சோமசுந்தர மும்மணிக்கோவை
அ. சோமசுந்தர முதலியார் எழுதியது
cOmacuntara mummaNikkOvai
by cOmacuntara mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
We thank Ms. Karthika Mukundh for her help in proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சோமசுந்தர மும்மணிக்கோவை
அ. சோமசுந்தர முதலியார் எழுதியது
Source:
"சோமசுந்தர மும்மணிக்கோவை"
இஃது ''வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்''
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகரவர்களது மாணாக்கரும்,
சென்னை வேதாகமோக்த சைவசித்தாந்த சபையடியவருள் ஒருவரும்
ஐகோர்டு அப்லேட்சையிட் கிளார்க்கும் ஆகிய
அ. சோமசுந்தர முதலியாரவர்களால் இயற்றப்பட்டது.
சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது,
1904.
--------------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீவிஷ்ணச்சிவஸாரூப்ய தாயிநேநம:
ஸ்ரீலஸ்ரீ நாயகர் அவர்கள் ஜெனன தினம்.
நேரிசை வெண்பா.
சீரார் யராபவவாண் டொண்சிங்கத் தீர்தேதி
நாரா ரிராமலிங்க நாயகற்கு -- மேராரு
மம்மணியம் மைக்குந்த வப்பயனா லார்ந்தனனாற்
செம்மலாஞ் சுந்தரனார் தேர்.
சிவசாயுச்சிய முற்ற திருநட்சத்திரம்.
கட்டளைக் கலித்துறை.
சார்வரி மாசிநற் றேதிபன் னொன்றினிற் சாருசனி
லேர்வரி முற்பிறை நான்கினி லைம்பத்தைக் தென்வயதிற்
பேர்வரி யீற்றிற் பிறங்கிய நாளினிற் பேர்மதியா
னார்வரி சோமநற் சுந்தர வாண்டகை யாண்டினனே.
---------
சிவமயம். திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீஜ்ஞாநஸம்பந்தகுருப்யோ நம:
சோமசுந்தர மும்மணிக்கோவை.
காப்பு.
நேரிசை வெண்பா.
மும்மைபொழிந் தோர்துதிக்கை முற்றிநாற் பாதங்கொண்
டெம்மையாள் போதகத்தை யேத்துமொரு - மும்மணிக்கு
மாவானான் மாவானான் மாவானான் பூசித்த
மாவானான் மாவான் றுணை.
வழிபடு கடவுள் வணக்கம்,
கட்டளைக் கலித்துறை
கழலாத வின்னற் பவக்கட னீந்திக் கதிக்கரைசேர்ந்
தழலாத வின்ப மடைக்குநற் றெப்பமென் றாரருள்வான்
சுழலாத ஞானக் கடன்முகந் தோர்திருத் தோணிசொரி
யுழலாத தெய்வப் புயலென் னுளக்க லொளிரு மன்றே.
நேரிசை யாசிரியப்பா.
மாமணி நித்தில மோடரி படுத்துப்
பேரலை முடங்காப் பெருநில மகட்குச்
சித்திரப் படாமென வொத்துநின் றவிரு
மளக்கரின் வீழுபு வங்காந் திறைகளத்
துறுபயன் றெரிப்பிய கருள்கோட் செம்மன்
மஞ்சு ஞெமல்பொறிப் புன்வா யடைப்பார்
நீர்ப்பறம் பாற்றப் போய்த்துற் றாரரு
டண்டா துறைக்குந் தகமை யொட்டவு
முன்னர்ஞான் றொருவ னென்னிகர்த் தரிசென்
றுடன்முழு துற்ற கருளிற் பயனிலென்
றறைவது கடுப்பவுஞ் சிலைவாள் காட்டிச்
சிலைக்குபு வளைகொளீஇப் பரிதிகர மடக்கி
யஞ்சு தரித்தோ ரகிலம் புரக்கு
மிறையருள் பெறீஇய வொருமால் யானெனப்
படீஇப் பெயல்சிறக்கும் பருவரை படைத்து
வானாப் பெருவளம் வட்க ரின்றித்
துறுமிய குறும்ப லூர்கள் சூழ்ந்திலகித்
தலைகொண்டு நிற்றலிற் றரைமகட் கணியிற்
றொண்டையா நின்றது தொண்டையா மாதோ
வதனனி முகனிற் பொலிநலச் சென்னை
யெனவரு நகரிற் றிருவுடன் மாய
னோற்றுறு வரத்திற் றம்பெயர்த் தெனவேண்
டதுமுத லிலக்குமி நாரண புரியெனச்
சகஞ்சொலுஞ் சூளைத் தனிப்பெரும் பாதியிற்
றீந்தமி டீர்ந்த முடிபுஞ் சிறப்ப
வார்ந்தமெய் யடிய ரகங்களீஇச் செழிப்பச்
சமய சந்தானத் தகுபரப் பெருமை
மாயிரு ஞாலங் கவினிய வோங்கப்
பொங்க னுங்கினரிற் புறத்தினர் மயங்க
முதலீ றின்மை மாசின்மை நிறைவு
தனிமை யதிநுட்ப மகற்சி முதலான
சிறப்பிய னிலையுஞ் * சத்தனே யுத்தி
யுத்தன் விருத்தனென் றொருமூன்று பட்ட
பொதுவிய னிலையுங் கொளீஇயைந் தாற்று
மொருமுத றிருவருட் டெளிகடற் றோய்ந்தொ
ருறுவனுண் டுமிழு மொண்மைய தாகலிற்
றன்மலங் குமைத்தற் கருமந்த தென்றங்
கவனடி பெறீஇய வொருநெடுங் கண்ணன்
றன்னக ரொரீஇக் கழிவிடக் கஞ்சி
யரவுகீழ்க் கொண்டு குறிக்கொளும் யோகிற்
கிடப்பத் தனிமையிற் கிளர்வா ணெடுங்கட்
பூவினர் நேடுபு புரிவுநேர் கொண்மா
ரடிகடை வந்து மறியா துஞற்றலிற்
கையற வுறீஇ யின்னா ராகப்
பன்னாட் பரித்தங் கரிதினிற் பயந்த
வம்மனை திரைவிழக் கரமெடுத் துயர்த்தி
நெஞ்சினிற் றாக்கி நெட்டுயிர்ப் பெறிந்து
விரங்க லேய்ப்ப வலைமறிந் துலம்பும்
வளிதுதைந் தூங்கு பாற்கட னடுவட்
டொலைவி னல்லமிழ்தந் தோன்றிய மானக்
கருங்குழற் செவ்வாய் வெள்வளைக் கொடிவயி
னிம்பர்கோன் புறுபய னெலாந்திரண் டென்னத்
தோன்றிமுப் பொருளின் றுணிபது விளக்கி
யெம்மைநெறிப் படுத்து மிருங்குரு மணியாஞ்
சோமசுந் தரநின் றொல்புகழ் வாழ்க
வைதிக சைவம் வழங்கியோய் வாழ்க
மறந்தும் புறந்தொழா வள்ளியோய் வாழ்க
தாதுகு பதுமச் செங்கேழ்ச் சீரடி
பணிந்துநிற் கேட்கும் பரிசொன்று மன்னோ
வென்னெனிற் சைவ சித்தாந்த முண்மை
முன்னுமத் தெய்வ முழுப்பொருள் சிவமே
யென்றெமக் குணர்த்து நின்னுப தேச
வுறைப் பென்று மகலாது
சிறப்ப வாழச் செய்ம்மதி யருளே. (1)
நேரிசை வெண்பா
அருளின்றி யத்துவித மாராதே யென்று
பொருளில்லா மற்றையவர் புன்சொ - லிருளறுத்த
வந்தரா வுய்ய வவதரித்த நற்சோம
சுந்தரா மூன்றுண்மை சொல். (2)
கட்டளைக் கலித்துறை.
சொற்பொரு ளற்பகல் பொற்பணி யென்னுந் தொடர்பவையு
மிற்றிவை யிற்றிட நற்பொது மெய்ந்நிலை யேன்றமுடி
புற்றது வென்றெமை முற்றிய வாணவ மோட்டெடுப்பச்
செற்றிய சோமநற் சுந்தர நின்னருட் செம்மையென்னே. (3)
நிலைமண்டில வாசிரியப்பா
என்னை யொருமுத லெனநினைத் துணராது
முன்னை யுடைமையுங் குணியுமென் றோதிச்
சிவசம மொடுசங் கிராந்த மாயா
வாதப் பொருளிவை பாறமேற் காட்டித்
தனிமுதல் சிவமெனத் தந்தநஞ் செல்வ
பல்வகை மதநிலை யெல்லா மிழுக்கென
மெய்ந்நிலை நிறுத்திய வெல்லருந் திறலோ
யருட்டிரு வினையொப் பளாய்நி பாதத்தி
னைம்மல மேவிய செவ்வியிற் பெறுது
மன்றே லின்றென வருப்பினிற் புகன்ற
சொல்வன்மை நின்ற சோம சுந்தர
வென்முறை கேட்க செவ்வியின் மாதோ
துணிபடும் பீற்ற லாடைதைத் துடீஇப்
பேயென வுருவு பெறீஇக்கரு ஞாளி
கவர்ந்த காலினி னிலந்தொறும் போந்து
பற்றிறந் திட்டுச் சொற்பல காட்டிப்
பருவரன் முகமு மருளுறப் புலத்தி
மல்லு மானமுங் கழீஇத் துணைக்கை
நீட்டியு நிரம்பாப் பெருமிடி யுறினு
மலப்புழு நாயிற் கிருட்டிவே சரியி
னோரறி வுறூஉந் தாருவிற் சேறினு
மிறப்பா மலக்க ணெனைத்துற வரினு
மீளா நோயின் மாழாந்து படினு
மொன்றிரண் டென்று முறுமவை யென்றும்
பல்லுரைப் பிணக்கிற் செலீஇய னின்ற
வருள்சிறி துணராத் தெருளிலா மாக்கள்
பொய்ந்நிலை கோடாது சமயமுடி நின்ற
மறைமுடி தழீஇய பெறலருஞ் சைவ
சித்தாந்த நன்னிலை பற்றியான் செம்மாந்
திருக்கு நிலையதொன் றுறப்புரி வதுவே
யன்னதிங் கரிதெனி லன்னவர் தட்கு
நல்லுழை துற்றுப் புறத்தெரு வெறிந்த
மிச்சிலா மமுது நச்சியுண் பிறவி
பருணினைந் துறுதலாம் பிறவின் றெற்கே. (4)
நேரிசை வெண்பா
எற்றினும் பற்றின்றி யேலடியார் நற்பற்றுப்
பெற்றவர்சீ ரோங்கப் புரிபெரியோய் - சிற்றறிவேன்
மூலஞ்சார் போதிற் கருவியெது முற்றியான்
சீலத்தி னேதறிவேன் செப்பு. (5)
கட்டளைக் கலித்துறை
செப்பன கொங்கை யுமைஞானத் தெள்ளமிர் துண்டசெல்வ
ரொப்பின ருட்டிரு வாரமிர் தாருமெ மொண்ணணலாம்
பப்பிய சீர்ச்சுந் தரநின் றிருமுகம் பற்றி நின்றோர்
மற்றொரு தெய்வ நினைகுவ ரோசிவ மன்றியிங்கே. (6)
நிலைமண்டில வாசிரியப்பா.
மன்றினி னடிக்கு மறைச்சிலம் பேத்திக்
கலிச்சும்மை யாககீர் பலப்பல திறக்குஞ்
சிறுநெறிச் செலவி னவலப் படாமே
சிவமே மறைமுத லெனவருட் செயலிற்
காட்டிய நின்ற வரதத் தாசா
னப்பய தீக்கித னிப்போழ் தத்து
வோருரு வுறீஇத் தோன்றிய துறழச்
சைவம் பாரமெனத் தருவா மொப்பி
றெய்வஞ் சிவமெனத் தெளிப்பாந் தெளிப்பா
மென்றநற் சூளைக் கொண்டெமர் வம்மென்
றுற்றவை கண்கூட் டுணர்த்தினை பெரியோய்
மன்றொழி லவற்றி னீவீற் றமர்ந்த
வப்பெரும் பதியு மதன்பெயர் கொண்மே
யிக்குறி தெருளாப் பற்றலர் சில்லோர்
வேறு காரணம் விரித்தொழிந் தனரே
சிவப்பெருந் தன்மை யிலக்கிய முற்செய்
நீல கண்டனார் பாடியந் தெளித்துக்
கையி னெல்லியங் கனியெனப் பெரும்பயன்
காட்டிய நின்ற சூளையம் பதியி
னியாவரு மதிக்க விருந்தநின் னுருவங்
காண்டொறுங் காண்டொறு மியார்கசி யாரே
நின்முகங் காண்மார் வேறுமருந் துளரோ
மொழிகளாம் பெறலருந் திருவநல் லமிழ்தம்
செவிவா யாகப் பருகிய வான்றோ
ரெல்லாச் சமயமு மெவ்வெத் தெய்வமு
மொன்றென வுலோக நின்ற நீர்மையிற்
சிற்றயங் காசு மொப்பென மருண்டு
குழறுத லடுத்த சமரசஞ் சொல்வரோ
வங்ஙன முரைத்த கருங்குழிக் கணக்கன்
வழூஉச்செறி பசுத்துவப் பாடலு மீரறு
தெய்வப் பாக்களுந் திறத்தினி லொப்பெனத்
திருவருட் பாவெனச் செப்புவர் கொல்லோ
வெனமறுத் துரைத்துக் கருங்குழி பாக்கள்
கருக்குழிப் பாவெனத் தெரித்தவெங் குரவ
வவன்றன் மைத்துன னறியாப் புரைகள்
பிதற்றிய மொழிகட் கசம்பிர தாய
நிரசனத் தொடஞ்ஞா னதிமிரபாற் கரமு
மூர்க்க வாத வித்வம் சநியெனப்
பேர்கொணன் னூலு மியற்றி யழித்த
சீலமுந் தவமுந் திருவுமெய் யுணர்வு
நிற்சேர் குநர்க்கு நாடொறும் பெருக
வளிக்குமெய்ஞ் ஞானச் செம்மால் கயக்க
ணின்றபல் வாளை வெடிபடக் கிளந்து
விண்மீன் வட்கார் மாறு சிதர்த்து
மொசிக்கமேற் சேற முசுக்கலை தாஅய்ப்
பூக்கத் தாருவி னேற்றெதிர் பற்ற
நெற்றுபு கிடந்த கொம்மைய வரத்த
துகிர்கடைந் தார்த்தன பழங்களாழ்ப் படுகர்க்
குடிகொளுந் தம்மிற் படப்படக் கர்கரென்
றரற்றிடு நுணல்க டலைமீக் கஞ்ச
வலர் நற வெளளிப் புழுவுண் டாங்கு
நற்பொலி வுறூஉஞ் சென்னையிற் சில்லோர்
பொய்யறி வாண்ட புன்மையி னின்னிய
லுரையும் பொருளு முணர்ந்து கொள்ளாமே
யிழுப்பவை விளைத்து விழுப்பமணு வின்றி
விசித்த வலியிற் பசித்தோர் கான
லலராக் கொண்டெனப் பகடியர் வெற்றுரை
புகழ்ந்துற் றலைந்து கலங்கினர் மாதோ
மெம்மவர் நல்வினை நின்றனைக் காட்டப்
பொக்கமின் றண்டிப் புலவர்கள் புகழ்வோய்
தம்மை யுடைய தலைவனை யிரண்டற
வீண்டலே பேறென விளக்கிய புலத்திற்
செம்பொருள் புரிவான் சேர்ந்தன மெய்யே. (7)
நேரிசை வெண்பா
மெய்யே விடுதியினு முப்பொருளு மேலதனா
லையோநாம் பிர்மமென லாகாதே - பொய்யெனிலோ
முத்தியில தென்றிலையேன் முன்னழிவார் பற்பலர்மெய்ச்
சத்தியமே சுந்தரநீ தா. (8)
கட்டளைக் கலித்துறை
நீதா சிவத்தை நினைப்பித் தவாபுற நீசமதப்
பேதா விபூதியுங் கண்டியும் பேணும் பெருவணியா
நாதா பிரசங்க போதா மதிச்சுந்தர நாயகனே
வேதா தகப்பன் பொருதழியார் நின்றன் மெய்ப்பெறினே. (9)
இணைக்குற ளாசிரியப்பா
பெறுகவிஞ் ஞாலம் பெறுகவிஞ் ஞால
மாயிரங் கவர்தாற் பணமுடை யரசு
மும்பர் வேந்தனு மொண்பெருங் குருவு
மாலு மோதிமத் தேவுந் தெரியா
மாழ்கி யகந்தையின் மாண்டு மேகான்ம
வாதராய்ப் பேத வுலகா யதராய்த்
தீமையே கெரண்டு தியங்கினர் நிற்கப்
படியவை படைந்துப் பரிவார முற்ற
மறைமுடிக் கோயின் மன்னிவீற் றிருந்து
திப்பியம் பழுத்த சைவசித் தாந்த
வுண்மைப் பொருளெலா மொருங்குறக் காட்டி
வாதியர் கோடமை மறுத்துரை தந்த
நாயக னூல்களை நன்கினிற் பெறுக
வன்னவை தம்முட்
சிலச்சில நாத்திகந் தெறுப்பன வன்றே
மாயா வாத மடிப்பன சிலவே
பலப்பல வைணவம் பாற்றுவ வன்றே
சமய சந்தானத் தாராங் குரவ
ரருண்மொழி விளக்குவ வன்றே பலவே
சித்தாந்த மாட்சி தெளிப்பன சிலவே
யடியவர் மேன்மைக ளறைவன பலவே
சைவ நிந்தைகளைத் தகர்ப்பன வளவில
வாகலி னுலகீர்
கலகல மிழற்றும் பசுநூ லொரீஇ
ஞான நூல்பயிலு மார்வங் கொண்மின்
வளமுய ரன்னவைக் கொருதிற வாவது
சோமசுந் தரன்றன் றொன்னூன் மாதோ
வென்பது தெளிக வியல்புணர்ந் தோரே. (10)
நேரிசை வெண்பா
ஓராத வத்துவிதக் கொண்பொருளை யோர்ந்துரைத்த
வேரார்மெய் கண்டசிவ னெந்தையினைப் - பாரா
தவற்பழித்த நிந்தையறுத் தான்றுதித்தா னீர்நூ
லவற்களித் தான்சுந் தரன். (11)
கட்டளைக் கலித்துறை
சுந்தர கேசவன் கோயிலிற் பாசண்டர் சொன்மையிலா
வந்தர கங்கைதம் வாமனன் பாதத் ததின்வரநஞ்
சுந்தரன் வேணியி னேற்றிடும் பாவந் தொடவுருவை
யந்தர மாககி யழித்தவ னீயன்றி யாருளரே. (12)
நிலைமண்டில வாசிரியப்பா
உள்ளது போகா தில்லது வாரா
தென்ப தாத்தக் கட்டுரை யாகலிற்
றெய்வப் புலமை கைவந்து கிடைத்த
சித்தாந்தப் பொருளைக் குறிப்பிற் பகர்ந்த
முப்பா லாரு முலக முண்டென்று
கிளத்தலி னானு முண்மையே யன்றேன்
முயற்கொம் பொட்டத் தோன்றா தன்றே
பேய்த்தேர்ப் பிறக்க மெனினப் பிறக்க
மாத்த மாக வறிந்திசி னோரே
யங்ஙன முணரும் பெட்பு வாயாது
சற்கா ரியமுந் தரத்துண ராமே
சச்சிதா னந்தனென் றிடுகுறி கொண்ட
வீசூர் மண்ணன் முதலாம் வாதியர்
முரணிக் கயிற்றி னரவே போலப்
பிரமத் துழையுயிர் சகபரந் தோன்றலிற்
பொய்யெனக் குழறிப் பொருந்துசித் தாந்த
முப்பொருள் பிழையே துவிதம தென்றுந்
தங்கோ ளத்து விதமா மென்று
மலகையிற் குழறிய பொருளிலா வெறுநூற்
கத்வித தூடண நிக்கிர கம்மென
முற்பெயர் வாய்ந்த வினாவிடை குதர்க்க
வாத விபஞ்சினி தூலவா தூலஞ்
சித்தாந்த பூடணஞ் சன்மார்க்க போத
வெண்பாப் போதப் பிரகா சிசையொடு
பிரம தத்துவ நிரூபண முதலாப்
பலநூ லியற்றி யவையினி லடக்கிய
தெருளோன் யாரெனச் செப்புக புலவீர்
மல்லன்மா ஞாலந் தேய்த்துறு புகழோன்
சொல்லரும் சென்னைச் சூளையாம் பதியோன்
சிவதத் துவத்திற் செறீஇக்கிடந் தவிர்வோன்
ஞான சம்பந்த வள்ளறன் றிருவடிப்
பதுமமலர் காட்சித் திருவுளத் தாவியன்
குரவர்க் காங்காங்கு கோயில் வகுத்தோன்
தவமதிற் சிறந்த சிவஞான போதன்
சோமசுந் தரனெனக் காண்குது மன்னோ
னில்வழி யிவ்வழி யில்லையா லெவரு
முய்வரும் பெற்றி மெய்ம்மைச் சைவமே. (13)
நேரிசை வெண்பா
சைவமெங்கே நால்வரருட் சார்பெங்கே மெய்கண்டத்
தைவிகநூ லெங்கேயெஞ் சாதனமெங் -- கைவரைவென்
றார்முத்தி யெங்கேயிங் கந்தோநஞ் சோமசுந்தர
னார்முந்தி வந்திலரே லா. (14)
கட்டளைக் கலித்துறை
ஆவா வொருசோம சுந்தரன் பாண்டிநன் னாடளித்தான்
றேவா மவன்றனைப் போற்றிடுஞ் சூளையிற் செம்மலவ
னாவா லொருசதுர் மண்டல மாண்டிணை யின்றிநவிர்
தாவா தவிரிய சித்தாந்தப் பேரர சார்ந்தனனே. (15)
நேரிசையாசிரியப்பா
சார்ந்திடு மாகமந் தந்த வெந்தையி
னருவா னனத்துட் பெரிது பயன்பெறத்
தோன்றிக் குருக்களாக் சொன்மாதி சைவ
ரொருபெரு மகிமையுந் திருவரு ளாளப்
பெருந்தகை நால்வர்தம் பெற்றியும் பிறவுங்
கொளுவிட வந்தவர் பிரபாவ மகிமை
யெனுநூற் கண்டுந் தம்மன் பீர்க்கக்
கெளணியர் பெருமான் சமணொடு புத்த
மாயா வாத மிரணிய கருப்பம்
வைணவ மென்னு மதவிப மழித்த
பரசமய கோளரி யியன்முத லான
பாவின மிலக்கிய நாவலப் பெருமான்
சிவஞா னப்பா றேரிய வதனா
னப்பான் மணங்கமழ் மெய்ப்பாற் றலைவன்
றன்னருள் பெறீஇய வந்தணச் செய்யுளி
னந்தாதி போற்றிய சிந்தா சனத்தோய்
புறச்சமய நெறியெனுஞ் சித்தியார் விருத்தக்
கிலக்கா யிருந்த கலக்கமில் புலவ
வேமந் திரியெனு மிவையிரு கூட
மன்னார ணித்தா மாதோட்ட மூன்று
மெந்தை முக்கணி னிலங்குறூஉ நீர்மையி
னரனென வவிரு மரித்தே யத்தி
னொருசார் செறீஇப் புலவரிசை மிகலி
னக்குறி புணர்ந்த வொப்பில்லாப் பதியிற்
புதுச்சந் நிதியா முயர்ந்தோங்கு சினகர
மமர்ந்தடி தொழுவார்க் கருள்விளை வருளித்
தன்றிரு முகனிற் பொலியுந் திருக்கோ
விருவொளி யென்னத் தெரிக்கிய குருகுச்
சலசங் கழுநீ ரருகுநின் றேந்து
மிச்சையுந் தொழிலுமா மிருமனை யவர்புற
மிருப்ப வீரையிற் றரணியுதித் தன்ன
வழியா வாற்றற் சிகிமீ திலங்கும்
பரனவ னருளி னவதரித் துறுகலை
முற்றத் தெரிந்து முடிபது புரக்கு
மொளிப்பே ரிரண்ட னுருபுசே ரயின்மக
வெனுமிறை பெயரோ னிணையில கேள்விய
னவன்றனை யுறழு மாரிய சோம
சுந்தர வயின்வயின் றொல்சபை வைத்துக்
கந்தர மென்னப் போதகஞ் செய்த
முந்தையோய் நின்னை முற்றக் கண்டோர்
வேதாந்தத் தெளிவா மெய்ந்நிலை
தானன்றி வெறுமதஞ் சாரா திசைவரே. (16)
நேரிசை வெண்பா
சைவத்தாய் மூத்தாய் சரித்தாய் புறமகத்துக்
கைவைத்தா யார்வத்தா யாரியாய் - மெய்வைத்தாய்
சித்தாய் பெரியாய் திருவாய்நற் சோமசுந்தர
வத்தா வெனக்கெங் கருள். (17)
கட்டளைக் கலித்துறை
அருணூன் மறைசிவ வாகமம் போலநம் மாரியரப்
பொருணூ லெமக்குயத் தந்தத னாலருட் போதரலாற்
றெருணூ லவையென காண்டலி னீரறு தெய்வமுறை
யருணூ லெனச்சொலுஞ் சூசோம சுந்தர வாண்டகையே. (18)
அடிமறி மண்டில வாசிரியப்பா.
கையுடை விலங்கு கரிமா வொன்றே
தகைமைப் பிரணவச் சாமி முன்னவனே
யாண்டரு ளாரியர் பன்னிரு வோரே
தக்கநற் றெய்வஞ் சங்கர னொருவனே
தகைய முயல்வதிங் காணவத் தளையே
யாண்டகை யென்பவன் சோமசுந் தரனே
யேலருள் பெறுவதிங் கெம்மனோர் கடனே. (19)
இன்னிசை வெண்பா.
கடலுலகில் வாழ்பயனுங் கற்றவரைச் சேர்வுந்
திடவாயு ளார்பயனுந் திண்வாயி னார்பயனும்
சொல்வரையார் தம்பயனு மாபயனுஞ் சோமசுந்தர
நல்லுடையாய் நின்னோக்கி னாம். (20)
கட்டளைக் கலித்துறை
நாமஞ்சு நாமஞ்செய் நாமக் குறிவைத்து நாணரகிற்
காமஞ்சு ராத்திரர் புத்தர் சமணர் முதற்கலகீர்
தோமஞ்சு வீட்டி விடுதிகண் டின்பச் சுவையருந்திற்
பாமஞ்சு சுந்தரன் செய்தரு நூல்களைப் பார்த்திடுமே. (21)
நிலைமண்டில வாசிரியப்பா
பாரறுத் தியற்றிய பல்லுவர்க் கூவ
றனுவேர் வாழ்க்கைச் சீறூர் மதவட
னனிநிரப் புற்றோ னாயினு மிமமிகப்
புல்லெ னந்தி யிடைத்தீ ஞெலியுங்
கல்லாப் பொதுவ னேரக் குறிப்பி
னில்லன படைக்கவும் வல்ல னயங்கெழு
வுலகக் கருவியா மாமழை யுறைக்கா
தியலின் வேறுறீஇக் கயங்கழி முளியும்
வேனி லாயினுந் துளைக்கா லல்லியி
னடைகளி னீழற் கதிர்க்கோட்டு நத்தை
யேற்றுட னிளவளை யவற்றைப் பகற்கடி
கூட்டுநீ ரேறிக் குலவுதண் பணைசூழ்
முகவையம் பதியான் றருணக் கதிரின்
வாய்மணி துற்றி மதிய நேரென்ன
மார்பிற் றுயல்வரு மகிபன் றன்னுயி
ராயினும் வேண்டுநர்க் களிக்குங் கருணை
மாயிருஞ் சீர்த்தியி னேர்பிற ரில்லோன்
றண்டமிழ் முற்பொரு டரூஉஞ் சித்தாந்த
மெனுமிவை போற்றிய வருளான் கொடையின்
வள்ள லெனையரும் வெள்கிக் கரக்குந்
தராபதிச் சேது பதிமகா நிருபன்
றன்னவை யகத்து மறுமத வாதிகள்
வாயடங்கி யுலர வைதிக சைவ
சிந்தாந்த வுண்மைத் திறமழை பொழீஇ
நின்றிட வேந்தனும் பரசமய கோளரி
யெனும்பேர்ப் பட்ட மெடுத்தழைத் திடவே
யத்திரு நாமமெம் மையனாங் கெளணிய
மெய்த்தெய் வக்கு மிளிர்வது கண்டும்
புல்லேன் வைத்துப் புரிவது பவமது
கண்ணுதற் பெருமா னல்லரு ளடைந்து
மண்ணில்வா ழெம்மவர் தண்ணரு ளடைய
வோதிய தேவா ரம்முதற் பெரிய
புராண மிறுதியாப் புகல்பன் னிரண்டு
திருமுறைக் குரிய திருவருட் பாவெனுஞ்
சீர்ப்பெயர் கருங்குழிச் சிறியோ னிராம
லிங்க னிறந்தோ னவன்பா டற்கும்
வைத்தின லுற்ற தன்மைய தென்ன
வாங்குள புலவரு மரசனும் வியந்து
வைதிக சைவ சித்தாந்த சண்ட
மாருத மென்னும் பேரிடக் கொண்ட
வைய வையகோ வெய்யர்கள் சில்லோர்
நின்மா ணவரென வெளிவந் துற்றும்
பொய்த்த பட்டங்கள் பொருத்தியுந் திருமுறை
திருவருட் பாவெனும் பெயரிவை சிறந்த
தேவார முதலா வோது மவைக்கிங்
கேற்கா வென்று மிழிப்பிய நின்றார்
நின்பகை யவராம் போலிச் சைவரொடு
சேர்ந்து பழிபவப் பட்டார் நின்ற
னுண்மை மாணாக்கரென் றுற்றவர் யாவரு
நின்மொழி போற்றி யுறைகுந ரன்றே
யன்னவர் பின்னு முய்ய விஞ்ஞான்று
நல்லருண் மதியை யொல்லையி னளிப்பாய்
வெல்பவ ரின்றி விளங்கிய திறலோய்
செல்லாச் சீர்த்திக் கேள்விய சோம
சுந்தர னென்னும் பெயரிய
நல்லோய் சற்குரு நாத மன்னவனே. (22)
நேரிசை வெண்பா
மன்னு மருண்மொழியார் வாய்மலரும் பன்னிரண்டு
சொன்ன கனவிலுமே சோரவிடே - லென்னத்
திருவாக்கி னுண்மையெனச் செய்தனையே சைவத்
திருவாக் கினையிதுவோ செப்பு. (23)
கட்டளைக் கலித்துறை
செப்பும் பொருள்வெறுத் தேற்காப் பொருள்வயிற் சென்ற சில
ருப்புங் கருப்புர வொண்பொரு டாமுமொன் றென்றுரைத்தே
பப்பும் பகட்டுரை வீழ்த்துச் சிவாதிகய வம்மணியி
னொப்பும் பொருளு முரைசோம சுந்தர வுத்தமனே. (24)
இணைக்குற ளாசிரியப்பா
உத்தமக் கண்ணுவ வுறுவனார் விருந்தை
கருப்பமாம் வாச வடுப்படாப் பெரியோன்
வாமதே முனிவன் பிருகுமா மகத்திற்
சிறுவிதிக் கெம்பர னியலவை தெளித்த
ததீசி முதலினோர் சாற்றிய சாபம்
பெரிது மலைக்கப் பிறந்த மானுடன்
கதிரையம் பதியு முதிரைசேர் கோணமுந்
திருக்கே தீச்சரப் பதியும் புதுச்சந்
நிதியெனு முபய கதிர்காம தலமு
மவிரிய பொன்னக ராண்டு சீகாழித்
துரைதிருப் பதிகந் தோறும் வியக்கப்
பெற்றரா வணனாற் பீழைபட் டரன்ற
னாரரு ளதனாற் கோறிய விராமன
பூசை சேதுவிற் புரிந்தில னென்ற
மாமயக் கொழிக்கக் கூரேச விசய
பங்கமு மிராம தத்துவ தீபிகை
யாபா சம்மொடு வாஞ்சன ராம
வைபவ பங்கமு மிராமன் பூசை
செய்ததென் றதுவுஞ் சைவச் சூளா
மணியுந் தந்த பணியோன் யாவன்
சிவன்பர னலனெனச் சிலபா சண்டா
குரைத்த காலையின் மறைப்பொருள் காட்டிப்
பரதத் துவப்பிர காசிகை
வரியநூ லிழைத்த வரியோ னேவன்
மேலைப் பாக்கத் தாத தேசிக
தாத்தாச் சாரி யிகழுரை யவைக்கி
ராமா யணத்துச் சூசிகா பங்க
மியற்றி யுணர்வளித்த வேரோன் யாவன்
மறைமுடி பான வுபநிட தங்க
ளெல்லாஞ் சைவமென் றிலக்கினன் யாவன்
கன்னிகா தேவி புராண முங்கறையில்
விபரீத ஞான விலக்கு மாபாச
ஞான நிரோதமு நவின்றோன் யாவ
னன்னவன் சூளைப்
பொற்புடைப் பதியின் மெய்ச்சிடத் தோன்றி
நித்தலு ஞான பூசைசெய் தாற்றும்
வித்தகன் சோம சுந்தர
னெனப்பெயர் கொண்ட கனத்தின னன்றே. (25)
நேரிசை வெண்பா
அன்றே தணிகா சலத்தவமுங் கண்ணப்பர்
நின்றபிர பாவமொடு நேருந்தி -யென்று
மறவாத நாமா வளியுஞ்செய் தாயுய்
பிறவா நெறியெனக்கே பேசு. (26)
கட்டளைக் கலித்துறை. (கிள்ளைவிடு தூது.)
பேசுக வெங்குறை பித்தர்கள் போலவன் பின்னலங்க
லாசுக வேண்டிப் பிதற்றுகின்றா ளிங்ங னாற்றுவர்யார்
காசுக எத்த வளையுங் கழலத் தலைவி செய்கை
மாசுகம வேட்டன ளென்றிணைப்பீர் நல்ல மாசுகமே. (27)
நேரிசை யாசிரியப்பா
சுகமளி சைவச் சுகம்பெறா துடற்றும்
பசிப்பிணி மிகுத்தோன் கையலர் கழீஇப்
பேய்த்தேர்த் தோற்றங் கண்டாங் கதிற்பசி
கழிப்பிய நினைந்து பெற்றுணச் சென்றாங்
கொன்றுங் கோடா துலைந்துமாண் டாங்கு
மணியு மகளிரும் பனையடுப் பெவையு
மூர்தியு முயர்வு மதிப்புஞ் சிறப்பும்
பெறுவே மென்று வேடர் கோட்பட்ட
மாவிற் புள்ளி னீண்டைய வீண்டு
மிழிஞர் பலர்மாளு மலமரல் குறித்துக்
காசு மதமெனக் கல்வியார் கழித்த
மாசுக் கோளென வண்மையா ரொதுக்கிய
வேசு மதமென வெம்மனோ ரிழித்த
வேசு மதத்தவ ரேமாற்றங்கள்
பலப்பல பொய்களுஞ் சிதர்த்தடை யுண்மை
யிலக்கி விளக்கமென் றியற்றிய குருவே
சிவபா ரம்மியப் பிரதரி சிநியு
மொருபா ரதத்தி னுட்சங் கிரகமுஞ்
சிவத்துவி சரினுற் கருட தீபிகையுந்
துர்ப்போத சம்வா தம்மெனு நூலும்
பிரமவநு பூதியும் பேசிய குருவே
ஞான தீபங்க ணவிற்றிய முதல்வோய்
மறைமுடி வுற்ற கைவலயக் கருத்துச்
சிறிதும் மாயா வாதமன் றென்று
பெருநூல் காட்டிப் பிறங்கவைத் தவனே
சித்தாந்த சேகரஞ் செய்தசீ ரியனே
சிவச்சொற் றெளிவுரை யியற்றுசூ ரியனே
சுபோத விளக்கஞ் சொற்றநே ரியனே
பரமத பங்க வினாவிடை வேத
சமரச கண்டனமொடு பிரம தரிசினி
சித்தாந்த போதம வேத சிவாகமப்
பிரமா ணியமிவை யருளுமா ரியனே
பெண்களைக் கல்வி பயிற்றுவித் திடுத
னன்றன் றென்று மறுப்பு நவிற்றிய
பொருண்முடி புணர்ந்த புலவ ரேறே
சிவதத்வ சிந்தா மணிசெயுஞ் செல்வ
மவதத் துவத்தி னலையா தரும்பொரு
ளிவையென வளித்த பெருநில வேந்தா
னியாயாக கரமணி சதுட்டய தர்ப்பண
மிவைமுத லான நூற்றின் மேற்படு
சோமசுந்தர சாத்திர மென்ன
வறிஞர் கொண்டாட வருளிய திருவே
சமய வாதந் தண்டாக் கேடெனப்
பொருளிலா பங்கள் போக்குவ தென்ன
வருநட் பெல்லா மாய்ப்பது மஃதெனப்
பெருஞ்சுற் றத்தைப் பிழைப்ப தஃதென்ன
வீங்கிருள் படித்துத் தூங்கி யீங்குப்
புலவரென் றிருந்தோ ரழியிவை நினைந்து
கொள்ளாது விட்டுப் பேதுற்றார் மன்னோ
வவையெலாம் பொய்யென் றறிந்து சித்தாந்த
மெய்ப்பொருள் விளக்கிப் பொய்ப்பொரு டெறுஉத்
தெய்ப்பிலா வைப்பி னொப்பிய நின்றோய்
புட்கரப் பட்ட வானப் பேருறைக்
குமிழி யன்ன பொகுட்டு வீழிய
கரும்பிடர்த் தலைய மாச்செவிக் குறுமுய
லுள்வளைந் துள்ளி யுலம்பல் போற்புற
மதத்து வாதிக டங்களுட் பேரொலி
செய்யு மார்ப்பரிப் பொழிய வாங்காங்
குய்வரச் செலீஇக் கைம்மாப் புக்குக்
கோட்டினுங் கையினும் வாலினுங் காலினு
நூழிலாட் டதினுஞ் சிதைப்பது நேர
வடர்கி யவர்மதந் தெறுத்த நிற்போல்
வெவருங் கண்டிலே மினியம்ம யாரே
தவத்தினிள் முளைத்த சதுர
வருட்பெரி யோய்நின் புகழளப் பிலவே. (28)
நேரிசை வெண்பா
அளப்பிலா வாதியர்க ளம்மவென வேங்கித்
துளக்க மனங்கொள்ளத் துலங்க - விளக்கமது
கண்டு சிரந்துளக்க வுண்மைப்பொருள் நாட்டு
கண்டு மதியழகக் கண்டு (29)
கட்டளைக் கலித்துறை.
கண்டனஞ் சுந்தர நின்றனைப் போற்செயக் கண்டுமிலேங்
கண்டனஞ் சாரருள் காட்டுவர் தம்மையுங் கண்டுமிலேங்
கண்டனஞ் சேரருள் சேர்குர வோரையுங் கண்டுமிலேங்
கண்டனம் பெண்மணிற் கண்டனர் தாமொன்றுங் கண்டிலரே. (30)
சோமசுந்தர மும்மணிக்கோவை முற்றிற்று.
----------