திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" பகுதி 35 (3751- 3953)
ஸ்ரீசிவஞானயோகிகள் சரித்திரம்
Sri civanjAna yOkikaL carittiram
by tiricipuram mInATcicuntaram piLLai
pirapantat tiraTTu, part 35, verses (3751- 3953)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgement:
The e-text has been generated using Google OCR and subsequently edited by K.Kalyanasundaram.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 35 (3751- 3953)
ஸ்ரீசிவஞானயோகிகள் சரித்திரம்
Source:
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய
ஸ்ரீசிவஞானயோகிகள் சரித்திரம்
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மஹாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு
இது ௸ ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள்
உதவியைக்கொண்டு ௸ பிள்ளையவர்கள் மாணாக்கரும் ஸ்ரீமீனாட்சி
தமிழ்க்காலேஜ் பிரின்ஸிபாலுமாகிய உ.வே. சாமிநாதையரால்
சென்னபட்டினம் கமர்ஷியல் அச்சிற்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
இரண்டாம் பதிப்பு, அக்ஷய ௵, ஆனி௴, 1926
விலை ரூ.5-10-0.
copyright reserved
--------------
சிவமயம்.
ஸ்ரீ குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்.(3409-3750)
காப்பு.
3751 விநாயகக் கடவுள்.
சீர்பூத்த தாய்முலைப்பால் பகுத்துணுங்கான் மூன்றுறுப் பாற் சேயா யுள்ளா,
னார்பூத்த மோத்தல்வரு தெல்கவர்தல் செய் தருந்தி நான்பி னென்ன,
வேர்பூத்த வோருறுப்பா லத்தனையுஞ் செய் தருந்தி யான் முன் னென்றே,
பார்பூத்த வருள் கொழிக்கும் யானை முகப் பெருமானைப் பரவி வாழ்வாம். 1
3752 சபாபதி.
பூமேவு முத்தொழிலாற் றுதலின்வலி யதுமறைப்பின் பொலிவை யாற்ற,
னாமேவு மதற்குவலப் பதமமையப் படிந்தாலு நாமு நோக்க,
லாமேவு முறையென்றே யருள்பதங்குஞ் சிதமாயே யதனை நோக்க,
வோமேவு கனகசபை நடநவிலும் பெருவாழ்வை யுன்னி வாழ்வாம். 2
3753 சிவகாமசுந்தரியம்மை
சிகரவரை யுதயவரை சிற்சபை பொற் றேர்கனகச் சிலை யோன் வெய்யோன்
பகரவருஞ் சடைகிரண மனையகதி ரவற்காட்டும் பார்வை யேபோ,
னகரமக ரந்தகர்க்கு மினையகதி ரவற்காட்டு நயன மாகி,
யகரமுதற் குணமன்று ணின்றருளு மணிவிளக்கை யடுத்து வாழ்வாம். 3
3754 தக்ஷிணாழர்த்தி.
வேதமது முதலென்றும் பிரமனே முதலென்றும் வேலை மேற்றுஞ்,
சோதமது முதலென்றுந் தம்மையே முதலென்று முரை ப்பார் தத்தம்,
போதமது தடுமாற வவ்வவர்தஞ் சென்னிமிசைப் புண்டரீக,
பாதமது மலர்சூட்டி யாண்டருளுங் குரவர் பொற்றாள் பணிந்து வாழ்வாம். 4
3755 விநாயகக் கடவுள்.
ஒருகுறளுக் கன்னமிடு தடாதகையுண் ணனிநாண வுலக மோம்பு,
திருகுதவிர் சுந்தரபாண் டியனுமனை யவனாகத் தீரா தோங்கும்,
பெருகுவளச் சனகனிடு பதத்தவியாப் பசிவருத்தம் பிறங்கோர் புல்லா,
லருகுதிற மவித்தவரிற் புகழ்படைத்த மதகளிற் றை யடைந்து வாழ்வாம். 5
3756 முருகக்கடவுள் .
பொருந்தியசெந் தமிழ்ப்பரமா சாரியனாக் குறுமுனிக் குப் போதம் பூட்டித்,
திருந்தியவா சானாகியது மட்டோ வடகலைக்குந் தென்கலைக்கு,
மருந்தியலும் பிறகலைக்கு மாரியனாம் பரமசிவன் வணங்க நாளு,
மிருந்தியலா சாரியனா மெங்குமர குருபரன்றா ளிறை ஞ்சி வாழ்வாம். 6
3757 திருநந்திதேவர்.
வடமொழியி லிரவுரவா கமத்தமைந்து பல்லோரு மதிக் கப் பெற்ற,
திடமொழியாப் பன்னிரண்டு சூத்திரமும் வழிவழியே சிறந்து மல்கப்,
படமொழியாப் பூணணிபா வனையில் குரு வாற்றே ளிந்து பயிற்று நீராற்,
றடமொழிமூலாசிரியப் பெயர்படைத்த நந்தி பிரான் சரணஞ் சார்வாம். 7
3758 அகத்தியமுனிவர்.
சிறந்தவகத் தியமிரண்டு நவின்றருளிச் செந்தமிழா சிரிய னென்றோ,
ருறந்தபுகழ்ப் பெயர்புனைந்த தன்றியுநோக் காதிபல வுற்ற தீக்கை,
யறந்தவறா துளவெனினும் பரிசத்தான் மால் சிவமே யாகச் செய்து,
நிறந்ததிற லுடைப்பரமா சாரியனு மானானை நினைந்து வாழ் வாம். 8
3759 சமயாசாரியர்.
செம்மடியொண் புலித்தோலே யெனக்கொண்டா ரடித் தொண்டின் சிறப்பான் மேக,
மும்மடியென் றிடவிழிகண் முத்து குப்ப வுருகுதலான் முழங்கி நாளுந்,
தம்மடிய ரெனப்பெருநீர் தலை நின்று பணிபுரிந்து தாழப் பெற்ற,
வெம்மடிக ளாஞ்சமயா சாரிய ரோர் நால்வரையு மிறைஞ்சி வாழ்வாம். 9
3760 சண்டேசநாயனார் முதலியோரும், சேக்கிழாரும்.
தந்தைதா ளடைவதற்குத் தந்தைதா ளறவெறிந்தார் தம்பி ராற்கே,
சிந்தையா தியமூன்றுஞ் செலுத்தறுபான் மூவரிவர் சீர்த்தி யாவு,
நிந்தை தீர் தரமொழிந்த நிகரரிய சேக்கிழார் நீடு வாழ் வா,
ரந்தைதீர் தரக்கருது மடியேனு ளனவரத மகலா ராயே. 10
3761 மெய்கண்டதேவர்
அகத்திருளைப் போக்கலும்பன் னிருகதிரோ வெனத்த மிழி லழகு வாய்ப்ப,
மகத்துவ நூன் மொழிபெயர்த்த துணர்ந்தியாமு மொழிபெயர்த்கல் வல்லே மென்று,
மிகத்தழைசத் தியஞான தரிச னிப்பேர் மொழிபெயர்த்து மெய்கண் டானென்,
றிகத்தியலப் பரஞ் சோதி யருளியவா சிரியனடி யிறைஞ்சி வாழ்வாம். 11
3762 திருமாளிகைத்தேவர்.
கச்சோதங் கதிராமோ யாங்கொள்வயி ணவமின்றே கழி வதாக,
வச்சோவிவ் வாரியனெங் ககப்படுவா னென்றரங்க மகல நீத் துப்,
பச்சோலைத் தெங்கடருங் கோமுத்தி யடைந்தரிய பலசெய் தெல்லா,
நச்சோத வருள் கொழித்து வளர் திருமாளிகைத்தேவை நயந்து வாழ்வாம். 12
3763 நமச்சிவாயதேசிகர்.
ஒருதிருமாளிகைத்தேவை நட்டசிவப் பிரகாச ருரை த்த வாறே,
தருதிருவா வடு துறைசார்ந் தவர்வகுத்த வறையமர்ந்து சைலா திப்பேர்,
வருதிருவன் முதலோராங் கைலாய பரம்பரைமன் னுதலி னோங்கக்,
கருதிருவன் மேற்கொணமச் சிவாயதே சிகன் மலர்த்தாள் கருதி வாழ்வாம். 13
3764 அம்பலவாண தேசிகர்
சோராத பெருங்கருணை தழைத்தோங்க வாவடுதண் டுறையை மேவி,
யோராத வெனையாள்வா னோராத வனிற்றோற்று முருவந் தோற்றித்,
தீராத மலமாயை கன்மமுதலொடுமாயச் சிர மேற் சூட்டு,
மாராத திருவடியம் பலவாண தேசிகனை யடைந்தா மன்றே . 14
3765 சுப்பிரமணிய தேசிகர் .
கொற்றவளம் பொலிதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவ னாவான்,
உற்றதன தடியர் குடி கொளுஞ்சிறுவீ டொருங்குத கர்த் துலவா மேன்மை,
பெற்ற பெரு வீட்டிருத்தத் தான் குடிகொ ளாலயமும் பேணா னாகி,
முற்றவொழித் தருள்வனெனி னவன்கருணை யெவராலு மொழியற் பாற்றோ. 15
3766 சிவஞானயோக்கள்
சீலநிகழ் மூலவா கமப்பொருளொன் றொன்றாகித் திறம் புறாது,
ஞாலநிகழ் குலதெய்வ மெனப்பலருங் கொண்டாட நாங்க ளுய்யச்
சாலநிகழ் சமவாத முதலியபோ யொளித்திடவு தயமாய்வந்த,
பாலநிகழ் விழிமறைத்த சிவஞான யோகிபாதம் பணிந்து வாழ்வாம். 16
3767 ஆக்குவித்தோர்.
குலவுமுரு கக்கடவுள் கருணையினோ தாதனைத்துங் கூட வோர்ந்தே,
யுலவுபுகழ்க் குமரகுரு பரமுனிவ னுதித்தமர புதித்த மேலோ,
னிலவுபுக ழிலக்கணமு மிலக்கியமும் வரம்புக்கண்ட நிக ரொன் றில்லான்,
கலவுசிறப் புத்தம நற் குணங்களெலா மோருருக் கொள் காட்சி போல்வான். 17
3768
கூடுபுகழ்க் கோமுத்திக் குருநமச்சி வாயனருள் கொண்ட மேலோன்,
பாடுபுகழ்ச் சித்தாந்த பாடியமுற் றொருங்குணர்ந்த பான் மை யாள,
னீடுபுகழ்த் துறவொழுக்கந் தவறாது காத்தோம்பு நெறி யில் வல்லோன்,
றேடு புகழ் வளர்குமர சாமிமுனி வரன் முனிவர் செய் சிங் கேறே. 18
3769 அவையடக்கம்.
அன்னமுனி வரன்கனிவிற் சிவஞான யோகிவர லாறு முற்று,
நன்னர்வள முறப்பாடித் தருகவெனச் சொற்றமொழி நலத்தை யோர்ந்தே,
யென்னவலி யுளமெனப்பா டுதற்கிசையேன் மறுப்பதற்கு மிசையே னேனுஞ்,
சொன்ன மொழி மறாத்திற மென்றொருவா றோ துதற்குத் துணிபுற் றோனால். 19
3770 அவையடக்கம்.
நலம் பூத்த தென்கலையும் வடகலையும் பணி செய்சிவ ஞான யோகி,
புலம்பூத்த வரலாற்றை யான் பாடப் புகுந்ததிறம் புல வோர் தேரின்,
வலம்பூத்த விலாமுறிய நகைப்பரெனும் வருத்தமு மென் மனநீங் காதித்,
தலம் பூத்த வஃதியற்றீர் தவிருதிரென் பாரொருவர் தமைக்கா ணேனே. 20
3771 அவையடக்கம்.
ஏய்ந்தவிளம் பூரணர்சே னாவரையர் நச்சினார்க்கினியர் மேலும்,
வாய்ந்த பரி மேலழகர் மயங்குசிவ ஞானமா தவத்தோன் சீர்த்தி,
தோய்ந்த புகழ்க் கச்சியப்ப முனிவர்பிரான் சொலிற் சொல்லாஞ் சொல்லா ரொன்றும்,
பாய்ந்தநில வரைப்போர்மற் றகத்தியனு மகத் துவமாப் பாலிப் பானே. 21
3772 அவையடக்கம்.
மிகப்பெரிய னாகியசீர்ச் சிவஞான முனிவரன்சீர் விளம்ப லாகு,
மிகப்பின்மட முடையேனு மெவ்வாற்றா னென்னின் முன மிரு வர்தேறா,
நகப்படிவ மாய்வளர்ந்த சோதியையா ராதனஞ்செய் நன்மை பூண்டோ,
ருகப்பரிய மூன்றிழை நான் திழைத்தீப் மல்லாம லுஞற்ற லுண்டோ . 22
3773 இரண்டாவது - பாண்டி நாடு.
திருமுனிவர் பல்லோருஞ் செந்தமிழிற் றனைச்சூழ
வொருமுனிவ னுலகுசம் முறவுறைதற் கிடமாகித்
தருமுனிவன் கைக்களிறுந் தாபதர் தம் பழக்கத்தாற்
கருமுனிவா னெழுபொதியக் கவினதுபாண் டியநாடு. 1
3774
தனையுண்ட முனியுறையத் தக்கவிடங் கொடுத்ததனை
நனையுண்ட விருக்கங்காள் கொணர்மினென நரலைவிடப்
புனையுண்ட வவையெழுந்து பொருநையெனும் வடம் பூட்டி
வினையுண்ட விருபானின் தீர்ப்பவென மிடைவனவால். 2
3775
அறிவிலர்தாஞ் செய்வினையே யவர்க்கிடையூ றாயது போற்
செறிமடுவின் மோட்டெருமை செறிந்துழக்கிக் கன்றுள்ளி
முறிவொழியப் பொழிதீம்பான் மூரிநெடுந்திரையெறிந்து
வெறியதென வதையெடுத்து மிசையெறியு மிடனெங்கும். 3
3776
பொருநைவரு புனன் முழுகிப் புறமதகுப் புனலொடும் போய்த்
திருகவிய நெடுந்தூரஞ் சென்றொர் தடத் தெழுபறவை
யொரு தடத்துப் புனன் முழுகி யொள்ளியநா வுக்கரசர்
விருதுமலி யையாற்றுத் தடத்தெழுந்த மேன்மை பொரூஉம். 4
3777
போரகத்துஞ் சேரகத்தும் புணரியெனப் பொய்கைநிறை
நீரகத்தும் படி மேக நிறைபொழிலி னிடைப்புகுந்து
சீரகத்தப் பொழின் மேலாற் றெரியுமா துவக்குண்டல்
பாரகத்திந் திரன்முகிலூர் பரிசுதெரி தரக்காட்டும். 5
3778
மடையெலாஞ் சங்கினங்கள் வரம்பெலா மவையுயிர்முத்
தடையெலாம் வெடியெழுமீ னாறெலா மதகினொலி
புடையெலாஞ் செஞ்சாலி போரெலாம் பொலிமேகங்
கடையெலாம் பொலி மருதக் காமர்வளங் கணிப்பவரார். 6
3779
சாலியினுங் கந்தியினுந் தலைவிரிந்த வரம்பையினுங்
கோலிய செங் கரும்பினுமாய்க் குலவியெழு முத்தரித்து
வாலியதண் பொருநைகொடு கொற்கையக மருவுதலா
லாலியவத் துறை முத்த மரிப்பதெனக் குலவியதால். 7
3780
கொண்டறரு முதயத்துங் கோடைதரு கொல்லியினும்
விண்டுயிரெ லாநடுங்க வாடைதரு மேருவினும்
வண்டுறுசந் தமுந்தமிழு முடன்வரத்தென் றலை வழங்கு
மொண்டனிமா மலைசிறந்த துயர்ந்தது மந் நாடொன்றே. 8
3781
சேல் பாயும் புனற்குளத்துச் சென்றேறித் திரையெறிந்து
கால் பாயும் வயலகத்துக் கரும்புடைக்க வெழுந்தநறும்
பால்பாயுங் கனிச்சாறு பற்பலவு மப்படியே
நூல்பாயும் பொருநையொன்றோ நுவலந்நாட்டினையோம்பல். 9
3782
நலிபாண்டித் திறமுயர்வா நாமெனவூ ழியுங்கருதா
ரொலிபாண்டின் முதற்பலவா மூர்தியன்றித் தரையியங்கார்
கலிபாண்டிப் பியமெனவே கரையவளி முரலுமலர்
பொலிபாண்டிற் கமல்வயற் புகழ்ப்பாண்டி வளநாடர். 10
3783
நீறுவிழி மணிபுனைவார் நீசரே யாயிடினும்
பேறு தமக் கருள்வரும் பிரானென்றே யுபசரிப்பார்
கூறுமெழுத் தைந்தொடருட் குறிப்பூசை புரிகுவரேன்
மாறுதவி ரவராற்றும் வழுத்தினையார் வழுத்துவார். 11
3784
இன்னவளம் பலதழுவி யேழுலகும் புகழவுள (வாத்
பொன்னவிரு மணிகெழுமார் பப்புருடோத் தமனுமொவ்
தென்னவர்த நாட்டுள தால் விக்கிரம சிங்கையெனு
நன்னகரம் பாவநா சப்பதிநா மமும்புகல்வார். 12
3785 விக்கிரமசிங்கபுரம்.
மறையவரே முதலொரு நால் வகைக்குடியும் பிறவாக
வறைகுடியுந் தத்தமொழுக் ககலாது மிக நெருங்கிக்
குறை சிறிது மில்லாது குலம்பொலிய நலம்பொலியும்
பறைபுகழான் மிக்கோங்கும் பாவநா சப்பதியே. 13
3786
சீராலும் விருந்தினர்க டிருந்தினரா வுபசரிக்கு
மேராலு முழவுதொழி லோராலும் போராலுஞ்
சேராலு மளப்பரிய சிறப்பாலும் பிறப்பாலும்
பாராலும் பொலிவேளாண் குடிகள் பல பயில்வதுவே. 14
3787
அணங்குவன மகளிரிடை யலறுவன நூபுரங்கள்
பிணங்குவன குழல்வண்டு பிரிகுவன விலம்பாடே
யுணங்குவன வஞ்சகமே யுருங்குவன கண்ணயிலே
யிணங்குவன வறமுழுது மிரிகுவன மறமுழுதும். 15
3788
பாடகமெல் லடிப்படல்செம் பஞ்சிகொல்காளையர்சிரமு
மாடமிசை யாடுதல் பொன் மாண்கொடியோ காண்கொடியு
நீடமனை தொறும் வளர்வ நெடுந்திருவோ நிரம்பன்புந்
தேடவரும் பொருளாதல் சிவார்ச்சனை கொ றெருளருளும். 16
3789
புதிதடைநர் பிரிவுநமைப் பொருந்துமென வருந்துவரான்
மதியினும் சரிப்பவர்மேல் வராமைக்கே வருந்துவரா
லதிநலமங் கையருட லடாமைக்கே வருந்துவரால்
பொதியவளிப் போரிரப்போர் புகாமைக்கே வருந்துவரால். 17
3790
தாழாது மேன்மையுறா மைந்தருடைத் தடங்கரமே
யாழாது மேன்மையுறா வம்மதில் சூழ் கிடங்குகளே
போழாது மேன்மையுறா பொருகரிவெண் கொடுகளே
வீழாது மேன்மையுறா சந்நிதிமெய் யன்பர்மெய்யே. 18
3791
மாதருட னீர்த்துறையின் மற்றவர்க்குத் துணையாயே
யோதவினி தாடுவன வொண்செங்கா லோதிமமே
போதமையக் குற்றமைக்கும் பொழிற்றுணைமை கூடுவன
மேதகைய சாயல் வளங் கண்டவிரி சிறைமயிலே. 19
3792
கந்தியிடைப் பொன்னூசல் கழுத்தழகு கவர்பிழைக்கா
முந்தியிறு குறப்பூட்டி மொய்குழலா ராடுதொறு
முந்தியுட னாடுவன வொண்குழைமுத் தாரங்கொல்
புந்திநனி தடுமாறப் புகுமைந்தர் தம்மனமும். 20
3793
கிள்ளையுறல் கைத்தலமோ கிளர்மகளிர் முலைத்தடமும்
வள்ளையுறல் பொய்கைகொலோ மடவியர்செங் கிடைவாயும்
வெள்ளையுறல் கவிஞர் தம்வா யோமதுமே வினர்வாயு
மெள்ளையுற னாசிகொலோ வெழிலரம்பை மார் நலமும். 21
3794
கயிலாய பரம்பரையிற் காமர்பெற வவதரித்த
சயிலாதி மரபுடையோன் சந்தானந் தழைப்பிக்க
வெயிலாரு மணிமாட மிளிர்துறைசை யகம் புகுந்தார்
பயில் வாய்மை யது தெரிந்து பரவாதா ருளரேயோ. 22
3795.
சந்தமலி நாவலர் தந் தலைவணங்க வடகலைக்குஞ்
செந்தமிழ்க்கும் விக்கிரம சிங்கமென வொருவருறப்
பந்தமற வவரையுள்வார் பாவநா சம்படலால்
வந்தனவிப் பெயரந்த நகர்க்கெனவும் வழக்குண்டால். 23
3796. பாண்டிவேளாளர் சிறப்பு.
அந்தந்த ரத்துலகா ளாய பெருங் கருணையொடுஞ்
சந்தமுற வினிதமருந் தம்பிரா னடிக்கன்பே
நந்தலுற வளர்பாண்டி வேளாளர் நற்குலமே
யெந்தவுல கமும்புகழ வினிதுநெருங் கிய தம்மா. 24
3797. முன்னேர்வரம் பெற்றமை.
அன்னகுலத் திடையொருவ ரருந்தவத்தா லகத்தியனார்
முன்னமைய வேழுதலை முறைப்புவமை நுமக்களித்தோ
மென்னவுமற் றவற்றீறே யேற்றநனி யாமெனவும்
பன்னவொரு வரம்பெற்றார் பாரடங்காப் புகழ்பெற்றார். 25
3798. ஆனந்தக்கூத்தர்.
அவ்வாறு பெற்றவரு ளமையாறாந் தலைமுறையார்
செவ்வாய்மை யானந்தக் கூத்தரெனுந் திருநாம
மெவ்வாயுஞ் சொலப்பெற்றாரில்லொழுக்கின் றலைநின்றார்
துவ்வாமை யுறாக்குணங்கள் சேராது திரண்டன்னார். 26
3799. மயிலம்மையார்
அன்னவர்த மனைக்குரியா ரருந்ததியிற் சிறந்துள்ளா
ரென்னவரும் விருந்தோம்ப லின்னிளையான் குடிமாறர்
தன்னமிலாக் காதலியார் தமையொப்பா ரெனப்புகழ்வார்
பின்னமிலா மனைக்குரிமை பேணுதலிற் றமையொப்பார். 27
3800. பாண்டிவேளாளர் சிறப்பு.
ஏயமயி லம்மையா ரெனுநாமம் பெற்றுள்ளா
ராயவரோ டெனளா யானந்தக் கூத்தரென
மேயவர்தா மகிழ்சிறந்து மேதகவின் வாழுநாட்
யேமகப் பெறுவாஞ்சை மேன்மேலுஞ் சுரந்துளதால். 28
3801. இவ்விருவரும் மகப்பேறுகருதிதோற்றல்.
திருத்தமுழு கியுங்கருணைத் திருவுருவா முலகாளை
யருத்தமறை முக்களா லிங்கரையன் பொடுபணிந்தும்
வருத்தமுறு விரதமெலா மாண்புடனாற் றியுநீற்றுப்
பொருத்தமுடை யடியாரைப் புகழ்ந்தூட்டி யுபசரித்தும், 29
3802.
மற்றுள நற் கருமமெலா மறவாது நனிமுடித்து
மிற்றுளதீ வினையாள ரிவ்வாறே யொழுகுவார்
கற்றுளமற் றிவர்க் குமடங் கழியாமை யெவன்கொல்சிவப்
பற்றுளநங் குறிமுனிமுன் பகர்ந்தமொழி பழுதாமோ. 30
3803. மயிலம்மையார் கருவுற்றமை.
இந்தவா றிவரொழுக வெம்பிரான் றிருவருளாற்
கந்தமார் குழன் மயிலார் கருக்கொண்டா ரன்று முதல்
வந்தமா மறையோர்க்கு மற்றையடி யார்க்குமவாச்
சிந்தவா தரித்தளித்தார் சிவானுபவ மகப்பெறுவார். 31
3804.
பொங்குமுலை முகங்கறுப்பும் புளிம்பழத்தி னெழுவிருப்புக்
தங்குமொரு பொய்த்துயிலுஞ் சார்ந்துவயா நிரம்பியெழ
வெங்குநிகழ் மழமலவா யிடுமணய னாடாமே
யங்குதவிர்ந் திடப்புகை மண்ணதுசிறிது நுகர்ந்தமர்ந்தார். 32
3805. மகப்பேறு.
ஒருபது திங் களுநிரம்ப வொள்ளியால் லோரையெழப்
பெருகுசம யத்துளுநற் பெருஞ்சைவங் குதுகலிப்பத்
திருகு தவி ரதனுள்ளுஞ் சித்தாந்த சைவமெழூஉப்
பொருவருநல் லின்படையப் போதநூ லுவப்பூற. 33
3806.
செப்பரிய தமிழ்வழங்கு தேயமெலாங் களிசிறப்ப
வெப்பரிய மறையோரு மெல்லோருங் கொண்டாட
வெப்பரிய சோணாட்டு மெய்த்துறைசை நகருவப்ப
வொப்பரிய தவப்பெரியோ ரொருவரவ தரித்தனரால். 34
3807. மகப்பேற்றுக்கொண்டாட்டம்.
சூதவினைச் சடங்கனைத்துந் தோற்றிய நாண் முதற்றொடங்கி
யாதரவை யவிபுகைப்பார் நிம்பமலங் கரித்திடுவார்
மேதகைய நெய்விழா வீதியெடுப் பவராகப்
போதமகப் பயந்தார்கன் புனன் முழுகி வித்தளித்தார். 35
3808. பிள்ளைத்திருநாமம்.
மிக்களா வியசூத வினைகழியப் பின்னாளி
லக்களா வியவரையா ரருள்கருது தந்தையார்
திக்களா வும் பெருமைச் சேயார்க்குத் திருநாம
முக்களா லிங்கமென மொழிந்தனர்பல் கிளையுவப்ப. 36
3809. காப்புப்பருவம்.
தண்ணியநீ றெடுத்தணிந்தீ சானரவர் முதலாக
வெண்ணியவான் பதினொருவ ரிணையடி.கள் கைதொழுது
மண்ணியமா மணிபுரைய வருமகவை வழுவாது
கண்ணியபே ரருளினொடு காப்பது நுங் கடனென்றார். 37
3810. செங்கீரைப்பருவம்.
இருகையாமன் பதித்தொருதா ளெடுத்தொருதா ளுறமடித் துத்
தருகைமலி சித்தாந்த சைவிமலாற் பிறிதொன்றும்
வருகையுறல் சம்மதியோ மெனமறுக்கு மாட்சிமையிற்
றிருகையுறார் தலையசைத்துச் செங்கீரை யாடினார். 38
3811. தாலப்பருவம்.
அத்தமணித் தூணிறுவி யாய்துகிர்விட் டங்கிடத்தி
முத்தவட மதிற்பொருத்தி முழுமணித்தொட் டிலையிணைத் துச்
சித்தமுற வதிற்கிடத்திச் செங்கைதொட்டுத் தாதியர்க
டத்தமனங் களிசிறப்பத் தாலோதா லெனவுவந்தார். 39
3812. சப்பாணிப்பருவம்.
ஆயபன்மூலத்தொடுமொவ் வாதமுரணுரையெழுதித்
தீயசம வாதஞ்செய் சிவப்பிரகா சப்பெயரீர்
நாயகமா யினிரென்று நகைத்திடக்கை தட்டுதல்போற்
றாயனையார் கைகுவித்துச் சப்பாணி கொட்டினார். 40
3813. முத்தப்பருவம்.
சித்தநிலை திரியாது சித்தாந்த சைவமரீஇ
நத்தமல வலியகல் நல்வினையுந் தீவினையு
மொத்தநிலை யுடையோரா யுற்றவருக் காரியனான்
முத்தமுவந் தளித்திடுவார் முத்தமுவந் தளித்திடுவார். 41
3814. வாரானைப்பருவம்.
வருக்கதிர் மணிவிளக்கே வருக்குல பூடணமே
வருகவிரு ளறுசுடரே வருகவிளங் கருமருந்தே
வருக முழு மலப்பகையே வருக்கருணைக்கடலே
வருகவரு கெனவழைப்ப வந்துவப்புச் செய்குவரே. 42
3815. அம்புலிப்பருவம்.
மதியவனா தலினொத்தா யல்லோனா தலின்மானாய்
விதியமையுங் கலைக்குறைவு மேவாது பொலிதருவாய்
துதியொடுவா ராமையினாற் சுடுகனற்சா பமும் பெறுவா
யதிவிரைவி னம்புலியே யாடவா வெனவுவப்பார். 43
3816. சிற்றிற் பருவம்.
பொருவினுதற் சுட்டியொடு பொலிமார்பைம் படைதயங்கத்
திருவிலிடு சதங்கையும் பொற் சிலம்புஞ்சீ றடியிரட்ட
வருதரும் புரத்தர் முரண் மரபனைத்துஞ் சிதைப்பது போற்
றெருவின்மட வியரியற்று சிற்றில் சிதைத் தருளினார். 44
3817. சிறுபறைப்பருவம்.
எடுத்தெனுஞ்சொற் கிடுவயிரக் குப்பாய மெண்டிசையு
மடுத்துநிறை வது பொருவ மண்முழுதும் போய்நிறைய
வடுத்தகுணில் கரம்பற்றி யழகியவெண் ணீறிலங்கத்
தொடுத்த சிறு பறை முழக்கி யருளினர்சொற் கலைமுழக்கார். 45
3818. சிறுதேர்ப்பருவம்.
இந்திரிய மெனும் பெருந்தே ரெண்ணியவா றுருட்டுவதற்
கந்திமதி சடைக்கணிந்த வண்ணலார் சீறடியார்
முந்தியுறப் பழகுதல் போன் மொய்யழகு; நலம்படைப்பப்
புந்தி மகிழ்ந் தினிதிவர்த்து பொற்சிறுதே ருருட்டினார். 46
3819. வித்தியாரம்பம்.
இந்தவித முறுபருவ மெலாநிரம்பத் தாய்தந்தை
சந்தமிகு மனங்களிப்பத் தண்டுறைசைப் பதிவாழு
மந்தமிலாக் குருநமச்சி வாயனரும் பொருள் வளரு
மைந்தமையு மையாண்டின் மேலாய பருவம்வர 47
3820.
காவணமெங் கணுமிட்டுக் கழைகதலி கமுகியாத்துப்
பூவணமாலையுஞ்சிறந்த பொன்னரிமா லையுந் தூக்கி
மாவணவே தியர் முழங்க மங்கலவாழ்த் தினிதியம்ப
நாவணநல் லவரோதும் பள்ளியைந் தமர்வித்தார். 48
3821. கல்விவளர்ச்சி.
பள்ளியிடை நயந்தமர்ந்த பாலனா ரன்று முதல்
வெள்ளிய நூ றெரிவிப்பா ரொருமுறைவிண் டிடுவதன்மு
னொளிய நூன் முழுதுணரு முணர்வுடைய ராய்த்திகழ்வா
ரெள்ளியமும் மலத்துயரு பிரித்துயரு மேற்றத்தார். 49
3822. இருமுதுகுரவர் மகிழ்ச்சி .
சந்தமலி பாவநா சப்பதிசெய் பெருந்தவத்தா
லந்தமில்சீர் மயிலம்மை யானந்தக் கூத்தர்மன
நந்தமகிழ் தலைசிறப்பு நாளெலாங் கொண்டாட
வந்தவரோர் பானாண்டு மருவவளர்ந் தினிதமர்ந்தார். 50
3823.
3823. கலையமைதிங் களின் வளர்ச்சி காட்டியே நாட்டுநா
டொலைவில்குண மறிவினொடு தொக்கமையுந் தோன்றலா
ரலை புனற்கா விரிநாட்டி னாவடுதண் டுறையடைந்து
தலையமைபா டியஞ்செய்த தன்மையினிச் சாற்றுவாம். 51
-------------
மூன்றாவது - திருக்கைலாயச்சிறப்பு.
3824.
வளங்கள் வேண்டுவ வந்திரந் தவர்க்கெலாம் வழங்கி
விளங்க மாயவ ரிந்திரர் முதலியர் மிடைந்து
துளங்க மேவிய கறுப்பலாற் றோற்றிடும் வேறு
களங்க மொன்றிலா துயர்ந்தது வெள்ளி வெண் கயிலை. 1
3825.
மேய வாதனக் கயிலையின் வெளுப்புமேன் மேய -
நாய னாயதன் படிகமெப் வெளுப்புமோர் நம்மான்
மாய மாஞ்சிறு கறுப்பொரு களத்துறன் மாயத்
தூய நீறுமூ விரலள வங்குலக் தொகுப்பான். 2
3826.
சடைநி றஞ்சிவப் பெனல்விளர்ப் புறத்தலை மாலை
யடைநி லாமதி கொக்கிற கவிர்தரு துரோண
மிடைதி ரைப்புனல் வெள்ளெலும் பருக்கமேல் விளங்க
வுடைய கோனனிந் தனன்கயி லையின்வள முவந்தே. 3
3827.
கரிய மாயவன் வெள்விடை யுருக்கொண்ட கருத்துக்
தெரிய வான்றுதி செயல்கொளு நான் முகன் செந்நா
வரிய வெண்கலை மகளுற வைத்தது மாயிற்
பிரிய மார்கயி லைக்கிரி பேணுதற் கன்றோ . 4
3828.
சைவ ராயவர்க் கநாதியே யெம்பிரான் றகைசா
றெய்வ வெள்ளிய நீறுகொண் டணிவது செய்தான்
பொய்வ குத்தவே றிலாஞ்சனம் புனைபவர் மாட்டு
மெய்வ கைப்பிரி யஞ்செயா தென்பது விழைந்தே. 5
3829.
நிறங்கு லாஞ்சடை யெம்பிராற் றொழுதுமே னின்றே
யிறங்கு வெள்ள ராக் குலங்களை முடியினின் றிறங்கும்
பிறங்கு வெள்ளரு வித்திரள் களைப்பகல் பெட்டே
யறங்கு லாவுவா னவரினு முயலவு மாகா. 6
3830.
தருகை நீண்டந் தம்பிரான் சரண்டரி சிப்பா
னுருகை மேற்கொடு படரும்வா ளராக்குல மொருங்கு
திருகை மேவுறா வருவிதங் குலமெனத் தெரியா
வருகை தேர்ந்தந்தோ சேவையா யிற்றென மருளும். 7
3831.
செங்கை வச்சிரப் படையினான் பதமிசைத் திகழு
மங்கை யெட்டுடை நான்முகன் பதமர விந்த
மங்கை மார்பினன் பதமிவை நவநவ மருவும்
வெங்கை யானையார் கயிலைமே வியபடி மேவும். 8
3832.
அருவி பல்லிடம் பாய்தரு முழக்கமு மமரர்
மருவி யார்ப்புறு துந்துபி முழக்கமும் வளையுங்
கருவி மாமுகின் முழக்கமு மலர்ப்பதங் கருத்தி
லிருவி யன்பர்செய் யாமுழக்கத்தின்மே லெழாவால். 9
3833.
அடியிற் றங்கிய சுனை தலத் தொடும்பகுத் தறியார்
தொடியிற் றங்குகை வானநா டியருளந் துணியக்
கடியிற் றங்கிய குவளைகள் செறிவன கண்ணிற்
கொடியிற் றங்கிய பகைதபுத் துறவுகொண் டாடும். 10
3834.
அணங்க னார்பலர் குடைதொறுஞ் சுனையகத் தமைந்த
மணங்கொள் கொங்கையிற் குங்கும் மண்ணிய நீத்த
மிணங்கு மீதெனாரிராவணற் கடிந்தபோ தெழுந்த
குணங்கொள் செய்யநீர் வறந்தில தினுமெனக் குறிப்பார். 11
3835.
கந்த ரந்தொறு முனிவரர் பற்பலர் கற்பச்
சந்த வெள்ளிய நீற்றினா லுடலெலாந் தயக்கி
வந்த வாதனத் துறைகுவர் கண்டவா னாடர்
நந்த வெள்ளிய முடங்குளை மடங்கலா நயப்பார். 12
3836.
நிலவு பாற்கரர் சேவைக்கு வருந்தொறு நீண்டு
குலவு வெள்ளிவெண் கற்றைபோ யவருடல் கூட
வுலவு ஞாயிறு நந்நிறம் போயதென் றுளைவான்
வலவு வாமதி களங்கநீங் கியதென மகிழ்வான். 13
3837.
மேக வண்ணனாங் கணைதொறும் வெள்ளி வெண் கயிலை
நாக நின்றெழு சுடர்ப்பிழம் பொருங்கு நண் ணுதலாற்
போக மாமக ளுவப்புறக் கருநிறம் போக்கி
யாக முற்றுமுன் னிறஞ்செய்த தெளிதென வவாவும். 14
3838.
அயனி ராசதன் மாயன்றா மதனிவ ரளவி
னுயருஞ் சத்துவ வுருத்திர னொருவனே வலியன்
மயருஞ் செய்யதா மரைபசுந் தொல்லிலை மட்டே
பெயர்வில் வெள்ளிவெண் கயிலையோ தாங்கிடப் பெறுமால். 15
3839. ஆயிரக்கால் மண்டபம்.
இன்ன மால்வரைக் கயிலையி லெற்றைக்கு முளது
சொன்ன மற்றை நான் கினுமிது துணைகுவ தரிது
பன்ன கேசனும் பகருவ லெனாப்பெரும் பண்ப
தன்ன மண்டப் மொன்றதன் கால்களா யிரமே. 16
3840.
ஆய்ந்த காலெலாஞ் செம்பொனாற் பன்மணி யவையால்
வாய்ந்த மேற்பரப் பொண்மையை வகுக்க நாம் வலமோ
வேய்ந்த தோற்றந்தா னிளங்கதிர்க் கோடிக ளிராறும்
பாய்ந்த வவ்வரை மிசையுதித் தனவெனும் படிய. 17
3841. திருவோலக்கமண்டபம்.
அன்ன மண்டப நாப்பணோர் மண்டப மதனை
யென்ன ருஞ்சொல்வார் வித்தினுட் படுமுளை யென்னச்
சொன்ன தூலத்துட் சூக்குமஞ் சொலத்துணி வாரு
மன்ன மற்றது னுண்டொழில் வகுத்திட மாட்டார். 18
3842. சிங்காதனம்.
யாம்பஞ் சானனப் பெயருற்றும் பரத்தலீ தன்றி
யாம்ப லாகம் மறைமுதற் றோற்றிடா வதனா
லேம்ப லோடணை சுமப்பமென் றரியியைந் தென்னப்
பூம்பன் மாமணி யணையொன்றம் மண்டபம் பொலிய. 19
3843. சிவபெருமான்வீற்றிருத்தற் சிறப்பு.
அனைய திப்பிய முடங்குளை மடங்கலா தனத்து
வனையு மெம்பெரு மான்சிவ ஞானமா முனிவ
னினையு மெய்யரு ளிதயத்தி லிருப்பென நெருங்க
லினையு மாதித்த மண்டல நடுவிருப் பென்ன. 20
3844. குடை, சாமரைகள்.
குறைந்த மாமதி யன்றிவே றிலையெனல் கொளாது
நிறைந்த மாமதி யெனமிசை வெண்குடை நிழற்ற
வுறைந்த வான்புன லிரண்டுந்தம் மினத்தொடு கலத்தற்
கறைந்த மேற்செல வெனக்கவ ரிகள் புடை யசைய. 21
3845. விடைக் கொடிகள் முதலியன.
விடையி ரண்டுள வெனலெதிர் கொடிகளான் விளங்க
வடைவ ளிக்கிடை யூறிலா மையினணிந் தனவாய்
மிடைந யங்கொள் சாந் தாற்றிகள் விளங்கமேன் மேலும்
புடைய நேகமா கியவிரு தாவளி பொலிய . 22
3846. குடமுழா, சங்கம் முதலியன.
ஆய வாணனும் பானுகம் பப்பெய ரவனும்
பாய வண்குட முழவமும் பணிலமும் பற்றி
மேய வார்ப்பொடு மற்றைய வார்ப்பெலாம் விரவி
யேய மாகட லொலிமுகி லொலிதப விரிப்ப. 23
3847. அரமுழக்கம்.
வான வாழ்வின ரிந்திரர் மலரணை வதிவா
ரூன நேமியார் வித்தியா தரர்சித்த ருரகர்
மான வாசைகா வலர்முனி வரர்முதல் வளைந்தே
யான மாதரோ டெழுப்பர வொலிதிசை யளாவ. 24
3848.
நந்தி நாயகன் வேத்திரத் தொடுமெதிர் நடந்து
முந்தி யாகுந்தன் பணிதலை நிற்பமூ வுலகுஞ்
சிந்தி யாதுயிர்த் தவளிடப் பாகத்துச் சிவண
வந்தி வான்மதி சூடிய வழகன்வீற் றிருந்தான். 25
3849. தரிசிக்கவந்தவர்கள் தரிசித்துச் செல்லல்.
கண்கொ ளாத்திரு வோலக்கப் பெரும்பயன் கண்ணுற்
றெண்கொ ளாக்களி மகிழ்ச்சியிற் றிளைத்தன ரிறைஞ்சி
விண்கொ ளாக்கதிர் மோலிவிண் ணவர்முத லியாரும்
பண்கொ ளாச்சொன்மா தர்களொடுந் தம்மிடம் படர்ந்தார். 26
3850. திருநந்திதேவருடைய வேண்டுகோள்.
கூடி நின்றவர் குழாத்தொடு மகன்றது மன்றத்
தாடி யாவயிற் றனித்தினி தமர்வது முளத்து
நாடி நல்லம யம்மிது வேயென நயந்து
பாடி யன்பொடு பணிந்தன னந்தியெம் பகவன். 27
3851.
இடையறாமலே பணிந்தெழு நந்தியெம் பிரானை
யுடைய நாயக னுண்ணெகிழ் கருணையா னோக்கி
யடைய நீயுளங் குறித்ததெ னறைகுதி யென்னக்
கடைய னேன் செயும் விண்ணப்ப மிதுவெனக் கரைவான். 28
3852.
ஐய நின்னருள் வலியினாற் கைலைகாப் பமைந்த
செய்ய போதி காரத்திற் பிறவற்றிற் சிறந்தே
னுய்ய வேண்டி நின் னாகமப் பொருண்முழு துணர்வான்
வெய்ய னேன்விழைந் தேனெனப் பணிந்தனன் மீட்டும். 29
3853. ஆகமங்களை உபதேசித்தல்.
பணிந்த நந்தியெம் பகவனை யெழுகெனப் பணித்தே
துணிந்த நான்மறைப் பொருளெனுந் தோன்றலெம் பெருமா
னணிந்த தன்புடை யிருத்தியங் கையின் வெரிந் தடவித்
தணிந்த சிந்தையி னாகமங் தெருட்டுதல் சமைந்தான். 30
3854. வேறு.
காமிகமே யோகசமே சிந்தியமே காரணமே யசிதந் தீத் தம்,
பூமிபுகழ் சகச்சிரஞ்சூக் குமமஞ்சு மான்சுப்ர பேதம் பொற்பி,
னாமினிய விசயநிச்சு வாசஞ்சுவா யம்புவமே யனலம் வீர,
நாமவிர வுரவமகு டம்விமலஞ் சந்திரஞா னம்விம் பம்மே. 31
3855.
மேயபுரோக் கிதஞ்சருவோத் தம்பார மேசுரமே மிளிர் சந் தானந்,
தூயவில ளிதங்கிரணஞ் சித்தமே யுயர்வுறுவா துளமே யென்ன,
வாயவிரு பத்தெட்டா மாகமத்தின் றொகையிவைக ளடை வே தோற்றம்,
பாயதிறங் களுமுறையே பகருவா மதுகுறிக்கொள் பண்பிற் கேணீ. 32
3856.
மறையனைத்து நம்முடைய நான் முகத்து நின்றும் வெளி வருமா செய்து,
பொறையமைக்கும் பொதுவாக்கிச் சிறப்பாக வாக மத்தைப் புகல லுற்றாங்,
குறையறுக்கு மவை மூலங் கோணறுக்கு மிவையுரையாக் கோடி யின்னு,
மிறைதபுக்கு மவைபசுவா மாகமந் தீம் பாலாகு மெய்ம்மை யோரின். 33
3857.
தேடுகா மிகமுதல சிதம்வரையோ ரைந்துஞ்சத் தியோ சா தத்தே,
மாடுபொலி தீத்தமுற்சுப் பிரபேதம் வரையைந்தும் வாம தேவங்,
கூடும் விச பம்முதலா வீரம்வரை யைந்துமகோ ரத்துண் டாய,
நீடுமிர வுரவமுதல் விம்பம்வரை தற்புருட நேர்ந்த தைந்தும். 34
3858.
அறையுமிரு பது நீங்கப் புரோக்கிதமுன் வாதுள மீறாய வெட்டு,
நிறையுமொளி வளரீசானத்து நின்று தோன்றினவா னிலவ நாளுங்,
குறையிலொவ்வோ ராகமமுஞ் சரியைமுத லொருநான்குங் கூறா நிற்கு,
மிறையிலினி துணர்த்தியென வொவ்வொன்றா வாய் மலர்ந்தான் மேதக் கோனே. 35
3859.
முந்துகா மிகமுதலா வோரிருபத் தெட்டனுளு மொழி முனாக்க,
நந்துமிர வுரவத்திற் சிவஞான போதநிற்க நயத்தவெல்லாஞ் .
சந்து முலை யொருபாக னுபாகமத்தோ டுணர்த்துதலுந் தவாது கேட் டவ்,
விந்து முடி யவன் பாத மெழுந்து பணிந் தொருவினா வியம்ப லுற்றான். 36
3860. திருநந்திதேவர் ஐயுற்று வினவல்.
ஆயசுவா யம்புமுத லியவேழ்ப தார்த்தமெனு மமைதி பூண்ட,
தூயபவுட் கரமதங்க முதலியவா றெனுமைந்தே சொலும்ப ராக்கியை,
யேயமுதற் சருவஞா னோத்தர முன் னான்கென்றே யியம்பா நிற்கு,
மேயவிர வுரவமிரு கேந்திரமுன் மூன்றென்றே விளம்பா நிற்கும். 37
3861.
ஆதலினா லடியேற்கு மலைவுபடு மிது தெளிய வறைவா யென்று,
காதலொடு கைகூப்ப முகமலர்ந்து நகைமுகிழ்த்துக் கருணை
மூர்த்தி, மேதகைய மூவகைப்பா தங்களிற்பல் பேதத்தால் வேறா மேனுங்,
கோதமையா ஞானபா தத்தியல் பெவ் வாகமத்துங் குறிக்கொ ளொன்றே. 38
3863.
மன்னியப் தார்த்தமேழ் முதலாக மூன்றளவும் வகுக்கு மேனு,
மின்னியமற் றவை மலைவு படாவெனினு மிரவுரவம் விளம்பா நின்ற,
துன்னியவான் சிவஞான போதமுணர்த் துதுமலைவு துன்னா தாகும்,
பன்னியவ பரம்பரமாஞ் சிவஞான மென்றதனைப் பகர்த லுற்றான். 39
3863. அவருக்குச் சிவஞானபோதத்தை உபதேசித்தல்<
அருமையினு மருமையென நாமும்பா ராட்டிடுவ தளவி லாத,
பெருமையுடை நூற்கெல்லா முடியாவ தெத்துணைத்தாய்ப் பிற ங்கு மென்னி,
னிருமைதரு பன்னிரண்டு சூத்திரமா முடிவு பெற்ற திதுகேளென்றே,
யொருமை மன நடுப்பதியப் பெருங்கருணை தழைத் தோங்க வுரைப்ப தானான். 40
3864.
எழுவாய்ச்சூத் திரம்பதிக்குப் பிரமாணம் பாசத்திற் கிர ண்டு மூன்று,
பழுதாகாப் பசுவிற்கா நான்கைந்தா றியல் பசுபா சம்ப திக்காம்,
வழுவாத விலக்கணமே ழெட்டொன்பான் சாதனமே மற் றை மூன்று,
மெழுதாத சாத்தியங்கூ றுதலாகு மின்னுமொன்றுண் டியம்பக் கேளாய். 41
3865.
முந்தியதாஞ் சூத்திரத்திற் சகந்தோற்ற நிலையிறுதி மூன் றதென்று,
நந்தியமற் றஃதானா லேயுடைய தென்றுமே னாடு மாறு, பிரகாசி
வந்தியலு மிருவருமுத் தொழிற்படுவ ரென்றும் வரையறுக்கப்பட்ட,
வுந்தியமூன் றதிகாண முள்ள துகா ணிந்தியங்க ளொருங்கு மாய்த் தோய். 42
3866.
நேயவிரண் டாவதர னுயிர்களிலே யிரண்டறுமா நிற்ப னென்றும்,
பாயகன்ம பலனையுயிர் களுக்கரனே கொடுத்தூட்டும் பண்ப னென்று,
மேயவுயி ரனைத்துமச்சு மாறியே பிறக்குமென்று மேலோ னாய,
தூயவான் சருவவியா பகனென்று நான்காகித் தோ ன்றா நிற்கும். 43
3867.
மூன்றிலையென் னறிவுடனே சொல்லுகையா னறிவுயிர் தான் முழங்க வண்டு,
மான்றவென துடலென்ற பொருட்பிறிதின் கிழமையா வழங்க லாலே,
யான்றவுட லினுக்கு வேறாயுயிருண் டொ ருவனே யைந்து மோர்வி,
னேன்றவொவ்வொன் றறிகின்ற வைந்த னுக்கும் வேறாயோ ருயிருண் டென்ப. 44
3868.
கனவுடலை விட்டுகன வுடலிலே வருகையினாற் கனவு டற்கு,
மனநெகவே றாயுயிருண் டொருவாநித் திரையினும்பி ராண வாயு,
கனமருவு தொழில் செயவுஞ்சரீரத்திற் குப்புசிப்புத் தொழிலுங் காண,
வுனவின்மை யாற்பிராண னுக்குவே றாயுயிரொன் றுண்டு மாதோ. 45
3869.
மறவியுற்று மறவியுற்று நினைக்கின்ற படியாலே மறவி தீர்ந்த,
வுறவியா னுக்குவே றாயுயிருண் டெல்லாத்தத் துவங்க ளுக் குஞ்,
சிறவுபெற வெவ்வேறு பெயரிருக்கும் விதத்தாலே தெரிய வந்த,
வறவருத்தத் துவங்களுக்கு வேறாக வுயிருண்டா லாக வேழே. 46
3870.
நாலிலந்தக் கரணங்கட் குயிருடனே கூட்டுறவு நண்ணி னன்றிச்,
சாலவொரு தொழிலிலா மையினந்தக் கரணங்க டமக்கு வேறா
யேலவுயிருண்டுமல மறைப்பினா லுயிர்க்கறிவொன் றில்லை நா ளுங்,
கோலவுயிர் மூன்றவத்தைப் படுமாக மூன்றென்றே கூற லாமே. 47
3871.
ஐந்தினுயி ராலேதத் துவங்களெலாந் தொழில் செய்யு மரன்ற னாலே,
மைந்துயிரெலாமறியு மிரண்டேயா றனிலுயிர்கண் மதியினாலே,
முந்தியறி வனவனைத்து மழியுமொழி தருமப்பிர மேய மாக,
நந்தியறியப்படுவா னானிதற்கு மிரண்டாக நவில் லாமே. 48
3872.
எழிலரன் பாசத்தை யனுபவியா னனுபவியா தியையப் பாசம்,
வாழனை யவ்விரண்டு மனுபவிக்கு முயிர்மூன்றே மருவு மெட்டி,
லூழுயிர்க்கு நல்லறிவு தவத்தடையு மரன்குருவா யுறுவ னைந்து,
மாழுமுயிர் பற்றுதலிற் றனையறியாத் தனையறியு மவையற் றாலே. 49
3873.
ஒன்பானி லான் ஞானத் தாலரனைக் காணுமுயி ருயிர்பா சத்தில்,
வன்பார்பற் றறினரன்றோற் றுவன்வாத னாமலம் போ மதித் தைந் தெண்ணி,
வின்பார்மூன்றொரு பதினீயரனுடனொன் றாகிநிற்றி யியையு மாறு,
நின்பாலாந் தொழிலனைத்து மரன்பணியென் றே கோடி நிகழ்த்தி ரண்டே. 50
3874.
பதினொன்றின் ஞானியுறும் விடையமர னனுபவிப்ப னரனைப் பற்றி,
முதிரன்பி னிருந்தாலவ் வரனிடத்தே கலப்பனிது மொழியி ரண்டே,
யெதிரில் கடை மும்மலமுங் களைகசிவ ஞானி யொடு மியைக ஞானி,
கதியிலிங்கஞ் சிவனென்றே வழிபடுக படா மையையுட் கழிக்க நான்கே. 51
3875.
பன்னிரண்டு சூத்திரத்தின் றனிச்சிறப்பு மொரோ வொன்றின் பாகு பாடு,
மின்னியநா மெடுத்துரைத்தா மின்னுங்கேள் சிலாதமுனி வேண்ட வந்தோய்,
மன்னியசை வத்தமனா திகளினறி வரியனவா னிறைவான் மாண்ட,
துன்னியவ லியவநா திசத்திநித்தி யத்தவைந்தாச் சொல்வர் மெய்யே. 52
3876.
பதியுமதற் கடிமையாம் பசுவுமதனாணவமும் பாற்ற வத் தைக்,
கதியவன்மா யையுங்கரும் மும்மெனலா மவையிரண்டுங் கடைம் லத்தாம்,
பொதியவறி வித்தல்பதி யறிந்து நிற்றல் பசுசிவத் தைப் புணரா தஃது,
விதியின் மண்ணுய்த் திடுவதா ணவங்கருவி மாயையுணா மேய கன்மம். 53
3877.
உணர்வுறாச் செயிர்வலியா லுறவிழந்திட் டாணவத்தை யுறுப சுக்கட்,
கணவுதா யெனவருளாற் பருவமுணர்ந் துடல் கரணம் புவனமாக்கிப்,
புணர்மாயை யாணவந்தீர்ந் தொளிரறிவே யுருவாய புனிதன் மாயை,
தணவில்வினைப் பாலுயிர்கட் கிறாவுடலு மிறுமுட லுந் தகமுற் செய்து. 54
3878.
அருவுருவத் திறத்துடலா யுயிராய்மற் றுலகமா யமை யும் வேறாய்,
மருவுகொள மற்றவற்றி னுடனுமாய் வல்வினைகட் கேற்கு மாறு,
கருவியெலாந் தொழிற்படுத்தித் தகுதிபெற வுணவனைத் துங் காட்டா நின்று,
வெருவறநற் பதம்புகுத்து வான்புகர்மா மலங் கழிக்கும் விடலிலாதே. 55
3879.
இரும்புகலந் தெரியழற்று மெரித்தொழிலே யழற்றிடுவ திரும்புக் கில்லை,
யரும்படைப்பா தியவிதியா தியரிடைச்செய்யினு மொடுக்க லரன தேகா,
ணொருங்குவலி யநாதிபந்த மனுபந்த மல மிரண்டு முயிரே மேவு,
நெருங்கியமற் றவையடையா னநாதிமுத் தன் கலந்தருணின் மலப்பி ரானே. 56
3880.
மேய்யா வையும் புரிந்தும் விகாரமொன்று மின்மை யினால் விடுபடாத,
தூயசுதந் தரத்தினா லொருவழியாங் குணங்கலக் குந் தூய்மைதன்னாற்,
பாயவித மாருயிர்க்கேற் றுந்திறத்தா லிவை முதலாம் பண்பான் மிக்காங்,
கேயவொளி முதல்வனொப்ப திலையிதுவ லாற்பதியு மில்லை மாதோ. 57
3881.
மருவுமுயிர் சிற்றறிவிற் பலவிதத்த விருண்மலத்த மலி யீண் டுற்ற,
வொருவில்சக லத்த வசிப்பன வரும்வி யாபகத்த வொ ருங்கு சூழு,
மிருண்மலந்தீர் தரமுத்தி யடைவ வெண்ணில் லனவெ னினு மிருண்ம லத்த,
பொருத்தனோ டுங்கருமத் தனவற்றோடும் மாயை புணர்ப்ப மூன்றே. 58
3882.
சாத்துநிகர் தமக்கறிவில் லாதனவ சாத்தெனச்சா ராத வல்ல,
வொத்தறிந்துங் கனவின் மயங் குவசத்த சத்துணர்விற் சத சத் தோரே,
பொத்தியவா ணவ மயக்க முதலை முதல் செயாதுவிண் ணம் புவிகீ ழின்ப,
மெத்திய துன் பருந்து நோய் முதலடுப்பின் வருந் துமற்றை மேவின் மேவும். 59
3883.
தனையொவ்வாச் சத்தசத்து றாதசத்தோ ராதொன்றுந் தான் வேண் டாது,
வினை பலவாங் கரணம் வெவ்வே றுடல் புவன மியாவுமுயிர் மேவற் கேகா,
ணனைய பெருங் கலாதியிச்சை யாதிகள் வந் தடையுமா றன்றே நெல்லின்,
வனையுமுளை யென்னவா ணவமு யிரிற் கலக்குமிச்சை யாதி மாற்றி 60
3884.
தியகத்தி னிச்சையா திகளையுந்தோற் றாதணவும் பார் வை சாரு,
மதியிருளின் விரவுதன்னை யழிப்பமுற்று சாத்தியுந்தன் வழியே யாக்கி,
விதியமையு மூன்றிடத்து மிருதிறமா மவத்தையென விளம்போ ரைந்துந்,
திதியமையத் தள்ளாம லுயிருறப்பல் சத்தியாச் சென்று பற்றும். 61
3885.
மேயவுறு திக்கருமஞ் செயவொட்டா திறுதியதே மிகவு மாக்கு,
மாயவுயிர் நல்லறிவைச் சிதைப்பிக்கும் வளர்ப்பிக்கு மடவு ணர்ச்சி,
தூயவெண்சொற்றொழிலணுவுந் தோற்றாது மறுதலையே தோன்றத் தோற்று,
மாயவல்லா ணவந்தணிக்க வுயிரடுக்கு மாயை சுத்த மசுத்த மாதோ. 62
3886.
சுத்தமலி தத்துவமைந் தீருருவாக் கைம்பத்தோ ரெழு த்துத் தோற்று,
வித்தவெண்பத் தொருபதமேழ் கோடி மனு வாகம் ங்கள் விளங்கு நாலே,
ழொத்தவிரு நூற்றெழுபா கம்மறைநால் புரா ணங்க ளொருமூ வாறு,
தத்தமனக் கினிமைசெய்சாத் திரமாறு கலை த்தொகையுந் தகவெட் டெட்டே. 63
3887.
ஆயசிவஞ் சத்திநா தவிந்து சதா சிவமீச மரனி வர்க்கு,
மேயநல்விஞ் ஞானகலர் பிரளயா கலர்தீது விடுத்தா ராய்,
தூய சரி யை கிரியை யோகத்திற் செறிந்தவர்க்குந் தொகுத னுக்கள்,
பாய கரணம்புவன போகமைந்து கலையுயிர்த்தல் பண்ணுஞ் சுத்தம். 64
3888.
காலமொடு நியதிகலை வித்தையரா கம்புருடங் கரைநா லாறு,
சாலமைதத் துவந்தன்பாற் றரும்பகுதி யோரேழுஞ் சாற்றா நின்ற,
மாலயன்வ லாரிமுனாஞ் சகலருக்குத் தனுமுதலா வகுக்கு நான்கு,
மேலவினி யுதவிடுவ தசுத்தமா மாயைமற்று மிசைத்தல் கேட்டி. 65
3889.
மாயாகா ரியமயக்க லில்லையேல் வினை நுகர்ச்சி வரவு மில்லை,
யேயாவவ் வினைக்கழிவு மாங்கெய்தா முனஞ்சூழ்ந்த விருண்மலத்தின்,
சாயாத முயக்கறலி லுயிர்மாயா காரியத்திற் சரித்த லின்றிக்,
கூயாத விருவினையீட் டாதிவையின் றவையுமெய்தல் குறிக்கொளாவால். 66
3890.
இருவினையென் பனமனமுன் மூன்றாலு மிதமகித மியற்ற லாமப்,
பெருவினையின் பயனறனே மறனேயிக் கருமத்தின் பயனாப் பேணி,
மருவியிடு மின்பதுன்ப மவை மாய்வி னவ்வினைகள் வந்து தோற்று,
மொருதனுவுண் டாக்கமற்று மொருதனுவி லுணப் படுங்கெட் டுங்கே டின்றாய், 67
3891.
மனமுதலா மூன்று மசை வறநிற்ப நல்வினையின் வரவும் பல்ல,
மனமுதலா மூன்று மசை வறநிற்பத் தீவினையின் வரவும் பல்ல,
மனமுதலா மொருமூன்றும் புடைபெயர நல்வினையின் வா வும் பல்ல,
மனமுதலா மொரு மூன்றும் புடைபெயரத் தீவினையின் வரவும் பல்ல. 68
3892.
தூயவா யமைந்தவினை யாவருக்குந் தூயவா யமைந்த பல்ல,
தீயவா யமைந்தவினை யாவருக்குந் தீயவா யமைந்த பல்ல,
தூயவா யொருவர்தமக் கொருவருக்குத் தீயவாய்த் தொலைவ பல்ல,
தீயவா யொருவர்தமக் கொருவருக்குத் தூயவாய்ச் செறிவ பல்ல. 69
3893.
நல்வினைமா று புதிய வாய்த்தீய நல்லனவாய் நணலு முண்டு,
வல்வினை மெல்லியவினையாய் மெல்வினைவல் லியவினையாய் வரவு முண்டு,
நல்வினையாற்றும் பொழுதேயதன் பயன்போற் றீயவினை நணுக லுண்டு,
புல்வினையாற் றும் பொழுதே யதன்பயன்போ னல் வினையின் புணர்வு முண்டு. 70
3893.
புரிமுறையிற் பிறழ்த்துயிர்தெய் வம்பூத மென்றிவற்றிற் புகலு மொன்றான்,
மருவுமுழி விழைந்தவிழைந் தில்விழைந்த வன்றி மற்று வருவ வென்னத்,
திரிவிதமாம் பயனிழிந்த வினை தீர்வு செயினு நுகர்ந் தன்றித் தீரா,
வரிய முழு வதுமிதுவிலையானுமியை யும் பண்ணா மையும்ப லிக்கும். 71
3895.
இன்பமே பயந்துவரும் புண்ணியமெல் லாமிழிந்த பாவ மெல்லாந்,
துன்பமே பயந்துவரு மிவ்விரண்டுந் தொகிற்பயனோ துய்த்தாற் றீருங்,
கொன்செய்வினை யொழிந்தவிரு வினையறமே மறமே கொள் பயனை நாளும்,
வன்செயந்தப் பயன் போல வழங்குறா தொழிந்தொ துங்கும் வகையு முண்டோ . 72
3896.
இயம்புநாற் கதியினெழு வகைத்தோற்றத் தெண்பத்து நான்கிலக்கப்,
பயம்புபடு பலபவத்தில் வினையினாற் பலமுறைவீழ் பசு வை வாங்க,
நயம்படுநின் மலனன்றே யுலகுவிதிப் புழித்தலநீர் நல்ல மூர்த்தி,
வியம்படுமூன் றுருவாகி விரிபுவன மெலாங்கதித்தான் விளங்கு மாறே. 73
3897.
அறிவுறா வகையறங்கண் முழுக்கவடுத் தறிதரச்செய் ததன் பின் னாகச்,
செறியுமகச் சரியை முத னான்கும் விளங் கிடுமா மென் மெலச்செலுத்தி,
நெறிகொளுண்மைச் சரியை முதன் மூன்று நிரப்புபுதனது வலிநேர் தேய்ந்து,
பரிமலபா கம்பயிற்றிச் சாத்திபதித் திருவினையின் சமமும் பண்ணி . 74
3898.
பாசமொடு பசுவுங்கீழ்ப் படமேலாம் பசுபதிநீர் பயிலுங் கூர்ப்புத்,
தேசுபெறத் திரண்டென்ன வருட்குருவாத் திருவுரு வொன் றெடுத்து வந்து,
காசின் மனுப் பதமெழுத்துப் புவனங்க டத் துவங்கள் கலைக ளின்னு,
மேசிலிவை யோராறு மரிற்புமா தூய்மை யினி தியற்றிப் பின்னர். 75
3899.
கூட்டமே பொதுவேதன் னியல்பேயென் றுரையுணர்வு குறிக்கு மூன்றா,
னாட்டமிகு முப்பொருளு மொன்பதினா டிடப்படுமிந் நயந்த வெல்லாங்,
காட்டு புகாட்டுந்தானுங் காணறிவுங் கதிர்விழியிற் கலப்பே யாகு,
மீட்டவரும் பயனுமுறத் தெரித்ததனி னழுத்துமிவற் றையுங்கே ளாயே. 76
3900.
மண்முதலாச் சிவமீறா மலிதருதத் துவமனைத்தும் வயங்க வாற்று,
மெண்முதலாந் தொழிலனைத்துந் தனித்தனிகாணுத லவற்றிற் கியையு ரூபந்,
திண் முதன்மற் றவைசடமாக் காண்டறரி சனமிடையித் திறங்க ணீங்கு,
வொண்முதலுண் மையைக்காண்டல் சுத்தியாம் பாசத்தி னுற்ற மூன்றும் 77
3901.
பாசமிவ்வா றகலுதலு முறவுப்பகை நாடாது பகருந் தானே,
நேசமுதலெனநிற்ற லுருவிதுகா றன்னியத்து நிரம்ப முழ்கு,
மாசநினக் குயிரருளென் றகற்றவரு ளாமுதலென் றவாவல் காட்சி,
வீசவது கொடுசெயனேர்ந் தொழிதலுற லருளாயே விடுதல் சுத்தி . 78
3902.
ஆயவரு ளான் முதலே யெனநினைத்த லருளினா லன்ன தாற்று,
மேயதொழில் புரிகுவலென் றெண்ணுசெய லறல் விரும்பு மருளினூடு,
தோயவவட் போதமொடுக் கிடலெனமுன் கிளந்தவற் றிற் றோன்று மூன்றும்,
பாயசிவ னுருக்காட்சி யோகமாம் போகமு மேற் பகர்வாங் கேண்மோ . 79
3903.
ஒன்றுபடு மதனாலோர் பொருளாகா திரண்டின்வே றும்மா காது,
தொன்று நிலை நிலையேயாய்க் கலந்து துன்ன றுன்னாமை யிரண்டுஞ் சோர,
வன்று மலத் தழுந்தியாங் கறிவாகி யறிவினுளாழ்ந் தறிவு மேவப்,
பொன்றியும் பொன் றாதவசத் தின்பவாய் மடுப்பதுவே போக மாமால். 80
3904.
இந்நிலைமே லொருநிலையு மில்லையில் தொழிதரா தெந்த ஞான்று,
மன்னுயிர்மற் றொன்பதுங்கண் ணுற்றுமாற் றிடுமீங்கு வகுத்த பத்துந்,
துன்னு முண்மை ஞானமே சுத்தவைந்த வத்தை யுளே தொக வடங்கும்,
பின்னர் நிலை நான்கினொன்ப தடங்குமொரு நிலைபோக மேய டங்கும். 81
3905.
இரிவரிய வுடலின் வினை வரும் வருங்காற் சாக்கிரா தீத மற்றைத்,
துரியமென விரண்டினிற்பி னேறாவாஞ் சுழுத்தியொடு சொப்பனத்திற்,
பிரியமிகு சாக்கிரத்தினுறினும் வள ருஞ்சகலம் பேச லென்னே,
யரியபெரு நிலையழுந்த வவையெலா மழியுமயக் காற்ற லின்றே . 82
3906.
மருண்மலநீங் குறமாயை வினையிரண்டு மருளாயே மன் னும் வையத்,
திருண்மலம் போக் கிடவவற்றை யெம்பிரா னேன்று கொண்டே யினிது நல்குஞ்,
சுருதியினான் மொழியாற்சு வானுபூ திகத் தையுறத் தோற்றி னானை,
யிரு பகுப்பா வயினுமிறவேத்து புசன் மார் க்கரின்ப மெய்து வாரே. 83
3907.
என்று பெருங் கருணையுரு வெம்பிரான் பெத்த முத்தி யிரண்டிற் றன்மை,
யொன்று பிறி தின்மை பொரு டொறுங்காட்டி யுரைத்தருளு முணர்வு கேட்டு,
நன்று சிந்தித் துத் தெளிந்து நிட்டை யுற்ற நந்திமா தவத்தோ னாங்குத்,
துன்று பெரு மகிழ்ச்சிகொள் வாண்டருளுந் தனிமுதலைத் துதிப்ப தானான். 84
3908. திருநந்திதேவர்துதி. வேறு.
கதிக்கு மியல்பு வேறுடைமை கற்றோர் கருது பலவாகப்
பதிக்கு முலக மெலாம்பாற்றி மீட்டு மாயோன் பதுமனொடுந்
துதிக்கும் படி தோற் றிப்போற்றிச் சூழு மலவாற் றலைக்காற்றுந்
திதிக்குஞ் செயலே தலைநின்ற சிறந்த வுருவ முதல் போற்றி. 85
3909.
ஒண்மைக் குணமி லொருநாயே னுற்ற மடனன் றில்லாத
திண்மைக் குணமா மலத்தன்றே சிவண வாழா நின்ற குண
வெண்மைத் தலைவ னுறவாங்கே யியலும் பருவந் தனையேய்த்து
வண்மைக் கலையா திகடந்த வள்ளற் றன்மையது போற்றி. 86
3910.
இருளு மலமொன் றேபற்று மிரண்டு வினையு முடையேற்கு
மருளின் மலியு மாயையுங்கன் மமுந்தி ரோதா னத்தினையும்
பொருளின் மலிமா மாயையையு மலநான் காகப் புணர்த்தியே
யருளின் மலித நீராவற் புதநற் றொழின்மை யது போற்றி. 87
3911.
நெருப்பி னழற்றி வாட்படையா னிமிரு முடலம் பிளந்தி ட்டே,
யருப்பு நெய்த்தோர் கண்சோர வமையக் குடைந்து நரகிட்டுங்,
கருப்பம் பொலிமண்ணகத்துய்த்துங் காமர் துறக்கத் திடையேய்த் தும்,
விருப்பு வெறுப்பு மில்லாது விளையு மவிகா ரம்போற்றி. 88
3912.
பூதங் கொல்லோ வவற்றான பொறைசா ருடலோ பொ றிகளோ,
மோதுங்காண மதுதானோ மொழியு மாயை யது கொல்லோ,
யாதோ வறியே முணர்வதென்றெ யினைத ராம னீதாழும்,
போதம் வேறென் றருள் புரிந்த பொங்கு மொளிப்போ தகம் போற்றி. 89
3913.
உறுகே வலச கலசுத்த முயிர்கட் கெல்லாங் கெழுமு மென்றும்,
தெறுமா யையிலா ரிரண்டாய திறத்த ரென்று மாவயி னம்,
மறுமா யையையின்ற டாவிரண்டு கரும மென்று முறவகுத்துங்,
குறுமா லேனு முளத்தரும்பக் கொள்ளா வாய்மை யதுபோற்றி. 90
3914.
வருசாக் கிரவ வத்தைக்கு வாய்த்த சகலத் தெனையன் னோ,
வொருவா தாக்குந் தொறு நீங்கி யுற்ற விருட்கே வலத்தின் கண்,
மருவா வீக்கு பிழை கொண்டு விடாதுட் சலியா மறுவலுங்காத்
தருமா தவஞ்செய் வலிச்சூழ்ச்சி கைக்கொண் டருளு மதுபோற்றி. 91
3915.
வினையின் றிறமூண் டிடுமாறு மெலியேன் மெலிவைத் தகவாற்றி,
யனைய துகள்போ யனுங்கும் வித மறிவுண் டாக்கி யெலாமா ற்றிக்,
கனைவண் டொலிக்க மதுப்பொழியுங் கமல மலர்நேர் திருப்பாத,
நினைவி லுறக்கொள் வாழ்வளித்த நிமல வாழ்வுன் பதம் போற்றி. 92
3916.
நிகழ்கே வலமுஞ் சகலமுமுத் திச்ச கலமும் நிகழவுய்த் துத்,
திகழ்கே வலச கலநீக்கச் சிறப்பு மருவுஞ் சுத்தத்திற்,
றிகழ்கே வலமே யானேனைச் செறிகே வலநீக் குபு மேலாந்,
திகழ்கே வலஞ் செய் திடநாடுஞ் செறிகே வலநற் பொருள் போற்றி. 93
3917.
காராணவத்தன் றேப்பட்டாய் கலக்க மாயை யது பூண்டா,
யோரா வினைக்கோட் பட்டாய் போக் குடனே வரவும் பட்டாயென்,
றாரா வறிந்தாய் நீயேயென் றமைய விழித்து மான் முதலோர்,
தேரா வுருவந் தோற்றியெனைக் காட்டியருளுந் திறம் போற்றி. 94
3918.
ஒன்று படுகே வலத்தையைந் துறழைந் தாஞ்ச கலத் தொன்று,
முன்ற விருஞ்ச கலத்தைந்து முதிரு மொளிசார் சுத்தத்தி,
லென்று வன்ன பேதமெலா மருளி னிசைத்து முறை காட்டி,
நன்று தெரித்திட் டினிதாண்ட நலமார் பெருமைத் திறம் போற்றி. 95
3919.
யானே யென்ன வெனதென்ன நின்ற விருளைப் போக் கியெலாந்,
தானே யென்ன வெனைவல்லே தன்றா ளிருத்திக் கதிர்மு
ன்ன, மீனே யென்ன விளக்கென்ன விரவு மாயை மாய்த்தங்க,
னூனே நுகரு நுகர்ச்சியெலா மேற்ற வுரிமைத் திறம் போற்றி. 96
3920
இற்றை வரையு மென்வழியே யிருந்த தனைப்போற் றன்வழியே,
யெற்றை வரையுந் தங்குநிலை தோன்றத் தனையு மெனை யுந்தந்,
தொற்றை யுறாத தனதெனதற் றொருமுப் பாழ்மேன் முழுப் பாழா,
மற்றைக் கடறி வலையாக வருபேரின்ப சுகம் போற்றி. 97
3921.
மதிவீற் றிருக்குஞ் சடைமுடியு மானு மழுவுஞ் சதுர்ப் புயமுந்,
துதிவீற் றிருக்குந் திருமுகமுந் தோன்றப் படிந்த புலித் தோலும்,
விதிவீற் றிருந்த செவ்வாயும் வெய்ய தாகு நுதற்கண்ணுங்,
கதிவீற் றிருந்த திருவடியு முடைய கைலைப் பிரான் போற்றி. 98
3922. சிவபெருமானுடைய கட்டளை.
என்று துதித்த நந்திமுக மெம்மான் கருணை யுறநோக்கி
நன்று நின்னை யபரசிவ னென்று ஞாலங் கொண்டாட வகை
வொன்று சிறப்பி னாம்பிறர்போ லுரைத்தா நூலுக் கியையும்
யன்று தவிரப் பாராட்டி யமைய வருகென் றருள் புரிந்தான். 99
3923.
பன்னாண் முயன்று நெடுமாலே பங்கே ருகனே பிறரறியாத்
தன்னாள் பெரியோன் பெருங்கருணை யொருங்கு பெற்ற சைலாதி
முன்னாள் வாய்த்த தன்பணியே முயன்று தலைநின் றிந்நாளே
நன்னா ளென்று மகிழ்சிறந்தா னடந்த தினிமே னவினுவாம். 100
3924. சனற்குமாாமுனிவர். வேறு.
மட்டலர் கமலப் புத்தேண் மைந்தனாஞ் சனக்கு மாரன்
கட்டலர் படைத்த லாதி கனவினு மேன்று கொள்ளான்
விட்டலர் மணிமார் பண்ணல் வாழ்க்கையின் வெறுப்பு வைத்தான்
பட்டலர் திசையான் றெய்வப் பாதமே சாரும் பண்பான். 101
3925. திருநந்திதேவரை அடைதல்.
மறைமுதற் கலைக ளெல்லா மயக்கறத் தெளிந்த நீரா
னிறைகெழு கருணை வாய்ந்த நெடுந்தவ முருக்கொண் டன் னான்
குறையரு முண்மை ஞானங் குறிக்கொடு தேர்தல் வேட்டா
னிறைமுதற் கயிலை காக்கு நந்திபா லெய்தி னானே. 102
3926.
எய்திய சனக்கு மார னந்தியெம் பெருமான் பாத
மெய்திக ழன்பிற் பலகால் விரைதரத் தாழ்ந்து தாழ்ந்தே
யைதென வெழுந்து நின்றா னருவியங் கண்ணீர் சோர
மைதிகழ் மனமில் லானை நோக்கினா னந்தி வள்ளல். 103
3927. திருநந்திதேவர்வனு.
நோக்கிய நந்திப் புத்தே ணுவலுநின் னாமம் யாது
தேக்கிய வலியி னிந்தச் சிலம்படை கருமம் யாது
பாக்கிய மாகக் கொள்ளும் பயனெது வேட்ட தென்றா
னூக்கிய வலியான் மீட்டும் பணிந்தெழுந் துரைக்க லுற்றான். 104
3928. சனற்குமாரர் விடை
என்பெயர் சனக்கு மார னிச்சிலம் படைந்தே னாதன்
றன்பெய ரடைநின் செம்பொற் றாட்பணி செயற்பொருட்டே
நன்பெய ருண்மை ஞான நாயினேன் வேட்ட தென்றே
மின்பெயர்ந் தென்ன மீட்டும் வீழ்ந்தெழுந் துரைத்தா னன்றே. 105
3929. திருநந்திதேவர் அவரை அங்கீகரித்தல்.
நந்தியெம் பெருமா னென்பா னல்லியற் சனக்கு மாரன்
புந்தியுந் தெளிவு மாந்தற் போதத்தி னொழிவுந் தேர்ந்தே
யுந்திய விவனுக் குண்மை யோதலா மென்றுட் கொண்டு
முந்திய விபூதி நல்கி முழுப்பணி நயத்தி யென்றான். 103
3930. சிவகணத்தோர் மகிழ்ச்சி.
சொற்ற சொற் றலைமேற் கொண்டு குமரன்றூ மகிழ்ச்சி
யுற்றா னற்றவக் கணங்க ணந்திக் கிவன் வந்து நணுகுங் காட்சி
கற்றையஞ் சடையார்க் கிந்த நந்தியே கலந்த தொக்கு
மற்றும் வே றில்லை யென்னா வாய்மலர்ந் துவகை பூத்தார். 107
3931.
திருவடிப் பணிவி டாது செய்யப்பன் னாள்கள் செல்ல
மருவடிக் கடிய னான குமரன்வாழ் தருமந் நாளிற்
றருவடிக் கைலை காக்குந் தம்பிரான் கருணை கூர்ந்தே
யுருவடிக் குண்மை ஞான மோதுமா வுள்ளங் கொண்டான். 108
3932. சனற்குமாரர் உபதேசம் பெறுதல்.
பொருள் பெறுங் குமரற் கூவிப் பொலிவின்மாட் டிருத்தல் செய்தே
யருள் சிவஞான போத மண்ணல்பாற் கேட்ட வாறே
தெருள்பெறத் தொகை முன் மூன்றாற் செப்பினா னெந்தஞான்று
மருள்படு மைய மாதி முக்குற்ற மடித்த நீரான். 109
3933. சிவகணத்தோர் மகிழ்ச்சி.
மன்னிய குரவன் வார்த்தை முழுமையு மாண்பிற் கேட்டு
மின்னிய கொடுசிந்தித்துத் தெளிந்துமே னிட்டை கூடித்
துன்னிய விருந்தான் வம்பே சொலும்பிர பஞ்ச மாய்த்துப்
பன்னிய சிவஞா னத்தே படர்பெருஞ் செல்வ னாகி. 110
3934. சிவகணத்தோர் மகிழ்ச்சி.
இன்னணஞ் சனக்குமார னியல் சிவ ஞான போத
நன்னருட் டெளிந்து முத்தி நயந்துவீற் றிருக்குங் காலைச்
செந்நெறி யொழுக்கஞ் சார்சத் தியஞான தரிசனிப்பேர்
மன்னிய முனிவன் வந்து வண்கயி லாயம் புக்கான். 111
3935. அவரைச் சத்திய ஞானிதரிசனிகள் அடைதல்.
புக்கமா முனிவன் ஞான போதமார் சனக்கு மார
னக்கபொற் பாதம் போற்றி நாயினே னுய்ந்தே னென்றான்
றக்க நீ யாவன் வந்த காரிய மெவன்சாற் றென்னத்
திக்கெலாம் புகழ்தான் பேரும் வந்ததும் தெரியச் சொற்றான். 112
3936. அடியார் மகிழ்ச்சி.
பரவுவிண் ணப்ப மேற்றுப் பங்கய முகமலர்ந்து
விரவு நீ றெடுத்து நல்கிப் பணிசெய்து மேக வென்றா
னாவுநீர்ச் சடையா னன்ப ரகத்திய முனிவ னுக்குக்
கரவுதீர் திரணதூமாக் கினியெனக் கலந்தா னென்றார். 113
3937. சத்தியஞானிதரிசனிகள் உபதேசம் பெறுதல்.
சீரிய தன்பேர் நாட்டத் திருவடிப் பணியிற் றப்பா
னோரிய முனிவன் மேவ வுறுமகிழ் குமரன் பூத்துத்
தேரிய தான் முன் னோர்ந்த சிவஞான போதஞ் சொற்றான்
வீரிய நந்திப் புத்தே டனக்கு முன் விளம்பு மாறே. 114
3938.
குரவனை வழிபா டாற்றிக் கொளுத்திய வனைத்துந் தேர்ந்து
திரவனை கையிலை ஞான சிகாமணி யாகி வாழ்ந்தான்
புரவனை யொருபான் மேய புராதன னருளே யென்னப்
பரவனை தருமா றுற்றான் பரஞ்சோதி முனிவ னென்பான். 115
3939. அவரைப்பரஞ்சோதிமுனிவாடைதல்.
திகழ்பரஞ் சோதி தான்சத் தியஞான தரிசனிப்பேர்ப்
புகழ்முனி யிருக்கை நாடிப் பொற்பதம் பணிந்து வீழ்ந்தா
னகழ்மல வனையா னீயா ரடுத்ததென் னெனவி னாவ
விகழ்பவ மாய்க்க வந்தே னென்றெலா முரைத்தா னன்றே. 116
3940. அடியார் மகிழ்ச்சி.
உரைத்தசொன் முழுது மேற்றே யுறுகுண முழுது நாடி
விரைத்தமற் றிவன்போ லியாரே மேவுவா ரென்று வந்து
நரைத்தவெள் விடையான் செய்யு நல்லரு ளென்று புல்லி
வரைத்தவெண் ணீறு நல்கி வதிகநம் பணியி லென்றான். 117
3941.
திருக்கிளர் முனிவ னாஞ்சத் தியஞான தரிசனிக்குக்
கருக்கிளர் தரஞ்சா ராத பரஞ்சோதி கிடைத்த காட்சி
யுருக்கிளர் துறைசை யெங்கள் சிவஞான யோகிக் குண்மைப்
பொருட்கிளர் கச்சியப்ப முனிவரன் புணர்ந்த தொக்கும். 118
3942. அடியார் மகிழ்ச்சி.
பணிபல நாளுங் கொண்டு பரஞ்சோதிக் கிரக்கஞ் செய்து
துணிசிவ ஞான போதந் தொன்மையி னுபதே சித்துத்
தணிவறத் தெளிந்த பின்பு நூலுங்கைத் தாங்க நல்கி
யணிசெய்தா னெம்மை யாளு மற்புதக் குரவ ரேறே. 119
3943. அடியார் மகிழ்ச்சி.
உண்மையார் கைலைநின்று மொருபரஞ் சோதி நாதன்
வண்மைசான் ஞான சிந்தா மணியென மண்ணிழிந்து
தண்மையார் காசி யாதித் தலந்தரி சிக்குங் காலை
நண்மைசால் வெண்ணெய் நல்லூர் நடந்தது மினிச்சொல் வாமால். 120
-------
நான்காவது
3944.
சொல்லொழுக்க நடவாது சோனைவறங் கூர்காலும்
புல்லொழுக்கந் தலையெடுத்தெவ் விடத்துமாய்ப் பொலிதரவு
மில்லொழுக்கந் துறவொழுக்க மிரண்டாய வியல் வாய்ந்த
நல்லொழுக்க மெனப்புகலு நடுநாடு நடுநாடு. 1
3945.
பொன்னிலமல் கமரரெலகம் போகிய தெம் பசியென்ன
வெந்நிலமுங் குதுகலித்தே யியல்பூசை விழாவெடுப்ப
வந்நிலமொய்க் கவராய வாற்றுக்கா லாட்டியாக
ணன்னிலஞ்சொன் முடி குலைத்து நடுநாடு நடுநாடு. 2
3946.
புக்கவுயிர் சிதையாது போற்றிவரு மண்மகட்குத்
தக்கவளம் பலபொலிதண் டகநாடல் குற்றடமாத்
தொக்கபெரு வளங்காட்டு சோணாடு முலைத் தடமா
நக்கமணி மேகலைசூழ் நடுநாடு நடுநாடு. 3
3947.
குறமலிதின் குன்றுகளைக் குஞ்சரத்தைக் கீழ்மேலா
வறமலிய வுருட்டிவயி றதுகிழியு மது நோக்கிப்
புறவகழி யிராப்பகலும் பொறேனென்றே யோலமிடப்
பிறரறியு நீத்தத்திற் பெண்ணைபாய் வளம் பெருகும். 4
3948.
பெண்ணை தி யிருபாலும் பெருக்குமிக வெழுங்கொழுங்காற்
பண்ணைவயற் றலைநிரப்பப் பசுஞ்சாலி கதலிகமு
கெண்ணையறத் தடித்தோங்கி யிந்திரனா ரவை நிரப்ப
வுண்ணயமார் மண்ணொடு விண் ணூடலறக் கூடல் செயும். 5
3949.
பெண்ணையெழுந் திரைக்கொழுந்து புகழ்க்கொழுந்தின் பிறக்கமென
விண்ணையளா யாமாதர் வெம் முலைக்குங் குமங்கழுவிப்
பண்ணைகளின் பிரதாபம் படர்ந்ததெனப் படருதலு
மெண்ணையிலாச் செந்நெலொடு கன்னல்களுமினிதோங்கும். 6
3950.
சாலெல்லாம் வெடிவாளை தடியெல்லாஞ் செங்குவளை
காலெல்லாங் கருமேதி கரம்பெல்லாம் பாம்பினங்கள்
சூலெல்லாம் சங்கினங்க டுறையெல்லா முத்துகுத்தல்
பாலெல்லாம் பசுந்திரையல் படர்வெல்லாங் கமுகேறி 7
3951.
தென்றலெழ வழலரும்புஞ் செவ்வியமாந் துணர்ச்சோலை
யொன்றல் கொள் முழுமதியை யொழியாது தடவருதல்
குன்றலின் மண் மகளங்கைத் தலைநீட்டிக் குளிர்விசும்பா
மன்றலிலா மகண்முகந்தை வருதிறமற் றது காட்டும். 8
3952.
கரைதபுமா டங்களெலாங் ககனமளாய் நிற்றலினால்
விரையாகிலின் கொழும்புகையோ மேகமோ சுலாவுவன
வுரைசெறிந்த பொழிலனைத்து மொள்ளியகார் தங்குதலாற்
புரைதவிரு மதுமழையோ புனன் மழையோ பொழிகுவன. 9
3953.
3953. மருவுலகங் களி தூங்க வண்சமயா சாரியரா
மிருவர்களுஞ் சந்தானத் திருவர்களு மவதரிக்கப்
பெருகுதவஞ் செய்ததெனிற் பிறங்குவள நடுநாட்டி
னருகுதவிர் சிறப்புரைக்க வடியேனா வாகுவதோ. 9
---------
ஆக செய்யள் - 202.
This file was last revised on 31 October 2021.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)