தமிழ் பழமொழிகள் தொகுப்பும்
ஆங்கில மொழிபெயர்ப்பும்
ஆசிரியர் பெர்சிவால், பாகம் 1 (முதல் 3000)
Tamil Proverbs Collection (over 6000)
with Their EnglishTranslation - part 1 (first 3000)
by Rev. P. Percival
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Sincere thanks also go to Ms. Priya Kulandaivelu for her help in proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online on 12 July 2019.
This file presents the source proverbs in Tamil in Unicode/utf-8 format
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தமிழ் பழமொழிகள் தொகுப்பும்
ஆங்கில மொழிபெயர்ப்பும், ஆசிரியர் பெர்சிவால்
Tamil Proverbs with Their Translation
by Rev. P. Percival
Source:
Tamil Proverbs with their English Translation
containing upwards of Six thousand proverbs
By The Rev. P. Percival,
Chaplain, Madras Military Female Orphan Asylum:
Author of the "Land of the Veda" etc.
Second Edition, 1874
Madras: Printed and Published at the Dinavartamani Press,
Little Bourne, Mylapore
--------------
PREFACE TO THE FIRST EDITION.
It is hoped that the following collection of Tamil Proverbs may be useful to those who are in any way connected with the interesting people who speak that language. Examples of concise and forcible expression are thereby furnished, which may tend to aid in the study of the language, and occasional allusions to national, social, and religious usages may suggest heads of valuable enquiry, while the modes of thinking, and the natural shrewdness of the Hindu mind may, be seen through this medium. It is presumed that the translation generally conveys the sense of the original, although not always with its force, nor with theelegance that might be desired. Should it be called for, a future edition may remedy some of the existing faults,and also supply deficiencies, both as to the character of the translation, and the number of the examples.
P. PERCIVAL.
JAFFNA, Christmas, 1842.
---------------
PREFACE TO THE SECOND EDITION.
A Few words on the history of the book now offered to the Public in an enlarged form may not be out of place in the Preface to the Second Edition.
Almost immediately after my arrival in this country in 1826, I entered on my Missionary work among the Tamil people, having acquired the rudiments of their language in England from a gentleman who had spent several years in the South of India and North Ceylon. Intercourse with the natives afforded me ample opportunities of becoming acquainted with their modes of thought and expression, and, noticing their predilection for proverbial sayings, I was led to an early study and use of Tamil proverbs.
In 1830 I was removed to Bengal. There I became acquainted with a clergyman who had, like myself, turned his attention to the proverbs of the people among whom he dwelt. He collected a considerable number of Bengali proverbs, and published them, with an English translation, in a small volume, printed at the Press connected with Bishop's College, Calcutta. When the Mission in Bengal with which I was connected was withdrawn, I returned to my former sphere of labor among the Tamil people. As opportunity offered, I collected and arranged proverbs that I found current among them; and in 1842 printed a collection of nearly nineteen hundred with an English translation.
PREFACE.
The First Edition having become scarce, I was urged, by many whose judgment I felt bound to respect, to prepare matter for a second and enlarged edition. Various causes prevented me from immediately undertaking the work. For several years all my time was devoted to the revision of the Tamil Scriptures, in conjunction with Messrs. RHENIUS, KNIGHT, SPAULDING, HUTCHINGS, and others, and in passing the “Tentative Bible” through the Press. Subsequently a visit to England caused a further postponement of my plan, but, on my return to Madras in 1854, my attention was again directed to the subject of Tamil proverbs.
In the following year a Committee of gentlemen belonging to the Civil and Military Services of Government, Messrs. STOKES, SIM, CHAMIER, and Colonels BROWN, PEARS, and BELL resolved to start a Journal, for the purpose of diffusing, among the Tamil people, information social, political, and literary. The Committee invited my co-operation as Editor. This labor I at once accepted, the more readily because for several months I had been making arrangements to carry out the same idea, and had visited Calcutta to procure information on the subject, chiefly from Mr. MARSHMAN. In October 1855 the first number of the new journal, the Dinavartamáni, was published. Soon after this I also undertook the editing of a Telugu journal of the same scope, and bearing the same name. The circulation of these papers throughout the Madras Presidency afforded me a good opportunity of inviting the subscribers to assist me in the collection of Tamil and Telugu proverbs. My request was met by contributions from all parts of the country. The former were added to a rapidly increasing collection, while a selection from the latter was published, from week to week, along with an
English translation, in the Telugu Dinavartamâni. When the late Major CARR informed me that he was preparing a volume of Telugu proverbs for the Press, I made over to him my collection, a service he thus acknowledged in the Preface to his work “The Translator hns to thank the Rev. P. PERCIVAL, Professor of Vernacular Literature, Presidency College, for kindly placing at his disposal a MS. containing a large number of Telugu proverbs.”
In the year 1860 my collection of Tamil proverbs contained nearly five thousand examples translated into English and ready for the Press. At that time, however, I was so much engaged in preparing books and maps, in the Vernaculars, for the Director of Public Instruction, that I found it impossible to carry out my design of printing these proverbs, although I had announced it in the Dinavartamâni. Then followed an interval of ten years during which I was engaged in duties absorbing all my time and attention. I had the superintendence of the Public Instruction Press on my hands; and, aided by the Pundits of the Presidency College, and other competent native scholars, had theresponsibility of editing, among the works that issued from the Press during this period, seven dictionaries, some of which have since been re-printed.
At the beginning of 1870, having been relieved from my heavy duties in connexion with the Presidency College and the University, I resolved to print the proverbs as they stood, and soon. after this having met the Rev. G. FRYAR of Manargudi, Tanjore District, I learnt that he had for eight or nine years been also engaged in collecting Tamil proverbs, and that his collection then amounted to five thousand examples, and that he proposed eventually to publish it on the basis of my First Edition. On
hearing of my own plan, Mr. FRYAR abandoned this purpose, and very generously placed his valuable MS. at my disposal, from which I obtained several hundred new proverbs.
Shortly after this, again, one of my compositors brought me an old-looking MS. containing over fifteen hundred examples. A volume printed in 1861 at Vepery, and containing nearly four thousand examples, was also put into my hands. But these collections yielded very few proverbs not already contained in my own MS. A Pundit of the Government Normal School furnished me with about a hundred fresh examples, and a small MS. belonging to a Native Christian lady of Tanjore contained a few curious proverbs that I had not seen before. These related to Christian character, and evidently originated in anything but a benign feeling.
Altogether my collections in 1872 exceeded fifteen thousand, but they only yielded the number contained in this volume. That the outcome of so large a gathering should be comparatively small may easily be accounted for by the fact that the several collections, in very many instances, contained the same proverbs. It must be borne in mind that my own collection, which eventually absorbed the others, was made during a period extending over forty years, and that, through the medium of the Dinavartamâni, I had received contributions from all parts of the Madras Presidency, as well from North Ceylon. Hence it was but natural that I should anticipate collectors who come into the field later.
But for the omission of many of the admired Aphorisms of the ancient Tamil matron, Avveyar, this collection would have been somewhat larger, Though these Aphorisms are compositions of
unequalled brevity and beauty, I have, for the most part, omitted them, because they are generally taught in schools, and indeed regarded as part of a school course. En passant I may mention that seven or eight years ago I printed and published them, in a separate form, with an analysis and translation in English, and that a Second Edition of this work is now in the Press. Bible proverbs, and those obviously Sanskrit, are also omitted, because this collection is designed to be Dravidian. Translations from Western proverbs I have for the same reason left out.
In this edition, as in the First, the proverbs are arranged in alphabetical order. This of course is the easiest method. Some years ago I thought of classifying the subjects somewhat after the plan of Amarakosha, a Sanskrit Dictionary, wherein objects are divided into separate classes, as Supernals, Infernals, Men, Animals, &c. A division of subjects on the principle of a commonplace book was also thought of, and a friend whose judgment I greatly respect, suggested an index. Although each of the methods referred to has much to recommend it, at length I gave them all up, and resolved to adopt the easiest-the alphabetical arrangement. Had I decided otherwise, the work must have been delayed ; andas in my case “ the day is far spent,” I might not have been able to accomplish my purpose.
On the analogy of the proverbial expressions current in all countries, many scraps of sentences, mere allusions, similitudes, and the like, are included in this collection, though not proverbs in the proper sense of the term. The objects of Nature, habits, and dispositions of animals, government, agriculture and commerce, domestic and religious usages supply a large number of proverbial expressions. The incidents of classical literature contribute many that prove highly acceptable to those who have
'any acquaintance with the sources of Hindu history. So largely do the stories of ancient writers contribute that the fact hasoriginated a proverb universal among the people of Bengal.
What is there after Bhárata? A glance at a few pages of this volume will suffice to show that the people among whom such proverbs are current cannot be ignorant of the laws of God.
Vox Populi, vox Dei, may be applied to this aspect of many of the Dravidian proverbs :
“ The people's voice, the voice of God we call ; And what are Proverbs, but the people's voice ? Coined first and common made, by common choice ;
Then sure they must have weight, and truth withal." I may be permitted to say a few words on the utility of a volume like that now offered to the public. A foreigner destined to spend the best part of his life among the Tamil people will find their proverbs of inestimable value. In these pithy and instructive sayings a vast fund of information will be found, not to be obtained from ordinary books, and not at all from books designed for Western minds ; —practical maxims, resulting from the experience of many generations, maxims that will be sought in vain in books of modern origin.
The translation will, I hope, be generally approved. In some instances I have found it difficult to ascertain the meaning ; and in many the application has equally puzzled both myself and others to whom I have applied for information. In some cases I may have been misled by those who might be more disposed to hazard a conjecture than to acknowledge ignorance. For the benefit of foreigners the occasional notes might have been
advantageously increased in number, but usages differ so much that great caution is required in this matter. So varied is the operation of race, language, religion, and climate, upon the character and social usages of the Hindus who occupy the vast area of India that it is unsafe to assume generally that what is common in one Province is so in others,
In conclusion, any one interested in this work will oblige by sending me proverbs not found in the collection, or any suggestions for improving the next Edition. Though I may not hope to see another edition, my son-in-law, Mr. W. A. SYMONDS, who has long studied Tamil proverbs with great interest, will, should it be called for, undertake the editing.
LITTLE BOURNE, MADRAS,
P. PERCIVAL, February 13, 1874.
TAMIL PROVERBS, WITH THEIR TRANSLATION IN ENGLISH.
தமிழ் பழமொழிகள் தொகுப்பும் ஆங்கில மொழிபெயர்ப்பும்
Part 1 (first 3000 proverbs)
1. அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
Having placed the thing on the palm, why lick the back of the hand?
2. அகடவிகடமாய்ப் பேசுகிறான்.
He speaks artfully.
3. அகதிக்கு ஆகாயம் துணை.
Heaven is the help of the helpless.
4. அகதிக்குத் தெய்வமே துணை.
God Himself is the help of the helpless.
5. அகதி சொல் அம்பலம் ஏறாது.
The word of the destitute does not reach the assembly.
An assembly of learned men or men in power. The words of the poor, whether they relate to oppression, or to other injuries, or to opinion, are not likely to find admission where alone they can avail.
6. அகதி தலையிற் பொழுது விடிகிறது.
Light breaks on the head of the destitute.
Blame, or suspicion, will fall on the head of the unprotected and friendless. The poor are at work by break of day.
7. அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும் வெள்ளி பூராடம்.
The destitute brings forth a female child, and that on Friday, under the star Purádam.
Used of one suffering from an accumulation of evils. The condition of the parent, the sex of the child, the day of its birth and its ruling star are alike inauspicious.
8. அகதியைப் பகுதி கேட்கிறதா?
What! is tribute demanded of the destitute ?
9. அகத்தில் அழகு முகத்தில் தெரியும்.
The beauty of the mind appears in the face.
10. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
Though the Agatti-Coronilla grandiflora.—brings forth by thousands, its fruit remains ungathered.
Spoken of the beneficent acts of one not held in estimation, and whose kindness is not therefore appreciated. The proverb is also used of a miser whose treasures are useless.
11. அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது ?
Does the thief steal in expectation of being caught ?
12. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா.
He who was caught was under the influence of Saturn in the eighth sign, and he who escaped, did so, under the influence of Saturn in the ninth.
Saturn situated in the eighth sign from that of one's birth is supposed to exercise a most malignant influence. This opinion of the Hindus appears in many of their Proverbs.
Hindu Astronomy is made the foundation of a vast system of Astrology. The real movements and the relative positions of the planets are wrought into a systematic connection with a great variety of arbitrary divisions of the signs of the Zodiac, and of the twenty-seven Lunar Mansions. To these bodies are added various Mythological appendages, as beasts, birds, trees, &c., all of which, of course, being a part of the fine-spun theory, help to form in the view of the people generally, a more recondite and imposing system than that of Astronomy itself.
The Astrological dogmas of India have an important bearing on all thedomestic arrangements and practices of the people. They extend to a great variety of popular superstitions which run out into every department of life. This is seen in the lucky and unlucky months, days and other divisions of time, in the horoscope, which has a powerful controlling influence in marriage, and in other matters relating to the settlement of families and in the more general prognostics for the year as given in the Hindu Calendar. Astrology in its popular developments exerts a powerful influence on all classes of Hindu Society.
13. அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தா லென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?
If he who has the ladle be one's own servant, what matters it whether one be seated first or last at the feast?
The Agappai—ladle—here referred to is made of a piece of cocoanut shell with a suitable wooden handle. The shell being very hard and not porous is well suited for the purposes of a spoon or ladle. It is easily cleaned, and well adapted for earthen cooking Vessels. It may be seen in every cooking room or shed throughout
the Tamil country.
14. அகம் ஏறச் சுகம் ஏறும்.
As grain becomes cheaper, enjoyment increases.
15. அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.
If grain abound, the five also will abound; if grain be scarce, the
five will be so.
16. அகம் மலிந்தால் எல்லாம் மலியும், அகம் குறைந்தால் எல்லாம்
குறையும்.
If grain abounds, all things abound, if grain be scarce, all things are scarce.
17. அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை.
If apart, long friendship, if together, the least touch will provoke hatred.
18. அகல இருந்தால்ப் பகையும் உறவாம்.
When apart, even enmity becomes friendship.
19. அகல இருந்தால்ப் புகல உறவு.
Separation secures manifest friendship.
20. அகல்வட்டம் பகல் மழை.
A large halo — a rainy day.
21. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
He who knows not the price of grain, knows not sorrow.
22. அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்.
The moat into which the alligator has plunged is to itself Vaikundam. (Paradise.)
23. அகா நாக்காய்ப் பேசுகிறான்.
He speaks glibly.
24. அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
Is it to see the face of one who acts improperly?
25. அகோர தபசி விபரீத சோரன்.
A terrible ascetic, an atrocious cheat.
26. அகோர தபசி, விபரீத நிபுணன்.
In austerity, severe ; in perversity, an adept. Prone to extremes.
27. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
Green pasture on this shore for the cattle on that.
28. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.
If I say that I am about to clear away the jungle to sow cotton seed, my child exclaims, O father, give me a cloth. Sanguine and very anticipatory.
29. அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச்சிற்றாடை என்கிறதாம் பெண்.
If I clear away the jungle and sow cotton seed, it is said that the girl exclaimed, O father, a cubit of cloth.
30. அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு.
The friendship of a brother-in-law lasts while one's sister lives.
31. அக்காள் உண்டானால், மச்சான் உண்டு.
If one has a sister, he may have a brother-in-law.
32. அக்காள் உடைமை அரிசி, தங்கைச்சி உடைமை தவிடா?
Is the property of the elder sister rice, and that of the younger bran?
Said of one who is extremely chary about his own property, and indifferent about that of another.
33. அக்காள் உறவும் மச்சான் பகையுமா ?
Whilst cherishing friendship for the sister, are you at enmity with the brother-in-law ?
34. அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?
Having taken in marriage the elder sister, why inquire after the rank of the younger ?
35. அக்காளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள்.
Having reproached her elder sister, the younger played the harlot.
36. அக்காள் தான் கூடப்பிறந்தாள் , மச்சானும் கூடப் பிறந்தானா?
My sister was indeed born of the same mother : was my brother in-law also ?
37. அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?
Will a dog understand the Vedas, although born in a Brahman village ?
38. அக்கிராரத்துக்கு ஒரு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர்.
Should a sheep come into a Brahman village, each person will get but a hair.
After a sheep has been sacrificed in a Brahmanical village and the carcass consumed, the Brahmans may use the hair when performing poja : this interpretation is disputed.
39. அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பினதுபோல.
As a dog longed for the consecrated things of a Brahman village.
Said when great expectations are entertained of something that is likely to prove illusory : an amusing story is told about this proverb.
40. அக்கினி மலைமேல் கர்ப்பூரபாணம் பிரயோகித்தது போல.
As one discharged a camphor arrow at a burning mountain.
Spoken of an act done to injure another, fruitless or inadequate, and possibly destructive of the means employed.
41. அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்தது போல் இருக்கிறான்.
He is as if a libation had been poured out to the god of fire.
Used of one naturally very black, who on hearing the proverb if heunderstands its purport, is of course very angry. When water is poured on burning charcoal the cinders appear exceedingly black. The intended reflection is not the less insulting because of the complimentary way in which it is conveyed.
42. அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.
A cauterized wound will not fester much.
43. அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?
Whence sorrow to him who has no connections ?
Said of one who is so obscure and isolated as to have no one whose griefs he can share or assuage.
44. அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
Is it improper to bathe in a river ?
45. அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலைசினாலும், தோஷம் இல்லை.
Although he take his body and wash it in the river, no fault will be found.
46. அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது.
A body that has been deprived of life (murdered) may not be put into a river.
47. அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.
He is seen everywhere enjoying himself: when looked at in his homestead, he is not worth half a cash.
Said of one who, when out, affects to be well off, whereas he has nothing at all to depend upon. The word (காசு) Cash, is used for several kinds of coin, also for
money.
48. அங்காடி விலையை அதிர அடிக்காதே.
Do not beat down the market price.
Do not contravene the established opinions and practices of the people with whom you are associated.
49. அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம் கரு வேப்பிலை என்பாள்.
If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim venkaiyam, karuveppilai, (Onions, curry leaves.)
50. அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு.
One who frequently changes his party will receive two slaps here and three cuffs there.
51. அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பட்டன்.
Tummattippattan, who had escaped here and there, was caught.
Referring to the adventures of a sorcerer.
52. அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.
He is here and there and has a share also in the boiled rice.
53. அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய்ப் பறக்கலாம்.
Why, my daughter, are you crying there for kanji ? come hither and you may fly as the wind.
Spoken of a proffered change which may be for the worse.
54. அசல் வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள்.
If her neighbour prospers, she will starve herself for five days.
55. அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா?
Is one to go to a foreign country, because his neighbour prospers ?
56. அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்.
Regardless of circumstances, he aims to destroy his neighbour.
57. அசவாப் பயிரும் கண்டதே உறவும்.
Stunted grain—friendship at sight.
Both valueless.
58.அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு.
A cow eats moving; a house eats standing.
59. அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
The fearless goes into the assembly.
Used of those who have more courage than discretion.
60. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
A car without a linch-pin will not move even three spans.
Intimating that appliances however trivial cannot be dispensed with, and that the best instruments and weapons require due management.
61. அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.
Though taken to Achchi, a wooden ladle will fetch only half a cash.
Achchi being a prosperous place, cooking utensils are there is great demand, yet even there this inferior article will bring no more than its value. Spoken of the intrinsic value of a thing.
62, அச்சியிலும் பிச்சைக்காரர் உண்டு.
There are beggars even in Achchi.
See the preceding proverb.
63. அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.
The cheat has got on the shoulders of the conjurer.
Said when one deceiver has got the better of another.
64. அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.
Deferential respect is agreeable to every one.
65. அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
Who will tolerate a presumptuous or impudent man?
66. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது.
A fifth born female cannot be obtained though earnestly sought.
A fifth born female is regarded as the special favourite of fortune; an eighth — as the very opposite.
67. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
Will that which was not bent at five, bend at fifty ?
68. அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்.
Even a fledgeling may scare the timid.
69. அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
Will one ignorant at five understand at fifty ?
Early instruction essential to future knowledge. The proverb may also suggest that growth in years will not make one, that is naturally dull, bright.
70. அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
Demons strike the timid.
71. அஞ்சி ஆண்மை செய்.
Act manfully, but modestly.
72. அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.
Those who were once feared may be made to beg; and they who were once oppressed may be made prosperous.
73. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.
To the timid the sky is full of demons.
74. அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
A horse is required for five cash, and he must be able to leap over a river.
Used in derision when great results are expected from inadequate means.
75. அஞ்சு குஞ்சும் கறியாமோ? அறியாப் பெண்ணும் பெண்டாமோ?
Are five young birds a curry? Is a young girl a wife?
76. அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.
Of the five senses two are uninjured.
Used with reference to some, of several desiderated objects that have been accomplished, or of some things that remain uninjured.
77. அஞ்சு பணம் கொடுத்தாலும், இத்தனை ஆத்திரம் ஆகாது.
Even if you were to give away five fanams, such haste or precipitation will not do.
Precipitance in judgment is worse than actual loss.
78. அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கும்..
If possessed of five and three, even a young girl may make a curry.
The five are acid, pepper, salt, mustard and cumin; the three are water, fuel and fire.
This proverb is used by a man when his wife has prepared a curry that does not please him.
79. அஞ்சுருத்தாலி நெஞ்சுருவக் கட்டிக்கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.
Thou speakest ostentatiously as a matron who has come having her bosom adorned with a tali ornamented with five figures.
The tali is a marriage symbol used as a wedding ring is in Europe. Various astrological observances attend the melting of the gold &c. The five forms referred to are the five weapons of Vishnu. Viz. the dischs, the club, the conch, the bow and the sword. The Romanists ornament the tali with the figure of a dove.
80. அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.
A woman of fifty must bend the knee before a boy of five.
Referring to the deference paid to the male sex by the Hindus.
81. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
He aims to humble the timid by force.
82. அஞ்சூர்ச்சண்டை சுண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவளம்.
Conflict in five villages is but curry, five maracals of rice is only a mouthful.
Spoken of one who delights in the misfortunes of others.
83. அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது.
The five letters and the sentiment are like him.
Spoken of a child who in feature and disposition resembles its father.
84. அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?
Of what use is beauty to a damsel living in retirement?
85. அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
The well-ordered are wise; the disorderly are fools.
86. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
Modesty is the ornament of a woman.
The proverb may be used of moderation generally and self-restraint.
87. அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த்
திரிகிறான்.
Adwarf without restraint—an unused tomtom-- he wanders about.
Used of one irrecoverably worthless.
88. அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.
A bamboo staff is the king of a vicious snake.
89. அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
A disobedient wife is an evil both to her mother and to one's self.
Spoken of a person inimical alike to two parties.
90. அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.
A disobedient wife and a self-willed husband.
Said of uncongenial society.
91. அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கலாகாது.
Seize that which can be grasped, not that which cannot.
Aim at the practicable.
92. அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
Even tender creepers when united are strong.
93. அடா என்பான், வெளியே புறப்படான்.
He will speak abusively, but will not come out.
94. அடாது செய்தவர் படாது படுவார்.
They who do what they ought not, will suffer what they might have avoided.
It serves him right.
95. அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை
A slap is a cake, a cuff is sweetmeat.
Spoken of one who is beyond ordinary discipline.
96. அடி உதவுகிறது போல அண்ணன் தம்பி உதவுவார்களா?
Will an elder or younger brother aid one as effectually as discipline or punishment ?
97. அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.
The more a ball is struck, the more it rebounds.
98. அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்பட வேண்டும்.
Beware of a beating wind and of falling rain.
Beware of things beyond human control.
99. அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?
Does the beating wind fear the sunshine ?
Spoken of irrelevant means to subdue an evil.
100. அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.
Winnow while the wind blows.
101. அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
One hand smites, the other embraces.
Discipline regulated by love; used sometimes of Divine chastisements.
102. அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
Can one make a somersault in the bottom of a chatti?
103. அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
What he received for his labour (ploughing) only paid for the kanji he drank.
104. அடித்துப் பழுத்ததும் பழமா?
Is that which ripens by force fruit?
(A favour done under constraint is no favour.)
105. அடித்துப் பால் புகட்டுகிறதா?
Is a child to be beaten in order to pour milk into its mouth?
106. அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும்
செவ்வையாகா .
Neither the child that is unchastised, nor the mustache that is untwirled will be right.
Implying that due care must be exercised to secure a desiderated result.
107. அடித்துவிட்டவன் பின்னே போனாலும், பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது.
Though you may trust one who has administered correction, you may not trust one who has betrayed you.
108. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமுமா ?
What! is it nectar at the tip of the tongue while poison is at the root?
Said of one, or to one whose professions are at variance with his intentions.
109. அடி நொச்சி நுனி ஆமணக்கா?
Is the stem nochchi, and the top a castor plant?
Intimating that the same characteristics will prevail in a family or tribe.
110. அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.
Why beat him, why seize him? we will subdue him by proper means.
111. அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.
Even a grindstone will move under repeated strokes.
112. அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
It is the duty of one who has a slave to employ him.
113. அடியற்ற பனை போல் விழுந்தான்.
He fell as a palmira tree severed from its root.
So perfect was his prostration. This may be used of obeisance or ruin.
114. அடியற்ற மரம் போலே.
As a tree without root.
115. அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
If the root fail, will not the top fall?
116. அடியா நாடு படியாது.
A province in which authority is not enforced will not submit.
117. அடியாத மாடு படியாது.
An unchastised bullock will not obey.
118. அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.
That which exists in the bottom is likewise in the middle and top.
119. அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
And besides being beaten, must (one) also eat sour mangoes?
Spoken of something imposed on one who is already suffering from questionable inflictions.
120. அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை , ஆண் எத்தனை பெண்
எத்தனை என்கிறது போல.
Like saying to a man how many boys have you, and how many girls, when he has not a wife to whom he can say, Adi.
121. அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.
If the horizon becomes black, the household of the farmer will begin to parch.
122. அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல.
Like the springing up of nectar ip a kitchen well.
123. அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும்
இருக்கிறதென்கிறான்.
He says, to cook, there is a woman; for outdoor work, a man.
Spoken of needful help already at hand.
124. அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு?
Does the dog that breaks (the cooking pots) know how difficult it is to arrange them?
Used when a heedless clumsy person has disarranged or spoiled some cherished work on which great pains had been bestowed.
125. அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.
When a neighbour's roof is in flames one's own is in danger.
126. அடுத்தவனைக் கெடுக்கலாமா?
Is it right to destroy one's neighbour?
127. அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.
Because his neighbour prospers he removes in the day-time i. e., at once.
128. அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.
He destroys those about him and robs those who fed him.
129. அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
By continually urging, the work undertaken may be completed.
130. அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கொடுப்பாள் வேசி.
A deceiver destroys when near, a harlot in contact.
131. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.
He is a teacher or spiritual guide who gives wholesome counsel to those who resort to him.
132. அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.
A story about butter being placed near the hearth.
133. அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?
Is ornamentation requisite in a hearth or fireplace? The needful is sufficient in common things.
134. அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.
No fire in the hearth, no bran in the mouth.
135. அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.
Should the fire burn, you may parch grain.
136. அடைந்தோரை ஆதரி.
Take care of those who are under your protection.
137. அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
A snake will bite him who removes a fence.
138. அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்ததுபோல.
As a lamb died in heavy rain.
Said of one coming to grief from want of due care.
139. அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.
Though the heavy rain is over, the dropping from the trees continues.
Though the greater evils have passed away, the lesser remain. Though the spoiler is not upon us, the ordinary imposts are demanded by men in power
140. அட்டமத்துச் சனி கிட்ட வந்ததுபோல .
As Saturn in the eighth sign approached.
Some person or thing ominous of evil.
141. அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.
Saturn in the eighth sign will bring loss.
See the preceeding.
142. அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்து கொண்டது.
Saturn in the eighth sign seized, and stripped off even the waist cloth.
143. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
Like borrowing Saturn in the eighth sign on interest.
144. அட்டைக்கும் திருத்தியில்லை , அக்கினிக்கும் திருத்தியில்லை.
The leech is not satisfied, nor is fire. Inordinate desire is never satisfied.
145. அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல.
As a reptile caught and placed on a cushion.
Said of a person in an unnatural situation.
146. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும்.
Although you take a reptile and place it on a cushion, it will seek a heap of dried leaves.
147. அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல.
As a dog looks up at a squirrel that has ascended and escaped his grasp.
A despairing look after a thing irrecoverably lost.
148. அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச்
சோறு அரிதோ?
Does the squirrel lack the pulp of the young palmyra fruit, or the
child of a Saiva mendicant, rice ?
To give to religious mendicants is held, by the Hindus generally, to be meritorious.
149. அணு மகாமேருவாமா?
Is an atom the great Meru?
The sacred mountain Meru, forming the centre of the seven continents according to the Mythological geography of the Hindus ; it appears to mean the highland of Tartary north of the Himalaya.
150. அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு.
An atom is become a mountain, a mountain an atom.
151. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
Though one cry after it, will the flood that has burst its bund return ?
As a premonition, this proverb is used to inculcate caution, andas a remark on misfortune, it suggests the uselessness of regret.
152. அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?
Who can stop a flood that has burst its bund?
Spoken of insuperable evils.
153. அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு.
Whatever exists in the universe exists in the human body.
154. அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா?
Does that exist in the body which does not exist in the universe ?
The greater includes the lesser. This and the preceeding proverb really relate to the dialectics of the learned and philosophic schools.
155. அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
Will a fruit be burdensome to Him who bears the universe ?
Used when some favour is sought of one who is known to possess ample resources.
156. அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.
Of the universe and the body, the former is hidden, the latter open.
157. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
Whom will the unapproachable demoness obey?
The term Pidari is generally applied to a village goddess who is regarded as an evil being.
158. அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.
A quarrel in a neighbouring house is refreshing.
Spoken of envious persons who may be supposed to delight in a neighbour's shortcomings or misfortunes
159. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.
The neighbouring Brahman will breed a quarrel and settle it.
Said of one who promotes evil in order that he may gain by it.
160. அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.
Disgrace will attach to a king who has not a competent person near him.
161. அண்ணனார் அரண்மனையில் அள்ளி உண்ணப் போகிறாள்.
She is going to eat rice in her elder brother's house.
162. அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
Although one may live six months with an elder brother, one cannot abide with his wife even half an hour.
The first condition is proverbially difficult, how much more so the second?
163. அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்.
If my elder brother has a daughter, my paternal aunt becomes an alien.
164. அண்ண னும் தம்பியும் சென்மப் பகைவர்.
An elder and younger brother are natural (birth) enemies.
They are supposed to be subject to envy, jealousy and hatred on account of the rights they inherit.
165. அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறது போல.
Like taking revenge in the market-place, or in the place where the Vedas are read, on account of an elder brother who has been murdered.
166. அண்ணன் பெரியவன், அப்பா நெருப்பு ஊது.
My elder brother is superior, father, blow the fire.
Said when an inferior is treated with grouter deference than one really entitled to distinction.
167. அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு.
The horn of my elder brother is as soft (harmless) as a shivered stick.
The foxes of a certain region familiar with the hare had, for a long time, an idea that its fine long ears were formidable horns, and there fore kept aloof from it. At length an old fox proposed that they should try to ascertain the nature of the extraordinary excrescences on its head; and suggested that some of their neighbours should be invited to a feast. This was done ; and when all things were ready the foxes led their guests into the festive hall and they were seated a fox and a hare alternately, at table. During the feast one of the foxes professing great admiration for the fine horns of their guests, laid his hand upon one and looking round uttered the Proverb. On
hearing this, each for seized and devoured the hare next to him.
168. அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.
Whatever is left uneaten by my elder brother is an advantage to my sister-in-law.
169. அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே.
Elder brother and younger brother are still wanted, O God.
170. அண்ணாவியார் விழுந்தால் அடைவுமுறை.
Should a teacher make a slip, it is attributed to his art.
171. அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா , அம்பட்டன் பிள்ளைக்கு மயிர்பஞ்சமா?
Is the child of an artist (a dancing-master) without money, is the
son of a barber in want of hair ?
172. அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.
It obstructed the throat and the uvula so as to cause them to quake.
173. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
If the favour of Annamalai (Siva) be obtained, will the god Mannnar pull out a hair?
Safe as regards an inferior, if protected by a superior.
174. அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை .
The forms of worship prescribed for Siva are sixty-four; whereas the seasons for feeding religious mendicants are seventy-four.
175. அதிக ஆசை அதிக நஷ்டம்.
Excessive desire entails excessive loss.
176. அதிக ஆசை அஷ்ட தரித்திரம்.
Excessive desire or greed ends in eight forms of poverty,
The eight forms of poverty are the absence or negation of the eight sources of fruition or enjoyment. These are பெண் women ; ஆடை apparel ; அணிகலன் jewels ; போசனம் food ; தாம்பூலம் betel ; பரிமளம் perfumes ; பாட்டு Songs ; பூவமளி reclining on flowers.
177. அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.
If the chief and headman are united, stealing may be carried on till day - break.
178. அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல.
As one placed in the house of the headman what he had stolen in the house of the chief.
Said of a thing done unwittingly.
179. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
An egg obtained from the house of the chief will break the grindstone in the house of the peasant.
Implying that authority imparts to the insignificant overwhelming power.
180. அதிஷ்டம் தொட்ட கழுக்காணி.
A short thick person favoured by fortune.
181. அதிஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது.
Fortune flows as a river.
182. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.
When fortune smiles one may reign as a king.
183. அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.
Although the unfortunate gets a large measure of milk, the cat will lap it all up.
Destiny prevails to thwart benefits when one is unfortunate.
184. அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
When touched by the fortunate even earth becomes gold.
185. அதிர அடித்தால், உதிர விளையும்.
If thoroughly ploughed, the yield will be abundant.
186. அதிலும் இது புதுமை , இதிலும் அது புதுமை.
This is stranger than that, and that is stranger than this.
187. அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா பூசாரி.
O, priest there is no lack, proceed with the ceremony.
Said to a Pujachari by way of encouragement.
188. அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.
Each object is attended by a single anxiety, whereas the master has eight.
189. அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.
He will eat it all and say come.
190. அதுக்கு இட்ட காசு மினக்கெட்டு அரிவாள்மணைக்குச் சுறுக்கிட்டதா?
Did the money, diverted from the object for which it was given, avail for the purchase of a sickle ?
191. அதுவும் போதாதென்று அழலாமா இனி?
May you hereafter weep because that also is too little ?
192. அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.
Like calling a coward a fearless hero'
Said of false adulation.
193. அதை விட்டாலும் கதியில்லை, அப்புறம் போனாலும் வழியில்லை.
If that is renounced there is no help, if you go further there is no way.
Spoken of evils from which there is no escape.
194. அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?
It is by reason of his great wealth, is it not, that the barber asks a maiden in marriage ?
195. அத்தனையும் நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.
Although she put in so many ingredients, she omitted salt.
Said of something complete in all but one essential.
196. அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
My brother-in-law's death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine.
197. அத்திக்காயைப் பிட்டுப்பார்த்தால், அங்கும் இங்கும் பொள்ளல்.
If you break open a fig, you will see cavities here and there.
198. அத்தி பூத்ததுபோல் இருக்கிறது அவன் வந்தது.
His coming is like the flowering of the fig tree.
Something that never happens.
199. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்.
The more a fig is opened, the greater will be the number of worms found.
200. அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?
Who ever saw the flower of a fig-tree?
201. அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா ?
Are there any who have seen the blossom of the fig-tree ? are there any who have seen the young of an owl?
Said of things that rarely or never happen.
202. அத்திமரத்தில் தொத்திய கனிபோல.
Like fruit sticking to a fig-tree.
203. அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.
He transgressed and became mad.
204. அத்தைக்கு மீசை முளைத்தாற் சிற்றப்பா என்கலாம்.
Should the mustache of one's aunt grow we may call her uncle.
Referring to improbable contingencies.
205. அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா ?
Will beauty emanate from one void of symmetry ?
206. அந்தணர்க்குத் துணை வேதம்.
The Veda is the staff of the Brahman.
207. அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும்.
The house of the Brahman is perfumed.
It being a requisite for ceremonial usages.
208. அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல.
Like a blind man who has thrown his staff into the air.
209. அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும்.
If white-ants take wing in the evening, it prognosticates excessive rain.
210. அந்தி மழை அழுதாலும் விடாது.
The evening rain will not cease even if one should weep.
211. அந்தூது நெல்லானேன்.
I am become as useless as a grain of paddy eaten by insects.
212. அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல.
While the father is sucking the husk of the cocoanut his son is crying for the kernel or pulp.
Indicating desires beyond one's means.
213. அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது.
While the hawk snatches away the father's waist-cloth his daughter is crying for a silk dress.
Said in reproof when wishes are entertained beyond one's means.
214. அப்பத்தை எப்படிச் சுட்டீர்கள்? தித்திப்பை எப்படி நுழைத்தீர்கள்?
How did you bake the cake ? how did you sweeten it ?
215. அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில்,
Cakes are baked in a chatty, steeped rice is flattened in a mortar.
Means must be suited to the end.
216. அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?
If bread, is it necessary to break and prove it ?
217. அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.
The value of a father is known after his decease, that of salt when exhausted.
218. அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
The father is crying for rice and his son is performing the ceremony of giving a cow at Kumbhakónam.
219. அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா என்கிறது போல.
Like saying, my father is a great person, uncle, bring fire to light my cigar.
Pride of wealth leads one to neglect the observance of established
social rules.
220. அப்பா என்றால் உச்சி குளிருமா ?
If one exclaim, alas ! alas! will the crown of the head become cool ?
Expressions of sympathy are unavailing if not associated with real help.
221. அப்பியாசம் கூசாவித்தை .
Experience is knowledge that maketh not ashamed.
222. அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.
Thoroughly acquired knowledge does not fail.
Said in commendation of obvious efficiency.
223. அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?
Why ask of the military officer if there is any compulsory service ?
Why gratuitously seek avoidable evil?
224. அமரபட்சம் பூர்வபட்சம், கிஷ்ணபட்சம் சுக்கில பட்சம்.
The latter and former halves of the moon—its dark and bright sides.
'These symbolize the light and darkness, the gladness and sadness of human life.
225. அமரிக்கை ஆயிரம் பெறும்.
Quietness is worth thousands of gold.
226. அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
An oppressor and a clever man need no landed property.
227. அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
In the darkness of the new moon the bandycoote finds a way wherever he goes.
228. அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?
Is the food peculiar to the new moon to be had every day ?
229. அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களா?
Will poison be received by the mouth accustomed to nectar ?
230. அம்பட்டக்கிருதும் வண்ணார ஒயிலும்.
The arrogance of a barber and the affectation of a washerman.
Said when inferiors give themselves airs of importance.
231. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.
If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.
The more you examine an inferior thing, the viler will it appear.
232. அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?
Is hair a rare sight to the child of a barber ?
233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன ?
What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.
234. அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.)
235. அம்பலத்தில் கட்டுச்சோறு அவிழ்க்கிறாப்போல்.
As boiled rice tied up for a journey is untied in an open place.
236. அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது.
It is not good to unpack in an open place.
Unnecessary exposure of one's personal affairs is to be avoided.
237. அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்.
He speaks like piercing arrows.
238. அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நரிவால் கொள்ளுவார்களா?
Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal ?
239, அம்மணமும் இன்னலும் ஆயுசுபரியந்தமா?
Are nakedness and misery to continue to the end of life ?
240. அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
Is a veil necessary for a woman in a bad condition ?
241. அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
The father-in-law and son-in-law are slaves in the same house.
242. அம்மான் மகளுக்கு முறையா?
Why enquire after the relationship of the daughter of one's maternal uncle ?
243. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?
Having to chastise a maid-servant in a father-in-law's house, is it necessary to ask the chief permission to do so ?
244, அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?
Whether is stronger, the grindstone or she who grinds ?
245. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தது போல.
Like one standing on a grindstone and looking at Arundathi.
Arundathi is a star in the Great Bear regarded as the wife de Vasishta, a pattern of chastity. This star is pointed out to the bride at the marriage ceremony.
246. அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.
She will bring forth a king on the grindstone.
During the time of child-birth it is not uncommon for the mothers to be seated on a grindstone.
247. அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற் போல.
As a leaf-plate sought advice when the grindstone and its rollerwere flying in the air.
218. அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
If a thievish woman eat the cream will there be any butter ?
249. அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.
The strife of Ammai, (a village goddess) has begun, boil and present (rice.)
250. அம்மையார் எப்பொழுது சாவாள்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?
When will my mistress die ? when shall I get her blanket ?
251. அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.
The yarn spun by the old dame will only just suffice to form waist-string for her grandson.
252. அம்மையார் பெறுகிறது அரைக்காசு , தலை சிரைக்கிறது முக்கால் காசு.
Three fourths of a cash is demanded for shaving the head of an old woman worth only half a cash.
253. அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.
What sorrow has the old dame ? that of raggedness.
254, அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.
Come, old lady, and receive the old man.
255. அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
He flies at his neighbours' property as a demon,
256. அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு.
Be blind as regards your neighbours' property.
257. அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.
No one escapes the decree of Brahma.
258.அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
The writing of Brahma will not fail in the least.
259. அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.
Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food.
260. அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு.
Beauty in the unworthy is poison in a casket of fine gold.
261. அய்யன் அளந்தபடி.
As God measured.
262. அய்யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?
Is Appaiyangar the dispenser of Aiyavaiyar's gruel ?
263. ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ?
Whether is greater as regards merit, to say Hara, Hara, or to give to the mendicant?
264. அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?
What matters it whether a demon or a man rules?
265. அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.
To play draughts without a board and to speak without a knowledge of the shastras are alike.
266. அரசன் அளவிற்கு ஏறிற்று.
It reached even the king.
267. அரசன் இல்லாத நாடு , புருஷன் இல்லாத வீடு.
A country without a king, a family without a head.
268. அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.
The sky is the witness regarding the king's property.
269. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
The king kills at once, God delays and kills.
270. அரசன் கல்லின் மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.
If it be reported that brinjals are growing on a stone in the king's courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.
271. அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
As is the king such are his subjects.
272. அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
The people follow the lead of their rulers
273. அரசன் வழிப்பட்டது அவனி.
It is the earth i.e., its inhabitants that follows the king.
274. அரசன் வழிப்படாதவன் இல்லை.
No one is exempt from duty to the king.
275. அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.
As regards the king it is a word, to the subject it is a burden.
276. அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
The fear of the king among those in power operates auspeciously as regards the poor.
277. அரசனுக்குத் துணை வயவாள்.
The help of a king is his mighty sword.
278. அரசனும் அரவும் சரி.
A king and a snake are alike.
279. அரசனும் அழலும் சரி.
A king and fire are alike.
280. அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
A king, fire. and snake are alike.
281. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டது போல.
Like losing a husband through trusting in a king.
282. அரசுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.
A king observes not the distinction between little and great.
283. அரசுடையானை ஆகாயம் காக்கும்.
The heavens guard the king.
284. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.
To the eye of the timid every thing obscure is a demon.
285. அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.
A file will cut a file, diamonds cut diamonds.
286. அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.
An Aiyampettah pony is preferable to an Arab steed.
287. அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
If a mungoose see a snake will it let it escape?
288. அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.
The distinction of big and little does not apply to snakes.
289. அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.
Not an atom will move without the permission of God.
290, அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.
Should the favour of God fail, every one will come to nought.
291. அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.
If I say Ari, Ari, he cries Rama, Rama.
292. அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.
If one understand the import of the word Ari, he may exercise regal power.
293. அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?
294. அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக்
கோபம்.
If one says Ari the Saiva mendicant is angry, if one says Ara the Vaishnava mendicant is angry.
295. அரிசி அள்ளின காக்காய்போல.
Like a crow that has taken np rice.
296. அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
Though there be only one álak of rice, three supporting points in the hearth are required.
Alak - a small measure of capacity.
297. அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால்
மச்சானும் உண்டு.
If there be rice there will be order—honour also, if a sister exist a brother-in-law may.
298. அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.
Though there be only one ulak of rice, three supporting points in the hearth are required.
An ulak is two alaks or the fourth of a measure.
299. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப்பார்ப்பாரும் இல்லை.
No one takes up rice to examine it, nor does any one blow upon chaff.
300. அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?
Seeing you have to pay for the rice you eat why go to the house of your elder sister?
301. அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்.
Water in a pot proportioned to the rice, and a display of authority in a husband suited to his condition.
302. அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா ?
Does hatred against rice or a husband exist?
303. அரிசிப் பொதியுடன் திருவாரூர்.
Tiruvaroor with a bag of rice.
Spoken of a double benefit--the grain is valuable, and a visit to a sacred place is auspicious.
304. அரிசி மறந்த உலைக்கு உப்பு என்ன?
Of what use is salt in a pot of boiling water without rice ?
305. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
His house is next to Harischandra's.
Used ironically of a notorious liar. Harischandra, a king famed for veracity.
306. அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.
It is difficult indeed to comprehend the purport of the five letter,
The famous fire lettered incantation called the மூலமந்திரம் asbeing the foundation of all spiritual wisdom and all religion, and the means prescribed and proper forobtaining emancipation from births and all the evils thereunto belonging, and union with the supreme.
307. அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா ?
Is tax levied op dry twigs scraped together for fuel ?
308. அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.
The precious body is a stone thrown into the air.
309. அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான்.
Having performed difficult things he wanders about alarmed at that which is easy.
310. அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண்.
Vishnu and Siva are one; let sand be put into the mouth of him who denies it.
311. அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.
The sickle must be moved, and the landlord's family must be ruined.
312. அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
Is it attempted to remove the heat of a burning fever as if it were that of a sickle ?
313. அரிவாள் சுறுக்கே அரிவாள்முனை கருக்கே.
Was it the dexterity of the reaper, or the sharpness of the sickle.
Success in an enterprise is mainly owing to the means employed.
314. அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.
He who listens to the words of a woman will be accounted worthless.
315. அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.
Although the fruit of the wood-apple tree (Feronia elephantum) close by ripens, bats will not approach it.
316. அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றாவாம்.
The haughty dame is said to have brought forth a monkey child.
317. அருக்காணி முத்துக் கரிக்கோலமானாள்.
She who was a precious pearl has become black as coal.
318. அருக்காமணியா முருக்கம் பூவா?
Is it a rare gem or a Murukkam flower?
319. அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.
Through severe drought every blade has perished.
320. அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை .
Divine favour is common to all, material wealth is not.
321. அருணாம்பரமே கருணாம்பரம்.
A cloth tinged red indicates the divine favour.
Refers to the dress of religious mendicants.
322. அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?
What matters it whether he who has no discrimination rules or dies ?
323. அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.
If it must be so, let the head of my son-in-law go; but the old
mortar must not go.
Said of things which long possession has made peculiarly precious.
324. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது.
Even a buffalo will not abide in a house where it is not regarded.
325. அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.
The drinking of water from a hill reservoir will at once produce disease.
326. அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும்.
Kindness, wealth and self-restraint are essentials.
327. அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் கிடையாது.
Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.
323. அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
The honour that has been forfeited for half a cash, will not return though one give thousands.
329. அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.
Though sandal wood bé rubbed, its fragrance will not be destroyed.
330. அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.
The water in a pot half full wabbles, if full it wabbles not.
331. அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்தது போல.
As one leaped over an Erukku leaf, Calotropis gigantea, under which he hadconcealed half a challi.
A cballi is a small copper coin, a fractional part of a larger coin.
332. அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
Is the hand to be complimented for tying the waist-cloth?
333. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமோ?
Can one go before an assembly with half a word?
334. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச் சொல்லாகும்.
Half a word admitted into the assembly becomes a whole word.
335. அரைத்த பயறு முளைத்தாற்போல.
As if macerated gram should sprout.
336. அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி.
After grinding the stone remains; after shaving the head, the kudumi (tuft of hair) remains.
A tuft of hair left on the head of a boy or man with a knot at the
end. It is considered becoming ; and is usually about a foot in length.
337. அரைப்பணம் கொடுத்து அழச் சொல்லி ஒருபணம் கொடுத்து ஓயச்சொல்லுவானேன்?
Having given half a fanam to weep, why give a fanam to cease ?
Fanam - a small coin of gold or silver.
338. அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
Though the service bring half a fanam, will it be equal to service in the king's house?
339. அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை.
A story of one who gave fifty gold pieces for a compound medicine after having hesitated to give half a fanam.
340. அரையிற் புண்ணும் அண்டை வீட்டுக் கடனும் ஆகாது.
Sores about the waist, and debt to one's neighbour are both bad.
341. அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழு வித்தை ஆகுமா?
If one goes before an assembly with half learning will it become perfect?
342. அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்துமச்சானிடத்திற் போட்டாளாம்.
When he went to his elder sister's wearied and exhausted, it is said that she sent him to his brother-in-law.
343 அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது ?
When will the waves be still, when will he wash his head ?
344. அலை மோதும் போதே தலை முழுகுகிறது.
Bathing in the midst of beating waves.
Said of attempting to do a thing under adverse circumstances.
345. அலைவாய்த் துரும்புபோல.
Like a straw on a wave.
346. அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல.
Showing his teeth like a jackal of the ginger fields.
Said of one who shows signs of disappointment,
347. அல்லவை தேய அறம் பெருகும்.
As vice wanes, virtue waxes.
348. அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.
The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.)
349. அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
A bed free from anxiety is the most agreeable of all things.
350. அல்லல் அருளாள்வார்க்கில்லை.
The kind-hearted are free from sorrow.
351. அல்லல் ஒரு காலம் செல்வம் ஒருகாலம்.
A time for adversity, and a time for prosperity.
352. அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
Pour toddy into the mouth of the wicked.
Add fuel to the file.
353. அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.
Ill-gotten wealth and illicit pleasure are both bad.
354. அல்லும் பகலும் அழுக்கறக் கல்.
Study day and night to be free from impurity.
355. அவகடம் உள்ளவன் அருமை அறியான்.
A wily man does not know the value (of friendship)
356. அவகுணக்காரன் ஆகாசமாவான்.
The vicious will evaporate into thin air.
357. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
The hasty are deficient in sense.
358. அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.
For hasty ornamentation I take up and sprinkle.
359. அவசரத்தில் உபசாரமா?
Is ceremonious behaviour demanded when one is in a hurry ?
360. அவசரத்திற்குப் பாவம் இல்லை.
A thing done in an emergency is not criminal.
361. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.
When in haste the hand will not enter even into a large chatty.
362. அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.
She is inclined to play the harlot, and is afraid that her husband will beat her.
363. அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.
The mouth of the harlot is large, and the bubbling of five or six grains of rice when boiling is excessive.
361. அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை.
The harlot has no oath, the thief has no god.
Spoken of one wholly derelict.
365. அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.
If one plays the harlot fortune is wanted, and when one goes to steal ability is needed.
366. அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?
As an abandoned woman one may ride on an elephant, but can one go along a street as a thief?
367. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
Chicanery ends in one's ruin.
368. அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.
God himself is the help of a family in extremities.
369. அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.
The worthless and the cheat have no need of land.
370. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
Time is better spent in austerities than in vanity.
371. அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.
Having acted reproachfully he speaks flatteringly.
372. அவரா சுறுக்கே அரிவாள்மணை கருக்கே.
He is surely as sharp as the edge of a sickle.
Spoken ironically of a man of vain pretensions.
373. அவருடைய சிறகு முறிந்து போயிற்று.
His wing is broken.
374. அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.
Each one's mind is the witness that acquits or condemns.
375. அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.
The supreme Ruler knows the purposes of every one.
376. அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.
The circular curls of an ugly horse are not examined.
377. அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
He who leads a useless life will die a miserable death.
378. அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.
As if one beat an empty mortar thinking it contained unhusked: steeped rice.
Spoken of absence of mind.
379. அவள் பாடுகிறது குயில் கூவுகிறது போல் இருக்கிறது.
Her singing is like the voice of the kuyil (an Indian cuckoo.)
380. அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.
Her best cooking-pot was broken in the middle of the road.
381. அவனுக்கு இவன் எழுந்திருந்து உண்பான்.
This person will rise and eat before him.
382. அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.
He has neither a cloth nor a knife.
Said of ope utterly destitute.
383. அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
That which is in his keeping is my livelihood.
384. அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
He is now under the auspicious influence of the planet Venus.
Spoken of one who is the favourite of fortune.
385. அவனுக்கும் இவனுக்கும் எருமைச்சங்காத்தம்.
The intimacy or friendship of these two persons is that of the buffalo.
386. அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும்.
His speech consists of quarters and halves of words.
Undecisive.
387. அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்தது போல் இருக்கிறது.
His prosperity is scattered like crabs from a broken vessel.
388. அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது.
It is better to cry Siva, Siva, than opprobriously to reproach others.
389. அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
He has authority both to behead and to release.
390. அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.
Having fished out his secrets by cunning he turned him upside down as a turtle is turned.
391. அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது.
He cannot equal him though he raise himself to the top of a ladder.
Said of one who is far inferior to another either socially or intellectually.
392. அவன் நா அசைய நாடு அசையும்.
When his tongue moves the country moves.
393. அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார் , அவன் அருள் உற்றால்அனைவரும் உற்றார்.
Without his favour all are destitute, if he favour, all are prosperous.
Said of God's grace and displeasure.
394. அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
He is a cold firebrand.
Said of a person really dangerous though apparently not so.
395. அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.
Even the grass under his footsteps will not die.
Used when speaking of one remarkable for gentle habits.
396. அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.
The place whereon he treads bursts into flames.
Spoken of the reckless and violent.
397. அவன் மெத்த அத்துமிஞ்சின பேச்சுக்காரன்.
His words exceed all bounds.
Said of one who delights in abusing others.
398. அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
The work that was indicated by the foot he will perform by the hand.
399. அவன் சாதி எந்தப் புத்தி குலம் எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
The devices of his caste and habits of his tribe will predominate.
400. அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
That which he tied with his foot cannot be loosened by the hand.
Spoken of one of superior skill.
401. அவன் அசையாது அணுவும் அசையாது.
Unless he move not an atom will move.
402. அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.
Every man's purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler.
403. அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
He is sharpening a knife for another's throat.
404. அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.
His mind is full of sores, his body is covered with blister.
405. அவன் எனக்கு அட்டமத்துச் சனி.
To me he is Saturn in the eighth sign.
The most malignant of enemies.
406. அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
He seeks friendship and prays for a skin.
407. அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்?
What can his teacher do if he ruin himself?
408. அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
What he has scored with his feet I efface with my tongue.
409அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?
Do you consider him as a green-herb nipped off?
410. அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.
He took another's hand and struck his eyes.
411. அவன் சிறகில்லாப் பறவை.
He is a bird without wings.
412. அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
He is preparing to cook my head.
413. அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.
Every one is responsible for his own actions.
414. அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.
He aims to scatter me to the winds.
415. அவன் எரிபொரியென்று விழுகிறான்.
He breaks out saying burn him, fry him.
Said of one who suddenly bursts into a rage.
416. அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.
Having run and sung, he at length sank like the pulse.
417. அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.
He is the man who encountered and fought the champion.
418. அவன் கொஞ்சப்புள்ளியா?
Is he a man of limited wealth ?
Spoken of a slovenly miser.
419. அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?
Can fire be kindled in mid-air ?
No, except by the Almighty "who holds the lightning in his hand and tells it whom to strike."
420. அவித்த பயறு முளைத்த கதை போல.
Like the story of the germination of boiled peas.
421. அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.
Better is the hatred of the wise than the friendship of fools.
422. அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.
What can rice do? it can work the five senses, what can wealth do ? it can subdue the world.
423. அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.
One who belongs to this convention and to that convention.
424. அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.
If I had so much should I not arrange my chatties earthen cooking vessels and prosper.
Spoken regretfully of succour which ought to be and is not afforded.
425. அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.
In beauty equal to natural coral, at home a cow-dung basket.
426. அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா?
Are there any who cut the nose for the sake of beauty?
427. அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.
Beauty will sit and weep, fortune will sit and eat.
428. அழகுப் பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.
O beautiful maid, frail kite, the comedian calls you.
Spoken of a female whoso demeanour is inconsistent with modesty.
429. அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.
A jewel worn as an ornament may aid in adversity.
Gold ornaments are often given as security for money borrowed to trade with, as well as to serve in pressing emergencies.
430. அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.
They who advise weeping are one's friends, those who advise laughing are strangers.
Spoken with reference to the character of advisers.
431 அழச்சொல்லுகிறவன் பிழைக்கச் சொல்லுவான், சிரிக்கச் சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்.
He who counsels us to weep does so to favour life; he who counsels mirth seeks our ruin.
432. அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.
God dements him who is to be destroyed.
433. அழிந்தவள் ஆரோடு போனால் என்ன?
What matters it with whom an abandoned woman goes ?
434. அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?
What matters it whether a horse or an ass grazes in a garden that lies waste ?
435. அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
One who seeks to maintain an unjust claim and a king who extenuates crime.
Both are injurious to society.
436. அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர்.
Weeping hypocrites, canting sycophants and religious formalists.
437அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
A weeping man and a smiling woman are not to be trusted.
438. அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.
Though one may abide in a house of mourning, it is not possible to remain in one that is leaky.
439. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறது போல.
Like showing a ripe plantain to a crying child.
A premium on naughtiness.
440. அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
He tickles when one is weeping.
Spoken of something that is obtruded at an inconvenient time.
441. அழுகிறதற்கு அரைப் பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
Having given half a fanam for weeping, give a fanam to cease.
442. அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடா?
Are grief and self-will things to be made sport of ?
443. அழுக்குச் சீலைக்குள்ளே மாணிக்கம்.
A ruby in a dirty rag.
444, அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.
Dirt will remove dirt, reproach will overcome reproach.
445. அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.
Though cleaned and placed on ope's knee, the mean disposition of a slave or low person will not leave him.
446 அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
A weeping eye and a running nose.
447. அழுதவனுக்கு அகங்காரமில்லை.
He who is weeping has no pride.
448. அழுதபிள்ளை பால்குடிக்கும்.
A crying child obtains milk.
449. அழுத பிள்ளை உரம் பெறும்.
The weeping child will gain strength.
450. அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
Although she may weep, she herself must bare the child.
451. அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.
The hard-hearted will be of use to none, the tender hearted will be of use to all.
452. அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.
A corpse unwept and a funeral pyre unquenched.
An affair or person forsaken by all.
453. அழுவார் அழுவார் தம் தம் துக்கமே திருவன் பெண்டீருக்கு அழுவாரில்லை.
All weep on account of their own griefs, pone un account of Tiruvan's wife.
Spoken of feigned sympathy and also of that outward expression of sorrow which is occasioned by surrounding circumstances.
454. அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.
The mother of a bride or bridegroom will not visit their new relations unless invited.
455. அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.
There are firewood carriers even in Alagapuri, (the city of Kuvera.)
Kuvera a wealthy king; now regent of the North and the guardian of riches.
456. அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.
Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.
457. அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.
Though as wealthy as Kuvera you must keep your expenses within due bounds.
458. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
Does the measure know the price of grain ?
459. அளந்த நாழிகொண்டு அளப்பான்.
He will measure in the accustomed measure.
460. அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.
When measured it is not a span long, when chopped up it does not fill a chatti.
461. அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.
By repeated measurement articles will be diminished.
Constant use wears out a thing.
462. அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.
The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank.
463. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
If in excess even nectar is poison.
464. அள்ளாது குறையாது சொல்லாது பிறவா து.
That of which no part is taken out will not lessen, that which is not uttered will not get out.
465. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்துக் கொடுத்தால் கடன்.
If taken up and given in handsful it is free, if measured out it is charged for.
466. அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது.
Whilst teeming milk already laded, the quantity is given.
467. அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும். One cannot afford to live with a plunderer though he might live with a pilferer.
468. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.
It is said that a dog imagines every thing taken up by the hand is intended for himself.
469. அறக்காத்தான் பெண்டிழந்தான் அறுகாதவழி சுமந்து அழுதான்.
An over-suspicious man lost his wife and carried her sixty miles, weeping.
Some mischievous persons having concealed her in a box employed him to carry it to the sea-shore.
470. அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.
She will over-boil the rice; or she will boil it imperfectly.
471. அறக்கூர்மை மழு மொட்டை.
Excessive sharpness is perfect bluntness.
472. அறச்செட்டு முழு நஷ்டம்.
Hard dealing ends in loss.
473. அறணை அலகு திறவாது.
The streaked lizard opens not its mouth.
474. அறணை கடித்தால் மரணம்.
If a streaked lizard bite, death ensues.
475. அறத்தால் வருவதே இன்பம்.
That is happiness which springs from virtue.
476. அறநனைந்தவருக்குக் கூதல் என்ன ?
No cold to them that are completely wet.
477. அறப்பேசி உறவாட வேண்டும்.
On a full understanding of the party admit to friendship.
478. அறப்படித்தவர் அங்காடி போனால் விற்கவுமாட்டார் கொள்ளவும் மாட்டார்.
When the hypercritical go to market they neither buy norsell.
479. அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.
One highly learned fell into a pot of gruel.
480. அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.
The story of a scrupulousy chaste wife who addressed her husband as Appa, father.
481. அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல்.
As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan.
482. அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.
When twisted to excess, fibres snap.
483. அறமுறுக்கினால் அற்றுப்போகும்.
If over-twisted it will snap.
484. அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.
When excessively twisted, strands break.
485. அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.
Virtue, wealth and pleasure are not common to all.
486. அறவடித்த முன் சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல.
As when being thoroughly strained the uppermost portion of the boiled rice fell into the refuse-pan.
487. அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு.
(Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.
488. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்.
It is the merit of the wise to gain knowledge by meditation.
489. அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.
When I went to a master whom I knew, to pay my respects, he said, your father owes tan fanams, give it me.
490. அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?
A known brahman is a friend ; are there only three pancakes for six cash?
Said of taking advantage of previous acquaintance in a bargain.
491. அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.
Knowingly and unknowingly I have been ruined; scratching has caused sores.
492.அறிந்தவனென்று கும்பிட அடிமை வழக்கிட்ட கதை.
The story of one who claimed as his slave the man who had paid his respects to him because he was an acquaintance.
493. அறிய அறியக் கெடுவார் உண்டா ?
Do any become vicious by increasing knowledge ?
494.அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.
All the days before the age of discretion are as the days before birth.
495. அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
Have I grown my beard not knowing that it would fall into the hands of the barber ?
Said with reference to the loss of a cherished object.
496. அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல.
Like the idea of an innocent child.
497. அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.
Do not ask advice of the ignorant.
498. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
Though fools are told a thousand times the thing is useless.
499. அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார்.
Who possesses information? Those who have examined a thing thoroughly.
500. அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்திலும் தாழ்வுபடுவான்.
An ignorant man is despised even by women.
501. அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
So to sleep as to be incapable of feeling is an impossibility.
502: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.
He that increaseth knowledge increasethsorrow.
503. அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.
The ignorant are not manly.
504. அறிவு புறம்போய உலண்டது போல.
As a chrysalis destitute of intelligence.
505. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
Wisdom is regulated by knowledge, good conduct by love.
506. அறிவு மனதை அரிக்கும்.
Conscious guilt will fret the heart.
507. அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.
Amouth that instructs and a tongue uttering words of love.
Spoken of one characterized by wisdom and love.
508. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
Even a king will approve of wise men.
509. அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
To obtain the favour of the wise is enough.
510. அறிவேன் அறிவேன் ஆலிலை புளியிலை போல் இருக்கும்.
I know, I know (i. e., I know it well) the leaf of the banyan tree is like that of the tamarind tree.
511. அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.
Fifty-eight sickles on the hip of one that cannot reap.
Used in contempt of mere show and parade.
512. அறுதலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை.
The son of a widow has evil gestures throughout his body.
Said of persons irreclaimably and naturally vicious.
513. அறுத்த கோழி துடிக்குமாப்போல.
Fluttering as a fowl with its throat cut.
514. அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை.
The story of a widow who gave birth to a son.
515. அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
Seventy rags for sixty days.
516. அறுபத்து நாலு அடிக் கம்பத்தின் மேல் ஆடினாலும், கீழே வந்து தியாகம் வாங்கவேண்டும்.
Although one may balance himself on a pole sixty-four feet high, he has to descend to receive gifts.
517. அறுபத்தெட்டுக் கோரம்பலம்.
Sixty-eight tricks.
Said of the various impediments which one meets with in carrying out a scheme.
518. அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.
In harvest time even a rat has five wives.
519. அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்குக் கொதி பெரிது.
The mouth of the rice-pot being enlarged by fracture, the rice must be boiled the longer.
520. அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்?
One must appear in the assembly, must he not, after having practised privately?
521. அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்.
One who leads private persons into a place of justice and perverts judgment.
522. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
The least unlawful desire destroys a myriad acts of austerity.
523. அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
Is beauty (self-respect) to be forfeited for a mere trifle ?
524. அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்.
Although the broom is inferior it will lay the dust in the house.
525. அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.
The friendship of the mean will issue in fatal results.
526. அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.
The friendship of the base is dangerous.
527. அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிப்பான்.
If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.
528. அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.
When a mean person acquires wealth he knows not how to take care of it.
529. அற்றத்துக்கு உற்ற தாய்.
Fitted to the opportunity.
530. அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள் அடக்கம்.
Three kinds of weather, hot, cold and temperate are included in the six seasons.
A year is divided into six seasons of two months each, beginning with August. The names of the seasons are 1. கார்,cloudy. 2 கூதிர், cold. 3. முன் பனி, evening dew. 4. பின் பனி, morning dew. 5. இள வேனில், mild heat. 6. முதுவேனில், very hot.
531. அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.
Even a common medicine may prove effectual after a disease has passed the crisis.
532. அன்பற்ற மாமியாருக்குக் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.
The touch whether of the foot or the hand is an offence to one's unkind
mother-in-law.
533. அன்பற்ற மாமியாருக்குக் கும்பிடும் குற்றந்தான்.
Even obeisance is an offence to an unloving mother-in-law.
534. அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.
Don't enter the portal of the uncharitable.
535. அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.
Know a loving friend in adversity.
536. அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.
They who are destitute of love are void of influence.
537. அன்புள்ள குணம் அலையில்லா நதி.
A loving disposition is a river without a ripple.
538. அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்.
Where love reigns the impossible may be attained.
539. அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.
The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband.
540. அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.
Love is all-important, and it is it's own reward.
541. அன்ற்ற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது.
A single cash saved is greater than thousands of gold spent as soon as acquired.
542. அன்றிறுக்கலாம் நின்றிருக்கலாகாது.
Pay at once, delay is bad.
543. அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை.
The body we then saw has suffered no decay.
The word மேனிis also used for beauty, freshness.
544. அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லைப் பொத்தல்.
There was no stitching then, nor is there any hole now.
545. அன்று கொள் , நின்றுகொள், என்றும் கொள்ளாதே.
Buy when you require, be slow to make purchases, do not make daily purchases.
546. அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா ?
Will the boiled rice eaten then suffice for six months ?
547. அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துப் பசியை அறுக்கும்.
The food which was then eaten will keep one free from hunger for six months.
548. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
Will he who wrote then, erase and write again?
Referring to the changeless preordination of God.
549. அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைத்த அரைக்காசு பெரிது.
The half cash obtained to-day is greater than thousands of gold to be got hereafter.
550. அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட இன்றைக்குத் தின்கிறகளாக்காய் பெரிது.
The Kala fruit, carissa diffusa, of to-day is better than the jack fruit of the future.
551. அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.
A handful of boiled rice has become as precious as a handful of sugar.
552. அன்ன மயம் பிராண மயம்.
The property of food is the support of life.
The supporting, nourishing quality of grain is its special property, without which, as life is now conditioned, it cannot exist.
553. அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை.
There is no physical virtue in aught but food.
The same as the preceding.
554. அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.
The glutton and the sloven are alike worthless.
555. அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
May we break through the wall of the house of those who fed us?
556. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
When food fails, the five senses fail.
Referring to the exercise of the senses as dependent on the health of the body and its dependence on food.
557. அன்ன நடை நடக்கப் போய்த் தன் நடையும் கெட்டாற்போல.
As in attempting to walk like a swan, the crow lost even its natural gait.
558. அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு.
When food or grain is scarce, all is scarce.
559. அன்னப்பாலுக்குச் சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறாள்.
She who was wandering about for rice water, is seeking sugar to mix in cow's milk.
560. அன்னதானத்திற்குச் சரி என்ன தானம் இருக்கிறது?
What gift is there that equals the gift of food ?
561. அன்னிய மாதர் அவதிக்கு உதவார்.
Strange women will not avail in adversity.
562. அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்?
Whom will he help that does not help his mother?
563. அஸ்த செம்மானம் அடைமழைக்கு லக்ஷணம்.
A crimson sunset betokens abiding rain.
564. அஸ்திமசகாந்தரம் என்றது போல் இருக்கிறது.
The difference is as great as that between an elephant and a mosquito.
565. ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.
A scoffer will be destroyed.
566. ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்னசெய்யும்?
If a child be born at an inauspicious time what evil will it occasion to a neighbour ?
567. ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
In a false almanac, the sixty hours are to be rejected.
In astrological calculations a time of three and three quarters to four Indian hours (நாழி - 24 minutes) for the asterism that rules the day is considered unlucky: it is called தியாச்சியம் rejected. An imperfect or uncertain formula should be wholly rejected.
568. ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும்.
The family of the wicked must be destroyed by associating with it.
569. ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.
If about to undertake a difficult work do so after due inquiry.
570. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?
Is a brahmanicide a suitable witness for an abandoned wretch ?
571. ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.
Like pointing out the middle of the sky. An impossibility.
572. ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?
Can a hawk carry away the sky?
573. ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறான் குரு.
The spiritual guide observed, I will teach you how to fly through the air, take me up and convey me to the other side of the river.
574. ஆகாய வல்லிடி அதிர இடிக்கும்.
A powerful thunder-clap will occasion tremor.
575. ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா?
Will white ants destroy an iron pillar that reaches to the clouds ?
The proverb was used by Sita when speaking to Ravana.
576. ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா?
Is there not sufficient space for one to go and look at the sky ?
577. ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?
Can the air be bit so as to leave a mark ?
578. ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.
The sky brought forth, the earth supported.
579. ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
If favoured by fortune medicine will take effect in due time.
580. ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
In times of prosperity, even a slave woman may bring forth a
female child.
581.ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும்.
A sound fruit may be known when it begins to set.
582. ஆகுங்காலம் ஆகும், போகுங்காலம் போகும்.
In auspicious times it succeeds, in inauspicious times it fails.
583. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?
Will he who waited till it was cooked, not wait till it cools?
584. ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.
Should I cook I shall spoil the rice, either by under or over doing it.
585. ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.
Rule will last but half an hour where discipline and authority do not exist.
586. ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தால் குந்தாணி பாழ்.
If the cook be weary, the hearth will be useless ; if she who pounds the rice be weary the mortar will be useless.
587. ஆங்காரிகளுக்கு அதிகாரி.
The chief of the proud.
588. ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.
She exclaims Sangara, Sangara at death having through life been given up to lewd behaviour.
589. ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.
All the deities that were venerated have entirely perished.
590. ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேன்.
By being associated with the base and by speaking hypocritically I have forfeited my dwelling-place.
591. ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
The virtuous are not affected by blessing and cursing.
592. ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.
His mind is fixed upon her, his body is on the mat.
593. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
Sixty days of excessive desire, thirty of enjoyment; when the ninety are over, the remaining time is as useless as a worn-out broom.
594. ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.
If evil desire spring not sorrow will not approach.
595. ஆசை உண்டானால் பூசை உண்டு.
If there be heartfelt love, there will be deferential regard.
Spoken of a devoted wife who has a cruel husband.
596. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
As long as desire continues, there will be anxiety also.
597. ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை.
Persons of inordinate desire have no shame.
598. ஆசைக்கு அளவில்லை.
Desire has no limits.
599. ஆசை சொல்லி மோசம் செய்கிறதா?
Is it to deceive after using enticing words ?
600. ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது?
What remedy is there for love-sickness ?
601. ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
As desire increases, anxiety increases.
602, ஆசை பெரிதோ , மலை பெரிதோ?
Which is greater, (human) desire or a mountain?
603. ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.
What was desired is now disgusting.
604. ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே.
She beat him with the winnowing fan to banish all his desires.
605. ஆசை வெட்கம் அறியாது.
Desire knows not shame.
606. ஆசை வைத்தால் நாசம்.
Cherished desire ends in ruin.
607. ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.
O mother, mother, do not speak so much.
ஆச்சி in 3 Provincialism for ஆயி.
608. ஆடப் பாடத் தெரியாது இரண்டு பங்கு உண்டு.
Neither able to sing nor dance, but he has two shares.
609. ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.
The temple girl who could not dance said that the hall was not large enough.
610. ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா?
Is it to look at the drama after having encouraged a profligate course?
Spoken ironically.
611. ஆடா ஜாதி கூடாஜாதியா?
Are those unfit for the drama unfit for every thing.
612 ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.
All is done and the avarai fruit is cut ?
Indicating decayed circumstances.
613. ஆடி அறவெட்டை அகவிலை நெல்விலை.
July harvest having failed, the price of dry grain is that of paddy.
614. ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.
The comedy began and ended in an hour.
615. ஆடி ஓய்ந்த பம்பரம்.
A top that spins no longer.
616. ஆடிக் கரு அழிந்தால் மழை குறைந்து போம்.
If the embryo clouds of July fail rain will be scant.
617. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்.
A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.
Treatment to be regulated by circumstances.
618. ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.
As dry leaves falling in the winds of July.
619. ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?
Is there any way of escape for a leaf-plate before the wind of July?
620. ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்தது போல்.
Like silk-cotton scattered by the wind of July.
621. ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.
Seek, seize her by the hair, and slipper a mother-in-law who does not invite you in July.
The parents of a newly married woman separate her from her husband, that she may be under their care during the first year of marriage, in the month of July. This is necessary to prevent conception in that month and delivery in the following April. The birth of a first child in April if a son is believed to bring ruin upon a family.
622. ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.
They say that the cuff was given in July, and the pain felt in August.
623. ஆடிய காலும் பாடிய மிடறும்.
A dancing foot and a singing throat.
624. ஆடி விதை தேடிப்போடு.
Provide seed-corn and sow in July.
625. ஆடு இருக்க இடையனை விழுங்குமா?
While there are sheep will it (the tiger or wolf) swallow the shepherd.
626. ஆடு எடுத்த கள்ளனைப் போலே விழிக்கிறான்.
He stares like a thief who has stolen a sheep.
627. ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.
The shepherd is trembling aloft fearing the sheep may bite him.
628. ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.
The price of the sheep is a quarter of a fanam that of its tail three fourths of a fanam.
629. ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.
Not even hair is found where sheep were penned.
630. ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
A place where sheep were penned and a place once occupied by an Agambadyan are profitless.
631. ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.
Not a leaf will be found where the sheep lay.
632. ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
The fattening of the sheep is an advantage to the shepherd.
633. ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான். He that has bought a sheep will wander about; he that has boughtfowls will go about crying them for sale.
634. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
Will the shepherd who refused to give a sheep give a cow ?
635. ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?
Will a sheep lead itself when the shepherd is absent.
636. ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.
Though he may fall headlong when dancing, he will not thereby
meet with greater success.
637. ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான். If one should fall headlong when he ought to be active, he will be so impoverished as to possess only broken pots and an alms-dish.
Indolence in youth leads to poverty in old age.
638. ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச்சமூலமும் ஆகும் என்கிறார்.
If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.
639. ஆடு தழை தின்பதுபோலே.
Like a goat cropping leaves.
640. ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.
It is said that the wolf wept because the sheep were wet.
641. ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
Will the pen be put up where the sheep may wish ?
642. ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான்.
If the sheep should recover, he will not give even a hair.
Said where benefits are not requited.
643. ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.
The dam at home, the lamb in the jungle.
644. ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
He who is naked is but half a man.
Self-respect essential.
645. ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
If the cream be consumed, can butter be obtained ?
646. ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.
The lapwing will by it’s cries betray whether he who approaches be the owner or a thief.
647. ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடிபிடித்துப் போகிறவன் கெ ட்டிக்காரனோ?
Which is the cleverer, the thief that goes out to steal taking care that the lapwing does not see him, or he that follows the track of that thief ?
648. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்.
A stupid servant to a shepherd.
649. ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பால் இல்லை .
Possessed of sheep by the thousand, of cattle by the thousand, he has not a spoonful of milk at home.
650. ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.
The tail of the sheep is proportioned to its size.
651. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு.
Sheep and oxen have two horns, an Aiyampidari has three.
652. ஆட்டுக்குத் தோற்குமா கிழப்பு?
Can an old tiger be overcome by a sheep?
653. ஆட்டுக்கும் மாட்டுக்குமுறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா?
Are relationships observed among, sheep. and oxen? have woods and uncultivated tracts any line of demarkation?
654. ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.
As the wolf entered the sheepfold.
655. ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.
The fate of the lamb is that of its dam.
656. ஆட்டுத்தலைக்கு வண்ணான் பறக்கிறது போல.
As the washerman flies at the sheep's head.
657. ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
The butter the sheep yields is not enough (to stew) the marrow with.
658. ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.
He causes them to dance and beats the drum.
659. ஆட்டுக் குட்டி மேல் ஆயிரம் பொன்னா?
What, thousands of gold for a young sheep?
660. ஆட்டுக்குட்டிக்கு ஆனையைக் காவுகொடு.
Sacrifice an elephant for the sake of a kid.
661. ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.
The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder.
662 ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.
He aims to catch the leopard by exposing the sheep.
663. ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது.
It is better to build a house and set fireto it, than to buy sheep and place them under the care of others.
664. ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?
Have you no desire to see us at least once a year ?
665. ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
Broth and curry ought to be prepared with all their ingredients.
666. ஆணவத்தால் அழியாதே.
Do not destroy yourself by pride.
667.ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை. Standard gold,and a woman at one with her mother-in-law are rare.
668. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.
Although one may injurer a man; a woman may not be injuriously treated.
669.ஆணை அடித்து வளர், பெண்ணைப் போற்றி வளர்.
Train a boy strictly, but a girl kindly.
670. ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப்போட்டுத் தாண்டு. Neither swearing nor oathsare required, put down the cloth and stride over it.
671. ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree.
672. ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?
Do you give to mendicants, or to the hard shell of the bottle-gourd ?
673. ஆண்டார் இருக்குமட்டும் ஆட்டும் கூத்தும்.
While the head of a family lives, prosperity may be enjoyed.
674. ஆண்டிகள் கூடி மடம் கட்டினாற்போல.
Like mendicants combining to build a choultry.
675. ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.
The mendicant lies in the choultry and his bag in the street.
676. ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.
When told to give rice to the Saiva mendicant, he says give it to the Vaishnava mendicant.
677. ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.
To the religious mendicant a word, to the brahman not even that.
678. ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் அவம்.
The five children borne by the mendicant's wife are all weakling.
679. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்
When the son of a mendicant assumes a mendicant's profession, he will blow his conch at the proper time.
680. ஆண்டியை அடித்தானாம் குடுவையை உடைத்தானாம்.
It is said that he beat the mendicants and broke his alms-dish.
681.ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.
The Saivite and the Vaishnavite mendicants are sa a water-pot and its cord.
United or separate.
682. ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால்
ரங்கன் என்கிறான்.
When he meets a Saiva mendicant be is a Lingan, and when he meets a Vaishnava mendicant he is a Rangan.
683. ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.
When two mendicants embrace each other, the ashes of the one cleave to the other.
684. ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.
Though he assumed the guise of a mendicant, his troubles did not cease.
685. ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
If a mendicant be struck on his posteriors, ashes fly.
686. ஆண்டு மாறின் காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
Kar rice a year old, and newly reaped Samba (superior rice) are rare to the eye of a cultivator.
687. ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
If the year withhold her increase, even tho menial servants willneglect to do obeisance.
688. ஆண்டைமேற் கோபம் கடாவின் மேல் ஆறினான்.
He wreaked his anger against his master on the male buffalo.
689. ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.
A thousand men may live together in harmony, whereas two women are unable to do so although they be sisters.
690. ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின் மேற் குறை சொல்லுவான்.
The coward blames his weapon.
691. ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.
A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.
692. ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?
Will a chetty (a merchant,) take his departure by a river without gain ?
693. ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
Will a chetty dam up a river and drain out its waters for nothing?
694. ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
Is a man possessed of landed property without a legal instrument?
695. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
The over-hasty is wanting in sense.
696. ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
Will the over-hasty be nice about family pedigrees ?
697. ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.
The hasty is gratified at the instant.
698. ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
While his mother is in extremity, her grown up son is crying for butter-milk.
699. ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.
Ho who possesses no property is but half a man.
700. ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
A man of wealth is the slave of his possessions.
701. ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.
The wealthy are not exposed to immediate ruin.
702. ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.
The owl is small, its screech is loud.
703. ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
He who helps another in his misfortune becomes his master.
704. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
Prosperity and adversity are common to all.
705. ஆபத்துக்குப் பாவம் இல்லை.
A thing done through necessity is no crime.
706. ஆபத்துக்கு உதவினவனே பந்து.
He is a friend who aids in adversity.
707. ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.
The condition of one's elder sister may be ascertained by attending her wedding.
708. ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.
As the monkey perished by drawing out a wedge.
709. ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
If castor seed (palma christi) be sown will achcha (ebony) spring up?
710. ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?
Are the nuts of the castor plant pearls ?
711. ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?
Will he sow Castor and cotton seeds in close proximity ?
712. ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.
The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.
Said of two things or persons not found together.
713. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.
They will catch the turtle, they will turn it on its back, for me to say so would be a crime. Indicating that it is more dangerous to speak of the crime of another than to commit it.
714. ஆமுடையானைக் கொன்ற அற நீலி.
A most abandoned woman who murdered her own husband.
715. ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.
The woman became wise after the death of her husband.
716. ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.
A blear-eyed man became the husband of a woman who had beencrying for one.
717. ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளேன்று அழுகிறேன்.I do not weep because my husband has beaten me, but because my rival will laugh at me.
718. ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டை வீட்டுக் காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.
When in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.
719. ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான். The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.
720. ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
No matter what the circumambulation of a husband may be, he entershis house by the door.
721. ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா?
True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?
722. ஆமுடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?
It is while she has a husband, is it not, that a woman, should play the harlot?
723. ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன் ?
Of what use is the favor of a midwife to her who has lost her husband?
724. ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.
If your husband be a powerful man, you may ascend the dunghill to fight.
725. ஆமை திடரில் ஏறினாற்போல.
As if a tortoise or turtle crept up a hillock.
726. ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.
It is said that when the hare went with the tortoise to lay eggs it strained its eyes out and died.
727. ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.
It is not difficult for one to win who understands the tricks of dice.
728. ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
The brahmanicide is the witness of the custom officer.
729. ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.
The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five.
730. ஆயத்திலும் நியாயம் வேண்டும்.
Even in gain justice is required.
731. ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.
Hire for the horse, nothing for its colt.
732. ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல.
Like swimming the river to avoid the tax.
733. ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.
Do not commit injustice at the custom-house.
734. ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.
One grain destroying insect will consume a thousand grains of rice.
735 ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டது போல.
As a swan in the midst of a thousand crows.
736. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
Like a single stone thrown at a thousand crows.
737. ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா ?
Can a thousand props support the universe ?
738. ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.
A thousand bonds may equal the strength of an elephant.
739. ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.
Though a thousand-times admonished, afaithless woman will not become a faithful wife.
740. ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினது போல.
Like one born with a thousand stretched out this legs with five hundred.
741. ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.
Beauty is found only in one of a thousand.
742. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
The combined light of a thousand stars is not equal to a single moon.
743. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை .
A thousand sixteenths make sixty-two and a half.
744. ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.
He whose fortune amounts to thousands is quiet, while the rag- gatherer leaps for joy.
Dignity is characteristic of the worthy, and levity of the worthless.
745. ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
Though it may bring in thousands, the occupation of a tax gatherer is bad
746. ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.
Although one may live a thousand years an unnatural death is bad.
747. ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.
Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.
748. ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.
He who has killed a thousand persons is half a doctor.
749. ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
Though a thousand may thereby be obtained, impetuosity is not good.
750. ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.
Though a thousand persons unite, they cannot kill a single grain insect.
751.ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்கு சத்துக்குப் பால் மாறுகிறதா?
After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?
752. ஆயிரம் அரைக்காற்பணம்.
A thousand eighths of a fanam.
753. ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
Half a letter is equal to a thousand words.
754. ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?
Will it prove a loss if one of a thousand cows kicks?
755.ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை. Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.
756. ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.
Like a toad among a thousand serpents.
757. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
Half a fanam to buy a whip for a horse worth thousands of gold.
758. ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்.
A single avaricious desire will destroy a thousand good qualities
759. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
Even a horse worth thousands of gold may require a whip.
760. ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
Tell lies by the thousand and build a temple.
761. ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
One of a hundred makes a skilful swords-man.
762. ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா?
What ! strike the unarmed?
763. ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல.
Like seeking a weapon in the face of battle.
764. ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
It rains in successive torrents.
765. ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
An ill-considered undertaking may occasion the agony of death.
766. ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
A female with an inauspicious mark on the neck will prove an evil in a king's palace.
767. ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.
Sirrah! who invested you with a free tenure, I did it myself.
A long continued favour is regarded as a right.
768. ஆராகிலும் படியளந்து விட்டதா?
Has any one measured out my daily allowance ?
769. ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.
How many shall I serve with this debilitated and ulcerated body?
770. ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்.
By whom was I ruined, by twisted hemp.
771.ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.
Although engaged in a mere puppet-show, one ought to keep the eye on the main chance.
772. ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.
He is fearless and shrinks not in the presence of any foe.
773. ஆருக்கு ஆர் சதம்?
Who is really true to another ?
774. ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்?
To whom were you born? you cry for butter-milk.
775. ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
Treachery against any man will be slowly requited, but treachery against one's self will meet with immediate retribution.
776. ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.
A wife who has no connections is to be preferred and so the friend ship of one.
777. ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
Who are related to each other? the mother and her child.
778. ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேத யாகம் செய்தானாம்.
He is said to have performed Ashwamedha, (the sacrifice of a horse) in an uninhabited country.
779. ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?
My friend, on whom did you depend for assistance when you putup a picotta to irrigate the kar rice ?
An efficient picotta is worked by two, frequently by three men.
780. ஆரோ செத்தான் எவனோ அழுதான்.
Some one died : someone cried.
781.ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.
In the morning it will be known whose mother is dead.
782. ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.
Whomsoever you delay to pay, the debt of Mari must be at once discharged.
Mari is the Goddess who presides over pestilence,&c.
783. ஆர் குடியைக் கெடுக்க ஆண்டிவேஷம் போட்டாய்?
Whose family did you intend to ruin when you assumed the guise of a religious mendicant ?
784. ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.
No matter who pounds it if we obtain the rice.
785. ஆலகால விஷம் போன்றவன் அந்தரமாவான்.
He who is as dangerous to society as the poison of a serpent will be ruined.
786. ஆலசியம் அமிர்தம் விஷம்.
Indolence changes nectar into poison.
787. ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினார்?
Who informed the birds that the banyan tree was in fruit ?
788. ஆலின்மேற் புல்லுருவி.
A parasite on a banyan tree.
789.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
As the banyan and the acacia strengthen the teeth, so Naladiyar and Kural give force to speech.
Naladiyar and Kural two celebrated poetie works on moral subjects.
790. ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.
I am become a bruised reed tossed on the waves.
791. ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
The temple understands not the hidden meaning of the Vedas.
792. ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.
The flowers of the olive, Bassia, are regarded as sugar in a place without a Sugar cane mill.
793. ஆலை விழுது தாங்குகிறாப்போலே.
As the pendulous roots of its branches support the banyan tree.
794.ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.
If the banyan be in fruit, thither, if the arasu, hither, the birds flock.
795. ஆல் போல் விழுந்துவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில் போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.
Day you prosper as the banyan with its daughter-stems, take root like the wide-spreading arugu grass, and as the bamboo amid unfailing friends.
A congratulatory expression to a newly married couple.
796. ஆவணி மாதம் அழுகல் தூற்றல்.
The month of August is attended with incessant drizzling.
797. ஆவத்தை அடரான் பாவத்தை தொடரான்.
He is not subject to calamity who pursues not a sinful course.
798. ஆவல் மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோபிழைப்பான்?
What avails mere desire, he will live, will be not, if he swallows rice?
799. ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.
Even the leaves of the avárai may be useful in misfortune.
800. ஆவென்று போன பிறகு அள்ளி இடுகிறது ஆர் ?
After his last gasp who will distribute our food ?
801. ஆவேறு நிறமானாலும், பால்வேறு நிறமாமோ?
Will the colour of the skin of a cow affect that of its milk?
802. ஆழமறியும் ஓங்கில் மேளம் அறியும் அரவம்.
The onkil fish is acquainted with depth, and the snake knows the sound of a drum.
This reference to the instincts of animals serves to indicate the aptitude &c., of individuals.
803. ஆழம் அறியாமல் காலை யிடாதே.
Do not step down unless you know the depth.
804. ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.
With an àlak of rice in hand and a pot that will suffice to boil only three fourths of it look at the ostentation the Mudaliar displays.
805. ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனி யெல்லாம் அன்னமயமானால் என்ன?
What if the great deep were an extended field and all the world standing corn?
Even then each could enjoy only what he might consume.
806. ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன் ?
Of what use is a wife to him who cannot govern her?
807. ஆளனில்லாத் துக்கம் அழுதாலும் தீராது.
The grief occasioned by the death of a husband will not be removed by a flood of tears.
808. ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
She who has no husband is like sand in the bed of a river.
Uncertain as to position.
809. ஆளான ஆட்களுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காகா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
The raven demon crying for kanji when the well-to-do cannot obtain a grain of boiled rice.
810. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.
811. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.
Being buffeted by every one, my head has become as large as a water-pot.
812. ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.
He may escape recognition in a crowd.
813. ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
After ascertaining the character of the person he undermines his interests.
814. ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.
Man must be tested by man and fish by tamarind acid.
815. ஆளை ஆள் குத்தும் ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
Personal valor enables one to encounter an enemy, but outward show will scare away ten.
816. ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?
What, do you take your measure of a person without eyeing him all around ?
817. ஆளைப் பார் முகத்தைப் பார்.
Look at the person, look at his face.
Spoken in derision of a boaster.
818. ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.
He eyed the man and deceived him by his talk.
819. ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.
One man may stab one, threatening may stab ten.
820. ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா?
Will a sword cut unwielded ?
821. ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
Is he who is yet alive, murdered ?
822. ஆள் இல்லாப் படை அம்பலம்.
Mere weapons are ineffective.
823. ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
When a dhony finds her steersman unskilful she pitches.
Spoken of something going wrong from want of skill.
824. ஆள் ஏற நீர் ஏறும்.
As men embark, the surrounding water rises.
825. ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.
Though feeble in person, his weapon is powerful.
826. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
When numerous fishermen combine together, multitudes of fish may be caught.
827. ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.
Neither six nor a hundred are required, let that be which will be.
828. ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீறாகவிடும்.
If the sixth-born be a female, a family of overflowing wealth will be reduced to powder.
829. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
Death may occur at six, or at a hundred years of age.
830. ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
Cold kanji is old kanji.
831. ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.
There will be a scab even after the wound is healed.
lnterrupted amity though restored will occasion suspicion.
832. ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
If cool pour it into the mould, if not pour it into the large earthen pot.
833. ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனல், ஆறு கடந்தால் நீயா நானார்.
To avow fraternal relationship until the river is crossed; and to ignore it on arriving at the opposite bank.
834. ஆறு கலியாணம் மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுகிறது.
Where six marriages are being celebrated three women are pressing and pushing.
835. ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்ப்பானேன்?
Why loose your waist-cloth on mentioning that the river is yet ten miles off?
836.ஆறு கெட நாணல் இடு ஊர் கெட நூலை இடு.
Plant reeds to destroy a river, to destroy a country introduce yarn.
Weavers who neglect tillage, and foul the water by dying processes &c are here referred to.
837. ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி.
The river has destroyed one half and the jungle the other.
838. ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம். Though the river is in full flood part of it flows on in its course, and part diverges.
839. ஆறு நிறையப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்.
Though the river is full to overflowing, a dog laps.
Amid the greatest abundance one can only enjoy what is required
840. ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?
Having swum a river, will it be difficult for me to swim over in tank?
841. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
What is a mere channel to him who has swum a river ?
842. ஆறு நேராய்ப் போகாது.
A river never flows straight.
843. ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.
A town in the course of a river will not endure.
844. ஆறு பார்க்கப் போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.
The old dame caught a cold by going to look at the river.
845. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
The flow of a river is its course, the utterance of a ruler is his decision.
846. ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?
Can a six months journey be accomplished if the party walk hesitatingly?
An arduous enterprize requires unremitted exertion.
847. ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.
Six months in the jungle and six at home.
848. ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.
As Saturn seized one for six months together.
849. ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை.
Debt in debt whether it amounts to six or a hundred; you fool(?) bake the cakes large.
850. ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.
Their severity is most felt, when a flood subsides, and a famine terminates.
851. ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குருதி.
All the way is bedewed with tears, and the footprints are red with blood.
852. ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.
He aims to expose me, after comforting and abusing me.
853. ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி , ஐயா குடி.
Drink sir, and drink the water that is flowing in the river.
Spoken of apparent generosity which in reality costs nothing.
854. ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.
He has one foot in the river and one in mud.
Said of one involved in inextricable difficulty.
855. ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேண்டும்.
Although you are throwing it into the river, measure it first.
856. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.
Though water in a river is up to one's ankle only, some will wade with hesitation.
857. ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
Creeping along a river and sinking in the sand.
858. ஆற்றிலே விட்ட தொப்பை போல் தவிக்கிறேன்.
I am tossed about like a tuft of sacred grass that has been thrown into a river.
859. ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று.
It is the pulp of the tamarind fruit dissolved in a river, and chaff sent to the bazaar.
Said of things useless and unavailing.
860. ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.
The river is in flood, but what of that to a dog? it is only a fordable stream.
861. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா?
Will a Brahman be of any use when one crosses a river, or pulse in pod serve for a curry?
862. ஆற்றுக்கும் பயம் காற்றுக்கும் பயம்.
Both the river and weather are dreaded.
863. ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.
I neither went to the river, nor put off my shoes.
864. ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.
The flood of a river and the reign of a king last but half an hour.
865. ஆற்று மணலை அளவிடக்கூடாது.
The sands of a river cannot be counted.
866. ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ?
How does a dog drink the water of a river, by lapping or by lading?
867. ஆற்றைக் கடந்தல்லோ அக்கரை ஏற வேண்டும்?
Before ascending its opposite bank it is necessary first, is it not to cross the river?
868. ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
After crossing the river the boatman gets a cuff.
869. ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன்
என்கிறான்.
He says, carry me over the river and I will give you a pill that willenable you to fly through the air.
870. ஆனதல்லாமல் ஆவதறிவாரோ?
Can one comprehend the future as well as the past?
871. ஆன தெய்வத்தை ஆறு கொண்டுபோகிறது அனுமந்தராயனுக்குத் தெப்பத்திருவிழாவா?
After the river has carried away every imaginable deity, do you stay to celebrate an aquatic festival in honour of Hanuman?
Said of one seeking the lesser aid when the greater has failed.
872. ஆனமட்டும் ஆதாளியடித்துப்போட்டு, ஆந்தை போல் விழிக்கிறான்.
Having spent all he stares like an owl.
873. ஆன முதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.
Having lost his capital, it will not be difficult for him to lose his reputation.
874. ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.
The good and the bad exist among all.
875. ஆனால் அச்சிலே வார்க்கிறேன் ஆகாவிட்டால் மிடாவிலே வார்க்கிறேன்.
If I succeed I will pour it into a mould, if not, into a large pot.
Accommodating one's conduct to circumstances.
876. ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.
Do not begin to build in June; nor set out to occupy a house in March.
877. ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
In June half a river, in August a full river.
878.ஆனி ஆனை வாலொத்த கரும்பு.
In June sugar-cane is like an elephant's tail.
879. ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.
An elephant moves when eating, a house eats without moving.
880. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.
An elephant waits before the outer hall of a king’scourt; a cat watches the putrid fish.
881. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?
882. ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.
A cat sits and mews in the place once occupied by the royal elephant.
883. ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.
An ordinary curry for an elephant and a superior curry for a cat.
884. ஆனை உண்ட விளாங்கனி போல.
Like a blighted wood-apple swallowed by an elephant.
885. ஆனை ஏறியும் சந்து வழி நுழைவானேன்?
Why enter by a corner when mounted on an elephant ?
886. ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா?
Will one mounted on an elephant enter through a wicket?
887. ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பயன் இல்லை.
It is of value though an elephant brings forth a single young one but the many young ones of a pig are of no value.
One good thing is better than ten bad ones.
888. ஆனை கட்டத் தூர் வானமுட்டப் போர்.
The stalks of the grain are so strong that an elephant may be tied to them, and the stacks are as high as the heavens.
Said in exaggeration of an abundant harvest.
889. ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக்கொள்ளுகிறது போல்.
As the blind quarrelled about an elephant they had examined.
890. ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
Though black, an elephant will fetch a thousand gold pieces.
891. ஆனை காணாமற்போனாற் குண்டுச் சட்டியில் தேடினால் அகப்படுமா ?
If an elephant be lost, is it to be sought in an earthen pot ?
892. ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ ?
Is the elephant in the rice-pot or in the Water-pot ?
893. ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா ?
What, does the mouth that asked for an elephant ask for a lamb ?
894. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?
Having given the elephant is there a dispute about the goad ?
895. ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது ?
How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws ?
896. ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
The deceit of an elephant and the thievishness of a cat.
897. ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.
898. ஆனைக்கும் பானைக்கும் சரி.
The same reason is applicable alike to elephants and earthen pots.
899.ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
The elephant and tiger are afraid of fire.
900. ஆனைக்கும் அடி சறுக்கும்.
Even an elephant may slip.
901. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
Will a lamb be famished in a place where elephants are fed ?
902. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.
As if a lion had entered a herd of elephants.
903. ஆனைக்குத் தேரை ஊணா?
Are toads fit for elephant's food ?
904. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
An elephant requires a goad, and boiled rice a chilli (condiment.)
905. ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
An elephant is not affected by sunshine or rain.
906. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
The elephant has its time, the cat also has its time.
907. ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
Although dead, an elephant will fetch a thousand gold pieces.
908. ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ?
What! does the hand that has caressed an elephant caress a sheep?
909. ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும்.
The elephant will put sand on its own head.
To see this done by wild elephants when travelling through a jungle is very interesting.
910. ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்தது போல.
As an elephant gives the chain to tether himself.
Said of one who, whether consciously or not, supplies means to his own disadvantage.
911. ஆனை துரத்திவந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
Though chased by an elephant, it is not right to enter a temple.
912. ஆனை நிழலைப் பார்க்கத் தவளை கலங்கினாற்போலே.
As a frog trembled at the shadow of an elephant.
913. ஆனை படுத்தால் ஆள்மட்டம்.
When an elephant lies down its height will equal the stature of a man.
914. ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா?
When an elephant lies down, will he be lower than a lamb ?
915. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?
Are your eyes too dim to see an elephant ?
You must be blind indeed.
916. ஆனை போன வீதி
The street by which an elephant passed.
917. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?
Has any survived after being trodden under foot by an elephant ?
918. ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.
Stubble as high as an elephant, stacks towering to the skies.
919. ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா?
Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?
920. ஆனை மேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.
Like asking chunam (lime) of one who is going along on an elephant.
921. ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.
As if an elephant's load was transferred to a cat.
922. ஆனையும் அறுகம்புல்லினால் தடைபடும்.
Even an elephant may be impeded by arugu, Agrostis linearis, grass.
This grass is sacred to Ganesa.
923. ஆனையும் ஆனையும் முட்டும்போது இடையில் அகப்பட்ட கொசுகுபோல.
As a gnat between two elephants that are brought into collision.
924. ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
Give an elephant to a pundit, and a cat to a mountaineer.
925. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா?
Is he who slew an elephant unable to overcome a cat ?
926. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன்?
After having paid a thousand gold pieces for an elephant, why hesitate to buy an iron goad?
927. ஆனையைக் குத்திச் சுளகாலே மூடுவாள்.
She will stab the elephant and cover it with a sieve.
928. ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
Having tied the elephant she will cover it with a winnowing fan.
929. ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்தது போல.
Like putting one's hand into a water-pot in search of a missing elephant.
930. ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.
Having sold the elephant he begs for the goad.
931. ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா?
Can an alligator which can draw an elephant in water, drag a cat on dry ground ?
932. ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
The sound of the bell is heard before the elephant makes its appearance.
Spoken of events which cast their shadows before.
933. ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா?
One can cross a river by holding the tail of an elephant, can one do so by holding the tail of a sheep?
934. ஆனை விழுந்தால் கொம்பு, புலி விழுந்தால் தோல்.
On the death of an elephant the tusk remains, on the death of a tiger the skin.
935. ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
A cat will be a small thing to an old dame who swallowed an elephant.
936. ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.
When down, an elephant is as high as a horse.
937. ஆனை வேகம் அடங்கும் துறட்டியால்.
The force of an elephant is subdued by the goad.
938. இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.
The contemptible will not be praised.
939. இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழுகொம்பு நடுகிறான்.
He puts down the seed pagal (a creeper) on this side of the river and erects a supporting pole on that.
940. இங்கு இருந்த பாண்டம் போல.
Like a vessel that contained assafoetida.
941. இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.
A thing that is greatly desired is not secret.
942. இஞ்சி தின்ற குரங்குபோல.
Like a monkey that has eaten green ginger.
943.இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலைமேலே.
Where is the way of the perverse ? on the head of the man that is lying down.
944. இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
If permitted he will pull down the choultry.
Intimating what persons of violent tendencies must be at once repressed.
945. இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.
The right hand helps the left and the left the right.
946. இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.
One may not make friendship with him who does not know the right side from the left.
Intimating that one must have nothing to do with fools.
947. இடி ஓசை கேட்ட பாம்பு போல.
Like a snake that has heard thunder.
948. இடிக்குக் குடை பிடிக்கலாமா?
Will an umbrella be of any use in a thunder-storm ?
949. இடுகிற தெய்வம் எங்கும் இடும்.
A liberal deity will give every-where.
950. இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.
In every place on which he reclined he constructed a hearth.
Spoken of one who takes care of himself.
951. இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற் குழியே கதி.
The mortar hole is the asylum of the fowl with a broken back.
952.இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.
Oppressors sleepnot day or night
953. இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.
Alms-giving secures heavenly bliss.
954. இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.
The evil-disposed will destroy the good deeds of the beneficent.
955.இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்த்தாளாம்.
It is said that she waited patiently for her mistress assured she would be rewarded; and at length she got ameasure of rice, and her four desires were met.
956. இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.
The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.
957. இடை சாய்ந்த குடம் கிடை.
The water-pot remains aslant as when put down.
958. இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?
When the marriage procession comes along the shepherd's street she asks where the potter's street is.
959. இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.
Middle and lower ranks in life are not good.
960. இடைப் புத்தி பிடரியிலே.
The sense of the shepherd is in his neck.
961. இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.
The shepherd destroyed half, and the simpleton destroyed half.
962. இடையன் கலியாணம் விடியும் பொழுது.
A shepherd's marriage takes place at day-break.
963. இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.
Among shepherds there are no Saiva mendicants, among potters there are no Vaishnava mendicants.
964. இடையூறு செய்தோன் மனையில் இருக்கலாது பேய் முதலாய் ?
Even a demon will not haunt the dwelling of him, that defeats the hopes of another.
965. இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?
If one's desires are in excess of destiny, will they be obtained?
966. இட்டதன் மேல் ஏறாசைப்படுகிறதா?
Is it fit to wish for more than what is already given?
967. இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.
If the giver cease to give, mortal hatred will ensue.
968. இட்டார்க்கு இடு, செத்தார்க்கு அழு.
Give to those who have given, weep for the dead.
969. இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.
He knows how to eat if food be set before him, and he knows how to carry if the burden be laid upon him.
970. இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.
To associate with the obstinate will bring disgrace.
971. இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா ?
What! is this a town in which water-melons were sold ?
972. இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது ?
When so great a personage takes one by the hand, how can one say nay ?
973. இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?
If this amounts to that how much will that come to ?
974. இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.
Such a blow would kill any dog.
975. இந்த எலும்பைக் கடிப்பானேன் சொந்தப்பல்லுப் போவானேன்?
Why gnaw this bone, and why lose one's own teeth?
976. இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?
Is it for this gruel that so many sacred namams are used?
977. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம் ?
What, is it for this gruel that I have made twenty-eight námam sectarial marks.
978. இந்தக்கரிப்பிற் செத்தால், இன்னம் ஒரு கரிப்பு மயிரைப் பிடுங்குமா?
If one die during this famine will another famine pull off his hair?
979. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்?
He is as if one said of a cat, will this also drink milk?
980. இந்தப் பெருமையும் பந்தல் அழகும் பார்த்தையா பண்ணைக்காரா ?
O, headman, hast thou noticed this greatness, and the beauty of the Pandal?
981. இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
Why do you treat this dog in this way?
982. இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள், எமதருமராஜனைக் கையாலே மறைப்பாள்.
She will conceal Jupiter and the moon with a leaf, and Yama, the regent of the dead, with her hand,
983. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
The defects in the eye-lashes are not apparent to the eye.
984. இயமன் ஒருவனைக் கொல்வான், ஏற்றம் மூவரைக் கொல்லும்.
Yama the regent of the dead, kills one at a time, a picotta may kill three at once.
985. இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?
Is the habit natural or acquired?
986. இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.
The heart of one void of compassion is harder than iron.
987. இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.
Though yougobegging, go decently attired.
988. இரங்காதவர் உண்டா ? பெண் என்றால் பேயும் இரங்கும்.
Are there those who have no pity ? If the word woman be uttered even a demon will be moved with compassion.
989. இரண்டு ஆட்டிலே ஊட்ட விட்ட குட்டிபோல.
Likea lamb allowed to suck two sheep.
Spoken of a youth full of strength and activity.
990. இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது.
Even a monkey will not stay in a village divided against itself.
991. இரண்டு தோணியில் கால் வைக்கிறதா ?
Is it to plant your feet on two dhonies?
992. இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?
Why fire in the house of a man that has two wives?
993. இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
It is said that the pup died between two houses where marriage festivities were going on.
994. இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டது போல.
As a bone thrown to two dogs.
995. இரந்தும் பரத்துக்கு இடு.
Though you have to beg them, make your offerings to God.
996.இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.
It is the duty of the richto give alms to beggars.
997.இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா?
Is it difficult for a beggar to get fine rice?
998. இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை.
A beggarnowhere suffers from famine.
999. இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.
The thing borrowed suits; I swear by my child that I will not return it.
1000. இரவல் சதமா , திருடன் உறவா?
Is a thing borrowed a durable possession, is a thief a friend?
1001. இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?
Will borrowed rice prove a security against famine?
1002. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
It is said, that relying on a borrowed cloth, she throw away her tattered cloth.
1003. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை. None ever prospered under Rahu, nor was any one ever ruined under Jupiter.
Rahuis the name of a monstrous serpent ordragon, the ascendingnode, and regarded as one of the nine planets, whichwith Kethu the descending node, is said to grasp the sun and moon periodically, and thus to cause eclipses. When the supernals assembled at a feast to drink the water of immortality obtained from the churning of the milky ocean Rahu and Kethu, two Asuras, clandestinely got admission. The sun and moon saw them and at once informed Vishnu of their presence. Vishnu dispatched his marvellous disc and decapitated them just as the coveted nectar was about to enter their throats. They to avenge themselves resolved periodically to swallow the sun and moon.
1004. இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.
The story of one who in a dream of the night saw Saturn swelling as a large pot.
1005. இராசன் ஏறிய குதிரையைப்போல்.
Like a horse ridden by a king.
1006.இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம் போல.
As a lemon offered to a king.
A gift to procure his favour: a hindu when offering a lemon or fruit of any kind invariably does so with the right hand.
1007. இராச கீரியைக் காவுகிறதுபோல.
Like carrying a royal mongoose.
1008. இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.
Though a king, he is the son of his mother.
1009. இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.
A king's sceptre extends to the limit of his territory.
1010. இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.
Though a princess, she is the wife of the man who has taken her in marriage.
1011. இராசாளியைக் கண்ட கொக்குப்போல.
Like a heron which saw a falcon.
1012. இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.
As a slave lived on gruel because the king was in debt.
1013. இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.
It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained.
1014. இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ?
Does be who lies down at night fasting, enquire after the price of grain?
1015. இராப்பட்டினி பாயோடே.
The sense of hunger ends on the mat.
1016. இராப்பகல் கண்ணிலே.
In the eye night and day.
1017. இராமர் இருந்த இடம் அயோத்தி.
Ayodhya was the city of Rama.
1018. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.
Acquiescence with the wishes of his wife was fatal to Rama.
1019. இராமனைப்போல ராஜா இருந்தால் அனுமானைப் போலச் சேவகனும் இருப்பான்.
If the king be equal to Rama, his servant may be equal to Hanuman.
Hanuman was the monkey chief, ally of Rama in his expedition against Lanka.
1020. இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.
The story of one who having listened to the reading of the Ramayana a whole night, asked what relationship existed between Sita and Rama.
1021. இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.
Though he went on a pilgrimage to Rameswaram, Saturn has not
left him.
1022. இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும். He is what Mahodharan was, to the family of Ravana and what
Sakuni was to Suyodhana.
Said of one who under professions of friendship secretly plotsone's ruin.
1023. இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.
He is as Ravana in the guise of a hermit.
1024. இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.
It is said that the horse not only threw his rider, but dug his gravealso.
1025. இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.
Like a buffalo he consumes the day's supply.
1026. இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.
If he who is being shaved sits properly, the barber will shave well.
1027. இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்.
If you wish to live long, eat iron.
1028. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.
In time all will be in harmony.
1029. இருக்கும் இடம் ஏவுமா ?
Will the place on which we sit, incite ?
1030. இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.
Oblations made to a demoness must not be kept till the morning.
1031. இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.
He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.
1032. இருட்டு வேலையோ குருட்டு வேலையோ?
Was the work done in the dark or by the blind ?
1033. இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா?
Will his thievish hand be restrained when he enters a dark room?
1034. இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.
It is a sign of thievishness for a family to live in obscurity.
1035. இருதலை மணியன் பாம்பைப்போல.
Like a snake that has a head at both ends.
1036. இருதலைக்கொள்ளி எறும்பு போல் ஆனேன்.
I have become like an apt on a fire-brand lighted at both ends.
Spoken when in danger from opposite quarters.
1037. இருந்தல்லோ படுக்கவேண்டும்?
Must one not sit before lying down?
1038. இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை. The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.
1039. இருந்தவன் தலைமேலே இடி விழுந்தது போல.
As the thunder-bolt fell on the head of the one who remained.
1040. இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.
The sluggish foot is Mudevi the goddess of adversity, the active footis Shridevi the goddess of prosperity.
These two personages were produced when the milky ocean was churned to obtain ambrosia. They play an important part in the economy of the Hindus.
1041. இருந்தவனுக்குப் போனவன் குணம்.
He that went away was better than he who stayed.
1042. இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.
Whilst he who was seated was rising, the man who was standing had gone ten miles.
1043. இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.
While squatting, a cat, when springing, a tiger.
1044. இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.
If sitting you sit, if you rise you stand.
1045. இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.
One must walk a long way to get back the money lent when seated.
1046. இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.
The twenty-one kinds of rain were enumerated and poured out.
1047. இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
What! knocking down an iron door to obtain a bran cake?
1048. இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?
If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?
1049. இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
Like an iron fort and a stone door.
1050. இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.
To associate with a double minded woman is fatal.
1051. இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.
If iron becomes copper, a straw may become a pillar.
One impossibility is as like as another.
1052. இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?
Can white-ants eat an iron pillar ?
1053. இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.
If iron can be converted into copper, Copper may be reconverted into gold.
1054. இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.
It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.
1055. இரும்புக்கட்டி பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம்எங்கே ?
When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place ?
1056. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?
What has a dog to do in a smith's shop?
1057. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.
The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still.
1058. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?
What will a dog get in a smith's shop?
1059. இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.
As if an ant had gnawed an iron pillar.
1060. இரும்பு துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
Will the tamarind fruit that has resisted an iron hook shake at a sacred song.
In illustration of this proverb the following may not be considered irrelevant. In the year 1826 when I went to my first Missionary station, Trincomalee on the Eastern coast of Ceylon, I called on the chief Mudaliar to pay my respects and to urge the claims of Christianity. The old gentleman who remembered the coercive system adopted by the Dutch for the propagation of Christianity, and well knowing too that Missionaries under the wild sway of Great Britain can use no weapon but the Gospel, uttered with great animation the above proverb. In view of the youthful character of his visitor he seemed to feel like Goliath in the presence of David.
1061. இரும்பை எறும்பு அரிக்குமா ?
Can an ant gnaw iron ?
1062. இரும்பை எலி தின்னுமா?
Can a rat eat iron ?
1063.இரும்பை எலி கவ்விற்று என்கிறான் படுக்காளி.
The infamous liar says that the rat took the iron in its mouth.
1064. இரும்பைக் கறையான் அரித்தால் பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா?
If the white-ants can eat iron, why cannot a hawk carry off a child ?
1065. இருவரும் ஒத்தால் இணக்குவார் ஏன்?
If the two agree what need of arbitrators?
1065. இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?
Can an affair be effected by one that could not be accomplished by two?
1067. இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.
The friendship of two depends on the forbearance of one.
1068. இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?
Does the son of an Irulan, a wild tribe, suffer from a scarcity of young rats?
1069. இருளன் ராஜவிழி விழிப்பானா?
Can a savage put on the look of a king ?
1070. இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.
A time of darkness, a time of moonshine.
1071. இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.
The story of one who dropped his plough when accosted O Reddy, O Reddy.
1072. இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.
The learned will appear undismayed in a royal assembly.
1073. இலக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.
Beauty and ugliness are in the face.
1074. இலங்கணம் பரம ஒளஷதம்.
Abstinence is the best medicine.
1075. இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?
Are all that are born in Ceylon, Ravanas?
1076. இலங்கையைச் சுட்ட குரங்கு.
The monkey that set fire to Lanka.
1077. இலவு காத்த கிளி ஆனேன்.
I am like the parrot that waited for the silk-cotton pod.
Spoken of one who has been sadly disappointed in his expectations.
The proverb is said to refer to a parrot that on seeing a green pod on a silk-cotton tree believed it would ripen into fruit, whereas it eventually burst and the cotton was scattered to the winds.
1078. இலுப்பைப்பூவைத் திருப்பினால் இருபுறமும் பொத்தல்.
If the flower of ilupai (Bassia Longifolia) be turned, it will be found hollow on both sides.
1079. இலை தின்னி காய் அறியான்.
He who feeds on leaves knows not the flavor of fruit.
1080. இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.
Leaves green and sear are found every where.
1081. இலௌகீகம் வைதீகம் இரண்டும் வேண்டும்.
The secular and the sacred are both necessary.
1082. இல்லது வாராது உள்ளது போகாது.
That which is not will not come, that which is, will not go.
1083. இல்லறம் பெரிது துறவறம் சிறிது.
Domestic life is better than that of the ascetic.
1084. இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.
Domestic life is honourable, that of the ascetic is disgraceful.
1085. இல்லாதவன் பொல்லாதவன்.
He that is destitute is wicked.
1086. இல்லாதது பிறவாது அள்ளாதது குறையாது.
That which is not, will not come out; that from which nothing is taken; will not lessen.
1087.இல்லாது சொல்லி அல்லற் படுதல்.
Uttering a falsehood and suffering the evil thereof.
1088. இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?
What! is it to speak manfully after deserting thy wife?
1089. இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.
He lacks nothing, nor does he possess any thing.
1090. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?
Is the wife of the destitute the friend or companion of all ?
1091. இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.
Even a lizard will not enter a house occupied by the niggardly.
1092. இல்லோர் இரப்பது இயல்பு.
It is natural for the destitute to beg.
1093. இவள் விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவாள்.
She will make butter out of the butter milk-given for sale, and make provision for the marriage of her first-born son.
1094. இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.
There are seven points of agreement between this person and that.
1095. இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.
The advice given to him is like assafoetida dissolved in the sea.
1096. இவன் ஊராருக்குப் பிள்ளை.
He is the child of the whole village.
Said of a self-willed wandering youth.
1097. இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.
He is a clever rogue, what he ties with his feet it is difficult to untie with the hand.
1098. இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.
He has attained the unattainable; he can show Vaikundam Paradise in the palm of his hand.
1099. இவன் புத்தி உலக்கைக் கொழுந்து.
His wit is as sharp as a wooden pestle.
1100. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
Will she who attends a funeral remove her marriage symbol?
1101. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
Harmony sets off a faulty stanza.
1102. இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
When the trail marks are before you, why look for footprints ?
1103. இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.
A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces.
1104. இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.
Thoroughly pounded and properly boiled.
1105. இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.
When the smith perceives that the iron is soft, he will raise himself to the stroke.
The Indian smith squats at the forge, and rises to his feet only when he uses a two-handed hammer.
1106. இளங்கன்று பயம் அறியுமா?
Does a young calf know fear?
1107. இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.
Indolence, in youth will bring poverty in old age.
1108. இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.
Industry in youth will support one in old age.
1109. இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.
The habits of early life will never be forgotten.
1110. இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.
Youth and senility do not properly belong to a man's age.
1111. இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?
Do you who cannot endure the early beams of the sun presume to walk over fire?
1112. இளைஞன் ஆனாலும் ஆகவான் மூப்பு.
Although young he will play the man.
1113. இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.
In the tresses of a poor woman are found nits and lice.
1114. இளைத்தவன் சினேகிதனைச் சேர்.
Associate with the friend of the poor.
1115. இளைத்தவனே எள்ளை விதை.
O you weak fellow, sow the sessamum seed.
1116. இளையாள் இலை தின்னி மூத்தாள் காய்அறிவாள்.
The younger sister feeds on leaves, the elder is accustomed to fruit.
1117. இளையாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.
Come my younger sister, we will proceed to Malayalam; come my elder sister, we will strike our heads together and die.
1118. இறகு முற்றிப் பறவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.
When mature and on the wing, all birds will look after their own food.
1119. இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
When death approaches, white-ants take wing.
1120. இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?
Will white-ants take wing except on the approach of death?
1121. இறங்கும் துறையிலே நீத்தானால், இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?
If on stepping into the riverone is obliged to swim, how will I get across ?
1122. இறங்கு பொழுதிலே மருந்து குடி.
Take medicine at sun-set.
1123. இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.
The dead is the pilotof the living.
1124. இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
The child of the dead is the ward of the living.
1125. இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.
Sessamum and water offered to the dead.
1126. இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
A family out of debt is out of danger.
1127. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது, உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
He who pays his debts cannot obtain money, nor can the labourer obtain a wife.
1128. இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.
They who live on flesh are acquainted with the medicine for tooth ache.
1129. இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?
Is one to wear a neck-lace of bones because he eats flesh ?
This and the preceding proverb are somewhat singular but not unnatural among a vegetarian people.
1130. இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
The water of a well always drawn, is fresh, that of a well not drawn is fetid.
1131. இறைத்த கிணறு சுரக்கும்.
The water of a well always drawn springs up a-fresh.
1132.இனம் பிரிந்த மான் போல.
Like a deer separated from its herd.
1133. இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?
Hereafter is it to lift up the hands to a god?
1134. இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
Hereafter he may effect his purpose as far as the realms of Yama.
1135. இன்பமும் துன்பமும் பொறுமையிலே.
Joy and grief must be regulated by moderation.
1136. இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
Happiness is desired by all.
1137. இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.
The body it is that is affected by pleasure and pain.
1138. இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.
Those who are alive to-day may not be on the morrow.
1139. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
He who cut off the leaves to-day may possibly cut off the bunch tomorrow.
1140. இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
That which is practicable to-day may be so on the morrow.
1141. இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.
If one die to-day, to-morrow will be the second day.
1142. இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.
To say today; tomorrow, indicates refusal.
1143. ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.
They will take the honey without dispersing the bees, they will take it without raising it up.
1144. ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.
The liberal giver will be happy.
1145. ஈக்கு விடம் தலையில், தேளுக்குக் கொடுக்கில்.
In a fly, the head is the seat of poison, in a scorpion, the tail.
1146. ஈசலுக்கு எல்லாம் பகை.
All are against the winged white-ants.
1147. ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
The wing of a white-ant is the softest of all things.
1148. ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.
The army perished like winged white-ants.
1149. ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.
The frog leaps and swallows the swarming winged white-ants.
1150. ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.
Nothing here is equal to God.
1151. ஈச்சங்கள் எதிலும் குளிர்ச்சி .
Date-palm toddy is the coolest of beverages.
1152. ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.
The story of a buffalo that lived in a date-palm grove.
1153. ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.
A strong man fears not hardship, nor does a bullock with a stunted tail fear gnats.
1154. ஈடாகாதவனை எதிராக்காதே.
Do not oppose your inferior.
1155. ஈடுள்ள குடிக்குக் கேடு இல்லை.
A wealthy family is not exposed to danger.
1156. ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை.
Learning is more substantial than accumulated riches.
1157. ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.
A spear wounds as far as it reaches; the effect of money reaches ten kathams
(100 miles).
1158. ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
Like for like, and equality in a pair are desirable.
1159. ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.
The maiden who was given in marriage was equal to all theexigencies of life.
1160. ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.
The smallest fraction will come out by division, இம்மி = 1,075,200th part of a unit.
1161. ஈப்பிசினி இரப்பதுகூடக் கக்கிசம்.
A miser will find even begging difficult.
1162. ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா ?
Load may be melted, can iron ?
1163. ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
He who has taken up lead will not listen, no matter what is it to him.
1164. ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
A niggardly, savage is nowhere found.
1165. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.
The wicked obtain by rapacity what the miserly accumulate.
1166. ஈயார் பொருளுக்குத் தீயார்.
Thewicked enjoy the property of the miser.
1167. ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.
Flies and ants abound everywhere.
1168. ஈயைப் பிடித்தால் கை வேறு கால் வேறு.
If you catch a fly, its limbs will be separated.
1169. ஈயைப் போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.
Clean as a fly, andstrong as an ant.
1170. ஈரச்சீலையைப் போட்டுக் கழுத்து அறுப்பான்.
He will cut the throat after tying a wet cloth round it.
1171. ஈர நாவிற்கு எலும்பு இல்லை.
There is no bone ina slanderous tongue.
1172. ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடதித்லே ஈ மொய்க்குமா? Do insects swarm in a dry place or in a wet place ?
1173. ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.
In an onion there are twenty-eight coats.
1174. ஈரை நினைப்பான் பேரை மறக்கான்.
He who thinks of a nit will not forget its name.
1175. ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கினேன்.
I magnified the nit into a louse, and the louse into Perumal.
1176. ஈர் உருவப் பேன் அகப்படுமா?
Will lice be obtained when drawing nits between the finger and the thumb?
1177. ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும்.
That which a bee ejects and that which a dog has stolen
1178. ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா ?
Will a fly that has fallen into the boiled rice.go unless it be taken out?
1179. ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.
To the giver a meal, to the beggar plenty.
1180. ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.
The pressis turned in Lanka, and the material under pressure is examined here.
1181. ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது.
It knows not how to bring forth nor how to lick.
1182. ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.
The mother of one's mother is his grandmother, her mother is his great grand mother.
1183.ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.
Indulgence in the parent is not good for the child.
1184. உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் பயிர் ஆகுமா?
Though it should rain to the end of the world, would broken oyster shells vegetate?
1185. உகிர்ச்சுற்றின் மேல் அம்மி விழுந்தது போல்.
As a grind-stone fell on the whitlow.
1186. உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.
It is better to be consumed by a faggot than by your friendship.
1187. உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.
The eyes will be over-powered by the dancing of your women.
1188. உங்களைக் கடலிலே கைகழுவினேன்.
I have washed my hands of you in the sea.
1189. உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.
It is said that when he urged his dog to seize, it replied, you do so.
1190. உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
If slippered on the head, will the crown of the head become cool?
1191. உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்த கதை.
The story of a man who defiled Amman covil by his ulcerated body.
1192. உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனது போல.
As the wearied ass went to the salt-pit.
1193. உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.
All who have taken a body have taken an alms-dish.
1194. உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?
Must one not invigorate the body and then proceed to meditation?
1195. உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
Thou huggest up in thy bosom the embers that warm every part of the body.
1196. உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன ?
Of what consequence is cold to him whose whole body is drenched ?
1197. உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால் வார்த்து உண்பது?
Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?
1198. உடல் இரண்டு உயிர் ஒன்று.
Divided as regards body, one in soul.
1199. உடல் ஒருவனுக்குப் பிறந்தது நா பலருக்குப் பிறந்தது.
The body is born for one, the tongue for many.
1200. உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.
Anxieties which the ocean cannot contain attendthe body as long as it exists.
1201. உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.
The body of one who has no kindred is exposed to desolation.
1202. உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
A garment not worn is a prey to moths.
1203. உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.
The cloth one has put on bites as a snake.
1204. உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.
The guana may go, it is enough if the hand be free.
1205. உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாளுக்கு.
The guana has two tongues, man only one.
1206. உடும்புக்கு இரண்டு நாக்கு உண்டு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா ?
The guana has a double tongue, has man the same?
1207. உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
Can you kick against the thorns of the Acacia?
1208. உடைமை என்பது கல்வியுடைமை.
Learning is real wealth.
1209. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
Wealth and poverty are not abiding.
1210. உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
What! give one's property and sacrifice one's reputation?
1211. உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
Will a crop not looked after by the owner flourish ?
1212. உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் களைபறி.
Pluck up the weeds about the mortar as your master bids you.
1213. உடையவனிற் கைப்பற்றினவன் மிடுக்கன்.
An embezzler is more obstinate than the owner.
1214. உடையவன் சொற்படி கமுகடி களைபறி.
Weed around the areca tree at thy master's biding.
1215. உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.
The cloth whose owner is absent is a cubit too short.
1216. உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
What necessity is there for estimating the quantity of buttermilk by the ladle in the homestead of the chief?
1217. உட்காந்து அல்லவோ படுக்க வேண்டும்?
You must sit before lying down, must you not?
1218. உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
Can he tie a man that is running who cannot tie one that is sitting?
1219. உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?
What! beautify the outside of a wall while the inside is neglected?
1220. உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
Garnish the inside of the wall and then the outside.
1221. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
A mirror reflects whatever is before it.
1222. உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.
A mere instrument void of feeling and food without salt are alike.
1223. உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா ?
What, is it to mix poison with the rice one is eating?
1224. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
There is strength in a body well fed, and grain in the ploughed field.
1225. உண்ட பிள்ளை உரஞ் செய்யும்.
A child that eats well thrives.
1226. உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?
Is rice required for a full stomach, or oil for a baldhead?
1227. உண்டது தான் ஏப்பம் வரும்.
That which has been eaten will be evidenced in the belching.
1228. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா?
May hospitality be requited by treachery?
1229. உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.
The body nourished by another's bounty will melt, arecanut when chewed turns red.
1230. உண்ட சுற்றம் உருகும்.
Friendship cemented by food will compassionate.
1231. உண்டார் மேனி கண்டால் தெரியும்.
The body shows who is well fed.
1232. உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?
Hunger is appeased by eating, will it be so by looking at food?
1233. உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.
Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage.
1234. உண்டாலும் உறுதிப்பட உண்ணவேண்டும்.
When you eat, do so to keep up your strength.
1235. உண்டாற் கொல்லும் விஷம்.
Poison destroys when taken.
1236. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
Moderation in food becomes women.
1237. உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?
1238. உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.
If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.
1239. உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
If a crab gets fat, it will not stay in its hole.
1240. உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன ?
What business has he in the village seeing that he is grown up?
1241. உண்ணக் கை சலித்து இருக்கிறான்.
His hand is weary with eating.
1242. உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.
When I call you to eat, you come to strike me.
1243. உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.
I will cut your uvula and smear it with chunam-lime.
1244. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
Property not enjoyed comes to nought.
1245. உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
One may wander over the whole country without eating, but one
may not go to a single house without dressing.
1246. உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.
One may go to nine houses without eating, but not to one without garments.
1247. உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
Mistleloe attached to edible greens.
1248. உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
Do not go to work without eating.
1249. உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
The Saiva Brahman will freely eat, the ferocious mendicant will show fight.
1250. உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.
Though you look at those who are eating, you may not look at those who are ploughing.
1251. உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
None ever perishes by speaking the truth, none flourishes by uttering
falsehood.
1252. உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.
As if the teeth also went out when the lips had gone to beg.
1253. உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ ?
Are there any who push into the mouth the plantain that is already between the lips?
1254. உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.
Protruding teeth and a hand given to thieving are bad.
1255. உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா ?
Will the cow not yield its milk because it has sore lips?
1256. உதட்டுத் துரும்பு ஊதப் போகாது ?
A small particle adhering to the lip cannot be removed by blowing.
1257. உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.
Divers disguises for the sake of the belly.
1258. உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே!
Thou art a useless vessel, a piece of brass, without sound!
1259. உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.
Like writing a chit to a thrifty merchant.
1260. உதவி செய்வார்க்கு இடையூறு ஏது?
What, accident can harm those who help others?
1261. உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.
A woman with a bustling gait came and destroyed what there was.
1262. உதாரிக்குப் பொன்னும் துரும்பு.
Even gold is a thing of nought to the generous.
1263. உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும் ?
Sympathy arises, does it not, from consanguinity?
1264. உதைத்த கால் புழுக்கிறபோது அல்லவோ புழுக்கும்?
Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?
1265. உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.
Before his kicking feet were eaten of worms his abdomen has ulcerated.
1266. உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.
He that washes for him who kicks him is a first-rate washerman.
1267. உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.
Contracts are needless as regards honest men and cheats.
The one needs no binding, and the other admits no obligations.
1268. உத்தமச்சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம்.
A faithful servant is more than a mother.
1269. உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
The good are exposed to no danger.
1270. உத்தியோகம் புருஷ லக்ஷணம்.
Exertion is a manly quality.
1271. உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.
Facilities suited to one's office.
1272. உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.
It is unfortunate when evil is returned for good.
1273. உபசரியாத வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.
It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility.
1274. உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?
What! are the civil to be requited by incivility!
1275. உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?
Will mere ceremonypass for money, will hunger be appeased otherwise than by eating?
1276. உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
Can that which may be realized by cunning be obtained by force ?
1277. உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.
A salt-cup and a deceitful heart will of themselves come to destruction.
1278. உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தானே உடையும்.
A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.
1279. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
Unsalted food is fit only for the rubbish heap.
1280. உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.
Remember through life those who have given you salt.
1281. உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.
Every thing from salt to camphor is required.
Said of things domestic and sacred.
1282. உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.
He who has eaten salt will drink water.
1283. உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி போல விழிக்கிறாய்.
Thou starest as the Brahmanee who had lost her salted mutton.
In her bewilderment she had no remedy because she dared not make known the loss of a thing she ought not to have had in her possession.
1284. உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை ?
Does the salt merchant know the price of camphor?
1285. உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.
If there be a supply of salt the world will be sustained.
1286. உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
Are salt and camphor used together?
1287. உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.
If the ocean were to become clouds, the world would be flooded.
1288. உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா ?
Must the root of cusa grass be added to sea-water to make it fragrant?
1289.உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
Excess of salt calls for water, excess of water requires salt.
1290. உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?
Did you spill the salt or the food ?
1291. உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.
Do not use salt both as food and condiment.
1292. உப்பைத் தொட்டுக்கொண்டு உரலை விழுங்கலாம்.
Using salt as a condiment you may swallow a mortar.
1293. உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
Nine things are required with salt, ten with pulse.
1294. உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ ?
Have you grown grey by age, or is your hair prematurely grey?
1295. உமியைக் குற்றிக் கை சலித்தது போல.
As the hand was wearied by beating husks in a mortar.
1296. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?
Though it may fly high, will a common bird become a hawk ?
1297. உயிரும் உடலும் போல.
Like soul and body.
1298. உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
It is more natural to die than to continue in life.
1299. உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?
Will he who would not turn to look at me when alive kiss me when dead?
1300. உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை
ஏறுவாளா?
Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?
1301. உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.
If one is alive, he may subsist by bartering salt.
1302. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
Will that which is in the mortar escape the pestle?
1303. உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா?
Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?
1304. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
The mortar is beaten at one end the drum at both.
1305. உரல் பஞ்சம் அறியுமா?
Does the rice mortar know what a famine is?
1306. உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டது போல.
As the mortar went to the tomtom with its complaints.
Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas thetomtom is beaten at both ends.
1307. உரு ஏறத் திரு ஏறும்.
Supernatural power increases according to the intensity of the incantations.
1308. உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.
O my loving aunt, come with me apart that we may embraceeach other and weep.
1309. உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.
The cats that has tasted nice things will leap on the swinging-tray.
1310. உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
When one deals fraudulently, even that which he has diminishes.
1311. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
Frauds and trickswill destroy reputation.
1312. உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
Tricks and frauds and threats.
1313. உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாது போல் இருக்கும்.
Like a beaded cat be appears as if he knew nothing.
1314. உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.
As a beaded cat gave divine instruction.
1315. உருப்படத் திருப்படும்.
As the figure is formed, beauty will become manjfest.
1316. உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.
Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.
1317. உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.
It is not for its form, but for its Sweet prattling that a parrot is esteemed.
1318. உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
A hero who does not sheath his sword.
1319: உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
To the world wisdom is folly, to wisdom the world is folly.
1320. உலகம் பலவிதம்.
The world has many forms.
1321. உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.
The whole country is at enmity with the thief who dwells there.
1322. உலக்கைப்பூசைக்கு அசையாத்து திருப்பாட்டுக்கு அசையுமா?
Will that which has resisted the strokes of the pestle shake at asacred chant?
1323. உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
The pestle by wearing away bas became the bundle of a chisel.
1324. உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.
The pestle grew and became a beam.
1325. உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
Nothing can be compared to the banquet of a miser.
1326. உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூடலாமா?
You way cover the mouth of a rice-pot, but can you cover the mouth of the country?
1327. உலோபிக்கு இரு செலவு.
The avaricious are subject to double expense.
1328. உல்லாசநடை மெலுக்குக்குக் கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.
1329. உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா?
If it be too cold to plough, why not put out the young plants?
1330. உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.
A quarter of a measure to one's friends, and sixteen measures to & religious mendicant.
1331. உழக்கிலே கிழக்கு மேற்கா?
Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?
1332. உழக்கிலே வழக்கு.
A dispute about an ullak.
See the preceding.
1333. உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?
Why give a measure of pepper, why drink the pepper water in a corner?
1334. உழவிற்கு ஏற்ற கொழு.
A plough share adapted to the tillage.
1335.உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
Nothing more advantageous than tillage.
1336. உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.
Cattle unfit for the plough are kept outside.
1337. உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?
If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?
1338. உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.
At the plough it will not go a single round, at foddering time it comes first.
1339. உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.
The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.
1340. உழுகிறதை விட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.
Like one who, to avoid ploughing, feigned to be demonized.
1341. உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.
As if one retired into the interior in the ploughing season, and returned with a sickle at the approach of harvest.
1342. உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் கட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
If a ploughing bullock go astray, it will be yoked wherever found.
1343. உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.
Like beating the ploughing ox with the yoke.
1344. உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.
As an ox licked a yoke of oxen when ploughing.
1345. உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.
The ox treats the unskilful ploughman as his brother-in-law.
1346. உழுதவனுக்கு ஊர்க்கணக்குப்பண்ணத் தெரியாது.
A ploughmanis unable to keep village accounts.
1347. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
When a ploughman balanceshis accounts, not even an ullak grain remains.
1348. உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
Can a.country be destroyed if there be no spy?
1349.உளவு இல்லாமல் களவு இல்லை.
NoSpy, no theft.
1350. உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.
He wanders alone after a pack-bull, through deepmudand incessantrain.
1351. உள்வீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.
To be in debt to an inmate and to have the itch in the palm of the hand are intolerable evils.
1352. உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத்திருப்பதிக்கு நடக்கிறாள்.
While her child licks the mortar, she goes on apilgrimage to Tirupati in expectation of another.
1353. உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல்.
Like putting rice-milk in the palm and licking the back of the hand.
1354. உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
Withwhat we have we may pretend to have that which we have not.
1355. உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம்.
It is said that the whole body breaks out into ulcers when the truth is told.
1356. உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
Sell what you have and buy what is really good.
1357. உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.
He is both an inmate and a thief.
1358. உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.
I will tie nine knots of hair in the palm of the hand.
1359. உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.
Like the Nelli berry (Phyllanthus simplex) in the palm of the hand.
Said of something unmistakably evident.
1360.உள்ளங்கையில் உரோமமுளைத்த தாயின், அறிவிலான் அடங்குவான்.
If it be that hair has sprung up in the palm of the hand, a fool may yield to discipline.
1361.உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம்.
When an inmate of a house joins the thief, stealing may be carriedon till day- break.
1362. உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.
If the truth be told, the blind woman will be greatly afflicted.
1363. உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.
It is said that he took to wife a blind girl having given away all he had.
1364.உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
The child of the wealthy takes salt with his food, the child of this
poor, sugar.
1365. உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
Our inmost thoughts are known to God.
1366.உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.
When the truth is told, every one takesit ill.
1367. உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
The evil-eyed destroyed even what there was.
1368. உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
He who speaks the truth is regarded as a wicked person by the country.
1369. உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?
Is association between an inmate and a thief to be tolerated?
1370. உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.
Internal distress is known to the inmates.
1371. உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.
A son-in-law of the same village and a ploughing buffalo are over wrought.
1372. உள்ளே கொட்டின தேளே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.
O thou scorpion thou hast thrust thy sting into me, listen, I will utter an incantation.
1373. உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
What! is itenmity at heart and friendship on the lips?
1374. உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.
Bowels burning within, lips shedding ripe fruit.
1375. உறவிலே நஞ்சு கலக்கிறதா ?
What! is poison to be mixed with friendship?
1376. உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?
What ! to feign friendship and to sting as a wasp?
1377. உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.
No doubt about friendship, but do not put your hand into my basket.
1378. உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.
Wealth may aid both in friendship and enmity.
1379. உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.
Nine measures for your friends and ten for the country.
1380. உறி அற மூளி நாய்க்கு வேட்டை
The snapping of the cord of the swinging-tray is like a hunting excursion to the cropped dog.
1381. உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.
As if one sought curds throughout the village when a supply was on his own tray.
1382. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
Why go about in quest of ghee when you have butter on your own tray?
1383. உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.
The money on the swinging-tray goes out and picks a quarrel in the public road.
Money is not infrequently put on a swinging tray in a cap or small basket.
1384. உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.
An affair firmly settled will never fail.
1385. உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
Is he a friend who helps not in adversity?
1386. உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
If encouraged, he will jump over the house top.
1387. உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.
A true friend is the nectar of life.
1388. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
When the truth is told, a breach between friends may be healed.
1389. உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.
This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.
1390. உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
If friends consume one's grain an ant hole, if strangers consume it, fame.
1391. உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.
He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i. e., all.
1392. உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?
Will friends help or will strangers ?
1393. உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே .
Pe, pe to you, and pe pe to your father also.
The following story is told about this proverb:-a debtor had two creditors. One of them said if you will pay me I will suggest an expedient for getting rid of the other creditor. He then instructed him when again applied to for payment, to feign madness, and to say Pé, Pé-a demon, a demon. The creditor not satisfied had him summoned before a Magistrate where he did as before. The Magistrate thinking the debtor mad, decided that he was not amenable to a court of justice. The other creditor then went to the debtor expecting to be paid according to promise. To his surprise the man said Pe,Pe, whereupon he said, do you deal with me also in this way, when, the debtor
replied as the proverb stands.
1394. உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.
I am under your protection, you are my patron.
1395. உன் சாமர்த்திலே குண்டு பாயாது.
Bullets will not fly by your strength.
1396. உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.
In your words there is neither salt nor acid.
1397. உன் முறுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.
Your petulance and fraud are all in my dress.
1398. உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.
Never trust one who has deceived you.
1399. உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.
O thou hunch-backed woman of Madras, how can I give thee up, hast thou not become crooked by bearing burdens ?
1400. ஊசல் ஆடியும் தன் நிலையில் நிற்கும்.
Though the swing oscillates, it will resume its proper centre.
1401. ஊசி ஒரு முழத்துணியையாவது கொடுக்கும் உற்றார் என்ன கொடுப்பார்?
A needle will give a cubit of cloth, what will your friends give ?
1402. ஊசி கொள்ளப் போய்த் துலாம் கணக்குப் பார்க்கிறதா?
When going to buy a needle, is the weight to be regarded?
1403. ஊசி கோக்கிறதற்கு ஊரில் துளாவாரம் ஏன்?
Why such a stir in the village about threading a needle ?
1404. ஊசிக்குக் கள்ளன் உடனே இருப்பான்.
Where there is a needle there will be a thief.
1405. ஊசிக்கு ஊசி எதிரேறிப் பாயுமா?
Can one needle penetrate another when brought point to point?
1406. ஊசி பொன்னானால் என்ன பெறும்?
Though made of gold what will a needle fetch?
1407. ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான் பூசனிக்காய் போகிறது தெரியாது.
He notes the loss of needles, but not that of pumpkins.
1408. ஊசிபோல மிடறும் தாழிபோல வயிறும்.
A throat like a needle, a belly like a caldron.
1409. ஊசி மலிவென்று சீமைக்குப் போகலாமா?
May one go to a foreign country to buy needles because they are there cheap?
1410. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
Though penance be performed by standing on the point of a needle, that which is predestined only will be obtained.
1411. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா ?
Can a camel pass through the eye of a needle ?
1412. ஊசியை ஊசிக்காந்தம் இழுக்கும், உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
A magnet attracts a needle, friendship, the good.
1413. ஊணன் கருமம் இழந்தான், உலுத்தன் பெயர் இழந்தான்.
The glutton failed in his object, and the miser lost his fame.
1414. ஊணினால் உறவு பூணினால் அழகு.
Friendship is promoted by entertainments, and beauty is set off by ornaments.
1415. ஊணினால் புத்தி பூணினால் சாதி.
Good sense is indicated by food, and rank by ornaments.
1416. ஊணுக்கு முந்தவேண்டும் கோளுக்குப் பிந்தவேண்டும்.
Be first at a feast, and the last to slender.
1417. ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
Neither food nor sleep.
1418. ஊண் அற்றபோதே உறவு அற்றுப்போம்.
When entertainment is discontinued, friendship ceases.
1419. ஊண்பாக்கு ஒழிய வீண்பாக்கு ஆகாது.
Betel is not good except after food.
1420. ஊத அறிந்தவன் வாதி உப்பு அறிந்தவன் யோகி.
He is an alchemist who knows how to infuse metals, and he is a Yogi who knows the quality of salt.
1421. ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு.
Even gold is a mere rush to the spendthrift.
1422. ஊதினாற் போம் உறிஞ்சினால் வரும்.
If blown it will fly off, if sucked it will go in.
1423. ஊதுகிற சங்கு ஊதினால் விடிகிறபோது விடிகிறது.
If you blow the conch, the day will break as it is wont.
1424. ஊத்தைவாயன் தேட நாற்றவாயன் தின்ன.
Acquired by the filthy mouthed and consumed by the fetid mouthed.
1425. ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா?
Will the dirt on one's body when collected form a linch-pin?
1426. ஊத்தைவாயன் தேடக் கர்ப்பூரவாயன் தின்ன.
Accumulated by the foul mouthed and consumed by a mouth fragrant with camphor.
1427. ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை பசிபோகத் தின்றவனும் இல்லை.
No one performs ablutions so as not to repeat them, nor does any one eat so as not, again to suffer hunger.
1428. ஊமை ஊரைக் கெடுக்கும் ஆமை கிணற்றைக் கெடுக்கும்.
The dumb destroys a village, a tortoise or turtle destroys a well.
1429. ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
A community is injured by the dumb, and a house by bandycootes.
1430. ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது.
It is like the dream of the dumb.
He is unable to relate his dream and therefore cannot obtain its interpretation.
1431. ஊமைக்கு உளறுவாயன் உற்பாதபிண்டம்.
The dumb regards a babbler as a wonder.
1432. ஊமையன் பேச்சு பழகின பேருக்குத் தெரியும்.
The speech-gesticulation of the dumb is known to those accustomed to it.
1433. ஊமையாயிருந்தால் செவிடும் உண்டு.
If one is dumb he is deaf also.
1434. ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற்போல.
As the dumb on meeting the dumb scratch their noses.
If a person on meeting a dumb man scratches his own nose the dumb man becomes very angry.
1435. ஊமையும் அல்ல செவிடும் அல்ல.
Neither dumb nor deaf.
1436. ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
No one at enmity with the whole community ever preserved his life.
1437. ஊரார் கணக்கு உடையவன் பிடரியிலே.
The liabilities of a village are on the neck of its chief.
1438. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
He flies on the property of others like a demon.
1439. ஊரார் எருமை பால் கறக்கிறது நீயும் ஊட்டு நானும் உண்ணுகிறேன்.
The buffalo of the village is in milk, you suck and I will also suck.
1440. ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தனம்.
Marriage ceremonies in the village and sandal paste on the breast.
1441. ஊரில் ஒருவனே தோழன் ஆரும் அற்றதே தாரம்.
Have one only of the community as a friend, and a woman without ties as a wife.
1442. ஊரில் எளியாரை வண்ணான் அறிவான் சாதிப்பொன் பூண்டாரைத் தட்டான் அறிவான்.
The washerman knows the poor of a village, the goldsmith knows whose ornaments are made of fine gold.
1443. ஊருக்கெல்லாம் ஒரு வழி உனக்கு ஒரு வழியா ?
While all the people of the village have one road in common, do you expect one for yourself ?
1444. ஊருக்குப் பால் வார்த்து உண்ணுகிறாயா உடம்புக்குப் பால்வார்த்து உண்ணுகிறாயா?
Do you take milk on account of the community or to promote your own health?
1445. ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி கூழ்ப்பானையில் விழுந்தாற்போல.
As if a lizard, the oracle of the whole village, should fall into a pot of gruel.
Spoken reproachfully, when a person remarkable either by position or profession, has done something injurious to his reputation.
The lizard-பல்லி a newt-here referred to, is seen on the walls of houses in India and Ceylon, and its chirp may be frequently heard. Its voice is never disregarded since it may bear a message of great consequence to the family or individual concerned. A small book called the Shaster of the Lizard contains all needed information regarding its chirping. On hearing it the facts to be observed are the point of the compass, the hour of the day &c. These being known the party has recourse to his formula and ascertains whether the omen is auspicious or not. The premonitions of this little domestic monitor derive their significance from the character of the preternatural regent who may at the time preside over the region indicated by the chirp. Thus it appears that the shaster of the domestic lizard is based on the dogmas of Astrology.
1446. ஊருக்கு ஆகாதவன் வீட்டுக்கும் ஆகான்.
He who is useless abroad is useless at home.
1447. ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆகுமா?
Is a child injurious to the community, of any use to its mother?
1448. ஊருக்கு ஓமல் வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.
Fame abroad and famine at home.
1449. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோயில் ஆண்டி.
He who was too feeble for the service of the community became a devotee in the temple of Genesha.
In Sanskrit a similar proverb exists : “The dancing girl being old has become a devotee”. It is a case not of breaking away from sinful habits, but the power of sinning is gone.
1450. ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும்.
If one is hated by the whole community he will be rooted out.
1451. ஊரெங்கும் பேர் வீடு பட்டினி.
Fame throughout the country, at home starvation.
1452. ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் புரண்டு அழுதால் வருமா?
Can you gain anything by wallowing and weeping because the village is prosperous?
1453. ஊரெல்லாம் சுற்றி எனக்கு என்ன புத்தி என்கிறான்.
Having wandered all over the country he says, what advice do you give.
1454. ஊரெல்லாம் உற்றார் அந்திபட்டால் பொதி சந்தியிலே.
He has friends in every part of the village, yet his bundle is left in the public road after sun-set.
1455. ஊரென்று இருந்தால் பறைச்சேரியும் இருக்கும்.
Wherever there is a village there is a Paracheri.
A Parachery is a hamlet of Pariahs—non caste Natives. Pariahs are employed in the lowest offices, as beaters of the tomtom or Native drum on festive and mournful occasions. They are employed to publish proclamations &c, as a bell-man in Europe.
1456. ஊரை உழக்கால் அளக்கிறாள் நாட்டை நாழியால் அளக்கிறாள்.
She measures the village with an ulak and the province with a nali.
The உழக்கு is a quarter of a படி. உழக்காழாக்கு three eighth of a measure. A நாழி is a measure, of which there are eight in aமரக்கால் , marcal.
1457. ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.
When told to visit the village, he goes to the Pariah quarter.
1458. ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
Saturn that seized the village seized also Ganesha. One thing happens to all.
1459. ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை, நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை.
Though one goes round the village he finds no help, though he goes round the country no real aid can be got.
1460. ஊரோட ஒக்க ஓடு நாடோட நடு ஓடு.
If the people of the village flee, join them, if the whole country flee, flee in their midst.
1461. ஊரோச்சம் வீடு பட்டினி.
Distinguished abroad, starving at home.
1462. ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
When the ruler of a village forcibly takes away another man's wife, to whom is be to make his complaint ?
1463. ஊர் இருக்கிறது ஓடு இருக்கிறது.
The village still exists and also the alms-dishes.
1464. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
If the village be divided into two parties, it will be advantageous to the commedians.
1465. ஊர் இளப்பம் வண்ணானுக்குத் தெரியும்.
That which is bad or exceptionable in a village is known to its washerman.
The clothes of all pass through his hands, he has therefore the opportunity of inferring much from their condition.
1466. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
There is a village for alms, and a tank for water.
1467. ஊர் ஓரத்திற் கொல்லை உழுதவனுக்குப் பயிர் இல்லை.
He that cultivates a field on the outskirts of a village loses its produce.
1468. ஊர் கூடிச் செக்குத் தள்ளினாற்போல.
As if a whole village united to put an oil-press in motion.
1469. ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கிறதா?
What, discharge Rama's arrow at a sparrow ?
Why lavish means so preciouson objectsso mean?
1470. ஊர்க்கோழியும் நாட்டுக்கோழியும் கூடி உரலிற் புழுங்கல் அரிசிக்குச் சேதம். When the poultry of the village and the poultry of the country at large come together, the rice in the mortar is spoiled.
1471. ஊர் நஷ்டம் ஊரிலே தேர் நஷ்டம் தெருவிலே.
Loss occurring in a village affects the community, injury occasioned by a temple car is apparent in the street.
1472. ஊர் நல்லதோ வாய் நல்லதோ?
Is the village good or your description?
1473. ஊர்ப்பிள்ளையை முத்தமிட்டால், உதட்டுக்குக் கேடு.
To kiss the child of another is bad for the lips.
1474. ஊர் வாயைப் படலிட்டு மூடலாமா?
Is it possible to shut the mouth of a village by a hurdle?
1475. ஊர் வாழ்ந்தால் ஓட்டுப்பிச்சைக்கும் வழி இருக்கும்.
If the village be prosperous—there will be an opening for alms-dishes.
1476. ஊழிக்காய்ச்சல் அதிகம் ஆனால் சூனியக்காரன் கொள்ளை.
When epidemic fever prevails, sorcerers abound.
1477. ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
Though the world come to an end do not remit your efforts.
1478. ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ ?
Is there any power greater than destiny?
1479.ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ளவேண்டும்.
Destiny and exertion must go together.
1480. ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.
The staff I gave for his support breaks the crown of my head.
1481. எங்களால் ஒன்றும் இல்லை எல்லாம் உங்கள் கர்மம்.
Nothing lies in our might, all must be done by you.
1482.எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.
Choultries everywhere, but no place of accommodation.
1483.எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.
No matter where hit, adog when struck, lifts up his leg.
1484. எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.
Wherever there is smoke there is fire.
1485. எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.
Like belching after eating leavings.
1486. எச்சிலைத் தின்று பசி தீருமா ?
Can hunger be appeased by eating leavings?
1487. எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டிஆதரவு மண்ணாங்கட்டிக்கு
எச்சிற்கல்லை ஆதரவு.
A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.
1488.எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
Spitting about will drive one to beggary, and ceremonial impurity will scatter a family.
1489. எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.
He will not scare away a crow with an unwashen hand.
1490. எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபேர் சாப்பிட்டதென்று கணக்குப் பார்க்கச் சொன்னார்களா?
Did they order the leavings to be removed, or an account to be taken of the number who had eaten?
1491. எச்சில் தின்றாலும் வயிறு நிறையத் தின்ன வேண்டும், ஏச்சுக்கேட்டாலும் பொழுது விடிகிற மட்டும் கேட்கவேண்டும்.
If you eat offal eat heartily, if you listen to abusive language, listen till day-break.
1492. எச்சிலிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல.
As dogs impatiently wait for leaf-plates.
1493. எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.
Wash off the refuse and pour the water on your clean person.
Spoken in derision of affected cleanliness.
1494. எடுக்க முன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.
It is said that the ass fell down with a broken hip as soon as it was loaded.
1495. எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.
It is said that the wealthy matron, whom one had gone to take in marriage, fell down, her waist having broken.
1496. எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும்சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.
If you steal, take away a golden casket;if you are impaled, endure the punishment on an ornamented stake.
1497. எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்க வேண்டும்?
A burden must be first carried, must it not, before it is put down?
1498. எடுத்து ஆளாத பொருள் உதவாது.
Things unused, spoil.
1499. எடுத்த அடி மடங்குமா?
Will the lifted foot be drawn back?
1500. எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும் ?
How long can an ox plough that requires to be lifted up?
1501. எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.
His occupation is begging, his conveyance a palanquin.
1502. எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.
Where many are in attendance to lift up and support, there will be weariness and fainting.
1503. எடுப்பார் கைக் குழந்தை.
A baby in the arms.
1504. எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.
There are who take up the battle axe, and there are who stop tigers, but givers are scarce.
1505. எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?
Will a worn out plough last long?
1506. எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டது போல.
As one gazed and gaped at a fruit beyond his reach.
1507. எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூதங்களுக்கு.
Flowers beyond reach are sacred to God, but those within reach are for themselves.
1508. எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?
What! is it to reach up and cuff, and cower and cling to the feet ?
1509. எட்டி பழுத்து என்ன , ஈயாதார் வாழ்ந்து என்ன ?
What if the fruit of the etti tree (strychnos nux vomica) ripens ; of what use is the prosperity of the niggardly?
1510. எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.
Though a poisonous tree, it should be green.
1511. எட்டி மரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.
Cut not down the tree you planted though it is the (strychnosnux vomica.)
I have observed among many natives a remarkable disinclination, to cut down trees: though not rational creatures they are said to have one sense.அறிவு.
1512. எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா ?
Although you may nourish an etti tree by pouring milk at its root, will it become sweet?
1513. எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?
Will an etti tree bear graft-mangoes?
1514. எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.
Even the silk-cotton tree growing by the etti will also be consumed by fire.
Evil association brings destruction.
1515. எட்டினால், குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப் பிடிக்கிறது.
If it can be reached, seizing by the kudumi knot of hair, if not, clinging to the feet.
1516.எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா ?
Can you strike your head against a dwarf wall when peeping on tiptoe?
1517.எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே
குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.
There are who peep on tiptoe, there arewho peep on a ladder, there are those who peep over a dwarf wall crouching.
1518. எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பக்ஷம்.
Though an etti tree, he who planted it will like it.
1519. எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
What, is an etti fruit to be desired?
1520. எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.
Eight old men conjointly took to wife a bald-headed old woman.
1521. எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
Eight chickens are not sufficient for a chatty of curry.
1522. எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.
A buffalo eight years old is at a loss to find its way to the tank.
1523. எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.
My eight-span body is reduced to one span.
1524. எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.
There is not a grain of modesty in his eight-span body.
1525. எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.
The head is the chief part of the eight-span body.
1526. எண்ணம் எல்லாம் பொய் எமன் ஓலை மெய்.
All our thoughts are vain, the ola of Yama is real.
Ola is the name of the Palmyra palm leaf. On this material, books, accounts, correspondence &c., are written with an iron pen. Several of the Tamil books I first read were written on ola. Yama, the regent of the dead, is graphically represented as stretching out his hand to deliver the order for departure.
1527. எண்ண ம் எல்லாம் பொய் ஏளிதம் மெய்.
Expectations are all unreal, a despicable condition is a reality.
1528. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தியே.
No matter how skilled a woman may be in numbers and letters, her judgment will be second rate.
Many modern Hindus of the day(1873, though themselves earnest about University honors, evince but very little interest regarding the intellectual and moral culture of their daughters. The Rev R. M. Banerjee, a learned brahman of Calcutta, very recently gave a sad account of the disabilities to which native ladies in that city are subject.
1529. எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள,
தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.
Whilst horses of the first blood liek the ground, the miserable tattoo is neighing for gram.
1530. எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.
As an incautions king went to hunt wild hog.
1531. எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.
All imaginations may be false, that which is written is true, certain.
1532. எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.
1533. எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.
He who acts after due consideration is a chitty a superior man, he who acts without consideration is a matti a fool.
1534.எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.
Trade requires forethought, agriculture requires none.
1535. எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
What was our expectation, and what led you to call me elder brother?
1536. எண்ணித் துணிவது கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
An action undertaken after due consideration may prove successful, consideration after action may end in disgrace.
1537. எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.
A brilliant crowd for an illustrious family.
1538. எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ?
It is questionable which will be first consumed, the oil or the wick.
1539. எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?
Although oil may be washed off, can the writing of Brahma be rubbed off?
1540. எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்த பாடு இல்லை.
As regards the child's recovery, nothing has resulted but an expenditure of oil.
1541. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல.
Like ants round a pot of oil.
1542. எண்ணெய்ப் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ ?
In the beauty attributable to oil, or is it real ?
1543. எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.
He who excels in figures excels in strength.
1544. எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.
If you speak a word, I will place before you an empty ladle.
1545. எதார்த்தவாதி வெகு சன விரோதி.
He who is truthful may be the enemy of many.
1546. எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.
If the opposite party be inferior in position, the anger of his enemy will rage like a tempest.
1547. எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?
What, is it to yield to an opponent ?
1548. எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
The house opposite is the washerman's, and my next door neighbour is a barber.
1549. எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணி செய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
The opposite house is the washerman's, the adjoining house is the goldsmith's, and the next to mine is that of the barber.
1550. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
When the opposed is poor, the anger of his opponent ends in cruelty.
1551. எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு .
No matter how any thing may go, each should mind his own business.
1552. எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
No matter how frequently it may be polished, the bad odour of brass will not leave it.
1553. எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.
Though iron may be heated never so much, it will not become gold.
1554. எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா?
However poor one may be, will he not possess gold, at least of the value of alemon ?
1555. எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.
How may we subsist ? if united we may subsist.
1556. எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுகிறது.
Bringing forth a child without cost, and rocking it in a borrowed cradle.
1557. எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
An ocean that knows no ebb anywhere at any time.
1558. எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.
The more an instrument is whetted, the sharper it becomes.
1559. எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.
Though the leaves of other trees may fall off, those of the date-palm will not.
1560. எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.
It is not known what species of snake may be found in any particular hole.
1561. எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.
Whatever else may fail the words, marks, of low breeding will not fail.
1562. எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான்.
His eye is always upon her.
1563. எமனுக்கு வழிகாட்டுவான்.
He can pilot Yama, the regent of the dead.
1564. எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?
Will a demon seize the child of Yama, the regent of the dead?
1565. எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?
What can the arrow do if discharged by a skilful archer ?
1566. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
Why blame the arrow, letting the archer go free?
1567. எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
As a burning firebrand was pushed into the hearth.
1568. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
Which of the burning firebrands is the best ?
1569. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
If the burning fuel be removed, the bubbling will cease.
1570. எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா?
May a burning fire be extinguished by pouring oil on it ?
1571. எரிகிற நெருப்பிலே நெய் விட்டது போல.
As if ghee were poured on a flaming fire.
1572. எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.
Like seeking an auspicious day, to dig a well in order to quench the flames of a house on fire.
1573. எரிகிற வீட்டிற் பிடுங்குகிறது லாபம்.
Whatever is abstracted from a burning house is a gain.
1574. எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.
Ashes are medicine for the sores of a bull.
1575. எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.
The buffalo suffers from the smarting of its sores, and the crow that picks them suffers from the smarting of hunger.
1576. எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.
If an-ox grow fat, it will not remain in a stall; if a Pariah becomes rich, he will not sit on a mat.
1577. எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.
The ox feels the pain, the crow its hunger.
1578. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
Is a crow aware what pain it occasions when picking the sore of an ox?
1579. எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.
If it be reported, that the bull has a calf, he will say, O, tie it up in the stall.
1580. எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.
Giving eight gall nuts to him who has lost a ball, and eight to a woman in the first stage of pregnancy.
1581. எருது வாங்குமுன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.
You bid me plough the dry land before the ox is bought.
1582. எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறதா ?
Is its shed put up where the bull may think fit ?
1583. எருது கோபங்கொண்டு பரதேசம் போனது போல.
As a bull went away in a rage to a foreign country.
1584. எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா?
Dost thou eat grass screened by a bull ?
1585. எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா?
Is its shed to be burnt down because the ox is sick ?
1586. எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது?
What matters the ruggedness of the road if the bullocks and bandy a country cart-hold together?
1587. எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய். Though it is a male buffalo, you ask me if there be not a drop of milk for the child.
1588. எருமை வாங்குமுன் நெய் விலை கூறுகிறாய்.
You publish the price of ghee before buying a buffalo.
1589. எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.
It will rain seventy times before a buffalo's horns will be wet.
1590. எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா?
Will the dung of the buffalo serve for sacrificial purposes ?
1591. எருமை மாட்டின் மேல் மழை பெய்ததுபோல.
As it rained on a buffalo.
1592. எருமை மாட்டின் மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.
Brands on a buffalo however numerous will scarcely appear, but a single brand on a cow will be visible.
1593. எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும்?
We may milk may we not, provided there be a buffalo ?
1594. எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?
Will a goat yield more milk than a buffalo ?
1595. எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.
As he who went in search of manure, seized the hand of a maiden.
1596. எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்தது போல.
As he who went to pick up cow-dung, gathered lemons.
1597. எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.
He says that the rat goes naked.
1598. எலி அழுதால் பூனை விடுமா?
Will the cat leave its hold on the crying of the rat ?
1599. எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.
Although the rat may cry and lament, the cat will not relinquish its hold.
1600. எலி அறுக்கும் தூக்கமாட்டாது.
The rat nibbles the grain, but it does not carry off the basket.
1601. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
Where there is a rat, there will also be a snake.
1602. எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல.
Like burning down the house for fear of rats.
1603. எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.
The death-struggle of a rat is the sport of a cat.
1604. எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.
The snake's fear of him who catches it, is favourable to the rat, when the strong fear the king, the weak are benefited.
1605. எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறது தான்.
The business of the rat is to burrow in the wall.
1606. என் தலையிலே கோடாலி விழுந்தது போல.
As an axe fell on the head of the rat.
1607. எலி தலையில் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.
As if the tower of the temple should fall on the head of a rat.
1608. எலி பூனையை வெல்லுமா?
Can a rat overcome a cat?
1609. எலி பூனைக்குச் சலாம் பண்ணுவது போல.
As a rat makes salaam to a cat.
1610. எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன ?
What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield ?
1611. எலியும் பூனையும் போல இருக்கிறது.
Living like a rat and a cat.
1612. எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.
As the rat and the cat united in sport.
1613. எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா ?
Will the cat be alarmed at the sight of a rat ?
1614. எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
Will a cat be greatly alarmed at the sight of a rat?
1615. எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.
A separate hole is to be preferred though it be a rat-hole.
One's own cot is desirable however humble.
1616. எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.
A rat makes the hole, a snake inhabits it.
1617. எலிவேட்டைக்குத் தவில் அடிப்பாரா?
Do they beat a tomtom when hunting rats?
1618. எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறது போல.
Like infusing acidity into a lemon.
1619. எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற்போல.
Like manuring a lemon tree.
1620. எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச் சோறு ஏன்?
Why give pulse to a dog that gnaws bones ?
1621. எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?
Can a dog that gnaws bones bite iron?
1622. எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.
A boneless tongue may say any thing.
1623. எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.
No one knows everything, nor is any one ignorant of everything.
1624. எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.
Everything wanted is in the box, but there is no chatty in which to macerate the vegetable curry.
1625. எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.
On all heads there are eight letters, on mine there are ten.
1626. எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.
It is said thut the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.
1627. எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.
It is in the evening that all the mosquitos come.
1628. எல்லாருக்கும் சனி துரும்பு போல, எனக்குச் சனி மலைபோல.
Saturn who is a more straw to all other men, to me is as a mountain.
1629. எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.
All other men are areca-nuts, but this man is a grove of areca
trees.
1630. எல்லாரும் தடுக்கின் கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைவான்.
If all can hide themselves under a small mat, he can conceal himself under the ornamental drawing on the floor.
The கோலம் here mentioned is a floor ornament very commonly formed at the entrance of a native house : the form is circular. These ornaments are renewed every morning. They contain various devices. In some a temple car as delineated, in others trees, birds, flowers. They are generally striking because the combinations indicate considerable skill. It may be that they are connected with the prevalent ideas regarding the evil eye.
1631. எல்லாத் தாட்டோட்டும் குல்லாவுக்குள்ளே இருக்கிறது.
All the skill in steering centres in the out-rigger.
Out-rigger boats or canoes are common on the south western coast of Ceylon. They are very swift and most safe. In 1848 when at Colombo duty called me daily to a largo ship at the time out in tho offing anchored in seven fathoms of water. On the occasion under notice I went on board in an ordinary Cingalese out-rigger canoe. In the evening after having completed the berths, for my two daughters who were going home for education, I betook myself to the boat, and soon after we got clear of the ship the boat was struck in the stern, filled, and went down. When I emerged from the waves I found myself near one of the two brackets of the out-rigger. The canoe was submerged but could not sink lower than the ends of the brackets tied to her side. The out-rigger at the other end of the brackets was floating on the surface of the sea, the canoe being suspended by it like a pair of scales from a beam. Aided by one of those brackets, which I pressed to my bosom, and a Chubb's Palanquin box, I gained the rocks soon after sunset and escaped to land.
1632. எல்லா ஓட்டும் குல்லாவிலே.
All our progress depends on the outrigger.
1633. எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?
Are all men good men, are all stones rubies ?
1634. எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.
He can do all things, but when dead he cannot resuscitate himself.
1635. எல்லாரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.
All have embarked, my uncle is about to receive a golden mark of
distinction.
Spoken of aspirations beyond one's merits.
1636. எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
On mounting a jadod horse that all had ridden, the astrologer slipped and fell down.
1637. எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?
What, is one who knows all things, to put his hand into filthy water?
1638. எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.
Though the landmarks be destroyed, they will not remit the ground-rent.
1639. எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
Will any one takemedicine to poison, himself?
1640. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
Will crying availfor money lent of which no account has been kept?
1641. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.
1642. எழுதிய விதி அழுதால் தீருமா?
Will destiny be averted by weeping ?
1643. எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.
Writing is important, reading correctly what is written, is more so.
1644. எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.
To be able to write is no great matter; to compose harmoniously is great.
1645. எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.
The washerman who had learnt his letters threw away his ola.
1646. எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.
The king who had learnt his letters tore and threw away his ola.
It would appear that the two preceding proverbs relate to personswho suppose that ability to read supercedes all records.
1647. எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.
The curmum who neglects his accounts, and the dancing girl who is careless about her dress, will come to grief.
1648. எழுந்திருப்பான் கால் இல்லை.
He would rise, but he has no feet.
1649. எழுபது சென்றாலும் பறை ஏவினாற்றான் செய்யும்.
Though seventy years old, a Pariah will do nothing unless he is prompted.
1650. எழுபது பேரைக் கொன்ற படு நீலி .
A cruel Nili-womam - who killed seventy persons.
1651. எழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை.
The mother of Vairavi is the patroness of the poor and of boats.
1652. எளியவள் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும்.
Though the child of a poor woman, the accustomed rites must beperformed.
1653. எளியவனை அடித்துப் புளியங்காய் பறித்தாற்போல.
Like beating a poor man, and plucking his tamarind fruit.
1654. எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது.
It is better to be the slave of the wealthy, than the wife of the indigent.
1655. எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.
Seeing that the man is poor, he deceives him by fair words.
1656. எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.
The wife of a poor man is sister-in-law to all.
1657. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
If the powerful oppress the weak, God will punish them in return.
1658. எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.
Inferiors if opposed become mortal enemies.
1659. எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.
Magnifying a rape seed into a mountain.
1660. எள்ளுக்காய் பிளந்த விவகாரம்.
A dispute as easy to decide as the splitting of a rape seed.
1661. எள்ளுக்காய் பிளந்தாற்போலப் பேசவேண்டும்.
One ought to speak as evenly as a rape-pod splits.
1662. எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.
Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.
1663. எள்ளுக்குப் புள்ளி வரும் எச்சிற்கு எறும்பு வரும்.
Birds are attracted by rape seed, ants by leavings.
1664. எள்ளுக்குள் எண்ணெய் போல.
As oil in sessamum seed.
1665. எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருக்கும்.
Everywhere present as oil throughout the sesamum seed.
1666. எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
Ploughing seven times for sesamum seed, once for gram.
1667. எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது?
Sesamum seed is dried for oil; but why dry rat-dung ?
1668. எள்ளும் பச்சை அரிசியும் போல இருக்கவேண்டும்.
It must be as sesamum seed and raw rice.
1669. எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும்.
Sesamum seed and sugarcane yield a profit when pressed.
1670. எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை வெள்ளாளர் கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.
O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough once for horse-gram and thus cultivate the ground.
1671. எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.
Throwing at a hare and hitting a bush.
1672. எறிவானேன் சொறிவானேன்?
Why throw, why scratch?
Why provoke a nuisance?
1673. எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
Canst thou not bear the bite of an ant?
1674. எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண்அதன் அளவுக்குச் சிறிது.
The eyes of an ant are large in proportion to its size, the eyes of an elephant are small for its size.
1675. எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்.
A cocoanut shell-full of water is an ocean to an ant.
1676. எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல.
As a snake occupies an ant-hole.
1677. எறும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.
Even an ant is eight spans long as measured by its own hand.
1678. எறும்பு ஊரக் கல் தேயும்.
By the continual creeping of ants a stone will wear away.
1679. எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.
The urine of the buffalo is as a perfect deluge in the eye of an ant.
1680. எறும்பு ஊரக் கல் குழியும்.
By the continual creeping of ants a stone will become hollow.
1681. எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.
If room be given sufficient for ants to creep in, he will drivea loaded bullock that way.
1682. எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?
You stand armed with a club to watch that which may be carried away by ants, are you unable to see when a large pumpkin hasbeen taken away?
1683. எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.
It is known to the eighty thousand millions of creatures from an ant upwards.
1684. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.
If ants carry their eggs to a higher place, it will rain.
1685. எனக்கு அட்டமத்துச் சனி.
With me Saturn is in the eighth sign.
1686. எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
I have neither food nor sleep.
1687. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின.
My days are like the dream of the dumb.
1688. என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.
It cuts my liver with a sharp sickle.
1689. என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய்ப் போயிற்று.
My affairs are like Nandan's camp.
The name of a shoemaker who is reputed to have reigned as a kingfor three hours, and to have issued leather coin.
1690. என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.
It will be knownat day-break whether my family or your's has
been ruined.
1691. என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.
Eating bones herself, she has brought up her children on flesh.
1692. என் மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன்தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.
My daughter bathes once a week, my son-in-law bathes at depaveli.
1693. என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.
Superior oil is said tobe Margosa oil to my son-in-law.
1694. என் முகத்திற் கரிபூசினாயே.
Thou hast smeared my face with charcoal.
1695. என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.
The skin of my back will serve you for shoes.
1696. என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
When you come to my house, what do you bring, when I come to
yours, what do you give ?
1697. என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.
It is better tocome to the front at once than to be always concealed.
1698. என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.
No matter how long one may live, the day of death will come.
1699. என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.
Say what you may, I will not change my mind.
1700. என்னடா தாதா புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.
O! mendicant, the thirty days of September are all days of receipt.
1701. என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.
You fellow, you affect to speak in an elegant style.
1702. என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
No instruction however explicit or agreeable will enter the ear of an ass.
1703. என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.
What is the deception practised by the dairy maid ? It is mixingwater with butter-milk.
1704. என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப்போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.
If one say, fie on thee, thou art destroying thyself, he replies, I will take a bet that I will exceed my former course.
1705. என்ன தின்றாலும் அதற்கு மேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.
No matter what may be eaten; if four dates be taken afterwards,the whole will be digested.
1706. என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.
Since the woman came to my house, even gold has become a common thing.
1707. என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.
The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.
1708. என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.
On seeing me, thou hidest among the hemp, and on seeing my wife, thou hidest in a chatty.
1709. ஏகாதசிக்கு மா இடித்தாற்போல.
Like pounding flour for Ekadasi.
Ekadasi, the eleventh of December which is observed by the Hindus as a fast and therefore the preparation of food is not required. Said of something irrelevant.
1710. ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தில்
O fellow, put the pretended observer of Ekadasi on the car.
1711. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
As a Washerman's vehicle (a donkey) carries its load.
1712. ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
He is indeed clever in abuse and empty talk.
1713. ஏடா கூடக்காரனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.
If it be asked where is the way for the stubborn, it is replied, on the head of the way faring man.
1714. ஏடு அறியாதான் பீடு பெறாதான்.
The ignorant man is not held in estimation.
1715. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
Will the word suraikai a gourd serve as a curry?
1716. ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?
Is a crooked pole fit for a ladder?
1717. ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?
Do you cut a crooked stick for a litter?
1718. ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.
You fellow! why did you go up the Cocoanut tree! when thus addressed, he replied, I went to get grass for the calf.
1719. ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் தான்.
O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.
1720. ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய்? என் அவசரம் உனக்குத் தெரியுமா ?
What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are ?
1721. ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.
Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.
1722. ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?
Why, you fellow, do you untie the knot? Do you know how hungryI am ?
1723. ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே.
Well, my girl, have you cut the grass? she replied, it was tied up before one could snap his fingers.
1724. ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.
Why, my girl, do you faint? I have not had rice enough.
1725. ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
Why my girl do you squat ? For want of sufficient rice.
1726. ஏது பிரியம் ? இல்லாதது பிரியம்.
What do you wish? That which I have not.
1727. ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
Why two wives to one who has nothing?
1728. ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
None to enquire, none to help.
1729. ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போடவேண்டும்.
Before the bund bursts, it must be strengthened.
1730. ஏரி நிறைந்தால் கரை கசியும்.
If the tank be full, its bank will be moist.
1731. ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
When the tank overflows, the flood will spread all around.
1732. ஏரி மிதந்தால் இடையனை மதியாது.
If the hunch of the ox grow high, he will not fear his keeper.
1733. ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.
It is difficult to confine the water of a tank, but easy to break the bund.
1734. ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா ?
O divine sun, behold the water of the tank?
1735. ஏரியோடு பகை கொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?
Do you abstain from ablution because you are dissatisfied with the tank?
1736. ஏர் உழுகிற பிள்ளை இளைத்து போனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
Never mind, should the youth at the plough become lean, take care of the girl who has received the nuptial presents.
1737. ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்.
Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.
1738. ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
The sin which affected us is already removed.
1739. ஏலேலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.
Elelam, Elelam, the buffalo dung is drying.
The sound elelam is uttered by boatmen and others on the Coromandel coast when palling together, as savas is, by boatmen on the Hoogly: Some derive it from வலிக்கிறது.
1740. ஏலேலசிங்கன் பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.
The property of Elelasingam, though it pass over seven seas, will return.
Elelasingam a wealthy merchant, the disciple of Tiruvallurar.
1741. ஏவற் பேய் கூரையைப் பிடுங்கும்.
The excited demon will take off the thatch.
1742. ஏவா மக்கள் மூவா மருந்து.
Children who do their duty unprompted are as a life-preserving remedy.
1743. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
To the taskmaster a word, to the servant a burden on the head.
1744. ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.
The tears of the poor are as sharp swords.
1745. ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறியவேண்டுமா?
Because the poor man uses betel-nut, is it to be made known at eight houses?
1746. ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?
Will the speech of the poor go up to the palace ?
1747. ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
God is the helper of the helpless child.
1748. ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
Every one is a helper to a helpless child.
1749. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
Even a beast without horns will attack the poor.
1750. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
When told to mount, the bull is angry, when told to dismount, the lame man is dissatisfied.
1751. ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.
Innumerable mangoes on a tree no one can climb.
1752. ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?
What ! remove the ladder after allowing one to mount ?
1753. ஏறின கொம்பால் இறங்க வேண்டும்.
One must come down on the branch by which he ascended.
1754. ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.
A plough bull is superior to a saddle horse.
1755. ஏறு நெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
It is a bad omen to meet one with a high forehead or curly hair.
1756. ஏறுமாறாய்ப் பேசுகிறதா?
What, is it to speak at random?
1757. ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும். Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.
1758. ஏற்கவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
The mother-in-law is frightfully ugly already, and the flour on her face makes her more so.
1759. ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்கவேண்டும்.
Approaching evils should be provided against in due time.
1760. ஏற்றக்கோலுக்குப் பிடித்தால் அரிவாட்பிடிக்கு வரும்.
If you measure sufficient for a well-bucket pole, it may suffice for the handle of a sickle.
1761. ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?
Is the song of the picotta responsive?
1762. ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற்சவுக்கிட்டேன் !
Cake! why so insipid? Because I lack a cash-worth of sugar.
1763. ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.
He is a broken grain fallen out of five kalams.
One of a large number of insignificant persons.
1764. ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.
Though you may go fifty miles, you will not fetch half a cash.
1765. ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.
Although it may go fifty miles, an agappai will fetch but half a cash.
1766. ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.
Though one goes fifty miles off, an acquaintance is needed.
1767. ஐங்காதம் போனாலும், தன் பாவம் தன்னோடே.
Though he may go fifty miles, his own sin will still cleave to him.
1768. ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம்பேய்ச்சுரைக்காய்க்கு.
Though cooked with five ingredients, the wild gourd will not lose its odour.
1769. ஐதது நெல், அடர்ந்த து சுற்றம்.
In rice plants, distance is required, in kindred, closeness.
1770. ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
The price of five chits a small bird is two cash.
1771. ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.
In October drizzling, in November heavy rain.
1772. ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும்.
In the sunshine of October a skin dries the day it is stript off.
1773. ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.
If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.
1774. ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
A buffalo in the month of October and a Vaishnava brahman in December are alike.
1775. ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்கு மேல் ஒன்றுமில்லை.
At fifty discrimination, at sixty moderation, after sixty no distinguishing characteristic.
1776. ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயதுப் பெண்ணா ?
Is a girl of five fit to be the wife to a man of fifty ?
1777. ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.
Even the Aiyangar may communicate contagious disease.
1778. ஐயப்பட்டால் பைய நட.
If in doubt, advance slowly.
1779. ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.
Like the story of one who rode Aiyanar's horse.
1780. ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.
To do a doubtful thing is bad.
1781. ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
Though reduced to beggary, learn to be wise.
1782. ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.
T'hose who are entitled to be called brahmans are holy.
1783. ஐயர் வருகிறவரையில் அமாவாசியை நிற்குமா ?
Will the new moon await the brahman's arrival ?
1784. ஐயர் கதிர் போல அம்மாள் குதிர் போல.
The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.
1785. ஐயனார் படையிற் குயவனார் பட்டது போல.
As the potter perished in the army of Aiyanar.
1786 ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
The bricks of Aiyanar's temple are so many gods.
1787. ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
Those who have trodden the ground of Aiyanar's temple are so many Pidaris.
1788. ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
Come, Aiyanar, and accept a goat, a sacrifice.
1789. ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
No one may dispute the pre-ordination of god.
1790. ஐயோ என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
The man who expresses commiseration for him will incur six months sin.
1791. ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழச்சே ஒப்பாரித் தங்கைக்குச்
சிற்றாடையாம்?
When one's sister is weeping for a cloth, is it to be given to a woman who resembles her?
1792. ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
The story of a man taking a girl to wife in a village inhabited by the shameless.
1793. ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்.
Though a broken one, a walking stick is necessary.
1794. ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.
Though I cling to him, he repels me.
1795. ஒட்டினால் தொட்டிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலும் கொள்ளாது.
If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.
1796. ஒட்டினாலும் உழக்குப்பீர்ச் சென்கிறதா?
Is it to say draw one ulak of milk though the animal is lean ?
1797. ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல.
As a camel is loaded.
1798. ஒதி பெருத்துத் தூணாமா?
Though the odina tree grow large, will it do for a pillar ?
1799. ஒதி பெருத்தால் உரலாமா?
Though the odina tree grow large, will it serve for a mortar ?
1800. ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன ?
What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous ?
1801. ஒதியமரம் தூணாமோ? ஓட்டாங்கிளிஞ்சில் காசாமோ?
Will an odina tree do for a pillar? will a broken oyster-shell pass as a coin?
1802. ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
Even an odina tree may prove useful on an emergency.
1803. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.
Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.
1804. ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
Are two swords contained in one sheath?
1805. ஒரு ஊருக்கு ஒரு வழியா ?
Is there but one way to a village?
1806. ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற்போல.
As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.
1807. ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?
What, to tie two elephants to one pole?
1808. ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு.
To earn one cash is as difficult as to find a horse with horns.
1809. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
One cash saved is two cash got.
1810. ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
He who has done a thing once, may do it again.
1811. ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
Will he who refuses to give acash, give a pagoda?
A Pagoda is a gold coin worth about seven shillings.
1812. ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
He weeps when the word money is uttered.
1813 ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.
Onedrop of butter-milk to a pot of milk.
1814. ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?
Cana fort be taken with one ball ?
1815. ஒரு குளத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அது போல ஒரு தாயின் வயிற்றில் பிறந்தசகோதரர் இருப்பார்கள்.
The lotus flowers of a tank are not all of the same species, so the children of the same mother are not all alike.
1816.ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.
He who has plaţted one basket may plat nine.
1817. ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை ?
If all the stones in a basket be gods, which shall I worship?
1818. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
Can clapping be effected by one hand?
1819. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?
Can clapping be affected with one, or with both hands?
1820. ஒரு கை முழம் போடுமா ?
Can cubits be measured with only one arm ?
1821. ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
When one has fallen into a well, in a fit of anger, will a thousand joyous considerations help him out ?
1822. ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
Two kinds of oil in one chatty.
1823. ஒரு சந்திப்பானை நாய் அறியாது.
A dog does not know the vessels used on fast-days.
Separate vessels are kept for special occasions, and also for different purposes on ordinary days, as for boiling milk &c.
1824. ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?
Can a stick a cubit long be cut in a grove a span high?
1825. ஒரு தரம் விழுந்தால் தெரியாதா ?
Having fallen once are you not wiser ?
1826. ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை .
An ex parte statement is straighter than a line.
1827. ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
Are there two punishments for one head?
1828. ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.
The whole village is mother to the motherless.
1829. ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
Think of those who have done you even one favour as long as you live.
1830. ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்தது போல்.
Like shaving the head for a single day's dance.
1831. ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.
One day blame, another day praise.
1832. ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.
Ten millions are born, and ten millions die, daily.
1833. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான், திருநாளும் வெறுநாளாயிற்று.
A man who had never laughed before, laughed on a festival day, consequently it became a common day.
1834. ஒரு நாளாகிலும் திருநாள்.
Although only one day, it is a festival day.
1835. ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.
One palmyra has two spathes, one yields fruit, the other toddy.
1836. ஒரு பானைச் சோற்றுக்கு ஒன்றே மாதிரி.
One grain suffices to test a whole pot of boiled rice.
1837. ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு, நாலு பிள்ளை
பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.
The rice for a woman who has borne one child, is on the swinging tray, that of the woman who has borne four, is in the middle of the street.
1838. ஒரு பிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம், அது செரியாக் குணம் பிடித்துச் செத்ததாம்.
It is said that having only one child she fed it well, but that it died of indigestion.
1839. ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?
Although he is an only son, will he become an obedient disciple?
1840. ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.
Though only one item, note it.
1841. ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?
What! did one tree yield all this fruit ?
1842. ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?
Will the bark of one tree stick to another ?
1843. ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.
The branch of one tree will not stick to another.
1844. ஒரு மனப்படு, ஓதுவார்க்கு உதவு.
Besingle-minded, assist those that teach the Vedas.
1845. ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.
A merchant who dammed up and drained a river to recover a grain of pepper.
1846. ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
Onegrainof pepper and four grains of salt will suffice.
1847. ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா ?
Whạt ! is it to take up the soil by diving once?
1848.ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
A family divided against itself will perish together.
1849. ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.
If known to one, the world may know it.
1850. ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
A secret known to one may spread through the world.
1851. ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேன்டும்.
Two men may help one, two are necessary that one may be known.
1852. ஒருவரும் அறியாத உச்சிதநாமன்.
One of illustrious name unknown to any.
1853.ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான். பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
He who, kills one person immediately suffers death, hewho kills many is rewarded with a crown.
1854. ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா, ஒன்றி மரம் தோப்பாமா?
Is it worth being to be an only offspring ? Is a single tree a tope a grove ?
1855.ஒருவன் தலையில் மாணிக்கம், இருக்கிறதென்று வெட்டலாமா?
May you cut-off a man's head because there is a ruby in it?
1856. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தார் பகைமை.
When only one is born there is loneliness, when two enmity.
1857. ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.
If known to one only it is a secret, if to two it is public.
1858. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
Attach yourself to one person, and dwell in one house.
1859. ஒரு விரல் நொடி இடாது.
A single finger cannot snap.
1860. ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும். Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.
1861. ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும்.
If only as large as the palm of the hand a house that does not leak will suffice.
1862. ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.
Virtue is superior to rank.
1863. ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல்.
As a flood came into a leaky house.
1864. ஒழுக்குக்கு வைத்த சட்டிபோல.
As a chatty placed under a leak.
1865. ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.
Propriety is worth a fanam, pride, three fourths of a fanam.
1866. ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
Of what use is a mustache to a sneaking soldier?
1867. ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?
When trying to conceal one's self, is it fit to do so in the house of the chief ?
1868. ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
Is the place too narrowfor one who has gone to hide himself?
1869. ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.
1870. ஒற்றியும் சீதனமும் பற்றி ஆளவேண்டும்.
Property received under mortgage, or as a dowry, must be taken into immediate possession.
1871. ஒன்ற வந்த பேய் ஊரைக் கெடுத்தது போல்.
As the demon that came for shelter destroyed the village.
1872.ஒன்ற வந்த காகம் உரம் பெற்றாற்போல.
As if a crow that came for shelter was strengthened in his position.
1873. ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டினது போல்.
As a demoness that came for shelter drove away the demoness of the village.
1874. ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.
As a demoness that came for shelter became the demoness of the village.
1875. ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன்தத்தியோதனத்திற்கு அழுகிறானாம்.
It is said that whilst a peerless nobleman was lying hungry and exhausted, a beggar cries for rice and curds.
1876. ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.
Not a single want, yet no cloth to put on.
1877. ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.
One thing meditated, another effected.
1878. ஒன்றும் அறியாளாம் கன்னி அவளைப் பிடித்ததாம் சன்னி.
It is said that the virgin is innocent, and is seized with lock-jaw.
1879. ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
He who knows one thing does not know all things.
1880. ஒன்றும் இல்லையென்று ஊதினான் அது தானும் இல்லையென்று கொட்டினான்.
He blew a conch to report that there was nothing; and beat a drum to intimate that there was not even that.
1881. ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.
Nine wives to him who has nothing.
1882. ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சட்டங்கள்?
Is a ceremony of nine days to be performed for a destitute woman?
1883. ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.
One horse, one horseman.
1884. ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.
One king, one horse.
1885. ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.
If one thing only be obtained, it ought to be good.
1886. ஒன்றைப் பிடித்தால் சாதிக்க வேண்டும்.
The thing asserted must be maintained.
1887. ஒன்றைப் பெற்றாலும் கடுக்கப் பெறு.
Though you get only one thing, get it quickly.
1888. ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.
If you get only one as your hire, take a calf.
1889. ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
Though you touch but one thing, touch what is good.
Most likely referring to the choice of a wife.
1890. ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.
Having become the wife of the wretch, I am compelled to run instead of walking.
1891. ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் பத்தாவின் வலிமை.
An onkil fish knows the depth of the ocean, a wife knows her husband's strength.
1892. ஓசை காட்டிப் பூசை செய்.
Ring the bell, and perform puja.
1893. ஒசை பெறும் வெண்கலம், ஓசைபெறா மட்கலம்.
Sounding brass, a soundless earthen vessel.
1894. ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
On landing, a cuff for the boatman.
1895. ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.
Even a navigable river may burn the feet when dry.
1896. ஓடம் கட்டின தூலம்.
A block of wood to which a boat is moored.
1897. ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
After crossing, a cuff for the boatman.
1898. ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.
A boat may be sesen in a cart, and a cart in a boat.
1899. ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.
The foot may be burnt in a navigable river, and a boat may float where the foot was burnt.
1900. ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.
He can neither run nor overtake, but he can talk continually.
1901. ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.
I can neither run nor catch.
1902. ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
It is better to acquire a cash in quiet than a lak by running about.
1903. ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.
Better earn one fanam where you are, thannine fanams by running hither and thither.
1904. ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.
The sole of the foot has become white by constant running.
1905. ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாள்.
The husband that ran away has returned and is reconciled, therefore she has adorned herself with jewels to excess.
1906. ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
He who entertained the man that fled from his own village was a Koundan-a man of that tribe.
1907. ஓடிப்போகிறவன் பாடிப் போகிறான்.
He who is running away, does so singing.
1908. ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
The hare that ran away was a large one, was it not ?
1909. ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
Though it is obscene, hear it out.
1910. ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
Having set out to run will it do for him to be behind an old Woman?
1911. ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.
Old enough to seize a running snake.
1912. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
Seeing him who retreats, makes the efforts of his pursuer easy.
1913. ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
Will a rolling flood stay at the anicut?
1914. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.
The chatty may be cracked, what matters that if it bakes the cakes.
1915. ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.
Like adorning a cracked measure with a metal rim.
1916. ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.
A cracked pot will hold sugar.
1917. ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?
Will sugar, because put in a cracked pot, taste bitter?
1918. ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா ?
Though the bell may be cracked will it be void of sound ?
1919. ஓணான் விழுங்கிய கதை போல.
Like the story relating to the swallowing of a bloodsucker.
1920. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
The unlettered have neither good sense nor virtue.
1921. ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.
All poets may be found at the entrance of the ploughman's house.
1922. ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
Has the poet no country, has the ploughman no land?
1923. ஓதுவார்க்கு உதவு.
Assist instructors-the brahmans.
1924. ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.
The blood-sucker draws its prey to a hedge, the frog to water.
1925. ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.
As if a dog longed for consecrated food.
Spoken by Sita to Ravana.
1926. ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
Continual rain, and ceaseless wind.
1927. ஓய்விலா நேசமே யோலமே சரணம்.
Thou, the object my unceasing love, take me under thy protection.
1928. ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?
Will any employ a person who is given to one-sided statements ?
1929. ஓரம் சொன்னவன் குடித்தனம் போலே.
Like the family of him who makes partial statements.
1930. ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?
Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?
1931. ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
Will he who cannot cross one river, cross nine?
1932. ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.
That which is polite in one country may be abusive in another.
1933. ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?
May one assume a different name in every village?
1934. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
No fear about Avvai's sayings.
1935. ஒளவையார்மேலும் குற்றம் உண்டு அண்ணாவியார்மேலும் பழு து உண்டு. Even Avvai may be charged with blame, a religious teacher also may have his defects.
1936. கங்கையிலே முளைத்தாலும் பேய்ச்சுரை நல்ல சுரை ஆமா ?
Will a wild gourd become a good gourd by growing on the Ganges ?
1937. கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
Will a crow become a swan by bathing in the Ganges?
1938. கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.
Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.
1939. கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
Will sin be expiated by bathing in the Ganges ?
1940. கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
Though a wild gourd be dipped in the Ganges, its inferiority will remain.
1941. கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது.
A snail of the Ganges is not a Shalgram.
The Shalgram is a flinty stone, containing the impression of one or more ammonitae, supposed by the Hindus to represent Vishnu.
1942. கசக்கி மோரலாமா?
Can the fragrance of a flower be appreciated after bruising it?
1943. கசடருக்கு இல்லைக் கற்றோர் உறவு.
The base do not enjoy the friendship of the learned.
1944. கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
Persons of imperfect learning have no reputation.
1945. கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.
Ignorance is better than imperfect knowledge.
1946. கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
Wipe off the tears of him who comes weeping.
1947. கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.
Though dried fish may attain final emancipation-heaven-beggars cannot.
1948. கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா என்கிறான்.
If I say, O Varathappa give me some kanji, he replies, O Varathappa where.
1949. கடலிலே ஏற்றம் போட்ட கதை.
The story relating to a picotta on the sea-side.
1950. கடலில் இட்ட பெருங்காயம் போல.
Like assafoetida cast into the ocean.
1951. கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.
A rush may remain in the sea, but a secret will not remain in the mind.
1952. கடலில் கரைத்த புளிபோல.
Like tamarind acid dissolved in the sea.
1953. கடலைத் தூர்த்தும் காரியம் முடிக்க வேண்டும்.
You must accomplish your undertaking, though you my have to fill up the ocean.
1954. கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.
Though the sea be filled up, the thing cannot be effected.
1955, கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே ?
Should the sea boil, whence water to cool it?
1956. கடல் நீர் நிறைந்து ஆவது என்ன, காஞ்சிரை பழுத்து ஆவது என்ன ?
What benefit arises from the water of the ocean, what good comes
from the ripening of the kanjirai, strychnos nux vomica, fruit ?
1957. கடல் தாண்ட ஆசை உண்டு, கால்வாய் தாண்டக் கால் இல்லை.
He wishes to cross the ocean, but has no feet to cross a small drain.
1958. கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.
As regards the fish of the sea, whatever name the fisherman givesis final.
1959. கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.
1960. கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
Will the shore extend when the sea flows?
1961. கடல் பெருகினால் கரை ஏது?
What avails the shore when the sea flows ?
1962. கடற் கரைத் தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன ?
What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?
1963. கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.
Though my debt be increased, let me have a quarter of a fanam worth more of fragrant powder.
1964. கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.
One fourth supply of kanji for the stomach is better than debt.
1965. கடன்காரனுக்குக் கடனும், உடன் பிறந்தானுக்குப் பங்கும்
கொடுக்க வேண்டும்.
One must pay one's creditor and give to a relation the portion due to him.
1966. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான் ; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான் .
He who borrowed to lend was ruined; and he who let go his hold of the tree he had climbed also perished.
1967. கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி .
Famished though he has borrowed, an ascetic though he is wedded.
1968. கடன் வாங்கியும் பட்டினியா!
What to famish after having borrowed money!
1969. கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.
Debt to the creditor and retaliation to the wrong-doer are due.
1970. கடன்காரனை வைக்கக் கழு உண்டா ?
Is there a stake for impaling debtors ?
1971. கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.
He was as disquieted as the mind of a debtor.
1972. கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.
Though informed that it is a he-goat, he persists in asking a drop of milk for a medicinal purpose.
1973. கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.
The drawing back of the he-goat shows that he is about to butt.
1974. கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப் போனவிடம்.
Does the cowherd know where the ploughshare has passed?
1975. கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறது போல.
Like eating grass screened behind a bull.
1976. கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.
As the tick was crushed to death when the goats fought.
1977. கடிகோலிலே கட்டின நாய்.
A dog tied to a stick.
1978. கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஓலையும் இல்லை .
She has not even a single bone to pick, nor has she an ear-ornament to polish.
1979. கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?
Will the cobra be affected by friendly intercourse?
1980. கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.
A short rope round the neck of a bitingdog.
1981. கடிதான பிள்ளை பெற்றாருக்கு உதவுமா ?
Will an obdurate child prove helpful to its parents ?
1982. கடிதான சொல் அடியிலும் வலிது.
A harsh word is more painful than a blow.
1983. கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில்
வழிவிட்டானாம்.
It is said that his uncle who would not give even a bite of an areca-nut, bore him company to the bazaar.
1984. கடித்த வாய் துடைத்தாற்போல.
Like wiping the mouth after biting.
1985. கடித்த பாம்புக்கு பால் வார்த்தால் விஷத்தைத் தரும் அது போலப்பொல்லாதவர்க்குச் செய்யும் உபகாரம் இருக்கும்.
When milk is placed before a biting. snake, in return it gives poison, and such is the return for the favours done to the wicked.
1986. கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.
Bugs are all the same whether they bite or not.
1987. கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.
Give vinegar to the dog that bit you.
1988. கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.
No matter if it bite you, do not kill it.
1989. கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.
They will call that a mad dog which has bitten some one.
1990. கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.
A kind word is better than a harsh one.
1991. கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?
Will they let a bug escape because it did not bite ?
1992. கடியும் சுறுக்குத்தான் அடியும் சுறுக்குத்தான்.
Both the bite and the stroke were quickly affected.
1993. கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.
The Vaduga woman's wedding is come nigh.
1994. கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.
He walks about with a staff in a place that will admit a mustard seed, and yet he is ignorant of the place where a pumpkin might easily pass.
1995. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
Though small, the mustard seed is not without pungency.
1996. கடுகு போன இடம் ஆராய்வார் பூசனிக்காய் போன இடம் தெரியாது.
They search for a grain of mustard seed, but not for a missing pumpkin.
1997. கடுகு போன இடம் ஆராய்வார் மிளகு போன இடம் ஆராயார்.
They search for a grain of mustard seed. but not for a grain of pepper.
1998. கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.
Theft is theft whether as regards a mustard seed or camphor.
1999.கடுக்காய்க்கு அதணி நஞ்சு, சுக்கிற்குப் புறணி நஞ்சு.
The kernel of the gall-nut and the skin of ginger are poisonous.
2000. கடுங்காற்று மழை காட்டும், கடுஞ்சினேகம் பகை காட்டும்.
Strong wind foretells rain, excessive friendship foreshows hatred.
2001.கடுஞ் சினேகம் கண்ணுக்குப் பகை.
Excessive intimacy will prove unfriendly to one's eyes.
2002.கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.
It is said that hard dealing fails in its object.
2003. கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.
Unfair dealing destroys the eyes.
2004. கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.
It is shocking to the ears to hear harsh words.
2005. கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.
Peon, my fellow, you are too strict, you have kamboo rice only as wages.
2006. கடும்பசி கல் மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும்.
Extreme hunger will induce a man to break through a stone wall and steal.
2007. கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.
Labouring in menial offices she has not leisure to put up her tresses.
2008. கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.
Each bazaar will have its attendant.
2009. கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.
Buttermilk for the last distribution of rice, and a mat for the foot of the bed are indispensable.
2010. கடைத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாற்போல்.
Like taking up a cocoanut in the bazaar and breaking it to Ganesa.
2011. கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.
He buys in the bazaar, and bestows at home.
2012. கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா, அபிசாரி புருஷன் ஆபத் துக்கு உதவுவானா?
Will the rice in the bazaar serve for kanji, will the paramour of an adulteress be of service to her in distress?
2013. கடையில் வந்ததும் அரிசியோ நடையில் வெந்ததும் சாதமோ?
Is that which comes to the bazaar rice? Is boiled rice cooked by the way desirable ?
2014. கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.
Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.
2015. கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.
Like drinking a decoction of dry ginger after swallowing a crow-bar.
2016. கட்டாந்தரை அட்டைபோல.
Like a wood-louse on dry ground.
2017. கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.
When told to tie and bring, he cuts and brings.
2018. கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.
When she embraces and weeps, her hand is groping to steal.
2019. கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம்தின்பாள்.
She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.
2020. கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.
If he organize an army and lead it, he may cut down the enemy and reign as a king.
2021. கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன ?
My daughter, why is your hand in the basket while you embrace and weep?
2022. கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?
It makes no difference whether you flog one bound or unbound.
2023. கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.
Many will find fault with a house newly built.
2024. கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.
Many will express an opinion respecting a house just built.
2025. கட்டினவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்குப் பல வீடு.
He who has built a house has only one, whereas he who has notbuilt makes use of many.
2026. கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?
On untyingacat and calling puss, puss, will it come?
2027. கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போமா?
Will head-achego by turning the bedstead?
2028. கட்டிவைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற்போல.
As if one displaced and carried away money carefully tied up.
2029. கட்டி விதை வெட்டி விதை.
Provide seed-corn, and sow having tilled the ground
2030. கட்டு அறிந்த நாயும் அல்ல, கனம் அறிந்த கப்பரையும் அல்ல.
He is not a dog accustomed to restraint, nor a mendicant's dish that knows what self-respect is.
2031. கட்டுக்குக் கட்டு மாறிக் கட்ட வேண்டும்.
Every time you have to tie, you must tie it in a different way.
2032. கட்டுப்பட்டாலும், கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும்.
குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be bya hand ornamented with jewels.
2033. கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.
It is difficult to carry, besides a child, boiled rice, tied up for all journey.
2034. கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?
Are toe-rings necessary when a woman goes out to get(?) the firewood?
2035. கட்டோடே போனால் கனத்தோடே வரலாம்.
If one sets out auspicious!y, he may return with honour.
2036. கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.
He is an axe splitting the tree of arithmetic.
2037. கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.
The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.
2038. கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.
Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them.
2039. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
When accounts are examined, difficulties arise.
2040. கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.
To suffer hunger is natural to an accountant.
2041. கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது.
There will be constant disputes in a house should one of its inmates be a skillful accountant.
2042. கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
A marriage ceremony in the house of an accountant is a waste of oil.
2043. கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.
All accountants are not learned.
2044. கணபதி பூசை கை மேலே பயன்.
The pooja of Ganesa has immediate effect.
2045. கணவனைப் பிரிந்தும் அயல் வீட்டில் இருக்கிறதா ?
What ! in a neighbour's house, separated from your husband?
2046. கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.
If her ankle grow big, she will be deprived of her husband.
2047. கண் கண்டது கை செய்யும்.
What the eye has seen the hand may do.
2048. கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.
I was waiting like an eye-snake.
2049. கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெளியுமா?
Is blindness curable by an external application ?
2050. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையா?
Though blind, does he sleep the less?
2051. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?
2052. கண்ட பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.
Tying one's lock of hair in imitation of others.
2053. கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.
I worshipped with raised hands in every temple I visited.
2054. கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.
That which was seen was a snake, that which bit was the stone of a mango fruit.
2055. கண்டதும் காட்சி பெற்றது பேறு.
Whatever is seen is a sight, whatever is received is a gift.
2056. கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.
He will neither eat nor sleep without asking whatever he sees.
2057. கண்டதைக் கேளாவிட்டால் கொண்டவன் அடிப்பான்.
If she does not attend to the affairs of her family, her husband will beat her.
2058. கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் வர இழுத்துத் திரிவானாம்.
It is said that if an inexperienced man marries, he will wander about dragging his wife; through jungles and over bills.
2059. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.
By learning what he sees, a person becomes a pundit.
2060. கண்டது கேட்டது சொல்லாதே காட்டுமரத்திலே நில்லாதே.
Never utter what you have seen and heard, nor stand under a wild tree.
2061. கண்டது பாம்பு கடித்தது கருக்கு மட்டை.
That which he saw was a snake, but he was bit by the rough points of the palmyra stem.
2062. கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு.
Acquire what you can, and go ashore.
2063. கண்டவன் எடானா?
Will he who finds, not take up?
2064. கண்டால் தெரியாதா கம்பளியாட்டு மயிர்?
May not sheep-hair be known as soon as seen?
2065. கண்டால் முறை சொல்லுகிறது காணாவிட்டால் பெயர் சொல்லுகிறதா?
If present, do you call mentioning the relationship of the party, and when absent, his name only ?
2066. கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.
If seen, duty, if not seen, fraud.
2067. கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.
If one die under human observation, his corpse will find its wayto the place of cremation.
2068. கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது.
I have something to speak of in person, but I am ashamed to look at his face.
2069. கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லையென்று இருக்க வேண்டும்.
Behave as though seeing, you see not, and hearing, you hear not.
2070. கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
Will be who finds and takes a thing give it up?
2071. கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?
Is a witness needed to prove that which one has seen with his own eye?
2072. கண்ணாற் கண்டது பொய் அகப்பைக்குறி மெய்.
That which one has seen is false, the sign of agappai is true.
2073. கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?
Why the sign of an agappai in proof of that which one has seen?
2074. கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.
That one has not seen with his own eye amounts to one third
2075. கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.
The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.
2076. கண்ணான பேர்களை மண்ணாக்குகிறான்.
He treats as common earth those who are precious as the eyes.
2077. கண்ணான மனதைப் புண்ணாக்குகிறான்.
Ho wounds the heart which is as tender as the eye.
2078. கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.
Though the life of the washerman is forced through his eyes by reason of drought, rain to him would be poison.
2079.கண்ணாடி நிழலிற் கண்ட பணம் கடனுக்கு உதவுமா?
Will the money reflected in a mirror avail for the payment of debt?
2080. கண்ணான பேர்களைப் புண்ணாக்கினாய்.
You have wounded your dearest friends.
2081. கண்ணிமை கைநொடி அளவே மாத்திரை.
The twinkling of the eye, or the snapping of the fingers, is the measure of a moment of time.
2082. கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.
He is dismayed like a deer caught in a snare.
2083. கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.
He is agitated as an ensnared blackbird.
2084. கண்ணிற் பட்டாற் கரிக்குமா, புருவத்திற் பட்டாற் கரிக்குமா?
When will it give pain, when it hits the eye or the eye-brow?
2085. கண்ணினால் எண்ணுவான்.
He can count with his eyes— at sight.
2086. கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்க்கல் ஆகாது.
When the eyes become sore, one cannot see them reflected in a mirror.
2087. கண்ணின் முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டுசொல்லுகிறது.
To assert a thing when in sight and to contradict it when out of sight.
2088. கண்ணிலே எண்ணெய் பட்டாற் கரிக்குமோ பிடரியில் பட்டால்
கரிக்குமோ?
Will oil give pain when it falls into the eye, or on the back of the neck?
2089. கண்ணிற் பட்ட கையைத் தறிப்பார் இல்லை.
No one cuts off the hand because it has struck the eye.
2090. கண்ணிலே பட்டால் விரலைத் தறிக்கிறதா ?
Should it strikethe eye is the finger to be cut off?
2091. கண்ணிலே வருகிறது புருவத்திலே.
The eye brow has received that which threatened the eye.
2092. கண்ணில் கண்டது கோடி காணாதது அனந்தம் கோடி.
That which was seen was a crore, and that not seen many crores.
2093. கண் உள்ளபோதே காட்சி.
One has the pleasure of seeing as long as the eyes are unimpaired.
2094. கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.
The blind will lose his wealth.
2095. கண்ணுக்குப் புருவம் காதாமா?
Is the brow ten miles in advance of the eye?
2096. கண்ணுக்குப் புண்ணும் அல்ல, காண்பார்க்கு நோயும் அல்ல.
It is neither an eye-sore, nor painful to beholders.
2097. கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும்?
We do not realize it when the eye and mind are unimpaired ; what may we expect to gain afterwards ?
2098. கண்ணுக்கு இமை காதாமா?
Is the eye-lid far apart from the eye?
2099. கண்ணுக்கும் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.
She will sit in one's eye cross-legged, and tether five elephants to the pole of a dancer.
2100. கண்ணை இமை காத்ததுபோல்.
As the eye-lash preserved the eye.
2101. கண்ணைக் கொடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.
The deity that deprived him of sight gave him superior mental endowments.
2102. கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கொண்டு நடந்தேன்.
I guarded you as I did my own eyes.
2103. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.
As one was left in the jungle blindfolded.
2104. கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?
Will she who would not come when called by the expression of your eyes, obey when taken by the hand?
2105. கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.
The deity that destroyed the eyes gave a supporting staff.
2106. கண்ணை மூடிக் குட்டுகிறதா?
Is it to strike the head after covering the eyes?
2107. கண்ணோ புண்ணோ.
Is it an eye, or a sore?
2108. கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்.
They who walk with their eyes open will not fall into the pit.
2109. கண்தெரிந்து வழி நடக்கும்படி நினை.
Take care that you walk with your eyes open.
2110. கண் பார்த்தால் கை செய்யும்.
If the eye have seen it, the hand may perform it.
2111. கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.
When the door is shut, the door-frame is outside.
2112. கதிரவன் சிலரைக் காயேன் என்குமோ?
Will the sun say, I will not burn certain persons?
2113. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.
Weed the corn even at the risk of destroying the ears.
2114. கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.
Though the thread on the spindle diminishes, that on the neck of a kalla woman does not.
2115. கதைக்குக் காலும் இல்லை தலையும் இல்லை.
Mere rumours have neither head nor foot.
2116. கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.
Rumours have no legs, nor have demons feet.
2117. கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.
Obrahman, do you repeat a story or mend old clothes? No, youfoolish widow, I crush the lice in my clothes.
2118. கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.
When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.
2119. கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.
As if feet and hands shot forth in the brinjal.
2120. கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.
The seed of a brinjal will not produce gourds.
2121. கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?
When you buy a brinjal, will the bazaar people give you a pumpkin in at the bargain?
2122.கத்தியும் கடாவும் போலே.
Like a knife and a he-goat.
2123. கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.
Great anger is more destructive than the sword.
2124. கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.
The wife of a swordsman is at any moment liable to become a widow.
2125. கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?
Is the elk to be carried to the knife?
2126. கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ.
Bawl out as long as you like, and shut the door when you go.
2127. கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது, சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்.
When repeatedly urged to bray, even an ass will not do so, when asked to sing, even a poet will refuse.
2128. கந்த பொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?
Does the perfumer appreciate the distinction of scents?
2129. கந்தைக்குத் தக்க பொந்தை.
The hole is in proportion to the rag.
2130. கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.
The more it is stitched and the stronger does the rag become.
2131. கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.
Though only a rag, Wash it and put it on, and if but kanji, drink it after ablution.
2132. கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.
Better is a harsh word than one smooth and feigned.
2133. கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.
Severe head-ache caused the eyes to sink.
2134. கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டது போலே.
Like dropping a bit of areca-nut in a ship.
2135. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீர்க்கவேண்டும்.
Debt incurred by the sea-faring merchant must be discharged by spinning cotton.
2136. கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமோ?
Can a debt incurred on account of a sea-faring life be discharged by spinning?
2137. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
The ship owner's wife is in good condition as long as the ship is safe, but if that be lost she is a beggar.
2138. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
The prosperity of the ship-owner is at the mercy of the wind.
2139. கமரிற் கவிழ்ந்த பால் அமரர்க்கு இட்ட அன்னம்.
Milk poured into a crevice, rice offered to enemies.
2140. கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?
Are not alms obtained by pole-dancing the lowest species of alms?
2141. கம்பளியிலே ஏற்றசோற்றை மயிர் மயிர் என்கிறதா ?
Is it to say that the boiled rice received in a cumbly is full ofhair ?
2142. கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?
Does hair grow in the money for which cumblies have been sold?
2143. கம்பளியில் ஒட்டின கூழைப்போல.
Like food sticking to a cumbly.
2144. கம்பளிமேல் பிசின்.
Gum on a cumbly.
2145. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
Even the peg to which a cow is tied at Kamban's house will sing.
2146. கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண் கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.
Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.
2147. கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.
One must buy a smith's cow after cropping her ears.
2148. கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.
When a child is born in a smith's family, sugar must be dealt out in the street of the dancing girls.
2149. கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?
Will the smith's dog be alarmed at the sound of a hammer?
2150. கயிறு இல்லாப் பம்பரம் போல.
Like a top without a string.
2151. கயிற்றைப் பாம்பென்று எண்ணிக் கலங்குகிறது.
Trembling at a bit of rope thinking it to be a snake.
2152. கரகத்து நீர் காதங் காக்கும்.
Water in a hand-pot will avail for a katham.
2153. கரடி பிறை கண்டது போல.
As a bear saw the new moon.
2154. கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.
Though one be pursued by a bear, he may not escape through weavers' street.
2155. கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.
He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.
2156. கரடி புற்றிலே வாய் வைத்தாற்போல், கருடன் காலிற் சதங்கை கட்டியது போல்.
As the bear puts its nose into the anthill, as small bells were tied to the legs of a kite.
2157. கரணம் தப்பினால் மரணம்.
To fail in a somersault may be fatal.
2158. கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது.
Excessive cording will not diminish the weight of a package.
2159. கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.
In famine, save your life where you are, in war, by flight.
2160. கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.
Like selling a child in famine.
2161. கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும் போல்.
Like an art without ingenuity to comprehend it, and a disciple without a teacher.
2162. கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.
Though you give him fried meat and pour melted ghee on his rice, he will say nothing
but what he saw.
2163. கருங்கண்ணி பட்டால் கரையான் கண்ணாலும் திரும்பிப் பாரான்.
When the karunkanni fish is caught, the fisherman does not even turn to look at it.
2164. கருங்கல்லிலே நார் உரிப்பான்.
He will strip fibre from a piece of granite.
2165. கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினதுபோல.
As a silver ferrule fastened to an ebony pestle.
2166. கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இள வாழைத் தண்டுக்கு வாய் நாணுமா?
Will an axe whose edge-is not blunted by cutting a piece of ebony be made dull by cutting a stem of a plantian tree ?
2167. கருடன் காலில் கெச்சை கட்டினது போல.
As a string of small bells was tied to the leg of a kites.
2168. கருடனைக் கண்ட பாம்பு போல.
Like a snake in sight of a kite.
2169. கருப்பங்கட்டியிலும் கல்லு இருக்கும்.
Stones, may be found even in sugar candy.
2170. கரும் ஒழுங்கு பெருமைக்கு அளவு.
Consistency of action is the measure of greatness.
2171. கருமத்தை முடிக்கிறவன் அருமை ஒன்றும் பாரான்.
A resolute man cares nothing about difficulties.
2172. கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.
A blacksmith's shop, and the place in which asses roll themselves are alike.
2173. கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.
There is honey in sugarcane there is sap in milk-hedge.
2174. கரும்புக்கட்டிக்கு எறும்புதானே வரும்.
Ants will of course be attracted by a lump of sugar-candy.
2175. கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை.
The story of one striking an ass with a sugar-cane.
2176.கரும்பைக் கழுதை முன் போட்டால் கழுதைக்குத் தெரியுமோ கரும்பு ருசி?
Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?
2177. கரும்பு தின்னக் கூலியா?
What, a reward for eating sugar-cane?
2178. கரும்பும் வேம்பு ஆயிற்றே.
Even sugar cane has become a margosa tree.
2179. கரும்புக்கு உழுத, புழுதி காய்ச்சின பாலுக்குச் சருக்கரை ஆமா ?
Will earth pulverised by the plough for sugar-cane, answer for sugar to be mixed with boiled milk?
2180. கரும்பு கசக்கிறது வாய்க்குற்றம்.
If sugar-cane provebitter to the palate, it is the fault of the mouth.
2181. கரும்பு ருசியென்று வேரோடு பிடுங்கலாமா?
May sugar-cane be plucked up by the root because it is of fine flavor?
2182. கரும்பை விரும்ப, அது வேம்பு ஆயிற்று.
If taken to excess sugar-cane becomes bitter as margosa.
2183. கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.
Where bundles of sugar-cane are, there ants will come of themselves.
2184. கருவு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்.
An egg without yolk, an art without a teacher.
2185. கருவேலமரத்திற்கு நிழல் இல்லை, கன்னானுக்கு முறை இல்லை.
The karuvel Acasia casts no shade, smiths observe no relationship in marrying.
2186. கரை காணாத தோணிபோல.
As a doney out of sight of land.
The common name of a country vessel, some of which are of considerable size. They have no deck and are thatched with palm leaves
2187. கரை தட்டின் கப்பல் போல.
Like a stranded vessel.
2188. கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாத தை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.
Like the misery endured by him who embarked when there was a way by land, and by the husband who revealed to his wife that which he ought not.
2189. கரைப்பார் கரைத்தாற் கல்லும் கரையும்.
Under the management of the skilful, even a stone may be dissolved.
2190. கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.
It is said that he who does not exaggerate when a tumult occurs will go to hell.
2191. கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?
In regard to a bed is the distinction of head and foot observed in a battle-field?
2192. கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.
In a general insurrection universal consternation prevails.
2193. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
Popular agitation leads to justice.
2194. கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம்.
If an insurrection exists, it is wrong not to make it known.
2195. கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.
When I went in rags to see her, she appeared enveloped in double the quantity.
2196. கலக் கம்பு தின்றாலும் காடை காட்டிலே.
Though it may consume a kalam of grain, the quail lives in the jungle.
2197. கலக்கினும் கடல் சேறாகாது.
Though never so troubled, the sea does not, become muddy.
2198. கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.
Like holding the hand after putting rice on the plate.
2199. கல நெல்லுக்குக் கல உமி இருக்குமா?
Will a kalam of paddy yield a kalam of husks?
2200. கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.
The corpse of an old person is better than immense wealth.
2201. கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா ?
A kalam of milk may be drawn; can a drop beinfused into the teat?
2202. கலப் பாலுக்குத் துளிப் புரை.
A drop of butter-milk or curds to a kalam of milk.
2203. கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.
Though not pure, repeated gilding will give it the colour of gold.
2204. கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே.
Like putting a drop of poisonin a kalam of milk.
2205.கலப் பால் குடித்தபூனை ஆழாக்குப் பால் குடியாதா?
Will not a cat that has drunk a kalam of milk drink alak?
2206.கல மா இடித்தவள் பாவியும், கப்பி இடித்தவள் புண்ணியவதியுமா?
Is she who pounded a kalam of flour vicious, and she who pounded prolong(?) virtuous?
2207. கலம் கலந்தால் குலம் கலக்கும்.
When plates are interchanged, tribal marriages interchange.
2208. கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.
Though a kalam of chaff bepounded, it will not become rice.
2209. கல உமி தின்றால் ஒரு அரிசி தட்டாதா?
If a kalam of chaff be eaten may not a grain of rice turn up?
2210. கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.
It is said that he forgot to tie the tali owing to the bustle at the wedding.
2211. கலியாணத்திலும் பஞ்சம் இல்லை, களத்திலும் பஞ்சம் இல்லை.
No scarcity at a wedding, nor in the threshing floor.
2212. கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?
Will the woman who wept as sheclung to the post of a marriage pandal at be silent when she attends a funeral?
2213. கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டு அறியான்.
He has never been at a wedding, nor has he heard the sound of a tom-tom.
2214. கலியாணம் செய்தும் சன்னியாசியா?
What, though married yet a Sanyasi-ascetic?
2215. கல் ஆகிலும் கணவன், புல் ஆகிலும் புருஷன்.
Though in heart hard as a stone, and worthless as a blade of grass, he is your husband.
2216. கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பக்கூடாது.
Though one may escape the cast of a stone, he cannot escape theglance of an evil eye.
The evil eye கண்ணூறு and the evil tongue நாவூறு are fearedvery generally. To avert their influence as regardsfruits &c, in a garden, it is common to put up some object of attraction as a water-pot whitewashed, inverted on a stump, and dotted with black spots &c. In some enclosures grotesque images are seen.
2217. கல்லடிச் சித்தன் போகிற வழி, காடு மேடு எல்லாம் தவிடு பொடி.
All the rough and rugged ground before the stone-cutter will be reduced to powder.
2218. கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே
Do not contend with him who has studied Kalladam.
Kalladam a work on the third part of grammar is said to be extremely dry.
2219.கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
The poverty of the learned is better than the wealth of theunlearned.
2220. கல்லாத ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே.
The illiterate who boast of high rank may be compared to the dust mixed with paddy-unhusked rice.
2221. கல்லார் உறவிலும் கற்றோர் பகை நலம்.
The enmity of the learned is better than the friendship of the illiterate.
2222. கல்லார் உறவகல் காமக் கடல் கட.
Keep at a distance from the unlettered; cross the sea of passion.
2223. கல்லிலும் வன்மை கன மூடர் நெஞ்சம்.
The heart of a great fool is harder than a stone.
2224. கல்லிலே நார் உரிக்கிறது போல.
Like stripping fibre from a stone.
2225. கல்லும் தேங்காயும் போலப் பேசுகிறான்.
He speaks as effectively as the hitting of a stone on a cocoanut.
2226. கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க.
May you live as long as the rocks and the Cauveri exist.
The river Cauveri rises in the western ghauts and flows into the bay of Bengal. It is the source of the great fertility of Tanjore and the adjacent districts. According to the legend it originated in the following manner. In ancient times when the people of southern India suffered from drought, Ganesa became incarnate in the form of a crow. As such he visited the abode of an ascetic on one of the western hills. He there alighted up the waterpot of a hermit and upset it. The water thus spilt, by reason of the hermit's merit, he came a river : the current spelling would make the name the lake of the crow: the legend requires the word to be spelt காலேறி crow
mounting, whereas காவேரி lake of the crow is common.
2227. கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்.
On seeing the rapid approach of a stone press your teeth and shut your mouth.
2228. கல்லை ஆகிலும் கரைக்கலாம், மூர்க்கன் மனதைக் கரைக்கல் ஆகாது.
Even stones may be dissolved, but the mind of a fool cannot.
2229. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
On finding a stone we see no dog, on seeing a dog we find no stone.
2230. கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?
Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?
2231. கல்லைப் போலக் கணவன் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?
Why weep for kanji while you have a husband as hard as a stone ?
2232. கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம்.
Like losing the hand by pinching a stone.
2233. கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.
Wealth without learning is like beauty without chastity.
2234. கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்.
Plants of learning flourish in the rain of tears.
2235. கல்வியும் குலமும் வெல்வது வினவில்.
When inquiring what will prevail, one's learning and rank naturally occur.
2236. கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.
A well instructed youth is an old man.
2237. கல்வியைப் பங்குபோட ஏலாது.
Learning cannot be allotted in portions-to persons.
2238. கவணெறி நெறியில் நில்லாதே, கண்டவன் தலையை உடைக்கும்.
Do not stand in the way of a stone from a sling, it may break the head of the beholder.
2239. கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.
Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.
2240. கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?
Are those who accept a poem and those who reject it alike praise worthy?
2241. கவிந்திராணம் கஜேந்திராணம் ராஜாவே நிற்பயே வகி.
Oking, manage a poet laureate and a superior elephant without fear.
2242. கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.
To effect your object, if necessary, cling to the legs of an ass.
2243. கழுதை காணவேண்டினால் குட்டிச்சுவரிலே காணலாம்.
If an ass be wanted, it may be found feeding near a ruinous wall.
2244. கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.
If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.
2245. கழுதைக்கு ஏன் கடிவாளம்?
Why a bridle for an ass?
2246. கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து.
Dust is medicine for the gores of an ass.
2247. கழுதையும் குதிரையும் சரி ஆமா ?
Are an ass and a horse equal ?
2248. கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல.
Like yoking an ass and a horse together.
2249. கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
Can an ass appreciate fragrant powder?
2250. கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா ?
Does an ass become a horse by being saddled?
2251. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.
The ass by wearing away has become an ant.
2252. கழுதைக்கு ஏன் கலினம், அல்லது கடிவாளம்?
Why a bit or a bridle for an ass?
2253. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
Like tying an ass and feeding a sacrificial fire.
This proverb relates to the following story. A certain Maharaja had a barber who had evinced great skill in shaving his royal master when he was asleep. To reward him the King resolved to elevate him in the socialscale. The brahmans were called and ordered to make a brahman of the barber. They set to work, kindled a sacred
fire and the barber was led round it, whilst the priests uttered the required incantations for accomplishing their purpose. The prime minister being of a somewhat facetious temperament determined to metamorphose an ass. As the proverb intimates he kindled a fire and led the animal round it. When the King
saw him thus engaged he asked him what he was doing. The prime minister replied by stating that if the brahmans could make a brahmanof a barber he thought an ass might be made into a horse, and he was therefore engaged in the ceremony.
2254. கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை.
Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying.
2255. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
Having married an ass, do you fear his kicking ?
2256. கழுதைமேல் ஏறி என்ன, இறங்கி என்ன ?
What matters it whether you mount an ass, or alight from one ?
2257. கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை, இறங்கியும் சிறுமை இல்லை.
Though you may ride on an ass, you gain no honour, nor are you disgraced by dismounting.
2258. கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?
Did the washerman become a farmer by ploughing with an ass ?
2259. கழுதை உழுது குறவன் குடி ஆனானா?
Has the forester become a farmer by ploughing with an ass?
2260. கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன ?
What profit or loss will arise from plucking off the hair of an ass ?
2261. கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?
Can one reign as a king by selling ass-hair?
2262. கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?
Does an ass appreciate the odour of musk?
2263.கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
The foreign country of an ass is a ruinous wall.
2264. கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்.
If an ass goes astray, it may be found near a ruinous wall.
2265. கழுதைப் பொதியில் ஐங்கல மாறாட்டமா?
Are there five kalams of fraud in the pack on an ass?
2266. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.
You say get a handful, although it be but ass dung.
2267. கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.
Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.
2268. கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
What ! is it to tread in the mud every time you wash your feet?
2269. கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.
A komutti exactly fitted to the stake.
2270. களம் சாறுகிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன்.
It is said that he who steals grain from the stack, will frighten away the women who
may sweep the threshing floor.
2271. களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.
If you cannot pluck up, pass by on the other side.
2272. களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.
Do not fret yourself about that which cannot be avoided.
2273. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.
2274. கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
He plays the thief and also holds the lamp.
2275. கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.
The neck of the hypocrite is covered with rosaries.
2276. கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.
Secure a thief by tying, and a flood by damming it up.
2277. கள்ளப் பிள்ளையிலும் செல்லப்பிள்ளை உண்டா?
Are there any indulged ones among the children of kallars?
2278. கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.
No one will ever approve of a thief.
2279. கள்ளனுக்கு ஊரெல்லாம் விள்ளாப் பகை.
The whole country owes implacable hatred to a thief.
2280.கள்ள மாடு சந்தை ஏறாது.
A vicious bullock will not be brought to market.
2281. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.
A rogue may be trusted, but not a dwarf.
2282. கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகப்படாது.
One may follow a rogue without risk, but not a dwarf.
2283. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
The jungle is not large enough to contain the fear of robbers.
2284. கள்ள மாடு துள்ளும்.
An unwilling bullock is restless.
2285. கள்ள மனம் துள்ளும்.
A guilty mind is agitated.
2286. கள்ளன் உறவு உறவும் அல்ல, காசா விறகு விறகும் அல்ல.
The friendship of a rogue is not friendship, nor is kasawood fuel.
2287. கள்ளன் புத்தி திருட்டு மேலே.
The mind of a rogue is set on thieving.
2288.கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.
Even the child of a thief is characterized by thievish propensites.
2289. கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.
The wife of a thief is at any moment liable to become a widow.
2290. கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?
Can the wife of a thief be consulted as an augur for the recovery of stolen property ?
2291. கள்ளனும் வெள்ளமும் ஒன்று.
A thief and a flood are alike.
2292. கள்ளனுக்குப் பாதி வெள்ளனுக்குப் பாதி.
One half to the rogue, and one half to the honest.
2293. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.
A gardener is another term for a thief.
2294. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்.
If the thief and a gardener are united, one may steal till day-break.
2295. கள்ளன் கொண்ட மாடு எத்துறை போயென்ன?
What matters it to what ferry the bull may go that has been bought by a thief?
2296. கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.
He who points out a thief is hated by him.
2297. கள்ளி பெருத்து என்ன? காய் உண்டா நிழல் உண்டா?
What if the kalli grow large ? Has it any fruit or any shade ?
2298. கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.
The whole country is a wild fit for the growth of the kalli.
2299. கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினதுபோல.
Like attaching a silver ferrule to a kalli stick.
2300. கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை.
Why you hypocrite, inlay with gems ? that which is in the ear is made of brass.
2301. கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.
After cutting the kalli to cut the kattalai.
2302. கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே, நீலிக்குத் தண்ணீர் நிமையிலே.
The tears of a thievish woman are in her eyes, those of an abandoned woman are in her eyebrows.
2303. கள்ளிக்கு கல நீர் கண்ணிலே.
A thievish woman has a kalam of tears in her eyes.
2304. கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்குக் கோடாலி ஏன்?
What avails a fence against a thievish woman, or an axe for cutting twigs?
2305. கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.
Where there is theft and gambling, there will also be a whoremonger.
2306. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.
Should he drink toddy, he will tell the truth.
2307. கறக்கிறது உழக்குப் பால், உதைக்கிறது பல்லுப் பறக்க.
Yielding an ulak of milk, and kicking out the teeth.
2308. கறந்த பாலும் எச்சில் பிறந்த பிள்ளையும் எச்சில்.
First drawn milk is unclean, and so is a first-born child.
2309. கறந்த பால் முலைக்கு ஏறுமா?
Will the milk that has been drawn, again enter the udder?
2310. கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.
If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.
2311. கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.
Whatever is black he calls water, and whatever is white he calls milk.
2312. கறுப்பு வெளுப்பு ஆகாது, கசப்பு இனிப்பு ஆகாது.
Black will not become white, nor bitter sweet.
2313. கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?
Will a black dog become white?
2314. கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.
The poet is reading the section on grumbling.
2315. கறையான் புற்றில் அரவம் குடிகொண்டது போல.
Like a snake that occupied an ant-hill.
2316. கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.
An ant-hill is useful to a snake.
2317. கற்கண்டாற் செய்த எட்டிக்கனி கசக்குமா ?
Will etti fruit made of sugar-candy taste bitter ?
2318. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.
Learning when being acquired is bitter, but when possessed it is sweet.
2319. கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.
Even a crow that lives in the kalpaka tree feeds on ambrosia.
2320. கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.
He who gave the eye is he who taught.
2321. கற்பித்தவன் காப்பாற்றுவான்.
He who preordained will protect or guide.
2322. கற்பில்லா அழகு வாசனை இல்லாப் பூ.
Beauty without chastity, a flower without fragrance.
2323. கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?
To practise a trick on him who taught it ?
2324. கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.
The anger of the learned passes away as water recovers its surface after being
divided.
2325. கற்றது கையளவு கல்லாது உலகளவு.
What he has learnt is a handful, and what he has still to acquire is wide as the world.
2326. கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?
What other service will he do for you who would not tell you what he has learnt ?
2327. கற்றவனுக்கு வித்தை கால் நாழி.
To the artist his art is but a quarter of a nali.
2328. கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போலே.
Like one who boils and drinks his learning.
2329. கற்றறி மோழையாய் இராதே.
Be not a learned fool.
2330. கற்றவனும் உண்பான், பெற்றவளும் உண்பாள்.
A learned man and a fruitful woman will not suffer from want of food.
2331. கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.
The ill odour of the karrali and the bad smell emitted from brass will not leave them.
2332. கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.
Though the karralai be small, the elephant will not tread upon it.
2333. கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சாதமும் எத்தனை நாள் நிற்கும் ?
How long will words put into one's mouth, and rice prepared for a journey, last?
2334. கற்றுக் கற்றுப் பேசாதே.
Do not speak in a studied way.
2335. கற்றும் கற்றறிமோழை.
Though he has learnt, he continues a learned fool.
2336. கற்றும் கற்றறிமோழையா?
What, to be a learned fool?
2337. கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.
The learned know the worth of the learned.
2338. கன ஆசை கன நஷ்டம்.
Excessive desire entails great loss.
2339. கன எலி வளை எடாது.
When rata are numerous, they do not burrow.
2340. கனக மாரி பொழிந்தது போலே.
As it rained gold.
2341. கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.
Dignity gains approval, meanness entails loss.
2342. கனத்த உடமைக்கு அனர்த்தம் இல்லை.
Solid jewels are invaluable.
2343. கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.
Dignity or worth increases relatives, wealth secures society.
2344. கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.
Virtue is the support of dignity.
2345. கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.
Dignity is appreciated by dignity, the pot of dried fish is known to the dog.
2346. கன மூடன் கைப்பொருள் இழப்பான்.
A great fool loses his substance.
2347. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.
Even in its dreams, the crow's thoughts turn on eating filth.
2348. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
Will the money seen in a dream meet one's expenses?
2349. கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.
The wealth seen in a dream, the water observed in a mirage.
2350. கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா?
Will the rice consumed in a dream appease hunger ?
2351. கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.
The story of a woman given in marriage to a man seen in a dream.
2352. கனிந்த பழம் தானே விழும்.
Ripe fruit falls of itself.
2353.கனிந்த பழம் நீர் தின்றீர் காயை உலுக்கிவிட்டீர்.
You have eaten the ripe fruit, and you have shaken off the unripe.
2354. கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?
What, to leave ripe fruit and to eat unripe ?
2355. கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.
Caste arises from action, it is not from birth.
2356. கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா ?
Will granite be dissolved by any amount of hail?
2357. கன்மத்தினால் வந்தது தன் மந்தினால் போகவேண்டும்.
That which has come of action sin must go by alms giving religiousmerit.
2358. கன்று இருக்கக் காசத்தனை பால் கறவாப் பசு கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?
Will a cow that gave milk worth a small coin while its calf lived, give a kalam after her calf is dead ?
2359. கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
Did they tell you to loose the calf or to pull up the peg?
2360. கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று வழியே பசு பசு வழியே.
When the calf and cow go out to graze, each takes its own way.
2361. கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?
If a herd of calves weed the corn, will there be any straw, or ever dry stubble?
2362. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.
Like a cow that comes running on seeing her calf.
2363. கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.
When the brazier begins to move, the potter will abandon his dwelling-place.
2364. கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
As an ass went on a pilgrimage before a copper-smith.
2365. கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?
When a virgin is yet unmarried, may the youth-her brother marry?
2366. காகத்திலே வெள்ளை உண்டா?
Are there any white crows ?
2367. காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.
To the eye of a crow the flower of the gourd is tinged with gold.
2368. காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.
It is said that when a crow caws she will exclaim, alas, and cling to her husband.
2369. காகம் ஏறிப் பனங்காய் உதிருமா ?
Will palmyra fruit fall because a crow alights on the tree ?
2370. காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.
Vicious persons are not found in a village which has no crows.
2371. காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.
Like the dropping of the fruit when a crow alighted on the tree.
2372. காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.
The country in which crows do not exist is without mussalmans.
2373. காகம் காலமே கா கா என்று கத்தும்.
Crows will caw at day-break.
2374. காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை கண்ணாளர் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?
O punnai tree, Alexandrian laurel, hast thou blossomed for Kakan and Pookan, couldst not thou have waited till the arrival of my husband ?
2375. காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
Though but a young crow, it is a golden one to its mother.
2376. காக்கையிற் கரிது களாம்பழம்.
Kala fruit, earissa, is blacker than a crow.
2377. காக்கையும் குயிற் குஞ்சைத் தன் குஞ்சு போல் வளர்க்கும்.
Even a crow will bring up a young kuyil-India cuckoo-as her own.
2378. காக்கைக்கு அஞ்சு குணம்.
The crow has five characteristics.
2379. காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்ததும்.
The alighting of the crow, and the falling of the palmyra fruit.
2380. காக்கையும் கத்திக் கத்திப் போகிறது கருவாடும் உலர்ந்து போகிறது.
The crowcontinues to caw whilst the karuvadu,(salted fish) dries.
2381. காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.
Crows and windsgo but to return.
2382. காக்கையைக் கண்டு அஞ்சுவாள் கரடியைப் பிடித்துக் கட்டுவாள்.
She is afraid on seeing a crow, and yet she will capture a bear.
2383.காக்கை ஏறின் கொம்பு அசையாதா?
Will not the branch shake on which a crow alights?
2384. காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?
Kasi is formed of two letters only; how many days will it take to reach it?
2385. காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.
Though one has gone to Benares his sins are not removed.
2386. காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.
Though taken to Benares, awooden ladle will fetch but half acash.
2387. காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.
Although he may go to Kasi, he will not find the way to heaven.
2388. காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?
What ! having gone to Kasi is it to fall at the feet of a lame ascetic?
2389. காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக்கொண்டு போகிறதா?
If you wish to strike the eyes of one at Kasi, do you go, for that purpose, with outstretched band from Conjevaram?
2390. காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?
Why should a penniless man talk about pagodas?
2391. காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.
If you are free with your money a harlot willcome, if you give also a kalam of rice, har sister and her mother will come.
2392. காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.
Though young birds are sold a cash each, an accountant's young bird is not good.
2393. காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளக் குஞ்சு ஆகாது.
Though sold for a single cash, never buya smith's bird.
2394. காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்.
Though cloth may be cheap; dogs go naked.
2395. காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.
The money basket has become a charcoal basket.
2396. காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.
Chastity lost for a cash will not be recovered by a crore.
2397. காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?
Will you buy a vicious cow at a high price?
2398.காஞ்சிபுரத்திற்குப் போனால் கால் ஆட்டி உண்ணலாம்.
If you go to Conjeverarm, you may eat without labour.
2399. காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்தது போல.
Like going for vinegar and bringing curds.
2400. காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
Both will be benefited, he who watches the jungle and he who waits at the cutchery.
2401. காடு வா என்கிறது வீடு போ என்கிறது.
Home bids me go, and the place of incremation sayscome.
2402. காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்துபோம்.
The debt will be discharged in either case, whether the jungle or highland yield a
good crop.
2403. காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?
Though the waste land has yielded nothing, will the tax be remitted?
2404. காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ?
Should the jungle be consumed, would the sandal wood tree escape?
2405. காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.
If a quail crosses one's path to the left, he will govern a province.
2406. காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?
Is it proper to betray one, and then stand aloof?
2407. காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?
Is it to give a girl in marriage when an elephant in the jungle is shown as dower?
2408. காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.
Though a man dies in the jungle, ceremonial uncleanness will attach to his house.
2409. காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
Does the wild cat observe the fast of Sivaratri?
2410. காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
Moonlight in the jungle and rain in the plains.
2411. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
When wild plantains come, domestic prosperity will vanish.
2412. காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
Is a wild gourd fit for curry?
2413. காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.
The hole in a mortar is paradise to a jungle fowl.
2414. காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.
It has become the story of wild insects offering resistance.
2415. காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.
That which was seen was like the new moon of November.
2416. காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.
All that is seen is temporary.
2417. காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே ?
Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose
bleeding woman?
2418. காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.
The story of one pulling by the feet the landlord whose house was on fire.
2419. காணி ஏறக் கோடி அழியும்.
While 1/80 is added a crore is destroyed.
2420. காணி கவிழ்ந்து போகிறதா ?
Does land turn upside down?
2421. காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்க வேண்டும்.
We must acquire by eightieths and spend by crores.
2422. காணிக்கு ஒத்தது கோடிக்கு.
The profit or loss on an eightieth part of a unit, will determine that on a crore.
2423. காணி சோம்பல் கோடி வருத்தம்.
A little indolence creates great trouble.
2424. காணி மந்தம் கோடி துக்கம்.
A little indolence will bring great sorrow
2425. காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறது போல.
Like ranging over the distance of two kathams instead of one.
2426. காதம் கொடுத்து இருக்காதம் வாங்குகிறது போல.
Like giving a katham and getting two.
2427. காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.
He who never walked a katham is said to have walked a whole month.
2428. காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.
He who never walked a katham is an ass.
2429. காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.
He whose reputation does not reach a katham is like an ass.
2430. காதிலே நாராசம் ஏற்றினாற் போல.
Like an iron wire passed into the ear.
2431. காதில் சிலந்தி ஓதடி ஆனந்தி.
O Ananti, I have a boil in my ear, utter an incantation.
2432. காது அறுத்த கூலி கைமேலே.
The hire for tearing the ear is readily paid.
2433. காது அறுத்தாலும் அறுக்கும் பேனைப் பார்த்தாலும் பார்க்கும் குரங்கு.
A monkey may tear the ears or hunt lice if he choose.
2434. காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.
If one says, my ear, my ear, he replies it is mine, it is mine.
2435. காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.
If one cry an ear, an ear, he cries deafness deafness.
2436. காது குத்தப் பொறுக்காதா?
Can you not bear the boring of your ears?
2437. காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.
If worn in the ears, they will add beauty to the face.
2438. காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.
Having put on ear-rings he walks about shaking them.
2439. காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.
It should be as if an ear, and an ear, were brought in contact.
2440. காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?
Will he who cut off the ear strike the eye also ?
2441. காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.
A stranger took possession of the wife of him who was watching her.
2442. காந்தமும் ஊசியும் போல்.
Like a magnet and needle.
2443. காப்பானுக்குக் கள்ளன் இல்லை.
He who takes care of his property will not be robbed.
2444. காயம் பட்ட குரங்குபோல்.
Like a wounded monkey.
2445. காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.
Like a falling shadow on a sun-striken worm.
2446. காய்த்த மரத்தில் கல் எறிபடும் காயாத மரத்தில் கல் எறி படுமா?
Stones are thrown at a fruit bearing tree; are they thrown at that which does not
bear?
2447. காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்.
Stones and other missiles are thrown at a fruit-bearing tree.
2448. காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.
A fruit-bearing tree bends; the virtuous are lowly.
2449. காய்ந்த மரம் தளிர்க்குமா ?
Will a dry tree bud?
2450. காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.
Like a starving cow falling in the kambu-millet.
2451. காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல .
Like a hungry tiger falling on a flock of sheep.
2452. காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.
A lean tiger falls on a cow.
2453. காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
Is water useless because it is boiled?
2454. காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது ?
Rain after drought will not soon cease ?
2455. காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.
It was destroyed by the sun and by the rain.
2456. காராம்பசுவுக்குப் புல்லானால் நந்தவனத்துக்குக் களையுமாம்.
Grass serves as food for kine, and as an ornament to a flower garden.
2457. காரிகை கற்றுக் கவி சொல்லுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
It is better to live by beating a drum than by composing verses according to the rules
of prosody.
2458. காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.
The ass grazes in the grounds of the industrious.
2459. காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.
His eye is on the object, not on the attendant applause.
2460. காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.
If necessary, secure your purpose by clinging to the feet of an ass.
2461. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
Which is the greater, success or boasting?
2462. கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.
Wait till the kar paddy is reaped, and the brinjal blossoms.
2463. கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.
No rain like that of November, no liberality superior to that of Karnan.
Karnan, one of the seven princes distinguished for great generosity.
2464. கார்த்திகைப் பிறைபோலக் கண்டேன்.
I saw it like the third-day moon of November.
2465.காலஞ் செய்கிறது கோலம் செய்யாதே.
Time will effect that which mere parade cannot.
2466. காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.
The world cannot accomplish that which time effects.
2467. காலத்தினால் செய்த நன்றி.
A benefit conferred opportunely.
2468. காலத்திற் பெய்த மழைபோல்.
Like seasonable rain.
2469. காலத்துக்கு ஏற்ற கோலம்.
Equipage suited to the occasion.
2470. காலமே எழுந்திருந்து காக்கை விழிக்கல் ஆகாது.
The sight of a crow on rising of a morning is ominous of evil.
The crow being regarded as the vehicle of Saturn the sight of a single crow is inauspicious; two are not so regarded. The cawing of a crow may excite apprehension. When this is the case the following formula may be used.
Measure the length of your shadow by the foot and add 12 to the number of feet ascertained. Then divide by 7 and the remainder will determine the import of the bird's note (1) Good luck, (2) Gain , (3) Rain, (4) Conflict, (5) Feasting, (6) Victory. If on dividing by 7 there is no remainder the cawing of the crow is ominous of death.
2471. காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.
Regulate your affairs with due reference to the times in which you live.
2472. காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.
Like receiving alms when in distress.
2473. காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
He who does not live according to the times will become an ape.
2474. காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போல் துறை நிற்கும்.
Time goes, words remain, a ship goes, the shore remains.
2475. காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல.
As one is subject to piles in his riper years.
2476. காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.
A mariner in anfavourable weather.
2477. காலாலே நடந்தால் காதவழி, தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்?
If on foot it is a katham; how much more distant if one walk on the head?
2478. காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
What he tied with his feet others cannot untie with the hands.
2479. காலிலே பட்டபிறகா கிரகசாரம் போதாது ?
After having hurt the foot is it to be attributed to planetary influence?
2480. காலில் விழுகிறது நல்லது மேலில் விழுகிறது கெட்டது.
To fall at the feet is good, to fall on another is bad.
2481. காலில் பட்டது கண்ணில் பட்டது போல.
That which struck the feet was felt as if it had struck the eye.
2482. காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.
If he puts ornaments on his legs, he will put ornaments on his head.
2482. காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.
No benefit accrued but the trouble of walking.
2484. காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.
The hand helps the legs and the legs help the hands.
2485. காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.
A slipper suited to the foot, and labour suited to the hire.
2486. காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?
Will a slipper that fits the foot do for the head?
2487. காலைச் சுற்றின பாம்பு கடித்தால் ஒழிய விடாது.
The snake that has coiled round the leg will not leave without biting.
2488. காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
Should winged white-ants come out in the morning the heavy rain will cease.
2489. காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.
He who sleeps after day-break, and he who keeps awake in the fore part of the night are worthless.
2490. காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றி அடிக்கும்.
If Saturn seize the feet, he will drive one round the village.
2491. காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம்.
Wealth is comparable to the morning dew, and the twinkling of an eye.
2492. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
Dreams of bliss and premature wisdom are not lasting.
2493. கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.
The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will
be as the yarn used in its manufacture.
2494. கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.
The foot puts the stick in motion, as that moves, the monkey dances.
2495. கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர்மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.
Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.
2496. கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.
Two cash for walking on foot, five cash for the swing of the arms.
2497. கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
If one be tied cross-legged, will his weight diminish?
2498. கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
Can he who cannot leap over a channel leap over the sea?
2499. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
The weight of a burden is felt by the bearer.
2500. காவல் தானே பாவையர்க்கு அழகு.
Chastity is a feminine grace.
2501. காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?
You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer ?
2502. காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.
2503. காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.
The green leaves of the palm laughed because the dry ones fell off.
2504. காளிதோட்டத்துக் கற்பக விருக்ஷம் ஆருக்கும் உதவாது.
Even the katpaka tree in the garden of Durga is of no use to man kind.
The katpaka tree is said to yield whatever a suppliant pay require.
2505. காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.
The name Kali may become obsolete, but not the (nickname) Mooli, the earless.
2506. காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.
A cat worth a quarter of a cash consumed curds worth three quarters of a cash.
2507. காற்றில் அகப்பட்ட கப்பல் போல் அலைகின்றது மனம்.
The mind is agitated like a ship in a storm.
2508. காற்றுக்கா மழைக்கா போர்த்துக்கொள்ள துணிக்கா?
Is it as a security against the wind and rain that you are thus clad?
2509. காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்திலே விழும்.
If one spit against the wind-the spittle-will strike his own face.
2510. காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.
A dhony cannot sail against the wind.
2511. காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
Will the wind blow so as to avoid certain persons?
2512. காற்று உள்ளபோது தூற்றிக்கொள் கரும்பு உள்ளபோது ஆட்டிக்கொள்.
Winnow when the wind blows, work the sugar-mill when the cane is ripe.
2513. காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா ?
Can one seize the wind and confine it in a small vessel?
2514. காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.
Anchor a ship with reference to the wind.
2515. கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்தது போல.
Like the deer that wearied itself in pursuit of a mirage imagining it to be water.
2516. கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை எடுத்து மணையிலே வை.
Leave the things as they are, and take the old man and put him on the stool to bathe.
The first thing done before a corpse is removed from the homestead is to bathe it.
2517. கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.
Dwelling in a ruinous hut and dreaming of a palace.
2518. கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.
When called, the dog licks the face.
2519. கிட்டாத ஒன்றை வெட்டென மற.
Forget at once what cannot be obtained.
2520. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல் ஆயிற்றே.
It has happened as if a demon had sprung out of a well just dug.
2521. கிணறும் வெட்டித் தவளையும் பிடித்து விடுகிறதா?
What! is it to dig a well and supply it with frogs?
2522. கிணறு கிடக்க மலை கல்லாதே.
Whilst there is a well do not excavate amountain for water.
2523. கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
Must one dig a well to quench his thirst?
2524. கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.
If there be water the undermost ring of the well will be wet.
2525. கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.
The more a well is drawn, the better the spring.
2526.கிணறு தப்பித் துரவில் விழலாமா?
Having escaped falling into the well, shall we fall into a tank?
2527. கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.
If the well in to be filled up, the belly must be filled up.
2528. கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது ஆர், குடியாததைக் கண்டது ஆர் ?
Who knows whether the frog in the well did or did not drink water?
2529. கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?
What has the frog in the wall to do with the news of the country?
2530. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
Having escaped falling into the well he jumped into the fire.
2531. கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப்போகுமா?
Will the sea shrink at the sight of a well?
2532. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா ?
Will the flood carry away the water of the well ?
2533.கிணற்றிலே தண்ணீர் உதித்தது.
Water sprang up in the well.
2534. கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.
The depth of the well, and the length of the cord must be ascertained.
2535. கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?
Will he who has fallen into a well once fallinagain?
2536. கிணற்றில் கல் போட்டது போல.
Like dropping a stone into awell.
2537. கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.
The more you dig in the refuse heapof the barber, the more will hair turn up.
2538. கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.
The more youdig, the more will greens and hair appear.
2539. கிரக சாந்திக்குச் சவரம் பண்ணிக் கொள்ளுகிறதா?
Will shaving counteract the evil influence ofaplanet?
2540. கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?
What! is it for an evil-doer to teach religious precepts?
2541. கிருபா நதியே சருவா நிதி.
The stream of grace is the source of all treasures.
2542. கிழக் குடலுக்குச் சோறும் இடிச் சுவருக்கு மண்ணும் இடு.
Give rice to the aged and add mud to a ruinous wall.
2543. கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா?
Will the words of an old man go up to the assembly?
2544. கிழவன் ஆனாலும் கெட்டை ஆனாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்.
She who marries will do well whether her husband be old or poor.
2545. கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.
It is better to fall into a well than to marry an old man.
2546. கிழவி பேச்சைக் கின்னரக்காரன் கேட்பானோ?
Will a musician listen to the speech of an old woman?
2547. கிழவியும் காதம் குதிரையும் காதம்.
The old woman is a katham from the horse, and the horse a katham from the old woman.
2548. கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது.
Neither the house of an old woman, nor the grove in which there are parrots, will be saved from ruin.
2549. கிழிந்த சீலை காசுக்கு இரண்டு,
Two rags for a cash.
2550. கிழிந்த பம்பரம் காசுக்கு இரண்டு.
Two split tops for a cash.
2551. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?
Is it proper to train a parrot and give it into the paw of acat?
2552. கிளியைப்போலப் பேச்சும் மயிலைப்போல நடையும்.
Speech like that of a parrot, gait like that of a peacock.
2553. கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சுமாம்.
It is said that it ripens by being pinched, and that parrots will nibble it leisurely.
2554. கிள்ளுவார்கீழ் இருப்பதிலும் அள்ளுவார்கீழ் இருக்கலாம்.
One may endure those who rob, but not those who pilfer.
2555. கீரி கடித்த பாம்புபோலே.
Like a snake bit by a mungoose.
2556. கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
Inveterate enmity exists between the mungoose and snakes.
2557. கீரியும் பாம்பும் போல.
Like a mungoose and a snake.
2558. கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும்.
An opposition shop is good even among green grocers.
2559. கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.
As if a parasite should spring from the lower part of a vegetable.
2560. கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?
When I order the greens to be pruned, is a garland put up?
2561. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
Why sing elela when plucking up greens?
2562. கீரையை இரண்டு கறி பண்ணாதே.
Do not make two curries of a vegetable.
2563. கீர்த்தியால் பசி தீருமா?
Will hunger be appeased by fame?
2564. கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?
Whence sorrow to himwho has obtained praise?
2565. கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.
If it is said that a snake is below, he looks up.
2566. கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.
Though of low origin, the learned ranks with the highest class.
2567. கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.
Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.
2568. கீறி ஆற்றினால் புண் ஆறும்.
If lanced, the sore will heal.
2569. குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே ?
If indeed the incense has expelled the demon, where is the sign? -uplifted hands.
2570. குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?
Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?
2571.குங்குமக் கோதைக்கு அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும், அஞ்சு பணமா?
The donation to the perfumed dame being five fanams, is five fanams to be assigned
to the blind woman, also?
2572. குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற் போல.
As if one lost his natural smile by taking medicine to induce a şimpering expression.
2573. குடத்தில் ஏற்றிய விளக்கு.
A lamp lit in an earthen pot.
2574. குடத்தில் பொன் கூத்து ஆடுமா?
Will gold in a pot dance?
2575. குடப்பால் கறந்தாலும் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது.
Though the cow gives a large pot of milk, it is not equal to the horse in speed.
2576. குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.
Though it may yield a large pot of milk, a cow that destroys the roof is not desirable.
2577. குடம் தண்ணீரிற் கொள்ளி வைத்தாற்போல.
As if a firebrand were put into a pot of water.
2578. குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.
Habit is the rule of the stomach and the hair.
2579. குடல் கூழுக்கு அழுகிறதாம் கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
It is said that the stomach cries for gruel, and the tresses for flowers.
2580. குடல் அறுந்த நரி எந்தமட்டும் ஓடும் ?
How far can a jackal run after its bowels are dislodged ?
2581. குடல் அறுந்த கோழி எங்கே போகும்?
Whither will a fowl go after its entrails have been exposed?
2582. குடி இருந்து அறி வழி நடந்து அறி.
Learn the character of a person by dwelling with him, and the condition of a road by
walking in it.
2583. குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.
Test his social qualities by living with him, and his honesty byjoint tillage.
2584. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.
He who dwells ina humble cottage dreams ofceiled apartments.
2585. குடி இல்லா வீட்டிற் குண்டுப் பெருச்சாளி உலாவும்.
Bandycootes will run about in an uninhabited house.
2586. குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.
It is a risk to set a foot in an uninhabited village.
2587. குடி இல்லா ஊருக்கு நரி இராசன்.
A jackal is king in a deserted village.
2588. குடி உடையானே முடி உடையான்.
He is fit for kingship who is approved by the people.
2589. குடிக்கிறது கூழாக் கொப்பளிக்கிறது பன்னீராம்.
He has gruel to drink, and washes his mouth with rose water.
2590. குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?
What, is it to pour down the drinkable milk into a crevice?
2591. குடிக்கிறது காடி நீர், அதற்குத் தங்கவட்டிலா ?
What you drink is sour gruels, do you require a cup of fine gold for it?
2592. குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.
Living on gruel and sitting on a throne.
2593. குடிக்கிற வீடு விடியுமா?
Will the family of a drunkard prosper?
2594. குடித்தனமோ துரைத்தனமோ எது பெரிது?
Whether is greater, the government of a family or of a state ?
2595. குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.
Wishing to elevate his family he married a Pidari-village goddess.
2596. குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.
If one becomes a householder, he must expect both good and evil.
2597. குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்தது போல.
As a lean dog watched a deserted house.
2598. குடிமதம் அடிபடத் தீரும்.
The madness of a drunkard may be cured by beating.
2599. குடியனும் வெறியனும் சரி.
A drunkard and a mad man are alike.
2600. குடியாத வீடு விடியாது.
The family of a drunkard is always benighted.
2601. குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.
If the bowels of the house-wife burn, her cloth hanging on the line will burn also.
2602. குடியில்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.
He is the only wealthy man in a deserted village.
2603. குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.
Born in a good family, and playing the monkey.
2604. குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.
Born in a good family and falling into a bush.
2605. குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண் டாயோ?
Have you taken a family to dwell with you ? Or have you taken firebrands?
2606. குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?
Is it proper to burn down a house after admitting a family?
2607. குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
As a wolf entered a fold of lambs.
2608. குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.
He who breeds divisions in a family shall be cuffed to death.
2609. குட்டிக் கரணம் போட்டாலும் லோபன் கொடான் .
The miser will give nothing though you tumble heels overhead.
2610. குட்டிச் சுவரிலே தேள் கொட்ட, கட்டுத் தறியிலே நெறி இடுமா?
If a scorpion sting in a ruinous dwarf wall, will the glandular swelling appear in the
stall?
2611. குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?
Does the sting of a scorpion in a ruinouswall, produce a glandular swelling in a water-pot?
2612. குட்டிச் சுவரை முட்ட வெள்ளெழுத்தா?
Is he so dim-sighted as to stumble against a ruinous wall ?
2613. குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.
He wanders about like a cat that has kittened.
2614. குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?
Can a cuff already inflicted and water that has run into a pit be recalled?
2615. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.
Though it become fat, the flesh of a kid is always clammy.
2616. குட்டி குலைத்து நாய்பேரில் வைக்கிறது போல.
Like pups barking and creating a quarrel among dogs.
2617. குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினதுபோல.
Like hunting with pups.
2618. குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.
Ifyou speak familiarly with a potter, he will not respect you, nor will he supply you with chatties.
2619. குணத்தை மாற்றக் குரு இல்லை.
No guroo- religious teacher-can change a man's temperament.
A Guru among the Hindus is regarded as a spiritual parent from whom the youth receives the initiatory mantra or prayer, and whoconducts the ceremonies necessaryat various seasons of infancy andyouth, up to the period of in vestiture with the sacred thread or string:this person may be the natural parent or the religions preceptor. The word Guru is also used for a teacher or preceptor generally.
2620. குணத்திற்கு அழுகிறதா, பிணத்திற்கு அழுகிறதா ?
Is the weeping on account of the virtue of the deceased or does it relate to his corpse?
2621. குணம் உற்றவன் மணம் உற்றவன், குணம் அற்றவன் மணம் அற்றவன்.
A good-natured man has an engaging exterior, an ill-natured man has a repulsive aspect.
2622. குணம் பாதி கொண்ட நோவு பாதி.
His suffering is due partly to his faint-heartedness, and partly to a disease.
2623. குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டாச் சோற்றுக்கு வழி இல்லை.
Though he makes somersaults to all he sees, he has no food to eat.
2624. குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
If starved even a horse will eat straw.
2625. குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி.
No matter how the body may be bent if the burden be carried home.
2626. குண்டி அறுந்த பருந்து போல.
Like a kite witha broken tail.
2627. குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.
He displays his horsemanship in an earthen pot.
2628. குண்டு பட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்.
It is said that he who survived a gunshot wound, died of the bite of an insect.
2629. குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?
Can one turn a somersault in an earthen pot ?
2630. குண்டுப் பெருச்சாளியும் வண்டு போல.
The bandycoote is also like a beetle.
2631. குண்டு சொல்லுகிறவனுக்கு இரு நாக்கு கட்டுவிரியனுக்கும் இருநாக்கு.
A slanderer and a snake of deadly poison have each two tongues.
2632. குண்டை பலத்தால் குடி பலக்கும்.
As kine increase, a household increases.
2633. குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.
They will all say leap, leap into the pyre, but there is none willing to leap with me.
2634. குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.
Though she may leap joyously and pound the grain, the slave woman gets but one
cake.
2635. குதிரை குருடானாலும் கொள்ளுத் தின்கிறதிற் குறைச்சல் இல்லை.
Though blind, the horse does not eat the less grain.
2636. குதிரை கொண்டால் கலினத்துக்கு வழக்கா?
When you have bought the horse, is there any occasion for disputing about its bit?
2637. குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?
Was it not because the Creator knew the nature of the horse that he did not provide
him with horns?
2638. குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.
Besides the death of the horse there is the saddle also to be carried.
2639. குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
The horse and the dog like a change of place.
2640. குதிரை ஏற அதிஷ்டம் இருந்தால் குண்டியின் கீழ் வந்து நுழையாதா ?
If it be your good fortune to ride, will not your horse come and place itself under your
seat?
2641. குதிரை நல்லதுதான் சுழி கெட்டது.
It is certainly a good horse, but its circular marks are bad.
The circlets of hair on a horse are generally observed by dealers and owners very carefully.
2642. குதிரை ஏறி என்ன , கோணக் கொம்பு ஊதி என்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
What if you do ride a horse, and have a hora blown before you?
There is a great distance between the worthless and reputation.
2643. குதிரை பாகனைத் தள்ளுவதும் அல்லாமல் குழியும் தோண்டுகிறதாம்.
It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.
2644. குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா ?
Besides losing the horse, have I to pay three fanams to bury him ?
2645. குதிரையும் காதம் கிழவியும் காதம்.
The horse is ten miles before you, and the old woman is ten miles behind you.
2646. குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.
You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.
2647. குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
The horse knows his rider, and a wife her husband.
2648. குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.
Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish
heap it is gold.
2649. குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்குமா?
A cuff may be borne, can hunger?
2650. குந்தி இருந்து தின்றால் குன்று மாளும்.
If you eat properly seated you may consume a heap of rice.
2651. குபேரன் பட்டணத்திலும் விறகு சுமக்கிறவன் உண்டு.
Even in the city of Kuberan there were firewood carriers.
2652. குபேரன் பட்டணம் கொள்ளை போனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?
Though the city of Kuberan be despoiled, will the unfortunate obtain even the handle of a wooden spoon?
2653. குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.
Though they may prostrate themselves and perform penance, religious teachers do not attain heaven.
2654. குப்புற விழுந்தும் மீசையிலே மண் படவில்லை என்கிறான்.
Though he fell flat on his face, he says that his mustache did not touch the ground.
2655. குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் காலாகுமா?
Will a plant grown on a dunghill answer for the mast of a ship?
2656. குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.
As a creeper springing on a dunghill climbed on a roof.
2657. குப்பையின்றிப் பயிர் விளையாது.
Without manure the growing grain will not yield a good crop.
2658. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.
Though it lies on the dunghill the kunrimani-abrus precatoriusremains unchanged.
2659. குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.
Though the kunrimani be buried in the dunghill its colour will not change.
2660. குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.
The rubbish heap has risen, the tower has sunk.
2661. குப்பை உயர்ந்ததென்ன கோபுரம் தாழ்ந்ததென்ன?
How is it that the rubbish heap has risen, and the tower sunk?
2662. குப்பையும் கோழியும் போலக் குருவும் சீஷனும்.
The teacher and his disciple are like the dunghill and the fowl.
2663. குமரி ஒரு பிள்ளை கோடி ஒரு வெள்ளை .
A woman is young till she bears a child, and cloth is new till it is washed.
2664. குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.
Though a young woman may go on her way alone, yawning is never alone.
2665. குமரியாய் இருக்கையிற் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கிற போது திண்டாட்டம்.
When young, a woman is full of hilarity, when old her portion is vexation.
2666. கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.
Neither lend nor borrow beseechingly.
2667. கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.
When I went to worship the temple fell.
2668. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.
As the deity one went to worship came to meet one cross wise.
2669. கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.
The deity I worship is my hereditary deity.
2670. கும்பிடும் கள்ளர் குழைந்திடும் கள்ளர்.
Obsequious rogues, deceitful friends.
2671. குயவனுக்குப் பல நாளை வேலை, தடி அடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை.
That which cost the potter many days labour, is but the labour of a moment to the
breaker.
2672. குயவா கலசம் கொண்டுவா , இடையா பால் கொடு என்றால் போல.
Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.
2673. குயில் கூவினாற்போல.
Like the warbling of the Indian cuckoo.
2674. குயிற் குரலும் மயில் அழகும் போல.
Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.
2675. குரங்கின் கைப் பூமாலை.
A garland of flowers in the hand of a monkey.
2676. குரங்குக்குப் புத்தி சொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.
The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.
2677. குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.
Even to the monkey its own young is precious.
2678. குரங்குப் புண் ஆறாது.
A sore on a monkey never heals.
2679. குரங்குப் புண் பிரமாண்டம்.
A sore of the monkey is enormously large.
2680. குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.
No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a
mountaineer.
2681. குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.
He tests it by another as a monkey tests an object by the hand of its young.
2682. குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.
Lay hold of a thing as firmly as a monkey.
2683. குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம்தத்திப்பாயும்.
If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.
2684. குரங்கு எல்லாம் ஒரு முகம்.
All monkeys have faces alike.
2685. குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.
Though she be a mere monkey, one should take a wife in one's own tribe.
2686. குரங்கு ஏறாத கொம்பு உண்டா ?
Is there a branch the monkey has not climbed?
2687. குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
All monkeys go about in troops.
2688. குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.
The story of a firebrand in the hand of a monkey.
2689. குரு இல்லாத சீஷன் உண்டா ?
Is there a disciple without a Guru-teacher?
2690. குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.
There is no art without a teacher, and no profit without capital.
2691. குரு என வந்தான் திரு உரை தந்தான்.
He came as a Guru; he gave sacred instruction.
2692. குருக்கள் பிழைத்தது மறுபிறப்பு.
The escape of the religious teacher was as it were a second birth.
2693. குருடன் கையில் விலாங்கு அகப்பட்டது போல.
As an eel was caught in the hand of a blind man.
2694. குருடனுக்கு வேண்டியது கோல்.
The need of a blind man is a staff.
2695. குருடனுக்கு வேண்டியது கண்.
What the blind want is eye-sight.
2696. குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?
Can the blind lead the blind with a staff ?
2697. குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?
Is it a work for eight men to help a blind man to feed sheep?
2698. குருடன் கூத்துப் பார்க்கப் போனால் பயன் என்ன?
What advantage will the blind man gain by attending a comedy?
2699. குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது.
To the blind milk was like a heron.
2700. குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள்.
The wife of a blind man became intimate with a hunch-backed man.
2701. குருடன் பெண்டிரை அடித்தாற்போல.
As if a blind man bent his wife.
2702. குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?
If requested to assume the looks of, a king, can a blind man do so?
2703. குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.
As if a blind man was asked to assay metals.
2704. குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.
Like snatching away the staff of the blind.
2705. குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.
If the blind lead the blind, both willfall into the pit.
2706. குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மின கெட்டது போல்.
As the work of eight persons was stopped by reason of a blindwoman going to fetch
water.
2707. குருடும் செவிடும் கூத்துப் பார்த்தது போல.
As the blind and the deaf attending comedy.
2708. குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
The excuse of a blind horse was his stumbling.
2709. குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்தது போல.
As a blind cat leaped on the cross beam.
2710. குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.
The village tank is the witness of the blind crane.
2711. குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியது போல.
As a blind fowl wasover-anxious to feed on bran.
2712. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?
Why adorn blind eyes with collyrium?
2713. குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.
He who will not hear the words of his Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.
2714. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.
2715. குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?
Cana palmyra fruit be suspended from the neck of a small bird ?
2716. குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?
Is not the weapon of Rama suited to the bird?
2717. குருவிக்குத் தக்க ராமேசுரம்.
Rameswaram suited to the bird.
This is I think a perversion of the foregoing proverb. An aged old feeble person may say, my Rameswaram, pilgrimage, efforts, must be moderate.
2718. குருவிக்குத் தக்க பாரம்.
A burden suited to the bird.
2719. குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.
Never disturb the nest of a bird with a stick.
2720. குருவுக்கு மிஞ்சின சீஷனா?
Is there a disciple who is above his Guru ?
2721. குருவுக்கு நாமம் குழைத்துப்போடுவான்.
He will deceive his own Guru.
2722. குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோக செய்யக்கூடாது.
Though a Guru may be deceived, the stomach cannot.
2723. குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?
Are all religious teachers who have assumed the garb?
2724. குலத்தைக் கெடுத்த கோடாலிக்காம்பு.
The handle of an axe that destroyed its own species.
The tree from which its handle was taken, was felled by the axe.
2725. குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.
It is said that a monkey will destroy its own species.
2726. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.
It becomes a lawful wife to honour her husband.
2727. குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்குஅழுவான்.
The high-born mourns the loss of caste, and the man who has lost his nose, his nose.
2728. குலமும் ஒன்று குறியும் ஒன்று.
Birth and external sign are at variance.
2729. குலம் புகுந்தும் குறை தீரவில்லை.
Though he has entered another tribe he is still in want.
2730. குலம் குலத்தோடே வெள்ளம் ஆற்றோடே.
Tribe goes with tribe, the flood with the river.
2731. குலம் குலத்தோடே வெள்ளாடு தன்னோடே.
A tribe associates with its own tribe, and goats follow their own kind.
2732. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே.
High birth lies on the dunghill, while wealth is at the festive board.
2733. குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
Arts appropriate to a family are partly intuitive and partly acquired.
2734. குலைக்கிற நாய் கடிக்க அறியாது.
A barking dog does not bite.
2735. குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.
Like throwing a bone to a barking dog.
2736. குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
Will a barking dog avail in hunting?
2737. குலைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குலைக்கும்.
If a staff be put into the mouth of a noisy dog, it will carry it through the village barking.
2738. குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.
A silent dog will bite the heels.
2739. குழந்தை பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.
Infants and temple servants do not suffer from hunger.
2740. குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
Children and dogs are pleased with a change of place.
2741. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
Children and gods best agree with their admirers.
2742. குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.
The fever of children and the spite of a slanderer are bad.
2743. குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.
The sleep of a child is advantageous to the mother.
2744. குழந்தையின் தேகம்போல்.
Tender as the body of aninfant.
2745. குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.
My child, do not sink into the pit.
2746.குழப்படி கண்டு திரைகடல் ஏங்குமா ?
Has the stormy weather set the whole sea in motion?
2747. குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?
O my youthful son, is your throat pained by drinking thick milk?
2748. குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?
Is it right to train a parasite to the roof?
2749.குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.
Likea jackal going round the grave of a child.
2750. குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?
Is it proper to agitate the tank to supply prey for kites?
2751. குளத்துக்கு மழை குந்தாணியா?
Are rain drops the weight of a mortar to a tank?
2752. குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா ?
Having put it into the tank, do you seek it in the well?
2753. குளத்தோடு கோபித்துக் கால் கழுவாதவன் போல்.
Like the man who would not wash his feet in the tank because he was angry with it.
2754. குளப் படி நீர் இறைத்தாலும் கடற் பள்ளம் நிரம்புமா?
Will the hollowof the sea be filled by draining a tank down to the lowest step?
2755. குளம் உடைந்து போகும்போது முறை வீதமா?
When a tank bursts, do they dispute about turns?
2756. குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ ?
Will not he who watches the tank drink?
2757. குளம் வற்றியும் முறை வீதம் உண்டா ?
Why dispute about your turn for drawing water seeing that the tank is dried up?
2758. குளம் வெட்டு முன்னே முதலை குடி இருக்குமா?
Before the tank is dug will the alligator go to dwell therein ?
2759. குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.
Like poking a wasp's nest with a stick.
2760. குளவிக் கூட்டிலே கல்லு விட்டு எறிகிறதா?
What! throw a stone at a wasp's nest?
2761. குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.
A green caterpillar is the offspring of a wasp.
2762. குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவது போல.
Like a wasp changing worms to its own colour.
2763. குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.
As one smeared himself with mud after bathing.
2764. குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?
Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house ?
2765. குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான் தண்டு எடு தடி எடு.
The dwarf Brahman has fallen into a pit, take a staff, take a stick.
2766. குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.
He sounds the depth by means of a dwarf.
2767. குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.
A dwarf will destroy a family; his wife will destroy the whole village.
2768. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் காயம் தின்பான்.
If the wife of a mountaineer is brought to bed, her husband takes the prescribed stimulant.
2769. குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
Disputes among mountaineers and shepherds are not easily settled.
2770. குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.
Disputes among chakliyars are more easily settled than those among mountaineers.
2771. குறுணிப் பால் கறந்தபோதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா?
May one suffer his cow to destroy his roof although she yields a kuruni of milk at a meal ?
2772. குறுணி மைதான் இட்டாலும் குருடு குருடே.
Though a kuruni of collyrium be applied to the eyes of the blind, the blindness remains.
2773. குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
A ceruminous ear will itch.
2774. குறும்பைத் தவிர்க்கும் குடிதாங்கி.
The supporter who puts an end to inhuman acts.
2775. குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.
A thoroughly learned man is one of a lac.
2776. குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.
A water pot not full is agitated, a full pot is not.
2777. குறையச் சொல்லி நிறைய அள.
Give more than you profess to sell.
2778. குறையுள்ளோர்க்கு உண்டு குறாவுதல் கறையுள்ளோர்க்கு உண்டு கரவு.
The guilty are dejected, those that have a tarnished reputation elude observation.
2279. குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.
An unfinished work ought not to be shown even to a Guru-master.
2780. குறை வேலையை அம்பலத்திற் கொண்டுவரலாமா?
Is it proper to expose an unfinished work for sale or otherwise ?
2781. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
A guilty conscience is agitated, a foul ear itches.
2782. குற்றம் மறைப்பதில் மற்றொரு குற்றமும் நேரும்.
By concealing one fault another may arise.
2783. குற்ற மனச்சாட்சி கூடி வாழ் சத்துரு.
A guilty conscience is an enemy that lives with its possessor.
2784. குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.
Distinction attained by wrong makes reformation difficult.
2785. குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.
Undeserved punishment is better than deserved punishment.
2786. குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.
If every fault be noticed, all intercourse must cease.
2787. குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.
Even a kunrimani seed-abrus precatorius-has a black spot on it.
2788. கூகைக்குப் பகலில் கண் தெரியாது.
An owl cannot see in the day-time.
2789. கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.
He stares like an owl.
2790. கூடக் குடி இருந்து கொண்டு கொள்ள சொருகலாமா?
Whilst residing with one shall we thrust a firebrand into his house?
2791. கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுக்கல் ஆகாது.
Although you may give an outer room, it is not proper to give an inner one.
2792. கூடம் ஒன்று போடுமுன்னே , சுத்தி இரண்டு போடும்.
Before the big hammer strikes one, the little hammer strikes two.
2793. கூடம் இடித்தால் மாடம்.
If the party-wall be broken down, one room only will remain.
2794. கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிதே.
Gruel served in the house of a united family is enjoyable.
2795. கூட்டத்திற் கட்டுச்சோறு அவிழ்த்ததுபோல.
As food prepared for a journey was untied in a crowd.
2796. கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச்சலும்.
Shivering and fever left with the body.
2797. கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.
When there is a kuruni of paddy in the bin, three kurunies of gods will be dancing in a corner.
2798. கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கு அரிசிக்கு வழி இராது.
In the house where rice is pounded for sale, there is not enough to pot into the mouth of a corpse.
Before a corpse is removed the females of the family place a little raw rice near the mouth, the males do the same in the cemetry before the body is laid on the pyre.
2799. கூத்தாட்டுச் சிலம்பம் படைவெட்டுக்கு ஆகுமா?
Will the art of fencing avail in a battle-field ?
2800.கூத்தாடிக்குக் கீழே கண் கூலிக்காரனுக்கு மேலே கண்.
A rope-dancer directs his eye downwards, one who bears a burden upwards.
2801. கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான் வேசிக்கு இட்டு விறகு ஆனான்.
By wasting his substanceon concubines he has become spare as a monkey, and by giving to common women he has become as dry as a stick.
2802. கூத்திப் பிள்ளைக்குத் தகப்பன் ஆர்?
Who is the legal father of the child of a concubine?
2803.கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும் கூத்தியார் செத்தால் ஒன்றும் இல்லை.
When the mother of one's concubine dies, there will be beating of drums, but when the concubine dies, there will be no such display.
2804. கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்.
When a concubine dies she is a mere corpse, whereas if her mother dies, her remains are honoured.
By honouring the remains of her mother it is supposed that a man
secures greater respect from his concubine.
2805. கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.
He frequents his concubine's house as a dog wandering about.
2806. கூத்துப் பார்க்கப் போன இடத்தில் பேய் பிடித்தது போல.
As one was seized by a demon when he went to see a comedy.
2807. கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.
He whose words are keen, is of all the most powerful.
2808. கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.
Kicking against thorns will cause pain.
2809. கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?
If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?
2810. கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.
If rice is thrown on the roof, a thousand crows will come.
2811. கூர்மையாளனே நேர்மையாளன்.
The acute man is the upright man.
2812. கூலி குறைத்தால் வேலை கெடும்.
If the hire be diminished, the work will be spoiled.
2813. கூலி குறைத்தாயே குறை மரக்கால் இட்டாயே.
Thou hast reduced my wages, and used false measures when paying me.
2814. கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.
It is said that the wife of a labourer is about to be confined, and that a castor plant will spring upon the midden.
2815. கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?
Does he who came on hire to transplant grain institute a boundary suit?
2816. கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.
A vicious fellow prevented the payment of my wages.
2817. கூலிக்குக் கழு ஏறுவார்களா?
Will they hire themselves to be impaled?
2818. கூலிப் படை வெட்டுமா?
Will mere hirelings conquer?
2819. கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.
Whether gruel or refuse, he who has drunk it will live.
2820. கூழுக்கு மாங்காய் தோற்குமா?
Will an unripe mango fail before gruel?
2821. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம் குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
An unripe mango improves the gruel, the kernel of a cocoanut is a feast to a monkey.
2822. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .
He wishes to drink the gruel, and he also wants a nice mustache.
Spoken of thingsincompatible.
2823. கூழுக்குக் கொறடா மிளகாய்.
A chilly serves as a whip to gruel. It makes it pungent.
2824. கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.
Though only gruel, it must be drunk agreeably to one's circumstances.
2825. கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.
If only gruel, he who drinks it will live.
2826. கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.
Fellowship is undesirable even in drinking gruel.
2827. கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமல் சொல்லலாமா?
Is it proper to say thoughtlessly that the gruel was sour, and then again that it was the mango that was sour?
2828. கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.
O, mother-in-law, incite a quarrel through the hunchbacked that an heir may be born.
2829. கூனன் குறை தீர்ந்தான் கொடியோன் வினை பெயர்ந்தான்.
The hunchbacked is relieved, the cruel man has escaped.
2830. கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெறவேண்டும்.
Although her back is crooked, she will have to carry the basket before she gets her hire.
2831. கூனி வாயாற் கெட்டாற்போல.
As she (Kaikesi) was demoralized by listening to the words of Kuni.
2832. கெடு காலத்துக்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.
They will listen to the advice of the wicked when their star is notfavourable.
2833. கெடு குடி சொற் கேளாது.
A decaying family will not listen to advice.
2834. கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
When you mediate another's ruin, your own will soon follow.
2835. கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
Learning can suffer no damage.
2836. கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்.
The deity will destroy those that injure others.
2837. கெடுப்பதும் வாயால் படிப்பதும் வாயால்.
It is with the mouth we injure others; it is with the mouth we read.
2838. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
One is blind to bis own imprudence.
2839. கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
Make a pitfall for imprudence.
2840. கெடுவாய் கேடு நினையாதே.
Thou wilt be ruined, think not of destroying another.
2841. கெடுவான் கேடு நினைப்பான்.
He who is on the way to ruin, will mediate another's ruin.
2842. கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினது போல.
As a crane in an evil time seized and swallowed a keliru fish.
2843. கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.
The wretched dog feels satisfied with the beating he received.
2844. கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
A village doomed to ruin profits not by repeated precaution.
2845. கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?
Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?
2846. கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
Will curdled milk become sweet again?
2847. கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.
I have had enough of loss, sufferings and toilin watering the vegetable garden.
2848. கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.
A vicious child in a poor family.
2849. கெட்ட குடிக்கு ஒரு கோட்டை பிறந்தது.
A child is born under the star kettai in a poor family.
2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
A vicious donkey has mischievous propensities.
2851. கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.
The family is ruined, do not fail to get the interest without reduction.
2852. கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகு சாற்றை.
No matter whose family is ruined, you drink the pepper water.
2853. கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.
The decaying family will be ruined. It will hit the leg which is already struck.
2854. கெட்ட மாடு தேடு முன்னம் எட்டு மாடு தேடலாம்.
You may procure eight cows before you can recover one that has strayed.
2855.கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.
He who pursues a vicious course will try to lead others into the same.
2856. கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
The impoverished have no friends even among their own kindred.
2857. கெட்டார் வாழ்ந்தால் கிளைகளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.
When the ruined in circumstances flourish they cant out innumerable branches; when the prosperous are reduced to poverty they are not worth a potsherd.
2858. கெட்டான் பயல் பொட்டலிலே, விழுந்தான் பயல் சறுக்கலிலே.
The boy suffered by walking in the arid tract, he fell in the slippery ground.
2859. கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.
Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn.
2860. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.
The deception of the clever will be manifest in eight days.
2861. கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை .
The clever fear nothing; the fool gains nothing.
2862. கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.
The reputation of the adroit lasts only eight days.
2863. கெட்டும் பட்டணம் சேர்.
Though you are ruined, cling to the city.
2864. கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?
When the time of destruction comes, will not evil devices operate ?
2865. கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்து போகிற பசுவைத் தானம் பண்ணினது போல.
Like giving a dying cow to a poor Brahman.
2866. கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
Can a family survive repeated misfortunes?
2867. கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறது போல.
Baiting with a small fish and catching a large one.
2868. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.
2869. கெலியன் பாற் சோறு கண்டது போல.
As the greedy saw milk and rice.
2870. கேடது இல்லான் பாடது இல்லான்.
One free from loss, free from suffering.
2871. கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
A bad time is followed by an alms-dish.
2872. கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.
You worthless dog quit my house.
2873. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே, ஆனைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
Indigence follows indiscretion, the elephant makes its appearance
after the sound of its bells reaches the ear.
2874. கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது எல்லாம் சொல்லாதே.
Believe not all you hear, tell not all you believe.
2875. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
Fortitude under privations will tend to restore lost fortune.
2876. கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.
Be not deceived by hearsay reports.
2877. கேண்மைத் தானவா வாய்மைக் கானவா.
Thou the self-existent, thou art the powerful.
2878. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
Friends and relations are denied to the ruined.
2879. கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.
He who acted on hearsay destroyed the village.
2880. கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.
Instruction is wealth, and learning is fame.
2881. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
But half of what one hears is true.
2882. கேள்வி முயல்.
Endeavour to obtain instruction.
2883. கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.
The miser will not prosper.
Literally will not "get ashore." The marriage of a girl is phrased in the same way.
2884. கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?
Can one who has no hands turn a somersault, can one who has no feet run about?
2885. கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.
It is the learned that have hands.
2886. கை ஊன்றிக் கரணம் போட வேண்டும்.
One has to fix his hands on the ground before he makes a somersault.
2887. கை காய்த்தாற் கமுகு காய்க்கும்.
If the palm of the hand becomes callous by drawing water, the areca will bear.
2888. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
That which reaches the band does not always reach the mouth.
2889. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.
Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.
2890. கை தப்பிக் கண்ணிலே பட்டாற் கையைத் தறித்துப் போடுவார்களா?
If the hand by accident strike the eye, will they cut it off ?
2891. கை தப்பினாற் கரணம்.
If the hand missess its hold, a somersault.
2892. கை நிறைந்த பொன் இல்லா விட்டாலும் கண் நிறைந்த கணவன் இருக்கவேண்டும்.
Though not possessed of a handfull of gold, one should have a husband that fills the eye.
2893. கை பட்டால் கண்ணாடி.
Handling makes a thing shine as glass.
2894. கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாது நிற்பானேன்?
Why give the fruit in your hand and stand gazing at that which can only be reached by a hook ?
2895. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.
Learning is better than riches.
2896. கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.
The wayfaring man who has no money may encounter thieves with impunity.
2897. கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.
If destitute of wealth, even one's own married wife will not regard him.
2898. கைம்பெண்டாட்டி பெற்ற கழிகடை.
The refuse that the widow has brought forth.
2899. கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.
He came to the buffalo of the widow to learn to milk.
2900. கையாற் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடாலி வேண்டுமோ ?
Is a heavy axe required for a work that may be easily effected by the hand ?
2901. கையாற் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?
Why a wedge and a mallet to split the edible root of the palmyra?
2902. கையிலும் இல்லை செட்டியார் பையிலும் இல்லை காசு.
There is no money either in the hands or purse of the chetty.
2903. கையிலும் மடியிலும் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்யலாம் ?
What harm can a thief do to him who has nothing in hand or in his belt?
2904. கையிலே மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.
If the hands are dipped in turmeric water, the undertaking will prove successful.
2905. கையில் இருக்க நெய்யிலே கையிடுவானேன்?
When it (the stolen thing) is in the hand, why put the hand in (hot) ghee?
2906. கையில் இல்லாதவன் கள்ளன்.
He who has nothing in hand is a thief.
2907. கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.
Rice in the hand and water in the pot.
2908. கையில் எடுக்குமுன்னம் கோழி மோசமென்று அறியாது.
The fowl is not aware of its danger before it is caught.
2909. கையிற் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
Is a mirror required for a sore in the hand ?
2910. கையிற் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
Why let a bird in the hand go and snare one in the jungle?
2911. கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.
I have fallen into the sea with the child in my arms.
2912. கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.
One must have an umbrella in the hand, and shoes on the feet.
2913. கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?
May one pour into the crackedground the nectar he has in his band?
2914. கையிற் காசு வாயில் தோசை ஆமா ?
Will the money in the hand become a cake in the mouth?
2915. கையும் கணக்கும் சரி.
The money in hand is just sufficient for current expenses.
2916. கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தால் காரியம் ஆகுமா?
If you say look at the hands and look at the face, will the work be accomplished?
2917. கைவினை கரவேல்.
Neglect not a work in which you are skilful.
2918. கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?
Whichattains swerga the mere boaster, or the self-immolated ?
2919.கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.
No one has seen a young crane, nor a straight cocoanut tree.
2920. கொக்குக்கு உண்டா வீரசைவம் ?
Does the stork observe the rules of Linga-worship?
The strict Saivite is a rigid vegetarian.
2921. கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.
As if a falcon fell among herons.
2922. கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்
As if a bandycoote rushed on to prey on a stork.
2923. கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?
Does the crane know how to carry away a chicken ?
2924. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?
O devotee, did you mistake me for a stork?
2925. கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.
Why remain here when grain sells cheap in the Kongu country.
2926. கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
As a carbuncle appeared on the back of a mosquito.
2927. கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?
Can you draw from a mosquito a kuruni of milk?
2928. கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே ?
A mosquito suffering from a carbuncle, has also diabetes : where shall we put in thelancet, and how apply leeches?
2929. கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.
O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.
2930. கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல,
As if a hawk assailed a mosquito imagining it to be a rival.
2931. கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?
What! do you strain out a gnat and swallow a camel?
2932. கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.
Those who strain out gnats are naturally suspected.
2933. கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.
See the result of his having gone to Cochin, and of one who betrayed his Guru.
2934. கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகு நீர் குடிக்கிறது ?
What, is it a small thing for a monkey to drink pepper water?
2935. கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்கமாட்டான்.
Not one even of ten millions is unfaithful in a little thing.
2936. கொடிகள் அருகான மரத்திலே படரும்.
Creepers spread over the trees that grow near them.
2937. கொடிக்குக் காய் கனத்திருக்குமா?
Is its fruit burdensome to the creeper?
2938. கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.
It is an evil omen to a tribe for a girl to be born with her navel string round the body.
2939. கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.
Palaniandi gives and Subbanandi eats.
2940. கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.
He who was not disposed to contribute to the drama spoke disparaginglyof it.
2941. கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?
Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?
2942. கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.
As a niggardly shepherd pointed to a sheep that was with young.
2943. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.
A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.
2944. கொடுங்கோல் அரசன் கீழ் குடியிருக்கல் ஆகாது.
It is not good to live under a tyrant king.
2945. கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.
If that which has been given be demanded hatred ensues.
2946. கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.
They praise the liberal, but reproach the niggard.
2947. கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
The liberal are fathers, niggards are useless.
2948. கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.
The dwarf demon returns only that which had been given to it.
Jugglery is generally attributed by the common people to the power of a dwarf demon which, retaining the materials entrusted to it, gives them one by one to the juggler as he may want them.
2949. கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.
The liberal have all things, the niggardly nothing.
2950. கொடுத்து உறவுகொள், கோளன் என்று இரேல்.
Be liberal and friendly, avoid being called a talebearer.
2951. கொடுப்பாரைத் தடுக்காதே.
Do not check the liberal.
2952. கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.
The kind-hearted is yielding.
2953. கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.
However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.
2954. கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத் தெரியுமா?
Can the woman who digs up roots dance before a temple idol?
2955. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
Though measured again and again, a kuruni will not become a pathakku.
2956. கொட்டினால் தேள் கொட்டா விட்டாற் பிள்ளைப்பூச்சியா?
If it stings it is scorpion, if it does not sting is it only a gryllus ?
2957. கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.
If despised by her husband, all will slight her.
2958. கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச் சண்டை செய்வாள்.
If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and
fight.
2959. கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.
If husbands treat their wives angrily, others will do so too.
2960. கொண்டு குலம் பேசுகிறதா?
Do you speak lightly of a family into which you have chosen to marry?
2961. கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.
To stand up to quarrel with a chaplet of flowers on the tresses.
2962. கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?
Are flowers for the tresses, or for the beard ?
2963. கொண்டோர் எல்லாம் பெண்டீர் அல்ல.
All that are betrothed are not real wives.
2964. கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டது போல.
Like keeping a firebrand in the border of her own cloth.
2965. கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
Can needles be sold in a street of smiths ?
2966. கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.
It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his
legs with rings.
2967. கொல்லன் பிணம் விறைத்தாற்போல.
As the smith's corpse became stiff.
2968. கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
Rice kills and it makes alive.
2969.கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
Like a wild jackal showing his teeth.
2970. கொல்லைக் காட்டில் நரியைக் குடிவைத்துக்கொண்டது போல்.
Like encouraging jackals in a field.
2971. கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.
He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.
Both are injurious.
2972. கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ ?
Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?
2973. கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?
Are small birds famished because the fields lie waste?
2974. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை .
The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of
relationship.
2975. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறளருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.
The kolukkattai has neither head nor foot, foresters are neither virtuous nor mannerly.
2976. கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
He who is thin is a mere straw to him who is fat.
2977. கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா ?
What! opening the mouth when one says gram, and covering it when one says bridle ?
2978. கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.
There are neither buyers nor sellers.
2979. கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா ?
Do you scratch your head with a firebrand ?
2980. கொள்ளிக்கு எதிர் போனாலும், வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.
Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.
2981. கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.
Because burning with a firebrand will produce blisters, you are branding me with a
plantain fruit.
2982.கொள்ளும் வரையில் கொண்டாட்டம் கொண்ட பிறகு திண்டாட்டம்.
Great pleasure till attained, great misery afterwards.
2983. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
Even when going to plunder association is bad.
2984. கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.
Escape from plunder and pestilence.
2985. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
The learned are more than kings.
2986. கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.
The sin arising from killing is expiated by eating the flesh so killed.
2987. கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
The handle of the axe is the enemy of its kind.
2988. கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?
Are the wealthy and mendicants on a par?
2989. கோடி சீமான் துணியவேண்டும், அல்லது கோவண ஆண்டி துணியவேண்டும்.
An attempt is to be made either by the wealthy, or by a beggar that has only a span-long cloth.
2990. கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.
It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.
2991. கோடீசுவரன் ஆகவேண்டுமோ, அல்லது லக்ஷாதிபதி ஆகவேண்டுமோ ?
Which is to be preferred as a possession, ten millions, or a hundred thousand?
2992. கோடை இடி இடித்தாற்போல.
As it thundered in summer.
2993. கோட் சொல்பவனைக் கொடும் தேள் என நினை.
Treat him who carries tales, as a scorpion.
2994. கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
The mouth of the slanderer is as fire exposed to the wind.
2995. கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டது போல.
Like concealing an ominous owl in the lap.
2996. கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
If samba rice is boiled, they will come and eat.
2997. கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?
Will destiny be averted because the female was born in a fort ?
2998. கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?
Can a great battle be fought in a fort ?
2999. கோணக் கொம்பு ஏறி என்ன குதிரை ஏறி என்ன வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
Whether they mount a palanquin or a horse, the distance between the vain and reputation is very great.
3000. கோணி கொண்டது எருது சுமந்தது.
That which the sack contained the buffalo carried.
This webpage was last revised on 16 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).