கண்ணனூர் பத்மாஸனி அம்மாளால் இயற்றிய
ஸ்ரீமத் இராமயண சரித்திரக் கும்மி
Sri irAmayaNa caritirak kummi
by kaNNanUr patmAcini ammAL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr.Mrs, Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கண்ணனூர் பத்மாஸனி அம்மாளால் இயற்றிய
ஸ்ரீமத் இராமயண சரித்திரக் கும்மி
Source:
ஸ்ரீமத் இராமயண சரித்திரக் கும்மி
இஃது கண்ணனூர் பத்மாஸனி அம்மாளால் இயற்றப்பட்டு
ஜீவாகாருண்ய விலாச அச்சுக்கூடத் தலைவர்
கோ. செல்லப்ப முதலியார் அவர்களால்
டைட்டில் பேஜ் மாத்திரம் அமிர்த குணபோதினி அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப் பட்டது.
சென்னை, 1929
இதன் விலை அணா 12.
----------------
ஸ்ரீமத் இராமாயணக் கும்பி
விருத்தம்
புல்லைமா நகரில்வாழும் பொற்கொடி நாதா யெந்தன்
தொல்லைகள்தீரவே ஸ்ரீராமனுட சரித்திரத்தை
நல்லதோர்கும்மியாய்பாட நாட்டிலுள்ளோர் கொண்டாட
வள்ளலேவந்துஎன்முன் வரமருள்செய்வாய் நீயே.
1-வது கட்டம்
தாகமெடுத்து
1. ஆதிகுருவானவேதாந்த தேசிகர்
ஆனந்தப் பாதத்தை நான்பணிய
ஜோதிபுகழும் ஸ்ரீராமயணக்கும்மி
செப்பிடவேயருள் செய்திடுவீர்.
வேறு
2. நீதிபுகழ்கலைவாணியரேதாயே
நீலவர்ணன்லீலைதன்னைக்கும்மியாக
பிரீதியுடனேனுக்கிரகிப்பாய் நீயே
புல்லைநகர்வாழ் பத்மாஸனித்தாயே.
வேறு
3. ஆதியில் பாற்கடலில்
ஆனந்தசயனந் தன்னில்
அன்புடன்பள்ளிகொண்டார்
துன்பத்தால் தேவர் விண்டார்.
வேறு.
4. பூவுலகுதேவரெல்லாம்
புண்ணடைந்து தசகண்டனால்
ஜெசுதாமரயென்னைக்காருமென்று
திருவடியில் பணிந்து நின்றார்
கடைக்கண்ணாலே என்னைப்பாரும்
எங்கள் கவலைதன்னை தீருமென்றார்.
வேறு.
5. முப்பத்துமுக்கோடி தேவர்களெல்லாம்
முரையிட்டுக்கரங்குவித்து நிற்க
அற்புதமான ஜெகநாதன்
யோக நித்திரைவிட்டு எழுந்திருந்தார்,
வேறு.
6. அஞ்சாதே தேவர்களா
வஞ்சக அரக்கர்களை
துஞ்சிடச்செய்வோமென்றார் ஜெகநாதனெனும்
கஞ்சமலர்க்கண்ணனும்.
வேறு.
7. ஈசனயன் தேவரோடு
இந்திரன் எமன்முதலாய்
வாஸம் செய்திடகிஷ்க்கிந்தியில்
மகபலத்தோட்வான ரசாய்
அவதரித்து ஆண்டிருப்பீர்
ஆதிகுபேரன்வாலியாக.
வேறு
8. மானிடவான ரல்லாமல்
மகாதேவர் வரம் வெல்லப்போகாது
ஆனதினாலே கிஷ்கிந்தியாபுரிதன்னில்
ஆண்டிருப்பீர்வெகுசேனையுடன்.
9. பார்முழுதாளுகின்ற
பக்தியுள்ள தெசரதற்கு
ஸ்ரீராமராகவந்து தம்பியோடு
ஜெனிப்போமென்றாக்யாபித்தார்.
வேறு.
10. பூர்வபுண்யவசமடைந்த
பொற்கொடி கௌஸலைக்கி
சீருடையபாலகராய்
ஜெனித்திடவே செல்வோமென்றார்
சங்குசக்ரசேஷர் தம்மோடு
தம்பிமாறாய் உதிப்போமென்றார்.
வேறு.
11. ஆண்டவர் செப்பியவாக்கமுதை தேவர்
அன்புடன் சிரசு மேல்வகித்து
பூண்டுமேவானரபூபதியாகிய
பூலோகந் தன்னில் அரசாண்டார்.
வேறு.
12. நாரதர்தானறிந்து
நல்லகாலமவந்ததென்று
சாரந்தனைவுரைக்க வால்மீகரும்
சந்தோஷங்கொண்டவரும்.
வேறு.
13. இருபத்தி நாலாயிரம் சுலோகமாக
ராமாயண சரித்திரத்தை
பார் முழுதும் விளங்கவைத்தார்
பாகவதால் கெதிபெரவே
அயோத்தியாளும் தசரதறும்
கீர்த்தி பெற வாழ்ந்திருந்தார்.
-----------
2-வது கட்டம்.
இராகம் - கல்யாணி ஆதிமூலமே.
1. அயோத்தியாபுரிப்பட்டணம்
அருபதநாயிரசம்வஸ்ஸரம்
வைய முழுதொருகுடை கீழாகவே
மகராஜர் ஆண்டிருந்தார்.
2. பூனைக்கிளி போர்கூண்டில் விளையாடும்
புலிபகமொருதுரைநீருண்ணும்
தீனசரண்யன் சக்ராக்கினையின்படி
செங்கோல் நடத்திவந்தார்.
3. பிர்மக்ஷத்திரியன் வைசியன்சூத்திரன்
புவனத்திலுள்ளோர்கள்
தர்மநிலைப்படித்தவராமல் அந்த
தரணியிலாண்டிருந்தார்.
4. வம்பு செய்ய அந்தசம்பராசூரனை
வானத்திலேத்திவைத்து
ஐம்பத்தாறு தேசத்துராஜர் கப்பங்கட்ட
ஆண்டார் ராஜ்ஜியத்தை.
5. ஆண்டவரைத்திரிகாலமும் பக்தியாய்
ஆராதிப்பவராம்
வேண்டுமுனிவர்கள் விப்ரர் அபீஷ்டத்தை
விரும்பியே நடத்துவராம்.
6. கோசலை சுமத்திரை கைகேசியென்
கோதையர்மூன்று பட்டத்தேவியராம்
வாஸமுடன் அருபதாயிரம் ஸ்திரீயுடன்
மகராஜர் ஆண்டிருந்தார்.
7. யாகஹோமகர்மாதி எக்யங்கள்
அந்தணர் செய்திடவே
வேதசாலை அன்னசத்திரம் ஆலயம்
விரும்பியே நடத்துவாராம்.
-----------
3-வது கட்டம்
இராகம் - வந்தகோபிமாறோடு.
மந்திரிசுமிந்திரரோடுரைத்தார் மகராஜன் தசரதனும்.
அநுபல்லவி.
2. இத்தனையும் கிடைத்தும் புத்திரனில்லாமையால்
சித்தம் வருந்திராஜன் மெத்தத் துயரத்தோடு (மந்)
3. அருபதினாயிரம் வருடமட்டும் ஆண்டு
பெருமையடைவதற்குச் சிரியவனில்லையே.
4. இந்தவிதம் புலம்பும் வேந்தரைப்பார்த்து மந்திரி
அந்தரங்க குருவை இந்தக்ஷணம் அழைத்து
வாரேனென்றாரே சுமந்திரர்
மகராஜனண்டையில் வாரேனென்றாரேசுமந்திரன் (மந்)
5. மகமுனிவசிஷ்டரும் மானுபாவர்கலைக்கோட்டு
ரிஷிகள் முதலாகிய
தேவர்களெல்லாம் வந்தரர் தெசரதரண்டையில்
ஆனந்தங்கொண்டு (மந்)
6. வந்தனம் தந்ததொரு வேந்தரைக்கண்டு முனி
இந்தத் துயர்வுமந்து வந்த காரணமென்னென்று
ஆதிகுருவசிஷ்டரருள்
அரசனண்டையிலே (மந்)
7. புத்திரனில்லாதோர்க்கு முக்திகிடைக்காதென்று
உத்தமவாக்கியத்தால் சித்தும் தெரிந்து கொண்டேன்
பிள்ளையில்லாத பாக்கியம் நான்
பெற்றிருந்துமென்ன யோக்கியம் (மந்)
8. பக்தியாயநதியோரத்தில் புத்திரகாமேஷ்டியாகம்
சற்றுதாமசமன்னியில் சேகரிப்பீர்சாமகிரி
யாகசாலைபை நேமித்தார்
அரசன் பத்தினிகையில் கங்கணம்தனை தரித்தார் (மந்)
9. யாகசாலையில் மகா ஹோமங்கள் செய்ய திவ்ய
நேமபுருஷன் வந்து பாயாசம் தன்னைக்கொண்டு
தந்தார் தசரதரண்டையில் ஆனந்தம் கொண்டு
வந்தார் அரண்மனையில் சென்று (மந்)
-----------
4-வது சட்டம்.
1. வாங்கியே பிரசாதம் தன்னைவந்து அரண்மனைக்குள்ளே
பாங்கியாகம்ஸலைக்குப் பகுத்து ஒருபாகந்தன்னையே
அளித்தாரடிபக்குவமாய் ராஜன் பிள்ளையே.
2 மத்துமொருபாகந்தன்னை உத்தமிகைசிசுமத்திரை
மெத்தவு மகிழ்ச்சியோடு பத்தினிக்களித்தார் ராஜனும்
வாங்கிப் புசிக்க உத்தமர் ஜெனித்தாரப்போது.
3. மாசம் ஒன்றிரண்டு மூன்று மசக்கையும் தெளிந்த பின்பு
தேசமுழுதாளும் ராஜர் ஸ்ரீமந்தக்கல்யாணம் செய்தாரே
திங்கள் பத்துமாசமும் செல்லப்பிரந்தாரே.
4. சித்திரருவமிகடகம் செழும்புநர்பூரகிரகமஞ்சும்
உச்சத்தில் செல்ல ஸ்ரீராமா உகந்துமே அவதரித்தாரே
கௌசலையம்மாள் மகிழ்ந்துமே புளகித்தாளே.
5. மங்கையர்கள் மூவருக்குப் மைந்தனுதித்தது கண்டு
அங்கம்பூரித்துறாசன் கங்காநதி வந்தடைந்தாரே
கோடிதானங்கள் அந்தணர்க்கு செய்திருந்தாரே.
6. பத்து நாளும் சென்ற பின்பு உத்தமவசிஷ்டமுனி
நேர்த்தியாய் புண்யாசனத்தை கீர்த்தியாய்செய்து நவரெத்ன
தொட்டில் தன்னில் பிரீதியாய்க்
கண்வளந்தாரே கண்ணன்.
7. ராமன்பரதன் லெட்சுமணன் சத்துருக்கனென் னுமுனி
நாமகானம்ஜாதகர்னம் நன்மையுடன் சாதித்தானப்போ
ராஜன் கண்டு நான் செய்த கபலமாச்சிப்போ.
-----------
5-வது கட்டம்.
1. மங்கிலியஸ்திரீகளெல்லாம் மங்களங்கள் பாட
மாதவனே வாழியென்று அக்ஷதைகள் போட.
2. வந்துவடி வாய் வளைந்த வரிசையுள்ள குழலும்
சந்திரன் போன்றநெத்தியில் தரித்த காமத்தொளியும்
3. சிங்காணிவில்லுப் போன்ற தெளிந்தபுருவத்தற்கும்
தங்கமெடல் போல செவியில் மகர குண்டலம் துலங்க.
4. புண்டரீக்கண்ணழகும் பூர்ணச்சந்திரமூகமும்
கண்டுகளிக்கும் கண்ணாடி பால்போலத்தோடொளியும்
5. பச்சை நிறமேனிகளும் பவழம் போன்ற உதடும்
அச்சுதர்குருநகையும் ஆணி முத்துப்பல்லும்.
6. சங்குச்சக்கரம் தரித்தகையும் சதுர்புஜத்தினழகும்
மங்கை துளசிவசிக்கும் மார்பில் மருவுனுடைய அழகும்.
-----------
6-வது கட்டம்.
1. ஆலிலைபோல் பரழகும் அமர்ந்தமுப்புரி நூலும்
கோலமுள்ள கொடியிடையும் குலுங்கும் சலங்கையொளியும்
2. மந்தகஜம் போல்திரண்ட உத்தமா துடையும்
முத்துச்சிப்பிப் போன்றதொரு முழங்காலினோடழகும்.
3. அண்டசராசரமுழுதும் அளந்தபாதந்தன்னில்
தண்டை சிலம்புகொலுசு சலசலவென்றனிந்தார்.
4. தத்தடியும் தளர்நடையும் தவிழ்ந்துவிளையாட
தாய்மார்கள் மூவரும் பரவசங்கொண்டாட
5. சவள உபநயனம் சாஸ்திரத்தால் செய்ய
புவனமெங்கும் புகழும் பூர்னமானவித்தைகற்றார்.
6. சேவைகண்டுராஜனப்போ சிந்தை மகிழ்ந்திருக்க
தாபரதன்னை விலக்க விஸ்வாமித்திரர் அங்கே சிரக்க.
7. யாகம் நிறைவேற்றிவைக்க தாடகியைவதைக்க
ராகவரை அனுப்பு மென்று கௌசிகருரைக்க.
8. பால்மறைவாபாலகனோ அந்தப்பாதகியைக் கொல்ல
நீதியுண்டோ நான்வருவேன் நிமிஷந்தன்னில் வெல்ல.
9. வசிஷ்டரொடுகௌசிகரும் மத்துமுள்ளமுனியும்
ஜெகபதியை அனுப்புமிப்போ ஜெயகாலந்தானென்றார்.
10. மாதவரும் தம்பியரும் மகமுனியின் பின் செல்ல
ஆதரவாய்நதிகளோடு ஆரண்யந்தாண்டி
11. யாகநிறைவேத்தவென்று ஆயுதங்கை கொண்டு
ஏகாஸனத்திலிருக்க எதிர்த்துவந்தாள் அரக்கி.
--------------
7-வது கட்டம்.
1. கண்டான் தாடகிதன்னை ராகவன்
கைகொண்டான் கோதண்டமுன்னே. (கண்)
அநுபல்லவி.
2. கண்டான் தாடகிதன்னை
கொண்டான் கோதண்ட முன்னே
அண்டசராசரத்தையுண்ட ஜெகதீசன். (கண்)
3 வண்டன் சுபாகுதனனை துண்டம்செய்துமாரீசனை
சண்டமாருதம்போலே சப்தசாகரம் தாண்டி விழ . (கண்)
4. ஆகாசந்தன்னில்ரெத்த மாம்ஸம்வருஷித்து
சாகாசம் செய்த அந்த மோசக்காரியாளை. (கண்)
5.. கொல்லைமலைபோலே பொல்லா அரக்கிவுத்
தொல்லுலகோர்புகழ் வள்ளல் ஜெகனாதன். (கண்)
6. முப்பத்துமுக்கோடி தேவர்கலர் சொரிய
அற்புதமான திரள் அஸ்திரங்கையில் தரித்து. (கண்)
-------------
8-வது கட்டம்
1. தேவரெல்லாம் புஷ்பமாரி சொரிந்திட
ஸ்ரீராமர் தம்பிமுனியோடு
பாவனையாகவே சென்றிடவே சுவாமி
பாததூளியது சிந்திடவே.
2. கல்லுருமாரியே பெண்ணாயெழுந்து
கமலப்பாதம் பணிந்திடவே
வள்ளலென்னும்ராமர் மாமுனியைநோக்கி
வந்தவளாரென்று தாமுரைக்க.
3. ஆதியில் இந்திரன் கௌதுமருக்கு
சம்வாதம்மிக அப்போவுந்ததினால்
பாதகமான கிருத்தியந்தன்னைச் செய்திட
இச்சாபவிறமாசனம் ஆச்சிதென்றார்.
4. தம்பியும்தானும் தவமுனியும்
தானடந்து அந்தக்கானகத்தே
அன்புடனேமிதிலா புரிப்பட்டணம்
ஆனந்தமாகவே செல்லலுற்றார்.
5. உப்பரிகை மீதில் தோழியுடன் கூட (சீமை)
உலாவிதோகை மயிராத்திநிற்க
மைப்பொருள் வண்ணன் மைதிலியைக்கண்டு
மையலாக அவர்ஏது சொல்வர்.
6. பூமடர்மங்கை வளரமாதோ இவள்
பொன்மணியோ ஈசன் கண்மணியோ
காமனுடரதிதேவியரோ இவள்
கானகத்துவளர் மான்மயிலோ.
-----------
9-வது கட்டம்.
1. சுவாமி இவள்ஜெனகன் நேமிதமாகிவந்த
பூமிதன்னிலுதித்த (சீதா)
தேவியிவள் என்றரிவீர்.
2. மன்னன் சபைதன்னிலே கண்ணபிரான் செல்ல
உன்னிதபூஜைசெய்து ஜெனகன்
உகந்து ஆஸனமிட்டார்.
3. சாமளவர்ணா இனிதாமஸம் ஏதோவென்று
கோமான் கௌசிகருரைத்திட
ஜெகதாமன் எழுந்தருள .
4. மேருபோன்றதோர்வில்லை கூறாமுரித்தவர்க்கு
தாரைவார்ப்பேனென்றார் ஜெனகன்
சபதம் தன்னைச் செய்தாராம்.
5. அண்டகடாகமெல்லாம் நின்று நடுங்கிடவே
புண்டரீகன்கரத்தால் தனுஸொடிந்து
கண்டோர் பிரமிக்கவிழ.
-------------
10-வது கட்ட ம்.
1. மன்னாகி மன்னர் பிரமிக்க மந்திரி முதலானோர் திகைக்க
உன்னிதமானவடிவைக்கண்டு மன்னன் ஜெனகன் மகிழ்ந்து
2. தங்கப்பல்லக்கு மீதினில் மங்கைஜானகியம்மனே
சிங்காரம் செய்து அழைத்து சீக்கிரமாய்வாருமென்ன.
3. தாதியருரைக்கலுமே ஜெனகன்மாதாவும்மனமகிழ்ந்து
ஜோதியோடு பூஷணங்கள் சுந்தரிக்கலங்கரிக்க.
4. அன்னையரடி பணிந்து பன்னகசயனரைநினைந்து
மன்னன் சபைதனில் வந்து மகானுபாவர்கைப்பிடித்தாள்.
5. பச்சைநிரமேனியா அச்சுதரைகைப்பிடித்து
மெச்சியே தேவர் துதிக்க விளங்கும் சிம்மாசனம் அமர்ந்தர்.
6. தூதுவர்கள் அனுப்பிவைக்க சேதிதன்னையறிந்து புத்திரர்
தேவியறோடு தசரதனும் ஜெனகன் மிதுளைவர.
7. மன்னன் ஜெனகன் கண்டு மங்கையர் நால்பேர் தன்னை
கன்னிகாதானங்கள் செய்தார் கார்வண்ணன் சகோதிரர்க்கு.
8. வசிஷ்டறொடுகௌகரும் மாயவரும் வேதமோத
ஜெகபதியோடு தம்பியர்க்கு திருமங்கல்யம் தரித்தார்.
9. உத்தமிப்பெண்களெல்லாம் முக்துனாலாலாத்தியிட
பத்தினித்தாய்மூவர்களும் உத்தமர்சேவை கொண்டாட.
----------------
11-வது கட்டம்.
1.- தேவரெல்லாம்மலர் சொரிய ஜெயஜெயவென்றாசி புரிய
பாவனையாரெதமேரீயே பத்தினி தம்பிமாருடனே.
2. ஜெனகரும்தெசரதரும் தேசமுள்ள மன்னவரும்
மனமகிழ்ந்து பவனிவா மங்கையர்கள் ஏதுசொல்வர்.
3. மன்மதனோசுந்திரனோ மனுஷவடிவாகி வந்தார்
என்ன தவம் செய்தாள் சீதை இவரைமணம்புரியுதர்க்கு.
4. மாதரெல்லாம்மதிகலங்க மன்னன் வீதிபவனிவர
ஆதரவாய் சீதனங்கள் அரசன் ஜெனகனனுப்ப.
5. ஆனை பரிசேனையோடு அயோத்திநகர் செல்லவென்று
வேணவிருதுகள் சூழவே வேந்தரெல்லாம் அடிதாழ.
6. பாளயங்கள் வழி நடக்கப் பரசுராமன் வழிமரிக்க
கிலேசத்தால் ராஜன் திகைக்க கார்வண்ணன் மனங்களிக்க.
-------------
12-வது கட்டம்.
1. கண்டான்பரசுராமனே அகம்பாவத்தேக்கொண்டே
எதிர்நின்றான் முனே. (கண்)
அநுபல்லவி
2. மண்டத்தையாளும் மகானுபாவவுமக்கு
தந்தேன் ஆசீர்வாதத்தை தாசரதேஎன்று. (கண்)
3. வாரும்பரசுராமனே உமக்கு நமஸ்காரம்பரசுறாமமே
மேரு போன்ற தோர்வில்லை தாராளமாயெடுத்து
நேராகவந்து நின்ற காரணத்தையுரைப்பீர். (கண்)
4. பெண்ணாய்ப்பிரந்தவளே என்றெண்ணாமல்
தாடகியை கொண்ணபழிகார உனக்கென்னதரமோடா
ஆருரைத்தான் சொல்லடா சொல்லாவிட்டால்
என்னே ராகவந்து நில்லடா. (கண்)
5. மெத்தமனந் துணிந்து பெத்ததாயை வதைத்து
சற்று மலஜ்ஜையில்லாமல் (கண்)
இத்தனை கெர்வங்கொண்டிங்கேவந்ததேதடா
மதங்கொண்டு பொங்கிவந்தவன் ஆரடா (கண்)
6. பெத்தபிதாவோடு உத்திரவின் படிக்கி அத்திசெய்ததினால்
குத்தமுண்டோடாஉந்தன் வாயைத்திரந்து சொல்லடா
அட்டா துஷ்டப்பேயே எதிரில் நில்லடா. (கண்)
7. ஆசான்மொழிப்படிக்கி வீசினேன் தாடகியை
மோசமுண்டோடா இனிபேசடாதடா அடாமூடா
வேதியனென்று பொறுத்தேன் இனி
என்னாலாகாதென்று மறுத்தேன். (கண்)
8. சீதை சொத்தைவில் முரித்ததால் இத்தனை கெர்வமுனக்கு
மெத்தவந்ததடாக்ஷத்ரீகவம்சத்தை வேரருத்தோனா நடா
கார்த்திய சூரன் தன்னை கூரு செய்தவன் நானடா. (கண்)
9. நீட்டாய் உனது பிலம்காட்டாய் என்னுடன் சண்டை மூட்டா
இநி என்னத்தோடு கூட்டா அடா இரிஎன்ன செய்குவாய்
உன் பலத்தை என்னோட காட்டுவாய் துருஸா .
உட காட்டுவாய் துருஸா. (கண்)
10. உந்தன் பகிமைதன்னை சிந்தையில் நினைக்காமல்
வந்தேன் கெர்வங்கொண்டிழந்தேன் பலங்களெல்லாம்
மதவாயினியென் செய்வேன் உன்னையன்றி
வேறேகெதியுண்டோ சொல்லுவாய். (கண்)
11. வேதியரையனுப்பி சீதையருடன் கூட
பிரீதியுடனே அயோத்தியாபுரி
பட்டணம் தன்னிலே வந்தார் ஸ்ரீராமச்சந்திரனும்
தசரதர்க்குதந்தார் சேவைதன்னையே. (கண்)
----------------
13-வது கட்டம்.
ஈளே பிங்களாநடுவில்.
1. கோமான் தசரதனும் கோதண்டபாணிதனை நோக்கி
சுவாமி எனக்கோர்மனுவை தந்திட வேண்டுகிறேன்.
2. வாழையடி வாழையாகி வந்துதித்தபூரணனே
சூழுமிந்தராஜியத்தை துரைத்தனங்கள் செய்திடுவீர்,
3. கட்டணம் யலங்கரிக்க பரைசாற்றுரைக்க
திட்டமுடன் மந்திரிமார் திருமுகங்கள் தானனுப்ப,
4. ஐம்பத்தாரு தேசமுள்ள அமச்சர்மனம் பூரித்திட
எம்பெருமான் சேவைகாண யேமகந்தகாசமாய்வரவே.
5. மகமுனியும் வதிஷ்டரோடு மரையவர்கள் கூடிடவே
ஜெகபதிக்கு முடிசூட்ட சிம்மாசனமலங்கரிக்க.
6. நாளை முடிசூடவென்று வீதியில் பேரிகையடிக்க
நீலியென்னும் கூனி செவி கேட்டு மதிகோபமுடன்.
7. வந்தானேகைகேசியண்டை சஞ்சத்தில் பள்ளிகொள்ள
கண்டாளே கண் சிவந்து காகுஸ்தருக்கு முடிநாளை என்றான்.
8. என்றவுடன் கைகேசியும் எழுந்திருந்து முத்துமாலைதனை
தந்தாளே கூனியண்டை என் தலைமகனுக்குசூட்டென்று.
9. கண்டாளே கூனி முத்து சரகண் சிவந்து பொரிபரக்க
உண்டோடி உன் போல் உலகுதன்னிலபேதையர்கள்.
10. பாதகியேகௌசலை கைப்படி வாங்கி நீயுண்ணிதைக்கி
காலமிப்போ வந்ததென்று கலங்குதடியென்கிளியே.
11. ஆதியில் ராஜனுனக்கு அனுகிரகித்தவரம்ரெண்டேன்
ராமன் வனம் போகுதைக்கி பரதன்ராஜ்யமாளுதைக்கி
12. கேளாயோவரமிரண்டேன் கிளிமொழியே என் துரைக்கி
ஆளலாம்பரதனோடு ஆருண்டு உனக்குசோடு.
-------------
14-வது கட்டம்.
நின்றதொரு பாலகனே.
1. கூனியவள் சொல்லலுமே கைகேசி கோபங்கொண்டு மனந்தளந்து
பூமியில் புரண்டழுது பூஷணந்தன்னை வாங்கியடுங்கோலமானாள்.
2. ராமன் முடி தரிக்கும் சேதிதன் நாயகியோடு சொல்லவென்று
தாமஸங்கள் அன்னியிலே தசரதனும் தானடந்தார் அந்தப்புரம்.
3. மான்மொழியே கண்மணியே எந்தனோடேமதவியே உந்தனுக்கு
என்கவலை வந்ததடியென் கண்மணியே எந்தனோடு உரையுமென.
4. எந்தனோடுரையுரையுமென்றீர் என்னாதா அந்தரங்கவஞ்சகமாய்
மூத்தமந்தனமுடிதரித்து எந்தன்பாலனை முஷ்டுஎடுக்கவத்தீர் .
5. ஏதடி கைகேசியரே உனக்கிந்த சூதுரைத்தபாதகி யார்
மாயன் முடிதரித்தால் பரதன் மகிமைபெரவொண்ணாதடி
6. அன்னெனக்கு கந்தவரம் பதினாலு அளவேணும் ராமன்வனம்
பின்னொகுவரம் பரதன்ராசியத்தை பொருந்தியரசாளவேணும்
7. றாமன்வனம்போகவென்றாய் பாதகி நடுக்கமில்லாமல் சொன்னாய்
உன்பாலன் முடிசூட்டுதைக்கி நாள் பாறாய்
என்பகவான் வனம் போகவேண்டாம்.
8. சத்யமேயில்லையென்று என்னாதா உத்திரவு தந்துவிடும்
சித்தநொடிக்குள்ளாக உன் சன்னதியில் ஸ்ரீ அத்திசெய்து கொள்வேனென்றாள்.
9. இந்தமொழிதனை கேட்டு தசரதர் எங்கியவர் மூர்க்சையானார்
அண்டையில் நின்ற தூதர்களை அறிநாமா அழையுமென்றார்
--------------
15-வது கட்டம்.
மாதவரொடுதிருவடியை.
1. சீதையரோடு அந்தப்புறத்தில் ஸ்ரீராமர்வீத்திருந்தார்
சீக்கிரமாய் தூதுவர்கள் வாறுமென்று அழைத்தார்
அநுபல்லவி.
2. மாதாகைகேசியுப்போ வரவழைக்கவேணுயென்று
ஆதரவாய் எங்கள் தன்னை அனுப்பிவைத்தார் இங்கு வந்தோம்
3. உங்களய்யர் தசரதரிப்போ அதிசோகத்துடன் கூட
அரிவை மரந்து மூர்ச்சையாகி விழுந்திருக்குரார் பாரும்வயமள
தமாதவா வும்மை வரவழைக்க வேணுமென்று
கைகேசியம்மாளனுப்பினாள் கடுகவேஇங்கு வந்தோம்
4. மாதவரரிந்து மகத்தானந்தங்கொண்டு நாம் வந்த காரியம்
செயமாச்சுதென்று மகிழ்ந்து சென்றுஸிதையரும் தாமுமாகி
சிக்கிரமாய்தானெழுந்து மாதாகை கேசியரண்
மனைக்குள் வந்து தான் வசித்தார்
5. அன்னையோடு அடிபணிந்து அவிறாமச்சந்திரனும்
அழைத்து வரச்சொன்னதென்ன உரைப்பீர் அம்மாநீரும்
மன்னவரும்முர்ச்சையாகி வந்தடைந்தகாரணமேன
என்னோடே உரைப்பீரம்மா ஏகாந்தமாய் நீருமென்று
6. என்னப்பனே பதினாலாண்டு ஆரணயம் சென்றால்
உங்களய்யா எழுந்திருப்பாரிப்போ அரைநிமிஷமே என்றால்
இப்புவியை பரதனரசாண்டிருப்பார் எனகண்மணியே
ஏத்தமுள்ள சீதையோடு ஏகிடுவீர்மரை தரித்து
---------------
16-வது கட்டம்.
பாரளந்தார் திருவடியே.
1. அன்னையரேவனம் போல அனுக்கிரகந்தான் செய்தீர்
நான் என்ன தவம் செய்தேனோ ஏந்திழையே முன்னாள்
2. பாலன்பரதராஜனிந்த பார்முழுதென் ஆள
கோலமுடன் அனுக்கிரகித்தீர் கோதையரிவ் வேளை
3. கொம்புப்பயிரைக் கூரையிலேத்திவிடும்டோலே
அன்புடன் பரதன் தன்னை ஆதரிப்பாய் நீயே
4. அய்யருட அருகில்வந்து அவிராமச்சந்திரரும்
மெய்மரதிகொண்டதென்ன என்வேந்தரேஉரைப்பர்
5. எத்தமியேடுவனம் நடக்க உரைத்தாளே என்தாயே
சித்தைக் கடைக்கண்பார்த்து வருடனுரைப்பீர்
6. கண்விழித்து பார்த்துயென்னை கவலை தன்னை தீர்த்து
இல்லமையமாளுபரதன்னை வாண்க்ஷையுடன் காரும்
7. ஆரண்யம் சென்றீரானால் உங்களயார் எழுந்திருப்பர்
தாரேனய்யாமரவுரியை தரிப்பீரப்பா நீரும்
8. மாதா கைகேசிதந்த மரவுரியை வாங்கி
ஆதரவா ஆண்டவனும் அணிந்து கொண்டாரப்போ
--------------
17-வது கட்டம்.
ஆகிஜெகநாதா.
1. கண்டு ஆதிசேஷனும் கொண்டு அதிகோபமாய்
அனாடமளந்தோர்பாதம்மணிந்து
அதிசோபமாய் ஏ துரைப்பார்
2. என்னுடைய நாதா எனக்கோர்வரம் தாதா
இந்தகன்னவரேன் தேவியரேன் கட்டி
பொல்லாச் சிரைவைத்திடுவேன்
3. இந்த வசிஷ்டரைப்போல் எந்தவுலகிலுண்டு
அந்தரங்கத்துடன் பரதருக்கு
அரசு முடிசூட்டுமென்றார்
4. அண்டம்பதினாலும் அரசர் எதிர்த்தாலும்
துண்டமாய் விழவடிப்பேன் உமக்கே
ஜோதிமுடிசூட்டிவைப்பேன்
5. என் தம்பியிங்கேவாராய் ஏனமொழியைக் கேளாய்
வம்பு செய்யக்கூடாதடா குழந்தாய்
வாஞ்சையுள்ள கண்மணியே
6. நாட்டைபரதன் கொண்டால் நமக்கினி வறாதோ
கோட்டைக்குள் படை வெட்டுப்போல் அடாதம்பி
கோபம் செய்யாதடா வெம்பி
7. தந்தை தாய்வாக்கியம் தான் கொண்டுயோக்யமாய்
சிந்தையில் மகிழ்ந்திடுவாய் வனம் போக
சீக்கிரமாய் நடந்திடுவேன்
8. என்கண்மணியாள் சீதை காக்ஷியாயிப்போது
அன்னையர்கள் மூவர்கட்கும் சிச்க்ஷை
அன்புடனே செய்திடுவாய்
--------------
18-வது கட்டம்.
நீருமே குமிழியான.
1. இந்த மொழி கேட்டு சீதை ஏங்கியப்போது
சிந்தை மகிழந்துமே ராமனோடுரைப்பாள்
2 என்னை விட்டுவனம் நடக்க ஏர்க்குமோபூமி
மன்னன் ஜெனகன் உமக்கு தாரைவார்த்தாரோ
3.. வனம் நடப்பேனென்று சொல்ல வந்துதோமனம்
துணைவனே உம்மைப் பிரியேன் சத்தியம்நானும்
4. பொன்னைவிட்டு ஒளிமழுங்குமோ இப்பூவுலகினில்
கன்னை விட்டுப்பசுப்பிரஞ்ச காக்ஷியாச்சுது
5. நானும் ஜெடைமுடி தரித்து நாரணாஉம்மோடு
கூடவே வருவேனென்று கோதையருரைத்தாள்
6.அடியெடுத்துவையும் பாரும் ஸ்ரீஹத்தி செய்குவே
முடிதரிப்பேன் நானுமென்றால் மோகனாங்கியும்
7. மத்துமுள்ள பந்துக்களெல்லாம் மனங்கலங்கியே
உத்தமரைக்கண்டுமவள் உருகியேநின்றால்
8. தாஸாதி சேஷனோடு ஜெடைமுடி தரித்து
சீதையரோடுவனம் நடக்க மாதாவை வணங்க
------------
19-வது கட்டம்.
அண்டவர் முனிவர்.
1. முப்பத்திமுக்கோடிதேவர் முனிவரெல்லாரும்
திப்ரமைகொண்டு ஸ்ரீ ராமனை சேவித்து நின்றார்
2. எங்கள் குரைவிட்டோமென்று எகாச்தமாக
பங்கமலர் தூவிநின்றார் பூவுலகிலுள்ளோர்
3. மங்கை சுமத்திரை அரம்மனை தனில்செனது
அவள் பங்கயத்தாள் மலர்பணிந்தாற்பத்தினியே
4. என் அன்புடையகண் கணியே அவிராமச்சந்திரா
ஆண்டிருப்பீர் ராஜ்ஜியமென்று ஆசீர்வதித்தார்
5. என் அன்னையரே பரதராஜன் ஆண்டிடவே ராஜ்யம்
அனுப்பிவைத்த அன்னையெனை ஆரண்யம் தனில்
6. போய்வாரேனம்மாசீதையுடன் பதினாலு ஆண்டு
போக்கிய பின் வருவேனம்மா அநுப்பு மென்றா
7. தம்பி பரதன் லக்ஷமணன் சத்துருக்கனோடு
அன்புடனேராசன் தன்னோட் ஆதரிப்பீரே
8. என் கண்மணியேராமா இந்தகடுமை வார்த்தையை
என்னமாயுரைத்தீரென்று ஏங்கியேரின்றாள்
9.ஆருரைத்தாருமை வனம்போகவென்று
இந்தபாருதான் சகித்திருக்குமோபாலா நீ போனார்
10. தம்பலக்ஷமணா நீதான் தாஸாதியுடன்
அன்புடனே செல்வீரென்று அன்னையருரைத்தார்
11. தாய் தந்தை குரு தெய்வமும் சகலமும் அவாளே
வாய்மொழி தவராமலே வனம் நடப்பீரே
12. உத்தமரோடு மொழிதவறாமல் சித்தும் பயமாய்
புத்திமதி தானுரைத்தாள் பொற்கொடியாளும்
13. ஆண்டு பதினாலுஞ் சென்று அரசாள்வாயென்று
அனுக்கிரகத்து சுமித்திரையாள் ஆசீர்வதித்தாள்
14. மங்கைசுபத்திரை மலர்பாதத்தைப் பணிந்து
சங்கபாணி கோசலை தன் அரமனை வந்தார்
15. மஞ்சத்தின் மேல்வீத்திருக்கும் கோசலையோடு
சஞ்சமலர்ப்பாதம் பணிந்தார் கார்வண்ணனப்போ
---------------
20-வது கட்டம்.
ஆதிநாராயணாவென்று.
1. அன்னைகமுசலையாள் மனமகிழ்ந்து
ஆசீர்வாதங்கள் செய்து சித்தம் குளிர்ந்து
2. வாழவீர்வளர்வீர் வர்த்தித்திடுவீர்
ஊழியகாலமட்டும் உகந்திருப்பீர்
3. மகுடம் தரிக்குதைக்கிக்காலமோ இப்போ
மன்னர் முனிவரெங்கே கண்மணியிப்போ
4. அன்னையருரைக்கலுமே ஸ்ரீராமரப்போ
ஆரண்யம் போகவென்று அய்யானுப்ப
5. தம்பிபரதன் அரசாளவேயென்று
தாளனுப்பிவதைத்தாதெங்கள் அன்னையரென்றார்
6. இந்தமொழியரிந்து கம்ஸலையாளும்
இடிமொழக்கமரிந்து அரவம் போலும்
7. கண்டு திடுக்கிட்டு மூர்ச்சைதெளிந்து
கண்ணனைப்பார்த்து ஒரு வசனம் சொல்வள்
8. மெத்தவயசு சென்ற ராசனைவிட்டு
என்புத்திதனே வனம் போகக்கூடுமோ
9. பாலவயசு சென்ற சானகியாளை
பாரவனம் அழைத்துப்போக ஒண்ணாதே
10. ஆதியில் அன்னையர்க்கு வரந்தந்ததால்
அனுப்பினார்யென்னை வனம் போகவென்று
11. ஆனதால்வனம் போய் வாரேனம்மா
அன்னையேயனுப்பிமென்று அடிபணிந்தார்
12. கண்டு திடுக்கிட்டு மனந்தளர்ந்து
கலக்கியே பூமிதன்னில் மூர்ச்சையடைந்தாள்
13. உன்னைவனந்தனில் போக விடுத்து
தன்னுயிர்பொருத்தாரோ வேந்தருமிப்போ
14. பிள்ளைகலிதீர்த்தபெருமானே
உன்னைப் பிரிந்து நான் இருப்பேனோ
------------------
21-வது கட்டம்.
கோபியாளாடுதம்மா.
1. கண்மணிறாகவனே என்னுடபூஷணமே
உன்னைப் பிரிந்தாள்வேனோ உத்தமனே உலசில்
2. அரவதாயிரவருஷம் அரசாண்ட தசதற்கு
பிரியமான தாச்சோ என்புண்ணியாஉம்மைவிட்டு
மாபாவிகை கேசி வரமதை கேட்டதால்
ஆமென்று உந்தனை அனுப்பினாரோ உன்னை கண்
3. கலியுகம் மேலிட்டதோ கபடத்தார் வந்ததுவோ
என் மனம் குலையுதே நான் ஏதுவகையில்லாததால்
பேதையான எந்தனை தோதகம் செய்துமே
போகவும் நீதியுண்டோ
புத்திரகாமேஷ்டியாகப் பலனிதுவோகண்டாய் கண்
4. மலரணை பள்ளி கொண்டால் மதிமுகம் நோகுதென்பாய்
அதிசுடர் கானகத்தை அதிவிரைவாகச் சென்றால்
மெல்லிய மேனியெங்கும் முள்ளும் கல்லுமதைக்க
என முகில்வர்ணாபார்ப்பேனோ கெதியென்ன சேர்ப்பீரோ
மூளுதேயென்யேழைநெஞ்சம் கண்
5 அஞ்ச வேண்டாந்தாயே ஆரண்டம் தன்னையே நான்
கொஞ்சகாலமட்டும் சென்றுநான் கோலமாய் வருவேனே
பஞ்ச பிராணனான உன்பர்த்தா எந்தந்தை தன்னை
அஞ்சாமல்காருமம்மா அதிவிரைவாகவாரேன்
அனுப்புமம் மாதாயே என்றடி பணிந்தார் மாயன் கண்
6. கண்டு கம்ஸலையும் கொண்டுமே சோகந்தன்னில்
கொண்டால விழிகளிரண்டேஅ நின்று செரிந்திடவே
மாதவனைப் பிரிய நீதியுண்டோயெனக்கு
பேதைகம்ஸலை புலம்பவனம் நடந்தாரே கண்
--------------
22-வது கட்டம்.
புவனம் புகழ்ந்திடும்.
1. ராமச்சந்திரன் தாய்மாரைப் போற்றி
தாமக்குழல் சிதையரும் தம்பியுடன் கூடவே
2. அந்தமுள்ளதோர்ரதம் மந்திரிசுமித்திரரும்
வந்துமேவனைங்கரதம் யேர அந்ததம்பியோடு
3. தனுஸ் பாணமும் சங்குச் சக்கரமும்
மகானுபாவர் கோதண்டத்தை வரிசையுடன் ஏந்தியே
4. ரத்ன தேர்தன்னில் பத்னியோடுயோ
பட்டணத்து ஜனங்களெல்லாம் பரதவிப்பதுடன்கூட
5. மாதாசிதையர் வனம் நடந்திட
அடி நீதமடி பாதகிகை கேசிக்கென்ன செய்தாளோ
6. வஞ்சகனான வசிஷ்டனப்போ
கஞ்சமலர் கண்ணனை வனம் போகக்காப்பு கட்டினார்
7. அடி இந்தநகரத்தில் நமக்கிருக்க நீதியோ
செந்தாமரைக் கண்ணனோடு செல்லுவோம் வனந்தன்னில்
8. பூமடமாது போகிய பின்னே
மூதேவி வசிப்பலிப்பாளோடி இந்தப்பாதகிபட்டணத்தில்
9. தாமரையிலைக் கண்ணீர் போலவும்
ஜெகதாமனைப்பிரிந்து ஜனங்களையெல்லாம் கவிர்த்திடவே
10. அய்யோ செங்கோல் செலுத்திடும் சிங்காரங்காமல்
நாம்பள் மங்கையரோடு மறைதரித்து வனத்தில்
நகத்திடக்கண்டோம்
11. மணித்தேரேரியே கனவேகமாகி
ஜெனகன் மகளோடு சேஷன் தம்முடனே செல்லவே
12. பட்டணமுள்ள ஜனங்கள் நித்திரை செய்யும் போது
உத்தமர்ரதம் நடத்தி உகந்து கங்கை வருகவே
13. கண்டான் குகராஜன் கொண்டான் பரவசம்
கொண்டல்வர்னறோடு பாதம் நின்றுமே மணிந்திட
--------------
23-வது கட்டம்.
சோதையரும் பாலகரே.
1. மாதவரைத்தான் பணிந்து வாரும்பட கேருமின்ன
ஆதரவாய் சிதையுடன் ஆதிசேஷன் தம்முடனே
2. கெங்காநதியைத் தாண்டி மந்திரிசுதந்திரரோடு
தங்கமணித்தேர் மீதில் தாஸரதி தம்பியோடு
3. பாதத்தைத் தான் பணிந்து போகுதேகத்துடன் குகன்
மாதவனே மைதலியோடு வாஸஞ்செய்திடும் யிவ்விடத்தில்
4. காய்கிழங்கு கனிகள் தேன்ரகுகளுண்டு
தோய்ந்த காமதேனு நெய்பால் தயிர் அமுதுண்டி
5. அற்புதமுள்ள தொரு புஷ்பமலருண்டு
இப்போவரவழைப்பேன் என்னுடன்ய மதாவுக்கு
6. இங்கே எழுந்தருளி யென்கங்சைதனை விலக்கும்
பங்கஜநாதாவென்று பாதம் பணிந்திடவே
7. என்னுடைய சகோதிரனே இன்னம்பதினாலாண்டுசென்று
உன்னுடன் கூட உகந்திடக்காலங்காண்
8. மந்திரி சுமிந்திரரோடு அங்கமாய்ரதமேரி
வந்தார்சித்ரகூடம் மகமுனிவர் போற்றிடவே
--------------
24-வது கட்டம்.
மைந்தன் வரக்காணேன்.
1. கண்மணியே இந்தச் சித்திரகூடமலை
காக்ஷியைப்பாராயோ
அநுபல்லவி
2. உன்னித அயோதிக்கிலேமான
சொர்ன பீடம் போல்மின்னும் ரத்னமலையை (கண்)
3. மலைநாகங்கள் சுருண்டுபடியது போலவே
மகமுனிரிஷிகளுக்கு யேரிடக்கிடப்பதும்
துலங்கும் பாகங்களுக்கு சாமக்கிரியந்தன்னை
துதிக்கையால் யானைகள் கொடுப்பதுவும் (கண்)
4. கும்பங்கள் சுத்திட சிலந்தி நூல் கொண்டுபோய்
குரங்குகள் கொடுப்பதுவும்
அன்புடன் தினைக்கதிர் கோதிக்கிளிகளெல்லாம்
ஆவலாய்க்கொப்பதுவும் பைந்தன் (கண்)
5. தாசரதிசிதா மடிதன்னில் சயனித்து
யோகநித்திரை செய்ய
காக்காஸுரன் மதாஸ்தனம் தன்னைக்கொத்திட
ஏகநேத்திரமானானப்போ (கண்)
6. மாதவரைப்பிரிந்தும் வந்திரிசுமந்திரனும்
பொக்கிலேசத்துடனே அயோத்திநகர் செல்ல
சோகமதாய்ப்புலம்பும் தசரதராஜனுக்கு
சேதிதன்னையுரைத்தார் மந்திரி (கண்)
----------------
25-வது கட்டம்.
1. பூபதியே சுவாமிவனம் நடந்தார்
சித்ரம்கூடம் தன்னில் தையலுடன்
2 உம்மிட திருவடிக்கி அவர்சரணம் சொன்னார்
சேதியிதுதானென்று அடிபணிந்தார்
3. என்னய்யனே ஸ்ரீராமா உம்மைவிட்டு
இந்த அவனிதன்னில் வசிக்கத்தரமோதான்
4. கானகத்துள் ரிஷிசாபத்தாலே
ஆனேனைய்யா இந்த நீலியாலே
5. வானவர்கள் யென்னைத் தூரிடாரோ இந்தக்
காலனைப்போன்ற பெஞ்சாதியாலே
6. ராகவா நீரேகெதியென்று ராஜன்
நாடினார் பரமபதத்தைச் சேர்ந்தார்
7. அன்னை கம்சலையோட் வதிஷ்டரப்போ
அழைக்கப்பரதனுக்கு தூதனுப்ப
8. பரதராஜர் துர்சொர்ப்பனத்தைக்கண்டு
வரிசைதம்பியுடன் ஏதுரைப்பர்
9. தூதுவர்கள் வந்து பரதனண்டை
பாதம் பணிந்துமே வாருமென்றார்
10. தம்பியோடு ரதம் தன்னில் யேறி
வந்தாரே அயோத்தியாபுரியை நாடி
11. பட்டணம் உரக்கமாயிருக்க பார்த்து பரதனோடே
மாதாமனையில் வந்தார்
12. அன்னையரடி பணிந்து நின்றார்
ஆதரவாய்தளுவி முத்தமிட்டாள்
-------------
26-வது கட்டம்.
ஆதிஜெகன்னாதா.
1. அய்யனேவாடா இந்தஅவனியில் ஜோடாயிந்தவையகத்தை யாளுகைக்கி
அடாகுழந்தாய் வந்தாயோவித்தை கற்று
2. அம்மணியேகேளும் அய்யரெங்கே சொல்லும் உமமைப் பிரிந் திடாரே
எங்களய்யா எரக்கமாய்ததோணுதம்மா
3. செல்வமெகேளும் இந்த சீமையை ஆளவள்ளல் ராமனைவனம்
போகவே வரக்கினேன் இருவரத்தை
4. இடி விழுந்த அரவம் ஏங்கிக்கிடப்பது போல்பாவியடிதனில்காய்ந்து
மூர்ச்சை வெரிந்து அதிசோகத்தோடு ஏதுரைப்பார்
5. பட்டாபிராமாயிந்த பாருக்கெல்லாம் கோமான் துஷ்டியே தூரவனம்
போகக் சொன்னாய் நான் துணிப்பேன் இவ்வானினாலே
6. என்மாதா சீதையானவள் வனத்தில் நடந்தபின்பு மூதேவி உந்தனோடே
முகத்தில் விழிப்பதில்லை யென்றெழுந்தார்
7. பாதகி கூனியாலே பகைவந்த சேதியென்றுமாதா கம்சயாள்
முன்னிலையில் மனஸ்தாபங் கொண்டிருந்தார்
----------------
27-வது கட்டம்.
ஏமி சேதுநம்மா கிருணா
1. ஆளும் பிள்ளாய்பரதா உமக்களுகையேதையா
சூழுமிந்த ராஜியத்தை துரைத்தனம் செய்வீர்
2. அன்னைவரம் வாங்கியதால் அவிராமச்சந்திரன்
கண்மனியாள் சீதையுடன் கானகம் நடந்தார்
3. மனஸ்தாபங்கொள்வதென்ன மைந்தனேபரதா
ஜெகபதிபோல் முடி தரித்து சீமையாளுவீர்
4. மாதா கம்சலையுரைத்த வசனத்தைக் கேட்டு
மனக்கவலையோடு பரதன் மறுமொழியுறைப்பார்
-------------
28-வது கட்டம்.
போய்வாரேனடி சகிகளா,
1. என் அன்னையேராமன்வனம் போன தரிந்தேனேயானால்
உன்னுடைய சன்னதியில் நான் உகந்து நான்வரக் காரணமேன்
2. பக்தியில்லா குருவைப்பழித்த தோஷத்தை நானடைவேன்
மெத்தமாதா பிதாக்களை பூசிக்காத தோஷமடைவேன்
3. மூத்தமனையாளிருக்க மோகத்தினால் மிகவேகூடி
கீர்த்தியநளிளையாளோடு கேளிதோஷத்தை நானடைவேன்
4. மண்ணோரம் வழக்கு சொல்லும் பாதகத்தை நானடைவேன்
என் அண்ணன் பாதசாக்ஷியாக அரியேன் இதுசத்தியமே
5. உண்மையாக நானுரைத்தேன் உம்பர் முதல்சாக்ஷியாய்
அன்னை பூமாதேவியேடு ஆகாசவாணி சாக்ஷியாய்
6. சத்தியங்கள் செய்து மந்த உத்தமபரதாழ்வார்
பெத்ததந்தையிருக்கும் போனயிடத்தில் சென்றார்
----------------
29-வது கட்டம்.
ஆதியில் பால்கடலில்.
1. தந்தை தசரதற்கு சகலகிர்தயங்கள் பண்ணிமுகுந்தவரைக்காண வென்று
ஜனங்களொடு வந்தாரேந்திக் கரையில்
2. கண்டான் குகராஜன் கொண்டான் மகாரோஷம்
சென்றான்பரனண்டை உரை கேட்டு சேர்த்தான் அக்கரைதனில்
3. சேனைகள் சென்றிடவே செந்தூள் பரந்திடவே
தானேரிப்பாரந்த சேனை தன்னைதா ஸாதயோடுரைப்பார்
4. உத்தாரம் தாரும் ஒரு நொடிக்குள் பாரும்
சத்துருபரதனோடசேனைகளை செந்தூள் பரக்கடிப்பேன்
5. அப்பனே கேளு உனக்கொப்புலகில் ஆறு
தப்பிதம் செய்தறியான் பரதன் தணிப்பாய் உன் கோபந்தன்னை
6. சேனையுடன் பரதன் சென்று மேறாமனோடே
பாதம் பணிந்து நின்று கண்ணீர் சொரியபார்த்தார் றாமச்சந்திரன்
-----------
30-வது கட்டம்.
சந்திரனெங்கையோ .
1. நின்றபரதனைக்கண்டு ஸ்ரீராமனும் தந்தைதாய்சுகமோ
அதிசோகமாய் பராமுகமாய்கொண்டு மனஸ்தாபம் விண்டு
கண்ணீர் மிகமின்றதோர் காரணம் எந்தனோரைப்பீர்ஐயனே
2. வையகமளர்ந்ததோர் மாதவனே நம்மிடஐயர்
சொர்க்கமடைந்தார் இகமரந்தார் ஜென்மம் துரந்தார்
இனிசெய்வதே தரியேன் ஸ்ரீராமச்சந்திரா
செப்பினேன் தப்பிதம் பேதறியேன் எந்தன் மாதவா
3. என் தந்தையேயிவ் வேளை யெந்தனைவிட்டு
தவப்பயமானீரோ வானில் சேரமனம் ஆர
எந்தவிதத்துள் துணிந்தோ அன்புள்ள
அய்யனே மெய்யனே என்செய்வேன் அய்யோ தெய்வமே
4. என்னப்பா பரதாநீ அய்யர் தசரதர்
ஆபத்து வேளையிலே அரிகினிலே உதவியன்போல்
ஒப்பிடலாமோ உள் பாக்கியந்தான்
உன் உத்தமனே நீதான் மெத்ததபம்சைய்தகண்மணியே
5. நாரணனே மாமன்மதனை தன்னில் சென்று நானிருந்தேனே
ஒழியதெய்வமரிய மனம்பிரியக்காரணம்
தூதருரைத்திட அறிந்துகண்டேன் மன துயர்கொண்டேன்
பாதகியாலிதுசத்தியமே
6. மெத்தவருத்தத்தோட உத்தமரும் தன்பத்தினி சமேதராகி
நதிக்கேகிகெங்கைமுழுகி பெத்ததந்தை
கிருத்தியங்கள் முதலாக உத்தமரும் செய்ய
பிரத்தியக்ஷமாய் வந்து வாங்கினார்
7. கவுசலை கைகேசி சுமித்திரை மூவரும்கிலேசமிகவடைந்து
மனங்குழைந்து கண்ணீர் சொரிந்து
கேசவனைக் கட்டித்தழுவி கௌசலைவாசுதேவர்
இனிதேசத்தை யாண்டிட வாருமே
8. வந்து பட்டணமுடிதரிக்க வென்று வணங்கிரின்றவனே
பரிவோடணைத்தும் பாதம் தன்னை
செந்திருவடியளித்திட பரதன் சிரசுமேல் கொண்டு
பரிவாய்ப்பட்டணமுடி சூட்டினார்
--------------
31-வது கட்டம்.
பூலோகரோஜாப்பூவே.
1. சீதை சேஷன் தம்முடனே சித்ரகூடந் தன்னைவிட்டு
ஆதியகஸ்தியரோடு ஆச்ரமம் தன்னில் வந்தார்.
2. எம்பெருமான் தான் பணிய எடுத்தணைத்து அகஸ்தியரப்போ
அம்பு வில்லுதனையளித்து ஆதித்தியமத்ரம் உபதேசித்தார்
3. வாங்கியேவிராதனோடே மார்பிளந்து தாஸரதி
ஓங்குபுகழ் அத்ரியுடன் உகந்துபானசாலை வந்தார்
4. அத்திரிமுனிபாதந்தன்னை சுவாமி பக்தியாய் பணிந்திடவே
பக்தியாய் அனுசூயையும் மைதலிக்கியாங்குடன் அலங்கரித்தா
5. வாடாதமாலை சூட்டி மைதலியும் தம்பியோடு
தேடிசரபங்கரோடு ஆச்ரமம் தன்னில் வந்தரர்,
6. போற்றிடவே ஸ்ரீராமரும் புண்யசுரபங்கனப்போ
பொகுகீர்த்தியுள்ள ஆயுதமோடு மந்ரத்தைமுர்த்தியுபதேசி
7. தவரிஷியனுப்பிவைக்க தண்டகாருண்யம் வரவே
தாபத்துடன் கண்டு மந்ததவ முனிதுதிக்கலுற்றார்
-------------
32-வது கட்ட ம்.
சரணம் சரணமையா.
1. சரணம் சரணமையா ஓஜெகதாமா
தருணம் எங்களைக்கார்க்க வேணும் ஏ அபிராமா
2. தெசமுகனால் நொந்தோபய்யா ஓஜெகதாமா
வசமென்றும்மை நம்பி வந்தோம் ஏ அபிராமா
3. உந்தன் சேவை தன்னைக்கண்டேன் ஓஜெகதாமா
சிந்தைக்கவலையை விண்டோம் ஏ அபிராமா
4. இத்தனை பேர் செய்ததவங்கள் ஓஜெகதாமா
உத்தமனே நீர் அரிவீர் ஏ அபிராமா
5. பாவி சூர்ப்பனகியால் நாங்கள் ஓஜெகதாமா
ஆவிமிகத்தளந்தோமைய்யா ஏ அபிராமா
6. தாவிவரும் வேளையாச்சே ஓஜெகதாமா
தர்க்காத்திட வேணுமையா ஏ அபிராமா
7. ஓமயாகங்கள் மறந்தோம் ஓஜெகதாமா
நேமவிரந்தங்கள் துரந்தோம் ஏ அபிராமா
8. பாமரமாய் ஆகிவிட்டோம் ஓஜெகதாமா
இந்தப்பாவிகுலம் வேரருப்பீர் ஏ அபிராமா
9. சீதையுடன் ஆசீர்மத்தில் ஓஜெகதாமா
ஆதரவாய்வீத்திருந்தார் ஏ அபிராமா
10. வீத்திருக்கும் வேளையிலே ஓஜெகதாமா
சூர்ப்பனகி அருகில் வந்தாள் ஏ அபிராமா
---------------
33-வது கட்டம்.
1. புண்டரீகக்கண்ணனோடு பூர்ணவடிவு தன்னை
கண்டாளே சூர்ப்பங்கி கண்கள் களித்திடவே
2. இவன் மன்மதனோ சுந்திரனோ மானிடவடிவாவந்த
என்மனதுருக்கவந்த எவ்வள்ளலோ நானரியேன்
3. கையில் வில் பிடித்து காக்ஷயெனக்குக் கொடுத்து
இந்த வையம் தன்னில் எழுந்தருளும் மாதவனோ நானரியேன்
4. பச்சரிர மேனியனும் பவழந்தனைப் போன்ற உதடும்
இச்செகத்தில் வந்ததொரு எவ்வனனோ நானரியேன்
5. பக்கம் யிளஞ்சிங்கத்தைப் போல் பாவனையாம் தம்பியுடன்
சக்கரம் கையில் பிடித்த சாரங்கனோ நானரியேன்
6. மங்கையம்மன் பார்வதியோ மகாலட்சுமியோ நானரியேன்
தங்கமடல் மேனியனோடு தெரிசனங்கண்டேன் நானே
7. இந்தமங்கைதனைவிட்டு என்னை மணம் செய்வானோதான்
சிந்தைமிகவருந்துதையோ செல்வ அண்ணா என் செய்வேன்
8. ஓடி ஓதிங்கிநின்று நாடியே ஸ்ரீராமனண்டை
குடிகேடியான சூர்ப்பனகி புன்சிரிப்புக் கொண்டிருந்தாள்
9. மெத்தவும் வடிவுடனே தேவபத்தினிபோல் ரூபங்கொண்டு
உத்தமனார் பக்கந்தன்னில் உகந்து மவள் நிற்கலுற்றாள்
10. கன்டுமே ஸ்ரீராமச்சந்திரர் காராக்கி ரூபந்தன்னை
அண்டைநின்ற லட்மணனோடு ஆச்சரியமாக செப்பலுற்றார்
---------------
34-வது கட்டம்.
வெண்ணையளந்த.
1. எங்கிருந்த நேசம் விட்டு ஆரண்யம் தன்னில் வந்தாய்
சங்கையா எனக்கு சொல்வாய் சாமளனே நீ மகிழ்ந்து
2. சங்கையர உரையுமென்று தையலரே கேழ்க்கவந்தாய்
மங்கையரே உன் வூரும் பேரும் மரம்மமா உரையுமம்மா
3. அப்படியே உரைப்பேன் நானும் என்னாசையுள்ள நாயகனே
ஒப்பற்ற லங்காபுரியாளும் உடப்பிரந்தாளையா
4. தேவர்களுக்குப் பணிகள் செய்வேன் பாவர்க்குத் துணை வருவன்
என் ஆவலார ஊரும்பேரும் அன்புடனே உரையுமென்றாள்
5. அடி தையலரே வரங்கள் பெத்த தவத்திலுயர்ந்த எங்கள் தன்
அயோத்தி தசரதற்கு அருமையுள்ள பாலன் நாங்கள்
6. ராமன் பரதன் லட்சுமணன சத்துருக்கன் தம் யெரும்
தாமக் குழல் சீதையரோடுதாய் மொழியால் வந்தோமம்மா
7. மாதவருரைக்கலுமே மையல் கொண்டு சூர்ப்பனகி
காதலாரயென்னை மாலைகாணியுடன் சூட்டிடுவீர்
8. மாலையிடுயென்றுரைத்தாய் வனத்த வசியானயென்னை
சீதையாயிருக்க வேறே தேவியரேதுக்குச் சொல்வாய்
9. மெத்தவருத்தங்கொண்டு பத்தினியில்லாமல் தம்பி
உத்தமனிருக்கிறான் போவாய் உகந்திருந்து வாழலாமே
10. ஆதிசேஷன் அண்டைநின்று ஆவலுடன் நிர்க்கலுமே
பேதையிவிட மகிற்காதடி போடியென்னண்ணரண்டை
11. போடி போடி என்கலுமே பொல்லாக் கோபமாகியவள்
நாடியந்த சீதையண்டை நான் விடுவேனோ வென்றுரைத்தாள்
12. தையலாபயங்கொண்டிட தாசரதி தம்பிதன்னை
அய்யமரசிக்ஷை செயவாய் எனறாக்யாபித்தார் மாதவரும்
13. சீக்கிரமாய் சேஷனப்போ செவியோடு மூக்குமுலை
தாக்கியே யறுத்துவிட்டார் தயங்கிக்கரனண்டை சென்றான்
14. சூர்ப்பனகை சொல்லலுமே துஷ்டன்கரதூஷணனும்
சீக்கிரமாய் சேனையுடன் ஸ்ரீராமன்யெதிரில் வந்தான்
15. அத்தனை பேர் மாண்ட பின்பு அரக்கியென்னும் சூர்ப்பனகி
மெத்தவும் துயரத்தோடு வேந்தனோடிலங்கை சென்றாள்
-----------------
35-வது கட்டம் .
ஆண்டிருப்பாயராஜ்.
1. சூர்ப்பனகிவோடி வந்து தென்னிலங்கையில்
மூர்க்கனோடி கால்விழுந்து முரையிட்டுச்சொல்வள்
2. என் கண்மணியாம் தங்கையே நீகலங்குவதேது
உன்னை யவமானஞ்செய்தார் உசுலத்தில சூது
3. மூக்குமுலை செவியருத்த மூலத்தையுரைப்பாய்
சீக்கிரத்திலிலவம்பஞ்சைப்போல் விழவடிப்பேன்
4. அண்ணா அந்த அதிசயத்தை யென்ன சொல்வேன்
ஒருவண்ணமடமங்கையுடன் வனமிருக்கிறான்
5. அம்புவில்லுகையில் தரித்து அதிரூபத்துடனே
வம்பு செய்த துஷ்டருக்கு மாலியாய் வாறான்
6. பார்வதியோ லக்ஷமியோ பரமனார் மகளோ
ஏர்கையுடன் வீத்திருக்கான நான் என்ன சொல்லுவேன்
7. மாணிக்கஜோதி விளக்கோ மதனோரதியோ
ஆணிமுத்துக்கோத்ததொரு அமர்ந்ததெந்தமும்
8. அன்ன நடையும் சொர்னப்பணியும் அலங்காரவிச்சும்
இந்தமண்ணுலகில் கண்டதில்லை அம்மங்கையைப் போல
9. அண்ணாவுனக்காகுமென்று ஆவலாய் சென்றேன்
பின்னப்பட செய்துவிட்டான் புஜபலத்தாலே
10. தங்கையருரைக்கலுமே தாபம் மேற்கொண்டு
மங்கையே அப்பாவியிருக்கும் வனத்தை தெரிவிப்பாய்
11. துஷ்ட மந்திரிதன்னை நோக்கி தெசமுகனப்போ
சப்தசாகரம் அப்பாலிருக்கும் சண்டாளனிடம் செல்ல
12. அர்த்தரதம்யேரியந்த அரக்கனுமகிழ்ந்து
மெத்ததவம் செய்யவும் மாரீசன் பாதம் பணிந்தரன்
-----------------
36-வது கட்டம்.
பாரளந்தார் திருவடி.
1. எங்கிருந்து இங்கில்வந்தாய் யெந்தன் கண்மணியே
வெகுசங்கடம் அடைந்திருக்கேன் தாஸரதியாலே
2. எந்தந்த தேசம் ஜெயித்தாய் யெந்தன் மருமகனே
நீவந்தொரு காரணத்தை வகையுடனே சொல்வாய்
3. மெத்த அதிரூபத்தோடே உத்தமி ஜானகியாப் பெண்
தன் பர்த்தாவோடு வந்திருக்காள் பஞ்சவடிக்கப்பால்
4: ஆசைகொண்டேன் அவள் மீதில் என் அன்புடைய மாமா
நேசமுடன் சேர்த்துவைப்பாய் இன்னிமிஷந்தனில்
5. உன்னையல்லால் வேறேயுண்டோ உத்தமனே சொல்வாய்
அக்கன்னிகையையெடுத்து வரக்கருணை செய்து செல்வாய்
6. இவ்வசனம் கேட்டவுடனே இடியரவம் போல
கண்ணிருண்டு மூர்ச்சையாகி களைதெளித்து சொல்வான்
7. ஸ்ரீராமனென்றுரைத்தால் செத்திடுவேன் நானே
போரும் போரும் யிவ்வசனப்போல் விடுங்கோமானே
8. தென்னிலங்கை யிழக்குதைக்கி காலமும் வந்ததோ
திரும்பிவிடு தெசமூகனே சீக்கிம் நில்லாதே
9. மாரிசனுரைக்கலுமே வாளரக்கன் பொங்கி
கூரிடுவேன் வாளுக்கிரை கொடுத்திடுவேன் யென்றான்
10. கேட்டுடனே மாரீசன் கிலேசங்கொண்டுமெத்த
வாட்டமில்லா பொன்மானாய் வடிவெடுத்தான் பாவி
11. சன்யாசிரூபங்கொண்டு சண்டாளன் செல்ல
பன்னகசாலைக்கெதிரில் பகட்டிமானாய் நின்றான்
-----------------
37-வது கட்ட ம்.
நீருமேல் குமிழியான.
1. உன்னிதவடிவுடையமான் தன்னைக்கண்டு
ஜானகிபன்னகசயனர் தன்னைப்பார்த்துக்கூருவள்
2. ஆண்டவனே பாருமிதோ அழகுள்ளமானே
கண்ணால் வேண்டு மாமியாருடனே விளையாடநானே
3. மான் பிடித்துத்தாருமென்றாய் மைதலியாளே
வெகுமோசம் தோணுதடி சூதுமானாய் சுந்தரியாளே
4. மான் பிடித்து தாராவிட்டால் மகானுபாவனே
ஓகோ காய்கிழங்கு யருந்தேனையா காணியாய்த்தானே
5. தையலர் உரைக்கலுமே தாஸரதியும்
சீதாமெய்யான சீதையை அழைத்து வனத்திலேகினார்
6. மெத்த அதிதூரம் செல்ல உத்தமனப்போ
சித்தமதில் கோபங்கொண்டு தொடுத்தார்பாணத்தை
7. லக்ஷம சீதையென்று நெடுங்குரலிட்டு
அச்சுதன் தனுஸால் மோக்ஷம் அடைந்தானப்போது
8. சப்தம் தன்னை கேட்டுடனே ஜானகியப்போ
உத்தமனார் சேஷனோ டே உரைப்பாள் துயரமாய்
9. என்னையரே றாக்ஷஸனால் அபகேடுயிது கான்
முன்னேகரனால் அரிந்து மோகமுண்டோதான்
10. அலக்ஷியமாய்யெண்ணு நீரே அண்னனுரைத்ததை
குலப்பெண்ணான யெந்தன் மீதில் கொண்டீரோ ஆசை
11. இவ்வசனம் தன்னைக் கேட்டுயேங்கி சேஷனும்
கரணம் தன்னில் கையை வைத்து காலத்தை நினைத்து
12. தேவர்க்கனுகூலகாலம் வந்ததென்றெண்ணி
சீக்கிரமாயண்ணறோடே யருகினில் சென்றார்
13. தம்பியரே சீதை தன்னை தனியாகவைத்து நீ
இங்கில் வந்த காரணத்தை யேதுரை செய்வாய்
14. ஆகாதவசனத்தாலே அனுப்பிவைத்தாளே
என்னைசாகஸங்கள் யேதரியேன் சரணமையனே
15. இருபேரும் கானகம்விட்டு யோகி வருகவே
துர்ஸாய் துர்க்காலத்தால் தெசமுகனும் உருவம்மாரியே
16. சன்யாசிரூபமெடுத்து ஜானகியண்டை
பன்னகசாலையில் வந்து பசியென்றுரைத்தான்
-----------------
38-வது கட்டம்.
பாரிபாரிகார்த்தி
1. கண்டாளே சீதை கபடசன்யாசிதன்னை
உண்டியளித்திடவுகந்தாளேமின்னே
2. வாருமைய்யா பெரியவரே மகனிவரே
இந்த பார்வனந்தனில்வர பாக்கியஞ் செய்தேனோ
3. மெத்தபசியாகுதம்மா உத்தமியாளே
உன் சித்திரக்கையாலே பாகம் அளித்திடுவாயே
4. பக்தியுடன் காய்கிழங்கு தேனமுதையும்
பரமனே பூஜிப்பீரென்று உபசரித்திட
5. கண்டானே தெசமுகனும் காரிழையாளே
உண்டிட வேண்டாம் உந்தனப்பலிச்சையாய் வந்தேன்
6. பாராயோகன் வடிவை யென்றரக்கனும்
பத்து சிரசுடனே யெதிரில்நின்றான்
7. அரசனுடவடிவைக்கண்டு ஜானகியப்போ
என் அபிறாமர் வருமுன்னே அப்புரம் செல்வாய்
8. ஆரென்று நினைத்தாய்யென்னை யன்னமே கேளாய்
ஊரிலும் சிரந்த வெங்கா வேந்தரென்பார்கள்
9. கைலாசமலை தன்னை அசக்கினதீரன்
இந்தவையக முழுதாளும் மகாறாஜனும் நானே
10. அடாமகராஜன்யென்றுரைத்தாய் மாபாவி நீதான்
கெஜபதிகையினாலே சிக்ஷையாவாய் நீயே
11. அடி சிலையடைவாயென்று செப்பினாய் நீயே
அஷ்டகெஜம்கொம்பும்மாரில் அணிந்திருக்கேன்பார்
12. அட அணிந்திருக்கோம் யென்று சொல்லி
அகம்பாவம் கொண்டாய்
உன் குலமருக்க வந்தாரடா கோதண்டபாணி
13. கோதண்டபாணியென்றால் கோதையை நீதான்
இந்தமூதண்டம்பிளக்கடிப்பேன் யென்முடியினாலே
14. வாராயோடிக் கண்மணியே யேராய் ரதத்திலே
பூரணச்சந்திரலு போல்விம்ப பொன்மணியாளே
15. விசையாக தேரிலிட மெல்லியாளப்போ
அசையாதே தேரேயென்று சாபத்தை விட
16. பாண்டத்தோடுகில்லெடுத்து பாவியான் கொடுக்க
அடமாண்டவனே மண்ணோடு தான்யென்றுரைக்கவே
17. தென்னிலங்கை தன்னை நோக்கி திருத்தேர்பறக்கவே
ஸ்ரீ ராமாராமாவென்று சீதைப்புலம்பிட
18. சீதையுட குரலறிந்து ஜெடாயுராஜனும்
தெசமுகனோடு யுத்தஞ்செய்து ஜீவனைவிட்டார்
19 ஆபரணம் அடையாளம் யனுமானும் காண
அணியிலங்கையில் சிறையில் வைக்க யாபிராமர்தேட
--------------
39-வது கட்டம்.
அரிவுகனேன் அட
1. ஸ்ரீராமர்லட்சுமண யிருபேருமாக
சீதை பரிருக்குமந்த யாச்ரமம் வந்தார்
2. கண்மணியே சீதையரே யெவ்விடம் சென்றாய்
நீ இன்னமும் பரியாசமோ யெதிரில் வாறாயோ
3. தடாகம் சென்று நீரெடுக்க தாமஸம்யேதோ பெண்ணே
இடும்பு செய்யலாமோ யென்னோடுயேதடி கண்ணே
4. சுற்றியெங்கும் தேடி சீதையை காணாமல் இந்த
உத்தமரும் தம்பியுடன் உருகி சொல்வாரே
5. என்ன செய்வேன்யேது செய்வேன் லட்சுமணாநான்
என்கண்மணியைக் காண்பேனோடா இக்கானகம் தனிலே
6. புவிருக்ஷிமிருகங்காப் பாலந்திகளா என்லட்சுமியை
இந்தவழிபோகக் கண்டீரோ
7. தரகங்கொண்டு சோகத்தால் தயங்கி நிற்கிற
விவேகமுள்ள ஜடாயுதன்னருகில் வருகவே
8. சிரகொடிந்து வலுக்கொரைந்த ஜெந்துவே நீயும்
சீதையரையிந்தவழி வரக்கண்டீரோ
9. மாதவாமதிசூதனா அரிராமா உன்னுடனே
சேஜியுரைத்துத்திவன் விடுவாய் யென்றாளேஹீதை
10. தென்னிலங்கை ராவணனும் சீதை எடுத்து போகையில்
என்னுடைய பலமட்டும் எதிர்த்துப் போர் செய்தேன்
11. சிரகொடித் துலங்கை சென்றான் சேதுயிதுதான்
அரஹரியென்னைக்காருமென்று அயிக்யமாகினார்
12. தந்தை மரியாதை செய்து தாசரதிரிம்
அந்தமாசவுரியுட ஆச்ரமம்வந்தார்
13. கானகத்திலிரு பேருமாகிச் செல்லவே
கண்டனுமான் தெண்டனிட தொண்டனாகினார்
------------
40-வது கட்டம்.
1. சரணம் சரணம் ரகுராமா இந்த
தருணத்தில் காரும் பரந்தாமா
2. உந்தன் தெரிசனம் கண்டேன் சுவாமி இந்த
ஜென்மந்தனை விண்டேன்
3. வாரும்பிள்ளாய்யனுமானே உந்தன்
ஊரும் பேரும் உரைப்பீரே
4.அஞ்சனைவாயுதன்பாலன் நான் உன்
பாதம் தஞ்சமென்று பணியும் சீலன்
5. தந்தை தாய் குருதெய்வம் நீரே என்னை
சொந்த அடிமையென்று யெண்ணுவீரே
6. கேளாய்யனுமானேயெங்கள்
பரம்பரைதன்னை சொல்வேளே
7. தசரதன்பாலகன் நாங்கள்
சீதையுடன் வனம் வந்தோம்
8. மைதலி தன்னைக் காணாமல்
மயங்கியே வொன்றும் தோணாமல்
9. கண்டேன் உந்தனைநான் நேராய்
யெந்தன் கவலைகளை நீயே தீராய்
10. அப்படியே செய்வேன் நானேயென்று
அழைத்து வந்தீர் சுக்ரீவனை
11. ஸ்ரீராமர் பாதம் பணிந்துறாஜன்
சீமைபூஷணங்கொடுத்தார்
12. கண்டு தவித் திடசுவாமி அப்பாயென் கவலை
யேற்குமோ இந்ரிபூமி
13. வாலிசங்காரம் செய்வீரே
மைதலியை மீட்ட நான் வாரேன்
14, ஏழுமரத்தை பாணத்தாலேவிழ
யெய்தார் சுவாமிகரத்தாலே
15. அப்போதே வாலியைக் கொன்றார்
அரசு சுக்ரீவனுக்குதந்தார்
---------------
41-வது கட்டம்.
ராஜனும் பதரியங்கே.
1. வச்வமுகபர்வதத்தில் வீத்திருந்தார் தம்பியோடு
சாச்வதமாய் சுகரீவனும் தாரையோடுவசித்தார்
2. சரக்காலம் சென்றவுடன் சுவாமி வரவேநின்றார்
மரதியாக தேவியோடு மையல் கொண்டு மோகித்தார்
3. ஆதி அவிராமச்சந்திரன் அணியழையாளை தேடிட
இப்போது சமயம் சுக்ரீவன் தனைக்காணோமே
4. தம்பியந்தமூர்க்கனை தாமசங்களில்லாமல்
என் அன்புடையமைதலியை அழைத்துவர வென்றவர்
5. மாதவர் உரைத்திட ஆதிசேஷன்றாஜனண்டை
சீதையை யழைக்ககாலம் சென்றதையரியீரோ
6. வாரேனென்று சேனையோடு தாசரதியைப் பணிந்திட
தீர அனுமான் தன்னை நோக்கி சுக்ரீவருரைத்திட
7. ஆஞ்சனையாபாலா உம்மிட ஆண்மையாரரிகுவார்
வாண்சையுடன் அம்மைதன்னை வரவழைக்க செய்குவீர்
8. ஆண்டவர் திருவாழி தன்னை அனுமானும்கை கொள்ளவே
வேண்டியந்த சேனையுடனே விரைவுடனே செல்லவே
9. அண்டம்பதினாலுலோகம் ஆகாசம் பாதாளங்கள்
தொண்டனுமான் சேனையுடன் தேடியும் காணாமலே .
10. ஓர்மங்கையர்யுரைத்திட வானரங்கள் தம்முடன்
எங்கேயோசீதையென்று ஏகோபித்து நிர்க்கவே
11. மெத்தத்துயரம் தன்னைக்கண்டு உத்தமன் சம்பாதியும்
பத்தினி லங்கையிலிருக்கிறாளென்று பரந்தானே ஆகாயம்
12. சம்புவானுரைத்திடசாதோஷத்தனுமானும்
ராமராம ராமாவென்று நாமத்தையுரைத்திட
----------
42-வது கட்டம்.
அத்திரியமுனி
1. ஆஞ்சனைபாலன் சப்தசாகரம் தன்னைத்தாண்டியே
அணியிலங்கையில் செய்த அதிசயம் கேள்
அநுபல்லவி.
2. வாண்சையுடனேஸீதா ராம்ராம்ராமென்று
வருகும்வழிதன்னில் அரக்கி தன்னைக் கொன்று
பாய்ந்திடவேசாயாதேவிமார்பிளந்து
பாங்காய் உபசரிக்கும் மைநாகம் தன்னைத்தாண்டி
3. பொட்டனவேயந்த சாகரம் தன்னைத்தாண்டி
பொல்லா இலங்கிணிக் கோட்டைதன்னைத்தாண்டி
அட்டகாசம் செய்த அரக்கி தன்னை தீண்டி
அனுப்பிவைத்து சொர்க்கம் அணிலங்கைக்குள் சென்று
4. மேடமாளிகை உப்பரிகைகளோடு
மூலை முடுக்கு தென்னஞ்சோலையோடு விதியும்
தேடியும் காணாமல் தெசமுகன் அந்தப்புரந்தன்னில்
வண்டோதரியைக்கண்டார்
5. மைதவி இவளல்லவென்று தெரிந்து வந்து
அசோகவன விருக்ஷத்தில் மரைந்து
அய்யமரஹீதையென்று தெரிந்து
அரக்கன் வருகும் ஓசைதனையரிந்து
6. ஸீதையர் தன்னை தெசமுகனினைந்து
தேவியோடே மந்திரி புடைசூழவளைத்து
அடிமாதரசேவாராரோவென்றுகனைத்து
மந்தகாசத்தோடு சிந்தை கலங்கிநின்றாள்
7 லங்கையையிழக்க வந்ததோ காலமென்று
நேரிழை துரும்புதன்னையிட்டு கண் சிவந்து
என் சங்கபாணி ராமர்கையாலே இழந்து
அடசண்டாள சென்மமே என்றுரைத்தரிந்து
8. ஆகட்டும் நாளைக்கி அரிவோமயெல்லாம் யென்று
அதட்டியே சோதிக்க அரைதன்னைச் சென்றிட
வேகமுடனே அந்தமங்கை மந்திரிதடுக்க
வேந்தரந்தப்புரம் செல்லக்கண்ட
9. மெத்தவருத்தங்கொண்டு அரக்கிகளாலே
மெல்லியர்சிம்சுப விருக்ஷத்தினிலே
சுத்திட வேசிகைக்கரத்தினாலே
நித்திரை தெளிந்து திருஜெடையாலே
10. ஸ்ரீராமராமாவென்று ஜெயித்திடும் போது
தீர அனுமான் யெரங்கியேஸாது
ஸாரமுடனே ராம நாமத்தை ஓதி
தாயாரோடே பாதம் தன்னைப்பணிந்திட ஆஞ்ச
11. அச்சங்கொண்டத்தாயார் ஆழிதன்னைக் கொண்டு
அவிராமர் தூதன் அனுமான்யென்பேர்யென்று
நிச்சியம் கொண்டம்மன் விஸ்வரூபத்தைக்கண்டு
அச்சுதர்க்கு சூடாமணியளித்தாள் ஆஞ்ச
-----------------
43-வது கட்டம் .
யோகநிஷ்டைதன்னை.
1. அன்னையடையாளங்கொண்டு அசோகவனம் தாலியே
சின்னாபின்னமாக விருக்ஷங்கள் சேகணங்கள் செய்திட
2. ஜெண்டமாருதத்தைப் போல ஜாடிட அனுமானும்
அண்டாமல் தூதவரெல்லாம் அரக்கனோடுரைப்பார்கள்
3. பொல்லாஜம்புமாலி சப்தமந்திரி சேனையோடுயெதிர்க்கவே
கெம்பீர்யம் குலைந்து கேட்டரக்கனும் கோபமாய்
4. ஆகட்டும் அரிவோம்யென்று ஆங்காரித்தெழும்பியே
மேகநாதன்ரதத்திலேரி வீசியேதெண்டம் வருகவே
5. சேனையிழந்த பின்பு செல்லாதிவனிடமென்று
ஆனதால் பிர்மாஸ்திரத்தால் அடிப்போமிவனை யென்றவன்
6. கிட்ட வந்து தொட்டுபார்த்து கட்டியேயிழுக்கவே
மட்டியான ராவணனோடு மகாசபையில் வருகவே
7. தேவரம்பைநயனமாட ஜெயஜெயவென்று கட்டியம் கூர
பாவலர்சபையை கூட பார்த்திருந்தான் ராவணன்
8. இந்திரசிந்து கொண்டுவந்து யெதிரினில் நிருத்தவே
அனுமந்தனும் தன் வாலை சுத்தி அரக்கலுக்கு மேல் நிற்கவே.
-------------
44-வது கட்டம்.
மோகனம்.
1. குட்டிக்குரங்கே யாரடா இவ்வூரில் வந்து மட்டி
உன்பேரைக்கூரடா
2. எட்டி பார்த்திடுவானோ யெமனும் லங்காபுரியை உன்
கெட்டியெழுத்தால் தலைதப்பிவந்தாயிவ்விடம் குட்டி
3. ஸ்ரீராமன் தூதன்நானடா அடடாமூடா என்பேர்
அனுமானடா சோரநாயைப் போல எந்தன் தாயைத்திருடி
வந்தாயேநாயே குலைக்காதேடா வாயை மூடிக்கொள்ளடா ஸ்ரீ
4. சப்தஸாகரம் தன்னை தாண்டி விட்டதாருன்னை
சற்றும் பயமில்லாமல் தென்னிலங்கையில் வந்த குட்டி
5. வந்ததுலெங்கைதனில் எந்தன் தாயார் சீதையை
தந்து பணிந்தாயானால் தாரேன்லங்கையை நோக்கு ஸ்ரீ
6. பொங்கியரக்கன் போகம் கண்கள் சிவக்கமிக
இங்கில்யிவனுயிரை வாங்குமென்று வுரைத்தான் குட்டி
7. கண்டுவிபீஷணனும் தெண்டனிட்டு அண்ணனே
தொண்டனைக்கொல்லலாமோ என் ஆண்டவனே
இவன்வாலில் கொளுத்திடுங்கள்
ஊரிலுள்ள சேலைகளெல்லாம் யெடுங்கள் குட்டி
8. வாலில்கோளுத்தி தீயை மேலேயிழுத்து
அனுகூலமாச்சுதென்றெண்ணி காலபாசத்தைப் போல்
வீசியெரித்தான் லெங்கையேயெங்கிலும்
கரித்தூசிபரக்கசங்கையாய் ஸ்ரீ
9. அத்தனை பேர் மடியதொண்டனனுமான் துணிய
உத்தமியைப்பணிய பக்திசூடாமணியை வாங்கி
கனுமான் செல்லவே மைதாகம் விட்டு
இரங்கமதுவில் செல்ல வே. ஸ்ரீ
10. வரனர சேனையுடன் பூரணமாய்பஜித்து
தீனசரண்யன் திருப்பாதம் பணிந்து நின்று
கண்டேன் சீதையை ராகவ சூடாமணியைத்
கொண்டேன் தந்தேன் ராகவா குட்டி
--------------
45-வது கட்டம்.
ஆதிசிதம்பரத்
1. என் கட்டி மணியான் என்னப்பா கிட்டயனுமானே
துஷ்டயிலங்கையிலே யெப்படி சென்று வந்தாய் குழந்தாய்
2. தாயும் தந்தைகுரு தெய்வம் சந்தானசம்பத்தும்
நீயன்றி வேறு மூண்டோ அய்யா நீடூழி வாழ்ந்திருப்பீர்
3. உன்னைப்போல் உபகாரியிந்த உலகீனில் கண்டதுண்டோ
நான் என்ன உரைப்பேனோ என்னய்யா கண்ணின் மணியானே
4. என்னை நினைத்தாளோ சீதை ஏங்கி தவித்தாளோ
உன்னையரிந்தாளோ யென்னப்பா உத்தது சொன்னாயே
5. ஆண்டவரும் உரைக்க அனுமான் தண்டமிகப்பணிந்து
சீதையைக் கண்டதொரு கேதிதன்னை
அனுமான் கார்வண்ணணோடுரைத்தார்
--------------
46-வது கட்டம்.
மோகவலைதனில் .
1. தென்னிலங்கை அசோகனம் சிம்சுபவிருக்ஷத்தினடியில்
என் அன்னையரைக் கண்டு வந்தேன் அவிராமாசரணம்
2. சந்திரன் கண்டதாமரைப்போல் தளர்ந்திருக்கிறாள்
சிந்தைதனில் உந்தன் நாமம் ஜெயித்து வருகிறாள்
3. பூனையின் வாய்கிளியைப் போலே பொல்லாயரக்கர் நடுவில்
ஈனன் சிரைவைத்திருக்கான் யென் தாயார் தன்
4. அரக்கிநடுசிரையிருக்கும் அம்மன் திருஜெடையாள்
இருக்கிறாள் துணையாக யென் பிராட்டியாருக்கு
5. இன்னமொரு மாசத்துக்குள் யென்னாதன் வாராவிட்டால்
தன்னுயிரை விடுவேனென்றாள் யென் தாயான சீதை
6. தாமஸங்கள் செய்யாமலே இத்தளங்களை பெருக்கி
இப்பாமரனை கொல்லுதைக்கி பயணமாகவேணும்
7. அப்படியே சுக்ரீவறும் அவிராமரைப் பணிந்து
ஒப்பற்றதன்சேனை எல்லாம் ஒருமிக்க சேர்த்து
8. அங்கதன் நளன் குமுதன் அய்யர் ஜாம்புவந்தன்
சங்கையில்லாவானரங்கள் தான் புறப்பட்டார்கள்
9. ஏழுபத்திரண்டு வெள்ளங்கள் ஏகோபித்து கூடி
வழுவாமலே பேரிகையடித்து வெளிப்பட்டார்
10. நவகிரகத்தை பூஜை செய்து நாதன் தம்பியுடன்
ஜெகம் புகழும் புல்லைநகர் சேனையுடன் ராமர் வந்தார்
11. வர்ணனும் வாராதிருக்க மகாகோபங்கொண்டு
அத்தருணத்தல் தர்ப்பையின் மேலே சயணம் கொண்டார் போதன
12. சப்தசமுத்திரங்கள் இத்தாணியுள்ள பிரஜைகள்
வந்திடவே ஓங்காரித்தார் மாதவர்பாணத்தால்
13. கண்டு சமுத்திரராஜன் கமலப்பாதம் பணிந்து
என் ஆண்டவனே என் முதுகில் அணையடையுமென்றார்
14. அப்படி சேனையுடன் அலைகடலில் செல்ல
ஒப்பற்ற தம்பியுடன் உத்தரவு சொல்
--------------
47-வது கட்டம்.
ஓடம்.
1. வானரசேணைகள் அணை பேரும் கூடி
வந்தாரே சமுத்திரக் கரைதன்னை நாடி
2. கண்மூங்கல்வெண்மூங்கல் கருங்காலே பாலே
காவலுடன் பில்லரிளி தேக்கு குருசாவும்
3. பருவதம்பாரைகள் பிலாவோடு நெல்லி
துருசாகக்கொண்டு சுக்ரீவன் செல்ல
4. வான்றாள் கொண்டுவர வாங்கி நடநடக்க
மகாராஜன் சுக்ரீவன் கண்டு மன மகிழ
5. அனுமந்தன் தோள் மேறே அவிராமர் ஏரி
அதிசூரன் இளயவரே அங்கதன் கொண்டாடி
6. வானர சேனையெல்லாம் லெங்கை தன்னை நாடி
வந்தார்கள் பவழமா மலை தன்னை தேடி
7. கண்டானேராவணன் கார்வண்ணனசே
தண்டோறாபோடுமிக கடுங்காவல் தானே
8. வலுவான துர்யோஜனைகள் செய்ய
மகாத்மாவிபூஷணனும் அண்ணன் பாதம்பணிய
9. அணையடைத் துலங்காபுரிதன்னில் வந்தார்
அன்னைஜானகியாளை கொண்டு பணிவீர்
10. அவர் ஆரென்று எண்ணி இருக்கிரீர் அண்ணா
ஸ்ரீமன் நாராயணர் தாமே ஸ்ரீராமராகினார்
11. பூமிபாரத்தை ஒழித்திடவந்தார்
பூமகளை சேர்ப்பித்தால் ஆளலாம் இப்பூமி
12. தம்பிவிபூஷணன் உரைத்ததைக் கேட்டு
தன்கைவாளினால் அவனை வெட்ட வருகவே
13. பக்கத்தில் வருகவே விபூஷ்ணாழ்வாரும்
பரவசமாக ஆகாசத்தில் எழும்பி
14. அன்புள்ள மந்திரி நால்பேருடன் கூடி
அவிராமர் பாதாரவிந்தத்தைத் தேடி
15. சரணம் சரணமய்யா தாசரதே இந்த
தருணத்தில் எந்தனைதர்க்காத்தருளும்
16. எத்தனையோ புத்தி உரைத்து கேளாமல்
அத்தி செய்ய வந்தான் அவிராமாசரணம்
17.. அந்தமுள்ளவிபூஷணன் அடைக்கலம் என்ன
தந்தார் சிரஞ்சீவியோடு லெங்காபட்டணத்தை
18. அனுமானுரைத்திட ஆனந்தங்கொண்டு
பெருமானும் சுக்ரீவன் வெகுசேளையோடு
19. உத்திகோபுரம் மேலேரக்கண்டு
பற்றியே கீரீடத்தைப்பரித்துப்பணிந்து
20. கண்டாரே ஸ்ரீராமர் சந்தோஷங்கொண்டு
காக்ஷியுள்ள சொர்னங்களை கண்ணிணால் கண்டு
-----------
48-வது கட்டம்.
பூமிபுகழும் ஆ
1. அங்கதன் தூதுசொல்ல அரக்கன் கோபங்கொள்ள
சங்கையில்லா சேனையோடு சங்கையத்துக்கொள்ள
2. மெத்தபலமுள்ள கும்பகர்ணன் புத்தி சொல்லவே
உத்தமர் தம்பிபாணத்தால் உகந்துயிரைக் கொள்ள
3. மெத்தவும் மனந்தளர்ந்து புத்திமதிகூரிட்
புத்திரரைத்தானழைத்து போருக்கு அனுப்பிவிட
4. மந்திரிம் கோதிரனும் மத்துமுள்ள சேனையும்
முகுந்தருடபாணத்தாலே முக்கி தன்னை பெற்றபின்
5. மோகனாதன் நிகும்பலை யாகந்தன்னை நடத்திவிட
வேகமுடன் மாருதிவிளங்கியே அழித்திட
6. நாகபாசத்தாலே சேனைகளை கட்டிட
வேகமாய் கருடாழ்வானால் விரும்பியே ஒழித்திட
7. சதுர் முகாஸ்திரத்தால் சாணர் தன் சேனைமேல்
பதிதனும் தொடுத்திட பாளயப்சிதரிட
8.. உத்தமிஜானகியாளை புஷ்பவிமானத்தில்
ஏத்தியே சன்சேனை தன்னை ஏரிட்டுப்பார் என்றிட
9. லக்ஷமணன் தன்னைக்கண்டு நேரிழைபுலம்பிட
பக்ஷமாய் திருஜடையாள் பபத்னியை தேத்திட
10. அண்டை வந்துராவணன் ஜெனகன் போலுரைத்திட
மைந்தனும் விழுந்தானென்று மாகைவிட்டுச்சென்றிட
11. பாதாளத்திலுள் மூலபலங்களெல்லாம் மாண்டிட
மாது மண்டோரதரி உரைக்க மனத்தெளிவு கொண்டிட
12. சசூனபேதங்கள் கண்டு தைரியமிக்க கொண்டுமே
ஜெகபதி எதிரில் சென்று சிங்கநாதம் செய்கின்றான்
----------------
49-வது கட்டம்.
நாராயணாவென்று.
1. கண்டார்தெசமுகனே ஸ்ரீராமச்சந்திரர்
தொண்டனுமானுட தோள் தன்னிலே
2. ஓங்காரம் செய்தவன் பாணத்தைவிட
உத்தமர்கண்டு திவ்விய அஸ்திரம் விட
3. இந்திரன்மாதலியோடு ரெதம் அனுப்ப
ஏரிபாணம் தரித்து தேர் திருப்ப
4. அக்கினி அஸ்திரத்தை அவன் தொடுக்க
அவிராமச்சந்திரர் அஸ்தத்தால் தடுக்க
5. நாராயணஸ்திர அவன் தொடுக்க
ராமபாணத்தினால் இவர்தடுக்க
6. ஸ்ரீறாமபாணத்தினால் சிரம் விழுக
திரும்பி திரும்பியது துனைத்துவர
7. என்னய்யன் திருக்கரங்கள் நோகுமே என்று
அரனார் அமுர்தம்மாரில் வரம இதெம்றார்
8. பக்தவிபூஷணர் பணிந்துரைக்க
உத்தமா ஆதிதயமந்திரமுரைக்க
9. அண்டமளந்தோர் ராமபாணத்தைவிட
கண்டராவணன் பூமிதன்னிலே விழ
10. தேவரெல்லாரும் புஷ்பமாரி சொரிய
செய்தான் ராவணனுக்கு சிர்த்திய முடிய
11. லங்கை முடித்தரித்து விபூஷணருக்கு
மங்கைசீதையை அழைத்துவாருமென்றார்
---------------
50-வது கட்டம்.
1. அழையுமென்று ஆக்யாபிக்க அவிராமச்சந்திரர்
பிழையற்ற அனுமானோடு விபீஷணரும் செல்ல
2. அசோகவனம் தன்னில் வந்து அன்னையரைக்கண்டு
தெசமுகனிரந்தானம்மா சுவாமிவரச்சொன்னார்
3. வாருமம்மா என் தாயே மகாலக்ஷிமியாளே
சேரவே ஸ்ரீராமரண்டை சீக்கிரமாய் வாராய்
4. சீதையரும் கேட்டுடனே சிந்தைமிக மகிழ்ந்து
ஆதரமாய் அனுமானை ஆசீர்வாதம் செய்தாள்
5. வாருமய்யா அனுமானே மகானுபாவர் நீரே
வீரரகுராமரண்டை விளங்கிடுவீர் நீரே
6. உந்தனைப்போலுபகாரி உலகுதமனிலுண்டோ
எந்தவிதம்கூரிடுவேன் யெந்தன்குமாரான்
7. நான்பட்டதுயரங்களெல்லாம் பாலகா உன்னாலே
துஷ்டர்களைசங்கரித்து சுகமளித்தாய் சீலா
8. அம்மன் சீதைதானுரைக்க அனுமாரும் பார்த்து
சின்மயஸ்வரூபினி நீர் ஸ்நானம் செய்து வாரும்
9. வாரூமென்றுரைத்ததொரு மாருதியே கேளும்
நாரணரைக்கண்டு அப்பால் ஸ்னானம் செய்வேன் நானும்
10. தூசியோடுயெச்சமெல்லாம் துடைத்துமே நீராடி
ஜெசதீரனோடே அருகில் செல்ல சீக்கிரமாய்வாராய்
11. மாருதி உரைக்கலுமே மைதலி ரோடி சீருடையபூஷணம்
பூண்டி வஸ்திரமதரித்தாள்
12. தண்டிகை மேலேரியம்மன் தொண்டனுமான் வருக
கண்டுவானர சேனைகள் காரிழையைப் பணிய
13. கவாமியோடேசன்னதியில் தையரும் நேரே
நேமத்துடனே பணிய நேரேகண்ணால் பார்க்க
-----------
51-வது கட்டம்.
வாராதேயின்னு
1. கண்டானேராகவன் சீதையை கண்கள் சிவந்து
கொண்டான் கோபங்கள் மிகவும்
அநுபல்லவி
2. கண்டகனானதொரு ராவணன் தன் அண்டையிலே கண்டு
களித்து பணிபூண்டையோ யென்று சொல்லி
3. மெத்தத்துணிவுடனே சித்து மலச்சையில்லாமல் இத்தனை
பேர் நடுவில் குத்தம் சொல்வேனோவென்று
4. தம்பிமொழிதடுத்துவம்பியினி உன்னை நான் நம்புவேனா
இனிநட்டனக்காரியென்று
5. பத்துமாசமாக துஷ்டரிடமிருந்து மெத்த அலங்கரித்த
சித்தறாங்கி நீரென்று
6. இந்தசபைதனிலே சிந்தை துணிவாக வேவந்து
நில்லாதேடி அந்தபுரம் செல்லென்று
7. தீனசரண்யனவர் செப்பியதோர்மொழியை
வானுலகொறரிந்து மனக்கவலை கொண்ட
8. சேஷ்நிதையரிந்து தோஷமிகயென்றெண்ணி
ரோசத்துடனே ஜெகதீசன் பாதம்மணிய
-----------
52- வது கட்டம்.
கெவர்னல் ஜெனரல்
1. அண்ணாநீரிந்தமின்னிடையாளதனை அபவாதம் சொல்லவும்
நீதியுண்டோகானகடூரமாய் பேசிடவும் இதுகாலமோ
கோலமோஜால மோ என் செய்வேன்
2. பத்தினியாள் மீதில் இத்தினை கோபங்கள் நித்தியானந்த
நீர் செய்வாயோ என்உத்தமனே சித்தடி போத்தினேன்
சித்தமிரங்கி சகித்தருள வேணும்
3. அண்டசராசரமம் அவனிமுழுவதும் அன்னையினால்
பஸ்பமாகாதோ புண்டரீகா உம்மிடகோதண்டத்தால்
அந்தகண்டகராவணன் மாண்டிடச்செய்த பின்
4. மாதவனே இந்த நீதமுறைத்திட வானுலகுள்ளோர்
சகிப்பாளோபேதகம்யெண்ணாமல் என்மந்தாசீதை மீதில்
ஆகரவாகி அனுக்கிரபிப்பீரெந்தன்
5. ஜெகதீசர் திருவடி சன்னதிதன்னிலே செழிக்க
அக்கினி வளத்திடவே நேசமுடனே அனுமான் பணிந்திட
தீரேவாருமம்மா அக்கினிபணிந்திட
6. என்வள்ளல் இடம் தன்னில் சொல்லுறே நின்றாய்
மார்க்கடகமென்னும் அனுமானே பொல்லாத கோபம்வர
செய்தாயென்று போட்டாளுச்சிதனில்வாட்டமாநின்றிட
7. ஆகாசமட்டும் அளாவியெரிந்திட அக்னி தனக்கெதிராகி
சாகாசங்கள் ஒன்றரியேன் நான்யென்று
அம்மன் சத்தியம் சாத்தியமென்றந்த
------------
53-வது கட்டம்.
காராயோதாயே.
1. சரணமையனே கார்க்கத் தருணமையனே
அநுபல்லவி.
2. என்பாமபதநாதறோடு பாதரரவிந்தத்தை பக்தியாய்
சித்தத்தில் நித்தியமும் நினைந்தேனொழிய
3. மன்னன் ஜெனகர்க்கு நான் பெண்ணாய்ஜனித்தும்
பன்னகசயனருக்கு பாரியாளானதும எண்ணியே
எண்ணியே ஏங்கித்தவிக்கலானேனே
4. என்னைப்போலிந்த மண்ணுலகத்தில் ஜெனித்தோர்கள்
பெண்ணாய்பிறந்து பொல்லாத் துயர் அனுபவிப்பாரோ
என்ன நான் செய்குவேன் என் தந்தைதாய் நீயேகெதி
5. பாதகனென்னை பொல்லா தோதகம்பண்ணிநீதமில்லா
லங்கை தனில் நிர்ப்பந்தம் செய்தாயென்னை அந்தப்
பாதகம்காண்டிட என்பர்த்தா தன்னை சிந்தித்தேன்
6. பஞ்சமாபாதகன் தனிநஞ்சாக எண்ணி என்கஞ்சமலர்க்
கண்ணனோடு கமலப்பொர்பாதத்தை நெஞ்சில் நினைத்தே
னொழியவஞ்சகங்கள் நானரியேன்
7. ஆகாயமட்டும் மலாவியெரிந்திடும் நிர்த்தோஷனான
அக்கினியை நீரேகெதியென்றேன்
நேருமேகாருமே நிர்மலாசுரூபனே
8. என் உத்தமர் தம்மையன்றி மற்றொன்றறியே
சத்தியமது சத்தியமது சாட்சிநீரே அப்யனே சுற்றி
வலமாக வந்து சென்றாள் அக்கினிதன்னில்
------------
54-வது கட்டம்.
ஜானகி வேடுகோ.
1. முப்பத்திமுக்கோடி தேவர்மலர்சொரிய
அற்புதமான அக்கினி அமர்ந்தான்
2. சொர்ன பீதாம்பரம் சப்ரகாசமாய்
நீலவர்னனை சிந்தையில் நினைத்தேயெழுந்தாள்
3. சொர்ன்வடிவுற்ற என் அன்னை ஜானகியாள்
விண்ணவந்போற்றிட விளங்கியே நின்றார்
4. அக்கினிபகவானும் ஆயாசம் கொண்டுமே
நிர்க்குண வஸ்துவாம் நிர்மலரை அடைந்தார்
5. சித்தடி தண்டைசிலம்பு ஓதியிடசீதை
நித்தியானந்தரைக்கண்டு பணிந்தாள்
6. ஜோதி சொரூபத்தை பெற்ற சிரோன்மணி
மாதவரண்டை மகிழ்ந்துமே நின்றாள்
------------
55-வது கட்டம்.
ஆதிசிதம்பரம்.
1. மெத்தமனந்தளர்ந்து அக்கினி
உத்தமனைப் பணிந்து பக்தியுடன் துணிந்து
எதிர்நின்று பாங்காய் துதிக்கலுற்றார்
2.. தப்பிதம் ஏது செய்தேன் பேதைகான்
தாஸனே உந்தனுக்கு உகந்த ஒப்பற்ற சீதையென்னும்
அக்கினியில் உள்ளம் வெதும்பிநொந்தேன்
3. ஆதியில் மச்சகூர்மவிராக அகண்ட நரசிம்மமாய்
நிதியுள்வாமனமாய் பரசுராமனென று உதித்தீர்
4. காரணத்தாலே இந்த உலகை கல்பித்த நாராயணர்
ராவணவதைக்க அயோத்தில்றாமனாய்வந்தே
5. அய்யனே உன் மகிமை அரிய அரன் அயனாலாமோ
நான் செய்த பிழை பொறுத்து உந்தனோடே திருவடி சேர்த்திடுவீர்
------------
56-வது கட்டம்.
பஞ்சமா பாதகியாளே.
1. சரணம் சரணமையா ரகுராமா
கறுணை செய்தெங்கள் கலிதனை தீர்த்தோனே
2. ஆகியந்தமுமத்த அகண்ட வெளிபெத்து
ஜோதிசுரூபனே
3. எங்கள் குரைத் தீர்த்த மங்களவதனா
ஒன்செங்கமலப்பாதம் சரணமய்யா
4. மெத்த இம்சை செய்ய துஷ்டன் தன்னை வதைத்த
உத்தமா உம்முடபாதம் சரணம்
5. தேவர் துதித்திடசீதையுடன் கூடி மாதவரும்
சிம்மாசனத்திலிருந்தார்
6. எத்தமா சேஷனவர் பக்தவிபீஷணர்க்கு
ரத்ன முடி தரித்தார் லங்கை தன்னை
7. தெசரதர்பிதுர் முதல் தேவர்கள் கூடி வந்து
சீதாபிராமர் சேர்வைகண்டார்
8. ஜெயஜெயவென்று தேவதுந்துமிமுழங்கிட
விஜயாவாழியென்று சொரிந்தார் தேவர்கள்
9. வானறாள் ராக்ஷஸாள் சீதாதிறுஜடையோ
தீன சரண்யன் புஷ்பவிமானமேரி
10. தம்பி விபீஷணனும் மந்திரி முதலானோறும்
வந்தார் ஸேதுமாநகர் தனிலே
11. நேசமுள்ள அனுமான் காசிலிங்கம் அழைத்து
ஜெகதீசனும் பூஜித்துநின்றார்
------------
57-வது கட்டம்.
1. சரணம் சரணமைய்யா ஏபரமேசா
கறுணை செய்து காறுமய்யா ஓஜெகதீசனே
2. ஆலகாம் தன்னை உண்ட ஏபரமேசா
அகில ஜெனரக்ஷகனே ஓஜெகதீசனே
3.. நீலகண்டமூர்த்தி என்னை ஏபரமேசா
ஆதரிக்கவேணுமய்யா ஓஜெகதீசனே
4. செகைமழுப்பிடித்த ஏபரமேசா
மங்கை உமாபரனே ஓஜெகதீசனே
5. உன் செங்கமலப் பாதந்தன்னை ஏபரமேசா
சிந்தித்து நான் நம்பினேனே ஓஜெகதீசனே
6. திருபுரமெரித்தவனே ஏபரமேசா
தேவர்களைக் கார்த்தவனே ஓஜெகதீசனே
7. மறுபாடாகையிலையிலே ஏபரமேசா
மகாதேவர் போற்றி போற்றி ஓஜெகதீசனே
8. பாலமார்க்கண்டனைக்கார்த்த ஏபரமேசா
காலனைக்காலா லுதைத்த ஓஜெகதீசனே
9. பார்வதிசமேதரறான ஏபரமேசா
பாதமலர்போற்றி ஓஜெகதீசனே
10. லிங்கம் தன்னை பூஜை செய்து ஸ்ரீராமச்சந்திரா
மங்கையரோட ஸேதுவந்தார் ஓஜெகதீசனே
---------------
58-வது கட்டம்.
1. மங்கையே வாராயோசேது மகிமையை கேளாயோ
பொல்லாசங்கம் தன்னைப்போக்கி வைக்கும் சங்கமும் தானிதுபார்
2. காமக்குரோத லோபமோக மதமாச்சரியம் என்று
பாமரமான தோர் தோஷங்களெல்லாம் ப்ரக்கும் கண்ணால் கண்டால்
3. ஸ்ரீஹத்தியோடு தூஷணைகள் பொய்கள்வாசரபாசம்
யெல்லாம் நேத்திரத்தால் ஹேது பார்த்தவுடன் மனம் நிர்மலமாகிவிடும்
4. சந்தானம் சம்பத்தும் கலகவை போகும் தருகும்
அந்தியத்தில் பரமபதத்தில் நம்மிட அடிதன்னில் சேர்த்திடுவார்
5. வாராயோகன் மணியே விமானத்தில் ஏராயோ
பொன்மணியேசீருடயநம்ப அயோத்திக்கிச் சென்றிடசேனையுடன் கூட
6. சேனையுடனேரதத்திலேர சீதை திருஜடைபோடு
தீனசரண்யன் வனத்து மகிமையை செப்பினார் மைதலிக்கி
--------------
59-வது கட்டம்.
1.அன்ன மேநானிந்த ஆழிதன்னில் அணை கட்டினதைப்
பாராய்மன்னலுமான யென்னைதோல் மீதிலேத்தியே
வழிநடந்த இடம்பது தான் (பாராய் பெண் மயிலே)
2. சமுத்திரராஜன் மேல் கோபங்கொண்டு தொப்பைமேல் சயனி
இடமிதுதான் ஜெகத்திலுள்ளோர் யெல்லாம் ஈடேரநவக்கிரக
பூஜை செய்த இடம் இதுதான் (பாராய் பெண்மயிலே )
3. வாலியை சங்கரித்து மகுடம் சுக்ரீவனுக்குத்தரித்தகிஷ்க்கிந்தி
யிதுதான் உன்னை நாடியே கவலையாய்பர்வதத்து உச்சியில்
நானிருந்த இடமிது தான் (பாராய்பெண்மயிலே)
4. கண்டு அனுமந்தன் தொண்டடுமையென்று காக்ஷியாய்ப் பணி
இடமிது தான் உண்டு சவுரிட ஆச்ரமம் தன்னிலுகந்த
இடமிது தான் (பாராய்பெண்மயிலே)
5. கவந்தனையருத்து காட்டிக்ஜெடாயுவைல்கண்டயிடம் இதுதா
தயங்கியே உன்னைக்காணாமல் தம்பியோடுதாபந்திரியப்பட்ட
இடமிது தான் (பாராய் பெண்மயிலே)
6. பாதகறாவணான் உந்தனையெடுக்க பன்னகசாலையிதுதான்
தோதகன்கரனை சம்சாரம் செய்து சூர்ப்பனகியைச்
சேதித்தயிடம்யிதுதான் (பாராய் பெண்மயிலே)
7. தேவர்கள் போற்றி செய்த தெண்டகாவனமிது செல்லவே
விராதன் முடியறுத்த இடமயிதுபாவையனுசூகை அலங்கரித்த
இடயிதுரபங்கர் ஆசிரமப் இதுதான் (பாராய் பெண்மயிலே)
8. அக்ஷாம்மோடுதிவ்ய மந்திரம் உபதேசித்த அகஸ்தியர் ஆரசிம
இதுதான் காக்காசூரனை நேத்திரபங்கமாகிசரணமடைந்த
சித்ரகூடமலையை (பாராய் பெண்மயிலே)
9. தவத்துள் சிரந்தபாரத்தாசரோடு ஆரமத்தில் அமுதளித்திட
ஜெகபதி அனுமானோடு காத்துள் திருவாழியளித்து
குகனுக்ருஉரையப்பாவென்றார் (பாராய் பொன்மயிலே)
10. வந்தார்றாமரென்று கேட்டு வாஞ்சையோடுவடிவுள்ள
பாதரப்போ அந்தமாய்தாய்மார்கள் பட்டத்துஜனங்களோ ஆ
வலாய்வருகலுற்றார் (பாராய் பெண்மயிலே )
11. திகப்பெருமான் பத்தினிபரதன் கோசலைசுமத்திரைகை கேசி
சேனையுடன் ஜெகபதி சீதையோடு திருவடி பணிந்து
சிந்தை மகிழ்ந்து (பாராய் பெண்மயிலே)
--------------
60-வது கட்ட ம்.
ஏண்ட எடப்பையர்
1. அண்ணனோடு பாதம் போற்றி ஆனந்தகண்ணீர் சொரிந்து
நின்றபாதனைக்கண்டு நிர்மலமான துடன்
2. வாரியெடுத்தணைத்து மடிவைத்து முத்தமிட்டுமே
சீருடய கண்மணி நீயும் தரித்தாயோஜடைமூடி
3. என்னப்பனே தேகமெல்லாம் மெத்தவாட்டம் ஆச்சுதே
என்னப்பனே என் சொல்வேன் அடாஉத்தமசிரோன்மணி
4. நால்பேரும்பானம் செய்து நதியில் ஸ்கரநம்பண்ணவே
சீருடய பூஷணங்கன் திவ்யவஸ்திரம் தரித்திட
5. பக்தியுள்ள குகப்பெருமாள் பழவகையளித்திட
உத்தமர் தம்பியோடு புஜித்து உள்ளங்களித்திடவே
6. தேவர்மலர்மாரிசொரிய ஜெயஜெய வென்று
நின்று பாடபாவலர்கட்டியம் போடபராக்கென்று கூரிட
7. ஆனைபரி ஒட்டகங்கள் மேல் அனேகம் வீரர்கள் வருகவே
சேனைத்தளங்கள் செல்லும் ஓசை செவ்வானம் போலாகவே
8. சப்தசாகரம் ஒன்றாகிதான் புரண்டுவந்தாப் போல்
மெத்தவாரனராக்ஷஸாள் சேனைத்தளங்கள் வருகவே
9. பட்டணத்து வீதியிலே பவனிவாரார்தம்பிமார்
வட்டக்குடை ஆலவட்டம் சாமரங்கள் போடவே
-------------
61-வது கட்டம்.
கன்யலாலே சோபனம்.
1. தம்பி பரதன் லக்ஷமணன் சத்துருக்கன் மூவருமாய்
அன்புடன் சாமரம்போட ஆனந்தமாய் ரதமேர
2. வீதிகள் அலங்கரித்து தோரணங்கள் மேலே கட்டி
ஜோதியுள்ள பூஷணங்கள் சுந்தரிமார் பூட்டி நின்றார்
3. அன்னையரால்பதினாலாண்டு ஆரண்யம் தன்னில் சென்று
தென்னிலங்கை தனையழித்து ஸ்ரீராமர்வாரார் பாருங்கோடி
4. முத்துனால் ஆலாத்திகொண்டு பத்திமார்வீதிநின்று
நித்தியாநந்தருக்கு பக்தியுடன் தாலெடுத்தார்
5. பாகவதால் கீதம்பாட பல்லாண்டுகூரிவர
யோகி முனிவாரிஷிகள் உத்தமனே சூழ்ந்திவர
6. நகரிவலமாக வந்து நாயகியாள் சீதையுடன் ஜெகபதியும்
மாதாவுட திருவடியில் பணிந்து நின்றார்
7. அன்னையர்கள் மூவர்களும் ஆசீர்வாதங்கள் செய்து
கண்மணியாம் சீதையரை கட்டித்தழுவியேநின்றாள்
8. தேச தேசத்திலுள்ள மகாராஜருக்கு தூதனுப்ப
ஜெகதீசருக்கு முடிதரிக்க ஸ்திரம் செய்தார் முனிவரெல்லாம்
-------------
62-வது கட்டம்.
வேகராவே நின்னுவே
1. கௌசிகர்வதிஷ்டர்பராசரர் விபாசர் கோமான்கலைக் கோட்டு
மகாமுனிவர் ஜெகதீசருக்கும் குடம் தரித்திடமூர்த்தம்
திவ்யமங்கள வாரம் நாள் பார்த்தார்
2. ஆதிரெகுபதிசீதையுடன் கூடி அபயங்கஸ்தானங்கள்
செய்திடவே ஜோதியுள்ள பீதாம்பர பூஷணம்
சுந்தரிக்கி அலங்காரம் செய்தாள்
3. தண்டிகை மேலேத்து மண்டலீகர்சூழ புண்டரீகனோடு
சிம்மாஸனத்துள் அண்டர் முனிவர்கள் தேவர்மலர் சொரிய
அவிராமர்கையில் கங்கணம் தரித்தார்
4. அந்தர துந்துமிவாத்யம் முழங்கிட அவிராமசந்திரர்
பராக்கென்றிட வந்தேசமன்னர் கப்பங்கட்டிட
மன்னர்க்குதம்பியார் சரமரம் போட
5 சப்தசமூத்திரதீர்த்தங்களால் அந்த உத்தமர்க்கு
அபிஷேகம் செய்ய பக்தியுடன் வதிஷ்டர் ரெத்தினகீரீடம்
தன்னை நித்தியானந்தர் சிரவலில் தரித்தார்
6. அனுமான்விபீஷணிர்ஜாம்புவான் அங்குதான் அரக்கர்வானர
சூழ்ந்து நிர்க்கமனுமந்திராதி இந்திரன் தேவர் முதலேசாகள்
மாதாவாழி யென்றாசி கூர.
7. பரதன்லக்ஷ்மணன் சத்துருக்கன் சுருட்டி ஆலவட்டம்
சாமரம்போடருகில் நின்று அனுமான்பாதந்தன்னைத்தழுவ
பத்தினியோடு ஸேவைசாதித்திட
8. அந்தந்த மன்னர்கள் மரியாதை பெற்று அந்தந்த தேசங்கள்
சென்றிடவே முகுந்தரும் பட்டாபிஷேகங்கள் செய்து
சீதையோடு அந்தப்புரத்தில் அமர்ந்திருந்தார்
9. எட்டும் ரெண்டும் அரியாதமட்டி ஸ்ரீஜாதியால் கட்டியகவிக்கரு
செய்திடுவீர்பட்டாபிராமாவுன் பாதத்தை நம்பினேன்
பதம் அளித்திடும்ஜெகநாதரே
---------------
63-வது கட்டம்.
பவனுதநாரத.
1. மங்களங்கள் பாடவென்று பொங்கமுடனே
2. துங்கன் தெகரதன் திருமைந்தனால் உதித்தவர்க்கு (மங்களம்)
3. மச்சகூர்மவராக நரசிம்மராகியே
உச்சுதப்பரசுராமராகி வந்தவர்க்கு (மங்களம்)
4. அண்டசராசரமுண்டநாதருக்கு
கண்டகராவணனைக் கொன்ற அவிராமருக்கு (மங்களம்)
5. பூலோகம் புகழும் திருப்புல்லாணிவாழும்
பாலைபதமாஸனி மணவாளஜெகநாதருக்கு (மங்களம்)
ராமாயணச்சரித்திரம் முற்றிற்று.
----xxxx------
This file was last updated on 22 May 2021.
Feel free to send the corrections to the Webmaster.