அம்பலவாண தேசிகர் அருளிய
"பண்டார சாத்திரம் - சித்தாந்தப் பஃறொடை"
pANTAra cAttiram - cittAntat paRRoTai
by ampalavANa tEcikar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. S. Ganesh and shaivam.org for providing a soft copy of this work and
for permissions to include this work as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த
பண்டார சாத்திரம் - சித்தாந்தப் பஃறொடை
காப்பு
செய்யாப் பணிபலவுஞ் செய்வேன் திருவுளத்துச்
செய்யும் பணிசிறிதுஞ் செய்தறியேன் - உய்யுநெறி
எத்தால் வரும் அடியேற்(கு) இன்(பு)ஆ வடுதுறைக்குள்
அத்தா நமச்சிவா யா.
மங்கள வாழ்த்து
இருவனை உற்றுக் கீழ்மேல் இசையுமெவ் வுயிர்க்கும் மூன்றாய்
உருவினை உற்றுக் கீழ்மேல் உறும்வினை தன்பால் அன்பாய்
வருவினை ஆக்கித் தென் ஆவடுதுறைக் கண்மகிழ்ந்த
திருவினை நம்ச்சி வாயன் திருவடிக் கமலம் போற்றி.
நூல்
திருவாரும் ஞானத் திலதத்தான் நீற்றான்
மருவாரும் மேனி வளர்த்தான் - ஒருவாத
கண்டிகை சென்னி களம்காது மார்புகரம்
கொண்டிலங்கு மேனிக் குறியுடையான் - விண்டிலங்கப்
பேதித்த மும்மலமாம் பெற்றியெனும் முப்புரத்தைச்
சேதித்த பொல்லாச் சிறுநகையான் - சாதித்த
காமனெனும் மாரன் கனலோ டெரிந்துவிழிச்
சேம விழிதிறிந்த சித்தத்தான் - பூமிசையில்
தோற்றமிறப் பென்னும் சொலுங்காலன் மாயந்துவிழி
மாற்றுந் திருவடியால் வாட்டினோன்
- கூற்றமெனும் (5)
ஆணவமும் சஞ்சிதமும் அற்றுவிழ நோக்களித்துப்
பூணுங் கருணைநெறிப் பொற்பினான் - வீணவமாம்
மாயை மயக்கம் மடிய மலர்க்கரத்தை
நேயமுடன் சென்னிவைத்த நேயத்தான் - காயமிடன்
ஓங்கு பொருளும் உறுமுயிரும் ஒன்றாக
வாங்குங் கருணை மதியுடையான் - நீங்காத
மாசகற்றி ஆவி மருவு(ம்)அர னோடடங்க
வாசகமே ஈந்த வழக்குடையான் - ஆசகற்றும்
தேவகமே ஆக அகம் தேவர்க்குந் தேவனெனப்
பாவகமே செய்யும் அருட் பண்புடையான்
- சீவகத்தால் (10)
பாசம் பதியை பரவாமல் பல்லுயிர்க்கும்
நேசமாய் நிற்கும் நிகளத்தைத் - தேசுற்ற
நூலரத்தால் நேயத்த அருள் வைத்தியிரை - மேலிருத்திச்
மாலரத்தை மாய அருள் வைத்தியிரை - மேலிருத்திச்
சித்தமும் தீய கரணமும் சித்திலே
ஒத்திருக்கச் செய்யுமிக்க யோகத்தான் - முத்திநெறி
வேண்டுவார் வேண்டும் படியாடி ஆருயிரைக்
தீண்டுநெறி மென்மேற் சிறப்பித்து - நீண்டநெறிக்(கு)
ஆடுவார் ஆடும் படியாடி ஆருயிரைக்
கூடுவான் மெய்ஞ்ஞானக் கோலத்தான்
- நீடும் (15)
புவிமால் அகல அருட் பூண்பார் புகழ்தன்
செவிமாண் நிறைத்த அருட் செல்வன் - பவமாய
ஓங்குவார் ஊட்டும் உறு(ம்)அனபா னாதியெல்லாம்
வாங்கிச் சுவைத்தநா வண்மையான் - ஆங்கவர்கள்
தொந்தித்த அன்பால் தொடும்பூ இருங்கந்தம்
கெந்தத்(து) அடக்குமருள் கேண்மையான். - சிந்தித்த
மக்களெல்லாஞ் சாலோகம் மன்னுதற்காய் மக்களைப்போல்
தக்கதொழில் கொண்ட சதுருடையான் - மிக்க அருள்
தொண்டரெல்லாஞ் சாமீபம் தோய்வதற்காய்த் தொண்டரைப்போ
அண்டனைப்பூ சிக்கும் அருளுடையான்
- மிண்டிப் (20)
புலனடக்கிப் சாரூபம் புல்குவிப்ப தாகத்
தலநடக்கும் மிக்க தவர்போல் - செலநடக்கும்
தேசன் கருணைச் சிறப்புடையான் ஆவியெல்லாம்
மாசற்ற சன்மார்க்கம் மன்னுதற்காய்த் - தேசுற்ற
நூலோது வார்போல் நூலோதித் தீத்தனுவின்
மாலோதி மாற்றும் வகையுடையான் - மேலோதிப்
பார்ப்பான்மெய் ஆவிகளைப் பற்றிலவை பற்றியடி
சேர்ப்பான் கருணைச் சிறப்புடையான்
- நோற்பாற்கு (25)
வாக்கால் அருளமுதம் மன்னுவிப்பான் தன்கருணை
நோக்கால் பிறப்பதனை நோவிப்பான் - நீக்காமல்
எத்தன்மைத் தோரும் இருக்கக் குணமாற்றி
மெய்த்தன்மைத் தாக்குமருள் வீறுடையான் - பொய்த்தன்மைத்
தேமால் உறுவார்தம் சித்தமலம் போக்கிஅருள்
மாமால் அளிக்கும் மதியுடையான் - பூமால்
உறுவார்க்குத் தன்னை உறுமா(று) அளித்துப்
பெறுமா(று) இதுவென்னும் பெம்மான் - பொறிமாறிச்
சேர்ப்பாரைத் தன்னடியில் சேர்திடுவான் தீவினைஉற்(று)
ஆர்ப்பாரை அவ்வாறுற்(று) ஆக்குவான் - நோற்பாராம்
அன்பருக் கன்பாவான் அல்லாதார்க் கல்லாதான்
வன்பருக்கு வன்பே வழங்குவான்.
- என்புருக்கும் (30)
ஈசன் குருலிங் சங்கமமே என்ற்றியப்
பேசிஅருள் நூலளித்த பெற்றியான் - நாசமிலாத்
தேவர் முதலாகச் சிறுயிர்கள் ஈறாக
மேவிஅருச் சித்து விளங்குரற்காய்ப் - பூவிதனில்
நற்கருணை தானே நயந்துலுங்க மாயமுளைத்து
நிற்கருணை தானே நயந்துலிங்க மாய்முளைத்து
நிற்குமதி காரம் நிகழ்த்தியிடச் - சொற்கருமம்
மாற்றி மவுன வகைநிறுத்தி வையத்தில்
தோற்றும் உயிர்கட்குத் தோற்றாமல் - வீற்றிருக்குஞ்
சீலமே யார்க்குந் தெரியாதான் தேவென்னுங்
கோலமே அல்லாத கொள்கையான்
- ஞாலமதில் (35)
லிங்கமே தேவென்(று) எணுவிக்கப் பேசுமருள்
அங்கமே உற்ற அருட்பெருமான் - சங்கமமே
அண்டர்பிரான் என்ப(து) அடக்கிஇத் தேவிக்கே
தோண்டரெனுந் தொண்டர்தம்மை ஆவரித்துப் - பண்தைமல
மிண்டகற்றி ஆருயிரை மேவுதலான் மேவுமருட்
கொண்டலெனும் மிக்க குணமுடையான் - எண்திசைக்கும்
முப்பொருளின் தன்மை உனர்த்தித்தன் மூதறிவால்
செப்பரிய நேயத்தில் சேர்த்திடலால் - ஒப்பரிதாம்
பேசரிய ஆவிஉருப் பெற்றியான்
- மாசிரிய (40)
வந்தோன் உயிர்க்கு வழிபாடு காட்டியிடல்
நித்தையல என்ன நிகழ்த்தினோன் - எந்தைதன்
கண்டக் கறையுமருட் கணுதலும் மற்றிநெறித்
தொண்டர்குழாம் என்னர் துலங்கியே - அண்டர்தொழும்
வேதா ரணியத்தின் மெய்கண்ட சந்ததிக்கோர்
ஞாதா எனப்பெயரும் நண்ணியே - ஓதா(து)
உணர்ந்தார்க்(கு) உலவாக் கிழிவழங்கி ஒப்பில்
மணந்தாள் பசுக்குலத்தை மாற்றிப் - புணர்ந்த
திருவா வடுதுறைவாழ் தேசிகன்நாம் என்ன
ஒருவாத் தொழிற்பெயரும் உற்றே.
- திருவார் (45)
அமரர்க்கும் எட்டா அரியதிரு நாமப்
பிரம உபதேசப் பெற்றி - வரமாகும்
முப்பொருளின் தன்மை முடிவாக யாவர்க்கும்
எப்பொழுதும் உள்ள(து) எனவாக - இப்பொழுது
தானே உபதேசம் தங்குமென்ப தாய்மொழிவார்
ஊனே அறுக்கும் உறுமுரணாய் - வானேயும்
ஆவி உளத்திருட்கோர் ஆதவனாய் மெய்த்தவார்கள்
மேவி அருந்தும் விழுப்பொருளாய்த் - தாவிமிக
உச்சரிக்கும் கேண்மை உடைத்தாய் உயர்சிவத்தை
வைச்சிருக்கும் ஞான வழக்கதாய்
- நிச்சயித்துச் (50)
செல்லா தவர்செவியுஞ் செல்லுவதாய்ச் சீரருளைச்
சொல்லாத வாயும் சொலும் எனலால் - எல்லாரும்
நண்போ(டு) உரைத்திடவே நன்நமச்சி வாயனெனப்
பண்போ(டு) உயர்நாமம் பற்றியே - கண்போது
சூட்டுவார் சூட்டித்தம் தொல்வினையின் எல்லையிருள்
ஓட்டுவார்க் கெல்லாம்மெய் ஓங்கொளியாய் - நாட்டுமருள்
நின்றோன் சபையின் நிகழுங் கருணைநெறி
சென்றோன்
..... சிவாகமத்தின் சீரொலியும் - மன்றோதும்
தேவாரம் பண்ணிற் சிறந்ததிரு வாசகமும்
நாவால் உரு கி நவில்வாரும்
- ஓவாமல் (55)
சிந்தை உருகித் திகைப்பாருஞ் சித்திரையின்
முந்து பருவ முதல்திருநாள் - வந்தபெருந்
தேரொடும் ஈசன் திருவிழாச் சேர்ந்திலங்கச்
சீராரும் தொண்டர் சிறப்புடனே - பாரோடும்
வெள்ளம் எழுந்தருளும் மேன்மைகண்டு - கொள்ளுந்
தவமுடையார் ஏத்தும் தகைமையினால் மங்கை
நவமுடைய பொன்னடியை நண்ணிச் - சிவனே
சிறியேன் அறியாமை தீர்த்திடுவாய் ஒன்றும்
அறியேன் எனவணங்கி ஆர்த்தாள்.
- பொறியகலப் (60)
பார்த்தான் சிரத்தைப் பரிசித்தான் பாவனையால்
தீர்த்தான் அறிவைத் திருப்பினான் - சேர்த்தவனை
வந்தித் திடுவதல்லால் மற்றொருவர் பின்செல்லச்
சிந்தித் திடுவதில்லை சீயென்பாள் - தொந்தித்த
மாதாஉன் பால் அன்பாய் வந்தாள் என உரைக்கில்
ஏதாகும் எச்செனைத் தாயென்பாள் - பேதாய்
மலத்தால் உறும்தாய் மலமகன்றார்க்(கு) எல்லாம்
இலைத்தாய் அருளல்லால் என்பாள் - நலத்தாகும்
தாயும் பொய்ச் சுற்றமெனுந் தந்தையும் ஓர்கணத்தில்
மாயும் உலக வழக்கென்பாள்
- ஆயுங்கால் (65)
மாயும் உலக வழக்கெல்லாம் ஈசனருள்
நேயமே ஒன்று நிலையென்பாள் - காயமாம்
தந்தை உனக்கிவனே என்னில் தகும் உதரத்
தொந்தத்(து) அளவுண்டோ சொல்லுங்கால் - எந்தையடி
வந்திப்பதாக வரும்வழியில் தங்கிநின்று
சந்தித்தோ ஆங்கவனும் தந்தையோ - பெந்தித்த
யான்மரிக்கும் முன்னாள் அவன்மரித்திங்(கு) என்னுதரம்
தானுதிக்கில் தந்தை தவறன்றோ - ஊனுதிக்கு
மாறே அளவில்லை மாறுபட்டுத் தோன்றுமலப்
பேறே பிதாவாய்ப் பெறுமோதான்
- மாறெலாம் (70)
நீக்கிஅறி வானந்த நேய முற அடியில்
ஆக்குவான் தந்தைஎனக் காமென்பாள் - நோக்கு
மகவே உனக்கிவர்கள் என்னின் மருவிச்
செகமா தரிப்பார் செனிப்பார் - வகையாம்
இருவினையால் இவ்வுலகில் ஏற்றபிரா ரத்தம்
மருவுதற்காய் வந்தார் மகவோ - ஒருவுதற்கு
நாளே வருங்கால் நமைக்கேட்டுச் செல்லுவரோ
தாளைப் பிடித்திரென்றால் தங்குவரோ - வாழப்
பிறந்தாரே எம்மைவிட்டுப் பேர்வீரே என்று
பறந்தாலும் நின்றுபார்ப் பாரோ
- நிறைந்த (75)
உயுருயிரின் தோற்றி ஒடுங்குதலும் உண்டோ
செயிர் உயிரின் தோற்றுஞ் செயலால் - பயில்வினைகள்
உள்ளளவும் ஓடி ஒடுங்குவார் தம்மைமிக்க
பிள்ளை என்ப(து) எவ்வாறு பேசுங்கால் - மெள்ள
இயக்கும் அரன்பால் இசையாத வாறு
மயக்குவார் தாமோ மகவாம் - உயக்கொள்ளும்
ஈசனே தாயாக எவ்வுயிரும் பிள்ளையெனப்
பேசுவதே ஞானப் பெருமை என்பாள் - நேசமுற்ற
சுற்றமே உற்றார் எனச்சொல்லில் தொல்கருமக்
குற்றமே மாயைக் குழாமன்றோ
- உற்ற அருட் (80)
கண்ணை மறைந்த கடிய இருட்குலமாய்
நண்ணிஅருல் தெய்வ நவை யென்றும் - பண்ணுதவம்
எல்லாம் பழுதென்றும் ஈசன் எழில் பூசையுறச்
செல்லா வறுமையுறச் செய்யுமென்றும் இல்லாத
வீம்பேத வாதாள் விழுவதெல்லாம் என்று(ம்) மெய்யில்
சாம்பலிடல் சாதித் தவறென்றும் - தீம்பாகும்
அக்குமணி அங்கத்(து) அடாதென்றும் ஆடவனைப்
பக்குவத்திற் கூடல் பயனென்றும் - மக்கடமைப்
பெற்றிடுவ தன்றோமெய்ப் பேறென்றும் பேராத
சுற்றமல்லால் உண்டோ துணையென்றும்
- உற்றநாம் (85)
செத்தாலுஞ் செய்வர் சிறப்பென்றும் செல்வத்தால்
ஒத்தாசை மக்கட் குறுமென்றம் - கத்தாவைச்
சேராமல் புத்திசொல்லிச் செய்வித்த தீயரையான்
பாரா திருப்பதுவே பண்பன்றோ - தீராத
மும்மலங்கள் தீர்த்தறிவின் முன்றுருவாம் பெற்றியுற்ற
தம்மைப்போற் செய்தார் தமரென்பாள் - இம்மைப்
பதியே உனைநோக்கும் பண்புற்றான் உன்னின்
விதியாற் பதியென்றே மேவ - மதியாளும்
ஆண்பெண் அலியென்ப தாருயிர்க் குண்டோதான்
கோண்கண் தன்வின் குறியன்றோ
- வீண்மண்ணில் (90)
தோற்றுதனு எத்திறத்த(து) அத்திறத்த தாய்தோய்ந்தங்(கு)
ஆற்றுமலப் பொத மதாய்நின்றும் - வேற்றுடலை
இன்பமெனக் கண்டிங்(கு) இசைவதெல்லாம் வீணான
துன்பமல்லால் உண்டோ சுகமுயிர்க்கு - வன்பாகும்
ஞாலமதில் நண்ணி நடக்குமகள் ஓராண்
கோலமது கொள்ளக் குறித்தொருத்தி - மாலுற்(று)
அணைவதற்கு முன்னம் அதன்சுவடு கண்டும்
புணரும் வகைபுணரு வாளோ - உணரும்
ஒருத்தி ஒருவனுக்கங் குற்றமால் அல்லால்
வருத்தின் மறுமால் வறுமோ
- பொருத்திப்போய்ப் (95)
புல்லுவார் தம்மோடும் புல்லான் அரனென்னச்
சொல்லுவார் சொல்லைத் துணிவுற்றும் - சொல்லும்
இவனே பதியென்றிங்(கு) இல்லாது சொல்லிம்
சிவனைஅகல் விப்பதன்றோ தேரின் - தவநேர்
உறுவார் அரனுக்(கு) உறுமடந்தை யாய்த்தம்
சிறுமான் சிதைத்தநிலை தேரின் - தவநேர்
ஆண்பால தாகில் அணுகான்பூ மானென்ன
வீண்பால தாக வீடுத்ததன்றோ - பூண்பாலாம்
மெய்யாம் மடந்தை எனவிரும்பி மோகமாய்ச்
செய்யாநலங்களெல்லாஞ் செய்வித்து
- மையல்தரும் (100)
காயம் ஒருவருமே காணாமல் ஆலயத்தில்
ஏயும் நெறியும் இயற்றாமல் - மாயமற்ற
ஈசன் அடியார்கள் ஏவலினுஞ் செல்லாமல்
தேசிகர்க்குஞ் செல்பஞ் செலுத்தாமல் - மாசகலச்
சொல்லும் புராணச் சுவைகள் உணராமல்
செல்லுமரன் பாலன்பு செய்யாமால் - வல்லபடி
வாச(ல்) தனில் காவல் மனையுள் அடக்கிமிக
ஆசையுற எல்லாம் அமைத்தங்ஙன் - நேசமுறும்
மால்காவி மையல் தொழிலனைத்தும் மன்னிமலத்
தோல்காவல் இட்டாவினைத் துட்டனன்றோ
- காலன்பால் (105)
உற்றபோ(து) ஆவி அறும் உடலைக் கையாலும்
பற்றுதலுஞ் செய்யாப்பொய்ப் பாவியன்றோ - சொற்ற அருள்
ஈசனுக்கே ஈயான் இசைந்த அபிமான மெல்லாம்
நீசனுக்கே ஈயுநெட் டூரனன்றோ - மாசற்ற
தேவென்பான் தன்னை எனைத் தேவிஎன்பான் சீவனறில்
சாவென்பான் பொல்லாச் சதியனன்றோ - கோவென்னும்
ஈசன் பதியாகி, எவ்வுயிரும் பெண்ணாகி
நேசமுறும் அல்லால் நிலையுண்டோ - மாசற்றும்
ஆவியோ டாவி அணைவதுண்டோ பெண்ணாகும்
பாவிபதி யென்னப் பகர்வனோ
- ஆவியற்ற (110)
மாயமே காயம் மலமாய் அறிவழிந்து
தோயும் பிணமால் தொடேனென்பாள் - ஏயும்நெறி
ஆளடிமை எல்லாம் அடைந்தார் என்னிலரன்
தாளடிமை அல்லால் தனியுண்டோ - நாளும்
எனக்கடிமை என்றிங் கிசைந்தநாள் ஈசன்
தனக்கடிமை இன்றாய்த் தனித்து - மனக்கவலை
உற்றுப் பிறப்பென்ப தெல்லாம் உறப்பட்டுக்
குற்றநர கத்துங் குடிப்பட்டுச் - சுற்றிடும்நாள்
ஊக்கும் குருலிங்க சங்கமமாய் உற்றீசன்
நீக்கும் மயக்கமெலாம் நீக்கி எனை
- நோக்கி (115)
அடிமையெனச் செய்தான் அறிந்தறிந்தும் பொல்லாக்
கொடுமையெனச் செய்தான் குணமோ - கடுமயக்கம்
தள்ளுவான் ஈசன் தனக்கடிமை ஆகினல்லால்
எள்ளுவான் சற்றும் இசைவனோ - உள்ளதாம்
எல்லாரும் ஈசற்(கு) அடிமை எனக்கடிமை
செல்லாது சீவன் சிவற்கடிமை - இல்லாது
மூடர் அடிமை முறையாக்கும் பொல்லாத
வேடர் தரும் அவ்விதியன்றோ - நாடும்
சிவனடியான் என்றமொழி தேரின் சிவனுக்(கு)
இவனடியான் அன்றென்(று) இசைக்கும்
பாதகத்தார் பொய்க்குப் பயப்படா(து) ஓதுமலப்
போதகத்துக் குள்ளாய்ப் புகுதாதே - மேதகத்தாம்
ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவா(று)
ஒன்றலா ஒன்றிலவை ஈறலா ஒன்றுபல
வாறே தொழும்பாகும் அங்கென்னும் ஓராது
இருக்கும் அவர்க்கியல்பாம் என்பாள் - செருக்கும்
உடைமையுனக் கீதென்(று) உரைக்கில் ஒருவர்க்(கு)
அடிமை உறினுடைமை யாமோ
- திடமாய்ச் (125)
சிவன(து) உடைமையெனச் செப்பின் சிவனுக்(கு)
இவனடிமை என்றே இசைக்கும் - இவனதிது
இன்னின் இறைஇவனின் வேறாம் இவனவனாய்த்
துன்னிலிரண் டாகுமோ சொல்லுங்கால் - மன்னுமுடல்
ஒற்றுமையாய் ஆவி உடன்படுங்கால் போகவிதம்
உற்றிடுவ தொன்றாய் உறுமன்றோ - பற்றுதற்கங்(கு)
இல்லாத தாமும் இதனால் உள்வாகிப்
பொல்லா நரகம் புகுவரோ - செல்லாத
ஆவி தனுவோ(டு) அரும்பொருளும் ஒன்றாக
மேவிச் சிவார்ப்பணமாய் விட்டதன்றோ
- பூவிதனில் (130)
யானெனதென்(று) எண்ணி இடுவாரும் ஏற்பாரும்
கோன்தனது தானாய்க் கொடுத்தடக்கித் - தான்தனதை
ஈந்துபலன் கொள்ளும் இயல்போர்க்(கு) இவைநன்றாம்
ஆய்ந்து தமைஅற்றார்க்(கு) அவைநன்றாம் - ஏய்ந்தமொழி
எங்குமுளன் என்றளவை ஒன்றன்(று) இரண்டென்னில்
எங்கு முளனன்(று) எவற்றெவனும் - அங்கண்
அவைஅவன் அன்றில்லைப் பொன்னொளிபோல் ஈசன்
அவையுடைமை ஆளாம்நாம் அங்கென் - நவையகலச்
சொல்லும் சிவஞான போதத்தைச் சூழாமல்
செல்லுவார்க்(கு) ஏதுமுண்டாய்ச் செப்புவாள்.
- இல்லறத்தின் (135)
ஓங்கு குலநலத்தின் உண்மையால் சைவநெறி
தாங்குவது மங்கை தவறென்னின் - தீங்குமையல்
சாதிஉயிர்க்(கு) இல்லைத் தருங்கரும பேதத்தால்
நீதிகுலம் நான்காக் நின்றுளதால் - ஓதும்
கருமமொரு நான்காங் கடவுள் வினையும்
வரும்பொதுவே யாக வரலால் - தருங்கரும்
பாவம் எவர்செயினும் பற்றுவார் தீநிரயம்
மேவுதன்மம் ஆர்செயினும் மேலுறைவார் - தேவன்
அரனே எனப்பணிவார் ஆரேனும் எங்கள்
பரனே பசுபாசம் பற்றி
- வரினே (140)
இறைமாறி கொண்டிங்(கு) எழுபிறவி யாகித்
துறைமாறு கொண்டு சுழுலும் - நிறைமா(று)
எழுகுலங்கள் எல்லாம் இறையருளால் மாற்றின்
தொழுகுலமே அன்றிச்சொல் உண்டோ - இழிகுலமாம்
சாதிஉயிர்க் குள்ளதெனச் சாற்றுமோ மாமறைகள்
தீதகலத் தேவர் திருமொழியும் - ஓதும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வாச்
செய்தொழில் வேற்றுமையான் என்றும் - பிறப்பகல
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுமென்றும்
- செய்ததனால் (145)
தேசிகர்க்குப் புத்திரராய்ச் சேர்ந்தாரை வன்னமெனப்
பேசின் நரகமுறும் பெற்றியன்றோ - மாசில்
திருந்து பெருஞ் சாதிச் செயல் அரனற் சைவத்(து)
இருந்தவர்கள் போதித் திலையால் - பொருந்துகின்ற
சாதிவியப் பாகத் தருமன்றோ வேதமிதை
நீதிமறை யோரே நிகழ்த்துவதாம் - ஓதியதோர்
ஆசிரமம் நான்கும் அடங்கும் வருண்த்தின்
நேசமுறு வேத நெறியதனைப் - பூசுரரை
அல்லாதார் ஓதில் அருநரகத் தாழ்வரென
எல்லா மறையும் இயல்புவதாம்
- சொல்லார் (150)
மறையோர் முதலாக வாழு(ம்)உயி ரெல்லாம்
இறையோனாம் பத்தி இசையின் - நிறைவாகும்
தேசிகர்பால் உற்பவிக்கும் தீக்கைஒரு நான்கதனின்
ஆசிரிக்கு மாறுவர வுற்றோர்கள் - ஆசரிப்பார்
ஆகமங்கள் ஐயைந்து ஒருமூன்றும் அல்லாதார்
தாகமுற்றுத் தீண்டில் தகுநிரயத்(து) - ஆழ்வரெனச்
செப்பும் சிவாகமங்கள் எல்லாம் இதனாலே
ஒப்புயர்(பு) இரண்டுக்(கு) உதாரணந்தாள் - இப்பொழுது
வேதநூல் ஆதியலா ஆதியால் - ஓதுநூல்
ஆரணநூல் சைவம் அருஞ்சிற்ப்பு நூலாகும் (155)
காரணர்க்கும் அல்லார்க்கும் காணுங்கால் - பூரணமாம்
வேதா கமத்தின் விதியால் இழிபுயர்பிங்(கு)
ஏதாம் உதரத்(து) எழுவாரும் - தீதாகா
ஞானத்(து) உதிப்பாரும் நண்ணியிடின் ஒன்றாமோ
வானத்தார் ஞான வானாமோ - மானத்தால்
ஆதிமறை ஓதி அதன்பயனொன் றும் அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே - ஆதியின்மேல்
உற்றதிரு நீறுஞ் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பால் செல்லாதே - நற்றவஞ்சேர் (160)
வேடமுடன் பூசையருள் மெய்ஞ்ஞானம் இல்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
அழித்துப் பிறப்ப(து) அறியா(து) அரனைப்
பழித்துத் திரிபவர்பா ராதே - விழித்தருளைத்
தந்தாளும் ஈசன் அடியாரைச் சாரென்ன
வந்தாள் உமாபதியான் வாழ்பதியே - நந்தானம்
கொற்றங் குடியான் குலவிஅடி யாரடையச்
சொற்ற திருமொழியைச் சூழாமல் - குற்றம்
உறுவார்க்குச் சாதி உயர்புநன்றி முத்தி
பெறுவார்க்குத் தீக்கைப்பே றென்பாள் (165)
- நிறைவாம்
இறவாப் பெருஞ்செல்லாம் இல்லறத்தின் ஓங்க
அறமான தெல்லாம் அடையத் - திறமாக
நின்றதனை விட்டு நெடிய துறவதனைச்
சென்றததுநீ எவ்வாறு செப்பென்ன - நின்றுலகில்
எண்ணான்(கு) அறத்தார்க்கோ ஏய்ந்தகுதி எவ்வுலகும்
நண்ணாதவர்க்கோ நலஞ்சொல்லாய் - கண்ணாரப்
பட்டதெல்லாம் பொய்யே பரம சிவனருளால்
வட்டதெல்லாம் மெய்ஞ்ஞான வெற்றியன்றோ - நட்ட
இலமே பலமாய் இசைந்ததெல்லாம் பொல்லா
மலமே இலமாய் மருவி - நலமே (170)
தரும அரனை நீத்துத் தகுமிலத்தின் மோகம்
பரவுதலால் உண்டோ பலம் என் - மரபழிபே
திய்யமலச் செய்தியன்றோ தீவினையால் ஆவிமிகச்
செய்யும் உலகச் செயல்பற்றிப் - பைய
நடக்கும் மயக்கமென நண்ணியதை நீங்கக்
கிடக்கும் கிடையே கெதியாய்த் - தொடுத்ததோர்
தொல்லையறம் எண்ணான்கும் சூழ்த்தமறம் ஒன்றினுக்குச்
செல்லும்மல(ம்) ஐந்தின் செயலாமால் - வல்லபலஞ்
சொற்க நரகமவை தோய்ந்தவையின் சேடத்தால்
நிற்கும் பிறவி நிலையினால் - நற்றருமம் (175)
பண்ணியபே ரன்றோ பகரயன்மால் தேவரென
எண்ணிரிய மக்களுக்குள் ஏற்றமாய் - நண்ணும்
அதிகாரம் பெற்ற அதனால் எவரும்
மதியான தெல்லாம் மயங்கிப் - பதியாம்
இவரே எனக்கருதி ஈசரன்பு நீத்த
புவனேச் ரெல்லாம் புறம்பாய்ப் - பவனேசப்
பட்டாரை எல்லாம் படைத்தயனாம் சங்காரம்
சிட்டிமுதல் எவ்வுயிர்க்குஞ் செய்துதான் - நட்டப்
படுவதின்றாய்ச் சங்காரப் பட்டதெல்லாஞ் சிட்டிப்
படுவதற்கு முத்தியினைப் பற்றித் - தொடுவதற்குத் (180)
தோற்றம் ஒடுக்கம் சொலுமிவையும் இல்லாத
தேற்றமே தேற்றம் எனநின்று - ஆற்றுமலம்
உள்லபோ தெல்லாம் மலமும் உளதாக
எள்ளு(ம்)அதி காரம் இயல்பாகக் - கள்ளமலம்
விட்டபோ தெல்லாம் விடவாம் இருவினையின்
கட்டகல்வ தானாய் அடைய அருட்குத்
தனுக்கிரமாகத் தருமால் - செனிக்கும்
இருவினையோ(டு) ஒன்றாய் இசையும் மலமெல்லாம்
வருமறமும் ஆங்கே வருமால் - ஒருமலமும் (185)
இல்லா இடமாம் இசைந்தசிவ புண்ணியமற்
றெல்லாம் துறவோ(டு) இசைவன்றோ
- சொல்லுமலம்
அற்றபோ தன்றோ அரன்நெறியைக் காமித்தங்(கு)
இற்றுறக்க நெஞ்சம் இயல்பாகும் - நற்றவரும்
ஈசன்மேல் மோகம் அடைந்தறோ இல்லறத்தை
மோசமென காணும் முறைபெற்றார் - ஆசற்ற
அத்தன்மேல் மோகம் அடைந்தன்றோ இல்லறத்தைக்
கொத்துடனே மாற்றக் குணம்பெற்றார் - சுத்தனருள்
நெஞ்சத்துள் வையாப்பொய் நெஞ்சர்க்கும் இல்லறமாம்
வஞ்சத்தை மாற்ற வருவதென்கொல் - கொஞ்சக் (190)
கருமமென்ப(து) ஒன்றைக் கருதுவார்க் கேதான்
தருமா தருமமெனச் சார்ந்து - வருமதனால்
சாதித்தார்க் காகும் தருமம் அதன்மமதை
சேதித்தார்க் காகுஞ் செயலாமால் - வாதித்த
பாவத்தை மற்றிப் பகரறத்தைச் சார்ந்துபசு
தெவத்துக்(கு) அன்பு செயற்பாலாய் - மெவித்தம்
மொகத்தால் நீத்திலத்தை முற்றியதே அன்றிமல
பாகத்தால் அல்ல பகருங்கால் - மாகத்தா
இன்னார் எனவும் இசைந்திலையால் தீயமலம்
முன்னாய் நடத்தும் முறையன்றே
-மன்னி (195)
அறிவித்தால் எல்லாம் அறிவன்மெய்த் தேவை
அறிவியா தாலறிவ(து) ஆரேல் - செறியுமலம்
அற்றார்க்(கு) அறிவை அளிக்கும் அறாதார்க்குக்
குற்றத் தளவே கொடுக்குமால் - நற்றிமிகத்
தித்திக்கும் பால்பித்தஞ் சேர்ந்தாருக்(கு) ஊட்டாத
புத்தி உடைய புனிதரைப்போல் - சத்தியமே
செல்லாத மூடருக்கும் தெய்வத்தைத் தெய்வமெனச்
சொல்லா தவர்க்கும் சொலான் ஈசன் - நல்ல
துணைவனைத்தோள் றாமலவன் தொத்துனுக்குமாலாய்
அணைவளவின் ஆய்ந்தும் அறியக் கணவனான் (200)
என்றாலும் பொய்யென் றிசையாள் இனியகுலத்(து)
ஒன்றாகு வாளோ உயர்ந்தாரைச் சுத்தரெனும்
புத்தியென்ப தெவ்வாறு புன்மலத்தை மாற்றாத
சித்தமென்ப தன்றோ திடமாகும்
- தொத்தும்
தருமத்தால் தேவாய்த் தகுவார்க்காய் நீத்த
கருமத்தா கருமத் தாரே - ஒருமித்து
நின்மலன்மேல் மோகம் நிகழ்ந்திலத்தை நீத்தாரைப்
புன்மலத்தார் அல்லரெனப் போறிடுக - நன்மையுற்ற (205)
ஆண்டவனே யானென்றும் ஆனவனைத் தேவென்றும்
பூண்டதனால் உண்டாமோ புண்ணியங்கள் - நீண்ட இலம்
நீத்தானை நிந்தித்து நீள்நிரயத் தாளாகச்
சேர்த்தத்னால் உண்டோ செயலம்மா - ஆர்த்ததோர்
தேவைப் பசுவாயும் சிற்றுயிரைத் தேவாயும்
பாவித்தாற்(கு) என்ன பயனுண்டாம் - பூவில்
முதலிழந்தார்க்(கு) ஊதியமும் உண்டோமெய்த் தேவாம்
பதமிழந்தார்க்(கு) உண்டோ பயன்கொல் விதமாய்த்
துறந்தாள் அனைத்தும் துணைவனையே பற்றி
இறந்தாள் இதன்மேலும் உண்டோ
- சிறந்தவனைப் (210)
பற்றி ஒருத்தி பரிந்துமிக மாலாய்த்தஞ்
சுற்றம் அனைத்தும் துறந்தவளுக்(கு) - அற்றமலம்
ஏதோ கடவுளிசை(வு) ஏதோ இசைவில்லை
யாதோர் வினைக்கும் அளவில்லைப் - பூதவினை
தன்னளவு நிற்கத் தகுமல்லால் மற்றொன்றை
உன்னி நடக்கும் உணர்வுண்டோ - மன்னுலகை
நீத்ததனால் முத்தி நெறியோ உலகமெல்லாம்
காத்ததனால் முத்திக் கடவுளோ - ஆர்த்த
அரற்காய் இலமதனை அற்றபேர்க்(கு) அல்லால்
நரற்கேதும் உண்டோ நவிற்றில் - இரக்குதற்காய் (215
அற்றதெல்லாம் முத்தி நெறியோதன் நாளன்ற
உற்றவர்கள் எல்லாம் உறுதவமோ - குற்றமற்ற
ஈசன்மேல் மோகம் எழுந்தற்றாற்(கு) அன்றிமல
மோசனமும் உண்டோ மொழியுங்கால்
- மேசும்
அரிஅயன்தே(வு) ஆவார்மற் றல்லாத பேரும்
திரிமலத்தோ(டு) ஒன்றாகச் சேர்ந்து - வருங்கரும
பாகத்தால் தேவாயும் பாவத்தால் ஆளாயும்
போகத்தால் போகப் படுமுயிர்கள் - மோகத்தால்
கத்தா அகத்தா அகத்தாவே கத்தாவாய்ப்
புத்தி திரிந்தமருட் போதத்தால் - அத்தன் (220)
அரனே எனவும் அரியாமை நின்ற(து)
உரைஎனக்கின்(று) உள்ளபடி என்னப் - பரவுமையல்
தந்தைபால் மோகத் தகுதியால் ஈசரெனும்
எந்தைபால் மோகம் இழப்பன்றோ - சத்தரமும்
தாயார்பால் மோகத் தகுதியால் ஈசரெனும்
நேயர்மேல் மோகம் நிலாதன்றோ - மாயமுற்ற
மாதர்பால் மோகம் மருவுங்கால் ஈசரெனும்
சொக்கர்பால் மோகம் தொடாதன்றோ - மிக்கதோர் (225)
சுற்றத்தார்மேல் மோகம் தோன்றுமால் ஈசரெனும்
மற்றவர்மேல் மோகம் மறுப்பன்றோ - உற்றதோர்
ஆடகத்தின் மேல்மோகம் ஆகுமால் ஈசரெனும்
நாடகத்தார் மோகம் நவையன்றோ - நீடுமையல்
பொய்த்தேவர் மேல்மோகம் பூணுமால் போதமுற்ற
மெய்த்தேவின் அன்பு வெறுப்பன்றோ - வைத்த
பரப்பெல்லாம் நீத்து பரமசிவத்(து) ஒன்றாய்
இருப்பன்றோ அவிக்(கு) இயல்பாம்
- மரிப்பாம்
உலகே நெடும்பிழையென்று ஒதி உலகம்
அலகைத்தேர் என்ன அறைவாள் - விலகித் (230)
துடைத்தான் தனக்குத் துணைஎன்பாள் - செல்வம்
பதைத்தார் பசுவாகும் என்பாள் - எடுத்துமுலை
தந்தாள் நடக்கத் தகுந்தாரத் தைச்சுமக்கும்
நந்தா உலக நடையன்றோ - தந்தையென
வந்தாள் பசித்திருக்க மக்களுக்கே ஊட்டுமையல்
சிந்தா உலகின் செயலன்றோ - நந்தாமல்
தொட்டதனைத் தொட்டுத் தொடுநன்றி அர்ரனையும்
வீட்டுவிடும் பொல்லா விதியன்றோ - நட்டாரை
ஓங்கும் பொருளால் ஒறுத்துப் பகையக்கி
வாங்கும் உலக வழக்கன்றோ - நீங்காமல் (235)
ஒட்து மக(வு)ஒருவரேனும் ஒருபண்த்தால்
வெட்டும் பகையாய் விடுவரன்றோ - சுட்டியருள்
ஈசன் திரவியங்கள் எல்லாம் இலத்தாக்க
ஆசைகொள்ளும் பொல்லா அவத்தரன்றோ - மாசறுக்கும்
தேசிகர்க்கோர் காசுஞ் செலுத்தார்தம் செல்வமெல்லாம்
வேசிகர்க்க்ற் ஈயும் விடரன்றோ - நாசமிலாச்
சங்கரர்க் கேஅன்பு தரிப்பியார் தீப்பிறப்பாம்
மங்கையர்க்கே அன்பதனை வைப்பரன்றோ - சங்கையற
உள்ளளவும் மக்களுகே ஈய ஒருப்படுவார்
எள்ளளவும் ஈசர்க்கொன்(று) ஈயாமல் - கள்ளமலம் (240)
தீர்ப்பார் புறமிருக்கத் தீயமக்க ளோடருத்தி
ஆர்ப்பார் நரகத் தவன்றோ
- நோற்பார்கள்
பெற்றெடுக்க ஈசன் பிறந்திருக்கப் பிள்ளையென
வெற்றுடலம் தீண்டும்பொய் வீணரன்றோ - நற்றியரன்
பூசைசெயும் போ(து)அனேகம் போதுசெலும் இல்லதற்கு
மோசமெனும் பொல்லாத மூர்க்கரன்றோ - மாசுற்ற
மைந்தர்செயுங் குற்றம் மறைப்பார் தவறென்னின்
நிந்தைசொல்லும் பொல்லாநெட் டூரரன்றோ - சிந்தைதனை
வாதைசெயும் தீய மலமகற்றுஞ் சங்கமத்தைச்
சாதிசொலும் பொல்லச்சண் டாளரன்றோ - நீதிசொலும் (245)
தேசிகரை ஈசரெனச் செப்புதவர்க்(கு) இல்லாத
வாசகமெ சொல்லும் பொய் வஞ்சரன்றோ - நேசமுற
உள்ளுவார் அல்ல உறவல்ல தேசிகரை
எள்ளுவார் தீய இடக்கரன்றோ - கொள்ளுநிலை
காணார் சிலரோடுங் கண்டாரைப் போல்தவரை
வீணாயும் பொல்லா விடரன்றோ - பூணாகும்
ஈச்ற்குப் பூசை இலாதிருக்க மக்களொடும்
போசனமே செய்யும் புலையரன்றோ
- பேசும்
உலகமுயி ரெல்லாம் ஒருவன(எஏஉ)இங் கென்றால்
விலகி எனதென்னும் வீணர் - நிலவுவதோர் (250)
ஊணாப் பிறிதுயிரைக் கொன்றுனைத் தின்றுமல
வீணாய் நரகில் விழுவரன்றோ - கோணாகும்
பொல்லாப் புலாலைப் பொசியாரும் நல்விருந்தால்
கொல்வார் நரகக் கொடியன்றோ - பல்பிணிகள்
ப்ந்தித்தால் சிற்றுயிரைப் பொல்லியிடு வித்தும்லத்
தொந்தத்தால் தீநிரயம் தோய்வரன்றொ - பந்தமுறும்
மாயா உலகே மதுபானச் ச ஆந்தையதைத்
தொயா தவரே துணையன்றோ- சாயாத
சங்கமமே லிங்கம் தகுங்குருவொடு ஒன்றாகத்
தங்கும் அவரே தமரென்பாள் - பொங்குமருள் (255)
வேடமும் பூசையுமே மேய்யன்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையையுமே - நீடியதோர்
நெஞ்சு விடுதூதின் நிகழ்த்துமுப தேசமுறா
வஞ்சகரை நெஞ்சின் மருவெனென்பாள்
-நஞ்சுண்ட
தேவேமய்த் தேவேன்னச் செப்புவதேன் மூவரும்நம்
கோவே எனமறைகள் கூறவேனின் - மேவும்
திதிக்கடவுள் சங்காரஞ் செய்கடவுள் தம்மை
விதிகடவுள் தானே விதித்தான் - -நதியைப்
பொறுப்பானும் சிட்டிதனைப் பூண்பானும் மாலால்
சிறப்பாவர் சிட்டிதிதி எல்லாம் - அறுப்பான்
அரனேயாம் அன்றோ அவன்மரிப்ப தின்றி (260)
வரமே அளித்து வருமான் - பரமே
இவன்ல்லார் எல்லாம் - எழுபிறப்பை ஏயும்
பவமாம் பசுவாகும் பார்க்கில் - செவையாய்
இலியித்த தன்னிலில யித்ததாம லத்தால்
இலியித்த வாறுளதா வேண்டும் - இலயித்த(து)
அத்திதியில் என்னில் அழியா(து) அவைஅழிவ(து)
அத்திதியும் ஆதியுமாம் அங்கென்று - முத்திநிலை
சொற்ற சிவஞான போதத்தைசே சூழாமல்
அற்றவர்க்கே பொய்க்கடவு ளாமென்பாள்
- உற்ற (265)
திருநீறும் அஞ்செழுத்தும் சேர்க்ண் டிகையும்
உருமாறு கொள்ளுமுறுந் தேவே - கருமாறச்
செயுமென நல்லெஅழுக்கஞ் செய்திடினும் சீவனற்று
நையும் உட்ற்சிறப்பு நண்ணியதாம் - மெய்யாகும்
அஞ்சக் கரத்தார்க்கே ஆவியுறும் மெய்யழுக்கு
மிஞ்சக் கரக்கும் விதியென்ன - நெஞ்சிரக்கத்(து)
ஆசாரஞ் சற்றும் இலவெனும் ஆவியைப்பேஅல்
தேசாகும் ஈசன் சிறப்புளதாம் - தூசாகும்
ஆவிஅற்றா லேதடுத்தும் ஆவிதுண்டே ஈசனல்லால்
பாவிப்ப தெல்லாம் பழுதென்னத் - தெவர் (270)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிதென்(று) - எனக்குவலை
போக்வதாய்ச் சொன்ன பொருணூல் உணராப்பொய்
மாக்களிக்கே தீநிரயம் வைத்ததென்பாள்
- நீக்கமறும்
பேசரிய வையம் பிரமத்தாய் வஞ்சத்தின்
நேச முறும்மலத்தால் நீள்பொருளில் - ஆசைப்
படுமாற தெவ்வாறும் பட்டு நிரயந்
எல்லாம் விடுத்தங்(கு) இசைவதற்கோர் தேவின்றிப்
பொல்லா நரகம் புகுவதாய் - நில்லாமெய்ப் (275)
ஆவி தனைக்கண்(டு) அகம்பிரமம் என்னுமலப்
பாவிகளைக் கண்ணாலும் பாரெனென்பாள்.
- மேவுமுயிர்
கொன்றூன் தினல் காமம் கோபம் மதுபானம்
என்றும் தனுவுக்(கு) இயல்பாக்கி - மன்றுணடம்
ஆடுவான் தன்னை அகற்றிஅவன் சத்திஅடி
கூடுவா னாகக் குறித்துடலில் - சூடுவான்
கண்டிகையும் நீறும் கருதுமெழுத்(து) ஓரைந்தும்
மண்திகழும் வாமி மருவியருள் - தொண்டொழுங்கு
மாறுபட்ட பொல்லா மருட்குழாம் ஆவார்க்கும்
வேறுபட்டேன் என்ன விளம்புவாள்
- நீறுபட்ட (280)
காயமதில் ஈசனையும் கண்மணியும் கட்டியடித்
தோய்ந்தவா வாயத் தொடுஞ்சேடம் - மாயமறு
நாதனடிக் காக்கிமுதல் நண்ணுஞ் சிவாலயமும்
ஓதுசிவ திர்த்தத் துறுவிதியும் - பேதமென
நீசர் குலமுதலாய் நீக்குமவை தோற்றியிட
நாசமுறல் மாதர் நவையெச்சில் - தேசதெனக்
கூடி நடந்து குலவும் உயிர்மடியின்
வாடுமுட லோடிலிங்கம் ஆய்த்தறிவாய் - நீடியதோர்
வேதா கமத்தின் விதிமாற தாய்நிரயச்
சூதாவார் தீங்ககலச் சொல்லு மறை - தீதாகா(து) (285)
உற்றடியார் ஓங்குஞ் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பால் செல்லாதே - மற்றவஞ்சேர்ந்(து)
ஒப்பாரே நாயினுக்கும் ஊனுடலின் மண்பூசி
முப்பொழுதும் மூழ்கார் முயன்றென்றும் - செப்பும்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படுமென்னும் - தூய்மொழியின்
போதகத்திற் செல்லாமல் புன்னூல்பா ராட்டுமலப்
பாதகரைக் கண்ணாற்பா ரேனென்பாள்
- பாரயிக்கம்
ஏயும் உயிர்க்கோர் இருள்மலம் ஒன்றின்றேல்
தோயுமுடல் மேல்முயங்கித் தோய்வதின்றாம் - காயமதிங்(கு)
ஆவிதனக்(கு) அஞ்ஞானம் எஞ்ஞானம் ஆகிலதாய்ச்
சீவிப்ப தல்லால் செயலுண்டோ - மெவியநீர்
ஒன்றாக லால்கத்த னோடமை வின்றதாய்
நின்றான் இவனைநினை யேனென்பாள்
- குன்றா (295)
இருகட் கிடையில் இசைந்ததடை யன்ன
மருவி மலமுயிரை மன்னக் - கருவிவினை
எல்லாம் இசைந்தங்(கு) இறப்புப் பிறப்போடு
பொல்லா நரகம் புகுந்துமிக - இல்லாத
இன்பமே மேலாய் இசைந்திடும்நாள் ஈசன்மலத்
துன்பமே நீக்கத் துடக்கோர்கண் - முன்புற்ற
கேவலமே போலக் கிளருமறி(வு) ஏதுமற
மேவுதலே முத்தி விதியென்பான்
- ஆவியறச்
செப்பியதோர் முத்தித் திறம்நன்றாம் தீதிருளை
ஒப்புவதாம் முத்தி ஒழுங்கென்னில் - இப்பொழுது (300)
மாயா தனுவிளக்காய் மற்றுள்ளங் காணும்மதைத்
தோயாத கேவலமும் சுத்தமன்றோ - வீயாத
அம்பகத்துக்(கு) உற்ற அவலத் தடைஅகன்றால்
செம்பொருளைத் தேர்தல் தெளிவன்றோ - நம்புமுயிர்க்(கு)
ஆசற்றால் ஈசனோ(டு) ஆவதுவே முத்தியெனப்
பேசுவதே மெய்ஞ்ஞானப் பெற்றியதாம் - தேசற்ற
ஆசாதி யேல் அணைவ காரணமென் முத்திநிலை
பேசா(து) அகவும் பிணியன்றோ - மாசுற்றார்
தூங்குதலே போலத் துலங்குங் காரணமற
ஓங்குதலே முத்தி எனவுரைக்கின் - தாங்கும்
பொறியிலார் முட்டைசினை புன்மரங்கள் கெர்ப்பத்(து)
அறிவிலார் முத்தி எனவுரைக்கின் - தாங்கும் (305)
பொறியிலார் முட்டைசினை புன்மரங்கள் கெர்ப்பத்(து)
அறிவிலார் முத்திஅடை வாராம் - நெறியின்
வருமிந்த முத்திக்கு மன்னுசிவ ஞானக்
குருவும்வர வேண்டாம் குறித்து - விரைவாய்
வருந்துன்பம் அல்லால் மருவுசிவ ஞானம்
பொருந்துவதங் குண்டோ புகலின் - திருந்தியதோர்
பாடாண வாதம் பகருவார்க் கேமுத்தி
கூடா தவனொடுங்கூ டேனென்பாள்
- நீடுசெம்பில்
தங்குங் களிம்பதறச் சாருங் குளிகையென
மங்கும் மலமுயிர்க்கு மாய அருட் - சங்கமுறச் (310)
சுத்துமாய் ஒன்றோடுந் தோய்வற்றுத் தான்பேத
முத்தனென முத்தி மொழிந்திடுவான்
- நித்தியமாய்
ஈசனோ(டு) ஆவி எழிற்பாசம் மேன்மறைகள்
பேசக் குளிகையிடில் பின்களிம்பு - நாசமே
தொட்ட களிம்பைத் துடைத்த குளிகையது
நட்டமுறா(து) ஆடகமாய் நண்ணியதால் - இட்டமற்ற
பேதமே வாதமெனப் பேசுவார் தங்களுடன்
நீதமே தீதாம் நிலையென்பாள்
- ஓதியதோர்
வேற்றுமலம் ஆவி மிகுபதி தம்முணர்விங்(கு)
ஏற்றமாய்ப் பாசம் இருங்கருவி - தோற்றியிட (315)
ஆவி அறிவாய் அருந்தியிடும் அவ்வறியும்
ஒவி யிடஎரியா ஒண்தழல் போல் - ஆவி
அறிவாய் மற்றொன்றும் அரியாத தாகும்
நெறியாம் இவ்வாறொழுகி நிற்கை - பிறியா
உயிருக்(கு) அரனருளே ஒண்புழுவை வண்டு
செயல்சேர்ந்(து) எடுத்ததெனச் சித்தைப் - பயின்றெடுக்கச்
சீவனைத நோக்கித் தெளிந்(து) அதுவாய் ஐந்தொழிலும்
தாவிய பேரறிவுஞ் சார்ந்தகலா - மேவுமருள்
மிக்கோர் திரட்சி விரவுதலே முத்தியென்பான்
தக்க அறிவு தவறின்றி - எக்காலும் (320)
முப்பொருட்கும் நிற்க, மொழிகின்ற ஆருயிர்க்குத்
தப்பறவே காணத் தகுமுறைமை - செப்பியிடில்
ஓங்கும் மல இருளுக்(கு) உற்ற கலைவிளக்காய்த்
தீங்குலகில் ஒன்றைத் தெளிவின்றாம் - ஆங்ககன்று
ஞானத்தால் பேரின்பம் நண்ணுவதும் இன்றாகும்
மானத்தால் ஓரொருகால் மன்னுமெனின் - ஈசத்தாம்
அங்கத்தை அன்றி அறியா(து) உயிர், உடலம்
தங்குமுயிர் அன்றிஒன்றுந் தானறியா - துங்க
அரற்கொன்ற வேண்டி அறியவேண் டின்றே
தரிக்குமனல் போலுயிரைச் சாற்றில் - விரிக்கும் (325)
பொறியற்றால் ஆவி புணர்ப்பின்றாம் ஈசன்
அறிவற்றார் தம்மை அணை வானோ
- நெறியுற்றங்(கு)
ஆற்றும் புழுவை அருங்குளவி தீண்டிலொன்றாய்த்
தோற்றுவதும் உண்டோமோ சொல்லுங்கால் - தேற்றரிய
வண்டு புழுவை மருவப் புழுவதுவாய்க்
கொண்டு நிற்க மந்திரமுட் கொண்டதுண்டோ - மண்டிப்
பிடித்ததனால் அப்பேறு பெற்றதெனின் வண்டாய்
எடுக்குமயிர்க் குட்டிக்(கு) இசைந்து - நடத்திகின்ற
தாயான ஒன்றதனைச் சாற்றியிடல் ஆயிடுமோ
மாயாப் பிறவி வழக்கதுவாம் - சாயாமல் (330)
ஆயுங்கால் யோகம் அதுவாகும் ஞானமின்றாய்
மாயும் எனமறுத்த வாறென்னை - ஒயும்
உயிரும் உணர்வும் ஒருங்கொப்ப தன்றிச்
செயல்வண்(டு) உருவமதைச் சேர்ந்தும் - அயல்புழுவின்
நெஞ்சமத னோடுற்று நின்றமையால் நீடுருவம்
வஞ்சமே உற்று மருவிடினும் - தஞ்சமெனம்
முத்தி தனிலறிவு மூளாமல் சாரூபம்
தொத்தும் தனுவதனைத் தோய்ந்ததற்பின் - இத்தனையும்
கூருகதி நோக்குங் குணமிலையால் முத்தியென்ப(து)
ஊறுடைத்தே ஈசனருள் உற்றவர்கள் - வேறுடைத்தாம் (335)
எல்லாத் தொழிலும் இரும்பே ரறிவுமுறச்
செல்லா உயிர்செலவே சேருவதால் - இல்லாத
ஆவிக்கோர் ஐந்தொழிலும் ஆவதெங்ஙன் ஆவிதொழில்
மேவும்போ(து) ஈசன் விடுவதுண்டோ - பூவிதனில்
சூரியனால் கண்கள் துலங்கியதே ஆவதல்லால்
பாரில் இருளகற்றும் பண்புண்டோ - ஓரில்
அலகைதொடும் மக்கள் அலகைஅல்லால் மற்றோர்
உலகிற் புதுமை உறுமோ - குலவிமிகுத்(து)
ஓங்குங் கடலை உறும்கடமே ஆங்கதனை
வாங்கி நடத்த வழக்குண்டோ
- ஓங்குமிருள் (340)
உற்றார் இடையின் உறுவரெனின் நன்முத்தி
பற்றாது சாரூபம் பற்றுவதென் - குற்றமிலா
முத்தியெனில் அவ்வறிவு முன்னவனாம் பேரறிவில்
தொத்துதலும் இன்றிஉருத் தோற்றுவதென் - நித்தனருள்
பெற்றார் உலகில் பெருஞ்சீவன் முத்தரென
உற்றார் எனமுத்தி ஓதினரேல் - சொற்றவுரு
நீங்கினரோ நீங்காரோ என்னில் இருவகையும்
ஓங்கினரேல் முத்தி ஒழுங்கன்றே - தீங்ககன்ற
மாமாயை ஈய உருமன்னுமெனின் நெல்லினது
போமா(று) உமிதவிடு போனதன்பின் - தாமாறித் (345)
தூய அரிசியெனுஞ் சொற்பெறும் அதேமுளைத்த
தாகில் உருவதனை ஆய்ந்திடலாம் - தோயுமது
சாரூபம் என்னி(ல்) ஐந்தாய்ச் சார்மலமும் உண்டாகும்
நேராகும் இவ்விதியை நெஞ்சதனில் - ஓராப்
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்(கு)
அறிவென்பான் தன்னை அடேனென்பாள்
- நெறிஇன்பார்
ஆவி அவிகார மாய் இருக்க வாயுவுடன்
மேவி நடத்தி விகாரமதாய்த் - தாவி
எழுபிறப்புஞ் சார்ந்தஞ்(கு) இருக்கும்நால் ஈசன்
அழிவிலாச் சத்திநிபா தத்தால் - ஒழியமலம் (350)
உப்பளத்துப் புல்லும் உறுந்தீ விறகுமெனச்
செப்புமரு ளோடாவி சேர்ந்தழிந்து - கப்பின்றாய்
நண்ணும் பசுகரணம் எல்லாம் தொன்றாய்
எண்ணுஞ் சிவகரண மாயென்றுக் கண்ணியதோர்
சங்கிராந் தவ்வாதி சாற்றுவான்.
எவ்வுயிர்க்கும்
பொங்கு விகாரப் புணர்ப்பின்றேல் - தங்குபொய்யில்
தேற்றுமறி வின்றிஉடல் தோற்றுமோ தொல்வினையில்
ஆற்றும் விகாரமின்றி ஆடுமோ - கூற்றன்
மயலாவார்க்(கு) அன்றி மதியிலா தார்க்கும்
செயலார் நரகமுறச் செய்யான் - அயலாரும் (355)
கோபக் குரோதங் கொடுங்காமம் இத்தனையும்
ஆவிக் குளதாய் அறையும்நூல் - மேவும்விழி
உள்ளபோ(து) உன்டாம் உறும்படல மேனுமதைத்
தள்ளும்போ(து) ஆதவனைச் சார்வதல்லால் - கொள்ளுகின்ற
ஆதவனோ(டு) ஒன்றாஉ அழியுமோ தத்துவங்கள்
ஏதமற்ற அருயிரொ(டு) ஏய்ந்தரன்பால் - சேதமற
நின்றால் சிவகரண நீதியல்லால் ஆவிகெட்டால்
ஒன்றாக்கு வாரார் உறுசிவத்தில் - இன்றாகும்
வாதம் உரைக்கும் மடவோனை மன்னனென்பாள்
தீதில் வளைபலவாய்ச் சேர்ந்தகடந்(து) - ஓதும் (360)
விளக்கொன்று நின்று விளங்குதல்போல் ஆவி
அளக்குந் தனுவில் அறிவாய் - முளைத்தேதும்
ஆயும் படிக்(கு) அங்(கு) அடைவாய்ப் பொறிநிறுத்தித்
தோயும் விடயமவை துஞ்சமலம் - வியுங்கால்
அங்கைவிளக்(கு) ஏந்திஇல்லில் ஆரிருளை நிக்கியதில்
தங்கும் பொருளதனைச் சார்பவர்போல் - எங்கும்
நிறைந்த அகவிருளை நீக்குதற்கு ஞானம்
உறைந்த அரனருளால் உற்றுச் - செறிந்தமலக்
கோணதனை நீக்கிஉயிர் கூடலர னோடதுதான்
காணும் வெயிற்காயும் காயத்தார் - ஊணும் (365)
தருநிழலிற் சார்ந்ததுபோல் சம்புஅருள் தாளை
மருவுதலே முத்தி வழக்காகத் - திருவிலா
ஆசிரமம் எல்லாம் அகன்றசிவ சைவத்தாம்
ஈச அவிகாரி இசைத்திடுவான்
- பேசரிய
அவிஒளி அங்கும் திரிநெய் கருமமகல்
மேவியபூ நான்கும் விளக்காகும் - பூவில்
நடக்கும் தனுவகல நண்ணிமலத் தொன்றிக்
கிடக்குமுயிர் கேவகல அன்றோ - துடக்காகும்
இல்லிக் குடமதனை ஏதென்பான் ஈதகலின்
சொல்லுமுயிர் கேவலத்தில் தோய்வதுன்டோ - எல்லாம் (370)
நிறைந்த இருட்டு நிகழ்விளக்கே போல
அறைந்த அரனருளே ஆகில் - செறிந்ததோர்
ஆவிக்கு உணர்வின்று அசேதனமாம் தத்துவங்கள்
மேவி(ன்) அரு(ள்) அன்றிஒன்றாய் மேவுமோ - தாவும்
அருள்கருவி என்ப(து) அடா(து) ஆதவனை
இருள்விலக்க வேண்டியெடுப் பாரோ - அருளுக்(கு)
உவமை விபரீதம் உற்றதனால் எல்லாம்
அவமே அறிவறிவ(து) உண்டோ - சிவமே
அவிகாரம் ஆகில் அருநரகத் தாக்கிப்
புவிமேல்கீழ் ஒடப் புரட்டி - நவமாரும் (375)
இன்பமே ஈசன் எனத்தெளிவித்(து) எவ்வுலகும்
துன்பமே என்னத் துடைப்பித்தே - அன்பருக்கன்
பாமோ அருளோடு அழுந்தாத அந்தகர்பால்
போமோஎன் நெஞ்சம் புகுந்தென்பாள்.
மாமேவும்
வையமெல்லாம் ஈசன் வடிவென்றும் மற்றுலகில்
செய்வதெல்லாஞ் சத்தி சிவமென்றும் - பொய்வாழ்வு(அ)
சேதனமே இன்றாம் அறிவோன் நுகரிலொன்றாம்
பேசரிய அவிஒன்றாம் பெற்றியென்றும் - காசமற்ற
பொற்பணியில் பேதம் புரையென்றும் பொன்னாக
நிற்பதுவே போத நெறியென்றும் நற்பொருளைக் (380)
காண்பானுங் காட்டியிடு வானும் காதலித்துப்
பூண்பானாய் நிற்கும் பொருள்தானும் - ஆண்பெண்
அலியாய் மயலுற்(று) அலைவானும் நோயால்
மெலிவானும் மீட்கும் மருந்தானும் - பலியதனை
எற்பானும் ஈவானும் ஏதமுறு விப்பானும்
அர்ப்பானும் இன்பம் அலிப்பானும் - தோற்பானும்
வெல்லத் தொடுப்பானும் ஈசனல்லால் வெறுன்டோ
சொல்லுமுத்தி ஈதாஞ் சுகமறியார் - அல்லலுறும்
காயமோ(டு) ஆவி கருதுமரற் கீந்துமலந்
தேயுங்கால் தத்துவங்கள் தீர்ந்தறிவாய்த் - தோயின் (385)
துரியாவ தீதத்(து) அருள்தோறிக் காயம்
பிரியா இடத்ததீதம் பெற்றுத் - திரியாது
நிற்பதுவே முத்தி நெறிநிமித்த காரணனோர்
கற்பனையே உற்றுக் கழறுவான்.
- சற்பனையாம்
பாசம் உயிர்க்குப் பகையால் பதிஅற்காய்
நேசமாய் அப்பகையை நீக்குதற்காய் - நாசமிலா
ஐந்தொழிலும் ஆருயிர்க்காய் ஆக்கிஅறம் பாவமெனும்
தொந்த நரகசொர்க்கஞ் சூழ்ந்திடுநாள் - எந்தையருள்
தொண்டருக்கே ஆளாகித் தொன்மை இருவினையும்
அண்டௌக்கே அன்பாய் அளித்துமலம் - மிண்டகற்றி (390)
அவி சிவத்தோ(டு) அழுந்தியு(ம்)அன் றல்லாத
பாவகத்த ஒன்றாய்ப் பகர்வரோ - சீவிக்கும்
காயமோ(டு) ஆவி கருதிமலம் இத்தனையும்
நேயமே என்ன நிகழ்த்துவரோ - அயுமலப்
பெத்தத்தில் ஆவிபிர வஞ்சமெல்லம் பேராத
நித்தனே என்ன நிகழ்த்தினான் - முத்தியென்ப(து)
ஆர்க்கோ கருவி அகன்ற அதீதத்தின்
கூர்க்கும் அறிவின் குணமுண்டோ - வேர்க்கும்
நிறைந்த பொறியிடத்து நில்லா அதீதம்
சிறந்தமுத்தி எவ்விடமாம் செப்பில் - அறைந்த (395)
பதிபசு பாசப் பரப்பெல்லாம் ஒன்றாம்
விதியென்பான் தன்னை விடுஎன்பாள்
- மதியால்
உணருமுயிர் கேவலத்தில் ஓருமுணர்(வு) இன்றாய்ப்
புணருமருண் நீங்கப் புணர்ப்பால் - அணையுமரன்
தத்துவங்கள் எல்லாம் தகுதி யுடன் அளிக்க
வித்தை அதனோடு மேம்பட்டுப் - பெத்தமுடன்
தோயும் இருவினையின் தொக்காய் வருவினையால்
சாயும் பிறப்பிறப்பைச் சாருநாண் - ஏயும்
இருவினை ஒப்பும் இசைந்தமலம் பாகத்(து)
ஒருவினையாம் சத்திநிபா தத்தை - மருவ உயிர் (400)
ஈசன் அருளுருவாய் எய்துமுத்தி ஆராய்ந்து
பாசமறப் பல்பணிகள் பாரித்து - மாசதறில்
அங்கமோ(டு) எல்லாம் அகல அகலா அருளே
சங்கமே யாகத் தரித்திடலும் - துங்கமதாய்த்
தானதனை நோக்கியருள் தன்னையும்தன் றன்னையுமேல்
ஆன அரன் தன்னையுமெ ஆய்ந்த்ழூந்தி - ஏனை இவை
இன்னவெனக் காணா இருவரும் ஒன்றாகி
உன்னும் உறுபயனும் ஓருவப்பும் - மன்னாமல்
நிற்கை கதியென்ன நிகழ்த்திடுவான் சைவனென்பான்
இற்கண் விளக்ககலில் ஏய்ந்தவிழி - அற்கண்ணே (405)
அல்லால் அழிவதுண்டோ ஆவி சகலமுறின்
நில்லா உணர்வுவந்(து) எய்துமோ - எல்லாம்
இறந்தவிடத்(து) ஆவிக்(கு) எழிலறிவும் உண்டோ
செறிந்தமுத்தி எவ்விடமாம் செப்பில் - அறைந்த
இருவினைகள் ஒக்கில் இசைந்ததுலாக் கோலின்
வருமுடலம் எங்ஙன் வருமோ - கருமலத்தால்
புண்ணியம்மேல் நோக்குவிக்கும் பாவம்கீழ் நூக்குவதாம்
நண்ணிநிறை ஓப்பாக நண்ணரிதாம் - கண்ணியதோர்
சத்திநி பாதம் சதுவித்த தாம்நிறையாய்
ஒத்தலென்ப(து) ஓரிடத்தும் ஒவ்வாது - சுத்தத்(து) (410)
ஒருமித்தால் உற்ற வினையிரண்டும் ஒத்து
வருமத்தால் தீயமலம் மாயும் - கருமத்தால்
உற்ற சரிதை ஒருநாள் கினினுவினை
பெற்றழிவ தல்லால் பிரிவதுண்டோ
- சோற்ற
அருளுருவே தேசிகனென்(று) அய்ந்ததனை ஆயின
இருளுருவம் தொக்கி எழுமென்றான் - மருள்மயல
பூண்பார் உதரம் புகுந்துவளர்ந் தாடுமோ
வீண்பால் நடைகற்று மேவுமோ - கோண்பால்
அறுக்குமுயிர் தானாய்மற்(று) அங்கம் தனதாய்ப்
பொருக்கும் அருல்மேனி பூண்டோன் செறிக்கும் (415)
சரிதாதி சத்திக்குத் தான்கா ரணமால்
ஒருவா அரன் இவையோ ஓதில் - பெருமானுக்(கு)
ஏற்றபணி தன்னால் இசைந்து பணிந்தருளின்
தோற்றுதலே அல்லால் சொலவுண்டொ - ஆற்றுந்
தொழில் அடியைத் வாகும் - வழுவிலா
ஈசன் பணிகொண்டு இருப்பதல்லால் ஈசனைத்தான்
பேசும் பணியாகப் பேசுவரோ
- மாசுற்ற
தத்துவமும் உற்ற தகுமலமும் மாயாருள்
ஒத்திடுவ(து) என்றாங்(கு) உரைக்குமால் - சித்தமுதல் (420)
எல்லாம் அகன்றவிடத்(து) ஏதறிவு கேவலமொன்(று)
இல்லா இதத்தங்(கு) இருங்கருவி - அல்லால்
அறியும் அறிவுண்டோ அருள்பெறுவ(து) எங்ஙன்
செறியுமலங் கேவலமோ தேரின் - பிறியும்
இருள்விலக்கல் உற்ற இரவிதனோ(டு) ஒன்றாய்
ஒருவுதலும் உண்டோ உலகின் - மருவிமையல்
பெண்டாட்டி பிள்ளை பிதாமாதா மேலன்பு
கொண்டாட்டிக் கேவலமேற் கொண்டதுண்டோ - திண்டாட்டும்
தத்துபங்கள் எல்லாம் தரிக்கும் சகலத்தில்
சித்தத் திருளின் சிதைவுண்டோ - ஒத்த இருட் (425)
காலமல மாமோ கருவியற ஞானமெனின்
மாலுன் மலமாய வாழ்சகலக் - கோலமலால்
வேறுண்டோ மெய்ஞ்ஞான வெற்றி உறவரிதே
பேறுபசு ஞானம் பிரங்குசிவம் - கூறில்
தருமரபு கேவலமால் காணுமறி(வு) ஏதாம்
ஒருவுதலும் உண்டோ உணரில் - இருவருமே
ஒன்றாய்த்தென்று ஓதில் உறுசிவமும் ஓர்மரபோ
இன்றாகும் பெத்தத்(து) இயல்பாகும் - குன்றா
உவப்பின்(று) எனுமால் உறுமுலகம் வேம்பாய்த்
தவப்பயனே இன்பமெனச் சார்ந்து - நவப்பேறாம் (430)
ஈசனே அல்லால் இசைந்ததெல்லாந் துன்பமெனப்
பேசுதலாற் பேரின்பப் பெற்றியன்றோ - மாசின்
வகையறியார் ஆவி பதியறியார் மக்கள்
தொகை அணுகேன் என்னச் சொலுவாள்
- வகையாய்ப்
பதியெயோன்(று) உலவாப் பசுபலவாம் பாச
விதிஜந்த தாக விளின்பும் - மதிதங்கும்
ஈசன் பரம் அறிவே எவ்வுயிரும் தானாகும்
நேசன் உயிர்க்குயிராய் நித்தியமாய்ப் - பேசும்
அருவுருவும் அன்றாய் அகண்டிதமாய்ப் பொற்பாய்
நிருமலமாய் நிர்க்குணமாய் நேரே - வருமறிவில் (435)
ஆனந்த மாய்ப்பெரிதாய் ஆராயின் நுட்பமதாய்த்
தானந்த மானிடத்தே தங்குமவன் - ஊனுந்தும்
ஆவிஒரு மூவகைத்தாம் ஆவணமே ஓர்வகைக்கு
மேவும்வகை ஒன்றும் வினையுறும் - பூவில்
ஒருவகைக்கே ஜந்தும் உறுமால்மெய்ஞ் ஞானம்
வரும்வகைக்குப் பேதம் அறுமேல் - கருவகைக்கு
ஆவணவமே மூலம் அறியாமை யால்பிறவி
காண் அனைத்தும்ச் ஒன்றாக்க் காட்டுமால்
- தாணுவினோ(டு)
ஒன்றா மலம்மொன்(று) ஒழியின்மல(ம்) ஒர்நான்கும்
நின்றாம் அருளொடு நீள்சிவமாம் - குன்றாத (440)
ஆவிஓர் ஆவிக்(கு) அடிமையல ஆவியெலாம்
பாவிக்கும் ஈசன் பரனென்னத் - தாவிப்
பொருமலத்தை மாய்க்கப் பொருந்தியதோர் நான்கில்
இருவினைக்காய் எப்பிறப்பும் ஏய்ந்து - வருமறிவவ்
வீசன்பா லாக இருள்மலம் ஒன்றேகப்
பேசும் வினைஒப்புப் பின்பிறக்க - மாசற்ற
சத்திநிபா தத்தால் தகுமருளோ(டு) ஒன்றாகும்
முத்திநெறி என்ன மொழியும் நூல் - சித்தித்(து)
இருளடைந்த காலம் இசைந்தமலம் நான்கும்
மருளடைவ தன்றியுமற் றுண்டோ
- தெருளில் (445)
சரிதாதி ‘னான்குந் தகுமெவைக்கும் மேலாய்
வரலால் தவமே வலியாய் - அரணாகும்
ஆணவமே ஒன்றாய் அளவிறந்த சத்தியதாய்த்
தாணுவினைக் கட்டாத் தகைமையதாய்த்
தாணுவினைக் காட்டாத் தகைமையதாய்ப் - பூணும்
அனாதியாய் ஆருயிராய் அங்கமோ(டு) உற்ற
மனாதியாய் வான்பொருளாய் மற்ற - இனாது
நரகமாயாய் சொர்க்க நவில்பிறப்பாய்ப் பொய்யில்
விரகமாய் வீணாய் விமலத் - துரகமாய்ச்
சிற்ருயிரைப் பற்றும் செடமாய்ப் பொய்த் தீவினையை
நற்றுவிக்கும் பொல்லா நலமதாய் - உற்றரனை (450)
அன்னியமே ஆக்கி அடைந்த உயிரோதெவையும்
தன்னியல்பே ஆக்கும் சதிராகும்
- மன்னும்
அருளடைய ஆவிஅங்கண் ஆதவனைச் சேர்ந்த
இருளடைந்த தென்ன இலவாம் - மருளென்னச்
சொல்லுவதிங்(கு) எவ்வாறு தொக்குமுடல் கன்மமல்லால்
இல்லை உயிர்ப் பெந்தம் எனின்நன்றாம் - எல்லவனாம்
தேவன்பொய்த் தீவினையைச் செய்வித்(து) இருநிரயக்
காவல் இடுகை கணக்கோதான் - ஆவி
மொழிந்த வினையதனில் மூழ்கி நரகத்(து)
அழுந்துவதுஞ் செய்யா(து) அறிவால் - எழுந்த (455)
விழியுடையார் வீணே நடந்துவிடப் பாம்பின்
குழியின்விழு வாரோ குறித்தங்(கு) - அழிவிலா
மார்க்கம் இருக்க மருவு கருவேன்முள்
தாக்க நடக்கத் தகுவரோ - நோக்குகின்ற
நாட்டம் தடையதனை நண்ணிஅந்த நாட்டமறக்
கோட்டமே உற்ற குணம்போலச் அவியற
மேவிச் சடமாய் விளங்கியே - பூவிதனில்
இச்சை கிரியை எழில்ஞானம் ஈங்கிவையை
அச்சமற அன்றே அடைந்துபொய்யாங் - கொச்சைநெறிக்(கு)
ஆசை மிகுவித்(து) அனன்னியமாம் ஈசனிச்சை (460)
நேசங் கிரியையெல்லாம் நீக்கியே - பேசுமல
மோகம் அனாதி முனைத்திலையேல் ஆதியதாம்
அதிகத்தோ(டு) ஒன்றாகச் செல்லுவரோ
- வேக
மலமே வினையின்மால் ஆக்கத் திரொதஞ்
செலவே தனுவினையச் சேர்த்துப் - புலமே
நடவா வழியை நடத்தித்தன் ஆணை
கடவா வழிகட்டிக் காத்தும் - விடவாண
போகத்(து) அவாவே பொருத்திஅரன் சத்தியையும்
ஏகத் துவமாய் இசைத்ததுவே - யாகும் (465)
நயனத் தடையார் நடக்கத் கோலீந்து
பயனைத் தரக்கையாற் பற்றிச் - செயலில்
நடத்துவார் போலீசன் நண்ணில்தீ(து) என்னைத்
தொடுத்தவா(று) எவ்வாறு சொல்வேல் - அடுத்தமலம்
மோகங் குருடு மொழியுமுடல் கோலீசன்
போகத் திடைநடத்தப் பூட்டுவான் - ஆகக்
குருட்டை நடத்துங் கொடுங்கோல ரேனும்
இருட்டுங் குருட்டேவ லேயாம் - மருட்டுங்
குணவேற் றுமையால் குருவருட்கு மாறாய்
அணையும் இருவினைக்கே ஆளாய் - உணர்வால் (470)
நடப்பார் தமைநடத்தி நன்குதீ(து) எல்லாம்
கொடுப்பார் அவர்நடத்துங் கோலோ
- எடுப்பாரும்
ஈசன் தனுவை இசைத்தாட்டு வான் அந்த
ஆசை அவனளித்த தோகருணைத் - தேசாம்
கடவுள்மல அந்தகர்க்குத் கைகொடுத்தால் பாவ
நடைபயிற்று வான் அவனாய் நாட்டும் - தொடரும்
அறியாமை முன்செல்ல ஆங்கதற்குப் பின்னே
பிறியாப் பிறப்பிறப்பைப் பெய்து - குறியாகும்
சொற்க நரகமுறத் தோஉவித்துத் தூநெறிக்கண்
நற்கண் சிறிதுநடை நண்ணியதேல் - பொற்கை (475)
பிடித்தடியை சேரப் பிரியாச் சரிதை
நடத்துங் கருணை நலமாம் - தொடுத்த
குருடுள போதே கொளுங்கோலும் உண்டாய்க்
குருடகலக் கோல்வந் ததுபோல் - மருளகல
வந்த மலநான்கும் மதிக்கில் அனாதிபின்
தொந்தமுறும் ஈசன் தொடர்பினால் - தந்தவனே
நீக்கிக் கருவி நிரப்ப வினையுமொத்து
நீக்கும் திரோதமவை நோக்குவதாம்
- ஊக்கும்
மலமே இருபோதும் மன்னி உயிரின்
புலமாய்த் தனுவதனைப் போக்க - நலமாய்க் (480)
கருவிமுதல் நான்குமதன் கைவழித்தாம் தீமை
ஒருவின்முதல் தந்தவனோ(டு) ஒன்றாம் - மருவுநெறி
தத்துவமே நீங்கத் தகும் பொருளைக் காணாமல்
தொத்துவதே கேவலத்தின் தொன்மையதாம் - புத்திவினை
நண்ணக் கருவியது நாடி யிடிற்சகலம்
எண்ணுமலம் எல்லாம் இலையாகிக் - கண்ணும்
அறிவோ(டு) அறியாய் அழுந்துவதே சுத்தம்
குறியோடு நிற்கு‘க் குருடர் - செறியும்
கருவிஅறி(வு) ஏதேனுங் காணாமல் காண
மருவியதும் அங்கே மறைப்பாய்ச் - சரியும் (485)
குருடோடு நித்திரையைக் கூடுவார் போல
மருளோடும் ஆவி மருவி - இருளோடும்
அங்கமறப் பூரணமாய் ஆங்கொன்றைக் காணாமல்
தங்குவதே கேவலத்தின் தன்மையதாம்
- பொங்கும்
கருவிஅவை கேவலத்தின் கண்ணுறுங்கால் ஆவி
மருவி உடலாகி மன்னித் - தெரியும்
விழியிழிந்தார் தூங்கி விழித்தவிழி போல
வழிதெரிந்த(து) இன்றாம் வழக்காய்ப் - பழிமலத்தின்
மோகத் தடையாய் முழுதும் அறிவதனை
ஆகச் செயலாய் அழுத்தும்வினை - ஊகதால் (490)
ஓர்மூ வகைத்தாய் உறுந்தோற்றம் நாலதாய்ச்
சார்பிறவி ஏழினையுஞ் சார்ந்துபொய்யில் - சேருஞ்
சுவர்க்க நரகமெனச் சொற்றெவையுந் தோய்ந்து
பவத்தைப் பலகாலும் பற்றிச் - சிவத்தில்
தரியாத வாறே சகலமென்ப தாகும்
தெரியா மத்துவமைச் செய்கை - பிரியாச்
செறியும் களிம்புவமை சேரும் அனாதிக்கும்
பிறியிலுற வற்றதையும் பேசும் - மறைபடலம்
தூங்கிக் குருடர் துயிலெழு‘ன்துங் கண்ணினுக்கே
ஓங்குபொருள் காட்டாத உண்மைபோல் - நீங்குமையல் (495)
கேவலத்தில் அன்றிக் கிளர்கருவி உற்று(ம்) அருட்
காவலனைக் காட்டாத காவலால் - மேவும்
இருளுவமை காண்பானும் எய்தும் அரனும்
தெருளுதலே இல்லாத் திகைப்பும் - அருள்பெறுங்கால்
மாறேமுன் உற்றதனை மன்னாமல் வீணாய்
வேறே கிடக்கும் வியப்பாலும் - மீறா
விடத்துக்(கு) உவமையது மீண்டுகுண மற்றுக்
கிடந்துங் கிடவாத கேண்மை - படமகன்ற
நாகமணி காட்டத்தீ நன்குவமை பேதமற
ஏகமாய் நிற்கும் இயல்பென்ப - தாகும் (500)
கடலுப்(பு) உவமை கலப்பும் வியர்த்தத்
தொடர்பும் அனாதியையுஞ் சொல்லும் - கடனாகும்
நெல்லுக்(கு) உவமை நிறைந்தமலம் மூன்றினையும்
தொல்லைஎன்ப தாகமறை சொல்லுகையால் -செல்லும்
அறுவையினில் ஆசுவமை ஆங்கதனை நீக்கிச்
செறியும் வினைமாயைச் சேர்க்கை - குறியாகும்
மாசுற்ற ஆடி அதுஉவமை ஆங்கதனைத்
தேசுற்ற நீறதனால் தேய்த்துபோல் - பேசும்
உளக்கண் விளங்க உறும்புல்முதல் ஆதி
விளக்கும் அரனடியை மேவி - அளக்கும் (505)
கலங்கற்(கு) உவமை கருதரனால் நெஞ்சின்
விலங்கிலுறா(து) என்கை விளம்பும்
களிம்பு உவமை
செம்பினிற் களிம்ப்பேய்ந்து என்றும் அஞ்ஞானம்
காட்டும் ஆவணம் ...
-துலங்குகின்ற
ஆகங்கோ லாக அறைகுவ(து) இங்கீசன்
மோகங்கோ லாய்வினையின் மூளுகையால் - ஏக
விளக்குவமை கேவலத்தின் விட்டபொருள் தன்னை
அளக்குகைக்கு நின்றறிவோ(டு) ஆமால் - உளக்கண்
மயக்கமுஞ் செய்யுமென மன்னிய(து)அஞ் ஞானம்
இயக்கப் படுமதனால் என்க - உயக்கொள்ளும்
ஈசன் அருளே இயல்பென்ப தாகுமதைப்
பேசியதும் அச்சொல்லின் பெற்றியதாம்
மயக்கிடும் உடலம் என்று மறைவல்லோர் உரைப்ப தென்னை
இயக்கிடும் கோலதாகி இசைந்திடும் குருடு போலத்
தியக்கிடும் உடல தாகிச் சேர்ந்து பொய் மெய்ய தாக
முயக்கிடும் மலம(து) அற்றால் முன்னிலை மயக்கம் இன்றாம்
சத்தியாம் மாயை என்னச் சாற்றிய(து) என்னை நூல்கள்
புத்தியாய் மறைப்பு தீர்த்து புண்ணியம் புகுத்த லானும்
சித்ததாம் உலகம் எல்லாம் செனித்திடு விக்கை யானும்
அத்தன்தன் சத்திச் செய்திக்(கு) ஆம்செல்வம் ஆத லானும்
- நேசக் (510)
கருமமருந் தென்னைக் கழறுவதும் ஈசற்(கு)
ஒருமைப்பா லாக உதவி - வருமதற்குத்
தோற்றுந் தனுவே துணையாய் அறிவுபற்றிப்
போற்றும் பிறவியறப் போக்குகையால்
- தோற்றுகின்ற
செப்புவமை ஆவி திகழும் அனாதியையும்
ஒப்புஞ் சிவத்தில் ஒழித்தலுமாம் - தப்பாத
கண்ணுக் குவமை கருது மலமறைப்பும்
எண்ணுஞ் சிவத்தில் இசைதலுமாம் - விண்ணில்
பருதிக்(கு) உவமை பகர்மலத்தோ(டு) ஒத்தும்
ஒருவி அறிவதற்கும் ஒப்பாம் - மருவியருள் (515)
ஈசற்(கு) உவமை இசைந்த வியாத்தியையும்
தேசுற்றிடலுமிச்சை சேர்வதுமாம் - பேசும்
பளிங்குவமை பெத்தமுத்திப் பண்புற்றங்(கு) ஆவி
விளங்குதலின் றாகா வியப்பால்
- களங்க
இரும்பாம் உவமை இரித்தலையும் தானாய்
வரும்பா வனையினையும் தானாய்
வரும்பா வனையினையும் ம்ன்னும் - விரும்புகின்ற
தூசுவமை மாயை தொடர்ந்து மலமென்னும்
மாசற்ற்ச் செய்யும் வகையினால் - நாசமிலா
நீருவமை மாசையுற்று நிற்பதற்கும் நீங்காமல்
ஈசன்பால் ஒன்றாய் இசைவதற்கும் - தேசுற்ற (520)
ஆடிக்(கு) உவமை அடைந்தமலம் மெள்ளமெள்ள
நீடும் அறிவளித்து நீக்குகையால் - கூடும்
விளக்குவமை மெய்ஞ்ஞானத் துற்றுமற் றொன்றை
அளக்குதலைச் செய்யாது அதனால்
- துளக்காகும்
நாக மணிஉவமை நண்ணுமலத்(து) ஒன்றாயும்
வாகு பிழையாத வண்மையால் - ஏகமாம்
காட்டத்(து) எரிஉவமை காண்ணுமத்(து) ஒன்றாயும்
வீட்டித் தனுஅழித்து மேவுகையால் - கூட்டும்
உடுஉவமை ஈசன்பால் ஒன்றாகி ஆவி
கெடுமுறைமை இல்லாத கெண்மை - நடுவாம் (525)
மாசுவமை ஈசனருள் ஆக்கினையால் கன்மம்
தெரிய நடத்தியிடச் சேர்தல்
- பிரியா
உடற்குயிர்போல் என்கை உறுமுயிரின் செய்தி
நடைநடத்தச் செய்யும் நலத்தால் - உடைத்தாம்
அருக்கர்க்(கு) உவமை அடைந்தார் வினையைப்
பெருக்க நுகருமால் பேறும் - திருக்காம்
மலைருளைப் போக்கி மதியைத்தன் பாலில்
நிலவுதற்கு நிற்கும் நெறியும் - நலமாம்
குளிகைக்(கு) உவமை கொடுமறைப்பை மாற்றித்
தெளிகைக்(கு) இடமாகச் சேர்தல் - விளியா (530)
நெருப்புக்(கு) உவமைஅருள் நீடுயிர்மேல் நின்றங்(கு)
ஒருத்தர் மலத்தை ஒழித்தல்
- பொருத்துகின்ற
காந்தத்(து) உவமை கருதுமுயிர் தன்பாலில்
சேர்ந்தகலா(து) ஈர்க்கும் திறத்தினால் - போந்த
உவருக்(கு) உவமை உறுமுயிரை ஒன்றாய்க்
கவரப் படுமதனால் காண்க - தவிராக்
கடலுக்(கு) உவமை கருதுமவைக் கெல்லாம்
இடமாய் இருக்கையினால் என்கை - உடனாம்
அலகைக்(கு) உவமை அடைந்தார் தனுவின்
நிலவி வினைதனதாய் நிற்கை - நலமாகும் (535)
தோற்றுக்(கு) உவமை திரிமலத்தை நீக்கிநெஞ்சில்
தோற்றிநிற்கும் இன்பச் சுவையாமால் - சாற்றுகின்ற
கண்டுதேன் பால்நெய் கரும்பு கனிஉவமை
விண்டகலா அன்பை விளக்குகையால்
- கண்டபொருள்
ஒப்பைப் பலவாய் உரைத்தல் ஒருவகைக்குச்
செப்பியது மற்றொன்றைச் சேராமல் - முப்பொருட்கும்
ஏற்ற இடத்தில் இசைப்பதற்காய் வெவ்வேறாய்த்
தோற்றுதலை எல்லாம் தொகுத்துவகை - கூற்றை
எளிதாய்ப் பிறித்தறிந்தங்(கு) எண்ணிப் பொருளைத்
தெளிய விளக்குதற்காம்.
தேரின் - விளைவாகும் (540)
கேவலத்தி னோடுங் கிளர்சகலத் துள்ளுமுடன்
காவலாய் நிற்குமலக் கட்டகலத் - தேவன்
சரிதாதி நான்கும் தரும்சுத்தம் மூன்றே
ஒருவாப் பதமுத்தி ஒன்றே - அருளோடு
பத்தவத்தை யாகப் பகருவதாம் நான்கினுக்கும்
முத்தியெனும் பேரே முடிவாகும்
- சத்திநி
பாதம் சதுவிதமாம் பற்றுமல பாகமந்த
வீதமாம் மற்ற வினையுமந்தப் - பேதமதாய்
ஒக்கக் கிரியை உயர் ஞானம் இச்சையுறத்
தக்கதே யாகத் தகுமரன்பால் - தொக்கி (545)
எழுந்து மலமனைத்தும் இல்லாமை நோக்கி
அழுந்துவதைச் செய்யும் அரனாம் - மொழிந்த
மலமொன்(று) உளதாக மாயைமுதல் நான்கும்
நலமொன் றிலதாக நண்ணிப் - பலமொன்றும்
காட்டாத காலத்துக் கண்ணாடி மாசதறத்
தீட்டாப் பொடியிலொளி சேர்ந்ததென - வீட்டா
இருஞ்செல்வம் வேண்டி இருப்பாரும் ஈசன்
தருஞ்செல்வம் என்னத் தழுவப் - பெருஞ்செல்வம்
மோகத்தால் ஊட்ட முனியின்மலச் சத்தியற்றுப்
போகத்தால் ஊட்ட முனியின்மலச் சத்தியற்றுப்
போகத்தால் மெல்ல அன்பு பூண்பதனால் - தாகத்தால் (550)
சாலோகத்(து) இச்சை தருமால்
சரிதைபற்றிப்
பூலோகத்து இச்சை புறம்பாக்கி - மேலோகச்
சாமீபத்(து) இச்சை தருமால் தகும்பூசை
பூமேல் பொருத்திப் பொருளனைத்தும் - தேமீதில்
ஏற்றச் செயுமால் இசைந்தரன் சாரூபம்
தோற்ற அதன் மேலன்பு தோன்றுவதால் - அற்றுகின்ற
நெஞ்சில் அரனை நிறுத்திமலச் சத்தியெல்லாம்
அஞ்சிஅதன் பாலில் அடங்கமுன்னாள் - வஞ்சமெனும்
அன்னியத்தில் இச்சை அடைந்த அறியாமையறத்
துன்னியதும் ஆங்கே துடர்ந்துடனாம் - தன்னியல்பாம் (555)
சன்மார்க்கத்(து) இச்சை தருமால் தகுமுடலின்
முன்மார்க்கத்(து) இச்சை முறையகலத் - துன்மார்க்கத்(து)
உற்ற பகலில் உறும்படலம் நீங்கத்தான்
நற்றும் பொருள்காண நண்ணரிதால் - மற்றவரால்
செப்பி யிடத்தெளித்த சீரென்னத் தேசிகரால்
முப்பொருளை நோக்கும் முறைமையதாய்
- எப்பொழுதும்
தொந்தித்த காயம் தொகும்தான் எனத்திரிவாய்ப்
பெந்தித்த தாகுமெனப் பேசியிடச் - சிந்தித்துக்
காயம் இரட்டுறவே கண்டவையில் ஐயமுற்றங்(கு)
ஆய குணமென்னும் ஐந்தோடும் - போயகத் (560)
தக்கதே என்னத் தகும்விகற்பக் காட்சியறத்
தொக்கதனை மாயத் துடைத்தங்ஙன் - நிற்குமது
காயசித்தி யாகும்வன்னம் கான்ற பளிங்கொளியைத்
தோயுங் கதிரொளித்த தோற்றம்போல் - ஏயுநெறி
ஆவி அகத்துணையை ஆதரிப்ப தாகமறை
கூவும் அறிவின் குறியன்ன - மேவியதோர்
அங்கத் துயிர்பிரம மாகும் எனத்திரிவாய்ச்
சங்கமுறும் ஐயம் எனத்தரித்துப் - பொங்குமருள்
ஆசற்ற காட்சி அதனாலவ் வாறடங்கத்
தேசுற்ற ஆவித் திகழுருவாம் - மாசற்ற (565)
ஆவிதனக் கின்பம் அரனல்லால் அங்கமறின்
மேவும்வினை உண்டோ விளம்பென்னக் - கூவும்
திரிவோ டுறு(ம்)ஐயம் சேராமல் ஆவி
வருமேல்தன் இன்பம் மருவி - ஒருவா
அருளானார்க் கின்பம் அல்லாதார் சேரின்
இருள்சேர் நரகத்(து) இசைவர்
- தெருள்சேர்ந்த
சித்தத்தார் பேதமெனச் செப்புவார் ஒன்றென்னப்
பித்தத்தார் சொல்லும் பிழைஎன்னில் - ஒத்தந்த
காரம் உறம்கண் கதிரொளி உற்றல்லால்
சேருமொளி இல்லாத செய்கையும்போல் - சாரும் (570)
உவலம் உறுங்கதிரை ஒன்றினல்லால் வன்னம்
தவிர்தலிலாத் தன்மையும்போல் தங்கும் - அவலத்
தடைஅகலும் மெய்ஞ்ஞானச் சம்புவுறின் காயத்
தொடையகலும் ஆவியதைத் தோய்ந்து - புடையகல
நின்றாற் கடிமையென நிற்பதுவே நீர்மையெனக்
குன்றா அருணூலுங் கூறியது - பொன்றாத
பன்னிறங் காட்டும் படிகம்போல் இந்திரியம்
தன்னிறமே காட்டும் தகைநினைந்து - பன்னிறத்துப்
பொய்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான்
மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறென்றும்
- வைப்பாம் (575)
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து - சிறைவிட்(டு)
அலைகடலில் சென்றடங்கும் ஆறுபோல் மீளா(து)
உலைவிலரன் பாதமுறின் என்றும் - நிலையாம்
தெரிசனமாம் ஈதுயிர்க்குச் சேட்டை இலதேல்
பரிசனத்தால் ஈசன் பகுதி - வருமதனால்
எல்லாத் தொழிலும் இரும்பே ரறிவுமுறச்
செல்லா உயிர்செலவே சேருவதால் - இல்லா
ஒருவர்க்கே ஈயும் உறுவார்கட் கெல்லாம் (580)
தருமத்தை ஈசர் தரத்தாம் - உரமற்றார்
தீயில் உறுமிரும்பும் தீயலால் மற்றொன்றை
ஐயமறத் தீயாக்க லாகுமோ - பைய
அலகைகொண் டாரந்த அலகையலால் மற்றோர்
உலகிற் புதுமை உறுமோ - நலமாம்
அறிவருளிற் சேர்ந்தங்(கு) அடங்குவதே சுத்தி
செறியுமுயிர் நயத்திற் சேர்ந்து - பிறவின்றி
நிற்பதுவே முத்தி நெறியென்ன நீள்சிவமாந்
தற்பரையிற் கேடே தகுமுத்தி
- அற்புதனை
ஒட்டுதற்கொன்(று) இன்றென்னில் உற்றசிவ முத்தியினைத்
தொட்டவரும் இன்றாய்ச் சொலவேண்டும் - நட்டமற (585)
நித்தியமே என்ன நிகழ்த்தியதும் பொய்யாகும்
சத்தியான் அற்றும் தகுஞ்செய்ல்கள் - இத்தனையும்
மாய அறிவளித்து மன்னியது நாமாகும்
நேயமே அல்லால் நினைவுண்டோ - ஏயுநெறி
ஒன்றும் இரன்டும் இலதாய் ஒருங்கொத்துத்
துன்றி அனன்னியமாய்த் தோன்றியே - நின்றிடுதல்
அவிக்கி லாபம் அதுவன்றி ஒன்றதனைப்
பாவிப்ப தெல்லாம் பழுதென்ன - ஒவியம்போல்
காயம் ஒருபொருளுங் காணாமால் கண்ணடைக்க
நேயம் அமுதா நிறையுமெனில் - ஆயக் (590)
கருவித்[து] உயர்மரங்கள் கண்ணிலார் எல்லாம்
விரவிக் சிவமாக வேண்டும் - மருவி
ஒடுக்கில் இவனாம் உயர்சிவமே வந்தங்(கு)
அடக்கி(ல்) ஒரு சற்றும் அகலா- முடக்குடலின்
வந்துபோ மாகில் வருமரற்கோர் மேனியொன்று
சிந்தையுறக் கண்டு தெளிவாகும்
- பந்தமறச்
சேதித்துத் தம்பாலில் சேர்ந்த அடி நம்மைவிட்டுப்
பேதித்த(து) எவ்வாறு பேசுங்கால் - வாதித்த
ஆகத்(து) அயலா அறிவுவெளி பட்டருளோ(டு)
ஏகத் துவமாய் இசையினல்லால் - மாகத்தாப் (595)
பாதத்(து) அடையு(ம்)அருட் பண்புண்டோ பல்லுயிர்கள்
ஏதத் துறின்மாயை எவ்வினையும் - போதத்(து)
அடங்குவது போல அரன்பாலில் ஆவி
ஒடுங்கத் தனுவினையும் ஒன்றாய்த் - தொடங்கிப்
பெறுவதெல்லாம் அப்பொருளின் பேறேமற் றொன்றை
உறுவதுவும் உண்டோ உரைக்கின் - தறுகுமலம்
தோயும் உயிர்க்கதிர்முன் தோற்றும் விளக்கென்ன
மாயவரின் அருளை மன்னுவதாம் - ஏயுநெறி
கேட்டலுடன் சிந்தித்தல் கேள்வி அதைத்தெளிந்து
வாட்டமற நிட்டையென மன்னுவதாம் - நாட்டுகின்ற (600)
பாச அறிவாலும் பசுஅறிவு தன்னாலும்
ஈசன் அடியை இயைவுறாத் - தேசுற்ற
பேரறிவைச் சிற்றறிவு பெற்றதனால் அச்சிவத்தோ(டு)
ஓரறிவே நிட்டை ஒழுங்காகும் - சேரினிட்டை
தோற்றித் திலையேல் சொலுமரபை மற்றொருகால்
ஏற்றி யிட அதனை எய்துவதாம்
- போற்றுமிதைப்
பாவகமேல் தானசத்தாம் பாவனா தீதமெனின்
பாவகமாம் அன்றென்னில் பாழதுவாம் -பாவகத்தைப்
பாவித்தல் தானென்னில் பாவகமாம் தன்னருளால்
பாவிப் பதுபரமில் பாழென்னத் -தேவகத்தாய்ச் (605)
சித்தந் தெளியச் சிவஞான போதத்தின்
முத்தி அளிக்கும் முறையறியத் -தொத்துமல
நட்டமெனின் நித்தியமோ நண்ணாது நட்டமற
ஒட்டுமெனின் மெய்ஞ்ஞானத்(து) ஒன்றாவாம் -கெட்டதுகேள்
ஞானமலம் நித்தியமே நள்ளிருள்தான் ஆதவன்முன்
ஊனமற நின்றாங்(கு) ஒளித்தென்ன -ஈனமுறச்
செய்யா திருக்குமதன் செய்கையதாம் தீவினைவந்(து)
எய்தா திருக்கை இயம்பென்ன்னின் -மெய்யனைத்தும்
தொந்தித்த சஞ்சிதமே தொக்குமருள் நோக்கால்தீச்
சந்தித்த வித்துத் தகைமையென - அந்தமுற (610)
அத்துவா ஆறும் அகல அக அறிவாய்
நித்தன்பால் ஒன்றாகி நிற்குமால் - தத்துவங்கள்
ஈசன்பா லாக இசையும் இருவினையும்
மாசற் றருள்வினையாய் மன்னுவதாம் - தேசுற்ற
ஆகா மியமே அடையு(ம்) அறி யாமையுற்ற
தேகா மியத்தில் இசையாவாம்
- மோகாந்த
காரமே இல்லைக் கதிர்முனிருள் போல்மலத்தின்
பாரமே தீர்க்குமருட் பண்பாகும் - பேராக்
கருணையிடம் கொண்ட கருணை கருவாம்
மரணம் அறுக்கும் மருந்தங்(கு) - அரணாகும் (615)
தன்னையே நோக்குவிக்கும் சம்பு தனிமலத்தை
அன்னியமே ஆக்கும் அரமாகும் - துன்னுகின்ற
ஆணவத்தோ(டு) உற்றநெஞ்சம் ஆணவமாய்த் தீவினையைப்
பூணுதற்கே இச்சை புகுமென்னத் - தாணுவினைத்
தொந்தித்த ஆவி தொகுமதுவாய் - லிங்கத்தை
வந்திக்கும் ஞான வரனேயாம்
- நந்துமுடல்
நின்றா ருயிரை நிறுத்திப் பிறித்தறியக்
குன்றாப் பருதிக் குலவிளக்காம் - பொன்றாத
செம்பிற் களிம்பென்னச் சேர்ந்தமலம் மாற்றுமருள்
நம்புங் குளிகையென நண்ணுவதாம் - சம்புவெனத் (620)
தோன்றும் உயிரருளாய்த் தோயும் உடல்வினையும்
ஏன்றசிவ போகமென எண்ணுவதாம் - ஆன்ற அருள்
சீவன்முத்தி ஈதிந்தத் தேகமறும் போதுற்ற
ஆவிபர முத்தி அடையுமெனின் - தேவன்
சரிதாதி மூன்றினுக்குந் தக்கபதம் இங்கே
மருவாதே மேலுலகம் மன்னில் - ஒருவா
மறுமையவைக் குண்டாம் வருஞான பாதத்(து)
உறுமறிவும் இங்கே உறலால் - பெறுமுத்தி
ஈசனே யாகும் இவனையல்லா(து) இல்லை அருள்
தேசனே எங்கும் செறிவாகும்
- மாசிலா (625)
அங்கம் அறும்போ(து) அடையும் மறுமைஎன்கை
பங்கமென மெய்ந்நூல் பகருவதாம் -சங்கரன்பால்
தோற்றுதற்கீ ரைந்தவத்தைச் சொல்லி உளமதனை
மாற்றிச் சிவமாக மன்னியிடச் - சாற்றியநூல்
வந்தித் தறியாத மக்கட்(கு) உபதேசம்
சந்தித் திடுவதில்லைச் சாற்றுங்கால் - பெந்திக்கப்
பட்டமல மாயை பகருமிருங் கன்மமென்றாய்த்
தொட்ட இடம்பொதுவாய்ச் சொல்லுவதாம் - விட்டிவையை
அன்னியமே ஆக அகன்ற நெறியதனைத்
தன்னியல்பே ஆகத் தகுமன்றோ - துன்னுமருள் (630)
சீவிக்குங் காயம் சிவனலவே லிங்கத்தைப்
பாவிப்ப தேதாம் பரனென்னத் - தாவிப்பின்
ஈசனே என்ன இயம்புவார் முன்போலப்
பேசுமுறை இல்லாத பெற்றிஎன்னோ - ஆசற்ற
உள்ளமோ டங்கம் உறும்பொருளும் ஈசன்பால்
தள்ளிச் சிவமாக்குந் தன்மையன்றோ
- எள்ளுமலம்
விண்டகலா தார்க்கே விளங்கும் உரு அருளைக்
கண்டகலா தார்க்கரனே காண்பதுவாம் - பண்டே
இருகண் குருடர் இசைந்த பொருளை
மருவி அறிய வசமோ - உருவில் (635)
சிறியார்க்குக் காமச் சிறப்புரைத்தால் அந்த
நெறியாகு வாரோ நினைந்து - பொறியார்ந்(து)
ஒளியிருளாய் நிற்கும் உறுமூமன் கட்கே
தெளிய மருந்திடினுந் தீரா - எளியமலம்
பாகப்பட் டாற்குண்மை பன்னில் விபரீத
மாகப் படுவதலால் ஆவதுண்டோ - போகப்
படுமலமொன்(று) எகப் பகருயிரோ டெல்லாம்
தொடுமமலன் தாளைத் தொடுமால் - விடுமமல
ஆவிக்குக் காயம் இலைஇங்ஙன் ஆவியுற்று
மேவிய காயம் விடுமென்னக் - கூவியதும் (640)
பொய்யாகுஞ் சித்தாந்தம் பூண்ட தவருரைக்கச்
செய்யார் அறிவிலார் செப்பியதாம்
- மையார்
அவஞானம் நெஞ்சத் தகற்றிப்பொய் அங்கப்
பவஞானம் எல்லாம் பறித்துத் - தவஞான
நந்தி சிவஞான போதத்தின் நல்வழியே
எந்தை மரபில் எழுந்தருளி - வந்தெனக்குச்
சித்தாந்தம் நெஞ்சில் தெளிவித்த தேசிகன்தாள்
முத்தாந்தம் என்ன மொழிந்துடனாம் - கத்தா
உளக்கணிறைந்(து) எற்காய் உறுபொறியும் தற்கே
விளக்கும் பொருளினையும் வேண்டி -அளக்கும் (645)
தனையான் உறுவதற்குத் தந்தென்னை யானே
நினையாத வாறு நிறுத்தித் -தினையளவும்
நீங்காத காதல் நிரப்பி மறந்தொருகால்
வாங்கா அறிவினையும் வைத்துண்மை -பாங்காகும்
ஆவிக்(கு) அமுதாய் அருங்கருணைத் தேனாகித்
தாவிக்குஞ் சர்க்கரையாய்த் தண்டயிராய்ப் -பூவிற்(கு)
உயர்ந்த மணம்போல ஒழியாமல் நின்ற
நயந்த கருணை நலம்போற்றி -இயைந்த
குருவடிவைப் போற்றிக் குலாவியமற் றொன்று
மருவறியே(ன்) என்னமதித் தாள் (650)
அருள்திரு அம்பலவாணதேசிகர் அருளிச் செய்த
- சித்தாந்தப் பஃறொடை முற்றியது
This file was last updated on 23 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.