதுவர்மகளிர் குழுமினர்
அமையுமிடுங் கலகமழகன் வருகவே
அமலைபழங் கொழுநனழகன் வருகவே. (7)
வேறு
திருநாட்டு வந்தெவரு மருள்பெறற் கரிதெனத்
தெண்டிரைப் பாற்கடற்கட்
டெய்வநா கணயினிற் றுயில்கொண்டு மீன்முதற்
றிருவுருப் பத்தெடுத்தும்
பெருநாட் டுளங்குநீ ருலகிற் படாதன
பிறந்துபட் டுங்குருதிநீர்
பெய்யும் புலாற்கூட்டை யிழிவெனா தணுவொளி
பிறங்கவுட் டாமரைப்பால்
உருநாட்டி யும்நமது பேரூர் மறந்தானு
மொருகா லுரைப்பர்கொலெனா
உபயகா வேரிநீ ராற்றினும் வேங்கடத்
துச்சியினு மடியர்தங்கள்
கருநாட்ட மறவிடப மலைமீது நின்றறாக்
கருணைபொழி முகில்வருகவே
கங்கையுந் தொல்லைப் பழம்பாடன் மறையுங்
கறங்குதாண் முகில்வருகவே. (8)
தொழக்களி வருந்தொண்டர் பாசவெம் புரசைசுவல்
சூழவைம் புலனடக்கும்
தோட்டிவென் றெழுமதம் பயின்மனக் கரிநிரை
தொடர்ந்துசிற் றடியைமுற்ற
மழக்களிற் றினமும் புனிற்றிளம் பிடிகளும்
வழியருவி யோதைவீங்க
மழைமதந் தூங்குங் கவுட்கரி யொருத்தலும்
வந்தரு குலாவவிண்ட
பழக்களி தீஞ்சுளைப் பலவுசொரி தேனாறு
பாயுஞ் சிலம்பாற்றயற்
பாசடைத் தாமரைப் பள்ளநீ ரள்ளலிற்
பாயுமேற் றெருமையேய்ப்ப
உழக்களிப் பூந்துணர்ச் சினையபுத் திரதீப
முறையுமா ளரிவருகவே
உபயசர ணம்பரவு மடியருக் கிருவினை
யொழிக்குமழை முகில்வருகவே. 9
வேறு
தளவு காட்டும் வெண்முறுவ
றவழுந் துவர்வா யசோதைபச்சைத்
தழைக்கூ ரையினின் முடைப்பகுவாய்த்
தடவுத் தாழி நெட்டுறியின்
அளவு காட்ட நிமிர்ந்துவெண்ணெ
யருந்து மளவி லவளதுகண்
டடிக்குந் தாம்புக் கஞ்சியழு
தரையி லார்க்கு மணிபொத்தித்
துளவு காட்டுந் திருமேனி
துவளத் திருத்தாண் முன்செல்லத்
துணைக்கட் கமலம் பின்கிடப்பத்
துண்ணென் றோடுஞ் சிறுவாவுன்
களவு காட்டே மெம்மிரண்டு
கண்ணுங் களிக்க வருகவே
கருணை சுரந்து மடைதிறந்த
கண்ணா வருக வருகவே. 10
வேறு.
கோட்டிற் பகுத்தமதி வைத்தனைய குறுநுதற்
கோற்றொடி யசோதைவாழைக்
குறங்கிற் குடங்கையி னெடுத்தணைத் துச்சிறிய
கொடிபட்ட நுண்மருங்குல்
வாட்டிப் பணைத்தமுது சூற்கொண்டு வெச்சென்ற
வனமுலைக் கண்டிறந்து
வழியுமின் பான்முதற் றரையூற்றி வெண்சங்கு
வார்த்துவ யிதழதுக்கி
ஊட்டித் தலைப்புறஞ் சங்குமும் முறைசுற்றி
யொருமுறை நிலங்கவிழ்த்தி
உடலங் குலுக்கிப் பசும்பொடி திமிர்ந்துதிரை
யூடெற்று தண்டுளிநனீர்
ஆட்டிப் பொலன்றொட்டின் மீதுவைத் தாட்டவள
ராயர்குல முதல்வருகவே
அருள்பெருகி யலையெறியு மரவிந்த லோசனன்
னழகன்மா தவன் வருகவே. 11
வாரானைப்பருவ முற்றும்.
----------------
ஏழாவது - அம்புலிப்பருவம்.
விடங்கலு ழெயிற்றரா வாலிலைப் பள்ளியுள்
விழித்துணை முகிழ்த்தடங்கா
வெளிமூடு வெள்ளத்து மலர்மண்ட பத்தயனும்
வேதமுங் கடவுணதியும்
கடங்கலுழ் புழைக்கரக் களிறெட்டு மெட்டுக்
களிற்றுப் பெரும்பாகரும்
காளகூடக்களத் திறைவர்பதி னொருவருங்
கதிரவர்கள் பன்னிருவரும்
மடங்கலும் வெண்டிரையும் வெண்டிரை வளாகமும்
வானுமெறி வளியுமனலும்
மன்னுயிர்ப் பன்மையும் வகுத்தளித் துப்பின்னர்
மாய்க்கும் மயக்கவிளையாட்
டடங்கலு மொழிந்துன்கண் விளையாடல் கருதினா
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே (1)
பொங்குவா லுளையேழு பரிமாத் தொடக்குபொற்
றேருகைத் திருளொதுங்கப்
பொழிகதிர்த் தபனமண் டலமூ டறுத்துநீ
போதுதற் குண்மயங்கில்
வெங்கண்மால் கூரலை கருங்கடற் குண்டுநீர்
விரிதிரை யிலங்கைமூதூர்
விட்டுப் பெருங்கிளைக் குழுவொடும் பொருசேனை
வெள்ளத்தி னொடுநிறைந்த
திங்கணான் மாலைவெண் குடையவுணன் வானமீச்
செல்லவத் தபனனாகம்
திறந்தெழும் பெருநடவை யூடிழிந் தின்றுநீ
சேணொடு விசும்புகைவிட்
டங்கண்மா நிலமுந்தி பூத்தவன் றன்னுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே (2)
முளைக்குங் கலாநிலா வமுதநிறை மண்டலம்
முழுகுதர மறைகிடக்கும்
முடக்கும் பகட்டுட னிமிர்ந்துவெம் புகையரா
முள்ளெயிறு நட்டமுத்தித்
தொளைக்கும் பெரும்பாழி வாய்கக்கு நஞ்சினித்
துண்டப் படைக்கொடிப்புட்
டூவியஞ் சேவற் கிரிந்துபோ மயிர்பொறித்
துள்ளுமான் பிள்ளைமற்றோள்
வளைக்குங் கருங்கார் முகங்கண் டெழத்தாவும்
வல்லிருட் பொசிவானின்வாய்
வட்டவா ழிப்படை வெயிற்பட வொதுங்குமேழ்
மண்ணுக்கு மத்துழக்கும்
அளைக்குந் திருப்பவள மங்காக்கு மாலுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (3)
வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில்
வண்டோ டிரண்டுபாடும்
மழைபாய் கடாக்கரிக் கண்கொடுத் தும்பச்சை
மரகதத் துச்சிபூத்த
ஒளிநான்ற நற்படிவ மலயப்பெருந்துவச
னுட்களிப் புறவளித்தும்
ஒருஞான்று பேரடிசில் வாய்மடுப் பச்செம்பொ
னுடைநெகிழ்த் தும்மலைத்தேன்
துளிநான்ற வாலவாய் வேப்பிணர்த் தென்னர்முன்
றொடைநறுங் குழல்விரித்தும்
தொல்லைநாள் செய்தவையி னரியதன் றேயிருட்
டோய்ந்தநின் மறுவொழித்தல்
அளிநான்ற பூந்துழாய் மணிமார்ப னிவனுடன்
னம்புலீ யாடவவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (4)
கறைபட்ட முக்கவைச் சூலவே லெறிபடைக்
கடவுள்சடி லத்திருந்து
கண்டத்தி லூற்றெழு விடத்தா லுணங்கியுங்
கங்கைப் பெருக்கெடுத்துத்
துறைபட்ட வெண்டலைத் திரையினடு வுடலந்
துளங்கியுந் நுதல்கிழித்துத்
தூற்றுங் கடுந்தழற் சூடுண்டும் வளைபிறைத்
தொளையெயிற் றரவுகண்டும்
குறைபட்ட வட்டவுட னிறையா திருந்துங்
கொதிக்கும் வெதுப்புமாறக்
கொய்துழாய்ச் சோலைநிழல் குடிபுக்கு வாழலாங்
கோதிலா வேதநான்கும்
அறைபட்ட தாட்கமல மலையலங் காரனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (5)
கோலுந் திரைப்புணரி யுதரத்தி னுடன்வந்த
கொத்தளிப் பத்திலக்கம்
குடைந்தாடு பொற்றருக் கிளைகிளர் படப்பைசெங்
கொள்ளைவெயில் புடைததும்பக்
காலுங் கதிர்கடவுண் மணிவண்டல் படுகலவை
கமழு*மணி மார்பிலாரம்
கள்ளுடைத் தொழுகங்க மடல்விண்ட பைந்துளவு
கடிமலர்த் தாமம்வேலும்
சேலுங் கெடுத்தவிழி மலர்மண்ட பந்தருந்
திருமாது தேவிவெள்ளைத்
தெண்ணிலா வுமிழ்கின்ற நீயுமிவண் மைத்துனன்
சினைவரா லுகளவெகினம்
ஆலும் புனற்சிலம் பாற்றலங் காரனுட
னம்புலீ யாடவாவே.
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
அம்புலீ யாடவாவே. 6
-------------
*வரை (பி-ம்)
உடைதிரைக் கடன்முளைத் துலகுவலம் வருமொற்றை
யுருள்பெருந் திகிரியிரவி
யுடனுறையி னென்றவனு வொளிமாழ்கு மிளநறவ
முமிழமடல் விண்டதுளபத்
தொடைகமழ் திருப்புயத் தாயிரந் தேரிரவி
சொரிகதிர்க் குப்பைகக்கித்
தூற்றுஞ் சுடர்ப்பாழி யாழியெதிர் யான்வரத்
துணியுமா றெங்ஙனென்னில்
புடையுமிழு மாயிரம் மணிவெண் ணிலாக்கற்றை
பொங்குவெண் கதிருடுக்கும்
புரிமுகக் கடவுட் டனிச்சங்க முண்டுநீ
போதுதற் கஞ்சறகுவர்
அடையவிரி யச்சங்கம வாய்வைத்த வாயனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
அம்புலீ யாடவாவே. 7
மாலைவாய் நறவுபாய் கொந்தளச் சதிரிள
மடந்தையர் முகத்தையொத்து
மலைதல்கொண் டிடபகிரி யருகுவரி லீயீட்டி
வளரிறா லென்றழித்தும்
சூலைவாய் வளைகதறு நூபுர நதிப்புகிற்
றுவளுநுரை யென்றுடைத்தும்
சூழல்வாய் வரிலிளைய வெள்ளையம் புயமென்று
சூழ்ந்துகொய் துங்கிளிக்குப்
பாலைவாய் விடவெள்ளி வெண்கிண்ண மென்றுகைப்
பற்றியுங் கதிர்ததும்பப்
பார்க்கின்ற பேராடி யென்றெடுத் தும்பகை
விளைப்பரென் றஞ்சறுஞ்சா
ஆலைவா யொழுகுபா காறுபாய் மலையனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாணவே. (8)
காயுங் கடுங்கதிர் விரித்தொற்றை யாழியங்
கடவுளலை தலைபிளந்து
கனைகடற் பெருவயி றுதித்தெழக் கனியவிளை
கனியென்று புகவிழுங்கப்
பாயுங்கவிக்குலத் தொண்டர்நா யகனைநின்
பால்வர விடுப்பனன்றேற்
பாழிவா யங்காந்து கவ்வியிரு கவுளுட்
படுத்துக் குதட்டவாலம்
தோயும் பிறப்பற் சுருட்டுடற் பாயல்வெஞ்
சூட்டரா வினைவிடுப்பன்
துளபத் துணர்க்கண்ணி யெந்தைகீழ் நின்றுநாற்
சுருதிதொழு தாள்செவப்ப
ஆயுந் தமிழ்ச்சங்க மீதிருந் தானுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன்
னிவனுடன் அம்புலீ யாடவாவே. (9)
துள்ளக் குறுந்திவலை வெள்ளிவெண் டிரையாடு
தொடுகடற் றலைதுயின்றும்
தொளைக்குங் கழைக்குழ லெடுத்திசை யெழுப்பியுந்
தொல்லைமா ஞாலமேழும்
கொள்ளப் பரந்துமறை மழலைவாய் நான்முகக்
குழவியைப் பெற்றெடுத்தும்
கொடியா டிலங்கையிற் பேயாட விற்கடை
குழைத்தும் பரந்துபூக்கும்
வெள்ளத் தடங்கமலம் யானருகு வரின்முருகு
விரிமுகங் குவியுமென்று
வெருவர லிவன்கரிய கடவுண்மே கத்துடலம்
விளைகமல வனமனஞ்சூழ்
அள்ளற் பெரும்பள்ளம் வந்ததன் றிவனுடன்
னம்புலீயாயவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (10)
விரியுங் கதிர்க்கற்றை யமுதூற நீவந்த
வேலைப் பெரும்பள்ளநீர்
வெஞ்சிலை குழைத்திவன் கணைதொட வறண்டது
விழைந்துநீ யரசுநாளும்
புரியும் பகட்டுவெளி யிவன் மலர்த் தாமரைப்
பொற்றா ளெடுத்துநீட்டப்
பொலனுடல் பிளந்ததட லிரவியொடு நீயரும்
புகலென்ன வடையும்வெற்பு
சொரியும் புயற்றலை தடுக்கைக்கி வன்னகந*
தொடவடி பறிந்ததிவனைத்
தொண்டையங் குதலைவாய் மதலையென் றெண்ணலஞ்
சூற்கமுகு வெண்பாளைவாய்
அரியும் பசுந்தே னரும்புமலை வாணனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (11)
அம்புலிப்பருவமுற்றும்.
------
எட்டாவது - சிற்றிற்பருவம்.
ஏட்டிற் பொறிச்செஞ் சுரும்பறுகால்
எறிய நறைபாய் செழுங்கமலத்
திறைவன் முதலா மிமையவர்கள்
இறைஞ்சு மெளலி யேந்துதலை
ஒட்டிற் பொறித்து வலனாழி
ஒருங்க வடிமை கொண்டதுபோல்
உனது மலர்த்தா ளுட்கிடக்கும்
ஒற்றைக் கடவுட் சங்குவண்டல்
வீட்டிற் பொறித்தின் றெங்களையும்
விழைந்தாட் கொள்ள நடந்ததிரு
விளையாட் டிதுநன் றன்றலைபாய்
வேலை யுதித்த திருவின்முலைக்
கோட்டிற் பொறித்த சுவடெழுதோட்
கொண்டல் சிற்றில் சிதையேலே
கொண்ட லுரங்குஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே. (1)
கொழித்துக் கிரணஞ் சொரிகழற்காற்
கோக னகத்தி லுறைகங்கை
குதித்துத் திரைநீர்ப் பெருக்கெடுத்துக்
கோட்டும் வண்டற் பாவையினை
அழித்துச் சமைத்த மலர்க்கறியை
அரித்துத் தூதைக் கலத்துமணல்
அடுஞ்சோ றெடுத்து மணிப்பந்தும்
ஆடுங் கழங்கு மம்மனையும்
சுழித்துப் பசும்பொற் குழமகவைச்
சுழியிற் படுத்துச் சிற்றடியேம்
துயர முறவே நடுவுடலம்
சுருட்டுங் கடவுட் பாம்பணையின்
விழித்துத் துயிலு முகின்முன்றின்
மிதித்துச் சிற்றில் சிதையேலே
விதுரன் மனைக்கு மிதிலைக்கும்
விருந்தன் சிற்றில் சிதையேலே. (2)
வாழி யெடுத்து நிற்பரவு
மறைநான் கரற்று நான்குமுகன்
வடிவு மெடுத்துப் படைத்துநிறை
மதியங் கொழிக்கு நிலாவென்னப்
பூழி யெடுத்த திருமேனிப்
புலவுக் கவைவேன் மழுப்படைக்கைப்
புனித னுருக்கொண் டழித்துவலம்
புரியு முகச்சங் குடன்வட்ட
ஆழி யெடுத்த வுருவெடுத்தால்
அளித்துப் பயிலுந் திருவிளையாட்
டன்றி யழித்த லியல்பன்றே
அணக்குங் குடுமித் தலைத்துயில்கான்
கோழி யெழுப்புஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே
கொண்ட லுறங்குஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே (3)
இளைத்துத் துவளு மிடைமடவார்
எண்ணில் பதினா றாயிரவர்
இழைக்குங் குமத்தோ டமைநெருக்கி
இலவத் துவர்வா யமுதருந்தித்
திளைத்துக் கெஞ்சிப் பெரும்புலவி
திருத்தித் தேய்ந்தும் மகளிர்முலை
தீண்டி யறியே னென்றுபொய்யே
தேவர் தெளிய முன்னையுயிர்
முளைத்துத் தழைப்பக் கரிக்கட்டை
முதுகு மிதித்தாய் சிற்றடியேம்
முன்றிற் புறத்தி லெதுதெளிய
முளரித் தாளான் மிதிப்பதுதேன்
வளைத்துச் சுழிக்குந் துழாய்ப்புயல்யாம்
வகுத்குஞ் சிற்றில் சிதையேலே
வானம் பிளக்குஞ் சோலைமலை
மன்னன் சிற்றில் சிதையேலே. (4)
அலம்பாய் விளைநெற் பழனத்தில்
அள்ளன் மடுவிற் றுள்ளுகயல்
ஆடுந் தரங்கக் கருங்கழியில்
அறையுஞ் சிறகர்ப் பேட்டெகினக்
குலம்பாய் குவளைக் கோட்டகத்திற்
குண்டு சுனையிற் றொட்டநெடுங்
குளத்திற் குறுந்தாட் கருமேதிக்
குழியி லுனது பேர்யாணர்ச்
சிலம்பாற் றயலி லாயிரநீர்த்
தெய்வத் தடத்தி னன்றிமுன்றிற்
றெள்ளிப் பரப்பு மணற்குவையிற்
செக்கர்க் கமல மலராது
வலம்பாய் திகிரி முகின்மித்து
வளைக்குஞ் சிற்றில் சிதையேலே
வாரி மகட்கு நிலமகட்கும்
மன்னன் சிற்றில் சிதையலே (5)
கோவை மணிப்பந் தெறிந்தாடும்
கொடிபொற் கழங்கு பனல்வாவி
கொட்குங் கிரணச் செய்குன்று
கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்
பாவை யுகைக்கும் பொன்னூசல்
பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
படப்பை குதிக்கு மான்கன்று
பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்
பூவை யிவையுன் பதத்தூளி
பொதியப் பெருவீ டுறிலடியேம்
பொய்த லொழியு மலர்வனசப்
பொகுட்டி லிருக்கு நான்குமுகத்
தேவைத் திரவுந் தியிலளித்த
சிறுவன் சிற்றில் சிதையேலே
தெள்ளுந் தரங்கப் பாலாழிச்
சேர்ப்பன் சிற்றில் சிதையேலே. (6)
வேறு
கொள்ளைநீர்க் குவளைக் கோட்டக மறந்தும்
குழந்தைவெண் மதிக்கோட்டுக்
குன்றொடுங் குயில்போற் கூவுதன் மறந்தும்
கூருகி ரிளங்கிள்ளைப்
பிள்ளையை மறந்து மயினட மறந்தும்
பேட்டிளம் புறவோடும்
பிணையினை மறந்தும் ஊசலை மறந்தும்
பிள்ளைவண் டிதழுந்தக்
கள்ளைவா யொழுக்கும் வெள்ளிவெண் ணிலவு
காற்றிள முகைமுல்லைக்
கன்றினை மறந்து மிழைத்தயாம் வருந்தக்
கன்னியர் மனைவாயின்
வளளையா லனங்கண் டுயின்மலைக் கிறைவன்
மணற்சிற்றில் சிதையேலே
வண்டமர் துளவன் மாலலங்காரன்
மணற்சிற்றில் சிதையேலே (7)
சுழித்தெறி தரங்கத் திருச்சிலம் பாற்றுத்
தூற்றிய திரை யீட்டும்
சொரிநிலாக் கிளைக்கும் வெண்மணற் குப்பைச்
சுட்பொலன் முறத்திட்டுக்
கொழித்துவெண் டுகிலிற் றலைமடிக் கொட்டிக்
குவித்ததோ ழியரோடும்
குருமணி முன்றிற் பரப்பிமெய் துவளக்
கோல்வளைக் குரலேங்கக்
கழித்தடங் கமலத் துணைக்கரஞ் சேப்பக்
கலைமதி முகம்வேர்ப்பக்
கண்ணிமைப் புறாம லிழைத்தயாம் வருந்தக்
கடைவளை யலம்பாயும்
வழித்தலை மலர்த்தேன் சொரிமலைக் கிறைவன்
மணற்சிற்றில் சிதையேலே
மாலிருஞ் சோலை மலையலங் காரன்
மணற்சிற்றில் சிதையேலே (8)
வேறு
வரியுங் கடுங்கார் முகங்கண்டு
வளர்க்கும் பிணைக்கன் றகலுமது
மடற்பூந் துளபத் திருமேனி
மழைக்கார் காட்டக் குயிற்பிள்ளை
இரியும் வள்வாய் நெடுந்திகிரி
எறிக்கும் வெயிலை முதுவேனில்
என்று கலாவ முள்ளொடுக்கி
இளைய மயிற்பே டெம்மைவிட்டுப்
பிரியுந் தவளத் தரளமணி
பிறழு நிலவுப் பெருவெள்ளம்
பெருகு முன்றிற் றலைவந்து
பெய்யும் பசும்பொ னொளிபரந்து
சொரியுங் கழற்காற் றுணைக்கமலம்
துவளச் சிற்றில் சிதையேலே
சோலை மலைக்கு நான்மறைக்கும்
தோன்றல் சிற்றில் சிதையேலே. 9
ஒடுங் கலுழி விடப்பாந்தள்
உடலங் கிழியத் தூண்டுசக
டுச்சி மிதிப்பப் பேரரக்கன்
உருவ மெடுத்த தெழுந்துபுகை
ஆடுந் தழன்மெய்க் கரிக்கட்டை
அகல மிதிப்பக் குருகுலத்தில்
அரச ரிளங்கோ வானததர்
அருங்கான் படர்கற் றலைமிதிப்பத்
தோடுஞ் சுரும்புந் ததும*புகுழற்
றோகை யுருவ மெடுத்ததொளி
சொரியுந் தவளத் திருமுன்றிற்
றுவைக்கின் முன்னை வடிவிழக்கும்
பாடு மறைநான் குடுத்தபதம்
பதித்துச் சிற்றில் சிதையேலே
பார்த்தன் றேர்க்கும் புள்ளிற்கும்
பாகன் சிற்றில் சிதையேலே. 10
முடங்காப் புரண்டு நிமிருரகன்
முடியிற் கிடக்கும் புவியேழும்
முந்நீ ரேழும் வரையேழும்
முழங்கு மருவிப் பெருக்கெடுப்பக்
கடங்காற் றியமா திரமெட்டும்
கனகக் குடுமிப் பொலன்வரையும்
ககன மேழு முட்கிடப்பக்
கமலத் திருத்தாள் பொத்தியநாள்
அடங்காப் புவியோ குற்றேவல்
அடியோ மாரை யயர்முன்றில்
அளக்க விற்றைக் கடிவைப்ப
தலைநீ ருடலந் தழல்பரப்பத்
தடங்கார்ச் சிலையிற் பகழிதொடும்
தலைவன் சிற்றில் சிதையேலே
சங்கத் தழக னிடபகிரித்
தலைவன் சிற்றில் சிதையேலே. 11
சிற்றிற்பருவமுற்றும்.
---------------
ஒன்பதாவது - சிறுபறைப்பருவம்.
மறுதலையரக்க ருயிரயில்குடிப்ப
வமரரையளித்த நெடுவேள்
மதனழியவெற்*று சிறுவயிறலைத்து
மயில்வரைபறப்ப வனல்போய்
மறிதிரைவயிற்றின் முழுகிமுதுவெப்பு
முமிழுடல்குளிர்ப்ப வரிதா
வடதிசைபுரக்கு மகள்புறமளிப்ப
மழைதுளிமறுத்த வனமீ
தெறுழ்வலியிருப்பு நெடுநுதிமருப்பு
முதுகலைதெறிப்ப வடல்வாய்
எறிபடைபிடித்த கரம்விடவுடுத்த
புலியதணிலத்து விழலான்
இடிபடவரற்று தமருகம்வெடித்த
குரலவியநெட்டை யரவூர்
எரிவிழுதுவிட்ட சடைபிணிநெகிழ்ப்ப
மரகதம்விரித்த விலைசூழ்
அறுகிதழிகொக்கி னிறகுதிரவட்ட
மதியின்வகிர்பட்ட நுதன்மீ
தலையும்வெயர்நெற்றி விழியழலவிப்ப
வமரநதியெற்றி விழுநீர்
அறைதிரைகொழிப்ப வுடல்பொதிவெளுத்த
பொடிகழுவவொற்றை ரதமூர்
அருணவெயில்கக்கு பழையவொளிகட்ப
வரன்முதுகளிப்ப முதனாள்
தெறுமுனைமுகத்தி லவுணனெழுவொத்த
திரள்புயமதுற்ற கறைநீர்
சிகரவரைவிட்ட வுவியைநிகர்ப்ப
வெரிதிகிரிவிட்ட மதிதோய்
திருமலைபுரக்கு மழககுணிலெற்று
சிறுபறைமுழக்கியருளே
திருவரைவணங்கி யழககுண்லெற்று
சிறுபறைமுழக்கி ருளே. (1)
வேறு,
ஒளிபெருகித்துளும்பு பரமபதத்திறைவா
உகளமுதைச்சுரந்த வெளியகடற்றுறைவா
அளியுழுபற்பவுந்தி யெழுதரணிப்புரவா
அயனுமைவைத்தபங்கன் விபுதகுலக்குரவா
விளைநகையுட்டதும்பு திகிரிசெலுத்துழவா
விழுநகைகக்குபொங்க ரிடபமலைக்கிழவா
குளிரமலர்க்கைகொண்டு சிறுபறைகொட்டுகவே
குணிறலையெற்றிநின்று செறுபறைகொட்டுகவே (2)
வேறு
செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
செற்றிய தழலெனவே
திக்குள சுறவகை நெற்குலை சடைபடு
செய்த்தலை விழவருசேல்
மொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை
முத்திட வளைதவழா
முக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை
முற்பயில் வெளியெனவால்
எக்கரி னிலவிய வுச்சியி லிளமல
ரிற்புற மளவிருகால்
எட்டடி யிடவிழை பெட்டையி னொடுதிரை
யெற்றிய முதுபுனல்வாழ்
குக்குட மலமரு வெற்புறை மழைமுகில்
கொட்டுக சிறுபறையே
கொத்தளி நிரையுழு மைத்துள வணிமுகில்
கொட்டுக சிறுபறையே. (3)
வேறு
வெண்டிரைப் பாற்கடல் விடப்பாம் புடற்றாம்பு
வெற்புமத் தெரிமுழக்கும்
விண்கிழிக் குங்குடுமி நொச்சிசூழ் மிதிலைவாய்
வின்முடக் கியமுழக்கும்
புண்டிரைக் குருதிநீ ராறுபட வாடகன்
பொன்மார்பி லுகிரழுத்தப்
புடைக்கும் பெருந்தூண் பிளந்தெழுமுழக்கமும்
பொங்கர்மது வாய்மடுத்து
வண்டிரைத் திதழ்குதட் டுந்துணர்த் தருவூழ்த்த
மலர்கொணர்ந் தமரரறிய
வாய்வைத்த வெள்வளை முழக்கமும் கேட்டுளம்
வாழ்ந்தயா மின்றுமகிழத்
தெண்டிரைப் பரிபுர நதித்தலைவ குணிலெற்று
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கியருளே. (4)
வேறு.
புள்ளுந் திரையும் பொருபுனல் குடையும்
பூந்தொடி மங்கையர்தேம்
பொதிவண் டலையுங் குமுதத்திளநகை
பொங்கொளி சொரிநிலவும்
கள்ளுண் சிறைவண் டினமும் பரவுங்
கற்றைக் குழல்செருகும்
கடிகமழ் பித்திகை விடுமலர் தூற்றுங்
கலைநில வும்மிடையைத்
தள்ளுங் கொங்கைகத் தரளக் குவைசொரி
தண்ணில வும்பருகிச்
சற்றும் படுபசி தணியா திளைய
சகோரக் குலமுலவும்
தெள்ளும் புனனூ புரநதி யிறைவன்
சிறுபறை கொட்டுகவே
செம்பொற் சாரற் குலமலை யிறைவன்
சிறுபறை கொட்டுகவே. (5)
வேறு.
கரைகடந் திறைக்கு நீத்தநீர்க் குழியிற்
கால்விழ மருப்பேற்றும்
கழித்தலைக் குமுத வாயிதழ் மடுத்துங்
கட்செவி கிடவாமல்
விரைகமழ் துளவப் பொதும்பரி னீழல்
வெப்பறப் புயம்வைத்தும்
விடுமடற் கமல வுந்தியிற் பூத்தும்
விண்ணுட றொடுமெட்டு.
வரையரா விருத்து நூற்றுவர் கூற்றின்
வாய்புகச் சுமைதீர்த்தும்
மலர்ப்பதந் தாவி யளந்துகைக் கொண்டு
மற்றொரு பொதுநீங்கக்
குரைகடல் வளாக மெமதெனக் குரிசில்
கொட்டுக சிறு பறையே
குலமலை வாணன் மாலலங் காரன்
கொட்டுக சிறுபறையே. 6
காட்டியுமுடலந் துண்ணெனப் புரிந்து
கண்களைத் திசைவைத்தும்
கரத்தினான் மீளப் புடைத்தெழுங் குரற்குக்
காந்தளஞ் செவிதாழ்த்தும்
நீட்டியுந் திரைத்து மெதுவென நகைத்து
நெஞ்சயர்ந் தலமந்தும்
நின்றுலாங் குரிசில் புறவினிற் பரப்பி
நிரையினைக் கழையூதிக்
கூட்டியும் யமுனைக் கரைவருங் களிறு
கொட்டுக சிறுபறையே
குலமலை வாணன் மாலலங் காரன்
கொட்டுக சிறுபறையே. . 7
வேறு
விழுத்தலை வடித்தநெட் டூசிநட் டுங்குப்பை
வெந்தீப் பிழம்பிலிட்டும்
வெண்ணிணத் தீந்தடி யரிந்துசெம் புண்னின்வாய்
வெள்ளுப்பு நீரிறைத்தும்
சுழித்தலை பரந்தாடு முதிரநீத் தத்தினிற்
றுயருழப் பத்தள்ளியும்
சுடர்வா ளிலைக்கள்ளி மீதெறிந் துந்நாசி
தூண்டுமூச் சுள்ளடங்கக்
குழித்தலை தலைக்கீ ழுறப்புதைத் தும்புலாற்
குருதியுடல் போட்டுநாயின்
கோள்வாய்ப் புகுந்துமா தண்டமயர் மறலிபதி
குறுகாம லடியருக்காத்
தெழித்தலை யறாவருவி மலைவந்து நின்றமுகில்
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறைமுழக்கியருளே. 8
பாந்தளிற் பஃறலைச் செம்மணிக் குப்பையிற்
படர்வெயிற் குடல்வெதும்பிப்
பாண்சுரும் பறுகால் கிளைக்கும் பசுந்துழாய்ப்
பள்ளியந் தாமநீழற்
சாந்தள றெடுத்துக் கொழிக்கும் பணைப்புயந்
தவிசுநடு வீற்றிருக்கும்
தரைமகள் விரும்பியெக் காலமுந் நிலவெழுந்
தவளவொண் சங்குடுக்கும்
காந்தளங் கையேந்து பாவையிப் பறையொலி
கறங்கமெலி யசுணமல்லள்
கனிவாயின் மொழிகற்று வளர்கிளிப் பிள்ளைசூற்
கருவிமுகில் கண்படுப்பத்
தேந்தழைப் பாயலரு ணற்சோலை மலைவாண
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கியருளே. 9
துளிகொண்ட வெள்ளமிர்த மிடையறா தொழுகிவிளை
துகிர்பழுத் தனையசெய்ய
தூயவா யூறலு முகத்தலை குழற்றலை
துவற்றிவிழு புழுகுநெய்யும்
அளிகொண்ட தண்டுழாய்ப் பள்ளித் திருத்தொங்க
லகவிதழ் வரிந்தோடுதேன்
அலையும் புனற்படத் தட்பமுற் றெழுகுர
லவிந்ததே னருகுபாயும்
ஒலிகொண்ட கடவுட் கவுத்துவச் செக்கர் மணி
யுச்சியிற் கற்றைவெயில்வாய்
ஒலிபொங்க வென்றதள் வெதுப்புங் கருங்கொண்ட
லுடுபதிக் குழவிதவழும்
தெளிகொண்ட தலையருவி துஞ்சுகுல மலைவாண
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கிஇருளே. (10)
சிறுபறைப்பருவ முற்றும்
-----------------
பத்தாவது - சிறுதேர்ப்பருவம்
இருகரமுஞ்செவப்ப வலனோடிளைத்துவிளைதேன்
எழுதளவம்பதித்த கொடிவேரொதுக்கிமலரால்
மருவெழுபந்தரிட்டு வெயில்வான் மறைத்துமலிதூள்
மடியமுகந்துகொட்டி யிறைநீர்மழைக்கண்மடவார்
நிறையளகங்குலைப்ப விழுதாதொதுக்கியடியேம்
நிலவியமுன்றில்வட்ட நடுவேநிறுத்திமரைவாழ்
திருவுறைபொங்கர்வெற்ப சிறுதேருருட்டியருளே
திகிரியிணைநதணைத்த சிறுதேருருட்டியருளே. (1)
பொறையுடலம்பிளப்ப வுழுசாறுவைத்தும் வருசேல்
பொருகதவந்திறக்கு மடைவாயடைத்துநுரைபாய்
அறைபுனல்பொங்கியெற்று நிறைகாலுடைத்தும்வயறோய்
அளறுபெறுங்குருத்து முளைநாறழித்துமணியால்
மறையவரம்புமுற்று முதுசூலுகுத்தும்வளையேர்
மளவருடன்பகைத்த புனனாடுடுத்தவளிசூழ்
சிறையெறிபொங்கர்வெற்ப சிறுதேருருட்டியருளே
திருவளரும்புயத்த சிறுதேருருட்டியருளே. (2)
வேறு
புழுதியளைந்து தெருத்தலையின்
புறம்போ யறையின் மணியசைத்தும்
புனிற்றா வந்த தெனவுரைத்தும்
பொங்க லெனச்சே றடியிழுக்கும்
தொழுவி லுரலைப் பிணிப்பொழித்தும்
துள்ளுங் குழக்கன் றெருத்தணைத்தும்
தொடர்பாய்ந் தறுத்த தெனவுரைத்து
சொரியும் விழிநீர் மெய்போர்**
அழுது பொருமி நின்றுபொய்யே
அடித்தா ரென்று மிலைமனையில்
அசோதை பதறி யோடிவர
அழைத்து நகைக்கு மழலைமுகில்
கொழுது மளிதோய் சோலைமலைக்
கோமான் சிறுதே ருருட்டுகவே
குளிருஞ் சிலம்பா றுடையமறைக்
கோமான் சிறுதே ருருட்டுகவே. (3)
மீன்கோட் டலைக்கும் பெருவாரி
வெள்ளத் தெழுந்த வெற்பும்வட
வெற்பு மழுந்த முன்னாளில்
வெள்ளை வராகப் பெரும்போத்துக
கூன்கோட் டிரட்டை நுதிமடுத்துக்
குழியில் வீழு நிலமகளைக்
கொண்டு நிமிர நாற்புறமும்
கொழிக்குந் தரங்கப் புனல்போல
வான்கோட் டிளைய மதியமுது
வழிக்கு மிரத நெடுஞ்சிகர
மருங்கு தொடுக்கு மிறால்பிளக்க
வழியுங் கடவா ரணங்குத்தித்
தேன்கோட் டிழிய வருஞ்சோலைச்
சிலம்பன் சிறுதே ருருட்டுகவே
தெள்ளுந் தரங்கப் பாலாழிச்
சேர்ப்பன் சிறுதே ருருட்டுகவே. (4)
அண்ட ருவலைக் குடிற்படல்வாய்
அனைத்துந் திறந்து தோற்றவுறி
அலைந்து தோற்ற வுரன்மிதித்த
அடியின் சுவடு தோற்றமுதிர்
வண்ட லளைபா னிறைந்ததடா
வயிறு குறைந்து தோற்றவிடை
மகளிர் துவர்வா பலர்தோற்ற
வதனம் வெகுளி தோற்றவிளந்
துண்ட மதிவா ணுதற்பவளத்
துவர்வா யசோதை கைமாறு
தோற்ற வுடனே யருடோற்றத்
துணைக்கண் மைநீர் தோற்றவளை
உண்ட களவு தோற்றாமல்
உலக மேழு முண்டதிரு
உதரங் குழைய வழுதமுகில்
ஒட்டுஞ் சிறுதே ருருட்டுகவே. (5)
வேறு
களிக்கக் குலப்பொதுவ ரெண்ணிலா யிரவராங்
கன்னியரி லொருவரைமலர்க
கண்ணருள் புரிந்துமலர் மணிமுடியி லொருவரிரு
கால்வைத்து மொருவர்முலைதோள்
குளித்துக்களிப்பக் கலந்துமலர் கற்பகக்
கொடியொருவர் கொங்கைமுற்றக்
கோட்டியு முரக்களப வள்ளல்லா யொருவரிடு
குறியொருவர் காண்குறாமல்
ஒளித்துப் பெருந்துளி யொழித்துமய லொருவருட
னூடியும் பகலொன்றின்வாய்
உவலையக் குடிலடங் கத்திரியு மிளையமுகி
லொழுகுமொளி மணியரைத்துத்
தெளித்துக் குழைத்தனைய மழலைவா யழகனே
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (6)
பூநறா வாறுபாய் சந்தனக் கொம்பர்ப்
புறத்துங் கடற்பிறந்து
பொன்பரப் புந்துணர்க் கற்பகக் கொம்பர்ப்
புறத்தும் வடந்துவக்கி
மீனறா வொழுகுமணி நூபுர நதிக்குவளை
விண்டபொற் றாதின்வெள்ளி
வெண்டிரைக் கங்கையின் பொற்றா மரைத்தாதின்
வேரியங் கால்கொழிப்பக்
கானறா வண்டுமுரல் கொந்தளக குற**க்
கன்னியரும் வானநாட்டுக்
கன்னியரு மிருமருங் காட்டிடச் சதிரிளங்
கன்னியர்க ளூசலாடும்
தேனறா வினையிறா னாலறா மலைவாண
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (7)
அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற
வறைபுனல் வறண்டுநெட்டை
ஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு
ளாதவன் றேர்ககடாவக்
கொலையெடுக் கும்படை யரக்கருடல் வெய்யபுட்
குலமேற வுயிர்விமானக்
கொடுஞ்சிப் பொலந்தே ருகைப்பவா னவமாதர்
குங்குமச் சேதகத்து
மலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்
மாறா விழாவெடுப்ப
மாரவே டென்றலந் தேரூர மாதலி
மணித்தேர் நடாத்திவெற்றிச்
சிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (8)
Last two verses missing here !!
-----------
This file was last updated on 10 May 2015.
Feel free to send corrections to the webmaster.