அகநானூறு: மணிமிடை பவளம்
பாகம் 2a செய்யுள் 121-210
நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார் விளக்கவுரைகளுடன்

akanAnUru - part 2A (verses 121-210)
with commentary of nAvalar vEngkaTacAmi nATTAr
In tamil script, unicode/utf-8 format






123. பாலை
[தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

(சொ - ள்.) 8. நெஞ்சே வாழிய-,

1-5. உண்ணாமையின் உயங்கிய மருங்கின் - உண்ணாமையாலே வாடிய வயிற்றினையும், ஆடாப் படிவத்து ஆன்றோர் போல - நீராடாத விதத்தினையுமுடைய தவத்தினர்போல, வரைசெறி சிறுநெறி நிரைபு உடல் செல்லும், கான யானை கவின் அழி குன்றம்-காட்டு யானைகள் அழகு அழியும் இடமாய குன்றத்தினை, இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் - கடந்து பொருள் ஈட்டி வருதலும் செய்திலை;

5-7. சிறந்த சில் ஐங்வந்தல் நல் அகம் பொருந்தி-சிறப்புற்ற சிலவாகிய ஐம் பகுதியையுடைய கூந்தலையுடைய நம் தலைவியின் நல்ல ஆகத்திற் பொருந்தி. ஒழியின் - மனையில் தங்கிவிடினும், வறுமை அஞ்சுதி - வறுமையை அஞ்சாநின்றாய்;

8-14. சென்று தரு பொருட்கு - சுர நெறிகளிற் சென்று ஈட்டிவரும் பொருட்காக, நிலவு என - நிலவுபோல் எஃகு இலை இமைக்கும் - கூரிய இலை விளங்கும், நெய்கனி நெடுவேல் - நெய்மிக்க நெடிய வேலினையும், மழை மருள் பல்தோல் - கரிய மேகம்போன்ற நிற முடைய பல கிடுகுகளையுமுடைய, மாவண் சோழர் - பெரிய வண்மை வாய்ந்த சோழருடைய, கழைமாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை - ஓடக் கோலும் மறையும் நீத்தத்தையுடைய காவிரி கடலில் மண்டும் பெருந்துறையின் கண்ணே, இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங் கடல் ஓதம்போல - இறா மீனொடு வந்து மாலையோடு மீளும் பெரிய கடல் நீர்போல, ஒன்றில் கொள்ளாய் - போதல் ஒழிதல் எனும் இரண்டினொன்றில் உறுதி கொண்டிலை;

2. ஒன்றிற் கொல்லாய்.

7-8. அழிதகவு உடைமதி - நீ வருந்துதலை உடையை யாவாய்.

(முடிபு) நெஞ்சே! குன்றம் இறந்து பொருள் தருதலும் ஆற்றாய்; சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி; சோழர் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை ஓதம் போலச் சென்று தருபொருட்கு ஒன்றில் கொள்ளாய்; அழிதக உடைமதி.

(வி - ரை.) “உண்ணாமையின் உயங்கிய மருங்கின், ஆடாப் படிவத் தான்றோர்போல...கானயானை கவினழி" என்னும் இவ்வுவமை, 1"உண்ணா நோன்பொ டுயவல் யானையின், மண்ணா மேனியன் வருவோன்" என, மணிமேகலையில் எதிர்நிலையாக வந்திருத்தல் காண்க. அகம்-ஆகம். உடைமதி - உடைமை யாகுதி. எஃகிலை இமைக்கும் வேல் என மாறுக. கழை - மூங்கில்: ஓடக் கோல். மாய் - மறைக்கு மெனலுமாம். கோதை - நீராடுவார் களைந்திட்டவை. ஓதம்-அலையுமாம்.

நெஞ்சு செல்லுதல் ஒழிதல் என்னும் இரண்டனுள் ஒன்றைத் துணியாது பொருளை யுள்ளிச் செலவயர்தலும் தலைவியது ஆகத்தை யுள்ளிச் செலவொழிதலுமாக உழலுதற்கு ஓதம் இறவொடு வருதலும் பின்பு அதனை விடுத்துக் கோதையொடு பெயர்தலும் உவமமாயின.

(மே - ள்.) 2'கரணத்தி னமைந்து முடிந்த காலை' என்னுஞ் சூத்திரத்து, 'வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்' என்னும் பகுதியில், அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மன நிகழ்ச்சி என்றுரைத்து, அதற்கு இச் செய்யுளை உதாரணமாகக் காட்டினர், இளம்பூரணர்.

அச் சூத்திரத்து அப் பகுதியில் இச் செய்யுளைக் காட்டி, இது போவேமோ தவிர்வேமோ என்றது என்றும், 3'நோயும் இன்பமும்' என்னுஞ் சூத்திரத்து, உண்ணாமையின் என்னும் அகப்பாட்டினுள், 'இறவொடு வந்து கோதையொடு பெயரும், பெருங்கட லோதம் போல, ஒன்றிற்கொள்ளாய் சென்று தருபொருட்கே' என்றவழி 'அழி தகவுடை மதி வாழிய நெஞ்சே' என்றதனான், நிலையின்றாகுதியென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி நன்குரைத்தவாறும், ஓதத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவம வாயிற் படுத்த வாறும் காண்க என்றும் உரைத்தனர், நச்சினார்கினியர்.


124. முல்லை
[தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது.]

(சொ - ள்.) 1-5. நண்ணார் நன்கலம் ஏந்தி வந்து - பகைவர் நல்ல அணிகளைக் கொண்டு வந்து, களிற்றொடு திறை கொடுத்து வணங்கினர்-அவற்றைக் களிற்றொடு திறையாகக் கொடுத்து வணங்கி, வழி மொழிந்து சென்றீக என்ப ஆயின்-பணி மாழி கூறிச்சென்றருள்க என்பாராயின், வேந்தனும் நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையோடு-நம் அரசனும் பார மிகுதியாற் புவியினை வருத்துதல் செய்து திரண்ட சேனையுடன், இன்றே புகுதல் நன்றே வாய்வது-இன்றே தன் ஊர்க்கேகல் பெரிதும் உண்மையாகும்;

6-8.மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கை - மாடங்களால் மாண்புற்ற நமது மாளிகையில் பெருமை அமைந்த படுக்கையின்கண்ணுள்ள, துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற - வெறுப்பற்ற கொள்கையினையுடைய நம் தலைவி இனிமை உறவும், பாசறை வருத்தம் வீட - நமக்குப் பாசறைக்கண் மேவிய வருத்தங்கள் ஒழியவும்;

8-10. நீயும்-(பாகனே) நீயும், மன்னுநிமிர்ந்தஅன்ன - மின்னல் பரந்து விளங்கினாலொத்த ஒளியினையுடைய, பொன்இயல் புனைபடை - பொன்னாலியன்ற அலங்கரிக்கப்பட்ட கலனையையும், கொய்சுவல் - கொய்யப்பெற்ற பிடரி மயிரினையும், கைகவர் வயங்குபரி - செலுத்தும் கை விரும்பும் விளக்கம் அமைந்த செலவினையும் உடைய, புரவி - குதிரையை;

11-3. காலை - செலுத்துங் காலத்தே, வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை - வளம் மிக்க மழையால் மலர்ந்த பசிய முல்லைக் கொடியின், வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய - மலர் மணக்கும் நெடிய வழியில் ஊதும் வண்டுகள் இரிந்தோட;

13-6. அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை - அந்திக் காலத்தே இடையரது அழகிய குழலின் ஒலிக்கும் இசை, அரமிய வியல் அகத்து இயம்பும் - நிலாமுற்றமாய அகன்றவிடத்தே வந்து ஒலிக்கும், நிரைநிலை ஞாயில் நெடு மதில் ஊர் - வரிசையாக நிற்கும் சூட்டுக்களையுடைய நீண்ட மதில் சூழ்ந்த ஊரின்கண், மாலை எய்தக் கடவுமதி - மாலைப் போழ்தில் நாம் எய்திடச் செலுத்துவாயாக.

(முடிபு) நண்ணார் திறைகொடுத்துச் சென்றீக என்பராயின், வேந்தனும் தானையொடு இன்றே புகுவது வாய்வது; ஆதலின், பாகனே நீயும் காதலி இனிது உறவும், வருத்தம் வீடவும், புரவியை, வண்டு இரிய, நெடுமதில் ஊர் மாலை எய்தக் கடவுமதி.

(வி - ரை.) சென்றீக - செல்லுக. 1'என் போர்யானை வந்தீக' 2'வினை கலந்து வென்றீக வேந்தன்' என்னுமிடங்களிற்போல வியங்கோள். சென்றீ கென்ப - அகரம் தொக்கது. வருத்துறாஅ - தான் கைப்பற்றிய நாட்டிலுள்ளாரை வருத்துறாமல் என்றுமாம். வகுத்துறா என்பது பாடமாயின், நிலத்தை வகுத்துக்கொண்டு என்க. சேக்கைத் துனிதீர் கொள்கை நம் காதலி என்றதனால், தலைவனைப் பிரிந்த வருத்தத்தை, அவன் கூறிய சொற் பிழையாத கற்பினால் மாற்றியிருப்பவள் என்பத பெறப்பட்டது. 'மின்னு நிமிர்ந்தன்ன வயங்குபரி' என இயைத்து உரைத்தலுமாம். பெயற்கு அவிழ்ந்த, வேற்றுமை மயக்கம். காலை - பொழுது; 3'கழகத்துக் காலை புகின்' என்புழிப்போல. அந்தி காவலர் அம்பணை என்னும் பாடத்திற்கு, அந்திப் பொழுதில் காத்தல் செய்யும் காவலரது அழகிய முரசு எனப் பொருள் கொள்க. அரமியம்: வடசொற் சிதைவு. ஞாயில் - சூட்டு; ஏவறை.
(மே - ள்.) 4'மேலோர் முறைமை' என்னுஞ் சூத்திரத்து 'நன் கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து' என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள் வருவாயாயிற்று என்றனர், நச்சினார்கினியர்.


125. பாலை
[2தலைமகன் வினைமுற்றி மீண்டமை யுணர்ந்த தோழி தலைமகட்கச் சொல்லியது.]

(சொ - ள்.) 3-13. இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் - இரவம் வித்தினை ஒக்கும்

அரும்பு முதிர்ந்த ஈங்கையினது ஆலங்கட்டி போலும் வெள்ளிய பூக்கள் தாவ, வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப தாதுஉறு குவளைப் போது பிணி அவிழ - கூரிய வாலினையுடைய ஓந்தியின் கரிய தாடியை ஒத்திடத் தாதுமிக்க குவளையின்போது பிணிப்பு நெகிழவும், படாஅப் பைங்கண் பா அடிக் கய வாய் கடாஅம் மாறிய யானை போல - உறங்காத பசிய கண்ணினையும் பரந்த அடியினையும் பெரிய வாயினையும் உடைய மதம் ஓய்ந்த யானையைப் போல, பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்டு - நீரினைப் பெய்து வறுமை எய்திய பொங்கிய செலவினையுடைய மேகம், மை தோய் விசும்பின்மாதிரத்து உழிதர - கருமை பொருந்திய வானின் திசைகளில் திரியவும், பனி அடூஉ நின்ற பால் நாள் கங்குல் - பனி நலிகின்ற நடு இரவின் இருளில், தமியோர் மதுகை தூக்காய்-தனிமை எய்தியவர் பொறுக்கும் வலியளவை ஆராயாது, முரண் இல் காலை - மாறுபாடு இல்லாத காலத்தும், தண்ணென முனிய அலைத்தி - வெறுக்கும்படி தண்ணென்று வீசி அலைக்கின்றாய்;

1-2. நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி - முற்றுப்பெறாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி, அரம் போழ் அ வளை தோள் நிலை நெகிழ-அரத்தாற் பிளக்கப்பட்ட அழகிய வளைகள் எம் தோளில் நிற்றலினின்று நெகிழ்ந்துவீழ;

14-5. கைதொழு மரபில் கடவுள் சான்ற - கையாற்றொழும் மரபினையுடைய கடவுட்டன்மை நிரம்பிய, செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் - ஓதல்வினையிடத்துச் சென்ற தலைவர் விரைந்து வருவரேல்;

14-22. வாடை - வாடையே, விரி உளை பொலிந்த பரி உடை நல்மான் - விரிந்த தலையாட்டத்தாற் சிறந்த விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படையுடன் கூடிய, வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த - பகைவர்க்கு அச்சந் தரும் சேனையுடன் தான் விரும்பும் புலத்தில் தங்கிய, பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் - பெரிய வளத்தையுடைய கரிகால் வளவன் முன்னிற்றலை ஆற்றாராய், சூடா வாகைப் பறந்தலை - வாகைப் பறந்தலை எனும் போர்க்களத்தின்கண், ஆடுபெற - அவன் வெற்றி பெற, ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - தமது ஒன்பது குடைகளையும் நன்றாகிய பகலிற் போகட்டுச் சென்ற, பீடு இல் மன்னர் போல - பெருமை யில்லாத மன்னர் ஒன்பதின்மரையும் போல, நீ எமக்கு ஓடுவை மன் - நீ எமக்குத் தோற்று மிகவும் விரைந்து ஓடுவை.

(முடிபு) வாடை! நீ குவளைப்போது அவிழ, மேகம் உழிதர, பானாட் கங்குல் முனிய அலைத்தி, செய்வினை மருங்கின் சென்றோர்வரின் கரிகால் வளவன் வாகைப் பறந்தலை ஆடுபெற, ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பீடில் மன்னர்போல, நீ எமக்குத் தோற்று விரைந்து ஓடுவை.

(வி - ரை.) நிரம்பா வாழ்க்கையாவது, துறவு பூண்டு மெய்யுணர்ந்து வீடுபெறுதல் இல்லறத்தின் பயனாகலின், அவை நிகழாவழி நிரம்புதல் இல்லாத வாழ்க்கை என்பது நச்சினார்க்கினியர் கருத்து. இர - ஒரு மரம்; இஃது, இரா, இரவு, இரவம் எனவும் வழங்கும். தாஅய். தாவ எனத் திரிக்க. ஓதி - இடைக்குறை. பொங்கு செலல்: பொங்குதல் - விளங்கிப் பரத்தல்; உயர்தலுமாம். தமியோர் - தன்மையிற் படர்க்கை. கடவுட் சான்ற செய்வினை என்றமையால், வினை ஓதலாயிற்று. சூடாவாகை - வாகைப் பறந்தலைக்கு வெளிப்படை.

(மே - ள்.) 1'மேவிய சிறப்பின்' என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் கூறி, இது தேவர் காரணமாகப் பிரியும் பிரிவு என்றனர், இளம்பூரனார்.

2'பனியெதிர் பருவமும்' என்னுஞ் சூத்திரத்து, 'உரித்து என்ற தனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும்' என்று கூறி, 'பனியடூஉ நின்ற பானாட் கங்குல்..முரணில் காலை' என்பதைக்காட்டி, முன்பனியாமம் குறிஞ்சிக்கண் வந்தது என்றும், 3'அவற்றுள் ஓதலுந்தூதும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்வினை யெனவே, ஓதற் பிரிவென்பது பெற்றாம் என்றும், மேலும், 4'சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே' என்பதனாற் கிழவனுங் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பா தென்றற்கு, 'நிரம்பா வாழ்க்கை' என்றார் என்றும், 5'வேண்டிய கல்வி' என்னுஞ் சூத்திரத்து, ஓதற் பிரிவிற்குக் கால வரையறை யின்றென்று கூறி, அரம்போ ழல்வளை' என்னும் பாட்டினுள் பானாட் கங்குல்...முனிய வலைத்தி'...கடவுட் சான்ற: செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின், ஓடுவை' என்றது, இராப்பொழுது அகலாது நீட்டித்தற்கு ஆற்றாளாய்க் கூறினாள் என்று உணர்க என்றும் கூறுவர், நச்சினார்கினியர்.

126. மருதம்

[(1) உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
(2) அல்ல குறிப்பட் டழிந்ததுமாம்.
(3) தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதுமாம்.]

(சொ - ள்.) 17-22-கிளி எனச் சிறிய மிழற்றும் செவ்வாய் - கிளிபோல மென் சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும், பெரிய கயல் என அமர்த்த உண்கண் - பெரிய கயல்மீன் என்னுமாறு ஒன்றை யொன்று பொருத மையுண்ட கண்களையும், புயல் என புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் - மேகம் என்னும்படி முதுகில்தாழ்ந்து இருண்ட விளங்கும் கொத்தாய ஐந்து பகுப்பை யுடைய கூந்தலையும், மின் நேர் மருங்குல் - மின்னலை யொத்த இடையினையும் உடைய, குறு மகள் பின் நிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே - இளைய தலைவியின் பின்னே தாழ்ந்து நிற்றலை விடாத அறியாமை மிக்க நெஞ்சே!

1-2. நீ நின வாய் செத்து - நீ நின் எண்ணங்களை உண்மை யானவை எனக் கருதி, பல உள்ளி - பலவும் எண்ணி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் - மிகப் பெரிய துன்பத்தினையுடையையாய் வருந்துதல் அன்றியும்;

3-13. மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல்நீத்தம் - மலை உச்சியினின்று தொடர்புற்று வீழ்ந்த மிக்குச் செல்லுதலையுடைய வெள்ளத்தால், தலைநாள் மாமலர் தண் துறை தயங்க - முதல் நாட்பூத்த சிறந்த மலர் தணிய துறைகளில் விளங்க, கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று - கடற்கரையினைக் கரைத்திடும் காவிரியாய பெரிய ஆற்றினது, அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க - கருமணல் ஒழுகும் நீண்ட மடுவின் நிலைக்கொள்ளாத நீர் கலங்குமாறு, மால் இருள் நடுநாள் போகி - கரிய இருளினையுடைய நடு இரவில் சென்று, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வளைக்கு - தன் தமையன்மார் விடியலிற்கொணர்ந்த திரண்ட கோடுகயைுடைய வாளை மீனுக்கு விலையாக, அவ் வாங்கு உந்தி அம்சொல் பாண்மகள் - அழகிய வாளைந்த உந்தியினையும் அழகிய சொற்களையுமுடைய பாண்மகள், நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் - நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில், பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் - பழைய செந்நெல்லை முகந்து தருதலைக் கொள்ளாளாகி, கழங்கு உறழ் முத்தமொடு நல்கலன் பெறூஉம் - கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும் பெறும், பயம்கெழு வைப்பில் - வளம் மிக்க ஊர்களையுடைய, பல்வேல் எவ்வி - பல வேற்படைகளையுடைய எவ்வியென்பான்;

14-7. நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் - நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தணியானாகி, பொன் இணர் நறுமலர் புன்னை வெஃகி - பொன் போலும் கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய (காவன் மரமாய) புன்னையைக் குறைக்க விரும்பி, திதியனொடு பொருத அன்னிபோல - திதியன் என்பானோடு போரிட்டிறந்த அன்னி என்பானைப்போல, நீ விளிகுவை கொல்லோ - நீ இறந்து படுவை போலும்.

(முடிபு) குறுமகள் பின்னிலை விடா நெஞ்சே! நீ பெரும் புன் பைதலையாய் வருந்தலன்றியும், புன்னை வெஃகித் திதியனோடு பொருத அன்னிபோல விளிகுவை கொல்லோ!

தன் ஐயர் தந்த வாளைக்குப் பாண்மகள் நெல்லின் முகவைகொள்ளாள் முத்தமொடு நன்கலன் பெறூஉம் வைப்பின் எவ்வி என்க.

(வி - ரை.) நின - நின்னுடையன; குறிப்பு வினைப்பெயர். புன்மை - துன்பம். புன் பைதலை - ஒரு பொருட்பன்மொழி. தயங்க - அசைய என்றுமாம். வாளை துஞ்சுங் காலத்துப் பற்றுதற் பொருட்டு மாலிருள் நடுநாட் போயினர் என்க. 1'கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து' என வருதலுங் காண்க. நெடுங்கொடி-கள் விற்குமிடத்தில் எடுத்தவை. முகவை-முகந்து அளக்கப்பட்டவை. நன்மொழி கூறி என ஒரு சொல் வருவிக்க. விளிகுவை கொல்லோ-விளிகுதலுஞ் செய்வையோ என உம்மை விரித்துரைக்க. மின் ஏர் எனப் பிரித்து மின்போலும் அழகிய என்றுரைத்தலுமாம். 2'உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும், புலத்தலும் ஊடலும் கிழவோற்குரிய என்னுஞ் சூத்திரத்தாற் கற்பின்கண் தலைவற்கும் ஊடல் நிகழும் எனக்கொளக. பின் இரண்டு துறைகளுமாயின், மருதத்துக் களவு நிகழ்ந்ததென்று கொள்க. இது திணை மயக்கம்.

(மே - ள்.) 3'மெய்தொட்டுப் பயிறல்' என்னுஞ் சூத்திரத்து. 'மற்றைய வழியும்' என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்துக் காட்டி, இது நெஞ்சினை இரவு விலக்கியது என்றனர். நச்சினார்கினியர்.

127. பாலை

[பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


(சொ - ள்.) 12. தோழி வாழி-,

1-2. இலங்கு வளை நெகிழச் சாஅய் - விளங்கும் கைவளை கழல மெலிந்து, அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய நாளும் கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க;

12-7. செங்கோல் கருங்கால் மராஅத்து வால்மெல் இணர் - சிவந்த கொம்புகளையும் கரிய அடியினையுமுடைய வெண்கடம்பின் வெள்ளிய மெல்லிய பூங்கொத்தினை, சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி-சுரிந்து வளைந்த தலைமயிர் அழகுபெறச் சூடி, கல்லா மழவர் வில் இடம் தழீஇ - அறிவில்லாத மழவர் வில்லினை இடப்பக்கத்தே தழுவிக் கொண்டு, வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை - வழி வருவோரைப் பார்த்திருக்கும் அச்சம்வரும் கவர்த்த வழிகளையுடைய, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - மொழி வேறுபட்ட தேயத்தில் உள்ளார் ஆயினும்;

3-11. வலம்படு முரசின் சேரலாதன் - வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன், முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து - கடல் நாப்பணுள்ள பகைவர்களைப் புறக்கிடச் செய்து அவர் காவன் மரமாகிய கடம்பினை வெட்டி, இமயத்து - இமையமலையில், முன்னோர் மருள வணங்குவில் பொறித்து - தமது முன்னோரையொப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து, மாந்தை நல்நகர் முற்றத்து - மாந்தை எனும் ஊரிலுள்ள தனது நல்ல மனையின் முற்றத்த, ஒன்னார் பணி திறை தந்த - பகைவர் பணிந்து திறையாகத் தந்த, பாடு சால் நன்கலம்-பெருமை சான்ற நல்ல அணிகலங்களுடன் பொன் செய் பாவை வயிரமொடு-பொன்னானியன்ற பாவையினையும் வயிரங்களையும், -ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குவைஇ-ஆம்பல் எனும் எண்ணளவு இடம் நிறையக் குவித்து, அன்று அவண் நிலம் தினத் துறந்த நிதியத்தன்ன - அக்காலத்தே அவ்விடத்தே நிலம் தின்னும் படி விட்டொழித்த நிதியம் போன்ற பொருளை, ஒரு நாள் ஒரு பகல் பெறினும் - ஒரு நாளில் ஒரு பகற் பொழுதிற் பெற்றாலும்;

18. பழிதீர் காதலர்-குற்றமற்ற நம் காதலர், சென்ற நாட்டு - தாம் சென்றுள்ள அந்நாட்டில்;

11-2. வாழிநாள் தங்கலர் - பிற்றை ஞான்று தங்காது வருவர்.

(முடிபு) தோழி! வாழி! நாம் இவண் ஒழிய, நம் தலைவர், மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் சேரலாதன் குவைஇ நிலம் தினத் துறந்த நிதியத்தன்ன பொருளினை ஒரு நாள் ஒரு பகல் பெறினும் அவர் தாம் சென்ற நாட்டு, வழிநாள் தங்கலராகி மீள்வர்.

(வி - ரை.) முந்நீரோட்டி என்பதற்குக் கடலின்கண் நாவாயைச் செலுத்தியென்று உரைத்தலுமாம். கடம்பறுத்தியற்றிய வலம்படு முரசு எனக் கூட்டி யுரைத்தலுமாம்; என்னை? 1'சேரலாதன், மால் கடலோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு' என வருதலின். பணிதிறை - பணிதலாற் றிறையாகத் தந்த என்க. 2'ஐயம் பல்லென வரூஉ மிறுதி, அல்பெய ரெண்ணினு மாயியல் நிலையும்' என்னுஞ் சூத்திரத்தால், ஆம்பல்-ஒரு பேரெண்ணாம் என்க. நிலம் தின என்றது 3'உண்டற் குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலும் மரபே' என்னுஞ் சூத்திரத்து உம்மையாற் கொள்ளப்படும். நிதியத்தன்ன பொருளென விரித்துரைக்க.


128. குறிஞ்சி

[இரவுக்குறி வந்ததலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள்தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

(சொ - ள்.) 5. தோழி வாழி-,

1-4. மன்றுபாடுஅவிந்து மனை மடிந்தன்று - அம்பலம் ஒலி யடங்கமனைகளும் துயின்றன, கொன்றோர் அன்னகொடுமையொடு-கொன்றாலொத்த கொடுமையுடன், இன்றுயாமம் கொளவரின் - இன்று நடுயாமம்பொருந்தவரின், காமம் கனைஇ - காமம் செறிந்து,கடலினும், உரைஇ - கடலைக் காட்டினும் பரவி, கரைபொழியும் - கரைகடந்து செல்லும்;

5-7. இன்னம் ஆகவும் -யாம் இந்நிலையினம் ஆகவும், நன்னர் நெஞ்சம்-நமதுநல்ல நெஞ்சம், மயங்கி - மயங்கலுற்று, என்னொடும்நின்னொடும் சூழாது-என்னையும் நின்னையும்உசாவியுணராது, கை மிக்கு - கை கடந்து;

8-11. இறும்புபட்டிருளிய இட்டு அரும் சிலம்பில் - சிறு காடாய் இருண்டசிறிய செல்லற்கரிய பக்கமலையின்கண் உள்ள,குறும் சுனைக் குவளை வண்டுபடச் சூடி-குறிய சுனையிற்பூத்த குவளைப் பூவினை வண்டு மொய்த்திடச் சூடி, கானநாடன் வரூஉம் – காட்டு நாட்டினையுடைய நம் தலைவன்வருகின்ற, யானைப் புறத்துக் கயிறு அன்ன - யானையின்முதுகிலுள்ள கயிற்றுத் தழும்பை யொத்த, கல் மிசைச்சிறு நெறி - மலை மீதுள்ள சிறிய வழியாகிய;

12-5. மாரி வானம்தலைஇ நீர் வார்பு - மேகம் மழை பெய்தலால் நீர்ஒழுகா நிற்க, இட்டு அரும் கண்ண - செல்லுதற்கரியசிறிய இடங்களிலுள்ள, படுகுழி இயவில் -படுகுழிகளைக் கொண்ட நெறியில், இருளிடைமிதிப்புழி நோக்கி - இருளின்கண்மிதிக்குமிடத்துப் பார்த்து, அவர் தளர் அடி - அவரதுதளராநின்ற அடியை, தாங்கிய இன்று சென்றது -தாங்கும் பொருட்டு இன்று சென்றுவிட்டது;

5. எவன் கொல் -இஃதென்னையோ!

(முடிபு) தோழி! வாழி! மன்றுபா டவிந்து மனை மடிந்தன்று:காமம் கரை பொழியும்; நாம் இன்னம் ஆகவும்நெஞ்சம் இன்று கான நாடன் வரூஉம் நெறிக்கட்படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கி அவர்தளரடி தாங்கிய சென்றது; இஃது எவன் கொல்.

(வி - ரை.) அவிந்து - அவிய. மனை: ஆகுபெயர். கரைபு ஒழியும் எனப்பிரித்து, முழங்கி யொழியும் என்றலுமாம். ஒழியும்,ஈண்டு விடும் என்பதுபோலத் துணிபுப் பொருட்டாயதுணைவினை. சிலம்பில் கானநாடன் வரூஉம் சிறுநெறியாகிய படுகுழி யியவின் என்க. யானையும் அதன்புறத்துக் கயிற்றுத் தழும்பும் கல்லிற்கும் அதன்மேலுள்ள சிறு நெறிக்கும் உவமை. கயிற்றை யொத்தசிறு நெறி என்றலுமாம். தலைஇ, வார்பு என்னும்எச்சங்களைத் திரிக்க. நெஞ்சம் தளரடி தாங்கியசென்றது என்றது, இரவுக் குறிக்கண் தலைவன் வரும்நெறியின் ஏதத்தை நினைந்து வருந்துதல்புலப்படுத்தியவாறு.

(மே - ள்.) 1'மறைந்தவற்காண்டல்' என்னுஞ் சூத்திரத்து, 'பொழுதும் ஆறும்புரைவ தன்மையின், அழிவுதலை வந்த சிந்தைக்கண்ணும்' என்ற பகுதியில், இச் செய்யுளைக் காட்டி,காமம் கரை பொழியா நிற்கவும், என்ன நன்றி கருதி,இருவரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டும்(பொழுதும் ஆறும்) கூறினாள். மனை மடிந்தன்றென்பதபொழுது; சிறு நெறி யென்பது ஆறின்னாமை என்றும், 2'நோயுமின்பமும்' என்னும் சூத்திரத்து, 'நெஞ்சம்...தளரடிதாங்கிய சென்றது இன்றே' என்பது, நெஞ்சினைஉறுப்புடை யதுபோல் அழுகைபற்றிக் கூறியது என்றும், 3'பொழுதும்ஆறும்' என்னுஞ் சூத்திரத்து, 'மன்று பாடவிந்து'என்பது பொழுது வழுவு தலிற் குற்றங்காட்டியது என்றும்கூறுவர், நச்சினார்கினியர்.

4'முட்டுவயிற்கழறல்'என்னுஞ் சூத்திரத்து, அச்சத்தின் அகறல் என்னும்மெய்ப்பாட்டிற்கு, இப் பாட்டினைக் காட்டி, இதன் கருத்தாவது, 'நாம் அவர் இருளிடைவருதல் ஏத மஞ்சி அகன்று அவலித்திருப்பவும்என்னையும் நின்னையும் கேளாது என் நெஞ்சுபோவானேன் என்றவாறாயிற்று' என்பர், பேரா.

129. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது.]


(சொ - ள்.) 18. அம்சில் ஓதி ஆய் இழை - அழகிய சிலவாகியகூந்தலையும் ஆராய்ந்த அணிகளையும் உடைய தலைவியே!

1-2. ஒழிந்தபின் -இவளைப் பிரிந்து சென்றபின், உள்ளல் வேண்டும் என- இவளை எண்ணி நாம் இரங்கல் வேண்டிவரும் என்றுநினைத்து, நள் என் கங்குல் நடுங்கு துணையாயவர் -நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில் நடுங்கும்துணையினரான;

17. காதலர் - நம்தலைவர்;

3-14. புல் மறந்து - புல்லைத்தின்னுதலை மறந்து, அலங்கல் வான் கழை உதிா நெல்நோக்கி - அசையும் நெடிய மூங்கிலினின்று உதிாந்தநெல்லைப்பார்த்து, கலைபிணை விளிக்கும் கானத்துஆங்கண் - கலைமான் தன் பிணையினை அழைக்கும்காட்டிடத்தே, கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பை- பாறையைச் சேர்ந்திருந்த சிதைவுற்ற குடிலில்,தாழி முதற் கலித்த கோழ் இலைப் பருத்தி -தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடையபருத்திச் செடியின், பொதி வயிற்று இளங்காய்பேடை ஊட்டி-பருத்த வயிற்றினை யுடைய இளங்காயைப்பேடைகட்கு அருத்தி, போகில் பிளந்திட்டபொங்கல் வெண்காழ் - ஆண் பறவைகள் பிளந்துபோகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை,நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் - வறுமையுற்றமகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும், கலங்குமுனைச் சீறூர் கை தலை வைப்ப - கலங்குதற்கு ஏதுவாயபோர் நிகழும் இடங்களையுடைய சீறூரிலுள்ளார்கையைத் தலைமீது வைத்து அலற, கொழுப்பு - ஆ தின்றகூர்ம்படை மழவர் - அவர்களுடைய கொழுத்த ஆக்களைக்கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளையுடையமழவர்கள்; செருப்பு உடை அடியர் - செருப்பினைப்பூண்ட அடியராகி, தெண்சுனை மண்டும்-தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும், அரும் சுரம்-அரியசுரநெறிகள்;

14-8. வார் கோல்திருந்து இழை பணைத் தோள் தேன் நாறு கதுப்பின்குவளை உண்கண்-நீண்ட கோல்தொழிலமைந்தவளையலையும் திருந்திய அணிகளையும் மூங்கில்போன்ற தோளினையும் தேன் மணக்கும் கூந்தலினையும்கருங்குவளைபோன்ற மையுண்ட கண்களையும் உடைய,இவளொடு செலற்கு அரியவல்ல என - இவளுடன்செல்லுதற்கு அருமையுடையன அல்லவென, நமக்கு நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் - நமக்குத் தமது உள்ளக்கருத்தை வாய்விட்டு மொழிந்தனர்;

3. நின் மறந்துஉறைதல் யாவது - ஆகலின் நின்னை மறந்து வேற்றுநாட்டுத் தங்குதல் எங்ஙனம் கூடும்?

(முடிபு) ஆயிழை, நடுங்கு துணை யாயவர், காதலர், நமக்குஅருஞ்சுரம் இவளொடு செலற்கு அரியவல்ல என நெஞ்சுவாய் அவிழ்ந்தனர்; ஆகலின் நின் மறந்து உறைதல்யாவது?

கானத் தாங்கண்சீறூர் கை தலைவைப்பக் கொழுப்பா தின்ற மழவர்சுனை மண்டும் அருஞ்சுரம் என்க.

(வி - ரை.) முதலிலே பிரிவிற்கு அஞ்சி நடுங்கிய காதலர், அதன்மேலும் இவளொடு செலற்கு அருஞ்சுரம் அரியவல்ல எனக்கூறினாராதலின், நின்னை மறந்து வேற்றுநாட்டின்கண் நீட்டித்திருப்பாரல்லர் என்றுதோழி தலைவியை ஆற்றுவித்தாள் என்க. விரைந்துவந்து நின்னை உடன் கொண்டு செல்வார்என்றாளாயிற்று. புல் கரிந்து போயினமையின் மான்அதனை உண்ணுதலை மறந்ததென்க. புல் மறைந்து என்னும்பாடத்திற்கு புல் அற்றொழிந்தமையால் என்றுபொருள் கொள்க. போகில் - பறவைப் பொதுப்பெயர்.பொங்கர் என்பது பாடமாயின், சிறு கோட்டிலுள்ளஎன்க. அல்குற் கூட்டும் என்பது பாடமாயின்,இடைமருங்கிலுள்ள மடியிற் சேர்க்கும் என்க.மண்டுதல் - மிக்குப் பருகுதல். பருகுதற்கு விரைதல்என்றுமாம்.
-----------

130. நெய்தல்

[கழறிய பாங்கற்குத்தலைமகன் கழற்றெதிர் மறுத்தது.]


(சொ - ள்.) 1. கேளிர் அம்ம வாழி - பாங்கீர், யான் கூறுவதனைக்கேட்பீராக; வாழி!

3-14. நுண் தாதுபொதிந்த செங் கால் கொழு முகை - நுண்ணியபூந்துகளால் மூடப்பட்ட சிவந்த தண்டினையும்கொழுவிய மொட்டினையுமுடைய, முண்டகம் கெழீஇயமோட்டு மணல் அடை கரை-கழிமுள்ளி பொருந்தியஉயர்ந்த மணல் அடைந்த கரையிடத்தே,பேஎய்த்தலைய பிணர் அரைத் தாழை - பேய் போலும்தலையினையுடைய சருச்சரை வாய்ந்த அரையினையுடையதாழையின், எயிறு உடை நெடுந்தோடு பல உடன் காப்ப -முள்ளாகிய பற்களை யுடைய நீண்ட புற இதழ்கள் பலவும்ஒருங்கு காவா நிற்ப, வயிறு உடைப்போது வாலிதின் விரீஇ - அதன் அகட்டினைஇடமாகவுடைய பூ தூய்தாக விரிந்து, புலவுப் பொருதுஅளித்த பூ நாறு பரப்பின் - புலால் நாற்றத்தைத்தாக்கி ஒழித்த மலர் நாற்றம் கமழும் இடத்தின்கண்;

இவர் திரை தந்தஈர்ங் கதிர் முத்தம் - பரக்கும் அலைகள்கொணர்ந்து வீசியகுளிர்ந்த ஒளியினையுடையமுத்துக்கள், கவர்நடைப் புரவிக் கால் வடுத்தபுக்கும் - விரும்பும் நடையினையுடைய குதிரையதுகாலினை வடுச்செய்து அதன் செலவினைக் கெடுக்கும்,நல் தேர் வழுதி கொற்கை முன் துறை - நல்லதேரையுடைய பாண்டியனது கொற்கை யென்னும் பதியின்கடற்றுறைக் கண்ணுள்ள;

வண்டு வாய் திறந்தவாங்கு கழி நெய்தற்போது - வண்டினால் வாய்திறக்கப்பெற்ற வளைந்த கழியிடத்திலுள்ளநெய்தல் பூவானது, புறங்கொடுத்த மாதர் வாள்முகஉண்கண் - புறங் கொடுத்த அழகிய ஒளி பொருந்தியமுகத்தின்கண்ணுள்ள மையுண்ட கண்களது, மதை இயநோக்கு - செருக்கிய பார்வையினை;

1-2. முன்நின்றுகண்டனிர் ஆயின் கழறலிர் - முன்னே நின்றுகண்டீராயின் இங்ஙனம் கழறிக் கூறீர்.

(முடிபு) கேளிர்,வாழி, கொற்கை முன்றுறையின் நின்ற அவள் உண்கண்நோக்குமுன் நின்று கண்டனிராயின் கழறலிர்,கண்டிலீர்.

அம்ம:கேட்பித்தற் பொருளில் வரும் இடைச்சொல்.கழறுதல் - இடித்துரைத்தல். மன்-கழிபு. வடுத்தபுக்கும் - காலை வடுச் செய்து முடமாக்கும்என்றலுமாம்; வடுச் செய்து என ஒரு சொல் வருவிக்க.தபுக்கும் முன்துறை: பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது. மாதர் - காதலுமாம்.

(உ - றை.) முண்டகமுகை கெழீஇய தாழையின்போது எயிறுடைநெடுந்தோடு பல காப்ப இருந்து விரீஇப் புலவுப்பொருதழித்த தென்பது, காதற்றோழியுடன் கூடிஆயவெள்ளம் புடை சூழு நின்ற தலைவியின் இயல், நீகூறிய உறுதி மொழிகளை யெல்லாம் அழித்தது என்றபடி.
--------------

131. பாலை

[பொருள் கடைக்கூட்டியநெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.]

(சொ - ள்.) 15.நெஞ்சம் - நெஞ்சமே!

1-5. விசும்பு உறநிவந்த மா தாள் இகணை - வானை அளாவ உயர்ந்த கரியஅடியினை உடைய இகணை மரத்தினது, பசுகேழ் மெல் இலைஅருகு நெறித்தன்ன - பசியநிறமுடைய மெல்லிய இலைகளைநெருங்கச் செறித்து வைத்தால் ஒத்த, வண்டு படுபுஇருளிய தாழ் இருங் கூந்தல்-வண்டு மொய்த்து இருண்டதாழிந்த பெரிய கூந்தலையும், சுரும்பு உண விரிந்தபெரும் தண் கோதை - வண்டுகள் தேன் உண்ணும்படிமலர்ந்த பூக்களாலாய பெரிய குளிர்ந்த மாலையையும்உடைய, இவளினும் நமக்கு ஈதல் சிறந்தன்று என -இத்தலைவியினும் நமக்கு ஈதலே சிறந்தது என்று;

6-13. வீளை அம்பின்விழுத்தொடை மழவர் - சீழ்க்கை போலும் ஒலியுடன்செல்லும் அம்பினது தப்பாத தொடையினையுடையவெட்சி மறவர், நாள் ஆ உயத்த நாம வெம்சுரத்து-விடியற் காலையில் ஆக்களைக் கவர்ந்துகொண்டுபோன அச்சம்தரும் கொடிய சுர நெறியிலே,சேண்படர் நடை மெலிந்து ஒழிந்த கன்றின் -நெடுந்தூரம் கடந்து வருதலின் நடை ஓய்ந்துநின்றுவிட்ட கன்றினது, கடை மணி உகுநீர் துடைத்தஆடவர் - கடைக்கண்ணினின்றும் ஒழுகும் நீரைத்துடைத்த கரந்தையோரது, பெயரும் பீடும் எழுதிப்பீலி சூட்டிய பிறங்க நிலைநடுகல் - பெயரும்சிறப்பும் பொறித்து மயில் தோகையினைச் சூட்டியவிளங்கம் நிலையினையுடைய நடுகல்லின் முன், ஊன்றுவேல் பலகை - ஊன்றிய வேலும் அதன்கட் சார்த்தியகேடகமும், அதர்தொறும் வேற்றுமுனை கடுக்கும் -செல்லும் வழிதோறும் பகைவர் போர்முனையிருப்பைஒக்கும், வெருவரு தகுந கானம் - அச்சம் வரும்இயல்பினவாய காட்டில்;

13-5. நம்மொடு வருகஎன்னுதியாயின் - எம்மோடு வருக என்பையாயின்,வாரேன் - யான் வருவேனல்லேன்; நின்வினை வாய்க்க- மேற்கொண்ட வினை வாய்ப்பதாக.

(முடிபு) நெஞ்சம், இவளினும் ஈதல் சிறந்தன்றென, கானம்நம்மொடு வருக என்னுதியாயின், வாரேன்; நின் வினைவாய்க்க.

(வி - ரை.) இகணை - ஒருமரம்; இது செழுமையுடன் அடர்ந்திருக்கும்தழைகளைத் தலையில் உடையதாகும் என்பது, 1'துன்னிய,ஈர நெஞ்சத் தார்வ லாளர், பாரந்தாங்கும் பழமைபோல, இலைக்கொடிச் செல்வமொடுதலைப்பரந்தோங்கிய, கணைக்கால் இகணை' என்னும்பெருங்கதையாற் பெறப்படும். இதணை எனப் பாடம்கொள்வாரு முளர். இவளினும் சிறந்தன்றீதல் -ஈதலால் வரும் இன்பம் இவளால் வரும் இன்பத்தினும்சிறந்தது என்றபடி, வீளையினையும் அம்பின்தொடையினையுமுடைய மழவர் என்னலுமாம்வீளை-சீழ்க்கை யொலி. விழு-இடும்பை என்னலுமாம்.கடைமணி யுகுநீர், இவ்வாறே 2'ஆவின்கடைமணியுகு நீர்' என வருதலுங் காண்க. உகுநீர்,துடைத்தஎன்ற, ஆநிரையை மீட்டமையால் அதன்துயரைப்போக்கிய என்றபடி. துடைத்த ஆடவர் நடுகல்என்றமையால், நிரைமீட்ட கரந்தையார்பொருதுபட்டமை பெற்றாம். வாய்க்க நின்வினைஎன்றது இகழ்ச்சி.

(மே - ள்) 3'வெறியறிசிறப்பின்' என்னும் சூத்திரத்து, 'ஆபெயர்த்துத் தருதலும்' என்னும் பகுதிக்கு, இச்செய்யுளையும் காட்டி, இதனுள் 'மறவர் நாள்ஆஉய்த்த' என வேந்துறு தொழில் அல்லாதவெட்சித்திணையும் பொதுவியல் கரந்தைக்கண்ணேகொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின் என்றும், இச்சூத்திரம் 'பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்,பீலி சூட்டியபிறங்குநிலை நடுகல்' எனஅகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று என்றும்,4'நோயுமின்பமும், என்னுஞ் சூத்திரத்து, வருகவென்னுதியாயின், வாரேன் நெஞ்சம் வாய்க்கநின்வினையே' என்பது 'மறுத்துரைப்பதுபோல் தறுகண்மைபற்றிய பெருமிதங் கூறிற்று' என்றுங் கூறினார், நச்சினார்கினியர்.


132. குறிஞ்சி

[தோழி தலைமகளைஇடத்துய்த்துவந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்றுவரைவுகடாயது.]

(சொ - ள்.) 8. நுண் பூண் மார்ப - நுண்ணிய தொழிற்றிற அமைந்தபூணணிந்த மார்பனே!

1-3. ஏனலும் இறங்குகுரல் இறுத்தன - தினையும் முதிர்ந்து வளைந்த கதிர்அறுக்கப் பெற்றன, இவள் நுதலும் நோய்மலிந்துஆய்வகவின் தொலைந்த - இவள் நெற்றியும்காமநோய் மிக்கமையால் ஒள்ளிய அழகு தொலையப்பெற்றது, இவ்வூரும் - இவ்வூராரும், நோக்கி - அதனைநோக்கி, ஏதில மொழியும் - இயைபில்லாதன கூறுவர்,ஆகலின் - ஆதலால்;

4-7. களிற்று கவுள்உடை முகம் திறந்த பகழி - களிற்றியானை மதம்பொருந்திய கன்னத்தையுடைய முகத்தைக் கிழித்தஅம் பினையும், வால் நிணப் புகவின் - வெள்ளியநிணத்துடன் உடிய உணவினையும் உடைய, கானவர் தங்கை -வேடர்களது தங்கையும், அம்விணை மெல் தோள் -அழகிய மூங்கிலை யொத்த மெல்லிய தோளினையும்,ஆய் இதழ் மழைக்கண் - அழகிய இமையுடன் கூடியகுளிர்ந்த கண்ணினையும், ஒல்கு இயல் - அசையும்இயலினையும் உடைய, கொடிச் சியைநல்கினை ஆயின் -கொடிச்சியுமாகிய இவளை அருள் செய்தாய் ஆயின்;

9-14. துளி தலைத்தலைஇய சாரல் - வானம் மழைத்துளியை முதற்கண்ணேபெய்த பக்க மலையிலே, நளிசுனைக் கூம்பு முகைஅவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை - பெரிய சுனைக்கண்ணேகுவிந்த அரும்பினை விரித்த குறுகிய சிறையினவாயவண்டுகள், வேங்கை விரி இணர் ஊதி - வேங்கையின்விரிந்த பூங்கொத்துக்களில் தாதினை ஊதி,காந்தள் தேன் உடைக் குவிகுலை துஞ்சி காந்தளின்தேன் பொருந்திய குவிந்த குலையில் உறங்கி, யானைஇரு கவுள் கடாஅம் கனவும் - யானையின் பெரியகன்னத்தில் ஒழுகும் மதத்தினை உண்பதாகக் கனாக்காணும், பெருங்கல் வேலி - பெரிய மலையைச்சூழக்கொண்ட, உறைவு இன்நும் ஊர்க்கு - உறைதற்குஇனிய நுமது ஊர்க்கு;

8. கொண்டனைசென்மோ - வரைந்துகொண்டு செல்வாயாக.

(முடிபு) நுண்பூண் மார்ப! ஏனல் குரல் இறுத்தன; நுதலும்கவின் தொலைந்த, இவ்வூரும் ஏதில மொழியும்;கொடிச்சியை நல்கினையாயின், நும் ஊர்க்கு(வரைந்து) கொண்டனை சென்மோ.

(வி-ரை.) ஏனலுங் குரல்இறுத்தன, இவ்வூரும் கவின் தொலைந்த இவள் நுதல்நோக்கி ஏதில மொழியும் ஆகலின்என்றுரைத்தலுமாம். இதற்கு நுதலும் என்பதிலுள்ளஉம்மை இசை நிறை; நுதலும் பிறவுமெனஎச்சவும்மையுமாம்.

(உ - றை.) முகையவிழ்த்த வண்டு வேங்கை மலரையூதி, காந் தட்குலையிலே துஞ்சி யானையின் கடாத்தினைக் கனவும்என்றது தலைவியின் நாண் முதலிய தளைகளைநெகிழ்த்த தலைவன் அவளை நுகர்ந்து, அக்களவொழுக்கத்திலே அழுந்தி, மேலும் பகற்குறிஇரவுக் குறிகளால், அடைதற்கரிய அவளைப் பெறுதற்குநினைக்கின்றான் என்றபடி.

(மே - ள்.) 1'ஆயர்வேட்டுவர்' என்னுஞ் சூத்திரத்து ஆயர் வேட்டுவர்என்னும் இரண்டு பெயரேயன்றி, ஒன்றென முடித்தலாற்கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர்என்றுரைத்து, 'வானிணப் புகவிற்கானவர் தங்கை'எனவருவனவுங் கொள்க என்றனர், நச்சினார்கினியர்.

133. பாலை

[பிரிவிடையாற்றாளாயினாளெனக் கவன்ற தோழிக்குத்தலைமகள் ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.]


(சொ - ள்.) 13. தோழி -,

14-8. இதல் முள்ஒப்பின் - சிவலின் காலிலுள்ள முள்ளை ஒத்த, முகைமுதிர் வெட்சி - அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள், கொல் புனக் குருந்தொடு -வெட்டித்திருத்திய கொல்லை நிலத்திலுள்ள குருந்தமலர்களோடு, கல்அறைத் தாஅம் - கற்பாறையிலேபரந்து கிடக்கும், மிளை நாட்டு அத்தத்து - மிளைஎன்னும் நாட்டின் பாலை நெறியில், ஈர் சுவல்கலித்த - ஈரமுடைய மோட்டு நிலத்தே தழைத்த, பரிமரல் கறிக்கும் - வரிகளையுடைய மரலைக்கடித்துண்ணும், மடப் பிணை திரி மருப்பு இரலைய -மடப்பத்தையுடைய பெண்மானுடன் கூடிய முறுக்குண்டகொம்பினையுடைய ஆண்மான்களையுடைய, காடுஇறந்தோர் - காட்டினைக் கடந்துசென்ற நம்தலைவர்;

1-4. குன்றி அன்னகண்ண - குன்றிமணி போன்ற கண்களையும், குரூஉமயிர்-நல்ல நிறம் வாய்ந்த மயிரையும், புல் தாள்- மெல் வலிய கால்களையும், மோவாய் - தாடியினையுமுடைய, வெள் எலி ஏற்றை - ஆண் வெள்ளெலி; செம்பரல்முரம்பில் சிதர்ந்த பூழி - சிவந்த பரல்கள்மிக்க வன்னிலத்தில் கிளறிப் போகட்டபுழுதியில், நல் நாள் வேங்கை வீகளம்வரிப்ப -மணநாளை அறிவிக்கும் இயல்புடைய வேங்கைப் பூக்கள்உதிர்ந்து சிறந்த வெறியாடு களம் போல அழகுசெய்ய;

5-7. கார்தலை மணந்தபைம்புதல் புறவின்-கார்காலம் கூடிய தால் பசியபுதல்களையுடைய முல்லை நிலத்தே, வில் எறி பஞ்சின்வெண் மழை தவழும்-வில்லினால் அடிக்கப்பெற்றபஞ்சுபோல வெள்ளிய மேகம் தவழ்ந்திடும்,

கொல்லை இதையகுறும்பொறை மருங்கில்-புதுக் கொல்லைகளையுடையசிறிய மலையின் பக்கலில்;

8-13. கரி பரந்தன்னகாயா செம்மலொடு-கரி பரந்தா லொத்த காயாவின்வாடற் பூக்களொடு, எரி பரந்தன்ன இலமலர் விரைஇ -நெருப்புப் பரந்தா லொத்த இலவமலர் கலக்க, பூகலுழ் சுமந்த தீம்புனல் - அப்பூக்களின் ஒழுகுதலைச்சுமந்துவரும் இனிய புனலையுடைய, கான்யாற்று -காட்டாற்றின்கண்ணே, வளிதர வான் கொள் தூவல்-காற்று எழுப்புதலின்மேலே எழும் துளிகளையே உண்கும்-உண்பேமாகிய,எம்மொடு வரும் வல்லையோ என - எம்முடன் வருதற்குவன்மையுடையையோ வென்று, கொன் ஒன்று வினவினர் -பெருமை தங்கிய ஒரு மொழியினைக் கூறி வினவினர்.

(முடிபு) தோழி! மிளைநாட்டு அத்தத்துக் காடிறந்தோர்ஆம் நம் தலைவர், குறும்பொறை மருங்கில்கான்யாற்றுத் தூவல் உண்கும் எம்மொடு வருதல்வல்லையோவெனக் கொன் ஒன்று வினவினர் (ஆதலின்விரைந்து வந்து உடன்கொண்டு செல்லுதலும் கூடும்.)

(வி - ரை) இதை - புதுப்புனம், இலவமலர்-இலமலரென விகாரமாயிற்று, விரைஇ - விரவ எனத்திரிக்க.கலுழ்-வண்டலுமாம். உண்கும்-உண்பேமாக என்னலுமாம்.மற்று, அசை, மன் ஒழியிசை, மிளைக் கந்தன்,மிளைகிழான் நல்வேட்டன், மிளைவேள் தித்தன்எனவரும் புலவர் பெயர்களால் மிளையென்பது நாட்டின்பெயராதல் அமையும் இளைநா டெனப் பிரித்தலுமாம்.தலைவர் அங்ஙனம் வினவினராதலின் உடன்கொண்டுசெல்லுதலும்கூடுமென எண்ணினாளென்க.நச்சினார்க்கினியர் கருத்தின்படி, தலைவர்வினவினதன்றி அங்ஙனம் செய்திலரே என்று தலைவிஇரங்கினாள் எனக் கொள்ளல்வேண்டும்.

(மே - ள்.) 1'கொண்டுதலைக் கழியினும்' என்னுஞ் சூத்திரத்து இதுபாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததென்றனர், நச்சினார்கினியர்.

134. முல்லை

[வினை முற்றி மீண்டதலைமகன் பாகற் குரைத்தது.]

(சொ - ள்.) 9-14. வலவ - பாகனே! கடுமான் தேர் ஒலி கேட்பின் -நமது விரைந்த குதிரைபூண்ட தேரின் ஒலியினைக்கேட்டால், வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்தகுவிமுகை ஒழிகுலை அன்ன - வாழையின் பெரிய பூமடல்கள் முறையாக முற்றி உதிர எஞ்சிய குவிந்தமொட்டும் ஒழிந்த குலையை ஒத்த, திரி மருப்புஏற்றொடு - முறுக்கிய கொம்பினையுடைய மானேற்றுடன்,கணைக்கால் அம் பிணைக் காமர் புணர்நிலை -திரண்ட காலினையுடைய அழகிய பெண் னினது விருப்பம்பொருந்தும் நிலையினதாகிய, நடுநாள்கூட்டம்-நள்ளிரவின் கூட்டம், ஆகலும் உண்டே -நிகழ்தலும் கூடுமோ? (கூடாதாகலின்,)

1-4. கமம் சூல் மாமழை- நிறைந்த சூலினையுடைய கரிய மகங்கள், கார் பயந்துஇறுத்தென - கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக,வானம் வாய்ப்ப - மழை தப்பாது பெய்தலால், கானம்கவினி - காடு அழகு பெற்று, மணி மருள் பூவை அணிமலர்இடை இடை - நீல மணியை ஒக்கும் காயாவின் அழகியமலர்களின் இடையிடையே, செம் புற மூதாய்பரத்தலின் - சிவந்த புறத்தினையுடையஇந்திரகோபப்பூச்சி புரத்தலோடு, முல்லை கழல்நன்பலவீ தாஅய் - முல்லையின்நின்றும் உதிர்ந்தநன்றாகிய பல பூக்களும் பரந்து கிடத்தலால்,வல்லோன் செய்கை அன்ன - ஓவியம் வல்லோன்செய்த ஓவியம் போன்ற, செம்புலப் புறவின் -சிறந்த நிலமாகிய முல்லை நிலத்தே;

7-9. வாஅ பாணி வயங்குதொழிற் கலிமா-தாவிச் செல்லும் குளச்சீர்விளங்கும் நடை வாய்ந்த செருக்கிய குதிரையின்,தாஅதாள் இணை மெல்ல ஒதுங்க - தாவிச் செல்லும்இணையொத்த கால்கள் மெல்லென நடக்கும்படி,இடிமறந்து-தாற்றுக் கோலால் குத்துதலை மறந்து, ஏமதி- செலுத்துவாயாக.

(முடிபு) வலவ! தேரொலி கேட்பின் ஏற்றொடு பிணையின்நடுநாள் கூட்டம் ஆகலுமுண்டோ? (ஆகாதாகலின்) புறவின்கண் கலித்தாளிணை மெல்ல வொதுங்கஇடிமறந்து ஏமதி.

(வி - ரை.) வீகழல் - கழல்வீ என மாறுக. தாஅய் - தாவ எனத்திரிக்க. வாவும், தாவும் என்பன விகாரப்பட்டன.இடி: முதனிலைத் தொழிற்பெயர். இடித்தல் - கசையால்அடித்தலுமாம். ஏவுமதி என்பது ஏமதி என்றாயிற்று.காமம்-காமர் என ஈறு திரிந்தது. தலைவியைக்கூடவருகின்ற பெருங்காதலுடைய னாகலின்,மானினங்களின் அத்தகைய கூட்டத்திற்கு இடையூறுவிளைத்தல் ஆகாதென அஞ்சினானென்க.
-----------

135. பாலை

[தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது.]

(சொ - ள்) 6. காதல் அம் தோழி - காதலையுடைய அழகிய தோழியே!

7-10. காதலர் - நம்காதலர், காய் கதிர் திருகலின் - காய ஞாயிறுதாக்குதலால், ஆடு தளிர் இருப்பை -அசையும்தளிரினையுடைய இருப்பை மரத்தின், கூடு குவிவான் பூ - இதழ் குவிந்த வெள்ளி பூக்கள், கோடு கடைகழங்கின் - யானை மருப்பினாற் கடைந்துசெய்கழங்கினைப் போன்று, அறைமிசைத்தாஅம்-பாறைமீது பரவிக் கிடக்கும், காடு இறந்தனரே- காடு கடந்து சென்றனர் ஆதலின்,

10-4. அவர் தெளிந்தஎன்நெஞ்சு - அவரைப் பிரியாரென்றுதெளிவுற்றிருந்த என் மனம், அடுபோர் வீயாவிழுப்புகழ் - அடுப் போரினையும் நீங்காத சிறந்தபுகழினையும், விண் தோய் வியன் குடைவானை அளாவியபெரிய குடையினையுமுடைய; கழுவுள் - கழுவுள்என்பானுடையதும், ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்குஎறிந்த பதினான்கு வேளிர் ஒருங்குக்கூடித்தாக்கியதுமாகிய, காமூர் போல காமூரைப் போல,கலங்கின்று - கலங்காநின்றது;

1-6. திதலை மாமைதளிர் வனப்பு அழுங்க - தேமலுடன் கூடிய எனது மாமைநிறமும் தளிர்போலும் அழகும் கெட்டொழிய, புதல் இவர் பீரின் எதிர்மலர்கடுப்ப-புதர்களிற் படர்ந்த பீர்க்கினது புதியமலரை யொக்க, பசலை பாய்ந்த நுதலேன் ஆகி - பசலைபரந்த நெற்றியை யுடையேன் ஆகி, எழுது எழில்மழைக்கண் கலுழ - ஒவியம் வல்லார் பார்த்துஎழுதுதற்குரிய 1அழகியகுளிர்ந்த கண் அழ, நோய் கூர்ந்து - துன்பம் பெருகி,ஆதிமந்தியின் அறிவு பிறிதாகி - ஆதி மந்தி போலஅறிவு திரிந்து, பேதுற்றிசின் - யான்மயங்கியுள்ளேன்.

(முடிபு) தோழி காதலர் காடிறந்தனர் ஆகலின், நெஞ்சுகாமூர் போலக் கலங்கின்று (அவர் இன்னும்வந்திலாமையால்) வனப்பு அழுங்க, பசலை பாய்ந்தநுதலேன் ஆகி மழைக்கண் கலுழ நோய் கூர்ந்து,ஆதிமந்திபோல அறிவு பிறிதாகிப் பேதுற்றிசின்.

(வி - ரை) ஆதிமந்தி - கரிகால் வளவன் மகள். இவள் தன்காதலனைக் கெடுத்து வருந்தினாளென்பது, அகம் 45, 74, 222- ஆம் செய்யுட்களாலும் அறியப்படும். இருப்பையின்பூவிற்கு யானைக் காம்பினாற் கடைந்தவைஉவமையாதலை, மேல், 'இருப்பை, விருப்புக்கடைந்தன்ன கொள்ளை வான்பூ' 2'இருப்பைக்,கோடு கிடைந்தன்ன கொள்ளை வான்பூ' எனவருவனவற்றாலும் அறிக. கலங்கின்று மாது; மாது: அசை.

136. மருதம்

[உணர்ப்புவயின் வாராஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 1-9. நெஞ்சே -, மைப்பு அற - குற்றம் நீங்காபுழுக்கின் - இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய,நெய்க்கனி - நெய் மிக்க வெண் சோறு - வெள்ளியசோற்றை, வரையா வண்மையொடு - வரை தலில்லாதவள்ளன்மையுடன், புரையோர்ப் பேணி - உயர்ந்தசுற்றத்தார் முதலாயினாரை உண்பித்து, புள்இனியவாகப் புணர்ந்து - புள் நிமித்தம் இனிதாகக்கூட, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க -தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரியவானம் களங்க மற விளங்குதலுற, திங்கள் சகடம்மண்டிய துகள் தீர் கூட்டத்து திங்களை உரோகணி கூடியகுற்றமற்ற நன்னாள் சேர்க்கையில், நகர் புனைந்து- மண மனையை அழகுறுத்தி, கடவுள் பேணி - கடவுளைவழிபட்டு, படுமண முழவொடு - ஒலிக்கும் மணமுழவுடன்,பரூஉ பணை இமிழ - பெரிய முரசம் ஒலிக்க, வதுவைமண்ணிய மகளிர் - தலைவிக்கு மணநீராட்டிய மகளிர்,பூக்கணும் இமையார் நோக்குபு - தமது கூரியகண்களாலும் இமையாராய் நோக்கி, விதுப்புற்றுமறைய விரைந்து மறைந்திட;

10-8. மென்பூ வாகைப்புல்புறக் கவட்டு இலை - மெல்லிய பூவையுடையவாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலையைபழங்கன்று கறித்த - முதிய கன்று கறித்த, பயம்புஅமல் – பள்ளத்திற் படர்ந்த, அறுகை - அறுகினது, தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற - ஒலிக்கும்குரலையுடைய மேகத்தின் முதற்பெயலால் ஈன்ற,யமண்ணுமணி அன்ன - கழுவி நீலமணியை ஒத்த, மா இதழ் -கரிய இதழையுடைய, பாவை - பாவைபோலுங் கிழங்கிடத்துள்ள, தண் நறுமுகையொடு - தண்ணிய நறியஅரும்புடன் (சேரக்கட்டிய) வெண் நூல் சூட்டி -வெள்ளிய நூலைச் சூட்டி, தூஉடைப் பொலிந்து - தூயஉடையாற் பொலியச் செய்து, மேவரத் துவன்றி -விருப்பம் உண்டாக நெருங்கி, மழைபட்டன்னமணன்மலி பந்தர் - மேகம் ஒலித்தா லொத்தமணவொலி மிக்க பந்தலிலே, இழை அணி சிறப்பின் -அணிகளை அணி வித்த சிறப்பினொடு, பெயர்வியர்ப்பு ஆற்றி - தோன்றிய வியர்வையை ஆற்றி,தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் - சுற்றத்தார்நமக்குத் தந்த முதல் நாள் இரவில்,

19-29. உவர் நீங்குகற்பின் எம் உயிர் உடம்பு அடுவி - வெறுப்புநீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாகஅடுத்தவள், முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ -கசங்காத புத்துடையால் உடல் முழுவதும்போர்த்தியதால், பெரும் புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறி வியர் - மிக்க புழுக்கத்தை எய்தியநினது பிறைபோன்ற நெற்றியில் அரும்பியவியர்வை, உறுவளி ஆற்ற சிறுவரை திற என - மிக்ககாற்றுப் போக்கிடச் சிறுபொழுது திறவாய் என்றுகூறி, ஆர்வம் நெஞ்சமொடு போர்வை வவ்வலின் -அன்பு மிக்க நெஞ்சமொடு போர்வையைக்கவர்தலின், உறைகழிவாளின் - உறையினின்றும்எடுத்த வாளைப்போல, உருவு பெயர்ந்து இமைப்ப - அவள்உருவம் வெளிப்பட்டு விளங்க, மறை திறன் அறியாள்ஆகி - மறையும் வகை அறியாதவள் ஆகி, பரூஉப்பகைஆம்பல் குரூஉத்தொடை நீவி - ஆம்பற் பூவின்முறிக்கப்பட்ட இதழ்களால் ஆய பருத்த நிறம்பொருந்திய மாலையை நீக்கி, சுரும்புஇமிர் ஆய்மலர் வேய்ந்த - வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்தமலரினைச் சூடிய, இரும் பல் கூந்தல் இருள் - பெரியபலவாய கூந்தலின் இருளால், மறை ஒளித்து -மறைத்தற்குரிய உறுப்புக்களை மறைத்து, ஒய்யெனநாணினள் பேணி இறைஞ்சியோள் - விரைவாக நாணிவிருப்புற்று இறைஞ்சினாள்; (அத்தகையாள், இன்றுநாம் பல கூறி உணர்த்தவும், உணராது ஊடுகின்றாள்;இவள் என்ன உறவினள் நமக்கு!)

(முடிபு) நெஞ்சே! சோற்றைப் புரையோரைப் பேணி, கடிநகர்புனைந்து கடவுட்பேணி, வதுவை மண்ணிய மகளிர்நோக்குபு மறைய, தமர் வெண்ணூல் சூட்டி உடையாற்பொலிவித்து மணன்மலி பந்த ரிடத்துவியர்ப்பாற்றி நமக்கு ஈத்த தலை நாளிரவின்கண்,எம் உயிருடம் படுவி, கலிங்கம் வளைஇப் புழுக்குற்றவியரை வளிஆற்றத் திறவென யாம் போர்வைவவ்வலின், உரு இமைப்ப மறைதிறனறியாளாகி, கூந்தல்இருள் மறையொளித்து, ஒய்யென நாணினள் பேணிஇறைஞ்சி யோளாயினள்; (அத்தகையாள் இன்று நாம்பல கூறி உணர்த்தவும் உணராது ஊடுகின்றாள் ஆகலின்,இவள் நமக்கு என்ன உறவினளோ!)

(வி - ரை.) புள்ளு - புள் நிமித்தம். சகடம் - உரோகிணி.பழந்தமிழ் மக்கள் உரோகிணியைத்திருமணத்திற்குச் சிறந்த நாளாகக்கொண்டிருந்தனர்; உரோகிணியுடன் கூடிய சந்திரன்உச்சன் ஆகலின் எவ்வகைத் தீங்கும் நீங்கும்என்னுங் கருத்தினர் போலும்; 1'வானூர் மதியம்சகடணைய வானத்துச், சாலி யொருமீன் தகையாளைக்,கோவலன்...தீவலம் செய்வது' என்பது காண்க. சகடம்வேண்டிய என்பதும் பாடம். கடவுட் பேணி என்பதனால்,திருமணத்தின் தொடக்கத்தில், கடவுளை வழிபடும்வழக்கம் பண்டும் உளதென்பது பெற்றாம். 2'பூக்கண்:பூ - கூர்மை: பூவாட் கோவலர்' என்புழி பூஇப்பொருட்டாதல் காண்க. மகளிர் விதுப்புற்றுப்பூக்கண்ணும் இமையார் நோக்குபு என்றதனால், தலைவிமகளிரும் விரும்பும் பேரழகனள் என்பது பெறப்படும். 3'கஞ்சத்துக்களிக்குமின்றேன்...மஞ்சர்க்கும் மாத ரார்க்கும்மனமென்ப தொன்றே யன்றோ!' 4'நெய்விலைபசும் பொற்றோடு.....செய்தவர் சிறுபுன் கோலம்தொறுத்தியர் திகைத்து நின்றார்' என்பன ஈண்டுஅறியற்பாலன. விதுப்புற்று மறைதல் கண் எச்சில்படாமைப் பொருட்டு. அறுகை - அறுகு. பெயற்கு - பெயலால்;வேற்றுமை மயக்கம். அறுகின் கிழங்கினைப் பாவைஎன்றல் மரபு. மாயிதழ முகை எனக் கூட்டுக. மணல்மலி:மணம், மணன் எனப்போலியாயிற்று, மணல் மலிந்தஎன்றலுமாம். பரூஉப்பகை யாம்பற் குரூஉத் தொடைநீவி - பாரத்தாற் பகையாயிருக்கிற பருத்த ஆம்பற்பூவாலாகிய தொடையினை நீக்கி என்றலுமாம்.

(மே - ள்.) 5'பொய்யும்வழுவும்' என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுள்,களவின்வழி நிகழ்ந்த கற்புங்கோடற்குஉதாரணமாகும் என்றார், நச்சினார்கினியர்.

6'புகுமுகம்புரிதல்' என்னுஞ் சூத்திரத்து 'பெரும்புழுக்குற்றநின் பிறைநுதற் பொறிவியர், உறுவளியாற்றச் சிறுவரை திறவென' என்பது பொறிநுதல்வியர்த்தல் எனும் மெய்ப்பாடும் ஆகும் என்றும்,இம்மெய்ப்பாடு தலைமகட்கே யுரித்து தலைமகற்குஉரித்தன்று, உட்கும் நாணும் அவற்கு இன்மையின்என்றும் கூறினர், பேரா.


137. பாலை

[தலைமகன்பிரியுமெனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழிசொல்லியது.]

(சொ - ள்.) 1-4. ஆறுசெல் வம்பலர் - சுரநெறியிற் செல்லும்புதியர், சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணி -சேற்றைக் கிண்டி ஊறிய நீரை உண்ட சிறிய பலவாயகேணிகளை, பிடிஅடி நசைஇ - தன் பிடியின் அடிச்சுவடெனவிரும்பி, களிறு தொடூஉக் கடக்கும் - களிறுகள்தொட்டுப் பார்த்துக் கடந்து செல்லும், கான்யாற்று அத்தம் - காட்டாற்றினையுடைய அச் சுரநெறியில், சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் - சென்றுசேர்தலை நம் தலைவர் இசையார் ஆயினும்;

4-12. வென்று எறிமுரசின் விறல்போர்ச் சோழர் - பகை வரை வென்றுஅடிக்கும் முரசினையும் போர் வென்றியையும் உடையசோழரது, இன்கடுங்கள்ளின் உறந்தை ஆங்கண் - இனியகடுப்பு மிக்க கள்ளினையுடைய உறையூரிடத்து, வருபுனல்நெரிதரும் இகுகரைப் பேர் யாற்று - வரும்நீர்உடைத்திடும் கரைந்து மெலிந்த கரையினை-யுடையபெரிய யாறாகிய காவிரியின், உருவவெண்மணல் முருகுநாறு தண் பொழில் - அழகிய வெண்மணல் நிறைந்ததேன் நாறும் தண்ணிய பொழிலில், பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் - பங்குனி விழாக்கழிந்த பிற்றைநாளில், வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் -பூக்களுடன் கூடிய இலைகள் நிறைந்த மரங்கள்அடர்ந்த சிறு காட்டில், தீஇல் அடுப்பின்அரங்கம்போல - அடுதல் இன்மையின் தீ இல்லையாகிய வெற்றடுப் புக்களையுடைய விழாக்களம் போல,நினக்கு நுதல் பெரும்பாழ கொண்டன்று - உனக்குநெற்றி பெரிதும் பொலிவற்ற நிலையினைக் கொண்டது.

12-14. தோளாமுத்தின் தெண்கடல் பொருநன் - துளையிடாத புதியமுத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடையவீரனாகிய, திண்தேர்ச் செழியன்- திண்ணியதேரினையுடைய பாண்டியனது, பொருப்பின் கவாஅன் -பொதியிலின் பக்க மலையிலுள்ள, நல் எழில்நெடுவேய் புரையும் தோளும் - நல்ல அழகிய நெடியமூங்கிலைஒக்கும்நின் தோளும் தொல்கவின்தொலைந்தன - பழைய அழகு கெட்டன; நோகோ யானே -யான் நோவேன்.

(முடிபு) நம் தலைவி அத்தம் சேர்பு ஒல்லார் ஆயினும்நினக்கு நுதல் பெரும்பாழ் கொண்டன்று: தோளும்தொல்கவின் தொலைந்தன: யான் நோகோ.

(வி - ரை.) கேணியை என இரண்டனுருபு விரிக்க. அடிநசைஇ - அடியெனநசைஇ. முயக்கம் - கூட்டம்; உத்தரமும் நிறைமதியும்கூடிய கூட்டம். பங்குனித் திங்களில் உத்தரமும்நிறைமதியுங் கூடிய நாள் நன்னாளாகும். அந்நாளில்உறையூரில் பங்குனி உத்தரவிழாச்சிறப்புற்றிருந்த தென்பது, 1'களவினுட்டவிர்ச்சி' என்னும் இறையனார் அகப்பொருட்சூத்திர உரையில். 'இனி, ஊர் துஞ்சாமை என்பது, ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க்கண்பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது; அவைமதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமேகருவூர் உள்ளி விழாவே என இவையும், இவைபோல்வனபிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுதுஇடையீடாம் என்பது' என வருதலான் அறியப்படும்;தீயில் அடுப்பின் அரங்கம்போல என்பதை தீயில்அடுப்பினர் அங்கம்போல எனக் கண்ணழித்து,விறலியர் உறுப்புப்போல என நலிந்துரை கூறுதல்சிறப்பின்றாம் என்க.

138. குறிஞ்சி

[தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழிக்குச்சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.]

(சொ - ள்.) 1. இகுளை - இகுளையே ! காதல் தோழி - காதலையுடையதோழியே! கேட்டிசின் - கேட்பாயாக;

13-22. நீடு நின்னொடுதெளித்த நம்மலை நாடன் - நெடு நாளாக நின்னொடுகடிதுவரைந்து கொள்வல் எனத் தெளிவித்து, வந்தநல்ல சில நாடனாகிய நம் தலைவன், குறிவரல் அரைநாள் இரவுக்குறி வரு நடு இரவில், குன்றத்துஉச்சி-அவர் வரும் குன்றின் உச்சியில், நெறிகெடவீழ்ந்த துன்அரும் கூர்இருள் - வழி தவறுமாறுசெறிந்த அலுகற் கரிய மிக்க இருளிலே, திருமணிஉமிழ்ந்த நாகம் - தனது அழகிமுடி மணியை உமிழ்ந்தநாகமானது, காந்தள் கொழு மடல் புதுப் ஊதும் தும்பி -காந்தளது கொழுவிய மடலையுடைய புதிய பூவினை ஊதித்தாதினை அளைந்த வண்டின், நல்நிறம் மருளும் - நல்லநிறத்திரக் கண்டு தன் மணி என மயங்கும், அரு விடர்இன்னா நீள் இடை அரிய பிளப்புக்களையுடைய இன்னாதநெடிய வழியை, என் நெஞ்சு நினையும் - என் மனம்நினைந்து கவலும்;

2-4. வளை உண்கண்தெண் பனி மல்க (அதனால்) குவளைப் பூவை ஒத்த எமதுமையுண்ட கண்களில் தெளிந்த நீர் ததும்ப,வறிதுயான் வருந்தி செல்லற்கு-யான் சிறிதுவருந்திய துன்பத்தினைக் கண்டு, அன்னை - நம் அன்னையானவள், பிறிதுஒன்று கடுத்தனள் ஆகி - இது தெய்வத்தால் ஆயதோஎனும் வேறோர் ஐயமுற்றனளாக;

4-13. வேம்பின்வெறிகொள் பசு இலை நீலமொடு சூடி - கட்டு விச்சியும்வேலனும் வேம்பினது நாற்றமுடைய பசிய இலையுடன்நீலப் பூக்களைச் சூடி, உடலுநர்க் கடந்த கடல் தானை- மாறுபட்ட பகைவரை வென்ற கடல்போலும்சேனைகளையும், திருந்து இலை நெடு வேல் - திருந்தியஇலையினைக் கொண்ட நெடிய வேலையுமுடைய, தென்னவன்பொதியில் அரும் சிமை இழிதரும் ஆர்த்துவரல்அருவியில் - பாண்டியனது பொதியில்மலையில்அடைதற்கரிய உச்சியினின்றும் இழியும் ஆரவாரித்து வருதலையுடைய அருவி ஒலிபோல, ததும்பு சீர்இன்னியம் கறங்க - ஒலிக்கும் சீரையுடைய இனியவாச்சியங்கள் ஒலிக்க, கைதொழுது - கையால்வணங்கி, உருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇ -அச்சம் தோன்றும் தலைமையையுடைய முருகனை மனைக்கண்வருவித்து, கடம்பும் களிறும் பாடி - அவனதுகடம்பினையும் களிற்றினையும் பாடி, தோடும்தொடலையும் கைக்கொண்டு - பனந்தோட்டினையும்கடப்ப மாலையையும் கையிற்கொண்டணிந்து, நுடங்கும்- அசைந் தசைந்து, அல்கலும் - இரவெல்லாம், ஆடினர்ஆதல் நன்றோ - ஆடுதல் நன்றாகுமோ!

(முடிபு) தோழி, நன்மலை நாடன் குறிவரல் அரைநாட்கூரிருள் இன்னா நீளிடை என் நெஞ்சு நினையும்;அதனால் உண்கண் பனிமல்க வருந்திய செல்லற்கு,அன்னை பிறிதொன்று கடுத்தனளாக, கட்டு விச்சியும்வேலனும் முருகுமனைத் தரீஇ ஆடினராதல் நன்றோ?

(வி - ரை.) கடுத்தனளாகி: ஆக எனத் திரிக்க: கட்டுவிச்சியும்வேலனும் கட்டினானும் கழங்கினானும் குறி பார்த்து,பாசிலை நீலமொடு சூடி என விரித்துரைக்க. காதல்அம் தோழி, கடல் அம் தானை என்ற இடங்களில் 'அம்'அசை. பனந்தோடுங் கடப்பமாலையும் அணிந்து ஆடுதல்,மேல், 1'வெண்போழ்கடம்பொடு சூடி' எனவந்தமையால் அறிக. தொடலைகாந்தள் மாலையுமாம். ஆடினர் எனப்பன்மைகூறினமையின், கட்டுவிச்சியும் வேலனும் என்க. 2'வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்தகாந்தளும்' என்பதற்கு செவ்வேள் வேலைத் தான்ஏந்தி நிற்றலின், 'வேலன்' என்றார்; காந்தள்சூடி ஆடுதலிற் காந்தள் என்றார்; வேலனைக்கூறினமையிற் கணி காரிகையுங் கொள்க. காந்தளையுடைமையானும், பனந்தோடுடைமையானும் மகளிரைவருத்துதலானும், வேலன் வெறியாட்டயர்ந்தஎன்றதனானும், வேலன் ஆடுதலே பெரும்பான்மை;ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.' எனநச்சினார்க்கினியர் உரைத்து ஈண்டு அறிதற்பாலது.காந்தட்பூவை யூதுந்தும்பி நாகத்தின் மணிபோலும்என்னுங் கருத்து, 3'காந்தள்அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி, கையாடு வட்டிற்றோன்றும்' என்பதனோடு ஒத்திருத்தல் அறிந்துமகிழற்பாலது.



(உ - றை) திருமணி யுமிழ்ந்த நாகம், காந்தட் புதுப்பூவைநுகர்ந்ததனால் நன்னிறம்பெற்ற தும்பியைக் கண்டு,ஐயுற்று மயங்குதல் போல, நம் அன்னை தலைவனோடுஇன்பந் துய்த்ததனாற் புதுச் செவ்வி யுற்றஎன்னைக் கண்டு மயங்குகின்றாள் என்றவாறு.

(மே - ள்.) 1'களவலராயினும்' என்னுஞ் சூத்திரத்து, 'கட்டினுங்கழங்கினும்...செய்திக் கண்ணும்' என்ற துறைக்குஇச்செய்யுளைக் காட்டி, இதன்கண் கட்டென்றாயினும்கழங்கென்றாயினும் விதந்து கூறாமையின் இரண்டும்ஒருங்கு வந்தன' என்றும், 2'பொழுதும்ஆறும்' என்னுஞ் சூத்திரத்து, அன்னவை பிறவும்என்னும் பகுதியில், 'கடம்புங் களிறும்...ஆதல்நன்றோ' என்பது, தலைவற்கு வெறியாட்டுஉணர்த்தியது என்றும் கூறினர், நச்சினார்கினியர்.

139. பாலை

[பிரிவிடை மெலிந்ததலைமகள் தோழிக்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 1-8. நன்னுதல் - நல்ல நெற்றியையுடைய தோழியே!; துஞ்சுவதுபோல இருளி - மேகம் உறங்குவது போல இருண்டு,இமைப்பதுபோல விண்பக மின்னி - கண் இமைப்பதுபோலவிண்பிளக்க மின்னி, உறைக்கொண்டு ஏறுவதுபோலபாடு சிறந்து உரைஇ - நீரைக்கொண்டு மேலேறுவதுபோலஒலிமிக்குப் பரந்து, நிலம் நெஞ்சு உட்க ஓவாதுசிலைத்து - நிலத்தின் நெஞ்சு துணுக்குற ஓழியாதுஇடித்து, ஆர் தளி பொழிந்த வார்பெயல் கடைநாள் -மிக்க நீரைச் சொரிந்த நீண்ட பெயலைக் கொண்டகார்காலத்தின் கடை நாளில், ஈண்டு நாள் உலந்தவாலா வெண் மழை - பெய்து நாள் கழிந்த தூய்மையில்லாத வெளிய மேகம், வான்தோய் உயர்வரை ஆடும்வைகறை - வானை அளாவிய உயர்ந்த மலையில் தவழும்வைகறை யாகிய, புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை -புதல்கள் ஒளியாற் சிறந்த காண்டற்கு இனியவாகும்காலத்தே;

9-15. தண் நறும்படுநீர் மாந்தி - குளிர்ந்த நறிய குளத்தின் நீரைநிறைய உண்டு, பதவு அருந்து - அறுகம்புல்லை மேயும்,வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை - வெள்ளியபுறத்தினையுடைய திரிந்த கொம்பினையுடையஆண்மான், வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழுநிழல் - நீண்ட மணலின் ஒருபக்கத்தே மலர்விரிந்த பிடவினது கொழுவிய நிழலிலே; காமர்துணையொடு ஏம் உற பதிய - அழகிய தன்பிணையுடன்இன்பம் பொருந்தத் தங்க; அரக்கு நிற உருவின்ஈயல் மூதாய் - செல்வரக்கு அனைய நிறத்தையும்அழகினையுமுடைய தம்பலப் பூச்சிகள்,பரப்பியவைபோல் பாஅய்ப் பலவுடன் - பரப்பிவைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து,நீர்வார் ஈர் மருங்கின் அணி திகழ - நீர் ஒழுகியஈரமுடைய இடத்தில் அழகுடன் விளங்க;

16-17. இன்னும்காதலர் வாரார் ஆயின் - இன்னும் நம் காதலர்வந்திலரேல், அவர் நிலை யாது கொல் - அவரது நிலைஎன்னையோ;

18-19. அவர் வருதும்என்றது - அவர் மீண்டு வருவேம் என்று கூறியது, கருவிக்கார் இடி இரீஇய பருவம் மன் - தொகுதியையுடையமேகங்கள் இடிகளைக் கொண்ட இந்தப் பருவம்அன்றோ!

(முடிபு) மேகம் தனி பொழிந்த கடைநாள் வெண்மழை ஆடும்வைகறையாகிய காலை, இரலை துணையொடு ஏமுற வதிய ஈயன்மூதாய் அணி திகழ, காதலர் இன்னும் வாராராயின்,அவர் நிலை யாது கொல், அவர் வருதும் என்றது கார்ஆகிய பருவம் மன்.

(வி - ரை.) சிலைத்தாங்கு: ஆங்கு, அசை. ஆம் கார் எனப்பிரித்துநீரையுடைய மேகம் என்பாரும் உளர்; வைகறையாகியகாலை என்க. படு - குளம். புறக்கு - புறம்; உடலின்வெளிப்புறம். இரலை வதியவும், ஈயன் மூதாய்திகழவும் இக்காலத்தும் வந்திலராயின் என்க. பருவமன்றவர் என்பது பாடமாயின், மன்ற என்றதன் அகரம்தொக்கதாகக் கொள்க. இப்பாட்டு உரிப்பொருளாற்பாலையாயிற்று.

(மே - ள்.) 1'திணைமயக்கு உறுதலும், என்னுஞ் சூத்திரத்து,இச்செய்யுட்கண், பாலைக்கண் முன்பனியும்வைகறையும் ஒருங்கு வந்தன என்றும், 2'வேந்துறுதொழிலே யாண்டின தகமே' என்னுஞ் சூத்திரத்து, 'கருவிக்காரிடி யிரீஇய, பருவ மன் அவர்' வருதுமென்றதுவே(என்னும) இது, கார் குறித்து வருவரென்றலின்,அறுதிங்கள் இடையிட்டது' என்றும் கூறினர், நச்சினார்கினியர்.


140. நெய்தல்

[இயற்கைப் புணர்ச்சிபுணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்குரைத்தது.]

(சொ - ள்.) 1-5. பெருங் கடல் வேட்டத்து - பெரிய கடலில் மீன்வேட்டை செய்யும், சிறுகுடிப்பரதவர் - சிறு குடியில்வாழும் பரதவர், இருகழி செறுவில் - பெரியஉப்பங்கழியாய செய்யில், உழாஅது செய்த வெண்கல்உப்பின்-உழாமலே விளைவித்த வெள்ளிய கல்உப்பின், கொள்ளை சாற்றி - விலை கூறி, என்றூழ்விடர குன்றம் போகும் - ஞாயிற்றின் வெம்மையாலாயபிளப்புக்களையுடைய குன்றங்களைக் கடந்துபோகும்,கதழ்கோல் உமணர் காதல் மடமகள் - கடாவினைவிரையத் தூண்டும் கோலினையுடைய உப்பு வாணிகரதுகாதலையுடைய இளைய மகள்;

6-10. சில்கோல்எல்வளை தெளிர்ப்ப வீசி - சிலவாகிய திரண்டஇலங்கும் வளைகள் ஒலிக்க வீசி, நெல்லின் நேரேவெண் கல் உப்பு என - நெல்லுக்கு ஒத்த அளவினதேவெள்ளிய கல்லுப்பு என்று, சேரி விலைமாறு கூறலின் -சேரியில் பண்ட மாற்றாகிய விலை கூறலின்,விளிஅறி மனைய ஞமலி குரைப்ப - ஒலி வேற்றுமை அறியும்மனையிலுள்ள நாய் வேற்றுக் குரலென்று குரைத்துவர,வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அதற்குஅஞ்சிய மதர்த்த கயல் இரண்டு எதிர்த்துப்பொருவது போன்ற அவள் கண்கள்;

10-15. எமக்கு - எமக்கு,இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் -புதுக்கொல்லை ஆக்க முயலும் குறவன் மரங்களைச்சுட்டெரிக்கும் தீயின் புகை நிழலை ஒக்கும், மாமூதுஅள்ளல் - கரிய பழஞ் சேற்றிலே, அழுந்திய சாகாட்டுஎவ்வம் தீர - அழுந்திய பண்டியின் இடையூறு நீங்க,வாங்கும் - வருந்தி இழுக்கும், தந்தை கைபூண்பகட்டின் வருந்தி - அவள் தந்தை கையிற் பற்றியபகடுபோல் வருந்தி, வெய்ய உயிர்க்கும் நோய்ஆகின்று - வெய்யவாக உயிர்த்தலைச் செய்யும்நோய் ஆகின்றது.

(முடிபு) உமணர் காதல் மடமகள் சேரிக்கண் விலைமாறுகூறலின்; ஞமலி குரைப்ப, வெரீஇய கண், எமக்கு நோய்ஆகின்று.

(வி - ரை.) பகடு - கடா; எருதுமாம். கண்ணால் நோயாகின்றதுஎன்றலுமாம்.

141. பாலை

[பிரிவிடை ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குக் கிழத்தியுரைத்தது.]


(சொ - ள்.) 1-4. அம்ம வாழி தோழி - தோழியே! நான் கூறுவதனைக்கேட்பாயாக; கங்குல்தோறு கனவும் கைம்மிக இனிய -இரவுதோறும் கனவும் மிகவும் இனியவாகின்றன, நனவும்புனைவினை நல் இல் புள்ளும் பாங்கின - நனவிலும்புனையப் பெற்ற தொழில்களையுடைய நல்ல மனையிலேபுள் நிமித்தங்கள் நல்லனவாகின்றன, நெஞ்சும்எஞ்சாது நனி புகன்று உறையும் - என் நெஞ்சும்சுருங்காது மிகவும் விருப்பம்மேவிஅமைதியுற்றிருக்கும்;

12-24. துவரப்புலர்ந்து - முற்ற உலர்ந்து, தூமலர் கஞலி - தூயமலர்கள் நெருங்கப்பெற்று, தகரம் நாறும் -மயிர்ச்சாந்து மணக்கும், தண்நறும் கதுப்பின் -தண்ணிய நறிய கூந்தலையுடைய, புதுமண மகடூஉ – புதிய மணமகள், அயினிய - உணவு மிக்க,கடிநகர் - மண மனையில், பல்கோட்டு அடுப்பில் - பலபுடைகளையுடைய அடுப்பில், பால் உலை இரீஇ - பாலைஉலையாக வார்த்து, கூழைக் கூந்தல் குறு தொடி மகளிர்- கூழையாகிய கூந்தலையும் சிறிய வளையலையும் உடையஇளமகளிருடன்; பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர்முறித்து - பெரிய வயலில் விளைந்த நெல்லின்வளைந்த கதிரினை முறித்து, பசு அவல் இடிக்கும் -பசிய அவலாகக் குற்றும், இரும் காழ் உலக்கைக் கடிதுஇடி வெரீஇய - கரிய வயிரமாய உலக்கையின் விரைந்தஇடிக்கு அஞ்சிய, கமம் சூல் வெண் குருகு நிறைந்த -சூலினையுடைய வெள்ளிய பறவை, தீம் குலை வாழை ஓங்குமடல் இராது - இனிய குலையினையுடைய வாழையின்உயர்ந்த மடலி லிராது, நெடுகால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும் - நெடிய காலையுடைய மாமரத்தின்கண்குறுகப் பறந்து செல்லும் பதியாய, செல்குடி நிறுத்தபெரும் பெயர் - கெட்ட குடிகளைத் தாங்கிய பெரும்புகழையும், வெல் போர் - வெல்லும் போரையுமுடைய,கரிகால் சோழன் - கரிகால் வளவனது, இடையாறு அன்ன -இடையாற்றினை ஒத்த, நல் இசை வெறுக்கை தருமார் -நல்ல புகழ் வாய்ந்த செல்வத்தை ஈட்டிவர;

24-26. கல்சேர்வேங்கை - மலையிடத்துள்ள வேங்கைமரத்தின்,பல்பொறிப் புலிக் கேழ் உற்ற பூ இடை - பலபுள்ளிகளையுடைய புலியின் நிறத்தினைப்பொருந்திய பூக்களிடையே, பெருஞ்சினை நரந்தம்நறும்பூ நாள்மலர் உதிர - பெரிய கிளையினையுடையநாரத்தை மரத்தின் நறிய அழகிய புதிய மலர்கள்உதிர, கலை பாய்ந்து உகளும் - முசுக்கலை பாய்ந்துதாவும், தேம் கமழ் நெடுவரைப் பிறங்கிய - தேன்நாறும் நீண்ட சிமையங்களால் விளங்கிய, வேங்கடவைப்பின் சுரன் இறந்தோர் - வேங்கட மலையைச்சார்ந்த ஊர்களையுடைய சுரநெறியைக் கடந்துசென்றோர்;

5-11. நாஞ்சில்துஞ்சி - கலப்பைகள் மடிந்து, உலகு தொழில் உலந்து -உலகின்கண் உழுதொழில் முடிந்துவிட, மழை கால்நீங்கியமாக விசும்பில் - மழை பெய்தல் ஒழிந்தவானின்கண்ணே, குறு முயல் மறுநிறம் கிளர - குறியமுயலாகிய மறுவின் நிறம் விளங்க, மதி நிறைந்து -மதி நிறைவுற்று, அறுமீன் சேரும்இருள் அகல் நடுநாள் -கார்த்திகையைச் சேரும் இருள் அகன்ற நடு இரவில்,மறுகு விளஉறுத்து - தெருக்களில் விளக்குகளை நிரல்படஏற்றி, மாலை தூக்கி - மாலைகளைத் தொங்கவிட்டு,பழவிறல் முதுஊர் பலர் உடன் துவன்றிய - பழமையானவென்றியுடைய முதிய ஊரின்கண் பலரும்ஒருங்குசேர்ந்த, விழவு உடன் உயர - விழவினை நம்முடன்கொண்டாட; வருக - வருவாராக.

(முடிபு) தோழி! வாழி! கனவும் இனிய; நனவும் புள்ளும்பாங்கின; நெஞ்சும் எஞ்சாது புகன்று உறையும்;கரிகால் இடையாற்றன்ன வெறுக்கை தருமார் வேங்கடவைப்பின் சுரம்இறந்தோர்; (ஆய நம் தலைவர்); பழவிறல் மூதூர் மதி நிறைந்து அறுமீன் சேரும்நடுநாள் விழவு நம்முடன் அயர வருகதில்.

(வி - ரை.) கனவும் நனவும் என்பவற்றின் உம்மை எச்சவும்மை.புள் - புள்நிமித்தம். உலந்து - உலக்க எனத்திரிக்க. மாகவிசும்பு: இரு பெயரொட்டு. அறுமீன் -கார்த்திகை. கார்த்திகைத் திங்களின்,கார்த்திகை நாளில், மறுகுகளில் நிரைநிரையாகவிளக்கு ஏற்றி விழாக் கொண்டாடும் வழக்கம்பண்டுதொட்டுள்ள தென்பது, இதனாலும், பிறாண்டுவருவனவற்றானும் அறியப்படும்: 1'இலையிலமலர்ந்த முகையிலிலவம், கலிகொ ளாய மலிபு தொகுபெடுத்த, அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி''2கார்த்திகைச்சாற்றிற் கழிவிளக்குப் போன்றனவே' என்பனகாண்க. தில்: விழைவு. அம்ம: அசை. உலையிற்பெய்தற் பொருட்டு அவல் இடிப்பர் என்க. இடிவெரீஇய - இடியாலாய ஒசையை வெரவிய என்க. இடையாறு -இடையாற்று மங்கலம் என்னும் ஊர். கனவுமுதலியவற்றால் தலைவர் விரைந்து வருவர் எனத்துணிந்து, ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள்தோழிக்குக் கூறினாள்.

142. குறிஞ்சி

[இரவுக்குறி வந்துநீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்) 7. நெஞ்சே, வாழிய காதலி - நம் காதலியானவள்;

8-15. முறையின் வழாஅதுஆற்றிப் பெற்ற - நீதி முறையின் வழுவாமல்கடமையினைச் செய்து பெற்ற, கறை யடி யானை நன்னன்பாழி - உரல்போலும் அடியினையுடைய யானையையுடையநன்னனது பாழியிலுள்ள, ஊட்டு அரும் மரபின் அஞ்சுவருபேய்க்கு - பலியிடற்கு அரிய தன்மையையுடையஅஞ்சத்தக்க பேய்க்கு, ஊட்டு எதிர் கொண்டவாய்மொழி மிஞிலி - ஊட்டுதலை ஏற்றுக்கொண்டவாய்மை பொருந்திய மிஞிலி என்பான், புள்ளிற்குஏமம் ஆகிய - புட்களுக்குப் பாதுகாவல் ஆகிய, பெரும்பெயர் - பெரும்புகழினையுடைய, வெள்ளத்தானை அதிகன்கொன்ற உவந்து - வெள்ளம் போன்ற சேனையினையுடையஅதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து, ஒள்வாள்அமலை ஆடிய ஞாட்பின் - 'ஒள்வாள் அமலை' எனும்வென்றிக்கூத்தை ஆடிய போர்க்களப் பூசலைப் போல,பலர் அறிவுறுதல் அஞ்சி - பலரும் அறிந்து அலர் கூறலைஅஞ்சி;

15-22. நீர்த் திரள்கடுக்கும் - நீரின் திரட்சியை ஒக்கும், மாசு இல்வெள்ளி - குற்றமற்ற வெள்ளியினாலாய, சூர்ப்பு உறுகோல் வளை - வளைவு பொருந்திய திரண்ட வளைகள்,செறித்த முன் கை - செறிக்கப்பெற்ற முன் கையளாய்,குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல் - நீர் குறைந்தஅறலை ஒத்த கரிய பலவாய கூந்தல், இடன்இல்சிறுபுறத்து இழையொடு துயல்வர - அகற்சியில்லாதபிடரியின் பாலுள்ள அணியோடு கூடி அசைய, கடல்மீன்துஞ்சும் நள்என்யாமத்து - கடல் மீன்கள் துயிலும்நள்ளென்று ஒலிக்கும் இடையாமத்தில், உருவு கிளர்ஏர்வினை பொலிந்த பாவை - அழகு கிளர்ந்தபொலிவினையுடைய செய்தொழிலாற் சிறந்தபாவை,இயல் கற்றன்ன ஒதுக்கினள் - நடை கற்றாற்போன்றநடையினளாய், பைப்பைய வந்து - மெல்ல மெல்ல வந்து;

23-26. பெயல் அலைகலங்கிய - மழையின் அலைத்தலாற் கலங்கிய; மலை பூகோதை - மலைப் பூக்களாலாய மாலையினின்றும், எறிஇயல் பொன்னில் - உலைக்களத்து அடிக்குங்கால்தெறித்து விழும் பொற்றூள்போல், கொங்கு சோர்புஉறைப்ப - தேன் துளித்து விழ, வடிப்பு உறு நரம்பில்தீவிய மொழிந்து - வடித்தல் அமைந்த யாழ்நரம்பின் ஒலிபோல இனிய மொழிகளைக் கூறி,தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் - வட்டமாயமுலைக்கண்ணின் வடுவுண்டாகத் தழுவினாள்;

1-7. இலமலர் அன்னஅம்செம் நாவின் - இலவமலர் போன்ற அழகியசிவந்த நாவினால், புலம் மீக் கூறும் புரையோர்ஏத்த - புல மையால் உயர்த்திக் கூறப்பெறும்மேலோர் புகழ, பலர் மேந்தோன்றிய கவி கைவள்ளல் - பலரினும் மேம்பட்ட கொடுத்தலாற்கவிந்த கையினையுடைய வள்ளலாய, நிறை அருந் தானை -நிறுத்துதற்கரிய சேனையினையுடைய, வெல்போர் -போர் வெல்லும், மாந்தரம் பொறையன் கடுங்கோ -மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேரமன்னனை, பாடிச் சென்ற குறையோர் கொள்கலம்போல- பாடிச்சென்ற வறியோரது பிச்சை ஏற்கும்கலம்போல, நன்றும் உவ இனி - இனிப் பெரிதும்நிறைவுற்று மகிழ்வாயாக.

(முடிபு) நெஞ்சே! வாழிய! காதலி, மிஞிலி அதிகற் கொன்றுஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் பலர் அறிவுறுதல்அஞ்சி; நள்ளென் யாமத்து வந்து; தீவிய மொழிந்துதொடிக்கண் வடிக்கொள முயங்கினள்; மாந்தரம்பொறையன் கடுங்கொப் பாடிச்சென்ற குறையோர்கொள்கலம் போல இனி உவப்பாயாக. நன்னன் பாழிப்பேய்க்கு ஊட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலிஎன்க. காதலி கூந்தல் துயல்வர வந்து தீவியமொழிந்து தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்என்க.

(வி - ரை.) இலவ மலர்: இலமலர், விகாரம். கறையடி - குருதிக் கறைபொருந்திய அடி எனலுமாம். ஊட்டு எதிர்கொண்ட -உண்பித்தலை ஏற்றுக்கொண்ட; களவேள்வியாற்பேய்க்கு ஊட்டிய என்றபடி. புள்ளிற்கு ஏமமாயினான்என்பது, 1'துன்னருங்கானம்' 2'யாமஇரவின்' என்னுஞ் செய்யுட்களானும்அறியப்படுகின்றது. அதிகன் என்பது, ஆய்எயினனுக்குரிய வேறு பெயர் போலும், எயினன் என்றேபாடங் கொள்ளுதலுமாம். ஒள்வாள் அமலை யென்பதுதும்பைத் திணையின் ஒரு துறை; வாள்வீரர் தம்தலைவனுடன் ஆடுதல் அதன் இலக்கணம். சூர்ப்பு - வளைவு.தொடி - வட்டம். தொடிக்கண் - வளையாலாயஎன்றுரைத்தலுமாம்; ஈண்டுக் கண் வேற்றுமை மயக்கம்.

(மே - ள்.) 1'செல்வம்புலனே' என்னுஞ் சூத்திரத்து; 'தொடிக் கண்வடுக்கொள முயங்கினள், வடிப்புறு நரம்பிற் றீவியமொழிந்தே' என்பது, புணர்ச்சிபற்றிய உவகையென்றும், 2வினைபயன்மெய்யுரு' என்னுஞ் சூத்திரத்து, உருவுகிளர்ஏர்வினைப் பொலிந்த பாவை, இயல் கற்றன்னஒதுக்கினள்' என்பது வடிவு பற்றிய உவமம் என்றும்கூறினர், பேரா.

143. பாலை

[பொருள்வயிற் பிரியக்கருதிய தலைகனைத் தோழி தலைமகளது ஆற்றாமை கண்டுசெலவழுங்குவித்தது.]

(சொ - ள்.) 1-9. ஐய - ஐயனே!, செய்வினைப் பிரிதல் எண்ணி -பொருள் ஈட்டும் வினைக்கண் பிரிதலை எண்ணி, காடுகவின் ஒழிய - காடு அழகுகெட, கடும் கதிர்கைம்மிகத் தெறுதலின்-ஞாயிற்றின் கடிய கதிர்அளவு கடந்து காய்தலின், நீடுசினை வறிய ஆக - நீண்டகிளைகள் வறியன ஆக, ஒல்லென வாடு பல் அகல் இலை -ஒல்லெனும் ஒலியுடன் வாடிய பல அகன்ற இலைகள்,கோடைக்கு ஒய்யும்
மேல் காற்றால்உதிர்க்கப்பெறும், தேக்கு அமல் அடுக்கத்துஆங்கண் - தேக்கு மரங்கள் நிறைந்த பக்கமலைகளாயஅவ்விடத்து, முளி அரில் பிறந்த வளிவளர் கூர் எரி- காய்ந்த தூறுகளிற் பிறந்ததும் காற்றினால்வளர்ந்தோங்கியதுமான மிக்க தீயின், சுடர்நிமிர் நெடும் கொடி - ஒளி மிக்க நீண்ட ஒழுங்கு,மேக்கு எழுபு விடர்முகை முழங்கும் - மேலே எழுந்துமலைப்பிளப்பாகிய குகைகளில் முழங்கும், வெம்மலைஅரும் சுரம் நீந்தி - வெப்பம் மிக்க மலையைச்சார்ந்த அரிய சுரத்தினைக் கடந்து, சேறும் என்றசிறு சொற்கு - நாம் போவேம் என்று கூறிய நுமதுசிலவாய சொல்லைக் கேட்டதற்கே;

9-16. இவட்கு -இத்தலைவிக்கு, வசை இல் வெம்போர் வானவன் மறவன்- பழியில்லாத கொடிய போர் வல்ல சேரன்படைத்தலைவனான, நசையின் வாழ்நர்க்கு நன்கலம்சுரக்கும் - பரிசில் விருப்புடன் வாழ்வார்க்குநல்ல அணிகலன்களை அளிக்கும், பொய்யா வாய்வாள்புனைகழல் பிட்டன் - தப்பாது வென்றி வாய்க்கும்வாளினையும் புனைந்த கழலினையும் உடைய பிட்டன்என்பானது, மைதவழ் உயர் சிமை குதிரைக் கவான் -மேகம் தவழும் உயர்ந்த உச்சியினையுடைய குதிரைமலையின் பக்க வரையில், அகல் அறை நெடும் சுனைத்துவலையின் மலர்ந்த - அகன்ற பாறையிலுள்ள நெடியசுனையிடத்து மழைத் துவலையால் மலர்ந்த, தண் கமழ்நீலம் போல - குளிர்ந்த மணம் கமழ்கின்றநீலமலர் நீர் ஒழுகுவது போல, கண் பனி கலுழ்ந்தன -கண்கள் நீரைச் சொரிந்தன, யான் நோகு - யான் அதுகண்டு நோவேன் ஆயினன்.

(முடிபு) ஐய! நீர் செய்வினைப் பிரிதல் எண்ணி வெம்மலைஅருஞ்சுரம் நீந்திச் சேறும் என்ற சிறு சொற்கு,இவட்கு, பிட்டன் குதிரைக் கவான் சுனைநீலம்போலக் கண் பனி கலுழ்ந்தன, யான் நோகோ.அடுக்கத்து ஆங்கண் கூரெரி நெடுங்கொடி விடர்முகைமுழுங்கும் வெம்மலை அருஞ்சுரும் என்க.

(வி - ரை.) ஒல்லென ஆடு எனப் பிரித்து, ஒல்லென்னும்ஒலியுண்டாக அசையும் என்றலுமாம். கோடைக்கு -கோடையால், ஒய்தல் - செலுத்தல். மேக்கு -மேலிடம். கொடி - ஒழுங்கு. விடராகிய முகை என்க. சிறுசொல் - நன்மை யல்லாத சொல்லுமாம். பொய்யாதபிட்டன் எனவும், பொய்யாது சுரக்கும் பிட்டன்எனவும் கூட்டி யுரைத்தலுமாம். துவலையின் மலர்ந்த -துவலையொடு மலர்ந்த என்றுமாம்.
-------

144. முல்லை

[வினைமுற்றிய தலைமகன்தன்னெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்குச்சொல்லியது.]

(சொ - ள்.) 11. நெஞ்சே-, வாழிய-,

1-8. (நம் தலைவி தன்தோழியை நோக்கி) ஆயிழை - தோழியே!, நமர் - நம்தலைவர், வருதும் என்ற நாளும் பொய்த்தன - தாம்வருவேம் என்று கூறிய நாட்களும் பொய்யாயின; அரிஏர் உண் கண் நீரும் நில்லா - செவ்வரி பரந்தஅழகிய மையுண்ட கண்களினின்று நீரும் நில்லாதொழுகுகின்றன; தண் கார்க்கு ஈன்ற பைங்கொடிமுல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த - குளிர்ந்தமழையால் அரும்பிய பசிய முல்லைக்கொடியினது கூரியமுனைவாய்ந்த வெள்ளிய அரும்புகள் மலர்ந்தன;கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும்உள்ளார்-மாலையைத் தரிக்கும் அழகினை இழந்தகூந்தலையும் நினையார் ஆயினர், அறன் அஞ்சலர் -அறத்திற்கும் அஞ்சுகின்றிலர், அந்தில் அருள்கண்மாறலோ மாறுக - இங்ஙனமெல்லாம் ஆகலின்அவரிடத்தினின்றும் அருள்மாறினும் மாறுக என,சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் -சிறியவாகச் சொல்லிப் பெரியவாகவருத்தமுறுவாளாயினும்;

11-9. விசும்பின் ஏறுஎழுந்து முழங்கினும் - வானில் இடியேறு எழுந்துமுழங்கினும், மாறு எழுந்து சிலைக்கும் - அதற்குஎதிராக எழுந்து தானும் முழங்கும், கடாஅ யானைகொட்கும் பாசறை - மதம் பொருந்திய களிறு சுழலும்பாசறைக்கண், போர்வேட்டு எழுந்த மள்ளர் கையதை -போர் விரும்பிக் கிளர்ந்தெழும் வீரர்தம்கையிடத்ததாகிய, கூர்வாள் குவிமுகம் சிதைய நூறி -கூரிய வாளின் குவிந்த முனை சிதைந்திட மாற்றார்படையை வீசிக் கொன்று, மான் அடி மருங்கில்பெயர்த்த குருதி - மான் அடிபதிந்த பள்ளங்களிலேபாய்ச்சிய உதிரம், வான மீனின் வயின்வயின்இமைப்ப - வானின்கண் மீன்போல இடந்தோறும்இடந்தோறும்மின்ன, ஓர்த்து அமர் அட்ட செல்வம் -அறிய வேண்டுவனவற்றையெல்லாம் ஆராய்ந்து அறிந்தபோரினை வென்ற செல்வத்தை, தமர் விரைந்துஉரைப்பக் கேட்கும் ஞான்று - நம் சுற்றத்தார்விரைந்து சென்று உரைக்கக் கேட்கும்பொழுது,

9-11. பனிபடுநறுந்தார் குழைய - குளிர்ச்சி பொருந்திய நறியமாலை குழைந்திட, நம்மொடு துனிதீர் முயக்கம்பெற்றோள்போல - நம் முடன் வெறுப்பு ஒழிந்தகூட்டம் பெற்றவளைப்போல, உவக்குவள் - மகிழ்வள்அன்றோ?

(முடிபு) நெஞ்சே! வாழிய! (நம்தலைவி தன் தோழியைநோக்கி) ஆயிழை! நமர் அருள் கண் மாறலோ மாறுகஎனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்,அமரோர்த்து அட்ட செல்வம் தமர்விரைந்துதரைப்பக் கேட்கும் ஞான்று, நம்மோடுதுனிதீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குவள்

நாளும்பொய்த்தன; நீரும் நில்லா; முகை அவிழ்ந்த;கதுப்பும் உள்ளார்; அறன் அஞ்சலர் மாறலோ மாறுக;எனச் சிறிய சொல்லி என்க.

(வி - ரை) வரி ஏர் எனப் பிரித்துரைத்தலுமாம். கண்மாறல்:ஒரு சொல். அந்தில் - அசையுமாம். புலப்பினும் என்றபாடத்திற்கு வெறுப்பினும் என்றுரைக்க. கையதை, ஐ:சாரியை. மான் - விலங்கு என்றுமாம். செல்வம் -வெற்றியாகிய செல்வம். அட்டதனாற் பெற்றபொருளாகிய செல்வம் என்றுமாம். கேட்கும் ஞான்றுஉவக்குவள் என்றதனால் நீ தேரினை விரையக் கடவுதிஎனத் தலைவன் பாகற்குக் குறிப்பினாற்கூறினானாயிற்று.

(மே - ள்.) 1'ஏவன்மரபின்' என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டினுள்,வேந்தன் தலைவனாயினவாறும், தான் அமரகத்து அட்டசெல்வத்தையே மிக்க செல்வமாகக்கருதுதற்குரியாள் அரச வருணத்திற்றலைவியேஎன்பதூஉம் உணர்க' என்றனர், நச்சினார்கினியர்.

1'இன்பத்தைவெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து, பொய்யாகக்கோடல் என்ற துறைக்கு மெய்யைப் பொய்யாக்கோடல் என்றுரைத்து, 'வருது மென்ற நாளும்பொய்த்தன, வரியே ருண்கண்ணீரு நில்லா' எனவரும்என்றார், பேரா.

145. பாலை

[மகட்போக்கியசெவிலித்தாய் சொல்லியது.]

(சொ - ள்.) 1-10. வேர் முழுது உலறி நின்ற புழல்கால் - வேர் முதல்முழு மரமும் வற்றி நின்ற துளைபட்ட அடியினையுடையதும், தேர்மணி இசையில் சிள்வீடு ஆர்க்கும் -தேரின் மணி ஒலிபோலச் சிள்வீடு எனும் வண்டுகள்ஒலிப்பதும் ஆகிய, வற்றல் மரத்த - வற்றல் என்னும்மரத்தினிடத்தவாகிய, பொன் தலை ஓதி -பொன்னிறம் வாய்ந்த தலையையுடைய ஒந்தி, வெயில்கவின் இழந்த வைப்பில் - வெய்யிலால் அழகுஒழிந்த ஊர்களில், பையுள் கொள நுண்ணிதின்நிவக்கும் - வருத்தங் கொள்ளுதலின் மெல்லெனத்தாவும், வெண்ஞெமை வியன் காட்டு - வெள்ளிய ஞெமைமரங்களையுடைய அகன்ற காட்டகத்தே, ஆள் இல்அத்தத்து - ஆட்கள் வழங்காத அரிய நெறியாய,வாள்வரி பொருத புண் கூர் யானை - வாள்போலும்வரியினையுடைய புலியுடன் போர் செய்தமையால்புண்மிக்க யானைகள், புகர் சிதை முகத்த - புள்ளிகள்சிதைந்த முகத்தினவாய், குருதி வார - உதிரம் ஒழுக,உயர்சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் -உயர்ந்த உச்சியினையுடைய நெடிய சிகரத்தில்இடிக்கும் இடிபோல முழங்குகின்ற, அரும் சுரம் - அரியபாலைநிலத்திலே, அளியள் - இரங்கத்தக்களாய என்மகள், அவனொடு - அத்தலைவனுடன், இறந்தனள் என்ப -சென்றாள் என்று கண்டார் கூறுவர்;

14-22. களி மயில் -களிக்கும் மயில்கள், குஞ்சரக் குரல குரு கோடு ஆலும்- யானைபோலும் குரலுடைமையான் யானையங் குருகு எனப்பெயர்பெறும் பறவைகளுடன் சேர்ந்து ஒலிக்கும்,துஞ்சா முழவின் - இடையறாது ஒலிக்கும் முழவினையும்,துய்த்து இயல் வாழ்க்கை - செல்வம் நுகர்ந்துவாழும் வாழ்க்கையினையும் உடைய, கூழ் உடை தந்தைஇடன் உடை வரைப்பில் - நெல் மிக்க தந்தையின்அகன்ற இட முடைய மாளிகையில், ஊழ் அடி ஒதுங்கினும்உயங்கும் - முறையாக அடியிட்டு நடக்கினும் வருந்தும்(என் அமர்க்கண் அஞ்ஞையை) , ஐம் பால் சிறுபல்கூந்தல்போது பிடித்து - ஐம்பகுதியான சிறிய பலவாயகூந்தலை வேய்ந்த மாலையுடன் கையாற்பற்றி, அருளாது- இரங்காது, எறிகோல் சிதைய நூறவும் -அடிக்குங்கோல் சிதையும் பரிசு (முதுகில) அடிக்கவும், சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள்நின்ற - என் முதுகு எனக்கு உரியது என்று கருதாது நின்ற,அமர்க் கண் என் அஞ்ஞையை - அமர்த்த கண்களையுடையஎன் மகளை, அலைத்த கை - துன்புறுத்திய கைகள்;

10-14. பெருஞ்சீர்அன்னி - பெரிய புகழையுடைய அன்னியாளவன்,குறுக்கைப் பறந்தலை - குறுக்கைப் பறந்தலை என்னும்போர்க்களத்திலே, திதியன் - திதியன் என்பானது,தொல்நிலை முழுமுதல் - பழைமை பொருந்திய பரியஅடியுடன், துமியப் பண்ணிய - துணித்திட்ட, நன்னர்மெல் இணர் - நன்றாகிய மெல்லியபூங்கொத்துக்களையுடைய, புன்னைபோல - புன்னை மரம்போல, கடுநவைப் படீஇயர் - பெரிய துன்பத்தை அடைவனவாக.

(முடிபு) அளியள் வியன்காட்டு ஆளில் அத்தத்து அருஞ்சுரம்அவனொடு இறந்தனள் என்ப; அமர்க்கண் அஞ்ஞையைஅலைத்த கைகள் அன்னி துமியப் பண்ணிய திதியன்புன்னைபோலக் கடு நவைப் படிஇயர்.

(வி - ரை.) வற்றல் - ஒருவகை மரம். ஓதி:இடைக்குறை. வாள் வரி -ஆகுபெயர். திதியனது புன்னை அன்னி என்பவனாற்குறைக்கப் பட்ட தென்பது, 'அன்னி குறுக்கைப்பறந்தலைத் திதியன்...புன்னை குறைத்த ஞான்றை' (4) என முன் வந்தமையா லறிக. இதற்கு, திதியன் புன்னையைமுதல் துமியப்பண்ணிய அன்னிபோலக் கடுநவைப்படீஇயர் எனக் கொண்டு கூட்டிப் பொருளுரைத்தலும்ஆம். என்னை? 'பொன்னிணர் நறுமலர்ப் புன்னைவெஃகித், திதியனொடு பொருத அன்னிபோல, விளிகுவைகொல்லோ' (126) என்றதனால், அன்னி துஞ்சினான்என்பது பெறப்படுதலின் என்க. குஞ்சரக் குரல குருகு -யானைபோலும் குரலுடைமையான் யானையங்குருகுஎனப்படும் பறவை; இது, 1'யானையங்குருகின் பெருந்தோடு' எனவும், 2'யானையங்குருகின் சேவலொடு' எனவும் பிறாண்டும் வந்துள்ளமைகாண்க. இதற்கு வண்டாங்குருகு எனவும் பெயருண்டென்பதுநச்சினார்க்கினியர் உரையால் அறியப்படுவது.அஞ்ஞை - அன்னை.

(மே - ள்.) 3'கொண்டுதலைக் கழியினும்' என்னுஞ் சூத்திரத்து - 'கூழுடைத்தந்தை யிடனுடை வரைப்பின், ஊழடி யொதுங்கினுமுயங்கும்' என நெல்லுடைமை கூறிய அதனானே, வேளாண்வருணமென்பது பெற்றாம்; என்றனர், நச்சினார்கினியர்.

146. மருதம்

[வாயில் வேண்டிச் சென்றபாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.]


(சொ - ள்.) 1-7. வலிமிகு முன்பின் அண்ணல் ஏறு - வலி மிக்கதிண்மையையும் தலைமையையுமுடைய எருமைக்கடா, பனிமலர்ப் பொய்கை பகல் செல மறுகி - குளிர்ந்தமலர்களையுடைய பொய் கையில் பகலெல்லாம் கழியச்சுழன்று, மடக்கண் எருமை மாண் நாகு தழீஇ - மடப்பம்வாய்ந்த கண்ணினையுடைய மாண்புற்ற பெண் எருமையினைஅணைந்து, படப்பை நண்ணி - தோட்டங்களில்பொருந்தி மேய்ந்து, பழனத்து அல்கும் -வயல்களிற்றங்கும், கலிமகிழ் ஊரன் - ஆரவாரம்பொருந்திய மகிழ்ச்சியையுடைய ஊரனது, ஒலி மணிநெடுந்தேர் - ஒலிக்கும் மணி பொருந்திய நெடியதேரானது, ஒள் இழை மகளிர் சேரி - ஒளி பொருந்தியஅணிகளையுடைய பரத்தையர் சேரியின்கண், பல்நாள்இயங்கல் ஆனாது ஆயின் - பல நாளும் இயங்குதல்அமையாதாயின்,

7-13. மாயப் பரத்தன்வாய்மொழி எம்போல் நம்பி - மாயம் செய்யும்பரத்தமைத் தொழிலுடைய அவனது வாய்மை போலும்மொழியினை எம்மைப்போல மெய்யென விரும்பி,வளிபொரத் துயல் வரும் தளி பொழி மலரில் - காற்றுமோதுதலின் அசையும் மழை பெய்யப்பட்டமலரைப்போல, கண் பனி ஆகத்து உறைப்ப - கண்கள்நீரினை மார்பிலே சொரிய, கண் பசந்து - கண்கள்கலங்கி, ஆயமும் அயலும் மருள - ஆயத்தாரும் அயலாரும்மயங்க, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோள் - தன்தாயார் பாதுகாத்து வளர்த்த அழகிய நலத்தினைவேண்டாது இழப்பாள் ஆகிய, வயங்கு இழை - விளங்கும்அணியினை யுடையாள், யார்கொல் - யாவளோ, அளியள் -அவள் இரங்கத்தக்காள்.

(முடிபு) ஊரன் நெடுந்தேர் சேரிப் பன்னாள் இயங்கல்ஆனாதாயின்; பரத்தன் வாய்மொழி நம்பி கண்பனியுறைப்பப் பசந்து, தாய் ஓம்பு நலம் வேண்டாதோள்யார்கொல்! அளியள்.

(வி - ரை) முன்பு- வலிமை. வலிமிகு முன்பு - மிக்க பெருவலியுடைய என்க.ஏறு என்பது எருமைக்கும் உரித்தென்பது 1'எருமையும்மரையும் பெற்றமும் அன்ன' என்பதனாற் பெறப்படும்.2'எருமையும் மரையும் பெற்றமும் நாகே' என்றதனால்எருமை நாகு எனப்பட்டது. பரத்தன் - புறத்தொழுக்கமுடையவன். வாய்மொழி - வாய் என்பதனை வேண்டாகூறலாக்கி உள்ளத்தொடு கூடாத மொழி என்றலுமாம்.துயல் வரும்மலர் எனக் கூட்டுக. மருள வேண்டா தோள்என்க. மருள - வியக்க எனக்கொண்டு, மருள ஓம்பியநலம் என்றுரைத்தலுமாம். நலம் வேண்டாதோளாகியவயங்கிழை அளியள் என்றமையால், நீ அவள்பால்வாயில்வேண்டிச் சென்று அவளது ஊடலைத்தீர்ப்பாயாக எனத் தலைவி பாணனுக்கு வாயின்மறுத்தாளென்க.

(உ - றை.) எருமை ஏறு பொய்கையிற் பகல்செல மறுகி, எருமை நாகுதழீஇப் படப்பை நண்ணிப் பழனத்தல்கும் என்றது,தலைவன் பரத்தையர் சேரியிற்றிரிந்து அவர்களைநுகர்ந்து, பின்பு இளையளாய பரத்தையொடும்சோலையில் விளையாடி, சேற்றினையுடைய பழனம்போலும் எம் இல்லில் தங்குதல் மாத்திரைக்குஇப்பொழுது வந்துளான் என்றவாறு.

147. பாலை

[செலவுணர்த்தியதோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

(சொ - ள்.) 10-14. (தோழியே, நம் தலைவன் பிரிதலால்) பல புலந்துஉண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய் -பலவற்றையும் வெறுத்து உண்ணாத வருத்தத்தால் உயிர்மெலிந்து ஒழுகிக் கெடவும், தோளும் தொல்கவின்தொலைய-தோளும் பழைய அழகு கெடவும், நாளும் -நாடோறும், பிரிந்தோர் பெயர்வுக்குஇரங்கியிருந்து - நம்மைப் பிரிந்த தலைவரதுநீக்கத்திற்கு இரங்கியிருந்தும், மருந்துபிறிதுஇன்மையின் - அதனைப் போக்கும் மருந்துபிறிதொன்று இல்லாமையால், வினையிலன் - வேறுசெயலில்லேன் ஆயினேன் ஆகலின்;

1-10. ஓங்குமலைசிலம்பில் - உயர்ந்த மலைச்சாரலில், பிடவுடன்மலர்ந்த வேங்கை வெறிதழை - பிடவுடன் சேரமலர்ந்த வேங்கையின் வெறி கமழும் பூவுடன் கூடியதழையை, வேறு வகுத்தன்ன - வேறா வேறாக. வகுத்துவைத்தாற் போன்ற, ஊன்பொதி அவிழாக் கோட்டுஉகிர் குருளை மூன்று உடன் ஈன்ற - தசையின் மறைப்புநீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள் மூன்றைஒரு சேரப் பெற்றதும், முடங்கர் - முடக்கமானஇடத்திலே, துறுகல் விடர் அளை - பாறையின்பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய, நிழத்த பிணவுபசி கூர்ந்தென - ஓய்ந்த பெண் புலி பசி மிக்கதாக,பொறிகிளர் போழ் வாய் உழுவை ஏற்றை - புள்ளிகள்விளங்கும் பிளந்த வாயையுடைய ஆண்புலி, அறுகோட்டுஉழைமான் ஆண் குரல் ஓர்க்கும் - அறல்பட்டகொம்பினையுடைய ஆண் மானினது குரலினைஉற்றுக்கேட்கும், கவலை நெறிபடு நிரம்பா நீள் இடை- கவர்த்த நெறிகள் பொருந்திய செல்லத்தொலையாத நீண்ட காட்டிலே, வெள்ளி வீதியைப்போல - தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளி வீதிஎன்பாளைப் போன்று, நன்றும் செலவு அயர்ந்திசின்- செல்லுதலைப் பெரிதும் விரும்பியுளேன்.

(முடிபு) தோழி! தலைவர் பிரிதலால், யான் உயிர்செல்லவும் தோளும் கவின் தொலையவும்,பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி யிருந்தும்மருந்து பிறிதின்மையால், வேறு வினையிலேன்ஆயினேன் ஆகலின், உழுவை யேற்றை உழைமான் குரல்ஓர்க்கும் கவலை நெறிபடு நிரம்பா நீளிடையில்வெள்ளி வீதியைப்போல நன்றும் செலவயர்ந்திசின்.

(வி - ரை.) வேறு வகுத்தன்ன குருளை எனவும், கோட்டுகிர்க் குருளைஎனவும் தனித்தனி கூட்டுக. அவிழா உகிர் என்க.முடங்கர்-முடக்கமான இடம். நிழத்தல் - மெலிதல்.வெள்ளி வீதியைப் போலும் என்ற உவமையான் அவள்கணவனைப் பிரிந்து பலவிடத்தும்தேடித்திரிந்தாளாதல் பெற்றாம். இலன் எனஅன்விகுதி தன்மைக்கண் வந்தது. செலவயர்ந்திசின்என்பதனை எச்சப்படுத்தி வினையிலனாயினன் எனமுடிப்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

(மே - ள்) 1'கொண்டுதலைக் கழியினும்' என்னுஞ் சூத்திரத்து, தலைவிபிரிந்திருந்து மிகவும் இரங்குதலின், இரங்கினும்எனச் சூத்திரஞ் செய்து அதனானே பாலைப் பொருட்கண் இரங்கற்பொருள் நிகழுமென்றார்.

உதாரணம்- ஓங்குமலைச்சிலம்பிற்......வினை இலனே, (என்பது) இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்த, 'யான்பலவற்றிற்கும் புலந்திருந்து, பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோள் நலந் தொலைய உயிர்செலச்சாஅய், இரங்கிப் பிறிது மருந்தின்மையிற்செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு.மெய்ப்பாடுபற்றி யுணர்க' என்றும், 1'மக்கள்நுதலிய' என்னுஞ் சூத்திரத்து 'வெள்ளி வீதியைப்போல நன்றும், செலவயர்ந்திசினால் யானே'என்பதன்கண் பெயர் அகத்திணைக்கட்சார்த்துவகையான் வந்ததன்றித் தலைமை வகையாகவந்திலது என்றும் கூறினர், நச்சினார்கினியர்.

148. குறிஞ்சி

[பகல் வருவானை இரவுவருகென்றது.]

(சொ - ள்.) 1-6. திரள் பனை அன்ன பரு ஏர் எறுழ்த்தடக்கை -திரண்ட பனையை யொத்த பருத்த அழகிய வலிய வளைந்தகையையும், கொலைச் சினம் தவிரா மதன்உடைமுன்பின் - கொல்லும் சினம் நீங்காத செருக்குப்பொருந்திய வலிமையினையும், வண்டுபடு கடாஅத்து -வண்டு மொய்க்கும் மதத்தினையும், உயர்மருப்புயானை - நிமிர்ந்த கோட்டினையும் உடைய யானை, தண்கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி -குளிர்ந்த மணம் கமழ்கின்ற பக்கமலையிலுள்ள மரம்வீழ ஒடித்துத்தள்ளி, உறுபுலி உரறக் குத்தி விறல்கடிந்து-மாறுபாடுற்ற புலியினைக் கதறுமாறு குத்திஅதன் வெற்றியினைத் தொலைத்து, சிறுதினைப் பெரும்புனம்வவ்வும் நாட - சிறிய தினை விளைந்த பெரியபுனத்தினைக் கவர்ந்து கொள்ளும் நாடனே!

7-11. கடும் பரிக்குதிரை ஆஅய் எயினன் - கடிய செலவினையுடையகுதிரையையுடைய ஆய் எயினன் என்பான், நெடும் தேர்மிஞிலியொடு பொருது களம் பட்டென - நெடியதேரையுடைய மிஞிலி என்பானொடு போர்புரிந்துகளத்தில் இறந்தனனாக, காணிய செல்லாக் கூகை நாணி- (புள்ளின் பாதுகாவலனாகிய அவனை ஏனைப்பறவைகளைப் போலச் சென்று) காணவியலாதபகற்குருடாகிய கூகையானது நாணுதலுற்று, கடும்பகல்வழங்காதாங்கு - கடிய பகலிலே இயங்காது இடும்பையுற்றாற்போல, இவட்கு இடும்பை பெரிது - இவளுக்குப்பகற் குறிக்கட் செல்லாத துன்பம் பெரிதாயிற்று;

11-4. அதனால், சோலைமுளைமேய் பெருங்களிறு வழங்கும் - சோலையின்கண்மூங்கிற் குருத்தினைத் தின்னும் பெரிய களிறுஇயங்குகின்ற, மலைமுதல் அடுக்கத்து -மலைச்சாரலிலுள்ள, சிறுகல் ஆறு - சிறிய பாறைகள்செறிந்த நெறியில், மாலை வருதல் வேண்டும் - நீமாலைக் காலத்தே வருதல் வேண்டும்.
(முடிபு) நாட! இவட்குப் பகற்குறிக்கண் இடும்பை பெரிது;அதனால் சிறு கல்ஆறு மாலை வருதல் வேண்டும்.

(வி - ரை) பனைத்திரள் என ஐகாரங் கெடாது வல்லெழுத்துப்பெற்று முடிந்தது, 1'கொடிமுன் வரினே யையவ ணிற்பக்,கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி' என்றசூத்திரத்து இலேசாற் கொள்ளப்படும். பரேர்என்றது மரூஉ முடிபு. ஆஅய் எயினன் என்பான்புட்களுக்குப் பாதுகாவலனாக இருந்தான் என்பதும்,அதனால் அவன் களத்திற் பொருது வீழ்ந்தபோதுபுட்களெல்லாம் வானிலே நெருங்கி வட்டமிட்டு,அவன்மீது வெயிற்படாது மறைத்தன என்பதும் வேறு சில 2செய்யுட்களாற்பெறப்படுகின்றன. ஏனைப் பறவைகளெல்லாம்செல்லவும் பகலிலே தான் செல்லலாற்றாமையின் 3கூகைநாணி வருந்தியிருந்த தென்றார். அகம்-208 ஆம்பாட்டில் 'எயினன்....பாழிப்பறந்தலை...மிஞிலியொடு நண்பகலுற்ற செருவிற்புண்கூர்ந் தொள் வாண் மயங்கமர் வீழந்தெனப்புள்ளொருங்கு, அங்கண் விசும்பின் விளங்குஞாயிற்று, ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி,நிழல்செய் துழறல் காணேன் யானெனப், படுகளங்காண்டல் செல்லான் சினஞ் சிறந்து, உருவினைநன்னன் அருளான் கரப்ப' என வரும். நன்னன்என்பானே பகலிற் செல்லா ஒப்புமைபற்றி இச்செய்யுளிற் 4'கூகையென வழங்கப்பட்டானாவன்' எனக் கருதுவாருமுளர்.


149. பாலை

[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது]

(சொ - ள்.) 7. என்நெஞ்சே - எனது நெஞ்சமே!

1-6. பெரும் கைஎண்கின் இரும் கிளை - பெரிய கையினை யுடையகரடியின் பெரிய கூட்டம், சிறு புன் சிதலை சேண்முயன்று எடுத்த - சிறிய புல்லிய கறையான் நெடிதுமுயன்று ஆக்கிய, நெடும் செம்புற்றத்து - உயர்ந்தசிவந்த புற்றில், ஒடுங்கு இரைமுனையில் - மறைந்துகிடந்த புற்றாம் பழஞ்சோற்றைத் தின்றுவெறுப்பின், புல் அரை இருப்பை - புற்கென்றஅரையினையுடைய இருப்பை மரத்தின், தொள்ளை வான்பூகவரும் - தொளை பொருந்திய வெள்ளிய பூவைக்கவர்ந்து உண்ணும், அத்தம் நீள் இடைப்போகி -சுரத்தின் நீண்ட வழியே சென்று, நன்றும் அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் -பெரிதும் அரிதாக ஈட்டும் சிறந்த பொருளைஎளிதாகப் பெறுவதாயினும்;

7-19. சேரலர் சுள்ளிஅம் பேர்யாற்றுவெண் நுரை கலங்க - சேர அரசரது சுள்ளியாகிய பேர்யாற்றினது வெள்ளிய நுரை சிதற, யவனர் தந்தவினைமாண் நல்கலம் - யவனர்கள் கொண்டு வந்ததொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்,பொன்னொடு வந்து கறியொடு பெயரும் - பொன்னுடன்வந்து மிளகொடு மீளும், வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழவளைஇ - வளம் பொருந்திய முசிறி என்னும்பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து, அரும் சமம்கடந்து படிமம் வவ்விய - அரிய போரை வென்றுஅங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்துகொண்ட, நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் - நெடிய நல்லயானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது,கொடி நுடங்க மறுகில் கூடல்குடாஅது - கொடி அசையும்தெருவினையுடைய கூடலின் மேல் பாலுள்ள, பல்பொறிமஞ்ஞை வெல்கொடி உயரிய - பல பொறிகளையுடையவெல்லும் மயிற் கொடியினை உயர்த்த, ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து - இடையறாதவிழவினையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே.வண்டுபட நீடிய குண்டு சுனை நீலத்து - வண்டுவீழ நீண்டஆழமான சுனையிற் பூத்த நீலப்பூவின், எதிர்மலர்ப்பிணையல் அன்ன - புதிய மலர் இரண்டின் சேர்க்கைபோன்ற, இவள் அரிமதர் மழைக் கண் தெண்பனிகொள -இவளது செவ்வரி படந்த மதர்த்த குளிர்ந்த கண்கள்தெளிந்த நீரினைக் கொள்ள, வாரேன் - வாரேன்,வாழி-

(முடிபு) நெஞ்சே! அத்த நீளிடைப்போகி, அரிதுசெய்விழுப்பொருள் எளிதிற் பெறினும், இவள் அரிமதர்மழைக்கண் தெண்பனி கொளவாரேன், வாழி!

(வி - ரை.) சுள்ளி, பேரியாறு என்பன சேரநாட்டு முசிறி மருங்குகடலிற் கலக்கும் ஓர் யாற்றின் பெயர்கள். யவனர்என்பார் எகித்து, கிரேக்கம் முதலிய புறநாட்டினர்.மரக்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்என்றது, பொன்னைக் கொண்டுவந்து விலையாகக்கொடுத்து மிளகை ஏற்றிச் செல்லும் என்றபடி. எனவேஅந்நாளில் சேரர்நாட்டு வாணிபம்சிறந்திருந்தமை பெற்றாம். படிமம் என்றதுமுசிறியி லிருந்ததோர் தெய்வ விம்பம்போலும்.கூடலின் குடக்கின்கண்ணதாகிய குன்றம் என்க.வாரேன் என்றதனால் நீ வேண்டிற் செல்லுதிஎன்றானாம்.
-----------

150. நெய்தல்

[பகற்குறி வந்துகண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து, செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.]


(சொ - ள்.) 9-14. தார் ஆர்மார்ப - மாலை பொருந்திய மார்பனே,நீ தணந்த ஞான்று - நீ பிரிந்தகாலை, கடும் செலல்வாள் சுறா வழங்கும் - விரைந்த செலவினையும் வாள்போன்ற கொம்பினையுமுடைய சுறா மீன் இயங்கும்,வளைமேய் பெரும்துறை - சங்குகள் மேயும் பெரியதுறையையுடைய, கனைத்த நெய்தல் கண்போல் மாமலர் -இதழ் செறிந்த நெய்தலது கண்போலும் பெரிய மலர்,மாலை மணி இதழ் கூம்ப - மாலைப் போதில் அழகியஇதழ்கள் குவிய; காலை - விடியலில், நனைத்தசெருந்திப் போதுவாய் அவிழ - அரும்பியசெருந்தியின் போதுகள் இதழ விரிய, கள் நாறுகாவியொடு - தேன் நாறுகின்ற குவளையுடன், தண் எனமலரும் - தட்பம் உற மலருகின்ற, கழியும் கானலும்காண்தொறும் - கழியையும் சோலையினையும் காணுந்தோறும், பல புலந்து -பலவும் எண்ணி வெறுத்து;வாரார்கொல் எனப் பருவரும் நம் தலைவர் வாராரோஎனத் தலைவி வருந்துவள், அதன்மேலும்;

1-9. யாய் -அன்னையானவள், பின்னுவிட நெறித்த கூந்தலும் -பின்னும்படி (வளர்ந்து) நெளிந்த கூந்தலையும்,பொன் என ஆகத்து அரும்பிய சுணங்கும் - பொன் போல மார்பிலே தோன்றிய தேமலையும், வம்பு விடக் கண் உருத்து எழுதரும்முலையும் - கச்சு அறக் கண்ணுடன் உருப்பெற்று எழுந்தமுலையினையும், நோக்கி - பார்த்து, பெரிது எல்லினைஎன - பெரிதும் அழகுடையை என்று, பல் மாண் கூறி - பலமுறையும் கூறி, பெரும் தோள் அடைய முயங்கி - பெரியதோளை முழுவதும் முயங்கி, நீடு நினைந்து -நெடிதுநினைந்து, அருங்கடிப்படுத்தனள் - (தலைவியை) அரிய காவலில் வைத்தனள்.

(முடிபு) தாரார் மார்ப! தலைவி, நீ தணந்த ஞான்று கழியுங்கானலுங் காண்டொறும் வாரார்கொல் லெனப்பருவரும்; (அதன் மேலும) யாய் கூந்தலும் சுணங்கும்முலையும் நோக்கி, எல்லினை எனக் கூறி, முயங்கிஅருங் கடிப்படுத்தனள்.

(வி - ரை.) உருத்து - வெகுண்டு என்றுமாம். வாட்சுறா வழங்கும்கழியெனவும், பெருந்துறையையுடைய கழியெனவும்இயையும். செருந்தியும் நெய்தலுங் காவியும்காலையில் மலரும் என்க. கழியுங்கானலும்இயற்கைப்புணர்ச்சிக் காலத்துத் தலைவன் சூளுற்றஇடமாகலின் அவற்றைக் காண்டொறும் வெறுத்தாள்என்றலுமாம்.

(மே - ள்.) 1'களவலராயினும்'என்னும் (செவிலி கூற்று நிகழுமாறு கூறும்) சூத்திரத்து,அளவு மிகத் தோன்றினும் என்னும் துறைக்கண், இச்செய்யுள் தோழி செவிலி கூறியதைக் கொண்டு கூறியதுஎன்று கூறினர்; நச்சினார்கினியர்.

2'இன்பத்தைவெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து 'ஏதம் ஆய்தல்'என்னும் மெய்ப்பாட்டிற்கு, கூட்டத்திற்கு வரும்இடையூறு உண்டென்று பலவும் ஆராய்தல். அது, நொதுமலர்வரையக் கருதுவர் கொல் லெனவும், பிரிந்தோர்மறந்து இனி வாரார்கொல் லெனவும் தோன்றும் உள்ளநிகழ்ச்சி என்று உரைத்து, அது, 'வாரார் கொல்லெனப் பருவரும், தாரார் மார்ப நீ தணந்த ஞான்றே'என வரும் என்று கூறினர், பேரா.

151. பாலை

[தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைமகள் சொல்லியது.]


(சொ - ள்.) 5-15. தோழி - வாழி-, கால் விரிபு உறுவளி எறிதொறும்- இடமெலாம் விரிந்து மிக்க காற்று வீசுந்தொறும்,கலங்கிய - கலங்கியதும், பொறிவரிக் கலைமான்தலையில் - புள்ளிகளையும் வரிகளையுமுடையகலைமானின் தலையின், முதன்முதல் கவர்த்த -அடியிடத்திற் கப்புவிட்ட; கோடு கவட்ட குறுங்கால்உழிஞ்சில் - கொம்பு போன்ற கவட்டினையுடைய குறியகாலினையுடைய வாகைமரத்தின், சினை விளைந்த -கிளையில் விளைந்ததும் ஆகிய, தாறுநெற்றம் -நெற்றின் குலை, ஆடுமகள் அரிகோல் பறையின் - ஆடும்கூத்தியரது கோலால் அரித்தெழும் ஒலியுண்டாக்கும் பறைபோல, ஐயென ஒலிக்கும் - வியப்புண்டாகஒலிக்கும், பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் -பதுக்கை யினையுடையதாய குறைந்த நிழலையுடைய,கள்ளிமுள் அரைபொருந்தி – கள்ளியின் முட்பொருந்திய அடியில் தங்கி, செல்லுநர்க்குஉறுவது கூறும் - வழிச் செல்வார்க்கு உண்டாகும்நிகழ்ச்சிகளைக் கூறும், சிறு செந்நாவின் - சிறியசெவ்விய நரவினது, மணி ஓர்த்தன்ன - மணியொலிகேட்டாற் போலும், தெண் குரல் - தெளிந்தகுரலைக்கொண்ட, கணிவாய்ப் பல்லிய காடுஇறந்தோர் - சோதிடம் கூறும் வாயையுடையபல்லிகளையுடைய காட்டைக் கடந்து சென்ற நம்தலைவர்;

1-5. தம் நயந்துஉறைவோர்த் தாங்கி - தம்மை விரும்பியிருப்போரைப் புரந்து, தாம் நயந்தஇன் அமர்கேளிரொடு ஏம் உறக்கெழீஇ - தாம் விரும்பியஇனிமை பொருந்திய நட்டாரொடு இன்பம் மிகஇயைந்து, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என -மகிழ்ந்திருத்தலை மாட்டாராவர் வறுமை யுற்றோர்என்று கூறி, மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு -மிக்க பொருளை ஈட்ட நினையும் நெஞ்சத்தால், மன்அருள் பிறிதுஆப - நம்பால் மிகவும் அருளுடையவர்அல்லர் ஆவர்.

(முடிபு) தோழி! வாழி! காடிறந்தோர், தாங்கி, கெழீஇ.நகுதல் ஆற்றார் எனப் பொருள் நினையும்நெஞ்சமொடு அருள் பிறிதாய: என்செய்வாம்.

(வி - ரை.) தம்நயந் துறைவோர் - தம் குடிக்கண் இளையாரும்பணியாளரும் பாணர் முதலாயினாருமாம். தாம் நயந்தஎன்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. கேளிர் -நட்டார். நெஞ்சமொடு - நெஞ்சத்தால். பொருளையேகாதலிப்பவர் அருளைக் கைவிடுவர் என்னும்கருத்தினை, 1'பொருளேகாதலர் காதல், அருளே காதலர் என்றி நீயே'என்றதனான் அறிக. கால் விரிபு என்புழிக் கால்இடமென்னும் பொருட்டு. கலங்கிய நெற்றம்எனவும்,சினைவிளைந்த நெற்றம் எனவும் தனித்தனி இயையும்.முதல் இரண்டனுள் முன்னது அடி, பின்னது இடம் என்னும்பொருளன: கோடலங்கவட்ட; அல்லும் அம்மும்சாரியைகள். நெற்றம்: அம், அசை. பகுதிப்பொருள்விகுதி என்றலுமாம். செந்நாவின் குரல் எனவும்மணியோர்த்தன்ன குரல் எனவும் இயையும். உறுவது கூறும்சிறு செந்நாவின் என்றமையால், கணிவாய் என்றதுபல்லிக்கு இயற்கை யடை.

152. குறிஞ்சி

[இரவுக்குறிவந்து நீங்குந்தலைமகன்தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) நெஞ்சே.

1-3. நெஞ்சு நடுங்குஅரும்படர் தீர வந்து - நம் நெஞ்சம்நடுங்குவதற்குக் காரணமான பிறிதொன்றால்தீர்தற்கரிய துன்பமானது தீர வந்து கூடி, குன்று உழைநண்ணிய சீறூர் ஆங்கண் செலீ இய பெயர்வோள் -குன்றிடத்துப் பொருந்திய தனது சிறிய ஊர்க்குச்செல்ல மீள்வோளாய நம் தலைவியின், வணர் சுரிஐம்பால் - வளைந்து சுருண்ட கூந்தல்கள்;

4-14. நுண் கோல்அகவுநர்ப் புரந்த பேரிசை - நுண்ணிய கோலையுடையபாணரைப் புரந்த பெரிய புகழையும், சினம் கெழு தானை- சினம் மிக்க படையினையுமுடைய, தித்தன் வெளியன்- தித்தன் வெளியன் என்பானது, இரங்கும் நீர்ப்பரப்பின் கானல் அம் பெருந்துறை - ஒலிக்கும்நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும்பட்டினத்தே, தனம் தருநன்கலம் சிதையத்தாக்கும் -பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம்சிதையுமாறு தாக்குகின்ற, சிறு வெள் இறவின் குப்பைஅன்ன - சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதிபோன்ற, உறுபகை தரூஉம் மொய்மூசு பிண்டன் - மிக்கபகையைத் தரும் வலிமிக்க பிண்டன் என்பானது, முனைமுரண் உடையக் கடந்த வென்வேல் - போர்செய்யும்மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும், இசைநல்ஈகைக் களிறு வீசு வண்மகிழ் - புகழ் மேவிய நல்லஈகையினையும் களிறுகளை வழங்கும் வண்மையானாகியகளிப்பினையும் உடைய, பாரத்துத் தலைவன் ஆரம்நன்னன் - பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகியஆரம்பூண்ட நன்னன் என்பானது, ஏழில் நெடுவரைப்பாழிச்சிலம்பில் - ஏழில் என்னும் நீண்டமலையின் பாழி யென்னும் பக்கமலையிடத்துள்ள,களிமயில் கலாவத்து அன்ன - களிக்கும் மயிலின்தோகையை ஒத்தன:

14-24. தோளே - இவள்தோள்கள், வல்வில் இளையர் பெருமகன் நள்ளி -வலிய வில்லையுடைய வீரர்கட்குத் தலைவனான நள்ளி என்பானது, சோலை அடுக்கத்து -சோலைகள் மிக்க பக்க மலையிடத்தே சுரும்பு உணவிரிந்த கடவுள் காந்தள் உள்ளும் - வண்டு உண்ணவிரிந்த கடவுள் சூடுதற்குரிய காந்தட் பூவுள்ளும்,இறும்பூது கஞலிய ஆய்மலர் பல உடன் நாறி, வியப்புமிக்க அழகிய மலர் பலவும் ஒருங்கு நாறுவது போலநாறிவல்லினும் வல்லாராயினும் சென்றோர்க்கு -பரிசில் கருதி வந்தார்க்கு அவர் கல்வியில்வல்லுநராயினும் அல்லாராயினும், சால் அவிழ் -மிடாச் சோற்றை, நெடுங்குழி நிறைய வீசும் -மண்டையின் நெடிய குழி நிறையும்படியாக அளிக்கும்,மாஅல் யானை ஆஅய் கானத்து - பெரிய யானைகளையுடையஆய் என்பானது காட்டினையுடைய, தலையாற்று நிலைஇயசேய் உயர் பிறங்கல் - தலையாறு என்னுமிடத்துநிலைபெற்ற மிக உயர்ந்த மலையிடத்துள்ள, வேய்அமைகண் இடைபுரைஇ - மூங்கிலிற் பொருந்தியகணுக்களின் நடு விடத்தை ஒத்து, சேய ஆயினும் நடுங்குதுயர் தரும் - சேய்மைக்கண் உள்ளனவாயினும் நாம்நடுங்கத்தக்க துயரினைத் தரும்.

(முடிபு) நெஞ்சே! சீறூராங்கட் செலீஇய பெயர்வோள் ஐம்பால் நன்னன் பாழிச் சிலம்பின் மயிற்கலாவத்தன்ன; தோள் நள்ளி அடுக்கத்து ஆய்மலர்நாறி, ஆஅய் கானத்துப் பிறங்கல் வேயமைக்கண்ணிடை புரைஇ, நடுங்குதுயர் தரும்

தித்தன்வெளியன் பெருந்துறை நன்கலம் சிதையத் தாக்கும்இறவின் குப்பையன்ன உறுபகை தரூஉம் பிண்டனது முரண்உடையக்கடந்த நன்னன் என்க.

(வி - ரை.) நடுங்குதுயர் தருமே என்பதனை முன்னுங் கூட்டி ஐம்பால்கலாவத்தன்னவாய் நடுங்குதுயர் தரும் என்றுஉரைத்துக் கொள்க. சால் - மிடா. சாலவிழ் நிறையவீசும் எனவும், நெடுங்குழி மாஅல் யானையெனவுங்கூட்டியுரைத்தலுமாம்; குழி - ஈண்டு யானையைஅகப்படுத்தும் பயம்பு. யானையையுடைய ஆஅய் என்க;ஆஅய் கானம் என்றலுமாம். என்ன? 1'...அண்டிரன்,குன்றம் பாடின கொல்லோ, களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே' என்பவாகலின்.
------------

153. பாலை

[மகட் போக்கியசெவிலித்தாய் சொற்றது.]


(சொ - ள்.) 2-4. அளியள் - இரங்கத்தக்காளாய என் மகள்,அம்தீம் கிளவி ஆயமொடு கெழீஇ - அழகிய இனியசொற்களையுடைய ஆயத்தாருடன் பொருந்தி,பந்துவழிப் படர்குவள் ஆயினும் - பந்தாடு மிடத்துச்சிறிது சென்று வருவாளாயினும், நனி நொந்து வெம்பும்மன் - மிகவும் நொந்து பெரிதும் வருந்துவாள்;

13-9. ஓங்கு வரைஅடுக்கத்து - உயர்ந்த மலைச் சாரலிலுள்ள, தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் -வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளக்கமுற்றகொத்துக்களையுடைய கோங்கினது, உயர்ந்த சென்னி -உயர்ந்த உச்சியில், எல்லி - இரவின்கண், மீனொடுபொலிந்த வானில் தோன்றி - மீனொடு விளங்கும்வானெனத் தோன்றிப் (பின்) , கால் உறக் கழன்றகண் கமழ் புது மலர் - காற்று அடித்தலின் கழன்றுவிழும் இடனெல்லாம் கமழும் புதிய மலர், கைவிடுசுடரில் தோன்றும் - கையினால் விடப்பெறும்சுடர்ப்பொறி போலத் தோன்றும் , மை படு மாமலைவிலங்கிய சுரன் - மேகம் பொருந்திய பெரிய மலைகுறுக்கிட்ட சுரநெறியில்:

4-13. வேனில் தெறுகதிர் உலைஇய - வேனிற்காலத்துக் காய்கின்றஞாயிற்றின் கதிர் கெடுத்த, வெம் காட்டு -வெப்பம் மிக்க காட்டிலே, உறு வளி - விரைந்துஅடிக்கும் மிக்க காற்று, ஒலி கழைக்கண் உறுபுதீண்டலின் - தழைத்த மூங்கிலின் கணுக்களைப்பொருந்தித் தாக்கலின், எடுத்த - எழுப்பப்பட்ட, பொங்கூ -விளங்குகின்ற, பொறி பிதிர்பு எழு வர் எரி -பொறியைச் சிதறி எழுகின்ற மிக்க நெருப்பினால்,பைது அறு சிமையம் பயம் நீங்கு - பசுமையற்றஉச்சியையுடைய பயன் ஒழிந்தவும், நல் அடிக்குஅமைந்த அல்ல - தன் நல்ல அடிகட்கு ஏற்றனஅல்லவுமாகிய, ஆர் இடை - அரிய வழிகளை, இனி -இப்பொழுது, மெல்லிய - மென்மைத்தன்மையுடைய அவள்,வன்கணாளன் மார்பு உற வளைஇ - கொடுமையுடைய தலைவன்தன் மார்பினாலே முற்ற வளைத்து, இன் சொல்பிணிப்ப - இனிய சொல்லாலே கட்டிவிட, நம்பி -அதனை விரும்பி, நம் கண் உறுதரு விழுமம் உள்ளாள் -நம்மிடத்தே உறும் துன்பத்தினை நினையாளாகி,ஒய்யென வல்லுநள் கொல்லோ - விரையச் செல்லவல்லமையுடையள் ஆவளோ;

1. நோதகும் உள்ளம்- என் உள்ளம் அதனை நினைந்து வருந்துகின்றது ; நோகு- யானும் நோகின்றேன்.

(முடிபு) அளியள்பந்துவழிப் படர்குவள் ஆயினும் நனிநொந்துவெம்பும்மன்; இனி மெல்லியள், மலை விளங்கியசுரனில், வேனில் வெங்காட்டுப் பயம் நீங்குஆரிடையில் ஒய்யெனச் செல்ல வல்லுநள் கொல்லோ!உள்ளம் நோதகும்; யான்நோகு.

(வி - ரை.) நோகோ - ஓ: அசைநிலை, ஒழியிசையாகக் கொண்டுஉரைத்தலுமாம். பந்துவழி - பந்துவிளையாடுமிடம்.வெம்பும்மன்; மன் மிகுதிப் பொருட்டு; கழிவுமாம்.ஒய்யெனச் செல்ல என விரித்துரைக்க. கைவிடு சுடர்-பரணின்மீதுள்ள கானவர் கையினின்றும் விடுத்தபந்தம்.
-----------

154. முல்லை

[வினைமுற்றிய தலைமகன்தேர்ப்பாகற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 13. வலவ - பாகனே!

1-10. படுமழைபொழிந்த பயம் மிகு புறவின் - மிக்க மழைசொரிந்தமையால் பயன் மிக்க முல்லைநிலத்தே,நெடுநீர் அவல பகுவாய்த் தேரை - ஆழமாகியநீரினையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்தவாயினையுடைய தேரைகள், நெடு நெறி – நீண்ட வழியெலாம், சிறு பல்லியத்தின் கறங்க - சிறியபலவாகிய வாச்சியங்களைப்போல ஒலிக்கவும்,குறும்புதல் பிடவின் நெடுங்கால் அலரி - குறியபுதராகிய பிடவின் நீண்ட காம்பினையுடையமலர்கள், செம்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப -செம்மண்ணாகிய நிலத்திடத்து நுண்ணிய மணலில்உதிர்ந்து கோலம் செய்யவும், வெம்சின அரவின் பைஅணந்தன்ன - கொடிய சினமுடைய பாம்பின் படம் மேலேநிவந்தால் போன்ற, தண் கமழ் கோடல் தாதுபிணிஅவிழ - தண்ணென மணக்கின்ற காந்தட் பூவின் தாதுகட்டவிழ்ந்து விரியவும், திரிமருப்பு இரலைதெள்அறல் பருகி - முறுக்கிய கொம்பினையுடையஆண்மான் தெளிந்த நீரைக் குடித்து, காமர் துணையொடுஏம்உற வதிய - விருப்பம் வாய்ந்த பிணையுடன்இன்பம் மிகத் தங்கவும், காடு கவின்பெற்ற தண்பதப்பெருவழி - காடு அழகுபெற்ற தண்ணிய செவ்விவாய்ந்த பெரிய வழியிலே;

11-3. ஓடுபரிமெலியாக் கொய்சுவல் புரவி - ஓடும் வேகம் குறையாதகொய்யப்பட்ட பிடரி மயிரினையுடைய குதிரையின்,தாள் தாழ் தார்மணி தயங்குபு இயம்ப - தாளின் அளவுதாழ்ந்த மாலையிடத்து மணி விளங்கி ஒலிக்க, தேர்ஊர்மதி - தேரை ஓட்டுவாயாக;

13-5. சீர்மிகுபு -சீர்மிக்கு, நம் வயின் புரிந்த கொள்கை -நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய, அம்மாஅரிவையை - அழகிய மாமை நிறத்தையுடைய நம்தலைவியை, விரைந்து துன்னுகம் - விரைந்து சென்றுஅடைவோம்.

(முடிபு) வலவ! தேரை கறங்க, அலரி வரிப்பக் காந்தட்பூ தாதுபிணி அவிழ இரலை ஏமுறக் காடு கவின்பெற்ற பெருவழி,புரவித் தார் மணி இயம்பு தேர் ஊர்மதி, அரிவையைவிரைந்து துன்னுகம்.

-----------

(வி - ரை) தேரையின் ஒலியும் சிறு பல்லியத்தின் ஒலியும் ஒருதன்மையவாதல், 2'தேரை யொலியின்மானச்சீரமைத்துச் சில்லரி' 'கறங்கும் சிறுபல் இயத்தோடு' எனப்பின் வருவதனாலும் அறியப்படும். 'அரவின் பைஅணந்தன்ன தண்கமழ் கோடல் தாது பிணி அவிழ'என்னும் இக்கருத்து, 1'அரவின்அணங்குடை அருந்தலைக் பைவிரிப்பவை போல்.....பஃறுடுப் பெடுத்த அலங்குகுலை காந்தள்'என முன்னரும் வந்துள்ளமை காண்க. அரிவையைத்துன்னுதற் பொருட்டுத் தேர் விரைந்து ஊர்மதி என்று உரைத்தலுமாம். தோடார் தார் மணி என்பதுபாடமாயின், தொகுதி கொண்ட தார்மணி என்க. தார்- குதிரையின் கழுத்தில் கட்டும் மாலை.

155. பாலை

[தலைமகன் பிரிவின் கண்வேறுபட்ட தலைமகள் சொல்லியது.]

(சொ - ள்.) 6. தோழி-,

1-4. புனை யிழை -அழகிய அணியுடையாளே!, என்றும் அறன் கடைப் படாஅவாழ்க்கையும் - எஞ்ஞான்றும் பாவநெறியிற்செல்லாத வாழ்க்கையும், பிறன்கடைச் செலா அச்செல்வமும் - பிறன் மனைவாயிலிற் சென்று நில்லாத மேம்பாடும் ஆய, இரண்டும் - இவ்விரண்டும், பொருளின் ஆகும்என்று - பொருளானே யாகும் என்று கூறி, நம் இருள் ஏர்ஐம்பால் நீவியோர் - நமது இருண்ட அழகியகூந்தலைத் தடவிய தலைவர்;

6-12. பல் வயின்பயம் நிரை சேர்ந்த பாணாட்டாங்கண் - பலவிடத்தும் பாற்பசுக் கூட்டம் சேர்ந்துளபாணாடென்னும் அவ்விடத்தே, நெடு விளிக் கோவலர்தோண்டிய கூவல் - நீண்ட சீழ்க்கை யொலியையுடையகோவலர் தோண்டிய கிணற்றினின்றும் முகந்த, கொடுவாய்ப் பத்தல் நீர் வார்ந்து உகு சிறுகுழி -வளைந்த வாயினையுடைய பத்தலினின்று நீர் வடிந்துசெல்லும் சிறிய குழி, காய் வருத்தமொடு -நீரின்றிக் காய்ந்ததனாலாய வருத்தத்துடன்,சேர்வு இடம் பெறாது - நீர் வேட்கை தணித்தற்குச்சேரத்தக்க வேறிடம் பெறாமல், பெருங்களிறுமிதித்த அடியகத்து - பெரிய களிறு மிதித்தேகியஅடிச் சுவட்டில், இரும்புலி ஒதுங்குவன கழிந்த - பெரியபுலிகள் அடிவைத்து நடந்து சென்ற, செதும்பல் ஈர்வழி- சேற்றுநிலமாய ஈரமுடைய வழிகள்;

13-6. செயிர் தீர்நாவின் வயிரியர் - குற்றமற்ற நாவினை யுடையகூத்தர், பின்றை அசைத்த - தோளின் பின்னேகட்டிய, மண் ஆர் முழவின் கண்அகத்து – மார்ச்சனை அமைந்த மத்தளத்தின் கண்ணிடத்தே, விரல் ஊன்றுவடுவில் தோன்றும் - விரலால் எறிந்த வடுக்கள்போலத் தோன்றும், மரல் வாடு மருங்கின் மலைஇறந்தோர் - மரல்கள் வாடிய இடங்களையுடையமலையைக் கடந்து சென்றார்;

5-6. நோய் நாம்உழக்குவம் ஆயினும் - அவரது பிரிவால் நாம்நோயுழப்போம் ஆயினும், தாம் தம் செய்வினைமுடிக்க - அவர் தமது பொருள்ஈட்டு வினையினை முடித்துவருவாராக.

(முடிபு) தோழி, வாழ்க்கையும் செல்வமும் இரண்டும்பொருளினாகும் என்று கூறி நம் ஐம்பால் நீவியோர், மரல் வாடு மருங்கின்மலை யிறந்தோர்; நாம்நோயுழக்குவம் ஆயினும், தாம் தம் செய்வினைமுடிக்க.

(வி - ரை.) அறன்கடை - பாவம்; அறத்தின் நீக்கப்பட்டமையின்அறன்கடையாயிற்று என்பது 1பரிமேழகர்உரை. பாவமாவது இரந்தோர்க்கு இல்லை என்றல்.அறன்கடைப் படா வாழ்க்கை, இரந்தார்க்கு ஈதலும்,பிறன்கடைப் படாஅச் செல்வம் - பிறர்பாற் சென்றுஇரவாமையும் ஆம் என்க. என்றும் என்பதனைஇரண்டிடத்தும் கூட்டுக. செல்வம் - வீறு, மேம்பாடு,இருள் ஏர் - இருளையொத்த என்றுமாம். ஐம்பால்நீவியோர் என்றது, பிரிவு கருதித் தலையளிசெய்தோர் என்றவாறு. பாணாடு - பாணன் நாடென்க; 'பாணன்நன்னாட்டும்பர்' (11) , 'வடாஅது, நல்வேற் பாணன்நன்னாட்டுள்ளதை' (325) எனப் பிறாண்டு வருதல்காண்க. பாணன் நாட்டில் ஆனிரைகள் திரண்டிருந்தன-வென்றும், அவற்றிற்கு நீரூட்டற்குக் கோவலர்தாம் தோண்டியகூவலினின்றும் பத்தலால் நீர் இறைத்துப் பல சிறுகுழிகளில் நிரப்புவர் என்றும், வேனில்வெம்மையால் கூவல் நீர் வற்றினமையின் நீர்இறைக்கப்பெறாது அக்குழிகள்காய்ந்திருந்தனவென்றும், அவற்றின்கண் நீருண்ணவந்த களிறுகள் நீரில்லாமையாலாய வருத்தத்தோடுஅவற்றை மிதித்து நடந்து சென்றன என்றும், பின்ஆண்டுச் சென்ற புலிகள் அக் களிறுகளின் அடிச்சுவட்டிலே கால் வைத்து நடந்து சென்றன என்றும்,அக் களிற்றின் அடிச்சுவட்டிற் பதிந்த புலியின்கால் விரற் சுவடு, முழவின் கண்ணிலே விரலூன்றியவடுப்போலத் தோன்றின என்றும் கொள்க. களிறுகுழியில் அடி வைத்து ஏகியதும், புலி, அக்களிற்றடியில் மிதித்துச் சென்றதும் அவ்வுழிச்சிறிது ஈரம் இருந்தமையால் என்க. செதும்பு-சேறு. அல்பகுதிப்பொருள் விகுதி. நாம் நோயுழத்தலால்தலைவர் கருதிய வினை முடியாது ஒழியுங்கொல் என்னும்கருத்தினால், தாம் தம் செய்வினை முடிக்கவெனஓம்படை கூறினாளென்க.


(உ - றை.) யானை யடியகத்தும் புலி யடிவைத்துச் சென்ற சுவடு -முழவின் கண்ணிலே விரலூன்றிய வடுப்போலத்தோன்றும் வழியிற் சென்றார் என்பது, தலைவர் பொருளீட்டுதற்கண் எய்தும் துன்பத்தையேஇன்பமாகக் கருதிச் சென்றார் என்றபடி.
-------------

156. மருதம்

[தலை மகளைஇடத்துய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது]


(சொ - ள்.) 1-7. முரசு உடைச் செல்வர் புரவிச்சூட்டு -முரசங்களையுடைய செல்வரது குதிரையது தலையின்உச்சியிடத்து, மூட்டுறு கவரி தூக்கி அன்ன -இணைத்துத் தைத்த கவரியை நிமிர்த்துவைத்தாலொத்த, செழும் செய் நெல்லின் சேய்அரிபுனிற்றுக் கதிர் - செழுமை வாய்ந்த வயலிலுள்ளநெல்லின் சிவந்த அரிகயைுடைய இளங்கதிரை, முதுஆதின்றல் அஞ்சி - முதிய பசு தின்வதைக் கண்டுஅஞ்சி, காவலர் - வயற்காவலர், கரும்பு அருத்தி -கரும்பினை உண்பித்து, பாகல் ஆய்கொடிபகன்றையொடு பரீஇ - பாகலின் சிறந்த கொடியைப்பகன்றையின் கொடியுடன் அறுத்து (அவற்றால்), காஞ்சியின் அகத்து யாக்கும் -காஞ்சிமரத்திடத்துக் கட்டிவைக்கும், தீம் புனல்ஊர - நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே!

12. பெரும - பெருமானே!

13-7. யாய் - எம்அன்னை, நிலைத்துறைக் கடவுட்கு - துறையினிடத்துநிலைபெற்ற தெய்வத்திற்கு, கையுறையாக - கையுறைப்பொருளாக, கள்ளும் கண்ணியும் - கள்ளினையும்மாலையையும், நிலைக்கோட்டு நால்செவி வெள்ளைக்கிடாஅய் ஒச்சி - நிமிர்ந்த கொம்பினையும்தொங்கும் காதினையுமுடைய வெள்ளாட்டுக் கிடாய்உட்படச் செலுத்தியும், தணிமருங்கு அறியாள் அழ -தன் மகளுக்கு உற்ற நோய் தணியும் உபாயம்அறியாளாய் அழ, மணிமருள் மேனி - இத்தலைவியின்நீலமணி போன்ற மேனி, பொன் நிறம் கொளல் -பசலையால் பொன் நிறத்தினை யடைதல்

7-12. குவளை உண்கண்இவளும் யானும் - நீலப்பூப்போலும் மையுண்ட கண்ணினையுடைய இத்தலைவியும் யானும், திறவிது ஆக -செவ்விதாக, கழுநீர் ஆம்பல் முழுநெறிப் பைந்தழை -கழுநீர் ஆம்பல் இவற்றின் இதழ் ஒடியாத பூக்களுடன்கூடிய பசிய தழையுடை, ஆகத்து அலைப்ப - ஆகத்தின்கண்அலைத்திட, காயா ஞாயிற்று - ஞாயிறு காய்தலில்லாதகாலைப்பொழுதில், பொய்தல் ஆடி - விளையாடி,பொலிக என வந்து - (பின்) நீ வாழ்வாயாக எனக்கூறி வந்து, நின்நாகப் பிழைத்த தவறோ - நின்னுடன்பிழைத்த குற்றத்தாலாய தொன்றோ.

(முடிபு) தீம் புனலூர! பெரும! யாய், நிலைத்துறைக்கடவுட்குக்கள்ளும் கண்ணியும் கிடாயும் உட்படஓச்சித் தணிமருங்கு அறியாள் அழ, இவள் மேனிபொன்னிறங் கொளல், இவளும் யானும் பொய்தல்ஆடிநீ பொலிகென வந்து நின் நகாப் பிழைத்ததவறோ!

(வி - ரை.) மூதா - முதிய எருமையுமாம். முழுநெறி - இதழ்ஒடிக்கப்படாத முழுப் பூ.

புனிற்றாக்கதிர்முதல் தின்றல் அஞ்சி என்னும் பாடத்திற்கு,ஈன்றணிமையுடைய பசு நெல்லின் கதிரையுடையமுதலினைத் தின்றலை அஞ்சி என்க. பொய்தல் ஆடிப் பொலிகென வந்து - நீவிர் பொய்தல் ஆடிப் பொலிகஎனத் தாய் விடுக்க வந்து என்றுரைத்தலுமாம்.நிலைக்கோடு - அறாது நிற்கும் கொம்பு என்றலுமாம்.

(உ - றை) விளைந்த பின் பெரிது பயன்படும் இளங்கதிரை ஆதின்றலை அஞ்சிக் கரும்பருத்திக் கட்டிப் பயன்கொள்வார்போல, பின்னே பெரும்பயன் தரும்களவினை அழித்துப் பயன்தராது செய்யும் அலர்கூறுவார் வாயடங்கி யொழிய வரைந்து கொள்வாயாகஎன்றவாறு.
----------

157. பாலை

[பிரிவுணர்த்தியதோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


(சொ - ள்.) 10-14. தோழி-, முனைபுலம் பெயர்த்த புல் என் மன்றத்து -போர் நிகழ்ச்சி குடிகளை இடத்தினின்றும் பெயரச்செய்தமையின் பொலிவற்றிருக்கும் மன்றிடத்தே, பெயல்உற நெகிழ்ந்து வெயில் உறச் சாஅய் -மழைபெய்தலால் இளகியும் வெயில் உறுதலால்காய்ந்து நுணுகியும், வினை அழி பாவையின் – வண்ணம் முதலியவேலைப் பாடுகள் அழிந்த பாவையைப்போல,உலறி - மேனி வாடி, மனை ஒழிந்திருந்தல்வல்லுவோர்க்கு - மனையின் கண் தலைவரைப் பிரிந்துதனித்திருத்தலை வல்லார்க்கு;

1-9. அரியல்பெண்டிர் அல்குல் கொண்ட - கள் விற்கும் மகளிர்இடையிற் சுமந்துவந்த, பகுவாய்ப் பானை குவிமுனைசுரந்த - விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனை சொரிந்த, அரிநிறக் கலுழி ஆரமாந்தி -அரிக்கப்பெற்ற நிறமுடைய கள்ளின் வண்டலை -நிறையக் குடித்து, செருவேட்டுச் சிலைக்கும் செம்கண் ஆடவர் - போரினை விரும்பி ஆரவாரிக்கும்சிவந்த கண்ணையுடைய வீரர், வில் இட வீழ்ந்தோர்பதுக்கைக் கோங்கின் - வில்லால் எய்யவீழந்தோரது கற்குவியலின் அயலதாய கோங்கின்மீது படர்ந்து, எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் -இரவில் மலர்ந்த பசிய அதிரற் கொடியை, கான யானை- காட்டு யானைகள், பெரும்புலர் வைகறை - பெரிய இருள்புலர்கின்ற விடியலில், அரும்பொடு வாங்கி -அரும்புடன் இழுத்து, கவளம் கொள்ளும் அஞ்சுவருநெறிஇடை - கவளமாக உண்ணும் அச்சம் வருகின்றசுரநெறியில்;

9-10. தமியர்சென்மார் நெஞ்சு உண மொழிப - தனியராகச்செல்லும் தலைவர் அதனை அவர் தம் மனம் விரும்பிஏற்றுக்கொள்ளும்படி சொல்லுவர்; மன்-யான்அவ்வாறு தனித்திருத்தலை மாட்டுகிலேன்.

(முடிபு) தோழி! அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார்வினையழி பாவையின் உலறி மனை ஒழிந்திருத்தல்வல்லுவோர்க்கு அவர் நெஞ்சுண மொழிப; மன்.

(வி - ரை) அல்குல் - மருங்குல். அல்கில் என்பது பாடமாயின்,தங்கிய இல்லில் என்க. குவிமுனை - கள்ளினைச்சொரிவதற்கு மூக்குப் போல் குவிந்திருக்கும்வாய். அரி - பன்னாடையால் அரிக்கப்பட்ட என்க,செங்கண் - கள்ளுண்டலாலும் சினத்தாலும் சிவந்தகண், மன்-ஒழியிசை.
------------

158. குறிஞ்சி

[தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி செவிலித்தாய்க்குச்சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.]


(சொ - ள்.) 7. அன்னை-, வாழி-,

1-7. உரும் உரறு கருவியபெருமழை தலைஇ - இடி முழங்கும் தொகுதியவாய மிக்கமழை பெய்துவிட்டு, பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள்நடு நாள் - இப் பெயல் நீங்கி ஒலியடங்கியசெறிந்த இருளையுடைய நள்ளிரவில், இவள் - இவள்,மின்னு நிமிர்ந்தன்ன கனம் குழை இமைப்ப -மின்னல் நிமிர்ந்தாலொத்தவாய்க் கனத்தகுழைகள் ஒளிவிட, பின்னு விடுநெறியில் கிளைஇயகூந்தலள் - பின்னல் நெகிழ்ந்தமையின் நெறிப்புடன் அகன்ற கூந்தலையுடையளாய், வரை இழிமயிலின் ஒல்குவனள் ஒதுங்கி - மயிலைனின்றுஇறங்கும் மயிலைப் போலத் தளர்ந்து நடந்து, மிடைஊர்பு இழியக் கண்டனென் என அலையல் - பரணில் ஏறிஇறங்கி வரக்கண்டேன் என்று கூறி இவளை வருத்தாதே,வேண்டு - நான் கூறுவதனை விரும்பிக் கேட்பாயாக;

7-11. சூர் உடைச்சிலம்பில் - தெய்வங்களையுடைய மலையை யடுத்த, நம்படப்பை நம்- தோட்டத்தின் கண், அணங்கு - ஒருதெய்வம், சுடர்ப்பூ வேய்ந்து - ஒளி தங்கிய பூவைச்சூடி, தாம் வேண்டு உருவின் வரும் - தாம் அவ்வப்போதுவிரும்பிய உருவங்கொண்டு வரும், (அன்றியும்,) நனவின்வாயே போல - நனவினது உண்மைத் தோற்றம்போலவே, துஞ்சுநர் ஆண்டு கனவு மருட்டலும் உண்டு -துயில்வோரைக் கனவு அவ்விடத்து மயக்கலும் உண்டு;

11-4. இவள்தான் -இவளோ, சுடர் இன்று தமியளும் பனிக்கும் - விளக்குஇல்லாமல் தனியளாக இருத்தற்கும் நடுங்குவள்,வெருவர - அச்சம் தோன்ற, மன்ற மராஅத்த கூகைகுழறினும் - மன்றத் தின்கண்ணுள்ள மராமரத்திலுள்ள கூகை குழறினாலும், நெஞ்சு அழிந்து அரணம் சேரும் - மனம் நடுங்கிப்பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிடுவள்;

14-8. அதன் தலை -அதன்மேலும் , புலிக்கணத்து அன்ன நாய்தொடர்விட்டும் - புலிக்கூட்டத்தை ஒத்த நாய்கள்தொடர்தல் நீங்கினவாயினும், முருகன் அன்னசீற்றத்துக் கடும்திறல் - முருகனை யொத்தசினத்தினையும் கடிய வலியினையும் உடைய, எந்தையும்இல்லன் ஆக - எம் தந்தை இல்லிடத்தானாகவும், இவள்- இத்தலைவி, இது செயல் - இங்ஙனம் படப்பை சென்றுவரல், அஞ்சுவள் அல்லளோ - அஞ்சுவாள் ஆகாளோ.

(முடிபு) அன்னை! வாழி! இவள் தூங்கிருள் நடுநாள், கனங்குழைஇமைப்ப, கூந்தலள், மயிலின் ஒதுங்கி மிடையூர்புஇழியக் கண்டனென் என அலையல்; வேண்டு; நம்படப்பை, தாம் வேண்டுருவின் அணங்கும் வரும்; கனவுமருட்டலும் உண்டு; இவள் தான் சுடரின்று தமியளும்பனிக்கும்; கூகை குழறினும் அரணம் சேரும்; அதன்றலை,நாய் தொடர்விட்டும் எந்தையும் இல்லன் ஆக இவள்இது செயல் அஞ்சுவள் அல்லளோ?

(வி - ரை) மிடை - பரண். அணங்குமார்: மார் அசை; அவ்வணங்குதுஞ்சுநரைக் கனவின் மருட்டலும் உண்டு எனலுமாம்.இன்று - இன்றி; இல்லையாக. தமியளும் - தனியேயிருத்தற்கும் என்க. குழறினும் உம்மை இழிவுசிறப்பு. நாய் தொடர்தலாலும் இவள் அஞ்சுவள்; அவைஅங்ஙனம் தொடராதுவிடினும் என விரித்துரைக்க.இதற்கு நாய் தொடர்தல்விட, வேட்டம் ஒழிந்துஎந்தையும் இல்லனாக என்றுரைத்தலுமாம். எந்தைஇல்லன் ஆகவும் என உம்மையை மாறுதலுமாம்.

(மே - ள்.) 1"நாற்றமும்தோற்றமும்" என்னுஞ் சூத்திர உரையில்இச்செய்யுளைக் காட்டி, இது மிடையை ஏறி இழிந்தாள்என்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும்உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது, இது சிறைப்புறமாகக் கூறிவரைவு கடாயது என்றும், 2'களவலராயினும்'என்னுஞ் சூத்திரத்து உரையில், இப் பாட்டினுள் 'மிடையூர்புஇழியக் கண்டனென் இவளென, அலையல் வாழிவேண்டன்னை' என்றது தலைவி புறத்துப்போகக் கண்டுசெவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினாள்என்றும் கூறினர், நச்சினார்கினியர்.

159. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


(சொ - ள்.) 12. காதல் அம் தோழி - காதலையுடைய தோழியே!

1-4. தெண்கழிவிளைந்த வெண்கல் உப்பின் - தெளிந்தகழியின்கண் விளைந்த வெள்ளிய கல் உப்பினது,கொள்ளை சாற்றிய - விலையைக் கூறி விற்ற,உமண்-உப்பு வாணிகர், கொடுஙக ஒழுகை - வளைந்தநுகத்தையுடைய வண்டிகளிற் பூட்டிய, உரன் உடைச் சுவலபகடு பல பரப்பி - வலிபொருந்திய பிடரியினையுடையஎருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு,உயிர்த்து இறந்த - (உண்டு) இளைப்பாறி விடுத்துச்சென்ற, ஒழிகல் அடுப்பின் - ஒழிந்துகிடந்தகல்லாகிய அடுப்பிலே

5-12. வடிஉறு பகழிக்கொடுவில் ஆடவர் - வடித்தல் உற்ற அம்பினையும்வளைந்த வில்லினையும் உடைய கரந்தை வீரர், அணங்குஉடை நோன்சிலை வணங்க வாங்கி - மாற்றார்க்குவருத்தத்தை விளைக்கும் வலிய வில்லினை மிகவளைத்து, பல் ஆன் நெடு நிரை தழீஇ - பலபசுக்களையுடைய நீண்ட நிரையினைக் கவர்ந்துகொண்டு, கல் என - கல்லெனும் ஒலியுடன், வரும் முனைஅலைத்த பெரும்புகல் வலத்தர் - வரும் வெட்சிமறவர் போரினை அலைத்து ஓட்டியபெரியசெருக்கினையும் வெற்றியையும் உடையராய், கனைகுரல்கடும் துடிப் பாணி தூங்கி. - மிக்க குரலையுடைய கடியதுடியின் ஒலிக்கொத்த தாளத்தொடு ஆடி, உவலைக்கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - தழையுடன் கட்டியகண்ணியைச் சூடினராய் ஊனைப்புழுக்கி உண்ணும், கவலை- கவர்த்த நெறிகளிலே, காதலர் இறந்தனர் என - நம்காதலர் சென்றனரென்று, நனி அவலம் கொள்ளல் -மிகவும் துன்புறாதே;

13-21. விசும்பின்நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை - வானிடத்தேசிறந்த இடி ஒலிக்கும் நெடிய உச்சியை யுடையதும்,நறும் பூ சாரல் - நறிய பூக்களையுடைய சாரல்களையுடையதுமான, குறும்பொறைக் குணாஅது -குறும்பொறை என்னும் மலைக்குக் கிழக்கின்கண்உள்ளதும், வில்கெழு தடக்கை வெல்போர் வானவன்-விற்பொருந்திய பெரிய கையினையுடைய போர்வெல்லும் சேரனது, மிஞிறு மூசுகவுள சிறு கண் யானை -வண்டுகள் மொய்க்கும் (மதம் வழியும்) கன்னத்தினையுடைய சிறிய கண்ணினையுடைய யானையின்,தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி - பூண் பூண்ட பெரியகோட்டினை ஒடியும்படி அழித்து, கொடுமுடி காக்கும் -கொடுமுடி என்பான் காத்து வருகின்ற, குரூஉக்கண்நெடுமதில் - விளங்கிய இடத்தையுடைய நெடிய மதில்சூழ்ந்த, சேண் விளங்கு சிறப்பின் - நெடுந்தூரம்சென்று விளங்கும் சிறப்பினையுடைய, ஆமூர்எய்தினும்-ஆமுரையே அடைவதாயினும், நின் பூண் தாங்குஆகம் பொருந்துதல் மறந்து - நினது பூண் சுமந்தமார்பினைப் பொருந்துதலை மறந்து, ஆண்டு அமைந்துஉறையுநர் அல்லர் - அங்கே மனம் பொருந்தித்தங்கிவிடுவா ரல்லர்.

(முடிபு) காதலம் தோழி! உமண் உயிர்த்திறந்த ஒழிகல்அடுப்பின் கொடுவில் லாடவர் ஊன்புழுக்கயரும்கவலையைக் காதலர் இறந்தனரென அவலங்கொள்ளல்;(அவர்) ஆமூர் எய்தினும் நின் ஆகம் பொருந்துதல்மறந்து, ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர்.

(வி - ரை.) அருமுனை அலைத்த எனப் பிரித்துரைத்தலுமாம்.கொள்ளன்மா: மா, அசை. குறும்பொறை - ஒரு மலையின்பெயர். கொடுமுடி -ஆமூர்க்கண்ணிருந்த ஒரு தலைவன்.
---------

160. நெய்தல்

[தோழி வரைவு மலிந்துசொல்லியது.]


(சொ - ள்.) 3-8. நிறைச் சூல் யாமை - நிறைவாய சூலுற்றயாமை,அடும்பு கொடி சிதைய வாங்கி - அடும்பினைக் கொடிசிதைய இழுத்து, கொடும் கழி குப்பை வெண்மணல்பக்கம் சேர்த்தி - வளைந்த கழியிடத்து வெள்ளியமணல் மேட்டின் பக்கத்தே சேர்த்து (அதன் கண) ,மறைத்து ஈன்று புதைத்த - மறைய ஈன்று புதைத்த,கோட்டு வட்டு உருவன் புலவு நாறு முட்டை - யானைக்கொம்பினாற்
செய்த வட்டின் வடிவமுடைய புலால்நாறும் முட்டையை, பகுவாய்க் கணவன் - பிளந்தவாயினையுடைய -ண் யாமை, பார்ப்பு இடன் -கும் அளவை -அதனிடத்தினின்று குஞ்சு வெளிப்படும் அளவு, ஒம்பும்- பாதுகாத்திருக்கும், கானல் அம் சேர்ப்பன் -சோலையையுடைய கடற்கரைத் தலைவனது;

9-15. திண்தேர் -வலிய தேரானது, ஏ தொழில் நவின்ற எழில்நடைபுரவி -அம்பின் வேகம்போலச் செல்லுதலைப் பழகிய அழகியநடையினையுடைய குதிரைகள், முள்உறில் சிறத்தல்அஞ்சி - தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவுகடத்தலை அஞ்சி, வள்பிற்காட்டி - கடிவாளத்தினால்குறிப்பிக்க, மெல்ல வரவு உடைமையின் - மெல்லத்தாவிச் செல்லுதல் கொண்டமையின், செழுநீர் தண்கழி நீந்தலின் - செழுமை வாய்ந்த நீரினையுடையகுளிர்ந்த கழியினைக் கடக்குங்கால், ஆழிநுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் -அத்தேர் உருளையின் கூரிய முனையால் அறுக்கப்பெற்றபொதிந்த அரும்புகளையுடைய நெய்தல், பாம்பு உயர்தலையில் சாம்புவன நிவப்ப - பாம்பின் மேலேதூக்கிய தலையைப்போல வாடி மேலெழ, இரவந்தன்று -இதுகாறும் இராக்காலங்களில் வந்து கொண்டிருந்தது;

16-9. பாய்பரிசிறந்து - (இன்று அத்தேர்) பாயும் குதிரைவேகத்தாற் சிறப்புற்று, கரவாது - மறையாமல், ஒல்என ஒலிக்கும் இளையரொடு - ஒல்லென ஆரவாரம்செய்யும் ஏவல் இளையரொடு, வல்வாய் அரவச் சிறுஊர் காண - வலிய வாயினாலே அலராகிய ஒலியைச்செய்யும் சிறிய ஊர்ப் பெண்டிர் காண, பகல்வந்தன்று - பகலிலே வந்தது; (அதனால்) ;

1-2. என் நிறை இல்நெஞ்சம் நடுங்கின்று - எனது நிறையில்லாத நெஞ்சம்நடுங்கியது, அளித்து - அது இரங்கத்தக்கது, ஒடுங்குஈர் ஓதி - ஒடுங்கிய கரியகூந்தலையுடைய தோழியே!நினக்கும் அற்றோ - நினக்கும் அவ்வாறு நெஞ்சம்நடுங்கியதோ?

(முடிபு) கானலஞ் சேர்ப்பன் தேர் இதுகாறும் இரவின்கண்வந்தன்று; இப்பொழுது பகல் வந்தன்று, என் நெஞ்சம்நடுங்கின்று; அளித்து ! ஒடுங்கு ஈர் ஓதி! நினக்கும்அற்றோ?

(வி - ரை.) யாமையானது முட்டையை மறைவிடத்தில் ஈன்றுபுதைத்துப் போகுமெனவும், ஆண் யாமையானது அம்முட்டையைக் குஞ்சு வெளிப்படும் அளவு பாதுகாக்கும்எனவும் கொள்க. இவ்வுண்மை, 1'தாயின்முட்டை போல உட்கிடந்து, சாயி னல்லது பிறிதெவனுடைத்தோ, யாமைப்பார்ப்பின் அன்ன, காமம்காதலர் கையறவிடினே.' 2'தீம்பெரும்பொய்கை யாமையிளம் பார்ப்பு, தாய்முக நோக்கிவளர்ந்திசி னாங்கு' என்னுஞ் செய்யுட்களானும் உணர்க.

முள்தாறு. காட்டி - காட்ட எனத்திரிக்க. முன்பெல்லாம் இரவந்தன்று எனவும் இப்பொழுது பகல் வந்தன்று எனவும் விரித்துரைக்க.இப்பொழுது கரவாது இளையரொடு சீறூர் காணப்பரிசிறந்து பகல் வந்தன்று என்றமையால்,முன்பெல்லாம் கரவிலே இளையரின்றிச் சீறூர்காணாமலும், பரிசிறவாமலும் இரவில் வந்ததென்க.இப்பொழுது தேர் இங்ஙனம் வந்தது என்றது வரைவுவேண்டி வந்த தென்றபடி. என் நெஞ்சம் நடுங்கின்று;ஒடுங்கீரோதி! நினக்கும் அற்றோ என்றது தலைவியைநோக்கி, வரைவு மலிந்து நகையாடிச் சொல்லியது.

(உ - றை.) 'நிறைச்சூல் யாமையைக் காமம் நிறைந்ததலைவியாகவும், அது அடும்பங் கொடியை யறுத்து அதனைவெண்மணற் பக்கத்தே சேர்த்தது, தலைவி தன் தாயர்தன்னையர்பாலுள்ள அற்புத் தளையையறுத்துஅவ்வன்பைத் தலைவன் பக்கலிலே சேர்த்துதன்மையாகவும், அது தான் ஈன்ற முட்டையை மறைத்துப்புதைத்தது, தலைவி தான் ஒழுகிய களவொழுக்கத்தைப்புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துவைத்ததன்மையாகவும், அம்முட்டை புலவு நாறியது, ஒம்பியது, அக்களவொழுக்கத்தைத் தலைமகன் வரையவந்துமாட்சிமைப் படுத்தும் துணையும் இடையீடின்றிக்குறிவழி யொழுகித் தலைமகளை ஓம்பின தன்மையாகவும் உள்ளுறையுவமம் கொள்க' என்பர், இராசகோபால ஐயங்கார்.
----------

161. பாலை

[பிரிவுணர்த்தியதோழி, தலைமகளதுவேறுபாடு கண்டு முன்னமேஉணர்ந்தாள் நம்பெருமாட்டியென்று தலைமகனைச்செலவு விலக்கியது.]


(சொ - ள்.) 9-14. (தலைவ !) சுரும்பு தோட்டு ஆழ்பு உண - வண்டுகள்மலரிதழுட்புக்குத் தேனையுண்ண, ஒலிவரும் இரும் பல்கூந்தல் - தழைத்த கரிய பலவாய கூந்தலையும், அம் மாமேனி - அழகிய மாமை நிறமுடைய மேனியையும், ஆய் இழை- ஆய்ந்த அணிகளையு முடைய, குறுமகள் - இளையளாயதலைவியின், சுணங்கு சூழ் ஆகத்து - திதலை படர்ந்தமார்பின்கண், அணங்கு என உருத்த - வீற்றுத்தெய்வமென உருக்கொண்ட, நல் வரல் இளமுலை நனைய -நல்ல வளர்ச்சியையுடைய இளைய முலைகள் நனைய, பல்இதழ் உண்கண் - பல இதழையுடைய நீலப் பூப்போன்றமையுண்ட கண்கள், பனி பரந்தன - நீர்பரந்தொழுகின;

1-9. வணர் சுரிவடியாப் பித்தை வன்கண் ஆடவர்-வளைந்துசுருண்டகோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்,அடி அமைபகழி ஆர வாங்கி - குதை யமைந்த அம்பினைமுழுதும் இழுத்துவிடுத்து, வம்பலர்ச் செகுத்த அஞ்சுவருகவலை - வழிச் செல்லும் புதியரைக் கொன்ற அச்சம்தோன்றும் கவர்த்த நெறியில், படுமுடை நசைஇயவாழ்க்கைச் செம் செவி எருவைச் சேவல்,பொருந்தும்முடை நணும்புலாலை விரும்பியுண்ணும்வாழ்க்கையினையுடைய சிவந்த செவியையுடையபருந்தின் சேவல், ஈண்டு கிளை பயிரும் - நெருங்கியதன் சுற்றத்தினை அழைக்கும், வெருவரு கானம் -அச்சம் தோன்றும் கானத்தை, பொருள் புரிந்து -பொருளை விரும்பி, நீந்தி இரப்ப எண்ணினிர்என்பது - கடந்து செல்ல எண்ணினிர் என்பதை தான்சிறப்பக் கேட்டனள் கொல் - அவள் முன்னரேநன்குகேட்டு ளாளோ? (ஆயின) ;

1. வினைவயிற்பிரிதல்யாவது - நீர் எண்ணியாங்கு பொருளீட்டும்வினையின் கண் அவளைப் பிரிந்து செல்லுதல்யாங்ஙனம் இயல்வதாகும்? இயலாதுகாண்.

(முடிபு) குறுமகள் ஆகத்து முலை நனைய கண் பனி பரந்தன, வெருவருகானம் பொருள் புரிந்து இறப்ப எண்ணினிர்என்பது, தான் சிறப்பக் கேட்டனள் கொல்லோ?(ஆயின்) வினைவயிற் பிரிதல்யாவது?

(வி - ரை.) சேவல் முடையை உண்டற்குக் கிளையைப் பயிரும் என்க.அணங்கு - வீற்றுத் தெய்வம். அதுமுலையிடத்திருக்கும் மென்பது.
1'ஆமணங்குகுடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே' என்பதனாற்பெறப்படும். கண் பனி பரந்தன என்பது, இடத்தினிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல்நின்றது.

162. குறிஞ்சி

[இரவுக்குறிக்கண்தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) நெஞ்சே-,

1-6. கொளக் குறைபடா- கொள்ளக் கொள்ளக் குறைபடாததும், கோடு வளர்குட்டத்து - சங்குகள் பெருகும் ஆழத்தினையுடைமையால்,அளப்பு அரிதாகிய - அளத்தற்கு அரியதாகியதும், குவைஇரு தோன்றல் - திரண்ட கரிய தோற்றத்தினையுடையதும் ஆகிய, கடல் கண்டன்ன - கடலைக்கண்டாலொத்த, மாக விசும்பின் - வானில்,அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க - தீயின்கொடியை யொத்த மின்னல் மேகத்தைப் பிளந்துகொண்டு அசைந்து செல்ல, கடிது இடி உருமொடு - கடுமையாகஇடிக்கும் இடியுடன், கதழ் உறை சிதறி - விரைந்தநீரைச் சிதறி, விளிவு இடன் அறியா - முடிவிடம்அறியாவாறு, வான் உமிழ் நடு நாள் - மேகம்பெய்தலைச் செய்யும் நடு இரவில்;

7-9. அருங் கடிக்காவலர் இகழ் பதம் நோக்கி - அரிய காத்தற்றொழிலையுடைய காவலர் நெகிழ்ந்திருந்தசெவ்வியை நோக்கி, பனி மயங்கு அசை வளி அலைப்ப -குளிர் பொருந்திய அசைந்து வரும் வாடைக்காற்றுவருத்த, தந்தை நெடுநகர் ஒரு சிறை நின்றனென் ஆக -தன் தந்தையின் நீண்ட மாளிகையின் ஒரு புறத்தேநின்று கொண்டிருந்தேனாக;

16- 25. வாய்மொழி -வாய்மைச் சொல்லினையும், நல் இசை தரூஉம்இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியா - நல்லகீர்த்தியினை அடைவிக்கும் இரவலர்க்கு அவர்எண்ணிய விருப்பம் பிழைத்தல் அறியப்படாதஈகையினையும் உடைய, கழல் தொடி அதிகன் - கழலும்வீர வளையும் அணிந்த அதிகன் என்பானது, கோளறவுஅறியாப் பயம் கெழு பலவின் - காய்த்தல்இல்லையாதலை அறியாத பயனுடைய பலாமரத்தினோடு,வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய -வேங்கைமரமும் பொருந்தியுள்ள மலையிடம் பொலிவுற,வில் கெழுதானை பசும்பூண் பாண்டியன் - வில்லையுடையசேனையையுடைய பசும் பூண் பாண்டியனது, களிறு அணி வெல்கொடி கடுப்ப - களிற்றின் மீது எடுத்த வெல்லும்கொடியை யொப்ப, காண்வர ஒளிறுவன இழி தரும்உயர்ந்து தோன்று அருவி - அழகுபெற மிளிர்வனவாய்இழியும் உயர்ந்து காணப்பெறும் அருவிகளையுடைய,நேர் கொள் நெடுவரைக் கவான் - நேரான நெடியமலையின் சாரலிலுள்ள, சூர் அரமகளிரில் பெறற்குஅரியோள் - அச்சம் தரும் தெய்வப்பெண்களைப்போலப் பெறுதற்கு அரியளாகிய நம் தலைவி;

10-6. அறல் எனஅவிர்வரும் கூந்தல் - அறல்போல் விளங்கும்கூந்தலினையும், மலர் என வாள் முகத்து அலமரும் ஆய்இதழ் மழைக்கண் - நீலமலரென ஒளிபொருந்தியமுகத்தில் சுழலும் அழகிய இதழினையுடைய குளிர்ந்தகண்ணினையும், மாவீழ் முகை நிரைத்தன்ன வெண் பல் -வண்டுகள் விரும்பும் முல்லை அரும்பினை வரிசையாக நிறுத்தினாலொத்தவெண் பல்லினையும்,நகை மாண்டு இலங்கு நலம் கெழு துவர்வாய் -புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை வாய்ந்தபவளம் போன்ற வாயினையும் உடையளாய், கோல் அமைவிழுத்தொடி விளங்க வீசி - அழகு வாய்ந்த சிறந்தவளையல் விளங்கக் கையை வீசி, கால் உறு தளிரின்நடுங்கி - காற்று வீசப்பெற்ற தளிரென நுடங்கிவந்து, நோய் அசா வீட ஆனாது முயங்கினள் - நமதுநோயாகிய வருத்தம் நீங்க அமையாது முயங்கினள்.

(முடிபு) நெஞ்சே! வான் உமிழ் நடுநாள் தந்தை நெடுநகர் ஒருசிறை நின்றனெனாக; சூரர மகளிரிற் பெறற்கரியோள் வீசி நடுங்கி வந்து நோயசா வீடமுயங்கினள், விசும்பின் மின்னு வசிபு நுடங்க,வானம் உருமொடு உறைசிதறிப் பெயலுமிழ் நடு நாள்எனவும், வெற்பகம் பொலிய வெல்கொடி கடுப்பஉயர்ந்து தோன்று அருவி நெடுவரைக் கவானிலுள்ள சூரரமகளிர் எனவும் கொள்க.

(வி - ரை.) கோடு - கரையுமாம். மாக விசும்பு - இருபெயரொட்டு.கருமையும் பரப்பும் பற்றிக் கடல் கண்டன்னஎன்றார். விளி விடன் தங்கு மிடமுமாம். அருங்கடிஎன்றதனாற் காவலின் அருமை கூறப்பட்டது. வளிஅசைப்ப ஒரு சிறை நின்றதனாற் காவலின் அருமைகூறப்பட்டது. வளி அசைப்ப ஒரு சிறை நின்றனென்என்றதனால், தலைவிபாலுள்ள வேட்கை மிகுதியால்தலைவன் இரவுக்குறிக்கண் நின்ற அருமைகுறிக்கப்பட்டது. கோலம் - கோல் எனக் குறைந்துநின்றது; கோல் - திரட்சியுமாம். நடுங்கிய -அச்சத்தால் நடுங்கி என்றலுமாம். பிழைப்பரியஈகையினையுமுடைய என விரித்துரைக்க. கோளறவு அறியாஎன்றது, எஞ்ஞான்றும் காய்த்தலையுடைய என்றபடி.பசும்பூட் பாண்டியன், பெயர். நெடுவரைக்கவான் -நீண்ட மூங்கிலையுடைய பக்க மலையுமாம்.
------------

163. பாலை

[பிரிவின்கண்வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமைமீதூரச் சொல்லியது.]


(சொ - ள்.) 1-6. விரவு மலர் குழைய - பலவகையாய மலர்களும்குழைந்திட, விண் அதிர்பு தலைஇய - வானின் கண்முழங்கிக் கூடிய, தண்மழை பொழிந்த தாழிபெயல் கடைநாள் - குளிர்ந்த மேகம் சொரிந்துபோனகுறைந்த பெயலைக்கொண்ட கூதிரின் கடை நாளில்,துனி உளம்கூர - மனத்தே வெறுப்பு மிக, எமியமாகச்சென்றோர் உள்ளி - யாம் தமியேமாகப் பிரிந்துசென்ற தலைவரை எண்ணி, சில்வளை நெகிழ – எஞ்சிய சிலவாய வளைகளும் கழன்று போக, பெருநசை உள்ளமொடுவருதிசை நோக்கி - பெரிய ஆர்வம் கொண்டஉள்ளத்தோடு அவர் மீண்டுவரும் திசையை நோக்கி(வருந்தி) , விளியும் எவ்வமொடு அளியள் என்னாது -இறத்தற்கேதுவாய துன்பத்தோடு கூடியிருத்தலின்அளிக்கத்தக்காள் இவள் என்று நினையாது;

7-10. களிறுஉயிர்த்தன்ன கண் அழி துவலை - யானை (நீரைப்பருக) உயிர்ப்பது போலும் இடம் மறைய வீசும்பனித்துளியால், முளரி கரியும் முன்பனிப்பால்நாள் - தாமரைமலர் கரிந்திடும் முன்பனிக்காலத்துப் பாதியிரவில், குன்று நெகிழ்ப்பு அன்னகுளிர்கொள் வாடை - மலையையும் நடுங்கச் செய்வதுபோன்ற குளிரைக்கொண்ட வாடைக்காற்றே, எனக்கேவந்தனை போறி - நீ என்பாலே நலிய வந்தனை போல்கின்றாய்;

10-4. புனல் கால்அயிர்இடு குப்பையின் - நீர் ஓடுகாலிடத்துள்ளநுண்மணலாலாய மேடு கரைந்திடல்போல, நெஞ்சுநெகிழ்ந்து அவிழ - நெஞ்சம் கரைந்து இளக,கொடியோர் சென்ற தேஎத்து - கொடியராய அத்தலைவர் சென்ற திசையில், மடியாது இனையை ஆகிச்சென்மதி - அயராது இன்ன தன்மையினை ஆகிச்செல்வாயாக; (செல்லின்) , வினை விதுப்பு உறுநர்உள்ளலும் உண்டு - பொருளீட்டும் தொழிலிற்பெருவேட்கை யுடையார் என்னை நினைத்து வருதலும்உண்டு.

(முடிபு) தாழ்பெயற் கடைநாள்; சென்றோர் உள்ளிஎவ்வமொடு (இருத்தலின்) அளியள் என்னாது,குளிர்கொள் வாடையே! எனக்கே வந்தனை போறி;கொடியோர் சென்ற தேஎத்துச் சென்மதி; வினைவிதுப்புறுநர் உள்ளலுமுண்டு.

(வி - ரை.) விளியும் எவ்வமொடு என்பதற்குத் துன்பத்தால்இறந்து படுவள் என்றுரைத்தலுமாம். விளியாஎவ்வமொடு என்பது பாடமாயின் கெடாத துன்பத்தினொடு (இருத்தலின்) என்றுரைக்க. என்னாது வந்தனை எனக் கூட்டுக.
-----------

164. முல்லை

[பாசறைக்கண் இருந்ததலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்) நெஞ்சே!

11-4. பகைவர் மதில்முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் – பகைவரது மதிற்கதவினைச் சிதைத்த பூண்சிதைந்தகோட்டினையும், கந்து ஒசிக்கும் கால் யானை -கட்டுத் தறியினை ஒடிக்கும் காலினையுமுடையயானைகளையுடைய, வெம் சின வேந்தன்வினைடிப்பெறின் - கொடிய சினத்தினையுடைய நம்வேந்தன் இப் போரினை முடிக்கப் பெறின்;

1-7. ஞாயிறு கதிர்கையாக வாங்கி - ஞாயிறு தன் கதிரே கையாகஈரத்தினைக் கவர்ந்து, பைது அற தெறுதலின் -பசுமையறக் காய்தலின், பயம் கரந்து மாறி - நீர்இல்லையாகி ஒழிய, விடுவாய்ப் பட்ட - பிளத்தல்பொருந்திய, வியன் கண் மாநிலம் - மிக்க இடம் வாய்ந்த பெரிய புவியிலே, காடுகவின் எதிர - காடு (பண்டை) அழகினை எய்த, கனைபெயல் பொழிதலின் - மிக்க மழைபொழிந்தமையால், பொறி வரி இனவண்டு ஆர்ப்ப -பொறிகளையும் வரிகளையும் உடைய கூட்டமாய வண்டுகள்ஆரவாரம் செய்ய, நறுவீ முல்லையொடு தோன்றி பலஉடன் தோன்ற - நறிய முல்லைப்பூவுடன் செங்காந்தள்பூவும் வேறு பல பூக்களும் ஒருங்கு மலர, கானம் வீ கமழ்வெறி ஏன்றன்று - காடு மலர் நாறும் நாற்றம்பொருந்தியது;

8-11. அவர்நிலைஎவன்கொல் என மயங்கி - நம் தலைவர் நிலைஎன்னாயிற்றோ என மயங்கி, இகு பனி உறைக்கும்கண்ணொடு - தாழும் நீரினைச் சிந்தாநிற்கும் கண்களுடன், ஆங்கு இனைபு இன்னாது உறைவி -மனையின்கண் வருந்தி இன்னாமையுடன் வதிவாளாயதலைவி, தொல் நலம் பெறூஉம் நல்காலம் இதுகாண்டிசின் - (நம்மைக் கண்டு) பழைய நலத்தினைஅடையும் நல்ல காலம் இதுவாகும் காண்பாயாக.

(முடிபு) நெஞ்சே! வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறின்,மாநிலம் காடு கவின் எதிரப் பெயல் பொழிதலின்கானம் வெறி ஏன்றன்று; அவர் நிலை யாதோ எனமயங்கி இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொன்னலம்பெறூஉம் நற்காலம் இதுகாண்.

(வி - ரை.) பயம் - வளமுமாம். விடுவாய் - பிளப்பு. நலம் பெறூஉம்நற்காலம் இது என மாறுக. வெஞ்சின வேந்தன்வினைவிடப் பெறின் என்றமையால், வேந்தன்வெற்றி யெய்தியும் சின மிகுதியாற் சந்திற்குஒருப்படாதுளன் என்பது போதரும்.

(மே - ள்.) 1'ஏனோர்மருங்கினும்' என்னுஞ் சூத்திரத்து, (இச்செய்யுள்) பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்பல் எனினும்நிலம் பற்றி முல்லையாயிற்று என்றுரைத்தனர், இளம்பூரனார்.

165. பாலை

[மகட்போக்கிய தாயதுநிலைமை கண்டார் சொல்லியது.]
கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்

(சொ - ள்.) 1-4. கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டென -மெல்லிய தலையையுடைய இளைய பெண்யானை குழியில்அகப்பட்டதாக, களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ- களிற்றுயானை கூப்பீடு செய்த ஆரவாரத்திற்குஅஞ்சி, ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி -விரைந்தெழுந்த சிவந்த வாயினதாய அதன் கன்று, தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண் - தாதாகிய எருவினையுடையதெருக்களையுடைய பழைய ஊராய அவ்விடத்து, எருமை நல்ஆன் பெறு முலை மாந்தும் - எருமையாய நல்லமாட்டினின்றும் பெறுகின்ற. முலைப்பாலை உண்ணும் இடமாய, நாடு பல இறந்த நன்ன ராட்டிக்கு - பல நாடுகளைக் கடந்து சென்ற நன்மையை யுடையாள் பொருட்டு ;

7. ஆயமும் அணி இழந்து அழுங்கின்று - ஆயமும் பொலிவிழந்து வருந்துகின்றது;

7-13. தாயும் - தாயும், இறீஇயர் என் உயிர் என - என்உயிர் கெடுவதாக என்று நொந்து கூறி, தருமணல் கிடந்த பாவை - கொணர்ந்து பரப்பிய மணலில் கிடந்த மகளது பாவையை எடுத்து, கண்ணும் நுதலும் நீவி - அதன் கண்ணையும் நெற்றியையும் தடவி, தடவு நிலை நொச்சி வரி நிழல் தண் என அசைஇ - வளைந்த நிலையினையுடைய நொச்சியின் வரி வரியாகவுள்ள நிழலில் தட்பமுறக் கிடத்தி, தாழிக் குவளை வாடுமலர் சூட்டி - தாழிக்கண்ணே யுள்ள குவளையின் வாடிய மலரைச் சூட்டி, என் அருமகளே - என் அரிய மகளே, இன் தோள் தாராய் என முயங்கினள் அழும் - நினது இனிய தோளைத் தருவாயாக என்று கூறித் தழுவி அழாநிற்பள்.

(முடிபு) நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அபங்கின்று; தாயும், இறீஇயர் என் உயிர் எனக்கூறி, பாவையைக் கண்ணும் நுதலும் நீவி, நிழல் அசைஇ, மலர் சூட்டி, என் அருமகளே இன்தோள் தாராய் என முயங்கினள் அழும்.

(வி - ரை.) கற்புக்கடன் பூண்டு கணவனுடன் சென்றாளாகலின் - 'நன்னராட்டி' என்றார். ஆயமும் அணியிழந் தழுங்கின்று என்றதனால் தாயது நிலைமையோடு ஆயத்தின் நிலைமையையும் கண்டார் சொல்லினர் என்று கொள்க. ஆயமும் தாயும் என்னும் உம்மைகள் எச்சப்பொருளன. ஈன்றோட்டாராய் என்பது பாடமாயின், தாய் பாவையை நோக்கி, நின்னை ஈன்றவளாகியஎன் மகளைக் காட்டுவாயாக என்று கூறினாளெனக்கொள்ளல் வேண்டும். தண்ணென முயங்கினள் என்றுஇயைத்தலுமாம். தலைவி யிருந்து நீர் வாக்கப்பெறாமையால், தாழிக் குவளையின் மலர்வாடுவதாயிற்று.


(மே - ள்.) 1'தன்னும்அவனும் அவளும் சுட்டி' என்னுஞ் சூத்திரத்து(இச்செய்யுள்) 'தாய் நிலையும் ஆயத்து நிலையும்கண்டோர் கூறியவாறுணர்க' என்றும் 2'பால்கெழுகிளவி நால்வர்க்கு முரித்தே' என்னுஞ்சூத்திரத்து, 'தருமணற் கிடந்த பாவையென், அருமகளேயென முயங்கினள் அழுமே''இது நற்றாய்மணற்பாவையைப் பெண் பாலாகக் கூறித் தழீஇக்கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று'என்றும், கூறினர், நச்சினார்கினியர்.

166. மருதம்

[பரத்தையொடு புனல்ஆடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு யான்-ஆடிற்றிலன் என்று சூளுற்றான் என்பது கேட்ட 3பரத்தைதன் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]


(சொ - ள்.) 11. தோழி-, வாழி-,

1-4. நல்மரம் குழீஇய- நல்ல மரங்கள் சூழ்ந்த (கள் விற்கும் இல்லில்உள்ள) , பல் நாள் அரித்த நனைமுதிர் சாடி - பலநாளும்வடிக்கப்பெற்ற கள் நிறைந்த சாடியை, கோஒய்உடைப்பின் - முகக்கும் கலம் உடைத்திடின், மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் - விரவியமழைத்துளிபோலத் தெருவெலாம் துளிக்கும் (ஊரா) ,பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் - பழைய பல வகைநெற்களையும் உடைய வேளூரின் வாயிலிடத்து ;

5-7. நறுவிரைதெளித்த நாறு இணர் மாலை - நறுமண நீர்தெளிக்கப்பெற்ற நாறும் கொத்துக்களாலாயபூமாலையை, பொறிவரி இனவண்டு ஊதல கழியும் -புள்ளிகளையும் வரிகளையுமுடைய கூட்டமாய வண்டு அஞ்சிஊதாது ஒழிவதற்கு ஏதுவான, உயர் பலி பெறூஉம் -உயர்ந்த பலிகளையே பெறும், உருகெழு தெய்வம் -அச்சம் தரும் தெய்வம் ;8-9. புனை இரும் கதுப்பின் நீகடுத்தோள்வயின் - அணிந்த கரிய கூந்தலையுடையளாயநின்னால் ஐயுறப் பெற்றாளுடன், அனையேன் ஆயின்அணங்குக என் என - யான் புனலாடி வந்தேனாயின் என்னைவருத்துவதாக என்று ;

10. மனையோள்தேற்றும் மகிழ்நன் ஆயின் - தன் மனைவியை அவள்கணவன் சூளுரைத்துத் தெளியவைப்பானாயின்;

11- 5. நெருநல் -நேற்று, புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர்நிறை - புதிதாக வந்த காவிரியின் கரையுச்சியினைத் தோய்ந்து வரும் மிக்கவெள்ளத்தில், தார்பூண் களிற்றில் தலைப்புணைதழீஇ - தாரணிந்த களிற்றினைப் போன்ற புணையின்தலையிடத்தைத் தழுவி யிருந்து, வதுவை ஈர் அணிப்பொலிந்த - கூட்டத்திற்குரிய பெரிய அணியாற்பொலிவுற்ற, நம்மொடு ஆடியோர் - நம்மொடு கூடிப்புனலாடினோர் ; யார்கொல் - யாரோதான்?

(முடிபு) வேளூர் வாயிலில் உயர்பலி பெறும் உருகெழு தெய்வம்நீகடுத்தோள் வயின் அனையேனாயின், என் அணங்குகஎன மகிழ்நன் மனையோளைத் தேற்றுமாயின், நெருநல்,காவிரி மலிர் நிறை நம்மோடு -ஆடியோர்யார்கொல்?

(வி - ரை.) நன்மரங் குழீஇய என்பதன்பின் கள் விற்கும் இல்என்பது வருவிக்கப்பட்டது. நனை - கள். கோஒய் - கள்விற்கும் கலம். கள்ளும் நெல்லும் மிகுதியாகவுடையவேளூர் என்றபடி. நறுவிரை - பனிநீரும், சந்தனமுதலியவற்றின் கலவையுமாம். பலி பெறூஉம் தெய்வம்உருகெழு தெய்வம் என இயையும். கடுத்தல் - ஐயுறல். என்- என்னை. தேற்றுமாயின் எனக் கூட்டுக. புணை -மிதக்கும் கட்டையாலாகிய தெப்பம்; வேழக்கோலைச் சேர்த்துக் கட்டியதுமாம்.

தலைப்புணை - புணையின் முற்பகுதி ; 'மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ' (266) எனப்பின்னரும் இவ்வாறு வருதல் காண்க. ஈரணி -நீராட்டிற்குரிய அணியுமாம். பொலிந்து என்பதுபாடமாயின் பொலிந்து ஆடியோர் என்க. 1'தோடுதோய்'என்பது பேராசிரியர் கொண்ட பாடம்.

(மே - ள்.) 2'புல்லுதல்மயக்கும்' என்னுஞ் சூத்திரத்து, 'இல்லோர்செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்' என்னும்பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது, 'இளையோர்கூற்று' என்றும், 3'கிழவோன் விளையாட் டாங்கும்அற்றே' என்னுஞ் சூத்திரத்து, 'கோடு தோய்மலிர்நிறை ஆடி யோரே' எனப் பரத்தை பிறர் அலர்கூறிய வழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்கஎன்றும் கூறினர், நச்சினார்கினியர்.
-----------

167. பாலை

[தலைமகன்பொருள்கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச்செலவு அழுங்கியது.]

(சொ - ள்.) 7.நெஞ்சே-,

1-5. வயங்கு மணிபொருத - பளிங்கு மணியினை யொத்த, வகைஅமைவனப்பின் - கூறுபாடமைந்த அழகினையுடைய, பசுகாழ் அல்குல் மாஅயோளொடு - பசிய சரத்தாலாயமேகலையை அணிந்த அல்குலையுடைய மாமை நிறத்தினளாயநம் தலைவியுடன், விண் பொரு நெடுநகர் - வானைஅளாவும் நீண்ட மாளிகையில், வினை வனப்பு எய்தியபுனை பூ சேக்கை தங்கி-அழகிய வேலைப்பாடு அமைந்தபுனையப்பெற்ற பூக்களையுடைய பள்ளியின்கண்தங்குதலானே, இன்று - இன்றையப் போழ்து, இனிது உடன்கழிந்தன்று - முழுதும் இனிதாகக் கழிந்தது;

7-20. சாத்து எறிந்துஅதர் கூட்டுண்ணும் - வழிச் செல்லும் வாணிகச்சாத்தினைக் கொன்று அவர் பொருளைக் கொள்ளைகொண்டு உண்ணும், அணங்கு உடை பகழி - வருத்தத்தைச்செய்யும் அம்பினையும், கொடுவில் - வளைந்தவில்லையும் உடைய, ஆடவர் படு பகை வெரீஇ - மறவரதுமிக்க பகையை அஞ்சி, ஊர் எழுந்து உலறிய - குடிபோகப் பெற்றமையின் வளன் அற்ற, பீர் எழுமுதுபாழ் - பீர்க்குப் படர்ந்த பெரிய பாழ்இடத்தில், முருங்கை மேய்ந்த பெருங்கை யானை -முருங்கையினைத் தின்ற பெரிய கையினையுடையயானையின், வெரிந் ஓங்கு சிறுபுறம்உரிஞ -முதுகினின் றுயர்ந்து பிடரி உராய்தலின், ஒல்கிஇட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென -தளர்ந்து செங்கல்லாலாய நீண்ட சுவரிலுள்ள விட்டமரம் வீழந்ததாக, மணிப்புறாத் துறந்த மரம்சோர்மாடத்து - மணிப்புறா விட்டொழிந்த மரம்சோர்ந்த மாடத்தினையும், எழுது அணி கடவுள்போகலின் - எழுதப்பெற்ற அழகிய கடவுள் புறத்தேபோய்விட்டமையின், புல் என்று - பொலி வற்று. ஒழுகுபலி மறந்த - இடையறாது நிகழும் பலி மறக்கப்பெற்ற,மெழு காப் புன் திணை - மெழுகப்படாத புல்லியதிண்ணையில், பால் நாய் துன்னிய பறைக்கண் சிறுஇல் - ஈன்றணிமையுடைய நாய் தங்கிய பறிந்தஇடத்தையுடைய சிற்றிலையும், அவ்விடத்தே குயில்காழ் சிதைய மண்டி - இயற்றப்பட்ட கைம் மரங்கள்சிதையுமாறு பரவி, அயில்வாய் கூர்முக சிதலைவேய்ந்த - வேலின் முனைபோன்ற கூரியமுகத்தினையுடைய கறையான் மூடிக் கொள்ளுதலின்,போர் மடி நல் இறை பொதியில் ஆன் - கூரைமடிந்தநல்ல இறப்பினையுமுடைய அம்பலத்தின் கண் ;

5-7. புலம்பு வந்துஉறுதரப் பொருந்தாக் கண்ணேம் - தனிமை வந்தடையத்துயிலாத கண்களை யுடையேமாய், நாளை - நாளைப் போழ்தில்,சேக்குவம் கொல் - தங்கி இருப்பேமோ (அஃதுஇயலாதன்றே.)

(முடிபு) நெஞ்சே! இன்று, நெடுநகர் சேக்கைக்கண் மாயோளொடுஇனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளை,பொதியிலின்கண் பொருந்தாக் கண்ணேம் புலம்புவந்துறுதரச் சேக்குவங் கொல்லோ?

மாடத்தினையும்சிற்றிலையும் இறப்பினையு முடைய பொதியில் என்க.

(வி - ரை.) வயங்கு மணி - பளிங்கு, கண்ணாடி.1'வயங்கலுள்துப்பெறிந்தவை போல' என்புழி வயங்கல் இப்பொருட்டாதல் உணர்க. மன் - மிகுதிப்பொருட்டு. ஊர்- ஊரினுள்ளார்க்கு ஆகுபெயர். எழுந்து - எழுதலால்.முருகை - முருங்கையை; முருகை - தொடை நோக்கித்திரியாது நின்றது. இட்டிகை - செங்கல். பால்நாய் -பாலினையுடைய நாய்; ஈன்றணிமையுடைய நாய் என்றபடி.குயிலுதல் - இயற்றுதல்.

(மே - ள்.) 2'கரணத்தினமைந்து'என்னுஞ் சூத்திரத்து 'தான் அவட்பிழைத்தநிலையின் கண்ணும்' என்னும் பகுதியில்இச்செய்யுள் நெஞ்சினாற் பிரியக் கருதிவருந்திக் கூறியது என்றார், நச்சினார்கினியர்.

168. குறிஞ்சி

[இரவுக்குறி வந்ததலைமகளை இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.]

(சொ - ள்.) 3. வான் தோய் வெற்ப - வானை அளாவிய மலையையுடையதலைவனே!

1-2. யாமம் நும்மொடுகழிப்பி - இராப்பொழுதை நும் முடன் கூடிக் கழித்து,நோய் மிக - பின்பு இரவுக்குறியின் ஏதம் அஞ்சித்துன்பம் மிகுதலால், பனிவார் கண்ணேம் வைகுதும் -நீர் ஒழுகுங் கண்களையுடையேமாய் வருந்தியிருக்கின்றேம் ஆகலின்;

3-14. பல்லான்குன்றில் படுநிழல் சேர்ந்த - பல்லான் குன்றுஎன்னும் மலையிற் பொருந்தும் நிழலின்கட்செர்ந்த, நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் -நல்ல ஆனிரையின் பரப்பினைக் கொண்டகுழுமூரிடத்தே, கொடைக் கடன் ஏன்ற கோடாநெஞ்சின் - ஈகையாய கடனை ஏற்றுக்கொண்டகோட்டமில்லாத நெஞ்சினையுடைய, உதியன்அட்டில்போல - உதியன் என்பானது அடுக்களை போல,ஒலி எழுந்து அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்- ஒலிமிக்கு அருவிகள் ஆரவாரித்து இழியும் பெரியவரையினது பக்க மலையில், களிறு ஈன்றணி இருபிடிதழீஇ - களிறு ஈன்ற அணிமையுடைய பெரிய பிடியினைத்தழுவிக்கொண்டு, தன் தூங்கு நடைக்குழவி துயில் புறம்காப்ப - தனது அசைந்த நடையினையுடைய குழவிஉறங்குகின்ற இடத்தைக் காத்திருக்க, கடுங்கண்வாள் வரி வயப்புலி - தறுகண்மையுடைய வாள் போன்றவரியினையுடைய வலிய புலி, ஒடுங்கு அளை புலம்ப போகி- ஒடுங்கிய முழை தனித்திடப் புறம் போய், கல் முழைஉரற - மலையின் குகையிடத்தில் முழங்க, கானவர்மடிந்த கங்குல் - வேட்டுவரும் துயிலும் நள்ளிரவில்,மான் அதர்ச் சிறு நெறி - விலங்குகள் செல்லும்வழியாகிய சிறுநெறியில், நீ வருதல் - நீ வருதலை,இனி ஆன்றல் வேண்டும் - இனி ஒழிதல் வேண்டும்.

(முடிபு) வெற்ப! யாமம் நும்மொடு கழிப்பி, பனிவார்கண்ணேம் வைகுதும் ஆகலின், சிலம்பில், களிறுகாப்ப, புலி உரற கானவர் மடிந்த கங்குலில் சிறுநெறிக்கண் நீ வருதலை இனி ஆன்றல் வேண்டும்.

(வி - ரை.) இராப் பொழுதை நும்முடன் கழிக்கும் நாளெல்லாம்அப்பொழுது இன்பமாயினும் நீ வரும் வழியின்ஏதத்தை நினைந்து பெரிதும் துன்புறுகின்றோம்.ஆகலின், இனி நீ அவ்வாறு வருதலை ஒழிதல் வேண்டும்என்று கூறி, இரவுக்குறி விலக்கிவரைவுகடாயினாளென்க. ஆன்றல் - அமைதல்: ஒழிதல்.பல்லான் குன்று - ஒரு மலையின் பெயர் போலும்;வல்லான் குன்று என்பது பாடமாயின் வல்லாண்மைக்குஇடமாகிய குன்று என்க. அட்டில்போல - அட்டிலில் ஒலியெழுதல்போல. ஒலி ; உண்ணவருவாராலாவது. ஈன்றணிஈன்ற அணிமை. ஒடுங்கு அளை - புலி துயின்ற இட்டிய முழைஎனவும், கன்முழை - பெரிய மலையின் குகை எனவும்கொள்க. களிறு காக்குமாறு புலி உரற என்க. இக்கருத்து1'இலங்கு மருப்பி யானை, குறும்பொறை மருங்கின் அமர்துணைதழீஇக், கொடுவரி இரும்புலி காக்கும்' என்னும்செய்யுளில் அமைந்திருத்தலுங் காண்க. மானதர்ச்சிறுநெறி என்றமையால் மக்கள் இயங்குதற்காகாதஇடுகிய நெறி என்பது பெற்றாம்.

169. பாலை

[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

(சொ - ள்.) நெஞ்சே!

1-8. மரம் தலைகரிந்து நிலம் பயம் வாட - மரங்கள் உச்சிகரியவும் நிலம் வளம் குன்றவும், அலங்கு கதிர்வேய்ந்த அழல் திகழ் நனந்தலை - அசைகின்றஞாயிற்றின் கதிர் குழப்பெற்ற வெம்மை விளங்கும்அகன்ற பாலை நிலத்தே, புலி தொலைத்து உண்ட பெரும்களிற்று ஒழி ஊன் - புலியாற் கொன்றுதின்னப்பெற்ற பெரிய யானையினது எஞ்சிக்கிடந்தஊனில், கலிகெழு மறவர் காழ்கோத்து ஒழிந்ததை -ஆரவாரம் பொருந்திய ஆறலைப்போர் கோலிற்கோத்துக் (கொண்டேகியது போக) எஞ்சியதை,ஒலிதிரை கடல்விளை அமிழ்தின் கணம் சால் உமணர்- ஒலிக்கும் அலை பொருந்திய கடலில் விளையும்உப்பினைக் கொணரம் கூட்டம் மிக்க உப்புவாணிகர், ஞெலிகோல் சிறு தீ மாட்டி - தீக்கடைகோலாலாக்கிய சிறு தீயில் வதக்கி, சுனை கொள்தீ நீர் சோற்று உலை கூட்டும் -சுனையிற்கொண்ட இனிய நீராலாய சோற்றின்உலையில் கூட்டி ஆக்கும், சுரம்பல கடந்த நம் வயின்- பல சுர நெறிகளையும் கடந்து வந்துள நம்மிடத்து,படர்ந்து - தன் உள்ளம் படர்தலால்;

8-14. திருந்து இழை -திருந்திய அணிகளையுடைய நம் தலைவி, செல்கதிர்மழுகிய புலம்புகொள் மாலை - மறையும் கதிர் மங்கியதனிமை கொண்ட மாலையில், நனி பசலை பாய்ந்தமேனியள் - பசலை மிகவும் பரந்த மேனியளாகி, நெடிதுநினைந்து - நீள நினைந்து, மெல் விரல் சேர்த்தியநுதலள் - மெல்லிய விரல்களைச் சேர்த்தநெற்றியினளாய், கயல் உமிழ் நீரில் கண் பனிமல்கி வார - கயல்மீன் உமிழும் நீர்போலக்கண்களில் நீர் நிறைந்து ஒழுக, பெரும் தோள்நெகிழ்ந்த செல்லலொடு - பெரிய தோள்மெலிந்ததாலாய துன்பத்துடன், வருந்தும் -வருந்துவள், அளியள் - இரங்கத்தக்காள்.

(முடிபு) நெஞ்சே! சுரம்பல கடந்த நம்வயின் தன் உள்ளம்படர் தலின், திருந்திழை, மாலையிலே நெடிதுநினைந்து பசலை பாய்ந்த மேனியளாய், விரல்சேர்த்தி நுதலளாய், கண்பனி வாரச் செல்லலொடுவருந்தும்; அளியள்.

(வி - ரை.) கரிந்து - கரிய எனத் திரிக்க. பயம் - ஏனைவளங்கள். காழ் - இருப்புச் சலாகை. கடல்விளைஅமிழ்து - உப்பு. கணம் சால் உமணர் என்றமையின்உமணர் கூட்டமாகவே வருவர் என்பது பெற்றாம்.சினைகொள் தீ நீர் என்றமையால் சுரத்தில் நீர்இன்மை பெறப்படும். படர்ந்து - படாதலால்.
------------

170. நெய்தல்

[தலைமகள், காமமிக்ககழிபடர்கிளவியாற் சொற்றது.]

(சொ - ள்.) 8. அலவ - நண்டே!

4-7. இரு கழி மலர்ந்த- கரிய நீரோடையில் மலர்ந்த, கண் போல்நெய்தல் கமழ் இதழ் நாற்றம் - கண்ணைப்போலும்நெய்தற் பூவின் கமழும் இதழ் நாற்றத்தினை,அமிழ்து என நசைஇ - அமிழ்தம் போலும் எனவிரும்பிச் சென்று, தண் தாது ஊதிய - குளிர்ந்ததாதினை உண்ட, வண்டு இனம் களி சிறந்து - வண்டின்கூட்டம் களிப்புமிக்கு, பறைஇய தளரும் துறைவனை -பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு ;

1-2. கானலும் கழறாது -கடற்கரைச் சோலையும் சென்று தூது கூறாது, கழியும்கூறாது - உப்பங்கழியும் இயம்பாது, தேன் இமிர்நறுமலர்ப் புன்னையும் மொழியாது - வண்டுகள்ஒலிக்கும் நறிய மலரினையுடைய புன்னையும்மொழியாது;

3. ஒரு நின் அல்லதுபிறிது யாதும்இலன் - நின்னையே யன்றி வேறுஎத்துணையும் இல்லேன்;

9-14. கைதைஅம் படுசினை - தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில், காமர்பெடையொடு எவ்வமொடு அசாஅம் - விருப்பம் மிக்கபெடையுடன் வருத்தமுடன் தளர்ந்திருக்கும், கடல்சிறு காக்கை - சிறிய கடற்காக்கை, கோட்டு மீன்வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - சுறாமீன்இயங்கும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள,வெள் இறா கனவும் - வெள்ளிய இறாமீனைப் பற்றியுண்பதாகக் கனவு காணும், நள் என் யாமத்து - இருள்செறிந்த நடுஇரவில் வந்து, பல்கால் நின் உறுவிழுமம் களைந்தோள் - பல நாளும் நினது மிக்கதுயரினை நீக்கியோள், தன் உறு விழுமம் நீந்துமோஎனவே - நின் பிரிவால் எய்திய தனது மிக்கதுயரினைக் கடக்க வல்லளோ என்று ;

7-8. நீயே சொல்லல்வேண்டும் - அத் தலைவன்பாற் சென்று நீயே கூறுதல்வேண்டும்.

(முடிபு) அலவ! துறைவனுக்குக் கானலுங்கழறாது ; கழியுங் கூறாது ;புன்னையும் மொழியாது ; ஒரு நின்னல்லது பிறிதுயாதும் இலன்; நள்ளென் யாமத்து வந்து பல் நாளும்நின்னுறு விழுமம் களைந்தோள், தன்னுறு விழுமம்நீந்துமோ என நீயே சொல்லல் வேண்டும்.

(வி - ரை.) கானல், கழி, புன்னை என்பன சான்றாகத் தலைவர்என்னைக் கலந்து சென்றாராயினும், அவை யெல்லாம்தலைவனைப் பிரிந்து எய்தும் வருத்தத்தை உணரவல்லனஅன்மையானும், ஒருகால் உணரினும் சென்றுகூறமாட்டாதன ஆகலானும் நீயே துறைவனுக்குச்சொல்லல்வேண்டும் எனத் தலைவி அலவனை நோக்கிக்கூறினாளென்க. கண்போல் நெய்தல் என்றது, 1'பொருளேஉவமம் செய்தனர் மொழியினும்' என்பதனால்அமைந்தது. துறைவனை - துறைவனுக்கு. காக்கை பெடையொடுவெள் இறாக் கனவும் யாமம் என்க. கோட்டு மீன்வழங்கும் பரப்பு எனவும், வேட்டமடி பரப்பு எனவும்இயையும். நின்னுறு விழுமம் களைந்தோள்என்றமையால் நீ அவளது விழுமத்தைக்களையாதிருத்தல் நன்றி கோறலாம் என்பதுபடநின்றது. இனி, பறைஇய தளரும் என்பதனைமுற்றாக்கிக் கானல் முதலியன போலாது வண்டு சென்றுகூறுதற்கு உரியதேனும், அது தேனையுண்ட களிப்பால்சோர்ந்து கிடக்கும் ஆதலின் நீயே சொல்லல்வேண்டும் என்றாள் எனலுமாம். காமம் மிக்ககழிபடர் கிளவியாவது தலைவனைப் பிரிந்து வருந்தும்தலைவி, தனது வேட்கை மிகுதியால், கேளாதன வற்றைக்கேட்பனவாக விளித்து, தலைவனிடத்துச் சென்று என்துன்பத்தை மொழியீரோ என்று கூறுதலாம். நீந்துமோஎன்றதனால் விழுமம் கடல் என்று குறித்தவாறாம்.

(உ - றை.) தாதினை உண்ட வண்டினம் களிசிறந்து பறக்கமாட்டாதுதளரும் துறைவன் என்றது, தான் பெற்ற வேறுஇன்பத்தில் மயங்கித் தலைவியை மறந்திருக்கும்தலைவன் என்றவாறு.

காக்கை பெடையொடுயாமத்து இறாக் கனவும் என்றது, தலைவி தலைவனுடன் கூடியிருந்து முன்பு பெற்ற இன்பத்தை நினைந்து வருந்துகின்றாள் என்றவாறு.

(மே - ள்.) 2'நோயுமின்பமும்' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள், 'சொல்லாமரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது, இவைஉயர் திணையுமாயின' என்றார். நச்சினார்கினியர்.

3'இன்பத்தைவெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து 'நின்னுறு விழுமங்களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே'என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடுஆகுமென்றும், 4'முட்டுவயிற் கழறல்' என்னுஞ் சூத்திரத்து, 'கானலுங்கழறாது....நீயே, சொல்லல் வேண்டுமால் அலவ'என்பது, தூதுமுனி வின்மை என்னும் மெய்ப் பாடுஆகுமென்றும் கூறினர், பேரா.

171. பாலை

[தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.]

(சொ - ள்.) 5. தோழி-, வாழி-,

6. பொருள் புரிந்துபொருள் ஈட்டிவரவிரும்பி, இலங்கு கோல் ஆய்தொடிநெகிழ - விளங்கும் திரட்சி பொருந்திய அழகியநின் தொடி கழன்று விழ ;

7-15. அலந் தலைஞெமையத்து அதர் அடைந்திருந்த - வாடியஉச்சியினையுடைய ஞெமை மரங்களையுடைய வழியைச்சார்ந்திருந்த, மால்வரைச் சீறூர் - பெரியமலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில், மருள் பல்மாக்கள் - மருண்ட மக்களாய பலர், கோள்வல் ஏற்றைஓசை ஓர் மார் - கொல்லுதல் வல்ல கரடிிஏற்றின்ஒலியினை உணர்வாராய், திருத்திக் கொண்டஅம்பினர் - செப்பம் செய்துகொண்ட அம்பினராய்,நோன்சிலை எருத்தத்து இரீஇ - வலிய வில்லைத்தோளிற் கொண்டு, இடம்தோறும் படர்தலின் -இடமெலாம் பரவி ருதலின், கீழப்படு தாரம உண்ணா -தரையிற் கிடக்கும் உணவினை உண்ணாவாய், மேல்சினை பழம்போல் சேற்ற தீம் புழல் உணீஇய -மேலிடத்தே கிளைகளிலுள்ள பழங்களைப் போலஇனிக்கும் சாற்றினையுடைய இனிய துளையையுடையபூக்களை உண்ண, கரும்கோட்டு இருப்பை ஊரும் – கரிய கொம்பினையுடைய இருப்பைமரத்தின் மேல் ஏறும், பெரும் கை எண்கின் சுரம்இறந்தோர் - பெரிய கையினையுடைய கரடிகளையுடைய சுரநெறியைக் கடந்து சென்றார்.

5. புணர்வர் -விரைவில் வருவர் ஆதலால்;

1-5. நுதலும் நுண்பசப்பு இவரும் - நெற்றியும் நுண்ணியபசலைபரக்கப்பெறும், தோளும் அகல் மலை இறும்பின்ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழிய வாடும் -தோளும் அகன்ற மலையிலுள்ள காட்டில்ஆராய்ந்துகொண்டு அறுத்த மூங்கில் துண்டை யொத்தஅழகு ஒழிய வாட்டமுறும், நாளும் நினைவல் அவர் பண்புஎன்று - நாடோறும் அவர் அருட்பண்பினை யான்நினைவேன் என்று கூறி, ஓவாது இனையல் - ஒழியாதுவருந்தாதேகொள்.

(முடிபு) தோழி! வாழி! பொருள் புரிந்து, தொடி நெகிழச்சுரன் இறந்தோர் புணர்வர்; ஆதலின், நுதலும் பசப்புஇவரும், தோளும் வாடும், நாளும் நினைவல் எனஇனையல்.

மாக்கள்ஓசையோர்மார் சிலை இரீ இப் படர்தலின், எண்குகீழ்ப் படுதாரம் உண்ணா, புழல் உணீ இயஇருப்பையூரும் சுரம் என்க.

(வி - ரை.) நினைவல் மாது : மாது, அசை. அலைந்தலை : விகாரம் -ஞெமையத்து : அத்து, சாரியை. மருள் - கரடியின் ஓசையைமுதலில் இன்னதென்றறியாது மருண்ட என்க. தாரம் -பண்டம் (உணவுப் பொருள்.) புழல், ஆகு பெயர். கடியும்மரத்தின் கோட்டில் இயங்க வல்லதாதல்அறியற்பாற்று.
-----------

172. குறிஞ்சி

[தோழி தலைமகளை இடத்துஉய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது.]


(சொ - ள்.) 1-5. வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில் - யானைமுழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில்,பிரசமொடு விரை இய வயங்கு வெள் அருவி - தேனுடன்கலந்து வரும்விளக்கமுற்ற வெள்ளிய அருவி, இன்இசைஇமிழ் இயம் கடுப்ப - இன்னொலியுடன் முழங்கும்மத்தளத்தை யொப்ப, இம் என கல்முகை விடர் அகம்சிலம்ப வீழும் - இம்மெனும் ஒலியுடன் மலையின்குகைகளும் பிளப்பிடங்களும் ஒலிக்க விழும், காம்புதலைமணந்த ஓங்கு மலைச் சாரல் - மூங்கில்நெருங்கிய உயர்ந்த மலைச்சாரலில் உள்ள ;

5-14. இரும்புவடித்தன்ன கருங்கைக் கானவன் - இரும்பினைவார்த்துச் செய்தாற் போன்றவலிய கையினையுடையவேட்டுவன், விரி மலர் மராஅம் பொருந்தி -விரிந்த மலரினையுடைய வெண்கடம்பினைச் சார்ந்துநின்று, கோல் தெரிந்து - அம்பினை ஆய்ந்துகொண்டுவரிநுதல் யானை அரு நிறத்து அழுத்தி - வரிபொருந்திய நெற்றினையுடைய களிற்றின் அரியமார்பிற் செலுத்தி, இகல் அடு முன்பின் வெண்கோடுகொண்டு - பகையினைக் கொல்லும் வலியினையுடையஅதன் வெள்ளிய கொம்பினைக் கொண்டுவந்து, தன்புல்வேய் குரம்பை புலர ஊன்றி - தனது ஊகம் புல்லால்வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றுதல்செய்து, முன்றில் நீடிய முழவு உறழ் பலவின் பிழிமகிழ் உவகையன் - அக் குடிசை முன்றிலில் உயர்ந்தமுழவு போலும் பலாக் கனியினின்று பிழந்தெடுத்தமதுவினை உண்ட களிப்பினனாகி, கிளையொடு கலிசிறந்து - சுற்றத்துடன் ஆரவாரம்மிக்கு, சாந்தஞெகிழியின் உன்புழுக்கு அயரும்- சந்தனவிறகாலாயதீயில் ஊனுடன் கூடிய சோற்றை அட்டுண்ணும் இடமாகிய,குன்றநாட - குன்றம் பொருந்திய நாட்டையுடைய தலைவனே!

14-18. நீ அன்பிலைஆகுதல் அறியேன் யான் - நீ அன்பிலாய் ஆதலை யான்முன்பு அறிந்திலேன், அஃது அறிந்தனென் ஆயின் - அதனை யான் அறிந்துளேனாயின், அணிஇழை ஆய் இதழ் உண்கண் குறுமகள் - அழகியஅணிகலனையும் அழகிய இதழினையுடைய மையுண்டகண்களையும் உடைய இளையளாய என் தலைவியின், மணிஏர் மாண் நலம் சிதைய - நீலமணி போலும் சிறந்தஅழகுகெட, பொன் நேர் பசலை பாஇன்று மன் - பொன்னைஒத்த பசலை பெரிதும் பரத்தல் இல்லையாகும்.

(முடிபு) குன்ற நாட! நீ அன்பிலை யாகுதல் அறியேன் : அஃதுஅறிந்தனென் ஆயின் குறுமகள் மாணலம் சிதைய பசலைமன்பா இன்று. அருவி இம்மென வீழும் சாரலில்கானவன் யானைக்கோடு கொண்டு குரம்பை ஊன்றிச்சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும் குன்றம்என்க.

(வி - ரை.) நீர் - சுனை நீருமாம். முகையாகிய வியர்என்றலுமாம். அருவி வீழும் மலைச்சாரல் எனவும்,காம்பு தலைமணந்த மலைச் சாரல் எனவும் தனித்தனிகூட்டுக. யானையைக் கொன்று அதன் கோடு கொள்ளும்வலிய கை யென்பது தோன்ற இரும்பு வடித்தன்ன கருங்கைஎனப்பட்டது. மராஅம் பொருந்துதல், யானை தன்இருப்பையறிந்து இரியாதவாறு பதுங்கி நிற்றல்.இரவுக்குறியின் ஏதம் அஞ்சித் தலைவிவருந்துதலையும், ஊரில் அலர் எழுதலையும் கருதிவிரைந்து வரைந்து கொள்ளாது களவொழுக்கத்திலேயேதாழ்ந்திருத்தல்பற்றித் தலைவனை 'அன்பிலை'என்றும், நீ இவ்வாறு ஒழுகுதி என்பதனை முன்னர்அறிந்திருப்பேனாயின், யான் கூட்டத்திற்குஉடன்பட்டிரே னாகலின், வரைவு நீட்டித்தல்காரணமாகத் தலைவி நலன்சிதையப் பசலை படர்தல்இல்லையாகும் என்றும் தோழி கூறினாள் என்க.

(உ - றை.) பிரசமொடு விரைஇய அருவி விடரகம் சிலம்ப வீழும்என்றது, தலைவியுடன் கூடிய தலைவனது களவொழுக்கம்ஊரெங்கும் அலருண்டாக நிகழ்கின்றது என்றவாறு.யானை வெண்கோடு கொண்டு கானவன் குரம்பை புலரஊன்றி உவகையன் கலிசிறந்து சாந்த ஞெகிழியின்ஊன்புழுக் கயரும் என்றது, தலைவன் அரியளாய தலைவியைஎளியள் என மதித்துக் களவொழுக்கமாகியஇன்பத்திலே தருக்கியிருத்தல் என்றவாறு.
-----------

173. பாலை

[தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]

(சொ - ள்.) 8, தோழி-, வாழி-,

1-4. அறம்தலைப்பிரியாது ஒழுகலும் - அறநெறியினின்றும்நீங்காது இல்வாழ்க்கை நடத்தலும், சிறந்தகேளிர் கேடு பல ஊன்றலும் - சிறப்புற்றசுற்றத்தாரது பலவகையான துன்பங்களையும் தாங்கலும்,நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என -எஞ்ஞான்றும் (முயற்சியால்) மெய் வருந்தாமைக்குஏதுவாய (ஊக்கமில்லாத) உள்ளமொடுஇருந்தோர்க்கும் இல்லையாகும் என்று, செய்வினைபுரிந்த நெஞ்சினர் - பொருள் ஈட்டும் வினையைவிரும்பிய நெஞ்சினராய நந் தலைவர்;

8-18. பலபுரி வார்கயிற்று ஒழுகை - பல புரிகளாலாய நீண்ட கயிற்றாற்பிணித்த வண்டியினை, பகடு நோன் சுவல் கொளீஇ -பகடுகளின் வலிய பிடரியில் பூட்டி, துறை ஏற்றத்து -ஏற்றமான துறைகளில் ஓட்டுமிடத்து, உமண் விளிவெரீஇ - உப்பு வாணிகர் அவற்றை உரப்பும் ஓசையைக்கேட்டு அஞ்சி, உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஓட- ஆண்மானும் பெண்மானும் ஆகிய இனங்கள் கெட்டுஓடவும், காடு கவின் அழிய - காடுகள் அழகு கெடவும்,கோடை உரைஇ - கோடை பரவி, நின்று தின விளிந்தஅம் பணை நெடுவேய் - நிலைபெற்று நீரினைஉறிஞ்சுதலால் வற்றிய அழகிய பெரிய நெடியமூங்கிலின், கண்விடத் தெறிக்கும் மண்ணாமுத்தம் -கணுக்கள் பிளக்கத்தெறித்து விழும் கழுவப்பெறாதமுத்துக்கள், கழங்கு உறழ் தோன்றல. - கழங்கினை யொத்த தோற்றம்உடையனவாகி, பழங்குழி தாஅம் - (அங்குள்ளார்கழங்காடிய) பழைய குழியிலே விழும் (இடமாகிய), இன்களி நறவின் இயல்தேர் நன்னன் - இனியகளிப்பைத்தரும் கள்ளினையும் இயற்றப்பட்டதேரினையுமுடைய நன்னனது, விண்பொரு நெடுவரைக்கவான் - வானை அளாவிய நீண்ட மூங்கிலையுடைய பக்கமலையினையும், பொன்படு மருங்கின் மலை இறந்தோர்- பொன் பொருந்திய இடங்களையுமுடைய மலையினைக்கடந்து சென்றோராய நம் தலைவர்;

4-8. நறுநுதல் மை ஈர்ஓதி - நறிய நெற்றியையும் கரிய பெரிய கூந்தலையும்உடையாளே, அரும்படர் உழத்தல் - அரிய துன்பத்தால்வருந்துதலை, சில்நாள் தாங்கல் வேண்டும் என்று -சிலகாலம் பொறுத்துக் கோடல் வேண்டும் என்று கூறி,நின் நல் மாண் எல்வளை திருத்தினராயின் - நினதுநல்ல மாண்புற்ற ஒளி பொருந்திய வளையினைத்திருத்தித் தலையளி செய்தனராதலால், வருவர் -விரைவில் வந்துறுவர்.

(முடிபு) தோழி! வாழி! செய்வினை புரிந்த நெஞ்சினராய்,மலையிறந்தோராகிய நம் தலைவர், அரும்படர்உழத்தல் சின்னாள் தாங்கல் வேண்டும் என்று நின்எல்வளை திருத்தினராதலின், (விரைவில்) வருவர்.

(வி - ரை.) நறுநுதல், ஓதி என்பவற்றிற்கு, நுதலை நீவுதலும்ஓதியைக் கோதுதலும் செய்தனர் எனக் குறிப்பிற்பொருள் கொள்ளலுமாம்; 1'வலிமுன்பின்' என்ற பாலைக்கலியில், 'தாழ் கதுப்புஅணிகுவர் காதலர் 'ஒள்ளிழை திருத்துவர் காதலர்,ஒண்ணுதல் நீவுவர் காதலர்' என வருதல் காண்க.திருத்தினராயின் - திருத்தினராதலின் என்க.சின்னாள் தாங்கல் வேண்டுமென்று கூறி இங்ஙனம்தலையளி செய்து அகன்றாராதலின், அவர் நின்னைநினைந்து விரைவில் வாரா திருப்பாரல்லர், நீவருந்தாதேகொள் என்று, தலைவியைத் தோழிவற்புறுத்தினாள் என்க. உமண் - உமணர்; ஆகுபெயர்.கோடைதின என்பது, 2'உண்டற்குரியவல்லாப்பொருளை, யுண்டனபோலக் கூறலு மரயே'என்னுஞ் சூத்திரத்து, உம்மையால் அமைக்கப்பெறும்.முத்தம் தாஅம் கவான் என இயையும். கழங்கு உறழ்தோன்றல என்றது முத்தின் பருமை குறித்தபடி.

174. முல்லை

[பாசறைக்கண் தலைமகன்தன்னெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 1-5. இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன்களத்து -பேரரசர் இருவர் மாறுபாடு கொண்டு பொரும் பெரியபோர்க்களத்தே, ஒரு படை கொண்டு வருபடைபெயர்க்கும் - தமது ஒப்பற்றபடைக்கலத்தைக்கொண்டு எதிர் வரும் படைகளைப்பிறக்கிடச் செய்யும், செல்வம் உடையோர்க்குவிறல் நின்றன்று என - வெற்றியாகிய செல்வம்உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று கூறி,பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கி - தண்ணுமைமுழக்குடன் பொருந்த அரசன் அளிக்கும்பூக்கோளினையும் ஏலாது தவிர்த்து, செல்வேம் ஆதல்அறியாள் - நாம் தன்பால் விரைந்து செல்லுதலைஅறியாளாய்;

10-14. வேங்கை ஊழ் உறுநறுவீ கடுப்பக் கேழ் கொள - வேங்கையின்மலர்தலுற்ற நறிய மலரை ஒப்ப நன்னிறம் கொள்ள,ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் - மேனியிற்றோன்றிய குற்றமற்ற தேமலையுடையளாய், நல் மணல்வியலிடை நடந்த - நல்ல மணலையுடைய அகன்றவிடத்தேநடந்த சில்மெல் ஒதுக்கின் மாஅயோள் - சிலவாயமெல்லிய நடையினையுடைய மாமை நிறத்தினையுடைய நம்தலைவி ;

5-10. நேர் கால்முல்லை முதுகொடி குழைப்ப - நிரம்பிய கால்களிற்படர்ந்த முதிய முல்லைக்கொடி தளிர்க்க, காலைவானத்துக் கடுங்குரல் கொண்மூ - கீழ்த்திசையில்வானத்தெழுந்த கடிய குரலையுடைய மேகம், நீர்சொரிந்து முழங்குதொறும் - நீரைப் பெய்து முழங்குந்தோறும், நப்புலந்து கையற்று ஒடுங்கி - நம்மைவெறுத்துச் செயலற்று ஒடுங்கி, பழங்கண் கொண்ட பசலைமேனியள் - துன்பினை எய்திய பசலை பாய்ந்தமேனியளாய், யாங்கு ஆகுவள் கால் - எந்நிலையினைஅடைவாளோ?

(முடிபு) நெஞ்சே! நாம் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்செல்வேமாதலை அறியாளாய மாயோள், கொண்மூ நீர்சொரிந்து முழங்கு தொறும் கையற்று ஒடுங்கிநம்மைப் புலந்து பசலை மேனியளாகி யாங்காகுவள்கொல்லோ!

(வி - ரை.) வருபடை பெயர்க்கும் செல்வம் என்றமையால்செல்வமென்பது வெற்றியை உணர்த்திற்று. விறல் -மேன்மை. மாற்றாரை வென்ற வெற்றிவீரர்க்குஅரசன் பொற்பூ அளித்துச் சிறப்புச் செய்வன்;அப்பூவினைப் பெறுதல் பூக்கோளாகும். தண்ணுமை ஏயபூக்கோள் என மாறுக. பகையை வென்று அரசன்அளிக்கும் சிறப்பினைப் பெறுதற்கும் தாழ்த்துநில்லாது நாம் செல்வேமாயினும் குறித்த பருவம்வந்தமையின் தலைவி எங்ஙனம் ஆகுவளோ என்றுதலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவுவிதுப்புறுகின்றான் என்க. காலை வானம் - ஞாயிறுதோன்றும் கீழ்த்திசை வானம் என்க. தான் அவளைப்பிரியும் ஞான்று மணற்பரப்பிலே அவள் குறுகஅடியிட்டு நடந்த மென்னடை அவன் நெஞ்சம்விட்டகன்றில தாகலின், 'நன்மணல் வியலிடைநடந்த, சின்மெல் லொதுக்கின் மாஅயோள்'என்றான்.

(மே - ள்.) 1'ஏவன்மரபின்' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள்மீள்வான் தன் நெஞ்சிற்கு உரைத்தது என்றும்,இதனுள் பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வேம்என்றலின், அரசனாற் சிறப்புப் பெற்ற -தலைவனாயிற்று என்றும், 2'ஒன்றாத்தமரினும்' என்னுஞ் சூத்திரத்து, ஆகித் தோன்றும்பாங்கோர் பாங்கினும் என்னுந் துறைக்கு, தமக்குஆக்கம் சிறந்த நட்புடையோராகித் தோன்றும்நட்புடையோர்க்கு உற்றுழி யுதவச் சேறற்கண்ணும்என்று பொருள் கூறி, இச் செய்யுள் அதற்குஉதாரணமாகும் என்றும் கூறினர், நச்சினார்கினியர்.

175. பாலை

[பிரிவின்கண்வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச்சொற்றதூ உமாம்.]


(சொ - ள்.) 9. தோழி-,

1-8. வீங்கு விளிம்புஉரீஇய - தமது தடித்த தோளின் விளிம்பினை உரசிய,விசை அமை நோன் சிலை - வேகம் அமைந்த வலியவில்லில் வைத்து, வாங்கு தொடை பிழையா வன்கண்ஆடவர் - இழுத்து விடும் அம்பு குறி தப்புதல் இல்லாததறுகண்மையையுடைய மறவர், விடுதொறும் விளிக்கும்வெவ்வாய் வாளி - எய்யுந்தோறும் ஒலித்துச்செல்லும் கொடிய வாயினையுடைய அம்பு, ஆறு செல்வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் -வழிச்செல்லும் புதியரது உயிர்கெடப்போக்குதலால், பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் -பருந்து தன் கிளையினை அழைத்து மிக்க புலாலைஉண்ணும், வெம் சுரம் இறந்த காதலர் - கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் காதலர், நெஞ்சு உணர -தமது நெஞ்சு உணர, அரிய வஞ்சினம் சொல்லியும் -கடிய சூள் உரைத்தும், பல்மாண் தெரிவளை முன்கைபற்றியும் - பன்முறை ஆராய்ந்த வளையினையுடைய எனதுமுன் கையினைப் பற்றித் தலையளி செய்தும் ;

10-18. தண் பெயல்எழிலி - தண்ணிய மழையைப் பெய்யும் மேகம், கால்இயல் நெடு தேர் கைவண் செழியன் - காற்றுப்போலஇயலும் நெடிய தேரினையும் கைவண்மையினையுமுடையபாண்டியன் நெடுஞ்செழியன், ஆலங்கானத்து அமர்கடந்து உயர்த்த - தலையாலங்கானத்துப் போரைவென்று உயர்த்த, வேலினும் பல் ஊழ் மின்னி -வேற்படைகளைக் காட்டில் பன்முறை மின்னி, முரசு எனமாஇரு விசும்பில் கடிஇடி பயிற்றி - கரியபெரிய வானின்கண் (அவனது வென்று எறி) முரசம் எனக்கடிய இடியினைப் பலகாலும் தோற்று வித்து, நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - நிரம்பியகதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியையுடையதிருமாலின், போர் அடங்கு அகலம் பொருந்தியதார்போல் - பகைவர் போர் ஒழிதற்குக் காரணமாயமார்பினிடத்தே தங்கிய மாலைபோல, உருகெழுதிருவில் தேஎத்துக் குலைஇ - பன்னிறம் வாய்ந்தஅழகிய வில்லை அவ்விசும்பினிடத்தே வளைத்து, மண்பயம் பூப்பப் பாஅய் - நிலம் பயனைத்தரப் பரவி,தாழ்ந்த போழ்து - இறங்கிப் பெய்யுங் காலத்து;

8-9. வினை முடித்துவருதும் என்றனர் அன்றே - தாம்செல்லும் வினையை முடித்துக்கொண்டு மீண்டும் வருவேம் என்றாரன்றோ?(அங்ஙனம் வந்திலரே ; என் செய்வல்!)

(முடிபு) வெஞ்சுரம்இறந்த காதலர், வஞ்சினம் சொல்லியும், முன்கைபற்றியும் ; தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்துவருதும் என்றனரே? (அங்ஙனம் வந்திலரே; என்செய்வல்!)

(வி - ரை.) விளிம்பு - தோலின் மேற்புறம், பெயர்ப்பின் -பெயர்த்தலால். அவர் கூறிய வஞ்சினத்திற்கு அவர்நெஞ்சே சான்றாக அமையும் என்பாள், 'நெஞ்சுணர'என்றாள்; 1'நெஞ்சத்துக்குறுகியகரியில்லை எனப் பிறசான்றோர் கூறுதலும் காண்க.முன்கை பற்றி யென்பதனை வேறு பிரித்து வஞ்சினம்சொல்லி என்பதனோடு கூட்டி யுரைத்தலுமாம். முன்கைபற்றி வஞ்சினம் கூறும் வழக்குண்மை. 2'நேரிறைமுன்கை பற்றிச், சூரர மகளிரொ டுற்ற சூளே'என்பதனால் அறியப்படும். கரிய வானுக்கு நேமியஞ்செல்வனது அகலமும், அவ்வானிற்றோன்றிய வில்லுக்குஅவ்வகலத்திற் பொருந்திய தாரும் உவமம். தேஎம் -இடம், வானின் இடம் கார்ப்பருவத் தொடக்கத்துவருதும் என்றவர் வாராமையால், யான் என்செய்வேன்எனத் தோழிக்குத் தலைமகள் கூறினாள்.

176. மருதம்

[தோழி, தலைமகனை வாயின்மறுத்தது.]


(சொ - ள்.) 1-12. கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் - கடலைக்கண்டாற்போன்ற இடமகன்ற நீர்ப்பரப்பில்,நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்- நிலம்பிளக்குமாறு இறங்கிய வேரில் முதிர்ந்தகிழங்கினையும், கழை கண்டன்ன தூம்பு உடை திரள்கால் - மூங்கிலைக் கண்டாலொத்த துளையுடைய திரண்டதண்டினையும், களிற்றுச் செவி அன்ன பாசடைமருங்கில் - களிற்றின் செவிபோன்ற பசியஇலையிடத்தே, கழு நிவந்தன்ன கொழுமுகை இடைஇடை - கழுஉயர்ந்து தோன்றலை யொத்த செழித்தமொட்டுக்களின் இடையிடையே, முறுவல் முகத்தில்தயங்கப் பூத்த பன்மலர் - புன்சிரிப்பினையுடையமுகம் போல விளங்கப் பூத்த பல மலர்களையுமுடைய,தாமரை புள் இமிழ் பழனத்து - தாமரையினையுடையபுட்கள் ஒலிக்கும் வயலில் உள்ள, வேப்பு நனை அன்னநெடுகண் நீர் ஞெண்டு - வேம்பின் அரும்பினையொத்த நீண்ட கண்ணினையுடைய நீர் ஞெண்டானது(பரத்தமைக்குப் பிரிந்து போயது.) இரை தேர் வெண்குருகு அஞ்சி - இரையினை ஆய்ந்து பார்த்திருந்தவெள்ளிய நாரையினைக் கண்டு அஞ்சி, அயலது ஒலித்தபகன்றை இரு சேற்று அள்ளல் - அயலிலுள்ள தழைத்தசிவதையினையுடைய கரிய சேற்றுப் பிழம்பில்,திதலையின் வரிப்ப ஓடி - தேமல்போல வரியுண்டாகஓடிச்சென்று, விரைந்து தன் ஈர் மலி மண் அளைச்செறியும் ஊர - விரைந்து தனது ஈரம் மிக்க மண்அளையுட் பதுங்கும் ஊரனே!

13-8. மனைநகு மரன்இவர் வயலை கொழுங்கொடி - மனையின் கண் விளங்கும்மரத்திற் படரும் வயலையாகிய கொழுவிய கொடியினை,அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ - விளங்கும்மலர்களையுடைய ஆம்பலொடு சேர்த்துக் கட்டியதழையுடையை உடுத்து, விழுவு ஆடு மகளிரொடு தழூஉஅணிபொலிந்து - விழாவின் கண் ஆடும் மகளிரொடு தழுவிஆடும் அணியாற் பொலிவுற்று, மலர் ஏர் உண்கண்மாண் இழை குறுந்தொடி முன்கை துடக்கிய - மலரையொத்த மையுண்ட கண்ணினையும் மாண்புற்றஅணியினையும் உடைய நின் பரத்தை தனது குறியவளையணிந்த முன்கையினால் பணித்த, நெடு தொடர்விடுத்தது - நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்றஅளவிற்கே, உடன்றனள் - வெகுண்டனளாய்;

21-6. தன் முகத்து எழுதுஎழில் சிதைய - தன் முகத்தினது எழுதுவதற்கு ஏதுவாகியஅழகு கெட, அழுதனள் ஏங்கி - அழுது ஏக்கமுற்று, வடித்துஎன உருத்த தித்தி - பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும், பல் ஊழ்நொடித்தென சிவந்த மெல்விரல் - பன்முறைமுறித்துக் கொள்ளலின் சிவந்த மெல்லியவிரலினையும், திருகுபு கூர்நுனை மழுகிய எயிற்றள் -திருகிக் கடித்தலான் கூரிய முனை மழுங்கியஎயிற்றையுமுடையளாய், ஊர் முழுதும் நுவலும் நின்காணிய சென்மே - ஊர் எங்கும் அலர் கூறப்படும்நின்னைக் காண்டற்குத் தேடிச் செல்வாள் (ஆகலின்);

18-21. நின் காதலி -நின் காதலியாகிய அவள், எம்போல் புல் உளைக்குடுமிப் புதல்வன் பயந்து - எம்மைப்போலப் புல்லியஉளை போலும் குடுமியையுடைய புதல்வனைப்பெற்று, நெல்உடை நெடுநகர் நின் இன்று உறைய - நெல்லுடைய நீண்டமனையில் நின்னைப் பிரிந்து தங்க என்னகடத்தளோ - என்ன கடப்பாடு உடையவளோ?

(முடிபு) ஊர! மாணிழை தன் முன்கை தொடக்கிய நெடுந்தொடர்விடுத்தது உடன்றனளாய் அழுதனள் ஏங்கி, ஊர் முழுதும்நுவலும் நின்னைக்காணிய சென்மே ஆகலின் நின்காதலியாய அவள் எம்போற் புதல்வற் பயந்துநெடுநகர் நின்இன்று உறைய என்ன கடத்தளோ?

(வி - ரை.) கடல் கண்டன்ன என்பதனாலும், தாமரையின் கிழங்கு,தண்டு, இலை, முகை, மலர் என்ற இவற்றிற்குக் கூறியஉவமைகளாலும் மருதநிலத்தின் கொழுமையும் நீர்மிகுதியும் குறிக்கப்பட்டன. நெடுங்கண் -நெடிதாய் நிவந்து தோன்றும் கண். வயலைக் கொடிமனையின்கண் வைத்து வளர்க்கப்படுதலால், மனைநகுவயலை எனப்பட்டது. உண் கண்ணினையும்மாணிழையினையுமுடைய நின் காதலியெனக்கூட்டியுரைத்தலு மாம். போலும் : ஒப்பில் போலி.மற்று, வினைமாற்று. எழுது எழில் - ஓவியர் பார்த்துஎழுதுதற்கு ஏதுவாகிய அழகு. விரல்களைப் பலமுறைநொடித்தலும், எயிற்றினைத் திருகுதலும்சினத்தினால் நிகழ்ந்தன. அவள்கைப்பிணிப்பினைச் சிறிது விடுத்த அளவிற்கேஉடன்று நின்னைத் தேடித் திரிவாள் என்ற மையின்'அவளது பொறுமையின்மையையும். யாம் மனையின்கண்நின்னை யின்றியே உறைக்கின்றோம் என்றதனால்,தமது பொறுமையையும் தலைவி புலப்படுத்தினாள் என்க.நெல்லுடை நெடுநகர் என விருந்தோம்பற்குஇன்றியமையாத நெலுலுடைமை கூறிய அதனானே, யாம்புதல்வற் பயந்தும் விருந்தோம்பியும்நினக்கும்இருமைக்கும் ஏதுவாகிய மனையறத்தின் வழுவாதொழுகுகின்றேம் என்று தலைவி குறித்தாளாம்,புதல்வற் பயந்து என்றது, முதுமையை உள்ளிப் பரத்தையிற் பிரிந்தான் எனப்புலப்படுத்தபடியுமாம். ஊர் முழுதும் நுவலும் என்றமையால், பிறர் கூறும் பழி கருதி இப்பொழுதுஈண்டு வருகின்றாயன்றி அன்பினால் வருகின்றாயல்லை என்று கூறித் தோழி வாயில் மறுத்தாளாம். சென்மே - செல்லும்; ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது.

தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒருமைப்பாட்டினால் தோழி,எம்போல் எனத் தலைவியைக் கூறினாள். இதனைத்தலைவி கூற்றாகவே கொள்வது நச்சினார்க்கினியர்க்கும் பேராசிரியர்க்கும் கருத்தாதல் தொல்காப்பிய உரையால் அறியப்படும்.

(உ - றை.) புன்இமிழ் பழனத்து ஞெண்டு குருகஞ்சி இருஞ்சேற்றள்ளல் திதலையின் வரிப்ப ஓடி மண்ணளைச்செறியும் என்றது, பரத்தையர் சேரிக்கண் அவர்நலத்தினை நுகர்ந்திருந்த தலைவன் அலர் எழுதலைஅஞ்சி அப்பரத்தையர் செய்த குறி, தன் மார்பிலே கிடப்பத்தன் மனைக்கண் விரைந்து வரலாயினன் என்றபடி.

(மே - ள்.) 1'அவனறிவாற்ற அறியு மாகலின்' என்னும் சூத்திரத்து, 'புகன்ற உள்ளமொடு....ஈரத்து மருங்கினும்' என்னும்துறைக்கண், இச் செய்யுளை உதாரணமாகக் காட்டி,மறுப்பாள்போல நயந்தாளாயிற்று என்று கூறினர், நச்சினார்கினியர்.

2'இளிவேயிழவே...அழுகை நான்கே' என்னுஞ் சூத்திரத்துஎழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி...நிற்காணியசென்மே' என்பது, தன்கட்டோன்றிய இளிவரல்பொருளாக அவலச்சுவை பிறந்தது என்றும், 3'தெய்வம்அஞ்சல்' என்னும் சூத்திரத்து, 'வேம்பு நனையன்ன... செறியும் ஊர' என்பது,தலைமகன் வாயில் வேண்டச் சென்றானைப் பிறர்கூறும் பழிக்கு வந்தாய் என்றமையின், இஃது உள்ளதுவர்த்தல் (எனும் மெய்ப்பாடு) ஆயிற்று என்றும்கூறினர், பேரா.

177. பாலை

[பிரிவிடைவேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


(சொ - ள்.) 6-12. தோழி-, காண்பு இன் கழை அமல்சிலம் பின் வழைதலைவாட - காண்டற்கு இனிய மூங்கில் நிறைந்தபக்கமலையிலுள்ள சுரபுன்னையின் உச்சி வாடும்படி,கதிர் கதம் கற்ற - ஞாயிற்றின் கதிர்சினத்தைப் பயின்ற, ஏ கல் நெறியிடை – பெருகிய கற்கள் பொருந்திய சுரநெறியில்,பைங்கொடிப் பாகல் செங்கனி நசைஇ – பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி,கானமஞ்ஞை கமம் சூல் மா பெடை - காட்டிலுள்ளமயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை,அயிரி யாற்று அடைகரை வயிரின் நரலும்,அயிரியாற்றினது அடைகரையின்கண் ஊதுகொம்பெனஒலிக்கும்-காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்- காட்டினைத் தாண்டிச் சென்ற தலைவர் (குறித்தபருவங் கடந்து) தாழ்த்து வாராதிருப்பினும்;

3-6. சிறுகண் இரு பிடிதடகை மான - சிறிய கண்ணினையுடைய பெரியபெண்யானையின் பெரிய கையினை ஒப்ப, ஒருங்குபிணித்து இயன்ற நெய் அருந்து வெறிகொள் ஐம்பால்- சேரக்கட்டி விட்ட நெய் பூசப்பெறும்நறுநாற்றமுடைய கூந்தற்கண்ணே, தேம் கமழ்வெறிமலர் பெய்ம்மார் - தேன் மணக்கும் நறியமலரைப் பெய்தலையும்;

13-20. வெண்வேல்இலைநிறம் பெயர ஓச்சி - வென்றி வேலை இலைமுனைநிறம் மாறிச் செந்நிறமடையச் செலுத்தி,மாற்றோர் மலை மருள் யானை மண்டு அமர்ஒழித்த -பகைவருடைய மலைபோலும்யானைகளை மிக்கபோரின்கண் அழித்த, கழல்கால் பண்ணன் -வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணனது, காவிரிவடவயின் - காவிரியின் வடபாலுள்ள, நிழல் கயம் தழீஇயநெடுகால் மாவின் - குளிர்ந்த குளத்தினை யடுத்துள்ளநெடிய அடிமரத்தினையுடைய மாமரத்தின், தளிர் ஏர்ஆகம் தகைபெற முகைந்த- தளிரை யொத்த ஆகத்தில்அழகுபெற அரும்பிய, அணங்கு உடை நின் வனமுலை தாய -வருத்தும் இயல்புடைய நின் அழகிய முலையிற் பரந்த,சுணங்கிடை தொய்யிலை வரித்தல் நினைந்தே -சுணங்கினிடையே தொய்யில் எழுதுதலையும் நினைந்து;

வல்லே வருவர் -விரைந்து வந்தருள்வர் ஆதலின்;

1-3. தொல்நலம்சிதையச் சாஅய் - பழைய அழகு சிதைந்திட வருந்தி,அல்கலும் - நாடோறும், இன்னும் வாரார் - இன்னும்வந்திலர், இனி எவன் செய்கு என - இனி என்னசெய்வேன் என்று, பெரும் புலம்பு உறுதல் ஓம்புமதி -மிக்க வருத்தம் அடைதலைப் பரிகரிப்பாயாக:

(முடிபு) தோழி! காடிறந்தகன்றோர் நீடினர் ஆயினும்,நினது ஐம்பால் வெறிமலர் பெய்தலையும், நின்வனமுலைத் தாஅய சுணங்கிடைத் தொய்யில்எழுதுதலையும் நினைந்து வல்லேவருவர்: ஆதலின், நலம்சிதையச் சாஅய், அல்கலும் பெரும் புலம்பு உறுதல்ஓம்புமதி.

(வி - ரை.) தடக்கை மானப் பிணித்தியன்ற ஐம்பால் என்க,அருந்தி என்பது அருந்து எனத் திரிந்ததெனக்கொண்டு, அருந்தி வெறிகொள் என்றலுமாம். கதம்கற்ற - வெம்மை முறுகிய என்றபடி. எ கல் நெறி: ஏ -பெருக்க மாதலை, 1'ஏபெற்றாகும்' என்பதன் உரையால் அறிக; ஏகல் நெறி -உயர்ச்சியையுடைய நெறியென்றுமாம். 1'ஏகல்வெற்பன்' என்பது காண்க. பெடை வயிரின் நரலுங்காடு என்க. அயிரியாறு தமிழ்நாட்டின்வடக்கண்ணுள்ளதோர் யாறு என்பது 2'வடுகர்பெருமகன், பேரிசை யெருமை நன்னாட்டுள்ளதை,அயிரியா றிறந்தனர் ஆயினும்' என்பதனால்அறியப்படும். போலும்: ஒப்பில் போலி, மலைமருள்:மருள், உவமச்சொல். காவிரி வடவயின் சிறுகுடிஎன்னும் ஊரிலுள்ள மாவின் தளிர் எனவிரித்துரைக்க. பண்ணனது ஊர் சிறுகுடி என்பது, 3'தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளன், பண்ணன் சிறுகுடிப்படப்பை' என்பதனால் அறியப்படும்.

178. குறிஞ்சி

[தோழி வரைவு மலிந்துசொல்லியது.]

(சொ - ள்.) 16-, தோழி-,

1-13. வயிரத்து அன்னவை ஏந்து மருப்பின் - வயிரத்தை ஒத்த கூரியமேனோக்கிய கோட்டினையும், வெதிர்வேர் அன்னபரூஉ மயிர்ப்பன்றி - மூங்கில் வேரினை ஒத்தபருத்த மயிரினையுமுடைய பன்றியானது, பறைக்கண்அன்ன நிறைச் சுனை பருகி - பறையின் கண்ணினை ஒத்தநிறைந்த சுனை நீரைக் குடித்து, நீலத்து அன்ன அகல்இலைச் சேம்பின் - நீலமணியை யொத்தநிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்,பிண்டம் அன்ன கொழு கிழங்கு மாந்தி - பிண்டித்துவைத்தாற்போன்ற வளவிய கிழங்கினை நிறையத்தின்று, பிடி மடிந்தன்ன கல்மிசை - பெண்யானைகிடந்தாலொத்த கல்லின்மீது, ஊழ் இழிபு -வருத்தமின்றி முறையாக இறங்கிவந்து, யாறுசேர்ந்தன்ன ஊறு நீர் படா அர் – யாற்றினை அடுத்திருப்பது போன்ற நீர் ஊறும் இடத்திலுள்ளசிறுதூறாகிய, பைம்புதல் நாளிசினை குருகு இருந்தன்ன -பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெண்ணாரை யிருந்தாலொத்த, வண்பிணி அவிழ்ந்தவெண் கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டி - வெள்ளியகூதளஞ் செடியின் அசையும் கொத்திலுள்ளவளம்பொருந்திய முகை விரிந்த மலரினைப்பொருந்தி, தாது உக - அதன் பூம்பொடி மேலேஉதிர்தலால், பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர- பொன் உரைத்து மாற்று அறியும் கட்டளைக்கல்லினை ஒப்ப அழகுபெறத் தோன்றி, கிளை அமல்சிறுதினை விளைகுரல் மேய்ந்து - கிளைத்தல் மிக்கசிறிய தினையின் விளைந்த கதிரினை மேய்ந்து, கண் இனிது படுக்கும் நல்மலை நாடனொடு - இனிது கண்ணுறங்கும் இடமாகிய நல்ல மலைநாட்டையுடையானொடு;

14-6. உணர்ந்தனைபுணர்ந்த நீயும் - ஊடிப் பின் அவ்வூடலை நீங்கிப்புணர்ந்திடும் நீயும், நின் தோள் பணைக்கவின்அழியாது - நினது தோளின் மூங்கில் போலும் அழகுஒழியாது, என்றும் துணை புணர்ந்து - நின் தலைவனுடன்என்றும் சேர்ந்து வாழ்ந்து பின், தவல் இல்உலகத்து உறைஇயர் - என்றுங்கெடாத மறுமை யுலகத்துத் தங்கிவாழ் வீராக;

17-20. எல்லையும்இரவும் என்னாது - பகலும் இரவும் என்றில்லாது, கல்என கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை -கல்லெனும் ஒலியுடன் மேகம் பெரிய மழையைச்சொரிந்த விடியற் காலத்தே, தண்பனி அற்சிரம் -குளிர்ந்த பனியையுடைய அற்சிரக் காலம்,தமியோர்க்கு அரிது என - தனித்திரு போர்க்குத்தாங்கற்கரி தாகுமெனவுணர்ந்து. கனவினும் பிரிவுஅறியலன் - கனவின்கண்ணும் பிரிதலை அறியான்;

20-2. அதன் தலை -அதன்மேலும், தன் பண்பினான் - தனதுநற்குணத்தினால், முன் தான்கண்ட ஞான்றினும் -முதன் முதல் தான் கண்ட நாளினும், பின் பெரிதுஅளிக்கும் - பின் எந்த நாளினும் மிகவும் அருள்செய்வானாவன்,

(முடிபு) தோழி! பன்றி கண் இனிது படுக்கும் நன்மலைநாடனொடு, என்றும் புணர்ந்து உறைஇயரோ; அற்சிரம்தமியோர்க்கு அரிதெனக் கனவினும் பிரிவுஅறியலன்; அதன்தலை தன் பண்பினாலே, முன் கண்டஞான்றினும் பின் பெரிது அளிக்கும்.

(வி - ரை.) வயிரத்தன்ன மருப்பு, வை மருப்பு, ஏந்து மருப்பு, எனத்தனித்தனி இயையும். குழிந்து வட்டமாயிருத்தல்பற்றிச் சுனைக்குப் பறைக்கண் உவமை கூறப்பட்டது.படாஅர் - சிறு தூறு ; படுகர் என்றுமாம். படுகர் -நீர்நிலை. கருநிறமுடைய பன்றியின் உடம்பில்கூதளத்தின் பொன்னிறப் பூம்பொடி படிந்திருத்தல்,பொன்னின் மாற்றறியும் கரிய கட்டளைக் கல்லிற்பொன் உரைத்தாற்போலும் என உவமமும் பொருளும்ஒத்து விலங்குதல் காண்க. தலைவன்மாட்டுத்தவறில்லையாயினும் அவன்பால் இருப்பதாகஏறட்டுக்கொண்டு, களவுக் காலத்தும் சிறு பான்மைஊடுதலும், பின்னர் அவ்வூடல் நீங்கிக் கூடுதலும்தலைவிமாட்டுண்மையின், 'உணர்ந்தனை புணர்ந்த'என்றாள். உணர்தல் - ஊடல் நீங்குதல். இனி,இயற்கைப் புணர்ச்சி முதலிய கூட்டங்களால்,தலைவனுடைய பண்பினை இனிதுணர்ந்த நீயும்என்றுரைத்தலுமாம். நீயும் என்ற உம்மையால்தலைவனும் என்பது பெறப்படும். தவல் இல் உலகம் -கெடுதலில்லாத இன்பத்தையுடைய மறுமையுலகம்.இவ்வுலகிலே தணவாக் காதலுடன் கூடி இல்லறம் இனிதுநடாத்தி, நன்மகப் பெற்று வாழ்ந்தோர்,மறுமையிலும் பிரிவின்றி இன்பம் துய்ப்பர்என்னுங் கருத்தினளாதலின், என்றும் தவலின்உலகத்து உறைஇயர் என்று கூறினாளென்க; 1'இம்மைமாறி மறுமை யாயினும், நீயா கியரென் கணவனை, யானாகியர்நின் னெஞ்சுநேர் பவளே' 2'இம்மையுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும்மறுவின் றெய்துப, செறுநரும் விழையும் செயீர்தீர்காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்ம லோரென'என்பன காண்க. இவ்வாற்றால், தலைவன் வரைய வருதலை யுணர்ந்து தோழி வரைவுமலிந்து கூறினாள் என்பதுபெற்றாம். அங்ஙனம் தலைவன் வரைதல் ஒருதலை எனவற்புறுத்துதற்குக் கனவினும் பிரிவு அறியலன் என்றும், முன்தான் கண்ட ஞான்றினும் பின்பெரிதளிக்கும் என்றும் கூறினாள். இயற்கைப்புணர்ச்சி தொடங்கி ஒருகாலைக் கொருகால்தலைவிமாட்டு அன்பு பெருகித் தலையளிசெய்துவருதலைக் கண்டுளாள். ஆகலின், தன் பண்பினானே அளிக்கும் என்றனள்.

(உ - றை.) பன்றி சுனை பருகிக் கிழங்கு மாந்தித் தினைவிளைகுரல் மேய்ந்து இனிது கண்படுக்கும் நாடன்என்றது, தலைவன் தான் கருதிய பொருளெலாம் பெற்றுத் தலைவியை மணந்து இன்பந்துய்த்து இனிது வாழ்வான் என்றபடியாம்.

179. பாலை

[பிரிவுணர்த்தியதலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.]


(சொ - ள்.) 1-10. தலைவ-, விண்தோய் சிமைய விறல் வரைக் கவான்- வானை அளாவிய உச்சியினையுடைய பெருமை தங்கியமலையினது பக்கமலைக்கண்ணே, வெண்தேர் ஓடும் காய்கடமருங்கில் - பேய்த் தேர் ஓடாநிற்கும் காய்ந்தகற்காட்டின் பக்கத்தே, துனை எரி பரந்த துன்அரும்வியன் காட்டுச் சிறுகண் யானை - விரைந்தநெருப்புப் பரவிய கிட்டுதற்கரிய பெரியகாட்டிலுள்ள சிறிய கண்ணினையுடைய யானை, நெடு கைநீட்டி வான் வாய் திறந்தும் - அப்பேய்த்தேரின்பால் தன் நெடிய கையினை நீட்டியும்பெரிய வாயினைத் திறந்தும் - வண்புனல் பெறாஅதுகான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் - வளவியநீரினைப் பெறாமல் காட்டை வெறுத்துக் கழிந்துபோம் இடம் அகன்ற பாலைநிலத்தின்கண், விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் - விடுதல்வாய்ந்த சிவந்த அம்பினையுடைய வளைந்த வில்லைக் கொண்ட மறவரது நல்நிலை பொறித்தகல் நிலை அதர - நல்ல வெற்றி நிலையை எழுதியநடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடையவாய, அரம்புகொள் பூசல் களையுநர் காணாச் சுரம்செல விரும்பினிர் ஆயின் - குறும்பர்கள் செய்யும் பூசலை நீக்குநரைக் காணாத சுரநெறியைக் கடந்து செல்லவிரும்பினீர் ஆயின்;

10-4. இன் நகைமுருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர் வாய் -இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்டமுட்போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும்,குவளை நாள் மலர் புரையும் உண்கண் - குவளையின் புதியமலரை யொக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இமதிஏர் வாள் நுதல் புலம்ப - இந்த மதியினை யொத்தஒளி பொருந்திய நெற்றியினையுடையாள்வருந்த, பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ - இப்பதியைநீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப்பொருந்துவதாமோ?

(முடிபு) தலைவ!சுரம்செல விரும்பினிராயின், வாள்நுதல் புலம்பப்பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ?

வெண்தேர் ஓடும்வியன் காட்டில், யானை, கை நீட்டியும் வாய்திறந்தும் புனல் பெறாது புலந்து கழிவதும்கொடுவில்லாடவர் நடுகல் நிலைபெற்றஅதர்களையுடையதும் அரம்புகொள் பூசல் களையுநர்இல்லாததும் ஆகிய சுரம் என்க.

(வி - ரை.) கொடுவில் ஆடவர், கரந்தை மறவர் என்க, அரம்பு -குறும்பர், காட்டுத் தலைவர், 'இன்னகை...வாணுதல்புலம்ப' என்றது, தலைவியின் இனிய நகையும் கூரியபல்லும்துவர் வாயும் உண்கண்ணும் வாணுதலும் ஆய இவை,நும்முன் தோன்றி நும்மை அழுங்குவிப்பன வாகலின்,நீர் பிரிந்துறைதல் ஒல்லாதென்றாள் என்றபடி.
----------

180. நெய்தல்

[இரந்து பின்னின்றதலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது. தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழிக்குச்சொல்லியதூஉமாம்.]


(சொ - ள்) 1-9. தோழி-, தகை மிக கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி -அழகு மிக மாலையையுடைய ஆயத்தாருடன் (நான்) திரண்டமணல் மேட்டில் ஏறி, வீ ததை கானல் வண்டல் உயர -மலர் நெருங்கிய சோலையில் விளையாடல்செய்யாநிற்க, ஒருவன் - ஒரு தலைவன், கதழ்பரிதிண்தேர் கடைஇ வந்து - விரைந்த குதிரையையுடையவலிய தேரினைச் செலுத்தி வந்து, தண் கயத்து அமன்றஒள்பூ குவளை - தண்ணிய குளத்தே நிறைந்த ஒள்ளியபூக்களையுடைய குவளையின் அரும்பு அலைத்து இயற்றியசுரும்பு ஆர் கண்ணி - அரும்பினை விரித் துக்கட்டியவண்டுகள் மொய்க்கும் கண்ணியினை, பின்னுப்புறம்தாழக் கொன்னே சூட்டி - எனது பின்னலைக் கொண்டமுதுகின்பால் தாழ்ந்திட யான் வேண்டாதே தலையிற்சூட்டி, நல்வரல் இளமுலை நோக்கி - நல்லவளர்ச்சியையுடைய இளைய முலையைப் பார்த்து,நெடிதுநினைந்து நில்லாது பெயர்ந்தனன் - ஏதோ நீளநினைந்து பின் தாழ்க்காது போயினன்;

9-15. அதற்கே -அவ்வளவிற்கே, இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரமிக்கஊர், புலவு நாறு இருகழிதுழைஇ பலஉடன் புள்இறை கொண்ட- புலால் வீசும் பெரிய கழியினைத் துழாவிப்பலவகைப் புட்களும் ஒருங்கே தங்கியிருக்கும், முள்உடை நெடு தோட்டுத் தாழை மணந்து - முள்ளுடைய நீண்டஇதழையுடைய தாழையைச் சார்ந்து, ஞாழலொடு கெழீஇ -புலிநகக் கொன்றையொடு பொருந்தி, படப்பை நின்றமுடத்தாள் புன்னைப் பொன் நேர் நுண்தாது நோக்கி- தோட்டத்தில் நிற்கும் வளைந்த தாளினையுடையபுன்னையது பொன்னை யொத்த நுண்ணிய தாதினைப்பார்த்து, என்னும் நோக்கும் - என்னையும் நோக்காநிற்கும்;

1. நகை நனி உடைத்து -இது மிகவும் நகையினைத் தருவ தொன்றாகும்.

(முடிபு) தோழி! நான் ஆயமொடு வண்டல் அயர, ஒருவன் தேர்கடைஇ வந்து, கண்ணியினைப் பின்னுப்புறம் தாழக்கொன்னே சூட்டி இளமுலை நோக்கி, நெடிது நினைந்துபெயர்ந்தனன்; அதற்கே இந்த அழுங்கலூர் புன்னைத்தாது நோக்கி என்னும் நோக்கும்; இது நகைநனியுடைத்து.

(வி - ரை.) யான் விரும்பாதிருக்கச் செய்தே சூட்டினான்என்பாள் 'கொன்னே சூட்டி' யென்றாள். பின்அவனோடு தனக்கு யாதொரு தொடர்பும் இன்றென்பாள்நில்லாது பெயர்ந்தனன் என்றாள். இவ்வூர்புன்னையின் தாது நோக்கி என்னையும் நோக்கும்என்றது, என். மேனி புன்னையின் தாதுபோலும் பசலைபடர்ந்த தெனக் கருதுகின்றது என்றபடி; இது குறிப்புநுட்பமாம். தோழியானவள் தலைவி குறை நயப்பக்கருதி, இங்ஙனம் படைத்து மொழியால் கூறுவே, இக்கானலின்கண் இங்ஙனம் வந்து செல்வான் தலைவனேயாவான் என்னுங் கருத்தினளாய்க் குறை நேர்வாளாம்என்க. இரண்டாவது துறையின் கருத்து தலைவியானவள்தலைவன் வரையாது பிரிந்திருத்தலால், தன் மேனிபசலை பூத்தலையும் அதனால் ஊரின்கண் அலர்எழுதலையும் தலைமகன் கேட்பத் தோழிக்குச்சொல்லினாளாம் என்பது.

181. பாலை

[இடைச்சுரத்து ஒழியக்கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது.]

(சொ - ள்.) 3. நெஞ்சே-,

22-6. பகாஅர் பண்டம்நாறும் வண்டு அடர் ஐம்பால் - விற்பாரது நறுமணப்பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாகிய கூந்தலினையும், பணைத்தகை தடைஇயகாண்பு இன்மெல்தோள் - மூங்கிலின்தகுதியையுடையதாய் வளைந்த காண்டற்கு இனியமெல்லிய தோளினையுமுடைய, அணங்குசால் அரிவைஇருந்த - அழகு மிக்க நம் தலைவியிருந்த, மணம் கமழ்மறுகின் மணல் பெரும் குன்று - மணம் நாறும்தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம்;

3-7. ஆஅய் எயினன் - ஆய்எயினன் என்பான், முருகு உறழ் முன்பொடு - முருகனைஒத்த வலிமையொடு நின்று, ஒன்னார் ஓம்பு அரண்கடந்த வீங்கு பெரும் தானை - பகைவர் பாதுகாக்கும்அரண்களை வென்று கடந்த மிக்க பெரிய சேனைகளையுடைய, அடுபோர் மிஞிலி செருவிற்கு -போர் அடுதல்வல்ல மிஞிலி என்பான் செருவின் கண்,களம் சிவப்பப் பொருது - குருதியால் களம்சிவப்புறப் பொருது, பின் உடைஇ வீழ்ந்தென -தோற்று வீழ்ந்தனனாக ;

7-10. ஞாயிற்று ஒள்கதிர்உருப்பம் புதைய - ஞாயிற்றின் ஒள்ளிய கதிர்களின் வெப்பம் (அவன் உடலிற்படாது)மறைய, ஓராங்கு-ஒருபெற்றியே, வம்பப் புள்ளின் கம்பலைப்பெருந்தோடு - புதிய புட்களின் ஒலி பொருந்தியபெரிய கூட்டம், விசும்பிடைதூர ஆடி - விசும் பிடம்மறைய வட்டமிட்டுப் பின்பு, உடன் மொசிந்து -ஒருங்குகூடி;

11-9. பூவிரி அகல் துறை -பூக்கள் விரிந்த அகன்ற துறை யினையுடைய, காவிரிப்பேர் யாற்று - காவிரியாய பெரிய ஆற்றின்,

கனைவிசைக் கடுநீர் - மிக்கவிசையுடன் கடுகிவரும் நீரானது, அயிர் கொண்டு ஈண்டி- நுண்மணலைக்கொண்டு திரளும்படி, எக்கர் இட்ட,குப்பை வெண்மணல் - மேடாக்கிய வெள்ளியமணற்குவியலையும், யாணர் வைப்பின் - புதுவருவாயையுமுடைய ஊர்களையுடைய, வளம் கெழு வேந்தர் -செல்வம் மிக்க சோழவேந்தராற் புரக்கப்படும்,ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை - உலகமெல்லாம்பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய, நால்மறைமுதுநூல் முக்கண் செல்வன் - நான்குவேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணையுடையபரமனது, ஆலமுற்றம் - ஆலமுற்றம் என்னுமிடத்து, கவின்பெறதைஇய - அழகுபெற இயற்றப்பெற்ற, பொய்கைசூழ்ந்த பொழில் - பொய்கையைச் சூழ்ந்துளபொழிலின்கண்ணே, மனை மகளிர் - சிற்றிலிழைத்துவிளையாடும் சிறுமிகளது, கைசெய் பாவைத் துறைக்கண்- அழகுறச் பெய்யப்பெற்ற பாவைகளையுடைய துறையின்கண்ணே, இறுக்கும் - வந்து தங்குவதும் ;

20-2. மகர நெற்றிவான்தோய் புரிசை - மகரக் கொடியினைஉச்சியிற்கொண்ட வானைத்தோயும் மதிலையும்,சிகரம் தோன்றாச் சேண் உயர் நல்இல் - முடிஅறியப்படாதவாறு சேணின்கண் உயர்ந்த நல்லமாடங்களையுடையதும் ஆகிய, புகாஅர்நல் நாட்டதுவே -காவிரிப் பூம் பட்டினத்தையுடைய நல்லசோழநாட்டின் கண்ணதாகும்;

1-3. துன் அரும்கானமும் துணிதல் ஆற்றாய் - செல்லுதற்கு அரியகாட்டைக் கடக்கவும் துணிவுறல் செய்யாயாய், பின்நின்றுபெயரச் சூழ்ந்தனை ஆயின் - பின்னே நின்றுபெயர்ந்து மீண்டிடக் கருதினையாயின், என்நிலைஉரைமோ - எனது இந்நிலையினை ஆண்டுச் சென்று அவட்குஉரைப்பாயாக.

(முடிபு) நெஞ்சே! அரிவை இருந்த மணற்பெருங் குன்று புகாஅர்நன்னாட்டது; நீ கானம் துணிதல் ஆற்றாய்; பின்நின்று பெயரச் சூழ்ந்தனையாயின், என்நிலைஆண்டுச் சென்று, அவட்கு உரைப்பாயாக.

(வி - ரை.) கானமும் - காட்டினைக் கடக்கவும்; உம்மை எச்சப்பொருட்டு; அசை நிலையுமாம். ஒன்னார், ஓம்பரண்கடந்த வீங்குபெருந்தானை என்பதனால் மிஞிலியின்தானைப் பெருக்கமும், முருகுறழ் முன் பொடு பொருதுஎன்பதனால் எயினனதுபோர் வலியும் பெறப்பட்டன,களஞ சிவப்பப் பொருது என்றமையால், பகைவர்தானையையெல்லாம் கொன்று பின் வீழ்ந்தமைபெற்றாம். களஞ் சிவப்ப வீழ்ந்தனன் எனக்கொண்டு, பகைவனது வேலால் தாக்குண்டு வீழ்ந்தான்என்றுரைத்தலுமாம். எயினன் புள்ளின்பாதுகாவலனாகலின், இவன் வீழ்ந்த போழ்துபறவைகளெல்லாம் இவன்மேல் ஞாயிற்றின்கதிர்படாது மறைத்தன என்பது, 1'புள்ளிற்குஏம மாகிய பெரும் பெயர், வெள்ளத்தானை அதிகற் (எயினற்) கொன்று'என்பதனாலும்,1'வெளியன்வேண்மான் ஆஅய் எயினன்...மிஞிலியொடு, நண்பகல்உற்ற செருவில் புண்கூர்ந், தொள்வாள் மயங்கமர்வீழ்ந்தெனப், புள்ளொருங்கு அங்கண் விசும்பின்விளங்கு ஞாயிறு, ஒண்கதிர் தெறாமைச் சிறகரில்கோலி, நிழல் செய்து உழறல்' என்பதனாலும்அறியப்படும். 'அகவுநர் வேண்டின் வெண்கோட்டு,அண்ணல் யானை ஈயும் வண்மகிழ், வெளியன் வேண்மான்ஆஅய் எயினன்' (208) என்று இவன் கூறப் பெறுதலின்ஈண்டு 'வண்மை எயினன்' என்று காணப்படும் பாடமும்பொருத்த முடைத்தே.

எயினன்வீழ்ந்தென, உருப்பம் புதைய, புள்ளின் பெருந்தோடுஆடி, மொசிந்து, துறைக்கண் இறுக்கும் புகார் நன்னாடுஎன்க, முக்கட்செல்வனது ஆலமுற்றத்திடத்தே தைஇயபொய்கை சூழ்ந்த பொழிலின் மகளிர் கைசெய்பாவைகளையுடைய துறையென்று இயையும். வளங்கெழுவேந்தரால் புரக்கப்படும் புகார் நன்னாடு என்க; ஆலமுற்றம் எனலுமாம். ஈண்டி, ஈண்டவெனத் திரிக்க.இறைவன் புகழே மெய்யாய புகழ் ஆகலானும், அதுவேஉலகெங்கும் பரத்தற் குரியதாகலானும் 'ஞாலம்நாறும் நலங்கெழு நல்லிசை முக்கட் செல்வன்'என்றார். நான்மறை முக்கண் செல்வனதுவாய்மொழியாம் என்பது, 2'நன்றாய்ந்தநீணிமிர் சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முது நூல்'என்றதனால் அறியப்படும். ஆலமுற்றம் - சிவபிரான்எழுந்தருளியுள்ளதோர் இடமாகும். இறுக்கும் புகார்எனவும் புரிசையினையும் நல் இல்லினையுமுடைய புகார்எனவும் தனித்தனி கூட்டுக. பகர்வார் என்பது பகாஅர்எனத் திரிந்து நின்றது. பண்டம் - பூவும் சாந்தும்முதலாயின. அணங்குசால் அரிவை - வருத்துதலையுடையஅரிவை. என்றாதல், தெய்வம் போலும் அரிவைஎன்றாதல் கூறுதலுமாம். குன்றம் நன்னாட்டது ; சூழ்ந்தனையாயின் ஆண்டுச் சென்று என் நிலைஉரையென விரித்துரைக்க.

182. குறிஞ்சி

[தோழி இரா வருவானைப்பகல் வர என்றது.]

(சொ - ள்.) 1-8. பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து - அழகியஇடத்தினையுடைய வேங்கை மரத்தின் பொன்போலும்பூங்கொத்துக்களைச் சூடி, வாங்கு அமை நோன்சிலைஎருத்தத்து இரீஇ - வளைந்த மூங்கிலாலாய வலியவில்லைத் தோளில் இருத்தி, தீம் பழப்பல வின்சுளைவிளை தேறல் - இனிய பலாப்பழத்தின்சுளையினின்றும் விளைந்த தேனை, வீளை அம்பின்இளையரொடு மாந்தி - சீழ்க்கை யொலியுடன்செல்லும் அம்பினையுடைய ஏவலிளையருடன் நிறையக்குடித்து, ஓட்டு இயல் பிழையா வயநாய் பிற்பட -விலங்குகளைத் துரத்திப் பற்றும் இயல்புதப்புதலில்லாத வலிய நாய் பின்னேவர, வேட்டம்போகிய குறவன் - வேட்டைக்குச் சென்ற குறவன்,காட்ட குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர -காட்டிலுள்ள மல்லிகை யாய தண்ணிய புதர்உதிரத்தொடு அசைந்திட, முழவு மா தொலைச்சும் குன்றநாட - முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்தும்குன்றுகளை யுடைய நாட்டின் தலைவனே!

9-12. உரவு மழை அரவுஎறி உருமோடு ஒன்றி - கால்வீழ்த்து - வலிய மேகம்அரவினை எறிந்து கொல்லும் இடியுடன் கூடிக் காலிறக்கங் கொண்டு, பொழிந்த பால் நாள் கங்குல் -நீரினைச் சொரிந்த அரை நாளாகிய இரவில், தனியைவந்த ஆறு நினைந்து - நீ தனியையாகி வந்த வழியேதத்தினை நினைந்து, அல்கலும் பனியொடு கலுழும்இவள் கண்ணே - இவள் கண் எப்பொழுதும் நீர் கொண்டுஅழாநிற்கும்;

12-8. அதனால்-,அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ - அதிரும்குரலினையுடைய முதிய முசுக்கலை மிளகின் தளிரை உண்டு

வெறுத்து, உயர் சிமை நெடு கோட்டுஉகள-உயர்ந்த உச்சியினை யுடைய நீண்டசிகரங்களிலே தாவுதலால், உக்க-உதிர்ந்த, கமழ்இதழ் அலரி தாஅய் - மணம் நாறும் இதழினையுடையபூக்கள் பரந்து, வேலன் வெறி அயர் வியன் களம்கடுக்கும் - வேலன் வெறியாடும் பெரிய களத்தினைஒக்கும், பெருவரை நண்ணிய சாரலான்-பெரிய மலையைஅடுத்துள்ள சாரற் கண்ணே, கடும் பகல் வருதல்வேண்டும் - கடிய பகற் கண்ணே நீ வருதல் வேண்டும்.

(முடிபு) நாட! பானாட் கங்குல் தனியை வந்தவாறு நினைந்து,இவள்கண் அல்கலும் பனியொடு கலுழும் ; அதனால்பெருவரை நண்ணிய சாரற்கண்ணே நீ கடும்பகல் வருதல்வேண்டும்.

(வி - ரை.) புதரிடத்தே பதுங்கியிருந்தமுளவுமாவைக் கொல்லுதலின் புதல் குருதியொடுதுயல்வருதலாயிற்று. இடியொலி கேட்டு அரவுஉட்குமென்னும் வழக்குப்பற்றி அரவெறியுரும்எனப்பட்டது. உருமின் கடுமை கூறியபடியுமாம்.உருமோடொன்றி என்றதனால் ஆற்றினது ஏதம்குறித்தாள். துணையொடும் வருதற்கரிய ஏதப்பாடுடையவழியில் நள்ளிருளில் தனிமையாய்த் தன்பொருட்டுவருகின்றாய் என்பதுணர்ந்து, இவள் ஆற்றாமைபெரிதுடைய ளாகின்றாள் என்பாள், 'தனியை வந்தஆறு நினைந்தல்கலும் பனியொடு கலுழு மிவள் கண்ணே'என்றாள். கடும் பகல் - நண்பகல் என்றபடி. தெய்ய ;அசை.

(உ - றை.) குறவன் முளவுமாவைக் கொல்ல அதற்கு இடமாகிய புதல்குருதியொடு அசைந்து தோன்றியதென்பது, தலைவன்தலைவியொடு களவொழுக்கத்தில் ஒழுக,அவ்வொழுக்கம் தலைவியின் மேனி வேறுபாட்டால்தாய் முதலியோருக்குப் புலனாயிற்று என்றவாறாம்.
------

183. பாலை

[தலைமகன் குறித்த பருவவரவு கண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

(சொ - ள்.) 1-5. தோழி-, குவளை உண்கண் கலுழவும் - எனது குவளைமலர்போன்ற மையுண்ட கண்கள் அழவும், திருந்து இழைதிதலை அல்குல் அவ்வரி வாடவும் - திருந்தியஅணியையும் தேமலையுமுடைய அல்குலின் அழகிய வரிவாட்டமுறவும், அருளார் நத்துறந்து - அருள்செய்யாராய் நம்மைப் பிரிந்து, அத்தம்ஆர்அழுவம் சென்று - அருநெறிகளையுடைய பரந்த பாலையைக்கடந்து சென்று, சேணிடையார் ஆயினும் -சேய்மைக்கண் உள்ளார் ஆயினும், நன்றும் நீடலர்என்றி - மிகவும் தாழ்க்காது வருவர் என்கின்றாய்;

5-10. இருங்கிளைக்கொண்மூ - பெரிய கூட்டமாய மேகங்கள், குவவு திரை -வளைந்த அலைகளையும், பனித்துறை - குளிர்ந்த துறையினையுமுடைய, பெருங்கடல் இறந்து - பெரிய கடலிலேமிக்குச் சென்று, நீர் பருகி அருந்து கொள்ளைய -நீரினைப் பருகியுண்டமிகுதியை யுடையனவாய், குடக்குஏர்பு - மேற்கே எழுந்து, வயவு பிடி இனத்தின் - சூலுற்றபெண்யானைக் கூட்டம்போல, வயின் வயின் தோன்றி- இடந்தோறும் தோன்றி, ஒருசேர பாடு ஆன்று -ஒலிமிக்கு, ஒருங்கு உடன் துவன்றி - பெய்தற்குநெருங்க, கார் காலை வந்தன்று - கார் காலம்காலையே வந்தது எனினும்;

10-15. மாலை - மாலைப்பொழுதில், குளிர்கொள் பிடவின் கூர் முகை அலரி -குளிர்ச்சி பொருந்திய பிடாவினது கூரிய அரும்புஅலர் தற்குரியதனை, வண்டு வாய் திறக்கும் தண்டாநாற்றம் - வண்டு வாயினை நெகிழ்த்தலால் எழும்அமையாத மணத்தினை, கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற -கூதிர் முன்பனிக் காலங்கட்கு உரிய வாடைக்காற்றானது தூற்றா நிற்க, பனி அலை கலங்கியநெஞ்சமொடு - பனி அலைத்தலால் கலங்கியநெஞ்சமுடன், பிரிந்திசினோர் திறத்து - பிரிந்துசென்றாராய தலைவரின் பொருட்டு, வருந்துவம்அல்லமோ - நாம் வருந்துதற் குரியோம் அல்லேமோ.

(முடிபு) தோழி! தலைவர் நத்துறந்து சேணிடையராயினும்நீடலர் என்றி; கார் காலை வந்தன்று; மாலை,பிடவினது அலரியின் நாற்றத்தை ஊதை தூற்ற பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு நாம் வருந்துவம்அல்லமோ?

(வி - ரை.) இழை - மேகலை. நம் துறந்து - நத்துறந்து எனவிகாரமாயிற்று. துவன்றி - துவன்ற எனத் திரிக்க.கார்ப்பருவம் வந்த தாகலின், தலைவர் நீடாதுவந்துவிடுவர் என்று கூறி ஆற்றுவித்த தோழிக்கு,அவர் வருந்துணையும் நாம் எங்ஙனம்ஆற்றியிருக்கற்பாலம் என்பாள், 'கார்காலைவந்தது எனினும் மாலை கூதிர் அற்சிரத்து ஊதைதூற்றப் பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடுவருந்துவம் அல்லமோ' என்று தலைவி கூறினாள்.கார்காலை வந்ததெனினும் மாலை கூதிர் அற்சிரத்துஊதை தூற்ற என்றது, அப் பருவங்கள் அடுத்தடுத்துவிரைந்துவரும் என்பதை உணர்த்தியவாறு.கார்ப்பருவம் குறித்துச் சென்ற தலைவர்,அப்பருவம் வந்தும் இன்னும் வந்திலாமையின்,அடுத்துவரும் கூதிர் அற்சிரப் பருவங்களிற்றான்அவர் வருதல் எங்ஙனம் தெளியப்படும் என்றாளுமாயிற்று.
---------

184. முல்லை

[தலைமகன் வினைவயிற்பிரிந்து வந்து எய்தியவிடத்து தோழி புல்லுமகிழ்வு உரைத்தது.]

(சொ - ள்.) 19. சீர்மிகு குரிசில் - சிறப்புமிக்க தலைவனே!

5-19. வெண்பிடவுஅவிழ்த்த வீ கமழ் புறவில் - வெள்ளிய பிடவமரத்தின் விரிந்த மலர் மணக்கும் முல்லைநிலத்தே, குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளி - குறியகிளைகளையும் குறிய முட்களையுமுடைய கள்ளியின், புன்தலைபுதைத்த கொழு கொடி முல்லை - புல்லியஉச்சியினை மூடிய வளவிய முல்லைக்கொடியின், ஆர்கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி - ஆர்க்குக்கழன்ற புதிய பூக்களை மூச்செறிதலால் ஒதுக்கி, தெள்அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை - தெளிந்தநீரைக் குடித்த முறுக்குண்ட கோட்டினையுடைய அழகியமான் கலை, புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் -புள்ளிகளையுடைய அழகிய பிணையுடன் தங்கும்அவ்விடத்தே, கோடு உடைக் கையர் - களைக்கொட்டினையுடைய கையினராய், துளர் எறி வினைஞர் -களையினை வெட்டி எறியும் தொழிலையுடையவர்கள்,அரியல் ஆர்கையர் விளைமகிழ் தூங்க - கள்ளினைநிறைய உண்டு அதனாலாய களிப்பு மிக்குற, செல்கதிர்மழுகிய உருவ ஞாயிற்று - செல்லும் கதிர் வெம்மைகுறைந்த செந்நிறத்தினதாய ஞாயிற்றையுடைய,செக்கர் வானம் சென்ற பொழுதில் - செவ்வானம்பரவிய காலத்தே, கல்பால் அருவியின் ஒலிக்கும்நற்றேர் - மலையின்பால் வீழும்அருவியைப்போலஒலிக்கும் நல்ல தேரிலுள்ள,தார்மணி பல உடன் இயம்ப - மாலையாகிய மணிகள்பலவும் ஒருங்கே ஒலிக்க, சுரும்பு இமிர் மலர கானம்பிற்பட - வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய காடுபின்னேபோக, அருந்தொழில் முடித்த செம்மல்உள்ளமொடு - அரிய வினையை முடித்த தலைமை மேவியஊக்கத்துடன், நீ வந்து நின்றது - நீ இங்கு வந்துநின்றது;

1-4. கடவுட் கற்பொடு- தெய்வக் கற்புடன், குடிக்கு விளக்கு ஆகிய - குடிக்குவிளக்கம் ஆகிய, புதல்வன் பயந்த புகழ்மிகுசிறப்பின் நன்னராட்டிக்கு அன்றியும் - மகனைப்பெற்ற புகழ் மிக்க சிறப்பினையுடைய நன்மையையுடையதலைவிக்கே யல்லாமலும், எனக்கும் இனிது ஆகின்று -எனக்கும் இனிமையைத் தருவதாகின்றது; நின் ஆயுள்சிறக்க - நின் ஆயுள் சிறந்திடுவதாக.

(முடிபு) சீர்மிகு குரிசில்! செக்கர் வானம் சென்றபொழுதில், நற்றேர் மணி இயம்ப, கானம் பிற்படசெம்மல் உள்ளமொடு நீ வந்து நின்றது, நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் இனிதாகின்று; நின் ஆயுள் சிறக்க.

(வி - ரை.) கடவுட் கற்பு - தெய்வத்தன்மையையுடைய கற்பு.கற்புடை மகளிர் வேண்டுங்கால் மழையும்பெய்விப்பாராகலின் அவரது கற்பு தெய்வத்தன்மையுடையதாயிற்று. 1'கற்புக்கடம்பூண்ட இத்தெய்வமல்லது, பொற்புடைத் தெய்வம்யாம்கண் டிலமால், வானம் பொய்யாது வளம்பிழைப்பறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது,பத்தினிப் பெண்டி ரிருந்த நாடு' என்பதுங் காண்க.கடவுட் கற்பொடு புதல்வன் பயந்த சிறப்பினையுடையநன்னராட்டி என்று இயையும். புதல்வன் குடியைவிளங்கச் செய்பவன் ஆகலின், குடிக்கு விளக்காகியபுதல்வன் என்றாள். மனைவாழ்க்கை மகளிர்க்குக்கற்பொழுக்கமும், நன்மக்கட்பேறும்இன்றியமையாதன என்பது, 2'மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன்-நன்கலம் நன்மக்கட்பேறு' என்னும் பொய்யா மொழியானும் அறியப்படும்.3'மனைக்குவிளக்கம் மடவார்' என்பதுபற்றிக் குடிக்குவிளக்காகிய என்பதனைத் தலைவிக்குஏற்றியுரைத்தலுமாம். நன்னராட்டி - மனைமாட்சியாயநன்மையெல்லாம் உடையவள். கணவன் கூறியசொற்பிழையாது ஆற்றியிருந்த அருமைப்பாடுதோன்றத் தலைவி இங்ஙனம் சிறப்பித்துக் கூறப்பெற்றாள். பிரிவாற்றாது தலைவி வருந்துந்தோறும்தானும் உடன் வருந்தி, அரிதின் ஆற்றுவித்துக்கொண்டிருந்தவள் ஆகலின், நீ வந்து நின்றதுஎனக்கும் இனிதாகின்றது என்று தோழி கூறினான்.பிரிந்த தலைவன் மீண்டு வந்ததேயன்றி அவன் அரியவினையை முடித்த பெருமிதத்துடன் தேரின் மணிஒலிக்கவந்து நின்ற தோற்றம், தலைவனது ஆக்கத்தைவிரும்பும் தலைவிக்குக் கழிபேரின்பம்பயப்பதாகலின், செம்மலுள்ளமொடு மணி இயம்ப நீவந்து நின்றது இனிதாகின்று என்றாள். தலைவன் தேர்வந்த விரைவு தோன்றக் கானம் பிற்பட என்றாள்.செல்கதிர் - மேற்றிசைக்கட் சென்று மறையும்கதிர். துளர் - களை. தார் மணி - மாலையாகக் கோத்தமணிகள்.

தலைவன் போந்தகாட்டின்கண் முல்லை, கள்ளியின் புன்தலையைமறைத்திருப்பது; தலைவி தன் பிரிவாலுளதாகியவருத்தம் புறந்தோன்றாமல் கற்பினால்ஆற்றியிருத்தலையும், மறைத்த பூவை உயிர்ப்பினால்நீக்கி நீரினைப் பருகிய கலை பிணையொடு வதிதல்,தான் தலைவியின் மெலிவினை நீக்கி அவளுடன்இன்புற்று வதியப் போவதையும் அவனுக்குப்புலப்படுத்தி மனவெழுச்சி தருவன என்க.

185. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகள் தோழிக்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 5-14. வாடல் ஒலி கழை நிவந்த நெல் உடைநெடுவெதிர்-வாடுதலுற்ற ஒலிக்கின்ற மேல்நோக்கிஎழுந்த தண்டினையும் நெற்களையுமுடைய நீண்டமூங்கில், கலிகொள் மள்ளர் வில் விசையின் உடைய- ஆரவாரம் கொண்ட மறவரது வில்லினின் றெழும்அம்பின் விசையாற் பிளந்திட, பைது அற வெம்பியகல் பொரு பரப்பின் - பசுமை அறக் காய்ந்தபருக்கைகள் பொருகின்ற இடத்தினையுடைய, வேனில்அத்தத்து ஆங்கண் - வேனிலான் உழந்த காட்டிடத்தே,வான் உலந்து அருவி ஆன்ற உயர் சிமை மருங்கின் -மேகம் பெய்யா தொழிதலின் அருவிகள் இல்லையாகியஉயர்ந்த சிகரங்களில், பெருவிழா விளக்கம்போல -பெரிய கார்த்திகை விழாவிற்கு இடும்விளக்குகளைப் போல, பல உடன் இலை இல மலர்ந்தஇலவமொடு - இலையே இல்லனவாய்ப் பலவும் ஒருங்கேமலர்ந்த இலவ மரங்களைக் கொண்டு, நிலை உயர்பிறங்கல் மலை இறந்தோர் - உயர்ந்த நிலையையுடையபக்க மலையினையுடைய பெருமலையினைத் தாண்டிச்சென்றோராய நம் தலைவர்;

1-5. ஆய் இழை நல்எழில் பணைத்தோள் - ஆய்ந்தெடுத்த அணிகளையும்நல்ல அழகினையுமுடைய மூங்கில்போலும் நமது தோள்,எல்வளை ஞெகிழச் சாஅய் - ஒளிபொருந்திய வளைநெகிழும்படி மெலிந்து, இருங்கவின் அழிய -பெரிய அழகு கெடுமாறு, பெரு கை அற்ற நெஞ்சமொடு நம்துறந்து - பெரிய செயலற்ற நெஞ்சமோடிருக்கும்நம்மைக் கைவிட்டு, இரும்பின் இன் உயிர்உடையோர்போல - இரும்பினால் இயன்ற இனிய உயிரைஉடையார்போல, வலித்துவல்லினர் - வலித்திருக்கவன்மையுடையோராயினர்.

(முடிபு) மலையிறந்தோர் ஆய நம் காதலர், நம் பணைத்தோள்சாஅய்க் கவின் அழிய நத்துறந்து இரும்பின்இன்னுயிர் உடையோர் போல வலித்து வல்லினர்.

(வி - ரை.) நெஞ்சமொடு இருக்க என ஒருசொல் விரித்துரைக்க.தாம் எய்தும் துன்பம் கருதி இரங்கித் தலைவர்வாராதிருத்தலின் இரும்பின் இன்னுயிர்உடையோர்போல வலித்து வல்லினர் என்றாள்.நம்மை இரும்பாலியன்ற உயிருடையார்போலக் கருதிவாராதிருக்கின்றார் என்றுரைத்தலுமாம்.
----------

186. மருதம்

[தலைமகட்குப்பாங்காயினார் கேட்ப இல்லிடைப் பரத்தைசொல்லி நெருங்கியது.]

(சொ - ள்.) 1-7. வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை -மழைபெய்தலை வேண்டாத வறுமையுறுத லில்லாதவாழ்க்கையினையுடைய, நோன் ஞாண் வினைஞர் - வலியதூண்டிற் கயிற்றினையுடைய மீன் பிடிப்போர்,கோள் அறிந்து ஈர்க்கும் - (மீன் இரை கோத்தமுள்ளினைப்) பற்றியது உணர்ந்து இழுக்கும், மீன்முதிர் இலஞ்சி - மீன் மிக்க நீர்நிலையில்,கலித்த தாமரை நீர் மிசை நிவந்த நெடு தாள் அகல்இலை-தழைத்த தாமரையின் நீர்மீது உயர்ந்த நெடியகாம்பினையுடைய அகன்ற இலையை, இருகயம் துளங்க கால்உறுதோறும்-பெரிய குளம் அலையக் காற்றுஅடிக்குந்தோறும், பெரு களிற்றுச் செவியின்அலைக்கும் ஊரனொடு - பெரிய களிற்றியானையின்காதுபோல அசைவிக்கும் ஊரனால், எழுந்த கௌவையோபெரிதே - எனக்கு உண்டாய அலரோ பெரிதாகும்ஆயினும்;

7-9. நட்பு-அவன்நட்போ, கொழு கோல் வேழத்துப் புணை துணை ஆக -செழித்த கொறுக்கங்கழியாலாய புணையினைத்துணையாகக் கொண்டு, புனல் ஆடு கேண்மை அனைத்தே -புனல் விளையாடும் நட்பின் அளவினதே;

9-13. அவனே - அத்தலைவன்றான், ஒள் தொடி மகளிர் பண்டையாழ்பாட-ஒள்ளிய தொடியினையுடைய மகளிர்பழையயாழினைப் பாடவும், ஈர் தண் முழவின்எறிகுணில் விதிர்ப்ப-மிக்க தண்மை வாய்ந்தமுழவினைக் குறுந்தடியால் அடிக்கவும். தண் நறும்சாந்தம் கமழும் தோள் மணந்து-தண்ணிய நறியசந்தனம் நாறும் தோளைக் கூடி, இன்னும் பிறள்வயினான் - இன்னும் பிறளிடத்தேயுள்ளான் ஆவன்;அங்ஙனமாகவும் ;

13-14 மனையோள்எம்மொடு புலக்கும் என்ப - அவன் மனைவி எம்முடன்வெறுக்கின்றாள் என்பர்;

14-17. மாரி அம்பின்மழைத் தோல் பழையன்-வெற்றி பொருந்தியவேலையும் மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும்மேகம்போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையன்என்பானது, காவிரி வைப்பின் போஒர் அன்ன -காவிரி நாட்டிலுள்ள போர் என்னும ஊரினை ஒத்த,என் செறி வளை உரிதினின் உடைத்தலோ இலன்-எனது நெருங்கிய வளைகளைஉரிமையால் உடைத்த லொன்றுஞ் செய்திலேன்; எனவே,

18-20. யாம் தன்பகையேம் அல்லேம் - யாம் அவளுக்குப் பகையாவேம்அல்லேம், சேர்ந்தோர் திருநுதல் பசப்ப நீங்கும்- தன்னைச் சேர்ந்தோரது அழகிய நெற்றி பசந்திடஅவர்களை ஒழித்து நீங்கும், கொழுநனும் - அவள்கணவன், தன் உடன் உறைபகை சாலும் - தன்னுடன்கூடியுறையும் பகைவனாதற்குப் பொருந்துவானாவன்.

(முடிபு) ஊரனொடு எனக்கு எழுந்த கௌவையோ பெரிதே: நட்பேவேழத்துப் புணை துணையாகப் புனலாடு கேண்மை அனைத்தே;அவனே இன்னும் பிறள் வயினானே; மனையோள் எம்மொடுபுலக்கும் என்ப; செறிவளை உடைத்தலோ இலேன்; யாம்தன் பகையேம் அல்லேம்; கொழுநன் தன் உடனுறை பகைசாலும்.

(வி - ரை.) மீன் பிடிக்கும் வினைஞர் உழவினால் நெல் முதலியனவிளைத்தல் இலராகலின் அவரது வாழ்க்கை வானம்வேண்டா வாழ்க்கை எனவும், அன்னராயினும் அவர்பிடிக்கும் மீனே அவருக்குப் பெரியதொருவருவாயாதலின், வறனில் வாழ்க்கை எனவும்கூறப்பட்டது. நோன்ஞாண் - தூண்டிலின் வலிய கயிறு;அதுகொண்டு வினை செய்தலின் அவர் நோன்ஞாண்வினைஞர் எனப்பட்டார். கோள் - இரும்பிற்கோத்தஇரையைப் பற்றுகை. இனி, வலிய கயிற்றையுடையவலையெனக் கொண்டு, அஃது அகப்படுத்தமை அறிந்துஈர்க்கும் என்றுரைத்தலுமாம். புணை துணையாகநீராடுவார் நீராட்டுமுடிந்தவுடன் அப் புணையைவிடுத்து அகறல்போல, தலைவன் என்பால் வந்துஅகன்றனன் என்பாள், நட்புகேண்மை அனைத்துஎன்றாள். கேண்மை - புணையினிடத்துளதாய கேண்மை;குறிப்பு மொழி. இனி, நட்பு ஒரு நாள் புணை துணையாகப்புனலாடிய அவ்வளவிற்றே என்றுரைத்தலுமாம்; 1"நீவெய்யோளொடு வேழவெண்புணை தழீஇ.......நெருநலாடினைபுனலே" என முன் வந்தமையுங்காண்க. ஒண்டொடிமகளிர் - விறலியர்; பரத்தையருமாம், தலைவன்சேரிப்பரத்தையொடு கூடி யொழுகுதலைப் பரத்தையர்சேரியினின் றெழும் யாழொலியும் முழவோசையுமேயாவருமறியப் புலப்படுத்தும்: அங்ஙனமாகவும் தலைவிஎம்மொடு புலத்தல் பொருந்தா தென்பது தோன்ற, பாடவிதிர்ப்பத் தோள் மணந்து பிறள்வயினான்எனவும், எம்மொடு புலக்கு மென்ப எனவும் இற்பரத்தைகூறினாளென்க. மற்றும், தலைவன் தலைவியையும்என்னையும் கையகன்று சேரிப்பரத்தையர் மாட்டுமருவி யொழுகுதலால் எனக்குளதாய வெறுப்பினை என்வளையை உடைத்துக் காட்டிற்றிலேன்; அது கொண்டேஅவன் என்னுடன் உளனாகத் தலைவிகருதினாள்போலுமென்பாள், “செறிவளை யுடைத்தலோஇலனே என்றாள்"
குலமகளிரல்லாத அலவற் பெண்டிர்முதலாயினோர் வெறுப்பினால் வளையுடைத்தல்செய்வரென்பது, 1"என்னோடுதிரியேனாயின்....உடைகவென், நேரிறை முன்கைவீங்கிய வளையே" என்பதனால றிகா இலன்: அன்விகுதி தன்மைக்கண் வந்தது. கொழுநனும்; உம்: அசைநிலை, இனி, சேரிப்பரத்தையரையும் விடுத்துத்தலைவியுடன் சென்று உறைவானென்பது தோன்றத் 'தன்உடனுறை பகை' என்றாள்; உடனுறைந்த கொழுநன்பகையாதல் சாலும் எனக் கூட்டியுரைத் தலுமாம்,
187. பாலை

[பிரிவுணர்த்தியதோழிக்குத் தலைமகள் சொல்லியது. தலைமகன்பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉமாம்.]

(சொ - ள்.) 10. தோழி-,

5. காதலர் - நம்காதலர்;

1-4. தோள் புலம்புஅகல நம்மொடு துஞ்சி - நமது தோள் தனிமை யகலநம்முடன் துயின்று, நாள் பல நீடிய கரந்து உறைபுணர்ச்சி - பலநாள் நீட்டித்த களவுப்புணர்ச்சியை,நாண் உடைமையின் நீங்கி - வினையின்றியிருத்தற்கு நாணுதல் உடைமையானே நீங்கி, சேய்நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு - தூரநாட்டிலே அரிய போருளை ஈட்டத் துணிந்தநெஞ்சத்துடன்;

14-24. மனை உறை கோழி- மனையில் வதியுங் கோழியின், அணல் தாழ்பு அன்ன -தொங்குகின்ற தாடியை யொத்த, கவை ஒண் தளிரகருங்கால் யாஅத்து - கவர்த்த ஒள்ளிய தளிரினையும்கரியஅடி யினையும் உடைய யா மரங்களையுடைய, வேனில்வெற்பில் கானம் காய - வேனில் வெப்பம் வாய்ந்தமலையை யடுத்த காடு காய்ந்திட, முனை எழுந்து ஓடியகெடுநாட்டு ஆர் இடை-காட்டரணிலுள்ளார்குடியெழுந்தோடிய பாழ் நாட்டின் அரிய இடத்தே, பனைவெளிறு அருந்து பைங்கண் யானை - பனங்குருத்தைத்தின்னும் பசிய கண்ணினை யுடைய யானை, ஒள் சுடர்முதிரா இளம் கதிர் அமையத்து - ஒள்ளிய சுடர்முதிராத இளைய ஞாயிற்றையுடைய காலையிலே, கண்படுபாயல் கை ஒடுங்கு அசை நிலை - துயிலுமிடத்தேசெயலொடுங்கி அசைந்து கொண்டிருக்கும் நிலையானது,வாள் வாய்ச் சுறவின் பனி துறை நீந்தி -வாள்போலும் வாயினையுடைய சுறா மீன்களுள்ளகுளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று, நாள் வேட்டுஎழுந்த நயன்இல் பரதவர் - நாட் காலத்தே மீன்வேட்டை குறித்து எழுந்த நயமற்ற பரதவருடைய, வைகுகடல் அம்பியில் தோன்றும் - கடலிடத்தேபொருந்திய தோணி போலத் தோன்றாநிற்கும், மைபடு மா மலை விலங்கிய சுரன் - மேகம் பொருந்தியபெரிய மலை குறுக்கிட்ட பாலையின் கண்ணே;

10-13. சேண் ஓங்குஅலந்தலை ஞெமையத்து - நெடுந்தூரம் உயர்ந்தகாய்ந்த உச்சியினையுடைய ஞெமை மரங்களையுடைய,ஆள் இல் ஆங்கண் - ஆள் வழக்கற்ற இடங்களில், கல்சேர்பு இருத சில்குடி பாக்கத்து - மலையைச்சார்ந்திருந்த சில குடிகளையுடைய பாக்கத்தே, எல்விருந்து அயர - இரவில் விருந்து செய்ய, ஏமத்துஅல்கி - பாதுகாவலாகத் தங்கி;

4-5. ஏகி -தொடர்ந்து சென்று, நம் உயர்வு உள்ளினர் - நமதுஉயர்ச்சியைக் கருதினர்; (அதனால்).

5-10. கறுத்தோர் -சினந்தெழுந்த பகைவரது, தெவ்முனை சிதைத்தகடும்பரிப் புரவி - பகைப்புலம் தொலைத்த கடியசெலவினையுடைய குதிரைகளையுடைய, வார்கழல்பொலிந்த - நீண்ட கழலாற் பொலிவுற்ற, வன்கண்மழவர் - தறுகண்மையினை யுடைய மழவர் செய்யும்,பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன - பூந்தொடைவிழா என்னும் விழாவின் முதல்நாளை யொத்தபொலிவினையுடைய, தரு மணல் ஞெமிரிய திருநகர்முற்றம் - கொணர்ந்திட்ட மணல் பரந்த அழகியமனையின் முற்றம், புலம்புறும் கொல்லோ -தனிமையுறுமோ?

(முடிபு) தோழி! காதலர், நம்மொடு நீடிய கரந்துறை புணர்ச்சியை நாணுடைமையின் நீங்கி, அரும்பொருள் வலித்தநெஞ்சமொடு, மலை விலங்கிய சுரத்தின்கண்ணே,பக்கத்தே எல்விருந்து அயர ஏமத்து அல்கி, ஏகி, நம்உயர்வு உள்ளினர்; அதனால் திருநகர் முற்றம்புலம்புறுங் கொல்லோ?

(வி - ரை.) தோள் புலம்பு அகலத் துஞ்சி என்றது, தோளிலேதுயின்று என்றபடி, நாணுடைமை - போகம் வேண்டிஆடவர்க்கு உயிராகிய வினையை யொழிந்திருத்தற்குநாணுதலுடைமை. சேய் நாட்டு அரும்பொருள் - சேய்நாட்டிற் சென்று தேடும் அரிய பொருள், நம் உயர்வு -வறியோர்க்கு அளித்தல், விருந்து புறந்தருதல்முதலிய இல்லறம் புரிந்து நாம் மேம்படுதல்;அதற்குப் பொருள் இன்றியமையாதாகலின்,பொருள்வயிற் பிரிந்தாரை நம் உயர்வு உள்ளினர்என்றாள். ஏகி உள்ளினர் என்பதனை உள்ளி ஏகினர்என மாறுக. பூந்தொடை விழவு, படைக்கலம் பயின்றஇளைய வீரரை அரங்கேற்றுவிக்கும் விழா.தொடை-அம்பு தொடுத்தல், தலை நாளன்னபொலிவினையுடைய முற்றமென விரித்துரைக்க. தலைவர்பிரிவிற்குளதாம் வருத்தத்தை முற்றம்தனிமையுறுதலால் வருந்துவாள் போற் கூறினாள்.அலந்தலை - அலந்த தலை; விகாரம். ஞெமையத்து; அத்து,சாரியை. சுரத்தைக் கடந்து ஏகுங்கால், பாக்கத்துஎல்விருந்தயர ஏமத்து அல்கி ஏகுவார் என்றாள்.கானங்கோழியின் வேறுபடுக்க, மனையுறை கோழிஎனப்பட்டது. முனை - காட்டரண்; வேட்டுவர் ஊர். கெடுநாடு-வாழ்வா ரொழிந்து பாழ்பட்ட நாடு.வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி என்றது,பரதவரின் அஞசாமையைப் புலப்படுத்தியவாறாம். பனைவெளிறு அருந்து என்றது, வேறு உணவின்மைகுறித்தபடியாம். யானை அசைநிலை. கடல் அம்பியிற்றோன்றும் சுரம் எனவும், மலை விலங்கிய சுரம்எனவும் தனித்தனி இயையும்.
--------

188. குறிஞ்சி

[இரவில் சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.]

(சொ - ள்.) 1.பெருங்கடல் முகந்த இரு கிளை கொண்மூ - பெரிய கடல்நீரை முகந்துகொண்ட பெரிய கூட்டமாகிய மேகமேநீதான்;

2-8. இருண்டு -இருட்சியுற்று, உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ -உயர்ந்த வானில் வலமாக எழுந்து சுற்றி, போர்ப்புஉறுமுரசின் இரங்கி - தோற்போர்வையுற்ற முரசுபோலமுழங்கி. முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர் - செங்கோன்மை மேற்கொண்டு அறநெறிவழுவாத செய்யுள் கூறு பாட்டினை அறிந்த மன்னரது,அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் - அரியபோரில் மாற்றாருடன் எதிர்த்துப் போர்செய்யும் பேராண்மைச் செய்கையையுடைய வீரர்கள்,கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் -உறையினின்றும் உருவி வீசும் வாளைப் போலச்செறிவனவாய் விளங்கும், மின் உடைக் கருவியை ஆகிமின்னின் தொகுதியை உடையை ஆகி: நாளும் அரவம்கொன்னே செய்தியோ - நாடோறும் பயனின்றிஆரவாரம் செய்து ஒழிதியோ? அன்றி;

8-14. பொன் எனமலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி - பொன்போல மலர்ந்த வேங்கைப் பூக்களாலாய நிறைந்தமாலையைத் தரித்து, பொலிந்த ஆயமொடு காண்தகஇயலி - பொலிவுற்ற ஆயத்தாருடன் அழகு பொருந்தநடந்து, தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் -தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும்,அழல் ஏர் செயலை அம்தழை அசைஇயும் - தீயின்கொழுந்தினை ஒத்த அசோகினது அழகிய தழையாலாயஉடையினை யுடுத்தும், குறமகள் காக்கும் - குறமகளாயஎம் தலைவி காக்கும், ஏனல் புறமும் மழைதருதியோ-தினையினிடத்து மழையும் பொழிவையோ!வாழிய.

(முடிபு) கொண்மூவே!நீதான் இருண்டு ஏர்பு வளைஇ இரங்கி விளங்கும்மின்னுடைக் கருவியை ஆகி, அரவம் கொன்னேசெய்தியோ; குறமகள் காக்கும் ஏனல்புறம் மழையும்தருதியோ வாழிய!

(வி - ரை.) முறைபுரிந்து பிழையா மன்னர் எனவும், திறன் அறிமன்னர் எனவும் தனித்தனி கூட்டுக. இறைமாட்சியாவும் அடங்கத் திறன் அறி மன்னர் என்றனள்.சமம்-அம் மன்னர் தம் மாற்றாருடன் செய்யும்போர். பெருஞ் செய் ஆடவர் - வஞ்சினங்கூறிப்போர் செய்யும் பேராண்மைச்செய்கையுடையவீரர். மலர்ந்த வேங்கை மலிதொடர்அடைச்சி என்றதனால் தினை விளையுங் காலம்பெறப்பட்டது. தழல் - பிரம்பு போல்வனவற்றாற்பின்னிச் சுற்றி ஒலியுண்டாக்கிக் கிளியைஓட்டுவதோர் கருவி. தட்டை - மூங்கிற் றுண்டைப்பிளந்து தட்டி ஒலியுண்டாக்கிக் கிளி கடிவதொருகருவி. இவற்றைத் “தழலும் தட்டையுங் குளிரும்பிறவும், கிளிகடி மரமின ஊழூழ் வாங்கி" என்பதன்உரையால் அறிக. தழை - தழை உடை. ஏனல் புறம் மழையுந்தருதியோ என உம்மையை மாறுக.

உம்மையைஅசையாக்கியும் மழையை விளியாக்கியும் ஏனலைப்புறந்தருதியோ என்றுரைத்தலுமாம். இதற்குக் கொண்மூஆகிய மழையே என்க. இரவிற் சிறைப்புறமாகவுள்ளதலைவனைத் தோழி இங்ஙனம் மழையாகக்கொண்டுகுறிப்பினாலே நீ இங்ஙனம் வந்து ஒழுகுதலாற்பயனின்றி அலர் விளைக்கின்றாயோ? அன்றிவரைந்துகொள்வையோ? எனக் கூறி வரைவு கடாயினாள்என்க.

(மே - ள்.) 2'உடனுறையுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபின்உள்ளுறை ஐந்தே' என்னுஞ் சூத்திரத்துச் சுட்டுஎன்னும் உள்ளுறைக்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி,'இதனுள்' கொன்னே செய்தியோ அரவம் என்பதனால்பயனின்றி அலர் விளைத்தியோ எனவும் கூறி, ஏனற்புறமும் தருதியோ என்பதனால், வரைந்து கொள்வையோஎனவும் கூறித் தலைமகனை மழைமேல் வைத்து கூறலின்சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றதனால்வழுவாயினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின்அமைந்தது' என்பர், நச்சினார்கினியர்.


189. பாலை

[மகட் போக்கிய செவிலிசொல்லியது]

(சொ - ள்.) 1-7. பசு பழம் பலவின் கானம் வெம்பி - செவ்விவாய்ந்த பழத்தினைக்கொண்ட பலாமரங்களையுடையகாடு வெதும்ப, விசும்பு கண் அழிய வேனில் நீடி -மேகம் வானிடத்தினின் றொழிதலின் வேனில்வெப்பம் மிக, கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்- குளங்கள் தம்மிடத்தே நீரற்றிருக்கும் கற்கள்உயர்ந்த இடங்களில், நாறு உயிர் மட பிடி தழீஇ -பெருமூச்சுத் தோன்றும் இளைய பிடியைத் தழுவி, களிறு -களிறுகள், முழவு எடுத்து உயரி வேறு நாட்டு விழவுப்படர்மள்ளரின் - தங்கள் முழவுகளை எடுத்துஉயர்த்துக்கொண்டு வேற்றுநாட்டில் நிகழும்விழாவினை நினைத்துச் செல்லும்மள்ளர்களைப்போல, அதர்ப்படுத்த -நெறிப்படுத்திச்சென்ற, கல் உயர் - கற்கள்உயர்ந்த, வெவ்வரை கவாஅன் அத்தம் சுட்டி - கொடியபக்க மலையைச் சார்ந்த சுரத்தினைச் செல்லத்துணிந்து;

8-15. வயலைஅம்பிணையல் வார்ந்த கவாஅன் - வயலைக்கொடியாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்ததுடையினையும், திதலை அல்குல் - தேமல் படர்ந்தஅல்குலினையும் உடைய, குறுமகள் - இளையளாய என் மகள்,பையென அவனொடு சென்று - மெல்லெனத் தன்தலைவனொடுசென்று, பிறள் ஆகிய அளவை - எங்கட்குப் பிறள்ஒருத்தி ஆகியபோது, என்றும் படர்மலிஎவ்வமொடு - எக்காலத்தும் நினைவு மிக்கதுன்பமொடு, மாதிரம் துழைஇ - திசையெல்லாம்தேடிவந்து, மனை மருண்டு இருந்த என்னினும்மனையின்கண் மயங்கியிருந்த என்னைக் காட்டிலும்,நனை மகிழ் நன்னராளர் கூடுகொள்இன்னியம்-கள்ளின் களிப்பினையுடைய நல்லபாணர்களது ஒன்றுகூடி யொலிக்கும் வாச்சியங்கள்,தேர் ஊர் தெருவில் ததும்பும்-தேர் ஓடும் பெருந்தெருக்களில் அறாது ஒலிக்கும், ஊர்-இவ்வூரானது, தன்வீழ்வு உறு பொருள் - தனது விருப்பம் மிக்கதொருபொருளை, இழந்தன்று - இழந்ததாயிற்று.

(முடிபு.) கவாஅன் அத்தம் சுட்டி, குறுமகள், அவனொடு சென்றுஎமக்குப் பிறளாகிய அளவை, என்னினும் ஊர் தன்வீழ்வுறு பொருள் இழந்தன்று.

(வி - ரை.) வெம்பி, நீடி என்பனவற்றை வெம்ப, நீடஎனத்திரிக்க. கயம்-சுனையுமாம். மள்ளர் என்றதுஈண்டுக் கூத்தரை. முழவெடுத் துயரி வேறுநாட்டுவிழவுப்படர் மள்ளர் என மாறுக. பொருளின்கண்மடப்பிடி தழுவி என்பதனை உவமையுடன் கூட்டிவிறலியருடன் செல்லும் கூத்தர் எனவும்,உவமையின்கண் முழவெடுத்துயரி என்பதனைப்பொருளுடன் கூட்டி முழவு போலும் பலாப்பழத்தினைஏந்திச் செல்லுங் களிறு எனவும் உரைக்க. பிறந்தநாட்டொட்டுப் பேணி வளர்த்த எம்மைக் கையகன்றுஏதிலானொடு சென்றாள் என்பாள், 'அவனொடு சென்றுபிறள் ஆகிய அளவை, என்றாள். அவள் அன்னள் ஆயினும்அவள் பிரிவால் யான் எய்தும் துன்பம் இறப்பவும்பெரிது என்பாள், 'என்றும், படர்மலி எவ்வமொடு,,மாதிரிந் துழைஇ மனை மருண்டிருந்த என்னினும்'என்றும் தான் எய்துந் துன்பத்தினும் நாற்றாயும்ஆயத்தாரும் முதலியோர், அவளை இழந்து எய்தும்துன்பம் பெரிதென்பாள், 'என்னினும்,ஊரிழந்தன்றுதன் வீழ்வுறு பொருளே' என்றும்கூறினாள். ஊர் என்றது ஈண்டு, நற்றாய் ஆயத்தார்முதலியோரைக் குறித்து நின்றது.
------------

190. நெய்தல்

[தோழி,செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.]

(சொ - ள்.) 6. அன்னை - தாயே, வாழி-, வேண்டு-நான் கூறுவதனைவிரும்பிக் கேட்பாயாக;

6. 10. உயர்சிமைபொதும்பில் - உயர்ந்த உச்சியையுடையசோலையில்புன்னை சினை சேர்பு இருந்த - புன்னைமரத்தின்கிளையைச் சேர்ந்திருந்த, வம்ப நாரை இரிய - புதியநாரை ஒழிந்திட, ஒரு நாள் - முன்பு ஒரு நாள், பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும் - பொங்குதலுடன்வரும் வடகாற்றுடன் அலைகள் அலைத்துக்கொண்டிருக்கவும், உழை கடல் வழங்கலும் உரியன் - ஒருதலைவன் கடலோரத்தே தேரில் வருதற்கும் உரியன்ஆயினன்;

10-17. அதன் தலை -அதன்மேலும், இரு கழிப் புகாஅர் - பெரியகழியினையுடைய துறைமுகத்தே, வயச்சுறா பொருந்தத்தாக்கி எறிந்தென - வலிய சுறாமீன் தம் உடம்பிற்பொருந்தத் தாக்கி எறிந்த தாக, வலவன் அழிப்ப -தேர்ப்பாகன் செலவினை நிறுத்தலால், எழில் பயம்குன்றிய - எழுச்சியும் பயனும் குன்றியனவும், சிறைஅழி தொழில - பூட்டு அழிந்த செய்கையையுடையனவுமாகிய; நிரை மணிப் புரவி - நிரைத்தமணிமாலை பூண்ட குதிரைகள், விரை நடை தவிர -விரைந்து செல்லும் செலவு ஒழிந்து தங்கினவாக, இழும்என் கானல் - இழுமென்னும் ஒலியையுடைய கானலிடத்தே,விழுமணல் அசைஇ-சிறந்த மணலில் தங்கி, ஆய்ந்தபரியன் இவண் வந்து - வேறு சிறந்த புரவியுடன் இங்குவந்து, மான்ற மாலை சேர்ந்தன்று இலன் - மயங்கியமாலைப் பொழுதில் தங்கியதும் இலன்;

5. அலமரல்மழைக்கண் அமர்ந்தும் நோக்காள் - அவனைச்சுழல்கின்ற குளிர்ந்த கண்களையுடைய நின் மகள்நோக்கினாளும் அல்லள்; அங்ஙனமாகவும்;

1-4. திரை உழந்துஅசைஇய - திரையின் விளையாடி உழந்தமையால்தளர்ச்சியுற்ற, நிரைவளை ஆயமொடு - நிரைத்தவளையினையுடைய மகளிர் கூட்டத்துடன், (மைந்தர்கள்)உப்பின் குப்பை ஏறி - உப்பு மேட்டில் ஏறி நின்று,எல்பட - இருள்வர, வரு திமில் எண்ணும் துறைவனொடு -கரைக்கு மீண்டு வரும் படகுகளை எண்ணும் துறையையுடையஅத் தலைவனொடு நின் மகளைச் சார்த்தி ஊர்-இந்தஊரானது, ஒரு தன் கொடுமையின் - ஒப்பற்ற தனதுகொடுமையால், அலர் பாடும் - அலர் கூறா நிற்கும்;

6. அலையல் - ஆதலால்நீ அவளை வருத்தாதேகொள்.

(முடிபு) அன்னை! வாழி! வேண்டு; ஒரு தலைவன்; ஒருநாள் ஊதையொடுபுணரி அலைப்பவும் உழைக்கடல் வழங்கலும் உரியன்;அதன் தலை வயச்சுறா எறிந்தென; வலவன் அழிப்பபுரவிகள் விரை நடை தவிர, அசைஇயஆய்ந்தபரியினன், மாலை இவண் சேர்ந்தன்றோ இலன்,மழைக்கண் நின்மகள் அவனை அமர்ந்துநோக்கினாளல்லள்; அங்ஙனமாகவும் நின்மகளைஅத்துறைவனொடு சார்த்தி; இவ்வூர் தன்கொடுமையின் அலர்பாடும்; ஆதலின் நீ இவளைஅலையல்.

(வி - ரை.) ஆயமொடு என்றமையால், மைந்தர் என்பது வருவிக்கப்பட்டது. எண்ணும் என்னும் பெயரெச்சம், துறை என்னும்இடப்பெயர் கொண்டது. துறையையுடைய தலைவனொடுசார்த்தி என விரித்துரைக்க. ஊர் என்பது -கௌவைப் பெண்டிரை. மழைக் கண்: ஆகு பெயர்.வழங்கலும் என்ற உம்மை வருதலருமையை விளக்கிநின்றது. அதன்தலை என்றது; ஊதையொடு புணரி அதை்தலேஅன்றி அதன்மேலும் என்றபடி, வயச் சுறா எறிந்தெனவலவன் அழிப்ப என்றதனால், குதிரை புண்பட்டமைபெற்றாம். புண்பட்டமையால் வலவன்பூட்டவிழ்த்துவிட்ட குதிரை நடைதவிர்ந்திருக்க,அவன் மணலில் ஓரிடத்தே தங்கியிருந்ததன்றி வேறுகுதிரை பூண்ட தேருடன் யாங்கள் இருக்குமிடத்திற்குவந்து இருண்ட மாலைப்பொழுதில் தங்கினானல்லன்என்றும், தலைவியும் அவனை விரும்பிநோக்கினாளல்லள் என்றும் கூறி, அங்ஙனமாகலின்ஊர் வாளாது அலர் கூறுவது பற்றி நீ தலைவியைவருத்தாதே என்று கூறுவாள்போல், தலைவன்எதிர்ப்பாட்டைக் குறிப்பிற் புலப்படுத்தித்தோழி. செவிலிக்கு அறத்தொடு நின்றாள் என்க.
--------

191. பாலை

[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.]

(சொ - ள்.) 13. என் நெஞ்சே வாழி-,

1-12. அத்தம் பாதிரிதுய் தலை புது வீ - பாலையிலுள்ள துய்யினை உச்சியிற்கொண்ட புதிய பாதிரிப் பூவை, எரி இதழ் அலரி யொடுஇடை பட விரைஇ - நெருப்புப் போன்ற இதழினையுடையஅலரிப்பூவுடன் இடையிடையே கலந்து, வெண்தோட்டுத்தொடுத்த வண்டுபடு கண்ணி - வெண்மை பொருந்தியதாழம்பூவின் தோட்டில் வைத்துக் கட்டிய வண்டுபொருந்தும் கண்ணியினைத் தரித்த, தோல் புதைசிரற்று அடி-பொதிந்த செருப்பு ஒலிக்கும்அடியினையும், கோல்-கோலினையுமுடைய, உமணர்-உப்புவாணிகருடைய, ஊர் கன்டன்ன-ஊர்திரண்டுவந்தாலொத்த, ஆரம் வாங்கி-வண்டிகளைஇழுத்து, அரும் சுரம் இவர்ந்த-ஏறுதற்கு அரியமேடுகளையுடைய காட்டில்ஏறி வந்த, அசைவு இல் நோன்தாள் திருந்து பகட்டு இயம்பும்கொடுமணி-தளர்வில்லாத வலிய தாளினையுடையசெவ்விய எருதுகளின் ஒலிக்கும் வளைந்த மணிகளின்ஒலி, புரிந்து அவர் மடி விடு வீளையொடு-அவர்கள்விரும்பி வாயினை மடித்து எழுப்பும் சீழ்க்கையொலியொடு கடிது எதிர் ஓடி-விரைந்து எதிரேசென்று,ஓமை அம் பெருங்காட்டு வருஉம் வம்பலர்க்கு-ஓமைமரங்களையுடைய பெரிய காட்டில் வரும் புதிய

( பாடம் ) 1.வண்டோட்டு.
2. வவ்வி.
3. உரையினி.
4.உரோடோகக்கவுணியன் சேந்தன்.
----------
ராய வழிச் செல்வார்க்கு, ஏமம்செப்பும்-பாதுகாவலைக் கூறும், என்றூழ் நீள்இடை-வெப்பம் மிக்க நெடிய காட்டிலே, அரும்பொருள்நசைஇ-அரிது ஈட்டும் பொருளை விரும்பி, பிரிந்துஉறை வல்லி-நம் தலைவியைப் பிரிந்து உறையும்வன்மை யுடையையாய், சென்று வினைஎண்ணுதியாயின்-சென்று பொருள் ஈட்டும் வினையைஎண்ணுவையானால்;

13-17. உறல் இன்சாயல்-உறுதற்கினிய மென்மைத்தன்மையையும், நிரைமுகை முல்லை அருந்து-முல்லையின் நிரைத்த அரும்புகளைநிறையச் சூடி, மெல்லியவாகி-மென்மைத்தன்மையுடையவாகி, அறல் என விரிந்த ஒலி இரும்கூந்தல்-கருமணல்போல விரிந்த தழைத்த கரியகூந்தலையுமுடைய நம் தலைவி, தேறும்என-தெளிந்திருப்பாள் என்று, வலிய கூறவும்வல்லையோ-பிரிவுணர்த்தும் வலிய சொற்களைக்கூறவும் வன்மை யுடையையோ? வல்லையாயின்;

12-13. நன்றும்உரைத்திசின்-அவளிடத்தே சென்று பெரிதும் கூறிஅவளைத் தேற்றுவாயாக.

(முடிபு) உமணரது ஊர்கண்டன்ன ஆரம் வாங்கி்ச் சுரம்இவர்ந்த பகட்டு இயம்பும் கொடுமணி; அவர்வீளையொடு எதிர் ஓடி வம்பலர்க்கு ஏமம் செப்பும்என்றூழ் நீளிடைப் பொருள் நசைஇச் சென்று வினைஎண்ணுதியாயின்; இன்சாயலும் கூந்தலுமுடைய இவள்தேறும் என வலிய கூறவும் வல்லையோ? வல்லையாயின்நன்றும் உரைத்திசின்.

(வி-ரை.) தோடு-தாழம்பூவின் இதழ். சிரற்று தோல் எனக்கொண்டு சிதறிய செருப்பு என்றலுமாம். கோல்-பகடுஓட்டுங்கோல். ஆரம்-வண்டியின் உறுப்பு; வண்டிக்கு-ஆகுபெயர். மிகப் பலவாகிய வண்டிகளுடன் உமணர்திரண்டு செல்லுந் தோற்றம் ஊர் எழுந்து செல்லுவதுபோலுமாகலின், உமணர் ஊர்கண்டன்ன ஆரம் என்றார்.பகட்டின் மணி யோசையையும் உமணர் வீளையொலியையும் செவி யேற்ற வம்பலர் இக்காட்டில்ஏதம் இல்லை யென்று உணர்வராகலின், அவ்வொலிகள்வம்பலர்க்கு ஏமம் செப்பும் எனப்பட்டன. வல்லிவலியையாய் என்னும் பொருட்டு ; வவ்வி என்பதுபாடமாயின், பிரிந்துறைதலை மனத்திற் கொண்டுஎன்க. பொருள் நசைஇ நீளிடைச் சென்று வினைஎண்ணுதியாயின் எனக் கூட்டுக. அருந்து - ஆர்ந்துஎன்பதன் விகாரம். தேறு மென என்றதனால், வலியஎன்றது. பொருளீட்டி விரைந்து வருவேம் என்னுஞ்சொற்களாதல் வேண்டும். கூறவும் வல்லையோ என்றதுகூறுதற்கு அருமையை விளக்கி நின்றத. மற்று,வல்லையல்லை என்னும் பொருள் தருதலின் வினைமாற்று; அசையுமாம்.
---------

192. குறிஞ்சி

[தோழி, தலைமகனைச் 1செறிப்புஅறிவுறீஇ இரவுக்குறி மறுத்தது.]

(சொ - ள்.) 13-15. உரவுப் பெயல் உரும் இறைகொண்ட-வலிய மழையுடன்இடி தங்குதல் கொண்ட, உயர்சிமை பெருமலை நாட -உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைநாட்டையுடையதலைவனே;

3-8. விசும்பில்எய்யா வரிவில் அன்ன பைந்தார் செவ்வாய் சிறுகிளி - வானிலுள்ள எய்யப் பெறாத அழகிய வில்லைஒத்த பசிய மாலையினையும் சிவந்த வாயினையும்உடைய சிறிய கிளி, சிதைய வாங்கி தினைசிதையும்படி கொய்து, பொறை மெலிந்திட்டபுல்புறப் பெரு குரல் - சுமக்கலாற்றாது போகட்டபுல்லிய புறத்தினையுடைய பெரிய கதிரினை, வளை சிறைவாரணம் கிளையொடு கவர-வளைந்த சிறகுகளை யுடையகானங்கோழி தன் இனத்துடன் கவர்ந்துண்ணுமாறு,ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன - தினையும்வளைந்த கதிர்களை ஈன்றன (ஆகலின் எம் தலைவி இனிஇற்செறிக்கப்படுவள்);

8-12. பால்நாள் நீவந்தது அளிக்குவை எனினே. பாதி இரவில் நீ வந்துஅளிப்பாய் என்று கூறின், மால் வரை மை படு விடரகம்துழைஇ - பெரிய மலையின் இருள் பொருந்திய குகையின்இடங்களைத் துழாவி, ஒய் என அருவிதந்த அரவு உமிழ்திருமணி - விரைய அருவிகொண்டுவந்த பாம்புஉமிழ்ந்த அழகிய மணி, பெருவரை சிறு குடி மறுகுவிளக்குறுத்தலின் - பெரிய மலையிலுள்ள எமதுசீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச்செய்தலாலே,

15. நின் மலர்ந்தமார்பு - நின் அகன்ற மார்பின் கூட்டத்தினை;

13. இரவும் இழந்தனள்- இரவினும் இழந்தாள் ஆவள்;

1-3. மதி அரும்பு அன்ன- இளைய மதியினை யொத்த, மாசு அறு சுடர் நுதல் இவளதுகுற்றமற்ற ஒள்ளிய நெற்றி, பொன் நேர் வண்ணம்கொண்டன்று-பொன்னை யொத்த நிறத்தினைக்கொண்டது; அன்னோ - அந்தோ, யாங்கு ஆகுவள் கொல் -எங்ஙனம் ஆகுவளோ;

11. அளியள் -இரங்கத்தக்காள்.

(முடிபு) பெருமலை நாட! ஏனல் பொறை உயிர்த்தன; (ஆகலின்எம் தலைவி இனி இற்செறிக்கப்படுவாள்;) நீபால்நாள் வந்து அளிக்குவை எனினே, அரவுமிழ்திருமணி மறுகு விளக்குறுத்தலின், நின்மார் பினைஇரவும் இழந்தனள்; சுடர்நுதல் பொன் நேர் வண்ணம்கொண்டன்று; அன்னோ யாங்காகுவள் கொல்; அளியள்.

(வி - ரை.) நுதல் பொன்நேர் வண்ணம் கொண்டன்று என்றது பசலைபூத்தது என்றபடி. விசும்பின் வில் என்க. எய்யாவில் என்றது வான வில்லிற்கு வெளிப்படை. வரி -அழகு. ஏனல் பொறை உயிர்த்தன என்றது,தினையறுக்குங் காலமாகலின் தலைவிஇற்செறிக்கப்படுவள் என்பது கூறி, அதனால்பகற்குறி அரிதென்று உணர்த்தியவாறாம். திருமணிமறுகு விளக்குறுத்தலின் என்பதனால் இரவுக்குறியிடையீடு உணர்த்தி, அதனால் அஃதும் அரிதெனஉணர்த்துவாள் நின் மார்பினை இரவு இழந்தனள்என்றாள். இரவும் என்னும் உம்மை எச்சப் பொருட்டு.தானே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது.

193. பாலை

[பொருள வலித்தநெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவுஅழுங்கியது.]

(சொ - ள்.) 1-11. நெஞ்சே, கான் உயர் மருங்கில் கவலை அல்லது -உயர்ந்த காட்டினிடத்தேயுள்ள கவர்த்த நெறிகளையன்றி, வானம் வேண்டா வில் ஏர் உழவர்-மழையைவேண்டுதலில்லாத வில்லாகிய ஏரால் உழுதலைச்செய்யும்ஆறலைப்போர், கிளை எழ வாய்த்த-தம்கிளைஞருடன் எழாநிற்கக் கிடைத்த, பெருநாள்வேட்டம் - நன்னாள் வேட்டத்தில், பொரு களத்துஒழிந்த-அவர்கள் பொருத களத்தில் ஆறு செல்வார்உடம்பினின்றும் உக்க, குருதி செவ்வாய் -குருதியினை உண்டமையால் சிவந்த வாயினையும்,பொறித்த போலும் வால் நிற எருத்தின் -பொறித்து வைத்தாற்போலும் வெண்ணிறம் வாய்ந்தகழுத்தினையும், அணிந்த போலும் செஞ்செவி எருவைசெய்து சூட்டியது போலும் சிவந்த செவியினையுமுடையகழுகு, குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து - குறியமலையிடத்தே வளர்ந்த நெடிய அடியினையுடைய யாமரத்தின், அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட- அரிய கவட்டின்நின் றெழுந்த உயர்ந்தகிளைகளிலுள்ள தன் குஞ்சினை உண்பிக்க, விரைந்துவாய் வழுக்கிய கொழு கண் ஊன் தடி - விரைதலினாலேஅக் குஞ்சின் வாயினின்றும் தவறி வீழ்ந்தகொழுமையுற்ற கண்ணாகிய ஊனின் துண்டு, தொல்பசிமுதுநரி வல்சி ஆகும் சுரன் - பழைய பசியினையுடையமுதிய நரிக்கு உணவாகும் காடுகள், நமக்கு எளிய மன் -நாம் செல்லுதற்கு மிகவும் எளியனவே ஆயினும்;

11-4. நம் மனை-நமதுநல்ல மனையின் கண்ணுள்ள, பல் மாண் தங்கிய- பலமாண்பும் உற்ற, சாயல் - மென்மைத்தன்மையினையும்,இன்மொழி - இனிய மொழியினையும், முருந்து ஏர்முறுவல் - மயிலிறகின் அடியினை ஒத்த பற்களையுமுடைய,இளையோள் - இளையோளாய நம் தலைவியின்,பெருதோள் இன் துயில் - பெரிய தோளின்பாலெய்தும் இனிய துயிலினை, கைவிடுகலன் - கைவிடுதலைஆற்றேன்.

(முடிபு) நெஞ்சே! சுரன் நமக்கு எளியமன்; ஆயினும், இளையோள் பெருந்தோள் இன்துயில் கைவிடுகலன்.

(வி - ரை.) உழுதொழில் செய்வார்க்கு மழை துணைக் காரணமாம்என்பது, 1'ஏரினுழாஅர் உழவர் புயலென்னும், வாரி வளங்குன்றிக்கால் என்பதனாற் பெற்றாம்; ஆயினும்,ஆறலைப்பாராகிய வில்லேர் உழவர்க்குக் காட்டின்கவர்நெறி யல்லது மழை துணையாதல் இல்லையாகலின்,'கவலை யல்லது வானம் வேண்டா வில்லேர் உழவர்'என்றார். அவர்க்கு வேட்டை பெரிதும் வாய்த்தநாள் சிறந்த நாள் ஆகலின், அது பெருநாள்எனப்பட்டது. கிளை யெழ என்பதற்கு ஆறு செல்வார்கிளையுடன் புறப்பட்டு வர என்றுரைத்தலுமாம்.குருதிச் செவ்வாய் - குருதியை யுண்டமையாற் சிவந்தவாய் என விரித்துரைக்க. அணிந்தபோலும்செஞ்செவி என்ற கருத்து, 2'ஊன்பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல்' எனமுன்னர்ப் போந்தமையுங் காண்க.

யாமரத்தின்உயர்ச்சி மிகுதி கூறுவார் நெடுந்தாள் யாஅத்துஎன்றும், அருங்கவட்டு உயர் சினை என்றும் கூறினார்.விரைந்து ஊட்ட என்று கூட்டி யுரைத்தலுமாம்.

எருவை குஞ்சிற்குக்கண்ணினைக் கொணர்ந்து உணவாகக் கொடுப்பது, 3'கண்ணுமிழ்கழுகின் கானம்' என்பதனாலும் அறியப்படும், தொல்பசி - பல்நாள் உணவின்மையால் எய்திய பசி. கொல்பசி என்னும் பாடத்திற்கு வருத்தும் பசியென்றுரைக்க. தலைவன் சுரத்திற் செல்லுதற்குஅஞ்சுகின்றிலேன் என்பான், 'சுரன் நமக்கு எளியமன்' என்றும், எனினும் தலைவியின் தோளிற்பெறும் இனிய துயிலைக் கைவிட்டுப் போதல் இயலாதென்பான் 'இளையோள் பெருந்தோள் இன்றுயில்கைவிடுகலனே' என்றும் கூறினான். அவள்கைவிடற்குஅரியாள் என்பதனைப் 'பன் மாண் தங்கிய சாயல்இன்மொழி முருந்தேர் முறுவல் இளையோள்'என்பதனாற் கூறினான்.

194. முல்லை

[பருவங் கண்டு ஆற்றாமைமீதூரத் தலைமகள் சொல்லியது.]

(சொ - ள்.) 16-9. தோழி-, போர்மிக-போர்மிக்கு மூண்டதாக,கொடுஞ்சி நெடுதேர் பூண்ட-கொடுஞ்சி யென்னும்உறுப்பினை யுடைய நெடிய தேரிற் பூட்டப்பெற்ற,கடும்பரி விரி உளை நல்மான் கடைஇய-விரைந்தசெலவினையும் விரிந்த பிடரி மயிரினையும் உடையநல்ல குதிரையைச் செலுத்தி, வருதும் என்று அவர்தெளித்த போழ்து - இன்ன போழ்தில் வருவேம் என்றுநம் தலைவர் தெரிவித்த காலம்;

1-16. பேர் உறைதலைஇய பெரிய மழைபெய்த, பெரும் புலர் வைகறை-இருள்பெரிதும் புலர்ந்த காலைப் பொழுதிலே, ஏர் இடம்படுத்த இருமறு-ஏர்களால் இடமுண்டாக உழப்பெற்றபெரிய வடுவினையுடைய, பூழி புறம் மாறுபெற்ற - கீழ்மேலாகப் புரண்ட புழுதியையுடைய, பூவல் ஈரத்து -செம்மண்நிலத்தின் ஈரம்பட்ட செவ்வியில், ஊன்கிழித்தன்ன செம் சுவல் நெடுசால் - ஊனைக்கிழித்தாலொத்த செவ்விய மேட்டுநிலத்தைப்பிளந்து சென்ற நெடிய படைச்சாலினிடத்து, வித்தியமருங்கில் - விதைத்த இடங்களில், விதை பலநாறிய-விதைகள் பலவும் முளைத்து வளர, இறலைநல்மான் இனம் பரந்தவைபோல் - நல்ல கலைமானின்கூட்டம் பரந்தனபோல, கோடு உடை தலைக்குடை சூடியவினைஞர் - கோட்டினையுடைய ஓலைக் குடையைத்தலையிற் சூடிய கொல்லை உழவர், கறங்கு பறைச்சீரின் - ஒலிக்கும் பறையின் ஒலியொடு, இறங்கவாங்கி களை கால் கழீஇய - பயிர்கள் வளையும்படிஒதுக்கிக் களையைப் பறித்துத் தூய்மை செய்த,பெரும் புன வரகின் - பெரிய கொல்லையில் விளைந்தவரகின், கவை கதிர் இருபுறம் கதூஉ உண்ட - கவைத்தகதிர்களின் கரிய புறத்தினைப் பற்றி உண்ட, குடுமி நெற்றி நெடு மா தோகை- குடுமி பொருந்திய தலையினையுடைய நீண்ட கரியமயில், காமர் கலவம் பரப்பி - அழகிய தோகையினைவிரித்து, ஏம் உற - இன்பம் உற, கொல்லை உழவர்கூழ் நிழல் ஒழித்த - கொல்லையை உழும்வினைஞர்கள் கூழ் உண்டற்கு நிழலாக விட்டுவைத்த,வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து - வலியஇலையினையுடைய குருந்தமரத்தின் வளைந்தகிளையிலிருந்து, கிளிகடி மகளிரின் விளிபடபயிரும் - கிளிகளை ஓட்டும் மகளிர்போலஒலியுண்டாக அகவும், கார் இது - கார் காலம் ஆகியஇதுவேயாகும். மன் - அங்ஙனமாகவும் அவர் இன்னும்வந்திலரே.

(முடிபு) தோழி! நம் தலைவர் வருதும் என்று தெளித்தபோழ்துகார் இதுமன்; வரகின் கதிர் உண்ட தோகை கலவம்பரப்பிக் குருந் தின் சினையிருந்து கிளிகடிமகளிரின் விளிபப் பயிரும் கார் என்க.

(வி - ரை.) ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப் புறமாறு பெற்ற பூவல்என்றது, புழுதி கீழ்மேலாகப் புரண்டு நன்கு புலருமாறுபன் முறை உழுத செம்மண் நிலம் என்றபடி; 1'தொடிப்புழுதிகஃசாஉணக் கிற் பிடித்தெருவும்-வேண்டாது சாலப்படும்' என வள்ளுவர் கூறு வதுங் காண்க. அங்ஙனம்உணக்கிய புழுதியில் மழைபெய்து ஈரம் பட்ட செவ்விபார்த்து மீட்டும் உழுது விதைதெளிப்பார் என்பது,'பூவல் ஈரத்து, ஊன்கிழித் தன்ன செஞ்சுவல்நெடுஞ்சால், வித்திய' என்பதனாற் பெற்றாம்.ஈரமுடைய செம்மண்நிலத்தே உழுபடை கிழித்த வடுவின்தோற்றம், ஊனினைக் கிழித்து வைத்தார்போலும்என்றார். நாறி - நாற எனத் திரிக்க; நாற-முளைத்தவளர என்க. மழைக்குத் தடையாக வினைஞர் தலையிற்சூடிய ஓலைக்குடையின் இரு முனையும் நீண்டுஉயர்ந்திருக்கு மாகலின் அதனையுடைய வினைஞர்கள்இரலையினம் போல்வாராயினர் என்க. கறங்கு பறைச்சீரின் என்ற இரலையினம் போல்வாராயினர் என்க.கறங்கு பறைச் சீரின் என்றதனால், அவர்கள்களைபறிக்குங்கால், பறையை ஒலிப்பிப்பர் என்பதுபெற்றாம். களைகால் கழீஇய-களையை அடியுடன் கழித்தஎன்றுமாம். தோகை-மயில் காரினைக் கண்ட மயில்களிப்புற்று அகவுதல் இயல் பாகலின், தோகை கலவம்பரப்பி ஏமுறப் பயிரும் என்றார். மயில் குருந்தின்சினையிலிருந்து அகவுவது கிளிகடியும் மகளிர்,மரத்தின் கிளைமீதிருந்து ஒலிப்பது போலும் என்க.அவர் தெளித்த போழ்து இதுவாகவும் இன்னும்வந்திலரே என்பதுபட நின்றமையின், மன்ஒழியிசையாகும்.

195. பாலை

[மகட்போக்கிய நற்றாய்சொல்லியது.]

(சொ - ள்.) 1-5.அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறுமகள்-அரியசுரநெறியைக் கடந்து சென்ற என் பெரியதோளினையுடைய இளையளாய மகள், திருந்து வேல்விடலையொடு வரும் என- திருந்திய வேலினையுடையதலைவனுடன் வரும் என்று, தாய் - அவள் தாய், புனைமாண்இஞ்சி பூவல் ஊட்டி - புனைதல் மாட்சிமைப்பட்டமாண்புற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, மனை மணல்அடுத்து - மனையின் முற்றத்தே மணலைப் பெய்து, மாலைநாற்றி - மாலைகளைத் தொங்க விட்டு, உவந்து இனிதுஅயரும் என்ப - மகிழ்ந்து இனிதே (மனையின் கண்கோலம் செய்யும் என்ப ;

5-10. யானும்-, மான்பிணை நோக்கின் மட நல்லாளை-பெண் மான் போலும்பார்வையையுடைய மடப்பம் வாய்ந்த அவளை, ஈன்ற நட்பிற்கு அருளான்ஆயினும்-ஈன்றாள் என்னும் அன்புபற்றி என்பால்அருள் செய்யானாயினும், இன் நகை முறுவல் ஏழையை -இனிய நகையுடன் கூடிய பற்களையுடைய அவளை, பல் நாள்கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய - பலநாளும்கூந்தலை வாரிமுடித்து மருங்கிலே ஏற்றிப்பாதுகாத்த, நலம்புனை உதவியும் மன் உடையன் - நன்மைபொருந்திய உதவியும் பெரிதும் உடையள் ஆவேன்;

11. அஃதுஅறிகிற்பினோ நன்று - அவன் அதனை அறியின்நன்றாம்;

12-14. அறுவை தோயும்ஒரு பெருங்குடுமி - ஆடை சூழ்ந்த ஒரு பெரியஉச்சியினையும், சிறு பை நாற்றிய பல் தலை கொடுகோல்-சிறிய பை தொங்கவிடப்பெற்ற பலதலையையுடையவளைந்தகோலினையும் உடையனாய், ஆகுவதுஅறியும் முதுவாய் வேல - மேல் நிகழ் வதனை அறிந்துகூறும் அறிவு வாய்ந்த வேலனே!

15-19. கங்குலின்ஆனாது துயரும் - இரவில் அமையாது துயருறும்,எம்-எம்முடைய, மாறா வருபனி கலுழும் கண் - இடையறாதுவரும் நீருடன் கலங்கி அழும் கண்கள், இனிதுபடீஇயர்-இனிது துயிலும் பொருட்டு, எம்மனை முந்துறத்தருமோ-எமது மனையின்கண் முற்படக் கொணர்ந்துதருமோ, (அன்றி) தன் மனை உய்க்குமோ - தன்மனையின்கண் முற்படக் கொண்டு செல்வானோ, யாதுஅவன் குறிப்பு கூறுவாயாக - அத் தலைமகன் குறியை, கூறுக.

(முடிபு) குறுமகள் விடலையொரு வருமெனத் தாய், ஊட்டி, அடுத்துநாற்றி அயரும் என்ப: யானும் ஓம்பிய உதவியும்உடையன்; அஃதறிசிற்பினோ நன்று; வேல! எம்மனைமுந்துறத் தருமோ தன் மனை முந்துற உய்க்குமோ, அவன்குறிப்பு யாது? நின் கழங்கின் திட்பம் கூறுக.

(வி-ரை) இஞ்சி - மனையை அடுத்துப் புறத்தே சூழ்ந்த மதில்போலும் சுவர். அயர்தல் - கொண்டாடுதலுமாம். யானும்என்ற உம்மை, தாய் என்றதனைக் கருதி நிற்றலின்எச்சவும்மையாகும். உதவியும் என்ற உம்மையும், எச்சவும்மையே. அஃது அறிகிற்பின் - உதவி யாகிய அதனைஅறியின் ஈன்ற நட்பிற்கு அருளானாயினும்அஃதறிகிற் பினோ நன்று என்க. அறிகிற்பினோநன்று என்றது, அறிந்து என் மனைக்கட் கொண்டுவரின்நன்ற என்றபடி. அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி என்றது,தலையிலே மயிர்க்கட்டாகச் சுற்றி ஒரு புறத்தேதொங்கவிட்ட ஆடை தோய்ந்த குடுமி என்றவாறு,குடுமியினையும் கோலினையும் உடைய வேலஎன்க.பிழையாத குறி என்னும் பொருட்டு மன், தில்ல,மாது, ஓ: அசைகள்.

(மே - ள்.) 1'தன்னும்அவனும் அவளுஞ் சுட்டி' என்னுஞ் சூத்திரத்து,இப்பாட்டினைக் கூறி, இது தெய்வத்தொடு படுத்துப்புலம்பியது என்றும்,
1'களவலராயினும் காமமெய்ப் படுப்பினும்' என்னுஞ்சூத்திரத்து, 'போக்குடன் அறிந்தபின்தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்துநிற்றற்கண்ணும்' என்னும் துறைக்கு 'எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே'என்ற பகுதியை உதாரணமாகக் காட்டி, (இது) 'கற்பினாக்கத்துக்கருத்து நிகழ்தல்' என்றும் 2'வெளிப்படவரைதல்படாமை வரைதல்' என்னுஞ் சூத்திரத்து, 'எம்மனை.. . . . .யாதவன் குறிப்பே' (இது) 'போல்வனவெளிப்படுவதன் முள்னர்க் கொண்டு தலைக்கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும் கரணம்நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம்' என்றும், 3'கொடுப்போரின்றியும் கரணமுண்டே' என்னுஞ் சூத்திரத்து,இச்செய்யுள் கொடுப்போ ரின்றிக் கரணம்நிகழ்ந்தது என்றும் கூறுவர், நச்சினார்கினியர்.

4'மறைவெளிப்படுதலும்' என்னுஞ் சூத்திரத்து 'எம்மனை. . . . . .யாதவன் குறிப்பே' என்பது மறை வெளிப்பாடுஎன்றனர், பேரா.
196. மருதம்

[பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகற்குக் கிழத்தி சொல்லியது.]


(சொ - ள்.) 1-7. நெடு கொடி நுடங்கும்நறவுமலிபாக்கத்து-நெடியகொடிகள் அசையும் கள் மலிந்த பாக்கத்திலே, நாள்துறைப் பட்ட மோட்டு இரு வராஅல்-விடியற்காலைவேட்டத்துத் துறைக்கண் அகப்பட்ட பெரியஅகட்டினையுடைய வரால் மீனின், துடிகண்கொழுகுறைநொடுத்து - துடியின் கண்போன்று அகன்ற வளவியதுண்டத் தினை விற்று, உண்டு ஆடி-கள்ளுண்டு ஆடி,வேட்டம்மறந்து-மீண்டும் வேட்டம் போதலை மறந்து,துஞ்சும் கொழுநர்க்கு-உறங்கிக் கிடக்கும்கணவன்மார்க்கு, பாட்டி - (அவரவர் மனைவியராய)பாண் மகளிர், ஆம்பல் அகல்இலை - ஆம்பலது அகன்றஇலையில், அமலை வெம்சோறு திரண்ட விருப்பந்தரும்சோற்றை, தீம்புளி பிரம்பின் திரள் கனி பெய்து -பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பினையுடையதிரண்ட பழத்தினைப் பெய்து, விடியல் வைகறை இடூஉம்ஊர - இருள் புலரும் விடியற் காலத்தே இடும் ஊரனே!

8-13. தந்தைகண்கவின் அழித்ததன் தப்பல்-தன் தந்தையின்கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக,ஒன்று மொழிக் கோசர் - நெடுமொழியினையுடையகோசர்களை, கடுதேர் திதியன் - விரைந்ததேரினையுடைய திதியனது, அழுந்தை - அழுந்தூர்என்னுமிடத்து, தெறுவரக்கொன்று முரண் போகிய -அச்சம் உண்டாகக் கொல்வித்து மாறுபாடு தீர்ந்த,கொடுங்குழை அன்னி மிஞிலியின் - வளைந்த குழையினைஅணிந்த அன்னி மிஞிலி என்பாளைப்போல, இயலும் -களிப்புற்று நடக்கும், நின்நல தகுவியை-நின்நலத்திற்குத் தக்காளாய பரத்தையை, முயங்கியமார்பு - தழுவிய மார்பினை, தொடு கலம்-தீண்டேம்,குறுக வாரல் - எம்மை அணுக வாரற்க.

(முடிபு) ஊர! அன்னி மிஞிலியின் இயலும் நின்நலத் தகுவியைமுயங்கிய மார்பினைத் தொடுகலம்; குறுகவாரல்:

வேட்டம் மறந்துதுஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி அமலை வெஞ்சோறுபிரம்பின் கனிபெய்து வைகறை இடூஉம் ஊர என்க.

(வி - ரை.) நொடுத்து - விற்று. பாட்டி பாண்மகள் ; பாணன்மனைவி. பாட்டியர் எனப் பன்மையாகக்கொள்க.விடியல் வைகறை-விடியற்கு முன்னர்த்தாகிய வைகறைஎன்பர், நச்சினார்கினியர். 1தப்பல்-தப்பற்குஎன நான்கனுருபு விரிக்க. கோசர் என்பார். தன்தந்தையை அருளின்றிக் கண் களைந்தமையின், அன்னிமிஞிலி என்பாள் சினம் கொண்டு, குறும்பியன்திதியன் என்பவர்களால் அக் கோசரைக்கொல்வித்து மாறுபாடுதீர்ந்து களிப்புற்றாள்என்பது, 2'வாய்மொழித்தந்தையைக் கண்களைந்து அருளாது, ஊர்முது கோசர்நவைத்த சிறுமையில், கலத்தும் உண்ணாள் வாலிதும்உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,மறங்கெழு தானைக் கொற்றக்குறும்பியன், செருவியல்நன்மான் திதியற் குரைத்தவர், இன்னுயிர்செருப்பக் கண்டுசின மாறிய, அன்னி மிஞிலி'என்பதனாற் போதரும். கொன்று-கொல்வித்து எனப்பிறவினையாகக் கொள்க.

இங்ஙனம் நிகழ்ந்தது அழுந்தூரில்என்பது, திதியன் அழுந்தை என்பதனாற் பெற்றாம்.நின் பிரிவால் யானும்இற்பரத்தை முதலாயினாரும்வருந்தும்படி செய்து, சேரிப் பரத்தையானவள்பெருமிதங் கொண்டிருக்கின்றாள் என்பாள், அன்னிமிஞிலியின் இயலும் நின்னலத் தகுவியை எனத்தலைமகள் கூறினாள். நின் நலத்தை நுகர்வதற்குத்தக்கவளாகிய அப் பரத்தையை முயங்கிய மார்பையாம் தீண்டுதலும் தகாதென்பாள் தொடு கலம்என்றும், குறுகவாரல் என்றும் கூறினள்.

(உ -றை) 'வராஅற் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம்மறந்து துஞ்சும்கொழுநர்க்குப்பாட்டியர்அமலைவெஞ்சோறு வைகறைஇடூஉம் ஊர' என்றது, தலைவன் இரவெல்லாம்பரத்தைக் குத் தன் மார்பினை நல்கி அவள் தரும்இன்பத்தை நுகர்ந்து, தலைவியை மறந்தொழுகி,விடியலில் தலைவியை நினைந்து வருகின்றான்என்றபடி.

197. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறீஇயது.]


(சொ - ள்.) 1-5. தோழி-, வாழி-, மாமலர் வண்ணம் இழந்த கண்ணும் -கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும், பூநெகிழ் அணையில் சாஅய தோளும் - அழகு நெகிழ்ந்துதிரைந்த அணை போன்ற மெலிந்த தோள்களும்(கொண்டு), நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்ததொல் நலம் இழந்த துயரமொடு - நன்மையுடையஅயமக்கள் விரும்பி ஆராயும் பழைய நலத்தினைஇழந்ததனாலாய துயரத்துடன், என்னதூஉம் இனையல் -சிறிதும் வருந்தாதே ;

10-7. தோள்தாழ்புஇருளிய குவை இரு கூந்தல் - தோள்களில் தாழ்ந்துஇருண்ட திரண்ட பெரியகூந்தலையுடைய, மடவோள்தழீஇய விறலோன் மார்பில்-மடப்பத்தையுடையமனைவியைத் தழுவியுள்ள மேம்பட்ட தலைவன்மார்பில், புன்தலைப் புதல்வன்ஊர்புஇழிந்தாங்கு-புல்லிய தலையினையுடைய புதல்வன்ஏறி இறங்குவது போன்று, கடுசூல் மடப்பிடி தழீஇயவெண்கோட்டு இனம் சால் வேழம்-நிறைந்தசூலினையுடைய இளைய பிடியினைத் தழுவிக்கிடந்தவெள்ளிய கோட்டினையுடைய இனத்துடன் கூடிய களிறு,கன்று ஊர்பு இழிதர-கன்று தம்மீதுஏறி இறங்க,பள்ளிகொள்ளும் பனிச்சுரம்நீந்தி-படுத்திருக்கும் நடுக்கத்தினைத்தரும்சுரநெறியைக் கடந்து, ஒள் இணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம் - ஒள்ளிய பூங்கொத்துக்களையுடையகொன்றை மரங்களையுடைய ஓங்கிய மலையையடுத்தநெறியில், வினைவலி யுறூம் நெஞ்சமொடு -பொருளீட்டும் வினையை வற்புறுக்கும் நெஞ்சத்தால்;

9. நின் நிரை வளைநெகிழ-நினது நிரைத்து வளைகள் நெகிழும் படி;

18. இனையர் ஆகிநம்பிரிந்திசினோர் - இங்ஙனம் அருளிலராகிநம்மைப் பிரிந்து சென்ற தலைவர்;

5 - 9. முனை எழமுன்னுவர் ஓட்டிய-போர்செய்ய முற்பட்டோரைஓட்டிய, முரண்மிகு திருவின்-வலிமிக்க வீரச்செல்வத்தினையும், மாமிகு தானை-வீரமிக்கபடையினையுமுடைய, கண்ணன் எழினி-கண்ணன் எழினிஎன்பானது, தேம்முது குன்றம்இறந்தனராயினும்-தேன்மிக்க முதுகன்றத்தினைக்கடந்துளராயினும், நீடலர்-நீட்டித் திராது வல்லேவந்துறுவர்.

(முடிபு) தோழி! வாழி! தொன்னலமிழந்த துயரமொடு இனையல்;பனிச்சுரம் நீந்தி. ஓங்குமலை அத்தம்வினைவலியுறூஉம் நெஞ்சமொடு, நின் நிரைவளை நெகிழஇனையராகி. நப் பிரிந்தசினோர், கண்ணன் எழினிமுதுகுன்றம் இறந்தனராயினும் நீடலர்.

(வி - ரை.) பூநெகிழ் அணை - நெகிழ்ச்சியுற்ற மலரணை என்றுமாம். அணை - தலையணை, கண்ணும் தோளும் கொண்டு எனஒருசொல் வருவித்துரைக்க. விழைவனர் ஆய்ந்தஎன்றது, தலைவியின் நலத்தை ஆராய்தல் அவர்க்குஓர் விளையாட்டு என்றபடி. யாழ, அசை. மடப் பிடிக்குமடவோளும் அதனைத் தழுவிய வேழத்திற்கு விறலோனும்அதன்மீது ஏறி இறங்கும் கன்றுக்குப் புதல்வனம்உவமம். கடுஞ்சூல் மடப்பிடி என்றமையால் சூலுற்றமடவோள் என்ற கொள்க. கடுஞ்சூல் முதற் சூலுமாம்.
----------

198. குறிஞ்சி

[புணர்ந்து நீங்கியதலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லியது.]


(சொ - ள்.) 18. என் நெஞ்சே-,

1-11. கரந்த காமம் - நங்மமுள்மறைந்துறையும் காமத்தினை, கூறுவம் கொல்லோகூறுலம் கொல் என - இவட்குக் கூறுவேமோ அன்றிக்கூறாது விடுவேமோ என்று இங்ஙனம் எண்ணி எண்ணி, கைநிறுக்கல்லாது-(முடிவில்) அடக்க இயலாது, நயந்து நாம்விட்ட நன் மொழ நம்பி - விரும்பி நாம்வெளியிட்டிரந்த இனிய மொழயை விரும்பி, அரை நாள்யாமத்து - பாதியிரவில், விழுமழை கரந்து-பெய்யும் மிக்க மழையில் மறைந்து, கார்விரை கமழும் கூந்தல்-கார் காலத்து மணம் கமழும்வந்தலுடன், தூ வினை நண் நூல் ஆகம் பொருந்தினள் -தூய தொழிற்பாடமைந்த நுண்ணிய நூலாலாகிய ஆடை தன்உடம்பின்கண்ணே பொருந்தப் பெற்றவளாய்,வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில்போல -மலையிடத்துள்ள இளமுகில் சூழ்ந்த மடப்பத்தையுடையமயில்போல, வண்டு வழிப் படர தண் மலர் வேய்ந்து -வண்டுகள் பின்னே தொடரக் குளிர்ந்த மலர்களைச்சூடி, வில் வகுப்பு உற்ற நல்வங்கு குடச்சூல் -வில்லினைப்போலும் வகை யமைந்தநன்மைபொருந்திய குடச்சூல் ஆகிய, அம் சிலம்புஒடுக்கி - அழகிய சிலம்பினை ஒலியாது அடக்கி,அஞ்சினள் வந்து - அச்சத்துடன் வந்து, ஊர் துஞ்சுயாமத்து - ஊர்முழுதும் துயிலும் யாமத் திலே,முயங்கினள் பெயர்வோள் - நம்மைத்தழுிமீள்வோள்;

12 - 3. -ன்ற கற்பில்சான்ற பெரிய அம் மா அரிவையோ அல்லள் - நிறைந்தகற்பினால் உயர்ந்த பெருமையுற்ற அழகிய மாமைநிறமுடைய பெண்ணோ அல்லள்;

13 - 7. தெனாஅதுஆஅயநல்நாட்டு அணங்க உடை சிலம்பில் -தெற்கின்கண் உள்ளதாகிய ஆய் என்பானது நல்லநாட்டில் தெய்வத்தையுடைய மலையில், கவிரம்பெயரிய உருகெழு கவான் - கவிரம் எனும் பெயரையுடையஅச்சம் பொருந்திய பக்கமலையில், நேர்மலர்நிறை சுனை உறையும் - மெல்லிய மலர்களையுடையநிறைந்த சுனையில் உறையும், சூர்மகள் என்னும் -சூரரமகளே யாவள் என்பேம்.

(முடிபு) என் நெஞ்சே! நாம் விட்ட நன்மொழி நம்பி, தண்மலர் வேய்ந்து அஞ்சிலம் பொடுக்கி,மடமயில்போல அஞ்சினள் வந்து யாமத்து முயங்கினள்பெயர்வோள் அரிவையோ அல்லள்; சனையுறையும்சூர்மகள் என்னும்.

(வி - ரை.) கூந்தலும் நுண்நூலாடையும், உடம்பின் பின்னம்முன்னும் பொருந்தியுள்ள தலைவியின் தோற்றம்,இளமேகம் சூழ்ந்த மயில் போல்வதாயிற் றென்க.குடச்சூல்-சூலுற்றதுபோல் புடைபடடிருக்கும் சிலம்பு.குடச்சூல் ஆகிய சிலம்பு என இருபெயரொட்டாகக்கொள்க. குடைச்சூல் எனப் பாடங் கொள்ளலுமாம்; 1'பசும்பொன்குடைச்சூல் சித்திரச் சிலம்பு' என்பது காண்க. 'வெளிப்பாட்டிற்குஅஞ்சிக் கரந்து சிலம்பொடுக்கி ஊர்துஞ்சு யாமத்துவந்து முயங்கிப் பெயர்வாள் ஆயினள்; அங்ஙனம்வந்து செல்வோளை ஓர் அரிவை யென்று கூறுதற்குஎளியள் அல்லள்; ஆகலின் அவளைச் சுனையுறையும்தெய்வம் என்பேம்;' என்று தலைவன் தன்நெஞ்சிற்கு வியந்து கூறினான் என்க. துஞ்சு ஊர்யாமம் என்பதனை ஊர் துஞ்சு யாமம் என மாறுக. ஏர்மலர் எனக்கெண்டு அழகிய மலர் என்றலுமாம்.என்னும்-என்பேம் என்னும் பொருட்டு.


(மே - ள்.) 1'பண்பில்பெயர்ப்பினும்' என்னுஞ் சூத்திரத்து இச்செய்யுளைகாட்டி, இது இரவுக் குறிக்கண் அவட்பெற்றுமலிந்ததுஎன்றும், 2'இரவுக்குறியே இல்லகத் துள்ளும், மனையோர் கிளவிகேட்கும் வழியதுவே' என்னுஞ் சூத்திரத்து, 'அஞ்சிலம்பொடுக்கி யங்சினள் வந்து, துஞ்சூர் யாமத்துமுயங்கினள் பெயர்வோள்' என வருவது 'மனையோர்கிளவி கேட்கும் வழியது' என்றும் கூறினர், நச்சினார்கினியர்.


199. பாலை

[பொருள் கடைக்கூட்டியநெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.]

(சொ - ள்.) 16. நெஞ்சே-,

1-13. கரை பாய் வெண்திரைகடுப்ப - கரைக்கண்ணே பாயும் வெள்ளிய அலையைஒப்ப, நிரை கால் ஒற்றலின் - வரிசையாக வரும்காற்று மோதுதலின், பல உடன் சேர்பு கல் உதிரும் -பலவும் ஒருங்கே சேர்ந்து பாறையில் உதிர்கின்ற,வரை சேர் மராஅத்து ஊழ் மலர் - மலையின்கண்பொருந்திய வெண்கடம்பின் முற்றிய மலரை, பெயல்செத்து - மழையென்று கருதி, உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர-நீர் வேட்கையால் வருந்துதலையுடைடயயனை அதைதை் தணித் தற்குச் சென்ற சுழல, சிலம்பிவலந்த வறுசினை வற்றல் - சிலம்பி நூல்பின்னப்பெற்ற வறிய சினையினையுடைய வற்றல்ஆகிய, அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ-அசைகின்றமரங்களின் அறல்பட்ட நிழலில் தங்கி, திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை - வாடிய மரைகை்கவ்விய செயலற்ற கூட்டத்தில் (புகுந்து), அரம் தின்ஊசி திரள் நுதி அன்ன - அரத்தால் அராவப்பட்டஊசியின் திரண்ட முனையை யொத்த, திண் நிலைஎயிற்ற செந்நாய் எடுத்தலின்-உறுதி பொருந்தியபற்களையுடைய செந்நாய்தாக்குதலின், வளிமுனைப்பூளையின் ஒய் என்று அலறிய - காற்றின்முன் பூளைப்பூவென விரைந்து அலறி யோடிய, கெடுமான் இனநிரைதரீஇய - காணாதொழிந்த தன் இன மாகியமான்கூட்டத்தைக் கூட்டற்கு, கலை - கலைமான்,கதிர்மாய் மாலை - ஞாயிறு மறைந்தமாலைப்போழ்தில், ஆண் குரல் விளிக்கும் - தனதுஆண் குரல் தோன்ற அழைக்கும், கடல் ோல் கானம்பிற்பட-கடல்போல் அகன்ற காடு பின்னே போக;

13-6. பிறர்போல் -ஏதிலரைப்போல, செல்வேம் ஆயின் எம் செலவு நன்றுஎன்னும் - நம் தலைவியைப் பிரிந்து போவேமாயின்எமது போக்கு நன்றாகும் என்றெண்ணும், ஆசை உள்ளம்அசைவு இன்று துரப்ப - பொருளாசையுற்ற நின் உள்ளம்தளர்தலின்றிச் செலுத்த, நீ செலற்கு உரியை நீசெல்லுதற்கு உரியை ஆவாய்;

16-24. யானே - யானோ,வேய்போல் தடையின மன்னும்-மூங்கிலைப்போலவளைந்தனவாகிப் பொருந்தும், தண்ணிய திரண்டபெருதோள் அரிவை ஒழிய - குளிர்ந்த திரண்ட பெரியதோளினையுடைய நம் தலைவி (இவண் தனித்து) ஒழிய,வலம்படு கொற்றம் தந்த வாய் வாள் - வென்றவெற்றியினைத் தந்த வாய்தத வாளினையுடைய,களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்-களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன்,குடாஅது இரும்பொன் வாகை பெரந்துறைச் செருவில் - மேற்கின்கண்ணதாகிய பெரியபொன்னினையுடைய வாகை மரம்நிற்கம் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்தபோரில், பொலம்பூண் நன்னன் - பொற்பூண் அணிந்தநன்னன் என்பவன், பொருது களத்து ஒழிய-போர்செய்து களத்தில் மடிய, இழந்த நாடு தந்தன்ன - தான்முன்பு இழந்த நாட்டைப் பெற்றாலொத்த,வளம்பெரிது பெறினும் - பெரிய செல்வத்தைப்பெறுவதாயினும், வாரலென் - வருவேன் அல்லேன்.

(முடிபு) நெஞ்சே! பிறர்போல் (தலைவியைப் பிரிந்து)செல்வே மாயின் எம் செலவு நன்றென்னும்ஆசையுள்ளம் துரப்ப; கடல்போல் கானம் பிற்பட நீசெலற்கரியை; யான் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வாகைப் பெருந்துறைச் செருவில் நன்னனானவன்பொருது களத்து ஒழிந்தமையால், தான் இழந்த நாடுதந்தன்ன வளம் பெரிது பெறினும் பெருந்தோள்அரிவை ஒழிய வாரலென்.

(வி - ரை.) நிரை நிரையாக மராமரத்தின்மேற் பாய்ந்துகலக்கும் காற்றிற்கு முறை முறையாகக் கரையிற்பாயயும் திரை உவமையாகும். மராஅத்து உதிரும மலர்எனக் வட்டுக. நீர் நசைக்கு-நீர் நசையால்.வறுஞ்சினை - தழையற்ற கிளை. வற்றல் - வற்றியமரங்கள். உலவை-மரச்செறிவு. காட்டின் விரிவுதோன்றக் கடல்போல் கானம் என்றார்.அன்புடையார் பிரியக் கருதாராகலின் பிறர்போல்செல்வோமாயின் என்றான். பிறர்போல் நீசெலற்கு உரியை என்ற இயைத் துரைத் தலுமாம்.வாகைமரம் நிற்றலின், பெருந்துறையானது வாகைப்பறந்தலை எனவும் படும்; இவ்வ்ாகையானது நன்னன்காவல்மரம் என்பதும், அதனை நார்முடிச்சேரல்தடிந்தான் என்பதும், 1'பொன்னங்கண்ணிப் பொலந்தேர் நன்னர், சுடர்வீ வாகைக்கடிமுதல் தடிந்த, தார்மிக மைந்தின் நார்முடிச்சேரல்' என்பதனால் அறியப்படும். 2'உருள்பூங்கடம்பின் பெருவாயில் நன்னனை, நிலைச் செருவின்ஆற்றலை யறத்தவன், பொன்படுவாகை முழுமுதல் தடிந்து'என்பதனால் கடம்பின் பெருவாயில் என்பதும்வாகைப்பெருந்துறை என்பதும் ஓரிடத்தையேகுறிப்பனபோலும். கடம்பின் பெருவாயில் நன்னன்ஊர் என்பர் பதிற்றப்பத்து உரையாசிரியர்.களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும்பெயர்க்குக் காரணம் கூறுவாராய்ப் பதிற்றுப்பத்துஉரையாசிரியர் 3'களங்காய்க்கண்ணி நார்முடி என்றது, களங்காயாற் செய்தகண்ணியும் நாராற் செய்த முடியும் என்றவாறு'எனவும், 'தான் முடி சூடுகின்ற காலத்து ஒருகாரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும்உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால்முடியும் செய்து கொள்ளப்பட்டன என்றவாறு' எனவும்உரைத்தார். இழந்தநாடு தந்தன்ன என்றதனால், முன் நன்னன்பால் இழந்த நாட்டை மீளப்பெற்றனன் என்பத போதரும். நாடு தந்தன்ன வளம்என்றிருப்பினும் தந்த நாடு போலும் வளம் என்பதுகருத்தாகக் கொள்க.

----------

(மே - ள்.) 1'செலவிடைஅழுங்கல் செல்லாமை யன்றே' என்னுஞ் சூத்திரத்து,'களங்காய்க்கண்ணி. . . . . . வாரலென் யானே'என்னும் அடிகளைக் காட்டி, இவை வன்புறை குறித்துச்செலவழுங்குதலின் பாலையாயிற்று என்றார். நச்சினார்கினியர்.


200. நெய்தல்

[தலைமகள் குறிப்பறிந்ததோழி தலைமகற்குக் குறைநயப்பக் கூறியது.]

(சொ - ள்.) 7. வளைமேய் பரப்ப - சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே!

1-7. நிலாவின்இலங்கு மணல் மலி மறுகின் - நிலாவைப் போலவிளங்கும் மணல் மிக்க தெருவிலுள்ள, புல்வேய்குரம்பை - புல்லால் வேயப்பெற்ற குடிசைகளையுடைய,புலால் அம் சேரி-புலால் நாறும் சேரியாகிய எம்பதி, ஊர் என உணராச் சிறுமையொடு-ஓர் ஊர் என்றுஉணரலாகாத சிறுமையினதாய், நீர் உடுத்து - நீர்குழப்பெற்று, இன்னா உறையுட்டு ஆயினும்- பெலிவற்ற உறையுளையுடைய தாயினும், இன்பம்-இன்பம்தருமாற்றால், ஒருநாள்உறைந்திசினோர்க்கும்-ஒருநாள்தங்கியிருந்தார்க்கும், வழி நாள்-பிற்றை நாள்,தம்பதி மறக்கும் பண்பின் - தம்முடைய பதியினையேமறந்திடச் செய்யும் பண்பினையுடைமையால், எம்பதி - எமது அப்பதிக்கு, வந்தனை சென்மோ - வந்துசெல்வாயாக;

8-14. பொம்மல்படுதிரை கம் என உடைதரும்-பொலிவுற்ற ஒலிக்கும்அலை விரைந்து சிதர்ந்திடும், மரன் ஓங்கு ஒருசிறை -மரம் ஓங்கிய ஒரு பக்கத்தே, பலபாராட்டி - பலவாயநின் குணங்களை யாங்கள் பாராட்ட, எல்லை எம்மொடுகழிப்பி - பகற்பொழுதினை எம்முடனிருந்து கழித்து,எல் உற - இரவு உறங்கால், நல்தேர் பூட்டலும்உரியீர் - நுமது நல்ல தேரினைப் பூட்டிச்செல்லுதற்கும் உரியீராவிர்;அற்றன்று-அதுவேயுமன்றி, சேர்ந்தனிர் செல்குவிர்ஆயின் - இரவில் எம் பதியில் தங்கிச்செல்லுவீராயின், யாமும் எம்வரை அளவையில்பெட்குவம் - யாங்களும் எங்களுக்கு இயன்ற அளவில்பேணுதல் செய்வேம்; நும் ஒப்பதுவோ - (இது) நும்கருத்திற்கிசைவதாமோ? எமக்கு உரைத்திசின் -எமக்குக் கூறுவீராக.

(முடிபு) எம் சேரி இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் ஒருநாள் உறைந்திசினோர்க்கும் வழிநாள் தம்பதிமறக்கும் பண்பினையுடைய மையால், எம்பதி வந்தனைசென்மோ; எல்லை எம்மொடு கழப்பி எல்லுற நல்தேர்பூட்டலும் உரியீர்; அற்றன்று, சேர்ந்தனிர்செல்குவிர் ஆயின், யாமும் எம் வரை அளவையிற்பெட்கவம்; நும் ஒப்பதுவோ எமக்கு உரைத்திசின்.

(வி - ரை.) புல்வேய் குரம்பை: புல் - பனைமட்டை முதலியன. புலால்நாறுதலானும், புல்வேய் குரம்பை யுடைமையானும்,நீர்உடுத்த லானும், சேரி இன்னா உறையுட்டு ஆயிற்று.அன்னதாயினும் அன்புடையாருடன் கூடி நுகரும் இன்பம்பெரிதுடையது என்பாள். 'இன்பம், ஒரு நாள்உறைந்திசினோர்க்கும் வழிநாள், தம் பதிமறக்கம் பண்பின் எம் பதி' என்றாள். ஒரு நாள்உறைந்திசினோர்க்கும் என்பதனால், பலநாள்உறைவார் பெறும் இன்பம் கூறவேண்டாதாயிற்று.பாராட்டி-பாராட்ட எனத் திரிக்க. நல்தேர்பூட்டலும் என்றது, அதன் காரிய மாகிய செல்கையைஉணர்த்திற்று. அற்றன்று-அஃதன்றி, வந்துசெல்லுதல்என்னும் பொதுமை கருதி இரண்டினையும் ஒப்பதுவோ எனஒருமையாற் கூறினாள்.
---------------

201. பாலை

[பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது.]

(சொ - ள்.) 1-12. தோழி-, வாழி-, அம்ம - நான் கூறுவதனைக்கேட்பாயாக; பொன்னின் அவிர் எழில்நுடங்கும்-பொன்னினாலாகிய விட்டு விளங்கும்அழகியஒளி அசையும், அணிகிளர் ஓடை - அழுகுமிக்கநெற்றிப் பட்டத்தினையுடைய, வினை நவில் யானை -ோர்ச் செயலிற் பயின்ற யானைகளையுடைய,விறல்போர்ப் பாண்டியன் - போரில்வெற்றிகொள்ளும் பாண்டியனது, புகழ்மலி சிறப்பின்கொற்கை முன்துறை-புகழ்மிக்க சிறப்பினையுடையகொற்கைப் பதியின் கடற்றுறையிலே, அவிர் கதிர்முதமொடு வலம்புரி சொரிந்து-விளங்கும்ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச்சங்கினையும் சொரிந்து, தழை அணிப் பொலிந்தகோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் - தழையுடைஅணிதலாற் பொலிவுற்ற பக்கம் உயர்ந்தஅல்குலினையுடைய பழையரது பெண்டிர், பனித்துறை பரவ -குளிர்ந்ததுறைக்கண் தெய்வத்தினைப் பரவாநிற்க,பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை-ஞாயிறு மறைந்தஅந்தியாகிய அரிய போழ்திலே, உருகெழு பெருங் கடல்உவவுக் கிளர்ந்தாங்கு-அச்சம் பொருந்திய பெரியகடலானது நிறைமதி நாளில் ஆரவாரித்தெழுந்தாற்போல, அலரும் மன்று பட்டன்று-
(ஊரார்கூறும்) அலரும் மன்றின்கண் பரவியது, அன்னையும்பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும்-தாயும்கண்துயிலாளாய் வெம்மையுடையனவாக மூச்செறியும்,என்று-என்று இங்ஙனம் வறி, எவன் கையற்றனை-ஏன்செயலற்றனை?
---------

12. இகுளை - தோழியே!

14-9. முனாஅது - பழையதாகிய, வான் புகு தலைய குன்றத் துக் கவாஅன்-வானில் ஓங்கிய உச்சியினையுடைய மலையின் சாரற் கண்ணே, பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை - பெரிய கையினையும் பிளந்த வாயினையுமுடைய ஆண் கரடி, இருள் துணிந்தன்ன குவவு மயிர்க்குருளை - இருளைத் துணித்து வைத்தாற் போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும், தோல்முலைப் பிணவொடு - திரங்கிய முலையினையுடைய பெண் கரடியுடனும், திளைக்கும் - மகிழ்ந்திருக்கும், வேனில் நீடிய சுரன் இறந்தோர்-வெம்மைமிக்க பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்;

12-4. சோழர் வெண்நெல் வைப்பின் நல்நாடு பெறினும் - சோழ மன்னரது வெண்ணெல் விளையும் ஊர்களையுடய நல்ல நாட்டினையே பெறுவதாயினும், ஆண்டு அமைந்துஉறைநர் அல்லர்-அங்கே மனமுவந்து தங்கிவிடுவாரல்லர்.

(முடிபு) தோழி! வாழி! அம்ம: ‘பெருங்கடல் உவவுக் கிளர்ந் தாங்கு அலரும் மன்று பட்டன்று; அன்னையும் வெய்ய உயிர்க்கும்’ என்று எவன் கையற்றனை; இகுளை! சுரனிறந்தோர், சோழர் நல்நாடு பெறினும், ஆண்டு அமைந்து உறைநர் அல்லர்.

(வி - ரை.) முத்தமொடு வலம்புரி சொரிந்து என்றமையால், அவற்றைப் பெறுதற்கிடனாகிய கொற்கைத் துறையின்சிறப்புக்கூறிய வாறாயிற்று. பழையர்-நெய்தல் நிலமாக்கள்: கள் விற்பவர். பழையர் மகளிர் உவாநாளிலே முத்தையும் வலம்புரியையுஞ் சொரிந்து கடற்றெய்வத்தைப் பரவுவாரென்க. உவா நாளிற் கடல் பொங்கி எழுமா கலின் பெருங்கடல் உவவுக் கிளிர்ந்தாங்கு என்றார். உவவு:குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெற்று முடிந்தது. அலரும், அன்னையும் எச்சவும்மைகள். சோழரது நல்நாடு போலும் பொருளை ஆண்டுப் பெறுவதாயினும் என்பது கருத்தாகக்கொள்க. எண்கின் ஏற்றை குருளையொடும் பிணவொடும் திளைக்கும் என்றது, அன்புறு தகுந வாகிய அவற்றைக் கண்டு, தலைவர் விரைவில் மீள்வர் என்று குறித்து வாறாகும்.

202. குறிஞ்சி

[இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.]

(சொ - ள்.) 1-8. வயங்கு வெள் அருவிய குன்றத்து கவான்-விளங்கும்வெள்ளிய அருவியினையுடைய மலையின் சாரற்கண்ணே,கயம் தலை மடப்பிடி இனன் ஏம் ஆர்ப்ப - மெல்லியதலையினையுடைய இளைய பிடி இனத்துடன் இன்பமடைய, புலிபகை வென்ற புண்கூர் யானை-புலியாகிய பகையைவென்றபுண் மிக்க ஆண் யானை, கல் அகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின் - கற்களை இடத்தே கொண்டபக்க மலையில் கையை யுயர்த்திப்பெருமூச்செறிதலால், நல்இணர் வேங்கை நறுவீ - வேங்கைமரத்தினது நல்ல கொத்துக்களிலுள்ள நறுமணமுடையபூக்கள், கொல்லன் குருகு ஊது மிதிஉலைப்பிதிர்வில் பொங்கி - கொல்லன் குருகு ஊதுமிதிஉலைப் பிதிர்வில் பொங்கி - கொல்லன்துருத்தியை மிதித்து ஊதும் உலையிற் பிதிர்ந்துஎழும் தீப்பொறி போலப் பொங்கி எழுந்து, சிறுபல்மின்மினி போல-சிறிய பலவாய மின்மினிப்பூச்சிகளைப் போல, பலவுடன் மணி நிற இரும்புதல்தாவும்-பலவும் ஒருங்கே நீலமணியின் நிறத்தினைஒத்த பெரிய புதரில் பரவி விழும்,நாட-நாட்டையுடைய தலைவனே!

9-15. பானாள் - நடுஇரவில், அரவின் உத்தி பை தலை துமிய - பாம்பினதுபுள்ளிகளையுடைய படம் பொருந்திய தலை துணி பட, உரவுஉருமு உரறம் உட்குவரு நனந்தலை - வலிய இடியானதுமுழங்கும் அச்சம் வரும் அகன்ற இடத்தே, தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாக - ஊக்கம்குன்றுதலில்லாத உள்ளத்துடன் வேலே துணையாக, கனைஇருள் பரந்த கல்அதர் சிறுநெறி - செறிந்த இருள்பரவிய
கற்களையுடைய வழியாகியஒடுங்கிய நெறியில்,தேராதுவரூஉம் நின்வயின் - ஏதத்தை ஆராயாது
வரும்நின்னிடத்து, ஆர் அஞர் அரும்
-----------
(பாடம்) 1. ஆவூர்கிழார் மள்ளனாகனார்.
---------
படர் நீந்துவோர் -பொறுத்தற்கரிய துன்பமாகிய அரிய நினைவினைநீந்துவோர், யாமே அன்றியும் உளர்கொல் -எம்மையன்றிப் பிறரும் உளரோ?

(முடிபு) நாட! சிறுநெறி தோரது வரும் நின்வயின், ஆர்அஞர்அரும்படர் நீந்துவோர் யாமே அன்றியும் உளரோ?யானைஉயிர்ப்பின் வேங்கை நறுவீ பொங்கி மின்மினிபோலப் புதல் தாவும் நாட என்க.

(வி - ரை.) உயிர்ப்பின் - உயிர்த்தலால். பிதிர்வு -பிதிர்கின்ற தீப்பொறி. படர்-துயர் நினைவு.நீந்துவோர்
என்றதனால் நினைவாகிய வெள்ளம்என்பது பெற்றாம். நீ இரவுக் குறிக்கண் வருதலால்யாம் துன்புறுதல்போலத் துன்புறுவார் பிறர் இலர்என்பாள், நீந்துவோர் யாமே யன்றியும்உளர்கொல் என்றாள்; அதனால், எமது துன்பம் நீங்கவிரைவில் வரைந்து கொள்க என வரைவு கடாயினாளாம்.

(உ - றை.) புலிப்பகை வென்ற யானை யுயிர்ப்பின் வேங்கைவீமின்மினிபோலப் புதல் தாவும் என்றது, தலைவன்இடையீட்டினைக் கடந்து இரவுக் குறிக்கண் வருதலால்ஊரெங்கும் அலர் எழுகின்றத என்றபடி.

203. பாலை

[மகட் போக்கிய 1தாய்சொல்லியது.]

(சொ - ள்.) 1-5. உவக்குநள் ஆயினும் உடலுகள் ஆயினும்-உவப்புஅடைவாள் ஆயினும் மாறுபடுவாள் ஆயினும், யாய்அறிந்து உணர என்னார்-தாய் ஆய்ந்துஉணர்க என்று கருதாராய், அலர் வினை மேவல் அம்பல்பெண்டிர்-கொடிய வாயால் அலர் கூறுந்தொழிலையேவிருபுதலுடைய புறங்கூறும் பெண்டிர்கள், நின்மகள்இன்னள்இனையள் என-நின் மகள் இன்ன தன்மையள்இனைய தன்மையள் என்று, பல் நாள் எனக்கு வந்துஉரைப்பவும் - பல நாளும் என்பால் வந்து கூறவும்;

5-7. நாணுவள் இவள் என- இவள் நாணுவாள் என்று எண்ணி; தனக்கு உரைப்புஅறியேன் - அவளுக்கு உரைத்தல் செய்யேனாய்,நனிகரந்து உறையும்-மிகவும் மறைத்து ஒழுகும்,யான்இவ் வறுமனை ஒழிய - யான் இந்த வறிய மனையில்ஒழிந்திட;

7-11. தான் - என்மகள், அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை - என்அன்னை அறியின் இங்கத் தலைவனுடன் களவிற்கூடியுறையும் வாழ்க்கை, எனக்கு எளிதாகஇல் என -எனக்கு எளிய தொன்றாதல் இல்லை என்றுஎண்ணினமையால், கழற்கால் மின் ஒளிர் நெடுவேல்இளையோன் முன்உற-கழலினைத் தரித்த காலையும்மின் பேல ஒளிவிடும் நீண்டவேலையுமுடைய இளமைப்பருவமுடைய தன் தலைவன் முன்னே ஏக, பல் மலை அரு சுரம்போகிய தனக்கு-பல மலை களையுடைய அரிய காட்டினைக்கடந்து சென்ற அவளுக்கு;

11-4. யான் அன்னேன்அன்மை நன் வாயாக-யான் அத்தன் மையினேன்அல்லாமை மிக்க உண்மையாதல் தோன்ற, மான் அதர்மயங்கிய மலைமுதல் சிறு நெறி-விலங்குகள்செல்லும்நெறிகள் பின்னிக் கிடக்கும்மலையடியிற்சிறிய நெறிகளில், வெய்துஇடையுறாதுமுன்னர் எய்தி - இடையே தீங்கு உண்டாகாதவாறுஅவர்கட்கு முன்னரே சென்று சேர்ந்து, புல் என் மாமலை புலம்பு கொள் சீறூர்- பொலிவற் றிருக்கும்பெரிய மலையைச்சார்ந்த தனிமைகொண்ட சிறியஊரில், செல் விருந்து ஆற்றி - வரும் விருந்தாகஏற்று அவர்களை உண்பித்து, துச்சில் இருத்த -தங்குமடத்தில் இருக்கச் செய்ய;

17-8. நுனை குழைத்துஅலமரும் நொச்சி - முனைகள் தளிர்க்கப் பெற்றுஅசைந்திடும் நொச்சி சூழ்ந்த, மனைகெழு பெண்டயான் ஆகுக - மனைக்குரிய பெண்டாக யான் ஆவேனாக.

(முடிபு) அம்பல் பெண்டிர் இன்னன் நின் மகளெனப் பன்னாள்எனக்கு வந்து உரைப்பவும் (அவள்) தனக்குஉரைப்பறியேன் கரந்துறையும் யான் வறுமனை ஒழிய,இளையோன் முன்னுற அருஞ்சுரம் போகிய
தனக்கு, யான்அன்னேன் அன்மை வாயாக, சிறுநெறி எய்திச்சீறூர்ச் செல் விருந்தாற்றித் துச்சிலிருத்த,மனைகெழு பெண்டு யானாகுக.

(வி - ரை.) இன்னள் இனையள்: ஒரு பொருள் குறித்த சொன்னடை.அம்பற் பெண்டிரது கொடுமை கூறுவாள், அவர் புறத்தேஉரைத்தலன்றிப் பின்னாள் என்பால் வந்து,நின்மகள் இனையளென உரைத்தார் என்றும்,அதனைக்கேட்டும் தன் மகள் நாணால் வருந்தாத படி,அவளுக்கு உரையாமையே யன்றி எவ்வாற்றாலும்அதுபுலப்படா மல் தான் மறைத்தலும் செய்த அருமைதோன்றத், ‘தனக் குரைப்பறியேன் நாணுவள் இவளெனநனிகரந் துறையும் யான்’ என்றும் கூறினாள். தன்மகள் நீங்கிய மனை சிறிதும் பொலிவின்றி வறுவியமனையாகத் தோன்றலின், யான் இவ் வறுமனை யொழியஎன்றாள். அருஞ்சுரம் போயினாள்; அங்ஙனம் போகியதனக்கு என வேறு அறுத்து உரைக்க. அவள் தலைவனொடுநுகரும் இன்பத்தை உணர்ந்த நான் வெறாமையே யன்றிஉவத்தலும் செய்தல் முழு உண்மையாதலை இவ்வாறன்றிவெளிப்படுத்தல் அரிதென்பாள், ‘யான்அன்னேனன்மை நன்வாயாகச், சீறூர்ச் செல்விருந்தாற்றித் துச்சிலிருத்த மனைகெழு பெண்டி யானாகுக’என்றாள். மன்: அசைநிலை; ஒழியிசையுமாம்.

204. முல்லை

[வினைமுற்றிய தலைமகன்தேர்ப்பாகற்குச் சொல்லியது.]
(சொ - ள்.) 9.பாக - பாகனே!

1-4. உலகு உடன்நிழற்றிய தொலையா வெண்குடை - உலக முழுதும் நிழல்செய்த கெடாத வெண்கொற்றக் குடையினையும்,கடல்போல் தானை-கடல்போன்ற சேனையினையும், கலிமா-செருக்கிய குதிரையினையுமுடைய, வழுதி - பாண்டியள்,வென்று அமர் உழந்த வியன் பெரு பாசறைச் சென்று -போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறைக்கண்ணே சென்று, வினை முடித்தனம் ஆயின் - வினையைவெற்றிபெற முடித்தோம் ஆதலானும்;

5-8. கார் பெயற்குஎதிரிய காண்தகு புறவில்-கார்காலத்தின் மழையைஏற்றுக்கொண்டு (தழைத்த) காண்டற்கு இனியகாட்டில், கணம் கொள் வண்டின் அம் சிறைத்தொழுதி - கூட்டம் கூட்டமாக வரும் அழகியசிறையினையுடைய வண்டின் தொகுதி, மணம் கமழ முல்லைமாலை ஆர்ப்ப-மணம் வீசும் முல்லை மலரில் மாலைக்காலத்தே ஆரவாரிக்க, பொழுது உதுக்காண்வந்தன்று-உதோ, கார் காலம் வந்து விட்டது(ஆதலானும்);

10-4. வெண்நெல்அரிநர்-வெண்ணெல்லை அரிவோர் (அடிக்கும்),மடிவாய் தண்ணுமை-தோல் மடங்கியவாயினையுடையகிணையின் ஒலி, பல் மலர்ப் பொய்கைபடுபுள் ஒப்பும்-பல மலர்களையுடைய பொய்கையில்பொருந்திய பறவைகளை ஓட்டும், காய் நெல்படப்பை-விளைந்த நெற்களையுடைய வயல்களையுடைய,வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல்-வாணனதுசிறுகுடியிலுள்ள சோலை என மணக்கும் கூந்தலையும், ஒள்தொடி-ஒளி பொருந்திய வளையலையும் உடைய, மடந்தைதோள் இணைபெற - நம் தலைவியின் தோளிணையைமுயங்குதற்கு;

4. இன்றே -இப்பொழுதே;

8-9. நின் நல் வினைநெடு தேர் - நினத நல்ல தொழிற் றிறம் அமைந்தநீண்ட தேர், வல் விரைந்து செல்க - மிக விரைந்துசெல்லுவதாக;

(முடிபு) பாக! வழுதி பாசறை வினை முடித்தனம் ஆதலானும், உதோபொழுது வந்தன்று (ஆதலானும்), மடந்தை தோளிணை பெற,நெடுந்தேர் விரைந்து செல்க.

(வி - ரை.) அரசனது வெற்றியைக் குடைக்கு ஏற்றி, கொற்றக் குடைஎன்பவாகலின் தொலையா வெண்கடை என்றார். வென்றுஅமர் உழந்த-அமர் உழந்து வென்ற என மாறுக.முடித்தனம் ஆயின்-முடித்தனம் ஆதலால் என்க. ஆதலால்என்பதனைப் பின்னுங்கூட்டி, முடித்தனம் ஆதலானும்,பொழுது வந்தன்று ஆதலானம் என உரைத்துக் கொள்க.வண்டாகிய தொழுதி என்க. உதுக்காண் - உதோ தேர்வல் விரைந்து செல்க என்றது, செல்லுமாறு செலுத்துகஎன்றபடி.

205. பாலை

[தலைமகன் பிரிவின்கண்வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச்சொல்லியது.]

(சொ - ள்.) 1-7. (தோழி!), தாம் - நம் தலைவர், உயிர் கலந்துஒன்றிய தொன்றுபடு நட்பில்-உயிருடன் கலந்துபொருந்திய பல பிறவிகளினும் தொடர்ந்து வரும்நட்பினால், செயிர்தீர் நெஞ்ச மொடுசெறிந்தோர்போல-குற்றமற்றநெஞ்சத்தால்கலந்தோர்போல, தையல் - பெண்ணே,நின்வயின் பிரியலம் யாம் என -நின்னிடத்தினின் றும் யாம் என்றும் பிரியேம்என்று, பொய் வல் உள்ளமொடு புரிவுணக்கூறி-பொய்மிக்க உள்ளத்தால் யாம் விரும்புமாறுகூறி, துணிவுஇல் கொள்கையராகி - உறுதியில்லாதகொள்கையினராகி, இனி-இப்பொழுது, நோய்மலிவருத்தமொடு நுதல் பசப்பு ஊர-துன்பம் மிக்கவருத்தத்தால் நமது நெற்றியிற் பசலை பரக்கவும்,நாம்அழ-நாம் அழவும், துறந்தனராயினும்-நம்மைப்பிரிந்து சென்றாராயினும்;

15-24. மழை கால்அற்சிரத்து மால் இருள் நீங்கி - மழையென்னப்பெய்யும் முன்பனிப் பருவத்து மயக்கத்தினைத் தரும்இருள் நீங்க, நீடு அமை நிவந்த நிழல்படுசிலம்பில்-நீண்ட மூங்கில் உயர்ந்தநிழல்பொருந்திய பக்க மலையில், கடாஅ யானைக்கவுள் மருங்கு உறழ-மதக்களிற்றினது கவுளின்பக்கத்தினை யொப்ப, -ம் ஊர்பு இழிதருகாமர்சென்னி-நீர் ஊர்ந்து இறங்கும் அழகியஉச்சிமலையில், புலி உரி வரி அதள் கடுப்ப -புலியின் உரியாகிய வரிகளையுடைய தோலை யொப்ப,நாள்பூ வேங்கை நறுமலர் உதிர-மணநாளைக் காட்டும்பூக்களாய வேங்கையின் நறிய பூக்கள் உதிர்ந்திட,கலிசிறந்து மேக்கு எழு பெரு சினை ஏறி - செருக்குமிக்கு அல்வேங்கையின் மேனோக்கி யெழுந்த பெரியகிளையில் ஏறி, கண கலை - கூட்டமாய ஆண் குரங்குகள்,கூப்பிடூஉ உகளும்-தம் இனங்களைக் கூப்பிட்டுத்தாவும், குன்றகச் சிறுநெறி-குன்றிடையேசெல்லும்சிறிய நெறியாகிய, கல் பிறங்கு -ர்இடைவிலங்கிய-கற்கள் விளங்கிய அரிய இடங்கள்குறுக்கிட்ட, சொல்பெயர் தேஎத்த சுரன்இறந்தோர்-மொழி வேறுபடட தேயங்களிலுள்ளபாலையைக் கடந்து சென்ற அவர்;

8-14. வாய்மொழிநிலைஇய சேண் விளங்கு நல் இசை-உண்மை நிலைபெற்றநெடுந்தூரத்து விளங்கும்நல்ல புகழினையுடைய,வளங்கெழு கோசர்-செல்வம் மிக்க கோசர்களது,விளங்கு படை நூறி - விளக்கமுற்ற படையினை அழித்து,நிலம்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி - அவர்கள்நிலத்தைக் கைக்கொள்ள விரும்பியபொற்பூணையுடைய சோழனது, பூவிரி நெடுங்கழிநாப்பண் - பூக்கள் விரிந்த நீண்ட கழியின் நடுவே,படப்பை - தோட்டங்களையுடைய, பெரும் பெயர்க் காவிரிப்பட்டினத்து அன்ன - பெரிய புகழையுடையகாவிரிப்பூம்பட்டினத்தை யொத்த, செழுநகர் -வளவிய நம் இல்லில், நல்விருந்து அயர்மார் - நல்லவிருந்தாற்றதற்கு, ஏம் உற - இன்பம் உண்டாக,விழுநிதி எளிதினின் எய்துக-சிறந்த பொருளைஎளிதினில் அடைவாராக.

(முடிபு) தோழி! நம் தலைவர், ‘தையல்! நின் வயிற்பிரியலம் யாம்’ எனக்கூறி, நுதல் பசப்பூர நாம்அழத் துறந்தனராயினும், சொற்பெயர் தேஎத்த சுரன்இறந்தோராய அவர், காவிரிப் பட்டினத்தன்ன செழுநகர் நல்விருந் தயர்மார் ஏமுற விழுநிதிஎளிதினின் எய்துக;சிலம்பில்ஆமூர்பு இழிதரு சென்னியில் வேங்கை மலர் உதிர,பெருஞ்சினை ஏறிக் கணக்கலை உகளும் குன்றகச்சிறுநெறியாய ஆரிடை விலங்கிய சுரன் என்க.

(வி - ரை.) தொன்றுபடு நட்பு-பழமை பொருந்திய நட்பு; பலபிறவிகளினும் தொடர்ந்து வரும் நட்பு என்றபடி.கழிநாப்பண் படப் பையையுடைய காவிரிப்பட்டினம்என்க. தில்ல: விழைவுப்பொருட்டு. அற்சிரத்துமாலிருள் நீங்கி எனவே பின்பனியும் வேனிலும்போந்தமை பெற்றாம். நீங்கி-நீங்க எனத்திரிக்க. அருவி நீரொழுகும் மலையின் சென்னிக்குமதஞ் சிந்தும் யானையின் கவுள் உவமையாகக்கூறப்பட்டது; 1'மலைபடுகடாஅம் மாதிரத்து இயம்ப’ என்னும் தொடரும்,அதன் சிறப்பால் உத்தராற்றுப்படை மலைபடுகடாம்எனப் பெயர் எய்தியதும் ஈண்டு அறியற்பாலன. நாட்பூ- புதியபூ என்றுமாம்.

206. மருதம்

[வாயில் வேண்டிச் சென்றவிறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்து.]

(சொ - ள்.) 1-6. தோழி-, நல் மகிழ் - நல்ல களிப்புடன்,பேடிப்பெண் காண்டு-பேடியாகிய பெணணின் உருவம்பூண்டு, ஆடு கை கடுப்ப - ஆடுவானது பின்சென்றுமேல்வளைந்த கையை யொப்ப, நரகுவப் பணைத்த திரிமருப்பு எருமை - விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்டகொம்பினையுடைய எருமையின், மயிர்க்கவின் கொண்ட மா தோல் இரு புறம்-மயிரால் அழகுபெற்றகரிய தோலினையுடைய பெரிய முதுகில், சிறுதொழில்மகாஅர் ஏறி- குறுந்தொழில்களைச் செய்யும்சிறுவர்கள் ஏறி, சேணோர்க்கு துற கல் மந்தியில்தோன்றும் ஊரன் – சேய்மையிலுள்ளார்க்கு உருண்டைக் கல்லின் மீதுள்ள மந்திபோலக்காணப்படும் ஊரனாகிய நம் தலைவன்;

7-12. மாரி ஈங்கை மாதளிர் அன்ன - மாரிக் காலத்து ஈங்கைச் செடியிற்றோன்றும் சிறந்த தளிரினை ஒத்த, அம் மா மேனிஆய் இழை மகளிர் - அழகிய மாமை நிறத்தினையுடையமேனியினையும் ஆய்ந்த அணியினையுமுடைய பரத்தையரது,ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - முத்துமாலையைஏந்திய பரந்த முலையினையுடைய மார்ப கத்தே, ஆராக்காதலொடு தார் இடை குழைய-அமையாத காதலுடன் பூமாலை இடைப்பட்டுக் குழைய, முழவு முகம்புலராவிழவு உடை வியன் நகர் - முழவின் ஒலி ஓய்தலில்லாதவிழவினையுடைய பெரிய மனையில், வதுவை மேவலன்ஆகலின் - மணத்தினைப் பொருந்துதலுடையனாதலின்;

12-16. அது புலந்து அச்செலினை வெறுத்த, அடுபோர் வேளிர் வீரை முன்துறை -வெல்லும் போரினை
வல்ல வேளிர்கட்கு உரிய வீரைஎன்னும் இடத்திலுள்ள துறையின் முன்னிடத்தே, நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை-நீண்டுகிடக்கும் வெள்ளை யுப்பின் அளவிலடஙகாத குவியல், பெரும் பெயற்கு உருகியாங்கு-மிக்க மழையால் உருகினாற்போல, தட மெல் தோள் - எனது பெரியமெல்லிய தோள்கள் மெலிந்து, திருந்து இஐாநெகிழ்ந்தன - திருந்திய வளைகள் நெகிழப்பெற்றன;

1. என் எனப்படும்கொல்-இவ்வாறாகவும் இவ் விறலியின் கூற்றுயாதெனப்படும்.

(முடிபு) தோழி! ஊரன் வதுவை மேவலன் ஆகலின், மென் தோள்இழை நெகிழ்ந்தன; (இவ்வாறாகவும் இவ்விறலியின்கூற்று) என் எனப்படும்!

(வி - ரை.) பேடிப்பெண் - பேடியாகியபெண்ணென இரு பெயரொட்டு. பெண்கொண்டு - பெண்ணினதுஉருவு கொண்டு. ஆடு கை கடுப்ப என்றமையாற்பின்சென்று மேல் வளைந்த மருப்பு என்க. எருமையின்புறத்திற்குத் துறுகல்லும் மாகஅருக்கு மந்தியும்உவமம். தார் இடை குழைய மேவலன் எனவும்,
அது புலந்துதோள் இழை நெகிழ்ந்தன எனவும் கூட்டுக. முழுவு முகம்புலார விழவுடை வியனகர் வதுவை மேவலன் என்றமையால்,அவன் பரத்தையர் இல்லில் வதுவை அயர்தலை அவ்வாரவாரமே புலப்படுத்தும்
என்றாளாயிற்று. உப்பின்குப்பை பெயற்கு உருகியாங்கு என்ற கருத்து, 1'கடல்விளையமுதம் பெயற்கேற்றாஅங் குருகி யுகுதல்’ 2'உப்பியல்பாவை யுறையுற்றதபோல, உக்கு விடுமென்னுயிர்’ 3'உப்பொய் சகடம், பெரும் பெயறலைய வீந்தாங்கு’எனப் பலவிடத்தும் வருதல் காண்க.


207. பாலை

[மகட் போக்கிய 4தாய்சொல்லியது.]
(சொ - ள்.) 1-7. அணங்க உடை முந்நீர் பரந்த செறுவின்தய்வத்தையுடைய கடலின்நீர் பரவிய உப்பு விளையும்வயலில், உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல்அமிழ்தம் - நீர் காய்ந்த தன்மையால் வேறாகியவெள்ளிய உப்பாகிய அமிழ்தினை, குடவுல மருங்கின்உய்ம்மார் - மேற்குத் திசையிலுள்ள இடங்களுக்குச்செலுத்தும் பொருட்டு, புள் ஓர்த்து - நிமித்தம்பார்த்து, படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர் -படைக்கலங்களை அமைத்துக்கொண்டெபந்த பெரியவீரச் செயல்களைப் புரியும் ஆடவர், நிரைபரப்பொறைய நரை புறக் கழுதை-அடுக்கிய உப்புப்பொதியாய சுமையினையுடைய வெள்ளிய புறத்தினையுடையகழுதைகளின், குறைக் குளம்பு உதைத்த கல்பிறழ்இயவின்-தேய்ந்த குளம்பு உதைத்தலால்பரற்கற்கள் பிறழ்ந்து கிடக்கும் வழியாய, வெம்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை - கொடிய
பாலையினைஊடறுத்துச் செல்லும் அச்சந்தோன்றும் கவர்த்தநெறிகளில்;

8-12. மிஞிறஆர்கடாஅம் கரந்துவிடு கவுள - வண்டுகள் பொருந்தும்மதம் கரந்தொழிந்த கன்னத்தினையுடைய, வெயில்தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் - வெயில்நலிதலால் வருந்திய நீண்ட கொம்பினையுடையகளிற்றின், பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல் -சருச்சரை அழிந்த பெரிய கை நீர்வேண்டித்துழாவிப் பார்த்த கிணற்றினை, அறன் இலாளன்தோண்ட - அறம் இல்லானாகிய தன் தலைவன்தோண்டுதலால் ஊறிய, தெள் உவரி குறைக்குட முகவை -தெளிந்த உவரையுடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை;

14-17. தேம் கலந்துஅளைஇய தீம்பால் ஏந்தி-தேனைப் பெய்து நன்குகலந்த இனிய பாலை ஏந்திக்கொண்டு, கூழை உளர்ந்துமோழைமை கூறபும் - கூந்தலைக் கோதி நயமொழிகளைக்கூறவும், மறுத்த சொல்லள் ஆகி - மறுத்துரைப்பாள்ஆகி, வெறுத்த உள்ள மொடு உண்ணாதோள் - வெறுப்புற்றஉள்ளத்துடன் அதனை உண்ணாதோளாகிய என்மகள்;

12-13. வெய்துஉயிர்த்து - வெப்பத்துடன் மூச்செறிந்து, பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்-பிறைமதி போன்றநெற்றி வியர்த்திடப் பருகினளோ!

(முடிபு) அஞ்சுவரு கவலையில், கூவலை அறனிலாளன் தோண்ட,குறைக்குட முகவை நீரை, தேம்கலந்து அளைஇய தீம்பாலைஏந்தி உளர்ந்து மோழைமை கூறவும் உண்ணாதோள்,வெய்துயிர்த்து நுதல் வியர்ப்ப உண்டனள் கொல்.

(வி - ரை.) குடபுல மருங்கின் உய்ம்மார் என்றமையால், உப்புவிளைந்தது குணகடற் செறுவில் என்பது போதரும்.படை-சேனையு மாம். செய்-வீரச்செய்கை; முதனிலைத்தொழிற்பெயர். கவுளவாகிய ஒருத்தல் எனவும்,உவரியாகிய முகவை எனவும் இயையும். முகவை-முகந்தநீர். தண்கண்: கண் அசை. 1'மீன்கண் அற்றதன்சுனையே’ என்புழிப்போல. தலைவிபால் மிக்கஅன்புடையனாயினும் தமரிற் பிரித்துக்கொண்டுசென்றமையின் அறனிலாளன் என்றாள் மோழைமை -தாழ்ந்த மொழி.
----------

208. குறிஞ்சி

[புணர்ந்து நீங்கும்தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

This file was last updated on 15 Sept. 2015
Please feel free to send corrections to the Webmaster.