சேலம் அநந்த நாராயண சர்மா
இயற்றிய "கஞ்சகிரி சித்தேசர் சதகம்"
"kanjcakiri cittEcar catakam"
of cElam ananta nArayaNa carmA
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
We thank Mr. Sezhian Annamalai for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சேலம் அநந்த நாராயண சர்மா இயற்றிய
கஞ்சகிரி சித்தேசர் சதகம்.
Source:
கஞ்சகிரி சித்தேசர் சதகம்.
இது சேலஞ்ஜில்லா சேலந் தாலூக்காவைச் சேர்ந்த
பெருமாக்கவுண்டன்பட்டி ப்ரம்மஸ்ரீ தருமராஜசர்ம்மா அவர்கள் குமாரர்
சேலம் அநந்த நாராயணசர்ம்மா அவர்களால் இயற்றப்பட்டு,
சேலம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் - சரவணப்பிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டு,
சென்னப்பட்டணம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
1902
விலை அணா 2
--------------
சிவமயம் - திருச்சிற்றம்பலம்.
சிறப்புப்பாயிரம்.
சேலம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் சரவணப்பிள்ளையவர்களியற்றிய
திரிபு விருத்தம்
மஞ்சமலை யுறக்குழுமி மஞ்சனமாட் டுதல்கடுப்ப மணிசீர் வார்க்குங்
கஞ்சமலைக் காந்தநதிக் கரையமருஞ் சித்தேசர் கமல பாதம்
நெஞ்சமலை வறப்பதித்துத் தகுபொருள்சேர் சதகமொன்று நிகழ்த்தினானால்
வஞ்சமலை யாவருந்த நாரணப்பேர் வரகவியா மறையோன்றானே.
கனியுதிருஞ் சோலைசெறி கஞ்சமலைச் சித்தேசர் கமலத் தாண்மீ
தினியசுவை தருரீதிச் சதகமுவந் தெழுதியன்ப ரெவர்க்கு மீய்ந்தான்
புனிதமிகு மெசுர்வேத குலதிலகன் புலவோர்கள் புகழு நேயன்
மனிதர்களி லிசைமருவு மாந்த நா ரணப்பெயர்கொண் மறையோன் றானே.
-----------
மகுலி பட்டணத்திலிருக்கும் ஹிண்டு ஹைஸ்கூலில்
பிரதம சகாய உபாத்தியாயராகிய மகா-ள-ள-ஸ்ரீ முத்துவையவர்கள் B.A.,
இயற்றிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அஞ்சமறி வரியபரன் முடிகடுப்ப வம்புலியு
மரவுஞ் சேர்த்த
கஞ்சமலைத் தலத்துறையுஞ் சித்தேசக்கடவுளிணைக்
கமலத் தாட்கு
நெஞ்சமலியன்பினெடு நிலவுபுகழ நந்தநா
ரணவே ணீட்டுஞ்
செஞ்சொன்மலி யொருமாலைக் கெதிர்மாலையிரும்புவியிற்
றெரிந்தி லேமால். (1)
மின்னொக்குஞ் சிறுவாழ்வை மிளிர்விக்குங் கருத்தினனாய்
விரிந்த கேள்வித்
தன்னொக்கும் பெரும்புலவ னநந்த நாரணன்புகலுந்
தமிழ்ப்பா மாலை
என்னொக்குங் கடலமுதை யினிப்பொக்கு மருமையினா
விலங்குந் தூய
பொன்னொக்கும் பொன்பதித்த மணியொக்கு மணிதிகழும்
பொலிவா லன்றே. (2)
வல்லோர்க்குந் தெரிவரிய கலைக்கடலின் மதியென்னு
மலையை நாட்டிச்
சொல்லேற்கும் பெருமுயர்வாற் கடைந்தெடுத்த வமுதமெனுந்
தூய நூலை
எல்லோர்க்கும் பவப்பிணியி னிருந்துயரந் தவிர்க்கிதிம
விரங்கி யீந்தான்
நல்லோர்க்குண் முதன்மைபெறு மருந்தநா ரணனென்னு
நாவலோனே. (3)
விண்முழுதும் விளங்குறுமோ ராடியினுண் மேவுவித்து
விளக்கல் போல
எண்முழுதுங் கொளக்கிடந்த பலகலையுந் திரட்டியநூ
றியற்பா வுள்ளே
கண் முழுது மிழந்தோர்க்கும் பார்வைதரும் பெறலரிய
கருமை போல
பண்முதிர்ந்த நாடிலனல் லநந்த நா ரணப்புனிதன்
பகர்ந்தான் மன்னோ. (4)
------------
பூந்துறை மகாவித்வான் மகா-ள-ள-ஸ்ரீ காளியண்ணப் புலவர் குமாரர்
மகா-ள-ள-ஸ்ரீ சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கரு ளொருவராகிய
மகா-ள-ள-ஸ்ரீ வாங்கல் ஐயாசாமி முதலியாரவர்க ளியற்றிய
இரட்டை யாசிரிய விருத்தம்
தடமருவு குமரேசருபயசர ணும்புயந் தனையனு தினம்ப ரவுவோன்
சாதுஜன சங்கப்ர சங்கத் துகந்தசெந் தமிழ்வாண ருக்குரியவன்
சங்கீத ஸாகித்ய வித்வஜன நேசன் சரோருக மடந்தை வாசன்
றலைமையொடு பெருமையம் புரிதனிற் பரிவுடன்சஞ்சரிக் கின்றநிபுணன்
படவரவு புனைவிமலரடிபுகழு மெஜூர்வேத பாரக குலத்து தித்தோன்
பவுரோகி தன்றரும ராஜமறை யோன்பெற்ற பண்புள குமார சீலன்
பைந்தமிழுகந்துரை யகந்தநா ராயணன் பதுமவதி மேவு ஞான
பக்தியொடு கஞ்சகிரி சித்தேசர் மீதினிற் பாமாரி பொழியு மேகம்
சுடருலவு கடலுலகி றமிழ்வாரி திக்குட் சுமங்கல வெழுத்தெ டுத்துச்
சுகந்தரு சுரஞ்சித மிகுந்தமது ரந்தருஞ் சொற்கண் மருவப்பு னைந்தே
சுதையெனுஞ் சதகமிதை யிதயங் களிக்கவே நூயவர் தமக்க ளித்தான்
சுபகர தயாரஸ சரஸ்வதி விலாசச் சொரூபலா வண்ய துல்யன்
இடபமிசை வருபரம சிவகுமர னருளினா லெல்லோர் களுஞ்ச ரியென
இயல்பான சமயோசி தத்தினுக் குறுகவி யியற்றியிந் நூலில் வைத்தான்
இணையிலா வரமுதவு காங்கேய னடிதொழு திறைஞ்சும் ப்ரபந்த வாக்கி
எக்காலு மேலான தக்கோர் சபாஷென் றியம்புகந் தமிழ்ப்புலவனே.
-----------
சேலஞ்ஜில்லா நாமக்கல் தாலுக்காவைச் சேர்ந்த கண்ணூர்ப்படி
சே. நாராயணையர் குமாரர் ப்ரம்ம ஸ்ரீ #வேங்கடரமணைய ரியற்றிய
எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
# வேங்கட ரமணையர் இந்நூலாசிரியரின் மாணாக்கர்.
பொதுமையை நீக்கிப் புகழுடனளும் பொற்புறு
சென்னை மா வரசுக்
கதுவொரு நிலையாஞ் சேலமாப் பதிக்காங் கருகுறுங்
கஞ்சமா மலைப்பாற்
றுதிமிகு பெருமைப் பதிவளர் தரும ராயசோ திடரருந்
தவத்தாற்
குதிகொளுங் குமரன் குமரவே ளருளாற் குவலயஞ்
சிறந்திட வுதித்தோன். (1)
உதித்திடு மனந்த நாரணப் பெயரோ னுளத்தினி
லுயர்மலைச் சித்தன்
பதத்தினைப் பதித்த பத்திமிக் குடையோன் பதிகமுஞ்
சதகமும் பலவாற்
றுதித்திடத் துணிந்தோன் றுதிப்பவர்க் ககலாத் துணையருள்
வலியினுற் றுயர்சேர்
விதித்திடும் பிறவிக் கடல்கடந் திடவே
வினையென விளங்கினன் மன்னோ. (2)
நெடுங்கடல் புடைசூழ் நேமியின் வலய
நிலவுறு நீதிதன் னெறிகுன்
றிடுங்குறை நிரப்பிக் கீரநற் கடலி
னிவர்ந்தெழு மதிபுரை மதியை
உடம்புறு முயிர்க்கு ளுதயமாம் படிக்கு
முதவியே யநந்தநா ரண வேள்
படும்பவக் கடற்கோர் பாதையா யினிது
பாடின னீதிநூற் சதகம். (3)
பாடிய பனுவற் பத்தியு நிறையும்
பயன்றர நின்றதற் பரன்றன்
நீடிய புகழு நீதிநன் னெறியு
நிலைபெறப் பிணித்ததாய்த் துலங்குங்
கோடிசூ ரியரைத் திரஸ்கரித் ததுபோற்
குலவொளி சிறந்த தாற் கடல்சூழ்ந்
தோடிய வுலகின் முற்றிதன் பெருமை
யுரைப்பரோ வுணர்ந்தவ ரலாதார். (4)
நித்திலந் தன்னை நேர்பெறு மொழியா
னிறைமணி மகுடமும் புனைந்து
இத்தரை புகழும் வளனுடைப் பொழில்சேர்ந்
திலங்குநற் கஞ்சமா நகரத்திற்
பத்தர்கள் பயனுய்ப் பயில்தருஞ் சித்தர்
பதத்திடை நினைவருந் தூய
சுத்தர்கண் மனமா மலரிடைத் தேன்
போற்றுளித்தர சிருக்குமிச் சதகம், (5)
இசையுடை யவரு மெழிலுடையவரு
மிருமையு முடையரும் யாரும்
நசையுறு நடையை யுடையதாய்க்
கல்வி நற்பொரு ளில்லவ ருய்ய
விசையுடன் புனைந்தே யிறைவன
தருளா லிருள் வலி யிரவியின் முன்ன
ரசைவிலா தென்று மிளிர்தரும் புகழை
யடைந்தன னன்னவன் மன்னோ. (6)
காந்தநன் னதிசூழ் கடவுண்முன்னிலையிற்
காட்டுமிந் நீதியைக் காண்பீர்
காந்தநன் னதியோ கடவுளி னிதிபோற்
காண்பினுங் கதிமிகச் சிறிதே
காந்தநன்னதிமேற் கதிமுதிர்ந் தொழுகுங்
கருத்தினா லுரைத்தனன் போலுங்
காந்தநன் ன தியாற் கமழுறுஞ் சாந்த தாருவின்
கலவையிற் றிளைப்போன். (7)
வேதமு மறையா விழுப்பொருண் மிகுத்து
வியனுடைப் பொருணனி சேர்த்தீ
தோதின னுலகிலுள்ளவர் பொருட்டே
யுய்யுமா றறிந்திதையுலகந்
தீதற விவற்குச் செய்வதோர் கைம்மா
றென்னெனிற் றினந்தின மிதனை
ஏதமற் றுய்ய வன்புடனய்ந்து படித்தலே
யெவரிதற் கிசையார். (8)
புடைபடு புனலும் பொய்கையும் பொழிலும்
பொருவுடைப் புண்ணியத் தலத்தி
லடையுறும் பெரியோ ரவையகத் திருந்தே
யறையுமிச் சதகமு மரங்கேற்
றிடவிருந் ததற்பி னன்னவர் மனமா
மதகரி மீதிவர்ந் தவனி
இடமெலாஞ் சென்றி யாவரும்
புகழவெங்கணு மிளிர்ந்ததை யன்றே. (9)
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
------------
கஞ்சகிரி சித்தேசர் சதகம்
திருச்சிற்றம்பலம்.
விநாயகர் காப்பு.
நேரிசைவெண்பா.
மஞ்சமலை சேர்பொழில்சூழ் வான்றோய் நெடுமுகட்டுக்
கஞ்சமலைச் சித்தேசன் கான் மலர்க்கு-நெஞ்சகமே
பைந்தமிழினாற்சதகப் பாமாலை சூடநினை
தந்திமுகத் தீசனிரு தாள்.
அவை யடக்கம்.
ஆசிரிய விருத்தம்.
நற்பொருளிலக்கண விலக்கிய மெனும்பெரிய நரலைமுழு துங்குடித்து
நாடெலாம் பொழியவரு கவிமுகி லெனக்கமல நாமகள் கடாக்ஷமேவும்
பற்பல கவிச்சக்ர வர்த்திகளின் மெய்ப்புகழ் பரந்தசமுகத்திலேகிப்
பாவினச் சீர்நிறைகளறியாத நாயினேன் பன்னுமென் செய்யுளியலை
விற்பன விவேகியர்க ளொப்பிச் சபா ஷென விளம்புவர்க ளென்றுதேர்ந்து
மேதினி மதிக்குமொரு நீதிசத கம்புகல மேன்மைபெறு கஞ்சகிரிவாழ்
சற்ப்ரபல ஸத்சுகிர்த ஸத்புருஷ ஸத்விஷய ஸமரஸ சுபாவயோக
சத்திய தயா நிலய சித்தேசர் தமதுபய தாள் பணிந் தனன் மகிழ்ந்தே.
இந்நூலுக்கு நிதியுதவினோர் சிறப்பு.
கடலுலகின் மகிமைபெறு கஞ்ச கிரி சித்தேசர் கான்மலர் முடிக்கணிந்து
கருதுமொரு நீதிநெறி சதகம் புனைந்ததைக் காசினியெ லாம் விளங்கத்
திடமருவு மிச்சதக மச்சிடக் கைப்பொருட் செலவுக்கு வேண்டுமதனைச்
சேரலம் புரியதனிலுறைவோர்க ளும்பலர் சிலாக்கியமி தென்றுணர்ந்தே
தடமருவு நிதியுதவி மேதினியி லினிதான சாசுவத மாகுமிந்நூ
றனையுவஙந் தச்சிடத் தக்கநிதி யுதவிஞேர் காலத்தி லெக்காலமுங்
கொடையுதவு நலமுறுவ ரவையெலாந் திகழுறு குணம்பெறுவ ரெந்நாளிலுங்
கோத்திரையெ லாங்குலவு கீர்த்திப்ர தாபமொடு குவலயந் தனில்வாழ்வரே.
-------------
கஞ்சகிரி சித்தேசர் சதகம்.
நூல்.
அந்தணர் சிறப்பு.
பூமேவு வைதீக நியதிநெறி வழுவாது புனலின் முச் சந்திமூழ்கிப்
புனிதமுறு பகவதர்ச் சனைபுரிந் தொழுகலும் புகழும்யா காதி நிகழத்
தேமேவு விரதமும் மறையாக மங்கலைக டேர்ந்தோது கின்றநலனுஞ்
சீலமிகு பத்தியொடு காலமுறை தவறாது ஜெபதபஞ் செய்துறுதியாய்
மாமேவு காயத்ரி மகிமையா லுஞ்சுருதி மந்திரபலத்தினாலும்
மாதமொரு மும்மாரி பொழியவைத் துலகெலாம் வளமுறச் செய்து நன்றாய்க்
காமேவு தருவெனத் தருமுறையு மறையோர்ம கத்வமென லாகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (1)
வேந்தர் சிறப்பு.
சாமபே தந்தான தண்டமொடு வினைகொளுஞ் சதுர்வித வுபாயங்களுந்
தரியலர்க ளிதயமும் பெரியோர்கள் வாய்மையுஞ் சதுரங்க சேனைபலமும்
பூமியுழு நற்குடிகண் மீதிலவி மானமும் புகழ்நீதி மந்திரிசொலும்
புத்தியுட் கொண்டுவெகு சத்தியநி தானமும்
பொழியுமழை போன்றகொடையும்
மாமக ளுலாவிவரு நாடுநக ராலயமு மனதிவிழி செவியிலாய்ந்து
மனுநீதி வழுவாது செங்கோ னடாத்திவரு மாட்சிசேர் முறைமைகண்டு
காமகளு நாமகளு மேமகிழ வாழுவது காவலரி யற்கையன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (2)
வணிகர் சிறப்பு.
முத்து நவ ரத்னமணி பட்டுபட் டாடையும் முதலிட்டு வாங்கிவிற்பார்
முதலுக்கு மவைநின்ற தவணைக்கு நாளெண்ணி முடிவான விலைசொல்லுவார்
சித்திதரு நிதியிலும் வட்டியிலு மொருகாசு சேதம்வா ராதொழுகுவார்
தேவாலை யந்திருவிழாவெனும் மேலான செய்கையிற் செலவுசெய்வார்
நித்தநித் தம்பற்று வரவெழுது வார்நல்ல நெறியுளோர்க் கேகொடுப்பார்
நீதியில் லாக்கொடிய மானிடர்க ளைத்துர நிற்கவைத் திடுவர்பட்டுக்
கத்தரித் ததுவெனப் பேசுவா ரிவைகள்வணி கக்குலத் தியல்பல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (3)
வேளாளர் சிறப்பு.
தொனிக்கின்ற மறையவ ரொழுக்கமும் புவிமீது தோன்றலர் நடாத்துமரசுந்
தொகைபெரிய லாபமுறு வணிகருயர் மேன்மையுஞ் சுபசோப னஞ்செய்வதும்
நனைக்கின்ற துணிகளும் பணிகளோடணிமருவு நாரியர்க ளகமோகமும்
நாமகள் விலாசமுந் தானதரு மங்களொடு நானாவி தஞ்செய்வதுந்
தனக்கென்று மன்றேறி விவகார மேசெய்து சாதித்து வருலாபமுந்
தாதாவெ னப்பெய ரெடுப்பதுவு நன்றாய்த் தராதலமெ லாஞ்செழிக்கக்
கனக்கின்ற வேளாளர் புரிகின்ற விவசாய காரியவ சத்ததன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (4)
கிரிவிசேஷம்.
சீர்கொண்ட மேருகிரி வடவேங்க டாசலந் தேசுமிகு சோணாசலந்
திகழ்பழனி யங்கிரி சிவாசலங் கந்தமலை தென் பரங் கிரிவிராலி
நீர் கொண்ட தீர்த்தமலை சதுர கிரி யிடபகிரி நீலகிரி நாகா சலம்
நியதியடி யோர் பரவு கைலையங் கிரிபெரியர் நேசமுறு மிமயாசலம்
வார் கொண்ட யானைமலை சோலைமலை நலமிகு வராக மலை சிறுகுருமலை
மகிமைபெறு தணிகையொடு கடிகாச லம்பலர்
வணங்குதென் பொதிகையுடனே
கார்கொண்டு பொழிகின்ற மலைவள மெலா நினது கஞ்சாச லத்தமையுமே
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (5)
தீர்த்த விசேஷம்.
திருவுலவு சிந்துநதி காவேரி கண்டகிவ சிஷ்டநதி கோதாவிரி
க்ஷீரநதி கங்கை நதி கூடலம் புரிவைகை திகழ்கச்சி மருவுகம்பை
நரு மதை சரஸ்வதி பவானியம ராவதி நறும்புன னிறைந்தயமுனை
நாடெலாம் புகழ்பரவு துங்கபத் திரையோடு நரலைபுகு மைராவதி
மருவுநல மிகுபெண்ணை யாதியாப் புகல்கின்ற மாநதிப்புண்ணியமெலாம்
வந்துற வளிக்குநின் கஞ்சாச லத்தூடு வருகாந்த நதிமூழ்கிடிற்
கருவுலவு மறுபிறவி யணுகாது முத்திதரு கன மகிமை புடையதன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (6)
மூர்த்தி விசேஷம்
சதமகன் பதியிலுள கற்பகத் தாருவைத் தாரணியில் வரவழைப்பாய்
தண்முகி றனைப்பிடித் துப்பிழிந் துதறித் தபோதனர் குழாந்துதிக்கச்
*சிதமருவ வுரையாடி யஷ்ட குல வெற்பினைச் செங்கையா லேந்திநான்கு
திக்கிலும் பந்தென்ன வீசிவிளையா டுவாய் செகதல மெலாம்புரக்கும்
பதியென விளங்குவா யஷ்டம சித்திகள் பரிந்தன் பருக்குதவுவாய்
பச்சிலை ரஸத்திற் களிம்பேறு செம்பைப் பழுத்தசெம் பொன்னக்குவாய்
கதியுதவி யென்னையுன் பாதமற வாமற் கருத்துற வமைப்பதரிதோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (7)
----------
* சிதம்-ஞானம்.
இதுவுமது
உண்மைதிக ழும்பருல கத்தினி லுலாவுவா யுரகனு மிளைப்பாறவே
யோகதண் டத்தின் மீ தீரேழு புவனமு மொழுங்கா யிருக்கவைப்பாய்
வண்மைவரு சப்தமே கங்களையு மொன்றாக வருஷிக்க வுஞ்செய்குவாய்
மாகருணு மமுதனைய பூதிசா தனமிட்டு மறுவுறு சரீரத்தினத்
திண்மைதரு மகிமைப்ர தாபமே வுமபெரிய தேசாதி பதியாக்குவாய்
சிலைவடிவ மாயுற்ற களிறுகைந் நீட்டியே தின்னக் கரும்புதவு நின
கண்ணுளெனை வைத்துனது பாதகம லந்தந்து காத்துரட் சிப்பதரிதோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (8)
இதுவுமது
அட்டநா கத்தைப் பிடித்துவிளையாடுவா யலைகடலின் மேனடப்பாய்
ஆதவன் றேரினிற் பூட்டிவரு துரகமீ தாரோக ணித்துவருவாய்
குட்டரோ கத்தைத் தொலைத்துவிடு வாயெமன் கொண்டவுயி ரைக்கொடுப்பாய்
கூடுவிட் டுக்கூடு செல்லுவாய் பலகோடி கொடியவினை யைக்கொல்லுவாய்
கிட்டவா வென்றழைத் தழகிலாப் பேடியை க்ரீடபதி யாக்கிவிடுவாய்
கிரியிலுறை நரிதனைப் பரியாக்கு வாய்கொடுங் கேசரியை யெலியாக்குவாய்
கட்டிமா ணிக்கக்தி னொளிவீசு மாசுணக் கடகந்த ரித்தகுருவே
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (9)
திருவருட் சிறப்பு.
துதியுண்டு நீங்காத துணையுண்டு மேலான துரைராஜ நேயமுண்டு
சுகமுண்டு சுசியுண்டு சூழ்வோர்கண் மிகவுண்டு தூய்மையொடு வாய்மையுண்டு
மதியுண்டு செம்பொன்வளர் நிதியுண்டு நலமருவு மங்கலசு பங்களுண்டு
மனையுண்டு மகவுண்டு மாதாபி தாவுண்டு மகுடமுடி சூடுகின்ற
பதியுண்டு சதுரங்க தளமுண்டு கொடையுண்டு பாரதிவி லாசமுண்டு
பலனுண்டு புனைகின்ற கலனுண்டு மேலோர் பழக்கமோ டுதவும்பர
கதியுண்டு கனமுண்டு கமையுமுண் டத்த நின் கருணையுண் டாயிலரசே
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (10)
நகரச் சிறப்பு.
துதிபெறு திருப்பதி சிவாலயங் கோபுரஞ் சுற்றுமதின் மண்டபங்கள்
தூயவே தியர்வீதி துரைராஜ வீதியுஞ் சொல்லுமற் றோர்வீதியும்
பதகஜது ரகமிரத படைகளுறை விடுதியும் பலர்மேவு கடைவீதியும்
பாதசங் கீதமுறை வழுவாது மங்கையர்கள் பாடலரி ஹரபஜனையும்
புதியபூம் பொழில்செறி சரோருக தடாகமும் புனல்பரவு மகழிவிரிவும்
பூரிமுத லானபதி னாறுவித தானமும் பூபால ருதவுகொடையுங்
கதிர்பரவு ராஜதா னிக்குரிய நகரியிற் காணுறு சிறப்பல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (11)
பலர்க்கும் பயன்படுவன.
பாதையோ ரத்திலுள வாவியும் விரிவான பங்கய தடாகங்களும்
பத்திதரு சத்திரமு மிரவிமதி யொளியும் *பயோதரம் பொழியுமழையும்
வாதமும் வன்னியும் வழிப்புறத் துதவுமிரு வடவிருக் கத்தினிழலும்
வளமருவு வேளாளர் விவசாய முந்தூய வரநதியை யனையபுனலும்
நீதியா சாங்கமுங் கிருபையொடு வைத்ததண் ணீர்ப்பந்த லுஞ்சற்குண
கிருபரைப் பொருவுமே தாவிய ரிடத்திலுறு நிதியுமீ ரேழுபொருளுங்
காதலுறு பற்பலர்க் குபயோக மாகவெகு கால நிலை யுள்ளதன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (12)
----------
* பயோதரம்-மேகம்,
இஃதில்லாத விது பெருமையுடைய தன்றெனல்.
அரசரில் லாத நக ராலயமி லாதவூ +ரம்பகமி லாதவதனம்
அறிஞரில் லாதசவை கொழுநனில் லாதபெண் ணறுசுவை யிலாதவுண்டி
புரவியில் லாதபடை யீகையில் லாதநிதி புதல்வரில் லாதவாழ்வு
பூஷணமி லாதவுடல் கந்தமில் லா தமலர் *புஷ்கரமி லாதவாவி
திறமையில் லாத +தனு தீபமில் லாதமனை |சிந்துரமி லாதசேனை
சிகழிகை யிலாகமுடி தந்தமில் லாதவாய் சீலமில் லாதபூசை
கரிசனையி லா மனைவி யிவையெலாம் புவியிலேன் காந்த நதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்ராச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (13)
-----------
+ அம்பகம்-கண்; * புஷ்கரம்-தண்; +தனு-சரீரம்; | சிந்துரம்-யானை;
-----------
இதுவுமது.
தாளலய மில்லாத சங்கீத கீர்த்தனஞ் சற்சனர்க ளில்லாதவூர்
தகுலாப மில்லாத வாணிபங் கனதையுள தனையரில் லாதவனிதை
*வேளருளி லாதகவி #நகிலமில் லாப்பெண் விபூதியணி யாதநெற்றி
மெய்ம்மையில் லாதமொழி $நளினமில்லாத மடு வீரமில் லாதவேந்தர்
கேள்வியில் லாதசெவி கறவையில் லாதபசு கேணியில் லாதகாணி
கிருதமில்லாத சுவை மணமலரி லாதபொழில் கீர்த்தியில் லாததேகங்
காளமுகில் சூழ்கருங் கடலுலகி லிவைகளேன் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (14)
---------
*வேள்-முருகன்; # நகிலம்-முலை;, $நளினம் – தாமரை.
நிறையாவிட மிவையெனல்.
அந்தமுள வேசையர்க் * கருவிபோ னிதிவரினு மவர்மனக் கிணறு நிறையா
அரசருக் கதுபோல வொருகோடி பெருகிவந் தாலுமவ ராசை நிறையா
விந்தைமிகு ரஸவாதி யர்க்குமலை யாவையும் @வித்தமா னுலுநிறையா
மிக்கபே ராசையுள் ளோர்களுக் கெத்தனை மிகுத்துவந் தாலுநிறையா
தொந்தரை தருங்கொடிய மதுவுண்டு திரிதருஞ் §சுமடர்கட் கிலவசமதாய்ச்
சூழுமெழு கடலெலாங் கள்ளாகி னாலுமவர் துட்டமன நிறையாதுகாண்
கந்தமலர் சோலைசெறி நந்தனவனங்குலவு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (15)
-----------
* அருவி-மலைவெள்ளம் @வித்தம்-பொன்; §சுமடர் - கீழ்மக்கள்.
இறந்துமிருப்பவர்.
பங்கய தடாகந் திருப்பதி சிவாலயம் பாரதனி லேவிதித்தோர்
பலபேர்க ணடமாடும வழியோர மாகவே பருகநீர்த் துரவாக்கினோர்
* அங்கஜ விரோதியா ராதனைக் காகவே யமையுநந் தனமாக்கினோர்
அட்டதிசை திறல்பெற்ற புலவராற் காவிய வலங்கார நூல்செய்வித்தோர்
தங்கலுறு சத்திரங் கிராமமுண் டாக்கினோர் தப்பாத வாய்மை யுடையோர்
தாரணியி னீதிநெறி வழுவாத நரவேந்தர் தருபெருங் கொடையாளர்கள்
கங்கைபெரு கும்புவியி லழிபாம லிவர்செய்த கனதை நிலை நிற்குமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (16)
----------
* அங்கஜ விரோதி -சிவபெருமான்,
இருந்து மிறந்தவர்.
விவ காரமே பேசுவோர் நீதிநெறி யுணராது தீதுபுரிவோர்
ஒன்னலார் தங்களுக் கிங்கிதம தாகவே யூழியமி கச்செய்குவோர்
தார மதை வேறொருவர் சேரவே தந்துசெந் தாதுகொண் டுடல்வளர்ப்போர்
தகுதியோர்க் குதவாத பொருளாளர் வேட்டகந் தனிலிருந் துண்டுதிரிவோர்
போரினிற் சூரனென வாய்மதம் பேசிப் புறங்கொடுத் தோடியுழல்வோர்
பொற்பென்று கைம்பெண்ணை மேவுவோ ரனுதினம் பொய்புகலுவோர்புவிதனிற்
காரியமி லாதலையு நாகரிக மில்லாத கானடைப் பிணமல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (17)
இவர்க்குத் தெய்வமிதுவெனல்
மிச்சகர்க் குப்பொருள் கொடுத்தவர்க ளேதெய்வம் விரகநோ யாளருக்கு
வேசியே தெய்வமாங் கொடியருக் கனுதினம் விரோதகல கந்தெய்வமாம்
மச்சமிகு சிறுவருக் கன்னைதந் தையர்தெய்வ மாவலொடு கல்விகற்போர்க்
கரியகுரு தெய்வமா மல்லலுறு வோர்க்கிட ரகற்றுமவ னேதெய்வமாஞ்
சச்சரவு றும்பரம லோபியர்க் கென்றுந் தகுந்த நிதி யேதெய்வமாந்
தகுமனைவி யர்க்குற்ற தலைவனே தெய்வமாஞ் சான்றவர்க் குத்தெய்வ நீ
கச்சுமுலை வேசையர்க் கிச்சை நிறை யச்செயுங் காந்தனே தெய்வமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (18)
இவையுண்டாயினு மிவைவேண்டுமெனல்.
நாகர முதற்சகல பாஷைக டெரிந்தாலு நபகுண மிருக்கவேண்டும்
நரவே ந்த ருறவா யிருந்தாலு மேலான நல்லோர்க ணட்புவேண்டுஞ்
சாகரந் தாண்டுஞ் சமர்த்தனென் றாலுநற் றயிரிய மிருக்கவேண்டுந்
தரைமுழுது மொருகுடையி லாண்டாலு மெண்ணத் தகுந்தமங் திரிகள்வேண்டும்
வாகுமிகு நிதியரச னென்னினும் பலனுறு வரும்படி யிருக்கவேண்டும்
வளமருவு கொடையாளி யானாலு மிதமாய் மதித்துக் கொடுப்பதழகாங்
காகமுத லானபுள் ளுறையுநற் சோலைசொறி காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (19)
இவைசெய்ய வேண்டுமெனல்
* பற்றலா ரென்றாலு மாபத்தி லேகிப் பரிந்துதவி செய்யவேண்டும்
பண்பான பிள்ளைமுழு மூடனென் றாலுமே பள்ளியிலமைத்தல்வேண்டுஞ்
சற்றாகி லுங்கோப மாறாத மூர்க்கரைச் சார்ந்துபெரி யோர் விலக்கிச்
சரியான நீதிச் சவுக்கா லடித்துத் தகும்புத்தி சொல்லவேண்டும்
உற்றோர்க ளாயினும் மற்றோர்களாயினு முடலினிற் கொடியபிணியா
லுயிர்மாயு மென்றாலு மவுஷதம் சேகரித் துடனே கொடுப்பரன்றோ
கற்றோர்க ளிதயங் களித்துக் குளிக்கவரு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (20)
---------
* பற்றலார்-பகைவர்.
இவை செய்யவேண்டாமெனல்.
தனந்தேடி யதனைப் புதைக்கவேண் டாநல்ல தருமத்தை நீக்கவேண்டாஞ்
சற்சனர்க ளுறவைத் தவிர்க்கவேண் டாம்பழைய தாயாதி நட்புவேண்டாம்
மனம்போன போக்கெலாம் போகவேண் டாந் தீய மார்க்கத்தை நாடவேண்டாம்
மறுமாதர் மீதுமயல் கொள்ளவேண் டா நீதி வாக்கிய மறக்கவேண்டாஞ்
சினந்தேடி நட்பைக் கெடுக்கவேண் டாமொருவர் செய்ந்நல மறுக்கவேண்டாம்
செல்வச் செருக்கினா னல்லோரை வீணாய்த் தெழித்துப் பழிக்கவேண்டாங்
கனந்தேடி வீண்செலவு செய்யவேண் டாம்பெருங் கடனல் வருந்தவேண்டாங்
கஞ்சனிகர் நற்றச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (21)
உபகாரமில்லாதவை
எருக்குச் செழிப்புற் றிருந்தென்ன காஞ்சிர மிலங்கப் பழுத்துமென்ன
எறிதிரைக் கடனீர் மிகுத்தென்ன $ ஒவியத் தெப்பணி யிருந்துமென்ன
பெருக்குற்ற சாக்கடைத் தண்ணீர் மலிந்தென்ன ப்ரேதமழ காயிருந்தென்
பேடியர்களணிகலம் பூண்டிருந் தாலென் பிசாசகுண மேவுபெண்கள்
செருக்குற் றிருந்தென்ன மனிதரணு காவிடந் தேன் கூடிருந்துமென்ன
@சீரணியி லேமழை பொழிந்தென்ன வுதவுறுந் த்யாகமில் லாதசெல்வர்
கருக்குற் றிருந்தாலு முபகார மாகுமோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேர கஞ்சகிரி சித்தேசனே. (22)
-----------
* ஒவியம்-சித்திரம், @சீரணி-ஆரண்யம்,
உதவியும் பயனில்லை யெனல்.
ஆபத்தி லுதவாத நட்பாளர் பின்னிட் டனேகங் கொடுத்துமென்ன
அரிதான கல்விநெறி யுணராத வொருபிள்ளை யழகா யிருந்துமென்ன
கோபத்தி லிரணம் புகுந்துசய மருவாத கோவீரர் சேவகமென
கொஞ்சமா யினுநல்ல மரியாதை யில்லாக் குடும்பினி யிருந்துமென்ன
தாபத்தி லில்லாத தண்ணீ ரிருந்தென்ன தகுதியோர்க் குதவியில்லாத்
தனதான்ய மிக்கவுள சம்பன்னர் வாழ்வதுந் தாரணிக் கதிகசுமையாங்
காபித்தி சாதிசிறு சண்பகச் சோலைசெறி காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (23)
இவையுண்டாயினு மிவையில்லாவிடினும் பயனில்லை யெனல்.
மானமில் லாதவர்க ளெத்தனை சிறப்புற்று வாழ்ந்தென்ன தாழ்ந்துமென்ன
மனைவியுடனே பிரிய மில்லாத நாயகர் மகிழ்ந்தென விகழ்ந்துமென்ன
தானதரு மந்தயவி லார்பொருள் வளர்ந்தென்ன சடுதியி லொழிந்துமென்ன
தயிரிய மிலாதவர்களாயுதம் வகித்துநற் றானையி னுழைந்துமென்ன
சேனையி னுழைந்துசமர் செய்யவகை யறியாத சேவக மிருந்துமென்ன
திகழவை மதிக்கப்ர ஸங்கமது செயமனத் திடமிலா வித்தையென்ன
கானலிற் பெரியமழை பேய்ந்தென்ன காய்ந்தென்ன காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (24)
உலோபியரியல்பு.
சாப்பிடார் நல்லுணவு தரியார்க ணல்லாடை தானதரு மங்கள்செய்யார்
சார்ந்தபெரி யோர்களைக் கண்டாலு மதியார்கள் தம்மனைச் சுபதினத்துங்
கூப்பிடாருறவினர்க ணேசம்வை யார் பொருள்கொடுக்கும்ப்ர மேயததிலே
கூசுவார் கைவரா தேசுவார் மக்கண்மேற் கோபமுறு வார்மனைவியோ
சேப்பிடாள் நெற்றியினின் மேனியில் விளங்கிடச் செய்தநகை யூேதுமணியாள்
சேய்மொழி வியந்தவர்க ளழகுபார்ப் போமெனச் செம்பொன்னி னாற்செய்துறுங்
காப்பிடார் பிள்ளை கட் கேதொன்று மேசெயக் கருதிடா ரீன ரன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (25)
அற்பர் வாழ்வினால் குணவேறுபடல்.
சிற்றறிவு ளோர்களுக் குயர்செல்வம் வந்திடிற் றிட்டியொளி மட்டாய்விடுந்
தேர்ந்துபழ கியநண்பர் வந்தாலும் வாவென்று செப்பவும் வாய்வராது
பற்றலுறு பேர்களைக் கண்டாலு முங்களைப் பார்த்திலே னென்று நன்றாய்ப்
பந்துவென் றுங்களைத் தெரியா தெனச்சொலிப் #பானீய முங்கொடார்கள்
கொற்றவன் போலவே தலையசைத் தங்கையிற் கோலேந்தி யேநடப்பார்
கொள்ளுமொரு சங்கதிகள் சொன்னலு மேசெவி கொடுத்தளிகொ ளாரற்பராங்
கற்றவர்க ணற்றவர் களித்துக் குளிக்கவரு காந்தாதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (26)
---
# பானீயம்-தண்ணீர்,
இருந்து மனுபவியாதவர்.
பட்டுடைக ணெய்கின்ற தொழிலாளர் வீட்டினிற் பழையகந் தைகடரிப்பார்
பதுமநவ ரத்னமணி விற்போர்களழகிலாப் பாசிமணி தன்னையணிவார்
தட்டுதவ லைகள்செயுங் கன்னார்கள் விட்டில்மட் சட்டியைக் கையாளுவார்
சந்தமலர் மாலைகள் தொடுக்கின்ற பேர்வெறுஞ் சவுரியிற் கொண்டைமுடிவார்
கொட்டிலிற் பால்கறக் கின்றபேருப்பிலாக் கூழ்குடித் தேப்பமிடுவார்
கொல்லையினி னெல்லைவைத் துண்ணாம லேசிறு குறுந்தினை சமைத்துண்ணுவார்
கட்டழகி தேவியைக் கைவிடுத் தறிவிலோர் கணிகையைச் சேர்வரன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (27)
இவர்க்கமுத மிவ்விடத்தெனல்.
பாவலர் தமக்கமுது நாவிலே மேலான பார்த்திபர்க் கமுதநெறியில்
பைங்கொடிய ருக்கமுது கற்பிலே பொற்புறும் பசுவினுக் கமுதமுலையில்
தேவருக் கமுதமது சொர்க்கலோ கத்திலே தேசிகர்க் கமுதமனதிற்
செய்பண்டி தர்க்கமுது கையிலே சங்கீத சீலருக் கமுதமிடறில்
பூவுலகில் விதரணிக ருக்கமுது கண்ணிலே பூசுரர்களுக்கமுதமோ
புகழார ணத்தின் சுரத்திலே தவயோக புனிதருக் குன்பதத்திற்
*காவிதிய ருக்கமுது நயமொழியி லல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (28)
---------
*காவிதியர்-மந்திரிகள்
இவர்க்குவிட மிவ்விடத்தேனல்.
பரத்தையர் தமக்குவிட முலையிலே விரிவுதரு படவரவு கட்கெயிறிலே
பகையாள ருக்குவிட மனதிலே கோட்சொலும் பாவிக்கு விடமிதழிலே
உரத்திடுந் திருடருக் குயர்விடங் கைதனி லுலோபியர் தமக்குவிடமோ
வுதவாது நிதிபுதைத் துற்றிடு மிடத்திலே யுண்மையல் லோர்க்குரையிலே
கிருத்ரம மிகுத்தவர் தமக்குவிட நெஞ்சிலே கெடுதிசெய்வோர்களுக்குக்
கிளவிதரு நாவிலே மயன் மீறி விபசரிக் கின்றவர்க் கிருகண்ணிலே
கருத்ததேட் குறுவிடங் கடைவாலி லல்லவோ காந்தாதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (29)
அந்தந்த வினங்களுக் கழகாவன.
பட்டண மதற்கழகு பலவீதி நாற்சந்தி பார்த்திபர்க் கழகுசெங்கோல்
பரத்தையர் தமக்கழகு பரதசங்கீதநெறி பைந்தொடிக் கழகுகொங்கை
கொட்டிலு களுக்கழகு பால்கறக் கின்றபசு *குரவருக் கழகுபொறுமை
கோயிலு களுக்கழகு சுற்றுமதின் மண்டபங் கோபுரமு நந்தவனமுந்
திட்டமொடு வாழ்புருடருக்கழகு நன்மனைவி சிறுவருக் கழகுகல்வி
திகழுஞ் சவைக்கழகு மேலோர்க ளன்புறு சினேகிதர்க் குதவியழகு
கட்டெழின் மடந்தையர்க் கழகுகற் பல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (30)
------
* குரவர் - குரு,
பதரெனப்படுவோரிவரெனல்.
புதுமனைவி துயருறப் பரமாத ரின்பம் பொருந்திவாழ் பவனொருபதர்
புகழ்பரவு தாய்தந்தை யோர்மீது தீதுறு புறங்கூறு வோனெருபதர்
உதவுதன தானிய மிருக்கநற் பாத்திரத் துதவாத நரனெருபதர்
உற்றோர்களைச்சற்று மெண்ணாது பகைசெய் தொழித்து விடுவோனெருபதர்
மதவிஷய மதிலெனது மரபுதான் பெரிதென்று வாதாடு வோனெருபதர்
மக்களிற் பெரியோர்கள் சொற்களைக் கேளாத மனிதரொரு பதரல்லவோ
கதழ்வுபெறு கதலிமல ரிதழவிழ மதுவொழுகு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (31)
இச்செய்கையுடையோரிப் பெயர்கொள்வரெனல்.
பிடித்தபிடி சாதிக்க வல்லவன் னானென்று பேசுமவ னேமூடனாம்
பெண்புத்தியைக்கொண்டு சினமுதிர்ந் தேசமர் பிடிக்கமுயல் வோன் மூர்க்கனாம்
எடுத்தவிக் காரியம் மென்னால் முடிந்ததென் றெண்ணுமவ னேகுருடனாம்
எழைகளை யெதிரிட்டு @வெருவந்த செய்கையா லிடர்புரிகு வோன்றீயனாந்
தொடுத்திடும் புண்ணியந் நிறைவேறிடாமற் றொலைக்குமவ னேபாவியாஞ்
சுபதினத் தினில்வந்து தீமொழி வழங்குவோன் *சூரியகு மாரனாகுங்
கடுத்தகோ பக்கன லடக்காத மக்களே $கட்செவிக் §கடுவல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (32)
--------
@ வெருவந்த செய்கை-பயமுறுத்துதல், * சூரியகுமாரன் - சனி,
$ கட்செவி-பாம்பு, § கடு - விஷம்.
கற்றறிவில்லாத மடையரியல்.
ஒற்றியூர்த் தியாகேசனீயென்று லோபிமீ துசிதமாய்க் கவிதைமொழிவா
ரொருகாசு மீயாத வீணரைக் கொண்டாடி யுதவுகொடையாளியென்பார்
சற்றுமொரு வெற்றிவகை யறியாத பேடியைச் சமரினிற் சூரனென்பார்
தானதரு மந்தயவி லாதவெகு பொய்யனைத் தகுமரிச் சந்த்ரனென்பார்
குற்றமோ ராயிரஞ் செய்துதிரி வோர்களைக் *கோபதிக் கிறைவனென்று
§கோத்திரையில் விவிதமாய்த் தோத்திரஞ் செய்கிற கொடும்பாவி யாங்கவிஞரே
கற்றறிவி லாமடைய ரிற்பெரிய மூடராங் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே, (33)
-----
*கோபதி-இந்திரன், §கோத்திரை-பூமி,
இவ்வினங்களிற் சிறப்பிவையெனல்.
நாலெட்டி ராகத்தி லேசங்க ராபரண ராகமொன் றேசிறப்பாம்
நாரிய ரினத்திலே யுலகெலாம் புகழ்கமலை நாமகள் வெகுசிறப்பாங்
கோலத்து டன்மிக்க வழிநடைக் குதவிதரு குதிரையே வெகுசிறப்பாங்
குணமிகுங் கற்போடு துணைவனைப் போற்றிடு குடும்பினி யதிற்சிறப்பாந்
காலத்தி னீர்வளங் குடிவளம் பயிர்வளஞ் சார்ந்தநில மேசிறப்பாந்
தக்கதொரு கொற்றவ ரிருக்கின்ற பட்டணந் தன்னில்வாழ் வதுசிறப்பாங்
காலத்தி லுதவிதரு நட்பே சிறப்பதாங் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (34)
இயற்கைச்செயலன்றி மாறுபடாதெனல்.
தண்டவா ளத்துமீ தோடுகிற புகைவண்டி தரையின் மீதினிலோடுமோ
தரைமீதி லோடுகிற மரவண்டி நீள்கடற் றண்ணீரின் மீதோடுமோ
புண்டரீ கம்பெரிய வாவியல் லாற்குறும் * பொறையிலுற்பத்தியாமோ
+ பொன்னிமடு தன்னிலுறு முதலையொடு மகரமிப் புவியிலுயிர் வாழுமோசூற்
கொண்டமே கங்களைக் கண்டமயில் போலவான் கோழிநட னஞ்செய்யுமோ
§கோகநக மிரவியைக் கண்டுமலர் தன்மைபோற் குமுதமல ரிதழ்விரியுமோ
#கண்டீர வஞ்சிறிய தானுலு மும்மதக் கரியினங் கட்கஞ்சுமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (35)
--------
* பொறை-மலை; + பொன்னி-காவேரி; §கோகநகம்-தாமரை; #கண்டீரவம்-சிங்கம்
அந்தந்த வினத்திலுயர்ந்தவை.
மலைகளின் மகாமேரு மாதத்தில் வைகாசி வாரத்தி லிந்துவாரம்
மலர்களிற் கமலமலர் நகரிதனி லேகச்சி மரமதிற் §சந்த்ரதிலகம்
பல பூத மதில்வாயு வருபுனலி லேகங்கை பசுவினிற் காமதேனு
பாரிபுகழ் பூமியிற் காஷ்மீர கண்டநற் பறவையினில் @வைந்தேயன்
இலகுமணி யிற்பதும ராகமணி மேன்மைதிக ழிருடிகளி லேவசிட்டன்
எழுகடலிலேதிருப் பாலுததி சங்கீத மிசைவீணையினினாரதன்
கலைதமிழகத்தியன் கற்பினி லருந்ததி காசினியி லுயர்வல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (36)
-----------
§சந்திரதிலகம் –சந்தனமரம், @வைந்தேயன்-கருடன்.
அந்தவினத்திலுயர்ந்தவை.
அழகினிற் *செங்கமலை பொறுமையிற் பூதேவி யறிவினிற் §றெய்வமந்த்ரி
அரியவிற் போரினிற் பற்குனன் சொல்லுக் கரிச்சந்த்ர பூபாலகன்
விழவுறும் பூசையிற் சிவபூசை விடுபடையில் வெற்றிதரு வேலாயுதம்
வேதியர் ஜெபிக்கின்ற மந்திரத் திற்ப்ரணவம் வெற்றியினில் விக்ரமார்க்கன்
செழியவிப் புவியிலுள தேவாலயங்களிற் தில்லைச் சிதம்பரதலந் திறமைபெறு
மிருகமதி லரசெனுங் கேசரி @செருவினிற் சூரபதுமன்
கழகமுறு கல்வியிற் சேடனுயர் வென்றறிஞர் கழறுவா ரநவரதமுங்
கஞ்சனிகர் கற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (37)
--------
* செங்கமலை-திருமகள்’ §தெய்வமந்த்ரி-வியாழபகவான். @செரு- உயுத்தம்
திருவாழிடங்கள்.
விண்டுவி னிடத்திலும் விவேகிய ரிடத்திலும் விளக்குப்ர காசத்திலும்
வேந்தர்களிடத்திலும் பூந்தடா கத்திலும் வெற்றியுறுவோரிடத்துந்
தண்டுளவு சந்தனங் குங்குமங் கூவிளஞ் சாதிமல் லிகைதன்னிலுந்
தந்தியின் முகத்திலுங் கந்துக முகத்திலுஞ் சத்யவாசகரிடத்தும்
வண்டுலவு கமலங் கடப்பமலர் மீதும்வி வாகமாளிகையிடத்தும்
*மகரால யத்திலுங் கங்காஜ லத்திலும் மாதவன் சங்கத்திலும்
கண்டுமகிழ் கொண்டுசெங் கமலையக லாமற் கருத்துற் றிருப்பளன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே, (38)
------------
*மகராலயம்-கடல்;
இதுவுமது.
தரளமணி தன்னிலுங் தனதானியத்திலுஞ் சற்சன ரிடந்தன்னிலுந்
தம்பூரு மிருதங்க முகவீணை நாகசுர சங்கீத நாதத்திலுஞ்
சுரபிகூட்டத்திலுங் கதலீ பலத்திலுந் தூயதீம் பாற்குடத்துஞ்
சுமங்கலை யிடத்திலு * மிலிங்குச பலத்திலுஞ் சூதபத் ரந்தன்னிலுந்
திரவியம் வைக்கின்ற பொக்கிஷந் தன்னிலுஞ் சீலமுள் ளோரிடத்துந்
# திரையலிலை தன்னிலுங் தெரியல்பைங் கூழிலுஞ் செம்பொனவ ரத்தினத்துங்
கருதரிய திருமாது நீங்காம லென்றுங் களிப்பொடு வசிப்பளன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (39)
-------
* இலிங்கு சபலம்-எலுமிச்சம்பழம், #திரையலிலை-வெற்றிலை.
மூதேவி வசிக்குமிடம்.
பிணியோ ரிடத்துந் தரித்திர ரிடத்திலும் ப்ரேததக னப்புகையிலும்
பெருக்கிடு தரைத்துகள் விளாவரசு நிசிநிழற் பீரலா கியகந்தைகள்
அணிவோ ரிடத்திலுங் கார்மேக விருளிலும் ஆட்டுக் குழாந்தன்னிலும்
ஆசார மில்லாத கொடியோர் முகத்திலும் #அலக்கணுறு வோரிடத்துந்
துணைவனைத் தூறிமறு கணவனைச் சேர்கின்ற சோரமங் கையரிடத்துஞ்
சுடர்தருங் தீபத்தி னிழலிலும் மட்கலச் சூளையிலெழும்புகையிலுங்
கணமுமக லாமலே மூதேவி மனதிற் களிப்புற் றிருப்பளென்பார்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (40)
------
#அலக்கண் - துன்பம்,
இவையிற்சிறப்படையினு மிவையாகாதெனல்.
தினையரிசி யன்னமென் சுவைமிகுத் தாலுமது செஞ்சாலி யன்னமாமோ
திரைகடலில் விளையுப்பு வெண்மையானுலுமது சீனிசர்க் கரையாகுமோ
பனையினது கனியுட் பசப்பிருந் தாலுமாம் பழமதற் கிணையாகுமோ
பார்த்திவர்கள் வீதியி லுலாவினுங் கழுதையது படைவீரர் பரியாகுமோ
வனமருவு வான்கோழி மேலாய் வளர்ந்திடினு மரகத மயூாமாமோ
வரியுற்ற பூனையொரு மலைசுற்றி யோடினும் *வல்லியப் பறழாகுமோ
கனவெதுகை மோனையழி யார்கவிஞ ராவரோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (41)
------------
*வல்லியப்பறழ் - புலிக்குட்டி,
இவர்களுக்குநோக்கமிவ்வகையிலெனல்.
சீலமிகு வேதியர்க ணோக்கஞ் செபத்திலே தீரமேயரசர்நோக்கஞ்
செல்வவணிகர்க்குவரு லாபத்தி னோக்கமாந் திகழும்வே ளாளருக்கோ
தாலமிசை விளைகின்ற கழனிமேனோக்கமாஞ் சதுரங்க சேனையதிபர்
தங்களுக் கெதிராளி மீதிலே நோக்கமாஞ் சாஸ்திரங் கற்பவர்க்குக்
கோலமிகு நூலினுட் பொருளிலே நோக்கமாங் கோதையர் தமக்கென்னிலோ
கொண்டகண வன்மீது நோக்கமா மெற்குன் $குசேசய பதத்தினோக்கங்
காலநிலை தவறாது முனிவோர் குளிக்கவரு காந்தந்தி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (42)
----------
§ குசேசயம் - தாமரை
மருத்துவன்.
கும்பமுனி பூரணம் வயித்திய நிகண்டெலாங் கோதறக் கற்றுணர்ந்து
கூறுமஷ் டாதசச் சித்தர்குணவாகடங் குற்றமறவேபடித்துச்
சம்ப்ரமம தாகவே போகரிஷி தன்வந்த்ரி சட்டமுனி நூலோதியுந்
தாரணியி லுண்டான பச்சிலைகளுங்கடைச் சரக்குவிவ ரங்தெரிந்தும்
*உம்பரமிழ் தத்தினைப் போலநன் மாத்திரைசெய் துண்ணவே நோயாளருக்
குசிதமுறு கனகுளிகை கலிகங் கஷாயங்க ளுயர்தைலநெய்யுதவியாற்
கம்பித மிகும்பல விதத்துறும் பிணிகளைய கற்றிவிடு வார்களன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (43)
-------
* உம்பரமிழ்தம் - தேவாமிர்தம்.
இப்படிப்பட்டவரிவரெனல்.
நலமருவு விகிதமொடு வுலகபரிபாலன நடாத்துமவ னேயரசனாம்
ராஜசமயந்தெரிந்துதவியா கியசெய்தி நவிலுமவனேமந்திரி
வலிமருவு தீரமொடு தரியலரை வென்றுவரு மனிதனே புருடசிங்கம்
வண்டமிழிலக்கண விலக்கியக் கணிதநூன் மாசறக் கற்றுணர்ந்தே
ஒலிமருவு சவையெலா மகிழப்ர ஸங்கம துரைக்குமவ னேவித்துவான்
வுற்றநவ நாதருறு கிரகநிலை வலிதெளிந் தோதுமவ னேசோதிடன்
கலகலென வினியதொனி பலபுரிபு மவனே வி கடகவி யெனப்புகலுவார்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (44)
உள்ளூரிற்சிறப்படையாதோர்.
சிந்தைதெளி கவிவாணர் மறுதேய மன்னவர்க டேசப்ர சித்திபெறவே
செப்புமவ தானியர்கள் சங்கீத வித்தையிற் றேர்ந்தபா டகர்வேசியர்
மந்த்ரவுப தேசிகர்பு ராணப்ர ஸங்கியொடு வாத்தியத் திற்சிறந்தோர்
வாசனைத் திரவியம் விற்போரு பாத்தியார் மந்த்ரவா தியர்வைத்தியர்
சுந்தர நயங்குலவு நாடகர் சோதிடர் தூயசெப் படிவிச்தையோர்
சொல்லுமிவ ரெல்லவரு முள்ளூரி னிற்பெருமை சொல்லப் பெறாரல்லவோ
கந்தரம் பொழியநற் றருவோங்கி வளர்கின்ற காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (45)
பலகூடினும் ஒன்றுக்கீடாகாதெனல்.
அண்டமிசை யுடுவினம் பலகோ டி யுற்றாலு *மம்புலிக் கீடாகுமோ
அடவிதனி லளவிலாத் தருவிருந் தாலு §மலை யாரமொன் றுக்குநிகரோ
@விண்டுவி லனேகங் ¢கிடக்கையிலிருந்தாலு மேருவுக் கிணையாகுமோ
மின்மினிகளாயிரஞ் சேர்ந்தாலு மொருசுடர் விளக்குப்ர காசமாமோ
மண்டல மதிற்சிலைகள் வெகுவா யிருந்தாலு மாமணியி னென்றாகுமோ
வாழைமுத லான பல கனிகூடி னாலுமுயர் வானுலக ரமுதாகுமோ
கண்டபடி வெகுமடைய ருண்டாயி னலுமொரு கவிவலோ னுக்குநிகரோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (46)
---------
* அம்புலி – சந்திரன்; §மலையாரம் – சந்தனமரம்;
@விண்டு – மலை; ¢ கிடக்கை - பூமி.
மக்களிற் சிறந்தவராவோர்.
இளவயதி லேகல்வி கற்பார்கள் வறுமைவந் தெய்தாம லேயிருப்பர்
ஏற்றபெரியோர்களுயர் நேசவிசுவாசமதை யென்றுமக லாதிருப்பர்
வளமருவு தாய்தந்தை தம்பிதம யன்களொடு வாழ்வுற் றிருப்பரினிதாய்
வாகோப தாரியென் றெல்லோரு மேசொல்ல மரியாதை யும்வகிப்பார்
விளைவுதரு நிலநலம் மேன்மையுத் யோகமொடு விமரிசை யதாயிருப்பர்
வெகுபெயர்க் குபகாரமாகவுங் கனதையொடு மிக்கவை போகமருவிக்
களவுமுதலானதுற் செய்கையற் றுன்பாற் கருத்துற் றிருப்பான்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (47)
குடிவாழ்க்கைச் சிறப்பு.
தேவரா லயநடு விசாலமுள தாய்ஞான தேசிக ரிருக்கையுளதாய்ச்
செங்கோலினரசாட்சி யோங்கிவளர் நகரமாய்த் தெருவுகளனேகமுளதாய்
நாவலர்களோடுபலர் வாழ்க்கையுள தாய்நல்ல நதிபுனற் றடமுள்ளதாய்
நகரம்வெகு பெரியதாய்த் தேர்வீதி கடைவீதி நன்மையுற வெய்தியதிலே
மாவள மிகுந்தமுக் கனிபழுக் குஞ்சோலை வரிவிளைவு தருகிலமுடன்
மக்கண்மரு மக்களொடு தனிமனையிலன்பாய் மகிழ்ந்தன்ன தானமுதவிக்
காவலர் மதிக்குமுத் யோகமொடு குடியின் வாழ்க் கைச்சிறப் பிவையல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (48)
வறுமையால் வருமிழிவு.
அடிபணியு மனைவியுந் தூறுவா டனையீன்ற அன்னைதந் தையரேசுவார்
* யாக்கையொடு மனமெலியு முறவினர்கள் மதியார்க ளசனமில் லாமலலைவார்
படி புகழும் வித்தையு மழுங்கிடும் பெருமைபோம் பாக்யரைக் காணிலஞ்சிப்
பாரா தொடுங்குவார் பசியா லயர்ந்திடப் பந்துவர்க் கங்கள்வந்தால்
இடிவிழும் பொழுதரவு மெய்ம்மறந் திடுதல்போ லேங்கித் துடிப்பரியல்பாய்
இன்மைவந் தெய்திடப் பெற்றபேர் கட்குவே றிப்புவியிலின்னலுளதோ
கடிகமழு மலர்விரிய நிறைவழிந் தொழுகிவரு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (49)
இவையெல்லா மளவுபடினும் ஆசையளவுபடாதெனல்
அரியினடி யாழமும் அமலனடி மகிமையும் அவனிமுழு நெடுநீளமும்
அம்பரத் துயரமும் அரிவையர்க ணெஞ்சமும் அசலமதி லுற்றசிலையும்
பெரியவர்கண் மகிமையும் @பொறையிலுறு தருவுமொரு பிலமிருந் தெழுமீசலும்
பெருமழைத் திவலையும் பல்லுலகி லுயிர்களும் பேராழி யெறியுமலையும்
உரியகரை நொய்மணலு மாகாய மேவுபல #வுடுவினின மும் §புணரியில்
உலவிவளர் ஜெந்துவும் மானிடர்கள் ஜனனமும் உறுதியா யளவு செயினுங்
கருதரிய மானிடர்கள் பேராசை யென்றுங் கணிக்கப் படாததன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (50)
-------
@பொறை – ஆரண்யம்; # உடு – நக்ஷத்திரம்; §புணரி - கடல்
உலகிலெதுவும் நிலையாதெனல்.
இலங்காதி பதியுறு வரப்ரஸா தங்களும் மிந்த்ரஜித் தன்கொற்றமும்
ஈடிலாக் கும்பகர் ணன்கொண்ட விஜயமும் இரணியா க்ஷதணாண்மையுந்
துலங்குஞ் சரீரமொடு மேலான வரமுற்ற சூரபது மன்றீரமுந்
துரியோத னாதிய ரகங்கார மும்பெரிய சோமுகா சுரன்வலிமையும்
பலங்கொண்ட கீசகன் றேகமுஞ் சூர்பெற்ற பானுகோ பன்றீரமும்
பலிச்சக்ர வர்த்தியின் வாகையுந் தக்கன்ப்ர தாபமுந் திரிபுரத்தோர்
கலங்காத வீரகம் பீாமுங் கடலுடைக் காசினியி னிலைநின்றதோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே, (51)
இன்னார்க் கிவையில்லையெனல்.
தீதுபுரி சோரருக் கிருளில்லை வலிமிகுந் தீரமில் லாதவர்க்குத்
திறலில்லை குற்றமெண் ணாதவர்க் கிகலில்லை தேகாபி மானமில்லா
மாதவ மிகும்பரம யோகிகட் குறவில்லை மானமில்லாதவர்க்கு
மட்டுமரி யாதையில் துஷ்டருக் குதவிதனை மறவாத தகைமையில்லை
பூததயை யில்லாத லோபியர்க் குப்பெறும் புகழ்பரவு மேன்மையில்லை
பொற்புறுங் கொங்கையில் லாதவட் கழகில்லை புண்ணியஞ் சற்றுமெண்ணாக்
காதக கனிஷ்டருக் கன்பில்லை யல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (52)
கனதையில்லாத கருமியிவரெனல்.
தருமபரி பாலனஞ் செய்வதற்காகநிதி தந்துபுக ழென்றுமருவார்
தடியடித் திருடர்கட் கஞ்சியே வீட்டுத் தனங்கண்முழு துங்கொடுப்பார்
ஒருகடிகை யாயினுந் தெய்வங் தொழார்வியந் *துருவிலி திறம்பேசுவார்
உத்தமர் நலத்தினைக் கண்டிகழு வார்பயந் §தொன்னார் குணம்புகழுவார்
மருவுமனை யாட்டிதனை மனதினினை யார்வேசி வஞ்சியுட னேகொஞ்சுவார்
மகிமைபெறு பெரியோர்க ணேசமவை யாரற்ப மடையரோ டுறவாடுவார்
கருதரிய கீர்த்திப்ர தாபமறி யாக்கொடுங் கருமியிவ ராகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (53)
-------
* உருவிலி - மன்மதன், §ஒன்னுர் - பகைவர்.
விரைவிலடக்க வேண்டுவன இவையெனல்.
செல்லாத விவகார மேசெயுந் தீயரைச் செப்புமொழி தப்புவோரைத்
தீதுறுந் திருடரைக் கொலைசெயுங் கொடியரைத் தேகத்தின் மிக்கபிணியை
நல்லார்கள் கற்பைக் கெடுக்கின்ற மூர்க்கரை நஞ்சுற்ற ஜந்துக்களை
நலமிலாத் துட்டமிரு கங்களைக் குலமங்கை நன்மைவழு வுஞ்செய்கையை
எல்லோரு மொருமித தடாததி தெனச்சொல்லு மேலாத காரியத்திற்
கிசைகின்ற பேர்களையும் வெகுஜன விரோதமுற் றெளியவர் தமைக்கெடுக்குங்
கல்லாத முழுமடையர் தம்மையுங் கடுகெனக் கண்டிக்க வேண்டுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (54)
இவர்க்கிவை துரும்பெனல்.
சலியாம லென்றுங் கொடுக்குந்தியாகியர் தமக்கு *வித் தந்துரும்பு
சரீரத்தி லபிமான மெண்ணாத துறவியர் தமக்கரச னோர்துரும்பு
வலிமருவு ரணரங்க சூரனுக் கெதிராளி வன்படைகளோர் துரும்பு
மகிமைபெறு பேரின்ப சாதகர்க் கழகான மாதர்போ கந்துரும்பு
பலகலைக ளாராய்ந்த பண்டிதர்க் கரிதான பதமிலாக் கவிதுரும்பு
பரமனடி பரவுமெய்ஞ் ஞானியர்க் கற்பர்கரு பலனலனெ லாந்துரும்பாம்
கலியரசு முதலான தருமருவு சோலைசெறி காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (55)
------
* வித்தம் - திரவியம்,
இதனினு மிதுநன்றெனல்.
வெருவுறச் செய்துநூ றீவதினு மின்சொலால் வெள்ளிலையளித்தனன்று
வேசிமனை யமளியினு மரியாதை யொடுமனைவி மேவுதரு பாயலேசன்
றருமைதெரி யாதவரொ டுறவுகொண் டாடுவதி லறிஞரொடு பகைமைநன்று
அஞ்சொன்மொழி யறியா ரளிக்கின்ற வெகுமதியி லறிஞாசிர மசைதனன்று
திருவுலவு செல்வமொடு நோயால் வருந்தலிற் றிடதேக வறுமைநன்று
கோநகவுத் யோகத்தினித்யுகண் டத்திலுஞ் செய்பயிர்த் தொழில்கணன்று
*கருதலர்களுறவிலும் முரகவிட நன்றுகான் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் கற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (56)
-----------
* கருதலர் – பகைவர்
இவர்க்குறுதியிவையெனல்.
மன்னவர் தமக்குறுதி சதுரங்க சேனைகள் மானிடர்க் குறுதியறிவு
மந்திரி தனக்குறுதி சமயோசி தந்தெரிதல் மறையவர்க் குறுதிவேதம்
நன்னகர் தனக்குறுதி செங்கோலி னாளுகை நாவலர்க் குறுதிகல்வி
நம்பனடி யோர்க்குறுதி மெய்யன்பு வளமேவு நல்லவர்க் குறுதிமேன்மை
இன்னிசையருக்குதுதி மிடறோசை மிக்கபொரு ளீகையோர்க் குறுதிநேயம்
இல்வாழ்வினுக்குறுதி நன்மனைவி கணிகையர்க் கெழில்செய்து கொள்வதுறுதி
கன்னியர் தமக்குறுதி கற்புடைமை யல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (57)
இதனாலிவை வசமாமெனல்.
புளகமுறு கல்வியே வுலகவச மாம்பத்தி புரிவதே தெய்வவசமாம்
போற்றுமரி யாதையே பாவலர்களோடுநற் புகழுமுற வோர்கள்வசமாம்
ஒளிதிகழும் விலைமாதர் தங்களுக் கினியவர்க ளுதவுந்த னத்தில்வசமாம்
உற்றமத வாரண நடத்துவோ னங்கைதனி லுளவங்கு சத்தில்வசமாம்
வளமருவ நடைபழகு கொடியபரி நெடியகடி வாளமது தன்னில்வசமாம்
வாத்தியார் கையிலுள *வேத்திரம தேசிறுவர் வாசிப்பதற்குவசமாங்
களமருவு கட்செவிகள் மங்த்ரவச மல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (58)
---------
* வேத்திரம் - பிரம்பு,
குறையுற்றுங் குறையுறாதெனல்.
வனமருவு சந்தனக் கட்டைதேய்த் திட்டாலும் வாசனை குறைந்துவிடுமோ
வானிலுறு மதியிரவி கட்செவியி னொருவாறு மறைவுதரி னுங்குறையுமோ
புனிதமுறு கனலிடை யுருக்கினு மடிக்கினும் பொன்னினிறை யுரைகுறையுமோ
புகழ்சங்கு செந்தழலில் வெந்துநீ றாகினும் போகுமோ தன்னிறந்தான்
தனிமருவு பெரியோர்க ளற்பராற் கொடுமையுற் றாலுமவர் மகிமைபோமோ
சாணையிற் றேய்த்தமணி சிறியதா னலுமதுதன்னொளி மழுங்கிவிடுமோ
கனமருவு பெருமையிவை யெந்நாளு நீங்குமோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (59)
கணிகையரியல்பு.
*அரிதகிற முறுவிரக புருடன்வந் தான்மிகவு மாசார வுபசாரமாய்
ஆசையொடு பாய்விரித்ததிலெழுந் தருளுமென் றருகே யிருந்துமய லுக்
குரியமொழி பேசிவிசு வாசமொடு தாம்பூல முதவியே சரசமாக
வுத்தரீ யத்தைப் பிடித்திழுத் துச்சிரித் தொய்யார மாய்நடித்துச்
சரிகையுடை நீவியலர் சூடிவிளையாடித் தனத்தைத் திறந்துமூடித்
தாய்க்கிழவி தனையழைத் துன்மருகன் வந்தார் தரித்திர மொழிந்ததென்றே
கருதரிய கைப்பொருள் பறித்திட முயன்றிடுங் கணிகையரை நம்பலாமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (60)
--------
*அரிதகிறம் – பொன்னிறம்.
நாடகச்சிறப்பு.
வண்ணமிகு வேஷமுஞ் சாதியும் பாஷையும் வகைபல விருக்கவேண்டும்
வல்லோர்கள் சொற்படி நடாத்தவேண்டும் நல்ல வாத்திய ஜமாக்கள்வேண்டும்
எண்ணியொரு வர்க்கொருவ ருசிதமிகு வெவ்வே றியற்றொனி யிருக்கவேண்டும்
இச்சைதரு விகடகவி நயமதுர மாகவு மிருக்கவேண் டுஞ் சவையிலே
புண்ணிய கதாரஸம் புரியுமிங் கிதபதம் புகழுஞ்ச பாரஞ்சிதம்
பூசுபரிமளவாச நாகரிக நேசநற் புலவோர் சபாஷென்றிடக்
கண்ணிய மிகும்பெரியர் பலபேர்கள் புகழ்நாட கச்சிறப் பிவையல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (61)
இதனை இவரன்றி யிவரறியாரெனல்.
பூந்தெரியல் மேன்மையைப் புனைவோர்களல்லாது பொல்லாக் குரங்கறியுமோ
புகழ்பெருங் கல்விநிலை கற்றேறோர்களல்லாது புத்தியீனர்களறிவரோ
வேந்தர்மனு நீதிநெறி மந்திரிக ளல்லாது வேழம்பர் தாமறிவரோ
வேதவே தியரியல்பு நல்லோர்க ளல்லாது வேசிகாந் தர்களறிவரோ
சாந்தகுணசீலமதை யீசனடி யோரலாற் சண்டாளர் தாமறிவரோ
சந்தன சுகந்தமதை நாகரிக ரல்லாது தடியுழு கடாவறியுமோ
காந்தனியல் மனையா ளலாற்பொருள் பறித்திடுங் கணிகையானவளறிவளோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (62)
இக்குறையாளர்க்கு இதுவில்லையெனல்.
வலியிலா தவருக்கு *விறலேது நலமான வயலிலார்க் கேதுவிளைவு
#வாகையில் லாதவர்க் கரசேது வுறுதிமொழி வழுவுவோர்க் கேதுநன்றி
பலனிலா தவருக்கு முதலேது கனமருவு பண்பிலார்க் கேதுசுற்றம்
பணமிலா தவருக்கு ஈகையேது மயலுறு பரத்தையர்க் கேதுநேசங்
குலமிலா தவருக்கு நலமேது மேன்மைபெறு குணமிலார்க் கேதுபரிசு
கோபமில்லாதவர்க் §கிகலேது வுதவுறுங் கொடையிலார்க் கேதுகீர்த்தி
கலையிலா தவருக்கு மகிமையே தென்பர்காண் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (63)
---------
* விறல்-வெற்றி, #வாகை- செயம், §இகல்-பகை.
இதுவுமது.
பதியிலா தவருக்கு நிலையேது புகழ்பெறும் பணமிலார்க் கேதுமேன்மை
படையிலா தவருக்கு விறலேது பக்தியொடு பணிவிலார்க் கேதுதெய்வம்
மதியிலா தவருக்கு நலமேது கவின்மேவு மாதிலார்க் கேதுவிழைவு
மானமில் லாதவர்க் கிழிவேது திருமங்கை வசமிலார்க் கேதுசெல்வஞ்
சுதியிலா தவருக்கு கானமே தூசிதமுறு துறவிகட் கேதுசுற்றந்
தூய்மையில் லாதவர்க் கறிவேது நன்மைதரு தொழிலிலார்க் கேதுவுணவு
கதியிலா தவருக்கு வுதவிநீயல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (64)
ஒன்றில்லமையாற் சிறவாமை.
சந்ததியி லாதவர்க ளெத்தனை விதம்புகழ் தரிக்கினுங் கனதையில்லை
தயாளமில்லாதவர்க் கெத்தனையரும்பொருள் சார்ந்துநன் மேன்மையில்லை
சிந்தைதெளி கல்வியில் லாமலெத் தனைகவிதை செப்பினும் புலமையில்லை
திரிகரண சுத்தியில் லாமலெத் தனைவிதஞ் செய்யினும் பூசையில்லை
வந்துமகிழ் வதுவையிற் பந்துஜன மில்லாவி வாகமும் பெருமையில்லை
மானினியி லாமனைக் கெத்தனை வளம்பெருக வரினுமில் வாழ்க்கையில்லை
கந்துக மிலாப்படைக் கழகில்லை யல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (65)
விரைவிற் கெடுவன விவையெனல்.
மோனையொடு திகழெதுகை யில்லாத கவிதையும் மூ"தரங் குறுலாபமும்
மூர்க்கர்விசு வாசமும் மூடருயர் நேசமும் மூப்பிலாக் குமரிவாழ்வுந்
தானையொடு சதுரங்க சேனேயில் லாவரசு தலைவரில் லாதநாடுஞ்
சத்திய மிலாதவிவகாரமும் புகழ்பெறுந் தருமமில்லாதபொருளுந்
§தேனருட னுறவுகொண் டாடலும் வினையமாய்த் தெரிவைதரு மதமோகமுந்
#திருவிலி ப்ரபுத்வமுங் கடைதிறப் பில்லா திருக்கின்ற நிறையேரியுங்
கானலிற் றீயின்முன் ¢ மாடுறு தருக்களுங் கடுகெனக் கெடுமல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (66)
------
* அரங்கு - சூதாடுமிடம், §தேனர்-திருடர், #திருவிலி-அமங்கலி, ¢ மாடு - சமீபம்.
தீநெறிவிலக்கல்.
செல்லாத விவகார மேசெய்ய வொண்ணாது செய்ந்நன்றி கொல்லொணாது
தேவதா ப்ரார்த்தனைகள் செய்துகொண் டதனைச் செலுத்தா திருக்கொணாது
வல்லோர்கண் முன்னின்று வாதஞ்செ யொண்ணாது வாய்மையை மறுக்கொணாது
மாதாபி தாவொடுவிரோதஞ்செ யொண்ணாது வசைமொழி வழங்கொணாது
நல்லோ ருடன்கூடி வெகுகால மாய்வந்த நட்பைப் பிரிக்கொணாது
நம்பனடி யோரைப் பழிக்கொணா துலகத்து நன்னடை தவிர்க்கொணாது
கல்லாத முழுமடையர் சகவாச மாகாது காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (67)
திரும்பாதவையிவையெனல்.
ஆரணை கடந்திட்ட வெள்ளமும் வலையினி லகப்பட்ட மான்கூட்டமும்
அஞ்சாது திருடர்கள் கைக்கொண்டவுடைமையும் ஆவிற் கறந்தபாலும்
வீரரண சூரர்முன்னேர்ந்திடும் பகைவரும் வேசிக் களித்தபொருளும்
விடவரவு வாய்தனி லகப்பட்ட * நீகமும் வேங்கைமுற் பட்ட §மறியுந்
தாரணியி லேவீடு தணலா லெரிந்ததுந் தருமன் கவர்ந்தவுயிருந்
தாரைவார்த் துத்தந்த சொத்துக்க ளுந்திரைச் சலதிமுழு கியகப்பலுங்
@காரணன் கைக்கேறு பொருளுந் திரும்புமோ காந்தநதி தீர மேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (68)
------------
* சீகம்-தவளை; §மறி-மான்; @காரணன் -அரசன்,
இவர் பகையாகாதெனல்.
அருந்தவத் தோர்பகையு மாச்சாரி யன்பகையு மறியுமுற வோர்கள்பகையும்
அடுத்துக் கெடுக்கின்ற கொடியோர்கள் பகையுநூ லாய்ந்த*முனி வோர்கள்பகையும்
பெருந்தன மிகுத்தோ ருடன்பகையு மூரினுட் ப்ரபலமுடை யோர்கள்பகையும்
பேசரிய கவிவாணர் தம்பகையு நீடிய §பெருந்தகைய ரோடுபகையும்
வரும்பிணியகற்றிடு மருத்துவர்கள் பகையுமிகு வல்லகரு ணீகர்பகையும்
மந்த்ரவா தியர்பகையும் விகடகவி பகையுநல மருவுவோர்க் குதவாதுகாண்
கருமபுன றிளைக்கப் பெரும்@பவ மொழித்திடுங் காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (69)
--------
* முனிவோர்-மறையோர்; §பெருந்தகையர்-அரசர்; @பவம்-பாவம்
மோசப்பரத்தையரியல்.
விலைமாது மனைதேடி யதிமோக மாகவொரு விடபுருடன் வந்தணைந்தால்
மிக்கவுப சாரமோ டாசனம் விரித்ததின் மீதெழுந் தருளுமென்பார்
தலையசைத் தபினயங் காட்டுவார் தட்டிலே தாம்பூல முதவியன்பாய்த்
தாசியென் னாசையுன் மீதன்றி வேறில்லை சத்தியமி தென்றுரைப்பார்
முலையது குலுங்கச் சிரித்துமது கைவைர மோதிரந் தந்துவிட்டென்
மோகந்தவிர்த்திடுஞ் #சித்தச னெனச்சொல்வர் மோசப் பரத்தையன்றோ
கலைவலா ரிமையோர் களித்துக் குளிக்கவரு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (70)
-----------
# சித்தசன்-மன்மதன்
கலிகாலவியல்.
தந்தைதாய் மொழிதனை மறுப்பார்கள் பெரியமூ தாதையைச் சீறுவார்கள்
சற் சனர்க ணட்பைத் தவிர்ப்பார்க ளிழிவான தடியரோ டுறவாடுவார்
சிந்தைதெளி கல்வியறி வில்லோர்களைக்கவிச் சிங்கமென் றேசொல்லுவார்
திக்கெலாம் புகழ்பரவு தக்கவித் வான்களைச சீவனோ பாயனென்பார்
பந்தமிகு *மந்திரத் துனதேவ ருருவினைப் பரியாச மேபண்ணுவார்
பரமனடி பரவுமெய்ஞ் ஞானியரை யிவனொரு பகற்சன்னி யாசியென்பார்
கங்தமணி வேசியைத் தழுவியே மனைவியைக் கைவிடுவர் காலமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (71)
-----
*மந்திரம் - தேவாலயம்
பூர்வவினைப் பயனிவையெனில்.
தனமோங்கி வளர்கின்ற பொருளாளருக்குரிய சந்ததி யிலாததென்ன
தாரித்ரியத்திற் றவிப்போர்களுக்கதிக தனையருண் டாவதென்ன
சினமோங்கு மூர்க்கர்க் கருந்ததி யெனத்தக்க தேவிவாய்த் துற்றதென்ன
திகழக் கொடுக்கமன முள்ளோர் களுக்கதிக திரவியமிலா தென்னவிற்
பனமோங்கு நாயகர்க் கிழிவான துர்க்குணப் பாரிவந் துற்றதென்ன
பலபிணி தொலைக்கின்ற பண்டிதர்க ணோயினாற் பரதவித் திடுதலென்ன
கனநீங்குமிவையெலா முற்பிறப்பிற்செய்த கன்மபல னாகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (72)
வேட்டகத்தினியல்.
பற்றலுறு நெறியினா லத்தைமனை தேடிப் பரிந்துமருமகன்வந்திடிற்
பாய்விரித் ததிலெழுந் தருளுமென் றேசொலிப் பயபத்தி விசுவாசமாய்
உற்றபல பகூணம் பாயசம் பால்கலங் துசிதமா கச்சமைத்தே
யுண்ணவாருங்களென றன் புடன் பேசியே வுபசார மேசெய்குவார்
சற்றுநாண் மூன்றாகில் வெற்றிலை கொடுப்பதுந் தவறியே போகுமறுநாள்
தாமதித் திடுவதே னலுவலிலேயோ வெனச் சாடையா கப்பேசவுங்
கற்றவர்க ளாகையால் மருகனம் மனையிலொரு கடிகையுமிருக்கவசமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (73)
கல்விப்பொருட் சிறப்பு.
புனைவுறுங் கல்வியாம் பொருளைப் படைத்திடிற் புவனமெல் லாந்துதிக்கும்
பொன் போல வேறொருவர் கைதனி லடங்காது போற்றிப் புதைக்கொணாது
வினைமருவு திருடருங் காணாம லேபெற விரும்பப் படாதசெல்வம்
மிக்காய மதுரமொடு கவிமாரி பொழிகின்ற மேகசஞ் சாரமிதனை
மனையிலொரு வர்க்கொருவர் செலவிடக் கூடாது மனமாளிகைப்பெட்டியில்
வைக்கின்ற மாமணிகள் மற்றொருவ ரிச்சித் து வெளவப் படாது கண்டாய்
கன மருவு வெண்கமலை நாமகள் விலாசமுறு கல்விச் சிறப்பல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (74)
குறிப்பறிதல்.
மேனியிற் கொடியநோய் தாதுபார்த் தறியலாம் மெய்ஞ்ஞானி யென்பவர்தமை
மேன்மையா லறியலாம் வீரரைச் சமர்புரி விசேஷத்தி னாலறியலாம்
மானினி நடக்கையவர் கானடையி னாலுமிரு வடுவிழியினுந்தெரியலாம்
மாவித்து வான்களைக் கற்றோர்களைக்கொண்டு வாதுசெய் வித்தறியலாம்
நானில மதிற்கொடுஞ் செய்கையுடை யோர்களை நடத்தையா லறியலாகும்
நம்பனி ணையடிபூசை செய்யுமெய் யன்பர்தமை நற்சுசியினாலறியலாம்
கான மலர் §மோதவங் காற்றடி வசத்தினாற் கண்டுகொள லாகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (75)
-------
§மோதவம் – வாசனை
அவரவர்க்குரியவை.
#விஞ்சையொடு மேன்மையா யவையெலாந்
திகழுற விளங்கவைப் போன்றந்தையாம்
விமரிசை யுடன் கற்ற கல்வியாற் றந்தையை
விளக்குவோ னேபுதல்வனாம்
அஞ்சலுறு தெய்வமென் றனுதினங் கணவன்மீ
தன் புசெய் பவள்மனைவியாம்
அரியநட்பாளர்போ லெந்நாளு மெய்ம்மொழிக
ளாய்ந்துரைப் போன்சோதரன்
நெஞ்சமகிழ் விதரணை தெரிந்துதவி செய்துமுன்
னிற்குமவ னேயனாகும்
நேயமுடனின்றுதன் றலைவன்மொழி கடவாத
நெறியினிற் போன்சேவகன்
கஞ்சமலரிரவியைக் கண்டிதழ் விரித்திடுங்
காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச
கஞ்சகிரி சித்தேசனே. (76)
-------
# விஞ்சை -கல்வி.
----------
இவையில்லாவிடிற்று யருறுமெனல்.
மாரியில் லாதபயிர் குழவியில் லாதபெண் வரும்படி யிலாதசெலவு
*வாகையில் லாதபடை மேகமில் லாதமயில் மதியமில் லாதகுமுதம்
+ஏரியில் லாத நில @மேந்தலில் லாவுலக மிசையறிவி லாதகணிகை
இரவியில் லாத ¦மரை யினிமையில் லாதசுவை யிச்சையில் லாதமனைவி
சூரியனி லாதபகல் சூசனையி லாதசொற் றூபமில் லாதபூசை
சுத்தியில் லாததரை சுபகரமி லாதமொழி தூய்மையில் லாதமனது
$ காரிகை யிலாதமனை யிவையெலாம் புவிதனிற் ¢கலுழா திருக்கவசமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (77)
--------
* வாகை - வெற்றி. * எரி -கனெறு. @எந்தல் - அன். ¦ மரை - தாமரை.
§ காரிகை - பெண். ¢கலுழ்தல் - துயருறல்
----------
உயர்ந்தபொருளிருக்குமிடத்துத் தாழ்ந்த பொருளுமுண்டெனல்
தாமரை செழிப்புற் றிருக்கின்ற வாவியிற் @ சைவல மிகுத்திருக்குந்
*தாணுவிற் றேனுண்டு சென்றொருவ ரணுகாது &சஞ்சரிக முற்றிருக்கும்
வாமமிகு சந்தன மரத்தணுகி டாமலே வல்லரவு குழ்ந்திருக்கும்
வாணியின் விலாசமிகு கவிராஜ சங்கத்தில் மடையரும் வதிந்திருப்பார்
பூமியிற் §கேதகைப் புட்பமுண் டணுகாது பொல்லாத முள்ளிருக்கும்
புகழக் கொடுக்குமவர் பெயரைக் கெடுக்கவரு $பூரிய ரிருப்பரன்றோ
%காமியம தெய்தக் களித்துக் குளிக்கவரு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (78)
-----
@ சைவலம் - பாசி. * தாணு - மலை. &சஞ்சரிகம் - வண்டுகள்.
§ கேதகை - தாழை. $பூரியர் - கீழ்மக்கள். % காமியம் - இஷ்டகாமியம்.
சமயத்துக்குதவுமவை.
சேரொன்ப திற்பெற்ற பிள்ளையும் நல்லோ ரிடத்திற் கொடுத்தபொருளும்
இலக்கண விலக்கியக் கடலெலாம் பருகிநின் றேப்பமிட் டுயர்வித்தையுஞ்
சேருந் தொழிற்குள்ள மைந்ததி லுயர்ந்திடுஞ் செம்பொன்னி * னூதியத்திற்
சிறிதுசிறிதாகவே ராஜதன சாலையிற் சேர்த்துவைக் கின்ற நிதியுஞ்
சாரும் புவிக்குட் டகுந்தவள மேவுந் தலத்திற் றெளித்தவிதையுங்
தாலம் புரக்கின்ற வேந்தர்விசு வாசமுந் தனவான்க ளிடகைப்பரி
காரஞ்செய் நன்றியுங் கைப்பலன தல்லவோ காந்தநதி தீரமேவுங்
கஞ்சணிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே, (79)
---------
* ஊதியம் - இலாபம்.
குணம்மாறதெனல்.
கருதுமந் திரமோதி * மகரந்த மூட்டினுங் @காஞ்சிரை கரும்பாகுமோ
கநகசிம் மாசனத் தரசுமுடி சூடினுங் கவிகுலச் செய்கைபோமோ
பொருதவரு ரணசூர ருடவினைத்தாலுமவர் #பூசலிற் பின்னிடைவரோ
$போகியதனுக்கமு தளித்தே வளர்க்கினும் புன்கடு வலாதுதருமோ
தருதலில் லாப்பரம லோபியர்க் குப்புத்தி சாற்றிடினு மீகைவருமோ
சற்றுநல மில்லாத சண்டாளருக்கரிய சன்மார்க்க நீதிவருமோ
கருதரிய முழுமூடருக்கரிய மேலான கனதையுண் டாக்கவசமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (80)
---------
* மகரந்தம் - தேன். @ காஞ்சிரை - எட்டி #பூசல் - உயுத்தம் * போகி - பாம்பு
இதனாலிவை பாவமெனல்.
தருவினிழலில்லாத நெடுவழி நடப்பதே தாள்செய்த பாவமாகுஞ்
சச்சிதா னந்தனைப் பணியாத தேதன் சரீரமது செய்தபாவம்
மருவுமனை யாட்டிதுர்க் குணியாக வாய்ப்பதே மணமகன் செய்தபாவம்
மக்களுயர் தேட்டாமை யுண்ணா திருப்பதே மாதாபி தாசெய்பாவம்
பருவமதில் மக்களுண் டாகாத தேயனு பவிப்பவர் புரிந்தபாவம்
பாக்கியம துற்றபோ தொருவர்க்கு மீயாமை பாணிசெய் பாவமாகுங்
கருவிழிப் பார்வைகுரு டாவதே யவர்களிரு கண்கள்செய் பாவமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (81)
திருமகள் சிறப்பு.
வனசமலர் மங்கையின் றிருவருள் வதிந்திடில் வன்மொழிகள் நன்மொழியதாம்
வாராத பொருளெலாம் வந்திடும் மேலான மரியாதை யும்வழங்குந்
தனதான்ய சம்பத்து மிகவுமுண் டாம்பெருந் தகையர்விசுவாசமுண்டாந்
தாராளமாகவிச் சவையில்வர லாமெனத் தக்கோ ரெழுந்திருப்பார்
இனமேவு முறவோர்கள் கொண்டாடுவார்கடம் மிழிகுலமு மேம்பாடுறும்
ஏந்தலிட மேகியொரு வாய்வார்த்தை சொன்னாலு மேலாத வேலைமுடியுங்
கனமேவு செங்கமலை வாழ்க்கை நல னாலுற்ற காட்சியிவை யாகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (82)
மேம்பாடிலாதவர்.
மானமில் லாதவர்க் கெத்தனை விதத்தாழ்வு வந்திடினும் வெட்கமில்லை
வல்லமை யிலாவரச ரெத்தனை விதப்படை வகிக்கினும் வாகையில்லை
ஞானமில்லாதவர்க ணன்னூல் படிக்கினும் நாகரிக மேன்மையில்லை
*நாநல மிலாதவர்க் குபகார மெவ்வளவு நல்கினும் நன்றியில்லை
தானதரு மந்தயவி லாதவர்க் குப்புத்தி சாற்றிலும் மீகையில்லை
சாந்தகுண மில்லாத மூர்க்கருக்குப்பெருந் தகைமையுண் டாவதில்லை
#கானவர்க் கெவ்வளவு நீதிசொலி னுஞ்ஜீவ காருண்ய முண்டாகுமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (83)
------
* நாநலம் - சத்தியம், #கானவர் - வேடர்
நற்சகுனம்.
திருமருவு கன்னிகை சுமங்கலி பசுக்குழாந் திகழுமெலுமிச்சம்பழஞ்
#சி ந்துரங் §கந்துகம் பாறயிர் மதுக்குடந் தீபமுல காளுமன்னன்
தருவுதவு முக்கணியொ டக்கினிச் சுடருடன் சகலவாத் தியமுழக்கந்
தம்பதி மணக்கோலம் வேசிய க்ஷ்தைமுத்து தக்கமறை யோர்களிருவர்
மருவுசெறி யிதழ்விரியு நாண்மலர் மாலைகள் மாம்ஸமங் கலசுபகர
மஞ்சளொடு குங்குமங் கந்ததாம் பூலமலி வரிசைக ளெடுத்துவரலுங்
$ கருமுகையும் @வேழமோ டிவையெலா நலமெனக் கருதுபெரி யோர்கழறுவார்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்ததேச கஞ்சகிரி சித்தேசனே. (84)
--------
# சிந்துரம் – யானை; §கந்துகம் = குதிரை.
$கருமுகை -இருவாக்ஷி. @வேழம் – கரும்பு
துற்சகுனம்.
விதவையொரு வேதியன் காஷாய தாரியொடு விறகுசுமை வேல்நம்பியான்
வில்லமபு வாச்சியுளி கோடாலி துப்பாக்கி வேடனெடு *மேதிபுலையர்
புதியமட் பாண்டமுந் தலைவிரித் தழுதலும் #புலைவியா கியமங்கையும்
புலிகரடி சுழல்காற்றொ டிடிமின்னல் மழையும் புகைந்துவருகின்றதீயும்
பதிதனிலிருந்துவரு மெதிரினிற் பூனையும் பாம்பையுங் கண்ணினாலே
பார்க்கவே கூடாது நீர்க்குட முடைத்தலும் பாவையோர் நிருவாணமும்
கதிர்பரவு புவியதனிலபசகுன மல்லவோ காந்தநதி தீாமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (85)
-------------
*மேதி - எருமை # புலைவியாகியமங்கை – வீட்டுக்குவிலக்காகிய பெண்.
மானமில்லாமற் பிழைப்பவரிவரெனல்.
தருமபத் தினியுடைய தாதைமனை நிலையென்று தங்கிவாழ் கின்றபேருந்
தம்புதல்வி வாழ்மனையிலன்பாக வேவரந்து சார்ந்துவாழ் கின்றபேரும்
அருமைதெரியாதமுழு மூடர்மீதிற்கவிதை யழகா யுரைப்போர்களும்
அரியமனை யாட்டிதனை யப்புறஞ் செலவிடுத் ததினாற் பிழைப்போர்களும்
பெருமைதரு செல்வமுண் டாயிலுந் தாழ்வான பிச்சைக ளெடுப்போர்களும்
பேசரிய வெகுகடன் பட்டுக் கொடாமற் பிதற்றித் தெழிப்போர்களுங்
கருதரிய மானமில்லாமற் பிழைக்கின்ற கயவரிவ ராகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (86)
நல்லோர்புகழ் நிலைப்பேறு.
புவியதனி லேயரிச் சந்திரன் வாய்மையாற் புலையனுக் கடிமையானான்
புள்ளினுக் காகவே சிபியென்னு மன்னவன் புகழுடற் றசையளித்தான்
தவவிரத மகிமையாற் றேவேந்தி ரற்குத் ததீசிமுது கென்பளித்தான்
தனதுகற் புடைமையின் நெறியினால் வேடனேச் தமயந்தி நீறாக்கினுள்
பவனடிக் கன்பனாய் மார்க்கண்ட னேமனைப் படியிலுரு ளச்செய்தனன்
பத்துமுடி ராவணன் பிரிவால் விபீஷணன் பாரினிற் புகழெய்தினன்
கவிகுலத் தநுமனை யிாாமனா லுலகெலாங் கைகுவித் திடுமெல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரிசித்தேசனே, (87)
----------
இதனாலிதன் பெருமையழியுமெனல்.
மரவைர மதனைப் பிளக்கின்ற கோடாலி வாழையால் முனைமழுங்கும்
மழையனைய கவிமாரி பொழிகின்ற கவிராஜர் மடையராற் றோல்வியடைவர்
அரவினம் *புள்ளரசு நிழலால் விடங்கெடும் யானையரி யாலடங்கும்
அல்லல்புரி யுங்கொடியர் வீரப்ர தாபமுள வதிகாரி யாலடங்கி
வெருவுவார் வெள்ளிசெம் பொன்னினங் கடுகளவு வெங்கார மதிலுருகிடும்
வேல்விழிக் கணிகையின் சேர்க்கையா லழகான மேனிகுலை யும்பெருமைபோங்
#கரவர்தம் முறவினால் மேன்மையக லாமலெக் காலமு மிருக்கவசமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (88)
--------
* புள்ளரசு - கருடன், #கரவர் - திருடர்
மானமும் நல்லொழுக்கமும்.
மானமுள் ளோர்களொரு வசவுகொள் ளார்கடுன் மார்க்கத்தி லேதலையிடார்
வாராத வாபத்து வந்தாலு மேலான வாய்மைநெறி வழுவிநடவார்
தானகன் னன்றனது வுயிரைமதி யாமலே தன் செவிக் குண்டலத்தைச்
சவையிற் கழற்றிக் கொடுத்தனன் பதிவிரதை சாவளவு நீதிவழுவாள்
ஞானமுறு சிவயோக சாதனிய ரெந்நாளு நாரியர் மயக்கிலுழலார்
நம்பனிணை யம்போ ருகப்பதம் பணிகின்ற நாயனா ரெமனைவெல்வர்
கானலிற் றிரிகின்ற கவரிமான் மயிரொன்று கழியவுயிர் விடுமல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்சேச கஞ்சகிரி சித்தேசனே. (89)
கடவுள்செயலிவையெனல்.
திருமகள் விலாசமிகு செல்வர்களிடத்திலே திகழ்கல்வி யில்லாததுந்
திறலுற்ற கல்வியறி வாளருக் குயர்வான செல்வம்வந் தெய்தாததும்
மருமகளும் மாமியும் விவேகமுடனெருமித்து வாழாது கலகமிடலும்
மதன சுக முறுவோர்கள் பரிபக்கு வத்திலே மனைவிய ரிறந்திடுதலுந்
தருணியர்களின்பசுக மனுபவிக் கும்பொழுது தலைவோ னிறந்துவிடிலுஞ்
சாசுவத நினைவுற்ற திடதேக முடையோர் தடாலென்று மரணமுறலுங்
கருமபூமியினிகழு மிவையெலா மகிமைபெறு கடவுணின் செயலல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (90)
பெருமையிற் சிறுமையுஞ் சிறுமையிற் பெருமையும்.
இசைமருவு பாறயிர்நெய் விலைகூறி யெங்கணு மெடுத்துக் கொணர்ந்துவிற்பார்
இழிவான மதுவகை யிருக்குமிட மேசென் றியம்பும்விலை யைக்கொடுப்பார்
நசைமருவு மேன்மையோர் ஜீவன மிலாதலைவர் *நாணிலோர் பெற்றபேர்கள்
நரபதிகளாற்பெரிய வுத்யோக முறைகளை நடாத்திவெகு கீர்த்திபெறுவர்
அசலையதில் வேழம்பர் வரவுசிறிதாயினும் அரியகர ணம்போடுவர்
அழகொழுகும் வேசியர்க ளபினய வசத்தினா லளவிலாப் பொருள்பறிப்பர்
கசிவரிய விலைமாத ரவைவருவரிசைபெறுவர் #காந்தைமனை நீங்கவசமோ
கஞ்சனிகர் ஈற்ருச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (91)
-------
* நாணிலார் - வேசியர். #காந்தை- குடித்தனத் தலைவி.
------------
வாழ்க்கைத்துணை நலம்.
நாணமட மச்சம் பயிர்ப்பெனும் பெண்மையா *நாற்குண நிறைந்துகொண்ட
நாதனே தெய்வமென் றனுதினம் பணிபுரியு நன்னட வடிக்கையுடனே
பூணுமணி யணிகலத் திச்சைக ளொழித்துநற் புத்திசா துரியத்துடன்
புனிதமுறு குலமதிற் றோன்றியவ ளாய்ப்பெறும் புகழ்கல்வி நெறியமைந்து
வேணபணி விடைசெய்து மாமனர் மாமிகள் விருந்தினர் களுக்குமினிதாய்
மிக்கவுப சாரமுற் றடிசிலிற் கைதேர்ந்து மேன்மையுட னேகணவனைக்
காணுமுன் னேநின்று கைகட்டி நிற்றல்வாழ்க் கைத்துணைக் குரியதன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (92)
இதனை விளக்குவதிதுவெனல்.
குடிநலம் விளக்குவது நிலவிளைவு மேன்மைபெறு கோவிளக்குவதமைச்சு
குலமுறை விளக்குவது விற்பன விவேகநற் குணம்விளக் குவதொழுக்கம்
படிதனை விளக்குவது மாதமொரு மும்மாரி பரிவிளக்குவதுவேகம்
பக்தியை விளக்குவது கண்ணினீர் வளமுறும் பயிர்விளக்குவது *கொண்டல்
+அடிகளை விளக்குவது பேரறிவு புகழ்நீதி யணிபெற விளக்குவது நூல்
அன்னை தந் தையர்களை விளக்குவது நற்புதல்வ ராநநம் விளக்குநீறு
கடிமணம் விளக்குவது வுறவினர்க ளோடுநின் கருணையுங் கூடியன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேசகஞ்சகிரி சித்தேசனே. (93)
-------
* கொண்டல்-மேகம், + அடிகள்-குரு,
அரிதெனல்.
மனிதராய்ச் சனனம தெடுப்பதரி ததனினும் மறுவிலாப் பிறவியரிது
மாசற்ற கல்விநல மெய்தலரி ததனினும் வாய்க்குமெய்ஞ் ஞான மரிது
புனிதமிகு வித்தையோ டுலகநடை திகழும் பொருட்செல்வ மெய்தலரிது
புத்தியுயர் பக்தியாய் ஜீவகாருண்யமும் புகழக் கொடுத்தலரிது
தனிமருவு தானதரு மங்களுஞ் செய்துநற் சம்பாஷ ணாதிசேய்து
தாய்தந்தை போற்பரிவு செய்கின்ற மக்கண்மேற் றருமனெறி பாசநீங்கிக்
கனமருவு மிவர்கணல மெய்தத் #துறக்கமுங் கதவந் திறக்குமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (94)
-----
#துறக்கம்-முத்தியுலகம்.
பெரிதெனல்.
பெரிதுபெரி தென்பதிற் புவனமே பெரிததைப் பிரமன் படைத்தானெனிற்
பிரமனோ வுலகளந் தோனுந்தி வந்தவன் பீதாம்ப ரன்றிரையெறி
அரியதிற் றுயிலுவோ னலைகடற் குறுமுனிவ னங்கையினி லாபோசனம்
அகத்தியன் கும்பத் துதித்தவன் கலசமோ அவனிதனி லேசிறியமண்
உரியபுவி யொருதலைச் சுமைசேட னுக்கவனு முமையவள் விரலிலழகாய்
உறுகின்ற மோதிர மதாய்விளங் குஞ்சத்தி யுயர்பரம னிடமொடுங்குங்
கருதரிய சிவனையு ளொடுக்குமடி யவர்பெருமை கழறுதற் கெளிதாகுமோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (95)
இனிதெனல்.
பூவுலகி லேமனித ருக்கினிது பேரறிவு புகழுமெய்ஞ்ஞானமினிது
பூதநா தன்பாத பூசையக லாமலே போற்றித் துதித்தலினிது
மேவிய தபோதனர்க ணேசவிசு வாசமது மேம்பட வகித்தலினிது
வேலைசூ ழுலகெலாம் பணிகின்ற மெய்ஞ்ஞான மேதாவி யாவதினிது
மாவள மிகுந்தோங்கு மடியார் குழாத்தினிடை வசனவுசி தப்ரஸங்க
மருவுகுரு நாதனென மேலவர் துதிக்கின்ற மகிமைப்ர தாபமினிதாங்
காவலர்கள் மேலே மிதக்கவரு வெள்ளமுறு காந்தநதி தீரமேவுங்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (96)
ஆங்கிலேய துரைத்தனப்பெருமை.
செந்திரு விருந்துலவு விண்டுவின் கையிலுறு திகிரியா ணைக்கமைந்து
தேசுரிய வெண்மையர்க ளிந்தியா வென்னுமித் தேயம் புரக்கவந்து
விந்தையுள வாங்கிலக் கல்வியைப் பரிவுற விளங்கவைத் துலகமகிழ
விக்டோரி யாசக்ர வர்த்தினி யெனத்திகழ வீரத்வ ஜத்தைநாட்டி
பந்தமிகு சட்டதிட்டஞ்செய்து பாரோர் படிக்கப் பழக்கிவைத்தும்
பற்பல பரிட்சையிற் றேறுவோர்க் குத்யோக பலிதமுண் டாக்குகின்றார்
கந்திருவ ரோவிவர்களைந்துகண் டத்திலுங் காணாத விடமுள்ளதோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (97)
இதுவுமது.
போக்குவர வுக்குரிய கானடைப் பாதைகள் புவனமெங் கும்புதுக்கிப்
புதியநிழ லூளதருப் பாதைமுழு திலுமுறப் போற்றிச் செழிப்பாகவே
ஆக்கிவைத் ததுமலா லச்செந்தி ரங்களும் அட்சர விதங்கள் பலவும்
அதிசய மிகும்பெரிய பலவகைக் கடிதங்க ளவையெழுது கோலனேகம்
ஊக்கமுள பற்பல பணிச்சாலை யுஞ்செய்யு முத்தியோ கச்சாலையும்
உபகார மாகவே யெந்திர வசத்தினா * லுதகங் கொணர்ந்துதவியுங்
காக்குமவ ருக்குரிய பாக்கியமெ லாமுனது கருணையா லுற்றதன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (98)
-------
* உதகம்-தண்ணீர்
இதுவுமது.
தந்தியெனு மொருநெடிய கம்பியின் வசத்திலே சாகரந் தாண்டிலண்டன்
சமுதாய மதிலோங்கு சங்கதிகள் முழுவதுஞ் சலுதியா கத்தெரியவுஞ்
சுந்தர நயந்திகழு மெந்திர வசத்தினாற் *றூமசக டங்கள்செய்துந்
துரைராஜ சங்கமுஞ் சட்டநிரு மிக்கின்ற தோன்றலர் குழாஞ்சரியென
மந்திரா லோசனை வகுத்துரைத் துப்பெரிய மதியுநிதி யுஞ்சிறந்த
மாமக ளுலாவுபுய வன்மையொடு நன்மைதரு வாகைபெறு தீரவீரர்
கந்துக தளம்பரவு சம்ப்ர்ம மிகுந்தநற் காவலர்க ளாகுமன்றோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (99)
----------
* தூமசகடம்-புகைவண்டி
இதுவுமது.
திருவுலவு மேன்மையுஞ் சாந்தமும் வாய்ந்துளோர் தேசாபி மானமுடையோர்
திகழ்தலைச் சீட்டுகள் செக்குடிக் கட்டுகள் செல்லு நா ணயநோட்டுகள்
மருவுபல வர்த்தகச் சாலையுண் டாக்கினர் மண்டல மெலாமதிக்க
வாழ்விற் சிறந்தனர் தாழ்வற் றுயர்ந்தனர் வடிவுதிக ழும்பலவித
உருவடங் கியநல்ல முத்திரைக் கடிதங்க ளுண்டுபண் ணித்தந்தனர்
உபகார மேவுங் தபாற்சாலை யெங்கெங்கு முதவியா கச்செய்தனர்
கருதரிய வெண்மையரி னரசாக்ஷி தனிலுற்ற கைங்கிரிய மிவையல்லவோ
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (100)
இதுவுமது
வீட்டுவரி ரோட்டுவரி கேட்டுவரி யும்பல விருக்கவரியும்விதித்து
விறகுவரி தொழில்செய்வரி விவகார வரியும் விளக்குவரி யுப்புவரியும்
சீட்டுவரி யாஸ்திவரி சாலிசா ராயவரி தேவர்பூ மிக்குவரியுஞ்
சீவில்விவ காரவரி சந்தைவரி யுதகவரி செய்நஞ்சை புஞ்சைவரியும்
மாட்டுவரி யாட்டுவரி குதிரைவரி வண்டிவரி மச்சவரி யெச்சுவரியும்
வழிவிடும் படகுவரி மதுவிறக்கும்பல மரத்துவரி யும்விதித்துக்
காட்டுவரி யுந்தர விதித்தார்க ளிந்தியா கவர்ன்மெண் டதிகாரிகள்
கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே. (101)
நூற்பயன்.
சீர்மேவு பழனியங் கிரியிலுறை முருகவேள் திருவடி தினம்பரவுவோன்
சேலநகர் வாழ்கவியனந்தநாராயணன் சித்தேச ரடிசூடிய
பார்மீது நீதிநெறி விஷயமுறு சதகமிப் பனுவலொரு நூறுகவியும்
பக்தியொடு மனதிலே படியப் பதித்துப் படித்துத் துதிக்குமவர்கட்
கேர்மேவு மிகலோக சகலசெள பாக்கியம தெய்தியுலகம்புரந்தே
இசைபரவு நாகரிக வைபோக மருவுமோ ரேகசக் ராதிபதியாய்க்
கார்மேவு வியனுலகு தேவராற் பூசனை கருத்தொடு செயப்பெறுவர்காண்
கற்பகத் தருவினன் னிழல்பெறுவ ரெழில்பெறுவர் கனமுக்தி யும்பெறுவரே.
சித்தேசர் சதகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
--------------------
This file was last updated on 14 Feb. 2018
Feel free to send the corrections to the webmaster.