பண்டார சாத்திரம் - தசகாரியங்கள் 3 (உரையுடன்)
அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்
paNTAra cAttiram - taca kAriyangkaL (with commentaries)
by ampalavANa tEcikar, taTciNAmurthy tEcikar & cuvAminAta tEcikar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Archive.org/Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டார சாத்திரம் - தசகாரியங்கள்- 3 (உரையுடன்)
அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்
Source:
திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டாரசாத்திரம்
தசகாரியங்கள் (உரையுடன்)
ஆசிரியர்கள் : ஸ்ரீ அம்பலவாண தேசிகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் & ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்
இஃது திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்தொன்றாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம்
1959.
வெளியீடு எண் 132
-------------
சிவமயம் திருச்சிற்றம்பலம்
குருமரபு வாழ்த்து
கயிலாய பரம்பரையில் சிவஞான
போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில் திருவா வடு துறைவாழ்
குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீடூழி தழைக மாதோ.
-- மாதவச்சிவஞானயோகிகள்.
----------------
சிவமயம்
முகவுரை
பண்டாரம், மிகப் பழமையான தமிழ்ச்சொல். கருவூலத் திற்கு வழங்கி வருவது. பரிபாடலிலும் (11:123) இச்சொல் லாட்சி உள்ளது. இதனைக் களஞ்சியம் எனவும் வழங்கலாம். மணிவாசகப் பெருந்தகை "மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துரினை' என்று அருளிச்செய்கிறார்கள். ஆகவே இச்சொல் அறிவுக்கருவூலத்தை உணர்த்தி, பின் அறிவுக் கருவூலமாக விளங்கும் ஆசாரியமூர்த்திகளையும் அறிவிப்பதாயிற்று.
மொழிக்காழ்ப்பின்றிக் கருத்துயர்வுக்கே மதிப்புக்கொடுத்து வந்த காலத்தில் தமிழ்ச்சொல் பிறமொழிகளிலும், பிறமொழிச் சொற்கள் தமிழிலும் விரவி வழங்கிவரலாயின. அப்படி வழங்கி வரும்போது அந்தந்த மொழிகளுக்கு உரிய சிறப்பொலி களைப் பெற்றும் பெறாமலும் வழங்குவது இயல்பு தானே! பண்டம் + ஆரம் = பண்டாரம். பண்டம் - பொருள்கள். உலகம் உலகு என் அம்குறைந்து வழங்குதல் போலப் பண்டம் என்பது பண்டு என் அம் விகுதி குறைந்து வழங்குவதாயிற்று. ஆரம் - ஆர்தலையுடையது. ஆர்தல் - நிறைதல். அம்விகுதி வினைமுதற் பொருளை உணர்த்தும். பண்டாரம் என்பது, பொருள்கள் நிறைதலையுடையது என்ற காரணம் பற்றிக் கருவூலத்துக்கும், அறிவுக்கருவூலமாக விளங்கும் ஆசாரியனுக்கும் பெயராயிற்று. வடமொழியில் भंडारम என வழங்குகிறது. பொருள் ஒன்றே. ஒலியால் தான் வேற்றுமை. ஆனாலும் இத்தகைய ஒலியின் வேற்றுமையைக்கொண்டு கருத்தை இழப்பது சமய அனுபவி களுக்கு முறையன்று. ஆகவே பண்டாரம் என்ற சொல் அறிவுக் கருவூலத்தை உணர்த்தி - கருவூலமாக விளங்கும் ஆசாரியரை உணர்த்தி - அவனுக்குள்ள பற்றற்ற பண்பாட்டினைக் காண்
பிப்பதாகிய துறவுள்ளத்தைச் சுட்டி - துறவிக்கே பெயராய் அமைவதாயிற்று. இச்சொல் செய்த பயணம் இது.
பற்றற்றவனுக்கே உண்மையான உணர்ச்சிவீரம் உண்டு. இதனை உணர்ந்தே இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் பாரதியார் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாடலுக்குப் பண்டாரப்பாட்டு என்று பெயரிட்டார். இதுவும் பண்டாரங்களின் உயர்ந்த உள்ளத் துறவை உணர்த்தும் எடுத்துக்காட்டாகும்.
தமிழ்நாட்டில் எந்த சம்பிரதாயங்களும், தோன்றிய அடிப் படையிலிருந்து நெடுந்தூரம் விலகிவிடுவது இயற்கையல்லவா! அதுபோலவே, பண்டார சாத்திரம் பண்டாரப்பாட்டு என்பவை களும், தன்னுடைய உயர்ந்த பொருள் நோக்கத்தை இழந்து, ஏதோ துறவிகள் பாடும் பாட்டு, துறவிகளுக்கு இன்றியமையாத பாட்டு என்ற கருத்தில் இப்போது வழங்கி வருகின்றன. இந்த அடிப்படையைக் கருத்தில் வைத்துக்கொண்டு ஞானக்கருவூலமாகிய பண்டாரசாத்திரத்தை நோக்குவோம்.
ஞானக்களஞ்சியங்களாகிய - சிவாநுபூதிச் செல்வர்களாகிய குருமூர்த்திகள், சிவாநுபவ நிலையிலிருந்து, பரிபாகமுற்ற சீடர்களிடத்துண்டான தம் கருணைத்திருவுள்ளத்தில் எழுந்த அருளுபதேச மொழிகளே பண்டாரசாத்திரங்கள். அவை பதினான்காம். பதினான்கு என்ற எண் சைவசித்தாந்த சமயத் துக்கு மிகமிகத் தொடர்புடையது. சைவநூல்கள், இரண்டு பதினான்காகிய இருபத்தெட்டு ஆகமங்கள். அவற்றின் வழி வந்த பிழிதேனாகிய சைவசித்தாந்த சாத்திரங்கள் திருவுந்தியார் முதல் சங்கற்பநிராகரணமீறாகச் சொல்லப்பட்ட பதினான்கு நூல்களாம். அவற்றைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து அனுபவித்த அனுபூதி நூல்களே ஸ்ரீ அம்பலவாண தேசிகர் தசகாரியம் முதல் பேரூர் வேலப்பதேசிகர் அருளிய பஞ்சாக்கரப் பஃறொடை ஈறாகிய பதினான்கு நூல்கள். அவையே பண்டார சாத்திரம் என வழங்கப்படுவன. அவைகளாவன :
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் செய்தனவாகிய தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாயநிட்டைவெண்பா, நிட்டைவிளக்கம், உபதேசவெண்பா , அதிசயமாலை, நமசிவாய மாலை என்ற பத்து; ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் செய்தன வாகிய தசகாரியம், உபதேசப்பஃறொடை என்ற இரண்டு; ஸ்ரீ சுவாமிநாததேசிகர் செய்த தசகாரியம், ஸ்ரீ பேரூர் வேலப்ப தேசிகர் அருளிய பஞ்சாக்கரப் பஃறொடை ஆகப் பதினான்காம்.
இவற்றுள் இப்போது வெளிவருவதா தசகாரிய நூல்கள் மூன்றுமே, தசகாரியம் என்பது தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ்சார்ந்து, சரியையாதிகளில் முறையேநின்று, சிவனருள்விளக்கம் குருமூர்த்தியின் திருவருள் நோக்கால் வாய்க்கப்பெற்றுப் பரிபாகமுற்ற ஆன்மா, தன்னின் வேறாக உலகத்தைக் காண்டலும், தன்னைத் தானாகக் காண்டலும், சிவமாகக்கண்டு அழுந்தி அனுபவித்தலும் ஆகிய மூன்றுவகை நிலைகளைப் பத்து அவத்தைகளாக நுகரும் அநுபவத்தை அறி விப்பதாம். இவை முறையே தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் எனப்படும். இவற்றை மாணாக்கன் நுகரும் போது எழுகின்ற அநுபவ நிலை களையும், அவற்றை மேலும் மேலும் அறிய எழும்பும் ஐயங் களையும், அவற்றை நீக்கும் உபதேசங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல்கள் மூன்றும் இயற்றப்பெற்றுள்ளன.
முதலாவதாகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் தசகாரியம், மங்கலவாழ்த்துப் பாடல்கள் நான்குடன் ஐம்பத்தைந்து ஆசிரியவிருத்தங்களான் அமைந்தது. இதனைத் “ தசகாரியம் ஐம்பத்தைஞ்சாய் விருத்தத்திசையா அருள்புரிந்தான் ” என்ற வெண்பாவாலும் அறியலாம்.
மங்கல வாழ்த்துப்பாடல் நான்கும் முறையே திருவருள் விநாயகர், ஸ்ரீ ஞானமாநடராசப்பெருமான், ஸ்ரீ நமசிவாயமூர்த்தி கள், ஸ்ரீ மறைஞான தேசிகர் ஆகிய நால்வரை வாழ்த்துவது. இந்நூலை யாத்த ஆசிரியமூர்த்திகள் மூன்றாமவராக விளங்கிய தால், முதல் இரு ஆசாரியமூர்த்திகளையும் வாழ்த்தினார்கள். அடுத்துப் பாசஞானம் பசுஞானம் சிவஞானம் என்பவற்றின் இலக்கணங்களையும், கேவலம் சகலம் சுத்தம் என்ற மூன்று அவத்தைகளின் இயல்புகளையும், மாயை சத்தி என்றழைக்கப் படும் காரணத்தையும், தத்துவரூபம் முதல் சிவபோகமீறான தசகாரியங்களின் இயல்புகளையும், சிவன் முத்தி பரமுத்திகளின் வேறுபாடுகளையும் விளக்கமாகத் தெரிவிக்கிறது.
இரண்டாவதாகிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ேதசிகர் தசகாரியம், பதின்மூன்று எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்களாலாகி யது. முதலிருபாடல்கள் ஆசிரியவணக்கமும் அவையடக்கமும்
அறிவிப்பன. ஏனையவற்றில் சிவஞானபோதப் பன்னிரு சூத்தி ரங்களின் கருத்துக்கள் தொகுத்துச் சொல்லப்பெற்றிருப்ப தோடு, தசகாரியங்களும் நன்கு விளக்கப்பெறுகின்றன. சிவாது பூதிச் செல்வர்களுடைய இயல்புகளும் தெரிவிக்கப்படுகின்றன.
மூன்றாவதாகிய ஸ்ரீ சுவாமிநாததேசிகர் தசகாரியம் இருபத்துநான்கு ஆசிரியவிருத்தங்களால் ஆகியது. தசகாரி யங்களில் முதலைந்தும் உபதேசம் பெறுவதற்குமுன் விளைவன என்றும், பின்னைந்தும் உபதேசம் பெற்றபின் விளைவன் என்றும் மிகத்திட்பமாகப் பாகுபடுத்தி அறிவிக்கிறது.
மூன்றாவது பட்டத்து எழுந்தருளிய ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் திருவிடைமருதூரில் பரம்பரைச் சைவ வேளாண் மரபில் அவதரித்தவர்கள். ஆதி பரமாசாரிய சுவாமிக ளாகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளிடம் ஞானோபதேசமும் ஆசாரி யாபிஷேகமும் பெற்றவர்கள். இவர்கள் அருளிய ஞான நூல்கள் பத்து. அவற்றுள் முதலாவது தசகாரியம்.
ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளிடமே , ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகளோடு ஞானோபதேசம் பெற்று, சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்திதேசிகர். இவர்கள் அருளிச்செய்தது இரண்டாவதான தசகாரியம். இவர்கள் சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த-வண்ணமே சிவத்தோடு இரண்டறக்கலந்தார்கள்.
ஸ்ரீ சுவாமிநாததேசிகர், எட்டாவது பட்டத்து வீற்றிருந் தருளிய ஸ்ரீ மாசிலாமணிதேசிக மூர்த்திகளிடம் சங்காபிஷேகம் பெற்று, திருநெல்வேலி ஈசானியமடத்தில் ஸ்ரீ ஈசானதேசிகர் என்னும் தீட்சாநாமத்தோடு விளங்கியவர்கள். இவர்களே இலக் கணக்கொத்து என்னும் இலக்கண ஆய்வு நூலையும் அருளிய வர்கள். இவர்கள் அருளிச்செய்த ஞான நாலே மூன்றாவதான தசகாரியம்.
இம்மூன்று தசகாரியங்களும், ஞானாசாரிய முதல்வராகிய ஸ்ரீமெய்கண்டதேவநாயனார் எழுந்தருளியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் வழக்கமாக நடைபெற்றுவரும் சித்தாந்த சைவ மாநாட்டு மலராக விஜயதசமிப் பெருநாளில் வெளிவருகிறது.
பண்டாரசாத்திர மூலம் மட்டும் முன்பு 1926-ம் ஆண்டில் பெருநிலக்கிழாரும் சைவகுல திலகரும் சாத்திர விற்பன்னரு மாகிய சீர்காழி சதாசிவமுதலியார் அவர்களால், வித்துவ சிரோமணி ப. அ. முத்துத்தாண்டவராயபிள்ளை அவர்களின் பரமோபகாரம் கொண்டு வெளிவந்திருக்கிறது. அதன்பின் இந் நூல் கிடைத்தற்கரியதாயிற்று. அப்பதிப்பிலும் சிறந்த பாடங் காண ஆதீன புத்தகசாலையிலுள்ள பண்டாரசாத்திர ஏடுகள் பெருந்துணையாக இருந்தன.
துறைசை ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் ஆதினத்து ஞானநூல் களான இத்தசகாரியங்களுக்கு உரையும் எழுதி வெளியிடுக என இருபத்தொராவது பட்டத்து எழுந்தருளியுள்ள ஸ்ரீ-ல-ஸ்ரீ
சுப்பிரமணியதேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணை தந்தார்கள். அவ்வண்ணமே அடியேன், சிவானுபூதிச் செல்வர்கள் அருளிய நூல்களுக்கு உரைகாணும் ஆற்றலும் பரிபாகமும் இலேன் ஆயினும், எங்கள் பரமாசாரிய மூர்த்தியின் திருவருள் கல்லைப் பிசைந்து கனியாக்குவித்ததுபோல' உள்ள உணர்ச்சியை ஊக்க ஒருவாறு எழுதியுள்ளேன்.
இவற்றுள், ஸ்ரீ சுவாமிநாததேசிகர் தசகாரிய நூலின் முதற் பதினேழு பாடல்கள் வரையுள்ள உரைப்பகுதி எழுதப்பெற்ற சுவடி ஒன்று ஆதினத்துப் புத்தகசாலையிலிருந்து கிடைத்தது. அதனைத் துணையாகக்கொண்டு அவ்வுரைப்போக்கை ஒட்டியே ஏனைய பாடல்களுக்கும், மற்றைய இரு நூல்களுக்கும் உரை எழுதப்பட்டுளது.
இப்படி அடியேனை அருட்பணிக்கு ஆளாக்கிவருகின்ற ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் திருவடிக்கமலங்கட்கு என்றென்றும் கடப்பாடு உடையேன்.
திருவாவடுதுறை ) திருவாவடுதுறை ஆதின மகா வித்துவான்.
15-9-59. ) ச. தண்டபாணிதேசிகர்.
---------------------
சிவமயம்
1. ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அருளிச்செய்த தசகாரியம்
தலையானே மாவித் தலையானே மின்பத்
தலையா வடு துறைத்தா டந்த - தலையம்
பலவாணன் பாட்டிற் றசகாரியத்தைப்
பலகால் வணங்குகையாற் பார்த்து.
இதன் பொருள் : இன்பத்தலை ஆவடு துறைத் தாள் தந்த - இன்பஞ்சிறந்த இடமாகிய திருவாவடுதுறைக்கண் எழுந்தருளி யிருந்து எமக்கெல்லாம் திருவடியைத் தந்து இரட்சித்த, தலை அம்பலவாணன் பாட்டில் - ஆசாரியவரியனான ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த பாட்டில், தசகாரியத்தை - தத்துவ ரூபம் முதலான தசகாரியங்களை, பலகால் பார்த்து வணங்குகையால் - பலமுறையும் கண்டு வணங்குதலால், தலை யானேம் - சிறந்தேம்; ஆவித் தலையானேம் - ஆன்மாக்கள் அனைத்தினும் சிறந்த தலைமை பெற்ற ஆன்மாவாக ஆனேம் என்றவாறு.
இச்செய்யுள் இப்பண்டாரசாத்திரத்தை இனிது பயின்றார் ஒருவர் தம்மநுபவங்கூறி வியந்தது.
தலையானேம் : அநாதியே மல மாயை கன்மங்களுள் துவக் குண்டு பிறவிப்பெருங்கடலில் வீழ்ந்திருந்த யாம், பரமகருணை யாளனாகிய இறைவனால் கை தூக்கி யெடுக்கப்பட்டு, காப்பாற் றப்பட்டதோடன்றிச் சிறந்தவர்களும் ஆனேம்.
ஆவித் தலையானேம் : உயிர்கள் எண்ணிறந்தன; தத்தம் வினைக்கிடாக உடலெடுத்து உழல்வன. அவற்றுள், பற்ற வேண்டிய தொன்றைப்பற்றி உயர்வற உயர்ந்தேம் யாம்.
இன்பத் தலை ஆவடு துறை : இன்பம் ஆன்மாக்களின் நுகர்ச்சி. அது பொறியின்பமும், உயிரின்பமுமென இருவகைப் படும். பொறியின்பம் கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும்,
உற்றும் அறியப்படுவனவாகிய சிற்றின்பம். உயிரின்பம் உரை மனம் கடந்துநின்ற ஒருவனிடமிருந்து, உணராதே உணர்ந்து அனுபவிக்கப்படும் பேரின்பம். அதிகாரிபேதத்திற்கேற்ப இரு வகையின்பமுந் தந்து இரட்சிக்கின்ற தலையாகிய சிவராசதானி யாகிய திருவாவடுதுறை அம்மை மாசிலாமணிப் பெருமானைப் பூசித்துப் பசுவடிவந்தீர்ந்த தலமாதலின் ஆ அடு துறையென இப்பெயர் பெற்றது.
கல்வெட்டுக்களில், சாத்தனூரான திருவாவடுதுறையென வழங்குவதால் தலம் சாத்தனூர் எனவும், ஆலயம் திருவாவடு துறையெனவும் முற்காலத்து வழங்கப்பெற்றது எனலாம்.
தாள் தந்த அம்பலவாணன் : பிறவிப் பெருங்கடலை நீந்தத் திருவடிப்புணையையருளிய எமது குருநாதனாகிய அம்பலவாண தேசிகர் . தலை அம்பலவாணன் - கன்மாந்த குரவரும் ஞானாந்த குரவரும் எனக் குரவர் இருவகைப்படுவர்; அவருள் ஞானகுரு வாய், அவருள்ளும் அநுபோகம் பெருக்கலின் தலையாய குரு நாதர் இவர் என்றபடி. இங்ஙனம் அன்றி, தாள் தலை தந்த அம்பலவாணன் எனப்பிரித்துக்கூட்டித் தமது திருவடியை எமது தலைக்கண் சூட்டியருவி, தாடலை போல் சுத்தாத்துவித அநுபவத்தைக் கொடுத்தருளிய குருநாதன் எனலும் சிறந்த உரையாம்.
பாட்டில் தசகாரியத்தைப் பலகால் பார்த்து வணங்குகை யால் : அவரருளிச்செய்தபாடலில் அநுபவமாகிய தசகாரியங் களை ஒருமுறை இருமுறையல்ல; அநுபவம் சித்திக்கின்ற வரையில் பலகாலும் கண்டு தொழுதமையால். அநுபவஞ் சித்தித்ததும், அநுபவத்தையும் அதனை எளிதிற் கைகூடக் கடைக்கண் பாலித்த பரமகுருநாதனையும் வணங்கத்தோன்று மாதலின் அங்கனம் வணங்கியதால் என்க.
தசகாரியமாவன : தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பன.
வணங்குகையால் தலையானேம் என விற்பூட்டுப்பொருள் கோளாக அமைந்தது. இச்செய்யுள்.
------------
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் தசகாரியம்
மங்கல வாழ்த்து - விநாயகர்
ஒருவிய விச்சை யாதி யுதயமா யொடுங்க வென்பான்
மருவிய கலாதி யிச்சை மறைந்திட வீசன் றன்பால்
விரவிய விச்சை யாதி விளங்கியாங் கொடுங்க வேண்டித்
திருவருள் வார ணத்தின் றிருவடி சென்னி வைப்பாம். 1
இ-ள் : ஒருவிய விச்சையாதி உதயமாய் ஒடுங்க - குற்றம் நீங்கிய வித்தையாகிய சுத்த வித்தையானது முதற்கண் தோன்றி வித்தையைத் தந்து ஒடுங்கவும், என்பால் மருவிய கலாதி இச்சை மறைந்திட - அடியேனிடம் கலந்துள்ள கலை முதலிய தத்துவங்களான் விளைந்த பற்றானது மறையவும், ஈசன் தன்பால் விரவிய இச்சையாதி விளங்கி ஆங்கு ஒடுங்க - சர்வேஸ்வரனிடத் தில் பொருந்திய விருப்பம் முதலியன தோன்றி மறையவும், வேண்டி - விரும்பி, திருவருள் வாரணத்தின் - திருவருளாகிற யானை முகக்கடவுளின், திருவடி சென்னி வைப்பாம் - திருவடி களைத் தலைக்கண் சூடுவாம் என்றவாறு.
ஒடுங்க, மறைந்திட, ஒடுங்கவேண்டி வைப்பாம் எனக் கூட்டுக.
சுத்தவித்தை வித்தையைத்தர, அது, ஆன்மாக்களுக்கும் விடயசுகங்களுக்கும் இடைநின்று இது இன்னதென்று நிரூபிக் கத்தக்க ஞானத்தைக் கொடுத்து, போகங்களைத் துய்ப்பித்து, பரிபாகமுறுத்தி, அதனால் அந்தவிடய இச்சையும் விலக, இறைவனது திருவடிக்கண் பற்றுண்டாகி, அதுவும் அநுபவ விசேடத்தால் தோன்றா தொழியும்படித் திருவருள் பாலிக்க வேணும் எனப் பிரார்த்தித்து, விநாயகப்பெருமானின் திருவடியைச் சூடுவாம் என்பது கருத்து.
ஒருவிய விச்சையாதி - நீங்கிய வித்தை முதலாயின. குற்றங் களினின்று நீங்கிய வித்தை. அதாவது சுத்தவித்தை. இதுவே இறைவனது ஞானசத்தியால் தரப்பட்ட தாய், வித்தைக்குத் தாயாய் இருப்பதாகலின் 'ஒருவியவிச்சை' என்றருளினார்கள்.
உதயமாய் ஒடுங்க : தோன்றி, ஆன்மாக்களுக்கு விடய சுகத்தில் விருப்பையு தவியபிறகு மறைய.
என்பால் - தத்துவக்கட்டிற் றளையுண்டு போக நுகர்ச்சிக் குத் தக்க அடியேனிடம். வினைக்கிடான போகங்களை நுகர இருக்கின்ற ஆன்மாவாகிய என்னிடம்.
கலாதி இச்சை மறைந்திட : வித்தையளித்த கலை முதலிய வற்றால் விளைந்த இச்சைகளும் தத்தம் தொழில் முற்றுப்பெற்ற தும் நீங்க. கலை, மூடிய சாம்பலை நீக்கித் தழலை வெளிப்படுத்தி யது போலவும் பாசிக்குட்டையில் விழுந்த கல் பாசியைச் சிறிது விலக்கினாற் போலவும் காலதத்துவங்கள், ஆணவமறைப்பை ஆன்மாவின் கன்மத்திற்கிடாகச் சிறிதேநீக்கி, அறிவைச் சிறிது பிரகாசிப்பிக்கும்; அதனால் ஆன்மா விடயசுகத்தில் அழுந்திப் போகம் நுகர்ந்து, உவர்ப்புக்கண்டு ஒதுங்க, கலாதிகளும் மறை யுமாதலின் 'கலாதி இச்சை மறைந்திட' என்றருளினார்.
#சன் தன்பால் விரவிய இச்சையாதி விளங்கி - இறைவ னிடம் கலந்துள்ள இச்சை முதலான ஆற்றல்கள் விளங்கப் பெற்று. இச்சையாதி - இச்சா ஞானக் கிரியைகள் . சிவத்தினிட மிருந்து விளைந்த சக்தியின் காரியமாகிய இந்த மூன்று சக்தி களாலே ஆன்மாக்களுக்கு அறிவு பிரகாசிக்கும். ஆன்மாக்கள் விஷயபோகங்களில் பொருந்தும் வினைப்போகந் தொலைந்து, மல வாதனையும் வாடியபின் இறைவனிடமே ஒடுங்குதலை வேண்டி என்க.
திருவருள் வாரணம் : திருவருளையுடைய யானைமுகக் கடவுள். இறைவனுடைய திருவருளே வடிவாக ஆன்மாக்களின் மலத்தடையை நீக்கி, அடிக்கரையைச் சேர்ப்பிக்கின்ற திருவருட் செயலுக்காகத் தோன்றிய, முதற் படைப்பாகிய, பரநாதவடி வாகிய பிள்ளையார்.
திருவடி சென்னி வைப்பாம் என்க.
------------------
ஸ்ரீ ஞானமா நடராசர்
அருந்திடும் வினையு மைய லாக்கிடு முடலும் போதத்
திருந்திடு மலமு மின்னே யிரிந்திட வுயிரு மின்பம்
பொருந்திட வுமையாள் கண்டு போற்றிட வம்ப லத்தே
திருந்திட நடனஞ் செய்வோன் திருவடி யுளத்தின் வைப்பாம். 2
இ - ள் : ஆன்மாக்களாகிய நமக்கு நியதி தத்துவத்தின் வண்ணம் வினைப்போகங்களை அளந்தளிக்க, அவனேவல்வழி நின்று நாம் நுகரும் நல்வினை தீவினைகளும், அவ்வினைப்போகங் களில் அழுந்திய நுபவிக்க மயக்கும் மாயாகாரியமான உடலும், அறிவைக் கொடுத்து ஆன்மாக்களை உய்யக்கொள்ளும் மலமும் இக்கணமே நீங்க, ஆன்மாக்கள் பேராவின்பத்தைப் பொருந்தி வாழ, உமையாள் கண்டுவணங்க, திருவம்பலத்தே ஆன்மாக்கள் மலக்கோணிலிருந்து திருந்தி உய்யும்வண்ணம் திருநடனம் செய்வோனாகிய ஞானமாநடராசப்பெருமான் திருவடியைச் சித்தத்து வைத்துப் போற்றுவாம் என்றவாறு.
தரிசனமாத்திரையான், ஆன்மாக்கள் வினையும் உடலும் விலகியுய்ய, பேரின்பம் எய்த, பெருமாட்டி கண்டு போற்ற, திருவம்பலத்தே திருநடஞ்செய்யும் ஞானமா நடராசப்பெருமான் திருவடிகளைச் சித்தத்துள் வைத்துப் போற்றுவாம் என்பது கருத்து.
அருந்திடும் வினை - பிராரத்தவினை. இது கழிந்தாலன்றி உடல் நீங்கா தாகலின் முதற்கண் எடுத்த உடலுக்குக் காரண மான நுகர்வினை நீங்க என்றருளியது. உடலும் மனமும் இன்னே இருந்திட என்றது வினைகளை நுகர உதவப்பெற்ற உடலும் மலமும் இக்கணமே நீங்க, உடல் - பூதபரிணாமதேகம். மலம் - ஆணவம். ஆணவம் ஆன்ம அறிவின் வியாபகத்தை மறைத்து அறிவையே பொருந்தி நிற்பதாகலானும், கலையால் விளக்கம் பெறுகின்ற போதும் அறிவைச் சிறிது பொருந்தி நிற்பதாகலானும் 'போதத்திருந்திடுமலம்' என விசேடிக்கப் பெற்றது.
மையல் ஆக்கிடும் உடல் : உடல் - மாயேயம், காரணத் திற்குள்ள குணம் காரியத்திலும் பற்றிநிற்கும் ஆதலின், மாயைக்கு உள்ள மயக்கும் ஆற்றல் உடலுக்கும் உண்டாய் ஆன்மாவை மயக்கி வினைப்போகத் தழுந்தி அனுபவிக்கச் செய்வது.
இன்னே என்ற விரைவு, ஆனந்த தாண்டவத்தின் பெருமை விளங்கநின்றது.
உயிரும் இன்பம் பொருந்திட : ஆன்மாக்களுக்குள்ள தடை நீங்கியவுடன் இன்பம் பொருந்துமா தலின் இங்ஙனம் அருளினார்கள்.
உமையாள் கண்டு போற்றிட: பாலுண் குழவி பசுங்குடர் பொருது என நோயுண்மருந்து தாயுண்டாங்கு ஆனந்ததாண் டவத்தின் அருளாற்றலை ஆன்மகோடிகள் ஆற்று எனத் திரு வுளத்தடைத்து, சிவகாமித்தாய் அத்தாண்டவத்தைக் கண்டு போற்றி, பரிபாக நிலைக்கேற்பப் பாலித் தருள்கின்றார் என்பது அறிவித்தவாறு. இதனைத் திருமந்திரம்,
"அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே ''
என்றருள்கின்றது.
அம்பலம் - பலர் கூடுகின்ற மன்றம், அது சிற்றம்பலமும் பேரம்பலமும் என இருவகைப்படும். பேரம்பலம் இதயாகாசம். சிற்றம்பலம் புருவமத்தி. இவ்விரண்டும் இறை நடம்புரியும் இடங்கள். இது பிண்டத்தில். அண்டத்திலோ தில்லைப்பதியில் பேரப்பலத்திலும், சிற்றம்பலத்திலும் திருக்கூத்தாடுவார். "சிற்றம்பலத்துப் பெருநட்டமாடியை” “சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்'' ''அம்பலம் ஆடரங்காக வெளி வளர் தெய்வக் கூத்துகந்தாயை" என்பன போன்ற பல்லாயிரம் அருட்பாடற்பகுதிகள் கொண்டு அறிக.
திருந்திட : ஆன்மாக்களை அநாதியே பற்றியுள்ள மலக் கோணல் நீங்கி அவை திருந்த; என்றது மலநீக்கம் பெற்றுச் சிவானந்தம் பெற என்பதனை விளக்கி நின்றது. இறைவன் செய்யுங்கூத்து பஞ்சகிருத்திய தாண்டவமாதலானும், அது ஆன்மாக்களுடைய மலவா தனையகற்றி மலரடிக்கிழ் வாழவைப்ப தாகலானும் திருந்திட நடனஞ்செய்வோன்' என்றருளியது.
உளத்தின் வைப்பாம் : மனத்தில் வைத்துத் தியானிப் பாம் என்பது வெளிப்படையான பொருளாயினும் உள்ளம் சடமாகிய கருவியாய் மாயேயமாதலின் சச்சிதானந்த வடிவா கிய இறைவன் திருவடி அதிற்பொருந்தவேசெய்யாது; இருளை ஒளி பொருந்தாவாறுபோல, ஆதலால், சித்சத்தாகிய உயிரி னிடமாக இறைவன் திருவடியை ஞானத்தால் போற்றுவேன் என்பதாம். உள்ளம் - உயிர்',
----------------------
ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள்
சதுரறி யாமை தீரத் தரித்தரு ளுருவு கொண்டு
துதிதரு வெண்ணெய் மெய்யன் றுலங்குசந் ததிக்கோர் ஞானக்
கதிரெனத் தோன்றித் தென்னா வடுதுறைக் கண்ணி ருந்து
மதிதரு நமச்சி வாயன் வளர்கம லங்கள் போற்றி. 3
இ - ள் : சதுர் அறியாமை தீர - ஆன்மாக்களுக்கு ஆணவ மலத்தான் விளைந்த சதுரும் அறியாமையும் அகல, தரித்தருள் உருவு கொண்டு - தாங்கிய திருமேனியைக் கொண்டு, துதிதரு வெண்ணெய் மெய்யன் - பரிபாகமுற்ற ஆன்மாக்களால் தோத் திரிக்கப்பெறுகின்ற திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளி யிருக்கின்ற மெய்கண்டதேவநாயனாரது, துலங்கு சந்ததிக்கு - திரிகாலத்தும் ஒருபடித்தாய் விளங்குகின்ற மரபிற்கு, ஓர் ஞானக்கதிர் எனத் தோன்றி - ஒப்பற்ற ஞானபானுவாக எழுந் தருளி, தென் ஆவடு துறைக்கண் இருந்து - அழகிய திருவாவடு துறைக்கண்ணிருந்து, மதி தரும் - எம்போலியர்க்கு அவரவர் பரிபாக நிலைக்கு ஏற்ப ஞான விளக்கத்தை நல்கியருள்கின்ற, நமச்சிவாயன் - ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின், வளர் கமலங்கள் போற்றி - எஞ்ஞான்றும் வளர்கின்ற திருவடித்தாமரைகள் வணங்கத்தக்கன என்றவாறு.
சதுர் - சாமர்த்தியம். அது ஆணவமலத்தின் காரியமாகிய அகங்காரம். அறியாமை - இதுவும் அம்மலத்தின் காரியமாகிய அஞ்ஞானம். அறியாமை சதுர் என நிற்றலே காரண காரிய முறைபற்றி முறைமையாயினும், எதுகை நோக்கி முன்பின்னாக நின்றது.
இறைவன் திருமேனி தாங்குவது ஆன்மாக்களுடைய மல மாயை கன்மங்களை வாட்டி வீடளிக்கும் கைம்மாறு வேண்டாக் கருணையால் என்பதை விளக்கத் 'தீரத் தரித்தருள் உருவு கொண்டு' என்றருளினார்.
துதி தரு வெண்ணெய் மெய்யன் : குருவை வணங்குதல் மயக்கந்தெளிந்ததோர் தலையாய நிலை; ஆதலின் துதிக்கும் பெருமனம் சிவபுண்ணிய சீலர்க்கன்றி ஏனையோர்க்குச் சித்தி யாது; ஆகவே அத்தகைய பரிபாக சீலர்களால் துதிக்கப்படு கின்ற மெய்கண்டார் என்க.
ஞானக்கதிர் - ஞான சூரியன். சூரியன் கண்ணொளிக்கு உபகாரப்பட்டுக் காட்டும் உதவி புரிதலைப்போல ஆசாரியன் ஆணவ இருளகற்றி ஞானவொளியின் உதவியால் தாட்டா மரைகாட்டி உதவு தலின், 'ஞானக்கதிரெனத் தோன்றி' என்று அருளியவாறாம்.
தென் - அழகு, திசைகுறித்த விகாரப்பட்ட பெயருமாம்.
மதி தரும் நமச்சிவாயன் : சிவபெருமானே பரமபதி; அவ னன்றி ஆன்மாக்கள் ஒன்றையுமுணரா; அவன் அருளையடை தலே ஆன்மா வீடுறு தற்குரிய நெறி என்ற உண்மையை உபதேசித்துப் புத்திபுகட்டுகிற ஸ்ரீ நமசிவாயமூர்த்திகள்.
வளர் கமலங்கள் : ஒருவன் உள்ளப்புலத்தில் ஊன்றினால் மேன்மேலும் வளருவது திருவடித் தாமரைக்கு இயல்பாதலின் வளர் கமலங்கள் என்றது. (3)
-----------------
ஸ்ரீ மறைஞானதேசிகர்
அரனரு ளுருவா யாவிக் களித்திட வுளத்தை மாயா
வுரமது பிளந்து குற்ற மொழித்து நின் மலம தாக்கி
வரமது தனைய ளித்து மருவுமா வடுது றைக்கோர்
பரன்மறை ஞான தேசன் பதாம்புயம் பற்றி வாழ்வாம். 4
இ - ள் : அரன் அருளுருவாய் - சிவ பெருமான் கருணையே திருவுருக்கொண்டு, ஆவிக்கு அளித்திட - உயிர்களுக்கு அருளை வழங்க, மாயா உரமது பிளந்து - மாயையின் வன்மையைக் கெடுத்து, குற்றம் ஒழித்து - ஆணவமலத்தின் காரியமாகிய அகங்காரத்தால் விளையும் குற்றங்களை நீக்கி, நின்மலமது ஆக்கி சுத்தான்மாவாகச் செய்து, வரமதுதனை அளித்து - மிக மேலான சிவானந்த அநுபவ நிலையைச் சேர்ப்பித்து, மருவும் - எழுந் தருளியிருக்கின்ற, ஆவடு துறைக்கு ஓர் பரன் - திருவாவடு துறைக்கு ஓர் பரம்பொருளாய் உள்ள, மறைஞானதேசன் - ஸ்ரீ மறைஞானதேசிக மூர்த்திகளின், பதாம்புயம் - திருவடித் தாமரைகளை, பற்றி வாழ்வாம் - உறுதுணையாகச் சிக்கெனப் பிடித்து, நிர திசயானந்தப் பெருவாழ்வில் நாம் வாழ்வாம் என்றவாறு.
அரன் அருளுருவாய் : ஆன்மாக்கள் மீ துவைத்த கருணை யால் இறைவனே கண்ணுதலும் கண்டக்கறையும் மறைத்து, உள்ளமலம் போக்கி, கள்ளவினை ஒழிக்க ஆசான் மூர்த்தமாக எழுந்தருளுகின்றான் என்பதை விளக்கியவாறு.
ஆவிக்கு அளித்திட : ஆன்மாக்கள் அறியாமையால் பொருந்துகின்ற துன்பங்களைப் போக்குதலும், அவ்வப்போது அறியாமையால் வேண்டுகின்ற நிலையாத இன்பத்தை ஆக்கு தலும், பரிபாகமுற்ற ஆன்மாக்களைப் பேரின்பத்தில் அழுத்து தலும் ஆகிய உபகாரங்களைச் செய்ய.
உளத்தை மாயா உரமது பிளந்து : நோய் நீக்கத்தந்த மருந்தை உணவாக இறுகப்பிடித்தவன் போல ஆணவமலத் தின் வன்மையை வாட்ட உதவிய மாயையையே உறுதியெனப் பற்றிநின்ற ஆன்மாக்களின் மாயை வலிமையைப் பிளந்து. சூரபன்மனுடைய பிராரத்தபோகத்திற்கு உறுதுணையாகத் தந்த மாயை கிரவுஞ்சமலையாகி இருந்ததையும் அதனைச் சிவகுமாரன் ஞானக்கதிர் வேலை ஏவிப் பிளந்ததையும் போல, ஞானாசாரியன் உபதேச அஸ்திரத்தால் மாயையின் வலிமை யைப்பிளந்தார் என்று உன்னுக. உரம் - வலிமை; மார்பும் ஆம்.
குற்றம் ஒழித்து : மனம்மொழிமெய்களால் செய்யப்படும் குற்றங்களாகிய பொய் கொலை முதலிய குற்றங்களையும், கரும்பு இருக்க இரும்பு தின்று இளைத்தது போலத் தவிர்வனவற்றைச் செய்தும் தகுவனவற்றைச் செய்யாதும் இருத்தலாகிய குற்றத் தையும் பெரிய மனத்தால் அகற்றி.
நின்மலமது ஆக்கி : இதுவரை மலத்தோடு இருந்த ஆன்மாவை மலமகற்றித் தாய்மைசெய்து. அஃதாவது பட்டை யிட்டுச் சாணையிற்றேய்த்து மாசுநீக்கப்பட்ட மணியைப் போல ஒளிவிடச்செய்து என்பதார்.
வரமது தனை அளித்து : மேலானவற்றிற்கெல்லாம் மிக மேலான சிவபதத்தை அளித்து,
ஆவடு துறைக்கு மருவும் ஓர் பரன் : திருவாவடு துறையில் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற ஓர் பரம் பொருள். மணற்கு ஈன்ற முளை என்பது போல ஆவடு துறைக்கு என்பதில் உள்ள 'கு' ஏழாம் வேற்றுமைப்பொருளில் வந்த நான்காம் வேற்றுமை உரு.. இது உருபுமயமக்கம்.
தேசிகன் என்பதன் மரூஉமொழி தேசன். பற்றுதலாவது மற்றோர் களைகண் இல்லென் றவாறு இறுகப்பிடித்தல். வாழ்வாம் - நிரதிசயானந்தப் பெருவாழ்வில் திளைப்பாம் என்பதாம்.
-------------------
நூல்
முப்பொருளுண்மையும், தசகாரியமும்
பதிபசு பாச மென்னப் பகர்வரப் பசுத்தா னாகு
மதியது வற்றுப் பாசம் பதியென வரினு மாயா
விதிசெலு மலமே யாயு மேலதாம் பதிக்குக் கீழாங்
கதிமதி யவத்தை பத்தாய்க் கழறுவன் கருதி டாயே. 5
இ-ள் : பதி பசு பாசம் என்ன பகர்வர் - மாணவகனே! இறைவனும் உயிர்களும் பாசமும் எனப் பொருள்களை மூன் றாகச் சொல்லுவர்; (அவற்றுள் ) அப்பசு தானாகும் மதியது அற்று - உயிர்கள் தாமே என்கிற உணர்ச்சி நீங்கி, பாசம் பதி எனவரினும் - பாசத்தைச் சார்ந்தபோது பாசமாயும் பதியைச் சார்ந்தபோது பதியாயும்வரினும், மாயா விதி செலும் - மாயை யிற்கட்டுண்டு அது செலுத்தும் ஆணைவழியே செல்லும், மலமே யாயும் - மூலமலமாகிய ஆணவமாயும், மேலதாம் பதிக்கு - அனைத்திற்கும் மேலதாகிய பதிப்பொருளுக்கு, கீழ் ஆம் - அடங்கியே நடக்கும்; (அங்ஙனம் கீழ்ப்பட்டு நடக்கும்போது) கதி மதி அவத்தை பத்தாய் - அடையப்படுவதாகிய மதிக்கப் படுகின்ற அவத்தைகள் பத்தாக, கழறுவன் - சொல்லுவேன், கருதிடாய் - நீ எண்ணித்தெளிக என்றவாறு.
நித்தியப்பொருள்கள் பதி பசு பாசம் என மூன்றென்பர். அப்பசு அறிபவனாகிய தானேயாகும். அதனை மறந்து பாசத் தோடு சார்ந்து பாசமாயும், பதியோடு சார்ந்து பதியாயும் இருக்கும் இயல்பினதாயினும் பாசத்தைச் சார்ந்தவழி மாயை யிற்கட்டுண்டு அது இட்ட ஆணைவழியே இயங்குவதாகும்; மலமேயாய்க் கிடக்கும். மேலாகிய பதிக்கு அடங்கி, அப்பதிப் பொருளின் ஆணையின் வண்ணம் அடையப்பெறும் அவத்தை பத்தாகும்; அவற்றைச் சொல்வேன் ; எண்ணித்தெளிக என ஆசாரியமூர்த்தி மாணாக்கனைப்பார்த்துக் கூறுவதாக அமைந் துள்ளது இச்செய்யுள்.
தான் என்றது ஆன்மாவை, பாசமென, பதியென வரினும் என்ற தன் விளக்கம் பின்னர்,
ஆணவம் அடைந்த ஆன்மா ஆணவ மாய்ம றைந்து
காணுறுங் கருணை மேனி காணுறா போல ஞானத் தாணுவை அடைந்த ஆன்மாத்
தாணுவாய் மறைந்து நேயம் பூணுறுங் கருணை மேனி போற்றியொன் றாயே நிற்கும்.
எனப் பின்வரும் (46) செய்யுளாலும் அறியப்படும்.
-------------------
பாசஞானம்
பிறவியிற் குருடர் கையிற் பெற்றிடுங் கோல்போ லான்மா
வறிவையா ணவமே மூடி யழித்திடக் கலாதி கோலாய்
நெறிதரச் செயலி னின்று நிலையிலாப் பொய்மெய் யாக
வெறிதர நரக சொர்க்க மேவலாற் பாச ஞானம். 6
இ-ள் : பிறவியில் குருடர் கையில் பெற்றிடும் கோல் போல் - பிறவிக்குருடன் கையில் பெற்ற கோலைப் போல, ஆன்மா அறிவை - உயிர்களின் வியாபக அறிவை , ஆணவமே மூடி அழித்திட - அநாதிபந்தமான ஆணவமலம் மறைக்க, கலாதி கோலாய் நெறிதர - கலை முதலான தத்துவங்கள் கோல்போலச் சிறிது அறிவுவிளக்கந்தந்து வழிகாட்ட, செயலின் நின்று - வினைப்போகத்து அழுந்தி நின்று, நிலையிலாப் பொய் மெய்யாக வெறிதர - நிலையற்ற பொய்யான தனு கரண புவனாதிகள் மெய் யாகி மயக்க, நரக சொர்க்கம் மேவலால் - செய்த வினைகட் கீடாக நரகத்தையும் சொர்க்கத்தையும் அடைதலால் , ( இதனை யறிவது) பாசஞானம் - பாசஞானமாகும் என்றவாறு.
பிறவிக்குருடன்கையில் கோல் கிடைத்தாலும் பயனடைய முடியாது தடுமாறுவது போல, ஆணவமல மறைப்பிற்கிடந்த ஆன்மா, கலாதி தத்துவங்களைக் கோல்போலப்பெற்று, வினைப் போகத்தழுந்தி, பொய்யை மெய்யாக எண்ணி மயங்கி, நரக சொர்க்கத்தை அடையும்; இவ்வண்ணம் அடைவிக்கும் அறிவு பாசஞானமாம் என்பது கருத்து.
பரமகாருணிகனான இறைவன், ஆன்மாக்களை ஆணவக் காட்டினின்று விடுவிக்க, ஆடையின் அழுக்கைச் சாணியால் போக்கும் வண்ணான் போல மாயையைக்காட்டி மலவலியை வாட்டுவன்; அப்போது ஆகந்துகமலமாகிய மாயையினின்று காலம் நியதி கலைகள் தோன்றும், அவற்றுள் கலாதத்துவ மானது, ஆணவமலத்தைச் சிறிது விலக்கி, ஆன்மாவிற்கு அறிவைத் தந்து, செயலாற்றலிருப்பதைத் தெரிவிக்கும்; அக் கலையினின்றும் வித்தியா தத்துவம் தோன்றி அறிவை உண் டாக்கும்; வித்தையினின்றும் அராகம் தோன்றி வினைக்கீடாகப் போகத்தின் கண் விருப்பை விளைவிக்கும்; அதனால் சொர்க்க நரகங்களை ஆன்மா நுகரும் என்பதாம். இதனை,
"மாயையிற் கால மோடு நியதி பின் கலாதி தோன்றும்
ஆய அக் கால மூன்றாய் ஆக்கியும் அளித்தும் போக்கிக்
காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி
நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம்.
நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்
அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின்
செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை
உயர்கலை அதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்.
விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா
நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே "
எனச் சித்தியாரில்வரும் பாடல்களைக்கொண்டு தெளிக.
--------------------
பாசஞானம் என்பதன் பெயர்க்காரணம்
கேவல மலத்தி னுண்மை கிளரொளி கலாதி வந்து
மேவினு மலமே யாவி வேண்டிடும் பொருள்கா ணாமற்
காவலாய் மறைத்து நின்று காட்டிடும் பொய்மெய் யாக
வாவதாற் சகல மாகு மாயினுங் கேவ லந்தான். 7
இ-ள் : கேவல் மலத்தின் உண்மை - ஆன்மா ஆணவ மொன்றிலே கட்டுண்டு கிடத்தலால், கிளர் ஒளி கலாதி வந்து மேவினும் - விளங்குகின்ற ஒளி மயமாகிய கலை வித்தை அராகம் இவைகள்வந்து பொருந்தினும், ஆவி மலமே - ஆன்மா வின்கண் உள்ள ஆணவமே, வேண்டிடும் பொருள் காணாமல் - விரும்புகின்றபொருள்களை ஆன்மா காணாதவண்ணம், மறைத்து நின்று - அதன் அறிவு இச்சை செயல்களை மறைத்து நிலை பெற்று நின்று, பொய் மெய்யாகக் காட்டிடும் - பொய்ப் பொருள்களனைத்தையும் உண்மையெனக் காட்டி நிற்கும்; ஆவ தால் - ஆதலால், சகலமாகும் ஆயினும் - இங்ஙனம் ஆன்மா பாசஞானம் பெற்றுக் காரியப்படுகின்றமையால் சகல நிலை யது எனக் கூறலாமாயினும் உலண்டு போல மலத்தில் கட் டுண்டு கிடத்தலால், கேவலந்தான் - கேவல நிலையினதேயாம் என்றவாறு.
கேவலாவத்தையிற் கிடக்கும் ஆன்மாவிற்கு இறைவன் குருடனுக்குக் கோல்கொடுத்தாற்போலக் கலாதிகளைக் கொடுப் பினும், அதனால் அறிவு சிறிது விளங்கி போகத் தழுந்து தலாற் சகலநிலை மேவினும், ஆன்மவியாபகம் மறைந்து கிடத்தலால் கேவலமேயாகும் என்பது கருத்து.
ஆன்மாக்கள் கேவலம் சகலம் சுத்தம் என் அன்றவத்தைப் படும். அவற்றுட் கேவலமாவது ஆன்மா மலத்திற் கட்டுண்டு கிடக்கும் நிலை. சகலமாவது இறைவன் தனு கரண புவன போகங்களைக் கொடுத்தபோது எய்தும் நிலை, சுத்தமாவது மலங்களினின்றும் நீங்கிய நிலை. இதனை,
"கேவல சகல சுத்தம் என்று மூன் றவத்தை ஆன்மா
மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனாம் மலங்க ளெல்லாம்
ஓவின போது சுத்த முடையன் உற் பவந்து டைத்தே "
என்று சித்தியார் தெரிவிக்கும். இங்ஙனமாக, ஆன்மா கேவல நிலையிற் கிடக்கின்றபோது கலாதிகளால் அறிவு விளக்கம் பெற்ற நிலையில் கேவலம் என்பதா? சகலம் என்பதா? என்ற ஐயம் உண்டாக, அதனை ஒழிக்கத் திருவுளத்தெண்ணி, அநுபவவுரையாக ஆன்ம அறிவு சிறிது காரியப்படினும் ஆணவமே மேவி நிற்றலின் கேவலநிலையேயாம் எனத் தெளி விக்கின்றது இத்திருப்பாட்டு.
------------------
பசுஞானம்
இயைந்திடுஞ் சரியை யாதிக் கெழுந்தவப் பதங்கள் பொய்யாய்க்
கயந்துமெய் வேற தாகக் கருதிக்கண் டுயிர்மே லாகப்
பயந்திடல் பசுவின் ஞானம் பார்க்கினின் மலம தாக
வுயர்ந்திடுஞ் சாக்கி ரத்தி னுண்மையென் றுரைப்பர் மேலோர். 8
இ - ள் : இயைந்திடும் சரியை ஆதிக்கு - பொருந்திய சரியை முதலான நான்கு சாதனங்களுக்கும், எழுந்த அப்பதங் கள் - பயனாகவிளைந்த அப்பதமுத்திகளை, பொய்யாய்க் கயந்து -
நிலையற்றனவாக எண்ணி உவர்த்து, மெய் வேறது ஆகக்கருதி - நிலைத்த இன்பம் இவற்றின் வேறாக உள்ளது என்று எண்ணி, கண்டு உயிர் மேலாகப் பயந்திடல் - ஆராய்ந்து ஆன்மா உயர் நிலையடைய முயலுதல், பசுவின் ஞானம் - பசுஞானம்; பார்க் கின் - இதனை ஆராயின், நின்மலமதாக உயர்ந்திடும் சாக்கிரத் தின் உண்மை என்று - நின்மலசாக்கிராவத்தையின் அனுபவ நிலை என்று, மேலோர் - சிவஞானிகள், உரைப்பர் - சொல்லுவர் என்றவாறு.
சரியையாதிக்கு எழுந்த அப்பதங்கள் : சரியை கிரியை யோகம் என்ற சாதனங்களால் எய்தப்படும் பயனாகிய சாலோக சாமீப சாரூப் பதவிகள். இப்பதவிகளும் செய்த புண்ணியவினை கட்கு ஈடாக அஃது உள்ளவரை நுகரப்படுவதாய், அது வற்றிய காலத்துக் கீழ்மேலாந் தன்மையவாகலின் பொய்யாகத்தோன்ற, அப்பதவிகளில் வைகுகின்ற காலத்தும், வினைக்கிடாகச் சூர பன்மனாதியரால் துன்பம் நேருகின்றமையின் கசந்துபோய், இவற்றினின்றும் ஆன்மா உயர் தற்குரிய நெறியொன்று இருக்க வேண்டும் என்றெண்ணுகின்ற ஞானம் தோன்றி அதற்காக முயலும்; அதுவே பசுஞானமாம்; இதனை நின் மலசாக்கிரம் என்பர் பெரியோர் என்பது கருத்து.
பசுஞானத்தியல்பை 'காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம் " என்ற சித்தித்திருவிருத்தம் சுருங்கக்கூறி, ''கோகனதன் முதல்வாழ்வு குலவுபதமெல்லாம் வெறுத்து, நெறி அறுவகையும் மேலொடு கிழடங்க" உயர் நெறியை நாடத் துணையாவதே பசுஞானம் என விரித்துக் கூறும்.
-----------------
சிவஞானம்
ஒத்திடு மலம் கற்றி யுயிரினை யணைத்துத் தம்பால்
வைத்திட விச்சா ஞானச் செய்தியை வைத்து ஞானப்
பித்திட மலங்க ளெல்லாம் பெயர்ந்திடப் பின்ன மற்றுச்
சத்துட னிச்சை மேவித் தரிப்பது சிவஞா னந்தான். 9
இ-ள்: ஒத்திடும் மலம் அகற்றி - ஆணவத்தோடு ஒத் துள்ள மாயாமலத்தையும் அகலச்செய்து, உயிரினை அணைத்து - ஆன்மாவைத் தன்னடிக்கீழ்ச் சேர்த்தி, தம்பால் வைத்திட - தம்மிடமே அநவரதமும் வைத்துக்காக்க, இச்சா ஞானச் செய்தியை வைத்து - பரேச்சை பரஞான பரகிரியை இவற்றை ஆன்மாவினிடமாக விளங்கப்பண்ணி, ஞானப்பித்து இட - சிவஞானத்தில் இடையீடில்லாத பற்றின் முதிர்ச்சியுண்டாக, மலங்கள் எல்லாம் பெயர்ந்திட - மூலமலமும் அது நீக்கப் புணர்க்கப்பட்ட மாயாமலமும் பரிபாகமுறுத்த உதவிய கன்ம பமுமாகிய மூன்று மலங்களும் வலி குன்றியும் கெட்டும் நீங்க, பின்னம் அற்று - வேறுபாட்டுணர்ச்சியின்றி, சத்துடன் இச்சை மேவி - சத்துப்பொருளாகிய சிவத்தோடு தைலதாரை போன்ற பற்றினைப் பொருந்தி, தரிப்பது சிவஞானம் - இருப் பதுவே சிவஞான மாம் என்றவாறு.
ஒத்திடு மலம் : முன்னிருந்த மலத்தோடு ஒத்த ஆகந்துக மாகிய மாயாமலம். அகற்றி - விரியச்செய்து. ''அறிவகற்றும்" என்பது போலக் கொள்க.
உயிரினை அணைத்து : நோயினால் வருந்திய குழந்தை நோய் நீக்கம் பெற்றகாலத்து அதுகண்டு அளவிலா மகிழ்ச்சியுற்ற தாய் பேரார்வத்தோடு குழந்தையை வாரி அணைப்பதுபோல வும், கிணற்றில் தவறிவிழ இருந்த குழந்தையை எடுத்தணைப் பதுபோலவும் மலநீக்கம் பெற்ற ஆன்மாவை வாசனை தாக்கித் திரும்பவும் கீழ் நோக்காவாறு எடுத்தணைத்து.
தம்பால் வைத்திட : தட்ச சாபமாகிய பிணியேதும் தீண்டா மல் சந்திரனைத் தம் முடிமீது வைத்ததுபோல, மலவலி குன்றிய ஆன்மாவைத் தம்பால் வைக்க.
இச்சாஞானச் செய்தியை வைத்து : கேவலத்திருந்த ஆன் மாக்களுக்கு வினைப் போகத் தாழந்த இச்சாஞானக் கிரியைகளை அளித்ததுபோல, வினை நீங்கி மலபரிபாகமுற்ற நிலையிலும் இறைவன் தன்னைப்பற்றிய இச்சை ஞானக் கிரியைகளைத் தந்தருள்வன். இத்தகைய இச்சா ஞானக்கிரியைகள் பரேச்சை, பரஞானம், பாகிரியை எனப்படும்.
ஞானப்பித்திட : யாதாமொரு பொருளிடத்து வைத்த பற்று முறுகியதோ அது பித்தாம். இறைவனைப்பற்றிய ஆசை முறுகிப் பித்தாக. இக்கருத்தையே "பிச்சதேற்றியே'' என மணிவாசகப்பெருந்தகையும் அறிவித்தல் காண்க.
மலங்களெல்லாம் பெயர்ந்திட : ஒத்திடுமலமகற்றி என்ற தோடு இதனிடை வேற்றுமை யாதோவெனின், மலமகற்றி என்பது மலத்தை விரியச்செய்து என்பதாம்; அதாவது ஆடையில் ஏறிய பண்டைய அழுக்கோடு உவர்மண் அழுக்கை யும் உடனூட்டிய வண்ணான் போல, இருக்கிற ஆணவமலத் தோடு மாயா மலத்தையும் காட்டி விரியச்செய்து என்பது பொருளாகவும் ஈண்டு மலங்கள் எல்லாம் பெயர்ந்திட என்பதற்கு பண்டைய மலமும், அது கழிக்கக் கூட்டப்பட்ட மாயாமலமும், கழிக்கப்படுவதாய கன்ம மலமுமாகிய மலங்கள் யாவும் அகலுவ அகல, ஒடுங்குவது ஒடுங்க என்பது பொருளாகவும் கொள்க.
பின்னம் அற்று - வேறற்று. "பின்னமறநின்ற பெர்மானே'' என்றதும் காண்க.
சத்துடன் இச்சைமேவித்தரிப்பது : சத்துப்பொருளாகிய சிவத்தோடு இடையறாப்பற்றுக்கொண்டிருப்பது. தான் அசை. தேற்றேகாரம் புணர்த்திப் பொருள் காண்க.
-----------------
சத்திநிபாதம்
திருந்திய கருணை யாலே திருவுரு மூன்ற தாகி
யிருந்திடு மீசர் நோக்கு மியைந்திடு முயிர்க ணோக்குந்
தெரிந்த புண்ணியமுஞ் சற்றுந் தெரிந்திடா தனவு மொத்து
விரிந்திட வறிவு மேலாய் விளங்கினற் பாத மாமே. 10
இ-ள் : திருந்திய கருணையாலே - ஆன்மாக்களை உய்வித் தருளவேண்டும் என வழிக்கொண்ட அருளால் , திருவுரு மூன்றது ஆகி - அருவம் உருவா ரூபம் உருவம் என மூன்றாகி, இருந்திடும் ஈசர்நோக்கும் - எழுந்தருளுகின்ற சிவனது கருணை நோக்கும், இயைந்திடும் உயிர்கள் நோக்கும் - அவ்வருட் பார்வையைப் பொருந்த இருக்கின்ற பரிபாகமுற்ற ஆன்மாக் களின் நோக்கமும், தெரிந்த புண்ணியமும் - எல்லாம் சிவன்
செயல் என்றறியப்பட்டு இயற்றப்பெறும் பதிபுண்ணியமும், சற்றும் தெரிந்திடாதனவும் ஒத்து - சிறிதும் அறியப்படாத அதுவ துவாயழுந்தி நிற்கும் நிலையும் ஆகிய இவைகள் ஒத்து, விரிந்திட - ஆன்மாவினிடமாக விளக்கம் பெற , அறிவு மேலாய் விளங்கின் - சிவஞானம் எல்லாவற்றிற்கும் மேலாக விளங்கி நிற்பின், அது நற்பாதமாம் - நல்ல சத்திநிபாதமாம் என்றவாறு.
கருணை , என்றும் மலகன்மங்களைச் சாராது. ஒளி இருளை யறியாதது போலக் கருணையும் அவற்றை அறியாதது. அங்ஙனமாகத் திருந்திய கருணையால் என்ற் பாற்கடல் பாற்கடலாக இருந்தபோது யார்க்கும் பயன்படா திருந்து, பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட அழைத்துக் கொடுத்தபோதே அவற்குப் பயன்பட்டதுபோல, கருணை இறைவனிடம் அபின்னமாய் ஒன்றியிருந்த நிலையினின்றும் ததும்பி ஆன்மாக்களை யுய்விக்கத் திருவுள்ளங்கொண்டபோது திருந்திய கருணையாயிற்று.
திருவுரு மூன்றதாகி : தூலம் சூக்குமம் அதிசூக்குமம் என மூன்று திருமேனிகளைத் தாங்கி. எங்கும் நிறைந்த பொருளாக இருந்த சிவம், ஆன்மாக்களுடைய பரிபாக நிலைக்கேற்ப ஆட் கொள்ள மூவகைத் திருமேனிகளையும் தான் ஒருவனே தாங்கி.
ஈசர் நோக்கும் : ஈஸ்வரன் - ஈசன். எல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்டவன். அவனது கருணை நோக்கமும் என்றவாறு.
இயைந்திடும் உயிர்கள் : சூரியனை எதிரிய தாமரை மலரும், காந்தத்தை எதிரிய இரும்பும் போலச் சிவனருளை எதிரிய ஆன் மாக்கள். அதாவது தமது மலக்கோண் நீங்கிப் பரிபாகமுற்ற உயிர்கள். அவற்றின் நோக்காவது இறைவனையன்றி அடைக் கலத்தானம் வேறில்லையென்றும், அடையத்தக்க பொருள் வேறில்லையென்றும் உறைத்து நிற்றல். பொருளைக் கொள்வான் மதிப்பும் விற்பான் மதிப்பும் ஒத்த இடம் அப்பொருளின் விலையாதல்போல, தலைவன் தலைவி இருவருடைய கண்களும் ஒத்த இடம் அகவின்பமாதல் போல சிவனோக்கும் சீவனோக்கும் ஒத்த இடம் சத்திநிபாதமாயிற்று.
தெரிந்த புண்ணியம் : ''புண்ணியம் மேல் நோக்குவிக்கும் " என்றபடி மேனிலை எய்துவிப்பனவாகிய புண்ணியங்கள் இரு வகையில், சிவனலாது பெருமானிலன் என்று தெளிந்து அவனை உன்னிச் செய்யப்படுவதாகிய பதிபுண்ணியமே ஆராய்ந் தெடுக்கப்பட்ட புண்ணியம்.
சற்றும் தெரிந்திடாதனவும் : இறைவனையே இடைவி டாது பற்றிச் சிவோகம் பாவனையில் இருப்பதால், ஒளியுட் புதைந்த கண் அவ்வொளியையும் அறியாது ஒளியாயிருத்தல் போலவும், அமுதக்கடலில் அழுந்திய உயிர் அமுதமயமாய் அதனையும் அறியாதது போலவும் சிறிதும் அறியப்படாதனவும்.
ஒத்து - வேறுபாட்டுணர்ச்சி தோன்றாதபடி ஒத்து.
விரிந்திட : பொழுது துணை செய்ய அரும்பு மலர்ந்தது போல ஆன்மா விளக்கம் பெற.
அறிவு மேலாய் விளங்கின் ஆன்மாக்கள் ஈடேறுவதற் காக இறைவனால் அளிக்கப்பெற்ற பரேச்சை முதலிய மூன்றில், பரஞானம் ஏனையவற்றை மடக்கித் தான் மேலாக விளங்கின.
நற்பாதம் ஆம் : நல்ல சத்திநிபாதம் ஆம். சத்திநிபாதம் - திருவருட் சத்தியின் மிக்க வீழ்ச்சி, அஃதாவது இதுவரை மலம் பரிபாகமாதற்பொருட்டு மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடாத்திய திரோதானசக்தி, மலம் பரிபாகம் எய்திய வழி, கருணை மறமாகிய அச்செய்கை மாறி, கருணையெனப்படும் அப்பராசத்திரூபமேயாய், ஆன்மாக்களிடத்துப் பதிதல். பாதம் சத்திநிபாதம். பெயரின் ஒரு கூறு; நாமைக தேசம். பாதம் வீழ்ச்சியென அல்லாப் பொருளையும் தருதலின் அதனின் நீக்குதற்கு நற்பாதம் என்றருளியபடி. (10)
----------------
அருளும் ஆன்மாவும்
பாசவே ரறுமா றாக்கும் பகர்சரி யாதி நான்கான்
மாசறும் பசுமே லாக மன்னுமவ் வாற தாகத்
தேசுறு மணுவு மீச னருளுமவ் வாற தாக
வேசறு முயிர தாக வியைந்துளம் புகுந்து நிற்கும். 11
இ-ள் : பாச வேர் அறுக்குமாறு ஆக்கும் பகர் சரியாதி நான்கால் - பாசங்களின் வேரைக் கல்லுமாறு மேற்கொள்ளப் படுகின்ற வேதாகமங்களாற் சொல்லப்பட்ட சரியை முதலான நான்கு சாதனங்களால், மாசு அறும் பசு - குற்றங்களிலிருந்து நீங்கிய ஆன்மா , மேலாக மன்னும் - எல்லாவற்றினும் மேலாக நிலைபெறும்; அவ்வாறதாக - அவ்வண்ணமாக, தேசு உறும் அணுவும் - அறிவொளி பெற்ற ஆன்மாவும், ஈசன் அருளும் - சிவபெருமானுடைய திருவருளும், அவ்வாற்தாக வேசறும் உயிரதாக - அவ்வண்ணமாக உலகிச்சை செயல்கள் ஒருங்கிய உயிரின் கண்ணதாக, இயைந்து - பொருந்தி, உளம் புகுந்து நிற்கும் - மனத்திற் பொருந்தி உடனாயும் நிற்கும் என்றவாறு.
சரியாதி நான்கு : சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. இவற்றினிலக்கணங்களை,
"அகண்டாகார நித்த வியாபக சச்சிதாநந்தப் பிழம்பாகிய சிவபிரான், உயிர்கள் சோபான முறையானுணர்ந்து உய்தற் பொருட்டுத் தூலமாகவுஞ் சூக்குமமாகவும் அதிசூக்குமமாகவும் மூவடிவங் கொண்டருளி அவ்வடிவங்களின் வழிபடும் முறை மையும் வேதாகமங்களில் அவனால் வகுத் தருளிச் செய்யப் பட்டனவாகலான் அம்மூவகை வடி-வின்வைத்துப் பக்குவமுறை மையான் மேம்பட்டு நிகழும் நுண்ணுணர்வின்மையிற் சகள மாகிய தூலவடிவமாத்திரத்தைப் பொருளென்று உணர்ந்து, காயத்தொழின் மாத்திரையான் ஆகமத்தின் விதித்தவாறு வழிபடுவது சரியை.
அஃது அடிப்பட்டு வரவா நிகழும் பக்குவவிசேடத்தான் நுண்ணுணர்வுடையராய், சகள நிட்களமாகிய சூக்குமவடிவமே பொருள், சகளவடிவம் அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனி யென்று இவ்வாறுணர்ந்து, புறத்தொழிலானும் அகத்தொழி லானும் விதித்தவாறே வழிபடுவது கிரியை.
அஃது அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவவிசேடத்தான் அதிநுட்ப வுணர்வுடையராய், நிட்களமாகிய அதிசூக்கும் வடிவமே பொருள், சகளமுஞ் சகளநிட்களமும் அதனை வழிபடு தற்கிடமாகிய திருமேனியென்று இவ்வா றுணர்ந்து, அகத் தொழின் மாத்திரையான் ஆண்டைக்கு விதித்தவாறே வழி படுவது யோகம்.
மூன்றும் இவ்வாறு முறையே அடிப்பட்டுவரவர நிகழும் பக்குவமுதிர்ச்சியானே உள்ளவாறுணர்வு விளங்கி, அகண்டா கார நித்தவியாபக சச்சிதாநந்தப் பிழம்பே சொரூபம், ஏனைச் சகளம் முதலிய மூன்றுந் தூலாருந்ததிநியாயமாக அதனை உணர் தற்பொருட்டும் வழிபடு தற்பொருட்டுங் கொண்ட திரு மேனியென்றிவ்வா றுணர்ந்து, காயத்தொழில் மனத்தொழில் இரண்டனையுங் கைவிட்டு, கேட்டன் முதலிய அறிவுத்தொழின் மாத்திரையான் வழிபடுவது ஞானம்''
என்று சிவஞானசுவாமிகள் கூறுவதுகொண்டு அறிக.
அவற்றால் மாசறுதலாவது, இந்திரிய வயப்பட்டு இயற் றும் காயத்தொழில்களைச் சிவப்பணியாகச்செய்து மனப்பயிற்சி வாயிலாக்குதலும், காயத்தொழிலும் மனத்தொழிலும் சிவன தாக்கி உலகியற்பற்றிலிருந்து ஒழிதலும், அகத்தொழில் முழு தும் அவனுக்கே ஆக்குதலும், அறிவுத்தொழில் மாத்திரமாக அவனை வழிபடுதலுமாகிய இவைகளாம். இவ்வண்ணம் குற்றம் நீங்கிய ஆன்மாக்கள் எல்லா ஆன்மாக்களினும் மேலாக நிலை பேறு அடையும் என்பதாம்.
பின்னிரண்டடிகளுக்கும், அவ்வண்ணம் அழுக்கு நீங்கி ஒளி விளக்கம்பெற்ற மணிபோல, மலம் நீங்கி, ஞானவிளக்கம் பெற்ற ஆன்மாவும் திருவருளும் ஒன்றிநின்று, அருளாகிய வியாபகத் துள் தன்செயலற்று வேதுற்றுப்போன உயிர் வியாப்பிய மாய் மடங்கிக் கிடக்கும் வண்ணம் பொருந்தி, உயிருக்குயிராக உளம்புகுந்து மன்னிய மன்னாகச் சிவம் விளங்கும் என்பது கருத்தாம்.
-----------------------
தீவிரதர சத்திநிபாதமுற்றோனியல்பு
அகத்திரு ளகற்றி நாலாஞ் சத்திநி பாத முற்றுப்
பகைத்திடு முடலை நோக்கிப் பயந்திடுஞ் சகத்தைப் பார்த்துத்
திகைத்திடும் பிறவி நோக்கிச் சேர்ந்திடுஞ் சுற்றங் கண்டு
பகைத்திடு மிவரே யென்னப் பதைத்துமெய் நடுங்கா நிற்கும். 12
இ - ள் : அகத்து இருள் அகற்றி - மனத்தின்கண்ணுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி, நாலாம் சத்தி நிபாதம் உற்று - தீவிரதரமாகிய நாலாம் சத்தி நிபாதத்தைப் பொருந்தி, பகைத்திடும் உடலை நோக்கி - பகை செய்யும் உடலைப்பார்த்து, பயந்திடும் சகத்தைப்பார்த்து - மேலும் விளைவினை உளதாக்கும் உலகினை நோக்கி, திகைத்திடும் பிறவி நோக்கி - மயக்கும் பிறவியைக்கண்டு, சேர்ந்திடும் சுற்றம் கண்டு - தம்மைச் சூழ்ந் துள்ள சுற்றத்தைக் கண்டு, இவரே என்னப் பகைத்திடும் - இவரே என்று இகழ்ச்சிதோன்ற மாறுகொள்ளும்; பதைத்து மெய் நடுங்கா நிற்கும் - பதைபதைத்து உடல் நடுங்கும் என்றவாறு.
உயிரைப் பற்றிநிற்கின்ற ஆணவத்தின் காரியமாகிய அறி யாமை, கருவியாகிய மனத்தைக்கொண்டு காரியப்படு தலின், உயிரிருளானது அகத்திருள் எனக் கருவிக்கும் காரியத்திற்குமுள்ள ஒற்றுமைநயம்பற்றி தப்பட்டது.
நாலாம் சத்திநிபாதம் : மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிர தாம் என்ற நால்வகைச் சத்திநிபாதங்களில் நாலாவதாகிய தீவிரதர சத்திநிபாதத்தைப் பொருந்தி, இவ்வண்ணம் சத்திநி பாதம் நான்காதல் ஆன்மாக்களுடைய பரிபாக தார தம்மியத் தால் என்க. தீவிரதர சத்திநிபாதம் உற்றோரே உடலைப் பகை யென்றும், உலகைச் சடமென்றும், பிறவியை மயலென்றும், சுற்றத்தைப் பேய் முதலிய அணங்குகள் என்றும் அஞ்சி நடுங்குவர் என்பதாம்.
பகைத்திடும் உடல் : மாறுபாடே செய்யும் உடல். இவ் வுடலை இறைவன் அருளியது ஆணவவலியை ஒடுக்கி வினைப் பிணி தீர்ந்து ஆனந்த வாழ்வை இவ்வுயிர் எய்துக என்ற எதிர் நோக்கால். இவ்வுடல் வந்ததும் மங்கையர் இன்புறுபோகமே முத்தியென்றும், அரிசலாம்பூசி, மாலை அணிந்து, பொன்னாடை சாத்தி, பரிசனம் பின்பு செல்ல, பாரகர் பரிக்கக்கொட்ட, வரி சின்ன மூத வலம்வருதலே பரமசுகம் என்றும் எண்ணச் செய்தலின் பகைக்கும் உடல் என்றருளியது.
பயந்திடும் சகம் : வினைப்போகங்களை நுகர்ந்து கழிக்க உதவிய உலகம். மேல்விளைவை யாக்கலின் இங்கனம் கூறியது. பயத்தல் - விளைதல்.
திகைத்திடும் பிறவி : முதலும் முடிவும் தெரியாமல், பிரவாக அநாதி போலவும், கடற்றிரைபோலவும் வருதலின் மயக்குகின்ற பிறவி.
சேர்ந்திடுசுற்றம் : எடுத்தபிறவிக்கியையத் தாய் என்றும், தந்தை என்றும், தாரம் என்றும், தனயன் என்றும் பிறவா முகவும் சேர்ந்திடும் சுற்றத்தார்.
இவரே என்பதில் ஏகாரம் இகழ்ச்சிக்குறிப்பு. அப்பர் சுவாமிகள் பர்வசி முதலானோரைக் கண்டபோது,
"பொய்ம் மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் ! தீவினைகாள்! திருவே! நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்(கு)
இல்லையே கிடந்தது தான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே''
என்றது போல இகழ்ந்து, அவர்களோடு உறவுகொள்ளாது பகைக்கும்; மேலும் உடல் பதைத்து நடுங்கும் என்பதாம். (12)
-----------------
சிவனே குரு
புகுத்திநன் கறிவு ளத்துப் பொய்மலம் புறம்ப தாக
அகற்றிப்பே ரறிவே யாக்கி யாகுமுப் பொருள்கள் கண்டு
பகுத்திட வுளத்தினின்ற பரம்பொரு டானே யிந்நாட்
செகத்தவ தரித்தே யுள்ளத் திகைப்பது தீர்ப்ப னாசான். 13
இ - ள் : நன்கு அறிவு உளத்துப் புகுத்தி - நன்றான ஞானத்தை உயிர்களுக்கு உண்டாக்கி, பொய் மலம் புறம்பது ஆக அகற்றி - பொய்ம்மையிற் பற்றவைக்கும் மலங்கள் வேறு பட்டதாக நீக்கி, பேரறிவே ஆக்கி - சிவஞான சொரூபமே தானாகச் செய்து, ஆகும் முப்பொருள்கள் கண்டு பகுத்திட - ஆகிய பதி பசு பாசமென்ற முப்பொருள்களை யுங்கண்டு பிரித்து உணர, உளத்தின் நின்ற பரம்பொருள் தானே - உயிரினிட மாக உணர்த்தியும் உணர்ந்தும் நின்ற பரசிவமே, ஆசான் - ஆசாரியன் ஆவன்; (அவனே) இந்நாள் செகத்து அவதரித்து - இப்போது உலகில் தோன்றி, உள்ளத்திகைப்பது தீர்ப்பன் - மனமயக்கைத் தீர்த்து மலரடிக்கீழ் வைப்பன் என்றவாறு.
நன்கு அறிவு - நன்றான ஞானம். திருப்பெருகு சிவஞானம். அன்றான பாச பசு ஞானங்களினிக்கினமையின் இது பிறிதின் இயைபுநீக்க வந்த விசேடணம். நன்கு - நன்மை; கு பண்புப் பெயர் விகுதி.
புகுத்தி - பிறவினை வினையெச்சம். அன்னை ஞானங்கள் பல ஆணவத் துணைக்கொண்டு அகத்துள் இடமறச் செறிந்து கிடத்தலின், அவை அகல, நன்றான அறிவை வலிந்து புகுத்தி.
பொய் மலம்: மலம் நித்தியமாயினும், அது அறியாமை வாயிலாக நிலையிலாப் பொருள்கவிடத்தில் பற்றினை விளைவித் தலின் பொய்ம்மலமாயிற்று.
புறம்பதாக அகற்றி - உயிரைப்பற்றியிராதே வன்மையை வாட்டி. அகற்றியென்பது உபசாரம்.
போறிவு - பாஞானம்.
ஆகு முப்பொருள்கள் கண்டு : சிவஞானம் கைவரப்பெற்ற வர்கள் சிவஞானம் வாயிலாகச் சிவத்தைத் தரிசிக்கும் போது தரிசிப்பவனாகிய தானும், தடையும் காணப்படுதலின் முப் பொருள்களையும் கண்டு. கண்டு என்பது அறி தன்மாத்திரை யன்று; அறிந்து, தள்ளுவதள்ளி, அநுபவிப்பதுவரை உணர்த் தும் பொருளாற்றலுடையது.
பகுத்திட உளத்தில் நின்ற பரம்பொருள் தானே ஆசான் : காணத்தகுவன கண்டு, கண்டு ஒதுக்கத்தகுவனவற்றை ஒதுக்க, மனத்தில் எழுந்தருளியுள்ள பரசிவமே ஆசாரியன். சிவனே ஆசாரியன் என்பது அருணூல்களிலும் ஆகமங் களிலும் மற்றும் பலவிடங்களிலும் பகரப்பட்ட உண்மை .
சிவமே ஆசாரியனாக எழுந்தருளிப் பிறவி மயலைப் போக்கி ஆட்கொள்ளும் என்பதாம். (13)
--------------
காட்டுமுபகாரமும் வேண்டும் என்பது
அண்டிடும் படலங் கீன்றங் களித்திட வொளியைக் கட்குக்
கண்டிடும் பொருள்க ளொன்றுங் கண்டிடா வாறு போல
விண்டிடு மலமு னக்கு விளங்கிடு மறிவு மேலாய்க்
கொண்டிடும் பொருள்கள் காட்டிக் கொடுத்திடி னன்றிக் காணாய். 14
இ - ள் : அண்டிடும் படலம் இன்று அங்கு கட்கு ஒளியை அளித்திட - நெருங்கிய கண்படலத்தைக் கீறி அவ்விடத்துக் கண்ணுக்கு ஒளியைக் கொடுக்க, கண்டிடும் பொருள்கள் ஒன்றும் கண்டிடாவாறு போல - காணத்தகும் பொருள்கள் ஒன்றையும் அக்கண் காணாத தன்மை போல , உனக்கு மலமும் விண்டு - மாணவகனே! உனக்கு மலமும் நீங்கி, அறிவு மேலாய் விளங்கிடும் (ஆயினும்) - மெய்ஞ்ஞானம் அனைத்திற்கும் மேலாய் விளங்குமாயினும், கொண்டிடும் பொருள்கள் காட்டிக் கொடுத்திடின் அன்றி - நீ கொள்ளத்தக்க பொருள்களைக் காட்டிக்கொடுத்தாலன்றி, காணாய் - நீ காணாய் என்றவாறு.
அண்டிடும் - நெருங்கும். கண்படலம் நீங்கினும் ஒளியை உதவினாலும் உயிர் கண்ணுடனிருந்து கண்டாலன்றிப் பொரு ளறியப்படாதவாறு, மலம் அகன்றாலும், சிவஞானம் சேர்ந் தாலும், இறைவன் உடனிருந்து காட்டினல்லது நீ சிவத்தைக் காணாய் என்பதாம். இது,
'காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன் கழல் செலுமே '
என்ற ஆசிரியவசனம் அறிவித்தது. (14)
-------------
மலமகலாதவழி காட்டினுங் காணுமாறில்லை என்பது
கண்ணிகழ் படலத் தோற்குக் காட்டினுங் காணா னொன்றுங்
கண்ணிகழ் படல மற்றாற் காட்டிடக் காணு மாபோல்
உண்ணிகழ் மறைப்பு மின்னே யொழிந்ததிவ் வுடலு னக்குத்
திண்ணிய மறைப்பு மன்று தெளிந்திடு மொளியு மன்றாம். 15
இ-ள் : கண் நிகழ் படலத்தோற்கு - கண்ணினிடத்து நிகழும் மறைப்பு நோயுடையானுக்கு, காட்டினும் - இது மரம் இவன் மகன் என்று காட்டினும், ஒன்றும் காணான் - ஒன்றையும் விவேகித்து அறியானாம்; கண் நிகழ் படலம் அற்றான் - அவ்வா றான கண்படலமற்றவன், காட்டிடக் காணுமாபோல் - காட்டக் காண்பது போல, உள் நிகழ் மறைப்பும் இன்னே ஒழிந்தது - உள்ளே உள்ள ஆணவமலத்தால் விளைந்த மறைப்பு இக்கணமே நீங்கிற்று; இவ்வுடல் - வினைக் கழிவிற்காகவும் ஆணவ வலி ஒடுக்கவும் உதவப்பெற்ற இவ்வுடல், உனக்கு திண்ணிய மறைப் பும் அன்று - மாணவகனே! உனக்கு வலியமறைப்பும் அன்று; தெளிந்திடும் ஒளியும் அன்றாம் - பொருளைப்புலப்படுத்தும் ஒளி போல்வதும் அன்றாம் என்றவாறு.
நீ மலத்தில் பிரியாத போது மறைப்பாயும், பிரிந்தபோது ஓவியாயும் உதவும் இருபெற்றித்து என்பதாம். (15)
-----------------
முன்னதற்கு ஏதுமொழிவது
காட்டினாலன்றிக் காணா தென்றுமுன் னோர்கள் செய்யுள்
நாட்டிய தென்னை யென்னினாட்டமற் றவர்க்குக் கோலைக்
கூட்டிய வழியுங் காட்டிக் கொடுப்பவர் போல மாசு
வீட்டிடா தவர்க்குக் காட்டல் விதிவழி பதிய தன்றாம். 16
இ-ள் : முன்னோர்கள் - பூருவகுரவன்மார், காட்டினால் அன்றிக் காணாது என்று - 'உணர்த்தினாலன்றி உணரா வுளங் கள்' என்று, செய்யுள் நாட்டியது என்னை என்னின் - செய் யுளில் நிலைபெறுத்தியதன் காரணம் என்னை என நீ வினாவுவை யாயின், நாட்டம் அற்றவர்க்குக் கோலைக் கூட்டிய வழியும் - பார்வை அற்றவர்க்கு கோலைக் கொடுத்தாலும், காட்டிக் கொடுப்பவர் போல - வழியைக் காட்டும் ஒருவர் இன்றி யமையாதது போல, மாசு வீட்டிடாதவர்க்கு - உயிர்மாசாகிய மலம் அகலாதார்க்கு , காட்டல் - பதியைக் காட்டல், விதி வழி - கன்மாந்தமாம்; பதியது அன்றாம் - ஞானாந்தமாகாதாம் என்றவாறு.
குருடனுக்குக் கொல் கொடுத்தாலும் வழிகாட்டுவான் ஒருவன் வேண்டும்; அதுபோல மலமறைப்பு உடையவனுக்குப் பரம்பொருளைக் காட்டினும் அவன் காணான்; அங்ஙனம் காட் டுதல் முறையுமன்று என்பது கருத்து.
விதி வழி; பதி அது அன்று ஆம்: வேதாகமங்களில் சொல்லப்பட்ட முறைகளின்படித் திட்சை முதலிய கிரியைகளைச் செய்து காட்டியதாம்; அவனருளாலே அவன்றாள் வணங்குவ தன்றாம் . விதியும் பதிவழிதானே! இது ஏலுமோ எனின், காட்டுவாரின்றி, எட்டுத் துணைக்கொண்டு எட்டாத்தொலை போவாரைப்போலச் சுற்றலாக முடியும் என்பதாம். (16)
-------------------
சிவத்துவவியாப்தி சித்திப்பதெப்படி?
விதிவழிக் கில்லை யென்றும் விளங்குயிர்க் குள்ள தென்றும்
பதிநடை பகர்வ தென்னோ படலமே படர்ந்த கட்குக்
கதிர் நடை யின்றாய்க் காட்டுங் கருத்தது போல வீசன்
மதிநடையின்றாய்க் காட்டு மென்று நீ மதித்தி டாயே. 17
இ-ள் : பதிநடை - சிவனது தன்மை , விதிவழிக்கு இல்லை என்றும் - கிரியை முறைகளால் சித்திப்பதில்லை யென்றும், விளங்கு உயிர்க்கு உள்ளது என்றும் - மலநீக்கத்தால் விளக்கம் பெற்ற உயிர்கட்கே உளதாவதாம் என்றும், பகர்வது என்னோ - சொல்வது என்னையோ எனின், படலமே படர்ந்த கட்கு - படலம் மூடிய கண்ணுக்கு, கதிர் நடை இன்றாய் காட்டும் கருத்தது போல - சூரியனியல்பு இல்லையாகவும் காட்டும் தன்மைமட்டுங் கருத்தாதல்போல, ஈசன் - சர்வேஸ்வரன், மதி நடை இன்றாய் காட்டும் என்று - மதிக்கத்தக்க சிவனியல்பு இல்லாமல் காணச் செய்யும் உபகாரத்தை மட்டும் செய்யும் என்று, நீ மதித் திடாய் - நீ எண்ணுக என்றவாறு.
படலம் மூடிய கண்ணுக்குச் சூரியனது ஒளித்தன்மையில்லை யாகவும், சூரியன் தன்னொளியைக் காட்டுவதுபோல, இறைவன் பதிஞானமில்லாத உயிர்களுக்கும் உணர்த்துவன்; ஆனால் உயிர்கள் உணரா என்பது கருத்து.
பதி நடை - பதியாகிய சிவத்தினியல்பு. விதிவழி - ஆகம நெறி; என்றது கன்மாந்தகுரவர்களாற் செய்யப்படும் தீக்கை முதலியனவற்றால், சிவத்துவ வியாப்தி நேரே சித்தியாது; அவைகள் ஞானவாயிலாக இருந்து ஞானத்தைப் பயக்கப் பின்னர் விளையும் என்பது கருத்து. "கிரியையென மருவுமவை யாவும் ஞானங்கிடைத்தற்கு வாயில்'' என்பதையும் உன்னுக.
விளங்கு உயிர் - ஞானாந்தகுரவரால் மலநீக்கம் பெற்று விளங்கும் உயிர். இங்ஙனம் சொல்வது ஏலுமோ எனின், படலம் மூடிய கண்போல்வது மலமூடிய உயிர். அதற்குச் சிவத்தை உணரும் தன்மை இல்லை; ஆனாலும் சிவம் உடனின்று வினைப் போகங்களைக் காட்டி நிற்கும். முத்திநிலையில் உண்மைஞான வாயிலாகத் தன்னை உணர்த்தும் சிவம், பெத்தநிலையில் தனு கரண புவன போகங்களைக் காட்டிநிற்கும் என்பதாம். 14
----------------------
உடலை விளக்கெனல் பொருந்துமா?
விளக்கென வுடலை மிக்கோர் விதித்திட வன்ற தாகக்
கிளத்திட லென்னோ வானிற் கிளர்கதிர் தனைவி ளக்கோ
வளித்திடு மாத வன்ற னடைந்திடாக் கண்போ லாவி
யொளித்திரு ணிற்கப் போக முதவிடு மொளிய தன்றாம். 18
இ-ள் ! விளக்கு என உடலை மிக்கோர் விதித்திட - இவ் வுடலை விளக்கு என்று ஞானிகள் சொல்ல, அன்றதாகக் கிளத் திடல் என்னோ - அங்ஙனன் றெனக் கூறுதல் என்னையோ? குருபர கூறியருளவேண்டும் என்று மாணாக்கன் கேட்க, வானில் கிளர் கதிர் தனை - வானமண்டலத்திற் கிளர்ந்தெழுகின்ற சூரியனை, விளக்கோ அளித்திடும் - இந்தக் கைவிளக்கோ காட்டும்; ஆதவன் தன் அடைந்திடாக் கண்போல் - சூரியனை அடையாத கண்ணைப்போல, ஆவி ஒளித்து - உயிரினிடமாக விறகிற்றீப் போல மறைய நின்று, இருள் நிற்க - ஆணவம் வலியொடு நிற்க, போகம் உதவிடும் - போகத்தை ஊட்டும்; ஒளியது அன்று ஆம் - சிவஞானத்தைப் பயவாதாம் என்றவாறு.
உடல் மலவிருளை நீக்கும் விளக்குப்போல உதவுவது என்று ஞானிகள் சொல்லவும், தேவரிர் அங்ஙனம் கூருமைக்குக் காரணம் என்னையோ என்றார்க்கு, சூரியனைக் கைவிளக்கா காட்டும்; அதுபோல இந்த உடலா சிவனைத் தெரிவிக்கும்; அல்லவே; ஆதலால் சிவன் உயிரினிடமாக வெளிப்படாது நின்று, மலவேகம் இருக்கப் போக நுகர்ச்சியாகிய விளக்கத்தை மட்டும் செய்யும்; ஞானமாகாது என்பது கருத்து. (18)
-----------------
மாயை இறைவற்குச் சத்தியாமா?
சத்தியா மாயை யென்னச் சாற்றிய தென்னை நூல்கள்
புத்தியாய் மறைப்புத் தீர்த்துப் புண்ணியம் புகுத்த லானுஞ்
சித்ததா முலக மெலாஞ் செனித்திடு விக்கை யானு மத்தன்றன் சத்திச் செய்திக் காஞ்செல்வ மாத லானும். 19
இ-ள் : நூல்கள் மாயை சத்தியாம் என்னச் சாற்றியது என்னை - சிவாகமங்கள் மாயையைச் சிவசத்தியென்று கூறியது என்னை எனின், புத்தியாய் மறைப்புத்தீர்த்து - மாயை வித்தியா தத்துவமாய் மலமறைப்பைப் போக்கி, புண்ணியம் புகுத்த லானும் - சிவபுண்ணியத்திற் செலுத்துதலானும், சித்ததாம் உலகம் எல்லாம் செனித்திடுவிக்கையானும் - சித்துப் பிரபஞ் சத்தை யெல்லாம் தோற்றுவிப்பதானும், அத்தன் தன்சத்திச் செய்திக்கு ஆம் செல்வம் ஆதலானும் - சிவசத்தியின் பஞ்ச கிருத்தியங்களுக்கு முதற்காரணமாகிய பொருள் ஆதலானும் சத்தியென்றதாம் என்றவாறு.
மாயை இறைவனுக்குப் பரிக்கிரகசத்தியாய், முதல்வனின் வியாப்பியமாய், மெய்ப்பொருளாய், அருவாய் உள்ளது. இது ஆன்மா கலையால் மலசத்தி நீங்கி ஞானசத்தி விளங்கினும், புத்திதத்துவத்தைப்பற்றி விஷயத்தைப் பகுத்துணரமாட் டாமல் திகைக்குமன்றே; அதனையும் நீக்குதற்கு வித்தையாய் மறைப்பைப் போக்கு தலானும், சித்துப்பிரபஞ்சமாகிய உயிர் களை வினை நுகர்ச்சியின் பொருட்டு உடலொடு கூட்டு தலாகிய செனனத்தைச் செய்வித்தலானும், முதல்வன் செய்யும் படைப் பாதிகட்கு முதற்காரணமாக இருத்தலானும் சத்தியென்னப் பட்டது என்பதாம்.
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் தசகாரியம் புத்தியென்பதற்குப் புத்திதத்துவமாய் என்று கொள்ள லுமாம். செல்வம் - பொருள். (19)
------------------
உடலம் மயக்குமா றெங்கன்?
மயக்கிடு முடல மென்று மறைவல்லோ ருரைப்ப தென்னை
யியக்கிடுங் கோல தாகி யிசைந்திடுங் குருடு போலத்
தியக்கிடு முடல தாகிச் சேர்ந்துபொய் மெய்ய தாக
முயக்கிடு மலம தற்றான் முன்னிலை மயக்க மின்றாம். 20
இ - ள் : உடலம் மயக்கிடும் என்று - உடம்பு மயக்கும் என்று, மறை வல்லோர் உரைப்பது என்னை - சைவத்திறம் அறிந்த ஞானிகள் சாற்றுவது என்னை , இயக்கிடும் கோலது ஆகி இசைந்திடும் குருடு போல - தன்னை நடத்தும் கோலின் வழியே பொருந்தும் குருடன் போல, தியக்கிடும் உடலதாகிச் சேர்ந்து - தியங்கச் செய்யும் உடலாகி ஆன்மாவைப் பொருந்தி, பொய் மெய்யதாக முயக்கிடும் - பொய்யான (நிலையற்ற) பிரபஞ் சத்தை மெய்யெனக்கொண்டு தழுவச்செய்யும்; மலம் அற்றால் - மலம் நீங்கின், முன்னிலை மயக்கம் இன்றாம் - உடம்பிற்கு முதல் நிலையாகிய மயக்கம் இல்லையாம் என்றவாறு.
கையில் கோலிருந்தாலும் குருடன் மேட்டைப் பள்ள மாகவும் பள்ளத்தை மேடாகவும் மயங்கி நடக்கின்றான். அது போல உடல் பெத்தான் மாக்களை மயக்கி நிற்கிறது. மலநீங்கிய முத்தான் மாக்களாயின் மயக்காது என்பதாம்.
'உடலம் மயக்கும்' என்ற ஆகம வாக்கியத்தின் பொரு ளெல்லை, மலநீக்கம்வரையில் என்பது விளக்கப்பெற்றது. (20)
------------------
இதுவுமது
கோலதி விச்சை கூரக் கொடுத்தது குருடே யாமான்
மாலது கலாதி தன்னின் வந்தது மலத்தா லன்றோ
கோலது போகந் துய்க்கக் கொடுத்தது நடையாய்க் கன்மத்
தாலதில் விகார மாகி யலை தலான் மயக்கு மென்பர். 21
இ - ள்: கோலதில் இச்சை கூரக் கொடுத்தது குருடே யாம் - கோலில் விருப்பமிகக் கொடுத்தது குருடனுடைய குருட்டுத் தன்மையேயாம், கலாதி தன்னின் மாலது வந்தது மலத்தால் அன்றோ - கலை முதலான தத்துவங்களில் மயங்குவது ஆணவமலத்தாலல்லவா, போகம்துய்க்கக் கொடுத்தது கோலது. வினைப்போகங்களை நுகர்தற்குக் கருவியாய்க் கொடுக்கப்பெற்ற கோல்போல்வதாகிய உடல், நடையாய் கன்மத்தால் அதில் விகாரமாகி - நடத்தற்றொழிலாய் கன்மத்தால் பரிணாமப்பட்டு, அலைதலால் - வருந்துதலால், மயக்கும் என்பர் - உடல் ஆன் மாவை மயக்கும் என்பர் என்றவாறு.
குருடன் தன் கை கால்களை விடக் கோலிடத்தில் பற்றுக் கொள்வான், காரணம் அவன் குருட்டுத்தன்மை. அதுபோல் கலாதி தத்துவங்களில் பற்று மிக்கது மலத்தின் மறைப்பால் என்பதாம்.
துணையாகக் கொடுக்கப்பெற்ற கோல் நடையாய் பலவேறு அச்சங்களை விளைவித்து மயக்குவதுபோல, வினைக் கழிவிற் காகக் கொடுக்கப்பட்ட உடல் ஆகாமிய சஞ்சித வினைகட்குக் காரணமாய் மயக்கும் என்பதாம்.
அதில் விகாரமாகி : ஆகாமியம் சஞ்சிதம் எனப் பரிணாமப் பட்டு. (21)
---------------
கலாதிதத்துவங்களின் சரியல்பு
இருட்டதால் விளக்கைக் கையா லெடுத்திடு வார்கள் கட்குப்
பொருட்டர வேண்டு மாபோற் பொருந்திய மலத்தி னாலே
தெருட்டிடுங் கலாதி வந்து சேர்பொரு ளனைத்துங் காட்ட
லிருட்டல பதார்த்தம் போலா மிருந்தரு ளெழுந்த போது. 22
இ-ள்: பொருந்திய மலத்தினாலே - பொருந்திய மாயை யாகிற மலத்தாலே, தெருட்டிடும் கலாதி வந்து சேர் பொருள் அனைத்தும் காட்டல் - தெளிவிக்கும் கலை முதலான தத்துவங்கள் வந்து ஆன்மாவோடு சேர்ந்த பொருள்களனைத்தையும் காட்டல், இருட்டதால் விளக்கைக் கையால் எடுத்திடுவார்கள் கட்கு - இருளாயிருப்பதால் விளக்கைக் கையால் எடுப்பவர்கள் கண்ணுக்கு, பொருள் தர வேண்டுமாபோல் - வேறு பொருள்களைத் தரவேண்டுவது போலாம்; அருள் எழுந்தபோது - சிவனருள் சீவனிடமாக வெளிப்பட்டபோது, இருட்டல - அக்கலாதிகள் இருளல்ல; பதார்த்தம் போலாம் - பொருள்கள் போல்வதாம் என்றவாறு.
பெத்தகாலத்து இருள்போலிருந்த கலாதிகள், முத்திக் காலத்து அருள் வெளிப்பட்ட நிலையில் பொருள்கள் போல்வ தாம் என்பது கருத்து. அஃதாவது பெத்தகாலத்து, சிறிதே விளக்கந்தந்த தன்னையும் அறியாதபடி மலத்துள் மலமாய் நின்ற கலாதிகள், அருட்காலத்துப் பொருளாய்ப் புலப்பட்டன என்பதாம். இது கலாதிதத்துவ தரிசனம் கூறியது.
உடல் கலாதி தத்துவங்களுக்கும், இருள் ஆணவமலத் திற்கும் உவமமாம். (22)
----------------
உடல் விளக்காம் என்பதை வேறொருவகையான் விளக்குவது
மறைத்திடு மிருட்ட கன்றான் மன்னிய விளக்குக் கட்கு
நிறுத்திடும் பதார்த்தத் தொன்றாய் நிற்றலா லிருட்டோ டொன்றா
யறுத்திடுங் கதிரைக் காட்டா தாதலான் மயக்க மாக
வெறுத்திடு முடலு மிவ்வா றாமென விடுவர் மிக்கோர்.
இ-ள் : மறைத்திடும் இருட்டு அகன்றால் - பொருள்களைப் புலப்படாதவாறு மறைக்கும் இருட்டு நீங்கினால், மன்னிய விளக்கு - பொருந்திய விளக்கானது, கட்கு - கண்ணுக்கு, நிறுத் திடும் பதார்த்தத்து ஒன்றாய் நிற்றலால் - புலனாக நிற்கும் பொருள்களில் ஒன்றாக இருப்பதால், இருட்டோடு ஒன்றாய் - தானும் இருளோடு ஒன்றாகவேயிருந்து, அறுத்திடும் கதிரைக் காட்டாது - அவ்விருளையறுக்கும் ஒளிக்கற்றையைக் காட்டாது; ஆதலால் மயக்கம் ஆக - ஆதலால் மயக்கம் தருவதாக (இருக்கும்) அதுபோல, வெறுத்திடும் உடலும் - ஞானிகளால் வெறுக்கப்படுகின்ற உடலும், இவ்வாறாம் என - இத்தன்மைய தாம் என, மிக்கோர் விடுவர் - மேலோர் அதன்கண்வைத்த பற்றினை விடுவர் என்றவாறு.
விளக்கு வர இருள் அகலும்; இருள் அகலின் இருளை அகற்றிய விளக்கும் அங்குள்ள ஏனைய பொருள்கள் போல உணரப்பட்டு இருள் போலவே அறியப்படாததாக இருக்கும்; இருளை யோட்டிய தன்னையும் காட்டாது நிற்கும்; ஆதலால் விளக்கும் மயக்குவது. அதுபோல உடலும் இருள் நீங்கிய காலத்து உறுதுணையாக இருந்து இரவென்றுணரப்பட்டமை யின் மயக்குவதாம் என்பது கருத்து. கதிர் - சுடர் , (23)
-------------
தடத்தம் சொரூபமென இயல்பு இரண்டாமெனல்
இயல்பது விரண்ட தாக வியம்புவ ரெப்பொ ருட்கு
மயலது வன்னி யத்தின் மன்னிடல் பொதுவ தாகு
மயலதிற் சார்த லின்றி யடங்கறன் னியல்ப தாகு
முயலுமுப் பொருட்குந் தத்த முறைமையைப் பகுத்துச் சொல்வாம். 24
இ-ள் : எப்பொருட்கும் - உலகிலுள்ள எவ்வகைப்பட்ட பொருளுக்கும், இயல்பது இரண்டதாக இயம்புவர் - இலக் கணம் இரண்டு என்று சொல்வர், மயலது - மயக்கந்தருவதாய், அன்னியத்தின் மன்னிடல் பொதுவது ஆகும் - வேறு பொருளி னிடத்தும் அவ்விலக்கணம் நிலை பெறுதல் பொதுவியல்பாம், அய லதில் சார்தல் இன்றி - வேறொன்றிற் சென்று பற்றாது, அடங்கல் தன்னியல்பது ஆகும் - உரிய ஒரு பொருளிலேயே அடங்கி யிருப்பது சிறப்பியல்பாம், முயலும் முப்பொருட்கும் தத்தம் முறைமையைப் பகுத்துச் சொல்வாம் - முயற்சிக்கும் பதி பசு பாசம் என்னும் மூன்று பொருள்களுக்கும் உரிய தத்தம் முறைகளைப் பிரித்துச் சொல்வாம் என்றவாறு.
பொதுவியல்பைத் தடத்தம் என்றும், சிறப்பியல்பைச் சொரூபம் என்றும் வடநூலார் வழங்குவர். உலகில் உள்ள எல்லாப் பொருள்களுமே, பொதுவியல்பும் சிறப்பியல்புமாகிய இருவகையிலக்கணமுடையன. ஆதலின் இப்பாகுபாடு பற்றித் திரிபதார்த்த இலக்கணங்களைத் தெரிவிப்பாம் என்பதாம். எப்பொருட்கும் - இயங்குவ நிற்பவாகிய எல்லாப்பொருளுக் கும். முயலும் முப்பொருள் - பசுவை மலவாதனை தாக்காது எடுத்துக் காக்கமுயலும் பதிப்பொருளும், நன்றி மறவாதே பதியை அடையமுயலும் பசுப்பொருளும், பசுக்களால் நீக்க முயற்சிக்கப்படும் பாசப்பொருளும் ஆகிய முப்பொருள்களை . முயலும் முப்பொருள் என்ற அடைமொழி பாசத்திற்குச் செல் லும் போது செயப்பாட்டு வினைத்திரிபாகக் கொள்ளுக; பாசம் சடமாதலின். 24
--------------------
தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி
தத்துவ மனைத்து நோக்கித் தனித்தனிச் செயல்கள் காண்ட
லொத்ததன் னுருவ மாகு மொன்றையொன் றுணரா தீது
சத்தியஞ் சடமே யென்னத் தானறிந் திடுதல் காட்சி
நித்திய மன்று சின்னா ணீங்குத லென்றல் சுத்தி. 25
இ-ள்: தத்துவம் அனைத்தும் நோக்கித் தனித்தனிக் செயல்கள் காண்டல் ஒத்த தன் உருவமாகும் - மண்முதல் குடிலை யிறாகிய தத்துவங்களனைத்தையும் கண்டு அத்தத்துவங்களின் செயல்களைத் தனித்தனியே காண்டல் ஒத்த தத்துவரூபமாகும். ஒன்றை ஒன்று உணராது ஈது சத்தியம் சடமே என்ன தான் அறிந்திடுதல் காட்சி - இத்தத்துவங்கள் ஒன்றை ஒன்று அறியாது சத்தியமாக இது அறிவற்ற பொருளே என்று ஆன்மா வாகிய தான் அறிந்து கொள்ளுதல் தத்துவக்காட்சியாம், நித்திய மன்று சின்னாள் நீங்குதல் என்றால் சுத்தி - இத்தத்துவங்கள் நித்தியப் பொருள்கள் அல்ல சின்னாட்களில் அழியுந்தன்மையான என்றறிதல் தத்துவசுத்தியாம் என்றவாறு.
தத்துவங்களையும், அவற்றின் செயல்களையும் தனித்தனி யறிதல் தத்துவரூபமாம். தத்துவம் சடம் என்றறிதல் தத்துவ தரிசனம், தத்துவம் -அநித்தியம் என்றறிதல் தத்துவசுத்தி (25)
----------------
ஆன்மரூபம்
அனைத்தையுந் துறந்தோ மிந்நாள் யாவர்க்கு மேனா மென்ன
நினைத்திட லுயிர்க்கு ரூப நீநெடு நாள் தாகச்
செனித்தனை நரகினின்றுந் திளைத்தனை தெளிந்து சற்று
முனைத்தனி நினைந்த தில்லை யுறுஞ்செய லருள தென்றோர். 26
இ-ள் : உயிர்க்கு ரூபம் - ஆன்ம ரூபமாவது, அனைத்தை யும் துறந்தோம் - தத்துவ தாத்து- விகங்களனைத்தையும் நீங்கி னோம், நாம் இந்நாள் யாவர்க்கும் மேல் (ஆம்) - நாம் இப்போது யாவர்க்கு மேலானோம், என்ன நினைத்திடல் - என்று எண்ணுத லாம்; நீ நெடுநாளதாக செனித்தனை - நீ நெடுநாட்களாகப் பிறந்திறந்து பிறந்து வருகின்றாய், நரகினின்றும் திளைத்தனை - செய்த பாவத்திற்கீடாக நரகத்தில் முழுகிக்கிடந்தாய், (இந் நிலையினின்று) தெளிந்து சற்றும் உனை தனி நினைந்தது இல்லை - தெளிந்து சிறிதும் உன்னைத் தனியே சித்சத்தாக எண்ணிப் பார்த்தாயல்லை; உறுஞ்செயல் - நீ பொருந்தும் செயல்கள் அனைத்தையும், அருளது என்று ஓர் - திருவருளுடையது என்று அறிவாயாக என்றவாறு.
தனுகரணாதிகளைச் சடம் என்றும், தன்னைச் சித்தென்றும் உணர்தல் ஆன் மரூபம். இதனையே முற்கூறியவண்ணம் விரித்து விளக்கிக்கூறுதல் காண்க . ஸ்ரீதட்சிணாமூர்த்திதேசிகர் அருளிய
தசகாரியத்திலும்,
" ஆசறவே தன்னறிவாய் மூன்றுமுண்டாய்த் தோன்றுங்கால்
அதுரூபம் ஆங்கறிவற் றுனைக்காண்டல் தெரிசனமாம்''
எனவருதல் காண்க. ''பாசமதகல ஞானம் பற்றல்'' என்பது உமாபதி சிவத்தின் திருவாக்கு, (26)
-------------------
ஆன்மதரிசனம்
அழிந்திட நினைமறைத்த வகவிரு ளிரிய மேலே
யெழுந்திடு மிச்சை மூன்று மிரிந்திட நின்பா லொத்து
ளழுந்திடல் காட்சி யாகுஞ் சொப்பன மருள தெங்கே
யெழுந்திடு நினைவ டக்கி யிசைந்துனைத் தந்த தோரே. 27
இ-ள் : அழிந்திட - கெட, நினை மறைத்த - ஆன்மாவாகிய உன்னை மறைத்த , அக இருள் இரிய - மனவிருளாகிய அறியாமை கெட , மேலே - மேல், எழுந்திடும் இச்சை மூன்றும் - விளைகின்ற இச்சையாதி மூன்றும், இரிந்திட - நீங்க, நின்பால் ஒத்து உள் அழுந்திடல் - உன்னிடம் இருவினையும் ஒத்து நிற்க உனக்குள் நீயே அழுந்தியறிவது, காட்சியாகும் - ஆன்மதரிசனம் ஆகும்; சொப்பனம் அருளது எங்கே எழுந்திடும் நினைவு அடக்கி - இத்தகைய சொப்பனமானது உன்னை அறியத்தந்த திருவருள் எங்கே விளைந்தது என்னும் நினைவையும் அடக்கி, இசைந்து - உன்னோடு பொருந்தி, உனைத் தந்தது ஓர் - உன்னைக்காட்டிற்று என்று அநுபவித்துப்பார் என்றவாறு.
நினை அழிந்திட மறைத்த அகவிருள் இரிய நீங்க: இறைவ னாலே உதவப்பெற்ற அறிவிச்சை செயல்களும் கெட, சிவம் உன்னோடு ஒத்து விளங்குகின்றபோது, நீ, தடையாகிய பாசமு மல்லேன்; என்னால றியத்தக்க பதியுமல்லேன்; அறிபவன் நான் என உணர்தல் ஆன்மக்காட்சியாம்.
'' சத்து அசத்து அறிவது ஆன்மா; தான் சத்தும் அசத்துமன்று
நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடு மிரண்டன் பாலும்
ஒத்து உடல் உதித்து நில்லாது உதியாது நின்றிடாது
வைத்திடும் தோற்ற நாற்றம் மலரினின் வருதல் போலும்''
என்ற சித்தித்திருவிருத்தத்தில், மலரின் மணம் மலர்போல உருவமாக விளங்கித் தோன்றாமலும், மணம் என்பது ஒன்று இல்லையென்று சொல்ல முடியாமலும், அம்மலரிடத்திலேயே அடங்கித் தோன்றுவது போல, சத்து அசத்தாகிய இரண் டினும் வேறாயுள்ள ஆன்மா, சத்தோடு சார்ந்து ஈத்தாயும்
அசத்தோடு சார்ந்து அசத்தாயும் அறியப்படும் என விளக்கப் பெறுதல் காண்க. இவ்வண்ணம் உணர்தலே ஆன்மதரிசன மாம். அங்ஙனம் காணுகின்றபோது, இதற்கு உபகாரப்படுகிற அருள் எங்கேவிளைந்தது என்ற நினைவையும் அடக்கியாராய்ந்து பார்க்க. அந்த நிலையே சொப்பனமாம், சொப்பனம் எனப் பொதுப்பட அருளினும், ஆன்மதரிசனம் செய்தவனுக்குக் கேவலசொப்பனம் நிகழாதாகலின் ஈண்டுக் கூறியது முறையே சாக்கிர சொப்பனத்தையும், அதற்குமேலனுபவ மாகிய மின்மலசொப்பனத்தையும் என அறிக. (27)
----------------
சுழுத்தி
இருந்திடு மகம தாக வெழுந்திடு நினைவ டக்கித்
தெரிந்திடுந் தனையி ழந்து திருவரு ளிச்சை கூரப்
பொருந்திட லருளி னிச்சை பூண்டது சுழுத்தி யாகுந்
திருந்திட வதனிற் செய்தி செய்திட வேண்டு மெற்கே. 28
இ - ள் : இருந்திடும் - இருக்கின்ற, அகம் அது ஆக எழுந் திடும் நினைவு - நான் என்று எழுகின்ற நினைவினை, அடக்கி தெரிந்திடும் தனை இழந்து - சத்தையும் அசத்தையும் அறிகின்ற ஆன்மாவாகிய தன்னையும் இழந்து, திருவருள் இச்சை கூர பொருந்திடல் - திருவருளின்கண்ணே பற்றுமிக்குப் பொருந்துக; அருளின் இச்சை பூண்டது - திருவருளின்கண்ணே பற்றுக் கொண்டதாகிய இந்நிலை, சுழுத்தியாகும் - சுழுத்தி அவஸ்தை யாம்; எற்கு - எனக்கு, அதனில் திருந்திட - அந்நிலையிலிருந் தும் திருத்தமுற, செய்தி செய்திடவேண்டும் - சில செயல்களைச் செய்திடவேண்டும் என்றவாறு.
இருந்திடும் அகம் : பதியொடு சார்ந்து தன்னை அறிகின்ற காலத்து உளதாகின்ற நான் என்னும் உணர்வு. அதனை அடக்கிய காலத்து அறிகின்ற தன்னையும் இழக்கின்றநிலை யெய்துமாகலின் தனையிழந்து என்றருளியது.
திருவருள் இச்சை கூரப் பொருந்திடல் : இங்ஙனம் உபக ரித்த திருவருளில் இச்சை மிகப் பொருந்துக; என்றது தானென்னும் முனைப்பு அடங்கித் திருவருளை முற்பட்டிருத்தல். இந்த நிலையே சுழுத்தி எனப்படும். இதிலிருந்தும் ஆன்மா உயர் நிலை எய்தவேண்டுமானால் குருநாதனாகிய எனக்குச் சில தீட்சாக் கிரியைகளைச் செய்யவேண்டிய இன்றியமையாமைநேரிடும்.
சித்தம் பிராணன் புருடன் என்னும் மூன்று கருவிகளுடன் இதயத்தானத்தை அடைந்து நிற்கும் கேவல சுழுத்திநிலை. போல, சுத்தவித்தை ஈச்சுரம் சாதாக்கியம் என்னும் மூன்றும் நீங்காமல் நீங்கப்பெற்று, திருவருளையே நாடிநிற்றலின் இது நின்மலசுழுத்தியாயிற்று. (28)
-----------------
துரியம்
உலகினை விளக்கா நிற்கு முயர்கதி ரொளிய தாகி
யிலகிய கண்ணச் செய்தி விளக்கிடா போல ஞான
நிலவிடு முயிரச் செய்தி நிறுத்திடா வதுவே யாகக்
குலவிடல் துரியஞ் சுத்தி கொள்ளுமேற் சிவம தாகும். 29
இ-ள் : உலகினை விளக்கா நிற்கும் உயர் கதிர் - சடப் பொருள்களை விளக்கும் உயர்ந்த சூரியனுடைய, ஒளியது ஆகி இலகிய கண் - ஒளியினை உடையதாகி விளங்கிய கண்ணா னது, அச்செய்தி விளக்கிடாபோல - அங்ஙனம் விளக்கி நிற்கும் செய்தியை விளக்காதவாறுபோல, ஞானம் நிலவிடும் உயிர் - அறிவு விளங்கும் ஆன்மா, அச்செய்தி நிறுத்திடா - அங்ஙனம் அறியும் செயலால் அறிவியாது, அதுவேயாகக் குலவிடல் - அதுவாக விளங்குதலே, துரியம் - துரியமாம்; சுத்தி கொள்ளு மேல் சிவமது ஆகும் - இது சுத்த நிலை அடையுமாயின் சிவமாம் என்றவாறு.
சூரிய ஒளியைப் பெற்ற கண், காணுதலையன்றித் தானும் ஒளியைச்செய்து காட்டா தவாறுபோல, அறிவுவிளக்கம் பெற்ற ஆன்மா அறியுமேயன்றி அறிவிக்காது. ஆனாலும் சிவமேயாக விளங்கு தலாலே துரியநிலையாம். துரியநிலையடைந்த ஆன்மா சிவமேயாகும் என்பது கருத்து.
உலகினை விளக்கா நிற்கும் உயர் கதிர்: அற இருளைப் போக்கி, இவை கடம், இவை படம், இவை வீடு, இவை மாடு எனப் பொருள்களைப் புலப்படுத்தும் விண்ணில் விளங்கும் புறச்சூரியன்.
அதன் ஒளிய தாகி இலகிய கண் - அச்சூரிய ஒளியைப் பெற்று விளங்கிய கண். கண்ணிற்கு ஒளி இயற்கையாயினும் காணுதலன்றிக் காட்டாது; அவ்வொளியும் புற ஒளியாகிய சூரிய ஒளி கூடு தலால் தோன்றியது என்பதாம்.
அச்செய்தி - அத்தொழில்; காட்டும் தொழில், காணு கின்ற கண் தன்னைக் காணமாட்டாது; தனக்குக் காட்டாய் உண்ணின்று செலுத்தும் உயிரையும் காணமாட்டாது. அது போலத் தனக்குவேறாகிய தத்துவ தாத்துவிகங்களைத் தற்போ தத்தால் அறிகின்ற உயிர், தன்னையும் அறியாது; தன்னைப் பிரேரிக்கின்ற தலைவனையும் அறியாது. ஆயினும் கண்போல் உயிர் சடமன்மையின் கண்ணிடத்து உயிர் நிற்குமாறுபோ லன்றி உயிர்க்குயிராக உண்ணின்று உணர்த்துவன் முதல்வ னாகலான் அவனை உன்னறிவின்கண்ணே காண்க என்பதாம். இதனை,
”காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளந் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன் தான் உள்ளத்திற் காண்''
என்னும் வெண்பாவால் அறிக.
சித்தம் ஒன்றும் இதயத்தில் நிற்க, பிராணன் புருடன் என்னும் இருகருவிகளுடன் கூடி ஆன்மா நாபித்தானத்தை யடையும் நிலையாகிய கேவலதுரியம்போல, ஆன்மா சுத்தவித்தை ஈச்சுரம் சாதாக்கியம் சத்தி என்னும் நான்கும் நீங்காமல் நீங்கியநிலையில், சிவத்தோடு ஒன்றியிருத்தலின் பின் மல துரிய மாயிற்று. இதனையே 'துரியம் சுத்தி கொள்ளுமேல் சிவம தாகும்' என்றருளியது. துரியஞ்சுத்தி - நின்மல துரியர். (29)
-----------------
மேலதற்கோர் ஐயமறுத்தல்
ஓங்கிய ஞானந் தன்னி லொடுங்கலே யன்றி நேயந்
தாங்குதற் கில்லை யென்னிற் றனையறிந் திட்ட தின்றாம்
வாங்கியே சிவத்தி லுன்னை வைத்தது மதிய தாகு
நீங்கலோ வருட்கு நேய நிகழ்த்திட வேண்டு மெற்கே. 30
இ - ள் : ஓங்கிய ஞானம் தன்னில் ஒடுங்கலே அன்றி - உயர்ந்து விளங்கிய ஞானத்தில் அடங்கியிருத்தலேயல்லாமல், தாங்குதற்கு நேயம் இல்லை என்னில் - ஞானத்தைத் தாங்கு தற்கு அறியப்படுவதாகிய நேயம் என்பதொருபொருள் இல்லை என்று நீ சொல்வாயானால், தனை அறிந்திட்டது இன்றாம் - ஆன்மா தன்னையும் அறிந்தது இன்றாய் முடியும்; உன்னை வாங் கியே சிவத்தில் வைத்தது மதியது ஆகும் - மலத்திற்கிடந்த உன்னை யெடுத்துச் சிவத்திற் சேர்ப்பித்தது அந்த ஞானமாகும்; நீங்கலோ அருட்கு நேயம் - அதனைவிட்டு நீங்குதலோ திரு வருளுக்கு ஞேயமாவது?, எற்கு நிகழ்த்திட வேண்டும் - எனக்கு அதனைத் தெரிவித்தருளவேண்டும் என்றவாறு.
ஓங்கிய ஞானம்: உயிரினிடமாக விளக்கம் பெற்ற சிவ ஞானம். ஞானத்தில் ஒடுங்கலே துரியா தி தமாம்; ஞேயப் பொருள் ஒன்று வேண்டாம் என்பாரை மறுத்து, ஞேயமில்லை யெனில், ஞா துருவாகிய நீயும் இல்லையாம்; ஆகவே, ஆன்ம தரிசனமுமின்றாம். ஞானம் செய்த பரம உபகாரம் என்னையோ வெனின், மலத்தைச் சார்ந்து மலமாயிருந்த உன்னை வாரியெடுத் துச் சிவன் திருவடிகளில் சேர்த்ததே ஆம். அங்ஙனமாக அத் திருவருளுக்கு ஞேயம் என்பதொரு பொருளில்லை என்று அதனை விட்டுப் பிரிதலோ ஏற்றது? அதனை எனக்கு விரித் துரைப்பாயாக என்பது கருத்து.
அறிகருவியாகிய ஞானம் அறிபவனிடத்தில் அறிந்தபின் ஒடுங்க, அவன் ஞேயத்து அழுந்து தலே அதீதமாம் என்பதை அறிவித்தவாறு. இதனைப் பின்வரும் செய்யுளில் ஓர் உவமை காட்டித் தெளிவித்தருளு- கின்றார்கள். (30)
---------------
இதுவுமது
கிரணமக் கதிர தாகா கிளர்கதிர் கிரண மாகா
அரணது போல வீசன் கருணையா மருளு மொப்பாங்
கரணமே யுனக்க தன்றாய்க் காட்டிட வுதிக்கு நேய
மரணமு மிரிய வொன்றாய் மன்னுத லதீத மாகும். 31
இ - ள்: கிரணம் அக்கதிரது ஆகா - கிரணங்கள் சூரியன் ஆகா, கிளர் கதிர் கிரணம் ஆகா - விளங்குகின்ற சூரியன் கிரணங்கள் ஆகா, அரண் - கிரணங்களுக்குக் கதிர் உறைவிடம்; அதுபோல ஈசன் கருணையாம் அருளும் ஒப்பாம் - அதனைப் போல ஈசனும் அவன் கருணையாகிற திருவருளும் தம்முள் அவற் றிற்கு ஒப்பாம்; கரணமே அது அன்றாய் உனக்குக் காட்டிட - அந்தக்கரணங்கள் அங்ஙனம் அன்றாக உனக்குக்காட்ட, நேயம் உதிக்கும் - நேயம் தோன்றும்; (அப்போது) நீ மரணமும் இரிய ஒன்றாய் மன்னுதல் - மரணம் நீங்க நேயத்தோடு ஒன்றாகி நிலைபெறுதலே, அதீதமாகும் - துரியாதீதமாம் என்றவாறு.
கிரணத்திற்கும் கதிருக்கும் உள்ள தொடர்பு குணகுணி சம்பந்தம். அருள் குணம்; ஈசன் குணி. உனக்கு உடனாய்ப் பொருள்களை விளக்கிய அந்தப் பாசஞா னங்கள், தாம் ஆன்மா அல்லவா தலை விளக்கிக்காட்ட உன்னால் அறியப்படுபொரு ளாகிய சிவம் தோன்றும்; அதனோடு நித்தமாய் ஒன்று தலே துரியாதீதமாம். பாசத்தோடு ஒன்றிப் பாசமாய் இருந்த ஆன்மாவுக்கு, கரணங்கள், பாசம் நீயல்லையென உணர்த்த, ஆன்மா சிவத்தோடு ஒன்றும்; அதுவே துரியாதீதமாம் என்றவாறு. இதனை,
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே''
என்னும் மெய்கண்டான் ஆகமம் கொண்டும் தெளியலாம். இதில், உணர்த்தவிட்டு என்பது, 'உனக்கு அது அன்றாய்க் காட்டிட' என்பதனானும், அன்னியமின்மையின் அரன் கழல் செலும் என்பது, 'உதிக்கும் நேயம், மரணமும் இரிய ஒன்றாய் மன்னு தல்' என்பதனானும் விளக்கப்பெற்றன. (31)
---------------
சிவமாந்தன்மை
இகழ்ந்திடு மலம் கற்றி யிலங்கிய வுயிரை வாங்கி
மகிழ்ந்திடக் கருணை யுள்ளே வைத்தத னியல்பு சற்றுந்
திகழ்ந்திடா தடக்கி நிற்ற றெளிவுறு சிவமே யாகு
நிகழ்ந்திடு முருவ மாதி நிலைமையு மிதனுட் சொல்வாம். 32
இ - ள் : இகழ்ந்திடும் மலமகற்றி - இகழப்படும் மலத்தை நீக்கி, இலங்கிய உயிரை வாங்கி - பரிபாகமுற்ற ஆன்மாவை எடுத்து, மகிழ்ந்திட - நித்தியானந்தத்தில் இருக்க, கருணை உள்ளே வைத்ததன் இயல்பு - திருவருளை ஆன்மாவினுள்ளே வைத்ததன் இயல்பானது, சற்றும் திகழ்ந்திடாது அடக்கி நிற்றல் - சிறிதும் வெளிப்படாதவாறு அடக்கிச் சிவத்தினிடம் நிலைபெறுதலே, தெளிவுறு சிவமேயாகும் - தெளிந்த சிவமாம் தன்மையாம்; நிகழ்ந்திடும் உருவம் ஆதி நிலைமையும் - சிவத்தி னிடமாக நிகழும் சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவ போகம் என்ற நான்கு நிலைமைகளையும், இதனுட் சொல்வாம் - இங்குக் கூறுவாம் என்றவாறு.
இகழ்ந்திடும் மலம் : மலம் சடமா தலின், ஞான நூல்களா லும் ஞானியர்களாலும் இகழப்படும் எனச் செயப்பாட்டுவினை யாக்கிப் பொருள் கொள்க.
இலங்கிய உயிர்: பசு பாச ஞானங்கள் நீங்கிச் சிவஞானம் பெற்று விளங்கிய உயிர். வாங்கி - சேற்றிற்புதைந்த சிறுவனை வாரி எடுத்ததுபோல, மல அளற்றினின்றும் எடுத்து. மகிழ்ந்திட - வாசனையாகவும் மலகன் மங்கள் தாக்காமையால் நித்தியானந்தத்தில் என்றும் திளைக்க.
கருணை உள்ளே வைத்து - திருவருள்வியாபகத்தில் வியாப் பியமாக ஆன்மாவை வைத்து. அதனியல்பு சற்றும் திகழ்க் திடாது அடக்கி - ஆன்மாவின் குணங்கள் சிறிதும் வெளிப் படாதபடி அடக்கிநிற்றல்; அதுவே சிவமாம். (39)
----------------
சிவரூபம், சிவதரிசனம்
பித்ததா யுளத்தி னின்ற பிரிவிரு ளகல ஞான
வித்ததாய் நிற்கும் வீரம் விட்டரு ளிச்சை மேவ
வைத்தது ரூப மாகும் வருமருட் செயல தாக
வொத்தது காட்சி யாகு முயர் சிவ மதற்குத் தானே. 33
இ-ள் : பித்ததாய் - மயக்குந்தன்மையதாய், உளத்தின் நின்ற பிரிவு இருள் அகல - ஆன்மாவினிடமாக நின்ற பிரிவுப்படும் இருளானது நீங்க, ஞான வித்ததாய் நிற்கும் வீரம் விட்டு - ஞானத்தை அறிபவனாய் நிற்கும் வீரத்தையும் நீங்கி, அருள் இச்சை மேவ வைத்தது - திருவருளின் இச்சைவழியே ஆன்மா பொருந்தவைத்தது, ரூபம் ஆகும் - சிவ ரூபமாகும்; வரும் அருட் செயலதாக - தன்பால்வரும் செயல் அனைத்தும் திருவருளின் செயலேயாக, ஒத்தது - ஒத்து விளங்குவதாகிய, உயர் சிவம் - சிவபரம்பொருள், அதற்குத் தானே காட்சியாகும் - ஆன்மாவிற் குத் தானே தரிசனமாம் என்றவாறு.
படலம் மறைத்த கண் ஒளி அறியாவாறுபோல ஆணவ மலம் பித்தாய் மறைத்து நிற்கின்றது என்பதும், அதனின் நீங்க ஆன்மா, ஞான வித்தாய் நிற்பன் என்பதும், அந்த வீரத் தையும் விட்டுச் சிவனருளில் இச்சை மேவவைத்ததே சிவரூப மென்பதும், எல்லாவற்றையும் திருவருளின் செயலாகக் காண் டலே சிவதரிசனம் என்பதும் தெரிவிக்கப்பெற்றன.
பிரிவு இருள் : பிரிவு செய்யத் தகும் இருள். ஆணவம் சகசமலமாயினும், ஆன்மாவின் வேறாய் வலி ஒடுங்கி மறைவதும் உண்டா தலின் பிரிவு இருள் அகல என்று அருளிச்செய்தபடி.
ஞானவித்து : ஞானத்தை அறிந்தவன். ஞானத்தின் விதையென்று கூறலும் ஆம். ஞானவித்த தாய் நிற்கும் வீரம் என்றது அறிவான் ஒருவன் உண்டு என்கின்ற அதாவது நான் என்கின்ற முனைப்பும் அற்று என்பதாம்; அருளிச்சை மேவ வைத்ததாவது அவனருளால் அவன் தாளை அடைய விரும்புவ தாம். ஆகவே சிவனருளை விரும்புதல் சிவரூபம்; எல்லாம் சிவன் செயல் என்றறிதல் சிவக்காட்சி என்பதாம். (33)
-------------
சிவயோகம், சிவபோகம்
சத்தியின் செயல்க ளெல்லாந் தற்சிவ மதனுக் கின்றா
யொத்திட லுணர்வ ளித்த லுயர்சிவ யோக மாகும்
பித்தது வாகிச் சற்றும் பின்னம தற்றுத் தன்னுள்
வைத்துயிர்ப் போக மாக வளர்தலா ராமை தானே. 34
இ-ள்: சத்தியின் செயல்களெல்லாம் - சத்தியின் செயல்க ளனைத்தும், தற்சிவம் அதனுக்கு இன்றாய் - சிவத்துக்கு இல்லை யாக, ஒத்திடல் உணர்வு அளித்தல் - ஒத்திருத்தலும் ஞானத்தை நல்குதலும் ஆகிய இவையிரண்டும், உயர் சிவ யோகம் ஆகும் - உயர்ந்த சிவயோகம் ஆகும்; பித்தது ஆகி - சிவத்தை அன்றிப் பற்றப்படுவதொரு பொருளின்மையின் அதுவேமயமாய், சற்றும் பின்னமதற்று - சிறிதும் வேறுபாடு இன்றி, தன்னுள் வைத்து - ஆன்மாவாகிய தனக்குள் உயிர்க் குயிராக வைத்து, உயிர்ப்போகமாக வளர்தல் - உயிர்க்கு அநு பவமாக வளர்தலே, ஆராமை - உண்டு தெவிட்டாத சிவபோக மாம் என்றவாறு.
தான், ஏ என்பன அசைகள்.
சிவயோகமாவது சத்தியின் செயல்களனைத்தும் சிவத்துக் கின்றாகி ஒத்தலும், பரஞான உபகாரமும் ஆம். பித்தேறி வேரற்றுச் சிவத்தை உயிர்க்குபிராகவைத்து அநுபவித்தலே சிவபோகமாம் என்பது கருத்து. ஆராமை - போதுமென்று அமையாமை. சிவபோகம் எல்லையற்ற இன்ப நிலையாகலின் ஆராமையாயிற்று.
இதுவரை அரன்கழல் செல்லுதலாகிய அநுபவம், நிர்வி காரியாய்த் தன் வண்ணமாகச் செய்தலாகலின் சிவரூபமும், பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி எனச் சிவத்தோடொப்பச் செய்தலாகிய சிவதரிசனமும், ஏகனாகி இறைபணிநிற்றலாகிய சிவயோகமும், அயரா அன்பின் அரன்கழல் செல்லுதலாகிய சிவபோகமும் முறையே இந்த இரண்டு செய்யுட்களாலும் உணர்த்தப்பெற்றன. (34)
--------------
சிவசீவக் கலப்பு
புரந்திடு மிச்சை மூன்றும் பொருந்தியன் றென்னை நோக்கி
யிரந்ததிங் கெங்கே யென்னி லீந்திட வாங்கித் தன்னுட்
கரந்திடு முன்னை யீசன் காறலை போல வொன்றாய்ப்
பரந்திடு ஞான ஞேயம் பற்றுமான் மாவு முற்றே. 35
இ-ள் : புரந்திடும் இச்சை மூன்றும் பொருந்தி - காக்கும் இச்சை முதல் மூன்று ஆற்றல்களும் அடியேனைப் பொருந்தச் செய்து, அன்று என்னை நோக்கி - அன்றைக்கு அடியேனை அருட் பார்வையால் நோக்கி, இரந்தது இங்கு எங்கே - இங்கு எங்கே யாசித்தது? என்று, என்னில் வாங்கி ஈந்திட - என்னுள்ளி ருந்து என்னையெடுத்துக் கொடுத்தருள, தன்னுள் கரந்திடும் உன்னை - தனக்குள்ளே மறைந்திருக்கும் உன்னை, ஈசன் காறலை போல ஒன்றாய் பரந்திடும் - இறைவன் கால் தலைபோல அநந் நியமாய் வியாபித்து நிற்பன்; ஞான ஞேயம் பற்றும் ஆன்மா வும் உற்று - அறிவையும் அறியப்படுபொருளையும் பற்றிய அறிவானாகிய ஆன்மாவும் பொருந்தி, பரந்திடும் - வியாபித்து நிற்கும் என்றவாறு.
கால் + தலையென்ற இருமொழிகள் புணர்கின் றகாலத்து, ளகர தகரங்களிணைந்து ஓரெழுத் தானாற்போல, ஆன்மாவும் சிவமும் கலந்துநிற்கும் என்பதாம்.
ஆணவத்திற் கிடந்த அடியேனுக்கு இச்சையாதிய சத்தி களைத் தந்து, தொழிற்படச்செய்து, கருணைக்கண் காட்டி, ஆன்மாவாகிய நீ எதனை விரும்புகிறாய் என்று வினாவி, எனக் குள்ளிருக்கும் உன்னைத் தந்து, காறலை போலக் கலந்துகிற்றலைக் காட்டினன்; அப்போது நீ அறிவும், அறிவானும், அறியப்படும் பொருளுமாக இருப்பாய் என்றவாறு. (35)
----------------
ஆசாரியன் அருட்பார்வையால் அருவினையகறல்
அழித்திடு மலமும் யானா யாகிய வுடலு மென்னாற்
செழித்திடும் வினையு மெங்கே தீர்த்தனை யென்னின் மாசு
மொழித்தசஞ் சிதமு நாலாஞ் சத்திநி பாதத் தாசான்
விழித்திட வேற தாகும் விட்டவவ் வகையுஞ் சொல்வாம். 36
இ-ள் : அழித்திடும் மலமும் - வருத்துகின்ற ஆணவமும், யானாய் ஆகிய உடலும் - நான் என்னும் உடலும், என்னாற் செழித்திடும் வினையும் - என்னாலே வளர்கின்ற வினையும் ஆகிய இவைகளை, எங்கே தீர்த்தனை என்னின் - எங்கே அகற்றினாய் என்னில், நாலாம் சத்தி நிபாதத்து - நாலாம் சத்தி நிபாதமாகிய தீவிரதர பக்குவ நிலையில், ஆசான் விழித்திட - ஆசாரியன் மீனண்டத்தைப் போல விழித்துப்பார்க்க, மாசும் - மலங்களும், ஒழித்த சஞ்சிதமும் - ஏனைய சஞ்சித கன்மங்களும், வேறதாகும் - வேறாகும்; அங்ஙனம் விட்டவகையும் சொல்லுவாம் என்றவாறு.
அழித்திடும் மலமும், யான் என்று விவகரிக்கும் உடலும், ஆன்மாவாற் செழிக்கச் செய்யப்படுகின்ற வினைகளும் எங்கே நீங்கினை எனின், தீவிர தர சத்திநிபாதத்தில் ஆசானருட்பார்
வையால் நீங்கப்பெற்றேன் என்பது கருத்து. (36)
----------------
தத்துவசுத்தியின் பயன்
நிறுத்திடு முடலைக் கூட்டி நீக்குத லாலே முன்னே
யறுத்ததா மலமு மின்பா யாக்கிடு மகில மெல்லா
மொறுத்தலாற் றுன்பாய் மற்றச் சஞ்சித மொழித்த தாகும்
புறத்திடு தத்து வத்தின் சுத்தியி னுடலம் போமே. 37
இ-ள் : நிறுத்திடும் உடலைக்கூட்டி நீக்குதலாலே - வினைப் போகம் துய்க்குமளவும் நிலைபெறுத்தப்பெற்ற தனுகரணாதி களைச் சேர்ப்பித்து நீக்குதலால், முன்னே அறுத்ததாம் மலமும் - முன்னே வேறுபடுத்தப்பெற்ற மூலமலமும், இன்பாய் - இன்ப மாகியும், ஆக்கிடும் அகிலமெல்லாம் ஒறுத்தலால் துன்பாய் - படைக்கப்பெறுகின்ற உலகம் எல்லாவற்றையும் தண்டித்த லால் துன்பமாயும், மற்ற சஞ்சிதம் ஒழித்ததாகும் - சஞ்சித வினை யை ஒழித்ததாம்; புறத்திடு தத்துவத்தின் சுத்தியின் - வெளியில் உள்ளதாக தத்துவங்களின் சுத்தியால், உடலம் போம் - உடலம் அழியும் என்றவாறு.
உயிர்களுக்கு உடலைத் தந்து மலவலிவை நீக்கு தலால் நீங்கிய மலம் இன்பந் தருவதாயும், உலகமாகவந்து துன்புறுத்த லால் துன்பாயும், சஞ்சி தவினையைப் போக்கியவாறாம். புறத் தத்துவங்களின் சுத்தியால் எடுத்த இந்த உடலம் அழியும் என்பது கருத்து. (37)
----------------
சிவன் நிலை
நின்றிடா வுடற னித்து நீங்கிய வான்மாக் கூடா
தொன்றிடான் சிவனு டற்க ணொத்திடு பவரா ரென்னிற்
பொன்றிடா வுயிரைத் தன்பாற் புகுத்துவா னுடற்கு வேறாய்ச்
சென்றிடான் சீவ னொத்து நிற்குமா போல நிற்பன். 38
இ-ள் : உடல் தனித்து நின்றிடா - உடலம் தனித்தியங்கா, நீங்கிய ஆன்மா கூடாது - உடலைவிட்டுப் பிரிந்த உயிரும் உடலைப் பொருந்தாது, சிவன் ஒன்றிடான் - சிவபெருமானும் பொருந்தான், உடற்கண் ஒத்திடுபவர் ஆர் என்னில் - இவ் வுடற்கண் ஒத்துப் பொருந்துபவர் யார் என்று மாணவகனே! நீ வினவில், பொன்றிடா உயிரை தன்பால் புகுத்துவான் - அழியாத ஆன்மாவை உடலாகிய தன்னிடம் புகுத்துகின்ற இறைவன், உடற்கு வேறாய் - இவ்வுடம்பிற்கு வேறாக, சென்றி டான் - செல்லான்; சீவன் ஒத்து நிற்குமாபோல - உயிர் உடம் போடு ஒத்து நிற்குமாறுபோல, நிற்பன் - சிவனும் நிற்பன் என்றவாறு.
உடலோ சடம்; தனித்து நில்லா, உயிரோ சிதசித்தும் சுதந்திரமற்றதும் ஆதலின் தானாகச் சென்று உடலோடு கூடாது. பேரொளிப்பிழம்பாகிய சிவ மோ மாயாகாரியமும் சடமுமாகிய உடலைப் பொருந்தான். ஆகவே உடலோடு ஒத் திருப்பவர் யார் எனில், உடம்பில் உயிரைப்புகுத்துகிற இறை வனே, உடற்கு வேறாக நில்லாமல் உடம்போடு ஒத்து வாழு கின்ற உயிரைப்போல, தானும் கலந்து நிற்பன் என்பது கருத்து. (38)
-----------------
கலாதிதத்துவங்கள் அரனுடைமையாம் எனல்
மலவிரு ளகற்ற வாய்த்த கலையது கொடுத்துக் கன்ம
பலமுள தருத்தித் தீய மறைப்பது பறித்து ஞான
நிலையுள மடிமை யாக நின்றிடு மன்றே யென்றாற்
கலைமுத லுடைமை யாகக் கைக்கொளல் வியப்போ காணில். 39
இ-ள்: மல இருள் அகற்ற வாய்த்த - ஆணவமல இருளைப் போக்கப் பொருந்தியதான, கலையது கொடுத்து - கலையென் னும் தத்துவத்தைக் கொடுத்து, கன்ம பலமுளது - வினைப்பய னாக உள்ளதை, அருத்தி - ஊட்டி, தீய மறைப்பது பறித்து . கெட்ட மலமறைப்பை வலியப் பறித்துப்போக்கி, ஞான நிலை உளம் அடிமையாக - சிவஞானத்தில் நிலை பெற்ற ஆன்மா அடிமையாகும்வண்ணம், நின்றிடும் அன்றே என்றால் - சிவம் உதவி நிற்குமன்றே எனின், காணில் - ஆராயுமிடத்து, கலை முதல் உடைமையாக - கலை முதலிய தத்துவங்களை உடைமை யாக்க, கைக்கொளல் வியப்போ - கொள்ளுதல் வியப்பாமோ என்றவாறு.
ஆணவமலத்தில் அழுந்தியுள்ள ஆன்மாக்கட்கு அறிவு விளக்கம் சிறிதே உண்டாக, கலா தத்துவத்தைக் கொடுத்து, கன்மங்களை யூட்டி, அஞ்ஞான மறைப்பை அகற்றி, சிவஞானம் நிலைபெற்ற உயிர்கள் அடிமைகளாம்படி, சிவம் வெளிப்பட்டு நிற்குமல்லவா எனின், கலை முதல் தத்துவங்கள் சிவனுடைமை
தாமே என்க. (39)
-------------
கடவுள் கன்மபலத்தை ஊட்டுதல்
கண்ணினால். விடயந் தன்னைக் கவர்ந்திடு மாவி போல
நண்ணிய தனுவ தாகி நாடிய வுயிரை வாங்கிப்
பண்ணிய தனுவி னூழும் பலவுயிர் கவர் ந்தங் கன்பாய்
நண்ணுமப் போகங் கொண்டு நற்பலம் பதிப்ப னீசன். 40
இ - ள் : கண்ணினால் விடயம் தன்னைக் கவர்ந்திடும் ஆவி போல - கண்ணாகிய கருவியால் பொருள்களை அறியும் ஆன்மா வைப்போல, ஈசன் - சர்வகாருணிகனான சிவபெருமான், நண் ணிய தனுவதாகி நாடிய உயிரை வாங்கி - வினைக்கீடாக அடை யப்பெற்ற உடம்பாகி, அதனை யே தாரகமாக நாடியுள்ள உயிரை எடுத்து, பண்ணிய தனுவின் ஊழும் பல உயிர் கவர்ந்து - சென்ற சென்ற பிறவிகளில் சேர்க்கப்பெற்ற ஊழ் வினைகள் பலவற்றையும் உயிர்களிடமிருந்து கவர்ந்து, நண்ணும் அப்போகங் கொண்டு - வினைகளால் வந்தடையும் அப்போகங் களையும் கழித்து, நற்பலம் பதிப்பன் - சிவபுண்ணியத்தின் கண்ணே ஆழ்த்துவன் என்றவாறு.
ஆன்மா கண்ணாகிய கருவியைக்கொண்டு, விடயங்களை அறி தல்போல, ஈசன் உயிருக்குத் தனுவைக் கொடுத்து, வினைகளை ஊட்டி, சஞ்சித ஆகாமியங்களையும் அதனால் விளைய இருக்கும் சுகதுக்கங்களையும் போக்கி, சிவபுண்ணியத்தில் ஆழ்த்துவான் என்பது கருத்தாம்.
நண்ணிய தனு - எடுத்த இவ்வுடல். தனுவிற்பண்ணிய ஊழ் - பழம்பிறப்பில் செய்த வினைகள். பல என்றது ஆகாமிய சஞ்சிதத் தொகுதிகளை. போகம் கொண்டு - கன்மபோகத்தை ஆன்மாக்கள் அடையா தவண்ணம் தாம் கொண்டு; அதாவது நிக்கி என்பதாம். நற்பலம் - நல்ல பலன்; என்றது சிவ புண்ணியங்களை.
-----------------
சுத்தான்மாவின் நுய்ப்பு
தனுவது கருணை மேனி தாணுவு மணுவு மொன்றாய்
நினைவது கருணை தானாய் நிற்றலாற் போக மன்பாய்
மனவிரு ளிரிய மற்றோ ருளமது மருவி மாயா
வினையறும் வினைபு சிப்பான் மேலவன் கருணை யாலே. 41
இ - ள் : தனுவது கருணை மேனி தாணுவும் அணுவும் ஒன்றாய் - கருணையே திருமேனியாகக் கொண்ட இறைவனும் ஆன்மாவும் ஒன்றாகி, நினைவது கருணை தானாய் நிற்றலால் - பசுபோதங்கெட்டு கருணையே நினைவாய் நிற்றலால், போகம் அன்பாய் - சிவபோகத்திலேயே விருப்பாகி, மன இருள் இரிய - அஞ்ஞானம் அகல, மற்றோர் உளமது மருவி - வேறொரு உளத் தைப்பொருந்தி, மாயா வினையறும் வினை - மாயையின் காரிய மாகிய கன்மவினைகள் அற்ற தூயவினைகளை, மேலவன் கருணை யாலே - சர்வேஸ்வரன் கருணையாலே, புசிப்பன் - ஆன்மா நுகர்வன் என்றவாறு.
ஆன்மா சிவத்தோடு ஒன்றி, சிவ போதம் பெற்றுச் சிவத் தொண்டுகளையே செய்துகொண்டு, பதிபுண்ணியப் பயன் களையே அனுபவிப்பன் என்பது கருத்து.
தாணு - சிவம். அணு - ஆன்மா. அங்கனம் ஆன்மாவும் சிவமும் ஒன்றியநிலையில் நினைவெல்லாம் சிவகருணையாகிய பதிபோ தமே ஆதலின் நினைவது கருணை தானாய் என்றருளி யது. போகம் அன்பாய் : சிவனிடத்துச் செலுத்தப்பெறும் தைல தாரைபோன்ற இடையீடில்லாத அன்பே நுகர்ச்சியாய்.
மற்றோர் உளம் மருவி என்றது நோயிற்கிடந் துழன்றான் நோய் நீக்கம் பெற்றபின் 'மறுபிறவி எடுத்தேன்' என்பதுபோல மல இருளில் அழுந்திக்கிடந்தநிலை நீங்கியமையான் வேறுள்ளத் தைப் பொருந்தி என்றது.
கன்மங்கள் யாவும் மாயை ஏதுவாக விளைவன ஆதலின் பாயாவினை என்றது. அத்தகைய வினையற்றவினை புசித்த லாவது சுத்த அனுபோகத்தைத் துய்த்தல்.
-------------------
ஐயமறுத்தது
உற்றவன் சிவனே யாக வொத்துடடற் சிவன தாகப்
பெற்றவ னருச்ச னாதி பிடிப்பதென் மலைவு தீரச்
சொற்றிட வேண்டு ஞேயந் துலங்கிய வாவி யான்மா
நற்றிரு மேனி யாகு நாடிலங் காங்கி யாமே. 42
இ-ள்: உற்றவன் சிவனேயாக - ஆன்மாவிடமாகப் பொருந் தியவன் பேரருளானாகிய சிவனேயாகவும், ஒத்துடல் சிவனது ஆக - இங்ஙனம் புண்ணியத்திற்கு ஏற்றதாகப் பரிபாகம் பெற்ற உடல் சிவனுடைமையேயாகவும், பெற்றவன் - பெற்ற சீவன் முக்தன், அருச்சனாதி பிடிப்பது என் - அர்ச்சனை முதலிய கன்மங் களைச் செய்யவேண்டிய இன்றியமையாமை என்னே? மலைவு தீரச் சொற்றிட வேண்டும் - ஐயம் நீங்க அறிவித்தருளவேண்டும், ஞேயம் - அறியப்படுபொருளாகிய சிவம், துலங்கிய ஆவி ஆன்மா - விளக்கம் பெற்ற ஆவியாகிய ஆன்மா, (அந்த ஞேயப் பொருளுக்கு) நல் திருமேனியாகும் - நல்ல வடிவாகும்; நாடில் - ஆராயுமிடத்து, அங்க அங்கி ஆம் - அங்கமும் அங்கியுமாகிய தொடர்புடையது என்றவாறு.
ஆன்மாவும் சிவனும் அங்க அங்கிகளாக இருத்தலானும், சிவன் கருத்தாவும் உடல் உடைமையுமாக இருத்தலானும் சிவ அருச்சனை முதலிய கன்மங்களை இயற்றவேண்டியது எற்றுக்கு? ஐயனே! இவ்வையத்தை அகற்றுக என மாணவன் வேண்டிக் கொண்டான் என்பதாம். (42)
-------------
குரு உயிர் - சீடன் உடல் எனல்
மாசிலா வாவி யங்க மன்னிடு முயிரா மீச
னாசிலாத் தேகந் தேகி யானது போல மாணன்
றேசுலா மேனி யங்கந் திரண்டெழு குருவின் மேனி
யேசிலா வுயிரே யாகி யிசைந்ததங் காங்கி யாமே. 43
மாசிலா ஆவி அங்கம் - மலமாசற்ற ஆன்மாவே அங்கம்; மன்னிடும் உயிர் ஈசன் ஆம் - அதன்கண் நிலை பெற்ற உயிர் இறைவனாம்; (இவ்வண்ணம் ஆன்மாவும் சிவனும்) தேகம் தேகியானது போல - உடலும் உயிரும் ஆனாற்போல, மாணன் தேசுலாம் மேனி அங்கம் - மாணாக்கனது சிவஞானப்பிரகாசம் பெற்ற மேனியே அங்கமாம், திரண்டெழு குருவின் மேனி - சிவஞானமெல்லாம் திரண்டு ஓருருவானாற் போல விளங்குகின்ற குருநாதனுடைய மேனியே, ஏசிலா உயிரே ஆகி இசைந்தது - யாராலும் எக்காரணமும் பற்றிப் பழிக்கப்படாத உயிராகிப் பொருந்திற்று; (ஆதலால் மாணாக்கனும் குருவும்) அங்கம் அங்கி ஆம் - அங்காங்கி சம்பந்தமுடையார் என அறிவாயாக என்றவாறு.
சிவனும் சிவனும் உடலும் உயிருமானாற் போல, மாணவனும் குருவும் உடலும் உயிருமாவர்; ஆதலால் அவர்கள் இயைபும் அங்காங்கித் தன்மை உடையதாம் என்பது. (43)
---------------
வெம்மையுற் றரக்கி ளக்க மேவிய வரக்கின் றன்மை
செம்மைசற் றுண்டோ சீவ னீசனைச் சேர்ந்தொன் றாகித்
தம்மையற் றொன்றாய் நிற்ற றகுமுத லொன்றே யன்றோ
வம்மையற் றளித்த மேனியது புகுந் துருக்கா நிற்கும். 44
இ-ள்: வெம்மை உற்று அரக்கு இளக்கம் மேவிய - வெப்பத்தைப் பொருந்திய அரக்கு இளக்கம் பொருந்திய, அரக்கின் தன்மை செம்மை சற்றுண்டோ - அரக்கினது தன்மை யாகிய சிவந்த நிறம் சற்றேனும் உளதாமோ? அதுபோல, சீவன் ஈசனைச்சேர்ந்து ஒன்றாகித் தம்மையற்று ஒன்றாய் நிற்றல் தகும் - ஆன்மாவும் இறைவனைச்சார்ந்து ஒன்றி ஆன்மபோதங் கெட்டு சிவபோதமாய் நிற்றல் பொருந்துவதாம், முதல் ஒன்றே யன்றோ - சார்பொருளும் சாரப்படுபொருளுமாக இரண்டு ஒன் றினும் தக்கமுதல் ஒன்றேயல்லவா? ஆதலால், அம்மையற்று அளித்த மேனியது புகுந்து - அந்த மலமற்ற கருணைக்கிலக் காகிய திருமேனிக்கண் புகுந்து, உருக்கா நிற்கும் - உருக்கும் என்றவாறு.
தீயணைந்த அரக்கு இளகித் தன் தன்மையும் செம்மையும் நீங்குவதுபோல, சிவனும், சிவபரம் பொருளைச் சார்ந்து தன் தன்மைகெட்டு, சிவத்தோடு ஒன்றாய்நிற்றல் தக்கதேயாம். இரு பொருளுங்கூடி ஒரு முதலாயிற்றன்றோ! ஆதலால் இறைவன் மலமற்ற திருமேனியாகிய உயிர்க்கட்புகுந்து அதனைப் பரிபாகம் படுத்தும் என்பது கருத்து. அம் +மை - அந்த இருள்; என்றது ஆணவத்தை . (44)
--------------
அகம்புற மென்றி ரண்டா மறிவதை யொழித்து மாயாச்
செகம்புற மாக்கித் தன்னைத் தெரிசித்துச் சிவனோ டொன்ற
யிகம்பர மற்று நிற்கு மின்பத்து ளதீத மான
சுகம்புரி கருணை மேனி தொழுதுகண் டுருகா நிற்கும். 45
இ-ள் : அகம் புறம் என்று இரண்டாம் அறிவதை ஒழித்து - அகம் என்றும் புறம் என்றும் இரண்டான ஞானத்தை நீக்கி, மாயா செகம் புறம் ஆக்கி - மாயாகாரியமான உலகைத் துறந்து, தன்னைத் தெரிசித்து - சித்தாகிய தன்னைக் கண்டு, சிவனோடு ஒன்றாய் - முதலோடு அன்னிய மின் றிக்கே ஒன்றாய், இகம் பரம் அற்று நிற்கும் - இம்மையும் மறுமையும் நீங்கி நிற்கின்ற, இன்பத்துள் அதீதமான சுகம் புரி கருணை மேனி தொழுது கண்டு - இன்பத்தைக்கடந்து நிற்கின்ற பரமசுகத்தையருளு கின்ற திருவருளாகிய திருமேனியைத் தொழுது தரிசித்தே, உருகா நிற்கும் - மனமுருகுவன் என்றவாறு.
சீவன்முத்தன், வேற்றுமையெல்லாம் ஒழிந்து, உலக வா தனையற்று, ஆன்மதரிசனமுஞ்செய்து, சிவத்தோடொன்றாய் இம்மைமறுமையில்லாத சுகாதீதமான பெருஞ்சுகத்தைத் தரும் கருணைத்திருமேனியைத் தரிசித்துத் தொழுது அநந்நியமாய் அனுபவித்து நிற்பன் என்பதாம். கண்டு தொழுது எனற் பாலது தொழுது கண்டு என் நின்றது. (45)
----------------
ஆணவ மடைந்த வான்மா வாணவ மாய்ம றைந்து
காணுறுங் கருணை மேனி காணுறா போல ஞானத்
தாணுவை யடைந்த வான்மாத் தாணுவாய் மறைந்து நேயம்
பூணுறுங் கருணை மேனி போற்றியொன் றாயே நிற்கும். 46
இ-ள் : ஆணவம் அடைந்த ஆன்மா ஆணவமாய் மறைந்து - ஆணவமலத்துள் அழுந்திய ஆன்மா தானும் ஆணவமாகவே மறைந்து, காணுறும் கருணை மேனி காணுறா போல - காண் கிற திருவருளாகிய திருமேனியைக் காணாத துபோல, ஞானத் தாணுவை அடைந்த ஆன்மா - ஞானமே வடிவான சிவபரம் பொருளை அடைந்த ஆன்மா, தாணுவாய் மறைந்து - சிவமாக மறைந்து, நேயம் பூணுறும் கருணை மேனி போற்றி - ஞேயமாகக் காட்சியளிக்கும் இறைவனது கருணைத்திருமேனியையே வணங் கிக்கொண்டு, ஒன்றாயே நிற்கும் - அதனோடு ஒன்றுபட்டே நிற்பன் என்றவாறு.
"ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ!''
என்னும் தாயுமான அடிகள் கருத்தும் ஈண்டு எண்ணுதற் குரியது. ஆன்மா மலத்தோடு கூடியவழி மலமாயும், சிவத் தோடு கூடியவழிச் சிவமாயும் இருத்தலாகிய இருதிறனுடைய னாகலின், சிவத்தோடு சார்ந்தவழிச் சிவமாயேநிற்பன் என்பது கருத்து. (46)
---------------
திருவுரு மூன்றி டத்துந் திருத்திய வணக்க மொன்ற
அருளிய தியல்பா மென்னை யடைந்திடு பவர்க்கி யானிங்
கிருளகற் றிடுவ தென்னோ வியைந்திடு மலத்தி னின்றும்
பருவரற் படுதல் பார்த்துப் பரிந்திடல் கருணை வாழ்வே. 47
இ-ள் : திருவுரு மூன்றிடத்தும் திருந்திய வணக்கம் ஒன்ற அருளியது இயல்பாம் - குரு லிங்கம் சங்கமம் ஆகிய திருவுரு மூன்றிடத்தும் செலுத்தப்பெற்ற திருத்தமான வணக்கம் பொருந்தி அருளிச்செய்தது இயல்பாம்; என்னை அடைந்திடு பவர்க்கு யான் இங்கு இருள் அகற்றிடுவது என்னோ - என்னைச் சரணென்றடைகின்ற மாணாக்கர்களுக்கு யான் இங்கு இருள் ஆகிய மலத்தை நீக்கியருள்வது என்னையோ? எனின், இயைந் திடும் மலத்தினின்றும் - அநாதியே பொருந்திய ஆணவமலத்தி னின்றும், பருவரல் படுதல் பார்த்து - ஆன்மாக்கள் துன்பப் படுதலைப்பார்த்து, பரிந்து கருணை வாழ்வு இடல் - பரிந்து அருள் வாழ்வை அளித்தலாம் என்றவாறு.
குரு லிங்க சங்கமம் ஆகிய மூவுருவிடத்திலும் செய்யப் படும் வணக்கங்கள் சிவமாகிய தன்னையே வந்து சார்வது இயல்பாம்; ஆயினும் என்னையடைந்த பக்குவர்களுக்கு, யான் மலமகற்றுவது என்னை யென வினாவும் மாணவகனே! ஆன் மாக்கள் படும் அவதியைப் பார்த்து வருந்தி அருள்வாழ்வு வழங்கியதாம் என்பது உணர்வாயாக என்பது கருத்து. இடல் - வழங்கல். கருணை வாழ்வு இடல் எனக் கூட்டுக. (47)
-----------------
அங்கமுள் ளங்கி யொத்துத் தங்கலா லங்கி தானா
மிங்குயி ருள்ளே யீசனியைதலாற் கருணை தானாய்த்
தங்கிடு மிரும்பி னுள்ளே தரித்திடு மெரியே போலப்
பொங்கிய பாசம் போக்கிப் புகுந்திடுங் கருணை யாலே. 48
இ-ள் : அங்கம் உள் அங்கி ஒத்துத் தங்கலால் அங்கி தானாம் - உடலுக்குள் அங்கியாகிய உயிர் ஒத்துத் தங்குதலால் உடலும் அங்கியாகிறது; இங்கு உயிருள்ளே ஈசன் இயைதலால் - இவ்விடத்து உயிருக்குள்ளாகப் பரசிவம் பொருந்துதலால், கருணை தானாய் தங்கிடும் - ஆன்மாவும் கருணையேயாகத் தங்கும்; இரும்பினுள்ளே தரித்திடும் எரியே போல - இரும்பினுள்ளே தங்கியிருக்கும் நெருப்பைப் போல, பொங்கிய பாசம் போக்கி மிக்க பாசத்தைக் கெடுத்து, கருணையாலே புகுந்திடும் - காரண மில்லாக் கருணையாலே சிவம் புகும் என்றவாறு.
அங்கம் - உறுப்புக்கள். படையது தொகுதிபோலக் கர சரணாதி அங்கங்களின் தொகுதி உடலாதலின் அங்கமாகிய காரணத்தின் பெயர் அதன் கூட்டமாகிய உடலுக்காயிற்று; ஆகுபெயர். அங்கத்துள் அங்கியாகிய உயிர் ஒத்துறைதலால் உடம்பு அங்கியாவது போல, ஆன்மாவினுள் ஈசன் பொருந்து வதால் உயிர் கருணையே வடிவாகிறது. இரும்பினுள் தங்கும் எரி இரும்பின் மாசுநீக்கித் தன் மயமாக்குவது போல, சிவம் உயிருள் புகுந்து மலம் போக்கிக் கருணையே வடிவாக்குகிறது என்பதாம். (48)
----------------
சீவன் முத்திக்கும் பரமமுத்திக்கும் வேறுபாடு
சீவனச் சிவனோ டொத்துத் தெளிவுறு முத்தி தன்னைப்
பாவினிற் சீவன் முத்தி பகருமேற் பரம முத்தி
மேவுவ னென்று மந்நூல் விளம்புமால் விகற்பங் கேணீ
யாவது மிரண்டு மொன்றே யாயினும் விகற்பஞ் சொல்வாம். 48
இ-ள் : சீவன் - ஆன்மா , அச்சிவனோடு ஒத்துத் தெளிவுறு முத்திதன்னை - சிவத்தோடு ஒத்துத் தெளிவுடன் விளங்குதலா கிய முத்தியை, பாவினில் - நூல்களில், சீவன்முத்தி பகருமேல் - சீவன் முத்தி யென்று கூறுமாயின், பரமமுத்தி மேவுவன் என்றும் அந்நூல் விளம்பும் - அவ்வாறு சீவன்முத்தனான ஆன்மா பரம முத்தியை யெய்துவன் என்றும் சைவநூல்கள் சொல்லுகின் றனவே, விகற்பம் கேள் நீ - அந்த இரண்டினுக்கும் உள்ள வேறுபாட்டை நீ கேட்பாயாக, யாவதும் இரண்டும் ஒன்றே ஆயினும் - எல்லாவகையாலும் இருமுத்திகளும் ஒன்றேயானா லும், விகற்பம் சொல்வாம் - அவற்றுள் வேறுபாடும் சிறிது உண்டு அதனையும் கூறுவோம் என்றவாறு.
சிவனும் சிவனும் ஒத்துக்கலத்தலே முத்தி. இதனைச் சிவன் முத்தியென்று நூல்கள் சொல்லுகின்றன. அந்த நூல்களே பரமுத்தி அடைவன் என்றும் கூறுகின்றன. இவற்றின் வேறு பாடுகளைக் கேட்பாயாக என்பது கருத்து. (49)
----------------
முத்தியு மிதுவே யாகு முடிவும்வே றில்லை யாகுஞ்
சித்தமு மிதுவே யாகுந் தெளிவுமே வில்லை யாகும்
பித்துமின் றொழிவே யாமேற் பேறிதற் கில்லை யாகு
மொத்தவிவ் வுடலு மிந்நா ளுறுவது மில்லை யாமே. 50
இ-ள்: முத்தியும் இதுவேயாகும் - ஆன்மாக்கள் அடையத் தக்க முத்தியும் இதுவேயாம்; முடிவும் வேறு இல்லையாகும் - முடிவும் இதுவே; சித்தமும் இதுவேயாகும் . சித்தாந்தமும் இதுவே; தெளிவு மேல் இல்லையாகும் - தெளிவும் இதனைக் காட்டிலும் சிறந்ததொன்றில்லையாம்; பித்தும் இன்று ஒழிவே யாமேல் - மயக்கமும் இன்றே நீங்குவாயானால், பேறு இதற்கு இல்லையாகும் - இதனோடு ஒத்தபேறு: இல்லையாம்; ஒத்த இவ் வுடலும் இந்நாள் உறுவதும் இல்லையாமே - வினைக்கிடான இவ்வுடலும் இந்நாட்கண் அடைவதாகிய வினைச்சேடமும் இல்லையாம் என்றவாறு.
இந்த முத்தியே சித்தாந்தமுத்தி. இதிற் சிறந்ததொரு நிலை எங்கும் இல்லை; என்றும் இல்லை. இதனையடைந்த உனக்கு ஆகாமிய சஞ்சிதவினைகளும் இல்லை என்பதாம். (50)
--------------
ஆதலா லிரண்டு மொன்றே யாயினுஞ் சிவற்கு ளத்தை
யீதலான் மேனி யாகி யிசையினுங் கருணை மேனி
நீதியால் வழிபாடுற்று நின்றிட லானு முண்மைத்
தீதிலாச் சீவன் முத்திச் செயலெனச் செப்பு நூலே. 51
இ - ள் : ஆதலால் இரண்டும் ஒன்றேயாயினும் - ஆதலால் இரண்டு முத்திகளும் ஒருதன்மையனவே ஆயினும், சிவற்கு உளத்தை ஈதலால் - சிவபெருமானுக்கு மனத்தைக் கொடுத்த லால், மேனியாகி இசையினும் - உடலோடு கூடியிருப்பினும், கருணை மேனி நீதியால் வழிபாடு உற்று நின்றிடலானம். சிவனுடைய அருட்டிருமேனியை வழிபட்டு நிற்பதாலும் உண்மை தீது இலாச் சீவன் முத்தி செயலென செப்பும் நாள். உண்மையான குற்றமற்ற சீவன்முத்தியின் தொழிலாம் என்று ஆகமம் சொல்லும் என்றவாறு.
சித்தம் சிவமாக்கலும் அவனருள் மேனியை அறிந்து வழி படுதலும் சிவன் முத்தியாம் என்பது கருத்து. (51)
--------------
பரம முத்தி
பருவரன் மலத்தி னாலே படுமுயி ரனைத்துந் தன்பான்
மருவிடக் கொணர்ந்த வீசன் வடிவனைத் தினுக்கும் பூசை
யொருவிடிற் றுயர மாத லுற்றிடின் மகிழ்ச்சி யாதல்
தருமிவை யிரண்டு நீங்கத் தருதலே பரம முத்தி. 52
இ-ள் : பருவரல் மலத்தினாலே படும் உயிர் அனைத்தும் - ஆணவத்தால் அவதிப்படுகின்ற உயிர்கள் எல்லாம், தன்பால் மருவிட கொணர்ந்த ஈசன் வடிவு அனைத்தினுக்கும் - தன்பாற் பொருந்த மலமகற்றி உய்யக்கொண்ட சிவ பெருமானுடைய உருவங்கள் எல்லாவற்றிற்கும், பூசை ஒருவிடில் துயர மாதல் - வழிபடுதலை விடில் துன்பமாதலும், உற்றிடின் மகிழ்ச்சியாதல் - பூசை செய்தால் மகிழ்ச்சியாதலும் ஆகிய இவற்றை, தரும் - தந்தளிப்பன்; இவை இரண்டும் நீங்கத்தருதலே பரமமுத்தி - இத்தகைய துன்ப இன்பங்கள் நீங்கக் காத்தருளுதலே பரம முத்தியாம் என்றவாறு.
சீவன் முத்தருக்கு உரிய துன்ப இன்பங்கள் அரன்பூசை முட்டுப்படுதலும் முட்டுப்படாது நடத்தலுமே என்பதும், அத் துன்ப இன்பங்களும் அகலுதலே பரமுத்தியாம் என்பதும் விளக்கிற்று. (52)
----------------
ஈசன்மே லெழுந்த வன்பு மீசனாஞ் சீவன் றன்பேர்
பேசிய தன்ற வன்றாட் பின்னமே யற்ற வன்பா
லாசையை யவனெ ழுப்பி யமர்ந்ததா லவனே யாகு
மாசிலா நூலோர் மிக்கு விதித்தலான் மதித்த தாமே. 53
இ-ள் : ஈசன் மேல் எழுந்த அன்பும் ஈசனாம் - சிவத்திடம் செலுத்திய அன்பு சிவமேயாம், சிவன் தன்பேர் பேசியது அன்று - ஆன்மவன்பு எனப்படாது, அவன் தாள் பின்னமே
அற்ற அன்பால் - அவன் திருவடிக்கண் விளைந்த வேறுபாடற்ற அன்பினாலே, ஆசையை அவன் எழுப்பி அமர்ந்ததால் - விருப் பத்தை அவனே விளைவித்து எழுந்தருளியதால், அவனே ஆகும் - அச்சிவனேயாவன்; மாசிலா நூலோர் - மலவாதனையற்ற ஆசா ரியமூர்த்தி, மிக்கு விதித்தலால் மதித்தது ஆமே - மிகுதியாக அருளியதால் எண்ணிய முடிபாகும் என்றவாறு.
சிவத்திடம் எழுந்த அன்பு சிவமேயாகும், சீவன தாகாது; அங்ஙனம் அபின்னமாக விளைந்த அன்பாலே, பதியன்பையும் அப்பதியே விளைவித்து, நம்முள் எழுந்தருளிய தால், ஆன்மா வும் சிவனேயாம். இம்முடிய நூலோர் சொன்னதாற் போந்த துணிவாம் என்பது கருத்து. (53)
-----------------
முத்தியை நான்க தாக மொழிந் தனர் பரம மாகு
முத்தியோ டைந்த தாக மொழிந்தன ரில்லை யாறாய்ச்
சத்திய வவத்தை தன்னைச் சாற்றின ரில்லை முன்னாள்
உத்தம னுரைத்தா னேனு முணருமா றுணர்ந்து கொள்வாம். 54
இ - ள் : முத்தியை நான்கதாக மொழிந்தனர் - முத்தியை நான்காகச் சொல்லினர்; பரமமாகும் முத்தியோடு ஐந்ததாக மொழிந்தனர் - பரமமுத்தியோடு ஐந்துவகைப்படும் என்றும் அருளினர்; ஆறாய் இல்லை - இதற்கும் மேற்பட்ட ஆறாவதொரு முத்திநிலை இல்லையாம்; சத்திய அவத்தை தன்னை சாற்றினர் இல்லை - உண்மையான பத்தவத்தைகளையும் தனியே பகர்ந்தனர் இல்லை, முன்னாள் உத்தமன் உரைத்தானேனும் - முற்காலத்து எமது உத்தமனாகிய குருபரன் சொல்லிக்காட்டினானேனும், உணருமாறு உணர்ந்து கொள்வாம் - தெளியுமுறைக்கணின்று தெளிந்து அனுபவிப்பாம் என்றவாறு.
நான்கு முத்திகள் : சாலோக, சாமீப, சாரூப , சாயுச்சிய முத்திகள், பரமமாகும் முத்தி - பரமுத்தி. (54)
------------
முன்னவன் வடநூ னோக்கி மொழிந்தனன் போத மற்றோன்
பின்னவ னந்நூ னோக்கிப் பெயர்த்தனன் சித்தி யாக
வன்னவை யிரண்டு நோக்கி யறைந்தனன் புடைநூன் மற்றோன்
சொன்னவை மூன்று நோக்கித் தொகுத்தன னவத்தை பத்தாய். 55
இ - ள் : முன்னவன் - முதல் ஆசாரியனாகிய மெய்கண்ட தேவநாயனார், வடநூல் நோக்கி போதம் மொழிந்தனன் - வடமொழிக்கண்ணதாய் ஈசான சிவத்தின் அருள்வாக்காகிய
ரௌரவாகமத்தின்கண்ணதாகிய பாசவிமோசனப் படலக்கம் சூத்திரங்களை அருட்கண்ணால் நோக்கிச் சிவஞானபோத நான் அருளிச்செய்தான்; பின்னவன் அந்நூல் நோக்கி சித்தியாகப் பெயர்த்தனன் - பின்னேராகிய அருணந்திதேவநாயனார் சிவ ஞானபோத நூலை நோக்காமல்நோக்கித் தெளிந்து சிவஞான சித்தியாராகக் கருத்துக்களைப் பெயர்த்துத்தந்தனர்; மற்றோன் . மற்றவராகிய உமாபதிதேவநாயனார், அன்னவை இரண்டும் நோக்கி - அந்நூல்கள் இரண்டையும் தடையிலா ஞானத்தால் ஆராய்ந்து, புடைநூல் அறைந்தனன் - சார்பு நூலாகிய சிவப் பிரகாசத்தை அருளிச் செய்தனர், சொன்னவை மூன்றும் நோக்கி - மேற்சொன்ன அநுபவ நூல்கள் மூன்றையும் ஆய்ந்து, அவத்தை பத்தாய் தொகுத்தனன் - பத்து நிலைகளாக தொகுத் துத்தந்தான் என்றவாறு. (55)
---------------
வெண்பா
தசகா ரியமைம்பத் தஞ்சாய் விருத்தத்
திசையா வருள் புரிந்தா னென்று - வசைதீர்ந்த
மேலா வடுதுறைக்கோர் வீறம் பலவாணன்
மாலா மருவினர்க்கு வந்து.
இ-ள் : வசை தீர்ந்த மேல் ஆவடு துறைக்கோர் வீறு அம்பல வாணன் - குற்றமற்ற மேலாகிய திருவாவடு துறைக்கு ஓர் தனிச் சிறப்பான ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள், மாலா வந்து மருவினர்க்கு - தனது திருவடிக்கே மாலாய்ச் சீபாதமே கதி யெனச் சேர்ந்தவர்களுக்கு, ஐம்பத்தைந்தாய் விருத்தத்து இசையா - ஐம்பத்தைந்து என்னும் எண்ணுடையதான விருத் தப்பாவாக, தசகாரியத்தை அருள் புரிந்தான் என்று - தசகாரி யத்தை அருளிச்செய்தான் என்று கூறுவேன் என்றவாறு.
வசை தீர்ந்த ஆவடு துறை, வசைதீர்ந்த அம்பலவாணன் என ஈரிடத்தும் கூட்டுக. வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு, மாலாய் - நின்னல்லதில்லை யெனத் தலைவன் ஒருவன் தலைவி யிடத்து மாலானாற்போல மாலாய். மருவினர் - பாசத்தை மருவிய ஆன்மாக்கள். அப்பாசத்தை ஒருவி அருளடியை அடைந்தவர்க்குத் தசகாரியத்தை யருளினான் என்க.
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் தசகாரியம் முற்றிற்று.
---------------------
சிவமயம்
2. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச்செய்த தசகாரியம்
குருவணக்கம்
திருந்துவட கயிலை தனிற் பரமசிவ னளித்த
சிவஞான போதமுணர் நந்திமுதற் சிறந்தே
வருங்குரவர் வெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவன்
வழங்கருட்சந் ததியினமச் சிவாயதே சிகனாம்
இருங்குரவ னளித்தசிவப் பிரகாச தேச
னிலங்குமறை வனத்தருகோர் வனக்குகையி லுறை நாட்
பொருந்தியவன் றிருவடிக்கீ ழவனருளே வலினாற்
போந்தருளா வடுதுறைவாழ் நமச்சிவா யனைப்புகழ்வாம். 1
இ-ள் : திருந்து வட கயிலைதனில் - இலக்கணங்கள் அனைத் தையும் இயற்கையே பொருந்தித் திருந்திய வடவிருட்சத்தை யுடையதாகிய திருக்கயிலையில், பரமசிவன் அளித்த சிவஞான போதம் உணர் நந்தி முதல் - பரமசிவம் அளித்த சிவஞான போதத்தைக் கேட்டுத் தெளிந்த திருநந்திதேவர் முதலாக, சிறந்தே வரும் குரவர் வெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவன் வழங்கு அருட்சந்ததியில் - சிறப்போடு வருகின்ற பரமாசாரியர் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ சிவாசாரியன் வழங் கிய அருள்மர பில், நமச்சிவாயதேசிகனாம் இருங்குரவன் அளித்த சிவப்பிரகாச தேசன் - ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளை ஞானாசாரிய னாக அருளிய சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள், இலங்கு மறை வனத்து அருகு ஓர் வனக்குகையில் உறைநாள் - விளங்கு கின்ற வேதாரணியத்திற்கு அருகில் ஒப்பற்ற காட்டிலுள்ள குகையில் எழுந்தருளியிருக்கின்ற காலையில், அவன் திருவடிக் கீழ்ப் பொருந்தி - அவன் திருவடியைச்சார்ந்து, அவன் அருள் ஏவலினால் போந்தருள் ஆவடு துறை வாழ் நமச்சிவாயனை - அவன் அருளாணையின் வண்ணம் வந்து ஞானோபதேசம் பெற்று அரு ளாணையின்வண்ணமே எழுந்தருளித் திருவாவடுதுறையில் வாழ் கின்ற ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளை, புகழ்வாம் - தோத்திரிப்போம் என்றவாறு.
புகழ்வாம் என மொழி வணக்கங் கூறவே முன்னிற்கும் மன வணக்கமும், பின்னிற்கும் காயத் தொழிலும் கொள்ளப்பட்ட தாம் என்றவாறு.
திருந்து வட கயிலை : எல்லாரும் மலக்கோணிங்கித் திருந் துதற் கேதுவாய ஞானவொளியோடு திருந்திய கயிலை. வடம் - ஆல். வடகயிலை - கல்லானிழலையுடைய கயிலை, சைவ நூல் உணர்ச்சியுடையார்க்குக் கயிலையெனவே, கல்லாலும் அதன்கீழ் எழுந்தருளியுள்ள ஞானமூர்த்தியுமே மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குமா தலின் என்க. எனையவை வெளி.
---------------
பொங்குமத வைங்கரனைப் புகழ்ந்துருகிப் போற்றியென்றும்
பூரணமா மரனருளைப் புணர்ந்துபோற்றி செய்தே
பங்கமறச் சத்தினிதாய்ப் பார்மகுட வரவம்போற்
பரந்திழிந்தே வந்தவர்க்குப் பரஞான வடிவாய்த்
தங்கியமா னிடர்போலத் தரித்தருளி யருட்டீக்கை
தானளித்துச் சிவஞான போதத்தி லுண்மை தனில்
அங்குரைத்த வவத்தைபத்து மாராய்ந்திங் கறைந்திடுவ
னவையென்போ லீசலிற காலுலகேற் றலைத்தவையாம். 2
இ-ள் : பொங்குமத ஐங்கரனை புகழ்ந்து உருகி - மதம் பொங்குகின்ற ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகப்பெரு மானை வாயாரப் புகழ்ந்து மனத்தால் உருகி மெய்யால் வணங்கி, என்றும் பூரணமாம் அரன் அருளைப் புணர்ந்து போற்றி செய்து - என்றும் நிறைவான சிவபெருமான் திருவரு ளைச் சேர்ந்து அதன் துணைக்கொண்டு வணங்கி, பங்கமற - மலம் நீங்க, சத்தினி தாய் - சத்திநிபாதம் உற்று, பார் மகுட அரவம் போல் - இந்தப் பூமியையே மகுடமாகவுடைய பாம் பாகிய ஆதிசேடனைப்போல, பரந்து இழிந்தே வந்தவர்க்கு - எங்கும் பரவித் தாழ்வெனுந் தன்மையோடு வந்தவர்களுக்கு, பரஞான வடிவாய் - மேலான ஞான சொரூபமாய், தங்கிய மானிடர் போலத் தரித்தருளி - இங்குத் தங்கியுள்ள மானிடர் போலத் திருமேனி தாங்கி, அருள் தீக்கை தான் அளித்து - திரு வருளால் தீட்சை செய்வித்து எனக்கு அருளிச்செய்த, சிவஞான போதத்தின் உண்மைதனில் - சிவஞானபோத ஆகமத்தில் கூறப் பட்ட மெய்ப்பொருளில், அங்கு உரைத்த அவத்தை பத்தும் ஆராய்ந்து - சொல்லப்பட்ட பத்தவத்தைகளையும் தெளிந்து, அறைந்திடுவன் - சொல்வேன்; அவை என்போல் (எனின்) - அங்ஙனம் கூறுதல் எதுபோலும் என வினாவின், ஈசல் இறகால் உலகு ஏற்று அலைத்தவையாம் - ஈசல் ஒன்று தன்னிறகால் உல கத்தையே தாங்கி ஆட்டிவைத்ததைப்போல் ஆம் என்றவாறு
விநாயகக்கடவுளையும் சிவபரம்பொருளையும் வணங்கி, மல பரிபாகமும் சத்திநிபா தமும் உற்று, எங்குமாய்த் தாழ்வெனுந் தன்மையோடு வந்த மெய்யடியார்கட்கு, சிவஞான சொரூபமாய், மானிடர்போலத் திருமேனி தாங்கிக்கொண்டு தீக்கை செய்து அருனிய சிவஞானபோத உண்மைகளில் தசகாரியங்களை அறிவிப்பேன் என்பதாம்.
பொங்குமத ஐங்கரன் : அடியார்கட்கு இடர் களையும்வகை யில் பொங்கிவருகின்ற மதமாகிய கருணையையுடைய ஐங்கரன் என்பதாம். ஐங்கரன் துதிக்கையும்சேர ஐந்து திருக்கரங்களை யுடையவன். இவையைந்தும் ஐந்தொழிலாற்றலை அறிவிப்பன என்க,
புகழ்ந்து உருகி : இறைவனைப்பற்றிப் புகழ் தல் மனம் உருகுதலுக்கு வாயிலா தலின் புகழ்ந்துருகி எனக் காரண காரிய முறைப்படிக் கூறப்பெற்றது. புகழ்ந்து உருகிப் போற்றி யென்பன முறையே உரை மனம் காயம் இவற்றின் செயல்.
என்றும் பூரணமாம் அரனருள் : நித்திய பரிபூரண வஸ்து வான பரமனருள். அருளைப்புணர்ந்து என்றது ‘தாயைக்கூடி' என்ற திருமந்திர அனுபவம்.
பங்கமற - மலம் நீங்க; என்றது மலபரிபாக நிலையை. சத்தினி தாய் - சத்திநிபாதம் பரந்து. மலபரிபாகமும், சத்திநி பாதமும் முன்பின்னாக அன்றி ஒளிவர இருள் நீங்கல்போல உடனிகழ்வனவா தலின் அடுத்தடுத்துக் கூறப்பட்டன.
பார் மகுட அரவம் போல் - பூமியைத் தலைக்கு அணியாக உடைய பாம்பைப்போல். ஆதிசேடனைப்போல், சேஷன் எங்கும் பரவி இறங்கிவருதல்போல, எங்குமான அருள் நிலைபெற்றுத் தாழ்ந்துவரும் ஞானிக்கு, பரஞானவடிவாய் - சிவஞானமே சொரூபமாக.
மானிடர்போலத் தரித்தருளி என்றமை பரசிவமே இவ் வண்ணம் கருணைத் திருவுருக்கொண்டு மானிடயாக்கை தாங்கிக் குருவாக வந்தது என்றறிவித்தவாறு.
இச்செய்யுள் அவையடக்கம் கூறியது.
சிவமே எனது குருநாதனாக எழுந்தருளிச் சிவஞானபோத உண்மைகளை உபதேசித்தருளியது; அவற்றுள் தசகாரியங்களை அடியேன் அறிவிக்கின்றேன்; அது ஈசல் சிறகால் உலகை வீசுவது போலாம் என்பது கருத்து.
------------
முதற்கருத்துச் சங்கரனே முதலென்ன மொழிந்திடல்காண்
முற்றுமற்றி னத்துவித முப்பொருளு முண்டென்னல்
இதற்கடைவே மூன்றிலுயி ரியானெனதா லுண்டென்ன
லெழினான்கின் மூன்றவத்தை விழித்திடலா லேற்றிடுதன்
மதிக்கையினாற் பிரமமென்றே வருமைந்தின் மறுத்திடல்கேண்
மதித்தறிவார்க் குயிர்க்குயிராய் மன்னி நின்றே காட்டுதலாற்
பதிக்கொருமை மலத்துரிமை பகருயிரே யறியுமதாற்
பதிபாசந் தெரித்திடலே பாராறிற் பாங்குறவே. 3
இது முதல் நான்கு விருத்தங்களான், சிவஞானபோதத்துப் பன்னிரு சூத்திரக் கருத்தையும் தொகுத்து அனுபவமுங் கூறுதல் நுதலிற்று.
இ-ள் : முதற்கருத்து ' சங்கரனே முதல் ' என்ன மொழிந் திடல்காண் - முதற்சூத்திரத்தின் கருத்து சங்காரகாரணனே முதல்வன் என மொழிந்திடுதலைப் பார்; முற்றும் அற்றின் அத்துவித முப்பொருளும் உண்டு என்னல் இதற்கு அடைவே - எல்லாவற்றையும் தம்மிடத்து முற்றுப்பெறச் செய்கின்ற அதனால் 'கலப்பால் முப்பொருளும் உண்டு என்றல்' முற்கூறிய முதற்சூத்திரத்திற்கு அடைவான இரண்டாம் சூத்திரத்தின் கருத்தாம்; மூன்றில் யான் எனது ஆல் உயிர் உண்டு என்னல் - மூன்றாம் சூத்திரத்தில் யான் எனது என்று விவகரித்தலால் அதற்கு விஷயமான உயிர் உண்டெனத் தெளிதலாம்; எழில் நான்கில் மூன்றவத்தை இழித்திடலால் ஏற்றிடுதல் மதிக்கை யினால் - அழகிய நான்காஞ்சூத்திரத்தில் மூன்று அவத்தைகளில் இழித்தலாலும் மேலான இரு அவத்தைகளில் ஏற்றுதலை மதித் தறிதலாலும், பிரமம் என்றே வரும் - நாம் பிரமம் என்றே உணரவருகின்ற பிரமஞானத்தை, ஐந்தில் மறுத்திடல் கேள் - ஐந்தாம் சூத்திரத்தில் மறுத்துரைத்து உண்மை தெரிவித்தலைக் கேட்டு உணர்வாயாக: மதித்து அறிவார்க்கு உயிர்க்குயிராய் மன்னிநின்றே காட்டுதலால் பதிக்கு ஒருமை - ஆராய்ந்து அறி வார்க்கு இறைவன் உயிருக்கு உயிராக நிலைபெற்று நின்று காட்டுதலால் பதிப்பொருளுக்குள்ள ஒன்றாதல் உண்மையை யும், மலத்துரிமை - மலத்தோடு தாம் கொண்டுள்ள உரிமை யையும், பகர் உயிரே அறியுமதால் - ஆன்மாக்களே அறிவதால், பதி பாசம் தெரித்திடலே ஆறில் பாங்குறப் பார் - பதிப் பொரு ளையும் பாசத்தையும் ஆராய்ந்தறிதலை ஆறாம் சூத்திரத்தில் அழகு பொருந்தப் பார்ப்பாயாக என்றவாறு.
சங்காரகாரணனே முதற்கடவுள்; அவன் கலப்பால் முப் பொருளும் உண்டென அறிக; யான் எனது என்று விவகரித்த லால் ஆன்மா உண்டு; இருவகையான அஞ்சவத்தைகளை எய்து தலால் நாம் பிரமமன்று; உயிர்க்குயிராக ஒன்றாக நின்று காட்டும் முதல்வன் ஒருவன் உளன்; அங்ஙனம் அவன் காட்ட உயிர்கள் தாம் பாசத்தோடு பொருந்தியிருத்தலையும் அறியும்; இவற்றைச் சிவஞானபோதத்து முதலாறு சூத்திரங்களானும் முறையே யுணர்க என்பது கருத்து.
இதுவரை கூறப்பட்டது பொதுவதிகாரமாகும்.
சங்கரனே முதல் : உலகம் உற்பத்தி திதி நாசம் உடை யது ஆகலின், எவன் சங்காரகாரணனோ அவனே மீளவும் புனருற்பவம் செய்தற்கும் உரியன்; ஆதலால் அவனே முதல் வன் என்பதை,
“ அவன் அவள் அதுஎனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் ''
என்ற முதற்சூத்திரம் விளக்கிற்று என்பதாம்.
முற்றும் அற்றின் : யாவற்றையும் முற்றச் செய்யும் அத் தன்மைத்தாகிய சிவத்தின். முற்றச் செய்தல் - ஒடுக்குதல். சித்தும் சடமும் ஆகிய உலகில் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் பண்ணையும் ஓசையையும் போலவும், பழத்தையும் கனியையும் போலவும், அரக்கொடு சேர்த்திய கல்லைப் போலப் பிரிப்பின்றி யும் நின்று உபகரிக்கு முகத்தான், சிவம் மாயை கன்மங்களை தன்னாணையாற் கூட்டி நுகரச்செய்தலால் அத்துவிதமாய்ப் பதிப்பொருளும், பசுப்பொருளும், ஆணையிற் கூட்டப்பெறும் மாயை கன்மங்களும் ஆகிய முப்பொருளும் உண்டென்பதை விளக்குவது,
" அவையே தானே யாய் இரு வினையில்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே''
என்ற இரண்டாஞ் சூத்திரம்.
மூன்றில் உயிர் யான் எனது ஆல் உண்டு என்னல்: யான் இல்லை என்றும், என் துடல் என்றும் கூறுதல் முதலா யினவற்றால் உயிர் உண்டு என்று துணிதல் மூன்றாம் சூத்திரக் கருத்து.
''உளது இலது என்றலின் எனது உடல் என் றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை யின்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா''
என்பது மூன்றாஞ்சூத்திரம்.
"அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகசமலத் துணராது
அமைச்சர தேய்ப்பதின் றஞ்சவத் தைத்தே”
என்பது நான்காம் சூத்திரம். இதில், கூரிய மதியின்மையால் அமைச்சர்களோடுகூடி எண்ணி ஆட்சி செலுத்தும் அரசன் போல, சகசமலத்தால் உணர்வின்றி, கலாதிகளாற் பொது வகையான் உணர்வு பெறினும், சிறப்புவகையான் உணரமாட்டா மையின், உசாத்துணையாக அந்தக்கரணங்களோடு கூடிநின்று, நனவாதி ஐந்தவத்தைகளும் எய்துவன் ஆன்மா என்பது விளக்கப்பெற்றுள்ளது. இதிற் கூறப்பட்ட ஐந்தவத்தைகளை யும் தேசிகமூர்த்திகள் இழித்திடுதல் மூன்று என்றும், ஏற்றிடுதல் மதிப்பன இரண்டு என்றும் குறிப்பவர்கள் எழில் நான்கில் மூன்றவத்தை இழித்திடலால் ஏற்றிடு தல் மதிக்கை யினால்' என்று அருளினார்கள்,
அவத்தை மூன்றாவன சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி யென்பன. ஏற்றிடு தல் மதிக்கையில் இவற்றை மேலாலவத்தை யாக மதிக்கும் துரியமும், துரியா தீதமும். இவ்விரண்டாலும் அறி தன்மாத்திரையாலே ஆன்மா நான் பிரமம் என்று எண்ணு கிறது. அந்த முனைப்பை, ஐந்தாம் சூத்திரத்து வரும்,
''தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே "
என்ற பகுதியால் நீக்கி, ஆன்மாத்தானும் தன்னையுணராது ஆகவே உணர்த்துவான் ஒருவன் உளன் ஆதலின் நீ பிரம மல்லை என்று மறுத்துரைக்கிறது. இதனை ஸ்ரீ தேசிகமூர்த்திகள் 'ஐந்தில் மறுத்திடல் கேள் மதித்தறிவார்க்கு உயிர்க் குயிராய் மன்னி நின்றே காட்டு தலால்' என்றளுகிறார்கள்.
"உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிற னல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே''
என்பது ஆழுஞ்சூத்திரம்.
இதன் கருத்து, சிவம் அறியப்படுபொருளாகிய அசத்து மன்றி, என்றும் அறியப்படாபொருளாகிய சூனியமுமின்றி ஒருவாற்றான் அறியப்படாமையும், ஒருவாற்றான் அறியப் படுதலும் ஆகிற இருதிறனுடையதென்பது. ஆகவே ஆன்மா ஒன்றே பதியென்பதையும், பாசம் என்றும் ஆன்மாக்களுக்கு உரிமையென்பதையும் அறிகின்றது. ஆதலால் பதிபாசங்களைத்
தெரிவிப்பதே ஆடும் சூத்திரக்கருத்து என்றவாறாம்.
------------------
ஏற்றவிவை யிருபாலு மணைந்து நின்றீ தாகாம
லீ தலினா மெனத்தேறி யிசைந்தறிவே நாமென்றே
பார்த்துடனே தெளிவாகிப் பாரியனும் பகைப்பொருளும்
பாராம லறிவாதல் பாரேழில் ரூபமதாந்
தேற்றுமெட்டின் முப்பொருட்கு மூன்றறிவு மோதித்
தேர்ந்திடவே திருமேனித் தெளிவருளி மலங்காட்டிச்
சாற்றியிடு மான்மாவி னுண்மைதனைக் காட்டியபின்
றளராம லடைடத லிலக்கணமுஞ் சாற்றி. 4
இ - ள் : ஏற்ற இவை இருபாலும் அணைந்து நின்று ஈது ஆகாமல் ஈதலின் நாம் எனத்தேறி - பொருந்திய பதியும் பாசமு மாகிய இவைகளை இருபாலும் பொருந்தி நின்று பின்னின்ற பாசமாகாமல் முன்னின்ற பதிப்பொருளைச் சார்ந்து பதியாத லின் நாம் ஆன்மா எனத் தெளிந்து, அறிவே நாம் என்று பார்த்து உடனே தெளிவாகி - ஆன்மாவாகிய ஞான சொரூபி யெனக் கண்டு தெளிந்து, பாரியனும் பகைப்பொருளும் பாரா மவ் - பிரமமும் பகையாகிய மலமும் பாராமல், அறிவாதல் ஏழில் பார் - அறிவே சிவமாதலை ஏழாம் சூத்திரத்து அறிந்து கொள்; ரூபமதாம் - இதுவே ஆன்ம ரூபமாம்; தேற்றும் எட் டின் - கலங்கிய தன்மையைத் தெளிவிக்கும் எட்டாம் சூத்தி ரத்து, முப்பொருட்கு மூன்றறிவும் ஓதி- சகலர், பிரளயாகலர் விஞ்ஞானாகலர் என்னும் மூவர்க்கும் குருவாய் நின்றும் முன் னின்றும் உள் நின்றும் உணர்த்தும் உபதேச ஞானங்கள் மூன் றையும் சொல்லியருளி, தேர்ந்திடவே திருமேனித் தெளிவு அருளி - கடைத்தேறுதற்காகத் திருமேனித் தெளிவையும் அரு ளிச்செய்து, மலங்காட்டி - மறைப்பாகிய மலத்தையும் காணச் செய்து, சாற்றியிடும் ஆன்மாவின் உண்மைதனைக் காட்டிய பின் - சொல்லப்படுகின்ற ஆன்மாக்களின் நித்தியத்தையும் காட்டிய பின், தளராமல் அடைதல் இலக்கணமும் சாற்றி - தளர்ச்சியின் றிக்கே இறைவனை அடைதற்குரிய உபாய இலக் கணங்களையும் உரைத்து என்றவாறு.
நாம் ஈது ஆகாமல் ஈது அலின் எனத்தேறி - நாம் இது வாகாமல் (பாசமாகாமல்) சிவம் ஆதலின் என்று தெளிந்து. ஈது அலின் - இதுவாகலின் என்பதன் மரூஉ. நாம் அறிவே யென் று - நாம் சடப்பொருளன்று சித்தேயாம் எனத் தெளிந்து. பாரியன் - தாங்குபவன்.
பகைப்பொருள் : ஆன்ம வியாபகத்தை மறைத்து நிற்பன வாகிய மலமாதிய பொருள்கள். இவ்வண்ணம் பாசத்தைப் பாராது, நீ அறிவாய் நின்று அறிதலே ஆன்மரூபமாம்; என்றது மலையுச்சியைச் சார்ந்தபோது தான் பள்ளம் அறியப் படுதல் போல, பதியைச் சார்ந்தபோது தான் அறிபவனாகிய நீயும், தடையும் அறியப்படும் என்றவாறாம்.
"யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்தில தறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா''
என்பது ஏழாம் சூத்திரம்.
உணரப்படுவன யாவையும் சூனியமாதலின், சத்தாகிய சிவம் அசத்தாகிய பாசத்தை அறிந்து அனுபவியாது; அசத் தாகிய பாசம் அறிவில்லாத சடம்; ஆதலால் சிவத்தையறிந்து அனுபவியாது. ஆகவே பாசத்தைச் சார்ந்து பாசமாயும், சிவத்தைச் சார்ந்து சிவமாயும் இருக்கும் சதசத்தாதலின் அது சிவத்தைச் சார்ந்தவழி ஆன்மாவாகிய தன்னையறியுமாதலின் அறிவா தல் பார் ஏழில் ரூபம் அதாம்' என்றருளினார்கள்.
ஆன்மாக்கள் ஒருமலமுடையாரும், இருமலமுடையாரும் மும்மலமுடையாரும் என முத்திறப்படுவர். அவர்களுக்கு இறை வன் செய்யும் உபதேசமும் பரிபாகத்திற்கு ஏற்ப முத்திறப்படும். அதனையே 'முப்பொருட்கும் அன்றறிவும் ஓதி' என்றருளியது.
தேர்ந்திடவே திருமேனித் தெளிவருளி : கருணைகொண்டு அங்ஙனம் உபதேசித் தகாலத்தும் மேலும், திருமேனியைக் காட்டித் தெளிவு பிறக்கச்செய்து. 'திருமேனித் தெளிவு அருளி எனப் பொதுப்படக் கூறியமையால், அறிவுருவாக விஞ்ஞானா கலர்க்கு உள் நின்று உணர்த்து தலும், பிரளயாகலர்க்கு கண் ணுதலும் கண்டக்கறையுங்காட்டி முன்னின்று உணர்த்துத லும், சகலர்க்கு மானைக்காட்டி மானைப் பிடிப்பதுபோலக் குரு வாக எழுந்தருளி வந்து, அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து கைகொடுத்துத் தூக்குதலும் கொள்ளப்படும்.
மலங்காட்டி: இதுவரை மலத்துள் அழுந்தியிருந்த ஆன்மா மலத்தையறியாதிருக்க, ஆன்மாவுக்கு ஞானம்வரக் காட்டியபின் தடையை யுணருமா தலின் அதனையுங்காட்டிய உபகாரம் இறை வன் செய்ததேயாம் என்பது கருத்து.
ஆன்மாவின் உண்மைதனைக் காட்டியபின் : ஆன்மா இரு திறனறிவுளது, பதியாயே யிருக்கும் பண்பினது என்ற உண் மைகளைத் தெரிவித்தபின். அடைதல் இலக்கணம் - சிவனடி சேர்தற்கு உரிய சாதனங்களாகிய சரியை ஆதிகளின் இலக் கணம், இது, .
" ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே"
என்ற எட்டாம் சூத்திரக் கருத்து.
வேடர்களாற் கவரப்பட்ட அரசகுமாரன், அவர்களைப் போலவே ஆனாற்போல ஐம்புலக் கூட்டத்து அகப்பட்ட நீ உன் தகைமை மறந்து புலன் மயமானாய்; உன் தகுதி இப்படிப்பட்டது என்று சிவம் ஆசான் மூர்த்தமாக எழுந்தருளிவந்து உணர்த்த, முடியில் தீப்பிடித்தார் போலப் பரபரந்து, புறச்சூழலை உதறித் தள்ளி, அடைதற்குரிய இடம் வேறின்மையால் தரையையடை யும் அறுகயி றூசல் போலத் தலைவன் திருவடியை யடையப் பற்றுண்டாக அப்பற்றும் அநந்நியமாந் தன்மையின் நிலைபெற, ஆன்மா திருவடிக்கண் அணையும். ஆதலின் இவ்வுண்மை களையே சாற்றியிடு மான்மாவில் உண்மைதனைக் காட்டியபின் தளராம லடைதல் இலக்கணமும் சாற்றி' என்றருளியதாம். (4)
-----------------
பற்றவதி லருட்காட்சி பகர்ந்திடவங் கதுவாகிப்
பரஞான வின்பெனவே பணியறலும் பாரித்தே
சொற்றவிது கூடாதே லுபாயவழி தனையருளாற்
சொல்லியோகத் தாற்கூட்டிச் சுத்திசெய்த லொன்பதிலா
முற்றவதில் ரூபகமுந் தெரிசனமும் காட்டியபின்
மூழ்கியிட வின்பொழிக்க முன்னையில்லா வான்போலக்
கற்றமலன் பணியாகக் கருதிமலங் காணாதாற்
கதிர்முன்னி னிருள் போலக் காண்பத்தில் யோகமதாம். 5
இ - ள் : பற்ற - அங்ஙனம் திருவடியிற்பற்றி நிற்க, அதில் அருட்காட்சி பகர்ந்திட - அந்த எட்டாம் சூத்திரத்தில் அரு ளால் ஆன்மதரிசனத்தை அருளிச்செய்ய, அங்கு அது வாகி - திருவருளிற்சார்ந்து திருவருளே வடிவாய், பரஞான இன்பு எனவே பணியறலும் பாரித்து - பரஞானமே இன்பம் பயப்பது என்று ஆன்மாவாகிய தான் செய்யும் வினைகளை ஒழித்தலை அருளிச்செய்து, சொற்ற இது கூடாதேல் - சொல்லிய இவ்வுப் தேசம் ஆன்மாவுக்குச் சித்தியா தொழியின், உபாய வழிதனை அருளால் சொல்லி - சாதனங்களைக் கருணையால் உபதேசித்து, யோகத்தால் கூட்டி - யோக வாயிலாக ஞானத்தைச் சேர்த்து, சுத்தி செய்தல் - ஆன்மசுத்தி செய்தல், ஒன்பதில் ஆம் - ஒன்ப தாம் சூத்திரத்தில் ஆம்; உற்ற அதில் ரூபகமும் தரிசனமும் காட்டிய பின் - பொருந்திய அச்சூத்திரத்தில் சிவரூபம் சிவதரி சனம் இரண்டை உணர்த்திய பிறகு, மூழ்கியிட இன்பு ஒழிக்க முன்னையில்லா வான் போலக் கற்று - வியாபகத்துள் வியாப்ய மாய் அடங்கியிருக்க இன்பருந்துகின்றோம் என்ற எண்ணமும் நீங்க முன்பில்லாத ஆகாயம்போல எல்லாவற்றையும் எல்லை யின்றி உணர்ந்து, அமலன் பணியாகக்கருதி - சிவச்செயலாகவே சிந்தித்து, கதிர்முன் இருள்போல - சூரியன் முன் இருள் காணப் படாதது போல, மலம் காணாது ஆம் - இறைவன் முன் மலம் அறியப்படாதாம் இவ்வுண்மையை, பத்தில் காண் - பத்தாஞ் சூத்திரத்தில் அறிவாயாக; யோகம் அதாம் - அதுவே சிவயோக மாம் என்றவாறு.
''அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே”
என்பது பத்தாம் சூத்திரம்.
இதனையே ஸ்ரீமத் தேசிகமூர்த்திகள், ஆன்மா இறைவ னோடு ஏகனாகி நிற்கின்ற நிலையில், வாசனாமலம் நீங்கத் தன் செயலற்று எல்லாவற்றையும் சிவச்செயலாகக் கண்டு, மலமாதி களைக் காணாது, சிவச்சோதியையே கண்டிருப்பன் என்று அருளிச்செய்தார்கள், இதுவே சிவயோகமாம். (5)
----------------
காட்டியே சிவானுபவங் காணாமை காட்டாமற்
கண்கதிர்போ லெங்குமாய்க் கலந்தின்பாய் நின்றிடவே
யூட்டியே தன்னையென்று மொன்றிரண்டு மில்லாம
லூன் போக முயிர்க்கறவே யுள்ளபடி யுள்ளதெல்லா
மூட்டியே கொண்டிடுவன் முன்னின்றே யானவைதான்
முன்னான்மாக் கருவியும் போன்ம் மொழிந்திடும்பத் தொன் றதனி
லீட்டும் வினைப் பயனுறுவ ரெளிதாக வேனு
மீராறின் மூன்றுருவு மேத்தியன்பு செய்திடலே. 6
இ - ள் : சிவானுபவம் காட்டியே - சிவானுபவம் ஆன்மாவிற்குப் புலப்படும் வண்ணம் காட்டி, காணா மை காட்டாமல் - அதனை அறியாத மலத்தைக் காண்பியாமல், சண் கதிர்போல் எங்குமாய்க் கலந்து - கண்ணையும் சூரியனையும் போல எங்கும் கலந்து, இன்பாய் நின்றிட - இன்பவடிவேயாய் நிற்க, தன்னை ஊட்டியே - சிவமாகிய தன்னை அனுபவிக்கச் செய்து, என்றும் - என்றைக்கும், ஒன்றும் இரண்டும் இல்லாமல் - ஒன்றாயும் வேறா யும் இல்லாமல், ஊன் போகம் உயிர்க்கு அறவே உள்ளபடி உள்ள தெல்லாம் ஊட்டி - உடலையும் போகத்தையும் இனிச்சேடம் இல்லையாம்படி அவைகளுக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லா வற்றையும் நுகர்வித்து, முன்னின்றே கொண்டிடுவன் - ஆசான் மூர்த்தியாக முன்னெழுந்தருளி ஆட்கொள்வன்; பத்தொன் றதனில் - பதினொராம் சூத்திரத்தில், முன் ஆன்மா கருவியும் போன்ம் மொழிந்திடும் - முன்னிய ஆன்மா சிவானுபவத்தை நுக ருங் கருவிபோலும்; ஈராறின் - பன்னிரண்டாம் சூத்திரத்தில், ஈட்டும் வினைப்பயன் எளிதாக உறுவரேனும் - தாம் தாம் ஈட்டிய வினைப்பயன்களை எளிமையாக அடைவராயினும், மூன் றுருவும் ஏத்தி - குருலிங்க சங்கமமென்ற மூன்று உருவங்களையும் வழிபட்டு, அன்பு செய்திடல் - பத்தி பண்ணுதலைப்பற்றி, மொழிந்திடும் என்றவாறு.
காட்டியே : சிவானுபவம் காட்டியே; சிவானுபவமாகிய ஞேயத்தை அறியச்செய்து என்பதாம். காணா மை காட்டாமல் : அவ்வனுபவத்தை அறியமுடியா தபடி தடுத்துநிற்கும் மைக் குழம்பு போன்றதாகிய மலத்தைக் காட்டாதபடி; என்றது ஆன்மா சிவனைச் சார்ந்து சிவாநுபவம் நுகர்கின்றபொழுது காண்பானாகிய தன்னையும், தடையையும் உணருமாகலின்; அங்ஙனம் உணர்ந்த காலத்து வாசனையால், மலத்தைச்சார விழையுமாகலின் கருணைக்கடலாகிய சிவம், சிவானுபவம் காட்டி காணாத மையைக் காட்டாதாயிற்று.
கண்கதிர்போல் எங்குமாய்க் கலந்து இன்பாய் நின்றிட என்பது, கண்ணொளியும் கதிரொளியும் போல எங்குமாய்க் கலந்து; கண் கதிரொளியே தன்னொளியாகப் பெறு தல்போல ஆன்மா சிவானந்தமே தன்னானந்தமாகத் திளைத்துநிற்க.
தன்னை ஊட்டி: நித்திய சுதந்திரனாகிய நிமலன், என்றும் சுதந்திரமில்லாத ஆன்மாக்களுக்குத் தன்னையும் நுகரச்செய்தா லன்றி ஆன்மாக்கள் தானாக நுகர மாட்டா ஆகையினாலே, தன்னை அனுபவிக்கச்செய்து.
ஒன்றிரண்டுமில்லாமல் - ஒன்றாயிருக்குந் தன்மையும், நுகர் வானும் நுகரப்படுபொருளுமாகிய இரண்டாயிருக்குந் தன்மை யும் இல்லாதபடி (நுகர்வித்து) உயிர்க்கு ஊன் போகம் அறவே ஊட்டி எனப் பொருள் காண்க, ஊன் - தனு. போகம் - நல்வினை தீவினைப் பயனாகிய இன்பத்துன்பங்கள். உயிர்க்கு அற - ஆன் மாக்களுக்குச் சேடமில்லையாம்படி நீங்க. உள்ளபடி - நியதி தத்துவத்தினாலே வரையறுக்கப்பட்டபடி. உள்ள எல்லாம் - ஆகாமியமும் சஞ்சி தமுமாக உள்ள எல்லாவற்றையும். ஊட் டியே முன்னின்று கொண்டிடுவன் - நுகர்வித்துப் பரிபாக நிலைக்கேற்ப எழுந்தருளியிருந்து ஆட்கொள்வன். ஆனவை தான் முன் - அத்தகைய தலைவனாகிய இறைவனுக்கு முன்பு. ஆன்மா கருவியும் போன்ம் - கருவியைப்போலும் நுகர்வானாகிய ஆன்மா நுகர்பொருளாகிய சிவத்தினிடம் மடங்கு தலால் சர்க்கரையைச் சுவைக்கும் நாப்போலச் சிவானந்தத்தை நுகரும் கருவி யளவின தாய் அமையும். அதற்கு ஞா துருத்துவம் இருக்காது என்பதாம். இக்கருத்தை,
" காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே''
என்னும் பதினொராம் சூத்திரம் பகரும்.
ஈட்டும் வினைப்பயன் உறுவர் எளிதாகவேனும் : இங்கனம் பல பிறவிகளில் ஈட்டபெற்ற வினையின் பயன்களை மிக எளிதாக அடைவாராயினும் மீட்டும் வாசனை வந்து தாக்கி வினைப்பயனை வலி தாக்காதவாறு என்பதாம்.
ஈராறின் மூன்றுருவும் ஏத்தி அன்பு செய்திடல் ஆம்: "செம்மலர் நோன்றாள்'' என்னும் பன்னிரண்டாம் சூத்திரத்தில் கூறியபடி குரு லிங்க சங்கமமாகிய மூன்று வடிவத்திடத்தும் வழிபட்டு அன்பு செய்தலாம் என்றவாறு. (6)
----------------
தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி.
பாசவடி வேபகுப்பி லறிவதுவே ரூபகமாம்
பார்க்கிலதி லொருசெயலு மறநிற்ற றெரிசனமாந்
தேசுள நா மிதிலணைந்தோ முன்னாளி லிந்நாட்
டீண்டாதே நிற்றலது சுத்தியதாந் தேர்ந்திடுநீ
யாசறவே தன்னறிவாய் மூன்றுமுண்டாய்த் தோன்றுங்கா
லதுரூப மாங்கறிவற் றுனைக்காண்ட றெரிசன மாம்
ஏசறவே காட்டியதை யெப்போது மிதுகாட்டே
யிகழ்ந்திருந்தோ மிந்நாளு மெனவழுந்தல் சுத்தியதே. 7
இ - ள் : பாசவடிவு - தத்துவவடிவங்களை, பகுப்பில் அறி வதுவே ரூபகமாம் - பகுத்தறிதலில் அறிவாக விளங்குவதே தத்துவ ரூபமாம்; பார்க்கில் - ஆராயில், அதில் - அத்தத் துவங்க ளில், ஒரு செயலும் அறநிற்றல் தரிசனமாம் - செயலொன்றுமில் லாது நிற்றல் தத்துவதரிசனமாகும்; தேசுள நாம் - ஞான சொரூபி யாகிய நாம், முன்னாளில் இதில் அணைந்தோம் - பெத்தகாலத்து இதில் பொருந்தியிருந்தோம் என்று, இந்நாள் - கலாதிகளால் விளக்கம் பெற்ற இந்நாளில், தீண்டாதே நிற்றலது - தத்துவங் களைச்சாராது நிற்றலே, சுத்தியதாம் - தத்துவசுத்தியாம்: நீ தேர்ந்திடு - மாணவகனே! நீ நன்கறிவாயாக; ஆசறவே தன்னறி வாய் - குற்றம் நீங்கச் சிவஞானம் பெற்று, மூன்றுமுண்டாய் - ஆன்மாவும் இறைவனும் தடையுமாகிய மூன்றும் உள்பொரு ளாய், தோன்றுங்கால் - தோன்றும் பொழுது, அது ரூபம் - அது ஆன்மரூபமாம்; ஆங்கு அறிவற்று - அவ்விடத்து அறிவும் அடங்கி, உனை காண்டல் தரிசனமாம் - ஆன்மாவாகிய உன்னை யறிதல் ஆன்மதரிசனமாம் : இந்நாளும் இகழ்ந்திருந்தோம் - இந் நாள்காறும் இகழ்ந்திருந்தோம், ஏசறவே காட்டியதை - குற்ற மறக் காட்டிய ஞானத்தை, எப்போதும் இது காட்டே என எப்பொழுதும் இதனை அறிவித்தருளும் என்று, அழுந்தல் சுத்தி யதே - அழுந்தி அறிதல் ஆன்மசுத்தியாம் என்றவாறு.
இச்செய்யுள் தத்துவரூபம் முதல் ஆன்மசுத்திவரை ஆறு அவத்தைகளின் இயல்பினைத் தெரிவிக்கின்றது. பாச காரிய மாகிய தத்துவங்களைத் தனித்தனியே பிரித்தறிதலே தத்துவ ரூபம்; அத்தத்துவங்களைச் சடமென்றறிந்து அவற்றின் செயல் தன்மாட்டு நிகழாதபடி நிற்பது தத்துவதரிசனம்; இத்தத்துவ தாத்துவிகங்களோடு முன்னாள் கூடியிருந்தோம், இந்நாள் இதனைத் திண்டோம் என்றிருத்தல் தத்துவசுத்தியாம்; ஞானத் தால் பதி பசு பாசம் மூன்றையும் உணர்தல் ஆன்மரூபமாம்; தன்னை உணர்தல் ஆன்மதரிசனமாம்; தன்னைத் தனக்கு எப் போதுங் காட்டென்று அழுந்தி இருத்தல் ஆன்மசுத்தியாம் என்பது கருத்து. 7
---------------
சிவரூபம் , சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம்.
திரிவிதமா மறிவுதனிற் றேர்ந் திரண்டுங் கீழிடவே
தேசுளதாய் மேலதுவாய் நிற்பதுவே சிவரூபம்
வருமிதனுக் கதிபதியாய் வாட்டிமல் முணல்காட்டல்
வாழ்சத்தி யெனத்தோன்றக் காட்டி நிற்றல் காட்சியதாம்
பொருவிலதிற் பணியறவே யின்பொடுங்கப் புக்கழுந்தப்
பொய்ஞ்ஞானங் காணாமை காட்டி நிற்றல் சிவயோகங்
கருவியுளங் கொண்டு நின்று காட்டியே காண்பதுபோற்
கருதுமுயிர்ப் போகமெல்லாங் கண்டு நிற்றல் போகமதே. 8
இ-ள் : திரிவிதமாம் அறிவுதனில் - மூவகையான ஞானத் தில், தேர்ந்து இரண்டும் கீழிடவே - ஆராய்ந்து இருவகை ஞானங்களும் கீழ்ப்போக, மேல துவாய் நிற்பதுவே சிவரூபம் - மேலான ஞானமாய் நிற்பதே சிவரூபமாம்; வரும் இதனுக்கு அதிபதியாய் - கைவரப்பெறுகின்ற இந்நிலைக்குத் தலைவனாகி, மலம் வாட்டி - மலவன்மையைக் கெடுத்து, மலம் உணல் காட் டல் - மலநாசத்தைச் செய்வது, வாழ்சத்தியெனத் தோன்றக் காட்டி நிற்றல் - வாழ்கின்ற திருவருளேயென விளங்கக் காண் பித்து நிற்றலே, காட்சியதாம் - சிவதரிசனமாம்; பொய்ஞானம் காணாமை - பாச பசு ஞானங்களை மீளவும் காணாமைப்பொருட்டு, பொருவில் அதில் - ஒப்பற்ற அத்திருவருளிடத்திலேயே, பணி யறவே - செயலற, இன்பு ஒடுங்க புக்கு அழுந்த காட்டி நிற்றல் - இன்பமும் ஒடுங்க அவ்வின்பத்துள் புக்கு அழுந்தி அனுபவிக் கும்படி அறிவித்து நிற்றல், சிவயோகம் - சிவயோகமாம்; உளம் கருவி கொண்டு நின்று காட்டியே காண்பதுபோல் - ஆன்மா கண்ணாகிய கருவியை இடமாக்கொண்டு வேறாக நின்று கண்ணுக்குக் காட்டியும் உடனாய் நின்று காண்பதும்போல, கருதும் உயிர்ப்போகம் எலாம் - இடைவிடாது சிவபோகத்தழுந்தியிருக் கும் உயிர்களுக்குப் போகமாகும் சிவானுபவம் அனைத்தையும், கண்டு நிற்றல் - சிவமும் உடனாய் நின்று கண்டு ஆன்மாவினிட மாக விளங்கி நிற்றல், போகமதே - சிவபோகமாம் என்றவாறு.
திரிவி தமாம் அறிவு - பாசஞானம், பசுஞானம், பரஞானம் என்ற மூவிதமான ஞானம், பரஞானஞ் சேர்ந்தவழி ஏனை யிரண்டும் இழ்ப்பட்டன; ஆன்ம வியாபகத்தை மறைப்பன என அறியப்படு தலின் அவையிரண்டும் கிழிட என்றதாம்.
தேசுள தாய் மேல துவாய் நிற்பது என்றது பரஞானத்தை; தேசோமயமாய், மேலான தாய் நிற்பது அதுவேயாதலின். இங்கனம் பரஞானம் சேர்தலே சிவரூபமாம்.
வரும் இதனுக்கு அதிபதியாய் - சிவரூபமாகும் இந்த அவத் தைக்குத் தலைவனாகி என்பது; இவனுக்கோ மலர்வாட்டி உணல் காட்டலாகிய மலபரிபாகமும், அதனைப் பெறுவிப்பதாகிய சத்திநிபாதமாகிய சத்தியெனத் தோன்றக் காட்டி நிற்றலும் கைவருமாதலின், அதுவே சிவக்காட்சியாகிய சிவதரிசன மாம் என்றது.
அடுத்து நிகழும் அவத்தை செயலறலும் இன்பத் தழும் தலும் பாசஞானம் பசுஞானங்களைத் திரும்பப் பொருந்தாமை யும் சிவனிடமே இடைவிடாது பொருந்துதலும் ஆகலின், அதுவே சிவயோகமாம்.
காணுங்கண்ணுக்கு உடனாய் நின்று காணும் உயிரைப் போல, சிவபோகத்தினின்று உணரும் உயிர்க்கு உடனாய்நின்று சிவபோகத்தை உணரச்செய்தலின் உயிரும் சிவமாகவே நின்று
போகத்தை நுகர் தல் சிவபோகமாம் என்றவாறு.
------------------
தேசான ஞாதிருவே திருமேனி யாசானே செப்பியவிப்
பத்தவத்தை தெளிந்தனன்யா னிவைதன்னின்
மாசான மூன்றவத்தை மருவியது கருவியதா
மலமெங்கே மலமிருக்கி னீக்கமுமில் மலமறியா
வாசாம கோசரநீ வந்தாலெ னவத்தையினும்
வழங்கவிலை யுனதருளு மோங்கிவரில் வாயாது
பேசாய்மே லைந்திற்கும் பிரிவின்மை பிரிவதுவும்
பிரியாய் நீ யறியாய் நா மாக்கியதிற் பேராதால். 9
இ-ள்: தேசான ஞாதிருவே திருமேனி ஆசானே - ஞான வொளிமயமான அறிபவனே திருமேனிகொண்டு எழுந்தருளி வந்த ஆசாரியமூர்த்தியே! செப்பிய இப்பத்தவத்தை யான் தெளிந்தனன் - தேவரீர் அருளிச்செய்த இந்தப் பத்தவத்தை களையும் அடியேன் தெளிந்தேன்; இவைதன்னின் - இப்பத்த வத்தையுள், மாசான மூன்றவத்தை மருவியது கருவியதாம் மலம் எங்கே - குற்றம் பொருந்தியதான மூன்றவத்தைகளை ஆன்மா மருவியதற்கு ஏதுவாகிய மலம் எங்கே? மலம் இருக்கின் நீக்கமும் இல் - மலம் இருக்குமாயின் அதினின்று வீடும் இல்லை யாம், மலம் அறியா வாசாமகோசர நீ வந்தால் - மலவாதனையே அற்ற மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவரே! தேவரீர் எழுந்தருளினால், என் அவத்தையினும் உனதருளும் வழங்கவிலை (எனின்) - எனது கீழான நிலையினும் தேவரீருடைய திருவருளை வழங்கவில்லையாயின், ஓங்கிவரில் வாயாது - அடியேனிடம் அவ்வருள் சிறந்து வருமாயினும் பொருந்தாதாம், ஆதலால், மேலைந்திற்கும் - மேலான தான ஆன்மசுத்தி முதல் சிவபோகம் வரையுள்ள ஐந்தற்கும், பிரிவின்மை பேசாய் - பிரியாது என்றும் கூடியிருக்கு முறைமைகளைத் தெரிவித்தருள்வாயாக என்று மாணவகன் ஆசாரியமூர்த்தியைப்பார்த்து வினாவ, ஆசா ரியர் அருளிச்செய்வார்; பிரிவதுவும் பிரியாய் - பிரித்தாலும் பிரியாய், நாம் ஆக்கியதில் பேராது நீ அறியாய் - நாம் அருளிய முறையினின்றும் சிறிதும் பெயராது அதனை நீ அறிவாயாக என்றவாறு.
இச்செய்யுள் பத்தவத்தைகளையும் உணர்ந்த மாணாக்கன், ஆசாரியனை நோக்கி, தத்துவரூபம் தத்துவ தரிசனம் தத்துவ சுத்தி வரையுள்ள கீழ் அவத்தைகளை நீங்கி, மத்தியாலவத்தைக ளாகிற ஆன்மரூபம் ஆன்ம தரிசனங்களைக் கண்டு இருக்கின்ற அடியேன் மேலவத்தைகளாகிய ஆன்மசுத்தி முதல் சிவபோகம் வரையுள் ஐந்திலும் நிலைத்துநிற்கும் உபாயத்தை உணர்த்தி யருள் என வேண்டிக்கொள்ள; ஆசிரியர் நாம் உரைத்த உப தேசவழியே நின்றாயானால் நீ சிறிதும் பிரியாய் பெயராயாய் அறிக என உபதேசித்தவாறு. வரினும் என்ற உம்மை விகா ரத்தால் தொக்கது.
---------------
இப்படியிப் பொருள் பெற்றா ரிம்மையே பரமுத்தி
யெய்திடுவர் சாதித்தோ ரந்தியத்தே யெய்திடுவர்
முப்பொருளும் வியாபகமே முற்றுந் தராதரமா
முப்பொருளு நித்தியமே மூடிருள்கண் கதிர்போல
வொப்பிதுவே வியாபகமு முட்புறம்பாந் தேசிகர்க்கு
மொப்பிதுவே திருமேனி யொழியாமூன் றவத்தையினுந்
தப்பினபேர் பதமுத்தி யடைந்தடைவ ராசானாற்
றரணியினற் குலத்திலவ தரித்துவினைச் சமம்பிறந்தே. 10
இ-ள்: இப்படி இப்பொருள் பெற்றார் - இவ்வண்ணம் உபதேசப்பொருளைப் பெற்றவர்கள் சத்தியோ நிர்வாணமாக, இம்மையே பரமுத்தி எய்துவர் - இம்மையிலே சிவசாயுச்சிய முத்தி சேருவர்; சாதித்தோர் - அங்ஙனமன்றி உபதேசவழியில் நின்று சாதனை செய்தவர்கள், அந்தியத்தே - வினைச்சேடங்களை நுகர்ந்து உடல் வீழ்ந்த காலத்து, எய்திடுவர் - வீட்டினை எய்து வர், முப்பொருளும் வியாபகமே - பதி பசு பாசம் என்ற முப் பொருள்களும் வியாபகப் பொருள்களேயாம், முற்றும் தராதர மாம் - ஆயினும் இவற்றுள் முழுதும் வேறுபாடுண்டாம், முப் பொருளும் நித்தியமே - அந்த முப்பொருள்களும் நித்தியப் பொருள்களேயாம்; மூடிருள் கண் கதிர்போல ஒப்பு இதுவே - இம்மூன்று பொருள்களுக்கும் மறைத்திருக்கின்ற இருளும் கண்ணும் சூரியனும் ஒப்பாம், வியாபகமும் உள் புறம்பு ஆம் தேசிகர்க்கும் ஒப்பு இதுவே - வியாபக ஞானத்தை உள்ளும் புறம்பும் உடைய என் தேசிகமூர்த்திக்கும் இக்கருத்து ஒப்புவ தாம்; திருமேனி ஒழியா மூன்றவத்தையினும் தப்பின பேர் - உடல் நீங்கப்பெறாத முதன் மூன்றவத்தையினும் நின்ற ஆன் மாக்கள், பதமுத்தி அடைந்து - சாமீபாதி பதமுத்திகளைப் பெற்று, தரணியில் நற்குலத்தில் அவதரித்து ஆசானால் வினைச் சமம் பிறந்து அடைவர் - பூமியில் மீட்டும் நற்குலத்தில் தோன்றி ஆசாரியனருளால் இருவினை ஒப்புப்பெற்று பரமுத்தி அடைவர் என்றவாறு.
ஞானதேசிகனால் அருளப்பெற்றுச் சிவபோகத்தழுந்தியே இருப்பவர்கள் உடனே பரமுத்தி எய்துவர்; சாதித்தோர் இறுதியில் எய்துவர். முப்பொருள்களும் நித்தியமாயும் வியா பகமாயும், இருளுக்கும் கண்ணுக்கும் கதிருக்கும் ஒப்பாயும் இருப் பினும், இவற்றுள் தராதரம் உண்டு. இவற்றை உணர்ந்து தெளிந்த உள்ளும்புறம்பும் சிவஞான மயமானதேசிகமூர்த்திக்கும் இக்கருத்துச் சம்மதமாம். தத்துவ பமாதிய மூன்றவத்தைகளி லும் திருமேனி அழியாது; ஆகவே அதினின்று சரியையாதி களைச் செய்தோர் எய்துவது பதமுத்தியேயாம். அங்ஙனம் பத முத்தி அடைந்து, மீளவும் பூமியில் புனருற்பவித்து ஆசாரியன் ஞானோபதேசத்தால் இருவினையொப்பும் மலபரிபாகமும் பெற் றுப் பாமுத்தி அடைவர் என்பது கருத்து. பதி பசு பாசங்கள் முறையே கதிரும், கண்ணும், இருளும் போல்வன என்பது முன்னரே விளக்கப்பெற்றது.
மூன்றவத்தையினும் தப்பின பேர் என்றது, மூன்றவத்தை களிலிருந்தும் அவற்றை அறிந்த பேர்கள் அவற்றைப் படி யாகக்கொண்டு மேலே ஏறவேண்டியிருக்க அந்நிலையிலேயே நின்று தப்புவார்களாயின் என்பது விளக்கி நின்றது. வினைச் சமம் பிறந்து என்பதற்கேற்பப் பரமுத்தியை எனச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது. (10)
-----------------
தன்னறிவைப் பற்றாத தபோதனராஞ் சத்தியர்க
டாமறவே யூன்போகந் தாக்காமற் பரஞான
வந்நெறியில் வழுவாம லவனிவரை நீங்காம
லநாதியே நேயத்தா லாக்கியுருக் கொண்டுவந்த
விந்நெறியே கருதியது தனுவாக வின்புற்றே
யெந்நாளுஞ் சிவானுபவ மெய்தியிங்கே யிருந்திடுவர்
துன்னெறியைக் கைவிட்டே தன்னின்பந் துய்ப்பரெனிற்
சோதியாய் நில்லாயேற் றுன்னெறிபோ காதறியே. 11
இ - ள் : தன் அறிவைப் பற்றாத தபோதனராம் சத்தியர் கள் - ஆன்மபோதத்தைச் சாராத சிவயோகியராகிய உண்மை ஞானிகள், தாம் அறவே - தற்போதங் கெட்டமையால், ஊன் போகம் தாக்காமல் - வினை நுகர்ச்சிக்காக வாய்த்த இவ்வுடலும் இதனைக் கருவியாகக்கோண்டு நுகர இருக்கும் போகங்களு மாகிய இரண்டாலும் பாதிக்கப்படாமல், பரஞான அந்நெறியில் வழுவாமல் - சிவஞானமாகிற உயர்ந்த அந்த நெறியிலிருந்தும் சிறிதும் நழுவாதபடி, அவன் இவரை நீங்காமல் - கருணாநிதி யாகிய சீபரமேசுரன் இவர்களைத் தங்கருணையால் பிறியாமல், அநாதியே நேயத்தால் ஆக்கி - அநாதி நித்திய சம்பந்தமான திருவடிப்பற்றால் விளைந்து, உருக்கொண்டு வந்த இந்நெறியே கருதி - உருவாகிய இந்த சிவானுபவ நெறியையே எண்ணி, அது தனுவாக இன்புற்று - சிவன் அருளே தமது திருமேனியாகக் கொண்டு இன்புற்று, எந்நாளும் சிவானுபவம் எய்தி இங்கே இருந்திடுவர் - எப்போதும் இடைவிடாத சிவானுபவத்தைப் பெற்று இங்கே எழுந்தருளியிருப்பர்; துன்னெறியை கைவிட்டுத் தன்னின்பம் துய்ப்பர் எனின் - தாம் பொருந்துதற்குரிய சிவ போக நெறியைவிட்டு ஆன்மபோகத்தை யனுபவிப்பார் எனில் மாணவகனே! நீ ஞான வொளிமயமாய் நில்லாவிடின், துன்னெறி போகாது அறி - மலவாதனையால் இதுவரையுள்ள கெட்ட நெறி மாறாது அறிவாயாக என்றவாறு.
தன் அறிவு - ஆன்மபோதம். தபோதனர் - இயமாதிகளில் நின்று மலபரிபாகத்திற்காக முயலும் சிவயோகியர்கள். தாம் அற - தற்போதம் கெட.
அவன் இவரை நீங்காமல் : பரமேசுவரன் இத்தகைய சிவ ஞானியரை என்றும் தம் கருணையால் நீங்கான் ஆதலின் இங்ஙனம் கூறியது.
அநாதியே நேயத்தால் ஆக்கி: ஆன்மாவும் சிவனும் அநாதியே நேசமுடையராயினும் ஆணவத்தடை ஆன்மாவிற் குள்ள நேயத்தை மறைத்து நின்றது; அதனை நீக்கவே ஆன்மா நேயத்தில் ஆழ்வதாயிற்று என்பதாம்.
அது - திருவருள். திருவருளே உடலாகக்கொண்டு சிவானு பவத்தில் திளைக்கும் என்பதாம். துன்னெறி - துன்னுகின்ற நெறி; வினைத்தொகை. துன்னெறி - தீநெறி; பண்புத் தொகை. (11)
----------------
அன்றாலின் கீழிருந்தா ரங்கையருட் போதத்தி
னலமலத்தை நீக்கித்தா னரன்கழலே செலுமென்று
மின்றேக னேயாகி யிறைபணியார்க் கில்லையென்று
மிடைவிடா தன்பினாலான்கழலே செலுமென்றுந்
தன்றாளி னேயர் தமிற் கூடலென்றுஞ் சாற்றியது
தானொன்றே வுயிர்ப்போகஞ் சாராதே யிரண்டினிலும்
பொன்றாதே தன்னின்பம் புசிக்குமெனுந் புத்தியினாற்
பொன்றறிவி லவனேய மிக்கங்கே புத்தியன்றே. 12
இ - ள் : அன்று ஆலின் கீழ் இருந்தார் அங்கை யருள் போதத்தின் - அன்று கல்லால் அடியின் கீழ் எழுந்தருளியிருந்த தட்சிணாமூர்த்திதேசிகருடைய திருக்கரம் சுட்டியருளிய சிவ ஞானத்தால், அலமலத்தை நீக்கி - அல்லாததாகிய ஆணவத்தை யகற்றி, தான் அரன் கழலே செலும் என்றும் - சிவஞானம் பெற்ற ஆன்மா சிவன்கழலேயடையும் என்றும், இன்று ஏகனே யாகி இறைபணியார்க்கு இல்லை - இன்று அநந்நிய பாவனையில் நிலைத்துச் சர்வேஸ்வரனை வணங்காதவர்கட்கு நிர திசயானந் தம் இல்லையாம் ஆதலால், என்றும் இடைவிடாது அன்பினால் அரன்கழலே செலும் என்றும் - என்றும் எக்கணமும் இடை விடாத அன்பினால் இறைவன் திருவடிக் கமலங்களைப் பற்றும் என்றும், தன் தாளில் நேயர் தமிற் கூடல் என்றும் - இறைவ னுடைய திருவடித் தாமரையிற் பற்றுக்கொண்ட சிவனடியார்க ளோடு மருவிவாழ்க என்றும், சாற்றியது ஒன்றே - அருளிச் செய்த உபதேசம் ஒன்றே, உயிர் போகம் சாராதே - ஆன்மாக் கள் தம் வினைச்சேடத்தை மீட்டும் வாசனையாற்சென்று பற்றுச் செய்யாதபடியும், இரண்டினும் பொன்றாதே - மல மாயையிரண் டினும் அகப்பட்டு அழியாமலும், தன்னின்பம் புசிக்கும் என் னும் புத்தியினால் - சிவானந்தத்தை நுகரும் என்கிற அறிவால், பொன்று அறிவிலவன் - அழியுந்தன்மையதாகிய பாசஞானங்கள் இல்லாத பரிபாகமுற்ற சிவஞானி, நேயம் மிக்கு அங்கே புத்தி யன்றே - சிவனடிப் பற்றுக்கொண்டு அங்கே உறைதல் அன்றோ அறிவாவது என்றவாறு.
ஸ்ரீ பரமேசுவரன் கல்லால விருட்சத்தின் கீழ் குருமூர்த்தி யாக எழுந்தருளி, சின் முத்திரைக்கையால் அருளியது சிவஞான போதம் ஆதலின் அங்கையருள் போதம் என்றருளியது.
சின்முத்திரை சுட்டுப் பொருளாகிய ஆன்மா, பாம்புவிரலும் மோதிரவிரலும் சிறு 'விரலுமாகிய மும்மலங்களினின்றும் நீங்கிச் சா தகநிலையில் தாள் தலையாக அடங்கியிருத்தலும், போதக நிலையில் இரண்டும் ஒன்றியிருத்தலுமாகிய உண்மைகளை உணர்த்துவதாம் என்க.
அலமலம் - ஆன்மா என்றும் சிவஞானம் பெற்றுச் சிவன் சேவடியைச் சேர் தற்குரியது; ஆதலால், அத்தகைய ஆன் மாவை அறியாமையில் அழுத்துவதாகிய நல்ல தல்லாத மலம்.
கழலே செலும் என்றும் என்றது சாதகர்க்கு; இது பன்னிரண்டாம் சூத்திரக்கருத்தை விளக்குவது. (12)
--------------
உண்மையாஞ் சிவானுபவ ரூன்போக மருந்திடினு
முத்தமமே யாகுமவை தானென்போ லுலகிலுள்ளோர்
வண்மையாங் கனவு தனில் வல்லிதனைப் புல்கிடவே
வருவதெலாந் தூலவுடற் கொல்லை தனி லானதுபோற்
றிண்மையாஞ் சாதகரூ ழருந்திடினுந் துணைமறவார்
சேய்விளையாட் டினை மறவா தனையடித்தூட் டிடினுமிக
வெண்மையாங் குணக்கோமா னிலங்கிடுமா
வடுதுறைவாழ் வெனு நமச்சி வாயனெனக் களித்தநெறி யிவைதேரே. 13
இ - ள் : உண்மையாம் சிவானுபவர் - உண்மையான சிவானு பவம் உடைய ஞானிகள், ஊன் போகம் அருந்திடினும் - எடுத்த இவ்வுடலைக்கொண்டு வினைப்போகத்தை நுகர்ந்தாலும், அவை உத்தமமே யாகும் - அப்போகங்கள் நன்மை பயப்பனவேயாம்; என் போல் உலகில் உள்ளோர் - என்னைப்போல உலகில் ஊனெ டுத்துழல்வார், வண்மையாம் கனவுதனில் வல்லிதனைப் புல் கிடவே வருவதெலாம் - வளப்பமான கனவில் ஒரு பெண்ணைப் புணர அதனால் வரும் புடைபெயர்ச்சியெல்லாம், தூலவுடற்கு ஒல்லைதனில் ஆனதுபோல் - பருவுடலையும் விரைந்து வாதித் தது போல, திண்மையாம் சாதகர் - உறுதியுடையராகிய சாதகர் கள், ஊழ் அருந்திடினும் - வினைப்போகத்தை நுகர்ந்தாலும், துணை மறவார் - தனக்குப் பரோபகாரம் செய்து கை தூக்கி விட்ட ஞானாசாரியனை மறவார்கள் எதுபோல எனில், அன்னை அடித்து ஊட்டிடினும் சேய் விளையாட்டினை மறவாது - தாய் அடித்து உணவை உண்பித்தாலும் குழந்தை விளையாட்டை மறவாது அது போலாம்; மிக வெண்மையாம் குணக்கோமான் - மிகத் தூய்மையான குணங்களையுடைய எமது தலைவன், இலங் கிடும் ஆவடு துறை வாழ்வு எனும் நமச்சிவாயன் - விளங்குகின்ற திருவாவடுதுறைக்கே வாழ்வாகும் குருநாதன் ஸ்ரீ நமசிவாய தேசிக மூர்த்திகள், எனக்கு அளித்த நெறி இவை - அடியேற்கு அருளிச் செய்த உபாயம் இவையாம்; தேர் - தேர்வாயாக என்றவாறு.
உண்மையாம் சிவானுபவர் என்ற அடை, சிவானுபூதி மான்களைப்போல நடிப்பாரை விலக்கி நின்றது. ஊன் - உடல். அவை உத்தமமேயாகும் எனக்கூட்டுக.
உலக ஞானியர் என்றது பாச பசு ஞானியரை, அவர்கள் கனவிற்கண்ட இன்பத்துன்ப உணர்ச்சியின் நிகழ்ச்சிகளைப் பருவுடலிலும் காண்கிறோம்; அதுபோல, சாதகர்கள் ஊழ்வினை நுகர்ந்தாலும் ஆசாரியன் சீபாதத்துணையை மறவார்; இதுவே அடியேனுக்கு ஆசாரியன் அளித்த அருளுபதேசம் என்று தேர்வாயாக என்பது கருத்து. (13)
ஸ்ரீ தட்சிணாமூர்த்திதேசிகர் தசகாரியம் முற்றிற்று.
---------------------
சிவமயம்
3. ஸ்ரீ சுவாமி நாததேசிகர் அருளிச்செய்த தசகாரியம்
அளவிலா வண்ட மாயை யானகன்ம மாணவத்தோ
டளவிலாச் சீவ னுற்ற வபக்குவ மறிந்த சீவன்
அளவிலாப் பிறவி நீத்தே யளவிலா வருளைச் சார்ந்தே
அளவிலா வரனைப் பெற்றே யளவிலாச் சுகமா ரும்மே.
அளவிலா அண்டமாயை ஆன கன்மம் ஆணவத்தோடு அளவிலாச் சீவன் உற்ற அபக்குவம் அறிந்த சிவன் என்பது அளவில்லாத ஆன்மாக்களும் பக்குவத்தினாலே ஆணவத்தைப் பிடித்தார்கள்; மலங்கன்மத்திலே விருப்பத்தைக் கொடுத்தது; இந்தச் செய்தியைக் கர்த்தா அறிந்து இரக்கத்தினாலே மாயை யினாலே பல அண்டங்களையும் தனு கரண புவன போகமாகப் படைத்தார்; இது அநாதி செய்தியாகலின் இப்படி ஒரு அர்த்தம் ஓதுவாருமுளர். இந்நூல் அறிவின்மையிலிருந்து நீங்கும் தகுதி உடைய சீடனுக்கு உணர்த்து நூலாகலின் அவனறிந்த பதார்த் தத்தைச் சுட்டிக்காட்டி மேல் அறிவிப்பது கடனாகச் சிவஞான போதம் முதலிய நூலினும் அவனவள துவாகிய பிரபஞ்சத்தைக் காட்டி அறிவிப்பது கருத்தாகலின் அது சார்வாக அர்த்தம் வருமாறு:
-
அளவிலா அண்டம் எ - து அளவிறந்த அண்டரூபமா யிருக்கிற பிரபஞ்சமெல்லாம் என்னத்திலே உற்பத்தி?
மாயை எ - து மாயையிலே உற்பத்தி; மாயை தானே இந்த ரூபமாகுமோ? அவனது மாயை செடமாகற்றான் அது தானே உண்டாகாது; கர்த்தா உண்டாக்குவர். எ துக்காக உண்டாக்கினார்?
கன்மம் எ - து ஆன்மாக்கள் செய்கின்ற கன்மத்துக்கு ஈடாக அவரவர்கள் கன்மம் பொசிக்கும் பொருட்டுத் தனு
கரண புவன போகமாக உண்டாக்குவர்; ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏது?
ஆணவத்தோடு எ - து ஆன்மாக்கள் ஆணவமலத்தைப் பிடித்தார்கள்; அது கன்மத்தினாலே விருப்பத்தைக் கொடுத் தது. ஆன்மாக்கள் அந்தமலத்தை ஏன்பிடித்தார்கள்?
அளவிலாச் சீவனுற்ற அபக்குவம் எ - து சர்வான்மாக் களும் அபக்குவத்தினாலே ஆணவத்தைப் பிடித்தார்கள்; சனன மரணமெல்லாம் வருவதற்கு அபக்குவமே காரணம். அது நீங்குவது எப்படி?
அறிந்த சிவன் எ - து அனுபோகமுடைய ஆசாரியராலே அந்த பக்குவத்தைத் தரிசித்துக்கொண்டேயிருக்கிற பக்குவ ஆன்மாக்கள்,
அளவிலாப் பிறவி நீத்தே எ - து எண்ணில்லாத செனன மரணத் துன்பத்தை நீக்கி,
அளவிலா அருளைச் சார்ந்தே எ - து ஆன்மாக்கள் அறி வால் அறிதற்கரிய திருவருளே சார்வாக,
அளவிலா அரனைப் பெற்றே எ - து திருவருளினாலேயும் அனுக்கிரகத்துக்கரிய சிவத்தைப் பெற்றே,
அளவிலாச் சுகம் ஆரும்மே எ - து அந்தச் சிவன் தன் பெருமை தானறியாத் தன்மையனாகலின் அந்தச் சிவனாலும் அளவிடற்கரிய அவனது பேரானந்தசுகத்தைப் பொசித்துக் கொண்டே இருப்பார்கள் என்றவாறு.
சிவனாலும் அளவிடற்கரிய ஆனந்தம் என்பதற்கு தாரணம்: திருவாசகத்தில்,
’தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ'
என்றும், இருபா இருபஃதில்,
‘தன்னது பெருமை தாக்கானாயினும்'
என்றும் வரும் ஏதுக்கள் கொண்டு அறிக. துகளறு போதத்தில்,
'நாவாரிரதமது நாவருந்த வல்லாதிங்
காவா ரிரதம் அறியுமோ'
என வருவதும் அறிக. 1
-------------
பூறுவ வினையே கன்மம் புகழான பஞ்ச சத்தி
பேறுகொ ணவபே தங்கள் பிறவிலா வக்க ரங்கண்
மாறுகொ ளான்ம ஞானம் வகைவகை தத்து வங்கள்
ஈறிலாத் தனுக்க ளாதி யிவையின்பத் துன்ப மூலம். 2
ஆன்மாக்கள் அனாதியிலேயே தனுவையின்றிச் செய்யும் கன்மம் ஏது? என்னில்,
பூறுவ வினையே கன்மம் எ - து அநாதியிலே மலமறைப் பினாலே சுகதுக்கத்திலுண்டான விருப்பு வெறுப்பான கன்மம்,
புகழான எ - து அந்த விருப்பத்தை எல்லாச் சமயத்தாரும் புகழப்பட்ட பூரணபரமே தானறிந்து அதை ஊட்டித்தொலைக்க என,
பஞ்ச சத்தி பேறுகொள் நவபேதங்கள் பிறிவிலா அக்கரங் கள் எ - து பஞ்சசத்தி மூர்த்திமானாகவும் நவந்தரு பேதங்களாக வும் மந்திர சொரூபமாகவும் திருமேனிகொண்டு பஞ்சகிருத்திய மும்பண்ணி என்ன காரியத்தை முடிக்கும்? என்னில்,
மாறுகொள் ஆன்மஞானம் எ - து ஆன்மாவின் அறிவை மாறுபடுத்தியிருக்கிற மலத்தை நிவர்த்திபண்ணும் பொருட்டு,
வகை வகை தத்துவங்கள் ஈறு இலா தனுக்கள் ஆதி எ - து பிரேரககாண்டம் போக்கியகாண்டமாகிய தத்துவங் களால் ஓர் அறிவு முதல் ஐயறிவுவரை உள்ள தனுவாதிகளைப் படைக்கும் , இவை இன்பத் துன்பமூலம் எ - து இதுவெல்லாம் பூர்வ வினையாகிய இன்பத் துன்பம் விருப்பம் தருவது காரணம் என்றவாறு. (2)
---------------
பக்குவந் தன்ம மூலம் பரிபாகம் பாத மொப்புச்
சற்குணக் குரவன் சாற்றுஞ் சத்தியச் சத்த மெல்லாம்
இக்கிர மத்தினாலே யிடரிலா தறிந்த சீவன்
அக்கணம் பிறவி நீத்தே யளவிலாச் சுகமா ரும்மே. 3
இவை தீருவது எக்காலம்? என்னில்,
பக்குவம் தன்மமூலம் பரிபாகம் பாதம் ஒப்பு எ-து அப் பக்குவம் அறுதியானால் அச்சிவபுண்ணியம் செய்யவரும், சிவ புண்ணியம் செய்தால் மலபரிபாகம் வரும், அது வந்தால் இரு வினையொப்புவரும்,
சற்குணக்குரவன் சாற்றும் சத்தியச்சத்தம் எ - து இரு வினையொப்புவந்தால் நிர்விகாரம் என்னும் ஓரியல் புகுணாதீதம் எல்லாவுயிரிடத்திலும் கலப்ப, பக்குவ ஆன்மாக்களுடைய உடல் பொருள் ஆவி மூன்றுக்கும் சுதந்தரமெல்லாம் பல்கிய பெருமை இந்த ஆறு குணமும் இயல்பாகஉடைய ஞானாசாரியர் எழுந் தருளி மெய்யாகிய உபதேசத்தை அனுக்கிரகம் பண்ணுவர்,
எல்லாம் இக்கிரமத்தினாலே இடரிலாது அறிந்த சிவன் எ - து பக்குவம் முதல் உபதேசம்வரை ஆறு காரியமும் இடை யூறு இல்லாமல் ஒன்றுக்கொன்று காரணமாய் ஒன்றன் பின் ஒன்றாகப் பொருந்தப்பட்ட ஆன்மாக்கள்,
அக்கணம் பிறவி நீத்தே அளவிலாச் சுகம் ஆரும் எ - து அந்தக்ஷணமே செனன மரணத் துன்பம் நீங்கி அளப்பரிய பேரானந்த சுகத்தைப் பெறும் என்றவாறு. (3)
---------------
அழிபொருளும் பொய்ப்பொருளு மளவிலவே யாதலினாற்
கழிபொருளாய்க் கைவிடுவா யொருக்காலுங் கருதாதே
அழிபொருளி லடங்காத வைந்துபெரும் பொருள்களையே
கழிபொருளாய்க் கருதாம லெப்பொழுதுங் கருதாயே. 4
ஆசாரியன் அறிவிக்கும் கருமம் ஏது? என்னில்,
அழிபொருளும் பொய்ப்பொருளும் அளவு எ - து தோன்றி நின்றழிவதே இயல்பாகிய பிரபஞ்சமும் முயற்கோடு ஆகாயப் பூவும் சரி; பிரபஞ்சம் உருவாயிருப்பதும் பொய்ப்பொருளும் ஓரளவாவது எப்படி?
இலவே ஆதலினால் எ - து பிரபஞ்சம் இருப்பது போலே காட்டி அழிந்துபோவதாதலின் இல்லாத பொருளாச்சுது. இரண்டும் இல்லாத பொருளாகையினாலே ஓரளவு தான்,
கழிபொருளாய்க் கைவிடுவாய் ஒருக்காலும் கருதாதே - முயற்கோடு ஆகாயப்பூவி ல பற்று இல்லாமல் இயல்பாய்க் கழித்ததுபோல இருந்த பிரபஞ்சத்தையும் பொய்யென்று கருதி ஒருக்காலமும் பொருந்தாமற் கைவிடுவாயாக, விடும் பொருள் இதுவாகில் பெறும் பொருள் எது? என்னில்,
அழிபொருளில் அடங்காத ஐந்து பெரும் பொருள்களையே கழிபொருளாய்க் கருதாமல் எப்பொழுதும் கருதாயே எ - து பிரபஞ்சங்களை அறிகிற உன்னுடைய சுட்டறிவினால் அறிவதற் கடங்காத மெய்ப்பொருளை நீ அறியாமல் களித்திருப்பதை நீங்கி எப்போதும் அருளிலே விசாரித்துக் கருதுவாய் என்றவாறு.(4)
---------------
மாயையா லறிவ தெல்லா மட்டிடாப் பாச ஞானம்
ஓய்விலா மலங்க ளெல்லா மொழித்தறி வோடி ருத்த லேயிருட்
பசுஞா னந்தா னிடர்ப்படு முயிரி ருட்டே
போயிட விரக்கம் வைத்த பொருள் சிவ ஞான மாமே. 5
அந்த மெய்ப்பொருளை என்னுடைய அறிவினாலே விசா ரித்து அறியக் கூடாதோ? என்னில்,
மாயையால் அறிவதெல்லாம் மட்டிடாப் பாசஞானம் எ - து மாயாகருவியைப் பொருந்தி அறிவதெல்லாம் பாசஞானம்,
ஓய்விலா மலங்களெல்லாம் ஒழித்து அறிவோடு இருத் தலே இருள் பசு ஞானந்தான் எ - து ஆன்மாவின் அறிவை விட்டு நீங்காமற் பெந்தித்திருக்கின்ற மும்மலங்களையும் நீங்கி உயிரறிவோடு கூடி இதுவெல்லாம் நாமே நீங்கினோம் என்று முதன்மையாயிருப்பது மயக்கத்தையுடைய பசுஞானம்,
இடர்ப்படும் உயிர் இருட்டே போயிட இரக்கம் வைத்த பொருள் சிவஞானமாம் என்றவாறு. (5)
-------------------
அபுத்தியாற் புத்தி தன்னா லகச்சரி யாதி நான்காற்
சுபுத்தியோ டந்த நான்காற் றோன்றுமே சிவதன் மங்கள்
உபத்திர மின்றிப் பத்து மொன்றன்பி னொன்று தோன்றுஞ்
சுபத்தினான் மலங்க ளெல்லாந் துடைத்துயிர் தோன்று மன்றே. 6
இந்தச் சிவஞானம் எப்போது உண்டாகும்? எனில்,
அபுத்தியால் புத்தி தன்னால் எ - து அபுத்தி பூருவ சிவ புண்ணியும் புத்திபூருவ சிவபுண்ணியம்,
அகச்சரியாதி நான்கால் எ - து உபாயச் சரியாதி நாலு,
சுபுத்தியோடு அந்த நான்கால் எ - து உண்மைச் சரியாதி நாலு,
தோன்றுமே சிவதன்மங்கள் எ - து இப்படிப் பத்துவித மாகச் சிவஞான நேயமுண்டாகும். இது வருமுறைமை எப்படி? என்னில்,
உபத்திரமின்றிப் பத்தும் ஒன்றன்பின் ஒன்று தோன்றும் எ - து சிவனிடத்தில் உண்டாகிய அன்பு இடையூறில்லாமல் இப்படி வி தமாக ஒன்றொன்றாக முறையே தோன்றும்,
சுபத்தினான் மலங்களெல்லாம் துடைத்து உயிர் தோன்று மன்றே எ - து இந்த அன்பு பெருகவே சிவஞானமுண்டாம்; அதனாலே மும்மலங்களையும் நீங்கி உயிர் தோன்றும் என்றவாறு.
---------------
மெய்ப்பொருளிற் பொய்ப்பொருளின் மேவாத
வழிபொருளில் விருப்ப மற்றால்
அப்பொழுதே யுயிருண்டா மதன்பின்னே . .
குருவுண்டா மான பின்னே
யொப்பரிய நூலுண்டா முபதேசம்
பலவுண்டா முபதே சத்துட்
செப்பரிய தசகாரி யங்களென்னு
மஞ்சவத்தைத் தெளிவுண் டாமே. 7
இப்படி உயிர் தோன்றுவதற்குச் சாதக நடக்குந்திறம் ஏது? என்னில்,
மெய்ப்பொருளின் பொய்ப்பொருளின் மேவாத அழிபொருளில் விருப்பம் அற்றால் அப்பொழுதே உயிருண்டாம் எ - து நித்திய பதார்த்தத்திலும் சேராமல் முயற்கோடு ஆகாயப் பூவினும் சேராமல் தோன்றி நின்றழியும் குணமுடைய தனு கரண புவன போகத்தில் விருப்பமற்றகாலம் உயிருண்டாகும் ,
அதன் பின்னே குரு உண்டாம் எ - து உயிர்பிறந்தகாலம் ஆசிரியர் எழுந்தருளும், ஆனபின்னே ஒப்பரிய நூல் உண்டாம் உபதேசம் பல உண்டாம் உபதேசத்துள் எ - து ஆசாரியர் எழுவகைத் தீட்சையும் செய்கையால் அக்குற்றங்கள் நீங்க உபதேசங்களைப் பண்ணு வார்; அந்த உபதேசத்தினாலே, செப்பரிய தசகாரியங்கள் என்னும் ஐந்தவத்தை தெளிவு உண்டாமே எ - து மனம் வாக்குக் காயங்களுக்கு அரியதாகிய பத்துக்காரியத்திலே நடைசெய்து சுத்தாவத்தை யனுட்டானம் கைகூடும் என்றவாறு.
-------------
செயிரறு சீவ னுண்டேற் றெளிந்தமுப் பொருளுந் தேரும்
உயிர்மலங் கன்மங் கர்த்தா வுபாதான மைந்து மெய்யே
பெயருள முயற்கொம் பாதி பெயர்ப்பொருளில்லாப் பொய்யே
துயருறு சரீர மாதி தோன்றி நின் றழிந்து போமே. 8
மெய்ப்பொருள் பொய்ப்பொருள் அழிபொருள் என்று மூன்றாகச் சொன்ன துண்டேல் அந்த மூன்று பொருளுக்கும் லட்சணம் எது? என்னில்,
செயிரறு சீவனுண்டேல் தெளிந்த முப்பொருளும் தேரும் எ - து செனன மரணத் துன்பம் தீர்த்துக்கொள்ளவேணும் என்கிற பக்குவான் மாக்கள் உளவாயின் இங்ஙனம் சொல்லிய மூன்று பொருளையும் விசாரிக்கும்,
உயிர் மலம் கன்மம் கர்த்தா உபாதானம் ஐந்து மெய்யே எ - து ஆன்மாவும் பாசம் மூன்றும் கர்த்தாவுமாக ஐந்து மெய்ப் பொருள்,
பெயருள முயற்கொம்பு ஆதி பெயர்ப்பொருள் இல்லாப் பொய்யே எ - து முயற்கோடு ஆகாயப்பூவைப்போலப் பெயர் மட்டுமன்றிப் பதார்த்தமில்லாதது பொய்ப்பொருள்,
துயர் உறு சரீரமாதி தோன்றி நின்று அழிந்துபோமே எ - து மிகுந்த துயரத்தை விளைக்கிற பிரபஞ்ச ரூபமாயிருக்கிற தனு கரண புவன போகம் நாலும் அழிபொருள் என்றவாறு.(8)
--------------
ஒப்பிலா நிறுவி கார மொருவழி குணங்க லப்புச்
செப்பிய சுதந்தி ரஞ்சிற் சீர்முதற் சமானஞ் சேரா
தப்பிலா விபுவி நாசஞ் சமர்த்ததை யனாதி சத்தி
அப்பிர மேய மற்று மைந்திற்குஞ் சமான மாமே. 9
இந்த மெய்ப்பொருளைந்திற்கும் லட்சணம் ஒருவழியாகச் சமானமே? என்னில்,
ஒப்பிலா நிறுவிகாரம் எ - து செடசித்துக்களனைத்தினுங் குறைவற நிறைந்துநின்று அதன் குணங்களை விளக்கியும் தான் ஒன்றினும் தோய்வற்றுநிற்கிற நிர்விகாரம்,
ஒருவழி எ - து என்றும் ரியல்பாயிருப்பது, குணம் எ - து குணரகிதனாயிருப்பது, கலப்பு எ - து சர்வ ஆன்மாக்களுக்கும் உயிர்க்குயிராய் நிற்பது,
செப்பிய சுதந்திரம் - து இங்கனம் சொல்லிய ஐந்தில் தானொன்று போக நின்ற நாலையும் தனக்கன்மையாயும் உடைமை யாயும் உடைய சுதந்திரம்,
சிற்சீர் எ - து ஒருவராலும் அறிதற்கரிதாகிய பெருமை,
முதல் சமானம் சேரா எ - து இந்த ஆறு செய்தியும் கர்த்தாவுக்கே அன்றி, நின்ற நாலு பொருளுக்கும் இல்லை;
தப்பிலா விபு எ - து அழிவில்லாதிருக்கிற நித்தியம்,
சமர்த்ததை எ - து தன்னிடத்திலே வந்து சேர்ந்த பொருளை அடக்கிக்கொண்டு தானே முதன்மையாய் நிற்கிற சாமர்த்தியம்,
அநாதி எ-து ஒருகாலத்து ஒருவராலுண்டாகாமல் தானே இயல்பாயுள்ளது,
சத்தி எ - து பொருடோறும் தனித்தனியே உண்டான சத்தி,
அப்பிரமேயம் எ - து பிரமேயமாகச் சுட்டியறியப்படாமல் இருப்பது,
மற்றும் ஐந்திற்கும் சமானமாமே எ - து இந்த ஆறு செய்தியுமே அப்பொருள் ஐந்திற்கும் சமானமாய் உண்டு என்றவாறு. 9
--------------
ஆரிரு ளாணவத்தோ டருங்கன்ம மானே மாயை
ஆரிருள் கேவ லாதி யாரொளி ஞான மூன்றே
சாருயிர் சார்ப தார்த்தஞ் சார்ந்தமுத் தொழில்க ளெல்லாஞ்
சாருயிர் தனக்குக் கேடு சாரவே பண்ணுஞ் சார்பே. 10
இங்ஙனம் சொல்லிய பொருளில் ஆன்மா எங்கேநிற்பன் என்னில்?
ஆரிருள் ஆணவத்தோடு எ - து மிகுந்த அந்தகாரமாய் இருண்ட ஆணவத்துடனே கூடி மலமாயே நிற்பன்; இது கேவலம் என்றும் பெயர்,
அருங்கன்ம மானே மாயை எ - து அந்த மலகன்மத் திலே விருப்பம் கொடுக்க அது கர்த்தா இரக்கத்தினாலே மாயையினாலே தனுவரத் தொடுப்பார்; அந்த மாயாதேகம் தானாகவே நிற்பன்; இது சகலம் என்றும் பெயர். இப்படி கன்மம் பொசித்துவரவே உயிர்க்குயிராயிருக்கிற சிவன், இவன் வழியே ஒழுகி, மலபாகப்படுத்தி, ஆசாரியராக எழுந்தருளி, மும்மலங்களையும் நீக்கி, தன்னோடு பிரிவின்றி அநாதியே அத்து விதமாயிருப்பதை அறிவிக்க; அறிந்து, சிவன் நிறைவாகிய ஆனந்தத்திலே அழுந்திச் சிவமாகியே இருப்பன். இது சுத்தம் என்றும் பெயர்.
ஆரிருள் கேவலாதி ஆரொளி ஞானம் மூன்றே எ - து மலபெந்தமாயிருக்கிற கேவலத்தினும் மாயை கன்மபெந்தமா யிருக்கிற சகலத்தினும் பாசஞானமும் பசுஞானமுமே விளங் கும்; இரண்டவத்தையும் இருவகை ஞானமும் நீங்கிச் சிவத் துடனே பெந்தமாயிருக்கிற சுத்தாவத்தையில் சிவஞானமே விளங்கும். ஆன்மா இப்படிக் கேவலம் சகலம் சுத்தம் என்னும் மூன்றவத்தையில் பாசஞானம் பசுஞானம் சிவஞானமே விளங் கும் மூவகை ஞானத்தையும் பொருந்தி அறிந்துவரும். இப்படிப் பொருந்தி அறியும் பொருளேது? என்னில்,
சாருயிர் சார்பதார்த்தம் எ - து உயிர்ச்சார்பு பொருட்சார்பு இரண்டையும் அறியும். இப்படி அறிகிற அறிவானது,
சார்ந்த முத்தொழில்கள் எ - து காற்றுப்போலத் தரிப் பின்றி விரைவாகச் சிருட்டி திதி சங்காரம் என்னும் முத்தொழி லும் பட்டுவரும்; அறிவிற்கு முத்தொழிலாவது எது? அறிதற் றொழிலுண்டாவது சிருட்டி, அறிதற்றொழிலின் நிலைநிற்றலே திதி, அறிவவத்தை, யதன்றொழில் ஒடுங்குதலே சங்காரம்.
எல்லாம் எ - து இங்ஙனம் சொல்லிய மூவகைப் பெந்தத் தையும் மூவகை அவத்தையையும் மூவகை ஞானத்தையும் மூவகைத் தொழிலையும் சார்வாக உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை அறிந்து வருவதெல்லாம் எதற்காக? என்னில்,
சாருயிர் தனக்குக் கேடு சாரவே பண்ணும் சார்பே எ - து சார்போ தனாய் ஆணவ மலத்தைச் சார்ந்த உயிர்க்கு அந்தமலம் கொடுத்த முதன்மையைக் கெடுக்கிறதற்காகப் பொருந்தினது என்றவாறு.
கேவல சகல சுத்தங்களில் அறியும் உயிர்ச்சார்பு பொருட் சார்பு ஏதென்னில், கேவலத்தினும் சகலத்தினும் அறிவது புகழவாக் காரணமாய்த் தோன்றி யான் என்பது சார்பாய் அறிவதெல்லாம் உயிர்ச்சார்பு; பொருளவாக் காரணமாய்த் தோன்றி எனது என்பது சார்பாய் அறிவதெலாம் பொருட் சார்பு; இவற்றை மெய்யென்றறிவது துக்கம்; முன் சொன்ன வற்றைப் பொய்யென்றறிவது சுகம்; சுத்தத்தில் அறிவது எது என்னில், சிவரூப தரிசன யோக போகங்களை அறிவது உயிர்ச் சார்பு. ஏனைய ஆறு காரியமும் அறிவது பொருட்சார்பு. இவை சுத்தச்சார்பு என்பாரும் உளர். (10)
----------------
அறிபவ னறிவிப் பானே யவர்களி னறிவு தாமே
அறிபொருட் பகுதி தாமே யறிதராப் பொருள்க டாமே
அறிபொருட் கருவி தாமே யறிபய னாதி தம்மை
அறிவதே யறிவு செய்தி யதற்குமிவ் வாற தாமே. 11
இந்த மெய்ப்பொருள் ஐந்துக்கும் லட்சணம் சொன்னதில் அவர்களுடைய அறிவு சொல்லவில்லையே-யென்னில்,
(அறிபவன் என்பதற்கு அன்னுவயம்) அவர்களின் அறிவு தாமே அறிபவன் அறிவிப்பானே எ - து மெய்ப்பொருளைந்தில் அறிவுள்ளது ஆன்மாவும் கர்த்தாவுமேயன்றி மூன்று பொரு ளும் அறிவற்ற சடம். இந்த இரண்டு பொருளுக்கும். அறிவுண் டாகில் இது இரண்டும் ஒருதன்மையோ? என்னில்,
அறிபவன் அறிவிப்பானே அவர்களின் அறிவு தாமே எ - து அறிவித்தால் அறிகிறவன் ஆன்மா, அறிவித்து நிற்கிறவன் கர்த்தா . இதுவே அவர்களறிவு லட்சணம். ஆன்மா அறியும் பொருள் எது? என்னில்,
அறிபொருட்பகுதி தாமே எ - து ஆன்மாவின் அறிவினாலே சுட்டியறியப்படாத பிரபஞ்சத்தினுடைய பகுப்பறிந்து நீங்குவன். அதன்மேலறிவது எது? என்னில்,
அறி தராப் பொருள்கள் தாமே எ - து உயிரறிவினாலே சுட்டியறிப்படாத மெய்ப்பொருளை அறிவன். அறியப்படாத மெய்ப்பொருளை அறிவது எப்படி? என்னில்,
அறிபொருட்கருவி தாமே எ - து அறிவுக்கறிவாயிருந்து அறிவித்து வருகிற திருவருளைத் தெரிசித்து அதை உனக்குக் கருவியாய்க்கொள்ளாமல் அந்தவருளுக்கு நீ கருவியாயிருக்கவே அறியலாம். இப்படி அறிந்ததினாலாகிய பிரயோசனம் ஏது? என்னில்,
அறிபயனாதி தம்மை அறிவதே அறிவு செய்தி எ - து இப்படித் திருவருளில் அடங்கிச் சிவயோகநிலை கூடவே அதன் பயனாகிய நேயந்தோன்றும்; அந்த நேயத்துக்குப் பரமானந்த சுகம் என்றும் பெயர், அவ்வானந்தமேலீடாய் அவாப்படுவதே ஆன்மாவுக்கு ஊதிபம். அதன் மேல் உயிருக்குப் பொசிப்பும் தொழிலுமில்லை. அறிபவனாகிய உயிர்ச்செய்தி இப்படியாச்சுது. அறிவிப்பானாகிய கர்த்தாவுடைய செய்தி ஏது? என்னில்,
அதற்கும் இவ்வாற தாமே எ - து அந்தச் சிவத்துக்கும் உயிர் அறிகிறவழியெல்லாம் அறிவித்து வருவதே நியதி
என்றவாறு. (11)
--------------
தெருளிரவி தெருளுடைய சிறிதேனுஞ்
சிலகாணாச் சிறுமைக் கண்ணே
குருடிரவோ டிருள்விளக்கீர் கொளலின்மை
கொடையின்மை கொடைமாற் றாமை
மருளிவைபோற் பலவுளவே மருண்டாலு
மிரண்டுருவை வலியக் காணும்
மிருளிலதுக் காகுமிதே யிருளுளதுக்
காகாதென் றியம்பு நூலே. 12
இப்படி அறிவிப்பானாகிய கர்த்தாவே ஆசாரியராக உத யஞ்செய் தவிடத்து எல்லாருக்கும் அறிவியாமல் சில உயிர்க்கு மட்டும் அறிவிப்பான் என்? என்னில்,
(தெருளிரவி என்பதற்கு அன்னுவயம்) இரவோடு இருள் விளக்கு ஈர் தெருளிரவி தெருளுடைய சிறிதேனும் சில காணாச் சிறுமைக் கண்ணே குருடு எ - து இராக்காலம் இருட்டு விளக்கு ஆக மூன்றையும் நீக்க உதயஞ்செய்த ஆதித்தனையும் அவனுடைய கிரணத்தையும் கிரணத்தினிடமாய் இருக்கின்ற பதார்த்தத்தையும் சற்றேனும் அறியும் தகுதியற்ற குற்ற முடைய கண்ணே குருடு. அந்தக் கண் காணாதது ஆதித்த னுடைய குற்றமன்று. கண்ணானது இராக்காலத்தினாலேயும் . மறைபடும், இருட்டினாலேயும் மறைபடும், இருட்டு நீங்கவந்த விளக்கத்தினாலேயும் மறைபடும். விளக்கினாலும் மறைவேது? என்னில், அப்பழுதையைப் பாம்பாகத் திரிவுக்காட்சிப்படு வதால் மறைவென்றே கூறப்படும். இதுபோல உயிரும் மலத் தினும் அறியாது கேவலத்தினும் அறியாது. ஆதித்தன் வந்து கண்ணுக்குள்ள மூன்று மறைப்பையும் நீக்குவது போல ஞானாசாரியார் வந்து உயிருக்குள்ள மலம் கேவலம் சகலம் என்னும் முக்குற்றத்தையும் நீக்குவிப்பான். ஆதித்தனையும் ஒளியையும் பதார்த்தத்தையும் குருடன் அறியாதது போல ஆசாரியரையும் சிவஞானத்தையும் மெய்ப்பொருளையும் அபக்கு வன் அறியான். ஆதித்தன் குருடனுக்குக் காட்டாததுபோல ஆசாரியர் அபக்குவனுக்கு அறிவிக்கமாட்டார். ஆதித்த னுக்குத் தன் கிரணத்தால் இருட்டை நீக்கிப் பதார்த்தங்களைக் காட்டும் குணமொன்று, தன்னைக் காட்டிப் பதார்த்தங்களையும் கிரணத்தையும் காட்டாத குணமொன்று ஆக இரண்டு குணம் உண்டு. கண்ணுக்குக் கிரணத்தைப் பொருந்திப் பதார்த்தங்களைக் காணுங்குணம் இல்லாததினாலே,
கொளலின்மை கொடையின்மை கொடைமாற்றாமை எ - து ஆதித்தனுக்கு முன் சொன்ன இரண்டு குணமில்லை. ஆசாரியருக்குச் சிவஞானத்தால் உயிருக்கு அறிவிக்கும் தணமொன்று, நேயத்தைக் காட்டித் திருவருள் ஞானத்தை பம் அதனால் அறிந்தபொருளையும் காட்டாத குணமொன்று ஆக இரண்டு குணமுண்டு. ஆன்மாவுக்குத் திருவருளைப் பொருந்தியறியும் குணமொன்று, நேயத்தைப் பொருந்தி அருளையும் காட்டாத குணமொன்று ஆக இரண்டு குணம் உண்டு. உயிருக்கு அறியும் குணமில்லா ததினாலே ஆசாரியருக்கு முன் சொன்ன இரண்டு குணமில்லை,
மருளிவைபோல் பலவுளவே எ - து உயிருக்கு அறியாமை மயக்கம் பலவாயுண்டு. கண்ணுக்கும் குருட்டினாலுள்ள மயக்கம் பலவாயுண்டு.
மருண்டாலும் எ - து இப்படி மயங்கினாலும்,
இரண்டு உருவை வலிய காணும் இருளிலதுக்கு ஆகும் இதே எ - து இருளிலே அழுந்தியிருந்தாலும் தூரவிருடனிலே வருகிற தீவெட்டியையும் அந்த ஒளியிலே யிருக்கிற பொருளையு மாக இரண்டு உருவையும் வலியப் பொருந்தியறிகிற குருடு நீங்கின கண்ணுக்கே ஆதித்தன் அறிவிக்கவந்தது.
இருளுள துக்கு ஆகாது என்று இயம்பும் நூலே எ - து குருடு நீங்காத கண்ணுக்கு ஆதித்தன் அறிவிக்கவந்ததல்ல; இதுபோல ஆசாரியரும் பக்குவனுக்கேயன்றி அபக்குவனுக்கு அறிவிக்க வந்ததல்ல என்றவாறு. 12
--------------
குருடிரா விருட்டுத் தம்மாற் கோலினாற் றீர்த்த மூன்றான்
மருடரா விழிப்புத் தன்னான் மருடரு மிமைப்புத் தன்னால்
இருடரா விரவி தன்னா லெழுந்ததம் மொளியால் வேறால்
தெருடராப் பருதி தன்னைத் தேடியுங் கண்கா ணாதே. 13
அறிவிப்பானென்ற பெயரையுடைய கர்த்தா அபக்குவனுக்கு ஒருநாளும் அறிவிப்பதில்லையோ? என்னில்,
குருடு இரா இருட்டுத் தம்மால் கோலினால் தீர்த்த மூன்றால் எ - து குருட்டினாலும் இருட்டினாலும் இரவினாலும் அறியாத கண்ணுக்குக் கோலினாலும் விளக்கினாலும் பகலினா லும் முறையே மூன்றையும் நீக்குவார்கள்; இதுபோல அபக்கு வத்தாலும் மலத்தாலும் கேவலத்தாலும் அறியாத உயிருக்குக் கர்த்தாவும் கோல்போன்ற தூலதேகத்தால் அறிவித்துக் குருடு போன்ற அபக்குவத்தை நீக்குவர்; இது கேவலமென்று சொல்லலாம். குருட்டுக்கும் விளக்குப்போன்ற தேகத்தையும் கூடக்கொடுத்து, குருட்டுப்போன்ற கேவலத்தை நீக்குவர்; இது சகலமென்றும் பெயர். இந்தக் கேவலம் சகலம் இரண்டினும் பாச ஞானமும பசுஞானமும் விளங்கும். பகல்போன்ற சிவஞானத்தைக்கொடுத்து இரவுபோன்ற மலத்தை நீக்குவர்; இது சுத்த மென்றும் பெயர். ஆக மூன்றவத்தையிலும் அறிவித்தாலும்,
மருடரா விழிப்புத் தன்னால் மருடரும் இமைப்புத்தன்னால் இருடரா இரவி தன்னால் தெருடரா or - து சகலத்தினும் கேவ லத்தினும் சிவஞானத்தைப் பொருந்திக் கர்த்தாவை அறியாது. அது என்போல? எனில்,
எழுந்த தம் ஒவியால் வேறால் பருதி தன்னைத் தேடியும் கண் காணாதே எ - து கண்ணானது தனக்குள்ளே ஒளியாலும் விளக்கொளி முதலிய ஒளியாலும் தேடி ஆதித்தனைக் காணாது; அது ஆதித்தன் வந்தக்கால் மந்தவொளியைப் பொருந்தியே ஆதித்தனைக்காணும், இதுபோல் ஆன்மாவும் கேவலம் சகலம் இரண்டும் நீங்கினவேளை ஆசாரியர் வந்து சிவஞானத்தை உணர்த்த அந்த ஞானத்தாலே நேயத்தைப் பொருந்தும்
என்றவாறு. (13)
-----------------
தத்துவத் தொழிலைக் காண்டல் சடமென்ற றன்னை நீக்கல்
அத்தினா னான்மே லென்ற லருளினா னான்மே லென்றல்
பத்தனா னருளாய்ச் செய்தி பண்ணவே யெண்ணி நீக்கிச்
சித்தரு ளதுவாய்ப் போதல் சிவத்தினைச் சேர்தறேரே. 14
சிவஞானத்தைப் பொருந்தி அறிகிற முறைமை எப்படி? என்னில்,
தத்துவத் தொழிலைக்காண்டல்எ - து முப்பத்தாறு தத்துவத்தின் தொழிலை அறிதல் தத்துவரூபம்;
சடம் என்றல் எ - து உயிர் பொருந்தா தவிடத்து அறி வின்மையினால் தத்துவயெல்லாம் சடமென் றறி தல் தத்துவ தெரிசனம்;
தன்னை நீக்கல் - து தத்துவங்களைப் பொருந்தின் பேய்த் தேர் போன்ற பிரபஞ்சத்தை மெய்யென்றறிவிக்கும்; இதை நீங்கினாலன்றி மெய்ப்பொருளை அறியக்கூடாது என்றறிந்து நீங்குதலே தத்துவசுத்தி;
அத்தினால் நான் மேல் என்றல் எ - து தத்துவங்களைச் செடமென்று திடமாயறிந்து நீங்கின அறிவாகிய நாமே முத லென்று நிற்றல் ஆன்மரூபம்;
அருளினால் நான் மேல் என்றல் எ - து அப்படி அறிவித் தது திருவருளேயன்றி ஆன்மாவின் அறிவாகில் இந்நாள் மட்டும் தத்துவசொரூபியான தனாலே திருவருளே முதன்மை என்றறிவிக்க அருளே முத்திறத் தவத்தைகூடி அறிவித்ததும் இப்போது செடமென்றறிவித்ததும் அதன் சகாயத்தினாலே தத்துவத்துக்கும் மேலானோம் என்றறிந்து நிற்பது ஆன்ம தரிசனம்;
பத்தனான் அருளாய்ச் செய்தி பண்ணவே எண்ணி நீக்கி சித்தருள துவாய்ப்போ தல் எ - து திருவருள் என்னிடத்திலே பொருந்துகையால் அது செய்யும் பஞ்சகிருத்தியமும் சர்வஞ்ஞ மும் உயிர் செய்வோமென்பது கூடாது; சூரிய கிரணத்தைப் பொருந்தில் கண் சூரியனாகாதது போல என்று அறிவிக்க அறிந்து தற்போத நிகழ்ச்சி கெட்டுத் திருவருளோடழுந்தாது சேர் தல் ஆன்மசுத்தி;
சிவத்தினைச் சேர்தல் தேரே எ - து அப்படி அருளாநிற் கவே அதற்கு மேலாகிய நேயம் தோன்றும்; அந்த நேயத்தைப் பொருந்தித் தான் தோன்றாமல் இரண்டறக்கலந்து நிற்பதே சிவபோகமாம். இதுவே ஆன்மலாபம் என்றறிக. இந்த ஏழு முறைமையானும் மோட்சம் சேரும் முறைமை என்றவாறு. (14)
--------------
அருளினா னான்மே லென்ற லதுவொழிந் தெண்ணி நீக்கல்
அருளினா லருளாய்ப் போதல் வகைமூன்று முன்பே வந்த
அருளிலை நான்மே லென்ற லருளினா னான்மே லென்றல்
மருளினா லெண்ணல் போதல் மகிழ்சிவஞ் சேர்தல் வந்த. 15
தெசகாரியத்தில் ஏழு போக மூன்று காரியம் எங்கே? என்னில்,
அருளினால் நான் மேல் என்றல் எ - து அது திருவருளைத் தெரிசித்து அதன் சகாயத்தினாலே உயிர் தத்துவத்துக்கு மேலானோம் என்றது சிவரூபம்;
அது ஒழிந்து எண்ணி நீக்கல் எ - து திருவருள் செய்யும் கிருத்தியம் உயிர் செய்யாது என்று திடமாயறிந்து நின்றது சிவதரிசனம்;
அருளினால் அருளாய் போ தல் எ - து திருவருளோடு அழுந்தாது சேர்ந்து அருளாய் நின்றது சிவயோகமாம்;
வகை மூன்றும் முன்பே வந்த எ - து இங்ஙனம் சொல்லிய சிவரூபம் சிவ தரிசனம் சிவயோகம் ஆகிய இவை மூன்றும் முன் சொல்லிய ஆன்ம தெரிசனத்தில் ஒன்றும், சுத்தியில் இரண்டு மாக அடங்கும்; ஆக, தசகாரியம் பத்தும், ஆன்மலாபம்வரை ஏழுகாரியத்தில் அடங்கினது அறிக. இவை சுத்தாவத்தையில் அடங்குவது எப்படி?
அருளிலை நான் மேல் என்றல் எ - து திருவருளின் சகாயத் தினாலே தத்துவங்களுக்கு மேலானோம்; என்றது நின்மல சொற்பனம்;
மருளினால் எண்ணல் எ - து மயக்கத்தினாலே சருவஞஞத் துவமும் பஞ்சகிருத்தியமும் செய்வோமென்றது நின்மலசுழுத்தி;
போதல் - அருள் செய்யும் கிருத்தியம் உயிர் செய்யாதென் றறிந்தது துரியம்;
மகிழ் சிவம் சேர்தல் வந்த எ - து சிவானந்தத்தைப் பொசித்தல் நின்மலதுரியாதீதமாக ஐந்தவத்தையும் இந்த முறைமை என்றவாறு. (15)
--------------
தன்னைத் தலைவ னெனக்கருத றலைமை யருளே யெனக்கருதல்
பின்னர்ப் புதிதா யருட்செயலைப் பெறவே யெண்ண லதை நீக்கி
மன்னித் திருவ ருளாய்ப்போதன் மகிழும் பரசிவ னைச்சேர்தல்
துன்னிக் கருது மவத்தையெனச் சொல்லுஞ் சுருதி சிவாகமமே. 16
இந்த அவத்தைகளில் ஆன்மா நிற்கும் முறைமை எப்படி? என்னில்,
தன்னைத் தலைவன் எனக்கரு தல் எ - து சாக்கிரத்தில் உயிர் தானே முதன்மை என்று நிற்கும்,
தலைமை அருளே எனக்கருதல் எ - து சொப்பனத்தில் அருளே முதன்மை என்று நிற்கும்,
பின்னர் புதிதாய் அருட்செயலைப் பெறவே எண்ணல் எது சுழுத்தியில் அருள் செய்யும் கீர்த்தியும் உயிரும் செய்யலாம் என்று நிற்கும்,
அதை நீக்கி மன்னித் திருவருளாய் போதல் எ - து துரி யத்திலே எந்தக் கன்மத்தையும் நீங்கித் திருவருளுடனே சேர்ந்து தற்போ தமிகழ்ச்சி கெட்டுநிற்கும்,
மகிழும் பரசிவனைச் சேர் தல் எ - து அதீதத்தில் சிவானந் தத்தைப் பொசித்து நிற்கும்,
துன்னிக் கருதும் அவத்தை எனச்சொல்லும் சுருதி சிவா கமமே எ - து இந்த முறைமையிலே ஆன்மா நிலைபெற்றது சுத்தாவத்தை என்று சிவாகமம் சொல்லும் என்றவாறு. (16)
------------------
அயர்வறுத் திட்ட ஞானி யகமறுத் திடலா லந்த
உயிருடற் றொழிலி னோடு முயிருட ஏழை மற்றோர்
செயிரறுத் திடும்பொ ருட்டுச் சிவன்றன தாகக் கொள்வன்
மயர்வறு முத்தி ரண்டை மாற்றுவ னொன்றே யென்றும். 17
இப்படி நிலை கூடினவர்கள் பிராரத்த தேகத்துடன் கூடி நின்று போகம் பொசிப்பதில்லையோ? என்னில்,
அயர்வு அறுத்திட்ட ஞானி எ - து மறைப்பாகிய பாச பெந்தம் நீங்கின ஞானவான்கள்,
அகம் அறுத்திடலால் எ - து தத்துவ சுத்திப்பட்டு ஆன்மபோதம் சீவியாமல் ஒடுங்கிப்போனதால்,
அந்த உயிர் உடல் தொழிலினோடும் உயிர் உடல் ஊழை எ - து அவர்களுக்கு முன்போல் அருந்தியிருந்த தேகத்துக் குள்ள பொசிப்பும் தொழிலும் அவர்கள் பொருந்தார்கள்; உயிர் பொருந்தாத உடலே செடமாதலின் அதுவும் தொழிற்படாது. கர்த்தாவே பொருந்திநின்று பொசிப்பார். எதனாலே? என்னில்,
செயிர் அறுத்திடும் பொருட்டுச் சிவன் தன தாகக் கொள்வன் எ - து பெத்தான்மாக்களுக்குப் பாசமோசனம் பண்ணுவ தற்குக் கருவியாக இந்தத் தேகமும் போகமும் கர்த்தாவே தன தாய் ஒத்துக்கொண்டு, மயர்வறு முத்தி இரண்டை மாற்றுவன் ஒன்றே என்றும் எ - து சீவன்முத்தி பரமுத்தி என்று இரண்டுபடுத்தாமல் இந்த முத்தியே பாமுத்தியாய்க் கூட்டுவிக்கும் என்றவாறு. (17)
---------------
முதற்பதி யரனே யைந்து முன்னத்து விதமி ரண்டே
இதற்பின்னே யனுமா னத்து மெண்ணிலா வுயிர்கண் மூன்றே
அதற்பின்னே யவத்தை நான்கே யகமறுத் திடலே யைந்தே
செகற்பதி பிரித்த லாறே தெரிவித்த லுயிரை யேழே. 18
முதல் பதி அரனே! - சிவஞானபோதத்தின் முதல் சூத்திரக் கருத்து பதியாவான் சங்காரகாரணனாகிய சிவனே என்பதாம்; ஐந்து முன் அத்துவி தம் இரண்டே - இரண்டாஞ் சூத்திரக் கருத்து ஆணவமும், கன்மமும், மாயையும், மாயேயமும், திரோ தாயியும் ஆகிய ஐந்தோடும் ஆன்மா அநாதியே அத்துவிதமா யிருத்தலை அறிவிப்பதாம்; இதற்பின்னே அனுமானத்தும் எண்ணிலா உயிர்கள் ஆம் மூன்றே - இதற்கடுத்தது அனு மான அளவையானே உயிர்கள் உள் பொருளே, அவை எண்ணிலா தன என்பது உணர்த்துதல் மூன்றாம் சூத்திரக் கருத்தாம்; அதற்பின்னே அவத்தை நான்கே - அதன் பின், கேவலம் சகலம் சுத்தமென ஆன்மாக்கள் அடையும் அவத்தைகள் மூன்று என்று உணர்த்துதல் நான்காம் சூத்திரக் கருத்தாம்; ஐந்து அகம் அறுத்திடல் - ஐந்தாம் சூத்திரக் கருத்து பசுபோ தம் நீக்கு தலாம்; ஆறு செகற்பதி பிரித்தல் - ஆறாம் சூத்திரக்கருத்து பாசத்தையும் பதியையும் பிரித்துணர் தலாம். செகத் என்றது உலகம். உலகம் மாயையின் காரியமாதலின் பாசத்தைத் தன்னின் வேறாகக் காண்டலும், பதியைச் சார்த லும் ஆகிய இருகருத்தும் ஆறாம் சூத்திரத்தில் அறிவிக்கப் படுவதாம்; ஏழே உயிரை தெரிவித்தல் - பதியைச்சார்ந்து பதி யாயும் பாசத்தைச் சார்ந்து பாசமாயும் இருக்கும் ஆன்மாவைக் காட்டுவது ஏழாம் சூத்திரக் கருத்தாம் என்றவாறு.
----------------
மறப்பினை நீக்கி ஞான வாரியை நினைத்த லெட்டே
சிறப்புடை யுபாயந் தம்மாற் றெளிவித்த லுயிரை யொன்பான்
அறுத்திடன் மலங்கள் பத்தே யழுந்தலே சிவத்து ளொன்றே
திறப்பணி கொளலி ரண்டே சிவஞான போதஞ் சித்தி, 19
மறப்பினை நீக்கி ஞான வாரியை நினைத்தல் எட்டே - ஆணவ மலத்தை அகற்றி ஞானக்கடலாகிய ஆசாரியனைத் தியானித்தல் எட்டாம் சூத்திரப் பொருளாம்; சிறப்புடை உபாயந்தம்மால் உயிரைத் தெளிவித்தல் ஒன்பான் - சிறப்புடையவைகளான சரியையாதி உபாயங்களால் உயிர் மீளவும் பாசத்தைச் சாராத வண்ணம் தடுத்தாட்கொண்டு பாதுகாத்துத் தெளிவிப்பது ஒன்பதாம் சூத்திரக்கருத்தாம்; மலங்கள் அறுத்திடல் பத்தே - மலங்களை நீக்கி உய்யக்கொள்ளுதல் பத்தாம் சூத்திரப் பொரு ளாம்; சிவத்துள் அழுந்தல் ஒன்றே - சிவத்தோடு ஒன்றி வியா பகமாகப் பிரியாது நிற்றல் பதினொன்றாம் சூத்திரக் கருத்தாம். திறப்பணி கொளல் இரண்டே - குரு லிங்க சங்கம் வழிபாடு செய்து சிவனடியில் திளைத்தல் பன்னிரண்டாம் சூத்திரக் கருத்தாம்; சிவஞான போதம் சித்தி - இவை சிவஞான போதமும் சித்தியும் இம் மெய்ந்நூற்பொருளாம் என்றவாறு. (19)
--------------
பலகலையு மெண்ணரிதும் பார்க்கிலருஞ் செறிந்திடுமே
மல நிலையால் வருமெண்ணே மருவியவுங் காட்டிடுமே
சொலவரிதாம் பன்னிறமுந் தன்னறிவுஞ் சொற்புகலும்
பிலமுளபோற் றீங்கண்டம் பேர்முதலாப் பன்னிரண்டே. 20
பல கலையும் எண்ணரிதும் பார்க்கிலரும் - பாசஞானங்க ளாகிற அறுபத்து நான்கு என்றும், அதற்கு மேற்பட்டு எண் ணற்றனவுமாயும் உள்ள நூல்களைப் பார்க்காதவர்களும், செறிந் திடுமே மலநிலையால் வரும் எண்ணே - மலமாயாதிகளை அடைந் திருக்கிற நிலைமையால் பொருந்தும் வரும் எண்ணங்களையும், மருவியவும் காட்டிடுமே - அதனால் அவர்கள் சார்ந்திருக்கிற புறச்சார்பு அகச்சார்புகளையும் அறியத் துணை செய்து நிற்கும்; சொல அரிதாம் பல் நிறமும் தன்னறிவும் - சொல்லுதற்கு அரியனவாகிற பலநிறங்களையும் ஆன்மபோதமாகிற பசுஞானத் தையும், பிலமுளபோல் தீங்கண்டம் பேர்முதலாப் பன்னிரண்டு சொல் புகலும் - மிக ஆழமான பிலத்துவாரத்தில் உள்ளன போல பல வேறு கண்டங்களுடைய நாம ரூபமாதியவற்றைப் பன்னிரண்டாம் சூத்திர அனுபவம் பெற்றவர் தம்முரையாற் புகல்வர் என்றவாறு.
பன்னிரண்டாம் சூத்திரத்தின் அநுபவ நிலையைச் சிவனரு பால் உற்றவர்கள், எத்தகைய கல்வியிலராயினும், சகல நிலையில் ஆன்மாக்கள் மலபந்தத்தால்படும் துன்பங்களையும், அதனால் சார்ந்துள்ள அகச்சார்பு புறச்சார்புகளையும், அதனால் ஆன்மாக்கள் பொருந்தும் நிலைவேறுபாடுகளையும், தன்னறிவும் சிவனருளையும், எங்கேயே தூரத்திலிருந்து பிலத்துள்ள கண் டங்களின் பேர் முதலானவற்றைத் தம்முரையால் சொல்லித் தேற்றுவர் என்பது கருத்து. 20
-------------------
இரண்டினி லைந்தி லாறி லேழினி லெட்டுத் தன்னில்
திரண்டிரண் டொன்ற தான திகழொன்பான் பத்துத் தன்னில்
இரண்டிலாப் பேறு தன்னி லிருத்திய பத்தோ டொன்றில்
திரண்டெழு முபதே சங்கள் சிவஞான போதஞ் சித்தி. 21
இரண்டினில் ஐந்தில் ஆறில் ஏழினில் எட்டுத் தன்னில் - பாச உண்மை , பாச இலக்கணம், பதி இலக்கணம், சாதிக்கும் பொருளாகிய பசுவின் இயல்பு, சாதிக்கப்படும் பொருளாகிய சிவத்தியல்பு இவற்றை உணர்த்தும் 2, 5, 6, 7, 8 எண்ணுள்ள சூத்திரங்களில், திரண்டு இரண்டு ஒன்றதான திகழ் ஒன்பான் பத்துத் தன்னில் - ஒன்றிநின்று சாதிக்கும் முறைகளையும் அதனால் பெறும் சாதனையுமாகிய இவற்றை உணர்த்துகின்ற 9, 10 ஆம் சூத்திரங்களில், இரண்டு இலாப் பேறு தன்னில் இருத்திய பத்தோடு ஒன்றில் - ஏகனாகி நிற்றலும் அயரா அன்பின் அரன்கழல் செல்லுதலுமாகிய சிவப்பேறு கூஅம் பதினொராம் சூத்திரத்திலும், சிவஞானபோதம் சித்தி - சிவ ஞானபோத்தினும், சித்தியாரினும், உபதேசங்கள் திரண்டு எழும் - உபதேசங்கள் விளங்கும் என்றவாறு.
சிவஞானபோதத்தும், சித்தியாரினும் உள்ள சூத்திர எண்களைக்கொண்டு, அவற்றின் கருத்தை உணரவைப்பது இத்திருப்பாடல். 21
-----------------
மூன்று நான் கேழு மூன்றே முடிந்தபின் னிரண்டி ரண்டே
மூன்று நான் மூன்றி னன்றாய் முடிந்தபின் னிரண்டி ரண்டே
யேன்ற நான் கீறு தாமே யிவையீரா றிலக்கத் துள்ளே
யேன்றமுப் பானொன் பானை யெனக்கர னிரங்கி னானே. 22
மூன்று நான்கு ஏழும் மூன்றே முடிந்தபின் - பசு உண்மை யும் பசு இலக்கணமும் சாதிக்கும் பொருளியல்புமாகிய மூன்றும் கைவந்த பிறகு, இரண்டிரண்டே - இதுவரை அத்துவிதமா யிருந்த பசுவும் பாசமுமாயிருந்த இருபொருளும் பிரிந்து வேறாயே உணரப்படுவதாம்; மூன்று நான் மூன்றின் அன்றாய் முடிந்தபின் - மூன்றாம் சூத்திரத்தான் உணர்த்தப்படும் பசு நான்கு மூன்றாகிய! சூத்திரங்களான் உணர்த்தப்படும் இலக் கணத்தது அன்ஞய்ப் பசுவைச்சார்ந்து முற்றுப்பெற்ற பின்பு, இரண்டிரண்டே - பதியை அறிந்து அறிவானும் அறியப்படும் பொருளுமாகிய இரண்டாய் விளங்கும், ஏன்ற நான்கு ஈறு தாமே - பொருந்திய நான்காம் இயலின் ஈறாகிய சீவன்முத்தி நிலையை, ஈராறு இலக்கத்துள்ளே - பன்னிரண்டு சூத்திரங் களுக்குள், முப்பான் ஒன்பானை - முப்பத்தாறு தத்துவங்களை யம் அவற்றின் முதலாகிய பதி பசு பாசம் என்ற மூன்றையும், எனக்கு அரன் இரங்கினானே - எனக்குச் சீபரமேசுவரன் மன மிரங்கி அருளிச்செய்தான் என்றவாறு.
பசு தன்னை உணர்ந்தபிறகு பாசத்தின் வேறாய்த் தன்னை யும் பாசத்தையும், பாதியைச் சார்ந்தபிறகு பதியும் தானுமாய் இரண்டாயும் இருந்து, மறுபடியும் வா தனை தாக்கி மலத்துள் அழுந்தா தவாறு நான்காமியலின் இறுதிக்கண்ணதாகிய சிவ வழிபாடும் சிவனடியார் வழிபாடுஞ்செய்து விளங்குக என்று, பன்னிரண்டு சூத்திரத்துள் முப்பத்தொன்பது பொருளை எல் லாம்வல்ல இறைவன் எனக்கு அருளிச்செய்தான் என்பதாம். (22)
------------------
மண்ணொடு செவியே சத்தம் வாக்காதி யையைந் தாகும்
எண்ணிய மனமே யாதி யீரிரண் டிவை நா லாறே
கண்ணிய கால மாதி கருதிடி லேழுங் காணே
திண்ணிய சுத்த வித்தை யாதியா யைந்துந் தேரே. 23
மண்ணொடு செவியே சத்தம் வாக்காதி ஐயைந்து ஆகும் - பூதங்களும் பொறிகளும் புலன்களும் வாக்காதி கன்மேந்திரியங்களும் ஆக இவை இருபதும், எண்ணிய மனமேயாதி ஈரிரண்டு இவை நாலாறே - எண்ணுகின்ற மனம் முதலான நான்குடன் நிற்க இவை இருபத்து நான்கு தத்துவங்களாம்; கண்ணிய கால மாதி கருதிடில் - எண்ணுதற்குரிய கால முதலிய தத்துவங்களை ஆராயின், ஏழும் காணே - வித்தியா தத்துவங்கள் ஏழையும் அறிவாயாக; திண்ணிய சுத்தவித்தை ஆதியாய் ஐந்தும் தேரே - நிலைத்த சுத்தவி த்தை முதலான சிவ தத்துவம் ஐந்தை யும் ஆராய்ந்து பார் என்றவாறு,
பிருதிவியாதி ஐம்பூதங்களும், செவியாதி ஐம்பொறிகளும், சத்தாதி தன்மாத்திரைகளும், வாக்காதி கன்மேந்திரியங்களு மாக இவை நான்கும் ஒவ்வொன்று ஐயைந்தாகத் தத்துவங் கள் இருபதாம்; அவற்றுடன் மனம் புத்தி சித்தம் அகங்காரம் கூட்ட இருபத்து நான்காம். கலை; காலம், நியதி, மாயை, வித்தை ,
புருடன், அராகமென்ற வித்தியா தத்துவங்கள் ஏழாம்; சுத்த வித்தை , ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் என்பன சிவ தத்துவங்கள் ஐந்துமாம்; ஆகத் தத்துவங்கள் முப்பத்தாறாதல் காண்க. (23)
-------------------
இந்திரி யங்க டன்மாத் திரைகணா டிகள்வா யுக்கள்
ஒந்துபப் பத்துப் பூத மோரைந்து மவையை யைந்தே
ஐந்துசுத் தம்மேழ் வித்தை யாங்கார மூன்று மூன்றா
வந்திடுங் குணங்க ணான்காம் வாக்கந்தக் கரண நான்கே. 24
இந்திரியங்கள் தன்மாத்திரைகள் நாடிகள் வாயுக்கள் - இந்திரியங்கள் முதலாக வாயுக்கள் ஈறாகக் கூறப்பட்ட இவை கள், ஒந்து பப்பத்து - ஒவ்வொன்றும் பப்பத்தாகப் பூதம் ஓரைந் தும் ஆக எல்லாம் கூட்டி இருபத்தைந்தாம். பூதம் ஓரைந்து - பிருதிவியாதி பூதங்கள் ஐந்தும், அவை ஐயைந்தும் - ஐம்பூதங் களின் காரியங்களாகிய மயிர் தோல் எலும்பு முதல் மாற்சரிய மீறாகக் கூறப்படும் இருபத்தைந்தும், சுத்தம் ஐந்து - சுத்த வித்தியை முதலான சுத்ததத்துவங்கள் ஐந்தும், வித்தையேழ் வித்தியா தத்துவங்கள் ஏழும், ஆங்காரம் மூன்றும் - தைத்தம் வைகாரிகம் பூதாதிகம் ஆகிய அகங்காரங்கள் மூன்றும், மூன்றா வந்திடும் குணங்கள் - சத்துவம் ராசதம் தாமதம் என்ற குணங் கள் மூன்றும், வாக்கு நான்காம் அந்தக்கரணம் நான்காம் - வாக்கு நான்கும் அந்தக்கரணம் நான்கும் ஆகத் தொண்ணூற் றாறும் தத்துவங்களாம் என்றவாறு.
இந்திரியங்கள் கன்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களு மாக பத்தாம். தன்மாத்திரைகள் சத்தாதிகளும் வசனாதிகளு மாகப் பத்தாம், நாடிகள் இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருஷன், சங்கினி, குகு என்னும் பத்துமாம், வாயுக்கள் பிராணன், அபானன், வியானன், உதா னன், சமாவன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்னும் பத்துமாம், ஓந்து என்பது ஒன்று என் பதன் மரூஉமொழி.
ஸ்ரீ சுவாமி நாததேசிகர் தசகாரியம் முற்றிற்று.
-------------
This file was last updated on 21 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.