பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
பாகம் 2 (சூத்திரங்கள் 1102-2310)
pingkala nikaNTu, part 2
of pingkala munivar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Libtrary of India for providing a scanned image version
of this work. This etext has been prepared using the Distributed Proof-reading Implementation
and we thank the following volunteers for their assistance in the preparation of this work.
Anbu Jaya, V. Devarajan, Karthika Mukundh, CMC Karthik, R. Navaneethakrishnan,
P. Thulasimani, V. Ramasami, A. Sezhian, P. Sukumar and SC Thamizharasu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" - பாகம் 2
(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)
Source:
பிங்கலமுனிவர் செய்த
பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
இஃது இன்ஸ்பெக்டிங் இஸ்கூல் மேஷ்டர் பென்சனர்
வீராட்சிமங்கலம் தமிழ்ப்புலவர் தி. சிவன்பிள்ளை
பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து இயற்றிய உரையோடும்,
கவர்னர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராயிருந்த
சோடசாவதானம் தி-க. சுப்பராயசெட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து,
மேற்படி சிவன்பிள்ளையால் காஞ்சி-நாகலிங்க முதலியாரது
சென்னை: இந்து தியலாஜிகல் யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
விகுர்தி வருடம் ஆவணி மாதம்
Registered Copy-right., 1890.
---------------------------
உள்ளடக்கம்
முதலாவது வான்வகை. சூத்திரம் 1- 92.
இரண்டாவது : வானவர் வகை. 93 - 312
மூன்றாவது : ஐயர்வகை. 313 - 447
நான்காவது : அவனிவகை 448 - 725
ஐந்தாவது : ஆடவர்வகை 726 - 1101
ஆறாவது : அநுபோகவகை 1102 - 1758
ஏழாவது - பண்பிற்செயலிற்பகுதிவகை. 1759 - 2310
"பிங்கல நிகண்டு" சூத்திரங்கள்
ஆறாவது : அநுபோகவகை (1102-1758)
முதலாவது உணவின்வகை.
1102. சோற்றின் பெயர் - அன்னமயினியடிசி லோதனம் - பொம்மல் போனகமடைபுன்க மூரல் - புழுக்கன் மிதவை யமலைபுற்கை - உணவு சருப்பாளித நிமிரல் வல்சி - யசனம்துற்றுக் கவளமுதரகம் - சொன்றி பாத்துக்கூழ்பதம்புகா சோறே (1)
1103. கஞ்சியின் பெயர் - கஞ்சியவாகே காடி மோழை (2)
1104. பாற்சோற்றின் பெயர் - பாயசம்பாற்சோறே (3)
1105. ததியுணவின் பெயர் - தயிரிற் றிமிரறதியி னுணவே (4)
1106. அவிழின் பெயர் - பதமவிழாகும் (5)
1107. வழியுணவின் பெயர் - பொதிதோட் கோப்புச் சம்பளம் வழியுணவே (6)
1108. பிட்டின் பெயர் - ஆவியும் வெந்தையும் பிட்டெனலாகும் (7)
1109. மோதகத்தின் பெயர் - மோதகமிலட்டுகம் (8)
1110. அடையின் பெயர் - அப்பமடையே (9)
1111. உக்காரியின் பெயர் - அஃகுல்லியுக்காரி (10)
1112. பில்லடையின் பெயர் - பில்லடைசஃகுல்லி (11)
1113. தினைமாவின் பெயர் - நுவணைதினைமா (12)
1114. நென்மாவின் பெயர் - இடிநென்மாவே (13)
1115. தோசையின் பெயர் - கஞ்சந்தோசை (14)
1116. பூரிகையின் பெயர் - நொலையல்பூரிகை (15)
1117. மாவின் பெயர் - பிண்டியு மருப்பமும்பிட்டமுதுவணையு - மென்றிவை மாவென லிடியுமாகும் (16)
1118. அப்பவருக்கத்தின் பெயர் - அபூபங்கஞ்ச மிலையடை மெல்லடை நொலையல் பூரிகை சஃகுல்லி போனக - மண்டிகை பொள்ளலு மப்பவருக்கம்(17)
1119. சிற்றுண்டியின் பெயர் - அப்பம் பிட்டோட குல்லியிடியெனச் செப்பிய வெல்லாஞ் சிற்றுண்டி யாகும் (18)
1120. கறிவர்க்கத்தின் பெயர் - கறிவர்க்கங் கூட்டமை (19)
1121.. கறியின் பெயர் - கறிநீடாணம் (21)
1122. பொரியலின் பெயர் - கருனைபொரியல் (22)
1123. புளிங்கறியின் பெயர் - துவையேபுளிங்கறி (23)
1124. குழம்பின் பெயர் - ஆணங்குழம்பாம் (24)
1125. பச்சடியின் பெயர் - அவித்துவையல்பச்சடி (25)
1126. வறையலின் பெயர் - வறையலோச்சை (26)
1127. பிண்ணாக்கின் பெயர் - மலாவகம்பிண்ணாக்கே (27)
1128. சூட்டிறைச்சியின் பெயர் - சூசியம் படிர்திரஞ் சூட்டிறைச்சியாகும் (28)
1129. மீன்முள் ளரிந்திடுங் கருவியின் பெயர் - அயிரி மீன்முள் ளரிந்திடுங்கருவி (29)
1130. பாலின் பெயர் - பயசு கீர மமிழ்து பயம் பாலே (30)
1131. தயிரின் பெயர் - ததியளைபெருகு தயிரெனலாகும் (31)
1132. நெய்யின் பெயர் - ஆதிரங் கிருத மாச்சிய மிழுது - நேயந்துப்பு நெய்யா கும்மே (32)
1133. மற்றுநெய்யின் பெயர் - அவியா காரமு மதன் பெயர் பெறுமே ()
1134. வெண்ணெயின் பெயர் - ஐயங் கவீன நவநீ தம்மென - வெண்ணெய் விதந்து விளம்பப்படுமே (34)
1135. மோரின் பெயர் - மதிதந் தக்கிரங் காலசேய மோரே (35)
1136. மற்றுமோரின் பெயர் - அருப்ப மளைமுசர் மச்சிகையு மாகும் ()
1137. எண்ணெயின் பெயர் - தைல மெண்ணெய் நேயமு மாகும் ()
1138. தேனின் பெயர் - பிரசமு மதுவுந் தேனெனப் பேசுவர் (38)
1139. குழம்பின் பெயர் - பாரு குழம்பு (39)
1140. செறிகுழம்பின் பெயர் - செச்சை செறிகுழம்பு (40)
1141. கண்டசருக்கையின் பெயர் - கண்டம் பாளிதங் கண்ட சருக்கரை. (41)
1142. மணற்பாகின் பெயர் - கட்டியும் விசயமுங் கன்னலு மணற்பாகே
1143. சருக்கரையின் பெயர் - குளமக் காரங் குடமிவை சருக்கரை ()
1144. மற்றுமோர்வகைச்சருக்கரையின் பெயர் - உண்டே யயிர்புல் லகண்டமொரு விகற்பம் (44)
1145. கற்கண்டின் பெயர் - கன்னல் கட்டி கற்கண்டாகும் (45)
1146. கள்ளின் பெயர் - பாலி பிழியே படுமதுத் தணியல் - சாலி யாலி
யாலை சாறு - மாதவஞ் சாதி சுரையே மாரி - மதுவம் வேரி தொப்பி தேற - னறவு
பிரச மாம்பலி ரேயந் - தொண்டி நனை மாலி யரிட்ட மாசபங் - கௌவை சுவிகை சுலோகி *சுண்டை - வெறியே யம்மியம் வாருணம் பானளியே மேதை -
முண்டகம் பாரி - மட்டுக் காலி சாயனங் காதம் - பரியெலி வாணிதங் கொங்கு
மகரந்தங் - குந்தி சொல்விளம்பி யருப்பங் களியே - கல்லியஞ் சுமாலி ஞாளிதேமு - நாற்றம் வடிநறை மதுகரங் கள்ளே. (46)
1147. மற்றுங்கள்ளின் பெயர் - பழையு மந்திரமும் பகரப்படுமே. (47)
1148. கோற்றேனின் பெயர் - பிரசங் கோற்றேன். (48)
1149. தேன்கூட்டின் பெயர் - இறா றேன்கூடே.(49)
1150. பலபண்டத்தின் பெயர் - பண்ணியம் வளமே பட்டம் பண்டம் - பண்ணிகாரங் கூலம் பலபண் டப் பெயர். (50)
1151. அரும்பண்டத்தின் பெயர் - தாரமென் கிளவி யரும்பண்டமாகும்.
1152. எச்சிலின் பெயர் - மிச்சி லுச்சிட்ட மெச்சிலாகும். (52)
1153. உணவின் பெயர் - உணாவே வல்சி யுண்டி யோதன - மசனம் பதமே யிரையா கார - முறையே யூட்ட முணவென லாகும். (53)
1154. பேருண்டியின் பெயர் - பிரப்பென் றுரைப்பது பேருண்டியாகும். (54)
1155. உண்பனவற்றின் பெயர் - துற்றி யுண்பன. (55)
1156. தின்பனவற்றின் பெயர் - திற்றி தின்பன. (56)
1157. பருகுவனவற்றின் பெயர் - பானமுந் துவையும் பருகுவன வாகும். (57)
1158. அடிசிலென்பது - அடப்படுவ தடிசில். (58)
1159. புழுங்கலென்பது - புழுக்குவது புழுங்கல். (59)
1160. தித்திப்பின் பெயர் - இழுமு மதுரமு மினிமையுந் தேமு - மமுதுஞ் சுவையுந் தித்திப் பாகும். (60)
1161. கைப்பின் பெயர் - கைத்தறித்தங் கைப்பாகும்மே. (61)
1162. புளிப்பின் பெயர் - ஆமில மாம்பிர மாகும் புளிப்பே. (62)
1163. காழ்த்தலின் பெயர் - கரிலே காயங் கடுகங் காழ்த்தல். (63)
1164. துவர்ப்பின் பெயர் - துவர்ப் பேதுவரம். (64)
1165. உவர்த்தலின் பெயர் - உவர்த்தலுவரே. (65)
---------
2 - வது பூணின்வகை.
1166. ஆபரணத்தின் பெயர் - பூணணி அணிகலம் பூடணம் வள்ளி -
ஆயிழை கலமு மாபரணம் மே. (66)
1167. மணிமுடியின் பெயர் - மகுடங் கீரீட மௌலி மணிமுடி. (67)
1168. மற்றும்மணிமுடியின் பெயர் - சூடிகை சுடிகை சேகரமுஞ் சொல்லும். (68)
1169 முடியுறுப்பைந்தின் பெயர் - கோடகங் கிம்புரி முகுடந் தாமம் - பதும முடியுறுப் பிவை யைந்தாகும் (69)
1170. முடிமாலையின் பெயர் - பாட முடிமாலை கோடி கரோடி (70)
1171. பதக்கத்தின் பெயர் - கண்டிகை மதாணி யாரமும் பதக்கம் (71)
1172. தோளணியின் பெயர் - அங்கதங் கேயூரந் தோளணி யாகும் (72)
1173. குண்டலத்தின் பெயர் - குண்டல மஞ்சிகை குழையெனலாகும்
1174. காதணியின் பெயர் - வல்லிகை கொட்டை கடிப்பங் காதணி ()
1175. குணுக்கின் பெயர் - கடிப்பிணை குணுக்காம் (75)
1176. தோட்டின் பெயர் - தாடங்கந் தோடே (76)
1177. கங்கணத்தின் பெயர் - வளையுந் தொடியுங் கடகமுங் கங்கணம் (77)
1178. கைவளையின் பெயர் - சரியுந் தொடியுங் சூடகமுஞ் சங்குங் - குருகும் வண்டுங் கன்றுங் கைவளை (78)
1179. பிள்ளைக்கைவளையின் பெயர் - பிள்ளைக்கைவளை பிடிக மாகும்()
1180. சுட்டியின் பெயர் - சுட்டி சுடிகை (80)
1181. பட்டத்தின் பெயர் - பட்ட மோடை (81)
1182. பாதகிண்கிணியின் பெயர் - பரிபுர நூபுரம் பாதிண் கிணியே()
1183. சதங்கையின் பெயர் - பாத சதங்கை சிறுமணி கிண்கிணி (83)
1184. சிலம்பின் பெயர் - அரிதளை ஞெகிழி நூபுரஞ் சிலம்பே (84)
1185. மற்றும்சிலம்பின் பெயர் - அரவமுஞ் சிலம்பினபிதானம்மே ()
1186. காற்சரிக்குங்கைச்சரிக்கும் பெயர் - பரியகங் காற்சரி கைச்சரியுமாகும் (86)
1187. காலணியின் பெயர் - பாத சாலங் காலணியாகும் (87)
1188. பாடகத்தின் பெயர் - பாத கடகம் பாடகமாகும் (88)
1189. ஓசைசெய்தளையின் பெயர் - ஞெகிழங் குடச்சூ லோசை செய்தளை (89)
1190. ஆடவர்கொடைவீரத்தாலணிவதின் பெயர் - ஆடவர் கொடையால் வீரத் தாலணி - பாதத் தணியே கழலணியென்ப (90)
1191. மாதரிடையணியின் பெயர் - காஞ்சி மேகலை கலாபம் பருமம் -
விரிசிகை மாத ரிடையணி யெனப்படும் - அவற்றுள் காஞ்சியெண்கோவை
யெழுகோவை மேகலை - கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு - விரிசிகை
யெண்ணான்கு கோவையென்ப (91)
1192. சரிமணிக்கோவையின் பெயர் - கலாபந் தோரை சரிமணிக் கோவை (92)
1193. அரைப்பட்டிகையின் பெயர் - அத்துமனாவு மரைப்பட்டிகையே
1194. அரைஞாணின் பெயர் - இரதர மரைஞாண் (94)
1195. செவிமலர்ப்பூவின் பெயர் - கன்னாவதஞ் சஞ் செவிமலர்ப்பூவே
1196. ஆபரணத்தொங்கலின் பெயர் - தொங்க லுத்தி மதலிகைதூக்கம்
1197. மோதிரத்தின் பெயர் - வீக மாழி யிலச்சினை மோதிரம் (97)
1198. மணிவடத்தின் பெயர் - சரமே யாரந் தாம மணிவடம் (98)
1199. பூணுநூலின் பெயர் - உபவீதம் பூணு நூலென மொழிப (99)
1200. நுதலணியின் பெயர் - இலம்பகம் புல்லகஞ் சூட்டு நுதலணி ()
1201. தெய்வவுத்தியின் பெயர் - திருத்தெய்வவுத்தி (101)
1202. தலைக்கோலத்தின் பெயர் - பங்குசம் பிஞ்ஞகம்பயிறலைக்கோலம்
1203. தலைப்பாளையின் பெயர் - தொய்யகமென்பது தலைப்பாளையாகும்
1204. கிம்புரியின் பெயர் - தாங்கி கிம்புரி கோளகை பூணே (104)
1205. பிருஞ்சூட்டின் பெயர் - பெருஞ்சூட் டென்பது சிவளிகைப் பெயரே (105)
1206. சரப்பணியின் பெயர் - சரப்பணி வயிரச் சங்கிலி யாகும் (106)
1207. பேரணியின் பெயர் - மதாணி யாரம் பெரும்பூண்பேரணி (107)
1208. பூண்கடைப்புணர்வின் பெயர் - கடையுங் கயிலும் பூண்கடைப் புணர்வே (108)
1209. மாதரணிவடத்தின் பெயர் - ஆரங் கண்டிகை தாமங் கோவை - மாலையிழைமா தரணிவடப் பெயரே (109)
--------------
3 -வது இரத்திநவகை
1210. மாணிக்கத்தின் பெயர் - மாமணி செம்மணி மாணிக்கம் பதும - ராக மென்பதுமப் பெயர்க் குரித்தே (110)
1211. வைடூரியத்தின் பெயர் - வால வாயம் வயிடூரிய மெனல் (111)
1212. வயிரத்தின் பெயர் - வச்சிரம் வயிரம் (112)
1213. மரகதத்தின் பெயர் - மரகத மரிமணி பச்சை மணியே (113)
1214. நீலமணியின் பெயர் - நீல மணிப் பெயர் மணியென நிகழ்த்துப ()
1215. பவளத்தின் பெயர் - துப்புப் பிரவாளந் துவர்துகிர் பவளம் ()
1216. மற்றும்பவளத்தின் பெயர் - வித்துரும மரத்த மென்னவும் விளம்புப (116)
1217. முத்தின் பெயர் - நித்தில மாரந் தரளமு முத்தே (117)
1218. கடவுண்மணியின் பெயர் - நிதியு நிதானமும் கடவுண் மணிப் பெயர் (118)
1219. மணிப்பொதுப் பெயர் - மனவுங் காசு மணியின் பொதுப் பெயர் (119)
1220. ஐவகைத்தெய்வமணியின் பெயர் - சிந்தா மணிசூ ளாமணி சிமந்தக - மணிசூடாமணி கௌத்துவ மணியென் - றினையவை தெய்வ மணியைந் தென்ப (120)
1221. சங்கநிதியென்பது - சங்கநிதி சங்கின் வடிவின தாகும் (121)
1222. பதுமநிதியென்பது - பதுமநிதி பதும வடிவினதாகும் (122)
1223. சந்திரகாந்தமாவது - சந்திர காந்த மணிநீர் கால்வது (123)
1224. சூரியகாந்தமாவது - சூரிய காந்த மணிதீச் சுடர்வது (124)
1225. இருப்புக்காந்தத்தின் பெயர் - இருப்புக்காந்தஞ்சும்பகமென்ப ()
1226. பளிங்கின் பெயர் - படிகம் பருக்கை காழுபலம் பளிங்கே ()
1227. வளைமணியின் பெயர் - மனவு மக்கும் வால்*வளை மணியே ()
--------
*வளைமணி - அக்குணி
1228. செங்கல்லின் பெயர் - தாது செங்கல் காரிகமு மாகும் (128)
1229. சிந்தூரத்தின் பெயர் - திலகமென்பதுசிந்தூரமாமே (129)
1230. சாதிலிங்கத்தின் பெயர் - இங்குலிகஞ்சாதிலிங்கங்குலிகம் (130)
1231. அகன்மணிப்பொதுப் பெயர் - அரதநஞ் சலாகை†யகன்மணி யாகும் (131)
------
† அகன்மணி - தேவமணிப்பொது
-------------
4 -வது உலோகவகை
1232. பொன்னின் பெயர் - ஆடகம் வேங்கை யரிசெந் தாது - காணந் தேசிகங் காஞ்சனங் கர்ப்பூரங் - காரந் தொடுக்கங் கனகஞ்சா மீகர - மீழஞ் சுவண மிரணிய மேம - மாசை செங்கொ லாக்கங்கோ வம் - பீதக மாழை யீகை சாக்குப் - பந்தந் தமனிய மத்தம் பூரி - சந்திரம் வித்த நிதியே வெறுக்கை - யிந்த வகைப்பெய ரெல்லாம் பொன்னே (132)
1233. மற்றும் பொன்னின் பெயர் - அனந்தமும் வசுவு மருத்தமும் பொருளுந் - தனமும் பண்டமுந் திரவியமு மதற்கே (133)
1234. வெள்ளியின் பெயர் - தார மிரசிதங் களதௌதம் வெள்ளி (134)
1235. செம்பின் பெயர் - தாமிர மெருவை வடுவே சுற்பம் - உதும்பரஞ்சீருள் சீருணஞ் செம்பே (135)
1236. வெள்ளீயத்தின் பெயர் - சீருளும் வங்கமும் வெள்ளீய மாகும் (136)
1237. காரீயத்தின் பெயர் - நாகங்காரீயம் (137)
1238. தராவின் பெயர் - மதுகந்தராவாம் (138)
1239. துத்தநாகத்தின் பெயர் - நாகம் துத்தநாகம்; (139)
1240. பித்தளையின் பெயர் - இரதிமா யாபுரி யாரகூடம் பித்தளை (140)
1241. வெண்கலத்தின் பெயர் - கஞ்சமுறைவெண்கலமாகும்மே ()
1242. இரும்பின் பெயர் - கருங்கொ லகியங் கருந்தாது வயிலு - மிரும்பின்பெயரே யயமு மென்ப (142)
1243. உலோகக்கட்டியின் பெயர் - மாழை சுவணம் வங்காரந் தகணை - யாடக முலோகக் கட்டியாகும் (143)
1244. பஞ்சலோகத்தின் பெயர் - தமனிய மிரும்பு தாமிர மீய - மிரசிதம் பஞ்சலோக மென்ப (144)
1245. நவலோகங்களின் பெயர் - இரதி மதுக நாகங் கஞ்சமென் - றுரை செய் நாலுட னவலோக ம்மே (145)
1246. பண்டாரத்தின் பெயர் - கோசந் தண்டம் பண்டார மாகும்; ()
1247. பொற்கலனிருக்கையின் பெயர் - பொற்கல னிருக்கை பொற் பண்டாரம் (147)
1248. உண்கலத்தின் பெயர் - தாலந் தட்டந் தளிகை பாசனமுண்கலம் (148)
1249. வட்டிலின் பெயர் - கரகமுங் கோரமும் வள்ளமுஞ் சகடமுஞ் - சிகரமுஞ் சாகையும் வட்டிற் பெயரே (149)
1250. சிறுவட்டிலின் பெயர் - கிண்ணமும் வள்ளமுஞ் சிறுவட்டிற் பெயரே (150)
1251. மற்றும்சிறுவட்டிலின் பெயர் - கிராணமென்பதுஞ் சிறுவட்டிற் பெயரே (151)
1252. நாழிகைவட்டிலின் பெயர் - கன்னலுங் கிண்ணமுநாழிகை வட்டில் (152)
1253. கண்ணாடியின் பெயர் - புளக மத்த மாடிபடி மக்கல - மொளி வட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி (153)
1254. மற்றுங்கண்ணாடியின் பெயர் - ஆதரிசன முருவங் காட்டி கஞ்சனமுமாகும் (154)
1255. படிக்கத்தின் பெயர் - படியகம் படிக்கம் (155)
1256. கலசப்பானையின் பெயர் - கஞ்சனை கலசப் பானை யாகும் (156)
1257. துடுப்பின் பெயர் - கசிதந்துடுப்பு (157)
1258. நெய்த்துடுப்பின் பெயர் - சுருவை நெய்த்துடுப்பே (158)
1259. சட்டுவத்தின் பெயர் - தவ்வி சிலகந் தறுவிசட்டுவம் (159)
1260. கைம்மணியின் பெயர் - படலிகை வட்டம்பகரிற்கைம்மணி ()
1261. பெருமணியின் பெயர் - பெருமணி கண்டைமணி யானைமணி யென்ப (161)
1262. எறிமணியின் பெயர் - எறிமணி சேகண்டி. 162
1263. தூபமணியின் பெயர் - தூபமணி கைம்மணி. 163
1264. தாளத்தின் பெயர் - கிட்டிசீர் பாண்டில் கஞ்சங்கைத் தாளம். 164
1265. கிண்கிணிமாலையின் பெயர் - குரலே தாரிவை கிண்கிணி மாலை. 165
1266. காளத்தின் பெயர் - காகளங் காளம். 166
1267. சிறுசின்னத்தின் பெயர் - பீலி சிறுசின்னம். 167
1268. கொம்பின் பெயர் - கோடு மிரலையும் வயிருங் கொம்பே. 168
1269. மற்றுங்கொம்பின் பெயர் - ஆம்பலுமாமென்றறையப் படுமே. 169
1270. பரணியின் பெயர் - கோயே பரணி. 170
1271. கமண்டலத்தின் பெயர் - குண்டிகை காண்டகங் கரகங் கமண்டலம். 171
1272. கெண்டியின் பெயர் - கடிப்பங் கோடிகங் கெண்டி யாகும்.
--------
5-வது. ஆடைவகை.
1273. கூறையின் பெயர் - ஆடை, கோடிசூடி வட்டங் - காடகம் புட்டங் கலிங்கங் காழகம் - படந் தூசுபுடைவை துகில்பரி வட்ட - மாவரணந் தானை யுடையா சார - மம்பர நீலியறுவை யுடுக்கை - சம்படம் பட்டி சாடி சேலை - மடியே சீரை வட்டுடை கோசிகங் - கலையே வாசனங் கூறை யெனக் கருதுவர். 173
1274. சிறுதுகிலின் பெயர் - கந்தை விரிபங் கண்டை பிடியல் - வேதகம் புங்கம் பங்கங் கத்தியந் - தூரியஞ் சிற்றிலிவை சிறுதுகிற் பெயரே.
1275. நல்லாடையின் பெயர் - நாகம் பாரி நல்லாடைப் பெயரே.
1276. பட்டுவருக்கத்தின் பெயர் - பாளிதங்கோசிகம்பட்டுவருக்கம்.
1277. மற்றும்பட்டுவருக்கத்தின் பெயர் - காம்பு நேத்திரமுங் கருதுவரதற்கே. 177
1279. பணித்தூசின் பெயர் - பாளிபணித் தூசு தேவாங்கென்ப. 178
1279. மயிர்ப்படாத்தின் பெயர் - மயிரகம் வயிரிய மயிர்ப்படா மாமே.
1280. அத்தவாளத்தின் பெயர் - வடகமுல்லாச மத்த வாளம். 180
1281. சித்திரப்படாத்தின் பெயர் - புத்தகஞ் சித்திரப்படாமதாகும்.
1282. உத்தரீயத்தின் பெயர் - உத்தரா சங்கமே கசமுத் தரீயம்.
1283. கொய்சகத்தின் பெயர் - நீவிகொய்சகம். 183
1284. போர்வையின் பெயர் - மீக்கோள்போர்வை. 184
1285. உடுத்தலிறுக்கலின் பெயர் - சுற்றலுடுத்தலிறுக்கறற்றல். 185
1286.முன்றானையின் பெயர் - முன்றானை தோகை. 186
1287. முகபடாத்தின் பெயர் - முகபடாஞ்சூழி. 187.
1288. கம்பளிப்படாத்தின் பெயர் - கம்பலங் கம்பளங் கம்பளிப் படாமே. (188)
1289. செம்படாத்தின் பெயர் - சிம்புளி செம்படாம். (189)
1290. முலைக்கச்சின் பெயர் - வம்புவார் விசிகை பட்டிகை முலைக்கச் செனல். (190)
1291. கச்சின்றலைப்பின் பெயர் - கஞ்சகஞ் சார்வாரங்கச்சின்றலையே.
1292. மேற்கட்டியின் பெயர் - விதானங் கம்பலம் படங்குவானி மேற்கட்டி. (192)
1293. சட்டையின் பெயர் - கஞ்சுகங் குப்பாய மெய்ப்பை காஞ்சுகியங்கி வாரணஞ் சட்டையாகும். (193)
1294. இடுதிரையின் பெயர் - அவிடி கஞ்சிகை யவளிகை காண்ட - மெழினி கண்டம் பாரங் கழனி - படமிடு திரை மெய்ப்படாமு மாகும்.(194)
1295. மெத்தையின் பெயர் - தவிசு மணையுந் தளிமமு மெத்தை. (195)
1296. மற்றும்மெத்தையின் பெயர் - காகுளி யென்பதுங் கருதப் பெறுமே.(196)
1297. தலையணையின் பெயர் - உபதான மென்பது தலையணையாகும்.
1298. பெருங்கொடியின் பெயர் - படமே வானி பதாகை கேதனந் - துவசஞ் சத்தி தோகை துகிலே - படங்குவி லோதனம் படாகை பெருங்கொடியே. (198)
1299. மற்றும்கொடியின் பெயர் - கிளத்துப் பெறுமே கேதுவுமிதன் பெயர். (199)
1300. வீதியிற்கட்டியகொடியின் பெயர் - விடங்கம் வீதியிற் கட்டிய கொடியே. (200)
1301. தேரிற்கட்டுங்கொடியின் பெயர் - தேரிடைத் திகழ்கொடி கூவிரமாகும். (201)
1302. சிறுகொடியின் பெயர் - கத்திகை சிறுகொடி கட்டுரையாகும். ()
1303. மரவுரியின் பெயர் - வற்கலை யிறைஞ்சி சீரைமரவுரி. (203)
1304. சும்மாட்டின் பெயர் - சுடுவு சுமடு சுமையடை சும்மாடு. (204)
1305. துணியின் பெயர் - சிதரே சிதலை சீரை துணியே. (205)
1306. பரிவட்டத்தின் பெயர் - வத்திர மாசாரம் வாசம் பரிவட்டம். ()
----------
6 -வது பூச்சுவகை.
1307. சாந்தின்பொதுப் பெயர் - கலவைச் சேறுங் காலேக வண்ணமுங் -
களபமும் விரையுங் கலவையுஞ்சாந்தே. (207)
1308. நால்வகைச்சாந்தின் பெயர் - பீதங் கலவை வட்டிகை புலியென நால்வகைச்சாந்தி னாமமாகும். (208)
1309. கருப்பூரத்தின் பெயர் - பாளிதங் கருப்பூரம். (209)
1310. கத்தூரியின் பெயர் - மான்மதங் கத்தூரி. (210)
1311. புழுகின் பெயர் - வாசநெய்புழுகே. (211)
1312. பூசுவனவற்றின் பெயர் - அங்கராகம் பூசுவன வாகும். (212)
1313. மயிர்ச்சாந்தின் பெயர் - ஏலந் தகரங் காசறை மயிர்ச்சாந்தே. (213)
1314. செஞ்சாந்தின் பெயர் - செஞ்சாந் தென்பது செங்குங்குமமே. (214)
1315. மற்றும்செஞ்சாந்தின் பெயர் - தளமென்றுரைப்பது மதற்கேசாற்றும். (215)
1316. வெண்சாந்தின் பெயர் - தளமென்றுரைப்பதுவெண்சாந்தாகும்.
1317. சந்தனத்தின் பெயர் - சந்து சாந்தம் சந்தஞ் சந்தனம். (217)
1318. கலவையின் பெயர் - கலவை களபப் பெயர தாகும். (218)
1319. பனிநீரின் பெயர் - கந்தசாரமிமசலம்பனிநீரே. (219)
1320. செறிகுழம்பின் பெயர் - தேய்வையுஞ்செச்சையுஞ் செறிகுழம்பாகும். (220)
1321. அப்புதலின் பெயர் - கொட்டலப்புதல். (221)
1322. பூசுதலின் பெயர் - புலர்த்தல் பூசுதல். (222)
1323. மகளிராகத்தெழுது கோலத்தின் பெயர் - மகளிர் கோலால் வனமுலையாகத்துத் - தொழில்பெர வரிப்பது தொய்யிலாகும். (223)
1324. நுதற்குறியின் பெயர் - புண்டரந்திலக நுதற்புனைகுறியே. (224)
1325. *அச்சுதமென்பது - அச்சுத மறுகரிசி கூட்டிய தாகும். (225)
----------
7 -வது சூட்டுவகை.
1326. மாலையின் பெயர் - சுக்கை தொடைய றெங்கல் கத்திகை - யலங்கல் கண்ணி தெரியறாரே - யணியல்தாம மொலியல் சூட்டு - கோதைமஞ்சரி மாலையின் கூற்றே. (226)
1327. நுதலணிமாலையின் பெயர் - சூட்டேயிலம் பகநுதலணிமாலை. (227)
1328. கோத்தமலரின் பெயர் - கோத்தமலரேமத்தகமாலை. (228)
1329. பின்னியமாலையின் பெயர் - பிணையலென்பது பின்னியமாலை (229)
1330. கோத்தமாலையின் பெயர் - சிகழிகைபடலைவாசிகைதொடையல்.
1331. வாகைமாலையின் பெயர் - கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் - வெல்லு நரணிவதுவாகையாகும். (231)
-----------
8 -வது இயல்வகை.
1332. மூவகைத்தமிழின் பெயர் - இயற்றமிழிசைத் தமிழ் நாடகத் தமிழென - வகைப்படச் சாற்றினர் மதியுனர்ந்தோரே. (232
-----------
*அச்சுதத்தை அக்கதமென்றுவழங்குவர்.
1333. எண்வகைக்கணத்தின் பெயர் - அறம்பொரு ளின்பம் வீடென்றி வற்றின் - றிறம்படச்செய்யுள் செப்புங்காலை - நீரின்கணமு நிலத்தின்கணமுந் தேயுவின்கணமும் வாயுவின் கணமு - மந்தரகணமுமியமான கணமுஞ் - சந்திர கணமுஞ் சூரியகணமு மென் - றெண்வகைக்கணமுமியம்பல் வேண்டும் (233)
1334. அவற்றுள் நீரின் கணவகை - நேர் முதலாகி நிரையிணை பின்வரினீரின் கணமெனச்சீர் பெயர் பெறுமே (234)
1335. நிலத்தின்கணவகை - நிரை மூன்றுறுசீர் நிலக்கண மாகும் (235)
1336. தேயுவின்கணவகை - நேர்நடுவாகி நிரையிரு பால்வரிற் - றேயுவின் கணமெனச் செப்புவர் புலவர் (236)
1337. *மாருதகணவகை - இறுதி நிரையா யிணைநேர் முன்னர் - வருவது மாருத கணமென வைப்பர் (237)
1338. அந்தரகணவகை - முந்து நிரையிணை வந்துநேர் பின்வரி - னந்தர கணமென் றறையல் வேண்டும் (238)
1339. இயமானன் கணவகை - நேர்மூன்றாகிற் சீரியமானன் (239)
1340. மதியின்கணவகை - முதனிரையாகி யிணைநேர்பின்வரின் - மதியின் கணமென வகுத்தனர் புலவர் (240)
1341. †எரிகதிர்க்கணவகை - நிரைநடு வாகி நேரிரு பால்வரி - னெரிகதிர்க் கணமென் றியம்பினர் புலவர் (241)
--------
† எரிகதிர் - சூரியன்
1342. அவ்வெட்டினுள் நற்கணவகை - நிலனுநீரு மதியுமிய மானனு நலமிக முன்வரினன் கணமாகும் (242)
1343. தீக்கணவகை - ஏனையநான்கு மூனமதாகும் (243)
1344. நன்கணதீக்கணவரலாற்றுவகை - வெண்பா - காய்ச்சீரின் முன்னிரண்டுங் கைகொள் கனிச்சீரின், வாய்த்தசீர் பின்னிரண்டும் வாங்கிக்கொள் - வாய்த்த, கனிச்சீரின் முனம்னிரண்டுங் காய்ச்சீரின் பிின்னும், நுனித்த கணமெட்டினுக்கு நூல் (244)
1345. எழுத்துப் பொருத்தவகை - சொல்லியவகையா லெழுத்துப் பொருத்தம் - வல்லெழுத்தல்லது மெல்லெழுத் தாகா - யாவகைச் செய்யுட் கின்பமொடு புணர்ந்த - மூவகைச் சீரேமுதற்சீ ராகும் (245)
--------
*மாருதம் - காற்று
1346. தானப்பொருத்தவகை - வெண்பா - தன்னெழுத் துப்பாலன் குமர னிரண்டாகு, மன்னவற்கு மூன்றாம் வகுக்குங்காற் - றுன்னிய, நஞ்சார் விருத்தமா நான்காகி லைந்தாகி, லெஞ்சா மரணத் தியல்பு (246)
1347. நற்றானந்தீத்தானமாவன - தலைவ னெழுத்தே முதலாய்ச் சாற்றினல மிகுமூன்று மற்றிரண்டு மூனம் (247)
1348. நாட்பொருத்தவகை - வெண்பா - தன்னாட்குப் பின்னாளு நன்றாகுஞ் சம்பந்த - நன்னான்கு மாறு நலம்பெருகும் - பொன்னனையா - யெட்டினோ டொன்பானா மித்தனையு மென்பரே - யொட்டாரை யொட்டுவிக்கு நாள்
1349. (இதுவும் அது) நீர்க்கணத்து நாள்சதய நீடியமானன் கணநாள் - பார்க்கிற் பரணிபடிக் கணத்துக் - கேற்குநாள் - கேட்டை மதியின்கணநாண் மகமிங்குக் - கூட்டிய நாளென்றே கூறு. (249)
1350. (இதுவுமது) காற்றின்கணநாள் கடுஞ்சோதி கார்த்திகையா - மேற்ற வெரிக்கணத்துக் கெண்ணுங்காற் - றோற்றிரவி - பொங்குகணநாள் புநர்பூச மாகாயந் - தங்குகண நாளோணந்தான் (250)
1351. நற்கணத்தின்பயன் - நிலமதி நீரியமான னெனுநான்கும் - பெருக்கஞ் செய்தலில் வாழ்நாள் பயத்தலிற் - றருக்கிய சீர்த்தி தன்னைத்தருதலின் - மிகுதிருவாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந் - தகுமெனக் கழறினுந் தகாமற் றச்சீர்க் - குரியவா நாளொடும் பொருந்தாக்காலே (251)
1352. தீக்கணத்தின்பயன் - அந்தரவாயு வளவிலாதித்தன் - செந்தழலெந்னுந் தீக்கணஞ் சேரின் - தேசம் போக்குதல் செல்வத்தைப் பிரித்தல் - சூனியமாக்கல் சூழ்நோயுறுத்தல் - ஊனம்பயக்குமென் றுரைத்தன ராய்ந்து - தெள்ளிதினுணர்ந்த செந்தமிழ்க் கவிஞர். (252)
1353. உண்டிபோருத்தவகை - ஆதியமு தெழுத் தாகிய வச்சீர்க்கோதிய தெய்வத்துக் குரிய நாளொடும் - பாடப் படூஉ மியல்பின்றியு மிறைவன் - பிறந்த நாளினும் பெயர்நாடன்னினும் - இரண்டினொன்றிற் பொருந்தக்கூறிய - பாத முதலே யெடுப்பின் மற்றவற் - கேறு திரு வாக்குமெ *ன்மனார் புலவர்.
1354. புள்வகை - வெண்பா - அகரமே வல்லூறா மாந்தை யிகர - முகரமே காக்கையென வோது - மெகரமே, *வண்டானக் கோழி வளைவாய் மயிலென்னக்,
கொண்டா ரொகரக் குறி. (254)
----------------
*வண்டானம் வளவிய தானமாகக்கொண்ட
1355. +கன்னல்வகை - ஐவகை யெழுத்தி லகர $முதிப்ப - இகரந்தானே யின்புறுமென்ப - உகரமரசா மெகரந்துயிலும் - ஒகரந்தானே யுயிரப்பின் றொடுங்கும்.(255)
----------
+கன்னல் நாழிகை, உதையாதி நாழிகை முதல் நாழிகை முப்பதும் ஒவ்வொன்றிற்கு அவ்வாறு நாழிகையாகக் கொள்ளுதலாம்.
$உதிப்ப என்றது ஆறுநாழிகையில் ஐந்துபுள்ளுந்தத் தந்தொழில் பெறநிற்றல்.
1356. அவ்வவர் பெயர்முத லெழுத்துவந் துதிப்ப - வவ்வவர்ப் பாடினாக்க மிகுமே. (256)
1357. பால்வகை - எழுத்தெனப் படுபவை யாண்பெண் ணலியே. (257)
1358. அவற்றுள் - ஆணெழுத்து - உயிர்பன் னிரன்டு மாணெனப் படுமே. (258)
1359. பெண்ணெழுத்து - உயிர்மெய் யெல்லாம் பெண்ணெழுத்தென்ப. (259)
1360. அலியெழுத்து - ஒற்றெழுத் தெல்லா மலியெனப் படுமே. (260)
1361, அவ்வெழுத்துகளுள் முதற்சீரின் முதலெழுத்து இன்னதெனல் - எழுத்தின் கிழத்தி நாமக ளாதலிற் - பெண்ணெழுத் தல்லது முன்வைத் துரையார். (261)
1362. மங்கலச்சொல் - திருவேகளிறே தேர்பரிகடலே - பொலிவே மணியே பூப்புகழ் சீரெனல் - வருத்தநீங்கிய மங்கலச் சொல்லே. (262)
1363. வேதியர்க் குரிய பாவகைப் பெயர் - பிள்ளைப் பாட்டு வாயின் முன்னம் - வெள்ளைப் பாடு வேதியர்க் குரித்தே.(263)
1364. அரசர்க்குரிய பாவகைப் பெயர் - நேரிசை யகவலுங் கொச்சகக் கலியு - மாரா யுங்கா லரசர்க் குரித்தே. (264)
1365. வணிகர்க் குரிய பாவகைப் பெயர் - வஞ்சியும் மின்னிசை வெள்ளையும் வணிகர்க் - கெஞ்சலில்லா வியல் புடைத்தாகும் (265)
1366. சூத்திரர்க் குரிய பாவகைப் பெயர் - நெடுவெண் பாட்டும் நேரிசை யகவலுங் - கடியசூத் திரர்க்குக் கட்டுரைத் தனரே. (266)
1367. காப்புக்குரிய கடவுள் - காப்புமுத லிசைக்குங் கடவுடானே - பூக்கமழ் தண்டுழாய் புனைந்தவனாமவன் - காவற் கிழமைய னாதலானும் - பூவின்கிழத்தியைப் பொருந்துதலானு - முடியுங்கடகமு மொய்பூந்தாருங் - குழையுநூலுங் குருமணிப்பூணும் - அணியுஞ்செம்ம லாதலானும் - மன்னுறு பிரமனைத் தருத லானும் - முன்னுற மொழிதற் குரிய னாமெனப் - பன்னி யுரைத்தனர்
பாவலர் தாமே. (267)
1368. ஆண்பாற்பிள்ளைப் பாட்டின்வகை - பிள்ளைப்பாட்டுத் தெள்ளிதிற் கிளம்பிற் - றிங்களிரண்டிற் றெய்வங் காக்கென - இன்றமிழ்ப்புலவரியம்பிய
காப்பு - மைந்தாந்திங்களிற் செங்கீரையாடலு - மாறாந்திங்களிற் கூறுதல்கற்றலொ
டேழாந்திங்களி னின்னமுதூட்டலு, மெட்டாந்திங்களினி யற்றாலாட்டலு -
மொன்பதாந் திங்களி லுயர்சப்பாணியும் - பத்தினோடொன்றின் முத்தங்கூறலு
மாண்டுவரையி னீண்டு வருகென்றலு - மதியீரொன்பதின் மதியையழைத்தலு -
மிரண்டாமாண்டிற் சிறுபறை கொட்டலு - மூன்றாமாண்டிற்சிற்றில் சிதைத்தலும் -
நாலாமாண்டிற் சிறுதேருருட்டலும் - பத்திற்பூணணிபன்னீராண்டினிற்
கச்சொடு சுரிகைகாமுறப்புனைதலென் - றின்னவை பிறவுமாகுமிவற்றுள் - முன்னர்மொழிந்த வொழிந்தவற்றோடும் - பெற்றவாண்பாற் பிள்ளைப்பாட்டாம் -
முன்னுறக்கிளந்த ஆண்டினாள்வரை - இசைத்தபாட லிருபாற்குமுரித்தே. (268)
1369. பெண்பாற்பிள்ளைப் பாட்டுவகை - பேணும் சிறப்பிற் பெண்மக வாயின் - மூன்றா மாண்டிற்குழமண மொழிதலு - மைந்தின் முதலா யொன்பதின்
காறு - மைங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும் - பனிநோர் தோய்தலும் பாவையாடலு - மம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ் - சிறு சோறடுதலுஞ்
சிற்றி லிழைத்தலு - மூசலாடலு மென்றிவை யுள்ளிட்டுப் - பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே. (269)
1370. கவியரங்கேற்றிய பாட்டுடைத்தலைவன் செய்யும் வழிபாடு - உருவகமுவமை வழிநிலை மடக்கே - விரிசுடர் விளக்கென விரவி வருநவும் - வேற்
றுமை நிலையே வெளிப்படு நிலையே - நோக்கே யுட்கோ டொகைமொழி மிகைமொழி - வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பெனப் - பாற்படக் கிடந்த
பகுதியின் வருநவுஞ் - சிறப்பு மொழி சிலேடை மறுத்துமொழிநிலையே - வுடனிலைக் கூட்ட முவமான முருவக - நுவலா நுவற்சி தலைக்கட் டியமொழி - நிதரிசனம்
பாராட் டொருங்கியனிலையே - யையமுயர்வே விரவியல் வாழ்த்தென -
வெய்துமிருபத் தெட்டலங்காரத் தாலு - மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு
நெறியாலு - நவையறச் செய்யுள் செய்யும் பாவல - னவையு மரசு மறியப் பாடுவோன் - முத்தமிழ் வல்லோ னாற்கவி பாடுவோ - னுத்தமச் சாதியிற்
றப்பாதுயர்ந்தோ - னுறுப்பிற் குறையா தொழுக்கமொடு புணர்ந்தோன் - முப்பதுகழிந்தங் கெழுபதுக் குளவாம் - பெற்றியினமைந்த பிராயம துடையோன் - பாடுங் கவிதை நாடுறக் கொள்ளிற் - றோரண நாட்டித் துகிற்கொடியெடுத்து - வார்முரசியம்ப மறையோர் வாழ்த்த - விழுத்தகு கோலத்து விரித்தபூங் கலிங்கத்துப் -
பழிப்பில் பாலிகைப் பல்லுணா முளையின் - விளக்கு நிறை குடத்து விதானப்
பந்தரிற் - றுளக்கமில் பல்வகைத் தூணிகைப் பொதியிற் - பல்கிளை நெருக்கிற்
பாவையர் பல்லாண்டின் - மல்குவனப் பமைந்த வளமனைநாப்பண் - வெண்டுகிலுடுத்து வெண்பூச் சூடித் - தன்றவிசிருத்தித் தானயலிருந்து - மங்கலச்செய்யுண் மகிழ்ந்துகேட்டுப் - பொன்னு மாடையும் பூணுங் கடகமு - மின்னிவை பிறவுங் கொடுத்தே ழடிநிலம் - புரவலன் பின்சென் றொழிகென நிற்றல் - பூவலர் நறுந்தார்ப் புரவலன் கடனே. (270)
1371. பரிசில்பெறாவகை - பாட்டுடைத்தலைவன் பரிசில்கொடானேல் - மீட்டொரு பேரின் விரைந்ததிற் சேர்த்தி - யூரும் பேரு மொருங்கே பறித்துச் -
சீருந் தளையுஞ் செல்வதினாட்டி - னிங்கிவன்றிருவிழந் திடர்ப்படத் திருவு,
மங்கவற்காகுமாகாதிவற்கே. (271)
1372. மற்றும் பாவலன் பரிசுபெறாக்காற்செய்யும்வகை - பரிசி லீயாப்
பாவிதன் பனுவலைத் - தெரிதர வெழுதிச் செம்பூச் சூடித் - தன்மனைப் புறத்தினுஞ்
சாமுண்டி முன்றிலும், பன்னகம் வாழும் பழம்பதி தன்னினு - மயானத்
திடத்தினு மறுகு தன்னினுந் - தியானித்திருந்து செந்தீக் கொளுத்த -
வீரறுதிங்களி னிறுதி யாமென்ப - தாதிப்புலவனறைந்த மொழியே. (272)
1373. இதுவுமது - பரிசில்பெறாது பாடியபுலவன் - றெருமர லுள்ளமொடுகலங்கித்
தீங்குயிற் - பாட்டுடைத்தலைவன்றிப் பாட்டுக் - கேட்டினிதிருந்த
கிளைஞருங்கெடுவர். (273)
----------
9 -வது இசைவகை.
1374. காமரப்பாட்டின் பெயர் - கானங் கொளையே வரிகந் தருவங் - கீத
மிராகங்கேயம் பாணி - நாத மிசைபண் காமரப் பாட்டே. (274)
1375. நால்வகைப்பண்ணின் பெயர் - பாலைகுறிஞ்சி மருதஞ் செவ்வழி
யென - நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே. (275)
1376. பாலையாழ்த்திறத்தின் பெயர் - அராக நேர்திற முறுப்புக் குறுங்கலி - யாசா னைந்தும் பாலையாழ்த்திறனே. (276)
1377. குறிஞ்சியாழ்த்திறத்தின் பெயர் - நைவளங் காந்தாரம் படுமலை மருளொடு - வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்திற - மிவ்வகை யெட்டுங் குறிஞ்சி யாழ்த் திறனே. (277)
1378. மருதயாழ்த்திறத்தின் பெயர் - நவிர்வடுகு வஞ்சிசெய்திற நான்கு - மருத யாழ்க்கு வருந்திற னாகும். (278)
1379. செவ்வழியாழ்த்திறத்தின் பெயர் - நேர்திறம் பெயர்திறஞ் சாதாரி
முல்லையென - நாலுஞ் செவ்வழி நல்யாழ்த்திறனே. (279)
1380. பெரும்பண்ணின்வகை - ஈரிரு பண்ணு மெழுமூன்று திறனு -
மாகின்றன விவை யிவற்றுட் பாலையாழ் - செந்துமண் டலியாழ் பவுரி மருத
யாழ் - தேவதாளி நிருபநுங்கராகங் - நாகராக மிவற்றுட் குறிஞ்சியாழ் - ஆசாரி
சாயவேளர் கொல்லி - கின்னராகஞ் செவ்வழிமௌசாளி சீராகஞ் - சந்தியிவை
பதினாறும் பெரும்பண். (280)
1381. பாலையாழ்த்திறன்வகையின் பெயர் - தக்கராக மந்தாளி பாடை
அந்தி மன்றல் நேர்திறம் வராடி - பெரிய வராடி சாயரி பஞ்சமம் - திராடம்
அழுங்கு தனாசி சோமராகம் - மேகராகந் துக்கராகங் - கொல்லிவராடி காந்தாரம்
சிகண்டி - தேசாக்கிரிசுருதி காந்தாரம்மிவை - யிருபதும்பாலையாழ்த்திறமென்ப.
1382. குறிஞ்சியாழ்த் திறன்வகையின் பெயர் - நட்டபாடை யந்தாளி மலகரி - விபஞ்சிகாந்தாரஞ் செருந்திகெவுடி - உதயகிரி பஞ்சுரம் பழம்பஞ்சுரம் -
மேகராகக்குறிஞ்சிகேதாளி - குறிஞ்சி கௌவாணம் பாடை சூர்துங்கராக -
நாகமருள்பழந் தக்கராகம் - திவ்வியவராடி முதிர்ந்தவிந்தள - மநுத்திரபஞ்சமந்
தமிழ்க்குச்சரியருட் - புரிநாரா யணிநட்டராக - மிராமக்கிரி வியாழக்குறிஞ்சி
பஞ்சமம்தக்கணா திசாவகக்குறிஞ்சி - யாநந்தையெனவிவை முப்பத்திரண்டுங் -
குறிஞ்சியாழ்த்திறமாகக்கூறுவர். (282)
1383. மருதயாழ்த் திறன்வகையின் பெயர் - தக்கேசி கொல்லி யாரிய குச்சரி - நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர் கொல்லி - காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி - தத்தள பஞ்சம மாதுங்க ராகம் - கௌசிகஞ் சீகாமரஞ் சாரல் சாங்கிமம் - எனவிவை பதினாறு மருதயாழ்த்திறனே. (283)
1384. செவ்வழியாழ்த் திறன்வகையின் பெயர் - குறண்டி யாரிய வேளர் கொல்லி - தனுக்காஞ்சி யியந்தை யாழ்பதங் காளி - கொண்டைக்கிரி சீவனியாமை சாளர் - பாணி நாட்டந் தாணு முல்லை - சாதாரி பைரவம் காஞ்சி யென விவை - பதினாறுஞ் செவ்வழி யாழ்த்திற மென்ப. (284)
1385. மற்றுந்திறத்தின் பெயர் - தாரப் பண்டிறம் பையுள் கஞ்சி - படுமலை யிவைநூற்று மூன்றுதிறத்தன. (285)
1386. நேர்திறத்தின் பெயர் - துக்கராக நேர்திறமாகும். (286)
1387. காந்தாரபஞ்சமத்தின் பெயர் - உறழ்ப்புக்காந்தாரபஞ்சமமாகும்.
1388. சோமராகத்தின் பெயர் - குறுங்கலி யென்பது சோமராகம். (288)
1389. காந்தாரத்தின் பெயர் - சாரற்றிறமெனி னதுகாந்தாரம். (289)
1390. நட்டபாடையின் பெயர் - நைவளமென்பது நட்ட பாடை. (290)
1391. பழம்பஞ்சுரத்தின் பெயர் - பஞ்சுரம் பழம்பஞ்சுரமாகும்மே. (291)
1392. கவ்வாணத்தின் பெயர் - படுமலையென்பது பகரிற்கவ்வாணம். (292)
1393. அநுத்திரபஞ்சமத்தின் பெயர் - அயிர்ப்புஅநுத்திரபஞ்சமமாகும். (293)
1394. குறிஞ்சியின் பெயர் - அரற்றுக்குறிஞ்சி. (294)
1395. செந்துருதியின் பெயர் - செந்திறஞ் செந்துருதி. (295)
1396. தக்கேசியின் பெயர் - நவிர்தக்கேசி. (296)
1397. வடுகின் பெயர் - இந்தளம் வடுகெனல். (297)
1398. பாக்கழியின் பெயர் - வஞ்சிபாக்கழி. (298)
1399. சிகண்டியின் பெயர் - செய்திறஞ் சிகண்டி. (299)
1400. சாதாரியின் பெயர் - முல்லை சாதாரி புறநீர்மை நேர்திற - மெனலாங்கிசைப்ப ரிசைவல் லுநரே. (300)
1401. நால்வகையாழின் பெயர் - பேரி யாழுஞ் சகோட யாழு - மகரயாழுஞ் செங்கோட்டி யாழு - மென நால்வகை யாழி னாம மாகும். (301)
1402. ஏழிசையின் பெயர் - குரலே துத்தங் கைக்கிளை யுழையே - யிளியே விளரி தார மென்றிவை - யேழும் யாழி னிசைகெழு நரம்பே. (302)
1403. அவற்றுள் செம்பாலைவகை - குரல்குரலாகிற்செம்பாலையென்ப.
1404. படுமலைப்பாலைவகை - துத்தங் குரலாகிற் படுமலைப்பாலை. (304)
1405. செவ்வழிப்பாலைவகை - கைக்கிளைகுரலேற் செவ்வழிப்பாலை. (305)
1406. அரும்பாலைவகை - உழைகுர லாகி லரும்பாலை யென்ப. (306)
1407. கொடிப்பாலைவகை - இளிகுர லாகிற் கொடிப்பாலை யென்ப. (307)
1408. விளரிப்பாலை - விளரி குரலாகின் விளரிப் பாலை. (308)
1409. மேற்செம்பாலையின்வகை - தாரங் குரலேன் மேற்செம் பாலை (309)
1410. ஏழ்பாலைகளுள் இதனினிது வலிதெனல் - ஆயவை யேழும் பாலை யவற்றுட் - செம்பாலைக்குப் படுமலைப்பாலை - படுமலைப்பாலைக்குச் செவ்வழிப்பாலை - செவ்வழிப்பாலைக் கரும்பாலை யாகும் - அரும்பா லைக்குக் கொடிப்பாலை வலிதே - கொடிப்பாலைக்கு விளரிப்பாலை - விளரிப் பாலைக்கு மேற்செம்பாலை - வலிதென் றுரைத்தனர் வான்றமிழ்ப் புலவர் (310)
1411. ஏழிசைதம்மிற் பிறக்கும் வகை - தாரத்துளுழையு முழையுட் குரலுங் - குரலு ளிளியு மிளியுட் டுத்தமுந் - துத்தத்துள் விளரியும் விளரியுட் கைக்கிளையுந் - தம்மிற் பிறக்குந் தகுதிய வென்ப. (311)
1412. இவற்றின் பிறப்பிடத்தின் பெயர் - குரலது மிடற்றிற் றுத்த நாவினிற் - கைக்கிளை யண்ணத்திற் சிரத்தி லுழையே - இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில் - தாரநாசியிற் றம்பிறப்பென்ப. (312)
1413. இவற்றின் மாத்திரைகளாவன - நான்கு நாலு மூன்று மிரண்டு - நான்கு மூன்று மிரண்டு மாத்திரை - குரன்முதலாகக் கூறுமென்ப. (313)
1414. ஏழிசையோசையாவன - வேண்டியவண்டு மாண்டகு கிளியுங் -
குதிரையும் யானையுங் குயிலுந் தேனுவு - மாடுமென்றிவை யேழிசையோசை.
1415. இவற்றினெழுத்தாவன - ஆஈஊஏ ஐஒ ஔவென் - றேழுமேழிசைக் கெய்துமக் கரங்கள். (315)
1416. ஏழிசைக்குரிய மணங்களாவன - *மௌவன் முல்லை செவ்விணர்க்கடம்பு -
வங்சி நெய்தல் வனசம்புன்னை - எஞ்சலில்லா ஏழிசைமணமே.
--------
*மௌவல் - வனமல்லிகை.
1417. இவைகளின்சுவை - பாலுந்தேனுங் கிழானு நெய்யு - மேலமும் வாழையு மாதுளங் கனியு - மாகு மேழிசைக் கமைந்தநன் சுவையே. (317)
1418. இவைகளுக் கிறைவர் பெயர் - விசுவா மித்திர னியம னங்கி - திங்கள் வெய்யோன் கௌதமன் காசிப - னென்றிவரேழிசைக் கிறைவரென்ப.
1419. மந்தவிசையின் பெயர் - மந்தரங் காகுளி மந்த விசையே. (319)
1420. சமனிசையின் பெயர் - மதுரந் துத்த மத்திமஞ் சமனிசை. (320)
1421. வல்லிசையின் பெயர் - தாரமு முச்சமும் வல்லிசையாகும். (321)
1422. இசைவிகற்பத்தின் பெயர் - ஏனையோரிசை விகற்பமென்ப. (322)
1423. குரற்குரிய திறத்தின் பெயர் - குரற்குரி யதிற மாசான் றிறமே. (323)
1424. இருதுறையின்வகை - இருதுறை செந்துறை வெண்டுறை யென்ப (324)
1425. பண்ணென்பது - நிறைந்தநரம்பு நிகழும்பண்ணெனல். (325)
1426. திறமென்பது - குறைந்த நரம்பு திறமெனக்கொள்க. (326)
1427. யாழெழு மின்னிசையின் பெயர் - எழாலே யாழெழு மின்னிசையென்ப. (327)
1428. இசைக்குழலின் பெயர் - வாரிவங்கியமற்றிவை யிசைக்குழல் (328)
1429. வீணையின் பெயர் - வீணை கின்னரந் தண்டு மாகும். (329)
1430. யாழின் பெயர் - தந்திவீணை கின்னரங்கோட்டங் - கோடவதிவி வஞ்சி யாழ்ப் பெயர் கூறும். (330)
1431. மற்றும்யாழின் பெயர் - அறிகலமுங்கருவியுமப் பெயர்க்குரித்தே.(331)
1432. யாழ்வலிக்கட்டின் பெயர் - வலிக்கட்டுத்திவவே. (332)
1433. முறுக்காணியின் பெயர் - முறுக்காணி மாடகம். (333)
1434. நரம்பின் பெயர் - கோலேதந்திரி குரலிவைநரம்பே. (334)
1435. ஆதியாழாவது - ஆயிரநரம்பிற் றாதியாழாகும். (335)
1436. உள்ளோசையின் பெயர் - முரல்வு நரல்வுந் தெளிருஞெளிரும் - விழைவு நுணுக்கமு முள்ளோசை யென்ப. (336)
1437. பல்லியந்தழுவுபாடலின் பெயர் - சங்கீதம்பல்லியந்தழுவுபாடல். (337)
1438. ஆடற்கேற்கும்பாட்டின் பெயர் - செந்துறைப் பாட்டே யாடற் கேற்பது. (338)
1439. பாடற்கேற்கும்பாட்டின் பெயர் - வெண்டுறைப்பாட்டே பாடற் கேற்பது. (339)
1440. அகமார்க்கமாவது - அருமையிற்பாட லகமார்க்ககமாகும். (340)
1441. யாழ்நரம்போசையின் பெயர் - கலித்தல் சும்மை கம்பலை யழுங்கல் - சிலைத்த றுவைத்தல் சிலம்ப லிரங்க - லிமிழ்தல்லிம்ம லிரட்ட லேங்கல் - கனைத்த றழங்கல் கறங்க லரற்ற - லிசைத்த லென்றிவை யாழ்நரம் போசை.
1442. ஒலியின் பெயர் - ஓதை நாதங் கம்பலை சும்மை - யாகுலம் பலம்பல் கோடணை யரவ - மோசை கர்ச்சனை யொலியா கும்மே. (342)
1443. திரட்டோசையின் பெயர் - அலறல்கூப்பிட றெழித்த லுரப்பல் - பிளிற லென்றிவை திரட்டோசை யாகும். (343)
-----------
10 -வது நாடகவகை.
1444. கூத்தின் பெயர் - நடமேநாடகநடன நட்டம் - படித மண்டிலந்தாண்டவம் பரத - நிலைய நிருத்த மாட றூக்கு - வாலுத றுணங்கை யவிநய மிலையம் - பாணி குரவை கூத்தெனப் பகர்வர். (344)
1445. கூத்தின்விகற்பத்தின் பெயர் - கரண முப்பித மலைப்புப்புரியம் - பிரமரிவீரட் டானங் குனிப்பு - வுள்ளானங்கடக மிலைய மென்ப - வொள்ளிய கூத்தின் விகற்பமாகும். (345)
1446. சிரமஞ்செய்தலின் பெயர் - பருமித்தல் சிரமஞ் செய்தலென்ப. (346)
1447. சிவனாடலின் பெயர் - பாண்டரங்கங் காபாலங்கொடு கொட்டி - ஆண்ட சிவன தாட லாகும். (347)
1448. பதினோருருத்திர ராடலின் பெயர் - கொட்டி குரவை குடங்குடை வெறியே - மல்லுப்பேடு பாவை கடையம் பாண்டரங்க - மரக்கா லீசர்
பதினோராடல் (348)
1449. மாயோனாடலின் பெயர் - அல்லியங் குடமாடன் மல்லே மரக்கா - லல்லொளி மாயோ னாடலாகும். (349)
1450. திருமக ளாடலின் பெயர் - பாவை யென்பது திருமக ளாடல். (350)
1451. முருகனாடலின் பெயர் - கொட்டியுங்குடையுங்குமரனாட - லொடிய துடியு முரித்தா கும்மே. (351)
1452. காமனாடலின் பெயர் - பேடாடல் காமன தாடலாகும். (352)
1453. அயிராணி யாடலின் பெயர் - அயிராணி யாடற் பெயர் கடையமாகும். (353)
1454. துர்க்கையாடலின் பெயர் - துர்க்கை யாடல் மரக்கா லென்ப. (354)
1455. சத்தமாத ராடலின் பெயர் - எழுவகை நங்கைமா ராடலுந் துடியே. (355)
1456. கைகோத் தாடலின் பெயர் - குரவைக் கூத்தே கைகோத் தாடல். (356)
1457. முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி யாடலின் பெயர் - முடக்கிய விருகை பழுப்புடை யொற்றித் - தொடக்கிய நடையது துணங்கை யாகும். (357)
1458. வேலனாடலின் பெயர் - அணங்கும் வெறியும் கழங்கும் வேலனாடல். 358)
1459. ஒத்தறுத்தலின் பெயர் - வட்டித்த றட்டல் வட்டணை யொத்தறுத்தல். (359)
1460. கைகுவித்துக் கொட்டலின் பெயர் - கொம்மை கொட்டல் கை குவித்துக் கொட்டல். (360)
1461. ஆர்த்துவாய் கொட்டலின் பெயர் - ஆவலங் கொட்ட லார்த்து வாய் கொட்டல் . (361)
1462. குந்திநிற்றலின் பெயர் - குந்திய கானிலை குஞ்சித்த லாகும். (362)
1463. கைகூப்பி மெய்கோட்டி நிற்றலின் பெயர் - குடந்தங் கைகூப்பி
மெய்கோட்டி நிற்றல். (363)
1464. கூத்தாடலின் பெயர் - அகவ றாண்ட லாடுத னடித்த - லசைதல் பெயர்த லடுத்தல்கூத்தாடல். (364)
1465. மற்றுங் கூத்தாடலின் பெயர் - மாற லென்பதுங் கூறலாகும். (365)
1466. தாளவொத்தின் பெயர் - சதியுஞ் சீருந் தாளவொத் தின் பெயர். (366)
1467. நாடகமாவது - அதினி னடிக்கு நடம் நாடகமாகும். (367)
-----
11 -வது மண்டிலவகை.
1468. விற்றொடுத்தம்பினையெய்வார்க்குரிய்நால்வகைநிலையின் பெயர் -
நவையறு பைசாச நிலையுமண்டிலமு - மாலீட நிலையும் பிரத்தியா லீடமு -
மெனக்கொளுநிலையு மொருநால்வகையே. (368)
1469. அவற்றுள் பைசாச நிலைவகை - ஒருகா னிலைநின் றொருகான் முடக்கும் - பரிசாய நிலையது பைசாச நிலையே. (369)
1470. மண்டிலநிலைவகை - இருகான்மண் டிலித் திடுதன்மண்டிலநிலை. (370)
1471. ஆலீடநிலைவகை - வலக்கான் மண்டிலித் திடக்கான் முந்துறி - லதற்பெய ராலீட நிலையதாகும். (371)
1472. பிரத்தியாலீடநிலைவகை - வலக்கான் முந்துற் றிடக்கான்மண்டிலித் - திடற் பெயர் பிரத்தியா லீடநிலையே.(372)
-------
12 - வது படைவகை.
1473. போரின் பெயர் - யுத்த மாகவந் தும்பை சமரங் - கணையஞ் செரு
சங்கிரா மம்மிகலெதிர் - ஞாட்புப் பூசலா யோதனமடலம - ரிரண மலைதலா
மின்னவை போரே. (373)
1474. புறவகை - வெண்பா - வெட்சிநிரைகவர்தன் மீட்டல்கரந்தையாம் - வட்கார்மேற் செல்வது வஞ்சியா - முட்கா - ரெதிரூன்றல் காஞ்சியெயில்காத்த னொச்சி - யதுவளைத்த லாகு முழிஞை - யதிரப் - பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் - செருவென் றதுவாகையாம். (374)
1475. புறப்புறவகை - - வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் - போகிய மூன்றும் புறப்புற மாகும். (375)
1476. நால்வகைப்படையின் பெயர் - கோலத்தேர்கரி குதிரை காலா - ணால்வகைப் படையி னாம மாகும்.(376)
1477. தேரின் பெயர் - குயவு வையங் கொடிஞ்சி சயந்தனந் - திகிரியந் திரங்கவரி யரி யிரதந்தேர். (377)
1478. மற்றுந்தேரின் பெயர் - கூவிரமென்பது மோர்வழிக்கொளலே. (378)
1479. தேருருளின் பெயர் - உருளிகா லாழி பரிதி யுந்தி - திகிரி சில்லிநேமி தேருருளே. (379)
1480. தேரினகத்திற்செறிகதிரின் பெயர் - அகத்திற்செறிகதி ராரெனலாகும். (380)
1481. தேர்க்கொடிஞ்சியின் பெயர் - கூவிரங்கொடிஞ்சி. (381)
1482. தேர்மொட்டின் பெயர் - கூம்புதேர் மொட்டே. (382)
1483. தேர்முட்டியின் பெயர் - பிரம்புதேர் முட்டி யென்னப் பேசுவர். (383)
1484. தேர்நடுவின் பெயர் - நடுவட் டேர்ப் பெயர் காப்பணுந் தட்டும். (384)
1485. தேர்மரச்சுற்றின் பெயர் - கிடுகென் கிளவி தேர்மரச்சுற்றே. (385)
1486. தேர்ப்பலகைப்பாவின் பெயர் - பாரே பலகைப் பாவெனலாகும். (386)
1487. தேர்ப்பரப்பின் பெயர் - பாரே தேரின் பரப்புமாகும். (387)
1488. அச்சுருவாணியின் பெயர் - அச்சே தேரி னச்சுரு வாணி. (388)
1489. பரிபூண்டதேரின் பெயர் - பாண்டில்கஞ் சிகைவையம் பரிபூண்டதேரே.(389)
1490. பண்டியின் பெயர் - சகட மொழுகை சாகாடு பண்டி. (390)
1491. பண்டியுள்ளிருசின் பெயர் - பண்டியுள்ளிருசு கந்தெனப்பகர்வர். (391)
1492. அரசுவாவினிலக்கணம் - காலோர் நான்குந் தனிக்கையுங் கோசமும் -
வாலுறுப் போடேழு மாநிலந் தோய்வதும் - பாலுஞ் சங்கும் போலுங் காலுகிர் - காலினுந் தன்றனிக் கையினு மெய்யினும் - வாலினு மருப்பினுங் கோறல்வல் லதுவா - யேழ்முழ முயர்ந்தோன் பான்முழ நீண்டு - பதின்மூன்றுமுழஞ் சுற்றுடைத் தாகித் - தீயுமிழ் சிறுகண்ணுஞ் செம்புகரு முடைத்தாய் - *முன்புயர்ந்து *பின்பணித்தாய - தியானை யரசுவா வாகுமென்ப. (392)
1493. அரசர்க்குரிய பரியினிலக்கணம் - மாதர்தம்மணமென மிக்கமணத்தது - வாழை மடலென வளர்ந்த செவியது - நாலுதாளு மெருத்துமுகனும் - வெந்து முன்னும் வெண்மையுடையதாய் - எண்பத் திருவிர லுயர முயர்ந்தது - பண்புடை யரசர்க் காவது பரியே. (393)
1494. பரியின்கதிவகைப் பெயர் - மல்ல கதியே வாநர கதியே - மயூர கதியே *வல்லிய கதியே - மால்விடைக் கதியென வருங்கதி யைந்துந் - தோலாப் புரவிக்குச் சொல்லிய கதியே. (394)
-------
13 -வது காலாள்வகை.
1495. பகைவர்மேற்செல்லல் - ஊராண்மையென்பதோங்கிச்செல்லல். (395)
1496. பகைவரிடத்தில்செய்யும் அரியசெயல் - பேராண்மை யென்ப
தரிய செயலே. (396)
1497. புறங்கொடுத்தோர்மேலாயுதம் எறியாமை - சாய்குநர்மேற்படை விடாமை தழிஞ்சி. (397)
1498. வெற்றிப்பூவின் பெயர் - பூளை வெற்றிப்பூவா கும்மே. (398)
1499. கொள்ளையின் பெயர் - சூறையுங் கொண்டியுங் கொள்ளை யாகும். (399)
1500. வாரலின் பெயர் - வாரல் கவரல் வௌவ லதுகொளல் . (400)
1501. படையின் பெயர் - தானை பதாதி தண்டம் பதாகினி - வானி யநிகம் வாகினி தந்திரஞ் - சேனை பகுதி பாடி பலம்படை. (401)
1502. மற்றும்படையின் பெயர் - நிதானமுங் ககனமுந் தளமு நிகழ்த்தும். (402) (402)
------------
*வல்லியகதி - புலியைப்போலும்பாய்ச்சலுடையநடை.
1503. படைவகுப்பின் பெயர் - ஒட்டும் யூகமுமுண்டையு மணியு - மற்றிவை படையின் வகுப்பென லாகும் (403)
1504. படையுறுப்பின் பெயர் - தூசியுங் கூழையு நெற்றியுங் கையு - மணியுமென்ப தப்படைக் குறுப்பே (404)
1505. பேரணியின் பெயர் - கூழையென்பது பேரணியாகும் (405)
1506. கொடிப்படையின் பெயர் - தாரே முன்செல் கொடிப்படை யாகும் (406)
1507. கீழறுத்தலின் பெயர் - அறைபோதல் கீழறுத்தன் படைமறுத்த லாகும் (407)
1508. பொரவழைத்தலின் பெயர் - அறைகூவ லென்பது பொரவழைத்தலாகும் (408)
-----------
14 -வது தோற்கருவிவகை
1509. முழவின் பெயர் - முழவு குளிரே (409)
1510. குடமுழாவின் பெயர் - மண்கணை முழவங் குடமுழா வாகும் ()
1511. படகத்தின் பெயர் - பணவந் திண்டிம மானகம் படகம் (411)
1512. கடிப்பின் பெயர் - குணிலே கடிப்பின் கூற்றாகும்மே (412)
1513. சிறுபறையின் பெயர் - ஆகுளி சிறுபறை (413)
1514. திமிலையின் பெயர் - சல்லரி திமிலை (414)
1515. ஒருகட்பறையின் பெயர் - ஒருகட் பறையே மொந்தை யென்ப
1516. நிசாளத்தின் பெயர் - தண்ணுமை நிசாளம் (416)
1517. ஒருபறைவிகற்பத்தின் பெயர் - ஒருபறை விகற்பந் தாழ்பீலி யாகும் (417)
1518. பன்றிப்பறையின் பெயர் - பன்றிப்பறையே குடப்பறையாகும்
1519. கரடிப்பறையின் பெயர் - கரடிநாமக் கட்டுரை தட்டை (419)
1520. ஒருகட்பகுவாய்ப்பறையின் பெயர் - பதலையொருகட் பகுவாய்ப் பறையே (420)
1521. துந்துபியின் பெயர் - சகண்டைமுரசு பணையே சகடந் - துந்துபியென்ப தூரியமு மாகும் (421)
1522. மற்றுந்துந்துபியின் பெயர் - பேரிதகணித மென்னவும்பேசுவர்
1523. உவகைப்பறையின் பெயர் - உவகைப்பறையே தூரிய மாகும் (0
1524. உடுக்கையின் பெயர் - துடியே யுடுக்கை (424)
1525. பம்பைப்பறையின் பெயர் - தடாரி பம்பைப்பறை (425)
1526. தம்பட்டத்தின் பெயர் - முரசு தம்பட்ட முழவு மாகும் (426)
1527. தலைவிரிபறையின் பெயர் - குழையுடற் றலைவிரி பறைகத் திரியே (427)
1528. மரக்காற்பறையின் பெயர் - மரக்காற் பறையே கோதையாகும்.
1529. பலவகைப்பறையின் பெயர் - பணவந் திண்டிமந் தக்கை யிடக்கை - திமிலை கண்டிகை கண்டை குறடு - பணைசிந் தூரம் பாண்டிகம் பீலி - கரடிகை துடிகை கடுவை யூமை - சகடை கிடுகு பல்வகைப் பறையே. 429
1530. வாச்சியப்பொதுப் பெயர் - தூரியமுழவம் வைதங்கோடணை - முரசுபீலி முருடு தடாரி - யியம்பணை வாச்சியப் பொதுப்பெய ரென்ப. 430.
---------
15 -வது குடைவகை.
1531. குடையின் பெயர் - கவிகை சத்திரம் பிச்சங் கவிப்புக் - குளிராத பத்திரந் தொங்கல் குடைப் பெயர். 431
1532. செங்குடையின் பெயர் - செங்குடைமீயையுஞ்சிந்தூரமுமாகும்.
1533. பீலிக்குடையின் பெயர் - துங்கப் பீலிக்குடைசுழ லாகும்.
1534. பீலிக்குஞ்சக் குடையின் பெயர் - தழையே தொங்கல் சமாலம் பிச்சங் - குளிரி பீலிக் குஞ்சமாகும். 434
------------
16 -வது ஆயுதவகை.
1535. வில்லின் பெயர் - கோதண் டஞ்சிலை கொடுமரங் கார்முகஞ் - சாபந் துரோணந் தனுசு தனுவில் லாகும்.435
1536. மற்றும்வில்லின் பெயர் - தடிமுனி சிந்து வாரஞ் சராசனந் - தவரே வேணுச் சார்ங்கமுமாகும். 436
1537. நாணின் பெயர் - பூரி யாவம்பூட்டுத் தொடை வடம் - நாரி நரம்புகுணநாணின் பெயரே 437.
1538. நாணினொலியின் பெயர் - நாணி னொலியே *மருமராஞ்சமாகும்.
------------
*மாஞ்சம் என்பது மற்றொருபிரதி.
1539. அம்பின் பெயர் - பகழி வாளி தோணி பாணங் - கதிரம் பல்லங் கணைகோல் சரமொடு - வண்டு பத்திரஞ் சிலீமுகம் விசிக - மம்பின் பெயருடு வாகலு முரித்தே. 439
1540. அம்புத்தலையின் பெயர் - உடுவம் புத்தலை. 440
1541. மொட்டம்பின் பெயர் - உதண்மொட்டம்பே. 441
1542. அம்புக்குப்பியின் பெயர் - புழுகு குப்பி. 442
1543. அம்புக்கட்டின் பெயர் - புதை யம்புக்கட்டே. 443
1544. அம்புக்குதையின் பெயர் - பகழி புங்க மம்புக்க குதையே. 444
1545. அம்புத்திரள்கட்டுங்கயிற்றின் பெயர் - பகழித்திரளின் பெயர் பற்றாக்கை. 445
1546. அம்பறாத்தூணியின் பெயர் - தூணி புட்டி லம்பறாத் தூணி.
1547. மற்றுமம்பறாத்தூணியின் பெயர் - ஆவமு மாவ நாழிகையுமாகும்.
1548. குதையின் பெயர் - குலையே வில்லி லிருதலைக் குதையே. 447
1549. அம்பினிறகின் பெயர் - அம்பி னிறகு வுடுவென் றாகும். (449)
1550. பிண்டிபாலத்தின் பெயர் - பீலித்தண் டெஃகம் பிண்டி பாலம்.()
1551. நாராசத்தின் பெயர் - சலாகை நாராசம்.(451)
1552. இருப்புமுள்ளின் பெயர் - தாறிருப்பு முள்ளே. (452)
1553. கழுமுள்ளின் பெயர் - கழுக்கடை கழுமுட் கட்டுரை யாகும்.(453)
1554. வாளின் பெயர் - நவிரேதி நாட்டங் கடுத்தலை நாந்தகம் - வசியே கட்கம் வஞ்சம் வாளே. (454)
1555. மற்றும்வாளின் பெயர் - மட்டா யுதந்தூ வத்தியு மாகும்.(455)
1556. கூன்வாளின் பெயர் - கோணங் கூன்வாள். (456)
1557.சிறுவாளின் பெயர் - முசுண்டி சிறு வாள். (457)
1558. கொடுவாளின் பெயர் - குயமும் புள்ளமுங் கொடுவாளாகும். (458)
1559. அரிவாளின் பெயர் - அரிகதிர்க் கத்திக்கு மப்பெய ராகும்.(459)
1560. *சுழல்படையின் பெயர் - சுழல்படை வட்டம் பாரா வளையம்.(460)
-------------
* சுழல்படைவளைதடி.
1561. ஈர்வாளின் பெயர் - வேதினங் கரபத் திரமுமீர்வாள். (461)
1562. உடைவாளின் பெயர் - சுரிகை பத்திரங் குறும்பிடி யுடைவாள்.
1563. கைவாளின் பெயர் - கண்ட மென்பது கைவா ளாகும். (463)
1564. கணையத்தின் பெயர் - எழுவும் பரிகமுங் கணைய மென்ப.(464)
1565. சூலத்தின் பெயர் - காள நல்வசி சூலங் கழுமுண் - மூவிலை
வேலே முத்தலைக் கழுவெனல். (465)
1566. பூங்கருவியின் பெயர் - சன்னகம் பூங்கருவியாகச்சாற்றும்.(466)
1567. மழுவின் பெயர் - பரசு கணிச்சி நவியமு மழுவே. (467)
1568. மற்றுமழுவின் பெயர் - பாலந் தண்ணமு மழுப்படை யாகும்.()
1569. இலைமூக்கரிகத்தியின் பெயர் - குளிரிலை மூக்கரி கத்தி யாகும் - கணிச்சியு மதன்பாற் கருதப்படுமே. (469)
1570. கோடாலியின் பெயர் - குடாரமு நவியமுங் கோடாலி யாகும்.(470)
1571. தோட்டியின் பெயர் - சரணங் கணிச்சி யங்குசந் தோட்டி. (471)
1572. மற்றுந்தோட்டியின் பெயர் - கோண மென்றுங் கூறப்படுமே.(472)
1573. வேலின் பெயர் - உடம்பிடியெஃக மயிலே கத்தி - விட்டேறரண
ஞாங்கரும் வேலே. (473)
1574. வச்சிராயுதத்தின் பெயர் - வயிரப் படையே சம்பங் குலிசம் - அசனி வச்சிரப் படையாகும்மே. (474)
1575. மற்றும் வச்சிராயுதத்தின் பெயர் - சதகோடி யென்பதுஞ் சாற்றப்பெறுமே. (475)
1576. தண்டாயுதத்தின் பெயர் - தடியுங் கதையும் சீருந் தண்டெனல்.
1577. மற்றுந்தண்டாயுதத்தின் பெயர் - வயிரமு முளையு மெறுழுமற்றுதுவே. (477)
1578. கிளிகடி கருவியின் பெயர் - தழலுந் தட்டையுங் கிளிகடி கருவி. (478)
1579. குறுந்தடியின் பெயர் - குணிலே குறுந்தடி. (479)
1580. ஈட்டியின் பெயர் - இட்டி யீட்டி. (480)
1581. கவணின் பெயர் - கவணை யொடிசில் குணில் குளிர் கவணே. (481)
1582. சிறுசவளத்தின் பெயர் - குந்தஞ் சிறுசவளம். (482)
1583. பெருஞ்சவளத்தின் பெயர் - குந்தந்தோமரம் பீலிபெருஞ்சவளம். (483)
1584. சக்கரத்தின் பெயர் - திகிரி நேமி யாழியெஃ கம்வளை - - பரிதி யொளி வட்டஞ் சுதரிசனஞ் சக்கரம். (484)
1585. கைக்கட்டியின் பெயர் - கோதை கைக்கட்டி கைப்புடையுங் கூறும். (485)
1586. கைவிடுபடையின் பெயர் - அத்திரம் விடுபடை. (486)
1587. கைவிடாப்படையின் பெயர் - சத்திரம் விடாப்படை. (487)
1588. சுவரகழ் கருவியின் பெயர் - கன்னஞ் சுவரகழ் கருவியாகும். (488)
1589. தறிகைக்கும் உளிக்கும் பெயர் - தறிகை கணிச்சியுளிக்குமதுவே. (489)
1590. கைவேலின் பெயர் - கைவேல் விகற்பங் கப்பணந் தோமரம். (490)
1591. கயிற்றின் பெயர் - பாசங் கச்சை நாண்வடம் பழுதை - - தாம மிரச்சுத் தாம்பு கயிறே. (491)
1592. தாமணியின் பெயர் - தாமணி கண்ணி தாம்பு மாகும். (492)
1593. வலைக்கயிற்றின் பெயர் - சால மென்பது கயிற்றுவலையே. (493)
1594. அஞ்சனமெழுதுங்கருவியின் பெயர் - கோலே யஞ்சன மெழுதுங் கருவி. (494)
1595. எழுதுங்கருவியின் பெயர் - கண்டமூசியாணி யெழுதுங்கருவி. (495)
1596. ஊசியின் பெயர் - - சூசி யூசி யென்ப. (496)
1597. ஊசித்தொளையின் பெயர் - பாசமூ சித்தொளை துன்னமும் பகரும். (497)
1598. நுனியின் பெயர் - நுதியு நுனையு நுனியா கும்மே. (498)
1599. முசுண்டியின் பெயர் - தானை படையே முற்கர *முசுண்டி.(499)
-------
*முசுண்டி - சம்மட்டி வடிவினதோராயுதம்.
1600. இருப்புலக்கையின் பெயர் - முசலமிருப் புலக்கை. (500)
1601. சங்கிலியின் பெயர் - துவக்குத் தொடர்சங் கிலியே யிடங்கணி. (501)
1602. பற்றிரும்பின் பெயர் - கற்பொறியள்வலி பற்றிரும்பாகும். (502)
1603. கூர்மையின் பெயர் - வயிரமும் வள்ளும் வசியும் வையு - மயிலு நிசிதமு மள்ளும் பூவு - மாருங் கூர்மையி னபிதா னம்மே. (503)
1604. ஆயுதப்பொதுப் பெயர் - தானை படையே படைக்கலங் கருவி யெஃகியவை யாயுதம் வேலு மியம்புவர்
1605. மற்றும் ஆயுதப்பொதுப் பெயர் - துப்பு மேதியுஞ் சுதன்மமு மாகும். (505)
1606. படையுறையின் பெயர் - தடறுங்கருவிப்புட்டிலுமுறையெனல். (506)
--------
17 -ஆவது செயற்கைவகை
1607. கவசத்தின் பெயர் - ஆசு தசனம் சடாரி யரணம் - பாசங் கண்டம் பருமங் கச்சை - சாலிகை மாடிகை கந்தளம் பார - மேழகங் கசையே மெய்புகு கருவி - கவசப் பெயரே சடாரியுஞ் சொல்லும். (507)
1608. மற்றும் கவசத்தின் பெயர் - அந்தளமு மபரமுஞ் சுரிகையுஞ் சொல்லும். (508)
1609. கேடகத்தின் பெயர் - கேடகம்வட்டந் தட்டிகடகம் - வேதிகை கிடுகு பலகை கேடகம். (509)
1610. *மாவட்டணத்தின் பெயர் - தட்டியம் பலகை தட்டுமா வட்டணம். (510)
1611. தோற்பலகையின் பெயர் - தோற்பரந் தட்டுத் தோற்பலகைத் தோலுமாம். (511)
1612. யானைப் புரசைக்கயிற்றின் பெயர் - தூசு கவடு புரசைக் கயிறெனல். (512)
1613. யானைமுகபடாத்தின் பெயர் - சூழி படமே வேழ முகபடாம். (513)
1614. மற்றும் யானைமுகபடாத்தின் பெயர் - மலையின் மந்தன மென்றுஞ் சொல்லும். (514)
1615. யானைகட்டுந்தறியின் பெயர் - ஆளானம் வெளிலேயானை யணைதறி. (515)
1616. யானைக்கச்சையின் பெயர் - கரியின் கச்சை கண்டமாகும். (516)
1617. யானைமேற்றவிசின் பெயர் - இலகடம்பலகாரந்தவிசெனலாகும். (517)
1618. மற்றும் யானைமேற்றவிசின் பெயர் - மணையும் பலகையையு மப் பெயர் கூறும். (518)
1619. குதிரைக்கலணையின் பெயர் - பருமமும் பண்ணும் படையும் பல்லணமும் - பரமு மென்றிவை பரிமாக் கலணை. (519)
1620. மற்றும் குதிரைக்கலணையின் பெயர் - சூழியும்பரிமாக் கலணையாகும். (520)
-------
* மாவட்டணம் நெடும்பரிசை.
1621. குதிரை யங்கவடியின் பெயர் - கச்சமும் படியு மங்கவடியென்ப. (521)
1622. குதிரைச்சம்மட்டியின் பெயர் - மத்திகை கோலே மற்றிவை சம்மட்டி. (522)
1623. குதிரைக்கயிற்றின் பெயர் - வற்கம் வாய் வட்டங்குசை கயிறென்ப. (523)
1624. குதிரைக்கடிவாளத்தின் பெயர் - கலியமுமூட்டுங் கிராமுங் கலினமுங் - கறுழு மென்றிவை கடிவாளப் பெயர். (524)
1625. கடிவாளப்பூணின் பெயர் - மற்றதற் கணியுங் விருளை யெனலாகும். (525)
1626. கலப்பையின் பெயர் - படையலந் தொடுப்புப் படைவாணாஞ்சி - லிலாங்கலி யால முழுபடை கலப்பை. (526)
1627. மற்றும்கலப்பையின் பெயர் - கலனை யென்பதுங் கலப்பைப்*பெரே. (527)
1628. மேழியின்பெயெர் - கொடுநுக மேழிக் கூற்றா கும்மே. (528)
1629. குறுந்தறியின் பெயர் - போதிகை குறுந்தறி. (529)
1630. வேள்வித்தறியின் பெயர் - யூபம் வேள்வித்தறி. (530)
1631. தூணின் பெயர் - தாணுவுங் காலுங் கம்பமுந் தம்பமு - மாளான மதலை யெழுவெளி லேதறி - தூணென்றுரைப்பர் கந்துஞ் சொல்லும். (531)
1632. தொழுவின் பெயர் - தொழுவின்பெயரே தோழமாகும். (532)
1633. யானைத்தோட்டியின் பெயர் - யானையின் குடாரியங்குசந்தோட்டி - கோண மியானை வணங்கியுங் கூறும். (533)
1635. பெருங்குறட்டின் பெயர் - அடைகுறட் டின் பெயர் பட்டடையாகும். (534)
1635. பெருங்குரட்டின் பெயர் - கூரின் முருடு பெருங்குற டென்ப.
1636. சம்மட்டியின் பெயர் - கொட்டுஞ் சம்மட்டிகூடமென்ப. (536)
1637. சுட்டுக்கோலின் பெயர் - சுட்டுக்கோ லாணி. (537)
1638. கொழுவின் பெயர் - கோல்கொழு வென்ப.(538)
1639. ஒண்டியிண் பெயர் - ஊற்றாணி யொண்டி. (539)
1640. பாரைக்கோலின் பெயர் - மீன்குத்தி பாரைக்கோல். (540)
--------
18 -வது அக்குரோணிவகை.
1641. பதாதியென்பது - ஒருபெருங்களிறு மொருபெருந்தேரும் - புரவி மூன்றும் படைஞரைவரும் - பதாதியென்றுபகரப்படுமே. (541)
1642. சேனாமுகமென்பது - பதாதி மும்மடி சேனாமுகமே. (542)
1643. குமுதமென்பது - - சேனாமுக மும்மடி தானாங் குமுதம். (543)
1644. கணகமென்பது - - குமுதமும்மடிகொண்டது, கணகம். (544)
1645. வாகினியென்பது - - கணக மும்மடி கொண்டது வாகினி, (545)
1646. பிரளயமென்பது - - வாகினி மும்மடியாகும் பிரளயம். (546)
1647. சமுத்திரமென்பது - - பிரளய மும்மடி கொண்டது சமுத்திரம். (547)
1648. சங்கமென்பது - - சமுத்திர மும்மடி கொண்டது சங்கம். (548)
1649. அநீகமென்பது - - சங்கமும்மடி கொண்ட தநீகம். (549)
1650. அக்குரோணியென்பது - - அநீக மும்மடியக் குரோணி யாகும். (550)
----------
19 -வது வெள்ளவகை.
1651. அக்குரோணி எட்டுப்பங்குகொண்டது - - முந்தையெண் மடங்கு கொண்டதொன் றேகம். (551)
1652. ஏகம்எட்டுப்பங்குகொண்டது - - ஏக மெண்மடங்கு கொண்டது கோடி. (552)
1653. கோடிஎட்டுப்பங்குகொண்டது - - கோடியெண் மடங்கு கொண்டது சங்கம். (553)
1654. சங்கம் எட்டுப்பங்குகொண்டது - - சங்கமெண்மடங்கு கொண்டது விந்தம். (554)
1655. விந்தம்எட்டுப்பங்குகொண்டது - - விந்தமெண் மடங்கு கொண்டது குமுதம். (555)
1656. குமுதம் எட்டுப்பங்குகொண்டது - - குமுதமெண் மடங்குகொண்டது பதுமம். (556)
1657. பதுமம்எட்டுப்பங்குகொண்டது - - பதுமமெண் மடங்குகொண்டது நாடு. (557)
1658. நாடு எட்டுப்பங்குகொண்டது - - நாடெண்மடங்கு கொண்டது சமுத்திரம். (558)
1659. சமுத்திரம் எட்டுப்பங்குகொண்டது - - சமுத்திரமெண்மடங்கு கொண்டது வெள்ளம்.(559)
---------
20 -வது இல்லணிவகை
1660. கருமபூமியினியல் - - உழவு தொழிலே வரைவு வாணிகம் - விச்சை சிற்பமென் றித்திறத் தறுதொழிற் - கற்பனை யுடையது கரும பூமி. (560)
1661. போகபூமியியல் - - பதினா றாட்டைக் குமரனுஞ் சிறந்த - பன்னீராட்டைக் குமரியு மாகி - யொத்த மரபினு மொத்த வன்பினுங் - கற்பகநன்மர நற்பய னுதவ - வாகியசெய்தவத் தளவுமவ்வுழிப் - போக நுகர்வதுபோகபூமி. (561)
1662. ஆசிரியர்கூற்று - அந்தண ரருமறை மன்ற லெட்டினுட் - பிரமந் தெய்வம் பிரசா பத்திய - மாரிடங் காந்தருவ மாசுர மிராக்கதம் - பைசாச மென்னவெண்வகைப் படூஉம் - வதுவை வகையின் மணமொன் றாயினர் - வாழ்க்கையென்னுமில்லற நன்னெறிக் - கேற்பவை நாமத்தெஞ்சிய கூறுவன். (562)
1663. கட்டிலின் பெயர் - கட்டில்பா ரிமஞ்சம் பரியங்கம் பாண்டில்.
1664. விசியின் பெயர் - கட்டிலின்வசியே யரியெனக்கழறும். (564)
1665. பீடத்தின் பெயர் - பீடிகை தவிசுவிட்டரம் பீடம். (565)
1666. சிங்காதனத்தின் பெயர் - பத்திராதனம் சிங்காதன மென்ப. (566)
1667. உரலின் பெயர் - கறையு முலூகலமுந்திட்டையுமுரலே. (567)
1668. உலக்கையின் பெயர் - முசலமுந் தடியு முரோங்கலு முலக்கை.
1669. உறியின் பெயர் - சிமிலி தூக்குச் சிக்கஞ் சிதருறி. (569)
1670. ஊஞ்சலின் பெயர் - ஊசலூஞ்ச றூரியு மாகும். (570)
1671. ஏணியின் பெயர் - இறைவையுங் கடவையு மேணியாகும். (571)
1672. கண்ணேணியின் பெயர் - கண்ணே ணிப் பெயர் மால்பென்றாகும். (572)
1673. அளவையின் பெயர் - கச்சமுங் கடனு மளவை யாகும். (573)
1674. மரக்காலின் பெயர் - அம்பணந் தூம்புகா லாகலு முரித்தே. (574)
1675. தூக்குக்கோலின் பெயர் - நிறையே கட்டளை வாணிக னிறுப்பான் - துலையே கோலோடு தூக்குக்கோலே. (575)
1676. கொத்தளிப்பாயின் பெயர் - ஆரை கொத்தளிப்பாய். (576)
1677. புற்பாயின் பெயர் - சாப்பை புற்பாய். (577)
1678. பிரப்பம்பாயின் பெயர் - சாதிபிரப்பம்பாய். (578)
1679. தோற்பாயின் பெயர் - சருமந்தோற்பாய். (579)
1680. தடுக்கின் பெயர் - தவிசுதடுக்கே. (580)
1681. குழாயின் பெயர் - தண்டுகுழாயே. (581)
1682. பூந்தட்டின் பெயர் - பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு. (592)
1683. விளக்குத்தண்டின் பெயர் - கௌசிக மல்லிகை கம்ப மத்திகை - சுடர்நிலைத் தண்டெனத் தீபமு மதற்கே. (583)
1684. முறத்தின் பெயர் - சின்னந் தட்டுச் சேட்டை #முச்சின்முறம்.
1685. சுளகின் பெயர் - சூர்ப்பஞ் சுளகே. (585)
1686. புட்டிலின் பெயர் - இறைவை புட்டில்.(586)
---------
* போகபூமி ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், எமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம், இதுகருமபூமியிலாதலால் பின்னர்க்கூறினார்.
# முற்றில் எனவும் பாடம்.
1687. கூடையின் பெயர் - வட்டிகை கூடை. 587
1688. துடைப்பத்தின் பெயர் - துடைப்பஞ் சோதனி மாறலகுவாருகோல். 588
1689. நாழியின் பெயர் - வட்டிகுஞ்சம் படிநாழி யாகும். 589
1690. தயிர்கடைதறியின் பெயர் - தயிர்கடை தறிவெளில். 590
1691. தயிர்க்கோலின் பெயர் - தயிர்க்கோன் மத்தாம். 591
1692. காராம்பியின் பெயர் - காராம்பி யம்பி. 592
1693. நீர்ப்பத்தலின் பெயர் - பத்த லம்பணம். 593
1694. கரண்டியின் பெயர் - கரண்டங் கரண்டி. 594
1695. அம்மியின் பெயர் - அரைசிலை யம்மி யாகலு முரித்தே. 595
1696. அம்மிக்கல்லின் பெயர் - அம்மிக் கல்குழவி. 596
1697. சானையின் பெயர் - சிலாவட்ட மென்பது சானையாகும். 597
1698. சந்தனமரைகல்லின்பயர் - சாணஞ் சிலாவட்டஞ் சந்தனமரைகல். 598
1698. நாடாவின் பெயர் - காருகர்நாடா நூனாழியாகும். 599
1700. இறைகூடையின் பெயர் - இடா ரிறை கூடை. 600
1701. சும்மாட்டின் பெயர் - சுமடுசுடுவுஞ் சுமையடைசும்மாடே. 601
1702. பேராலவட்டத்தின் பெயர் - ஆலவட்ட முக்கந் தால விருந்தம். 602
1703. மற்றும்பேராலவட்டத்தின் பெயர் - கால்செய் வட்டமு மப் பெயர் கழறும். 603
1704. சிற்றாலவட்டத்தின் பெயர் - சிவிறியென்பது சிற்றாலவட்டம்.
1705. சாந்தாற்றின் பெயர் - பீலியென்பது சாந்தாற்றியாகும். 605
1706. சீப்பின் பெயர் - சிக்க மயிர்வாரி கங்கம் சீப்பெனல். 606
1707. திரிகையின் பெயர் - வட்டமும் பந்துந் தட்டுந் திரிகை. 807
1708. பந்தின் பெயர் - கந்துகம் பந்தெனல். 608
1709. அம்மானையின் பெயர் - அம்மனை யம்மானை. 609
1710. மகளிர்விளையாட்டுக்கலத்தின் பெயர் - ஓரை யென்பது விளையாட் டொண்கலம். 610.
1711. கூத்தர்கருவியின் பெயர் - கலப்பை கூத்தர் கருவியாகும். 611
1712. நீர்சிதறுந்துருத்தியின் பெயர் - நீர்சிதறுந் துருத்தி சிவிறி யாகும். 612
1713. செருப்பின் பெயர் - தொடுதோல் கழலிவை தோற்செருப்பாகும்.
1714. மிதியடியின் பெயர் - பாதுகை மிதியடி பாவலு மாகும். 613
1715. மிதியடியின்மேலிட்டகொட்டையின் பெயர் - குடையே கல்லை
கொட்டையதன் பெயர். (615)
1716. உலைத்துருத்தியின் பெயர் - உதியத் திரிசிவை யுலைத்துருத் திப் பெயர். (616)
1717. கொல்லுலைமூக்கின் பெயர் - குருகுஞ் சிவையுங் கொல்லுலை மூக்கே. (517)
1718. சுண்ணச்சாந்தின் பெயர் - சுதையேகளபஞ் சுடுசுண்ணச்சாந்தே. (518)
1719. நெருப்புறுவிறகின் பெயர் - ஞெகிழிகொள்ளிநெருப்புறுவிறகே. (519)
1720. விறகின் பெயர் - இந்தனங்காட்டந்துவரிவைவிறகே. (620)
1721. ஓமவிறகின் பெயர் - சமிதை யோமவிறகெனச்சாற்றும். (621)
1722. அரிவாண்மணையின் பெயர் - புள்ளங் கூர்வா யிரும்பரி வாண்மணை. (622)
1723. சுக்கின் பெயர் - நாகரஞ் சுண்டி சுக்கா கும்மே. (623)
1724. மிளகின் பெயர் - திரங்கல் கலினை கோளக மிரியல் - காயமரீசம் கறி யிவை மிளகே. 624
1725. மஞ்சளின் பெயர் - நிசி யரிசனமே பீதங் காஞ்சனி - அரித்திர
மின்னவை மஞ்சளாகும். (625)
1726. அரிசியின் பெயர் - அரியே வீயந் தண்டுலமரிசி. (626)
1727. தவிட்டின் பெயர் - முட்டைதவிடே முடைபொதியு மாகும். (627)
1728. பெருங்காயத்தின் பெயர் - இங்குப் பெருங்காயம். (628)
1729. குங்குலியத்தின் பெயர் - குக்கில் குங்கிலியம். (629)
1730, கடுகின் பெயர் - ஐயவிகடுகு. (630)
1731. உப்பின் பெயர் - இலவண முப்பாகும். (631)
1732. பருப்பின் பெயர் - முதிகை முற்கம் பருப்பெனமொழிப. (632)
1733. அரக்கின் பெயர் - அரத்தமுந் துப்பு மரக்கின்பெயரே. (633)
1734. செத்தையின் பெயர் - காடுந் துராலு மயலுஞ்செத்தை. (634)
1735. பாடையின் பெயர் - பாடை வெள்ளிலா சந்தியுமாகும். (635)
1736. தாழியின் பெயர் - அகளமுஞ் சாடியும் பதலையு மன்றித் - தளமுந்
தாழியின் சாற்றிய பெயரே. (636)
1737. நீர்ச்சாலின் பெயர் - நிறைவட்ட மிடங்கர் நீர்ச்சா லாகும். (637)
1738. கொப்பரையின் பெயர் - கொப்பரை கொப்பரி கடாரந் தசும்பு. (638)
1739. குடத்தின் பெயர் - கடமு மிடங்கருந் தாழியு மிறங்கருங் - குணமு
மிரும்பையுங் கும்பமுங் குடங்கரும் - குடந்தமுங் கலசமு மிடக்கருங்குடமே. (639)
1740. மிடாவின் பெயர் - கரீரங் குழிசி முகை தடாமிடாவே. (640)
1741. பானையின் பெயர் - குண்டமு மிடாவுங் குழிசியும் பானை. (641)
1742. தயிர்கடைதாழியின் பெயர் - குடாரு மந்தினி வெண் டயிர்த்தாழி. (642)
1743. கரகத்தின் பெயர் - கர்க்கரி சிரகங் கன்னல் கரகம். (643)
1744. மட்கலத்தின் பெயர் - கடிஞை பாத்திர மட்கல மாகும். (644)
1745. தகழியின் பெயர் - இடிஞ்சில் பாண்டி லெரிசுடர்த் தகழி. (645)
1746. குடுவையின் பெயர் - குடுவை குண்டம். (646)
1747. சட்டியின் பெயர் - விசளை சட்டி. (647)
1748. அகலின் பெயர் - சராவஞ் சுத்திகை யிடிஞ்சி லகலென்ப. (648)
1749. கொள்கலத்தின் பெயர் - இடுங்கலங் கொள்கலம் பாண்ட மென்ப.(649)
1750. வெற்றிலையின் பெயர் - நாகவல்லிதாம்பூலம் வெற்றிலை. (650)
1751. பாக்கின் பெயர் - கோலந் துவர்க்காய் பாகு பாக்கே. (651)
1752. சுண்ணாம்பின் பெயர் - சுண்ணமுநீறும் சுண்ணாம்பாகும். (652)
1753. திருநீற்றின் பெயர் - பூதி யோமப்பொடி விபூதி காப்புப் - புண்ணிய சாந்தம் வெண்டாது திருநீறே. (653)
1754. சாணியின் பெயர் - புண்ணிய சாந்தஞ் சாணிசா ணாகம். (654)
1755. சாம்பலின் பெயர் - அடலை வெண்பலி சாம்ப லாகும். (655)
1756. பெட்டியின் பெயர் - மஞ்சிகம் பெட்டி. (656)
1757. பேழையின் பெயர் - மஞ்சிகை பேழை. (657)
1758. அணிகலச் செப்பின் பெயர் - கண்டிகை பீடிகை காண்டங் கடிப்ப - மன்றியுங் கோடிக மணிகலச் செப்பே. (658)
ஆறாவது - அநுபோகவகை முற்றிற்று.
-----
ஏழாவது - பண்பிற்செயலிற்பகுதிவகை.
உள்ள நல்வகை.
1759. குணத்தின் பெயர் - *உள்ள நல்வகை யுரைக்குங்காலை - மாலையும் பெற்றியு மரபுங் கிழமையும் - பாலும் விதியும் பான்மையு மியல்புந் - தகவுந் தகுதியுந் தகைமையும் தன்மையும் - பரிசும் படியு முறையும் பண்பு - நிலையும் வண்மையு நீருஞ் சால்புங் - குணமென லதன் பெயர் கொள்கையு மாகும். (1)
- - - -
*உள்ள நல்வகை - மனத்தினல்வகை.
1760. உயர்வின் பெயர் - உவப்புப் புரைசே ணுன்னதந் துங்க - நிவப்பு மேடு நீள்வரி பிறங்க - லேந்த லொழுகல் போக லோச்ச - லோங்கல் வார்தலுறையுயர் வென்ப. (2)
1761. வலியின் பெயர் - முரணு மறமு முன்பு நோன்மையு - முரமும் பாழியு மூக்கமு மதுகையு - முடலையு மும்பலு மூரியுந் தோற்றமு - மிடலும் *மளளமுங் கூளியு மீடுந் - திறமு மெழிலு மெறுழுந் திண்மையும் - வயமும் விறலு மைந்துந் துப்பு - மீளியு மடலுந் தாவு மாண்மையும் - ஆற்றலுங் கோளு மிகலு மொய்ம்பும் - மதனுங் கலியும் வலியின் பெயரே.(3)
1762. மாட்சிமையின் பெயர் - மாணலு மாணுஞ் சால்பு மதனு - மான்றலும்
வாய்த்தலு மாட்சிமை யாகும். (4)
1763. கொழுமையின் பெயர் - கொழுமையுஞ் செழுமையும் வளமைமையுங்
கொழுப்பே.(5)
1764. குளிரின் பெயர் - நளிபனி சீதந் தண்ணே சீதளங் - குளிரின் பெயரே நளிருங் கூறும். (6)
1765. செவ்விதின் பெயர் - செவ்வையுஞ் செப்பமுஞ் செம்மையுஞ் செவ்வனு - மிவ்வகை பிறவுஞ் செவ்விதின் பெயரே. (7)
1766. அறிவின் பெயர் - உணர்வு காட்சி யுரனே மேதை - தெளிவு புலனே தெருட்சி போதம் - புத்தி ஞான மறிவெனப் புகல்வர். (8)
1767. வெற்றியின் பெயர் - வலனுங் கொற்றமுங் வாகையு முல்லையுஞ் - சயமு மாடும் புகலும் படினமும் - விசயமும் வெற்றமும் வென்றியும் வெற்றி. (9)
1768. செல்வத்தின் பெயர் - சீரும் வெறுக்கையும் விபவமுந் திருவு - மாவு மாக்கமும் வாழ்க்கையும் பொறியு - மாகுஞ் செல்வத் தபிதா னம்மே. (10)
1769. பற்றின் பெயர் - பரிவு மார்வமு மீரமும் பற்றே. (11)
1770. அன்பின் பெயர் - அளிநார் சங்க நேய மன்பே. (12)
1771. மற்றுமன்பின் பெயர் - பாச மென்றும் பேசப்படுமே. (13)
1772. அருளின் பெயர் - தகவுங் கருணையு மிரக்கமுந் தயவுங் - கிருபையு மபயமுங் கிளரரு ளாகும். (14)
1773. மனத்தின் பெயர் - முன்னமு மகமு முள்ளமு முன்னமும் - இதயமு நெஞ்சு முள்ளு மனமே. (15)
1774. குறிப்பின் பெயர் - சிந்தையு நினைவுந் தெளிவுந் தியானமு - மிங்கிதமுங் கருத்து மெண்ணமுங் குறிப்பே. (16)
1775. மற்றுங்குறிப்பின் பெயர் - அங்கதுநாட்டிய மாகலு முரித்தே.(17)
1776. குறித்தலின் பெயர் - கண்ண னுதலல் காணல் புகற – லெண்ணல் பேணல் கருதல் சுட்ட - லுன்ன லென்றிவை குறித்தலை யுரைக்கும். (18)
1777. வரையறுத்தலின் பெயர் - குணித்தலுங் கணித்தலுங் குறித்தலு மன்றி - மதித்தலும் வரையறுத்தற் பொருட்டாமே. (19)
1778. தேடலின் பெயர் - நாடலுந் நேடலுந் தேட லாகும். (20)
1779. மற்றுந்தேடலின் பெயர் - கூடலுங்கையரிக்கொளலு மதற்கே.
1780. நினைத்தலின் பெயர் - உன்னல் படர்த லூழ்த்தல் கருதல் - முன்னலறிதல் வலித்தல் சிந்தித்தல் - எண்ண லனைத்து நினைப்பென் றிசைப்பர்.
1781. ஏமாப்பின் பெயர் - ஏமாப்புச் செம்மாப்பு. (23)
1782. இறுமாப்பின் பெயர் - ஏக்கழுத்த மிறுமாப்பு. (24)
1783. களிப்பின் பெயர் - மதர்ப்பு மதர்வை மதந்தருக் கேமம் - பெருமிதஞ் செருக்கும் பேசிற் களிப்பே. (25)
1784. இன்பத்தின் பெயர் - நகையு மேமமு நயமு மகிழ்ச்சியுஞ் - சுகமுங் கடியுந் தொய்யலு மின்பம். (26)
1785. பேரின்பத்தின் பெயர் - அகமலர்ச்சி பேரின்ப மாநந்தமாகும். (27)
1786. சுகத்தின் பெயர் - சந்தமுந் தருமமு மழகுமகிழ்வுஞ்சுகம். (28)
1787. தெளிவின் பெயர் - தெருளு மானவு முணர்வுந் தேறலுந் - தேற்றமுந் துணிவும் தெளிவின்றிற்த்த. (29)
1788. நயத்தின் பெயர் - நறுமை விழுப்ப நன்னர் நயமே. (30)
1789. நன்மையின் பெயர் - உறுதி யாண ரொண்மை யுத்தமம் - நன்றி சேடு நன்மைநன் றாகும்.(31)
1790. பொறுத்தலின் பெயர் - சமித்தலு நோன்றலுங் கமித்தலும் பொறுத்தல். (32)
1791. முயற்சியின் பெயர் - முயற்சி யூக்க மியற்றி யாள்வினை - யுஞற்றுத் தாடுப் புற்சா கம்மே. (33)
1792. உற்சாகத்தின் பெயர் - உஞற்றுத் தாள்வினை துப்பூக்க முற்சாகம். 34
1793. இலாபத்தின் பெயர் - பலனு மூதியமும் பயனு மாக்கமும் - பேறும் பலித்தலு மிலாபப் பெயரே. (35)
1794. ஒற்றுமையின் பெயர் - ஒருமை குறிப்போ டொற்றுமை யாகும். (36)
1795. துணையின் பெயர் - இணையுந் துப்புஞ் சகாயமு மென்றிவை - துணையென்ப புகலுஞ் சொல்லுவர் புலவர். (37)
1796. தவத்தின் பெயர் - நோன்பென் கிளவி தான்றவ மாகும். 38
1797. மற்றும்தவத்தின் பெயர் - உவ்வென் கிளவியு மோதுவ ரதற்கே. 39
1798. நல்வினையின் பெயர் - தானமு மறமுந் தருமமுஞ் சீலமு - மருளு மங்கலமுஞ் சுபமுஞ் சுகிர்தமும் - புண்ணியமும் பாக்கியமு நல்வினை யாகும். 40
1799. அருச்சனையின் பெயர் - ஆரா தனையே வழிபா டருச்சனை. 41
1800. பூசையின் பெயர் - பூசனை யென்ப பூசையின் பெயரே. 42
1801. யாகத்தின் பெயர் - சித்து யாகம் வேள்விகிரு தாகும். 43
1802. வெறுப்பின் பெயர் - வெறுப் பொல்லாமையும் வேண்டாமை யுமுனிவு - மொறுத்தலு முவர்த்தலு முவர்ப்பு மாகும். 44
1803. துறவின் பெயர் - துறத்த னிவிர்த்தி துறவா கும்மே. 45
1804. உறவின் பெயர் - உறவி விருப்ப முறவா கும்மே. 46
1805. நாணத்தின் பெயர் - வெட்க மிலச்சை வெள்கல் சமழ்த்தல் - வட்க லிருளை மானமு மன்றி - யுட்கு நாணத் துரையெனப் படுமே. 47
1806. செல்வப்பகுதியின் பெயர் - மல்லுந் தடமும் வளமும் வாரியுஞ் செல்வப் பகுதிக்குச் செப்பிய பெயரே.48
1807. நிலைபேற்றின் பெயர் - துஞ்சன் மன்ன றி திநிலைபேறே. 49.
1808. மற்றும் நிலைபேற்றின் பெயர் - அங்கது திறமோ டேணந் தாணூ - வென்பன மூன்று மிசைக்கப்பெறுமே. 50
1809. மெய்யின் பெயர் - சாதம் வாய்மை சத்திய முண்மை - நீதி நிலைமை நியாய நிச்சயம் - வாய் திடமாணை மன்றஞ் சரதம் - வேளான்மை பட்டாங்கு மெய்யெனவுரைப்பர். 51
1810. பிழைப்பின் பெயர் - இழுக்கம் வழுக்குத் தப்பல் பிழைப்பென்ப - உஞற்றும் பணைத்தலு முளவப் பெயர்க்கே. 52
1811. ஆதலின் பெயர் - ஆத னந்துதல். (53)
1812. ஏவலின் பெயர் - ஆணையேவல். (54)
1813. ஒற்றின் பெயர் - வேயென் கிளவி யொற்றாகும்மே. (55)
1814. செய்தியின் பெயர் - செயல்செய்கை செய்தியாகும். (56)
1815. ஒழுக்கத்தின் பெயர் - சரியையாசார நடையியல் ஒழுக்கம் (57)
1816. நீதியின் பெயர் - நெறியு நியாயமுந் தருமமு நீதி. (58)
1817. மற்றும்நீதியின் பெயர் - விதியு நிழலும் வரைவின் றென்ப.(59)
1818. உள்ளின் பெயர் - அகணி யகடே யகமே கோட்டை, யுரைசெயி லின்னவை யுள்ளா கும்மே. (60)
1819. சூழ்ச்சியின் பெயர் - சூழ்ச்சி யுசாவே தேர்ச்சி விசாரம் - யாப்பே யெண்ண மந்திர நூலே. (61)
1820. மற்றுஞ் சூழ்ச்சியின் பெயர் - ஆய்தலுந் தேர்தலு மாகலு முரித்தே.(62)
1821. உண்டாதலின் பெயர் - விளைதல் பூத்தல் படுதலுண் டாதல். (63)
1822. தோற்றுதலின் பெயர் - பிறப்பித்தலும் படைத்தலு நாறலும் வெளிப்படலுந் - தோற்றலு முருத்தலுந் தோற்றுதலாகும். (64)
1823. காத்தலின் பெயர் - நிலைபெறுத்தலும் புரத்தலு மளித்தலுங் காப்பு நோக்கலுந் திதியுங் காத்தலென்ப. (65)
1824. பாதுகாத்தலின் பெயர் - போற்ற லோம்பல் நோக்கல் பாதுகாத்தல்.(66))
1825. காவலின் பெயர் - சிறையு மரணுஞ் சேமமுஞ் செயலுங் - காப்பும் வேலியும் கடியுந் தட்டியுங் - கட்டுந்தட்டுங் காவற்பெயரே. (67)
1826. கொள்கையின் பெயர் - தெவ்வு வரைத றேர்த லேற்றலெனக்கூறிய பிறவுங் கொள்கை யாகும். (68)
1827. மேற்கோளின் பெயர் - பூட்கையென்பது மேற்கோ ளாகும். (69)
1828. உய்தலின் பெயர் - ஆற்றுதல் வலித லுய்த லாகும். (70)
1829. தூய்மைசெய்தலின் பெயர் - உவளித்த றூய்மை செய்தலையுரைக்கும். (71)
1830. உடன்பாட்டின் பெயர் - வலித்த லொட்ட னேர்த லிசைதலென் - றுரைத்த பலவு முடன் பாடாகும். (72)
1831. விதிமுறையின் பெயர் - நியமமென் கிளவி விதிமுறையாகும். (73)
1832. குற்றலின் பெயர் - நவித்தலுந் துப்பலுந் துற்றலுங் குற்றல். (74)
1833. அவியலின் பெயர் - அவைத்தலு மவித்தலு மவிய லாகும். (75)
1834. ஒட்டுதலின் பெயர் - அணவ லொட்டுதல். (76)
1835. தெரிதலின் பெயர் - தெள்ளுத றெரிதல். (77)
1836. தெளிதலின் பெயர் - தேறுதல் தெளித லாகச் செப்புவர். (78)
1837. கேளாவென்றலின் பெயர் - வேளாவென்பதுகேளாவென்றல். (79)
1838. தவிர்தலின் பெயர் - வாளாவென் கிளவி தவிர்த.லாகும். (80)
1839. தேற்றத்தின் பெயர் - மன்ற தேறு தேற்ற.மாகும். (81)
1840. ஆமென்னும் பெயர் - அன்றென லின்றென லாமெனலு மாகும். (82)
1841. சரண்புகலின் பெயர் - மறைபுகல் கிளவி சரண்புகலாகும். (83)
1842. எண்ணலின் பெயர் - கரணமுங்கணிதமுங்கணக்குமெண்ணல். (84)
1843. நிமித்தத்தின் பெயர் - சோதனஞ்சோதிட நிமித்தச் சொல்லே. (85)
1844. உடனிகழ்வின் பெயர் - ஒடுவெண்கிளவி யுடனிகழ்வாகும். (86)
1845. பெயரின் பெயர் - அபிதானமாக்குவயநாமமும் பெயரே. (87)
1846. ஆதாரநிலையின் பெயர் - கந்துமா லம்பமு மாலம்பனமும் - தஞ்சமுந் தூவு மாதார நிலையே. (88)
1847. பேரறிவின் பெயர் - முதுக்குறைவு பேரறிவு முகரிமையுமாகும்.
1848. உள்ளதுசிறத்தலின் பெயர் - கூர்ப்புங் களிப்பு முள்ளது சிறத்தல். (90)
---------
2 -வது உள்ளத்தின்தீயவகை.
1849. தீவினையின் பெயர் - பவமும் பாவமும் பாதகமுந் தீவினை. (91)
1850. தாழ்வின் பெயர் - சாய்ப்பு மிழிவுந் தண்மையுந் தஞ்சமுந் - தாழ்வென் கிளவித் தன்மைய தாகும். (92)
1851. கூம்புதலின் பெயர் - சாம்புத லொடுங்குதல் கூம்புதலாகும். (93)
1852. அச்சத்தின் பெயர் - உருமு முருவு முட்கும் பனிப்பும் - வெருவும் புலம்பும் வெறியும் பயமும் - பிறப்புங் கொன்னும் பேமு நாமும் - வெறுப்புஞ் சூரும் பீரும் வெடியுங் - கவலையு மடுப்புங் கலக்கமு மச்சம்.(94)
1853. குலைதலின் பெயர் - ஓடல்வெய்துற லுலமர றேங்கல் - கூசறிட்கல் குலைய றுணுக்கெனல் - வெள்க றுண்ணென றெருமர லளுக்கல் - ஞொள்கல் பிறவுங் குலைதலி னுவல் பெயர். (95)
1854. நடுக்கத்தி் பெயர் - விதிர்ப்புப் பனிப்பு விதலை கம்பம் - அதிர்ப்புப் பொதிர்ப்பு விதப்பு நடுக்கம். (96)
1855. கலக்கத்தின் பெயர் - கதனமுந் துரிதமும் பிரமமும் கலக்கம். (97)
1856. மற்றுங்கலக்கத்தின் பெயர் - வெறியென் றுரைப்பதுமப் பெயர். (98)
1857. எளிமையின் பெயர் - எண்மை பரிபவ மிழிதகவு மெளிமை. (99)
1858. மற்றுமெளிமையின் பெயர் - தண்மை யென்பது மதன்பாற் சாற்றும்.(100)
1859. பேதைமையின் பெயர் - பேதைமை மடமை வெறியே மருட்சி. (101)
1860. மாசின் பெயர் - கசடு மலினமும் கறையு மழுக்கும் - மலமுங்க ளங்கமு மாசாகும்மே. (102)
1861. குற்றத்தின் பெயர் - காசுந் தவறுங் கறையுங் களங்கமு - மாசும் வசையு மறுவும் வடுவு - மாசும் புகரு மரிலுங் களையு - மேசும் பழியும் போக்கு மேதமு - நறையும் வண்டுங் கடவையு நவையு - மிறையும் பிழையும் விடலுங் கரிலுந் - தோமுந்தப்புந் துகளும் புரையுங் - கோதுஞ் செயிரும் மையுங் குற்றம். (103)
1862. மற்றுங்குற்றத்தின் பெயர் - இழுக்குஞ் சோர்வும் புன்மையு மிகழ்ச்சியும் - வழுக்குங் கீழு மறிவியும் பொல்லாங்கும் - பொச்சாப் பென்பதும் புகலுமப் பெயர்க்கே. (104)
1863. வெம்மையின் பெயர் - உருமமுங் கருமமு முருப்பமும் வெப்பமு - மழனமுங் கோரமு மழலும் வெம்மை. (105)
1864. தோல்வியின் பெயர் - நிலையழி வோட்டம் பின்னிட றோல்வே - தொலைத றோற்ற லஞ்ச றோல்விப் பெயர். (106)
1865. கொடுமையின் பெயர் - கடுமை கோடணை சண்டங் கடினங் - கொடுமையின் பெயரிவை கூரமுமாகும். (107)
1866. மற்றுங்கொடுமையின் பெயர் - உக்கிரங் கோர முறைப்புப்பூதி - வக்கிரம் வஞ்சஞ் சடங்கரிலு மாமே. (108)
1867. மறப்பின் பெயர் - வழுக்கு மறவியு மயர்ப்புமிவறலு - மறப்பென் கிளவி மறலு மாகும்.(109)
1868. வறுமையின் பெயர் - மிசைகுறை மிடியே தரித்திர மொற்க - மிலம்பா டிலாமை நல்குரவும் வறுமை. (110)
1869. மற்றும் வறுமையின் பெயர் - மறலு மின்மையு நிரப்புமற் றதன் பெயர். (111)
1870. பகையின் பெயர் - முனையு முரணு முறழ்வுந் தூவும் - படியுந் தெவ்வுந் துப்பும் பகையென்ப. (112)
1871. மற்றும்பகையின் பெயர் - இகலுஞ் செறலு மதன்பெய ரென்ப. (113)
1872. வெகுளியின் பெயர் - கறுவங் கோபங் கலாமறங் குரோதம் - வெகுளி யென்பர் வேரமு மாகும். (114)
1873. சினத்தின் பெயர் - முனிவுஞ் செயிருஞ் சீற்றமும் வியர்ப்புஞ் - சினமென் கிளவி தெரிக்குங் காலே. (115)
1874. சினக்குறிப்பின் பெயர் - கறுப்புஞ் செவப்புங் கஞறலுங் கன்றலும் - வியர்ப்பும் வெதிர்ப்பும் புழுங்கலும் கொதித்தலும் - வெய்துறலும் புகைதலும் வயிரமு மினைத்தும் - சினத்தின் குறிப்பினைத் தெரிக்குங் கிளவி. (116)
1875. தணியாக்கோபத்தின் பெயர் - கோம்பலுங் கொந்தலுங் கனிதலும் வெம்பலும் - வெதும்பலுந் தணியாக் கோபமுமென்ப. (117)
1876. பெருஞ்சினத்தின் பெயர் - உடற்றல் சீற லுருத்தல் காய்தன் - முனைதல் விடைத்தல் பைத்தல் பெருஞ்சினம். (118)
1877. தணியாமுனிவின் பெயர் - சலமும் வயிரமுஞ் செற்றமு மற்றிவை -
கறுவுகொள் நெஞ்சங் கடைமுடி வளவுந் - தணியா முனிவு தானாகும்மே. (119)
1878. இகழ்தலின் பெயர் - எள்ள னகுத னிந்தை யிகழ்தல். (120)
1879. வருத்தத்தின் பெயர் - உயவே யனுக்கங் கவற்சி யுயங்க - லயர்வே கசிவே யாகுல மணங்கு - வயாவே யழுங்கல் வருத்த மாகும். (121)
1880. குணமின்மையின் பெயர் - சீரணஞ் சிதம்பு சீத்தை செடியெனக் - கூடிய பலவுங் குணமின்மை யாகும். (122)
1881. துக்கத்தின் பெயர் - அல்லல் பீடை யரந்தை கோட்டாலை - செல்லல் கலக்கஞ் சிறுமை யுறுகண் - கவ்வை மம்மர் விழுமங் கவலை - யெவ்வ மின்ன லிடும்பை யிடுக்கண் - படர்சூர் பைதல் பருவரல் பழங்கண் - னிடரஞ ரேதம் யாதனை யிட்டளங் - கலக்கம் புன்கண்பனிநோய் கம்பலை - யலக்கண் வெய்துறலழுங்கல் பீழை - யலமர னடலை யுறுவல் வெறுப்பே - கிலேசந் துயர்துனி துன்பந் துக்கமாம். (123)
1882. மற்றுந்துக்கத்தின் பெயர் - துரிசு மல்ல கண்டமுந் துராலுஞ் - சிலுகு மலந்தலையுஞ் செப்பற்குரித்தே. (124)
1883. சந்தேகத்தின் பெயர் - அனுமானமுஞ்சங்கையுஞ்சந்தேகமாகும்.
1884. மற்றுஞ்சந்தேகத்தின் பெயர் - ஐயுறல் கடுத்தலு மப் பெயர்க் குரித்தே. (126)
1885. மயக்கத்தின் பெயர் - களிப்பு மறமுங் கழுமலு பிறப்பு - மாலு மறலு மையலு மான்றலு - மிருளு மைந்து மேமமு மிளமையு - மருளு மயர்வு மயக்க மென்ப. (127)
1886. மற்றுமயக்கத்தின் பெயர் - மோகமு முணராமையு முன்மத்தமுங் - களனென் கிளவியு மப் பெயர்க் கட்டுரை. (128)
1887. தீதின் பெயர் - தீங்குங் கோளு மூறுந் தீதெனல். (129)
1888. மற்றுந்தீதின் பெயர் - ஆங்கது மாயமு மந்தரமுமென்ப. (130)
1889. பொய்யின் பெயர் - படிறு மிச்சையும் பெட்டும் பழுதும் - வழுதுந்
தத்தி காரமுமாயமும் - பொக்கமும் பிசியும்நடலையும் பொய்யே. (131)
1890. பொறாமையின் பெயர் - நோனாமை வக்கிர மழுக்கா றவ்வியம் கூரமென்பது பொறாமையின் கூற்றே. (132)
1891. சோம்பலின் பெயர் - தூங்க லசைத லலைசுதல் சோம்பே. (133)
1892. மற்றுஞ்சோம்பலின் பெயர் - சடமடிதள்ளாவாரமுந் தகுமே. (134)
1893. வஞ்சனையின் பெயர் - கூடம் புள்ளுவங் குத்திரங் கஞ்ச - மாயைதொடுப் பட்டிமை வஞ்சனை யாகும். (135)
1894. வேறுபாட்டின் பெயர் - வீற்று விகிர்தம் விகடம் விரூபம் - வேற்றுமை விபரீதம் வேறுபா டாகும். (136)
1895. மற்றும் வேறுபாட்டின் பெயர் - திரிபும் விள்ளலும் செப்புமப் பெயர்க்கே. (137)
1896. தளர்வின் பெயர் - எளிமை யுடைத லிட்டளந் தளர்வே. (138)
1897. தனிமையின் பெயர் - கேவலமும் புலம்புந் தனிமையைக் கிளக்கும்.(139)
1898. பாவத்தின் பெயர் - தீவினை மறமே செடியே யகமே - துரிதங்கலுடம் பாவமாமே. (140)
1899. விருப்பத்தின் பெயர் - மாதர் காதல் வயாவே வேட்கை யாதரவாசை
யவாவே யார்வ - நச்சு நசைவிழைவு நயப்புக் காம - மிச்சை பெட்பு மோக மேட்டை - வெப்பம் பற்று விழுப்பம் வீழ்தல் - இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல் - வேட்ட றாழ்தல் வெஃகலும் விருப்பம். (141)
1900. வேட்கைப்பெருக்கத்தின் பெயர் - வேட்கைப் பெருக்கம் வேணவா வாகும். (142)
1901. நோயின் பெயர் - மடங்கல் பிணிமடி மாரியைபு - ளணங்குவியாதி யவல நீழல் - உறுகண் புன்கண் உரோகஞ் சூர்நோய். (143)
1902. மற்றுநோயின் பெயர் - சிறுமையுங் குத்துமப் பெயர்தெரிக்கும். (144)
1903. வேதனைநோயின் பெயர் - ஈதி வாதை வேதனை நோயே. (145)
1904. காமநோயின் பெயர் - விரக மதனங் காமக் கவலை - காம நோயின் கட்டுரை யாகும். (146)
1905. களவின் பெயர் - காப்புக்கட்டல் பட்டிமை சோர்வு - கயவு படிறு கரவடங் களவே. (147)
1906. பயனின்மையின் பெயர் - வறிதுங் கொன்னும் விழலும் விதாவு - மல்லவை பயனில் சொல்லா கும்மே. (148)
1907. மரணத்தின் பெயர் - முஞ்சலுந் துவன்றலு முடிதலும் விளிதலுந் - துஞ்சலுந் தவறலு மிறப்பும் பொன்றலும் - வீய்வு முலப்பும் வீடலு மாய்தலு - மாண்டலு மரித்தலுஞ் சாவு மரணம். (149)
1908. மற்றுமரணத்தின் பெயர் - இல்லெனலென்பதுவுஞ்சொல்லப்படுமே.(150)
1909. சாய்தலின் பெயர் - இரிதல் நெரிதல் இடைத லுடைதல் - கெடுதல் சரிதல் சாய்தலாகும். (151)
1910. பிணக்கின் பெயர் - அரின்மற லபரந் துவக்கென வமைந்த - பெயரிவை நான்கும் பிணக்கென மொழிப. (152)
1911. முறிதலின் பெயர் - ஒடித லொசிதன் ஞெமிர் தலிடிதன் - முரித லிறுதன் முறிதற் பெயரே. (153)
1912. கேட்டின் பெயர் - வழுவு சிதைவு மங்குதல் சேத - மழிவு சிந்துதல் நந்துதன் முரித - லிறுதல் சுதமடி யொருங்கல்கே டென்ப. (154)
1913. கொலையின் பெயர் - கோளே யணங்கு வேட்டங்கொலையெனல். (155)
1914. வெளிற்றின் பெயர் - வெண்மையுந் தண்மையும் வெளிறெனலாகும்.(156)
1915. புன்மையின் பெயர் - நவிர மென்பது புன்மை யாகும். (157)
1916. இரங்குதலின் பெயர் - இனைத லெற்றித்த லிரங்குத லாகும். (158)
1917. அருவருப்பின் பெயர் - வாலாமை சூதகம் பயிர்ப்பரு வருப்பே. (159)
1918. ஒழிதலின் பெயர் - ஓவு மன்னு மொழிதற் சொல்லே. (160)
1919. மற்றும்ஒழிதலின் பெயர் - ஏனையு மப்பெய ரியல்பா கும்மே. (161)
1920. கலங்குதலின் பெயர் - கதுவே கலுழல் கலங்குதல் மலங்குதல். (162)
1921. குலுங்குதலின் பெயர் - குலைத னடுங்குதல் குலுங்குத லாகும். (163)
1922. வாட்டத்தின் பெயர் - தேம்பலுங் குழைதலு மனுங்கலு முளியும் - வாடலுந் தளர்தலும் வாட்டமென லாகும். (164)
1923. குழைதலின் பெயர் - சுனைதல் களைதல் குழைத லாகும். (165)
1924. மாறுபாட்டின் பெயர் - தெற்றே மாறுபா டாகத் தெரிக்கும். (166)
1925. நிலையின்மையின் பெயர் - வம்பென் கிளவி நிலையின்மை யின் பெயர். (167)
1926. மேன்மையின் பெயர் - கயவுஞ் சாயலு ஞெள்ளலு மேன்மை. (168)
1927. மனக்கோட்டத்தின் பெயர் - அழுக்காறு மனத்தழுக்குமவ்வியமு மனக்கோட்டம். (169)
------
3 -வது மெய்வகை.
1928. பருமையின் பெயர் - மெய்வகைக் கியன்றன விளம்புங் காலைப் பரூஉம் பீனமுந் தடித்தலும் பருமை. (170)
1929. இளைப்பின் பெயர் - தேம்பலும் பழங்கணுஞ் சிங்கலுந் தேய்வு - நாம்பலு ஞொள்கலு மெலிவு மிளைப்பே. (171)
1930. வெண்மையின் பெயர் - சுவேதந் தவளஞ் சுக்கிலங் குருத்து - விளர்வால் வெள்ளை நரைசிதம் வெண்மை. (172)
1931. மற்றும்வெண்மையின் பெயர் - குருகு பால் சுப்பிர மென்னவுங் கூறும்.(173)
1932. பொன்மையின் பெயர் - பீதகம் பசப்புப் பிங்கலம் ரிதம் - நாலுங் சாஞ்சனியும் பொன்மையின் பெயரே. (174)
1933 செவப்பின் பெயர் - அத்து மருணமு மரத்தமுஞ் சேப்புஞ் - சோணமுங் குருதியுந் துவருஞ் சிந்தூரமும் - பூவலும் படீரமும் சேத்தும் மரக்கும் - செக்கருஞ் செம்மையுஞ் சேந்துபா டலமுங் - கிஞ்சுகமுங் குலிகமுந் துப்புஞ் செவப்பே (175)
1934 பச்சையின் பெயர் - பாசும் பையு மரியும் பசுமையும் - பலாசுஞ் சாமமு மரிதமும் பச்சை (176)
1935 கருநிறத்தின் பெயர் - காளமுங் காழகமுங் காளிமமுங் காரிமால் - மாவு மிருளு நீலமு மசிதமுங் - காருமஞ் சனமு நல்லமுங் கருளு - மாகுங் கருநிறத் தபிதா னம்மே (177)
1936 புற்கெனுநிறத்தின் பெயர் - கபிலங் குரால் புகர் புற்கெனுநிறமே (178)
1937 ஒளியின் பெயர் - வெயிலு நிலவும் வில்லும் வாளு - நிழலு மெல்லு நீமமு நகையும் - கானலுங் கிரணமுங் கதிருஞ் செடியுஞ் - சோதியு மின்னுந் துணியு மரியுங் - கேழுங் கரமுந் தேசுங் கிளரொளி (179)
1938 மற்றும்ஒளியின் பெயர் - ஆதவ மென்பது மதன்பாற் படுமே (180)
1939 ஒளிவிடுதலின் பெயர் - விளங்குத னகுதன் மின்னன் மிளிர்த - றுளங்குதனிகழ்தல் சுடர்தல் பிறழ்த - லிலங்கல் வயங்க லிலகுத லிமைத்த - லலங்க றயங்க லவிர்த னிலவ - லொளிர்த லென்றிவை யொளிவிட லாகும் (181)
1940 ஒளிமழுங்குதலின் பெயர் - மட்கல் புல்லெனன் மழுங்குத லழுங்குதல் - ஒளி மழுங்குதலென வுரைத்தல் வேண்டும் (182)
1941 அழகின் பெயர் - *ஏ/எரும் வனப்பு மெழிலு மிராமமுங் - காரிகையு மாவு மம்மையுங் கவினுஞ் - செழுமையும் பந்தமுந் தேசிகமு நோக்கு - மணியு மணங்கு மியாணரும் பாணியு - மாதரு மாழையுஞ் சாயலும் வகுப்பும் - வண்ணமும் வளமும் பூவும் பொற்புஞ் - சேடும் பொன்னுஞ் சித்திரமும் பத்திரமு - மாமையுந் தளிமமு மயமு மஞ்சு - மதனும் பாங்கு மம்முஞ் சொக்குஞ் - சுந்தரமுந் தோட்டியு மையு மொப்பு - மந்தமு மொண்மையும் விடக்கமு மமலமுங் - குழருங் கோலமும் வாமமுங் காந்தியு - மழகின் பெயரலங் காரமு மாகும் (183)
1942 மற்றுமழகின் பெயர் - கொம்மையு மனோகரமுஞ் சாருவுங் கூறுப. (184)
1943 கட்டழகின் பெயர் - சித்திர மனோகரஞ் சுந்தரங் கட்டழகே (185)
1944 நிறத்தின் பெயர் - குருவுங் கொழுமையுங் குணமுங் கொழுமையு - மரியுஞ் சாயலும் வருணமு மன்றிப் - பயப்புங் கறையும் கருவு நிறமே (186)
1945 வடிவத்தின் பெயர் - செண்ணம் படிவம் வடிவமென்ப (187)
1946 வண்ணத்தின் பெயர் - வண்ணஞ் சந்தம் (189)
1947 வளைதலின் பெயர் - குடிலந் தடவு கூன்கோண் கோட்டம் - வசிவு கோணல் வாங்கல் குலாவல் - வளாவலென் றின்னவை வளைத லாகும்
1948 இளைமையின் பெயர் - மழவு முருகுந் தருணமு மஞ்சுங் - குழவும் விளருங் கொம்மையும் புருவையுங் - கோமளமும்போதகமு மிளைமையின் கூற்றே (190)
1949 முதுமையின் பெயர் - முதுமை மூப்பு முரஞ்சுதன்முற்றுதல். (191)
1950 மற்றுமுதுமையின் பெயர் - விளைவும் சாம்பலும் விதந்துகொளப்படுமே (192)
1951 கலியாணத்தின் பெயர் - வதுவை மன்றல் மணங்கலி யாணம்
1952 மற்றுங்கலியாணத்தின் பெயர் - கடியும் வேட்டலுங் கைப்பற்றலு மாகும் (194)
1953 கொண்டாடுதலின் பெயர் - குலாவல்பாராட்டுக்கொண்டாடுதலே
1954 அலங்கரித்தலின் பெயர் - புனைதலு மண்ணலும் பொற்புறுத்துதலு - மணிதலுங் கைசெய்தலு மலங்கரித்தல் (196)
1955 சிங்காரத்தின் பெயர் - அணியே பொற்புக் கையலங் காரந் - தெரியி னொப்பனையுஞ் சிங்காரமாகும் (197)
1956 புதுமையின் பெயர் - புதைபுணர் விருந்து புத்தேள் கடிநவ நூதனங் கோடகம் வம்பிவை புதுமை (198)
1957 மகளிர்விளையாட்டின் பெயர் - தொடலையுந்தகுளமு மகளிர் விளையாட்டே (199)
1958 சூடுதலின் பெயர் - மிலைதலு மலைதலும் வேய்தலுஞ் சூடுதல் (200)
1959 இகுத்தலின் பெயர் - செகுத்த லிகுத்தல் (201)
1960 மீளுதலின் பெயர் - திரிதல் மீளுதல் (202)
1961 புறத்தின் பெயர் - புறணியும் புடமும் புறமெனலாகும் (203)
1962 பதுங்கலின் பெயர் - பழகலு மொடுங்கலும் பாந்தலும் பதுங்கல் (204)
1963 தங்குதலின் பெயர் - அசைத றெவிட்ட லிறுத்த லார்தல் (205)
1964 மற்றுந்தங்குதலின் பெயர் - வதிதல் வைக லிறையுமப் பெயர் (206)
1965 அடக்கத்தின் பெயர் - முடக்கமுநொறிலு மடங்கு முணங்கு - மொடுக்கமு மடக்க மொருங்குமாமே (207)
1966 கூடலின் பெயர் - விழைச்சும் பிணைச்சும் விழைவுமை துனமும் - புணர்ச்சியுங் கூடலும் புகலுங் கிளவி - அணைதல் கலவிசை யோகமுமாகும் (208)
1967 மற்றுங்கூடலின் பெயர் - மணத்தல் பயினி மற்றிவை கூடுதல்
1968 பிரிதலின் பெயர் - நீத்த றவிர்த லகல லுணர்தல் - தணத்தல் வல்லி பகலிவை பிரிதல் (210)
1969 புலத்தலின் பெயர் - புலவி யூடல் புலத்த லாகும் (211)
1970 புலவிநீடுதலின் பெயர் - துனியென் கிளவி புலவி நீடுதல் (212)
1971 கலத்தலின் பெயர் - புணர்தல் படித றோய்தல் சார்தல் - கலவன் மேவல் கலத்தலாகும் (213)
1972 அளவளாவலின் பெயர் - கலாவலுந் துழாவலும் வளாவலுஞ் சிவணலும் - புணர்தலும் பொருந்தலு மளவளா வற் பெயர் (214)
1973 வணங்கலின் பெயர் - வந்தனை பணித றண்டன் வணக்கம் - பரவலிறைஞ்ச றாழ்தல் காண்டல் - வந்தித்தல் போற்றல் வணங்கலாகும் (215)
1974 சிறைப்படலின் பெயர் - வலைப்பட றளைப்படல் சிறைப்பட லாகும் (216)
1975 சருச்சரைவடிவின் பெயர் - பிணரேசருச்சரை வடிவினதாகும்
1976 தாழ்தலின் பெயர் - இறைஞ்சலுங் குரங்கலுந் தாழ்தலை யிசைக்கும் (218)
1977 அலைதலின் பெயர் - நடுங்க லாஞ்சி ஞெகிழ்தல் ஞொள்கல் - அழுங்குதல் சோம்பென லலைதலுமாகும் (219)
1978 சுமத்தலின் பெயர் - பரித்தல் பொறுத்த றரித்தல் சுமத்தல் (220)
1979 ஏறுதலின் பெயர் - எக்க லிவரன் மீக்கோ ளேறுதல் (221)
1980 எதிர்தலின் பெயர் - முட்டல் கிடைத்தன் முடுக னேர்த - லேற்றறலைப்பட லெதிர்த லாகும் (222)
1981 மீதூரலின் பெயர் - இடங்கழி நெருங்குதல் மீதூ லாகும் (223)
1982 ஒருங்கின் பெயர் - உடங்கொருங் காகும் (224)
1983 வடுப்படுத்தலின் பெயர் - கதுவாய்வடுப்படுத்தலாகக் கருதுவர்
1984 சொறியின் பெயர் - கண்டூதி தினவு சொறியெனக் கழறும் (226)
1985 பொங்குதலின் பெயர் - பூரித்தன் மிகுதல் பொங்குதலாகும்
1986 வேர்த்தலின் பெயர் - வேர்த்தல் வியர்ப்பு (228)
1987 விடுதலின் பெயர் - விடுதல் உயிர்த்தல் (229)
1988 மூடுதலின் பெயர் - போர்வை மூய்தல் கவித்தன் மூடுதல் (230)
1989 பூணலின் பெயர் - புனைத லார்த்தல் பூணலாகும் (231)
1990 இயைபின் பெயர் - இயைபே புணர்ச்சி யிசைப்பிவை யாகும் (232)
1991 மஞ்சனத்தின் பெயர் - நான மென்பது மஞ்சன மாகும் (233)
1992 குளித்தலின் பெயர் - தோய்தலும் படிதலு மாடலு மன்றிக் குடைதலு மூழ்கலுங் குளித்தலின் கூற்றே (234)
1993 பிறகிடலின் பெயர் - பின்றல் பிறக்கிடல் பிறகிட லாகும் ()
1994 கருவுளமைப்புமெய்படுபருவமுமாவன - பேறிழ வின்பம் பிணி
மூப்புச் சாக்காடென் - றாறுள வந்நா ளமைந்தன வறியக் - கூறிய புலவர்
கோட்பாடன்றியும் - பாளை பாலன் காளை யிளையோன் - முதியோ னென்ன
விதிவழி வந்த - மெய்யே மெய்யின் மேம்படுகுணமே (236)
---------
4 -வது வாய்வகை.
1995 இன்சுவையின் பெயர் - வாய்வகை யியல்பு வகுக்குங் காலைத் - தீமென் கிளவியொ டிரதமின்சுவை (237)
1996 அழைத்தலின் பெயர் - கேத லுளைத்த லிகுத்தல் விளித்தல் - மாவெனல் கூவுதல் வாவெனன் மத்தல் - கரைதலா கருடணை யிவையே யன்றி - யகவ லென்பது மழைத்தலாகும் (238)
1997 சிரிப்பின் பெயர் - மூரலு மிளியு முறுவலு நகையும் - ஆசமுஞ் சிரிப்பென லார்ப்புமாகும் (239)
1998 உண்டலின் பெயர் - அயிறல் மிசைத லருந்துதல் நுகர்தல் - துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல் - ஆர்தல் மாந்தல் கைதொடலுண்டல் (240)
1999 மற்றுமுண்டலின் பெயர் - பானகம்போனகம்பண்பொடுவருமே
2000 குடித்தலின் பெயர் - பருகல் மாந்தல் பானங் குடித்தல் (242)
2001 விழுங்கலின் பெயர் - நுங்கல் நுகர்தல் விழுங்கலென் றாகும் (243)
2002 இயம்பலின் பெயர் - கதையு நுவலும் காதையுங் கிளவியும் - பனுவலு மறையும் பறையும் வாணியும் - கூற்றுமொழியுங் குயிறலும் புகறலும் - மாற்றமு மறையு நொடியும் பரவலும் - இசையு மியமும் பேச்சு முரையும் - எதிர்ப்பு மென்றிவை யியம்பலாகும் (244)
2003 வாசகத்தின் பெயர் - வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் (245)
2004 பதத்தின் பெயர் - பாழியு முரையும் பதமெனலாகும் (246)
2005 பேசுதலின் பெயர் - இசைத்த லிறுத்தல் இயம்பல் புகறல் - பிதற்ற லென்றிவை பேசுதலாகும் (247)
2006 பல்கால்விளம்புதலின் பெயர் - மீதுரை பல்கால் விளம்புதலாகும்
2007 துதித்தலின் பெயர் - பரவல் வழுத்தல் ஏத்தல் போற்றல் - பழிச்சல் வாழ்த்தல் துதித்தலாகும் (249)
2008 வாழ்த்தின் பெயர் - ஆசிடை யாசி வாழ்த்தா கும்மே (250)
2009 சொல்லுதலின் பெயர் - இயம்பல் விரித்தன் மொழிதல் விளம்பல் - பகர்தல் பன்னல் நவிறல் கத்துதல் - உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல் புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல் - பறைதல் செப்ப லதிர்த்தல் பணித்தல் - சொற்ற லாடல் சொல்லுதலென்ப (251)
2010 படித்தலின் பெயர் - பாடலோதல் வாசித்தல் படித்தல் (252)
2011 பெருஞ்சொல்லின் பெயர் - பெருஞ்சொல் பலரறி சொல்லெனப் பெயர்பெறும் (253)
2012 சிறுசொல்லின் பெயர் - சிறுசொ லிழிச்சொற் றீச்சொற் பழிச்சொல் (254)
2013 பழிமொழியின் பெயர் - அம்பலுங்கௌவையுமலரும்பழிமொழி
2014 திசைச்சொல்லின் பெயர் - தேசிக மென்பது திசைச் சொல்லாகும் (256)
2015 மறைத்துமொழிகிளவியின் பெயர் - இடக்கர் மறைமொழி யெக்கரு மாகும் (257)
2016 சிலரறிந்துதம்முள்தூற்றலின் பெயர் - அம்பல்சில ரறிந்துதம் முட்புறங் கூறுதல் (258)
2017 பலரறிந்துதூற்றலின் பெயர் - அலரேபலரு மறிந்தலர் தூற்றுதல்
2018 உறுதிக்கட்டுரையின் பெயர் - கழறலு மிடித்தலு நெருங்கலு மென்றிவை - யுறுதிக் கட்டுரை யெனவுரைத்தனரே (260)
2019 நயச்சொல்லின் பெயர் - முகமன் சம்மான முபசார நயச்சொல்
2020 குறளைமொழியின் பெயர் - கொடுவாய் பிசுனம் தொடுப்புக் குஞ்சம் - குறளை மொழிகொண் டியமு மாகும் (262 )
2021 அசதியாடலின் பெயர் - அசதிநகல்நயக் கிளவியாகும் (263)
2022 நிரம்பாமென்மொழியின் பெயர் - குதலை மழலை கொஞ்சலுல் லாபம் - மிழலை நிரம்பா மென்மொழியாகும் (264)
2023 சத்தியத்தின் பெயர் - ஆணை வஞ்சினஞ் சபதஞ் சத்தியம் (265)
2024 மற்றுஞ்சத்தியத்தின் பெயர் - சூளே விதரஞ் சூளுறவு மாகும் (266)
2025 முதுசொல்லின் பெயர் - மொழிமை மூதுரை முன்சொற் பழஞ்சொல் - முதுசொல் லென்பர் பழமொழியு மாமே (267)
2026 நன்னிமித்தத்தின் பெயர் - விரிச்சியும் வாய்ப்புள்ளு நற்சொனி மித்தம் (268)
2027 கதையின் பெயர் - கதையென் றுரைப்பது காரணச் சொல்லெனல் (269)
2028 வினாவலின் பெயர் - வினாவல் கடாவல் (270)
2029 எதிர்மொழியின் பெயர் - விடையதற் கெதிர்மொழி (271)
2030 வினாவும்விடையும்கூடியபொருளின் பெயர் - வினாவொடு விடையும் விளம்புதல் சல்லாபம் (272)
2031 பாயிர்தின் பெயர் - அணிந்துரைபெய்துரை புனைந்துரைநூன் முகம் - முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் (273)
2032 சத்திபண்ணலின் பெயர் - உமிழ்தல் தெவிட்டல் கான்ற லோங்கல் - * உக்காரஞ் சத்தி யன்றிக் கக்கல் (274)
- - - -
*உற்காரம் எனவும் பாடம்
2033. மற்றுஞ்சத்திபண்ணலின் பெயர் - அபன மென்பது மதன்பெயராகும். (275)
2034. எச்சிலின் பெயர் - மிச்சில் பேளிகை யுச்சிட்டம் விசதம் - எச்சிலென்றற் கிழவுமாகும். (276)
2035. கொட்டாவியின் பெயர் - ஆவித்தல் கொட்டாவி யாகு மென்ப.
-----------
5 -வது கண்வகை.
2036. கண்ணோட்டத்தின் பெயர் - கண்ணிற்கமைந்த கடனெறிகூறிற் கண்மைநா கரிகம் பார்வை கண்ணோட்டம். (278)
2037. மற்றும் கண்ணோட்டத்தின் பெயர் - கண்ணென் பதுமக் கட்டுரையாகும். (279)
2038. உற்சவத்தின் பெயர் - சாறு முருகு துணங்கறல் விழாவுடன் - ஓதுஞ் சேறு முற்சவ மாகும். (280)
2039. தூங்கலின் பெயர் - கனவே துயிலே கண்படை யனந்தல் - படலே நித்திரை பள்ளி யுறக்கந் - துஞ்ச லுறங்க றூங்க லாகும். (281)
2040. நிரம்பாத்துயிலின் பெயர் - தூங்கல் நிரம்பத் துயிலு மாமே. (282)
2041. அழுகையின் பெயர் - கலக்க முரோதனங் கலுழ்ச்சி யழுகை. (283)
2042. மற்றுமழுகையின் பெயர் - அரற்ற லிரங்கல் விம்மல் பொரும - லேங்க லிராவண மாங்கத னிலையே. (284)
2043. துயிலொழிதலின் பெயர் - சாகரமென்பது துயிலொழிதலாகும்.
2044. கண்பார்வையின் பெயர் - விழித்தல் கண்பார்வை. (286)
2045. கண்மூடலின் பெயர் - சிமிழ்த்தல் கண்மூடல். (287)
2046. காண்டலின் பெயர் - நோக்க றெரிசித்தல் பார்த்தல் காண்டல்.
2047. கண்ணுறலின் பெயர் - காட்சி யென்பது கண்ணுற லாகும். (289)
2048. கண்ணிமையின் பெயர் - கண்ணிமை யிதழ்விளிம் பென்னவும் பெறுமே. (290)
-----------
6 -வது மூக்கின்வகை.
2049. கந்தித்தலின் பெயர் - மூக்கி னியல்பு மொழியுங் காலை – மணமு முருகு மன்றலும் வாசமும் - விரையும் வதுவையு நானமும் வேரியுங் - கடியுந் தேனும் வம்புங் கானு - நறையுங் கந்தமு கோதமு நாற்றமுங் - கமழலும் வெறியுங் கந்தித்தலாகும். (291)
2050. நறுமணத்தின் பெயர் - சுகந்த நறுமணம். (292)
2051. பெருமணத்தின் பெயர் - பரிமளம் பெருமணம். (293)
2052. மூச்சின் பெயர் - தும்மன் மூச்சுச் சுவாதங் கொறுக்கை - யிரேசக பூரகங் கும்பக மன்றிச் - சுவாச நிசுவாசஞ் சொல்லப் பெறுமே. (294)
-------------
7 -வது செவிவகை
2053 கல்வியின் பெயர் - செவியிற் றேறுந் திறனினி துரைக்கி - லுறுதியுங் கேள்வியு மோதியுங் கலையும் - பனுவலுங் கல்விப் பெயரெனப் பகரும்.
2054 சொன்மாலையின் பெயர் - தோற்றஞ் சீரொளி சுலோகஞ்சொன்மாலை. (216)
2055 புகழின் பெயர் - ஏற்றங் கியாத மிசை மெய்ப்பாடு - சீர்த்தி கீர்த்திசொல் திகழ் புகழாகும் (297)
2056 மற்றும்புகழின் பெயர் - மீக்கூற் றென்று விளம்பவும்பெறுமே (298)
2057 நூலின் பெயர் - அதிகாரம் பிடக மாரிடந் தந்திரம் - பனுவலாகமஞ் சூத்திர நூலே (299)
2058 நற்பொருளின் பெயர் - ஞாபகம் பிசியிவை நற்பொருளாகும் (300)
2059 வேதத்தின் பெயர் - இருக்குச் சுருதிமறை யெழுதாக் கிளவி - ஆதிநூல் சாகை யாரணம் வேதம் (301)
2060 முதல் வேதத்தின் பெயர் - பௌடிகமிருக்கு முதல் வேதமாகும்
2061 இரண்டாம் வேதத்தின் பெயர் - இரண்டாம்வேதம் யசுதைத்திரியம் (303)
2062 மூன்றாம் வேதத்தின் பெயர் - மூன்றது சாம வேதங் கீதநடை (304)
2063 நான்காம் வேதத்தின் பெயர் - நான்காம்வேத மதர்வணமென்ப (305)
2064 வேதத்துட்பொருளின் பெயர் - உபநிடதம் வேதத்தி னுட் பொருளாகும் (306)
2065 வேத மார்க்கத்தின் பெயர் - வைதிகம் வேதமொழி மார்க்கமாகும் (307)
2066 உதாரணத்தின் பெயர் - இதிகாச மிலக்கிய மெடுத்துக்காட்டல் - உதாரணமென வுமுரைக்கப் படுமே (308)
2067 ஆகமத்தின் பெயர் - ஆகம ஞானம் (309)
2068 அத்தியாயத்தின் பெயர் - படல மிலம்பகஞ் சருக்கங் காண்டம் - பரிச்சேத மத்தியாய மாகும் (310)
2069 நூற்பாவகவலின் பெயர் - அடிவரை யின்றி விழுமிதி னடக்கு - நூற்பா வகவல் சூத்திர மென்ப (311)
2070 ஓத்தென்பது - நிரல்பட வைப்ப தோத்தென மொழிப (312)
2071 படலமென்பது - பொதுமொழி தொடர்வது படலமாகும் (313)
2072 பொழிப்புரையென்பது - பொழிப்புரை பிண்டப் பொருள தென்ப (314)
- - - - - - - - -
*அதர்வம் எனவும்வழங்கும்
2073 விரித்துரையென்பது - விரித்துரை பதவுரை விரித்த சூரணை - தொகுதி பகுதிப் பொருளதாகும் (315)
2074 கீர்த்தியினேற்றத்தின் பெயர் - ஏற்றங்கியாதமிசைப் பாடென்ப (316)
2075 தன்மேம்பாடுதானிகழ்தலின் பெயர் - நெடுமொழி தன்மேம் பாட்டுரை யென்ப (317)
2076 சோபனத்தின் பெயர் - பல்லாண்டு சோபனம் (318)
2077 பழிச்சொல்லின் பெயர் - பழிச்சொல் பரிவாதம் (319)
2078 பிடித்தொன்றைப்பேசுதலின் பெயர் - பிடித்தொன்றைப் பேசுதல் பிதற்றுதலாகும் (320)
2079 வெண்பாவின் பெயர் - முதற்பா வெண்பா (321)
2080 கலிப்பாவின் பெயர் - விகற்பங் கலிப்பா (322)
2081 ஆசிரியப்பாவின் பெயர் - அகவலுந் தொகையு மாசிரியப்பா (323)
2082 வஞ்சிப்பாவின் பெயர் - *அதனின் விகற்பம் வஞ்சி யாகும் (324)
- - - -
* "ஆசிரியநடைத்தே வஞ்சியேனை - வெண்பாநடைத்தே கலியெனமொழிப" என்னும், தொல்காப்பியம்பொருள்அதிகாரம், செய்யுளியல் சூ - ஆல் - அறிக
2083 அராகத்தின் பெயர் - அராக முடுகியல் வண்ண மாகும் (325)
2084 குளகச்செய்யுளென்பது - குற்றெழுத்துத் தொடரினது குளகச் செய்யுள் (326)
2085 கணக்கின் பெயர் - எழுத்துமெண்ணுங் கணக்கென்றாகும் (327)
2086 எண்ணின் பெயர் - எண்ணே கரணமுங் கணிதமு மென்ப (328)
2087 நால்வகையெழுத்தாவன - †வடிவு பெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே (329)
- - - -
†வடிவெழுத்து செவிப்புலவொலியைக் கண்களுக்குப்புலப்படவெழுதும் எழுத்து. பெயரெழுத்து, வடிவெழுத்து முதலாகவழங்கு மெழுத்துகளுக்கு இடும்பெயரெழுத்து. தன்மையெழுத்து, செவிப்புலனாகிய ஒலியெழுத்து, தன்மையெழுத்து
முடிவுஎழுத்து வடிவெழுத்துமுதலாகவுள்ளஎழுத்தினை மனத்தாற்றுணிவது முடிவெழுத்து.
2088 ஒற்றெழுத்தின் பெயர் - விராமமும் புலுதமு மெய்யுமொற் றெழுத்தே (330)
2089 இருவகைப்பாயிரத்தின் பெயர் - பாயிரம் பொதுச்சிறப் பெனவிருபாற்றே (331)
2090 முதல்வன்வாக்கின் பெயர் - ஆகம முதல்வன் வாக்கதாகும் (332)
2091 அந்தணர்க்குரியமார்க்கத்தின் பெயர் - அந்தண ரவர்க்கே வேத மார்க்கம் (333)
2092 தந்திரத்தின் பெயர் - மிருதி யாரிடம் பனுவ றந்திரம் (334)
2093. பாவின் பெயர் - தூக்கு மியாப்புஞ் செய்யுளுங் கவியும் - பாட்டுந் தொடர்பும் பாவென்றாகும். (335)
2094 உலக்கைப்பாட்டின் பெயர் - உலக்கைப் பாட்டே வள்ளைப்பாட்டென்ப . (336)
2095 இடத்தின்சந்தேகச்சொல்லின் பெயர் - யாண்டையு மியாங்கு மிடத்தினை யுறற்சொல். )337)
2096 ஐயச்சொல்லின் பெயர் - யாதெவனென்னை யேதுகொல்லையம்.
2097 இசைநிறையசைச்சொல்லின் பெயர் - ஏயுங் குரையு மிசை நிறையசைச்சொல். (339)
2098 முன்னிலையசைச்சொல்லின் பெயர் - மியாலிக மோமதி யிகுஞ்சின் னென்னு - மின்னவை முன்னிலை யசைச்சொ லென்ப. (340)
2099 சுட்டின் பெயர் - அஇ உஅம் மூன்றுஞ் சுட்டே. (341)
2100 வினாவின் பெயர் - ஆஏ ஓஅம் மூன்றும் வினாவே. (342)
2101 சாரியைச்சொல்லின் பெயர் - இன்னே வற்றேயிக்கேயம்மே - யொன்னே யானேயக் கேயன்னே - யின்னவை யெல்லாஞ் சாரியைச் சொல்லே.
2102 எழுத்தின்சாரியையின் பெயர் - கரமுங் கானுங் காரமு மகரமு - மேனமும் பிறவு மெழுத்தின் சாரியை. (344)
2103 இடைச்சொல்லின் பெயர் - அரோபோ மாதோ வல்லா லுறைகெழு - வாங்குத் தெய்ய வெனவே ஞான்று - அந்தி லோரு மினைய விடைச்சொல். (345)
2104 அதிசயமொழியின் பெயர் - ஆஅ ஓஒ வத்தோ வந்தோ - வன்னோவையோ வக்கோ வச்சோ - வென்னோ வெற்றே யிவையதி சயமொழி. (346)
2105 இகழ்ச்சிக்குறிப்பின் பெயர் - ஏஎ சீச்சீ யெல்லெ னிகழ்மொழி.
2106 வேற்றுமையுருபின் பெயர் - ஐயொடு குஇன் அதுகண் ணென்னு - மவ்வா றென்ப வேற்றுமை யுருபே. (348)
2107 ஒலியின் பெயர் - ஆர வாரங் கம்பலை யரவங் - கோடணை புலம்பு கோசணை யுளையே - நாத மோதை யாகுலந் துழனி - யிடியிசை சும்மை யோசை தொனியே - யுரையே பாடு சத்த மொலியெனல். (349)
2108 ஆபரணஓசையின் பெயர் - சிஞ்சித மாபரண வோசை யாகும். (350)
2109 எடுத்தலோசையின் பெயர் - முரல்வு நரல்வு முக்கலும் பயிறலுந் - தெளிறலு ஞெளிர்தலுஞ் சிரற்றலும் பிரற்றலுங் - குளிறலுங் குமுறலுங் குருமித்தலும் நெளிர்தலும் - அகவலு மெடுத்த லோசைப் பெயரே. (351)
2110 மற்றுமெடுத்தலோசையின் பெயர் - உளையென் றுரைத்தலு மப் பெயர்க் குரித்தே. (352)
2111 தொனித்தலின் பெயர் - கலித்தல் கனைத்தல் கறங்கல் கதித்தல் - சிலைத்தல் சிலம்ப லிரைத்த லிரட்ட - லிடித்த லிசைத்த லுளைத்த லுரப்ப - லுரற்ற லுழம்பன் முரற்ற லிரற்றன் - முழங்க றழங்கல் கத்தல் புலம்ப - லழுங்கலியம்ப றுவைத்த லிரங்க - றெழித்தல் குரைத்தல் கொழித்த னரற்ற - றெ*லி/விட்ட லாலித்த லிமிழ்த்தல் குமுற - லேங்கல் விம்மல் பிளிற றொனித்தல்.
2112 பேரொலியின் பெயர் - திமிலங் குமிலந் திமிர்தந் திமிதங் - களகள மென்பன பேரொலிக் கட்டுரை. (354)
2113 மற்றும்பேரொலியின் பெயர் - குமுத மென்பது மப் பெயர்க் கூற்றே. (355)
2114 ஆரவாரத்தின் பெயர் - அலம்ப லுளற லரற்ற லேம்ப - றழங்கல் பிளிறல் கலித்தல் குமுறல் - பூச றமரங் கோசனை யுலம்ப - லாகுலங் கோலாகல மாரவார மென்ப. (356)
2115 கதறலின் பெயர் - அரற்றலு முரற்றலு மழைத்தலுங் கத்தலுங் - கதற லென்னுங் கட்டுரை யாகும். (357)
2116 அனுகரணவோசையின் பெயர் - இம்மெனல் கல்லென லிழுமெனல் வல்லெனல் - பொம்மென லொல்லெனல் பொள்ளெனன் ஞெரேலெனல் - கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லென - லம்மெனல் பிறவு மனுகரண வோசை (358)
2117 அனுகரணவுபயவோசையின் பெயர் - வெடுவெடெனறிடுதி டெனல் களகளெனல் கொளகொளென - னெடுநெடெனன் மொகமொகென னெறுநெறெனல் படபடெனன் - மொடுமொடெனல் சடசடெனல் சளசளெனல் கலகலெனல் - சலசலெனல் கிடுகிடென லாமன்ன பிறவு - மனுகரண வுபயவோசைப் பெயரே. (359)
2118 கலப்புக்கட்டோசையின் பெயர் - உளற றெழித்த லுலப்ப லலப்பல் - பூசல் குமுற றுவைவர றுவைத்த - லாகுலங் கோடணை கோலா கலமே - யார்ப்புத் தமரங் கலப்புக் கட்டோசை. (360)
2119 அடரொலியின் பெயர் - அதிர்த்த றெழித்த லதட்ட லுறைத்த - லுரப்ப லடரொலிப் பெயர தாகும். (361)
2120 செவியறிவின் பெயர் - சத்தம்$பரிச ரூப ரச கந்தமென் - றொத்த வைம்புலனுஞ் செவியறி வென்ப. (362)
- - - - - - - - -
$பரிச முதலிய நாற்புலங்களின்குணங்களைச் செவிகேட்டுணர்தலால் சத்தத்தையும் அடக்கி ஐம்புலனும் என்றார்.
---------
8 - வது கைவகை.
2121 பறித்தலின் பெயர் - கைக்கட னாய காரண முரைப்பின் - பரூஉவுங் குற்றலும் பறித்தன் மேற்றே (363)
2122 கடைதலின் பெயர் - கடைதல் குடைதல் கவர்த லன்றி - மதனமந் துருவலு மற்றதன் பெயரே. (334)
2123 தேய்த்தலின் பெயர் - அரைத்தலு மரக்கலுஞ் சிரத்தலுஞ் சிதைத்தலுந் - தேய்த்தலின் பெயரென்ன வழங்கும். (335)
2124 எழுதலின் பெயர் - தெரித்தல் வரித றீட்டல் பொறித்தல் - வரைதல் கீறல் கிறுக்குத லெழுதல். (336)
2125 எழுத்தின் பெயர் - வரியும் பொறியு மக்கரமு மன்றி - யிரேகையு
மெழுத்தின் பெயரா கும்மே. (337)
2126 கொல்லுதலின் பெயர் - காதுத றொலைத்த லெற்றல் களைதல் - சவட்டல் கோறல் செறித்தல் செவிட்ட - லடுத றெறுதல் செறுத்தல் முருக்குதல் - செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும். (368)
2127 எற்றலின் பெயர் - எறித லள்ள லெற்றலின் மேற்றே . (369)
2128 கொடையின் பெயர் - ஈகை தான மிடுகை கவிகை - வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை - யுதாரங் கடப்பா டுபகாரங் கொடையெனல்.
2129 பெருங்கொடையின் பெயர் - ஈதல் வீச லிசைத்த னீட்டல் - புதரத்தனல்க லருளல் பகுத்தல் - கொடுத்தல் வழங்க லளித்தல் பெருங்கொடை.
2130 வரையாதுகொடுத்தலின் பெயர் - கொடைமட மென்பது வரையாது கொடுத்தல். (372)
2131 கொடாமையின் பெயர் - மாற்றலுங் கரத்தலுமறுத்தலுங் கொடாமை. (373)
2132 இரத்தலின் பெயர் - ஏற்றல் குறைகோ ளிரத்தல் வேண்டுதல். (374)
2133 பிச்சையின் பெயர் - பலியும் படிகமும் பாகமும்பயிக்கமும் - பிண்டமுஞ் சரியையு மையமும் பிச்சை. (375)
2134 கும்பிடுதலின் பெயர் - தொழுதலஞ்சலி சோத்தங் கும்பிடல். (376)
2135 மெய்கோட்டிக் கைகுவித்தலின் பெயர் - குடந்த மெய்கோட்டிக் கைகுவித்த லென்ப. (377)
2136 தொடுதலின் பெயர் - திவள லூறு பரிசந் தீண்ட - றுவள றொட்ட றொடுதலாகும். (378)
2137 அடித்தலின் பெயர் - புடைத்த லெற்ற லெறிதல் மொக்கல் - குத்தன் மோதன் மொத்த லறைத - லடித்த லென்ப அகைத்தலு மாகும். (379)
2138 மற்றும் அடித்தலின் பெயர் - வழுக்கலுமப் பெயர்வரைவின்றாகும்.
2139 குத்தலின் பெயர் - அவைத்தலென் கிளவி குத்த லாகும். (381)
2140 கட்டலின் பெயர் - விசித்த லிசைத்தல் வீக்கல் கட்டல். (382)
2141மற்றுங்கட்டலின் பெயர் - அசைத்த லிமிழ்த்த லார்த்தல்யாப்பு - சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்க றொடுத்தல் - கிட்டல் துவக்கல் கட்டுதலாகும்.
2142 தீட்டலின் பெயர் - தீட்டலறுக்கல். (384)
2143 வெட்டலின் பெயர் - துழாவல் வெட்டல். (385)
2144 துணித்தலின் பெயர் - துமித்தலு மெற்றலுந் துணித்த லாகும்.
2145 அறுத்தலின் பெயர் - கடித றடிதல் பரிதல் கண்டித்தல் - சேதித்தல் கொய்த லறுத்த லாகும். (387)
2146 முகத்தலின் பெயர் - தோண்டன் முகத்தல். (388)
2147 நிறுத்தலின் பெயர் - நோன்ற னிறுத்தல். (389()
2148 கிண்டலின் பெயர் - கிண்டல் கிளைத்தல். (390)
2149 கிளறுதலின் பெயர் - நோண்டல் கிளறுதல். (391)
2150 தெள்ளுதலின் பெயர் - வறண்ட றெள்ளுதல். (392)
2151 கொழித்தலின் பெயர் - வரன்றல் கொழித்தல். (393)
2152 தொளைத்தலின் பெயர் - தொள்கலுங்குயிறலுந்தொளைத்தலாகும்.
2153 தோண்டலின் பெயர் - சூறல் சூன்ற றொட்ட றோண்டல் - ஆகுந் தொடுதலு மகழ்தலு மதற்கே. (395)
2154 கிழித்தலின் பெயர் - கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல். (396)
2155 மற்றுங்கிழித்தலின் பெயர் - பீற லென்பது மப் பெயர்மேற்றே.
2156 அடைக்கலத்தின் பெயர் - கையடையில் லடைய பயமடைக்கலம். ((398)
2157 பிடுங்குதலின் பெயர் - புய்த்தலும் பறித்தலும் பிடுங்குதலாகும்.
2158 களைதலின் பெயர் - கட்டலென்பது களைதலாகும். (400)
2159 மற்றுங்களைதலின் பெயர் - சிதைத்தல் குத்தல் சிந்துதல் விலங்கல். (401)
2160 உருவுதலின் பெயர் - சிதக லுருவுதல். (402)
2161 முடைதலின் பெயர் - வலத்தன் முடைத னிணத்த லாகும். (403)
2162 எறிதலின் பெயர் - விலகல் செலவிடல் வீசல்ஓச்சுதல் - விடுதலெறித லாகுமென்ப. (404)
2163 மாற்றுதலின் பெயர் - மாற்றுதல் விலக்கல். (405)
2164 பிடித்தலின் பெயர் - தொடலும் பற்றலும் பிடித்தலாகும். (406)
2165 நெரித்தலின் பெயர் - தெறுத்த னெரித்தல். (407)
2166 கூட்டுதலின் பெயர் - அடுத்தல் பொருத்தல் கூட்டுதலாகும். (408)
2167 எழுப்புதலின் பெயர் - எடுத்த லெற்ற லெழுப்புதலாகும். (409)
2168 தடுத்தலின் பெயர் - வாரித்தல் வாரணை தகைத்த றடுத்தல். (410)
2169 பகுத்தலின் பெயர் - பகிர்தல் பாத்தி பகுத்தலாகும். (411)
2170 சிந்துதலின் பெயர் - சிதர்த்தல் சிந்துதல். (412)
2171 வாரலின் பெயர் - வாரல் கவரல் வௌவலென்ப. (413)
2172 வகிர்தலின் பெயர் - வகிர்தறுவர்தல். (414)
2173 தடவலின் பெயர் - தடவ றைவர னீவல் வருடல். (415)
2174 அசைதலின் பெயர் - துயில்வரலசைதல். (416)
2175 சொரிதலின் பெயர் - சொரிதல்பொழிதல். (417)
2176 மூட்டலின் பெயர் - மாட்டலும் பொருத்தலு மூட்டலாகும். (418)
2177 தள்ளுதலின் பெயர் - நோன்ற லூன்ற னூக்கறள்ளுதல். (419)
2178 செறித்தலின் பெயர் - அளித்தலும் பெய்தலுஞ்செறித்தலாஞகும்.
2179 பரப்புதலின் பெயர் - விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல். (421)
2180 அடுக்குதலின் பெயர் - ஏற்றலடுக்குதல் (422)
2181 புதைத்தலின் பெயர் - பொத்தல் கனிதல் புதைத்தலாகும் (423)
.
2182 குட்டலின் பெயர் - குட்டல் புடைத்தல் தகர்த்தலாகும். (424)
---------
9 -வது கால்வகை
2183 கடத்தலின் பெயர் - காலிற் கமைந்த கடனெறி கூறி - லிறத்தலுங்கழிதலு மிகத்தலுங் கடத்தல் - நடத்தலு மீளலு மவ்வியல் பாகும். (425)
2184 சுழலலின் பெயர் - உழிதரல் கொட்புத்திரிதர லுழலல் - பிரமரி யலமர றெருமரன் மறுகல் - சொரிதரல் கறங்கல் சுழலற் பெயரே. (426)
2185 தாண்டலின் பெயர் - தாண்டலும் வரவலுந் தாவலு மன்றித் - தத்தலுங் கடத்தலுமப் பெயர் மேற்றே. (427)
2186 மற்றுந்தாண்டலின் பெயர் - உறுக்கலும் பாய்தலு முகளலு மன்றிக் - குதித்தலுந் தவறலுங் குப்புறலுமாமே. (428)
2187 எழுச்சியின் பெயர் - கஞறலுங் கதித்தலு மும்பலு மேர்பும் - பொலிவுங் கலித்தலு மொழுக்கலும் பாச்சலு - மறலுமோங்கலு மெழுச்சிப் பெயரே . (429)
2188 நடத்தலின் பெயர் - இல்ல லொதுங்க லேகலிவர்தல் - செல்லல்
படர்தல் கழித னடத்தல். (430)
2189 செலவின் பெயர் - தாவுங் கதியும் படருஞ் செலவெனல். (431)
2190 ஓடலின் பெயர் - நீளல் பாற னிமிர்த லென்றிவை - யோடலின் பெயருக் குரித்தாகும்மே. (432)
2191 இரிதலின் பெயர் - உடைதல் கெடுத லிரித லாகும். (433)
2192 நேரோடுதலின் பெயர் - ஆதியும் வீதியு நோரோ டுதலே. (434)
2193 மண்டிலமா யோடலின் பெயர் - மாதி சுற்றுச் சாரிகை வாளி - யாயவை மண்டில வரவா கும்மே. (435)
2194. விரைவின் பெயர் - கதழ்வும் வல்லையு மொல்லையுங் கடுப்புங் - கடுகலுந் - தாரையுந் துனைவு நொறிலும் - விசையுமுடுகலும் வேகமும் விரைவே.
2195. மற்றும் விரைவின் பெயர் - கவனமுந்துரிதமுமப் பெயர்க்கட்டுரை.
2196. விரைவுக்குறிப்பின் பெயர் - பொள்ளென லையெனல் பொருக்கென னொய்தெனல் - வெய்தெனல் கதுமெனல் விரைவின் பண்பே. (438)
2197. உராய்தலின் பெயர் - உரோச லுரிஞ்ச லுரோஞ்ச லுராய்தல். (439)
2198. உலாப்போதலின் பெயர் - பவனியென்பது முலாப்போதலாகும்.
2199. உலாவலின் பெயர் - அசைதலுமியங்கலும் வழங்கலுமுலாவுதல்.
2200. உழக்குதலின் பெயர் - உழுதன் மடித்த லுழக்குத லாகும். (442)
2201. கொடுபோதலின் பெயர் - போதரல் கொடுபோதல். (443)
2202. மீளுதலின் பெயர் - மறிதரல் திரிதரன் மடங்கன் மீளுதல். (444)
2203. ஒதுங்கலின் பெயர் - ஒடுங்கலென் கிளவி யொதுங்க லாகும்.(445)
2204. செலுத்தலின் பெயர் - ஓய னடவல் கடவ லோச்சல் – ஏவுதல் தாண்டல் தூண்ட லுகைத்தல் - ஊர்தல் உய்த்தல் செலுத்த லொருபொருள்.
2205. போதலின் பெயர் - படர்தல் சேற லொதுங்க றீர்த - றிரித லியங்க னீங்க லிறத்த - றுரத்த லேகல் செல்லல் விடுதல் - கடத்த னடத்தல் போதலின் பெயரே. (447)
----------
10 - வது முறைமைவகை.
2206. முறைமையின் பெயர் - முறைமையுமூழும் பாவமுந் தன்மமு - முறையும் வாழும் வழியுமா மென்ப. (448)
2207. கோத்திரத்தின் பெயர் - குடியே யும்பல் கோத்திரமாகும். (449)
2208. பழைமையின் பெயர் - ஒல்லை புராண முதுமை முறையூழ் - தொல்லை முந்தை தொன்று பண்டு - தொன்மை முன்னை புராதனம் பழைமை.(450)
2209. முற்பிறப்பின் பெயர் - உம்மைமுற் பிறப்பு. (451)
2210. இப்பிறப்பின் பெயர் - இம்மையிப் பிறப்பு. (452)
2211. வருபிறப்பின் பெயர் - அம்மையு மறுமையும் வருபிறப்பாகும். (453)
2212. பிறப்பின் பெயர் - பிறந்தையும்பவமும் யோனியும் பிறப்பெனல்.
2213. மற்றும்பிறப்பின் பெயர் - சூதக மென்ன வோதவும் பெறுமே. (455)
2214. உரிமையின் பெயர் - உரிமை கிழமை யாட்சியு மாகும். (456)
2215. பயிறலின் பெயர் - நவிறல் கெழுமல் பயிறலாகும். (457)
2216. அடைவின் பெயர் - ஆம்ப லடைவே. (458)
----------
11 -வது அளவின்வகை.
2217. விரிவின் பெயர் - அளவின் வகையை யளந்தீங் குரைப்பின் - விசாலமும் விபுலமும் விரிவென லாகும். (459)
2218 பரப்பின் பெயர் - பாய்தல் விரியல் பப்புப் பரவை - தாவ லென்றிவை தாம்பரப் பாகும். (460)
2219 தூரத்தின் பெயர் - சேணு நீளமுஞ் சேய்மையுந் தூரம். (461)
2220 அகலத்தின் பெயர் - நனவே கண்ணறை வியலிவை யகலம். (462)
2221 கனத்தின் பெயர் - கனமே யடையு ஞாட்பு மாகும். (463)
2222 எல்லையின் பெயர் - அவதியுஞ் சிம்முங் காடும்பரியந்தமும் - ஏணியும் வரைப்புங் கொத்தமு மெல்லை. (464)
2223 அளவின் பெயர் - தனையுங் காறுந் தாறுந் துணையும் - வரையும்
பிரமாணமு மாத்திரையு மட்டு - மளவின் பெயரென் றறைந்தனர் புலவர். (465)
2224 அளவின்மையின் பெயர் - அபரி மிதமு மநந்தமு மபாரமு - மெல்லையில் பொருளு மளவின்மை யென்ப. (466)
2225 பெருமையின் பெயர் - இருமையும் பொழிலு மேந்தலு மீடுங் -
கருமையுந் தடவுங் கயவு மணியும் - பகடு மண்ணலுஞ் செம்மலும் பரியு - மிறையும் பேழுங் கொன்னும் விபுலமும் - வியலுந் தலையு நெய்தையு மாவுந் - தகையு முடலையு மூரியும் வீறு - நளியு மீளியு நன்றும் பாடும் - நனியும் பணையும் விறலுஞ் சேடும் - பீடுங்க தழ்வும் பெருமைப் பெயரே. (467)
2226 நுண்மையின் பெயர் - ஐயு நுணுக்கமு மணுவு முளரியும் - நுவணையு நுட்பமு நுணங்கு நூழையும் - நுணுகு நுழையு நுண்மைப் பெயரே. (468)
2227 சிறுமையின் பெயர் - அற்பமுங் கன்றுந் தன்னமு மாசும் - பேடும் வறிது மிறையுஞ் சிறுமை. (469)
2228 நிறைவின் பெயர் - மலித றுவன்றன் மல்க லார்த - றெகுள றதும்ப றேக்கல் கிளைத்த - னிரம்பல் பூரணங் கமமே நிறைவு. (470)
2229 பெருக்கத்தின் பெயர் - பிறங்கலும்பெருகலும் பெருக்கமாகும்.
2230 குறைபாட்டின் பெயர் - ஊனமு நிரப்பும் விகலமுந் தவலு - மீனமுங் குறைபாடென் றியம்பல் வேண்டும். (472)
2231 குறைதலின் பெயர் - சுருங்கலுங் குறையு மருகலுங் குன்றலு -
மெஞ்சலுங் குறைதலி னியன்ற பெயரே. (473)
2232 மிகுதியின் பெயர் - அமலை நனியே யாற்ற லிறப்புப் - பெருகல் கழிவு சிறப்புப் பிறங்க - லுருப்பந் தவமத ரூக்க மதிகம் - விதப்புச் செறிதல் பொங்கன் மிகுதி. (474)
2233 பொலிவின் பெயர் - துப்புக் கலிப்புக் கஞறல் பொம்மல் - பொறியே பொக்கம் பூப்பொலி வாகும். (475)
2234 செறிவின் பெயர் - துறுத லுறுப்புப் பிறப்புத் துதைதல் - மிடைதல் துற்று வெறிதலோதி - செற்று வெறுப்புக் கஞற லடர்தல் - நெருங்குதல் திணுங்குத லென்றிவை செறிவின்பெயரே.(476)
2235 கூட்டத்தின் பெயர் - கூளியுங் கூட்டமுங் குழுமலுந் தோடுந் - தொழுதியுந் தொறுவுந் தொகையுங் குழாமுந் - துற்று நளியு முகையு மொய்யுங் - கணமுஞ் சரியு மீண்டலுஞ் சங்கமுந் - திரளையுஞ்சவையு மவையுமீட்டம்.
2236 திரளின் பெயர் - கொம்மையு முண்டையுங் குழியமுங் குப்பையு - முத்தையும் பூகமுஞ் சோகமும் புஞ்சமும் - பந்தமு மாழையும் வட்டும் பிண்டமும் - வழியுஞ் சேடுஞ் சேர்வுந் திரளே. (478)
2237 ஐம்மையின் பெயர் - அரியுந் தகடு மடரு *மைம்மை. (479)
--------
*ஐம்மை - தகட்டுவடிவு
2238 எல்லாம்என்றலின் பெயர் - அடையவு மடங்கலு மனைத்தும் யாவையு - முழுவது முற்றுஞ் சமத்தமு முட்டவு - மெவையு மெல்லா மென்றலின் பெயரே. (480)
2239 மற்றும்எல்லாம்என்றலின் பெயர் - அகிலமு மகண்டமு மப்பெயராகும். (481)
2240 பாதியின் பெயர் - பாயல்பய லருத்தம் பங்கு பாதி. (482)
2241 மற்றும்பாதியின் பெயர் - கூறும் பாகமுங் கூறு மதற்கே. (483)
2242 பாரத்தின் பெயர் - சீருங் கனமுங் குருவு ஞாட்பும் - பார மாகும் பரமு மதற்கே. (484)
2243 நொய்மையின் பெயர் - நொய்வு மிலேசு நொய்மை யாகும்.
2244 பொழுதுபோக்கலின் பெயர் - நெடித்தல் பாணித்தல் பொழுது போக்கல். (486)
2245 மீறுதலின் பெயர் - திருகலு முறுகலு மீறுத லென்ப. (487)
2246 குவிதலின் பெயர் - குவையுங் குவாலு மிராசியுங் குப்பையுங் - குலவு நூழிலுங் குவிதற்பெயரே. (488)
2247 முதலின் பெயர் - ஆதி தலைதா ளடிமுன் னெழுவாய் - மோனை பிராசய முதலெனப் படுமே. (489)
2248 நடுவின் பெயர் - இடை சம மத்திமம் நாப்பண் பகனடு. (490)
2249 மற்றும்நடுவின் பெயர் - நள்ளென் பெயரு நனந்தலையு மாகும்.
2250 கடையின் பெயர் - இறுதிபின் னெல்லை கடையீ றந்த - முடிவுமுற்று முடித லாகும். (492)
2251 மிகுத்தலின் பெயர் - தெறுத லுறுத்தல் மிகுத்தலாகும். (493)
2252 மிக்கதன் பெயர் - மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது. (494)
2253 நெருக்கத்தின் பெயர் - எக்கல் குவித்தனளி நிபிட நெருக்கம்.
2254 தூக்கின் பெயர் - தூக்குத்தலாங் கா. (496)
2255 தூக்கினிறையின் பெயர் - தூற்றுப் பலநிறை. (497)
2256 ஒருபலத்தின் பெயர் - தொடியென் கிளவி யொருபல மாகும்.
2257. துலாமிருபஃதின் பெயர் - பாரமென்பது துலா மிருபஃதே. (499)
2258. காற்பலத்தின் பெயர் - கஃசுகாற்பலம் (500)
2259. மாகாணிப்பலத்தின் பெயர் - வீசமாகாணிப்பலம். (501)
2260. ஒன்றன் பெயர் - ஏகமொன்றே. (502)
2261. பத்தின் பெயர் - தசம்பத்தாகும். (503)
2262. நூற்றின் பெயர் - சதநூறாகும். (504)
2263. ஆயிரத்தின் பெயர் - சகசிரமாயிரம். (505)
2264. பதினாயிரத்தின் பெயர் - அயுதம்பதினாயிரம். (506)
2265. நூறாயிரத்தின் பெயர் - நியுதநூறாயிரம். (507)
2266. பத்துநூறாயிரத்தின் பெயர் - பிரயுதம்பத்துநூறாயிரமே. (508)
2267. கோடியின் பெயர் - பிரயுதம் பத்தே கோடி யென்ப. (509)
2268. அற்புதத்தின் பெயர் - கோடி பத்தே யற்புத மாகும். (510)
2269. நிகர்ப்புதத்தின் பெயர் - அர்ப்புதம் பத்தே நிகர்ப்புத மாகும். (511)
2270. கும்பத்தின் பெயர் - நிகர்ப்புதம் பத்தே கும்ப மாகும். (512)
2271. கணகத்தின் பெயர் - கும்பம் பத்தே கணக மாகும். (512)
2272. கற்பத்தின் பெயர் - கணகம் பத்தே கற்ப மாகும். (514)
2273. நிகற்பத்தின் பெயர் - கற்பம் பத்தே நிகற்ப மாகும். (515)
2274. பதுமத்தின் பெயர் - நிகற்பம் பத்தே பதும மாகும். (516)
2275. சங்கத்தின் பெயர் - பதுமம் பத்தே சங்க மாகும்.(517)
2276. சமுத்திரத்தின் பெயர் - சங்கம் பத்தே சமுத்திர மாகும். (518)
2277. அந்தியத்தின் பெயர் - சமுத்திரம் பத்தே யந்தியமாகும். (519)
2278. மத்தியத்தின் பெயர் - அந்தியம் பத்தே மத்திய மாகும். (520)
2279. பரார்த்தத்தின் பெயர் - மத்தியம் பத்தே பரார்த்த மாகும். (521)
2280. பூரியத்தின் பெயர் - பரார்த்தம் பத்தே பூரிய மாகும். (522)
2281. பிரமகற்பத்தின் பெயர் - பூரியம் பத்தே பிரம கற்பமெந்றோதின ரெண்ண ருறுமப் பெயரே. (529)
----------
12 -வது காரணவகை பல்பொருள்வகை.
2282. காரணத்தின் பெயர் - காரண வகையும் பலபொருள் வகையுஞ் -
சேர வுரைப்பன் றெள்ளதிற் றெளிந்தே. (524)
2283. காரணத்தின் பெயர் - நிபமும் பொருட்டு மேதுவு நிமித்தமுந்திறனும் வாயிலு மூலமு மென்றிவை - கருதுங் காலைக் காரண மாகும். (525)
2284. உட்டொளையின் பெயர் - சுகிர் குழனாழி தசிரந் தூம்பு - புழைபுரை வேய்வேணு வுட்டொளை பொள்ளே. (526)
2285. மற்றுமுட்டொளையின் பெயர் - நாளமுஞ் சுரையு மதற்குநாமம்.
2286 வட்டத்தின் பெயர் - வலய நேமி கடக மண்டிலம் – பரிதியாழி பாண்டில் விருத்தம் - படலிகை கோளகை பாலிகை கொம்மை – திகிரி மல்லை வல்லை சக்கரந் - தட்டு வட்டணை யென்றிவை பிறவும் - வட்ட வடிவிற் கொட்டிய பெயரே. (528)
2287 அதிசயத்தின் பெயர் - வியப்பே யிறும்பு விசித்திரம் விம்மிதம் - விபரீத மிறும்பூ ததிசய மாகும். (529)
2288 மற்றுமதிசயத்தின் பெயர் - சித்திர மென்பது மற்றதற் குரித்தே. (530)
2289 உவமையின் பெயர் - புரையு மானும் பொருவுங் கடுப்பு – நிகரு மேய்வு நேரும் போலு - மொப்பு முவமமு மேரு மாங்கு - மெனவெதி ரன்னவு மிணையு முறழ்வும் - சமமுந் துல்லியமு முவமைக் காகும். (531)
2290 வினையின் பெயர் - கருமமுந் தொழிலும் விதியும் பணியும் - வினையமுஞ் செயலும் வினையின் பெயரே. (532)
2291 செய்தலின் பெயர் - அயர்தலுங் குயிறலும் பண்ணலும் வனைதலும் - புரிதலு மாடலுஞ் செய்த லாகும். (533)
2292 விற்றலின் பெயர் - மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல். (534)
2293 விலையின் பெயர் - நொடையென் கிளவி விலையென நுவல்வர். (535)
2294 கூட்டுதலின் பெயர் - ஆற்றலும் போற்றலு மீட்டலுங் கூட்டுதல். (536)
2295 மற்றுங்கூட்டுதலின் பெயர் - ஓம்ப லென்பது மாங்கதன் மேற்றே. (537)
2296 இலாஞ்சனையின் பெயர் - ஆணை பொறிகுறி யச்சடை யாளம் - சாதனஞ் சின்ன முத்திரை யிலிங்கமென் - றேயவை பலவு மிலாஞ்சனையாகும். (538)
2297 தலைக்காவலின் பெயர் - இளையு முக்கிரமு மிவைதலைக் காவல். (539)
2298 படர்தலின் பெயர் - படலை படர்ச்சி பம்பல் படர்தல். (540)
2299 அறியாமையின் பெயர் - எய்யாமை யறியாமை. (541)
2300 ஒழியாமையின் பெயர் - ஓவாமை யொழியாமை. (542)
2301 வழிப்பறியின் பெயர் - அதர்கோள் வழிப்பறி யாறலையு மாகும். (543)
2302 தைத்தலின் பெயர் - அத்தும் பொல்லமுந் தைத்தல் துன்னம். (544)
2303 தண்டலின் பெயர் - தப்பலென் கிளவி தண்டலாகும். (545)
2304 காய்தலின் பெயர் - உலறுதல் காய்தல் வறளுதன் முளிதல். (546)
2305 பில்குதலின் பெயர் - பிலிற்றல் தூவுதல். (547)
2306 குடியிறையின் பெயர் - கறைவரி யாயங் கடன்கரமென்றிவை - குடியிறைப் பெயரா மிறுப்புமதற்கே. (548)
2307 சுங்கவிறையின் பெயர் - உல்கு சாரிகை சுங்கவிறை யாகும். (549)
2308 தீர்தலின் பெயர் - ஓவ றீர்தல். (550)
2309 முடிவின் பெயர் - முடிவு வீடே. (551)
2310 கலத்தலின் பெயர் - கலவை கலப்புக் கலத்தலாகும். (552)
ஏழாவது - பண்பிற்செயலிற்பகுதிவகை முற்றிற்று
ஆக சூத்திரம் 2310
-------------
பிங்கல நிகண்டு - பெயர்ப்பிரிவு
ஆறாவது அநுபோகவகை / பெயர்ப்பிரிவு
உணவின்வகை.
1102. சோற்றின் பெயர் - அன்னம் அயினி அடிசில் ஓதனம் பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் புழுக்கல் மிதவை அமலை புற்கை உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி அசனம் துற்று கவளம் உதரகம் சொன்றி பாத்து கூழ் பதம் புகா (27)
1103. கஞ்சியின் பெயர் - யவாகு காடி மோழை (3)
1104. பாற்சோற்றின் பெயர் - பாயசம் (1)
1105. அவிழின் பெயர் - பதம் (1)
1106. ததியுணவின் பெயர் - தயிரிற்றிமிரல் (1)
1107. வழியுணவின் பெயர் - பொதி தோட்கோப்பு சம்பளம் (3)
1108. பிட்டின் பெயர் - ஆவி வெந்தை (2)
1109. மோதகத்தின் பெயர் - இலட்டுகம் (1)
1110. அடையின் பெயர் - அப்பம் (1)
1111. உக்காரியின் பெயர் - அஃகுல்லி (1)
1112. பில்லடையின் பெயர் - சஃகுல்லி (1)
1113. தினைமாவின் பெயர் - நுவணை (1)
1114. நென்மாவின் பெயர் - இடி (1)
1115. தோசையின் பெயர் - கஞ்சம் (1)
1116. பூரிகையின் பெயர் - நொலையல் (1)
1117. மாவின் பெயர் - பிண்டி அருப்பம் பிட்டம் நுவணை இடி (5)
1118. அப்பவருக்கத்தின் பெயர் - அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம் மண்டிகை பொள்ளல் (10)
1119. சிற்றுண்டியின் பெயர் - அப்பம் பிட்டு அஃகுல்லி இடி (4)
1120. கறிவர்க்கத்தின் பெயர் - கூட்டமை (1)
1121. கறியின் பெயர் - நீடாணம் (1)
1122. பொரியலின் பெயர் - கருனை (1)
1123. புளிங்கறியின் பெயர் - துவை (1)
1124. குழம்பின் பெயர் - ஆணம் (1)
1125. பச்சடியின் பெயர் - அவித்துவையல் (1)
1126. வறையலின் பெயர் - ஓச்சை (1)
1127. பிண்ணாக்கின் பெயர் - மலாவகம் (1)
1128. சூட்டுறைச்சியின் பெயர் - சூசியம் படித்திரம் (2)
1129. மீன்முள்ளரிந்திடுங்கருவியின் பெயர் - அயிரி (1)
1130. பாலின் பெயர் - பயசு கீரம் அமிழ்து பயம் (4)
1131. தயிரின் பெயர் - ததி அளை பெருகு (3)
1132. நெய்யின் பெயர் - ஆதிரம் கிருதம் ஆச்சியம் இழுது நேயம் துப்பு (6)
1133. மற்றுநெய்யின் பெயர் - அவி ஆகாரம் ஆக (8)
1134. வெண்ணெயின் பெயர் - ஐயம் கவீனம் நவநீதம் (3)
1135. மோரின் பெயர் - மதிதம் தக்கிரம் காலகேயம் (3)
1136. மற்றுமோரின் பெயர் - அருப்பம் அளை முசர் மச்சிகை 4 ஆக (7)
1137. எண்ணெயின் பெயர் - தைலம் நேயம் (2)
1138. தேனின் பெயர் - பிரசம் மது (2)
1139. குழம்பின் பெயர் - பாகு (1)
1140. செறிகுழம்பின் பெயர் - செச்சை (1)
1141. கண்டசருக்கையின் பெயர் - கண்டம் பாளிதம் (2))
1142. மணற்பாகின் பெயர் - கட்டிகம் விசயம் கன்னல் (3)
1143. சருக்கரையின் பெயர் - குளம் அக்காரம் குடம் (3)
1144. மற்றும்ஓர்வகைச்சருக்கரையின் பெயர் - அயிர் புல்லகண்டம்
1145. கற்கண்டின் பெயர் - கன்னல் கட்டி (2)
1146. கள்ளின் பெயர் - பாலி பிழி படு மது தணியல் சாலி ஆலி ஆலை சாறு மாதவம் சாதி சுரை மாரி மதுவம் வேரி தொப்பி தேறல் நறவு பிரசம் ஆம்பல் இரேயம் தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் கௌவை சுவிகை சுலோகி சுன்டை வெறி அம்மியம் வாருணம் பானம் அளி மேதை முண்டகம் பாரி மட்டு காலி சாயனம் காதம் பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் குந்தி சொல்விளம்பி அருப்பம் களி கல்லியம் சுமாலி ஞாளி தேம் நாற்றம் வடி நறை மதுகரம் (58)
1147. மற்றுங்கள்ளின் பெயர் - பழை மந்திரம் ஆக (60)
1148. கோற்றேனின் பெயர் - பிரசம் (1)
1149. தேன்கூட்டின் பெயர் - இறால் (1)
1150. பலபண்டத்தின் பெயர் - பண்ணியம் வளம் பட்டம் பண்டம் பண்ணிகாரம் கூலம் (6)
1151. அரும்பண்டத்தின் பெயர் - தாரம் (1)
1152. எச்சிலின் பெயர் - மிச்சில் உச்சிட்டம் (2)
1153. உணவின் பெயர் - உணா வல்சி உண்டி ஓதனம் அசனம் பதம் இசை ஆகாரம் உறை ஊட்டம் (10)
1154. பேருண்டியின் பெயர் - பிரப்பு (1)
1155. உண்பனவற்றின் பெயர் - துற்றி (1)
1156. தின்பனவற்றின் பெயர் - திற்றி (1)
1157. பருகுவனவற்றின் பெயர் - பானம் துவை (2)
1158. அடிசில்என்பது - அடப்படுவது (1)
1159. புழுங்கல்என்பது - புழுக்குவது (1)
1160. தித்திப்பின் பெயர் - இழும் மதுரம் இனிமை தேம் அமுது சுவை (6)
1161. கைப்பின் பெயர் - கைத்தல் தித்தம் (2)
1162. புளிப்பின் பெயர் - ஆமிலம் ஆம்பிரம் (2)
1163. காழ்த்தலின் பெயர் - கரில் காயம் கடுகம் (3)
1164. துவர்ப்பின் பெயர் - துவரம் (1)
1165. உவர்த்தலின் பெயர் - உவர் (1)
----------
2 - வது பூணின்வகை
1166. ஆபரணத்தின் பெயர் - அணி அணிகலம் பூடணம் வள்ளி இழை கலம் (7)
1167. மணிமுடியின் பெயர் - மகுடம் கிரீடம் மௌலி (3)
1168. மற்றும்மணிமுடியின் பெயர் - சூடிகை சுடிகை சேகரம் ஆக (6)
1169. முடியுறுப்பைந்தின் பெயர் - கோடகம் கிம்புரி முகுடம் தாமம் பதுமம் (5)
1170. முடிமாலையின் பெயர் - பாடம் கோடி கரோடி (3)
1171. பதக்கத்தின் பெயர் - கண்டிகை மதாணி ஆரம் (3)
1172. தோளணியின் பெயர் - அங்கதம் கேயூரம் (2)
1173. குண்டலத்தின் பெயர் - மஞ்சிகை குழை (2)
1174. காதணியின் பெயர் - வல்லிகை கொட்டை கடிப்பம் (3)
1175. குணுக்கின் பெயர் - கடிப்பிணை (1)
1176. தோட்டின் பெயர் - தாடங்கம் (1)
1177. கங்கணத்தின் பெயர் - வளை தொடி கடகம் (3)
1178. கைவளையின் பெயர் - சரி தொடி சூடகம் சங்கு குருகு வண்டு கன்று (7)
1179. பிள்ளைக்கைவளையின் பெயர் - பிடிகம் (1)
1180. சுட்டியின் பெயர் - சுடிகை (1)
1181. பட்டத்தின் பெயர் - ஓடை (1)
1182. பாதகிண்கிணியின் பெயர் - பரிபுரம் நூபுரம் (2)
1183. சதங்கையின் பெயர் - சிறுமணி கிண்கிணி (2)
1184. சிலம்பின் பெயர் - அரி தளை ஞெகிழி நூபுரம் (4)
1185. மற்றுஞ்சிலம்பின் பெயர் - அரவம் ஆக (5)
1186. காற்சரிக்குங்கைச்சரிக்கும் பெயர் - பரியகம் (1)
1187. காலணியின் பெயர் - பாதசாலம் (1)
1188. பாடகத்தின் பெயர் - பாதகடகம் (1)
1189. ஓசைசெய்தளையின் பெயர் - ஞெகிழம் குடச்சூல் (2)
1190. ஆடவர்கோடைவீரத்தாலணிவதின் பெயர் - கழல் (1)
1191. மாதரிடையணியின் பெயர் - காஞ்சி மேகலை கலாபம் பருமம் விரிசிகை அவற்றுள் காஞ்சி - எண்கோவை மேகலை - எழுகோவை கலாபம் – பதினாறு கோவை, பருமம்பதினெட்டுகோவை, விரிசிகை முப்பத்திரண்டுகோவை (5)
1192. சரிமணிக்கோவையின் பெயர் - கலாபம் தோரை (2)
1193. அரைப்பட்டிகையின் பெயர் - அத்து மனா (2)
1194. அரைஞாணின் பெயர் - இரதநம் (1)
1195. செவிமலர்ப்பூவின் பெயர் - கன்னாவதஞ்சம் (1)
1196. ஆபரணத்தொங்கலின் பெயர் - உத்தி மதலிகை தூக்கம் (3)
1197. மோதிரத்தின் பெயர் - வீகம் ஆழி இலச்சினை (3)
1198. மணிவடத்தின் பெயர் - சரம் ஆரம் தாமம் (3)
1199. பூணுநூலின் பெயர் - உபவீதம் (1)
1200. நுதலணியின் பெயர் - இலம்பகம் புல்லகம் சூட்டு (3)
1201. தெய்வவுத்தியின் பெயர் - திரு (1)
1202. தலைக்கோலத்தின் பெயர் - பங்குசம் பிஞ்ஞகம் (2)
1203. தலைப்பாளையின் பெயர் - தொய்யகம் (1)
1204. கிம்புரியின் பெயர் - தாங்கி கோளகை பூண் (3)
1205. பெருஞ்சூட்டின் பெயர் - சிவளிகை (1)
1206. சரப்பணியின் பெயர் - வயிரச்சங்கிலி (1)
1207. பேரணியின் பெயர் - மதாணி ஆரம் பெரும்பூண் (3)
1208. பூண்கடைப்புணர்வின் பெயர் - கடை கயில் (2)
1209. மாதரணிவடத்தின் பெயர் - ஆரம் கண்டிகை தாமம் கோவை மாலை இழை (6)
-------
3 -வது இரத்திநவகை
1210. மாணிக்கத்தின் பெயர் - மாமணி செம்மணி பதுமராகம் (3)
1211. வைடூரியத்தின் பெயர் - வாலவாயம் (1)
1212. வயிரத்தின் பெயர் - வச்சிரம் (1)
1213. மரகதத்தின் பெயர் - அரி பச்சை (2)
1214. நீலமணியின் பெயர் - மணி (1)
1215. பவளத்தின்; பெயர் - துப்பு பிரவாளம் துவர் துகிர் (4)
1216. மற்றும்பவளத்தின் பெயர் - வித்துருமம் அரத்தம் ஆக (3)
1217. முத்தின் பெயர் - நித்திலம் ஆரம் தரளம் (3)
1218. கடவுண்மணியின் பெயர் - நிதி நிதானம் (2)
1219. மணிப்பொதுப் பெயர் - மனவு காசு (2)
1220. ஐவகைத்தெய்வமணியின் பெயர் - சிந்தாமணி சூளாமணி சிமந்தகமணி சூடாமணி கௌத்துவமணி (5)
1221. சங்கநிதியென்பது - சங்கின்வடிவினது
1222. பதுமநிதியென்பது - தாமரைவடிவினது
1223. சந்திரகாந்தமாவது - சந்திரகிரணத்தானீர்கால்வது
1224. சூரியகாந்தமாவது - சூரியனொளியாற்றீக்கால்வது
1225. இருப்புக்காந்தத்தின் பெயர் - சும்பகம் (1)
1226. பளிங்கின் பெயர் - படிகம் பருக்கை காழ் உபலம் (4)
1227. வளைமணியின் பெயர் - மனவு அக்கு (2)
1228. செங்கல்லின் பெயர் - தாது காரிகம் (2)
1229. சிந்தூரத்தின் பெயர் - திலகம் (1)
1230. சாதிலிங்கத்தின் பெயர் - இங்குலிகம் குலிகம் (2)
1231. அகன்மணிபொதுப் பெயர் - அரதநம் சலாகை (2)
----------
4 - வது உலோகவகை
1232. பொன்னின் பெயர் - ஆடகம் வேங்கை அரி செந்தாது காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் சாரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் ஈழம் சுவணம் இரணியம் ஏமம் ஆசை செங்கொல் ஆக்கம் கோவம் பீதகம் மாழை ஈகை சாக்கு பந்தம் தமனியம் அத்தம் பூரி சந்திரம் வித்தம் நிதி வெறுக்கை (32)
1233. மற்றும் பொன்னின் பெயர் - அனந்தம் வசு அருத்தம் பொருள் தனம் பண்டம் திரவியம் ஆக (69)
1234. வெள்ளியின் பெயர் - தாரம் இரசிதம் களதௌதம் (3)
1235. செம்பின் பெயர் - தாமிரம் எருவை வடு சுற்பம் உதும்பரம் சீருள் சீருணம் (7)
1236. வெள்ளீயத்தின் பெயர் - சீருள் வங்கம் (2)
1237. காரீயத்தின் பெயர் - நாகம் (1)
1238. தராவின் பெயர் - மதுகம் (1)
1239. துத்தநாகத்தின் பெயர் - நாகம் (1)
1240. பித்தளையின் பெயர் - இரதி மாயாபுரி ஆரகூடம் (3)
1241. வெண்கலத்தின் பெயர் - கஞ்சம் உறை (2)
1242. இரும்பின் பெயர் - கருங்கொல் அகி கருந்தாது அயில் அயம் (5)
1243. உலோகக்கட்டியின் பெயர் - மாழை சுவணம் வங்காரம் தகணை ஆடகம் (5)
1244. பஞ்சலோகத்தின் பெயர் - தமனியம் இரும்பு தாமிரம் ஈயம் இரசிதம் (5)
1245. நவலோகங்களின் பெயர் - இரதி மதுகம் நாகம் கஞ்சம் (4)
1246. பண்டாரத்தின் பெயர் - கோசம் தண்டம் (2)
1247. பொற்கலனிருக்கையின் பெயர் - பொற்பண்டாரம் (2)
1248. உண்கலத்தின் பெயர் - தாலம் தட்டம் தளிகை பாசனம் (2)
1249. வட்டிலின் பெயர் - கரகம் கோரம் வள்ளம் சகடம் சிகரம் சாகை (6)
1250. சிறுவட்டிலின் பெயர் - கிண்ணம் வள்ளம் (2)
1251. மற்றுஞ்சிறுவட்டிலின் பெயர் - கிராணம் ஆக (9)
1252. நாழிகைவட்டிலின் பெயர் - கன்னல் கிண்ணம் (2)
1253. கண்ணாடியின் பெயர் - புளகம் அத்தம் ஆடி படிமக்கலம் ஒளி - வட்டம் கஞ்சனை தருப்பணம் (7)
1254. மற்றுங்கண்ணாடியின் பெயர் - ஆதரிசனம் உருவங்காட்டி கஞ்சனம் ஆக(10)
1255. படிக்கத்தின் பெயர் - படியகம் (1)
1256. கலசப்பானையின் பெயர் - கஞ்சனை (1)
1257. துடுப்பின் பெயர் - கசிதம் (1)
1258. நெய்த்துடுப்பின் பெயர் - சுருவை (1)
1259. சட்டுவத்தின் பெயர் - தவ்வி சிலகம் தறுவி (2)
1260. கைம்மணியின் பெயர் - படலிகை வட்டம் (2)
1261. பெருமணியின் பெயர் - கண்டை யானைமணி (2)
1262. எறிமணியின் பெயர் - சேகண்டி. 1
1263. தூபமணியின் பெயர் - கைம்மணி. 1
1264. தாளத்தின் பெயர் - கிட்டி, சீர், பாண்டில், கஞ்சம். 4
1265. கிண்கிணிமாலையின் பெயர் - குரல். தார். 2
1266. காளத்தின் பெயர் - காகளம்.1
1267. சிறுசின்னத்தின் பெயர் - பீலி. 1
1268. கொம்பின் பெயர் - கோடு, இரலை, வயிர். 3
1269. மற்றுங்கொம்பின் பெயர் - ஆம்பல். 1
1270. பரணியின் பெயர் - கோய். 1
1271. கமண்டலத்தின் பெயர் - குண்டிகை, காண்டகம், கரகம். 4
1272. கெண்டியின் பெயர் - கடிப்பம், கோடிகம். 2
-----------
5 - வது. ஆடைவகை.
1273. கூறையின் பெயர் - ஆடை, கோடி, சூடி, வட்டம், காடகம், புட்டம், கலிங்கம், காழகம், படம், தூசு, புடைவை, துகில்,பரிவட்டம், ஆவரணம், தானை, உடை, சாரம், உம்பரம், நீலி, அறுவை, உடுக்கை, சம்படம், பட்டி, சாடி, சேலை, மடி, சீரை, வட்டுடை, கோசிகம், கலை, வாசனம். 31
1274. சிறுதுகிலின் பெயர் - கந்தை, விரிபம், கண்டை, பிடியல், வேதகம், புங்கம், பங்கம், கத்தியம், தூரியம், சிற்றில். (10)
1275. நல்லாடையின் பெயர் - நாகம்,பாரி. 2
1276. பட்டுவருக்கத்தின் பெயர் - பாளிதம், கோசிகம். 2
1277. மற்றும்பட்டுவருக்கத்தின் பெயர் - காம்பு, நேத்திரம். 2
1279. பணித்தூசின் பெயர் - பாளி, தேவாங்கு. 2
1279. மயிர்ப்படாத்தின் பெயர் - மயிரகம், வயிரியம். 2
1280. அத்தவாளத்தின் பெயர் - வடகம், உல்லாசம். 2
1281. சித்திரப்படத்தின் பெயர் - புத்தகம். 1
1282. உத்தரீயத்தின் பெயர் - உத்தராசங்கம், ஏகாசம். 2
1283. கொய்சகத்தின் பெயர் - நீவி. 3
1284. போர்வையின் பெயர் - மீக்கோள். 1
1285. உடுத்தலிறுக்கலின் பெயர் - சுற்றல், (க*) தற்றல்.1
1286.முன்றானையின் பெயர் - தோகை. 1
1287. முகபடாத்தின் பெயர் - சூழி. 1
1288. கம்பளிப்படாத்தின் பெயர் - கம்பலம் கம்பளம் (2)
1289. செம்படாத்தின் பெயர் - சிம்புளி (1)
1290. முலைக்கச்சின் பெயர் - வம்பு வார் விசிகை பட்டிகை (4)
1291. கச்சின்றலைப்பின் பெயர் - கஞ்சகம் சார்வாரம் (2)
1292. மேற்கட்டியின் பெயர் - விதானம் கம்பலம் படங்கு வானி (4)
1293. சட்டையின் பெயர் - கஞ்சுகம் குப்பாயம் மெய்ப்பை காஞ்சுகி அங்கி வாரணம் (6)
1294. இடுதிரையின் பெயர் - அவிடி, கஞ்சிகை, அவளிகை, காண்டம், எழினி, கண்டம், பாரகம், கழனி, படம், படாம் (10)
1295. மெத்தையின் பெயர் - தவிசு அணை தளிமம் (3)
1296. மற்றும்மெத்தையின் பெயர் - காகுளி ஆக (4)
1297. தலையணையின் பெயர் - உபதானம் (1)
1298. பெருங்கொடியின் பெயர் படம் வானி பதாகை கேதனம், துவசம் சத்தி தோகை துகில் படங்கு விலோதனம் படாகை (11)
1299. மற்றும்பெருங்கொடியின் பெயர் - கேது (12)
1300. வீதியிற்கட்டியகொடியின் பெயர் - விடங்கம் (1)
1301. தேரிற்கட்டுங்கொடியின் பெயர் - கூவிரம் (1)
1302. சிறுகொடியின் பெயர் - கத்திகை (1)
1303. மரவுரியின் பெயர் - வற்கலை இறைஞ்சி சீரை (3)
1304. சும்மாட்டின் பெயர் - சுடுவு சுமடு சுமையடை (3)
1305. துணியின் பெயர் - சிதர் சிதலை சீரை (3)
1306. பரிவட்டத்தின் பெயர் - வத்திரம் ஆசாரம் வாசம் (3)
------------
6 - வது பூச்சுவகை
1307. சாந்தின் பொதுப் பெயர் – கலவைச்சேறு, காலேக வண்ணம், களபம், விரை, கலவை (5)
1308. நால்வகைச்சாந்தின் பெயர் - பீதம் கலவை வட்டிகை புலி (4)
1309. கருப்பூரத்தின் பெயர் - பாளிதம் (1)
1310. கத்தூரியின் பெயர் - மான்மதம் (1)
1311. புழுகின் பெயர் - வாசநெய் (1)
1312. பூசுவனவற்றின் பெயர் - அங்கராகம் (1)
1313. மயிர்ச்சாந்தின் பெயர் - ஏலம் தகரம் காசறை (3)
1314. செஞ்சாந்தின் பெயர் - செங்குங்குமம் (1)
1315. மற்றும்செஞ்சாந்தின் பெயர் - தளம் (1)
1316. வெண்சாந்தின் பெயர் - தளம் (1)
1317. சந்தனத்தினம் பெயர் - சந்து சாந்து சந்தம் (3)
1318. கலவையின் பெயர் - களபம் (1)
1319. பனிநீரின் பெயர் - கந்தசாரம் இமசலம் (2)
1320. செறிகுழம்பின் பெயர் - தேய்வை செச்சை (2)
1321. அப்புதலின் பெயர் - கொட்டல் (1)
1322. பூசுதலின் பெயர் - புலர்த்தல் (1)
1323. மகளிராகத்தெழுதுகோலத்தின் பெயர் - தொய்யில் (1)
1324. நுதற்குறியின் பெயர் - புண்டரம் திலகம் (2)
1325. அச்சுதமென்பது - அறுகும் வெள்ளரிசியுங்கூட்டியணிவது
----------
7 - வது சூட்டுவகை
1326. மாலையின் பெயர் – சுக்கை, தொடையல், தொங்கல், கத்திகை, அலங்கல், கண்ணி, தெரியல், தார், அணியல், தாமம், ஒலியல், சூட்டு, கோதை, மஞ்சரி (13)
1327. நுதலணிமாலையின் பெயர் - சூட்டு இலம்பகம் (2)
1328. கோத்தமலரின் பெயர் - மத்தகமாலை (2)
1329. பின்னியமாலையின் பெயர் - பிணையல் (1)
1330. கோத்தமாலையின் பெயர் - சிகழிகை படலை வாசிகை தொடையல் (4)
1331. வாகைமாலையின் பெயர் - கல்வியிலும் கேள்வியிலும் கொடையிலும் படையிலும் வென்றவரணிவது (5)
-----------
8 - வது இயல்வகை
1332. மூவகைத்தமிழின் பெயர் - இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் (3)
1333. எண்வகைக்கணத்தின் பெயர் - அறமும் பொருளும் இன்பமும் வீடும் என்று சொல்லப்பட்ட இவற்றினது பாகுபாடமைய ஒருநூலைச் சொல்லுங்காலத்து நீர் நிலம் தேயு வாயு அந்தரம் இயமானன் சந்திரன் சரியன் என்றுசொல்லப்பட்ட எட்டுவகைக் கணங்களு முதற்செய்யுளின் முதலிலமையக்கூற வேண்டும். (8)
1334. அவற்றுள் நீரின் கணவகை - நேர் நிரை நிரை
1335. நிலத்தின் கணவகை - நிரை நிரை நிரை
1336. தேயுவின் கணவகை - நிரை நேர் நிரை
1337. மாருத கணவகை - நேர் நேர் நிரை
1338. அந்தர கணவகை - நிரை நிரை நேர்
1339. இயமானன் கணவகை - நேர் நேர் நேர்
1340. மதியின் கணவகை - நிரை நேர் நேர்
1341. எரிகதிர்க் கணவகை - நேர் நிரை நேர்
1342. அவ்வெட்டினுணற் கணவகை - நிலன் நீர் மதி இயமானமன் இந்நான்கும் முன்வரில் நன்று
1343. தீக்கணவகை - மற்றைத்தேயு வாயு அந்தரம் சூரியன் இந்நான்கு கணமுந்தீது
1344. நன்கண்தீக்கண வரலாற்றுவகை - தேமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்கனி கூவிளங்கனி (4) தீக்கணவரலாற்றின்வகை - தேமாங்கனி
புளிமாங்கனி கருவிளங்காய் கூவிளங்காய் (4)
1345. எழுத்துப்பொருத்தவகை - நன்கண வகையில் வருமூவகைச்சீர்
நான்கும் வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து முதற் சீராகவரத் தொடுக்கக்கூடா, எவ்வகைப்பட்ட செய்யுளுக்கு நன்கணவகையால்வரு மூவகைச்சீரே முதற் சீராய்ப் பாடவேண்டும்
1346. தானப்பொருத்தவகை - குற்றெழுத் தைந்தும் அவற்றிற் கினமாகிய நெட்டெழுத்துகளேழும் பாட்டுடைத்தலைவனியற் பெயர் முதலெழுத்தெந்தஎழுத்தோ அந்த எழுத்தே பாலதானமாகக் கொண்டு மற்றை எழுத்துகளைக் குமாரன், ராசன், மூப்பு ,மரணம் ஆகஎண்ணுதலால் தன்னெழுத்தைப் பாலனாகவும், இரண்டாம் எழுத்தைக் குமாரனாகவும் மூன்றாம் எழுத்தை ராசனாகவும் நான்காம் எழுத்தை மூப்பாகவும், ஐந்தாம் எழுத்தை மரணமாகவும் காப்பியத்தின் முதற் செய்யுளின் முதற்சீரிற் கொள்க
1347. நற்றானந்தீத்தானமாவன - தானப்பொருத்தம் நன்று தீது என்றிருவகைப் படுதலால் தலைவனியற் பெயரின் முதலெழுத்து முதல் மூன்றும் நற்றானம் ஆகவும், ஏனை இரண்டுந் தீத்தானம் ஆகவுங்கொள்க
1348. நாட்பொருத்தவகை - உயிரும் உயிர்மெய்யும் இருபத்தேழு நட்சத்திரங்களாக வகுக்கப்பட்டிருத்தலால் தலைவனியற் பெயரின் முதலெழுத்துக்கமைந்த முதற்பாவின் முதற்சீரிலுள்ள எழுத்தை விதித்த அந்நட்சத்திரமாகக் கொண்டு பின்வரும் எழுத்திற்கமைந்த நட்சத்திரம் நன்மையாம், அந்த முதலெழுத்திற்கு நான்காமெழுத்திற்கும் ஆறாம் எழுத்திற்கும் எட்டாம் எழுத்திற்கும்
ஒன்பதாம் எழுத்திற்கும் உரிய நட்சத்திரங்களும் பகைவரை நட்பினராக்கும் நட்சத்திரங்கள் என்பர்
1349. முன்னர்க்கூறியகணங்களெட்டினுள் நீர்க்கணத்திற்குரிய நேர் நிரை நிரை என்னுஞ் சீர்க்குச்சதய நட்சத்திரம்; இயமானன்கணத்திற்குரிய நேர் நேர் நேர் என்னுஞ் சீர்க்குப்பரணி நட்சத்திரம்; நிலக்கணத்திற்குரிய நிரை நிரை நிரை என்னுங் சீர்க்குக்கேட்டை நட்சத்திரம்; சந்திரகணத்திற்குரிய நிரை நேர்நேர் என்னுஞ் சீர்க்குமக நட்சத்திரம் எனவும் இங்கு அமைத்த நாளாகச்சொல்லு.
1350. வாயுகணத்திற்குரிய நேர் நேர் நிரை என்னுஞ்சீர் சுவாதி நட்சத்திரம் எனவும்; தீக்கணத்திற்குரிய நிரை நேர் நிரை என்னுஞ் சீர்கார்த்திகை நட்சத்திரம் எனவும், சூரியகணத்திற்குரிய நேர் நிரை நேர் என்னுஞ்சீர் புநர்பூச நட்சத்திரம் எனவும்; ஆகாயகணத்திற்குரிய நிரை நிரை நேர் என்னுஞ்சீர் திருவோண நட்சத்திரம் எனவுங் கூறுவர்
1351. நற்கணத்தின்பயன் - நிலக்கணம் பெருக்கஞ் செய்தலாலும், சந்திரகணம் வாழ்நாள்தருதலாலும், நீர்க்கணம் கீர்த்தியைத்தருதலாலும், இயமானன்கணம் செல்வத்தைத்தருதலாலும், அரசர்க்கும் பிறர்க்கும் இவைதக் கனவென்று நூல்கூறினாலும்; தலைவனியற்பெயரின்முதலெழுத்திற்கு இயைந்த சீர்க்குரிய நட்சத்திரத்தொடு சென்மநட்சத்திரம் ஆயினும் நாம நட்சத்திரம் ஆயினும் பொருந்தாதவிடத்துக்கொள்ளத்தகா.
1352. தீக்கணத்தின் பயன் - அந்தரகணம் வேறுதேசத்திற் செலுத்தலும்,
வாயுகணம் செல்வத்தைப்போக்கலும், சூரியகணம் சூனியஞ்செய்தலும்,
தீக்கணம் நோய்செய்தலுமாகிய குற்றத்தைத்தருமென்று நூலினையாராய்ந்து
தெளிவாகவுணர்ந்தபுலவர்கள் கூறுவார்கள்.
1353. உண்டிப்பொருத்தவகை - ஒகரநீங்கிய உயிர்க்குற்றெழுத்து நான்கும்,
கசதபநமவஎன்னும் மெய்யெழுத்து ஏழுமஅமுதெழுத்தாகக்கூறலால்
இவ்வெழுத்துகளுளொன்றை முதலாகவுடைய முதற்சீர்க்குக்கூறிய கணத்திற்குரிய
நட்சத்திரத்தோடு பாடவேண்டுதல் முறையாம். இதுவும் அன்றித்
தலைவன்பிறந்த நாளேனும் பெயர் நாளேனுமிரண்டிலொன்று பொருந்தக்கூறிய
அடியை முதலெடுத்துச்சொன்னால் அப்பாட்டுடைத்தலைவனுக்குச்செல்வம்
எந்நாளும் வளரும் என்றுபுலவர் கூறுவர்.
1354. புள்வகை - அகரம்வல்லூறு; இகரம் ஆந்தை; உகரம் காக்கை; எகரம் கோழி; ஒகரம் மயில்.
1355. கன்னல்வகை - அகரம் தோற்றமாக இகரம் இன்பத்தையுண்டாக்கும;
உகரம் அரசாகும், எகரம் உறங்கும், ஒகரம் மரணம்.
1356. அவ்வப்பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்தே அவ்வப்பட்சியாகக்
கொண்டுஉதிப்பு முதல் அரசீறாகப்பாடின், அப்பாட்டுடைத்தலைவனுக்குச்
செல்வமுண்டாகும்.
1357. பால்வகை - எழுத்தென்று சொல்லப்படுவன ஆண், பெண், அலி என மூன்றுவகைப்படும்.
1358. அவற்றுள் ஆண்பாலெழுத்தின் பெயர் - அகரமுதல் ஔகாரமிறுதியாகிய உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு மாணெழுத்துக்களாம்.
1359. பெண்பாலெழுத்தின் பெயர் – உயிர்மெய்யெழுத்துக்களிரு நூற்றுப்பதினாறும் பெண்ணெழுத்துகளாம்.
1360. அலியெழுத்து - மெய்யெழுத்துப் பதினெட்டு மலியெழுத்தாம்.
1361. ஆண்முதலியபகுதிகளின் எழுத்துக்குரியவள் நாமகளாதலாற்
பெண்பாலெழுத்தை முதற்சீரின் முதலெழுத்தாகக்கொண்டுகூறல்வேணண்டும்.
1362. மங்கலச்சொல்வகை - திரு, களிறு, தேர், பரி, கடல், பொலிவு,
மணி, பூ, புகழ், சீர்.
1363. வேதியர்க்குரிய பாவகைப் பெயர் - பிள்ளைக்கவி பாடத்தொடங்கும்வழி
அதற்குமுன் வெண்பாகூறுதல் அந்தணர்க்கு உரியது.
1364. அரசர்க்குரிய பாவகைப் பெயர் - அக்கவி முன் நேரிசையாசிரியப்பா
ஆயினும் கொச்சகக்கலிப்பாவாயினுங்கூறுதல் அரசர்க்குஉரித்து.
1365. வணிகர்க்குரிய பாவகைப் பெயர் - அக்கவி முன்வஞ்சிப் பாவாயினும்
இன்னிசைவெண்பா வாயினும் கூறுதல் வணிகர்க்கு உரித்து.
1366. சூத்திரர்க்குரிய பாவகைப் பெயர் - அக்கவிமுன் நெடுவெண்பாட்டாயினும்
நேரிசையாசிரியப்பாவாயினும் கூறுதல் சூத்திரர்க்கு உரித்து.
1367. காப்புக்குரியகடவுள் - காப்பாக நூன்முகத்துரைக்கப்படும்
கடவுள் மலர்களாற் கமழுந் தண்ணிய துழாய்மாலை சூடிய திருமால்; அத்திருமால்
காத்தற்குத் திருமகளைப் புணர்தலையுடையவனாதலாலும், கிரீடமுங்கடகமும்
நெருங்கிய மலர்மாலையும், குண்டலமும் உபலீதமும் நிறந்தங்கிய
கௌத்தாபரணமுமாகிய இவற்றையணியும் இறைவனாதலாலும், நிலைபெற்ற
பிரமனைத் தந்தமையாலும் நூன்முகத்துக் கூறுதற்குரியவனாமென்று
நூல் வல்லோர் கூறுவர்.
1368. ஆண்பாற் பிள்ளைப்பாட்டின் வகை - பிள்ளைக்கவியி னிலக்கணத்தைத்
தெளிவாகக்கூறில் இரண்டா மாதத்திற் காப்புக் கூறுதலும் ஐந்தா மாதத்தில்
செங்கீரை கூறுதலும், ஆறாமாதத்தில் சொல்லுவதைப் பழகுதலோடு
ஏழா மாதத்திலமுதூட்டலும், எட்டா மாதத்தில் தாலாட்டுதலும், ஒன்பதா மாதத்திற்
சப்பாணி கொட்டலும், பதினோரா மாதத்தில் முத்தங் கூறுதலும், பன்னிரண்டா மாத்தில் வாரானை கூறுதலும், பதினெட்டா மாதத்திற் சந்திரனை யழைத்தலும்,
இரண்டாமாண்டிற் சிறுபறை கொட்டலும் மூன்றா மாண்டில் சிற்றில் சிதைத்தலும்,
நாலாமாண்டில் சிறுதேருருட்டலும், பத்தாமாண்டில் பூணணிதலும்,
பன்னிரண்டாம் ஆண்டில் கச்சினோடு உடைவாளை விரும்பத்தரித்தலுமென்று
சொல்லப்பட்டவையும் இவை ஒழிந்த பிறவுமாம். இவைகளுள் கூறுதல் கற்றலோடு
அமுதூட்டலும் பூணணிதலும் கச்சொடு சுரிகைபுனைதலும் என்னும்
இவற்றையொழிந்த காப்புமுதல் பத்தும் ஆண்பாற் பிள்ளைக்கவியில் வரும்;
இவற்றுள் ஓராண்டுகாறுங்கூறிய நிலங்கள் இருபாலுக்கும் உரியனவாம்.
1369. பெண்பாற் பிள்ளைப்பாட்டுவகை - பெண்பாற் பிள்ளைக்கவியாயின்
மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு மணம்பேசுதலும்,
ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுகாறும் மன்மதனையொத்த புருடனைப்
பெறத் தவஞ்செய்தலும், குளிர்ந்தநீராடலும், பதுமைவைத்து விளையாடலும்,
அம்மனையாடலும், *கழங்காடலும் பந்தடித்தலும், சிறுசோறடுதலும்,
சிற்றிலிழைத்தலும், ஊசலாடலும் என்றுசொல்லப்பட்ட இவற்றை யுள்ளிட்டு
முற்சூத்திரத்தில் ஆண்டுகாறுங்கூறிய நிலமேழில் ஏற்பனகூறுதல் முறையாம்.
-----------
*கழங்கு - கழற்காய்
1370. கவியரங்கேற்றிய பாட்டுடைத்தலைவன் செய்யும் வழிபாடு - உருவகவணி,
உவமையணி, வழிநிலையணி, மடங்குதனவிற்சியணி, தீவகவணி, வேற்றுமையணி, வெளிப்படையணி, கருத்துடையடையணி, குறிப்புநிலையணி, சுருங்கச்சொல்லலணி, மிகுதிநவிற்சியணி, சிறப்பணி, சிலேடையணி, எதிர்மறுத்தலணி, உடனிலைக் கூட்டவணி, உவமானவுருவகவணி, பிறிதினவிற்சியணி, ஒப்புமைக் கூட்டவணி, நிதரிசனவணி, புகழ்ச்சியணி, பலபொருட் சொற்றொடர்நிலையணி, ஐயவணி, உயர்வுநவிற்சியணி, கலவையணி, வாழ்ந்தணியென்னும் இருபத்தெட் டலங்காரங்களாலும், எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்குவகையாலும் குற்றமறச் செய்யுள் பாடும்புலவனும், அவைக்களத்திலுள்ளாரும் அரசனும் வியக்கப்பாடுகின்றவனும், இயலிசை நாடகமென்னு முத்தமிழில் வல்லவனும் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமென்னும் பாக்களைப்பாடுகின்றவனும், உயர்குடியிற்பிறந்து மேம்பட்டவனும், எல்லாவுறுப்புகளுங் குறைவின்றிநிறைந்து நல்லொழுக்கமுடையானும், முப்பது வயதிற்கு மேற்பட்டு எழுபது வயதளவிலுள்ளவனுமாகிய கவிஞனொருவன் தன்மேற்பாடுங் கவிதையை யாவருமாராய்ந்தறியத்தான் கொள்ளுங்கால், அவைக்களத்தில் தோரணத்தைக் கட்டித் துவசத்தை நாட்டி மங்கலமுரசியம்ப அந்தணரொருபால் வாழ்த்த, இவ்வாறு மேன்மைமிக்க கோலத்தோடு விரித்த அழகிய ஆடையில் பலதானியங்களாலமைந்த புகழ்ச்சி வாய்ந்த முளைப்பாலிகையோடு தீபமு நல்ல பூரணகலசமுநிறைந்த மேற்கட்டியையுடைய பந்தலின் கீழ், சலித்தலில்லாத தூண்வரிசையினெருக்கத்தாலும் பலவகைப்பட்ட தமதுறவினர் நெருக்கத்தாலும் பெண்கள்பாடும் பல்லாண்டினாலும் நிறைந்த அழகுஅமைந்த செல்வம்வாய்ந்த தன் கோயில் நடுவில் தான் வெள்ளாடையுடுத்தி வெள்ளிய மலரைச் சூடித்தனதாசனத்தில் தன்மேற்பாடிய புலவனிருக்கச்செய்து தான் பக்கத்திலிருந்து மங்கலமைந்த செய்யுளை மகிழ்கூர்ந்து கேட்டுப், பொன்னும் ஆபரணமும் கடகமுமிவைபோன்ற பிறவும் அக்கவிஞனுக் கொடுத்து அவன்பின் ஏழடிசென்று அவனிற்கவெனக் கூறத்தானிற்றல், மலர்களாற்
பரந்த நறுமணங்கமழு மாலையையணிந்த அரசனது கடமையாம்.
1371. பரிசில்பெறாவகை - தான்பாடியபாட்டிற்குத் தலைவன் தனக்குப்
பரிசு கொடானாகில், வேறொருவன் பெயரினைத் தன்னூலிலமைத்து, அவன்
ஊரையும் பெயரையும் ஒருசேர அதனின்றும் நீக்கி, சீரினையுந் தளையினையும்
பின்பு தன்னாற் பாடப்பட்டவன் பாட்டுக்கியைய நாட்டுவனாயின் முன்புள்ள
தலைவன் செல்வமிழந்து துன்பப்பட இலக்குமியும் பின்புள்ளவனைச் சாருவாள்,
அவனுக்குச் செல்வமுண்டாகாது.
1372. மற்றும் பாவலன் பரிசு பெறாக்காற் செய்யும்வகை - தனக்குப் பரிசுகொடாத பாவிநூலை வேறுபடவெழுதிச் செவந்த பூவினைச்சூடித், தன்மனைக்குப்புறத்திலும் காளிகோவிலிலும் பாம்பு வாழும் புற்றிலிடத்திலும் சுடுகாட்டிலும் வீதியிலும்தான் வழிபடுகடவுளைத் தியானஞ் செய்திருந்து அவன் மேற்பாடியநூலை நெருப்பிற் கொளுத்தினால் பன்னிரண்டு மாதத்தில் மரணமடைவானென்பது முதற்புலவனாகிய அகத்தியன் கூறிய வாய்மைமொழியாம்.
1373. இதுவும்அது - பாடியபுலவன் பரிசுபெறாமையால் மயங்கிய மனத்தோடு நிலைகலங்கிச் சுழல்வானாகில், அப்பாடலுக்குத் தலைவனாயுள்ளவன் கெடுதலுமின்றி அப்பாடலை அவைக்களத்திற் கேட்டிருந்த அவனுறவினருங் கெடுவார்.
1374. காமரப்பாட்டின் பெயர் - கானம், கொளை வரி, கந்தருவம், கீதம், இராகம், கேயம், பாணி, நாதம், இசை, பண். (11)
1375. நால்வகைப்பண்ணின் பெயர் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. (4)
1376. பாலையாழ்த்திறத்தின் பெயர் - அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான். (5)
1377. குறிஞ்சியாழ்த்திறத்தின் பெயர் - நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சுரம், அரற்று, செந்திறம். (8)
1378. மருதயாழ்த்திறத்தின் பெயர் - நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம். (4)
1379. செவ்வழியாழ்த்திறத்தின் பெயர் - நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை. (4)
1380. பெரும்பண்ணின்வகை - பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளர்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி (16)
1381. பாலையாழ்த்திறன் வகையின் பெயர் - தக்கராகம், அந்தாளி பாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசி, சோமராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதி காந்தாரம். (20)
1382. குறிஞ்யாழ்த்திறன் வகையின் பெயர் - நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம்,செருந்தி,கௌடி,உதயகிரி,பஜ்சுரம்,பழம்பஞ்சுரம், மேகராகக்குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்வியவராடி, முதிர்ந்தவிந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நாட்டராகம், ராமக்கிரி, வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை. (32)
1383. மருதயாழ்த்திறன்வகையின் பெயர் - தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி,
நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தளபஞ்சமம், மாதுங்கரரகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம். (16)
1384. செவ்வழியாழ்த்திறன் வகையின் பெயர் - குறண்டி, ஆரியவேளர் கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி.(16)
1385. மற்றுந்திறத்தின் பெயர் - தாரப்பண்டிறம், பையுள் காஞ்சி படுமலை, இம்மூன்றும் நூற்றுமூன்று வகைப்படும். (3)
1386. நேர்திறத்தின் பெயர் - துக்காரகம். (1)
1387. காந்தாரபஞ்சமத்தின் பெயர் - உறழ்ப்பு. (1)
1388. சோமராகத்தின் பெயர் - குறுங்கலி. (1)
1389. காந்தாரத்தின் பெயர் - சாரல். (1)
1390. நட்டபாடையின் பெயர் - நைவளம். (1)
1391. பழம்பஞ்சுரத்தின் பெயர் - பஞ்சுரம். (1)
1392. கவ்வாணத்தின் பெயர் - படுமலை. (1)
1393. அநுத்திரபஞ்சமத்தின் பெயர் - அயிர்ப்பு. (1)
1394. குறிஞ்சியின் பெயர் - அரற்று. (1)
1395. செந்துருதியின் பெயர் - செந்திறம். (1)
1396. தக்கேசியின் பெயர் - நவிர். (1)
1397. வடுகின் பெயர் - இந்தளம். (1)
1398. பாக்கழியின் பெயர் - வஞ்சி. (1)
1399. சிகண்டியின் பெயர் - செய்திறம். (1)
1400. சாதாரியின் பெயர் - முல்லை.(1). நேர்திறத்தின் பெயர் - புறநீர்மை.(1)
1401. நால்வகையாழின் பெயர் - பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ். (4)
1402. ஏழிசையின் பெயர் - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். (7)
1403. அவற்றுட்செம்பாலைவகை - குரலே குரலாகிற் செம்பாலை. (1)
1404. படுமலைப்பாலைவகை - துத்தமே குரலாகிற்படுமலைப் பாலை. (1)
1405. செவ்வழிப்பாலைவகை - கைக்கிளையே குரலாகிற் செவ்வழிப் பாலை. (1)
1406. அரும்பாலைவகை - உழையே குரலாயி னரும்பாலை. (1)
1407. கொடிப்பாலைவகை - இளியே குரலாகிற் கொடிப்பாலை. (1)
1408. விளரிப்பாலைவகை - விளரியே குரலாகின் விளரிப்பாலை. (1)
1409. மேற்செம்பாலையின்வகை - தாரமே குரலாயின் மேற்செம்பாலை (1)
1410. ஏழ்பாலைகளுள் இதனினிது வலிதெனல் - அவற்றுள் கூறிய செம்பாலைக்குப் படுமலைப்பாலைவலிது, படுமலைப்பாலைக்குச் செவ்வழிப் பாலைவலிது,<
செவ்வழிப்பாலைக்கு அரும்பாலைவலிது, அரும்பாலைக்குக் கொடிப்பாலைவலிது, கொடிப்பாலைக்கு விளரிப்பாலைவலிது, விளரிப்பாலைக்கு மேற்செம்பாலைவலிது.
1411. ஏழிசைதம்மிற் பிறக்கும்வகை - தாரத்துள் உழையும், உழையுட் குரலும், குரலுள் இளியும், இளியுள் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் பிறப்பதுதகுதி.
1412. இவற்றின் பெறப்பிடத்தின் பெயர் - மிடற்றால்குரல், நாவினாற்றுத்தம், அண்ணத்தாற் கைக்கிளை, சிரத்தாலுழை, நெற்றியாலிளி, நெஞ்சால் விளரி, மூக்காற்றாரம்; இவ்வாறு தனித்தனி பிறக்குமென்பர்.
1413. இவற்றின் மாத்திரைகளாவன - மாத்திரை கூறுமிடத்து குரல்(4), துத்தம் (4), கைக்கிளை (6), உழை(2), இளி (4), விளரி (6), தாரம் (2)
1414. ஏழிசை யோசையாவன - வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு. (7)
1415. இவற்றினெழுத்தாவன - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ. (7)
1416. ஏழிசைகக்குரிய மணங்களாவன - மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், தாமரை, புன்னை. (7)
1417. இவைகளின்சுவை - பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி. (7)
1418. இவைகளுக்கிறைவர் பெயர் - விசுவாமித்திரன், இயமன், அங்கி, சந்திரன், சூரியன், கௌதமன், காசிபன். (7)
1419. மந்தவிசையின் பெயர் - மந்தரம், காகுளி. (2)
1420. சமனிசையின் பெயர் - மதுரம், துத்தம், மத்திமம் . (3)
1421. வல்லிசையின் பெயர் - தாரம், உச்சம். (2)
1422. இசைவிகற்பத்தின் பெயர் - ஏனை. (1)
1423. குரற்குரிய திறத்தின் பெயர் - ஆசான்றிறம். (1)
1424. இருதுறையின்வகை - செந்துறை, வெண்டுறை. (2)
1425. பண்ணென்பது - நிறைந்த நரம்புள்ளது. (1)
1426. திறமென்பது - குறைந்தநரம்புள்ளது. (1)
1427. யாழெழுமின்னிசையின் பெயர் - எழால். (1)
1428. இசைக்குழலின் பெயர் - வாரி, வங்கியம். (2)
1429. வீணையின் பெயர் - கின்னரம், தண்டு. (2)
1430. யாழின் பெயர் - தந்தி, வீணை, கின்னரம், கோட்டம், கோடவதி, விவஞ்சி. (6)
1431. மற்றும்யாழின் பெயர் - கலம், கருவி. (2)
1432. யாழ்வலிக்கட்டின் பெயர் - திவவு. (1)
1433. முறுக்காணியின் பெயர் - மாடகம். (1)
1434. நரம்பின் பெயர் - கோல், தந்திரி, குரல். (3)
1435. ஆதியாழாவது - ஆயிர நரம்புள்ளது. (1)
1436. உள்ளோசையின் பெயர் - முரல்வு, நரல்வு, தெளிர், ஞெளிர், விழைவு, நுணுக்கம். (6)
1437. பல்லியந்தழுவு பாடலின் பெயர் - சங்கீதம். (1)
1438. ஆடற்கேற்கும் பாட்டின் பெயர் - செந்துறைப்பாட்டு. (1)
1439. பாடற்கேற்கும் பாட்டின் பெயர் - வெண்டுறைப்பாட்டு. (1)
1440. அகமார்க்கமாவது - அருமையிற்பாடல். (1)
1441. யாழ் நரம்போசையின் பெயர் - கலித்தல், சும்மை, கம்பலை, அழுங்கல், சிலைத்தல், துவைத்தல், சிலம்பல், இரங்கல், இமிழ்தல், விம்மல், இரட்டல், ஏங்கல், கனைத்தல், தழங்கல், கறங்கல், அரற்றல், இசைத்தல். (17)
1442. ஒலியின் பெயர் - ஓதை, நாதம், கம்பலை, சும்மை, ஆகுலம், புலம்பல், கோடணை, அரவம், ஓசை, கர்ச்சனை. (10)
1443. திரட்டோசையின் பெயர் - அலறல், கூப்பிடல், தெழித்தல், உரப்பல், பிளிறல். (5)
நாடகவகை.
1444. கூத்தின் பெயர் - நடம், நாடகம், நடனம், நட்டம், படிதம், மண்டிலம், தாண்டவம், பரதம், நிலையம், நிருத்தம், ஆடல், தூக்கு, ஆலுதல், துணங்கல், அவிநயம், இலையம், பாணி, குரவை. (18)
1445. கூத்தின் விகற்பத்தின் பெயர் - கரணம், உப்பிதம், மலைப்பு, புரியம், பிரமரி, வீரட்டானம், குனிப்பு, உள்ளானம், கடகம், இலையம். (10)
1446. சிரமஞ் செய்தலின் பெயர் - பருமித்தல். (1)
1447. சிவனாடலின் பெயர் - பாண்டரங்கம், காபாலம், கொடுகொட்டி. (3)
1448. பதினேருருத்திர ராடலின் பெயர் - - கொட்டி,குரவை, குடம், குடை, வெறி, மல், பேடு, பாவை, கடையம், பாண்டரங்கம், மரக்கால். (11)
1449. மாயோனாடலின் பெயர் - அல்லியம், குடம், மல், மரக்கால். (4)
1450. திருமகளாடலின் பெயர் - - பாவை. (1)
1451. முருகனாடலின் பெயர் - கொட்டி, குடை, துடி. (3)
1452. காமனாடலின் பெயர் - பேடு. (1)
1453. அயிராணியாடலின் பெயர் - கடையம். (1)
1454. துர்கையாடலின் பெயர் - மரக்கால். (1)
1455. சத்தமாதராடலின் பெயர் - துடி. (1)
1456. கைக்கோத்தாடலின் பெயர் - குரவை. (1)
1457. முடக்கிய விருகை பழுப்புடை யொற்றியாடலின் பெயர் - துணங்கை. (1)
1458. வேலனாடலின் பெயர் - அணங்கு,வெறி,கழங்கு. (3)
1459. ஒத்தறுத்தலின் பெயர் - வட்டித்தல், தட்டல், வட்டணை. (3)
1460. கைக்குவித்துக்கொட்டலின் பெயர் - கொம்மை. (1)
1461. ஆர்த்துவாய் கொட்டலின் பெயர் - ஆவலங்கொட்டல். (1)
1462. குந்திநிற்றலின் பெயர் - - குஞ்சித்தல். (1)
1463. கைகூப்பி மெய்கோட்டி நிற்றலின் பெயர் - குடந்தம். (1)
1464. கூத்தாடலின் பெயர் - அகவல், தாண்டல், ஆடுதல், நடித்தல், அசைதல், பெயர்தல், அடுத்தல். (7)
1465. மற்றுங் கூத்தாடலின் பெயர் - மாறல். (1)*(8)
1466. தாளவொத்தின் பெயர் - - சதி, சீர். (2)
1467. நாடகம்ஆவது – அத்தாளவொத்தின்றிறத்துக்கியையநடிப்பது நடம்.
---------
11 - வது மண்டிலவகை.
1468. விற்றொடுத்தம்பினையெய்வார்க்குரியநால்வகைநிலையின் பெயர் - பைசாசம், மண்டிலம், ஆலீடம், பிரத்தியாலீடம்ம் (4)
1469. அவற்றுள் பைசாசநிலைவகை - ஒருகால்நிலைநின் றொருகான்
முடக்கல் பைசாசநிலை.
1470. மண்டிலநிலைவகை - இருகாலும் பக்கல் வளையமண்டி லித்தலே மண்டிலநிலை.
1471. ஆலீடநிலைவகை - வலக்கான் மண்டிலித் திடக்கான் முந்துறலே யாலீடநிலை.
1472. பிரத்தியாலீடநிலைவகை - வலக்கான் முந்துற் றிடக்கான் மண்டிலித்தலே பிரத்தியாலீட நிலை.
----------
12 - வது படைவகை.
1473. போரின் பெயர் - யுத்தம், ஆகவம், தும்பை, சமரம், கணையம், செரு, சங்கிராமம், இகல், எதிர், ஞாட்பு, பூசல், ஆயோதனம், அடல், அமர், இரணம், மலைதல். (16)
1474. புறவகை - வெட்சி=பகைவர் பசுக்கவர்தல், கரந்தை = பகைவர் கவர்ந்த
தன்னிரை மீட்டல், வஞ்சி=பகைமேற் செல்லல், காஞ்சி = வரும்பகைவர்
முன்னெதி ரூன்றல், நொச்சி=தன்னரண் காத்தல், உழிஞை = பகையரண்
வளைத்தல், தும்பை=பொருதல், வாகை=போர் வெல்லல். (8)
1475. புறப்புறவகை - வாகை, பாடாண், பொதுவியல். (3)
1476. நால்வகைப்படையின் பெயர் - தேர், யானை, குதிரை, காலாள். (4)
1477. தேரின் பெயர் - குயவு, வையம், கொடிஞ்சி, சயந்தனம், திகிரியந்திரம் - கவரி, அரி, இரதம். (9)
1478. மற்றுந்தேரின் பெயர் - கூவிரம். ஆக(10)
1479. தேருருளின் பெயர் - உருளி, கால், ஆழி, பரிதி, உந்தி, திகிரி,
சில்லி, நேமி. (8)
1480. தேரி னகத்திற் செறிகதிரின் பெயர் - ஆர். (1)
1481. தேர்க் கொடிஞ்சியின் பெயர் - கூவிரம். (1)
1482. தேர்மொட்டின் பெயர் - கூம்பு. (1)
1483. தேர்முட்டியின் பெயர் - பிரம்பு. (1)
1484. தேர்நடுவின் பெயர் - நாப்பண், தட்டு. (2)
1485. தேர்மரச்சுற்றின் பெயர் - கிடுகு (1)
1486. தேர்ப்பலகைப்பாவின் பெயர் - பார் (1)
1487. தேர்ப்பரப்பின் பெயர் - பார் (1)
1488. அச்சுருவாணியின் பெயர் - அச்சு (1)
1489. பரிபூண்டதேரின் பெயர் - பாண்டில், கஞ்சிகை, வையம் (3)
1490. பண்டியின் பெயர் - சகடம், ஒழுகை, சாகாடு (3)
1491. பண்டியுள்ளிருசின் பெயர் - கந்து (1)
1492. அரசுவாவினிலக்கணம் - நான்குகாலும் துதிக்கையுங் கோசமும் வாலும் ஆகியஏழுறுப்புநிலத்திற்றோய்வதும், பாலையுஞ்சங்கையுமொத்த வெண்ணிறம்வாய்ந்த கால்நகமுடையதுமாய், காலினாலுந் தனதுதுதிக்கையினாலும் சரீரத்தாலும் வாலினாலுங் கொம்பினாலுக் கொல்லவல்லதாய் ஏழுமுழ
முயர்ந்து ஒன்பதுமுழநீண்டு பதின்மூன்றுமுழஞ் சுற்றுடைத்தாய் சிறியகண்ணையுஞ் செவந்தபுள்ளிகளையுமுடையதாய், முன்புமுற்கூறிய வாறுயர்ந்துபின்பு தாழ்ந்தது அரசியானையென்று அறிவுடையோர்சொல்வர்
1493. அரசர்க்குரிய பரியினிலக்கணம் - பெண்களது மணம் போலமிக் கமணத்ததாய், வாழைமடலைப்போலச் செவியினையுடையதாய், நான்குகாலும்பி
டருமுகமுமுதுகும் முன்புறமும் வெண்ணிறமுடையதா யெண்பத்திரண்டு
விரலுயர்ந்த குதிரைதத்தமக்குரிய குணங்களையுடைய அரசர்க்குரியது.
1494. பரியின்கதிவகைப் பெயர் - மல்லகதி, வாநரகதி, மயூரகதி, வல்லியகதி, விடைக்கதி (5)
காலாள்வகை
1495. பகைவர்மேற்செல்லல் - ஊராண்மை (1)
1496. பகைவரிடத்தில்செய்யும்அரியசெயல் - பேராண்மை (1)
1497. புறங்கொடுத்தார்மேலாயுதம்எறியாமை - தழிஞ்சி (1)
1498. வெற்றிப்பூவின் பெயர் - பூளை (1)
1499. கொள்ளையின் பெயர் - சூறை, கொண்டி (2)
1500. வாரலின் பெயர் - கவரல், வௌவல், கொளல் (3)
1501. படையின் பெயர் - தானை, பதாதி, தண்டம், பதாகினி, வானி, அநிகம், வாகினி, தந்திரம், சேனை, பகுதி, பாடி, பலம். (12)
1502. மற்றும்படையின் பெயர் - நிதானம், ககனம், தளம் . ஆக(15)
1503. படைவகுப்பின் பெயர் - - ஒட்டு, யூகம், உண்டை, அணி. (4)
1504. படையுறுப்பின் பெயர் - - தூசி, கூழை, நெற்றி, கை, அணி. (5)
1505. பேரணியின் பெயர் - - கூழை. (1)
1506. கொடிப்படையின் பெயர் - - தார். (1)
1507. கீழறுத்தலின் பெயர் - - அறைபோதல், படைமறுத்தல். (2)
1508. பொரவழைத்தலின் பெயர் - - அறைகூவல். (1)
தோற்கருவி வகை.
1509. முழவின் பெயர் - - குளிர். (1)
1510. குடமுழாவின் பெயர் - - மண்கணை, முழவம். (2)
1511. படகத்தின் பெயர் - - பணவம், திண்டிமம், ஆனகம். (3)
1512. கடிப்பின் பெயர் - - குணில். (1)
1513. சிறுபறையின் பெயர் - - ஆகுளி. (1)
1514. திமிலையின் பெயர் - - சல்லரி. (1)
1515. ஒருகட்பறையின் பெயர் - - மொந்தை. (1)
1516. நிசாளத்தின் பெயர் - - தண்ணுமை. (1)
1517. ஒருபறைவிகற்பத்தின் பெயர். - - பீலி. (1)
1518. பன்றிப்பறையின் பெயர் - - குடப்பறை. (1).
1519. கரடிப்பறையின் பெயர் - - தட்டை. (1)
1520. ஒருகட்பகுவாய்ப் பறையின் பெயர் - - பதலை. (1)
1521.. துந்துபியின் பெயர் - - சகண்டை, முரசு, பணை, சகடம், துந்துபி, தூரியம். (6)
1522.. மற்றுந்ததுந்துபியின் பெயர் - - பேரி, தகணிதம். ஆக (8)
1523. உவகைப்பறையின் பெயர் - - தூரியம். (1)
1524. உடுக்கையின் பெயர் - - துடி. (1)
1525. பம்பைப்பறையின் பெயர் - - தடாரி. (1)
1526. தம்பட்டத்தின் பெயர் - - முரசு, முழவு. (2)
1527. தலைவிரிபறையின் பெயர் - - கத்திரி. (1)
1528. மரக்காற்பறையின் பெயர் - கோதை. 1
1529.பலவகைப்பறையின் பெயர் - பணவம், திண்டிமம், தக்கை, இடக்கை, திமிலை, கண்டிகை, கண்டை, குறடு, பணை, சிந்தூரம், பாண்டிகம், பீலி,கரடிகை, துடிகை, கடுவை, ஊமை, சகடை, கிடுகு. 18
1530. வாச்சியப்பொதுப் பெயர் - தூரியம், உழவம், வைரம், கோடணை , முரசு, பீலி, முருடு, தடாரி, இயம், பணை. 10
குடை வகை.
1531. குடையின் பெயர் - கவிகை, சத்திரம், பிச்சம், கவிப்பு, ஆதபத்திரம், தொங்கல். 6
1532. செங்குடையின் பெயர் - மீயை, சிந்தூரம். 2
1533. பீலிக்குடையின் பெயர் - சுழல்.
1534. பீலிக் குஞ்சக் குடையின் பெயர் - தழை, தொங்கல் சமாலம், பிச்சம், குளிரி. 5
ஆயுதவகை.
1535. வில்லின் பெயர் - கோதண் டம்,சிலை, கொடுமரம், கார்முகம், சாபம், துரோணம், தனு. 7
1536. மற்றும்வில்லின் பெயர் - தடி,முனி ,சிந்துவாரம், சராசனம், தவர், வேணு, சார்ங்கம். ஆக 14
1537. நாணின் பெயர் - பூரி, ஆவம், பூட்டு, தொடை, வடம், நரரி, நரம்பு. குணம். 9
1538. நாணினொலியின் பெயர் - மருமராஞ்சம். 1
1539. அம்பின் பெயர் - பகழி, வாளி, தோணி, பாணம், கதிரம், பல்லம், கணை, கோல், சரம், வண்டு, பத்திரம், சிலீமுகம், விசிகம்.உடு. 14
1540. அம்புத்தலையின் பெயர் - உடு. 1
1541. மொட்டம்பின் பெயர் - உதண். 1
1542. அம்புக்குப்பியின் பெயர் - புழுகு. 1
1543. அம்புக்கட்டின் பெயர் - புதை. 1
1544. அம்புக்குதையின் பெயர் - பகழி, புங்கம். 2
1545. அம்புத்திரள்கட்டுங்கயிற்றின் பெயர் - பற்றாக்கை. 1
1546. அம்பறாத்தூணியின் பெயர் - தூணி, புட்டில். 2
1547. மற்றுமம்பறாத்தூணியின் பெயர் - ஆவம், ஆவநாழிகை. 2
1548. குதையின் பெயர் - குலை. 1
1549. அம்பினிறகின் பெயர் - - உடு (1)
1550. பிண்டிபாலத்தின் பெயர் - - பீலித்தண்டு, எஃகம் (2)
1551. நாராசத்தின் பெயர் - - சலாகை (1)\
1552. இருப்புமுள்ளின் பெயர் - - தாறு (1)
1553. கழுமுள்ளின் பெயர் - - கழுக்கடை (1)
1554. வாளின் பெயர் - - நவிர், ஏதி, நாட்டம், கடுத்தலை, நாந்தகம், வசி, கட்கம், வஞ்சம் (8)
1555. மற்றும் வாளின் பெயர் - - மட்டாயுதம், தூவத்தி .ஆக (10)
1556. கூன்வாளின் பெயர் - - கோணம் (1)
1557. சிறுவாளின் பெயர் - - முசுண்டி (1)
1558. கொடுவாளின் பெயர் - - குயம், புள்ளம் (2)
1559. அரிவாளின் பெயர் - - மேற்கூறிய பெயர்கள் அரிவாட்குமாகும். ()
1560. சுழல்படையின் பெயர் - - வட்டம், பாராவளையம் (2)
1561. ஈர்வாளின் பெயர் - - வேதினம், கரபத்திரம். (2)
1562. உடைவாளின் பெயர் - - சுரிகை, பத்திரம், குறும்பிடி (3)
1563. கைவாளின் பெயர் - கண்டம் (1)
1564. கணையத்தின் பெயர் - - எழு, பரிகம். (2)
1565. சூலத்தின் பெயர் - - காளம், நல்வசி, சூலம், கழுமுள், மூவிலை
வேல், முத்தலைவேல், கழுவு (7)
1566. பூங்கருவியின் பெயர் - - சன்னகம் (1)
1567. மழுவின் பெயர் - - பரசு, கணிச்சி, நவியம். (3)
1568. மற்றுமழுவின் பெயர் - பாலம், தண்ணம் ஆக (5)
1569. இலைமூக்கரி கத்தியின் பெயர் - - குளிர், கணிச்சி (2)
1570. கோடாலியின் பெயர் - குடாரம், நவியம் (2)
1571. தோட்டியின் பெயர் - - சரணம், கணிச்சி, அங்குசம் (3)
1572. மற்றுந்தோட்டியின் பெயர் - - கோணம் ஆக (4)
1573. வேலின் பெயர் - - உடம்பிடி, எஃகம், அயில், சத்தி, விட்டேறு, அரணம், ஞாங்கர் (7)
1574. வச்சிராயுதத்தின் பெயர் - - வயிரப்படை, சம்பம், குலிசம், அசனிய (4)
1575. மற்றும் வச்சிராயுதத்தின் பெயர் - - சதகோடி ஆக (5)
1576 தண்டாயுதத்தின் பெயர் - தடி, கதை, சீர் (3)
1577. மற்றுந்தண்டாயுதத்தின் பெயர் - வயிரம், முளை, எறுழ், ஆக (6)
1578. கிளிகடிகருவியின் பெயர் - தழல், தட்டை (2)
1579. குறுந்தடியின் பெயர் - குணில். (1)
1580. ஈட்டியின் பெயர் - இட்டி. (1)
1581. கவணின் பெயர் - கவணை, ஒடிசில், குணில், குளிர் (4)
1582. சிறுசவளத்தின் பெயர் - குந்தம். (1)
1583. பெருஞ்சவளத்தின் பெயர் - குந்தம், தோமரம், பீலி. (3)
1584. சக்கரத்தின் பெயர் - திகிரி, நேமி, ஆழி, எஃகம், வளை, பரிதி, ஒளிவட்டம், சுதரிசனம்
1585. கைக்கட்டியின் பெயர் - கோதை, கைப்புடை. (2)
1586. கைவிடுபடையின் பெயர் - அத்திரம். (1)
1587. கைவிடாப்படையின் பெயர் - சத்திரம். (1)
1588. சுவரகழ்கருவியின் பெயர் - கன்னம். (1)
1589. தறிகைக்கும் உளிக்கும் பெயர் - கணிச்சி. (1)
1590. கைவேலின் பெயர் - கப்பணம், தோமரம். (2)
1591. கயிற்றின் பெயர் - பாசம், கச்சை, நாண், வடம், பழுதை, தாமம், இரச்சு, தாம்பு (8)
1592. தாமணியின் பெயர் - கண்ணி, தாம்பு. (2)
1593. வலைக்கயிற்றின் பெயர் - சாலம். (1)
1594. அஞ்சனமெழுதுங்கருவியின் பெயர் - கோல். (1)
1595. எழுதுங்கருவியின் பெயர் - கண்டம், ஊசி, ஆணி. (3)
1596. ஊசியின் பெயர் - சூசி. (1)
1597. ஊசித்தொளையின் பெயர் - பாசம், துன்னம். (2)
1598. நுனியின் பெயர் - நுதி, நுனை. (2)
1599. முசுண்டியின் பெயர் - தானை, படை, முற்கரம். (3)
1600. இருப்புலக்கையின் பெயர் - முசலம். (1)
1601. சங்கிலியின் பெயர் - துவக்கு, தொடர், இடங்கணி. (3)
1602. பற்றிரும்பின் பெயர் - கற்பொறி, அள், வலி. (3)
1603. கூர்மையின் பெயர் - - வயிரம், வள், வசி, வை,அயில், நிசிதம், அள், பூ, ஆர். (9)
1604. ஆயுதப்பொதுப் பெயர் - - தானை, படை, படைக்கலம், கருவி, எஃகு, வேல். (6)
1605. மற்றும் ஆயுதப்பொதுப் பெயர் - - துப்பு, ஏதி, சுதன்மம். ஆக (9)
1606. படையுறையின் பெயர் - - தட*து, கருவிப்புட்டில். (2)
செயற்கைவகை.
1607. கவசத்தின் பெயர் - - ஆசு, தசனம், சடாரி, அரணம், பாசம், கண்டம், பருமம், கச்சை, சாலிகை. மாடிகை, கந்தளம், பாரம், மேழகம், கசை, மெய்புகுகருவி, சடாரி. (16)
1608. மற்றுங்கவசத்தின் பெயர் - - அந்தளம், அபரம், சுரிகை. ஆக (19)
1609. கேடகத்தின் பெயர் - - கேடகம், வட்டம், தட்டி, கடகம், வேதிகை, கடுகு, பலகை. (7)
1610. மாவட்டணத்தின் பெயர் - - தட்டியம், பலகை, தட்டு. (3)
1611. தோற்பலகையின் பெயர் - - தோற்பரம், தட்டு, தோல். (3)
1612. யானைப்புரசைக்கயிற்றின் பெயர் - - தூசு, கவடு. (2)
1613. யானைமுகபடாத்தி பெயர் - - சூழி, படம். (2)
1614. மற்றும்யானைமுகபடாத்தின் பெயர் - - மந்தனம். ஆக (3)
1615. யானைகட்டுந்தறியின் பெயர் - - ஆளானம், வெளில். (2)
1616. யானைக்கச்சையின் பெயர் - - கண்டம். (1)
1617. யானைமேற்றவிசின் பெயர் - - இலகடம், பலகாரம். (2)
1618. மற்றும்யானைமேற்றவிசின் பெயர் - - மணை, பலகை. ஆக (4)
1619. குதிரைக்கலணையின் பெயர் - - பருமம், பண், படை, பல்லணம், பரம். (5)
1620. மற்றும்குதிரைக்கலணையின் பெயர் - - சூழி. ஆக (6)
1621. குதிரையங்கவடுயின் பெயர் - கச்சம், படி. (2)
1622. குதிரைச்சம்மட்டியின் பெயர் - மத்திகை, கோல். (2)
1623. குதிரைக்கயிற்றின் பெயர் - வற்கம், வாய்வட்டம், குசை. (3)
1624. குதிரைக்கடிவாளத்தின் பெயர் - கலியம், மூட்டு, கிராம், கலினம், கறுழ். (5)
1626. கலப்பையின் பெயர் - படை, அலம், தொடுப்பு, படைவாள், நாஞ்சில, இலாங்கலி, ஆலம், உழுபடை. (8)
1627. மற்றும்கலப்பையின் பெயர் - கலனை. (9)
1628. மேழியின் பெயர் - கொடுநுகம். (1)
1629. குறுந்தறியின் பெயர் - போதிகை. (1)
1630. வேள்வித்தறியின் பெயர் - யூபம். (1)
1631. தூணின் பெயர் - பெயர்தாணு, கால், கம்பம், தம்பம், ஆளானம், மதலை, எழு, வெளில், தறி, கந்து. (10)
1632. தொழுவின் பெயர் - தோழம். (1)
1633. யானைத் தோட்டியின் பெயர் - குடாரி, அங்குசம், தோட்டி, கோணம், யானைவணக்கி. (5)
1634. அடைகுரட்டின் பெயர் - பட்டடை. (1)
1635. பெருங்குறட்டின் பெயர் - முருடு (1)
1636. சம்மட்டியின் பெயர் - கூடம். (1)
1637. சுட்டுக்கோலின் பெயர் - ஆணி. (1)
1638. கொழுவின் பெயர் - கோல். (1)
1639. ஒண்டியின் பெயர் - ஊற்றாணி. (1)
1640. பாரைக்கோலின் பெயர் - மீன்குத்தி. (1)
அக்குரோணிவகை.
1641. பதாதியென்பது - ஓரியானையும், ஓர்தேரும், மூன்றுபரியும், ஐந்து காலாளுங் கொண்டது.
1642. சேனாமுகமென்பது - பதாதிமூன்றுபங்குகொண்டது.
1643. குமுதமென்பது - சேனாமுகமூன்றுபங்குகொண்டது.
1644. கணகமென்பது - குமுதமூன்றுபங்குகொண்டது.
1645. வாகினியென்பது - கணகமூன்றுபங்குகொண்டது.
1646. பிரளயமென்பது - வாகினிமூன்றுபங்குகொண்டது.
1647. சமுத்திரமென்பது - பிரளய மூன்று பங்குகொண்டது சமுத்திரம்.
1648. சங்கமென்பது - சமுத்திரமூன்றுபங்குகொண்டது.
1649. அநீகமென்பது - சங்கமூன்றுபங்குகொண்டது.
1650. அக்குரோணியென்பது - அநீகம்மூன்றுபங்குகொண்டது.
வெள்ளவகை.
1651. அக்குரோணி எட்டுப்பங்குகொண்டது - ஏகம்.
1652. ஏகம் எட்டுப்பங்குகொண்டது - கோடி.
1653. கோடிஎட்டுப்பங்குகொண்டது - சங்கம்.
1654. சங்கம்எட்டுப்பங்குகொண்டது - விந்தம்.
1655. விந்தம்எட்டுப்பங்குகொண்டது - குமுதம்.
1656. குமுதம்எட்டுப்பங்குகொண்டது - பதுமம்.
1657. பதுமம்எட்டுப்பங்குகொண்டது - நாடு.
1658. நாடுஎட்டுப்பங்குகொண்டது - சமுத்திரம்.
1659. சமுத்திரம்எட்டுப்பங்குகொண்டது - வெள்ளம்.
இல்லணிவகை.
1660. கருமபூமியியல் - கருமபூமியாவது - உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் என அறுவகைப்படுந் தொழிற் பாகுபாட்டினை யுடையது.
1661. போகபூமியியல் - போகபூமியாவது - பதினாறுவயதுடைய குமரனும்,
பன்னிரண்டுவயதுடைய குமரியுமாய், தம்முளொத்தமரபும் தம்முளொத்த
அன்புமுடையவராகிய தலைவனும் தலைவியும் கற்பகம்போலச் செல்வம் வந்து வாய்ப்பத்தாம் செய்ததவங்காறும் அப்பூமியில் இன்ப நுகர்வது.
1662. ஆசிரிர்கூற்று - - அந்தணர்க்குரிய வேதத்திற்கூறிய பிரம முதலிய எட்டு வகைக்குட்பட்ட கல்யாணத்தில் ஒருவகைமணமுடையவராய் அவர்கள் வாழும் இல்வாழ்க்கைக்குரிய பொருள்களுள் முன்பு சொல்லா தொழிந்தவைகளை இங்கே கூறுவன்.
1663. கட்டிலின் பெயர் - - பாரி,மஞ்சம், பரியங்கம், பாண்டில். (4)
1664. விசியின் பெயர் - - அரி. (1)
1665. பீடத்தின் பெயர் - - பீடிகை, தவிசு, விட்டரம். (3)
1666. சிங்காதனத்தின் பெயர் - - பத்திராதனம். (1)
1667. உரலின் பெயர் - - கறை, உலூகலம், திட்டை. (3)
1668. உலக்கையின் பெயர் - - முசலம், தடி, உரோங்கல். (3)
1669. உறியின் பெயர் - - சிமிலி, தூக்கு, சிக்கம், சிதர். (4)
1670. ஊஞ்சலின் பெயர் - - ஊசல், தூரி. (2)
1671. ஏணியின் பெயர் - - இறைவை, கடவை. (2)
1672. கண்ணேணியின் பெயர் - - மால்பு. (1)
1673, அளவையின் பெயர் - - கச்சம், கடன். (2)
1674. மரக்காலின் பெயர் - - அம்பணம், தூம்பு, கால். (3)
1675. தூக்குக்கோலின் பெயர் - - நிறை, கட்டளை, வாணிகன், நிறுப்பான், துலை, கோல். (6)
1676. கொத்தளிப்பாயின் பெயர் - - ஆரை. (1)
1677. புற்பாயின் பெயர் - - சாப்பை. (1)
1678. பிரப்பம்பாயின் பெயர் - - சாதி. (1)
1679. தோற்பாயின் பெயர் - - சருமம். (1)
1680. தடுக்கின் பெயர் - - தவிசு. (1)
1681. குழாயின் பெயர் - - தண்டு. (1)
1682. பூந்தட்டின் பெயர் - - பீடிகை, படலிகை, கோடிகம். (3)
1683. விளக்குத்தண்டின் பெயர் - - கௌசிகம், மல்லிகை, கம்பம், மத்திகை, தீபம். (5)
1684. முறத்தின் பெயர் - - சின்னம், தட்டு, சேட்டை முச்சில். (4)
1685. சுளகின் பெயர் - - சூர்ப்பம். (1)
1686. புட்டிலின் பெயர் - - இறைவை. (1)
1687. கூடையின் பெயர் - வட்டிகை. 1
1688. துடைப்பத்தின் பெயர் - சோதனி, மாறு, அலகு, வாருகோல். 4
1689. நாழியின் பெயர் - வட்டி,குஞ்சம், படி. 3
1690. தயிர்கடைதறியின் பெயர் - வெளில். 1
1691. தயிர்க்கோலின் பெயர் - மத்து. 1
1692. காராம் பியின் பெயர் - அம்பி. 1
1693. நீர்ப்பத்தலின் பெயர் - அம்பணம். 1
1694. கரண்டியின் பெயர் - கரண்டம். 1
1695. அம்மியின் பெயர் - அரைசிலை. 1
1696. அம்மிக்கல்லின் பெயர் - குழவி. 1
1697. சாணையின் பெயர் - சிலாவட்டம். 1
1698. சந்தனமரைகல்லின் பெயர் - சாணம், சிலாவட்டம். 2
1698. நாடாவின் பெயர் - நூனாழி. 1
1700. இறைகூடையின் பெயர் - இடார். 1
1701. சும்மாட்டின் பெயர் - சுமடு,சுடு,சுமையடை. 3
1702. பேராலவட்டத்தின் பெயர் - உக்கம், தாலவிருந்தம். 2
1703 மற்றும்பேராலவட்டத்தின் பெயர் - கால்செய்வட்டம். ஆக 3
1704. சிற்றாலவட்டத்தின் பெயர் - சிவிறி. 1
1705. சாந்தாற்றின் பெயர் - பீலி. 1
1706. சீப்பின் பெயர் - சிக்கம், மயிர்வாரி, கங்கம். 3
1707. திரிகையின் பெயர் - வட்டம், பந்து, தட்டு. 3
1708. பந்தின் பெயர் - கந்துகம். 1
1709. அம்மானையின் பெயர் - அம்மனை. 1
1710. மகளிர்விளையாட்டுக்கலத்தின் பெயர் - ஓரை. 1
1711. கூத்தர்கருவியின்* பெயர் - கலப்பை. 1
1712. நீர்சிதறும்துருத்தியின் பெயர் - சிவிறி. 1
1713. செருப்பின் பெயர் - தொடுதோல், கழல் 2
1714. மிதியடியின் பெயர் - பாதுகை, பாவல். 2
1715. மிதியடியின்மேலிட்டகொட்டையின் பெயர் - குடை, கல்லை. (2)
1716. உலைத்துருத்தியின் பெயர் - உதி, அத்திரி, சிவை. (3)
1717. கொல்லுலைமூக்கின் பெயர் - குருகு, சிவை. (2)
1718. சுண்ணச்சாந்தின் பெயர் - சுதை, களபம். (2)
1719. நெருப்புறுவிறகின் பெயர் - ஞெகிழி, கொள்ளி. (2)
1720. விறகின் பெயர் - இந்தனம், காட்டம், துவர். (3)
1721. ஓமவிறகின் பெயர் - சமிதை. (1)
1722. அரிவாண்மணையின் பெயர் - புள்ளம், கூர்வாயிரும்பு. (2)
1723. சுக்கின் பெயர் - நாகரம், சுண்டி. (2)
1724. மிளகின் பெயர் - திரங்கல், கலினை, கோளகம், மிரியல், காயம், மரீசம், கறி. (7)
1725. மஞ்சளின் பெயர் - நிசி, அரிசனம், பீதம், காஞ்சனி, அரித்திரம் (5)
1726. அரிசியின் பெயர் - அரி, வீயம், தண்டுலம். (3)
1727. தவிட்டின் பெயர் - முட்டை, முடை, பொதி. (3)
1728. பெருங்காயத்தின் பெயர் - இங்கு. (1)
1729. குங்குலியத்தின் பெயர் - குக்கில். (1)
1730, கடுகின் பெயர் - ஐயவி. (1)
1731. உப்பின் பெயர் - இலவணம். (1)
1732. பருப்பின் பெயர் - முதிகை, முற்கம். (2)
1733. அரக்கின் பெயர் - அரத்தம், துப்பு. (2)
1734. செத்தையின் பெயர் - காடு, துரால், மயல். (3)
1735. பாடையின் பெயர் - வெள்ளில், ஆசந்தி. (2)
1736. தாழியின் பெயர் - அகளம், சாடி, பதலை, தளம். (3)
1737. நீர்ச்சாலின் பெயர் - நிறை, வட்டம், இடங்கர். (3)
1738. கொப்பரையின் பெயர் - கொப்பரி, கடராம், தசும்பு. (3)
1739. குடத்தின் பெயர் - கடம், இடங்கர், தாழி, இறங்கர், குணம், இரும்பை, கும்பம், குடங்கர், குடந்தம், கலசம், இடக்கர். (11)
1740. மிடாவின் பெயர் - கரீரம், குழிசி, முகை, தடா. (4)
1741. பானையின் பெயர் - குண்டம், மிடா, குழிசி. (3)
1742. தயிர்கடைதாழியின் பெயர் - குடார், மந்தினி. (2)
1743. கரகத்தின் பெயர் - கர்க்கரி, சிரகம், கன்னல். (3)
1744. மட்கலத்தின் பெயர் - கடிஞை, பாத்திரம். (2)
1745. தகழியின் பெயர் - இடிஞ்சில், பாண்டில். (2)
1746. குடுவையின் பெயர் - குண்டம். (1)
1747. சட்டியின் பெயர் - விசளை. (1)
1748. அகலின் பெயர் - சராவம், சுத்திகை, இடிஞ்சி. (3)
1749. கொள்கலத்தின் பெயர் - இடுங்கலம், பாண்டம். (2)
1750. வெற்றிலையின் பெயர் - நாகவல்லி, தாம்பூலம். (2)
1751. பாக்கின் பெயர் - கோலம், துவர்க்காய், பாகு. (3)
1752. சுண்ணாம்பின் பெயர் - சுண்ணம், நீறு. (2)
1753. திருநீற்றின் பெயர் - பூதி, ஓமப்பொடி, விபூதி காப்பு, புண்ணியசாந்தம்,
வெண்டாது. (6)
1754. சாணியின் பெயர் - புண்ணியசாந்தம், சாணாகம். (2)
1755. சாம்பலின் பெயர் - அடலை, வெண்பலி. (2)
1756. பெட்டியின் பெயர் - மஞ்சிகம். (1)
1757. பேழையின் பெயர் - மஞ்சிகை. (1)
1758. அணிகலச்செப்பின் பெயர் - கண்டிகை, பீடிகை, காண்டம், கடிப்பம், கோடிகம். (5)
அநுபோகவகை முற்றிற்று.
------------
பிங்கலநிகண்டு - பெயர்ப்பிரிவு
ஏழாவது - பண்பிற்செயலிற்பகுதிவகை.
உள்ள நல்வகை.
1759. குணத்தின் பெயர் - மாலை, பெற்றி, மரபு, கிழமை, பால், விதி, பான்மை, இயல்பு, தகவு, தகுதி, தகைமை, தன்மை, பரிசு, படி, முறை, பண்பு, நிலை, வண்மை, நீர், சால்பு, கொள்கை. (21)
1760. உயர்வின் பெயர் - உவப்பு, புரை, சேண், உன்னதம், துங்கம், நிவப்பு, மேடு, நீள், வரி, பிறங்கல், ஏந்தல், ஒழுகல், போகல், ஓச்சல், ஓங்கல், வார்தல், உறை. 17
1761. வலியின் பெயர் - முரண், மறம், முன்பு, நோன்மை, உரம், பாழி, ஊக்கம், மதுகை, முடலை, உம்பல், மூரி, தோற்றம், மிடல், மள்ளம், கூளி, ஈடு, திறம், எழில், எறுழ், திண்மை, வயம், விறல், மைந்து, துப்பு, மீளி, அடல், தா, ஆண்மை, ஆற்றல், கோள், இகல், மொய்ம்பு, மதன், கலி. (34)
1762. மாட்சிமையின் பெயர் - மாணல், மாண், சால்பு, மதன், ஆன்றல், வாய்த்தல். (6)
1763. கொழுமையின் பெயர் - செழுமை, வளமை, கொழுப்பு. (2)
1764. குளிரின் பெயர் - நளி, பனி, சீதம், தண், சீதளம், நளிர். (4)
1765. செவ்விதின் பெயர் - செவ்வை, செப்பம், செம்மை, செவ்வன். (4)
1766. அறிவின் பெயர் - உணர்வு, காட்சி, உரன், மேதை, தெளிவு, புலன், தெருட்சி, போதம், புத்தி, ஞானம். (10)
1767. வெற்றியின் பெயர் - வலன், கொற்றம், வாகை, முல்லை, சயம், ஆடு, புகல், படினம், விசயம், வெற்றம், வென்றி. (11)
1768. செல்வத்தின் பெயர் - சீர், வெறுக்கை, விபவம், திரு, மா, ஆக்கம், வாழ்க்கை, பொறி. (8)
1769. பற்றின் பெயர் - பரிவு, ஆர்வம், ஈரம். (3)
1770. அன்பின் பெயர் - அளி, நார், சங்கம், நேயம். (4)
1771. மற்றுமன்பின் பெயர் - பாசம். ஆக (5)
1772. அருளின் பெயர் - தகவு, கருணை, இரக்கம், தயவு, கிருபை, அபயம். (6)
1773. மனத்தின் பெயர் - முன்னம், அகம், உள்ளம், உன்னம், இதயம், நெஞ்சு, உள். (7)
1774. குறிப்பின் பெயர் - சிந்தை, நினைவு, தெளிவு, தியானம், இங்கிதம், கருத்து, எண்ணம். (7)
1775. மற்றுங்குறிப்பின் பெயர் - நாட்டியம். ஆக (8)
1776. குறித்தலின் பெயர் - கண்ணல், நுதலல், காணல், புகறல், எண்ணல், பேணல், கருதல், சுட்டல், உன்னல். (9)
1777. வரையறுத்தலின் பெயர் - குணித்தல், கணித்தல், குறித்தல், மதித்தல். (4)
1778. தேடலின் பெயர் - நாடல், நேடல். (2)
1779. மற்றுந்தேடலின் பெயர் - கூடல், கையரிக்கொளல். ஆக (4)
1780. நினைத்தலின் பெயர் - உன்னல், படர்தல், ஊழத்தல், கருதல், முன்னல், அறிதல், வலித்தல், சிந்தித்தல், எண்ணல். (9)
1781. ஏமாப்பின் பெயர் - செம்மாப்பு. (1)
1782. இறுமாப்பின் பெயர் - ஏக்கழுத்தம். (1)
1783. களிப்பின் பெயர் - மதர்ப்பு, மதர்வை, மதம், தருக்கு, ஏமம், பெருமிதம், செருக்கு. (7)
1784. இன்பத்தின் பெயர் - நகை, ஏமம், நயம், மகிழ்ச்சி, சுகம், கடி, தொய்யல். (7)
1785. பேரின்பத்தின் பெயர் - அகமலர்ச்சி, ஆநந்தம். (2)
1786. சுகத்தின் பெயர் - சந்தம், தருமம், அழகு, மகிழ்வு. (4)
1787. தெளிவின் பெயர் - தெருள், மானவு, உணர்வு, தேறல், தேற்றம், துணிவு. (6)
1788. நயத்தின் பெயர் - நறுமை, விழுப்பம், நன்னர். (3)
1789. நன்மையின் பெயர் - உறுதி, யாணர், ஒண்மை, உத்தமம், நன்றி, சேடு, நன்று. (7)
1790. பொறுத்தலின் பெயர் - சமித்தல், நோன்றல், கமித்தல் (3)
1791. முயற்சியின் பெயர் - ஊக்கம், இயற்றி, ஆள்வினை, உஞற்று, தாள், துப்பு. 6
1792. உற்சாகத்தின் பெயர் - உஞற்று, தாள் வினை, துப்பு, ஊக்கம். 4
1793. இலாபத்தின் பெயர் - பலன், ஊதியம், பயன், ஆக்கம், பேறு, பலித்தல். 6
1794. ஒற்றுமையின் பெயர் - ஒருமை, குறிப்பு. 2
1795. துணையின் பெயர் - இணை, துப்பு, சகாயம். புகல். 4
1796. தவத்தின் பெயர் - நோன்பு. 1
1797. மற்றும்தவத்தின் பெயர் - உவ்வு. ஆக 2
1798. நல்வினையின் பெயர் - தானம், அறம், தருமம், சீலம், அருள், மங்கலம், சுபம், சுகிர்தம், புண்ணியம், பாக்கியம். 10
1799. அருச்சனையின் பெயர் - ஆராதனை, வழிபாடு. 2
1800. பூசையின் பெயர் - பூசனை. 1
1801. யாகத்தின் பெயர் - சித்து, வேள்வி, கிருது. 3
1802. வெறுப்பின் பெயர் - ஒல்லாமை, வேண்டாமை, முனிவு, ஒறுத்தல், உவர்த்தல். 6
1803. துறவின் பெயர் - துறத்தல், நிவிர்த்தி. 2
1804. உறவின் பெயர் - உறவி, விருப்பம்.
1805. நாணத்தின் பெயர் - வெட்கம், இலச்சை, வெள்கல், சமழ்த்தல், வட்கல், இருளை, மானம், உட்கு. 8
1806. செல்வப்பகுதியின் பெயர் - மல், தடம், வளம், வாரி. 4
1807. நிலைபேற்றின் பெயர் - துஞ்சல், மன்னல், திதி. 3
1808. மற்றும் நிலைபேற்றின் பெயர் - திறம், ஏணம், தாணு. ஆக 6
1809. மெய்யின் பெயர் - சாதம், வாய்மை, சத்தியம், உண்மை, நீதி, நிலைமை, நியாயம், நிச்சயம், வாய், திடம், ஆணை, மன்றம், சரதம், வேளாண்மை, பட்டாங்கு. 15
1810. பிழைப்பின் பெயர் - இழுக்கம், வழுக்கு, தப்பல், உஞற்று, பணைத்தல். 5
1811. ஆதலின் பெயர் - நந்துதல். (1)
1812. ஏவலின் பெயர் - ஆணை. (1)
1813. ஒற்றின் பெயர் - வேய். (1)
1814. செய்தியின் பெயர் - செயல், செய்கை, செய்தல். (3)
1815. ஒழுக்கத்தின் பெயர் - சரியை, ஆசாரம், நடை, இயல்பு. (4)
1816. நீதியின் பெயர் - நெறி, நியாயம், தருமம். (3)
1817. மற்றும்நீதியின் பெயர் - விதி, நிழல். (5)
1818. உள்ளின் பெயர் - அகணி, அகடு, அகம், கோட்டை. (4)
1819. சூழ்ச்சியின் பெயர் - உசா, தேர்ச்சி, விசாரம், யாப்பு, எண்ணம் மந்திரம், நூல். (7)
1820. மற்றுஞ்சூழ்ச்சியின் பெயர் - ஆய்தல், தேர்தல். (9)
1821. உண்டாதலின் பெயர் - விளைதல், பூத்தல், படுதல். (3)
1822. தோற்றுதலின் பெயர் - பிறப்பித்தல், படைத்தல், நாறல், வெளிப்படல், தோற்றல், உருத்தல். (6)
1823. காத்தலின் பெயர் - நிலைபெறுத்தல், புரத்தல், அளித்தல், காப்பு, நோக்கல், திதி. (6)
1824. பாதுகாத்தலின் பெயர் - போற்றல்,ஓம்பல், நோக்கல். (3)
1825. காவலின் பெயர் - சிறை, அரண், சேமம், செயல், காப்பு, வேலி, கடி, தட்டி, கட்டு, தட்டு. (10)
1826. கொள்கையின் பெயர் - தெவ்வு, வரைதல், தேர்தல்,ஏற்றல். (4)
1827. மேற்கோளின் பெயர் - பூட்கை. (1)
1828. உய்தலின் பெயர் - ஆற்றுதல், வலிதல். (2)
1829. தூய்மைசெய்தலின் பெயர் - உவளித்தல். (1)
1830. உடன்பாட்டின் பெயர் - வலித்தல், ஒட்டல், நேர்தல், இசைதல். (4)
1831. விதிமுறையின் பெயர் - நியமம். (1)
1832. குற்றலின் பெயர் - நவித்தல், துப்பல், துற்றல். (3)
1833. அவியலின் பெயர் - அவைத்தல், அவித்தல். (2)
1834. ஒட்டுதலின் பெயர் - அணவல். (1)
1835. நெரிதலின் பெயர் - தெள்ளுதல். (1)
1836. தெளிதலின் பெயர் - தேறுதல். (1)
1837. கேளாவென்றலின் பெயர் - வேளா. (1)
1838. தவிர்தலின் பெயர் - வாளா. (1)
1839. தேற்றத்தின் பெயர் - மன்ற, தேறு. (2)
1840. ஆமென்னும் பெயர் - அன்றெனல், இன்றெனல். (2)
1841. சரண்புகலின் பெயர் - மறை, புகல். (2)
1842. எண்ணலின் பெயர் - கரணம், கணிதம், கணக்கு. (3)
1843. நிமித்தத்தின் பெயர் - சோதனம், சோதிடம். (2)
1844. உடனிகழ்வின் பெயர் - ஒடு. (1)
1845. பெயரின் பெயர் - அபிதானம், ஆக்குவயம், நாமம். (3)
1846. ஆதாரநிலையின் பெயர் - கந்து, ஆலம்பம், ஆலம்பனம், தஞ்சம்,தூவு.(5)
1847. பேரறிவின் பெயர் - முதுக்குறைவு, முகரிமை. (2)
1848. உள்ளதுசிறத்தலின் பெயர் - கூர்ப்பு, களிப்பு. (2)
உள்ளத்தின்தீயவகை.
1849. தீவினையின் பெயர் - பவம், பாவம், பாதகம். (3)
1850. தாழ்வின் பெயர் - சாய்ப்பு, இழிவு, தண்மை, தஞ்சம். (4)
1851. கூம்புதலின் பெயர் - சாம்புதல், ஒடுங்குதல். (2)
1852. அச்சத்தின் பெயர் - உரும், உருவு உட்கு, பனிப்பு, வெருவு, புலம்பு, வெறி, பயம், பிறப்பு, கொன், பேம், நாம், வெறுப்பு, சூர், பீர், வெடி, கவலை, அடுப்பு, கலக்கம். (19)
1853. குலைதலின் பெயர் - ஓடல்,வெய்துறல், உலமர,ல் தேங்கல், கூசல், திட்கல், குலையல், துணுக்கெனல், வெள்கல், துண்ணெனல், தெருமரல், அளுக்கல், ஞொள்கல். (13)
1854. நடுக்கத்தின் பெயர் - விதிர்ப்பு, பனிப்பு, விதலை, கம்பம், அதிர்ப்பு, பொதிர்ப்பு, விதப்பு. (7)
1855. கலக்கத்தின் பெயர் - கதனம், துரிதம், பிரமம். (3)
1856. மற்றுங்கலக்கத்தின் பெயர் - வெறி. ஆக (4)
1857. எளிமையின் பெயர் - எண்மை, பரிபவம், இழிதகவு. (3)
1858. மற்றுமெளிமையின் பெயர் - தண்மை. ஆக (4)
1859. பேதைமையின் பெயர் - மடமை, வெறி. மருட்சி. (3)
1860. மாசின் பெயர் - கசடு, மலினம், கறை, அழுக்கு, மலம், களங்கம். (6)
1861. குற்றத்தின் பெயர் - காசு, தவறு, கறை, களங்கம், மாசு, வசை, மறு, வடு, ஆசு, புகர், அரில், களை, ஏசு, பழி, போக்கு, ஏதம், நறை, வண்டு, கடவை, நவை, மிறை, பிழை, விடல், கரில், தோம், தப்பு, துகள், புரை, கோது செயிர், மை. (31)
1862. மற்றுங்குற்றத்தின் பெயர் - இழுக்கு, சோர்வு, புன்மை, இகழ்ச்சி, வழுக்கு, கீழ், மறவி, பொல்லாங்கு, பொச்சாப்பு. (40)
1863. வெம்மையின் பெயர் - உருமம், கருமம், உருப்பம், வெப்பம், அழனம், கோரம், அழல். (7)
1864. தோல்வியின் பெயர் - நிலையழிவு, ஓட்டம், பின்னிடல், தோல்வு தொலைதல், தோற்றல், அஞ்சல். (7)
1865. கொடுமையின் பெயர் - கடுமை, கோடணை, சண்டம், கடினம், கூரம். (5)
1866. மற்றுங்கொடுமையின் பெயர் - உக்கிரம், கோரம், உறைப்பு, பூதி, வக்கிரம், வஞ்சம், சடம், கரில். ஆக (13)
1867. மறப்பின் பெயர் - வழுக்கு, மறவி, அயர்ப்பு, இவறல், மறல். (5)
1868. வறுமையின் பெயர் - மிசை, குறை, மிடி, தரித்திரம், ஒற்கம், இலம்பாடு, இலாமை, நல்குரவு. (8)
1869. மற்றும்வறுமையின் பெயர் - மறல், இன்மை, நிரப்பு. ஆக (11)
1870. பகையின் பெயர் - முனை, முரண், உறழ்வு, தூவு, படி, தெவ்,துப்பு.(7)
1871. மற்றும்பகையின் பெயர் - இகல், செறல். ஆக (9)
1872. வெகுளியின் பெயர் - கறுவம், கோபம், கலாம், மறம், குரோதம், வேரம்.(6)
1873. சினத்தின் பெயர் - முனிவு, செயிர், சீற்றம், வியர்ப்பு. (4)
1874. சினக்குறிப்பின் பெயர் - கறுப்பு, செவப்பு, கஞறல், கன்றல், வியர்ப்பு, வெதிர்ப்பு, புழுங்கல் ,கொதித்தல், வெய்துறல், புகைதல், வயிரம். (11)
1875. தணியாக்கோபத்தின் பெயர் - கோம்பல், கொந்தல், கனிதல், வெம்பல், வெதும்பல். (5)
1876. பெருஞ்சினத்தின் பெயர் - உடற்றல், சீறல், உருத்தல், காய்தல், முனைதல், விடைத்தல், பைத்தல். (7)
1877. தணியாமுனிவின் பெயர் - சலம், வயிரம், செற்றம். (3)
1878. இகழ்தலின் பெயர் - எள்ளல், நகுதல், நிந்தை, (3)
1879. வருத்தத்தின் பெயர் - உயவு, அனுக்கம், கவற்சி, உயங்கல், அயர்வு, கசிவு, ஆகுலம், அணங்கு, வயா, அழுங்கல். (10)
1880. குணமின்மையின் பெயர் - சீரணம், சிதம்பு, சீத்தை, செடி. (4)
1881. துக்கத்தின் பெயர் - அல்லல், பீடை, அரந்தை, கோட்டாலை, செல்லல், கலக்கம், சிறுமை, உறுகண், கவ்வை, மம்மர், விழுமம், கவலை, எவ்வம், இன்னல், இடும்பை, இடுக்கண், படர், சூர், பைதல், பருவரல், பழங்கண், இடர், அஞர், ஏதம், யாதனை, இட்டளம், கலக்கம், புன்கண், பனி, நோய், கம்பலை, அலக்கண், வெய்துறல், அழுங்கல், பீழை, அலமரல், நடலை, உறுவல், வெறுப்பு, கிலேசம், துயர் துனி, துன்பம். (36)
1882. மற்றுந்துக்கத்தின் பெயர் - துரிசு, அல்லகண்டம், துரால், சிலுகு, அலந்தலை. (48)
1883. சந்தேகத்தின் பெயர் - அனுமானம், சங்கை. (2)
1884. மற்றுஞ்சந்தேகத்தின் பெயர் - ஐயுறல், கடுத்தல். ஆக (4)
1885. மயக்கத்தின் பெயர் - களிப்பு, மறம், கழுமல், பிறப்பு, மால், மறல், மையல், மான்றல், இருள், மைந்து, ஏமம், இளமை, மருள், மயர்வு. (14)
1886 மற்றுமயக்கத்தின் பெயர் - மோகம், உணராமை, உன்மத்தம்,களன். ஆக(18)
1887. தீதின் பெயர் - தீங்கு, கோள், ஊறு. (3)
1888. மற்றுந்தீதின் பெயர் - மாயம், அந்தரம். ஆக (5)
1889. பொய்யின் பெயர் - படிறு, மிச்சை, பெட்டு, பழுது, வழுது, தத்திகாரம், மாயம், பொக்கம், பிசி, நடலை. (10)
1890. பொறாமையின் பெயர் - நோனாமை, வக்கிரம், அழுக்காறு, அவ்வியம், கூரம். (5)
1891 சோம்பலின் பெயர் - தூங்கல், அசைதல், அலைசுதல். (3)
1892 மற்றுஞ்சோம்பலின் பெயர் - சடம், மடி, தள்ளாவாரம் ஆக (6)
1893 வஞ்சனையின் பெயர் - கூடம், புள்ளுவம், குத்திரம், கஞ்சம், மாயை, தொடு, பட்டிமை. (7)
1894 வேறுபாட்டின் பெயர் - வீற்று, விகிர்தம், விகடம், விரூபம்,
வேற்றுமை விபரீதம் (6)
1895 மற்றும்வேறுபாட்டின் பெயர் - திரிபு, விள்ளல். ஆக (8)
1896 தளர்வின் பெயர் - எளிமை - உடைதல், இட்டளம். (3)
1897 தனிமையின் பெயர் - கேவலம், புலம்பு (2)
1898 பாவத்தின் பெயர் - தீவினை, மறம், செடி, அகம், துரிதம், கலுடம் (6)
1899 விருப்பத்தின் பெயர் - மாதர் காதல், வயாவு வேட்கை, ஆதரவு, ஆசை, அவா, ஆர்வம், நச்சு, நசை, விழைவு, நயப்பு, காமம், இச்சை, பெட்பு, மோகம், ஏட்டை, வெப்பம், பற்று, விழுப்பம், வீழ்தல், இவர்தல், கவர்தல், வேண்டல், பேணல், வேட்டல், தாழ்தல், வெஃகல் (28)
1900. வேட்கைப்பெருக்கத்தின் பெயர் - வேணவா (1)
1901 நோயின் பெயர் - மடங்கல், பிணி, மடி, மாரி, பையுள், அணங்கு, வியாதி, அவலம், நீழல், உறுகண், புன்கண், உரோகம், சூர். (13)
1902 மற்றுநோயின் பெயர் - சிறுமை குத்து ஆக (15)
1903 வேதனைநோயின் பெயர் - ஈதி வாதை (2)
1904 காமநோயின் பெயர் - விரகம், மதனம், காமக்கவலை (3)
1905 களவின் பெயர் - கரப்பு, கட்டல், பட்டிமை, சோர்வு, கயவு, படிறு, கரவடம். (7)
1906 பயனின்மையின் பெயர் - வறிது, கொன், விழல், விதா, அல்லவை. (5)
1907 மரணத்தின் பெயர் - முஞ்சல், துவன்றல், முடிதல், விளிதல், துஞ்சல், தவறல், இறப்பு, பொன்றல், வீய்வு, உலப்பு, வீடல், மாய்தல், மாண்டல், மரித்தல், சாவு (15)
1908 மற்றுமரணத்தின் பெயர் - =இல்லெனல் ஆக (16)
1909 சாய்தலின் பெயர் - இரிதல், நெரிதல், இடைதல், உடைதல், சரிதல். (5)
1910. பிணக்கின் பெயர் - அரில், மறல், அபரம், துவக்கு. (4)
1911. முறிதலின் பெயர் - ஒடிதல், ஒசிதல், ஞெமிர்தல், இடிதல், முரிதல், இறுதல். (6)
1912. கேட்டின் பெயர் - வழுவு, சிதைவு, மங்குதல், சேதம், அழிவு, சிந்துதல், நந்துதல், முரிதல், இறுதல், சுதம், மடி, ஒருங்கல். (12)
1913. கொலையின் பெயர் - கோள், அணங்கு, வேட்டம். (3)
1914. வெளிற்றின் பெயர் - வெண்மை, தண்மை. (2)
1915. புன்மையின் பெயர் - நவிரம். (1)
1916. இரங்குதலின் பெயர் - இனைதல், எற்றித்தல். (2)
1917. அருவருப்பின் பெயர் - வாலாமை, சூதகம், பயிர்ப்பு. (3)
1918. ஒழிதலின் பெயர் - ஓவு, மன். (2)
1919. மற்றும்ஒழிதலின் பெயர் - ஏனை. ஆக (6)
1920. கலங்குதலின் பெயர் - கதுவு, கலுழ்தல், மலங்குதல். (3)
1921. குலுங்குதலின் பெயர் - குலைதல், நடுங்குதல். (2)
1922. வாட்டத்தின் பெயர் - தேம்பல், குழைதல், அனுங்கல், முளி, வாடல், தளர்தல். (6)
1923. குழைதலின் பெயர் - சுனைதல், களைதல். (2)
1924. மாறுபாட்டின் பெயர் - தெற்று. (1)
1925. நிலையின்மையின் பெயர் - வம்பு (1)
1926 மேன்மையின் பெயர் - கயவு, சாயல், ஞெள்ளல். (3)
1927. மனக்கோட்டத்தின் பெயர் - அழுக்காறு, மனத்தழுக்கு, அவ்வியம். (3)
மெய்வகை.
1928. பருமையின் பெயர் - பரூஉ, பீனம், தடித்தல். (3)
1929. இளைப்பின் பெயர் - தேம்பல், பழங்கண், சிங்கல், தேய்வு, நாம்பல், ஞொள்கல், மெலிவு. (7)
1930. வெண்மையின் பெயர் - சுவேதம், தவளம், சுக்கிலம், குருத்து, விளர், வால், வெள்ளை, நரை, சிதம். (9)
1931. மற்றும்வெண்மையின் பெயர் - குருகு, பால், சுப்பிரம். ஆக(12)
1932. பொன்மையின் பெயர் - பீதகம், பசப்பு, பிங்கலம், அரிதம், காஞ்சனி (5)
1933 செவப்பின் பெயர் - அத்து, அருணம், அரத்தம், சேப்பு, சோணம், குருதி, துவர், சிந்தூரம், பூவல், படீரம், சேத்து, அரக்கு, செக்கர், செம்மை, சேந்து, பாடலம், குஞ்சுகம், குலிகம், துப்பு. (19)
1934 பச்சையின் பெயர் - பாசு, பை, அரி, பசுமை, பலாசு, சாமம், அரிதம். (7)
1935 கருநிறத்தின் பெயர் - காளம், காழகம், காளிமம், காரி, மால், மாஇருள் நீலம், அசிதம், கார்,அஞ்சனம், நல்லம், கருள். (13)
1936 புற்கெனுநிறத்தின் பெயர் - கபிலம், குரால், புகர் . (3)
1937 ஒளியின் பெயர் - வெயில், நிலவு, வில், வாள், நிழல், எல், நீமம், நகை, கானல், கிரணம்,கதிர், செடி, சோதி, மின், துணி, அரி, கேழ், கரம், தேசு, கிளர். (20)
1938 மற்றும்ஒளியின் பெயர் - ஆதவம் ஆக (21)
1939 ஒளிவிடுதலின் பெயர் - விளங்குதல், நகுதல், மின்னல், மிளிர்தல், துளங்குதல், நிகழ்தல், சுடர்தல், பிறழ்தல், இலங்கல், வயங்கல், இலகுதல், இமைத்தல், அலங்கல், தயங்கல், அவிர்தல், நிலவல், ஒளிர்தல். (17)
1940 ஒளிமழுங்குதலின் பெயர் - மட்கல், புல்லெனல், மழுங்குதல், அழுங்குதல். (4)
1941 அழகின் பெயர் - ஏர், வனப்பு, எழில், இராமம், காரிகை, மா, அம்மை, கவின், செழுமை, பந்தம், தேசிகம், நோக்கு, அணி, அணங்கு, யாணர், பாணி, மாதர், மாழை, சாயல், வகுப்பு, வண்ணம், வளம், பூ, பொற்பு, சேடு, பொன், சித்திரம், பத்திரம், மாமை, தளிமம், மயம், மஞ்சு, மதன், பாங்கு, அம், சொக்கு, சுந்தரம், தோட்டி, ஐ, ஒப்பு, அந்தம், ஒண்மை, விடங்கம், அமலம், குழகு, கோலம், வாமம், காந்தி, அலங்காரம். (49)
1942 மற்றும்மழகின் பெயர் - கொம்மை, மனோகரம், சாரு . (52)
1943 கட்டழகின் பெயர் - சித்திரம், மனோகரம், சுந்தரம். (3)
1944 நிறத்தின் பெயர் - குரு, கொழுமை, குணம் , **கொழுமை, அரி, சாயல், வருணம், பயப்பு, கறை, கரு. (10)
1945 வடிவத்தின் பெயர் - செண்ணம், படிவம். (2)
1946 வண்ணத்தின் பெயர் - சந்தம் (1)
1947 வளைதலின் பெயர் - குடிலம், தடவு, கூன், கோண், கோட்டம், வசிவு, கோணல், வாங்கல், குலாவல், வளாவல். (10)
1948 இளைமையின் பெயர் - மழவு, முருகு, தருணம், மஞ்சு, குழவு, விளர், கொம்மை, புருவை, கோமளம், போதகம். (10)
1949 முதுமையின் பெயர் - மூப்பு, முரஞ்சுதல், முற்றுதல். (3)
1950 மற்றுமுதுமையின் பெயர் - விளைவு, சாம்பல். ஆக (5)
1951 கலியாணத்தின் பெயர் - வதுவை, மன்றல், மணம், (3)
1952 மற்றுங்கலியாணத்தின் பெயர் - கடி, வேட்டல், கைப்பற்றல். ஆக (6)
1953 கொண்டாடுதலின் பெயர் - குலாவல், பாராட்டு. (2)
1954 அலங்கரித்தலின் பெயர் - புனைதல், மண்ணல், பொற்புறுத்தல், அணிதல், கைசெய்தல். (5)
1955 சிங்காரத்தின் பெயர் - அணி, பொற்பு ,கை, அலங்காரம், ஒப்பனை. (6)
1956 புதுமையின் பெயர் - புதை, புணர், விருந்து, புத்தேள், கடி, நவம் ,நூதனம், கோடகம், வம்பு. (9)
1957 மகளிர்விளையாட்டின் பெயர் - தொடலை, தகுளம். (2)
1958 சூடுதலின் பெயர் - மிலைதல், மலைதல், வேய்தல். (3)
1959 இகுத்தலின் பெயர் - செகுத்தல். (1)
1960 மீளுதலின் பெயர் - திரிதல். (1)
1961 புறத்தின் பெயர் - புறணி, புடம். (2)
1962 பதுங்கலின் பெயர் - பழகல், ஒடுங்கல், பாந்தல். (3)
1963 தங்குதலின் பெயர் - அசைதல், தெவிட்டல், இறுத்தல், ஆர்தல். (4)
1964 மற்றுந்தங்குதலின் பெயர் - வதிதல், வைகல், இறை. ஆக (7)
1965 அடக்கத்தின் பெயர் - முடக்கம், நொறில், மடங்கு, முணங்கு, ஒடுக்கம், ஒருங்கு. (6)
1966 கூடலின் பெயர் - விழைச்சு, பிணைச்சு ,விழைவு, மைதுனம், புணர்ச்சி, அணைதல், கலவி, சையோகம். (8)
1967 மற்றுங்கூடலின் பெயர் - மணத்தல், பயினி. ஆக (10)
1968 பிரிதலின் பெயர் - நீத்தல், தவிர்தல், அகலல், உணர்தல், தணத்த, வல்லி, பகல். (7)
1969 புலத்தலின் பெயர் - புலவி, ஊடல். (2)
1970 புலவிநீடுதலின் பெயர் - துனி. (1)
1971 கலத்தலின் பெயர் - புணர்தல், படிதல், தோய்தல், சார்தல், கலவல், மேவல். (5)
1972 அளவளாவலின் பெயர் - கலாவல், துழாவல், வளாவல், சிவணல், புணர்தல், பொருந்தல். (6)
1973 வணங்கலின் பெயர் - வந்தனை, பணிதல், தண்டன், வணக்கம், பரவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்றல். (10)
1974 சிறைப்படலின் பெயர் - வலைப்படல், தளைப்படல். (2)
1975 சருச்சரைவடிவின் பெயர் - பிணர் (1)
1976 தாழ்தலின் பெயர் - இறைஞ்சல், குரங்கல் (2)
1977 அலைதலின் பெயர் - நடுங்க, ஆஞ்சி, ஞெகிழ்தல், ஞொள்கல், அழுங்குதல், சோம்பு . (6)
1978 சுமத்தலின் பெயர் - பரித்தல், பொறுத்தல், தரித்தல். (3)
1979 ஏறுதலின் பெயர் - எக்கல், இவரல், மீக்கோள். (3)
1980 எதிர்தலின் பெயர் - முட்டல், கிடைத்தல், முடுகல், நேர்தல், ஏற்றல், தலைப்படல். (6)
1981 மீதூரலின் பெயர் - இடங்கழி, நெருங்குதல் . (2)
1982 ஒருங்கின் பெயர் - உடங்கு. (1)
1983 வடுப்படுத்தலின் பெயர் - கதுவாய். (1)
1984 சொறியின் பெயர் - கண்டூதி, தினவு. (2)
1985 பொங்குதலின் பெயர் - பூரித்தல், மிகுதல். (2)
1986 வேர்த்தலின் பெயர் - வியர்ப்பு. (1)
1987 விடுதலின் பெயர் - உயிர்த்தல். (1)
1988 மூடுதலின் பெயர் - போர்வை, மூய்தல், கவித்தல். (3)
1989 பூணலின் பெயர் - புனைதல், ஆர்த்தல். (2)
1990 இயைபின் பெயர் - இயைபு, புணர்ச்சி, இசைப்பு. (3)
1991 மஞ்சனத்தின் பெயர் - நானம். (1)
1992 குளித்தலின் பெயர் - தோய்தல், படிதல், ஆடல், குடைதல், மூழ்கல். (5)
1993 பிறகிடலின் பெயர் - பின்றல். பிறக்கிடல். (2)
1994 கருவுளமைப்பு மெய்படு பருவமும் ஆவன - பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு. (6)
1995 மெய்படுபருவம் - பாளை, பாலன், காளை, இளையோன், விருத்தன். (5)
வாய்வகை
1995 இன்சுவையின் பெயர் - தீம், இரதம். (2)
1996 அழைத்தலின் பெயர் - கேதல், உளைத்தல், இகுத்தல், விளித்தல், மாவெனல், கூவுதல், வாவெனல், மத்தல், கரைதல், ஆகருடணை, அகவல். (11)
1997 சிரிப்பின் பெயர் - மூரல், இளி, முறுவல், நகை, ஆசம், ஆர்ப்பு. (6)
1998 உண்டலின் பெயர் - அயிறல், மிசைதல், அருந்துதல், நுகர்தல்,
துவ்வல், துய்த்தல், துற்றல், துறுவல், ஆர்தல், மாந்தல், கைதொடல். (11)
1999 மற்றும்உண்டலின் பெயர் - பானகம், போனகம். ஆக(13)
2000 குடித்தலின் பெயர் - பருகல், மாந்தல், பானம். (3)
2001 விழுங்கலின் பெயர் - நுங்கல், நுகர்தல். (2)
2002 இயம்பலின் பெயர் - கதை, நுவல், காதை, கிளவி, பனுவல், அறை, பறை, வாணி, கூற்று, மொழி, குயிறல், புகறல், மாற்றம், மறை, நொடி, பரவல், இசை, இயம், பேச்சு, உரை, எதிர்ப்பு. (21)
2003 வாசகத்தின் பெயர் - வசனம், பாசுரம், வார்த்தை. (3)
2004 பதத்தின் பெயர் - பாழி, உரை. (2)
2005 பேசுதலின் பெயர் - இசைத்தல், இறுத்தல், இயம்பல், புகறல், பிதற்றல். (5)
2006 பல்கால்விளம்புதலின் பெயர் - மீதுரை (1)
2007 துதித்தலின் பெயர் - பரவல், வழுத்தல், ஏத்தல், போற்றல், பழிச்சல், வாழ்த்தல். (6)
2008 வாழ்த்தின் பெயர் - ஆசிடை, ஆசி. (2)
2009 சொல்லுதலின் பெயர் - இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல் - கத்துதல், உரைத்தல், கூறல், வழங்கல், குயிலல், புகலல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செப்பல், அதிர்த்தல்,,பணித்தல், சொற்றல், ஆடல். (22)
2010 படித்தலின் பெயர் - பாடல், ஓதல், வாசித்தல். (3)
2011 பெருஞ்சொல்லின் பெயர் - பலரறிசொல் (1)
2012 சிறுசொல்லின் பெயர் - இழிச்சொல், தீச்சொல், பழிச்சொல். (3)
2013. பழிமொழியின் பெயர் - அம்பல், கௌவை, அலர். (3)
2014. திசைச்சொல்லின் பெயர் - தேசிகம். (1)
2015. மறைத்துமொழிகிளவியின் பெயர் - இடக்கர், எக்கர். (2)
2016. சிலரறிந்துதம்முள்தூற்றுதலின் பெயர் - அம்பல். (1)
2017. பலரறிந்துதூற்றுதலின் பெயர் - அலர். (1)
2018. உறுதிக்கட்டுரையின் பெயர் - கழறல், இடித்தல், நெருங்கல். (3)
2019. நயச்சொல்லின் பெயர் - முகமன், சம்மானம், உபசாரம். (3)
2020. குறளைமொழியின் பெயர் - கொடுவாய், பிசுனம், தொடுப்பு, குஞ்சம், கொண்டியம். (5)
2021. அசதியாடலின் பெயர் - நகல், நயக்கிளவி. (2)
2022. நிரம்பாமென்மொழியின் பெயர் - குதலை, மழலை, கொஞ்சல்,
உல்லாபம், மிழலை. (5)
2023. சத்தியத்தின் பெயர் - ஆணை, வஞ்சினம், சபதம். (3)
2024. மற்றுஞ்சத்தியத்தின் பெயர் - சூள், விரதம், சூளுறவு. ஆக (6)
2025. முதுசொல்லின் பெயர் - மொழிமை, மூதுரை, முன்சொல், பழஞ்சொல், பழமொழி. (5)
2026. நன்னிமித்தத்தின் பெயர் - விரிச்சி, வாய்ப்புள். (2)
2027. கதையின் பெயர் - காரணச்சொல். (1)
2028. வினாவின் பெயர் - கடாவல். (1)
2029. எதிர்மொழியின் பெயர் - விடை. (1)
2030. வினாவும்விடையுங்கூடியபொருளின் பெயர் - சல்லாபம். (1)
2031. பாயிரத்தின் பெயர் - அணிந்துரை, பெய்துரை, புனைந்துரை, நூன்முகம், முகவுரை, தந்துரை, புறவுரை. (7)
2032. சத்திபண்ணலின் பெயர் - உமிழ்தல், தெவிட்டல், கான்றல், ஓங்கல், உக்காரம், கக்கல். (6)
2033 மற்றுஞ்சத்திபண்ணலின் பெயர் - அபனம் ஆக (7)
2034 எச்சிலின் பெயர் - மிச்சில், பேளிகை, உச்சிட்டம், விசதம், இழவு. (5)
2035 கொட்டாவியின் பெயர் - ஆவித்தல் (1)
கண்வகை
2036 கண்ணோட்டத்தின் பெயர் - கண்மை, நாகரிகம், பார்வை. (3)
2037 மற்றும்கண்ணோட்டத்தின் பெயர் - கண் ஆக (4)
2038 உற்சவத்தின் பெயர் - சாறு, முருகு, துணங்கறல், விழாவு, சேறு.
2039 தூங்கலின் பெயர் - கனவு, துயில், கண்படை, அனந்தல், படல் நித்திரை, பள்ளி, உறக்கம், துஞ்சல், உறங்கல். (10)
2040 நிரம்பாத்துயிலின் பெயர் - தூங்கல் (1)
2041 அழுகையின் பெயர் - கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி. (3)
2042 மற்றுமழுகையின் பெயர் - அரற்றல், இரங்கல், விம்மல், பொருமல், ஏங்கல், இராவணம். ஆக (9)
2043 துயிலொழிதலின் பெயர் - சாகரம் (1)
2044 கண்பார்வையின் பெயர் - விழித்தல் (1)
2045 கண்மூடலின் பெயர் - சிமிழ்த்தல் (1)
2046 காண்டலின் பெயர் - நோக்கல், தெரிசித்தல், பார்த்தல். (3)
2047 கண்ணுறலின் பெயர் - காட்சி (1)
2048 கண்ணிமையின் பெயர் - இதழ், விளிம்பு. (2)
மூக்கின்வகை
2049 கந்தித்தலின் பெயர் - மணம், முருகு, மன்றல், வாசம், விரை, வதுவை, நானம், வேரி, கடி, தேன், வம்பு, கான், நறை, கந்தம், மோதம், நாற்றம், கமழல், வெறி. (18)
2050 நறுமணத்தின் பெயர் - சுகந்தம். (1)
2051 பெருமணத்தின் பெயர் - பரிமளம் . (1)
2052 மூச்சின் பெயர் - தும்மல், சுவாதம், கொறுக்கை, இரேசகம், பூரகம், கும்பகம், சுவாசம், நிசுவாசம் . (8)
செவிவகை
2053 கல்வியின் பெயர் - உறுதி ,கேள்வி, ஓதி, கலை, பனுவல். (5)
2054 சொன்மாலையின் பெயர் - தோற்றம், சீர், ஒளி, சுலோகம். (4)
2055 புகழின் பெயர் - ஏற்றம், கியாதம், இசை, மெய்ப்பாடு, சீர்த்தி, கீர்த்தி, சொல். ஆக (7)
2056 மற்றும்புகழின் பெயர் - மீக்கூற்று (8)
2057 நூலின் பெயர் - அதிகாரம், பிடகம், ஆரிடம், தந்திரம், பனுவல், ஆகமம், சூத்திரம். (7)
2058 நற்பொருளின் பெயர் - ஞாபகம், பிசி. (2)
2059 வேதத்தின் பெயர் - இருக்கு, சுருதி, மறை, எழுதாக்கிளவி, ஆதிநூல், சாகை, ஆரணம். (7)
2060 முதல்வேதத்தின் பெயர் - பௌடிகம், இருக்கு. (2)
2061 இரண்டாம்வேதத்தின் பெயர் - யசு, தைத்திரியம். (2)
2062 மூன்றாம்வேதத்தின் பெயர் - சாமம், கீதநடை. (2)
2063 நான்காம்வேதத்தின் பெயர் - அதர்வணம். (1)
2064 வேதத்துட்பொருளின் பெயர் - உபநிடதம். (1)
2065 வேதமார்க்கத்தின் பெயர் - வைதிகம் (1)
2066 உதாரணத்தின் பெயர் - இதிகாசம், இலக்கிய, எடுத்துக்காட்டல் . (3)
2067 ஆகமத்தின் பெயர் - ஞானம். (1)
2068 அத்தியாயத்தின் பெயர் - படலம், இலம்பகம், சருக்க, காண்டம், பரிச்சேதம். (5)
2069 நூற்பாவகவலின் பெயர் - சூத்திரம். (1)
2070 ஓத்தென்பது - ஓரினப்பொருளை வரிசைப்படவைப்பது
2071 படலமென்பது - ஒருவழிப்படாமல், பலபொருள்களைத்தரும் பொதுச் சொற்றொடர்வது.
2072 பொழிப்புரையென்பது - பலபொருளைப்பிண்டமாக்கிக்கூறுவது.
2073 விரித்துரையென்பது - பதவுரை, கருத்துரை, தொகுத்துரை முதலிய பகுதிப் பொருளையுடையது.
2074 கீர்த்தியினேற்றத்தின் பெயர் - கியாதம், இசைப்பாடு. (2)
2075 தன்மேம்பாடுதானிகழ்தலின் பெயர் - நெடுமொழி. (1)
2076 சோபனத்தின் பெயர் - பல்லாண்டு. (1)
2077 பழிச்சொல்லின் பெயர் - பரிவாதம். (1)
2078 பிடித்தொன்றைப்பேசுதலின் பெயர் - பிதற்றுதல். (1)
2079 வெண்பாவின் பெயர் - முதற்பா. (1)
2080 கலிப்பாவின் பெயர் - வெண்பாவிகற்பித்துவருவது. (1)
2081 ஆசிரியப்பாவின் பெயர் - அகவல், தொகை . (2)
2082 வஞ்சிப்பாவின் பெயர் - ஆசிரியப்பா விகற்பித்துவருவது. (1)
2083 அராகத்தின் பெயர் - முடுகியல், வண்ணம் . (2)
2084 குளகச்செய்யுளென்பது - குற்றெழுத்துத் தொடர்ந்துவருவது
2085 கணக்கின் பெயர் - எழுத்து, எண். (2)
2086 எண்ணின் பெயர் - கரணம், கணிதம் . (2)
2087 நால்வகையெழுத்தாவன - வடிவெழுத்து, பெயரெழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து. (4)
2088 ஒற்றெழுத்தின் பெயர் - விராமம், புலுதம், மெய். (3)
2089 இருவகைப்பாயிரத்தின் பெயர் - பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரயம். (2)
2090 முதல்வன்வாக்கின் பெயர் - ஆகமம். (1)
2091 அந்தணர்க்குரியமார்க்கத்தின் பெயர் - வேதமார்க்கம் . (1)
2092 தந்திரத்தின் பெயர் - மிருதி, ஆரிடம், பனுவல். (3)
2093. பாவின் பெயர் - தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, தொடர்பு. (3)
2094. உலக்கைப்பாட்டின் பெயர் - வள்ளைப்பாட்டு. (1)
2095. இடத்தின்சந்தேகச்சொல்லின் பெயர் - யாண்டை, யாங்கு. (2)
2096. ஐயச்சொல்லின் பெயர் - யாது,எவன்,என்னை,எது,கொல். (5)
2097. இசைநிறையசைச்சொல்லின் பெயர் - ஏ, குரை. (2)
2098. முன்னிலை யசைச்சொல்லின் பெயர் - மியா, இக, மோ, மதி, இரும், சின், (6)
2099. சுட்டின் பெயர் - அ,இ, உ, (3)
2100. வினாவின் பெயர் - ஆ,ஏ, ஓ. (3)
2101. சாரியைச்சொல்லின் பெயர் - இன், வற்று, இக்கு, அம்,ஒன்,ஆன், அக்கு, அன். (8)
2102. எழுத்தின்சாரியையின் பெயர் - கரம், கான், காரம், அகரம், ஏனம், (5)
2103. இடைச்சொல்லின் பெயர் - அரோ, போ,மாது, ஓ,அல், ஆல், உறை, கெழு, ஆங்கு, தெய்ய, என, ஏ, ஞான்று, அந்தில், ஓரும். (15).
2104. அதிசயமொழியின் பெயர் - ஆஅ,ஓஒ, அத்தோ, அந்தோ. அன்னோ, ஐயோ, அக்கோ, அசேசோ, என்னோ, எற்றே. (10)
2105. இகழ்ச்சிக்குறிப்பின் பெயர் - ஏஎ.சீச்சி, எல்,என். (4)
2106. வேற்றுமையுருபின் பெயர் - ஐ,ஒடு, கு, இ்ன், அது, கண். (6)
2107. ஒலியின் பெயர் - ஆரவாரம், கம்பலை, அரவம், கோடணை, புலம்பு, கோசணை, உளை, நாதம், ஓதை, ஆகுலம், துழனி, இடி, இசை, சும்மை, ஓசை, தொனி, உரை, பாடு, சத்தம். (19)
2108. ஆபாணவோசையின் பெயர் - சிஞ்சிதம். (1)
2109. எடுத்தலோசையின் பெயர் - முரல்வு, நரல்வு, முக்கல், பயிறல், தெளிறல், ஞெளிர்தல், சிரற்றல், பிரற்றல், குளிறல், குமுறல், குருமித்தல், நெளிர்தல், அகவல். (13)
2110. மற்றுமெடுத்தலோசையின் பெயர் - உளை. ஆக (14)
2111. தொனித்தலின் பெயர் - கலித்தல், கனைத்தல், கறங்கல், கதித்தல், சிலைத்தல், சிலம்பல், இரைத்தல், இரட்டல், இடித்தல், இசைத்தல், உளைத்தல், உரப்பல், உரற்றல், உழம்பல், முரற்றல், இரற்றல், முழங்கல், தழங்கல், கத்தல், புலம்பல், அழுங்கல், இயம்பல், துவைத்தல், இரங்கல், தெழித்தல், குரைத்தல், கொழித்தல், நரற்றல், தெவிட்டல், ஆலித்தல், இமிழ்த்தல், குமுறல், ஏங்கல், விம்மல், பிளிறல். (36)
2112. பேரொலியின் பெயர் - திமிலம், குமிலம், திமிர்தம், திமிதம், களகளம். (5)
2113. மற்றும்பேரொலியின் பெயர் - குமுதம். ஆக (6)
2114. ஆரவாரத்தின் பெயர் - அலம்பல், உளறல், அரற்றல், ஏம்பல், தழங்கல், பிளிறல், கலித்தல், குமுறல், பூசல், தமரம், கோசணை, உலம்பல், ஆகுலம், கோலாகலம். (14)
2115. கதறலின் பெயர் - அரற்றல், முரற்றல், அழைத்தல், கத்தல். (4)
2116. அனுகரணவோசையின் பெயர் - இம்மெனல், கல்லெனல், இழுமெனல், வல்லெனல், பொம்மெனல், ஒல்லெனல், பொள்ளெனல், ஞெரேலெனல், கொம்மெனல், சரேலெனல், ஞொள்ளெனல், கொல்லெனல், அம்மெனல். (13)
2117. அனுகரணவுபயவோசையின் பெயர் - வெடுவெடெனல், திடுதிடெனல், களகளெனல், கௌகொளெனல், நெடுநெடெனல், மொகமொகெனல், நெறுநெறெனல், படபடெனல், மொடுமொடெனல், சடசடெனல், சளசளெனல், கலகலெனல், சலசலெனல், கிடுகிடெனல். (14)
2118. கலப்புக்கட்டோசையின் பெயர் - உளறல், தெழித்தல், உலப்பல், அலப்பல், பூசல், குமுறல், நுவைவரல், துவைத்தல், ஆகுலம், கோடணை, கோலாகலம், ஆர்ப்பு, தமரம். (13)
2119. அடரொலியின் பெயர் - அதிர்த்தல், தெழித்தல், அதட்டல், லுறைத்தல், உரப்பல். (5)
2120. செவியறிவின் பெயர் - சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். (5)
கைவகை
2121. பறித்தலின் பெயர் - பரூஉ, குற்றல். (2)
2122 கடைதலின் பெயர் - குடைதல், கவர்தல், மதனம், துருவல். (4)
2123 தேய்த்தலின் பெயர் - அரைத்தல், அரக்கல், சிரத்தல், சிதைத்தல். (4)
2124 எழுதலின் பெயர் - தெரித்தல், வரிதல், தீட்டல், பொறித்த, வரைதல், கீறல், கிறுக்குதல். (7)
2125 எழுத்தின் பெயர் - வரி, பொறி, அக்கரம், இரேகை. (4)
2126 கொல்லுதலின் பெயர் - காதுதல், தொலைத்தல், எற்றல், களைதல், சவட்டல், கோறல், செறித்தல், செவிட்டல், அடுதல், தெறுதல், செறுத்தல், முருக்குதல், செகுத்தல், வதைத்தல். (14)
2127 எற்றலின் பெயர் - எறிதல், அள்ள. (2)
2128 கொடையின் பெயர் - ஈகை, தானம், இடுகை, கவிகை, வேள்வி, வண்மை, தியாகம், வேளாண்மை, உதாரம், கடப்பாடு, உபகார. (11)
2129 பெருங்கொடையின் பெயர் - ஈதல், வீசல், இசைத்தல், நீட்டல், புரத்தல், நல்கல், அருளல், பகுத்தல், கொடுத்தல், வழங்கல், அளித்தல். (11)
2130 வரையாதுகொடுத்தலின் பெயர் - கொடைமடம், (1)
2131 கொடாமையின் பெயர் - மாற்றல், கரத்தல், மறுத்தல். (3)
2132 இரத்தலின் பெயர் - ஏற்றல், குறைகோள், வேண்டுதல். (3)
2133 பிச்சையின் பெயர் - பலி, படிகம், பாகம், பயிக்கம், பிண்டம், சரியை, ஐயம். (7)
2134 கும்பிடுதலின் பெயர் - தொழுதல், அஞ்சலி, சோத்தம். (3)
2135 மெய்கோட்டிக்கைகுவித்தலின் பெயர் - குடந்தம். (1)
2136 தொடுதலின் பெயர் - திவளல். ஊறு. பரிசம். தீண்டல். துவளல், தொட்டல். (6)
2137 அடித்தலின் பெயர் - புடைத்தல், எற்றல், எறிதல், மொக்கல், குத்தல், மோதல், மொத்தல், அறைதல், அகைத்தல். (9)
2138 மற்றும்அடித்தலின் பெயர் - வழுக்கல். ஆக (10)
2139 குத்தலின் பெயர் - அவைத்தல். (1)
2140 கட்டலின் பெயர் - விசித்தல், இசைத்தல், வீக்கல். (3)
2141 மற்றுங்கட்டலின் பெயர் - அசைத்தல், இமிழ்த்தல், ஆர்த்தல், யாப்பு, சிமிழ்த்தல், பிணித்தல் சுருக்கல், தொடுத்தல், கிட்டல், துவக்கல். ஆக(13)
2142 தீட்டலின் பெயர் - துலக்கல். (1)
2143 வெட்டலின் பெயர் - துழாவல். (1)
2144 துணித்தலின் பெயர் - துமித்தல், எற்றல். (2)
2145 அறுத்தலின் பெயர் - கடிதல், தடிதல், பரிதல், கண்டித்தல், சேதித்தல், கொய்தல்.(6)
2146 முகத்தலின் பெயர் - தோண்டல். (1)
2147 நிறுத்தலின் பெயர் - நோன்றல். (1)
2148 கிண்டலின் பெயர் - கிளைத்தல். (1)
2149 கிளறுதலின் பெயர் - நோண்டல். (1)
2150 தெள்ளுதலின்பெயஇர் - வறண்டல். (1)
2151 கொழித்தலின் பெயர் - வரன்ற.ல் (1)
2152 தொளைத்தின் பெயர் - தொள்கல், குயிறல். (2)
2153 தோண்டலின் பெயர் - சூறல், சூன்றல், தொட்டல், தொடுதல், அகழ்தல். (5)
2154 கிழித்தலின் பெயர் - கீறல், கிண்டல், கிள்ள. (3)
2155 மற்றுங்கிழித்தலின் பெயர் - பீறல். (1)
2156 அடைக்கலத்தின் பெயர் - கையடை, இல்லடை, அபயம். (3)
2157 பிடுங்குதலின் பெயர் - புய்த்தல், பறித்த. (2)
2158 களைதலின் பெயர் - கட்டல். (1)
2159 மற்றுங்களைதலின் பெயர் - சிதைத்தல், குத்தல், சிந்துதல், விலங்கல். (4)
2160 உருவுதலின் பெயர் - சிதகல். (1)
2161 முடைதலின் பெயர் - வலத்தல், நிணத்தல். (2)
2162 எறிதலின் பெயர் - விலகல், செலவிடல், வீசல், ஓச்சுதல், விடுதல். (5)
2163 மாற்றுதலின் பெயர் - விலக்கல் . (1)
2164 பிடித்தலின் பெயர் - தொடல், பற்றல். (2)
2165 நெரித்தலின் பெயர் - தெறுத்தல். (1)
2166 கூட்டுதலின் பெயர் - அடுத்தல், பொருத்தல். (2)
2167 எழுப்புதலின் பெயர் - எடுத்தல், ஏற்றல். (2)
2168 தடுத்தலின் பெயர் - வரித்தல், வாரணை, தகைத்தல். (3)
2169. பகுத்தலின் பெயர் - பகிர்தல், பாத்தி. (2)
2170. சிந்துதலின் பெயர் - சிதர்த்தல். (1)
2171. வாரலின் பெயர் - கவரல், வௌவல். (2)
2172. வகிர்தலின் பெயர் - துவர்தல். (1)
2173. தடவலின் பெயர் - தைவரல், நீவல், வருடல். (3)
2174. அசைதலின் பெயர் - துயில்வரல். (1)
2175. சொரிதலின் பெயர் - பொழிதல். (1)
2176. மூட்டலின் பெயர் - மாட்டல், பொருத்தல். (2)
2177. தள்ளுதலின் பெயர் - நோன்றல், ஊன்றல், நூக்கல். (3)
2178. செறித்தலின் பெயர் - அளித்தல், பெய்தல். (2)
2179. பரப்புதலின் பெயர் - விரியல், விளம்பல், பாரித்தல். (3)
2180. அடுக்குதலின் பெயர் - ஏற்றல். (1)
2181. புதைத்தலின் பெயர் - பொத்தல், கனிதல். (2)
2182. குட்டலின் பெயர் - புடைத்தல், தகர்த்தல். (2)
கால்வகை.
2183. கடத்தலின் பெயர் - இறத்தல், கழிதல், இகத்தல், நடத்தல், மீளல். (5)
2184. சுழலலின் பெயர் - உழிதரல், கொட்பு, திரிதரல், உழலல், பிரமரி, அலமரல், தெருமரல், மறுகல், சொரிதரல், கறங்கல். (10)
2185. தாண்டலின் பெயர் - வாவல், தாவல்,தத்தல், கடத்தல். (4)
2186. மற்றுந்தாண்டலின் பெயர் - உறுக்கல், பாய்தல், உகளல், குதித்தல், தவறல். (9)
2187. எழுச்சியின் பெயர் - கஞறல், கதித்தல், உம்பல், ஏர்பு, பொலிவு,
கலித்தல், ஒழுக்கல், பாச்சல், மறல், ஓங்கல். (10)
2188. நடத்தலின் பெயர் - இல்லல், ஒதுங்கல், ஏகல், இவர்தல், செல்லல், படர்தல், கழிதல். (7)
2189. செலவின் பெயர் - தாவு, கதி, படர். (3)
2190. ஓடலின் பெயர் - நீளல், பாறல், நிமிர்தல். (3)
2191. இரிதலின் பெயர் - உடைதல், கெடுதல். (2)
2192. நேரோடுதலின் பெயர் - ஆதி, வீதி. (2)
2193. மண்டிலமாயோடலின் பெயர் - மாதி, சுற்று, சாரிகை, வாளி. (4)
2194. விரைவின் பெயர் - கதழ்வு, வல்லை, ஒல்லை, கடுப்பு, கடுகல், தாரை, துனைவு, நொறில், விசை, முடுகல், வேகம். (11)
2195. மற்றும்விரைவின் பெயர் - கவனம், துரிதம். (13)
2196. விரைவுக்குறிப்பின் பெயர் - பொள்ளெனல், ஐயெனல், பொருக்கெனல், நொய்தெனல், வெய்தெனல், கதுமெனல். (6)
2197. உராய்தலின் பெயர் - உரோசல், உரிஞ்சல், உரோஞ்சல். (3)
2198. உலாப்போதலின் பெயர் - பவனி. (1)
2199. உலாவலின் பெயர் - அசைதல், இயங்கல், வழங்கல். (3)
2200. உழக்குதலின் பெயர் - உழுதல், மடித்தல். (2)
2201. கொடுபோதலின் பெயர் - போதரல். (1)
2202. மீளுதலின் பெயர் - மறிதரல், திரிதரல், மடங்கல். (3)
2203. ஒதுங்கலின் பெயர் - ஒடுங்கல். (1)
2204. செலுத்தலின் பெயர் - ஓயல், நடவல், கடவல், ஓச்சல், ஏவுதல், தாண்டல், தூண்டல், உகைத்தல், ஊர்தல், உய்த்தல். (10)
2205. போதலின் பெயர் - படர்தல், சேறல், ஒதுங்கல், தீர்தல், திரிதல், இயங்கல், நீங்கல், இறத்தல், துரத்தல், ஏகல், செல்லல், விடுதல், கடத்தல், நடத்தல். (14)
முறைமைவகை.
2206. முறைமையின் பெயர் - ஊழ், பாவம், தன்மம், முறை, வாழ், வழி. (6)
2207. கோத்திரத்தின் பெயர் - குடி, உம்பல். (2)
2208. பழைமையின் பெயர் - ஒல்லை, புராணம், முதுமை, முறை, ஊழ், தொல்லை, முந்தை, தொன்று, பண்டு, தொன்மை, முன்னை, புராதனம். (12)
2209. முற்பிறப்பின் பெயர் - உம்மை. (1)
2210. இப்பிறப்பின் பெயர் - இம்மை. (1)
2211. வருபிறப்பின் பெயர் - அம்மை, மறுமை. (2)
2212. பிறப்பின் பெயர் - பிறந்தை, பவம், யோனி. (3)
2213. மற்றும்பிறப்பின் பெயர் - சூதகம். ஆக(4)
2214. உரிமையின் பெயர் - கிழமை, ஆட்சி. (2)
2215. பயிறலின் பெயர் - நவிறல், கெழுமல். (2)
2216. அடைவின் பெயர் - ஆம்பல். (1)
அளவின்வகை.
2217. விரிவின் பெயர் - விசாலம், விபுலம். (2)
2218 பரப்பின் பெயர் - பாய்தல், விரியல், பப்பு, பரவை, தாவல். (5)
2219 தூரத்தின் பெயர் - சேண், நீளம், சேய்மை. (3)
2220 அகலத்தின் பெயர் - நனவு, கண்ணறை, வியல். (3)
2221 கனத்தின் பெயர் - அடை, ஞாட்பு. (2)
2222 எல்லையின் பெயர் - அவதி, சிம், காடு, பரியந்தம், ஏணி, வரைப்பு, கொத்தம். (7)
2223 அளவின் பெயர் - தனை, காறு, தாறு, துணை, வரை, பிரமாணம், மாத்திரை, மட்டு. (8)
2224 அளவின்மையின் பெயர் - அபரிமிதம், அகந்தம், அபாரம், எல்லையின்மை. (4)
2225 பெருமையின் பெயர் - இருமை, பொழில், ஏந்தல், ஈடு, கருமை, தடவு, கயவு, அணி, பகடு, அண்ணல், செம்மல், பரி, இறை ,பேழ், கொன், விபுலம், வியல், தலை, நெய்தை, மா, தகை, முடலை, மூரி, வீறு, நளி, மீளி, கதழ்வு, நன்று, பாடு, நனி, பணை, விறல், சேடு, பீடு. (34)
2226 நுண்மையின் பெயர் - ஐ, நுணுக்கம், அணு, முளரி, நுவணை, நுட்பம், நுணங்கு, நூழை, நுணுகு, நுழை. (10)
2227 சிறுமையின் பெயர் - அற்பம், கன்று, தன்னம், ஆசு, பேடு, வறிது, இறை. (7)
2228 நிறைவின் பெயர் - மலிதல், துவன்றல், மல்கல், ஆர்தல், தெகுளல், ததும்பல், தேக்கல், கிளைத்தல், நிரம்பல், பூரணம், கமம். (11)
2229 பெருக்கத்தின் பெயர் - பிறங்கல், பெருகல். (2)
2230 குறைபாட்டின் பெயர் - ஊனம், நிரப்பு, விகலம், தவல், ஈனம். (5)
2231 குறைதலின் பெயர் - சுருங்கல், குறை, அருகல், குன்றல், எஞ்சல். (5)
2232 மிகுதியின் பெயர் - அமலை, நனி, ஆற்றல், இறப்பு, பெருகல், கழிவு, சிறப்பு, பிறங்கல், உருப்பம், தவ, மதர், ஊக்கம், அதிகம், விதப்பு, செறிதல், பொங்கல். (16)
2233 பொலிவின் பெயர் - துப்பு, கலிப்பு, கஞற, பொம்மல், பொறி, பொக்கம் பூ. (7)
2234 செறிவின் பெயர் - துறுதல், உறுப்பு, பிறப்பு, துதைதல், மிடைதல், துற்று, வெறிதல், ஓதி, செற்று, வெறுப்பு, கஞறல், அடர்தல், நெருங்குதல், திணுங்குதல். (14)
235 கூட்டத்தின் பெயர் - கூளி, கூட்டம், கழுமல், தோடு, தொழுதி, தொறு, தொகை, குழாம், துற்று, நளி, முகை, மொய், கணம், சரி, ஈண்டல், சங்கம், திரளை, சவை, அவை, ஈட்டம். (19)
2236 திரளின் பெயர் - கொம்மை, உண்டை, குழியம், குப்பை, முத்தை, பூகம், சோகம், புஞ்சம், பந்தம், மாழை, வட்டு, பிண்டம், வழி, சேடு, சேர்வு. (15)
2237 ஐம்மையின் பெயர் - அரி, தகடு, அடர். (3)
2238 எல்லாமென்றலின் பெயர் - அடைய,அடங்கல், அனைத்தும் , யாவை, முழுவதும், முற்றும், சமத்தம், முட்ட, எவை. (9)
2239 மற்றுமெல்லாமென்றலின் பெயர் - அகிலம், அகண்டம். ஆக (11)
2240 பாதியின் பெயர் - பால், பயல், அருத்தம், பங்கு. (4)
2241 மற்றும்பாதியின் பெயர் - கூறு, பாகம். (2)
2242 பாரத்தின் பெயர் - சீர், கனம், கு, ஞாட்பு, பரம். (5)
2243 நொய்மையின் பெயர் - நொய்வு, இலேசு. (2)
2244 பொழுதுபோக்கலின் பெயர் - நெடித்தல், பாணித்தல். (2)
2245 மீறுதலின் பெயர் - திருகல், முறுகல். (2)
2246 குவிதலின் பெயர் - குவை, குவால், இராசி, குப்பை, குவவு, நூழில். (6)
2247 முதலின் பெயர் - ஆதி, தலை, தாள், அடி, முன், எழுவாய், மோனை, பிராசயம். (8)
2248 நடுவின் பெயர் - இடை, சமம், மத்திமம், நாப்பண், பகல். (5)
2249 மற்றும்நடுவின் பெயர் - நள், நனந்தலை. ஆக (7)
2250 கடையின் பெயர் - இறுதி, பின், எல்லை, ஈறு, அந்தம், முடிவு, முற்று, முடிதல். (8)
2251 மிகுத்தலின் பெயர் - தெறுதல், உறுத்தல். (2)
2252 மிக்கதன் பெயர் - மிஞ்சுதல், விஞ்சுதல், மீமிசை. (3)
2253 நெருக்கத்தின் பெயர் - எக்கல், குவித்தல், நளி, நிபடம். (4)
2254 தூக்கின் பெயர் - துலாம், கா. (2)
2255 தூக்கினிறையின் பெயர் - நூற்றுப்பலம். (1)
2256 ஒருபலத்தின் பெயர் - தொடி. (1)
2257 துலாமிருபஃதின் பெயர் - பாரம். (1)
2258 காற்பலத்தின் பெயர் - கஃசு. (1)
2259 மாகாணிப்பலத்தின் பெயர் - வீசம். (1)
2260 ஒன்றன் பெயர் - ஏகம். (1)
2261 பத்தின் பெயர் - தசம். (1)
2262 நூற்றின் பெயர் - சதம். (1)
2263 ஆயிரத்தின் பெயர் - சகசிரம். (1)
2264 பதினாயிரத்தின் பெயர் - ஆயுதம். (1)
2265 நூறாயிரத்தின் பெயர் - நியுதம். (1)
2266 பத்துநூறாயிரத்தின் பெயர் - பிரயுதம். (1)
2267 கோடியின் பெயர் - பிரயுதம் பத்து. (1)
2268 அற்புதத்தின் பெயர் - கோடி பத்து. (1)
2269 நிகர்ப்புதத்தின் பெயர் - அர்ப்புதம் பத்து. (1)
2270 கும்பத்தின் பெயர் - நிகர்ப்புதம் பத்து. (1)
2271 கணகத்தின் பெயர் - கும்பம் பத்து. (1)
2272 கற்பத்தின் பெயர் - கணகம் பத்து. (1)
2273 நிகற்பத்தின் பெயர் - கற்பம் பத்து. (1)
2274 பதுமத்தின் பெயர் - நிகற்பம் பத்து. (1)
2275 சங்கத்தின் பெயர் - பதுமம் பத்து. (1)
2276 சமுத்திரத்தின் பெயர் - சங்கம் பத்து. (1)
2277 அந்தியத்தின் பெயர் - சமுத்திரம் பத்து. (1)
2278 மத்தியத்தின் பெயர் - அந்தியம் பத்து. (1)
2279 பரார்த்தத்தின் பெயர் - மத்தியம் பத்து. (1)
2280 பூரியத்தின் பெயர் - பரார்த்தம் பத்து . (1)
2281 பிரமகற்பத்தின் பெயர் - பூரியம்பத்து. (1)
காரணவகை - பல்பொருள்வகை.
2282 காரணவகையும் பல்பொருள்வகையும் ஒருசேரக் கூறாநிற்பன்.
2283 காரணத்தின் பெயர் - நிபம், பொருட்டு, ஏது, நிமித்தம், திறன், வாயில், மூலம். (7)
2284 உடடொளையின் பெயர் - சுகிர், குழல், நாழி, தசிரம், தூம்பு, புழை, புரை, வேய், வேணு, பொள். (10)
2285 மற்றுமுட்டொளையின் பெயர் - நாளம், சுரை. ஆக (12)
2286 வட்டத்தின் பெயர் - வலயம், நேமி, கடகம், மண்டிலம், பரிதி, ஆழி, பாண்டில், விருத்தம், படலிகை, கோளகை, பாலிகை, கொம்மை, திகிரி, மல்லை, வல்லை, சக்கரம், தட்டு, வட்டணை. (18)
2287 அதிசயத்தி பெயர் - வியப்பு, இறும்பு, விசித்திரம், விம்மிதம், விபரீதம், இறும்பூது. (6)
2288 மற்றுமதிசயத்தின் பெயர் - சித்திரம். ஆக (7)
2289 உவமையின் பெயர் - புரை, மான், பொருவு, கடுப்பு, நிகர், ஏய்வு, நேர், போல், ஒப்பு, உவமம், ஏர், ஆங்கு, என, எதிர், அன்ன, இணை, உறழ்வு, சமம், துல்லியம். (19)
2290 வினையின் பெயர் - கருமம், தொழில், விதி, பணி, வினையம்,
செயல். (6)
2291 செய்தலின் பெயர் - அயர்தல், குயிறல், பண்ணல், வனைதல், புரிதல், ஆடல். (6)
2292 விற்றலின் பெயர் - மாறுதல், பகர்தல், கூறுதல். (3)
2293 விலையின் பெயர் - நொடை. (1)
2294 கூட்டுதலின் பெயர் - ஆற்றல், போற்றல், ஈட்டல். (3)
2295 மற்றுங்கூட்டுதலின் பெயர் - ஓம்பல். ஆக (4)
2296 இலாஞ்சனையின் பெயர் - ஆணை, பொறி, குறி, அச்சு, அடையாளம், சாதனம், சின்னம், முத்திரை, இலிங்கம். (9)
2297 தலைக்காவலின் பெயர் - இளை, உக்கிரம். (2)
2298 படர்தலின் பெயர் - படலை, படர்ச்சி,பம்பல். (3)
2299 அறியாமையின் பெயர் - எய்யாமை. (1)
2300 ஒழியாமையின் பெயர் - ஓவாமை. (1)
2301 வழிப்பறியின் பெயர் - அதர்கோள், ஆறலை. (2)
2302 தைத்தலின் பெயர் - அத்து ,பொல்லம், துன்னம். (3)
2303 தண்டலின் பெயர் - தப்பல். (1)
2304 காய்தலின் பெயர் - உலறுதல், வறளுதல், முளிதல். (3)
2305 பில்குதலின் பெயர் - பிலிற்றல், தூவுதல். (2)
2306 குடியிறையின் பெயர் - கறை, வரி, ஆயம், கடன், கரம், இறுப்பு. (6)
2307 சுங்கவிறையின் பெயர் - உல்கு, சாரிகை. (2)
2308 தீர்தலின் பெயர் - ஓவல். (1)
2309 முடிவின் பெயர் - வீடு. (1)
2310 கலத்தலின் பெயர் - கலவை, கலப்பு. (2)
ஏழாவது _ பண்பிற்செயலிற்பகுதிவகை முற்றிற்று.
------------
This file was last updated on 15 July 2015.
Feel free to send the corrections to the webmaster.