வீரராகவதாஸரவர்களால் இயற்றிய
நளச்சக்கரவர்த்தி கும்மி
naLAcakravarti kummi
by vIrarAkava tAcar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library, Chennai for
providing a scanned PDF of this work.
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance
in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வீரராகவதாஸரவர்களால் இயற்றிய
நளச்சக்கரவர்த்தி கும்மி
Source:
ஸ்ரீராமஜெயம்,
நளச்சக்கரவர்த்தி கும்மி.
இஃது திரிசிரபுரம், அருட்கவி நா. வீரராகவதாஸரவர்களால் இயற்றியதை,
இவை: திரிசிரபுரம் - புக் ஷாப் அ. மாமுண்டி பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது
Sanganichi Vilakkem Press
MADRAS.
ரிஜிஸ்டர் காப்பிரைட், 1911
விலை அணா- 2
----------------
ஸ்ரீ
ஸ்ரீராமஜெயம்,
இதை வாசிப்போர்களடையும் பயன்
நேரிசை வெண்பா.
திட்டமுடன் பூவிலுள்ளோர் செம்மல் நளன்கும்மிதனை
இட்டமுடன் வாசிக்க யாவர்களுஞ் - சட்டமாய்
வைகுண்டமும் பெருவர் வருஞ்சனியனிடர் தவிர்க்கக்
கைகண்ட வவிழ்த மிது காண்.
ரிஜிஸ்தர் அறிவிப்பு.
இதனால் சகலமான அச்சுக்கூடத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனில்:- திரிசிரபுரம் அருட்சவி) நா.வீரராகவ தாஸரவர்களாலியற்றிய நளச்சக்கிரவர்த்தி கும்மியை திருச்சினாப்பள்ளி புக் ஷாப் அ. மாமுண்டியாபிள்ளையாகிய நான் மேற்படியாரிடம், யெடிட்டர் பாத்தியதை சகல சுதந்திரமும் கிரயம் பெற்று அச்சிட்டு, கவர்ன்மெண்ட்டில் ரிஜிஸ்தர் செய்திருப்பதால் இப்புத்தகத்தையாவது, இப்புத்தகத்துள்ள பாகங்களில் எதையாவது, பெயரை மாத்தியாவது, அச்சிட துணிவீர்களாகில் 1887
u 2 -வது ஆக்ட்டு 20-வது பிரிவில்-6--வது விதியின் படி நஷ்ட பாத்தியதைக்கும் கவர்ன்மெண்டாறால் விதிக்கும் கிரிமினல் தண்டனைக்கும் பாத்திரர்களாவீர்களெனத் தெரிவிக்கின்றனன்.
இப்படிக்கு,
அ. மாமுண்டியாபிள்ளை
புக் ஷாப் -திருச்சினாப்பள்ளி.
-------------------
ஸ்ரீ
ஸ்ரீராமஜெயம்
நளச்சக்கரவர்த்திக்கும்மி.
நேரிசை வெண்பா.
சீர்புகழும் நிடததகர் செம்மல் நளன் கும்மிதனைப்
பார்மகிழப் பாடுதற்குப் பண்படனே - கோதிகழும்
அந்திவண்ண னம்பிகையி னன்னைவயற்றிற் பிறந்த
கந்தனுக்கு முன் வந்தோன் காப்பு.
கும்மி.
தெண்டிரைசூழுல கெங்கனுந்தன்கீர்த்தி செல்லும்படிக்கவ னோர்குடையாய்க்
கண்டிப்பாப்பதியாளு மன்னவன்றன் கதையைச்சொல்கிறேன் கேளுங்களே. (1)
முப்போகம்விளையு மந்தாடாம்நெற்கள் முத்தைப்பழித்திடும் நந்நாடாம்,
செப்பமாய்ஆறுகள் வோடைகள்சூழ்ந்த சீமையதுவாகும் பாருங்களே. (2)
புன்னைவிருட்சை பலாவேம்புநாவல் புளியன்பூவரசு நெல்லிவாழை,
கொன்னைவன்னியாத்தி மாவுங்கொய்யாவொடு கும்பல்நிறைந்தவூர் பாருங்களே. (3)
மல்லிகைமுல்லை யிருவாட்சி மயிர்மாணிக்கம் வெட்டிவேர்கதிர்பச்சை,
வில்வமரளி செவந்திரோஜாமனோ ரஞ்சிதம்பூத்தவூர் கேளுங்களே. (4)
இவ்வகைபூத் தங்கிருக்கும்வனத்திலே யெந்நேரமும் வண்டுசங்கீதம்,
செவ்வையாய்ப்பாடிடும் அன்னமயில்குயில் சிறந்தாடுமெ ன்றறியுங்களே. (5)
சுந்தரமாயக்கி ராரத்திலந்தணர் சூட்டிநான்காஞ் சாமத்திலெழுந்து,
விந்தையதாஸ்தான கன்மங்களைச்செய்து வேதங்களோதுறார் பாருங்களே. (6)
நாலுவீதிதெருவழகும் நட்ட நடுவேகடைகள் சூழ்ந்திலங்கும்,
கோலக்கோபுர மதில்கள்வாய்ந்த கோவிலெங்குமுண்டு சாருங்களே. (7)
தானதருமங்கள் மென்மேலும்அவர் தான்செய்யச்சத்திரம் யெங்குமுண்டு,
ஆனபடிமுப்பத் திரண்டறங்களு மப்பதிசெய்கிறார் கேளுங்களே. (8)
பொய்ச்சூதுகளவு மோசம்பறநிந்தைப் போக்கிரித்தனமுங் கிடையாது,
மெய்யைப்பேசிதேவ பக்தியோடவ்வூரில் விரும்பிவாழ்கிறார் பாருங்களே. (9)
கோவும்புலியும் வொருதுரையிற்றண்ணீர்க் குடிக்கும்சர்ப்ப மும்கீரிவொன்றாய்,
மேவியிருக்க அவ்வரசன்சத்திய மேன்மையைச்சொல்கிறேன் கேளுங்களே. (10)
மாதமதில்மூன்று மாரிபெய்யஅங்கு மறையோர்வேதமும் தான்படிக்கத்,
தீ திலையப்பதிநால் வர்ணமோங்கிச் செழித்துவாழ்கி றார்பாருங்களே. (11)
இவ்விதமுடைய நகருக்கரசன் யேற்றநளச்சக்கர வர்த்திஅவன்
செவ்வையாய்நிடத நாட்டுடைவள்ளலச் சீமைபோலெங்குங் கிடையாதாம். (12)
நவகண்டமதை யோர்குடையாயாளும் நளச்சக்கரவர்த்தி மஹராஜன்,
அவனியிலவனைப் போல்சத்யசந்தன் யாருமிலையென் றோதுங்களே. (13)
தேசமதில்வெகு கீர்த்திபெற்றதிவ்ய தேசம்நிடத மெனும்பதியை,
நேசமுடன்நளச் சக்கரவர்த்தியவர் நீதியாய்ஆண்டு வரும்நாளில், (14)
புலியும்பசுவுமோர் துறையிற்றண்ணீர்ப் பொருந்திக்குடிக்கப்
பசுவானை,நடையோட்டப் புலியுளம்கர்விக்க நாடிச்சக்கரம் வந்தேயறுக்க, (15)
இப்படிமன்னரசாள வோர்தினம் யேற்றநிலவில் மலர்ச்சோலையில்,
செப்பமுடன்பலர் சொல்லத்தமயந்தி செந்தேனைநினைந் துருகியவன். (16)
பஞ்சனைமெத்தையிற் றான்படுத்துஅவன் பரித்துகாமத்தினால் சோர்ந்து,
சஞ்சலமுற்றவன் மாயனைநினைந்து தமயந்தியைப்பெண் ணாக்குமென்று. (17)
இவ்விதந்தன்னுள மெண்ணியிருக்கவும் இன்பமுற்றன்னங்கள் தானும்வர,
செவ்வையாய்ப்பார்த்ததில் வொன்றைப்பிடித்திடத் தெற்றெனவன்ன
முரைத்ததுபார். (18)
பூதலத்தையாளு மன்னவரேநீரும் புரிந்துநியாய மறிந்திருப்பீர்,
ஆதலால்யென்னைப் பிடித்ததுநீதியோ அய்யனேநான்செல்ல வேண்டுமென்ன. (19)
இப்படியுரைக்க வேந்தனுங்கேட்டு நான்யிச்சைகொண்டுன்னைப் பிடித்தேனென்ன,
அப்பொழுதன்னமும் யேற்றுசில சேதியவ்வரசனிடஞ் சொன்னதுபார். (20)
பூமிதனையோர் குடையாகவேயாளும் புண்ணியரே நீர்தினமுருகிக்,
காமத்தினால்மெலிந்தைய முறுகிறீர்காணுந் தமயந்திப்பெண் மீதென்ன. (21)
இவ்விதம்நான் சொன்ன பெண்ணையானுமுமக் கெப்படியாக லுங்கல்யாணம்,
செவ்வையாய்ச்செய்யும் படிமுடிப்பேன்யென்னைச் சீக்கிரம்நீர் விடுமென்றுசொல்ல, (22)
சொல்லுரைகேட்டதிபன் மகிழ்ந்துநீயுஞ் சொன்னதெல்லாஞ் சரிஅம்மயிலை,
நல்லதோரன்னமே யென்னைமணஞ்செய்ய நாட்டுதல் நின்பாரமென்றுரைத்து, (23)
ஆதலால்நின்னையான் விட்டுவிட்டேனிதோ வானகாரியமுடிக் கவேணும்,
சாதகமாய்ச்சொல்லிவிடுக்கப் பின்யொன்றைத்தான் நினைந்தேன் சாற்றிப்போவீரென.
(24)
இங்ஙனம்புகலப் பட்சியதுவென்ன வேந்தலேநீ ருரைப்பீரெனவும்,
அங்ஙனந் தமயந்தி யழகுந்தந்தையத்தை விளம்புமெனக் கேட்க, (25)
கேட்டவுடன்பட்சி யரசனேகேளும் கிளருந்தமயந் தியழகை
வாட்டமுடன்சொல்ல சேடனாலாகாதோர் வாயுள்ளவனெப்படி யுரைப்பேன், (26)
ஆனதாலிப்படியு மிருக்கயென் னாலறிந்தவரையிற் சொல்கிறேன்கேள்,
நானிலந்தன்னில் விதர்ப்பமதையாளும் நல்லரசன்வீமன் யென்றுரைப்பார். (27)
அன்னவனுமவன் பத்தினிதனக்கும் அருமைமகவொன் றில்லாமல்,
தன்னந்தனியேகான் சென்றுதவஞ் செய்யத்தமயந்தி பிறந்தாள்பாரும். (28)
அப்படிப்பெற்ற தன்பெண்ணையவர்களும் அன்பாய்வளர்க்க வவள்வதனம்,
செப்பமுடன்மூன்றாம் பிறையைப்போன்றதாம் சீர்பெரும்பற்கள் முத்துடையதாம், (29)
வில்லைப்போன்ற யிருபுருவமாகுமாம் விளங்கும்நாசிக்கு மிழம்பூவாம்,
சொல்லுமொழிகுயி லிசையுமாகுமாம் சூட்டுமிதழ்பவளம் போன்றதாம். (30)
வரையைப்போன்ற யிருதனமாம்வயர் வண்ணமோடாலிலை போன்றதுவாம்,
நிரைகொளும்வார்த்தை மதுரக்கற்கண்டாம் நேர்துடைகள்ரண்டும் வாழைத்தண்டாம்.
(31)
பட்டையுடுத்தியவ்வன்ன நடையொத்தப் பாவையினழகைக் கையால்தொட்டு,
பொட்டிட்டுநாம்வைத்துக் கொள்ளலாமப்பெண்ணின் பூஷணசிறப்பை
யென்ன சொல்வேன், (32)
இப்படியழகு வாய்ந்திடுங்கன்னியை யெப்படியுஞ்சென்று நான்வுமக்குத்,
தப்பிதமன்றி மணமுஞ்செய்துவைப்பேன் சத்தியமாய் நம்பும்யென்வார்த்தை, (33)
என்றுசொல்லக்கேட்டு மன்னன்விடவங்கு யேகிவிதர்ப்ப நகரதனில்,
நன்றுடன்முன்னம் பலருரைக்கக்கேட்டு நளனைநினைந்து நங்கைதானும், (34)
பஞ்சனைமெத்தையில் காமத்தினால்சோர்ந்து படுத்திருக்குந் தமயந்திமுன்,
அஞ்சாதன்னமவளிடம் நடைகற்க வனுகல்போலம்ஷம ங்குவர. (35)
வந்ததைப்பார்த்துத் தமயந்திமாரனும் வாடிவயர நமதுமுனம்,
சந்தோஷமாக வனுப்பினான்பாரென்று தையல்மனம்நொந்து சாற்றுகிறாள், (36)
தாதியரேரும் நானுமிவ்வன்னத்தைத் தப்பாமல்பிடிக்க வேனுமென்று,
ஓடிச்சென்றுபிடித்திட அன்னமொன்று வுத்தமிகை யகப்பட்டதுவே (37)
இப்படிக்கொண்ட தோரன்னத்தைத்தன்கரம் யேற்றுத்தடவவும் வேர்த்திருக்க,
அப்போதமயந்தி யிவ்விதகாரிய மானதையுரையு மென்றுகேட்க, (38)
கேட்டவுடன் அன்னம்நளச்சக்கரவர்த்திக்கி ளரும்நாயக னாவாரென்று,
வாட்டமன்றியவ ரழகைவர்ணித்து வஞ்சிமுன்னுரைக்க வாசைகொண்டாள் (39)
கொண்டவள்நீயுரை சொன்னதுமெய்யாகும் கோரிநானவ ரைநாயகனாய்,
அண்டிடசெய்யுபகாரத் திற்குநான்யாது செய்யப்போரேன் யென்றுரைக்க (40)
ஈதியம்பத்தமயந்தியின் முன்விடை யேற்றன்னமுற்று நளனிட மாய்ப்,
போதுவந்தவளழகைச் சொல்லிமணம் புதுக்கப்போமென் றுரைத்ததுவே, (41)
இப்படிப்புகன்றங் கன்னங்கள்தான்செல்ல யேற்றரசன்வேளின் வாதையினால்,
அப்போதுகாமமதிகரிக்க அவன்ஹரியைத் தோத்திரஞ் செய்திருக்க. (42)
அங்குதமயந்தி காமத்தினால்சோர்ந்து அன்னமுண்ணாமல் நளனையெண்ணி,
மங்கிக்கிடந்தெவரிடமும் பேசாமல் மௌனமுறத்தா தியர்கள் கண்டு (43)
தாதிகள்பார்த்துத் தமயந்தியின்றந்தை சாரும்வீ மனெதிர் தாங்கள்வந்து,
மாதவள்நளன் மேற்கொண்ட மயக்கத்தை மர்மமன்றி சொலத்தானறிந்து, (44)
அப்போதைம்பத்தாறு தேயருக்கும்பிற கான தமயந்தியானவட்கு,
செப்பமுடன்சுயவர மெனச்சொல்லி சீக்கிரம் வோலையைத் தானெழுதி, (45)
தூதுவர்கையீந்து யீயவிடுத்தபின் தொல்லுலகையலங்காரஞ் செய்து,
ஓதும்பேரிகையடிக்கச்செய்துபல ருகந் தவ்விடமிருக்கையிலே, (46)
மன்னவர்கூட்டங்கள் தானும்வரநள மஹராஜனவன் மாதவனை,
தன்னுளமிருத்தி மேளதாளத்துடன் றானும்ரதமேறித்தானும்வர. (47)
ஈங்கிந்தக்காரியந்தான் நடக்கஅதை யேற்றுநாரதனவன் பார்த்து,
ஆங்குவிண்ணவர்கோனிடஞ்சென்றுதம யந்தியழகைவர்ணித் துச்சொல்ல, (48)
சொன்னவுடன் காமந்தலைக்கேறி அவன்றோணித்திக்குப்பாலர் மூவருடன்,
நன்னயமாய்ர தமேறிக்கனத்தில் நாடிவந்துநளன்றன் னைக்காண, (49)
கண்டுநான்குபேரும் நீரோருபகாரங் கருதிச்செய்வீரதென்ன வெனில்,
வண்டுமொய்க்குங்கூந்தல் தமயந்திதன்னால் வாடுறோம் தூதாகச்செல்லுமென்ன, (50)
என்றுசொல்லக்கேட்டுத் தாங்களோதேவர்கள் யின்பதுன்பம் பிணிக்குள்ளநரன்,
கன்றைத்தேடும்பசுப் போலநானுமிந் தக்கன்னியால் வாடியேவந்தேனென்ன, (51)
அவ்வுரையைக் கேட்டு தேவர்களானவ ரானதப்படியிங் கானாலும்,
ஒவ்வியேயெங்களால் பெண்ணிடம்நீர்செல்ல வுரூபந்தெரியாமல் செய்வோமென்ன,(52)
தமயந்தியெனுங்கன்னி யால்காமத்தில் தடுமாறி யலைந்துருகுகிறோம்,
அமந்துசென்றெங்கள் தூதனென்றுசொல்ல வாகும்புண்யம் விஞ்சயறியென்ன, (53)
இந்தவிதந்தேவர் தொந்தரைசெய்திட யேனிவர்களின் விரோதமென்ன,
பந்தனத்துடன் மனதெண்ணிச்செல்வதாய்ப் பார்த்திபன் நளனுமொப்புக்கொண்டு, (54)
தேவர்களானபெரியோரே யானுஞ்செல்கிறேன் பெண்ணிடந் தூதுவனாய்,
ஆவதழிவதுந்தெய்வச்செயல்பிற கடியன்பேரில்வருத் தம்வேண்டாம், (55)
இப்படியுரைத்துத்தமயந்தியரண் யிசைந்தங்குநளன் சென்றபின்னற்,
கொப்பெனப்பார்த்துத் தமயந்திமூர்ச்சித்துக் கோரியாசனத் தமருமென்ன, (56)
ஆனவரசனழகைக்கண்டுசொக்கி ஐயனேநீரா ரறையுமென்ன,
தானுந்தேவர்தூதன் நானாகும்நிடதந் தன்பதியாள் நளனென்று ரைப்பார், (57)
இந்திரன்குபேரன் வருணன்தருமன் யிவர்களுன்னை மணஞ்செய்திட,
அந்தோயென்னைவிட நான்வரநின்கார்யம் யாதெனக்கேட்க வவள்சிரித்து, (58)
நல்லமொழிதனைச் சொல்லவந்தீர்பட்சி நாட்டியதெல்லா மறந்துவிட்டீர்,
தொல்லைவரும்தேவர் யெனக்குத்தந்தையாம் துரைவிளுரைப்பேன் கேளுமென்ன, (59)
அன்னம்வந்துதம் மழகைச்சொல்லமணம் யான்செய்யவிருக்க யிதுவரை,
கன்னல்வில்மாரனால் கலங்குமெந்தனைக் கல்யாணஞ்செய் யக்கருதுமென்று, (60)
அப்படிநீர்செய்ய மாட்டீரெனில்வேறு யாரையும்நான்மணஞ் செய்யமாட்டேன்,
இப்போதென்னுயிரை விட்டிடுவேன்ஹரியின் பேரில்சாட்சி நீரறியென்ன, (61)
ஈதுநிகழ்த்திடக் கேட்டுநளபதி யிந்திரன்குபேரன் வருணன்யெமன்,
மாதேவரிடம்வந்துரைக்க அன்னவர் மர்மறிந்தோமரசே யென்று, (62)
ஆனதறிந்து தேவர்செல்லநள னோடைம்பத்தாறு தேவர்களும்வரத்,
தானறிந்துவீமன் யிருத்திநாள்பார்த்துத் தாதியுடன்ற மயந்திதன்னை. (63)
மங்களமாகச்சிங் காரித்துக்கல்யாண மண்டபமழைத்து மன்னவர்கள்,
தங்கள்பெயர் தனைத்தாதிசொல்லிவரத் தானறிந்து தமயந்திவர, (64)
அங்கவங்கஞ்சீனம் கலிங்கம்நேபாள மய்யோத்திசிந்து மச்சகூர்ச்சரம்,
தங்குஞ்சேரம்சோழம் பாண்டியும்கேரளம் தாவும்விராடத்த ரசரென்ன. (65)
கோசலம்பாஞ்சால மொட்டியம்டெங்கணங் கொங்குகாஸ் மீரமரசரென,
ஆசையுடன்சொல்லக் கேட்டுத்தமயந்தி அறிந்துநளனை ப்பார்த்துவர, (66)
இந்தப்படிசொல்லித் தாதியும்வந்தங்கு யேற்கும்நிடதம்ந ளனெனவே,
அந்தவிடமுரை செய்யத்தமயந்தி யானவள்பார்த்துற்றுத் தான்நினைத்து, (67)
பூவினில்நளனென்பவ ரொருவரே பொருந்திநால்வராய்த் தாமிருக்க,
தேவர்செய்சூதிதுவென்று தியானிக்க சீக்கிரம்நால் வருங்தேவராகி, (68)
விண்ணிடஞ்செல்பவர் நீயும்நளனும் விரும்பித்திருமணந் தானுஞ்செய்து,
மண்ணில்சுகக்ஷேமமாகவே வாழ்ந்திடவாழ்த்தினோம் நீயறியென்று சொல்லி, (69)
இப்படி தேவர்கள் சென்றபின்ரதியோ யிந்திராணிமேனகை யோரம்பையோ,
கொப்பெனவேந்தர்கள் தமயந்தியின்றன் கோலத்தைக்கண்டங் குரைத்தார்கள், (70)
மஞ்சவழகும்மைப் பொட்டழகும்நல்ல வாயிதழ்தாம்பூலத்த ன்னழகும்,
கொஞ்சும்படிவிற் புருவத்தினழகும் கூந்தலழகும்நாம் யென்னசொல்வோம். (71)
நாசியழகும் நளினக்கண்ணழகும் நாடுங்கரந்தன்னி யத்தழகும்,
வீசியமார்பு வயரழகுந்துடை மேவியகாலழகென்ன சொல்வோம், (72)
பட்டழகும்வாயிற் பல்லழகும்நமைப் பார்க்குங்கடைக்கண் ணின்றானழகும்,
இட்டபூஷணத்தின் றன்னழகுமிந்த மங்கைபோற்காண்கிலோ மென்றிருக்க, (73)
மத்தளம்பீட்டில் தம்பூர்ஜாலர்வீணையும் மல்லரிநாகசுரம்பேரி,
சக்திக்க அண்டம் வெடித்திடநளன்மேற் றமயந்திபுட்பமாலையிட் (74)
தேவர்களானவர் நளனுக்குவரம் சீக்கிரமாக வளித்துவிட்டு,
ஆவலுடன்றிருக் கல்யாணமண்டபம் அமர்ந்திருந்தன ரவ்விடத்தில் (75)
கல்யாணமண்டபஞ் சிங்காரித்தார் வேந்தன் சொல்லியசொற்போல செய்தார்கள்,
எல்லோருமானந்தமாய் வந்துகூடினார் யெங்கெங்கும்நின்று கூத்தாடினார்கள், (76)
வாழைகமுகுகள் நாட்டினார்கள் நெடுவானமட்டும் பந்தல்போட்டார்கள்,
ஆழிபோற்றிரையை யிட்டார்கள்அலங் காரமாகசாலர் கட்டினார்கள். (77)
தங்கத்தினாற்றூணை நட்டார்கள் - மிக - தாவியகண்ணாடி மாட்டினார்கள்,
பொங்கமுடன் பொம்மைப் பட்சிலக்காபுறா பொற்சிட்டுமேற் கட்டிலமைத்தார்கள், (78)
மாணிக்கத்தீபங்கள் யேற்றினார்கள்நல்ல வாடைகஸ்தூரிகள் தீட்டினார்கள்,
ஆணிப்பொன்னாடை கள்சாற்றினார்கள் பன்னீராகத்தெருவெங்கு மூற்றினார்கள்,(79)
சந்தணத்தால் கோலந்தீட்டினார்கள் பஞ்ச தருவைநன்றாக நாட்டினார்கள்,
சுந்தரப்பாலிகை தூற்றினார்கள்நருந் தூபமும்தீபமும் காட்டினார்கள், (80)
மத்தளம்பிட்டீல் தம்பூர்ஜாலர்வீணையும் மல்லரிதித்தி நாகசுரமும்,
சத்திக்கஅண்டம் வெடிக்கநளன்வீமன் றானதைக்கண்டு மகிழ்ந்தார்கள். (81)
சிவனுமைவேதன் வாணியும்சுப்பிர மண்யனும்வள்ளியானைமுகனும்,
அவனில்வல்லபை யிந்திரன்றன்றேவி யமரர்முனிவர் யாவர்களும், (82)
மாதவர்பூசுரர் மாங்கல்யப்பெண்களும் வந்தங்கம்மண்டபஞ் சேர்ந்தார்கள்,
சாதகமாய்நளன் கங்கைதீர்த்தமாடி ஜவ்வாதுசந்தணந் றான்றரித்தான். (83)
மாலைமகுடஞ்சரப் பளிப்பட்டமும் வாகுவளையம் பதக்கம்வளை,
காலணிகைவளை பீதாம்பரம்பட்டுக் கருதியாவுந் தரித்துக்கொண்டான் (84)
தாரணியோர்க்கெலாந்தாய் தமயந்தியைச் சாரநளனரு கில்வைத்தபின்,
சீருடன்வதிட்டர் தர்ப்பைகொள்ளவங்கு சேரத்தண்டுளம் பரப்பினார்கள். (85)
உத்தமமுனிவர் மந்தரஞ்சொல்ல வப்போ-வோமாக்கினிவலம் கொண்டுவர,
நத்தியேதர்மங்கள் தான்செய்யசத்தியம் நாடியுலகில் நிலைத்திருக்க, (86)
சல்லாபமாகவே வீமனுந்தன்பெண்ணைத் தான்பிடித்துநளன் கைதனிலே,
எல்லோருமறியத் தந்தான்றமயந்தி யேற்றகரம்நளன் றான்பிடித்தான். (87)
மங்களகாரியந்தான் முடியவங்கு மாவிஷ்ணுலட்சுமி போலெழுந்தார்,
தங்கிடும்நற்றீயைச் சுற்றிவந்தான்றம யந்திகாற்றூக்கியம் மியில்வைத்தான். (88)
முன்னேயருந்ததி காட்டிவைத்தான் மோன- முனிவர்தாய்தந்தை மார்சரணம்,
அன்புடன்சேவித்துத் தமயந்தியுடன் அணுகியவ்விடம் வீற்றிருந்தான். (89)
வானவர்பூமாரி தூற்றினார்கள்அங்கு- மாமுனிவராசீர் வாதஞ்சொன்னார்,
நானிலமரசர்பொன் மலரிறைத்தார் நாடிப்பெற்றோர்கள் வரிசையீந்தார், (90)
பற்றுள்ளபந்துக்கள் மொய்த்துக்கொண்டாரங்கு பாவைசுமங் கலிகள்கூடி,
அற்றையப்போதினி லானந்தமாகவே யாவருஞ்சோப னங்கொட்டினார்கள், (91)
இந்திரனும்நளனிடஞ் சிலவுபெற்றே கச்சனிய னெதிர்வரவும்,
விந்தையுடன்வெகு சீக்கிரமாக விரும்பிச்செல்லுங்கார்யஞ் சொல்லுமென்ன. (92)
ஆனதோர்காரியஞ் பூதலத்தில்வீமன் அவன்மகள் தமயந்தியின்றன்,
தானழகுக்கெவ ரானவரிலையென்றா ரினிலுள்ளவர்கள் சாற்ற, (93)
அப்படிக்கொற்றப் பெண்ணுக்குக்கல்யாணமா மதைச்சென்று யானுஞ்செய்துவர,
கொப்பெனச்செல்கிறேன் செய்துவரிலிடங்கோ ரிக்கொடுத்திட வேண்டுமென்ன (94)
இம்மொழிகேட்டங்கு தேவர்களும்நகைத் தெம்மாலானதந்தரஞ் செய்துபார்த்தோம்.
அம்மொழிபொய் யாகிநளனைமணமு மங்குதமயந்தி யவள்செய்ய, (95)
ஆதலால்நாங்களும் வந்தனம்நீர்வாரும் அய்யனேயென்றிவர் கள்நிகழ்த்த,
சாதகமாய்க்கேட்டு யீரேழ்வுலகமுந் தான்கலங்கக்கோ பமுண்டாகி, (96)
விண்ணவரேயிது யென்னஅனியாயம் வேண்டித்தேவரான பேர்கள் நீங்கள்,
மண்ணையாளும்நளன் வுங்களையிப்படி மானபங்கப்படுத் தினான்பாரும் (97)
அப்படிச்செய்யவருத்தம் வேண்டாம்யெந்தன் ஆண்மையைச்சொல்கிறேன் சற்றுகேளும்,
இப்பநான்சென்றொரு சிற்றரசனைச் சூதிவனிடமாடச் செய்திடுவேன் (98)
செய்தபின்புநளன் செல்வம்பூமிசீமை செம்பொன்னாபரண மெல்லாந்தோர்த்து,
உய்யமணஞ்செய்த பத்தினியைப்பிரித் தோட்டுறேன் காட்டினில்பாருமென்ன. (99)
மாரனைப்போலொத்த மேனியைக்குலைத்து மாநிலமுள்ளோர் பழிக்கச்செய்து,
சாரமற்றசிற்றரசர்க்குச் சமையல்தானிவன் செய்யநான் வைத்திடுவேன். (100)
வெய்யவன்மதியிவ் வுலகுள்ளவரை விரும்பிச்செய்யும்யென் காரியத்தைப்,
பொய்யாகாமலிதையா வர்களுஞ்சொல்லப் போகிறேன்நான் செய்யப்போங்களென்ன,
(101)
அங்குயிவ்விதஞ்சனியன் சபதஞ்செய் தணுகிவிதர்ப்ப நகர்வந்து
தங்கிமறையவர் வேடமெடுத்திவன்றார் மன்னன்நளனை வந்துகாண. (102)
சத்தியம்பொறுமை சாந்தந்தெய்வபக்தி தர்மதானம்பூண் டிவனிருக்க,
நத்திவந்தகார்ய மாகாதெனச்சொல்லி நாடிப்பார்த்திவனுந் தான்முழிக்க, (103)
ஐயையோவாய்க் கொழுப்புசீலையால்வந்த தக்கதைபோலாச் சேயிச்சேதி,
பையவேசனியன் காலம்வரும்வரைப் பார்த்துக்காத்தி ருந்தான்வேந்தனிடம். (104)
ஈங்கிருக்கமன்னன் தமயந்தியைப்பார்த்தென் நகர்சென்றிட வேணும்பெண்ணே,
பாங்குடன்நின்அன்னை தந்தையிடஞ்சொல்லிப் பரிந்துவாருமென் றேயுரைக்க, (105)
அன்னவள்கேட்டன்னை தந்தையிடஞ்சொல்ல அவர்கள்மூர்ச்சித் துத்தானெழுந்து,
கன்னல்மொழியாளே கோத்திரம்விளங்கக் கணவன்பின்செல்ல வேண்டுமென்று, (106)
ஆனை பரியொட்டைப் பல்லக்குவஸ்திர மாபரணங்காணி சீமையொடு,
தானைமுதல் மருகனுக்குச்சீதனந் தானீந்துவீமனுஞ் சொல்லுகிறான், (107)
அன்புள்ளமாப்பிளை யாங்கள்தவஞ்செய்து அருமைப்பெண்ணைப் பெற்றுவளர்த்தோம்,
இன்பமாய்வைத்திடக் கைபிடித்தீந்தனம் யேகுமென்றவர் விடைகொடுக்க. (108)
அம்மொழிநளனும் தமயந்தியுங்கேட் டவர்கள்திரு வடிவணங்கி,
செம்மையாய்நிடதம் வரச்சேதிகேட்டு சீமையைய லங்கரித்தார்கள். (109)
மேளம்வீணை தம்பூர்முரசுபேரிகை மேண்மையுள்ள தவில்நாகசுரம்,
தாளமடிக்கவுல கெங்குஞ்சத்திக்கத் தமயந்தி நளன்றானும்வந்தார் (110)
வந்தவர்க்காலங்கள் சுற்றுவோரும் யெங்கும் வாகுன்றிட்டிக் கழிப்போரும்,
சந்தோஷமாய்வித்து வான்கள்புகழ்வோரும் தாவிநளன் ஆசனத்தமர (111)
அமர்ந்தபின் சனீஸ்வரன் றேவரிடம் ஐயையோ- நான் சொன்ன காரியத்தை,
சமைந்தநளன் றனக்குச்செய்யயிவன்றன் னாசாரந்தவ றாதிருக்க, (112)
என்ன செய்வோமென்று யேங்கிமனம்நொந் திருக்கையி லோர்தினம்நளபதி,
நன்னயமாய் மலங்கழித்திவநங்கு நாடிக்கைகால்சுத்தி செய்கையிலே (113)
அப்போதுகாலி னிற்றண்ணீருமுள்ளிடை யங்குவொட்டாம லதுவிருக்க,
கொப்பெனச்சனியன் மகிழ்ந்தங்கந்நேரம் கூத்தாடிச் சென்றுகுடியிருக்க, (114)
ஈதுநிகழ்ந்தபின் தமயந்திகெற்ப மீரைந்து திங்களுமானவுடன்,
சாதமாய்ச்சு தன்றான்பிறக்கநளன் தான்களித்து தானம் செய்துவைக்க (115)
வேண்டிய தன்பின்னே பெண்பிறக்கநளன் விரும்பித்தானம் செய்தேமகிழ,
பூண்டிவர்கள் சுகமாகயிருந்திடப் பொல்லாதகாலத் தினால்நளனும், (116)
வேட்டையாடவேணு மென்றுசொல்லிவன வேடர்மந்திரி யொடுதானும்,
காட்டினில்சென்று சிங்கம்புலியானை கரடியைக்கொன்று மடித்திடவே, (117)
இப்படிச்செய்துநள னுந்தன்பதி வந்தேக்கமற்றிவ னிருக்கையிலே,
முப்புரி நூலுடையந் தணனாய்ச்சனி முனைந்துபுஷ் கரனிடஞ்சென்று (118)
சென்றவன் நான்சனி யாவரையடக்கும் தீரன்நளன்ற மயந்திதன்னை,
இன்றுபிரித்தவரைக் காட்டிலோட்டி, யிவ்வுலகெலாமுனையா ளச்செய்ய, (119)
வஞ்சமெனக்கவர் செய்தார்கள்மனம் வாடுறேன் மன்னவனேகேளும்,
அஞ்சிப்பயந் தவனிடம்பகுதிகட் டரசனென்று நீயெண்ணாதே (120)
தைரியமாய்ச்சென்று சூதாடநீயழைத்தா லவனையானு மாடச்செய்து,
வைரம்வைத்தவன் பாச்சிகையைத்தோர்த்து வாழிசூழ்வுல கமதையெல்லாம். (121)
நீயேயாளயேக சக்ராதிபதியாய் நீனிலமதில்நான் வுன்னைச்செய்ய,
வையத்தையாளும் நளனிடஞ்செல்லென்ன வார்த்தையைக்கே ட்டிவன் சம்மதித்தான். (122)
அந்தமொழியைப் போற்றன்னமைச்சர் களையழைத்துப்புஷ்கர னும் நிடதம்,
சந்தோஷமாயுள்ள சிங்காரத்தைப்பார்த்துத் தாவிநளன்கொலு வந்துகாண, (123)
கண்டுநளமஹராஜனை வணங்கிக் கைகட்டி நிற்க வவர்பார்த்து,
கொண்டதோரா சனமளிக்கப்புஷ்கரன் கும்பிட்டுத்தானவன்வுட்கார்ந்து (124)
பாருலகையாளும் பார்த்திபரேசற்று பரிந்துபோதுநாம் போக்குதற்கு,
சிருடன்சூதுக ளாடுவோம்யென்றிங்கு செப்பிப்பயந்த வன்றானிருக்க, (125)
அவ்வுரையைக் கேட்டுசூதுகளாடுத லந்நீதமென்று நளனுரைக்கச்,
செவ்வையாய்ப்புஷ்கர னாய்ந்துபிரமனுஞ் சிட்டிக்கஆடுவோம் வாரு மென்ன. (126)
வெய்யவன் சுதன்சனியன் மகிமையால் வேந்தன்நளன் மனந்தான்கலங்கி,
வையத்துவேந்தரை யனுப்பிப்புஷ்கர வரசனையழைத் துள்ளேசென்று. (127)
காயும்பலகையுங் கொண்டுவரச்சொல்லிக் கைகடையத்தைப் பந்தயமாக,
நேயமாய்வைத்தாடப் புஷ்கரன்தோர்க்கப் பின்நேர்சனி யறிந்திங்கணுகியே. (128)
அனுகிநளன் ரதகஜ துரகம்யானை பதாதியவன் நகரும்,
இணங்கிப்பிடிங்கி யவனைத்தனியாய் யிருத்தவிசன முற்றிருக்க, (129)
அந்தவேளை தனில்குடிகள்வந்து சூதாடலாமோவென்று தாமுரைக்க,
சொந்தநளனறிந் திவர்களைத்தள்ள கொடியிலுத்திரவதுசெய்ய (130)
செய்தபின் குடிகள் தமயந்தியிடஞ் சேதியைச் சொல்லியிவரகல,
அய்யோநொந்தவளும் வேந்தர்க்குயிவ்விதி யாய்வரநாம்யென்ன செய்வோமென்று. (131)
அந்தட்சணமிரு பிள்ளையைத்தேரினி லன்புடனேற்றித் தன்றாயினிடம்,
சந்தோஷமாய்க் கொண்டுவிட்டு வரும்படிதமயந்தி யவளுமனுப்ப, (132)
சகலசிறப்பும் புஷ்கரனுக்கீந்து சந்யாசியைப்போல வேடம் பூண்டு,
அகம்கலங்கித்தன் றேவியிடம்வந்து யாவுஞ்சொல்லி மூன்று நாள்வரையில், (133)
அன்னத்தையுன்னா மலவதிப்படவு மரியநின்றந்தை யென்னைத்தேடி,
கன்னல்வில் மயிலேமாபாவிக்குந்தனைக் கட்டிக்கொடுத்தனர் பாருமென்று. (134)
இப்பெரியபட்ட ணத்தினிலிருவர் யேற்றிருக்கமூன்று நாள்வரையில்,
கொப்பெனவாய்மொழி பேசுவோருமன்னங் கொண்டளிப்போர்க ளிங்கில்லையென்று. (135)
ஆனதால்பூர்வத்தி லாருக்கன்னமது யாமுமளிக்காமல் பட்டினியாய்க்,
கானமயிலேநாம்செய்யயிப்பொழுது கருதிவாய்த்த தைப்பாருமென்ன, (136)
கெட்டவரைப்பூவில் கிட்டவேசேர்க்கார்கள் கிளம்பிநாமாகப் போனாலும்,
சட்டமாய்ப்பிறகே நிந்தித்துப்பேசுவார் தாரணிவழக் கமிதுவென்ன. (137)
மந்திரிமார்களுங் குடிகளும்வந்து மாசூதாடவேண்டாமென் றுசொல்ல,
அந்தோவவரை நானதட்டிவிரட்ட யானும்பொல்லாத வனென்றுரைக்க. (138)
பூவிற்றகடையில் புல்லைவிற்க -புலி - யிருந்தகானில் பூனையிருக்க,
மேவிச்சிங்கமிருந்த குகையில்நரி - வேண்டியிருத்தல் போலாச்சுதென்று. (139)
சல்லாபமாகப் பொன்னூஞ்சலிலேறியே தாதியர்அன்னம்கொ டுத்துவர,
உல்லாசமாயுறக் காட்டிலலையாமல் வுன்றந்தை வீடேகு மென்றுரைக்க, (140)
இச்சேதியைச் சொல்லக் கேட்டுத்தமயந்தி யிடிவிழுந்தா லும்நாயகனே,
அச்சமன்றிமடி யேந்திவாங்கவேணு மதற்குப்பயமே னென்றுரைக்க (141)
அம்மொழிகேட்டு நளபதிகாட்டினி லானமிருகமும் காய்கனியும்,
செம்மையாயிருக்குங் கல்முள்ளின்பேரினில் செந்தேனேபடுக்க வேணுமென்று. (142)
என்ன பயமுறச் சொன்னாலும்அவள் யேற்றதன் நாயகனைப்பிரிய,
அன்னமயிற்றம யந்தியாலாகாம லன்னவளுங்கூடச் செல்லுகையில் (143)
கானிலிருவரும் போகையில்சனியன் கருதியன்னங்களை விடுக்கத்,
தானறிந்துவர நளன்கண்டதனைத் தன்றேவியிடந்தா னுஞ்சொல்வான். (144)
அடிக்கும்பசிக்குச் சுவாமியும்பார்த்திந்த அன்னத்தைநம்மெ திரேயனுப்ப,
பிடித்திதைச்சுட்டுநம் பசியாறுவோம்பெண்ணே பாரென்றவனுஞ் சொல்லி, (145)
தொடர்ந்து பிடிக்கச் செல்லுகையிலன்னந் துள்ளியோடிச்செ டிமறைவிலும்,
அடர்ந்தகாடுக ளெல்லாம்நளன்றனை யலையச்செய்ய வவனலுத்து, (146)
நொந்தவனுருகி யன்னத்தைப்பிடிக்க நொடியில்வஸ்த்திரந் தன்னைப்போட,
அந்தோபறித்துப் புஷ்கரனுமிதுவு மறிசனிமாய்கை யென்றுசெல்ல, (147)
அங்குசனியிட மன்னங்கள் சென் றறைந்தகல யிவ்விடம்நளன் பார்த்து,
மங்கையேநின்னை யான்மணஞ்செய்யச்சனி வஞ்சகமுற்றவ னென்னையிந்த. (148)
வாதனைக்குள்ளாக்கி வைத்திடவும்யிரு வண்ணக்குழந்தைகள் சென்றசேதி,
மாதரசே தூதன் வந்தொன்றுஞ்சொல்லாமல் மயங்கி றேனென்றவனழுக. (149)
அப்போது பத்தினியண்டையிருந் தவளையனே நீர்யாவுமறிந் தவர்,
இப்படிவந்தவிதிக் கழுகலாமோயென்று நளன்கண்ணைத்தான் றுடைத்து. (150)
கட்டினகோமணத் தோடிருக்கஅவடன் கண்டாங்கிப்புடவை யைக்கிழித்துச்,
சட்டமாய்நளன் மேல் போத்தி துக்கந் தீர்க்கத்தானி ருவர்வழிதான் நடக்க, (151)
அங்குவழிநான்கு செல்லப்பார்த்துநளன் ஆய்ந்துரைத்தெங் குநாம்செல்வோமென்ன,
மங்கையுங்கேட்டிந் தக்காட்டைவிட்டுங்கள் மாமிவீடுபோகலாம் வாருமென்ன, (152)
அம்மொழிகேட்டிரு காதினிலீயத்தை யங்குகாய்ச்சி விட்டது போல்நளன்,
செம்மையாய்நான் செல்லக்கெட்டவரினத்தைச் சேரலாமோபெண்ணே யென்றுசொல்லி, (153)
போகிறவழிநின்றந்தை நகர்செல்லும் புத்திரனைப்பார்த் தங்கிருவென்ன,
வாகுடன்வரக்கானில் காய்கனிதனை வருந்தித்தின்று புழுதிதனில், (154)
படுத்துறங்கிடவேணும் பெண்ணேயென்னப் பத்தினிகேட்டுப் பதைபதைத்து,
அடுத்தகட்டமனு பவிப்பேனென்று யவளுஞ்சொல்ல நளன்கேட்டு, (155)
ஆனதுயர்தனைநானும் நினையாமல் அன்னமேயுன்னால் மறந்திருக்க,
தானுன்னைப்பிரியேன் நீயும்மயங்காமல் தானும்வாவென்றிவர் போகையிலே, (156)
கல்லுமுள்ளும்படு குழியும்மேடுகள் கதித்தகாட்டினிலே சனியன்,
தொல்லைகொண்டிவர்கள் நடந்துசெல்வதைத் தோணியறிந்தனன் சூட்சத்தினால், (157)
அவ்விதஞ்சென்று குளத்தைக்கண்டு புனல் அருந்தத்தமயந்திகளைத்து,
செவ்வையற்ற மண்ணில்படுத்து நித்திரை செய்கின்றதன்றேவி தன்னைப்பார்த்து, (158)
பொல்லாதகாலங்க ளிப்படிவரவும் புட்பசயனம் போய்பூமியது,
நல்லதோர் பஞ்சனையாகவும் மிருகம்நாடித்தாதிக ளாய்யிங்கிருக்க. (159)
இவ்விதகாலம்வரலாச்சே இந்தப்பெண்ணுக்கு நான்சொன்ன முன்பேச்சே,
ஒவ்விப்படுங் கட்டம்பார்க்காமல் நானிந்தவுத்தமிதன் னைப்பிரிவேனென்று. (160)
தந்தைநகர்வழி காட்டிவிட்டேன்தையல் தான்செல்வாளென்று சனித்துணிவால்,
முந்தாணையைக் கிழித்தரசன் கட்டியே முனைந் துநின்றவனே துசொல்வான். (161)
இந்திரனைம்பத்தார் தேயத்தரசர்கள் யெல்லோரையும்வேண் டாமென்றுசொல்லி,
சந்தோஷமாயிந்தப்பாவி தனைப்பார்த்துத்தா னும்மணஞ்செய்தாள் பாருமென்று. (162)
அப்படிச்சொல்லியவன் நடப்பான் பின்பு யணுகிவந் தாமுகத் தைப்பார்ப்பான்,
கொப்பெனப்பிரம னெழுத்தெனச்சொல்லிக்கோ வென்றலரியே தானழுவான். (163)
பெண்ணசையென்கிற சாகரத்தாலிவன் பேணியேகட்டுண்டு தான்கலங்கி,
யெண்ணாதெல்லா மெண்ணிப்பசியால் நித்திரையிப்ப டப்போகிறாளென்றறிந்து (164)
சுந்தரமாகவே பெற்று வளர்த்ததன் சுற்றமுறவுகளை மறந்து,
வந்தென்னைச்சத மென்றிங்குநம்பின வரிவையைவிட்டு நான்போரேனென்று. (165)
இப்படிச்சொல்லியே சற்றுபோவான் பிறகிசைந்துவந்து முகம்பார்த்து,
கொப்பெனப்புலம்பி மூர்ச்சித்தெழுந்துபின் கோரியங்குநின் றுரைக்கலானான், (166)
மாதவாகோவிந்தா நாராயணாஎன் மணையாளைவிட்டிதோ நான்போறேன்,
ஆதரவற்றவ ளாதலால்காட்டினி லன்புடன் கார்த்திட வேணுமையா (167)
சிங்கம்புலியானைக ரடிபன்றியும் செந்நாய் புலிமிருகங்களினால்,
தங்கிடும் பேய்களால்யிடர்கள்வாராமல் தாய்வீடுசேர்த்திடும்சாமி யென்று, (168)
இப்படிச்சொல்லித் தன்பத்தினியைவிடுத் தேகியவன் காட்டில்போகையிலே,
அப்போதுசனியன் அக்கினியைவிட் டரசனைத்துண் பமியற்றச்செய்ய, (169)
ஆனதுபோல்காட்டில் மூங்கிப்புதர்களி லக்கினிபிடித்தெரிய நளன்,
தானகப்பட்டுப் புகையிற்றத்தளித்துத்தன் றேவியையெண்ணித் திரும்பையில். (170)
தீயில்விழுந்து சனியன்பாம்பாகியே சென்றவதியுற்று வேந்தைப்பார்த்து,
வாயாலழைத்துமை யடைக்கலமென்றேன் வன்புடன்யென்னை நீர் காருமென்ன. (171)
ஆபத்துவேளையி துவென்றெண்ணிநளன் அரவைப்பார்த்தங் கிரக்கத்தினால்,
பாபம்வருமென்று தன்னிடர்பாராமல் பரிந்துபாம் பின்வால்கைபிடித்து. (172)
தூக்கியெறியசீறித் தன்கைகடிக்கத் தோன்றலுருவம் விகாரமாக,
சீக்கிரம்பார்த்து தன்பத்தினியுரைத்த சேதியறிந்தங்கு சொல்லுகிறான் (173)
ஆதரைபெண்பிள்ளை விட்டுத்துணியில்லா தலையுமென்னைச்சர ணடைய,
பாதகமென்றுநான் செய்யகீரிதனைப் பாப்பாத்திசெய்த தைப்போலச்செய்தாய், (174)
என்றுசொல்லசனி யாகியபாம்பும் யெழிலுடன்கேட்டிதைத் தான்சிரித்து,
நன்றுசெய்தேன்நீரும் பிழைக்கும்வழிக்கு நானுந்தன்ரூபம் மறைத்தேனென்ன, (175)
ஆதலாலும்மிட துன்பமெல்லாந்தீர்த்திங் கானபின்நீரும் யென்னைநினைத்தால்,
சாதகமாயுமக்கேற் பட்டரூபத்தைத் தானுஞ்செய்வே னென்றுசனிசொல்ல, (176)
நல்லதென்றொப்பியே காடுமலைதாண்டி நாடுமயோத்தியாள் ரிதுபர்னன்,
வல்லசபைவந்தர சனைவணங்கி வாகுடன்நளனுஞ் சொல்லுகிறான், (177)
நவகண்டமதையோர் குடையாய்ஆண்ட நளச்சக்ரவர்த்தி யின்நிடமாய்த்,
தவமெனச்சுயம்பாகி யாயிருந்தேன்றான் செல்லக்கலியா ல்நானும்வந்தேன். (178)
வேணபடியான பாகங்களைச்செய்வேன் விரும்பிச்சாரதி வேலை செய்வேன்,
காணவேயென்பெயர் பாகுகனென்பார்கள் கருதிவைத்தெனைக் காருமென்ன. (179)
அம்மொழிகேட்டு ரிதுபர்னனிருமென் றறையநளனு மங்கிருக்க,
செம்மையாய்பௌஸி களிருவரைவிட்டு சீக்கிரம்நிடதம் வந்துபார்க்க, (180)
பார்த்திடநளன்போய்ப் புஷ்கரனாள்வதைப் பரிந்தறிந்து விதியீதென்று,
வேர்த்திவனுருகி ஐயோத்தியாண்டிடும் வேள்ரிதுபர்னனை வந்துகண்டு. (181)
நளச்சக்ரவர்த்தி யின்னிடஞ்சேவகம் நான்செய்யக்காலக் கதியாலவர்
தளர்ந்துசெல்ல நான்யிவ்விடம்வரவும் தார்வேந்தேவைத் துக்காரென்றுரைக்க, (182)
ஆனமொழியைப் போலிவனையிருத்த வங்குநளனு மிவனைக்கண்டு,
மோனமுற்றிருந்து தன்சேவகனென்று முனைந்தறிந் துளங்கொண்டிருக்க, (183)
இப்படியிருக்க வங்குதமயந்தி யேற்றதுயில்நீங்கித் தானெழுந்து,
கொப்பெனப்பதியைப் பார்த்துத்தன்சீலையைக் கோரிக்கிழித்திருப்பதைக்கண்டு, (184)
இவ்விதஞ்செய்துதன் நாயகன்சென்றன ரென்றறிந்து பூமியில்வீழ்ந்து,
ஒவ்வியேமூர்ச்சித்துப் பிறண்டுருண்டவ ளுத்தமியழுது சொல்லுகிறாள். (185)
மாலையிட்டுவந் தமன்னவரேமனை யாமென்னைப் பிரிந்தீரே,
ஆலைக்கரும்புபோல் நானிருக்கக்துன்ப மாகுமென்றெண்ணி நடந்தீரே (186)
என்னையறியா மல்நித்திரையும் வரயிப்படி மோசமுமானேனே
தன்னந்தனியேநீ ரென்னைவிட்டுச்செல்லத் தமக்குநான்குறை செய்யவில்லை. (187)
சந்திரனைப்போன்ற தங்கள்முகத்தைநான் சாமியெப்போயினி காணப்போரேன்,
பொந்தியிலென்னுயிர் போயிநீரிருக்கப் பூமியோர்மெய்க்கத் தவிக்கின்றேனே. (188)
என்னைமணஞ்செய் துகைப்பிடிக்கவுமக் கிந்தகட்டங்கள் வரலாச்சே,
மன்னவனே தமக்கேவல்பணிவிடை மாபாவிசெய்யாமல் நான் போச்சே, (189)
தாமிருக்கயிந்தக் காட்டினில்பயமுந் தானொன்றில்லாம லேநானிருக்க,
சாமிநீர்பிரியத்துக் கத்தினால்நொந்து தவிக்குமெந்தனைப் பாருமென்று, (190)
நாயகன்காட்டினில் விட்டாரெனத்தூறி நான்சொன்னகுற் றத்தைநீர்பொறுத்து,
மாயனேகாருமென் றன்னவளுஞ்சொல்லி மனமுருகியே தான்புலம்பி, (191)
வேதனுமெழுதயிவ் விதியாச்சுதே வேந்தேயென்னை வந்துபாருமென்று,
சாதகமாய்ச்சொல்லப் பட்சிமிருகங்கள் தானுமிதைப்பார் த்திருந்ததுவே, (192)
இப்படியுருகியிருளில் செல்லவும் யேற்றபட்சிமிரு கங்கள்மரம்,
கொப்பெனயிருக்கப் பார்த்துத்தன்பதியைக் கோரிக்கேட்டிவளுஞ் செல்லுகையில், (193)
சனியின்மாய்கையால் பாம்பாகியிவள்தன் காலிரண்டையுஞ் சுற்றிக்கொள்ள,
அனியாயமிதற் கென்செய்வேன்வாருமென் றன்பனைநினைந் தழுகையிலே, (194)
அச்சத்தங்கேட்டந்தக் காட்டினில்வாழு மதிசூரனான வேடனொருவன்,
உச்சிதமானகுல்லாவுஞ் சிந்தூரப்பொட்டோங்கும் சிங்கப்பல் சிவந்தகண்ணும், (195)
நாசிவிகாரமுடைய வனாய்வில்லை நாடிக்கரமதிற் றான்பிடித்து,
பேசிவந்தவனும் பாம்பைவெட்டித்தள்ளிப் பெண்ணழகைப்பார்த் துச்சொல்லுகிறான், (196)
உன்னதமுள்ளயென் மாதரசேகாட்டில் ஒண்டியாய் யிங்காரைத்தேடிவர,
அன்னைதந்தையுந் தன்பேருமுருரையென் றஞ்சாமல்வே டனும்கேட்கையிலே, (197)
பத்தினிகேட்டெந்தன் தந்தைபேர்வீமனாம் பதியும்நள மஹராஜனாம்,
நத்திநவகண்ட மாண்டவறாமவர் நாடிப்போகத் தேடுகிறேனென்ன. (198)
அப்படிக்கொற்றயென் மன்னனையெங்கேனும் அண்ணாவேநீர் பார்த்ததுண்டோவென்னத்,
தப்பிதமன்றித்தமயந்தி கேட்கவும் தாவிவேடனதி காதல் கொண்டு, (199)
ஒண்டியாய்வந்தவ ளானதினால்வேடன் வுள்ளமறிந்தங்கு சொல்லுகிறான்,
மண்டலந்தன்னிலுன் பதியைப்போல்வேறு மானிடரில்லையோ வென்றுசொல்லி. (200)
சின்னவயதினில் சீரழிந்துநிற்க சீதேவிபோலொத் தரூபவதி,
அன்னமிருக்கப் பசிக்குண்ணாதவர்போல் அசட்டுவார்த்தைகள் பேசுகிறாய். (201)
சாங்காலந்தன்னில் நாம்காமலீலைசெய்ய சாத்தியப்படு மோவானதினால்,
ஆங்காலம்வாலிபம் வீனாகப்போகுதே யறிந்துரைக்கி றேன்கேளுமென்ன. (202)
இல்லத்தில்பத்தினி யெனக்குண்டவளை யேவல்பணிவிடை தான்செய்யநின்,
சொல்லுக்கிரண்டுநான் செய்யவில்லையெந்தன் சூரபராக்ரமம் சொல்கிறேன்கேள், (203)
கன்னமிடுவேன் புதைப்பெடுப்பேன்வீட்டில் கருதிச்சென்று முடிப்பெடுப்பேன்,
அன்னமேசொக்குப்பொ டியிடுவேன்வலை கட்டிமிருகத்தை நான்பிடிப்பேன், (204)
தேனுந்தினைமாவும் வள்ளிக்கிழங்குகள் சீர்பெருமாமிசவகை யெல்லாம்,
மானேயென்னில்லத் தில்வேனதுண்டு தின்றுமதன்ரதிபோ லிருப்போம்வாடி, (205)
ஆதலால்நீயெந்தன் பிராணசகியாகு மானமணவாளன் நானுனக்காம்,
பாதகனுரைக்கத் தமயந்திகேட்டுப் பதைத்தவனிடஞ் சொல்லுகிறாள், (206)
ஈனசாதியில்பிறந் தவனேநெறி யின்னதென்றறியா நீர்மூடனே,
ஆனமறையறி யாதவனேயெந்தன் ஆபத்தைதீர்த்தாயே அண்ணாவே. (207)
ஐந்துபேர்பத்தினி தாயாகும்யிதை யறியாமலாசை கொண்டவரை,
நைந்துபோகயே மன்கதையாலடித்து நரகிற்றள்ளியே நாசஞ்செய்வான். (208)
மண்ணில்பிறந் தோர்பிறபெண்ணை நினைக்கமாதன மாயிசழகுபலம்,
கண்ணில் நிற்காமலே நசித்துப்போகுமாம் கண்டறிவீரெந்தன் அண்ணாவே. (209)
ஆனதால் நீசெய்த குற்றத்தைப்பொறுக்க ஹரியைத்தோத்திரஞ் செய்திடுவாய்,
நானுனக்குத்தங்கை யென்றறி நீகொண்டநாட்டம் விடுமினி அண்ணாவே. (210)
வேணநீதியெடுத்து ரைத்தும்யெட்டி வேப்பங்காய்க்க சப்புமாறாதுபோல்,
தோணித்தனக்கு மரணமுண்டானதால் தோகைமஹிமையை யறியாமல், (211)
மானேமயிலே மரகதமேதேனே வஞ்சியேநீசொல்லும் வார்த்தையெல்லாம்,
தானெந்தன்செவி யிலேறவிலைமோகந் தன்னைத்தணித் திடவாருமென்ன. (212)
பாவபுண்ணியத்தை நாங்களறியோமே பார்த்தென்னைச் சேரயிதுதருணம்,
மேவியேவாவென் றழைக்கத்தமயந்தி மெல்லியுங்கோ பித்துச்சொல்லுகிறாள். (213)
மூர்க்ககுணமுள்ள சண்டாளனேயென்முன் முகத்தைக்காட் டிநில்லாதே,
பார்க்குளெனக்குநீ செய்தநன்றிதனைப் பார்த்துப்பொறுத்திருந் தேன்பாரும், (214)
இப்படியதட்டிச் சொல்லவும்வேடனுக் கிருகண்சிவந்த வன்முழித்துக்,
கப்பித்தமயந்தி கைப்பிடிக்கவரக் கடவுளைத்து தித்துக்கற்பினால், (215)
வேடனுஞ்சாம்பலாய்ப் போனபின்பார்த்து விசனமுற்றுவழி தான்நடந்து,
ஆடவனைநினைந் தங்குள்ளபச்சிலை யாவுந்தின்ன வுயிர்போகாமல், (216)
சனியின் மாய்கையால் அக்கினியெறியத் தான்விழுந்ததில்யிற ப்போமென்று,
கனிவாய்வீழத்தீயுங் கற்பால்குளிரக் கண்டுநமக்குச்சா வில்லையென்று. (217)
சிங்கம்புலியானைக் கரடிக்கால்களைச் சென்றுநாம்பிடிக்கக் கொல்லுமென்று,
சங்கையறச்செய்யப் பயந்துவோடிடத் தனக்குச்சாவில்லை யென்றுசொல்லி, (218)
நடந்துசெல்லக்கான் முனியைக்கண்டு நமஸ்கரித்துநடந் ததைச்சொல்ல,
கடந்தமுனிவர் திட்டியால்பார்த்து நற்காலம் வருமென் றுரைத்தபின்னற், (219)
மூன்றுவருடஞ்சென்ற பின்நீங்கள்முன்போ லரசைச்செய்து க்ஷேமமாக,
சான்றுவாழ்வீர்கள் யென்றுசொல்லித் தம்மிடமிருத்தித் தவம்தீர்ந்தபின்னற், (220)
தாங்களுஞ்செல்லச் சுவாகு மகாராஜன் றன்பட்டணத்தின் வழியைக்காட்டி,
ஏங்காமலம்மணி யிவ்வழிபோமென் றிசைந்துரைத்து வர்கள்சென்றபின்னற். (221)
அவ்வழிபிடித்துத் தமயந்திபோக வங்குபொதிமாட்டுக் காரர்செல்ல,
ஒவ்விப்பார்த்தி வளைப்பேய்பிசாசென் றெல்லோரோடவொ ருவனும்நின்றுகொண்டு, (222)
அச்சமில்லாமலே நீரிந்தக்காட்டினி லாதரவன்றித் தனியாக,
மெச்சும்ரூபமாய் வருபவராரென்ன மெல்லியதைக்கேட்டு சொல்லுகிறள். (223)
வீமன்மகள்தம யந்தியாமென்பெயர் விரும்பிச்சனியன் மாய்கையினால்,
காமனைப்பழித்த யென்பதிநளனைக் கைவிட்டுக்காட்டில் தேடுறேன்யென்ன, (224)
இவ்வுரைகேட்டுப் பொதிமாட்டுக்காரனும் யெல்லோரிடமிதைத் தானுஞ்சொல்ல,
அவ்வுரைகேட்டுப் பயமன்றியழைத்து அங்கிராகண்டிவ ரெல்லோரும், (225)
ஆலமரமுங்குளத்தைக் கண்டிவர்களங்கு பொங்கியுண்டு தாம்படுத்து,
கோலமாய்நித்திரை கொள்ளத்தமயந்தி கொண்டபுருடனைத் தான்நினைத்து. (226)
விசனப்படவும் அவர்கள்தேற்றப்பின் மெல்லியும்நடந்து வந்ததினால்,
அசந்துநித்திரை போகப்பொதிமாட்டுக் காரரிடம்வந்து யானைக்கூட்டம், (227)
எருத்துமாட்டையும் அவர்களையுங்கிழித் தெரிந்துபொய்கையி ற்றானிரங்கி,
கருத்தில்மகிழ்ந் தங்காடிடச்சத்தத்தைக் கண்டுற்றுத்த மயந்தியெழுந்து. (228)
விதிவசமிதுயென் னைக்கொல்லாமலே விட்டதுபாரிந்த யானைகளும்,
அதிசயமென்று புலம்பிவிடிய வவளெழுந்து வழிநடக்க (229)
சுவாகுவின்பட்டணந் தன்னைக்காண யிவள்சொகுசைக்கண்டு புகழ்வோரும்,
அவாவைநீக்கியே தானுந்தாதியென்று யவ்வீதிநடந்து செல்லுகையில், (230)
பட்டத்துமன்னன் றாய்கோகிலாதேவியும் பாங்குடன்வுப்பரி கையிருந்து,
சட்டமாய்ப்பார்க்கிவள் ராஜன்றேவியெனத் தானறிந்துக்கீ யிடஞ்சொல்வாள். (231)
ஆரடிதாதிகாள் போரவள்நமது அரசகுலத்தைச் சேர்ந்தவள்போல்,
சீருடனிருக்கச் சென்றழைத்துவாரும் சீக்கிரஞ்செல்லுங் கோளென்றுசொல்ல. (232)
அந்தமொழியைப் போல்வந்திவரழைத் தரசியினிடமே தான்விடுக்க,
பைந்தொடியும்பார்த்து நவகண்டமாளும் பார்த்திபன்றேவி போற்றோணுதென்ன, (233)
ஈதுரைக்கக்கேட்டு நானுங்கந்தர்வப்பெண் யேற்றமொழியுண் டுயென்றாயே,
தாதிகளில்வேண கீர்த்திபெற்றுவந்த தாதியென்றெந் தனைச்சொல்வார்கள். (234)
அந்தமொழியைக்கேட் டமர்ந்திருமென்ன ஆளனை நினைத்து மாயவனை,
சிந்தையி லெண்ணித்துதித்து நற்காலத்தை சேயிழையாள் வரப்பார்த்திருந்தாள். (235)
இக்கதையிவ் விதமாயிருக்க அங்கு யேற்கும்ரி துபர்னனுக்குநளன்,
தக்கபடிப்புசிப் பளித்துத்தாம்பூலந் தானீந்திவனுண்டு தான் படுத்து (236)
நல்லநிலவிதுநமது தேவியைநாடிக்காட்டினில் நாம் விட்டுவரத்
தொல்லையடைந் தவள்யெவ்விதமானாளோ தோனிநினைந்தி வன்புலம்பையில், (237)
அண்டையில் நின்றிதை ரிதுபர்னனுங்கேட்டா ருக்கும்யிந்த நிலவதனில்,
கொண்டிடும்பத்தினி தன்மேலாசைவரும் கோரியவரவ ர்க்கேற்றபடி. (238)
உம்மழகுக்குமேலுமக்கு நேர்ந்திடும்வோங்கும் பத்தினியின்ற ன்னழகைச்,
செம்மையாய்நினைந்து மெத்தவுமெலிந்து சித்தஜன்கணை யால்நீர்வாடி, (239)
அவளைநினைந்து நீருமுருகியாற்றுறீர் காட்டில் விறகொடிக்கத்,
தவறிவிட்டங்கு நிலவிலெண்ணுறீர் தாமென்றிவன் இழிவாகச்சொல்ல (240)
அம்மொழிகேட்டு நளனுமென்ரூபத்திற் காணதோர்தேவியு முண்டோவென்ன,
எம்மைவைத்தாளு மிறைவனேயோர்கதையித்த ரையுண்டுநினைந் தேனென்ன. (241)
ஆனமொழியதை ரிதுபர்னனுங் கேட்டையையோ நமக்கிதுவுமென்ன.
தானெவ்விதமாக விருக்கினும்யிதில் சாரமென்னவென்று தானுஞ்செல்ல. (242)
இந்தப்படியிங்கி ருக்கவும்அவ்விடம் யிசைந்தவிதர்ப் பநகர்வீமன்,
சிந்தைநொந்தவன் மகள்மருகனையும் தேடப்பிராமணர் தம்மைவிட (243)
காடுமலைவனம் தேயமெங்குஞ்சுற்றிக் கருதிப்பார்த்துக் களைத்திவரும்,
நாடிக்காணோமென்ற வர்கள்வுளம் யெண்ணிநடந்து சென்றுபதியிருக்க, (244)
விதர்ப்பநகர்புரோகிதர் புத்திரன்வேண்டுங்கிருஷ்ணையனென் றுரைப்போரும்,
குதர்க்கமாடியே ஜோதிடசாத்திரம் கூர்வோர்யென் முன்னெவரில்லையென்று. (245)
விருதுபடித்துச்சுவாகு மஹாராஜன் விரும்புமரணில் சென்றிருந்து,
கருதியவ்வரசனுக் குசாத்திரங்கள் கண்டுரைக்க அவன்காத்துவர. (246)
இப்படியிருக்கவோர் தினமரசன் யேற்குந்தன் தந்தைக்குத்திதிசெய்ய,
அப்போது கிருஷ்ணைய்யர் அங்குவர அழகுள்ள தமயந்திரூபங்கண்டு. (247)
என்ன அனியாயகாலமிது- இந்த யேந்திழையாள் பதியைப்பிரிந்து,
அன்னமயிலரைட் சணமிருக்காளே யானுமிதற்கினி யென்னசெய்வேன், (248)
ஓடம்வண்டியேரும் வண்டியோடமேரும் வோடுந் தண்ணீரிலா மணல்காணும்,
நாடுகாடாகிடும் காடுநாடாகிடும் நன்மறையுரைக் குமிவ்வார்த்தை, (249)
இந்தமொழியைப்போலோர் குடையாயாண்ட யிறைவன்நளன் றனைப்பிரிந்து,
வந்திங்குதாதியாய் வேலைசெய்திருக்க வைத்ததேபார் பாழுந்தெய்வமென்று, (250)
மேனிகுலைந்து சொரூபம்வேறாகியே வேற்றுருக்கொண்டு மயிர்ச்சடையும்,
தானும்பிடிக்க நான்பார்க்கலாச்சே தமயந்தியென்றி வன்றான்புலம்பி. (251)
இருக்கவங்கு தமயந்தியுங்கேட்டிவர் நமதுதந்தை விப்பிரரென்று,
உருக்கத்தோடறிந் தோடிவந்துவீழ்ந்து வோகோவென் றலறிச்சொல்லுகிறாள், (252)
நானும்பிறந்து வளர்ந்தஅருமையை நாடிநீர் அறிவீரையாவே,
தானும்யிவ்விதியை நான்காணத்தெய்வமுந் தான்வைத்ததே பாரும்அய்யாவே. (253)
இப்படியழவுங்கேட்டுச் சுவாகுமன்ன னெழில்பெருந் தாயார்தாதியுடன்,
கொப்பெனவோடி வந்திப்புதுமைதன்னைக் கோரியவளங்கு பார்த்திருக்க. (254)
அங்குவந்திருக்கும் புரோகிதரும்உந்தன் ஆளன்களன் புஷ்கரன்னுடனே,
வங்கணமாகச் குதாடிசகலமும் வருந்தித்தோற்றுப் பரதேசியாய், (255)
காட்டினில்சென்றதோர் சேதிகேட்டுஅங்கு கதித்தநகர் விதர்ப்பமாளும்,
தாட்டீகனுந் தந்தை தாய்சுற்றமுறவோர் தானுங்கலங்கி அவதியுற்று, (256)
என்னையறிந்துவர அனுப்பயானும் யிங்குவர நீயுருமாறி,
அன்னமேயிருக்கத்தெரிந்து கொள்ளாமலானேன் யிதற்குநான்யென்ன செய்வேன். (257)
பாழும்பிரமன்வுன் றலையிலிவ்விதம் பார்த்தெழுதி நின்பதியைவிட்டு,
ஆழிசூழவுலகை வோர்குடையாகவே ஆண்டநளனைப் பிரித்தான்பார். (258)
ஆனதால்நீயும் பயப்படாமல்யெந்தன் அருமைத்தாயே நீர்யென்பிறகே,
தானும்வரக்கூட்டித் தந்தையிடஞ்சேர்ப்பேன் தானுஞ்சொல்லத் தமயந்தி சொல்வாள்.(259)
நாடியென்பதியும் பயனத்தைவிட்டு நயந்தம்மாளிடம் நான்யிருக்கத்,
தேடியென்தந்தைபோல் தம்மைபார்த்தேனெனச் சேதிசொல்லச்சு வாகுதாயும்வந்து, (260)
என்னடியம்மாயி துவும்புதுமைபோல் யிருக்குதுன்றாயும் நானும்கூட,
அன்னமேபிறந்தோம்யிக் கோலமாகநீ யாகவுனைப்பார்த் தேன்யென் மகளே. (261)
மாறுவேஷமாக நீயிருக்க - நான் உன்மர்மமறியா மல்போனேனையோ,
தாறுமாறாகக்கஷ்டப் படதெய்வமுந்தான் வைத்ததேபாரும் யென்மகளே. (262)
இப்படிச்சொல்லிய வளழுது- அப்போ -யேற்றவஸ்திரா பரணமதைக்,
கொப்பெனத்தாதியர் தம்மைக்கொண்டுவரக் கூறல்போலுற வாங்கியேநின்று (263)
வேதமறையவர் கைக்கொடுத்துயிதை விரும்பியாசீர் வதித்துநீரும்,
சாதகமாகயென் மகள்தமயந்தி தன்கையிலீயு மென்றேயுரைக்க (264)
அத்தைப்போல்வாங்கி அவருமீய - அதை-யான தமயந்தியவள் பெற்று,
தத்தைமொழியாளுந்தன் வாயைத்திறந்து தானுஞ்சிற்றன் னையிடமுரைப்பாள், (265)
விப்பிரர்யீந்ததை வேண்டாமெனச்சொல்லி விரும்பியானதை வாங்கிக்கொண்டேன்,
இப்போதுமஞ்சளை நான்றரியேன்யேற்ற வஸ்திரந்தன்னையும் நானுடுக்கேன். (266)
ஆபரணங்களை நான்பூணேன் - வாயில் அடைக்காய்வெற்றிலைத ன்னைக் கொள்ளேன்.
சோபங்கொண்டுவர மெத்தையில்படுக்கேன் சொகுசாய்கந்தத்தை நானனியேன். (267)
இவ்வகையை நீக்கி நானிருக்கவேண்டு மென்பதியில்லாம லேயிருக்க,
ஒவ்வியவர்வர வோங்குஞ்சிறப்புடன் வுற்றிருக்க வேண்டும் யென்றாயே, (268)
என்றுரைக்கத்தமயந்தி யின்சிற்றன்னை யேற்றிதைக்கேட்டி வள்தந்தையிடம்,
நன்றுடன் அனுப்பத்துயர் நீங்குமென்று நங்கையவள் மனதில்நினைத்து. (269)
ஆனபல்லக்கில் அவளையேற்றி அழகுள்ள தாதியரை பின்னனுப்பி,
ஞானநெறியுள புரோகிதரைக்கட்டி நடவும்விதர்ப்பமென்றனுப்ப (270)
அப்போதுவிதர்ப்ப நகர்வரவங்கு வாளும்வீமனிடம் புரோகிதரும்,
கொப்பெனச்சென்றுயான் றமயந்திதன்னைக் கூட்டிவந்தேனெ ன்றவருரைக்க, (271)
சொன்னவுடன் கேட்டப்புரம்போக - அங்குதோணுந்தன்றாய் தந்தைக்குச்சரணம்,
நன்புடன்செய்துதன் பிள்ளைகளைப்பார்க்க நாடிப்புலம்பியே சொல்லுகிறாள் (272)
ஆதரைதன்னையோர் குடையிலாண்டயென் னாளன்புஷ்கரனு டனேசூது,
சாதகமாய்ஆட யெல்லாந்தோர்த்துக்காட்டில் தாவிப்பரதேசியைப் போல்நாங்கள். (273)
போகையில்பட்சிகள் வஸ்திரம்பிடுங்கப் புடவையைக்கி ழித்துக்கொடுத்து,
வாகுடன்நான்கட்டிக் கொள்ளச்சொல்லவழி வஞ்சியுன்றாய்வீடு போகுமென்ன. (274)
அம்மொழிகேட்டுங்கள் மாமியரணம் அமருவோம்வாரு மென்றேஅறைய,
செம்மையாய்ச்சென்ற நான்கெட்டோர்போகலா காசேயிழைநீயுஞ் செல்லுவாயென்ன. (275)
ஆனதோர்காட்டினில் கந்தமூலபலம் அதைத்தின்றுமண்ணில் படுக்கவேணும்,
தானவர்சொல்லநான் பிறகேசென்றிடத் தாவிநான்நித்திரை செய்யும்வேளை. (276)
ஈதுசமயமென்றென்னை விட்டுச்செல்ல யெழுந்துபார்த்தவர்யில் லாமல்
மோதியழுதுநான் றேடிவரவங்கு முனிவர்களைக் கண்டுகேட்க (277)
இன்னுஞ்சிலகாலஞ் சென்றபின்கலியும் யேகக்சுகம்வரு மென்றுசொல்லி,
மன்னன்சுவாகுநகர் வழியைக்காட்டி மாமுனிவோர்க ளுஞ்சென்றபின்னர், (278)
அந்தப்பதியாளும் அரசன்றேவியின் ஆனதாதியாக நானமர்ந்து,
சந்ததம்வேலை செய்திருக்கப்புரோகிதர் தானங்குவரக் குசலம்வோர்ந்து (279)
இங்குவந்தேனென் றியம்பவுந்தாய்தந்தை யிதனைக்கேட் டவர்கள்புலம்பி,
பங்கமன்றிநவ கண்டமதையாளும் பட்டத்து தேவியுந்தானாகி (280)
இவ்விதம் ஆபத்தும் படப்பிரமன் யெழுதினானோ பார்வுன்னைத்தேடி,
எவ்விதம்வுன் பதியிக்கட்டம் பொறுத்தங் கிருக்கிறாரோ தெரியோமென்ன. (281)
இப்படியவர்கள் புலம்பித்தேர்ந்துபின் யிறைவன்நள பதியைத் தேட,
அப்போது பிராமணர்தம்மை விடவதையுற்றுத் தமயந்தியோ டிவந்து, (282)
என்னைக்கொண்ட பிராணநாதருக்குமுன்போல் யேற்றரூபமும் யிருக்காதையா
மன்னவர்க்கன்னஞ் சமையல்செய்துசுயம் பாகியாயிருப்பார் பாருமையா (283)
தெருத்திண்ணைகளில் படுத்துறங்குவார் தேடிநீர்யெங்குஞ் சலியாமல்,
கருதிப்பார்க்கும்நகர் தனில்சொல்வதைக் களித்துரைப்பேன் நான்கேளுமையா. (284)
அன்னநடையொத்தப் பெண்நித்திரைசெய்ய அவள்கட்டுஞ் சீலையைத்தான்கிழித்து,
நன்னயமாகவே தானுங்கட்டிக்காட்டில் நங்கையைவிட்டவர் சென்றவரும். (285)
அந்தப்பெண்ணையவர் காட்டில்விட்டுவர அவளுக்கோர்நிந்தை வந்துதானால்,
எந்தவிதமாமோ யென்றுவிகடமாய் யிவ்வார்த்தையு ரைத்துவாருமென்ன. (286)
ஈதுரைக்கஅவர் கேட்டுமருவார்த்தை யியம்பநீங்களு மப்பதியின்,
சாதுபோன்ற மொழியும்முகக்குறிப்புந் தானறிந்துவாருஞ் சாமியென்ன. (287)
இவ்விதமாகவே தேயமெங்குஞ்சொல்லி யிசைந்தயோத்தி நகரமாளும்,
செவ்வையுள்ளரி துபர்னன்சபைவந்து சென்றுபிராமணர் யிவ்விதமாய், (288)
சொல்லிஅடவியிற்றன் றேவியைவிட்டுஞ் சூட்டுஞ்சீலையில் கொஞ்சங்கிழித்து,
நல்லபெண்ணைத்தனி யாய்விட்டுநிடதம் நளன்யென்பவரும் வந்தார்பாரும், (289)
மாசுபடிந்ததன் றேகத்துடன்வாயில் மாண்புடன்தாம்பூ லம்போடாமல்,
தூசும்வுன்னதமாய்க் கட்டாமல்பதி தோணும்வரையிவ் விதமிருக்க, (290)
நல்லவோர்மாப்பிளை தன்னைப்பார்த்து - வீமன் நாடிக்கல்யாணம் நடாத்திவைக்கத்
தொல்லுலகிலிந்தப் புதுமையைப்போலத் தோணுமோபார் நீரும்வேந்தேயென்ன. (291)
இப்படியுரைத்துத் தமயந்தியவர் யேற்றநீதியை அறிந்தவர் பார்,
கொப்பெனஅவரை யெப்போகாண்பேனென்று கோரியவளங் கழுதிருக்க. (292)
வீமனுந்தன்மருகனை தேடச்சொல்லி விப்பிரர்யெங்க ளைத்தான்அனுப்பப்,
பூமனேகாட்டில் வாழ்புலிபசித்தாலும் புல்லைத் தின்னுமோநீர் பாருமென்ன (293)
இம்மொழிதன்னை ரிதுபர்னனங்கேட்டு யேற்குந்திரு வடியைவணங்கி,
மும்மையைநீக்கி நவகண்டமாண்டதோர் முடிபெற்ற நளமஹராஜன், (294)
அப்படிக்கொற்றவர் சகலதர்மம் அறிந்தவர்க் கிப்படிக்காலம்வர.
எப்படிப்பட்டவ ரானாலுந்தெய்வத்தின் யேற்றவிதியைக் கடவாரென்று. (295)
ஆனாலுமோர்கார்யம் அடவியில்விட்ட அவர்பத்தினி தன்தந்தையில்லம்,
தானேவந்துசேர மாபாக்யமென்று தான்றளர்ந்திங்கவர் யில்லையென்று, (296)
எப்பதிசென்றிருப்பாரோ சுவாமிநீங்கள் யேகிச்சென்றவரைப் பாருமென்ன,
அப்போதவர்களுங் கேட்டுவெளிவர அங்குநளபதி வோடிவந்து. (297)
போரவர்தங்களைத்தான் பார்த்துநளன் பொல்லாதகாரிய மென்னசெய்தான்,
சாரமறிந்ததைநானு ரைப்பேன்அந்தத் தையலையேன்காட் டில்விட்டார் பாரும், (298)
கஷ்டத்தைக்காட்டில் அனுபவியாளென்று கருதித்தந்தை நகர்வழியை,
சட்டமாய்க்காட்டினோம் செல்லுவாளென்றவா தான்விட்டுப்போகத் தப்பிதமென்ன. (299)
இத்தைஅறியாமல நீங்களும்யென்னென்ன யேசிப்பேசுகி றீரையாவே,
சுத்தப்பொய்யை நிசமென்றிருக்கும் யிந்தத்தொல்லுல கோர்கள்வழக்காச்சே, (300)
உடலுயிருக்கும் வொன்றுஞ்சம்பந்தமு முறவில்லாமலே தானிருக்க,
திடமுடன்யித்தை நீங்களறியாமல் செப்புரீர்வார்த்தையென்றிவன்சொல்லி, (301)
இப்படிச்சாற்றியவள் பதியவளுக்கேற்ற நியாயத்தைச் செய்திருக்க,
தப்பென்றெண்ணமல் தமயந்தியவளும் தான் தூரல்காலமென் றவன்செப்பி. (302)
செல்லவும்அக்குறி தன்னைஅந்தணர்கள் சீருடன்பார்த்து விகாரமுறச்
சொல்லியதையல் மொழிசரியிவனுஞ் சொல்லுரையால் நளனென்றறிந்து, (303)
வீமனிடம்வந்துது யாவுஞ் சொல்லக்கேட்டு விரும்பியறிந் தவனுமங்கு,
போமென்மகளிடம் போயுரையுமென்னப் போந்துதமயந்தி யிடம்வந்து. (304)
அம்மணீகாடுள்ள தேயமெங்குஞ்சுற்றி யங்கொன்றுமில்லாமல் அய்யோத்தி,
செம்மையுடன் கொலூரிதுபர்னனிடம் சேதிசொல்லியாம் திரும்புகையில், (305)
விகுர்தரூபமும் கறுத்தமேனியும் விளங்கவொருவ னோடிவந்து,
அகமதிலதிக்கோபத் துடன்தர்மம் யாவுஞ்சொல்லி யவரும்நடக்க. (306)
இந்தப்புதுமையைக் கண்டோமென்றியம்ப யேற்றுத்தமயந்தி தன்புருடன்
சொந்தமறிந்துரை யாடினவரென்று தோணியறிந்து தந்தையினிடம். (307)
ஐயனேவிப்பிரர் தம்மைதூஷணங்கள் யான்செய்யச்சொல்லி யெங்கும்விடுக்க,
வையமெங்கும்யிவர் சொல்லக்கேட்டுத்திரம் வருந்தியுரைப்பார் யில்லாமல், (308)
என்னசெய்வோமென் றையோத்திரிதுபர்னன் யேற்குஞ்சபைபோய் யிவர்வுரைத்து,
நன்னயமாகத் திரும்பகோரத்துடன் நாடிவந்தொருவர் ஞாயஞ்சொல்லி, (309)
சென்றவர்யென்பதி யென்றறிந்தேன்-யினி - செய்யும்காரியம் நாம்யென்னவெனில்,
நன்றுடன்சாத்திரங் கற்றபெரியோரை நாடியழைத்துப் பலன் கேட்க. (310)
அன்னவர்சொல்லு ரையைஅறிந்துநா மதன்படிநடக்கவேணுமென்று,
கன்னிசொற்போல் மன்னன்சாத்திரங் கற்றோரைக்கருதி அழைத்தவர் கேட்க, (311)
தாரணியெல்லாமோர் குடையிலாண்ட நற்- சற்சனன் நளனையிப்போது,
சீருடன்ஆள்விட்டுத்தேடக்கிடைப்பராம் செப்பினோம் யிப்போதுநற்காலம். (312)
அந்தமொழியைக்கேட்ட வர்க்குச்சன்மானம் அதுவும்யீந்த னுப்பியபின்னற்,
சந்தோஷமாகமறை யவரைப்பார்த்துத் தமயந்தியவள் சாற்றுகிறாள். (313)
விதர்ப்பதேசத்தை யாளும்வீமராஜன் விரும்பித்தன் மருகன்நளனை,
இதமுடன்ஆளை விட்டெங்கும்தேட யில்லாமலவரும் யிருப்பதினால், (314)
தன்மகள்தமயந்திக் கிரண்டாவதுசாருஞ் சுயவரம்சாற்றி வைக்க,
நன்மையாய்அனுப்ப வந்தோமென்றையோத்தி நாடும்ரிதுபர்னன்யி டம்போய்நீர். (315)
சொல்லஅவருடன் யென்பதியும்வரத் தோணும்பிள்ளை களைநாம்அவர்பால்,
நல்லபடியனுப்பக் குறியறிந்து நாட்டுவோம் பின்னென்று நங்கைசாற்ற (316)
சாற்றியதைக்கேட்டு வீமனுங்களித்துத் தாமேசுவாமிசெல்ல வேண்டுமென்னப்,
போற்றவிப்பிரரும் அய்யோத்தியாள் புரவலன் ரிதுபர்னன் சபைவந்து. (317)
சகலபேர்கள்யிருக் கக்கேட்கும்படித் தமயந்தியை நளன்காட்டில்,
அகிர்த்தியமொன்றப் பெண்செய்யாதிருக்க அவளையவர்விட்டு வந்ததால், (318)
அட்டமிருகங்கள் கொல்லாமல் அந்தத்தோகை தன்தந்தையினில்லம்வந்து,
கஷ்டப்பட்டுத்தன் புருடனைத்தேட ஆள் கருதவிடவும் யில்லாமல், (319)
மூன்றாண்டு வரையில் சிறைவைத்ததுபோல் மொய்க்குழல் அவள் சிறையிருக்க,
யீன்றவீமனறிந்தினி யிரண்டாவதேற்ற சுயவரம்செய்யயெண்ணி, (320)
எங்களைதம்மிடம் யிதைசொல்லச்சொல்லி யேற்றனுப்பநாங்கள் வந்துசொன்னோம்,
அங்கவர்வுரைக்கரி துபர்னனுங் கேட்டாச்சார்ய மீதென்று தான் நினைத்து, (321)
செல்லுவோம்விதர்ப்ப மென்றிருக்க - யிதை - தீரன் அருகில் நளன் கேட்டு,
தொல்லுலகிருக்கும் பெண்களையினிமேல் தோணி நம்பலாகாதென்றிவரும். (322)
தன்னுளமெண்ணியே தாமிருக்கஅங்கு தாவும்ரிதுபர்னன் பாகுகனை,
நன்னயமாய்ப்பார்த்து விப்பிரர்சொற்போல் நற்றமயந்தி யெனக்குத்தானும், (323)
கிடைக்குங்காலம் போல்யிருக்குதாதலால் கிளம்பிசீக்கிரம் அங்குபோக,
திடச்சித்தமாயுரை யென்பாகுகன் தீரனேநான்சேர்ப்பே ன்யென்றுசொல்லி, (324)
பரியின்லாயமதனிற் செல்ல - நளனை- பௌசிகனென் பவனும்பார்த்து,
சரியாமோ தமயந்திக் கிரண்டுளதார்மணஞ் செய்கிறார் நீர்பாரும். (325)
நாடுநகரத்தைக் சூதினால்தோர்த்து நளச்சக்கரவர்த்தி யுங்கானில்செல்ல,
வாடியாவரும் அவரைச்சேர்ந்தவரும் வன்னியரிடஞ்சேவகஞ்செய்ய (326)
இப்படிக்காலம்வரலாச்சே அவரையெப்போ துநாமினிபார்க்கப்போறோம்,
கொப்பெனச்சொல்லி அழத்தேற்றியேநளன் கோரிஅறிந்து புலம்பியுளம், (327)
நம்முடையபதி செல்வம்புஷ்கரனும் நாடிஅடைய நமதுபெண்டீர்,
இம்மைதனில்யி ரண்டாமணஞ்செய்யநாம் யீதெல்லாம் பார்க்க விதிவசமே. (328)
இப்படிக்காலம் வரலாச்சே யிதையேற்று நாம்நினைக்கிலென்ன பலன்,
கொப்பெனச்சென்று குதிரைகளைக்கொண்டு கோரிக்கட்டித் தேரைக்கொண்டுவந்து (329)
வீற்றிருமையனேவி தர்ப்பஞ்செல்லத்தேர் விளங்குதென்று பாகுகன் சொல்லி,
சாற்றக் குதிரையைப்பார்த்து ரிதுபர்னன் சந்தேகங் கொண்டவன் சாற்றுகிறான். (330)
என்னகுதிரையைக் கட்டினாய் பாகுகா யெப்படிப்போகும்விதர்ப்பநகர்,
அன்னமயிற்றமயந்தியை நான்கட்ட ஆகாதுன்மனம்போ ற்றோணுதென்ன. (331)
இந்தமொழியைநள பதியுங்கேட்டு யெத்தூரமாகயிருந்தாலும்
விந்தையாய்த் தீனியும்தண்ணீருங்கொள்ளாமல் வேகமாய்ப் போகும்விநோதம்பாரும், (332)
என்றுரைக்கரி துபர்னவங்கேட்டுப்பின் யேற்றநல்ல வஸ்திராபரணம்,
நன்றுடன் கட்டியேநல்ல வேளைதனில் நாடிப்பிராமணர் தாம்வாழ்த்த (333)
தேரிலேரியவன் வீற்றிருந்து - அப்போ சீக்கிரம் பாகுகனைப்பார்த்துக்,
கோரிநடாத்துமெனச் சொல்லநளனும் கோனாமல் பரியைத் தூண்டும் வேளை. (334)
காற்றாடியைப்போல்குதிரையும்பறக்கக் கருதித்தேர்போகும் வேகம்பார்த்து,
சாற்றிய பாகுகன் மொழிகேட்டு ரிதுபர்னனுஞ்சரி யென்றேபுகழ்ந்து, (335)
வேகமுடன்செல்லும் தேரின்அதிர்ச்சியால் வீரன்புஷ்கரன் மேல்போட்டிருக்கும்,
வாகுள்ளவுத்தரீயம் விழப்பார்த்தவன் வாடியெடுக்கத்தேர் நீர்நிருத்தும், (336)
என்றுரைக்கஅதை அறிந்துபாகுகன் இந்நேரம்மூன்று யோசனைதூரம்,
மன்றலரசேநம்தேரும் வரலாச்சேமார்க்கம் போய்த்திரும்பக் காலமாகும். (337)
என்றுரையாடியவன் களையாமலும் யேற்றவுற்சாகத்துடன் றானும்,
நன்றுடன்குதிரை யாவுக்கும்பசியை நாடாமல்செய்து நளன்றானும், (338)
காடுமலைவனம் தாண்டிவிதர்ப்பமும் கருதிவரப் புஷ்கரன்பார்த்து,
தேடறியவிந்தையென் றெண்ணித்தன் னுள்ளம் தேர்வரபாகுகன் தன்னைப்பார்த்து (339)
என்ன அதிசயம் தாமரையின்ரசம் யேற்றதவளைய றியாதுபோல்,
மன்னனிடம்நீயி ருக்கவுன்மஹிமை மார்க்கமாய்நான் அறியாமல்போனேன். (340)
மூடன்யென்னைப்போல மூதுலகில்யில்லை முனைந்தறிவாய் நீ பாகுகனே,
தேடிப்பெரியோர்கள் மோனமாயிருப்பர் தெரிந்தேன்வு ன்னிடம் நானும்யின்று. (341)
ஆதலால்நீசமர்த்தனென்று மெச்சினேன் அஸ்வயிருதயம் வித்தைசொல்ல,
சாதகமாய்ய தற்குப் பிரதியாகச்சாற்றுறேன் நானெரு வித்தையைக்கேள். (342)
அந்தோபுட்பமும் காயும்யிலையுமாய் அடர்ந்துசெழித்து தானிமரம்,
விந்தையாய்யிருக்க நான்அத்திரம்விட வேண்டிய தனிலைக்கோர்துளையாய். (343)
இருக்கும்அதனை நீநேரில்பார்த்தறி யென்றியம்பப்புஷ்கரன் நளனும்,
சுருக்காய் தேரைநிறுத்தி செய்யுமெனத் தோன்றல்புஷ்கரனும் வில்வளைத்து (344)
தானிமரத்தின்மேல் அம்பைவிட - அது - தப்பாமற் பூவிலையைத் துளைக்க,
ஆனநளனும்போய்ப் பார்த்ததிசயித்து ஆச்சர்யம்யென்றங்கு நிற்கையிலே. (345)
அந்தமரத்தினில் சனியனுந்தோன்றி யாவர்கண்ணுக்குத்தெரியாமல்,
சந்தோஷமா நளனுக்குமாத்திரம் தன்னுருவைக்காட்டி நின்றபின்னற் (346)
சீக்கிரமுன்னே நளனைக்கடித்திட்ட சீருள்ளகார்க்கோ டகனும் வந்து,
தாக்கிக்கடிக்க நளன் சொரூபம்முன்போல் தானாகசனியன் வேந்தைப்பார்த்து, (347)
இரக்கங்கொண்டதி துக்கத்துடனே யிறைவனே கேளுந் தமயந்தியால்,
நெருக்கவுமக்குப் பகுதியைக்கட்டும் நீனிலத்தரசன் றன்னைவிட்டு (348)
சூதாடநான் செய்து வும்முடையநகர்சொத் தெல்லாம் பிடிங்கி யீந்தபின்னற்,
பூதலத்தை அவன் வோர்குடையாய் ஆளப் பொருந்த நீயும்வுன் பெண்டீர்காட்டில். (349)
போகச்செய்தபின் புறாவாகவந்து போட்டிருக்கும் தூசைநா னுங்கொண்டு,
வாகுடன் செல்லவுன் பத்தினி சீலையை வன்புடன் நீயு ங்கிழித்துக்கட்டி (350)
காட்டிலிருவருஞ்சேராமல் பிரித்துக் கைகட்டிச்சேவகஞ்செய்த வன்பால்,
ஆட்டிநான்வுன்னையும் அங்குசுயம்பாகியாகவைத்தவதி யெல்லாஞ்செய்து, (351)
செய்யாதகட்டங்கள் செய்து பார்த்தேன் - ஒன்றும் செல்லவில்லை நின்னிடமரசே,
வையாதேசாபமும் வாயால் நீ சொல்லாதே வாடினேன்நான் சனியென்று சொல்லி. (352)
வேண்டும் வரத்தைக்கேள் நான்தருவேனென்று விளம்பநளபதியும் கேட்டு,
ஆண்டருளும் தெய்வம் செய்தவிதிக்கிநாம் யாது செய்யப்போறோமென் றுரைத்து, (353)
வெய்யவன்குலத்தில்வுற்பவிக்க நாமும் வேறல்லயெனக்கிங்கெ ன்னவரம்,
வையமுள்ளோர்கள் யென் கதையும்யென்னையும் வாசிப்போர்கள்யிம்மரத்தினிடம். (354)
வந்தவர்கள்யிந்த பேர்களிடம்நீரும் வணுகாமல் நான்யிருப்பே னென்று,
இந்தவரம்யெனக்கீயப்போருமென் றிணையடிபோற்றி நளன் கேட்க, (355)
என்னைச்செய்தகஷ்டம் யிப்பூமி தன்னிலிருக்கும் மாந்தர் தம்மைநீருஞ்செய்ய,
அன்னவர்பொறுக்கார்யென்னை நினைக்கில் அவரிடம் போகாமல் நீரிருக்க (356)
இந்தவரம்யெனக் கீயுமென்றுகேட்க யேற்றுச் சனியனும் யீதருளி,
உந்தன் பந்தன்னை மாறுசெய்தோம்வீமன் வோங்கும் நகர் நீருஞ்சென்றபின்னற். (357)
பத்தினிப்பிள்ளையும் முன்னுள்ளரூபமும் பாங்குடன் பெற்றுத் தன்நகர்தனை,
சத்தியமாய்நீரும் முன்போலோர்குடையாய்த் தானாளப்போறீர் நற்காலம்வரும், (358)
தமயந்தியெனுங்கற்பு நெருப்பது தான்யென்னைச்சுடநான்போ ரேன்யின்று,
அமர்ந்தேன்யிவ்விடம் போய்வாரும்மன்னனே யான் போரேன்யென்று சனியன் சொல்லி, (359)
உத்தரம் பெறவும் நளன் வணங்கியே ஓடிவந்துரிதுபர்னன்றன் னை,
நத்திப்பார்க்க அவன் இந்நேரம்யேன்யென நாடிவிநோதத்தை நான் பார்த்து, (360)
இருக்கநேரமும் ஆச்சுதென்று தேரை யேகிவோட்டி விதர்ப்பம்வர,
பெருக்கங்கண்டன்றுநளன் கரிபரி பேணியே மாவுத்தர் தம்மிடத்தில் (361)
அடங்காமல் அதுயிருக்கமாவுத்தர் அறிந்து வீமனிடமேவந்து,
தடங்கலன்றி சொலத் தெரியும்யெனச்சாற்ற அவர் செல்ல வீமன்பார்த்து (362)
இத்தனை அதர்ச்சியாய் வரும் ரதத்தை யேற்றுப்பார்த்திவன் அதிசயித்து,
நத்தியேதன் பெண் தமயந்திக்குச் சொல்ல நாடியரணிருந்தவளுற்று (363)
பார்த்ததிசயித்தவள் யிருக்க ரதம்பாங்குடன் விதர்ப்பரணம்வந்து,
நேத்தியுடன்ரி துபர்னன் வீமன் சபை நெருங்கபாகுகன் லாயஞ் சென்று (364)
குதிரையைக்கட்டி லாயத்தில்யிருக்கக் கோரிவீமன் ரிதுபர்னனிடம்,
சதிராய்மன்னர் வரத்தமயந்திக்கு சாற்றுவோம்மாலை யென்றவன்சொல்ல. (365)
அம்மொழிகேட்டு ரிதுபர்னன்யிருக்க அங்கு தமயந்தி தாதியரை,
செம்மையாய்லாயமி ருக்குஞ்சாரதியின் சேதியை அறிந்துவா ருமென்று. (366)
விடுக்க அதுபோல்தாதியர் வந்து வேற்றுருக்கொண்ட சாரதி யைப்பார்த்து,
இடக்குவார்த்தைகள் பேசயிவர்வுரை யேற்றுத்தம யந்தியிடஞ்சென்று, (367)
அம்மணியாங்களும் சென்றுரையாட அவரும்தம்முடைய பதியென்று,
செம்மையாய் அறிந்தோம்ரூபம்மாறாகத் தெரியுதுயென் செய்வோம்யென்றாயே. (368)
அப்படிச்சொல்லத் தமயந்திஅறிந்து அன்புள்ளதாதியர் யிடம்பிள்ளை,
கொப்பெனயீந்து குறிகுணம்சாதமும் கொண்டுவர லாயஞ்சாரதிபால் (369)
விடுக்கத்தாதியர் லாயந்தனில்வந்து வேண்டுஞ்சாரதியிடம் அணுக,
அடுத்துத்தாதியர் தம்மைப்பார்த்து நளன்அன்புடன்அவர்முன் சாற்றுகிறான், (370)
பிள்ளையையெடுத்து நீர்வரநான் அந்தப் பிள்ளையையெடுக்கில் நளனென்று,
உள்ளம்யெண்ணிநான் யெடுக்காவிடில் கன்னென் சுள்ளவன்யென்றெனை நீருஞ் சொல்வீர், (371)
இப்படியுரைத்துப் பிள்ளைகளைப்பார்க்க யிசைந்து துக்கம் அதிகரிக்க,
அப்போது வோடியிரண்டு பிள்ளைகளை அங்குசாரதியெடுத்தவரும் (372)
மடியின்மீதினில் வைத்துமுத்தமிட்டு மன்னன்நளன் கண்ணில் நீர்பெருகப்
படித்தழுதிடத்தாதியர் பார்த்துப் பார்த்திபன்நளனவர் பிள்ளைகளை (373)
ஏனையாநீருமெடுத்தழுகிறீர் யென்றியம்பக்கேட்டு நளபதியும்,
தானெடுத்துமுத்தம் யிடயெச்சிலென்று தானும்நினையாதீர் சொல்வேன்கேளும், (374)
மூன்றுவருடம்யென் பிள்ளைகளைவிட்டு மோகப்பட்டேன்நான் யிதைப்பார்க்க,
போன்றிதுதின்னநான் யீயவொன்றுமில்லைப் புரிந்தரைக்காசென் கையில்யில்லை. (375)
இப்படியுரைக்கத் தாதிகள்கேட்டு யிசைந்தரிது பர்னனிடம்நளன்,
செப்பமாயிருக்கச் சேதிகண்டுவீமன் தெரிவைக்கிரண் டாஞ்சுயவரமும், (376)
என்று சொல்லியிங்கு செய்திருக்கயின்னும் யேற்றசரசவார்த் தைகள்சொல்ல,
நன்றுடன்அதனைக் கேட்டுநளபதி நடந்தவார்த்தை யைத்தான்வுரைக்க, (377)
இவ்விதம்நடக்கப் பிறகுதாதிகள் யிந்தயிருபிள்ளைக்குச் சோறு,
ஒவ்வியேநீர் கொஞ்சம் யீயவேண்டுமென வுத்தமன்யோசித்தி தைப்பார்த்து, (378)
ஆகாநீர்வுரைத்தபடி யான்அன்னத்தை அளிக்கநீவீர் வுண்பீரோவென,
வாகுடன்வுண்ணத்தடையென்னபிள்ளைக்கு வயர்பசிகொஞ்சம் யீயுமையா, (379)
அப்படியாகில் யிருமென்று வுட்சென்று ஆனதிரையிட் டனலுமன்றி,
கொப்பெனப்பாண்டம் அடுப்பேற்றிநீரன்றிக் கோரிச்சமைக்க நளபாகமாய் (380)
ஆனபின்சாதத்தைப் பாத்திரம்வைத்தங் கருமைத் தாதியரிடமீய,
தானெடுத்தேகி அவர்தமயந்தியின் றன்னிடமிந்து நடப்பைச் சொல்ல. (381)
அம்மொழிகேட்டுத் தமயந்திசாதத்தை அன்புடன் மஞ்சத்தின் மீதில்வைத்து,
செம்மையாய்வணங்கித் தாய்தந்தைக்குக்காட்டி சீர்அன்னம்மணத் தைப்பாருமென்று, (382)
வந்திடுஞ்சாதத்தில் பாதியீந்துயிவள் வாசுதேவன் பதம்தான்வணங்கி,
விந்தையாயின்றுப்பு கலந்தசாதத்தை விரும்பியுண் கிறேனென்றுசொல்லி, (383)
அதனைச்சாப்பிட்டு அன்னையைப்பார்த்தன்னம் ஆனமணமும் யெவ்விதமென்ன,
இதமுடன்கேட்கத் தாயும்யிதைப்போல யென்றும் நான்காணேன் யென்கண்ணேயென்ன. (384)
ஈதுநிகழ்ந்தபின் தமயந்தியவள் யேற்றுத்தந்தையின் பால்யென்பதியை,
சாதகமாயழையு மெனவீமனுந்தான் கேட்டுசெய்வே னென்றமைச்சர்பால். (385)
சென்றுரிதுபர்னன் சாரதிதம்மை சீக்கிரம்அழைத்தோம் நாம்யென்றுசொல்லி,
நன்றுடன்அழைத்து வாருமெனஅவர் நாடிரிதுபர்னன்யிடம்வந்து. (386)
எங்களையாளும் யிறைவன்வீம னுங்கள்யிசையும் சாரதியைஅழைத்து,
பொங்கமுடன்வரச் சொன்னாரெனச்சொல்லப் பொருந்தியோ சித்திவன்பார்த்து (387)
எதுக்குநமதுசாரதியை வீமன்யேற்றழைக்கிறார் யென்றாய்ந்த வனும்,
வேதையன்றிச்சென் றழைத்துப்போமென்றிட விரும்பிப்ப ரியின்லாயம்வந்து, (388)
சாரதியானநளனிடம் வந்தெங்கள் தார்மன்னன் வீமன்யெனுமரசன்,
சீருன்றம்மைஅழைக்க வாருமெனச்சேதி கேட்டங்கொன்று மில்லையென்ன. (389)
ஆதலால் நானும்வரேனென் றுரைக்கவும் அமைச்சர் சென்றுவீமனிடமே,
சாதகமாய்ச்சொல்லத் தமயந்திகேட்டுத் தந்தையைப்பார்த் தவள்சாற்றுகிறாள், (390)
என்னைப்பெற்றயெந்தன் தந்தையே பூவெலாம் யேற்றவர் ஓர்குடையாயாண்ட,
மன்னனிடம்நீரும் மந்திரியைஅனுப்ப மார்க்கமறிந்தவர் வாராதினால், (391)
தாங்களேசென்றழைக்க வருவாரெனத்தையல் தமயந்தி தந்தைபக்கல்,
ஓங்கியுரைக்கும் மொழிப்படிவீமனும் வோடிலாயம்வந்தங் குற்றுப்பார்த்து, (392)
சாரதியென்னும்நளன் மருகன்கரந்தன்னைப் பிடித்தவர் வாருமென,
நீரும்அங்கென்னையேன் அழைக்கிறீர்யென நேர்ந்திவர்கள் சபைவந்தபின்னற். (393)
ஆசனந்தன்னிலமரு மெனவீமன் ஐயோநான்சாரதி யென்னநளன்,
பேசும்மொழி பார்த்துத்தமயந்தியழப் பெண்யென்னைக்கண்டு புலம்புவானேன். (394)
இப்படிசாரதி சொல்லவீமன்கேட்டு யிப்பெண்ணின்மேல்திஷ் டியேன்வுமக்கு,
செப்புமெனயென் சேயைவிட்டுமூன்றாண்டு செல்லவும் பார்த்துருகிறேன்யென, (395)
ஆனாலுமிப்பெண்போல் அந்தமுளபெண் அடியேற்கிருக்க யார்அழுகினும்,
தானேபார்க்க அதிதுக்கம்வரும்வேறு சாற்றுதலொன்றில்லை தார்வேந்தே. (396)
இப்படிவுரைக்கத் தமயந்தியழ யேற்கும்நளன் யெனுஞ்சாரதியும்,
கொப்பெனவுன்றந்தை ரண்டாமணஞ்செய்யக் கோரிநளன்வு னக்கேதுக்கென (397)
அம்மொழிகேட்டங்கு வீமனும்நளனென் றறிந்துமருகன் றன்னைப்பார்த்து,
செம்மையாய்அறியு மிரண்டாமணஞ்செய்ய தேசத்தரசர் யிங்கில்லைபாரும், (398)
அந்தமொழிகேட்டுச் சாரதிநளனும் ஐயோரிதுபர்னன் சாரதிநான்,
வந்திருக்கும் ரிதுபர்னனைப்போய் நளன்வளப்பமறியத் தான்றெரியும். (399)
ஆகிலும்நளன்றன் பெண்டிரைக்காட்டில் அலையவிடாமற்றந் தையினில்லம்,
வாகுடன்அனுப்பி நன்மைசெய்யயிதில் வந்ததப்பிதம் யெனநளனும். (400)
என்றென்னைநீங்களும் யெண்ணாதீர்யென் றியம்பக்கேட்டந்த மங்கைதானும்,
நன்றுடன்அன்று கிழித்திந்தசீலையை நாடிநன்றாய் அவள்வுற்றறிந்து. (401)
தமயந்திதானுந் தன்பதிதூசையுந் தான்கட்டியிருக்குஞ்சீ லைபார்த்து,
அமர்ந்துயோசித்துக் கற்புடையாளவள்அவர் தன்னாளனென் றேயறிந்து, (402)
பார்த்தபின்சகிக்கமுடியாமல் - அவர் பாதங்களில்வந்து தான்வீழ்ந்து,
வேர்த்துருகியிந்தக் கோலம்நான்காண விதிவசமோயென்ற வளழுக, (403)
அங்கவளழநளன் யெனுஞ்சாரதி அன்னவர்கேட்டுன் பதிநளனும்,
மங்கையேவந்திடில் அவரிடஞ்சொல்வாய் மன்னன் சாரதிநான் பாருமென்ன. (404)
ஆனாலும்யென்னைக் கண்டேனழுகிறாய் வுன்அரியதந்தை யுணக் குப்பதி,
தானேயவர்தேட வந்திருக்கநீங்கள் சாற்றும்வார்த்தை வீணுக்கென்றுரைக்க, (405)
இந்தமொழிகேட்டுத் தமயந்தி - அவள் இந்திராதிதேவர்கள் ரவிமதி,
அந்தோநாரணனும் அறியநீர்பதியான பத்தினியும் நான்வுமக்கு (406)
தம்முடையபிள்ளை யீதென்றுரைக்கத் தமயந்தியைப் பார்த்துநளபதி,
எம்மிடஞ்சொல்ல வீணாகும்யிதுவெல்லாம் யேற்றநளன்மு ன்னுரையு மென்ன. (407)
அப்போதுபத்தினி தமயந்தியவன் அக்கினிதன்னை வளர்க்கச்சொல்லி,
கொப்பெனக்குதிக்கத் தாய்தந்தையரழக் கோரியக்கினியும் தூக்கிக்கொண்டு, (408)
யாவருமிருக்க அச்சபைவந்துநான் யாவரைச்சுடும் நெருப்புநானே,
மேவித்தமயந்தி கற்பெனுந்தீயெண்ணை வேண்டிச்சுடநானும் நொந்துவந்தேன், (409)
ஆதலால்பூமியை யோர்குடையாய்ஆண்ட அன்பரெனும் நளபூபதியே,
சாதகமாய்யிந்தப்பெண் தம்மைக்காணச் சாற்றியமருமண மென்றறியும், (410)
பத்தினிதன்னைநீர் சேர்த்துக்கொள்ளுமெனப் பரிந்துநளம கராஜனும்,
நத்தியேநாரணன்றாள் மலர்துதிக்க நாடிஆசீர்வதித் தவர்வர (411)
எல்லோரும்பார்த்துப் பணியநளன்நிற்க யிசைந்துசனியனைப் பார்த்து,
வல்லவிஷம்போக்கும் யென்னகார்க்கோடகன் வந்துகடிக்கச் சொகுசாய்நளன் (412)
முன்னுள்ளரூபமுண்டா கவும்வேந்தனும் முனைந்துகார்க்கோ டகனைப்பார்த்து,
என்னையும்யென் கதைதன்னைவாசிப்போர் யிவரைத்தீண்ட நீர்வருத்தாமல், (413)
இந்தவரந்தரவேண்டு மெனக்கேட்க இப்புவி ஆகாயந்தான்அறிய,
அந்தப்படிதந்தே னென்றுவிடைபெற்று அவரேகத் தமயந்தியவள் (414)
சனியனைப்பார்த்து சாமிநீர்யெங்களை சங்கடப்படுத்தி வைத்ததுபோல்,
கனிவுடன்பூவி லுள்ளோரைசெய்திடில் கருதியவர் பொறுக்கார்கள். (415)
ஆதலால்யெங்களைச் செய்ததுன்பத்தைப்போல் அதிகமாகநீர் செய்யாமல்,
சாதகஞ்செய்வேன் யென்றில்வரந் தந்திடத்தாள் பணிந்தெனென்றவள் சாற்ற (416)
உள்ளமறிந்திப் பூபெண்கள்ருதுவாகில் ஓர்முகூர்த்தம் அவர்களிடம்நான்,
கள்ளமன்றியங்கி ருப்பேன்யெனச்சொல்லிக் கருதியவவருஞ் சென்றபின்னர் (417)
வீமன்யிதையறிந் துற்றுத்தன்றாதியை வேண்டிவஸ்திரா பரணத்தைநீர்,
தாமசமன்றி யெடுத்துவாருமெனச் சாற்றச்சென்றிவர் கொண்டீயவதை (418)
வாங்கியரசனும் வேதியர்தம்மிடம் வாழ்த்திக்கொடு மென்றிவனீய
ஓங்கியேபெற்றிவர் ஆசீர்வதித்து கந்திருவர் கையினிற்றான் கொடுக்க. (419)
பெற்றவுடன்நளன் தமயந்திதானும் பெருகியதனைத் தான்சூட்டி,
வுற்றிவர்விளங்க ரிதுபர்னன்கேட் டுள்ளம்வுருகித் தன்மெய்வாடி (420)
ஓடியேவந்திவன்நான் செய்தகுற்றம் வுகந்துபொருத் தெனையாளுமென,
நாடியுரைக்கநளன் கேட்டுன்நன்றியை நான்மறவேன் நீருஞ்செல்லுமென்ன. (421)
ஈதறிந்துரிது பர்னனும் வய்யோத்தி யேற்றுச்செல நளன்றன்சகியை,
சாதகமாய்ப்பார்த்துத் தன்பதியணுகத் தாய்தந்தையைக்கேட்டு நீவாவென. (422)
என்றதுபோற்சென் றிவளுரைக்கஅவர் யேற்றறிந்து துக்கந்தான்பெருகி,
நன்றலவென்றி துதான்றெரிந்துபின்னற் நாடிக்கரிபரி தானையாவும் (423)
மருகந்தனக்கு வீமனுமீந்துந்தன் மாமயிலைக்காரும் யென்றுசொல்லி,
பெருகிவாழ்த்திவிடை கொடுக்கத்தன்னூர் பேணிவந்து புஷ்கரனைக்கண்டு. (424)
முன்விளையாடின சூதைநாம்பிப்போ முனைந்தாடுவோம் நீரும்வாருமென,
தன்வினையணுகக் காய்பலகைகொண்டு தான்அமர்ந்து புஷ்கரனுடனே (425)
மாமுடியோன் சனியனைத்துதித்து மனதிலெண்ணி யிருவருமாட,
தாமுன்நின்று புஷ்கரன்செல்வம் பதியைத்தான் பிடிங்கீயநளன்ஜெயிக்க (426)
நடந்ததைக்கண்டு புஷ்கரன்கீழ்முழித்து நாடிமுகஞ் சோர்ந்துவேறாகி,
படிந்தசந்தோஷம்போய் துக்கமுண்டாகிப் பரவநளபதி தான்பார்த்து, (427)
என்னஅதிசயம் சிற்றரசன்நீரும் யென்பதிசெல்வம் சனியன்றன்னால்,
நன்னயமாகசூதாடித் தோற்றன்னம்நான் நாள்மூன்றுண்ணா மல்புறமிருக்க (428)
அப்போதொருவரை யென்னிடம்வாராமல் ஆக்கினைசெய்வே னென்றேதடுக்க,
ஒப்பிநீர்வுத்தரமிட்டதுமாநேத்தி வுன்பதிசென் றுநீர்கப்பங்கட்டி, (429)
இருமென்றனுப்பப் புஷ்கரனும்விடை யேற்றுப்பெற்றவன் நகரம்வந்து,
கருதியுலகில் வாழ்வுதாழ்விரண்டும் காசினியோர்காண் கனவிதென்று. (430)
என்றெண்ணியிவ னிருக்கவிதர்ப்பத்தை யேகிச்சிங்காரித் தவர்யிருக்க,
நன்றுடன்அன்றன்னம் நாங்கள்கொண்டுவர நாடிப்புஷ்க ரனுந்தான்றடுக்க, (431)
ஆதலால்குடிகள் யாங்கள்வரவில்லை யரசேபொறுத்தெமைக் காருமென,
ஓதுங்குடிகள் மொழிகேட்டுநளன் வுற்றவிதிக்கிநாமென்ன செய்வோம், (432)
சென்றங்கிருமென்ற வர்களமரவும் தேசத்துமன்னர்கள் தான்வரவும்,
அன்றுநாகசுரம் மேளதாளந்தம்பூர் அண்டமதிர அடித்திடவும், (433)
தேவரும்யிந்திரன் ரம்பைமேனகை திலோர்த்தமையூர்வசி தன்னுடனே,
மூவரும்வந்தங்கு மண்டபஞ்சேர்ந்து முடுகியாவர்களும் வீற்றிருக்க. (434)
இருக்கச்சித்திர மண்டபத்தில்வுள்ள யேற்குந்தேவர்நரர் சேவைகொண்டு,
பெருகும்அமைச்சரொடு நேயர்களும் பேணுந்துணையால் சிம்மாதனத்தில், (435)
சத்தியத்தைக்கொண்டு கைதனிற்செங்கோலைத் தான்பிடித்தன்று தமயந்திதன்,
பத்தினியோடமர்ந் துலகையாளும்படி கொண்டபிஷேக முடிகொண்டு (436)
அண்டையிலரசர் வேதியரும்நல்ல அமைச்சர்சந்திர சூரியரும்,
கண்டுதேவேந்திரன் யிருக்கமாதவர் களித்து மறையைத் தான்படிக்க, (437)
ரம்பைமேனகை திலோர்த்தமைவூர்வசி ரம்மியமாக நடமாடக்,
கும்புகூடியங்கு மாங்கல்யப்பெண்களுங் கொண்டுகளித்தவ ராலஞ்சுற்ற (438)
சோபனஞ்சொல்லவும் நாரதர்கீதத்தை சொகுசாய்ப்பாடிக் கொண்டுவரவும்,
தாபமுடன்ஐம்பத் தாறுதேயமன்னர் தான்சூழக்கட்டி யர்தான்புகழ. (439)
வதிஷ்ட்டன்கௌஸிகன் றூறுவாசன்நல்ல வகத்தியன் வியாஸன்வுரகேஸன்,
நிஸபவாசன்காஸீபன் பரத்துவாஸன் நேர்ந்துபூந்து கிலைச்சுற்றியங்கு, (440)
மாந்தழைவைத்த பூரணகும்பமதை மகிழ்ந்தவரவர் தான்கொடுக்க,
ஏந்திநெய்யும்பொரி அக்கினிதேவன் யெழும்பிவலங் கொண்டுதானும்வர, (441)
அப்போதுவேதியர் நல்லமுகூர்த்தமென் றவசரமாய்க் கடுகடுக்க,
செப்பியேமுனிவர் சேர்ந்துநவக்கிரஹ சீர்மந்திரஞ்செய்யும் வேளைதனில், (442)
அந்தச்சமயத்தில் பொடிவகைகளை யாவருந்தன்கை யாற்றானிறைக்க,
சந்தோஷமாய் நவரத்தினபீடத்தில் தான்நளன்ற மயந்திஅமர (443)
அமர்ந்தபிறகு நாரணன்காத்தால் ஆசிகூறிமுடி தான்புனைந்து,
தமதிருப்பிடம் யாவர்களுஞ்செல்லத் தார்மன்னன்வுலகை யாண்டுவர (444)
இப்பெருங்காதை பூவாய்நரர்அறிய யேற்றுபுக் ஷாப்மாமுண் டியாபிள்ளை,
செப்பிடவீரராகவ தாஸன்செய்யச் சீர்பெறப்படிப் போர்வாழிதானே. (445)
நளச்சக்கரவர்த்தி கும்மி முற்றிற்று.
-------------
This file was last updated on 24 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)